Jump to content

ஐஸ்வர்யா ராய் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் அக்கி நீங்கள் நிச்சயார்த்ததுக்கு போகவில்லையா? :P :lol:

அடுத்தமாதம் 19 ம் திகதி கலியாணம் நடக்க இருக்கே அதுக்கு போறதுக்கு இருக்கேன் :lol:

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

ஏன் அபிஷேக் திருமனம் செய்வது பிடிக்கவில்லையா? :P

அக்கா கோவிக்கப் போற நீங்கள் இப்படி சொல்

Link to comment
Share on other sites

அடுத்தமாதம் 19 ம் திகதி கலியாணம் நடக்க இருக்கே அதுக்கு போறதுக்கு இருக்கேன் :lol:

என் வாழ்த்துக்களையும் தெரிவித்துவிடுங்கள்

Link to comment
Share on other sites

பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களான ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. திருமணத்தை உறுதி செய்யும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராயின் கையில் மோதிரம் போட்டார் அபிஷேக் பச்சன்.

மும்பை புறநகர் ஜுஹு பகுதியில் உள்ள பாலிவுட் நட்சத்திர ஜோடி அமிதாப்பச்சன்-ஜெயா பச்சன் வீட்டில் ஞாயிறு இரவு 8.30 மணி முதல் 9 மணிக்குள் நிச்சயதார்த்தம் நடந்தது.

அபிஷேக் பச்சனுக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி 31 வயதாகிறது. எனவே, அன்றைய தினமே அவரது திருமணம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராய்க்கு 33 வயதாகிறது. எனினும், திருமணத்துக்கான தேதி நிச்சயதார்த்தத்தின் போது குறிக்கப்படவில்லை.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா-அபிஷேக் இருவரும் நடித்த குரு படத்தின் சிறப்புக் காட்சிக்காக நியூயார்க் சென்று விட்டு இருவரும் திரும்பிய ஒரு மணிநேரத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயதார்த்த விழாவில் அமிதாப்பச்சனின் நெருங்கிய நண்பரும் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலருமான அமர் சிங், ஐஸ்வர்யாவின் பெற்றோர், தொழிலதிபர் அனில் அம்பானி, அவரது மனைவியும் நடிகையுமான டினா அம்பானி மற்றும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர்.

:P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரண்மனையில் ஐஸ் கல்யாணம்?

ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சன் திருமணம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

ஐஸ், அபிஷேக் கல்யாணம் ஒரு வழியாக நிச்சயமாகி விட்டது. மும்பையில் உள்ள அமிதாப் வீட்டில் வைத்து நிச்சயதார்த்தை நடத்தி முடித்துள்ளனர். திருமண தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அமிதாப் குடும்பம் அறிவிக்கவில்லை.

பிப்ரவரி 19 அல்லது மார்ச் 7ம் தேதி ஆகியவற்றில் ஒன்றில் திருமணம் நடைபெறலாம் என கூறப்படுகிறது. எந்தத் தேதியாக இருந்தாலும் மார்ச் 14ம் தேதிக்குள் கல்யாணத்தை முடித்து விட வேண்டும். அதற்குப் பிறகு கெட்ட காலம் ஆரம்பிக்கிறது என்று அமிதாப்பின் குடும்ப ஜோதிடர் அறிவுறுத்தியுள்ளாராம்.

திருமணம் எங்கு நடைபெறும் என்பதும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ஜெய்ப்பூ>ல் உள்ள அரண்மனை அல்லது உதய்ப்பூரில் திருமணம் நடைபெறக் கூடும் என கூறப்படுகிறது.

ஐஸ்அபி கல்யாணத்திற்கு பெரும் புள்ளிகளின் கூட்டம் அலைமோதும் என்பதால் கிராண்ட் ஆக கல்யாணத்தை நடத்த அமிதாப் பச்சன் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். இதனால் ஜெய்ப்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க அரண்மனையில் திருமணத்தை நடத்த அவர்கள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த நாள் அபிஷேக் ஷýட்டிங்குக்காக ஜெய்ப்பூர் சென்றார். அப்போது மகாராணி பத்மா தேவியை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். திருமணம் தொடர்பாகவே அவர் பேசியதாக கூறப்படுகிறது.

ஜெய்ப்பூரில் திருமணத்தை முடித்து விட்டு உதய்ப்பூர் அரண்மனையில் வரவேற்பை வைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.

ஆனால் பாதுகாப்பு கருதி மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலிலேயே திருமணத்தை முடித்து விடவும் வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே, ஐஸ்வர்யாவின் முகூர்த்தப் புடவைக்காக, ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பனாரஸ் பட்டுப் புடவையை ஸ்பெஷலாக ஆர்டர் கொடுத்துள்ளனராம். வாரணாசியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இதற்கான ஆர்டர் தரப்பட்டுள்ளது.

இதுதவிர அமிதாப் பச்சன் குடும்பப் பெண்மணிகள் கல்யாணத்தன்று கட்டிக் கொள்வதற்காக அதே இடத்தில் தலா ரூ. 1 லட்சம் மதிப்பு கொண்ட 21 பட்டுச் சேலைகளுக்கும் ஆர்டர் தரப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மும்பை, ஜன.29: ஐஸ்வர்யா ராய் மிகவும் எளிமையான குணம் படைத¢தவர் என பாராட்டுகிறார் அமிதாப் பச்சன்.

high4fm9.jpg

அமிதாப் மகன் அபிஷேக் பச்சன்&ஐஸ்வர்யா ராய் திருமணம் விரைவில் நடக்க உள்ளது. இந்நிலையில் தனது வருங்கால மருமகள் ஐஸ்வர்யா குற¤த்து அமிதாப் கூறும்போது, Ôஐஸ்வர்யாவிடம் எனக்கு பிடித்ததே அவரது எளிமைதான். உலகத்தின் பார்வையில் அவர் பெரிய இடத்தில் இருக்கிறார்.

