Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

சாமானிய பெண்ணுக்கு வந்த இளவரசர் திருமண அழைப்பிதழ்: நெகிழ வைத்த அங்கீகாரம்!

 

சுஹானி ஜலோடா இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இருக்கிறார். சாமானிய பெண்ணான அவர் முகத்தில் அரும்பும் புன்னகை பார்ப்பவர்களை உடனே தொற்றிக் கொள்கிறது. இருபத்து மூன்றே வயதான சுஹானியிடம் நெகிழ வைக்கும், உற்சாகம் கொள்ள வைக்கும் ஒரு கதை இருக்கிறது. அவரது வயதினர் கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத உச்சத்தை, சுஹானி தொட்டு இருக்கிறார்.

சாமானிய பெண்ணுக்கு அரச குடும்பம் அளித்த நெகிழ வைக்கும் அங்கீகாரம்

இப்போது இந்த சாமானிய பெண்ணுக்கு இங்கிலாந்தில் நடக்க இருக்கும் இளவரசர் ஹாரி, மெகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் வந்திருக்கிறது. அதுமட்டுமல்ல ஒரு சிறப்பு அங்கீகாரமும் கிடைத்து இருக்கிறது.

சுஹானியின் கதை

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுஹானியும் மும்பையில் குடிசை பகுதியில் இருக்கும் சில பெண்களும் இணைந்து `மைனா மஹிளா' எனும் அரசுசாரா அமைப்பை தோற்றுவித்தனர். இந்த அமைப்பின் நோக்கம் மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

 

பல பெண்களின் வாழ்க்கை மேம்பட இவரது பணி காரணமாக அமைந்து இருக்கிறது. அதற்கான பல அங்கீகாரங்களும் அவருக்கு கிடைத்து இருக்கிறது. இப்படியான சூழலில் சுஹானிக்கு லண்டனின் நடக்க இருக்கும் அரச குடும்பத்தின் திருமணம் தொடர்பாக சிறப்பு மரியாதை ஒன்று கிடைத்து இருக்கிறது.

இளவரசர் ஹாரி தனது திருமணத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களுக்கு திருமண பரிசு தருவதற்கு பதில் ஏழு தொண்டு நிறுவனங்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து இருந்தார். அந்த ஏழு தொண்டு நிறுவனங்களில் `மைனா மஹிளா'-வும் ஒன்று.

சாமானிய பெண்ணுக்கு அரச குடும்பம் அளித்த நெகிழ வைக்கும் அங்கீகாரம்

தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு நிறுவனங்களில், 6 நிறுவனங்கள் லண்டனில் இயங்கும் நிறுவனங்கள். 'மைனா மஹிளா' மட்டும் லண்டனுக்கு வெளியே இயங்கும் தொண்டு நிறுவனம்.

பெண்கள் மேம்பாடு, சமுக மாற்றம், விளையாட்டு, சூழலியல், எய்டஸ் உள்ளிட்டவற்றில் பணி செய்யும் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பிதழ் வந்தது. இந்த தொண்டு நிறுவனங்களில் பல சிறிய தொண்டு நிறுவனங்கள் என்கிறது கென்ஸிங்டன் அரண்மனை வெளியிட்ட அறிக்கை.

இன்னும் சில தினங்களில் சுஹானியும் அவரது தோழிகளும் இந்த அரச குடும்ப திருமணத்தில் பங்கேற்பதற்காக லண்டன் பயணிக்கிறார்கள்.

இது குறித்து சுஹானி, "இந்த அழைப்பு எங்களுக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது." என்கிறார்.

மைனா மஹிளா தொண்டு நிறுவனம்

கிழக்கு மும்பையில் உள்ள கோவாண்டி குடிசைப் பகுதியில்தான் 'மைனா மஹிளா' தொண்டு நிறுவனத்தின் அலுவலகம் இயங்குகிறது. படிப்பறிவும் இந்த பகுதியில் குறைவு, குற்ற சதவிகிதமும் இந்த பகுதியில் அதிகம். இந்த பகுதியின் சூழலும் மாசுப்பட்டு, எங்கும் நீக்கமற குப்பைகள் சிதறி இருக்கும்.

ஆனால், இது எதுவும் சுஹானிக்கு ஒரு தடையாக இருக்கவில்லை. அவர் தாம் மேற்கொண்ட பணியை செம்மையாக செய்தார். இவரது தொண்டு நிறுவனம் அந்த குடிசைப் பகுதியில் உள்ள பெண்களுக்கு சுகாதார பேடுகள் செய்ய சொல்லி கொடுத்தனர். இன்று அந்த பெண்கள் ஒரு நாளுக்கு 1000 பேடுகள் வரை செய்கின்றனர்.

அழைப்பிதழ்

முதல்முதலாக, ஜூலை 2015 ஆம் ஆண்டு 'மைனா' பேடுகளை உற்பத்தி செய்ய அந்த பெண்கள் தொடங்கினர்.அதன் பின், 2016 ஆம் ஆண்டு இந்த தொண்டு நிறுவனம், மும்பையின் ஐந்து வெவ்வேறு பகுதிகளில் உள்ள 1500 பெண்களுக்கு 'மைனா மஹிளா` இந்த பயிற்சியினை அளித்தது.

சுஹானி, "நாங்கள் மாதவிடாய் குறித்து பெண்கள் வெளிப்படையாக பேச வேண்டும் என்று விரும்பினோம். குறைந்தபட்சம் அவர்களுக்குள்ளாவது பேசி கொள்ள வேண்டும் என்று நினைத்தோம். அதற்காகதான் இந்த சானிட்டரி நாப்கின் செய்யும் பயிற்சியையும் அதற்கான உபகரணங்களையும் வழங்கினோம்" என்கிறார்.

இந்த தொண்டு நிறுவனத்துக்கு 'மைனா' என்று பெயரிடவும் காரணம் இருக்கிறது என்கிறார் அவர். 'மைனா' அதிகம் பேசும் பறவை. அந்த பறவையை போல பெண்களும் மாதவிடாய் குறித்து பேச வேண்டும் என்று விரும்பினோம். அதற்காகதான் இப்படி பெயரிட்டோம்.

பெருநிறுவன சமூக பங்களிப்பின் பொறுப்பிலிருந்துதான் மைனா மஹிளா நிறுவனத்திற்கு அதிக நிதி வருகிறது.

சாமானிய பெண்ணுக்கு அரச குடும்பம் அளித்த நெகிழ வைக்கும் அங்கீகாரம்!

இந்தியா போன்ற ஒரு நாட்டில் மாதவிடாய் குறித்து வெளிப்படையாக பேசுவது பெரும் மனத்தடை ஒன்றாக உள்ளது. இன்னும் பல குடும்பங்களில் மாதவிடாய் உதிரப் போக்கு உள்ள பெண் பரிசுத்தம் அற்றவள் என்று நினைக்கும் போக்கு உள்ளது. மாதவிடாய் குறித்த உரையாடல்களில் ஆண்களும் பங்கேற்பதில்லை.

சுஹானி, "ஒரு பெண் சானிட்டரி நேப்கின் வாங்க சென்றால், அதுவும் அந்த கடைக்காரர் ஆணாக இருந்துவிட்டால், அந்த ஆண் நாப்கின் வாங்குவது ஏதோ பெருங்குற்றமான செயல் என்ற எண்ணத்தை ஏற்படுத்து விடுவார். அந்த நேப்கினை செய்திதாளில் சுற்றி, பின் ஒரு கருப்பு ப்ளாஸ்டிக் பையில் போட்டு தருவார். அதாவது நேப்கினை சுமப்பது ஏதோ அசிங்கமான ஒரு செயல் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுவார்." என்கிறார்.

இது குறித்துதான் எங்கள் தொண்டு நிறுவனம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மாதவிடாய் குறித்தும் சானிட்டரி நேப்கின் பயன்பாடு குறித்தும் வீடுவிடாக சென்று உரையாடுகிறோம் என்கிறார் அவர்.

https://www.bbc.com

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply
‘மனதைச் செயல் திறன் ஆக்குக’
 

image_79161ca8a8.jpgமனம் இன்றி மனிதன் இல்லை. இதை விலக்கி எம்மால் இயங்க முடியாது. மனம் எங்களை விழிக்க வைக்கிறது. இதுவே எங்களை உறங்கவும் வைக்கிறது. விழிப்பூட்டும் வாழ்க்கையை மனமே உருவாக்கும். சதா சோம்பலுடன் உறங்கி, ஓய்ந்தபடி இருக்கவும் செய்துவிடுகிறது. எல்லா வேளைகளிலும் நாம் மனம் சொல்வதைக் கேட்கக்கூடாது. அதை ஆசுவாசப்படுத்தியபின் சிந்திக்க வேண்டும். அனுபவ ஞானம் அசாத்திய வல்லமை நிறைந்தது. கொஞ்சமாவது எமது கருமங்களின் நிலையை ஆராய்ந்தால் என்ன?

ஸ்தம்பிக்கும் நிலைக்குள் எம்மை நாம் ஆளாக்கக் கூடாது. அதீதமான அறிவுரை எனும் பேச்சுகளே, ஒருவரை உன்மந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றது. அதாவது செயலற்ற, செய்வது எது என்று தெரியாத நிலை.

கண்டபடி எவரையும் பேச அனுமிப்பதே ஆபத்தானது.தனிமைக்கு நேரம் ஒதுக்குக. கேட்பது வேறு; செவிமடுப்பது வேறு. போதனைகளை நாங்கள் கேட்கின்றோமா, அல்லது மனதில் உள்வாங்குகின்றோமா?

ஆலோசனைகளை உணர மனதுக்கும் நெஞ்சத்துக்கும் சமகௌரவம் வழங்குக. இறக்கும் வரை மனது இயங்கும். மரணம் தொட்டால் யாவுமே போய்விடும். எனவே, மனதைச் செயல் திறன் ஆக்குக. நற்போதனைகளைச் செவிமடுத்து, நல்லதை மட்டும் ஆற்றுக.

Link to comment
Share on other sites

வார்த்தைகளின் பலம் தெரியுமா உங்களுக்கு? - நம்பிக்கைக் கதை #MotivationStory

 

கதை

`ன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப்பவையோ ஏராளம்’ - பிரெஞ்ச் கணிதவியலாளரும் தத்துவவியலாளருமான பிளெய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal) அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். வார்த்தைகளின் மகிமை அபாரமானது. அதனால்தான் நல்ல சொற்களைப் பேச வாய்ப்பிருக்கும்போது, கடுஞ்சொற்களை ஏன் பேச வேண்டும் என்பதை `கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ என்கிறார் வள்ளுவர். மொபைல்போனில் சாட் செய்யும் நேரத்தில் பத்தில் ஒரு பங்குகூட நம்மில் பலர் பேசுவதற்கு செலவழிப்பதில்லை. உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பேசுவதற்கு சந்தர்ப்பங்களிருந்து, அதைப் பயன்படுத்தாமல் தவறவிடுகிறீர்களா..? இழப்பு மற்றவர்களுக்கு இல்லை. உங்களுக்குத்தான். `ரசத்துல வாசனைக்குக்கூட எதையும் போடலை. ஆனா, சூப்பரா இருக்குப்பா...’ என்கிற பாராட்டு மனைவிக்கு எவ்வளவு உற்சாகம் தரும் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை. `உன்னால முடியும்டா...’ என்று ஆசிரியர் அளிக்கும் ஊக்கம் மலையளவு பலத்தை மாணவனுக்குத் தந்துவிடும். ஒருவருக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும், எதையும் சாதிக்கும் நம்பிக்கையையும் வார்த்தைகளால் கொடுக்க முடியும் என்பதை உணர்த்துகிறது இந்தக் கதை.

 

அது இங்கிலாந்திலிருக்கிற கிராமம். அங்கிருந்த விவசாயி ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது. `பட்டீ’ (Buddy) என்று அதற்குப் பெயர்வைத்திருந்தார் அவர். அவருடைய சின்னஞ்சிறு நிலத்து வேலைகளுக்கு உதவுவது பட்டீதான். அறுத்த கதிர்களை நிலத்திலிருந்து எடுத்துவருவது, விவசாயத்துக்கான பொருள்களை ஏற்றிச் செல்வது, அவ்வப்போது பக்கத்து ஊர்களுக்கு வண்டிகட்டிக் கொண்டு போக... எனப் பல வேலைகளுக்கு உறுதுணையாக இருந்தது பட்டீ.

ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார் அந்த விவசாயி. அவரைத் தேடிக்கொண்டு ஒருவர் வந்தார். அவரை விவசாயி, அந்தச் சுற்றுவட்டாரத்தில் பார்த்ததில்லை. வெகுதூரத்திலிருந்து வருகிறார் என்பதை அவருடைய கலைந்த தலையும் கசங்கிய ஆடைகளும் உணர்த்தின. வந்தவர், வணக்கம் சொன்னார்.

கார் விபத்து

விவசாயி, அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார். அவர் உட்கார்ந்ததும், `சூடாக டீ குடிக்கிறீங்களா?’ என்று கேட்டார்.

வந்தவர், அவசரமாக `வேண்டாம்’ என்று சொன்னார். அவர் கொஞ்சம் பரபரப்பாக இருப்பதை விவசாயியால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

`சொல்லுங்க... என்ன விஷயம்?’ விவசாயி கேட்டார்.

`ஒண்ணுமில்லை. நான் லண்டன்லருந்து வர்றேன். பக்கத்துல இருக்குற ஒரு ஊருக்குப் போகணும். இது எனக்குப் பழக்கமில்லாத பாதை. வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு. அதை வெளியே எடுக்கணும். அக்கம்பக்கத்துல விசாரிச்சேன். உங்ககிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க. அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம்னும் சொன்னாங்க. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம்னு...’

