Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

‘அன்பில்லாவிட்டால் நாக்கு நயம்பட உரைக்காது’
 

image_2edc3d4174.jpgஅற‍ங்களில் மேலானது, கொல்லாமையாகும். அதனிலும் மேலானது, பிறரின் மனங்களைப் புண்படுத்தாமல் வாழ்வதாகும். 

ஒருவரை அடித்து வீழ்த்துவதை விட, சுடு சொற்களால் அவர் மனதை நோகடிக்கச் செய்வது பாவகாரியமாகும். இதனால், எவரும் நிம்மதி பெற்றுக் கொள்ளவே முடியாது. பிறரைச் சந்தோசப்படுத்துதல் தனக்கும் இனிமை கூட்டுவதாகும்.

உங்கள் கோபம், ஆணவத்தால் பிறரை எதிரியாக்குவது எப்படி நியாயமாகும். வலிந்து இடர்கள் வந்தால், பொறுமை காத்து விலகி நின்றால், உங்கள் கௌரவம் மேம்படும். சண்டித்தனம், கண்களிடத்தில் நியாயம், நீதிகளை மறைத்து, துஷ்டத்தனத்துக்கு அடிமையாக்கும். சிலரது பேச்சுகள் மூச்சுத் திணரவைக்கும். அன்பில்லாவிட்டால் நாக்கு நயம்பட உரைக்காது. 

கேட்கக்கூடாதவைகளில் நாட்டம் கொள்ளற்க. இனியவை பேசி, மனதை இனிமையாக்கினால், பூக்களின் வாசனையாய் சொற்கள் மலர்ந்து விரியும். 

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்: மே 25

 
அ-அ+

ஒவ்வொரு வருடமும் மே 25-ந்தேதி சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 
 
 
 
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்: மே 25
 
ஒவ்வொரு வருடமும் மே 25-ந்தேதி சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1810 - ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த பியூனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுனரை வெளியேற்றினார்கள்.
 
* 1812 - இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1837 - கியூபெக்கில் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
 
* 1865 - அலபாமாவில் "மொபைல்" என்ற இடத்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர். * 1895 - போர்மோசா குடியரசு அமைக்கப்பட்டது.
 
* 1953 - நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது.

* 1955 - ஐக்கிய அமெரிக்காவில் கன்சாஸ் மாநிலத்தில் "உடால்" என்ற சிறு நகரை இரவு நேர சூறாவளி தாக்கியதில் 80 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1961 - அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அதிபர் ஜோன் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார்.
 
* 1963 - அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியம் உருவானது.
 
* 1966 - எக்ஸ்புளோரர் 32 விண்வெளிக்கு ஏவப்பட்டது.
 
* 1977 - ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது.
 
* 1979 - ஐக்கிய அமெரிக்காவின் ட்சி-10 விமானம் ஒன்று சிக்காகோவில் விபத்துக்குள்லாகியதில் அதில் பயணித்த 271 பேரும் தரையில் இருவரும் கொல்லப்பட்டனர்.
 
* 1982 - போக்லாந்து போரில் கவெண்ட்ரி என்ற ஆங்கிலக் கப்பல் மூழ்கியது.

* 1985 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
 
* 1997 - சியேரா லியோனியில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து ஆகற்றப்பட்டார்.
 
* 2000 - லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இஸ்ரேல் ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
 
* 2001 - அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
 
* 2002 - சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் கொல்லப்பட்டனர். 2002 - மொசாம்பிக்கில் ரெயில் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 197 பேர் கொல்லப்பட்டனர்.
 
Link to comment
Share on other sites

தெய்வக்குரலோன்... டி.எம்.எஸ்!


 

 

tms-deivakkuralon

 

’புலவரே. உன் பாட்டுக்கு இந்தப் பாண்டிய நாடே அடிமை’ என்று திருவிளையாடலில் டி.எஸ்.பாலையா வசனம் பேசுவார். பாண்டிய நாடான மதுரையைச் சேர்ந்த அந்தப் பாடகரின் குரலுக்கு, தமிழ் கூறும் நல்லுலகமே அடிமை என்று எப்போதும் கொண்டாடலாம். அந்தப் பாடகர்... டி.எம்.செளந்தர்ராஜன்.

சிவாஜியின் குரலை மட்டும் கேட்டால், சிவாஜியின் முகம் தெரிந்துவிடும். எம்ஜிஆரின் குரல் கேட்டால், அவர் முகமும் எதிரே வந்து நிற்கும். ஜெய்சங்கருக்கும் அப்படித்தான். நாகேஷூக்கும் அவ்விதம்தான். ஆனால் ஒருவரின் குரல்... சிவாஜியை நம் கண்ணுக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்தும். எம்ஜிஆரைப் போலவே நமக்கு எதிரே கைகள் சுழற்றிக்கொண்டிருக்கும். ஜெய்சங்கர் மாதிரியே குனிந்து, தலைவெட்டி, சிரித்து மயக்கும். நாகேஷ் போலவே நம் எதிரே வந்து அத்தனை சேட்டைகளையும் செய்யும். அந்த ஒரே குரல்... டி.எம். செளந்தர்ராஜனின் ஜிகர்தண்டாக் குரல்.

 

’இந்த நடிகர் எப்படி நடிப்பார், எவ்விதம் வாயசைப்பார் என்றெல்லாம் அறிந்துகொண்டு, அதற்கு ஏற்றார் போலப் பாடுவது என்பது சாதாரணமில்லை. பாடலை எடுத்தால்தான் படமாக்கமுடியும். அப்படி படமாக்குகிற போது, பாட்டுக்குத் தகுந்தது மாதிரி, குரலுக்கு ஏற்றது போல, நடிப்பை கொஞ்சம் முன்னும்பின்னுமாக ஆக்கிக் கொள்ளலாம். ஆனால், நடிகரி நடிப்பைக் கூர்ந்து பார்த்தால்தான் அவர் எப்படியெல்லாம் நடிப்பார் என்பதை அனுமானித்துப் பாடமுடியும். அந்த செப்படிவித்தையை, முழுவதும் கற்ற பிறவிக்கலைஞன் இவர்.

சிலசமயங்களில், கதைக்குத் தகுந்தது போல, கேரக்டருக்கு ஏற்றது மாதிரி, பாடலின் சூழலுக்கு உகந்தது போல இப்படித்தான் இருக்கணும் என்பது போல பாடிவிட்டு, பாடலையும் பாடலின் சூழலையும் சூழலில் உலாவும் நடிகர்களையும் அந்தப் படத்தையும் படத்தின் இயக்குநரையும் கூட, தூக்கிப் பிடித்து, தன் குரலின் வழியே, காற்றில் உயரப் பிடித்து அழைத்துச் செல்லும் மாயக்குரலோன் டி.எம்.எஸ் என்று எல்லோரும் புகழ்ந்து நெகிழ்ந்து மகிழ்ந்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

 ’சிந்தனை செய் மனமே...’ என்ற பாடலில் உச்சஸ்தாயியியே இல்லாமல், ஓர் அமைதியும் ஆர்ப்பாட்டமின்மையுமாய் இருக்கும். அதே ‘யாருக்காக... இந்த மாளிகை வசந்த மாளிகை’ என்று முழுவதும் மேலேயே செல்லும் அந்தப் பாடலுக்குள் தன்னைக் கரைத்து அதகளம் பண்ணிவிடுவார். ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்’ என்ற பாடலை ஏதோ சரக்கு ஏற்றிக்கொண்டு பாடுவதாகவே இருக்கும். ‘பெண்ணொன்று கண்டேன்... பெண் அங்கு இல்லை’ என்று பாடும்போது, நம்மையும் கைகள் வீசி, கால்கள் உதைத்து நீந்தவைத்து விடுவார்.

ஆபீசுக்கு பேண்ட் ஷர்ட், கல்யாணத்துக்கு ஜிப்பா வேஷ்டி, கோயிலுக்கு சட்டை வேஷ்டி என்று நாம் அணிந்துகொள்வது போல், விதம்விதமான குரல் வைத்திருக்கிறார் டி.எம்.எஸ். ‘இன்னிக்கி எம்ஜிஆருக்கு ‘உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்’ பாட்டு பாடணுமோ...’ என்று அதற்கு ஒரு குரல். ‘’மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே...’ என்று ஜெமினிக்குப் பாடுவதற்கு ஒரு குரல். ‘முல்லைமலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்று சிவாஜிக்குப் பாடவேண்டும் என்றால், அதற்கு ஒரு குரல். ‘நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்’ என்று ஜெய்சங்கருக்குப் பாடுவதற்காகவே ஒரு குரல். ‘ஏடா முத்தம்மா.. உம் மனசு எம்புட்டு.. எங்கிட்டதான் சொல்லடியம்மா... முத்துக்குளிக்க வாரீயளா...’ என்று நாகேஷூக்குப் பாடுவதற்காகவே ஒரு குரல். அதாவது, ஒரு குரலின் வழியே ஓராயிரம் பாடல்கள் பாடலாம். ஆனால் ஒரு குரலுக்குள் ஓராயிரம் குரல்களை அடக்கிவைத்து, ஏடிஎம் மிஷின் போல் எனிடைம் எல்லோருக்கும் பாட, டி.எம்.எஸ். ஒருவரால்தான் முடியும்.

சரி... நடிகர்களுக்குத் தகுந்தது மாதிரி பாடுகிறார் என்கிற வியப்பில் இருந்தே மீளமுடியாத நம்மை, காலங்களுக்குத் தக்கபடியும் பாடி நம்மை மூர்ச்சையாக்கியும் தெளியவைக்கவும் செய்திருக்கிறார்.

எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளிலும் வேறொரு குரல் குழைவுடனும் கனிவுடனும் வந்து பட்டையைக் கிளப்பினார். ‘கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை... என்று ‘எந்தன் பொன்வண்ணமே...’ என்று தனித்த ஸ்டைலில் பாடுகிற டி.எம்.எஸ்., ’அந்தப்புரத்தில் ஒரு மகராணி’, ‘சிந்துநதிக்கரையோரம் அந்தி நேரம் என் தேவன் பாடினான்...’ என்றும் ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி’ பாடலும் அதற்கு முன்னதாக ஒரு ஹம்மிங் போடுவாரே... அதுவும் என பின்னிப் பெடலெடுத்துவிடுவார்.

ஹம்மிங்கிலும் டி.எம்.எஸ். எப்போதுமே எல்லோருக்குமே அண்ணாதான். திருவிளையாடலில் ஹாங்... ஹேங்... என்று பாட்டும் நானே பாட்டுக்கு முன்பாக, கொட்டாவி விட்டது போல் ஹம் செய்வார். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற பாடலில், ம்.. ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்ம்... என்று பாடிக்கொண்டே வருவார். மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு என்பார்கள். அந்த ஜிம்மிக்ஸ் குரல், அவருக்குக் கட்டுண்டு அத்தனை வேலையையும் செய்யும்.

