Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கி ஆச்சு 50 வருஷம்... அலோ அது உண்மையா?!

 

இன்றைய விண்வெளி சாகசங்களுக்கு முன்னோடியாக இருந்து இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நிகழ்வான மனிதன் பூமியில் இருந்து 3.50 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவில் கால் பதித்த 50-ம் ஆண்டு இன்று.

ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கி ஆச்சு 50 வருஷம்... அலோ அது உண்மையா?!
 

பூமியில் இருந்து 3.50 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங் கால் பதித்து இன்றோடு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைய விண்வெளி சாகசங்களுக்கு முன்னோடியாக இருந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நிகழ்வு அது.


பூமியில் உள்ளது போல் மனிதர்கள் உயிர் வாழ தேவையான பிராணவாயு, தண்ணீர் போன்றவை இல்லாத ஓரிடம் சந்திரன். எனவே மனிதன் அங்கு சென்று வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றே நம்பப்பட்டு வந்தது. இத்தகைய நிலையில் சந்திரனுக்கு யார் முதலில் செல்வது என்ற ஆய்வில் வல்லரசுகளாக திகழ்ந்த ரஷ்யாவும், அமெரிக்காவும் ஈடுபட துவங்கின. அதன் முதன் முயற்சியாக பூமியை சுற்றி ''ஸ்புட்னிக்'' எனும் விண்வெளிக் கப்பலை 1957-ல் மிதக்க விட்டது. அதன் தொடர்ச்சியாக 1961-ல் ககாரின் என்ற வின்வெளி வீரரை ராக்கெட்டில் அனுப்பி பூமியைச் சுற்றிவிட்டு பத்திரமாக திரும்பி வர செய்து சாதித்தது ரஷ்யா. இதற்குப் போட்டியாக அதே ஆண்டில் ஷெப்பர்டு என்ற விண்வெளி வீரரை ராக்கெட் மூலம் பூமியைச் சுற்றிவர செய்தது அமெரிக்கா. இரண்டு ஆண்டுகளுக்கு பின் 1963-ம் ஆண்டு ஜூன் 16-ல் வாலண்டினா தெரஸ்கோவா என்ற இளநங்கையை பூமியைச் சுற்றி பறக்க செய்து பதிலடி கொடுத்தது ரஷ்யா. 

 இரு வல்லரசுகளுக்கு இடையே நடந்த இந்த விண்வெளி பயணப் போட்டியில் தனது நாட்டைச் சேர்ந்த நீல் ஆர்ம்ஸ்டிராங் என்பவரைச் சந்திரனில் காலடி பதிக்க வைத்து சாதனை சிகரத்தை அடைந்தது அமெரிக்கா. சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை 1969 ஜூலை 15-ல் துவக்கியது அமெரிக்கா. அதற்கான ஒத்திகைகளும் முன்னதாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. மறுநாள் இரவு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி முனையில் இருந்து ஆர்ம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய 3 வீரர்களுடன் சந்திரனை நோக்கி 'அப்பல்லோ 11' என்ற ராக்கெட் செலுத்தப்பட்டது. மறு நாளே தாங்கள் நலமுடன் இருப்பதாகவும், சரியான திசையில் ராக்கெட் பயணித்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் பூமிக்கு தகவல் கொடுத்தனர்.

 

 

neil armstrong 


மணிக்கு 3500 மைல் வேகத்தில் சென்ற ராக்கெட் 18-ம் தேதி சந்திரனை நெருங்கியது. மறுநாள் சந்திர மண்டலத்தினுள் புகுந்த ராக்கெட் சந்திரனை சுற்றத் துவங்கியது. 20-ம் தேதி மாலை சந்திரனுக்கு அனுப்பட்ட பிரதான ராக்கெட்டில் இருந்து ஆர்ம்ஸ்டிராங், ஆல்ட்ரின் ஆகிய இருவரும் சந்திரனுக்குள் செல்லக் கூடிய பூச்சி போன்ற வடிவம் கொண்ட 'ஈகிள்' வண்டியினுள் சென்றனர். இரவு 12 மணி நெருங்கவிருந்த வேலையில் இந்தப் பூச்சி வண்டியானது பிரதான ராக்கெட்டில் இருந்து வெளிவந்து சந்திரனை சுற்றியது.  சுமார் இரண்டரை மணி நேர பயணத்திற்கு பின் சந்திரனை அடைந்தது அந்த வண்டி. அதனுள்ளேயே இருந்தவாறு ஓய்வு எடுத்தனர் வீரர்கள் இருவரும்.
 21-ம் தேதி காலை சரியாக 8.26 மணிக்கு பூச்சி வண்டியில் இருந்த வெளியே வந்த ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் தன் கால் தடத்தினை பதித்தன் மூலம் 'நிலவில் கால் பதித்த முதல் மனிதன்' என்ற  அழியாத சரித்திரத்தினையும் படைத்தார். அவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் நிலவில் கால் பதித்தார். சந்திரனில் சிறிது தூரம் நடந்த இருவரும் அங்கிருந்த கல், மண் ஆகியவற்றை சேகரித்ததுடன், தங்கள் நாட்டு கொடியினையும் அங்கு  நட்டார்கள்

 

 

 

neil armstrong


உலகம் வியக்கும் சாதனையினைப் படைத்த விண்வெளி வீரர்கள் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் மீண்டும் பூச்சி வடிவ வண்டிக்குள் சென்று பிரதான ராக்கெட்டிற்குள் நுழைந்தனர். அங்கிருந்து பூமியை நோக்கி பறந்த அந்த ராக்கெட் 24-ம் தேதி இரவு 10 மணி 19 நிமிடங்களுக்கு பத்திரமாக கொலம்பியா கடலில் வந்து இறங்கியது. உலகின் உயர்ந்த சாதனையினை படைக்க உதவிய 'அப்பலோ 11' ஐ தயாரிக்க 6 ஆண்டுகள் ஆனது. இதற்கு செலவிடப்பட்ட தொகை 1.74 லட்சம் கோடி ரூபாய்.
 இதன் பின்னரும் அமெரிக்கா சந்திரனுக்கு பலமுறை ராக்கெட்டுகளில் மனிதர்களை அனுப்பி பல்வேறு சோதனை நடத்தி வந்தது. ஒரு கட்டத்தில் அங்கு மனிதன் வாழும் சூழல் இல்லை என்பதால் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்வத்தை குறைத்து கொண்டது. 

 

 

இந்தச் சம்பவம் நடந்தபோது அமெரிக்காவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் அது உண்மையில்லை என்ற பேச்சு கிளம்பியது. முன்னர், ஆனந்த விகடனுக்காக இந்திய விண்வெளி வீரர் திரு. ராகேஷ் ஷர்மாவை நேர்காணல் செய்தபோது இதற்கு அவர் விளக்கமளித்தார்.

"உண்மைதான். ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்றார். இங்கேயிருக்கும் தொலைக்காட்சிகள் டி.ஆர்.பி.க்காக அடித்துக் கொள்கிறார்களே. அது போல அப்போது அமெரிக்க தொலைக்காட்சிகள் டி.ஆர்.பி பசியில் இருந்தார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிய குழப்பம் அது."

நிலவைத் தொட்ட நீல் ஆம்ர்ஸ்டிராங்குக்கும் அவர் டீமுக்கும் இந்தப் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

புட்டின் பாதி … ரம்ப் பாதி! இது ரைம்ஸின் கிண்டல்

 
 

கவுண்டமணி செந்திலின் நகைச்சுவைக்காட்சி அமெரிக்கர்களுக்கு தெரியாவிட்டாலும் தமதுஅரசதலைவர் டொனால்ட் ரம்ப் இப்போது அடிக்கடி மாற்றி மாற்றி கூறும் விடயங்கள் அவர்களுக்கு பெரும் நகைச்சுவையாக தெரிகிறது.

ஊடகங்களும் அவரை விடுவதாக இல்லை. குறிப்பாக டொனால்ட் ரம்ப்பையும் விளடிமிர்புட்டினையும் கலவையாக கலந்து (மோர்பின்) ரைம்ஸ் இதழ் தனது அட்டைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

அமெரிக்க அரசதலைவர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இல்லை என கடந்த திங்கள் அன்று புட்டினுக்கு ஆதரவாக ரம்ப் கூறியதை மையப்படுத்தியே அடுத்த இதழுக்கான அட்டை படத்தை ரைம்ஸ் இவ்வாறு வடிவமைத்துள்ளது.

இது தொடர்பான வீடியோவையும் ரைம்ஸ் தனது ருவிற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மெக்சிகோ அகதிகளின் மீதான ரம்பின் கட்டுப்பாடுகளை கடுமையாக விமர்சித்து கடந்த மாதமும் ரைம்ஸ் தனது அட்டைப்படத்தை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com

Link to comment
Share on other sites

உலக இமோஜி தினம்: இமோஜிக்கள் பெருகும் உலகம்

 

 
emojisjpg

இமோஜிக்கள் இல்லாத வாழ்க்கையை இன்று யாராலும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. இன்றைய தலைமுறையினர் தங்கள் உணர்வு களை வார்த்தைகளில் தெரிவிப்பதைவிட இமோஜிக்களில் தெரிவிக்கவே விரும்புகிறார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் எனச் சமூக ஊடகங்களில் எந்தச் செய்தியும் இமோஜிக்கள் இல்லாமல் பகிரப்படுவதில்லை. இந்த இமோஜி கலாச்சாரத்தை அங்கீகரிக்கும் விதமாக ‘உலக இமோஜி நாள்’ ஜூலை 17 அன்று கொண்டாடப்பட்டது.

‘இமோஜிபீடியா’ நிறுவனர் ஜெரெமி புர்ஜ், இந்த உலக இமோஜி நாளை 2014-ம் ஆண்டு  அறிமுகப்படுத்தினார். இமோஜிக்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் நமக்கு அருகில் இருப்பவர்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதாகத் தெரிவிக்கிறது  ‘இமோஜிபீடியா’ நிறுவனம்.

 

70 புதிய இமோஜிக்கள்

இந்த ஆண்டு ‘உலக இமோஜி நாளி’ல் ஆப்பிள் நிறுவனம் எழுபது புதிய இமோஜிக்களை அறிமுகம் செய்திருக்கிறது. ஆப்பிள் தயாரிப்புகளான ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச், மேக் போன்றவற்றில் இந்த இமோஜிக்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதில் மனிதர்களின் தலைமுடியில் இருக்கும் வேறுபாட்டை விளக்கும்விதமாக சிவப்பு நிற முடி, சாம்பல் நிற முடி, சுருட்டை முடி, வழுக்கைத் தலை போன்ற இமோஜிகளும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

emojijpg
 

அத்துடன், புதிய சுவாரசியமான ஸ்மைலி முகங்களும் இந்த அறிமுகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. விலங்குகளில் புதிதாக கங்காரு, மயில், கிளி, இறால் போன்றவையும் உணவில் மாம்பழம், கப் கேக், மூன் கேக் போன்றவையும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. விளையாட்டுப் பொருட்கள், சூப்பர் ஹீரோ, முடிவுறா சின்னம் போன்றவை இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகமாக உள்ளன.