நிஜத்தில் அந்த இடத்துக்குரிய எந்த கர்வமும் அவரிடம் இல்லை. நமது கலாசாரத்துக்கு ஏற்ற பெண் அவர். குடும்பப் பாங்கும் எளிமையும் நிறைந்தவர்Õ என்றார். அடுத்த மாதம் 19ம் தேதி அல்லது மார்ச் 7ம் தேதி ஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம் நடக்கும் என தெரிகிறது.

தினகரன்.கொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பதான் ஐஸ்சுக்கு கலியாணம் (ஐ மீன் தாலி கட்டு)முடியப்போகுதோ?எங்கடையள் எப்பதான் அடங்கப்போகுதுகளோ?என்ரை கதிர்காம கந்தனே!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உலக அழகிக்குக் கல்யாணம்... ஊரெல்லாம் கொண்டாட்டம்!

p20cta1.jpg

உலக அழகிக்குக் கல்யாணம்! ஊரெல்லாம் அதைப்பத்திதான் பேச்சு. சல்மான் கான், விவேக் ஓபராய் எனக் காதல் கிசுகிசுக்களில் அடிபட்ட ஐஸ், இப்போது தன்னைவிட 2 வயது குறைவான அபிஷேக்கோடு கை கோக்க இருக்கிறார். இது ஒரு பிரமாண்ட நட்சத்திரத் திருவிழாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத் தேதி, நேரம், இடம் என எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அந்தத் திருமணம் பற்றி ஆங்காங்கே லீக் அவுட் ஆன சில சுவாரஸ்யத் தகவல்கள்...

கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட அந்த சுபமுகூர்த்த வேளையில் வெளியான ‘தூம்&2’ படத்தில் ஐஸ்வர்யா ராயும் ஹ்ரித்திக் ரோஷனும் பதித்துக்கொண்ட பச்சக் இதழ் முத்தம், பச்சன்ஸ் குடும்பத்தார் உட்பட அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தது. படத் தயாரிப்பாளர்கள் மேல் அதிகாரபூர்வமாக கேஸ§ம் பதிவு செய்யப்பட்டது. ஐஸ்வர்யா ராய் & அபிஷேக் பச்சன் திருமணம் முடிவு செய்யப்பட்டதும், யாஷ்ராஜ் ஃபிலிம்ஸை அணுகிய பச்சன்ஸ் அந்த முத்தக் காட்சியைப் படத்தில் இருந்து நீக்கிவிட்டனர்.

p20bnt3.jpg

* ஐஸ்வர்யா ராய்க்கு செவ்வாய் தோஷம் இருப்பதால், ஏகப்பட்ட கோயில்களில் சிறப்பு பூஜை, யாகம் எல்லாம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஐஸின் ஜாதகப்படி அவருக்கு இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் திருமணம் செய்துவிட வேண்டுமாம். பிப்ரவரி 19&ம் தேதி திருமணம் இருக்கும் என பச்சன் குடும்பத்தின் நெருங்கிய வட்டாரம், காது வழிச் செய்தியைக் கசியவிட்டுக்கொண்டு இருக்கிறது.

* திருமணம் ஜெய்ப்பூரில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசப்ஷனுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என 6,000 பேருக்கு மேல் அழைக்கப்பட இருக்கிறார்கள். திருமணத்துக்காக ஜெய்ப்பூர் பேலஸ் முழுவதையும் அமிதாப் புக் செய்யப் போவ தாகச் சொல்கிறார்கள். விருந்தினர்கள் தங்குவதற்காக ஜெய்ப்பூரைச் சுற்றி உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் புக் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

* ஐஸ்வர்யா ராய்க்காக பனாரஸில் இருந்து ஒரு ஸ்பெஷல் புடவை வரவழைக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா-ஜெய்ப்பூரி எம்ப்ராய்டரி போடப்பட்டு, மிக ஆடம்பரமான புடவையாக அது வடிவமைக்கப்பட இருக்கிறது. இதன் விலை ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும்.

* ஐஸின் அம்மா வ்ரிந்தா ராய், கொல்கத்தாவில் ஷர்பாரி தத்தா என்றொரு ஃபேஷன் டிஸைனரிடம் ஐஸ் - அபிஷேக் திருமணத்துக்கு முன் உடுத்தப்போகும் உடைகளை வடிவமைக்கச் சொல்லியிருக்கிறார். மாப்பிள்ளை அபிஷேக்குக்கென தனியாக இரண்டு டிஸைனர் குர்தாவும், ஒரு வேஷ்டியும் ஆர்டர் செய்திருக்கிறார்.

* ரிசப்ஷனில் கச்சேரிக்காக வாரணாசியில் இருந்து ‘ஷன்னுலால் மிஸ்ரா’ என்ற பாடகரை அமிதாப் அழைத்திருக்கிறார். ‘‘நிகழ்ச்சிக்கான பிராக்டீஸை நான் இப்போதே ஆரம்பித்து விட்டேன்’’ என்று உற்சாகத்தோடு சொல்கிற ஷன்னுலால் மிஸ்ராவுக்கும் அபிஷேக்-ஐஸ் திருமணத் தேதி தெரியவில்லை.