`ரொம்பப் பெரிய காரா?’ என்று கேட்டார் விவசாயி.

`இல்லை, இல்லை. சின்ன கார்தான்’ என்றார் வந்தவர்.

`வாங்க முதல்ல காரைப் பார்க்கலாம்’ என்ற விவசாயி, கயிறு உட்பட சில உபகரணங்களை எடுத்துக்கொண்டார். குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்தியபடி அவருடன் சென்றார். இருவரும் கார் பள்ளத்துக்குள் விழுந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம், அதன் நிலை எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்தார். வெளியூர்க்காரர் சொன்னதைப்போல கார் சிறியதாகத்தான் இருந்தது. ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில் ஒருவேளை அவருடைய குதிரைக்குக் காயம் ஏற்பட்டாலும் படலாம் என்றும் அவருக்குத் தோன்றியது.

பட்டீ

`என்னங்கய்யா... காரை வெளியே எடுத்துடலாம்ல?’ என்ற வெளியூர்க்காரரின் கேள்விக்கு விவசாயி பதில் சொல்லவில்லை. வேலையில் இறங்கினார். ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி, குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகப் பிணைத்தார். கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தார்.

பிறகு, `எங்கடா கேஸி (Casey)... இழு பார்ப்போம்!’ என்று சத்தமாகக் குரல் கொடுத்தார். குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது.

`ம்... பெய்லி (Bailey) இழுடா ராஜா!’ இன்னும் சத்தமாகச் சொன்னார் விவசாயி. குதிரை நகரவேயில்லை.

`டேய் மேண்டி (Mandy) வேகமா இழு!’ மறுபடியும் உரத்த குரலில் சொன்னார். குதிரை ஒரு இஞ்ச்கூட நகரவேயில்லை.

`என் செல்லம்... பட்டீ... நீயும் சேர்ந்து இழுடா!’ என்றார். அவ்வளவுதான். குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடம் கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது.

வெளியூர்க்காரர் விவசாயிக்கு நன்றி சொன்னார். விவசாயி குதிரையை அழைத்துக்கொண்டு கிளம்பும்போது கேட்டார்... `சரிங்கய்யா... நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேர்ல கூப்பிட்டீங்க? அதுதான் எனக்குப் புரியலை.’

பார்வையின்மை

`அது ஒண்ணுமில்லை. என் பட்டீக்கு கண்ணு தெரியாது. தான் மட்டும் கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்னு அது நினைச்சுடக் கூடாது இல்லியா? அதான்... அதுகூட இன்னும் மூணு குதிரைகள் இருக்குற மாதிரி நம்பவெச்சேன். அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு. காரை வெளியே இழுத்துடுச்சு!’

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

மெஹந்தியுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற புது மணப்பெண் சோனம் கபூர் (படங்கள்)

 

 
f064f466e298ed81dc005a475365ed63a016f6cb-tc-img-preview

 

சமீபத்தில் பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவுடன் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. 

sonam.jpg

திருமணம் முடிந்த கையோடு சோனம் கபூர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்று விட்டார். கடந்த சில ஆண்டுகளாக கேன்ஸ் திரைவிழாவின் முக்கிய அழைப்பாளர் சோனம் என்றால் மிகையில்லை.

a_picture_of_sonam_kapoor_from_cannes_fi

மெஹந்தி அணிந்த நிலையில் கேன்ஸ் திரைவிழாவின் ரெட் கார்ப்பெட்டில் நடக்க சோனம் கபூரின் புகைப்படம் வைராலானது.

71st-cannes-film-festival_0d21e924-58b3-

அழகான மெஹந்தி டிசைனுடன், சோனம் விரலில் அணிந்திருக்கும் கல்யாண மோதிரம் கவனிக்கப்பட்டது.

ring1.jpg

அந்த மோதிரத்தின் விலை 90 லட்சம் என்று ஒரு தகவலும் வைரலாகப் பரவி வருகிறது.  

625.0_.560_.320_.100_.600_.197_.800_.160

சோனம் கபூர் கழுத்தில் அணிந்திருந்த மாங்கல்யத்தில் அவருடைய நட்சத்திர குறியீட்டுடன் கணவரது நட்சத்திர குறியீட்டையும் சேர்த்து பொறித்து ஒரு டிசைன் செய்திருந்தார்.

625.0_.560_.320_.100_.600_.197_.800_.160

முதல் நாள் ரெட் கார்பெட்டுக்கு டிசைனர் லெஹங்கா அணிந்து அசத்தினார் சோனம் கபூர். இந்த நிகழ்ச்சியில் அணிவதற்கென ரால்ஃப் அண்ட் ருசோ என்ற ஸ்டூடியோவில் இந்த ஆடையை வாங்கியிருக்கிறார் சோனம்.

france-cannes-film-festival_2d283504-581

இரண்டாவது ரெட் கார்பெட்டுக்கு வேரா வாங் என்றழைப்படும் இந்த ஸ்கின் கலர் ஆடை அணிந்து அசத்தினார் சோனம் கபூர்.  

625.0_.560_.320_.100_.600_.197_.800_.160

திருமணம் முடிந்த அடுத்த நாளே கேன்ஸ் விழாவுக்குக் கிளம்பியதால் தாலியை பத்திரமாக வைத்துள்ளார் புதுமணப் பெண் சோனம் கபூர்.

 
 
f064f466e298ed81dc005a475365ed63a016f6cb-tc-img-preview

 

625.0_.560_.320_.100_.600_.197_.800_.160

சோனம் கபூரின் கேன்ஸ் புகைப்படங்கள் உலக மீடியாக்களின் கவனத்தைப் பெற்று வைரலாகி வருகின்றது.

Untitled.jpg

சோனம் கபூரின் நகை மற்றும் சிகை அலங்காரமும் அனைவரின் பாராட்டையும் அள்ளிக் குவித்தது.

625.0_.560_.320_.100_.600_.197_.800_.160

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: மே 18
 

image_3ff6a9a3ec.jpg1912: முதலாவது இந்தியத் திரைப்படமான சிறீ பந்தாலிக்இ மும்பையில் வெளியிடப்பட்டது.

1927: மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில்இ குழந்தைகள் அடங்கலாக 45 பேர் கொல்லப்பட்டனர்.

1944: கிரிமியத் தார்த்தார்கள்இ சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர்.

1955:முதலாவது இந்தோனேசியப் போர் முடிவுக்கு வந்ததை அடுத்துஇ பொதுமக்கள்இ போர்வீரர்கள்இ பிரான்சிய இராணுவத்தினர் அடங்கிய 310இ000 பேர்இ கம்யூனிச வடக்கு வியட்நாமில் இருந்து தென் வியட்நாமுக்கு இடம்பெயர்ந்தனர்.

1974: சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில்இ இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாகச் சோதித்தது.

1984: அன்னலிங்கம் பகீரதன்இ சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.

1994: இசுரேலியப் படைகள்இ காசாக்கரையில் இருந்து முற்றாக விலகின. பாலஸ்தீனர்கள் ஆளும் உரிமையைப் பெற்றனர்.

2005: ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் அனுப்பப்பட்ட படிமம்இ புளூட்டோ நிக்சுஇ ஐதரா என்ற மேலதிகமாக இரண்டு நிலாக்களைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தியது.

2006: நேபாளம் - மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும்இ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.

2009: 26 ஆண்டுகள் நீடித்த ஈழப்போர் முடிவுக்கு வந்ததாகஇ இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53இ000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களைக் கொன்ற நாளெனஇ தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள்.

2010: நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.

2015: கொலம்பியாவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்

http://www.tamilmirror.lk/

Link to comment
Share on other sites

பிட்ஸ் பிரேக்

 

19p1_1526386380.jpg

மெரிக்கன் சிட்டிசனான அனு இம்மானுவேல் தென்னிந்திய மொழிகளின் முன்னணி ஹீரோக்களின் படத்தில் நடித்து வந்தாலும் தனது சிறு வயது க்ரஷ்ஷான,  ஹாலிவுட்டின் ஜேம்ஸ் ஃப்ராங்கோ (James Franco) படத்தில் நடிக்க வேண்டுமென்பதை கனவாகக் கொண்டிருக்கிறார். ரவி தேஜாவுடன் ‘அமர் அக்பர் ஆண்டனி' மற்றும் நாக சைதன்யாவுடன் ‘சைலஜா ரெட்டி அல்லுடு' படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனக்கு மிகவும் விருப்பமான பாரிஸ், மிலன் நகரங்களுக்கு செல்லத் திட்டமிட்டிருக்கிறார். தமிழில் துப்பறிவாளன் 2 படத்திற்காக வெய்ட்டிங்.


31p1_1526386396.jpg

ரிது வர்மாவுக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். வீடு முழுவதும் இவர் வரைந்த ஓவியங்களால் நிரப்பப்பட்டிருக்குமாம்.

வீட்டில் ‘ஷூ' கலெக் ஷனுக்கு என்றே ஒரு தனிப் பகுதியை ஒதுக்கியுள்ளார். இத்தாலியன் உணவு வகைகள் இவரது ஆல் டைம் ஃபேவரைட்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

சீனாவை அச்சுறுத்தும் மிதிவண்டி குவியல்

சீன நகரம் வுஹானில் அதிகாரிகளால் இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஏன் இவ்வாறு குவித்து வைக்கப்படுகின்றன? என்ன பிரச்னை? என்பதை மேலேயுள்ள காணொளியில் காணலாம்.

Link to comment
Share on other sites

பிரிட்டன் அரச குடும்ப திருமணம் குறித்த 5 சுவாரஸ்ய தகவல்கள்

பிரிட்டன் இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் வரும் மே 19 ஆம் தேதியன்று நடக்கவுள்ளது. கோலாகலமாக நடக்க இருக்கும் அந்த திருமணம் குறித்த 5 தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

எங்கு... எப்போது திருமணம்?

இங்கிலாந்து உள்ளூர் நேரப்படி வரும் சனிக்கிழமை மதியம் வின்ஸ்டரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடக்க உள்ளது.

புனித ஜார்ஜ் தேவாலயம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த தேவாலயத்தில்தான் இளவரசர் ஞானஸ்நானம் பெற்றார். தேவாலயத்தின் வெளியே இருக்கும் பூங்காவில் உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு பொதுமக்கள் கூட தொடங்குவார்கள். 9.30 மணிக்கு வர தொடங்கும் விருந்தினர்கள் 11.15 மணிக்குள் இருக்கையில் அமர வைக்கப்படுவார்கள். 11.20-க்கு அரச குடும்பத்தினர் வருவார்கள். 12 மணிவாக்கில் திருமணம் நடைபெறும்.

யாரெல்லாம் திருமணத்தில் பங்கெடுக்கிறார்கள்?

திருமண அழைப்பிதழ்படத்தின் காப்புரிமைEPA Image captionதிருமண அழைப்பிதழ்

ஏறத்தாழ 600 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் அன்று மாலை நடக்க இருக்கும் திருமண வரவேற்புக்கு தனியாக 200 பேர் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மும்பையில் இயங்கும் 'மைனா மஹிளா' என்ற தொண்டு நிறுவனத்திற்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், இந்த திருமணத்தில் மெகன் மார்கின் தந்தை தாமஸ் பங்கேற்கபோவதில்லை. இது குறித்து பல வதந்திகள் உலவினாலும், அவர் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், உடல் நலன் காரணமாக, அவர் பங்கேற்க மாட்டார் என அரண்மனை அறிக்கை விளக்குகிறது.

திருமணத்தை நடத்தி வைக்க போவது யார்?

பேராயர் ஜஸ்டின் வெல்பிபடத்தின் காப்புரிமைPA

ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணத்தை நடத்தி வைக்கப்போவது கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி.

மக்கள் என்ன உடை அணிவார்கள்?

இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலிபடத்தின் காப்புரிமைALEXI LUBOMIRSKI

திருமணத்திற்கு வருபவர்கள் என்ன மாதிரி உடை அணிய வேண்டும் என்பது அழைப்பிதழிலேயே விவரிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் கோட் சூட்டும், பெண்கள் தொப்பியுடன் கூடிய நீண்ட கவுனும் அணிய வேண்டும்.

மணமகளுக்கென பிரத்யேக ஆடை கட்டுபாடுகள் உள்ளன. அதனை காண, கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.

இந்த திருமணத்திற்கான புகைப்பட கலைஞர் யார்?

அலெக்ஸிபடத்தின் காப்புரிமைPA

பிரிட்டனில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் அலெக்ஸி லுபொமிர்ஸ்கிதான் இந்த திருமணத்தின் அதிகாரபூர்வ புகைப்பட கலைஞர்.

ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் நிச்சயதார்த்த புகைப்படத்தையும் இவர்தான் எடுத்தார்.

 

https://www.bbc.com

Link to comment
Share on other sites

‘ஆன்ம ஈர்ப்பை வேருடன் களைவது தப்பு’
 

image_6f2eedea99.jpgஎம்மோடு இரண்டறக் கலந்து நிற்கும் மொழி, மதம், இனம் என்பன எங்கள் மரபுடன் இணைந்தவை; மரபணு சார்ந்தவை. இவை காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக எங்கள் நெஞ்சோடு, உணர்வோடு சங்கமித்தவையாகும்.

வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள பிரமாண்டமான கட்டடங்கள், இயற்கை வனப்புகள், நவீன முறையிலான தொழில் நுட்ப வளர்ச்சிகளை வியந்து போற்றுகின்றோம். அவை உண்மைதான்.

