Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

கில்லி கதை உருவான கதை தெரியுமா? #13YearsofGhilli

 
 

எந்த ஹீரோவுக்கும் காலத்துக்கும் சொல்லிக் கொள்கிற மாதிரியான ஒரு ஹிட் அமைவது... அவ்வளவு சுலபமில்லை. கில்லியில் விஜய்க்கு அமைந்தது அந்த ஹிட். இரண்டு மாதத்திகுள்ளாகவே எந்தப் புதுப் படமாக இருந்தாலும் டிவியில் போட்டுவிடும் சூழல் இது. ஆனால் கில்லி ரிலீஸ் ஆகி மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் டிவியில் ஒளிப்பரப்பானது. அந்த அளவுக்கு ப்ளாக்பஸ்டர் ஹிட். அந்தப் படம் வெளியாகி இன்றோடு பதிமூன்று வருடங்கள் ஆகிறன.  இரண்டில் எது பெஸ்ட், யார் பெஸ்ட் என்பதெல்லாம் தவிர்த்து, கில்லிக்குப் பின்னாலும், ஒக்கடு கதை உருவானதுக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யம் உண்டு. அதைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.

கில்லி

அப்போது தான் உதயா படம் வெளிவந்து தோல்வியடைந்திருந்த நேரம். விஜய்க்கு மிகப் பெரிய வெற்றி தேவை. அப்படியே 2003 ஜனவரியை ஜும் செய்து பார்த்தால், தெலுங்கில் சங்கராந்தி (பொங்கல்) ரிலீஸாக வந்து மிகப்பெரிய ஹிட்டாகியிருந்தது 'ஒக்கடு'. அந்தப் படத்திற்கு முன்பு மகேஷ் பாபு நடித்த 'பாபி' படம் தோல்வியடைந்திருந்தது. அதிலிருந்து அவரை பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றது 'ஒக்கடு'. அது விஜய்க்கு தெரிந்திருந்ததோ என்னவோ. இவ்வளவுக்கும் அப்போது 'உதயா' ரிலீஸ் ஆகியிருக்கவில்லை. 'ஒக்கடு' பார்த்த விஜய் அதன் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் விரும்பினார். அது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் காதுகளை எட்ட, இயக்குநர் தரணி, இசை வித்யாசாகர், ஒளிப்பதிவு கோபிநாத், நாயகி த்ரிஷா என சடசடவென அத்தனையும் முடிவானது. இயக்குநர் தரணி அப்போது தில், தூள்  என அதிரி புதிரியாக இரண்டு ஹிட்களைக் கொடுத்திருந்தார்.

பக்கா டீம் செட் ஆகியிருந்தது. ரமணா இயக்கத்தில் நடித்த 'திருமலை' படத்தின் ஷூட்டை முடித்துவிட்டு 2003ன் மத்தியில் 'கில்லி' படத்தைத் துவங்கினார்கள். சரியாக 'கில்லி' படப்பிடிப்பு முடியவும், சில நாளிலேயே 'உதயா' வெளியாகவும் சரியாக இருந்தது. உதயா பெரிய வரவேற்பைப் பெறாததால் விஜய் ரசிகர்களுக்கும், விஜய்க்கும் இருந்தது பசி இல்லை வெறி; வெறித்தனமான ஒரு ஹிட் வர வேண்டும் என்ற வெறி. அதற்காக ஒவ்வொரு சீனிலும், வசனத்திலும், சண்டைக்காட்சியிலும் மாஸ் ஏற்றியிருந்தார் தரணி.

Okkadu

இப்போது இங்கு இன்டர் கட் வைத்து, 'கில்லி'யின் ஒரிஜினல் ஒக்கடு உருவான கதையைப் பார்க்கலாம். சென்னை மெட்ராஸாக இருந்த நேரம் அது. அப்போது குணசேகர் என்கிற ஒரு உதவி இயக்குநர் ஹைதராபாத்தின் சார்மினார் பின்னணியில் ஒரு கேங்ஸ்டர் படத்தை எடுக்க வேண்டும் என்ற கனவுகளில் மிதந்து கொண்டிருந்தார். சில வருடங்கள் கழித்து, அதாவது உதவி இயக்குநராக இருந்த குணசேகர், மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்தே படம் எடுத்திருந்த இயக்குநர் குணசேகர் ஆகிய பிறகு. 2001ல் பேட்மிட்டன் வீரர் புலேலா கோபிசந்தின் பேட்டி ஒன்றில், தன் தந்தையை எதிர்த்து பேட்மிட்டன் விளையாடியதையும், கப்களை மறைத்து வைத்ததையும் சொல்லியிருப்பதைப் பார்க்கிறார். பேட்மிட்டனை கபடியாக மாற்றி ஒரு கதையைத் தயார் செய்கிறார். முதலில் அதில் நடிக்க சொல்லி பவர்ஸ்டார் பவன்கல்யாணிடம் செல்கிறார் குணசேகர். ஆனால், பவன் மறுத்துவிடுகிறார். காரணம் சிரஞ்சீவியை வைத்து குணசேகர் எடுத்த ‘மிருகராஜூ’ தோல்வியடைந்திருந்தது. அடுத்து அவர் சென்றது மகேஷ் பாபுவிடம். அவர் ஓகே சொல்ல, துவங்கியது ஷூட். படம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. மகேஷின் கெரியரில் முதல் ஹிட் 'முராரி' என்றால் முதல் ப்ளாக்பஸ்டர் 'ஒக்கடு'. இந்தப் படத்துக்குப் பிறகு மகேஷுக்கு என தனியாக உருவான ரசிகர் வட்டம் மிகப் பெரியது.

Vijay

இப்போது மீண்டும் கில்லிக்கு வருவோம். அதுவரை வெங்கடேஷின் சில தெலுங்குப் படங்களை ரீமேக் செய்திருந்த விஜய், முதல் முறையாக மகேஷின் படத்தை ரீமேக்க கையில் எடுக்கிறார். ‘ஒக்கடு’வின் கதையை கில்லிக்காக நிறைய மாற்றினார் தரணி. விஜய்யின் இன்ட்ரோ காட்சியில் கபடி கபடி கபடி என்ற பின்னணியுடன் வருவது, ஒக்கடுவில் கிடையாது. விஜய் வீட்டை ஏமாற்றிவிட்டு கபடி ஆட செல்வது போல, ஒக்கடுவில் இல்லை, ஓட்டேரி நரியோ, டுமீல் குப்பம் வௌவ்வாலோ, நெய் எடுத்துட்டுவா என டார்ச்சர் செய்யும் பிரம்மானந்தமோ ஒக்கடுவில் கிடையாது. அப்படி ஒரு ரீமேக்கை, தமிழ் ரசிகனுக்காக எந்த அளவுக்கு பக்காவாக கொடுக்க வேண்டுமோ அந்த அளவுக்கு ஸ்க்ரிட்டை ட்யூன் செய்திருந்தார். படம் எதிர்பார்த்ததை விட எகிறியடித்தது. ஒரு மாஸ் ஹீரோவுக்கு எதாவது ஒரு படம், தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸ் திரும்பி போகும் போது அந்தப் பட ஹீரோவின் ரசிகர்களாக மாற்றும் மாயத்தை செய்யும். அந்த மேஜிக்கை செய்தது கில்லி. படத்தைப் பார்க்க அத்தனை கூட்டம், எத்தனை ஸ்க்ரீன்களில் திரையிட்டாலும் குறையாத அளவுக்குக் கூட்டம். ‘இந்த ஏரியா, அந்த ஏரியா, அந்த இடம் இந்த இடம்’ என இன்ட்ரோ காட்சியில் பேசுவதாகட்டும், 'தம்மாத்தூண்டு ப்ளேடு மேல வெச்ச நம்பிக்கைய உன் மேல வை', 'கபடி ஆடலாம், கில்லி ஆடலாம், க்ரிக்கெட் ஆடலாம், கதகளி கூட ஆடலாம் ஆனா, ஆணவத்துல மட்டும் ஆடவே கூடாதுடா', எனப் படம் முழுக்க பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டல் தெறிக்கிறது. அப்பா ஆஷிஷ் வித்யார்த்தியை சமாளிப்பது, தங்கையை கலாய்ப்பது, அம்மாவை ஏமாற்றுவது என விஜயின் ஒவ்வொரு ரியாக்‌ஷனும் வேற லெவல் ரீச்சைக் கொடுத்தது.

தெலுங்கு, தமிழில் உண்டான நடுக்கம், மற்ற மொழிகளில் இதே கதை சென்ற போது நடக்கவில்லை என்பது தான் விஷயம். இரண்டு வருடங்களுக்கு முன் சோனாக்‌ஷி சின்ஹா, அர்ஜுன் கபூர் நடித்து 'தேவர்' என ரீமேக் ஆனபோது கூட ஃப்ளாப் ஆனது. அப்படி ஒரு மேஜிக்கை மீண்டும் அதே கூட்டணி இணைந்தபோது கூட கொடுக்க முடியவில்லை. அதுதான் 'கில்லி' ஸ்பெஷல் படம் என சொல்லக்காரணமும் கூட.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply
23 hours ago, நவீனன் said:

 1943 -ல் தனது 54-வது வயதில் ஓ நீல் என்ற 17 வயதுப் பெண்ணை மணந்தார்.  இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தனர். சாப்ளின், 1977-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது 88-வது வயதில் இறந்தார். இவரது உடலை வாட் நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.

சார்ளி சாப்ளின் பதின்மூன்று முறைகள் மணவாழ்க்கையில் இருந்துள்ளார் // அனைவருமே பதினெட்டு வயதுக்கு குறைந்தவர்கள். இப்பவென்றால் குழந்தை துஷ்பிரயோகம் எண்டு சொல்லி உள்ள தூக்கி போட்டிருப்பானுங்க.

 

Link to comment
Share on other sites

 

டியர் விக்ரம்... உங்களை ஏன் எங்களுக்குப் பிடிக்கும் தெரியுமா?! #HBDVikram

#dhruvanatchathiram GIF

 

என் பள்ளிப்பருவம். என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த தியேட்டரில் ‘தூள்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் படம் பார்க்க ஐந்து ரூபாயோடு தியேட்டருக்குக் கிளம்பினேன். லேட்டா போனதால ஹவுஸ்ஃபுல் போர்டைத்தான் பார்த்தேன். வீடு பக்கத்தில் இருந்தாலும், நான் திரும்பிப் போகலை. தியேட்டர் வாசலிலே காத்திருந்து மேட்னி ஷோவுக்கு முதல் ஆளாக டிக்கெட் வாங்கி  படம் பார்த்தேன். இதுல என்னன்னு கேட்டீங்கன்னா, ‘தூள்’ படத்தை அதுக்கு முந்தைய  வாரம்தான் அதே தியேட்டர்ல பார்த்தேன். அதுதான் விக்ரம் கிரியேட் பண்ணுன மேஜிக். இன்று அந்த மேஜிக் கிரியேட்டருக்குப் பிறந்தநாள்... 

Vikram

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி !

தன்னுடைய முதல் படத்தில் இருந்து பல தோல்விகளைச் சந்தித்த விக்ரம், கடைசி ஆயுதமாக தன் கையில் எடுத்தது ‘சேது’  படத்தைதான். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் ராதிகாவைச் சந்தித்த விக்ரம், ‘நான் இப்போ ‘சேது’னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். இந்தப் படமும் எனக்கு சரியா போகலைன்னா நீங்க எடுத்துட்டு இருக்கிற ‘சித்தி’  நாடகத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க’ன்னு கேட்டாராம். ‘சேது’ விக்ரமுக்குக் கொடுத்தது வரலாற்று வெற்றி. 9 ஆண்டுகால காத்திருப்புக்குக் கிடைத்த விஸ்வரூப வெற்றி. 

