Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

1983 – ஹிட்லரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் “ஹிட்லரின் நாட்குறிப்புகள்” நூலின் முதல் பகுதியை ஜெர்மனியின் “ஸ்டேர்ன்” இதழ் வெளியிட்டது.

வரலாற்றில் இன்று….

ஏப்ரல் 25

நிகழ்வுகள்

1607 – எண்பதாண்டுப் போர்: கிப்ரால்ட்டரில் டச்சுக் கடற்படையினர் ஸ்பானிய கடற்படைக் கப்பலைத் தாக்கி அழித்தனர்.
1829 – மேற்கு அவுஸ்திரேலியாவில் சார்ல்ஸ் ஃபிரெமாண்டில் சலேஞ்சர் என்ற கப்பலில் வந்து தரையிறங்கி சுவான் ஆற்று குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வாஷிங்டன், டிசியை அடைந்தனர்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் டேவிட் பராகுட் தலைமையில் லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரை கூட்டமைப்பினரிடம் இருந்து கைப்பற்றினர்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினர் பெரும் வெற்றி பெற்றனர்.
1898 – ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயின் மீது போரை அறிவித்தது.
1915 – முதலாம் உலகப் போர்: ஆஸ்திரேலியா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் பிரெஞ்சுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியை முற்றுகையிட்டனர்.
1916 – அயர்லாந்தில் இராணுவச் சட்டத்தை ஐக்கிய இராச்சியம் பிறப்பித்தது.
1916 – அன்சாக் நாள் முதற் தடவையாக நினைவு கூரப்பட்டது.
1945 – நாசி ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது.
1961 – ரொபர்ட் நொய்ஸ் ஒருங்கிணைந்த மின்சுற்றுக்கான (integrated circuit) காப்புரிமத்தைப் பெற்றார்.
1974 – போர்த்துக்கலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.
1982 – காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலியப் படைகள் முழுவதுமாக சினாய் தீபகற்பத்தில் இருந்து வெளியேறியது.
1983 – பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கிரகத்தின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.yuyu-500x303.jpg
1983 – ஹிட்லரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் “ஹிட்லரின் நாட்குறிப்புகள்” நூலின் முதல் பகுதியை ஜெர்மனியின் “ஸ்டேர்ன்” இதழ் வெளியிட்டது.
1986 – சுவாசிலாந்தின் மன்னனாக மூன்றாம் முசுவாட்டி முடிசூடினார்.
1988 – இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு இஸ்ரேல் மரண தண்டனை விதித்தது.
2005 – இத்தாலிய ஆக்கிரமிப்பாளர்களால் 1937 இல் களவாடப்பட்ட 1700-ஆண்டுகள் பழமையான சதுர நினைவுத்தூபியின் கடைசித் துண்டு எதியோப்பியாவுக்கு கொண்டுவரப்பட்டது.
2005 – ஜப்பானில் தொடருந்து விபத்தில் 107 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் தற்கொலைதாரியினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்து 5 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1599 – ஒலிவர் குரொம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர், அரசியல்வாதி (இ. 1658)
1874 – மார்க்கோனி, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இத்தாலியர் (இ. 1937)
1906 – புதுமைப்பித்தன், தமிழக எழுத்தாளர் (இ. 1948)
1940 – அல் பசீனோ, அமெரிக்கத் திரைப்பட நடிகர்
1949 – டொமினிக் ஸ்ட்ராஸ்-கான், பிரெஞ்சு பொருளியலாளர், அரசியல்வாதி

இறப்புகள்

1744 – ஆன்டர்சு செல்சியசு, சுவீடிட வானியலாளர் (பி. 1701)
1989 – வ. சுப. மாணிக்கம், தமிழறிஞர் (பி. 1917
2005 – சுவாமி இரங்கநாதானந்தர், இந்திய மதகுரு (பி. 1908)
2007 – ஆர்தர் மில்ட்டன், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1928)

சிறப்பு நாள்

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து – ஆன்சாக் நாள்
போர்த்துக்கல் – விடுதலை நாள் (1974)
இத்தாலி – நாசிகளிடம் இருது விடுதலை (1945)

 

 

http://metronews.lk

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

கன்னிமாரா நூலகத்தின் கலையழகு மிக்க பழைய கட்டடம் சொல்லும் கதைகள்

இந்தியாவின் பழமையான நூலகங்களில் ஒன்றான கன்னிமாரா பொது நூலகத்தின் கலையழகு மிகுந்த பழைய கட்டடம் உலகப் புத்தக தினத்தை ஒட்டி பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

கன்னிமாரா பொது நூல் நிலைய கலையழகு மிகு பழைய கட்டடம் பொதுமக்களுக்கு திறப்பு Image caption1890ம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்றுதான் இந்த நூலகத்தில் பொதுமக்களுக்கான அனுமதி வழங்கப்பட்டது.

இந்தோ - சாரசெனிக் பாணியில் கட்டப்பட்ட கன்னிமாரா நூலகத்தின் பழைய கட்டடம், சென்னையின் அழகு மிகுந்த கட்டடங்களில் ஒன்று.

சென்னையில் 19ஆம் நூற்றாண்டிலேயே ‘மெட்ராஸ் லிட்டெரரி சொசைட்டி‘ போன்ற சில நூலகங்கள் இயங்கிவந்தாலும், பொதுமக்களுக்கென பிரத்யேகமாக ஓர் இலவச நூலகத்தை உருவாக்க வேண்டுமென விரும்பினார் சென்னையின் அப்போதைய ஆளுநரான பாபி ராபர்ட் பூர்க் கன்னிமரா (1886-1890).

இதையடுத்து அந்த நூலக கட்டடத்திற்கான அடிக்கல் 1890 மார்ச் 22ஆம் தேதியன்று நாட்டப்பட்டது. திட்டமிட்ட காலத்தில் கட்டடப் பணிகள் முடிக்கப்பட்டு, 1896ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று திறப்புவிழாவும் நடத்தப்பட்டது.

கன்னிமாரா பொது நூல் நிலைய கலையழகு மிகு பழைய கட்டடம் பொதுமக்களுக்கு திறப்பு Image captionகட்டடத்தின் ஜன்னல்கள், வண்ணக் கண்ணாடிகளால் ஆன சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், அதே ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்றுதான் பொதுமக்களுக்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்த நூலகத்திற்கு அடிக்கல் நாட்டிய கன்னிமாரா பிரபுவின் பெயர் நூலகத்திற்குச் சூட்டப்பட்டது.

அந்த காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் தலைமை கட்டடக் கலை நிபுணராக இருந்த எச். இர்வினால் வடிவமைக்கப்பட்டு, அப்போது சென்னையின் பிரபலமான ஒப்பந்ததாரராக இருந்த நம்பெருமாள் செட்டியால் இந்தக் கட்டடம் கட்டப்பட்டது.

அந்த காலகட்டத்திலேயே இந்தக் கட்டடத்தைக் கட்டி முடிக்க ஐந்து லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவானது. இங்கு உள்ள மர அலமாரிகளும் மரத்தலான கட்டுமானப் பொருட்களும் விலை உயர்ந்த தேக்கு மரத்தாலும், நூக்க மரத்தாலும் செய்யப்பட்டன.

கன்னிமாரா பொது நூல் நிலைய கலையழகு மிகு பழைய கட்டடம் பொதுமக்களுக்கு திறப்பு Image captionஇந்தோ - சாரசெனிக் பாணியில் கட்டப்பட்ட கன்னிமாரா நூலகத்தின் பழைய கட்டடம், சென்னையின் அழகு மிகுந்த கட்டடங்களில் ஒன்று.

அரைவட்ட வடிவத்தில் முகப்பும் நீண்ட புத்தக அறைகளையும் கொண்ட இந்தக் கட்டடத்திற்கான சலவைக் கற்கள் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்திலிருந்து, படகுகளில் பக்கிங்கம் கால்வாய் வழியாக கொண்டுவரப்பட்டன.

இந்த பழைய கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் நாற்காலி போன்ற அறைகலன்களில் யாழி, குரங்கு போன்ற விலங்குகளின் உருவங்கள் மரச் சிற்பங்களாக இடம் பெற்றிருக்கின்றன.

இந்த நூலகத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்ற ஊழியரான தமோதரன் இதற்கு ஒரு சுவாரஸ்யமான கதையைச் சொல்கிறார்.

கன்னிமாரா பொது நூல் நிலைய கலையழகு மிகு பழைய கட்டடம் பொதுமக்களுக்கு திறப்பு Image captionபெரும் கலையழகுடன் கூடிய வடிவங்கள் இந்த கட்டத்தின் விதானங்களில் இடம்பெற்றிருக்கின்றன

அதாவது, தலைமை கட்டட நிபுணரான எச். இர்வினும் தி ஜங்கிள் புக் புத்தகத்தை எழுதிய ரட்யார்ட் கிப்ளிங்கும் நண்பர்கள். ரட்யார்ட் கிப்ளிங்கின் தாக்கத்தினாலேயே இங்கு பல விலங்குகளின் உருவங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்கிறார் அவர்.

அதேபோல, லண்டனில் உள்ள பக்கிங்கம் அரண்மனைக்கான நாற்காலிகள், மேசைகள் போன்றவை 1890களில் சென்னையிலிருந்து செய்து அனுப்பப்பட்டதாகவும் அவை சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றப்பட்டபோது, மீண்டும் சென்னைக்கே திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவற்றில் 121 நாற்காலிகள் கன்னிமாரா நூலகத்திற்கு வழங்கப்பட்டதாகவும் கூறுகிறார் தாமோதரன். அந்த நாற்காலிகள் தற்போதும் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்த நூலகத்தின் மிகச் சிறப்பான அம்சம், இவற்றின் விதானங்கள். பெரும் கலையழகுடன் கூடிய வடிவங்கள் இந்த விதானங்களில் இடம்பெற்றிருக்கின்றன. இது தவிர, கட்டடத்தின் ஜன்னல்கள், சித்திரங்கள் கொண்ட வண்ணக் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.

கன்னிமாரா பொது நூல் நிலைய கலையழகு மிகு பழைய கட்டடம் பொதுமக்களுக்கு திறப்பு Image captionகலையழகு மிகு பழைய கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் யாழி, குரங்கு என பல மிருகங்களின் உருவங்களைப் பார்க்க முடிகிறது.

1948ல் இயற்றப்பட்ட மெட்ராஸ் பொது நூலகச் சட்டத்திற்குப் பிறகு, புத்தகங்களின் எண்ணிக்கையும் வாசகர்களின் எண்ணிக்கையும் இங்கு வெகுவாக அதிகரித்தது.

இதனால், இந்த கட்டடத்தில் தேக்கு மரத்தாலான ஒரு தளம் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் 1952ல் அமைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் இங்கு இருந்தன.

ஆனால், பழமையும் அழகும் நிறைந்த இந்தக் கட்டடம் தொடர் பயன்பாட்டால் சேதமடைந்து வந்ததையடுத்து, 1973ல் இந்தப் பழைய கட்டடத்திற்கு முன்பாக, புதிதாக ஒரு பெரிய கட்டடம் கட்டப்பட்டது. இப்போது இதன் வழியாகவே பழைய கட்டடத்தை அடைய முடியும்.

