• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
நவீனன்

இளமை புதுமை பல்சுவை

Recommended Posts

"வலியைப் புன்னகையாக்கி, சந்தோஷத்தை விற்ற அரை இன்ச் மீசைக்காரன்!" - #HBDCharlieChaplin

 
 

ஹிட்லர் என்ற சர்வாதிகாரி பிறந்த நான்கு நாட்களுக்கு முன் ஒரு குழந்தை, போட்டிகள் நிறைந்த இவ்வுலகை அடையாளம் கண்டது. பின்னாட்களில், நகைச்சுவையின் முகவரியாகத் திகழப்போவதை அறிந்திராத அக்குழந்தை சார்லஸ் சாப்ளின் - ஹன்னா சாப்ளின் என்ற தம்பதிக்கு மகனாகப் பிறந்ததது. பல நடிகர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சார்லி சாப்ளின்தான் அந்தக் குழந்தை. அழியாப் புகழ்கொண்ட அக்கலைஞனின் எத்தனை முறை கொண்டாடினாலும் திகட்டாது!  

சார்லி சாப்ளின்

ஒருநாள் காலை, மக்கள் ஆரவாரத்துடன் தங்களது பணிகளைச் செய்துகொண்டிருந்தனர். அப்போது கசாப்புக் கடையை நோக்கி, தெருவுக்குள் நுழைந்தது ஒரு வண்டி. அதில், இருந்து பல ஆடுகள் வரிசையாக வந்து இறங்கின. கடைசியாக இறங்கிய ஆடு மட்டும் சாமர்த்தியமாக கசாப்புக் கடைக்காரனிடம் இருந்து தப்பித்து தெறித்தோடியது. சந்துபொந்துகளில் துள்ளிக் குதித்து ஓடும் அந்த ஆட்டைப் பிடிக்கும் முயற்சியில் அங்குமிங்கும் தடுமாறி விழுகிறார் கசாப்புக் கடைகாரர். அங்கு நடக்கும் இந்த நிகழ்வைப் பார்த்த மக்கள், வயிறு குலுங்கிச் சிரித்து மகிழ்ந்தனர். மக்களோடு மக்களாக சாப்ளினும் அந்நிகழ்வைக் கண்டு சிரித்து மகிழ்கிறார். ஒருவழியாக தப்பித்த ஆடு கசாப்புக் கடைக்காரனிடம் சிக்கியது. மக்களும் அவரவர் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர். வேடிக்கை பார்த்த சாப்ளின் மட்டும் கசாப்புக் கடைக்காரனைப் பின் தொடர்கிறார். கசாப்புக் கடையில் நிகழ்ந்ததைப் பார்த்த சாப்ளின், பதறிப்போனார். இது ஒரு நிகழ்வு. 

சாப்ளின், அவரது அம்மாவின் எல்லா நாடகங்களிலும் கலந்துகொள்வது வழக்கம். அப்படியொரு நாள் அவரது அம்மா நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே பேசும் திறனை இழந்தார். இவர் பேச முயற்சி செய்து, திக்குவதைப் பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் கேலி, கிண்டல் செய்து சிரித்துக்கொண்டிருந்தனர், இருவரைத் தவிர!. பேசும் திறனை இழந்த ஹன்னா, அவர் படும் வேதனைகளைப் பார்த்து அழத்தொடங்கிய சாப்ளின்தான் அந்த இருவர். பின், `அழுதால் மட்டுமே இந்த உலகில் வாழமுடியாது' என்று நினைத்தாரோ என்னவோ... தாயை ஓய்வெடுக்கும்படி ஓரமாக அமர்த்திவிட்டு, மேடையில் இவர் பாடத் தொடங்கினார். `சிறுவன் ஏதோ முயற்சி செய்கிறான்' என்று அதைக் கண்டுகழித்த பார்வையாளர்கள் அனைவரும் சில்லறைகளை அள்ளிவீசத் தொடங்கினர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நாடகத்தின் மேலாளர், சிறுவனுக்கு உதவ எண்ணி சில்லறைகளைப் பொறுக்கத் தொடங்கினார். அவர் திருட முயற்சிக்கிறார் என்று எண்ணிப் பாடிக்கொண்டே அவரிடம் சென்று கையில் இருந்த காசை முறைத்தபடி பிடுங்கினார். இதைப் பார்த்ததும் அங்கிருக்கும் அனைவரும் வயிறு குலுங்க சிரிக்கத் தொடங்கினர். 

சார்லி சாப்ளின்

அந்தச்சமயத்தில் சாப்ளினின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்?! தன் முதல் மேடையே வெற்றிகரமாக மாறியதை எண்ணி சந்தோஷத்தில் துள்ளிக்குதிப்பதா, தனது அம்மாவிற்கு அதுதான் கடைசி மேடை என்று எண்ணிக் குமுறி அழுவதா? இந்தக் கேள்விக்கான பதில்தான் இன்று, இந்தச் சமயத்தில் அவரைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சாப்ளின் கற்றுக்கொண்ட பாடம் ஒன்றுதான். `சிரித்தால், ஒட்டுமொத்த உலகமுமே உன்னுடன் சேர்ந்து சிரிக்கும். அழுதால், கடைசிவரை நீ மட்டும்தான் அழவேண்டும்' என்ற தத்துவத்தை தனது சிறு வயதிலே புரிந்துகொண்டார், சாப்ளின். தன் உலகில் நடக்கும் நிகழ்வுகளோடு, வெளியுலகத்தில் நடக்கும் அவலங்களையும் சாப்ளின் அமைதியாக கவனத்துக்கொண்டே இருந்தார். முதலாளி வர்க்கத்தையும், தொழிலாளிகளின் அவலங்களையும் தன் படங்களில் காட்டத் தொடங்கினார். 

சார்லி சாப்ளினிடம் `Are you a communist or Socialist?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, `I'm just a peace monger' என்று சிம்பிளாக பதிலளித்தார் சாப்ளின். `Peace monger' என்றால், அமைதிகளின் வியாபாரி. `என் வழியில், நான் அமைதியை மக்களிடம் விற்பேன்' என்பதே அவர் சொன்ன பதில். காரல் மார்க்ஸின் `மார்க்சிஸ'த்தான் தன் `மாடர்ன் டைம்ஸ்' படத்தில் பயன்படுத்தியிருப்பார், சாப்ளின். ஆட்டு மந்தைகளுக்கு மத்தியில் ஒரு கறுப்பு ஆடு சென்றுகொண்டிருக்கும். அது, சாப்ளின்தான். இதிலிருந்துதான், படம் தொடங்கும். அதற்கடுத்த காட்சியில் தொழிலாளிகள் கூட்டமாக வேலைக்குச் சென்றுகொண்டிருப்பார்கள். `தொழிலாளிகள் அனைவரும் ஆட்டு மந்தையில் இருக்கும் ஆடுகளுக்குச் சமம், அதில் ஒரு கறுப்பு ஆடாக இருந்து தொழிலாளிகளின் அவலத்தை அரங்கேற்றுவேன்' என்ற விதத்தில் இடம்பெற்றிருக்கும் அவரது காட்சி மொழி. `மனுஷன் அந்தக் காலத்திலேயே எப்படி யோசிச்சுருக்கார் பாரேன்!' என்ற வியப்பை ஏற்படுத்துகிறது. அதில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு காட்சியும், தொழிலாளி வர்க்கத்திற்குக் குரல் கொடுப்பதுபோல் அமைந்திருக்கும். 

சார்லி சாப்ளின்

இவரின் மற்றொரு மகத்தான படைப்பு, `தி டிக்டேட்டர்'. மூக்கிற்குக் கீழே அரை இன்ச் மீசை வைத்திருப்பவர்களில் மூன்று பேர் நமக்குப் பரீட்சயம். ஹிட்லர், சாப்ளின் மற்றும் நம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஒருமுறை பாரதிதாசனின் நண்பர், `என்னங்க, ஹிட்லர் மாதிரி மீசை வெச்சுருக்கீங்க?' எனக் கேட்டதற்கு, `ஹிட்லரே சார்லி சாப்ளின் ரசிகன்தான்யா, இது ஹிட்லர் மீசை இல்லை, சார்லி சாப்ளின் மீசை!' என்று பதில் கூறினாராம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஹிட்லர் உலகையே தன் அடிமையாக்கும் நோக்கோடு சர்வாதிகாரியாக செயல்பட்டுக்கொண்டிருந்தார். இதைத் தன்னுடைய 'தி டிக்டேட்டர்' படத்தின் மூலம் அரங்கேற்றினார் சாப்ளின். `உலகம் ஒரு சர்வாதிகாரியின் பிடியில் சிக்கினால் மக்களின் நிலை என்ன?' என்பதை எடுத்துரைப்பதே இந்தப் படத்தின் நோக்கம். உலகமே அந்த மனிதனைக் கண்டு அஞ்சி நடங்கும் சமயத்தில், அப்படியொரு படைப்பைக் கொடுத்ததுதான் சாப்ளினின் சரியலிஸம். 

உலகில், கடைசி மனிதனின் முகத்தில் சிரிப்பு இருக்கும் வரை, அதில் சாப்ளின் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். தனது வலிகளைப் புன்னகையாக மாற்றி, சந்தோஷத்தை மட்டுமே நமக்கு விற்ற, இந்த அரை இன்ச் மீசைக்காரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

https://cinema.vikatan.com

 

சார்லி சாப்ளின் நிஜத் தோற்றத்தில் பிபிசிக்கு அளித்த நேர்காணல்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: Text

 

இன்று
உலகக் குரல் நாள்

குரல் வழி இதயங்களுடன் பேசும் - இதயங்கள் வழியாக அன்புடன் இணைந்திருக்கும் எம் அனைவருக்குமான நாள்.
சேர்ந்து மகிழ்ந்திருப்போம்..
சூரியனின் வாழ்த்துக்கள்.

உலகக் குரல் நாள் (World Voice Day (WVD); ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16 இல் கடைபிடிக்கப்படுகிறது. குரல் என்ற இயல்நிகழ்வு கொண்டாட்டமான இது, அர்ப்பணிப்புடன் நடைபெறும் உலகளாவிய ஆண்டு நிகழ்வு ஆகும்.
அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையில், குரல் ஒரு மகத்தான முக்கியத்துவத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், "பிரேசிலியன் காது மூக்கு தொண்டை மற்றும் குரல் சங்கம்" (Brazilian Society of Laryngology and Voice) 1999 இல் முதன்முதலாக தொடங்கப்பட்டது.

Share this post


Link to post
Share on other sites

அமேஸான் அலுவலகத்திற்கு தினமும் வரும் 6 ஆயிரம் நாய்கள்... எதற்காக?

 
 

"அவன் ஒரு அதி சிறப்பான வாழ்வை வாழ்ந்தான். டென்னிஸ் பால் (Tennis Ball) விளையாட்டில் அவனை யாராலும் ஜெயிக்க முடியாது. அவன் ஒரு சாம்பியன். அவன் நம் நிறுவனத்தின்  பல முக்கிய மீட்டிங்குகளில் பங்கெடுத்துள்ளான். இவனை ஒரு முறை பார்த்துவிட்டு போகும் யாரும் நிச்சயம் அவனுக்கான ஒரு பரிசோடு தான் அடுத்த தடவை வருவார்கள். அப்படி ஒரு செல்லப்பிள்ளை.
இன்று நம் அலுவலகத்திற்கு ஒவ்வொரு நாளும் 6 ஆயிரம் நாய்கள் கொண்டு வரப்படுகின்றது என்று சொன்னால்...அதற்கான விதை இவன் போட்டது. ரூஃபஸுக்கு (Rufus) நன்றி.

அழகான வாழ்க்கையை வாழ்ந்த திருப்தியோடு, அமைதியான மரணத்தைத் தழுவினான் ரூஃபஸ். அவன் இறந்த தினம் - மே, 27, 2009. 

லவ் யூ ரூஃபஸ்"

அமேஸான் நிறுவனத்திற்கு வரும் நாய்கள்

அமேஸான் அலுவலகத்திற்குள் முதன் முதலாக வந்த ரூஃபஸ் எனும் நாய் குறித்து, தங்கள் வலைதளத்தில் இப்படியாகத் தான் பதிவிட்டிருக்கிறது அமேஸான். அமெரிக்காவின் சியாட்டிலில் இருக்கும் அமேஸான் தலைமை அலுவலகத்தில் மொத்தம் 30 கட்டடங்கள் இருக்கின்றன. அதில் ஒரு கட்டடத்திற்கு ரூஃபஸ் என்று பெயரிட்டிருக்கிறார்கள். உலகளவில் நாய்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்கும் மிக சில நிறுவனங்களில் முன்னணியில் இருக்கிறது அமேஸான். நாய்களை அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல், அப்படி அனுமதிக்கப்படும் நாய்களுக்குப் பல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது அமேஸான். 

அமேஸான்

30 ஆயிரம் பேர் பணி புரியும் அமேஸான் தலைமை அலுவலகத்தில், ஒரு நாளைக்கு 6 ஆயிரம் நாய்கள் வருகை தருகின்றன. 
உலகளவில் கூகுள், சேல்ஸ் ஃபோர்ஸ், மார்ஸ் போன்ற சில நிறுவனங்கள், தங்கள் அலுவலகத்திற்குள் நாய்களை அனுமதித்தாலும் கூட, அமேஸான் வழங்கும் வசதிகள் வேற லெவல்!

ஒருவர் தன் நாயைக் கொண்டு வர வேண்டுமென்றால், முதலில் தன் மேனேஜரிடமும், தன் டீம் உறுப்பினர்களிடம் அவர்களுக்கு இதனால் பிரச்னை இல்லை என்ற ஒப்புதலை பெற வேண்டும். பின்னர், நாய்க்கு சரியான தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக, நாய் குறித்த தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும்.

