Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

'King Arthur: Legend of the Sword' - ட்ரெய்லர்

 

 

 

சார்லி ஹன்னம், ஜூட் லா, டேவிட் பெக்கம்(கேமியோ), ஜிமோன் ஹோன்சோ ஆகியோர் நடித்திருக்கும் 'King Arthur: Legend of the Sword' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. வரும் மே மாதம் 17-ம் தேதி படம் வெளியாகிறது. கய் ரிட்ச்சி இயக்கியுள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம். இதில் கிங் ஆர்தராக சார்லி ஹன்னம் நடித்துள்ளார். நாட்டை ஆளும் கொடுங்கோலன் வோர்ட்டிகெர்ன் ஆக ஜூட் லா நடித்துள்ளார்.

ட்ரெய்லர் மியூஸிக் என்ன எனக் கேட்கிறீர்களா? அது Led Zeppelin இசைக்குழுவின்  'Babe I'm Gonna Leave You!' பாடல். 

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

புது மணத் தம்பதிகள் இதைக் கவனிக்கவும்

 

 தம்பதிகள்

 

ங்கோ பிறந்த இருவரும் இணைவதே திருமண பந்தம்.  தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கு முன்னரே திருமண வாழ்க்கைத் துவங்கி விடுகிறது. விட்டுக் கொடுத்து வாழணும்,   ஒற்றுமையா இருக்கணும், எதிர்த்துப் பேசக்கூடாது என்று புதுமணப் பெண்களுக்கு பல திசைகளில் இருந்து அட்வைஸ்கள் அம்புகளாக வரும். கணவருக்கும் இதேபோல் ஏகப்பட்ட அறிவுரைகள் வந்த வண்ணம் இருக்கும். இதில் எதை எடுத்துக் கொள்ளலாம்? அவற்றுக்கெல்லாம் ஆலோசனைகள் தருகிறார் செங்கல்பட்டு  அரசு மனநலப்பிரிவுத் தலைவர் டாக்டர் அமுதா. 

* எவர் ஒருவருக்கும் நிறை, குறை இருக்கும். அந்த நிறை, குறைகளோடு இருவரும் தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

* பெண்கள் திருமணமாகி கணவர் வீட்டுக்கு புது இடத்துக்கு, புது சூழலுக்கு வருகின்றனர். புது சூழலுக்கு தன்னைப் பழக்கிக் கொள்ள சில காலம் தேவைப்படும். அக்காலத்துக்கு  கணவரும், குடும்பத்தினரும் உறுதுணையாக இருக்க வேண்டும். அதே போல தன் வீட்டுக்கு வருவது ஒரு புதுப் பெண். அவளுக்கு நம்மைப் பற்றி புரிய வைப்பது, அவளைப் புரிந்து கொள்ள முயல்வது நம்முடைய கடமை என்பதை கணவரும், அவருடைய வீட்டினரும் உணர வேண்டும். 

* உங்கள் இருவருக்கும் இருந்த காதல், க்ரஷ் என எல்லாவற்றையும் துணையோடு பகிர வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. அப்படி பகிர்ந்தால்தான் நீங்கள் உண்மையானவர் என்கிற எந்த நியதியும் இல்லை. நம்முடைய பாஸ்ட் லைஃப் என்பது வேறு. அவை நடந்து முடிந்ததாகவே இருக்கட்டும். கையில் கிடைத்திருக்கும் வாழ்க்கையை முழுமையான அர்ப்பணிப்போடு வாழுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

* கணவர் பேசும்போது மனைவியும், மனைவி பேசும்போது கணவரும் என்ன சொல்ல வருகிறார் என்பதை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும். அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு  அமைதியாக, சொல்ல வருகின்ற விஷயத்தை தெளிவாகப் பேசுதல் அவசியம். பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கீடுதல் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, மனதில் என்ன நினைக்கிறார் என்பதை முழுவதுமாக தெரிந்து கொள்ள இயலாமல் போய்விடும்.

* குடும்ப வாழ்க்கை என்பது உறவுகளின் சங்கமம். இதில் பெண்கள் கணவர் மட்டும் போதும் என நினைப்பதோ, கணவர் மனைவி மட்டும் போதும் என நினைப்பது தவறு. குடும்பத்தினரின்  உறவும் அவசியம். இரு வீட்டு குடும்பத்தினரையும் நிறை, குறைகளோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். உறவுகளைப் பற்றி ஒருவரிடம், மற்றவர் புகார் சொல்லிக் கொண்டே இருக்கக்கூடாது. ஒவ்வொரு உறவுகளிடம் இருக்கின்ற பாசிட்டிவைப் பார்க்க வேண்டும். நெகட்டிவ் கேரக்டரை எப்படிச் சமாளிக்கலாம் என மனதில் கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

* கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும். மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என எந்தவித எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. அந்த எதிர்ப்பார்ப்புப்படி தம்பதியினர் இல்லாதபோது வாழ்க்கையே வீணாகிப் போனதாக கவலை கொள்வதுண்டு. இது தவறு. ஒருவரையொருவர் முடிந்தவரை புரிந்து நடந்து கொள்ள  வேண்டும்.

* சிலர் ஓவராக விட்டுக் கொடுக்கிறோம் என்ற பெயரில் விருப்பு, வெறுப்பு என அனைத்தையும் விட்டுக் கொடுத்து விடுவார்கள். ஒரு கட்டத்தில் விட்டுக் கொடுப்பதாலேயே  மனஉளைச்சலுக்கு  உள்ளாவார்கள். விருப்பு, வெறுப்புகளை துவக்கத்திலேயே வெளிப்படுத்தி, தெரியப்படுத்த வேண்டும்.

* திருமணத்துக்கு முன்னர் தம்பதியினர் இருவருக்கும் காதல் கதை இருந்திருக்கலாம். அதனை ஒருவரிடம் மற்றவர் சொல்ல வேண்டிய அவசியமில்லை. துவக்கத்தில் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக்  கொள்பவர்கள்  சில நாட்கள் கழித்து அதைப் பற்றி வேறு விதமாக சிந்திக்கலாம். அதனால் தேவையான விஷயங்களை மட்டும் பகிர வேண்டும்.

* திருமண வாழ்வில் நுழைந்ததும் தம்பதியினர் தங்கள் லட்சியத்தை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் லட்சியம் என்ன? நீங்கள் தொடர்ந்து படிக்கப் போகிறீர்களா?  வேலைக்கு  செல்லப் போகிறீர்களா? அதற்கு ஒருவருக்கொருவர் எவ்வகையில் துணை நிற்க முடியும் என்பதை பற்றிப் பேச வேண்டும். ஆனால் அதெல்லாம் திருமணமான அன்றே பேச வேண்டும் என்பதில்லை. மெதுமெதுவாக ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது உங்கள் முடிவை தெளிவாக சொல்லுங்கள்.   

* நட்பு வட்டம், பண விஷயங்களில் எந்த ஒளிவு, மறைவின்றி இருவரும் இருத்தல் வேண்டும். இல்லையென்றால் ஒருவர் மீது ஒருவர் தேவையற்ற சந்தேகம் ஏற்பட வழி வகுக்கும்.

* திருமணமாகி விட்டால் பெண்கள் தங்களின் பிரண்ட்ஷிப் மற்றும் ஹாபியை விட்டுவிட வேண்டும் என அவசியமில்லை. அதைத் தொடரலாம். அதே போல் கணவரின் பிரண்ட்ஷிப், ஹாபிக்களுக்கும்  மதிப்பளியுங்கள்.

* வாழ்வின் வெற்றியே கிவ் அண்டு டேக் பாலிசி தான். அதாவது விட்டுக் கொடுத்து வாழ்வது. இதில் விட்டுக் கொடுப்பது என்பது சமமாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து அதை ஒரு பழக்கமாக்கிக் கொண்ட பிறகு, அதை மாற்ற முயல்வது கடினம்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

டொனால்டு டிரம்ப் கார் விற்பனைக்கு! அதில் என்ன ஸ்பெஷல்? விலை என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்ட Cadillac One கார் விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த காலத்தில் அவர் பயன்படுத்திய 1988-ம் ஆண்டைச் சேர்ந்த Cadillac Limousine, தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

Cadillac Trump என அழைக்கப்படும் இந்த கார், இங்கிலாந்தில் உள்ள குளொசெஸ்டர் நகரத்தைச் சேர்ந்த Craig Eyre எனும் கார் டீலரிடம் இருக்கிறது. Cadillac நிறுவனம், இது போல 50 கார்களைத் தயாரிக்க முடிவு செய்தபோது, அவை அனைத்தையும் டிரம்ப் வாங்கும் ஆர்வத்தில் இருந்தார். என்ன நடந்ததோ தெரியவில்லை, வெறும் இரண்டு Limousine கார்களை மட்டுமே Cadillac தயாரித்தது. இதனாலேயே ஸ்பெஷல் அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது இந்தக் கார்.

டிரம்ப் பயன்படுத்திய கார்

டிரம்ப் பயன்படுத்திய கார்

Cadillac மற்றும் Dillinger/Gaines எனும் கோச்சுகளை வடிவமைக்கும் நிறுவனம் இணைந்து, டிரம்ப்பின் மேற்பார்வையில், இதனை வி.ஐ.பி-களுக்கான காராக வடிவமைத்துள்ளன. அப்போதைய Cadillac நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்த ஜான் க்ரெட்டன்பெர்கர் (John Grettenberger) என்பவரிடம், ''ஒரு சிறந்த Limousine காருக்கான டிஸைனை, Cadillac நிறுவனம் வெளியிட விரும்புகிறேன். அதில் அதிக ஹெட்ரூம் மற்றும் ஒருவர் எதிர்பார்க்கும் வசதிகள் அனைத்தும் இருக்க வேண்டும்'' என டிரம்ப் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் வெளிப்பாடாக, கடந்த நவம்பர் 1987-ல் நடைபெற்ற Las Vegas Limousine & Chauffeur Show-வில், இப்படிப்பட்ட Limousine காரைத் தயாரிக்கப் போகிறோம் என்பதை அறிவித்த Cadillac நிறுவனம், அடுத்ததாக ஜனவரி 1988-ல் நடைபெற்ற Atlantic City Limousine & Chauffeur Show-வில் காட்சிபடுத்தியது Cadillac நிறுவனம். ஆக வெறும் இரண்டு மாதத்தில், டிரம்ப் கேட்டபடியே Golden Series and Executive Series-ல் Limousine காரைத் தயாரித்து அசத்திவிட்டது Cadillac நிறுவனம்.

டொனால்டு டிரம்ப்

Cadillac Trump கார், 1980-களில் இருந்த டிஸைன் கோட்பாடுகளின்படி இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. கிரோம் பார்களால் ஆன கிரில், ஸ்டீலால் ஆன காரின் பக்கவாட்டுப் பகுதியில் உள்ள கதவு பில்லர்கள், கூடுதல் ஹெட்ரூமுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ரூஃப் பகுதி, Gold Lined டயர்கள் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த Golden Series காரின் உற்பத்திச் செலவைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. அதிக இடவசதிக்காக நீட்டிக்கப்பட்ட கேபினில் இத்தாலிய லெதரால் ஆன இருக்கைகள், Wool கார்பெட், Rosewood பேனல்கள், தங்க இழைகளால் ஆன டிரம்ப் பிராண்டிங் ஆகியவை, தற்போதைய அமெரிக்க அதிபரின் விருப்பத்துக்கு ஏற்ப இடம்பெற்றுள்ளன.

டொனால்டு டிரம்ப்

அந்த காலத்தில் அதிகபட்ச தொழில்நுட்பங்களாக இருந்த தொலைநகல் இயந்திரம் (Fax Machine), காகிதத்தை மெல்லிய பட்டைகளாக அறுக்கும் இயந்திரம் (Paper Shredder), வீடியோ கேசட் ரெக்கார்டிங் (VCR), NEC செல்ஃபோன், மதுபானம் மற்றும் குளிர்பானங்களை வைப்பதற்காக ஃபைபர் போர்டால் தயாரிக்கப்பட்ட பகுதி (Drinks Dispenser Cabinet) ஆகியவற்றுடன் அசத்தலாக இருக்கிறது Cadillac Limousine. இதைப் பற்றி டிரம்ப் கூறியதாவது, ''தரம் என்ற வார்த்தைக்கு அர்த்தம், இந்த காரைப் பார்க்கும்போதே தெரிகிறது. எல்லா வசதிகளும் இருக்கும் இப்படிப்பட்ட காரை, முதன்முதலாக வைத்திருப்பதில் பெருமைப்படுகிறேன். ஏனெனில் நான் அதற்கு தகுதியானவன்(!)'' என உற்சாகமாகப் பேசியிருக்கிறார். 