தெய்வமகனில் தெய்வமே... தெய்வமே... என்று பாடும்போது சும்மா உட்கார்ந்திருக்கும் நம்மை, உசுப்பிவிட்டு, ஹாலில் ஓடவிடுகிற, ஆடவிடுகிற, பாடவிடுகிற குரல் அது. ’நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்...’ என்று ஆபத்பாந்தவக் குரல் கொடுக்க அவரால் மட்டுமே முடியும். ‘அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... நண்பனே நண்பனே நண்பனே...’ என்ற பாடலில் ஒவ்வொரு வார்த்தையிலும் அந்த ஏக்கத்தையும் வலியையும் சந்தோஷத்தையும் குதூகலத்தையும் இட்டு நிரப்பிக்கொண்டே வருவார்.

’நேற்றைய பொழுது உன்னோடு, இன்றைய பொழுது கையோடு, நாளைய பொழுதும் உன்னோடு...’ என்று பாடும்போது, இவரும் இவரின் குரலும் எப்போதும் நம்மோடு இருந்துகொண்டே இருக்கும், இதம் தந்துகொண்டே இருக்கும் என்று கிறங்கிப் போனார்கள் ரசிகப் பெருமக்கள்.

’நெஞ்சே உன் ஆசை என்ன நீ நினைத்தால் ஆகாது என்ன’ என்று ரஜினிக்காகவும் ‘வடிவேலன் மனசு வைச்சான் மலரவைச்சான்...’ என்று கமலுக்காகவும் ‘சிரிப்போரும் பழிப்போரும் சேர்ந்துவந்து வாழ்த்திடவே... திருமுருகன் அருளாலே திருமணந்தேன் செஞ்சிடணும்’ என்று சிவகுமாருக்காகவும் ’நானொரு ராசியில்லா ராஜா’ என்று ஒருதலைராகம் சங்கருக்காகவும் கூடுவிட்டு கூடு, குரல்விட்டுக் குரல் என்று ஜாலம் செய்யும் மாயாஜாலக்காரன் டி.எம்.எஸ்.

’உள்ளம் உருகுதய்யா’ என்றால் உருகிவிடுவோம். ‘அழகென்ற சொல்லுக்கு முருகா’ என்றதும் கிறங்கிப் போவோம். ‘முத்தைத்திரு’ என்று அருணகிரிநாதரின் பாட்டைப் பாடும் போது, வியர்த்துப் போய் வியந்து நிற்போம். ‘அன்புள்ள மான்விழியே’ பாடலில், ‘நலம்நலம்தானா முல்லைமலரே...’ என்று சொல்லும்போதும், ‘நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிகொள்ள சுகம் மெல்லமெல்லவே புரியும்’ என்று குமரிப்பெண்ணின் உள்ளத்திலே பாடலின் வரிகளிலும் ‘பணம் என்னடா பணம் பணம்’ என்று ஹ. என்று அலட்சியம் காட்டும் போதும், ‘தம்பீ என்னத்தச் சொல்வேண்டா தம்பியோவ் என்னத்தச் சொல்வேண்டா’ என்று கேலியும் வருத்தமுமாக சொல்லும் வரிகளிலும் ‘அடி சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டிவிடவா...’ என்று அடி என்னடி ராக்கம்மா பாடலின் வரிகளிலும், ‘காதல்கிளிகள் பறந்தகாலம் கண்ணில் தெரியும்...’ என்று ஒரேபாடல் உன்னை அழைக்கும் பாடலிலும் ‘சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ...’ பாட்டின் கொஞ்சலிலும் அந்த ‘ஒருபக்கம் பாக்குறா’ வின் மொத்தப்பாடலிலும் ‘அம்ம்ம்ம்ம்ம்மாடி.... பொன்னுக்குத் தங்க மனசு’ பாடலின் அம்மாடியிலும் பாரப்பா பழநியப்பா பட்டணமாம் பட்டணமாம் என்று இழுத்து நெளித்துப் பாடுகிற வகையிலும் ‘நான் தண்ணீர்ப்பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள், நான் தன்னந்தனியே நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’ என்று தாகத்துடனும் மோகத்துடனும் தயக்கத்துடனும் பாடுகிற டி.எம்.எஸ். பிறக்கவும் இல்லாத இறக்கவும் செய்யாத அவதாரக் குரலோன். முக்கியமாக, அடி என்னம்மா ராக்கம்மா பாடலில், பாடலின் நிறைவில், ‘அடி பீப்பீப்பீ... பீப்பீப்பீ... டும் டும் டும் பீப்பீப்பீ... என்று வாய் வழியே நாகஸ்வரத்தையும் மேளத்தையும் கொண்டு வந்து, கொண்டாட்ட குதூகல மனோபாவத்தை ஏற்படுத்திவிடுவார் ஜிகர்தண்டா குரல்காரர். 

அந்த... ’நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே...’ அந்த பாட்டுக்கு தன் குரலாலும் மகுடமும் கிரீடமும் பூச்செண்டும் பூங்கொத்தும் கொடுத்து கவுரவித்திருப்பார்.

டி.எம்.எஸ், நினைவு நாள் இன்று... அவரைப் போற்றுவோம். குரலால் வாழ்ந்துகொண்டிருக்கும் அவருக்கு, அவரின் குரல் வழியே நம் மனம் தொட்ட பாடல்களைக் கேட்டு, பூரித்துச் சிலிர்ப்போம்!  

தெய்வம் மனுஷ ரூபம் என்பார்கள். டி.எம்.எஸ்.விஷயத்தில் தெய்வம் குரல் ரூபம்.

செவி இருப்பவர்கள் கேட்கக்கடவது என்றொரு வாசகம் உண்டு. செவி இருக்கிற நம் எல்லோருமே அந்த குல்கந்துக் குரலில் சொக்கித்தான் போனோம்.

டி.எம்.எஸ், நினைவு நாள் இன்று (மே 25)

http://www.kamadenu.in/

Link to comment
Share on other sites

பிட்ஸ் பிரேக்

 

21P1_1526880123.jpg

`ஆடுகளம்’ மூலம் தமிழில் அறிமுகமான டாப்ஸி இப்போது பாலிவுட்டில் பிஸி. பாலிவுட்டில் கடந்த வருடம் இவர் நடித்து வெளியான ‘ஜுட்வா 2’ வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறவே, பல ஹீரோயின்களைப் பின்னுக்குத் தள்ளி டாப் லிஸ்டில் இடம்பிடித்துப் பல படங்களில் நடித்து வருகிறார். கங்கனா ரணாவத், கத்ரீனா கைஃப் ஆகியோர் நடித்துக்கொண்டிருந்த சில விளம்பரப் படங்களும், டாப்ஸி கைவசம் வந்திருப்பதால் டாப்ஸி செம குஷி.


37p1_1526880141.jpg

மேற்கு வங்காள மயில்... மிஷ்டி,  தமிழில் ‘செம போத ஆகாத’வில் அறிமுகமாகிறார். இது அவருக்குப் பத்தாவது படம். பத்து படங்களுக்குள்ளேயே பெங்காலி, இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் என்று ஆறு மொழிகளில் தலைகாட்டியிருக்கிறார் என்பதில் மிஷ்டிக்கு ரொம்பவே பெருமிதம்.


37p2_1526880202.jpg

ன்னி லியோன் எந்நேரமும் ஜிம்மே கதியாகக் கிடப்பவர். கடந்த ஒரு மாதமாக ராப்பகலாக உடற்பயிற்சியே கதியாக இருக்கிறார்.

‘கரஞ்ஜித் கவுர் - தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னிலியோன்' என்கிற  பயோபிக், தமிழில் என்ட்ரி ஆகும் ‘வீரமாதேவி' இரண்டிலும் நடிக்கத்தான் இந்தத் தீவிர உடற்பயிற்சி.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஓரம்போ... ஓரம்போ.. மர சைக்கிள் பறந்து வருது!

25CHCycle2

நமக்கு மிகவும் பிடித்தமான பொருள், பழுதடைந்துவிட்டால் அதைத் தூக்கி எறிய மனம் வராது. அதை அப்படியே ஓர் ஓரத்தில் ‘பாதுகாப்பாக’ வைத்துவிடுவோம். சில காலம் கழித்து வேறு வழியின்றி அப்புறப்படுத்திவிடுவோம். ஆனால், தன்னுடைய செல்லமான சைக்கிள் பழுதானபோது அதைக் கிடத்தவும் இல்லை; கடாசவும் இல்லை கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த முருகேசன். தன்னுடைய சைக்கிளுக்குப் புத்துயிர் ஊட்ட முடிவெடுத்தார்.

டயர், சக்கரத்தின் ரிம், சங்கிலி, ஹாண்டில் பார், கியரைத் தவிர மற்ற பாகங்களை மரத்தால் இழைத்துத் தன்னுடைய பழைய சைக்கிளைப் புத்தம்புதியதாக மாற்றினார். கோயம்புத்தூரின் தெருக்களில் ஒய்யாரமாகத் தன்னுடைய புதிய மர சைக்கிளை அவர் ஓட்டி வருவதைப் பார்த்தவர்கள் ‘லைக்ஸ்’ போட்டார்கள். “எனக்கும் இதே மாதிரி சைக்கிள் செஞ்சு தாங்க” என்று கேட்டவர்களிடம் “இது வெறும் சைக்கிள் இல்ல ‘ஹைபிரிட் பைக்’” என்று காலரைத் தூக்கிவிட்டவர், தற்போது பத்துக்கும் மேற்பட்ட புதிய மர சைக்கிள்களைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார் முருகேசன்.

     
 

 

தச்சர் டு டிசைனர்

தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து வீட்டு உள் அலங்காரப் பணிகளைச் செய்துவருகிறார் அவர். ‘இண்டீரியர் டிசைனரான நீங்கள் மரத்தாலான சைக்கிளை வடிவமைத்தது எப்படி?’ என்று கேட்டால், “தச்சு தொழில்செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். குடும்பச் சூழலால் எட்டாவது வரைக்குதான் பள்ளிக்குப் போக முடிஞ்சது.

25CHcycle1
 

அதுக்கப்புறம் அப்படியே அப்பாவோட சேர்ந்து தச்சு வேலை செய்ய ஆரம்பிச்சுட்டேன். தச்சர் என்ற நிலையில இருந்து டிசைனர் என்ற நிலைக்கு உயரணும்னா மேலும் படிப்பு தேவைன்னு ஒரு கட்டத்துல புரிஞ்சது. பி.ஏ. அரசியல் அறிவியல் தொலைதூரப் படிப்புல சேர்ந்து படிச்சேன். ‘ஹோம் டெக்கரேட்டர்’ சான்றிதழ் படிப்பையும் படிச்சேன்.

சின்ன வயசுல இருந்தே மர வேலைப்பாடு எவ்வளவு பிடிக்குமோ அதே அளவுக்குச் சூழலியலிலும் ஆர்வம் உண்டு. எங்களுடைய பகுதியில் நடத்தப்படும் சூழலியல் சார்ந்த கூட்டங்களில் தவறாமல் பங்கேற்பேன். அப்போதுதான் ஒண்ணு தெளிவா புரிஞ்சது. காடுகளைப் பாதுகாக்க மரத்தை வெட்டாமல், அதற்கு மாற்றாக பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தும்போது மேலும் சுற்றுச்சூழலுக்குக் கேடும் விளைவிக்கிறோம்.

