Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

இன்பாக்ஸ்

 

dot_1519213735.jpg `டைட்டானிக்’ கேட் வின்ஸ்லெட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. 80களில் போதை நிழல் உலகத்தைத் தன் பிடியில் வைத்திருந்த பெண்மணி க்ரிசெல்டா பிளாங்கோ. இருபதாண்டுச் சிறைத்தண்டனை முடித்து கொலம்பியா திரும்பியவரை அவரது பாணியிலேயே 2012-ல் தலைசிதறச் சுட்டுக் கொன்றனர் பழைய எதிரிகள். காட்ஃபாதர் படம் பார்த்து, தன்னை போதை மற்றும் ஆயுதக்கடத்தல் தலைவியாக வளர்த்துக்கொண்ட இந்த அம்மணியின் கதை இப்போது ஹாலிவுட் ஆக்‌ஷனுக்குத் தயாராகிறது. கேட் வின்ஸ்லெட் தான் க்ரிசெல்டா பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.  காட்மதர் ரெடி!

p62_1519213923.jpg

dot_1519213735.jpg ஹர்திக் பாண்ட்யாவுக்கும் இந்தி நடிகை எல்லி எவ்ராமுக்கும் காதல் என்று மும்பை மீடியாக்கள் எல்லாம் கதறுகின்றன. ஆனால், இருவரும் அதை மறுத்துவந்தனர். இந்த நிலையில் பாண்ட்யாவின் சகோதரர் க்ருனால் பாண்ட்யாவின் திருமணத்தில் எல்லியும் கலந்துகொண்டு குடும்பத்தில் ஒருவராக பிஸியாக இருந்தார். இப்போது மீண்டும் இரண்டுபேருக்கும் நிச்சயமாகக் காதல்தான் எனப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் மும்பைவாலாக்கள்! மாட்னார்யா!

dot_1519213735.jpg இந்த ஆண்டு அதர்வாவின் ஐந்து படங்கள் வெளிவரவிருக்கின்றன. ‘இமைக்கா நொடிகள்’ ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. அடுத்து பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் பர்னேஷ் இயக்கத்தில் ‘ஒத்தைக்கு ஒத்தை’, ஷாம் ஆண்டன் இயக்கத்தில் ஹன்சிகாவுடன் நடிக்கும் ‘100’, ஆர். கண்ணன் இயக்கத்தில் மேகா ஆகாஷுடன் ‘பூமராங்’ என வரிசையாகப் படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. இதுபோக அதர்வா நடித்துத் தயாரித்துள்ள ‘செம போத ஆகாதே’ அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. ராக்கெட் ஸ்டார்!

p62a_1519213944.jpg

dot_1519213735.jpg ‘அப்பா மிலிட்டரியில் இருந்து ஓய்வுபெற்றவர். அதனால், சிறுவயது தொடங்கி நிலையாக ஓரிடத்தில் இருந்தது கிடையாது. பல மாநிலங்கள் பயணம். அதனால் மொழிப்பற்று, இடத்தின் மீதான பிடிப்பு... என எதுவும் எனக்குக் கிடையாது. செயலில் மட்டுமே கவனமாக இருப்பேன்.’ ஸ்ரத்தா ஸ்ரீநாத் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை. அப்படித்தான் தேடித்தேடி படங்களில் கமிட்டாகிறார். ‘சார்லி’யின் தமிழ் ரீமேக், ஓர் இந்திப் படம், ‘நானும் ரௌடிதான்’ கன்னட ரீமேக் என்று சவாலான, நடிக்க வாய்ப்புள்ள கதைகளைத் தேடி ஸ்டேட் ஸ்டேட்டாக ஓடிக்கொண்டிருக்கிறார் ஸ்ரத்தா. யாஞ்சி ராக்ஸ்

p62b_1519213900.jpg

dot_1519213735.jpg அமிதாப் பச்சன், ரிஷி கபூர் இருவரும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் படம், ‘102 நாட் அவுட்.’ இதில், ‘உலகின் அதிக வயதில் வாழும் மனிதன்’ என்ற சாதனையைச் செய்ய முயலும் 102 வயது தந்தை வேடத்தில் அமிதாப்பும் அவருக்கு உதவிசெய்யும் 75 வயது மகன் வேடத்தில் ரிஷி கபூரும் நடித்துள்ளனர். கபி... கபி...

p62c_1519213882.jpg

dot_1519213735.jpg சிவகார்த்திகேயனின் புதிய ஹீரோயின், ரகுல் ப்ரீத் சிங்! சிவகார்த்தி தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்துவருகிறார். இது சிங்கம்புனரி ஜமீன் பற்றிய கதை. இந்தப் படத்தைத் தொடர்ந்து முற்றிலும் வேறு களம், வேறு கலர் என ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது ஏலியன்கள் பற்றிய சை-பை படமாக இருக்குமாம்! இதில்தான் ரகுல் சிவாவோடு நடிக்கவிருக்கிறார்.  ரகுல் அதிகாரம் இரண்டு

dot_1519213735.jpg சர்வதேச அளவில் இந்தியாவில் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டே இருப்பதை உறுதிப் படுத்தியிருக்கிறது மருத்துவ ஆராய்ச்சி இதழான ‘லான்செட்’. அது குறிப்பிட்டிருக்கும் இன்னொரு அதிர்ச்சியான விஷயம், இந்தியாவில் நடக்கும் தற்கொலைகளில் 60 சதவிகிதத்தினர் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் என்பது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வசதிகளில் முன்னேறியிருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தற்கொலைகள் அதிகம் நடப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. கேர்ஃபுல் மக்கா!

p62d_1519213844.jpg

dot_1519213735.jpgஇந்தியாவுக்கு சன்னிலியோன் எப்படியோ அப்படித்தான் பாகிஸ்தானுக்கு டெமீனா அஃப்சல். பாகிஸ்தான் வம்சாவளி அமெரிக்கரான டெமீனா அஃப்சல், பல மியூசிக் வீடியோக்களில் நடித்துப் பிரபலமாகி வருகிறார். இணையதளம் எங்கும் ‘மிஸ் மீனா’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்மன்றங்களெல்லாம் வைத்திருக்கிறார்கள்! மீனம்மா மீனம்மா...

p62e_1519213817.jpg

dot_1519213735.jpg பாலிவுட்டுக்குச் செல்கிறார்கள் துல்கர் சல்மானும், நிவின்பாலியும். ‘கர்வான்’ படத்தில் இர்ஃபான்கானுடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான், அடுத்து சோலோ ஹீரோவாக சோனம் கபூருடன் இணையவிருக்கிறார். ‘மூத்தோன்’ என்ற இந்திப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் நிவின்பாலி. அடுத்து ஃபகத் ஃபாஸிலும் பாலிவுட் போவார் என்கிறது மலையாள வட்டாரம். பாக்யமுண்டாகட்டே!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

உங்கள் உடல் அழியாமல் என்றென்றும் வாழ்வதற்கு விருப்பமா?

என்றென்றும் அழியாமல் வாழ செய்யும் நோக்கில் இறந்தோரின் உடலை -200சி-யில் அல்கோர் நிறுவனம் பாதுகாத்து வருகிறது. தொழில்நுட்பம் மேம்படும் நாளில், உறைநிலையில் வைக்கப்படும் இந்த உடலை எடுத்து உயிர்ப்பிக்க செய்யலாம் என்று நேர்மறை கருத்தை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. ஆனால், நரம்பியல் நிபுணர்கள் இதற்கு எதிர்மறையான கருத்துக்களையே கொண்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

'லக்ஷ்மி' படத்தின் டீசர் வெளியானது..!

 
 

'குலேபகாவலி' படத்தைத் தொடர்ந்து, பிரபுதேவா 'யங் மங் சங்', 'மெர்குரி', 'லக்ஷ்மி', 'சார்லி சாப்ளின் 2' எனப் பல படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். அந்த வகையில், விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லக்ஷ்மி' படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

லக்‌ஷ்மி

 

இந்தப் படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 'ஏபிசிடி' படத்தைப் போலவே, நடனத்தை மையமாக கொண்டுள்ள இந்தக் கதையில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மேலும், கோவை சரளா, கருணாகரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை  ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ் – பிரமோத் ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. விஜய் - பிரபுதேவா கூட்டணியில் வெளியான 'தேவி' படம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இந்தப் படத்தின் மீதும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் உருவான 'கரு' படமும் ரிலீஸிற்கு காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 
Link to comment
Share on other sites

நிகழ்ச்சி ஒலிபரப்பின்போது குழந்தை பெற்றெடுத்த வானொலி தொகுப்பாளர்

 

அமெரிக்க வானொலி தொகுப்பாளர் ஒருவர் தன்னுடைய நிகழ்ச்சி ஒலிபரப்பின்போது, குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

வானொலி தொகுப்பாளர்படத்தின் காப்புரிமை@RADIOCASSIDAY/INSTAGRAM

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரிலுள்ள "த ஆர்ச்" வானொலி நிலையத்தில் வார நாட்களில் காலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் காச்டேய் ப்ரோக்டர் என்பவர் செவ்வாய்கிழமையன்று தன்னுடைய நிகழ்ச்சி ஒலிப்பரப்பான நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

திங்கள்கிழமை அவருக்கு பிரவச வலி உண்டானது. அவர் பணியாற்றி வந்த வானொலி நிலையம், ப்ரோக்டர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையோடு ஒத்துழைத்து அவரது நிகழ்ச்சி ஒலிப்பரப்பாகிறபோது, குழந்தையை அவர் பெற்றெடுக்க செய்துள்ளது.