டொனால்டு டிரம்ப்

இந்த வகை கார்களுக்கே உரித்தான கறுப்பு நிறத்தைத்தான், Cadillac Limousine காரும் கொண்டிருக்கிறது. இதன் இழுவைத் திறனுக்காக, 5.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. டிரம்ப் இந்த காரை சில காலமே தன்வசம் வைத்திருந்தார். அவரையும் சேர்த்து, இதுவரை ஐந்து பேர் இந்த காரின் உரிமையாளர்களாக இருந்திருக்கிறார்கள். தற்போது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க  Cadillac Limousine காரின் உரிமையாளராக இருப்பவர், 10 ஆண்டு காலம் இதனைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் ஏலத்துக்கு வரத் தயாராக இருக்கும் இந்த கார், டிரம்ப் அடைந்திருக்கும் உயரத்தை வைத்துப் பார்க்கும்போது, எப்படிப் பார்த்தாலும் £ 50,000 மேலான ஆரம்ப விலையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது; அதாவது இந்திய மதிப்பில் சுமார் 42 லட்ச ரூபாய்! 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

கெட்சப் பாட்டிலை முழுசாக காலி செய்ய ஒரு வழி

கெட்சப், பற்பசை போன்றவற்றை அவற்றின் பாட்டில்களில் இருந்து ஒரு துளிவிடாமல் முழுமையாக வெளியே எடுக்க உதவும் "வழுக்கு திறன்" கொண்ட பாட்டில்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

குழந்தைகளுக்கு இன்று எல்லா மீன்களும் ஃபிஷ் தான்! - அறிவுமதி ஆதங்கம்! #InternationalMotherLanguageDay #MustRead

குழந்தைகளுக்கு

ன்று உலக தாய்மொழி தினம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் போல முக்கியமானது, தாய்மொழி. உலக அரங்கில் தமிழினம் (குறிப்பாக ஈழத்தமிழர்), சீனர்கள் மற்றும் யூதர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தங்களது தாய்மொழி குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். நார்வே, கனடா, ஜெர்மென் உள்ளிட்ட நாடுகளில் வார விடுமுறை நாட்களான சனிக்கிழமைகளில் பள்ளிகளில் பெற்றோரே ஆசிரியார்களாக மாறி, தங்களது குழந்தைகளுக்குத் தாய்மொழியை கற்பிக்கின்றனர். குழந்தைகளோடு பேசும்போது, தாய்மொழியில் பேசுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் குழந்தைகள் தமிழ் பேச முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றனர். உலக தாய்மொழி தினமான இன்று, நாம் ஏன் நம் குழந்தைகளுக்கு தாய்மொழியை கற்பிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோமா!

தாய்மொழி

நம் குழந்தைகளுக்கான தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து கவிஞர் மற்றும் பாடலாசிரியர் அறிவுமதி கூறுகையில், “சோவியத் நாட்டில் 'அவார்' என்ற தாய்மொழி உடைய இனம் உள்ளது. தாய்மொழிப் பற்றில் உணர்வுகளையும் அறிவுபூர்வமான சிந்தனைகளையும் பதிவுசெய்கிற இனம் அது. அந்த மொழியை சேர்ந்த கவிஞர் ஒருவர் இப்படிப் பதிவுசெய்கிறார், 'எனது தாய்மொழியான அவார் நாளை இறந்துவிடுமானால், நான் இன்றே இறந்துவிடுவேன்.’ அங்கு திட்டுகிறபோதும், 'நாளை உனது குழந்தைக்குத் தாய்மொழியைக் கற்றுத்தருகிற ஆசிரியர் கிடைக்காமல் போகட்டும்' என திட்டுவதுண்டு. வசவில்கூட தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிற இனம் அது. உலக தாய்மொழி தினம் எனும்போது ஒரு மொழிக்கான தினம் மட்டுமன்று. அந்தந்த இனம் தனது தாய்மொழியை கொண்டாட வேண்டும். ஆனால், உலகின் வணிகமயம் தாய்மொழிகளைக் கொன்று தனது வணிகத்தை செழிக்கச் செய்ய போராடுகிறது. உலகம் எங்கும் ஒரு மொழி என்ற பட்டைத் தன்மைக்கு நம்மை இழுத்தும் செல்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பொருளை விளம்பரம் செய்ய, அந்த மாநிலத்தை சேர்ந்த நடிகர் பயன்படுத்தப்பட்டிருப்பார். இன்று ஒரு விளம்பரத்தில் இந்தி நடிகர் ஒருவர் நடிக்கிறார் என்றால், அவரே அனைத்து மொழிகளிலும் நடித்துவிடுகிறார். இதன் மூலம் ஒவ்வொரு மாநில நடிகரும் பெறவேண்டிய வருவாயை, அவர் ஒருவரே அறிவுமதிபெற்றுக்கொள்கிறார். இன அடையாளத்தை முகங்களில் தேடிய நாகரிகம் இப்போது மாறியுள்ளது. இன்றைக்கு கான்வென்டில் படிக்கிற குழந்தையின் முன்பு, சில மீன் வகைகளை வைத்து என்னவென்று கேட்டால், ‘பிஷ்’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே சொல்லும். ஐந்தாம் வகுப்பு வரை தமிழில் படித்த குழந்தைகள்தான் அயிரை, கெண்டை, கெழுத்தி என மீன்களுக்கான பெயர்களைச் சொல்லும். தாய்மொழி என்பது உணர்வோடு சம்பந்தப்பட்டது. அது பன்முகத் தன்மைகொண்டது.

உலக அளவில் உளவியல், நரம்பியல் நிபுணர்கள் தாய்மொழியில் கல்வி கற்பதே குழந்தைகளுக்குச் சரியானது என்கின்றனர். சமூக உணர்வுகளை தாய்மொழியில் இருந்துதான் கற்றுக்கொள்ள முடியும். தாய்மொழியில் எழுதப்பட்டிருக்கும் பாடலோ, கதையோ, அந்த மக்கள் வாழும் சமூச்சூழலையும், பண்பாட்டையும் கொண்டிருக்கும். தாய்மொழியில் படிக்கும்போதுதான் குழந்தைகளின் மூளைக்குள் பண்பாடு சார்ந்த விஷயங்கள் உள்வரும். நம் தமிழ் மொழியில்தான் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்கிறோம். ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற சிந்தனை நம் மொழியில் உள்ளது. ஆங்கில மொழியில் 'மாந்தநேயம்' என்ற ஒரு சொல்தான் உள்ளது. அந்த மொழி மனிதர்களை மட்டும்தான் நேசிக்கக் கற்றுத்தருகிறது. ஆனால், நம் தமிழ் மொழியில் 'உயிர் நேயம்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுத்துகிறது. தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்பது நமது மொழியில் சேமிக்கப்பட்டுள்ள பண்பாடு.

செடி, கொடி, எரும்பு எல்லாவற்றையும் நேசிக்கக் கற்றுத்தருகிறது. அப்படி நேசிக்கும்போதுதான் உயிர்ச் சங்கிலி அறுந்துவிடாமல் நாம் வாழும் இயற்கையைப் பாதுகாக்க முடியும். வணிகச் சிந்தனைகொண்ட அந்த நாடுகள், தங்களது உற்பத்திப் பொருள்களை மனிதர்களிடம்தான் வணிகம் செய்ய முடியும். அதனால், அவர்கள் மனிதநேயம் என்று சொல்கின்றனர். தாய்மொழிச் சிந்தனை உலகத்துடன் ஒத்து வாழும் உணர்வைக் குழந்தைகளுக்கு ஊட்டுகிறது. தான் வாழும் இடத்தின் சூழலை, மரங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை, அந்தந்தத் தாய்மொழில் இருக்கும். தமிழ் இலக்கியத்தில் வரும் காட்சி இது, கடற்கரையில் நிலா வெளிச்சத்தில் தேர் ஓட்டுகிறான். அவன் தன் தேர் பாகனிடம், 'கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான நண்டுகள் உலவுகின்றன. ஒரு நண்டுகூட நசுங்கிவிடாமல் தேரை ஓட்ட வேண்டும்' என்று சொல்கிறான். நண்டுகள் இறந்துவிடக் கூடாது. ஒரு நண்டு இறந்தாலும் இயற்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அறிவும் சேர்த்தே மொழியின் வழியாக நம் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது.

தாய்மொழி, அசங்க இலக்கியத்தில் மரம் வெட்டினான், காடுகளை வெட்டினான் என்று சொல்லப்படவில்லை. மரம் கொன்று, காடு கொன்று என்று சொல்லப்பட்டுள்ளது. அதை ஓர் உயிராகப் பார்க்கும் தன்மை தாய்மொழியில் உள்ளது. தன் முன்னோர்களை உள்வாங்கியே குழந்தைகளால் தனது பண்பாட்டைக் காப்பாற்ற முடியும். உலகத்தின் இயற்கைச் சக்கரத்தில் தமிழ் அழிக்கப்பட்டால், ஒரு பல் உடையும். கர்நாடக மொழியை அழித்தால், இன்னொரு பல் உடைந்துவிடும். இப்படி எந்தத் தாய்மொழியின் இழப்பாக இருந்தாலும் அது, அந்தந்த இனத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பேரிழப்பே.

மனிதர்கள் இல்லாத உலகத்தில் பறவைகள் வாழ்ந்துவிடும். ஆனால், பறவைகள் இல்லாத உலகத்தில் மனிதர்களால் வாழவே முடியாது. ஆங்கிலம் இல்லாத உலகத்தில் மனிதர்கள் வாழ்ந்துவிட முடியும். ஆனால், தமிழை அழித்த உலகம் வெகு விரைவில் இறந்துவிடும். என் தமிழ் மொழி ஒரு மூலிகைச் செடி. எல்லோரையும் நேசிக்கச் சொல்லித்தருவது தமிழ் மொழி. உலகத்துக்காக சிந்தித்த மொழி. எல்லாரையும் உறவு என்று சிந்திக்கச் சொல்லித்தருகிறது. தமிழன் வணிகத்தால் சிந்திக்காதவன். வாழ்க்கையால் சிந்திப்பவன். ஆனால், இவன் இப்போது பெரிய நெருக்கடியில் இருக்கிறான். 

 வணிகமயத்தின் இறக்கமற்ற, கொடூரமான கரங்கள், இவனுடைய தாய்மொழியைக் கொத்திட்டுப் போக முயல்கின்றன. உலகம் முழுவதுமே அத்தனை இனங்களுக்கும் இந்த நெருக்கடி உள்ளது. ஒருவன் அழியும்போது ஒரு தாய்மொழி இறந்துவிடும் எனில், அந்த மொழியையும் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது. தாய்மொழியைக் காப்பாற்ற நம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. நமது குழந்தைகள் தாய்மொழியில் படிக்கும்போதுதான் நமது பண்பாட்டை உணர்ந்து வாழ முடியும். சமூகத்தில் இன்று நடக்கும் பல்வேறு மனித முரண்பாடுகளுக்கு தாய்மொழிச் சிந்தனை மற்றும் பண்பாட்டை விட்டு விலகியதுதான் காரணம். ஒவ்வோர் அம்மாவும் தனது தாய்மொழியைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டியது அடிப்படைக் கடமை’’ என்கிறார் அறிவுமதி.  

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

தன்னைத் தானே திருமணம் செய்யவுள்ள பெண்

பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் செய்துகொள்வற்கு பொருத்தமான மணமகன் கிடைக்காத நிலையில், தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாகக் கூறுகிறார்.

woman-marry

 லின் கொலோக்லி எனும் இப் பெண் இங்கிலாந்தின் யோர்க்ஷயர் பிராந்தியத்திலுள்ள ரொதர்ஹாம் நகரில் வசிக்கிறார்.

தனக்கு 39 வயதாகிவிட்ட போதிலும் திருமணம் செய்வதற்குப் பொருத்தமான மணமகன் கிடைக்க வில்லை என இவர் கவலை கொண்டுள்ளார்.