* ‘திருமணம் முடிந்த கையோடு ஹனி மூனுக்கு எங்கள் நாட்டுக்கு வாருங்கள்’ என்று உலக நாடுகள் பலவும் போட்டி போட்டு அழைப்பு விடுத்துக்கொண்டு இருக்கின்றன. ரயில் யூரோப், ஸ்விஸ் டூரிஸம், பிரெஞ்ச் டூரிஸம் எனப் பலவும் ஃப்ரீ ஹனிமூன் பேக்கேஜ் தருவதாகச் சொல்லி அன்போடு அழைத்துக் கொண்டு இருக்கின்றன. தங்கள் டூரிஸம் போர்டில் இந்த ஹனிமூன் ஜோடி வருவது தங்களுக்கும் தங்கள் நாட்டுக்கும் கிடைக்கும் மிகப் பெரிய அங்கீகாரமாக அவர்கள் கருதுகிறார்கள்.

* திருமணம் நிச்சயம் ஆன மறுநாள், ஐஸ்வர்யா ராய் உலகப் பொருளாதார மையத்தின் குளோபல் யங் லீடராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். 70 நாடுகளில் இருந்து பிஸினஸ், அரசியல், கல்வி, மீடியா எனத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் 19ல் அபிஷேக்}ஐஸ்வர்யா திருமணம்

27aishyt2.jpg

வரும் மார்ச் மாதம் 19ம் தேதி அன்று அபிஷேக் பச்சன் } ஐஸ்வர்யாராய் திருமணம் நடைபெறும் என தெரியவந்துள்ளது.

அதிகாரபூர்வமாக தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், மார்ச் 19ல் திருமணம் நடைபெறுவதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.

நடிகர் பிரபுவின் மகனுடைய திருமணத்திற்கு வந்திருந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மண்டபத்தில் இருந்த முக்கிய தமிழ்த் திரையுலகப் புள்ளிகளிடம் வரும் 19ம் தேதி திருமணம் என்றும், அன்றைக்கு வேறு வேலைகள் ஏதும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக் கொண்டாராம்.

இவர்களிடம் மட்டுமல்லாது தனது நெருங்கிய உறவினர்கள், அரசியல் வி.வி.ஐ.பி.க்கள், பாலிவுட் பிரபலங்கள் என தனக்கு மிக நெருக்கமானவர்களிடமும் வரும் 19ம் தேதி திருமணம் என்று தகவல் தெரிவித்துள்ளார் அமிதாப்.

இந்த நட்சத்திரத் திருமணம் ஜோத்பூரில் உள்ள உனமத்பவன் அரண்மனையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. குறிப்பாக இந்த இடத்தை தேர்நதெடுத்தற்கும் காரணம் இருக்கிறது. இந்த அரண்மனையில் 'உம்ராவ் ஜான்' பட சூட்டிங் நடைபெற்றபோது தான் ஐஸிற்கும், அபிஷேக்கிற்கும் இடையே காதல் மலர்ந்ததாம்.

திருமண அழைப்பிதழ் மிகவும் ஆடம்பரமாக அச்சடிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஒரு அழைப்பிதழின் விலை ரூ. 5,000 என்று கூறப்படுகிறது. அழைப்பிதழே இவ்வளவு ஆடம்பர செலவு என்றால் திருமணம் எவ்வளவு ஆடம்பரமாக இருக்கும்...!

dinamani.com

Link to comment
Share on other sites

ஒரு அழைப்பிதழின் விலை 5000 ரூபாவா? களியாணத்துக்கு மொய்போடப்போவபர்பாடு திண்டாட்டம்தான்! இந்தியாவில் 5000 ரூபாவை வைத்து ஒரு ஏழைத்தம்பதியருக்கு கலியாணமே செய்து வைக்கலாமே? காசு கூடி சனம் தலை, கால் தெரியாமல் ஆடுதுகள்! நன்றாக ஆடட்டும்! கடைசில் எல்லாம் மண்ணுக்குள்தானே போகப்போகிறது! :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

ஏன்னப்பா இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் இது எங்களுக்கு இப்ப முக்கியமான செய்தியோ? நாங்கள் இதுக்கு இப்படி கடிபடுகிறோமே எப்பாவாவது ஐஸ்வர்யா எமக்காக ஒரு சொல்லாவது பேசியிருப்பாவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா விரைவில் ஒரு வல்லரசாகப்போகின்றது.

Link to comment
Share on other sites

இந்தியா விரைவில் ஒரு வல்லரசாகப்போகின்றது.

எப்படிச் சொல்கின்றீர்கள்? ஐசு திருமணத்திற்கும் இந்தியா வள் அரசு ஆவதற்கும் என்ன சம்மந்தம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

19-ந் தேதி சூரிய கிரகணம்: ஐஸ்வர்யாராய் திருமண தேதி மாற்றப்படுமா?

03ishim0.jpg

இந்தியா முழுவதும் பலத்த எதிர்பார்ப்புகளை கிளப்பி இருக்கும் ஐஸ்வர்யாராய் -அபிஷேக் பச்சன் திருமணத்தை ஜோத்பூரில் உள்ள உமைத்பவன் அரண்மனையில் வருகிற 19-ந் தேதி நடத்த தடபுடலான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் குர்லி, இந்திய தொழில் அதிபர் அருண்நாயர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் இங்கு பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

15 வருட கடின உழைப்பிற்கு பிறகு 347 அறைகளுடன் பிரம்மாண்டமாக 1943-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. உமித்பவன் அரண்மனை. 26 ஏக்கரில் அழகிய தோட்டத்திற்கு நடுவே பறந்துவிரிந்திருக்கும் இந்த பிரம்மாண்ட அரண்மனை இந்திய கட்டிடக்கலையை உலக அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜுலி இந்தியா வந்தபோது இதன் சிறப்பை கேள்விப்பட்டு ஆசை ஆசையாக இங்கு வந்து தங்கிவிட்டு போனார்.