இதயத்தால் இயங்கும் உலகம்

இதய இமோஜிதான் ஃபேஸ்புக்கிலும் மெசஞ்சரிலும் அதிகமாகப் பகிரப்பட்ட இமோஜி என்று ஃபேஸ்புக் நிறுவனம் உலக இமோஜி நாள் அன்று அறிவித்திருக்கிறது. “2,800-க்கும் மேற்பட்ட இமோஜிக்கள் இருக்கின்றன. அவற்றில் 2,300 இமோஜிக்கள் ஃபேஸ்புக்கில் தினமும் பயன்படுத்தப்படுகின்றன. மெசஞ்சரில், ஒரே நாளில் 90 கோடி இமோஜிக்கள் எந்தச் செய்தியும் இல்லாமல் பகிரப்படுகின்றன. ஃபேஸ்புக் பதிவுகளில் தினசரி 70 கோடி இமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன” என்ற தகவலை ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

உலக இமோஜி நாளை முன்னிட்டு, ட்விட்டர் நிறுவனமும் சிறந்த பத்து இமோஜிக்களைப் பட்டியிலிட்டிருக்கிறது. இதில், ‘ஹார்ட் ஐஸ்’ ஸ்மைலி, இதயம், நெருப்பு, தம்ப்ஸ் அப் போன்றவற்றை சிறந்த ஸ்மைலிகளாக ட்விட்டர் தேர்ந்தெடுத்திருக்கிறது.

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

 

தானாக மறைந்துபோகும் 'மாயப் பெண்'

இந்தப் பெண்ணால் தானாகவே மறைந்துபோக முடியும். வயிறை முடிந்துகொள்ளவும், தனது எலும்புக்கூட்டை வெளிக்காட்டவும் இவரால் முடிகிறது.

Link to comment
Share on other sites

‘நேசித்து வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்’
 

image_585e823144.jpgமிகவும் தூய்மையுடன் வாழும் ஒருவர், பிறர்போல வாழ விரும்ப மாட்டார். பிறரைப் போல வாழ எண்ணுவதுகூட, ஒரு நடிப்புத்தான். பெரியோர்களின் உன்னத வாழ்க்கையைத் தெரிந்து, தெளிவது நல்லது. அதற்காக அவரைப் போலவே தங்களை உருமாற்ற விளைவது ஆகாது. ஒவ்வொருவரும் தமக்கான பாணியில், நற்பண்புகளுடன் வாழ்வது தனித்துவமானதாகும். 

‘நான் இறை படைப்பால் உருவானவன்; எனக்கான அறிவு, திறன் எல்லாமே தெய்வகடாட்சம் நிறைந்தவை; நான் நடித்து வாழ விரும்பாதவன்; அதனால், நான் கர்வம் கொண்டவனும் இல்லை; எனது இயல்பு எனக்கானது; நல்வழியை நாட்டமாகவும் உயிர் மூச்சுமாகக் கொண்டவன் நான்’. 

மேற்படி கருத்து ஒருவரின் தன்னம்பிக்கை, திடசிந்தனைக்குரியது.எவருமே பெரியோர் ஆகலாம்; தலைவராகவும் வரமுடியும். ஆயினும் நான், நானாகவே வாழ விரும்புகின்றேன். அதுவே, பலம் என்பதை உணரவேண்டும். 

‘என்னை நான் வரவேற்கின்றேன்; என்னை நான் விரும்புகின்றேன்; அதுபோலவே பிறரையும் நான் என்றும் கௌரவிப்பேன்’. இந்த எண்ணம், பரந்துபட்ட உண்மை நிலை என்பதை அறிவீர்களாக. மனிதன் மனிதனுக்குப் பயப்படவும் கூடாது. எவரையும் நேசித்து வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்.  

Link to comment
Share on other sites

உலகத்தை முதன்முதலில் சுற்றி வந்த முதல் மனிதர் வைலி போஸ்ட் (22-7-1933)

 
அ-அ+

வைலி போஸ்ட் என்ற மனிதர் 1933-ம் ஆண்டு ஜுலை 22-ந்தேதி உலகத்தை 7 நாட்களில் 18 மணி 45 நிமிடங்களில் 15596 கிலோ மீட்டர் சுற்றி சாதனைப் படைத்தார். உலகத்தை முதன்முதலில் தனியே சுற்றியவரும் இவர்தான். இதே தேதியில் நடந்த முக்கிய சம்பவங்கள்:- * 1812 - வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஸ்பெயினில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.

 
 
 
 
உலகத்தை முதன்முதலில் சுற்றி வந்த முதல் மனிதர் வைலி போஸ்ட் (22-7-1933)
 
வைலி போஸ்ட் என்ற மனிதர் 1933-ம் ஆண்டு ஜுலை 22-ந்தேதி உலகத்தை 7 நாட்களில் 18 மணி 45 நிமிடங்களில் 15596 கிலோ மீட்டர் சுற்றி சாதனைப் படைத்தார். உலகத்தை முதன்முதலில் தனியே சுற்றியவரும் இவர்தான்.

இதே தேதியில் நடந்த முக்கிய சம்பவங்கள்:-

* 1812 - வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஸ்பெயினில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.

* 1823 - யாழ்ப்பாணத்தில் டாக்டர் டானியல் வோரன் புவர் தலைமையில் அமெரிக்க மிஷனின் பட்டிக்கோட்டா செமினறி திறக்கப்பட்டது.

* 1916 - கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
 
 

நாசாவின் 'மரைனர்-I' விண்கலம் வெடித்து சிதறியது : 22-7-1962

 
அ-அ+

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வுக்கழகம் 1962-ம் ஆண்டு ஜுலை மாதல் 22-ந்தேதி மரைனர்-I என்ற விண்கலத்தை ஏவியது. ஆனால் ஏசிய 5 நிமிடத்தில் வெடித்து சிதறியது.

 
 
 
 
நாசாவின் 'மரைனர்-I' விண்கலம் வெடித்து சிதறியது : 22-7-1962
 
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வுக்கழகம் 1962-ம் ஆண்டு ஜுலை மாதல் 22-ந்தேதி மரைனர்-I என்ற விண்கலத்தை ஏவியது. ஆனால் ஏசிய 5 நிமிடத்தில் வெடித்து சிதறியது.

இதே தேதியில் நடந்த முக்கிய சம்பவங்கள்:-

* 1944 – போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாசிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது.

* 1999 - விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.

* 2003 - ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.

* 2009 - 21-ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது.
 

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

 

தங்கத்தை விட விலை உயர்ந்த 'இமயமலை வயகரா'

 

உலகிலேயே அதிக விலை உயர்ந்த பாரம்பரிய மருத்துவ குணம் வாய்ந்த காளான்தான் யர்சாகும்பா என்று அழைக்கப்படுகிறது. இமயமலையிலுள்ள வயகரா என்று இதனை கூறுகின்றனர். இதை தேடி ஆயிரக்கணக்கான நேபாள மக்கள் இமயமலையின் உயரமான இடங்களில் சில மாதங்கள் கழிக்கின்றனர். பாலுணர்வை தூண்டும் குணங்களுக்கு அப்பாற்பட்டு, ஆஸ்துமா முதல் புற்றுநோய் வரை பல நோய்களை இந்த காளான் குணமாக்க முடியும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Link to comment
Share on other sites

மண்ணின் மைந்தர்கள் - வேளாண் தொழிலின் வியர்வை சிந்தும் தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)

  •  
லோகேஷ் பாபு லோகேஷ் பாபு ஜெரூம் கிளிண்டன். ஜெ ஜெ. ஜெரூம் கிளிண்டன் மண்ணின் மைந்தர்கள் - விவசாயமும் விவசாயம் சார்ந்த வாழ்க்கையும் மண்ணின் மைந்தர்கள் - விவசாயமும் விவசாயம் சார்ந்த வாழ்க்கையும் எம்.எம். சந்திரசேகரன் எம்.எம். சந்திரசேகரன் ந. துளசி வா்மா ந. துளசி வா்மா ஜெகன் எஸ் எஸ். ஜெகன் மண்ணின் மைந்தர்கள் - விவசாயமும் விவசாயம் சார்ந்த வாழ்க்கையும் மண்ணின் மைந்தர்கள் - விவசாயமும் விவசாயம் சார்ந்த வாழ்க்கையும் எம். கந்தவேலு எம். கந்தவேலு கே. ஆதர்ஷ் கே. ஆதர்ஷ் நவீன் குமார் நவீன் குமார் வினோத் கண்ணன் வினோத் கண்ணன் என். வளசுப்ரமணியம் என். வளசுப்ரமணியம்

 

https://www.bbc.com

Link to comment
Share on other sites

வலைபாயுதே

 

 

facebook.com/vignesh.bava.9

பழைய பொறியியல் கல்லூரி நண்பனை மீண்டும் சந்திக்கையில்

மீ : எங்க வேலை செய்யுற?

ஹீ : எங்க வேலை செய்யுறேன்?

facebook.com/Elamathi Sai Ram

சரி சரி அழாதே குரேஷியா...

டீம்ல ஒருத்தன் பேரு தெரியாது. மேப்ல எங்க இருக்குன்னுகூடத் தெரியாது. ஸ்கூல் அட்லஸ்ல நாட்டோட பேரு கூட போடலை. ஆனாலும், உலகமே இன்னைக்கு குரேஷியாவை, உங்களைப் பார்த்திருக்கும்... வாழ்த்துக்கள் இம்மானு வேல் மாக்ரானுக்கு.

106p1_1531819380.jpg

#FIFA_2018twitter.com/FineSuja

அழுத்தி அழுத்திப் பேசவேண்டியிருக்கு கஸ்டமர் கேரிடம்

facebook.com/andrewnithya

படுத்த உடனே தூங்கவைப்பதில் அலுவலக மேசை ஓர் இரண்டாம் தாய்மடி.

twitter.com/Jino_Offl

மொட்டை மாடியை நிரப்பிவிட்டு படிகளின் வழியே சலசலவென இறங்கி வருகிறது வெயில்!

twitter.com/Kozhiyaar

‘நல்லா சாப்பிடுங்க’ன்னு ஆரம்பித்து ‘சாப்பாட்டைக் குறைங்க’ என்பதாக முடிகிறது வாழ்க்கை!

facebook.com/aaranyan.yatchinipriyan

1990-ல பொறந்தவனுக்கே இன்னும் முப்பது வயசு கூட ஆகியிருக்காது. ஆனா இவனு(ளு)ங்க போடுற நாஸ்டாலஜியா மீம், பதிவெல்லாம் திண்ணையில பொறணி பேசுற 70 வயசு கெளவி ரேஞ்சுல தான் இருக்குது. அடேய் நமக்கு இன்னும் காலமிருக்குது

twitter.com/mohanramko

‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்’ மகள் கேட்ட பொருளை முதலில் வாங்குவதே தந்தையின் சிறப்பு.

twitter.com/Kozhiyaar

உலகிலேயே கடினமான ஒன்று உண்டெனில், அது மனைவியின் உறவினர்கள் உள்ள வாட்ஸ் அப் குரூப்பில் உரையாடுவதுதான்!!

106p2_1531819405.jpg

twitter.com/kanmani_01

பத்து செல்பி எடுத்தா அதுல ஒண்ணு, ரெண்டுதான் நமக்கே புடிக்குது. அது மாதிரி தான் வாழ்க்கையும்....மொத்தமும் நமக்குப் புடிச்ச மாதிரி இருக்கணும்னு ஆசைப்படக் கூடாது...

facebook.com/Khadar.FT

இருநூறு ரூபாய்க்கு விற்கும் ஒரு பொருளை, ஐம்பது ரூபாய்க்கு கேட்கும் முரட்டு தைரியம் பெண்களுக்கே உரித்தானது. அந்த விஷயத்தில் ஆண்கள் என்றும் கோழைகளே!

twitter.com/Jeytwits

மௌனம் சம்மதம்னு மட்டும் அர்த்தம் இல்லை. ‘வாயில நல்லா வருது..சொல்ல வேணாம்னு பார்க்கிறேன்’ என்பதாய்க் கூட இருக்கலாம்..

facebook.com/sruthi

“ச்சே, கடைசியில இவனைத்தான் நாம காதலிக்கணுமா?” என்று யோசனை கொள்ளும் நொடி ஆழ்மனதில் அந்த ‘இவனை’க் காதலிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்றறிக .

facebook.com/srinathvenkatesanr

சி.எஸ்.அமுதன் எடுத்தா ஸ்பூஃப்னு சொல்லுறாங்க. அதே அட்லி எடுத்தால் காப்பின்னு சொல்லுறாங்க. என்ன சார் உங்க நியாயம்?

