• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
நவீனன்

இளமை புதுமை பல்சுவை

Recommended Posts

வியப்பூட்டும் இந்தியா: சலார் ஜங் அருங்காட்சியகம்

6CHSUJSALAR7

6CHSUJSALAR
 

உலகிலுள்ள மிகப் பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று, ஐதராபாத்திலுள்ள சலார் ஜங் அருங்காட்சியகம். தனிப்பட்ட மனிதர் ஒருவர் சேமித்த பொருட்களை வைத்து இவ்வளவு பெரிய அருங்காட்சியகத்தை அமைத்திருப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். இது ஐதராபாத் நகரின் மூஸி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

மூன்றாம் நவாப் மிர் யூசுஃப் அலிகான் சலார் ஜங், ஏழாவது நிஜாமின் பிரதம மந்திரியாக இருந்தவர். இவரின் வருமானத்தின் பெரும் பகுதியை, அரிய பொருட்கள் வாங்கிச் சேமிப்பதில் செலவிட்டார். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலைநுட்பமான பொருட்களை எல்லாம் தேடித் தேடி வாங்கினார். அப்படி அவர் சேகரித்த 35 ஆண்டுகாலப் பொக்கிஷங்களே இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

 

6CHSUJSALAR1
 

 

முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பொருள்களிலிருந்து அவர் வாழ்ந்த காலம் வரையிலான பொருட்களைச் சேகரித்திருந்தார். ஜப்பான், சீனா, மியன்மார், நேபாளம், பாரசிகம், எகிப்து, வட மெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து, கலைப் பொக்கிஷங்களை அள்ளிவந்தார்.

உலோகச் சிற்பங்கள், சலவைக்கல் சிற்பங்கள், ஓவியங்கள், தந்தத்தில் செதுக்கப்பட்ட நுணுக்கமானக் கலைப் பொருட்கள், விதவிதமான துணிகள், பீங்கான் ஜாடிகள், விரிப்புகள், கடிகாரங்கள், இருக்கைகள், கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள் என்று சுமார் 42,000 பொருட்களும் 60,000 நூல்களும் 950 கையெழுத்துப் பிரதிகளும் இங்கே உள்ளன.

 

 6CHSUJSALAR2

 

1951-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, இந்த அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார். இரண்டு அடுக்குக் கட்டிடத்தில் 38 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, பார்ப்பதற்கு வசதியாக வரிசைப்படுத்தியுள்ளனர்.

இவற்றுடன் பெரிய நூலகம், படிக்கும் அறை, பதிப்பகம், ரசாயன முறையில் பொருட்களைப் பாதுகாக்கும் ஓர் ஆய்வகம், விற்பனையகம் போன்றவையும் உள்ளன.

 

6CHSUJSALAR5T
 

 

ராஜா ரவிவர்மா ஓவியங்கள், ஔரங்கசீப், ஜஹாங்கீர், நூர்ஜஹானுடைய வாள்கள், திப்புசுல்தானின் அங்கிகள், தலைப்பாகை, நாற்காலிகள் என்று வரலாற்று முக்கியத்துவம் மிக்கப் பல பொருட்களை இங்கு கண்டு களிக்கலாம்.

முக்காடு போட்டிருக்கும் ரபேக்கா சிலை மிகவும் புகழ்பெற்றது. மெல்லிய துணி மூடியிருப்பதால் முகம் மங்கலாக இருப்பதுபோல் வடிவமைத்துள்ளனர். 1876-ல் பென்சொனி என்னும் இத்தாலிய சிற்பியால் இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டது.

 


 6CHSUJSALAR6Y

 

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்டுள்ள குரான் நூல்கள், விதவிதமான அளவுகளிலும் வடிவங்களிலும் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. தங்கம், வெள்ளித் தகடுகளில் எழுதப்பட்ட குரான், மிகச் சிறிய குரான் போன்று பல ஆச்சரியங்களுக்கு இங்கே பஞ்சமில்லை.

 

6CHSUJSALAR8

இங்கு வரும் பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்த்த ஒரு பொருள் என்றால் அது, ‘இசைக்கும் கடிகாரம்’தான். 200 வருட கடிகாரம். ஒருமுறை கூடப் பழுதாகாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. 350க்கும் மேற்பட்ட உலோக பாகங்களால் இந்தக் கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது.கடிகாரங்களுக்கு என்று தனி அறை உள்ளது. பழங்கால சூரியக் கடிகாரத்திலிருந்து 20-ம் நூற்றாண்டின் அதிநவீன கடிகாரங்கள்வரை வைக்கப்பட்டிருக்கின்றன. பூதக் கண்ணாடியால் பார்க்கக்கூடிய மிகச் சிறிய கடிகாரமும் உள்ளது.

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கடிகாரத்தின் மேல் பகுதியில் உள்ள கதவு திறக்கப்பட்டு, தாடி வைத்த ஒரு மனித பொம்மை வெளியே வருகிறது. சுத்தியலால் ஓர் உலோகத் தகட்டின்மீது ஓங்கி அடித்துவிட்டுச் சென்றுவிடுகிறது. இதைப் பார்ப்பதற்கே மக்கள் அதிகமாக இங்கே வருகிறார்கள்.

இருக்கை வசதிகளுடன் கூடிய பெரிய அறையில் அமர்ந்து, காத்திருந்து, மணியடிப்பதைப் பார்த்துச் செல்கிறார்கள்.

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

 

கேட்பாரற்று கிடக்கும் ஏழை நாட்டின் சொகுசு விமான நிலையம்

மொசாம்பிக்கில், 200 மில்லியன் டாலர்கள் செலவில் கட்டப்பட்ட விமான நிலையம் நாட்டிலேயே இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக இருக்குமென்று கருதப்பட்டது. ஆனால், இதை திறந்து மூன்றாண்டுகள் ஆன நிலையில், அதன் திறனில் 4 சதவீத பயணிகளை மட்டுமே இயங்குகிறது. நாகலாஸ் சர்வதேச விமான நிலையத்தை கட்டிய பிரேசிலிய ஒப்பந்ததாரரான ஓடிப்ரெக்ட், விமான நிலைய கட்டுமான ஒப்பந்தத்தை பெறுவதற்கு மொசாம்பிக்கின் உயர் மட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

இந்தப் புகைப்படங்களை எல்லாம் எடுத்தது இவரா? இந்தியாவின் முதல் பெண் புகைப்பட கலைஞர் ஓமாயி! (படங்கள்) 

 

 
21TH_1HOMAI-horz

 

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அவர்கள் ஒரு ஆங்கிலேய பெண்ணிற்கு சிகரெட் பற்ற வைப்பதைப் போன்ற புகைப்படத்தை நம்மில் பலரும் பார்த்து இருப்போம். இன்றும் நேருவை விமர்சனத்திற்குள் ஆக்கும் இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் ஒரு பெண் என்பதை அறிவீர்களா? 

இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகைப்படக் கலைஞரான ஓமாயி வியாரவாலாவின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றியும் அவர் எடுத்த சில புகைப்படங்களில் மறைந்திருக்கும் வரலாற்றைப் பின்னணிகள் பற்றியும் தெரிந்து கொள்வோம். இவரது 104-வது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் இன்றைய இந்தியாவிற்கான கூகுள் டூடுலில் இவரை இடம் பெற செய்துள்ளது கூகுள் நிறுவனம்.

doodle-759.jpg

1913-ம் ஆண்டு குஜராத்தில் பிறந்த இவர் தன்னுடைய கணவன் மானெக்‌ஷா ஜம்செட்ஜி வியாரவாலாவிடம் புகைப்படம் எடுப்பது எப்படி என்று கற்றுக்கொண்டார். பின் 1930-களில் இருந்து பத்திரிகைகளுக்கு புகைப்படம் எடுப்பதையே தன்னுடைய வேலையாக மாற்றிக் கொண்டார். அன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமே இருந்த இந்தத் துறையில் இவர் எடுத்த பல தனித்துவமான புகைப்படங்கள் இவருடைய பெருமையை பேசியது. கேண்டிட் ஷாட்ஸ் (Candid Shots) என சொல்லப் படும் புகைப்படங்களை எடுப்பதில் இவர் வல்லவராம். ஓமாயி கேமரா மட்டும் எப்படி இப்படிச் சரியான நேரத்தில் புகைப்படத்தை எடுக்கிறது என்று மற்றவர்களை வியப்பில் ஆழ்த்துமாம் இவருடைய புகைப்படங்கள்.

ஆங்கிலேயரிடம் அடிமை பட்டு கிடந்த இந்தியா, இந்தியாவின் சுதந்திரம், அண்டை நாட்டுத் தலைவர்களின் வருகை, சுதந்திர இந்தியாவின் பதவியேற்பு நிகழ்ச்சிகள், நேரு, காந்தி போன்ற தலைவர்களின் இறப்பு என 1930-1970 வரையிலான எந்தச் சரித்திர நிகழ்வைப் பற்றி நீங்கள் அரிய முயற்சித்தாலும் அதில் ஓமாயி எடுத்த புகைப்படம் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அதிலும் அடுத்து நான் காட்ட போகும் சில புகைப்படங்களைப் பார்த்துவிட்டு நீங்களே “அட! இந்தப் புகைப்படத்தை எடுத்தது இவர்தானா?” என்று அசந்து போவீர்கள்.

 

1.jpg

1. இந்தியாவில் இருக்கும் ரூபின் அருங்காட்சியகத்தில் ‘புகைப்படங்கள் எடுக்கத் தடைசெய்யப்பட்டுள்ள பகுதி’ என்கிற எச்சரிகை பலகையின் பக்கத்தில் நேரு நிற்பதைப் போன்ற புகைப்படத்தை இவர் எடுத்தார். இந்தப் புகைப்படம் பார்ப்பவர்களின் முகத்தில் நிச்சயம் புன்சிரிப்பை உண்டாக்கும்.

2.jpg

2. 1940-களில் மும்பையில் இருக்கும் விக்டோரியன் சாலை முனையமாக இருந்த இப்போதைய சத்திரபதி சிவாஜி சாலை.

3_(2).jpg

3. பேரன்களான ராஜிவ், மற்றும் சஞ்சய் காந்தியுடன் நேரு நின்று உரையாடுவதைப் போன்ற புகைப்படம்.

4.jpg

4. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ஜான் கென்னடியின் மனைவி ஜாக்லின் கென்னடி 1962-ல் இந்தியாவிற்குச் சுற்று பயணம் வந்த போது யானை குட்டி ஊர்வசிக்கு உணவு வழங்கும் புகைப்படம்.

 

5.jpg

5. ஆங்கிலேய அதிகாரி மௌண்ட் பேட்டனின் மனைவி எட்வீனா மௌண்ட் பேட்டனுடன் ஆகஸ்ட் 16, 1947-ல் செங்கோட்டையில் நேரு நிற்பது போன்ற புகைப்படம்.

6.jpg

6. 1956-ல் திபேத்திய பௌத்த மத தலைவரான தலாய் லாமா இந்தியாவிற்கு நட்பு ரீதியாக வருகை தந்த போது மேடையில் தலாய் லாமா, நேரு, சீனாவின் ஜூ இன் லை ஆகியோர் இருப்பது போன்ற புகைப்படம்.

7.jpg

7. ஜனவரி 26, 1950-ம் ஆண்டில் இந்தியாவின் முதல் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி புகைப்படம்.

8.jpg

8. 1947-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு, லார்ட் மௌண்ட் பேட்டன் மற்றும் அவரது மனைவி எட்வீனா மௌண்ட் பேட்டன் இருப்பது போன்ற புகைப்படம்.

9.jpg

9. பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்காக 1948-ல் பிர்லா இல்லத்தில் காந்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த புகைப்படம்.

10.jpg

10. அமெரிக்காவின் கறுப்பின உரிமை மீட்பு போராளியான மார்டின் லூதர் கிங் மற்றும் அவரது மனைவி காரேட்டா ஸ்காட் கிங் 1959-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த போது அப்போதைய இந்திய பிரதமர் நேருவைச் சந்தித்த புகைப்படம்.

11.jpg

11. 1956-ல் தலாய் லாமாவின் இந்திய சுற்று பயணத்தின் போது அவர் குதிரையில் மலை பிரதேசத்திற்கு தனக்குப் பின்னால் சிக்கிம் நாட்டு மக்கள் அணிவகுத்து வரச் செல்வதை போன்ற புகைப்படம்.

 

12.jpg

12. 1950-ம் ஆண்டு குழந்தைகள் விளையாடும் ராட்டினத்தில் அவர்களுடன் நேரு அவர்களும் உட்கார்ந்து சுற்றுவதை போன்ற புகைப்படம்.

13.jpg

13. 1948-ம் ஆண்டு ராஜகோபாலச்சாரி அவர்கள் தந்த விருந்தில் நேருவுடன் அவருடைய மந்திரி சபை மந்திரிகளும் கலந்து கொண்டு உணவு உட்கொள்ளும் புகைப்படம்.

14.jpg

14. காங்கிரஸ் கழகத்தின் உறுப்பினர்களிடம் 1947-ம் ஆண்டு காந்தி உரையாற்றுவது போன்ற புகைப்படம்.

