Jump to content

பெண்களுக்கு மட்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள்மறுப்பு மட்டும்தான் உங்கள் பிரச்சாரம் போல்த்தெரியவில்லை, மததூஸிப்பும் சேர்ந்தே வருகிறது என்றே நினைக்கின்றேன்.

பல இலட்ச்சம் யூதர்கள் யேர்மனியர்களால் வேடையாடப் பட்டனர் யுத்தகாலத்தில்.

இந்தப்பழியை அந்த இனத்தின் கையில் ஒப்படைப்பது. பௌகுத்தறிவுக்கு உடன்பாடானதா?

கிட்லர் என்பவன் ஒரு யேர்மனியனாக இருந்துவிட்டமை என்பதற்கு அப்பால் குற்றம் பிடிக்க, இன அடிப்படையில் ஏதுமில்லை.

இதுபோலவேதான் சமணர்கள் கொல்லப்பட்டமையும். அந்தக்காலத்தின் மதவாத ஆட்சி மதப்பிணக்கின் தீர்ப்பை அப்படி எழுதிவிட்டது.

இதன் அடிப்படைக்காரணம் இந்துமதத்தின் தூயவிசுவாசமோ, அல்ல அரசியலோ காரணமாய் இருக்கட்டும். மதம்தான் இதைசெய்தது என்பது பையிதியக்காறத்தனம்.

கடவுள்மறுப்பு பிரச்சாரம் செய்யவந்து, சமணசிந்தனைகளை விற்கமுயற்சி செய்வது மேலும் மத உணர்சியைச் சீண்டும் செயல்.

என்ன இருந்தாலும் மற்றெல்லா மதங்களயும் விட மிக அதிகதொகையான பௌகுத்தறிவாளர்களை உற்பத்தி செய்தமயால் இந்து மதம் என்ற கல்லூரி பெருமை அடைகிறது.

எனவே அதற்க்கான பௌக்குவவிதையை விதைத்துத் தருவது இந்து மத நெறிதான் என்பது உண்மையாகிறது.

எனவே பட்டப்படிப்பு முடிந்து வெளியேறினதும் கல்லூரியைத் தூஸிப்பதைத் நிறுத்துங்கள்.

மத உணர்வு இரத்தத்தில் கலந்தது. அதனால்த்தான் மேல்நாடுகளில் அவைபற்றிய விவகாரத்துக்கு தண்டனைகள் அதிகம். ஆனால் நீங்கள் வரைமுறை இல்லாமல் இந்துக்கள் புண்படும் வண்ணம் கருத்தாடி வைத்திருக்கிறீர்கள். அப்போது நீங்கள் பேணும் மனிதத்திடம் விடுப்பில் வந்துதான் செய்தீர்களோ?

உங்களுக்குத்தெரியுமா? விபூதிப் பட்டை போட்ட எத்தனையோபேர் பெரியாரை மிக உயர்வாக மதிக்கிறார்கள். ஏன் என்றால் மெய்ப்பொருள் காணும் பௌக்குவம்தான்.

ஆடைநாகரீகம் ஒரு விவகாரமே இல்லை என்கிறீர்கள்.

தெருக்களின் கண்களுக்கு தேவாமிர்தம் வார்க்கும் ஆடைநாகரிகத்தின் புண்ணியம் என்னவாமோ?

உடம்பில் இடம் தேடித்தருவதற்க்கு அல்ல காதல்.

உயிரில் இடம் பிடிப்பதற்குத்தான் காதல்.

உண்மையான காதலுக்கு இன்பம் என்பது தன் காதலியின் அன்பில் விளைய வைப்பனதான் மற்ற அனைத்தும் தூஸிக்கு சமன்.

அரைவேக்காடுகளையும், மயக்கங்களையும் குற்றங்கள் இலகுவாக ஏப்பம்விடும்.

பின்பு தம் தரத்துக்கு தக்கனவாய் சட்டங்களைத் திருத்தம் செய்யவேண்டும் அதுவே அறிவுடமை என வாதிடுவர்.

காலவளக்கு வளர்த்துத்தந்த ஒழுக்கவிழுமியங்களை மிருகத்தரத்துக்குள்ளே கொண்டேக் கொட்ட ஆசைப்படலாமா?

காதல் என்பது ஒரு மண்ணும் இல்லை ஒரு உணர்வுமட்டும் தான் என்கிறார் ஒருவர் இங்கே.

ஒருவன் தன்உணர்வின் பாதைக்கு இடம்விட்டுக் கொடுத்தால் முடிவு குட்டிச் சுவர்தான் என்பது தெரியாதா?

