• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
நவீனன்

இளமை புதுமை பல்சுவை

Recommended Posts

 

தீயாய் பரவும் தந்திரக்காட்சி

ஐநூறு அடி தூரம். பல படிக்கட்டுகள், அகலமான ஸ்நூக்கர் மேசைகள், குறுகலான கட்டைகள், மேடுகள், பள்ளங்கள். அனைத்து தடைகளையும் தாண்டி இறுதி இலக்கான ஸ்நூக்கர் பந்துக்கான பள்ளத்தில் போய் விழுவதைப்போன்ற ஒரு தந்திரக்காட்சி பிரிட்டன் பிரிஸ்டலில் இருக்கும் விளையாட்டு விடுதியில் படம்பிடிக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, ஆல்ஸ்டார் விளையாட்டு விடுதியில் இந்த தந்திரக்காட்சி படமாக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டது. பல லட்சம் பேர் பார்த்து, பகிர்ந்ததில், சமூக வலைத்தளங்களில் இது தீயாய் பரவி வருகிறது.

இந்த காட்சிகளை வடிவமைத்து படமாக்க 11 மணி நேரம் பிடித்ததாக கூறுகிறார்கள் இதை உருவாக்கிய ஆல்ஸ்டார் விளையாட்டு விடுதியின் மேலாளர் ஷேன் ஒஹராவும் அவரது உதவியாளர் டாம் உல்மேனும்.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

'எவரெஸ்ட் நாயகன் எட்மண்ட் ஹிலரிக்கு மலையேறும் விருப்பம் எப்போது வந்தது?' நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

எவரெஸ்ட்

லக நாடுகள் அனைத்தும் 1953-ம் ஆண்டு ஜூன் 2-ம் நாள், இங்கிலாந்தை உற்று நோக்கியபடி இருந்தன. காரணம், அன்றைய தினம்தான் இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் ராணியாக முடிசூட்டிக்கொண்டார். இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தது. இங்கிலாந்து எப்படி இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரப்போகிறது? என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, அனைத்து மக்களின் எண்ணமும் இரண்டாம் எலிசபெத் முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். இங்கிலாந்து முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த ஒரு செய்தி மட்டும் உலக நாடுகளை இங்கிலாந்து பக்கம் திரும்பச் செய்யவில்லை. ராணி முடிசூட்டிக் கொள்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு ஒருதகவல் வந்தது. உலகத்தில் யாராலும் முடியாது என்றெண்ணிய, நம்பவும் முடியாமல், அதே நேரத்தில் நம்பி ஆக வேண்டிய செய்தி அது. "மலைகளின் முடிசூடா ராணியான எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து விட்டார் எட்மண்ட் ஹிலரி" என்பதுதான். ஆம்... பிரிட்டிஷ் காமன்வெல்த் உறுப்பு நாடாக இருந்த நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலரியும், நேபாள நாட்டின் ஷெர்பா இனத்தைச் சேர்ந்த டென்சிங் நார்கேவும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து விட்டார்கள் என்று உலகமே வியந்து பாராட்டியது. எவரெஸ்ட் சிகர உச்சியை முதன்முதலில் சென்றடைந்த எட்மண்ட் ஹிலரியின் நினைவு தினம் இன்று....

எவரெஸ்ட்

"இது என்ன பெரிய இமாலய சாதனையா?" என்று பொதுவாக நாம் அடிக்கடி கேலியாகச் சொல்வோம். எவரஸ்ட் உச்சியைச் சென்றடைவது என்ன அவ்வளவு கஷ்டமான காரியமா என்ன? இமாலயம் என்ற பெயரை உச்சரித்தாலே உடம்புக்குள் பனி ஊடுருவும். 8,848 மீட்டர் உயரம், கிட்டத்தட்ட 9 கிலோ மீட்டர் தூரத்தை செங்குத்தாக நிறுத்தி அதன்மேல் ஏறிச் செல்வதுபோல, அதுவும் சாதாரணமான சூழ்நிலையில் அல்ல... பல ஆயிரம் கிலோமீட்டர் வரை பனி படர்ந்த பாலைவனம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்களையே பார்க்க முடியாது. குறைந்தபட்சம் - 30 டிகிரியிலிருந்து - 60 டிகிரி செல்சியஸ் வரை தட்பநிலை இருக்கும். இந்த இடத்தை இதுவரை போர் விமானங்கள்கூட எட்டிப்பார்த்தது கிடையாது. நாம் அணிந்திருக்கும் உடையில் நமக்கு தெரியாமல் எங்கேனும் சிறு ஓட்டைகள் இருந்தால் கூட, அதுவே நமக்கு எமனாக மாறிவிடும் அபாயம். சிறிது நேரம் உடையை களைந்தால் கூட ஃபுரோஸ்ட்பிட் எனும் உறைகடி வந்து ஆளையே நடைபிணம் ஆக்கிவிடும். அவ்வளவு உயரத்தில் ஆக்சிஜன் மிக மிகக் குறைவு. ஒவ்வொரு முறையும் நுரையீரலும், ரத்த நாளங்களும் மரணத்தின் பிடிக்குச் சென்று திரும்பும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில நாட்கள் இருந்தாலே மனம் பேதலித்து, பைத்தியம் பிடித்து விடும். எல்லாவற்றுக்கும் மேல் மலைஏறும் ஆணி, கயிறு என குறைந்தது 20 கிலோ பொருட்களை நம் உடம்பில் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டும். சற்றே நிலை தடுமாறினாலும் பல ஆயிரம் மீட்டர் ஆழம் கொண்ட அதலபாதாளத்தில் விழுந்து உடலைக்கூட தேடி எடுக்க முடியாத மரணம் ஏற்படும். எப்போதும் திடீர் திடிரென மாறிக்கொண்டேயிருக்கும் சீதோஷ்ண நிலையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் பல மாதங்கள் பயணிக்க வேண்டும். இப்போது சொல்லுங்கள்... எவரெஸ்ட் உச்சியை அடைவது, எவ்வளவு கடிமான பயணம் என்று? 

எவரெஸ்ட் சிகரத்தை எட்டுவது குதிரைக்கொம்பு என எண்ணியிருந்த மனிதர்களுக்கு மத்தியில், துணிந்து ஏறி, உச்சியை அடைந்த எட்மண்ட் ஹிலரியை உலகம் உற்று நோக்கத்தானே செய்யும். இந்த நிகழ்வுக்கு முன் பலர் எவரெஸ்ட் உச்சியை அடையும் முயற்சியில் தோல்வியைச் சந்தித்ததும், இறந்து போனதும் நினைவுகூரத்தக்கது.

ஹிலரியின் இளமைப் பருவம்!

1919-ம் ஆண்டு ஜூலை 20-ல், நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஒரு சாதாரண தேனீ வளர்ப்பு குடும்பத்தில் பிறந்தவர் எட்மண்ட் ஹிலரி. இவரது சிறுவயதில் பள்ளி நிர்வாகம் கல்விச் சுற்றுலாவுக்காக 'Mount Ruapehu' என்ற எரிமலைக்கு அழைத்து சென்றது. அப்போதுதான் ஹிலரிக்கு மலை உச்சியை ஏற வேண்டும் என்பதில் தீரா காதல் ஏற்பட்டது. அதன் பின் எப்போதும் சிறு, சிறு மலைகள் ஏறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஹிலரியின் சாதனைகள்!

எட்மண்ட் ஹிலரிஹிலரிக்கு 21 வயதானபோது, நியூசிலாந்தில் 3,764 மீட்டர் உயரம் கொண்ட 'Mount Cook / Aoraki' என்ற மலை மீது ஏறினார். இதுவே மலையேறுவதில் சாதனை செய்ய இவரைத் தூண்டியதாம். இரண்டாம் உலகப்போரின்போது, ராயல் நியூசிலாந்து வான்படையில் சேர்ந்து பணியாற்ற விண்ணப்பித்தார் ஆனால், அவரது விண்ணப்பம் பல காரணங்களால் அப்போது நிராகரிக்கப்பட்டது. பின் நியூசிலாந்துப் படைக்கு கட்டாயம் ஆளெடுக்கும் நிலை ஏற்பட்ட போது, ஹிலரி தேர்ந்தெடுக்கப்பட்டார். விமானப் படைப்பிரிவில் சேர்ந்து தனது நாட்டுக்காக பல வீர சாகசங்கள் புரிந்தார். போருக்குப் பின் விடுமுறை நாட்களில் மலை ஏறுவதை மட்டுமே தனது பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். மலை ஏறுவதற்கான நுண்ணறிவைப் பெற, அது  சம்பந்தமான புத்தகங்களையும் இவர் விட்டு வைக்கவில்லை. அதன் பிறகு வெவ்வேறு கால நிலைகளில் வெவ்வேறு உயரமுள்ள 11 மலைகளை தனி மனிதனாக ஏறி சாதனை படைத்தார். இப்படி உயரமான மலை உச்சிகளை தொட்டு வந்த ஹிலரி எவரெஸ்ட் உச்சியை அடைய தீவிரமாக முயற்சி மேற்கொண்டார்.

இமாலய சாதனை!

இவர் இப்படி நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில், 1952-ம் ஆண்டு எவரெஸ்ட் உச்சியை அடைய சுவிஸ் மலையேறும் குழு தோல்வியைச் சந்தித்து திரும்பி வந்தது. 1953-ம் ஆண்டு பிரிட்டிஷ் மலையேறும் குழுவுடன் தனது இமயத்தை நோக்கிய பயணத்தைத் தொடந்தார் ஹிலரி. இந்தக் குழுவும், காலநிலை மாறுபாட்டால் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால் ஹிலரியும், டென்சிங் நார்கேயும் எவரெஸ்ட் உச்சியை தொட்டே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் சற்றும் பின் வாங்கவில்லை. அதனால், இவர்கள் இருவரும் அதிக எடையுள்ள பொருட்களை சுமந்து கொண்டு தங்கள் குழுவுக்கு விடைசொல்லி புறப்பட்டனர். பல நாட்களாக பனி பாலைவனத்தில் சுற்றித் திரிந்து, உயரமான மலைகளை கடந்து, கடைசியாக மே 29-ம் நாள், சரியாக 11.30 மணிக்கு எவராலும் எட்டமுடியாத எவரெஸ்ட் உச்சியில் தங்களின் கால்தடங்களைப் பதித்தனர். இந்த சிறப்பு மிக்க சாதனைக்கு பரிசாக இரண்டாம் எலிசபெத் மகாராணி, ஹிலரிக்கு 'சர்' பட்டம் வழங்கி கௌரவித்தார். ஒருமுறை எவரெஸ்ட்டின் உச்சத்தைத் தொட்டபோது என்ன நினைத்தீர்கள்? என சிலர் கேட்டபோது "எத்தனையோ பேர் சாதிக்கத் துடித்ததை சாதிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்ததை நினைத்து பிரமிப்பு ஏற்பட்டது. இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்தவர் டென்சிங் நார்கே" என்று கூறினார். இவர்கள் இருவரில், யார் முதலில் எவரெஸ்ட் உச்சியில் முதலில் காலடி வைத்தனர் என்ற பெரிய சந்தேகம் எழுந்தது. அதற்கு டென்சிங் நார்கே, "ஹிலரிதான் முதலில் உச்சியை அடைந்தார். அடுத்த சில நிமிடங்களில்தான் நான் உச்சியை அடைந்தேன்" என்று தெரிவித்து டென்சிங் நார்கே குழப்பத்தைத் தீர்த்தார். 

எட்மண்ட் ஹிலரி, டென்சிங் நார்கே

இப்படி ஒரு சாதனை செய்யக் காரணமாக இருந்த ஷெர்பா இன மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என 1960-களில் 'ஹிமாலயன் டிரஸ்ட்' என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தி அதன்மூலம் நேபாள மக்களுக்கு பல நன்மைகளை செய்து வந்தார் ஹிலரி. 1953-ம் ஆண்டு மேரி ரோஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு, ஒரு மகன், இரு மகள்கள் பிறந்தனர். 1975-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு விமான விபத்தில் தனது மனைவியையும், ஒரு மகளையும் பறிகொடுத்தார் ஹிலரி. அதன்பின் ஜீன் மல்க்ரூ என்ற பெண்ணை மறுமணம் செய்து வாழ்ந்து வந்தார். 2008-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி எவரெஸ்ட் நாயகன் ஹிலரி இம்மண்ணை விட்டு மறைந்தார்.  