அலுவலகத்தின் எந்தக் கட்டடத்திற்குள் நுழைந்தாலும் அங்கு ஓர் அழகான வரவேற்பாளர் உட்கார்ந்திருப்பார். அவருக்கு அருகே "Treat Bucket" என்று ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அது முழுக்கவே நாய்களுக்குப் பிடித்த உணவுகளால் நிரப்பப்பட்டிருக்கும். நாய்கள் வரிசையில் நின்று அதைப் புசிக்கலாம். 

அமேஸான் நாய்கள்

"Treat Bucket"

நல்ல ஆரோக்கியமான, சுவையான உணவை முடித்த பின் சும்மா இருக்க முடியாதல்லவா? எனவே, அது ஓடி, ஆடி விளையாட "Doggie Deck" என்ற இடம். இங்கு நாய்களுக்கான பல விளையாட்டுப் பொருட்கள் இருக்கும். 

நாய்களுக்கான காப்பீடு திட்டத்தையும் ( Pet Insurance)) அமேஸான் நிறுவனம் வழங்குகிறது. மேலும், நாய்கள் இறந்துவிடும் பட்சத்தில், சோகத்தில் ஆழ்ந்திருக்கும் அதன் உரிமையாளருக்கு "இழப்புத் துயர விடுமுறை" (Bereavement Leave) அளிக்கப்படுகிறது.

அடுத்தது , ஆயிரம் சதுரடியில் நாய்களுக்கென ஒரு பிரத்யேக பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு பெரிய பாறைகள், மரக் கட்டைகள் என நாய்கள் ஏறி, குதித்து விளையாடும் வகையில் பல விஷயங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. 

நாய் பூங்கா

நாய்களுக்கான பூங்கா...

பல இடங்களில் நாய்களுக்கான பிரத்யேக "Dogs Only Water Fountains" அமைக்கப்பட்டிருக்கின்றன. 

அமேஸான்

"Dogs Only Water Fountains"

நாய்களுக்கான சிறுநீர் கழிக்குமிடம், மலம் கழிக்க தனியாக "Poop Bag Stations" என பல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

1.அமேஸானில் மூன்று பிரபல நாய் இனங்கள் இருக்கின்றன: கோல்டன் ரிட்ரீவர் (Golden Retriever), லேப்ரடார் ரிட்ரீவர் (Labrador Retriever), லேப்ரடூடல்ஸ் (Labradoodles).


2. நிறுவனத்தில் இருக்கும் நாய்களில் பிரபலமான மூன்று பெயர்கள் இருக்கின்றன: லூஸி (Lucy), பெல்லா (Bella), சார்லி (Charlie). 

இப்படியாக நாய்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவது, தேவைகளைக் கண்காணித்து மேம்படுத்துவது என நாய்கள் சம்பந்தமான விஷயங்களை முன்னெடுக்க, நாய்ப் பராமரிப்பிற்காகவே அங்கு ஒரு தனிக் குழு இயங்குகிறது. அந்தக் குழுவுக்கு மேனஜராக இருப்பவர் லாரா ஹிர்ச்ஃபீல்ட் (Lara Hirschfield).

அமேஸான் நாய்கள்

"எங்கள் நிறுவன ஊழியர்கள் பலருக்கும் நாய்கள் வெறும் வளர்ப்புப் பிராணிகள் மட்டுமே கிடையாது. அவர்களுக்கு அவை குழந்தைகள் மாதிரி. ஒருவர் ஒரு அலுவலகத்தில் திறன்பட செயல்பட வேண்டுமென்றால், அந்த அலுவலக சூழல் அவருக்குப் பிடித்த மாதிரியானதாக இருக்க வேண்டும். அந்தச் சூழலை நாங்கள் உறுதிபடுத்துகிறோம். நாய்களை அனுமதிப்பதால் எங்கள் ஊழியர்கள் மன அழுத்தம் இன்றி வேலை செய்கிறார்கள். அது அவர்களுக்கு மகிழ்ச்சி. எங்களுக்கும் மகிழ்ச்சி." என்று சொல்கிறார் லாரா. 

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

இக்கட்டான சூழ்நிலையில் ரிஸ்க் எடுப்பது கைகொடுக்குமா? - நம்பிக்கைக் கதை #MotivationStory

 

கதை

லகப் புகழ்பெற்றவை ஆன் ஃப்ராங்க் (Anne Frank) டைரிக் குறிப்புகள். யூதப் பெண்ணான ஆன் ஃப்ராங்க், நாஜிப் படைகளின் கண்களில் படாமல் ஒளிந்து வாழ்ந்தபோது எழுதிய வாழ்க்கை அனுபவங்கள் ஒவ்வொன்றும் வலியும் வேதனையும் நிரம்பியவை. அதில் ஆன், ஓரிடத்தில் இப்படி எழுதியிருந்தார்... `பிறருக்குக் கொடுத்து உதவுவதால், ஒருவர்கூட ஏழையாவதில்லை.’ ஒரு நாளல்ல, இரண்டு நாள்களல்ல... கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையின்போது அவர் எழுதிய வரிகள் இவை. அப்படியானால், கொடுப்பதின், பிறருக்கு உதவுவதின் அருமையை அவர் உணர்ந்துதான் எழுதியிருப்பார்... அல்லவா!? எதையும் பெறுவதைவிட, கொடுப்பதில்தான் மகிழ்ச்சி அதிகம். சரி, ஒன்றை ஏன் பிறருக்குக் கொடுக்க வேண்டும்... அடுத்தவருக்காக என்று எதையும் ஏன் விட்டுச் செல்ல வேண்டும்? தங்கள் அனுபவங்களை, வரலாற்றை, புதிய கண்டுபிடிப்புகளை, எண்ணற்ற தொழில்நுட்பத்தை நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்றதால்தான் நாம் இன்றைக்கு மகிழ்ச்சியான, வசதியான வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இதை நம்மில் யாருமே உணர்வதில்லை. பிறருக்காக எதையும் விட்டுச் செல்வதிலிருக்கும் மகத்துவத்தை உணர்த்தும் கதை இது! 

குழாய்

ஒரு மனிதன் தனியாகப் பாலைவனத்தில் மாட்டிக்கொண்டான். அவன் கொண்டு வந்திருந்த தண்ணீரும் தீர்ந்து போயிருந்தது. தாகம் வாட்டியெடுத்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உதவுவதற்கு ஆட்கள் யாரும் தென்படவில்லை.  தண்ணீர் கிடைப்பதற்கான அறிகுறிகூடத் தெரியவில்லை. அவன் நடந்து நடந்து சோர்ந்து போனான். `அவ்வளவுதான்... தாகத்தில் உயிரைவிட வேண்டியதுதான்’ என அவன் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் சற்று தூரத்தில் சின்னதாக ஒரு சோலை இருப்பது தெரிந்தது. `அங்கே ஒருவேளை தண்ணீர் கிடைக்குமோ..? கிடைத்தாலும், கிடைக்கும்.’ அவன் நம்பிக்கையோடு, நடக்கக்கூட முடியாத அந்த நேரத்திலும், எட்டு வைத்து மெள்ள மெள்ள சோலையை நோக்கி நடந்தான். 

அது ஒன்றும் பெரிய பாலைவனச் சோலை அல்ல. வாடி, வதங்கி இரண்டு ஈச்சை மரங்கள் நின்றிருந்தன. இடிந்து, பாழடைந்த வீடு ஒன்றும் அருகிலிருந்தது. ஏதோ புயல் காற்றால் அந்த வீட்டின் ஜன்னல்கள், கதவுகளெல்லாம் பெயர்ந்துவிழுந்திருந்தன. அவன் நீர் கிடைக்காதா என்று அங்குமிங்கும் தேடினான். வீட்டின் பக்கவாட்டில் ஓர் அடிகுழாய் இருப்பது தெரிந்தது. அவன் தடுமாறித் தடுமாறி அதனருகே போனான். அடிகுழாயைத் தன் பலம் கொண்ட மட்டும் ஓங்கி ஓங்கி அடித்தான். எத்தனை முறை அடித்தும், குழாயிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வரவில்லை. அவன் சோர்ந்து போனான். அவனுக்குத் தாகத்திலும் களைப்பிலும் மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. அப்போதுதான் அதை கவனித்தான். 

குழாய்

குழாயிலிருந்து பத்தடி தூரத்தில் ஒரு சின்ன கூஜா இருந்தது. கார்க் போட்டு மூடிவைத்திருந்த கூஜா. அந்த மனிதன் அதனருகில் போனான். கூஜாவுக்கு அடியில் ஒரு தாளில், குறிப்பு ஒன்றும் எழுதிவைக்கப்பட்டிருந்தது. அவன் மூடியைத் திறந்து பார்த்தான். கூஜா நிறையத் தண்ணீர் இருந்தது. அவனுக்கு ஆனந்தத்தில் கண்கள் விரிந்தன. இப்போது அவன் அந்த பேப்பரை எடுத்துப் படித்தான். அதில் இப்படி எழுதியிருந்தது... `நண்பரே, முதலில் இந்த கூஜாவிலிருக்கும் தண்ணீரை அடிகுழாயில் ஊற்றி நிரப்புங்கள். பிறகு அடிகுழாயை அடியுங்கள். தண்ணீர் வரும். பின்குறிப்பு: இங்கிருந்து போகும்போது மறக்காமல் கூஜாவில் நீர் நிரப்பி, மூடிவிட்டுச் செல்லவும்.’ 

அந்த மனிதன் இப்போது என்ன செய்யலாம் என யோசித்தான். `சரி... கூஜாவிலிருந்த தண்ணீர் முழுவதையும் குழாயில் ஊற்றிவிடுகிறோம். அதற்குப் பிறகு தண்ணீர் வராவிட்டால் என்ன செய்வது? தாகத்தில் உயிரைவிட வேண்டியதுதான். ஆனால், இந்த கூஜா தண்ணீரைக் குழாயில் ஊற்றாமல் எடுத்துக் குடித்துவிட்டால், உயிர்பிழைத்துக்கொள்ளலாம்.’ இந்த இரண்டு வாய்ப்புகள்தான் அவனுக்கு இருந்தன. அவன் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போனான். ஆனால், இந்தக் குறிப்பை எழுதியவர், `தண்ணீர் வரும்’ என்று நம்பிக்கையோடு எழுதிவைத்திருக்கிறாரே..! அப்படியானால் அது உண்மையாகத்தானே இருக்கும்? 

தண்ணீர்

 

இயல்பாக அந்த மனிதன் நல்லவன். பிறருக்கு உதவும் சுபாவம்கொண்டவன். கொடுப்பதில் மகிழ்பவன். `ஒருவேளை என்னைப்போலவே யாராவது தாகத்தோடு இந்த இடத்துக்கு வந்தால் என்ன செய்வார்கள்?’ என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தான். கடைசியில் ரிஸ்கான முடிவை எடுத்தான். கூஜாவை எடுத்தான். அதிலிருந்த தண்ணீர் முழுவதையும் அடிகுழாயில் ஊற்றினான். அடிக்க ஆரம்பித்தான். இரண்டே அடி... தண்ணீர் பொங்கிக்கொண்டு வந்தது. அவன் தேவையான அளவு தண்ணீர் குடித்து தாகத்தைத் தீர்த்துக்கொண்டான். களைப்பாறினான். அந்த கூஜா நிறைய தண்ணீர் பிடித்து, அதை மூடினான். பிறகு அந்தக் குறிப்பு எழுதப்பட்டிருந்த தாளை எடுத்தான். அதற்குக் கீழே தன் பேனாவை எடுத்து இப்படி எழுதினான்... `நான் சொல்வதை நம்புங்கள்... நிச்சயம் தண்ணீர் கிடைக்கும். ஏதாவது ஒன்றைப் பெறுவதற்கு எதையாவது கொடுத்துத்தான் ஆக வேண்டும்...’ 

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

பழுதடைந்ததால் பயணத்தை பாதியில் முடித்து திரும்பியது அப்போலோ-13 விண்கலம்: ஏப்ரல் 17, 1970

பழுதடைந்ததால் பயணத்தை பாதியில் முடித்து திரும்பியது அப்போலோ-13 விண்கலம்: ஏப்ரல் 17, 1970
 
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு திட்டமான அப்பல்லோ திட்டத்தின் 7-வது மனிதர் பயணித்த விண்கலம் அப்பல்லோ-13 ஆகும். அப்பல்லோ-11 மற்றும் அப்பல்லோ-12 விண்கலங்களைத் தொடர்ந்து செலுத்தப்பட்ட இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் நோக்கோடு 1970-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி ஏவப்பட்டது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆக்சிஜன் கலன் வெடித்ததால் நிலவில் தரையிறங்குவது இடைநிறுத்தம் செய்யப்பட்டது. ஆக்சிஜன் கலன் வெடித்ததால் சேவைப் பெட்டகமும் அதைச் சார்ந்திருந்த கட்டளைப் பெட்டகமும் பாதிக்கப்பட்டன.

குறைந்த திறன்மூலம், சிற்றறை வெப்பக்குறைவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் குறைபாடு, கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை பிரித்தெடுக்கும் அமைப்பை தற்காலிகமாக செய்தாகவேண்டிய சூழல் போன்ற மிகக் கடினமான சவால்களையும் மீறி, அதில் பயணம் செய்த குழுவினர் ஏப்ரல் 17-ம் தேதி மீண்டும் பூமியில் தரையிறங்கினர்.

சைபீரியாவில் தங்கச்சுரங்க தொழிலாளர்கள் 150 பேர் படுகொலை: ஏப்ரல் 17, 1912

 

சைபீரியாவில் தங்கச்சுரங்க தொழிலாளர்கள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 150 பேர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

 
சைபீரியாவில் தங்கச்சுரங்க தொழிலாளர்கள் 150 பேர் படுகொலை: ஏப்ரல் 17, 1912
 
வடகிழக்கு சைபீரியாவில் லேனா ஆற்றின் அருகே செயல்பட்ட தங்கச் சுரங்க தொழிலாளர்கள் கடும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் பணியாற்றினர். 15 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை வேலை செய்தும் அவர்களுக்கு உரிய சம்பளம் கிடைப்பதில்லை. இதற்கெல்லாம் மேலாக பாதுகாப்பு குறைபாடு காரணமாக அடிக்கடி விபத்திலும் சிக்கினர்.