சிறப்பு தருணங்களில் இந்த நூலகத்தில் உள்ள பழைய, அரிய புத்தகங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகின்றன Image captionசிறப்பு தருணங்களில் இந்த நூலகத்தில் உள்ள பழைய, அரிய புத்தகங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகின்றன

சேதமடைந்த பழைய கட்டம் மூடப்பட்டு, 2003ல் புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்பட்டன. 2009ல் இந்தப் பணிகள் முடிவடைந்தாலும், இதற்குள் பொதுமக்கள் இன்னும் அனுமதிக்கப்படுவதில்லை. உலகப் புத்தக தினம் போன்ற சிறப்பு தினங்களில் மட்டும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த சிறப்புத் தருணங்களில் இந்த நூலகத்தில் உள்ள பழைய, அரிய புத்தகங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகின்றன. அழகிய சித்திர எழுத்துக்களால் கையால் எழுதப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் பிரதி ஒன்றும் இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் அரசியல்சாசன அவையில் இடம்பெற்றவர்களின் கையெழுத்துகளையும் பொதுமக்கள் பார்க்க முடியும்.

கன்னிமாரா பொது நூல் நிலைய கலையழகு மிகு பழைய கட்டடம் பொதுமக்களுக்கு திறப்பு Image caption1890களில் இந்தக் கட்டடத்தைக் கட்டி முடிக்க ஐந்து லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவானது.

1955ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ‘டெலிவரி ஆஃப் புக்‘ சட்டத்தின்படி இந்தியாவில் பதிப்பிக்கப்படும் எல்லாப் புத்தகங்களின் பிரதி ஒன்றும் இந்த நூலகத்திற்கு அனுப்பப்படுகிறது.

இப்போது கன்னிமாரா நூலகத்தில் சுமார் எட்டு லட்சத்து 22 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அரிய புத்தகங்களாகும். 1553ல் பதிப்பிக்கப்பட்ட Omnes Quae Extant என்ற புத்தகமே இருப்பதிலேயே பழைய புத்தகம்.

https://www.bbc.com

Link to comment
Share on other sites

 

தெரு உணவுகளின் சொர்க்கமாக விளங்கும் வியட்நாம் நகரம்

வியட்நாம் மக்களிடம் உடல் பருமன் பிரச்சனை இல்லாமல் இருப்பதற்கு, அந்நாட்டு மக்கள் உட்கொள்ளும் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Link to comment
Share on other sites

‘அன்பைச் சொரிபவர் கோபம் தார்மீகமானது’
 

image_81a4346596.jpgநாட்டை ஆண்டு வருபவர், தனது கோபத்தைக் கட்டுப்படுத்தாது விட்டால், அவரது கேடயம் பிடுங்கி எறியப்படும்.

பலரது வாழ்க்கை தேவையற்ற கோபங்களால் கேவலமாகி விடுவது பரிதாபம். ‘எனக்கே எல்லாம் தெரியும்; அடுத்தவன் என்ன சொல்வது’ எனும் மேலாதிக்க சிந்தனை, தன்னைத் தானே உணரவிடாமல்ச் செய்துவிடுகின்றது.

சமூகத் தவறுகளைக் கண்டும், வாய்மூடியாக இருப்பவர்கள், தனக்கு மட்டும் சிறிய துன்பம் வந்தால் போதும், சீறி எழுந்து வாய் வீரம் பேசுவதால், பிறர் வெறுப்பைத்தான் சம்பாதிப்பார்கள்.

சமூக அநீதிகளை எதிர்த்துப் போராடுபவர்களின் சினம் நியாயமானது. வன்முறைகளைக் கண்டு கொள்ளாதவன், சமூக விரோதிகளின் பங்காளியாகிறான். நீதியை உயரத்துச் சொல்பவனைத்தான் குழப்பவாதி எனச் சாயம் பூசுகின்றார்கள். நல்லதைச் சொல்ல வேண்டும் என்ற ஆதங்கம், ஆத்திரத்தில் உருவாகுவது இல்லை.

அன்பைச் சொரிபவர் கோபம் தார்மீகமானது. உண்மையின் திறனை, அவர்களின் பேச்சு உணர்த்தும். கோபங்கள் எங்களை ஆள இடமளித்து விடக்கூடாது.

Link to comment
Share on other sites

கணித மேதை ராமானுசன் மறைந்த தினம்: ஏப்ரல் 26, 1920

 

கணித மேதையான ராமானுசன் சீனிவாசன்-கமலத்தம்மாள் ஆகிய தம்பதியருக்கு 1887-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவருக்கு பிறகு இவரது பெற்றோருக்கு மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்து போயினர். இராமானுசனின் தந்தையாரும் தந்தை வழி பாட்டனாரும் துணிக்கடைகளில் எழுத்தராக பணியாற்றி வந்தனர். தாய் வழி பாட்டனாரும் ஈரோட்டு முனிசிப் அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே அவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார். இராமானுசன் தாய் வழி தாத்தா வேலை பார்த்த கடை 1891-ஆம் ஆண்டு

 
கணித மேதை ராமானுசன் மறைந்த தினம்: ஏப்ரல் 26, 1920
 
கணித மேதையான ராமானுசம் சீனிவாசன்-கமலத்தம்மாள் ஆகிய தம்பதியருக்கு 1887-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவருக்கு பிறகு இவரது பெற்றோருக்கு மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்து போயினர்.

இராமானுசனின் தந்தையாரும் தந்தை வழி பாட்டனாரும் துணிக்கடைகளில் எழுத்தராக பணியாற்றி வந்தனர். தாய் வழி பாட்டனாரும் ஈரோட்டு முனிசிப் அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே அவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார்.

இராமானுசன் தாய் வழி தாத்தா வேலை பார்த்த கடை 1891-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்துக்கு மாறியதால் இவரது குடும்பமும் காஞ்சிபுரம் வந்தது. 1892-ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் ராமானுசன் தொடக்க கல்வியை தொடங்கினார்.

1894-ஆம் ஆண்டு அவர் தெலுங்கு வழி கல்விக்கு மாற்றப்பட்ட ஒரு சில நாட்களிலேயே அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது. அங்கு கல்யாணம் தொடக்க கல்வியில் சேர்ந்து கல்வி கற்றார்.

1897 ஆம் ஆண்டில் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று தொடக்கக் கல்வியை நிறைவு செய்தார். 1897-ஆம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவ்வாண்டிலிருந்து முறையாகக் கணிதம் கற்கத் தொடங்கினார்.

சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.

1920-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மரணமடைந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் ‘The Ramanujan Journal’ என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

 

 

 

தான்சானியா தேசிய நாள்: ஏப்ரல் 26, 1964

 

தங்கனீக்கா சன்சிபாருடன் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் இணைந்து தங்கனீக்கா, சன்சிபார் ஐக்கியக் குடியரசு என முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதே ஆண்டில் தன்சானியா எனப் பெயர் மாற்றம் பெற்றது.

 
 
தான்சானியா தேசிய நாள்: ஏப்ரல் 26, 1964
 
தன்சானியா கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யா, உகாண்டா ஆகியனவும், மேற்கே ருவாண்டா, புருண்டி, கொங்கோ மக்களாட்சிக் குடியரசும், தெற்கே சாம்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகியனவும் அமைந்துள்ளன. இந்தியப் பெருங்கடல் இதன் கிழக்கே உள்ளது.

இதன் முக்கிய பகுதியான தங்கனிக்கா, மற்றும் கிழக்குக் கரையோரத்தில் உள்ள சன்சிபார் தீவுகளின் பெயர்களை இணைத்து இந்நாட்டுக்கு தன்சானியா எனப் பெயர் வைக்கப்பட்டது. தங்கனீக்கா சன்சிபாருடன் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் இணைந்து தங்கனீக்கா, சன்சிபார் ஐக்கியக் குடியரசு என முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதே ஆண்டில் தன்சானியா எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1996 இல் அரசு அலுவலகங்கள் அனைத்தும் தாருஸ்ஸலாமில் இருந்து டொடோமாவுக்கு மாற்றப்பட்டு அது அரசியல் தலைநகராக்கப்பட்டது. தாருஸ்ஸலாம் வணிகத் தலைநகராக உள்ளது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

* 1564 - ஆங்கில எழுத்தாளர் வில்லியம் ஜேக்ஸ்பியர் பிறந்த தினம்

* 1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜோன் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றனர்.

* 1962 - நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.

* 1981 - மட்டக்களப்பில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

* 1986 - உக்ரைனில் செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.

* 1994 - ஜப்பானில் சீன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 264 பேர் கொல்லப்பட்டனர்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

மன உறுதியிருந்தால், எதிலும் வெற்றி பெறலாம்! - உண்மைக்கதை #MotivationStory

 
 

கதை

`ர் அற்புதமான கருவிலிருந்துதான் ஒரு சிறந்த புத்தகம் உருவாகிறது. அதேபோல் மனிதனுக்கு மன உறுதி இருந்தால்தான் அவனுக்கு சிறந்த வாழ்க்கை அமையும்’ - அமெரிக்க எழுத்தாளர் லூயி லேமுர் (Louis L'Amour) உதிர்த்த பொன்மொழி இது. நம் வேதங்கள் தொடங்கி ஞானிகள் வரை மனிதனுக்குத் தேவையென வலியுறுத்துவது மனோதிடம். திடமான சிந்தனையுள்ள மனிதனால் என்ன செய்ய முடியும்? எதையும் செய்ய முடியும்! ஒருவரின் லட்சியத்தை, கனவை நிஜமாக்குவதற்கு முதல் தேவை மனஉறுதி. இது இல்லையென்றால் எந்தச் சாதனையும் சாத்தியமில்லை. மன உறுதியோடு, முயற்சி, அர்ப்பணிப்போடுகூடிய உழைப்பு, ஒழுங்கு எல்லாம் சேர்ந்துகொள்ளும்போது கனவு நனவாகிறது; ஒருவர் தான் அடைய நினைக்கும் இலக்கை அடைந்துவிடுகிறார். ஆக, எதுவும் சாத்தியம், சாத்தியமில்லை என்பது மனிதனின் மன உறுதியில்தான் அடங்கியிருக்கிறது. மன உறுதியிலிருந்து எந்த நிலையிலும் பின்வாங்காமலிருப்பதுதான் உண்மையான ஞானம். இந்த உண்மையை விளக்குகிறது இந்தக் கதை.

அது 1968-ம் ஆண்டு. கிழக்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் தான்சானியாவிலிருந்து (Tanzania) நான்கு தடகள வீரர்கள் மெக்ஸிகோவில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள கிளம்பிப் போனார்கள். எப்படியாவது ஒரே ஒரு பதக்கத்தையாவது வென்றுவிட வேண்டும் என்பது அவர்களின் லட்சியம். ஆனால், அவர்களில் ஒருவர்கூட வெள்ளி... ஏன் வெண்கலப் பதக்கம்கூட வாங்கவில்லை. ஆனால், அவற்றைவிட மிகப் பெரிய மரியாதையை உலக அளவில் தன் நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்தார் அவர்களில் ஒருவர்... ஜான் ஸ்டீபன் அக்வாரி (John Stephen Akhwari). அன்றைய தினம் அவர் போட்டியில் கலந்துகொண்ட ஒரே காரணத்துக்காக அக்வார் எண்ணற்ற தடகள வீரர்கள், அவருடைய நாட்டு மக்கள், ரசிகர்கள் மனதில் அழிக்க முடியாத சித்திரமாக உயர்ந்து நின்றுவிட்டார். அப்படி என்னதான் நடந்தது?