அவர், இப்பூவுலகை விட்டு பிரிந்தாலும், அவரது மன உறுதியும், விடாமுயற்சியும் எவரெஸ்ட் உயரத்திற்கு வளர்ந்து என்றென்றும் அவரது நினைவை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

vikatan

Share this post


Link to post
Share on other sites

ஐரோப்பாவில் கருத்தரிக்கும் ஆண்!

fff_05066_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1_06

20 வயதான ஹைடன் கிராஸ் இப்போது ஐரோப்பாவின் ஹாட் டாபிக். இவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர். பெண்ணாகப் பிறந்த இவர்  தான் பருவ வயதை அடைந்ததும், தனக்குள் ஏற்பட்ட பாலுணர்வு மாற்றத்தால், ஹார்மோன் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் மூலமாகத் தனது உருவத்தையும் குரலையும் ஆண் போல மாற்றிக்கொண்டார். தனது பெற்றோரின் பிரிவுக்குப் பின்னர், 3 வருடங்கள் வேலை இல்லாமல் அரசு காப்பகத்தில் வாழ்ந்து வந்த ஹைடன்,  வாழ்க்கையில் வெறுமையை உணர்ந்தார். தனக்கென்று ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தார். இன்னும் முற்றிலும் ஆணாக மாறாத ஹைடனின் உடலில் பெண்ணின் கருப்பையும் மார்பகங்களும் உள்ளன. இந்த கருப்பையில் விந்தணு செலுத்தினால், கருவைத் தாங்கும் அளவுக்கு உறுதியாக உள்ளது. இதற்காக விந்தணு தானம் பெற சமூக வளைதளமான ஃபேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தார். இதனைக் கண்டு தனது விந்தணுவை தானம் செய்ய முன்வந்த ஒரு நபரிடம் தானம் பெற்ற நிலையில், விந்து ஹைடனின் கருப்பைக்குள் செயற்கை முறையில் செலுத்தப்பட்டது. இதனையடுத்து ஹைடன் வெற்றிகரமாகக் கரு தரித்துள்ளார். இப்போது  ஹைடன் கர்ப்பமாகி நான்கு மாதங்கள் ஆகின்றன. இதன்மூலமாக 'குழந்தை பெறவிருக்கும் ஐரோப்பாவின் முதல் ஆண்' எனப்பெயர் பெற்றுள்ளார் ஹைடன்.      

vikatan

Share this post


Link to post
Share on other sites
தெரியாத வேலைகளைக் கற்று உணர்க
 

article_1484026892-euyu.jpgகடமையில் கரிசனையற்றவன் கடவுளைத் திட்டக்கூடாது. இன்று பலரும் நல்லது நடந்தால் கடவுளுக்குப் படையல் வைப்பார்கள். தீயவை நடந்தால் எல்லாமே பொய் என்பார்கள்.  

எங்களுக்கு எவற்றை முழுமையாகச் செய்ய முடியுமோ அதனைச் செய்து முடித்தால் முழுமையான மனிதனாகலாம்.  

அரைகுறையாக எதனையும் செய்வதால் செய்கருமங்களில் வெறுப்புத்தான் மிஞ்சும். தெரியாத வேலைகளைக் கற்று உணர்க.  

இன்று வைத்தியத்துறையில் ஒவ்வொரு மனித அவயவங்களுக்கும் எனப் பிரத்தியேகமாக வைத்திய நிபுணர்கள் வந்துவிட்டார்கள். கல்வித்துறையில் தனித்தனியாக ஆயிரமாயிரம் துறைகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன.  

கல்வியில் செறிவூட்டல் ஒவ்வொரு வினாடியும் படுவேகமாகி விட்டது. இந்நிலையில் எங்கள் வேலையின் தரத்தை உயர்த்தியேயாக வேண்டும். தெளிவான புரிதல் இல்லாமல் உயர்வடைவது எங்ஙனம்?  

கடமையில்தான் கடவுளைக் காணமுடியும்.

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

வரலாற்றில் இன்று...

ஜனவரி - 12

 

1528 : சுவீ­டனின் மன்­ன­னாக முதலாம் குஸ்தாவ் முடி சூடினார்.

 

1539 : புனித ரோமப் பேர­ரசு மன்னன் ஐந்தாம் சார்ள்ஸ் மற்றும் பிரெஞ்சு மன்னர் முதலாம் பிரான்சிஸ் ஆகி­யோ­ருக்­கி­டையில் ஒப்­பந்தம் கைச்­சாத்­தா­கி­யது.

 

1853 : தாய்பிங் இரா­ணுவம் சீனாவின் வூச்சாங் நகரை கைப்­பற்­றி­யது.

 

1875 : சீனாவின் மன்­னா­னாக குவாங்-சூ முடி சூடினார்.

 

1908 : முதல் தட­வை­யாக தூர இடத்­துக்­கான வானொலி செய்தி ஈஃபெல் கோபு­ரத்திலிருந்து அனுப்­பப்­பட்­டது.

 

883haiti06-copy.jpg1915 : அமெ­ரிக்க நாடா­ளு­மன்றம், பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை அளிப்­ப­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்­தது.

 

1918 : பின்­லாந்தில் உள்ள யூதர்கள் முழுக் குடி­யு­ரி­மையைப் பெற்­றனர்.

 

1945 : இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்­றியம் நாசி­க­ளுக்கு எதி­ரான பெரும் போரை கிழக்கு ஐரோப்­பாவில் ஆரம்­பித்­தது.

 

1964 : ஸான்­ஸி­பாரின் புரட்­சி­வா­திகள் புரட்­சியை முன்­னெ­டுத்து ஸான்­ஸி­பாரை குடி­ய­ர­சாக அறி­வித்­தனர்.

 

1967 : தமி­ழ­கத்தில் நடிகர் எம்.ஜி.ராமச்­சந்­தி­ரனை (எம்.ஜி.ஆர்.) நடிகர் எம்.ஆர். ராதா, துப்­பாக்­கியால் சுட்டுப் படு­கா­யப்­ப­டுத்­தி­ய­துடன் தன்னைத் தானே சுட்­டுக்­கொண்டார். இரு­வரும் உயி­ர்­ழைத்­தனர். 

 

1970 : நைஜீ­ரி­யாவில் உள்­நாட்டுப் போர் முடி­வுக்கு வந்­தது.

 

1976 : பலஸ்­தீன விடுதலை இயக்கம் ஐ.நா. பாது­காப்பு அவையில் வாக்­கு­ரி­மை­யில்­லாமல் விவா­தங்­களில் கலந்து கொள்­வ­தற்கு ஐ.நா. பாது­காப்புச் சபை 11:1 என்ற வாக்கு வித்­தி­யா­சத்தில் அனு­மதி அளித்­தது.

 

1992 : மாலியில் அர­சியல் கட்­சிகள் அமைப்­ப­தற்­காக, பொது வாக்­கெ­டுப்பு மூலம் அர­சியல் அமைப்புச் சட்­டத்தில் மாற்றம் கொண்­டு­வ­ரப்­பட்டது.

 

2004 : உலகின் மிகப் பெரும் பய­ணிகள் கப்­ப­லான ஆர்­எம்எஸ் குயீன் மேரி 2 தனது கன்னிப் பய­ணத்தை ஆரம்­பித்­தது.

 

2006 : சவூதி அரே­பி­யாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்­லெ­றியும் நிகழ்வின் போது இடம்­பெற்ற நெரி­சலில் சிக்கி  362 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2006 : 25 ஆண்­டு­க­ளுக்கு முன்னர், பாப்­ப­ரசர் இரண்டாம் இரண்டாம் அரு­ளப்பர் சின்­னப்­பரை சுட்டுக் காயப்­ப­டுத்­திய மெஹ்மேட் அலி ஆக்கா என்­பவர் துருக்­கிய சிறையிலிருந்து விடு­விக்­கப்­பட்டார்.

 

2010 : ஹெய்ட்­டியில் ஏற்­பட்ட பூகம்பத்தினால் சுமார் 316,000 பேர் உயிரிந்தனர்.

 

2015 : கெமரூனில் அந்நாட்டு அரச படையினருடனான மோதலில் போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த 140 பேர் கொல்லப்பட்டனர். 

metronews.lk
Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

மோர்ஸ் குறியீட்டில் உங்கள் பெயரை எழுதுவோமா?

 

 
 
 
morse_3115969f.jpg
 
 
 

. அதென்ன மோர்ஸ் குறியீடு? அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் பின்னோக்கிச் செல்ல வேண்டும். போய்விட்டு வருவோமா?

ரொம்ப தூரத்தில் உள்ள உங்கள் தாத்தா, பாட்டி, அத்தை, மாமாவை எப்படித் தொடர்புகொள்கிறீர்கள்? செல்போன் உதவியுடன் பேசுகிறீர்கள் அல்லவா? பேச முடியாத நேரத்தில் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறோம் இல்லையா? இப்போது ‘வாட்ஸ்அப்’ வந்துவிட்டது. இந்த வசதியெல்லாம் 10 அல்லது 15 ஆண்டுகளுக்குள் வந்தவைதான். அதற்கு முன்பு எப்படித் தொடர்புகொண்டார்கள் தெரியுமா? தந்தி மூலம்தான்!

பழங்கால உத்திகள்

அதற்கு முன்பு, பழங்காலத்தில் தூரத்தில் உள்ள ஒருவருக்குத் தகவலைச் சொல்ல ரொம்ப நாள்கூட ஆனது. தகவலைக் கொண்டு செல்பவர் நடந்தோ, ஓடியோ, குதிரை மீது சென்றோ கொடுத்துவிட்டுத் திரும்புவார். அப்புறம், பறவைகளுக்குப் பயிற்சி தந்து அவற்றின் காலில் கடிதம் கட்டி அனுப்பினார்கள். போர் போன்ற அவசர, ஆபத்து காலங்களில் இவையெல்லாம் உதவுமா? அதற்காக அப்போது, குறிப்பிட்ட தூர இடைவெளிகளில் பறை மற்றும் ஊதல் கருவிகளின் மூலம் அடுத்தடுத்து ஒலிகளை எழுப்பியோ, புகை மூட்டியோ தகவலைத் தெரிவித்தார்கள். காற்று, மழை போன்ற பருவ மாற்றங்கள் இந்தத் தகவல் தொடர்புகளை வெகுவாகப் பாதித்தன. எனவே புதிய தகவல் தொடர்புகளைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மோர்ஸ் உருவானது

18-ம் நூற்றாண்டில் பல புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து வெளி வந்தவண்ணம் இருந்தன. மின்சாரம் மற்றும் காந்த சக்திகளின் பயன்பாடு புதிய கருவிகளை உருவாக்க உதவின. அடிக்கடி நடைபெற்ற போர்கள், தகவல் தொடர்பின் தேவையை ரொம்ப அதிகரித்தன. ரயில் பாதையில் சிக்னலுக்காக உருவாக்கப்பட்ட மின்காந்தத் தகவல் தொடர்பை அடிப்படையாக வைத்துப் பலர் பலவகையான ஆராய்ச்சிகளைச் செய்தார்கள்.

அப்போது அமெரிக்கரான சாமுவேல் மோர்ஸ் என்பவர் மின்காந்தக் கருவியிலிருந்து வயர்கள் வழியாகக் குறியீடுகளை அனுப்பும் முறைக்கு1837-ல் பிள்ளையார்சுழி போட்டார். அவருக்குப் பின்னர் வந்த ஆராய்ச்சியாளர்கள் அவரது கண்டுபிடிப்பை இன்னும் மேம்படுத்தினார்கள். அந்தக் குறியீடுகள் மோர்ஸ் பெயராலேயே பின்னர் அழைக்கப்பட்டன. புள்ளிகள், சிறு கோடுகள் அவற்றின் இடைவெளிகள் வாயிலாகக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன.

ஆங்கில எழுத்துகள் மற்றும் எண் வரிசைகள் இந்த 2 குறியீடுகளுக்குள் கொண்டுவரப்பட்டன. உதாரணத்துக்கு உடனடி அவசர உதவிக்கு இன்றைக்கும் நாம் SOS என்ற எழுத்துகளைப் பயன்படுத்துகிறோம் அல்லவா? இதை மோர்ஸ் குறியீட்டில் ‘S’ எழுத்து 3 புள்ளிகளாலும், ‘O’ எழுத்து 3 சிறுகோடுகளாலும் குறிக்கப்படுகிறது. மோர்ஸ் குறியீடுகள் வந்த பிறகு, அதுவரையிலான போர்கள் மற்றும் பத்திரிக்கை செய்தி பரிமாற்றத்தின் போக்கையே மாற்றின. வான்வழி மற்றும் கடல் போக்குவரத்தில் மோர்ஸ் குறியீடுகள் பல ஆண்டுகள் முக்கியப் பங்கு வகித்தன.

morse_code_3115970a.jpg

‘தந்தி’ வந்ததும் போனதும்

தொடக்கத்தில் அரசு தகவல் தொடர்புகளுக்கு மட்டுமே நடைமுறையில் இருந்த மோர்ஸ் பயன்பாடு, டெலிகிராம் எனப்படும் ‘தந்தி’துரித சேவையாகப் பொதுமக்களுக்குப் பயன்பட ஆரம்பித்தது. உங்கள் பெற்றோர், தாத்தா பாட்டியிடம் அவர்கள் காலத்துத் தந்திகளைக் கேட்டுப்பாருங்கள். ஒவ்வொரு தந்திக்குப் பின்னாலும் ஒரு கதையைச் சொல்வார்கள்.

