நவீனன்

இளமை புதுமை பல்சுவை

Recommended Posts

இறக்கும் தறுவாயில் புகைப்படம்... மக்கள் மனதை உருக்கிய நியூயார்க் சோயி!

 

சோயி, தங்களைப் பார்த்துச் சொன்ன `ஐ லவ் யூ' மற்றும் `நாட் டுடே' என்ற இரண்டு வார்த்தைகளின் ஒலி அலைகளையும் தங்கள் கைகளில் டாட்டூவாகப் பதியவைத்திருக்கிறார்கள் அந்தப் பெற்றோர். இதில் `நாட் டுடே' என்பது மரணத்தைப் பற்றி சோயி சொன்ன வார்த்தை.

இறக்கும் தறுவாயில் புகைப்படம்... மக்கள் மனதை உருக்கிய நியூயார்க் சோயி!
 

வள் பெயர் சோயி. ஐந்து வயது தேவதை. தாயின் கரங்கள் அவளைத் தழுவியபடி இருக்க, தந்தையின் மடியில் படுத்தபடி தன் இறுதிப் பயணத்தை நோக்கி மெள்ள மெள்ள நகர்ந்துகொண்டிருக்கிறாள். பின்னணியில் `ஹாரி பாட்டர்' படம் ஓடிக்கொண்டிருக்கிறது. சோயி பெற்றோரின் கன்னத்துத் தசைகள் தாங்கமுடியாத துக்கத்தினால் துடித்துக்கொண்டே இருக்கின்றன. கல்லும் கரைந்து உடையும் இந்தக் காட்சியை, அருகே நின்றபடி நர்ஸ் ஒருவர் வழியும் தன் கண்ணீருடன் சேர்த்து படம் பிடித்துக்கொண்டிருக்கிறார்.

தேவதை

சோயி, நியூயார்க்கில் பிறந்தவள். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள், நன்றாக விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, தடுக்கிக் கீழே விழுந்தாள். `அச்சச்சோ... குழந்தைக்கு எலும்பு உடைந்திருக்குமோ' எனப் பதறிப்போய் தூக்கினார் அம்மா கேஸி. அப்படி எதுவும் நடக்கவில்லை. குழந்தை நார்மலாகவே இருந்தாள். ஆனால், ஒரு வாரம் கழித்து ஒரு கையில் மட்டும் எந்த அசைவும் இல்லை. பயந்துபோய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போதுதான், சோயிக்கு மிக ஆபத்தான மூளைப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அது சரிசெய்ய முடியாத புற்றுநோய், பிழைக்க ஒரு சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு, அதற்கும் எக்கச்சக்க செலவாகும் என்பது சோயி பெற்றோரின் தலையில் இடியாக இறங்கியது.

 

 

மகளின் மருத்துவச் செலவுக்காக `Zoey's fight' என்ற ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்தார்கள் சோயியின் அம்மா கேஸியும், அப்பா பென்னும். அதில், சோயி நிலையைப் பதிவிட்டு, உதவுமாறு கேட்டார்கள். கூடவே, தங்கள் மகளின் தினசரி நடவடிக்கைகளையும் பதிவிட ஆரம்பித்தார்கள். 6,000 பேர் இந்தப் பக்கத்தை ஃபாலோ செய்ய ஆரம்பித்தார்கள். சோயியைக் காப்பாற்ற மருத்துவர்களும் பொதுமக்களும் ஒன்று சேர்ந்தார்கள். பணம் குவிகிறது. சிகிச்சை ஆரம்பிக்கிறது. இதற்கிடையில், மகள் சோயி பற்றி அம்மா கேஸி சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்.

 

 

சோயி அம்மாவுடன்

``அவளுக்குப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். ஒரு கிறிஸ்துமஸ் நள்ளிரவில் அவ்வளவு பெரிய சர்ச்சில் நாங்கள் எல்லாரும் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தோம். திடீரென்று எழுந்து நின்று அவளுடைய மழலைக் குரலில் `டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்' எனப் பாட ஆரம்பித்தாள்'' என்கிறார். 

அப்பா பென், ``மூளையில் புற்றுநோய் என்று தெரிவதற்கு முன்புவரை, தாத்தா பாட்டியின் பண்ணை வீடு, அங்கே மாடுகளுக்குத் தீவனம் வைப்பது என இருப்பாள் சோயி. அவளுக்கு எங்களுடன் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். `வளர்ந்த பிறகு மேக்கப் கேர்ள் ஆவேன்' என அடிக்கடி சொல்வாள்'' என்று நெகிழ்கிறார்.

தன் மகள் வாழ்வதற்காக நடத்திய போராட்டத்தைச் சொல்லும்போது உடைந்தே போகிறார். ``இரண்டு வருடப் போராட்டம். ஐந்து தடவை கீமோதெரபி சிகிச்சை. குழந்தைகளால் மூன்று தடவைக்கு மேல் இந்தச் சிகிச்சையைத் தாங்கமுடியாது என்கின்ற நிலை. ஆனால், அதை சோயி ஐந்து தடவை தாங்கினால் என்றால், வாழ்க்கையின் மீது அவளுக்கு இருந்த ஆசையே காரணம். ஆனால், எதுவுமே என் மகளைக் காப்பாற்றவில்லை. அவளால் நடக்க முடியவில்லை; பேச்சு திக்க ஆரம்பித்தது; உணவை விழுங்க முடியவில்லை. எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தவளின் கண்கள் மெள்ள மெள்ள பார்வையையும் இழக்க ஆரம்பித்தன. ஜூன் 27-ம் தேதி மூச்சுவிடவும் கஷ்டப்பட ஆரம்பித்தாள். இனிமேல் செய்வதற்கு எதுவுமில்லை என மருத்துவம் என் மகளை கைவிட்டு விட்டது'' என்கிறார் பென்.

 

 

சோயி, தங்களைப் பார்த்துச் சொன்ன `ஐ லவ் யூ' மற்றும் `நாட் டுடே' என்ற இரண்டு வார்த்தைகளின் ஒலி அலைகளையும் தங்கள் கைகளில் டாட்டூவாகப் பதியவைத்திருக்கிறார்கள் அந்தப் பெற்றோர். இதில் `நாட் டுடே' என்பது மரணத்தைப் பற்றி சோயி சொன்ன வார்த்தை. அந்தச் சின்னஞ்சிறு உயிர், மரணத்தை இன்றைக்கு வேண்டாம் எனத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்திருக்கிறது. கடைசியாக, நோயிடம் தோற்று, தாயின் கரங்கள் தன்னைத் தழுவியபடி இருக்க, தந்தையின் மடியில் படுத்தபடி தன் இறுதிப் பயணத்தை ஆரம்பிக்கிறாள். பின்னணியில் அவளுக்குப் பிடித்த, ஆனால் அவளால் பார்க்கவோ கேட்கவோ முடியாத `ஹாரி பாட்டர்' படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தக் கண்ணீர்த் தருணத்தை, அவளுக்காக இரண்டு வருடங்களாகப் பண உதவி செய்துவந்த முகநூல் நண்பர்கள் பார்ப்பதற்காக, நர்ஸ் ஒருவர் படம் பிடித்துக்கொண்டிருக்கிறார். 

ஐ லவ் யூ, நாட் டுடே ஒலியலைகள்

Photos Courtesy: facebook.com/ZoeysFightDIPG

சோயியின் மரணச் செய்தி அறிந்து, அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்ப்பதற்காக உதவி செய்த அத்தனை பேரும் வருகிறார்கள். ஆனால், யாரும் கறுப்பு உடை அணியவே இல்லை. சோயிக்கு மரணமும் பிடிக்காது. அதன் அடையாளமான கறுப்பு நிறமும் பிடிக்காது. துக்கம் கேட்க வந்த அனைவருமே வண்ண வண்ண உடைகளில் கண்ணீரை அடக்கியபடி, அந்தச் சின்ன தேவதையைத் தரிசித்துவிட்டு செல்கிறார்கள். 

தேவதைகள் மண்ணில் வாழ்வது கொஞ்ச நாள்களே என்றாலும், தங்களுடைய சின்னஞ்சிறு கால் தடங்களை மனிதர்களின் மனமெங்கும் அழுத்தமாகப் பதியவைத்து விடை பெறுகிறார்கள்.

https://www.vikatan.com/

Share this post


Link to post
Share on other sites

 

உலகை மாற்றிய நான்கு கண்டுபிடிப்புகள்

உலக வரலாற்றில் அதிகம் தாக்கம் செலுத்திய நான்கு கண்டுபிடிப்புகளின் பட்டியல் இதோ.

Share this post


Link to post
Share on other sites

இயற்கையைத் தேடும் கண்கள் : நீலகண்டனுக்குச் சேதி செல்லும் நீல்காந்த்!

 

 
07chnvkr2jpg

Indian Roller with prey

 

 

இது பனங்காடை. இந்தியா முழுவதும் காணப்படும் பறவை. பார்க்கப் பார்க்க அலுக்காத பறவை இது. காடுகள், புல்வெளிகள், வயல்வெளிகள் ஆகியவற்றில் தென்படும் இந்தப் பறவை, நகரங்களில் மின்சாரக் கம்பிகளின் மீது அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம்.

 

‘எங்கே அந்தப் பறவை?’ என்று பறவைநோக்கர்கள் ஒருபோதும் அங்கே இங்கே என்று அலையத் தேவையில்லை. அவர்களின் கண்களிலிருந்து இந்தப் பறவை ஒருபோதும் தப்பாது. அதற்குக் காரணம் அதன் நிறம். ‘எலெக்ட்ரிக்’ நீல நிறம் கொண்ட இந்தப் பறவை, தன் இறகுகளை விரித்துப் பறக்கும்போது வானில் சிறு வர்ணஜாலமே நடக்கும்.

 

07chnvkr1jpg

Indian Roller

விவசாயிகளின் நண்பன்

இந்தப் பறவைகளுக்கு நான் வைத்திருக்கும் பெயர் ‘டோஸ்ட் மாஸ்டர்’. ஏனென்றால், இவை பிடிக்கும் சின்னச் சின்னப் பூச்சிகளை, உடனே சாப்பிடாமல், மேலே ‘டாஸ்’ செய்து வீசி, அவை கீழே வரும்போது ‘டக்’கென்று பிடித்து உண்ணும். அந்த அழகே தனிதான்.

நாட்டின் பல இடங்களில், இதை ‘விவசாயிகளின் நண்பன்’ என்று அழைக்கிறார்கள். பயிர்களைச் சேதப்படுத்தும் சின்னச் சின்னப் பூச்சிகள், சிறு தவளைகள் ஆகியவற்றைப் பிடித்து உண்டு, பூச்சிகளை இவை கட்டுப்படுத்துகின்றன.

 

சுத்தி சுத்தி வந்தீக…

இந்தப் பறவைக்கு ஏன் ‘இந்தியன் ரோலர்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு சுவாரசியமான காரணம் உண்டு. இனப்பெருக்கக் காலத்தில் தன் இணையை ஈர்ப்பதற்காக இவை மேலே இருந்து சுழன்று சுழன்று பறந்து கீழே வந்து, மீண்டும் மேலே ஏறிப் பறக்கும். ‘சுத்தி சுத்தி வந்தீக’ என்பதுபோல் இப்படிச் சுழன்று வருவதாலும் இந்தியாவில் இது அதிக எண்ணிக்கையில் தென்படுவதாலும் இதற்கு ‘இந்தியன் ரோலர்’ என்று ஆங்கிலத்தில் பெயர் வந்தது.

தான் பிடித்த இரையைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் நேரத்தில் இந்தப் பறவையை ஒளிப்படம் எடுத்தேன். அந்த இரை ஏதாவது சிறு பூச்சியாகவோ தவளையாகவோ இருக்கும் என்று நினைத்து விட்டுவிட்டேன். வீடு திரும்பிய பிறகு, கணினியில் படங்களை உள்ளிட்டுப் பார்த்தபோதுதான் தெரிந்தது. அந்த இரை… பூச்சியோ தவளையோ அல்ல. அது ஓர் ஆமைக் குட்டி! படத்தை உற்றுப் பாருங்கள்… ஆமை தெரியும்.

 

07chnvkr3JPG

Indian Roller

‘பறக்கும்’ ஆசைகள்

விளக்கு வெளிச்சத்துக்கு வந்து விழும் பூச்சிகளைக்கூட இது உண்ணும் என்பதால், சாலையோரங்களில் அடிக்கடி பறந்துகொண்டிருக்கும். அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களில் மோதி இவை அதிக அளவில் இறக்கின்றன.

தசரா விழாவுக்குப் பிறகு இந்தப் பறவை பறப்பதைக் கண்டால், நம்முடைய விருப்பங்களைக் கைலாயத்தில் இருக்கும் சிவனிடம் அது சொல்லி நிறைவேற்றி வைக்கும் எனும் ஒரு நம்பிக்கை வட மாநில அரசர்களிடம் முன்பு இருந்தது. அந்த நம்பிக்கை இன்றும் தொடர்வதால், இந்தப் பறவைகளைப் பிடித்து, தசரா நாட்களில் விற்பது தனி வியாபாரமாகிவிட்டது. இதற்குத் தடை விதிக்கப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் விற்பனை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒடிசா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் ‘மாநிலப் பறவை’யாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்தப் பறவைக்கு வட மாநிலங்களில் என்ன பெயர் தெரியுமா..? ரஜினிகாந்த், விஜயகாந்த்போல, நீல்காந்த்!

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

http://tamil.thehindu.com

Share this post


Link to post
Share on other sites
‘வார்த்தைக்கு வலிமையுண்டு என்பதை உணர்க’
 

image_af5e367a7e.jpgபொய் பேசக்கூடாது; பொய்யாகச் சிரிக்கக்கூடாது; பொய்யாக நடித்தல் ஆகாது; பொய்யாக அழவும் கூடாது. இத்தகைய துர்க்குணங்களுடன் வாழும் ஒருவர், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதுடன் உலகத்துக்கும் ஊறு விளைவிக்கும் மகாபாவியும் ஆகிறான். 

பொய்மையுடன் புரள்வது இழிவு; வாய்மையுடன் வாழ்வதே சிறப்பு. நல்லவைகளைப் பிடிக்காதவர் நலிவடைவார். கண்ணியத்தைக் கடைப்பிடிப்போர், எண்ணியவை எல்லாம் கிடைக்கப் பெறுவர். 

துன்பமே காணாத வாழ்வைப் பெற, சிறப்பான எண்ணங்களை மட்டுமே நோக்கினால் போதும். 

பூக்களைப் போன்ற நெஞ்சங்களால் மட்டுமே, உலகைச் சிருஷ்டிக்க முடியும். அழகிய அன்பான சொற்களால், புவனத்தைச் சோதனை செய்க. வார்த்தைக்கு வலிமையுண்டு என்பதை உணர்க. 

கனிவுடன் சகலரையும் அரவணைப்பது, பேதமற வாழுகின்ற முறையைக் கற்றுத்தருகின்றது. 

வாழும் வாழ்க்கை, பரந்த உலகை உங்களுக்கே சொந்தமாக்குகின்றது.

Share this post


Link to post
Share on other sites
வரலாற்றில் இன்று : ஜூலை 11
 

image_71e3730f95.jpg1901 : நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.

1903 : செர்பியாவில் அதிகாரிகள் குழு ஒன்று அரசர் மாளிகையைத் தாக்கி, மன்னர் அலெக்சாந்தர் ஒப்ரெனோவிச்சையும், அரசி திராகாவையும் படுகொலை செய்தனர்.

1917 : கிரேக்க இராச்சியத்தின் மன்னராக அலெக்சாந்தர் முடி சூடினார்.

1935 : அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜேர்சி, அல்ப்பைனில் அறிமுகப்படுத்தினார்.

1937 : பெரும் துப்புரவாக்கம் - சோவியத் ஒன்றியத்தில் யோசப் ஸ்டாலினின் உத்தரவுப்படி எட்டு இராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1940 : இரண்டாம் உலகப் போர் - மால்ட்டா மீது முதற்தடவையாக இத்தாலிய விமானங்கள் தாக்குதலை நடத்தின.

1942 : இரண்டாம் உலகப் போர் - அமெரிக்கா சோவியத் ஒன்றியத்துக்கு கடன் - ஒப்பந்தத்தில் நிவாரணம் வழங்க ஒப்புக் கொண்டது.

1955 : பிரான்சில் நடைபெற்ற தானுந்து ஓட்டப் பந்தயம் ஒன்றில் இரண்டு தானுந்துகள் மோதிக் கொண்டதில், 83 பார்வையாளர்கள் உயிரிழந்தனர். 100 பேர் வரை காயமடைந்தனர்.

1956 : கல்லோயா படுகொலைகள் - இலங்கையின் வடக்கே கல்லோயாவில் சிங்களக் குடியேற்றிகள் நடத்திய தாக்குதலில், 150 க்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1963 : தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி, திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.

1968 : உலகத் தமிழ்க் கழகம் தேவநேயப் பாவாணர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் அமைக்கப்பட்டது.

1981 : ஈரானில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,000 வரையில் கொல்லப்பட்டனர்.

1991 : ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டார்.

2002 : அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என, ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார்.

2004 : நாசாவின் காசினி - ஐசென் விண்ணுளவி சனிக்கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது.

2007 : கடும் மழை, வெள்ளம் காரணமாக வங்காள தேசத்தில் சிட்டகொங் நகரில் மண்சரிவு காரணமாக 130 பேர் உயிரிழந்தனர்.

2012 : ஆப்கானித்தானில் இடம்பெற்ற இரண்டு நிலநடுக்கங்கள் அங்கு நிலச்சரிவை ஏற்படுத்தியதில் ஒரு கிராமமே மூழ்கியது. 80 பேர் உயிரிழந்தனர்.

1838 : எம். சி. சித்திலெப்பை, ஈழத்துத் தமிழறிஞர், எழுத்தாளர் பிறந்த தினம்.

http://www.tamilmirror.lk

Share this post


Link to post
Share on other sites

பூமியின் முதல் விலங்கு உலகை அழித்தது போலவே, நாமும் செய்கிறோம்! அது என்ன?