எந்த நாடு என்றாலும், அவைகளின் அழகை, பெருமைகளைப் போற்றிப் புகழ்வதில் தவறு இல்லை. 

இத்தனைகளையும் பார்த்துவிட்டு, எங்கள் தாய் நாட்டின், எமது சொந்த ஊரில் உள்ள வீட்டுக்குள் நுளையும் போது, சில்லென வீசும் காற்றின் ஸ்பரிசம் உங்களை வரவேற்பதை உணர்வீர்கள்.

அதுமட்டுமல்ல, வீட்டின் தாழ்வாரத்தின் ஓலைப்பாயில் படுக்கும்போதுதான், சந்தோஷமான சுதந்திர மிடுக்கும் அமைதியும் நம்மில் தவழுகின்றது. எந்த வசதிகளுக்காகவும் மனதைப் புறத்திசையில்த் தள்ளுவது, நஷ்டம் எமக்குத்தான்.

ஆன்ம ஈர்ப்பை வேருடன் களைவது தப்பு.  

Link to comment
Share on other sites

``இந்தப் புத்தகம் படிங்க... உலகமே நல்லாருக்கும்..!” - பில் கேட்ஸ் பரிந்துரை

 
 

‘பில் கேட்ஸ் ’- அமெரிக்கத் தொழிலதிபர், உலகின் பணக்கார நபர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர், முதலீட்டாளர், மனிதநேயமிக்கவர்- இவை தாம் அவரின் பெயரைக் கேட்டதும் நமக்கு தோன்றுபவை. ஆனால், இவையனைத்தையும் தவிர ஒன்று சொல்ல வேண்டும் என்றால் அது ‘அவர் ஒரு சிறந்த புத்தக வாசிப்பாளர்’ என்பதாகத்தான் இருக்கும். தொழில்நுட்பத்தைத் தவிர அவருடன் விவாதிப்பதற்கு வேறு விஷயம் உண்டென்றால் அது புத்தகங்கள் பற்றியதாகத்தான் இருக்கமுடியும். எவ்வளவு பிஸியான வேலைகள் இருந்தாலும் ஒரு நாளில் குறைந்தபட்சம் ஒருமணிநேரம் புத்தக வாசிப்பில் செலவழிப்பதைக் வழக்கமாகக் கொண்டுள்ள பில் கேட்ஸ், ஒரு வருடத்தில் குறைந்தது 50 புத்தகங்கள் வாசிக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

தான் வாசிக்கும் புத்தகங்களைப் பிறருக்குப் பரிந்துரைக்கவும் அவர் தவறுவதில்லை. ஒவ்வொரு வருடமும் தனக்குப் பிடித்த புத்தகங்களைப் பற்றி, ‘கேட்ஸ் நோட்ஸ்’ (Gates Notes) என்ற தனது வலைப்பூவில் (Blog) பதிவிடுவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார். அவ்வாறு அவர் பரிந்துரைக்கும் புத்தகங்கள் விற்பனையில் சக்கை போடு போடுவதும் அவ்வப்போது நடப்பதுண்டு. 

 

பில் கேட்ஸ் பரிந்துரை செய்த புத்தகம்


அந்த வகையில் இந்த ஆண்டு அவர் பரிந்துரைத்த புத்தகம், “Factfulness: Ten Reasons We’re Wrong About the World- and Why Things Are Better Than You Think”.  இதைப் பற்றி சமீபத்தில் வெளியிட்டுள்ள யூடியூப் வீடியோ பதிவில், “நான் இதுவரை படித்துள்ள கல்வி தொடர்பான புத்தகங்களிலேயே மிகச்சிறந்த புத்தகம் இதுதான்,” என்று குறிப்பிட்டுள்ள அவர்  மேலும் கூறுகையில், ``சுலபமாகப் புரிந்துகொள்ளமுடியாத நுட்பமான ஒரு தளத்தை இது உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளது”, என்றும், “உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் உண்மையில் மில்லியன் கணக்கான மக்கள் இந்தப் புத்தகத்தை வாசித்தால் போதும்”, என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், “I give it my highest recommendation” (எனது உட்சபட்ச பரிந்துரையாக இதைத் தருகிறேன்) என்றும் சொல்லி எல்லோருடைய ஆர்வத்தையும் தூண்டியுள்ளார்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் புள்ளியியல் வல்லுநரும் உலக சுகாதார நிபுணருமான ‘ஹான்ஸ் ரோஸ்லிங்’ (Hans Rosling) என்பவர்தான் இந்தப் படைப்பின் சொந்தக்காரர். இவர்  பில் கேட்ஸின் உற்ற நண்பரும்கூட. இந்தப் புத்தகம் அவரின் இறப்புக்குப் பிறகு அவரது மகன், ‘ஓலா’ (Ola), மற்றும்  மருமகள், ‘அன்னா’ (Anna) ஆகியோரது முயற்சியால் வெளியிடப்பட்டது.
இப்புத்தகத்தைக் குறித்து தனது ப்ளாகில் எழுதியுள்ள பில் கேட்ஸ்,  “நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பார்ப்பது பற்றிய ஒரு புதிய அணுகுமுறையை இந்தப் புத்தகம் அளிக்கும். மேலும், “வளர்ந்த” (developed) மற்றும் “வளரும்” (developing) நாடுகள் மீது உலக நாடுகள் கொண்டுள்ள கருத்தாக்கங்கள் அனைத்தையும் சிதறடிக்கும் வகையில் ரோஸ்லிங்-ன் கருத்துக்கள் உள்ளன”, என்கிறார். 

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ் 1999ல் கணித்ததில் எவை இன்று நிஜமாகியிருக்கின்றன?

இந்த ‘Factfulness’ புத்தகமானது,  நமது உட்புற இயல்பை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாக அல்லது கேட்ஸ் எழுதுவதைப் போல் சொல்லவேண்டுமானால், “உலகத்தை உண்மையாகக் கண்டுகொள்ள விடாமல் நம்மைத் தடுக்கும் பத்து உள்ளுணர்வினை வெளிக்காட்டும் ஒரு கருவியாக இது உதவும்,” என்கிறார்.

‘பயம் பற்றிய உள்ளுணர்வு’ (the fear instinct), ‘அளவு பற்றிய உள்ளுணர்வு ( the size instinct) மற்றும் இடைவெளி பற்றிய உள்ளுணர்வு (the gap instinct) போன்றவை ரோஸ்லிங் குறிப்பிட்டுள்ள பத்து உள்ளுணர்வுகளில் சிலவாகும். இவற்றைப் பற்றி அவர் விளக்கிய முறையே இந்தப் புத்தகத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது.

பில் கேட்ஸ் சொல்வதைப்போல இந்தப் புத்தகம் உலகத்தை உண்மையாகக் கண்டுகொள்ளவும், சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கும் உதவுமானால் நாமும் இதை வாங்கி படித்துப் பார்க்கலாம்.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

இன்பாக்ஸ்

 

68p6_1526466724.jpg

* நடிகர் அனில் கபூரின் மகளும் பாலிவுட்டின் இளம் நடிகையுமான சோனம் கபூர், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜாவைக் கரம் பிடித்தார். இவர்களது திருமணம் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. ஸ்ரீதேவியின் மரணத்துக்குப் பிறகு கபூர் குடும்பத்தில் நடக்கும் முதல் சுபகாரியம் என்பதால், பாலிவுட்டே கலந்துகொண்டது. ரிசப்ஷனில் ஷாருக், சல்மான் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் பலர் ஆடிய ஆட்டம் பக்கா மாஸ்! பெரிய வீட்டு விசேஷம்!

68p3_1526450815.jpg

* ‘The Extraordinary Journey of The Fakir’ என்ற படத்தின் மூலம்  ஹாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார் தனுஷ். அடுத்த மாதம் வெளியாகவுள்ள அந்தப் படத்தை புரமோட் செய்யும் வகையில் இயக்குநர் கென் ஸ்காட் உடன் 72வது கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில்   மாரி கெட்டப்பில் கோட் சூட்டில் கலந்து கொண்டு கலக்கி இருக்கிறார் தனுஷ். சிறப்பு கருப்பு!

* ‘ஆரம்பம்’ படத்துக்குப் பிறகு சைலன்ட் மோடில் இருந்த இயக்குநர் விஷ்ணுவர்தன், கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையைப் படமாக இயக்க இருக்கிறார். கோலிவுட்டில் இல்லை, பாலிவுட்டில்.  படத்தில் விக்ரம் பத்ராவாக பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கவிருக்கிறார். நாயகியாக கத்ரீனா கைஃப் நடிக்கவிருக்கிறாராம். கரண் ஜோகர் தயாரிக்கவிருக்கும் இந்தப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக இருக்கிறது. ஆரம்பம்ம்மே... அதிருதடா...

* புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள `நீரில் வாழும் வண்டு’க்கு லியானார்டோ டிகாப்ரியோவின் பெயரை சூட்டியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். தனி அமைப்பை நிறுவி  20 ஆண்டுகளாக தொடர்ந்து அழிந்து வரும் உயிரினங்களை காப்பதற்காக போராடி வருபவர் லியானார்டோ டிகாப்ரியோ. இவரது இந்தச் சேவையை கௌரவிப்பதற்காகவே  புதிதாக கண்டறியப்பட்ட நீர் வண்டுக்கு `க்ரோவெல்லினஸ்  லியானார்டோ டிகேப்ரியாய்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். வாவ் ஜாக்!

68p4_1526450857.jpg

* பார்சிலோனா அணியில் 17 ஆண்டுகளாக மீட்ஃபீல்டை ஆண்ட `மாயக்காரன்’ இனியஸ்டா, இந்த சீசனுடன் பார்சிலோனாவுக்கு குட்பை சொல்கிறார். இனியஸ்டாவின் ஜாலத்தை இனி கேம்ப் நு மைதானத்தில் பார்க்க முடியாதே என்கிற சோகத்தில் இருக்கிறார்கள் கேடலன் ரசிகர்கள். எதிரணி ரசிகர்களிடம் இருந்தும் `Standing Ovation’ பெறும் இனியஸ்டாவுக்கு உருக்கமான Sendoff கொடுத்தனர் `பார்கா’ ஃபேன்ஸ். இன்ஃபைனட் இனியஸ்டா

* ‘அயன்’, ‘மாற்றான்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவின் படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த். இந்தப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை. இதில் சூர்யாவுடன் மோகன்லாலும் கூட்டணி போடப்போகிறார். இது கமர்ஷியலான அதிரடி ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்கிறார்கள். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் முடிந்ததும் இந்தப்படம் தொடங்குமாம்.  கூல் கூட்டணி

68p5_1526450882.jpg

* ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு இரண்டு கெட்அப்கள். வயதானவராக ஒரு கெட்டப்பிலும், இளைஞராக இன்னொரு கெட்டப்பிலும் தோன்றவிருக்கிறாராம் தல! ‘தீபாவளி ரிலீஸ்’ என்ற அறிவிப்புடன்தான் படத்தைத் தொடங்கினார் இயக்குநர் சிறுத்தை சிவா. இடையில் எதிர்பாராத விதமாக சினிமா வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட, இப்போது அதைச் சரிகட்டும் வகையில் பரபரப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. சீறி வாங்க சிவா!

* சினிமாவில் நிலவும் பல்வேறு பிரச்னைகளில் ஒன்று, தியேட்டர்கள் பற்றாக்குறை. இதற்கு தீர்வு காணும்விதமாக, நடமாடும் சிறு தியேட்டரை வடிவமைத்திருக்கிறார், டெல்லியைச் சேர்ந்த சுசில் செளத்ரி. ஒரே நேரத்தில் 200 பேர் அமர்ந்து படம் பார்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் 35 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை மட்டுமே. அச்சா ஐடியா

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

கேப்டன் கூல் டோனியின் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் கலெக்‌ஷன்ஸ்

 
அ-அ+

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கேப்டன் கூல் என செல்லமாக அழைக்கப்படும் டோனியின் கார் மற்றும் மோட்டார் சைக்கிளின் தொகுப்புகள் அனைவரையும் வியப்படையச் செய்கின்றன. #MahendraSinghDhoni ‏

 
 
 
 
கேப்டன் கூல் டோனியின் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் கலெக்‌ஷன்ஸ்
 
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் முழுப்பெயர், மகேந்திர சிங் டோனி. ஆனால் இவரது சிறப்பான மற்றும் நிதானமாக கேப்டன் பண்பு காரணமாக கேப்டன் கூல் என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் தனித்திறமை கொண்டவர். கிரிக்கெட் மீது மிகுந்த அன்பு கொண்ட டோனி, அதே காதலை கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீதும் வைத்திருக்கிறார்.

டோனி பொதுவாக சொகுசு கார்கள் மீது ஆர்வம் கொண்டவர். அவரிடம் பல கார்கள் உள்ளது. அவற்றை குறித்து விரிவாக பார்ப்போம்.

ஹம்மர் H2:
 
201805191257131441_1_Dhoni-Hummer._L_styvpf.jpg

டோனியிடம் உள்ள கார்களில் மிகவும் கவர்ச்சியான கார் இதுவாகும். தனது சொந்த ஊரில் டோனி இதனை அதிகம் பயன்படுத்துவார். இது சாலையில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும்.