எக்ஸ்ட்ரா உழைப்பு, கொஞ்சம் ரெஸ்ட்!

ஒரு படத்துக்காக தன்னை முழுவதும்  அர்ப்பணித்து, உடலை வருத்தி, எத்தனை மாதங்கள் வேண்டுமானலும் தனது  கடின உழைப்பைக் கொண்டு, பார்க்கிறவர்கள் எல்லாம், ‘என்னடா இந்த மனுஷன்  இப்படி உழைக்கிறாரு’னு சொல்கிற அளவுக்குத் தன்னைத்தானே வருத்திக்  கொண்டு நடிப்பார். அப்படி ஒரு படத்தை கொடுத்தப் பின்னர், அதற்கடுத்து  கூலாக, ரிலாக்ஸாக ஒரு படத்தை தேர்வு செய்து நடிப்பார். அதுதான் அவருக்கான ரிலாக்ஸ் டைம். அப்படி தேர்ந்தெடுக்கும் படத்திலும் தனது நடிப்பிற்கு தீனி போடும் அளவிற்கு அதில் ஏதாவது விஷயம் வைத்திருப்பார்.  ஒருசில படங்களுக்கு பல மாதங்களும் செலவழித்திருக்கிறார், ஒருசில படங்களை சில மாதங்களிலேயே முடித்திருக்கிறார். 

ரசிகர்களுக்கே முன்னுரிமை!

இந்த சப்-டைட்டிலுக்கு ஏற்ப ஒரு சம்பவம் சென்ற  வருடம் நடந்தது. அந்த ஒரு சம்பவமே போதும், விக்ரம் தன் ரசிகர்களின் மீது  எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதற்கு. சென்ற வருடம் நடைபெற்ற  ஏசியா நெட் விருது நிகழ்ச்சியில், விக்ரம் அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி  ஒரு ரசிகர் ஓடி வந்திருக்கிறார். அது நட்சத்திரங்கள் மட்டுமே அமர்ந்திருக்கும்  இடம் என்பதால் பிறருக்கு அனுமதியில்லை. அதனால் அந்த நபரை அங்கிருந்த  பவுன்சர்கள் தடுத்தனர். அதையும் மீறி அந்த நபர் விக்ரமை நோக்கி வந்ததால்,  பவுன்சர்கள் அவரை தள்ளி விட்டனர். இதனை கண்ட விக்ரம் உடனே தன் இருக்கையில் இருந்து எழுந்து பவுன்சர்களை தடுக்க சென்றார். விக்ரமிற்கு  பக்கத்தில் இருந்தவர் விக்ரமை தடுக்க, அவரையும் மீறி விக்ரம் பவுன்சர்களை  விலக்கிவிட்டு அந்த நபரை அழைத்தார். அந்த ரசிகர் விக்ரமை கட்டி  அணைத்து, முத்தம் கொடுத்து, பின் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.  இதனை அருகில் இருந்து பார்த்தவர்கள் சிலர், விக்ரமின் இந்த குணத்தை கண்டு  நெகிழ்ந்து கண்ணீர் விட்டனர். இது தான் விக்ரம், இதுதான் தன் ரசிகர் மீது  அவர் வைத்திருக்கும் பாசம்.

இந்த சம்பவத்தின் வீடியோ இதோ...

ரசிகர்களுக்கு சீயான்; நண்பர்களுக்கு கென்னி!

ரசிகர்களுக்கு சீயான் விக்ரமாக இருப்பவர், தனது நண்பர்களுக்கு என்றைக்குமே கென்னியாகத்தான்  இருக்கிறார். எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும் அதனை தலை மேல் தூக்கி  வைத்துக் கொண்டு, ஓவர் பந்தாவாக வலம் வராமல், என்றைக்கும் ஒரே  மாதிரியாக இருப்பவர். அதனால்தான் தன் நண்பர்களுக்கு  கென்னியாகவே இருந்து வருகிறார். 

விஜய்யின் நெருங்கிய நண்பர்! 

நடிகர் விஜய்யும் விக்ரமும் ஒரே கல்லூரியில்  வேறு வேறு துறைகளில் படித்தாலும், கல்லூரி நாள்களில் இருந்தே இருவரும் நல்ல நண்பர்கள். அவர்கள் நட்பை அப்படியே காண்பித்திருக்கும் விகடனில் வெளி வந்த இவர்களின் பேட்டி. அந்தப் பேட்டியில் இருவரும் சேர்ந்து நடிக்க ஆவலோடு இருப்பதாகவும் சொல்லியிருப்பார்கள். ‘நண்பன்’  படத்தில் விஜய்யுடன் நடிக்க முதலில் பேசப்பட்டது விக்ரமிடம் தான் என்றும்,  பிறகு கால்ஷீட் பிரச்னையால் அது நடக்கவில்லை என்றும் தகவல்கள் வந்தன.  ஆனால், ஒரு நாள் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கான அறிவிப்பு வரும். அதுவரை காத்திருப்போம்.

Vikram

அஜித்தால் கிடைத்த வாய்ப்பு!

விஜய்க்கும் விக்ரமிற்கும் எப்படி நெருங்கிய  பழக்கம் இருக்கிறதோ அதே போல் அஜித்துக்கும் விக்ரமிற்கும் இடையே ஒரு  நல்ல நட்பு உள்ளது. இவர்களின் நட்பு, அஜித்தின் முதல் படமான ‘அமராவதி’  படத்திற்காக அஜித்துக்கு குரல் கொடுத்ததில் இருந்து ஆரம்பமானது என்று சொல்லலாம். அதற்குப் பிறகு ‘உல்லாசம்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். விக்ரமின் கேரியரில் மறக்க முடியாத பாட்டு என்றால் அது  ‘ஜெமினி’ படத்தின் ‘ஓ போடு...’ பாட்டாகத் தான் இருக்கமுடியும். பட்டி  தொட்டு எங்கும் ஹைடெசிபலில் ஒலித்தது இந்த பாடல். முதலில் ‘ஜெமினி’  படத்திற்கு நடிக்க அஜித்தை தான் தேர்வு செய்திருந்தாராம் இயக்குநர் சரண்.  பிறகு சில காரணங்களால் அந்த படத்தில் அஜித் நடிக்க முடியாமல் போக அந்த  வாய்ப்பு விக்ரமிற்கு வந்தது, அவருக்கு ஹிட்டையும் கொடுத்தது. 

பாடகராகவும் கலக்கிய விக்ரம்!

தனது படங்களிலும், பிற நடிகர்களின் படங்களிலும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார் விக்ரம். அதிலும் அவர் நடித்த  ‘கந்தசாமி’ படத்தில் அனைத்து பாடல்களையும் அவரே பாடினார். தமிழிலில்  மட்டுமல்ல, கந்தசாமி படத்தின் தெலுங்கு டப்பிலும் அவரே அனைத்து  பாடல்களையும் பாடியிருக்கிறார் என்பது ஹைலைட்ஸ். ‘ஜெமினி’ படத்தின்  ‘ஓ போடு...’ பாடலையும் இவர் தான் பாடினார்.

என்னது... விக்ரமிற்கு வயசாகிடுச்சா..? 

விக்ரமின் வயதை அவரின் உருவத்தை  வைத்து கணிப்பது கடினம்.  திருப்பூரில் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில்  படப்படிப்பு நடந்து கொண்டிருந்த சமயம். 50 தொழிற்சாலைகள் இருக்கும் தொழிற்பேட்டை அது! அங்குள்ள செக்யூரிடிகள் அந்த ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். என் நண்பரின் தொழிற்சாலைக்கு முன்பு, நாங்கள் நின்று கொண்டிருந்தோம். கார் சேஸிங் காட்சிப் படமாக்கத் தயாராக இருந்தார்கள். சடாரென்று கேரவனுக்குள் இருந்து குதித்து... பரபரவென நடந்து வருகிறார் விக்ரம். எல்லோரும் எட்டிப் பார்க்க, நண்பரின் தொழிற்சாலை கேட்டில் நின்று கொண்டிருந்த ஒரு ஸ்டாஃப் எங்களை விலக்கிக் கொண்டு அலுவலகத்துக்கு உள்ளே சென்றார். 

Vikram

கொஞ்ச நேரம் ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்த்துவிட்டு உள்ளே வந்தோம். அந்த சக ஊழியரைப் பார்த்ததும் நண்பர் ‘கரெக்டா விக்ரம் வர்றப்ப ஏன் உள்ள வந்துட்டீங்க?’ என்று கேட்டார். அதற்கு அவர் சொன்னது: “குற்ற உணர்ச்சியா இருக்கு சார், விக்ரமைப் பார்க்கறப்ப. நாலுநாளா ஷூட்டிங் நடந்துட்டிருக்கு. நானும் பார்த்துட்டுதான் இருந்தேன். நேத்துதான் என் பையன் சொல்றான்.. அவருக்கு 49 வயசாச்சாமே? எனக்கு 44 வயசாச்சு. எப்டி வயசானவனா இருக்கேன் பாருங்க. அந்தாள் எப்டி உடம்பை ஃபிட்டா வெச்சிருக்கார்னு பாருங்க. ஒருவேளை டூப் வெச்சு ஏமாத்துறாங்க போலனு நெனைச்சேன். இல்ல.. அது விக்ரம்தான்!”  

அவர் கண்முன்னே பார்த்த  விக்ரமின் வேகமும், அவரது வயதையும் அவரால் நம்ப முடியவில்லை. ஆமாம், இன்று விக்ரமிற்கு 51 வயது தொடங்கி விட்டது... ஆனால்  அவர் என்றும் ‘புதிய மன்னர்’ தான்...

பிறந்தநாள் வாழ்த்துகள் சீயான்..!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

12 hours ago, MEERA said:

நவீனன், ஏன் அம்மாக்களுக்கு இந்த பிரச்சனை வராதா? 

மீரா, இதை டுவீட் செய்தவரிடம்தான் கேட்கவேணும்.

என்னமா யோசிக்கிறார்கள்..:grin:

1 hour ago, ஜீவன் சிவா said:

சார்ளி சாப்ளின் பதின்மூன்று முறைகள் மணவாழ்க்கையில் இருந்துள்ளார் // அனைவருமே பதினெட்டு வயதுக்கு குறைந்தவர்கள். இப்பவென்றால் குழந்தை துஷ்பிரயோகம் எண்டு சொல்லி உள்ள தூக்கி போட்டிருப்பானுங்க.

 

:rolleyes:

On 16.4.2017 at 1:55 AM, குமாரசாமி said:

சானியா மிர்ஸா

 

இப்பிடி பப்பிளிக்கிலை வந்து போஸ் நிக்கிறதின்ரை அர்த்தம் என்ன? :cool:

 

உங்க கேள்வி ரொம்ப அநியாயம்..:unsure:

Link to comment
Share on other sites

அக்காவைத் தொடர்ந்து தம்பி! அசத்திய ஹைதராபாத் சிறுவன்

 
 

ஹைதராபாத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன்,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் வகுப்பில் தேர்வாகி உள்ளான்.

hyderabad boy

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர், 11 வயது சிறுவன் அகஸ்தியா ஜெய்ஸ்வால். அந்த மாநிலத்திலேயே 11 வயதில் பிளஸ் 2 தேறிய முதல் சிறுவன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். காமர்ஸ், பொருளாதாரம் மற்றும் சிவிக்ஸ் பாடத்தை முதன்மையாகக்கொண்டு 63 சதவிகித மதிப்பெண்ணில் தேர்வாகி உள்ளார். தற்போது, காமர்ஸ் பாடத்தை முதன்மைப் பாடமாகக்கொண்டு படித்த அகஸ்தியாவுக்கு பி.காம் படிக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாம். ஆனால், டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் கனவு என்றும் கூறுகிறார் அகஸ்தியா.