 

பூமியின் முதல் உயிரிக்கும் மனிதனுக்கும் பொதுவாக இருப்பது என்ன? ஒன்று மட்டுமே. இருவருமே புவியை வெப்பமயமாக்கி உள்ளோம். பூமியில் முதன்முதலில் தோன்றிய கடல்வாழ் உயிரினமும்

பூமியின் முதல் விலங்கு உலகை அழித்தது போலவே, நாமும் செய்கிறோம்! அது என்ன?
 

பூமியின் இயற்கையான சுற்றுச்சூழலைப் பேரழிவுக்குள்ளாக்கும் விதத்தில் பல செயல்களைப் புரிந்துகொண்டிருக்கிறோம். 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் தோன்றிய முதல் விலங்கு கூடத் தன் அழிவை அப்படித்தான் தேடிக்கொண்டது. பூமியின் முதல் உயிரிக்கும் மனிதனுக்கும் பொதுவாக இருப்பது என்ன?

ஒன்று மட்டுமே. இருவருமே புவியை வெப்பமயமாக்கி உள்ளோம். பூமியில் முதன்முதலில் தோன்றிய கடல்வாழ் உயிரினமும் புவியை வெப்பமயமாக்கியது. மனிதர்களாகிய நாமும் தற்போது அதையே செய்துகொண்டிருக்கிறோம். 

சுமார் 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடலில் வாழ்ந்துகொண்டிருந்த சிறு உயிரினங்கள் கடல் தரையில் தங்கள் உணவுக்காகத் தோண்டத் தொடங்கின. தோண்டி எடுக்கும் கரிமப் பொருள்களைக் கொரித்துத் தின்று வாழ்ந்த அவற்றுக்கு அது எத்தனை ஆபத்தானது என்பது அப்போது தெரியவில்லை. அவை அப்போது ருசித்துக் கொரித்துக்கொண்டிருந்த கரிமப் பொருள்கள் வெளியிட்டதென்னவோ கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை. தங்களுக்குத் தெரியாமலேயே அவை புவியின் தட்பவெப்பநிலைக்கு விபரீதமான விளைவுகள் ஏற்படுவதற்கான விதைகளை விதைத்துக் கொண்டிருந்தன.

 

 

ஆதியில் தோன்றிய உயிரினங்கள் அளவில் மிகவும் சிறியவை. ஆகவே, அவற்றை மிஞ்சிப் போனால் ஒன்று அல்லது இரண்டு அங்குலம் அளவுக்கே கடல் தரையைத் தோண்ட முடிந்தது. அது ஓரளவுக்கான கரிம வாயுக்களையே வெளியேற்றின. அது விளைவுகளை அவ்வளவு விரைவாக ஏற்படுத்தவில்லை. ஆனால், அவற்றின் பரிணாம வளர்ச்சியின் வாயிலாகப் பெரிய பெரிய கடல்வாழ் உயிரினங்கள் தோன்றின. அவையும் முன்னதைப் போலவே கடல்தரையைத் தோண்டிக் கொரிக்கத் தொடங்கின. இந்த முறை கொஞ்சம் ஆழமாகவே. முதலில் தோன்றிய விலங்குகளிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து வந்த அடுத்த விலங்குகளால் முந்தையதைவிட 10 மடங்கு அதிகமாகத் தோண்டமுடிந்தது. அவ்வளவு ருசித்துச் சாப்பிடும் அளவுக்கு அந்தக் கடல் தரையிலிருந்து அப்படி என்னதான் கிடைத்தது?

 

 

முதலில் தோன்றிய விலங்குகள் புழுக்கள், கணுக்காலிகள் ஆகியவற்றின் அளவிலேயே இருந்தன. அதற்கடுத்ததாகத் தோன்றியவை சற்றே பெரிது. அவற்றால் ஆழமாகவே தோண்ட முடிந்தது.

கடல்

அப்போது கடல் தரை மிகத் தடிமனாகவும், கலைக்கப்படாத பாய்களைப் போன்ற அமைப்பில் வாழ்ந்துகொண்டிருந்த நுண்ணுயிரிகளின் வாழிடமாகவுமே இருந்தது. முதல் கடல்வாழ் விலங்கு தோன்றியபோது அதற்கான உணவாக இந்த நுண்ணுயிரிகளும் அவற்றின் கழிவுகளால் கடலடி மணலில் படிந்துகிடந்து படிவுகளுமே கிடைத்தன. அவற்றையும் அவற்றின் கழிவுகளையும் தோண்டித் தோண்டித் தின்று தீர்த்தன உலகின் முதல் விலங்குகள். தற்போதைய தாவரங்களைப் போல அப்போது ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கரிம வாயுவை வெளியேற்றும் தன்மைகொண்ட தாவரங்கள் முளைக்கவில்லை. ஆகவே, தனக்குக் கீழே இருந்த மணல் தரையில் கழிவுகளோடு படிந்துகொண்டிருந்த கழிவுகளோடு கரிமவாயுவும் படிந்துகொண்டிருந்தது. 

 

 

இப்போதைய மண்புழுக்கள் எப்படி மண்ணைத் தோண்டிக்கொண்டு செல்கிறதோ! அதேபோன்று அப்போது வாழ்ந்த அனைத்து விலங்குகளும் பூமியின் மேற்பரப்பில் செய்தன.

எங்கும் நீக்கமற நிறைந்திருந்த இந்த விலங்குகள் கடல்தரையின் தன்மையையே மாற்றிவிட்டன. அதிகமாகத் தோண்டப்பட்ட கடலடி மணலிலிருந்து வெளியேறிய கரிம வாயுவும், மணல் படிவுகளில் கிடைத்த உணவுகளைச் சாப்பிட்ட விலங்குகள் வெளியேற்றிய கரிம வாயுவும் பூமியின் வளிமண்டலத்தில் கலக்கத் தொடங்கின. தற்போது புதைபடிவ எரிவாயுக்களைப் பயன்படுத்தித் தேவையான ஆற்றலை எடுத்துக்கொண்டு மிச்சமாகும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறோமே! அதையே அன்று அந்த விலங்குகள் செய்யத்தொடங்கின.

விலங்கு

இந்த விலங்குகள் பூமியெங்கும் நிறைந்திருந்ததால் இவற்றின் இத்தகைய செயற்பாடுகள் மோசமான எதிர்வினைகளைப் புவிப்பரப்பெங்கும் ஏற்படுத்தியது. அவை செய்த மேற்கூறிய செயல்கள் பூமியின் உயிர்வளி வாயுவைக் குறைத்தது மட்டுமில்லை. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடை அதிகப்படுத்தி பூமியின் வெப்பதையும் அதிகரித்தது.

இது உலகம் முழுவதும் நடைபெற்றதால், பூமியின் உயிரிவளி வாயுவான ஆக்ஸிஜனின் அளவைவிட கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகமாகியது. விளைவு: புவி வெப்பமயமாதல்.

நிலவியல் சார்ந்த முந்தைய ஆராய்ச்சிகளில் கிடைத்தப் பதிவுகளின் மூலமாகப் பூமியின் முதல் விலங்குகள் தோன்றி 100 மில்லியன் ஆண்டுகள் கழித்து புவியின் தட்பவெப்பநிலை அதீத வெப்பமாகவும், வளிமண்டலத்தில் கரிம வாயுவின் அளவு அபரிமிதமாகியிருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய ஆராய்ச்சியின் மூலமாக அந்தக் கடல்வாழ் விலங்குகள் கடல்தரையிலிருந்த முந்தைய இயற்கையான அமைப்பை மாற்றியதே காரணமென்று தெரியவந்துள்ளது.

இந்த ஆதி விலங்குகளின் அழிவை எடுத்துக்காட்டாக வைத்துக்கொண்டு தற்போது நடைபெறுவதை ஆராய்ந்தால் ஓர் ஒற்றுமை இருப்பது புரியும். அவையும் இயற்கையின் அமைப்பை மாற்றின. நாமும் பூமியின் இயற்கையான அமைப்பை மாற்றிக்கொண்டிருக்கிறோம். அவற்றின் அளவுக்கு ஏற்றவாறும் செயற்பாட்டின் வேகத்துக்குத் தகுந்தவாறும் அழிவு ஏற்படுவதற்கான காலகட்டம் அமைந்தது. அதேபோல், மனித சமுதாயம் இயற்கையை மாற்றியமைத்துக்கொண்டிருக்கும் வேகத்துக்குத் தகுந்தவாறே அதன் அழிவும் அமையும். 

புவிவெப்பமயமாதல்

நாமும் அவற்றைப்போலதான். வெப்பமிகுதியுடைய ஓர் உலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அது கடலில் ஆக்ஸிஜனற்ற நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அது நமக்கும் நல்லதில்லை. நம்மோடு வாழும் மற்ற உயிரினங்களுக்கும் நல்லதில்லை. நம்மோடு அவையும் சேர்ந்துதான் அழியும். ஆனால், அவற்றை மொத்தமாக அழித்த பாவமென்னவோ நம்மைத்தான் சேரும்.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

எக்கனாமி பயணம், `கட்டிப்பிடி' வைத்தியம்... கலக்கும் குரோஷியா அதிபர் கொலிண்டா

 

சமானிய மக்களுடன் பயணித்து அவர்களுடனே போட்டியை ரசித்து உலகக் கோப்பை மைதானத்தில் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார் குரோஷி நாட்டின் பெண் அதிபர்.

எக்கனாமி பயணம், `கட்டிப்பிடி' வைத்தியம்... கலக்கும் குரோஷியா அதிபர் கொலிண்டா
 

குட்டி நாடு குரோஷியா,1998-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. மாஸ்கோவில் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் குரோஷியா மோதுகிறது. கால் இறுதியில் குரோஷிய அணி, தொடரை நடத்தும் ரஷ்ய அணியுடன் மோதியது. சோச்சி நகரில் நடந்த இந்த ஆட்டத்தைக் காண, குரோஷிய அதிபர் கொலிண்டா கிராஃபர் கிரடோவிக் வந்திருந்தார். நாட்டுக்கே அதிபதியானாலும் கொலிண்டா எளிமையான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுபவர். மக்கள் பணத்தில் உல்லாசச் சுற்றுப்பயணங்களை விரும்பாதவர். வி.ஐ.பி கல்ச்சர், கொலிண்டாவுக்குப் பிடிக்காத விஷயங்களில் ஒன்று. 

குரோஷியா நாட்டு அதிபர் கொலிண்டா

உலகக் கோப்பையைக் காண குரோஷிய தலைநகர் ஸக்ரப்பிலிருந்து சோச்சிக்கு தனி விமானத்தில் எல்லாம் கொலிண்டா பறக்கவில்லை. சாமானிய மக்களுடன் சமானியாக அதுவும் `எக்கனாமி க்ளாஸ்' இருக்கையில் அமர்ந்துதான் ரஷ்யாவுக்குப் பயணித்தார். லஸ்கினி அரங்கில் வி.ஐ.பி இருக்கை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், முதல் சில நிமிடம் தன் நாட்டு ரசிகர்களுடன் சாதாரண கேலரியில் அமர்ந்து போட்டியை ரசித்தார் கொலிண்டா. இந்தியப் பிரதமர் மோடி, ட்விட்டரில் வேண்டுமானால் `ஒவ்வோர் இந்தியரும் வி.ஐ.பி-தான்' என்று பதிவிடுவார். உண்மையில் வி.ஐ.பி கல்ச்சரைக் கொண்டாடி அனுபவிப்பார். 

 

 

குரோஷியா அதிபர் கொலிண்டா

மோடிக்கு முற்றிலும் எதிரானவர் கொலிண்டா. சோச்சி மைதானத்தில் தன் நாட்டு ரசிகர்களுடன் அமர்ந்தே போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஃபிஃபா அதிகாரிகள்தான் அவரை வற்புறுத்தி வி.ஐ.பி-கள் அமரும் இடத்துக்கு அழைத்துவந்தனர். ஃபிஃபா தலைவர் இன்ஃபான்டினோ, ரஷ்யப் பிரதமர் டிமித்ரே மெட்வெடவ் ஆகியோருடன் போட்டியை ரசித்தார் கொலிண்டா. ரஷ்யாவுக்கு எதிராக குரோஷியா இரண்டாவது கோலை அடித்ததும் உற்சாகப்பெருக்கில் சிறிய நடனமும் ஆடி அசத்தினார் கொலிண்டா. குரோஷிய அதிபரின் அழகு நிறைந்த இந்தச் சாமானிய முகம், உலக மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதுவரை கொலிண்டா பற்றி அறிந்துகொள்ளதவர்கள்கூட அவரை இணையத்தில் அதிகமாகத் தேடிவருகின்றனர்.

 

குரோஷியா அதிபர் கொலிண்டா

ரஷ்ய அணியை குரோஷியா வீழ்த்தியதும் வீரர்களின் டிரெஸ்ஸிங் அறைக்குச் சென்ற கொலிண்டா ஆடிப் பாடி மகிழ்ந்ததுடன் அனைத்து வீரர்களையும் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் குரோஷிய அதிபரின் `கட்டிப்பிடி' வைத்தியம் பலிக்குமா எனத் தெரியவில்லை. ஆனால், உலகின் கவர்ச்சியான பெண் அதிபர் யார் என்றால், கொலிண்டாவை நோக்கி தாராளமாகக் கைக் காட்டலாம்.

தற்போது 46 வயதான கொலிண்டா, 2015-ம் ஆண்டு குரோஷிய அதிபர் ஆனார். குரோஷியா நாட்டின் முதல் பெண் அதிபரும்கூட. எளிமையான பின்னணியிலிருந்து அரசியலுக்குள் நுழைந்த கொலிண்டா, மிகச்சிறந்த படிப்பாளி. ஹார்வேர்டு பல்கலையில் படித்தவரும்கூட. 2003-ம் ஆண்டு குரோஷிய அமைச்சராகப் பதவியேற்ற கொலிண்டா, படிப்படியாக உயர்ந்தார். கணவரின் பெயர் ஜகோவிக் கிடரோவிக். இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். 

உலகக்கோப்பை கால்பந்து தொடரில், இதுவரை 8 நாடுகளே கோப்பையை வென்றுள்ளன. பிரேசில், அர்ஜென்டினா, இத்தாலி, உருகுவே, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் வரிசையில் குரோஷியா இணையுமா எனத் தெரியவில்லை. ஒருவேளை, உலகக் கோப்பையை வென்ற 9-வது நாடு என்ற பெருமையைக் குரோஷியா பெறலாம். சென்னையில் பாதிதான் இந்த நாட்டு மக்கள்தொகை!

 

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

66 ஆண்டுகளுக்கு பின்னர் நகம் வெட்டிய இந்தியர்

 

thumb_large_sri.jpg

நகம் வளர்ப்பதில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக நகம் வெட்டுகிறார். 

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை சேர்ந்தவர்  88 வயதான ஸ்ரீதர் சில்லால் என்பவர் கடந்த 1952ஆம் ஆண்டுமுதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல், நீளமாக வளர்க்க ஆரம்பித்தார்.

இதன் விளைவாக கடந்த 66 ஆண்டுகளில் அவரது இடது கையில் உள்ள ஐந்து விரல்களிலும் வளர்ச்சி அடைந்துள்ள நகங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது 909.6 சென்றீ மீற்றர்களாகவுள்ளது. இதில் அவரது இடது கை கட்டை விரலில் உள்ள நகத்தின் வளர்ச்சி மட்டும் 197.8 சென்றீ மீற்றராகும்.

உலகிலேயே மிக நீளமான நகத்தை கொண்டவர் என்ற முறையில் கடந்த 2016ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஸ்ரீதர் சில்லால் இடம்பிடித்தார்.

இந்நிலையில், 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஸ்ரீதர் அமெரிக்காவில் இன்று தனது கை நகங்களை வெட்டுகிறார். 

 

 

அமெரிக்காவின் பிரபலமான ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஓர் நொட்’ ( Ripley's Believe It or Not!) என்னும் தொலைக்காட்சி தொடர் உலகில் அதிசயமான செயல்கள் மற்றும் சாதனைகள் புரிந்தவர்களின் பதிவுகளை ஒளிப்பரப்பி வருகிறது.

’நம்பினால் நம்புங்கள்’ என்னும் பொருள்படும் இந்த தொடருக்கான நிகழ்ச்சிகளை தயாரிக்கும் அலுவலகம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஆச்சரியப்பட வைக்கும் அரியப் பொருட்களை சேமித்து  வைக்கும் அருங்காட்சியகமும் உண்டு.

 கடந்த 66 ஆண்டுகளாக பேணிப் பராமரித்து, பாதுகாத்து வளர்த்த நகத்தை இந்த அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக வைத்து அழகுப்பார்க்க விரும்பிய ஸ்ரீதர், சமீபத்தில் இதற்கான அனுமதியை ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் பெற்றார்.

இதையடுத்து, இந்தியாவில் இருந்து விமானம் மூலம் நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார் ஸ்ரீதர் சில்லால்.

http://www.virakesari.lk/

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

 

திமிங்கிலத்தின் குரலை மிமிக்ரி செய்யும் இசைக்குழு

திமிங்கிலங்கள் எழுப்பும் ஒலியை, பிரிட்டனில் உள்ள ஒரு பாடகர் குழுவினர் மிமிக்ரி செய்து உருவாக்குகிறார்கள். இப்படி செய்வதற்கான காரணம் என்ன?

Share this post


Link to post
Share on other sites

மின்மினிப் பூச்சியின் லவ்வுக்கும் அதன் ஒளிக்கும் என்ன தொடர்பு தெரியுமா?

 

உதடுகளில் பட்ட சில துளிகளே அவரை அடுத்த 30 நிமிடங்களுக்குத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. இனி அதை எந்தக் காலத்திலும் வாயில் வைக்கவே மாட்டேனென்று அவர் அன்று முடிவு செய்தார்.

மின்மினிப் பூச்சியின் லவ்வுக்கும் அதன் ஒளிக்கும் என்ன தொடர்பு தெரியுமா?
 