15.jpg

15. 1950-ம் ஆண்டு அமைதியின் அடையாளமாக வெள்ளை புறாவை நேரு வானில் பறக்க விடுவதைப் போன்ற புகைப்படம்.

16.jpg

16. தில்லி செங்கோட்டையில் 1947-ம் ஆண்டு முதல் முதலாக மூவண்ண தேசியக் கொடி ஏற்றிய போது எடுத்த புகைப்படம்.

17.jpg

17. ஆகஸ்ட் மாதம் 1947-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த பிறகு முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் செல்வதற்கு முன்பு இந்தியாவில் தந்த கடைசி பத்திரிகையாளர் பேட்டி.

18.jpg

18. இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக ராஜேந்திர பிரசாத் பதவியேற்கக் குதிரை வண்டியில் செல்லும் புகைப்படம்.

 

19.jpg

19. ஜூன் மாதம் 1948-ம் ஆண்டு இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன்பு ராஷ்திரபதி பவனில் லார்ட் மௌண்ட் பேட்டன் வணக்கம் தெரிவிக்கும் புகைப்படம்.

20.jpg

20. தேசியக் கொடி போர்த்திய ஜவஹர்லால் நேருவின் உடலை அவரது மகள் இந்திரா காந்தி கவலையுடன் பார்ப்பதைப் போன்ற புகைப்படம்.

இந்திய வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த பல புகைப்படங்களை எடுத்த ஓமாயி 1970-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அப்போதும் புகைப்பட துறையின் உச்சியில் இருந்த அவர் தனது ஓய்வுக்குக் கூறிய காரணமாவது “இனி மேல் இந்தத் துறையில் இருப்பதில் பயனில்லை. புகைப்படக் கலைஞரான எங்களுக்கு எனத் தனி விதி முறைகளும், ஆடை முறைகளும் இருந்தது. ஒருவரை ஒருவர் மிகவும் மரியாதையுடன் நாங்கள் நடத்தினோம். ஆனால், இன்றைய நிலை அப்படி இல்லை, இளைய புகைப்படக் கலைஞர்களின் முழு கவனமும் புகைப்படங்களை வைத்து எப்படிப் பணம் சம்பாதிப்பது என்பதிலேயே உள்ளது. அந்தக் கூட்டத்தில் ஒருத்தியாக நான் இருக்க விரும்பவில்லை.”

padma-awards.jpg

நீண்ட காலம் இவரைக் கௌரவிக்காமல் இருந்த இந்திய அரசு 2010-ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளின் ஒன்றான பத்ம விபூஷன் விருதை வழங்கியது. புகைப்பட துறையில் பெண்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உண்டாக்கிய இவர் 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் தன்னுடைய 98-ம் வயதில் உயிர் இழந்தார். அவர் மறைந்தாலும் பொக்கிஷங்களாய் அவர் விட்டுச் சென்ற பல புகைப்படங்கள் என்றும் அவரது புகழை பேசிக்கொண்டே இருக்கும்.

நன்றி - புகைப்படங்கள்: Alkazi Collection of Photography

http://www.dinamani.com

Share this post


Link to post
Share on other sites
‘வைராக்கிய காதல் உயிர்ப்புடன் வாழும்’
 

image_9882793b77.jpgஒருவாரத்தின் பின்னர் வீட்டுக்கு வந்தபோது, திருமண அழைப்பிதழைத் தாயார் அவனிடம் கொடுத்தார். தனது காதலிக்கும் வேறுஒருவனுக்குமான திருமண அழைப்பிதழைக் கண்டால் எப்படி மனநிலை இருக்கும்?

 

நான் அவளைச் சந்தித்தபோது, எதுவுமே சொல்லவில்லையே? திடீர் என நிச்சயம் பண்ணிவிட்டார்களா? வெறுத்துப்போனவன் உடனே அலுவலக விடுமுறை எடுத்துக்கொண்டு, வெளியூருக்கு விரக்தியுடன் சென்றுவிட்டான்.

 

கொஞ்சநாள் கழித்து, ஊருக்குத் திரும்பிவரும்போது, வழியில் காதலியைத் தனியாகக் கண்டான். “உனக்குத் திருமணமாயிற்றே ஏன் தனியாக வருகின்றாய்” எனக் காட்டமாகக் கேட்டான்.

அவளும் பதிலுக்கு, “ யாருக்குத் திருமணமானது; நீ எல்லாம் ஒரு மனுஷனா? கோழைபோல் எங்கே ஓடிவிட்டாய்; திருமணம்தான் என்னால் நின்றுவிட்டதே; எனது தோழிகள் மூலம் திருமணத்தன்றே அதனை நிறுத்தச் செய்துவிட்டேன்? என ஆவேசத்துடன் சொன்னாள்.

“மன்னித்துவிடு” என அவன் சொல்ல, விம்மலுடன் அவன் மார்பில் சாய்ந்தாள்.

திருமணம் முடிந்து இப்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் பிறந்துவிட்டன. வைராக்கிய காதல் என்றும் உயிர்ப்புடன் வாழும்.

Share this post


Link to post
Share on other sites

ஜெர்மனி மருத்துவர் ராபர்ட் கோக்கின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்

மறைந்த ஜெர்மனி மருத்துவர் ராபர்ட் கோக்கின் 174-வது பிறந்தநாளை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுளின் மூலம் கொண்டாடி வருகிறது.

 
ஜெர்மனி மருத்துவர் ராபர்ட் கோக்கின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்
 
புதுடெல்லி:

ராபர்ட் கோக் ஜெர்மனிய அறிவியலாளரும், மருத்துவரும் ஆவார். அவர் ஹெர்மன் கோக் - மதில்டே ஜூலி ஹென்ரிடே பெய்வாண்ட் தம்பதியினருக்கு 1843-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஜெர்மனியின் ஹெனோவர் நகரில் பிறந்தார். இவர் பள்ளியில் சேரும் முன்னரே வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றுக்கொண்டார். 1862-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த அவர், அறிவியல் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கினார்.

201712100640142500_1_google._L_styvpf.jpg

தனது 19-வது வயதில் இயற்கை அறிவியல் பயில்வதற்காக கொட்டிங்கன் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். இருப்பினும் இடையிலேயே மருத்துவ துறையின் மீது கொண்ட ஈடுபாட்டினால் தனது துறையை மாற்றிக்கொண்டார். 1866-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த அவர் மருத்துவராக பணியாற்றத் தொடங்கினார்.

1885 முதல் 1890-ம் ஆண்டு வரை பெர்லின் பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். அதன்பின் பிரஷ்யன் தொற்றுநோய் நிறுவனத்தின் இயக்குனராக செயலாற்றினார்.

இவர் 1877-ல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் நோய்க்கு காரணமான பாக்டீரியாவை கண்டறிந்தார். அதன்பின் 1882-ல் காசநோய் ஏற்பட காரணமாக இருக்கும் மைக்கோபாக்டீரியம் என்ற நுண்ணுயிரையும் கண்டுபிடித்தார். 1884-ம் ஆண்டில் காலரா குறித்த ஆய்வை தொடங்கிய அவர், அந்த நோய் தாக்க காரணமாக இருக்கும் வைபிரியோ காலரா என்ற நுண்ணுயிரை கண்டுபிடித்தார். அவரது இந்த கண்டுபிடிப்புகளே பின்நாளில் அந்த நோய்களுக்கு தடுப்புமருந்து கண்டுபிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

காசநோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905-ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1908-ம் ஆண்டு, சிறந்த மருத்துவர்களை கவுரவப்படுத்துவதற்காக ராபர்ட் கோக் பதக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. 27-05-1910 அன்று தனது 66-வது வயதில் மரணம் அடைந்த ராபர்ட் கோக்கை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை ‘டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது.
 

Share this post


Link to post
Share on other sites

நீர் விளையாட்டுகள்... பவழப்பாறைகள்... காலுக்கு கீழே சூரிய உதயம்... ஹவாயி தீவுகளுக்கு ஹாய் சொல்வோமா?

 
 

ஹவாயி

அமெரிக்கா என்றாலே வானுயர கட்டடங்களும், அதிவேகக் கார்களும், ஹாலிவுட் திரைப்படங்களும் தான் நினைவுக்கு வரும். ஆனால் அமெரிக்காவில் இயற்கை எழில் கொஞ்சும் மலைத்தொடர்களும், வியக்கவைக்கும் பள்ளத்தாக்குகளும், வெண்மணல் கடற்கரைகளும், ரம்மியமான தீவுகளும் உண்டு. அப்படி மனதை மயங்கவைக்கும் பேரழகு மிகுந்த தீவுதான் ஹவாயி. ஹவாயி என்பது ஒரு தீவு அல்ல; நான்கு தீவுகள் கொண்ட ஒரு தீவுக்கூட்டம். ஹவாயி(Hawaii) ,உவாகு (Ooahu), மாவுயி(Maui), கனாயி (Kanai) ஆகியவை தான் அவை. அமெரிக்காவின் மேற்குக்கரையிலிருந்து சுமார் 2500 மைல்கள் தூரத்தில் பசிஃபிக் பெருங்கடலில் இருக்கிறது, இந்தத் தீவு.

 
 

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த நம்ம ஊருப் பெண்ணான சுதா பாபுலால் பிரசாத் கடந்த ஐந்து வருடங்களாக அமெரிக்காவின், செயின்ட் லூயிஸ் நகரில் வசித்து வருகிறார். அவர் தனது ஹவாயி அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

”மாவுயி தீவில், ஹானா என்னும் இடத்திற்குச் செல்லும் கார் பயணம் மிகவும் இயற்கை அழகு வாய்ந்தது. இந்தப் பயணத்தில், ஒருபுறம், நீலப்பட்டாடை உடுத்திய கடலும், மறுபுறம், மரகதப் போர்வைப் போர்த்திய மலைச் சரிவுகளும் கண்களுக்கு விருந்தாகும். ஆங்காங்கே கார்களை நிறுத்தி புகைப்படங்கள் எடுக்க 'வியூ பாயின்ட்ஸ்' பல உள்ளன. வழிநெடுகிலும் சிறு சிறு அருவிகளும், சுனைகளும் கண்கொள்ளாக் காட்சி. தேனாய் தித்திக்கும் அன்னாசிப் பழங்களும், காரசாரமான மீன் பொரியலும் பயணத்தை மேலும் சுவாரஸ்யமாக்கும்.
மாவுயியிலேயே அதி உயரமான இடம் ஹலியேகலா சிகரம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், கடலிலிருந்து கொதித்து எழுந்த எரிமலையே குளிர்ந்து உறைந்து இன்று இந்த மலையாய் நிற்கிறது. இதன் சிகரத்தைச் சென்றடைய காரில் சுமார் 3 மணி நேரம் ஆகிறது. இந்த சிகரத்திலிருந்து சூரிய உதயம் காண தினந்தோறும் நூற்றுக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். சூரியன் கடலிலிருந்து உதிப்பதை மேகங்களுக்கும் மேல் நாம் நின்று பார்க்கும்போது, வானில் பல வண்ணச்சிதறல்களாய் காட்சி தரும்.

அழகிய வெள்ளை மணல் கடற்கரைகள் இங்கு ஏராளம். மக்கள் தங்கள் வேலைப்பளுவெல்லாம் மறக்க, கடற்கரைகளில் நாள் முழுவதும் கூட ஓய்வெடுக்க வருகிறர்கள். குழந்தைகள் மணல் வீடு கட்டி விளையாட, பெரியவர்கள் கரையில் காலாற நடக்கின்றனர். இளைஞர்கள் சிறு படகு ஓட்டியும்(kayaking) நீர்ச்சறுக்கு(surfing) விளையாடியும் களிக்கின்றனர். கடற்கரைக்கு அருகிலேயே சுத்தமான குளிர்ந்த நீர் ஊற்றுக்களும்(showers) கழிவிட வசதிகளும் உள்ளன.

மூன்று நாட்கள் மாவுயியில் இயற்கை எழில்களைக் கண்டு ரசித்தபின், உவாகு தீவுக்கு விமானம் பிடித்தோம். உவாகுவில் உள்ள ஹோனலுலு(Honolulu) நகரம் தான் ஹவாயி தீவின் தலைநகரம். எப்போதும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது இந்நகரம்.

Hawaii

பகலில் அங்கு உள்ள கடற்கரைகளைப் பார்த்தபின், மாலையில் உல்லாசப் படகுப் பயணம் (Cruise) சென்றோம். கடலுக்குள் சிறிது தூரம் சென்றபின் ஹவாயி தீவுகளின் சிறப்பு உணவுகளைப் பரிமாறுகிறர்கள். அந்த மூன்றடுக்குப்படகின் மேல் தட்டில் நின்று கொண்டு, ஆரஞ்சுப்பழம் போல சூரியன் கடலில் மறைவதைப் பார்த்துக்கொண்டே இரவு உணவை உண்டோம். பின்னர், ஹவாயி தீவுகளின் கலாசார நடனங்கள் ஆடி மகிழ்விக்கிறார்கள். சுமார் இரண்டு மணி நேர ஆடல் பாடல் கொண்டாட்டங்களுக்குப் பின் கரைக்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.