“2 வாரங்களுக்கு முன்னர் பிறந்துள்ள நிலையிலும், இந்த குழந்தை பிறந்திருக்கும் நேரம் ஒலிபரப்பு வாய்ப்பில் சிறந்ததொரு உற்சாக தருணம்” என்று ப்ரோக்டர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"என்னுடைய வாழ்க்கையில் மிகவும் உற்சாகமான நாளை என்னுடைய வானொலி நேயர்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்திருப்பது மிகவும் சிறப்பு” என்று இந்த நிகழ்ச்சியை பற்றி ப்ரோக்டர் தெரிவித்துள்ளார்.

 

“இந்த வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பாகியபோது குழந்தை பெற்றெடுப்பது நான் ஒவ்வொரு நாளும் என்னுடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் நேயர்களோடு பகிர்ந்து கொள்வதன் நீட்சியாக அமைந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற குழந்தைக்கான பெயர் தேர்வு போட்டியில், நேயர்கள் தெரிவு செய்த "ஜேம்சன்" என்ற பெயரால் 3.35 கிலோ எடையுடைய இந்த குழந்தை அழைக்கப்படுகிறது.

பன்னிரண்டு வேடிக்கையான பெயர்களும், இந்த ஜோடியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரென்டு பெயர்களும் இந்தப் போட்டியில் இடம்பெற்றன.

ஜேம்சன் என்கிற பெயர் கிடைக்கிற வரை வாக்களித்து கொண்டிருந்ததாக இந்த நிகழ்ச்சி இயக்குநர் ஸ்காட் ரோடி "த ரிவர்ஃபிரான்ட் டைம்ஸ்" செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

http://www.bbc.com

Link to comment
Share on other sites

பேசும் படம்: கனடா பிரதமரும்..இந்திய பயணமும்..

 

 
coljustinjpg

கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிப்பது தொடர்பாகவும் ஒருவார கால சுற்றுப்பயணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் கடந்த சனிக்கிழமை இந்தியாவுக்கு வருகை தந்தார்.

கடந்த சனிக்கிழமை தாஜ்மஹால், உ.பி.யின் மதுராவிலுள்ள யானைகள் காப்பகம், அகமதாபாத்தில் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரம், பஞ்சாப் பொற்கோவில் என தனது பயணத்தை வண்ணமயமாக மாற்றி இருக்கிறார்கள் ஜஸ்டின் ரூடோவும் அவரது குடும்பத்தினரும்.

இந்தியாவின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து கொண்டு ஜஸ்டின், அவரது குடும்பத்தினர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அலங்கரித்து வருகின்றன அவற்றின் புகைப்படத் தொகுப்பு ..

jhgpng
gtfpng
okilpng
kioppng
elepng
1png
5png
loppng
uipng
tajpng
jkpng
juiopng
hypng
hgfpng
Link to comment
Share on other sites

கர்மம் : கொடுத்ததை திரும்பப் பெற்றுகொள்
 

image_f13cd93930.jpgவாழ்கை என்ற பயணம் மிகச்சிறியதாகும். முடிந்தவரை நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ்வதோடு குறிப்பாக நமக்கு பிடித்த வண்ணம் வாழ பழக வேண்டும். இப்பயணத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை பலரை சந்திக்கின்றோம் அத்துடன் சார்ந்தும் இருக்கின்றோம். ஏன்? பாதி வாழ்க்கை மற்றவர்களுடன் மற்றவர்களுக்காகவே வாழ்வதில் கழிக்கிறோம்.
இந்த குறுகிய பயணத்தில் ஒன்றை முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதாவது, நாம் பங்கிட்டு பகிர்ந்து வாழும் இவ்வாழ்க்கையில் முடிந்தவரை அடுத்தவருக்கு கேடு நினையாது, தாழ்த்தாது இருப்பதை மனதில் வைத்துகொள்வது அவசியமும் அதேசமயம் தேவையுமாகும்.
ஏனெனில், விதையை விதைத்து அது அறுவடைக்காக ஓர் நாள் வளர்ந்து நிற்கும் என்பதை உணருங்கால், கொடுத்ததை திரும்ப பெற்றுகொள்ள வேண்டிய நாள் ஒன்றும் வரும் என்பதை அறிய கடவ.

கொடுங்கள்!  இயலுமானவரை அடுத்தவருக்கு பாதகமற்றவற்றை.....
காத்திருங்கள்!  நீங்கள் கொடுத்ததை திரும்பப் பெற்றுகொள்ள.....

Link to comment
Share on other sites

ரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்- பிப்.23-2-1997

 
அ+

ரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1847 - மெக்சிகோ- அமெரிக்கப் போர்: மெக்சிகோவின் புவெனா விஸ்டா நகரில் அமெரிக்கப் படைகள் மெக்சிகோ படைகளைத் தோற்கடித்தன. * 1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசிசிப்பியில் ராணுவ ஆட்சி முடிவடைந்து அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைக்கப்பட்டது. * 1887 - பிரெஞ்சு ரிவியேராவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர்

 
 
 
 
ரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்- பிப்.23-2-1997
 
ரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1847 - மெக்சிகோ- அமெரிக்கப் போர்: மெக்சிகோவின் புவெனா விஸ்டா நகரில் அமெரிக்கப் படைகள் மெக்சிகோ படைகளைத் தோற்கடித்தன. * 1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசிசிப்பியில் ராணுவ ஆட்சி முடிவடைந்து அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைக்கப்பட்டது. * 1887 - பிரெஞ்சு ரிவியேராவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரை கொல்லப்பட்டனர். * 1893 - ருடால்ப் டீசல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார். * 1903 - கியூபா குவாண்டானமோ விரிகுடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு முடிவற்ற குத்தகைக்குக் கொடுத்தது. * 1904 - 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் உரிமையைப் பெற்றுக் கொண்டது.

* 1905 - ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. * 1917 - சென் பீட்டர்ஸ்பர்க்கில் முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் மூலம் பிப்ரவரி புரட்சி ஆரம்பமானது. * 1919 - இத்தாலியில் பெனிட்டோ முசோலினி பாசிசக் கட்சியை ஆரம்பித்தார். * 1941 - புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. * 1944 - செச்னிய மற்றும் இங்குஷ் மக்கள் கட்டாயமாக மத்திய ஆசியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். * 1945 - இரண்டாம் உலகப்போர்: பிலிப்பைன்சின் தலைநகர் மணிலா அமெரிக்கப் படைகளினால் விடுவிக்கப்பட்டது. * 1966 - சிரியாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.

* 1991 - தாய்லாந்தில் ராணுவத் தலைவர் சுந்தொங் கொங்சொம்பொங் தலைமையில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் பிரதமர் சட்டிச்சாய் சூன்ஹாவென் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். * 1997 - ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. * 1998 - மத்திய புளோரிடாவில் இடம்பெற்ற சுழற்காற்றில் 42 பேர் கொல்லப்பட்டனர். * 2007 - இங்கிலாந்தில் கிறேரிக் என்ற இடத்தில் ரெயில் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் கொல்லப்பட்டு 22 பேர் காயமடைந்தனர்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

ஓர் ஆணி... ஒரு கார்... ஒரு கோபம் - தந்தையைக் கதறவைத்த மகனின் கதை! #FeelGoodStory

 

Feel good story

 

 

`ஒருவரைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு எதிரியாக இருப்பவை கோபமும் வெறுப்பும்தான்’ - மகாத்மா காந்தியின் பொன்மொழி இது. கோபம் ஏற்படுத்தும் இழப்பு சாதாரணமானதல்ல.  கோபத்தில், நேசத்துக்குரியவர்களையே பழிக்கிறோம்; நெருங்கியவர்கள் மேல் வெறுப்பை உமிழ்கிறோம். `செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற’ என்கிறார் திருவள்ளுவர். அதாவது, `தன்னைவிட வலிமையானவரிடம் (செல்லுபடியாகாத இடத்தில்) கோபம் கொள்வது தீங்கு; தன்னைவிட வலிமை குறைந்தவர்களிடம் (செல்லுபடியாகும் இடத்தில்) கோபம் கொள்வதுபோலத் தீங்கு வேறு எதுவுமில்லை’ என்பது இதன் பொருள். கண்ணை மறைக்கும் கோபம், இதையெல்லாம் மனிதர்களை யோசிக்கவிடுவதில்லை. அதன் விளைவு நம்மை எப்படிப் பாடாகப்படுத்தும் என்பதை உணர்த்தும் கதை இது!

அமெரிக்காவின் தெற்குக் கரோலினாவிலிருக்கும் சார்லஸ்டோன் (Charleston), சிறு நகரம். அந்த நகரத்தில் வசிப்பவன் ஜேம்ஸ். ஒரு ரெஸ்ட்டாரன்ட்டில் வேலை. மனைவி, ஒரே மகன். மகன் டேவிட்டுக்கு ஏழு வயது. துறுதுறு குழந்தை. ஒரு கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, பலவிதங்களில் பணம் சேர்த்து ஒரு வாரத்துக்கு முன்னர்தான் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தான். அதற்குக்கூட அப்பா அவனுக்காக விட்டுவிட்டுப் போயிருந்த பழைய காரை விற்கவேண்டியிருந்தது.

ஜேம்ஸுக்கு அந்த காரைப் பார்க்கப் பார்க்கப் பெருமையாக இருந்தது. மாலையோ, காலையோ மனைவி, மகனுடன் தினமும் அதிலேறி ஒரு ரைடு போய்விட்டு வருவது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.

அது ஒரு காலை நேரம். ஜேம்ஸ் தன்னுடைய காரைத் துடைத்துக்கொண்டிருந்தான். மும்முரமாக காரை க்ளீன் செய்யும் வேலையில் அவன் இருந்ததால், டேவிட் அங்கே வந்ததை அவன் கவனிக்கவில்லை. ஜேம்ஸ் ஒரு பக்கம் காரைத் துடைத்துக்கொண்டிருக்க, குழந்தை டேவிட் மறுபக்கம் போனான்.  