மார்க் பிரென்ஹாம் (Mark Branham) என்பவர் மின்மினிப் பூச்சிகளைத் தனது ஆய்வுக்காகச் சேகரித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் பிடித்த ஒரு பூச்சியைக் குப்பியில் போடவேண்டும். ஒரு கையில் பூச்சி, மற்றொரு கையில் குப்பி. குப்பி மூடியைத் திறக்கவேண்டுமே!

மின்மினிப் பூச்சி

Photo Courtesy: National Geographic

 

 

மின்மினிப் பூச்சியைத் தன் உதடுகளுக்கிடையில் வைத்துக்கவ்விக்கொண்டார். அதை அழுத்திவிடாதவாறு ஜாக்கிரதையாகத்தான் வைத்திருந்தார். இருப்பினும் அந்தப் பூச்சியின் உடலிலிருந்து வெளியான ரசாயனம் அவர் உதடுகளில் பரவியதை அவரால் உணரமுடிந்தது. அதைப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் குப்பியைத் திறந்து பூச்சியைப் பத்திரப்படுத்தினார். அதன்பிறகு சில நிமிடங்களில் அவரது உதடுகள் அரிக்கத் தொடங்கின. சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த அரிப்பைத் தொடர்ந்து உணர்ச்சிகளை இழந்து உதடுகள் மரத்துப்போயின. தொண்டையின் அளவு சுருங்கியதைப் போன்றதோர் உணர்ச்சிக்கு ஆளானார் பிரஹான்.

 

 

உதடுகளில் பட்ட சில துளிகளே அவரை அடுத்த 30 நிமிடங்களுக்குத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. இனி அதை எந்தக் காலத்திலும் வாயில் வைக்கவே மாட்டேனென்று அவர் அன்று முடிவு செய்தார்.

இது நடந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. மின்மினிப் பூச்சிகள் தங்கள் உடலிலிருந்து வெளிப்படுத்தும் ஒளி, வேட்டையாடிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே. அதன்பிறகு நடந்த ஆராய்ச்சிகள் முந்தைய அறிஞர்களின் அந்தக் கூற்றை உறுதி செய்ததோடு மற்றுமோர் அரிய தகவலையும் அளித்துள்ளது. மின்மினிப் பூச்சிகள் இனப்பெருக்கக் காலங்களில் தங்கள் பெண் துணையை ஈர்க்க இது மாதிரியான ஒளியினை அதிகமாக வெளிப்படுத்தும். வெளிப்படுத்தும் ஒளியின் நீளமும் நேரமும் எந்தப் பூச்சிக்கு அதிகமாக உள்ளதோ அதை வைத்தே பெண் பூச்சி தன் துணையைத் தேர்வுசெய்யும். அதிக நேரத்துக்கு நீளும் ஒளி அளவை வெளியிடும் பூச்சிகளிடம் அதிகமான கருக்களை உருவாக்குவதற்கேற்ப அதிகமான உயிரணுக்கள் இருக்குமாம். அதன்மூலமே பெண் பூச்சிகளால் அதிகமான முட்டைகளை உற்பத்தி செய்யமுடியும். 2 வாரங்களே நீளும் அவற்றின் இனப்பெருக்க காலத்துக்குப் பின் அவை இறந்துவிடும். இந்தக் காலகட்டத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமான முட்டைகளை இடுவதற்கான முறைகளில் ஒன்றாகவே இந்த ஒளி வெளியிடும் முறை நடைபெறுகிறது.

தோட்டம்

உலகில் 2000 வகை மின்மினிப் பூச்சிகள் இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் பனி மற்றும் வசந்த காலங்கள் முழுவதும் முடங்கிக் கிடக்கும் முட்டைகளிலிருந்து கோடைக்காலத்தின் மே மாத இறுதியிலிருந்து ஜூன் மாத இறுதிவரை பூச்சிகள் வெளிவரத் தொடங்கும். பொதுவாக அனைத்து வகைகளுக்குமே ஆயுட்காலம் சராசரியாக 2 மாதங்களே. அதற்குள் அவை வளர்ந்து தன் அடுத்த சந்ததிக்கான கருக்களை உருவாக்கிட வேண்டும். அந்த முட்டைகள் அடுத்த ஓர் ஆண்டுக்கு அப்படியே செயலற்றுக் கிடந்து அடுத்த ஆண்டின் கோடைக்காலத்தில் மீண்டும் உயிர்கள் பிறக்கத் தொடங்கும்.

 

 

தங்கள் குழந்தைகளின் பிறப்பைக் காணும் பேரின்பமோ, தங்கள் பெற்றொரைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்போ அவற்றுக்குக்  கிடைப்பதேயில்லை என்பதே வேதனை. மிகவும் மென்மையான, அமைதியான, யாரையும் காயப்படுத்தாத மின்மினிப் பூச்சிகளின் கடந்த ஆண்டு முட்டைகளிலிருந்து இந்த ஆண்டுக்கான வாரிசுகள் பிறக்கத் தொடங்கிவிட்டன. வழக்கமான கோடையைப் போலவே இந்தமுறையும் மெக்கார்டின் வீட்டுத் தோட்டத்தில் மின்மினிப் பூச்சிகளின் அழகான வரவு அவரை முழுமையாக ஆட்கொண்டிருந்தது. 

பெவெர்லி மெக்கார்டு (Beverly McCord)  என்பவர் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் டல்ஹஸீ (Tallhassee) என்ற பகுதியில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 11-ம் தேதியில் அதைப் போலவே அவர் தனது வீட்டுத் தோட்டத்தைப் பார்த்தவாறு வீட்டுக்குள் கண்ணாடிக் கதவுகளுக்கு அருகே அமர்ந்திருந்தார். அந்தச் சமயத்தில் கண்ணாடிக் கதவில் வந்து ஒட்டிக்கொண்ட தவளை ஒன்று அதைக் கடந்துசென்ற ஒரு மின்மினிப் பூச்சியை லபக்கென்று நாக்கை நீட்டிச் சுழற்றியிழுத்து விழுங்கிவிட்டது.

மரத் தவளை

அந்தத் தவளை அவரது அந்தக் கண்ணாடிக் கதவில் எப்போதுமே வந்தமரும் ஒரு சாதாரண மரத் தவளைதான். அது அன்று அங்கே அமர்ந்ததையோ, மின்மினியை வேட்டையாடியதையோ அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அதை வேட்டையாடிய பிறகு தவளையின் தொண்டையில் மினுக்கிக்கொண்டிருந்த மின்மினிப்பூச்சியே அவரது கவனத்தை ஈர்த்தது.

மரத் தவளை தொண்டையில் மினுக்கிக் கொண்டிருந்த மின்மினியைத் தன் கைபேசியில் காணொளியாகப் பதிவுசெய்துள்ளார். 20 ஆண்டுகளுக்குமுன் பிரான்ஹாமின் உதடுகளை மரத்துப்போக வைத்த மின்மினிப் பூச்சிகளின் திரவம் இந்த மரத் தவளையை ஒன்றும் செய்யமுடியவில்லையோ என்ற கேள்வி அந்தக் காணொளியைப் பார்த்த ஆய்வாளர்களுக்குத் தோன்றாமலில்லை.

அதற்கும் முன்னால் அன்று பிரன்ஹாம் உதடுகளைத் தாக்கிய ரசாயனம் என்ன என்பதைப் பற்றி நாம் சிறிது தெரிந்துகொள்வோம். உயிருள்ளவை வெளியிடும் ஒளி வகைகளில் மின்மினிகள் என்றுமே தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றின் அடிவயிற்றிலிருக்கிறது லூசிஃபெராஸ் (Luciferase) என்ற வேதியியல் பொருள். அது வெளியிடும் லூசிஃபெரின் (Luciferin) என்ற ரசாயனமே இந்த ஒளி வெளிப்பாட்டுக்கு மூலகாரணம். அந்த ஒளிக்கான ஆற்றலைத் தருவது வேதியியல் பொருளில் லூசிஃபெரினோடு கலந்து வெளிப்படும் அடினோசின் டிரைபாஸ்பேட் (Adenosine Triphosphate) என்ற மூலக்கூறு. இவை இரண்டும் கலந்து வெளியாகும் சமயத்தில் அவற்றோடு ஆக்சிஜன் கலக்கும்போது இத்தகைய ஒளியை வெளிப்படுத்துகின்றன.

அந்த ஒளி பெண் துணைகளை இனப்பெருக்கத்துக்காக ஈர்ப்பதையும் தாண்டி, தற்காப்புக்காகவும் பயன்படுத்தப்படுவதாக முன்னரே பார்த்திருந்தோம். ஏனென்றால் அதே திரவத்தை அவற்றால் ஒளி ஏற்படுத்துவதைப் போலவே வெளியிடவும் முடிகிறது. விஷத்தன்மை நிறைந்த திரவம் 20 ஆண்டுகளுக்கு முன் பிரன்ஹாமுக்குச் சுமார் 30 நிமிடங்கள் மிகுந்த சிரமங்களைக் கொடுத்தது. அந்த அளவு ஒரு தவளைக்குத் தந்திருந்தால் அது மடிந்தே போயிருக்கும். அப்படியிருக்க தவளை இறக்காமலிருந்தது அனைவருக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

மின்மினியை விழுங்கிய பிறகு..

மின்மினிகளின் ஒளி தனக்கான துணையை ஈர்ப்பதுபோக அவற்றிடமிருக்கும் விஷத்தன்மை வாய்ந்த தற்காப்பு யுக்திகளைப் பற்றிய மிரட்டலாகவும் பார்க்கப்பட்டது. அனைத்து வகையான பூச்சிகளையும் அவற்றின் விஷத்தன்மையை முறித்து உணவாக எடுத்துக்கொள்ளும் பல்லிகளுக்கே மின்மினிகள் யமனாக வாய்த்த சம்பவங்களும் நிகழ்ந்ததுண்டு. ஆய்வுக்கூடத்தில் ஒருமுறை பொகோனா என்ற வகையைச் சேர்ந்த பல்லிக்கு மின்மினியை உணவாகக் கொடுத்திருக்கிறார்கள். அதைச் சாப்பிட்ட அடுத்த ஒரு மணிநேரத்தில் அந்தப் பல்லி விஷத்தன்மையால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டது.

ஆனால், இந்த மரத் தவளையின் உடலில் சுமார் 15 நிமிடங்கள் மினுக்கிக்கொண்டிருந்த மின்மினிப் பூச்சி சிறிது சிறிதாகத் தன் உயிரைவிட்டது. ஆனால், அதைச் சாப்பிட்ட தவளைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. உலகின் அனைத்து வகையான உயிர்களுக்கும் அவற்றுக்கேற்ற வேட்டையாடிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒருவேளை அதைப் போன்றதொரு வேட்டையாடியாக இந்த மரத் தவளை இருக்கலாமென்கிறார்கள் ஆய்வாளர்கள். அதே சமயம், அதைத் தொடர்ச்சியாக நாம் கவனிக்கவில்லை. ஒருவேளை அது அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணிநேரங்களில் இறந்தும்கூட இருக்கலாமென்கிறார்கள் மற்றுமொரு குழுவினர்.

உண்மை என்னவென்பது அந்தத் தவளையை மீண்டும் பார்த்தால்தான் தெரியும். ஆனால், அதற்கு அடுத்த தினங்களிலிருந்து இன்றுவரை அந்தத் தவளை தனது வீட்டின் கண்ணாடிக் கதவுகளை நோக்கி வரவேயில்லை என்கிறார் பெவெர்லி மெக்கார்டு.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

கொழும்பு வாழ் மக்களை வியப்பில் ஆழ்த்திய தாமரை கோபுரம்!

தெற்காசியாவின் மிகவும் உயர்ந்த கட்டடமாக கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரம் அழகாக காட்சியளித்துள்ளது.

நிர்மாணப் பணிகளை நிறைவு பகுதியை எட்டி வரும் நிலையில், நேற்றிரவு பல வர்ணங்களில் தாமரை கோபுரம் காட்சியளித்துள்ளது.

கொழும்பு டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் இந்த தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

பல வர்ணங்களில் ஒளிர்ந்த தாமரை கோபுரம் ஆயிரக்கணக்கான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

நேற்றையதினம் கொழும்பின் பல பகுதிகளில் கடும் காற்று வீசிய போதும், உயரமான கோபுரத்தின் அழகு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

 
 

http://www.tamilwin.com

 தாமரை கோபுரம்

 


ஆசியாவின் உயரமான தாமரைக் கோபுரம்..!

– 1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய பாரிய தரிப்பிட வசதி

– செக்கனுக்கு 12 மீற்றர் வேகத்தில் காற்று வீசினால் பணிகள் தடை!

– 50 வானொலி நிலையங்கள்

– 50 தொலைக்காட்சி நிலையங்கள்

– 20 தொலைத்தொடர்பு நிலையங்களுக்கு வசதி

Image result for தாமரை கோபுரம்

கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரின் கண்கணுக்கும் எட்டிய தூரத்திலிருந்து தெரிய கூடியதாக தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது.

சிமேந்து நிறத்தில் காணப்படும் இக்கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் முடிவுறாத போதிலும் அது வாணளாவ வளர்ந்து நிற்கிறது.

இதன் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டன. அடுத்தாண்டில் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கோபுரத்தை பார்ப்பவர்கள் எப்படி இந்தளவு உயரமாக கட்டப்படுகிறது, இவ்வளவு பெரியதான கோபுரத்தில் ஆட்கள் எப்படி வேலை செய்வார்கள்? இப்போது உயரமென்ன? இப்பணி எப்போது நிறைவுறும்? இவ்வளவு பெரியதான கோபுரம் ஏன் கட்டப்படுகின்றது? இப்படியான பலகேள்விகள் பார்ப்பவர்களின் உள்ளத்தில் உருவாகுவது பொதுவானதே.

இக்கோபுரம் கொழும்பு, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இக்கோபுரத்தின் உச்சிக்குச் சென்றால் நாம் எங்கே நிற்கிறோம்.

இவ்வளவு பெரியதான உயரமான கட்டடம் சென்றதில்லை என்ற நினைப்பேவரும். இக்கட்டிடத்தின் உச்சிக்கு செல்வதற்கு உள்பகுதியில் மின்சார லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது கொங்கிறீட் சுவர்களின் குழல் வடிவத்திலே பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இக்கட்டிடத்தின் 215 உயரத்திற்கு லிப்ட்டினூடாக செல்வதற்கு சுமார் 2 நிமிடங்களே சென்கின்றன.

இக்கோபுரத்தினூடாக எமது நாட்டுக்குப் புகழ் கிடைப்பதுடன் கொழும்பு நகரின் அழகை மேன்மைப்படுத்தும் கோபுரமாகத் திகழும். உலக ரீதியில் வானத்தைத் தொடும் அளவில் பாரிய உயர் கட்டிடங்கள் கட்டப்பட்டுவரும் அதேநேரத்தில் பிரான்ஸ் பைசா கோபுரம் 324 மீட்டர் உயரமுடையது.

ஆனால் தாமரைக் கோபுரத்தின் முழுமையான உயரம் 356.3 மீட்டராகும். இக்கோபுரம் தென் ஆசியாவின் மிக உயரமான கோபுரமாகும்.

அத்துடன், உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்றாக இதுவும் காணப்படும்.

இத்தாமரைக் கோபுரத்தில் முதலாம் மாடியில் வர்த்தக் கடைத் தொகுதியொன்று நிர்மாணிக்கப்படுகிறது.

மேல் பகுதியில் 400 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபமும். திருமண வரவேற்பு மண்டபம், ஆடம்பர அறைகள், ஹோட்டல்கள், மற்றும் கவனயீர்ப்பு பார்வையாளர் மண்டபம் உட்பட பூரண வசதிகள் நிறைந்த்தாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், தொலைத்தொடர்பாடல்கள் அருங்காட்சியகம் மற்றும் உணவு விடுதி போன்றன கோபுரத்தின் அடித்தளத்தில் அமைக்கப்படுகின்றன.

கோபுரத்தின் நிர்மாணப் பணிகளில் சீனருடன் இலஙகை ஊழியர்களும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

பல்வேறு பரிவர்த்தனை நிலையங்களை கொண்டதாக அமைக்கப்படும் இந்தத் தாமரைக் கோபுரம் ஆசியாவிலேயே மிகவும் உயரமான தாமரை வடிவிலான அமைக்கப்படு்ம் கோபுரமாகவும் திகழவிருக்கிறது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்தத் தாமரைத் கோபுரத்துக்கான ஒதுக்கப்பட்ட மொத்த செலவினம் 104 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

தற்சமயம் இந்த கோபுரத்தின் நிர்மாண வேலைகள் இரண்டு இலட்சம் சதுரஅடி அளவில் பூர்த்தியடைந்துள்ளன.

எதிர்காலத்தில் இதன் நிர்மாண வேலைகள் வாரத்துக்கு ஐந்து மீட்டர் என்ற அடிப்படையில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்ப கட்ட நிர்மாண வேலைகள் நிறைவு பெற்றதுடன் இரண்டாம் கட்ட வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும்.

இக்கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் நிறைவுறும் என்று பொறியியலாளர் சிரோமால் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இதில் 1500 வாகனங்களை ஒரே தடவையில் நிறுத்தி வைக்கக் கூடியதாக பாரிய வாகன தரிப்பிடம் ஒன்றும் வர்த்தக கட்டடத் தொகுதியும் நிர்மாணிக்கப்படும்.

சீனாவின் எக்சிம் வங்கியின் நிதியுதவியுடன் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் தாமரைக் கோபுரம் முற்றுமுழுதாக நிர்மாணிக்கப்படும் போது, 1148.3 அடி உயரத்தையும் 30,600 சதுர மீற்றர் விஸ்தீரணத்தையும் கொண்டதாக அமைந்திருக்கும்.

கடந்த காலங்களில் பல சர்ச்கைகளை உண்டு பண்ணிய இக்கோபுர நிர்மாணப் பணிகளுக்குப் பல தடையான ஆதாரங்களும் எதிர்ப்புகளும் உருவாகி மறைந்துள்ளன.