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவன் அவர்களே! தூயவன் போல் நீங்களும் என்னைத் தவறாக நினைத்து விட்டீர்கள். நான் இங்கு சமணத்தைப் புதுப்பிக்க வரவில்லை. எனது நோக்கமும் அது வல்ல. பகுத்தறிவு, பெண் விடுதலை, மனிதநேயம் எல்லாவற்றுக்கும்மேலாக தமிழ் தேசியத்தையே முன்னிறுத்துகிறேன்.

சைவம், வைணவம், மற்றும் இந்து மதத்தைச் சார்ந்தவர்களின் இலக்கியப் படைப்புக்களில் பக்தி மார்க்கம் மட்டும் தான் காணப் படுகின்றன. ஆனால் சமணத் துறவிகள் மருத்துவம், கணிதம், வானவியல் என பல விடயங்களை உள்ளடக்கிய தமிழ் இலக்கியங்களை படைத்துள்ளனர். தமிழுக்கு அவர்கள் ஆற்றிய பங்கு அளப் பெரியது. சமணத்தை அவர்கள் தங்கள் நூல்களில் விதைக்கவில்லை. சமணம் காதலை மறுக்கிறது. ஆனால் சமணத் துறவி திருத்தக்க தேவரோ காதல் ரசம் கொட்டும் சீவக சிந்தாமணியைக் கொடுத்துள்ளார்.

1800 ஆண்டுகளுக்கு முன் இளங்கோவடிகள் வலியுறுத்திய தமிழ்த்தேசியத்தை இப்பொழுது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது. தமிழில் அதிக இலக்கியங்கள் படைத்தவர்கள் அவர்களே!. அவர்கள் பச்சைத் தமிழர்கள். தமிழை உயிராக எண்ணி வாழ்ந்தவர்கள்.

ஆனால் இந்து மதம் அப்படி அல்ல. அதன் வேதங்களையும் புராணங்களையும் படைத்தவர்கள் தமிழர்களே அல்ல. அது கற்பிதத் தமிழ் துவேசத்தால்தான் தமிழனால் கட்டப் பட்ட கோவில் கருவறைக்குள் தழிழும் நுழைய முடியவில்லை தமிழனும் நுழைய முடியவில்லை. ஏசுநாதருக்கே தமிழில் வழிபாடு நடக்கும்போது கோவிலில் மட்டும் ஏன் வடமொழி?

இந்து மதத்தை அண்ணல் அம்பேத்கார் ஆய்வு செய்த அளவுக்கு வேறு யாரும் செய்யவில்லை. அவர் கூறிய ஒரு வரியைத் தமிழில் தருகிறேன்

"மதங்களில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம் ஆனால் ஏற்றத்தாழ்வுகளே மதமாக இருக்கலாமா? இந்து மதம் அப்படித்தான் இருக்கிறது"

இந்து மதத்தின் லட்சணத்திற்கு இது ஒன்றே போதும்

தமிழனுக்கு சூத்திரப் பட்டம் கட்டிய மதம், தமிழ்பெண்களுக்கு தாசிப் பட்டம் கட்டிய மதம்.

மீண்டும் கூறுகிறேன் சமணத்தின் மீது எனக்கு மதிப்பு உண்டு. மனித நேயத்தை வளர்த்தது. அது மதமல்ல. தத்துவரீதியாக அதில் பலவற்றை ஏற்றுக் கொண்டருக்கிறேன்ஆனால் அதுவல்ல எனது அடையாளம். நாம் தமிழர் அதுவே நமக்கு அடையாளம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கோவடிகளுக்கு மட்டுமல்ல இந்த இளங்கோவுக்கும் அந்தத் தமிழ்தான் அடையாளம் என் உயிரினும் மேலான என் தமிழைத் தூசித்ததால் இந்து மதத்தை வெறுக்கிறேன். எனது உடல் சோர்வையும் மன அழுத்தத்தையும் தீர்ப்பதற்காக நான் போகும் தமிழ் இலக்கியப் பூந்தோட்டத்தில் என்றென்றும் மணம் வீசும் மலர்ச் செடிகளை நட்டதால் சமணத்துறவிகள் மீது நல்ல மதிப்பு இருக்கிறது. அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்துத்துவம் என்று எதைப் பிரிக்கின்றீர் என்று புரியவில்லை. சைவம் இல்லை என்றால் திருமால் வழிபாடான, வைணவத்தையா? அல்லது சக்தி வழிபாட்டையா? அல்லது முருக வழிபாட்டையா? எதை எதிர்ககின்றீர்கள்.

