Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

கறுப்பு நிறத்தில் கடவுளர்கள்: ஒரு புதிய கலை முயற்சி

கறுப்பானவர்கள் அழகற்றவர்கள் என்கிற நிலையை மாற்றவே, கருப்பு நிறமும் புனிதமானதுதான் என கூறி, 'Dark is Divine' என்கிற தலைப்பில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நிறம் சார்ந்த ஏற்றத்தாழ்வை ஒழிக்க ஒரு புது முயற்சி பற்றி காணொளி.

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

9 வயதில் ஆப் டெவலப்பர், 13 வயதில் IBM புரோகிராமர்...கலக்கும் இந்திய சிறுவன் டன்மய் பக்ஷி! #VikatanExclusive

 
 

ள்ளிக்கூடத்தை தாண்டிய கல்வி என்பதே இன்றைய சிறுவர்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. பள்ளி, வீடு, தனிப்பயிற்சி வகுப்புகள் என எப்போதுமே பள்ளி பாடங்கள்தாம் இன்றைய சிறுவர்களின் உலகம். அதைத்தாண்டி சிலபேர்தான் விளையாட்டு, இலக்கியம், அறிவியல் என கலக்கிக்கொண்டிருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரைக்கும் கணினி என்பதே பலருக்கும் கனவாக இருந்தது. ஆனால், தற்போது சிறுவர்களே கணினி கோடிங்கில் கலக்கி வருகின்றனர். அந்தளவுக்குத் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துவிட்டது. அப்படி இன்றைய யுகத்தின் சாதனையாளர்களில் ஒருவர்தான் டன்மய் பக்ஷி. ஐ.பி.எம் நிறுவனத்தின் வாட்சன் சூப்பர் கணினியின் இளம் நிரலாளர்; ஆப் டெவலப்பர்; நூலாசிரியர்; பேச்சாளர்; கணிதவியல் பயிற்சியாளர்; சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்கள் கொண்ட யூ-டியூப் சானலின் அட்மின்; இப்படி நீண்டுகொண்டே போகிறது பக்ஷியின் பெருமைகள். இத்தனைக்கும் பக்ஷியின் வயது வெறும் 14-தான் என்றால் நம்ப முடிகிறதா? 

2003-ம் ஆண்டு டெல்லியில் பிறந்த பக்ஷி, தற்போது கனடாவில் வசித்துவருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்காக கோவை வந்திருந்தவரை சந்தித்தோம்.

 

Tanmay bakshi

"இந்த இளம் வயதில் எப்படி இந்த ஆர்வம் உங்களுக்கு வந்தது? எங்கு தொடங்கியது இந்த புரோகிராமர் பயணம்?"

“ஐந்து வயதில் எனக்கு ஒவ்வொன்றும் விளையாட்டு பொம்மையாகத்தான் இருந்தது. கம்ப்யூட்டர் புரோகிராமிங்கும் அப்படித்தான். புரோகிராமிங் என்பது ஒரு வேலை. இதற்கு பணமெல்லாம் கொடுக்கிறார்கள் என்பதே அப்போது எங்களுக்குத் தெரியாது. என்னுடைய அப்பாவும் ஒரு புரோகிராமர்தான். அவர் என்னுடைய ஆர்வத்தையும், விருப்பத்தையும் கண்டுபிடித்து அதனை வளர்ப்பதற்கு உதவினார். FOXPRO, VB போன்ற எளிய கணினி மொழிகளிலிருந்து என் பயணத்தைத் தொடங்கினேன். இன்று AI வரைக்கும் வந்துவிட்டேன்."

"முதல் ஆப் பற்றி?"

"புரோகிராமிங் கற்றுக்கொள்ளலாம் என முடிவு செய்தபின்னர் எனக்கு எந்தத் தடையும் இல்லை. வேகமாக அவற்றைக் கற்றுக்கொண்டேன். என்னுடைய 9-வது வயதில் tTABLES  என்ற ஐ.ஓ.எஸ் ஆப்பை வடிவமைத்தேன். இது பெருக்கல் வாய்ப்பாட்டை கற்றுக்கொள்ள உதவும் ஒரு ஆப். 2013-ல் காதலர் தினத்தன்று இதனை வெளியிட்டேன். எனக்கு 18 வயது ஆகவில்லை என்பதால் என் பெயருக்கு பதில் ஆப் பெயர் மட்டும்தான் இருந்தது."

"நீங்கள் தற்பொழுது செய்துக்கொண்டிருக்கும் பணி?"

"இப்போது, இரண்டு வருடங்களாக செயற்கை நுண்ணறிவை உடல்நலப் பராமரிப்பில் எப்படிப் பயன்படுத்தலாம் என்று மிகவும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறேன். தகவல்பரிமாற்றத்தில் ஈடுபட முடியாத அளவுக்கு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள கனடாவில் உள்ள ஒரு பெண்மணிக்கு உதவும் ஒரு கூட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளேன் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஐ.பி.எம். வாட்சன் போன்ற அமைப்புமுறைகளின் ஆற்றலைக் கொண்டு அந்தப் பெண்ணுக்குச் செயற்கைத் தகவல்பரிமாற்றத் திறன் அளிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். இப்படி நான் கற்றுக்கொள்ளும் முக்கியமான விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள தனி யூ-டியூப் சானல் ஒன்றும் நடத்திவருகிறேன்."

டன்மய் பக்ஷி

"இன்னும் கொஞ்சம் விரிவாகக் கூறுங்களேன்?"

"இந்த திட்டத்திற்கு பெயர் Cognitive Story. அந்தப் பெண்ணுக்கு ஏழு வயது இருக்கும் போது, சரியாகத் தகவல்பரிமாற்றம் செய்துகொள்ள முடிந்தது. இப்பொது அந்தப் பெண்ணுக்கு 29 வயது ஆகிறது, அவரால் பேசவோ கைகால்களை அசைக்கவோ முடிவதில்லை, “பூ” என்ற ஒலியை மட்டுமே அந்தப் பெண்ணால் எழுப்ப முடிகிறது. அதனால் அந்தப் பெண்ணை “பூ” என்றே குறிப்பிடுவோம். இப்போது வெளிஉலகுடன் தகவல்பரிமாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும் திறனை அந்தப் பெண் வளர்த்துக்கொள்வதற்கு எப்படி Cognitive Technology-யைப் பயன்படுத்த முடியும் என்றுதான் கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். அந்தப் பெண் என்ன கூறுகிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்காக மூளையின் EEG அலைகள், cognitive computing, செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம்.

"செயற்கை நுண்ணறிவியல் மனித இனத்திற்கு ஆபத்தாக முடியும் எனக் கூறப்படுவதை குறித்து உங்களது கருத்து?"

"இதற்கான பதில் மிகவும் எளிமையானது. அறிவியல் எப்போதுமே ஆக்கம், அழிவு என இரண்டு பக்கங்களைக் கொண்டது. அதேதான் AI-க்கும். செயற்கை நுண்ணறிவால் நமக்கு நிறைய பலன்கள் ஏற்படும். உதாரணமாக மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினால் புற்றுநோயைக் கூட குணப்படுத்த முடியும். இன்னும் இப்படி நிறைய சொல்லலாம். ஆபத்தை மட்டுமே பார்த்தால் இந்த நன்மைகளை எல்லாம் இழந்துவிடுவோம்."

"AI கற்றுக்கொள்ள எளிமையானதா?"

"நிச்சயமாக. ஆனால், அடிப்படைகளில் கவனம் செலுத்தவேண்டும். டேட்டா சயின்ஸூம் முக்கியம். எனவே புள்ளியியல் மற்றும் கணிதமும் நன்கு தெரிந்திருக்க வேண்டும்."

"உங்களுடைய “Tanmay Teaches” யூடியூப் சேனலை நிறையபேர் தொடர்ந்து பின்தொடர்கிறார்களே...அதைப்பற்றி?"

"புரோகிராமிங்கில் ஆர்வமுள்ள பல மாணவர்களுக்கு உதவும் நோக்கில்தான் என் சானலைத் தொடங்கினேன். தற்போது அதை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தொடவுள்ளது. ஐ.ஓ.எஸ் செயலியை உருவாக்கும் 'ஹலோ ஸ்விப்ட்' என்ற நூலையும் எழுதியுள்ளேன்."

"14 வயது சிறுவனான டன்மய்க்கு கேம் விளையாட எல்லாம் நேரமிருக்கிறதா?"

(சிரிக்கிறார்) "தற்போது “American Truck Simulator” விளையாடிக் கொண்டிருக்கிறேன். அதுவும் தானியங்கி கார்களை டெவலப் செய்ய வேண்டும் என்ற ஆசையில் ஆரம்பித்தது. அவ்வப்போது விளையாடுவேன்"

"உங்களின் ரோல்மாடல் யார்?"

"முன்னாள் ஆப்பிள் சி.இ.ஓ. ஸ்டீவ் ஜாப்ஸ்தான். குறிப்பாக அவருடைய பணியில் அவருக்கிருந்த தீவிர விருப்பமும் அர்ப்பணிப்பும்தான் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது"

டன்மய் பக்ஷியின் பெற்றோர்கள்

அருகில் இருந்த டன்மயின் பெற்றோர்களிடம் பேசினோம்.

 “டன்மய் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே, அவன் மற்றவர்களை விடவும் மாறுபட்டவன் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே எங்களால் முடிந்தவரை எல்லா உதவிகளையும் அவனுக்குச் செய்துவந்தோம். அவனுக்குக் கிடைத்த வசதிகளும், தற்போதைய தொழில்நுட்பங்களும் மட்டுமே அவனுடைய வெற்றிக்குக் காரணமில்லை.அவனுடைய ஆர்வமும், தொடர்ச்சியான தேடலும்தான் அவனை இந்தளவுக்குக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது" என்கிறார் டன்மய்யின் அம்மா சுமிதா பக்ஷி.