அத்துடன் தாமரைக் கோபுரத்தில் அயல்நாடுகளுக்கு எதிரான மின்னணு கண்காணிப்பு வசதி அடங்குவதாக வெளியான செய்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.

இக்கோபுர பணியில் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் 50 பொறியியலாளர்களும் பணியாற்றுகின்றனர்.

கட்டிட நிர்மாணத்திற்கு இரும்பு 5000 டொன், கொங்கிறீட் 20,000 கனமீட்டரும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இக்கோபுரத்தின் மேல் பகுதியில் வேலை நடைபெறும் வேளையில் செக்கனுக்கு 12 மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் வேலைகள் முன்னெடுக்க முடியாமல் தடைப்பட்டுவிடும்.

இக்கோபுரத்தைச் சுற்றிலும் பேரவாவி இருப்பதினால் அத்திரவாரப் பகுதியின் ஸ்திரத்திற்கு ஆரம்பக் கட்ட பணிகளுக்கு 4000 கனமீட்டர் கொன்கிறீட்டும், 400 தொன் இரும்பும் செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இத்தாமரை கோபுரத்தில் வானொலி மற்றும் தொலைகாட்சிகளுக்காக 350 மீட்டர் உயரமான பரிவர்த்தனை கோபுரங்கள் இங்கு அமைக்கப்படவுள்ளன. அத்துடன், கண்காணிப்பு கூடம், தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலையங்கள் அனைத்தும் உள்ளடக்கியதாகவே அமைக்கப்படவுள்ளது.

பத்து ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் இத்தாமரைத் கோபுர திட்டத்துக்கு பூங்கா ஒன்றும் அமைக்கப்படும்.

இந்த கோபுரம் நிலத்துக்கு கீழ் நான்கு மாடிகளுடன் ஆரம்பமாகிறது.

இக்கோபுரத்திற்கு அதிவேக மின்சார லிப்டுகள் அமைக்கப்படவுள்ளதுடன், 85 முதல் 90 வரையிலான மாடிகளுக்கு சுமார் இரண்டே நிமிட குறுகிய நேரத்தில் செல்லக்கூடியதாக இருக்கும்.

நிலத்துக்குக் கீழான நான்கு மாடிகள் நிர்மாணிக்கப்பட்டதும் இந்த கட்டடம் ஒரு சிலின்டரின் வடிவத்தில் காணப்படும் அது 270 மீட்டர் வரை அதாவது 85 அல்லது 90 மாடிகள் வரை உயரும் தாமரைப் பூவின் வடிவில் வரும் கோபுரத்தில் ஒன்பது மாடிகள் உள்ளடக்கப்படும்.

இந்த ஒன்பது மாடிகளுக்கும் பார்வையாளர் கூடங்களும் அமைக்கப்படும். இந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் தெளிவான காலநிலையில் இலங்கை முழுவதையும் பார்க்கலாம் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவிக்கிறது.

அவ்வாறே சுமார் 50 வானொலி நிலையங்களும் 50 தொலைகாட்சி நிலையங்களும் 20 தொலைத்தொடர்பு சேவை நிலையங்களும் அமைப்பதற்கு இடவசதி அளிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

தாமரைக் கோபுரத்தில் டிஜிற்றல் பிராந்திய தொலைக்காட்சி ISDB-T ,தொலைத்தொடர்பாடல்கள், பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக வசதிகள் போன்றன உருவாக்கப்படவுள்ளன.

இவை இலங்கையர்களாலேயே பயன்படுத்தப்படும். அத்துடன், இக்கோபுரமானது சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, நவீனன் said:

தாமரைக் கோபுரத்தில் டிஜிற்றல் பிராந்திய தொலைக்காட்சி ISDB-T ,தொலைத்தொடர்பாடல்கள், பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக வசதிகள் போன்றன உருவாக்கப்பவுள்ளன.

இங்கிருந்து இந்தியாவை அவதானிக்கலாமோ?

யாருக்காவது தெரியுமா அல்லது சீனாகாரனுக்கு மட்டும் தான் தெரியுமா?

Share this post


Link to post
Share on other sites
‘எல்லாமே கைகூடும்’
 

image_f63f7d380a.jpgவிழிகளைத் தீட்சண்யமாக வைத்திருங்கள்; செவிகளைக் கூர்மையாக்குங்கள்; பேச்சில் இனிமையையும் உறுதியையும் கலந்திடுங்கள். துணிவும், அன்பும், நிதானமும் என்றும் இருந்தால், உங்களைவிடச் சிறந்தவர்கள் எவருமில்லை. எல்லா மனிதர்களும் இவ்வண்ணம் வாழ்ந்து வந்தால், நல்லோர் உலகம் நிலைபெறும். 

எல்லோராலும் நல்லபடி வாழமுடியும். உங்களுக்குள் இருக்கும் இதயத்தில் என்றும் தூய்மையை ஏற்றினால் போதும். எல்லாமே கைகூடும். ஒருவர் எப்படி மேன்மையுடன் வாழ்கின்றார் என்பது, அவர்களின் ஆன்மபலம் என்பதேயாகும். போராடும் தைரியத்தை இது ஊட்டுகின்றது. 

விரிந்த மார்பும் நெடிய தோற்றமும் உடல்வலு மட்டும் இருந்தால் போதுமா? மனம் மாசு இன்றி இருக்க வேண்டும். 

நல்ல புத்தகங்களின் உள்ளடக்கங்களை உங்கள் மூளையில் பதிவுசெய்திடுக. முன்பை விட, இன்று நான் நன்றாக இருக்கின்றேன் என்று எண்ணுக. உங்கள் இலட்சியங்கள் நனவாவது கண்முன்னே தெரியும்.  

Share this post


Link to post
Share on other sites

பிரச்னைகளைத் தீர்க்க இது உதவும்! - யதார்த்தம் சொல்லும் கதை #MotivationStory

 
 
 
பிரச்னைகளைத் தீர்க்க இது உதவும்! - யதார்த்தம் சொல்லும் கதை #MotivationStory
 

தன்னம்பிக்கை கதை

`ஒரு பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்று பயப்படாதீர்கள். நிச்சயம் ஏதாவது ஒரு வழி இருக்கும்.’ - இது ஒரு சீனப் பழமொழி. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் அப்படித்தான். இதைத் தீர்க்கவே முடியாது என்று நினைக்கும் சிக்கலைத் தீர்ப்பதற்குக்கூட நிச்சயம் ஏதாவது ஒரு வழி இருக்கும். சரி.. அது நமக்குப் புலப்படாமல் போவது ஏன்? மேலோட்டமாகப் பார்ப்பதும் அணுகுவதும்தான் முக்கியமான காரணம். சில நேரங்களில் அபத்தமாகத் தோன்றும் ஒரு விஷயம்கூட சிக்கலைத் தீர்க்க உதவலாம். பொறுமை, நிதானமான அணுகுமுறை, ஈடுபாடு, கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும்... எப்பேர்ப்பட்ட தீர்க்க முடியாத பிரச்னையையும்கூட தீர்த்துவிடலாம். `எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டம், சங்கடம்... என்னால இதைச் சரிபண்ணவே முடியலையே...’ என்று சோர்ந்து போய் உட்கார்வதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைத் தேட வேண்டும். தேடல்தான் வெற்றிக்கான மந்திரச்சாவி. இந்த உண்மையை உணர்த்தும் கதை ஒன்று... 

கார்

 

 

அது, அமெரிக்காவின் பிரபல கார் உற்பத்தி நிறுவனம்... வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனம். காரில் கோளாறு என்று புகார் வந்தால், அடுத்த கணம் அங்கிருந்து ஆட்கள் கிளம்புவார்கள். அந்த அக்கறை காரணமாகவே, விலை அதிகமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கார்கள் நன்கு விற்பனையாகிக்கொண்டிருந்தன. ஒருநாள் அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. உறையில், `டைரக்ட் - பெர்சனல்’ என்று சிவப்பு எழுத்தில் எழுதி, நிர்வாக இயக்குநரின் பெயர் எழுதப்பட்டிருந்தது. நிர்வாக இயக்குநர் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தார். அதில் இப்படி எழுதியிருந்தது. 

 

 

`ஐயா, வணக்கம். இந்தக் கடிதத்தை இரண்டாவது முறையாக எழுதி உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். ஏற்கெனவே, 10 நாள்களுக்கு முன்னர் நான் அனுப்பிய கடிதத்துக்கு தங்கள் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை. நீங்கள் ஏன் பதில் அனுப்பவில்லை என்று உங்களைக் குற்றம்சாட்டுவதற்காக நான் இதைக் குறிப்பிடவில்லை. எனக்குப் பதில் தெரியாவிட்டால், பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறது. விஷயத்துக்கு வருகிறேன்... உங்கள் நிறுவனத்தின் காரை நான் வாங்கி மூன்று மாதங்களாகின்றன. எங்கள் குடும்பத்தில் பாரம்பர்யமாக ஒரு பழக்கமுண்டு. இரவு உணவுக்குப் பிறகு குடும்பத்திலிருக்கும் எல்லோரும் ஐஸ் க்ரீம் சாப்பிடுவோம். ஒரு நாளைக்கு ஒரு ஃப்ளேவர் என்கிற கணக்கில் விதவிதமாக வாங்கிச் சாப்பிடுவோம். எங்கள் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தரமான ஐஸ் க்ரீம்கள் கிடைக்கும். அதனால், நானே காரை எடுத்துக்கொண்டு போய் ஐஸ் க்ரீம் வாங்கி வருவது வழக்கம். அதில்தான் பிரச்னையே..! நான் அந்த சூப்பர் மார்க்கெட்டில் வெனிலா ஐஸ் க்ரீம் வாங்கி வந்தால் மட்டும் கார் ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்கிறது. ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட்...என வேறு எந்த ஐஸ் க்ரீம் வாங்கி வந்தாலும், கார் உடனே கிளம்பிவிடுகிறது. ஒரு முறையல்ல... பல முறை இப்படி நடந்துவிட்டது. இது என்ன அபத்தம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இதுதான் உண்மை. அருகிலிருக்கும் மெக்கானிக் ஷாப்பில் போய் பிரச்னையைச் சொன்னால், என்னை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். இதற்கு நீங்கள்தான் ஒரு தீர்வு சொல்ல வேண்டும். தங்கள் உண்மையுள்ள...’’ இப்படி எழுதி அந்த வாடிக்கையாளரின் கையொப்பம் இருந்தது. 

தன்னம்பிக்கை கதை

நிர்வாக இயக்குநர், தன் பெர்சனல் செக்ரட்டரியை அழைத்தார். இதற்கு முன் அந்த வாடிக்கையாளர் எழுதிய கடிதம் ஏதாவது வந்திருந்ததா என விசாரிக்கச் சொன்னார். விசாரித்ததில், `கஸ்டமர் கேர்’ பிரிவில் ஓர் ஊழியர் கடிதம் வந்தது உண்மையென்றும், அதில் சொல்லப்பட்டிருந்த தகவல் வேடிக்கையாக இருந்ததால், யாரோ விளையாட்டுக்காக எழுதியிருந்ததாக நினைத்து அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டதையும் சொன்னார். நிர்வாக இயக்குநர் அந்த ஊழியரை அதற்காகக் கடிந்துகொண்டார். உடனே, தன் நிறுவனத்தின் முக்கியமான இன்ஜினீயர்களை அழைத்து ஒரு கூட்டம் போட்டார். அவர்களில் திறமையான ஓர் இளம் இன்ஜினீயரிடம், அந்த வாடிக்கையாளரின் குறையைச் சரிசெய்யும் பொறுப்பைக் கொடுத்தார்.  

 

 

அந்த இன்ஜினீயர், கடிதம் எழுதிய வாடிக்கையாளரைப் போய் சந்தித்தார். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தன் கடிதத்துக்கு இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் கார் நிறுவனத்திலிருந்து கிடைத்ததே என்று வாடிக்கையாளர் மகிழ்ந்து போனார். ``இன்னிக்கி ராத்திரி டின்னர் முடிஞ்சதும் நானே உங்க வீட்டுக்கு வர்றேன். ரெண்டு பேரும் போய் ஐஸ் க்ரீம் வாங்கிட்டு வரலாம்’’ என்றார் இன்ஜினீயர். சொன்னதுபோலவே வந்தார். இருவரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு காரில் போனார்கள். அன்றைக்கு வெனிலா ஐஸ் க்ரீம் வாங்கினார் அந்த வாடிக்கையாளர். அவர் கடிதத்தில் எழுதியிருந்ததுபோலவே நடந்தது. கார் ஸ்டார்ட் ஆகவில்லை. அசந்து போனார் இன்ஜினீயர். ``இன்னும் ரெண்டு, மூணு நாள் பார்ப்போம். எப்படியும் பிரச்னையைச் சரி பண்ணிடலாம்னுதான் நினைக்கிறேன்’’ என்று நம்பிக்கையோடு சொன்னார் இன்ஜினீயர். கார் அங்கேயே நிற்க, தன்னுடைய காரில் அழைத்துப்போய் வாடிக்கையாளரை அவர் வீட்டில் விட்டுவிட்டு வந்தார் இன்ஜினீயர். திரும்ப சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்து காரை ஸ்டார்ட் செய்து பார்த்தார். ஸ்டார்ட் ஆகிவிட்டது. 

அடுத்த நாள் இரவு. அதே சூப்பர் மார்க்கெட். அன்றைக்கு சாக்லேட் ஐஸ் க்ரீம் வாங்கிக்கொண்டு வந்தார் வாடிக்கையாளர். ஒரு பிரச்னையும் இல்லை. கார் ஸ்டார்ட் ஆகிவிட்டது. மறு நாள் இரவு... அதே சூப்பர் மார்க்கெட். ஸ்ட்ராபெர்ரி ஐஸ் க்ரீம் வாங்கினார். ஒரு பிரச்னையும் இல்லை. கார் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அதற்கு அடுத்த நாள்... வெனிலா ஐஸ் க்ரீம் வாங்கினார். அதே பிரச்னை... கார் ஸ்டார்ட் ஆகவில்லை. அன்றைக்கும், இன்ஜினீயர்தான் அவரை தன் காரில் கொண்டு போய்விட வேண்டியிருந்தது. மறுபடியும் சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்தார். தன் காரை நிறுத்திவிட்டு சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார். ஒவ்வொரு பிரிவாக ஆராய்ந்து பார்ப்பதுபோல் நிதானமாக நடந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சூப்பர் மார்க்கெட்டுக்குள் சுற்றியலைந்துவிட்டு வெளியே வந்தார். 

ஐஸ் க்ரீம்

அன்று இரவு அந்த இன்ஜினீயர் தன் வீட்டில் உட்கார்ந்து யோசித்துப் பார்த்தார். `காருக்கு வெனிலா ஐஸ் க்ரீம் அலர்ஜி’ என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆரம்பத்திலிருந்து தான் ஆராய்ந்தவற்றையெல்லாம் ஒரு குறிப்பாக எழுதினார். வாடிக்கையாளர் பயன்படுத்தும் கார் மாடல், அவர் போடும் பெட்ரோல் அளவு, வீட்டிலிருந்து சூப்பர் மார்க்கெட் இருக்கும் தூரம், காரின் வேகம்... இப்படி எழுத எழுத அவருக்கு ஒரு க்ளூ கிடைத்தது. அது, சூப்பர் மார்க்கெட்டின் அமைப்பு. ஐஸ் க்ரீம்களில் வெனிலா ஃப்ளேவர் மிகவும் புகழ்பெற்றது என்பதால் சூப்பர் மார்க்கெட்டின் முன் பகுதியிலேயே அதற்கென தனியாக ஓர் இடம் வைத்திருந்தார்கள். வாடிக்கையாளர்கள் உள்ளே நுழைந்ததும், அதை எடுத்துக்கொண்டு வந்துவிடலாம். மற்ற ஐஸ் க்ரீம் ஃப்ளேவர்கள் மிக அதிகமாக விற்கப்படுவதில்லை என்பதால், அவை சூப்பர் மார்க்கெட்டின் பின் பகுதியில் இருந்தன. அங்கே நடந்து போய், தேடிக் கண்டுபிடித்து எடுத்து வர சிறிது நேரம் பிடிக்கும். இப்போது இன்ஜினீயருக்கு கார் கிளம்பாததற்கான காரணம் பிடிபட்டுவிட்டது. காரணம் வெனிலா ஐஸ் க்ரீம் அல்ல. நேர அவகாசம். 

வாசலில் நிறுத்திவிட்டுப் போன கார், சீக்கிரத்தில் வந்து கிளப்பினால் ஸ்டார்ட் ஆவதில்லை. கொஞ்சம் நேரம் கழித்து வந்தால், கிளம்பிவிடுகிறது. இது ஏன் என்று ஆராய்ந்ததும் விடை கிடைத்துவிட்டது. காரின் இன்ஜினில் இருக்கும் வேப்பர் லாக் (Vapor lock) என்ற பாகத்தில் பிரச்னை என்பதைக் கண்டுபிடித்தார் அந்த இளைஞர். அதில் ஏற்படும் பிரச்னையால் கார் சூடாகிவிடுகிறது; கொஞ்சம் நேரம் கழித்துவந்து கிளப்பினால், வெப்பம் தணிந்துவிடும்; கார் கிளம்பிவிடும். உடனே அல்லது சீக்கிரம் வந்தால், கார் இன்ஜின் சூடாக இருப்பதால், கிளம்பாமல் நின்றுவிடுகிறது. 

இன்ஜினீயர் விஷயத்தை நிர்வாக இயக்குநரின் கவனத்துக்குக் கொண்டு போனார். வெகு சில நாள்களிலேயே வேப்பர் லாக் பாகத்தை பிரச்னை ஏற்படாத வகையில் புதுவகையில் தயாரிக்க ஆரம்பித்துவிட்டது அந்த நிறுவனம்! தேடல் ஏன் முக்கியம் என்பது இப்போது புரிகிறதா? 