பி.காம் படித்தால் எப்படி டாக்டராக முடியும் எனக் குழம்புவோருக்கு, பதில் வைத்துள்ளார் அகஸ்தியா. அதாவது, 17 வயதில்தான் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு எழுத முடியுமாம். அதனால், 17 வயதுக்குள் பி.காம் படித்து முடித்துவிட்டு, மீண்டும் உயிரியல் பாடத்தை முதன்மையாகக் கொண்டு, பிளஸ் 2 தேர்வெழுதி, எம்.பி.பி.எஸ். படித்து டாக்டர் ஆவேன் எனக் கூறுகிறார் அகஸ்தியா.

ஆசியாவிலேயே முதன்முதலாக எட்டு வயதில் 10-ம் வகுப்பும், 10 வயதில் பிளஸ் 2 -வும் முடித்து, 13 வயதில் ஆசியாவின் இளம் இதழியல் பட்டதாரியாகப் பட்டம் பெற்று, அரசியல் அறிவியலில் முதுகலை முடித்து, தன்னுடைய 17 -வது வயதில் விளையாட்டு மேம்பாடு குறித்து பி.ஹெச்டி என்னும் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டுவருகிறார், அகஸ்தியாவின் அக்கா.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

ஓவியக் கண்காட்சி
 

article_1492409827-DSC_0203.JPG

 

இக்கண்காட்சியில், சுரேஸ்காந்தின் ஒவியங்கள் காட்சிக் வைக்கப்பட்டிருந்தன.

article_1492409899-DSC_0197.JPG

article_1492409909-DSC_0196.JPG

article_1492409918-DSC_0194.JPG

tamilmirror.lk
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

நவீனன், ஏன் அம்மாக்களுக்கு இந்த பிரச்சனை வராதா? 

அவர்களுக்கு வராது மீரா.... மகள் வாழை மரமாய் வளர்ந்து நிக்கும்போது அவர்கள் ஆலமரமாய் விழுதுகளோடு உக்கார்ந்து இருப்பார்கள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

உங்கள் மனைவி சண்டைக்கோழியா... சமாளிக்க 10 மேஜிக் டிப்ஸ்!

 

மனைவி

ணவன் மனைவி... இந்த உறவுக்குள் நடக்காத கெமிஸ்ட்ரியா? தேடி அலசிப் பார்த்தால் அத்தனை மனைவிகளும்... கணவர்களிடம் பெரும்பாலும் தனது சண்டைக்கோழி முகத்தையே காட்டுகின்றனர். சண்டைக் கோழிகளை கட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் ஆண்களுக்காக கவலைப்பட யாரும் இல்லை. பெண்ணின் கோபம் எல்லை கடந்து விட்டால் வீடு வீடாகவே இருக்காது. போர்க்களம் போல் மாறிவிடும்.

போர்க்களத்தில் யாரும் நிம்மதியாக இருக்க முடியாதே. பெண் சந்தோஷமாக இருந்தால்தான் அனைவரும் மகிழ்வை உணர முடியும். வீட்டில் சந்தோஷ மனநிலை உள்ளவர்களால்தான் அலுவலகத்திலும் திறம்பட செயல்பட முடியும். மனைவியைச் சமாளிக்க சிரமப்படும் ஆண்களுக்கு இது தற்காப்பாகவும் அமையும். எவ்வளவு பெரிய சண்டைக்  கோழியாக இருந்தாலும் அன்பிற்கு இசையாத பெண்ணும் உண்டோ?!

* உங்கள் மனைவிக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என்பதில் தெளிவாக இருங்கள். அவர்களுக்கு கோபம் ஏற்படுத்தும் செயல்களை, அவர்கள் கண்பட செய்ய வேண்டாம். உங்களுக்கு உங்கள் தங்கை மீது அதிகபட்ச பாசம் இருக்கலாம். ஆனால் அதை மனைவியின் கண் எதிரில் வெளிப்படுத்தி அவர்களை கடுப்பேற்றுவதாக நினைத்து, மனைவிக்கும் உங்களுக்குமான அன்பின் பாலத்தை சிதைத்து விடாதீர்கள். மனைவிகளைப் பொறுத்தவரை உங்கள் அன்பு முழுவதும் அவர்களுக்கானது என்ற பொசசிவ்னெஸ் இருக்கும்... புரிந்து செயல்படுங்கள். ‘‘இந்த உலகத்தில் என் அன்பு மொத்தமும் உனக்கே என்று உணர வைக்கலாம்.

மனைவி

* உங்கள் மனைவியின் நிறை குறைகள் உங்களுக்கு புரிந்திருக்கும். பலர் இருக்கும் போது அவரின் பிளஸ் பாயிண்டுகளைச் சொல்லி பாராட்ட தயங்க வேண்டாம். ‘‘நீங்கள் பெரிய ஓவியராமே’’ உங்கள் கணவர் அடிக்கடி சொல்வார் என்று உங்கள் நட்பு வட்டத்தில் இருந்து கமெண்ட் வந்தால் சந்தோஷ மழையில் நனையப்போவது நீங்களும் தான். உங்கள் மனைவி பற்றிய பாசிட்டிவ் எண்ணங்களை எங்கும் விதையுங்கள்..அத்தனையும் அன்பாய் திரும்பக் கிடைக்கும். 

* எப்பொழுதும் உங்களுக்குள்ளான சண்டை எங்கிருந்து துவங்குகிறது என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த எல்லைக்கு முன்பாகவே விவாதத்தை நிறுத்தி விடுங்கள். பல வீடுகளில் மனைவியிடம் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் விஷயம் விவாதமாக மாறி பிறகு, மிகப்பெரிய புயலாய் உருவெடுத்து சண்டையில் முடியும். உங்கள் அறிவை நிரூபிக்கும் இடம் அது இல்லை. விவாதத்தை நிறுத்தி விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவி சொல்லும் கருத்துகளை மனம் திறந்து கேளுங்கள். அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பதும் புரிதலை மேம்படுத்தும். 

* எதிர்பாராத சந்தர்ப்பத்தில் உங்கள் மனைவி ஏதோ ஒரு விஷயத்தில் கோபமாகி, சண்டை துவங்கிவிட்டது எனில், நீங்கள் வெள்ளைக் கொடி வேந்தராக மாறிவிடுங்கள். பெண்களால் தனியாக சண்டை போட முடியாது. அவர்கள் கோபத்தின் உச்சத்தில் கத்தினாலும் உங்கள் மெளனம் அவர்களை விரைவில் அமைதிப்படுத்திவிடும். 

* நீங்கள் சமாதான வார்த்தை கூறியும் உங்கள் மனைவி கோபத்தை விட்டு வெளியில் வராமல் நெருப்பு வார்த்தைகளைக் கொட்டினால் அந்த இடத்தை விட்டு வெளியில் சென்று விடுங்கள். நீங்கள் எதிர்த்துப் பேசாவிட்டால் உங்கள் மனைவியால் சண்டையைத் தொடர இயலாது. 

* உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் அன்று ஏதோ ஒரு விஷயம் முரண்பாடாக மாறியிருக்கலாம். இன்னும் சிறிது நேரத்தில் சண்டை வரப் போகிறது என்றால் உடனடியாக அவர்களை வேறு விஷயத்தில் டைவர்ட் செய்யுங்கள். அவர்களுக்கு பிடித்த விஷயம் குறித்து பேசத் தொடங்குங்கள்..அப்போதைக்கு அவர்கள் மனதில் கோப நெருப்பு அணைந்து விடும். 

* உங்கள் மனைவி கோபத்தில் இருப்பது தெரிந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் குழந்தைகள் பற்றியும், அவர்களது எதிர்காலம் அல்லது உங்கள் இருவரின் அடுத்த இலக்கு என்பது பற்றியும் பேசத் தொடங்குங்கள். தன் கோபம் எவ்வளவு அர்த்தமற்றது என்று புரிந்து கொண்டு உங்கள் மனைவி வேறு முக்கிய விஷயங்களில் மனதைத் திருப்புவார். 

* வீட்டில் இருந்தால் தானே சண்டை வரும். மனைவியை உடனடியாக சினிமா, ஹோட்டல், பார்க் என்று உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற இடத்திற்கு அழைத்து செல்லுங்கள். அவர்களது விருப்பத்தைக் கேட்டு நிறைவேற்றுங்கள் மூட் மாறிவிடும். உங்களது வாழ்வின் முக்கிய தருணங்களில் ஆச்சர்ய பரிசுகளால் அசத்த மறந்து விட வேண்டாம். உங்களுக்குள்அன்பின் பிணைப்பு அதிகரிக்கும். 

* அன்றைய  காலை கோபத்தில் துவங்கியிருந்தாலும் அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் உங்கள் மனைவி குறித்த நேரத்துக்கு சாப்பிட்டாரா என்பது போன்ற அக்கரையுள்ள கேள்விகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அவர் நினைப்பதை பேச வாய்ப்பளித்து அவர் இடத்தில் இருந்து...குடும்ப சூழல் அடிப்படையில் எது நடைமுறையில் சாத்தியம் என்பதை புரிய வையுங்கள். கோபம் குறைந்து அன்பின் மழையால் உங்களை நனைப்பாள் மனைவி. 

* உங்கள் மனைவியின் வேலைகளை நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கான தனிமை நேரத்தில் அன்பில் மிச்சமின்றி மூழ்கடித்து விடுங்கள். அவ்ளோ தான் உங்கள் தேவதையின் அன்பு மொத்தமும் உங்களுக்கு மட்டுமே. வாழ்வை ஒவ்வொரு நொடியும் கொண்டாடுங்கள் கணவர்களே

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஐபிஎல் மேட்ச்சும் வானத்தைப் போல படமும் ஒண்ணு... ஏன்?

 
 

ன்னதான் இன்டர்நேஷனல் மேட்சில் எலியும் பூனையுமாக இருந்தாலும் ஐபிஎல் என்ற ஒன்று ஆரம்பித்தவுடன் சண்டை போட்ட ஆட்களெல்லாம் நகமும் சதையுமாக இருப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் ஐ.பி.எல் ஒரு விக்ரமன் சார் படம்..!

ஒரு வருடத்திற்கு ஒருமுறை இந்த ஐ.பி.எல் மேட்ச் நடக்கும். ஃபாரீன் வீரர்கள் அனைவருமே ஐ.பி.எல் வரப்போகிறது என்று தெரிந்தால் குஷியாகி விடுவார்கள். சுருக்கமாகச் சொன்னால் சொந்த ஊர்களில் நடக்கும் திருவிழா மாதிரிதான் ஐ.பி.எல். ஆட்டம், பாட்டம் கொண்ட்டாட்டம் என எல்லாமே கலந்த கலவையாக இருக்கும். இங்கிருந்து சொந்த ஊர் திருவிழாவுக்குப் போவது போல் வெளிநாடுகளில் இருந்து இங்கு வருவார்கள் ஃபாரீன் ப்ளேயர்ஸ். குறிப்பாக 'க்ரிஸ் கெயில்', 'பொலார்டு', 'ஹெய்டன்' போன்ற வீரர்களுக்கெல்லாம் ரொம்பவே குஷியாகிவிடும். இன்டர்நேஷனல் மேட்சில் என்னதான் அடித்து மல்லுக்கட்டினாலும் இங்கு வந்து விளையாடும் வீரர்களை அரவணைப்பதில் இந்தியர்களை விட்டால் வேறு யாராக இருக்க முடியும்? அதே சமயம் நம்ம டீம் ஆட்களுக்குள்ளே அடித்துக்கொள்வதும் இந்த ஐ.பி.எல்-லில்தான். 