மாரத்தான்

அன்று, ஒலிம்பிக் போட்டிகளின் கடைசி நாள் நிகழ்வு அது. மாரத்தான் பந்தயம். ஓடியும் நடந்தும் இலக்கை அடையும் போட்டி. அதில் கலந்துகொண்டிருந்தார் அக்வாரி. தான்சானியாவின் கிலி மஞ்சாரோ (Kili Manjaro) மலைப் பகுதியில் நீண்ட தூரம் ஓடிய அனுபவமுள்ளவர்தான். ஆனால், மெக்ஸிகோவின் பருவநிலை அவருக்கு ஒத்துக்கொள்ளாததாக இருந்தது. அந்த நாட்டுச்சூழலுக்கு ஏற்ப ஓடுவதற்கு அவர் பயிற்சி பெற்றிருக்கவில்லை. கடல் மட்டத்திலிருந்து 2,300 மீட்டர் உயரமான இடம். பல உலக சாதனைகளைப் படைத்த ஓட்டப் பந்தய வீரர்களே சர்வ சாதாரணமாக இடறி விழும் அளவுக்கு கடினமான, சவால்கள் நிறைந்த பாதை.

அக்வாரி மாரத்தானில் ஓட ஆரம்பித்த ஆரம்பநிலையிலேயே பிரச்னைதான். அவரின் பின்னங்காலில் தாள முடியாத வலி. அதைத் தாங்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார். மொத்தம் 42 கிலோமீட்டர் ஓட வேண்டும். மற்றவர்களுடன் போட்டி போட்டு ஓடியபோது ஒரு கட்டத்தில் கீழே விழுந்துவிட்டார் அக்வாரி. காலில் சுளுக்கு வேறு பிடித்துக்கொண்டுவிட்டது. `ஆனாலும் ஓடியே ஆக வேண்டும். நாடு, `ஏதாவது சாதித்துவிட்டு வா’ என்று நம்பி அனுப்பியிருக்கிறது. பின்வாங்கக் கூடாது’ இந்த மன உறுதியோடு ஓடிக்கொண்டிருந்தார். கரடு முரடான, அறிமுகமில்லாத, அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திராத சாலை அது. முதுகில் தசைப் பிடிப்பு, காலில் வெட்டுக் காயம்... எனத் தொடர்ந்து உடலில் பிரச்னைகள். 30 கிலோ மீட்டரைத் தாண்டியதும், அது நடந்தது. ஓட முடியாமல் கீழே விழுந்துவிட்டார். நடுவர்கள் வந்து பேசிப் பார்த்தார்கள். ``உங்களால முடியலை. பேசாம பந்தயத்துலருந்து விலகிடுங்களேன்...’ என்று சொன்னார்கள். அக்வாரி கேட்கவேயில்லை. காலில் கட்டுப் போட்டுக்கொண்டு மெள்ள மெள்ள மீதமிருக்கும் 12 கிலோமீட்டரையும் கடந்துவிடும் உத்வேகத்துடன் ஓடிக்கொண்டிருந்தார்.

 

 

மாரத்தான் ஓட்டம் முடிவு பெறும் இடத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் காத்திருந்தார்கள். அன்றைய மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றவர், எத்தியோப்பியாவைச் சேர்ந்த மேமோ வோல்டே (Mamo Wolde). 2:20:26 என்ற மணிக்கணக்கில் அவர் தன் ஓட்டத்தை முடித்திருந்தார். மேமோதான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதுமே கூட்டம் கலைய ஆரம்பித்துவிட்டது. அதுதான் ஒலிம்பிக்கின் கடைசி நிகழ்வு என்பதும் ஒரு காரணம். மேமோ வெற்றி பெற்று, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்துதான் ஸ்டேடியத்துக்குள் நுழைந்தார். அதற்குள் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கிளம்பிப் போயிருந்தார்கள். எல்லைக்கோட்டைத் தொட்டுவிட்டு, அப்படியே சுருண்டு கீழே விழுந்தார் அக்வாரி.

வெற்றி

 

ஒலிம்பிக் வரலாற்றின் சாதனை நிகழ்வுகளில் இது முக்கியமான ஒன்று. அந்த நிகழ்வை ஒட்டி ஊடகத்துக்கு அக்வாரி பேட்டி ஒன்று கொடுக்கவேண்டியிருந்தது. ``நீங்க உடம்புல அவ்வளவு அடிகள் பட்டிருந்தும், வலியிருந்தும் ஏன் ஓடுறதை நிறுத்தலை?’’ என்று நிருபர் கேட்க, பதில் சொன்னார் அக்வாரி... ``என்னோட நாடு இந்த ஓட்டப்பந்தயத்தை ஆரம்பிச்சுவெக்கிறதுக்காக என்னை இங்கே அனுப்பலை. முடிச்சுவெக்கிறதுக்காக அனுப்பியிருக்கு.’’

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

காலால் எழுதி கற்பிக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியை

கல்வியால் இலக்குகளை விரிவாக்கி, காலால் எழுதி கற்பிக்கும் ஆசிரியையும், வழக்கறிஞருமான மாற்றுத்திறனாளி பெண் பற்றிய காணொளி.

Link to comment
Share on other sites

 
நாசா கண்ணில் சிக்கிய இலங்கை!!
 
 

நாசா கண்ணில் சிக்கிய இலங்கை!!

இலங்கையை கடந்து சென்ற நாஸா விண்வெளி ஓடத்தில் பதிவான அழகிய இலங்கையின் படம் மிதக்கும்  இலங்கை என வர்ணிக்கப்பட்டு  சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

31450199_1020849848074107_90934014385710

http://newuthayan.com/

Link to comment
Share on other sites

"ஆட்டம் முடிந்து விட்டது... இது தந்தையின் கடமை": தோனி

 

 
jbnpng

ஆட்டம் முடிந்துவிட்டது இது தந்தையின் கடமை என்று தோனி தனது மகள் ஜிவாவுடன் இருக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

பெங்களூருவில் புதன்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸின் அம்பதி ராயுடு 52 பந்துகளில் 82 ரன்களும், கேப்டன் தோனி 34 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

அதிரடியாக விளையாடிய தோனியைப் பலரும் பாராட்டி சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் ஜிவாவின் கூந்தலை உலர்த்தும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில் போட்டி முடிந்துவிட்டது. நல்ல தூக்கம் தூங்கினேன். தற்போது இது தந்தையின் கடமை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

Link to comment
Share on other sites

குடைபோல் வளையும் இறகுகள் வைத்து இரையைப் பிடிக்கும் அபூர்வப் பறவை #BlackHeron

 

அமைதியான நீர்நிலை. ஒரே ஒரு பறவை மட்டும் அமைதியாக நீண்ட கால்களோடு நீருக்குள் நின்றுகொண்டிருக்கிறது. அதைப் பார்க்கும்போதே இரைக்காகக் காத்துக்கொண்டிருப்பது புரிகிறது. அதென்ன திடீரென்று சிறகுகளை விரித்து உடலை மறைத்துக்கொண்டு நீருக்குள் பார்க்கிறது. அது என்ன செய்கிறது என்பதைப் பார்க்க முடியவில்லையே. ஒருவேளை நீர் அருந்துகிறதோ. நீரை ஏன் இப்படி இறகுகள் கொண்டு முகத்தை மறைத்து மறைவாகக் குடிக்கவேண்டும்.

இறகுகள்

Picture Courtesy: Tony Faria

அடடா...
நீர் அருந்த வெக்கப்படும் ஒரு பறவையா! என்ன அதிசயம். மீண்டும் நகர்கிறது. அரவம் ஏதேனும் இருக்கிறதா என்று கூர்ந்து கவனிக்கிறது. சில அடிகள் எடுத்து வைத்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் சிறகுகளுக்குள் மறைகிறது.
ஆஹா... எவ்வளவு வெட்கம் வருகிறது இந்தப் பறவைக்கு. அது நீர் பருகுவதாக இருந்தால் ஏன் அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருக்கவேண்டும். அப்படி என்னதான் செய்கிறது. அதைத் தெரிந்துகொள்வதற்கு முன் அது என்ன பறவை என்பதைப் பார்த்துவிடுவோமா!
அந்தப் பறவைதான் கருநாரை (Black Heron). அடிப்படையில் மிகவும் அமைதியான கருநாரை ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. உடல் முழுவதும் கருமை நிறத்தில் இருக்கும் அதற்கு கால் மட்டும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதுவே இனப்பெருக்கக் காலத்தில் இரு பாலினத்திலும் அடர் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும். இணைசேர்ந்தவுடன் ஆண் பறவை முதலில் குச்சிகள், மரக்கிளைகளைக் கொண்டு சுமார் 15 அடி உயரத்தில் நீர்நிலைக்கு அருகிலோ நீர்நிலையிலேயே உள்ள மரங்களிலோ கூடுகட்டத் தொடங்கும்.

Heron Nest

Photo Courtesy: Hellen Jennings

மழைக்காலங்களில் இனப்பெருக்கம் செய்யும் இவ்வகைப் பறவைகளில் ஆண், பெண் பறவைகள் இரண்டுமே இணைந்து அவற்றின் முட்டைகளை அடைகாக்கும். 18 முதல் 30 நாள்கள் அடைகாக்கப்படும் முட்டைகள் ஒவ்வொன்றாகச் சிறிது இடைவெளியோடு பொறிந்து வெளிவரும் கருநாரைக் குஞ்சுகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் பிறப்பதால் அவை வெவ்வேறு அளவுகளில் இருக்கும். மிகவும் சிறிய பறவைகள் உயிர் பிழைத்து வருவது மிகவும் கடினம். பெரும்பாலும் இறந்தே விடுகின்றன. முழுமையாகப் பறக்கப் பழகும் வரை கூட்டிலேயே இருந்து பெற்றோர் இருவரும் பாதுகாக்கின்றனர்.
கூட்டமாகவே வாழக்கூடிய இந்தப் பறவை இனம் கூடுகட்டுவது கூட ஒரே பகுதியில் கூட்டமாகத்தான் கட்டும். அதன் பெருமளவு நேரத்தை நீர்நிலைகளில் அலைந்து திரிவதில் கழிக்கும் இது தன் நீண்ட கால்களை வளைத்து பாதத்தில் இருக்கும் நகங்களால் உடலில் ஒட்டும் பூச்சிகளைச் சுத்தம் செய்துகொள்கிறது. சிறகுகளைப் பயன்படுத்தி தலையில் நீண்டிருக்கும் கொண்டையைச் சீவிச் சிங்காரித்து அழகுபடுத்திக் கொள்ளுமாம்.