வெளியூரில் இருப்பவர் அங்குள்ள அஞ்சலகத்தில் தனது தகவலை எழுத்து வடிவில் கொடுப்பார். தனிப் பயிற்சி பெற்ற அஞ்சலக ஊழியர் அத்தகவலை மோர்ஸ் குறியீடாக மாற்றி, நமது ஊர் அஞ்சலகத்துக்கு அனுப்புவார். அங்கே குறியீடுகள் உரிய வார்த்தைகளாக மாற்றப்பட்டு, நமது வீட்டுக்கு வந்து சேரும்.

இன்றோ தொலைபேசியின் நவீன வளர்ச்சியும், இண்டர்நெட் பயன்பாடும் தகவல் தொடர்பை இன்னும் எளிமையாக்கிவிட்டது. இதனால் பல்வேறு நாடுகளிலும் தந்தி சேவை முடிவுக்கு வந்தது. நம் நாட்டில் 1850-ல் கிழக்கிந்திய கம்பெனி மூலம் அறிமுகமான தந்தி சேவையை, சுதந்திர இந்தியாவில் அஞ்சல் துறையும், தொடர்ந்து பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனமும் வழங்கி வந்தன. இச்சேவை 2013-ம் ஆண்டு ஜூலை 15 அன்று நிறுத்தப்பட்டது.

மோர்ஸில் பெயர் எழுதுவோம்

இன்று தகவல் தொடர்பு எவ்வளவோ வளர்ந்துவிட்டது. என்றாலும் அவற்றின் முன்னோடியான மோர்ஸ் தந்த தந்தியை மறக்க முடியுமா? குழந்தைகள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும், பல்வேறு நாட்டுப் பள்ளிகளில் மோர்ஸ் குறியீட்டில் இன்று (11-ம் தேதி) ஒன்றிரண்டு வார்த்தைகளை எழுத மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இதற்காகவே ஆண்டுதோறும் ஜனவரி 11 அன்று ‘மோர்ஸ் குறியீட்டில் பெயரெழுத கற்கும் தினம்’ பள்ளிகளில் கடைபிடிக்கப்படுகிறது.

மேலே தரப்பட்டுள்ள பட்டியல் உதவியுடன் நீங்களும் உங்களது பெயரை ஆங்கில எழுத்துக்கு உரிய மோர்ஸ் குறியீடு கொண்டு எழுதிப் பாருங்கள். உங்களது அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அடுத்தகட்ட தகவல் தொடர்பு சாதனத்தை உருவாக்கப்போகும் விஞ்ஞானி நீங்களாகவும் இருக்கலாம் அல்லவா?

tamil.thehindu.

Share this post


Link to post
Share on other sites
எம்.ஜி.ஆரை எதனால் சுட்டார் எம்.ஆர்.ரா­தா? சுடப்­­பட்டு 50 ஆண்­டுகள் இன்­றுடன் நிறைவு
 

எம்.ஜி.ஆர். துப்­பாக்­கியால் சுடப்­பட்டு 50 ஆண்­டுகள்  நிறை­வு­பெற்­று­விட்­டன. ஆனால், இன்­ற­ளவும் எம்.ஆர்.ராதா நடத்­திய துப்­பாக்­கிச்­சூட்டின் பர­ப­ரப்பு அவ்­வ­ளவு எளிதில் அடங்­கி­விட­வில்லை.

 

21754mgr.jpg

 

என்ன நோக்­கத்­திற்­காக ராதா துப்­பாக்­கியைத் தூக்­கினார்? என்ற கேள்­விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் சாதா­ரண மக்­க­ளிடம் மேலோங்­கியே இருக்­கி­றது. 1967ஆம் ஆண்டு, ஜன­வரி 12ஆம் திகதி மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர். வீட்டில் துப்­பாக்கிச் சூடு நடந்­தது. தான் கொண்டு போயி­ருந்த துப்­பாக்­கியில் மூன்று தோட்­டாக்­களை மட்­டுமே நிரப்­பி­யி­ருந்தார் ராதா.

 

எம்.ஜி.ஆரை நோக்கி துப்­பாக்­கியின் விசை அழுத்­தப்­பட, எம்.ஜி.ஆரின் இட­து­காதை ஒட்டி துப்­பாக்கி ரவை துளைத்துக் கொண்டுபோனது. பின்னர் அதே துப்­பாக்­கியால் தனது நெற்றிப் பொட்­டிலும், தோளிலும் இரண்டு குண்­டுகள் பாய, இரத்த வெள்­ளத்தில் மிதந்தார்  எம்.ஆர்.ராதா. மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட இரு­வரும் உயிர் பிழைத்­தனர்.    

 

"என் முகத்­துக்கு நேராக குண்டு பாய்ந்து வந்­தது. நான் எப்­படிப் பிழைத்தேன்?" என தட­ய­வியல் நிபுணர் சந்­தி­ர­சே­க­ர­னிடம் ஆச்­சர்­யத்­தோடு கேட்டார் எம்.ஜி.ஆர். ராதா பயன்­ப­டுத்­திய ரவை­களை தீவி­ர­மாக ஆராய்ந்து ஒரு  முடி­வுக்கு வந்தார் சந்­தி­ர­சே­கரன். 'அந்தத் துப்­பாக்கி ரவைகள் பதி­னைந்து வரு­டங்­க­ளுக்கு முன்பு வாங்­கப்­பட்­டவை. அவற்றை ஒரு டப்­பாவில் போட்டு அடிக்­கடி பயன்­ப­டுத்தும் மேசை லாச்­சியில் வைத்­தி­ருந்தார்.

 

அங்கிருந்த துப்­பாக்கி ரவைகள் ஒன்­றுக்­கொன்று உருண்டு தேய்ந்­ததால், ரவையின் மேல் பிணைக்­கப்­பட்­டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடி­மானம் தளர்ந்து போய்­விட்­டது. அத­னால்தான் இரண்டு பேரின் உயி­ருக்கும் ஆபத்து ஏற்­ப­ட­வில்லை' என விளக்­கினார்.    

 

21754mgr-radha.jpgராதா­வுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நீண்­ட­நாட்­க­ளாக  இருந்­து­வரும் கருத்து வேறு­பா­டுகள் அனைத்தும் நீதி­மன்­றத்தில் பதிவு செய்­யப்­பட்­டன. தொழி­லாளி திரைப்­பட சூட்­டிங்­கின்­போது எம்.ஜி.ஆர், எம்.ஆர்.  ராதா சம்­பந்­தப்­பட்ட ஒரு காட்­சியில், எம்.ஜி.ஆர், ‘இந்த பஸ் இனி தொழி­லா­ளர்­களின் நம்­பிக்கை நட்­சத்­திரம்' எனப் பேச வேண்டும்.

 

‘இந்த பஸ்தான் இனி தொழி­லா­ளர்­களின் உத­ய­ சூ­ரியன்' என மாற்றிச் சொன்னார் எம்.ஜி.ஆர். இதனால் கோப­மான எம்.ஆர்.ராதா, ‘சினி­மா­வுக்­குள்ள, உன் கட்சி சின்­னத்தைக் கொண்டு வராதே. வெளிய போய் மேடை போட்டு பேசு' என சண்டை போட்­டி­ருக்­கிறார்.   

 

இதனால் எம்.ஜி.ஆர். படப்­பி­டிப்பை நிறுத்த, தயா­ரிப்­பாளர்  சின்­னப்பா தேவர் வந்து சமா­தானப்படுத்­தினார்.

 

இறு­தியில் குறிப்­பிட்ட அந்தக் காட்­சியில் ‘நம்­பிக்கை நட்­சத்­திரம்’ என்று பேச வைத்தார் சின்­னப்பா.  

 

இது­த­விர, காம­ரா­ஜரைக் கொல்ல சதி செய்­யப்­ப­டு­வ­தா­கவும் ராதா எழு­திய ஒரு கட்­டுரை, எம்.ஜி.ஆரை மிகுந்த வேத­னைக்­குள்­ளாக்­கி­யி­ருந்­தது. வழக்கு  விசா­ர­ணையில், எம்.ஆர்.ராதாவை வள­ர­வி­டாமல் சினிமா வாய்ப்­பு­களை எம்.ஜி.ஆர்  கெடுத்தார் என்­றெல்லாம் காரணம் சொல்­லப்­பட்­டது.   

 

'எம்.ஜி.ஆரும் அவ­ரு­டைய துப்­பாக்­கியால் என்னை நோக்கிச்  சுட்டார்' என ராதா தரப்பில் சொல்­லப்­பட, அதை முறி­ய­டித்­தது தட­ய­வியல் துறை. கே.சி.பி. கோபா­ல­கி­ருஷ்ணன், பி.சந்­தி­ர­சே­கரன் மற்றும் துப்­பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்­பி­ர­ம­ணியம் ஆகியோர் அடங்­கிய குழு, வெடிக்­கப்­பட்ட 3 குண்­டு­களும் ராதாவின் துப்­பாக்­கியில் இருந்து மட்­டுமே வெளி­யே­றி­யது என நிரூ­பித்­தனர்.  

 

இந்த சம்­பவம் நடந்­த­போது, கண்ணால் பார்த்த ஒரே சாட்சி. தயா­ரிப்­பாளர் வாசு  மட்­டும் தான். அவர் தன்­னு­டைய சாட்­சி­யத்தில், 'எம்.ஜி.ஆரை சுட்­டு­விட்டு அதே  துப்­பாக்­கியால் இரண்டு முறை தன்னை சுட்டுக் கொண்டார் ராதா' என வாக்­கு­மூலம்  கொடுத்தார்.   

 

21754download-%281%29.jpgநீதி­மன்­றத்தில் வாதம் நடந்­த­போது பல சுவா­ரஸ்ய சம்­ப­வங்­களும்  நடந்­தன. எம்.ஆர்.ராதா லைசென்ஸ் இல்­லாத துப்­பாக்­கியால் சுட்டார் என அரச தரப்பு சட்­டத்­த­ரணி குற்றம் சாட்டிக்கொண்டே போக, ஒரு கட்­டத்தில் கோப­மான ராதா, ' யுவர் ஆனர். வழக்கில் குறுக்­கி­டு­வ­தற்கு மன்­னிக்­கவும். லைசென்ஸ் இல்­லாத துப்­பாக்­கியால் ராதா சுட்டார் என அரசதரப்பு சட்­டத்­த­ரணி சொல்­வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

 

துப்­பாக்­கியால் சுட்­டதில் நானும் சாக­வில்லை. ராமச்­சந்­தி­ரனும் சாக­வில்லை. யாரையும் கொல்­லாத ஒரு துப்­பாக்­கிக்கு லைசென்ஸ் தேவையா?' எனக் கேட்க, அதிர்ந்­தது நீதி­மன்றம்.     

 

துப்­பாக்கிச் சூடு வழக்கு மிக விரை­வாக நடந்­தது. அதே ஆண்டு நவம்பர் 4ஆம் திக­தி­யன்று நீதி­பதி லட்­சு­மணன் தீர்ப்பை வாசித்தார். 'அர­சியல்  முன்­வி­ரோதம் கார­ண­மாக ராதா தன் துப்­பாக்­கியால் எம்.ஜி.ஆரை சுட்டார்.

 

பிறகு தன்­னைத்­தானே இரண்டு முறை சுட்­டுக்­கொண்டார். இதை அர­ச ­த­ரப்பு ஆதா­ர­பூர்­வ­மாக  நிரூ­பித்­துள்­ளது' எனக் கூறி, ராதா­வுக்கு ஏழாண்டு சிறைத் தண்­டனை வழங்­கப்­பட்­டது. 

 

தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்­நீதி மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு செய்தார். மேன்­மு­றை­யீடு தள்­ளு­படி செய்­யப்­பட்­டது. மீண்டும் உச்ச நீதி­மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு செய்தார். அங்கே தண்­டனை காலம்  ஐந்­தாண்­டு­க­ளாகக் குறைக்­கப்­பட்­டது. சிறையில் அவ­ரு­டைய நன்­ன­டத்தை கார­ண­மாக நான்கு ஆண்­டுகள் நான்கு மாதங்­களில் அவர் விடு­த­லை­யானார்.  