 

டன்மயின் தேடல்கள் தொடரட்டும்!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

‘உலகமே சிறை’
 

image_a06335206f.jpg‘கராக்கிரஹம்’ என்பது இருள் சூழ்ந்த சிறைவாசமாகும். ஆனால், இன்றைய சிறைகள் இருள்சூழ்ந்தவை அல்ல. முற்காலத்தில் சிறை வாழ்க்கை மிகவும் பயங்கரமாக இருந்தது.  

தங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கடத்தி, சட்டவிரோதமாக  வனத்திலோ, பாழடைந்த வீட்டிலோ வைத்துச் சித்திரவதை செய்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். காசுக்கார சமூகவிரோதிகளுக்கு சிறைவாழ்வு இராஜஉபசாரம். 

இதில் வேடிக்கையும் கோபப்படுவதற்குமான விடயம் யாதெனில், சிறைக்குச் செல்ல வேண்டிய நபர்கள், அப்பாவிச் சனங்களைக் கூண்டுக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றார்கள். பெருமைமிகு ஆன்மீக வள்ளல்கள், உலகமே சிறை எனக்கூறுவார்கள். மேலான வாழ்வே, இறைவன் எங்களுடன் வாழும் நிலையாகும்.  

இன்றும் என்றும் நற்சிந்தனையுடன் வாழ்ந்தாலே மாயச்சிறை என்னும் போலி உலகம் உடைபடும். உங்கள் உள்ளே புதுப்புவனம் உருவாகும். 

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: ஜனவரி 15
 

1559: பிரிட்டனில் முதலாம் எலிஸபெத் மகாராணியாருக்கு முடிசூட்டபட்டது.

1759: பிரித்தானிய நூதனசாலை திறக்கப்பட்டது.

1889: அமெரிக்காவில் கொகாகோலா கம்பனி கூட்டிணைக்கப்பட்டது.

1982: கூடைப்பந்தாட்டத்திற்கான விதிகளை ஜேம்ஸ் நைஸ்மித் என்பவர் வெளியிட்டார்.

1943: உலகின் மிகப்பெரிய அலுவலகக் கட்டிடமான பென்டகன் அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் திறக்கப்பட்டது.

1966: நைஜீரியாவில் இராணுவப் புரட்சியின் மூலம் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.

1970: நைஜீரியாவில் பயாப்ரா பிராந்தியத்திற்கு சுதந்திரம் கோரி 30 மாதங்களாக போராடிய போராளிகள் சரணடைந்தனர்.

1970: லிபியாவில் கேணல் முவம்மர் கடாபி பிரதமராக பதவியேற்றார்.

1973: அமெரிக்க ஜனாபதிபதி ரிச்சர்ட் நிக்ஸன், வியட்நாமில் யுத்த நிறுத்தம் செய்வதாக அறிவித்தார்.

1977: சுவீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

1991: குவைத்திலிருந்து ஈராக் படைகள் வெளியேறுவதற்கு ஐ.நா. விதித்திருந்த காலக்கெடு முடிவுற்றது.

1992: யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்த ஸ்லோவேனியா, குரோஷியாவின் சுதந்திரத்தை சர்வதேச சமூகம் அங்கீகரித்தது.

2001: இணைய கலைக்களஞ்சியமான விக்கிபீடியா அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

2009: யூ.எஸ். ஏயார்வேஸ் விமானமொன்று கோளாறுக்குள்ளானதால் அதை ஹட்சன் நதியில் விமானி தரையிறக்கினார். பயணிகள், ஊழியர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.

http://www.tamilmirror.lk/

Link to comment
Share on other sites

உலக வரலாற்றில் பெரிய பணக்காரராக இருந்த முஸ்லிம் மன்னர்

99591023cac83813-caa2-4bb9-bc9f-b5aaba45

உலகின் மிகவும் பணக்கார மனிதர் யார் என கேட்டால் உடனே பில் கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க் மற்றும் ஜெஃப் பெஸோஸ் மக்கள் நினைவுக்கு வருவார்கள். ஆனால், மன்சா மூசா பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆஃபிரிக்கா நாடான மாலியை ஆண்ட மன்சா மூசா உலக வரலாற்றிலே பணக்கார மனிதராகக் கருதப்படுகிறார். 1280 முதல் 1337 ஆண்டு வரை மாலியை மூசா ஆண்ட போது, தங்கம் உள்ளிட்ட நிறைய கனிம வளங்கள் அங்கு கிடைத்தன.

உலகம் முழுவதும் தங்கத்திற்கான தேவை உச்சத்தில் இருந்த சமயத்தில் அவர் வளமிக்க அந்நாட்டை ஆண்டார். இவரது இயற்பெயர் மூசா கெய்ட்டா. இவருக்கும் முடிசூட்டப்பட்ட பிறகு மன்சா என்று அழைக்கப்பட்டார். மான்சா என்றால் மன்னர்.

தற்போதைய செனகல், காம்பியா, புர்கினா பாசோ, மாலி, நைஜர், நைஜீரியா ஆகியவை இவரது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளாகும். இவர் கட்டிய பல மசூதிகள் இன்னும் உள்ளன.

99590890fba798ad-0a11-4386-be12-24bbc3d7

மன்சா மூசா கட்டிய மசூதி   -  Getty Images

மன்சா மூசாவுக்கு எவ்வளவு சொத்து இருந்தது?

தற்போதைய காலத்தில் மன்சா மூசாவின் சொத்து மதிப்பைக் கணக்கிடுவது கடினமான ஒன்று. ஆனாலும் அவருக்கு 400,000 மில்லியன் டாலர் சொத்துக்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2.5 டிரில்லியன் ரூபாயாகும்.

உலக பணக்காரராக உயர்ந்துள்ள அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸின் சொத்து மதிப்பு, 1,06,000 மில்லியன் டாலர்களாக உள்ளது.

இதில் பணவீக்கம் சேர்க்கப்படவில்லை என்றால், உயிருடன் இருக்கும் பணக்காரர்களில் ஜெஃப் பெஸோஸ் சொத்து மதிப்பு அதிகபட்சமாக இருக்கும்.

இருந்தாலும் இந்த தகவல்கள் குறித்து கேள்வி எழுப்புபவர்களும் உள்ளனர்.

9959089143b6eda7-d00e-4d29-9a96-68b1ff51

மெக்கா பயணம்:

இஸ்லாமியர்களின் புனித நகராகக் கருதப்படும் மெக்காவுக்கு மன்சா மூசா இவர் பயணம் செய்தது குறித்தும் சுவாரசியமான கதை உள்ளது.

மூசாவுடன் 60 ஆயிரம் பேர் மெக்காவுக்குப் பயணம் செய்தனர்.

அத்துடன் 80 ஒட்டகத்தில் 136 கிலோ தங்கத்தையும் அவர்கள் கொண்டு சென்றனர். மூசா மிகவும் தாராள மனதுடையவர் என கூறப்படுகிறது. எகிப்து தலைநகரான கொய்ரோவை அவர்கள் கடக்கும் போது, அங்கிருக்கும் ஏழை மக்களுக்குத் தங்கத்தை தானமாக வழங்கினார் மூசா.

மாலியிலும் ஆஃபிரிக்காவிலும் பல பள்ளிகளையும், நூலகங்களையும் தன் ஆட்சி காலத்தில் மூசா கட்டினார்.

25 அண்டுகள் மன்னராக இருந்த மூசா 1337ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

ஹட்டனில் அதிசய முட்டை!!!

 

ஹட்டன் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் பேடு ஒன்று 180 கிராம் நிறை கொண்ட பாரிய முட்டைகளை இட்ட அதிசய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

online_New_Slide__3_.jpg

வழமையாக குறித்த கோழி  சுமார் 60 தொடக்கம் 70 கிராம் வரையான நிறை கொண்ட சாதாரண முட்டைகளை மாத்திரம் இட்டு வந்துள்ளதாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரட்டை கோதுடைய பெரிய முட்டையொன்றினை இட்டுள்ளதாகவும் நேற்று சுமார் 180 கிராம் கொண்ட அதிசயத்தக்க பாரிய முட்டைகளை  இட்டுள்ளதாகவும் பண்ணை உரிமையாளர் தெரிவித்தார்.

Egg__1_.jpg

மேலும் சாதாரணமாக பெட்டை கோழி ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை முட்டை இடுவதாகவும் ஆனால் இந்த கோழி இரண்டு தடவைகள் வித்தியாசமான முட்டைகளை இட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Egg__4_.jpg

http://www.virakesari.lk

Link to comment
Share on other sites

மேரி கோல்வின் - சிரியாவிலிருந்து

 
 

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்

 

பிரேசிலிலிருந்து மேரி கோல்வின் திரும்பிவருவதற்குள் அவருடன்  பள்ளியில் படித்தவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு கல்லூரியில்  இடம் கிடைத்துவிட்டது. பல இடங்களில் வகுப்புகளும் ஆரம்பித்துவிட்டன.

108p2_1515395143.jpg

‘நீ என்ன செய்யப்போகிறாய் மேரி' என்று வருத்தப்பட்டார் அவருடைய அம்மா ரோஸ்மேரி கோல்வின். அமெரிக்க மாணவர்கள் சிலரை பிரேசிலுக்கு அனுப்பி, அங்கிருந்து சிலரைப் பெற்றுக்கொள்ளும் மாணவர் பரிமாற்ற முறையில் மேரி கோல்வினும் அவருடைய உயர்நிலைப் பள்ளியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு  அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். சாவகாசமாக அமெரிக்கா திரும்பியபோது அம்மாவின் சோகமான முகத்தையே அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கோல்வின் யோசிக்கவேயில்லை. `இதோ வருகிறேன்' என்று காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். நேராக யேல் பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்தார். `அனுமதி முடிந்துவிட்டது' என்னும் அறிவிப்பைப் புறந்தள்ளிவிட்டு புயல்போல அலுவலக அறைக்குள் நுழைந்தார். ‘என் பெயர் மேரி கோல்வின். இவை என்னுடைய சான்றிதழ்கள். என்னை நீங்கள் அனுமதிக்க வேண்டும்.’