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

 

இனி கால்டாக்சி போல விமானத்தையும் பயன்படுத்தலாம்

கடந்த வாரத்தில் உலகம் முழுவதும் நடைபெற்ற டாப்- 3 தொழில்நுட்ப நிகழ்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Share this post


Link to post
Share on other sites

வடக்கு கிரீன்லாந்தை நார்வே தன்னுடன் இணைத்துக் கொண்ட நாள்

 

வடக்கு கிரீன்லாந்தை நார்வே தன்னுடன் இணைத்துக்கொண்டது, மேலும் இதே தேதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:- * 1641 - போர்ச்சுக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. * 1690 - இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் படைகள் போயின் என்ற இடத்தில் இரண்டாம் ஜேம்சின் படைகளை வென்றனர். * 1691 - இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின்

 
 
 
 
வடக்கு கிரீன்லாந்தை நார்வே தன்னுடன் இணைத்துக் கொண்ட நாள்
 
வடக்கு கிரீன்லாந்தை நார்வே தன்னுடன் இணைத்துக்கொண்டது, மேலும்

இதே தேதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:-

* 1641 - போர்ச்சுக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

* 1690 - இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் படைகள் போயின் என்ற இடத்தில் இரண்டாம் ஜேம்சின் படைகளை வென்றனர்.

* 1691 - இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் படைகள் அயர்லாந்தில் ஓகிறிம் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றனர்.

* 1799 - ரஞ்சித் சிங் லாகூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பஞ்சாபின் ஆட்சியைப் பிடித்தார்.

* 1806 - 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.

 

ஜப்பானில் சுனாமி தாக்கி 202 பேர் பலி- 12-7-1993

அ-அ+

ஜப்பானில் 7.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கடற்கரையோர பகுதியை சுனாமி அலைகள் தாக்கின.

 
 
 
 
ஜப்பானில் சுனாமி தாக்கி 202 பேர் பலி- 12-7-1993
 
ஜப்பானில் 7.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கடற்கரையோர பகுதியை சுனாமி அலைகள் தாக்கின.

அதில் நோஷிரோ கரையை பெரிதும் பாதிக்கப்பட்டது. அலையின் உயரம் அதிக பட்சமாக 10  மீட்டர் வரை எழுந்தது. இதில் 202 பேர் பலியானார்கள். பெரும் பொருட்சேதம் ஏற்றபட்டது.

மேலும் இதே தேதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:-

* 1898 - செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

*  1932 - நார்வே வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

*  1975 - சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி போர்ச்சுக்கலிடம் இருந்து விடுதலை பெற்றது.

* 1979 - கிரிபட்டி பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது.

* 1993 - ஜப்பானில் 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியதில் 202 பேர் பலியானார்கள்.

*    2006 - இஸ்ரேலிய இராணுவத்தினர் இருவரை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்தினர். இதனை அடுத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்கியதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். போர் ஆகஸ்ட் 14-ல் முடிவுக்கு வந்தது.

* 2007 - வவுனியாவில் இலங்கை வான்படையின் விமானத்தை விடுதலைப்புலிகள் சுட்டு வீழ்த்தினர்.

https://www.maalaimalar.com

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

ஒரு மனிதர்... 400 வகை உருளைக்கிழங்குகள்! - உணவுப் பஞ்சம் தீர்க்கப் போராடும் விவசாயி ஜூலியோ

 

"என் பிள்ளைகளைவிடவும் இந்த உருளைக்கிழங்குகளை நான் பெரிதும் நேசிக்கிறேன்." இதை எப்போதும் சொல்வார் ஜூலியோ. அது பெருமலையின் உச்சி. கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடிகளுக்கு மேல். அங்கு தான் ஜூலியோ தன் குடும்பத்தோடு வாழ்கிறார்.

ஒரு மனிதர்... 400 வகை உருளைக்கிழங்குகள்! - உணவுப் பஞ்சம் தீர்க்கப் போராடும்  விவசாயி ஜூலியோ
 

புகா குசி (Puka K'usi) - இதற்கு "சிகப்பு பூசணி" என்று அர்த்தம். 

கச்சூன் வக்காச்சி (K'achun Waqachi) - "உங்கள் மருமகளை அழவைக்கும் ஒன்று" என்று அர்த்தம் 

குசி கச்சூன் வக்காச்சி (Kusi K'achun Waqachi) - "மகிழ்ச்சியாக இருப்பவரை அழவைக்கும்" என்பது இதன் பொருள்.

 

 

பூமா மக்கி (Puma Maki) - "பூமாவின் பாதங்கள்" என்று அர்த்தம். 

இது மாதிரியாக இன்னும், இன்னும் 400 பெயர்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒருவர் வளர்க்கிறார். இவை அனைத்தும் உருளைக்கிழங்கு வகைகளின் பெயர்கள். 

அது பெரு மலையின் உச்சி. கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடிகளுக்கு மேல். அங்கு தான் ஜூலியோ ஹன்கோ மமானி (Julio Hancco Mamani) தன் குடும்பத்தோடு வாழ்கிறார். அங்கு தான் உருளைக்கிழங்கு விவசாயம் செய்கிறார். 

 
 
 
பெரு - உருளைக்கிழங்கு விவசாயம்

ஜூலியோ ஹன்கோ மமானி (Julio Hancco Mamani)

பெரு நாட்டின் கஸ்கோ நகருக்கு அருகிலிருக்கும் ஆண்டஸ் (Andes) மலைத் தொடரில் வாழ்கிறார் ஜூலியோ. அவர் வாழும் இடத்திலிருந்து சிறு நகரத்தை எட்ட வேண்டுமென்றாலும் கூட குறைந்தது மூன்றரை மணி நேரம் நடக்க வேண்டும். அந்தப் பகுதியில் குளிர் அதிகம். 

"என் பிள்ளைகளைவிடவும் இந்த உருளைக்கிழங்குகளை நான் பெரிதும் நேசிக்கிறேன்." இதை எப்போதும் சொல்வார் ஜூலியோ. 
ஜூலியோவின் அப்பா 100 வகை உருளைக்கிழங்குகளை பயிரிட்டார். இப்போது ஜூலியோ 400 வகை உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்கிறார். மிக, மிக அரிதாகவே நகரத்திற்கு வருகிறார் ஜூலியோ. அதற்கு அவருக்கான அவசியமும் இருப்பதில்லை. தனக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அத்தனையையும் அவரே தயாரித்துக் கொள்கிறார். 

பெரு பூர்வகுடிகள்

பெருவில் உருளைக்கிழங்குகளின் வரலாறு என்னவென்பதற்கு பல கதைகள் உண்டு. அது 1500களில் ஸ்பானிய படையெடுப்பின் போது, நாட்டிற்குள் வந்தது என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெருவின் பூர்வகுடிகள் உருளைக்கிழங்குகளை அறுவடை செய்யத் தொடங்கினார்கள் என்பதாகவும் சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தாலும், பெருவின் பூர்வகுடிகள் வாழ்வில் உருளைக்கிழங்கிற்கு முக்கியப் பங்குண்டு. அவர்கள் அதை வளர்ப்பதையும், அறுவடை செய்வதையும் மிகவும் புனிதமான ஒரு காரியமாகக் கருதுகிறார்கள். 

 

 

பெரு உருளை விவசாயிகள்

பெருவின் உணவு முறையில் உருளைக்கிழங்கு பெரும் பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், இன்று உலகம் முழுக்க எல்லா நாடுகளிலுமே, உணவில் உருளைக்கிழங்கிற்கு முக்கியப் பங்கு உண்டு. உருளைக்கிழங்குகளின் உற்பத்தியைப் பெருக்குவதின் மூலம், உலகில் உணவுப் பஞ்சத்தைக் குறைக்க முடியும் என்று கருதி பெரு அரசு பூர்வகுடிகளோடு இணைந்து சில முயற்சிகளை எடுத்து வருகிறது "சர்வதேச உருளைக்கிழங்கு மையம்" (International Potato Center) எனும் அமைப்பு. குறிப்பாக,  பூர்வகுடிகளின் விவசாய அறிவுத் திறனையும், நவீனத் தொழில்நுட்பத்தையும் ஒரு புள்ளியில் இணைத்து உருளைக்கிழங்கு உற்பத்தியைப் பெருமளவு பெருக்குகிறது. 

ஆண்டஸ் மலைத் தொடர்களில் இருக்கும் பூர்வகுடிகளை " பப்பா அராரிவா" (Papa Arariwa) என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது இவர்கள் "உருளைக்கிழங்குகளின் பாதுகாவலர்கள்" (Guardians of Potatoes) என்று சொல்லப்படுகிறார்கள். 

பெருவின் பிசாக் (Pisaq) நகர் அருகே இருக்கும் "புனிதப் பள்ளத்தாக்கில்" (Sacred Valley) 12 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவிற்ககு உருளைக்கிழங்கு அறுவடை செய்யப்படுகிறது. இதில் முழுக்கவே ஆண்டஸ் மலைகளின் பூர்வகுடிகள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். ஒருவேளை அந்த விவசாயிகளுக்கு ஏதேனும் விதைகள் வேண்டுமென்றாலோ, பயிர்களில் வைரஸ் தாக்குதல்கள் நடந்தாலோ, அவர்களுக்கான தேவையை செய்து உதவிடுகிறது "சர்வதேச உருளைக்கிழங்கு மையம்". 

விவசாயம் - பெரு

இந்த ஆண்டஸ் மலைத் தொடர்களில் இரவுகளில் குளிர் 4டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். நண்பகல் நேரத்தில் அதிகபட்சமாக 20டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். இது உருளைக்கிழங்கு வளர்ப்பதற்கான சரியான சீதோஷ்ண நிலை. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக பருவநிலை மாற்றங்களால் இதற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. முன்னர் செய்த உயரத்தைக் காட்டிலும், இப்போது அதிக உயரங்களுக்குச் சென்று விவசாயம் செய்ய வேண்டியிருக்கிறது. 

ஒருவேளை இயற்கைச் சீற்றத்தினாலோ, மனிதனின் பிழையினாலோ இந்த உலகிற்குப் பெரும் பிரச்னைகள் ஏதும் வரும் சூழலில் அது நேரடியாக விவசாயத்தை ஒட்டு மொத்தமாக அழித்துவிடும். அப்படி ஏதும் ஒன்று நிகழ்ந்தாலும் கூட, இதை மீண்டும் உருவாக்கிடும் அளவிற்கு ஒரு "விதை வங்கியை” உருவாக்கியுள்ளது சர்வதேச உருளைக்கிழங்கு மையம். கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் அதிகமான உருளைக்கிழங்கு விதைகளை இங்கு பத்திரப்படுத்தி வைத்துள்ளது. 

இந்த விதைகள் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பத்திரமாக இருக்கும் வகையில் (-)20 டிகிரி செல்ஷியஸில் லேப்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

உருளைக்கிழங்கு விதைகள் பாதுகாக்கும் இடம்

 பெருவின் உருளைக்கிழங்கு காவலர்களில் ஜூலியோ ஒர் எடுத்துக்காட்டு மட்டுமே. 

“நான் இந்த மலையின் உருளைக்கிழங்கு காவலன். அதை ஒருபோதும் நான் அழிய விடமாட்டேன். அதை நான் பத்திரமாக பாதுகாப்பேன்.” - ஜூலியோ

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

 

ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அடிமையாகும் உலகம்

சமூக ஊடகங்களின் வியாபார உத்திகளால் தன்னிலை மறக்கும் ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டாளர்கள்

Share this post


Link to post
Share on other sites
 
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்  குறிஞ்சி மலர்கள்
 
 
 
10585-sooriyan-gossip71243643.jpg
இந்தியாவின் கொடைக்கானலில் சுமார் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்  குறிஞ்சி மலர்கள் தற்போது கண்கவர் பூக்களை பூத்துள்ளது. 
 
 
இந்த அரிய அழகிய மலர்களை காண சுற்றுலா பயணிகள் அந்த பிரதேசத்தில் அண்மைய நாட்களில் அதிகரித்த வண்ணம் உள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. 

பொதுவான நாட்களிலேயே கொடைக்கானல் என்றால் அங்கு மலர்சியான குளிர்மையான அழகிய பொழுதை களிக்கலாம். 
 
இப்போது குறிஞ்சி மலர்கள் அங்கு போதுமான அளவிற்கு பூத்திருப்பது  எல்லோர் மனங்களிலும் பெரும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.  
 
 மலை முகடுகள் மற்றும்  காணும் இடமெல்லாம் பசுமை பொங்க குறிஞ்சி மலர்கள் கொத்து கொத்தாக பூத்துக் குலுங்குகின்றன. 
 
 
உலகம் முழுவதும் 450 வகையான குறிஞ்சி மலர்கள் உள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 59 வகையான குறிஞ்சி மலர்கள் பூப்பதாக கூறப்படுகிறது. 
 
 
பசுமையான புல்வெளிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் நிறைந்திருந்த குறிஞ்சி செடிகள் 12 ஆண்டுகளுக்கு பின்னர் தனது இன்முகத்தை காட்டி சிரிக்கத் தொடங்கியுள்ளன.
 
 
குறிஞ்சி பூக்கள்  பூக்கும் காலப்பகுதி  தொடங்கியுள்ளதால், தேனீக்களின் எண்ணிக்கையும் இனப்பெருக்கமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
 
இந்த நிலையில்  இங்கு பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்களை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளதால், இங்கு  இந்த காலப்பகுதியில் கொண்டாடப்படும் கோடை குறிஞ்சி விழாவை  விரைந்து நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://gossip.sooriyanfm.lk

 

Share this post


Link to post
Share on other sites
‘காதலும் காமமும் தவறாக சித்தரிக்கப்படுகின்றன’
 

image_74919d65d6.jpgகெட்டவர்களும் கெட்டுப்போக விரும்புவர்களும் வந்துபோகும் கூடாரங்கள், நகரங்களில் பலவுண்டு. இவர்கள், உள்ளத்தையும் உடலையும் அற்ப சந்தோஷங்களுக்காகக் கெடுத்துக் கொள்ளச் சித்தமாக இருப்பது வேதனைதான். 

காதலும் காமமும் தவறாகவே இங்கு சித்தரிக்கப்படுகின்றன. அவர்களின் தேவைகள், ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், கழிக்கும் காலங்கள், அழுக்காகி விடுகின்றன. 

இந்த இலட்சணத்தில், தங்களை நாகரிகத்தின் உடைமையாளர்கள் எனச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வது வேடிக்கைதான். ‘அவனுக்கென்ன கொடுத்து வைத்தவன்’ என இத்தகையவர்களைப் பார்த்து, மனம் குமைபவர்கள் பலர் உள்ளனர். 

இந்தத் திரைப்பட நடிகருக்கு, எல்லாச் சந்தோஷங்களும் வலிந்து கிடைக்கின்றனவே என, அங்கலாய்ப்பவர்களை நீங்கள் பார்ப்பது உண்டு அல்லவா? 

ஒழுக்கத்தால் உருவாகும் பேரின்பம் நிரந்தரமானது. கறுப்பு வாழ்வு ஆபத்தானது.

Share this post


Link to post
Share on other sites

கண்டுபிடிப்புகளின் கதை: ஒட்டும் காகிதங்கள்

 

 
4chsujInventionjpg

ஆர்ட் ஃப்ரை   -  Aftenposten

அலுவலகங்களிலும் வீடுகளிலும் குறிப்புகளைச் சிறிய வண்ணத் தாள்களில் ஒட்டி வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ’போஸ்ட் இட் நோட்’, ’ஒட்டும் காகிதம்’ என்று அழைக்கப்படும் இந்தக் காகிதங்களை விரும்பிய இடங்களில் ஒட்டி, தேவையில்லாதபோது எடுத்துவிடலாம். ஒரே தாளை மீண்டும் மீண்டும் எடுத்து வேறு இடங்களில் ஒட்டிக்கொள்ளவும் செய்யலாம். தாளும் கிழியாது, ஒட்டிய இடமும் அழுக்காகாது.

 

ஒட்டும் காகிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 41 ஆண்டுகள்தான் ஆகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த 3எம் என்ற சர்வதேச நிறுவனம், புதுவிதமான பசையைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியிருந்தது. இதற்காக ஸ்பென்சர் சில்வர் என்ற விஞ்ஞானி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தும் அவர்கள் நினைத்ததுபோல் ஒட்டி, எடுக்கக் கூடிய புதுவிதமான பசையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே ஒரு முறை மட்டுமே ஒட்டக் கூடிய பசையைத்தான் ஸ்பென்சர் சில்வரால் உருவாக்க முடிந்தது. ஆனாலும் மனம் தளராமல் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தார்.

ஸ்பென்சர் சில்வருடன் பணியாற்றிய விஞ்ஞானி ஆர்ட் ஃப்ரை. 1974-ம் ஆண்டு, துதிப்பாடல் புத்தகத்தைப் பார்த்துக்கொண்டே பாடிக்கொண்டிருந்தபோது, பக்கங்கள் அடிக்கடிப் பறந்தன. இதனால் அவருக்குத் தொடர்ச்சியாகப் பாட முடியாமல், வரிகளைத் தவறவிட நேர்ந்தது. அப்போதுதான் ஒரு முறை மட்டும் ஒட்டும் பசையை வைத்து புத்தகங்களின் பக்கங்களை அடையாளப்படுத்தும் புக் மார்க் ஆகப் பயன்படுத்த முடிவு செய்தார். அதற்காக மேலும் சில மேம்படுத்தல்களை மேற்கொண்டார். அவரது அலுவலகத்துக்குப் பக்கத்தில் மஞ்சள் வண்ணத்தாள்கள்தான் கிடைத்தன. அதை வைத்து ‘ஒட்டி எடுக்கும்’ தாள்களை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டார்.