கதை - நெகிழ்ச்சிக் கதை

 

கொஞ்சம் நேரம் கழித்து, சின்னதாகக் கீறுவதுபோல ஒரு சத்தம் வருவதை ஜேம்ஸ் உணர்ந்தான். எழுந்து பார்த்தபோது, மறுபக்கம் டேவிட்டின் தலை தெரிந்தது. பதறிப்போய் மறுபக்கம் ஓடினான். அங்கே டேவிட் ஓர் ஆணியால், காரில் எதையோ கீறிக்கொண்டிருந்தான். அவ்வளவுதான். பார்த்துப் பார்த்துப் பராமரிக்கும் கார் ஆயிற்றே! ஜேம்ஸுக்கு ஆத்திரமும் கோபமும் பொங்கிக்கொண்டு வந்தது. சுற்று முற்றும் பார்த்தவன், கையில் கிடைத்த ஒன்றை எடுத்துக்கொண்டு வேகமாக டேவிட்டின் அருகே போனான். தான் கையில் வைத்திருந்ததைக்கொண்டு, குழந்தையின் கையிலேயே அடித்தான்... ``செய்வியா... செய்வியா... இனிமே கார்கிட்ட வருவியா?’’

டேவிட்... `இல்லைப்பா... வர மாட்டேன்பா... சாரிப்பா...’’ என்று அரற்றி, அழ ஆரம்பித்தான். ஆத்திரம் தணிந்து, தன் நிலைக்கு வந்ததும்தான் ஜேம்ஸுக்குத் தன் கையிலிருந்தது ஓர் இரும்புக்கம்பி என்பது தெரிந்தது. அதற்குள் ஜேம்ஸின் மனைவி ஓடிவந்திருந்தாள். டேவிட்டின் கைகளில் ரத்தம்... ஜேம்ஸும் பதறிப் போனான். `ஐயோ... குழந்தையைப்போய் இப்படி அடித்துவிட்டோமே...’ எனத் துடித்துப்போனான். குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். 

கதை - நெகிழ்ச்சிக் கதை

 

டேவிட் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டான். ஜேம்ஸ் அடித்ததில், டேவிட்டின் ஒரு விரல் ஒடிந்துபோயிருந்தது. ஜேம்ஸும் அவன் மனைவியும் அழுதபடி வெளியே காத்துக்கிடந்தார்கள். பல மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை டேவிட் கண்விழித்துவிட்டதாக நர்ஸ் தகவல் கொடுத்ததும், உள்ளே ஓடினார்கள். அப்பாவைப் பார்த்ததும் டேவிட் கேட்டான்... ``ஏம்ப்பா... என் இடது கை விரல் ஒண்ணு ஒடிஞ்சிருச்சுனு நர்ஸக்கா சொன்னாங்க... அது திரும்ப வளர்ந்துடுமாப்பா?’’

 

ஜேம்ஸ் இதைக் கேட்டதும் துடித்து அழுதான். சிறிது நேரம் குழந்தையின் அருகே இருந்துவிட்டு, மனைவியை துணைக்கு விட்டுவிட்டு வீடு திரும்பினான். வாசலில் அந்தப் புதிய கார் நின்றுகொண்டிருந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆத்திரமாக வந்தது. ``உன்னாலதானே என் குழந்தைக்கு விரல் போச்சு...’’ என்று அரற்றியவன், ஒரு கட்டையை எடுத்து காரை அடித்து நொறுக்கினான். அடுத்த பக்கம் போனவன், குழந்தை டேவிட் ஆணியால் கீறிய இடத்தைத் தற்செயலாகப் பார்த்தான். அங்கே, இப்படிக் கிறுக்கப்பட்டிருந்தது... `டாடி... ஐ லவ் யூ...’

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பட்ட மரத்தில் துளிர்த்த கலை

 

 
chandigarh1

பொதுவாக, பட்டுப்போன மரங்கள் மீது பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், சண்டிகர் நகரைச் சேர்ந்த கவின்கலை ஆசிரியர் துள்சி ராம் பிரஜாபதிக்குப் பட்டுப்போன மரங்களைப் பார்த்தால் ஆர்வம் துளிர்த்துவிடுகிறது. பட்டுப்போன மரங்களை, கலைப் படைப்பாக மாற்றுவதில் இவருக்குக் காதல். சண்டிகரில் ஏராளமான பட்டுப்போன மரங்களைக் கலைப் படைப்பாக மாற்றி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் இவர். சாலையோர மரங்களைத் தனது கலைப் படைப்புகளுக்காக இவர் தேர்வுசெய்யும் பின்னணி இன்னும் ஆச்சரியப்பட வைக்கிறது.

துள்சி ராமின் சொந்த ஊர் ஃபரிதாபாத். தனது வீட்டில் கலைப் படைப்புகளை உருவாக்குவதற்காக மரங்களைச் செதுக்குவது இவரது வழக்கம். ஆனால், அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் மரங்களைச் செதுக்குவதால் அதிக சத்தம் வருவதாக அவரிடமே புகார் தெரிவித்தனர். அதனால், வேறு வழியின்றி கலைப் படைப்புகளுக்காக வேறு ஒரு கச்சாப்பொருளைத் தேடும் நிலை ஏற்பட்டது துள்சி ராமுக்கு. அப்போது அவருக்கு விக்யான் சாலையிலுள்ள பட்டுப்போன மரங்கள் கைகொடுத்துள்ளன.

அந்தச் சாலை வழியாகச் செல்வோர்கூடத் தொடக்கத்தில் துள்சி ராமைக் கண்டுகொள்ளவில்லை. நாளாக நாளாக ஒவ்வொரு பட்டுப்போன மரமும் ஒரு கதையைச் சொல்லத் தொடங்கியது.

chandigarh

சமூக அவலங்களுக்கு எதிரான கருத்துகளைத் தனது படைப்பில் புகுத்திய துள்சி ராமின் முயற்சிக்குக் கை மேல் பலன் கிடைத்தது. நடைப்பயணம் சென்றவர்கள் துள்சி ராமின் கலைப் படைப்புகளை ரசிக்கத் தொடங்கினர்.

இப்போது வார விடுமுறை, அரசு விடுமுறை நாட்களில் இதற்காகவே ஃபரிதாபாத்திலிருந்து சண்டிகரில் உள்ள விக்யான் சாலைக்கு வந்துவிடுகிறார் துள்சி ராம். சில மணி நேரம் தங்கி மரங்களைச் செதுக்கி, படைப்புகளை உருவாக்குகிறார். அங்குள்ள 8 பட்டுப்போன மரங்களைத் தனது படைப்புகளுக்காகத் தேர்வுசெய்த துள்சி ராம், தற்போது இறுதிக் கட்டத்தையும் எட்டியிருக்கிறார்.

பொதுவாக, பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளைத் தடுக்கும் விதமாக மரச் சிற்பங்களைச் செதுக்குகிறார் துள்சி ராம்.

சரி, பட்டுப்போன மரங்களைக் கலைப் படைப்பாக மாற்றும் தாகம் ஏற்பட்டது ஏன் என்று கேட்டால், மனிதர் மிகச் சாதாரணமாகப் பதிலளிக்கிறார்.

chandigarh2

“பல ஆண்டு காலம் மனிதர்களுக்கு நிழலும் காற்றும் கனியும் கொடுத்த இந்த மரங்கள் கேட்பாரற்ற நிலையிலிருந்ததைப் பார்த்த போது என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

அதனால், சமூகத்துக்கு மீண்டும் பயனளிக்கும் வகையில் இந்த மரங்களை மாற்ற நினைத்தேன். அதன் பயனாகச் சமூகத்துக்கு நல்ல செய்திகளைச் சொல்லும் கலைப் படைப்புகளாக இந்த மரங்களை மாற்றத் தொடங்கினேன்” என்கிறார் துள்சி ராம்.

விக்யான் சாலையிலிருக்கும் பட்டுப்போன மரங்கள் அனைத்தையும் படைப்புகளாக மாற்றிவிட்டால், பிறகு என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கும் துள்சிராமிடம் பதில் இருக்கிறது.

“ஃபரிதாபாத்துக்கு அருகே உள்ள பிற நகரங்களுக்குச் சென்று இதே போன்ற பட்டுப்போன மரங்களைப் படைப்புகளாக மாற்றுவேன்” என்று கூறும் துள்சி ராம், “ஒரு வேளை பட்டுபோன மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினால்கூட, அதிலிருக்கும் கலைப் படைப்புகளை ஏதாவது ஒரு அரசு அலுவலகத்தில் அலங்காரப் பொருளாக வைத்துக்கொண்டாலே போதும்” என்கிறார்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, Bart und Text

#QuoteOfTheDay
ஒரு மனிதரை நேசிக்காமல், அவரை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது.
-ரவீந்திரநாத் தாகூர்.