106p3_1531819419.jpg

facebook.com/vijay.neruda

ஏண்டா! உங்காளு அமித்ஷா வந்தி ருக்காரு. பாக்கப் போகலையா?

அந்தாளுனாலதான் நான் பானிபூரி விக்கவே வந்தேன்... போயா அங்கிட்டு...

twitter.com/ikrthik

தற்செயலாய் உன்னைப் பார்த்து விடத்தான் எத்தனை திட்டமிடல்கள் நிகழ்த்துகிறேன் நான்!

facebook.com/thegretviji

எப்ப பெட்டுக்கு பக்கத்தில கையெட்டும் தூரத்தில் விக்ஸ், வாலினி ஸ்ப்ரே, மூவ், டவல் போன்றவை இடம்பிடிக்குதோ அப்போதிலிருந்து வயசாகுதுன்னு ஏத்துக்கணும்.

twitter.com/BlackLightOfl

அக்கவுன்ட் வெச்சுதான் கடன் வாங்க முடியும் பேங்க்ல.. கடன் வெச்சுதான் அக்கவுன்ட் ஓபன் பண்ண முடியும் டீக்கடையில..!!

twitter.com/rahimgazali

உலகத்தில் யார் என்ன கோமாளித்தனம் செய்தாலும் எல்லாத்துக்கும் சேர்த்து செல்லூர் ராஜூதான் அடிவாங்கறாரு.

106p4_1531819431.jpg

facebook.com/boopath23

தொப்பையை மறைக்க உதவும் டி-ஷர்ட் கண்டுபிடிங்கப்பா. அதுக்கு டிமாண்ட் அதிகம்!

twitter.com/Kozhiyaar

தாய்லாந்துல நடந்தது இங்க நடந்திருந்தா, அந்த குகை வாசலைக் கல்லைப் போட்டு மூடிட்டு, ‘அப்படி அங்கன ஒரு குகையே இல்லை’ன்னு சொல்லி இருப்பாங்க!

twitter.com/Aruns212

‘சார் போஸ்ட்!’ என்ற குரல் தந்த உற்சாகத்தை, நோட்டிஃபிகேஷன் டோன்கள் தருவதில்லை.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

8 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் முரளிதரன் நிகழ்த்திய உலக சாதனை: வைரலாகும் வீடியோ

 

இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி இன்றுடன் எட்டாண்டுகள் முடிகிறது.

கடந்த 2010-ஆம் ஆண்டு யூலை 22-ஆம் திகதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இந்த உலக சாதனையை முரளிதரன் படைத்தார்.

அந்த போட்டியுடன் முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

மொத்தமாக 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முரளிதரன் 800 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முரளிதரன் மட்டுமே 800 விக்கெட்களை வீழ்த்திய ஒரே வீரர் ஆவார்.

முரளிதரன் 800 விக்கெட்களை வீழ்த்திய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

 
Link to comment
Share on other sites

முதலையைப் பழிவாங்கிய மனிதர்கள்... மனிதர்களைப் பழிவாங்கிய விலங்குகள்! #RevengeStories

 

சுகிடோ இறந்த கோபத்தில் இருந்த மக்கள் கத்தி, அரிவாள் இன்னபிற ஆயுதங்களுடன் முதலைப் பண்ணைக்குள் நுழைகிறார்கள். குழுவாகச் சென்றவர்கள் பண்ணையில் இருந்த முதலைகளை தேட ஆரம்பிக்கின்றனர்...

முதலையைப் பழிவாங்கிய மனிதர்கள்... மனிதர்களைப் பழிவாங்கிய விலங்குகள்! #RevengeStories
 

ழிக்கு பழி  வாங்க வேண்டுமென்பதில் மனிதர்கள் மோசமான எல்லைக்குச் சென்றுக்கொண்டிருக்கிறோம்.. ஒவ்வொரு நாளும் ஏதோ  ஒன்றைக் கண்மூடித்தனமாக மனித இனம் செய்து கொண்டேயிருக்கிறது. அதில் ஒன்று 300 முதலைகளைக் கொன்ற சம்பவம். ஆனால், இதில் விலங்குகளும் விதி விலக்கல்ல, விலங்குகளின் ரிவெஞ்ச் கதைகள் விசித்திரமானவை. அதில் சிலவற்றை காணும் முன், முதலில் சமீபத்தில் நடந்த அந்த முதலை சம்பவம்...

உப்பு நீர் முதலை விலங்கு

Photo: Antara news agency

 

 

இந்தோனேஷியாவின் சோரங் பகுதியில் செயல்படுகிறது ஒரு தனியார் முதலைகள் பண்ணை. இங்கு சுமார் 300 உப்பு நீர் முதலைகள் வளர்க்கப்படுகின்றன. 2013-ம் ஆண்டு உப்பு நீர் முதலைகளை வளர்க்கவும் அவற்றைப் பாதுகாக்கவும் அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் கடந்த 14 தேதி 48 வயதுடைய சுகிடோ (Sugita) என்பவர் முதலைப் பண்ணைக்கு அருகில் காய்கறிகளை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது முதலைப் பண்ணையில் இருக்கிற ஒரு முதலை சுகிடோவைத் தாக்கிவிடுகிறது. அவரது கால் பகுதி முற்றிலும் சேதமடைந்துவிடுகிறது. சுகிடோ முதலையிடம் சிக்கியதும் உதவிக் கேட்டு கதறியிருக்கிறார். அப்போது முதலைப் பண்ணையின் பணியாளர் ஒருவர் முதலை தாக்குவதைப் பார்க்கிறார். ஆனால், அவராலும் சுகிடோவை முதலையிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. உதவிக்கு ஆட்கள் வருவதற்குள் முதலை சுகிடோவைத் தாக்கிவிட்டு மறைந்துவிடுகிறது. சுகிடோ இறந்து விடுகிறார். சுகிடோவின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் சுகிடோவின் உடலை அடக்கம் செய்த பிறகு பக்கத்திலுள்ள சோரங் காவல் நிலையத்தில் முறையிடுகின்றனர். 

 

 

காவல் துறை அதிகாரிகளின் சமரசம் தோல்வியில் முடிந்துவிடுகிறது. சுகிடோ இறந்த கோபத்தில் இருந்த மக்கள் கத்தி, அரிவாள் இன்னபிற ஆயுதங்களுடன் முதலைப் பண்ணைக்குள் நுழைகிறார்கள். குழுவாகச் சென்றவர்கள் பண்ணையில் இருந்த ஒவ்வொரு முதலையாகக் கொல்ல ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் கோரத்தாண்டவத்தில் முதலைப் பண்ணையிலிருந்த 292 மொத்த முதலைகளையும்  கொன்று குவித்துவிடுகிறார்கள். இந்தத் தகவலை இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஆண்டாரா என்கிற செய்தி நிறுவனம் (Antara news agency) வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட புகைப்படங்கள் வெளியே வந்த பின்புதான் முதலை கொலை உலகத்துக்குத் தெரிய வந்தது. சுகிடோவைக் கொன்ற ஒரு முதலையைப் பலி வாங்குவதற்காக மொத்த முதலைகளையும் கொன்று குவித்த சம்பவம் மனித இனத்தின் கொடூரத்தை உலகுக்குக் காட்டியிருக்கிறது. 

முதலை முதல் மனிதன் வரை

2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜார்கண்ட் மாநிலம் மதரி என்னுமிடத்தில் இருக்கிற தண்டவாளத்தை 15 யானைகள் கொண்ட குழு ஒன்று கடந்திருந்தது. அப்போது வந்த கொல்கத்தா டெல்லி துரந்தோ ரெயிலில் அடிபட்டு ஒரு யானை இறந்து விடுகிறது. மொத்த யானைக் கூட்டமும் சிதறி ஓடுகின்றது. வனத்துறை அதிகாரிகள் ரயில்வே துறை ஊழியர்கள் என எல்லோரும் வந்து இறந்த யானையை அங்கிருந்து அப்புறப்படுத்துகிறார்கள். தூரத்திலிருந்து யானைகள் கூட்டம் பார்த்துக் கொண்டேயிருந்திருக்கிறது. ஆனால், அந்த யானைக் கூட்டத்தை பட்டாசுகள் வெடித்து அங்கிருந்து துரத்துகிறார்கள். அன்றைய இரவு மீண்டும் யானை அடிப்பட்ட இடத்துக்கு மொத்த யானைக் கூட்டமும் வருகிறது. ரயிலில் அடிப்பட்ட யானை காயத்துடன் அங்கே கிடக்கிறது என அவை நம்பின. அதனால் அவை யானையைத் தேடி மதரி ரயில் நிலையத்துக்கு வருகின்றன. அன்றைய தினமும் பட்டாசு மற்றும் மேளத் தளங்களை பயன்படுத்தி யானைகளை விரட்டி விடுகிறார்கள். யானை அடிப்பட்ட இடத்துக்கு யானைகளை மக்களும் அதிகாரிகளும் நெருங்கவே விடவில்லை. அதில் கோபமடைந்த யானைகள் Belwatand என்னும் கிராமத்தில் நுழைந்து அங்கிருந்த வீடுகள், பள்ளிக்கூடம் என எல்லாவற்றையும் அடித்து உடைத்து விடுகின்றன. யானைகளின் ஆக்ரோஷத்தைக் கட்டுக்குள் கொண்டு வர மேற்கு வங்கத்திலிருந்து யானைகளை விரட்டும் சிறப்புக் குழுவை அரசு கொண்டு வந்தது. அவர்கள் பட்டாசு பயன்படுத்தி யானைகளைக் காட்டுக்குள் விரட்டினர். அதோடு நிலைமை சரியாகவில்லை அடுத்த நாள் Hariktand என்னும் கிராமத்துக்குள் நுழைந்த யானைகள் அங்கிருந்த சுமார் பத்து வீடுகளை நொறுக்கின. அதன் பிறகே அவை காட்டுக்குள் சென்றன. 

 

 

ரிவென்ச்

2015 ம் ஆண்டு சீனாவின் Chongqing மாகாணத்தில் நாய் ஒன்று எப்போதும் படுத்திருக்கும் இடத்தில் படுத்திருந்தது. நாய் படுத்திருந்த இடத்தில் காரை நிறுத்த வேண்டும் என்பதற்காக அங்கு வந்த காரின் உரிமையாளர் ஒருவர் நாயை அடித்து விரட்டியிருக்கிறார். கார் உரிமையாளரைப் பார்த்து குரைத்த நாயை உரிமையாளர் பயமுறுத்தி விரட்டியிருக்கிறார். நாய் சென்றதும் அங்குக் காரை நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டார். அதில் கோபமடைந்த நாய் அங்கிருந்து சென்று தன்னுடைய நண்பர்களை அழைத்து வந்து காரின் பாகங்களை கடித்துச் சேதப்படுத்திவிட்டது. இந்தக் காட்சியைப் பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவு செய்து வைத்திருந்தது. இது போல நிறையக் கதைகள், மனிதர்களைப் போலவே மிருகங்களின் பழிக்குப் பழி உணர்வையும் நமக்குப் புரிய வைக்கின்றன. ஆனால், 300 முதலைகளை இரக்கமில்லாமல் கொன்ற நமக்கு, மிருகங்களின் பழிக்குப் பழி உணர்வைக் குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது? அது சரி, மனிதனும் ஒரு மிருகம்தானே?