மகேந்திரா ஸ்கார்பியோ:
 
201805191257131441_2_dhonis_modified_scorpio_3._L_styvpf.jpg

இது டோனியிடன் உள்ள மிக எளிமையான கார். இது சாதாரணமாக ஸ்கார்பியோ போன்று இல்லாமல் டோனிக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் அமரக்கூடிய இந்த காரில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

ஆடி Q7:
 
201805191257131441_3_Dhoni_Q7._L_styvpf.jpg

ஆடி கார் ஜெர்மன் நாட்டில் உற்பத்தியாகும் சொகுசு கார். இது அவர் அதிகமாக பயன்படுத்தும் கார்களில் ஒன்று. இது பழைய மாடல் கார்.

லண்ட் ரோவர் பிரீலண்டர் 2:
 
201805191257131441_4_landrover._L_styvpf.jpg

இதுவும் மிகச்சிறந்த சொகுசு கார். இதன் சிறப்பு அம்சங்கள் மிகவும் பிரபலமானது.

டோனியிடம் உலகின் மிகச்சிறந்த பல மோட்டார் சைக்கிள்கள் உள்ளன.

யமகா RD350:
 
201805191257131441_5_yamaha._L_styvpf.jpg


டோனிக்கு மிகவும் பிடித்த பைக் இது. அவரிடம் இரண்டு யமகா உள்ளது. அவர் பல முறை இதனை சுத்தம் மற்றும் சரி செய்வார். இவர் வாங்கிய முதல் பைக் இது. அதனை 4,500 ரூபாய்க்கு வாங்கினார்.

கான்பிடரேட் ஹெல்காட் X32:
 
201805191257131441_6_confederate._L_styvpf.jpg

இது மிகவும் அரிய பைக்காகும். இது மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டோனி பல முறை ரேஸ் செய்துள்ளார். இதன் மதிப்பு 50 லட்சம் ரூபாயாகும்.

ஹார்லி-டேவிட்சன் பட்பாய்:
 
201805191257131441_7_davidsaon-fatboy._L_styvpf.jpg

இந்த பைக்கில் டோனி தனது சொந்த ஊரை சுற்றி வருவார். இதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

பிஎஸ்ஏ கோல்ட்ஸ்டார்:
 
201805191257131441_8_goldatar._L_styvpf.jpg

இது அவருடைய மோட்டார் சைக்கிள் தொகுப்புகளில் தலைச்சிறந்தது.

கவாசாகி நின்ஜா ZX14R
 
201805191257131441_9_dhonikawaski1._L_styvpf.jpg

இது மிகச்சிறந்த மோட்டார் சைக்கிள்.

யமகா FZ-1:
 
201805191257131441_10_MS-Dhoni-on-the-Yamaha-FZ-1._L_styvpf.jpg

டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதனால் அதிக நாட்கள் சென்னையில் தங்குகிறார். ஸ்டேடியத்திற்கு இந்த பைக்கில் தான் வருகிறார்.

கவாசாகி நின்ஜா H2:
 
201805191257131441_11_dhonikawaski2._L_styvpf.jpg

இது டோனி சமீபத்தில் வாங்கிய பைக். பைக்கின் புகைப்படங்களை டோனி தனதுசமூக ஊடகங்களில் பதிவு செய்தார். இதன் மதிப்பு 30 லட்சம் ரூபாயாகும். #MahendraSinghDhoni

கேப்டன் கூல் டோனியின் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் கலெக்‌ஷன்ஸ்

 
அ+

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கேப்டன் கூல் என செல்லமாக அழைக்கப்படும் டோனியின் கார் மற்றும் மோட்டார் சைக்கிளின் தொகுப்புகள் அனைவரையும் வியப்படையச் செய்கின்றன. #MahendraSinghDhoni ‏

 
 
 
 
கேப்டன் கூல் டோனியின் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் கலெக்‌ஷன்ஸ்
 
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் முழுப்பெயர், மகேந்திர சிங் டோனி. ஆனால் இவரது சிறப்பான மற்றும் நிதானமாக கேப்டன் பண்பு காரணமாக கேப்டன் கூல் என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் தனித்திறமை கொண்டவர். கிரிக்கெட் மீது மிகுந்த அன்பு கொண்ட டோனி, அதே காதலை கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீதும் வைத்திருக்கிறார்.

டோனி பொதுவாக சொகுசு கார்கள் மீது ஆர்வம் கொண்டவர். அவரிடம் பல கார்கள் உள்ளது. அவற்றை குறித்து விரிவாக பார்ப்போம்.

ஹம்மர் H2:
 
201805191257131441_1_Dhoni-Hummer._L_styvpf.jpg

டோனியிடம் உள்ள கார்களில் மிகவும் கவர்ச்சியான கார் இதுவாகும். தனது சொந்த ஊரில் டோனி இதனை அதிகம் பயன்படுத்துவார். இது சாலையில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும்.

மகேந்திரா ஸ்கார்பியோ:
 
201805191257131441_2_dhonis_modified_scorpio_3._L_styvpf.jpg

இது டோனியிடன் உள்ள மிக எளிமையான கார். இது சாதாரணமாக ஸ்கார்பியோ போன்று இல்லாமல் டோனிக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் அமரக்கூடிய இந்த காரில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

ஆடி Q7:
 
201805191257131441_3_Dhoni_Q7._L_styvpf.jpg

ஆடி கார் ஜெர்மன் நாட்டில் உற்பத்தியாகும் சொகுசு கார். இது அவர் அதிகமாக பயன்படுத்தும் கார்களில் ஒன்று. இது பழைய மாடல் கார்.

லண்ட் ரோவர் பிரீலண்டர் 2:
 
201805191257131441_4_landrover._L_styvpf.jpg

இதுவும் மிகச்சிறந்த சொகுசு கார். இதன் சிறப்பு அம்சங்கள் மிகவும் பிரபலமானது.

டோனியிடம் உலகின் மிகச்சிறந்த பல மோட்டார் சைக்கிள்கள் உள்ளன.

யமகா RD350:
 
201805191257131441_5_yamaha._L_styvpf.jpg


டோனிக்கு மிகவும் பிடித்த பைக் இது. அவரிடம் இரண்டு யமகா உள்ளது. அவர் பல முறை இதனை சுத்தம் மற்றும் சரி செய்வார். இவர் வாங்கிய முதல் பைக் இது. அதனை 4,500 ரூபாய்க்கு வாங்கினார்.

கான்பிடரேட் ஹெல்காட் X32:
 
201805191257131441_6_confederate._L_styvpf.jpg

இது மிகவும் அரிய பைக்காகும். இது மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டோனி பல முறை ரேஸ் செய்துள்ளார். இதன் மதிப்பு 50 லட்சம் ரூபாயாகும்.

ஹார்லி-டேவிட்சன் பட்பாய்:
 
201805191257131441_7_davidsaon-fatboy._L_styvpf.jpg

இந்த பைக்கில் டோனி தனது சொந்த ஊரை சுற்றி வருவார். இதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

பிஎஸ்ஏ கோல்ட்ஸ்டார்:
 
201805191257131441_8_goldatar._L_styvpf.jpg

இது அவருடைய மோட்டார் சைக்கிள் தொகுப்புகளில் தலைச்சிறந்தது.

கவாசாகி நின்ஜா ZX14R
 
201805191257131441_9_dhonikawaski1._L_styvpf.jpg

இது மிகச்சிறந்த மோட்டார் சைக்கிள்.

யமகா FZ-1:
 
201805191257131441_10_MS-Dhoni-on-the-Yamaha-FZ-1._L_styvpf.jpg

டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதனால் அதிக நாட்கள் சென்னையில் தங்குகிறார். ஸ்டேடியத்திற்கு இந்த பைக்கில் தான் வருகிறார்.

கவாசாகி நின்ஜா H2:
 
201805191257131441_11_dhonikawaski2._L_styvpf.jpg

இது டோனி சமீபத்தில் வாங்கிய பைக். பைக்கின் புகைப்படங்களை டோனி தனதுசமூக ஊடகங்களில் பதிவு செய்தார். இதன் மதிப்பு 30 லட்சம் ரூபாயாகும். #MahendraSinghDhoni

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

இந்திய மணக்கோலத்தில் பிரிட்டனின் புதிய இளவரசி - ஒரு சுவாரஸ்ய கற்பனை

பிரிட்டன் இளவரசர் ஹேரியை மணக்கும் மெகன் மார்கில் இந்திய மணமகள் ஆடையில் இருந்தால் எப்படி இருப்பார் என்ற கற்பனையை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ள படங்கள்.

மெகன் மார்கில்

 

மெகன் மார்கில்

Royal wedding பிரிட்டன் இளவரசர் ஹேரியை மணக்கும் மெகன் மார்கில் தமிழ் மணமகள் ஆடையில். Royal wedding வங்காள பாரம்பரிய மணமகள் ஆடையில் மெகன் மார்கில். Royal wedding குஜராத்தி மணமகளாக இருந்தால் இப்படித்தான் இருப்பார் மெகன். Royal wedding

மராத்தி கலாசார மணக்கோலத்தில் மெகன் மார்கில்.

 

Royal wedding மெகன் மார்கில் இப்போது இருப்பது பஞ்சாபி மணமகள் உடையில். Royal wedding தெலுங்கு முறைபடி மணக்கோலம் பூண்டுள்ள மெகன் மார்கில்.

 

https://www.bbc.com

Link to comment
Share on other sites

கண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க

ஃபுல் ஸ்லீவ மடிச்சு.. முதல் ரெண்டு பட்டன அவிழ்த்து விட்டு… அரைகுறையா டக் பண்ணி வியர்க்க விருவிருக்க இருக்குறது கூட ஆண்களுக்கு அழகு தான். பசங்க இப்படி இருந்தா அழகா இருப்பாங்க… அப்படி இருந்தா அழகா இருப்பாங்கன்னு சொல்றதுக்கு நாலு விஷயம் இருந்தாலும்… எங்க சொன்னா நம்மள மதிக்க மாட்டானோங்கிற ஒரு கண்ணோட்டத்துல பொண்ணுங்க ஆம்பளைங்கள ரசிக்கிறத வெளிக்காட்டிக்க மாட்டாங்க.

ஆனா, ஆம்பளைங்க நாங்க அப்படி இல்லைங்க. பொண்ணுங்க சின்னதா ஒரு பொட்டு வெச்சுட்டு வந்தாலுமே கூட… அத ரசிச்சு கவிதை என்ன கட்டுரையே எழுது தள்ளுவோம். ரெட் கலர் எப்பவுமே பொண்ணுகளுக்கு அழகு. அது ஒரு கவர்ச்சியும் கூட. என்ன தான் ஷார்ட் ஸ்கர்ட் போட்டுக்கிட்டு நூறு பொண்ணுங்க நம்ம முன்னால வந்தாலும்… ஒரே ஒரு பொண்ணு சிவப்பு கலர் பாவாடை தாவணி போட்டுட்டு வந்தா… கண்ணும், மனசும் அவ மேல தான் அலைபாயும்

இஞ்சி இடுப்புல இருந்து இன்சு, இன்சா அழகா ஆராதிக்கிறவங்க ஆம்பளைங்க. அந்த வகையில… என்னவோ தெரியல… என்ன மாயமோ புரியல… கண்ணாடி போட்ட பொண்ணுங்கன்னா பசங்களுக்கு ஒரு டீஸ்பூன் அதிகமாவே பிடிக்குதாம்.

இது பசங்க மட்டும் சொல்லலீங்க… சிலபல ஆய்வறிக்கையும் அப்படி தான் சொல்லுது. நம்ம ஊர் படத்துல மட்டும் தான் பொண்ணுகள லூசுத்தனமா காமிக்க கண்ணாடி மாட்டிக்விட்டுடுவாங்க. ஆனா, உண்மையில கண்ணாடி போட்ட பொண்ணுக தான் கொஞ்சம் கூடுதல் அழகு, செக்ஸி, கியூட்… இதோ! கண்ணாடி போட்ட பொண்ணுங்க பத்தி ஆம்பளைங்க என்ன சொல்றாங்கன்னு பாருங்க…

செக்ஸியும் கூட…

glasses-sexy-parineethi-500x305.png

டக்குன்னு கேட்டா எப்படி பதில் சொல்றது… இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி தான். கண்ணாடி போட்ட பொண்ணுங்க கூடுதல் அழகு தான்.

ஆனால், அதுல அவங்க கண்ணோட பங்கு முக்கியமானது. தோசை நல்லா இருந்தாதானே மசாலா தோசையே நமக்கு பிடிக்கும்.   powered by Rubicon Project உதாரணம் கொஞ்சம் வர்ஸ்ட்டா இருந்தாலும்… ரசிக்க தெரிஞ்சவங்களுக்கு இது நல்லாவே புரியும்ன்னு நினைக்கிறேன். கண்ணாடி போட்ட பொண்ணுங்க அழகு மட்டும் இல்லைங்க… கொஞ்சம் செக்சியும் கூட.

முன்னாள் காதலி…

glass-2-400x400.jpg

என்னோட முன்னாள் காதலி கண்ணாடி போட்டிருப்பா.. நிஜமாவே சொல்றேன்… அவ அழகி தான்… ஆனா, அவள பேரழகியா காட்டுறது அவளோட கண்ணாடி தான். எனக்கு நிறைய அழகான பெண் தோழிகள் இருக்காங்க. அவங்களே அவள பார்த்தா அசந்து போறதுக்கு காரணம்.. அவளோட கண்ணாடி தான். அது என்னமோ தெரியுல… அவ என்ன டிரஸ் போட்டாலும்.. தூங்கி எழுந்த நிலையில இருந்தாலுமே கூட.. கண்ணாடி எடுத்து மாட்டுனானா ரொம்ப அழகா ஆயிடுவா. அந்த கண்ணாடி அவளுக்கு நல்லா பொருந்துதா… இல்ல… அவளுக்காகவே அந்த கண்ணாடி வடிவமைச்சான்களான்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு இருக்கு

ஈர்ப்பு…

நீங்க நல்லா கவனிச்சீங்கன்னா தெரியும்… கண்ணாடி போட்டிருக்க பொண்ணுங்க கிட்ட ஒரு விதமான கூடுதல் ஈர்ப்பு இருக்கும். பொண்ணுங்கள அழகா காட்டுறது ரெண்டு நகை தான். ஒன்னு புன்னகை, இன்னொன்னு கண்ணாடி. அதுலயும், அவங்க முகத்துக்கு, கண்ணுக்கு எத்த ஃபிரேம் சூஸ் பண்ண தெரிஞ்ச பொண்ணுங்க எக்ஸ்ட்ரா அட்ராக்டிவா இருப்பாங்க.