சைவத்தை எதிர்க்கவில்லை என்று சொல்லிக் கொண்டு, கீழே சைவம் சமணர்களைக் கொன்றனர் என்று புதுக் கதை விடுகின்றீர்கள். அது எவ்வாறு உண்மை என்று கேட்டால் வரலாற்று ஆதாரங்கள் ஒன்றையும் உங்களால் காட்ட முடியவில்லை.

கேட்டால் சம்பந்தர் பாடிய பாடலைத் திரிக்கின்றீர்கள். அப்பாடலில் செய்ய வேண்டும் என்ற கோபத்தில் சொல்கின்றாரே தவிர, செய்தனார் என்று காட்டமுடியாது. இப்போது கூட எம் மக்கள் தமிழனைக் கொல்கின்ற சிங்களவனை வெட்டிப் பொசுக்க வேண்டும் என்று குழுறுகின்றனர். அதற்காக அவ்வாறு நடந்ததாக ஆக முடியுமா? கழுமரம் ஏற்றிக் கொன்றதாகச் சமணப்பித்தர்கள் சொல்லக் காரணம், அவர்கள் சமணத்தை இந்தியா முழுக்க பரப்பி, சிறிய காலத்திலேயே அந்த மாயைக்குள் இருந்து மக்கள் விழித்தெழுந்தமையைப் பொறுக்கமுடியாமையிலாகும். தங்களின் மதம் தோல்வியுற்றதைப் பொறுக்க முடியாத சமண வெறியர்கள் இந்து மதம் மீது அவதூறைப் பரப்பி சுகம் காணுகின்றனர் அவ்வளவே!

கருணாநிதி முகவுரை கொடுத்த நூல் ஒன்றை இங்கே இணைத்தார்கள். நானும் தங்களின் மதத்தைப் பற்றி ஏதும் சொல்கின்றார்களோ என்று பார்த்தால் அது வெறுமனே இந்து மதத்தை திட்டித் தீர்க்க மட்டுமே பாவிக்கப்பட்டிருந்தது. மற்றவர்களைத் திடடித் தீர்ப்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களின் கொள்கை எவ்வாறு சமுதாயத்தில் எடுபடாமல் போனது என்பதை இப்போது தான் புரிந்து கொள்ள முடிகின்றது. இதைத் தான் நாஸ்திகம் கதைப்பவர்களும் செய்தார்கள். அதனால் தான் கடைசியில் நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனரோ என்னவோ!

சமணர்களைக் கழு ஏற்றிக் கொன்றனர், என்று அடிக்கடி கண்ணீர் விடுவதன் மூலம் அது உண்மையாகி விடாது நண்பரே.என்ன செய்வது தோற்றுப் போன கொள்கை என்று சொல்ல அவமானமாகத் தான் இருக்கும்.

முட்டாள்தனமான எந்தக் கொள்கைகளுக்கும் பகுத்தறிவு என்று பெயர் சூட்டலாம். பெயரில் என்ன இருக்கின்றது. ஆனால் மற்றவர்களை முட்டாள் என்றும், நீங்கள் மேதாவிகள் என்று கருதிக் கொண்டு திரிந்தால் மூக்குடைபடப் போவது நிச்சயம்.

பகுத்தறிவு என்ற பெயரில் கொள்கையில்லாத, வெட்டிப் பேச்சுக்களை கொட்டிக் கொண்டு இருப்பதில் பிரியோசம் ஏதுமில்லை. பணத்தாலும் துன்பத்தாலும் பாதிக்கப்படாத உயர்தட்டு வர்க்கங்களுக்கு தான் அந்த வெட்டிப் பேச்சு உதவும்.

அவ்வாறே பகுத்தறிவு என்ன என்று கதை விடுவதை விட, ஏழைகளுக்கு நாலு காசு செலவளிப்பேன் என்று சிந்திப்பதும் நல்லது. இன்றைக்குப் பகுத்தறிவு கதைத்த எவன் தன் சொந்தக் காசை மக்களுக்குச் செலவளித்திருக்கின்றான். தன் பெயர் அடிபடவும், பெருமை பேசவும் மட்டுமே தானே காசைச் செலவளிக்கின்றான்.

