நவீனன்

இளமை புதுமை பல்சுவை

Recommended Posts

``எங்கள் வீட்டில் கலைஞர் ஆட்சி!’’ - கருணாநிதியின் `வாவ்’ கேள்வி - பதில்கள்

 

கலைஞரின் டைமிங் சென்ஸும் ஹியூமர் சென்ஸும் வேற லெவல். பத்திரிகையாளர்கள் சந்திப்போ தனித்த உரையோடலோ அவரின் சொல்லாடல்கள் வேற லெவல்!

``எங்கள் வீட்டில் கலைஞர் ஆட்சி!’’ - கருணாநிதியின் `வாவ்’ கேள்வி - பதில்கள்
 

சமயோசிதமும் நகைச்சுவை உணர்வும்தான் கலைஞர் கருணாநிதியின் அடையாளம்.

அதிநுட்பமான திறமையைத் தன்னகத்தே கொண்ட தலைவர் கலைஞர்தான். பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது அவர் அளித்த நகைச்சுவையான பதில்கள் இவை. கலைஞரின் பதில்கள் ஒவ்வொன்றும் துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டாவாக வந்தது சிறப்பு! 

கலைஞர் கருணாநிதி

 

 

கேள்வி: ``அம்மையார் ஜெயலலிதா சென்னையில் அமர்ந்துகொண்டே காணொலிக் காட்சி மூலம் தமிழகமெங்கும் கட்டடங்களைத் திறந்து வைக்கிறாரே?''

பதில் : ``ஸ்ரீரங்கத்தில் இருந்துகொண்டு சொர்க்கவாசலைத் திறந்துவிட்டோம் என்கிறார்களே... அதுபோல நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்!''

 

கேள்வி: ``சட்டமன்றப் பேச்சுக்கும் பொதுக்கூட்டப் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?’’

பதில் : ``மனக்கணக்குக்கும் வீட்டுக்கணக்குக்கும் உள்ள வித்தியாசம்.’’

 

கேள்வி: ``செவ்வாயில் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்களே?''

பதில்: ``செவ்வாயில் இருந்தால் அது உமிழ்நீர். தண்ணீர் அல்ல.''

 

கேள்வி : ``விவாதம்-வாக்குவாதம்-விதண்டாவாதம் மூன்றும் எப்படி இருக்க வேண்டும்?''

பதில் : ``விவாதம்-உண்மையாக இருக்க வேண்டும். வாக்குவாதம்-சூடு இருந்தாலும், சுவையாக இருக்க வேண்டும். விதண்டாவாதம்-தவிர்க்கப்பட்டாக வேண்டும்.''

 

கேள்வி: ``கோழி முதலா, முட்டை முதலா?''

பதில் :``முட்டை வியாபாரிகளுக்கு முட்டையும், கோழி வியாபாரிகளுக்கு கோழியும்தான் முதல்.''

 

கேள்வி: ``இளம் மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா?''

பதில் : ``இளம் வயதில் அரசியல் என்பது அத்தைப்பெண் போல. பேசலாம், பழகலாம். சுற்றிச் சுற்றி வரலாம். ஆனால், தொட்டு மட்டும் விடக்கூடாது!''

 

கேள்வி: ``தலையில் முடி கொட்டியது குறித்து எப்போதாவது வருந்தியிருக்கிறீர்களா?''

பதில்: ``இல்லை. அடிக்கடி முடிவெட்டிக்கொள்ளுவதற்கு ஆகும் செலவு மிச்சமென்று மகிழ்ந்துதான் இருக்கிறேன்.''

 

கேள்வி:``கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், அங்கே அசுத்தம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் முதலைகள் விடுவது பற்றி அரசு ஆலோசிக்குமா?''

 

 

பதில்: ``ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் `முதலை' கூவம் ஆற்றில் போட்டிருக்கிறது.''

 

கேள்வி:  ``உங்கள் வீட்டில் மதுரை ஆட்சியா... சிதம்பரம் ஆட்சியா?
பதில்: ``கலைஞர் ஆட்சி!''

கலைஞர் கருணாநிதி

கேள்வி: ``தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் அரசு ஆணையைத் தள்ளிப்போடவேண்டுமென்று சிலர் கோரிவருகிறார்களே..?'' 

பதில்: ``தலையில் ஒன்றும் இல்லையென்றால் தள்ளி வைக்கலாம்.''
 

கேள்வி: ``உங்களுக்குப் பிடித்த சட்டமன்றப் பேச்சாளர்?''

பதில் : ''எந்த மன்றமானாலும் சரி, அங்கே கொடிமரம் போல் உயர்ந்துநிற்கும் ஆற்றல்மிகு பேச்சாளர் அறிஞர் அண்ணாதான்''

 

 கேள்வி: ``சட்டமன்றத்துக்கு உள்ளே போகும்போது என்ன நினைப்பீர்கள்?''

பதில் : ``கற்றுக்கொள்ளும் மாணவனாகவும் கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்க வேண்டுமென்று.''

 

கேள்வி: ``நினைவாற்றல், சொல்லாற்றல், வாதத்திறன்-ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு எது முக்கியம்?''

பதில் : ``நினைவாற்றலுடன்கூடிய வாதத்திறன்மிக்க சொல்லாற்றல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் முக்கியம்.''

 

கேள்வி : ``கேள்வி கேட்பது எளிதா, பதில் சொல்வது எளிதா?''

பதில் : ``பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்பது எளிதல்ல.''

 

கேள்வி : ``தி.மு.க. ஆட்சி இரண்டு முறை (1976 மற்றும் 1991) டிஸ்மிஸ் ஆனபோது என்ன நினைத்தீர்கள்?''

பதில் : ``பதவியைத் தோளில் போட்டுக்கொள்ளும் துண்டு என்றும், மக்களுக்காக ஓடியாடி உழைப்பதே சிறந்த தொண்டு என்றும் எண்ணியிருப்பவனுக்கு ஆட்சிக் கலைப்பு என்பது ஒன்றும் பெரிதல்ல.''

 

கேள்வி : ``உங்கள் அமைச்சரவையிலே உள்ளவர்களில் மனதிலே இடம் பெற்ற சிலரை வரிசைப்படுத்துங்களேன்?''

பதில் : ``மனதிலே இடம் பெற்ற பிறகுதானே, அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். மந்திரிசபையில் இடம் பெறாதவர்கள் என் மனதில் இடம் பெறாதவர்கள் அல்ல.''

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

மனித பாதத்தை ஒத்த அதிசய உருளைக்கிழங்கு

 

(ரவி கலைச்செல்வன்)

 

பிரேஸில் நாட்டில், சென்டா கதரினா பகுதியில் அதிசய உருளைக்கிழங்கொன்று   கிடைக்கப்பெற்றுள்ளது.

pot.jpg

குறித்த உருளைக்கிழங்கு மனிதர்களின் பாதத்தைப் போல் தோற்றம் அளிப்பதோடு அதில் விரல்களும், முடிகளும் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும். மனித பாதத்தில் 5 விரல்களே காணப்படும். ஆனால் குறித்த கிழங்கில் 5 விரல்களுக்கு மேலதிகமாக ஒரு சிறிய விரலும் காணப்படுகின்றது.

சுமார்  8 கிலோகிராம் நிறையுடைய இந்த கிழங்கு பிரேஸில் நாட்டைச் சேர்ந்த மார்லி என்பவருடைய  தோட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.

4EEE732100000578-6040685-image-a-2_15337

இவ்வாறு கிடைக்கப்பெற்ற அதிசய கிழங்கு தோட்டத்தின் உரிமையாளர் குறித்து மார்லி தெரிவிக்கையில்,

இந்த வகையான அதிசயத்தக்க கிழங்கை நான் எங்கும் கண்டதில்லை. நாங்கள் சுமார் 6 வருடங்களாக தோட்டம் செய்து வருகின்றோம். வீடடுக்கு பின்புறத்தில் கிழங்குடன் வேறு மரக்கறி தோட்டமும் வைத்துள்ளோம்.

4EEE730C00000578-6040685-image-a-1_15337

நாம் இந்த கிழங்கை அறுவடை செய்யும் போது மிகவும் பயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. நாம் எமது அன்றாட  உணவுத் தேவைக்காகவே இவற்றை பயன்படுத்துகின்றோம். எவ்வாறு இதனை உண்பதென்று புரியவில்லையெனத் தெரிவிக்கின்றார்.

http://www.virakesari.lk

Share this post


Link to post
Share on other sites

உலகெங்கும் இவர்களின் கலாசாரம் மாறலாம்... பிரச்னைகள் மாறுவதில்லை...! பூர்வகுடிகள் தினம் இன்று

 
 

தங்கள் அடையாளத்தை இழந்தோ, அதை மீட்பதற்காகவோ இன்றைய நவீன உலகில் பூர்வகுடியினர் பல சவால்களைச் சந்தித்து வருகிறார்கள்.

உலகெங்கும் இவர்களின் கலாசாரம் மாறலாம்... பிரச்னைகள் மாறுவதில்லை...! பூர்வகுடிகள் தினம் இன்று
 

கஸ்ட் 9-ம் தேதியை, சர்வதேச பூர்வகுடிகள் தினமாக ஐ.நா சபை ஆண்டுதோறும் அனுசரித்துவருகிறது. இதைச் சிறப்பிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட்-9) மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை ஐ.நா தலைமைச் செயலகத்தில் பூர்வகுடியினரைப் போற்றும் நிகழ்வு நடைபெற்றது.

`இன்றைய நவீன வாழ்க்கைமுறையில் எவ்வளவோ மாற்றங்கள் வந்திருந்தாலும் தங்களுக்கான கலாசாரப் பண்பாட்டு முறைகளுக்குச் சிறிதும் பங்கம் வராமல், தலைமுறை தலைமுறையாகப் போற்றிப் பாதுகாத்து, அதன் வழியில் வாழ்க்கையை நிறைவாக வாழ்பவர்கள் பூர்வகுடியினர். தன் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கைமுறையோடு இன்றைய தொழில்நுட்ப நடைமுறைகளும் கலந்திடுவதற்கான பல்வேறு சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், அதிலும் தங்களுக்குரிய தரத்தை எந்த நிலையிலும் இழந்துவிடாது தனக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் மேம்படுத்தும் வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார்கள் இந்தப் பூர்வகுடியினர்' என்று சமூகத்தில் அவர்களுக்கான நிலை எடுத்துச்சொல்லப்பட்டது.

பூர்வகுடிகள்

 

 

தனித்துவமான கலாசார, பண்பாட்டுப் பழக்கவழக்கங்களை மரபுவழியாகத் தொன்றுதொட்டுக் கடைப்பிடித்துவரும் மனிதர்கள், `பூர்வகுடியினர்' என அறியப்படுகிறார்கள். ஆதிக்கச் சமூகத்தினர், தாங்கள் வாழும் நிலத்தில் அதிகாரம் செலுத்திவந்தாலும், தங்கள் மரபைத் தொடர்ந்து போற்றிவருகிறார்கள். ஒவ்வொரு பூர்வகுடி இனத்துக்கும் தங்களுக்கே உரிய கலாசாரங்கள் இருந்தாலும், உலகம் முழுவதும் பூர்வகுடி மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஒன்றுபோலவே இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, உலகில் தற்போது 37 கோடி பூர்வகுடி மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். சுமார் 90 நாடுகளில் வாழ்ந்துவரும் இவர்கள், உலகத்தின் மொத்த மக்கள்தொகையில் ஐந்து சதவிகிதமே இருக்கிறார்கள். உலகத்தில் உள்ள மொத்த ஏழைகளின் எண்ணிக்கையின்படி, சுமார் 15 சதவிகித மக்கள் பூர்வகுடியினரே! ஒப்பீட்டளவில் குறைவான மனிதர்களே இருந்தாலும், உலகில் பேசப்படும் 7,000 மொழிகளில் பெரும்பாலான மொழிகள் இவர்களால்தாம் பேசப்படுகின்றன.

பூர்வகுடிகள்

பூர்வகுடியினர் தங்கள் அடையாளம், வாழ்க்கைமுறை, நிலத்தின் மீதான உரிமை, அதன் வளங்கள் போன்றவற்றைக் காப்பதற்காகத்  தொடர்ந்து போராடிவருகிறார்கள். ஆனாலும், பன்னெடுங்காலமாகவே அவர்கள் ஒடுக்குமுறைக்குத்தான் உள்ளாகிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய உலகச் சூழலில்கூடப் பெருமளவிலான பாதிப்பை அடையும் வாழ்க்கையை வாழ்பவர்கள் இந்தப் பூர்வக்குடியினர்தான். 

அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களாலும், பெருமுதலாளிகளின் அழுத்தம் காரணமாகவும் இந்த மக்கள் தங்கள் ஆதி நிலத்தைவிட்டு வெளியேறவேண்டிய நிலை, கடந்த சில நூற்றாண்டாகவே உள்ளது. சொந்த நிலம் இல்லையென்று ஆன பிறகு, இவர்கள் பெரும்பாலும் நம்பி இருப்பது நகரங்களைத்தான். சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு, நிம்மதியான வாழ்க்கை போன்றவற்றின் தேவை கருதி, இந்த மக்களில் பலர் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர நேரிடுகிறார்கள். பூர்வகுடியினர் பெரும்பாலும் கிராமங்களில்தாம் இருப்பார்கள் எனும் பொதுவான நம்பிக்கையைப் பொய்யாக்கும் வகையில், இவர்களில் பல இனக் குழுக்கள் நகரங்களிலும் வாழ்ந்துவருவது கண்டறியப்பட்டுள்ளது. 

பூர்வகுடிகள்

ஐ.நா-வின் தகவலின்படி ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவில் உள்ள 40 சதவிகிதப் பூர்வகுடியினர், நகரப் பகுதிகளில்தான் வசிக்கிறார்கள். குறிப்பாக, இந்தப் பிரதேசத்தில் உள்ள சில நாடுகளில் 80 சதவிகிதப் பூர்வகுடியினர் நகரப் பகுதிகளில் வாழ்வது தெரியவந்துள்ளது. இப்படி நகரங்களுக்குப் புலம்பெயரும் பெரும்பாலானவர்களுக்கு, நல்ல வேலைவாய்ப்பும் மேம்பட்ட பொருளாதார நிலையும் அமைகிறது. ஆனாலும் இவர்கள் பெருமளவிலான இனவெறியையும் தீண்டாமையையும் சந்திக்கவேண்டியிருக்கிறது என்பது கசப்பான ஓர் உண்மை. 

தங்களின் அடையாளத்தை இழந்தோ, அதை மீட்பதற்காகவோ இன்றைய நவீன உலகில் பூர்வகுடியினர் பல சவால்களைச் சந்தித்துவருகிறார்கள். அவர்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் சர்வதேசப் பூர்வகுடியினர் தினத்தை அனுசரிக்கும் ஐ.நா-வின் முன்னெடுப்பு, மிகச்சிறந்த ஒன்று.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

”ஒரே அடி...ஒரே கடி...ஆள் காலி!” - இந்த விலங்குகள் கிட்ட வச்சுக்காதீங்க மக்கா

 

பெரிய விலங்குகள், மனிதர்கள் உள்பட அனைத்தையும் ஒரே கடியில் கொன்று விடும். இந்தியா, தென் ஆசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் வாழும்.