புத்திசாலி!

 

ஒரு முரட்டுத்தனமான ஆம்பளைய கூட புத்திசாலியா காட்டிடும் கண்ணாடி. அப்படி இருக்க ஒரு மென்மையான பூவா எவ்வளோ அழகா காட்டும். எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு… படிச்சவங்க எல்லாம் கண்ணாடி போடுறதால… கண்ணாடி போடுறவங்க எல்லாம் படிச்ச புத்திசாலி மாதிரி தெரியிறாங்கலா என்ன? பசங்கள கூட ரியாக்ஷன் வெச்சு கொஞ்சம் கண்டுப்பிடிச்சிடலாம். ஆனா, பொண்ணுக கண்ணாடி போட்டாலே புத்திசாலி மாதிரி தான் தெரியிறாங்க.

கெத்தா!

கண்ணாடி போட்ட பொண்ணுங்க அழகா இருப்பாங்க, கியூட்டா தெரிவாங்க… கவர்ச்சியா இருப்பாங்கன்னு பலபேர் சொல்லலாம். ஆனால், முக்கியமான ஒன்னு இருக்கு. கண்ணாடி போட்ட பொண்ணுங்க தெரியசாலியா தெரிவாங்க. சும்மா ஒரு பொண்ணு முறைச்சு பார்க்குறதுக்கும். கண்ணாடி போட்ட பொண்ணு முறைச்சு பார்க்குறதுக்குமான பார்வை வேறுபாடு இருக்கு.

glass-3-500x333.jpg

கண்ணாடி போட்ட பொண்ணுங்க பார்வையில தைரியமும், கம்பீரமும் இருக்கும். நிஜமாவே அவங்க அப்படி இல்லாட்டியும் கூட… கண்ணாடி அவங்கள அப்படி தான் காண்பிக்கும். மத்தத விட… கண்ணாடி ஒரு காந்தம்ன்னு சொல்லலாம்.

சில பொண்ணுக ஷார்ட் ஸ்கர்ட் போட்டு ஈர்ப்பு உ உண்டாக்குவாங்க. சில பொண்ணுங்க சிரிச்சே ஈர்ப்பு உண்டாகுவாங்க. இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம். ஆனா, இத பட்டியல்ல முதல் இடம் பிடிக்கிறது என்னவோ கண்ணாடி போட்ட பொண்ணுங்க ஈர்ப்பு தான். ஜஸ்ட் ஒரு செகண்ட் அவங்க பார்க்குற அந்த பார்வையில இருக்க ஈர்ப்பு இருக்கே. என்ன தான் பிரியாணி, கூட்டு, சூப்பு, வறுவல்ன்னு வகை, வகையா இருந்தாலும். அதுல உப்பு இருந்தாதானே ருசிக்கும். அப்படி தாங்க கண்ணாடி போட்ட பொண்ணுக ஏற்படுத்துற ஈர்ப்பும்

. !

http://metronews.lk

Link to comment
Share on other sites

உதகையில் கண்கவரும் மலர் கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)

 

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆண்டு தோறும் கோடைவிழாவை முன்னிட்டு நடைபெறும் மலர்கண்காட்சி துவங்கியுள்ளது. தொடர்ந்து 5 தினங்களுக்கு நடைபெறும் 122வது கண்காட்சியில் பிளாக்ஸி,டேலியம், பால்சம் ,டியூலிப், ஜின்சர் லில்லி, அந்தோரியம் போன்ற 185 வகையான பூக்கள் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் மலர்கள் கொண்டு, 60 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்ட மேட்டூர் நீர் அணை போன்ற அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

பலவிதமான காய்கள், பழங்கள் கொண்டு அமைக்கப்பட்ட விதவிதமான உருவங்கள், கண்ணைகவரும் மலர் தோட்டங்கள், மேட்டூர் அணை அமைப்பு ,பார்பி பொம்மை , பறவைகள், விலங்குகள், படகு போன்றவை பார்வையளர்களை மிகுதியாய் கவர்ந்தது.

ஊட்டியில் 122 வது மலர் கண்காட்சி ஊட்டியில் 122 வது மலர் கண்காட்சி ஊட்டியில் 122 வது மலர் கண்காட்சி ஊட்டியில் 122 வது மலர் கண்காட்சி ஊட்டியில் 122 வது மலர் கண்காட்சி ஊட்டியில் 122 வது மலர் கண்காட்சி ஊட்டியில் 122 வது மலர் கண்காட்சி ஊட்டியில் 122 வது மலர் கண்காட்சி

 

https://www.bbc.com/

Link to comment
Share on other sites

பிரிட்டன் அரச குடும்ப திருமணத்தில் கலந்து கொண்ட மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்

 
 

பிரிட்டன் இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் 2018, மே 19ஆம் தேதியன்று (இன்று) நடைபெறவுள்ளதை அடுத்து, வின்சர் கோட்டையில் உலகத்தின் கவனம் குவிந்திருக்கிறது. மும்பையின் புகழ்பெற்ற டப்பாவலாக்களும் (மும்பை அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு மதிய உணவு எடுத்துச்செல்லும் பணி செய்பவர்கள்) அரச குடும்பத்தின் இந்த திருமணத்தை மிகவும் உற்சாகமாக மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர்.

பிரிட்டன்

 

பிரிட்டன் அரச குடும்பத்தோடு, டப்பாவலாக்களுக்கு சிறப்பு தொடர்பு இருக்கிறது. வேல்ஸ் இளவரசர் சார்லஸ் 2005 ஆம் ஆண்டில் கேமில்லா பார்க்கரை திருமணம் செய்து கொண்டபோது மும்பை டப்பாவலாக்கள் இருவர் சிறப்பு விருந்தாளிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.

அரச குடும்பத்தின் திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்ற அவர்கள் இருவரில் ஒருவர் சோபன் லக்ஷ்மண் மேரே.

முதல்முறை விமானப் பயணம்

அரச குடும்பத்தின் திருமணத்தில் கலந்து கொண்ட அனுபவத்தைப் பற்றி கேட்டபோது, சோபன் மகிழ்ச்சியுடன் தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார். திருமண அழைப்பு கிடைத்தபோது அவர்களிடம் பாஸ்போர்ட் கூட இல்லையாம்!

"இந்திய அரசு எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஓரிரு நாட்களில் பாஸ்போர்ட் வழங்கியது. விமானத்தில் முதல் முறையாக பயணம் செய்த அனுபவமும் உற்சாகமாக இருந்தது. தரையில் இருந்து விமானம் எப்படி மேலெழும்பும் என்று பார்க்க விரும்பினோம். ஒரு கனவு போல தோன்றிய அந்த பயணத்தின் முடிவில் லண்டன் சென்றடைந்தோம்."

பிரிட்டன்

 

சோபன் லக்ஷ்மண் மேரே

"நாங்கள் லண்டனில் தரையிறங்கியபோது, மிகவும் குளிராக இருந்தது. திருமண வரவேற்பு குழுவினர் எங்களை சிறப்பான முறையில் வரவேற்றார்கள். கோட்டுகளை எங்களுக்கு அளித்தார்கள், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எதிரில் இருந்த தாஜ் ஹோட்டலுக்கு எங்களை அழைத்துச் சென்றார்கள்."

சோபன் லக்ஷ்மண் மற்றும் அவரது சகா ரகுநாத் மெட்கே அங்கு எட்டு நாட்கள் தங்கியிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்ததை சொல்லி ஆச்சரியப்படுகிறார் சோபன்.

டாப்பாவாலாவுக்கு மொழிபெயர்ப்பாளரான ஜெய்ப்பூர் ராணி

அரச குடும்பத்தினரின் விருந்தினர்களாக, தங்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதையையும், கவனத்தையும் அவர்கள் உண்மையிலேயே அனுபவித்தார்கள். விரைவிலேயே அரச குடும்பத்தை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

"இளவரசர் சார்லஸையும், அவருடைய தாயான ராணி எலிசபெத்தையும் சந்தித்தபோது அவர்களிடம் பேச முடியாமல் தடுமாறினோம். எங்கள் இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. அங்கிருந்த ஜெய்ப்பூர் ராணி பத்மினி தேவி எங்களுக்கு உதவினார். இந்தியில் நாங்கள் பேசியதை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார், அதற்கு ஆங்கிலத்தில் அவர்கள் அளிக்கும் பதிலை எங்களுக்கு இந்தியில் சொல்வார்."

தங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பற்றி மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார் சோபன். "அரச குடும்பத்தினரில் ஒருவரைப் போன்றே நாங்கள் நடத்தப்பட்டோம். அரண்மனையை சுற்றிக் காட்டினார்கள். அரண்மனை எவ்வளவு பெரியது தெரியுமா? ஒரு நுழைவாயிலில் இருந்து மற்றொரு நுழைவாயிலுக்கு செல்வதற்குள் மூச்சு வாங்கிவிடும்" என்று சொல்லி நினைவுகளில் பூரித்து போகிறார் சோபன்.

டாப்பாவாலா

"ஒவ்வொரு மாடியிலும் பெரிய அரங்குகளும், கலைப்பொருட்களையும் பார்க்கவே மலைப்பாக இருந்தது. அரண்மனைகளைப் பற்றி கதைகளில்தான் படித்திருந்தோம், ஆனால் அதை நேரடியாக பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற அதிர்ஷ்டம் என் வாழ்க்கையில் எப்போதும் இருந்ததேயில்லை" என்று தனக்கு கிடைத்த வாய்ப்பை நினைத்து பெருமை கொள்கிறார் சோபன்.

லண்டன் சுற்றுலா

லண்டனில் இருந்த மூன்று நாட்களில் திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிறகு, மீதமுள்ள நான்கு நாட்களும் நகரத்தை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

"காலை ஏழு மணிக்கு கிளம்பினால் இரவு 8 மணிவரை ஊரை சுற்றிப் பார்ப்போம். அரச குடும்பத்தில் இருந்து எங்களுக்காக ஒரு கார் கொடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமா? நாங்கள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் இரண்டு பாதுகாப்பு வாகனங்களும் எங்கள் காரை பின்தொடரும்."

இளவரசர் ஹேரி மற்றும் மெகன்

 

"லண்டன் அண்டர்கிரவுண்டில் 40-50 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்தோம். இந்தியர்கள் வசிக்கும் பல இடங்களையும் சுற்றிப் பார்த்தோம். இந்தியாவில் இருந்ததைப் போலவே உணர்ந்தோம். எங்களுக்கு எல்லாவிதமான உணவும் கொடுக்கப்பட்டது, அதில் இந்திய உணவும் இருந்ததை பார்த்து மகிழ்ச்சியடைந்தோம்."

அரச குடும்பத்தினருக்கு மகாராஷ்டிரா மாநிலத்தவர் கொடுத்த பரிசு

புதிதாக திருமணம் செய்து கொண்ட அரச தம்பதியருக்கு டப்பாவாலாக்கள் சிறப்பு பரிசுகளை கொடுத்தார்கள். மணமகனுக்கு புகழ்பெற்ற கோலாபூர் காலணிகள் மற்றும் புணேயில் இருந்து அலங்காரமான தலைப்பாகை பரிசாக கொடுத்தார்கள். மணமகளுக்கு பைத்தான் பட்டுப்புடவை மற்றும் கண்ணாடி வளையல்களை திருமண பரிசாக கொடுத்தார்கள்.

"நாங்கள் இந்தியாவில் இருந்து திருமணத்திற்கு புறப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்த பரிசுகளை அவர்களுக்கு அனுப்பிவிட்டோம். லண்டனுக்குச் சென்றபோது, காட்சிப்படுத்தப்பட்டிருந்த திருமண பரிசுப்பொருட்களில் எங்கள் பரிசுகளும் இடம்பெற்றிருந்ததை பார்த்தபோது, ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சாதாரணமான எங்கள் அன்பளிப்புகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மனதை நெகிழ்த்திவிட்டது" என்கிறார் சோபன்.

"இந்த திருமணத்தில் கலந்து கொண்டபோது, நாங்கள் சொர்க்கத்தில் இருப்பதைபோல் உணர்ந்தோம். இந்திரனின் தேவலோகம் என்பது இப்படித்தான் இருக்குமா? என்று அயர்ந்து போனோம். நாங்கள் படித்தவர்களோ, பணக்காரர்களோ இல்லை, ஆனால் பிரிட்டன் அரச குடும்பத்தின் திருமணத்தில் கலந்துகொண்டபோது எங்களுக்கு கிடைத்த மரியாதையை எங்கள் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாத சுகானுபவம், யாருக்கும் சுலபமாக கிடைக்காத பெரும் பேறு" என்று புன்னகையுடன் சொல்கிறார் சோபன் லக்ஷ்மண் மேரே.

https://www.bbc.com

Link to comment
Share on other sites

‘தப்புகளை ஆராய முற்படக்கூடாது’
 

image_7f0fbe8aba.jpgநண்பர்களிடையே ஏற்படும் சின்னச்சின்னத் தப்புகளை ஆராய முற்படக்கூடாது. இவை சகஜமானவை. இதையே பெரிதுபடுத்தினால் நல்ல நண்பர்களுடனான நட்பு வெட்டப்பட்டுவிடும்; உணர்க. 