Hawaiiஅடுத்த நாள் நாங்கள் பார்த்த முக்கியமான இடம் ஹனுமா பே(Hanauma Bay) எனப்படும் கடற்கரை. இங்கு கரைக்கு அருகிலேயே நீருக்கடியில் ஏராளமாக பவழப்பாறைகளும் வண்ண மீன்களும் உள்ளன. தண்ணீர் மிகத் தெளிவாக இருப்பதால் அவை மிக நன்றாகத் தெரிகின்றன. இன்னும் அருகில் அவற்றைக் கண்டு களிக்க வேன்டுமெனில் அங்கு snorkeling gear (வாடகைக்கு கிடைக்கிறது) அணிந்து நீந்தியபடியே ரசிக்கலாம்.

வழியில் செல்லுமிடமெல்லாம் மனதைக்கவரும் காட்சிகள் கொட்டிக் கிடந்தாலும், நின்று பார்த்து அனுபவித்து ரசிக்க வேண்டியது மாகாபு(ma ca pu) என்னுமிடத்தில் உள்ள காணுமிடம்(viewpoint). இளம்பச்சையும் இளநீலமும் கலந்த இதமான நிறத்தில் பளிங்கு போன்ற கடல் நீரும்,கடற்கரையில் ஆனந்தமாக ஆடும் மரங்களும் ஆங்காங்கே தெரியும் சிறு தீவுகளும் காணக் கண் கோடி வேண்டும்.

உவாகு தீவில் கண்டிப்பாக தவறாமல் பார்க்க வேண்டிய இடம் பாலிநேசியன் கலாச்சார மையம்(Polynesian Culture Center). இங்கு ஹவாயி உட்பட 6 பாலிநேசியன் தீவுகளின் கலாசாரங்களைப் பற்றி விளக்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஃபிஜி, சமோவா, டோங்கா, டகிடி, நியூசிலாந்து மற்றும் ஹவாயி தீவுகளின் இசை, நடனம், உணவு, வாழ்க்கைமுறை ஆகியவற்றை சுவாரசியமாகச் சொல்லும் பல கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.
ஒவ்வொரு தீவுக்கும் ஒவ்வொரு சிறு கிராமம் உருவாக்கி மக்களை அந்தந்தத் தீவு மக்களைக்கொண்டே வரவேற்று உபசரிக்கின்றனர். அது மட்டுமின்றி அந்த கிராமங்களுக்கு ஊடே ஓடும் ஓடையில் படகுச்சவாரி செய்தும் மகிழலாம். லுவாவு(Luau) எனப்படும் கலாச்சார நடனத்தை ரசித்துக்கொண்டெ இரவு விருந்து உண்ணலாம்.

அதன் பின்னர் அனைத்து தீவு விருந்தினர்களும் இணைந்து நடத்தும் இசை நாடகம் மிக அற்புதமாய் அரங்கேற்றப்படுகிறது. சுமார் இரண்டு மணி நேர நாடகத்தில் நடனமும், இசையும், ஒலி, ஒளியமைப்பும், கத்தி சுற்றுதல், நெருப்புச் சிலம்பாட்டம் என அட்டகாசமான அனுபவம் அது.

Hawaii

இரண்டாம் உலகப்போரின் முக்கியமான இடமான முத்துத் துறைமுகம்(Pearl Harbour) இந்தத் தீவில்தான் உள்ளது. இந்தப் போரில் இங்கு இறந்த கடற்படை வீரர்களுக்குக் கடலின் நடுவிலேயே நினைவாலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. ஒரு சிறு திரையரங்கில் போரின் காணொளிகளைக் கொண்டு தொகுத்த குறும்படமும் திரையிடப்படுகிறது. இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் ராணுவ மையத்துடன் ஒரு அருங்காட்சியகமும் செயல்பட்டு வருகின்றது.

ஹவாயி தீவில் நீர் விளையாட்டு ஆர்வலர்களுக்குத் தீனி போடும் வகையில் அனைத்து விளையாட்டுக்களும் உள்ளன. ஜெட் ஸ்கி(Jet Ski), பாராசெய்லிங்க் (Parasailing), சர்ஃபிங்க்(Surfing) எனப் பல விளையாட்டுக்கள் உள்ளன.  கண்ணாடி ஜன்னல்கள் வைத்த நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கடியிலேயே நம்மைக் கோண்டு செல்கின்றன. அழகிய பவழப்பாறைகளும், பல வண்ண வண்ண மீன்களும், கடல் கொடிகளும் நம்மை வேறு உலகத்தைக் கொண்டு செல்கின்றன.

இன்னும் கண்டு களிப்பதற்கும், இயற்கையொடு வருடித் தோய்வதற்கும், அமிழ்ந்து அனுபவிப்பதற்கும் ஏராளமான அழகுடனும் தாராளமான அன்புடனும் இரு கை நீட்டி வரவேற்கின்றன ஹவாயி தீவுகள்.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

நீரும், நானும்: பிபிசி தமிழ் நேயர்களின் உயிர்துடிப்பான புகைப்படத் தொகுப்பு #BBCTamil

பிபிசி தமிழின் முதல்வார புகைப்பட போட்டிக்கு நீரும், நானும் என்ற தலைப்பில் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

சுமார் 2,000க்கும் மேற்பட்ட புகைப்படங்களை நேயர்கள் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 20 சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

நீரும், நானும்: பிபிசி தமிழ் வாசகர்களின் புகைப்படத் தொகுப்பு Image captionநீரில் தேடும் நிறைவு... புதுவை ஆர். பிரபாகரன் AFZAL KHAN Image captionசெளதி அரேபியாவில் உள்ள ஓர் ஏரி: பதிவு - கன்னியாகுமரி அப்சல் கான் எஸ்.பாலாஜி மாமல்லபுரம் Image captionமானுடர்க்கும் கொஞ்சம் கற்றுத் தருவாயா - எஸ். பாலாஜியின் இந்த புகைப்படம் எஸ். கார்த்திகேயன் Image captionநட்பு: எல்லைகள் இல்லா உலகம் - எஸ்.கார்த்திகேயன் mathi007k7 Image captionஉன் ஆழத்தை புரிந்து கொள்ள யாருமில்லையா - பி. மதிவாணன் Jasmine Jagan Image captionதுளியே... உயிர் துளியே - மருத்துவர் ஜாஸ்மீன் பாக்கியா பிரியா muthuramalingam_s2726 Image captionநீரின் மேன்மையை உணர்த்தும் மதுரை அழகர் கோயிலில் பதிவான காட்சி - எஸ். முத்துராமலிங்கம் muralib95 Image captionசிறை வைக்க முடியுமா? - முரளி நீரும், நானும்: பிபிசி தமிழ் வாசகர்களின் புகைப்படத் தொகுப்பு Image captionமிதந்து வரும் காதல் ஆஸ்திரேலியா - விநோதன் பரமாநந்தன் நீரும், நானும்: பிபிசி தமிழ் வாசகர்களின் புகைப்படத் தொகுப்பு Image captionநான், ஈ, நீர்... சேலம் நவீன்ராஜ் rkarena88 Image captionசென்னையில் வெள்ளநீர் சூழ்ந்தபோது...- ராம் கிஷன் நீரும், நானும்: பிபிசி தமிழ் வாசகர்களின் புகைப்படத் தொகுப்பு Image captionநீ வரும் நேரம் ஆனந்தமே - தஞ்சாவூர் சஞ்சய் சசி நீரும், நானும்: பிபிசி தமிழ் வாசகர்களின் புகைப்படத் தொகுப்பு Image captionதாகம் தீர்ந்ததா?... ஆரணி ஆர். விஜயன் நீரும், நானும்: பிபிசி தமிழ் வாசகர்களின் புகைப்படத் தொகுப்பு Image captionஉன் வீழ்ச்சியால் உயர்வது யார்?... ஸ்ரீ தேவி நீரும், நானும்: பிபிசி தமிழ் வாசகர்களின் புகைப்படத் தொகுப்பு Image captionவற்றாத நம்பிக்கை - தூத்துக்குடி வி.கார்த்திக் நீரும், நானும்: பிபிசி தமிழ் வாசகர்களின் புகைப்படத் தொகுப்பு Image captionமயில் துளியா.. உயிர் துளியா? - புதுக்கோட்டை எஸ். பாலச்சந்திரன் காஷ்மீரின் சோன்மார்க் மலைப்பிரதேசத்தை ரம்மியமாக படம்பிடித்திருக்கிறார் திருப்பூரை சேர்ந்த மனோஹரன் சக்திவேல் Image captionஎன்ன விலை அழகே! காஷ்மீரின் சோன்மார்க் மலை - திருப்பூர் மனோஹரன் சக்திவேல் நீரும், நானும்: பிபிசி தமிழ் வாசகர்களின் புகைப்படத் தொகுப்பு Image captionஇதென்ன கலாட்டா! - சென்னை ஸ்ரீனிவாஸ் நீரும், நானும்: பிபிசி தமிழ் வாசகர்களின் புகைப்படத் தொகுப்பு Image captionகரையாத கவிதைகள் - இளைய ராஜா அமெரிக்காவின் நியூ யார்க்கிலுள்ள வாட்கின்ஸ் க்லென் என்ற இடத்தில் இலையுதிர்காலத்தில் ஓசூரை சேர்ந்த பார்கவ் கேசவன் எடுத்த புகைப்படம் Image captionநியூ யார்க்கிலுள்ள வாட்கின்ஸ் க்லென்- ஓசூர் பார்கவ் கேசவன்

 

http://www.bbc.com/

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

விடைபெறும் 2017: தீயாய் வேலை செய்யும் சமூக ஊடகங்கள்!

social%20mediaa%202

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கற்காலத்தில் வாழ்க்கையைத் தொடங்கிய மனித இனம், இன்று தகவல் தொழில்நுட்ப யுகத்தில் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர்கூடத் தகவல் தொழில்நுட்பம் இப்போது இருக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை. ஆனால், தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்று தினம் ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த மாற்றத்துக்கு சமூக ஊடகங்களும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் இந்த ஆண்டு சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியையும் சந்தித்த மாற்றங்களையும் பார்ப்போம்.

   
ஃபேஸ்புக்

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக்கை மார்க் ஸக்கர்பர்க் தொடங்கியபோது, அது உலக மக்களை ஒன்றிணைக்கும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். இந்த ஆண்டு முக்கியமான ஒரு மைல்கல்லை ஃபேஸ்புக் எட்டியது. ஜூன் மாதத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 200 கோடியாக அதிகரித்ததுதான் அது. சமூக ஊடகங்களிலேயே அதிக எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டிருப்பது ஃபேஸ்புக் மட்டுமே.

 social%20media%202
இந்த ஆண்டு பல புதுமையான மாற்றங்களையும் ஃபேஸ்புக் கண்டது. எங்கிருந்து வேண்டுமானாலும் ஃபேஸ்புக்கில் லைவ் செய்யும் வசதி அறிமுகமானது இந்த ஆண்டின் மிகப் பெரிய மாற்றம். ஸ்மார்ட்போன் ஃபேஸ்புக் பக்கங்களுக்கு மட்டுமே கிடைத்த இந்த லைவ் வசதி, பின்னர் அனைத்துப் பயனாளர்களுக்கும் வழங்கப்பட்டது. இதனால் கணினியில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் பயனாளர்கள் நேரலை வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யவும் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ சேவைகளுக்கு ஃபேஸ்புக் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

இதேபோல் பயனாளர்கள் பார்வையிடும் பக்கத்தைப் பார்க்க நியூஸ் ஃபீட் என்ற ஆப்ஷன் ஃபேஸ்புக்கில் சேர்க்கப்பட்டு, தனிப்பட்ட, வணிகரீதியிலான விஷயங்களைப் பார்க்கும் பக்கம் ‘எக்ஸ்புளோர் ஃபீட்’ என்றும் பிரிக்கப்பட்டது. வணிக ரீதியிலான விளம்பரங்களுடன் வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவித்துப் பின்தொடரும் நட்சத்திரங்களின் போஸ்ட்களை எக்ஸ்புளோர் ஃபீட்டில் பார்க்கவும் இந்த வசதி உதவியது. இவை தவிர, இன்னும் ஏராளமான மாற்றங்கள் ஃபேஸ்புக்கில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டன.

வாட்ஸ்அப்

ஒவ்வோர் ஆண்டும் வாட்ஸ் அப் செயலி புதுவிதமான மாற்றங்களையும் புதிய பயனாளர்களையும் கண்டு வருகிறது. 2013-ல் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் கடந்த 4 ஆண்டுகளில் 130 கோடிப் பயனாளர்களுடன் உலக அளவில் முன்னணிச் செயலியாக வளர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 10 கோடிப் பேர் வாட்ஸ்அப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு புதிய மாற்றமாக ஸ்டேட்டஸ் வைப்பதில் புதிய வசதியை வாட்ஸ்அப் கண்டது. இதன் மூலம் பயனர்கள் வண்ணமயமான எழுத்துகளை ஸ்டேட்டஸ் பகுதியில் புகுத்திக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

வாட்ஸ்அப்-ல் கேமரா ஐகானுக்கு மேல் பகுதியில் புதிதாக பென்சில் பட்டன் அறிமுகமானது. இதனால், பயனாளர்கள் வண்ணமயமான டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் பதிவேற்றம் செய்து வாட்ஸ்அப்பைக் கொண்டாடினர். இதற்காகவே இமோஜியை சேர்ப்பது, ஃபான்ட் தேர்வு செய்தல், பேக் கிரவுண்ட் கலர் மாற்றுதல் என மூன்று விதமான ஆப்ஷனை வழங்குகிறது வாட்ஸ்அப். இது போக ஸ்டேட்டஸ் பகுதியில் ஒளிப்படங்களையும் சிறு வீடியோவையும்கூட வைத்துக்கொள்ள முடியும். இது 24 மணி நேரத்துக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.