`அவகாசம் முடிந்துவிட்டது, எங்காவது ஊர் சுற்றிக்கொண்டிருந் தாயா?' என்று கேட்கப்பட்டபோது கோல்வின் சளைக்காமல் பதிலளித்தார். ‘பிரேசில் போயிருந்தேன். ஊர் சுற்றுவதற்கு அல்ல. அங்கே இருந்த சில மாதங்களில் போர்ச்சுகீஸ் மொழி கற்று வந்திருக்கிறேன். எனக்கு இடம் கிடைக்குமா, கிடைக்காதா?’

கோல்வினின் துணிச்சலை ரசித்தபடி மானுடவியல் பிரிவில் இடம் ஒதுக்கிக்கொடுத்தார்கள். இது நடந்தது 1978-ம் ஆண்டில். ஆர்வத்துடன்தான் படிக்க ஆரம்பித்தார். ஆனால், கல்லூரி இதழான யேல் டெய்லி நியூஸில் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு கிடைத்ததும் அவருடைய ஆர்வம் திசை மாறிவிட்டது. இனி மகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று அம்மா நிம்மதியடைவதற்குள், `நான் பத்திரிகையாளராகப் போகிறேன்' என்று அறிவித்தார் மேரி கோல்வின்.

108p1_1515395231.jpg

வசதியாக ஓரிடத்தில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கப் பிடிக்கவில்லை அவருக்கு. நேரடியாகக் களத்துக்குச் சென்று சுற்றித் திரிந்து, மக்களுடன் பேசி, செய்திகளைச் சேகரிக்க விரும்பினார். `அப்படியென்றால் பிரச்னைக்குரிய பிரதேசங்களுக்கும் நீ போக வேண்டியிருக்குமா?' என்று கேட்ட அம்மாவிடம், `கவலைப்படாதீர்கள் அம்மா, அப்படிப்பட்ட இடங்களுக்கு மட்டும்தான் போகப்போகிறேன்' என்று பதிலளித்தார் கோல்வின். 1985-ம் ஆண்டு `தி சண்டே டைம்ஸ்' கோல்வினைப் பணியில் அமர்த்தியது. ஒரே ஆண்டில் மத்தியக் கிழக்கு நாடுகளின் நிருபராக அவர் உயர்த்தப்பட்டார்.

அம்மா பதறுவதைப் பொருட்படுத்தாமல் போர், உள்நாட்டுக்குழப்பம், கலகம், கலவரம் நடைபெறும் இடங்களுக்கெல்லாம் ஓடோடிச்சென்று ‘கவர்’ செய்வது அவர் வழக்கம். நாள் கணக்கில், வாரக்கணக்கில் மேரியிடமிருந்து தொலைபேசி அழைப்புகூட வராது. `குண்டு வீசிக்கொண்டிருக்கும் இடத்தில் ஒரு மெல்லிய கூடாரத்தில் அவர் தங்கியிருப்பதை நினைத்து நினைத்து வருந்திகொண்டிருப்பேன். நான் துவண்டுபோயிருக்கும் நேரத்தில் மேரி தொலைக்காட்சியில் மைக் பிடித்து நின்று பேசிக்கொண்டிருப்பதைக் கேட்பேன். உயிர் திரும்பிவந்ததுபோல் இருக்கும்' என்பார் அம்மா.
லிபிய அதிபர் கடாபியுடன் மேரி கோல்வின் மேற்கொண்ட நேர்காணல் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. செசன்யாவும் கொசோவாவும் பற்றி எரிந்தபோது, மேரி கோல்வின் அங்கே இருந்தபடி உலகுக்குச் செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தார்.  கொசாவோவிலும் சியாரா லியோனிலும் என்ன நடக்கிறது என்பதை மேரி கோல்வினின் கட்டுரைகளிலிருந்தும் அவர் சந்தித்துப் பேட்டிகண்ட மனிதர்களிடமிருந்தும்தான் தெரிந்துகொண்டது அமெரிக்கா. ஜிம்பாப்வேவையும் கிழக்கு திமோரையும் நெருங்கிச்சென்று அங்குள்ள மக்களின் சிக்கல்களைப் புரிந்துகொள்ள முயன்றார்.

`போனேன், பார்த்தேன், எழுதினேன்' வகை நிருபரல்லர் அவர். ஒரு மண்புழுவைப்போல நிதானமாக... ஆனால், விடாப்பிடியாக ஒரு நாட்டுக்குள் ஊர்ந்து ஊர்ந்து சென்று அதன் இதயத்தைக் காணத் துடித்தார் அவர். செய்தியை அல்லது செய்தி குறித்த கருத்தை உதிர்த்துவிட்டுப் போவதோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று அவர் நினைக்கவில்லை. இதை உலகம் உணர்ந்து கொண்டது 1999-ம் ஆண்டுதான். இந்தோனேஷியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை பெறுவதற் காகக் கிழக்கு திமோர் போராடிக் கொண் டிருந்த நேரம் அது. ஓரிடத்தில் 1,500 கிழக்கு திமோர் மக்கள் ஆண் களும் பெண்களும் குழந்தைகளுமாக ஓரிடத்தில் ஒடுங்கிக் கிடந்ததைக் கண்டார் மேரி கோல்வின். இந்தோனேஷியப் படைகள் அவர்களை வாகாகச் சுற்றி வளைத்திருந்தன. மேரி கோல் வினோடு அப்போது பல நாடுகளைச் சேர்ந்த 22 நிருபர்கள் உடனிருந்தார்கள்.

நிராயுதபாணிகளாக நின்றுகொண்டிருந்த அந்த மக்களின் குரலை மேரி கோல்வின் தனது பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் பதிவுசெய்தார்.  ஐக்கிய நாடுகள் சபையின் படை அவர்களை மீட்பதற்காக விரைந்து வந்தது. `மேரி, நம் வேலை முடிந்தது. வா, போகலாம்' என்று அழைத்தார்கள் பத்திரிகை நண்பர்கள். `நீங்கள் கிளம்புங்கள். ஐ,நா வந்து இந்தோனேஷியப் படைகளை வீழ்த்தி இவர்களை மீட்கும்வரை நான் இங்கேதான் இருக்கப்போகிறேன்' என்று உட்கார்ந்துவிட்டார் மேரி கோல்வின். 22 நிருபர்களையும் வழியனுப்பிவிட்டு நான்கு நாள்கள் அவர்களுடன் கழித்தார். உக்கிரமான போர் நடைபெற்ற நேரங்களில்கூட அவர் விலகிச் செல்லவில்லை. ஐ.நா அந்த 1,500 பேரையும் மீட்ட பிறகே வீடு திரும்பினார். வந்து குவிந்த பரிசுகளையும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தூக்கி ஒரு மூலையில் வைத்துவிட்டு இலங்கைக்குப் புறப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையிலான நீண்ட கால மோதலை நேரில் கண்டு பதிவு செய்ய வேண்டாமா?

108p3_1515395216.jpg

ஏப்ரல் 2001 இலங்கையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது மேரி கோல்வினுக்கு 44 வயது ஆகியிருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்திலிருந்து அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அவர் சென்றுகொண்டிருந்தபோது தாக்குதல் தொடங்கியது. `தாக்க வேண்டாம்... அவர் ஒரு பத்திரிகையாளர்' என்று யாரோ கத்துவது கேட்டது. பிறகு சுருண்டு விழுந்துவிட்டார். விழித்து பார்த்தபோது ஒரு கண்ணை நிரந்தரமாக இழந்துவிட்டது தெரிந்தது. ஒரு காது முழுக்கவே அடைத்துக்கொண்டுவிட்டது. `இப்போது என்ன செய்யப் போகிறாய்?' என்றார் அம்மா. `டெட்லைன் இருக்கிறது, கட்டுரை எழுதி முடித்துவிட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்கிறேன்' என்று சொல்லிவிட்டார். சொன்னபடியே மூவாயிரம் வார்த்தைகளில் ஒரு நீண்ட கட்டுரையை எழுதி முடித்த பிறகே மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தார்கள்.

துனீஷியா, எகிப்து, லிபியா என்று அதற்குப் பிறகு அவர் சென்றுவந்து எழுதிய இடங்கள் ஏராளம். அவர் உலகம் முழுவதிலும் நன்கு அறியப்பட்ட மதிப்புமிக்க பத்திரிகையாளராக உயர்ந்திருந்தார்.

`துயரப்படும் மக்களின்மீதும் கொந்தளிக்கும் பிரதேசங்களின்மீதும் வெளிச்சம் பாய்ச்சுவதே என் பணி... அதைத்தான் நான் செய்துவருகிறேன்' என்றார் மேரி கோல்வின். அவர் மூளையில் இன்னமும் ஒரு சிறிய உலோகத் துண்டு தங்கியிருந்தது. இலங்கையில் வெடித்த குண்டின் ஒரு துகள் அது.

அவருடைய திருமண முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்துவந்தன. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பயணத்திலும் எழுத்திலும் மட்டும் முழுக் கவனத்தையும் செலுத்திவந்தார். பார்வையிழந்த கண்ணில் கறுப்பு துணியைத் திரையிட்டு மறைத்துக்கொண்டார். `உலகம் சிதறிக்கொண்டிருக்கிறது. என்னைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை' என்று முதுகுப்பையை மாட்டிக்கொண்டு கிளம்பி விட்டார். இந்த முறை சிரியாவுக்கு.