எல்லா நேரங்களிலும் எங்கள் விருப்பப்படி, எல்லோரும் நடந்து கொள்வார்களா? இது சாத்தியமற்றது. ஒரே மாதிரியாகவா மனிதர்கள் இயங்குகின்றார்கள்? இல்லையே. 

ஏன் நீங்கள் கூட என்றைக்கும் ஒரே மனநிலையில்தானா பிறருடன் இயங்குகின்றீர்கள்? நண்பர்களிடம் குறைகளைக் கண்டால் அன்புடன் சுட்டிக்காட்டுவதை விடுத்து, புறம்தள்ளி விலகக்கூடாது.இந்தப் பழக்கம் ஏற்பட்டால், நீங்கள் தனித்துத் தவிக்க நேரிடும். 

நல்ல நட்பு வட்டங்களை விரிவாக்கினால், எங்கள் பலம் பெருகும். நட்பால் ஒரு மனிதனுக்குள் பல மனிதர்கள் இணைந்து கொள்கின்றார்கள்.   

Link to comment
Share on other sites

கொலம்பஸ் இறந்த தினம்: மே 20- 1506

 
அ-அ+

இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக்கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. கொலம்பசு ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார்.

 
 
 
 
கொலம்பஸ் இறந்த தினம்: மே 20- 1506
 
இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக்கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.

கொலம்பசு ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார்.

கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்காவைப் பற்றி ஐரோப்பா தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும்

உண்மையாக கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் அல்லர். ஏனென்றால் அங்கே ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார். முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள்,வட ஐரோப்பாவிலிருந்து 11-ம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர். இருந்தாலும், கொலம்பசின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக்குடியேற்றத்திற்கு அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும்.

கொலம்பசு இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் 1451-ல் பிறந்தார். அவருடைய தந்தை டொமினிகோ கொலம்போ, ஒரு கம்பளித்துணி வியாபாரி. தாய் சுசான்னா போன்டனாரோசா. கொலம்பசிற்கு மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி.

1471-இல் கொலம்பசு எசுபெனோலா ஃபினான்சியர்சு நடத்திய ஒரு கப்பலில் சேர்ந்தார். அவர் கியோஸ் கியோசு (ஏஜியன் கடல்-இல் உள்ள ஒரு தீவு) பகுதியைச் சுற்றி வந்த அக்கப்பலில் ஒரு வருடம் வேலை செய்தார். சில நாட்கள் நாடு திரும்பிய பின் மறுபடியும் கியோசுப் பகுதியில் மற்றோர் ஆண்டு வேலை செய்தார். இக்கால கட்டத்தில் ஏகயன் துருக்கியர் வசம் இருந்தது(இவர்கள் கான்ஸ்டான்டினோபில்-ஐ மே 29, 1453-ல் கைப்பற்றியிருந்தனர்).

1476-இல் கொலம்பசு ஒரு வணிகப்பயணத்தை அட்லாண்டிக் கடலின் மீது மேற்கொண்டார். இந்தக் கப்பல் கேப் ஆஃப் செயின்ட் வின்சென்ட் இன் பிரெஞ்சு பிரைவெட்டீயெர்ஸ்-ஆல் தாக்கப்பட்டது. கொலம்பஸ் கப்பல் எரிந்து போய் அவர் ஆறு மைல்கள் நீந்திக் கரை சேர்ந்தார்.

1477-இல் கொலம்பசு லிஸ்பன் நகரில் வாழ்ந்தார். போர்த்துக்கல் கடல் தொடர்பான நடத்தைகளுக்கு ஒரு மையமாக இங்கிலாந்து, அயர்லாந்து, ஐசுலாந்து, மடீயெரா, த அசோர்சு, ஆப்பிரிக்காக்குச் செல்லும் கப்பல்களுடன் விளங்கியது. கொலம்பசின் உடன்பிறந்தார் பார்த்தலோமியோ லிசுபனில் ஒரு வரைபடங்களை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவ்வமயம் இவ்விரு உடன்பிறந்தவர்களும் வரைபடங்கள் வரைபவர் களாகவும், புத்தகங்களைச் சேமிப்பவர்களாகவும் விளங்கினர்.

கொலம்பசு வணிகக் கடற்பயணியாக போர்ச்சுகீசிய கப்பல்களில் மாறினார். 1477-ல் ஐசுலாந்துக்கும், 1478-இல் மடியெராவிற்கும் சர்க்கரை வாங்கவும், மேற்கு ஆப்பிரிக்க கடலோரங்களுக்கு 1482லும் 1485-இலும், போர்ச்சுகீசிய வணிக எல்லையான ஸாவோ ஜார்ஜ் டா மைனா என்ற கினியாக்கரைக்கும் சென்றார்.

கொலம்பசு பிலிப்பா பெரெசிட்டெல்லோ எ மோனிசு என்ற போர்ச்சுகீசியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்(1479-இல்). அவர்களுக்கு தியெகோ என்ற ஒரு மகன் பிறந்தான். பிலிப்பா 1485-இல் காலமானார். கொலம்பசு பின்னர் பீட்ரிஸ் என்ரிகுவெசு என்ற பெண்ணைத் திருமணம் செய்து (1488-இல்) கொண்டார். அவர்களுக்கு பெர்டினான்ட் என்ற மகன் பிறந்தான்.

கொலம்பசு முதலில் தன்னுடைய திட்டத்தை போர்ச்சுக்கல் அரச சபையில் 1485-இல் தெரிவித்தார். ஆனால் அரசரின் நிபுணர்கள் கொலம்பசின் வழி கொலம்பசு நினைப்பதை விடப் பெரியது என நம்பினர். அதனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். கொலம்பசு பின்னர் எசுப்பானியா அரசவையை நாடினார். ஆனால் பல நாட்கள் அலைக்கழிக்கப்பட்ட பின்னர் 1492-இல் அவர்களுடைய ஒப்புதலைப் பெற்றார். எசுப்பானிய அரசரும் அரசியும்( பெர்டினான்ட் ஆப் ஆரகன், காசிட்டைலின் இசபெல்லா) அப்போது தான் கடைசி முசுலிம் கோட்டையான கிரானாடா-வைக் கைப்பற்றியிருந்தனர். அவர்கள் பயணத்திற்கான செலவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர். செலவில் பாதியைத் தனியாரிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு ஏற்கெனவே கொலம்பசு திட்டம் வகுத்திருந்தார். கொலம்பசு அலைகடலின் தளபதி என்று பட்டம் சூட்டப்பட்டு, புதிதாகக் கண்டுபிடிக்கும் தீவுகளுக்கு அவரே ஆளுநர் என்ற உறுதிமொழியும், வருவாயில் பெரும்பங்கை அவருக்குக் கொடுக்கவும் அரசவை ஒப்புக்கொண்டது.

அவ்வாண்டு ஆகத்து 3 அன்று, கொலம்பசு பாலோசில் இருந்து மூன்று கப்பல்களில் சாண்டா மரியா, நின்யா, பின்டா புறப்பட்டார். முதலில் அவர் கேனரித்தீவுகளை அடைந்தார். அங்கே ஒரு மாதம் தங்கினார். பின்னர் பெரும் பயணத்தைத் துவக்கினார். அவர் தன்னுடைய குறிப்பேடுகளில் தான் பயணித்த தூரத்தை விடக்குறைவான தூரத்தையே பதிவு செய்து தன்னுடைய மாலுமிகளை ஏமாற்றினார். இன்றைக்கும் அவர் முதலில் அடைந்த தீவு எது என்பதில் சர்ச்சை இருந்தாலும், அவர் பகாமாஸ்-இல் ஒரு தீவையே அடைந்திருக்க வேண்டும் என்பது உறுதி. அவர் அக்டோபர் 12, 1492-இல் கரையேறினார்.

அவர் அங்கிருந்த அமெரிக்கப் பழங்குடிகளை எதிர்கொண்டார். அவர்கள் டையனோ அல்லது ஆராவாக், மிகவும் அமைதியானவர்களாகவும், நட்புணர்வுடனும் விளங்கினர். அக்டோபர் 14, 1492 குறிப்பில் கொலம்பசு எசுப்பானியாவின் அரசர் பெர்டினான்டு, அரசி இசபெல்லா ஆகியோருக்கு டையாகுட்;நோ பற்றி பின்வருமாறு எழுதினார்.

"அரசர் விரும்பினால், அவர்கள் அனைவரையும் காஸ்டைலுக்குக் கொண்டு வரமுடியும்;அல்லது, அவர்களது தீவிலேயே பிணையாளிகளாக ஆக்கமுடியும்.அவர்களில் ஐம்பது பேரை உங்களுடைய பொறுப்பில் விடுகிறேன். நீங்கள் அவர்களை வைத்து என்ன செய்ய வேண்டுமோ செய்யலாம்." *கொலம்பசு அவருடைய முதல் பயணத்தில், கியூபாவிலும், லா எசுப்பானியோலா விலும் பயணத்திருந்தார் (அக்டோபர் 28-இல்).சாண்டா மரியா தரை தட்டியதால், அதை அவர் கைவிட வேண்டியதாயிற்று. கொலம்பசு லா நாவிடாட் என்ற குடியேற்றத்தை அங்கே அமைத்து அங்கே தன்னுடன் வந்த 39 பேரை விட்டு விட்டார்.

சனவரி 4, 1493-இல் அவர் நாடு திரும்பப் பயணப்பட்டார்.ஆனால், புயல் காரணமாக அவர் போர்ச்சுகல்லில் இறங்க வேண்டியதாயிற்று. அப்போது போர்ச்சுகல்லுக்கும், காஸ்டைலுக்குமான உறவு மிகவும் மோசமாக இருந்த படியால் அங்கே அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். பின்னர் மார்ச் 15-இல் அவர் எசுப்பானியாவை அடைந்தார்.

அங்கே அவர் தான் கொண்டு வந்த தங்கம் மற்றும் கொண்டு வந்த அமெரிக்கப்பழங்குடிகள் ஆகியவற்றை அரசவையில் ஒப்படைத்தார். அங்கே அதுவரை அறியப்படாதிருந்த புகையிலையையும், அன்னாசியையும் அன்னாக்கு ஆகியவைகளைப்பற்றி அங்கே விளக்கினார். அங்கே அவர் ஒரு மாவீரராக வரவேற்கப்பட்டார். அவருடைய கண்டுபிடிப்பு பற்றிய செய்தி உலகெங்கும் பரவியது.

மே 20, 1506-ல் கொலம்பஸ் இறந்தார். அப்போது கூட தான் கண்டுபிடித்தது, ஆசியாவின் கிழக்குக்கரை என்று உறுதியாக நம்பினார். அவருடைய இறப்பின் பின்கூட அவரது பயணம் தொடர்ந்தது.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

99p1_1526465431.jpg

Facebook.com/ Lakshmi Saravanakumar

‘நதிகளை இணைப்பதே என் லச்சியம்.’ - ரஜ்னி ஸார். அவர் இணைக்கும் நதியில் ஜாலியாக நீச்சலடிப்பதே என் லச்சியம்...

99p2_1526465497.jpg

twitter.com/Thaadikkaran

பொய்யைப் பதிலாய்த் தருவாங்கன்னு தெரிஞ்சும், அதிகமாய்க் கேட்கப்பட்ட கேள்வி,

‘ஏன் லேட்டு..?’

99p6_1526465611.jpg

twitter.com/mufthimohamed1

“ஜெயலலிதாவைவிட சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி” - திண்டுக்கல் சீனிவாசன். 

இதை இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது!

99p3_1526465528.jpg

twitter.com/Thaadikkaran

நண்பர்கள் டூர் கேன்சல் ஆகுறதுக்கு ரெண்டே காரணம் தான்.

1. அவன் வந்தா நான் வரல.

2. அவன் வரலேன்னா நானும் வரல.

99p4_1526465544.jpg

twitter.com/NicheBrain

எஸ்.வி.சேகரைத் தமிழகக் காவல்துறை பிடிக்க முடியாததற்குக் காரணம், அவரிடம் புதிய 2000/- நோட்டு எதுவும் இல்லாததுதான் என்பது நம்மில் கித்னா பேருக்குத் தெரியும்?!

twitter.com/kumarfaculty

வடிவேலு நடிக்கவந்தபிறகு தமிழ் வார்த்தைகளின் எண்ணிக்கை கூடிவிட்டன.

99p5_1526465562.jpg

Facebook.com/Abdul Hameed Sheik Mohamed

நாற்பது ஐம்பது வருட அரசியல் அனுபவம் உள்ளவர்களை யெல்லாம் தாண்டி  ராகுல் காந்தி பிரதமராக முயற்சிப்பதை மோடி கடுமையாக விமர்சித்த போது அத்வானி வாய் விட்டு கேவிக் கேவி அழுதாராம்

Facebook.com/ Salman Syed

ஒரு காமெடி பார்த்தீங்களா, சொத்துக் குவிப்பு வழக்கின் அபராதமாக ஜெயலலிதாவின் சொத்துகளில் இருந்து 100 கோடியைப் பறிமுதல் செய்து விரைவில் அரசு கஜானாவில் சேர்க்கப் போகிறார்களாம். பிறகு, அரசு கஜானாவிலிருந்து ஐம்பது கோடியை எடுத்து ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுகிறார்கள்.