ட்விட்டர்

ஃபேஸ்புக் போலவே இன்னொரு சமூக வலைத்தளமான ட்விட்டரும் இந்த ஆண்டு கணிசமாக வளர்ந்திருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் ட்விட்டரில் புதிதாக இரண்டு கோடிப் பேர் இணைந்திருக்கிறார்கள். 2010-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ட்விட்டர் தற்போது 33 கோடிப் பயனாளர்களுடன் முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு ட்விட்டர் கண்ட முக்கியமான மாற்றம், பதிவிடும் எழுத்துகளின் நீளத்தை அதிகரித்துதான். இதற்கு முன்புவரை 140 எழுத்துகள்வரை மட்டுமே பதிவிடும் வசதி இருந்தது. அந்த எண்ணிக்கை 280 ஆக அதிகரித்தது ட்விட்டர். குறைந்த அளவு எழுத்துகளைக் கொண்டு தாங்கள் விரும்பும் செய்தியைப் பதிவுசெய்வதில் பயனாளர்களுக்குச் சிரமம் இருந்ததைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றத்தைச் செய்ததாகத் தெரிவித்தது ட்விட்டர்.

இன்ஸ்டாகிராம்

ஒளிப்படங்களைப் பதிவிடுவதற்காக பிரத்யேகமாகத் தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம் செயலி இந்த ஆண்டு மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டது. 2012-ல் இன்ஸ்டாகிராம் செயலியை ஃபேஸ்புக் வாங்கிய பிறகுப் பயனாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. தற்போதைய நிலையில் 80 கோடிப் பேர் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு சூப்பர்ஸும் வசதியையும் டெஸ்க்டாப்பில் பயன்படுத்தும் வசதியும் இன்ஸ்டாகிராமில் அறிமுகமானது. வருவாய் ஈட்டும்வகையில் இன்ஸ்டாகிராமில் ஏற்கெனவே செய்யப்பட்ட மாற்றத்தின் மூலம் அதன் விளம்பர வருவாயும் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

 socoal%20media%202
யூடியூப்

வீடியோக்களைப் பதிவிடுவதற்காகப் பிரத்யேகமாக 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது யூடியூப். இந்த ஆண்டு அதன் பயனாளர்களின் எண்ணிக்கை 130 கோடியாக அதிகரித்தது. உலகெங்கும் ஒரு நிமிடத்துக்கு 300 மணி நேர வீடியோப் பதிவுகள் பதிவேற்றப்படுகின்றன என்பதிலிருந்து யூடியூபின் வளர்ச்சியைஅறிந்துகொள்ளலாம். சமூக ஊடகங்கள் நேரத்தை வீணடிக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கு மாறாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் யூடியூப் வழங்கிவருகிறது.

தொடங்கியதிலிருந்து ஒரே லோகோவைப் பயன்படுத்திய யூடியூப் இந்த ஆண்டு அதன் லோகோவை மாற்றியமைத்தது. பார்த்தவுடனேயே வீடியோ பிளேயர் என்பதை உணரும் வகையில் அந்த மாற்றம் இருந்தது. குழந்தைகளுக்காக பிரத்யேகமாக யூடியூப் கிட்ஸ் ஏற்கெனவே தொடங்கப்பட்டிருந்தாலும், அதை இந்த ஆண்டு இன்னும் மெருகேற்றினர்.

சமூக ஊடங்களில் இந்த ஐந்து மட்டுமே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றன. ஆனாலும் அண்மைக் காலமாக ரெட்டிட் (Reddit), வைன் (Vine), பின்டரெஸ்ட் (Pinterest), கூகுள் பிளஸ் (Google +) போன்ற சமூக ஊடகங்களும் தொடர்ந்து அதிகமான பயனாளர்களுடன் முன்னேறி வருகின்றன. வரும் காலத்தில் இவையும் முன்னணியில் உள்ள சமூக ஊடகங்களுக்குப் போட்டியாக மாறலாம்.

 

http://tamil.thehindu.com

Share this post


Link to post
Share on other sites

"விடுதலை வரை காத்திரு..!" - பேரறிவாளன் வாசித்த கிடார் இசை#WorldHumanRightsDay #VikatanExclusive

 
 
Chennai: 

லகமே நிசப்தமாக இருக்கும் நள்ளிரவு நேரத்தில் வாட்சப் வழியாக ஒரு கிடார் இசை ஒன்று பகிரப்படுகிறது. அதனுடே அது அனுப்பிவைக்கப்பட்ட எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பும் வருகிறது. 26 வருடங்களாக தனது மகனை சிறைக்கம்பிகளுக்கு பின்னால் மட்டுமே பார்த்துவிட்டு, அந்த மகன் என்றேனும் விடுதலையாகித் திரும்பிவிடுவான் என்கிற நம்பிக்கையையும் தவிப்பையும் இத்தனை வருடங்களாக மனதில் ஏந்தியிருக்கும் குரல் அது.. அற்புதம்மாளின் குரல் மறுமுனையில் ஒலிக்கிறது,

பேரறிவாளன்

 
 

”நாந்தாம்மா பேசறேன்!...எம்மகன் பரோல்ல வெளிய வந்து ரெண்டு மாசம் எங்க எல்லாரோடையும் இருந்தப்போ எம்மவன் நிரந்தரமா என் கூடவே தங்கிட மாட்டானானு மனசெல்லாம் ஏங்கிடுச்சு. பரோல் முடிஞ்சு அவன் சிறைக்கு திரும்பிப் போகும்போது “சீக்கிரம் எங்கூடவே இருக்கற மாதிரி வந்துருப்பா அறிவுன்னு..” மனசு கலங்க அவனுக்கு சொல்லி வழியனுப்பி வைச்சேன். ரொம்ப வருஷம் கழிச்சு எங்களோட அற்புதம்மாள்இருக்க வந்ததால எம்மகன அக்கா, தம்பி, அக்கா பிள்ளைங்கனு யாரும் தூங்கவே விட மாட்டாங்க. விடிய விடிய பேசிட்டு விளையாடிட்டு இருப்பாங்க. அறிவுக்கு கிடார் வாசிக்கப் பிடிக்கும்னு அவங்க அக்கா தங்கை ரெண்டு பேரும் ஆசையா கிடார் வாங்கி வெச்சாங்க. அதுல அவனுக்கு பிடிச்ச பாட்டு ஏதாவது அவங்களுக்கு வாசிச்சுக் காட்டுவான். அப்படி ஒருமுறை வாசிச்சதுதாம்மா  உனக்கு அனுப்பியிருக்கேன். இப்பக் கூட சிறையில போய் அறிவ பார்த்துட்டு வந்தேம்மா. இந்த மனித உரிமை தினத்துலையாவது தன்னை விடுதலை செஞ்சிருவாங்களான்னு எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருக்காம்மா. விடுதலை செஞ்சிருவாங்களாம்மா? எம்மகனுக்கு விடுதலை கிடைக்கனும் ஒரு நல்லது நடத்திப்பாக்கனும்” என்று தழுதழுத்தாலும், நம்பிக்கை குறையாமல் கூறுகிறது அந்தக் குரல். உண்மையில் அற்புதம்மாளைச் சமாதானப்படுத்தும் பதில் அப்போது நம்மிடம் இல்லை.

 

பேரறிவாளன் சிறை சென்று இதோடு இருபத்து ஐந்து சர்வேதச மனித உரிமை தினங்கள் கழிந்துவிட்டன. 1948ல் முதன்முதலில் வரையறுக்கப்பட்ட உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தின் மூன்றாவது உறுப்புரை ஒவ்வொரு தனிமனிதருக்குமான வாழ்வையும் விடுதலையையும் உறுதி செய்கிறது. இந்த மனித உரிமை தினத்திலாவது பேரறிவாளனுக்கு அந்த உரிமை உறுதி செய்யப்படுமா?. 

பேரறிவாளன் வாசித்ததாக அற்புதம்மாள் அனுப்பியிருந்த கிடார் இசையைக் கேட்டோம். ’கயாமத் ஸே கயாமத் தக்’ என்கிற இந்தி படத்தில் வரும் ’ஏ மேரே ஹம்சஃபர்’ பாடலை தனது கிடாரில் வாசித்திருந்தார். தனது காதலை இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்திருக்கும்படி தொடங்கும் அந்தப் பாடல்...

 

”ஏ மேரே ஹம்சஃபர் 

எக் ஸரா இந்தஜார்

சுன் சதாயேன் தே ரஹி ஹேன்

மன்சில் பியார் கி

பியார் நே ஜஹான் ப்பே ரக்கா ஹே
ஜூம்கே கதம் ஏக் பார்
வஹின் சே குலா கோயி ராஸ்தா
வஹின் சே கிரே ஹே திவார்!”

 

பேரறிவாளன் வாசித்த கிடார் இசையைக் கேட்க கீழே உள்ள வீடியோ இணைப்பை க்ளிக் செய்யவும்

 

 

 அன்பு காலடி எடுத்து வைக்கும் இடங்களில் எல்லாம் எப்படியேனும் ஒரு வழி பிறக்கும், ஏதேனும் ஒரு திரை விலகும்! என்பதுதான் பேரறிவாளன் வாசித்த பாடலின் சரணத்தின் பொருள். 

வழி பிறக்கட்டும்!   

https://www.vikatan.com

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, நவீனன் said:

ஜெர்மனி மருத்துவர் ராபர்ட் கோக்கின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்

மறைந்த ஜெர்மனி மருத்துவர் ராபர்ட் கோக்கின் 174-வது பிறந்தநாளை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுளின் மூலம் கொண்டாடி வருகிறது.

 
ஜெர்மனி மருத்துவர் ராபர்ட் கோக்கின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்
 
புதுடெல்லி:

ராபர்ட் கோக் ஜெர்மனிய அறிவியலாளரும், மருத்துவரும் ஆவார். அவர் ஹெர்மன் கோக் - மதில்டே ஜூலி ஹென்ரிடே பெய்வாண்ட் தம்பதியினருக்கு 1843-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஜெர்மனியின் ஹெனோவர் நகரில் பிறந்தார். இவர் பள்ளியில் சேரும் முன்னரே வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றுக்கொண்டார். 1862-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த அவர், அறிவியல் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கினார்.

201712100640142500_1_google._L_styvpf.jpg

தனது 19-வது வயதில் இயற்கை அறிவியல் பயில்வதற்காக கொட்டிங்கன் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். இருப்பினும் இடையிலேயே மருத்துவ துறையின் மீது கொண்ட ஈடுபாட்டினால் தனது துறையை மாற்றிக்கொண்டார். 1866-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த அவர் மருத்துவராக பணியாற்றத் தொடங்கினார்.

1885 முதல் 1890-ம் ஆண்டு வரை பெர்லின் பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். அதன்பின் பிரஷ்யன் தொற்றுநோய் நிறுவனத்தின் இயக்குனராக செயலாற்றினார்.

இவர் 1877-ல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் நோய்க்கு காரணமான பாக்டீரியாவை கண்டறிந்தார். அதன்பின் 1882-ல் காசநோய் ஏற்பட காரணமாக இருக்கும் மைக்கோபாக்டீரியம் என்ற நுண்ணுயிரையும் கண்டுபிடித்தார். 1884-ம் ஆண்டில் காலரா குறித்த ஆய்வை தொடங்கிய அவர், அந்த நோய் தாக்க காரணமாக இருக்கும் வைபிரியோ காலரா என்ற நுண்ணுயிரை கண்டுபிடித்தார். அவரது இந்த கண்டுபிடிப்புகளே பின்நாளில் அந்த நோய்களுக்கு தடுப்புமருந்து கண்டுபிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

காசநோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905-ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1908-ம் ஆண்டு, சிறந்த மருத்துவர்களை கவுரவப்படுத்துவதற்காக ராபர்ட் கோக் பதக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. 27-05-1910 அன்று தனது 66-வது வயதில் மரணம் அடைந்த ராபர்ட் கோக்கை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை ‘டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது.
 

பொய்...பச்சைப்பொய் ...:cool:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
வரலாற்றில் இன்று: டிசெம்பர் 10
 

1817 – மிசிசிப்பி நகரம் அமெரிக்காவின் 20ஆவது மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டது.

1869 – கிழக்கு அமெரிக்காவின் வயோமிங் பிரதேசத்தில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

1901 – முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1901 – பிலிப்பைன்ஸ் மீது ஜப்பான் போர் தொடுத்தது.

1953 – உலகப் புகழ்பெற்ற 'ப்ளேபோய்' சஞ்சிகையினை 7600 அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடன் ஹுக் ஹேப்னெர் ஆரம்பித்தார்.