108p4_1515395196.jpg

சிரியா சிதறிக்கொண்டிருக்கும் செய்தியை ஒவ்வொருமுறை தொலைக்காட்சியில் பார்க்கும்போதும் அம்மாவுக்கு தூக்கி வாரிப்போடும். `கடவுளே, என் மகளைத் திருப்பிக்கொடு' என்று வேண்டிக்கொள்வார். சில நேரம் மேரியே போனில் வருவார். அவர் குரலைக் கேட்கும்போது கவலைகள் எல்லாம் மறைந்துபோகும். அந்த மகிழ்ச்சியில் மேலும் சில தினங்களைத் தைரியமாகக் கழித்துவிடுவார். குறிப்பாக, இலங்கை அனுபவத்துக்குப் பிறகு அவருடைய அச்சங்களும் கவலைகளும் பலமடங்கு அதிகரித்துவிட்டன என்றாலும், தன் மகளிடம் அவர் எதையும் வெளிக்காட்டிக்கொண்டதில்லை.

சிஎன்என் சேனலில் ஒருநாள், மேரி கோல்வினைப் பேட்டி கண்டார்கள். மகிழ்ச்சியுடன் அமர்ந்து பார்த்தார். தான் திரும்பிவருவதாகச் சொன்ன தேதி கடந்து சில தினங்கள் ஆகியிருந்தன. ஆனால், ரோஸ்மேரி கோல்வின் கவலைப்படவில்லை. இது வழக்கமாக நடப்பதுதான். `அடுத்த புதன் வந்துவிடுவேன் அம்மா' என்று உறுதிபடச் சொல்லிவிட்டு மேலும் பத்து நாள்கள் எடுத்துக்கொள்வது இயல்பானதுதான். எனவே, அவர் அமைதியாகக் காத்திருந்தார். ஒரு போன் அடித்துக் கேட்கலாமா? முயன்றார். கிடைக்கவில்லை. இதுவும் அவருக்கு இயல்பானதுதான். அழைத்தால் உடனே எடுத்துப் பேசும் இடத்துக்கு மேரி கோல்வின் இதுவரை சென்றிருக்கிறாரா என்ன? பிறகு, ஒருநாள் அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டுத் தொலைபேசி அடித்தது. அதை எடுத்துப் பேசுவதற்கு முன்பே அம்மாவுக்குத் தெரிந்துவிட்டது. இத்தனை அதிகாலையில் அழைப்பு வருவது நிச்சயம் இயல்பானதல்ல.

22 பிப்ரவரி 2012 அன்று 56 வயது மேரி கோல்வின் சிரியாவில் ஒரு ஷெல் தாக்குதலில் இறந்துபோனார். பயங்கரவாதத் தாக்குதல் அல்ல; சிரிய அரசாங்கமே அவர் கொலைக்குக் காரணம் என்பது பின்னர் தெரியவந்தது.  `உங்கள் மகளின் பை' என்று சொல்லி வீட்டுக்கு வந்து கொடுத்துவிட்டுப்  போனார்கள். மாற்றுத்துணி, இரண்டு சாட்டிலைட் போன்கள், ஒரு கறுப்புப் பெட்டியில் 387 பக்கங்களில் மேரி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகியவை உள்ளே காணப்பட்டன. இறப்பதற்கு முன்பே அவர் தன் கட்டுரையை அனுப்பிவிட்டிருந்தார்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

நாட்டுப் புற இசையால் நம்பிக்கை ஊட்டும் உமாராணி

"அந்தக் காட்சியை நடிக்கும் போதே அழுதுவிட்டேன்!" - நாட்டுப் புற இசையால் நம்பிக்கை ஊட்டும் உமாராணி

Link to comment
Share on other sites

பிளமிங்கோ திருவிழா

 

birds1

ஸ்ரீஹரிகோட்டா அருகே உள்ள பழவேற்காடு ஏரி பகுதியில் பிளமிங்கோ எனும் செங்கால் நாரை பறவைகள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன. பிளமிங்கோ பறவைகளின் வருகை சிறந்த சுற்றுச்சூழலைப் பிரதிபலிக்கிறது. பறவை ஆர்வலர்களுக்கு இதுவே ரம்மியமாகவும், விருந்தாகவும் அமையும்ந்தது. தொடர்ந்து பருவமழை அதிகரித்தால் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

birds2

birds3

 

birds4

birds5

 

birds6

birds7

birds8

 

birds9

birds10

 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

‘அடிமை கொள்ள எண்ணினால் ஒடுங்க நேரிடும்’
 

image_df03423701.jpgஓரினத்தின் மாண்புகளையும் பண்பாடுகளையும் இன்னோரு பலம்மிக்க இனம் சிதைக்கக்கூடாது. அப்படி எண்ணிச் செயற்பட்டால் சிதைக்கப்படும் இனம் பாதிப்படைவது மட்டுமல்ல, இந்த அடாத செயலைச் செய்யும் இனமும், அதன் தாக்கத்தைப் பிறிதோர் அழுத்தங்கள் மூலம், பாரிய எதிர் விளைவுகளை எதிர் கொண்டேயாக வேண்டும்.  

இந்தப் புவனமே, ஒரே குடும்பம் என்று சொல்லிக் கொண்டு, இந்தக் குடும்பத்துக்குள்ளேயே பொல்லா வினைகளைப் விதைப்பது நல்லதல்ல. 

மேற்கத்தைய நாடுகள், ஆதிக்க வெறியுடன் எமது நாட்டுக்குள் புகுந்து, செய்த அடாதவடித்தனங்கள் நாங்கள் அறியாதது அல்ல; எங்கள் நாட்டின் பாரம்பரிய கலாசாரங்களைச் சிதைக்க முனைந்ததன் பயன்தான் என்ன? 

இன்று வல்லரசுகள், தங்களைத் தாங்களே சுட்டுக்கொல்கின்றன. இது அவர்களாகத் தேடிய வினைப் பயன்; மீளமுடியாது. 

எந்த இனத்தையும் அடிமை கொள்ள எண்ணினால், அவர்களே ஒடுங்க நேரிடும்.

Link to comment
Share on other sites

2008 : இலங்­கையில் போர் நிறுத்தக் கண்­கா­ணிப்புக் குழு தனது பணி­களை நிறுத்­தி­யது

வரலாற்றில் இன்று…

ஜனவரி – 16

 

1547 : நான்காம் இவான் ரஷ்­யாவின் சார் மன்­ன­னாக முடி­சூ­டினான்.

1581 : இங்­கி­லாந்து நாடா­ளு­மன்றம் ரோமன் கத்­தோ­லிக்க மதத்தை சட்ட விரோ­த­மா­ன­தாக்­கி­யது.

SLMM_car_in_Mullaitivu_Sri_Lanka-copy.jp1707 : ஸ்கொட்­லாந்து, இங்­கி­லாந்­துடன் இணைந்து ஐக்­கிய இராச்­சி­ய­மாக உரு­வா­வ­தற்கு ஏது­வாக அமைந்த சட்­ட­மூ­லத்தை நாடா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றி­யது.

1761 : இந்­தி­யாவின் பாண்­டிச்­சே­ரியை பிரான்­ஸி­ட­மி­ருந்து பிரித்­தா­னியர் கைப்­பற்­றினர்.

1795 : நெதர்­லாந்தின் யூட்ரேக்ட் என்ற இடத்தை பிரான்ஸ், கைப்­பற்­றி­யது.

1864 : ஜேர்­மனி மீது டென்மார்க் போர் தொடுத்­தது.

1909 : ஏர்ணெஸ்ட் ஷாக்­கி­ளெட்­டனின் குழு­வினர் தென் முனையைக் கண்­டு­பி­டித்­தனர்.

1945 : ஜேர்மன் சர்­வா­தி­காரி அடோல்வ் ஹிட்லர் தனது சுரங்க மறை­வி­டத்­துக்கு தப்பிச் சென்றார்.

1956 : எகிப்­திய ஜனா­தி­பதி கமால் அப்துல் நாசர் பலஸ்­தீ­னத்தைக் கைப்­பற்­று­வ­தாக சூளு­ரைத்தார்.

1979 : ஈரான் மன்னர் முக­மது ரேசா பாஹ்­லாவி குடும்­பத்­துடன் நாட்டை விட்டு வெளி­யேறி எகிப்தில் குடி­யே­றினார்.

1991 : ஈராக் மீது ஐக்­கிய அமெ­ரிக்கா போர்ப்­பி­ர­க­னடம் செய்­தது. அமெ­ரிக்க நேரப்­படி இத்­தி­னத்தில் வளை­குடா யுத்தம் ஆரம்­ப­மா­கி­யது.

1992 : எல் சல்­வடோர் அதி­கா­ரிகள் தீவி­ர­வாதத் தலை­வர்­க­ளுடன் மெக்­ஸிகோ நகரில் சமா­தான ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டனர்.

Laurent-Desire_Kabila-copy.jpg1993 : விடு­தலைப் புலி­களின் தள­பதி கிட்டு உட்­பட 10 விடு­தலைப் புலிகள் வெளி­நா­டொன்றில் இருந்து இலங்கை திரும்­பு­கையில் சர்­வ­தேசக் கடற்­ப­ரப்பில் இந்­தியக் கடற்­ப­டையால் சுற்றி வளைக்­கப்­பட்ட போது கப்­பலை வெடிக்க வைத்து இறந்­தனர்.

2001 : கொங்கோ ஜனா­தி­பதி லோரன்ட் கபிலா, அவரின் மெய்க்­கா­வலர் ஒரு­வரால் சுடப்­பட்டார். இரு நாட்­க­ளின்பின் அவர் உயி­ரி­ழந்­த­தாக கொங்கோ அரசு அறி­வித்­தது.