1977-ம் ஆண்டு அமெரிக்காவின் நான்கு முக்கிய நகரங்களில் இது விற்பனைக்கு வந்தது. ஆனால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. ஓராண்டுக்குப் பிறகு, 3எம் நிறுவனம், பல்வேறு நகரங்களுக்கு இலவசமாக ஒட்டும் புக்மார்க்கை அனுப்பி வைத்தது. ஆச்சரியப்படும் விதத்தில் மக்களிடம் வரவேற்பு இருந்தது. 1979-ம் ஆண்டு ‘போஸ்ட் இட்’ என்ற பெயரில் ஒட்டும் தாள்கள் அமெரிக்கா முழுவதும் விற்பனைக்கு வந்தன.

அடுத்த ஆண்டு கனடாவுக்கும் ஐரோப்பாவுக்கும் பரவியது. இருபதே ஆண்டுகளில் 3எம் நிறுவனம் தன்னுடைய காப்புரிமையை இழந்தது. அதனால் பல்வேறு நிறுவனங்கள் ஒட்டும் காகிதங்களை, பல வண்ணங்களில் வெளியிட ஆரம்பித்தன. அலுவலகங்களிலும் வீடுகளிலும் குறிப்புகளை எழுதி வைக்கவும் பிறருக்குத் தகவல் தெரிவிக்கவும் ஒட்டும் காகிதங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். சுவர், மரம், உலோகம், புத்தகம், பிளாஸ்டிக் என்று எதில் வேண்டுமானாலும் இந்த ஒட்டும் காகிதங்களை ஒட்டலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் எடுக்கலாம். இன்று உலகம் முழுவதும் 100 நாடுகளில் ஒட்டும் தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 

http://tamil.thehindu.com/

Share this post


Link to post
Share on other sites

கழுத்தைத் திருகினாலும் இறக்காத `ரப்பர்’ கோழி... வாட்ஸ்அப் வைரல் உண்மையா?

 

பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி வைரல் வீடியோ வரிசையில் பிளாஸ்டிக் கோழிக்குஞ்சும் இணைந்துள்ளது.

கழுத்தைத் திருகினாலும் இறக்காத `ரப்பர்’ கோழி... வாட்ஸ்அப் வைரல் உண்மையா?
 

டந்த சில மாதங்களுக்கு முன்னால் `பிளாஸ்டிக் அரிசி' குறித்த விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. ஆளாளுக்கு வீடியோக்களை வெளியிடத் தொடங்கினர். இதனால் பிளாஸ்டிக் அரிசி குறித்த பீதி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரிசி விற்பனையாளர் சங்கம் தாமாக முன்வந்து `பிளாஸ்டிக் அரிசி என்ற ஒன்று இல்லை' என்று தெளிவுபடுத்தியது. தமிழக அரசு ஒருபடி மேலே போய் பிளாஸ்டிக் அரிசி குறித்த புகார் எண்கள் வரை அறிவித்தது. அதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் முட்டை குறித்த வீடியோவும் வெளியானது. அதனால் மக்கள் அந்த உணவில் பிளாஸ்டிக் இருக்குமோ, இந்த உணவில் பிளாஸ்டிக் இருக்குமோ என்ற அச்சத்துடன் காணப்பட்டனர். இந்த அச்சத்துக்கு பிளாஸ்டிக் பற்றிய பயம்தான் முக்கியக் காரணம். அந்த பிளாஸ்டிக்தான் இப்போது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், இப்போது வந்திருப்பது சமைக்கும் உணவுப்பொருள்களில் அல்ல... பெரும்பாலானோர் அதிகமாக உட்கொள்ளும் கோழிகளில்..ரப்பர் கோழி என்ற வீடியோ இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது

பிளாஸ்டிக் கோழி வைரல் வீடியோ

தற்போது வைரலாகி வரும் வீடியோவில், கோழிக்குஞ்சுகளை ஒருவர் விற்பனை செய்துகொண்டிருக்கிறார். அப்போது அவர் கோழிக்குஞ்சுகளை வைத்து வித்தைக் காட்ட தொடங்குகிறார். அதைப் பார்க்கும்போது வெறும் வித்தைதான் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒருவர் வலைக்கூண்டுக்குள்ளிருந்து ஒரு கோழிக்குஞ்சை எடுக்கிறார். அதன் இருகால்களையும் பிடித்துக்கொண்டு சுழற்றுகிறார். பழைய அம்மன் படங்களில் மனிதர்களின் தலையைத் திருகுவதுபோல, கோழிக்குஞ்சின் தலையைத் திருகுகிறார். ஒருமுறை அல்ல... தொடர்ந்து நான்குமுறை. அதன்பின்னர், இரண்டு கால்களையும் சேர்த்து கழுத்தைச் சுற்றி மடக்குகிறார். அப்போது கோழிக்குஞ்சு ஜிம்னாஸ்டிக் செய்யும் என்றும் சொல்கிறார். அதன்பின்னர் கோழிக்குஞ்சை தரையில் விடுகிறார். அது இறந்ததுபோல படுத்துக்கிடக்கிறது. மீண்டும் தனது அடுத்த சாகசத்துக்கு வந்துவிடுகிறார். ஒரு துண்டில் கோழிக்குஞ்சை வைத்துக்கட்டி, துண்டை இறுக்குகிறார். கோழிக்குஞ்சு இருக்கும் இடம் பெரிய அளவிலான கோலிக்குண்டாக மாறுகிறது. பின்னர் மீண்டும் துண்டின் முடிச்சை அவிழ்க்கிறார். அதன்பின்னர் கோழிக்குஞ்சு சாதாரண நிலையிலிருந்து வெளிவருகிறது. எலாஸ்டிக் போல.

 

 

கோழி

இம்முறை கூண்டுக்குள் கையைவிட்டுக் கிடைக்கும் கோழிகளைத் தனது ஜீன்ஸ்பேன்ட் பாக்கெட்டுக்குள் கர்ச்சிப்பை வைப்பதுபோல, மடக்கி வைத்துக் கொள்கிறார். பேன்ட் பாக்கெட்டுக்குள் கிட்டத்தட்ட எட்டுக் கோழிக்குஞ்சுகளை வைத்துக்கொண்டு அப்படியே தரையில் அமர்ந்து எழுகிறார். மீண்டும் தனது பேன்ட் பாக்கெட்டுக்குள்ளிருந்து கோழிக்குஞ்சுகளை எடுத்து வெளியே விடுகிறார். பாக்கெட்டுக்குள் போட்ட அனைத்துமே உயிருடன் அப்படியே இருக்கின்றன. அடுத்ததாக ஒரு கோழிக்குஞ்சை எடுத்து இரண்டு கால்களையும் பிடித்து இருபக்கமும் இழுக்கிறார். இம்முறையும் ஒன்றும் ஆகவில்லை. இப்போது முதன்முதலாக ஜிம்னாஸ்டிக் காட்டிய கோழி மெள்ள் எழுந்து நடக்க ஆரம்பிக்கிறது. இறுதியாக ஒரு கோழியின் படத்தைக் காட்டி, இது ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட கோழிக்குஞ்சுகள் என்று சொல்கிறார். அதற்குச் சுற்றியிருந்தவர்கள் ``படத்தில் இருப்பது ஈமு கோழி மாதிரி தெரியுதே" என்கிறார்கள். அதைக் கோழிக்குஞ்சு விற்பனை செய்யும் இளைஞர் மறுக்கிறார். இந்த வீடியோ வடமாநிலத்தில் எடுக்கப்பட்டதுபோல இருக்கிறது. ஆனால், இதைச் சமூக வலைதளங்களில் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் கோழிகளா?.. என்று பரப்பி வருகிறார்கள்.

 

 

இதைப் பற்றி காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் முனைவர் தேவகியிடம் பேசினோம். ``இது உண்மையா என்று தெரியவில்லை. சாதாரணமாக கோழிக்குஞ்சின் தலையை இத்தனை முறை திருக முடியாது. பார்ப்பதற்கு மேஜிக் போல இருக்கிறது. நான் பார்த்தவரையில் இந்த மாதிரி கோழிகளைச் செய்ய முடியாது. உடனடியாக என் சீனியர்களிடம் விஷயத்தைக் கொண்டு போகிறேன். இது எப்படி எனக் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார்.

ரப்பர் கோழி என்று கூறி வாட்ஸ் அப்பில் பகிரப்படும் வீடியோ:

 

 

ரப்பர் கோழியென்று ஒன்று கிடையாது. சிலர் விஷப்பாம்புகளை லாகவமாகக் கையாள்வார்கள். புதிய பாம்பென்றாலும் அவர்கள் சொல்பேச்சு கேட்டுவிடும். அது போல கோழிகளை மிருதுவாகக் கையாளத் தெரிந்தவர் செய்ததாக இருக்கலாம். மற்றபடி, கோழியில் ரப்பர் கோழியெல்லாம் நிச்சயம் கிடையாது.

பிளாஸ்டிக் முட்டை, அரிசி வைரல் வீடியோ வரிசையில் ``இது பிளாஸ்டிக் கோழி, இது ரப்பர் கோழி" என வைரலாகி வருகிறது.

https://www.vikatan.com/

Share this post


Link to post
Share on other sites

 

ஆப்பிரிக்காவின் கலர் நாயகன்

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் ஒரே வண்ண உடைகளை அணிந்து திரையில் தோன்றும் நாயர்களை பார்த்திருப்போம். ஆனால், ஆஃப்பிரிக்காவில் அத்தகைய ஆடையை அணிவதாலேயே ஒருவர் ஸ்டைலான நபராக அறியப்படுகிறார்.

Share this post


Link to post
Share on other sites

``ஆட்டுப்பண்ணையில் வேலை... அப்படியே ஒரு செம பயணம்!” - நார்வே நாட்டில் ஒரு திரில் அனுபவம்

43_thumb.jpg

நார்வே போன்ற நாடுகளில் உள்ள பண்ணைகளில் வேலை செய்ய முழு நேர ஊழியர்கள் இருப்பதில்லை. அந்நாடுகளில் பயணம் மேற்கொள்ள வரும் பயணிகளுக்கு இலவசமாக உணவு மற்றும் இருப்பிடம் வழங்கி வேலைக்கு வைத்துக்கொள்கிறார்கள்.

``ஆட்டுப்பண்ணையில் வேலை... அப்படியே ஒரு செம பயணம்!” - நார்வே நாட்டில் ஒரு திரில் அனுபவம்
 

தமிழகத்தைச் சேர்ந்த அரசன் எனும் மாணவர் சுவிட்சர்லாந்து நாட்டில் வங்கி மற்றும் நிதியியல் படிப்பு படித்து வருகிறார். வடதுருவத்தின் அருகில் மட்டுமே காணக்கூடிய வடக்கு வெளிச்சங்களைக் (நார்த்தன் லைட்ஸ்) காண ஆசைப்பட்டு அவர் சென்று வந்த சுவாரஸ்யமான கதையை இங்கே விவரிக்கிறார்.

இனி அரசனின் வார்த்தைகளில்…

நார்வேயில் அரசன் 

 

 

எனக்கு வடக்கு வெளிச்சங்களைப் பார்க்க வேண்டும் என்பது பல ஆண்டு கால ஆசை. தற்போது சுவிட்சர்லாந்தில் படித்து வருவதால், இதுதான் சரியான தருணம் என்றெண்ணி, இணையத்தில் அதற்கான தேடல்களில் ஈடுபட்டேன். அதன்பிறகுதான் தெரிந்தது, வடதுருவப்பயணம் என்பது என்னைப்போன்ற சாமானியர்களுக்கு எட்டாக் கனி என்பது. அந்த வடக்கு வெளிச்ச ஒளிக்கீற்றுகளை வட துருவத்தின் மிக அருகில் மட்டுமே காண முடியும். ஆனால், அத்தகைய பகுதிகளில் மக்கள் மிகக் குறைவாகத்தான் வசிக்கிறார்கள். மேலும் அந்த ஒளிக்கீற்றுகள் காணக்கிடைக்கும் இடங்கள் மற்றும் நேரங்களைக் கணிப்பதும் கடினமான விஷயம். ஒரு சுற்றுலாப் பயணியாக, சுவிட்சர்லாந்திலிருந்து வடதுருவப்பகுதிகளுக்குப் போய் விடுதியில் தங்கி வடக்கு வெளிச்சங்களைப் பார்த்து வர இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய் (மூன்று நாள்களுக்கு) செலவாகும்.

 

நான், சுவிட்சர்லாந்தில் பகுதி நேரப் பணி செய்து கொண்டே படித்து வரும் மாணவன். எனக்கு அவ்வளவு பெரிய தொகையைச் சுற்றுலாவுக்காகச் செலவு செய்ய முடியாது. அதனால், மற்றவர்களின் உதவியில்தான் போய் வரக்கூடிய சூழ்நிலை. நான் இந்தியாவில், காஷ்மீர் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மக்களுக்குத் தொண்டு செய்து கொண்டே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அதுபோல ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தேன். அப்போதுதான் அங்குள்ள இரண்டு பண்ணைகளைப்பற்றி அறிந்தேன். அவற்றில் நார்வே நாட்டிலிருக்கும் ஆட்டுப்பண்ணையில் பணி செய்து கொண்டே தங்குவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

ஐரோப்பியர்களுக்குப் பயணம் மிக பிடித்தமான விஷயம். பயணம் என்பது சுற்றுலா அல்ல. இரண்டும் வெவ்வேறானவை. ஐரோப்பியர்கள் பெரியளவில் பணம் செலவு செய்யாமல் நெடு நாள்கள் பயணம் செய்யக் கற்றிருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் பாஸ்போர்ட்களுக்குக் கிடைக்கும் விசா சலுகைகளும் அவர்களது பயணங்களுக்கு முக்கியமான காரணம். மேலும், பயணம் என்பது அவர்களின் கலாசாரத்தின் முக்கிய அங்கமும் கூட. அந்த நாட்டில் வேலை இல்லாதவர்களுக்குத் தேவையான உதவியை அரசாங்கமே செய்கிறது. ஒரு பட்டப்படிப்பு முடிப்பதற்குள் அல்லது ஒரு வேலை மாற்றத்துக்கு இடைப்பட்ட காலத்துக்குள் அவர்கள் சராசரியாக 8 மாதங்கள் பயணித்து விடுகிறார்கள்.

நார்வே போன்ற நாடுகளில் உள்ள பண்ணைகளில் வேலை செய்ய முழு நேர ஊழியர்கள் இருப்பதில்லை. அந்நாடுகளில் பயணம் மேற்கொள்ள வரும் பயணிகளுக்கு இலவசமாக உணவு மற்றும் இருப்பிடம் வழங்கி வேலைக்கு வைத்துக்கொள்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் `ஃபுட் ஃபார் வொர்க் ஸ்கீம்' (Food for work scheme) என்கிறார்கள். பண்ணை வேலை மட்டுமல்லாமல், நம் திறனுக்கு ஏற்றவாறு எல்லா வேலைகளுமே இத்திட்டத்தில் கிடைக்கின்றன. அது தொடர்பான சில இணைய இணைப்புகளையும் இங்கே கொடுத்துள்ளேன்.

https://hippohelp.com/

http://wwoof.net/

https://www.workaway.info/

நார்வே நாட்டில் எனக்கு வாய்ப்பளித்த பண்ணை, சுமார் 250 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இரண்டு நீரோடைகளைக் கடந்து ஒரு மலை வரை தொடர்கிறது அப்பண்ணை. அதில் ஒரு பகுதியில்தான் ஆட்டுப்பண்ணை அமைந்துள்ளது. அங்கு 150 ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. பண்ணையில் மூன்று குதிரைகளும் உள்ளன. நார்வே நாட்டில் உள்ள `இன்னொவேஷன் நார்வே ஆர்கனைசேஷன்' எனும் அமைப்பின் மூலம் செயல்படும் இப்பண்ணையின் முக்கிய நோக்கம், முழுமையான நிலையான வாழ்வாதாரத்தை விவசாயிகளுக்கு உருவாக்கித்தருவதுதான். சமீபத்தில்தான் இப்பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பண்ணையின் சிறப்பம்சம், இங்கு அமைக்கப்பட்டுள்ள நிலையான சூழல் முறைதான். இம்முறையைச் செயல்படுத்த பண்ணையை நிர்வகிப்பவர்கள், மிகச் சிறந்த சூழல் பாதுகாப்பு தொழில்நுட்பங்களைக் கையாள்கிறார்கள்.

 

 கடுங்குளிரிலிருந்து, ஆடுகளைப் பாதுகாக்கும் வகையில் அவற்றை உள்ளரங்கத்தில் கொட்டிலில் வைத்துள்ளனர். கொட்டிலின் தரைப் பகுதிக்கும் நிலத்துக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பதால், ஆடுகளின் புழுக்கை மற்றும் சிறுநீர் கொட்டிலின் அடியே சேகரமாகிறது. இதனால், கொட்டில் சுத்தமாக இருக்கிறது. கொட்டிலுக்கு அடியில் சேகரமாகும் கழிவுகள் மூலம் எரிவாயு தயாரித்துப் பயன்படுத்துகிறார்கள். அந்த எரிவாயுவைக் கொண்டு கடுங்குளிர் காலங்களில் வீட்டின் வெப்பநிலையை அதிகரித்துக்கொள்கிறார்கள். அந்த எரிவாயுவைக் கொண்டு சமையல் செய்து கொள்கிறார்கள். சமைக்கும் போது வெளிப்படும் புகையைக் கூட சூழலுக்குப் பாதிப்பு இல்லாவகையில் தண்ணீரைச் சுட வைக்கப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எரிவாயு தயாரித்தது போக மீதமிருக்கும் கசடுகளை உலர்த்தி உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஆடு வளர்ப்பிலும், நவீனத் தொழில்நுட்ப முறையைப் பின்பற்றுகிறார்கள். ஆடுகளுக்கு வைக்கோலையும், சிறுதானிய மாத்திரைகளையும் உணவாக வழங்குகிறார்கள். இயல்பான மேய்ச்சலில் கிடைக்கும் சத்துகள் இந்த மாத்திரைகளில் அடங்கியுள்ளன. இப்பண்ணையில் பனிக்குகை போன்ற ஓர் அமைப்பு உள்ளது. கிட்டத்தட்ட எஸ்கிமோக்களின் குடிசையைப் (இக்லூ) போன்ற அமைப்பு அது. கடுங்குளிர் காரணமாக அந்தப் பனிக்குகை உறைபனியால் சூழப்பட்டிருந்தது. அதனால், எங்களால் அக்குகைக்குள் சென்று பார்க்க முடியவில்லை.