Heron

Photo Courtesy: don.vanpoppel

ஆப்பிரிக்கா கண்டத்தில் தெற்கு சகாரா, நியூ கினியா, ஐவரி கடலோரப் பகுதி, நைஜீரியா, கென்யா, தான்சானியா, சாம்பியா, ஜிம்பாப்வே மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்ந்து வருகிறது. தற்போது அதிகமாகவே இருக்கும் இந்தப் பறவையினம் அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் இல்லையென்றாலும் அது குறைந்துவருவது அந்த நிலைக்கு இட்டுச்செல்ல வாய்ப்புகள் அதிகம் என்ற நிலையில்தான் இருக்கிறது. மனித ஆக்கிரமிப்புகள் அதிகமாகி வருவது மற்றும் அவர்களது வாழ்விடங்களில் மனிதத் தலையீடுகள் அதன் இனப்பெருக்கத்தைப் பாதிக்கின்றன.
1950 களில் மடகாஸ்கர் தீவின் அண்டானானரிவோ என்ற ஒரு பகுதியில் மட்டுமே பத்தாயிரத்திற்கும் அதிகமான ஜோடிகள் இருந்தன. தற்போது 50 ஜோடிகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. இது வரும் காலத்தில் அவை அழிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதைச் சுட்டுகிறது. இந்தப் பறவைகளின் இனப்பெருக்க எண்ணிக்கை கூட பெருமளவில் குறைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Searching prey

 

ஒரு குறிப்பிட்ட கண்டத்தில் மட்டுமே வாழக்கூடிய இந்த அறிய வகைப் பறவைக்கு மற்றுமொரு தனித்தன்மையும் உண்டு. அதுதான் அதன் வேட்டையாடும் யுக்தி. நாம் மேலே பார்த்த அதன் செயல் யாராவது பார்த்துவிடுவார்களோ வெட்கப்பட்டுக்கொண்டு இறகுகளை மறைத்து நீர் அருந்த அல்ல. சூரிய ஒளியில் அதிகம் மீன்கள் நீரின் மேற்பகுதிக்கு வராது. அதனால் அது தன் இறகுகளைக் குடைபோல் வளைத்து நீரின் மேல் வைத்துக் காத்திருக்கும். இருட்டாக இருக்கிறது என்று அந்தப் பகுதிக்கு வரும் மீன்களை நிலத்தில் இருக்கும் கால்களை அசைப்பதன் மூலம் கீழே செல்லவிடாமல் பயமுறுத்தி இன்னும் மேலே வரவைத்துத் தனது நீண்ட அலகால் கொத்திப் பிடித்துக்கொள்ளும். பிடித்த மீனை கொத்திச் சாப்பிடாமல் அப்படியே வாயில் போட்டு விழுங்கிவிடும். அதன் மீன்பிடிக்கும் தனித்தன்மை வாய்ந்த யுக்திக்காகவே பறவையியல் ஆய்வாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனது. இதுபோல் உங்களைக் கவர்ந்த பறவைகளைப் பற்றிக் கீழே பட்டியலிடலாமே...!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

1966 – தாஷ்கெண்ட் நகரத்தின் பெரும் பகுதி நிலநடுக்கத்தால் அழிந்தது. 300,000 பேர் வீடுகளை இழந்தனர்.

வரலாற்றில் இன்று….

ஏப்ரல் 26

 

நிகழ்வுகள்

1802 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினான்.
1805 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் லிபியாவின் டேர்ன் நகரைக் கைப்பற்றினர்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோசப் ஜோன்ஸ்டன் தலைமையில் கூட்டமைப்புப் படையினர் வட கரோலினாவின் டேர்ஹம் நகரில் கூட்டணியினரிடம் சரணடைந்தனர்.
1865 – அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜோன் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றனர்.
1937 – ஸ்பானிய உள்நாட்டுப் போர்: ஸ்பெயினின் கேர்னிக்கா நகரம் ஜெர்மனியினரின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
1945 – இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியின் கடைசி வெற்றிகரமான தாக்குதல் போட்சன் என்ற இடத்தில் இடம்பெற்றது.
1954 – பிரெஞ்சு இந்தோசீனா, மற்றும் வியட்நாமில்வில் அமைதியைக் கொண்டுவரும் முகாமாக ஜெனீவாவில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின.
1962 – நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.
1964 – தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு தான்சானியா என ஒரு நாடாகியது.
1966 – தாஷ்கெண்ட் நகரத்தின் பெரும் பகுதி நிலநடுக்கத்தால் அழிந்தது. 300,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1981 – மட்டக்களப்பில் பட்டித்திடலில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1982 – தென் கொரியாவில் முன்னாள் காவல்துறையினன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1986 – உக்ரைனில் செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.
1994 – ஜப்பானில் சீன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 264 பேர் கொல்லப்பட்டனர்.
1994 – உச்சி குவார்க் (Top Quark) உபஅணுத் துணிக்கை ஓன்றைத் தாம் அவதானித்ததாக இயற்பியலாளர்கள் அறிவித்தனர்.
2005 – 29-ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் சிரியா தனது 14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.

பிறப்புகள்

1564 – வில்லியம் சேக்சுபியர், ஆங்கில எழுத்தாளர் (இ. 1616)
1762 – சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1827)
1906 – ஜி. பட்டு ஐயர், திரைப்பட நடிகர், இயக்குனர்
1970 – சரண்யா, திரைப்பட நடிகை.

இறப்புகள்

1920 – சிறீனிவாச இராமானுசன், கணித மேதை (பி. 1887)
1897 – பெ. சுந்தரம் பிள்ளை, மனோன்மணீயம் என்ற நாடக நூலைப் படைத்த தமிழறிஞர் (பி. 1855)
1977 – எஸ். ஜே. வி. செல்வநாயகம், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் (பி. 1898)

சிறப்பு நாள்

தான்சானியா – தேசிய நாள்
அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்

http://metronews.lk

Link to comment
Share on other sites

‘பூமியின் சுழற்சி பேதமற்றது’
 

image_5f105922cb.jpgசெருக்கு நிறைந்த பணக்காரன், ஏழைகளைப் பார்க்கும் பார்வை விசித்திரமாக இருக்கும். தன்னைப்போலவே, மனித உடல் அவர்களுக்கும் இருக்கும் என்பதை அவர்கள் மறந்தே போகிறார்கள். அவர்களுக்குத் தன்மானம், கௌரவம் இருக்கக் கூடாது என்பதில் இத்தகையவர்கள் பிடிவாதமாக இருக்கின்றார்கள். 

காலம் பல கதைகள் சொல்லிய வண்ணமே உள்ளது. தங்களுக்கு மட்டுமே, நல்ல காலம் நிலையானது என வீம்புடன் நடப்பவர்கள் உளர். 

இன்று, ஏழைகள் பலரின் வாழ்க்கைத்தரம் தாழ்ந்து நிற்பதற்கான காரணம், காலமாற்றங்களின் வலிமையைப் புரிந்து கொள்ளாமையே ஆகும். 

எவரும் பெரும் பதவிக்கும் செல்வத்துக்கும் உரிமை கொண்டாடவும் கல்வி ஞானத்தில் நிகரற்றவர்களாகவும் முடியும். பூமியின் இந்தச் சுழற்சி பேதமற்றது; இங்கு எல்லாமே நடக்கும். இந்த விடயம் உண்மையானது. எவரும் தாழ்வுடன் நிரந்தரமாக வாழ்ந்ததும் கிடையாது. எழுவது எமது கடன்; அது உரிமையும் கூட.

 

 

Link to comment
Share on other sites

லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள்: ஏப்ரல் 27, 1840

 

வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனை லண்டனில் தேம்ஸ் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த அரண்மையில் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமர்கின்ற இடமாகும். 1834-ஆம் எரிந்து போன பழைய கட்டிடத்திற்கு மாற்றாக 1840-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் அடிக்கல் நாட்டப்பட்டு இந்த புதிய அரண்மனை அமைக்கப்பட்டது. இந்த அரண்மனை அரசாங்க சடங்குகளுக்கு அரசியின் வசிப்பிடமாக தனது தகுதியையும் கம்பீரத்தை தக்க வைத்துள்ளது. மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்: * 1124 - முதலாம் டேவிட் ஸ்கொட்லாந்து மன்னனானான்.

 
 
 
 
லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள்: ஏப்ரல் 27, 1840
 
வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனை லண்டனில் தேம்ஸ் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த அரண்மையில் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமர்கின்ற இடமாகும்.

1834-ஆம் எரிந்து போன பழைய கட்டிடத்திற்கு மாற்றாக 1840-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் அடிக்கல் நாட்டப்பட்டு இந்த புதிய அரண்மனை அமைக்கப்பட்டது. இந்த அரண்மனை அரசாங்க சடங்குகளுக்கு அரசியின் வசிப்பிடமாக தனது தகுதியையும் கம்பீரத்தை தக்க வைத்துள்ளது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:

* 1124 - முதலாம் டேவிட் ஸ்கொட்லாந்து மன்னனானான்.

* 1521 - நாடுகாண் பயணி பேர்டினண்ட் மகலன் பிலிப்பீன்சில் பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.

* 1959 - மக்கள் சீனக் குடியரசில் இருந்து கடைசி கனேடிய மதபரப்புனர் வெளியேறினர்.

* 1961 - சியேரா லியோனி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

* 2002 - நாசாவின் பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தடவையாக தொடர்புகள் கிடைத்தது.

 

 

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

இன்பாக்ஸ்

 

ரலாற்றுப் படமொன்றில் நடிக்க வேண்டும் என்பது விஜய் சேதுபதியின் ஆசைகளுள் ஒன்று. அதிலும், அதிகம் பேசப்படாத வரலாற்று நாயகனின் கதையாக இருக்க வேண்டும் என்பது பேராவல். “நமக்கு செட் ஆகுமானு தெரியலை. ஆனா, அவங்க காலத்துல போய் வாழ்ந்துட்டு வந்த ஃபீல் கிடைக்கும்ல!” என்கிறார்.  மக்கள் செல்வன்னா சும்மாவா..?

p36a_1524478449.jpg


ஸ்ரீதேவி மறைவுக்குப் பிறகு ‘எங்களைக் கொஞ்சம் அமைதியாக விடுங்கள்’ என்று கேட்டுக்கொண்ட கபூர் குடும்பம் ஆறுதலுக்காக  லண்டன் சென்றுள்ளனர். ஜான்வியின் அறிமுகப்படமான ‘தடக்’ அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. அர்ஜுன் கபூரின் ‘நமஸ்தே இங்லாண்ட்’ திரைப்படத்துக்கான ஷூட்டிங் அடுத்த மாதத்திலிருந்து துவங்கவிருக்கிறது. அதுவும் லண்டனிலேயே நடைபெறுகிறது. மீண்டு வாருங்கள்! 


p36d_1524478466.jpg

‘துப்பறிவாளன்’,   ‘சவரக்கத்தி’ என வெவ்வேறு பரிமாணங்களில் வந்த மிஷ்கின், ஹாரர் த்ரில்லர் படம் ஒன்றை இந்த வருடம்   எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.   முன்னணி ஹீரோயின்தான் ‘பிசாசு 2’-வாக வருவாரெனத் தெரிகிறது. மிரட்டணும்!


p36b_1524478480.jpg

p36c_1524478490.jpg

த்திரிகைத் துறையின் உயரிய கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படுவது புலிட்சர் விருது. இந்த ஆண்டின் சிறந்த புகைப்படத்திற்கான புலிட்சர் விருதை ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் பெற்றிருக்கிறார்கள். மியான்மரில் ரோஹிங்யா அகதிகள் படும் வலியை, வேதனையை ராய்ட்டர்ஸ் குழுவின் புகைப்படங்கள் சிறப்பாகப் பதிவு செய்திருப்பராக நடுவர்கள் பாராட்டியுள்ளனர்.  அந்தக் குழுவில் இருப்பவர்களில் அத்னான் அபிதி, தானிஷ் சித்திகி இருவரும் இந்தியர்கள். வலியை ஒளியாக்கு!