2002 : ஒசாமா பின் லாட­னி­னதும் அல் கைதா, தலிபான் அமைப்­பு­க­ளி­னதும் சொத்­துக்­களை முடக்­கு­வ­தற்கு ஐ.நா.பாது­காப்புச் சபை தீர்­மானம் நிறை­வேற்­றி­யது.

2006 : எலென் ஜோன்சன் சேர்லீஃப் லைபீ­ரி­யாவின் ஜனா­தி­ப­தி­யானார். இவரே ஆபி­ரிக்க நாடொன்றின் முத­லா­வது பெண் அரசுத் தலைவர் ஆவார்.

2003 : கொலம்­பியா விண்­ணோடம் தனது கடைசிப் பய­ணத்தை ஆரம்­பித்­தது. இது 7 விண்­வெளி வீரர்­க­ளுடன் 16 நாட்­களின் பின்னர் பூமிக்குத் திரும்­பு­கையில் வெடித்துச் சித­றி­யது.

2008 : இலங்­கையில் பல்­தே­சிய போர் நிறுத்தக் கண்­கா­ணிப்புக் குழு இலங்­கையில் தனது பணிகள் அனைத்­தையும் நிறுத்­தி­யது.

2013 : அல்­ஜீ­ரி­யாவில் வெளி­நாட்டுத் தொழி­லா­ளிகள் 41 பேர் பண­யக்­கை­தி­க­ளாகப் பிடிக்கப்பட்டனர்.

2016 : புர்கினா பெஸோவில் உல்லாச ஹோட்டலொன்றில் பயங்கரவாதிகள் முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கானோரை பணயக் கைதிகளாக்கினர். இவர்களில் 30 பேர் கொல்லப்பட்டனர். 56 பேர் காயமடைந்தனர். 176 பேர் விடுவிக்கப்பட்டனர்.

http://metronews.lk

Link to comment
Share on other sites

ஆதரவற்ற குட்டி யானைகளுக்காக ஸ்பெஷல் பால் தயாரித்த பெண்! - ஓர் உண்மைக் கதை #MotivationStory

 
 

கதை

`ரு விலங்கின் கண்களுக்குப் பிரமாதமான ஒரு மொழியைப் பேசும் சக்தி இருக்கிறது’ என்கிறார் தத்துவமேதை மார்ட்டின் பபர் (Martin Buber). அந்த மொழியைப் புரிந்துகொண்டவர்கள் சக பிராணிகளிடம் நேசம் பாராட்டுகிறார்கள்; தெருவில் அனாதையாகத் திரியும் பூனைக்குட்டியைக் காப்பாற்றி வளர்க்கிறார்கள்;  ஒரு நாய்க்குட்டி அடிபட்டுக்கிடந்தால், புளூ கிராஸ் அமைப்புக்கு போன் செய்ய ஓடுகிறார்கள். அந்த மொழி புரியாதவர்கள், அதை உதாசீனப்படுத்துகிறார்கள்; அடித்து விரட்டுகிறார்கள். இந்த உலகில் மனிதன் வாழ்வதற்கு எவ்வளவு உரிமையிருக்கிறதோ, அவ்வளவு உரிமை எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு. ஆனால், எத்தனை வேட்டையாடுதல் தடுப்புச் சட்டம், மிருகவதை தடுப்புச் சட்டம் போட்டாலும், இறைச்சிக்காகவும், பிற பயன்களுக்காகவும் விலங்குகளை அடித்துக் கொல்வது இன்றைக்கும் உலகமெங்கும் தொடர்கதை. அது போன்றவர்களிடமிருந்து பிராணிகளைக் காப்பாற்றும் நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் பலர் விலங்குகளைக் காப்பாற்றுவதை லட்சியமாகவே வைத்திருப்பவர்கள். அவர்களில், `யானைகளின் அன்னை’ என்று போற்றப்படும்   டேஃப்னே ஷெல்டிரிக் (Daphne Sheldrick) செய்த சேவை மகத்தானது. அவர் காப்பாற்றி வளர்த்த யானைகள் கணக்கிலடங்காதவை. இளகின மனம் கொண்ட அவரின் கதையைப் பார்ப்போமா? 

 

டேஃப்னே ஷெல்ரிக்

                                                                                                      ( PC:sheldrickwildlifetrust.org )

ஆப்பிரிக்காவில் மிருகங்களின் மேல் நிகழ்த்தப்படும் வன்முறைகள் மிக அதிகம். அதிலும் யானைகள் வேட்டையாடப்படுவது அன்றாடம் நடக்கும் அவலம். தந்தங்களுக்காக கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றன யானைகள்.  ஆசியாவின் பல நாடுகளில் யானைத் தந்தம் விலைமதிப்பில்லாதது; அதை வைத்திருப்பது கௌரவம்; நல்ல முதலீடும்கூட. இதன் காரணமாகவே யானைகளின் எண்ணிக்கை மளமளவென சரிந்துவருகிறது. அப்பாவி யானைகள் வேட்டையாடுப்படுவதை எதிர்த்து தைரியமாகப் போராடினார்  கென்யாவைச் சேர்ந்த டேஃப்னே ஷெல்டிரிக். 

1934-ம் ஆண்டு, ஜூன் 4-ம் தேதி கென்யாவில் பிறந்தார் டேஃப்னே ஷெல்டிரிக். அங்குள்ள ஒரு பண்ணை வீட்டில் பல செல்லப் பிராணிகள் புடைசூழ வளர்ந்தார். இயல்பாகவே அவருக்கு விலங்குகளின் மேல் பிரியம் அதிகமிருந்தது. அது இறுதிவரை தொடரவும் செய்தது. திருமணத்துக்குப் பிறகு கணவர் டேவிட்டுடன் இணைந்து, கென்யாவிலேயே மிகப் பெரிய உயிரியல் பூங்காவான ஸாவோ-ஈஸ்ட் நேஷனல் பார்க்கில் (Tsavo East National Park) பணியாற்றினார். அப்போதுதான் காட்டில் விலங்குகள் வேட்டையாடப்பட்ட பிறகு அனாதைகளாக்கப்படும் குட்டிகளின் மேல் அவர் கவனம்திரும்ப ஆரம்பித்தது.  

குட்டிகளை கவனித்துக் கொள்ளும் டேஃப்னே ஷெல்ரிக்

                                                                                                    ( PC:sheldrickwildlifetrust.org )

டேஃப்னே ஷெல்டிரிக்கும் அவர் கணவரும் சேர்ந்து காட்டில் அனாதையாக்கப்படும் வனவிலங்குகளுக்காக ஓர் உயிரியல் பூங்காவை உருவாக்கினார்கள். முக்கியமாக காட்டில் நிராதரவாக்கப்படும் குட்டி யானைகளுக்கு அடைக்கலம் தந்து காப்பாற்றியது அவர்களின் உயிரியல் பூங்கா. பெரிய யானைகள் வேட்டையாடிக் கொல்லப்படும்போது, அவற்றின் குட்டிகளும் கிட்டத்தட்ட மரணத்துக்குத் தள்ளப்பட்டுவிடும். பல குட்டி யானைகள் காப்பாற்றுவதற்கு ஆளின்றி, இரை கிடைக்காமல் பட்டினியிலேயே உயிரை விடுவதும் உண்டு. அவற்றுக்கெல்லாம் அடைக்கலம் கொடுப்பதையே தன் முக்கியமான வேலையாக வைத்துக்கொண்டார் டேஃப்னே ஷெல்டிரிக். 
`` `எதை விதைக்கிறோமோ அதுவே முளைக்கும்’ என்பது யானைகளுக்கும் பொருந்தும். யானையை நல்ல முறையில் நாம் நடத்தினால், நம்மிடமும் பாசத்தோடும் அன்போடும் நடந்துகொள்ளும். அதனிடம் வன்முறையைக் கையாண்டால், நம் மீது பகைகொள்ளும். நாம் அதை எப்படித் தொடுகிறோம் என்பதைக்கூட அதனால் புரிந்துகொள்ள முடியும். ஒரு பறவையின் இறகு விழுந்தால்கூட யானையால் அதை உணர முடியும்’’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் டேஃப்னே ஷெல்டிரிக். 

யானைக்குட்டிகளுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆதாரமான உணவு பால்தான். தாய், தந்தையைப் பிரிந்து அனாதையாக வந்து சேரும் குட்டி யானைகளுக்கு பசுவின் பால் ஒத்துக்கொள்வதில்லை. அந்தப் பாலை மட்டும் புகட்டி, அவற்றை நீண்ட நாள்களுக்குக் காப்பாற்றுவது மிகக் கடினம். டேஃப்னே ஷெல்டிரிக் சோர்ந்து போய்விடவில்லை. குட்டி யானைகளைக் காப்பாற்றுவதற்காக, பல மாதங்கள் முயற்சி செய்து, ஒரு ஸ்பெஷல் பால் கலவையைக் கண்டுபிடித்தார். அது, ஒரு சின்னஞ்சிறு யானைக்குட்டிக்கு ஜீவாதாரமான உணவாக அமைந்தது. பல குட்டி யானைகள் உயிர் பிழைத்து வளர உதவியது. கணவரின் மரணத்துக்குப் பின்னர், அவர் நினைவாக, `டேவிட் ஷெல்டிரிக் வைல்டுலைஃப் ட்ரஸ்ட்’ என்ற ஒன்றை ஆரம்பித்தார் டேஃப்னே ஷெல்டிரிக். வனவிலங்குகளைப் பாதுகாக்கும் அரணாக அவருடைய யானைகள் காப்பகம் இருந்தது.  