பண்ணையின் பராமரிப்புப்பணிகளில் முக்கியமானவற்றில் ஒன்று, இக்குகையிலிருந்து பனியை அகற்றுவது. ஒரு நாள் பனியை அகற்றத் தவறினாலும், அது மிகப் பெரிய பிரச்னையாகி விடும். குளிர் காலத்தில் கால்நடை வளர்ப்பு தவிர, எந்த விவசாயப் பணிகளையும் செய்ய முடிவதில்லை. நார்வே நாட்டில், இந்தப் பண்ணை இருக்கும் இடத்தில் குளிர் காலங்களில் சூரிய ஒளியைக் காண்பது மிக அரிது. நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய நான்கு மாதங்களில் சூரியனைப் பார்க்க முடியாது. மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை, சூரியன் தெரியும் நேரம் படிப்படியாக அதிகரிக்கும். மே மாத மத்தியிலிருந்து ஆகஸ்ட் மாத இறுதி வரை சூரியன் மறையவே மறையாது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மந்தமான சூரிய ஒளி இருக்கும். சூரியனையே காண முடியாத துருவ இரவுகளும் நள்ளிரவில் கூட ஒளிரும் சூரியனும் நார்வே நாட்டு மக்களின் வாழ்க்கையில் கலந்துவிட்டன. கோடைக்காலத்தில் அந்தப் பண்ணையில் `பெர்ரி' சாகுபடி செய்யப்படுகிறது.

அந்தப் பண்ணையில் ஆறு நாள்கள் வேலை செய்து ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். அந்த ஒரு நாளை நாம் அருகில் சுற்றுலா சென்று வரப் பயன்படுத்திக்கொள்ளலாம். எங்கள் பணி, காலை 6.30 மணிக்குத் துவங்கும். எந்திரத்தை இயக்கி வைக்கோலைத் துண்டுகளாக்க வேண்டும். ஆடுகளின் கொட்டிலுக்குள் கிடக்கும் பழைய வைக்கோலை அகற்றி விட்டு நறுக்கப்பட்ட புதிய வைக்கோலை ஆடுகளுக்குக் கொடுக்க வேண்டும். ஆடுகளின் வட்டிலில் இருக்கும் பழைய தண்ணீரைக் கொட்டி விட்டு புதிய தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். வைக்கோல் கொடுத்து முடித்தபிறகு ஆடுகளுக்குத் தானியங்களைக் கொடுக்க வேண்டும். அது மிகவும் ஆபத்தான விஷயம். குளிர்காலம் என்பதால் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டிலுக்குள்ளேயே வைத்திருப்பதால் அவை, பைத்தியக்காரத்தனமான மனநிலைக்கு உள்ளாகி விடுகின்றன. தானியங்களை எடுத்துச்செல்லும் வாளிகளின் சத்தம் கேட்டவுடன் ஆடுகள் எங்களைத் தாக்க வந்தன. ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், போகப் போக அந்த வேலை பழகி விட்டது. என்னைப்போல அங்குத் தங்கியிருந்த சிலரும் என்னோடு சேர்ந்ததால், வேலைகளைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது.

கேம்ப் ஃபையர்

ஆடுகளுக்கான பராமரிப்புப் பணி முடிந்தவுடன் குதிரைகளை மேய்க்க வேண்டும். குதிரைகளுக்கு உணவு அளிப்பது ஒரு சிக்கலான விஷயமாக இருந்தது. குதிரைகளைப் பேணுவது கடினமானதாகவும், சவாலான விஷயமாகவும் இருந்தது. குதிரைகளுக்குச் சுடு தண்ணீரைத்தான் குடிக்கக் கொடுக்க வேண்டும். சுட வைத்து எடுத்து வந்த தண்ணீரை நான்கு மணி நேரத்துக்குள் குதிரைகளைக் குடிக்க வைத்து விட வேண்டும். இல்லையென்றால், தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகி விடும். அதேபோல தானியங்களை, சுடுநீரில் கரைத்து, `சூப்' போலத் தயாரித்து குதிரையின் வாயில் ஊற்ற வேண்டும். குதிரைகளுக்குத் தண்ணீர் கொடுப்பது, உணவு ஊட்டுவது போன்ற வேலைகளை திறந்த வெளியில்தான் செய்ய வேண்டியிருந்தது. திறந்தவெளியில் ஏழு அடுக்குகளைக் கடந்தும் அங்கு 16 டிகிரி சென்டிகிரேட் அளவு வெப்பநிலை நிலவும். அந்தக் குளிரில் நரம்புகள் கூட விரைத்து விடும்.

குதிரைகளைப் பராமரிக்கும் பணிகளை முடிக்கக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆகும். அதன்பிறகுதான் நாங்கள் காலை உணவுக்குச் செல்ல வேண்டும். அப்பண்ணையில், எப்போது வேண்டுமானாலும், எந்த உணவை வேண்டுமானாலும் நாமே சமைத்துக் கொள்ளலாம். அடுத்த நாள் சமையல் செய்யவிருக்கும் உணவுக்குத் தேவையான பொருள்களின் பட்டியலை முதல் நாளே கொடுத்து விட வேண்டும். அடுத்த நாள் காலை அந்தப் பொருள்கள் சமையலறைக்கு வந்து விடும்.

காலை உணவை முடித்த பிறகு மதியம் ஒரு மணி வரை எங்களுக்கு எந்த வேலையும் இருக்காது. ஒரு மணிக்கு மீண்டும் நாங்கள் கொட்டகைக்குள் சென்று ஆடுகளுக்குக் கொஞ்சம் வைக்கோலையும், தண்ணீரையும் அதற்கான தட்டுகளில் நிரப்ப வேண்டும்.

வழக்கமாக மதிய நேரத்தில் பண்ணையில் கட்டுமானப்பணிகளைத்தான் நாங்கள் செய்தோம். அந்தக் கொட்டகை மற்றும் பண்ணையின் கட்டமைப்பு சவால்கள் மீது எங்களுக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அங்கிருந்த சில தடைகளை நீக்கவும், உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் நாங்கள் எங்களது மூளையைப்பயன்படுத்தி உதவிகள் செய்தோம்.

மாலை நான்கு மணிக்கு பொது உணவுக்கான வேலைகளை ஆரம்பிப்போம். எல்லோரும் ஒன்றாக உண்பது, இரவில் மட்டும்தான். ஒரு தன்னார்வலர் (அவர் அமெரிக்காவைச் சேர்ந்த சமையல்காரர்) மட்டும் எங்களுக்குச் சமையல்காரராக உதவி புரிந்தார். அவர்மூலம் சில நல்ல உணவுகளைச் சாப்பிட முடிந்தது. எவ்வளவு நல்ல உணவாக இருந்தாலும் அது ஐரோப்பிய உணவாகத்தான் இருந்தது. அதாவது உப்புச்சப்பில்லாமல்.

6 மணிக்கு இரவு உணவை முடித்து, 6.45 மணிக்கு மீண்டும் ஒரு முறை கொட்டிலுக்குள் சென்று காலையில் செய்த பணிகளை மீண்டும் ஒரு முறை செய்துவிட்டால், அன்றைய பணி முடிவடைந்துவிடும். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு இரவு இனிமையாகக் கழியும். இரவு பன்னிரண்டு மணி வரை பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருப்போம். சில சமயங்களில் கேரம், செஸ் போன்ற விளையாட்டுகளையும் விளையாடுவோம்.

ஒரு நாள் திரு.ஹூயூபர்ட் (பண்ணை உரிமையாளரின் கணவர்) எங்களுக்கு `கேம்ப் ஃபயர்' உருவாக்கித் தந்தார். மைனஸ் 28 டிகிரி குளிரில் நெருப்பு முன் அமர்ந்து குளிர் காய்ந்தது மறக்க முடியாத அனுபவம். இரவு முழுவதும் ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம்தான். அன்று வானம் முழுவதும், பச்சை நிறமாகக் காட்சி அளித்தது. இந்த ஒளி தொடர்பாக நிறைய நாட்டுப்புறக் கதைகள் உள்ளன. அந்தப் பச்சை நிற ஒளியைக் காண்பது அவ்வளவு அரிதல்ல. வெவ்வேறு நிறங்களில் ஒளி சீரற்று நகர்வதைக் காண்பதுதான் மிக அரிதான விஷயம். இதுதான் வடக்கு வெளிச்சம் (நார்தர்ன் லைட்ஸ்) என அழைக்கப்படுகிறது. அங்கேயே வசிக்கும் பலருக்குக்கூட இது காணக்கிடைக்காது. ஏனென்றால், எப்போது ஒளி நகரும் என்பது கணிக்க முடியாத விஷயம். மைனஸ் 20 டிகிரி குளிரில் இரவு முழுவதும் அமர்ந்து யாராலும் காத்துக் கொண்டிருக்க முடியாது அல்லவா.

அன்றைய இரவு ஒரு மணியளவில் தீ முழுவதும் அணைந்த பிறகு குளிர் வாட்டத்தொடங்கியது. உடனே வீட்டுக்குத் திரும்ப ஆரம்பித்தோம். பத்து நிமிட நடையில் வீட்டை அடைந்து விடலாம். வீட்டை நெருங்க 50 மீட்டர் தொலைவு மட்டுமே இருந்த நேரத்தில், வானில் ஓர் அதிசயத்தைக் கண்டோம். வானத்தில் இளஞ்சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், ஊதா போன்ற நிறங்கள் தீடிரெனச் சிறிது சிறிதாகத் தெரிய ஆரம்பித்தன. அப்படியே நின்று விட்டோம். அண்ணாந்து வானையே பார்த்துக்கொண்டிருந்ததால் கழுத்தில் வலி ஏற்பட்டு விட்டது. மற்றொருபுறம் குளிர் வாட்டி வதைத்தது. ஆனாலும் நாங்கள் எங்கள் பார்வையை வானத்திலிருந்து அகற்றவில்லை.

வானில் வெளிச்சம்

அந்த ஒளி வேகமாக நகர ஆரம்பித்தது. அடிவானத்தில், இடது பக்கமிருந்து வலது பக்கத்துக்கு ஆரஞ்சு நிற ஒளி நகர்ந்தது. அதற்குக் கீழேயே சிகப்பு நிற ஒளி வலது பக்கமிருந்து இடது பக்கத்துக்கு நகர்ந்து. உச்சியிலிருந்து பச்சை வண்ண கதிர்கள் நேராகக் கீழிறங்கின. அந்த ஒளிமயமான வானத்தைக் கண்டவுடன் எங்களை அறியாமலே கூச்சலிட ஆரம்பித்தோம். அதைக் கேட்டு பண்ணை உரிமையாளரின் மகன் திரு. மிகேல்சன் ஓடி வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி. கண்டிப்பாக வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அந்த வர்ண ஜாலத்தை 'ஐ போன் கேமரா'க்களில் கூட சரியாகப் பதிவு செய்ய முடியாது. அதற்கு மேம்பட்ட DSLR கேமராக்கள் தேவை. அந்த ஒளியின் நாட்டியம், கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நீடித்தது. நாட்டியம் முடிந்ததும் அனைவரும் மகிழ்ச்சியாக வீட்டுக்குக் கிளம்பினோம். அப்போதுதான், `நான் இங்கேதான் பிறந்து வளர்ந்து வருகிறேன். இதுவரை இப்படிப்பட்ட காட்சியைக் கண்டதில்லை' என்று மிகேல்சன் சொன்னார். அதைக் கேட்டவுடன் ஆச்சர்யப்பட்டேன். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பரமானந்தம் அடைந்தேன்.

நாங்கள் தங்கியிருந்த பண்ணைக்கு அருகில் இருக்கும் கடைக்கும் பண்ணைக்குமான தொலைவு 12 கிலோ மீட்டர். அந்தக் கடை இருக்கும் பகுதியின் பெயர் `நோர்ட்க்ஜோஸ்பாட்ன்' (nordkjosbotn). இந்தப் பகுதியில் குளிர் காலத்தில் கடலில் உறைந்தநிலையில்தான் கடலலைகளைக் காண முடியும். அந்த நாட்டு மக்கள் அந்தப் பனிக்கட்டியில் பனிச்சறுக்கு விளையாடுகிறார்கள். அங்கு மீன் பிடித்தல் ஒரு சவாலான விளையாட்டு. பனித்தளத்தில் நாற்காலி போட்டு அமர்ந்துகொண்டு பனிப்பாறையில் துளையிட்டு அதற்குள் தூண்டிலை விட்டு மீன் மாட்டும் வரை மணிக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும்.

என்னால் அந்த மக்களோடு மிக விரைவாக நட்பாகப் பழக முடிந்தது. பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் கார் ஓட்டுவது, மிகவும் நல்ல அனுபவமாக இருக்கும். நார்வேயில் மிக அற்புதமாக இருந்தது. நார்வேயின், அமைதியான வெற்றிடங்களும், மலைச் சரிவுகளும் மலைகளும் ரம்மியமானவை. கடல் மட்டத்திலிருந்து 542 மீட்டர் உயரத்தில் உள்ள ரைட்டன் மலை (Mount Ryten) மற்றும் க்வால்விகா (Kvalvika) கடற்கரை ஆகியவற்றுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். அவை அப்படியே என் மனதைக் கொள்ளை கொண்டு விட்டன. அடிக்கடி மாறும் சீதோஷ்ண நிலைதான் ஆர்டிக் பிரதேசத்தின் தனித்துவம். காற்றுதான் இங்கே நாம் உணரும் குளிர் நிலையை முடிவு செய்யும். காற்றின் வேகம் அதிகமானால் நாம் உணரும் குளிரும் அதிகமாகும்.

நார்வேயில் பத்து நாள்கள் தங்கிவிட்டு நாடு திரும்பலாம் என முடிவு செய்தபோது, துரதிர்ஷ்டவசமாகப் பனிப் புயல் தாக்கியது. வட துருவத்திலிருந்து சில மைல்கள் மட்டுமே உள்ள அப்பகுதியிலிருந்து வெளியே வருவது அவ்வளவு எளிதான ஒரு செயல் இல்லை. விமானம் ஒரு வசதியான வழி. ஆனால் நான் முன்பதிவு செய்யாததால் கட்டணம் அதிகமாக இருந்தது.

அங்கிருந்து நார்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோ அல்லது ஸ்வீடன் தலை நகர் ஸ்டோக்ஹோல்ம் செல்ல வேண்டும். அங்கிருந்து பெர்லின் வழியாக சுவிட்சர்லாந்து செல்லப் பேருந்துகள் கிடைக்கும். பேருந்துகளில் கட்டணம் மிகக்குறைவுதான். இரண்டு தலைநகரங்களுக்குமே பேருந்து மற்றும் ரயில் ஆகியவை மூலமாகக் கிட்டத்தட்ட 28 மணி நேரங்கள் பயணிக்க வேண்டும்.

நான், நார்விக் எனும் சிறிய டவுனுக்குப் பேருந்தில் சென்று அங்கிருந்து ஸ்டோக்ஹோல்ம்க்கு ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்து மூலம் பெர்லின் சென்று அங்கிருந்து மற்றொரு பேருந்து மூலமாக சுவிஸ் செல்லலாம் எனத் திட்டமிட்டேன். நான் இருக்கும் இடத்திலிருந்து சுவிஸ் செல்ல கிட்டத்தட்ட 60 மணி நேரங்கள் பயணம் செய்ய வேண்டும். அழுதுகொண்டே அதற்கான பயணச்சீட்டுகளை வாங்கினேன். கிளம்ப வேண்டிய நாளுக்கு முந்தைய நாளில் நான், தங்கியிருந்த அறையைச் சுத்தம் செய்து எனது பொருள்களை எடுத்து வைத்த சமயத்தில்தான் பனிப்புயல் வீச ஆரம்பித்தது. தொடர்ந்து மூன்று நாள்களுக்கு அதே நிலைமை நீடிக்கும் என்று அறிவித்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் புயலைச் சமாளிப்போம் என்று முடிவு செய்தேன்.

பண்ணை

மறுநாள் காலை, ஆடுகளுக்கும் குதிரைக்கும் ஒரு `பை' சொல்லி விட்டு வீட்டுக்கு வந்து எல்லாரையும் கட்டித்தழுவி விடை பெற்றேன். நான் தங்கியிருந்த பண்ணையிலிருந்து நார்விக் செல்ல யாரிடமாவது `லிஃப்ட்' கேட்போம் என முடிவு செய்தேன். நார்விக் செல்ல வேண்டிய பேருந்து காலை பத்து மணிக்குத்தான். அது மதியம் இரண்டு மணி அளவில்தான் நார்விக் சென்றடையும். அங்கிருந்து ஸ்டோக்ஹோல்மிற்கான ரயில் மதியம் 3:05 க்கு இருந்தது. புயலால், பேருந்து தாமதமாகி விடலாம் என்று எண்ணிதான் லிஃப்ட் கேட்க முடிவு செய்தேன். மிகேல்சன் என்னை நோர்ட்க்ஜோஸ்பாட்ன் வரை காரில் கொண்டு வந்து விட்டார்.

கடும் பனிப்புயல் வீசிக் கொண்டிருந்தது. நான் ஒரு அட்டையில், `நார்விக்’ என எழுதி அதை ஏந்திக்கொண்டு சாலையில் நின்று கொண்டிருந்தேன். புயலின் வேகத்தினால் இரு முறை அட்டை கையை விட்டுத் தவறி பறந்து விட்டது. அதை எடுக்க ஓடி, பனியில் சறுக்கி விழுந்தேன். பத்து நிமிடங்களில் இரண்டே கார்கள் மட்டும்தான் வந்தன. அவையும் நிற்காமல் சென்று விட்டன. என் கால்கள், குளிரில் உறைந்து விட்டன. எனக்கு அழுகையே வந்து விட்டது. அந்தச் சூழ்நிலையில், ஒரு ஜீப் வந்து என்னிடம் வந்து நின்றது. அந்த ஜீப்பில் இருந்தவர்கள், என்னை பார்டுஃபோஸ் (Bardufoss) என்ற இடம் அவரை அழைத்துச் செல்வதாகக் கூறினார்கள். அது, நார்விக் செல்ல வேண்டிய தூரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு தூரத்தில் உள்ள இடம். `எட்டா தென்னையை விட எட்டும் எலுமிச்சையே மேல்' என அவர்கள் வாகனத்தில் ஏறினேன்.