இந்நிலையில், தன்னைத்தானே திருமணம் செய்து கொள்வதற்குத் தான் திட்டமிட்டுள்ளதாக லின் கொலேக்லி கூறுகிறார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் தனது 40 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும்போது தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வதற்கு தான் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“மணமகனும் நானே, மணமகளும் நானே” என்ற நிலையிலும்  இத்திருமண வைபவத்தை எளிமையாக நடத்துவதற்கு அவர் முயற்சிக்கவில்லை.

இத்தாலியின் ரோம் நகரில் ஆடம்பரமாக இத் திருமண வைபவத்தை நடத்தவுள்ளதுடன் இதற்காக திருமண ஆடை அணிகலன்களை வாங்கியுள்ளார்.

தனியாக தேனிலவு செல்வதற்காக இரகசிய இடமொன்றை முன்பதிவு செய்துள்ளதாகவு

http://metronews.lk/

Link to comment
Share on other sites

42 ஆண்டு காதல்; 90 வயதில் திருமணம்

தெருவில் உணவின்றித் திரிந்த வறிய இளைஞரை 42 ஆண்டுகள் காதலித்து 90 வயதில் மணமுடிக்கும் சீமாட்டியின் கதை.

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 22
 
 

article_1456118565-11-dolly2-pa.jpg1819: புளோரிடா பிராந்தியத்தை 50 லட்சம் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஸ்பெய்ன் விற்பனை செய்தது.

1882:  சேர்பிய  இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட்டது.

1924: அமெரிக்க ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ், வெள்ளை மாளிகையிலிருந்து வானொலியில் உரை நிகழ்த்திய முதலாவது   அமெரிக்க ஜனாதிபதியானார்.

1948: செக்கஸ்லோவாக்கியாவில் கம்யூனிஸ புரட்சி ஏற்பட்டது.

1958: எகிப்து, சிரியா ஆகியன ஐக்கிய அரசு குடியரசில் இணைந்தன.

1974: பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்ற இஸ்லாமிய அமைப்பு மாநாட்டு அமைப்புக் கூட்டத்தில் 37 நாடுகள் பங்குபற்றின. பங்களாதேஷை அவ்வமைப்பு அங்கீகரித்தது.

1974: அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஷனை சாமுவேல் பைக் என்பவர் கொலை செய்யும் முயற்சி தோல்வியுற்றது.

1979; பிரிட்டனிடமிருந்து சென் லூசியா சுதந்திரம் பெற்றது.

1997: டோலி எனும் ஆடு குளோனிங் முறையில் பிரதியாகக்கம் செய்யப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்டது.

2002: அங்கோலாவின் அரசியல் தலைவர் ஜொனாஸ் சவிம்பி இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.

2002: இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வவுனியாவில் கைச்சாத்திடப்பட்டது.

2006: பிரித்தானியாவின் சரித்திரத்தில் மிகப் பெரும் கொள்ளை கெண்ட் நகரில் இடம்பெற்றது. £53 மில்லியன் பணத்தை அறுவர் சேர்ந்து கொள்ளையிட்டனர்.

2011: நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 183 பேர் பலி

http://www.tamilmirror.lk/

Link to comment
Share on other sites

எதிர்மறை எண்ணங்களைத் தகர்த்தெறிய சில வழிகள் ... #MotivateYourSelf

 

MotivateYourSelf

ஒவ்வொரு செயலுக்கும் இன்னொரு எதிர்வினை இருக்கும். அது, நல்லதாகவும் இருக்கலாம்; கெட்டதாகவும் இருக்கலாம். இப்ப, நியூட்டன் ஞாபகத்துல வர்றாரா? ''For every action there is an equal and opposite reaction'' என்று ஒன்பதாம் வகுப்பில் படித்திருக்கிறோமே, அதுதாங்க. ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும், அதைச் செய்யலாமா வேண்டாமானு குழப்பமாக இருக்கும். ''லவ் பண்ணலாமா, வேண்டாமா?'' என்பதுபோலத்தான் இதுவும். இந்த ‘வேண்டாம்’ என்று சொல்லும் எதிர்மறை எண்ணம் இருக்கு பார்த்தீங்களா, அதை எப்படி அகற்றலாம்னு நாம யோசிப்போம். அப்படி அகற்றணும்னு நீங்க யோசனை செய்தவர்களாக இருந்தால், இதைப் படிச்சாலே போதும்… முதல் படியைத் தொட்ட மாதிரி....   

MotivateYourSelf

•    எப்போதுமே நல்ல செயல்கள் நடந்துகொண்டிருக்கிறதென்றால், அதை அதன் பாட்டுக்கு விட்டுட வேண்டும். அப்படி விடும்போது, நம்முடைய உள்மனதில் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அது என்ன சொல்லும்னு, என்னைவிட உங்களுக்கே தெரியும். நல்லதைக் கெடுப்பதற்கென்றே அது பேசும். அப்படி அது பேசுவதை எல்லாம் நாம் காது கொடுத்துக் கேட்காமல், நமக்கு நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்பட்டு வருகிறோம் என்றாலே, கொஞ்சம் பெட்டரா இருக்கும். 

•    அந்த உள்மனம் பேசுகின்ற எதிர்மறைச் சொற்களுக்கு எதிரா, நீங்க எதையாவது செய்துபாருங்களேன். அது தானாகவே... கொஞ்சம் கொஞ்சமா அடங்கிவிடும். 

MotivateYourSelf

•    ஒரு குறிப்பிட்ட சொற்களை நீங்கள் அதிகம் பேசுவீர்கள். அதைக் கொஞ்சம் உல்டாவாக்கிப்பாருங்கள். அதாவது, என்னால் முடியாது; மாட்டேன், நடக்காது, வேண்டாம் என இப்படிப் பேசுவதையெல்லாம் கொஞ்சம் பாசிட்டிவாக மாற்றிப்பாருங்களேன். அந்த எதிர்ச் சொற்கள் எல்லாம் காணாமல்போய்விடும். 

MotivateYourSelf

•    எதையும் பிளான் செய்து செயல்படுத்த வேண்டும். நாம், பிளான் இல்லாமல் ஒரு செயலைச் செய்தால், இந்த எதிர்மறை எண்ணம் இருக்குப் பாருங்க... அது, போதும் விட்டுடுணு முட்டுக்கட்டை போடும்; அப்புறம் நாம அதை ஃபாலோ பண்ண நேரிடும். அதனால், எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்தால், அதைத் தொடர்ந்து நடக்கும் செயல்களும் சிறப்பாக முடிவடையும். அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியில் நீங்கள் மூழ்கிப் போவீர்கள் என்பதே நிதர்சனம். 

•    சத்தமாகப் பேசப் பழகிக்கொள்ளுங்கள். அதற்காக நடு ராத்திரியில் எழுந்து கத்தக் கூடாது; வெளியில் ஒரு சிலவற்றை சத்தமாகப் பேசினாலே, நமக்குள்ளே சன்னமாகப் பேசுகின்ற அந்த எதிர்மறைக் குரல் காணாமல் போய்விடும்.  பாசிட்டிவ் எண்ணத்தைக்கொண்டு, நெகட்டிவ் எண்ணத்தை நீங்களே சுயமாக முறியடிக்க முடியும். அதற்கு ஒரு தூண்டுகோலாக, உங்கள் கான்ஃபிடெண்ட்டான பேச்சு இருக்கும்.

MotivateYourSelf

•    உங்கள் எண்ணம், முழுமையான நீங்களில்லை; அது, உங்களது வெற்றிக்கான ஒரு தூண்டுகோல்தான்; எனவே, அதனை நல்லதாக வைத்துக்கொள்ளுங்கள். பிறரது எண்ணங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதுபோல, நம்முடைய எண்ணத்தையும் பிறரால் கட்டுப்படுத்த முடியாது. அதனால், நம்மை, நம் எண்ணங்களை நாம்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். எனவே, உங்கள் எதிர்மறைகளை, மனசுக்கு ஆதரவு தரும்படி மாற்றினால், உங்களுக்கு அதைவிட பெஸ்ட் ஃபிரெண்டு யாராகவும் இருக்க முடியாது.

ரொம்ப சிம்பிள்தான்... வெற்றிக்கான வழிகள் எல்லாமே சிம்பிளாதான் இருக்கும் பாஸ்!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

உலக அழிவுக்கு சிக்னல்கொடுக்கும் ஆப்பிரிக்க 'ஹைனா'க்கள்!

நள்ளிரவு நேரம். ஊர் அடங்குகிறது. ஊரைச் சுற்றியிருக்கும் காடுகளிலிருந்து பதுங்கிப் பதுங்கி ஒவ்வொன்றாக மெதுவாக வெளியேற ஆரம்பிக்கின்றன, 'ஹைனா'க்கள் என்று சொல்லப்படும் கழுதைப் புலிகள். மிரட்டும் கண்கள், கொடூரமான பற்கள், ஆக்ரோஷமான முகம் என இருந்தாலும், வழக்கமான கழுதைப்புலிகளிடம் இருக்கும் ஒரு வேட்கை, கம்பீரம் இந்த ஹைனாக்களிடத்தில் இல்லை. காட்டில் வாழ்ந்தாலும், காட்டு வாழ்க்கையின் இயல்புகளை அவை இழந்திருந்தன. 

ஹைனா

ஆப்பிரிக்காவிலுள்ள எத்தியோப்பியாவின் ஹாரார் நகரத்தின் கிழக்கிலிருந்து ஒரு ஹைனாக் கூட்டம் ஊருக்குள் புகுகிறது. அதேபோல வடக்கிலிருந்தும். கூர்மையான பற்களுக்கிடையிலிருந்து நீளமான நாக்கு தொங்கிக்கொண்டிருக்கிறது. மஞ்சள் உடையணிந்த அந்த நபர், கையில் ஒரு பாத்திரத்துடன் வருகிறார். அவரைத் தொடர்ந்து, சில வெள்ளையர்கள் பெரும் பரவசத்தோடு வருகிறார்கள். அந்த பச்சை மாமிசத்தை அவர் ஹைனாக்களுக்குத் தூக்கி எறிகிறார். வெள்ளையர்கள் பணம் கொடுத்து அதைப் படமெடுத்துக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில், அந்த மஞ்சள் சட்டைக்காரன் மாமிசத்தைத் தன் வாயில் வைத்துக் கடித்தபடியே, ஹைனாக்களிடம் செல்கிறான். அவன் வாயிலிருக்கும் மாமிசத்தைத் தாவிக்குதித்து, கவ்வி இழுத்து உண்கிறது ஹைனா. சுற்றியிருப்பவர்கள் கைதட்டிக் கொக்கரிக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் சிலருக்கு பயமாக இருக்கலாம், சுவாரஸ்யமாக இருக்கலாம், சிரிப்பாக இருக்கலாம். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக இது ரொம்பவே சிந்திக்கவேண்டிய, வருந்தவேண்டிய விஷயமாகவே இருக்கிறது. காரணம், இது இயற்கையின் விதி மீறல்.
பொதுவாக, ஹைனாக்கள் என்பது பிற மிருகங்களால் வேட்டையாடப்பட்ட உயிரினங்களை உண்ணும் துப்புறவாளர்கள் (Scavengers) என்றே பெரும்பாலும் நம்பப்படுகிறது. ஆனால், ஹைனாக்கள் சிறந்த வேட்டைக்காரர்களும்கூட. தங்கள் உணவில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் அவை சுயமாக வேட்டையாடுகின்றன. 60 கி.மீ வேகத்தில் ஓடும் திறன் பெற்றவை. வேட்டையாடுவதற்கான மிக நுட்பமான வியூகங்களை அமைத்து, வேட்டை மிருகத்தின் ரத்த நாளங்களைக் கடித்துக்கொன்று இரையாக்கும் பழக்கம் கொண்டவை. ஆண்களைவிட, பெண் ஹைனாக்கள் வலிமைபொருந்தியவை. அதன் ஊளைச் சத்தம் 5 கி.மீ தூரம் கேட்கும். 