”ஒரே அடி...ஒரே  கடி...ஆள் காலி!” - இந்த விலங்குகள் கிட்ட வச்சுக்காதீங்க மக்கா
 

விலங்குகளின் கோபத்திற்கு சிறியது, பெரியது என்ற உருவ வித்தியாசம் கிடையாது. யாரை வேண்டுமானாலும் எப்போதும் தாக்கக் கூடியது. பெரிய விலங்கு மட்டும்தான் சிறியவற்றை தாக்கும் என நினைப்பது தவறு. உருவத்தில் சிறியதாக இருக்கும் விலங்குகள்கூட மிகவும் ஆக்ரோஷமாக தாக்கக்கூடிய பண்புகளைக் கொண்டிருக்கும். ஆனால், விலங்குகள் எப்போதும் சூழ்நிலைக்கு ஏற்றவாறுதான் தங்களுடைய கோபத்தைக் காட்டிக் கொள்ளும். அப்படி உலகில் அதிகமாகத் தனது கோபத்தை வெளிப்படுத்தும் சில விலங்குகளைப் பற்றி பார்க்கலாம்.

1. தேன்வளைக் கரடி (honey badger) 

விலங்குகள்

 

 

தென் ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆசியக் காடுகளில் அதிகம் வாழும். தேன்வளைக் கரடிகளுக்கு பயம் என்ற ஒன்று கிடையாது. பார்ப்பதற்குக் கீரியின் உருவம் போலவே உடலமைப்பைக் கொண்டது. ஆனால் தன்னை விட உருவத்தில் பத்து மடங்கு பெரிய விலங்குகளைக் கூட எதிர்த்துத் தாக்கக் கூடிய தன்மை கொண்டது. இவற்றின் அதிக கோபம் மற்றும் ஆக்ரோஷத்தின் காரணமாக மிருகக்காட்சி சாலையில் வைத்துப் பராமரிப்பது எளிதான காரியம் அல்ல. பொதுவாகச் சிங்கம், புலி போன்ற விலங்குகளுடன் சமமாக சண்டையிடும் திறமையை பெற்றுள்ளது. இவ்வளவு பெரிய கோபக்கார விலங்காக இருந்தாலும், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தால் அரிதான விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 

 

 

2. காட்டுப் பன்றி (wild boar) 

விலங்குகள் பன்றி

மேற்கு ஆசியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய பகுதிகளில் காட்டுப் பன்றிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. பன்றி இனத்தைச் சேர்ந்திருந்தாலும், மற்ற பன்றிகள் போல இல்லாமல் இதன் கீழ்த்தாடையில் இரண்டு நீளமான பற்களைக் கொண்டிருக்கிறது. கோபம் ஏற்படும் நேரங்களில் மனிதர்களைக்கூட ஆக்ரோஷமாக தாக்கக் கூடியது. முழுவதுமாக வளர்ந்த காட்டுப்பன்றி கிட்டத்தட்ட 130 கிலோ எடையுடன் காணப்படும். ஒவ்வொரு கடியும் அதிகமான உறுதியைக் கொண்டது. இந்தப் பன்றிகள் அனைத்து விலங்குகளையும் உண்ணக்கூடிய குணத்தைக் கொண்டது. 

 

 

3. உப்புநீர் முதலைகள் (Salt Water Crocodile) 

முதலை

உலகில் மிகவும் பெரியதாக வளரும் விலங்கு என்ற சாதனையைக் கொண்டுள்ள உப்புநீர் முதலைகள் மிக ஆபத்தானதும்கூட. ஆண் முதலைகள் 24 அடி வரை வளரும் தன்மை கொண்டது. 180 கிலோ எடையைக் கொண்டிருக்கும். இவை கொண்டுள்ள உறுதியான பற்கள் கோபம் ஏற்படும் நேரங்களில் மற்றவற்றைத் தாக்க உதவியாக இருக்கும். பெரிய விலங்குகள், மனிதர்கள் உள்பட அனைத்தையும் ஒரே கடியில் கொன்று விடும். இந்தியா, தென் ஆசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் இவை அதிகமாக வாழும். 

4. சூரிய கரடிகள் (Sun Bear) 

சூரிய கரடி

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமாக இக்கரடிகள் காணப்படுகின்றன. அதிகமாகத் தூங்கும் பழக்கத்தைக் கொண்ட இந்த விலங்குகள் சிறிய விஷயத்துக்கெல்லாம் கோவப்படக் கூடியது. மனிதன் எந்த ஒரு தொல்லையும் கொடுக்காதபோதும் கூட மனிதனைத் தீவிரமாக தாக்கும் குணம் கொண்டது. உலகில் வாழும் மிகச் சிறிய கரடி இனமும் இதுதான். இது மிகக் கூரிய பற்களைக் கொண்டிருக்கும். கால்களில் மிகப்பெரிய நகங்களைக் கொண்டிருக்கும். ஒரே தாக்குதலில் சாதாரண கரடி ஏற்படுத்தும் காயங்களை விட அதிக அளவிலான தாக்கங்களை ஏற்படுத்திவிடும். 

5. ஆப்பிரிக்க காட்டெருமைகள் (african buffalo) 

காட்டெருமை

ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இவ்விலங்குகள் மிகவும் கோபம் கொண்ட விலங்குகள். சாதாரணமாக ஒரு டன் எடை வரை வளரக் கூடியது. ஒரே தாக்குதலில் மனிதனின் உயிரை நிச்சயமாகத் தாக்கிவிடும் திறன் கொண்டது. இதனால் வருடத்திற்கு 200 நபர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைகின்றனர். இதனைச் சரணாலயத்துக்குள் சென்று பார்த்து அதனுடன் விளையாடுபவர்களும் உண்டு.

https://www.vikatan.com/

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

`கண் அசந்தால் வைரத்தையும் தூக்குவோம்'- கட்டெறும்பு நடத்திய சதுரங்க ஆட்டம்! #ShockingVideo

 

எறும்பு, அளவில் சிறியதுதான். கொஞ்சம் கண் அசந்தால், வைரத்தையும் தூக்கிச் சென்றுவிடும். நம்ப முடியவில்லையா... 

எறும்பு
 

யூடியூபில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில்தான் அந்த அதிசயத்தைப் பார்க்க முடிந்தது. கட்டெறும்பு ஒன்று, நகைக்கடையில் இருந்து வைரக் கல்லை  இழுத்துக்கொண்டு செல்கிறது. அந்த வீடியோ, எந்த நாட்டில் பதிவானது... யார் எடுத்தது? என்பது போன்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களில் இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அந்த எறும்பு, உணவுப் பொருள் என்று நினைத்து வைர கல்லை இழுத்து செல்கிறது.

வீடியோவில், பின்னணியில் சிலர் இந்தியில் பேசிக்கொள்கின்றனர். வைரக் கற்களை மொத்த வியாபாரம் செய்யும் இடம் அது என்றும் தெரிகிறது. இந்தியாவில், குஜராத்தின் சூரத் நகரில்தான் வைர வர்த்தகம் அதிக அளவில் நடக்கும். எனவே, இந்த வீடியோ அங்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.  இந்த வீடியோவைப் பார்க்கும்போது இன்னொரு சந்தேகமும் எழுகிறது. தன் எடையைவிட அதிக எடையுடைய பொருளை எறும்பு எப்படித் தூக்கிச்செல்கிறது? இணையத்தில் இந்த பதில் தேடியதில்.. `எறும்புகள், தன் எடையைவிட 10 மடங்கு எடையுள்ள பொருளை சுமக்கும் திறன் பெற்றவை’ என்கிறது ’National Wildlife Federation’. இனி, வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருள்களை எறும்பு கண்ணுக்குப் படாமல் வைப்பது நல்லது!  

 

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

சீனப் பெருஞ்சுவர் எங்கே உள்ளது? - மில்லியனர் நிகழ்ச்சியில் திருதிருவென முழித்த துருக்கியப் பெண் 

 
 

துருக்கி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்,  `சீனப் பெருஞ்சுவர் எங்கு உள்ளது?’ என்ற எளிமையான கேள்விக்கு விடை தெரியாமல் முழித்த போட்டியாளரை நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துவருகின்றனர். 

துருக்கி பெண்
 

இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான  `குரோர்பதி’ போன்று,  துருக்கி நாட்டில்  `உங்களில் யார் மில்லியனர்?’ (Who wants to be a millionaire) என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண் போட்டியாளர் ஒருவரால், அந்நிகழ்ச்சி தற்போது உலக அளவில் பிரபலம் ஆகிவிட்டது.

 

 

சமீபத்தில் ஒளிபரப்பான  `உங்களில் யார் மில்லியனர்?’ நிகழ்ச்சியில், துருக்கியின் இஸ்தான்புல் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கலந்து கொண்டார். பொருளாதார மாணவியான அவரிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்,  `சீனப் பெருஞ்சுவர் எங்கே உள்ளது?’  என்ற கேள்வியைக் கேட்டார். அந்தக் கேள்விக்கு, `சீனா, இந்தியா, தென்கொரியா மற்றும் ஜப்பான்’என நான்கு ஆப்ஷன்கள் தரப்பட்டன. சற்று நேரம் யோசித்த அவர், இந்தக் கேள்விக்கு நான் பார்வையாளர்களிடம் கருத்து கேட்கும் லைஃப்லைனை( audience poll) பயன்படுத்துகிறேன் என்று கூறினார்.

பார்வையாளர்களில் 51 சதவிகிதம் பேர், ''சீனா'' என்று பதில் அளித்தனர். மீதம் உள்ள 49 சதவிகிதம் பேர், வெவ்வேறு விடைகளைத் தேர்வு செய்தனர். இதனால் குழம்பிப்போன அந்தப் பெண், நண்பர்களுக்கு போன் செய்து கருத்துக் கேட்கும் லைஃப்லனைப் பயன்படுத்த விரும்புகிறேன் என்றார்.  அவரின் நண்பர், அவருக்கு ''சீனா'' என்று உறுதியாகப் பதில் அளித்தார். இரண்டு லைஃப் லைனைப் பயன்படுத்திய பின்னர், அவர் சீனா என்னும் சரியான விடையைப் பதிவுசெய்தார். அடுத்த கேள்விக்கு தவறான விடை கொடுத்து, போட்டியைவிட்டு வெளியேற்றப்பட்டார். யூ டியூபில் இந்த நிகழ்ச்சியின் வீடியோ வெளியானது. சீனப் பெருஞ்சுவர் எங்கு உள்ளது என்ற கேள்விக்கு விடை தெரியாமல், பொது அறிவு நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண்ணை நெட்டிசன்ஸ் கடுமையாக ட்ரோல் செய்துவருகின்றனர்.

துருக்கியில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது. இதுகுறித்து அந்தப் பெண்ணிடம் துருக்கி ஊடகங்கள் கேள்வி எழுப்பின. `உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் சீனப் பெருஞ்சுவர் பற்றி உங்களுக்குத் தெரியவில்லையே?’ என்றும் உங்களைப் பற்றி விமர்சனங்கள் வருகின்றதே? என்றும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ‘அந்த நிகழ்ச்சியில் லைஃப்லைன் பயன்படுத்துவது என் விருப்பம். அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை’ என்று கூறியிருக்கிறார். 

 

https://www.vikatan.com/

Share this post


Link to post
Share on other sites
56 minutes ago, நவீனன் said:

யூடியூபில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில்தான் அந்த அதிசயத்தைப் பார்க்க முடிந்தது. கட்டெறும்பு ஒன்று, நகைக்கடையில் இருந்து வைரக் கல்லை  இழுத்துக்கொண்டு செல்கிறது. அந்த வீடியோ, எந்த நாட்டில் பதிவானது... யார் எடுத்தது? என்பது போன்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களில் இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அந்த எறும்பு, உணவுப் பொருள் என்று நினைத்து வைர கல்லை இழுத்து செல்கிறது.

இதைப் பார்த்து பலரும் எறும்புக்கு பயிற்சி கொடுக்க போகிறார்கள்.

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

விண்வெளியில் திருமணம் செய்த முதல் மனிதர் (10-8-2003)

 
விண்வெளியில் திருமணம் செய்த முதல் மனிதர் (10-8-2003)
 
ரஷியாவைச் சேர்ந்த யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் விண்வெளியில் திருமணம் செய்து கொண்ட முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசில் தீவிரவாதிகள் ரிலெரீஸ் அரண்மனையை முற்றுகையிட்டு பதினாறாம் லூயி மன்னனைக் கைது செய்தனர்.

* 1809 - குவிட்டோ (தற்போதய ஈக்வடாரின் தலைநகர்) பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

* 1821 - மிசூரி ஐக்கிய அமெரிக்காவின் 24-வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

* 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் மிசூரியின் தென்மேற்குப் பகுதியில் கூட்டணிப் படைகளை வென்றனர்.

* 1904 - ரஷ்யப் படைகளுக்கும் ஜப்பானியர்களுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்பெற்றது.

* 1913 - பால்கான் போர்கள்: பல்கேரியா, ருமேனியா, செர்பியா, மொண்டெனேகுரோ, கிரேக்கம் ஆகிய நாடுகள் புக்கரெஸ்ட் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின.

* 1944 - இரண்டாம் உலகப்போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.

* 1990 - மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.