1964 – நோர்வே – ஒஸ்லோவில் டொக்டர் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு நோபல் பரிசு கிடைத்தது. இளவயதில் நோபல் பரிசுபெற்றவர் என்ற பெருமை இவருக்குண்டு.

1996 – தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா புதிய ஜனநாயக அரசியலமைப்பு சட்டமூலமொன்றில் கையொப்பமிட்டார். வெள்ளையர்கள் - சிறுபான்மையினர் என்ற அடிப்படை வாதமின்றி நாட்டினை கட்டியெழுப்புவதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.

2007 – ஆர்ஜன்டீனாவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக கிரிஸ்டினா பெர்ணான்டெஸ் பதவியேற்றார்.

http://www.tamilmirror.lk

Share this post


Link to post
Share on other sites

வாழ்வு இனிது: சொப்புப் பொம்மைகளில் மண்வாசனை சமையல்!

 

8chgowtinyfoods
 

குழந்தைப் பருவத்தின் நினைவுகளை அசைபோடுவது எல்லோருக்கும் பிடித்தமான விஷயம். அதுவும் சிறு வயதில் சொப்புச் சாமான்களை வைத்து சமையல் செய்து விளையாடிய நினைவு, எப்போதும் பசுமையாகவே நிலைத்திருக்கும். இந்த நினைவுகளுக்கு திரும்பவும் உயிர்கொடுத்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் ‘தி டைனி ஃபுட்ஸ்’(The Tiny Foods) என்ற யூடியூப் சேனல் செய்து வருகிறது.

       
 

தொடர்புடையவை

இந்த நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சியாகத் திருவண்ணாமலையைச் சேர்ந்த தம்பதி என்.பி. ராம்குமாரும் ஆர். வளர்மதியும் இந்த சேனலை ஆரம்பித்திருக்கின்றனர். இந்த சேனலில், கிராமத்துச் சூழலின் பின்னணியில் சொப்புச் சாமான்களை வைத்து விதவிதமான உணவு வகைகளை உண்மையிலேயே சமைக்கின்றனர். ‘மினியேச்சர் குக்கிங்’ என்று அழைக்கப்படும் இந்த வகை சமையல் ஜப்பானில் மிகவும் பிரபலம்.

8chgowBriyani

சொப்பு சாமானில் தயாரிக்கப்பட்ட பிரியாணி

 

யூடியூப்பில் எப்போதுமே டிரெண்டிங்காக இருப்பவை சமையல் சேனல்களே. உலகம் முழுவதும் சமையல் வீடியோக்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துகொண்டு இருக்கிறது. இதை மனதில் வைத்துதான் ஏதாவது வித்தியாசமான, தனித்துவமான யூடியூப் சேனலை ஆரம்பிக்க வேண்டும் என்று யோசித்திருக்கிறது இந்தத் தம்பதி.

 

இது புதுமை

“யூடியூப்பில் உணவு தொடர்பான சேனல் ஒன்று தொடங்கலாம் என்ற யோசித்தபோது, என் மனைவி வளர்மதி தான் சொப்புச் சாமானில் சமைத்தால் வித்தியாசமாக இருக்கும் என்று சொன்னார். சொப்புச் சாமான்கள் எல்லோருடைய குழந்தைப் பருவ நினைவுகளுடன் இணைந்திருக்கும் விஷயம் என்பதால், எனக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. ஆனால், மொத்த சேனலையும் அப்படி வடிவமைக்கலாம் என்று திட்டமிடவில்லை. ஒரு நாள், எதேச்சையாக யூடியூப்பில் பிரபலமாக இருக்கும் ஜப்பான் ‘மினியேச்சர் குக்கிங்’ சேனல்களை என் மனைவி பார்த்துவிட்டு என்னிடம் காண்பித்தார்.

8chgowtinyfoods5

இட்லியும் மீன் குழம்பும்

 

அந்த சேனல்களைப் பல லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். அந்த ‘மினியேச்சர் குக்கிங்’ சேனல்களின் வீடியோக்களைப் பார்த்த பிறகு, நாமும் ஏன் அப்படி ஒரு சேனலை இங்கே ஆரம்பிக்கக் கூடாது என்று யோசித்துதான் ‘தி டைனி ஃபுட்ஸ்’ சேனலை உருவாக்கினோம்” என்கிறார் ராம்குமார். தகவல் தொழில்நுட்பத்தில் எம்.எஸ். படித்திருக்கும் இவர், குடும்பத் தொழில் நிறுவனத்தை நிர்வகித்தபடி, இந்த சேனலையும் நிர்வகித்துவருகிறார். இந்த வீடியோக்களைப் படம் பிடிப்பதற்கான இடங்களை ஒவ்வொரு வாரமும் வித்தியாசமாகத் தேர்வு செய்கிறார் இவர்.

“இந்த ‘மினியேச்சர் குக்கிங்’ செய்வதற்குப் பொறுமை தேவை. பின்னணி ‘செட்’ எல்லாம் அமைத்து உணவைச் சமைத்து முடிக்க சிலமுறை ஐந்து மணி நேரம்கூட ஆகும். அதுதான் நாங்கள் எதிர்கொள்ளும் சவால். சொப்புச் சாமானில் சமைக்கும்போது ருசியிலும் சமையல் முறையிலும் எந்தச் சமரசமும் செய்துகொள்வதில்லை. சமைப்பதற்கு என்னென்ன பொருட்கள் தேவையோ அவற்றைப் பயன்படுத்தியே சமைக்கிறோம்.

8chgowtinyfoods6
 

ஆரம்பித்த ஒரு மாதத்தில் எங்கள் நண்பர்களும் ஊரில் இருப்பவர்களும் எங்களை வீடியோக்களைப் பார்த்துப் பாராடினார்கள். நமது குழந்தைப் பருவத்து நினைவுகளை நம்முடைய குழந்தைகளுடன் பார்த்து அசைபோட வைக்கும் நோக்கத்தில்தான் இந்த சேனலைத் தொடங்கினோம். அதற்கு வரவேற்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி” என்று சொல்கிறார் வளர்மதி.

 

சொப்புச் சமையல்

இந்த சேனல் ஆரம்பித்து ஒரு மாதம்தான் ஆகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு புதிய சமையல் வீடியோ பதிவேற்றப்படுகிறது. பிரியாணி, இட்லி-மீன்குழம்பு, ரொட்டி-இறால் தொக்கு, ‘சிக்கன் நக்கெட்ஸ்’, ‘சிக்கன் ஆம்லெட்’ போன்ற ஐந்து உணவு வகைகளைப் பதிவேற்றியிருக்கின்றனர். இதில், இவர்கள் செய்த பிரியாணி வீடியோ ஃபேஸ்புக்கில் டிரெண்டாகியிருக்கிறது.

8chgowtinyfoods1

ஆர். வளர்மதி, என்.பி. ராம்குமார்

 

இந்த வீடியோவை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பகிர்ந்திருக்கின்றனர். கிராமத்துச் சூழலின் பின்னணியில் நம்ம ஊர் மண்பாண்ட சொப்புச் சாமான்களில் சமைக்கப்படும் இந்தச் சமையல் வீடியோக்கள் குழந்தைகள், பெரியவர்கள் என இருதரப்பினரையும் கவரும் அம்சங்களுடன் இருக்கின்றன.

 

http://tamil.thehindu.com

 

Share this post


Link to post
Share on other sites

ராபர்ட் கோக் ஜெர்மனிய அறிவியலாளரும், மருத்துவரும் ஆவார். அவர்  Hermann KochMathilde Julie Henriette Biewand தம்பதியினருக்கு 1843-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஜெர்மனியின்  Niedersachsen மாநிலத்தில் உள்ள   Clausthal-Zellerfeld   நகரில் பிறந்தார். tw_blush:

3 hours ago, குமாரசாமி said:

பொய்...பச்சைப்பொய் ...:cool:

 

இந்திய பத்திரிக்கை தவறாக Hannover என்று எழுதிவிட்டார்கள்.

Niedersachsen மாநிலத்தின் தலைநகரம் Hannover என்றபடியால் தவறான புரிதலாக இருந்து இருக்கும்.:rolleyes:

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

உலகில் அதிகம் பேர் செல்லும் தீவு… ஆனால் இது உலகிலேயே இல்லை! #NULLISLAND

 
 

ரு தீவு. அங்கே தான் ஒவ்வொரு நாளும் ஆயிரம் செல்ஃபிக்களுக்கும் மேலாக எடுக்கப்படுகின்றன. எண்ணற்ற திருமண விழாக்கள் நடக்கின்றன. பல பிரியா விடைகள் அளிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு லட்சக் கணக்கில் மனிதர்கள் வந்து போகிறார்கள். இவ்வளவு ஏன்? நீங்கள் கூட பல முறை அங்கே சென்று வந்திருப்பீர்கள். நேற்று நீங்கள் ஏதோ ஒரு டேட்டிங் ஆப்பில் அப்லோட் செய்த படம் கூட இந்தத் தீவில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கலாம். அதன் பெயர் ‘நல் தீவு’ (Null Island). சோகம் என்னவென்றால், அப்படி ஒரு தீவு இந்த உலகத்திலேயே இல்லை. குழப்பிக்கொள்ளும் முன், ஒரு சிறிய கணித விளக்கம்.

நல் தீவு - Null Island

 
 

Screenshot Grabbed From youtube.com/minuteearth

‘Null’ என்ற வார்த்தையை நாம் கணிதத்தில் அதிகம் பயன்படுத்தி இருப்போம். இதற்கு என்ன அர்த்தம்? பலர் இதை ‘0’ வுடன் குழப்பிக் கொள்வார்கள். ஆனால், உண்மையில் இதற்கும் ‘0’ விற்கும் Null என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக உங்களிடம் பணம் ஏதும் இல்லை என்னும் போது அங்கே ‘0’ (பூஜ்யம்) பயன்படுத்தப்படும். உங்களிடம் பணம் இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியவில்லை என்றால் அங்கே ‘NULL’ பயன்படுத்தப்படும். போதிய தரவு இல்லாத போது, அந்தத் தரவு பூஜ்யமா இல்லையா  என்று தெரியாத போது, ‘NULL’ பயன்பாட்டிற்கு வரும். ஆனால், சில சமயம் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்கள் ‘NULL’ என்ற விஷயத்தை ‘0’ வுடன் குழப்பிக் கொள்ளும். இதனால் பெரும் குழப்பங்கள் ஏற்படும்.

இதில் பிரபலமான ஒரு குழப்பம், நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஏற்படும். நன்றாக ப்ரோக்ராம் செய்யப்படாத ஆப்கள் நீங்கள் போட்டோ அப்லோட் செய்யும் போது உங்களுக்கே தெரியாமல் ஒரு பிரச்னையை ஏற்படுத்தும். நீங்கள் ‘Location’ ஆன் செய்யாமல் ஒரு புகைப்படமோ அல்லது ஒரு நிலைத் தகவலோ பதிவு செய்யும் போது, ‘Location’ குறித்த டேட்டா இல்லாததால், நீங்கள் (0°, 0°) என்ற லோகேஷனில் இருப்பதாக எடுத்துக் கொள்கிறது. “சரியாகத் தானே செய்கிறது? நான் தான் லோகேஷன் ஆன் செய்யவில்லையே?” என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், பூமியைப் பொறுத்தவரை (0°, 0°)  என்பதும் ஒரு லோகேஷன் குறித்த டேட்டா தான். அது தான் பூமியின் மையப் பகுதி (Center of the earth). அந்த இடத்திற்கு என்று நிறையப் பின்கதைகளும் உண்டு.

Weather Buoy on Null Island

(0°, 0°) என்ற இடத்தில் தான் அட்சரேகையான பூமத்திய ரேகையும் (Equator), தீர்க்கரேகையான ப்ரைம் மெரிடியன் ரேகையும் (Prime Meridian) சந்திக்கின்றன. இந்த இடம் சரியாக ஆப்பிரிக்காவிற்கு மேற்கில், கினியா வளைகுடாவில், கிழக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் வருகிறது. நடுக்கடலான இந்த இடத்தில் இருப்பது வானிலையைக் கண்டறிய உதவும் ஒரு மிதவை (Weather Buoy) மட்டுமே. (0°, 0°) என்று இந்த இடத்தை, வரைபடங்களில் குறிப்பிடுவதாலும், இதனால் அவ்வப்போது ஏற்படும் குழப்பங்களை தவிர்க்கவும், இந்த இடத்தை ‘Null Island’ என்று அழைக்கின்றனர். நீங்கள் லோகேஷன் ஆன் செய்யாமல் அப்லோட் செய்யும் விஷயங்கள் பல இங்கே இருந்து நீங்கள் அப்லோட் செய்ததாக தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிரபலமான ஆப்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்த பிரச்னை ஏற்படுவது இல்லை. கடனே என்று ப்ரோக்ராம் செய்யப்பட்ட ஆப்கள் (பல உண்டு) அனைத்தும் உங்களை நல் தீவில் இருப்பது போல் காட்டி குழப்பம் ஏற்படுத்துகின்றன.