அந்த வாகனத்தில் இரண்டு பேர் இருந்தனர். பயணம் மிகவும் அபாயகரமாகவே இருந்தது. கடும் பனி கொட்டிக்கொண்டிருந்ததால் முன்னே செல்லும் வாகனங்கள் சுத்தமாகத் தெரியவில்லை. சாலையில் பனி உறைந்திருந்ததால், வாகனம் வழுக்கிக்கொண்டே இருந்தது. அவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, அவர்கள் இருவரும் சிரியாவிலிருந்து போரின் காரணமாக நார்வேவுக்குத் தஞ்சம் புகுந்தவர்கள் எனத் தெரிந்தது. சிரியாவில் அவர்கள் பட்ட இன்னல்கள் பற்றியும் நார்வேவுக்கு வர அவர்கள் மேற்கொண்ட மிக ஆபத்தான பயணத்தைப் பற்றியும் கேட்டறிந்தேன். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் கடந்த மே 22-ம் தேதி தூத்துக்குடியில் நமது அரசாங்கம் செய்ததைத்தான் அவர்களின் அரசாங்கம் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது. மக்களின் வளர்ச்சிக்காகத்தான் நாடே தவிர, ஆட்சியாளரின் வளர்ச்சிக்காக இல்லை என்பது இன்னும் பல நாட்டு அரசாங்கங்களுக்குப் புரியவில்லை என்பது மிகவும் மனவருத்தத்தை அளிக்கிறது. பல நாடுகளில் இன்று நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு ஆட்சியாளர்களின் பதவி மோகமே பெரும் காரணமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே இந்தப் பிரச்னை பரவியிருப்பதை அவர்களுடன் உரையாடியதிலிருந்து புரிந்து கொண்டேன். அவர்கள் என்னை பார்டுஃபோஸ் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுச் சென்றனர்

அந்த நேரத்தில், பனிப்பொழிவு மிக அதிகமாகி விட்டது. சாலையில் ஒரு வாகனம் கூட தென்படவில்லை. அரை மணி நேரம் நின்று சோர்ந்துபோன சமயத்தில், பெரிய ட்ரைலர் வாகனம் ஒன்று வந்து நின்றது. அதில் ஏறிக்கொண்டேன். அதன், ஓட்டுநர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். அது வோல்வோ நிறுவனத்தின் வாகனம். நான் இது வரை ட்ரைலர் கேபினில் அமர்ந்தது இல்லை. அது எனக்கு மிகவும் புதுமையும் ஆச்சர்யமுமாய் இருந்தது. கேபினில் ஹீட்டர், ஏர் கண்டிஷனர் , காபி மெஷின், ஓவன், குளிர்சாதனப்பெட்டி, ஜி.பி.எஸ் நேவிகேஷன் சிஸ்டம், நீளமான படுக்கை என அத்தனை வசதிகளும் இருந்தன. எனக்குக் கொஞ்சம் `போலிஷ்' மொழி தெரிந்திருந்ததால் அந்த மொழியில் ஓட்டுநரிடம் சில வார்த்தைகள் பேசினேன். மிகவும் சந்தோஷப்பட்ட அவர், எனக்குக் கொஞ்சம் இனிப்புப் பண்டங்களைக் கொடுத்தார். மொழிப்பற்றுதான் அனைத்தையும் விஞ்சியது என உணர்ந்தேன்.

நாங்கள் சென்று கொண்டே இருக்கும்போது, ஒரு வாகனம் எங்களை வேகமாக முந்திக்கொண்டு சென்றது. அது, நான் செல்லத் திட்டமிட்டிருந்த பஸ். ஆனால், அந்த அசாதாரண வானிலையில் ட்ரைலர் வாகனத்தால் வேகமாகச் செல்ல முடியவில்லை. கடின முயற்சி செய்தும் அந்த ஓட்டுநரால், என்னைச் சரியான நேரத்துக்கு ரயில் நிலையத்தில் விட முடியவில்லை. நான் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது. அந்தச் சமயத்தில் என்னை நெகிழ வைத்த விஷயம், அந்த ஓட்டுநர் அன்றைய இரவு நான் நார்விக்கில் தங்குவதற்கான செலவை ஏற்றுக்கொள்ள முன்வந்ததுதான். நான், பணிவாக அதை நிராகரித்து விட்டு அவரிடமிருந்து விடைபெற்றேன்.

பொதுவாக, ஐரோப்பிய நகரங்களில் பேருந்து நிலையம் ரயில் நிலையத்தின் அருகிலேயே இருக்கும். நான் வர முன்பதிவு செய்திருந்த பேருந்து அங்கு நின்றுகொண்டிருந்தது. திட்டமிட்டபடி பேருந்திலேயே வந்திருந்தால், நான் ரயிலைப் பிடித்திருக்க முடியும். அதுதான் விதியின் சதி.

நார்விக், ஆர்க்டிக் வளையத்தில்தான் இருக்கிறது. அதாவது நான் இன்னும் துருவப் பிரதேசத்திலிருந்து கீழே வர வில்லை. நார்விக், ஸ்வீடன் நாட்டின் `கிருனா' என்ற இடத்திலிருந்து எடுக்கப்படும் இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்யும் ஒரு துறைமுக நகரம். அந்த நகரத்தில் எங்கு தங்குவதென்று எனக்குப் புரியவில்லை. அடுத்த நாள் பயணம் செய்ய வேண்டிய ரயிலுக்கான பயணச்சீட்டை வாங்கச் சென்றேன். நார்விக், நார்வே நாட்டின் ஒரு பகுதி. ஆனால், ரயில் நிலையம் மற்றும் ரயில் பாதைகள், சுவீடன் ரயில்வேவுக்குச் சொந்தமானவை. அதனால், அந்த ரயில்நிலையத்தில் பயணச் சீட்டு அலுவலகம் இல்லை. என்ன செய்வதென்று புரியாமல், இரவு தங்குவதற்கான வழியைத் தேட ஆரம்பித்தேன். சில விடுதிகளில் விசாரித்தபோது, ஒரு இரவு தங்குவதற்கு 150 யூரோ கட்டணம் கேட்டார்கள். அது எனது செலவழிக்கும் திறனுக்கு அப்பாற்பட்டது. அதனால், `Couch Surfing' ஆப் மூலமாக ஏதேனும் வீடுகளில் தங்க இடம் கிடைக்குமா எனத் தேட ஆரம்பித்தேன். ஐந்தே நிமிடங்களில் ஒரு பெண் அவர் வீட்டில் என்னைத் தங்க அனுமதித்தார்.

அவரது வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தேன். கடலோரமாக இருந்த வரிசை வீடுகளில் ஒன்று அவருடைய வீடு. மிக அமைதியான ஒரு சூழல். அவர், போலந்து நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு சுமார் 42 வயது இருக்கும். முதுநிலை வேதியியல் பயின்று விட்டு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரும் அவரின் நாய்க் குட்டியும்தான் அந்த வீட்டில் வசிக்கிறார்கள். தனிமையைப் போக்குவதற்கும் கலாசாரப் பரிமாற்றத்துக்காகவும் பயணிகளைத் தங்க அனுமதிப்பதாகக் கூறினார். என்னுடைய பயணத்தின் சோகத்தை அவரிடம் சொன்னேன். அவர், `பொதுவாக ஸ்வீடிஷ் ரயில்வேயில் இடம் இருந்தால்... மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ளும்படி நாம் காரணம் சொன்னால், நம்மிடம் இருக்கும் பயணம் செய்யப்படாத பழைய ரயில் பயணச்சீட்டை வைத்தே பயணம் செய்ய அனுமதிப்பார்கள். அது சட்ட பூர்வமானது இல்லை. ஆனால், செயல் முறையில் நடக்கக்கூடிய விஷயம். மேலும், ரயிலிலேயே பயணச்சீட்டு கண்காணிப்பாளரிடம் பயணிச்சீட்டையும் பெற்றுக்கொள்ள முடியும்' என்று சொன்னார். அதனால் அடுத்த நாள் ரயிலில் சென்று விடலாம் என முடிவெடுத்தேன். அதே சமயம் ஆன்லைனில் தேடியதில் ஸ்டோக்ஹோல்மிலிருந்து சுவிஸுக்கு மலிவுக் கட்டணத்தில் விமானப் பயணச்சீட்டும் எனக்குக் கிடைத்தது.

ரயில் பயணம், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. மனித நடமாட்டமே இல்லாத இடங்களில் ரயில் பயணித்தது. சுவீடன் நாட்டில், ரயில்களில் தேவைக்கு அதிகமாகவே வசதிகள் உள்ளன. பேருந்து நிலையம் கூட ஒரு விமான நிலையம் போல் செயல்படுகிறது. பயணிகளைப் புறப்பாடு வாசலுக்கு வந்து பேருந்துகள் ஏற்றிச் செல்கின்றன. சுவீடன் நாட்டிலிருந்து விமானம் மூலம் சுவிட்சர்லாந்து திரும்பினேன்.

இப்பயணத்தை மேற்கொண்டு நான்கு மாதங்கள் கடந்துவிட்ட இத்தருணத்தில், பயணத்தின் பிரதிபலிப்பாக எனக்கு ஒரு விஷயம் மனதில் மிக ஆழகமாகப் பதிந்துள்ளது. என்னால் மிகக்குறைந்த செலவில் இப்பயணத்தை மேற்கொள்ள முடிந்ததற்கான காரணம், ஒரு மனிதர் இன்னொருவர் மேல் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் உதவி செய்யும் மனப்பான்மை ஆகியவைதான். இதை மனதளவில் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் செயலிலும் இருக்க வேண்டும் என எண்ணி என்னால் முடிந்த அளவுக்குச் சில நபர்களுக்கு என் வீட்டில் தங்கும் உதிவியை நான் செய்து வருகிறேன், என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். ஆனால், அது மட்டுமே போதாது என்பதையும் நான் உணர்கிறேன்.

அனைவருக்கும் இயன்ற அளவில் உதவுவோம்... நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.

 

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

இன்பாக்ஸ்

 

 

36p1_1531207284.jpg

முன்னாள் மத்திய அமைச்சரான சசி தரூருக்கு மனைவி சுனந்தா புஷ்கர் இறப்பு வழக்கில் ஏற்கெனவே இமேஜ் டேமேஜ் ஆகிக் கிடக்கிறது. தற்போது  பாலிவுட் இயக்குநர் ஓம்பிரகாஷ் ஜா, சுனந்தா மரணத்தை மையமாக வைத்து த்ரில்லர் சினிமா ஒன்றை எடுத்துவருகிறாராம். காங்கிரஸில் இப்போதே படத்துக்கு எதிராக சர்ச்சைகள் கிளம்ப, பா.ஜ.க தரப்பில் சசி தரூரை வில்லனாக்கிப் படமெடுக்க இயக்குநர் தரப்புக்கு ஐடியா கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. படம் வந்தால்தான் தெரியும். பாவம்யா அந்த மனுஷன்!


36p2_1531207387.jpg

யிரோடு இருப்பவர்களை மையமாக வைத்தே ‘சஞ்சு’ ஸ்டைலில் பயோபிக் எடுப்பதில் பாலிவுட் உலகம் இப்போது பிஸி. அடுத்தது யாருடைய கதைகளை எடுக்கலாம் என்று வாசகர்களைக் கேட்டது ஓர் இணையதளம். வாசகர்களின் தேர்வில், ஃபைனல் லிஸ்டை டிக் அடித்தார் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. டாப் லிஸ்டில் இருப்பவர்கள், அமிதாப், கபில் தேவ், வித்யா பாலன், மாதுரி தீட்சித், ஏ.ஆர்.ரஹ்மான். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கெனவே பலமுறை இதற்காகத் தன்னை அணுகியவர்களுக்கு நோ சொல்லிவிட்டதால், அமிதாப் வாழ்க்கை படமாக்கப்படலாம் என்ற பேச்சு உலவிக் கொண்டிருக்கிறது. BIGPIC!


று வருடங்களுக்கு முன் எழுத்தாளர் அவதாரம் எடுத்தார் நடிகை கேமரூன் டயஸ்.  இளம்பெண்களுக்கான டயட், ஸ்லிம் ரகசியங்களைப் புத்தகமாக்கினார். அது வெற்றிபெற, அடுத்து The Body Book, The Longevity Book என்று எழுதிய நூல்களும் ஹிட் அடிக்க, நடிப்புக்கு மொத்தமாக முழுக்கு போட்டார். இப்போது தன் சுயசரிதையை எழுதுவது என்று முடிவெடுத்திருக்கிறார். சிறுவயதில் நிகழ்ந்த பாலியல் ரீதியான தாக்குதல்களைப் பற்றி அதில் எழுதவிருப்பதாகச் சொல்லிப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.  பயோபிக் ரெடி!


36p3_1531207363.jpg

36p4_1531207375.jpg

தெலுங்கில் ‘யூ-டர்ன்’, தமிழில் `சீமைராஜா’, `சூப்பர் டீலக்ஸ்’ எனப் படங்கள் லைனில் இருக்க, இவற்றையெல்லாம் முடித்துக்கொடுத்துவிட்டுத் திரையுலகிற்கு டாட்டா காட்டப்போகிறார் சமந்தா என்றொரு செய்தி தெலுங்குதேசத்தில் பரபரப்பாக ஓடுகிறது. சமந்தா ரசிகர்கள், இந்தச் செய்தியால் வருத்தத்தில் இருக்க, அந்தச் செய்தியை மறுத்திருக்கிறது சமந்தா தரப்பு. நாக சைதன்யாவுடன் ஒரு படம், அர்ஜுன் ரெட்டியின் உதவி இயக்குநர் இயக்கும் படம் என்று இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேடம் பிஸி என்கிறார்கள்! போகாதே போகாதே 


டத்தல் கும்பலிடமிருந்து 26 சிறுமிகளைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது . ஒரு ட்வீட். உத்தரப்பிரதேசம் கோரக்பூர் அருகே ஆவத் எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்5 கோச்சில் பயணம் செய்து கொண்டிருந்தார் ஆதர்ஷ் ஸ்ரீவத்சவா என்ற இளைஞர். `என் கோச்சில் சந்தேகத்துக்கிடமான ஒரு கும்பல் 26 சிறுமிகளைத் துன்புறுத்தி அழைத்துச்செல்கிறது. ரயில் ஹரிநகரிலிருந்து பாகாவுக்குப் போய்க்கொண்டி ருக்கிறது. விரைந்து வந்தால் காப்பாற்றலாம்’ என டைப் செய்து பியூஷ் கோயல், ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளம், பிரதமர் முதலானவர்களை டேக் செய்து ட்வீட்டாகப் போட்டிருந்தார் ஆதர்ஷ். உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தலைமையில் மாநில போலீஸும் இணைந்து ஆக்‌ஷனில் இறங்க, 26 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒரே ட்வீட்டில் ஹீரோவாகி யிருக்கிறார் ஆதர்ஷ். வாழ்த்துகள் ப்ரோ!


36p5_1531207431.jpg

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய, தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருக் கிறார்கள். படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்க, ‘மாநாடு’ எனப் படத்திற்குப் பெயர் வைக்க இருக்கிறார்களாம்.  எ வெங்கட்பிரபு ஈவன்ட்!


36p6_1531207506.jpg

கேரளத்தின் முதல் ஆதிவாசி இயக்குநர் லீலா இயக்கத்தில் ‘கரிந்தண்டன்’ என்ற படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. போஸ்டரே மிரட்டு கிறது.  பிரிட்டீஷ் ஆட்சியில் ஆரம்ப காலத்தில் வயநாட்டு மலைக்காட்டில் வாழ்ந்தவர் கரிந்தண்டன். ஆங்கிலேயர்கள் கேரள நிலத்தில் சாலைகள் அமைக்க உதவியவர், பின் அதே ஆங்கிலேயர்களால் பலி கொடுக்கப்பட்டவர். மலை கிராமத்து மக்கள் இன்றும் வழிபடும் கரிந்தண்டனைத் தான் காவியமாக்கி யிருக்கிறார் லீலா. கரிந்தண்டனாக நடித்திருக்கிறார் ‘கம்மட்டிப்பாடம்’ விநாயகன். கறுப்புச் சரித்திரம்.


பிரபலங்கள் ட்விட்டரில் பண்ணுகிற அலப்பறைக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் கிரிக்கெட் வீரர்கள் அலும்பு தாங்கலை! ஹர்பஜனின் தமிழ் ட்வீட்டுகள் அகில உலக பிரசித்தம். சென்றவாரம் ஹர்பஜனுக்கு டெண்டுல்கர் தமிழில் வாழ்த்து சொல்லி ட்வீட் போட, ஷேரிங் அள்ளியது. தல தோனி பிறந்தநாளான ஜூலை 7-ம் தேதி வீரேந்தர் சேவாக் போட்ட குறும்பு வாழ்த்து லைக்ஸ் அள்ளியது. ரன் அவுட் ஆகாமல் இருப்பதற்காகக் காலை அகட்டி கிரீஸுக்குள் தோனி வைத்திருக்கும் ஒரு போட்டோவைப்போட்டு,  `உங்கள் வாழ்க்கை இந்த அளவுக்கு நீண்டதாய் இருக்கட்டும். உங்கள் ஸ்டம்பிங்கைவிட வேகமாக உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கட்டும்!’ என்று வாழ்த்தியிருந்தார் சேவாக். குறும்பு டீம் ஃபார்ம் பண்ணுங்க பாய்ஸ்!

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.