 

துப்­பாக்கிச் சூடு வழக்கிலிருந்து வெளியே வந்­து­விட்­டாலும், 1975இல் இந்­திராகாந்தி அரசின் நெருக்­கடி நிலை அறி­விப்­பின்­­போது, மிசா  சட்­டத்­தின்கீழ் கைது செய்­யப்­பட்டார் ராதா. 

 

'திரா­விடர் கழ­கத்­துடன்  தொடர்­பில்லை' என எழுதித் தந்தால் விடு­தலை செய்­வ­தாகக் கூறியும், நிபந்­த­னையை ஏற்க மறுத்து பதி­னொரு மாதங்கள் சிறையிலிருந்தார் எம்.ஆர்.ராதா.   

 

கடை­சி­வரை, எந்தப் பேச்­சு­வார்த்­தையும் வைத்துக்கொள்­ளாமல் இருந்த எம்.ஜி.ஆரும் ராதாவும் சந்­தித்துக் கொண்­டது பெரி­யாரின் இறப்­பின்­போ­து தான். அப்­போ­து­கூட,' உங்­க­ளுக்கு பக்­கத்தில் இருப்­ப­வர்­களை நம்ப வேண்டாம்' என ராதா கூறியதாகவும் ஒரு செய்தி உண்டு.    

 

அதன்பின் சிங்கப்பூரிலும் மலேஷியாவிலும் வெற்றிகரமாக நாடகம்  நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979ஆம் ஆண்டு செப்டெம்பர் 17ஆம் திகதி இறந்தார். 

 

அப்போது முதல்வராக இருந்த  எம்.ஜி.ஆர். இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முன்வந்தாலும், ராதா  குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அரச மரியாதையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.                                         

 

(நன்றி:விகடன்)      

metronews.lk/
Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

உயிருக்குப் பயந்து ஒளியும் பிரிட்டிஷ் உளவாளி!

Donald Trump

நேற்று உலகை அதிரவைத்த டொனால்ட் ட்ரம்ப் பைல்களை தொகுத்தது பிரிட்டனைச் சேர்ந்த கிரிஸ்டோஃபர் ஸ்டீல் எனும் முன்னாள் MI6 உளவாளி என தெரிய வந்துள்ளது.

இதனால், 'ரஷ்யாவின் கோபத்துக்கு ஆளாகவேண்டுமே' என்று அஞ்சுகிறாராம் கிரிஸ்டோபர் ஸ்டீல். உயிருக்குப் பயந்து இங்கிலாந்தின் சர்ரே-வில் உள்ள அவரது வீட்டில் இருந்து நேற்று இரவே கிளம்பி, தலைமறைவாகிவிட்டாராம்.  இங்கிலாந்தின் MI6 உளவு அமைப்பு அவரை பாதுகாக்க தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. 

 

 

சுஷ்மாவின் எச்சரிக்கைக்கு அடிப்பணிந்த அமேசான்!

Sushma Swaraj

அமேசான் நிறுவனம் தேசியக் கொடி பொறித்த மிதியடிகளை (doormats) ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு வைத்திருந்தது. தேசிய கொடியை அவமதிக்கும் விதமாக தயாரித்த அனைத்து பொருட்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அமேசான் தளத்துக்கு எச்சரிக்கைவிடுத்தார்.

Doormate

அமேசானில் பணிபுரிபவர்களுக்கு விசா வழங்கப்படாது  என்றும் கடுமையாக சாடினார். இதனைத்  தொடர்ந்து தேசியக் கொடி ப்ரின்ட் செய்யப்பட்ட மிதியடிகளை தளத்தில் இருந்து நீக்கிவிட்டதாக இன்று அமேசான் அறிவித்துள்ளது.

vikatan

Share this post


Link to post
Share on other sites

ஒபாமா புகைப்பழக்கத்தை விட, மிஷேல் என்ன ஒப்பந்தம் போட்டார் தெரியுமா?!

ஒபாமா

லகின் உச்ச அதிகாரம் கொண்ட அந்த ஆணின் குரல், தன் முக்கியமான உரையில், தன் மனைவி பற்றிக் குறிப்பிடும்போது அன்பாலும் நன்றியாலும் நெகிழ்கிறது. 

''25 ஆண்டுகளாக எனக்கு மனைவியாக, என் குழந்தைகளுக்குத் தாயாக மட்டுமல்ல, என் மனதுக்கு நெருக்கமான தோழியாக உடன் பயணித்திருக்கிறாய். உனதில்லை என்றாலும், பல பொறுப்புகளை நீ விரும்பி எடுத்துக்கொண்டாய். அவற்றை உன் நல் இயல்பாலும், தைரியத்தாலும் செய்து முடித்தாய். இந்த வெள்ளை மாளிகையை, அனைவருக்குமான இடமாக நீ மாற்றினாய். வரும் தலைமுறையினரின் இலக்கு மேன்மையானதாக இருக்கும். ஏனெனில், அவர்கள் உன்னை ரோல்மாடலாகக் கொண்டிருக்கிறார்கள். நீ என்னைப் பெருமைப்பட வைத்தாய். நீ நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்தாய்!"

சிகாகோவில், அமெரிக்க அதிபராக தன், இறுதி உரையை நேற்று பராக் ஒபாமா நிகழ்த்தியபோது, முன் வரிசையில் அமர்ந்திருந்த தன் மனைவியின் கண்களைப் பார்த்து இந்த வார்த்தைகளைச் சொன்னவர், ஒரு சந்தர்ப்பத்தில் தன் கைக்குட்டையை கண்களில் ஒற்றிக்கொள்ள, அந்த அரங்கில் இருந்த 18,000 பேரும் நெகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.

இதே சிகாகோவில்தான் பராக் ஒபாமாவும், மிஷேலும் சந்தித்துக்கொண்டனர். இதே சிகாகோவில்தான் இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்களும் பிறந்தனர். ''எனக்கும் மிஷேலுக்கும், வாழ்வின் அனைத்து அத்தியாயங்களும் இந்த சிகாகோவில்தான் ஆரம்பித்தன'' என தன் ஃபேஸ்புக் போஸ்டில் குறிப்பிட்டுள்ளார் ஒபாமா. ஆம்... ஒபாவின் அனைத்து அறிக்கைகளிலும், மிஷேலின் பெயர் நீங்காமல் இடம் பிடித்திருக்கும். அந்தளவுக்கு அவர் இல்வாழ்க்கை, பொதுவாழ்க்கை இரண்டிலும் இரண்டறக் கலந்தவர் மிஷேல்.

எண்பதுகளின் இறுதியில், சிகாகோவில் உள்ள சிட்லே ஆஸ்டின் சட்ட நிறுவனத்தில் மிஷேல் பணிபுரிந்தபோது, அங்கு புதிதாகப் பணிக்குச் சேர்ந்தார் ஒபாமா. அவருக்கு மிஷேல்தான் பாஸ். சில மாதங்களில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. 1992-ம் ஆண்டு, அது திருமணத்தில் முடிந்தது. அப்போது, ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவார் என்றோ, மிஷேல் அமெரிக்காவின் முதல் குடிமகள் ஆவார் என்றோ அந்தத் தம்பதிக்குத் தெரியாது என்றாலும், அவர்களின் வாழ்க்கை நோக்கமும் செயல் ஆக்கமும் கொண்ட பாதையிலேயே சென்றுகொண்டிருந்தது.

சோஷியாலஜி பட்டம் பெற்று, சட்டம் படித்த மிஷேலுக்கு மக்கள் சேவையில் விருப்பம் அதிகம். எனவே, வழக்குரைஞராகத்தான் வகித்த வேலையை உதறி, சிகாகோ மாநகர திட்ட மற்றும் வளர்ச்சித் துறையில் உதவி ஆணையராகும் அளவுக்கு பொதுவாழ்வில் முன்னேறினார். இன்னொரு பக்கம், தன் மகள்கள் மலியா, சாஷாவுக்கு ஓர் அம்மாவாக அவர் எந்தளவுக்குத் தேவைப்படுவாரோ, அதை நிறைவாகக் கொடுக்கவும் அவர் தவறவில்லை. 


ஒபாமா தன் மனைவி மிஷேலுடன் காதல் தருணத்தில்


2007. ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கணவரின் வெற்றிக்கு உழைக்க, தன் பணிகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் மிஷேல். ஆனால், அதற்கு பதில் பரிசாக தன் கணவர் சிகரெட் பழக்கத்தை விடவேண்டும் என்று அவரிடம் உறுதிபெற்றுக் கொண்டார்.

தொடர் பயணங்கள், பிரசாரங்கள் எனச் செல்ல வேண்டிய சூழல். மிஷேல் ஒரு திட்டம் வகுத்துக்கொண்டார். வாரத்தில் ஓர் இரவு மட்டுமே வெளியே தங்குவது, இரண்டு நாட்கள் தொடர் பிரசாரத்தின் இறுதி இரவை தன் மகள்களுக்கு மட்டுமானதாக ஆக்குவது. 'உங்களை நீங்கள் எப்படி அடையாளப்படுத்திக் கொள்வீர்கள்?' என்று அமெரிக்காவின் குடிமகளான மிஷேலிடம் கேட்கப்பட்டபோது, 'முதலில், மலியா, சாஷாவின் அம்மாவாக' என்ற தன் பதிலுக்கு எப்போதும் உண்மையாக இருப்பவர் மிஷேல்.

2008 அமெரிக்கத் தேர்தலில் ஒபாமா வென்றதில், மிஷேலின் உழைப்புக்கு மிகப் பெரிய பங்குண்டு. அதை ஒபாமாவே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். பிரசாரத்தின்போது சில பத்திரிகைகள் 'ஆங்ரி பிளாக் உமன்' என்ற அடைமொழியுடனே எப்போதும் தன்னைக் குறிப்பிட்டதில் தொடங்கி, அனைத்து விமர்சனங்களையும் கடந்து, தன் கணவர், மகள்களுடன் மிஷேலின் கறுப்பினக் குடும்பம் வெள்ளை மாளிகையில் குடியேறியபோது, உலகமே ஆச்சர்யமாகத்தான் பார்த்தது. அதன் பின் மிஷேல் அமெரிக்காவின் முதல் குடிமகளாக மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம், உலகுக்கு செய்திதான்.

தன் குழந்தைகளுடன் ஒபாமா


வெள்ளை மாளிகையில் முதல் முறையாக ஆர்கானிக் தோட்டம் நிறுவினார் மிஷேல். இந்தத் தலைமுறை குழந்தைகளின் ஒபிஸிட்டி பிரச்னைக்குத் தீர்வு காண 'லெட்ஸ் மூவ்' என்ற இயக்கத்தை அவர் ஆரம்பிக்க, அதற்கான தேசிய அளவிலான அரசின் செயல் திட்டங்களை வகுத்தார் ஒபாமா. 'ரீச் ஹையர்' என்ற இயக்கத்தை நிறுவி, ஒவ்வொரு அமெரிக்க மாணவரும் நிச்சயமாக மேற்படிப்பு பெறுவதற்கான சூழலை மேம்படுத்தினார். 'லெட் கேர்ள்ஸ் லேர்ன்' என்ற இயக்கத்தை ஆரம்பித்து, மாறுபட்ட சூழல்களில் வசிக்கும் பதின் பருவப் பெண்கள் கல்வி பெறும் வாய்ப்புகளை அதிகரித்தார். இதுபோன்ற செயல்பாடுகளால்தான், தன் இறுதி உரையில் தன்னையும், நாட்டையும் பெருமைப்படுத்தியதாக தன் மனைவியைக் குறிப்பிட்டுள்ளார் ஒபாமா.

மிஷேல், தன் ஆடைகளாலும் அதிகம் கவனிக்கவைத்தவர். ஆரம்பகால தேர்தல் பிரச்சாரத்தின்போது, 'அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் துணைகளிலேயே, சுவாரஸ்யம் குறைந்த, பிரபலத்தன்மை இல்லாதவர் இவர்தான்' எனக் குறிப்பிடப்பட்டவர் மிஷேல். ஆனால், 2006ல் 'எசன்ஸ்' இதழ் வெளியிட்ட 'உலகின் ஆளுமைமிக்க 25 பெண்கள்' பட்டியலிலும், 'உலகின் மிகச் சிறந்த ஆடை ரசனைகொண்ட 10 நபர்கள்' பட்டியலிலும் அந்த கறுப்பழகி இடம் பிடித்தது, காலத்தின் பதில்.

மிஷேல், மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர். 2012-ம் ஆண்டு இரண்டாவது முறையாக ஒபாமா அதிபரானபோது மிஷேல் நிகழ்த்திய உரை உட்பட, வரலாற்றில் இடம்பிடித்த அவரின் உரைகள் பல. அவற்றின் கருப்பொருளாக, பெரும்பாலும் தன் கணவரையே கொண்டிருக்கிறார் மிஷேல்.