இரண்டு நட்சத்திர திருமணம் சிலநாள் இடைவெளியில் இந்த அரண்மனையில்நடக்க உள்ளதால் உமித்பவன் வழக்கத்தை விட அதிகமாககளை கட்டத் தொடங்கியிருக்கிறது.

தனது உதவியாளர்கள் குழுவை ஜோத்பூருக்கு அனுப்பி அங்கு திருமண ஏற்பாடுகளை அமிதாப் கவனித்து வருகிறாராம். அவர்கள் முதல்கட்டமாக திருமணத்திற்கு வரும் அமிதாப்பின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக நட்சத்திர ஓட்டல்களில் அறை களை `புக்'செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் இது சுற்றுலா சீசன் என்பதால் தேவையான அறைகள் கிடைப்பது சிரமமாக உள்ளது. எனவே அமிதாப் உதவியாளர்கள் ஜோத்பூர் அருகில் உள்ள ஜெய்சால்மருக்கு சென்றும் அறைகளை புக் செய்து வருகிறார்களாம்.

இந்த தடபுடல் ஏற்பாடுகள் ஒருபுறம் இருக்க திருமண தேதியையும், திருமணம் நடக்கும் இடத்தையும் மாற்ற அமிதாப் குடும்பத்துக்கு நெருக்கமான சில ஜோதிடர்கள் ஆலோசனை கூறி வருகிறார்கள்.

``வருகிற 19-ந் தேதி சூரிய கிரகணம் தவிரவும் அன்று அமாவாசை வேறு. எனவே அன்று திருமணம் நடத்துவது நல்லதல்ல. 20-ந் தேதி நாள் மிகவும் நன்றாக உள்ளது. எனவே அந்த தேதிக்கு திருமணத்தை மாற்றுங்கள்.

மேலும் அரண்மனை, கோட்டை போன்றவை திருமணம் நடத்துவதற்கு உகந்த இடம் கிடையாது. எனவே ஜோத்பூர் அரண்மனைக்கு பதிலாக வேறு கட்டிடத்தை தேர்ந்தெடுங்கள்'' என்று அவர்கள் அமிதாப்பிடம் ஆலோசனை கூறி வருகிறார்கள்.

இதற்கிடையே அமிதாப்பின் நெருங்கிய நண்பரான அமர்சிங் இந்த நட்சத்திர திருமணத்தை உத்திரபிரதேச மாநிலத்தில் நடத்த வேண்டும் என்று அமிதாப்பச்சனிடம் கேட்டு வருகிறாராம்.

http://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மும்பையில் உள்ள வீட்டில் அபிஷேக்- ஐஸ்வர்யாராய்க்கு ஏப்ரல் 18-ந் தேதி திருமணம்: டெல்லியில் வரவேற்பு விழா

மும்பை, மார்ச். 17-

பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயும் தீவிரமாக காதலித்து வந்தனர். இருவருக்கும் திருமணம் நடத்த கடந்த மாதம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

அபிஷேக்- ஐஸ்வர்யாராய் திருமணம் எப்போது, எங்கு நடைபெறும் என்ற விபரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர், ஜோத்பூர் அரண்மனையில் திருமணம் நடத்தப்படலாம் என்று முதலில் தகவல்கள் வெளியானது. ஆனால் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யாராய் திருமணம் நடைபெறும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள அமிதாப்பச்சனின் வீட்டில் திருமணம் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. அமிதாப்பச்சனின் தாய் தேஜி பச்சன் உடல் நலம் இல் லாமல் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே திருமணத்தை இனியும் தள்ளிப்போடாமல் நடத்தி விட அமிதாப்பச்சன் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அபிஷேக் பச்சன் தற்போது திரோணா எனும் படத்திலும் ஐஸ்வர்யாராய் அக்பர் ஜோதா எனும் படத்திலும் நடித்து வருகிறார்கள். திருமணத்தை கருத்தில் கொண்டு இருவரும் இந்த மாத இறுதியில் சூட்டிங்கை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

அபிஷேக்- ஐஸ்வர்யாராய் திருமணத்துக்கு முக்கிய உறவினர்களை மட்டும் அழைக்க தீர்மானித்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு மும்பை, டெல்லியில் வரவேற்பு நிகழ்ச் சிகளை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அபிஷேக்- ஐஸ்வர்யாராய் திருமணத்தை பிரத்யோகமாக படம் பிடிக்க வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அமிதாப்பச்சனிடம் பல கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.

மாலைமலர்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அபிஷேக் ஐஸ்வர்யாவுக்கு ஏப்ரல் 20ம் தேதி திருமணம்

மும்பை: பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராயின் திருமணம் ஏப்ரல் 20ம் தேதி நடக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களது நிச்சயதார்த்தம் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது. திருமணம் எப்போது என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் அமிதாப் பச்சன் தரப்பிலோ, ஐஸ்வர்யா தரப்பிலோ வெளியிடப்படவில்லை. ஆனால், பல்வேறு யூக செய்திகள் மட்டும் தினந்தோறும் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் இவர்களது திருமணம் ஏப்ரல் 20ம் தேதி நடக்கலாம். அபிஷேக் பச்சன் தற்போது, "துரோணா' என்ற படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார். அதே போல் ஐஸ்வர்யாவும், "ஜோதா அக்பர்' என்ற படப்பிடிப்பில் உள்ளார். அமிதாப் பச்சனின் தாயார் தற்போது உடல்நலம் குன்றி உள்ளதால் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி!