* 2000 - உலக மக்கள் தொகை 6 பில்லியனைத் தாண்டியது

* 2006 - திருகோணமலையில் சேருவிலப் பகுதியில் தொடர்ச்சியான குண்டுவீச்சினால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

https://www.maalaimalar.com

Share this post


Link to post
Share on other sites

இன்பாக்ஸ்

 

 

p36a_1533634107.jpg

ன்றைய தேதியில் அதிகம் ட்ரோல் பண்ணப்படும் பாலிவுட் பிரபலம் யாரென்றால் ஷாரூக் கானின் மகள் சுஹானா கான்தான். அவரின் நவநாகரிக ஃபேஷன் உடை களாலேயே சமூக வலைதளங்களில் கேலி செய்யப்படுபவர் இம்முறை வேறொன்றுக்காக விமர்சிக்கப்படுகிறார். உலகப்புகழ்பெற்ற ‘Vougue’ என்ற ஃபேஷன் உலகின் நம்பர் ஒன் இதழின் அட்டைப்படத்தில் இடம்பிடித்தி ருக்கிறார். ‘ஷாரூக் கான் பணம் கொடுத்துத் தன் மகளை வளர்த்து விடுகிறார். அவர் ஒரு சாதாரண மாணவி மட்டுமே. அவ்ளோ வொர்த் எல்லாம் இல்லை’ என்று ஒரு குரூப்பும், ‘என்ன இல்லை என் அழகு செல்லத்துக்கு!’ என சுஹானாவுக்கு ஆதரவாக இன்னொரு குரூப்பும் சோஷியல் மீடியாவில் களமாடி வருகிறார்கள். `என் மகளை முதன்முதலில் கைகளில் தூக்கிச் சுமந்தபோது அடைந்த பெருமிதத்தை அவள் புகைப்படம் தாங்கிய வோக் இதழைக் கையில் ஏந்தியபோது கிடைத்தது!’ என வெளியீட்டின்போது ஏகத்துக்கும் நெகிழ்ந்தி ருக்கிறார் ஷாரூக். மகளைப் பெற்ற அப்பா!


p36b_1533634145.jpg

‘பாகுபலி’ படத்தில் ரம்யாகிருஷ்ணன் ஏற்று நடித்த சிவகாமி கதாபாத்திரத்தை வைத்து ‘ரைஸ் ஆஃப்  சிவகாமி’ என்ற நாவலை ஆனந்த் நீலகண்டன் 2015-ல் எழுதினார்.  தற்போது அந்த நாவலை நெட் ஃபிளிக்ஸில் வெப் சீரிஸாகத் தயாரிக்க வுள்ளனர்.    ‘பாகுபலி - தி பிகினிங், ‘பாகுபலி - தி கன்க்ளூஷன்’ என இரண்டு படங்களும் பாகுபலியைப் பற்றிப் பேசிய நிலையில், மகாராணி சிவகாமியைப் பற்றிய இக்கதைக்கு ‘பாகுபலி - பிஃபோர் தி பிகினிங்’ என்று பெயரிட்டுள்ளனர். ராஜமாதா ரிட்டர்ன்ஸ்!


p36c_1533634169.jpg

ந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாதான் இப்போது இங்கிலாந்து கிரிக்கெட்டில் சென்சேஷன். அவரது அதிரடி ஆட்டத்தைக்கண்டு இங்கிலாந்தே மிரண்டுகிடக்கிறது. இங்கிலாந்தின் கியா பெண்கள் டி20 சூப்பர் லீக் போட்டியில் லங்காஷயர் தண்டர் அணிக்காக விளையாடிவருகிறார் ஸ்மிரிதி. சென்றவாரம் நடந்தபோட்டியில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து, கலக்கியிருந்தார். இந்த வாரம் 60 பந்துகளில் செஞ்சுரி போட்டிருக்கிறார். கியா சூப்பர் லீகில் ஆடிய எல்லாப் போட்டிகளிலும் எதிரணிப் பந்துவீச்சை அடித்துநொறுக்கி மிக அதிக ரன்குவித்தோர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் ஸ்மிரிதி. வெற்றிக்கொடிகட்டு...


சாமா பின்லேடனின் தாயார் பேட்டி ‘தி கார்டியன்’ இதழில் வெளியானதுதான் இந்த வார வைரல். முதன்முறையாக மீடியாவுக்கு முகம் காட்டியிருக்கிறார். சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமைதியாக வாழ்ந்து வரும் ஆலியா கானம் என்ற அந்தப் பாட்டி, ஒசாமாவின் மென்மையான பக்கங்களையும், எப்படி 20 வயதுக்குள்ளே தீவிரவாதியாக மூளைச்சலவை செய்யப்பட்டு ஒசாமா பின்லேடன் மாற்றப்பட்டார் என்றெல்லாம் எமோஷனலாகப் பேசியிருக்கிறார். பாசக்கார பாட்டிம்மா


ரொம்ப சுமாரான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த ஹன்னா எட்வர்ட் என்ற 36 வயதுப் பெண் இப்போது உலகமெங்கும் விமர்சிக்கப்படுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த  ஹன்னா எட்வர்ட் ஒரே நாளில் இணைய உலகின் சென்சேஷனல் ஆகிவிட்டார். கேக் செய்து சிறிய அளவில் விற்பனை செய்து வந்த அவர் செய்த ஒரு விஷயம் இன்று பாராட்டுகளையும் வசவுகளையும் ஒருங்கே கிடைக்கச் செய்திருக்கிறது. அச்சு அசலான விலங்குகளின் உருவங்களை கேக்கில் சிலைகளாக வடிவமைத்து விற்பனை செய்ததுதான் அது. இணையத்தில் வைரலானாலும் ‘மிக மட்டமான ரசனை இது. என்னால் ஒரு நாயையோ குதிரையையோ வெட்டிச் சாப்பிட முடியாது!’, ‘கலையைத் தவறாகப் பயன்படுத்தி விட்டார்!’ என்றெல்லாம் நெகட்டிவ் கமென்ட்டுகளால் விமர்சிக்கப்படுகிறார். ஆனாலும், சத்தமில்லாமல் விற்பனை பத்து மடங்கு உயர்ந்து லாபம் பார்த்துள்ளார் அம்மணி. ஃபாரின் ஆர்டர்களும் குவிகிறதாம். கேக்ஸ்டர்


p36d_1533634201.jpg

ந்தி நடிகரும், டி-சீரிஸ் ஆடியோ நிறுவனத்தின் நிறுவனருமான குல்ஷன் குமாரின் வாழ்க்கையைப் படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர். இப்படத்தை டி-சீரிஸுடன் இணைந்து அமீர்கான் தயாரிக்கவுள்ளார். 1997-ல் குல்ஷன் குமார் கோயில் வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்தக் கொலையின் பின்னணியில் நிழலுலக தாதா தாவுத் இமப்ராஹிமுக்கும், கூட்டாளி  அபு சலீமுக்கும்  தொடர்புள்ளது என இன்றுவரை சந்தேகம் இருக்கிறது. இந்த பயோபிக்கில்  குல்ஷனின் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட்டின் பல முன்னணி கதாநாயகர்களுக்கு அழைப்பு விடுத்தும் யாரும் முன் வரவில்லையாம். அடுத்த ஹிட்டு!


p36e_1533634228.jpg

ன்னைப் பற்றி வரும் நெகட்டிவ் விமர்சனங்களை ஆர்வமாகப் படிப்பவர் அஜித். சமீபமாக தோற்றம் குறித்த விமர்சனங்கள் அதிகமாக வருவதைக் கண்டு தன் உதவியாளர்களிடம்  `ஏன் இப்படியெல்லாம் வருது?’ எனக் கேட்டிருக்கிறார். ‘அஜித் என்றாலே அழகு என்ற இமேஜ் உண்டு. பொது இடங்களில் மேக்-அப் இல்லாமல் மிக இயல்பாக இருக்கும்போது எடுக்கப்படும் படங்களைத்தான் சிலர் விமர்சிக்கிறார்கள்’ என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள்.  ஷாலினியின் அட்வைஸ்படி தோற்றத்தைப் பொலிவாக்க கேரளா போய் வந்திருக்கிறார் அஜித். விரைவில் சால்ட் அண்டு பெப்பர் லுக்குக்கு குட் பை சொல்லி யங் லுக்கில் வலம் வரப்போகிறாராம் அஜித். வாங்க தல வாங்க! 

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

கண்டுபிடிப்புகளின் கதை: வல்கனைசேஷன்

 

 

இன்று நாம் பயன்படுத்தும் ரப்பர் குழாய், ஷூ சோல், டயர், பென்சில் அழிக்கும் ரப்பர், பந்து, பொம்மை போன்ற ரப்பர் பொருட்களுக்குக் காரணம், ரப்பரை வல்கனைசேஷன் செய்ததுதான். இயற்கையான ரப்பரைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மாற்றுவதுதான் வல்கனைசேஷன்.  வல்கனைசேஷன் கண்டுபிடிப்புக்கு முன்பும் ரப்பர் பொருட்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால், அந்த ரப்பர் காலணிகளும் ரெயின் கோட்களும் வெயில் காலத்தில் உருகின. மழைக் காலத்தில் ஒட்டிக்கொண்டன.

அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் குட்இயர் என்பவருக்கு ரப்பர் மீது தீராத ஆர்வம் இருந்தது. அதுவரை பயன்பாட்டில் இருந்த ரப்பரை, இன்னும் மென்மையாகவும் நீடித்து உழைக்கும் வகையிலும் மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கினார். ஒவ்வொரு முறையும் மிகுந்த நம்பிக்கையோடு காத்திருப்பார்.

 

அந்த முயற்சி தோல்வி அடைந்தால், சிறிதும் மனம் தளராமல் அடுத்த முயற்சியில் இறங்கி விடுவார். சில ரசாயனங்கள் ரப்பரை மென்மையாக்குவதுபோல் தோற்றத்தைத் தரும். வெயில் காலத்துக்கும் மழைக் காலத்துக்கும் காத்திருப்பார்.  வெயில் காலத்தில் உருக ஆரம்பித்துவிடும். மழைக் காலத்தில் விரிசல் அடைந்துவிடும். அதைத் தூக்கிப் போட்டுவிட்டு, அடுத்த ரசாயனத்தைக் கலந்து வைப்பார்.

வெவ்வேறு வெப்பநிலைகளில் வெவ்வேறு ரசாயனங்களைக் கலந்து ஆராய்ச்சிகளைச் செய்து பார்த்தார். இவரது ஆராய்ச்சிகளில் மனைவியும் குழந்தைகளும் பங்கேற்றார்கள். ரப்பரை மென்மையாக மாற்றுவதற்கு, அதனுடன் கலக்கப்படும் டர்பைனே காரணம் என்பதைக் கண்டறிந்தார். ஆராய்ச்சி அடுத்த கட்டத்தை அடைந்தது. தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டார்.

கண்டுபிடிப்பின் மீதுள்ள இவரது ஆர்வம், அவரை வறுமையில் தள்ளியது. குழந்தைகளைக் கூடப் படிக்க வைக்க முடியாத அளவுக்கு அவரது நிலைமை சென்றது. கடன் வாங்கிச் சமாளித்தார். கடனைத் திருப்பித் தர முடியாமல் ஒருமுறை சிறைக்கும் சென்றார். ஆனாலும் ஆராய்ச்சி மீது இருந்த ஆர்வம் சார்லஸுக்குக் குறையவே இல்லை.

iventionjpg

ஒரு நாள் நைட்ரிக் அமிலத்தைக் கலந்தார். வெற்றி கிடைத்தது. மகிழ்ச்சியோடு அதற்கான காப்புரிமையும் பெற்றார். அமெரிக்கத் தபால் துறை, ரப்பர் பைகளுக்கான ஆர்டரை வழங்கியது. ஆர்வத்துடன் தயாரித்துக் கொடுத்தார். ஆனால் சில மாதங்களில், அந்தப் பைகள் ஒட்டிக்கொண்டன. மிகவும் ஏமாற்றம் அடைந்தார் சார்லஸ்.

சில நாட்களுக்குப் பிறகு ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கந்தகமும் வெள்ளைக் காரீயமும் தவறுதலாக விழுந்துவிட்டன. சார்லஸ் இதைக் கவனிக்கவில்லை. மறுநாள் எடுத்துப் பார்த்தபோது ரப்பர், தோல்போல மென்மையாக இருந்தது. நன்றாக வளைந்தது. ஒட்டவும் இல்லை.

இந்த விபத்து சார்லஸின் ஆராய்ச்சியைச் சரியான திசையில் திருப்பியது. வெப்பமும் வேதிப் பொருட்களும் சேர்ந்துதான் ரப்பரைப் பயன்படுத்தக் கூடியதாக மாற்றும் என்பதை அறிந்துகொண்டார். 1844-ல் வல்கனைஷேசனுக்குக் காப்புரிமையும் பெற்றார்.

பல ஆண்டுகள் சார்லஸ் செய்த தொடர் முயற்சியின் காரணமாக, இன்று உலகமே ரப்பர் பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. முக்கியமான இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்திய, சார்லஸ் குட் இயர் பெரிய அளவில் பணம் ஈட்டவில்லை. “நான் விதைத்திருக்கிறேன், பின்னால் உள்ளவர்கள் பழத்தை அறுவடை செய்வார்கள்” என்று கூறிவிட்டார். இவர் மறைந்து,
 

(கண்டுபிடிப்போம்)

https://tamil.thehindu.com

Share this post


Link to post
Share on other sites

இன்று உலக சிங்க தினம்; அழிவின் விளிம்பில் ‘காட்டு ராஜா’- 2 லட்சமாக இருந்த எண்ணிக்கை 20 ஆயிரமாக குறைந்தது

 

 
lion

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10-ம் தேதி உலக சிங்க தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

திறந்த புல்வெளி காடுகளின் அழிவாலும், கடுமையான வேட்டை யாலும் சிங்கங்கள் அழிவைச் சந்திக்கின்றன. சிங்கங்களைப் பாது காக்கவும், அது தொடர்பாக மக்கள் விழிப்புணர்வு அடையவும் கென்யா வன உயிரின ஆர்வலர்களின் முயற்சியால் இந்த நாள் முதலில் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழு வதும் சிங்கங்களின் நலன் பேணும் விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 
 

உலகில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை 2 லட்சத்துக்கும் மேல் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை இன்று வெறும் 20 ஆயிரமாக குறைந்துவிட்டது. அவற்றிலும் ஆசிய சிங்கங்கள் 500-க்கும் குறைவாகவே உள்ளன.

மன்னர்கள் காலத்தில் இருந்து சிம்மம் என்னும் சொல் தலைவன், அரசன் என்பதை குறிக்கும் சொல்லாகவே கருதப்படுகிறது. உதாரணமாக சிம்மாசனம், சிம்ம சொப்பனம் என்று பல சொற்களை குறிப்பிடலாம். ஆற்றலின் அடை யாளமாகவே சிங்கம் அடையாளப் படுத்தப்படுகிறது. இந்த வழக்கம் நமது நாட்டில் மட்டும் அல்ல, ஆப்பிரிக்க பழங்குடிகள் தொடங்கி ஐரோப்பா வரை இருந்துவருகிறது.

பூனை இனங்களில் புலிகளுக்கு முன்னர் மிகக் கடுமையான அழிவை சந்தித்தவை சிங்கங்களே. கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இவற்றின் அழிவு தொடங்கிவிட்டது. அரசர்கள் வேட்டையாடியபோதும், போர்களின்போதும் நாடுவிட்டு நாடு பயணம் செல்லும் வேளைகளிலும், வீர விளையாட்டு என்ற பெயரில் சிறைபிடிக்கப்பட்டு கொன்றழிக்கப்பட்ட சிங்கங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை.

இதுகுறித்து மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் கூறியதாவது:

ஆப்பிரிக்க சிங்கங்கள் இனத்தில் 7 உள்ளினங்களும், ஆசிய இனத்தில் ஒரே ஒரு இனம் மட்டுமே மீதம் உள்ளன. ஆப்பிரிக்க இனங்களின் உள்ளினங்களில் ஒன்று பார்பெரி சிங்கம், இவை ஐரோப்பா, வடமேற்கு ஆப்பிரிக்க பகுதிகளில் காணப்பட்டன. இவை தற்போது காடுகளில் முழுமையாக வேட்டையாடப்பட்டு விலங்கு காட்சியகங்களில் மட்டுமே சொற்ப எண்ணிக்கையில் எஞ்சியுள்ளன. இரண்டாவது, செனகல் சிங்கங்கள் எனும் மேற்கு ஆப்பிரிக்க சிங்கங் கள். இவையும் அழிவின் விளிம்பில் உள்ளன. மூன்றாவது காங்கோ சிங்கம் அல்லது உகாண்டா சிங்கம் என்ற இனம். இவை காங்கோவில் உள்ள தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நான்காவது, கட்டாங்கா சிங்கங்கள் அல்லது தென் மேற்கு ஆப்பிரிக்க சிங்கங்கள்.