ஐபிஎல்

ஒட்டுமொத்த ஐ.பி.எல்-லும் 'விக்ரமன்' இயக்கிய 'வானத்தைப் போல' படம் மாதிரிதான். ஃபைனல் மேட்ச் வந்துவிட்டால் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டும். ஏனென்றால் இது போன்று தருணங்களைப் பார்ப்பதற்கு இன்னும் ஓர் ஆண்டாகுமே! இந்த லிஸ்டில் க்ரிஸ் கெயில்தான் ரொம்பவே குசும்புக்காரர். நடு கிரவுண்டில் தண்டால் எடுப்பது. யுவராஜை விளையாட்டாக அடிக்க பேட்டை ஓங்கி கிரவுண்ட் முழுவதும் துரத்துவது என இவர் பண்ணாத லூட்டிகளே கிடையாது. இவர் இந்தச் சேட்டையெல்லாம் செய்யும்போது ரசிக்கும் முதல் ஆள் நம் ஆளாகத்தான் இருக்கும். குறிப்பாக இவருக்கும் பொலார்டுக்கும் ஆகவே ஆகாது. ஆனா ரெண்டு பேரும் ஒரே டீம் பாஸ், நம்புங்க. இவர் அவரை வம்பிழுப்பது அவர் இவரை வம்பிழுப்பது என இவர்களுக்குள் ஜாலியாகவே இருக்கும். 

அதுவும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் டீமில் சேட்டைக்கு பஞ்சமே இருக்காது. 2011 ஐ.பி.எல் மேட்சில் சென்னை ஜெயித்து, கிரவுண்டை வலம் வரும்போது இந்தப் பக்கம் சென்னைக்கே பெயர் போன தப்பாட்டத்தை அடித்துக் கொண்டிருந்தனர். அந்தப் பக்கமாக வந்த 'பிராவோ', 'பொலின்ஜர்' இருவரும் செம குத்தாட்டம் போட்டதை யாராலுமே மறக்க முடியாது. இதே மாதிரி மியூஸிக்கைக் கேட்டதும் கன்ட்ரோல் செய்ய முடியாமல் ஆடியவர்கள் லிஸ்டில் கெயிலும் இணைந்தார். மேட்ச் ஆரம்பிக்கவிருக்கும் நேரத்தில் பாட்டுப் போடுவது வழக்கம். அப்போது 'கங்னம் ஸ்டைல்' பாடல் இசைக்கத் தொடங்கியது. அதைக் கேட்டு குஷியில் 'க்ரிஸ் கெயில்' ஆடத் தொடங்கிவிட்டார். அவர் ஆடியது 15 செகண்ட்ஸ்தான். ஆனால் அதைப் பார்த்து பார்த்து இன்று முழுவதும் சிரித்துக்கொண்டே இருக்கலாம். 

ஐபிஎல்

ஒருபக்கம் விளையாடும் வீரர்கள்தான் இப்படிச் செய்கிறார்கள் என்று பார்த்தால் அம்பயர்கள் செய்யும் லூட்டிகள் அதற்கும் மேல். 'கொல்கத்தா' அணியைச் சேர்ந்த 'அஷோக் டிண்டா' 'டெல்லி' அணியைச் சேர்ந்த 'சேவாக்கை' நோக்கி பந்து வீசினார். பேட்டில் பட்டதா என்று தெரியவில்லை. அது கீப்பரின் கையில் தஞ்சம் புகுந்தது. தொண்டை கிழியும் அளவிற்கு அம்பயரைப் பார்த்து விக்கெட்டுக்கு அப்பீல் செய்தார் 'டிண்டா'. கையை மேலே உயர்த்த வருவது போல் பாக்கெட்டுக்குள் கையினைவிட்டு சர்காஸம் செய்துவிட்டார் அம்பயர் 'ரூடி'. 

இந்த வருட ஐ.பி.எல்-லில்கூட இது போன்ற நிகழ்வு நடந்தது. 'ஹைதராபாத்' அணியைச் சேர்ந்த 'வார்னர்', 'தம்பி' வீசிய பந்தினை அடித்துவிட்டு சிங்கிள் ஓடினார். ஆனால் ஓடி வரும் அவசரத்தில் தம்பியின் ஷூ பறக்க அதை ஓடும் வழியிலேயே எடுத்து தம்பியின் கையில் கொடுத்துவிட்டு ரன்னை கம்ப்ளீட் செய்தார். ஒருபக்கம் காமெடியாக இருந்தாலும் மறுபக்கம் இதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாகவும் உள்ளது. 

ஐபிஎல்

இது போன்ற நிகழ்வுகளை எக்கச்சக்கமாக பட்டியலிடலாம். நான் சொல்லவந்த நோக்கமோ விளையாட்டில் போட்டி போடுவதைத தாண்டி இது மாதிரி விஷயங்களை பார்க்கும்போது மனதிற்கும் ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. தொடர்ந்து இதே மாதிரி நடக்க வேண்டும்; சி.எஸ்.கே களத்தில் இறங்க வேண்டுமென்று கூறி விடைபெறுகிறேன்.!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

டி.டி எத்தனை வகைப்படும்? - ஒரு கையடக்கக் குறிப்பு!

 
 

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'பவர் பாண்டி' ஸாரி 'ப.பாண்டி'. முதல்முறையாக தனுஷ் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து டிடி1-னு பவர் பாண்டி தொடர்பான அனைத்துப் பதிவுகளிலும் குறிப்பிட்டு வருகிறார் தனுஷ். அதாவது டிடி1 என்பதற்கு தனுஷ் டைரக்ட்டோரியல் 1 என்று அர்த்தமாம். பிறகு உட்கார்ந்து ஆராய்ச்சி பண்ணியதில்தான் டி.டி-க்கு ஏற்கெனவே எக்கச்சக்க அர்த்தங்கள் இருக்குனு தெரிஞ்சுது. இப்படி டி.டி-க்கு இருக்கும் நமக்குத் தெரிஞ்ச சில பிரபல அர்த்தங்களைப் பார்ப்போம்.

டிமாண்ட் ட்ராஃப்ட் :

டிடி

வங்கிக்கு மக்கள் பழக்கப்பட ஆரம்பிச்ச பிறகு எல்லோருக்கும் டி.டி-னா டிமாண்ட் ட்ராஃப்ட்தான். இப்போதுதான் வங்கிப் பரிவர்த்தனைகள் பல வடிவங்களில் இருக்கும். ஆனால் முன்பு அப்படி இல்லை. டி.டி வழியாதான் எல்லாமே நடந்தது. இது மாறியதால்தான் என்னமோ இப்போ நமக்கு டி.டி-னா டக்குனு ஸ்ட்ரைக் ஆகிறது இல்லை.

தூர்தர்சன் டி.வி :

டிடி

டி.வி வந்த காலத்துல டி.டி-னா மொத்த இந்தியாவுக்கே தூர்தர்சன்தான். தொலைக்காட்சி வந்த புதுசுல இருந்த ஒரே சேனல் இதுதான். இன்னமும் போன ஜெனரேஷன் மக்களுக்கு டி.டி-னா தூர்தர்ஷன்தான் நினைவுக்கு வரும்.

ஆங்கர் திவ்யதர்ஷினி :

டிடி

போன ஜெனரேஷனுக்கு டி.டி, தூர்தர்சன்னா இந்த ஜெனரேஷனுக்கு டி.டி-னா விஜய் டி.வி ஆங்கர் திவ்யதர்ஷினிதான் ஞாபகத்துக்கு வருவாங்க. அதுவும் காஃபி வித் டி.டி நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழ்நாட்டுல யாரு பேரு திவ்யதர்ஷினின்னாலும் எல்லோரும் ஷார்ட்டா டி.டி-னுதான் கூப்பிடுவாங்க. அந்த அளவுக்கு இந்தப் பெயர் ஃபேமஸ். டிடி1ல டி.டி-யும் நடித்திருப்பது மிகச்சிறப்பு.

டெல்லி டேர்டெவில்ஸ் :

டிடி

எல்லாத்துக்கும் மேல ஏப்ரல்-மே மாசத்துல டி.டினு யாராவது சொன்னா, உலகம் முழுக்க இருக்கிற கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அதை டெல்லி டேர்டெவில்ஸ்னுதான் எடுத்துப்பாங்க. கடந்த 10 வருஷமாவே அப்படித்தான். இதுல கமென்ட்ரியில் வேணும்னா டேனி மோரிசன் டி.டி-டை 'தி டபுள் டி'ஸ்னு கொஞ்சம் வித்தியாசமா கூப்பிடுவார். மற்றபடி எல்லோருக்கும் டி.டி-னா டெல்லி அணிதான்.

இந்த நீண்ட லிஸ்ட்லதான் டிடி1னு நம்ம தனுஷ் டைரக்ட்டோரியலும் சேர்ந்துருக்கு. இந்த மாதிரி ஷார்ட் ஃபார்ம் பிடிக்கிறது தனுஷுக்கு இது முதல்முறை கிடையாது. தனுஷ் அனிருத் கூட்டணியை 'டிஎன்ஏ'னு எல்லார் மனசுலையும் பதிய வெச்சுருக்கார். முதல் படத்திலேயே நல்ல டைரக்டர்னு பெயர் வாங்கினதால டிடி2, டிடி3 னு இன்னும் நிறையப் படங்கள் எதிர்பார்க்கலாம்.

மேல சொன்ன து சும்மா ரொம்ப வழக்கத்துல ஃபேமஸா இருக்குற லிஸ்ட் மட்டும்தான். இதைத் தாண்டி டி.டி-க்கு டபுள் டிகிரி, டிபார்மென்ட் ஆஃப் டிபென்ஸ், டெய்லி டைஜெஸ்ட், டால்பி டிஜிட்டல், டொனால்ட் டக், டிஸ்க் டிரைவ்னு இன்னும் முடியாத பெரிய லிஸ்ட் இருக்கு. நல்லவேளை இன்னும் ராஜேஷ் மாதிரி டைரக்டர்கள் படம் எடுத்து அதுக்கு டிடினு ஷார்ட் ஃபார்ம் பிடிக்கலை...!

Link to comment
Share on other sites

மோடியின் காரை நிறுத்திய 4 வயது குழந்தை!

 
 

பிரதமர் மோடி குஜராத்தில் கிரன் பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க செல்கையில், 4 வயது குழந்தைக்காக தனது காரை நிறுத்தியுள்ளார். இதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

11_ok_19353.jpg

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்தார். அரசின் நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த அவர், இன்று கிரன் பல்நோக்கு மருத்துவமனையைத் திறந்து வைக்க  காரில் சென்றார். முழு பாதுகாப்புடன் அவரின் கார் சென்று கொண்டிருக்கையில், சாலையின் ஒரு சந்திப்பில் 4 வயது குழந்தை ஒன்று பாதுகாப்பு வளையத்தை தாண்டி மோடி கான்வாயை நோக்கி ஓடி வந்தது.

பாதுகாப்பு காவலர்கள் அக்குழந்தையை தடுக்க முயன்றதைக் கவனித்த மோடி, குழந்தையை அழைத்துவரச் சொன்னார். அக்குழந்தையை தனது மடியில் அமர்த்தி சில விநாடிகள் பேசிவிட்டு அவர் கிளம்பிச் சென்றார். இதையடுத்து இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறது.
 