நான் ஏப்ரல் 01ந் தேதியோவென்று நினைச்சிட்டன். சீச்சீ அப்படியெல்லாம்

இருக்காது இல்லையாக்கா?. :lol::lol:

Link to comment
Share on other sites

சகோதரி!

நான் ஏப்ரல் 01ந் தேதியோவென்று நினைச்சிட்டன். சீச்சீ அப்படியெல்லாம்

இருக்காது இல்லையாக்கா?. :lol::lol:

அப்ப நம்ம யாழ்மாப்புக்கு கல்யாணம்

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபிஷேக் ஐஸ் சிறப்பான மணவாழ்வுக்காக சூடான பாலில் குளித்த வாரணாசி சாமியாடி

fpn03pf0.jpg

வாரணாசி: அபிஷேக் ஐஸ்வர்யா ஜோடியின் திருமண வாழ்க்கை சந்தோசமாக அமைவதற்காக உ.பி.,யில் ஒருவர் சூடான பாலில் குளியல் போட்டு கடவுளிடம் வேண்டினார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் மகன் அபிஷேக் பச்சனுக்கும், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தங்கள் திருமண வாழ்க்கை நல்லபடியாக அமைவதற்காக அவர்கள் இருவரும் பல்வேறு கோவில்களில் பூஜை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், உத்தர பிரதேசம் வாரணாசியில் வித்தியாசமான வேண்டுதல் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாரணாசி சிவ்பூர் பகுதியை சேர்ந்தவர் பானி பகத் (50). இவரது முன்னோர்கள் சப்தசாகர் என்ற இடத்தில் உள்ள துர்கா கோவிலில் சாமியாடி வந்தனர். தற்போது பானி பகத்தும் சாமியாடி வருகிறார். சாமியாடுபவர் உடலில் துர்கா தேவி தங்கி இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, ஆண்டுதோறும் நடக்கும் பூஜையின்போது சாமியாடுபவர் மீது கொதிக்கும் பாலை அபிஷேகம் செய்தால் துர்கா தேவிக்கே அபிஷேகம் செய்வதாகவும் அதன் மூலமாக நினைத்த காரியம் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை. அதன்படி துர்கா கோவிலில் தற்போது சாமியாடி வரும் பகத் மீது சூடான பாலை ஊற்றி மக்கள் பிரார்த்தøனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கோவில் விழாவில் அபிஷேக் ஐஸ் தம்பதி வளமுடன் வாழ்வதற்காக நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது, துர்கா தேவியின் அருளை பெற்று சாமியாடிக் கொண்டிருந்த பகத் மீது சூடான பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். சிறப்பு பூஜையுடன் மேள தாளங்கள் முழங்க நெய் மற்றும் பாலாடை போன்றவையும் பகத் மீது ஊற்றி துர்கா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இது குறித்து பகத் கூறுகையில், ""துர்கா தேவியின் அருளை பெறுவதற்காக எனது முன்னோர்கள் காலம் முதலே கடந்த அறுநுõறு ஆண்டுகளாக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இதற்கு "குவால்பால் பூஜை' என்று பெயர். இந்த பூஜை மூலமாக சொத்து, குழந்தைகள் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான வசதிகள் மட்டுமன்றி கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையும் கிடைக்கும்,'' என்றார்.

சிறப்பு பூஜைக்கான விழா அமைப்பாளர் ஒருவர் கூறுகையில், ""பானி பகத் மற்றும் சிலர் ஒட்டு மொத்த தேசத்தின் சுபிட்சத்துக்காக சூடான பால் அபிஷேகம் நடத்தி வருகின்றனர். அபிஷேக் ஐஸ்வர்யா திருமணத்துக்காக இந்த ஆண்டு கூடுதலாக ஒரு பூஜை நடத்தி தருமாறு நாங்கள் கேட்டு கொண்டோம்,'' என்றார்.

தினமலர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாரணாசி: அபிஷேக் ஐஸ்வர்யா ஜோடியின் திருமண வாழ்க்கை சந்தோசமாக அமைவதற்காக உ.பி.,யில் ஒருவர் சூடான பாலில் குளியல் போட்டு கடவுளிடம் வேண்டினார்.

இதற்கு "குவால்பால் பூஜை' என்று பெயர். இந்த பூஜை மூலமாக சொத்து, குழந்தைகள் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான வசதிகள் மட்டுமன்றி கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையும் கிடைக்கும்

சாப்பாட்டு கடினப்படுகிற குழந்தைகளுக்கு இந்தப்பாலைக் குடுத்தால் ஒரு வேளை புண்ணியமாக இருக்கும். நடிகைமார்கள் இப்ப சேருவினம். நாளை விவகாரத்து.

Link to comment
Share on other sites

சாப்பாட்டு கடினப்படுகிற குழந்தைகளுக்கு இந்தப்பாலைக் குடுத்தால் ஒரு வேளை புண்ணியமாக இருக்கும். நடிகைமார்கள் இப்ப சேருவினம். நாளை விவகாரத்து.