அதனால வீட்டு அலங்கார வேலைகளுக்குக் குறைந்த அளவில் மரம் விரயமாகும் ‘Engineered Woods’ எனப்படும் பிளைவுட்டைப் பயன்படுத்தத் தொடங்கினேன். இப்படி என்னுடைய சிறுவயதிலிருந்தே மர வேலைப்பாடுதான் என்னுடைய உலகம்கிறதால என்னுடைய ‘ஃபேவரைட்’ சைக்கிளைச் சரிபண்ணனும்னு நினைச்சப்ப உடனடியாகத் தோன்றியது மர சைக்கிள் ஐடியாதான்” என்கிறார் முருகேசன்.

25CHcyclemurugesan
 

 

தாக்குப்பிடிக்குமா?

இரண்டு நாட்களை வடிவமைப்புக்காகச் செலவழித்தவர், இரண்டு வாரத்தில் புதிய மர சைக்கிளை உருவாக்கிஇருக்கிறார். கிட்டத்தட்ட ரூ. 25 ஆயிரம் செலவில் தயாரான அவருடைய மர சைக்கள் பார்ப்போரைக் கவர்கிறது. ஆனாலும் சைக்கிளுக்கு இவ்வளவு தொகை செலவழிக்க வேண்டுமா, அதுவும் மரமாச்சே வெயில், மழைக்குத் தாக்குப்பிடிக்குமா?

“இது மரத்தாலான சைக்கிளாக இருந்தாலும் ‘weather coating’ கொடுக்கப்பட்ட பிளைவுட் கொண்டுதான் உருவாக்கியிருக்கிறேன். அதனால, தாராளமாக எல்லாத் தட்பவெட்பத்துக்கும் தாக்குப்பிடிக்கும். இன்னொன்று, மர சைக்கிள் ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளில் பிரபலம். ஆனால், கிட்டத்தட்ட ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 1.5 லட்சம்வரை விலைக்கு அங்கே மர சைக்கிள்கள் விற்கப்படுகின்றன.

சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு அங்குப் பரவலாக இருப்பதால நல்ல வரவேற்பும் உள்ளது. இந்தியாவிலும் சில நிறுவனங்கள் ரூ. 40 ஆயிரத்துக்கு மர சைக்கிளை விற்பனை செய்கின்றன. இதெல்லாம் அடிப்படையா வெச்சு நம்ம ஊருக்கு ஏற்றமாதிரி ரூ.18 ஆயிரம்வரை செலவில் மர சைக்கிளை உருவாக்கிவருகிறேன்” என்கிறார்.

தன்னுடைய சைக்கிளை ‘ஹைப்ரிட் பைக்’ என்று அழைக்கக் காரணம், இது ஏழு கியர் கொண்டது, எஃகுவுக்குப் பதிலாக ஸ்டீலால் ஆனது, எடை குறைவு, இருக்கையின் உயரத்தை ஒரு ‘கிளிக்’கில் கூட்டிக் குறைத்துக்கொள்ளலாம், முன் சக்கரத்தையும் பின் சக்கரத்தையும் எளிதில் கழற்றி மாட்டலாம்....இப்படி ஏகப்பட்ட வசதிகள் உள்ளன என்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னுடைய மர சைக்கிள் சமதளமான தார் ரோட்டில் மட்டுமல்ல, மலையேற்றத்துக்கும் தாக்குப்பிடிக்கும் என்று அடித்துச் சொல்கிறார் இந்த ‘சைக்கிள் சயின்டிஸ்ட்’.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்

வரலாற்றில் இன்று….
மே 25

நிகழ்வுகள்

1659 – ரிச்சார்ட் குரொம்வெல் இங்கிலாந்தின் “ஆட்சிக் காவலர் பெருமகன்” (Lord Protector) பதவியைத் துறந்தார். பொதுநலவாய இங்கிலாந்தின் இரண்டாவது குறுகிய கால அரசு ஆரம்பமானது.
1810 – ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த பியூனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுனரை வெளியேற்றினார்கள்.
1812 – இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் கொல்லப்பட்டனர்.
1837 – கியூபெக்கில் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
1865 – அலபாமாவில் “மொபைல்” என்ற இடத்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1895 – போர்மோசா குடியரசு அமைக்கப்பட்டது.
1953 – நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது.
1955 – ஐக்கிய அமெரிக்காவில் கன்சாஸ் மாநிலத்தில் “உடால்” என்ற சிறு நகரை இரவு நேர சூறாவளி தாக்கியதில் 80 பேர் கொல்லப்பட்டனர்.
1961 – அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அதிபர் ஜோன் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார்.
1963 – அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியம் உருவானது.
1966 – எக்ஸ்புளோரர் 32 விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1977 – ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது.
1979 – ஐக்கிய அமெரிக்காவின் ட்சி-10 விமானம் ஒன்று சிக்காகோவில் விபத்துக்குள்லாகியதில் அதில் பயணித்த 271 பேரும் தரையில் இருவரும் கொல்லப்பட்டனர்.
1982 – போக்லாந்து போரில் கவெண்ட்ரி என்ற ஆங்கிலக் கப்பல் மூழ்கியது.
1985 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1997 – சியேரா லியோனியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து ஆகற்றப்பட்டார்.
2000 – லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
2001 – அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
2002 – சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – மொசாம்பிக்கில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 197 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1458 – மஹ்மூத் பேகடா, குஜராத் சுல்தான் (இ. 1511)
1865 – பீட்டர் சீமன், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1943)
1866 – மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (இ. 1947)
1878 – சோமசுந்தரப் புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1953)
1918 – நா. முத்தையா, ஆத்மஜோதி இதழாசிரியர் (இ. 1995)
1933 – அநு. வை. நாகராஜன், ஈழத்து எழுத்தாளர்
1954 – முரளி, மலையாள நடிகர் (இ. 2009)

இறப்புகள்

19?? – சி. வைத்திலிங்கம், ஈழத்து சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர்.
1988 – ஏர்ணஸ்ட் ருஸ்கா, ஜெர்மனிய இயற்பியலாளர் (பி. 1906)
2005 – சுனில் தத், இந்திய நடிகர், அரசியல்வாதி (இ. 1929)
2013 – டி. எம். சௌந்தரராஜன் தமிழ்த் திரைப்படப் பாடகர், (பி. 1923)

சிறப்பு தினம்

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்
ஆர்ஜென்டீனா – மே புரட்சி தினம்
சாட், லைபீரியா, மாலி, மவ்ரித்தானியா, நமீபியா, சாம்பியா, சிம்பாப்வே – ஆபிரிக்க விடுதலை தினம்
லெபனான் – விடுதலை தினம் (2000)

http://metronews.lk

Link to comment
Share on other sites

 

இஸ்ரேலில் உள்ள மின் நிலையத்தில் இருந்து கடலில் கலக்கும் வெப்பமான நீரைத் தேடி ஏராளமான சுறா மீன்கள் வருகின்றன. கருத்தரித்த நிலையில் காணப்படும் அந்த சுறாக்களுக்கு அந்த கடல் பகுதி, ஆரோக்கியமான நீராவிக் குளியலிடமாக விளங்கி வருகிறது.

Link to comment
Share on other sites

‘உழைப்புக்குக் கௌரவம் கொடுப்பது மானுட தர்மம்’
 

image_f80b82e39b.jpgமிகவும் கொடுமையான விடயம் ஏழைகளுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அள்ளியள்ளிக் கொடுப்பதேயாகும். வசதியிருந்தால் எதையும் பேசலாம் என எண்ணி, நலிந்தோர் உதவி கேட்டால், அவர்களைத் துச்சமென எண்ணி, ஆசை வார்த்தைகளைப் பேசி, நம்பவைத்தல் இறைவனையே அவமானப்படுத்தல் போன்றதுதான். 

ஒருவரிடம் வேலை வாங்கக் காசைக் கொடுக்காமல், பொய்யான வார்த்தைகளைக் கொடுக்கும் ஏமாற்று வித்தகர்கள், போக்கிரிகள். 

உழைப்புக்குக் கௌரவம் கொடுப்பது மானுட தர்மம். ஒருவர் உழைப்பில் அவர்கள் குடும்பம் வாழ்கின்றது. சற்றேனும் சிந்திக்காமல் கொத்தடிமைகளாக புரியாத இடம், இனம் தெரியாத நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.

பணத்தையும் உழைப்பையும் பிடுங்கி, பிணமாகவும் அனுப்பப்படுவது கொடுமை. எத்தர்கள் பேச்சால், அல்லலுறுகின்றனர் பாமரர்கள். தேகம் கெட்டுத் தேய்ந்து, சொந்த மண்ணின் தொடர்பைக் கழற்றி விடுவதை நிறுத்தப் போவது எப்போது?

Link to comment
Share on other sites

அண்ணாந்து பார்க்கும் மாளிகை கட்டி... அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி...

புகைப்படக்கலைஞர் ஜானி மில்லர் தென்னாப்பிரிக்காவில் உள்ள நகரங்களில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ’டிரோன்’ கேமராக்கள் மூலம் முதலில் படம் பிடித்தார்.

பின்னர் மெக்சிகோ சிட்டி, மும்பை, நைரோபி, டெட்ராய்ட் உள்ளிட்ட உலகின் பிற நகரங்களையும் அவ்வாறே படம் பிடித்தார்.

டிரோன் மூலம் காட்சிப்படுத்தப்படும் புகைப்படங்கள் மூலம் நகரங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வை உணர முடிவதாக அவர் கூறுகிறார்.

"நமது சமூகத்தில் இருக்கும் சமத்துவமின்மை ஒளிந்து கிடக்கிறது. அதை தரையில் இருந்து பார்க்க முடியாது. நிலத்தில் உள்ள தடுப்புகள் நகரங்களில் நிலவும் அதீத பொருளாதார வேறுபாடுகளை பார்க்க விடாமல் செய்கின்றன," என்கிறார் அவர்.

Aerial photo of large colonial residences in Oyster Bay, South Africa and neighbouring poor settlement

 

ஒரு புறம் பசுமை நிறைந்த குடியிருப்புகள், மறுபுறம் நெரிசல் மிக்க குடில்கள். ஆய்ஸ்டர் பே, ஈஸ்டர்ன் கேப், தென்னப்பிரிக்கா.

Aerial shot of contrasting rich and poor neighbourhoods in Nairobi, Kenya.

 

கென்யா தலைநகர் நைரோபியில் சாலையோரம் அமைந்துள்ள அடுக்கு மாடி கட்டடங்களும், அவற்றின் பின்னே மறைந்துள்ள வளர்ச்சியற்ற குடியிருப்பும்.

An aerial shot of Lake Michelle, a wealthy gated estate in Cape Town, South Africa, and a poorer community, Masiphumelele.

 

வலதுபக்கம் இருப்பது வசதி மிக்க லேக் மிஷேல் குடியிருப்பு. இடதுபக்கம் இருப்பது மசிபுமெலேலே எனும் ஏழைகளின் வாழ்விடம். கேப்டவுன், தென்னாப்பிரிக்கா.

Aerial shot showing contrasting rich and poor neighbourhoods in Santa Fe, Mexico City, Mexico.

 

ஒருபுறம் வளர்ச்சியின்மை, மறுபுறம் ஆடம்பர கட்டடங்கள். இரண்டுமே மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில்தான் உள்ளன.