ஐந்தாவது மசாய் சிங்கங்கள் அல்லது கிழக்கு ஆப்பிரிக்க சிங் கங்கள். இவை மிக அழகான வையாக கருதப்படுகின்றன. அதன் நீண்ட கால்களும், சீரான பிடரி முடிகளும், அழுத்தமான முக அமைப்பும் தனி அடையாளமாக திகழ்கின்றன. ஆறாவது, கலகாரி சிங்கங்கள் அல்லது தென்கிழக்கு ஆப்பிரிக்க சிங்கங்கள். இவை மசாய் சிங்கங்களைப் போன்றே மிகப் பெரியவை. ஏழாவது, எத்தியோப்பிய சிங்கங்கள். இவை வெகு சமீப காலத்தில்தான் மரபணு சோதனையின் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க வகை சிங்கங்களில் இருந்து தனி இனமாக அறிவிக்கப்பட்டன. இதன் சிறப்பு அடர்ந்த பிடரி முடியில் இருக்கும் கருப்பு வண்ணமே.

இந்த 7 வகை சிங்கங்களைத் தவிர, துருக்கியில் இருந்து தென்மேற்கு ஆசியா முழுவதும் பரவி இருந்த ஆசிய சிங்கங்கள் இன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மட்டுமே உள்ளன. ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை மிகவும் அருகிவிட்டன. திடீரென பரவும் தொற்றுநோய்கள், ஒரே குடும்பங்களுக்குள் நேரும் இனச்சேர்க்கையினால் பலவீனம் அடைதல், இடநெருக்கடிகளால் காடுகளை விட்டு வெளியேறும் சிங்கங்களால் ஏற்படும் மனித - விலங்கு மோதல்கள் போன்ற பிரச்சினைகளை ஆசிய சிங்கங்கள் எதிர்கொள்கின்றன. அரசர் காலத் தில் சிங்கங்கள் பெரிய அழிவை சந்தித்திருந்தாலும், அதையே சொல்லிக்கொண்டு இருக்காமல் தற்போதுள்ள பிரச்சினைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வன உயிர்களை காப் பதன் மூலம் இயற்கையின் சம நிலையை நிலை நிறுத்தினால் நமக்குத் தேவையான நீர், காற்று, ஆரோக்கியம் போன்ற செல்வங் களையும் பெறலாம் என்றார்.

https://tamil.thehindu.com

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

 

உபெர் அறிமுகம் செய்யவுள்ள பறக்கும் டாக்ஸி எப்படியிருக்கும்?

விமானி இல்லா தானியங்கி ஹெலிகாப்டரை தயாரிப்பது உபெர் நிறுவனத்தின் எதிர்கால திட்டம். பேட்டரி மூலம் இயங்கும் இந்த வாகனம், மணிக்கு அறுபது மைல் வேகத்தில் பறக்கும்.

Share this post


Link to post
Share on other sites

''என் மகள் ஜிவா தான் என் அழுத்தத்தைப் போக்கும் சக்தி'' - தோனி நெகிழ்ச்சி


 

 

ziva-is-my-stress-buster

கோப்புப் படம்

 

னது மகள் தான் தன் எல்லா அழுத்தத்தையும் போக்கும் சக்தி என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.

சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனியிடம், அவரது மகள் ஜிவாவுக்கு கிடைக்கும் ஊடக கவனங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அந்தக் கேள்வியை எதிர்பார்த்திராத தோனி, சற்று ஆச்சரியமடைந்தார். பின், தன் அழுத்தத்தைப் போக்கும் சக்தி (ஸ்ட்ரெஸ் பஸ்டர்) ஜிவா என தோனி பதிலளித்தார்.

 

"எனக்குப் பிடிக்கறதோ, இல்லையோ, என் மகளுக்குக் கிடைக்கும் அதிக கவனத்தை நான் பார்க்கிறேன். அவளைப் போல ஒருவள் என்னைச் சுற்றி இருப்பது நன்றாக இருக்கிறது. துருதுருவென எப்போதும் ஓடிக் கொண்டே இருப்பாள். எதைச் செய்தாலும் மிகக் கவனமாக இருப்பாள். அதனால் அவளுக்கு அடிபட்டுவிடும் என்று நாங்கள் கவலைப்படுவதில்லை. 

நமது அழுத்த்தையெல்லாம் போக்கும் ஒருவர் நம்மைச் சுற்றி இருப்பது நல்ல உணர்வைத் தரும். அவளுக்கு மூன்றரை வயதுதான் ஆகிறது ஆனால் இப்போதே பெரியவர்கள் போல நடந்துகொள்கிறாள், பேசுகிறாள். மகள் எப்போதும் நம்மைச் சுற்றி இருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.

நான் எங்கு போனாலும்,அவள் எங்கிருக்கிறாள், என்ன செய்கிறாள் என அவளைப் பற்றிதான் நிறைய கேட்கிறார்கள். என்னைப் பற்றி கேட்பதேயில்லை" என்று தோனி கூறி முடித்தார்.

https://www.kamadenu.in

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்க அதிபர் ரீகனின் வானொலி அதிர்ச்சி பேச்சு (11-8-1984)

 
 
அமெரிக்க அதிபர் ரீகனின் வானொலி அதிர்ச்சி பேச்சு (11-8-1984)
 
தனது குரலை சோதிப்பதற்காக வானொலி ஒன்றிற்காக அமெரிக்க அதிபர் ரீகன் கூறியது: எனது சக அமெரிக்கர்களே ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும் என்றார். இந்த பேச்சால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் குரல் பரிசோதனைக்குதான் என்பதை அறிந்தபின் நிம்மதி அடைந்தனர்.

மேலும் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1920 - லாத்வியாவின் அதிகாரத்தை போல்ஷெவிக் ரஷ்யாவிடம் வழங்கும் உடன்பாடு லாத்வியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் ஏற்பட்டது.

* 1954 - கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர்.

* 1960 - பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது.

* 1965 - கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

* 1968 - பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.

* 1972 - வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க தாக்குதல் படையினர் தென் வியட்நாமை விட்டுப் புறப்பட்டனர்.

* 1975 - போர்த்துக்கீசத் தீமோரில் உள்நாட்டுக் கலவரம் ஆரம்பித்ததில் அதன் ஆளுநர் "மாரியோ லெமொஸ் பிரெஸ்" தலைநகர் டிலியை விட்டுத் தப்பினார்.

* 1999 - ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.

* 2003 - ஆப்கானிஸ்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ நாடுகள் அனுப்பின.

* 2003 - ஜெமா இஸ்லாமியா இயக்கத் தலைவர் ரிதுவான் இசாமுதீன் (ஹம்பாலி) பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்டார்.

* 2006 - யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.
 
 

https://www.maalaimalar.com/

Share this post


Link to post
Share on other sites

வலைபாயுதே

 

twitter.com/Kozhiyaar

குழந்தைகளுடன் வெளியில் செல்வதில் ஒரு நல்லது உண்டு!

எப்படியும் ஸ்நாக்ஸ் எடுத்துட்டுப் போவோம், நமக்குப் பசித்தாலும் பிரச்னை இருக்காது!

twitter.com/g4gunaa

“ஹேப்பி ஃப்ரெண்ட்ஷிப் டே டா மச்சான்”னு போன் பண்ணிச் சொன்னா, “மூடிட்டு போனை வைடா டேஷ்”ங்கறவன் தான் உண்மையான நண்பன்.

p110a_1533676309.jpg

twitter.com/urs_venbaa

போன் இல்லாம இருந்தாலே போதிமரத்தின் அடியில் அமர்ந்திருப்பதுபோல.

facebook.com/iam.suriyaraj

டீம்ல இருக்குறவனெல்லாம் இந்தியாவுக்கே ரிட்டர்ன் அனுப்பிட்டு, தன்னோட `பூஸ்ட்’ விளம்பரத்துல விளையாண்ட குட்டிப் பயலுவகளை டீம்ல சேர்த்தாலேபோதும் விராட்கோலி, கப் நமதே..!

facebook.com/umar.ibu.3

இந்தக் காலத்துல தங்கத்தைக்கூடக் காசு கொடுத்து வாங்கிடலாம்... ஆனா, பிரியாணிக்குதான் பாக்ஸிங்லாம் பண்ண வேண்டியிருக்கு...!

twitter.com/Thaadikkaran

“எல்லையில் நடக்கும் ஊடுருவலைத் தடுத்துப் பாதுகாக்கவே நான் பாதுகாப்பு அமைச்சராக உள்ளேன்”- நிர்மலா சீதாராமன். நாங்ககூட ராணுவ விமானம் வாடகைக்கு விடுறவங்கன்னு நெனச்சுட்டோமுங்க..!

twitter.com/Malarko65562105

டி.வி.யில சோப் விளம்பரத்தில குழந்தை அழுக்கா வந்தா அம்மா சிரிச்சுட்டே சட்டையைத் துவைக்கிறாங்க. நான் குழந்தையா இருந்தப்பெல்லாம் அழுக்கா வந்தா முதல்ல என்ன துவைச்சுட்டுதான் எங்கம்மா சட்டையைவே துவைப்பாங்க.

p110b_1533676357.jpg

twitter.com/BlackLightOfl

பல வீடுகளில் சமைத்த உணவை வைக்கும் இடத்தின் பெயர்தான் சாப்பாட்டு மேசை (டைனிங் டேபிள்). மற்றபடி ஹால்தான் சாப்பிடும் இடம்.

twitter.com/selvaraj851

எவன் எப்டி பாசமா பேசுனாலும் ரியாக்ஷன்லயே கிண்டலடிக்கிறது ஒண்ணு வடிவேலா இருக்கணும், இல்ல துரைமுருகனா இருக்கணும்!

twitter.com/shivaas_twitz

சேமிப்புக் கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் ஐந்தாயிரம் கோடி அபராதம் வசூலிப்பு: செய்தி

‘பேங்க் ஒண்ணு கட்டிக்கொடுங்க... நடத்துறோம்’னு கைப்புள்ள சொன்னது காமெடி இல்ல... நல்ல ஐடியாதான்போல..

twitter.com/Kozhiyaar

ஏடிஎம்மிலிருந்து வெளியே வருபவரை ‘பணம்  இருக்கா?’ என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைவது சடங்காகி விட்டது!

p110c_1533676399.jpg

twitter.com/amuduarattai

மனைவியிடம், நம் மொபைல் இருக்கும் நேரம், ஒரு திகில் படத்தைப் பார்த்ததை விட அதிக திகில் உணர்வைத் தரவல்லது.

twitter.com/Thaadikkaran

புதுசா போன் வாங்கியவன் அருகில் அமர்வது உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் கேடு விளைவிக்கும்..!

twitter.com/kathir_twits

“ராகுலுக்குப் பதில் சொல்ல எனக்கு இத்தாலி மொழி தெரியாது” - அமித்ஷா. கூடவே மொழிபெயர்க்க ஹெச்.ராஜா இருக்காரே செவ்வாழை, மறந்துட்டீங்களா?!

twitter.com/satturkaran

இனிமேல் வதந்தி எனச் சொல்வதைவிட

வாட்ஸ்-அப் செய்தி என்றே சொல்லலாம்...

p110d_1533676439.jpg

twitter.com/Aruns212

 மொபைல் ரிங்டோன் வயசுக்குத் தகுந்த மாதிரி ரகுமான், ராஜா, பக்திப் பாடல்கள்னு ட்ராவல் ஆகி,கடைசியாக டீஃபால்ட் ரிங் டோனில் நின்றுவிடுகின்றது.

twitter.com/Thaadikkaran

 ஆடிமாதத்தில் அலாரம் இல்லாமல், தூங்கியவர்களை எழுப்பிய பெருமை எல்.ஆர்.ஈஸ்வரியைச் சாரும்..!

twitter.com/RagavanG

p110e_1533676482.jpg

நடுநிலையா இருக்கணும்னு நினைக்கிறவன்கூட இனிமே நடு நிலைன்னு சொல்லிக்கக் கூச்சப்படும் அளவுக்குப் போயிட்டிருக்கு நடுநிலைத்தனம்.

twitter.com/gips_twitz

எப்பொருள் சீமான்வாய்க் கேட்பினும் அப்பொருள்

 மெய்ப்பொருள் காண்பது அறிவு

twitter.com/amuduarattai

சொர்க்கத்தில்... திங்கள் கிழமைகள் இருக்காது.

twitter.com/manipmp

p110f_1533676523.jpg

ஒரு புதுச்சட்டைக்குப் பழைய பேன்ட் போடுவதெல்லாம்., பழைய பேன்ட்டுக்கு மறுவாழ்வு கொடுக்கிற மாதிரி

twitter.com/kathir_twits

தமிழ்நாட்டில் பொறியாளர் கட்சினு ஒண்ணு ஆரம்பிச்சா நிச்சயம் எதிர்க்கட்சி ஆகிடலாம்.

twitter.com/kumarfaculty

எல்லா மண்டையோடுகளும் சிரித்துக் கொண்டுதான் இருக்கின்றன...!!!

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

உலகக் கோப்பை நாயகர்கள்: லுகாகு - பந்தால் வறுமையை விரட்டியவன்

 

 
lukaku%202jpg

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் அரையிறுதிவரை முன்னேறிய பெல்ஜியம் அணியின் நட்சத்திரம் ஆப்பிரிக்க வம்சாவளி வீரர் ரொமேலு லுகாகு. இன்றைக்கு பெல்ஜியம் வீரராக லுகாகு ஜொலித்துக்கொண்டிருப்பதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருந்தது எது தெரியுமா? வறுமை, சிறு வயதில் அவர் அனுபவித்த கடும் வறுமைதான் காரணம்.

“எப்போது பந்தை உதைத்தாலும் அது கிழிந்துவிடுவதுபோல முழு வேகத்துடன்தான் உதைப்பேன். எப்போதுமே கால்பந்தை மிகுந்த கோபத்துடன் நான் விளையாடியதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. எங்கள் வீட்டில் எப்போதுமே எலிகள் ஓடிக்கொண்டிருந்தன; பெரிதும் எதிர்பார்ப்பைக் கிளறக்கூடிய 2002 உலகக் கோப்பை, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டிகளைப் பார்க்க முடியாமல் போனது; சிறு வயதுக் கால்பந்துப் போட்டிகளில் மற்ற குழந்தைகளின் பெற்றோர் என்னைச் சந்தேகத்துடன் பார்த்தது... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

 

நான் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் எனக்கு இறுதிப் போட்டிதான். பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடியபோதும், பள்ளியில் விளையாடியபோதும் அதுவே எனக்கு இறுதிப் போட்டி" - நடந்து முடிந்த உலகக் கோப்பையின்போது தன் இளமைக் காலம் குறித்து, லுகாகு ஒரு கட்டுரை எழுதினார். அதன்பிறகு அதிகம் பேசப்பட்ட கதையாக லுகாகுவின் வாழ்க்கை மாறியது.