எவ்வளவு பெரிய உண்மையை சொல்லிவிட்டு குந்தி கொண்டு இருக்கிறார் கந்தப்பு,யூ ஆர் கிரேட்

:P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்வர்யா திருமணத்தில் மாஜி காதலர்கள்

high1md3.jpg

மும்பை, ஏப்.5: ஐஸ்வர்யா ராய் திருமண விழாவில் அவரது மாஜி காதலர்களான நடிகர்கள் சல்மான் கான், விவேக் ஓபராய் கலந்துகொள்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராய் & அபிஷேக் பச்சன் திருமணம் வரும் 20ம் தேதி மும்பையில் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள அவரது முன்னாள் காதலர்கள் சல்மான் கான், விவேக் ஓபராய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன் நேரில் சந்தித்து அவர்களை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் சினிமாவில் அறிமுகமானதும் சல்மான் கானை காதலித்து வந்தார். விவேக் ஓபராயுடன் ஐஸ்வர்யா சேர்ந்து நடித்தபோது சல்மான் கோபம் அடைந்தார். இதையடுத்து விவேக்கை அவர் மிரட்டினார். மற்ற நடிகர்களையும் சல்மான் மிரட்டி வந்தார். இதனால் ஐஸ்வர்யா அவரை விட்டுப் பிரிந்தார்.

பின் விவேக் ஓபராயை காதலித்தார். ஐஸ்வர்யாவை திருமணம் செய்யப்போவதாக விவேக் அறிவித்தார். ஆனால் இந்த காதலும் நிலைக்கவில்லை.

இப்போது அபிஷேக்&ஐஸ்வர்யா திருமணத்தில் சல்மான், விவேக்கை அழைத்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அபிஷேக் பச்சனின் நண்பர்கள் என்பதால் திருமணத்துக்கு வருவார்கள் என தெரிகிறது.

தினகரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்வர்யாராய் திருமண நாளில் நடிகை கத்ரினாவை மணக்கிறார் சல்மான்கான்

இப்போதெல்லாம் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நிஜகாதலில் பரபரப்பும் பதபதைப்பும் இருக்கின்றன.

காதலியால் கைவிடப்பட்ட காதலன் தன் காதலி வேறு ஒருவனுக்கு மாலை சூடும் அதே நாளில்தன் அத்தை மகளையோ மாமனம் மகளையோ அவசர அவசரமாக திருமணம் செய்து அந்த காதலியிடம் தனது வீராப்பைக் காட்டும் காட்சிகளை திரைப்படங்களில் பார்த்திருப்போம். இதோ அந்த காட்சிகளையெல்லாம் நிஜத்திலேயே ஐஸ்வர்யாராய் விஷயத்தில் அரங்கேறப் போகின்றன.

தன் முதல் காதலன் சல்மான் கானின் நினைவுகளிலிருந்து முழுமையாக மீண்டு தனது மூன்றாவது காதலன் அபிஷேக் பச்சனோடு கரம் கோர்க்க காத்திருக்கின்றார் பாலிவுட்டின் பரபரப்பு தேவதை ஐஸ்வர்யாராய்.

ஆனால் ஐஸ்வர்யாராய் நினைவுகளிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை சல்மான் கான். அவர் கொடுத்த காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தி இன்று வரை சல்மானிடம் காணப்படுகிறது.

ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சனுடன் நெருங்கி பழகி வலம் வருவதைப் பார்த்து பொருமிய சல்மான்கான், இந்த காதலுக்கு பதிலடி கொடுக்க அவசர அவசரமாக காதலி தேடினார். பல பாலிவுட் நடிகைகள் சல்மானின் முரட் டுத்தனத்தைக் கேள்விப்பட்டு ஒதுங்கி விட கவர்ச்சிப் புயல் கத்ரினாகைப் மட்டும் சல்மானின் காதல் வலையில் விழுந்தார்.

சமீபத்தில் மும்பையில் நடந்த சினிமா விருது வழங்கும் விழாவில் ஐஸ்வர் யாராயும்-அபிஷேக் பச்சனும் மேடையில் ஜோடியாக சிறிது நேரம் நின்று தங்களது மண மேடை வைபவங்களுக்கு ஒத்திகை பார்த்தனர். இதைப் பார்த்து பொருக்க முடியாத சல்மான்கான் உடனே தனது புதிய காதலியை அருகில் அழைத்தார். சம்பந்தமே இல்லாமல் மேடையில் கத்ரினாவுடன் வலம் வந்து ஐஸ்வர்யாராயின் ரியாக் ஷனை உன்னிப்பாக கவனித் தார். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தனது பழைய காதலுக்கு பதிலடி கொடுத்து வரும் சல்மான்கான் திரு மணம் விஷயத்திலும் விடப் போவதில்லையாம்.

மும்பையில் ஐஸ்வர்யாராய் திருமணம் நடக்கும் அதே ஏப்ரல் 20-ந் தேதி அதே மும் பையில் கத்ரினாகைப்பை மணக்க திட்டமிட்டுள்ளார் சல்மான்கான்.

திருமணம் செய்து கொள்ளாமல் சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும் சல்மான்கானால் கலக்க மடைந்திருந்த அவ ரது பெற்றோர்கள் இந்த திடீர் திருமண முடிவால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு பக்கம் ஐஸ்வர்யா-அபிஷேக் பச்சன் திருமண ஏற்பாடுகள் தடபுலாக நடந்து வர மறுபக்கம் சல்மான்கான் - கத்ரினாகைப் திருமண ஏற்பாடுகள் தீவிர மடைந்துள்ளன.

இதற்கிடையே ஐஸ்வர் யாராய் திருமணத்தை பற்றி தினம் தினம் சுவாரஸ்யமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. வருகிற 20-ந் தேதி மும்பையில் உள்ள அமிதாப்பச்சனின் ஜ×கு பங்களாவில் இந்த திரும ணம் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு அபிஷேக் - ஐஸ்வர்யாராய் கழுத்தில் தாலி கட்டுகிறாராம். வட நாட்டு திருமணங்களில் முக்கிய சடங்காக இடம் பெறுவது மெகந்தி (மருதாணி) பூசுதல் வைபவம் மணமகளின் கை, கால்களில் மருதாணி பூசி அலங்கரிப்பார்கள். ஐஸ்வர் யாராய் திருமண மெகந்தி விழாவுக்காக ராஜஸ்தான் மாநி லம் சோஜத் என்ற இடத்தில் இருந்து உயர்தர மருதாணி 15 கிலோ வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாம். சோஜத்தான் இந்தியாவிலேயே மருதாணி விளைச்சலுக்கு அதிக புகழ் பெற்ற இடம்.