முன்னே நடந்து செல்லும் தன் மனைவிக்கு குடைப்பிடித்தபடி, அமெரிக்க அதிபர் அவர் பின்னால் நடந்துவரும் புகைப்படம், ஜோடியாக பால் ரூம் நடனம், கட்டியணைத்தபடி, முத்தம் கொடுத்தபடி, மகள்களுடன் ரிலாக்ஸ் தருணங்கள் என... இந்த வெள்ளை மாளிகை தம்பதியின் ஒவ்வொரு புகைப்படமும், க்யூட் ரசனையைத் தரும். இதோ...  அமெரிக்க அதிபராக இறுதி உரை நிகழ்வின் முடிவிலும், தன் மனைவியின் கரம் பற்றியே நிற்கிறார் ஒபாமா.

பெண்மையின் ஆளுமை!

vikatan

Share this post


Link to post
Share on other sites

இறைவன் எங்கு இருக்கிறார்... சுவாமி விவேகானந்தர் #பிறந்தநாள் பகிர்வு

Swami Vivekananda 


ந்தியாவை புனர்நிர்மாணம் செய்தவர் சுவாமி விவேகானந்தர். இளைஞர்களை மிகவும் நேசித்தவர்; இளைஞர்களிடம் பெரிதும் நம்பிக்கை கொண்டவர். தன்னிடம் ஆற்றல் மிக்க நூறு இளைஞர்கள் இருந்தால் போதும் உலகத்தையே மாற்றி அமைக்க முடியும் என்று, இளைஞர்களை போற்றியவர். அதனால்தான் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.  இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம். இளைஞர்கள் பெருமிதத்துடன் கொண்டாடவேண்டிய நன்னாள். இந்த நன்னாளில் சுவாமி  விவேகானந்தர் பற்றியும், அவர்  இளைஞர்களுக்கு கூறிய அருளுரைகள் பற்றியும் சிறு தொகுப்பு...
ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்துக்காகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும்,  தான் பிறந்த தன்னுடைய நாட்டுக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர்.  


ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகத்  திகழ்ந்தஅவரின்,  ஆணித்தரமான, வார்த்தைகளும், பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த  ஒவ்வொரு இளைஞனின் மனதிலும் தேசிய உணர்வைத் தூண்டியது. 
அதேபோல நாட்டு மக்களுக்கு ஆன்மிக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்தவர். ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமைச் சீடரான சுவாமி விவேகானந்தர்.  ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளை உருவாக்கி, ஆன்மிகத்தையும் அன்பையும் பரப்பியவர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று உணர்த்தியவர்.


இளைஞர்களுக்கு ஓர் உந்து சக்தியாக திகழ்ந்த 39 வயது வரை வாழ்ந்த இளைஞரின் பிறந்த நாளைத்தான் நாடெங்கிலும் தேசிய இளைஞர் தினமாக  கொண்டாடி வருகிறோம். 


இளைஞர்கள் தேசியத்தையும், தெய்வபக்தியையும் நம் இரு கண்களாக போற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர்,  இறைவன்  அவர் பல்வேறு இடங்களில் உபதேசித்த அமுத மொழிகளை நினைவு கூர்வோம்.

 

Swami Vivekananda 


கடவுள் எங்கு இருக்கிறார்?


கடவுளைத் தேடி வேறு எங்கும் செல்ல வேண்டாம். அவர் ஏழைகளின் வடிவில் தான் இருக்கிறார். எனவே ஏழைகளை இறைவனாக ஏற்று அவர்களுக்கு சேவை செய்தாலே போதும்; அவர்களுக்காக பிரார்த்தனை செய்தாலே போதும் இறைவனின் அருள் உங்களுக்கு பூரணமாகக் கிடைக்கும்.


அனைத்திலுமே ஏழை எளியவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். அவர்களுக்குக் கொடுத்ததுபோக எஞ்சியதைத்தான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். 


நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் நேசியுங்கள். அவர்களுக்குத் தொண்டு செய்வதே சிறந்த இறைவழிபாடாகும்.Swami Vivekananda


கடும் தவத்தினால் ஆற்றல் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் பிறருக்காக  பாடுபடுவது தான் உண்மையான தவம்.  கர்மயோகிகளும் தொண்டு செய்வதை தவத்தின் ஒரு பகுதியாகவே கருதுகிறார்கள். சுயநலம் இன்றி பிறரது நன்மைக்காக வாழவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது; மனதை தூய்மைப்படுத்தி, ஆன்மிக உணர்வையும் அதிகரிக்கிறது. 
இந்த மனிதப் பிறவியை பிறருக்காக அர்ப்பணியுங்கள். அவர்களுக்கு சேவை செய்வதிலேயே இந்த உடல் போகட்டும். பிறரின் நன்மைக்காக, இந்த  ஒரு பிறவியையாவது நீங்கள் தியாகம் செய்ய வேண்டாமா? ஆகவே  நீங்கள் முக்தியடைய வேண்டி தியானம், தவம் செய்வதை அடுத்தடுத்த பிறவியில் செய்துகொள்ளலாம்.


சிறந்த வழிபாடு  எது?


ஏழைகளின் வடிவில் இறைவனை காண்பதே சிறந்தது.  மற்றவர்களுக்கு உதவுவதே உண்மையான வழிபாடு. விக்கிரகங்களின் மூலம் மட்டும் இறைவனை காண்பது என்பது வழிபாட்டின்  ஆரம்ப நிலைதான்.


ஒரு மனிதன் உடல் மற்றும் மனத் தூய்மையுடன் வழிபட்டால்தான் அது பயனுள்ள வழிபாடாகும். அவர்களின் பிரார்த்தனைதான் இறைவனால்  நிறைவேற்றப்படும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

vikatan

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல் ரசிகர்கள் கருத்துகளுடன் மறு அவதாரம்

Share this post


Link to post
Share on other sites

பறக்கும் வெள்ளை மாளிகை

 
air_force_one_3114997f.jpg
 
 
 

உலகின் உச்சக்கட்ட பாதுகாப்போடு பயணத்தை மேற்கொள்பவர் அமெரிக்க அதிபர். அதிபரின் பாதுகாப்புக்காக அவர்கள் செய்திருக்க கூடிய ஒவ்வொரு விஷயமும் நம்மை பிரமிக்க வைக்கிறது. முக்கியமாக அதிபரின் விமான பயணம். அதிபருக்கென்று பிரத்யேக விமானங்கள், பாதுகாப்பு வசதிகள் இருக்கும். இந்த விமானத்தை பற்றியும் பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் சில தகவல்கள்…

> மற்ற விமானங்களை போல் அல்லாமல், பைலட், துணை பைலட்டை தாண்டி, ஒரு பொறியாளர் ஒரு வழிகாட்டி ஆகியோரை உள்ளடக்கிய நான்கு பேர் கொண்ட குழு இந்த விமானத்தை இயக்குகிறது.

boeing_3115019a.jpg

> இந்த விமானத்தை மிகப் பெரிய நிறுவனமான போயிங் வடிவமைத்துள்ளது.

> போயிங் 747 என்ற ரக விமானம்தான் ஏர்போர்ஸ் ஒன் என்று அழைக்கப்படுகிறது.

> 1953ம் ஆண்டு அமெரிக்க அதிபர் சென்ற எல்சென்ஹோவர் விமானம், வர்த்தக விமானங்கள் செல்லும் வழித்தடத்தில் குளறுபடியால் தவறுதலாக சென்றுவிட்டது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி அமெரிக்க அதிபருக்காக உருவாக்கப்பட்ட விமானத்தின் பெயர்தான் ஏர்ஃபோர்ஸ் ஒன்.

> படுக்கையறை, குளியலறை, வரவேற்பு அறை, சிறிய ஆலோசனைக் கூடம் என அனைத்தும் இந்த விமானத்தில் உள்ளன. ஆலோசனைக் கூடத்தில் இருக்கும் பிளாஸ்மா டிவி மூலம் வீடியோ கான்ஃபரன்சிங் வசதியில் நாட்டு மக்களுக்கு கூட உரை நிகழ்த்த முடியும்.

> இந்த விமானம் நெருப்புப் பொறிகளை உமிழக்கூடிய வசதி கொண்டது.

af1_3114999a.jpg

> அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் விமான மாடல் போயிங் 747- 200பி ஜம்போ ரக விமானமாகும். அவர் பயணிக்கும் விமானத்தை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வகையில் ஒரே மாதிரியான இரண்டு விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மூன்றாவது விமானத்தில் பாதுகாப்பு அதிகாரிகளும், அலுவலக பணியாளர்களும் பயணிப்பர்.

> விமானத்தின் கீழ் பகுதியில் ரகசிய அறையில் பல்வேறு பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரேடியோ அலைகளை செயலிழக்க செய்யும் கருவி, ரேடாரிலிருந்து விமானத்தை தப்பவைக்கும் கருவி மற்றும் ஏவுகணை தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறியும் கருவிகள் இதில் உள்ளன.

> தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானங்கள் பழமை அடைந்து விட்ட காரணத்தால் அதன் பராமரிப்புப் பணிகள் மிகுந்த செலவீனமும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி உள்ளன. இதையெடுத்து இரண்டு புதிய விமானங்களை வாங்குவதற்கு போயிங் நிறுவனத்திடம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

trump_3115018a.jpg

> இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் டொனால்டு டிரம்ப் இந்த புதிய விமானங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆர்டரை ரத்து செய்ய வேண்டும் என்று அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். இது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

> படம் பிடிப்பது இந்த விமானத்தில் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. அதிபரின் தனி அறை மற்றும் அலுவல்களை கவனிக்கும் அறை விமானத்தின் முன்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

> பொதுவாக, காலநிலை சாதகமாக இல்லாத பட்சத்தில் விமானங்கள் தரையிறங்கும் இடங்கள் மாற்றப்படும். ஆனால், ஏர்போர்ஸ் ஒன் விமானம் எந்தவிதமான காலநிலையிலும், ஏற்கெனவே குறிப்பிட்ட இடத்தில் கட்டாயம் தரையிறங்க வேண்டும். அதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் உள்ளடக்கியது இந்த விமானம்.

> அதிபர் பயணிக்கும் விமானத்திலேயே அவசர மருத்துவ உதவி மற்றும் சிகிச்சைகளுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒரு மருத்துவர் மற்றும் செவிலியரும் இருப்பர். மேலும், உணவு பொருட்கள் தயாரிப்பதற்காக இரண்டு சமையலறைகளும் உள்ளன.

af11_3114998a.jpg

> மணிக்கு அதிகபட்சமாக 925 கிமீ வேகத்தில் பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 13,000 கிமீ தூரத்திற்கு இடைநில்லாமல் செல்லும். நடுவானில் பறக்கும்போதே, இந்த விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப முடியும். இதன் மூலம், ஏர்போர்ஸ் ஒன் பல மணி நேரம் பறக்க முடியும்.

> படுக்கையறை, குளியலறை, வரவேற்பு அறை, சிறிய ஆலோசனைக் கூடம் என அனைத்தும் இந்த விமானத்தில் உள்ளன. ஆலோசனைக் கூடத்தில் இருக்கும் பிளாஸ்மா டிவி மூலம் வீடியோ கான்ஃபரன்சிங் வசதியில் நாட்டு மக்களுக்கு கூட உரை நிகழ்த்த முடியும்.

> இந்த விமானத்தில் 87 தொலைபேசிகளும் 19 தொலைக்காட்சி திரைகளும் உள்ளன. மேலும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தகவல் தொடர்பு வசதி இருக்கிறது.

> அணுகுண்டு தாக்குதல் மூலம் ஏற்படும் கதிரியக்கத்தை தடுக்கும் வசதிகளுடன் இந்த விமானம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பறக்கும்போது ஏவுகணை தாக்குதல்களை கூட சமாளிக்கும் வசதிகள் கொண்டது.

>அமெரிக்க அதிபர் பயணிக்கும் விமானத்தில் 70 பேர் தாராளமாக பயணிக்க முடியும்.

> பொதுவாக, காலநிலை சாதகமாக இல்லாத பட்சத்தில் விமானங்கள் தரையிறங்கும் இடங்கள் மாற்றப்படும். ஆனால், ஏர்போர்ஸ் ஒன் விமானம் எந்தவிதமான காலநிலையிலும், ஏற்கெனவே குறிப்பிட்ட இடத்தில் கட்டாயம் தரையிறங்க வேண்டும். அதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் உள்ளடக்கியது இந்த விமானம்.

tamil.thehindu

Share this post


Link to post
Share on other sites

ரோபோ குரங்கு குட்டி இறந்து விட்டதாக நினைத்து மனமுடைந்து போன குரங்குகள் : அரிய காணொளி இணைப்பு 

 

 

கெமரா பொருத்தப்பட்ட ரோபோ குட்டி குரங்கை பார்த்து உயிரிழந்த குரங்கு என நினைத்து, குரங்குகள் கண்ணீர் விடும் நெகிழ்ச்சியான காட்சியை சர்வதேச ஊடகம் காணொளியாக பதிவு செய்துள்ளது.