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பிரச்னைகளை எதிர்கொள்ளும் துணிச்சலைக் கொடுப்பது எது? - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

 
பிரச்னைகளை எதிர்கொள்ளும் துணிச்சலைக் கொடுப்பது எது? - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory
 

நெகிழ்ச்சிக் கதை

`நம்பிக்கை இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. நம்பிக்கையிருந்தால் சாத்தியமாகாதது எதுவுமில்லை’ - ஒரு பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளரும், மனித உரிமைப் போராளியுமான மேரி மெக்லியாட் பெத்துனே (Mary McLeod Bethune). மகிழ்ச்சியும் கண்ணீரும் கலந்ததுதான் வாழ்க்கை. ஏதோ ஒன்றின் மீது அசைக்க முடியாத பிடிப்பு, ஆழமான நம்பிக்கை மட்டும் இருந்துவிட்டால் வாழ்வது எளிது. எப்பேர்ப்பட்ட இன்னல்கள் வந்தாலும், அவற்றை எதிர்கொள்ளும் துணிச்சலைக் கொடுப்பது நாம் எதன் மீதோ வைத்திருக்கும் நம்பிக்கைதான். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி போதித்த வார்த்தைகள், பெரியவர்கள் கற்றுக் கொடுத்த நல்ல விஷயங்கள்கூட நமக்கு சில நேரங்களில் கைகொடுக்கும். முதலில் நாம் அவற்றை மனதார நம்ப வேண்டும்; அப்போதுதான் அது சாத்தியப்படும். தாத்தா சொன்னதை அப்படியே வேத வாக்காக எடுத்துக்கொண்ட ஒரு சிறுவனின் கதை இதற்கு நல்ல உதாரணம்... 

ஹோவர்டு கவுன்ட்டி (Howard County), அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்திலிருக்கும் சிறு ஊர். அங்கே ஷெரிஃப்-ஆகப் (Sheriff) பணியாற்றிக்கொண்டிருந்தார் பீட்டர். `அமைதி காவலர்’ என்றும் சொல்லலாம். அவர், அவருடைய மகன், மருமகள், பேரன் ஜான் எல்லோரும் ஒரே வீட்டில்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். பீட்டருக்கு ஒரு பழக்கம்... இரவில், பேரனைப் பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டு கதைகள் சொல்வார். பெரும்பாலும் நீதிக் கதைகள், அவற்றிலும் பைபிள் கதைகள்தான் அதிகமாக இருக்கும். கதையைக் கேட்ட பிறகு ஜான் கேட்பான்... ``ஏன் தாத்தா... கடவுளை நம்பிக்கையோட கூப்பிட்டா உதவிக்கு ஓடி வருவாரா?’’ 

 

 

தூண்டில்

``நிச்சயம் வருவார் ஜான்!’’ 

``சரி... ஒரு சிங்கம் என்னைக் காட்டுல துரத்துது. அப்போ கூப்பிட்டா உதவிக்கு வருவாரா?’’ 

``வருவாருப்பா.’’ 

``துப்பாக்கியோட நாலஞ்சு கொள்ளைக்காரங்க என்னைத் துரத்திக்கிட்டு வர்றாங்க... அப்போ கூப்பிட்டா?’’ 

``வருவாருடா கண்ணு...’’ 

இந்தக் கேள்விகளை தினமும் மாற்றி மாற்றிக் கேட்பான் ஜான். பீட்டரும் பொறுமையாக அவனுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பார். ஜானுக்குள் அவருடைய வார்த்தைகள் நம்பிக்கையாக வளர்ந்துகொண்டிருந்தது அவருக்குத் தெரியாது.  

 

 

அது ஒரு வெள்ளிக்கிழமை.  பீட்டர் அலுவலகத்திலிருந்தார். அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய குரல், பதற்றமாக ஒலித்தது. ``ஷெரிஃப், உங்க பேரனுக்கு... பேரனுக்கு...’’ 

``என்ன... என்ன ஆச்சு என் பேரனுக்கு?’’ 

``ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்...’’ 

``ஆக்ஸிடென்ட்டா... எங்கே?’’ 

``உங்க பேரனும் அவன் அப்பாவும் ஏரி ஓரமா உட்கார்ந்து, தூண்டில்ல மீன் பிடிச்சுக்கிட்டு இருந்திருக்காங்க. அப்போ அந்தப் பக்கமா வந்த ஒரு கார் பிரேக் பிடிக்காம ஜான் மேல மோதிடுச்சு...’’ 

பீட்டர் எந்த மருத்துவமனையில் ஜான் சேர்க்கப்பட்டிருக்கிறான் என்பதை விசாரித்தார். உடனே கிளம்பினார். அந்த முதியவர் தன் வாழ்நாளில் எத்தனையோ மோசமான விபத்துகளைப் பார்த்திருந்தார். தன் பேரனுக்கு விபத்து என்றதும் கொஞ்சம் அரண்டுதான் போனார். 

பீட்டர்

மருத்துவமனையின் அவசரப் பிரிவில் ஜான் இருந்தான். அவர் நினைத்ததற்கு மாறாக பெரிய அடியெல்லாம் அவனுக்கு ஏற்பட்டிருக்கவில்லை. காலில் சின்னதாக எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அதுவும் விரைவில் குணமாகிவிடும் என்று சொன்னார்கள். 

தாத்தா பீட்டர், பேரனுக்கு அருகில் அமர்ந்தார். மென்மையாகச் சிரித்தார்; அவன் தலையைத் தடவிக் கொடுத்தார்... ``என்ன ஆச்சு ஜான்?’’ என்று விசாரித்தார். 

``ஒண்ணுமில்லை தாத்தா. நானும் அப்பாவும் தூண்டில்ல மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தோமா... வேகமா வந்த ஒரு கார் என் மேல மோதி, என்னைத் தூக்கி எறிஞ்சிடுச்சு. நல்லவேளையா நான் சகதி நிறைஞ்ச ஒரு மண் குட்டையில விழுந்துட்டேன். அதனால அடி பெருசா விழலை. கார் மோதினதுல தூண்டில் ரெண்டா உடைஞ்சு போச்சு. இன்னிக்கி நான் ஒரு மீன்கூடப் பிடிக்கலை...’’ 

அந்த விபத்தில் மரங்களுக்கு மேல் சுமார் 60, 70 அடி உயரத்துக்குத் தூக்கி வீசப்பட்டிருந்தான் ஜான். 

அவன் திரும்பத் திரும்ப உடைந்துபோன தூண்டிலைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். அதைத் தாங்க முடியாமல் பீட்டர் கடைத்தெருவுக்குப் போய் புதிதாக ஒரு தூண்டில் வாங்கிக்கொண்டு வந்தார். ``ஜான்... உனக்கு குணமானதும் மறுபடியும் மீன் பிடிக்கப் போகலாம்... சரியா? இந்தத் தூண்டிலைவெச்சுக்கோ...’’ என்றார் பீட்டர். 

அடுத்த நாள் மருத்துமனையில் ஜானுக்கு அருகே அமர்ந்து பீட்டர் பேசிக்கொண்டிருந்தார். ஜான், புதிய தூண்டிலைக் கையில் வைத்துக்கொண்டிருந்தவன் திடீரென்று கேட்டான்... ``தாத்தா... கடவுள்... இருக்கார்தானே?’’ 

ஜான்

``ஆமா... மனப்பூர்வமா நம்பி, உண்மையா நேசிக்கிறவங்களுக்கு...’’   

``ஆமா தாத்தா... நீங்க சொல்றது உண்மைதான்.’’ 

``உனக்கு எப்படித் தெரியும்?’’

``கார் என் மேல மோதி, நான் தூக்கி வீசப்பட்டேனா... அப்போ நீங்க சொன்னதுதான் ஞாபகத்துக்கு வந்தது. நான் `கடவுளே...’னு கத்திட்டேன். அப்போ யாரோ மேலருந்து இறங்கி வந்து, என்னைத் தாங்கிப் பிடிச்சு, அந்த மண் குட்டையில போட்டாங்க தாத்தா... அது கடவுளேதான்...’’ 

இதைக் கேட்டு தாத்தாவுக்குக் கண்கள் நிறைந்து போனது. பயத்தில், பதற்றத்தில்கூட ஜானுக்கு கடவுள்போல ஓர் உருவம் தோன்றியிருக்கலாம். அல்லது விபத்து தந்த அதிர்ச்சியில் ஏற்பட்ட பிரமையாகக்கூட இருக்கலாம். ஆனால், அதுவரை அவர் சொன்ன கதைகளையெல்லாம், அவன் மனது முழுமையாக நம்பிக்கொண்டிருந்திருக்கிறது என்பதே அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது; புதுத் தெம்பைத் தந்தது.

பீட்டர், ஜானின் கைகளைப் பற்றினார்; அவன் நெற்றியில் தன் அன்பையெல்லாம் ஒன்று சேர்த்துக் கொடுப்பதுபோல அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தார். 

***    

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

14 நாள்கள்

 
பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

 

டந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பூனைக்கு மணி கட்டிய புதுமைப் பெண்!

ர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்திலிருந்து பெங்களூருக்கு விதிமுறை மீறி தரப்பட்ட பணியிட மாற்ற உத்தரவை நீக்கக் கோரி கடந்த ஐந்து மாதங்களாகக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் போராடி வந்தார் ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இட மாற்றம் வருவது வாடிக்கைதான் என்றாலும், ரோகிணி அதை சட்டப்படி எதிர்கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  ``தெரிந்த அதிகாரிகள் பலர், இந்த விஷப்பரீட்சை வேண்டாம் என்றுதான் என்னை எச்சரித்தனர். அது ஏன் என்று இத்தனை போராட்டத்துக்குப் பின்னரே எனக்குப் புரிகிறது. அரசை யாரும் எதிர்ப்பதில்லை. நாம் செய்யும் எந்த வேலையிலும் பேசுவதிலும் அரசு தவறு கண்டுபிடிக்க முடியும். ஆனால், அரசுடன் நீங்கள் இணக்கமாகப் போய்விட்டால் எந்தத் தொந்தரவும் இருப்பதில்லை” என்கிறார் ரோகிணி.

p10a_1531114180.jpg

தன் 25 ஆண்டுக்கால பணியில் 45 முறை பணிமாற்றம் செய்யப்பட்ட அஷோக் கேம்கா ஐ.ஏ.எஸ் பற்றி நினைவுகூரும் ரோகிணி, ``பூனைக்கு யாராவது மணி கட்டித்தானே ஆக வேண்டும்?’’ என்கிறார். ``சட்டப்படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இடமாற்றம் என்று இருப்பதை நம் உரிமையாகக் கையில் எடுத்தால், ஆட்சியில் இருப்பவர்கள் நம்மைப் பந்தாட மாட்டார்கள்” என்றும் கூறுகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரான மஞ்சுவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இவர் இறங்கியதே இடமாற்றத்துக்குக் காரணம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அரசு பங்களாவை தேர்தல் நேர கட்சிப் பணிக்கு அமைச்சர் மஞ்சு உபயோகித்ததால், அதற்குப் பூட்டு போட்டார் ரோகிணி. இதனால், சித்தராமையா அரசால் ஏழே மாதங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். எது எப்படியோ, மீண்டும் ஹாசனிலேயே டெபுடி கமிஷனராகப் பணியேற்று வலம்வருகிறார் ரோகிணி.