இந்த திருமணத்திற்கு வி.வி.ஐ.பி.க்கள் அழைக்கப்பட் டிருப்பதால் அவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்து வருகிறார் அமிதாப். இதற்காக முறைப்படி அவர் வீட்டிற்கு அருகே உள்ள காவல் நிலையத்தை அனுகி யுள்ளாராம்.

திருமணத்தன்று வி.வி.ஐ. பி.க்களுக்கு, பாதுகாப்பு கொடுக்கவும் வீட்டிற்கு வெளியே திரண்டிருக்கும் பெரும் கூட்டத்தை கட்டுப்படுத் தவும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.

மாலைமலர்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ் திருமணத்தில் நடனம்

மும்பை, ஏப்.18: அபிஷேக்&ஐஸ்வர்யா திருமணத்தில் ஹிருத்திக் ரோஷன் நடனம் ஆடுகிறார்.

'தூம்-2' இந்தி படத்தில் அபிஷேக்குடன் ஐஸ்வர்யா ராய், ஹிருத்திக் ரோஷனும் நடித்திருந்தனர். இப்படத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஹிருத்திக் முத்தம் அளிப்பது போல காட்சி இருந்தது. இதனால் அமிதாப் குடும்பத்தார் கோபம் அடைந்தனர். பின் அந்தக் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டது. இதனால் ஹிருத்திக்-அபிஷேக் இடையே பிரச்னை எனக் கூறப்பட்டது.

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா திருமணம் வெள்ளிக்கிழமை நடக்கிறது. மும்பை ஜுஹே பகுதியிலுள்ள அமிதாப் வீட்டில் இந்த திருமண விழா நடைபெறும். இதில் ஹிருத்திக் ரோஷன் நடனம் ஆடுவதாகக் கூறப்படுகிறது.

இதே போல 'கஜுராரே' என்ற பாடலுக்கு மணமக்களான ஐஸ்வர்யா, அபிஷேக் நடனமாட உள்ளனர். 'பீடி ஜலாய்லே' என்ற பிபாஷா பாசு நடித்த பாடலுக்கு அமிதாப் குடும்பத்தார் நடனம் ஆடுகின்றனர்.

தினகரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மும்பையில் வரலாறு காணாத பாதுகாப்பு கெடுபிடி ஐஸ்வர்யா-அபிஷேக் இன்று திருமணம் 100 பேருக்கு மட்டுமே அழைப்பு திரையுலகினர் ஏமாற்றம் 500 போலீஸ் குவிப்பு

topnewsqk9.jpg

மும்பை, ஏப்.20: வெள்ளித்திரை நட்சத்திரங்கள் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் மும்பையில் இன்று கோலாகலமாக திருமணம் நடக்கிறது. இதில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என முக்கியமான 100 பேருக்கு மட்டும் அமிதாப் அழைப்பு விடுத்துள்ளார். திருமணத்துக்காக மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜூஹ§ கடற்கரைப் பகுதியில் உள்ள அமிதாப்பின் வீட்டைச்சுற்றி போக்குவரத்தில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக்கும், நடிகை ஐஸ்வர்யா ராயும் காதலித்து வந்தனர். இதற்கு இருவரின் பெற்றோர்களும் பச்சைக்கொடி காட்டினர். ஆனால், ஐஸ்வர்யா ராயின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதாகவும், இதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் ஜோதிடர்கள் அறிவுரை கூறினர். இதன்படி, நாடு முழுவதும் பல்வேறு கோயில்களுக்கு சென்று தோஷ நிவாரண பூஜைகளில் ஐஸ்வர்யா ராய் ஈடுபட்டார். வருங்கால மருமகளுடன் அமிதாப் குடும்பத்தினரும் இந்த பூஜைகளில் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 20ல் திருமணம் நடத்துவது என்று தேதி குறிக்கப்பட்டது. திருமணத்தை 3 நாட்களாக நடத்துவது என்று அமிதாப் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதன்படி கடந்த சில நாட்களாக மும்பையின் ஜூஹே கடற்கரைப் பகுதியில் உள்ள அமிதாப் பச்சனின் 'பிரதீக்ஷா' வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. திருமணத்துக்கு 'பிரதீக்ஷா' வீடு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம், இது ராசியான வீடு என்று அமிதாப் பச்சன் குடும்பத்தினர் கருதுவது தான். இந்த வீட்டில் தான், இவர்களது குடும்பத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்துள்ளன.

இதனால் தான் 'ஜல்சா' வீட்டுக்கு பதிலாக இந்த வீட்டையே திருமணத்துக்கு அமிதாப் குடும்பத்தினர் தேர்ந்தெடுத்துள்ளனர்.

மாலையில் திருமணம்: 'பிரதீக்ஷா' வீட்டில் இன்று மாலை 5 முதல் 6.30 மணிக்குள் இந்து முறைப்படி அபிஷேக் - ஐஸ்வர்யா திருமணம் நடக்கிறது. திருமண விழா நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக பாரம்பரிய இசை விருந்து நிகழ்ச்சி நடந்தது.