அகதிக் குடும்பம்

காங்கோலீஸ் அகதிக் குடும்பத்தைச் சேர்ந்த லுகாகு, பெல்ஜியத்தின் இரண்டாவது பெரிய நகரமான ஆண்ட்வெர்ப்பின் புறநகர் பகுதியில் வளர்ந்தார். கால்பந்து விளையாட்டில் தான் ஒரு வெற்றிகரமான வீரராக வேண்டும் என்ற தீர்மானம், இளம் வயதில் வறுமையில் வாடியபோது அவர் எடுத்ததே. உலகக் கோப்பை எனும் கவர்ச்சிகரமான பெரும் கொண்டாட்டத்துக்கு முற்றிலும் நகை முரணான ஒரு சூழல்தான் அவருடைய வாழ்க்கையாக இருந்தது.

லுகாகுவின் அப்பா ரோஜரும் ஒரு தொழில்முறை கால்பந்து வீரர்தான். 1999-ல் அவர் ஓய்வுபெற்றபோது லுகாகுவுக்கு ஆறு வயது. அதன்பிறகு அவருடைய குடும்பம் வருமானம் இன்றித் தவித்தது, வாழ்க்கை மிகவும் கடினமானதாக மாறியது.

குளிர் நிறைந்த ஐரோப்பிய நாட்டில் சுடுநீரில் அவர்களால் குளிக்க முடியாது. அடுப்பில் சுட வைக்கப்பட்ட நீரை, சிறு குவளையால் எடுத்துத் தலையில் தெளித்துக்கொள்ளவே முடியும். தன் பிரார்த்தனைகளை பல நேரம் இருட்டறைகளிலேயே முடித்துக்கொண்டுள்ளார். மின்கட்டணம் செலுத்தப் பணம் இல்லாததே காரணம். அவர்கள் ஏழையாக மட்டும் இருக்கவில்லை, கையில் காசில்லாமலும் தவித்துக்கொண்டிருந்தார்கள்.

பால் உணர்த்திய வறுமை

எந்த விளையாட்டு வீரரும் சிறு வயதில் இருந்தே ஊட்டச்சத்துமிக்க உணவை அவசியம் சாப்பிட்டாக வேண்டும். "தினசரி பிரெட்டும் பாலும் மட்டுமே எங்களுக்குக் கிடைத்தது. சில நாட்கள் அதுவும் கிடைக்காது. திங்கள்கிழமை கடனுக்கு வாங்கும் பிரெட்டுக்கு, வெள்ளிக்கிழமைதான் காசு கொடுப்போம்.

lukakujpg
 

ஒரு நாள் குடும்பத்தினர் அனைவருக்கும் பாலைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, அதில் அளவுக்கு மீறி என் அம்மா தண்ணீரைக் கலந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போதுதான் நாங்கள் உழன்றுகொண்டிருந்த வறுமையை என்னால் நேரடியாக உணர்ந்துகொள்ள முடிந்தது.

இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்று அப்போது முடிவு செய்தேன். தொழில்முறை கால்பந்து மட்டுமே வறுமையிலிருந்து என் குடும்பத்தைக் காக்கும் என்று அப்போது முடிவுசெய்தேன்" என்று லுகாகு குறிப்பிட்டுள்ளார்.

16 வயதும் ரூ. 600 கோடியும்

தொழில்முறைக் கால்பந்துக் குழுவில் 16 வயதில் சேருவேன். அதன் பிறகு நம் துன்பங்கள் அகன்றுவிடும் என்று தன் குடும்பத்தினருக்கு லுகாகு உத்தரவாதம் அளித்திருந்தார். அதேபோல லுகாகுவின் 12 வயதில் அவருடைய தாத்தா இறந்தபோது, 'அம்மாவை நான் பார்த்துக் கொள்வேன்' என்று தாத்தாவுக்கு லுகாகு வாக்குறுதி கொடுத்திருந்தார்.

தொழில்முறை கால்பந்துக் குழுவில் சேருவேன் என்று லுகாகு சொல்லியிருந்தார் இல்லையா, சொன்னபடியே 16 வயதில் ஆண்டர்லெக்ட் கிளப்பில் அவர் சேர்ந்தார். என்ன ஒன்று 16 வயதுடன் கூடுதலாக 11 நாட்கள் ஆகியிருந்தன, அவ்வளவுதான். அதற்குப் பிறகு செல்சியா, வெஸ்ட் புரோம்விச், அல்பியான், எவர்டன் ஆகிய கிளப்களில் விளையாடிய பிறகு, கடந்த ஆண்டு ஐரோப்பிய கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு 600 கோடி ரூபாய்க்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பெல்ஜியம் தேசிய அணிக்காக 75 கோல்களை அடித்து சாதனை படைத்திருக்கிறார்.

அதிரடிதான் முகவரி

“வாழ்க்கை ரொம்பக் குறுகியது. அதில் மன அழுத்தத்தையும் நாடகத்தன்மையையும் ஏற்றிக்கொள்ள வேண்டியதில்லை. பெல்ஜியம் அணி குறித்தும், என்னைக் குறித்தும் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். விளையாடுவது மட்டும்தான் என் நோக்கம்." - இந்த உலகக் கோப்பை தொடங்கிய நேரத்தில் லுகாகுவின் தீர்மானம் இதுவாகத்தான் இருந்தது.

சொன்னதுபோலவே, இந்த முறையும் லுகாகு அதிரடியாக ஆடத் தொடங்கினார். உலகக் கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து நான்கு கோல்களை அடித்தார். 1986-ல் அர்ஜென்டினா கால்பந்து சாதனையாளர் டீகோ மரடோனா உலகக் கோப்பையில் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் கோல் அடித்த பிறகு இதுவே சாதனை. அத்துடன் பெல்ஜியம் அணி அரையிறுதிவரை முன்னேறியது.

தாத்தாவுக்கு ஃபோன்

எனது தொழில்முறை கால்பந்துக் கனவு நனவானதையும் அம்மாவை இப்போது நான் பார்த்துக்கொள்வதையும் பார்க்க என் தாத்தா இன்றைக்கு இல்லை என்பது மட்டும்தான் என்னுடைய கவலை. இதையெல்லாம் ஒரு ஃபோன் செய்து அவரிடம் சொல்ல முடிந்தால் நன்றாக இருக்கும்:

“தாத்தா உங்களிடம் நான் சொல்லியிருந்தேன் இல்லையா. உங்கள் மகளை நான் பார்த்துக்கொள்வேன் என்று. சொன்னதுபோலவே இப்போது நான்தான் பார்த்துக்கொள்கிறேன். இப்போது நம் வீட்டில் எலிகள் ஓடிக்கொண்டிருக்கவில்லை. வெறும் தரையில் படுத்துத் தூங்க வேண்டிய கட்டாயம் இல்லை. மன அழுத்தம் இல்லை. நாங்கள் இப்போது நன்றாக இருக்கிறோம் தாத்தா" என்று சொல்ல வேண்டும்.

https://tamil.thehindu.com

Share this post


Link to post
Share on other sites

அணில் குட்டியிடம் இருந்து மனிதரை காப்பாற்றிய ஜெர்மனி காவல் துறை

ஒரு மனிதரை துரத்தி, பயமுறுத்திய குட்டி அணில் ஒன்றிடம் இருந்து அந்த மனிதரை ஜெர்மனி காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.

தூங்கிய அணில் குட்டி

 

தாயை இழந்துவிட்ட அணில் குட்டிகள் தாய்க்கு மாற்றாக ஒரு மனிதரிடம் தங்களின் கவனத்தை திருப்பலாம்.

உதவி செய்ய அழைப்பு வந்தவுடன் விரைவில் வந்தடைந்த மேற்கு நகரான கார்ல்ஸ்ரூ அதிகாரிகள், உதவிக்கு அழைப்புவிடுத்தவரை ஒரு குட்டி அணில் பயமுறுத்தி கொண்டிருப்பதை கண்டனர்.

திடீரென அந்த அணில் குட்டி அயர்ந்து தூங்க தொடங்கியது. காவல்துறையினர் அதனை பாதுகாப்பாக பிடித்து, விலங்குகள் மீட்பு மையம் ஒன்றில் சேர்த்துள்ளனர்.

நன்மையை கொண்டு வருகின்ற புதிய அடையாளமாகியுள்ள இந்த அணிலுக்கு, 'கார்ல்-ப்ரீட்ரிச்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக இந்த சம்பவம் பற்றி அறிக்கையில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அணில் குட்டி

 

காவல்துறைக்கு நற்பெயரை கொண்டு வருகின்ற புதிய அடையாளமாக இந்த அணில் மாறியுள்ளது.

விலங்குகள் மீட்பு மையத்தில் இந்த அணில் குட்டி நன்றாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்டவரின் பல புகைப்படங்களோடு, கார்ல்ஸ்ரூ காவல்துறை ட்விட்டர் செய்தி பதிவிட்டுள்ளது.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @Polizei_KA
View image on TwitterView image on TwitterView image on TwitterView image on Twitter
 

„Hilfe, ich werde von einem #Eichhörnchen verfolgt!“ Eventuell mit diesen Worten richtete sich am Do, gegen 8:00 Uhr früh, ein Mann an den Karlsruher Polizeinotruf.

Zur PM: http://bit.ly/2KHNrVr 

Eure #Polizei #Karlsruhe

தங்களுக்கு உணவோ, உதவியோடு தேவைப்படும்போது அணில்கள் மனிதரை துரத்தும் என்று அறியப்படுகிறது.

தங்களின் தாயை இழந்துவிட்ட அணில் குட்டிகள் தாய்க்கு மாற்றாக ஒரு மனிதரிடம் தங்களின் கவனத்தை திருப்பலாம் என்று காவல்துறையின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டினா கிரென்ஸ் 'கார்டியன்' செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

"இது பயமுறுத்துவதுபோல தோன்றலாம். எங்களை தொலைபேசியில் அழைத்து உதவி கோரியவரும் சற்று பீதியடைந்திருந்தார்," என்று அவர் கூறினார்.

அணில் தாக்குதல்கள் எப்போதும் நன்மையானதாக இருப்பதில்லை.

அணில் குட்டிபடத்தின் காப்புரிமைEPA/KARLSRUHE POLICE Image captionவிலங்குகள் மீட்பு மையத்தில் இந்த அணில் குட்டி நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

கோபமாக இருக்கின்ற அணில்களிடம் இருந்து தங்களை காத்துகொள்ள வேண்டும் என்று புரோஸ்பெக்ட் பூங்கா பார்வையாளர்களை நியூ யார்க் அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் வழக்கத்திற்கு மாறாக எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஒரு வாரத்தில் 5 பேரை இந்த அணில்கள் தாக்கியிருந்தன.

கடந்த ஆண்டு பிரிட்டனின் கோர்ன்வாலில் ஆறு அணில்களால் கடிக்கப்பட்ட மூன்று வயது குழந்தை ஒன்று உடல் முழுவதும் ரத்தத்தோடு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது.

https://www.bbc.com

Share this post


Link to post
Share on other sites

பேரழகி கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள்

 
அ-அ+

எகிப்தை ஆண்ட பன்னிரண்டாம் தொலமிக்கு கிளியோபாட்ரா என்ற பெண்ணும், பதின்மூன்றாம் தொலமி, பதினான்காம் தொலமி ஆகிய மகன்களும் இருந்தனர். கிளியோபாட்ராவின் தாய் பெயர் இஸிஸ் எனக் கூறப்படுகிறது. பன்னிரண்டாம் தொலமியின் இறப்பிற்கு பின்பு பண்டைய எகிப்தின் முறைப்படி பெண் முடிசூட இயலாது. எனவே கிளியோபாட்ரா தனது சகோதரர்களை திருமணம் செய்துகொண்டார்.

 
 
 
 
பேரழகி கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள்
 
எகிப்தை ஆண்ட பன்னிரண்டாம் தொலமிக்கு கிளியோபாட்ரா என்ற பெண்ணும், பதின்மூன்றாம் தொலமி, பதினான்காம் தொலமி ஆகிய மகன்களும் இருந்தனர். கிளியோபாட்ராவின் தாய் பெயர் இஸிஸ் எனக் கூறப்படுகிறது.

பன்னிரண்டாம் தொலமியின் இறப்பிற்கு பின்பு பண்டைய எகிப்தின் முறைப்படி பெண் முடிசூட இயலாது. எனவே கிளியோபாட்ரா தனது சகோதரர்களை திருமணம் செய்துகொண்டார். அவர்களில் மூத்தவர் இவர் என்பதால் எகிப்தின் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். அப்பொழுது கிளியோபாட்ராவிற்கு பதினாறு வயதென்றும், அவரது சசோதரருக்கு 10 வயது  எனத் தெரிகிறது. இவர் தனது தந்தை ஆட்சியிலிருந்த பொழுதே, அதிகாரத்தினை பகிர்ந்துகொண்டதாகவும் தெரிகிறது.

அமைச்சர்களும், வணிகர்களும் தங்களுடைய எண்ணத்தினை நிறைவேற்றிட தொலமியை உபயோகித்து கொண்டனர். இதனால் கிளியோபாட்ராவின் அரசு பறிபோனதுடன், எகிப்தினை விட்டு விரட்டப்பட்டாள். சிரியாவிற்கு சென்றவள் ஜூலியஸ் சீசர் எனும் வீரன் எகிப்தை போர் செய்து வெல்ல வந்திருப்பதை அறிந்தாள். அதனால் சீசருடன் இணைந்து எகிப்தினை வெல்ல திட்டமிட்டாள். சீசருக்கும் கிளியோபாட்டராவின் கணவனுக்கும் (சகோதரர்) நடந்த சண்டையில் சீசர் கணவனை கொன்று விடுகிறார்.

கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய சீசர் அவளை திருமணம் செய்துகொள்கிறார். இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் சிசேரியன் எனக் கூறப்படுகிறது. நெடுநாள் கழித்து ரோமாபுரிக்கு சென்ற சீசர் தனது நண்பன் புருட்ஸ் என்பவரால் கொலை செய்யப்பட்டார். அதன்பின் ரோமில் சீசரின் வாரிசுகளுக்கும், தளபதிகளுக்கும் பதவி சண்டை நடைபெற்றது. கணவர் துணையின்றி இருந்த கிளியோபாட்ரா சீசரின் படைத்தளபதியான ஆண்டனி என்பவரை சந்தித்தாள். அவர் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி திருமணம் செய்துகொண்டார். அடுத்து தனது இரண்டு சகோதரிகளையும், மீதமிருந்த சகோதரனையும் கிளியோபட்ராவே கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் வாரிசு சண்டை என்ற பேச்சுக்கே இடமின்றி போனது.

ஆண்டனி- கிளியோபட்ராவிற்கு இரண்டாம் கிளியோபாட்ரா செலீன், அலெக்சாண்டர் ஹெலியோஸ் என இரட்டையர்கள் பிறந்தார்கள். அதன்பின் தொலமி பிலடெல்பஸ் என்பவரும் பிறந்தார். சீசரின் வாரிசான ஆக்டோவியஸ் சீசர் கிளியோபட்ராவை எதிர்த்தார். எகிப்தின் ஆட்சிக்காக ஆண்டனியுடன் ஆக்டோவியஸ் சண்டை மூண்டது. இதில் ஆண்டனி கொலை செய்யப்பட்டார்.