அடிச்சு ஆடுங்க அம்மணி... சட்டம் நம் கையில்!

``அரசியல் என்னைக் கொன்றுவிடும்!’’

மெரிக்காவில் பிரபல டாக் ஷோ நடத்தும் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஓப்ரா வின்ஃப்ரே,  `வோக்’ என்கிற ஆங்கிலப் பத்திரிகைக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில், “அரசியலில் பொய்கள், முதுகில் குத்துவது என்று கேவலமான விஷயங்கள் இருக்கின்றன. அந்தக் குப்பையில் என்னால் நீடிக்க முடியாது. அரசியல் என்னைக் கொன்றுவிடும்” என்று கூறியிருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுகள் விழாவில் அவர் ஆற்றிய அசத்தலான உரையைக் கேட்ட ஊடகங்கள், வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ஓப்ரா போட்டியிடப் போவதாக யூகத்தை முன்வைத்தன. அவை அத்தனையையும் உடைத்து நொறுக்கியிருக்கிறார் ஓப்ரா.

p10b_1531114198.jpg

அரசியல் நிலைப்பாடு எடுக்கவில்லை என்றாலும், `மீ டூ’,  `டைம் இஸ் அப்’, பாலியல் வன்முறைக்கு எதிரான இயக்கங்கள் என்று சமூகப் பணியைச் சத்தமின்றி செய்து வருகிறார். `மாற்றம் நிச்சயம் வரும்' என்று தான் நம்புவதாகக் கூறும் ஓப்ரா, “இது இருண்ட காலம் என்று கூறுபவர்கள் அதிகம். ஆனால், நான் அதை அவ்வாறு பார்க்காமல், இப்போதாவது விழிக்கத் தொடங்கிவிட்டோமே என்று நினைத்துப் பார்க்கிறேன்” என்கிறார்.

ஹ்ம்ம்ம்… நம்ம எப்போ விழிக்க ஆரம்பிக்கிறது?!

வாலிபால் வல்லபி!

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் இந்திய கைப்பந்து அணியின் தலைவியாக, தமிழக மாணவி ஷாலினி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பி.கே.ஆர் மகளிர் கலைக்கல்லூரி மாணவியான எஸ்.ஷாலினி, சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விவசாயியின் மகள். புனேவில் நடந்த ஆசிய அளவிலான மகளிர் கைப்பந்து தேர்வுப் போட்டிகளில் விளையாடி வந்தார். இப்போட்டிகளில் விளையாடியவர்களில் 12 பேர், 19 வயதுக்குட்பட்ட இந்திய கைப்பந்து அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ஷாலினி. பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே தன் தந்தை தன்னைக் கைப்பந்து விளையாட்டில் சேர்த்துவிட்டதாகக் கூறும் இவர், அப்பாவின் நண்பரான பயிற்சியாளர் சேகரால்தான் விளையாட்டின் மீது அப்பாவுக்கு ஆர்வம்வந்தது என்று கூறுகிறார்.

p10c_1531114242.jpg

அப்பாவின் ஆர்வத்துக்காக முதலில் விளையாடத் தொடங்கியவருக்கு, தானாகவே கைப்பந்து ஜுரம் தொற்றிக்கொண்டது. கல்லூரியில் சேர்ந்த பிறகு பயிற்சியாளர் மாற, புதிய நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய அணிக்கான தேர்வில் கலந்துகொண்டு தேர்வான 24 பேரில் இவரும் ஒருவர். `கைப்பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடி நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என்் அடுத்த இலக்கு' என்று கூறும் ஷாலினியைப் பாராட்டி ஏடிஜிபி ஷைலேந்திரபாபு தன் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். கிராமத்துப் பின்னணியில் இருந்து சிறு விவசாயியின் மகள் இந்த நிலையை அடைந்திருப்பதை சமூக வலைதளங்களில் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

சபாஷ்... ஷாலினி!

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர்!

மிழகத்தின் பரமக்குடியைச் சேர்ந்த திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா. சேலம் சட்டக்கல்லூரியில் 2007-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்திருந்தார். “சிறுவயதிலேயே நான் திருநங்கை என்பதை உணர்ந்துகொண்டேன். திருநங்கைகளின் வாழ்க்கை முறை, அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து அதிகம் தேடி அறிந்தேன். என் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற சட்டம் படித்தேன். பின்னாளில் எனக்கும் என் போன்றோருக்கும் இது உதவும் என்பதும் நான் சட்டம் படிக்க ஒரு காரணம்” என்று கூறும் இவர், பார் கவுன்சிலில் தன்னைத் திருநங்கை என்று பதிவுசெய்ய விரும்பியதாகத் தெரிவித்தார். 2014-ம் ஆண்டு ‘நால்சா’ தீர்ப்புக்குப் பிறகே இந்தியாவில் மூன்றாம் பாலினருக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது என்று கூறும் சத்யஸ்ரீ, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்ய சட்டம் பயின்ற 11 ஆண்டுகள் கழித்து விண்ணப்பித் தது கண்டு வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்ததைக் குறிப்பிடுகிறார்.

p10d_1531114260.jpg

திருநங்கைகளுக்கு இன்னமும் சமுதாய அங்கீகாரம் இல்லை என்று வருந்தும் சத்யஸ்ரீ, ``நிற்கக்கூட இடமில்லாத ரயிலிலும் எங்களுக்கு அருகே உள்ள இருக்கைகள் காலியாகவே இருக்கும்’’ என்று வருந்துகிறார், ``மூன்றாவது நபருக்கு இது ஒரு சிறிய விஷயமாகத் தெரியலாம், என்னைப் பொறுத்தவரை  இது ஒரு பெரிய உளவியல் சிக்கல். அந்த வலி எனக்குத்தான் தெரியும்’’ என்கிறார். ``கிடைத் திருக்கும் அங்கீகாரத்தைக்கொண்டு, என் உழைப்பு மற்றும் அனுபவங்களை வைத்து திருநங்கைகளைப் பாதிக்கும் பிரச்னைகளைக் களைய முனைவேன்’’ என்று தன்னம்பிக்கை யுடன் கூறுகிறார் இவர்.

பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் திருநங்கைகளும்தான்!

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று…. ஜூலை 23 நிகழ்வுகள்…!

 
 

1829 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் வில்­லியம் ஒஸ்டின் பேர்ட் முத­லா­வது தட்­டச்சு இயந்­தி­ரத்­துக்­கான காப்­பு­ரி­மையைப் பெற்றார்.

1840 : கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்­தா­னிய குடி­யேற்ற நாடு வட அமெ­ரிக்­காவில் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1874 : இலங்­கையின் சட்­ட­ச­பையின் தமிழ்ப் பிர­தி­நிதி முத்துக் குமா­ர­சு­வாமி இங்­கி­லாந்தில் சேர் பட்டம் அளிக்­கப்­பட்டு கௌர­விக்­கப்­பட்டார்.

1881 : ஆர்­ஜென்­டீனா, சிலி நாடு­க­ளுக்­கி­டை­யி­லான எல்லை தொடர்­பான ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

1914 : ஆஸ்­தி­ரி­யாவின் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் பிரான்ஸ் பேர்­டி­னண்ட்டின் கொலை­யா­ளியைக் கண்­டு­பி­டிக்க சேர்­பி­யா­வுக்கு ஆஸ்­தி­ரி­யா-­ஹங்­கேரி காலக்­கெடு விதித்­தது.

1929 : இத்­தா­லியின் பாசிச அரசு வெளி­நாட்டுச் சொற்­களைப் பயன்­ப­டுத்த தடை விதித்­தது.

1942 : நாஸி ஜேர்­ம­னி­ய­ரினால் போலந்தில் டிரெப்­லின்கா வதை முகாம் யூதர்­க­ளுக்­காக அமைக்­கப்­பட்­டது.

1952 : எகிப்தின் பாரூக் மன்­னரின் ஆட்­சிக்கு எதி­ரான இயக்­கத்தை ஜெனரல் முஹமட் நக்கீப் ஆரம்­பித்தார்.

1961 : நிக்­க­ர­கு­வாவில் சன்­டி­னீஸ்டா தேசிய விடு­தலை முன்­னணி அமைக்­கப்­பட்­டது.

1962 : லாவோஸ் நாட்டின் அர­சி­யலில் வெளி­நா­டுகள் தலை­யி­டா­தி­ருக்க சர்­வ­தேச ஒப்­பந்தம் லாவோஸ் உட்­பட 15 நாடு­க­ளுக்­கி­டையில் ஜெனீ­வாவில் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

1967 : அமெ­ரிக்­காவின் வர­லாற்றில் மிகப் பெரும் கல­வரம் ஆபி­ரிக்க அமெ­ரிக்­கர்கள் செறிந்து வாழும் டிட்­ராயிட் நகரில் இடம்­பெற்­றது. 43 பேர் கொல்­லப்­பட்டு 342 பேர் காய­ம­டைந்­தனர். ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான கட்­டி­டங்கள் எரிக்­கப்­பட்­டன.

1970 : ஓமானின் காபூஸ் அவ­ரது தந்தை சாயிட் பின் தாமூரின் ஆட்­சியைக் கைப்­பற்றி நாட்டின் சுல்­தா­னாகப் பத­வி­யேற்றார்.

1983 : தமி­ழீழ விடு­தலைப் புலிகள் யாழ்ப்­பா­ணத்தின் திரு­நெல்­வே­லியில் கண்­ணி­வெடித் தாக்­குதல் நடத்­தி­யதில் 13 இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர்.

1988 : பர்­மாவில் இடம்­பெற்ற மக்­க­ளாட்­சிக்கு ஆத­ர­வான ஆர்ப்­பாட்­டங்­களை அடுத்து 1962ஆம் ஆண்டில் இருந்து ஆட்சி நடத்­திய இரா­ணுவத் தள­பதி நே வின் பத­வியைத் துறந்தார்.

1992 : ஓரினச் சேர்க்­கை­யா­ளர்­களின் உரி­மை­களைக் கட்­டுப்­ப­டுத்தும் தீர்­மா­னத்தை ஏற்க ஜோசப் ரட்­சிங்கர் தலை­மை­யி­லான சிறப்புக் குழு வத்­திக்­கானில் முடி­வெ­டுத்­தது.

1995 : ஹேல்-பொப் என்ற வால்­வெள்ளி சூரி­ய­னுக்கு வெகு தொலைவில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இது கிட்­டத்­தட்ட ஓராண்­டிற்குப் பின்னர் வானில் தெரிந்­தது.

1999 : சந்­திரா எக்ஸ்-­கதிர் அவ­தான நிலையம் என்ற செய்­மதி ஏவப்­பட்­டது.

2005 : எகிப்தில் இடம்­பெற்ற மூன்று குண்­டு­வெ­டிப்­பு­களில் 88 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2006 : இந்­தி­யாவின் ஹரி­யா­னாவில் குரு­ஷேத்­தி­ரத்தில் 60 அடி ஆழ் துளைக்­கு­ழியில் வீழ்ந்த சிறுவன் 50 மணி நேரத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

2012 : ஈராக்கில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 107 பேர் உயிரிழந்ததுடன் 250 பேர் காயமடைந்தனர்.