Link to comment
Share on other sites

எந்த நிறச் சட்டைக்கு எந்த நிற பேன்ட் பெஸ்ட்? #FashionForMen

 
 
Chennai: 

கிர்ர்ருனு அலாரம் அடிச்சதும் சர்ர்ருனு கிளம்பி ஆபீஸ்/கல்லூரி வாசல்ல போய் நிற்கும் இளைஞர்கள் வாழும் காலம் இது. அதுக்கு முன்னாடி குளிக்கிறது, சாப்பிடுறது, வண்டி துடைக்கிறது, வண்டி இல்லாதவங்க பாஸ் வாங்குறது, அப்போன்னு பார்த்து பணம் இல்லாம அவசர அவசரமா ATM முன்னாடி போய் நிற்கிறதுன்னு ஏகப்பட்ட வேலைகள் காலையிலேயே வெயிட்டிங்ல இருக்கும். அதுலயும் டிப்-டாப்பா டிரஸ் பண்றதுக்கு நம்ம பசங்க மிஸ் பண்ணவே மாட்டாங்க. இதுக்குக் காரணம், ஒண்ணு... ஆபீஸ் ரூல்ஸ். இன்னொண்ணு, பொண்ணுங்க முன்னாடி கெத்து காட்டணும். இப்பெல்லாம் பொண்ணுங்களைவிட பசங்கதான் டிரெஸ்ஸை செலெக்ட் பண்ண ரொம்ப நேரம் எடுத்துக்கிறாங்க. அப்படி இருந்தும் சிலரோட தேர்வு தோல்வியிலதான் முடியுது. இதற்குக் காரணங்கள் பல. எந்த நிறச் சட்டைக்கு எந்த நிற பேன்ட் மேட்ச் என்பது முதல், உங்கள் நிறத்துக்கேற்ப சரியான ஷர்ட் மற்றும் பேன்ட்டை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது வரை ஒரு குயிக் அப்டேட்...

ஃபேஷன்

 

நிறங்களை, பொதுவாக டார்க், லைட், பிரைட் என வகைப்படுத்தலாம். லைட் வண்ண சட்டையுடன் டார்க் வண்ண பேன்ட்டையும், டார்க் வண்ண சட்டையுடன் லைட் வண்ண பேன்ட்டையும் மேட்ச் செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், பேட்டர்ன், துணிவகை போன்று வேறு சில எலிமென்ட்களையும் சேர்த்துப் பின்பற்றினால் மிடுக்கான தோற்றம் நிச்சயம் உங்களுடையதே!

அடிப்படையான சில மேட்சிங் நிறங்கள்:

வெள்ளை, ஸ்கை ப்ளூ, பீஜ் மற்றும் பேபி பிங்க் போன்ற லைட் வண்ணச் சட்டையுடன் சாக்லேட், நேவி மற்றும் பிரவுன் போன்ற டார்க் நிற பேன்ட்டை மேட்ச் செய்து உடுத்தலாம்.

 

எந்தக் கலர் சட்டைக்கு எந்தக் கலர் பேன்ட் மேட்ச்

மெரூன், ஊதா, டார்க் ப்ளூ மற்றும் கறுப்பு போன்ற டார்க் வண்ணச் சட்டையுடன் பீஜ், க்ரீம், காக்கி மற்றும் கிரே போன்ற லைட் வண்ண பேன்ட் அணிந்து வசீகரமான தோற்றத்தைப் பெறலாம்.

Dark Shirt and Light Pants

எந்த நிற பேன்ட்டுக்கு எந்த நிற ஷர்ட் மேட்ச்?

Colour Fashion

கடைகளில் கிடைக்கும் சில முக்கிய பேன்ட் நிறங்களுக்கு ஏற்ற ஷர்ட் நிறங்களின் பட்டியல் இங்கே...

கறுப்பு பேன்ட் - வெள்ளை, லைட் கிரே, மெரூன், சிவப்பு, நீலம், ஊதா, லைட் பிங்க், லைட் எல்லோ, லைட் ஆரஞ்சு மற்றும் டர்காய்ஸ் பச்சை.

காக்கி நிற பேன்ட் - கறுப்பு, வெள்ளை, சாம்பல், சிவப்பு, பச்சை, மெரூன், ஊதா, நேவி ப்ளூ, பிங்க் மற்றும் டீல் (Teal).

நேவி ப்ளூ - கறுப்பு, வெள்ளை, சாம்பல், காக்கி, பிரவுன், சிவப்பு, மெரூன், பிங்க், பீச், ஊதா, ராயல் ப்ளூ, ஆக்வா, மெஜென்த்தா, லைட் கிரீன், மஞ்சள் மற்றும் ரஸ்ட்.

க்ரீம் நிற பேன்ட் - கறுப்பு, நேவி ப்ளூ, மெரூன், பிங்க் மற்றும் கடல் பச்சை.

கிரே பேன்ட் - கறுப்பு, வெள்ளை, சிவப்பு, பச்சை, நீலம், ஊதா, லைட் பிங்க், ஆக்வா மற்றும் செர்ரி.


ஸ்கின்டோன்:

ஸ்கின்டோனுக்கு ஏற்ற நிறத்தைத் தேர்ந்தெடுத்தாலே, பாஸ் மார்க் வாங்கிடலாம். டார்க் மற்றும் லைட் ஷேடுகளில் உங்களுக்குப் பொருந்தும் நிறங்களைத் தேர்வுசெய்வதன் மூலம், மெருகேற்றிய தோற்றத்தை நொடியில் பெறலாம்.

வெளிர் ஸ்கின்டோனுக்கு ஏற்ற மேட்சிங் நிறங்கள்: 

வெள்ளை மற்றும் லைட் ப்ளூ சட்டை - கறுப்பு மற்றும் நீல நிற பேன்ட்.

பிங்க் மற்றும் கறுப்புச் சட்டை - நீலம் மற்றும் கிரே நிற பேன்ட்.

சிவப்புச் சட்டை - பீஜ் மற்றும் நீல நிற பேன்ட்.

நிச்சயம் தவிர்க்க வேண்டிய நிறங்கள் - மஞ்சள், ஆரஞ்சு போன்ற பிரைட் ஷேடுகள்.

மாநிற ஸ்கின்டோனுக்கு ஏற்ற மேட்சிங் நிறங்கள்:

பீஜ் நிற சட்டை - பிரவுன் மற்றும் ப்ளூ பேன்ட்.

வெள்ளைச் சட்டை - கறுப்பு மற்றும் நீல நிற பேன்ட்.

பிரவுன் சட்டை - பீஜ் மற்றும் இளமஞ்சள் பேன்ட்.

கறுப்புச் சட்டை - நீலம் மற்றும் கிரே பேன்ட்.

நிச்சயம் தவிர்க்க வேண்டிய நிறங்கள் - எந்த நிறத்திலும் மிகவும் அடர்த்தியான அல்லது லைட்டான நிறங்கள்.
 

டார்க் ஸ்கின்டோனுக்கு ஏற்ற மேட்சிங் நிறங்கள்:

பீஜ் மற்றும் டார்க் கிரே சட்டை - கறுப்பு மற்றும் நீல நிற பேன்ட்.

நீல நிறச் சட்டை - நேவி, கிரே, பிரவுன் மற்றும் பீஜ் நிற பேன்ட்.

காக்கி நிறச் சட்டை - கறுப்பு மற்றும் பிரவுன் பேன்ட்.

பிரவுன் சட்டை - பீஜ் மற்றும் காக்கி பேன்ட் .

நிச்சயம் தவிர்க்க வேண்டிய நிறங்கள் - பிரைட் அல்லது அடர்த்தியான ஷேடுகள்.
 

சரியான துணிவகை:

Right Clothing

சரியான நிறம்போல சரியான துணிவகையைத் தேர்ந்துடுப்பதும் அவசியம். லினன், கார்டராய், காட்டன், டெனிம் என ஏகப்பட்ட துணிவகைகள் உள்ளன. அதன் சரியான மேட்ச் லிஸ்ட் இங்கே...

லினன் சட்டை - டெனிம் அல்லது லினன் பேன்ட்.

கார்டராய் அல்லது Fleece சட்டை - டெனிம், காக்கி அல்லது லினன் பேன்ட்.

சில்க் அல்லது சிந்தடிக் சட்டை - லினன், டெனிம் அல்லது பாலிஸ்டர் பேன்ட். 

டெனிம் ஷர்ட், செக்டு அல்லது சாலிட் சட்டை - காக்கி அல்லது சீனோஸ் அணிந்து மிடுக்கான தோற்றத்தைப் பெறலாம்.

என்றும் இளமை:

Occasion Wear

பார்ட்டி, திருமண வரவேற்பு, அலுவலகம் என இடத்துக்கேற்ப உடைகளை உடுத்துவதும் முக்கியமான ஒன்று. விழாக்காலங்களில் உடை எடுக்கப் போனாலே அக்கபோருதான் என்று மனக்குரலிட்டுக்கொண்டிருப்பவர்களுக்கான டிப்ஸ்...

திருமண வரவேற்பு, ஈவ்னிங் பார்ட்டி போன்ற நிகழ்வுகளுக்கு ஏற்ற மேட்சிங் டிப்ஸ், கறுப்பு ஷர்ட் மற்றும் வெள்ளை பேன்ட் அல்லது நேவி ப்ளூ ஷர்ட் மற்றும் காக்கி பேன்ட்.

அலுவலகம் செல்பவர்களுக்கு, வெள்ளை ஷர்ட்டுடன் பீஜ், டார்க் கிரே அல்லது நீல நிற பேன்ட் பக்கா மேட்ச் அல்லது லைட் ப்ளூ ஷர்ட்டுடன் டார்க் கிரே பேன்ட் அணிந்து செல்லலாம். 

கல்லூரி செல்லும் ஆண்களுக்கு, என்றும் துணையாக இருப்பது ஜீன்ஸ். அதனுடன், பிரின்ட்டட் டீ-ஷர்ட் அல்லது ஷர்ட்டுடன் ஸ்னீக்கர்ஸ் ஷூ அணிந்தால் மிடுக்கான தோற்றத்தைப் பெறலாம்.

மேலும் சில டிட்-பிட்ஸ் :

 

பொதுவாக பிளைன் பேன்ட்டுக்கு செக்டு அல்லது striped ஷர்ட் உடுத்தலாம்.
செக்டு அல்லது striped பேன்ட்டுடன் சாலிட் அல்லது போல்கா டாட் பதித்த ஷர்ட்டை அணிந்து மேட்ச் செய்யலாம். 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வலைபாயுதே

 

சைபர் ஸ்பைடர்

 

facebook.com/Hariharasuthan Thangavelu
அதிகாலைல ஓடுனா ஹார்ட்டுக்கு நல்லதுனு சொன்னாங்க. அதனால 4 மணிக்கு அலாரம் வச்சு 4 வது கி.மீ ஓடும்போது மூச்சிரைக்க ஆரம்பிச்சுருச்சு!