இதனால் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள், 8 மணி நேர வேலை, சம்பள உயர்வு, அபராதம் விதிப்பதை ரத்து செய்தல், தரமான உணவு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1912ம் ஆண்டு மார்ச் மாதம் போராட ஆரம்பித்தனர். இதன் உச்சகட்டமாக ஏப்ரல் மாதம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களை ஒடுக்குவதற்காக இம்பீரியல் ரஷ்ய ராணுவ வீரர்கள் ஏப்ரல் 17-ம் தேதி தொழிற்சாலை வளாகத்தில் குவிக்கப்பட்டனர். வேலைநிறுத்தம் செய்யும் கமிட்டியின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை விடுவிக்க வலியுறுத்தி மனு அளிப்பதற்காக தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது தொழிலாளர்கள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 150 பேர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 
 

https://www.maalaimalar.com

Share this post


Link to post
Share on other sites

திருமணமாகி தேனிலவிற்கு தயாராக இருக்கும் தமபதியார் மட்டும் படிக்கவும்.!

 

திருமணமாகி தேனிலவிற்கு தயாராக இருக்கும் தமபதியார் மட்டும் படிக்கவும்.!

தேனிலவு என்பது 19 நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரிட்டனில் நடைமுறையில் இருந்த பழக்கவழக்கங்களுள் ஒன்று. புதியதாக திருமணமான தம்பதிகள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து, தோலை தூர உறவினர்களை சந்திக்க பயணம் மேற்கொள்வார்கள். இதுவே நாள் அடைவில் பிரபலமடைந்து இன்று உலகம் முழுவதும் இளம் ஜோடியின் மத்தியில் தேனிலவு செல்வது என்பது ஒரு பொதுவான நடைமுறையாக மாறிவிட்டது. புதியதாக திருமணமாகும் ஒவ்வொரு தம்பதியின் வாழ்விலும் தேனிலவு என்பது ஒரு முக்கிய பகுதியாகும். ஒரு புதிய நபருடன் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குவதற்கு முன் மணமக்கள் ஒருவருக்கொருவர் பேசி பழகிக்கொள்ள சிறந்த இடம் தேனிலவாகும். புரிதல், தெரிதல், தொடுதல் இம்மூன்றும் தேனிலவில் எளிதாக சாத்தியப்படும். இப்போது நாம் புதியதாக திருமணமாகும் தம்பதியர் குறைந்த செலவில் தேனிலவு சென்று வர இந்தியாவில் உள்ள சிறந்த இடங்களை பற்றி பார்க்கலாம்.

டார்ஜ்லிங்

மேற்கு வங்காளத்தில் இம்மாலைய இமைய மலை கரையில் அமைந்திருக்கும் டார்ஜ்லிங் பெரும்பாலும் மலைகளின் ராணி என குறிப்பிடபடுகிறது. இது இந்தியாவில் தேனிலவிற்காக மிக அழகிய மற்றும் புது மண தம்பதியருக்கு ஏற்ற குளிர்ந்த காலநிலையுடன் கூடிய அமைதியான இடமாகும். மேலும், இங்கு ராக் கார்டர்ன், டைகர் ஹில்ஸ் சூர்யா உதயம், பட்டாஷியா லூப், சிங்கமாரி லூப் வே உள்ளிட்ட உள்ளத்தை கொள்ளைகொள்ளும் எழில் மிகு காட்சிகள் பல நிறைந்துள்ளன. தேனிலவு தம்பதியினர் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப ஓய்வு நேரங்களில், ராக் கிளைம்பிங், பேரா கிளைடிங் உள்ளிட்ட விளையாட்டுகளும் விளையாட வசதிகள் உள்ளன. டார்ஜ்லிங் செல்ல கோடைகாலம் சிறந்த நேரம் என்றாலும், புதுமண தம்பதியினர் குளிர் காலத்தில் சென்றால் இன்னும் மகிழ்ச்சியான தருணமாக அமையும்.


ஹிமாச்சல பிரதேசம்

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா தேனிலவிற்கு எப்போதும் புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. சிம்லாவின் மயக்கும் குளிர்ந்த கால சூழ்நிலை, பனிமலைகள், பனிக்குன்றுகள், பிரிட்டீஷ் கால கட்டிடங்கள் கோயில்கள், மடங்கள் மற்றும் தேவலையங்கள் உள்ளிட்டவை கண்களை கவரும் வகையில் உள்ளன. கோடை மற்றும் குளிர் காலங்களுக்கு மிகவும் ஏற்றது சிம்லா. அதைத்தொடர்ந்து, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள குலுமணாலி தேனிலவுக்கு ஏற்ற பசுமையான மற்றும் பரந்த இயற்கையான அழகை கொண்ட மற்றொரு இடமாகும். மேலும், இங்கு பனி சறுக்கு, மலையேற்றம், பேரா கிளைடிங், ஹிக்கிங் உள்ளிட்ட சாகச விளையாட்டுக்கள் நிறைந்த இடமாகவும் உள்ள குலுமணாலிக்கு பயணம் செய்ய ஏற்ற காலம் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களாகும்.

திருமணமாகி தேனிலவிற்கு தயாராக இருக்கும் தமபதியார் மட்டும் படிக்கவும்.!


தமிழ்நாடு

ஆன்மீகம் மற்றும் வன விலங்குகள் மீது ஆர்வம் உள்ள இளம் தம்பதியினரின் தேனிலவுக்கு ஏற்ற இடம் தமிழ்நாடு. அக்டோபர், நவம்பர் மற்றும் ஜனவரி முதல் மே மாதத்திற்கு இடைப்பட்ட கால பகுதியில் தமிழகத்தில் பசுமையான காடுகளை கொண்ட வால்பாறையும் தேனிலவு பயணம் மேற்கொள்ளலாம். இங்கு ஆனைமலை புலிகள் சரணாலயம் மற்றும் இன்னும் பல வனவிலங்குகள் சரணாலயங்கள் உள்ளன. அக்டோபர் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையிலான கால பகுதியில் தமிழகத்தில் நீலகிரி மலைகளில் அமைந்துள்ள ஊட்டி தேனிலவுக்கு ஏற்ற மற்றொரு சிறந்த இடம். அழகிய பூங்காக்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட எழில் மிகு காட்சிகளோடு தம்பதியர் படகு சவாரி, மீன் பிடி போன்றவைகளின் மூலம் சுவாரசியமாகவும் பொழுதை களிக்கலாம். புதுமண தம்பதிகளுக்கு தேனிலவிற்கான சொர்க்கமாக அமைந்துள்ளது ஊட்டி.

கோவா

கேளிக்கை மற்றும் இயற்கையான அழகை கொண்ட கோவாவிற்கு தேனிலவு பயணம் செல்லும் எந்த ஒரு புதுமண தம்பதியரும் கோவாவின் கதகதப்பான சூரியன், அழகிய கடற்கரை, முடிவற்ற கடல், நீளமாக அணிவகுத்து நிற்கும் தென்னை மரங்கள், தேவலையங்கள் உள்ளிட்டவைகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. மேலும், சாகசம் விரும்பும் இளம் தம்பதியினருக்கு நீர் சறுக்கு விளையாட்டு, மீன் பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு சாகச விளையாட்டுகளும், நிறைந்துள்ளன. கோடை மற்றும் குளிர் காலங்கள் கோவாவிற்கு தேனிலவு பயணம் செய்ய ஏற்ற காலமாகும்.

திருமணமாகி தேனிலவிற்கு தயாராக இருக்கும் தமபதியார் மட்டும் படிக்கவும்.!

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகர், தேனிலவு பயணத்திற்கு ஏற்ற மற்றொரு கண்கவர் இடமாகும். மின்னும் சிற்றலைகளுடன் கூடிய அழகிய ஏரிகள், பள்ளத்தாக்குகள், உயர்ந்த மலைகளாகியவை தேனிலவு தம்பதியினர் மனதில் சொர்கத்தை நினைவு படுத்தும். மேலும், ஸ்ரீநகரில் உள்ள முகல் கார்டர்ன், படகு வீடு ஆகியவை வெனிஸ் நகரத்தை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளன. குளிர் கால தலைநகரான ஜம்முவில் கோட்டைகள், கோவில்கள் மற்றும் குகைகள் நிறைந்துள்ளன. மேலும், சன்மார்க், குல்மார்க், பகலகம் உள்ளிட்டவைகள் ஜம்முவில் காணவேண்டிய பகுதிகளாகும். அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையிலான ஜம்மு காஷ்மீர் பயணம் தம்பதியின் மனதில் இருந்து தேனிலவு பற்றிய சிந்தனைகளை நீங்காமல் வைத்திருக்கும்.

அந்தமான் நிகோபார் தீவுகள்

தேனிலவை ஒரு தீவில் கொண்டாட விரும்பும் ஒரு புதுமண தம்பதியினருக்கு ஏற்ற இடம் அந்தமான் நிக்கோபார் தீவுகள். கோடைகாலமானாலும், குளிர்காலமானாலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவில் தேனிலவிற்கான சிறந்த இடங்களில் ஒன்றாக உள்ளது. காட்டு விலங்குகள், மலைகள், வண்ணமயமான மீன்கள், பிரமிப்பூட்டும் தாவிரங்கள், நாகர்கள் உள்ளிட்டவைகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கண்கவர் காட்சிகளாகும்.கேளிக்கைகளை விரும்பும் ஜோடியினருக்கு நீர் சறுக்கு, வின் சர்பிங், விசைப்படகுகள், கிளாஸ் பாட்டம் படகு சாரிகள் உள்ளிட்ட பல விளையாட்டுகளும் நிறைந்துள்ளது.

திருமணமாகி தேனிலவிற்கு தயாராக இருக்கும் தமபதியார் மட்டும் படிக்கவும்.!

கேரளா

கோடைக்காலமோ, குளிர்காலமோ புதியதாக திருமணமானவர்கள் பெரும்பாலானோர் தேனிலவிற்காக தேர்வு செய்யும் இடம் கேரளா. சன் பாத் விரும்பும் ஜோடிகளுக்கு கோவளம் கடற்கரை உள்ளது. ஆலப்புழா, மூணார் மற்றும் வயநாடு பகுதிகளில் தம்பதியர் தண்ணீரில் ரொமான்ஸ் செய்வதற்கு ஏற்ப படகு வீடுகள் கிடைக்கின்றன. பல்வேறு அழகிய ஏரிகள், கால்வாய்கள், ஆறுகள், தாவரங்கள், வனங்கள், விலங்குகள், கிராமப்புற கலாச்சாரத்தின் மேன்மை ஆகியவற்றை கொண்ட கேரளா தேனிலவை கழிக்க இந்தியாவில் உள்ள சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

https://news.ibctamil.com

Share this post


Link to post
Share on other sites

2004 – இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா பெங்களூரில் விமான விபத்தில் இறந்தார்.

வரலாற்றில் இன்று….

ஏப்ரல் 17

நிகழ்வுகள்

69 – பெட்ரியாக்கும் என்ற இடத்தில் இடம்பெற்ற போரின் பின்னர், விட்டேலியஸ் என்பவன் ரோம் பேரரசின் மன்னன் ஆனான்.
1492 – வாசனைப் பொருட்களை ஆசியாவில் கொள்வனவு செய்யும் உரிமையை கொலம்பஸ் ஸ்பெயின் அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
1524 – இத்தாலிய நாடுகாண் பயணி ஜோவானி டா வெரசானோ நியூயோர்க் துறைமுகத்தை அடைந்தார்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியா கூட்டணியில் இருந்து விலகியது.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் வட கரோலினாவின் பிளைமவுத் நகரைத் தாக்கினர்.
1895 – சீன-ஜப்பான் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியப் பேரரசு ஜெர்மனியிடம் சரணடைந்தது.
1961 – அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயினால் பயிற்சியளிக்கப்பட்ட கியூபா அகதிகள் குழு ஒன்று பிடெல் காஸ்ட்ரோவைப் பதவியில் இருந்து அகற்றும் நோக்குடன் பிக்ஸ் விரிகுடாவில் தரையிறங்கினார்.
1969 – செக்கோசிலவாக்கியாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அலெக்சாண்டர் டூப்செக் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1970 – அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது.
1971 – முஜிபுர் ரகுமான் தலைமையில் வங்காள தேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1975 – கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் தலைநகர் நாம் பென்னைக் கைப்பற்றினர். கம்போடிய அரசு சரணடைந்தது.
1986 – 335 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் நெதர்லாந்துக்கும் சில்லி தீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தானது.sds-500x303.jpg
2004 – இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா பெங்களூரில் விமான விபத்தில் இறந்தார்.