2016 : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இரு குண்டுவெடிப்புகளால் 80 பேர் உயிரிழந்ததுடன் 260 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk

Link to comment
Share on other sites

 

சுற்றுலா படகை எரிமலை குழம்பு தாக்கியது எப்படி?

கடலில் சேரும் “எரிமலை குழம்பு குண்டு” சுற்றுலா படகை தாக்கியதால் 23 பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிமலை குழம்பு கடலில் சேருகின்ற பகுதியில் ஏற்பட்ட பெரியதொரு வெடிப்பால், கற்களும், குப்பைகளும் கற்றில் பறந்தன. சுற்றுலா படகு ஒன்றின் மேற்கூரையை அவை தாக்கியுள்ளன. இதனால் ஒருவரின் கால் உடைந்த நிலையில், பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது, புலனாய்வுதுறை அதிகாரிகள் ஒன்றை தொடங்கியுள்ளனர். கடந்த மே மாதம் வெடித்து சிதறிய ஹவாயிலுள்ள கீலவேயா எரிமலை, அதுமுதல் வாயுவையும், உருகிய எரிமலை குழம்பையும் வெளியேற்றி வருகிறது.

Link to comment
Share on other sites

தன்னம்பிக்கையால் ஓடத் தொடங்கிய கால்!

 

 

 
thannambikkaijpg

டுபு…டுபு….டுபு...டுபு’ வெனச் சீறிப் பாய்ந்து வருகிறது அந்த புல்லட். அதில் மனைவி, குழந்தைகளோடு வலம்வருகிறார் விக்னேஷ்வர சுப்பையா. அவரது வாழ்க்கை ஒருவகையில் பிறருக்குத் தன்னம்பிக்கைப் பாடம்!

சாலை விபத்தில் ஒரு காலை இழந்த இவர், செயற்கைக் கால் பொருத்தி, இயல்பான மனிதர்களோடு ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்கிறார். நிச்சயித்த திருமணமும் விபத்துக்குப்பின் நின்றுபோக, தன் தன்னம்பிக்கையால் மீண்டெழுந்தவர், இன்று அன்பான மனைவி, அழகான குழந்தைகள் செல்வங்கள், திகட்டாத தன்னம்பிக்கை என வாழ்ந்துவருகிறார்.

 
 

ஒரு காலைப் பொழுதில் விக்னேஷ்வர சுப்பையாவை நாகர்கோவிலில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். ‘’அப்பா ராமகிருஷ்ணனுக்குத்  தனியார் நிறுவனத்தில் வேலை. அம்மா முத்துமாரி இல்லத்தரசி. என் உடன்பிறந்தவங்க இரண்டு தங்கச்சிங்க. இரண்டுபேருக்கும் திருமணம் முடிஞ்சிருச்சு. நான் பன்னிரெண்டாம் வகுப்புவரை படிச்சுட்டு, எலக்ட்ரிக்கல் வேலை செஞ்சுட்டு இருந்தேன். நான் வேலை பார்த்த எலக்ட்ரீசியன் வெளிநாட்டுக்குப் போனாரு. அதனால மொத்தப் பொறுப்பையும் எனக்கே சொந்தமா தந்துட்டு போனாரு.

எல்லாம் நல்லபடியா போச்சு. எனக்கும் வீட்டுல திருமண நிச்சயம் பண்ணுனாங்க. ஒரு நாள் நண்பர் வீட்டு விசேஷத்துக்குப் போயிட்டு பைக்ல வந்துட்டு இருந்தேன். எதிர்ல வந்த மீன் லோடு வண்டி என்னை இடிச்சுட்டு நிக்காமப் போயிருச்சு.  தூரத்துல இருந்தே அந்த வண்டி ஆடி, ஆடித்தான் வந்துச்சு. டிரைவர் குடிபோதையில் இருந்திருக்கணும். அந்த விபத்தில் என்னோட வலது கால் மூட்டின் கீழ் பகுதி மூன்று பாகங்களா உடைச்சுருச்சு. பாதமும் உருத்தெரியாம சிதைஞ்சு போனது.

ஆஸ்பத்திரியில ஆப்ரேஷன் பண்ண முடியாது. செயற்கைக் கால்தான் வைக்கணும்னு சொன்னாங்க. மொத்த குடும்பமும் இடிஞ்சு போச்சு. நிச்சயிக்கப்பட்ட பொண்ணு வீட்டுல ஒரு கால் இல்லைன்னு சொல்லி, கல்யாணத்தை நிறுத்திட்டாங்க. வாலிப வயசுல இது எத்தனை சோதனையான காலகட்டம்? ஆனாலும் நான் மனம் தளரல. செயற்கைக் கால் வைச்சேன். பிலோனி என்னும் வகையைச் சேர்ந்த கால் இது. மூணே மாசத்துல செயற்கைக் காலில் நடந்தே பொண்ணு வீட்டுக்குப் போனேன்.

பொண்ணு வீட்டுல எல்லாருக்கும் எப்படி நடக்குறீங்கன்னு ஆச்சர்யமா பார்த்தாங்க. ஆனாலும் கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் இல்லன்னு சொல்லிட்டாங்க. இதெல்லாம் நடந்து அஞ்சு வருசம் ஆச்சு. திரும்பி பார்க்கும்போது, இப்பவும் வலிக்குது” என்கிறார் விக்னேஷ்வர சுப்பையா.

ஆனால்,  விபத்துக்குப் பிறகு அவர் சோர்ந்து போய் உட்கார்ந்துவிடவில்லை. செயற்கைக் கால் உதவியுடன் ஜிம்முக்குப் போகத் தொடங்கியிருக்கிறார். சிறிய உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.  விக்னேஷ்வராவுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால், உடம்பு சீக்கிரமே குணமாகிவிட்டது, பிறகு ஹைதராபாத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு விழிப்புணர்வு மாரத்தான் நடந்தபோது அதில் கலந்துகொள்ள விரும்பியிருக்கிறார்.

செயற்கைக் கால் வைத்து ஏழே மாதங்களில் மாரத்தான் போட்டியில் பங்கேற்று, 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி அசத்தியிருக்கிறார். அந்த மாரத்தானில் 30 பேர் மட்டுமே 5 கிலோ மீட்டர் தூரத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள். இவர்களில் விக்னேஷ்வர சுப்பையாவும் ஒருவர். அந்த நம்பிக்கை கொடுத்த அனுபவம், தொடர்ந்து ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

 “முதலில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓட்டப் பந்தயங்களில்தான் பங்கெடுத்தேன். அதில் பரிசு வாங்குனாலும், எனக்குள்ள ஒரு கேள்வி இருந்துட்டே இருந்துச்சு. நம்மைவிட இயலாதவருக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்பை நாம் பறிக்கிறோமோன்னு தோணுச்சு. உடனே இயல்பானவர்கள் கலந்துகொள்ளும் போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச்சேன். இதுக்குன்னு செயற்கைக் காலுக்குப் பதிலாக, பிளேட்ன்னு ஒரு கால் இருக்கு. ஸ்பிரிங் வகையில் அது துள்ளி எழும்பி ஓட வைக்கும்.

ஹைதராபாத்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் என்னை ஊக்குவிக்கும் விதமா ரூ.5 லட்சம் மதிப்பிலான கார்பன் பைபர் வகையிலான  இந்தக் காலை எனக்கு இலவசமா கொடுத்தாங்க. இப்போ என்னால 100 மீட்டரை 13.5 வினாடிகளில் ஓட முடியும். மாவட்ட அளவில் பல பரிசுகளும் வாங்கிருக்கேன். இப்போதைய உடல்நிலையில் எலக்ட்ரிக்கல் வேலை சாத்தியமே இல்லைன்னு மொபைல் பழுது நீக்கும் பயிற்சி படிச்சேன். இப்போ நாகர்கோவிலில் சொந்தமா செல்போன் சேல்ஸ், சர்வீஸ் மையம் வைச்சுருக்கேன்” என்று பெருமையுடன் கூறுகிறார் விக்னேஷ்வர சுப்பையா.

சரி, திருமணம் நடந்த கதையைச் சொல்லவே இல்லையே என்று கேட்டவுடன் அதையும் பகிர்ந்துகொண்டார். “ஒரு திருமண வீட்டுலதான் முதன்முதலா ஸ்ரீதேவிய சந்திச்சேன். கால் இல்லைன்னாலும், தன்னம்பிக்கை நிறைந்த மனுஷன்னு என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சாங்க. அவுங்க வீட்டுலயும் என்னை மகன்போல ஏத்துக்கிட்டாங்க.  இப்போ எனக்கு இரண்டு குழந்தைங்க இருக்காங்க.

இப்போ இவுங்கதான் என் உலகம். என்னால் புல்லட்கூட ஓட்ட முடியும். என்னைப் பொறுத்தவரை விருதும் கோப்பையும் முக்கியம் அல்ல. விபத்தால் ஒரு காலை இழந்த பின்பும், நான்  இயல்பாக இருப்பதும், தொடர்ச்சியாய் இயங்குவதும் என்னைப் போல் பலருக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்!” என்று சொல்லியவாறே குடும்பத்தை ஏற்றிக்கொண்டு புல்லட்டைக் கிளப்புகிறார் விக்னேஷ்வர சுப்பையா.

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

 

30 மொழிகள் தெரிந்த ஆட்டிசம் இளைஞர்

ஹைதராபாத்தை சேர்ந்த வருண் ஆட்டிசம் குறைபாடு உடையவர் என்பது தெரியவந்தபோது அவருக்கு வயது மூன்று. ஆனால், கர்நாடக இசையையும், 30 மொழிகளையும் கற்றுக்கொள்ள ஆட்டிசம் அவருக்கு ஒரு தடையாக இல்லை.

Link to comment
Share on other sites

சூர்யாவின் நெடுநாள் ஆசை; சூர்யாவின் முதல் சம்பளம்..! - #HBDSuriya

 

இன்று தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடும் சூர்யாவைப் பற்றி, சில சுவாரஸ்யமான தகவல்கள்.

சூர்யாவின் நெடுநாள் ஆசை; சூர்யாவின் முதல் சம்பளம்..! - #HBDSuriya
 

`நேருக்கு நேர்’ படத்தின் மூலம் அறிமுகமாகி இந்த வருடம் ரிலீஸான `தானா சேர்ந்த கூட்டம்’ படம் வரைக்கும், பல வித்தியாசமான படங்கள்; கெட்டப்கள் என மக்கள் மனதில் இடம் பிடித்த சூர்யாவுக்கு, இன்று 44வது பிறந்தநாள். அவரைப் பற்றி, சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...

கமல்தான் சூர்யாவுக்கு குரு.`தேவர் மகன்' படம் வந்த சமயத்தில் அதில் வரும் கமலைப் போன்றே பன்க் தலையோடு வலம் வந்தார். `கஜினி’ பட வெற்றியின் போது, `ஒரு அண்ணனோட இடத்திலிருந்து சந்தோசப்படறேன்’ என்று கமல் சொன்னது, அவருக்குத் தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத மற்றொரு நிகழ்வு.

சூர்யாவோட பர்சனல் அட்வைஸ் என்னன்னா, `தயவு செஞ்சு யாரும் சிக்ஸ் பேக் வைக்காதீங்க’ என்பதுதான்.

 

 

தன்னோட வாழ்நாள் மந்திரமாக சூர்யா கடைப்பிடிப்பது, `இதுவும் கடந்து போகும்’ என்பதுதான். தன்னுடைய அப்பா சொன்ன இதை வேதவாக்காக இன்று வரை பின்பற்றி வருகிறார்.