ஆனால், ஹாரார் பகுதியிலிருக்கும் ஹைனாக்களிடம் இந்த இயல்புகள் மாறுபட்டிருக்கின்றன. இரைக்காக வேட்டையாடும் நோக்கம் தொலைந்து, இறைச்சிக்காகக்  கையேந்தும் நிலைக்கு அவைகள் தள்ளப்பட்டிருக்கின்றன. ஹாரார் பகுதி காடுகளில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஹைனாக்கள் வாழ்ந்துவருகின்றன. அவை, ஒருபோதும் நகருக்குள் நுழைந்ததில்லை. இந்தத் தலைமுறையில் மக்கள் தொகை அதிகரிக்க, நகரம் விரிவடைய, காடுகள் அழிக்கப்பட அவ்வப்போது நகருக்குள் வலம் வர ஆரம்பித்தன ஹைனாக்கள். 1960-களில் ஹாரார் நகர விவசாயி ஒருவர்,  தன் பொருட்களை அவைகள் வேட்டையாடாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில்,  மாமிசத்தைக் கொடுக்க ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து, அவரின் பிள்ளைகள். கொஞ்ச காலத்தில் அது ஊர் முழுக்கப் பரவியது. இந்தப் பழக்கம், வேறு சில மூட நம்பிக்கைகளுக்கு வித்திட்டது. 

ஹாரார்

வருடத்துக்கு ஒரு முறை கொண்டாடப்படும் "அஷுரா" என்ற பண்டிகை நாளில், ஹைனாக்களுக்கு  வெண்ணெய் கலந்து தயாரிக்கப்பட்ட கஞ்சியைப் படைப்பார்கள் உள்ளூர் மக்கள். ஹைனாக் கூட்டத் தலைவி  முதலில் வந்து, பாதியளவுக்கேனும் அதைக் குடித்தால், அந்த வருடம் ஹாரார் மக்களுக்கு செழிப்பாக இருக்கும் என்று நம்புகிறார்கள். மேலும், ஹைனாக்கள் 'ஊ...வூ...ப்ப்ப்' என்று  ஊளையிடும். இதில் "ஊ...வூ..." எனும்போது கண்ணுக்குத் தெரியாத பிசாசுகளை அவை கொல்வதாகவும், "ப்ப்ப்..." எனும் ஒலியின்போது அந்தப் பிசாசுகளை ஹைனாக்கள் தங்கள் வயிற்றுக்குள் கொண்டுபோகின்றன என்றும் நம்புகிறார்கள். 

இந்த மூட நம்பிக்கைகள், ஹாராரில் ஒரு பெரும் வணிகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. பல வெளிநாட்டவர் ஹைனாக்களை அருகிலிருந்து போட்டோக்கள் எடுப்பது, அவைகளுக்கு உணவளிப்பது போன்ற விஷயங்களுக்காக ஹாராருக்கு வருகிறார்கள். அவர்களுக்கான தங்கும் விடுதிகள், உணவகங்கள், அவர்களை ஹைனாக்களிடம் அழைத்துச்செல்லும் கைடுகள் என ஹாராரில் ஹைனாவைச் சுற்றிய வணிகம் வளர்ந்துள்ளது. 

மண்ணில் ஊறும் புழுவில் தொடங்கி, வானில் பறக்கும் கழுகு வரை அவைகளுக்கேற்ற இயல்புகளை இயற்கை வடிவமைத்திருக்கிறது. அதை மீறும் இடங்களிலெல்லாம் இயற்கையின் இடர்பாடுகள் அதிகரிக்கவே செய்யும். ஹாராரின் ஹைனாக்கள் செய்தியையும், ஹாராரில் கடந்த 15 ஆண்டுகளாக நிலவிவரும் கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தையும், நகரில் ஏற்பட்டிருக்கும் கடுமையான கூட்ட நெரிசலையும் 'கேயாஸ் தியரி' இல்லாமலேயேகூட  இணைத்துப் பார்க்க முடியும். 

ஹைனா

ஏனோ ஹாராரின் ஹைனாக்களைப் பற்றி எழுதும்போது, நம் ஊட்டி, கொடைக்கானல், ஒகனேக்கல் போன்ற பகுதிகளிலிருக்கும் குரங்குகள் என் ஞாபகத்துக்கு வருகின்றன. குரங்குகள் மரம் ஏறும், கிளைகள் தாவும், பழம் சாப்பிடும், காட்டுக்குள் இருக்கும் என்பதைச் சொன்னால், இந்தத் தலைமுறைக் குழந்தைகள் சிரிக்கிறார்கள். குரங்குகள் ரோட்டில் உட்காரும், சிப்ஸ் சாப்பிடும், பெப்ஸி குடிக்கும், பிச்சை எடுக்கும் என்பதை உறுதியாக நம்புகிறார்கள் அவர்கள். அல்லது நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். குரங்குகளும் தங்கள் பழைய வாழ்வை மறந்து, தலைமுறைகள் கடந்துவிட்டன.

ஹாரார் ஹைனாக்களின் நிலை, இந்தியக் குரங்குகளின் நிலை, தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம், தலை உடைக்கும் வெயிலின் தாக்கம் போன்ற நிகழ்வுகளையும், உலக வெப்பமயமாதல், இயற்கைப் பேரிடர்கள் போன்ற அழிவுகளையும் நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்க முடியும். 

இயற்கை விதிமீறல், மனிதப் பிறழ்!!!

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் அவசியம் பார்க்க வேண்டிய 8 கோயில்கள்! #PhotoStory

இந்திய  ஆன்மிகத்தின் உயர்வையும்  புனிதத்தையும் அமெரிக்காவில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே, சுட்டிக்காட்டினார் சுவாமி விவேகானந்தர். அவரின் வழிகாட்டல் எனும் விதையில், இந்திய வம்சாவழியைச்சேர்ந்தவர்கள், நம் இந்திய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் எண்ணற்ற கோயில்களை எழுப்பி வழிபட்டுவருகின்றனர். அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.
 சிகாகோ:

சிகாகோ கோயில்


சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு ஆற்றிய புனிதமிகு இம்மண்ணில், சிகாகோவில் வாழும் இந்திய வம்சாவழியினரால்  கடந்த 1977-ம் ஆண்டு லெமன்ட்,பகுதியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த கோயில் தான் இது.

இந்த ஒருங்கிணைந்த இந்து கோயிலில் எம்பெருமான் சிவனுக்கும்,  விஷ்ணுவுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இங்கும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கும்பாபிஷேகத்தை  ஆகம விதிப்படி, தவறாமல் நடத்துகின்றனர்.

இத்தலத்தில் சிவன், பார்வதி மற்றும் ராமர், லஷ்மணன், ஹனுமன் ஆகிய  தெய்வங்கள்  தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

 சான்  அன்டோனியா( San Antonio) ஆலயம்:

ஷான் அன்டோனியா, இந்து திருத்தலம்


அமெரிக்காவின்  டெக்ஸாஸ் மாகாணத்தில், சான் அன்டோனியா நகரத்தில் 'ஹேலோட்ஸ்'மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது இந்த ஆலயம். இந்த ஆலயத்தை நகரின்  மையப்பகுதியில் இருந்து 20 நிமிடங்களில் அடையலாம். இத்தலத்தில் ஶ்ரீ கணேஷ், வெங்கடேஷ்வரா, சிவா, முருகன்,ராமர், அர்த்தநாரீஸ்வரர், ஆஞ்சநேயர் ஆகிய  தெய்வங்கள் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

ட்ராய் (Troy),  பாரதிய கோயில்:

ட்ராய், பாரதிய கோயில்


அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில், ட்ராய் நகரில் கட்டப்பட்டுள்ள, இத்திருக்கோயிலில் ஶ்ரீ கணேசர், ஶ்ரீ வெங்கடேஸ்வரா, ஶ்ரீ சிவா,ஶ்ரீ மீனாட்சி  ஆகிய தெய்வங்களுக்கும் ஶ்ரீ மகாவீரருக்கு சிலை  பிரதிஷ்டை செய்தும் வழிபாடுசெய்கின்றனர். ட்ராய் திருக்கோயில், இந்தியாவில் உள்ள வட இந்திய சிற்பக்கலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது.


வெங்கடேஸ்வரா திருத்தலம்:

வெங்கடேஸ்வரா இந்து திருத்தலம்

 


அமெரிக்காவின்,  வட கரோலினா மாகாணத்தின் 'கேரி'என்னும் நகரத்தில் இந்து ஆகம சாஸ்திரங்களின் படி, அமைந்து இருக்கிறது  ஶ்ரீ வெங்கடேஸ்வரா திருக்கோயில். தரிசிப்பதற்கும்,தியானம் செய்வதற்கும் ஏற்ற பசுமையான பகுதிகளைக் கொண்டபகுதியாகக் காணப்படுகிறது, இத்திருத்தலம்.

ஶ்ரீ மஹா வல்லப கணபதி தேவஸ்தானம்:

மஹா வல்லப கணபதி  ஆலயம்


வடஅமெரிக்காவில், நியூயார்க் நகரில் இருக்கும் இந்து கோயில்களின் கூட்டமைப்பின் சார்பில்  திரட்டப்பட்ட நிதியைக்கொண்டு இக்கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் அனைத்து  திருப்பணிகளும் செய்து முடிக்கப்பெற்று, 1977-ம் ஆண்டு கும்பாபிஷேகம் ஆனது.
இத்தலத்தில் ஶ்ரீமஹா வல்லப கணபதி, ஶ்ரீ வெங்கடேஸ்வரா, ஶ்ரீ மஹாலட்சுமி, ஶ்ரீ  சிவ பார்வதி மற்றும் ஶ்ரீ தக்‌ஷிணாமூர்த்தி ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

கொலாம்பியா, இந்து கோயில்:

கொலாம்பியா, இந்து திருத்தலம்


தெற்கு கரோலினாவில் இருக்கும் இந்து கோயில் மற்றும் கலாசார மையத்தின் சார்பாக, அனைத்து மக்களும் ஒன்றுகூடுவதற்காகவும் மற்றும் விழாக்களைக் கொண்டாடுவதற்காகவும், 1984-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது இத்திருக்கோயில்.
இத்திருத்தலத்தில் ராமர், சீதா, சரஸ்வதி, விஷ்ணு, மற்றும் சிவன் ஆகிய கடவுளருக்குச் சிலைகள் உள்ளன.

ரங்கநாதர் ஆலயம்:

ரங்கநாதர் திருத்தலம்


அமெரிக்க நியூயார்க் நகரில், அஹோபில மத் மடத்தைச் சேர்ந்த 44-வது ஜீயர் அவர்களின் ஜயந்தி விழாவைச் சிறப்பிக்கும் வகையில், 1985-ம் ஆண்டு ஶ்ரீமன் நாராயணருக்கு பிரத்யேகமாக ஆலயம் உருவாக்கத் திட்டமிட்டு, 2001-ல்  அனைத்து திருப்பணிகளும் நிறைவுபெற்ற தலம் தான் இது. இத்தலத்தில் மூலவர்களாக ஶ்ரீ ரங்கநாதர் மற்றும் ரங்கநாயகி ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.

லிவர்மோர், சிவ-விஷ்ணு திருக்கோயில்:

லிவர்மோர், சிவ-விஷ்ணு ஆலயம்


இத்திருக்கோயில் வடஇந்திய  மற்றும் தென்இந்திய  கட்டடக்கலை மற்றும் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.  வடகலிஃபோர்னியா மாகாணத்தில் இந்து சமய வளர்ச்சிக்குப் பயன்படும் ஒரு கருவறையாக இது செயல்படுகிறது.

இக்கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் இருக்கும் சுற்றுச்சுவர்கள் அழகிய கலைநயம் மிக்கவேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

அகதிகளை வரவேற்கும் அமெரிக்க சுதந்திர தேவி

நியூயார்க்கில் அமைந்திருக்கும், மிக உயரமான அமெரிக்க சுதந்திர தேவி சிலையின் அடிப்பகுதியில் போராட்டக்காரர்கள் , 'அகதிகளை வரவேற்கிறோம்' என்ற வாசகங்களைப் பொருத்தினர். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, அந்நாட்டில் இருந்து அகதிகளை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

liberty_statue_16078.jpg

உலகம் முழுவதும் இதற்கு கடுமையான எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கும் நிலையிலும், டிரம்ப் அந்த நடவடிக்கைகளில் உறுதியாக உள்ளார். சிறிய குற்றங்களில் ஈடுபட்ட அகதிகளை நாடு கடத்துவதற்கு அரசாணை பிறப்பித்துள்ளார். இந்நிலையில், நியூயார்க் நகரில் அமைந்துள்ள சுமார் 305 அடி உயர சுதந்திர தேவி சிலையில், 'அகதிகளை வரவேற்கிறோம்' என்ற வாசகங்கள் அடங்கிய பேனரை போராட்டக்காரர்கள் கட்டியுள்ளனர். டிரம்பிற்கு இந்த செய்தியை உணர்த்துவதற்காக, போராட்டக்காரர்கள் இதனை செய்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்குள்ளாக, பூங்கா ஊழியர்கள் அந்த பேனரை நீக்கினர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அம்மா உணவகத்தில் இருந்து ஜெயலலிதா படம் அகற்றம்

Amma unavagam

திருச்சியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இன்று திடீரென அகற்றப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா. இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.