 

 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

பழுதடைந்ததால் பயணத்தை பாதியில் முடித்து திரும்பியது அப்போலோ-13 விண்கலம்: ஏப்ரல் 17, 1970

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு திட்டமான அப்பல்லோ திட்டத்தின் 7-வது மனிதர் பயணித்த விண்கலம் அப்பல்லோ-13 ஆகும். அப்பல்லோ-11 மற்றும் அப்பல்லோ-12 விண்கலங்களைத் தொடர்ந்து செலுத்தப்பட்ட இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் நோக்கோடு 1970-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி ஏவப்பட்டது. இரண்டு

 
பழுதடைந்ததால் பயணத்தை பாதியில் முடித்து திரும்பியது அப்போலோ-13 விண்கலம்: ஏப்ரல் 17, 1970
 
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு திட்டமான அப்பல்லோ திட்டத்தின் 7-வது மனிதர் பயணித்த விண்கலம் அப்பல்லோ-13 ஆகும். அப்பல்லோ-11 மற்றும் அப்பல்லோ-12 விண்கலங்களைத் தொடர்ந்து செலுத்தப்பட்ட இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் நோக்கோடு 1970-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி ஏவப்பட்டது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆக்சிஜன் கலன் வெடித்ததால் நிலவில் தரையிறங்குவது இடைநிறுத்தம் செய்யப்பட்டது. ஆக்சிஜன் கலன் வெடித்ததால் சேவைப் பெட்டகமும் அதைச் சார்ந்திருந்த கட்டளைப் பெட்டகமும் பாதிக்கப்பட்டன.

குறைந்த திறன்மூலம், சிற்றறை வெப்பக்குறைவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் குறைபாடு, கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை பிரித்தெடுக்கும் அமைப்பை தற்காலிகமாக செய்தாகவேண்டிய சூழல் போன்ற மிகக் கடினமான சவால்களையும் மீறி, அதில் பயணம் செய்த குழுவினர் ஏப்ரல் 17-ம் தேதி மீண்டும் பூமியில் தரையிறங்கினர்.

 

 

 

சைபீரியாவில் தங்கச்சுரங்க தொழிலாளர்கள் 150 பேர் படுகொலை: ஏப்ரல் 17, 1912

 

வடகிழக்கு சைபீரியாவில் லேனா ஆற்றின் அருகே செயல்பட்ட தங்கச் சுரங்க தொழிலாளர்கள் கடும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் பணியாற்றினர். 15 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை வேலை செய்தும் அவர்களுக்கு உரிய சம்பளம் கிடைப்பதில்லை. இதற்கெல்லாம் மேலாக பாதுகாப்பு குறைபாடு காரணமாக அடிக்கடி விபத்திலும் சிக்கினர். இதனால்

 
 
 
 
சைபீரியாவில் தங்கச்சுரங்க தொழிலாளர்கள் 150 பேர் படுகொலை: ஏப்ரல் 17, 1912
 
வடகிழக்கு சைபீரியாவில் லேனா ஆற்றின் அருகே செயல்பட்ட தங்கச் சுரங்க தொழிலாளர்கள் கடும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் பணியாற்றினர். 15 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை வேலை செய்தும் அவர்களுக்கு உரிய சம்பளம் கிடைப்பதில்லை. இதற்கெல்லாம் மேலாக பாதுகாப்பு குறைபாடு காரணமாக அடிக்கடி விபத்திலும் சிக்கினர்.

இதனால் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள், 8 மணி நேர வேலை, சம்பள உயர்வு, அபராதம் விதிப்பதை ரத்து செய்தல், தரமான உணவு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1912ம் ஆண்டு மார்ச் மாதம் போராட ஆரம்பித்தனர். இதன் உச்சகட்டமாக ஏப்ரல் மாதம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களை ஒடுக்குவதற்காக இம்பீரியல் ரஷ்ய ராணுவ வீரர்கள் ஏப்ரல் 17-ம் தேதி தொழிற்சாலை வளாகத்தில் குவிக்கப்பட்டனர். வேலைநிறுத்தம் செய்யும் கமிட்டியின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை விடுவிக்க வலியுறுத்தி மனு அளிப்பதற்காக தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது தொழிலாளர்கள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 150 பேர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

”நான் ஏன் ஷேவ் பண்ணிக்கணும்?” அதிர வைக்கும் பெண்ணின் வைரல் வீடியோ #ViralVideo

 

ஷேவ்

பெண்கள்  தங்களை  அழகுப்படுத்திகொள்வது என்பது ஆதிகாலத்தில் இருந்தே நடைமுறையில் இருக்கும் விஷயம்!  ஒரு காலத்தில்,  நீளமான கூந்தல் வளர்க்கும் பெண்களுக்கு சமூகத்தில்  தனிமரியாதை  இருந்தது.  ஆனால், பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த காலத்தில், பராமரிக்க கடினமாக இருந்ததால், கூந்தலை குட்டையாக வெட்டிக்கொண்டார்கள்.  

தங்களை பராமரிக்க பெண்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தையில் ஒன்றுதான் ஷேவிங். கைகாலில் ஆரம்பித்து அந்தரங்க உறுப்பு வரை தேவையில்லாதவை என்று கருதப்படும் ரோமங்களை ஷேவிங் செய்து கொள்வது என்பது பேஷனாக அல்லாமல் சுத்தத்தின் வெளிப்பாடாக நினைக்கிறார்கள் பெண்கள். 


அப்படி ரோமங்கள் அகற்றப்படுவது என்பது அதிக நேரம் பிடிக்கும் காரியங்களில் ஒன்றாகிப் போகிறது. சிலருக்கு அவை தினமும் செய்யப்படும் வேலைகளில் ஒன்றாகும். சுத்தத்துக்காக என்றாலும் இத்தனை நேரம் பிடிக்கும் ஒரு காரியத்தை செய்ய சலிப்படையும் பெண்கள் நாடுவது அழகு நிலையத்தை! ஆனால் 'ஏன் ஷேவ் பண்ணிக்கணும்' என்கிற கேள்வியோடு தன் உடலில் உள்ள ரோமங்களை ஷேவ் செய்யாமல் தான் ரசிப்பதை பற்றி பேசிய பெண்ணின் வீடியோ வைரலாகியிருக்கிறது.


அமெரிக்காவைச் சேர்ந்த மோர்கன் மைக்னஸ் (Morgan Mikenas) என்ற ஒரு பெண் உடற்பயிற்சியாளர், உடலில் ரோமங்களை  ஒரு வருட காலமாக  அகற்றாமல் வைத்திருக்கிறார். இதற்கான  காரணங்களை,  அவர் வீடியோ பதிவாக, “யூடியூப்” வலைதளத்தில் வெளியிட்டிருப்பது  பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஷேவ்

”ஓய் ஐ டொண்ட் ஷேவ்” (Why I dont shave) என்ற  பெயரில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பது இவைதான்...

”நான் என் உடலில் இருக்கும் ரோமங்களை அகற்றுவதை நிறுத்தியதற்கு முதல் காரணம், இதை செய்வதால் எனக்கு  அதிக நேரம் விரயம் ஆகிறது. குளியலறைக்கு சென்று, என் உடலில் உள்ள ரோமங்களை அகற்றி,  தலைக்கு குளித்து, அதன்பிறகு உடம்புக்கு குளித்து... என பல மணி நேரம் பிடிக்கிறது. 

ஒரு நாள் “நாம் ஏன் இதனை செய்துகொண்டு இருக்கிறோம். இதனை செய்வதால், எவ்வளவு நேரம் விரயம் ஆகிறது என்று தோன்றியது. முன்பெல்லாம் என் உடம்பில் இருந்த ரோமங்களை அகற்றாவிட்டால், என் உடலெல்லாம் அழுக்காக இருப்பது போல, அருவெருப்பாக உணர்வேன். அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி உடல் ரோமங்களை நீக்கி சுத்தமாக வைத்துக்கொள்வேன்.


தொடர்ந்து இதையே செய்து கொண்டிருந்த போது ஒருநாள் ரோமங்களை அகற்றாமல் அப்படியே விட்டால் என்ன என்று தோன்றியது. நிதானமாக சிந்தித்து பிறகு முடிவெடுத்தேன் 'என் உடலில் ரோமங்கள் எப்படி வளர்கிறதோ, அப்படியே வளரட்டும். இதில்  வெட்கப்படவோ அவமானப்படவோ ஒன்றுமில்லை. என் இயற்கையான அழகை பாதுகாக்க விரும்புகிறேன்.

இதற்கு  மற்றொரு காரணம், ரோமங்களை ‘ஷேவ்’ செய்யும்போது, அரிப்பு, ஊசி குத்துவது போன்ற உணர்வு, ஒருவிதமான  அசெளகரியத்தை உணர்ந்தேன். இப்போது ஷேவ் செய்யாத என் உடலில் ரோமங்கள் அடர்ந்து இருப்பது எனக்கு மிகவும் செளகர்யமாக இருக்கிறது. நான் இப்படி இருப்பது என் காதலனுக்கு பிடித்திருக்கிறது. என் இயற்கை  அழகை அவர் ரசிக்கிறார். 

மேலும்,  என்னைப்போல் எல்லோரும் அக்குள் மற்றும் காலில் ரோமங்களை அகற்றாமல்  இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. என்னை  பொறுத்தவரையில் 'உங்களுக்கு எது செளகரியமாக இருக்கிறதோ அதையே பின்பற்றுங்கள் என்றுதான் கூறுகிறேன் ” என்று மோர்கன் பேசியிருக்கிறார். . 

தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில், கிட்டதட்ட 15000 ரசிகர்களை கொண்டிருக்கும்  மோர்கன், வித்தியாசமாகவும் வெளிப்படையாகவும்  கூறிய கருத்துகளுக்கு மேலும்  ‘லைக்ஸ்’ அள்ளியிருக்கிறார்.  

மோர்கன் மைக்னஸின் வீடியோ பதிவை பார்க்க: 

 

 

 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

முத்தையா முரளிதரனின் 45 ஆவது பிறந்த தினம் இன்று

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் நட்சத்திரங்களில் ஒருவரான முத்தையா முரளிதரனின் 45 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

muttiah muralitharan

1972 ஏப்ரல் 17 ஆம் திகதி கண்டியில் பிறந்த முத்தையா முரளிதரன் உலகின் மிகச் சிறந்த ஓவ் பிறேக் சுழற்பந்துவீச்சாளர் ஆவார்.  

1992 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பிரவேசித்தார்.  1993 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டி மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு அறிமுகமானார்.  

133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்திய முத்தையா  முரளிதரன் 350 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 534 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 

டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்களை வீழ்த்தியவரான முத்தையா முரளிதரன் விளங்குகிறார்.

http://metronews.lk

 

 

Link to comment
Share on other sites


கல்வி கற்றல் ஒரு சுவாரஷ்யமான நிகழ்வு
 
 

article_1492408210-15942190_173826579983கல்வியூட்டல் தங்கள் மீது வலிந்து திணிக்கப்படுகின்றது என்கின்ற ஓர் எண்ணம் ஏற்படுவதாலேயே இளம் சிறார்கள், கல்வியில் நாட்டம் இல்லாமலும் வெறுப்பான மனநிலைக்கும் உள்ளாகின்றார்கள். 

இளம் மாணவர்கள் உரிய முறையில் கல்வி பயிலாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. வீட்டில் வறுமை நிலை, தாய் தகப்பனாரின் அசமந்த குணம், சதா வீட்டில் சண்டை சச்சரவுகள், குடும்பத் தலைவனின் மதுப்பழக்கம் எனப் பல காரணங்களினால் பிள்ளைகளின் கல்வி மீதான ஆர்வம் தடைப்படுகின்றது.