சூர்யாவோட வாழ்க்கையில மிக முக்கியமான நாள், `அவரோட கல்யாண நாள்’. அப்போதைய முதல்வர் கலைஞரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவும் கலந்துகொண்டனர். முன்னாள் மற்றும் இந்நாள் முதல்வர்கள் கலந்துகொண்ட  அபூர்வமான நிகழ்ச்சிகளில் என்னுடைய திருமணமும் ஒன்று என்று இன்றளவும் தன்னுடைய நண்பர்களிடையே சிலாகித்துக் கூறுவார்.

 
 

 

சூர்யா

சிவகுமாரும், சூர்யாவும் மலேசியாவுக்கு விமானத்தில் சென்றனர். அப்போது, `ஏன் இவ்வளவு கம்மியாகத் தண்ணீர் தருகிறார்கள்’ என அப்பாவிடம் கேட்க, விமானப் பணிப்பெண்ணை அழைத்து 2 கிளாஸ் எடுத்து வரச் சொல்லி, சூர்யாவை `ஒரு கிளாஸ் எடுத்துக் குடி’ என்றார். சிறு துளி நாக்கில் பட்டதும், `என்னது இது? இப்படிக் கசக்கிறது?’ என்று கேட்க, `இதுதான் வோட்கா. நம்ம ஆளுங்க சந்தோசம் வந்தாலும் துக்கம் வந்தாலும் இதுலதான் மூழ்கி அழிஞ்சு போயிடுறாங்க' என்றார். அப்போதிலிருந்து இப்போ வரை மது, சிகரெட் போன்ற எந்தக் கெட்ட பழக்கமும் சூர்யாவுக்கு இல்லை.

 

 

பி.காம் முடித்த பிறகு கார்மென்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.,அங்கு வேலை செய்த தியாகு என்பவர், `முதலில் சரவணன் என்ற அடையாளத்தை உருவாக்கு. பணம் சம்பாதிக்கும் முன் நல்ல பெயரைச் சம்பாதிப்பவனே சிறந்த பிசினஸ்மேன்’ என்று அவரது தோளைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.

கார்மென்ஸில் தான் வாங்கிய முதல் சம்பளமான 1,200 ரூபாயில், ஆரஞ்சு நிறப் புடவையைத் தன் தாய் லட்சுமிக்கு வாங்கிக் கொடுத்தார்.

`காக்க காக்க’ படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆன சமயம், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனிடமிருந்து ஒரு கால் வந்தது. `சூர்யா சத்யம், தேவி, உதயம்னு எல்லா தியேட்டர்களுக்கும் ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க’ என்றார். `காலைக்காட்சி 11 மணிக்குத் தானே... இப்போவே போகணுமா’ என சூர்யா கேட்க, `முதல்ல கிளம்பிப் போய் பாருங்க’னு கெளதம் சொல்ல, காலை ஐந்து மணியிலிருந்து டிக்கெட் வாங்குவதற்கு ஏராளமானவர்கள் வரிசையில் நிற்பதைப் பார்த்த சூர்யாவுக்கு ஆச்சர்யம். அதில் ஒருவர், `முதல் ஷோ பாக்கணும்னு ராத்திரியெல்லாம் தூங்கவே இல்லை’ என்று கூற சூர்யா நெகிழ்ந்து போனார்.

நடிகர் ஜெட்லீ ஆரம்பித்த `தி ஒன்’ ஃபவுண்டேஷன் மாதிரி, ஆரம்பக் கல்வியிலிருந்து இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது வரை `அகரம் ஃபவுண்டேஷன்' எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதே சூர்யாவின் நெடுநாள் ஆசை.

சூர்யா

தந்தை சிவகுமார் இலக்கியத்தில் வரும் 100 மலர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு சூர்யாவிடம் கொடுத்து, இதனை மனப்பாடம் செய்து விட்டால், உன் மூளை கொஞ்சம் வலுப்பெறும் என்றார். பின்னர் சில நாள்கள் கழித்து 100 மலர்களின் பெயர்களை கட கடவென்று கூற, இதை பார்த்த இயக்குநர் வசந்த் `பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் அதை ஒரு காட்சியாக வைத்தார்.

கார்மென்ஸில் வேலை செஞ்சிட்டு இருந்தப்போ,சொந்தமா பேக்டரி ஆரம்பிக்கணும்கிறதுதான் சூர்யாவோட ஆசையா இருந்துச்சு. அதுக்காக வங்கியில லோன் வாங்கலாம்னு முடிவு எடுத்தப்போ, அது குடும்பத்தைப் பாதிக்குமோன்னு ஒரு கவலையும் சூர்யாவுக்கு இருந்துச்சு. அப்போதுதான் இயக்குநர் மணிரத்னத்திடமிருந்து சூர்யாவுக்கு நடிக்க அழைப்பு வந்தது. அதுதான் வசந்த் இயக்கிய `நேருக்கு நேர்’.

வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் சோர்வுகளை மறக்க, எப்போதும் `பாரதியார் கவிதை’களை படிப்பது இவரின் வழக்கம்.

சூர்யாவுக்கு ரொம்ப பிடித்த மனிதர்கள் இரண்டு பேர், ஏ. ஆர்.ரகுமான், தோனி. `பல வெற்றிகளை கொடுத்தும், இன்னும் எப்படி இவ்வளவு அடக்கமாக இருக்க முடியும் என்பது இவர்களிடத்தில்தான் கற்றுக்கொண்டேன்’ என்று சூர்யா பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

`உங்க இயக்கத்துல ஒரு படம் நடிக்கணும் சார்’ என்று இவர் பாலாவிடம் கேட்க, தான் அடுத்து இயக்கிய `நந்தா’வில் நடிக்க வைத்தார். இவருக்குத் தனிப்பட்ட முறையிலும் சரி, திரையுலக வாழ்விலும் சரி மிக முக்கியத் திருப்பு முனையாக அமைந்தது `நந்தா’.

சூர்யா

2006 செப்டம்பர் 11 ம் தேதி சூர்யா - ஜோதிகா திருமணம் நடைபெற்றது. இதற்கு 3 நாள்களுக்கு முன்புதான் இவர்கள் கணவன் - மனைவியாக நடித்த `ஜில்லுன்னு ஒரு காதல்’ ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் ஏற்கெனவே சரவணன் என்ற நடிகர் இருந்ததால், இயக்குநர் மணிரத்னம் தனக்கு மிகவும் பிடித்த `சூர்யா' என்ற பெயரை இவருக்கு வைத்தார்.

தனது அப்பா சிவகுமார் திரைப்பட நடிகராக இருந்தாலும்,சிறு வயதில் எந்தவொரு படப்பிடிப்புக்கும் செல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரானியப் படங்களின் தீவிர காதலரான இவர், முடிந்தவரை எல்லாப் படங்களையும் மிஸ் செய்யாமல் பார்த்துவிடுவார்.

சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான `2 டி' என்பதன் விளக்கம் தன்னுடைய  குழந்தைகளின் பெயர்களான தியா மற்றும் தேவ் என்பதன் சுருக்கமே.

https://cinema.vikatan.com

Link to comment
Share on other sites

‘பூமிக்கான இழப்பு’
 

image_2dc2b88ea9.jpgபலரும் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்யாமல் இருப்பதால்தான், தங்களை உணராமல் இருக்கிறார்கள். அத்துடன், ‘நான்தான் மேலானவன்’ என்ற தன்முனைப்புடனும் காலம் முழுவதும் தவறான எண்ணங்களுடனும் வாழ்ந்து தீர்க்கின்றனர். 

தனது உண்மையான திறன்களை உணர்ந்து, தன்னைத்தான் செதுக்கும் மகா வல்லமையைச் சுயபரிசோதனை மூலம் பெற்றுவிடுகின்றான். களிம்பால் பூசப்பட்ட உலோகம், தன் சுய ஒளியைக் காணாமல், கண்டுகொள்ள விரும்பாத நிலைபோல் வாழ்வது துரதிர்ஷ்டமானது. 

இன்று, மிகவும் திறமையானவர்கள், தங்களைப் பற்றியே அறியாமல், பிறருக்கு தங்களது திறமைகளை வழங்காமல் இருப்பது, பூமிக்கான இழப்புத்தான். 

போலிகளைக் கோலோச்ச அனுமதிக்கும் உலகம், நல்லவர்களையும் வல்லவர்களையும் வெளிக்கொணர ஏன் மறுக்கின்றது?  

திறமைசாலிகள் தயங்காமல் துணிச்சலுடன் உலகின் முன் நிமிர்ந்து, கர்வத்துடன் நிற்பார்களாக. வாழும் பூமிக்கு வழங்கும் சேவைகளைப் பயமின்றி ஆற்றுவீர்களாக. இது உங்கள் வீடு; வாழும் தாய் நாடு. உங்களை உணருங்கள். 

 

Link to comment
Share on other sites

நிலவுக்கு முதன்முதலாக சென்ற அப்பல்லோ 11- என்ற விண்கலம் பத்திரமாக பூமிக்கு திரும்பிய நாள்: 24-7-1969

 

 

நிலவுக்கு முதன்முதலாக சென்ற அப்பல்லோ 11- என்ற விண்கலம் பத்திரமாக பூமிக்கு திரும்பிய நாள்: 24-7-1969
 
1969-ம் ஆண்டு ஜுலை 16-ந் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் காலின்ஸ் ஆகியோரை ஏற்றிக் கொண்டு சந்திரனை நோக்கி விண்ணில் பாய்ந்த அப்பல்லோ 11 விண்கலம் ஜூலை 20-ந் தேதி சந்திரனில் பத்திரமாக தரையிறங்கியது. சந்திரனில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தவர் என்ற பெருமை நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு கிடைத்தது.

பின்னர் ஜுலை 24-ந் தேதி இந்த விண்கலம் பத்திரமாக பசுபிக் கடலில் பத்திரமாக இறங்கியது. திரும்பிய வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

 

சிகாகோவில் பயணிகள் கப்பல் மூழ்கி 845 பேர் பலியான நாள் - ஜுலை 24- 1915

 
அ-அ+

சிகாகோவில் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 845 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #

 
 
 
 
சிகாகோவில் பயணிகள் கப்பல் மூழ்கி 845 பேர் பலியான நாள் - ஜுலை 24- 1915
 
1915-ம் ஆண்டு அமெரிக்காவில் ஈஸ்ட்லாண்ட் என்ற பயணிகள் கப்பல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணம் மேற்கொண்டது. இந்த கப்பல் சிகாகோ அருகே மூழ்கியதில் 845 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இதே தேதியில் நடைபெற்ற பிற நிகழ்வுகள்....

• 1924 - பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.

• 1931 - பென்சில்வேனியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 48 பேர் கொல்லப்பட்டனர்.

• 1977 - லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே நடைபெற்ற 4-நாள் போர் முடிவுக்கு வந்தது.

• 1982 - ஜப்பானில், நாகசாகியில் பெரும் வெள்ளம், மற்றும் மண்சரிவினால் 299 பேர் கொல்லப்பட்டனர். 

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

சுரேஷ் ரெய்னா உதவியால்தான் என் மனைவி உயிருடன் உள்ளார்..! இங்கிலாந்து பேருந்து ஓட்டுநர் உருக்கம்

 
 

ரெய்னாவின் உதவியால்தான் என் மனைவி உயிருடன் இருக்கிறார் என்று இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பேருந்து ஓட்டுநராக இருக்கும் ஜெஃப் குட்வின் நெகிழ்ந்திருக்கிறார். 