2012ம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலின் போது விஸ்கான்ஸின் என்ற இடத்தில் சென்சஸ் முறையாக எடுக்கப்படாததால் ஒரு குழப்பம் ஏற்பட்டது. பலருக்கு அவர்களின் லோகேஷன் குறித்த டேட்டா எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் அந்த வாக்காளர்கள் அனைவரும் நல் தீவில் (0°, 0°) இருப்பதாக கம்ப்யூட்டர் புரிந்து கொண்டது. அதாவது அவர்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு வெளியே இருப்பதாகப் பதிவு செய்து கொண்டது. கடைசி நேரத்தில் இதைக் கண்டறிந்து சரி செய்து உள்ளனர்.

நல் தீவு சென்ற பயணி

Photo Courtesy: Imgur

 

சரி, இந்த 'NULL' தீவிற்கு உண்மையாகவே சென்று ஒரு செல்ஃபி எடுத்தால் எப்படி இருக்கும்? நிறையப் பேர் சென்று நிஜமாகவே படங்கள் எல்லாம் எடுத்திருக்கிறார்கள். பலர் அதை எதேச்சையாக கடந்து செல்லும் போது அதைப் பற்றி அறிந்து கொண்டு படகை நிறுத்தி படங்கள் எடுத்திருக்கிறார்கள். அதற்கு ஒரு சிறந்த, அனுபவம் நிறைந்த வழிகாட்டி ஒருவர் உடன் வர வேண்டும். அப்போதும் உறுதியாக இலக்கை அடைவோம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அங்கே நீங்கள் எப்போது சென்றாலும், உங்களை வரவேற்க அந்த Weather Buoy காத்திருக்கும்.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

DQrKtGTV4AAfpBz.jpg

 

Meme Of The Day 😂😂😬👌#INDvSL

சாமி போச்சு

இந்த நிலையில் சாமி படத்தில் ஹீரோ விக்ரமுக்கு கல்யாணம் ஆகும் போது நடக்கும் பிரச்சனையை வைத்து இந்த மீம் செய்து இருக்கிறார்கள். அதில் கோஹ்லிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கு இடையில் கல்யாணம் நடக்கும் போது இங்கு இந்திய அணி மோசமாக மாறிவிட்டதாக கூறியிருக்கிறார்கள்.
 

Share this post


Link to post
Share on other sites

ஜாலியா ஒரு விளையாட்டு!

 

 

Black-Pudding-Thr24C66
 

இங்கிலாந்தில் இளைஞர்களின் விருப்பமான விளையாட்டுகளில் ஒன்று ‘உலக பிளாக் புட்டிங் சாம்பியன்ஷிப்’. கறுப்புப் பந்துகளை மேலே எறிந்து ரொட்டித் துண்டுகளைக் கீழே விழ வைக்கும் விநோதமான விளையாட்டு இது.

 

தொடர்புடையவை

ராம்ஸ்பாட்டம் நகரில் நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக ஏராளமான போட்டியாளர்கள் குவிந்துவிடுவார்கள். குறிப்பாக இளைஞர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும்.

போட்டி இதுதான். இருபது அடி உயரத்தில் ஒரு தட்டு வைக்கப்பட்டிருக்கும். அதில் 5 ரொட்டித் துண்டுகள் இருக்கும். போட்டியில் பங்கேற்பவர்களுக்கு 3 வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த வாய்ப்புகளில் போட்டியாளர்கள் கறுப்பு பந்தை மேலே எறிந்து, ரொட்டித் துண்டுகளை கீழே விழ வைக்க வேண்டும். ரொட்டித் துண்டுகளைக் கீழே விழ வைப்பவரே வெற்றியாளர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் இந்தப் போட்டி நடைபெறுவது வாடிக்கை.

இந்த விநோதமானப் போட்டி இங்கிலாந்தில் நூறாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. பழமையான போட்டியாக இருந்தாலும், விநோதமாக இருப்பதால், இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டுக்கு தனி மவுசுதான்.

http://tamil.thehindu.com

Share this post


Link to post
Share on other sites

1972 : மனி­தர்கள் சந்­தி­ரனில் இறு­தி­யாக தரை­யி­றங்­கினர்

வரலாற்றில் இன்று…

டிசம்பர் – 11

 

1282 : வேல்ஸின் கடைசி பழங்­குடி இள­வ­ர­ச­னான கடைசி லெவெலின் கொல்­லப்­பட்டான்.

600px-NASA_Apollo_17_Lunar_Roving_Vehicl1789 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் மிகப் பழ­மை­யான பொதுப் பல்­க­லைக்­க­ழ­க­மான வட கரோ­லினா பல்­க­லைக்­க­ழகம் (சாப்பல் ஹில்) அமைக்­கப்­பட்­டது.

1792 : பிரெஞ்சுப் புரட்சி: பிரான்ஸின் பதி­னாறாம் லூயி மன்னன் தேசத்­து­ரோகக் குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்டு விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்டான்.

1907 : நியூஸிலாந்தின் நாடா­ளு­மன்றக் கட்­டடம் தீயில் எரிந்து சாம்­ப­ரா­னது.

1917 : பிரித்­தா­னியப் படைகள் ஓட்­டோமான் பேர­ர­சிடம் இருந்து ஜெரு­ச­லேமை மீட்­டன.

1927 : சீனாவின் குவாங்சூ நகரை கம்­யூ­னிஸ்­டுகள் கைப்­பற்றி அதனை குவாங்சூ சோவியத் என மாற்­றி­யி­ருப்­ப­தாக அறி­வித்­தனர்.

1931 : அவுஸ்­தி­ரே­லியா, கனடா, அயர்­லாந்து, நியூ­ஸி­லாந்து, தென் ஆபி­ரிக்கா ஆகி­ய­வற்­றுக்கு தமது முழு­மை­யான அர­சி­ய­ல­மைப்­பு­களைப் பேணும் சட்­ட­மூலம் வெஸ்ட்­மின்ஸ்டர் சட்டம் 1931 இல் பிரித்­தா­னிய நாடா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

1936 : விவா­க­ரத்­தான அமெ­ரிக்கப் பெண்­ணான வலிஸ் சிம்­ஸனை திரு­மணம் செய்­ததால், ஐக்­கிய இராச்­சி­யத்தின் மன்னர் எட்டாம் எட்வேர்ட் முடி துறந்தார். அவரின் இளைய சகோ­தரர் 6 ஆம் ஜோர்ஜ் புதிய மன்­ன­ரானார்.

1937 : எஸ்­தோ­னி­யரின் தலைவர் ஜோன் ஆன்வெல்ட் ஸ்டாலின் ஆட்­சி­யா­ளர்­களால் கைது செய்­யப்­பட்டுக் கொலை செய்­யப்­பட்டார்.

1941 : இரண்டாம் உலகப் போர்: ஜேர்­ம­னியும் இத்­தா­லியும் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக போர்ப் பிர­க­டனம் செய்­தன.

1946 : ஐக்­கிய நாடு­களின் சிறுவர் நிதியம் (யுனிசெப் நிறு­வனம்) அமைக்­கப்­பட்­டது.

edward-viii-wallis-simpson.jpg1964 : நியூயோர்க் நகரில் ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்தில் சேகுவேரா உரை­யாற்­றினார். இவர் உரை­யாற்றிக் கொண்­டி­ருந்­த­போது ஐ.நா. கட்­ட­டத்தை நோக்கி குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.

1972 : நாசாவின் அப்­பலோ 17 விண்­க­லத்தில் சென்ற விண்­வெளி வீரர்கள் சந்­தி­ரனில் தரை­யி­றங்­கினர். மனி­தர்கள் சந்­தி­ரனில் தரை­யி­றங்­கிய கடைசி சந்­தர்ப்பம் இது­வாகும்.

1981 : எல்சல்­வ­டோரில் இரா­ணு­வத்­தினர் நாட்டின் உள்­நாட்டுப் போரின் ஒரு கட்­ட­மாக கிட்­டத்­தட்ட 900 பொது­மக்­களைக் கொன்­றனர்.

1993 : மலே­ஷி­யாவின் தலை­நகர் கோலா­லம்­பூரில் உயர்­மாடிக் கட்­டடம் ஒன்று வீழ்ந்­ததில் 48 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1994 : ரஷ்­யாவின் அதிபர் போரிஸ் யெல்ட்சின் தமது படை­களை செச்­சி­னி­யா­வுக்கு அனுப்­பினார்.

1994 : பிலிப்­பைன்­ஸி­லி­ருந்து டோக்­கியோ நோக்கி சென்­று­கொண்­டி­ருந்த பிலிப்பைன்ஸ் விமா­னத்தில் குண்டு வெடித்­ததால் ஒருர் பலி­யானார். எனினும் இவ்­வி­மா­னத்தை விமானி பாது­காப்­பாக தரை­யி­றக்­கினார்.

1998 : தாய்­லாந்து விமா­ன­மொன்று தாய்­லாந்தில் வீழ்ந்­ததில் 101 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2001 : உலக வர்த்­தக அமைப்­பில் ஐ.நா. இணைந்­தது.

2007 : அல்­ஜீ­ரி­யாவில் ஐ.நா. அலு­வ­லகம், நீதி­மன்ற வளா­கங்­க­ளுக்கு அருகில் இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்­களால் சுமார் 45 பேர் பலி­யா­கினர்.

2008 : அமெ­ரிக்­காவில் 5000 கோடி டொலர் நிதி மோசடி தொடர்­பாக பிர­பல முதலீட்டு ஆலோசகர் பேர்னார்ட் மடோவ் கைது செய்யப்பட்டார்.

2012 : சிரியாவின் அலாவிட் நகரில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் சுமார் 125 பேர் உயிரிழந்தனர்.

2014 : அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய மாநகர வங்குரோத்து நிலைக்குள்ளான டெட்ரோய்ட் நகரம் அந்நிலையிலிருந்து மீண்டது.

http://metronews.lk

Share this post


Link to post
Share on other sites

அகதியாக வந்தவர் ரெஸ்டாரென்ட் அதிபரான கதை #MotivationStory

 
 

கதை

வெற்றி என்பது என்ன? ஃப்ரேம் போட்டு சுவரில் மாட்டிவைத்திருக்கும் நாம் வாங்கிய சான்றிதழ்களா... கண்ணாடி அலமாரியில் அடுக்கிவைத்திருக்கும் பரிசுக்கோப்பைகளா... வங்கிக் கணக்கில் கணிசமாகச் சேர்ந்திருக்கும் பணமா... சம்பந்தப்பட்ட துறையில் கிடைத்திருக்கும் பெயரும் புகழுமா? ஆம், நிச்சயமாக இவையெல்லாம் வெற்றிகள்தான். இவற்றையும் தாண்டியது உண்மையான வெற்றி. ஏதோ ஒருநாள் ஆளுயரக் கண்ணாடிக்கு முன் நிற்கிறீர்கள். ‘ஏ யப்பா... இந்த அளவுக்கு உயர்ந்திருக்கோமா?!’ என்று உங்களுக்கு நீங்களே பாராட்டிக்கொள்கிறீர்கள். ‘என் ஃபீல்டுல என்னால எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு சாதிச்சுட்டேன்’ என்று பெருமைகொள்கிறீர்கள். அதுதான் உண்மையான வெற்றி. கியோ சனானிகோன் (Keo Sananikone) என்கிற மிகச் சாதாரணமான மனிதர், அதிலும் ஓர் அகதியாக அமெரிக்காவுக்கு வந்தவர், எப்படிச் சாதனையாளர் ஆனார் என்ற கதையைத் தெரிந்துகொண்டால், வெற்றிக்கான உண்மையான அர்த்தம் நமக்குப் புரியும்.

 

தென்கிழக்கு ஆசியாவின் லாவோஸ்தான் (Laos) கியோ சனானிகோனுக்குப் பூர்வீகம். அந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது அகதியாக வெளியேற வேண்டிய சூழல். அங்கிருந்து வெளியேறி, அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார் கியோ சனானிகோன். ஏற்கெனவே அவர் அமெரிக்காவில்தான் படித்திருந்தார். ஏதோ ஒரு படிப்பு, பெயருக்கு ஒரு பட்டம். ஆனால், அவருடைய ஆசையெல்லாம் அற்புதமான, மக்கள் அனைவரும் விரும்புகிற அருமையான ஒரு ரெஸ்டாரென்ட்டை ஆரம்பித்து நடத்த வேண்டும் என்பதுதான். அதற்குக் காரணமும் இருந்தது. அவர், அமெரிக்காவில் இருந்த பல ரெஸ்டாரென்ட்களைப் பார்த்துவிட்டார். அங்கெல்லாம் ஒன்று, சுவை பிரமாதமாக இருக்கும்; ஹோட்டல்காரர்கள் பரிமாறும் முறை, நடத்தும்விதம் சரியாக இருக்காது. அப்படி இல்லையென்றால், ரெஸ்டாரன்ட்டில் கவனிப்புப் பிரமாதமாக இருக்கும்; உணவின் சுவை நன்றாக இருக்காது. இவை இரண்டும் சேர்ந்ததுபோல் ஒரு ரெஸ்டாரன்ட்டைத் தொடங்கி நடத்த வேண்டும் என்பது அவருடைய மிகப்பெரும் கனவாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு ஹோட்டலில் வருமானம் கிடைக்கிறதோ இல்லையோ, பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது அவர் எண்ணம்.