Skyscrapers contrast with informal dwellings in Mumbai, India

 

மும்பை நகரின் அடுக்கு மாடிக் கட்டடங்களின் அருகே நீல நிற தார்பாலின்களை வைத்து மழையில் இருந்து தங்களை காத்துக்கொள்ளும் குடிசை வாசிகள்.

Aerial view of Kya Sands/Bloubosrand, Johannesburg, South Africa, showing a great disparity of wealth.

 

தென்னாப்பிரிக்காவின் ஜோஹனன்ஸ்பெர்க் நகரில் வளர்ச்சியையும் வறுமையையும் பிரிப்பது ஒரு சாலை மட்டுமே.

An aerial view of Detroit, Michigan, showing contrasting neighbourhoods

 

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரின் சீரற்ற வளர்ச்சியை காட்டும் புகைப்படம்.

 

 

https://www.bbc.com

Link to comment
Share on other sites

விராட் கோலியின் சவாலை ஏற்ற மோடி...`ஸ்பைடர்மேன் ப்ளாங்க்’ - அப்படி என்ன ஸ்பெஷல்?

 
 

ணையத்தில் ஒருவர், இன்னொருவருக்கு வீடியோ மூலமாகச் சவால்விடுவதுதான் இப்போது ட்ரெண்ட். ஒருவர், `இது உங்களால் முடியுமா?’ என்று சவால்விட, மற்றவர் அதைச் செய்து காட்டிவிட்டு, `நான் முடித்துவிட்டேன், இதையே 'இன்னொருவருக்கு'ச் சவாலாகவிடுகிறேன்' என்று கூறி, சம்பந்தப்பட்ட நபரை `டேக்' செய்வார்கள். இந்தப் பழக்கம் கடந்த சில மாதங்களாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பிரபலமாகிவிட்டது. இது, சில பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. இந்தச் சவால் ஆரோக்கியம் தொடர்பாகவும் இருப்பது நல்ல போக்கு.

 

விராட் கோலி

ட்விட்டரில் இரு தினங்களுக்கு முன்னர், இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஒரு பயிற்சியை வீடியோவில் செய்து காட்டி, பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன், விராட் கோலி, சாய்னா நேவால் ஆகியோரை டேக் செய்து, அவர்களும் செய்ய வேண்டுமென்று சேலஞ்ச் செய்திருந்தார். ஏற்கெனவே ஃபிட்னெஸில் அதிக ஆர்வம் கொண்ட விராட் கோலி, நேற்று முன் தினம் அதைச் செய்து முடித்துவிட்டு, தன் பங்குக்கு அனுஷ்கா சர்மா, தோனி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு சேலஞ்ச் செய்திருந்தார். மோடி இந்த சேலஞ்சை ஏற்றுக்கொள்வதாக நேற்று பதில் கூறியிருக்கிறார். விராட் செய்த பயிற்சியின் பெயர், `ஸ்பைடர்மேன் ப்ளாங்க்' (Spiderman Plank). பிருந்தா, பிஸியோதெரபிஸ்ட்

" `ப்ரோன் ப்ளாங்க்' (Prone Plank) எனப்படும் ப்ளாங்க் வகைப் பயிற்சியின் நீட்சிதான் இது. உடல் எடையைக் கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கும், கலோரிகளைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் இது உதவும். இந்தப் பயிற்சியை வார்ம்-அப் பயிற்சியாகவோ, அன்றாடப் பயிற்சிகளில் ஒன்றாகவோ தினமும் செய்யலாம். இடுப்புக்கு மேலிருக்கும் பகுதிகளுக்கும், வயிற்றுப் பகுதிக்கும் இந்தப் பயிற்சி வலு சேர்க்கும்; முக்கியமாக இதயச் செயல்பாடும் ரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவும்.

எப்படிச் செய்வது?
* தரையில் குப்புறப் படுத்துக்கொண்டு, முழங்கை மடித்து ஊன்றி, கால் விரல்களையும் ஊன்றி, உடலை மேல்நோக்கி உயர்த்தவும். தரையிலிருந்து உடல் பகுதி முழுவதும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். 

* அடுத்ததாக, வலது பக்க கை மூட்டுக்கு அருகில், வலது பக்க காலைக் கொண்டு வர வேண்டும். பிறகு, காலை பின்னுக்கு இழுக்கவும். இதேபோல, இரண்டு கால்களிலும் செய்யலாம். கால் மூட்டு, கையின் மூட்டைத் தொடுவதுதான் இந்தப் பயிற்சியின் அடிப்படை. இந்தப் பயிற்சியை நன்கு பழகிவிட்டவர்கள், கால் மூட்டு கையின் மேல்பகுதியைத் தொடும்வரை உயர்த்தலாம்.

ப்ளாங்க்

* ஒரு பயிற்சிக்கு 15 முதல் 30 விநாடிகள் வரை நேரம் எடுத்துக்கொண்டு, 10 முதல் 15 முறை செய்யலாம். 


நன்மைகள்:

வொர்க்-அவுட் செய்பவர்கள், ஒவ்வொரு பயிற்சியும் எந்தெந்தப் பகுதிகளுக்கானது என்பதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.  

* ஸ்பைடர்மேன் ப்ளாங்க் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால், உடல் எடை சீராகும்; வயிற்றைச் சுற்றியிருக்கும் தசைகள் வலுப்பெறும்; அந்தப் பகுதியிலுள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரையும். உடலின் முன்புறம் மட்டுமல்லாமல், பின்புறத்துக்கும் இந்தப் பயிற்சி மிகவும் நல்லது. சீரான உடலமைப்பு கிடைக்கும். 

*  விளையாட்டு வீரர்களுக்கு, ப்ளாங்க் சிறந்த பயிற்சி. குறிப்பாக, ஓடுபவர்களுக்கும், கால்பந்து வீரர்களுக்கும்.

* எளிதில் சோர்வடைபவர்கள் இந்தப் பயிற்சியை தினமும் காலையில் செய்துவந்தால், புதுத் தெம்பைப் பெறலாம். தினசரி வேலைகளைப் புத்துணர்வோடு செய்ய இந்தப் பயிற்சி உதவும்.

* பின் முதுகுவலிக்கு, இந்தப் பயிற்சி மிகச் சிறந்த தீர்வு. 

ப்ளாங்க்

ப்ளாங்க் செய்வதற்கு, மூச்சுப் பயிற்சி அடிப்படை. ப்ளாங்க் செய்யத் தெரியாதவர்கள், `ஸ்பைடர்மேன் ப்ளாங்க்' செய்ய பரிந்துரைக்கப்படுவதில்லை. `ப்ரோன் ப்ளாங்க்' என்ற ப்ளாங்க் வகைப் பயிற்சியைச் செய்து, நன்கு பழக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே, ஸ்பைடர்மேன் ப்ளாங்க் எளிய பயிற்சியாக இருக்கும். யோகா, பைலேட்ஸ் (Pilates), க்ராஸ் ஃபிட் (Cross Fit) அனைத்திலும், அதன் பயிற்சிமுறைகளுக்கு ஏற்ப, சில மாற்றங்கள் செய்து பரிந்துரைக்கப்படும். 

பொதுவாகவே எந்தப் பயிற்சியையும், வெகுநாள்களுக்குத் தொடரக் கூடாது. குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பயிற்சியையும், முடிந்தால் பயிற்சி முறைகளையும் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், குறிப்பிட்ட தசைக்கு மட்டும் பயிற்சிக் கொடுப்பதும், குறிப்பிட்ட தசைக்குப் பயிற்சியே கொடுக்காமல் இருப்பதும் தசைப் பிரச்னைகளை ஏற்படுத்தும். வயிற்றின் அடிப்பகுதிக்காகப் பயிற்சிகளை மட்டும் செய்பவர்கள் (சிட்-அப்ஸ்), கூடவே முதுகு மற்றும் பின் தொடைக்கான பயிற்சியையும் செய்ய வேண்டும். ப்ளாங்க் செய்யும்போது இவை எதுவும் வருவதில்லை. காரணம், இதைச் செய்யும்போது உடலின் முன், பின் பக்கங்கள் இரண்டுமே செயல்படும்; அனைத்துத் தசைகளும் ஆக்டிவ்வாக இருக்கும். இதனால்தான் இந்தப் பயிற்சியை அன்றாடப் பயிற்சிகளோடு சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள்’’ என்கிறார் பிசியோதெரபிஸ்ட் பிருந்தா.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

இன்பாக்ஸ்

 

70p1_1526880906.jpg

‘No Smoking’  படத்தின் மூலம் பாலிவுட்டையும் தாண்டி, கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அனுராக் காஷ்யப்.. பல வருடங்களாக செயின் ஸ்மோக்கர். இப்போது புகைப்பழக்கத்தை விட்டுவிட்டு ஜிம்மே கதியாகக் கிடக்கிறார். காரணம் கல்யாணம். தன் உதவி இயக்குநர் சுப்ரா ஷெட்டியோடு காதலில் இருக்கும் அனுராக், விரைவில் சுப்ராவை மணமுடிக்கப்போகிறார். அதற்குத்தான் இந்த மேக் ஓவர். வாழ்த்துகள் அனு-சுப்ரா!


70p2_1526880949.jpg

மீர்கான் நடித்த ‘டங்கல்’ படம் மூலம் புகழ்பெற்றவர்கள் `போகட் சகோதரிகள்’. கீதா, பபிதா, ரிது, சங்கீதா என்கிற இந்த நான்கு மல்யுத்த வீராங்கனைகளுக்கும் ஆசியப்போட்டிக்கான இந்திய கேம்ப்பில் கலந்துகொள்ள தடை விதித்துள்ளது இந்திய மல்யுத்த சம்மேளனம். ஒழுங்கீன நடவடிக்கைகளே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தமுறை ஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மல்யுத்த சம்மேளனம் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சிகொடுத்திருக்கிறது. கவனமா இருங்கம்மா!


70p3_1526880962.jpg

ங்கிலாந்து இளவரசர் ஹாரியின் திருமணத்துக்கு மும்பையின் டப்பாவாலாக்கள் வித்தியாசமான பரிசை வாங்கி அனுப்பியிருக் கிறார்கள். டப்பாவாலாக்கள் எல்லாம் இணைந்து ஹாரிக்கு அழகான தலைப்பாகையையும், மணமகள் மேகனுக்கு மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற பைத்தானி சேலை ஒன்றையும் வாங்கி அனுப்பி அசத்தி யிருக்கிறார்கள். இவைகளோடு தாலி ஒன்றையும் வாங்கி அனுப்பியது தான் ஹைலைட்டே. சென்டிமென்ட் முக்கியம்


70p4_1526880977.jpg

ணிரத்னத்திடம் இயக்கம் கற்கிறார் இசைப்புயல்!  இந்த ஆண்டுக்குள் பன்மொழிகளில் தயாராகவுள்ள படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இது எல்லோருக்குமான யுனிவர்சல் கதையாம். விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் வெளியாகவுள்ளது! இயக்கப்புயல்!