கல்விகற்றல் என்றால் பாடசாலையில் தண்டனை வழங்கும் நிகழ்வு எனப் பிள்ளைகள் கருதும் நிலை ஏற்படலாகாது. கல்வி கற்பிக்கும் விடயத்தில் பிள்ளைகளுக்கு தண்டனைகள் வழங்குதலாகாது. நவீன கல்விச் சிந்தனைகள் தண்டனை வழங்கும் முறையைக் கடைப்பிடித்தலாகாது என்று வலியுறுத்துகின்றன. 

கல்வி கற்கும்போது அவர்களின் மனஇயல்பு பாதிக்காத வகையில் நடந்து கொள்ளல் வேண்டும். கல்வி கற்றல் ஒரு சுவாரஷ்யமான நிகழ்வு என்ற உணர்வையூட்டுக. 

 
Link to comment
Share on other sites

கடலை மிட்டாய் விற்பவர் கற்றுக்கொடுத்த அனுபவப் பாடம்! #MorningMotivation

 
 

Local train - MorningMotivation

காலையிலிருந்து சென்னை மக்களை வேகாத வெயிலில் அலையவிட்டு விட்டு அத்தனை அமைதியாக மேற்கில் மறைந்து கொண்டிருந்தது சூரியன். வேலை முடித்து வீட்டுக்கு கிளம்புபவர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் என அத்தனை கூட்டம் எழும்பூர் ரயில் நிலையத்தில். சுண்டல், வேர்க்கடலை, சமோசா விற்பனை ஜோராக நடந்து கொண்டிருந்தது. அத்துடன் புறநகர்  மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களின் பாட்டுச் சத்தமும் சேர்ந்து கொண்டு ரயில் நிலையமே திருவிழா திடல் போல காட்சியளித்தது. சென்னை பீச் ஸ்டேஷனிலிருந்து தாம்பரம் செல்லும் ரயிலில் ஏறி ஜன்னல் ஓரமாக இருக்கிறதா என நோட்டம் விட்டால் எல்லாவற்றிலும் ஆட்கள்  அமர்ந்திருந்தார்கள். சரி, 'ஏதாச்சும் ஒரு இடத்துல உட்காருவோம்' என நினைத்துக்கொண்டு, நடக்கும் பாதையை ஒட்டிய ஒரு இருக்கையில்  அமர்ந்து கொண்டேன். ரயில் சேத்துப்பட்டை தாண்டியிருந்தது. ஓர் அக்கா கூடை நிறைய ஆரஞ்சு பழங்களை வைத்துக் கொண்டு "அஞ்சு பழம் அம்பது ரூவா, வாங்கிக்கோ வாங்கிக்கோ" என கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தார். இன்னோர் அண்ணன் "10 பிஸ்கட் 20 ரூபா சூடா இருக்கு வேணுமா சார்" என ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு குட்டி அலுமினிய வளையத்துக்குள் தன் உடலை நுழைத்து, அதிலிருந்து வெளியே வந்து உதவி கேட்டுக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. கதவு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பூ கட்டிக் கொண்டிருந்தார்கள் சில பெண்கள். செய்தித்தாள்களை கீழே மடித்து போட்டு அதில் அமர்ந்து தங்களது அன்றாட நிகழ்வுகள் குறித்து பேசி சிரித்துக் கொண்டு வந்தார்கள் சிலர். கல்லூரி இளைஞர்கள் சிலர் ஃபுட் போர்டில் தொங்கிக் கொண்டு வந்தார்கள். 

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தாலும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. யாருக்கும் நிற்ககூட இடமில்லாத நிலைமை. ரயில் மாம்பலம் நிலையத்தில் நின்று புதிதாக நிறைய பயணிகளை ஏற்றிக் கொண்டு  நகரும் பொழுதுதான் அந்த மனிதரை பார்த்தேன். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார். ஒரு கையில் ஸ்டிக்குடன், வண்ண வண்ணமாக நீளமான பேனாக்களையும் வைத்திருந்தார். இன்னொரு கையில் நிறைய வேர்க்கடலை பர்ஃபி பாக்கெட்டுகளையும் வைத்திருந்தார். தோளில் ஒரு பை கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. சிகப்பு வண்ண உடையும் முகத்தில் மாஸ்க்கும் மாட்டியிருந்தால் அப்படியே சான்டாகிளாஸ் போலத்தான் இருந்திருப்பார். கூட்டத்தை விலக்கிக் கொண்டு "சுவீட்டான வேர்க்கடலை ரெண்டு பாக்கெட் பத்து சார் வாங்கிக்கங்க" எனச் சொல்லி ஒவ்வொரு அடியாக முன்னேறி வந்து கொண்டிருந்தார். முகத்தில் அத்தனை சந்தோஷம், வழக்கமாக அந்த ரயிலில் பயணிக்கும் சிலர் அவரிடம் "என்னய்யா இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க போலையே.." என்று கேட்க "இன்னிக்குதான் என்னை நீ பாக்குறியா? புதுசா கேக்குற? நாம எப்பவுமே ஹாப்பி தான்யா!" -  அந்த குரல் வந்த பக்கம் திரும்பி அவர் பதில் சொல்ல அந்த இடமே கலகலப்பாகியது. ஒரு கடலை பாக்கெட்கூட விற்கவில்லை.

MorningMotivation

என் பக்கத்தில் வந்ததும் கையிலிருந்த பேனாக்களையும், வேர்க்கடலை பாக்கெட்டுகளையும் மொத்தமாக என் கையில் கொடுத்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாம்தான் எதுவுமே கேட்கவில்லையே நம் கையில் அத்தனையையும் கொடுக்கிறாரே என குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் தொண்டையை செருமிக் கொண்டு.

"சைலன்ஸ் ப்ளீஸ்" எனச் சொல்ல எல்லோரும் பேச்சை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தார்கள். அவரிடம் பேசிக் கொண்டிருந்தவர்களோ இன்னும் உற்சாகமாகி "சைலன்ஸ் ப்ளீஸ்.. சைலன்ஸ் ப்ளீஸ்" எனச் சத்தம்போட மொத்தப் பெட்டியும் அமைதியான நொடியில்...   

"ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான். என்ன அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்..." என சத்தம் போட்டு பாடி நிறுத்த அவர்கள் சிவாஜியோடு கோரஸ் பாடும் நண்பர்களைப் போல கோரஸ் போட்டார்கள்.

"உலகம் எந்தன் கைகளிலே.. உருளும் பணமும் பைகளிலே..." என்று பாடி தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த சில்லறைகளை ஆட்டிக் காண்பித்தபோது எங்கும் சிரிப்பலை எழுந்தது. 

"யோசிச்சுப் பார்த்தா நானே ராஜா..." எனப் பாடி கொஞ்சம் யோசித்துவிட்டு "இன்னிக்கு குரல் சரியில்லை மீதியை நாளைக்கு பாடுறேன்" எனச் சொல்லி என்னிடமிருந்த வேர்க்கடலை மிட்டாய் பாக்கெட்டுகளையும் வாங்கிக் கொண்டிருக்கையில் எல்லோரும் கை தட்ட ஆரம்பித்திருந்தோம். அவருடைய கையிலிருந்த வேர்க்கடலை மிட்டாய்கள் மளமளவென விற்க தொடங்கியிருந்தன. மீதமிருந்த பர்ஃபி பாக்கெட்டுகளை கையில் பிடித்துக் கொண்டு கதவருகில் நின்று கொண்டிருந்தவரிடம் நானும் இரண்டு பர்ஃபி பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். "ரொம்ப நல்லா பாடுனீங்க... உங்க குரல்ல அவ்ளோ சந்தோஷம். சூப்பர் சார்'னு சொல்ல.. அமைதியாக என் பக்கம் திரும்பி புன்னகைத்தவர் "மனசுல சந்தோஷம் இருந்தா, அது நம்ம வார்த்தைகள்லயும் வெளிப்படும் சார். அது மட்டுமில்லாம ஏற்கெனவே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு யோசனையோட போய்கிட்டு இருப்பாங்க. நாமளும் சோகமா மூஞ்ச வைச்சுக்கிட்டு பர்ஃபி வாங்கிக்கங்கன்னு போய் நின்னா எப்படி வாங்குவாங்க. அதான் நீங்க சந்தோஷப்படுற மாதிரி ஒரு பாட்டை எடுத்துவிட்டேன். இதுவும் பிஸினஸ் ட்ரிக்ஸ்தான் சார்!" எனச் சொல்லிய பொழுது ரயில் குரோம்பேட்டையில் நின்றிருந்தது. வேகமாக ரயிலில் இருந்து இறங்கியவர் எதிரே பீச்சுக்கு போகும் ரயிலை பிடிக்க ஸ்டிக்கை கீழே தட்டி தட்டி நடந்து கொண்டிருந்தார்..!

Train vendors - MorningMotivation

நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மனிதரிடமும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா!? "யார் பேச்சையும் நின்று கவனிக்க நேரமே கிடைப்பதில்லை" எனப் புலம்பும் அதே நேரத்தில் வாட்ஸ்அப் குரூப்பில் வந்த பழைய மொக்கை மெசேஜை இன்னொரு குரூப்புக்கு ஃபார்வேர்ட் செய்து கொண்டிருப்போம். அல்லது, நம் நண்பர் "டிராவலிங் டூ ஊட்டி வித் மை ஃபேமிலி" என போட்ட ஸ்டேட்டஸுக்கு கமென்ட் போட்டுக் கொண்டிருப்போம். ஆனால், 'சூரியன்' படத்தில் கவுண்டமணி சொல்வது போல "நான் இங்கே ரொம்ப பிஸி" டையலாக்கைச் செல்லாதவர்கள் ரொம்பவே குறைவுதான். ஆயிரம் புத்தகங்களில் இருந்து கற்றுக் கொள்ளும் அறிவை ஒருவருடைய அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ள முடியும் எனச் சொல்வார்கள். அதே போலத்தான் கடலை மிட்டாய் விற்பவரும் வருடக்கணக்கில் எம்.பி.ஏ மாணவர்கள் படிக்கும் பிசினஸ் சூட்சுமத்தை எளிதாக சொல்லிவிட்டார் தானே!?

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று…

ஏப்ரல் – 18

 

1025 : போலந்தின் முதல் மன்­ன­ராக போலெஸ்லாவ் குரோப்றி முடி சூடினார்.


1835 : அவுஸ்­தி­ரே­லி­யாவில் மெல்பேர்ன் நகரம் அமைக்­கப்­பட்­டது. 


1906 : அமெ­ரிக்­காவின் சான் பிரான்­சிஸ்கோ நகரில் ஏற்­பட்ட நில­ந­டுக்­கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்­லப்­பட்­டனர்.


1909 : பிரான்ஸின் வீரப் பெண்­ணான ஜோன் ஒஃப் ஓர்க், பத்தாம் பயஸ் பாப்­ப­ர­சரால் புனி­தப்­ப­டுத்­தப்­பட்டார்.


zimbabwe_map--varalaru1912 : கடலில் மூழ்­கிய டைட்­டானிக் கப்­பலின் பய­ணி­களில் உயிர் பிழைத்த 705 பேர் நியூயோர்க் நகரை சென்­ற­டைந்­தனர்.


1930 : பிபிசி வானொலி தனது வழ­மை­யான செய்தி அறிக்­கையில் இந்­நாளில் "எந்த செய்­தி­களும் இல்லை" என அறி­வித்­தது.