ஆண்டனியின் மரணத்தினை ஏற்றுக்கொள்ள இயலாத கிளியோபட்ரா, தன்னை மகாராணி போல அலங்கரித்துக் கொண்டு விஷப் பாம்புகளை தீண்டும்படி செய்து உயிர் துறந்தாள். கிளியோபாட்ராவின் மரணத்தினை வரலாற்று ஆசிரியர்கள் சிலர் வேறுவிதமாக கூறுகிறார்கள். கிளியோபாட்ரா உடலழகு மீது மிகுந்த கவனம் செலுத்தியவர் என்பதால், பாம்பின் விஷம் தீண்டி இறந்தால் முகம் விகாரமடையும் என்ற காரணத்திற்காக அவ்வாறு செய்திருக்க மாட்டார் என்கிறார்கள்.

கிளியோபாட்ரா பண்டைய எகிப்தில் வழக்கதிலிருந்த கொடிய தாவர விஷத்தினை அருந்தியே இறந்தார் என்கிறார் செபர் எனும் வரலாற்று அறிஞர். பண்டைய பாடலாசிரியர்களும் இதையே பாடல்களில் பாடியுள்ளார்கள் என்ற போதும், கிளியோபட்ரா பாம்பு தீண்டி இறந்தார் என்பதையே பல்வேறு ஓவியங்கள் விளக்குகின்றன.

கிளியோபாட்ராவை பேரரறிவு உடையவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவர், வானியல், ஜோதிடம் முதலிய பல கலைகளில் சிறந்து விளங்கியதாகவும், தானே ஏழுவகையான வாசனை திரவியங்களை தயாரித்ததாகவும் கருத்துண்டு. ஏழு மொழிகளை பேசவும், எழுதவும், படிக்கவும் கற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. எகிப்தினை ரோமானியர்களிடமிருந்து காப்பாற்ற அவள் தனது வாழ்வை தியாகம் செய்தவள் என்ற கருத்தும் காணப்படுகிறது.

தினம் பாலில் குளிப்பவள், கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள், உடல் முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள் என்ற கருத்தும் உண்டு.

https://www.maalaimalar.com

Share this post


Link to post
Share on other sites

‘விளையாடுங்கள், வேட்டையாடாதீர்கள்’ - யானை குறித்து 11 சுவாரஸ்ய தகவல்கள்

இயற்கையின் தலைசிறந்த படைப்பு யானை என்பார் பிரிட்டிஷ் கவிஞர் ஜான் டோன். ஆம், பார்க்க பார்க்க அலுக்காத ஜீவன் யானை.

யானைகள் பற்றி பேச எழுத எவ்வளவோ உள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமானவை. அவற்றில் அடிப்படையான 11 தகவல்களை மட்டும் உலக யானைகள் தினமான இன்று பகிர்கிறோம்.

ஒன்று

'விளையாடுங்கள், வேட்டையாடாதீர்கள்' - யானை குறித்து 11 சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உலகில் பல்லாயிரகணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவை. ஒன்று ஆசிய யானைகள்; மற்றொன்று ஆஃப்ரிக்க யானைகள்.

Presentational grey line

இரண்டு

'விளையாடுங்கள், வேட்டையாடாதீர்கள்' - யானை குறித்து 11 சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது.

Presentational grey line

மூன்று

'விளையாடுங்கள், வேட்டையாடாதீர்கள்' - யானை குறித்து 11 சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

யானை பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமானது.

'விளையாடுங்கள், வேட்டையாடாதீர்கள்' - யானை குறித்து 11 சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Presentational grey line

நான்கு

'விளையாடுங்கள், வேட்டையாடாதீர்கள்' - யானை குறித்து 11 சுவாரஸ்ய தகவல்கள்

யானைகளுக்கு கண் இமைகள் உள்ளன.

Presentational grey line

ஐந்து

'விளையாடுங்கள், வேட்டையாடாதீர்கள்' - யானை குறித்து 11 சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆஃப்ரிக்க யானைகள்தான் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு. டைனோசர் எல்லாம் நாம் நினைவில் வேண்டுமானால் வாழலாம். இப்போது நிலத்தில் வாழும் விலங்குகளில் யானைகள்தான் பிரம்மாண்டமானவை.

Presentational grey line
  •  
  •  

ஏழு

'விளையாடுங்கள், வேட்டையாடாதீர்கள்' - யானை குறித்து 11 சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

யானைகளுக்கு பிடிக்காத ஒரு உயிரினம் 'தேனீ'

Presentational grey line

எட்டு

'விளையாடுங்கள், வேட்டையாடாதீர்கள்' - யானை குறித்து 11 சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையைவிட யானையின் தந்தத்தில் அதிக சதை உள்ளது.

Presentational grey line

ஒன்பது

'விளையாடுங்கள், வேட்டையாடாதீர்கள்' - யானை குறித்து 11 சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

யானைகள் 22 மாதங்கள் கர்ப்பமாக இருந்து குட்டியை ஈன்றெடுக்கும்.

Presentational grey line

பத்து

'விளையாடுங்கள், வேட்டையாடாதீர்கள்' - யானை குறித்து 11 சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது. பொதுவாக மனிதர்கள் வலது கை பழக்கம் உடையவர்களாக இருந்தாலும், இடது கை பழக்கம் உடையவர்களும் இருக்கிறார்கள் தானே... அது போல யானைகளையும் நாம் அடையாளப்படுத்தலாம். அதாவது, எந்த பக்க தந்தத்தை அது அதிகம் பயன்படுத்துகிறது என்பதை பொறுத்து அதனை அடையாளப்படுத்த முடியும்.

Presentational grey line

பதினொன்று

'விளையாடுங்கள், வேட்டையாடாதீர்கள்' - யானை குறித்து 11 சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உலக வனவிலங்கு நிதியத்தின் கணக்குப்படி, உலகில் இப்போது 4,15,000 ஆஃப்ரிக்க யானைகள் உள்ளன. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. எண்ணிக்கையில் பார்ப்பதற்கு அதிகமாக தெரிந்தாலும், இவை அருகிவரும் விலங்கினமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் வேட்டையாடுதல் தான்.

https://www.bbc.com

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

`வரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி?!

3277_thumb.jpg
 
`வரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி?!
 

இந்தக் காலத்து இளைஞர்களின் விருப்பமான உடைகளுள் ஒன்று, `ஜீன்ஸ்'. வெயில், மழை என எந்தக் காலத்திலும் சற்றும் யோசிக்காமல் அணிந்துகொள்ளும் உடை. தரமான ஜீன்ஸ் பிராண்டு என்றதும், உலகளவில் பெரும்பாலானவர்களின் சாய்ஸ் `லீவைஸ்'. விதவிதமான பேட்டர்ன், கச்சிதமானப் பொருத்தம், நீடித்த உழைப்பு போன்றவற்றுக்குப் பேர்போன லீவைஸ்தான் முதன்முதலில் ஜீன்ஸ் பேன்ட்டுகளைத் தயாரித்த நிறுவனம். இருபாலாருக்கும் பிடித்த இந்த `ஜீன்ஸ்' பிறந்த வரலாறு இதோ...

லீவைஸ் ஜீன்ஸ்

`லீவைஸ்' நிறுவனர்  லீவ் ஸ்ட்ராஸ், 1829-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி, ஜெர்மனி நாட்டில் உள்ள பவேரியாவில் பிறந்தார். சிறுவயதிலேயேLevi Strauss தந்தையை இழந்து, பிழைப்புக்காக தன் தாய், சகோதர, சகோதரிகளுடன் நியூயார்க் நகரத்தில் குடியேறினார். அங்கு கேன்வாஸ், ரெடிமேட் துணிவகைகளைக்கொண்டு வணிகம் செய்யும் தன் சகோதரர்களுடன் இணைந்து தொழிலைக் கற்றுக்கொண்டு, தானே சுயமாய் தொழில் தொடங்க முடிவுசெய்தார்.

 

 

1853-ம் ஆண்டு, கலிஃபோர்னியாவில் தங்க சுரங்க வேலைக்காக, வெவ்வேறு நாட்டிலிருந்து ஏராளமான மக்கள் அங்கு குடிபெயர்ந்தனர். பொதுமக்கள் கூட்டம் நிறைந்த இடம் என்பதால், தனது வணிக அலுவலை விரிவுப்படுத்த நினைத்த லீவ் ஸ்ட்ராஸும் அங்கு சென்றார். ஆனால், அங்கு வியாபாரம் சரியாக அமையவில்லை. கரிகளை அள்ளிப் போடும் தொழிலாளர்களிடம், ஒரு மீட்டர் கேன்வாஸ் துணியைக்கூட அவரால் விற்க முடியவில்லை. எனவே, அவரிடம் இருந்த கேன்வாஸ் துணிகளை, ஒரு தையல்காரரிடம் கொடுத்து பத்து பேன்ட்டுகளாக மாற்றினார். இவற்றைப் பார்த்ததும், அங்கு இருந்த தொழிலாளர்கள் உடனே வாங்கி அணிந்துகொண்டனர். அங்கு இருக்கும் குப்பை மற்றும் அழுக்குகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த உடை, தொழிலாளர்களுக்கான வரப்பிரசாதமாகக் கருதினர்.

பிறகு, கேன்வாஸ் துணிக்குப் பதிலாக அடர்ந்த காட்டன் ஃபேப்ரிக்கான `டெனிம்' துணிவகையைக்கொண்டு பேன்ட்டுகளை உருவாக்கினார் ஸ்ட்ராஸ். 19-ம் நூற்றாண்டின் மலிவான வண்ணச்சாயம் `இண்டிகோ' நிறம் என்பதால், அதையே பயன்படுத்தினார் லீவ். அப்போதுதான் தன் நிறுவனத்தின் பெயரை `Levi Strauss & Co' என மாற்றினார்.Levis Label

தொழிலாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், `பேன்ட்டுகளில் பொருத்தப்பட்டிருக்கும் பாக்கெட்டுகள் அடிக்கடி கிழிந்துவிடுகின்றன' என்ற புகார் தொடர்ந்து வந்தது. இந்நிலையில்தான், 1872-ம் ஆண்டு, ஜகோப் டேவிஸ் எனும் தையல்காரரிடமிருந்து ஸ்ட்ராஸுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், `நீடித்து உழைக்க வேண்டும் என்பதற்காக, Rivets கொண்டு, தனிப்பட்ட முறையில் தன் வாடிக்கையாளர்களுக்கு பேன்ட்டுகளைத் தைத்துத் தருவதாகவும், அதற்கான காப்புரிமைப் பெறுவதற்கு சரியான தொழில்முறை பங்குதாரர் வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். இதைக் கண்டு உற்சாகமான லீவ், காப்புரிமை பெறுவதற்கான வேலைகளை உடனே Jeans with Rivetsஆரம்பித்தார். 1873-ம் ஆண்டு, மே 20-ம் தேதி, ஜாகோப் டேவிஸ் மற்றும் Levi Strauss & Co-வுக்குக் காப்புரிமை வழங்கப்பட்டது. இன்று நாம் அனைவரும் உடுத்தும் `ஜீன்ஸ்' முழு உருவம் பெற்று பிறந்தது அந்த நொடியில்தான்.

ஆரம்பத்தில் பேன்ட் முழுவதும் ஆங்காங்கே பொருத்தப்பட்ட ரிவெட்ஸ், பின்னாளில் பாக்கெட்டுகளில் மட்டுமே பொருத்தப்பட்டது. 1896-ம் ஆண்டு இரண்டு குதிரைகள் பதிக்கப்பட்டிருக்கும் `லீவைஸ் லேபிள்', பேன்ட்டுகளில் பொருத்தப்பட்டது. 1902-ம் ஆண்டு, லீவ் ஸ்ட்ராஸ் உயிரிழந்த பிறகு, அவரின் மருமகன்களால் லீவைஸ் நிறுவனம் நடத்தப்பட்டது.

ஆரம்பத்தில், சுரங்கத் தொழிலாளர்கள் மட்டுமே உபயோகித்த ஜீன்ஸ் பேன்ட்டுகள், பிறகு கலிஃபோர்னியாவில் உள்ள பொதுமக்களால் அதிகம் வாங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது, ஜீன்ஸுக்கான பிரசார வேலைப்பாடுகளில் ஈடுபட்டனர் ஸ்ட்ராஸின் குடும்பத்தினர். 20-ம் நூற்றாண்டின் இறுதியில் அதிக மக்களால் ஈர்க்கப்பட்ட உடைகளில் மிக முக்கிய உடையாக அறிவிக்கப்பட்டது ஜீன்ஸ். `வரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்' என, இதற்கு மியூசியத்திலும் இடம் உண்டு.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

14 நாள்கள்

 
கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

 

16p1_1533538658.jpg

பாகிஸ்தானின் முதல் பெண் தலைமை நீதிபதி!

மீபத்தில் பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாண உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தாஹிரா சஃப்தாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமேடையில் அறிவித்தார் அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார். ஓய்வுபெற்ற பெண் நீதிபதி ஃபக்ருன்னிஸாவின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மியான் சாகிப், லாகூர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு வர தனக்குத் தகுதி இருந்தும், தான் நிராகரிக்கப்பட்டதை ஃபக்ருன்னிஸா தெரிவித்ததாகக் கூறினார். எப்போதோ நிகழ்ந்த தவறு அது என்றும், அதைச் சரிசெய்யும் விதமாக, பலூசிஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு, தாஹிராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தனிப்பட்ட முறையில் ஃபக்ருன்னிஸாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக அதைப் பார்க்கவில்லை என்றும், ஒட்டுமொத்தமாகப் பெண் இனத்துக்கு நிகழ்ந்த அநீதி அது என்றும் மியான் சாகிப் தெரிவித்தது பாகிஸ்தான் பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

61 வயதாகும் தாஹிரா சஃப்தார், கெட்டா மாகாணத்தைச் சேர்ந்தவர். புகழ்பெற்ற வழக்கறிஞர் செய்யது ஹனாஃபியின் மகள். 1982-ம் ஆண்டு, பலூசிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீதான எமெர்ஜன்சிகால அத்துமீறல்கள் வழக்கை விசாரிக்கும் மூன்று நபர் நீதி ஆணையத்தில் இப்போது பணியாற்றி வருகிறார் தாஹிரா.

ஆகஸ்ட் 31 அன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவிருக்கிறார் இந்த சாதனைப் பெண்மணி.            

சபாஷ்... சஃப்தார்!


16p2_1533538673.jpg

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியத்தில் தீபிகா படுகோன் சிலை!

ங்கிலாந்தின் பிரசித்தி பெற்ற மேடம் டுசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மெழுகு சிலை வைக்கப்படவுள்ளது. “இது ஓர் அலாதி அனுபவம். மிகுந்த மகிழ்வைத் தரக்கூடியது. இதற்கு என் ரசிகர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார் தீபிகா.