70p5_1526880991.jpg

போட்டி ஒன்றின் முடிவில் கே.எல்.ராகுலும் ஹர்திக் பாண்டியாவும் சட்டைகளைக் கழட்டி மாற்றிக் கொண்டதுதான் சென்ற வாரத்தின் ஐபிஎல் வைரல். இரண்டு அணி களுக்குமான நட்பை வெளிப் படுத்தும்படி இப்படி ShirtSwap செய்து கொள்வது கால் பந்தாட்டத்தில் ரொம்ப பிரபலம். முதன்முறையாக அதை கிரிக்கெட்டில் செய்துகாட்டி ‘நாங்க கிரவுண்ட்லதான் எனிமி... வெளியே நண்பர்கள்’ எனப் புன்னகைத்திருக்கிறார்கள் இந்த புதிய இளைஞர்கள்! கழட்ரா சட்டைய!


70p6_1526881004.jpg

டிகை சாவித்திரியின் பயோபிக் ஹிட்டடிக்கவும், அடுத்து திரைப்படமாகப் போகிறது மறைந்த நடிகை சௌந்தர்யாவின் கதை. தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி எனப் பல மொழிப் படங்களிலும் நடித்த சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாறைத் தயாரிக்க முடிவு செய்தி ருக்கிறார் டோலிவுட் தயாரிப்பாளர் ராஜ் குண்டுகுரி. மறக்கமுடியாத சிந்தாமணி!


70p7_1526881015.jpg

‘நேஷனல் ஜியாகிரபிக்’ இதழின் சமீபத்திய கவர் போட்டோவை உலகமே புகழ்ந்து தள்ளுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளால் நம்முடைய கடல் எந்த அளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும்படி உருவாக்கப்பட்டிருந்தது இந்த அட்டைப்படம். இதை வடிவமைத்த மெக்ஸிகோவைச் சேர்ந்த ஜோர்ஜ் கம்பாவோவுக்கு உலகெங்கும் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன! மலைக்கவைக்குது!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

‘தாய்’ எனும் அற்புதம்!

 

 
25chncaWatTrimitr

பெயரைக் கேட்டவுடனேயே சட்டென்று ஒரு நெருக்கம் நம் மனத்தில் வந்து ஒட்டிக்கொள்கிறது. தமிழில் போற்றப்படும் வார்த்தையை, பெயரின் முன்பகுதியாகக் கொண்டது இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்தியர்கள் அதிகம் சுற்றுலா செல்லும் நாடுகளில் தாய்லாந்து முக்கியமானது. 3 மணி நேரத்தில் சென்றுவிடக்கூடிய தொலைவில் இருக்கும் தாய்லாந்து, நில அமைப்பிலோ தட்பவெப்ப நிலையிலோ பெரிய மாற்றங்களைக் கொண்டிருக்காவிட்டாலும் கலை, கலாச்சாரம், ஆண்-பெண் சமத்துவம், கேளிக்கைகள் போன்றவற்றில் வித்தியாசமானது.

 

புலிக்குப் பால் புகட்டலாம்

   
 

தலைநகர் பாங்காக் விமான நிலையத்தில் கால் பதித்து, அங்கிருந்தே கடற்கரை நகரான பட்டாயாவை நோக்கிப் பயணப்படத் தொடங்கினோம். இரண்டு நகரங்களுக்கு இடையில் சீனப் பெருஞ்சுவர்போல் மைல் கணக்கில் நீண்டிருந்த பாலத்தில் பயணம் செய்தது சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருந்தது. 2 மணி நேரத்துக்குப் பிறகு ரச்சா வேங்கைப் புலிப் பூங்காவுக்குள் நுழைந்தோம். இங்கே கண்ணாடிச் சுவருக்கு அந்தப் பக்கம் இருக்கும் புலிகளின் கொஞ்சல், சண்டை, சோம்பல் முறித்தல் போன்றவற்றை ரசித்தபடியே காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டோம்.

இங்கே புலிக் குட்டியை மடியில் வைத்துப் பால் புகட்டி, ஒளிப்படம் எடுத்துக்கொள்வதற்குக் கட்டணம் அதிகம். ‘புலிக்கே பால் கொடுத்த சாதனையாளர்’ என்று சரித்திரத்தில் இடம்பெறுவதற்கு இந்தக் கட்டணம் எல்லாம் தூசு என்று பலரும் நினைக்கிறார்கள்!

 

மிதக்கும் சந்தைகள்

தாய்லாந்து என்றவுடன் நினைவுக்கு வருவது ‘மிதக்கும் சந்தை’ (ஃபுளோட்டிங் மார்க்கெட்). இங்கே ஆறு, கழிமுகம் போன்றவற்றில் சிறிய படகுகளில் மக்களைத் தேடிவந்து வியாபாரம் செய்கிறார்கள். சில படகுகளில் சுடச்சுட உணவும் காபி, தேநீர், பழச்சாறு போன்றவையும் கிடைக்கின்றன.

மறுநாள் பவழத் தீவு (கோரல் ஐலாண்ட்) நோக்கிப் புறப்பட்டோம். பயணப்பட்டது ஸ்பீட் போட் என்பதால், படகின் வேகம் சற்றுத் திகிலை அளித்தது. கடலுக்குள் இருந்து பட்டாயா நகரைப் பார்க்கும் காட்சி முற்றிலும் புதிய அனுபவத்தைத் தந்தது.

பவழத் தீவில் பார்த்தது போன்ற மணலை இதுவரை வேறெங்கும் பார்த்ததில்லை! வெள்ளை நிறத்தில் மாவுபோல் மெல்லிய மணல் துகள். அமைதியான குளம்போல் நிற்கும் நீலக் கடலில் மணிக்கணக்கில் மக்கள் நீந்துகிறார்கள். கரைகளில் ஓய்வெடுக்கிறார்கள். சாப்பிடுகிறார்கள்.

2jpg

100

 

 

அலைத் தாலாட்டில் விருந்து

பாங்காக்கில் உள்ள சாவோ பிரயா மிக நீளமான நதி. இரவும் பகலும் நதி பரபரப்பாக இருக்கிறது.

சிறிய கப்பல்களில் இரவு உணவு சாப்பிடும் நிகழ்ச்சி சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் ஏறியவுடன் கப்பல் நகர ஆரம்பிக்கிறது. இதமான தென்றல் காற்றின் தழுவலுடன் இருளில் தண்ணீர் மீது பயணிப்பது பிரமாதமாக இருக்கிறது. தூரத்தில் தெரிந்த ஆலயங்கள் பொன் நிறத்தில் ‘தகதக’வென்று ஜொலித்துக்கொண்டிருந்தன!

 

பிரம்மாண்ட மால்

மால்கள் என்ற பெயரில் ஒரு கட்டிடத்துக்குள் ஏராளமான கடைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஓர் ஊரே பிரம்மாண்டமான கட்டிடங்களுக்குள் இருப்பதை தாய்லாந்தில் பார்க்க முடிந்தது. மலர்கள், காய்கள், கனிகள், இறைச்சி அங்காடிகளில்கூடச் சிறு அழுக்கையோ துர்நாற்றத்தையோ பார்க்கவோ முகரவோ முடியவில்லை. எவ்வளவு பேர் வந்து சென்றாலும் தரையிலும் சுவர்களிலும் அவ்வளவு பளபளப்பு. ஒவ்வொரு பொருளுக்கும் தனித் தனிப் பகுதி. ஒரு தளம் முழுவதும் துணி வகைகள். முழு ‘மாலை’யும் சுற்றிப் பார்க்க குறைந்தபட்சம் ஒன்றிரண்டு நாட்கள் தேவைப்படும்!

 

புத்தர் ஆலயம்

தாய்லாந்தில் பெரும்பான்மையானவர்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள். எங்கே பார்த்தாலும் புத்தர் ஆலயங்கள். பஆலயத்தைச் சுற்றியிருக்கும் பிராகாரத்தில் 64 பளிங்கு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. புத்தரைச் சற்று உற்றுப் பார்த்தாலே இது எந்த நாட்டுப் புத்தர் என்பதைச் சொல்லிவிடும் அளவுக்கு, அந்தந்த நாட்டு மக்களைப் போலவே புத்தர் சிலைகள் வடிக்கப்பட்டிருக்கின்றன.

 

கூண்டுக்கு வெளியே

மனிதர்களால் பயிற்சியளிக்கப்பட்டு சாகசங்கள் நிகழ்த்திக் காட்டும் விலங்குகளைவிட தாய்லாந்தில் திறந்தவெளிகளில் இயற்கையாக விடப்பட்ட விலங்குகளும் பறவைகளும் கூடுதல் மகிழ்ச்சியளித்தன. பாதுகாப்பான வாகனத்துக்குள் அமர்ந்தபடி சுதந்திரமாகச் சுற்றித் திரியும் விலங்குகளையும் பறவைகளையும் பார்த்தபோது, சிலிர்ப்பாக இருந்தது.

 

‘தாய்’ பணியாரம்

மிதக்கும் சந்தையில் கரை முழுவதும் இருந்த உணவகங்களில் சுவைத்த தாய் குழிப் பணியாரத்தின் சுவையை இன்றுவரை மறக்க முடியவில்லை. நூறு பணியாரங்கள் ஒரே நேரத்தில் பிரம்மாண்டமான கல்லில் வேகும் காட்சியே ரசிப்பதற்குரியதாக இருந்தது. பணியாரத்தைப் பிய்த்தால் உள்ளுக்குள் இருந்து அடர்த்தியான தேங்காய்ப் பால் வெளிவருகிறது. வேகவைத்த பணியாரத்துக்குள் திரவப் பொருள் எப்படிச் சாத்தியம் எனத் தெரியவில்லை. ஆனால், சுவை அசத்தல்.

தாய்லாந்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மா. மாம்பழத் துண்டுகளும் பெரிய அரிசிச் சாதமும் சேர்த்துச் சாப்பிடுவதை இங்கே விரும்பாதவர்களே இருக்க முடியாது. வாழைப் பழமும் அரிசிச் சாதமும் சேர்த்து, இலையில் சுற்றி வேகவைத்த புது உணவு அட்டகாசமாக இருந்தது. உலர் பழங்கள், பருப்புகள், ஜெல்லி, பால் சேர்த்த ஜில்லென்ற தேநீர் தாய்லாந்தின் ஸ்பெஷல்! ஒரு பெரிய டம்ளரில் வாங்கினால் ஒரு குடும்பமே குடிக்கலாம்!

 

1jpg
தூங்கா நகரம்

பாங்காக்கில் பகலைவிட இரவே கூடுதல் பரபரப்பாகக் காணப்படுகிறது. மளிகைக் கடைகளிலிருந்து மால்கள்வரை திறந்திருக்கின்றன. பேருந்துகளும் டாக்சிகளும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஆண்களும் பெண்களும் பகலைப் போலவே இரவிலும் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். தாய்லாந்தின் புகழ்பெற்ற மசாஜ் பார்லர்கள் இரவு ஒரு மணிவரை திறந்திருக்கின்றன. இரவு நேரத்திலும் பெண்கள் வேலைக்கு சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்புகிறார்கள்.