யானையுடன் ஷெல்ட்ரிக்

                                                                                                             ( PC:sheldrickwildlifetrust.org )

யானைகள் மனிதர்களைவிட நுட்பமான உணர்வுகளைக்கொண்டவை. கண்முன்னே தங்கள் பெற்றோர்களைப் பறிகொடுத்துவிட்ட அதிர்ச்சியோடும் துயரத்தோடும் வரும் குட்டி யானைகளை அரவணைத்துக்கொண்டார் டேஃப்னே ஷெல்டிரிக். வெகு தொலைவில் தங்கள் அப்பா அம்மா கொல்லப்பட்டது நிகழ்ந்திருந்தாலும், அந்த நினைவு அத்தனை எளிதாக குட்டி யானைகளிடமிருந்து விலகுவதில்லை. அதை மறக்க அவற்றுக்குப் பல மாதங்களாகும். அந்த நேரத்தில் அவற்றுக்குத் தேவை ஓர் அரவணைப்பு, பரிவு காட்டும் நெஞ்சம். இதை நன்கு உணர்ந்திருந்தார் டேஃனே ஷெல்டிரிக். மிக மிக அர்ப்பணிப்போடு கூடிய கவனிப்பும், உண்மையான அன்பும்தான் குட்டிகளை, துயரத்திலிருந்து மெள்ள மெள்ள மீட்க உதவும்.  அப்படி அன்பு காடுகிறவர்களை யானைகள் ஒருபோதும் மறப்பதில்லை. 
இன்றைக்கு டேஃப்னே ஷெல்டிரிக்கின் யானைகள் காப்பகம் நூற்றுக்கணக்கான யானைகளுக்குப் புகலிடமாக இருக்கிறது. அவருடைய  அமைப்பு, யானைகள் கொல்லப்படுவதற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவருகிறது. யானைகளைக் காக்கவேண்டிய அவசியம் குறித்து தொடர்ந்து விழிப்புஉணர்வை ஏற்படுத்திவருகிறது. டேஃப்னே ஷெல்டிரிக், `யானைகளின் அன்னை’ என்று அழைக்கப்படுகிறார். அவர் செய்த சேவைகளுக்காக பல விருதுகள் அவரைத் தேடி வந்தன...

அன்பாக கவனித்துக் கொள்ளும் ஷெல்ட்ரிக்

                                                                                                  ( PC:sheldrickwildlifetrust.org )

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிஸபெத் கொடுத்த அரசாணை உட்பட.  வனவிலங்குகளின் மேல் மட்டுமல்ல, இந்த உலகிலுள்ள அனைத்து உயிர்களின் மேலும் நாம் அக்கறைகொள்ள வேண்டும், அன்பு பாராட்ட வேண்டும் என்பதற்கு சாட்சி, டேஃப்னே ஷெல்டிரிக்கின் வாழ்க்கைக் கதை! 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

தென் மாவட்டங்களில் பிரசித்திபெற்ற சிறு வீட்டுப் பொங்கல்! - அசத்திய குழந்தைகள்

 
 

குழந்தைகள் பொங்கல்

Nellai: 

தென் மாவட்டங்களில், பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, குழந்தைகள் பொங்கல் கொண்டாட்டமான சிறு வீட்டுப் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. குழந்தைகள், தாங்களே சிறிய வீடு போன்ற அமைப்பை ஏற்படுத்தி, சிறிய பாத்திரத்தில் பொங்கலிட்டுக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் சிறுவர், சிறுமியர் சேர்ந்து கொண்டாடும் சிறு வீட்டுப் பொங்கல் என்பது நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பிரசித்தம். ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் குழந்தைகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, தாங்களாகவே வீடுகள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் அருகில் பொங்கல் வைப்பார்கள். சிறுமிகள், சிறுவர்கள் இணைந்து அந்த வீட்டில் படையலிட்டு சாமி கும்பிட்டு, சாப்பிட்டு மகிழ்வார்கள்.

சிறுவீட்டு பொங்கல்

சிறு வீட்டுப் பொங்கல், இன்று நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்றது. குமரி மாவட்டம், கோட்டாறு பகுதியில் சபரீஷ்குமார் என்ற சிறுவனின் தலைமையில் அஷ்டல், ராகுல், கார்த்திகேயன், அன்சியா, தர்ஷினி, அரவிந்த், சக்திமீரா, கனிஷ்கா, தட்சனா, விஷ்ணு, கார்த்திகா ஆகிய குட்டீஸ் அனைவரும் சேர்ந்து சிறு வீட்டுப் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். குழந்தைகளில் சிலர், வேட்டி சட்டையும், பாவாடை தாவணியுமாக பாரம்பர்ய உடையில் இருந்தனர். அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடிய இந்தப் பொங்கல், வித்தியாசமானதாக அமைந்திருந்தது. 

சிறு வீட்டுப் பொங்கல்குறித்து சபரீஷ்குமாரின் தந்தை திசை.கே.வி.என்.நரசிங்க மூர்த்தி கூறுகையில், ’முன்பெல்லாம் பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் வரக்கூடிய சிறு வீட்டுப் பொங்கல்தான் குழந்தைகளை மிகவும் கவரக்கூடியதாக இருக்கும். இப்போது, அந்தக் கலாசாரம் சற்று மறைந்துவருகிறதோ என்கிற ஆதங்கம் எனக்கு இருந்தது. இந்த நிலையில், எனது மகன் சபரீஷ்குமார் தலைமையில் குட்டீஸ் அனைவரும் சேர்ந்து சிறு வீட்டுப் பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடியது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றவர், சிறு வீட்டுப் பொங்கல் பற்றி விளக்கினார்.  

உற்சாகக் கொண்டாட்டம்

’’மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் கோலமிட்டு, சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் பூசணிப் பூவை வைப்பது வழக்கம். பின்னர், அந்த சாணத்தையும் பூவையும் எடுத்துவிட்டு, அதைத் தட்டி பத்திரமாக எடுத்து வைப்பார்கள். நாள்தோறும் வைக்கப்படும் பிள்ளையாரும் பூவும் எருவாக்கி சேமித்துவைக்கப்பட்டு, பொங்கலுக்குப் பின்னர் அதை எடுத்துச்சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்காக சிறு வீட்டுப் பொங்கல் கொண்டாடப்படும். 

 

சிறு வீட்டுப் பொங்கல் வைத்ததும், சேர்த்துவைக்கப்பட்ட எருவை குழந்தைகளுடன் உற்சாகமாக நீர் நிலைகளுக்கு எடுத்துச்சென்று கரைத்துவிட்டு ,அந்த நாள்  முழுவதும் பெற்றோரும் உறவினர்களும் குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்வார்கள். இந்தப் பண்டிகை மறைந்துவரும் நிலையில், குழந்தைகள் அவர்களாகவே ஒரு சேலையை எடுத்து வீடு போல கட்டி, அதன் முன் பொங்கலிட்டு உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தது பாராட்டுக்குரியது’’ என்றார் உற்சாகத்துடன்.    

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

நாய்களின் குரலொலியை இனி மொழிபெயர்த்து புரிந்துகொள்ளலாம்

 


நாய்களின் குரலொலியை இனி மொழிபெயர்த்து புரிந்துகொள்ளலாம்
 

மனித இனத்துடன் இணக்கமாக ஒன்றி வாழும் செல்லப்பிராணிகளாய் நாய்கள் உள்ளன.

இந்நிலையில், நாய்களுடன் மக்கள் சரியாக தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள புதிய வழிமுறையொன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வழிமுறை மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விலங்குகளின் குரலொலி மற்றும் முக பாவனைகளை எளிமையாக ஆங்கிலத்தில் மாற்றம் செய்ய முடியும்.

வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கான் லெபோட்சிகோஃப் என்பவர் நாய்களின் உடல் மொழி மற்றும் அவை தகவல் பரிமாற்றம் செய்யும் வழிமுறைகள் குறித்து 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆய்வு செய்து வருகிறார்.

தனது ஆய்வு மட்டுமின்றி பல்வேறு இதர ஆய்வாளர்களின் தகவல்களைக் கொண்டு Pet Translator (விலங்கு மொழிமாற்றம்) எனும் சாதனத்தைக் கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கி வருகின்றார்.

அத்துடன் நாய்கள் குரைத்தல், உறுமல் மற்றும் ஊளையிடல் மூலம் வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை செயற்கை நுண்ணறிவினால் கண்டறிய முடிகிறது.

Machine Learning மூலம் கம்ப்யூட்டர்கள் உதவியுடன் நாய்களின் உறுமல் மற்றும் வால் அசைவுகளால் அவை வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை புரிந்துகொள்ள முடியும் என லெபோட்சிகோஃப் தெரிவித்துள்ளார்.

இன்னும் 10 ஆண்டுகளில் நாய்கள் வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை மனிதர்களால் மிக எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

தற்சமயம் லெபோட்சிகோஃப் மற்றும் அவரது குழுவினர் இணைந்து கண்டறிந்திருக்கும் புதிய வழிமுறையானது நாய்களின் மொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்.

இவ்வாறான தொழில்நுட்ப சாதனங்கள் விலங்குகள் வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை மிக எளிமையாக மனிதர்கள் புரிந்துகொள்ள வழி செய்யும்.

http://newsfirst.lk/tamil

Link to comment
Share on other sites

 

 

சமூகம் - அப்படி நமக்கு என்ன சொல்லி குடுக்குது இந்த சமூகம் அருவியின் வாயிலாக ஒரு சிறந்த வீடியோ பதிவு.

Link to comment
Share on other sites

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த காணொலி

 

 

சில மாதங்களுக்கு முன்பு தமிழ் இளைஞர்கள் முமுணுத்த பாடல் தான் ஜிமிக்கி கம்மல். அதற்கு காரணம் ஷெரில் என்ற மலையாள கல்லூரி ஆசிரியை தான்.