பிறப்புகள்

1756 -தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1805)
1894 – நிக்கிட்டா குருஷேவ், சோவியத் ஒன்றியத்தின் பிரதமர் (இ. 1971)
1916 – சிறிமாவோ பண்டாரநாயக்கா, இலங்கையின் பிரதம மந்திரி, உலகின் முதல் பெண் பிரதமர் (இ. 2000)
1966 – விக்ரம், தமிழ் திரைப்பட நடிகர்
1972 – முத்தையா முரளிதரன், இலங்கைப் பந்தாளர்
1979 – சித்தார்த், பன்மொழி திரைப்பட நடிகர்
1981 – மயூரன் சுகுமாரன், இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் (இ. 2015)

இறப்புகள்

1761 – தொமஸ் பேயிஸ், ஆங்கிலேயக் கணிதவியலாளர்
1790 – பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (பி. 1706)
1942 – ஜீன் பெரின், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1870)
1975 – சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர், இரண்டாவது குடியரசுத் தலைவர் (பி. 1888)
1976 – ஹென்ரிக் டாம், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)
1994 – ரொஜர் ஸ்பெரி, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1913)
2004 – சௌந்தர்யா, இந்திய நடிகை (பி. 1971)
2013 – டி. கே. ராமமூர்த்தி, தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1922)
2014 – கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (பி. 1927)
2014: கர்பால் சிங், மலேசிய வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1940)

http://metronews.lk

Share this post


Link to post
Share on other sites

14 நாள்கள்

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

 

மண்ணுக்குள் சென்ற கறுப்பு வைரம்! 

p8a_1523893771.jpg

தென்னாப்பிரிக்காவின் தாய் என அழைக்கப்பட்ட வின்னி மடிக்கசேலா மண்டேலா ஏப்ரல் 2 அன்று மறைந்தார். 1957-ம் ஆண்டில், 20 வயது மங்கையாக வெள்ளையருக்கு எதிரான போராட்டக்களத்தில் நின்ற வின்னியும், அவரைவிட  16 வயது மூத்தவரான மண்டேலாவும் சந்தித்தபோது, ஒரு கடுமையான வாழ்க்கை இருவரையும் இணைக்கும் என அவர்கள் நினைக்கவில்லை. உடனே திருமணம், அடுத்தடுத்து இரு பெண் குழந்தைகள் ஒருபுறம், போராட்டம் மறுபுறம் என மூச்சுவிட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த தம்பதியை உலுக்கிப்போட்டது 1964-ல் மண்டேலாவின் கைது. அதன்பின் 26 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் மண்டேலா. வின்னியோ அவ்வப்போது சிறையும் ஆர்ப்பாட்டங்களும் என மாறிமாறி பிரச்னைகளைக் கையாண்டு வந்தார். இரு குழந்தைகளையும் தனியே நின்று வளர்த்தெடுத்தார். குடியிருந்த வீடு எரிக்கப்பட்டது. இரவு விசாரணை, ஆயுத மிரட்டல் என அத்தனையும் தாண்டி வந்தார் வின்னி. 1990-ம் ஆண்டு, 26 ஆண்டுகள் சிறைவாசம் முடித்து வெளிவந்த மண்டேலாவுடன் கைகோத்தபடி சிரித்திருந்த வின்னியின் புகைப்படங்கள் உலகெங்கும் வெளியாகி அவர்களது காதலைப் பறைசாற்றின. அந்த மகிழ்ச்சியும் நிலைக்கவில்லை. சில ஆண்டுகளிலேயே, விவாகரத்து கேட்டார் மண்டேலா. அவர் வகித்த கலாசாரத் துறை அமைச்சர் பதவியையும் பறித்தார். அதையும் கடந்து வந்தார் வின்னி. வங்கி மோசடி வழக்கு ஒன்றில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, `ராபின் ஹுட்’ போல வங்கியிடம் இருந்து பணத்தை ஏமாற்றி வாங்கி, ஏழைகளுக்கு வழங்கினார் எனத் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். விமர்சனங்களைத் தாண்டி, தனியே தன் வாழ்க்கையின் பெரும்பான்மைப் பகுதியை நாட்டுக்கான அர்ப்பணிப்புடன் கழித்த வின்னி பாராட்டுக்குரியவர்தான்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.


p8b_1523893926.jpg

வாழவைக்கும் காதலுக்கு ஜே!

டந்த 2015-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துச் சாதனை புரிந்தவர் டீனா தபி. அதே தேர்வில் இரண்டாமிடம் பிடித்தவர் அத்தர் அமீர் உல் ஷஃபி. டெல்லியைச் சேர்ந்த டீனாவும் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அத்தரும் 2016-ம் ஆண்டு, மசூரி நகரில் சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் சந்திக்க, கண்டதும் பற்றிக்கொண்டது காதல். இஸ்லாமியரான அத்தரை, தான் காதலிப்பதாக ட்விட்டரில் மூன்றாண்டுகளுக்கு முன்னரே செய்தி வெளியிட்டார் டீனா. `இந்துவான டீனாவை ஏமாற்றித் திருமணம் செய்துகொள்ள முயல்கிறார் இஸ்லாமியரான அத்தர். இது, லவ் ஜிஹாத்' எனக் கொதித்து எழுந்தன இந்துத்துவ அமைப்புகள். பயிற்சி முடியும் வரை அமைதி காத்த ஜோடி, ராஜஸ்தான் மாநிலத்தில் பணியேற்றுக்கொண்டது.

அவ்வப்போது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஜோடிக்கு, ஆன்லைன் ‘ட்ரால்கள்’ கடும் மன உளைச்சலை ஏற்படுத்தின. இந்த நிலையில் சந்தடியின்றி டீனாவும் அத்தரும் ஜெய்ப்பூர் ஆட்சியர் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். அதன்பின், காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நகரில் பாரம்பர்ய முறைப்படி திருமண சடங்கு நடைபெற்றது. டெல்லியில் வரவேற்பும் நடைபெறவுள்ளது. “சமூக நல்லிணக்கம் இல்லாத இந்த வேளையில், திருமண பந்தத்தில் இணைந்துள்ள உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்’ என்று வாழ்த்தியிருக்கிறார் ராகுல் காந்தி. எதிர்ப்பையும் வெறுப்பையும் புறம்தள்ளிவிட்டு இணைந்திருக்கிறது காதல் ஜோடி.

காதல் கிளிகளுக்கு நம் வாழ்த்தும் அன்பும்!


p8c_1523893956.jpg

இந்தியாவின் முதல்  பாலின நடுநிலை விடுதி!

மு
ம்பையிலுள்ள டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் கல்வி நிறுவனம் (டிஸ்), இந்தியாவின் முதல் பாலின நடுநிலை விடுதியை வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கையர், பாலின சார்பற்றோர் என `எல்ஜிபிடி’ மாணவ மாணவிகளுக்கு இது ஒரு வரமாக அமையும்.

சுலபமாகக் கிடைத்துவிடவில்லை இந்த விடுதி வசதி. `டிஸ் க்வீர் கலெக்டிவ்’ என்ற அமைப்பினரின் விடாமுயற்சியும் தொடர் போராட்டமும்தான் இதற்குக் காரணம் என்று கூறுகிறார் இரண்டாமாண்டு பயிலும் `க்வீர் கலெக்டிவ்’வின் தேஜோ. “கடந்த ஆண்டு செப்டம்பரில் இதுபோன்ற விடுதி வேண்டும் என்று மாணவர் யூனியன் சிறப்புத் தீர்மானம் இயற்றியது. பாலின நடுநிலை கழிவறைகளும் விடுதியும் எங்களது நீண்ட நாள் கோரிக்கை” என்கிறார் தன்னை டிரான்ஸ்-உமன் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் தேஜோ. மிஸ்டர், மிஸ், மிஸஸ் என்ற அடையாளங்கள் தாண்டி, மெக்ஸ் (Mx) என்ற அடைமொழியைச் சான்றிதழில் எழுதி வழங்கவும் இந்த ஆண்டு அனுமதியளித்தது டிஸ்.

டிஸ் - நிச்சயம் ஒரு முன்னோடிதான்!


p8d_1523893977.jpg

பிறந்த மண்ணில் கல்வி  தேவதை !

மைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுஃப்சாய் ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு, தான் பிறந்த ஸ்வாட் பள்ளத்தாக்கின் மண்ணை மிதித்திருக்கிறார். பாகிஸ்தானின் தாலிபன் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டு, கோமா நிலையில் பாகிஸ்தானிலிருந்து வெளியேறினார் அப்போது 14 வயதான சிறுமி மலாலா. அவர் செய்த குற்றம், இஸ்லாமிய தீவிரவாதிகளான தாலிபனை எதிர்த்துக் கல்வி கற்க பள்ளிக்குச் சென்றது. இப்போது, தன் தாய்வீட்டை அடைந்த மலாலா, ஸ்வாட் பள்ளத்தாக்கின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிந்து, ‘உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடம்’ என எழுதியிருக்கிறார்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் மலாலா, “படித்து முடித்தபின் நான் பாகிஸ்தானுக்குத் திரும்புவேன். இது என் நாடு. ஒவ்வொரு பாகிஸ்தானியருக்கும் இருக்கும் உரிமை எனக்கும் இந்த நாட்டின் மீது உள்ளது” என்றும் கூறினார். அனைவருக்கும் கல்வி என்ற உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கும் மலாலா, 2017-ம் ஆண்டு அமைதிக்கான ஐ.நா தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளைப்பூக்கள் மலரட்டும்... அனைவருக்கும் கல்வி கிடைக்கட்டும்!


p8e_1523894002.jpg

குடும்பக் கட்டுப்பாடு ஒரு நியாயமான கேள்வி!

ருத்தடை என்றதுமே இரண்டு குழந்தைகளுக்குப் பின் பெண்கள் செய்து கொள்ள வேண்டும் என்பது இந்தியக் குடும்பங்களில் எழுதப்படாத நியதி.

ஆனால், கேரளாவைச் சேர்ந்த ஹபீப் தன் மனைவி அஞ்சுவுடன் குழந்தைப் பிறப்புக்கு முன்பே பேசி முடிவு எடுத்துவிட்டார். சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தால், அஞ்சு பிறப்புத் தடை அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றும் இல்லை என்றால் ஹபீப் செய்துகொள்வதாகவும் உடன்பாடு. நார்மல் முறையில் அஞ்சுவுக்குக் குழந்தை பிறக்க, வாசக்டமி எனப்படும் ஆணுக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டார் ஹபீப். 20 நிமிடங்களில் சிகிச்சை முடிந்ததாகவும், வலி அத்தனை அதிகம் இல்லை எனவும் தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் ஹபீப், தனியாகவே மருத்துவமனை சென்று ஒன்றரை மணி நேரத்தில் வீட்டுக்கு மீண்டும் இருசக்கர வாகனத்தைத் தானே ஓட்டி வந்ததையும் எழுதியுள்ளார். அதன்பின், தன் பணிகளைத் தானே செய்ததாகவும் அதிக பளு மட்டும் ஒரு வாரத்துக்குத் தூக்கவில்லை என்றும் கூறியுள்ள ஹபீப், ஒரே ஒரு கேள்வியை முன்வைக்கிறார். “மருத்துவர் உங்கள் முன் இரண்டு வாய்ப்புகளைத் தருகிறார். ஒன்று, தோல் மட்டும் நீக்கிச் செய்யப்படும் அறுவை சிகிச்சை, இன்னொன்று வயிற்றைக் கிழித்துச் செய்யப்படும் அறுவை சிகிச்சை. இரண்டில் நீங்கள் எதைத் தேர்ந்
தெடுப்பீர்கள்? பெண்களே ஏன் இதுபோன்ற அறுவை சிகிச்சையைச் செய்துகொள்ள வேண்டும்?”

அதானே?!


p8f_1523894021.jpg

கலக்கும் இந்திய  வீராங்கனைகள்!

ந்தியப் பெண்களுக்குத் தங்கப்பதக்கங்களை அள்ளித் தந்துகொண்டிருக்கிறது கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டு. எட்டாவது நாள் வரை 14 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் பெருமையுடன் நின்றுகொண்டிருக்கிறது இந்தியா. துப்பாக்கிச் சுடுதல், பளுதூக்குதல், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் என வித்தியாசமான விளையாட்டுகளில் முத்திரைப் பதித்துவருகிறார்கள் இந்தியப் பெண்கள். முதல் தங்கத்தை இந்தியாவுக்குப் பெற்றுத்தந்தார் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. இரண்டாவது தங்கமும் பளுதூக்கும் போட்டியிலேயே கிடைத்தது சஞ்சிதா சானு மூலம். பூனம் யாதவ் மூன்றாவது தங்கம் பெற்றுத் தந்தார். பிஸ்டல் போட்டியில் மனு பேக்கர் முதலிடம் பிடித்து, தங்கம் வென்றார்.

2002-ம் ஆண்டு முதல் எந்த காமன்வெல்த் போட்டி யிலும் தோற்காத சிங்கப்பூர் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணியை வீழ்த்தியும் தங்கம் வென்றது இந்தியப் பெண்கள் அணி. துப்பாக்கி சுடுதலில் ஹீனா சித்து, ஷ்ரேயசி சிங், தேஜஸ்வினி சாவந்த், மெஹுலி கோஷ், ஹீனா சித்து ஆகியோர் வெள்ளி வென்றனர். தங்கமும் வெள்ளியும் என இரண்டு பதக்கங்களைத் துப்பாக்கி சுடுதலில் வென்று சாதனை புரிந்திருக்கிறார் மும்பையைச் சேர்ந்த பல் மருத்துவரான ஹீனா.
பளுதூக்குதலில் பபிதா குமாரி வெள்ளி வென்றுள்ளார். மல்யுத்தத்தில் கிரண், அபூர்வி சந்தேலா ஆகியோர் வெண்கலம் வென்றிருக்கின்றனர்.

பெண்கள் அணிக்குப் பாராட்டுகள்! 

https://www.vikatan.com

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites
 
 
 
Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen
 

கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan, பிறப்பு: ஏப்ரல் 17, 1972, கண்டி) பிறந்த தினம் இன்று.!!

பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முக்கிய சுழற்-பந்து வீச்சாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். தேர்வு (Test) துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடி 800 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார்.

22 சூலை 2010 அன்று தேர்வுக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும் இவர் அதிகூடிய இலக்குகளை வீழ்த்திய பட்டியலில் முதலாவதாக உள்ளார்

இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் ஆய்வுக் கூட பரிசோதனைகளின் பின்னர் சர்ச்சைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டன.

2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்.