ஜெயலலிதா குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அவரது படத்தை அரசு அலுவலகங்களில் இருந்து எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், திருச்சியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இன்று திடீரென அகற்றப்பட்டுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமியின் அதிர்ச்சி ட்வீட்

subramanyan_samy_308_15191.jpg

சென்னைக்குள் ஆறு ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜென்டுகள் ஊடுருவியுள்ளதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தான் மாநில எல்லை வழியாக ஊடுருவி ஆறு ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜென்டுகள் சென்னை வந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

செத்தும் வாழ வைக்கும் கறுப்பினத்து தாய் கதை இது #HBO_FILM

‘ஹென்ரிட்டா லாக்ஸ்' என்கிற கறுப்பினத்துப் பெண்ணின் பெயர் இந்த உலகம் அழியும் வரை இருக்கப்போகிறது. அவரைப்பற்றிய (HBO) டெலி ஃப்லிமில் தொலைக்காட்சி பிரபலம் ஓப்ராவின் ப்ரே நடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்தப்படம் ஏற்படுத்தியுள்ளது. 

ஹென்ரிட்டா - ஓப்ரா

யார் அந்த ஹென்ரிட்டா? 

வெர்ஜினியா மாநிலத்தின் அந்தப் பெரும் விவசாயப் பண்ணை வீட்டில் அடிமைகளுக்கான கொட்டிலில் 'வரப்போகும் மனித குலத்திற்குப் பிரசவம் குறித்த பெரும் வரலாற்றை'த் தன் பிள்ளை பதிக்கப்போவதை அறியாமல் அவரைப் பெற்றெடுத்தார் எலிஸா ப்ளசண்ட். ஹென்ரிட்டாவின் தாய். இவர் பிறந்து அடுத்த சில வருடங்களில் தன் பத்தாவது பிரசவத்தின்போது எலிஸா இறந்து போனார். மனைவி இல்லாமல் குழந்தைகளை வளர்க்க முடியாத அவரின் அப்பா, அவர்களை உறவினர்களிடம் பிரித்துக் கொடுத்தார். அதன்படி ஹென்ரிட்டா தாய் வழிப்பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரின் பாட்டி ஒரு விவசாயப் பண்ணை வீட்டில் இரண்டு அடுக்கு பெட்டி போன்ற வீட்டில் வசித்தார். அதில் தன் வருங்காலக் கணவனும், அத்தை மகனுமாகிய 'டேவிட் லாக்ஸ்' உடன் வளரத்துவங்கினார். 

அடிமைகளுக்குப் பெரிய உரிமைகள் எதுவும் கிடைக்காத காலகட்டம். ஹென்ரிட்டாவின் பாட்டிக்கு அந்தப் பண்ணையில் இடம் கிடைத்ததே அதன் வெள்ளை முதலாளியின் தாத்தாவுக்கு அவர் பிறந்தார் என்பதால்தான். அந்தப்பண்ணையின் புகையிலை விவசாயத்தில் கூலியாக, தன் 10 வயதிலிருந்தே ஹென்ரிட்டா வேலை செய்தார். 14 வயதிலேயே ஆண் குழந்தையைப் பெற்ற அவர் அடுத்து சில வருடங்களில் பெண் குழந்தை ஒன்றையும் பெற்றார். பண்ணை முதலாளி ஃப்ரெட் கெரட் இரண்டாம் உலகப்போருக்குச் செல்ல வேண்டியிருந்ததால் ஹென்ரிட்டா-டேவிட் தம்பதிக்கு ஒரு வீடு சொந்தமாக வாங்கும் அளவுக்குப் பணம் கொடுத்து நகரத்தில் உள்ள இரும்புத் தொழிற்சாலை வேலையில் டேவிட்டை சேர்த்து விட்டார். 

அதன் பின்னர் மூன்று குழந்தைகளை ஹென்ரிட்டா பெற்றெடுத்தார். அவரின் கடைசி மகனை அந்த மாநிலத்தில் கறுப்பர்களுக்குச் சிகிச்சையளிக்கும் ஒரே மருத்துவமனையான 'ஜான் ஹாப்கின்ஸ்' மருத்துவமனையில் 1950-ம் ஆண்டு நவம்பரில் பெற்றபோது அவருக்கு வயது 30. பிரசவத்தின் போதே மிக அதிகமான ரத்த இழப்புக்கு ஆளானார். வயிற்றில் ஏதோ முடிச்சு இருப்பதாகவும் சிறிது நாள் கழித்து வந்தால் அதை நீக்கி விடுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியதைக் கேட்டு ‘டிஸ்சார்ஜ்’ ஆனார். அதன் பிறகும் தொடர்ந்த வயிற்று வலியால் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவரைச் சோதித்த போது ‘ஸ்குவாமஸ் செல் கார்சினோமா' என்கிற புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டதாக கருதினர். அதற்கு ஏற்ப சிகிச்சையை அளித்து வந்த நிலையில் அவருக்கு வந்திருப்பது வேறு வகைப் புற்றுநோய் என உறுதியானது. 'அடோன் கார்சினோமா' என்கிற ஒரு உறுப்பில் இருந்து மற்றொரு உறுப்புக்குப் பரவக்கூடிய புற்றுநோய் முற்றிய நிலையில் ஆகஸ்ட் 8-ம் தேதி 1951-ம் ஆண்டு காலமானார் ஹென்ரிட்டா. 

HeLa - ஹிலா HBO film

ஹென்ரிட்டா அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து சோதனைக்காகப் புற்றுநோய் செல்கள் தாக்கியிருந்த கர்ப்ப வாய் பகுதியிலிருந்து 'செல் மாதிரிகளையும்' நோய் தாக்காத வயிற்றுப்பகுதியில் இருந்து செல் மாதிரிகளையும் ஹென்ரிட்டாவிடம் தெரிவிக்காமல், அனுமதி பெறாமல் எடுத்திருந்தனர். அது அந்த மருத்துவமனையின் புற்றுநோய் ஆராய்ச்சியாளர் ஜார்ஜ் ஓட்டோ ஜேயிடம் வழங்கப்பட்டது. அந்த மாதிரிகளைக் 'கல்ச்சர்' செய்து சோதனை சாலை பயிற்சிக்கு வைத்திருந்த போதுதான் அவை வழக்கமானவை அல்ல எனத் தெரியவந்தது. மற்ற செல் மாதிரிகள் எல்லாம் சில நாள்களிலேயே உயிரற்றுப் போய்விடும் நிலையில் பல்கிப் பெருகும் ஹென்ரிட்டாவின் கேன்சர் செல்கள் மட்டும் உயிரிழக்காமல் எத்தனைமுறை பிரித்தெடுத்தாலும் அவை உயிருடனே இருந்தன. அதாவது ‘இறவா நிலை’ என்பதை அவரின் செல்கள் அடைந்துவிட்டன. எத்தகைய சோதனையையும் அவை தாங்கின. இதனால் அவரின் மரணத்துக்குப் பிறகும், தனது உதவியாளர் மூலம் பிரேத பரிசோதனையின்போது இன்னும் அதிகமான செல் மாதிரிகளை எடுத்தார் ஜேய்.

ஆராய்ச்சியாளர் ஜேய்,  ‘ஹென்ரிட்டா'வின் மாதிரிகளுக்கு ‘ஹிலா’ என பெயர் வைத்தார். பல்கிப்பெருகும் வேகத்தினால் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் வெகுவாக வளர்ப்பு ஹிலா செல் மாதிரிகள் பரவின. உலகிற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய போலியோ நோய்க்கெதிரான தடுப்பு மருந்தை ஹிலா செல்களில் சோதித்தே கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் முதல் செல் வளர்ப்பு தொழிற்சாலை ஹிலா செல்களை வளர்ப்பதற்காகவே தொடங்கப்பட்டது. இதுவரை 11,000 மருந்துகளின் காப்புரிமைகள் ஹிலா செல்களில் நடத்திய ஆராய்ச்சியில் இருந்து பெறப்பட்டுள்ளன. 

கடந்த 2013-ம் ஆண்டு இந்தச் செல்லின் 'டி.என்.ஏ' வரைபடத்தை வெளியிட இருப்பதாகத் தகவல் வெளியானதும் ஹென்ரிட்டாவின் குடும்பத்தினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதன் பின்னரே இதன் முழுக்கதையும் வெளியே தெரியவந்தது. அந்தக் கருப்பினத்தாய் உலகிற்கே தன் சாவிற்குக் காரணமான செல்களைக் கொடுத்ததன் மூலம் கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறன.

ஆனால், ஹென்ரிட்டாவிடம் தெரிவிக்காமல் அவரிடம் இருந்து மாதிரிகளை எடுத்தது அவர் கருப்பினப் பெண் என்கிற நிறவெறியால்தான் எனக் கடுமையான விமர்சனங்களும் எழாமல் இல்லை. இதனை அடிப்படையாகக்கொண்டு ரெபெக்கா கோல்ட் என்பவர் எழுதிய புத்தகம் மிகப்பெரிய கவனம் பெற்றது. உலகில் 125 பல்கலைக்கழகங்களில் இந்தப்புத்தகம் பொது வாசிப்புக்காக வைக்கப்பட்டுள்ளது. 

நாம் இன்று அம்மையின்றி, போலியோ இன்றி இன்னும் பல நோய்களை வென்று நலமுடன் வாழ ஹென்ரிட்டாவிடம் இருந்து அவருக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட செல் மாதிரிகளே காரணம். பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவள்தான் தாய் என்றால் அந்தக் கறுப்பின பெண் ஹென்ரிட்டா லாக்ஸ் ஒரு வகையில் நமக்கும் தாய்தான்! 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

காரில் வந்து பிச்சையெடுக்கும் நபர்கள்

உணவுக்கும் வழியில்லை எனக் கூறி பிச்சை எடுக்கும் பலர், பெருந்தொகைப் பணத்துக்கு உரிமையாளர்களாக இருப்பது குறித்த செய்திகள் பல நாடுகளிலிருந்தும் அடிக்கடி வெளியாகுகின்றன.

இவ்வகையில், காரில் வந்து இறங்கி, பிச்சையெடுக்கும் நபர்கள் தொடர்பான செய்திகள் பிரித்தானிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் அண்மையில் ஒரு குழுவினர் காரில் வந்து இறங்கிய பின்னர் பிச்சையெடுக்க ஆரம்பித்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

மேற்படி குழுவினர் ருமேனியா நாட்டில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்றில் கேம்பிரிட்ஜ் நகரில் வந்திறங்கினர்.

பின்னர் அவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் தனித்தனியாகப் பிரிந்து சென்று பிச்சையெடுக்க ஆரம்பித்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாகனத்தை தரித்து வைத்திருந்தமைக்கான கட்டணத்தையும் இவர்கள் செலுத்தினர் என நேரில் கண்ட ஒருவர் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவித்துள

beggar

beggar22

beggar2

beggar3

http://metronews.lk

Link to comment
Share on other sites

ரயிலில் சென்று அசத்திய தோனி!

dhoni_18179.jpg

தோனி என்றாலே வித்தியாசம் தான். ஸ்ரீஷாந்திடம் கடைசி ஓவர் பந்து வீசக் கூறியதில் தொடங்கி, யுவராஜுக்குப் பதிலாக களமிறங்கி அசத்தியது வரை, தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை வித்தியாசமான, அற்புதமான முடிவுகளால் ஆனது. கிரிக்கெட் வாழ்க்கை தான் அப்படி என்று நினைத்தால், தனது குடும்ப வாழ்க்கையையும் அவ்வாறே நடத்தி வந்தார் தோனி. திடீரென சாக்ஷியை திருமணம் செய்து கொண்டார். உலக கோப்பையின் நடுவே குழந்தை பிறந்தபோது, “நான் நாட்டுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறேன். மற்றவை எல்லாம் இரண்டாவது தான்” என்று எளிமையாகக் கூறி தொடர் முடிந்தவுடன் தான் வீடு திரும்பினார்.