Keo sananikone

சமையலில் தீராத ஆர்வம் அவருக்கு இருந்தது. ஃபிரெஞ்ச், இத்தாலி, தாய்... என அனைத்து சமையல் முறைகளையும் கற்றுத் தேர்ந்திருந்தார் கியோ. ஆனாலும், ஒரு ரெஸ்டாரென்ட்டை ஆரம்பித்து நடத்தலாம் என்கிற நம்பிக்கை அவருக்கு வரவில்லை. `இன்னும் பயிற்சி வேண்டும்... இன்னும் கற்க வேண்டும்... இன்னும் அனுபவம் வேண்டும்...’ என்கிற எண்ணம் அவருக்கு மேலோங்கியிருந்தது. அப்போது கியோ, அமெரிக்காவிலுள்ள ஒரு மெக்கின்லே பள்ளியில் (McKinley School) கணக்கு வாத்தியாராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். பகலில் வாத்தியார் வேலை... இரவில்? ஒரு ஹோட்டலில் போய், சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவினார். சில மாதங்களுக்குப் பிறகு அவருடைய சின்சியாரிட்டிக்கு புரொமோஷன் கிடைத்தது... சர்வர் வேலை! அந்த வேலையையும் சின்சியராகச் செய்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சமையலறையிலேயே கிடந்தார். உணவு செய்யப்படும் முறை, சேர்க்கப்படும் சேர்மானங்கள் அத்தனையையும் உற்றுக் கவனித்தார். சந்தேகங்கள் கேட்டுக் கேட்டு, சமையலைப் பார்த்துப் பார்த்து ஒரு ரெஸ்டாரென்ட்டின் அத்தனைச் சூட்சுமங்களையும் கற்றுக்கொண்டார் கியோ.

அந்த நாளும் வந்தது. அது 1977-ம் ஆண்டு. சிறுகச் சிறுக, தான் சேர்த்துவைத்திருந்த பணத்தோடு, நண்பர்களிடம் கொஞ்சம் கடன் வாங்கி, அதைக்கொண்டு ஒரு `தாய்’ (Thai) பாணி ரெஸ்டாரென்ட்டை ஹவாய் மாகாணத்திலுள்ள ஹோனோலுலுவில் ஆரம்பித்தார். ரெஸ்டாரென்ட்டின் பெயர், `மிகோங் ரெஸ்டாரென்ட்’ (Mekong Restaurant). `மிகோங்’ என்பது தென்கிழக்கு ஆசியாவில் ஓடும் ஓர் அழகான நதி. கியோவின் ஒரே எண்ணம் வருகிற வாடிக்கையாளர், திருப்தியோடு சாப்பிட்டுத் திரும்பிப் போக வேண்டும் என்பதுதான். அதில் மிகக் கறாராக இருந்தார். ஆரம்பத்தில் அந்த ரெஸ்டாரென்ட்டுக்கெனத் தனியாகப் பணியாளர்கள் யாரையும் அவர் அமர்த்தவில்லை. மிக மிகச் சிறிய ஹோட்டல். ஆனாலும், வெகு விரைவில் புகழ்பெற்றுவிட்டது மிகோங் ரெஸ்டாரென்ட். காரணம், அங்கே கிடைக்கும் அற்புதமான சுவை நிரம்பிய உணவு, குறைந்த விலை, பிரமாதமான சேவை.

கியோவால் அதிகம் வாடகை கொடுக்க முடியவில்லை. ஒரு சுமாரான கட்டடம்தான் கிடைத்தது. அதிலும் பக்கவாட்டுச் சுவரில் பெரிதாக ஓட்டை ஒன்று இருந்தது. இடத்துக்குச் சொந்தக்காரர் அதையெல்லாம் சரிசெய்து கொடுக்க முடியாது, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அந்த ஓட்டையை மறைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் கியோ. அவருக்கு ஒரு ரசனை இருந்தது. மங்கலான விளக்கொளியில், அமைதியான சூழலில் சாப்பிடுவது அவருக்குப் பிடிக்கும். அந்த முறையை தன் ரெஸ்டாரென்ட்டிலும் கடைப்பிடித்தார் கியோ. பகலோ, இரவோ ரெஸ்டாரென்ட் மங்கலான விளக்கொளியில் இருந்தது. அதனால் வருகிற வாடிக்கையாளர்களுக்கு சுவரில் இருந்த ஓட்டை தெரியவில்லை.

கியோவின் குடும்பத்தினர் பல வேலைகளில் இருந்தனர். அவர்களில் இரவில் வேலைக்குப் போனவர்கள், பகலில் மிகோங் ரெஸ்டாரென்ட்டில் பணியாற்றினார்கள். பகல் நேரத்தில் வேலைக்குப் போனவர்கள், இரவில் ரெஸ்டாரென்ட்டுக்கு வந்து வேலை செய்தார்கள். ரெஸ்டாரென்ட்டைத் தொடங்கி எட்டு மாதங்கள் கழித்து, இரண்டுபேரை வேலைக்குச் சேர்த்தார் கியோ. அவர் வியாபாரம் கிடுகிடுவென்று வளர்ந்தது. சரியாகப் பத்து வருடங்கள் கழித்து, கியோவின் நான்கு ரெஸ்டாரென்ட்டுகளில் 142 தொழிலாளிகள் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவருடைய தாய் ஹோட்டலில் வேலைக்குசேர விருப்பப்பட்டு, மேலும் 300 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். அந்த அளவுக்கு ஹோட்டல் பிசினஸில் வெற்றியாளராகிவிட்டார் கியோ.

வெற்றி

 

ஒரு பத்திரிகைக்குப் பேட்டி அளித்தபோது, தான் அடைந்த வெற்றிக்கான காரணத்தை கியோ சனானிகோன் இப்படிக் குறிப்பிட்டார்… “எனக்கு மனிதர்களுடன் வேலை பார்ப்பது பிடிக்கும். அதை ஒரு கொண்டாட்டமாக மாற்றிவிடுவேன். ரெஸ்டாரென்ட்டை நடத்தும்போது அதை ஒரு தொழிலாக நான் நினைக்கவில்லை. `நான் என் வீட்டில் ஒரு விருந்துவைக்கிறேன். என் உறவினர்களும் நண்பர்களும் வந்து விருந்துச் சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டுப் போகிறார்கள்’ என்று நினைத்துக்கொள்வேன். நான் நடத்திய எல்லா விருந்துகளும் சிறப்பாக நடந்தன. `நான் வெற்றி பெறுவேன்’ என்பது எனக்கு நன்றாகத் தெரியும். வெற்றி என்றால், நான் எவ்வளவு சம்பாதித்தேன் என்ற அர்த்தத்தில் அல்ல. என் பிசினஸில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன்; அந்தக் கணங்களில் நான் நிறையச் சிரித்தேன். நான் வெற்றிபெற்றுவிட்டேன் என்பதை உணர்ந்தேன். நல்ல படிப்பு, நல்ல சூழ்நிலை, நல்ல நண்பர்கள்… வேறு என்ன வேண்டும் எனக்கு?’’

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites
 
 
 
 

நெட்டிசன் நோட்ஸ்: தேவையில்லாத '200' இல்ல டீமுக்கு முக்கியமான '65'- தோனிடா!

DQtCf8BVAAATKecjpg
 
 

தரம்சலாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இலங்கை - இந்தியாவிடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 112 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துது. அடுத்து விளையாடிய இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்திய அணியின் முக்கிய ஆட்டக்கரர்கள் அனைவரும்  ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழக்க  தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வந்த இந்திய அணியின் முன்னாள்  கேப்டன் மஹேந்திர சிங் தோனி  ஒற்றை வீரராக நின்று 65 ரன்கள் எடுத்தார்.

             
 

தொடர்புடையவை

இதுகுறித்து, நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.  அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்.

Venkatsapz

இவன இன்னும் எதுக்குடா அணியில வச்சிருக்கிங்க ODIல 30க்கு ஆல் அவுட் என்கிற உலக சாதனைய இழந்து விட்டது இந்திய அணி... #இதுதான் தோனி இதனாலதான் தோனி ரசிகனுக்கு எப்பொதுமே கொஞ்சம் திமிரு அதிகமாவே இருக்கும்...

#தோனி 65(87)...

சோழ நாட்டு தமிழன் விஜய்

பத்துபேர் அடிக்கிறப்ப அடிச்சா அது சாதரணமா தான் தெரியும்,

தனியா நின்னு அடிக்கிறப்பதான் அது சரித்திரமா தெரியும்..!

#தல #தோனி 

23PNG
 
hjuPNG
 

Ajithiyan Rtr Sathish

எவன் கேப்டன்லாம் பாக்கத்தெரியாது எவன் வேணும்னாலும் கேப்டனா இருக்கட்டும் என்னோட 100% #உழைப்ப நான் போடுவேன் என் இந்தியாவுக்காக

- #தோனி

#தோனிரசிகன்னு சொல்லும்போதே ஒரு திமிரேறுதில்ல

7PNG
5PNG
 

Hari Msð

தேவையில்லாத 200 இல்ல டா

டீமுக்கு முக்கியமான 65*

#தோனி 

rtPNG
 
2499156817974631936054018553498571845036
 

Boopathi T

டேய் நீ ப்பீல்டர் எங்க வேனா செட் பன்னு

அடிக்கிற பந்து பவுண்ரிய தாண்டும்

#தோனி 

kholiPNG
12PNG

 LONE WOLF

எத்தன ஆள் போனா என்ன இவன் ஒத்த ஆள் இருக்க வர நோ கவலை.. தோனிடா

 

3PNG
 

Karthik Đ Šmart

தனி ஒருவன் #தோனி

DQvC5FAVwAAdb-Gjpg

Thalapathy Siva Msd

மத்தவன் அடிக்க திணறுன பிட்ச்ல இந்த மனுசன் அடிய பாரு

டான்ஸ் ஆடுறவன்லாம் #தளபதி ஆக முடியாது .. கிரிக்கெட் விளையாட்றவன்லாம்

#தோனி ஆய்ற முடியாது  

Kala Nithi

எவ்வளவு கஷ்டமான நிலையிலும் தன் நிலை தவறாமல், மற்றவர்களை வழிநடத்தி வெற்றியை நோக்கி செல்பவன்தான் உண்மையான தலைவன்/ வீரன்.

#தோனி

DQtCRngVwAAmF3ojpg

Nagamuthu Susanthan

ஆயிரம் கோழி வந்தாலும்

#தோனியின் இடத்தை பிடிக்கவே முடியாது...

#தோனி

Selva Mohan

இந்த மாதிரி சூழ்நிலைதான் தோனிக்கு லோ ஸ்டிரைக் ரேட்ட பில்டப் பண்ணுது

Kêňňy Raynold 

Once a captain.

Always a captain !!

Name is #DHONI

9PNG
 

Rabel Rab 

நா தோனி Fan லாம் இல்ல

ஆனா அவர Troll பண்ணுறவங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன். இன்னிக்கு தோனி மட்டும் இல்லனா உங்க டீம் (49) ரன்னுக்குள்ள All Out ஆகியிருக்கும்

 
 

 

 
 
 
 
 
 
 
border_3.gif spacer.gifspacer.gif border_3.gif
spacer.gif spacer.gif  
spacer.gifspacer.gif
 
 
border_3.gif
spacer.gif spacer.gifspacer.gif
 

http://tamil.thehindu.com/

 

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

2 டொலருக்கு வாங்கப்பட்ட புகைப்படத்தின் இன்றைய பெறுமதி 5 மில்லியன் டொலர்!

 

2 டொலருக்கு வாங்கப்பட்ட புகைப்படத்தின் இன்றைய பெறுமதி 5 மில்லியன் டொலர்!

2 டொலர் கொடுத்து வாங்கப்பட்ட புகைப்படம் தற்போது 5 மில்லியன் டொலரிற்கு விற்பனையாகியுள்ளது. அமெரிக்காவின் மிகப் பிரபலமான Gunfighter எனக் கூறப்படும் Billy the kid என்பவரின் புகைப்படமே இவ்வாறு விற்பனையாகியுள்ளது.

1879 ஆம் ஆண்டு New Mexico Territory's Lincoln என்னும் இடத்தில் நடைபெற்ற போரில் கலந்துகொண்ட Billy the kid 8 பேரை சுட்டுக் கொன்றுள்ளார். இவரது புகைப்படங்களுக்கு தற்போது வரை மதிப்பு உள்ளது.

2010 ஆம் ஆண்டு Randy Guijarro என்ற புகைப்படக் கலைஞர் Billy the kid இன் புகைப்படத்தை 2 டொலர் கொடுத்து வாங்கியுள்ளார். ஆனால் தற்போது இதன் மதிப்பு 5 மில்லியன் டொலர் ஆகும்.

2 டொலருக்கு வாங்கப்பட்ட புகைப்படத்தின் இன்றைய பெறுமதி 5 மில்லியன் டொலர்!