“உங்கள் மெழுகு சிலை என்ன ஆடை அணியப் போகிறது?” என்ற கேள்விக்கு பதில் அளித்த தீபிகா, “அது இந்தியாவை நினைவூட்டும் ஆடையாகத்தான் நிச்சயம் இருக்கும். அங்கேதான் என் வேர்கள் உள்ளன. அதுதான் நான் பிறந்த, வாழும் இடம்... அதே வேளையில், உலக மக்களைக் கவரும் வகையிலும் என் ஆடை அமையும்” என்று தெரிவித்தார். ஷாரூக், அமிதாப் போன்ற பிரபலங்கள் வரிசையில் இடம்பிடித்திருக்கிறார் தீபிகா.

மெழுகு சிலைக்கே ஒரு மெழுகு சிலையா!


16p3_1533538685.jpg

ஒரு தாயின் கனவு!

மும்பையைச் சேர்ந்த பூஜா சின்சங்கர் 1980-ம் ஆண்டு முதல் பறந்துகொண்டிருக்கிறார். ஏர் இந்தியாவின் ‘கேபின் க்ரூ’வாக இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்த பூஜா,  அண்மையில் பணி ஓய்வு பெற்றார். தன் மகள் அஷ்ரிதாவிடம் மகளும் தன்னைப்போலவே விமானத்தில் பறக்க வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்து வந்தார். அஷ்ரிதாவோ மாஸ் மீடியா படிக்க விருப்பம்கொண்டிருந்தார். திடீர் மனமாற்றம் கொண்ட அஷ்ரிதா, கனடா நாட்டில் பைலட் லைசன்ஸ் பெற்று ஏர் இந்தியாவிலேயே பைலட்டாகப் பணியமர்ந்தார்.

அம்மாவுக்குத் தெரியாமலேயே மகள் அவரது பணியின் கடைசி விமானப் பயணத்தில் தானும் சேர்ந்துகொள்ள ஏற்பாடு செய்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஏர் இந்தியா, அதே விமானத்தின் பைலட்டாக அஷ்ரிதாவை நியமித்தது. 38 ஆண்டுகள் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பூஜாவை வாழ்த்துவதாக விமானத்தின் பைலட் அஷ்ரிதா அறிவிக்க, பயணிகள் அனைவரும் கைதட்டி வாழ்த்தினர். மகளின் குரலையும் அறிவிப்பையும் கேட்ட தாய்க்கு பெரும் மகிழ்ச்சி. தன் மகிழ்ச்சியை ட்விட்டரில் பதிவு செய்த அஷ்ரிதா, ஏர் இந்தியாவுக்கு நன்றியையும், தாயைப்போலவே தானும் விமானப் பணியை தொடரப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதுவல்லவோ அம்மா பொண்ணு பாசம்!


16p4_1533538699.jpg

இங்கிலாந்து ராணுவத்தில் கூர்க்கா பெண்கள்!

ங்கிலாந்து ராணுவத்தில் சிறப்பிடம் பிடித்துள்ள கூர்க்கா ரெஜிமென்ட்டில் இனி பெண்களும் பணியமர்த்தப்படுவார்கள் என அந்நாட்டு ராணுவம் அறிவித்திருக்கிறது. 1815-ம் ஆண்டு நேபாளத்தைக் கைப்பற்றியபோது ஏற்பட்ட உயிர்ச்சேதம் இங்கிலாந்துக்கு அச்சத்தைத் தர, நேபாளத்தில் இருந்து தன் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டது. 1947-ம் ஆண்டில் இந்திய விடுதலையின்போது, இந்தியா, நேபாளம், இங்கிலாந்து என மூன்று நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இந்திய ராணுவத்தின் நான்கு கூர்க்கா ரெஜிமென்ட்டுகள் இங்கிலாந்துக்கு மாற்றம் செய்யப்பட்டன. இரண்டாம் உலகப்போரில் 1,12,000 கூர்க்காக்கள் போரில் ஈடுபட்டிருந்தனர். இப்போது இங்கிலாந்து ராணுவத்தில் கிட்டத்தட்ட 3,000 கூர்க்காக்களே உள்ளனர். இன்னமும் போர்முனையில், கூர்க்காக்களின் ஆயுதமான, 18 இஞ்ச் நீளம் கொண்ட `குக்ரி'யைக் கொண்டு செல்கின்றனர். `கோழையாக இருப்பதைவிடச் சாவதே மேல்’ என்பதைத் தங்கள் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.

இங்கிலாந்து ராணுவத்தின் லெஃப்டினன்ட் ஜெனரல் நிக் போப், “ராணுவத்தில் பெண்களின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்ற அரசின் கொள்கையை மனதில் கொண்டு வரும் 2020-ம் ஆண்டு முதல், ஆண் கூர்க்காக்களுக்கு உள்ள அதே நடைமுறையைப் பின்பற்றி பெண் கூர்க்காக்களும் கூர்க்கா ரெஜிமென்ட்டுகளில் பணியமர்த்தப்படுவார்கள்” என்று தெரிவித்தார். ராணுவத் தேர்வுகளில், பெண்கள், ஆண்களைப் போலவே அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற வேண்டும். அதில் 25 கிலோ மணல் கூடையை முதுகில் சுமந்தபடி 5 கி.மீ தூரம் ஓடிக் கடக்க வேண்டும். இங்கிலாந்தின் பாதுகாப்புச் செயலர் கவின் வில்லியம்ஸன், “பெண்களுக்கு இந்த ‘எலைட்’ படையில் பங்கு கொடுப்பது மிகச் சரியானதே” என்று தெரிவித்திருக்கிறார்.

வருங்கால வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்!


16p5_1533538712.jpg

உலகக்கோப்பை ஹாக்கி... சபாஷ் இந்திய மகளிர்!

ண்டன் லீ வாலி ஹாக்கி மற்றும் டென்னிஸ் சென்டரில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகளில், இத்தாலி நாட்டை 3-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி, காலிறுதிச் சுற்றுக்குள் நுழையும் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி.

லால்ரெம் சியாமி, நேஹா கோயல், வந்தனா கட்டாரியா மூவரும் கோல் அடித்தனர். உலகத் தரவரிசையில் 17-ம் இடத்தில் உள்ள இத்தாலியை, 10-ம் இடத்தில் உள்ள இந்திய அணி வென்றதன் மூலம் அடுத்த கட்ட காலிறுதி ஆட்டத்தில் அயர்லாந்து நாட்டை எதிர்த்து விளையாடியது.

பி பிரிவு மேட்சுகளில் விளையாடிய இந்திய அணி, பெரிய எதிர்பார்ப்புகளுடன் லண்டன் செல்லவில்லை எனலாம். பி பிரிவில் மூன்றாவது இடம், அல்லது அதை விடச் சிறப்பாக ஆடினால், 7-ம் இடத்தில் உள்ள அமெரிக்காவைத் தோற்கடிப்பது என்ற பொது நம்பிக்கையைத் தகர்த்து, அமெரிக்காவுடனான ஆட்டத்தை டிரா செய்தனர்.

இந்த டிராவின் மூலம், பி பிரிவில் மூன்றாம் இடம் கிடைத்தது. கூடவே, 20 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிப் போட்டிகளிலும் நுழைந்தது. அந்தப் போட்டியில் வெற்றி கிட்டவில்லை என்றாலும், இது ஒரு சாதனையே. இறுதியாக 1974-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் நான்காம் இடத்தைக் கைப்பற்றியது இந்திய மகளிர் அணி.

அடுத்தடுத்த போட்டிகளில் சாதியுங்கள் கண்மணிகளே!


16p6_1533538724.jpg

“என் மகன்களின் தந்தை அடுத்த பிரதமர்!”

மீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் தேர்தலின் முடிவுகள் வெளியான வண்ணம் இருக்க, உலகின் கவனத்தை ஈர்த்தது பிரதமர் பதவியில் அமரவிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் மனைவியான ஜெமிமா கோல்ட்ஸ்மித் வெளியிட்டிருந்த செய்தி... “22 ஆண்டுகள் போராட்டங்கள், தோல்விகள், தியாகங்களுக்குப் பிறகு பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகியிருக்கிறார் என் மகன்களின் தந்தை. தோல்வியைக் கண்டு துவளாமை, தொடர் முயற்சி, நீடித்திருக்கும் தன்மை இவற்றை அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை அவர் நினைவில்கொள்ள வேண்டும்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்திருந்தார் ஜெமிமா.

ஒன்பது ஆண்டுகால திருமண வாழ்க்கையை 2004-ம் ஆண்டு விவாகரத்து செய்து முடித்துக்கொண்டவர்கள் இத்தம்பதி. இஸ்லாம் மதத்துக்கு மாறிய ஜெமிமாவால் பாகிஸ்தானின் அரசியலில் புதிதாகக் களம் இறங்கிய இம்ரானின் அரசியல் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 42 வயது இம்ரானைத் திருமணம் செய்திருந்த 21 வயது ஜெமிமா, அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிய முடிவெடுக்க, இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து பெற்றனர். இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். விவாகரத்து பெற்றுப் பிரிந்தாலும், தானும் இம்ரானும் சிறந்த நண்பர்கள் என்றும் கூறியிருக்கிறார் ஜெமிமா.

ஹும்ம்ம்ம்…இங்கெல்லாம் இப்படி நடக்குமா?

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

மறக்க முடியுமா?: ஆகஸ்ட் 13 - கைவிளக்கு ஏந்திய தேவதையின் நினைவுநாள்

 
 
 

செவிலியர் தொண்டில் சிறந்து விளங்கியதுடன் கிரிமியா போரில் உயிருக்கு போராடிய பலரின் கண்களுக்கு ‘கைவிளக்கு ஏந்திய தேவதை’யாக தோன்றிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் நினைவைப் போற்றுவோம்.

 
மறக்க முடியுமா?: ஆகஸ்ட் 13 - கைவிளக்கு ஏந்திய தேவதையின் நினைவுநாள்
 
லண்டன்:

இங்கிலாந்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், பிரான்சஸ் நைட்டிங்கேல் தம்பதியரின் மூன்றாவது மகளாக இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் 12.5.1820 அன்று பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார்.

சிறுவயதில் மிகவும் துடிப்பாக இருந்த நைட்டிங்கேல் கணிதத்தை சிறப்புப் பாடமாக தேர்வு செய்து பயின்றார். மேலும், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாட்டு மொழிகளையும் கற்றார். செவியலராகி மக்களுக்கு தொண்டு செய்ய விரும்பிய தனது எதிர்கால திட்டத்தை பெற்றோரிடம் அவர் கூறியபோது அவர்கள் எளிதில் சம்மதிக்கவில்லை.

செவியலராகும் குறிக்கோளுக்காக தன்னை காதலித்தவரின் திருமண ஆசையை 1849-ம் ஆண்டில் நிராகரித்தார். 1850-51 ஆண்டுகளுக்கிடையில் ஜெர்மனியின் கைசெர்ஸ்வெர்த் பகுதியில் உள்ள பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து செவிலியராக மாறினார்.

பின்னர் லண்டன் நகரில் உள்ள ஹார்லே ஸ்டிரீட் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார். அப்போது அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கவர்னருக்கு அவர் ஆற்றிய சிறப்பான சேவையால் செவிலியர்களுக்கான மேற்பார்வையாளராக (சூப்பிரண்ட்) உயர்த்தப்பட்டார்.

201708112140315365_1_nurse._L_styvpf.jpg

அந்த காலகட்டத்தில் காலரா எனப்படும் வாந்திபேதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மிடில்செக்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் குழுவுக்கும் இவரே தலைமை தாங்கினார்.

கடந்த 1854-56 ஆண்டுகளுக்கு இடையில் ரஷ்யப் பேரரசுக்கும், பிரான்ஸ் கூட்டணி நாடுகளுக்கும் இங்கிலாந்து அரசின் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையே கிரீமியனில் நடைபெற்ற போரில் சுமார் 18 ஆயிரம் வீரர்கள் காயம்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தலைமையில் 38 பேர் கொண்ட குழு ஒன்று போர்முனைக்கு அனுப்பப்பட்டது.

கான்ஸ்டட்டின்நோப்புல் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதியின்றி மூட்டைப்பூச்சிகள் மற்றும் எலிகளுக்கு இடையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வீரர்களுக்கு நைட்டிங்கேல் குழுவினர் இடையறாது மருத்துவ சிகிச்சை அளித்தும், ஆறுதல் மொழி பேசியும் குணப்படுத்தி வந்தனர்.

தண்ணீர்கூட அங்கு ரேஷன் முறையில் வழங்கப்பட்டதால் பல வீரர்கள் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த சோகம் அவரது நெஞ்சைப் பிழிந்தது. முதலில் அந்த மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டினார்.

201708112140315365_2_nurse1._L_styvpf.jpg

இரவு நேரங்களில் நைட்டிங்கேல் கையில் மெழுகு விளக்கை ஏந்தியபடி வலியால் துடித்துக் கொண்டிருக்கும் வீரர்களை நலம் விசாரித்து, ஆறுதல் மொழியுடன் அவர்களின் வலிக்கு மருந்துகளைக் கொடுத்து, மனச்சுமையை போக்கி, விரைவில் குணப்படுத்தினார்.

இதைகண்ட ராணுவ வீரர்கள், ‘தங்களைக் காக்க விண்ணுலகில் இருந்து தேவதையொன்று மண்ணுலகுக்கு கையில் விளக்குடன் வந்துள்ளது’ என்று புகழ்ந்து பாராட்டினர். போருக்குப்பின் தனது ஊருக்கு  திரும்பிய பிளாரன்ஸ் நைட்டிங்கேலை அங்குள்ள மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். இதனால், விக்டோரியா மகாராணிக்கு அடுத்தபடியாக நன்கறியப்பட்ட பிரபலமாக பி.பி.சி. வானொலி இவரை அறிவித்தது.

இங்கிலாந்து ராணி விக்டோரியா ‘நைட்டிங்கேல் ஜுவல்’ எனப்படும் ஆபரணத்தை இவருக்கு விருதாக வழங்கி கவுரவித்தார். இந்த விருதுடன் அளிக்கப்பட்ட பணமான இரண்டரை லட்சம் டாலர்களை கொண்டு 1860-ம் ஆண்டு செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியை நைட்டிங்கேல் தொடங்கினார். இங்கு செவியர் பயிற்சி பள்ளி ஒன்றும் உருவானது.

அவரது அரிய சேவையை பாராட்டி அந்நாட்களில் கவிதைகள், கதைகள், பாடல்கள், நாடகங்கள் பல உருவாக்கப்பட்டு மக்களிடையே மிகவும் புகழுக்குரிய பெண்மணியாக உயர்ந்தார். பிளாரன்ஸ் நைட்டிங்கேலைப் போல் வாழ வேண்டும் என பல இளம்பெண்கள் சபதமேற்கும் அளவுக்கு அவர் விளங்கினார். மிக உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த பல பெண்கள் அவரது பள்ளியில் சேர்ந்து செவிலியர் பயிற்சி பெற்று நோயாளிகளுக்கு சேவையாற்ற முன்வந்தனர்.