99p7_1526465578.jpg

வ்வொரு ஆண்டும் மே 2-வது ஞாயிற்றுகிழமை தமிழ் ட்விட்டர்களின் சந்திப்பு நடக்கும். இந்த வருடம் புதுச்சேரியில் நடந்தது. பல்வேறு ஊர்களில் இருந்தும் தமிழ் ட்விட்டர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்ட இந்த நிகழ்வில் சமூகம், சினிமா, புத்தகவாசிப்பு, நட்பு  எனப்பல விஷயங்களும் பேசப்பட்டன. அடுத்த ஆண்டு தேனியில் சந்திப்போம் என முடிவெடுத்திருக்கிறார்கள்.  #TNMegaTweetup2018

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

"கடல் எங்கள் வீடு, சுறா எங்கள் சாமி!" - ஆச்சர்யப்படுத்தும் ஆஸ்திரேலிய பூர்வகுடிகள்

 
 

"மனன்ங்கொரா கொர்பெங்கா, கொர்பெங்கா மனன்ங்கொரா
  யோரோ யோரோ மனன்ங்கொரா...
  மபியிஞாரா, கொலியின்ஜாரா...
 கொலியின்ஜாரா மபியிஞாரா.... " 

கடல் அலைகளின் சத்தத்திற்குப் பின்னணியில் ஓர் உறுதியான ஆண்குரல் இந்தப் பாட்டைப் பாடுகிறது. இந்த வரிகள் 40 ஆயிரம் வருட வரலாற்றைக் கடத்துகிறது. பல ஆயிரம் தலைமுறைகளாக இந்தக் கதை வாய்மொழியாகவே கடத்தப்பட்டு வருகிறது. இதை அவர்கள் "சுறாவின் கனவு" (The Tiger Shark Dreaming) என்றழைக்கிறார்கள். 

 

சுறா கனவு - ஆஸ்திரேலிய பூர்வகுடி

Courtesy : Neil Hammerschlag
                                                 

 சுறாவின் கனவு. 

"அந்த (Tiger Shark)சுறாவுக்கு அது மிகவும் மோசமான நாளாக இருந்தது. 

மற்ற சுறாக்களும், இன்னும் பல மீன்களும் அதைத் தொந்தரவு செய்துகொண்டேயிருந்தன. அது மிகவும் பொறுமையாக இருந்தது. குறிப்பாக, அங்கிருந்த ஸ்டிங்க்ரே மீன்கள் அதை வீண் வம்பிற்கு இழுத்துக் கொண்டேயிருந்தன. ஒரு கட்டத்தில் பொறுமை கடந்து, அந்த மீன்களோடு சண்டையிட்டு,  அங்கிருந்து வெளியேறியது அந்த சுறா. 

வழியில் சந்தித்த தன் சகாக்களிடம் தன் வருத்தத்தைப் பகிர்ந்தது. தனக்கான, தன் இனத்திற்கான ஒரு வாழிடத்தை நோக்கிப் போவதாக அது சொன்னது. தங்களுக்கான வீட்டை...நிம்மதி கொடுக்கும் ஒரு வீட்டை உருவாக்கப் போவதாக சொல்லி விடைபெற்றது. அப்படி ஒரு வீட்டை உருவாக்கும் கனவோடு அந்த சுறா அன்று, அங்கிருந்து புறப்பட்டது..." 

இது தான் அந்தக் கதை. 

சுறா - ஆஸ்திரேலிய பூர்வகுடிகள்

அப்படி கிளம்பிய அந்த சுறா தான் இந்த வான்டர்லின் தீவுகளை (Vanderlin Island) உருவாக்கியது. இங்கிருக்கும் நன்னீர் ஓடைகளையும், சுனைகளையும், கிணறுகளையும் உருவாக்கியது. தீவு அமைந்திருக்கும் இந்தக் கடல் பரப்பான, கார்பென்டரியா வளைகுடாவை (Gulf of Carpentaria) உருவாக்கியதும் கூட அந்த சுறா தான். அந்தச் சுறாவின் வழி வந்தவர்கள் நாங்கள் என்கிறார்கள் "யன்யுவா" (YanYuwa) பழங்குடியினர். ஆஸ்திரேலிய பூர்வகுடி இனத்தில் ஒன்று யன்யுவா. 

யன்யுவா மக்கள் தங்களை "லி அந்தா விரியரா" (Li - Antha Wirriyara) என்று சொல்லிக் கொள்கிறார்கள். அதாவது, “உப்பு நீரின் மக்கள்” என்பது அதன் அர்த்தம். 

யன்யுவா மக்கள் - ஆஸ்திரேலியா

யன்யுவா மொழி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில் ஆண்களுக்கு என தனி பேச்சு வழக்கும், பெண்களுக்கென தனி பேச்சு வழக்கும் இருக்கிறது. இரண்டு பேச்சு வழக்கிலும் கடலையும், சுறாவையும் குறிக்கும் வகையில் தலா 5 வார்த்தைகள் இருக்கின்றன. இந்த மொழியை,"இயற்கையின் மொழி" என்று வர்ணிக்கிறார்கள் மொழி ஆராய்ச்சியாளர்கள். 

நாற்பதாயிரம் வருடங்களைக் கடந்து வாழ்ந்த இனத்தின் அழிவு 1700களில் தொடங்கியது. அப்போது தான் வெள்ளையர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் காலடி வைக்கத் தொடங்கினார்கள். ஆஸ்திரேலியா... வெள்ளையர்கள் தேசமாக உருமாறத் தொடங்கியது. பல பூர்வகுடிகளின் வேர்களும் அழிக்கப்பட்டன. அந்தச் சுழலில் யன்யுவாவும் தப்பவில்லை.

யன்யுவா மொழியை இன்று தெரிந்தவர்கள் மிகவும் சொற்பானவர்களே. அவர்கள் இனத்தின் மீது ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தியது. அது மொழி, கலாசார, பண்பாடுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இருந்தும் யன்யுவா உயிர் பிழைத்திருந்தது. 

யன்யுவா மக்கள் - ஆஸ்திரேலியா

2008ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், அன்றைய ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் (Kevin Rudd) பாராளுமன்றத்தில் இப்படிச் சொன்னார்...

" பல ஆயிரம் ஆண்டுகளாக இந்தத் தேசத்தின் ஆன்மாவில்  படிந்திருக்கும் கறையை நீக்கி, இந்த மண்ணில் ஆன்மாவின் மனசாட்சிப்படி ஒரு புதிய வரலாறை எழுதிட இங்கு...இன்று கூடியிருக்கிறோம். 

இந்த மண்ணின் பூர்வகுடிகளுக்கு நாங்கள் இழைத்த மன்னிக்க முடியா குற்றங்களுக்கு இன்று நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். திருடப்பட்ட அந்தத் தலைமுறைகளின் வாழ்விற்காக மன்னிப்புக் கேட்கிறேன். பெரும் வலிகளை சுமந்து திரியும் அந்த இனங்களின் தாய்மார்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். 

பெருமை வாய்ந்த மக்களையும், அவர்களின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் இகழ்ந்து, அழித்தமைக்கு அந்த இனத்தின் தாய்மார்களிடமும், தந்தையர்களிடமும், சகோதர சகோதரிகளிடம், குழந்தைகளிடம் பெரும் மன்னிப்புக் கேட்கிறேன். " என்று கிட்டத்தட்ட 4 நிமிடங்களுக்கும் மேலாக மன்னிப்புக் கோரினார் பிரதமர். 

இது உலக வரலாற்றில் எந்த நாட்டிலும் நடந்திராத ஓர் நிகழ்வு. 

பகிரங்க மன்னிப்புக் கேட்டதோடு மட்டுமல்லாமல், மண்ணின் பூர்வகுடிகளின் வாழ்வை மீண்டும் நிர்மாணிக்க பல முயற்சிகளையும் எடுத்து வந்தது, எடுத்து வருகிறது ஆஸ்திரேலிய அரசு. 

ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் - யன்யுவா - சுறா கடவுள்

யன்யுவா இனத்திற்கான நில உரிமைகளைப் பல இடங்களில் வழங்கியது. தங்கள் நாட்டின் மலைகளையும், காடுகளையும், கடலையும் பூர்வகுடிகளால் மட்டும் தான் பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்து அதற்கான பல முன்னெடுப்புகளையும் செய்கிறது. 
யன்யுவா இனத்தைச் சேர்ந்த மூத்தவரான "கிரஹன் ஃப்ரைடே" (Graham Friday) என்பவரை கடல் பாதுகாவலராக நியமித்துள்ளது. தங்கள் தீவைச் சுற்றியிருக்கும் கடல் பகுதியைப் பாதுகாப்பது, கடல் உயிரினங்களின் எண்ணிக்கைகளை கணக்கில் எடுப்பது, தங்களின் மொழியை இளைய தலைமுறைக்கு சொல்லித் தருவது, தங்கள் பழைய வேட்டையாடும் யுத்திகளை சொல்லித் தருவது என இயங்கி வருகிறார் ஃப்ரைடே. 

ஆஸ்திரேலிய பூர்வகுடி - யன்யுவா

கடல் உணவு தான் இவர்களின் பிரதானம். ஆனால், ஒருபோதும் சுறாக்களை இவர்கள் வேட்டையாடுவதில்லை. அதேபோல், தங்கள் தேவைக்கு மீறியும் இவர்கள் வேட்டையாடுவதில்லை. யன்யுவா மொழியை பாதுகாப்பது அதன் கலாசாரத்தைப் பாதுகாப்பது. அது மட்டுமல்லாமல், அது அந்தக் கடலையும், கடல் வாழ் உயிரினங்களையும் பாதுகாப்பதாகும். 

பொதுவாக, சுறாக்கள் இந்தப் பகுதியிலிருந்து வருடத்திற்கு ஒருமுறை பசிபிக் பெருங்கடலை நோக்கி நகரும். ஆனால், சமீபகாலங்களில் சுறாக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துக் கொண்டே வருகிறது. பூமி வெப்பமயமாதலும், பருவநிலை மாற்றமுமே இதற்கான முக்கிய காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். யன்யுவா மக்கள் சுறாக்களை இனி பாதுகாப்பார்கள் என்று அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய அரசாங்கம். அவர்களால் மட்டும் தான் அது முடியும் என்றும் கூறியுள்ளது. 

"எங்கள் ஆன்மா...வாழும் மற்றும் மூச்சுவிடும் அத்தனையோடும் ஒன்றோடு கலந்திருக்கிறது. 
  எங்கள் ஆன்மா... உயிரல்லாத மற்றும் மூச்சுவிடாத அத்தனையோடும் கூட ஒன்றோடு கலந்திருக்கிறது." 

                                                                                                                                 - முட்ரூரூ. (ஆஸ்திரேலிய பூர்வகுடி கவிஞர்) 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

''முதுமை'' - பிபிசியின் சிறந்த புகைப்படங்கள் #BBCTamilPhotoContest

'முதுமை' என்பதை மையக்கருவாகக் கொண்டு பிபிசி நடத்திய 23ஆவது வார புகைப்படப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்.

கபிலன் ராமநாதபுரம்

 

#BBCTamilPhotoContest   #BBCTamilPhotoContest   #BBCTamilPhotoContest   #BBCTamilPhotoContest   #BBCTamilPhotoContest

 

#BBCTamilPhotoContest   ஈஸ்வர் மூர்த்தி திருவல்லிக்கேணி   ஹரி பாலன், தஞ்சை  

 

https://www.bbc.com

Link to comment
Share on other sites

வாட்ஸ்அப் கலக்கல்: எம்.எல்.ஏவுக்கு நீட் தேர்வு

 

 
mem%204
mem%201
mem%202
 
mem%203
mem%2010
mem%2011
mem%205
mem%206
mem%207
mem%209
 
Link to comment
Share on other sites

ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட நாள்: மே 21- 1991

 

ராஜீவ் காந்தி (ஆகஸ்ட் 20, 1944 - மே 21, 1991), பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பிப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

 
 
ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட நாள்: மே 21- 1991
 
ராஜீவ் காந்தி (ஆகஸ்ட் 20, 1944 - மே 21, 1991), பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.

இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பிப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார். இவர் 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.

ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. பின்னர், அவரது உண்மையான பெயர் காயத்ரி என்று தெறியப்பட்டது.

ராஜீவ் காந்தி சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சென்னை வந்து, பின்னர் ஒரு வெள்ளை அம்பாசிடரில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சார இடங்களை பார்வையிட்டார். அப்போது அவரை நேர்காணலிட வண்டியில் ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் அவருடன் பயணித்தார். அவர் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பிரச்சார பேரணியை அடைந்தபோது, அவர் தனது வண்டியை விட்டு வெளியே வந்து மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

வழியில், அவருக்கு பல நலவிரும்பிகள், காங்கிரஸ் கட்சி தொழிலாளர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் மாலை அணுவித்தனர். 22:21 மணிக்கு கொலையாளி தானு, அவரை அணுகி வாழ்த்தினாள். அவள் அவரது கால்களை தொட கீழே குனியும்போது அவளது ஆடையின் அடியே வைத்திருந்த ஆர் டி எக்ஸ் வெடிபொருளை வெடிக்கச் செய்தாள். ராஜீவ் காந்தி மற்றும் 14 மற்றவர்களும் அந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின் புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் கட்டப்பட்டு இன்று சிறுதொழில் நகரமாக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1851 - கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.
 
* 1864 - ரஷ்ய-கோக்கசஸ் போர் முடிவடைந்தது.
 
