Jump to content

மாவீரர்களுக்கு நாடாளுமன்றில் த.தே.கூட்டமைப்பு அஞ்சலி!


Recommended Posts

[ செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015, 07:14.34 AM GMT ]
maveer3.jpg
தமிழர் தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று நாடாளுமன்றில் நடைபெற்றுவரும் வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் மக்கள் இவ்வாரம் தமது உயிர்நீத்த மாவீரர்களுக்கு - தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளதால் அதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழருக்கான விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும், மாவீரர் வாரம் கடந்த 21ம் திகதி ஆரம்பமாகியது. எதிர்வரும் 27ம் திகதி வரை இது அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.tamilwin.com/show-RUmtzBRYSWnv2C.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக செய்யவேண்டிய விடயம்.

Link to comment
Share on other sites

உருண்டு விழுந்த சுமந்திரன் அவர்கள் எழுந்து ஒருபடி ஏறிவிட்டார். th?id=OIP.M5d8f8b4f3491e582ccd26811d6924

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீதரன் எம் பி எப்போதும் செலுத்தி வருகிறார் தானே. இப்ப மட்டும் இவர் என்ன புதிசா..?! இவர் சுமந்திரன் இம்முறை மாவீரர் நாளில்.. முள்ளிவாய்க்காலில் ஒரு அஞ்சலியை செய்யட்டும் பார்க்கலாம்..??! tw_astonished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Sooravali said:

தமிழர் தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளது.

சோழியன் குடுமி சும்மா ஆடாது. <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.