இடைவிடாத பணியின்போது ‘கிரிமியன் காய்ச்சல்’ கடுமையான தொற்றுநோய்க்குள்ளாகி மேஃபேர் நகரில் உள்ள தனது வீட்டில் பல ஆண்டுகள் அவர் படுக்கையில் கிடக்க நேரிட்டது. இருப்பினும் தனது 38-வது வயதில் படுக்கையில் இருந்தபடியே மருத்துவ துறையில் செய்யப்பட வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக பல ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டார்.

நடமாட இயலாத நிலையிலும் நலிவுற்ற நோயாளிகளின் துயர்துடைக்கும் பல நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். இந்தியாவிலும் சுகாதாரத்துறையில் செய்யப்பட வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் அவர் பரிந்துரைத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, பிளாரன்ஸ் நைட்டிங்கேலுக்கு விக்டோரியா மகாராணி செஞ்சிலுவை சங்க விருதை வழங்கினார்.
1907-ம் ஆண்டு பிரிட்டானிய மன்னரின் ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ என்னும் உயரிய விருதையும் பெற்ற முதல் பெண்மணியாக பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விளங்கினார்.

1910-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமானது. ஆகஸ்ட் 12-ம் தேதி பல்வேறு நோய்கள் ஒருசேர தாக்கியதில் 13-8-1910 அன்று பிற்பகல் 2 மணியளவில் அந்த ‘கைவிளக்கு ஏந்திய தேவதையின்’ இன்னுயிர் பிரிந்தது.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தாரின் நன்மதிப்பை பெற்றிருந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வந்த வாய்ப்பை அவரது குடும்பத்தார் நிராகரித்து விட்டனர். எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் தனது இறுதி யாத்திரை நடைபெற வேண்டும் என்ற பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் நீண்ட நாள் விருப்பம் நிறைவேற்றப்பட்டது.

இங்கிலாந்தின் ஹேம்ப்ஷைர் அருகேயுள்ள செயிண்ட் மார்கரெட் சர்ச் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பிளாரன்ஸ் நைட்டிங்கேலால் தொடங்கப்பட்ட செவிலியர் பயிற்சிப் பள்ளி தற்போது அவரது நினைவிடமாகவும் அருங்காட்சியகமாகவும் விளங்கி வருகிறது.

‘கிரிமியாவின் தேவதை’ என்றும் அழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெற்ற விருதுகள், பரிசுகள் அவர் பயன்படுத்திய உபகரணங்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் கலைப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

1987-ம் ஆண்டில் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச செவிலியர் மாநாட்டில் உலகளவில் செவிலியர் தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதன் விளைவாகவே, 1991-ம் ஆண்டு, மே மாதம் 12-ம் தேதியை சர்வதேச செவிலியர் தினமாக அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை போற்றியும், பாராட்டியும் வருகின்றன.

அவரது நினைவாக, ஆண்டுதோறும் நைட்டிங்கேல் பிறந்த மே 12-ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாளிகையில் உள்ள விளக்குகள் அங்குள்ள செவிலியர்களால் ஏற்றப்பட்டு, அங்குள்ள உயர்ந்த பீடத்தில் அவர்கள் அமரவைக்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர்.

பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளான மே மாதம் 12-ம் தேதி உலகின் பல நாடுகள் செவிலியர் துறையில் சிறந்த சேவையாற்றுபவர்களை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற சிறப்பு விருதால் கவுரவித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ண குமாரி என்ற செவிலியர் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்து இவ்விருதினை பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.
 

https://www.maalaimalar.com

Share this post


Link to post
Share on other sites

ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள்

கியூப புரட்சியின் தந்தையும், கியூபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் 93வது பிறந்தநாள் இன்று.

Fidel Castro, Cubaபடத்தின் காப்புரிமைAFP

1. ஃபிடல் அலெஜாண்ட்ரோ காஸ்ட்ரோ ரஸ் ஆகஸ்டு 13, 1926 அன்று கியூபாவில் உள்ள பிரான் எனும் கிராமத்தில் பிறந்தார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான அவரது தந்தை ஏன்ஜல் மரியா படிஸ்டா காஸ்ட்ரோ ஒய் அர்கிஸ் ஸ்பெயினில் இருந்து கியூபா குடிபெயர்ந்த ஒரு பெரு விவசாயி ஆவார்.

2. பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் கரும்பு விவசாயம் செய்து வந்த ஏன்ஜல் மரியாவின் முதல் மனைவி இறந்தபின், தனது வீட்டின் பணியாளாக இருந்த கியூப பெண் லினா ரஸ் கொன்சலஸ் உடன் அவர் வாழத் தொடங்கினார்.

3. இந்த தம்பதிக்கு பிறந்த ஏழு குழந்தைகளில் முதல் குழந்தை ஃபிடல். ஏன்ஜல் மரியா மற்றும் லினா ஒரே வீட்டில் வாழ்ந்தபோதும் ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தபின்தான் திருமணம் செய்து கொண்டனர். இரண்டாவதாக பிறந்த குழந்தை ராவுல் காஸ்ட்ரோ. அடுத்த ஐவரும் பெண் குழந்தைகள்.

4. பள்ளிக் காலங்களில் படிப்பைவிட விளையாட்டில் அதிக கவனம் செலுத்திய ஃபிடல் காஸ்ட்ரோ, 1940களில் ஹவானா பல்கலைகழகத்தில் படித்தபோது அரசியலில் ஈடுபடத் தொடங்கியதுடன் தனது பேச்சுத் திறனையும் வளர்த்துக்கொண்டார்.

5. பல்கலைக்கழக மாணவரான ஃபிடல் காஸ்ட்ரோ 1946இல் அப்போதைய கியூபா அதிபர் ராமோன் கராவ் சான் மார்ட்டின் அரசின் ஊழலுக்கு எதிராக நிகழ்த்திய உரை அப்போது மிகவும் பிரபலமானது.

6. 1947இல் டோமினிக்க குடியரசின், அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரி ரஃபேல் டிரோஜிலோவின் அரசைக் கலைக்கும் முயற்சியில், கியூபாவில் இருந்த டோமினிக்க குடியரசு மாணவர்களுடன் கடல் வழியாகக் கிளம்பினார். இம்முயற்சி அமெரிக்க ஆதரவுடன் தடுத்து நிறுத்தப்பட்டது.

Castro Cubaபடத்தின் காப்புரிமைVANDRAD

7. காஸ்ட்ரோ - மிர்தா டையாஸ் பாலார்ட் திருமணம் 1948இல் நடந்தது. இரு குடும்பங்களின் எதிர்ப்பை மீறி நடந்த காதல் திருமணம் இது.

8. அதிபர் கார்லஸ் ப்ரியோவின் அரசுக்கு எதிராக ராணுவப் புரட்சி மூலம் 1952இல் கியூபா அதிபரானார் ஜெனரல் ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டா. அவரது ராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிராக ஜூலை 1953இல் மான்கடாவில் இருந்த ஆயுதக் கிடங்கைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்ட காஸ்ட்ரோ உள்ளிட்ட ஏராளமானோர் கைதாகினர்.

9. காஸ்ட்ரோவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும்,பொது மன்னிப்பு வழங்கப்பட்டு 19 மாதங்களுக்கு பிறகு மே 1955இல் விடுதலை செய்யப்பட்டார்.

10. அதே ஆண்டு மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோ, அங்கு தனது வருங்கால சக போராளி மற்றும் நண்பரான எர்னஸ்டோ 'சே' குவேராவை சந்திக்கிறார்.

11. நவம்பர் 1956இல் ஃபிடல், ராவுல், சே உள்ளிட்ட 81 போராளிகள், 12 பேர் மட்டுமே பயணிக்க உகந்த கிரான்மா எனும் சிறிய படகில் புரட்சியில் ஈடுபட மெக்சிகோவில் இருந்து கியூபா திரும்பினர். 1959இல் கியூப புரட்சி வெற்றிபெறும் வரை, மலைப் பகுதிகளில் பதுங்கியிருந்து இந்தக் குழு கொரில்லா போரில் ஈடுபட்டது.

Castro Che Guevaraபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

12. கியூபப் புரட்சி 1959 ஜனவரியில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மனுவேல் உருசியா லியோ கியூப அதிபரானார். அவரது அரசில் ஜோஸ் மிரோ கார்தோனா பிரதமரானார். கருத்து வேறுபாடு காரணமாக அவர் ஆறு வாரங்களில் பதவி விலகியதால், காஸ்ட்ரோ 1959 பிப்ரவரி மாதம் பிரதமர் பொறுப்பேற்றார்.

13. அதே ஆண்டு ஜூலை மாதம், கருத்து வேறுபாடு காரணமாக மனுவேல் பதவி விலகியும் ஃபிடல் பிரதமராகவே தொடர்ந்தார். ஓஸ்வால்டோ டோர்டிகோ தொராடோ அப்போது புதிய அதிபரானார். ஆனால், அதிபர் பதவி, பிரதமரைவிட அதிகாரம் குறைந்த ஒரு சம்பிரதாய பதவியாகவே இருந்தது. 1976 டிசம்பரில் அரசியலமைப்பு மாற்றப்படும் வரை அவர் அதிபர் பதவியில் நீடித்தார்.

14. அதன் பின் பிரதமராக இருந்த காஸ்ட்ரோ, அதிபர் பதவியேற்றார். அப்பதவியில் பிப்ரவரி 2008 வரை காஸ்ட்ரோ நீடித்தார். காஸ்ட்ரோ கியூபாவின் பிரதமர் மற்றும் அதிபராக இருந்து ஆட்சி செய்த ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு 10 பேர் அதிபராக இருந்தனர்.

Cuba

15. புரட்சிக்கு பிறகு கியூபாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறியவர்களை வைத்து 1961இல் பே ஆப் பிக்ஸ்-இல் கியூபாவால் தோற்கடிக்கப்பட்ட தாக்குதல் சம்பவம் உள்பட, கம்யூனிச அரசை கவிழ்க்க பல முயற்சிகளை அமெரிக்கா செய்ததாக கியூபா குற்றம் சாட்டியது.

16. ஆப்ரேஷன் மங்கூஸ் (Operation Mongoose) எனும் திட்டம் மூலம் காஸ்ட்ரோவின் சிகரெட்டில் நஞ்சு தடவி கொல்ல முயன்றது, அவரது அடையாளமான தாடியை உதிர வைக்க முயன்றது என காஸ்ட்ரோ மீது அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ பல தாக்குதல் முயற்சிகளை நடத்தியது.

Fidel Castroபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

17. அமெரிக்க சொத்துகளை காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிச அரசு, 1960இல் தேசியமயமாக்கியத்தைத் தொடர்ந்து அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் பலவும் இன்றும் நீடிக்கின்றன.

18. பதவி விலகியபின்பு பொது வாழ்வில் ஒதுங்கி இருந்த காஸ்ட்ரோ இரு ஆண்டுகள் கழித்து ஜூலை 2010இல் தொலைக்காட்சியில் தோன்றினார்.

19. உலகிலேயே அதிக ஆண்டுகள் ஒரு நாட்டு அரசின் தலைவராக பதவி வகித்தவர்களில் ஒருவரான காஸ்ட்ரோ நவம்பர் 25, 2016 அன்று தனது 90ஆம் வயதில் காலமானார்.

20. லட்சக்கணக்காக கியூபா மக்களால் வெறுக்கப்பட்ட காஸ்ட்ரோ, கோடிக்கணக்கான கியூபா மக்களால் நேசிக்கப்பட்டார். அவர்கள் அருகில் உள்ள அமெரிக்கா எனும் கோலியாத்தை எதிர்க்கும் டேவிட்டாகவே காஸ்ட்ரோவைப் பார்த்தனர்.

https://www.bbc.com

Share this post


Link to post
Share on other sites

உலக இடது கை பழக்கமுடையோர் நாள்: 13-8-1976

 
அ-அ+

உலக இடதுகை பழக்கமுடையோர் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இந்நாளைக் கொண்டாடி வருகின்றது. இது முதன் முதலில் 1976-ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. உலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 7 முதல் 10 சதவிதத்தினர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணக்கீடப்பட்டுள்ளது. இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட சிரமங்களை அவர்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்றது. இந்த இடதுகைப் பழக்கம் பிறப்பிலே சிலருக்கு ஏற்படுகின்றது.

 
 
 
 
உலக இடது கை பழக்கமுடையோர் நாள்:  13-8-1976
 
உலக இடதுகை பழக்கமுடையோர் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இந்நாளைக் கொண்டாடி வருகின்றது. இது முதன் முதலில் 1976-ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.

உலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 7 முதல் 10 சதவிதத்தினர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணக்கீடப்பட்டுள்ளது. இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட சிரமங்களை அவர்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்றது. இந்த இடதுகைப் பழக்கம் பிறப்பிலே சிலருக்கு ஏற்படுகின்றது.

மூளையானது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை: பெருமூளை, சிறுமூளை மற்றும் நீள்வளைய மையவிழையம். இவற்றில் பெருமூளை இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும், வலதுப்பக்க அரைக்கோளம் உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது.

இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகளை சில பெற்றோர்கள் குழந்தைப் பருவத்திலேயே வலக்கைக்கு மாற்றுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வர். இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல். தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கௌரவிக்கவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இந்நாள் சிறப்பாக அனுட்டிக்கப்படுகிறது. குறிப்பாக இவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதும், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துவது என்பன இந்நாளில் முக்கியமாக மேற்கொள்ளப்படுகின்றன.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1849 - யாழ்ப்பாணம் பதில் மறை மாவட்டம் நிறுவப்பட்டது.

* 1913 - ஹரி பிறியர்லி துருப்பிடிக்காத எகுவைக் கண்டுபிடித்தார்

* 1920 - போலந்து- சோவியத் ஒன்றியம் போர் ஆரம்பமாயிற்று. ஆகஸ்ட் 25-ல் முடிவடைந்த இப்போரில் செம்படையினர் தோற்றனர்.

* 1937 - ஷங்காய் சமர் ஆரம்பமானது.

* 1954 - பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது.

* 1960 - மத்திய ஆப்பிரிக்க குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

* 1961 - ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு பெர்லினின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளை மூடி கிழக்கு ஜெர்மனியினர் தப்பிச் செல்லாவண்ணம் பெர்லின் சுவரைக் கட்ட ஆரம்பித்தது.

* 2004 - கறுப்பு வெள்ளி: மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் ராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.

* 2004 - புருண்டியில் கடும்பா அகதிகள் முகாமில் இருந்த 156 டூட்சி இன அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

* 2004 - 28-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.

* 2006 - யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை ராணுவத்தினரின் ஏவுகணை வீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

https://www.maalaimalar.com

Share this post


Link to post
Share on other sites

 

சூரியனை ஆய்வு செய்யும் விண்கலனை ஏவிய நாசா

இதுவரை எந்த விண்கலனும் செல்லமுடியாத சூரியனின் கொரோனா என்னும் பகுதிக்கு நாசா தனது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.