அந்நிய நாட்டில், நள்ளிரவில், மொழி தெரியாத ஊரில், கேளிக்கை விடுதிகள் மிகுந்திருந்த நகரில் பெண்கள் மட்டும் தனியாகச் சுற்றியதை எங்களால் நம்பவே முடியவில்லை! நிச்சயம் இந்தியாவின் எந்த நகரிலும் இப்படி ஓர் உலா செல்வதை கற்பனைகூடச் செய்துபார்த்திருக்க மாட்டோம். இரவு பெண்களுக்கும் உரியது என்பதை அங்கே முதல்முறையாகப் புரிந்துகொண்டோம். அந்த வகையில் தாய்லாந்து சுற்றுலா மறக்க முடியாத வாழ்நாள் அனுபவமாக மாறிவிட்டது!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

விக்டோரியா மகாராணிக்கு விசிறியான தாளிப்பனை மரம்... சுவாரஸ்யத் தகவல்கள்!

 

``நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பனை மரம் பூக்கிறது" என்ற வாசகத்துடன் கூடிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில்  கடந்திருப்போம். உண்மையில் என்ன வகையான பனை மரம் என்று அதிகமானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் சிலரோ பனை மரம் பூக்கிறது என்பதையும் ஏற்க மறுக்கிறார்கள். உண்மையிலேயே பனை பூக்குமா? அது என்ன வகையான பனை மரம் என்ற தேடலில் இறங்கியபோது தாளிப்பனை பற்றி கிடைத்த தகவல்கள் ஆச்சர்யமளித்தன.

தாளிப்பனை

 

பனை மரத்தில் ஆண், பெண் என இரண்டு வகைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 34 வகையான பனை மரங்கள் உலகில் இருக்கின்றன. அதில் தாளிப்பனை பூக்கும் இனத்தைச் சார்ந்தது. இதை கூந்தல் பனை, காலிப்பனை, விசிறிப்பனை கூந்தற்பனை, தாளி, தாளம், சீதாளி, சீதாளம், தேர்ப்பனை, ஈரப்பனை, ஆதம் குடைப்பனை என்ற பெயர்களாலும் இடத்துக்கு ஏற்ற வகையில் அழைப்பது உண்டு. உலகிலேயே மிகவும் பெரிய பனைமர வகை தாளிப்பனை. வளர்ந்த ஒரு மரம் 25 மீ உயரமும் 1.3 மீ அகலமும் கொண்டது. இதன் இலைகள் 5 மீ விட்டமும் கிட்டத்தட்ட 130 சிறிய இலைகளையும் கொண்டிருக்கும். இப்பனை பெரிய பூவை மலரச் செய்கிறது. இப்பூக்கள் 6 – 8 மீ உயரத்தில், பல லட்சக்கணக்கான தனி மலர்களைக் கொண்டிருக்கும். தாளிப்பனையில் இருந்துதான் எழுதும் ஓலைச்சுவடிகளும் தயாரித்திருக்கின்றனர். இந்த வகை பனை மரங்கள் வளர்வதற்கு உரம், பூச்சிக் கொல்லி மருந்து எடையும் தெளிக்கத் தேவையில்லை. தானாக வளரும் பனையில் நுங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனை வெல்லம் உள்ளிட்ட உணவு பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை சிறுநீரகக் கோளாறு, உடலில் ஏற்படும் கொப்பளம் போன்றவைக்கு மருந்தாக விளங்கி வருகின்றன.  தாளிப்பனை மரமானது 70 ஆண்டுகளில் முதிர்ச்சி பெற்றுவிடும். பூக்கள் பூத்து கொத்துக் கொத்தாக காய்கள் பிடித்து, ஆறு மாதங்களுக்குப் பின்னர் அழிவைச் சந்திக்கும். இப்பூக்கள் காய்ந்து வெடித்துச் சிதறும்போது, பல்வேறு வகையான ஒலி ஏற்படும்

இதன் தாவரவியல் பெயர் ‘கோர  சாசு‘. சாதாரண பனை மரத்தின் ஓலைகள் போலத்தான் தாளிப்பனையின் ஓலைகளும் இருக்கின்றன. இந்த வகை மரங்கள் அதிகபட்சமாக 120 ஆண்டு வரை வளரும். 40 முதல் 70 ஆண்டுகளுக்கு மேல்தான் பூக்கும் தன்மையைப் பெறுகிறது. தாளிப்பனை மரங்களில் பூக்கும் பூவானது வெள்ளை நிறத்தில் பெரிய அளவில் காணப்படும். இந்த மலர் நன்றாக விரிந்து பால் போன்ற ஒருவித மணம் வீசுகிறது. மரத்தின் உச்சிப் பகுதியில்தான் பூவைப் பார்க்க முடியும். இதன்  ஓலைகள் தொப்பி, விசிறிகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண பனை மரம் வருடத்துக்கு ஒரு முறை காய்க்கும். ஆனால், அரிய வகையான தாளிப்பனை வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே காய்க்கும். காலப்போக்கில் தாளிப்பனை இனம் அழிவைச் சந்தித்து வருகிறது. தற்போது, தென்னிந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே இம்மரம் இருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கையில் தாளிப்பனை அதிகமாக காணப்படுகிறது. 

தாளிப்பனை

இலங்கையில் அதிகமான அளவில் தாளிப்பனை மரங்கள் இருக்கின்றன. இந்த மரங்கள் ஒரே நேரத்தில் பூத்தால் ஏதோ ஓர் மோசமான நிகழ்வு நிகழப்போகிறது என்று இலங்கை மக்கள் அச்சப்படும் வழக்கம் இன்று வரையிலும் தொடர்கிறது. தாளிப்பனைகள் பொறித்த இலங்கை நாணயங்கள் கி.பி 1901 முதல் 1926-ம் ஆண்டு வரையிலும் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. முழுமையாக பூத்து நிற்கும் மரங்கள், முழுமையாக வாழ்ந்த ஒரு மனிதன் முதுமையில் நரைத்த முடியோடு முகத்தில் அறிவின் ஒளிவீச புன்னகை சிந்த, தலைநிமிர்ந்து நிற்பதுபோல் இருக்கும். 

 

விக்டோரியா மகாராணிக்கு விசிறி செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட வரலாறும் தாளிப்பனைக்கு உண்டு. ஆனால், இன்று தமிழ்நாட்டில் சில இடங்களில் மட்டுமே அரிதாக காணப்படுவதுதான் வேதனையான ஒன்று.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

மைக்ரோ கதை

 

 
k12

புகழ்பெற்ற ஞானி ஒருவர் அந்த நகரத்துக்கு வந்திருந்தார். அவரைக் காண ஊரில் உள்ள பெரியவர்கள், ஆசிரியர்கள் உட்பட பல பெரிய மனிதர்கள் வந்திருந்தார்கள். ஞானியிடம் ஒவ்வொருவராகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டனர். ஒருவர் "நான் பேராசிரியர்' என்றார். இன்னொருவர் "நான் இன்ஜினியர்' என்றார். உயரமான ஒரு மனிதர் தன்னை "டாக்டர்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இன்னொருவர் தன்னை அரசியல்வாதி என்றார். 
ஓர் ஏழை மனிதர் வந்தார். தன்னுடைய பெயர் குப்புசாமி என்றார்.


ஞானி அவரை தன் இருக்கைக்குப் பக்கத்தில் அழைத்துச் சென்று அங்கிருந்த நாற்காலியில் உட்காரச் செய்தார். ஒரு சால்வை ஒன்றைப் போர்த்தி அவருக்கு மரியாதை செலுத்தினார்.


அவரைப் பார்க்க வந்த பெரிய மனிதர்களுக்கோ ஆத்திரம் தாங்கவில்லை. தன்னை ஞானி மதிக்கவில்லையே என்று கோபப்பட்டனர். 
ஞானி சொன்னார்: " இவருக்கு ஏன் மரியாதை செய்தேன் என்று நீங்கள் ஆச்சரியப்படக் கூடும். நீங்கள் எல்லாம் மனிதர்கள் என்பதையே மறந்துவிட்டீர்கள். வெறும் பதவி, பட்டம் ஆகியவற்றிலேயே உங்களைக் கரைத்துக் கொண்டீர்கள். பாருங்கள், இந்த எளிய மனிதரை. தான் யார் என்பதை மறக்காமல் இருக்கிறார்''

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

‘நல்ல நோக்கம்தான் காரணம்’
 

image_e24363f38e.jpgஒருவரோடு ஒருவர் உரையாடும்போது, வார்த்தைகள் சூடேறினால் உடன் யாராவது ஒருவர் தணிந்துபோய், அதை நிறுத்துதல் நல்லது. அப்போது அவர் விட்டுக்கொடுத்து விட்டதாக அர்த்தம் இல்லை. தேவையற்ற விதத்தில் கலகம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்ல நோக்கம்தான் காரணமாகும்.

இன்று மேடைகளில்  கேட்பது, கருத்துமோதல்கள் அல்ல; ஆணவ மேலீட்டால் எழும் நீயா, நானா என்ற எண்ணம். உன்னைவிட நான் மேதாவி எனும் எண்ணம் மேலோங்குவதுதான் என்பதை அறிக. 

ஒருவர் தனக்குத்தானே, தன்னை மேலானவன் என எண்ணலாம். ஏன் கல்விமானாகச் சமூக அந்தஸ்துப் பெற்றவனாகவும் இருக்கலாம். இத்தகையவர் எவரையும் எடை போடும் தகுதி, எவருக்கும் இல்லை.

பொது மேடையில் சுய புராணம் பாடினால், அதை எல்லோரும் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று பேசுபவர் நினைப்பது சுத்த அபத்தம்.  பேசும் திறன் உள்ள அறிஞர்கள் கூட, மேடையில் அவமானப்பட்டதுண்டு.

ஆணவம் கொண்டோரை ஒட்ட நறுக்குவது கடவுளின் இயல்பு.

Link to comment
Share on other sites

கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்ட நாள்: மே 27, 1937

 
அ-அ+

கோல்டன் கேட் பாலம், பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது. மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

 
 
 
 
கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்ட நாள்: மே 27, 1937
 
கோல்டன் கேட் பாலம், பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும்.

1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1703 - ரஷ்ய சார் மன்னன் முதலாம் பீட்டர் புனித பீட்டர்ஸ்பெர்க் நகரை அமைத்தான்.

* 1860 - இத்தாலியின் ஒற்றுமைக்காக கரிபால்டி சிசிலியின் பலேர்மோ நகரில் தாக்குதலை ஆரம்பித்தான்.

* 1883 - ரஷ்யாவின் மன்னனாக மூன்றாம் அலெக்சாண்டர் முடி சூடினான்.

* 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் பிஸ்மார்க் போர்க் கப்பல் வட அட்லாண்டிக்கில் மூழ்கடிக்கப்பட்டதில் 2,100 பேர் கொல்லப்பட்டனர்.

* 1960 - துருக்கியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது செலால் பயார் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

* 1965 - வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தெற்கு வியட்நாம் மீது குண்டுகள் வீசித் தாக்குதலைத் தொடுத்தன.

* 1994 - சோவியத் அதிருப்தியாளர் அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ரஷ்யா திரும்பினார்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

வலைபாயுதே

 
 

சைபர் ஸ்பைடர்

 

114p1_1526969172.jpg

facebook.com/Yavanika Sriram

ஆண்கள் நிலவைக் காதலித்து விட்டு சூரியோதத்திற்குக் காத்திருக்கிறார்கள்

பெண்கள் சூரியோதயத்தைக் காதலித்து விட்டு நிலவிற்குக் காத்திருக்கிறார்கள்.

facebook.com/hari.lifeisfun

‘ரொம்பநாளா உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும்னு நினச்சேன்’ என்று சொல்லி, மனைவி நம் முகத்தைக் கூர்ந்து கவனிக்கும்போது, வாழ்வில் நாம் செய்த அத்தனைத் தவறுகளையும், ஒரு நொடியில் காட்சிகளாக மனத்திரையில் காட்டும் வேகம் கொண்டது ஆணின் மூளை.