அடுத்தாப்ல ஒரு வயசானவரு ஓடி வந்தாரு... “என்ன தாத்தா இப்பெல்லாம் மூச்சு இரைக்கிறதில்லையானு கேட்டேன்!”

“எங்க தம்பி, செத்ததுக்கு அப்புறம்தான் நல்லாருக்கேன்”னாரு... திரும்பி வூட்டுக்கு ஓடியாந்துட்டேன்!

twitter.com/Selvatwitz
கீழ விழுந்து குரங்குப் பெடல்ல சைக்கிள் கற்றுக்கொண்ட பிறகு, பக்கத்தில் இருக்கும் கடைக்குப் போகச் சொன்னாகூட தூரமாக இருக்கும் கடைக்குச்சென்று பொருள் வாங்கிட்டு வந்தது
#நான்_அனுபவித்தது

p110_1519226753.jpg

twitter.com/Kadharb32402180
காபி போடுற மாதிரியான ஈசியான வேலையெல்லாம் அவங்க பாத்துக்குறாங்க.... அதைக் குடிக்கிற மாதிரி கஷ்டமான வேலையெல்லாம் என் தலைல கட்டிடுறாங்க... சொக்கநாதா..!

twitter.com/HAJAMYDEENNKS
தனிமை என்பது யாரும் இல்லாதது அல்ல..யாரும் கண்டுக்காதது!

twitter.com/MJ_twets
அம்மா, அப்பா ஸ்தானத்தில் அம்மு என்று ஒரு கேரக்டர் எல்லோருடைய மனதிலும் இருக்கிறது...
#வெரிஃபைடு

facebook.com/Muthu Ram
சிக்கன் ரைஸ் ஒண்ணு வாங்குனா ஒண்ணு ஃப்ரீனு எழுதி வச்சிட்டு, ஒன் பை டூ போட்டு தரானுங்க, அகராதி புடிச்சவனுங்க.

twitter.com/Thaadikkaran
நான் உங்க கடைக்கு ரெகுலர் கஸ்டமர்ங்க என்பதே கடைகளில் அதிகமாகச் சொல்லப்பட்ட பொய்.!

twitter.com/abuthahir707
Credit Card மாத வருமானத்தைச் சுரண்டுகிறது...
Debit Card ஆயுள் வருமானத்தையும் சுரண்டுகிறது!

twitter.com/ArasanMkm
கோபத்தில், மிருகத்தை
விஞ்சுகிறான் மனிதன்...
பாசத்தில், மனிதனை
விஞ்சுகிறது மிருகம்.

twitter.com/mufthimohamed1
அனைவரையும் திக்குமுக்காட வைப்பதுதான் `திங்கட்கிழமை’

p110a_1519226772.jpg

twitter.com/stalinsk50
ஸ்கூல் படிக்கிற காலத்திலயே நான் நிறைய படிச்சு ஏழை மக்கள காப்பாத்தணும்னுதான் நினைச்சேன்..
ஆனா படிச்சதுக்கு அப்பறம்தான் தெரிஞ்சுது என்னைய காப்பாத்திக்கிறதே பெரிய கஷ்டம்னு!

twitter.com/vandavaalam
சென்னை ஆட்டோக்காரங்க சொல்ற ரேட்டை நாம முதல் வாட்டியே ஒத்துக்கிட்டோம்னா, அவங்க அதிர்ச்சியாகி அட்ரஸை ரெண்டு மூணுவாட்டி செக் பண்ணிக்குறாங்க!

twitter.com/arumugamsony
5 ரூபாய் தண்ணி கிளாசை சங்கிலிபோட்டு, 1 ரூபாய் பேனாவைக் கயிறுபோட்டுக் கட்டிப் பாதுகாத்து, 11,000 கோடியைப் பறிகொடுத்தால் அதற்குப் பெயர் பேங்க்.

twitter.com/HAJAMYDEENNKS
அண்ணாச்சி மளிகைக் கடைக்குப் போனால் நமக்குத் தேவையானதை வாங்குவோம்..
கார்ப்பரேட் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனால் அவர்கள் விற்க நினைப்பதை எல்லாம் வாங்குவோம்!

twitter.com/DhasthanSatham
இன்ஜினீயரிங் காலேஜ் பஸ்ல கெத்தா உட்கார்ந்து இப்போ போறவனை எல்லாம் பார்க்கும்போது பயங்கரமா சிரிப்பு வருது... நாங்கூட இதுமாதிரி ஒரு காலத்துல!

p110b_1519226796.jpg

twitter.com/iamlaxmi1
காசு கொடுத்து முறையாக வாங்கினாலும் முட்டையை பிரியாணிக்குள் மறைத்து வைத்துதான் தருகிறார்கள்!

twitter.com/thoatta
‘வெரட்டி வெரட்டி வெளுக்கத் தோணுது’ பாட்ட கோலியத் தவிர யாருக்கும் டெடிகேட் பண்ண முடியாது!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

உங்களுக்குத் தெரியுமா?

பிப்ரவரியில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிராமம் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பு.

Link to comment
Share on other sites

ஒரு பூமா வளர்ந்த கதை - ஓராயிரம் பூமா அழிந்த கதை - இது ஒரு "இரண்டு" கதை!

 
 

அழிவின் கதை - பகுதி 1:

1900-களின் ஆரம்பம். அந்தக் காடுகளில் இவை நிறையவே இருந்தன. 

 

தலையிலிருந்து வால் வரை கணக்கிட்டால் தோராயமாக 8 அடி நீளம். எடை தோராயமாக 64 கிலோ. ராஜநடை என்று முழுமையாகச் சொல்ல முடியாவிட்டாலும்கூட, அதன் நடை கம்பீரம்தான். ஆனால், அதைப் பார்த்துவிடுவது அத்தனை எளிதான காரியமல்ல. கண்களில் சிக்கவே சிக்காது. இதற்குப் பல பெயர்கள் இருக்கின்றன. பொதுவாக, "ஈஸ்டர்ன் பூமா" (Eastern Puma) அல்லது "ஈஸ்டர்ன் கவுகர்" (Eastern Cougar). இது மட்டுமில்லாமல், இதற்கு மலை சிங்கம் (Mountain Lion), கேட்டமவுன்ட் (Catamount) என்றெல்லாம் கூட சொல்வார்கள். ஆனால், மரபணு ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இவற்றுக்கு எத்தனையோ விதமான பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும்கூட, எல்லாம் ஒன்றுதான் என்பது நிரூபணமாகியுள்ளது. அதாவது, இந்த மிருகத்தை ஒவ்வொரு இடத்திலும் இதை ஒவ்வொரு பெயர் வைத்துக் கூப்பிடுவார்கள். அவ்வளவே! 

அமெரிக்காவின் மிஸிஸிபி ஆற்றுக்குக் கிழக்குப் பகுதியிலுள்ள காடுகளில் இவை அதிகமாகக் காணப்பட்டன. ஆனால், கடந்த 80 ஆண்டுகளில் வடகிழக்கு அமெரிக்காவில் இதைப் பார்த்ததாக எந்தப் பதிவுகளும் கிடையாது. கடைசியாக 1938-ல், அமெரிக்கா - கனடா எல்லையிலிருக்கும் மெயின் (Maine) காட்டில் இதை ஒருவர் வேட்டையாடினார். அதன் பிறகு இதுவரை இதைப் பார்த்ததாக யாரும் சொல்லவில்லை.

அழிந்துப் போன உயிரினப் பட்டியலில் பூமா

முக்கியச் செய்தி. இது செய்தி என்பதைக் காட்டிலும் முக்கியமான தகவல். அறிந்துகொள்ள வேண்டியது:
United States of America-வில் இந்த பூமாக்களைப் பாதுகாக்கும் பொறுப்புகளும், அதிகாரங்களும் அந்தந்த மாகாணங்கள் இடத்தே விடப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவின் பல மாகாணங்களில் இந்த பூமாக்களை வேட்டையாடுவது சட்ட விரோதம் அல்ல. 

வளர்ச்சியின் கதை - பகுதி 1:

1930-களின் ஆரம்பம். அந்தப் பகுதியின் காடுகளில் எப்போதும் குண்டுச் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும். 

ஜெர்மனியின் இந்தக் கிராமத்தின் பெயர் `ஹெர்சொன்கெனரா' (Herzongenaurach). அடால்ஃப் (Adolf) மற்றும் ருடால்ஃப் (Rudolf) இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். அவர்களின் அம்மா துணிகளை சலவை செய்வதற்காக வைத்திருந்த அறையில் தங்கள் தொழிலைத் தொடங்குகிறார்கள். ருடால்ஃப் தன் கையால் ஷூக்கள் செய்ய, அடால்ஃப் அதைக் கொண்டுபோய் விற்பனை செய்வான். அடால்ஃபுக்கு நல்ல வியாபார புத்தி. தங்களின் ஷூ நிறுவனத்திற்கு 'டேஸ்லெர்' (Dassler) எனும் தங்கள் குடும்பப் பெயரை வைக்கிறார்கள். ருடால்ஃபின் தரமான தயாரிப்பும், அடால்ஃபின் புதுமையான வியாபார யுக்தியும் அவர்கள் ஷூ நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்கிறது.

ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். ஒருவர் பின் ஒருவராகத் திருமணம் செய்துகொள்கிறார்கள். புது உறவுகளாக வந்த இரண்டு பேரின் மனைவிகளுக்கும் சரிவரவில்லை. எந்நேரமும் சண்டை, சச்சரவு. சின்ன சின்னதாகப் பிளவுகள் ஏற்படுகின்றன. ஆனால், தொழில் மிக வேகமாக வளர்ச்சியடைகிறது. குறிப்பாக, 1936 பெர்லினில் நடந்த ஒலிம்பிக்கில் ஜெஸ்ஸி ஓவனுக்கு தங்கள் நிறுவன ஷூவை இவர்கள் ஸ்பான்ஸர் செய்கிறார்கள். 100மீ, 200மீ, நீளம் தாண்டுதல், 4*100 மீட்டர் ரிலே என நான்கிலும் தங்கத்தை வெல்கிறார் ஜெஸ்ஸி. டேஸ்லெர் நிறுவனத்தின் பெயர் உலகப்புகழ்பெறுகிறது.

ஜெஸ்ஸி ஓவன்ஸ்

அது இரண்டாம் உலகப் போர் சமயம். திடீர், திடீரென விமானங்கள் வானில் பறந்து குண்டு மழை பொழியும். அன்றும் அப்படித்தான். குண்டு பொழியத் தொடங்கியதுமே ருடால்ஃபும் அவரின் மனைவியும் ஒரு அறைக்குள் போய் பதுங்கிக்கொண்டார்கள். ஏற்கெனவே வேறு இடத்தில் பதுங்கியிருந்த அடால்ஃபிற்கு அந்த இடம் பாதுகாப்பானதாய் தோன்றவில்லை. சில நிமிடங்கள் குண்டு மழை பொழிவது நின்றதுமே, ருடால்ஃப் பதுங்கியிருந்த அறைக்கே தன்னுடைய மனைவியோடு வந்து சேர்கிறார். அவர் அந்த அறைக்குள் நுழையவும் மேலே புது விமானம் வந்து குண்டு போடத் தொடங்கவும் சரியாக இருந்தது.

"ஸ்ஸ்ஸ்..........(பீப்) திரும்ப வந்துட்டானுங்க........(பீப்)" என்று சொன்னார் ருடால்ஃப். திரும்ப வந்த விமானத்தைப் பார்த்து ருடால்ஃப் சொன்னதை, தாங்கள் வந்ததைப் பார்த்துதான் இப்படிப் பேசுகிறார்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள் அடால்ஃபும் அவரின் மனைவியும். குண்டு மழை சத்தத்திற்கு நடுவே நான்கு பேரும் பெரும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். எல்லாம் முடிந்தது. எல்லாம் பிரிந்தது. 

அழிவின் கதை - பகுதி 2:

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதி காடுகளில் இருந்த பூமாக்கள் சரமாரியாக வேட்டையாடப்பட்டன. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக அந்தக் காடுகளில் பூமா இருப்பதை யாருமே பார்க்கவில்லை. 1970-களிலேயே அரசு அதை `அழிந்துகொண்டிருக்கும் உயிரினங்களின்' (Endangered Species)  பட்டியலில் பூமாவை வைத்தது. ஆனால், எந்த மாற்றமும் இல்லை. 2011-ல் இந்த உயிரினம் குறித்த இருப்புகளை அறிய ஒரு குழு அமைக்கப்பட்டது. 2015-ல் அந்தக் குழு, 'இந்த உயிரினம் இந்தப் பகுதியில் மீட்க முடியாத அழிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது' என்று அறிக்கை கொடுத்தது. இப்போது கடந்த மாத இறுதியில், 'அந்த இனம் மொத்தமாக அழிந்துவிட்டது' என்று அறிவித்திருக்கிறது அரசு. 

அழிந்து போன பூமா

ஒரு வகையில் இந்த இனம் அழிந்துவிட்ட விலங்கு பட்டியலில் வந்ததும் நல்லதுதான் என்கிறார்கள் சூழலியலாளர்கள். அப்படியாவது மற்ற மாகாணங்களில் இந்த உயிரினத்தைக் காக்கும் பொருட்டு ஏதாவது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.

பூமாவின் அழிவு மனிதர்களுக்கு ஒரு பிரச்னையைக் கிளப்பியுள்ளது. பூமாவின் முக்கிய உணவு வெள்ளை வால் மான்கள் (White Tailed Deers). பூமாக்கள் அழிந்துபோனதால் இந்தப் பகுதியில் மான்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேயிருக்கிறது. அந்த மான்களின் உடலில் ஒருவிதமான பூச்சி இருக்கும். அந்தப் பூச்சிதான் 'லைம்' (Lyme) எனும் நோய்க்கான முக்கிய காரணி. அதனால் மனிதர்களுக்கு லைம் நோயின் தாக்குதல் இந்தப் பகுதியில் அதிகமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளை வால் மான்

வளர்ச்சியின் கதை - பகுதி 2:

பிரிந்த இரண்டு சகோதரர்களும் தனித்தனியே ஷூ தயாரிக்கும் நிறுவனங்களைத் தொடங்கினர். அடால்ஃபின் செல்லப் பெயர் அடி (Adi) தங்கள் குடும்பப்பெயரான டேஸ்லரையும் அதோடு இணைத்து "அடிடாஸ்" (ADIDAS) என்று தன் நிறுவனத்திற்குப் பெயரிட்டார். ருடால்ஃப்பின் செல்லப் பெயர் "ரூடா" (Ruda). அதைத் தன் நிறுவனத்திற்கு வைக்கப் போனார்... ஆனால், கடைசி நிறுவனத்தில் நண்பர் ஒருவர் அந்தப் பெயர் அத்தனை சிறப்பாக இல்லை என்று சொல்லவும், சில நொடிகள் யோசித்த ருடால்ஃப் தன் நிறுவனத்திற்கு "பூமா" (PUMA) என்று பெயரிட்டார். 

அடிடாஸ்பூமா

இரண்டு நிறுவனங்களும் இன்று உலகின் மிக முக்கிய ஷூ நிறுவனங்கள். ஆனால், ருடால்ஃபும், அடால்ஃபும் கடைசி வரை ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவேயில்லை. இருவரும் இறந்தபின்னர்கூட அவர்களின் கல்லறைகள் எதிர் எதிராகத்தான் அமைக்கப்பட்டன. பல ஆண்டுகளாக இரண்டு நிறுவனங்களும் பெரும் போட்டியோடேதான் இயங்கி வந்தன. பின்னர், 2009-ல் ஜெர்மனியில் அமைந்திருக்கும் அந்த நிறுவனங்களின் நகரில் இருந்த ஒரு கால்பந்து மைதானத்தில் நட்பு ரீதியிலான ஒரு போட்டியை நடத்தினர். அதில் இரண்டு நிறுவனங்களும் கலந்துகொண்டதோடு பல ஆண்டு விரோதம் முடிவுக்கு வந்தது. 

கதை முடிந்தது. 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பறக்கும் பல்லி... கருந்தேள்... ராஜநாகங்கள்... அகும்பே - மினி அமேசான்! ஊர் சுத்தலாம் வாங்க

 

 

Agumbe

நம் வாழ்க்கை முழுதும் ஏதோ ஒரு விஷயம் நம்மை அண்டியோ, அரவணைத்தோ வந்து கொண்டே இருக்கும். அதுபோல், தமிழ்நாட்டுக்கு - கர்நாடகா என்று நினைக்கிறேன். ஏதோ வாட்ஸ்-அப் ஃபார்வேர்டு மெசேஜில் படித்ததுபோல் ஞாபகம். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தேவைப்படும்போது கர்நாடகா தேவைப்படுகிறது;  தமிழ்நாட்டுக்கு ஒரு முதலமைச்சரை கர்நாடகாதான் தந்தது; தமிழ்நாட்டில் பிறந்த சசிகலாவுக்கு ஜெயில் தண்டனையைத் தருவதற்கும் கர்நாடகா தேவையாய் இருக்கிறது; இங்கே ஒரு சூப்பர் ஸ்டாரையும் கர்நாடகாதான் தர வேண்டியிருக்கிறது. இந்தமுறை எனக்கும் அது பொருந்திவிட்டதுதான் ஆச்சர்யம். நிற்க! என் ‘ஊர் சுத்தல்’ டைரியின் முதல் பக்கத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு, மிகப் பெரிய த்ரில்லிங் நினைவுகளாக கர்நாடகாவில் உள்ள அகும்பே மழைக்காடுகள், (Agumbe) என் மெடுல்லா ஆப்லேங்கேட்டாவில் வெள்ளை ஆம்ப்ளேட் போல் பசுமையாய் இருக்கின்றன.

Agumbe

அகும்பேவின் அழகும், த்ரில்லிங்கும் அப்படி. செய்திகளை முந்தித் தரும் கூகுளில், அகும்பே என்று அடித்தால் ‘ரெயின் ஃபாரெஸ்ட்’ என்றுதான் வரும். அதாவது, இந்தியாவில் சிரபுஞ்சிக்குப் பிறகு அதிகமாய் மழைப் பொழிவு நடக்கும் இடம் அகும்பே என்று கூகுள் சொல்வது உண்மைதான். ஆனால், அதைத் தாண்டி அகும்பேவின் ஸ்பெஷல் - 'கிங் கோப்ரா' எனும் ராஜநாகங்கள். சில கட்சிகளில் தொண்டர்களைவிட தலைவர்கள் அதிகமாய் இருப்பார்கள். அதுபோல்தான் அகும்பே. அகும்பேவின் மொத்த மக்கள் தொகையே 600 முதல் 700தான் என்றார்கள். ஆனால்,  பாம்புகள் ஆயிரக்கணக்கில் உண்டு. அதிலும் ராஜநாகங்கள் எக்கச்சக்கம். ‘‘கனவுல பாம்பு வந்தா நல்லது நடக்கப் போகுதுன்னு அர்த்தம்டா’’ என்று சின்ன வயசில் என் பாட்டி சொன்னது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அகும்பேவில் நான் கண்ட சில ராஜநாகங்கள் இப்போது நினைத்தாலும் மயிர்க்கூச்செறிகின்றன. ராஜநாகங்களின் தலைநகரம் என்று பெயரே எடுத்துவிட்டது அகும்பே. 

கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்தான் அகும்பே. பெங்களூருவில் இருந்து 360 கி.மீ. சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 350 கி.மீ. சுற்றிலும் மழைக்காடுகள், விதவிதமான மூலிகை மரங்கள், பழைய காலத்து வீடுகள் என்று யாரோ பிளாக்கில் எழுதியிருந்ததைப் படித்ததுமே பரவசமாகிக் கிளம்பி விட்டேன். 

காரில்தான் கிளம்பினேன். ஒரே மிதி... பெங்களூர் வந்திருந்தது. வேலூர் வழியில் வாலாஜா பேட்டை டோல்கேட்டுக்கு முந்தைய சாலையில், ஏற்கெனவே நான் உயிர் தப்பித்த கதை தெரியாதவர்களுக்காக... க்ளிக்! குண்டு வெடித்த பிறகு கடுமையாக நடக்கும் சோதனை மாதிரி... கொலை நடந்த பிறகு அந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது மாதிரி.. அந்த இடத்தில் மட்டும்தான் மிகவும் கவனமாக வந்தேன். ஆனால், நெடுஞ்சாலைப் பயணங்களில் சிக்கல்கள் எந்த ரூபத்திலும் வரும் என்பதை உணர்ந்த தருணம் அது. சரக்கு லாரி ஒன்று வலது பக்க இண்டிகேட்டரைப் போட்டு இடது பக்கத்துக்கு ஒதுங்க, நானும் இடதுபுறத்தில் ஒதுங்க... ‘‘யோவ், அதான் ரைட்ல இண்டிகேட்டர் போட்டு உன்னைப் போகச் சொன்னேன்ல...’’ என்று மேலும் சில எக்ஸ்ட்ரா வார்த்தைகள் போட்டு 80-கள் ஸ்டைலில் அன்பாகத் திட்டினார் லாரி டிரைவர். அதாவது, அவர் வலது பக்கம் இண்டிகேட்டர் போட்டால், நாம் வலது பக்கம் போக வேண்டும் என்று அர்த்தமாம். கொஞ்சம் பழைய புரளிதான்; ஆனா எனக்குப் புதுசாவுல்ல இருக்கு!

பெங்களூருவில் இருந்து அகும்பேவுக்கு இரண்டு வழிகளில் செல்ல முடியும். ஒன்று - சிக்மகளூர் வழி; இன்னொன்று - ஷிமோகா. ‘சிக்மகளூர்’ பெயரே கிக் ஆக இருந்தது. ஸ்கெட்ச் போட்டேன். பெங்களூரு வழியாக வேறு மாவட்டங்களுக்குச் செல்பவர்களுக்கு ஒரு டிப்ஸ். பெங்களூரு டோல்கேட் தாண்டி ‘நைஸ் ரோடு’ வழியாக நுழைந்தால்தான் எந்த இலக்கையும் நைஸாக, ஈஸியாக அடைய முடியும். முதல் டோல் தாண்டி, கொஞ்ச தூரம் சென்று இடதுபுறம் திரும்பினால் நைஸ் ரோடு. மறந்து போய் நேராகப் போனால்... பெங்களூரு டிராஃபிக்கில் சிக்கி ரிட்டர்ன் ஆவதற்குள்... ரஜினி அரசியலுக்கு வரும் காலமே கனிந்துவிட வாய்ப்புண்டு. 

நைஸ் ரோடு டோலுக்கு 165 ரூபாய் கட்டணம் வாங்கினார்கள். கர்நாடகா ஹைவேஸில் பயணிப்பதற்கு ரொம்பவும் பொறுமை வேண்டும். ஹைவேஸ் என்று பெயர் வைத்ததற்குப் பதில் ‘ஸ்பீடு பிரேக்கர்வேஸ்’ என்று வைத்திருக்கலாம். எத்தனை தடதட ஸ்பீடு பிரேக்கர்கள்? விட்டால் வீட்டுக்குள்கூட ஸ்பீடு பிரேக்கர் வைத்திருப்பார்கள்போல! 

Agumbe

செம குளிர் அடித்தது. சிக்மகளூர் வந்திருந்தது. இதுவும் ஒரு அருமையான டூரிஸ்ட் ஸ்பாட்தான் என்றார்கள். சின்ன மகளின் ஊர் என்று அர்த்தமாம். கேப்பைக் களி, சிக்கன் சைட் டிஷ், கட்டஞ்சாயா, லேசான மழைத் தூறல், ஜில் பனி, போஸ்டர்களில் பயமுறுத்திய கன்னட ஹீரோக்கள், மீன் வறுவல்கள் என்று சிக்மகளூர் ‘கிக்’ ஆகவே இருந்தது. இரவு தங்கிவிட்டு மறுநாள் சில் பயணம்.

பாதி தூரம் தாண்டிவிட்டேன். ‘என்னடா இது சம்பந்தமே இல்லாம மழை தூறுது; நிக்குது’ என்று அடிக்கடி வைப்பரை மாறி மாறி ஆன்/ஆஃப் செய்தேன். காருக்கே டயர்டு ஆகியிருக்கும். அப்புறம்தான் தெரிந்தது - தென் இந்தியாவில் அதிகமாக மழை பொழியும் இடமான அகும்பேவை நெருங்கிவிட்டேன் என்பது. காரும் மனசும் ஈரமாகவே இருந்தது. காரில் இல்லாமல், பொதுப் போக்குவரத்தில் நீங்கள் அகும்பேவுக்கு ப்ளான் பண்ணியிருந்தீர்கள் என்றால், 54 கி.மீ தூரம் தள்ளியுள்ள உடுப்பி ரயில் நிலையம்தான் உங்களுக்கு பெஸ்ட். 

Agumbe

அகும்பே வந்துவிட்டது. சில் வெயிலும், ஜில் மழையும், ஜிவ் காற்றும்... அந்நியன்/ரெமோ/அம்பி போல் மாறி மாறி பெர்ஃபாமென்ஸ் காட்டியது. ஒரு முடிவுக்கே வர முடியவில்லை. வித்தியாசமாக இருந்தது க்ளைமேட். அகும்பேவில் உள்ள ‘மழைக்காடுகள் ஆராய்ச்சி நிலையம்’ போக வேண்டிய இடம். மூலிகைக் குணங்கள் நிறைந்த செடி கொடிகள், மலர்கள், மரங்கள் என்று வெரைட்டியாகப் பராமரித்து வருகிறார்கள்.

Agumbe

 ‘அனகோண்டா’ படத்தில் வரும் ரத்த மஞ்சரிப் பூக்கள் மாதிரி ஒரு பூ பார்த்தேன். சிவப்பு வண்ணத்தில் சாதாரண சாமந்தி போல்தான் இருந்தது. ஆனால் மூலம், இதய நோய்கள், காச நோய் என்று எல்லாவற்றுக்கும் இதன் இதழும் வேரும் மருந்து என்று அடுக்கினார்கள். ‘ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்’ என்பதுபோல், ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு ஹீலிங் குணம் இருந்தது.

Agumbe

அகும்பேவில் மிகப் பழைமையான ஒரு வீடு இருக்கிறது. அகும்பே வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மராமத்துப் பணிகள் எதுவும் நடைபெறாமல், பழைமை மாறாமல் அப்படியே இருக்கிறது. மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மணனின் சகோதரர் ஆர்.கே.நாராயணன் எழுதிய ‘மால்குடி டேய்ஸ்’ எனும் புகழ்பெற்ற டி.வி. சீரியல் இந்த வீட்டில்தான் படமாக்கப்பட்டது என்றார்கள். ஓட்டினால் வேயப்பட்ட கூரை, வதவதவென வீட்டைத் தாங்கிப் பிடிக்கும் தூண்கள், அகன்ற திண்ணை, கைவினைப் பொருட்கள், மாட விளக்குத் தூண்கள் என்று 1800-களுக்கு நம்மைக் கொண்டு செல்கிறது வீட்டின் அமைப்பு. 

Agumbe

அகும்பேவின் பெயர் சொல்லும் முக்கியமான நான்கு அருவிகள் இங்கே உண்டு. பர்கானா அருவி... கூட்லு தீர்த்த அருவி... ஓநேக் அபி அருவி... ஜோகி கவுண்டி அருவி.. (Jogi gundi) கர்நாடகாவில் இதை வேறு மாதிரி உச்சரிக்கிறார்கள்.

‘அருவியில தலை காட்டிட்டு டிரெஸ் சேஞ்ஜ் பண்ணிட்டு வந்திடலாம்’ என்று சட்டு புட்டென நினைத்த மாத்திரத்தில் இந்த அருவிகளுக்குக் கிளம்பி விட முடியாது. விக்ரமாதித்யன் கதைகளில் வரும் கிளியின் உயிர் ஏழு கடல்; ஏழு மலை தாண்டி இருக்குமே... அது மாதிரி ஒவ்வொரு அருவிகளுக்கும் குறைந்தது 3 கி.மீ-யாவது காடு, மலைகளில் ட்ரெக்கிங் போய்த்தான் வர வேண்டும். 

Agumbe

பர்கானா அருவி, தூரத்தில் இருந்து பார்த்தாலே மிரட்சியாகவும், பரவசமாகவும் இருந்தது. சுற்றிலும் பச்சைப் பசேல் மலைகள்... நடுவே வெள்ளை நிறத்தில் மெல்லிசான கோடுபோல் பர்கானா அருவி விழும் அழகு மெஸ்மரிசம் பண்ணுகிறது. கன்னாபின்னாவென உயரத்தில் இருந்து விழும் இதில் தலை என்ன... விரல்கூடக் காட்ட முடியாது. ஆனால், பர்கானாவில் இருந்து பிரிந்து விழும் கிளை அருவி நீர் விழும் இடத்தில், கெட்டிக் கிடக்கும் நீரில் குளிக்கலாம். இது எல்லா அருவிகளுக்கும் பொருந்தும்.