மேலும் 2011 ஆம் ஆண்டு Billy the kid தனது குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் 2.3 மில்லியன் டொலரிற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது Kagin's என்னும் நிறுவனம் Billy the kid இன் ஏனைய இரண்டு புகைப்படங்களையும் ஏலத்தில் விட்டுள்ளது. அதில் அவர் தனது குழுவினருடன் விளையாடிக்கொண்டிருந்த புகைப்படமும் ஒன்றாகும்.

2 டொலருக்கு வாங்கப்பட்ட புகைப்படத்தின் இன்றைய பெறுமதி 5 மில்லியன் டொலர்!

2 டொலருக்கு வாங்கப்பட்ட புகைப்படத்தின் இன்றைய பெறுமதி 5 மில்லியன் டொலர்!

https://news.ibctamil.com

Share this post


Link to post
Share on other sites

‘பார்த்த இடத்திலெல்லாம் நீதானே கண்ணம்மா!’ - காதலைக் கொண்டாடும் பாரதியின் பிறந்தநாள் பதிவு!

 
 

வாழ்ந்த தடம், எட்டிய உயரம் என எதையும் எண்ணாமல் காலங்கள் கடந்து நிற்பவர்களில் வெகு சிலர் மட்டுமே நமக்கு நெருக்கமானவர்களாக உடன்வருவார்கள். அப்படி உடன்வருபவர்கள் ஒன்று ஆசானாக இருக்க வேண்டும். இல்லையேல் துணையாக இருக்க வேண்டும். தமிழ் கற்றவர்கள் ஆசான்களாக இருப்பதைவிட தோழனாக, வழித்துணையாக இருக்கும்பொழுது எந்த ஒரு மரியாதையும் இல்லாமல் வெகு இயல்பாக ஒருமையில் அழைத்துவிட முடிகிறது. வெறும் பாடப்புத்தகங்களின் வாயிலாக மட்டுமே ஒரு தேர்ந்த பிம்பமாக, பாரதியாராக பரிட்சயமாக்கப்பட்ட இந்த பாரதி வள்ளுவனைப்போல, கம்பனைப்போல நெருக்கமானவன். பாரதிக்குப் பால் பாகுபாடு கிடையாது. இங்கு பாரதி அண்ணன்களும் இருக்கிறார்கள் பாரதி அக்காள்களும் இருக்கிறார்கள். 

பாரதி

 

செந்தமிழின் மகா கவிஞன், சுதந்திர வேட்கை சூழ்ந்திருந்த கலகக்காரன், சமுதாய சீர்திருத்தத்தின் புரட்சிக்காரன் என்பதையெல்லாம் தாண்டி நம் வீட்டில் ஒருவனாக, நம்மோடு சுற்றித்திரியும் சக நண்பனாக, காதலனாக, ரசிகனாக அடம்பிடிக்கும் கோபக்காரனாக நம்மை ஒரு முகமூடிக்குள் பொருத்திப்பார்க்க ஏதுவான ஜீவனாக நம்முடன் பயணிப்பவன் இந்த பாரதி. சாதாரணமாக  ஏதேனும் ஒரு பள்ளியில் நடந்த மாறுவேடப்போட்டியின் ஆல்பத்தை பார்க்க நேர்ந்தால் நிச்சயம் அதனுள் ஒரு பாரதி கையை நீட்டிக்கொண்டு நிற்பான். தோற்ற மயக்கங்களைப் பாடியவனின் தோற்றமும்கூட மயக்கம்தான்.

அவன் கவிதைகள் தெரியாமல் இருக்கலாம். அவனது வாழ்க்கை பற்றி அறிந்துகொள்ளாமல் இருக்கலாம். பற்றிக்கொள்ள காரணமில்லாது திரிந்தாலும் அவன் பாரதி. முண்டாசு தோற்றமும் முறுக்கு மீசையும் ஒரு புரட்சிக்காரனது செயல் வடிவம். உண்மையாகச் சொல்லப்போனால் அது வெறும் காட்சிப்பிழை, கானலின் நீர். அவனுக்கான ரௌத்திரங்களாலும், புருவ உயர்த்தல்களாலும் அப்படிக் கட்டமைக்கப்பட்ட பிம்பம். ஆனால், அவனது முண்டாசுக்குள் ஒளிந்திருந்த பாமுகம் நிச்சயம் வேறாக இருந்திருக்க வேண்டும்.

அகநானூறு படைத்த சங்கத் தமிழ் சமுதாயத்தின் நாத வேர் - காதல். காதலைக் கொண்டாடுவதில் பாரதியொன்றும் விதிவிலக்கல்ல. பாரதியை ஒரு நல்ல நேர்மையான, காத்திரமான, மென்மையான ரௌத்திரமான "காதலன்" என்ற ஒற்றைப்பதத்தில் அடைத்துவிடுவது எனக்கு மிகவும் இலகுவாக இருக்கிறது. ஏனென்றால் இந்தக் காதல்காரன் காதலாலும் ரசனைகளாலும் ஆட்கொள்ளப்பட்டவன். 

ஒரு பெண்ணை தன்னிலை மாறாது தன்னிலையில் தக்க வைத்துக்கொள்வதில் இருக்கிறது ஒரு ஆணுடைய காதல். திருவிழா கண்ணாடிக்கு அடம்பிடிக்கும் குழந்தைத்தனம் , பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுவனின் மனநிலை, ஆற்றங்கரையில் காத்திருக்கும் ஆணின் பெண்மனம், முதுமையில் அசையும் கொல்லைப்புறத்து சாய்வு நாற்காலி, அது எழுப்பும் வாழ்க்கையின் ஓசை என அனைத்தும் ஒருசேர கொண்டவை பாரதியின் காதல்.

ஒவ்வோர் ஆண் மனதுக்குள்ளும் ஒரு பெண்பிம்பம் அவரவர் ரசனைக்கேற்ப செதுக்கப்பட்டிருக்கும். அதற்கு பெயர் இருக்காது உருவம் இருக்காது. ஆனால், அதற்கான இருப்பு ஒரு பெண் கை கோத்திரும் நிலையைக் கொண்டிருக்கும். சகலமாக கோடை மழையில் நனையும்போதோ, இரவுநேர கடற்கரையில் கால் நனைக்கும்போதோ, பேருந்தின் கூட்ட நெரிசலில் யாரோ ஒரு கைக்குழந்தை நம்மைப்பார்த்து சிரிக்கும்போதோ, நமக்கு நாமே சமைத்து ருசி பார்க்கும்போதோ, மனதில் தோன்றுவதை இலக்கணங்கள் மீறி எழுதிவிடும்போதோ அந்தப் பெண்பிம்பம் நம்மை மீறி வெளிவந்து நமது விரல்களைத் தாங்கிக்கொள்ளும்.

அப்படியிருக்கும் பெண்பிம்பம் பாரதிக்குக் கண்ணம்மா. பாரதியென்று இல்லை; யாராக இருந்தாலும் இப்படிப்பட்ட இயற்கையான கண்ணம்மாக்கள் ஒரு குழந்தையாக காதலை காதலாக வெளிக்கொணர நிச்சயம் இருப்பார்கள்..

காதலுக்கு அளவீடென்று எதுவுமில்லை; ஒருவர் மீதான விருப்பத்துக்கு அளவென்று அனுமானித்து "என்னை உனக்கு எவ்ளோ பிடிக்கும்" என்று கேட்பது பேரபத்தம். பாரதியெனும் காதல்க்காரனின் காதலும் அப்படிப்பட்ட அளவீடுகளைக் கடந்தது.

ஓர் ஆணுக்கு அவனுக்கான காதலை உணர்ந்துகொள்ள, அவனுக்கான காதலை வெளிப்படுத்த, அவனுக்கான பெண்ணை அடைந்துகொள்ள அவனுக்குள் ஒரு பாரதி தேவைப்படுகிறான். அதனால்தான் இன்று வரை இங்கு வாழும், உருவாகும், படைக்கப்படும் காதலிகள் அனைவரும் கண்ணம்மாக்களாகவே உருவகப்படுத்தப்பட்டுப் பாடப்படுகிறார்கள்.

"பாரதிக்குக் கண்ணம்மா நீயெனக்கு உயிரம்மா" என்று ஒரு பெண்ணுக்குக்கான காதல் உயிருக்கு நிகரென்று பாரதி - கண்ணம்மாவுக்கு ஒப்பிடுகிறார் கவிஞர் அறிவுமதி. கண்ணம்மாவை பாடிய அந்த பாரதியைப்போல சமீபத்தில் கண்ணம்மாவை அழகு பூஞ்சிலையாக்கி பாடியிருந்தார் நம் யுகபாரதி. அதில் ஒரு பெண்ணின் அழகை எழுதுவதற்கு "பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்" என்று எழுதியிருப்பார். அது அத்தனை உண்மை.

கண்ணம்மாவும் காதலும் வேறு வேறல்ல. காதலின் பொருள்வடிவமென பாரதி கண்டது கண்ணம்மாவைத்தான். 
கண்ணம்மா ஒரு பெண். மீசை வேண்டாமென பொட்டு வைத்து மனதில் வரைந்து வைத்த ஓவியம். வயது கடந்தவள் அவள். 
வைரமுத்து காதலின் செருக்கைச் சொல்ல "காதலின் திமிருக்கு பிறந்தவளே" என்று பாடியிருப்பார். அதுபோல கண்ணம்மா காதலால் பிறந்தவள்; காதலிலே சுகிக்கப்பட்டவள். இவள்தான் கண்ணம்மா என்று எங்கும் வரையறை செய்துவைக்கவில்லை அவன். கண்ணம்மாவை குழந்தையாக, குமரியாக, காதலியாக, மணப்பெண்ணாக, தெய்வமாக என அனைத்து நிலையிலும் அவனது அன்பெனும் ஞானக்கண்ணில் அவளை ரசித்துக்கொண்டேதான் இருந்திருக்கிறான். 

"சுட்டும்விழிச் சுடர்தான், -- கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி, -- கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?"

என்று சொல்வதில் இருக்கிறது பாரதியின் கண்ணம்மா மீதான விழியீர்ப்புப் பார்வையும் அது பாட்டாக மாறும் சாயலும்.

அதைப்போலவே இன்னொரு கவிதையில் மாலைநேரக் கடலையும் வானத்தையும் பார்த்திருந்து காத்திருக்கும் பாரதியிடம் பின்வந்து கண்களைப் பற்றிக்கொள்கிறாள் கண்ணம்மா.

"பாங்கினிற் கையிரண்டுந் தீண்டியறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னிலறிந்தேன்,
ஓங்கி வருமுவகை யூற்றிலறிந்தேன்"

என்று கண்ணம்மாவின் பற்றுதலை அறிந்ததன் ஆக்கங்களைப் பாட்டாக அடுக்குகிறான்.

உலகத்தைக் காணும் கண்களைப் பின்னிருந்து பற்றி தனது உள்ளங்கையில் பாரதிக்கான உலகத்தைக் கொண்டுவந்த கண்ணம்மாவினைத் திருமித் தழுவி, “என்ன செய்திசொல்” என்று வினவுகிறான். ஒரு காதலியின் காத்தலுக்கான திமிர் அவளது காதலனை கேள்விகளால் சூழ்ந்துகொள்வதில் இருக்கிறது. விதிவிலக்கற்ற விதிகள் இருக்கலாம். ஆனால், காதலின் நிலையில் கண்ணம்மாவும் காதலியே. 

நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்? 
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,
பெற்ற நலங்கள் என்ன?

என்று கேட்கும் கண்ணம்மாவுக்கு, "பார்த்த விடத்திலெல்லாம் -- உன்னைப் போலவே பாவை தெரியுதடீ" என்னும் பாரதி கேள்விகளிலிருந்து பதில் உரைக்கிறான்.

“நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்;
 நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்;
 திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்;
 சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்;
 பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே, பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை.''

ஆம் அவன் கண்டதெல்லாம் கண்ணம்மாவின் முகம் மட்டும்தான். முகமின்றி பிறிதொன்றுமில்லை.

"நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!"
காதல் ஒரு சரணாகதி நிலை. பைத்தியத்தனத்தின் புனித உச்சம். உன்மத்த நதிகளின் ஊற்று. அதை உணர்ந்தவன் பாரதி,. உணர்த்தியவள் கண்ணம்மா. 
காதலில் களிப்பது வேறு. காதலை எண்ணி எண்ணி களிப்பது வேறு. அப்படி எண்ணிக்களிப்பதுதான் உண்மையான காதலென்றும் சொல்லலாம். பாரதி அப்படி எண்ணிக்களித்தான். கண்ணம்மா அப்படிப்பட்ட காதலி. 

பாரதியின் பிறந்தநாள் அழைப்பு

காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
காணமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே

ஆம். காதல் செய்வீர் உலகத்தீரே.

https://www.vikatan.com

Bild könnte enthalten: 1 Person, Nahaufnahme und Text

Share this post


Link to post
Share on other sites

கை, கால்களை இழந்த பிறகும் விளையாட்டில் அசத்தும் யுக்ரைன் மருத்துவர்

கிழக்கு யுக்ரைனில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திடீர் தாக்குதலில் சிக்கி உயிர் பிழைத்தவர் யுக்ரைன் ராணுவ துணை மருத்துவர். அங்கு நிலவிய உறைபனியால் கை, கால்களை இழந்த அவர், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராணுவத்தினருக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now