114p2_1526969269.jpg

facebook.com/brinda.keats

அபராதம் விதிக்கப்படும் எந்த நடவடிக்கையும், அந்த விஷயங்கள் பணக்காரர்கள் சட்டபூர்வமா செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதுன்னுதானே அர்த்தம்?

facebook.com/swaravaithee

இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடலை. ஆர்.ஜே. பாலாஜி மாதிரி ‘நானும் சினிமா புரமோஷன்தான் பண்ணினேன்’னு சொல்லி ரஜினி தப்பிச்சுக்கலாம்

114p6_1526969362.jpg

facebook.com/rajeev.rajamani.9

இன்னுமா பள்ளிகளையும் கல்லூரி களையும்  வணிகர் சங்கத்துல சேர்க்கலை?

facebook.com/sharewithsalman

கே டிவியில் ஓடும் படத்துக்கு ‘வாட்சிங்’ ஸ்டேட்டஸ் போட்டால்கூட, அதில் ஒருவர் இப்படி கமெண்ட் செய்திருப்பார்.

“ஹவ் இஸ் தி மூவி ப்ரோ?”

114p3_1526969283.jpg

twitter.com/manipmp

வாடிய பயிர்கள் இருந்த இடத்தில் உருவானது வள்ளலார் நகர்.!

twitter.com/thoatta

 ஆனா தோனி சிக்ஸ் அடிக்க, கடைசி பாலில் ரெய்னா டொக்கு வச்சதெல்லாம்,  ‘புருசன் வரட்டும்’னு பொண்டாட்டி சாப்பிடாம காத்திருக்கிற ரேஞ்ச்!

twitter.com/nanbanjei

 எவ்வளவு பெரிய வெற்றின்னாலும் தோனியோட அதிகபட்ச செலிபிரேஷன்ங்கிறதே ஸ்டம்பைப் பிடுங்கிறதும்,பெயில்ஸ தள்ளி விடறதும் தான்... குழந்தைப் பையன்யா நம்மாளு!

114p4_1526969297.jpg

twitter.com/mrithulaM

பஸ்லயோ, டிரெய்ன்லயோ தன் பிள்ளைகள்கிட்ட அம்மாக்கள் ‘நல்லா உட்காரு’ங்குறது அடுத்தவங்களுக்கு இடம் கொடுக்காதேன்னு சொல்றதுதான்!

twitter.com/ThePayon

மனவேதனையில் இருக்கும்போது குடிக்காதீர்கள். அந்த வேதனையைக் கவிதையாக  எழுதுங்கள். குடித்தால் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள். கவிதை எழுதினாலோ அதைப் படிக்கும் எல்லோரும் பாதிக்கப்படுவார்கள். போட்டி நிறைந்த இச்சூழலில் அது உங்களுக்கு ஆதாயமாகலாம்.

twitter.com/Kozhiyaar

நல்லா யோசிச்சு பார்த்தா மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க அப்பா ரொம்ப அவசரப்பட மாட்டார்! ஏன்னா அவர் படும் துயரம் மகனுக்கு சீக்கிரம் வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணம் தான் அது.

114p5_1526969315.jpg

twitter.com/nandhu_twitts

 நமக்கு எது சுத்தமா வராதோ.. அதுதான் நம்மளச் சுத்தி சுத்தி வரும்..!!

twitter.com/Lathasambath1

முதல் கையெழுத்து: விவசாயக் கடன் தள்ளுபடி. இரண்டாவது கையெழுத்து: முதல்வர் பதவியே தள்ளுபடி..!

twitter.com/arumugamsony

 ஒரே கன்ஃப்யூசன் ...எவன்கிட்ட பேசினாலும் பிஜேபி மேல கொலை வெறியோட இருக்கானுங்க. அப்புறம் யார்தான்டா அவங்களுக்கு ஒட்டு போடறது?

twitter.com/HAJAMYDEENNKS

“பிரபாகரன் வடிவில் சீமானைப் பார்க்கிறேன்” - பாரதிராஜா #தாமதிக்காமல் வாசன் ஐ கேர் செல்லவும்!

114p7_1526969201.jpg

facebook.com/rajeev.rajamani.9

“அப்பா, பைக் வாங்கி கொடுப்பா”

“கடவுள் எதுக்கு ரெண்டு கால் கொடுத்திருக்காரு?”

“ஒண்ணு கியர் போட, இன்னொண்ணு பிரேக் போட”

twitter.com/itzme_parthu

“என்னைப் பிரதமராக நினைக்காமல் நண்பராகப் பாருங்கள்” -மோடி. எதுக்கு, வீட்டுல ‘சேர்க்கை சரியில்லை’னு செருப்படி வாங்கவா?

www.facebook.com/ManoRed

ஃபேஸ்புக் கவிஞர்கள் இல்லாத மாவட்டத்தில் திருமணம் முடிக்க வேண்டும் என்பது என் நெடுநாள் அவா. அது, தொகுதி, தாலுகா, வட்டம், வார்டு, ஏரியா, ஊர், தெரு என்கிற அளவில் சுருங்கி விட்டது. குறைந்தபட்சம் ஃபேஸ்புக் கவிஞர்கள் இல்லாத வீட்டில் திருமணம் முடிக்க வேண்டும்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பேசும்படம்:

 

 
27CHLRDCLAYPOTS

மண்பானைகள். படம்: ஆர். ரகு

டந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது.

 
27CHLRDBOOKER

சர்வதேச இலக்கிய விருதான ‘மேன் புக்கர்’ விருதை போலந்து நாட்டு எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய ‘Flights’ நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

27CHLRDCHINAHAND

சீனாவில் தேசிய மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி சேகரிப்பதற்காக காது கேளாத, பேச இயலாத பெண்கள் புகழ்பெற்ற ‘ஆயிரம் கைகள்’ நடனத்தை ஆடினார்கள்.

27CHLRDMORTARSHELL

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆர்.எஸ். புரா பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவம் ஷெல் குண்டுகளை வீசியது. இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்தனர். தங்கள் பகுதியில் விழுந்த ஷெல் குண்டின் ஒரு பாகத்தைக் காண்பிக்கிறார் ஒரு பெண்.

27CHLRDNIPAH

நிபா வைரஸால் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சையளித்த செவிலியர் லினி ஷாஜிஷ், நிபா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவருடைய இரண்டு குழந்தைகளுக்கு கேரள அரசு பத்து லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ததுடன், அவருடைய கணவருக்கும் அரசு வேலை வழங்கியிருக்கிறது.

27CHLRDLINISAJEESH

லினி

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

இயற்கை எழில் ததும்பும் கிராமங்கள் - பிபிசி நேயர்களின் சிறந்த புகைப்படங்கள் #BBCTamilPhotoContest

  • 5
#BBCTamilPhotoContest

 

ஸ்ரீ ராமகிருஷ்ணன், சென்னை

#BBCTamilPhotoContest

 

கார்த்திக் கணேசன், கிளியன்னுர்

#BBCTamilPhotoContest

 

கோ.வெங்கடேஸ்வரன், பட்டுக்கோட்டை

#BBCTamilPhotoContest

 

சாகுல் ஹமீது, அதிராம்பட்டினம்

#BBCTamilPhotoContest

 

ஸ்ரீதரன் சுப்பிரமணியன், சென்னை

#BBCTamilPhotoContest

 

வள்ளி சௌத்திரி.ஆ, கோவில்பட்டி

https://www.bbc.com

Link to comment
Share on other sites

‘செறிவான வார்த்தைகள் மனதை வைராக்கியப்படுத்துகின்றன’
 

image_8586fb7c8f.jpgபேச்சுக்குக் கொடுக்கும் முன்னுரிமையை, தங்கள் செயலுக்குக் கொடுக்காமல் விடுவது அரசியல்வாதிகளுக்கான தனிப்பட்ட குணமாகும். இது எல்லா அரசியல்வாதிகளுக்கும் பொருந்தாது. 

ஆனால், ஒரு சாராசரி மனிதனின் ஆன்ம வலுவை, அதிகம் வாய் அசைப்பதன் மூலம், இழக்கச் செய்து விடலாம்.

நல்ல உபதேசங்களைப் பொழிபவர்கள் ஆழ்ந்து, உணர்ந்து, மௌனம் காத்துத் தங்கள் தேடல் மூலம் பேசும் சொற்கள், சமானியமானது அல்ல. அவர்கள் சொற்களே எங்களைச் செயல் வீரர்களாக்கும் வல்லமைகளை ஈட்டித்தர வல்லது. ஒருவரைத் தட்டி எழுப்பும் திறன், நல்ல பேச்சாளனுக்கு உண்டு. இத்தகையவர்கள் தங்கள் ஆன்மாவுடன், எதிரில் இருக்கும் மாந்தர்களின் அறிவை ஸ்பரிசித்து, ஈர்த்துக் கொள்வதால் அவை ஸ்திரமாக மனதில் உட்புகுந்து கொள்கின்றன. 

உணர்வுபூர்வமாக மனம்திறந்து, சொற்பெருக்காற்றினால் கருத்துகளைச் செயலுருப் பெறவைக்கும் வல்லமை தானே கைவரப்பெறும். 

செறிவான வார்த்தைகள் மனதை வைராக்கியப்படுத்துகின்றன.

Link to comment
Share on other sites

அந்தரத்தில் தொங்கிய சிறுவனைக் காப்பாற்றிய ரியல் `ஹீரோ' - வைரல் வீடியோ!

 
 

பாரிஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த சிறுவனை, ஸ்பைடர்மேன் போல தாவிப்பிடித்து காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன. சிறுவனை அவர் காப்பாற்றும் வீடியோ, தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகப் பரவிவருகிறது. 

சிறுவன்

 

பாரிஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று, நான்காவது மாடியில் விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன், பால்கனியில் இருந்து தவறிக் கீழே விழும் அளவிற்குத் தொங்கிக்கொண்டிருந்தான். சிறுவன் அழும் சத்தம் கேட்டு, சிறுவனின் பெற்றோர் வெளியே வந்துள்ளனர். அப்போது, வீட்டின் உள்பகுதி வழியாக குழந்தையைக் காப்பாற்ற ஒருவர் முயன்றுகொண்டிருந்தார். 

அப்போது, அந்த வழியாக வந்த கஸாமா என்பவர்,  தன் உயிரைப் பற்றி யோசிக்காமல், பாதுகாப்பு கவசங்கள்  எதையும் அணிந்துகொள்ளாமலே ஸ்பைடர்மேன்போல கட்டடத்தின் ஸ்லாப்களை மட்டும் பிடித்து சரசரவென  மேலே ஏறி, அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சிறுவனை ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் காப்பாற்றிவிட்டார். கஸாமா சிறுவனைக் காப்பாற்றும் வீடியோ, இணையதளங்களில் வெளியானது. 