இதில், அமிதாப்பின் நெருங்கிய நண்பர் அனில் அம்பானி, சுப்ரதோ ராய், மனோஜ் தேசாய் மற்றும் நீது கபூர், இந்தி திரைப்பட பிரபலங்கள் பிரேம் சோப்ரா, அஜய் தேவ்கன், ப்ரீத்தி ஜிந்தா, கிரண் கேர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து மணமகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் மருதாணி வைக்கும் விழா நேற்று மாலை நடந்தது. இதில் மணமக்களின் முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்காக பந்தாராவில் உள்ள ஐஸ்வர்யாவின் வீட்டில் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது.

ரசிகர்கள் ஆர்வம்: அபிஷேக் - ஐஸ்வர்யா திருமணத்துக்காக வரலாறு காணாத வகையில் மும்பையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதீக்ஷா வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு அடிக்கு ஒரு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தங்களது அபிமான நட்சத்திர ஜோடியின் திருமண நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக, ரசிகர்கள் வீட்டுக்கு வெளியே குவிந்துள்ளனர். ஒவ்வொரு முறை 'பிரதீக்ஷா' கதவுகள் திறக்கும்போதும், உள்ளே என்ன நடக்கிறது என்று ரசிகர்கள் எட்டிப்பார்த்தபடி இருந்தனர்.

100 பேருக்கு மட்டுமே அழைப்பு: திருமண நிகழ்ச்சியில் உ.பி. முதல்வர் முலாயம் சிங், பால்தாக்கரே, சஞ்சய் தத், அனில் அம்பானி, இவரது மனைவி டினா, சச்சின் டெண்டுல்கர் உட்பட மிக முக்கியமான 100 பேருக்கு மட்டுமே அமிதாப் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தி திரைப்பட உலகத்தைச் சேர்ந்த முக்கியமான பல நடிகை, நடிகைகளுக்கும் கூட இந்த திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அமிதாப்பின் வீட்டிலேயே திருமணம் நடப்பதால், அதிகம் பேருக்கு அழைப்பு விடுத்தால் நெரிசல் ஏற்படும் என்று கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமிதாப்பின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்தில் மாற்றம்:அபிஷேக்&ஐஸ்வர்யா திருமணம் 5 மணி முதல் 6.30 மணிக்குள் நடக்கவுள்ளது. மணமகன் அபிஷேக் 5.15 மணிக்கு தன்னுடைய 'ஜல்சா' இல்லத்தில் இருந்து திருமணம் நடக்கும் 'பிரதீக்ஷா' வீட்டுக்கு புறப்படுகிறார். இந்த நேரத்தில் மணமகனை பார்ப்பதற்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் சேரும் என்பதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஓவியர் ஹ¨சேன் பரிசு: அபிஷேக் - ஐஸ்வர்யா ராய் திருமணத்துக்காக ஓவியர் எம்.எப்.ஹ¨சேன் சிறப்பு ஓவியம் ஒன்றை வரைந்து அவர்களுக்கு பரிசு அளித்துள்ளார். இந்த ஓவியத்தில், காதலி சம்யுக்தையை குதிரையில் கடத்திச்செல்லும் பிருத்விராஜை போல், ஐஸ்வர்யா ராயை அபிஷேக் குதிரையில் கடத்திச் செல்வதுபோல் ஓவியர் ஹ¨சேன் வரைந்துள்ளார். இந்த அன்பு பரிசால் அமிதாப் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஓவியர் ஹ¨சேன் வரையும் ஓவியங்கள் ஒன்றும் கோடிக்கணக்கான ரூபாய் விலைபோவது குறிப்பிடத்தக்கது.

போலி அபிஷேக் பரபரப்பு: அபிஷேக்கை போன்று தோற்றம் கொண்ட ஒரு விளம்பர மாடல் நடிகரை கொண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்று ஐஸ்வர்யா ராய் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பையில் விளம்பர படங்களில் நடித்து வருபவர் தேவிசிங் புரோகித் (24). இவர் நடிகர் அபிஷேக்கை போலவே இருப்பார். இவருக்கு விலை உயர்ந்த கோட், சூட்டை அணிவித்து, விலை உயர்ந்த காரில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் பந்தராவில் உள்ள ஐஸ்வர்யா ராயின் வீட்டுக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைத்தது.

மணமகன் அபிஷேக் தான் வந்துவிட்டார் என்று ஐஸ்வர்யா வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் தேவிசிங்கே உண்மையை கூறி, ஐஸ்வர்யா ராய்க்கு மலர்கொத்து கொடுத்து, வாழ்த்து கூறினார்.

கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி தேவிசிங் எப்படி ஐஸ்வர்யா ராயின் குடியிருப்புக்கு வந்தார் என்பது குறித்து ரகசிய விசாரணை நடந்து வருகிறது.

தினகரன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
    • சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் மிஸ்ர‌ர் க‌ட்ட‌த்துரை🙏🥰...........................
    • 😔 ம்ம்ம்ம் குதிரையை குளம் வரை கூட்டிப்போகலாம், நீரை அதுதான் குடிக்க வேண்டும்.
    • நியூயோர்க் பங்கு சந்தை வெள்ளி 4 மணிக்கு மூட, சில options, swaps நடந்தேறிய பின், திங்கள் 8 EST க்கு முதல் எதாவது எதிர்வினை காட்டப்படலாம் என்கிறனர் சிலர். மீள நேற்று நான் எழுதியபோது சரிய தொடங்கிய எண்ணை 82 இல் தரித்து நிற்கிறது. சந்தை தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை என நினைத்தால் 76 க்கு வந்திருக்கும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.