மோகன் லால் நடித்த படத்தின் ஒரு பாடல் தான் ஜிமிக்கி கம்மல். ஓணம் என்ற கேரளா பண்டிகையின் போது ஒரு கல்லூரியில் சில பெண்கள் இணைந்து நடனம் ஆடினார்கள். அதில் நடுவில் ஆடிய ஷெரில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் சொடக்கு பாடலுக்கு நடனம் ஆடி அந்த வீடியோவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது மலையாள நடிகை மற்றும் நடிகர் ஒருவருடன் இணைந்து ஒரு வீடியோவை யூ டியூப்பில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவும் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Link to comment
Share on other sites

பிளவுஸ் அணிய கற்றுக் கொடுத்தது யார்..? புடவையின் கதை

 
 
Chennai: 

பண்டிகை என்றாலே புத்தாடை. புத்தாடை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புது உற்சாகம்தான். அதிலும் பண்டிகைக் காலங்களில் பாரம்பர்ய ஆடைகள் அணிவது தனி அழகு. தமிழரின் பாரம்பர்ய உடை எனக் கருதப்படும் புடைவையின் ஆதி முதல் அந்தம் வரையிலான தொகுப்பு இங்கே.

Samantha in Saree

 

இன்று நாம் பின்பற்றும் புடைவை உடுத்தும் முறை முற்றிலும் மேற்கத்தியர்கள் பின்பற்றிய ஃபேஷன். ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு உடைகள் அணியும் முறை பின்பற்றப்பட்டது. அதுவே பாரம்பர்யம் என நம்பப்பட்டது. கி.பி 300-களில் ஆண், பெண் இருவரும் இணை ஆடை ஏதுமின்றி செவ்வக வடிவிலான துணியை மட்டுமே கட்டியுள்ளனர் என்பதை பழம்பெரும் சிற்பங்கள் மூலம் அறியலாம். 16-ம் நூற்றாண்டில், முகலாயர்களின் ஆதிக்கத்தினால் இந்தியாவுக்கு வந்ததுதான் சல்வார் கமீஸ், கிட்டத்தட்ட இந்தியாவின் தேசிய உடை என்று தற்போது கருதப்படுகிறது. அதுவரை ஒரே துணியை அணிந்திருந்த மக்கள், இரண்டு பாகங்களாகப் பிரித்து அணியும் முறைக்கு மாறினார்கள். ஆனாலும், இந்தியாவில் சில இடங்களில் மட்டுமே இந்த மாற்றம் நிகழ்ந்தது.

செட்டிநாடு அல்லது கண்டாங்கி சேலை, தமிழர்களின் பொக்கிஷமாக நீண்ட நாள் இருந்தது. ரவிக்கை எனப்படும் பிளவுஸ் இல்லாமல், இந்தப் பிளைன் காட்டன் புடைவையைக் கட்டும் விதமும் வித்தியாசம். புடைவையின் விளிம்பு முட்டிக்குக் கீழே வரையில்தான் இருக்கும். வயல்களில் உழவும் கிராமியப் பெண்களுக்கு ஏற்ற உடையாகவும் கருதப்பட்டது. சிவப்பு, பச்சை, ரஸ்ட் நிறங்களில் மட்டுமே ஆரம்பத்தில் கண்டாங்கி சேலைகள் உற்பத்தியானது. பின், வெவ்வேறு வண்ணங்களில் நெய்யப்பட்டது. நாளடைவில் இந்த முறையும் மறைந்தது.

புடவை


19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பால் பிளவுஸ் அணியும் வழக்கம் வந்தது. அன்று வரை பிளவுஸ் அணியாமல் வெறும் புடைவையை மட்டும் அணிந்திருந்தனர். ரவீந்திரநாத் தாகூரின் சகோதரனின் மனைவி ஜெநாநந்தா நந்தினி தேவி மூலம்தான் பிளவுஸ் அணியும் வழக்கம் பிரபலமானது. விமரிசையாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நந்தினி தேவியை அனுமதிக்கவில்லை. காரணம் அவர் பிளவுஸ் இல்லாமல் சேலையை மட்டும் அணிந்திருந்தார். இதனால் நந்தினி தேவி மேற்கத்தியர்களின் ரவிக்கை அணியும் பழக்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்தார். இதைத்தொடர்ந்து 'Blouse ' மற்றும் 'Petticoat ' ஆகிய சொற்கள் தமிழரின் அகராதியில் இடம் பெற்றன.

Nayanthara in Saree

உலகிலேயே தரமான பட்டு வகைகள் கிடைக்குமிடம் காஞ்சிபுரம். இங்கே தயாரிக்கப்படும் பட்டுப்புடைவை, அனைத்துத் தமிழ் பெண்களின் அலமாரியிலும் கண்டிப்பாக இருக்கும். ஆரம்ப காலத்தில் ஜரி விளிம்புகளை மட்டும் கொண்ட காஞ்சிபுரம் புடைவைகள், பின்னாளில் முழு புடைவையிலும் ஜரி பின்னப்பட்டன. வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதுபோல் 'Customised' புடைவைகளும் பிரபலமாயின. ஊர்த் திருவிழா முதல் திருமணம் வரை அனைத்திலும் பட்டுப் புடைவை உடுத்தும் முறை தமிழர்களின் வழக்கமானது. இப்போது தமிழ் பெண்கள் என்றாலே பட்டுப் புடைவை, தலை நிறைய மல்லிகைப்பூ, மூக்குத்தி, மஞ்சள், கொலுசு போன்றவை முக்கிய அடையாளங்களாகிவிட்டன.

Kanchipuram Saree

 

ஒரே ஒரு துணியை உடுத்திய காலம் போய் இப்போது புடைவை என்றாலே பிளவுஸ், பெட்டிகோட், சேலை பின் போன்றவை அவசியமாகிவிட்டது. எப்போதும் புடைவையில் பார்த்த பெண்களின் காலம் மலையேறி, பண்டிகை நாள்களில் மட்டுமே புடைவையில் பார்த்து ரசிக்கும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

நைஜீரியாவில் தமிழர்கள் மத்தியில் பொங்கல் விழா

நைஜீரியாவில் வாழும் தமிழர்கள் மத்தியில் பொங்கல் விழா நடந்தது.
Link to comment
Share on other sites

‘அது என் தவறா?’

 

ஆடைக் கண்காட்சி ஒன்று நடைபெற்றுள்ளது. வித்தியாசம் என்ன என்று கேட்கிறீர்களா? இங்கு காட்சிப்படுத்தப்பட்ட ஆடைகள் அனைத்தும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள், சம்பவ நேரத்தில் அணிந்திருந்த ஆடைகள்!

13_Dres.jpg

லீஸ்பெத் கென்னஸ் என்ற பெண்ணே இந்தக் கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தவர். இக்கண்காட்சிக்காக, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் அமைப்புகள் மூலமே இந்த ஆடைகளைச் சேகரித்துள்ளார்.

‘அது என் தவறா?’ என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்தக் கண்காட்சியில் பெண்கள் பெருவாரியாகக் கலந்துகொண்டனர்.

“ஒரு பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டால், அவர் அணிந்திருக்கும் ஆடைகளைக் குறைசொல்பவர்களே அதிகம். ஆனால், இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஆடைகளைப் பாருங்கள். மிகச் சாதாரணமாக, எப்போதும் யார் வேண்டுமானாலும் அணியக் கூடிய ஆடைகளே இவை. இவற்றுள், குதிரைப் படம் வரைந்த சிறு குழந்தையின் மேலாடை ஒன்றும் இருக்கிறது. அதில் எதைக் கண்டு காமுற்றான் அவளைச் சிதைத்த கயவன்?” என்று கேள்வியெழுப்புகிறார் கென்னஸ்!

http://www.virakesari.lk

Link to comment
Share on other sites

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!

 
 

ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதன் சூரியன் மறைந்த பிறகு நிலவின் ஒளியைத்தான் நம்பியிருந்தான். நெருப்பைக் கண்டுபிடித்த பிறகுதான் மனிதனுக்கு இருட்டின் மீது இருந்த பயம் குறையத்தொடங்கியது. இரவில் விலங்குகளை விரட்டவும், வெளிச்சம் தரவும் நெருப்பு பயன்பட்டது. அதன் பிறகு குகை, வீடு என்று வசிப்பிடங்களுக்கு மாறினாலும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் வெளிச்சம் தருவதற்கு பயன்பட்டது விளக்குகள்தாம். மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மின் விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்தன.

மின் விளக்கு

 

சாதாரண  குண்டுபல்பில் தொடங்கிய மின்சார விளக்கின் வரலாறு ட்யூப் லைட், சோடியம் விளக்குகள், என எல்இடி பல்பு வரைக்கும் வந்து விட்டது. குண்டுபல்புகள் வெப்பத்தை அதிகமாக வெளியிடுகிறது என்றும், புவி வெப்பமடைதலில் இதற்க்கு பங்கு உண்டு எனவும், இந்த பல்புகளை மாற்றினாலே போதும் பெருமளவு மின்சாரத்தை சேமிக்கலாம் எனவும் விளக்குகள் தொடர்பான விவாதங்கள் ஒருபுறம் நடைபெறுகிறது.. குண்டுபல்பு தொடங்கி எல்இடி பல்பு வரை எதுவாக இருந்தாலும் மின்சாரம் என்பது தேவையானதாக இருக்கிறது.

மின் விளக்குகளுக்கு பதிலாக தாவரங்கள்

மின்மினிப் பூச்சி

நம்மைச்சுற்றிதான் அதிகமாக தாவரங்கள் இருக்கிறதே பேசாமல் அவற்றையே ஒளிரச் செய்தால் என்ன என்ற கேள்விக்கு பதிலாக கண்டுபிடிக்கப்பட்டதுதான் தாவரங்களை ஒளிரச் செய்யும் தொழில்நுட்பம். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர்கள்தாம் இந்தத் தொழில்நுட்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது தொடர்பான ஆராய்ச்சிகள் பல வருடங்களாகவே நடைபெற்றுக்கொண்டுதானிருந்தன. இறுதியாக அவர்களுக்கு விடை இயற்கையிடம் கிடைத்திருக்கிறது.