இலங்கை துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 இல் இந்தியரான மதிமலர் இராமானுதியைத் திருமணம் செய்து கொண்டார்

 

 
 
 
Bild könnte enthalten: 1 Person, lächelnd, machen Sport und im Freien
ICC - International Cricket Council
 

800 Test wickets - the most by any player.
534 ODI wickets - the most by any player.
1,347 international wickets - 346 more than his nearest rival, Shane Warne.

Happy birthday to the legendary Sri Lanka Cricket spinner, Muttiah Muralitharan!

Share this post


Link to post
Share on other sites

சாலையில் இறங்கி கிரிக்கெட் விளையாடிய சச்சின்: இன்ப அதிர்ச்சி அடைந்த மெட்ரோ ரயில் தொழிலாளிகள்

 

 
download%204

சச்சின் டெண்டுல்கர் மெட்ரோ தொழிலாளர்களுடன் கிரிக்கெட் விளையாடும் காட்சி

காரில் சென்றுக்கொண்டிருந்த சச்சின் சாலையில் கிரிக்கெட் விளையாடிய மெட்ரோ ரயில் தொழிலாளிகளுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார். இதைப்பார்த்த தொழிலாளிகள் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகினர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று டான் பிராட்மேனை அழைப்பார்கள், அதற்கு அடுத்து அந்தப்பட்டத்தை பெற்றவர் சச்சின் டெண்டுல்கர். மும்பையின் சாதாரண மத்திய தர குடும்பத்திலிருந்து வந்த சச்சின் அக்குடும்பத்தில் 4 வது பிள்ளை ஆவார்.

பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்த சச்சின் மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், தன்னுடையா சக தோழன் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து 664 ரன்களை குவித்ததன் மூலம் கிரிக்கெட் விளக்கு வெளிச்சத்தை தன் பக்கம் திருப்ப வைத்தார்.

அதன் பின்னர் ஏறுமுகம் தான். 1988-ல் ரஞ்சிப்போட்டியில் தனது 15 வது வயதிலேயே மும்பை அணியின் சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் எடுத்தார். 15 வயதில் இத்தனை திறமையா என சர்வதேச போட்டிக்கு சச்சினை தேர்வு செய்தனர். 15 வயதில் அப்போதைய புதிர் ஸ்பின்னர் மணீந்தர் சிங் பந்து வீச்சை அதி புரிதலுடன் ஆடி அசத்தினார். விவ் ரிச்சர்ட்சே மணீந்தர் சிங் பந்து வீச்சை ஆடுவது செஸ் ஆட்டம் போல் உள்ளது என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

1989-ம் ஆண்டு தம் 16-வது வயதில் முதன்முறையாக இந்தியாவின் சார்பாகத் சர்வதேச போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கினார் சச்சின். அடுத்த ஆண்டே இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச முதல் சதத்தை அடித்தார்.

அன்று துவங்கிய அவரது பயணம் 100 சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி சத சாதனையில் முடிந்தது. கடந்த 2012-ல் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற சச்சின், 2013-ல் டி-20, டெஸ்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார்.

ராஜ்யசபா எம்பியாகவும் சச்சின் இருக்கிறார். பல்வேறு விருதுகளை பெற்ற சச்சினை இன்றும் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். சரவதேச அளவில் பிரபலமான நபராக அறியப்பட்டாலும் சச்சின் பெரும்பாலும் எளியவராகவே வலம் வருகிறார்.

சமீபத்தில் தனது காரில் மும்பை பாந்த்ரா பகுதியில் இரவு நேரம் வந்துக்கொண்டிருந்த சச்சின் அங்கு மெட்ரோ ரயில் பணி நடக்கும் இடத்தில் ஓய்வுக்காக சில தொழிலாளர்கள் சாலையோரம் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்துள்ளார்.

தன்னுடைய பிள்ளை பருவத்தில் சாலையோரத்தில் கிரிக்கெட் விளையாடியது ஞாபத்துக்கு வர காரை ஓரம் நிறுத்தச்சொல்லி இருக்கிறார் சச்சின். ஒன்றும் புரியாமல் காரை டிரைவர் நிறுத்த காரைவிட்டு கீழே இறங்கிய சச்சின் நேராக கிரிக்கெட் விளையாடும் தொழிலாளர்களை நோக்கி செல்ல யாரோ பெரிய மனிதர் வருகிறார் என்று நினைத்த தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

நாம் கான்பது கனவா? நனவா? திரையில் மட்டுமே பார்த்த உருவம் நேரில் நடந்து வருகிறதே என்று திகைத்தப்படி பார்க்க, என்ன பார்க்கிறீர்கள் பேட்டை கொடுங்கள் என்று சச்சின் கேட்க அந்த தொழிலாளி திகைத்தப்படி அவர் காலில் விழுகிறார் அவரை தடுத்து தூக்கி விட்ட சச்சின், அவர் கையில் இருந்த பேட்டை வாங்கி பேட்டை பிடித்து நின்று பாலை போடச்சொல்லுகிறார்.

சர்வதேச அளவில் பல புகழ்பெற்ற மைதானங்களில் பேட்டை பிடித்து நின்ற சச்சின் தெருவில் பேட்டை பிடித்து நிற்க, ஸ்டம்புக்கு பதில் சாலைத்தடுப்பு இருக்க பந்தை போலர் போட அதை அடித்து ஆடுகிறார் சச்சின். இரண்டு மூன்று பந்துகளை அவர் அடித்து ஆட சாலையில் செல்வோர் யாரோ இளைஞர் விளையாடுகிறார் என்று சாதாரணமாக சாலையை கடக்கின்றனர்.

பின்னர் காரில் வந்த சிலர் சச்சினை அடையாளம் கண்டுவிட அத்துடன் தனது விளையாட்டை நிறுத்திக்கொள்கிறார். பின்னர் தொழிலாளுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டு வாழ்த்திவிட்டு காரில் ஏறிச்செல்கிறார் சச்சின். இந்த வீடியோவை சச்சினின் பால்ய தோழரும் சச்சினுடன் சாலையோரம் கிரிக்கெட் விளையாட்டை துவக்கி சர்வதேச போட்டி வரை பயணித்த வினோத் காம்ப்ளி தனது ட்விட்டர் பக்கத்தில் போட அது வைரலாகி வருகிறது.

http://tamil.thehindu.com/

 

 

 
 
தெருவில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின்: வைரலாகும் வீடியோ!

Share this post


Link to post
Share on other sites

அன்புக்கு ஐஸ்கிரீம் இலவசம்!

 

 
10CHIcecream1

எல்லோரையும் வசப்படுத்தவே பொதுவாக இலவசங்கள் அள்ளி வீசப்படுகின்றன. ஆனால், இலவசம் வழங்குவதிலும், ‘என் வழி தனி வழி’ என்று ஐஸ்கிரீமை வாரி வழங்கிவருகிறது அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ‘பென் அண்டு ஜெர்ரி’ ஐஸ்கிரீம் நிறுவனம்.

   

 

கோடை கொடை

வருடத்தில் ஒரு நாள் இலவசமாக கோன் ஐஸ்கிரீம் விநியோகிப்பதைக் கடந்த நாற்பது ஆண்டுகளாக வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். அப்படியாக, 2018-ம் ஆண்டுக்கான ‘ஃபிரீ கோன் டே’வைச் சில தினங்களுக்கு முன்பு கொண்டாடியது. எதற்கு இந்த இலவசம் என்று கேட்பவர்களுக்கு, “ஒரு பெட்ரோல் பங்கை ஐஸ்கிரீம் கடையாக 1978-ல் மாற்றியபோது தங்களுடைய அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்த இந்த ஊர் மக்களுக்கு எங்களுடைய நன்றியை இப்படிச் செலுத்துகிறோம்” என்று பதில் அளிக்கிறது இந்நிறுவனத்தின் இணையதளம்.

இந்நாளில் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான எந்த ஐஸ்கிரீம் வகையையும் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். இதில் சுவாரசியத்தைக் கூட்ட ஒரு குட்டி விநாடி வினாவையும் நடத்தி அதன் அடிப்படையில் பிரத்யேகச் சுவைகளைத் தேர்வுசெய்யும் வாய்ப்பு இந்த ஆண்டு அளிக்கப்பட்டது. நியூயார்க்கின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள ‘பென் அண்டு ஜெர்ரி’யின் கிளைகளில் கோன் ஐஸ்கிரீம்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

10CHflavorgraveyard
 

 

டூர் போலாமா!

கடைகளை நியூயார்க் நகரில் திறந்து வைத்திருந்தாலும் ‘பென் அண்டு ஜெர்ரி’ நிறுவனம் இன்றுவரை ஐஸ்கிரீம் தயாரிப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெர்மாண்ட் மாகாணத்தில் தொடங்கிய ஒரு தொழிற்சாலையில்தான். சிறிய வளாகத்தில் இயங்கிவரும் இந்த ஐஸ்கிரீம் தொழிற்சாலைதான் 40 சதவீதம் அமெரிக்கர்களைத் தன்னுடைய ஐஸ்கிரீமால் உருக வைத்திருக்கிறது. இந்தத் தொழிற்சாலையைப் பொதுமக்கள் எந்நேரமும் பார்வையிடலாம்.

குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் இந்த ‘ஐஸ்கிரீம் டூர்’-ன்போது ‘பென் அண்டு ஜெர்ரி’ நிறுவனத்தின் நாற்பதாண்டு காலத் தித்திக்கும் கதையை ஒரு அனிமேஷன் குறும்படமாகப் பார்க்கலாம். எட்டு நிலைகளில் எவ்வாறு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது என்பதையும் பார்வையிடலாம். அதைவிடவும் சுவாரசியமானது ‘ஃபிளேவர் கிரேவ்யார்ட்’. கடந்த காலத்தில் கைவிடப்பட்ட ஐஸ்கிரீம் சுவைகளுக்கு இங்கு நகைச்சுவை ததும்பும் வாசகங்களுடன் இடுகாடு அமைக்கப்பட்டுள்ளது.

shutterstock653330359
 

டாலர் தேசமாக இருந்தாலும் வருடா வருடம் இந்த இலவச ஐஸ்கிரீமுக்கும் ஐஸ்கிரீம் சுற்றுலாவுக்கும் அமெரிக்க மக்கள் அலைமோதுகின்றனர். இன்ஸ்டாகிராமிலும் #FreeConeDay என்ற ஹேஷ் டேக்குடன் ஐஸ்கிரீம் ஒளிப்படங்கள் குவிந்துவருகின்றன.

அடடே! முன்கூட்டியே தெரிஞ்சிருந்தா…செலவு செஞ்சாவது நியூயார்க் போய், இலவச கோன் ஐஸ்கிரீமையும் ஐஸ்கிரீம் டூரையும் அனுபவிச்சிருக்கலாமே என்று யோசிக்கிறீர்களா?

http://tamil.thehindu.com

Share this post


Link to post
Share on other sites

 

60 ஆண்டுகள் முன்னரே பரபரப்பாக இயங்கிய பழைய கார் சந்தை

2-ஆம் உலகப் போருக்கு பிறகு பழைய கார்களை வாங்க பிரிட்டன் மக்கள் ஆர்வம் காட்டியது குறித்த செய்தித் தொகுப்பு.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

உதவி செய்யும் மகனைப் பெற்ற அப்பா ஆசீர்வதிக்கப்பட்டவர்! – நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

 
 

கதை

`என் இதயத்தைத் திருடிய ஒரே மனிதன் என் மகன்’ - நெகிழ்ந்து போய் ஒரு பேட்டியில் இப்படிச் சொன்னார் அமெரிக்க நடிகை சாண்ட்ரா புல்லக் (Sandra Bullock). சில நேரங்களில் நம் எல்லோருடைய பிள்ளைகளுமே ஏதோ ஒருவிதத்தில் நம் மனதைக் கொள்ளை கொண்டவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். ஆனால், தேவைப்படும்போது பெற்றோருக்கு ஒரு மகன் உதவுவதென்பது இன்றைய காலத்தில் எதிர்பார்க்கவே முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. வளர்ந்த பிறகு பெற்றோரும் பிள்ளைகளும் விலகி, தனித்தனித் தீவுகளாகவே வாழ்கிற காலச்சூழல் இது. இதற்கு விதிவிலக்காக எந்த இடத்தில், எந்த நிலையில் மகன் இருந்தாலும் அவனால் உதவி பெறும் பெற்றோர் பாக்கியசாலிகள்; தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அப்படி ஒரு மகனைப் பெற்ற தந்தையின் கதை இது.

அது மட்டுமல்ல… இந்த உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் சரி… உங்கள் மனதில் ஆழமாக ஒன்றைச் செய்வதற்கு முடிவெடுத்துவிட்டால், அதை உங்களால் நிச்சயம் செய்ய முடியும்- இந்த உண்மையையும் அழகாக விளக்குகிறது இந்தக் கதை.

அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் ஒன்று, மின்னசோட்டா (Minnesota). 20 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருக்கும் ஒரு சிறு கிராமத்திலிருந்தார் அந்த முதியவர். அவர் ஒரு விவசாயி. அது, உருளைக்கிழங்கு பயிரிடும் காலம். அதற்காக அவர் நிலத்தை ஆழமாகத் தோண்டவேண்டியிருந்தது. ஆனால், முதுமை… உதவிக்கு ஆளில்லை. இருந்த ஒரே மகனும் ஏதோ ஒரு பிரச்னையில் மாட்டிக்கொண்டு சிறையிலிருந்தான். சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டு அவனை வெளியே கொண்டுவரவும் வழியில்லை. உருளையைப் பயிரிடும் நாள்கள் நெருங்கிக்கொண்டிருக்க, அவர் சிறையிலிருக்கும் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார்… 

கதை

`இந்த வருஷம் நம்ம தோட்டத்துல உருளைக்கிழங்கு பயிரிட முடியாதுனு தோணுதுப்பா. உன் அம்மாவுக்கு உருளைக்கிழங்குன்னா அவ்வளவு உசுரு. அவ உசுரோட இருந்தவரைக்கும் ஒரு வருஷம்கூட நாம உருளைக்கிழங்கைப் பயிரிடாம இருந்ததில்லை. என்ன பண்றது? இப்போ எனக்கு உதவிக்கு ஆளில்லை. என்னால நிலத்தை மம்பட்டியால தோண்டவே முடியலை. கால் மணி நேரம் ஓங்கி மம்பட்டியால வெட்டினாலே மூச்சு வாங்குது. நீ மட்டும் இங்கே இருந்திருந்தீன்னா எந்தப் பிரச்னையும் இருந்திருக்காது. நீ ஒத்தை ஆளாவே நின்னு உருளைக்கிழங்கைப் பயிரிட மொத்த நிலத்தையும் தோண்டியிருப்பே… என்ன பண்றது… நீ ஜெயில்ல இருக்கியே… சாரிப்பா… என்னமோ எழுதணும்னு தோணிச்சு. எழுதிட்டேன். உடம்பைப் பார்த்துக்கோ! – பிரியங்களுடன் உன் அப்பா.’

இந்தக் கடிதத்தை அனுப்பிய இரண்டாவது நாளில் அவருக்குச் சிறையிலிருந்த மகனிடமிருந்து ஒரு தந்தி வந்தது. `அப்பா… நல்ல வேளைப்பா. நீங்க நம்ம நிலத்தைத் தோண்டலை. அங்கேதான் நான் சில வெடிகுண்டுகளையும் துப்பாக்கியையும் புதைச்சுவெச்சிருக்கேன். ஜாக்கிரதை!’ இப்படிச் சொன்னது தந்தி வாசகம்.

அடுத்த நாள், அதிகாலை 4:00 மணிக்கு அது நடந்தது. அந்த விவசாயியின் வீட்டுக்கு பத்து, பதினைந்து எஃப்.பி.ஐ ஏஜென்ட்டுகளும் சில காவல்துறை அதிகாரிகளும் வந்தார்கள். அவருடைய நிலத்தையே தலைகீழாகப் புரட்டுவதுபோல, அங்குலம் அங்குலமாகத் தோண்டிப் பார்த்தார்கள். ஆனால், எவ்வளவு ஆழமாகத் தோண்டியும் அவர்களால் ஒரு சிறு கைத்துப்பாக்கியைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இரவானதும், வெறுத்துப் போனவர்களாகக் கிளம்பிப் போனார்கள். 

கதை

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த விவசாயி, சிறையிலிருந்த தன் மகனுக்கு இன்னொரு கடிதத்தை எழுதினார். அதில் நடந்ததையெல்லாம் விவரித்திருந்தார்… `இப்போ நான் என்னப்பா செய்யட்டும்?’ என்று கடிதத்தை முடித்திருந்தார்.

 

இரண்டே நாளில் சிறையிலிருந்த மகனிடமிருந்து கடிதம் வந்தது. அதில் இப்படி எழுதியிருந்தது… `அப்பா… இப்போ நீங்க ஆசைப்பட்ட மாதிரியே இப்போ  நிலம் நல்லா தோண்டியிருக்குல்லப்பா! அப்புறமென்ன… உருளைக்கிழங்கை பயிரிடுங்க. ஜெயில்ல இருந்துக்கிட்டு என்னால செய்ய முடிஞ்சதெல்லாம் இவ்வளவுதாம்ப்பா… மன்னிசுக்கோங்க!’’

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்ட நாள்: ஏப்ரல் 18, 1912

 

ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் தலைநகரமான மெல்போர்ன் 1912-ஆம் ஆண்டு இதே நாளில் அமைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். 2006-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 3.8 மில்லியன் ஆகும். மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள் * 1906 - அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

 
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்ட நாள்: ஏப்ரல் 18, 1912
 

ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் தலைநகரமான மெல்போர்ன் 1912-ஆம் ஆண்டு இதே நாளில் அமைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். 2006-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 3.8 மில்லியன் ஆகும். மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்

* 1906 - அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

* 1912 - கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூயார்க் வந்து சேர்ந்தனர்.

* 1930 - பிபிசி வானொலி தனது பழமையான செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்த செய்திகளும் இல்லை என அறிவித்தது. • 1949 - அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

* 1954 - கமால் அப்துல் நாசர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

* 1993 - பாகிஸ்தான் அதிபர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.

* 1996 - லெபனானில் ஐநா கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

 

 

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மரணமடைந்த நாள்: ஏப்ரல் 18, 1955

1955-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் இயற்பியல் அறிஞர் ஐன்ஸ்டைன் மரணமடைந்தார்.

 
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மரணமடைந்த நாள்: ஏப்ரல் 18, 1955
 
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் குறிப்பிடத்தக்க பயன்பாட்டு கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இவர் 1879-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராக கருதப்படுகிறார்.

இவர் புகழ்பெற்ற சார்பு கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளார். 1955-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் ஐன்ஸ்டைன் மரணமடைந்தார்.

ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாடு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும் 1921-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப்பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல் அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999-ல் புதிய ஆயிராமாவது ஆண்டை குறித்து வெளியிடப்பட்ட டைம் இதழ் இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதன் என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.  

https://www.maalaimalar.com

Share this post


Link to post
Share on other sites

பாப் கட், ஹால்டர் நெக், புடவையில் புதுமை... சமந்தாவின் லேட்டஸ்ட் ஃபேஷன்!

 
 
Chennai: 

திருமணம் வரை `ஹீரோயின்', அதன் பிறகு `அம்மா' கதாபாத்திரம்தான் என்கிற கோட்பாட்டை, பாலிவுட்டை தொடர்ந்து தற்போது கோலிவுட்டும் முறியடித்துவருகிறது. அந்த வகையில் சமந்தா `டாப் ஸ்டார்'. திருமணமான பிறகும் `ஹீரோயின்', அதுவும் டாப் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். அதிக ரசிகர்களைக்கொண்டிருக்கும் சமந்தா, புகழின் உச்சத்தில் இருக்கும்போதே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாகசைதன்யாவை மணந்தார். நடிப்பில் மட்டுமல்ல, அவரின் ஃபேஷன் சென்ஸுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. எந்த ஒரு விழாவாக இருந்தாலும் சமந்தாவின் ஸ்டைல்தான் அங்கே `ஹாட் நியூஸ்'. விழாவுக்கு ஏற்ப அவரின் ஆடை, ஆபரணங்களின் தேர்வு மிகவும் நேர்த்தியாக இருக்கும். அனைவராலும் பின்பற்றக்கூடிய வகையில், எளிமையாகவும் அதே சமயம் புதுமையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சமந்தாவின் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் என்னென்ன என்பதைப் பார்ப்போமா!


ஐவரி அனார்க்கலி:

சமந்தா

நிறத்தைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்துபவர் சமந்தா. திருமணம், பார்ட்டி, சக்சஸ் மீட் என நிகழ்வுகளில் இருக்கும் லைட்டிங்குக்கு ஏற்றவாறு நிறங்களைத் தேர்ந்தெடுப்பதில் கில்லாடி. அந்த வகையில், இந்த ஐவரி நிற அனார்க்கலி செட் காலை நேர நிகழ்ச்சிகளுக்கு ஏற்றது. ஆடை முழுவதிலும் படர்ந்திருக்கும் அழகான எம்ப்ராய்டரி டிசைன் க்ளாசிக் தோற்றத்தைத் தருகிறது. அதற்கேற்ற வகையில், `பண்' கொண்டையிட்டு அதைச் சுற்றி மல்லிகைப்பூ பார்ப்பதற்கு அவ்வளவு அழகு! இணை ஆபரணங்கள் ஏதுமின்றி, `சாண்ட்பாலி' கம்மல் மட்டும் அணிந்து எளிய `எத்னிக்' தோற்றத்தை தன்வசமாக்கியுள்ளார்.


`பாப் கட் (Bob Cut)' மற்றும் ஹால்டர் நெக்:

Halter Neck Blouse

`புடவை' என்றாலே அதை அடையாளப்படுத்த பின்னலிட்ட சிகை, அலங்கரிக்க மல்லிகைப்பூ, நெற்றியில் பொட்டு என்று தயாராகிவிடுவோம். அனைத்து ஸ்டீரியோ டைப்புகளையும் (Stereo type) உடைத்து, புடவைக்குப் புதிய தோற்றத்தைக் கொடுத்துள்ளார் சமந்தா. கழுத்தளவு வரை மட்டுமே நீண்டிருக்கும் ஹேர்ஸ்டைல், `பாப் கட்'. வெஸ்டர்ன் ஆடைகளுக்கே உரித்தான ஹேர்ஸ்டைல் இது. இதனுடன் புடவை அணிந்தால், விகாரமான தோற்றம் உண்டாகுமோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழும். சமந்தாவின் `ஹால்டர் நெக் (Halter Neck)' பிளவுஸ், எழுந்த சந்தேகத்தின் பதில். `ஹால்டர் நெக்', வெஸ்டர்ன் வகை கழுத்து டிசைன்களுள் ஒன்று. இதை புடவை பிளவுஸ் டிசைனில் பொருத்துவதால், புடவை, பாப் கட்டுக்குச் சரியான ஜோடி ஆகிறது. இந்த நெக் டிசைன் கழுத்தை ஒட்டி வருவதால், நெக்லஸ், சோக்கர் (Choker) போன்ற அணிகலன்கள் அணிய அவசியமில்லை.


பொஹீமியன் ஸ்டைல் (Bohemian Style):

Bohemian Fashion

வடிவியல், மங்கா, பிளைன் முதலிய வழக்கமான டிசைன்கள் இல்லாமல், வழக்கத்துக்கு மாறாக உருவாக்கப்படும் டிசைன்கள் `பொஹீமியன் டிசைன்'. தனிப்பட்ட வித்தியாசமான தோற்றத்தை உருவாக்குவதில், இது என்றைக்கும் தோற்றதில்லை. அதிலும் சமந்தாவின் ஸ்டைல் தனிதான். புடவையின் பிளவுஸ் என்றாலே உடலை ஒட்டித்தான் இருக்க வேண்டுமா? சிறிதளவு தளர்வாய் இருந்தாலே இளைஞர்கள் அவ்வளவு சங்கடப்படுவார்கள். ஆனால், சமந்தாவின் இந்த பொஹீமியன் வகை புடவை, இந்தியப் பெண்களின் புடவைக்கான அனைத்துக் கோட்பாடுகளையும் உடைத்துள்ளது என்றாலும் அழகில் மெருகேறியுள்ளது. இதுபோன்ற டிசைன்களுக்கு `பிளாக் மெட்டாலிக்' ஆபரணங்களே சிறந்தது. அதற்கேற்ற வகையில் கனமான வேலைப்பாடுகள் நிறைந்த `சோக்கர்' அணிந்திருக்கிறார் சமந்தா.


போட் நெக் பிளவுஸ்:

Boat Neck Blouse

பொதுவாகவே கழுத்தை ஒட்டி அணியப்படும் ஆடைகள் பருமனான உடலுக்கு ஏற்றதல்ல. ஏனெனில், அது மேலும் பருமனாகக் காட்டும். அந்த வகையில் போட் நெக் மெலிந்த தோற்றத்தைக்கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே ஏற்றது. இந்த ஆண்டு பேஸ்டல் வண்ணங்களுக்கான ஆண்டு. பேஸ்டல் பிங்க் மற்றும் பச்சை வண்ணத்தில் இந்தக் கைத்தறி ஆடையை சமந்தா உடுத்தியிருக்கும் விதம், புதுமை. போட் நெக் என்பதால், கழுத்தில் அணிகலன்கள் அணியத் தேவையில்லை. அதிக வேலைப்பாடுகளுடன்கூடிய சிகை அலங்காரம் புடவைக்கு அவசியமில்லை, சாதாரண `போனி டைல் (PonyTail)' போதும் என்பதை தன் மெருகேற்றியத் தோற்றத்தில் சொல்லியிருக்கிறார் சமந்தா.

 

`எத்னிக்' என்றால் `பாரம்பர்யம்' எனலாம். அந்த வகையில் நம் நாட்டின் பாரம்பர்ய உடை எனக் கருதப்படும் `புடவை' மற்றும் `சல்வார் கமீஸில்' புதுமையை எவ்வாறு புகுத்தலாம் என்பதை சமந்தாவின் ஃபேஷன் சென்ஸ் சொல்லிவிட்டது.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

இயற்கையைத் தேடும் கண்கள் : நடனமாடும் பெருங்கொக்கு!

 

 
14chnvksarusJPG
 
 
 

எனக்கும் என் ஒளிப்படக் கலைக்கும் மிகவும் நெருக்கமான ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள கேலாதேவ் தேசியப் பூங்காவில் இந்தப் பறவையை 2006-ல் முதன்முதலாகப் பார்த்தேன். ஒளிப்படக் கலைஞர்கள் அதிகம் விரும்பும் பறவைகளில் புகழ்பெற்றது சாரஸ் கிரேன்.

ஆங்கிலத்தில் ‘சாரஸ் கிரேன்’ என்று அழைக்கப்படும் இந்தப் பறவை தமிழில் ‘சரச பெருங்கொக்கு’ எனப்படுகிறது. வடக்கு, மத்திய இந்தியாவில் தென்படும் இந்தப் பறவைதான், பறக்கக்கூடிய பறவைகளில் மிகவும் உயரமானது. உலகின் உயரமான பறவையான நெருப்புக்கோழியால் பறக்க முடியாது.

சாரஸ் கிரேன் பறவைகளில் ஆண், பெண் இரண்டுமே ஒரே மாதிரியாக இருக்கும். ஆண் பறவை சற்று பெரிதாகத் தெரியும். பரத்பூர் பறவை சரணாலயம், புல்வெளிகள், கோதுமை வயல்கள் போன்றவற்றிலும் இவற்றைப் பார்க்க முடியும்.