 

  ரோபோ குரங்கு குட்டி இறந்து விட்டது என நினைக்கும் குரங்குகள் அதற்கு உயிர் இருக்கின்றதா என சோதனை செய்து பார்ப்பதும் குரங்கை அங்கும் இங்குமாக பயத்துடன் தூக்கி கொண்டு செல்வதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

பின்னர் குட்டி குரங்கை தடவி பார்த்து, கட்டியணைத்து, குரங்குகள் தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றன. 

பின்னர் தனது இன குரங்குகளை ஒன்றை ஒன்று கட்டிக்கொண்டு வருந்துகின்றன. -TV-SHOW-Spy-in-the-Wild.jpgTVV.jpgTV-SHOW-Spy-in-the-Wild.jpgTV22.jpgtv3.jpgtv2.pngtv.jpg

http://www.virakesari.lk

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

வரலாற்றில் இன்று....

ஜனவரி - 13 

 

1658 : இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வார்ட் செக்ஸ்பி என்பவர் லண்டன் கோபுர சிறையில் இறந்தார்.

 

884varalru1.jpg1830 : அமெரிக்காவின் லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பரவியது.

 

1840 : லோங் தீவில் லெக்சிங்டன் என்ற நீராவிக்கப்பல் மூழ்கியதில் 139 பேர் கொல்லப்பட்டனர்.

 

1847 : கலிபோர்னியாவில் மெக்ஸிகோ - அமெரிக்கப் போரானது காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

 

1908 : அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் ரோட்ஸ் ஒபேரா மாளிகையில் தீப்பிடித்ததில் 171 பேர் உயிரிழந்தனர்.

 

1915 : இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 29,800 பேர் உயிரிழந்தனர்.

 

1930 : மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.

 

1939 : அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிலோமீற்றர் நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் கொல்லப்பட்டனர்.

 

88408.jpg1942 : ஹென்றி போர்ட், பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் வாகனத்துக்கான காப்புரிமையைப் பெற்றார்.

 

1953 : யூகோஸ்லாவியாவின் தலைவராக மார்ஷல் ஜோஸப் டிட்டோ தெரிவு செய்யப்பட்டார்.

 

1964 : இந்தியாவின் கல்கத்தாவில் இடம்பெற்ற கலவரங்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

 

1972 : கானாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

 

1982 : அமெரிக்காவின் வோஷிங்டன் டிசி நகரில் விமானம் ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து நொருங்கியதில் 78 பேர் கொல்லப்பட்டனர்.

 

1985 : எத்தியோப் பியாவில் பயணிகள் ரயிலொன்று விபத் துக் குள்ளாகி யதில் 428 பேர் கொல்லப் பட்டனர்.

 

884shirani.jpg1992 : இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக ஜப்பான் மன்னிப்புக் கோரியது.

 

2001 : எல் சல்வடோரில் இடம்பெற்ற பூகம்பத்தில்  800 பேர் கொல்லப்பட்டனர்.

 

2006 : சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற பூகம்பத்தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.

 

2012 : பயணிகள் கப்பலான கொஸ்டா கொன்கோர்டினா, 4,232 பேருடன் சென்றுகொண்டிருந்த வேளையில் இத்தாலியின் கரையோரத்தில் விபத்துக்குள்ளாகி மூழ்கியது. இதனால் 31 பேர் உயிரிழந்தனர். 

 

2013 : இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் பிரேரணையை உறுதிப்படுத்தும் ஆவணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கையெழுத்திட்டார். இதன் மூலம் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து சிராணி பண்டாரநாயக்க நீக்கப்பட்டார்.

 

2014 : ஜப்பானின் ஹிரோஷிமா பிராந்தியத்தில் மண்சரிவினால் 72 பேர் உயிரிழந்தனர்.

 

2015 : பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ்  இலங்கைக்கு விஜயம் வருகை தந்தார்.

metronews.lk
Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

மசால் தோசை பர்கராகிறதாம் - மக்டொனால்ட்ஸின் கைவண்ணத்தில்!

  •  
    பர்க்கர் சாப்பிடும் இளைஞர்
 
 

அப்படியானால், பேன் கேக் போல இருக்கும் அரிசி மாவால் செய்யப்படும் தோசையில், உருளை கிழங்கால் செய்யப்பட்ட மசாலா கலவையை பரப்பி வழங்கப்படும் பிரபலமான மசாலா தோசையை பற்றி அறிய வந்திருப்பீர்கள்.

மென்டோனெல் கடை 

அத்தகைய இந்த பழமை வாய்ந்த உணவு, பர்கரின் வடிவில் கிடைக்கும் என்று எப்போதாவது எண்ணியிருக்கிறீர்களா? எண்ணியிருக்க மாட்டீர்கள் தானே?

 

மக்டொனால்ட்ஸ் அத்தகைய பர்க்கரை விற்பதற்கு திட்டமிட்டு வருகிறது.

டிவிட்டர் பதிவு 

 

"தோசை பர்க்கர்" எனப்படும் உணவு வகை விரைவில் மக்டொனால்ட்ஸ் கடைகளில் விற்கப்படும் என்று தெரிய வருகிறது.

 

http://www.bbc.com

Share this post


Link to post
Share on other sites

நன்றி செலுத்தும் நன்னாள்! தைப் பொங்கல் திருநாள்... #PongalSpecial

லகத்துக்கே ஒளியையும் உயிர்ச் சக்தியையும் தருபவர் சூரிய பகவான். மண்ணுலக உயிர்களுக்கெல்லாம் கண்கண்ட தெய்வமாக வணங்கப் படுகிறார். சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிக்கும் நாளை, 'மகர சங்கராந்தி' விழாவாக நாடெங்கும் கொண்டாடுகிறார்கள். இந்த விழா, வருடந்தோறும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இருந்து சூரியனின் பயணம் வடதிசை நோக்கிச் செல்கின்றது. இதை உத்தராயண புண்ணிய காலம் என்று சொல்வார்கள்.

பொங்கல்

உத்தராயணம் என்றால், 'வட திசை நோக்கிய வழி' என்று பொருள். அதாவது மனிதர்களின் ஓராண்டு காலம், தேவர்களுக்கு பகல் பொழுதாகும். சூரியன் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை சூரியன் தென் திசை நோக்கி பயணிக்கும் தட்சிணாயன காலம் ஆகும். இது தேவர்களின் இரவுப் பொழுதாகும். தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உள்ள காலம், சூரியனின் வடதிசைப் பயணம் தொடங்கும் உத்தராயன புண்ணிய காலம் ஆகும். உத்தராயன புண்ணிய காலமே நல்ல காரியங்களைச் செய்வதற்கு உகந்த காலம் ஆகும்.

போகிப் பண்டிகை

பொங்கலுக்கு முதல்நாள் போகிப் பண்டிகை. போகங்களை விரும்பும் இந்திரனுக்கு போகி என்ற பெயரும் உண்டு. கோகுலத்தில் வாழ்ந்த யதுகுலத்தவர்கள் வருடந்தோறும், 'இந்திரனுக்கு விழா' எடுப்பது வழக்கம். கோகுலத்தில் கிருஷ்ணன் அவதரித்த பிறகும் அவர்கள் தவறாமல் இந்திரனுக்கு விழா எடுத்தனர். அவர்களுடன் இருந்ததால் கிருஷ்ணனும் இந்திர வழிபாட்டில் கலந்துகொள்வது வழக்கம். இதனால், இந்திரனுக்கு கர்வம் ஏற்பட்டது. இந்திரனின் கர்வத்தை அடக்க நினைத்த கிருஷ்ணன், 'கோவர்த்தனமலையையே கடவுளாக வழிபடுவோம்' என்று கூறினார். இதனால் கோபம் கொண்ட இந்திரன் பெருமழை பெய்யச் செய்தான். உடனே கிருஷ்ணன் கோவர்த்தனமலையை தன் சுட்டு விரலால் தூக்கிப் பிடித்து மழையைத் தடுத்து கோகுலவாசிகளையும், ஆவினங்களையும் காப்பாற்றினான். பகவானின் அவதாரமே, 'கிருஷ்ணன்' என்று இந்திரன் உணர்ந்து கர்வம் நீங்கிய நாளையே போகியாகக் கொண்டாடி மகிழ்கிறோம் என்று சொல்லப்படுகிறது.

 

 

போகித் திருநாளில் பழைய குப்பைகளை எரித்து, புதியனவற்றை வாங்குவது மரபு. அதாவது ஆணவம், கண்மம், மாயை ஆகியவற்றுடன், ஆசை, பொறாமை போன்ற மன மாசுகளையும் பொசுக்கி, ஆன்ம பலம் பெறவேண்டும் என்பதையே போகிப் பண்டிகை நமக்கு உணர்த்துகிறது. பண்டைய தமிழகத்திலும் போகிப் பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டு இருக்கிறது.

தைப்பொங்கல் திருநாள்

'மகர சங்கராந்தி' என்று சாஸ்திரங்கள் போற்றும் இத்திருநாள் சூரியக் கடவுளுக்கு உரிய திருநாள். துன்ப இருளகற்றி எல்லோர் மனதிலும் இன்பம் பொங்கும் வகையில் உழவிலும், வாழ்விலும் ஒளிதரும் சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் நாள் இத்திருநாள்.

பொங்கலுக்கு முன்னதாகவே வீட்டைக் கழுவி சுத்தம் செய்து வெள்ளையடித்து, கோலமிட்டு அலங்கரித்து வைப்போம். பொங்கலன்று சூரிய பூஜை அவசியம். ஆகவே, சூரிய ஒளிபடும் இடத்தை சுத்தமாகப் பெருக்கி பச்சரிசி மாவினால் தேர்போல கிழக்கு நுனியாக கோலம் இட்டு வடக்குப்புறத்தில் அரிசி மாவினாலே சூரியனைப் போல் வரைந்து அதன் அருகில் குங்குமத்தால் பாதி சந்திரனையும் வரையவேண்டும்.

பிறகு தலைவாழை இலைவிரித்து, அதில் காய்கறிகள், புதுமஞ்சள், கரும்பு, அரிசி பரப்பிவைத்துக் கொள்ளவேண்டும். மஞ்சள் பிள்ளையாரும் பிடித்துவைக்க வேண்டும். மேலும் திருவிளக்கேற்றி வைத்து பூச்சூடி, பிள்ளையார் வணக்கத்துடன் பொங்கலிட வேண்டும். புதுப் பானையில் நல்ல தண்ணீர் ஊற்றி சந்தனம், குங்குமம் இட்டு, மஞ்சள் குலை சேர்த்துக் கட்டி, அடுப்பில் வைத்து நெருப்பேற்ற வேண்டும். பிறகு புது அரிசிபோட்டு பொங்கி வரும் வேளையில், பாலூற்றி பொங்கலிட்டு படைத்து இறைவழிபாடு செய்து வணங்க வேண்டும்.

பூஜையின் முடிவாக, 'ஆதித்யஹ்ருதயம்', 'சூரிய காயத்ரி' கூறி கைகூப்பி கதிரவனை மனதில் தியானித்து வணங்கி வழிபடுவது மிகவும் நன்று. நகர்ப்புறங்களில் உள்ளோர் வீட்டுக்குள் பொங்கல் வைத்தாலும் பால்கனி அல்லது மொட்டைமாடியில் பொங்கலைப் படையலிட்டு சூரியனை கண்டிப்பாக வழிபடுதல் வேண்டும். பூஜை முடிந்து காகத்துக்கு அன்னமிட்டு ஏழை ஒருவருக்கு பொங்கல் சாதம், கரும்புத்துண்டு, காணிக்கையோடு தந்து பிறகு அனைவரும் உண்டு மகிழலாம்.

http___photolibrary.vikatan.com_images_g

மாட்டுப் பொங்கலும், காணுப்படியும்;

இயற்கையை வழிபடுவதைப் போலவே பசுக்களையும் காளைகளையும் கன்றுகளையும் வருடத்துக்கு ஒரு முறையாவது தெய்வமாக கருதி பூஜிக்க வேண்டும் என்பது சாஸ்திர நியதி. அதை கடைப்பிடிக்கும் விதமாகவும், நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம்.

http___photolibrary.vikatan.com_images_g

மாட்டுப் பொங்கலன்றும், பொங்கல் வைத்து வீட்டில் உள்ள மாடு, கன்றுகளைப் பூஜித்து வணங்குவதால், முப்பது முக்கோடி தேவர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். தை மாதம் இரண்டாம் நாள் காணுப்பிடி முக்கியத்துவம் பெறுகிறது.