p36e_1524479540.jpg

கால்பந்து உலகின் பெரும் தலைகளான பார்சிலோனா, யுவன்டஸ் அணிகள் மோதும் போட்டி இந்தியாவில் நடக்கவுள்ளது. உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் பங்கேற்ற அந்த அணிகளின் முன்னாள் வீரர்கள் மோதும் ‘லெஜண்ட்ஸ்’ மேட்ச் மும்பை டி.ஒய்.பாடில் மைதானத்தில் ஏப்ரல் 27-ம் தேதி நடக்கவுள்ளது. கால்பந்து உலகின் ராஜாக்களாக வலம் வந்த எட்கர் டேவிட்ஸ், கியான்லுகா சம்ப்ரோட்டா, எரிக் அபைடால் போன்றவர்கள் விளையாடுவதைப் பார்த்துவிடவேண்டும் என்று முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள் மும்பை வாலாக்கள். லெட்ஸ் ஃபுட்பால்!


p36f_1524479556.jpg

ம்மாவின் ஆசைக்கு நல்ல நேரம் பார்த்து வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. தன் மகன் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதுதான், மறைந்த அவரது தாய் ஜீவாவின் ஆசை. சினிமாவுக்கான முக அமைப்பு இல்லை என்று சொல்லி வாய்ப்புகளைத் தவிர்த்து வந்தார். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஜி.வி.பி-யிடம் இதைச் சொல்ல, ‘நிச்சயமா வாங்க. நாம சேர்ந்து படம் பண்ணலாம்!’ என ஏகத்துக்கும் சப்போர்ட் பண்ணி இருக்கிறார்.  வாங்க இளைய இளையராஜா!


p36g_1524479584.jpg

‘டைம்’ இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்க நூறுபேர் பட்டியலில் இந்தியாவிலிருந்து விராட் கோலி, தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, சத்யா நாதெல்லா என சர்வதேச அளவில்  பிரபலமானவர்கள்  சிலர் இருந்தனர். அனைவருக்கும் ஆச்சர்யமூட்டிட்டியது  ‘ஓலா’ கார் நிறுவனத்தலைவர்  பாவிஷ் அகர்வால் அந்தப் பட்டியலில்  இருந்ததுதான். ஸ்டார்ட் பண்ணுங்க!


விர்ச்சுவல் ரியாலிட்டி கேமைக் கதைக்களமாக வைத்து ‘ரெடி ப்ளேயர் ஒன்’ திரைப்படத்தை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், தனது அடுத்த படத்தை இயக்கத் தயாராகிவிட்டார்.  ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ கதைகளுக்குப் பேர்போன டிசி யுனிவர்ஸ் தயாரிக்கும் ‘பிளாக் ஹாக்’ படத்தை இயக்குகிறார்.  ஸ்பீல்பெர்க்  இயக்கும் முதல் சூப்பர் ஹீரோ படம் இது. சூப்பர் டைரக்டர்!


p36h_1524479598.jpg

மிழுக்கு வருகிறார் அனுராக் காஷ்யப்!   கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், வெற்றிமாறன் என,  பலரின் அழைப்புகளுக்கும் புன்முறுவலுடன் ஏதேதோ காரணம் சொல்லி மறுத்துவந்தவர், தற்போது ஜி.வி.பிரகாஷின் அன்புக்குக் கட்டுப்பட்டிருக்கிறார். மும்பை மாதுங்காவில் வாழும்  தமிழ் இளைஞனின் வித்தியாசமான காதல் கதையைத் தமிழிலும், இந்தியிலும் பைலிங்குவலாக இயக்கப்  போகிறாராம். வெய்ட்டிங் ஜி! 

 

 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

நேரம் என்றால் என்ன? நேரமில்லாத உலகம் எப்படி இருக்கும்? #KnowScience

 

"இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இம்மூன்றையும் வேறுபடுத்திக் காட்டுவது வெறும் மாயை மட்டுமே!" - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

டிக்... டிக்... டிக்... இதயத் துடிப்பை ஒத்த ஓசை அது. கடிகார சுழற்சியின் குழந்தையாக அது இருந்தாலும், இவ்வுலகை, அதிலுள்ள மனிதர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் செயல் அதுதான். இன்றைய காலகட்டத்தில் மனிதன் தன்னை ஆள ஒன்றுக்கு அனுமதி கொடுத்திருக்கிறான் என்றால் அது இந்த நேரத்துக்கு மட்டும்தான். ஆனால், நம்மைப் பொறுத்தவரை, நேரம் என்றால் என்ன என்ற கேள்விக்கு ''கடிகாரம் என்ன காட்டுகிறதோ, அதுதான்" என்ற பதிலைத்தான் சொல்லத் தோன்றும். உண்மையில், நேரம் என்றால் என்ன? நாம் அதை ஏன் பின்பற்றுகிறோம்? நேரமில்லாத உலகம் எப்படி இருக்கும்?

கடிகாரம்

மாமேதைகளான நியூட்டன் மற்றும் கலீலியோ போன்றவர்கள்கூட, நேரம் என்பது பூமியில் இருக்கும் அனைவருக்கும் ஒன்றுதான், ஒரே மாதிரிதான் தோன்றும் என்ற எண்ணத்தில்தான் பல காலம் இருந்தனர். இவ்வளவு ஏன், 20-ம் நூற்றாண்டு வரை, பலரும் இப்படி ஓர் அறியாமையில்தான் இருந்தார்கள் என்று கூறுகிறது ஓர் ஆய்வு. தற்போதைய நேரம் என்னும் நவீனக் காலக் கோட்பாடு ஐன்ஸ்டீன் அவர்களின் ரிலேடிவிட்டி கோட்பாட்டின்படி கட்டமைக்கப்பட்டது. தற்போதைய நவீன அறிவியல் கோட்பாடுகளின்படி, மனிதன் நாகரிகம் அடைந்த பின்பு, அறிவியல் சார்ந்த அறிவை வளர்த்த பின்பு, ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தின் தொடக்கப்புள்ளியாக விஞ்ஞானிகள் ஒன்றை நிறுவினர். அது 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதிர்வெடிப்பு (Big Bang) நிகழ்ந்து இப்பிரபஞ்சம் ஓர் புள்ளியில் இருந்து பிரசவிக்கப்பட்ட பின்பு விரிந்த அந்த முதல் நொடி. 

எல்லாக் கோள்களும் அதனதன் இடத்தில் சென்று அமர்ந்த பிறகு, சுழற்சி என்ற ஒன்று தொடங்கிய பிறகு இந்த நேரமும் உயிர்பெற்றது என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். அன்றிலிருந்து இன்றுவரை நடந்த செயல்களை ஓர் அமைப்பாகக் கோக்கவும், நாளை நடக்கவிருக்கும் செயல்களை அதே வரிசையில் அடுக்கவும் நமக்கு நேரம் தேவைப்படுகிறது. பொதுவாக நேரம் என்பது மாற்றம் என்ற ஒன்றோடு தொடர்புடையது. ஒரு செயல் நடைபெற்றால்தான், அதை அடிப்படையாகக் கொண்டு நேரம் என்ற ஒன்றை உருவாக்க முடியும். அதன் பிறகு நடக்கும் எல்லாச் செயல்களையும், அந்த நேரம் என்ற அளவுகோல் ஒன்றைக் கொண்டு அளக்க முடியும்.

கடிகாரங்கள் 

இங்கே நம் பார்வையில், நேரத்தின் அடிப்படையாக இருப்பது கோள்களின் சுழற்சிதான். பூமி சூரியனைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவை ஒரு வருடமாகக் கொண்டு அதைக் கூறுகளாக பிரித்து, பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவை ஒரு நாள் என்றும், பகல் மற்றும் இரவுகளைப் பிரித்து மணி நேரங்கள் என்றும், அதையும் பின்னர் கூறுகளாகப் பிரித்து நிமிடங்கள், நொடிகள் என்றும் அழைக்கிறோம். ஆக, பூமியின் சுழற்சி என்னும் செயல்தான் நமக்கு நேரம் என்ற ஒன்றையே தருகிறது.

நேரம் என்பது நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. நாம்தான் கடிகாரங்களையும், காலண்டர்களையும் வைத்து அதைக் கணக்கிட்டு துரத்திப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். நேரத்தின் சிறப்பே அதை வைத்து நாம் எந்தப் பரிசோதனையும் செய்ய முடியாது. அதாவது, அதை நிறுத்திப் பார்க்க முடியாது, திரும்பி ஓடவைக்க முடியாது. அது ஒரே திசையில் பயணித்துக்கொண்டிருக்கும். இந்த நேரத்தை நாம் கோள்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கி இருந்தாலும், இன்று அந்தச் செயல் இல்லாமலே தனித்து நிற்கும் திறன் நேரம் என்ற இந்தக் கோட்பாட்டுக்கு உண்டு. உதாரணத்துக்கு, நம் பூமி தன் சுழற்சியை நிறுத்திவிட்டது என்றாலும், எவ்வளவு நேரமாகச் சுற்றாமல் இருக்கிறது என்பதை நாம் கண்டறிய முடியும்.

நேரம் என்ற ஒன்றை நாம் ஏன் உருவாக்கினோம்?

நேரம்

பொதுவாக, இயற்கை என்னும் தத்துவக் கோட்பாடு, ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்துகொண்டேதான் இருக்கிறது. உயிர்கள் பிறப்பதும், இறப்பதும், பின்பு மீண்டும் பிறப்பதும் என நம் கோள்களின் சுழற்சி போல, கடிகாரத்தின் சுழற்சி போல நிகழ்ந்து கொண்டேயிருக்கும் ஒரு செயல் அது. இயற்கை என்ற வார்த்தையின் கீழ் வரும் அனைத்துமே சுழற்சியை அடிப்படையாகக் கொண்டவை. என்ன அந்தந்தப் பொருளுக்கு ஏற்றவாறு அதனதன் சுழற்சிக்குத் தேவையான கால அளவு மட்டும் மாறுபடுகிறது. இந்த இயற்கை உருவாக்கிய பொருள்களும் இந்தச் சுழற்சி என்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகின்றன. இரவானால் உறங்க வேண்டும், பகலில் எழ வேண்டும், உணவு உண்ண வேண்டும், பின்பு மீண்டும் உறங்க வேண்டும் என்பவை நம் ஜீன்களில் பதிந்துபோன ஒரு விஷயம்.