ஜூலை – அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், மழைக்குப் பிறகு இணை சேரும் இந்தப் பறவைகள், ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் முட்டையிடும். குளம், குட்டை போன்ற நீர்நிலைகளுக்கு அருகேதான் இவை முட்டையிடும். நான்கைந்து முட்டைகளை இட்டாலும், இரண்டு அல்லது மூன்று மட்டுமே குஞ்சு பொரிக்கும். முட்டைகளைப் பேணிக் காப்பதில், ஆண் பெண் இரண்டுமே பங்களிக்கும். இணையைக் கவர்வதற்காக இவை கொடுக்கும் அழைப்புகளும் நடனமும் உலகப் புகழ்பெற்றவை.

இந்தப் பறவைகளிடையே தென்படும் ஒரு சிறப்புக் குணம் ஆண், பெண் பறவைகள் ஒருமுறை இணைந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் ஒரே இணையோடுதான் வாழும். அதனால், புதிதாகத் திருமணமான ஜோடிகள் இந்தப் பறவைகளைப் பார்த்தால் நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கை வட இந்தியாவில் உண்டு. இணை சேரும் காலம் தவிர்த்து இந்தப் பறவைகள் 10 அல்லது 15 கொண்ட குழுவாகத் திரியும். நாடெங்கும் நீர்நிலைகளும் நன்செய் நிலங்களும் ரியல் எஸ்டேட்டுகளாகவும் கட்டிடங்களாகவும் மாறி வரும் நிலையில், இந்தப் பறவைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது! ‘இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேசச் சங்கம்’ (ஐ.யூ.சி.என்) இந்தப் பறவையை ‘அழிவுக்கு உள்ளாகக் கூடிய’ (வல்னரபிள்) பறவை இனமாக வகைப்படுத்தியுள்ளது. நடனத்துக்குப் புகழ்பெற்ற இந்தப் பெருங்கொக்கின் எதிர்காலம் மனிதர்களின் கைகளில் சிக்கித் தவிக்கிறது.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

 

வேற்று கிரகங்களை தேடும் நாசாவின் புதிய செயற்கைக் கோள்

Share this post


Link to post
Share on other sites

``பாரம்பர்ய கல்வெட்டுகளை இழப்பது நம் தொன்மத்தை அழித்துவிடும்!"- சு வெங்கடேசன் #WorldHeritageDay

 
Chennai: 

இன்று, உலக பாரம்பர்ய சின்னங்கள் தினம். யுனெஸ்கோ அமைப்பால் உலகில் உள்ள பாரம்பர்யச் சின்னங்களைப் பராமரிக்கும் நோக்குடன்  ஒவ்வோர் ஆண்டும்  ஏப்ரல் 18-ம் தேதி இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஓர் ஊரில் உள்ள  பாரம்பர்யமான கட்டங்கள் வெறுமனே உயிரற்ற ஒன்றாக இருப்பதில்லை. அவை அந்த ஊரின், மக்களின் வரலாற்றைச் சுமந்து நிற்கின்றன. அவற்றைப் பாதுகாக்கவேண்டியது நம் தலையாய கடமை.

சு வெங்கடேசன்

இந்தியாவில் 36 இடங்களை, யுனெஸ்கோ அமைப்பு உலகின் பாரம்பர்யமான இடங்களாக அறிவித்துள்ளது. அவற்றில் கலாசாரப் பாரம்பர்யமிக்க இடங்களாக சில இடங்களையும், இயற்கைப் பாரம்பர்யமிக்க இடங்களாக சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளன. தமிழ்நாட்டில் தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராதவேசுவரர் கோயில், மகாபலிபுரத்தில் உள்ள பல்லவர் காலத்து சிற்பங்கள் மற்றும் கோயில்கள் உள்ளிட்ட இடங்கள் கலாசாரப் பாரம்பர்யமிக்க இடங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

இவை தவிர, தமிழகத்தில் பாரம்பர்யமான  பல இடங்கள், கோயில்கள் சிதிலமடைந்து வருகின்றன. அவற்றையும் பாதுகாக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். தனுஷ்கோடியில் சிதிலமடைந்து கிடக்கும் தேவாலயத்தின் புகைப்படத்தைப் பார்க்கும்போது, அங்கு வாழ்ந்த, வாழ்விழந்த மக்களின் நினைவுகள் நம்மை நிம்மதியிழக்கச் செய்யும். தமிழகத்தின்  முக்கியமான வரலாற்று நாவலான `காவல் கோட்டம்' நாவலை எழுதியவர் சு.வெங்கடேசன். தமிழகத்தின் வரலாற்று நாயகர்களை, வரலாற்றைத் தொடர்ந்து தன் எழுத்துகளில் பதிவுசெய்துவரும் அவரிடம், நமது தமிழகத்தின் நினைவுச்சின்னங்களைப் பாதுகாப்பது குறித்தும், பாதுகாக்கப்படாமல் சிதைந்துபோன இடங்கள் குறித்தும் பேசினோம். 

World Heritage Day

``நம் தொன்மத்தைக் காப்பாற்றுவதில் அனைவருக்குமே மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அடுத்த தலைமுறையினருக்கு நம் மரபின் வேர்களைச் சுட்டிக்காட்டி, அவற்றைப் பற்றிய விழிப்புஉணர்வை... அவற்றைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு, நமது பாரம்பர்யத்தைக் காப்பதில் சில நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும். தமிழகத்தின் மரபான இடங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பராமரிக்கலாம். தஞ்சை மற்றும் நாகையையொட்டிய பகுதிகளை ஒரு குழுவாகவும், மதுரையையொட்டிய, தென் பிராந்தியங்களையொட்டிய பகுதிகளை ஒரு குழுவாகவும், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளை ஒரு குழுவாகவும் பிரித்துப் பராமரிப்பதன் மூலம், பொதுமக்களே அறிந்திடாத வரலாற்று இடங்களையும் அறிந்துகொள்ள வழிசெய்ய முடியும்.  

சிலை

இப்படி மூன்று `ஹெரிடேஜ் சர்க்கில்' உருவாக்கி அதற்கான வரைபடம் ஒன்றை அரசு கொண்டுவர வேண்டும். நாகப்பட்டினத்தில் உள்ள பழைய புத்த விஹாரங்கள் தொடங்கி தஞ்சாவூரில் உள்ள சரபோஜி அரண்மனை வரை 2000 வருட பாரம்பர்யத்தை மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டும். நவீன வாழ்க்கை  முழுக்கவே சினிமா மற்றும்  ஊடகம் சார்ந்து  கட்டமைத்துவிட்டோம். நமக்கு அருகில் உள்ள கற்களின், பாறைகளின் வரலாற்றை, கலை மதிப்பை அறிய மறந்துவிட்டோம். கண்டுபிடிக்கப்படவேண்டிய கல்வெட்டுகள் நிறைய இருக்கின்றன. இதற்கிடையில் கண்டுபிடிக்கப்பட்ட பலவும் அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

கழுகுமலையில் உள்ள கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துள்ளோம். அதை மக்களிடையே கொண்டு செல்லவேண்டியதும் முக்கியம். மிகச் சொற்பமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த இடங்களை, மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இந்தியாவின் பழைமையான கல்வெட்டான புலிமான் கோம்பை கல்வெட்டு, கீழடி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் எனப் பல வரலாற்று குவியல்கள் உள்ளன. அவற்றில் மீனாட்சியம்மன் கோயில் மட்டுமே வெளியே தெரிகிறது. மற்ற இடங்களையும் மக்களிடையே கொண்டுசேரக்க வேண்டும். தனுஷ்கோடியில் ஒரு மியூசியம் உருவாக்கலாம்.

இயற்கை

அவை 70-களில் நமக்குத் தெரிய நடந்த ஒரு நிகழ்வு. அந்தப் பகுதியைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தவேண்டியது நமது கடமை. பாதுகாக்காமல்விட்டால் நம் வரலாறும் தொன்மமும் நம்மோடு அழிந்துவிடும். அப்படி ஓர் அசம்பாவிதம் நிகழவிடக் கூடாது" என்றார்  வேதனையுடன். 

 

ஜப்பான் போன்ற ஆசியாவின் பிற நாடுகள் எல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்தாலும், தங்களின் தொன்மத்தை இன்னும் கட்டிக்காக்கின்றன. நமது நாட்டிலும் வட இந்தியாவில் பல மாநிலங்கள் அவர்களின் தொன்மத்தை அழியவிடாமல் பாதுகாத்துவருகின்றன. நாமும் நமது தொன்மத்தை அறிந்துகொள்வோம். அதற்கான சாட்சிகளாக விளங்கும் கல்வெட்டுகளையும் புராதன இடங்களையும் பாதுகாப்போம்.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

1912 – கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.லம் பாதிப்பு அடைந்து இறந்தார்.

வரலாற்றில் இன்று….

ஏப்ரல் 18

நிகழ்வுகள்

1025 – போலெஸ்லாவ் குரோப்றி போலந்தின் முதல் மன்னனாக முடி சூடினான்.
1797 – நியுவியெட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை வென்றனர்.
1835 – ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
1880 – மிசூரியில் வீசிய புயல் காற்றினால் 99 பேர் கொல்லப்பட்டனர்.
1906 – அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1909 – ஜோன் ஆஃப் ஆர்க் பத்தாம் பயஸ் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டாள்.p-1-500x303.jpg
1912 – கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.
1930 – பிபிசி வானொலி தனது வழமையான செய்தி அறிக்கையில் இந்நாளில் “எந்த செய்திகளும் இல்லை” என அறிவித்தது.
1941 – ஜெர்மனியப் படைகள் ஏதன்சை நெருங்கும் போது கிறீஸ் பிரதமர் அலெக்சாண்ட்ரொஸ் கொரிசிஸ் தற்கொலை செய்து கொண்டார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: டோக்கியோ நகர் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹெலிகோலாந்து என்ற சிறு தீவின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
1949 – அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
1954 – கமால் அப்துல் நாசர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1958 – இலங்கையில் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது.
1980 – சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் அதிபரானார்.
1983 – லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
1993 – பாகிஸ்தான் அதிபர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.
1996 – லெபனானில் ஐநா கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1838 – பவுல் எமில் புவபோதிரான், பிரெஞ்சு வேதியியலாளர் (இ. 1912)
1858 – தோண்டோ கேசவ் கார்வே, இந்தியக் கல்வியாளர் (இ. 1962)
1858 – ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1917)
1884 – ஜான் ஆன்வெல்ட், எசுத்தோனிய அரசியல்வாதி (இ. 1937)
1941 – மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ், அயர்லாந்தின் 9-வது அரசுத்தலைவர்
1967 – மரியா பெல்லோ, அமெரிக்க நடிகை, பாடகி

இறப்புகள்

1859 – தாந்தியா தோபே, இந்திய இராணுவத் தளபதி (பி. 1814)
1916 – ஜி. சுப்பிரமணிய ஐயர், இந்திய இதழியலாளர் (பி. 1855)
1955 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், செருமனிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1879)
2018 _ அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி பார்பரா புஷ் (பி.1925)

சிறப்பு நாள்

ஈரான் – இராணுவ நாள்
சிம்பாப்வே – விடுதலை நாள் (1980
உலக மரபுடைமை நாள் (உலக பாரம்பரிய நாள்)

http://metronews.lk

Share this post


Link to post
Share on other sites

கிரிக்கெட் கிருத்திகா!

 

 
kirithika

கிருத்திகா

“கிரிக்கெட்டைப் பற்றி இளைஞர்கள்தான் பக்கம் பக்கமாக ஆர்வமாக பேசுவார்கள், எழுதுவார்களா? பெண்களால் முடியாதா” என்ற கேள்விதான் சென்னையைச் சேர்ந்த கிருத்திகாவை கிரிக்கெட்டுக்காக இணையதளம் தொடங்க வைத்திருக்கிறது. கிரிக்கெட் தவிர டென்னிஸ் விளையாட்டைப் பார்த்து அதைப் பற்றி எழுதுவதையும் வேலையாகக் கொண்டுள்ளார் இவர்.

   

சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் என்றால் கிருத்திகாவுக்கு உயிர். கிரிக்கெட்டைப் பார்ப்பது மட்டுமல்ல, அன்றைய தின ஆட்டத்தையும் புள்ளிவிவரங்களையும் தன் டைரியில் குறித்துக்கொள்வதையும் பழக்கமாக வைத்திருந்தார். இன்ஜினீயரிங் முடித்து வேலைக்குப் போன பிறகும் கிரிக்கெட் மீதான ஆர்வம் இவருக்குக் குறையவில்லை. கிரிக்கெட் மீதான அந்த ஆர்வம்தான் ஒரு கட்டத்தில் அவரை அதுபற்றி எழுதவும் தூண்டியிருக்கிறது.

“சிறு வயதில் நான் செய்தித்தாள் படிக்கும்போது பெண்கள் பங்கேற்கும் கிரிக்கெட் பற்றிய செய்திகளைத் தேடுவேன். ஆனால், அந்தச் செய்திகள் கிடைக்காது. இது எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது. என்னைப் போல மற்றவர்களும் வருந்தக் கூடாது என்பதற்காகவே முதலில் பெண்கள் கிரிக்கெட் தொடர்பான விஷயங்களை எழுத வலைப்பூ தொடங்கினேன். பிறகு கிரிக்கெட் செய்திகளைப் பற்றியும் எழுத ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய இன்ஜினீயரிங் வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிரிக்கெட்டைப் பற்றி முழு நேரமாக எழுதும் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்குக் கிடைத்த அனுபவம் தனியாக இணையதளம் தொடங்க உதவியது” என்கிறார் கிருத்திகா.

penbug

கிருத்திகா நடத்தும் இணையதளம்.