இயற்கையாகவே ஒளிரக்கூடிய பொருள்கள் உலகில் பல இருகின்றன. யோசித்துப்பார்த்தால் இப்பொழுது காண்பது அரிதுதான் என்றாலும் பலருக்கு மின்மினிப் பூச்சிகள் ஞாபகத்திற்கு வரக்கூடும். மின்மினிப் பூச்சியின் பின்புறத்தில் ஒளி விட்டுவிட்டு ஒளிர்ந்து கொண்டே இருக்கும். அது எப்படி ஒளியை உருவாக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்த போதுதான் அதற்கு காரணம் லூசிஃபெரேஸ் எனும் என்சைம் எனத் தெரிந்தது. இந்த என்சைம்தான் தாவரங்களை ஒளிரச் செய்யவும் பயன்படப்போகிறது.

நானோதொழில்நுட்பம் 

ஆய்வின்போது லூசிஃபெரேஸ் என்சைம்கள் நானோதுகள்களாக மாற்றப்பட்டு அதனுள்ளே செடிகள் அதிக அழுத்தத்தில் மூழ்கவைக்கப்பட்டன, எனவே என்சைம்கள் இலையின் வழியாக தாவரத்தின் உள்ளே ஊடுருவுகின்றன. உள்ளே சென்ற பின்பு தாவரம் அந்த என்சைம்களுக்கு எதிர்வினையாற்ற தொடங்கும் பொழுது வேறு சில வேதிப்பொருள்களையும் ஒளியையும் உருவாக்குகிறது. இதற்கு முன்பு தாவரங்களின் மரபணுவை மாற்றம் செய்தே இந்த ஆய்வுகள் நடைபெற்றது அதற்கு அதிகமாக் செலவு செய்ய வேண்டியிருந்தது, அதற்கு மாறாக இந்த நானோதொழில்நுட்பத்தில் செலவும் குறைவு; அதிக விலை கொண்ட உபகரணங்களும் தேவைப்படாது. மேலும் இந்தத் தொழில்நுட்பத்தை எல்லா விதமான தாவரங்களிலும் பயன்படுத்த முடியும்.

ஒளிரும் செடியின் இலைகள்

“எங்கள் நோக்கம் செடியை முழுமையான மேஜை விளக்காக மாற்றுவதுதான். நிச்சயமாக அதற்கு மின்சாரம் தேவைப்படப்போவதில்லை. செடியில் ஏற்படும் வளர்சிதை மாற்றமே வெளிச்சத்தை உருவாக்கும்" என்கிறார் வேதியல் பொறியியல்துறையைச் சேர்ந்த மைக்கேல் ஸ்ட்ரானோ. தற்பொழுது நீரில் வளரும் அமலைச் செடிகளில் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய பொழுது அதன் இலைகள்  மூன்று மணி நேரம் ஒளியை உமிழ்ந்திருக்கிறது. அமலைச் செடிகளில் மட்டுமில்லாது பசலைக் கீரை மற்றும் வேறு சில செடிகளிலும் பரிசோதனை செய்து பார்த்தபொழுது வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்கிறது இந்தத் தொழில்நுட்பம். இதை இன்னும் மேம்படுத்தினால் ஒரு நாள் முழுவதும் ஒளியை உமிழச் செய்யவும் பெரிய மரங்களில் கூட அலங்காரத்திற்காக இந்தத் தொழில்நுட்பத்தை தெளிப்பு முறையில் பயன்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் பொறியாளர்கள். பாதுகாப்பான பொருள்களையே இந்தத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்துவதால் தாவரங்களுக்கும் மனிதர்களுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும் உறுதியாக கூறுகிறார்கள்.

 

எதிர்காலத்தில் மேஜையில் புத்தகம் படிக்கும் பொழுது நமக்கு ஒளி தரப்போவது ஒரு செடியாக இருக்கக்கூடும்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

1991: வளை­குடா போரில் ஈராக்­குக்கு எதி­ரான தரை­வழித் தாக்­குதல் ஆரம்­ப­மா­கி­யது

வரலாற்றில் இன்று…

ஜனவரி – 17

1377 : பாப்­ப­ரசர் பதி­னோராம் கிறெ­கரி தனது ஆட்­சியை ரோமுக்கு மாற்­றினார்.

1524 : இத்­தா­லிய நாடுகாண் பயணி ஜியோ­வன்னி டா வெர­சானோ, சீனா­வுக்­கான தனது பய­ணத்தை ஆரம்­பித்தார்.

1595 : பிரான்ஸின் நான்காம் ஹென்றி ஸ்பெயி­னுக்கு எதி­ராக போர்ப் பிர­க­டனம் செய்தார்.

1648 : இங்­கி­லாந்தின் லோங் நாடா­ளு­மன்றம் முதலாம் சார்ள்­ஸுட­னான தொடர்­பு­களை துண்டித்தது. இதன் மூலம் இங்­கி­லாந்தின் உள்­நாட்டுப் போர் இரண்டாம் கட்­டத்தை அடைந்­தது.

1773 : கெப்டன் ஜேம்ஸ் குக் அண்­டார்க்டிக் வட்­டத்தை அடைந்த முதல் ஐரோப்­பி­ய­ரானார்.

1819 : சைமன் பொலிவர் கொலம்­பியக் குடி­ய­ரசை அறி­வித்தார்.

1852 : தென் ஆபி­ரிக்­காவின் ட்ரான்ஸ்வால் போவர் குடி­யேற்­றங்­களை ஐக்­கிய இராச்­சியம் அங்­கீ­க­ரித்­தது.

1893 : ஹவாயில் அமெ­ரிக்க கடற்­ப­டையின் தலை­யீட்டால் அரசி லிலி­யோ­க­லா­னியின் அரசு கவிழ்க்­கப்­பட்­டது.

Varalaru-17-01-2018.jpg1899 : பசுபிக் சமுத்­திரப் பகு­தியில் வேக் தீவை ஐக்­கிய அமெ­ரிக்கா கைப்பற்றிக் கொண்­டது.

1917 : வேர்ஜின் ஐலன்ட் தீவு­க­ளுக்­காக 25 மில்­லியன் டொலர்­களை டென்­மார்க்­குக்கு ஐக்­கிய அமெ­ரிக்கா கொடுத்­தது.

1928 : போல்ஸ்விக் புரட்­சி­யாளர் லியோன் ட்ரொட்ஸ்கி மொஸ்­கோவில் கைது செய்­யப்­பட்டார்.

1945 : இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்தின் வோர்சா நகரைக் கைப்­பற்­றின.

1945 : சோவியத் படைகள் நெருங்­கி­யதை அடுத்து அவுஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்து ஜேர்­ம­னிய நாஸிகள் வெளி­யேற ஆரம்­பித்­தனர்.

1946 : ஐ.நா. பாது­காப்பு சபை தனது முத­லா­வது கூட்­டத்தை நடத்­தி­யது.

1951 : சீன மற்றும் வட கொரியப் படை­யினர் தென்­கொ­ரி­யாவின் சியோல் நகரைக் கைப்­பற்­றினர்.

1961 : கொங்கோ ஜன­நா­யகக் குடி­ய­ரசின் பிர­தமர் பாட்ரிஸ் லுமும்பா இரா­ணுவப் புரட்­சியின் பின் கைது செய்­யப்­பட்டு சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

1991 : முத­லா­வது வளை­குடா போரில் ஈராக்­குக்கு எதி­ராக அமெ­ரிக்கா தலை­மை­யி­லான நாடு­களின் “பாலை­வனப் புயல்” எனும் தரை­வழித் தாக்­குதல் ஆரம்­ப­மா­கி­யது.

1995 : ஜப்­பானின் கோபே நகரில் இடம்­பெற்ற 7.3 ரிச்டர் பூகம்­பத்தில் 6,434 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1998 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி பில் கிளின்­ட­னுக்கும் வெள்ளை மாளிகை ஊழி­ய­ரான மோனிகா லுவின்ஸ்­கிக்கும் இடை­யி­லான பாலியல் விவ­காரம் இணை­யத்­தளம் ஒன்றின் மூலம் அம்­ப­ல­மா­கி­யது.

2001 : கொங்­கோவில் எரி­ம­லை­யொன்று வெடித்­ததால் சுமார் 4 லட்சம் பேர் இடம்­பெ­யர்ந்­தனர்.

2008 : பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறு­வ­னத்தின் போயிங் 777 விமா­ன­மொன்று லண்­டனில் தரை­யி­றங்­கும்­போது பாரிய சேத­ம­டைந்­தது. இதனால் 47 பேர் காய­ம­டைந்­தனர். போயிங் 777 விமா­ன­மொன்று பாவ­னைக்கு உத­வாத வகையில் சேத­ம­டைந்­தமை இதுவே முதல் தட­வை­யாகும்.

2010 : நைஜீ­ரி­யாவில் மத ரீதி­யான வன்மு­றைகள் மூண்­டன. இதனால் சுமார் 200 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2017 : லொத்தர் சீட்­டு­களின் விலையை 30 ரூபா­வாக அதி­க­ரிப்­பத்­றகு வியா­பா­ரி­களின் கடும் எதிர்ப்பு தெரி­வித்­த­தை­ய­டுத்து லொத்தர் சீட்­டுக்­களின் விலையை 20 ரூபா­வாக பேண ஜனா­தி­பதி மைத்திரிபால பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

2017 : இலங்கை முழுவதும் வரட்சியினால் 113,436 குடும்பங்களைச் சேர்ந்த 606,478 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்தது.

http://metronews.lk/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.