தோனியின் திரைப்படத்தைப் பார்த்தால் கூட, அப்படிப்பட்ட மிக வித்தியாசமான முடிவுகளை அவர் சிறு வயது முதலே எடுத்து வந்தது தெரிய வரும். ரயில்வே துறையில் தனது வேலையை விட்டு கிரிக்கெட் விளையாடியது அவரது வாழ்வில் ஒரு முக்கியமான முடிவாக திகழ்ந்தது. இந்திய ரயில்வே அன்றே அவரது வாழ்வில் மிக முக்கியமான பங்கை வகித்துள்ளது. 

அதன் நினைவாக தானோ என்னவோ தெரியவில்லை, கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கிய காரை விடுத்து, சொகுசு விமானங்களை விடுத்து விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் விளையாட கொல்கத்தாவுக்கு ரயில் மார்க்கமாக வந்துள்ளார் தோனி.

சென்ற வாரம் ஐ.பி.எல் பூனே அணியின் தலைவர் பதவியிலிருந்து தோனி நீக்கப்பட்டார். ஷோயப் அக்தர் முதல் ரசிகர்கள் வரை யாரும் இந்த முடிவுக்கு ஆதரவளிக்கவில்லை. இந்நிலையில் விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளின் ஜார்கண்ட் அணித் தலைவராக தோனி தேர்ந்தெடுக்கப்பட்டது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.

பிப்ரவரி 25-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் இந்தத் தொடரில், ஜார்கண்ட் அணி முதல் மூன்று போட்டிகளையும் மேற்கு வங்கத்தில் தான் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தகது. இந்தத் தொடரில் விளையாடுவதற்காக கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்குப் பின் ரயிலில் பயணித்தார் தோனி. கடந்த 2007-ம் ஆண்டுக்குப் பின் எந்த உள்நாட்டு போட்டிகளிலும் தோனி விளையாடவில்லை.

பல வருடங்களுக்குப் பின் ஜார்கண்ட் அணிக்காக விளையாடுவதால் அதனை ஒரு மறக்கமுடியாத நினைவாக மாற்றிக் கொண்டார் தோனி!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

2017 அனைத்துலக பெல்லி டான்ஸ் போட்டிகள்

2017 அனைத்துலக பெல்லி டான்ஸ் போட்டிகள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றன.

6 பிரிவுகளாக நடைபெற்ற இப் போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குபற்றினர்.

033911-01-02-copy

 

034046-01-02-copy

 

 

033912-01-02-copy

 

033981-01-02-copy

 

 

033983-01-02-copy

 

034092-01-02(1)-copy

cutout

 

http://metronews.lk

 

Link to comment
Share on other sites

'பிரேக்கிங் நியூஸ் வாசிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா..!?’ வேதவள்ளி சொல்லும் கதை

இனி ‘பிரேக்கிங் நியூஸ்' என்று டிவி சேனல்களில் வந்தாலே தெறித்து ஓடிவிடுவோம் போல. அந்த அளவிற்கு பிரேக்கிங்குகளால் ப்ரேக்காகிப்போய் கிடக்கிறது தமிழகம். புதியதலைமுறை சேனலில் பிரேக்கிங் செய்திகளை வாசித்த நியூஸ் ரீடர்களில் ஒருவர் வேதவள்ளி.

நியூஸ் ரீடர் வேதவள்ளி புதியதலைமுறை

புதியதலைமுறை சேனலில் ஜூனியர் பொண்ணு.  நியூ என்ட்ரி என்றாலும் செய்திகளில் நேர்த்தியும் தெளிவுமாக செய்திகளை வழங்குகிறார். படித்தது இன்ஜினியரிங் என்றாலும், மீடியாவில் ஜெயிக்கவேண்டும் என்பதே இவருக்கு லட்சியம். கிராமத்திலிருந்து வந்திருந்தாலும், மண்வாசனை மறக்காத சென்னை தமிழச்சி. கேள்வி கேட்கும் முன்பே பேசத்தொடங்கிவிட்டார் செய்தி வாசிப்பாளர் வேதவள்ளி. 

“திருப்பத்தூர்தான் எனக்கு சொந்த ஊர், ஸ்கூல், காலேஜ்னு எல்லாத்திலுமே டாப்பர். அதுனால கல்லூரி படிக்கும் போதே கேம்பஸில் வேலை கிடைச்சிடுச்சு. கோயம்புத்தூர்ல வேலை. கம்ப்யூட்டர் முன்னாடி டொக்குடொக்குனு தட்டிட்டு இருக்கும் போது தான், மண்டைகுள்ள பல்பு எரிஞ்சுச்சி. இது நமக்கான துறை இல்லைனு பட்டுச்சு. உடனே வேலைய விட்டுட்டு ஊருக்கே திரும்பி வந்துட்டேன். 

சின்ன வயசுல இருந்தே மீடியா மேல ஆர்வம். அதுனால லோக்கல் சேனல்ல வீஜே-வா வேலை பார்த்தேன். செய்தி வாசிப்பாளரா ஆகணும்னு மனசுக்குள்ள பட்சி கத்திட்டே இருந்துச்சு.  ‘டைம் டூ லீட்’னு ஸ்டேட்டஸைத் தட்டிவிட்டுட்டு சென்னை வந்துட்டேன். முதல் இன்டர்வ்யூ புதியதலைமுறை சேனல்ல...  என்னோட சேர்த்து 200 பேர் வந்துருந்தாங்க. அந்த கூட்டத்தைப் பார்த்ததுமே, கண்டிப்பா நமக்கு வேலை கிடைக்காதுனு நினைச்சேன். ஆனா And the Winner is-னு என்ன தான் தேர்ந்தெடுத்தாங்க. அப்போ தான் வேதவள்ளி செம ஹேப்பி. ! 

செய்தி வாசிப்பாளரா ஆகணும்னு ஆசை மட்டும் தான் இருந்தது. ஆனா என்னவேலை, அதற்கான முக்கியத்துவம் என்ன, அரசியல் முதல் சமூக நடப்பு வரைக்கும் முழுமையா சொல்லித்தந்தது புதியதலைமுறை சேனல் தான். 

எங்க வீட்ல எல்லாருக்கும் இந்நேரம் என் அன்பைக் கொட்டிக்கறேன்.  ‘ஸ்கூல் படிக்கும் போது, டிகிரி முடிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்க’னு சொன்னாங்க. நான் இன்ஜினியரிங் தான் படிப்பேன்னு அடம்பிடிச்சேன். அப்போ இன்ஜினியரிங் முடிச்சிட்டு திருமணம் பண்ணச் சொன்னாங்க, நான் மீடியா தான் போவேன்னு சொன்னேன். எந்த எதிர்ப்பும் இல்லை. உடனே ஓகே சொல்லிட்டாங்க.  வீட்டுல நான் வச்சது தான் சட்டம். ஒட்டுமொத்த ஃபேமிலிக்குமே நான் தான் செல்லப்பொண்ணு. என்கிட்ட கேட்காம எதையுமே செய்யமாட்டாங்க. நான் சொல்றத அவங்க கேட்காம விடமாட்டாங்க. ஐ.. பஞ்ச் நல்லாருக்குல்ல?  

நியூஸ் ரீடர் வேதவள்ளி புதியதலைமுறை

நியூஸ் ஸ்க்ரோலிங் ஓடும், அதை அப்படியே பார்த்துப் படிக்கிறது தான் வேலைன்னு பலரும் நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா அதுமட்டும் நியூஸ் ரீடரோட வேலை கிடையாது. வெறுமனே நியூஸ் மட்டும் வாசிச்சா,  அதுல ரியாலிட்டி இருக்காது. செய்தி பற்றிய சென்ஸ் ரொம்ப முக்கியம்.  சினிமாவுல தொடங்கி அரசியல் வரைக்குமான அறிவும், புரிதலும் நிச்சயம் தேவை. சில நேரங்களில் எழுதிக்கொடுக்கும் செய்தில பிழை இருந்தா கூட ஈஸியா கண்டுபிடிக்கவும் உதவும்; தப்பில்லாம செய்தியை வழங்கவும் முடியும். மொத்தத்துல நியூஸ் படிக்கிறது மட்டுமில்லாம, உள்வாங்குற திறமையும் இருக்கணும். 

பிரேக்கிங் செய்திக்கு ஸ்கிரிப்ட் ரெடியாகறவரைக்கும் காத்துக்கிட்டு இருக்கமுடியாது. அந்த சமயங்களில் நாமே தான் பிரேக் பண்ணவேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாம, களத்தில் இருக்கும் நிருபர்களிடம் பேசும்போது, அந்தப் பிரச்னை சார்ந்த புரிதல் இருந்தாதானே கேள்வி கேட்கவும் முடியும். அதுனால நியூஸ் ரீடர்னா சும்மா இல்ல பாஸ். அது ஒரு தவம்...  நான் ரொம்பவே என் வேலையை காதலிக்கிறேன். செய்தி வாசிப்பாளரா மட்டுமில்லாம, ஸ்பெஷல் ஸ்டோரி நிறைய பண்ணிருக்கேன்.  

எதிர்கால திட்டம் என்னென்னே தெரியாம மீடியாவுக்குள்ள வந்தேன். இனி மீடியா தான் என் எதிர்காலமா மாத்திக்கிட்டேன். எங்க அலுவலகத்திலேயே நான் தான் ரொம்ப சின்ன பொண்ணு. எனக்கு பலமே என்னுடைய அலுவலக நண்பர்கள் தான். எதிர்காலத்துல நிறைய விவாத நிகழ்ச்சிகளை நடத்தணும்னு ஆசை. அதுக்கு இன்னும் நிறைய கத்துக்கணும்... நிறைய உழைக்கணும்... சமூக  அக்கறையுடன் பொறுப்பான செய்தியாளரா இருப்பேன்” என்று முகமலர்ச்சியுடன் பேசுகிறார் வேதவள்ளி. 

ஆல் தி பெஸ்ட் ...! 

 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஜப்பான் சூசைட் பாயின்ட் ஃபுஜி மலைத்தொடர் மர்மங்கள்..!

ஜப்பான் தற்கொலை காடு

 ப்பான் நாட்டைச் சேர்ந்த மிக உயரமான மலைகளில் பிரசித்தி பெற்ற மலை ஃபுஜி மலை. இம்மலையானது ஜப்பானில் உள்ள மேற்கு டோக்கியோவில் அமைந்திருக்கிறது. இதுதான் ஜப்பானின் மிக உயரமான மலையாகும். இதன் உயரம் 3,776.24 மீட்டர் (12,389 அடி) இந்த உயரமான மலையில் எப்போதும் எரிமலை பொங்கிக்கொண்டே இருக்கும். ஆனாலும் இம்மலை அவ்வளவு ரம்மியமானது, இதனைக்காணவே இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகம். ஷிஜிவோகா, யாமான்ஷி என்ற இரண்டு தலைமையகங்களின் எல்லைகளில் அமைந்துள்ளது. என்னதான் இம்மலை இயற்கையழகை காட்டினாலும், இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள சற்று திகிலூட்டக்கூடிய 'ஏயோக்கிகாரா' காடு ஒன்று உண்டு. இதனை ஜப்பான் மொழியில் 'ஜீகாய்' என்று அழைப்பர், இதன் பொருள் 'சீ ஆப் டிபீஸ்'. இதன் அடர்த்தி அதிகமாக இருப்பதால் இப்பெயரை பெற்றது. இங்கு ஐஸ் குகை, காற்றுக் குகை என்று இரண்டு வகையான குகைகள் உள்ளன. இந்த காடு பல வகையான உயிரினங்களையும், காட்டு விலங்குகளையும் கொண்டது. ஆனால் இதுதான் ஜப்பானில் தற்கொலை செய்து கொள்பவர்களின் முதன்மையிடமாக உள்ளது. ஆம், இக்காட்டில் எங்கு பார்த்தாலும் பிணங்களாக காட்சியளிக்கும். மரங்களில் தூக்குக் கயிறுகளும் அதில் எலும்புக் கூடுகளும் இன்னும் உள்ளன.

 தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் இங்கே வந்துதான் செய்து கொள்கின்றனர். வருடத்துக்கு இங்கு 100 பிணங்களாவது கண்டெடுக்கப்படுகிறது. மரங்களில் தங்களின் தற்கொலை வாசகங்களையும் எழுதிவிட்டு செல்கின்றனர். அதேபோல இந்த காட்டினுள் செல்பவர்கள் திரும்பி வருவதில்லை என்றும் சொல்லபடுகிறது. சாதாரண மனநிலையோடு இந்த காட்டுக்கு வந்தால்கூட தற்கொலைக்கு தூண்டிவிடும் தன்மையுள்ள அபாயகரமான காடு. அதனால்தான் இக்காட்டை “தற்கொலைக் காடு” என்கிறார்கள். ஜப்பானிய அரசு காட்டின் சில பகுதியை மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கென அனுமதித்திருக்கிறது. சில பகுதிகளை தடைசெய்யபட்ட பகுதிகளாக அறிவித்து அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இக்காட்டில் எளிதாக தொலைந்து விடமுடியும் என்பதால் காட்டுக்குள் செல்வதற்க்கு முன்பாக மரங்களில் பிளாஸ்டிக் டேப்புகளை சுற்றி கொண்டு செல்கிறார்கள். எங்கு பார்த்தாலும் டேப்புகளாகவே இருக்கும். வருபவர்கள் அனைவரும் தற்கொலைக்கு முயல்வதால் மர்மங்கள் நிறைந்த காடாகவும், மனநிம்மதியின்றி தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆவிகள் உலாவிக்கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள். இந்த ஆவிகள்தான் வருபவர்களையும் தற்கொலைக்கு தூண்டுவதாகவும் சொல்லப்படுகிறது. இக்காட்டில் எங்கு பார்த்தாலும் இதற்கான எச்சரிக்கைப் பலகைகளைக் காணமுடியும். இதற்கு முடிவுகட்ட ஜப்பானிய அரசால் தற்கொலை மீட்பு படை ஒன்று அமைக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட உடல்களை மீட்பது, அங்கு வருபவர்களிடம் அறிவுரை சொல்வது போன்ற பணியில் ஈடுபடுகிறார்கள். ஜப்பானின் கணக்குப்படி 1998-ல் 73 பேர், 1999-ல் 68 பேர், 2000-ல் 59 பேர், 2001-ல் 59 பேர், 2002-78 பேர், 2003-105 பேரும் தற்கொலை செய்திருக்கிறார்கள். இங்கு தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிக அளவில் ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களின் வயது இடைவெளியும் 40-50-க்குள் மட்டுமே இருக்கிறது. இங்கு நடக்கும் தற்கொலைகள் அதிகமாக மார்ச் மாதத்தில்தான் நடப்பதாக சொல்கிறார்கள் ஜப்பானியவாசிகள்.

தற்கொலை செய்து கொண்டவர்கள்

 அக்காலத்தில் வாழ்ந்த சாமுராய்களிடமே இந்த தற்கொலை பழக்கம் இருந்துள்ளது. தங்கள் தோல்விகளினால் பிறரை சந்திக்க மனமில்லாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வர். இந்த தற்கொலையும், அதனைத் தொடரும் விதமாக அமைந்துள்ளது. தற்கொலை செய்பவர்களை வெகுவாக ஈர்க்கும் தன்மை கொண்டது இந்த காடு. இக்காடு 19-ம் நூற்றாண்டில் ஜப்பானியர்கள் தங்களின் வறுமையால் வீட்டில் உள்ள வயதானவர்களை இக்காட்டில் விட்டுவிட்டும் சென்றிருக்கிறார்கள். விட்டில் வறுமையின் காரணமாக வயதானவர்களுக்கு உணவளிக்க முடியாததால் இந்தக் காட்டில் கொண்டு விடுகிற பழக்கத்தை செய்யும் வழக்கம் ஜப்பானியர்களிடையே இருந்துள்ளது. பல மிருகங்களின் விசித்திரமான வாடை அடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. காட்டினுள் பொதுவாக நுழைவதற்கு முன்னால் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாதீர் போன்ற வாசகங்களைத் தான் அதிகமாக பார்க்க முடிகிறது. உள்ளே இங்கு “உங்கள் வாழ்க்கை உங்கள் பெற்றோர்களால் உங்களுக்கு வழங்கப்பட்ட பரிசு, தயவுசெய்து உங்கள் பிள்ளைகளை, மனைவியை, உடன்பிறப்புகளை, பெற்றோர்களை நினைத்துப் பாருங்கள்”, “உங்கள் பிரச்சனைகளை மற்றவர்களிடம் பேசுங்கள், தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்" என்ற வாசகங்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது. மனஅழுத்தம் சம்மந்தமாக பேச மனநல மருத்துவரின் தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்கொலை படங்கள்

இக்காட்டைப் பற்றி 1960-ல் செய்தி வெளியிடப்பட்டு 'டவர் ஆப் வேவ்ஸ்' என்ற பெயரில் முதன்முதலாக இங்கு தற்கொலை செய்து கொண்ட காதல்ஜோடி பற்றி அதிகமாகப் பேசப்பட்டது. பின்பு 1993-ம் ஆண்டு 'தி கம்பிளிட் மெனிவல் ஆப் சூசைட்' என்ற புத்தகம் வாட்டாறு சிரும் என்பவரால் எழுதப்பட்டது.  இப்புத்தகத்தால் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. வாட்டாறு சிரும் என்பவர் இப்புத்தகத்தில் தற்கொலை செய்வதற்க்கு மிகப் பொருத்தமான இடமாக இக்காட்டை சித்தரித்துள்ளார். எங்கே மனிதர்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும்? எங்கே தற்கொலை செய்யலாம் போன்றவைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காட்டுக்கு வருபவர்கள் தங்கள் காரை பார்கிங்கில் பார்க் செய்துவிட்டு செல்கின்றனர். இன்றும் பல கார்கள் கைவிடப்பட்ட நிலையில் அங்கேயே நின்று கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலைமையில் தற்கொலை விகிதம் பல மடங்காக அதிகரித்திருக்கிறது. மனஅழுத்தங்கள் காரணமாகவே முக்கால்வாசி தற்கொலைகள் இங்கு நிகழ்கின்றன. இயந்திரமயமான இவ்வுலகில் அருகில் இருப்பவரிடம் பேசாமால் தூரத்தில் இருப்பவரிடம் அலைபேசியில் பேசுவதால் என்ன பயன்? தற்கொலை எண்ணம் கொண்டவரிடம் பத்து நிமிடம் பேசினால் போதும் அவர் தற்கொலை செய்துகொள்ளவே மாட்டார் என்கிறார்கள், உளவியலாளர்கள். இன்றைய சூழ்நிலையில் அது சாத்தியமில்லாமல் போகிறது. தொழில்நுட்பங்களால் மனிதர்களை மறந்துவிடுகிறோம். சதையினாலும், ரத்தத்தினாலும் செய்யப்பட்டது தான் இதயம் என்பதையும் மறந்துவிடுகிறோம், மனது விட்டுப் பேசினால் எதற்கும் தீர்வு உண்டு என மேலும் எச்சரிக்கிறார்கள்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

அரசியல் பேசும் அயல்நாட்டு சினிமாக்கள்! #WorldPoliticalMovies

ரசியல் பேசும் படங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். 'முதல்வன்', 'அமைதிப்படை' என மேலோட்டமாக அரசியல் பேசும் படங்கள்கூட பல சிக்கல்கள் தாண்டித்தான் வெளியாகின்றன. சமீபத்தில் வெளியான 'ஜோக்கர்' மட்டும்தான் விதிவிலக்கு. ஆனால் உலக சினிமாவைப் பொறுத்தவரை இந்தப் பிரச்னைகள் இல்லை. அவர்கள் அசால்ட்டாய் அரசியலை உறித்து உப்பு தடவிவிடுகிறார்கள். அப்படி பொலிடிக்கல் ஜானரில் வெளியான சில முக்கியப் படங்களின் லிஸ்ட்தான் இது. 

Citizen Kane :

அரசியல்

1941-ல் வெளியான அரசியல் படம் இது. பணக்காரக் குடும்பத்தில் பிறந்த சார்லஸ் கேன் காலேஜ் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு செய்தித்தாள் நிறுவனம் ஒன்றை நடத்தத் தொடங்குகிறான். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நாட்டின் மிக முக்கிய அதிகார மையமாக மாறுவதுதான் கதை. இந்தக் கதை அமெரிக்காவின் மிகப்பெரும் ஊடகங்களுக்குச் சொந்தக்காரரான வில்லியம் ஹெர்ஸ்ட் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்ற பேச்சு உண்டு. ரிலீஸானதும் விமர்சகர்கள் பாராட்டினாலும் படம் பெரிதாகப் போகவில்லை. பின்னர் ரீ ரிலிஸ் செய்ய, படம் சூப்பர்ஹிட். 9 பிரிவுகளில் ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்டு சிறந்த திரைக்கதைக்காக விருதும் பெற்றது.

Mr. Smith Goes to Washington :

அரசியல்

லூயிஸ் பாஸ்டரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் 1939-ல் வெளியானது. ஸ்மித் என்ற இளைஞர் அமெரிக்க செனட்டராக நியமிக்கப்படுகிறார். சுற்றி எங்கும் ஊழல் நிறைந்திருப்பதைப் பார்ப்பவர் அதற்கு எதிராக போராடுவதுதான் கதை. இதை நகைச்சுவையாக சொல்லியிருப்பார்கள். படம் சிலபல சிக்கல்களோடுதான் வெளியானது. ஆனால் 'தி பெஸ்ட்' எனக் கொண்டாடினார்கள் விமர்சகர்கள். ஹீரோ ஸ்டீவர்டுக்கு அதன்பின் சுக்கிர திசைதான். பதினோரு பிரிவுகளில் நாமினேட் ஆகி சிறந்த கதைக்கான ஆஸ்கார் விருதை வென்றது. 

Election :

அரசியல்

இதுவும் டாம் பெர்ரோட்டா என்பவர் எழுதிய நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான். இதில் வித்தியாசமாய் பள்ளியைக் கதைக்களமாக அமைத்திருந்தார்கள். ட்ரேஸி தன் பள்ளியில் நடக்கும் மாணவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற நினைக்கிறாள். இது பிடிக்காத மெக் அலிஸ்டர் என்ற ஆசிரியர் அவள் வெற்றியைத் தடுக்க முயற்சிக்கிறார். இந்த ஜாலிவாலி போட்டியில் யார் ஜெயித்தார்கள் என்பது மிச்சமுள்ள ரோலர்கோஸ்டர் சவாரி. படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அநியாயத்திற்கு சொதப்பியது. ஆனால் விமர்சகர்கள் இன்றுவரை படத்தைக் கொண்டாடுகிறார்கள். 

The Candidate :

அரசியல்

ஏற்கெனவே வெற்றி தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒரு தேர்தலில் போட்டியிடுவது எப்படி இருக்கும்? இந்தக் கேள்விக்கான பதிலை காமெடியாக சொல்லியிருப்பார்கள் இந்தப் படத்தில். தேர்தலில் பழம் தின்று கொட்டை போட்ட ஜார்மனை எதிர்த்து களமிறக்கப்படுகிறார் ஒரு புதுமுகம். தோல்வி நிச்சயம் என உறுதியான நிலையில் ஜாலியாக நினைத்ததை எல்லாம் சொல்லி பிரசாரம் செய்கிறார் அந்த புதுமுகம் மெக்கே. கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே இவருக்கு ஆதரவு அதிகரிக்க, எதிர்த்தரப்பு பயப்படுகிறது. அதற்குப் பின் என்ன நடந்தது என்பதுதான் கதை. திரைக்கதைக்கான ஆஸ்காரை வென்ற இந்தப் படம் வசூலிலும் குறை வைக்கவில்லை.