* 1871 - பிரெஞ்சு அரசுப் படைகள் பாரிஸ் கம்யூனைத் தாக்கினார். ஒரு வார முற்றுகையில் 20,000 கொம்யூன் மக்கள் கொல்லப்பட்டு 38,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
* 1894 - 22 வயது பிரெஞ்சு கொடுங்கோலன் எமிலி ஹென்றி கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.
 
* 1904 - பாரிசில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) ஆரம்பிக்கப்பட்டது.
 
* 1917 - அட்லாண்டாவில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.
 
* 1941 - இரண்டாம் உலகப் போர்: பிரேசிலில் இருந்து 950 மைல் தூரத்தில் ரொபின் மூர் என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜெர்மனியின் யூ-படகினால் மூழ்கடிக்கப்பட்டது.
 
* 1991 - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார்.

* 1991 - எதியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்டு ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
 
* 1994 - ஏமன் மக்களாட்சிக் குடியரசு ஏமன் குடியரசில் இருந்து விலகியது. * 1996 - தான்சானியாவில் பூக்கோவா என்ற என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

* 1998 - 32 ஆண்டுகள் இந்தோனேசியாவை ஆண்ட சுகார்ட்டோ பதவி விலகினார்.
 
* 2003 - வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
 
* 2006 - மட்டக்களப்பு மாவட்டத் துணைத் தளபதி கேணல் ரமணன் நினைவு நாள்.
 
* 2006 - சுதுமலை புவனேசுவரியம்மை கொடியேற்றம்.

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

மரணத்தைத் தடுத்த டாக்டருக்கு `கேலி’ பரிசு! - உண்மைக் கதை #FeelGoodStory

 
 

கதை

ளனம் செய்வது என்பது, ஒரு முட்டாளின் முதலும் கடைசியுமான வாதம்’ - கொஞ்சம் கடுமையாகவே குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்க நாவலாசிரியர் சார்லஸ் சிம்மன்ஸ் (Charles Simmons). அவரின் ஆதங்கத்துக்குக் காரணமும் இருக்கிறது. வரலாற்றில் மேதைகளும் அரிய கண்டுபிடிப்புகளைச் செய்த விஞ்ஞானிகளும் ஆரம்பத்தில் கேலி, கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இன்றைக்கும் அது நடக்கத்தான் செய்கிறது. அங்கீகாரம் கிடைக்காததால், எங்கேயோ முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது ஒரு புது முயற்சி. பாராட்டுக்கு பதிலாக ஏளனம் பரிசாகக் கிடைத்ததால், நசுக்கப்படுகிறது யாரோ ஒருவரின் கனவு. இருக்கும்போது யாராலும் சீண்டப்படாத, ஏளனத்துக்கு ஆளான ஒரு மேதைக்கு, இறந்த பிறகு சிலை வைத்து கௌரவிக்கும் பழக்கம் உலகம் முழுக்க இருக்கத்தான் செய்கிறது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம், ஹங்கேரிய மருத்துவரும் விஞ்ஞானியுமான இக்னேஸ் செம்மல்வீய்ஸ் (Ignaz Semmelweis). மருத்துவமனைகளில் சுத்தமும் சுகாதாரமும் கடைப்பிடிக்கப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்திய முதல் குரல் அவருடையது. இக்னேஸ் செம்மல்வீய்ஸின் வாழ்க்கைக் கதை மருத்துவர்களுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே பாடம்!

 

ஹங்கேரி, புதாபெஸ்ட் (Budapest)-ன் தபான் (Tabán) பகுதியில், 1818-ம் ஆண்டு பிறந்தார் செம்மல்வீய்ஸ். அப்பா மளிகைக்கடை வைத்திருந்தார். செல்வத்துக்குக் குறைச்சலில்லை. வீட்டில் மொத்தம் 10 குழந்தைகள். ஐந்தாவதாகப் பிறந்தவர் இக்னேஸ். முதலில் வியன்னா பல்கலைக்கழகத்தில் சட்டம் படிப்பதற்காகச் சேர்ந்தார். என்ன காரணமோ, ஒரே வருடத்தில் மருத்துவப் படிப்புக்கு மாறினார். 1844-ம் ஆண்டு தன்னுடைய மருத்துவப் படிப்பை முடித்தார். மகப்பேறு மருத்துவத்தில் அவருக்கு ஈடுபாடு இருந்தது. ஆஸ்திரியாவிலிருந்த, வியன்னா பொது மருத்துவமனையில் 1846-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தார்.

செம்மல்வீய்ஸ்

அந்த மருத்துவமனையில்தான் செம்மல்வீய்ஸ், காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த சில மருத்துவப் பழக்கங்களைத் தகர்த்தெறிந்தார். அவை மருத்துவ வரலாற்றில் முக்கியமான விஷயங்களாக இன்றைக்கும் கருதப்படுகின்றன, கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனாலும், அந்த நேரத்தில் அவர் கேலிக்கு ஆளானார்; அவருடைய யோசனைகளுக்காக சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டார்.

அது 1847-ம் ஆண்டு. வியன்னா பொது மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு விஷயத்தைக் கண்டு அதிர்ந்துபோனார் செம்மல்வீய்ஸ். பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட தாய்மார்கள் கும்பல் கும்பலாக இறந்துபோனார்கள். அந்த மர்மமான நோய்க்கு `ப்யூர்பெரல் காய்ச்சல்’ (Puerperal fever) அல்லது `சைல்டுபெட் காய்ச்சல்’ (Childbed Fever) என்று பெயர் சொன்னார்கள். ஒரு பெண் அப்போதுதான் குழந்தை பெற்றிருப்பார். முதல் குழந்தையைப் பெற்றெடுத்த மகிழ்ச்சியில் அந்தப் பெண்ணும் கணவரும் குடும்பமும் திளைத்துக்கொண்டிருப்பார்கள். அடுத்த இரண்டு மூன்று மணி நேரத்துக்குள்ளாக அந்தப் பெண்ணுக்குக் காய்ச்சல் வரும். சில மணி நேரங்களில் இறந்துபோவார். `பிறக்கும்போதே அம்மாவைப் பலிவாங்கியது’ என்கிற பட்டத்தோடு அப்போதுதான் பிறந்த குழந்தை கதறிக்கொண்டிருக்கும். இப்படி ஒன்று, இரண்டல்ல... இரண்டு வருடங்களில் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் இறந்துபோனதைத் தன் கண்ணால் பார்த்தார் இக்னேஸ் செம்மல்வீய்ஸ்.

பிரசவித்த பெண்கள் இறப்போடு, இன்னொரு மரணமும் அவரை அதிரவைத்தது. அவருடைய நெருங்கிய நண்பர் அவர்... டாக்டர். இருவரும் இணைந்துதான் ஓர் அறுவைசிகிச்சையைச் செய்தார்கள். ஆபரேஷனின்போது ஒரு சிறு கத்தி, நண்பரின் கையில்பட்டு ஒரு கீறலை ஏற்படுத்திவிட்டது. அடுத்தநாளே அந்த நண்பருக்கு காய்ச்சல் வந்து இறந்துவிட்டார். காரணம், அவர் கையில் ஏற்பட்ட சின்னஞ்சிறு கீறல்தான் என்றார்கள். இடிந்துபோனார் செம்மல்வீய்ஸ். `கையில் பட்ட சிறு காயம் உயிரை பலி வாங்குமா என்ன? இந்த மரணங்களுக்கு எப்படியாவது முடிவுகட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கு முதலில் காரணத்தைக் கண்டுபிடித்தாக வேண்டும்’ என்று தோன்றியது அவருக்கு.

உபகரணங்கள்

ஒருநாள் மருத்துவமனை காரிடாரில், ஏதோ யோசனையில் நடந்துகொண்டிருந்தார். ஓர் அறையிலிருந்து வந்த இன்னொரு டாக்டர், இவருக்கு வணக்கம் சொன்னார். இவரின் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு, எதிரே இருந்த இன்னோர் அறைக்குப் போனார். அவர் போனதும் ஏதோ நினைவு வந்தவராக, அந்த டாக்டர் வெளியே வந்த அறையைப் பார்த்தார். அது, `பிணவறை.’ அவர் நுழைந்த அறையைப் பார்த்தார்... அது, பிரசவ அறை. இவருக்குச் சட்டென்று ஏதோ உறைத்தது. `பிணவறைக்கு அந்த டாக்டர் எதற்காகப் போயிருப்பார்?’ அவரே பதில் சொல்லிக்கொண்டார். `பிரேத பரிசோதனை (Autopsy) செய்வதற்காகத்தான் இருக்கும். சரி... பிரசவ அறைக்குள் நுழைவதற்கு முன்னர் அவர் கைகழுவியிருப்பாரா? நிச்சயம் அதற்கு வாய்ப்பில்லை. சுத்தமாக இல்லாத கைகளால் பிரசவம் பார்த்தால் என்ன ஆகும்? பிரவித்த பெண்ணுக்கு நோய்த்தொற்று ஏற்படும். பிறகு..? காய்ச்சல் வரும். பிறகு..? பிறகென்ன... மரணம்தான்.’ ஆடிப்போனார் செம்மல்வீய்ஸ். இது தொடர்பாக மேலும் சில ஆய்வுகளைச் செய்தார்.

அதில் ஓர் உண்மை தெரியவந்தது. பிரசவ அறையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில், டாக்டரின் உதவி தேவைப்படாத பெண்களுக்கு சைல்டுபெட் காய்ச்சல் அதிகம் ஏற்படவில்லை. ஆனால், மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்த பெண்கள் மிக அதிகமாக சைல்டுபெட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள். பிரேத பரிசோதனை உள்பட, வேறு அறுவைசிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள்தான் பிரசவ வார்டிலும் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் பார்த்தார் செம்மல்வீய்ஸ். அந்த மருத்துவ உபகரணங்கள் முறையாகக் கழுவாமல் பயன்படுத்தப்பட்டதும் காய்ச்சல் வரக் காரணம் என்பதைத் தெரிந்துகொண்டார். இதைத் தடுத்தாலே பாதி மரணங்களைத் தவிர்த்துவிடலாம் என்கிற முடிவுக்கு வந்தார்.

கை கழுவுதல்

நோய்த்தொற்று ஏற்படாமலிருக்க சிலவழிமுறைகளைக் கண்டுபிடித்தார். குளோரின் கெமிகல் கலந்த நீரில் எல்லா மருத்துவர்களும் சுத்தமாகக் கைகளைக் கழுவிவிட்டுத்தான் பிரசவ அறைக்குள் நுழைய வேண்டும். பிரசவ வார்டுக்குள் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களை சுத்தமாகக் கழுவிவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும். இந்த எளிய சுகாதார வழிமுறைகளைத்தான் கடைப்பிடிக்கச் சொன்னார். அவ்வளவுதான்... பிரசவ வார்டில் பெண்கள் காய்ச்சலுக்கு பலியாவது மளமளவெனக் குறைந்தது.

ஆனால், இந்தப் புதிய விதிகள், வழிமுறைகள் பல டாக்டர்களை எரிச்சல்படுத்தின. `எங்க கை சுத்தமா இல்லையா என்ன... நாங்க ஏன் கை கழுவணும். எங்களை செம்மல்வீய்ஸ் அசிங்கப்படுத்துறார். மருத்துவ உபகரணங்களை கழுவிட்டு யூஸ் பண்ணினா சாவு குறைஞ்சுடுமா... பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு?’ என்றெல்லாம் பேசினார்கள். கைகழுவச் சொன்னது பல டாக்டர்களின் ஈகோவை பாதிப்பதாக இருந்தது. பலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் கேலி பேசினார்கள். மருத்துவ நிர்வாகத்திடம் அவரைக் குறித்துப் புகார் கொடுத்தார்கள். ஒருகட்டத்தில், நிர்வாகமே செம்மல்வீய்ஸை ராஜினாமாக் கடிதம் கொடுக்கச் சொல்லி கேட்டுக்கொண்டது. அவரும் ராஜினாமா செய்தார்.

ஆனாலும் அவர் மனம் தளர்வில்லை. தன் கண்டுபிடிப்புகளை ஒரு புத்தகமாக (Etiology, Concept and Prophylaxis of Childbed Fever) எழுதி, பல நாட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தார். அவற்றில் பல பிரிக்கப்படாமலேயே திரும்பி வந்தன. மருத்துவமனைகளை விட்டுவிட்டு, மக்களிடமே போய் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். அவரை யாரும் மதிக்கவேயில்லை. அவரிடமிருந்து விலகி ஓடினார்கள். விமர்சனம், கிண்டல், கேலி... ஒரு கட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார் செம்மல்வீய்ஸ்.

தாய்மார்கள் காப்பாற்றப்பட்ட கதை

இன்றைக்கு மருத்துவமனைகளில் ஊசி முதற்கொண்டு பல மருத்துவ உபகரணங்கள் சுத்தமாகக் கழுவப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. கையுறைகளை மருத்துவர்கள் அணிகிறார்கள். மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் சுத்தமாகக் கைகளைக் கழுவுகிறார்கள். இதற்கெல்லாம் காரணமாக இருந்தவர் இக்னேஸ் செம்மல்வீய்ஸ்.

மனநலக் காப்பகத்தில், 1865-ம் ஆண்டு செம்மல்வீய்ஸ் இறந்துபோனார். இதில் ஒரு முரண்சுவை என்னவென்றால், `எந்தக் காய்ச்சலை விரட்ட அவர் பெருமுயற்சி எடுத்தாரோ, அதேபோல ஒரு காய்ச்சலால்தான் அவர் இறந்துபோனார்’ என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.