1941 : ஜேர்­ம­னியப் படைகள் ஏதன்ஸை நெருங்கும் போது கிறீஸ் பிர­தமர் அலெக்­சாண்ட்ரொஸ் கொரிசிஸ் தற்­கொலை செய்து கொண்டார்.


1942 : டோக்­கியோ நகர் மீது அமெ­ரிக்கப் போர் விமா­னங்கள் குண்டுத் தாக்­கு­தலை மேற்­கொண்­டன.


1945 : இரண்டாம் உலகப் போரில் ஜேர்­ம­னியின் ஹெலி­கோ­லாந்து என்ற சிறு தீவின் மீது ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட போர் விமா­னங்கள் தாக்­குதல் நடத்­தின.


1949 : அயர்­லாந்து குடி­ய­ரசு சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.


1954 : கமால் அப்துல் நாசர் எகிப்தின் ஆட்­சியைக் கைப்­பற்­றினார்.


1955: முத­லா­வது ஆசிய – ஆபி­ரிக்க மாநாடு இந்­தோ­னே­ஷி­யாவில் ஆரம்­ப­மா­கி­யது. 29 நாடுகள் பங்­கு­பற்­றின.


1980 : ஸிம்­பாப்வே குடி­ய­ர­சுக்கு (முன்னாள் ரொடீ­சியா) சர்­வ­தேச அங்­கீ­காரம் கிடைத்­தது. கனான் பனானா அதன் முதல் ஜனா­தி­ப­தி­யா­கவும் ரொபர்ட் முகாபே பிர­த­ம­ரா­கவும் பத­வி­யேற்­றனர்.


1983 : லெப­னானின் பெய்ரூத் நகரில் அமெ­ரிக்க தூத­ர­கத்தில் இடம்­பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தலில் 63 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1993 : பாகிஸ்­தானில் பிர­தமர் பெனாஸிர் பூட்டோ தலை­மை­யி­லான  அமைச்­ச­ரவை மற்றும் நாடா­ளு­மன்­றத்தை ஜனா­தி­பதி குலாம் இசாக் கான் கலைத்தார்.


1996 : லெப­னானில் ஐ.நா. கட்­டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவு­கணைத் தாக்­குதல் நடத்­தி­யதில் 106 பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர்.


2013 : ஈராக் தலை­நகர் பக்­தாத்தில் உணவு விடுதி ஒன்றில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் 27 பேர் கொல்­லப்­பட்­டனர்.


2014 : எவரெஸ்ட் சிக­ரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவினால் 16 பேர் உயிரிழந்தனர்.


2014 : பொலன்னறுவை அரலகன்விலவில் ட்ரெக்டர் ஒன்று கால்வாயில் வீழ்ந்ததால், அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk

Link to comment
Share on other sites

ஜனாதிபதியாக இருந்தும் இதை மறந்துட்டாரே ட்ரம்ப்...!

 

Trum_1_400_05511.jpg

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப். அவர் பதவிக்கு வந்ததில் இருந்து இன்று வரை, அவர் பேசும் கருத்துகளிலும் எடுக்கும் நடவடிக்கைகளிலும் பல விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கிறிஸ்தவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தியாகக் கொண்டாடப்படுகிற ஈஸ்டர் விழாவையொட்டி ட்ரம்ப் குடும்பத்தினர், வெள்ளை மாளிகையில் ஈஸ்டர் எக் ரோல் (Easter Egg Roll) என்ற நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தனர். இதில் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் மற்றும் 10 வயது மகன் பேரான் ட்ரம்ப் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் அனைத்தும் திட்டமிட்டபடி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து, நிகழ்வை முடிக்கையில் அமெரிக்காவின் தேசிய கீதம் பாடப்பட்டது. பொதுவாக, மேற்கத்திய நாடுகளில் தேசிய கீதம் ஒலிக்கப்படுகையில், இடதுபுற மார்பகத்தின் மீது வலது கையை வைத்தபடி அனைவரும் பாடுவது வழக்கம். இது நாட்டுப்பற்றின் வெளிப்பாடாகக் கூட பார்க்கப்படுகிறது. 

ஈஸ்டர் நிகழ்வு முடிவில், தேசிய கீதம் பாடப்பட்ட போது ட்ரம்ப், இடதுபுற மார்பகத்தின் மீது கை வைக்க மறந்துவிட்டார். பின்னர், பக்கத்தில் இருந்த அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், தன் கணவரை கை வைக்குமாறு பணித்தார். பிறகு, ட்ரம்ப் இடது மார்பகம் மீது கை வைத்து தேசிய கீதத்தைப் பாடியுள்ளார். ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்து கொண்டு, இந்த விஷயத்தைப் போய் மறந்துவிட்டாரே என்று ட்ரம்பை ட்விட்டரில் கலாய்த்து வருகின்றனர். 

 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

தோழியை தூக்கிக் கொண்டு மாரத்தானில் ஓடிய காலிழந்த ராணுவ வீரர் .. நெகிழ்ச்சி வீடியோ!

ஒரு கால் இழந்த ராணுவ வீரர், போஸ்டன் மாரத்தானில் ஒரு பெண்ணை தூக்கி கொண்டு இலக்கை கடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாரத்தானில் பென்சில்வேனியாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்  கிரான்வி கலந்து கொண்டார். கிரான்வி 2008 ஆம் ஆண்டு நடந்த ஆஃப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் ஒரு காலை இழந்தவர். 

போஸ்டன் மாரத்தானில் பங்குபெற்ற மாற்று திறனாளிகள் அனைவரும் ஹேன்ட் பைக்கில் (Hand Bike) தூரத்தை கடந்தனர். ஆனால் ஒரு கால் இழந்த கிரான்வி தன்னம்பிக்கையாக நடந்தே மாரத்தான் தூரத்தை கடந்தார். கிரானி இறுதிக் கோட்டை நெருங்கும் போது தன் தோழி ஒருவரை தோளில் தூக்கி கொண்டு உற்சாகமாக இலக்கை அடைந்தார். அந்த காட்சி அங்கிருந்த பார்வையாளர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. பார்வையாளர்கள் அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கிரான்வியின வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்ஸை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

உலக பூமி தினத்துக்காக கூகுள் தந்திருக்கும் ஸ்பெஷல் அப்டேட்!

 
 

கூகுள் எர்த் முழுமையான தோற்றம்

இணையதளத் தேடுபொறி உலகின் ஜாம்பவான் கூகுள். கூகுள் வழங்கும் சேவைகளில் இமெயில், கூகுள் பிளஸ், கூகுள் மேப், கூகுள் எர்த் ஆகியவை குறிபிடத்தக்கவை. இதில் கூகுள் எர்த் மென்பொருள் சற்று வித்தியாசமான உருவமைப்புக் கொண்டது. இதில் விண்வெளியில் இருந்துகொண்டு பூமியை நாம் பார்த்தால் பூமி எப்படித் தோற்றமளிக்கும் என்பதைக் கூகுள் எர்த் மூலம் காணமுடியும். இதில் உலகிலுள்ள ஏழு அதிசங்களையும் 3D - யில் காணும் வசதி கொண்டது. அதேபோலப் பூமியில் இறங்கி ஸ்ட்ரீட் வியூ(Street view)-வில் நேரடியாக அந்த இடங்களைக் காணலாம். இதுதவிர, அதிலுள்ள டூல்ஸ்களின் மூலம் ஒரே இடத்தின் பழைய புகைப்படம் மற்றும் புதிய புகைப்படம் ஆகியவற்றைத் தெளிவாகக் காணலாம். நாம் காணும் இடம் கடல்மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதைப் பார்க்க முடியும். மேலும், ஓர் இடம் தற்போது இருக்கும் சாலை வசதிகளின் அப்டேட் என அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும். ஒவ்வொரு வீதியையும், ஒவ்வொரு தெருவையும் துல்லியமாகக் காணலாம்.

தாஜ்மஹால் 3D படம்

பொதுவாக ஒருவர் வீடு வாங்க விரும்பினால் கூகுள் எர்த்தில் முதலில் அந்த வீடு உள்ள சாலைகளில் பயணிக்கலாம். வீட்டைச் சுற்றிலும் என்னென்ன வசதிகள் இருக்கின்றன. மருத்துவமனை, கடைகள், காய்கறி மார்க்கெட், உணவகம் என அனைத்தையும் இதில் பார்க்க முடியும். கூகுள் மேப்பில் ஒர் அளவுக்கு மேல் ஜூம்(Zoom) செய்து பார்க்க முடியாது. ஆனால் கூகுள் எர்த்தில் தரை வரைக்கும் ஜூம் செய்து பார்க்கும் வசதி உண்டு. இந்தியாவிலுள்ள உலக அதிசயமான தாஜ்மஹாலை முப்பரிமாணம் (3D) மற்றும் புகைப்படங்கள் ஆகியவை நேரில் நாம் சென்று காண்பதைப்போல இருக்கும். மேலும் 360 டிகிரி படங்கள் தாஜ்மஹாலின் ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும் வகையில் துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகில் மிக முக்கியப் பகுதிகள் கூகுள் எர்த் மென்பொருளில் தடை செய்யப்பட்டிருக்கும்.

இதில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்துகொண்டே உலகம் முழுவதும் சுற்றி வருவதற்காகவே உருவாக்கப்பட்டது. இதில் இருந்து ஆராய்ச்சிகளுக்குத் தேவையான பூமியின் புகைப்படங்களை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்தமான இடங்களைக் குறித்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உடனடியாக அந்த இடத்தை வேகமாக அடையலாம். ஏராளமான வசதிகளை விரல்நுனிக்கு கொண்டு வந்த 'கூகுள் எர்த்' மென்பொருள், நாளை புதிய அப்டேட்களை வெளியிடப் போகிறது. இதுதவிர புதிய வசதிகளையும் புதிதாக சேர்க்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. இதில் விர்ச்சுவல் ரியாலிட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 22-ம் தேதி 'உலக பூமி தினம்' கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்த அப்டேட்கள் கொண்டு வரப்படுகிறது. இதில் முன்னர் இருந்த வசதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுப் பயனாளர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாற்றம் செய்யப்பட்ட மென்பொருளில் மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகள் அனைத்தையும் துல்லியமாகக் காண முடியும். இதற்காகக் கூகுள் நிறுவனம் உலகிலுள்ள மூலை முடுக்குகளில் எல்லாம் கேமரா பொருத்திய கார்களை ஓடவிட்டுப் படம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வீட்டில் இருந்து கொண்டே பயணம் செய்யலாம்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

சாம்சங், சிம்கார்டு, மிஸ் கால் என்று பெயர் வைக்கும் விசித்திரக் கிராமம்!

 
 
 

சாம்சங், சிம் கார்டு, ஆண்ட்ராய்டு, ஜியோனி, சிப்..... இவை நம்மை பொறுத்தவரை மொபைல் தொடர்புடைய வார்த்தைகள். ஆனால் ராஜஸ்தானில் உள்ள கிராமத்தில் குழந்தைகளுக்கு இந்த வார்த்தைகளைத் தான் பெயராக சூட்டுகிறார்கள். 

ramnagar
 

ராஜஸ்தானில் புந்தி என்னும் நகருக்கு அருகே ராம்நகர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் காஞ்சர் இன மக்கள்  வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் மக்கள் தொகை 500 தான். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் படிக்கவில்லை. எனவே தங்கள் பிள்ளைகளின் பெயர்கள் அவர்களைப் பற்றி பேச வைக்க வேண்டும் என்பதால், ஐ.ஏ,எஸ், ஐ.பி.எஸ், பிரதமர் என்னும் பெயர்களை சூட்டுகின்றனர்.