சுரேஷ் ரெய்னா

Photo Courtesy: Twitter/BCCI

 

 

இங்கிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணி எப்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும், இந்திய அணிக்காக ஏற்பாடு செய்யப்படும் பேருந்தின் ஓட்டுநராக ஜெஃப் குட்வின் என்பவர்தான் இருப்பார். அவரிடம் பி.சி.சி.ஐ பேட்டி எடுத்திருந்தது. அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, 'இந்திய அணியை 1999-ம் ஆண்டிலிருந்து எனக்குத் தெரியும். அப்போதிலிருந்து இப்போதுவரை இந்திய அணி, எப்போது இங்கிலாந்து வந்தாலும், நான்தான் பேருந்து ஓட்டுநராக இருப்பேன். நான் பார்த்த கிரிக்கெட் அணி வீரர்களிலேயே, இந்திய அணி வீரர்கள்தான் மிகவும் ஒழுக்கமானவர்கள்.

 

 

உலகக் கோப்பை போட்டியின்போது பல்வேறு அணிகளுக்காக நான் பேருந்து ஓட்டியுள்ளேன். ஆனால், இந்திய அணி வீரர்கள்போல ஒழுக்கமானவர்களைப் பார்த்ததில்லை. போட்டி முடிந்த அடுத்த சில மணி நேரத்தில் இந்திய வீரர்கள் பேருந்துக்கு வந்துவிடுவார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள், இரவு முழுவதும் மது அருந்திவிட்டு தாமதமாகத்தான் பேருந்துக்கு வருவார்கள். இந்திய அணியின் ஒழுக்கமான பழக்கம்தான், கிரிக்கெட்டை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும். என் மனைவிக்கு புற்றுநோய் இருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்க என்னிடம் போதுமான பணம் இல்லை. இதுகுறித்து இங்கிலாந்து வந்திருந்த சுரேஷ் ரெய்னாவிடம் தெரிவித்தேன். அவர், அவருடைய ஆடையை லீட்ஸ் நகரில் ஏலம் விட்டு, அதில் கிடைத்த பணம் முழுவதையும் என் மனைவியின் சிகிச்சைக்காக அளித்தார். அதனால், இன்று என் மனைவி உடல்நலம் பெற்று மகிழ்ச்சியாக உள்ளார். என் மனைவி உயிருடன் இருக்க, சுரேஷ் ரெய்னா செய்த உதவிதான் காரணம்'’ என்று கூறி நெகிழ்ந்திருக்கிறார்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஆபத்தான நிலையில் இப்படி ஒரு புகைப்படம் தேவையா…?

 
 

பிரபல புகைப்படப்பிடிப்பாளரும் மற்றும் பிரபல மொடல் அழகியும் நீருக்குள்ளே முதலையுடன் ஃபோட்டோ ஷுட் எடுத்த காணொளி வைரலாகி வருகின்றது.

kkkk.jpg

மெக்சிகோவில் எடுத்த இந்த ஃபோட்டோ ஷுட் பிரபல புகைப்படப்பிடிப்பாளர் Ken Kiefer அவரது மனைவி Kimber மற்றும் பிரபல மொடல் அழகி Melodie Trevino உடன் இணைந்து இந்த பயகரமான ஃபோட்டோ ஷுட்டை செய்துள்ளனர்.

ko1.jpg

ஒரு மனிதனை முழுமையாக விழுங்கக்கூடிய மிக விசாலமான முதலையுடன் இப்படியான ஒரு ஃபோட்டோ ஷுட் செய்வது இலகுவான காரியமல்ல. இது ஒரு சாதனையாகவும் மட்டுமல்லாமல் மிக ஆபத்தானதுமாகும்.

 

 

ko2.jpg

ko3.jpg

ko4.jpg

ko5.jpg

ko7.jpg

ko55.jpg

 

http://metronews.lk

Link to comment
Share on other sites

தாய்லாந்து குகை மீட்பு: நாயகர்களுக்கு கலை மரியாதை

தாய்லாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மலைப்பாங்கான சியாங் ராய் மாகாணத்தின் தாங் லுயாங் குகைக்குள் சிக்கிக்கொண்ட கால்பந்து அணியை சேர்ந்த 12 சிறார்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களை மீட்ட கதாநாயகர்களை கௌரவிக்கும் விதமாக மிக பெரிய சுவரோவியம் வரைந்து மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை

 

 

தாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை

 

 

இந்த கலை வேலைப்பாடு உள்ளூர் ஓவியர்கள் குழுவால் வரையப்பட்டுள்ளது. "காட்டுப்பன்றிகள்" கால்பந்து அணியை சேர்ந்த தாய்லாந்து குகையில் சிக்கிக்கொண்டோரை மீட்கும் பணியின்போது உயிரிழந்த தாய்லாந்து கடற்படையின் முன்னாள் அதிகாரி சமான் குனானுக்கு இந்த சுவரோவியங்களில் மிக முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை

 

வெற்றிகரமாக முடிந்த மீட்பு நடவடிக்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கண்காட்சியின் ஒரு பகுதியாக தாய்லாந்தின் வட பகுதியிலுள்ள தனியார் கலைக்கூடம் ஒன்றான 'ஆர்ட் பிரிட்ஜில்' இந்த சுவரோலியங்கள் காட்சிக்கு திறக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை

 

 

குகையில் சிக்கிய 12 சிறார்கள் மற்றும் அவர்களின் கால்பந்து வீர்ர்களை குறிக்கும் விதமாக ஒரு காட்டு பன்றியும், அதன் குட்டிகள் காலடியில் இருப்பதை போன்று சமான் குனானின் சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை

 

 

கடந்த மாதம் ஜூன் 23ம் தேதி தாம் லுயாங் குகையில் சிக்கிக்கொண்டனர். 9 நாட்கள் கழித்து, ஜூலை 2ம் தேதி 4 கிலோமீட்டருக்கு அப்பால் மீட்புதவி முக்குளிப்போரால் அவர்கள் உயிரோடு இருப்பது கண்டறியப்பட்டது.

தாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை

 

 

தாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை

 

 

கீழ் காணுகின்ற பிரிட்டனை சேர்ந்த முக்குளிப்பவர் ரிக் ஸ்டான்டன் உள்பட, குகையில் சிக்குண்டோரை மீட்பதற்கு மிக முக்கிய பங்காற்றிய கதாநாயகர்களை இந்த சுவரோவியங்கள் சித்தரிக்கின்றன.

தாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை

 

 

ஸ்டான்டன் மற்றும் பிரிட்டனை சேர்ந்த சகா முக்குளிப்பவர் ஜான் வோலாதென் (கீழே) ஆகியோர் 9 நாட்களாக குகையில் சிக்கியிருந்த 12 சிறார்களையும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரையும் முதலில் சென்றடைந்து கண்டுபிடித்தனர்.

கோடு கோடு

"இது முற்றிலும் தெரியாத, முன்னொருபோதும் செல்லாத பகுதியாகும், இதுபோல இதற்கு முன்னால் ஏதுவும் செய்யவில்லை. எனவே, நிச்சயமாக சந்தேகங்கள் இருந்தன" என்று ஸ்டான்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை

 

 

பிரிட்டனுக்கு திரும்புகையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜான் வோலாதென், "அவர்கள் அனைவரும் உயிரோடு இருப்பதை அறிந்து நிம்மதி அடைந்தோம். சிக்கலான நிலைமையை உணர்ந்ததால்தான் அனைவரையும் மீட்க இவ்வளவு காலமாகியது" என்று கூறினார்.

பிரிட்டன் முக்குளிப்பவர் வெர்ன் அன்ஸ்வர்த்தும் சுவரோவியத்தில் சிறப்பிடம் பெறுகிறார்.

கோடு கோடு

குகையின் அருகில் வாழ்ந்த அன்ஸ்வர்த், தாம் லுயாங் குகை வளாகம் பற்றி விரிவாக ஆய்வு செய்திருந்தது மிகவும் நன்மையானதாக அமைந்தது.

தாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை

 

 

சுவரோவியத்தில் வரையப்பட்டுள்ள குகை ஆய்வில் ஈடுபட்டுள்ள பிரிட்டனை சேர்ந்த ராபர்ட் சார்லஸ் ஹார்பரின் உருவம்.

தாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை

 

 

தனிச்சிறப்பு மிக்க தொப்பியோடு இந்த குகை மீட்பு நடவடிக்கையின் தலைவர் சியாங் ராய் மாகாண ஆளுநர் நொரன்பாக் அசோட்டானகாரன்.

தாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை

 

 

இந்த குகையின் எதிர்காலம் பற்றி குறிப்பிடுகையில், "இந்த குகை மீட்பு நடவடிக்கையை வெளிப்படுத்தும் விதமாக, இந்த குகை பகுதி வாழும் அருங்காட்சியகமாக உருவாகும்" என்று நொரன்பாக் அசோட்டானகாரன் தெரிவித்தார்.

"ஊடாடும் தரவுதளம் ஒன்று அமைக்கப்படும். அனைவரையும் கவருகின்ற தாய்லாந்தின் இன்னொரு இடமாக இது மாறும்" என்று அவர் கூறினார்.

தாய்லாந்து குகை மீட்பு: சுவரோவியங்கள் வரைந்து மீட்பு வீரர்களுக்கு மரியாதை

 

https://www.bbc.com

Link to comment
Share on other sites

இதையும் விட்டுவைக்காத டோனி 

 

அதிக வருமான வரி செலுத்தியோர் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி முதலிடத்தில் உள்ளார்.

dhoni.jpg

இவ்வாண்டில் அவர் ரூபா 12.17 கோடியை வருமான வரியாக செலுத்தி பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்தியவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகேந்திர சிங் டோனி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மட்டுமல்லாமல் தற்போது வரை விக்கெட் காப்பளாராக தனது அணிக்காக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சாதனைகளைப் படைத்த மகேந்திர சிங் டோனிக்கு  தற்போது 37 வயதாகின்றது டோனிக்கு வயதான காரணத்தினால் ஓய்வுபெறவுள்ளதாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளநிலையில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், 2017-2018 நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்தியவராக தோனி உள்ளார். 

அவர். 12.17 கோடி ரூபாயை வருமான வரியாக செலுத்தியுள்ளார். அதற்கு முந்தைய ஆண்டு அவர் ரூபா 10.93 கோடி செலுத்தினார். ஆனால், அந்த ஆண்டில் அதிக வரி செலுத்தியோரில் அவர் முதலிடத்தில் இல்லை. கிரிக்கெட் விளையாடுவதற்கான சம்பளத்தைத் தவிர, பல்வேறு விளம்பரங்கள் மூலம் டோனிக்கு வருமானம் கிடைத்து வருகிறது. 

ஏற்கனவே 2013-2014 நிதியாண்டிலும் பீகார், ஜார்க்கண்ட் மண்டலத்தில் அதிக வருமான வரி செலுத்தியோரில் முதலிடத்தில் தோனி இருந்தார். 

இதில் குறிப்பிடத்தக்க வேண்டிய விடயம் அதிக வரி செலுத்துவது என்பதல்ல தன் வருமானத்தை சரியாக கணக்கில் இட்டு வருமான வரியை சரியான முறையில் செலுத்தியமை என்பது மகேந்திர சிங்  டோனிக்கு பெருமைக்குரிய விடயமாகும் 

பல நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என எல்லோரும் உரிய முறையில் வரி செலுத்தாமை உட்பட்ட வழக்கில் சிக்கிக்கொள்ளும் நிலையுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.