ஆதி மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உண்டு, குறிப்பிட்ட நேரத்தில் தம் கழிவுகளைக் கழித்து... என்று வாழத் தொடங்கும்போது, அவர்களின் உடலும் அதற்குப் பழகிப் போகின்றன. உதாரணமாக, இன்று சூரியன் உச்சியில் இருக்கும்போது உணவு உண்கிறார்கள் என்னும் போது, அதை மீண்டும் மீண்டும் செய்யத் தொடங்க, நாளைச் சூரியன் உச்சிக்கு வரும் முன்பே வேட்டைக்குச் சென்றுவிட வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றும். இந்தச் சூரியன் உச்சியில் இருக்கும்போது நாம் உணவு உண்டுவிட வேண்டும் என்று அவன் முதன் முதலில் நினைத்தபோதே அவன் நேரம் என்ற கோட்பாட்டை அவனுக்குத் தெரியாமலே உருவாக்கிவிட்டான். பகலானால் வேட்டை, இரவானால் உறக்கம் என்பதும் அதற்கான உதாரணம்தான். பின்பு நாகரிகம் வளர வளர, அவன் அன்றாடம் செய்யும் செயல்கள் அதிகமாக அதிகமாக அவற்றையெல்லாம் எப்போது செய்ய வேண்டும் என்று குறித்துக்கொள்ள அவனுக்கு அளவுகோல் ஒன்று தேவைப்பட்டது. நேரம் என்ற கோட்பாடும் அதனால் பரிணாம வளர்ச்சி அடைகிறது. தற்போது நேரம் என்பது மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஆயங்களாக (Coordinates) விளங்குகிறது.

நேரம் இல்லாத உலகம் எப்படி இருக்கும்?

நேரமில்லா உலகம் சாத்தியமா?

நேரம் இல்லாத உலகம் குழப்பங்களின் குவியலாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. நேரம் இல்லாத உலகம் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. நேரம் என்ற ஒன்று இல்லாத உலகம் வேண்டும் என்றால், அங்கே இருக்கும் உயிர்களின் ஜீன்களுக்குள் 'சுழற்சி' என்ற விஷயமே பதிந்திருக்கக் கூடாது. எப்போது நம் வாழ்வில் சுழற்சி என்ற ஒன்று நுழைந்துவிட்டதோ, அப்போதே நேரம் என்ற ஒரு கோட்பாடு உள்ளே நுழைந்துவிட்டதாகதான் அர்த்தம். அதைக் கூறுகளாக பிரித்து கடிகாரம் கொண்டு அளக்கவில்லை, அவ்வளவுதான். உதாரணமாக ஐந்தறிவு மிருகங்களால் நேரம் என்றால் என்னவென்று புரிந்துகொள்ள முடியாது. ஆனால், எப்போது உணவு தேடச் செல்ல வேண்டும், உணவு உண்ண வேண்டும், எப்போது இனப்பெருக்கம் செய்ய வேண்டும் போன்ற விஷயங்கள் அதற்குத் தெரியும். அது மிருகத்துக்கு மிருகம் மாறுபடுமே தவிர, அது சுழற்சியாக நடந்து கொண்டேதான் இருக்கும்.

 

துரதிர்ஷ்டவசமாக, நம் பிரபஞ்சத்தின் இயற்பியல் விதிகளின்படி, சுழற்சி என்ற ஒன்று இயற்கையின் தன்மையாக (Nature's Order) இருக்கிறது. இங்கே நாம் நேரம் என்ற ஒன்றை கழட்டி விடவே முடியாது. நாம் நாள் முழுவதும் கடிகாரத்தைப் பார்க்காமல் தவிர்க்கலாம். ஆனால், பசித்தால் உணவு உண்ண வேண்டும். உறக்கம் வந்தால் உறங்க வேண்டும் என உங்கள் உடலின் தேவைகள் சுழற்சி நிலையில்தான் இருக்கும். அதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது. நம் கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருட்டி விடுமா என்ன?

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 
 
 

திருகோணமலைக் கடலில் ஓர் அதிசயம்!!

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் இராவணன் வெட்டுக்கு அருகே கடல் மட்டத்தில் இருந்து 80 அடிக்கு கீழே உள்ள பழைய சிலைகளின் அழகிய தோற்றம்.

31369053_1371214469645403_4081501504591031394907_1371214436312073_7922966099066631369606_1371214492978734_19736239364160

http://newuthayan.com

Link to comment
Share on other sites

 
 

உலகில் மிகப்பெரிய நண்டு!!

‘Coconut Crab’ எனப்படும் இவ்வகை நண்டுகளே உலகில் வாழும் மிகப்பெரிய நண்டு இனமாகும்.

இவை 3 அடி நீளம் வரை வளரக்கூடியவை. 4 முதல் 5 கிலோ வரையான எடையையும் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

31403588_292946977909913_88677342578212831306847_292947037909907_8813285681804609884536d78ae042f00fe37ef656119c4923ea8e9download-11-2-300x168.jpgdownload-10-3.jpg

http://newuthayan.com

Link to comment
Share on other sites

 

தென் கொரியாவில் கிம் ஜாங்-உன்

1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து, கொரிய தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதித்திருக்கிறார் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன். 2000 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உச்சி மாநாடுகளுக்கு பிறகு, இரு நாட்டு உறவும் சமீப மாதங்களில் மேம்பட்டு வருவதே தற்போது நடைபெறும் இந்த சந்திப்புக்கு காரணமாகும்.

Link to comment
Share on other sites

'வயதானவர் தோற்றத்தில் பந்துவீச்சு!’ - சிறுவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரட் லீ #IPL

 

ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ. அதிவேகமாகப் பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களைத் திணறடிப்பதில் பிரட் லீக்கு நிகர் பிரட் லீதான். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகைப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் இவர் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர். 

பிரட் லீ

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் கலந்துகொண்டு விளையாடியுள்ளார். கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்ற பிறகு, தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் வர்ணனையாளராக உள்ளார். இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் பிரட் லீ, முகம் நிறையத் தாடியுடன், வயதான தோற்றத்தில் சிறுவர்களுடன் விளையாட வந்தார். 

முதலில் வந்திருப்பது பிரட் லீ எனத் தெரியாமல், சிறுவர்கள் அவருக்கு பேட்டிங் கற்றுக்கொடுத்தனர். பிரட் லீயும் முதலில் தனக்கு ஆடத் தெரியாததுபோல் ஆடி ஆட்டமிழந்தார். பின்னர், சிறிது நேரம் பவுண்டரிகளாக விளாசிய அவர், பந்தைக் கையில் எடுத்தார். முதலில் பந்துவீசவே தெரியாதவர்போல் பந்துவீசிய அவர், பின்னர், தனது ஸ்டைலில் பந்துவீசினார். அவரது ஆட்டத்தைக் கண்டு பிரமித்த சிறுவர்கள், இறுதியில் இந்த வயதில் எப்படி, இவ்வளவு வேகமாகச் செயல்படுகிறீர்கள் எனக் கேட்க, சிறுவர்கள் முன்னிலையில் தனது வேஷத்தைக் கலைக்கிறார். பிரட் லீயைப் பார்த்த மகிழ்ச்சியில் சிறுவர்கள் குதித்தனர். பின்னர், சிறுவர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கி  விடைபெறுகிறார் பிரட் லீ.

A ragged, old man turned up at a local park to play cricket with the kids - little did they realise it was none other than @BrettLee_58! Watch many such unique stories only on #SuperSunday, on Star Sports.

 
2:32
8.650 Aufrufe
 
#SuperSunday: Brett Lee in disguise!
Powered by SnappyTV

 

 

https://www.facebook.com/starsportsindia/videos/1363900853754450/?hc_ref=ARS2nkBvsszKhrg3CEX7dpxcRyX26nUX6Cjc3o0PxVW0JMI6IX1MJlmN_cIVFSkMiEo

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பிறந்த தினம்: ஏப்ரல் 28, 1937

 
அ-அ+

ஈராக் நாட்டின் முன்னாள் அதிபரான சதாம் உசேன் 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 1968-ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கிய பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராக பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுத படைகளுக்கு இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார். அதிபராக பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை நடத்தினார். ஈரான்-ஈராக் போர் மற்றும் பெரிசியக் குடாப்போர் நடந்த காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்பிடியில் வைத்திருந்தார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது.

 
 
 
 
ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பிறந்த தினம்: ஏப்ரல் 28, 1937
 
ஈராக் நாட்டின் முன்னாள் அதிபரான சதாம் உசேன் 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 1968-ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கிய பங்கு வகித்தார்.

தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராக பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுத படைகளுக்கு இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.

அதிபராக பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை நடத்தினார். ஈரான்-ஈராக் போர் மற்றும் பெரிசியக் குடாப்போர் நடந்த காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்பிடியில் வைத்திருந்தார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது.

மேலை நாடுகளிடம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிடம், அவர் காட்டிய எதிர்ப்பை மெச்சி, பல அராபிய மக்கள் அவரை ஒரு பிரபலத் தலைவராகக் கருதினாலும், அனைத்துலக சமுதாயத்தினர் பலரும் அவரை சந்தேகக் கண் கொண்டே நோக்கினர்.

அதுவும் 1991 பெர்சிய குடாப் போருக்கு அடுத்து சில ஈராக்கிய குழுக்கள் சதாமின் பாதுகாப்பு படை குறித்த அச்சத்துடன் வாழ்ந்தனர். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார்.

நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. டிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006-ல் அவர் தூக்கிலிடப்பட்டார்.

மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்:

* 1932 - மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

* 1945 - முசோலினியும் அவனது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

* 1995 - பலாலியில் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது.

* 2001 - கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் உல்லாசப் பயணியானார்.
 

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

பனி மலையில் காணாமல் போன நாய்கள்... உயிரோடு மீட்ட தனியொருவன்... ஒரு நெகிழ்ச்சிக் கதை!

 
 

இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. "இனி நாம் போனாலும் அதைக் காப்பாற்ற முடியுமா?" என்ற கேள்வி அவருக்கு எழாமல் இல்லை. மீண்டும், மீண்டும் ஃபேஸ்புக்கில் போடப்பட்டிருந்த அந்த விளம்பரத்தைப் பார்க்கிறார். 
                                                 

                                                                                         காணவில்லை.

பெயர்: லைலா (Lilah). 

தொலைந்த இடம்: ஹெல்வெலின் மலையடிவாரம் (Helvellyn), இங்கிலாந்து. 

உடன் இருந்தவன் : மாங்க்ரெல் கேஷ் (Mongrel Cash)  

இனம்: ஜெர்மன் ஷெப்பர்டு (German Shepherd)

உரிமையாளர் :  காலெட் கில்ராய் (Colette Kilroy).  

ஸ்காட் பில்லிங்கிற்கு (Scott Pilling)  வயது 40யை நெருங்கிக் கொண்டிருந்தது. லாரிகளுக்கு "பாடி" கட்டுவது தான் ஸ்காட்டின் வேலை. ஆனால், மலையேற்றத்தில் பெரும் ஆர்வம். நாய்கள் என்றால் அலாதி பிரியம். 

பனிமலையில் மீட்கப்பட்ட நாய்கள்

முயற்சி செய்வோம் என்று முடிவு செய்கிறார். விளம்பரத்தில் இருக்கும் மொபைல் எண்ணிற்கு போன் செய்து தகவல்களைச் சேகரிக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்னர், ஹெல்வலின் மலையடிவாரத்தில் இரண்டு நாய்களையும் வாக்கிங் அழைத்துச் சென்றிருக்கிறார் அதன் உரிமையாளர் காலெட். அப்போது, அவர் அசந்த நேரம் இரண்டு நாய்களும் ஓடியாடி விளையாட, அப்படியே வழி தெரியாமல் காணாமல் போயிருக்கின்றன. போனில் பேசும்போதே காலெட் அழுகிறார்...