" நாங்கள் எல்லாம் பகுத்தறிவு வாதிகள். எங்கள் வேலை மதங்களைத் திட்டித் தீர்ப்பது." திருக்குறள் போல 2 வரிக்குள் கொள்கயை அடக்கியாச்சு. ஆனால் அர்த்தம் தேடினால் ஒரு வரி கூட வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தேவன் அவர்களே! தூயவன் போல் நீங்களும் என்னைத் தவறாக நினைத்து விட்டீர்கள். நான் இங்கு சமணத்தைப் புதுப்பிக்க வரவில்லை. எனது நோக்கமும் அது வல்ல. பகுத்தறிவு, பெண் விடுதலை, மனிதநேயம் எல்லாவற்றுக்கும்மேலாக தமிழ் தேசியத்தையே முன்னிறுத்துகிறேன்.
இதில் தான் உங்கள் மீது எனக்குச் சந்தேகம் இருக்கின்றது. உண்மையில் தமிழ் தேசியத்தை நிறுத்தும் பாணியாகத் தெரியவில்லை. தொல்காப்பியத்தில் இருந்து சனாதானதர்ம வழிபாட்டு முறைகளும், அக்காலத்தில் மக்கள் வழிபட்ட முறைகளும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.தமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் எழுதிய இந்தக் கருத்துக்களை இன்றுதான் எனக்கு படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வார்த்தைகளை அநாகரிகமாக விடாமல் கருத்தைக் கருத்தோடு எதிர்த்த விதம் பாராட்டுக்குரியது . இதுதான் நல்ல விவாதம் இப்படியே தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களைப் பொறுத்தவரை இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் போல் பௌத்தம் மற்றும் சமணமும் தமிழர்களுக்கு அந்நிய மதம்தான். பண்டைய தமிழர்களின் வழிபாடு இயற்கையோடு இணைந்திருந்ததேயன்றி மதப்பேதங்கள் இருக்கவில்லை என்பதை சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. அதிலும் குறிப்பாக போரில் வீரமரணம் அடைந்தவர்களையோ அல்லது

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்

எனும் வள்ளுவரின் வாக்குப் படி நல்ல முறையில் வாழ்ந்து மடிந்த தம் முன்னோர்களையோ வணங்கும் நடுகல் முறையே பரவலாகக் கணப்பட்டது. சமணம் மற்றும் பௌத்தத்துக்கு முன் கி.மு. 15 ஆம் நூற்றாண்டளவில் மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து ஹைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர் பண்பாட்டு படை எடுப்பாளர்களான ஆரியர்கள். இவர்களின் வருகையால் ஏற்கனவே சிந்து சமவெளி நாகரிகத்தை அமைத்து மேம்பாட்டுடன் வாழ்ந்த திராவிடர்களின் பண்பாடும் நாகரிகமும் சிதைவுற்றது. ஆரியர்களின் வரவுக்குப் பின் அவர்களின் வேதமதமாகிய ஆரிய மதம் பரவத் தொடங்கியது. பிறப்பினால் ஏற்றத் தாழ்வுகளையும் யாகமெனும் பெயரில் உயிர்க்கொலைகளையும் நியாயப் படுத்திய இம்மதம் திராவிட மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது. ஆரிய திராவிட மோதல்கள் அக்காலத்தில் ஏராளமாக நடந்திருக்கின்றன. தமிழுலகத்தை எடுத்துக்கொண்டால் பண்டைய தமிழிலக்கியங்களில் ஆரிய எதிர்ப்புக்கள் கணிசமாகவே காணப் படுகின்றன. இவ்வேளையில் மனிதநேயமே சிறந்தது, உயிர்க் கொலை கூடாது, மனிதரில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிப்பது கயமைத்தனம் போன்ற உயரிய கோட்பாடுகளுடன் உருவாகிய சமணமும் பௌத்தம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. பௌத்தத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தர் திராவிட இனத்தில் தோன்றிய ஆரிய எதிர்ப்பாளரே, இவர் தமிழ் படித்தார் என்பதை வடமொழி நூலான "லலித விஸ்தரம்" கூறுகிறது. வடநாட்டில் செல்வாக்குப் பெற்ற பௌத்தம் தென்னாட்டிலும் பரவியது ஏற்கனவே வைதீகப் புரட்டல்களால் வெறுப்புற்றிருந்த தமிழர்களை சமணமும் பௌத்தம் வெகுவாகக் கவர்ந்தன. பெருவாரியான தமிழர்கள் அவைகளைத் தழுவிக் கொண்டார்கள்.

Link to comment
Share on other sites

சொல்லுறன் எண்டு கோவிக்காதீங்கோ ஏன் தலைப்புக்கு பொருத்தமில்லாமல் கதைப்பதுடன் ஒரே விடயத்தை எல்லா தலைப்பிலயும் கதைக்கிறியள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் ரசிகை !

துயவனுக்கு பதில் சொல்ல நேர்ந்ததால் அப்படி ஆகிவிட்டது. மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்பதால் நானும் பதில் அளிக்க வேண்டியுள்ளது.