 

தற்போது இவருடைய தோழி விஷாலியுடன் சேர்ந்து இணைய தளத்தை நடத்திவருகிறார் கிருத்திகா. அதேநேரம் கிரிக்கெட் பற்றிய செய்திகள், விவரங்களை ஃபேஸ்புக், வலைப்பூவிலும் தொடர்ந்து எழுத கிருத்திகா தவறுவதில்லை. இவரது இணையதளத்துக்குக் கணிசமான பார்வையாளர்களும் கிடைத்திருக்கிறார்கள். அதனால், கிருத்திகாவும் விஷாலியும் முன்பைவிட கிரிக்கெட் செய்திகளை அதிகம் எழுதிவருகிறார்கள்.

vishali

விஷாலி

 

“நானும் என் தோழியும் கிரிக்கெட் பற்றி எழுதுவதைக் கேள்விப்படுவோர் ஆச்சரியமாகவே எங்களைப் பார்க்கிறார்கள். அப்படிப் பார்ப்பது எனக்குச் சுத்தமாகப் பிடிப்பதில்லை. என்னைப் பொறுத்தவரை ஆண், பெண் பேதம் தாண்டி விளையாட்டை விளையாட்டாகவே பார்க்கிறேன். விளையாட்டில் ஆண்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பெண்கள் அணியினருக்கும் கொடுக்க வேண்டும். பெண் விளையாட்டு என்றாலே பல்லாங்குழியும் பார்பி பொம்மையும் போதும் என்றே நினைக்கிறார்கள். அந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே இளைஞர்கள்கூட எழுத முன்வராத கிரிக்கெட்டைப் பற்றி எழுதிவருகிறேன்” என்று அழுத்தமாகக் கூறுகிறார் கிருத்திகா.

வாய்ப்பு கிடைத்தால், கிருத்திகாவின் www.penbugs.com இணையதளத்தைப் பாருங்களேன்!

http://tamil.thehindu.com

Share this post


Link to post
Share on other sites
‘விழிகளின் உணர்வுகளை அறிவது எளிதன்று’
 

image_34e2a9ea00.jpgவிழிகளுக்கு வல்லமை அதிகம். இதன் திடமான பார்வை, இரும்பு போன்ற மனிதனையும் வளைக்கும்; காதலைப் படைக்கும்; கருணை வளர்க்கும்; கோபத்தைக் கரைக்கும்; விழிகள் ஊடாக நெஞ்சத்துக்குப் பாயும்.  

தனது விழி அஸ்திரத்தால் மாவீரர்களையே தம்வசம் இழுத்த பெண்களைப் பற்றிய, சரித்திரங்கள் பலவுண்டு. இதே விழி நோக்கில், பல அழிவுகளும் நிகழ்ந்துள்ளன. 

கருணைக் கண்களால் முழு உலகையும் சுவீகரித்த ஞானிகள் பலர், உலகுக்கு அருள்ஞான ஒளியூட்டினர். ஊனக்கண், ஞானக்கண் என இரண்டு கண்கள் உண்டு எனப் பெரியோர்கள் கூறுவர். 

கண் இருந்தும் பார்வையற்றவர்கள் போல் வாழ்பவர்களும் இருக்கின்றார்கள். ஞானக்கண் வீச்சினால் உலகை உணர்ந்தவர்கள் பற்றியும் உலகம் பேசுகின்றது. நல்ல நெஞ்சம், பலகோடி விழிகளின் பார்வையைவிடத் தீட்சண்யமானது. செவிப்புலனற்ற இசைமேதை பீத்தோவன், பல்வேறு இசை நுட்பங்களைக் கண்டறிந்தார். இது எப்படி? இவை நெஞ்சத்தின் ஊற்று; விழிகளின் உணர்வுகளை அறிவது எளிதன்று.

Share this post


Link to post
Share on other sites

நம் உயிர் காக்க நமக்கே தெரியாமல் உதவுபவர்கள் யார்? - நெகிழ்ச்சிக்கதை #FeelGoodStory

 
 

கதை

`ல்லாச் சுமைகளுமே போற்றுதலுக்குரியவை’ - அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் வால்ட் கெல்லி (Walt Kelly) பிறர், நமக்காகத் தாங்கிக்கொள்ளும் பொறுப்பை வெகு அழகாக இப்படிச் சொல்லியிருக்கிறார். குடும்பச்சுமை, அலுவலகச்சுமை இவற்றையெல்லாம் விட்டுவிடுவோம். நமக்கே தெரியாமல் சில பொறுப்புகளைச் சுமந்துகொண்டு நமக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருப்பவர்களை நாம் நினைத்தே பார்ப்பதில்லை. குளு குளு ஏ.சி கம்பார்ட்மென்ட்டில், பெர்த்தில் படுத்துறங்கி சொகுசாக ரயில் பயணம்... காலையில் இறங்கும்போது நம் ஒருவருக்குக்கூட நம்மை பத்திரமாகக் கொண்டு சேர்த்த ரயில் டிரைவருக்கு நன்றி சொல்லத் தோன்றியதில்லை. அதேபோல பாதுகாப்பான பேருந்துப் பயணத்துக்கு உதவிய ஓட்டுநர் தொடங்கி கல், முள் குத்தாமல் நம் பாதங்களைப் பார்த்துக்கொள்ளும் செருப்புத் தொழிலாளி வரை எத்தனையோ பேரை நாம் நினைத்துப் பார்ப்பதேயில்லை. சிலர் `பொறுப்பு’ என்கிற பெயரில் சுமக்கும் சுமை நம் உயிருக்கேகூட எவ்வளவு பாதுகாப்பைத் தருகிறது என்பதை விளக்குகிறது இந்தக் கதை.

வரலாற்றில் சில வீரர்களின் பெயர்கள் மறக்க முடியாதவை. அவற்றில் ஒன்று, ஜோசப் சார்லஸ் ப்ளம்ப் (Joseph Charles Plumb). அமெரிக்காவின் நேவல் அகாடமியில் (U.S. Naval Academy) பட்டம் பெற்றவர். வியட்நாம் போரில், கப்பலிலிருந்து கிளம்பிப் போய் தாக்கும் போர் விமானத்துக்கு (Jet Flight) பைலட்டாக இருந்தவர். 74 முறை வெற்றிவாகை சூடியவர். 75-வது முறை கிளம்பியபோது, எதிரிகளின் ஏவுகணையால் தாக்கப்பட்டு, அவருடைய விமானம் எரிந்துபோனது. பாராசூட்டில் பறந்து தப்பித்த ப்ளம்ப், எதிரிகளிடம் மாட்டிக்கொண்டார். ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்தார். அந்தக் கடுமையான சோதனையைக் கடந்து விடுதலையானார். பின்னாள்களில் எழுத்தாளராக, மேடைப் பேச்சாளராக மாறினார். அந்த நாள்களில் நடந்த சம்பவம் இது.

ஒருநாள் ப்ளம்ப் தன் மனைவியுடன் ஒரு ரெஸ்டாரன்ட்டில் அமர்ந்திருந்தார். மனைவிக்கு வேண்டியதைக் கேட்டு கேட்டு ஆர்டர் செய்துகொண்டிருந்தார் ப்ளம்ப். சற்றுத் தள்ளியிருந்த ஒரு மேஜையில் அமர்ந்திருந்த ஒருவர் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால், ப்ளம்ப்பின் எண்ணமெல்லாம் மனைவியை கவனிப்பதிலேயே இருந்தது. அதனால் அவர் தங்களை ஒரு மனிதர் பார்த்துக்கொண்டேயிருப்பதை அறியவில்லை.

பாராசூட்

சிறிது நேரம் போனது. அந்த மேசையிலிருந்தவர் எழுந்து இவர்களருகே வந்தார். ``மன்னிக்கவும்... நீங்க ப்ளம்ப்தானே?’’ என்று கேட்டார்.

``நீங்க..?’’

``நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க... நீங்க கிட்டி ஹாக் (Kitty Hawk) பிரிவுலதானே பைலட்டா இருந்தீங்க... வியட்நாம் போர்ல கலந்துக்கிட்டீங்களே... உங்க விமானம்கூட சுடப்பட்டு, அதுலருந்து தப்பிச்சீங்களே...’’

ப்ளம்ப் கொஞ்சம் அசுவாரஸ்யத்தோடு சொன்னார்... ``ஆமா. இப்போ அதுக்கென்ன?’’

``உங்க விமானத்தை எதிரிங்க சுட்டு வீழ்த்தினாங்கல்ல... அன்னிக்கி நான்தான் உங்க பாராசூட்டை பேக் பண்ணிவெச்சேன்.’’

இதைக் கேட்டு ப்ளம்ப் சட்டென்று எழுந்துகொண்டார். இப்போது அந்த மனிதர், ப்ளம்ப்பின் கையைப் பிடித்து குலுக்கினார்... ``அன்னிக்கி பாராசூட் சரியா வேலை பார்த்துச்சுனு நினைக்கிறேன்...’’

``நிச்சயமா. அன்னிக்கி மட்டும் அந்த பாராசூட் வேலை செய்யாமப் போயிருந்தா, நான் உங்களுக்கு முன்னாடி நின்னுக்கிட்டு இருக்க மாட்டேன்...’’

மாலுமி

 

அந்த மனிதர் மேலும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பிப் போனார். அன்று இரவு ப்ளம்ப்பால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. இப்படி நினைத்துக்கொண்டார்... `கிட்டி ஹாக்கில் இருந்தபோது அந்த மனிதரை எத்தனை முறை நான் பார்த்திருப்பேன், கடந்து போயிருப்பேன்... தொள தொள பேன்ட், இறுக்கமான சட்டை, தொப்பி யூனிஃபார்மில் நின்றுகொண்டிருப்பார். ஒரு `குட்மார்னிங்’கோ, `எப்படி இருக்கீங்க?’ என்கிற விசாரிப்பையோகூட நான் செய்ததில்லை. இப்போது புரிகிறது... அது ஏனென்றால், நான் போர் விமானத்தை இயக்கும் பைலட். அவர் ஒரு சாதாரண மாலுமி. நான் செய்தது தவறு... மாபெரும் தவறு!’’

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

1971 – முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது

வரலாற்றில் இன்று….

ஏப்ரல் 19

நிகழ்வுகள்

1587 – ஸ்பானிய போர்க் கப்பலை சேர் பிரான்சிஸ் டிரேக் மூழ்கடித்தார்.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது.
1810 – வெனிசுவேலாவில் இராணுவ ஆட்சி நிறுவப்பட்டது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தின் பால்ட்டிமோர் நகரில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களினார் ஐக்கிய அமெரிக்கப் படைகள் தாக்கப்பட்டனர். நான்கு படையினரும் 12 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
1892 – ஐக்கிய அமெரிக்காவில் முதன் முதலில் தானுந்து ஒன்றை சார்ல்ஸ் டூரியா என்பவர் மசாசுசெட்சில் ஸ்ப்றிங்ஃபீல்ட் என்ற இடத்தில் செலுத்தினார்.
1902 – குவாத்தமாலாவில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் 2,000 பேர் இறந்தனர்.
1904 – கனடாவின் டொரோண்டோ நகரத்தின் பெரும் பகுதிகள் தீயினால் அழிந்தது.
1928 – ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் 125வதும் கடைசியுமான தொகுதி வெளிவந்தது.
1936 – பாலஸ்தீனர்களின் ஆங்கிலேயர்களுக்கெதிரான முதலாவது கிளர்ச்சி தொடங்கப்பட்டது.
1954 – உருது, மற்றும் வங்காள மொழி ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.
1971 – முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1975 – இந்தியாவின் முதலாவது செய்மதி ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
1988 – அன்னை பூபதி மட்டக்களப்பில் ஆக்கிரமிப்பாளருக்கெதிராக உண்ணா நோன்பிருந்து இறந்தார்.
1989 – அமெரிக்காவின் அயோவா என்ற கப்பலில் பீரங்கி மேடை ஒன்று வெடித்ததில் 47 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1993 – ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் டாவீடீயன் என்ற மதக்குழு ஒன்றின் கட்டிடத்தை 51 நாட்களாக சுற்றி வளைத்த அமெரிக்க எஃப்பிஐ இன் முற்றுகை கட்டிடம் தீப்பற்றியதில் முடிவுக்கு வந்தது. மதக்குழுத் தலைவர் டேவிட் கொரேஷ் உட்பட 87 பேர் கொல்லப்பட்டனர்.
1995 – அமெரிக்காவின் ஓக்லகாமா நகரத்தில் நடுவண் அரசுக் கட்டிடம் ஒன்று தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானாதில் 168 பேர் கொல்லப்பட்டனர்.
1995 – சந்திரிகா – விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதனை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் இரண்டு பீரங்கிக் கப்பல்கள் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.
1999 – ஜெர்மனியின் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது.
2006 – நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறப்புகள்

1832 – ஜொசே ஐசாகிர், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1916)
1912 – கிளென் சீபோர்க், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1999)
1957 – முகேஷ் அம்பானி, இந்தியாவின் தொழிலதிபர்

இறப்புகள்

1882 – சார்ள்ஸ் டார்வின், பரிணாமக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் (பி. 1809)
1906 – பியரி கியூரி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1859)
1988 – அன்னை பூபதி, ஈழத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர் (பி. 1932)
1998 – ஒக்டாவியோ பாஸ், நோபல் பரிசு பெற்ற மெக்சிக்கோ எழுத்தாளர் (பி. 1914)
2013 – சிவந்தி ஆதித்தன் தினத்தந்தி உரிமையாளர் (பி. 1936)
2013 – செ. குப்புசாமி தொழிற்சங்கத் தலைவர் (பி. 1926)

சிறப்பு நாள்

தமிழ் ஈழம் – நாட்டுப்பற்றாளர் நாள்
சியெரா லியொன் – குடியரசு நாள் (1971)

http://metronews.lk

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now