"அவை என் நாய்கள் அல்ல. குழந்தைகள். அவற்றுக்கு என்ன நடந்ததோ என்று தெரியாமல் என் நெஞ்சம் பதறுகிறது. ஒவ்வொரு நொடியும் அவற்றின் நலன் வேண்டி கடவுளை பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்." 

பனிமலை - நாய்

ஸ்காட் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார். ஹெல்வெலின் மலையின் கிழக்குப் பகுதி மிகவும் ஆபத்தானது. கடந்த இரண்டு நாட்களாக, யாரும் அந்தப் பக்கம் மட்டும் போய்த் தேடவில்லை என்ற தகவல் அவருக்குத் தெரிகிறது. அதை நோக்கி ஸ்காட் கிளம்புகிறார். உயிரைப் பணையம் வைக்கும் பயணம் தான். இருந்து துணிகிறார் ஸ்காட். 

பனி மலை. உயரம் ஏற, ஏற சிரமம் அதிகமாகிறது. பனியில் சில முறை சறுக்கி விழவும் செய்கிறார்.  நாய்களை உயிரோடு மீட்க முடியும் என்ற நம்பிக்கை ஸ்காட்டிற்கு ஆரம்பம் முதலே கிடையாது. குறைந்தது, நாய்களின் உடலையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பயணத்தைத் தொடங்குகிறார். இந்த மலைப்பகுதியில் கடும் குளிருக்கும், திடீரென கிளம்பும் பனிப்புயலுக்கும் நடுவே இரண்டு வாயில்லா ஜீவன்கள் பிழைத்திருப்பது அரிதிலும், அரிதான விஷயமாகத் தான் இருக்க முடியும். 

ஸ்காட் நடந்துக் கொண்டேயிருக்கிறார். கால்கள் பலமிழக்கத் தான் செய்கின்றன. முதுகு வலி எடுக்கத் தான் செய்கிறது. இது வழக்கமான மலையேற்றம் கிடையாது. இரண்டு உயிர்களுக்கான தேடல். இதில் நேரம் தான் முக்கியம். ஒவ்வொரு நொடியும் மிகவும் முக்கியமானது. நின்று ஓய்வெடுக்கும் நேரம், நாய்கள் அங்கு பெரும் ஆபத்தில் சிக்கியிருக்கலாம். ஒரு நொடி வீண் செய்யாமல், ஒரு நிமிடம் ஓய்வெடுக்காமல் ஸ்காட் போய்க் கொண்டேயிருக்கிறார். 

மீட்கப்பட்ட நாய்கள்

திடீரென பனிப்புயல் கிளம்புகிறது. வழக்கமான மலையேற்ற சாகசத்திற்கு வந்திருந்த ஒருவர் நிலைத்தடுமாறுவதை ஸ்காட் கவனிக்கிறார். அவரைக் காப்பாற்ற ஓடுகிறார். பனிப் புயலிலிருந்து அவரைக் காக்கிறார். அடுத்து எப்படி முன்னேறுவது என்ற குழப்பம். அடுத்த பத்தடியில் என்ன இருக்கிறது என்று தெரியாத சூழல். ஒரு பாறையின் அடியில் அடைக்கலமாகிறார். உடன் அவர் காப்பாற்றிய அந்த மனிதரும். சில நிமிடங்கள், பனிப்புயல் கிளப்பிய புகை, கொஞ்சம், கொஞ்சமாக மறையத் தொடங்குகிறது. 

ஸ்காட் அருகே உட்கார்ந்திருந்த அந்த மனிதரிடம் ஒரு பைனாகுலர் இருந்தது. அதை வாங்கி சுற்றும், முற்றும் பார்க்கிறார். ஒரு நொடி ஸ்காட் கண்களை சுருக்குகிறார். தூரத்தில் வெள்ளைப் பனி போர்வைக்கு நடுவே இரண்டு கருப்பு புள்ளிகள் தெரிகின்றன. இன்னும் கூர்ந்து கவனிக்கிறார். அவை அசைவது தெரிகிறது. அவை நாய்களாக இருக்குமென்று அனுமானிக்கிறார் ஸ்காட். 

புயல் வேகம் எடுக்கிறார். அந்தப் புள்ளிகளை நோக்கி ஓடுகிறார். தெரிந்துவிட்டது அது லைலாவும், கேஷும் தான். ஆனால், ஐயோ... எங்கே நிற்கின்றன அவை. அங்கு எப்படி போயின? 

ஸ்காட் நெருங்கிக் கொண்டிருக்கும் போதே விசிலடிக்கிறார். லைலா அதற்கு பதில் சொல்வது போல் குரைக்கிறாள். இருக்கும் கொஞ்ச இடத்தில் சுற்றி, சுற்றி வருகிறாள். காப்பாற்று என்பது போல் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டிருக்கிறாள். கேஷ் சிறியவன் என்பதால், அவனைக் காத்து லைலா நிற்பதைக் கண்டு மெய்சிலிர்த்துப் போகிறார் ஸ்காட். பாறையின் அடியில் மறைந்திருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முயற்சி செய்த அவற்றின் புத்தி கூர்மை அவரை ஆச்சரியப்படுத்தியது. கிட்டத்தட்ட நெருங்கி விட்டார். 

லைலா நாய்

திடீரென மீண்டும் புயல். பனிப் புகையாக மறைக்கிறது. அப்படியே ஒதுங்கி உட்கார்கிறார் ஸ்காட். சில நிமிடங்கள். மீண்டும் முன்னேறுகிறார். ஆனால், இப்போது ஆபத்து அதிகமாகியிருந்தது. நாய்கள் நின்று கொண்டிருந்த பனி சரியும் நிலையில் இருந்தது. அதற்குள் அங்கு, ஸ்காட் காப்பாற்றியிருந்த அந்த மனிதரும் வந்து சேர்ந்தார். பல மணி நேரங்கள் இருவருமாகப் போராடி, லைலாவையும், கேஷையும் பத்திரமாகக் காப்பாற்றினர். 

பாசத்தில் தாவி குதித்து, ஸ்காட்டை தன் நாவின் ஈரத்தால் நனைத்தாள் லைலா. கேஷ் அப்போது தான் பயத்திலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக வெளிவந்துக் கொண்டிருந்தான். 

ஸ்காட்

ஸ்காட் பில்லிங் (Scott Pilling)

இறுதியாக இருவரையும் உயிரோடு கொண்டு வந்து காலெட்டின் முன் நிறுத்தினார் ஸ்காட். காலெட்...அழுதார். சிரித்தார். குதித்தார். அவருக்கு உண்மையில் என்ன செய்வதென தெரியவில்லை. மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என தெரியவில்லை. 
அவரைப் பார்த்து சிரித்தபடியே ஓர் ஓரமாக நின்றார் ஸ்காட். 

மீட்கப்பட்ட நாய்கள்

லைலா மற்றும் மாங்க்ரெல் கேஷோடு அதன் உரிமையாளர் காலெட். 

 

"உண்மையில் இது அதிசயம் தான். சில நிமிடங்கள் தாமதித்திருந்தாலும், உயிரோடு மீட்டிருப்பது சிரமமான விஷயமாகியிருக்கும். உயிர் வாழ்தலில் லைலாவுக்கும், கேஷுக்கும் பெரிய ஆசை என்று நினைக்கிறேன். அது தான் அவர்களைப் பிழைத்திருக்க வைத்திருக்க வேண்டும். இனி அவர்களின் வாழ்க்கை இன்னும், இன்னும் அழகாக இருக்கும் என்று நம்புகிறேன்." என்று சொல்கிறார் ஸ்காட். 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வலைபாயுதே

 

சைபர் ஸ்பைடர்

 

twitter.com/MJ_twets

ஒவ்வொரு அழுகைக்குப் பின்னும் ஆழமான காயங்கள்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஆம்லேட்டுக்கு வெங்காயம்கூட வெட்டிக்கொண்டிருந்திருக்கலாம்.!

facebook.com/Ma Pandia Rajan

சாமி பேருக்கு அர்ச்சனை பண்ணுங்கனு சொன்னா, எந்த ஊர்லய்யா ‘எந்த சாமிக்கு’ன்னு கேப்பாங்க?

twitter.com/yugarajesh2

‘கொசுறா வாங்குற கொத்துமல்லிக்குத்தான் மணம் அதிகம்’னு கெயில் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

twitter.com/Thaadikkaran

டூ வீலர் ஓட்டும்போது மட்டுமில்லை, இனி கவர்னர் மீட்டிங்குக்கும் ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போகணும்போல..!

p112a_1524647795.jpg

twitter.com/@CreativeTwitz

தலை சீவும் நேரத்தில் மக்கள் பணி செய்யலாம் என்றுதான் யோகி ஆதித்யநாத் மொட்டையுடன் திரிகிறார்!

facebook.com/Parthiban Gowthamaraj

முன்னாடியெல்லாம் தயிர்ல கொஞ்சம் தண்ணி கலந்து, ரய்தா செய்வாங்க. இப்ப மோர்ல நிறைய தண்ணிய ஊத்தி ரய்தா செய்றாங்க.

twitter.com/Kozhiyaar

காபி ஆர்டர் பண்ணா, ‘சர்க்கரைப் போடலாமா?’ என்ற கேள்வி வயது அதிகமாகிக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது!!

facebook.com/Bogan Sankar

ஒரே ஒரு பெண்ணையோ ஆணையோ அறிந்தவர்கள் எழுதும் காதல் கவிதைகளைப் படித்தால் பாவமாக இருக்கிறது. அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.

facebook.com/Umanath Sevan

சாமியும் செல்வமும்தான் நாட்டை ஆள்கின்றன. (ஒரே ஒரு அர்த்தம் தான்)

p112b_1524647813.jpg

twitter.com/BoopatyMurugesh

என்னைப் பற்றி மீம் போடுகிறவர்கள், முடிந்தால் அட்ரஸ் போட்டுப் போடுங்கள் - அமைச்சர் ஜெயக்குமார்.

அட்ரஸ்லாம் போட்டுப் போட.. நாங்க என்ன உங்களுக்கு லெட்டரா போடுறோம்? அது மீம்!

twitter.com/yugarajesh2

அடுத்த வருசம் IPL சீசனுக்கு இந்த வருசம் RCB யில் ஆடுற ஆளுங்களுக்குத்தான் அதிக கிராக்கி இருக்கும்னு நினைக்கிறேன்#RCB ராசி அப்படி!

twitter.com/imganesaa

“ரஜினிக்கு காவிரியோட பரப்பளவு தெரியுமா?” - சீமான்...

இன்னும் சீமான்  கேக்காத ஒரே ஒரு  கேள்விதான் இருக்கு. ‘ரஜினிக்கு (a+b) ஃபார்முலா தெரியுமா?’

twitter.com/sharmi_twitz

செல்போனையும் நம்மையும் பிரிக்கும் சக்தி செல்போன் சார்ஜருக்கு மட்டுமே உண்டு!

p112c_1524647831.jpg

twitter.com/Gopi007twitz

படத்தில சரக்கு அடிக்குற சீன் வரும்போது ‘மது அருந்தாதீர்’ன்னு போடுற மாதிரி #CSK மேட்ச் அன்னிக்கு ‘கடைசி 4 ஓவர்கள் பார்ப்பதை இதய நோயாளிகள் தவிர்க்கவும்’னு போடுங்கய்யா!

twitter.com/Nelson Xavier

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விசாரணை முழுவதுமாக முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இன்றோடு 90 நாள். வெற்றிகரமான நூறாவது நாளை நோக்கி...

twitter.com/BlackLightOfl

“காவிரிப் பிரச்னையில் சட்ட ரீதியாக நல்ல தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்” - தமிழிசை சௌந்தர்ராஜன்.