காணு - காக்கை; பிடி - பிடிசோறு அதாவது காக்கைகளுக்கு படைக்கப்படுகின்ற பிடிசோறு காணுப்பிடியாகும். மகளிர் தம் உடன்பிறந்தவர்கள் நலமுடன் வாழ காணுப்பிடி கொண்டாடுவார்கள். வெட்ட வெளியில் தூய்மையான இடத்தில் மெழுகி, கோலமிட்டு மஞ்சள் இலை அல்லது வாழை இலை பரப்பி அதில் வண்ண வண்ணமான சித்ரான்னங்களை ( கலவை சாத வகைகள்) ஐந்து அல்லது ஏழுபிடிகளாக பிடித்து வைத்து பூஜித்து காக்கைகளுக்குப் படைத்து வழிபடுதல் வேண்டும். இந்த காக்கை வழிபாட்டை பித்ரு வழிபாடாகக் கருதி வழிபடுவோரும் உண்டு.

தைமாதம் மூன்றாம் நாள் மக்கள் யாவரும் மகிழ்வின் வெளிப்பாடாகக் கொண்டாடுவது காணும் பொங்கலாகும். அன்று தான தர்மம் செய்வதும் பெரியோரிடம் ஆசி வாங்குவதும் நம் வாழ்வை வளமாக்கும்.

vikatan

Share this post


Link to post
Share on other sites

'என்னைக் கண்டுபிடிங்க' வைரலாகும் விராட் கோலி புகைப்படம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
'என்னைக் கண்டுபிடிங்க' வைரலாகும் விராட் கோலி புகைப்படம்
 
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக இருந்த விராட் கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் போட்டி, 20-20 ஆகிய மூன்று போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்று போட்டிகளுக்கும் கேப்டனாக தான் நியமிக்கப்பட்டது குறித்து விராட் கோலி "எல்லாமே எனக்கு கடவுள் கொடுத்ததாக நினைக்கிறேன். உங்களது வாழ்க்கையில் ஏதாவது ஒன்று நடக்க வேண்டும் என்று இருந்தால் அது நடப்பதற்கு ஒரு காரணம் இருக்கும். அது சரியான நேரத்தில் நடக்கும்'' என்று கூறினார்.

இந்நிலையில் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விராட் கோலி, அதில் தன்னைக் கண்டுபிடிக்குமாறு ரசிகர்களிடம் கேட்டிருக்கிறார்.சிவப்பு நிற ஜூனியர் கிரிக்கெட் வீரர் உடையில் கைகளைக் கட்டிக்கொண்டு, விராட் கோலி அமர்ந்திருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (15-ந்தேதி) புனேவில் நடைபெறவுள்ளது. ஒருநாள் போட்டியில் முதன்முறையாக விராட் கோலி தலைமையில் இந்திய அணி களம் காணுவது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com

Share this post


Link to post
Share on other sites

இசைக்காக எதையும் விட்டுக்கொடுக்காதவர் டி.எம்.எஸ்!

டி எம் எஸ்

‘கௌரவம்’ படத்தின் பாடல் காட்சி ஒன்றில் நடிப்பதற்காக படப்பிடிப்புக்கு தளத்துக்கு வந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்த அந்த பாடலின் ஒலிப்பேழையை  ஓடவிட்டார் உதவி இயக்குநர். காட்சிக்கான உடைகளை அணிந்தபடி சிவாஜி பாடலை கேட்கத் துவங்கினார். ஒருதடவையல்ல... இருதடவையல்ல; கிட்டதட்ட 11 முறைக்கும் மேலாக  பாடலை ஓடவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தபடி பாடலை கேட்டு முடித்த சிவாஜி  படத்தின் இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரத்தை அழைத்து “சுந்தரா கொஞ்சம் டயம் கொடு...அப்புறம் சூட் பண்ணிக்கலாம்...”

எந்த பாடலையும் அதிகபட்சம் ஓரிருமுறை கேட்டுவிட்டு நடிக்கத் தயாராகும் சிவாஜியின் இந்த மாற்றத்தை கண்டு குழம்பிய சுந்தரம்  “என்னண்ணே ஏதாவது பிரச்னையா...சூட்டிங்கை இன்னொரு நாள் வெச்சிடலாமா...? என்றார் பதறியபடி. “இல்லை சுந்தரா, அண்ணன் எனக்கு பெரிய சவாலை கொடுத்திருக்கிறார். இந்தப் பாடலை, தேர்ந்த நடிகனுக்குரிய உணர்ச்சிப் பிரவாகத்தோடு பாடியிருக்கிறார். பல்லவியில் ஒரு விதமான பாவம், ஆக்ரோஷம்…அடுத்த சரணத்தில்..இன்னொரு விதமான..தொனி. மற்ற சரணத்தில்…இன்னொரு பரிமாணம்…என பிச்சு உதறியிருக்கிறார். ஒரே வரியையே இரண்டு இடங்களில் இரண்டு விதமான தொனிகளில் பாடி அற்புதம் செய்திருக்கிறார். ஒரு நடிகனின் வேலையை அவர் செய்திருக்கும்போது ஒரு நடிகனாக நான் இன்னும் அதிகம் மெனக்கெட்டால்தான் நான் அவர் சவாலை எதிர்கொள்ளமுடியும்... காட்சியும் எடுபடும். அதனால் எனக்கு கொஞ்சம் ஒய்வு கொடு பிறகு நடித்துக்கொடுக்கிறேன்” என ஓய்வறைக்குள் புகுந்துகொண்டார் சிவாஜி. 

TMS Stamp

 

உச்சி முதல் உள்ளங்கால்வரை நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் திலகத்துக்கு, தம் குரலிலேயே சவால் கொடுத்த அந்த பாடகர்  டி.எம். சௌந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்.!

கவுரவம் படத்தில் இடம்பெற்ற “ நீயும் நானுமா...  கண்ணா நீயும் நானுமா...” என்ற அந்த பாடலில்  சிவாஜிக்கு சவால் தந்த டி.எம்.எஸ்க்கு தபால் தலைவெளியிட்டு கவுரவம் செய்திருக்கிறது மத்திய அரசு.  கடந்த 30-ம் தேதி இந்திய அளவில் இசைத்துறையில் சாதனை படைத்த 10 ஆளுமைகளுக்கு தபால் தலை வெளியிட்டு கவுரவித்திருக்கிறது மத்திய அரசு. இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய கலைஞர் டி.எம்.எஸ் மட்டுமே. 

டி எம் எஸ்தமிழ்சினிமாவின் சாகாவரம் பெற்ற குரலுக்கு சொந்தக்காரரான டி.எம். சவுந்தரராஜன், மதுரையில் 1923- ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி பிறந்தார். பிரபல வித்வான்  காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்றார். இசை ஞானம் அடைந்தபின் தன் அறிவை பெருக்கிக்கொள்ள சிறியதும் பெரியதுமான கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். தன் திறமையை மெருகேற்றிக்கொள்ள மதுரை சுற்றுப்புறங்களில் கோயில் பஜனைகளில் கூட சங்கடங்கள் இன்றி பாடுவார். டி.எம்.எஸ் திரையுலகில் நுழைய காரணம் அவரது குரல்வளம். ஆம் அவரது குரல் அன்றைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் குரலை ஒத்திருக்கும். “டேய் உன் குரலுக்கு பாகவதர் போல் நீ எங்கேயோ போகப்போறெ” என அவருக்கு எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை நண்பர்கள் ஏற்படுத்திவைத்தனர். கச்சேரிகளில் அவர் பாடுகிறபோது சற்று கண்ணை மூடிக்கேட்டால் தியாகராஜ பாகதவர்தான் நினைவுக்கு வருவார். தெய்வாதீனமாக அமைந்த இந்த குரல்வளம்தான் அவருக்கு சினிமா உலக கதவு திறக்க காரணமானது. புகழின் உச்சியில் இருந்த சமயம் தியாகராஜ பாகவதர் திருச்சியில் கச்சேரி செய்ய வந்திருந்தார்.  அதே கச்சேரியில் அவருக்கு முன்பு பாடிய சிறுவன் ஒருவனது குரல் அவரை ஈர்த்தது. ஆச்சர்யத்துடன் சிறுவனை அழைத்து பாடச் சொன்னார் பாகவதர். பாகவதரின் புகழ்பெற்ற பாடல் ஒன்றை அட்சரம் பிசகாமல் பாடிக் காண்பித்தான் சிறுவன். “சென்னைக்கு வா தம்பி நல்ல எதிர்காலம் இருக்கு” என வாஞ்சையாய் தலையை தொட்டு ஆசிர்வதித்தார் தியாகராஜபாகவதர். திரையுலக கனவில் மிதக்க ஆரம்பித்த சிறுவன் டி.எம்.சௌந்தரராஜன் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தார். 

சுந்தரராவ் நட்கர்னி இயக்கத்தில் வெளியான கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடல்தான் சினிமாவில் அவர் குரல் ஒலித்த முதல்பாடல். தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸின் மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடினார்.   மலைக்கள்ளனில் எம்.ஜி.ஆருக்கு பாடிய எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” பாடல் பட்டிதொட்டியெல்லாம் டி.எம்.எஸ் என்ற மந்திரக்குரலோனை கொண்டு சேர்த்தது. தொடர்ந்து திரையுலகில் டி.எம்.எஸ்ஸின் சகாப்தம் துவங்கியது.

எம்.ஜி.ஆர் சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் திரையுலக வரலாற்றில் டி.எம்.எஸ் தவிர்க்கவியலாதவர். எம்.ஜி.ஆர் பாட்டு சிவாஜி பாட்டு என இவர்களை அடையாளப்படுத்தும் அனைத்து பாடல்களும் டி.எம்.எஸ் பாடியவை. தம் குரல் வளம், இசைஞானம் இவற்றுக்கிடையில் எல்லை தாண்டாத மற்ற பாடகர்களிடமிருந்து டி.எம்.எஸ் முற்றிலும் மாறுபட்டார். திரையுலகின் அன்றைய இருபெரும் ஆளுமைகளுக்கும் இருவேறுவிதமாக பாடும் திறமை பெற்றிருந்த இவரது பாடல்களை கண்ணை மூடியபடிக் கேட்டால் பாடலை உச்சரிக்கும் கதாநாயகன் யார் என கண்டறிந்துகொள்வர் அந்நாளைய ரசிகர்கள். இது வேறு எந்த பாடகருக்கும் கிடைக்காத பேறு. ஆனால் இது டி.எம்.எஸ் எளிதில் சாதித்தது அல்ல...அதன்பின் இருந்த அவரது உழைப்பு அளப்பரியது. 

உரத்த குரலும் அழுத்தமான பேச்சு வன்மையும் கொண்ட சிவாஜி பாடல்களுக்கு அடிவயிற்றிலிருந்து குரலை எழுப்புவார். எம்.ஜி.ஆரின் சன்னமான குரலுக்கு கண்டமும் நாசியும் இணையும் இடத்திலிருந்து பாடுவார்...ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,முத்துராமன் சிவகுமார், நாகேஷ் என இன்னபிற நாயகர்களுக்கு  கண்டத்திலிருந்து  சில ஃபார்முலாவில் பாடி அசரடிக்கும் திறமைசாலியாக உலாவந்தவர் டி.எம்.எஸ். 

டி எம் எஸ்

பாடல்களை பாடுகிறபோது இசையமைப்பாளர் சொல்லிக்கொடுத்ததுபோல் நில்லாமல் பாடலை மெருகேற்ற பெரும் சிரத்தை எடுத்துக்கொள்வார் டி.எம்.எஸ். அதற்காக பாடலின் இசை அம்சங்களை தவிர்த்து பாடல்காட்சியின் சூழலையும் இயக்குநரிடம் கேட்டு தெரிந்துகொண்டு பாடுவது அவரது குணம். 'உயர்ந்த மனிதன்' படத்தில் இடம்பெறும் 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடல் நடுத்தர வயதைக் கடந்த கதாநாயகன் தன் பால்ய நினைவுகளை சுமந்தபடி தன் வாழ்க்கையை பின்னோக்கி பார்த்து பாடுவதாக காட்சி. படத்தின் கதாநாயகன் சிவாஜி மூச்சிரைக்கப்பாடுவதாக இயக்குநர் காட்சியை சித்தரித்திருந்தார். அதைக்கேட்டுக்கொண்ட டி.எம்.எஸ் ரிக்கார்டிங் நடந்த அறையில் பாடலை பாடியபடி தேவைப்பட்ட நேரத்தில் பின்னாளில் சிறிது துாரம் ஓடிவந்து திரும்ப மைக் முன் வந்து பாடுவார். காட்சிக்கு தக்கபடி டி.எம்.எஸ் குரல் தத்ரூபமாக பாடல் காட்சிக்கு பொருந்தி பாராட்டுகளை பெற்றுத்தந்தது. அந்த அர்ப்பணிப்புக்கு பெயர்தான் டி.எம்.எஸ்.

வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும்,மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். முருகனுக்காக அவர் பாடி இசையமைத்த பாடல்கள் சாகாவரம்பெற்றவை.

TMS_13220.jpg

மேதைகள் குழந்தைத்தன்மை கொண்டவர்கள் என்பதற்கு டி.எம்.எஸ் -ம் விதிவிலக்கல்ல. திரையுலகில் யார்மீதும் அவர் பொறாமை கொண்டவரல்ல அவர். மாறாக திறமைசாலிகளை அவர் அடையாளங்கண்டு வளர்த்திருக்கிறார். 50 களின் பிற்பகுதியில் திருச்சி வானொலி நிலையத்துக்கு பாடல் பாடச் சென்றபோது அங்கு பணிபுரிந்துவந்த கவிஞர் ஒருவரின் திறமையை பாராட்டி 'சென்னைக்கு வாய்யா உனக்கு எதிர்காலம் இருக்கு' என வாஞ்சையோடு வாழ்த்திவிட்டுச் சென்றார். அவர்தான் பின்னாளில் காவியக்கவிஞர் என பெயர்பெற்ற வாலி. பாடகரான டி.எம்.எஸ் தேர்ந்த சமையற்கலைஞர் என்பது பலரும் அறியாதது. தன் குரலின் இனிமைக்காக பல சமையற்குறிப்புகளை அறிந்துவைத்ததோடு ஓய்வு நேரத்தில் தானே சமைத்து குடும்பத்தினருக்கு பரிமாறுவார். 

“டி.எம்.எஸ், எம்.ஜி.ஆர், சிவாஜி, நான் உட்பட அரசியலில் பங்கெடுத்த நடிகர்களின் திரையுலக வாழ்க்கைக்கு மட்டும் அல்ல; அரசியல் வாழ்க்கையிலும் டி.எம்.எஸ்க்கு முக்கிய பங்கு உண்டு. ஆம்...தேர்தல் பிரசாரங்களுக்கு நாங்கள் செல்லும் இடங்களில் எத்தனை மணிநேரங்கள் நாங்கள் தாமதமாக சென்றாலும் மக்களை காத்திருக்கச்செய்தது, எங்களுக்காக அவர் குரல் கொடுத்து பாடிய பாடல்கள்தான். இப்படி எங்கள் அரசியல்வாழ்விலும் அவர் பங்கு முக்கியமானது" என வெளிப்படையாக சொன்னார் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இது நிதர்சனமும் கூட.

ஆனால் தன்னால் பயனடைந்த கதாநாயகர்கள் பின்னாளில் அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்ந்தபோதுகூட அவர்களின் சிறு பரிந்துரைக்கு கூட சென்று பல் இளிக்காத பண்பாளராக இறுதிவரை திகழ்ந்தார் டி.எம்.எஸ். 

கதாநாயகர்களுக்காக குரல் கொடுத்த டி.எம்.எஸ் 1962-ம் ஆண்டு 'பட்டினத்தார்' என்ற படத்தில் தானே க(தை)தாநாயகனாக நடித்தார். Latha_and_TMS_13237.jpgஅருணகிரிநாதர் என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்த டி.எம்.எஸ். அதில் முருகனை புகழ்ந்து “முத்தைத் திருபத்தித் திருநகை” எனும் பாடலை பாடியிருந்தார். தான் பாடும் பாடலின் பொருளை அறிந்தபின்னரே பாடும் வழக்கமுடைய டி.எம்.எஸ் இந்த பாடலை பாடும் முன் கிருபானந்தவாரியாரிடம் நேரில் சென்று அதற்கான பொருளைக் கேட்டறிந்த பின்னரே பாடினார். புகழ்பெற்ற அந்த பாடலைக் கேட்ட அவரது பையன்களில் ஒருவர், “அப்பா, உனக்கு சிவாஜி குரல் கொடுத்தாரா” என கேட்க விழுந்து விழுந்து சிரித்தாராம் டி.எம்.எஸ். 

“வடநாட்டுக்கு ஒரு முகமது ரஃபி என்றால் தென்னாட்டுக்கு டி.எம்.சவுந்தரராஜன் என ஒரு முறை டி.எம்.எஸ் குறித்து சிலாகித்த வாலி, கர்நாடக பாடகர்களே கூட சமயங்களில் சுருதி விலக்கக்கூடும். டி.எம்.எஸ் எப்போதும் அதை செய்யமாட்டார். அத்தனை இசைஞானம்” என புகழ்ந்தார். 

“ லட்ச ரூபாய் கொடுப்பதாக சொன்னாலும் டி.எம்.எஸ் சுருதி விலகி பாடமாட்டார். அதுதான் டி.எம்.எஸ்” என இன்னும் ஒரு படிமேலாக டி.எம்.எஸ் பற்றி எம்.எஸ்.வி குறிப்பிட்டார் ஒருசமயம். 

உண்மைதான், இசைக்காக எதையும் விட்டுக்கொடுக்கத் தயங்காதவர் டி.எம்.எஸ். தான் இசையமைத்த ஒரு படத்தில் தன் இருமகன்கள் இசையுலகில் தலையெடுத்த நேரத்திலும் பாடலின் சுவைக்காக அவர்களை தவிர்த்து மற்றொரு புகழ்பெற்ற பாடகர் திருச்சி லோகநாதனின் மகனான டி.எல்.மகராஜனை பாடவைத்தார். பாடகருக்கு புகழ் கிடைக்கும் பாடல் என்று தெரிந்தும் இசைக்கே முக்கியத்துவம் அளித்து வேறொருவரை பாடவைத்த அவரது பண்பு ஆச்சர்யமானது. 

தமிழை அட்சர சுத்தமாக அழகாக உச்சரித்து தமிழுக்கு பெருமை சேர்ந்த டி.எம்.எஸ், தமிழை தாய்மொழியாக கொண்டவரல்ல என்பது ஆச்சர்யமான தகவல். 

2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் “செம்மொழியான தமிழ்மொழியாம்” என பாடியதுதான் இசையுலகில் டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடல். 3 தலைமுறையினரை தன் இனிய குரலால் மகிழ்வித்த 'மதுரை மாங்குயில்' டி.எம்.எஸ்ஸின் புகழ் தமிழர்கள் காதுகள் இல்லாது பிறக்கும் காலம் வரை நீடித்து நிலைக்கும்.

vikatan

Share this post


Link to post
Share on other sites

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

118p1.jpg

twitter.com/thoatta: பிள்ளையார் பால் குடிக்கிறதைப் பார்க்கப் போனானுங்க, பாபா கையில் விபூதி வருதுன்னு பார்க்கப் போனானுங்க, இப்ப அம்மா மாதிரியே தீபா இருக்குன்னு போறானுங்க.

twitter.com/Selvaa__: `கடைசி ரிங் வரைக்கும் அட்டன் பண்ணுவோம்'னு நம்பிக்கையோடு அந்தப் பக்கம் போன் பண்றவனுக்கு, நாம முதல் ரிங்லயே சைலன்ட்ல போடுறதுதான் நம்பிக்கைத் துரோகம்.

twitter.com/Lorrykaran: கடைசியா, நியாயமான ஒரு காரணத்துக்காக தமிழ்நாடே ஸ்தம்பிச்ச நாள் யாருக்காச்சும் நினைவுல இருக்கா? எனக்கு இல்லை.

118p2.jpg

twitter.com/kumarfaculty: வியர்வை என்பது `பணித்துளி'!

twitter.com/gundugopal: சத்தமா சிரிக்கக் கூடாது; தனியா அழக் கூடாது. ஆனா, மூஞ்சை மட்டும் புதுசாப் பூத்த பூ மாதிரி வெச்சுக்கணும்.

twitter.com/teakkadai: சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்'னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு' எனச் சொல்லிவிடுகிறது.

twitter.com/udanpirappe: விறகு அடுப்பில் அரிசி பொங்கிட்டு இருந்தவனை பூரா, சிலிண்டருக்கு மாற விட்டுட்டு,இப்ப `சிலிண்டருக்கு அரிசி கிடையாது'னு சொல்லும் முட்டாள் தேசம் இது !

118p3.jpg

facebook.com/Raajaa Chandrasekar: சிலருக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ, தைரியம் இருக்கிறது.

facebook.com/வெ. பூபதி: பகல்ல குழந்தையை அதட்டித் தூங்கவைச்சுட்டா, நைட்டுல மத்தவங்களைத் தூங்கவிடாம சேட்டை பண்றாங்க! முற்பகல் செய்யின் பின்னிரவில் விளையும்!

facebook.com/Raajaa Chandrasekar: தனியாக நின்றாலும், வரிசையில் நின்றிருப்பதுபோல் இருக்கிறது #BankQueueHangover

facebook.com/Arasu Palanisamy: எப்படி முடிகிறது இந்தப் பெண்களால்... ரோஜாக்களைத் தெருவில் எறிய?!

vikatan

Share this post


Link to post
Share on other sites

24 வயது பெண்ணை கூகுள் காப்பாற்றியது எப்படி?

கூகுள்

தரமணி படத்தோட பாட்டுக்கு நடுவுல யாருக்காவது தற்கொலை எண்ணம் வந்தா, 104 என்ற எண்ணுக்கு கால் பண்னுங்கனு ஒரு வாய்ஸ் வரும். பாட்டுக்கு நடுவுல மெஸேஜ் சொல்லக்கூடாதானு கேட்டுருப்பாங்க. அதே மாதிரி ஒரு வேலையைத்தான் கூகுளும் பார்த்திருக்கிறது. சஹரான்பூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள இடத்தில் 24 வயது இளம்பெண் காதல் தோல்வியால் யமுனையாற்றின் துணைப்பாலங்களில் ஒன்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்ய நினைத்திருக்கிறார்.

ஆனால் கடைசி நேரத்தில் தற்கொலைக்கு மாற்று வழியை தேட முயற்சித்துள்ளார். அதற்காக அவர் உதவியை நாடியது கூகுள் தேடலைத்தான். கூகுளில்  ''how to commit suicide" என்று தேடியுள்ளார். அதற்கு கூகுள் அளித்த பதில் அவரது தற்கொலை எண்ணம் மாற காரணமாகியுள்ளது. கூகுள் தேடல் AASRA என்ற தற்கொலையிலிருந்து மீட்க உதவும் அமைப்பின் என்னை வழங்கியுள்ளது. அதன் மூலம் தனது தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டுள்ளார் அந்த பெண்.

161020100204-depression-suicide-780x439_

இது குறித்து கூறிய அந்த பகுதியின் டிஐஜி ''ஒரு பப்ளிக் தொலைபேசி எண்ணிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதன் எதிர்முனையில் ஒரு பெண் நடுக்கத்துடன் பேசினார். பின்னர் என் அலுவலகத்துக்கு வரவழைத்து பேசியதில் அவரது விவரத்தையும் கூறினார். ஒரு இளைஞனை காதலித்ததாகவும், அவனுக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது, அவர்கள் பெற்றோர் என் திருமணத்துக்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்று கூறியுள்ளார். பின்னர் இருவரையும் அழைத்து கவுன்சிலிங் தர சொன்னதாகவும் டிஐஜி கூறியுளார்.

இந்த பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றியது கூகுள் தேடல் தான். நாம் அனைத்துக்குமே கூகுளை தான் தேடுகிறோம். கூகுள் தேடலில் இது போன்ற சமூக அக்கறையுள்ள விஷயங்கள் இருப்பது ஆச்சர்யமளிப்பவையே. மேலும் இந்த விஷயத்தில் கூகுள் சிறப்பாக இயங்குகிறது. இதேபோல  “how to kill” என்று டைப் செய்தாலே அதன் பரிந்துரைகளாக கொசு, எலி, கரப்பான்பூச்சி என்ற பரிந்துரைகளையே முன்னிருத்துகிறது. 

மேலும் ஒருவர் “how to commit suicide” என தேடினால் அவரது பகுதியுடன் அங்குள்ள மீட்பு மையத்தின் உதவிமைய எண் அளிக்கப்படுகிறது. கூகுள் தேடல் 24 வய‌து பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளது. வெல்டன் கூகுள்...

vikatan

Share this post


Link to post
Share on other sites

பெட்டியில் பள்ளிக்கூடம்
------------------------------------------------
மும்பையின் சாலையோர சிறார் வியாபாரிகளுக்கு கல்வியளிக்க ஒரு முயற்சி

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now