Lincoln :

அரசியல்

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் க்ளாஸிக் சினிமா. அடிமைத்தனத்தை ஒழித்துக்கட்ட தைரியமாகப் போராடிய லிங்கனின் வரலாற்றைச் சொல்லும் படம். நியூயார்க் திரைப்பட விழாவில் முதன்முதலாக திரையிடப்பட்டபோதே அபார வரவேற்பைப் பெற்றது. அதன்பின் தியேட்டர்களில் ரிலீஸாக வாரி அணைத்து வரவேற்றார்கள் ரசிகர்களும் விமர்சகர்களும். லிங்கனாகவே வாழ்ந்திருக்கிறார் என ஹீரோ டேனியல் டே லூயிஸுக்கு வாழ்த்துமழை பொழிந்தது. 12 பிரிவுகளில் ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்டு சிறந்த ப்ரொடக்‌ஷன் டிசைன், சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் வென்றது.

Wag the Dog :

அரசியல்

லேரி பெய்ன்ஹார்ட்டின் அமெரிக்கன் ஹீரோ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட சினிமா. வித்தகக் கலைஞன் ராபர்ட் டி நீரோவின் மற்றுமொரு மெர்சல் நடிப்பு இந்தப் படத்தில் வெளிப்பட்டது. பலான சர்ச்சை ஒன்றால் மொத்த அதிபர் தேர்தலும் கேள்விக்குள்ளாகும் நிலையில் அதை திசைதிருப்ப யாரும் எதிர்ப்பார்க்காத சம்பவம் ஒன்றை நடத்திக் காட்டுகிறார் ராபர்ட் டி நீரோ. அரசு நினைத்தால் மக்களை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்பதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன். படம் வெளியான கொஞ்ச நாளிலேயே நிஜத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடக்க, பப்ளிசிட்டி பிய்த்துக்கொண்டது படத்திற்கு. 

In the Loop :

அரசியல்

பி.பி.சி-யில் 'தி திக் ஆஃப் இட்' என்ற பெயரில் சீரியலாக வெளியாகி ஹிட்டடித்த கதையை முழுநீளப் படமாக மாற்றி எடுத்தார்கள். உலக அரசியலின் இரு பெரும் நாட்டாமைகளான அமெரிக்கா, இங்கிலாந்தைக் கலாய்த்து எடுக்கப்பட்ட படம் இது. மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தைக் குறிவைத்து போர் தொடுக்க முடிவெடுக்கின்றன இரு நாட்டின் அரசுகள். அதைத் தடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள். இந்த இரண்டு தரப்பிற்கும் நடுவே நடக்கும் அகாதுகா சம்பவங்கள்தான் கதை. முக்கியத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

The Ides of March :

அரசியல்

சால்ட் அண்ட் பெப்பர் ஹீரோ ஜார்ஜ் க்ளூனி இயக்கி நடித்த படம். அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடுகிறார் மைக் மோரிஸ். தன் பிரசாரத் திட்டங்களை வடிவமைக்க வலுவான ஆள் தேவை என மேயர்ஸ் என்பவனை நியமிக்கிறார். ஒரு கட்டத்தில் மேயர்ஸுக்கும் மோரிஸுக்கும் முட்டிக்கொள்கிறது. மோரிஸை பிளாக்மெயில் செய்ய முடிவெடுக்கிறான் மேயர்ஸ். அதன்பின் நடக்கும் அரசியல் திருப்பங்கள்தான் கதை. பாக்ஸ் ஆபீஸிலும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி, படத்திற்கு சிவப்புக் கம்பள வரவேற்பு.  

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

22.02.1732:  அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த தினம் இன்று!

 
washington

 

ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்கக் கண்டத்தின் படையைத் தலைமை தாங்கி, ஆங்கிலேயர்களை அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் (1775-1783) தோற்கடித்தார்.

இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் எட்டு ஆண்டுகள்- 1789 முதல் 1797 வரையிலும், ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தலைமை தாங்கினார்.

விடுதலை பெற்ற நாடாக ஐக்கிய அமெரிக்கா திகழ்ந்த துவக்க ஆண்டுகளில் இவர் ஆற்றிய நாடு நிறுவும் பணிகளை நோக்கி இவரை ஐக்கிய அமெரிக்காவின் தந்தை எனப் போற்றுவர்.

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

 

மயிரிழையில் உயிர்தப்பியவர்

நியூயார்க் நகர கடைக்குள் வாகனம் புகுந்தபோது அலமாரிகளுக்கு இடையில் இருந்தவர் காயங்களின்றி உயிர் தப்பிய காணொளி

Link to comment
Share on other sites

சர்ச்சையில் சிக்கிய பிரபல நாவல் ஆசிரியர்!

shoba-cop.jpg.image.784.410_02007.jpg

மும்பையைச் சேர்ந்த பிரபல நாவல் ஆசிரியர், பத்திரிக்கையாளர் ஷோபா டீ. இவர் மும்பையில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலரின் அதீத உடற்பருமனைக் கிண்டலடிக்கும் வகையில் அவரது படத்துடன் ஆங்கிலத்தில் டுவீட் ஒன்றைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு மும்பை காவல்துறை 'எங்களுக்கும் நகைச்சுவை பிடிக்கும். ஆனால் மற்றவர் மனதை காயப்படுத்தும் விதமாக கிண்டலடிப்பது தங்களைப் போன்ற பிரபலங்களுக்கு அவதூறு' என அமைதியாக பதிலடி கொடுத்தனர். இதனைத் தொடர்த்து ஷோபாவின் டுவீட்டுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

ENGLISH OVERVIEW

சர்ச்சையில் சிக்கிய பிரபல நாவல் ஆசிரியர்!

 

 

 

மனைவியை முதன்முதலாகப் பார்த்த பார்வை குறைபாடுள்ள கணவர்.

esight1_02433.jpg

அமெரிக்காவைச் சேர்ந்த ஜீன் பர்டீ என்பவர் ஸ்டார் கர்ட்ஸ் நோயால் (Stargardt’s Disease) பாதிக்கப்பட்டுள்ளார். இந்தப் பிறவி நோயால், அவருக்கு கண் பார்வை மிகவும் மங்கலாகத் தெரியும். பிரபல தொலைக்காட்சித் தொகுப்பளர் ரச்சல் ரே தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பர்டீக்கு ஈ -சைட் எனப்படும் அருகில் இருப்பவரைப் பார்க்கும் அதிநவீன கண்ணாடி வழங்கப்பட்டது. அதனை அணிந்து, தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்த்தார். வார்த்தையில் விவரிக்க முடியாத சந்தோஷம் அவரது முகத்தில் தெரிந்தது. த்ஹனது மனைவி மிகவும் அழகாக இருப்பதாகத் தெரிவித்தார். இதனைக் கேட்டு அவரது மனைவி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இந்தக் காட்சியைக் கண்ட பார்வையாளர்கள் பலத்த கரவொலி எழுப்பினர்.    
 

 

ENGLISH OVERVIEW

Blind husband sees his wife for the first time

 

பார்முலா-1 கார் திறப்பு விழாவில் பங்கேற்ற விஜய் மல்லையா.

353670-mallya_00069.jpg

இந்தியாவின் தேடப்படும் முக்கிய நபர்களில் ஒருவரான விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.9000 கோடி கடன் நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்த கோரியதால் இங்கிலாந்த் தப்பிச் சென்ற மல்லையா அதன்பின் இந்தியா திரும்பவே இல்லை.இங்கிலாந்து அரசிடம் மல்லையாவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் படி பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் இங்கிலாந்தில நடைபெற்ற பார்முலா-1 கார் திறப்பு விழாவில் மல்லையா பங்கேற்றார்.தன்னுடைய உதவியாளர்களுடன் அவர் பங்கேற்ற படங்கள் பார்முலா-1 நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த செய்தி இந்திய அரசை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

“கடல் புழு” இளவரசி கதையால் உருவான லொம்போக் பண்டிகை

 

செழுமையின் அடையாளமாக இருக்கின்ற கடல் புழுக்களை பிடித்து, சமைத்து சாப்பிட இந்தோனீஷியாவின் செகர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.

  • ‘பௌ நயெலெ‘, லொம்போக் , இந்தோனீஷியா, பண்டிகைRAHMAT ANDI

    இந்தோனீஷியாவின் உள்ளூர் சசாக் மொழியில், “கடல் புழுக்களை பிடித்தல்” என்று பொருள்படுகின்ற ‘பௌ நயெலெ‘ பண்டிகை ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இந்தோனீஷியாவின் மத்திய லொம்போக்கிலுள்ள கூடா கிராம கடற்கரையோரம் நெடுக வைகறை நேரத்தில் மக்கள் கூட்டம் வந்து சேரத் தொடங்கியுள்ளது. பாரம்பரிய மீன்பிடி கருவிகளோடு வந்த அவர்கள், அந்த கடற்கரையோரத்தில் கடல் புழுக்களை தோண்டி எடுக்கின்றனர்.

  • ‘பௌ நயெலெ‘, லொம்போக் , இந்தோனீஷியா, பண்டிகைRAHMAT ANDI

    கடல் புழுக்களை கடலில் முழ்கிவிட்ட இளவரசியின் மறுபிறப்பாக உள்ளூர் மக்கள் பலரும் நம்புகின்றனர். இளவரசி மன்டாலிகா மிகவும் அழகாக இருந்ததால், நாட்டின் எல்லா மூலைகளிலும் இருந்தும் இளவரசர்கள் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பினர்.

  • ‘பௌ நயெலெ‘, லொம்போக் , இந்தோனீஷியா, பண்டிகைRAHMAT ANDI

    அவரை திருமணம் செய்துகொள்ள இளவரசர்களுக்குள் சண்டையிட்டு வெற்றிகாண அரசர் கேட்டு கொண்டார். “இத்தகைய ரத்தகளறியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு மறுத்துவிட்ட இந்த இளவரசி, கடலில் விழுந்து தன்னையே மாய்த்துக் கொண்டார்” என்று உள்ளூர் சுற்றுலா அதிகாரியான லாலு ஃபௌஸால் கூறினார்.

  • ‘பௌ நயெலெ‘, லொம்போக் , இந்தோனீஷியா, பண்டிகைRAHMAT ANDI

    இந்த சடங்கு பல நூற்றாண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்னால்தான் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா நிகழ்வாக இது உருவாகத் தொடங்கியது. “இந்த பண்டிகை ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது” என்று ஃபௌஸால் பிபிசியிடம் கூறினார்.

  • ‘பௌ நயெலெ‘, லொம்போக் , இந்தோனீஷியா, பண்டிகைRAHMAT ANDI

    இந்த கடல் புழுக்களை சேகரித்த பிறகு, உள்ளூர் மக்கள் அவற்றை தீயில் சமைத்து அல்லது கம்பி சட்ட அடுப்பில் வாட்டி அல்லது ஆவியில் வேகவைத்த பின்னர் சாப்பிடுகின்றனர். இந்த கடல் புழுக்கள் வளத்திற்கும், செழுமைக்கும் அடையாளமாக இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

  • ‘பௌ நயெலெ‘, லொம்போக் , இந்தோனீஷியா, பண்டிகைRAHMAT ANDI

    இந்த கடல் புழுக்கள் பச்சை, மஞ்சள், மற்றும் பழுப்பு என வேறுபட்ட பல நிறங்களில் உள்ளதோடு, விளக்கு வெளிச்சத்தில் ஒளிருபவையாக தோன்றுகின்றன.

  • ‘பௌ நயெலெ‘, லொம்போக் , இந்தோனீஷியா, பண்டிகைRAHMAT ANDI

    அவர்களின் பாரம்பரிய நாட்காட்டியின்படி, இந்த பண்டிகையை ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் பாரம்பரிய சசாக் சமூகங்கள் கொண்டாடுகின்றன. கடந்த வாரம் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிக்கு முன்னால், உள்ளூர் மக்கள் பாரம்பரிய இசை நிகழ்ச்சியையும், கலாசார அணிவகுப்பையும் நடத்தினர்.

  • ‘பௌ நயெலெ‘, லொம்போக் , இந்தோனீஷியா, பண்டிகைRAHMAT ANDI

    “இளவரசி மன்டாலிகாவுக்காக இங்கு வாழ்கின்ற எங்களுக்கு இதுவொரு கொண்டாட்டம். ‘பௌ நயெலெ‘ (கடல் புழுக்கள்) சேகரிப்பதற்கு கடற்கரைக்கு மக்கள் பலர் வருவதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று உள்ளூரை சேர்ந்தவர்களில் ஒருவரான இனாக் சேனா தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.