நகர்ந்து போனா கால் வலிக்கும். ஒரு சைக்கிள் வாடகைக்கு வாங்கிட்டுப் போங்க!

twitter.com/yugarajesh2

தமிழிசை அக்காவோட ஒட்டு மொத்தப் பேட்டிகளையும் தொகுத்துப் பார்த்தால் அதில் மேலோங்கி இருக்கும் இரண்டே இரண்டு வசனங்கள் :

‘அது அவரின் சொந்தக் கருத்து’

‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’

p112d_1524647848.jpg

  twitter.com/sultan_Twitz

தமிழக அரசின் இணையதளம் சர்வர் பிரச்சனையால் முடங்கியது - செய்தி #

இந்த சர்வர் பிரச்சினையைச் சரிசெய்ய மதுரை முனியாண்டி விலாஸில் இருந்து உடனடியாக 10 ‘சர்வர்கள்’ வரவழைக்கப்படுவார்கள் - செல்லூர் ராஜூ#

twitter.com/Thaadikkaran

எனக்கென்னமோ முதல்வர் பெயருக்கு அர்ச்சனை பண்ற வீடியோ போடக் கூடாதுங்குறதுக்காகவே இவ்வளவு நாள் தியேட்டர் ஓனர் போராட்டம் பண்ணிருப்பாங்களோனு டவுட்டு!

p112e_1524647863.jpg

twitter.com/@abuthahir707

நமக்குத் தேவைப்படுகிற பஸ்ஸைத் தவிர மற்ற எல்லா பஸ்ஸும் வருவதுதான் நம் வாழ்க்கைப் பயணத்தில் எழுதபட்ட முதல் விதி

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

'நெருப்பு' 

நாராயண சேகர், பாண்டிச்சேரி

நாராயண சேகர், பாண்டிச்சேரி வள்ளி சௌத்திரி, கோவில்பட்டி

வள்ளி சௌத்திரி, கோவில்பட்டி ஹரிஹர சுப்ரமணியன், சென்னை

ஹரிஹர சுப்ரமணியன், சென்னை சுபான் பீர் முஹம்மது, அபுதாபி

சுபான் பீர் முஹம்மது, அபுதாபி ஹாரிஷ் ராகவ், ஈரோடு

ஹாரிஷ் ராகவ், ஈரோடு கோபிசங்கர், யாழ்ப்பாணம்

கோபிசங்கர், யாழ்ப்பாணம் செந்தமிழரசு, சேலம்

செந்தமிழரசு, சேலம் கந்தவேலு, புதுச்சேரி

கந்தவேலு, புதுச்சேரி சுகுமார், தஞ்சாவூர்

சுகுமார், தஞ்சாவூர் ரோஹிணி பாலசுப்ரமணியன், ஈரோடு

ரோஹிணி பாலசுப்ரமணியன், ஈரோடு வசந்த குமார்

வசந்த குமார்

 

https://www.bbc.com

Link to comment
Share on other sites

பிட்ஸ் பிரேக்

 

‘தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு’ மோடில் சுற்றிக் கொண்டிருக்கிறார் விராட் ‘கிங்’ கோலி! எந்த ஊரில் மேட்ச் நடந்தாலும் தனக்கென இருக்கும் ரசிகர் கூட்டத்தை அதிரடி பேட்டிங்கால் குஷிப்படுத்துகிறார். இந்த முறை ஆர்,சி.பி ஜெயிக்க வேண்டும் என்று, அனுஷ்காவும் கோலிக்குக் கட்டளையிட்டிருக்கிறாராம்! தங்களது 34 கோடிரூபாய் ‘சூப்பர் லக்சுரி’ வீட்டில் சில இண்டீரியர் வேலைகள் நடைபெறுவதால், வாடகை வீட்டில்தான் இருக்கிறார்கள் ‘விருஷ்கா’ ஜோடி! இப்போது இருக்கும் வீட்டு வாடகை... மாசத்துக்கு ஜஸ்ட் 15 லட்சம்! 

p19a_1524462318.jpg

p19b_1524462327.jpg


சென்னையில் இந்த சீசன் மேட்ச் கிடையாது என்றதும் சோர்ந்துபோனது விசில் படை. ஆனால், புனேவில் சி.எஸ்.கே.வுக்கு கிடைத்த உற்சாக வரவேற்பைப் பார்த்து அசந்து போனார்கள் வீரர்கள். ‘இந்தியாவுல எங்க போனாலும் தோனிக்கு ஹோம்டவுன்தான்’ - ஒரு ரசிகர் ட்வீட் தட்ட, ‘ஹலோ.. எங்க ஊருக்கு வந்தா இதைவிட பலமா இருக்கும் வரவேற்பு’ என ஆப்கானிஸ்தான் ரசிகர் ஒருவர் பதில் தட்ட, ‘தேசங்களின் எல்லைக்கோட்டை விளையாட்டால்தான் அழிக்க முடியும்’ என சீனியர் ரசிகர் ஒருவர் கண்ணீர் மல்க ட்வீட் போட்டு அந்த உரையாடலை முடித்து வைத்தது ஆசம்!

p42b_1524480961.jpg

p43a_1524480975.jpg


 இசையில் பியானோ வாசிப்பதும் அட்வெஞ்சரில் ஐஸ் ஸ்கேட்டிங் செய்வதும் கேத்ரின் தெரசாவின் விருப்பங்கள். காமெடி சேனல்கள் பார்ப்பது இவரது ஸ்ட்ரெஸ் பஸ்டர்களுள் ஒன்று. சினிமாவில் தனது பயணம் தொடர்ந்தாலும், ராம்ப் வாக்கில் கலந்து கொள்வதை இன்னும் தொடர்கிறார் இந்த தேவதை! 

p65a_1524569974.jpg


2018 ஐ.பி.எல் ஏலம் நடந்தபோது கிறிஸ் கெயிலை ஏலம் எடுக்க, எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. குறைந்தபட்ச விலைக்கே கெயில் கிடைத்தபோதும் பெங்களூரு அணி அவரை ஏலம் எடுக்காதது கெயிலுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகுக்கே அதிர்ச்சியாக இருந்தது. கடைசியாக, பிரீத்தி ஜிந்தா பஞ்சாபுக்காக கெயிலை ஏலம் எடுத்தார். முதல் இரண்டு போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காத கெயில், அடுத்த இரண்டு போட்டிகளில் அரை சதம், சதம் என வெளுத்து வாங்க இப்போது மற்ற அணி ரசிகர்கள் ‘மிஸ் பண்ணிட்டோமேப்பா’ எனப் புலம்புகிறார்கள்.

p71a_1524631952.jpg

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீட்டுக்குள்ளே பசுமைக் கூட்டம்

 

 
1jpg

கோடை வெயில் உச்சத்துக்கு ஏறிவருகிறது. பசுமையாகச் சிறிய நிழல் கிடைத்தாலும் மனம் குதூகலிக்கிறது. இந்த வெயிலைச் சமாளிக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மண் பானைத் தண்ணீர், கூழ் என உணவு முறையையும் மாற்றிப் பார்க்கலாம். அதுபோல வீட்டுக்குள் குளிர்ச்சியாகச் சிறு தாவரங்களை வளர்க்கலாம். அவை கண்ணுக்குக் குளிர்ச்சியாக மட்டுமல்லாது வீட்டுக்குள் இருக்கும் காற்றையும் சுத்தப்படுத்துகின்றன.

மணி பிளாண்ட்

பலவிதமான செடிகள் சந்தையில் கிடைக்கின்றன. மணி பிளாண்ட், அவற்றுள் ஒன்று. வீட்டின் உள்ள காற்றைச் சுத்தமாக்க இந்தச் செடி உதவுவதாகச் சொல்லப்படுகிறது. மணி பிளாண்ட், பிரான்ஸைப் பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் இப்போது உலகத்தில் பல நாடுகளில் பரவலாக இருக்கிறது. இது தொட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.200-லிருந்து சந்தையில் கிடைக்கிறது. இது வெறும் தண்ணீரில் வளரக்கூடியது.

 

சீன மூங்கில்

சீன மூங்கில் என அழைக்கப்படும் இது பார்ப்பதற்கு மூங்கிலைப் போல் இருக்கும். ஆனால் இதற்கும் மூங்கிலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது வீட்டுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என நம்பப்படுகிறது. அது எந்த அளவுக்குச் சாத்தியம் எனத் தெரியவில்லை. ஆனால், அதற்கு அதிர்ஷ்ட மூங்கில் என்ற பெயரும் உண்டு. இதுவும் ரூ.200-லிருந்து கிடைக்கிறது.

 

சைங்கோனியம் பிங்க்

சைங்கோனியம் பிங்க் எனப்படும் இந்தச் செடி குரோட்டன் செடியைப் போல் இருக்கும். இது லத்தீன் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் வீட்டுக்குள் வளர்க்கும் செடியாக உள்ளது. இது மண்ணில் வளரக்கூடியது. அதேபோல் இதற்கு நேரடியாக சூரிய வெளிச்சமும் அவசியமல்ல. இதன் இலைகள் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். இது ரூ.150லிருந்து கிடைக்கிறது.

2jpg
 

 

ஜேடு பிளாண்ட்

தென்னாப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தச் செடி, தடிமனான இலைகளைக் கொண்டது. இந்தச் செடியும் மண்ணில் வளரக்கூடியது. நேரடியான சூரிய வெளிச்சம் தேவை இல்லை. அதனால் இந்தச் செடியை வீட்டுக்குள் வளர்க்கலாம். இது ரூ.190 முதல் கிடைக்கிறது.

 

அரக்கா பனை

தென்னை மரத்தைப் போன்று உள்ள இந்தச் செடி வீட்டுக்குள் வளர்க்கும் செடியில் மிகப் பிரபலமானது. இதன் பூர்வீகம் மடகாஸ்கர். ஆனால், அந்தமான் பகுதிகளிலும் இது காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் செடி மற்ற செடிகளைப் போல் மேஜை மீது வளர்க்கக்கூடியது அல்ல. குட்டைத் தென்னையைப் போல் 4,5 அடிகள் வளரக் கூடும். அதனால் பெரிய தொட்டியில் வளர்க்க வேண்டும். இதன் விலை மற்ற மேஜைத் தொட்டிச் செடிகளைக் காட்டிலும் சற்று அதிகம். ரூ.500லிருந்து கிடைக்கும்.

 

பீஸ் லில்லி

அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தச் செடி அழகாக வெள்ளை நிறத்தில் வளரக் கூடியது. அதனால் இது அமைதி லில்லி (Peace lilly) என அழைக்கப்படுகிறது. இது மேஜைத் தொட்டிச் செடிதான். இது ரூ. 180லிருந்து கிடைக்கிறது.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.