இந்தக் கிராமத்தில் வசிக்கும் 50 வயது பெண்ணுக்கு அவர்களின் மாவட்டக் கலெக்கடர் மீது மரியாதை என்பதால், அவரின் பேரனுக்கு ‘கலெக்டர்’ என்று பெயர் சூட்டி உள்ளார். இங்கு கொள்ளை, திருட்டு அதிகம். கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான ஆண்கள் மீது திருட்டு வழக்குகள் பதியப்பட்டிருக்கும். தங்கள் பிள்ளைகள் அவ்வாறு வளரக் கூடாது என்பதால் அவர்களுக்கு ’ஐஜி’, ’எஸ்.பி.’, ’நீதிபதி’, என்று பெயர் சூட்டி உள்ளனர்.

தற்போது தொழிநுட்ப ரீதியாக அப்டேட் ஆகியுள்ள கிராம மக்கள் ஆண்ட்ராய்டு, சாம்சங், நோக்கியா, ஜியோனி, சிம் கார்டு, சிப் என்று பெயர் வைக்க தொடங்கிவிட்டனர்!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

ரசகுல்லாவால் நின்றுபோன திருமணம்! இது உ.பி கலாட்டா

 
 

பொதுவாக வரதட்சணைப் பிரச்னை, மணமகன் அல்லது மணமகள் ஓடிச் சென்றுவிட்டார்கள் என்றால் திருமணம் நிற்கும். ஆனால், உத்தரப்பிரதேசத்தில், ரசகுல்லாவால் ஏற்பட்ட,  சண்டை ஒரு திருமணத்தை நிறுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் குர்மபூரில், ஒரு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. மணமகள் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. கொஞ்சம் டிலே ஆனதால், 'டின்னரை சீக்கரம் போடுங்கப்பா' என்று மணமகனின் தந்தை கூறியுள்ளார். இதனால், அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு வந்தது. 

 

Rasagulla

டின்னர் மெனுவில் ரசகுல்லாவும் இருந்தது. பஃபே முறை என்பதால், மணமகளின் உறவினர் ஒருவர் ரசகுல்லா ஸ்டாலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார். ஒரு நபருக்கு ஒரு ரசகுல்லா என்பது மணமகளின் உறவினருக்குக் கொடுக்கப்பட்டிருந்த உத்தரவு. ஆனால், மணமகனின் உறவினர் ஒருவர் இரண்டு ரசகுல்லாவை, அவராகவே எடுத்துவிட்டாராம்.

அங்குதான் பிரச்னை ஆரம்பித்தது. இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து, அந்த இடமே கிட்டதட்ட போர்க்களமாக மாறியது. இதையெல்லாம், மணமகள் அமைதியாக பால்கனியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார். தன் தந்தையையும் குடும்பத்தையும் அவமானப்படுத்தியது அவருக்குப் பிடிக்கவில்லை. இதனால் இந்தத் திருமணம் வேண்டாம் என்று அந்தப் பெண் முடிவெடுத்தார். இதையடுத்து, மணமகளின் தந்தை இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். விசாரணை நடந்துவருகிறது.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

தெரியுமா... ‘இன்று எந்தச் செய்தியும் இல்லை’ என்று செய்தி வாசித்த நாள் இன்று! #NowIKnow

 
 

இன்று எந்த செய்தியும் இல்லை

டந்த பிப்ரவரி மாதத்தை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்கள். நிமிடத்துக்கு நிமிடம்  பிரேக்கிங் நியூஸ், ஒன்றுக்கொன்று சளைக்காத பரபரக்கும் செய்திகள் என எந்நேரமும் சென்சேஷன் மோடிலேயே இருந்தோமே நினைவிருக்கிறதா?. அக்டோபர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆகும் போது செய்தியை பார்க்கத் தொடங்கினோம். அன்றிலிருந்து, ஜெயலலிதா மரணம், ஜல்லிக்கட்டு, சசிகலா-ஓ.பி.எஸ் பிரச்னை என இன்றுவரை தொடர்ந்து நியூஸ்மயம் தான். பிப்ரவரி மாதமெல்லாம் இந்தப் பக்கம் சசிகலா பிரஸ்மீட்.. அந்தப் பக்கம் ஓ.பி.எஸ் பிரஸ்மீட். எதைக் காட்டுவது என்று செய்திச் சேனல்களே குழம்பும் அளவுக்கு நியூஸ் குவிந்தது எல்லாம் வேற லெவல். இன்றைக்கும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு புதிய நியூஸ்கள் நமக்கு வந்து கொண்டே இருக்கிறது.

ஏன், இன்றைக்குக் கூட காலையில் ‘டி.டி.வி தினகரனை விசாரிக்க டெல்லி போலீஸ் இன்று சென்னை வருகை’ என்று ஒரு ப்ரேக்கிங் நியூஸ். சில மணிநேரங்களுக்குப் பிறகு ‘டி.டி.வி தினகரனை விசாரிக்க டெல்லி போலீஸ் இன்று சென்னை வரவில்லை’ என்றொரு பிரேக்கிங் நியூஸ்! மீடியாக்கள் மட்டுமல்லாது சோசியல் மீடியா, வாட்ஸப் என ஏதோ ஒரு வகையில் செய்திகள் நம்மை தொடர்ந்து துரத்திக் கொண்டேதான் இருக்கிறது.

ஒரு நாள் செய்தியே இல்லையென்றால் எப்படி இருக்கும்?

நாம் வழக்கமாகக் கேட்கும் / பார்க்கும் ஒரு பிரதான சேனல் ’இன்று எந்த நியூஸூமே இல்லை’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? ‘விளையாடாதீங்க பாஸ் அப்படி ஒரு நாள் சாத்தியமே இல்லை. எங்கேயாவது ஏதாவது நடந்துகிட்டேதான இருக்கும்’ என்கிறீர்களா? உண்மையில் அப்படி ஒரு நாள் வந்தது. இப்போது இல்லை.. 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி.  

இந்த சம்பவம் நடந்தது லண்டனில். 24 மணி நேர செய்திச்சேனல்கள், இணையதளங்கள் ஏதும் இல்லாத அந்தக் காலத்தில் மக்கள் செய்தியைத் தெரிந்துகொள்ள  இரண்டே வழிகள் தான் இருந்தது. ஒன்று தினசரிகள்  மற்றொன்று ரேடியோ. பிபிசி ரேடியோ அப்போது லண்டனில் மிகப் பிரபலம். 1930 ஆம் ஆண்டுதான் பிபிசிக்கு முக்கியமான காலகட்டம். காரணம், அதுவரை நியூஸ் ஏஜென்சிகளிடம் இருந்து செய்திகளை வாங்கி வெளியிட்டுக் கொண்டிருந்த பிபிசி,  புதிதாக ஒரு நியூஸ்ரூம் செட்டப்பை அமைத்து சொந்தமாக செய்தி வெளியிடத் தொடங்கியிருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் மக்களுக்கு தெரிவிக்க விரும்பும் செய்திகள் அத்தனையும் பிபிசி வழியாக வெளியிட்டது. அரசாங்க அறிவிப்புகளை மட்டுமே வெளியிடாமல் செய்தி சேகரிப்பவர்கள் பலரை வேலைக்கு வைத்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது. 

1930, ஏப்ரல் 18 ஆம் தேதி, புனித வெள்ளியன்று பிரிட்டிஷ் அரசாங்கம் பற்றிய நியூஸ் ஒன்றைத் தான் அன்றைய மாலை நேரச் செய்தியில் வாசிப்பதற்காகத் தயார் செய்திருந்தனர். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் எக்காரணம் கொண்டும் அந்த நியூஸ் மக்களை சென்று சேரக் கூடாது என்று நினைத்தது. அதனால் எல்லாப் பத்திரிக்கைகள் மற்றும் செய்தி நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு உடனே அந்தச் செய்தி வெளியிடாமல் தடுக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர். புனித வெள்ளி காரணமாக அன்றைக்கு எல்லா பத்திரிக்கைகளும் விடுமுறையில் இருந்தது. ஈஸ்டர் விடுமுறை முடியும் வரை பத்திரிக்கைகள் வெளிவராது என்பதால், பிபிசிக்கு மட்டும் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள். துரதிஷ்டவசமாக அன்றைக்கு அந்த நியூஸை விட்டால் பிபிசியிடம் வேறு செய்தி இல்லை. 

மாலை 6:30 மணி. செய்திக்காக எல்லோரும் பிபிசி ரேடியோவிற்கு காது கொடுத்து காத்திருக்க, செய்தி வாசிப்பவர் குரல் ஒலிக்கத் தொடங்குகிறது. “Good Evening. Today is Good Friday. There is no news” அவ்வளவு தான். அதற்கு பிறகு செய்தி நேரம் முழுவதும் பியானோ இசை மட்டுமே ஒலித்தது. வரலாற்றில் அந்த நாள் இடம்பிடித்தது. 

சரி உண்மையில் அந்த நாளில் வேறெந்த சம்பவமும் நடக்கவில்லையா?

வங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங் எனும் இடத்தில் புரட்சியாளர்கள் சிலர், பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கை சூறையாடினர். பின்னாட்களில் சிட்டகாங் எழுச்சி என்று வரலாற்றில் இடம்பிடித்த சம்பவம் நிகழ்ந்தது அந்த தினத்தில்தான். ஆனால் அப்போதெல்லாம் Just In, Breaking என உடனுக்குடன் வழங்கும் வழக்கமெல்லாம் இருக்கவில்லை. மேலும் அந்த நிகழ்வை  பிபிசி  அறிந்திருக்கவில்லை. 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல செயல் செய்பவர்கள் உயர்ந்த குலம் , நாசவேலை செய்பவர்கள் செயலால் தாழ்ந்த குலம் . அதைத்தான் குலவழக்கம் என்றேன் . சுமாவினை இன்னும் கேவலமாக தான் நான் சொல்வேன் , பொதுவெளி மரியாதைக்காக இத்துடன் முடிக்கிறேன் .... என் அயல் ஊர் தான் அவர், சந்து பொந்து எல்லாம் தெரியும் அவரை பற்றி. ஒரு நாகரீகத்துக்காக வேண்டாம் .
    • எனக்கு பெரேரா அண்ட் சன்ஸ் களில் நடந்ததில்லை. ஆனால் புதுக்கடையில் இரு பெண்கள், ஒருவர் மத்திய வயது இன்னொருவர் வயசாளி, சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வந்து கையை நீட்டுவார்கள். அசெளகரியம்தான் ஆனால் aggressive begging என சொல்லமுடியாது. அதே போல் ரோயல் பேக்கரி அடியிலும் ஒரு ஐயா நிரந்தர டியூட்டி. நிற்க, இது 90,2000,2010 களிலும் இருந்தது. எனது கேள்வி -  இப்போ கூடியுள்ளதாக உணர்கிறீர்களா? எத்தனை சதவீதத்தால்? பிகு என்னுடன் இலண்டன் - இலங்கை வந்த நண்பரை இன்று காலை கேட்டேன். 10% அளவில் கூடி உள்ளதாக அவர் நினைக்கிறார். ப் பா….பெரிய ஆள்தான் வாப்போ😀. சும்மா ஓளட் போடும் ஶேர்யக்ஹ் கணக்கா கம கமப்பிங்க போல🤣 எத்தனை வருடம் கழித்து போகிறீர்கள் ? யாழ் களத்தில் ஒரு சிட்சுவேஷன் ரிப்போர்ட் போட்டு விடவும்🙏. இனிய பயணமாகட்டும்.
    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.