இதை அறிந்த, பாரிஸ் மேயர் ஆன் ஹிடால்கோ, கஸாமாவைப் பாராட்டினார். இவரைத் தொடர்ந்து, சினிமா கிராஃபிக்ஸ்கூட பக்கத்தில் வரமுடியாத அளவுக்குத் துணிச்சலாக சிறுவனைக் காப்பாற்றிய கஸாமாவை தனிப்பட்ட முறையில் பாராட்ட விரும்பிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், கஸாமாவை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துள்ளார். 

 

 
 

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

ஒருவரை தோற்றத்தைவைத்து எடை போடலாமா? - உண்மை சொல்லும் கதை #MotivationStory

 
 

கதை

`ஒரு மனிதனை அவனுடைய பதில்களைக்கொண்டு எடைபோடாதீர்கள்; கேள்விகளைக்கொண்டு எடை போடுங்கள்!’ என்கிறார் ஃபிரெஞ்ச் எழுத்தாளரும் தத்துவவியலாளருமான வோல்டேர் (Voltaire). இது ஒரு நுட்பமான அணுகுமுறை. ஒருவரிடம் கேள்விகள் கேட்கும்போது, நமக்குத் தெரிந்ததைக் கேட்கிறோம்; அவற்றுக்குப் பதில் பெறுகிறோம். ஆனால், ஒருவர் நம்மிடம் கேள்வி கேட்கும்போதுதான், அவருக்கு என்னென்ன தெரியும், அவர் எதையெல்லாம் கற்றுவைத்திருக்கிறார் என்பதையெல்லாம் நாம் புரிந்துகொள்கிறோம். கேள்வி, பதில் இருக்கட்டும். இன்றைக்கும் தோற்றத்தை, அணிந்திருக்கும் ஆடையை, உடைமைகளை வைத்துத்தான் ஒருவரை எடைபோட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தில் நம்மில் பலபேர் சராசரிகள்தான். ஓர் ஆளின் தோற்றத்தைவைத்து எடை போடும் பழக்கம் எவ்வளவு தவறு என்பதை உணர்த்துகிறது இந்தக் கதை!

 

அந்தத் தம்பதி ஒரு ரயிலில் வந்து அந்த ஊரில் இறங்கியிருந்தார்கள். அது காலை நேரம். ஒரு ஹோட்டலில் அறை எடுத்து, தங்களைக் கொஞ்சம் ரெஃப்ரெஷ் செய்துகொண்டு உடனே கிளம்பிவிட்டார்கள். அவர்கள் போய்ச் சேர்ந்த இடம், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் முதல்வர் இருக்கும் அலுவலகம்.

முன்கூட்டியே பல்கலைக்கழக முதல்வரைச் சந்திக்க அவர்கள் அப்பாயின்ட்மென்ட் எதையும் வாங்கியிருக்கவில்லை. ஆனாலும், எப்படியாவது அவரைச் சந்தித்துவிட வேண்டும் என்கிற வேட்கை மட்டும் அவர்களுக்கு இருந்தது. முதல்வரின் செக்ரட்டரியிடம் போனார்கள். முதல்வரைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னார்கள். செக்ரட்டரி அந்தக் கணவன், மனைவி இருவரையும் பார்த்தார். மிகச் சாதாரணமான உடையில் அவர்கள் இருந்தார்கள். அமெரிக்காவின் மிக முக்கியமான ஒரு பல்கலைக்கழகத்தின் முதல்வரைச் சந்திக்கப் போகும்போது உடை விஷயத்தில் காட்டவேண்டிய அக்கறையைக்கூட அவர்கள் செய்திருக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அப்பாயின்ட்மென்ட் எதுவும் அவர்களிடம் இல்லை.

கணவன் - மனைவி

``நாங்கள் முதல்வரைச் சந்திக்க வேண்டும்’’ என்றார் அந்த ஆண்.

``அவர் ரொம்ப பிஸியாக இருக்கிறார்’’ என்றார் அந்தப் பெண் செக்ரட்டரி.

``சரி. அவர் வரும்வரை நாங்கள் காத்திருக்கிறோம்’’ என்றார் கணவருடன் வந்திருந்த அந்தப் பெண்மணி.

சில மணி நேரங்களில் செக்ரட்டரி அவர்கள் வந்திருந்ததை மறந்தே போனார். காத்திருந்து பார்த்துவிட்டு, பல்கலைக்கழக முதல்வரை சந்திக்க முடியாமல், அவர்களாகவே திரும்பிப் போய்விடுவார்கள் என்பது அவரின் எண்ணம். மாறாக, அந்தத் தம்பதி இருக்கும் இடத்தைவிட்டு அசையாமல் அங்கேயே அமர்ந்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் காத்திருப்பு செக்ரட்டரிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இனி அவர்களை வெளியே போகவும் சொல்ல முடியாது. எனவே, பல்கலைக்கழக முதல்வரின் அறைக்குள் போனார். விஷயத்தைச் சொன்னார்.

``நீங்கள் சில நிமிடங்கள் அவர்களுடன் பேசினால் போதும்... அவர்கள் போய்விடுவார்கள்’’ என்றார். முதல்வர், பெருமூச்சுவிட்டபடி தலையை அசைத்தார். உண்மையில், வெளியே காத்திருக்கும் அந்தத் தம்பதியிடம் பேசுவதற்கு அவருக்கு நேரமிருக்கவில்லை. அதோடு, அவர்கள் அணிந்து வந்திருந்த உடை அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. அவர் ஏற்கெனவே, ஜன்னல் வழியாக அவர்களைப் பார்த்திருந்தார்.

தம்பதி உள்ளே வந்தார்கள். எரிச்சலோடும் கொஞ்சம் அகம்பாவத்தோடும் பார்த்தார் முதல்வர். வந்தவர்கள் முதல்வருக்கு வணக்கம் சொன்னார்கள். அந்தப் பெண்மணிதான் முதலில் பேசினார்... ``எங்களுடைய மகன் இந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்தான் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு இந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. இங்கே படிக்க வந்த நாள்களில் மகிழ்ச்சியாகவும் இருந்தான். ஒரே வருடம்தான். டைஃபாய்டு காய்ச்சல் வந்து இறந்துபோனான். நானும் என் கணவரும் அவனுக்காக இங்கே ஒரு நினைவுச் சின்னத்தை ஏற்படுத்த முடிவெடுத்திருக்கிறோம். அதாவது, இந்தப் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே...’’

இதைக் கேட்டு முதல்வருக்கு எரிச்சல் இன்னும் அதிகமானது... ``மேடம்! இங்கே படிக்கும் ஒவ்வொருவருக்கும் சிலை வைப்பது என்பது முடியாத காரியம். அப்படிச் செய்தால், இது பல்கலைக்கழகமாக இருக்காது; கல்லறையாகத்தான் இருக்கும்...’’

தோற்ற மதிப்பீடு

அந்தப் பெண்மணி உடனே சொன்னார்... ``இல்லை... இல்லை. நாங்கள் இங்கே எங்கள் மகனின் சிலையை வைப்பதற்காக வரவில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு, அவன் நினைவாக ஒரு கட்டடத்தைக் கட்டித்தரலாம் என்று வந்திருக்கிறோம்...’’

முதல்வர் இப்போது அவர்களை ஏளனமாகப் பார்த்தார். மிகச் சாதாரணமான உடையிலிருக்கும் இவர்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்குக் கட்டடம் கட்டித் தரப் போகிறார்களாம். ``கட்டடமா? ஒரு பல்கலைக்கழகத்தின் கட்டடத்தைக் கட்டுவதற்கு எவ்வளவு செலவாகுமென்று உங்களுக்குத் தெரியுமா? இந்த பல்கலைக்கழகத்தைக் கட்டி முடிக்க நாங்கள் எவ்வளவு செலவழித்திருக்கிறோம் தெரியுமா? ஏழரை மில்லியன் டாலர்...’’ என்றார் முதல்வர்.

அந்தப் பெண்மணி ஒருகணம் அமைதியாகயிருந்தார். முதல்வர் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர்களின் வாயைக் கட்டிவிட்டோம் என்கிற திருப்தி அவருக்கு!

இப்போது அந்தப் பெண்மணி, தன் கணவர் பக்கம் திரும்பினார். ``ஒரு யுனிவர்சிட்டி ஆரம்பிக்க இவ்வளவுதான் செலவாகுமா? ஏங்க... நாமே ஒரு பல்கலைக்கழகத்தை ஆரம்பித்துவிட்டால் என்ன?’’ என்று கேட்டார். கணவர், சற்றுக்கூட யோசிக்காமல், சரி என்பதுபோல் தலையசைத்தார். பல்கலைக்கழக முதல்வர் அவர்களை யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

கணவனும் மனைவியும் எழுந்தார்கள். முதல்வரிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் வெளியே போனார்கள். பிற்பாடுதான் அவர்கள் யாரென்று ஹார்வர்டு பல்கலைக்கழக முதல்வருக்குத் தெரியவந்தது. வந்திருந்தவர்கள் லீலேண்டு ஸ்டான்ஃபோர்டு (Leland Stanford) மற்றும் அவரின் மனைவி ஜேன் ஸ்டான்ஃபோர்டு (Jane Stanford) என்பதும், பெரும் பணக்காரர்கள்... சமூகத்தில் கௌரவமான இடத்தில் இருப்பவர்கள் என்பதும்!

கல்லூரி

அந்தத் தம்பதி தங்களின் மகனின் நினைவாக ஆரம்பித்ததுதான் கலிஃபோர்னியா, பாலோ ஆல்டோ-வில் (Palo Alto) இருக்கும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் (Stanford University)!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

“தோனி, என்றாவது ஒருநாள் இந்தியாவின் பிரதமரானால் எப்படியிருக்கும்...” - இயக்குநர் விக்னேஷ் சிவன்

 

 
vignesh%20shivan%20dhonijpg

‘தோனி, என்றாவது ஒருநாள் இந்தியாவின் பிரதமரானால் எப்படியிருக்கும்...’ என்று எதிர்பார்ப்புடன் கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.

ஐபிஎல் 2018-ன் இறுதிபோட்டி நேற்று நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. இரண்டு வருடங்களுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் களத்தில் இறங்கியதால், போட்டி எப்படி இருக்கும்? கோப்பையை வெல்லப்போவது யார்? என கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

 

இந்தப் போட்டியில், முதலில் பவுலிங்கைத் தேர்வுசெய்த சென்னை சூப்பர் கிங்ஸ், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ms%20dhonijpg
 

இந்த வெற்றியை, நேற்று இரவே பலரும் வெடி வெடித்துக் கொண்டாடினர். பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் தங்களுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒருபடி மேலே போய், “தோனி, என்றாவது ஒருநாள் இந்தியாவின் பிரதமரானால் எப்படியிருக்கும்... மிகச்சிறந்த தலைவர், மிகச்சிறந்த மனிதர். எத்தனை வருடங்கள் ஆனாலும், தன் மீது ஒரு புகார் கூட இல்லாத தூயவர்.

அவர் இன்னும் மிகப்பெரிய அளவில் வரவேண்டும். எதிர்காலத்தில் மிகச்சிறந்த விஷயங்களைச் செய்ய வேண்டும். விளையாட்டில் மட்டுமல்ல, நாட்டுக்காகவும்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.