உங்கள் ஆதங்கம் நியாயமானதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுறன் எண்டு கோவிக்காதீங்கோ ஏன் தலைப்புக்கு பொருத்தமில்லாமல் கதைப்பதுடன் ஒரே விடயத்தை எல்லா தலைப்பிலயும் கதைக்கிறியள் :lol:

இதற்கு காரணம் நான் அல்ல ரசிகையக்கா. இங்கே பெரியார் வெறிக்கும்பல்களைச் சேர்ந்தவர்கள் எழுதும் விதமே காரணமாகும். இளங்கோ சொல்வது போல நான் கேள்வி கேட்டதால் தான் பதில் அளிக்க வேண்டி வந்ததாகக் கூறப்படுவது பொய்யானது. இளங்கோ இந்த விடயத்தில் இந்து மதத்தைச் சீண்டி எழுதிய விடயத்தால் தான் நான் இப்பகுதியில் எழுத வேண்டி வந்தது.

எதற்கெடுத்தாலும் இந்து மதத்தைச் சீண்டுவதே சிலரின் பிழைப்பு. நீராவி இயந்திரம் என்றால் கூட ஆரியச் சாயம் பூசி, அதனோடு இந்து மதத்தைச் சாடுவதும், இப் பெண்கள் மட்டும் தலைப்பில் கூட இந்துமதத்தை இழுத்துப் பேசுவதும் தொடருகின்ற நிலை மாறும் போது தான் ஒழுங்கான விவாதம் நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கோவடிகளுக்கு மட்டுமல்ல இந்த இளங்கோவுக்கும் அந்தத் தமிழ்தான் அடையாளம் என் உயிரினும் மேலான என் தமிழைத் தூசித்ததால் இந்து மதத்தை வெறுக்கிறேன். எனது உடல் சோர்வையும் மன அழுத்தத்தையும் தீர்ப்பதற்காக நான் போகும் தமிழ் இலக்கியப் பூந்தோட்டத்தில் என்றென்றும் மணம் வீசும் மலர்ச் செடிகளை நட்டதால் சமணத்துறவிகள் மீது நல்ல மதிப்பு இருக்கிறது. அவ்வளவுதான்.

செடிகள் பார்ப்பதற்கு அழகாகத் தான் இருக்கும். ஆனால் நிழல் தராது. இளங்கோவே சமணசமயத்தில் நாட்டம் கொள்ளதாபோது சிலப்பதிகாரத்தைச் சமண நூலாக்க முனைவது அவருக்குச் செய்கின்ற துரோகம். தமிழும் சைவமும் ஒன்றெனக் கருதுகின்ற போது தமிழ் மொழியைச் சைவம் திட்டியதாக பொய் உரைப்பது கூட இளங்கோ அடிகளைப் பாவித்து அவர் மீது அவப்பெயர் உருவாக்குதலே!

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம். நான் ஒரு கட்டுரையை எழுதும் நோக்குடன் இந்தத் தலைப்பினை இந்தத் தளத்திலே பதிவு செய்தேன். பல பயனுள்ள கருத்துக்களைப் பலர் முன்வைத்தீருந்தீர்கள். அவர்களுக்கு நன்றி. அதேவேளை யாழ்களத்தில் பலரையும் வெறுப்புக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் ஒரு புதிய நோய் இந்தத் தலைப்பிற்குள்ளும் ஊடுருவி தலைப்புக்கொவ்வாத அலட்டல்களையும் பதிவாக்கியிருந்தது. (எழுதுபவர்கள் தாங்கள் பெரும் அறிவுசார் விவாதத் திறமை கொண்டவர்கள் என்று கருதிக் கொண்டாலும் பலரது அபிப்பிராயம் அதுவே.)

இவ்வாறு தலைப்பிற்கு ஒவ்வாத கருத்துக்களை எழுதியதை நியாயப்படுத்தும் கருத்துக்களும் பதியப்பட்டிருந்தன.

உண்மையிலே ஒரு விடயம் தொடர்பாக உங்களுக்கு விவாதிக்க வேண்டிய தேவையிருந்தால் அந்தத் தலைப்பிற்கு புதிய பதிவொன்றை ஆரம்பித்து நீங்களிருவரும் மணிக்கணக்காக, நாட்கணக்காக, ஏன் மாதக் கணக்காகக் கூடத் தர்க்கித்துக் கொள்ளுங்கள். தயவு செய்து ஏனைய விடயங்கள் விவாதிக்கப் படுகின்ற தலைப்புகளிற்குள் வந்து பலருக்கும் தொந்தரவாக இருக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.