காரை நிறுத்திவிட்டு, கால் வலிக்க, மனம் லயிக்க 4 கி.மீ காட்டுக்குள் நடந்து சென்று ஜோகி கவுண்டி அருவியை அடைந்தேன். அருவி எங்கிருந்து விழுகிறது என்றே தெரியவில்லை. ஆனால், பாறை இடுக்குகளிலுந்து பொத பொதவென வந்து விழுந்தபடி இருந்தது தண்ணீர். ‘‘இப்போ நான் ஆள் அரவமே இல்லாத.. பாம்புகள் நிறைஞ்சிருக்கிற ஜோகி கவுண்டி அருவிக்கிட்டே இருக்கேன்’’ என்று ‘பியர் கிரில்ஸ்’ மாதிரி ஒரு வீடியோ பைட் போட்டால்... லைக்ஸ் பிய்ச்சுக்கொண்டு போகலாம். ‘அருவித் தண்ணியில் குளிக்கும்போது, பாம்புகள் ஜாக்கிரதை’ என்று ட்ரெக்கிங் போகும் முன்னே பற்றி எச்சரிந்திருந்தார்கள். நிஜம்தான். பாறைகளுக்கு இடுக்கில்... அருவி நீரில்... புதர்களுக்கு மறைவில்.. ஏகப்பட்ட பாம்பு பிரதர்களைப் பார்த்தேன். 

Agumbe

ஜோகி கவுண்டிக்குப் பக்கத்தில் ஒரு குகைக்குக் கூட்டிச் சென்றார் கைடு. கொஞ்ச காலத்துக்கு முன்பு இது விலங்குகளின் குகையாக இருந்ததாகவும், ராஜநாகங்கள் விலங்குகளை விரட்டி விட்டு அந்த இடத்தை ஆக்ரமித்துக் கொண்டதாகவும் புராணக் கதை சொன்னார் கைடு. குகைக்கு அருகில் பயத்தை மறைத்தபடி ஒரு செல்ஃபி எடுத்து வைத்துக் கொண்டேன். 

126 அடி உயர கூட்லு தீர்த்த அருவிக்குப் பக்கத்தில் குட்டி ராஜநாகமெல்லாம் பார்த்தேன். பிறவிப் பயனே அடைந்ததுபோல் இருந்தது. சீதா நதிக்கு இந்த அருவிதான் ஆதாரம் என்கிறார்கள். கூட்லு தீர்த்தம் குளிப்பதற்கேற்ற அருவி என்றார் கைடு. ஆனால், நல்ல நீச்சல் தெரிந்தவர்கள்தான் இங்கே ஸ்விம் பண்ண முடியும். அகழியின் ஆழம் மழைக் காலங்களில் கிட்டத்தட்ட 40 முதல் 50 அடி வரை இருக்குமாம். ஓநேக் அபி அருவிதான் சுற்றுலாவாசிகளின் செல்லம். இங்கே படிகளெல்லாம் அமைத்திருக்கிறார்கள். எனவே, படி ஏறிச் சென்று ஓநேக் அபியில் அதகளம் பண்ணலாம். 

அகும்பே போன்ற காட்டுப் பகுதியில் தங்குவது ஒரு கிக்கான விஷயம். நான் அகும்பேவில் தங்கியதற்குக் காரணம், கௌரிஷங்கர். பட்டுக்கோட்டை பிரபாகர், தஞ்சாவூர் கவிராயர் என்று ஊர்களைப் பிரபலப்படுத்தும் பிரபலங்கள்போல், கௌரிஷங்கரும் அகும்பேவைப் பிரபலப்படுத்தும் ஒரு பிரபலம். ‘அகும்பே கௌரிஷங்கர்’ என்றால்தான் எல்லாருக்கும் தெரிகிறது. ‘‘இல்லையென்றால், ராஜநாகம் கௌரிஷங்கர் என்றும் சொல்லலாம்’’ என்றார் கௌரிஷங்கர். இதற்குக் காரணம் இருக்கிறது. ‘ஆகாயம் இல்லாத இடம் ஏது’ என்பதுபோல், ‘நாடோடிகள் இல்லாத ஊர் ஏது’ என்பதை நிரூபிப்பவர் கௌரிஷங்கர். ராஜநாகங்களிடம் இருந்து அகும்பேவைக் காக்கும் நாடோடி. ஆம்! ஏற்கெனவே சொன்னபடி அகும்பேவின் மொத்த மக்கள் தொகையைவிட ராஜநாகங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், புலிகளிடம் இருந்து கிராமத்தைக் காக்கும் புலிமுருகன்போல், அந்த ஊரைக் காக்கும் நாடோடியாக வலம் வருகிறார் கௌரிஷங்கர். ‘‘அதுக்காக பாம்புகளைக் கொன்று மக்களைக் காப்பாத்துவேன்னு நினைச்சுடாதீங்க’’ என்று சொல்லும் கௌரிஷங்கருக்கு, ‘மக்கள் நீதி மய்யம்’ தலைவர் கமல்போல் ஏழு மொழிகள் தெரியுமாம். 

Agumbe

‘‘நம்ம மனைலி ஹாமு (பாம்பு) பந்துருத்து!’’ என்று வீட்டுக்குள் ராஜநாகம் புகுந்தவர்கள், முதலில் அழைப்பது கௌரிஷங்கரைத்தான். சேவை அமைப்பு வைத்திருக்கும் கௌரிஷங்கர், பாம்புகளைப் பிடித்து ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திவிட்டு, திரும்பவும் காட்டுக்குள்ளேயே கொண்டு போய் விட்டு விடுகிறார். ஆராய்ச்சிக்காகவென்றே காட்டுக்குள் தனி இடம் வாங்கி, ‘டேட்போல்’ எனும் குட்டித் தவளைப் பண்ணையே வைத்திருக்கிறார் கௌரிஷங்கர். கல்லூரி மாணவர்கள், பாம்புகளைப் பற்றியும் காடுகளைப் பற்றியும் அறிந்து கொள்ள இன்டர்ன்ஷிப்பெல்லாம் வருகிறார்கள் என்றபோதே அவரின் அனுபவம் புரிந்தது. எனக்கு கைடாக வந்ததே கௌரிஷங்கரிடம் இன்டர்ன்ஷிப் வைத்திருக்கும் மாணவர்தான். 

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். கௌரிஷங்கருக்கு, பாம்பைக் கண்டால் உற்சாகம் பொங்கிவிடும். ராஜநாகங்களுக்கும் கௌரிஷங்கருக்கும் அப்படி ஒரு பிணைப்பு. உலகிலேயே கொடூர விஷம் கொண்ட ‘கிங் கோப்ரா’ ராஜநாகங்கள் பற்றி அவர் சொன்ன தகவல்கள் ‘பக் + கிக்’ ரகம். ஆசியாவில், அதுவும் இந்தியாவில் மட்டும்தான் ராஜநாகங்கள் இருக்கின்றன. ஊர்வன இனத்தில் கூடு கட்டி முட்டை பொறிக்கும் இனமும் ராஜநாகம் மட்டுமே! பாம்பு முட்டைகளுக்குக் குளிர்ச்சி ஆகாது; எனவே முட்டைகளை பிரமிடுபோல் அடுக்கி வைத்து, மூங்கில் கழிகள், சருகுகள் போன்றவற்றைத் தனது உடலால் இறுக்கி முறுக்கி, சற்று மேடான இடங்களில் ராஜநாகம் வீடு கட்டும் அழகை இரவில் மட்டும் அகும்பேவில் பார்க்கலாமாம். எத்தனை செ.மீ மழை பெய்தாலும் இந்தக் கூட்டினுள் ஒரு செ.மீ மழை நீர்கூட உள்ளே புகாத வண்ணம் இது வீடு கட்டும் சாதுர்யம்... வாவ்! சிவில் இன்ஜீனியர்ஸ்... நோட் பண்ணுங்கப்பா!

Agumbe

அதேபோல் யானை, புலி, சிங்கத்தையெல்லாம் விலகிப் போகச் செய்யும் ராஜபார்வையைக் கொண்டவை ராஜநாகங்கள். ராஜநாகத்துக்குக் கோபம் வந்துவிட்டால், 8 முதல் 10 அடி வரை எழுந்து நின்று படமெடுத்து மிரட்டுமாம். லேசாக விஷம் தெளித்தால், 20 நிமிடங்களுக்குள் யாராக இருந்தாலும் க்ளோஸ்! அகும்பேவில் 15 வருடங்களுக்கு முன்பு ஒருவர் ராஜநாகம் கடித்து இறந்ததாகவும், அதற்குப் பிறகு அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும் சொன்னார் கௌரிஷங்கர். காரணம், பாம்புகளுக்குச் சும்மா கோபம் வராது. பயமுறுத்தினாலோ, தொந்தரவு செய்தாலோ மட்டும்தான் நாக்குக்கு மேல் கோபம் வருமாம். எனவே, ராஜநாகங்களைக் கண்டால் மிரண்டு ஓட வேண்டியதில்லையாம். மேலும் ராஜநாகங்கள் பாம்புகளை மட்டும்தான் உணவாகச் சாப்பிடும். பெரும்பாலும், ‘ரேட்டில் ஸ்நேக்’ எனும் வகை பாம்புகள்தான் ராஜநாகங்களின் ஃபேவரைட் டிஷ். பாம்புகள் உணவாகக் கிடைக்காத பட்சத்தில், சின்ன சைஸ் ராஜநாகங்களையே லபக்கிவிடுமாம் பெருசுகள். ராஜநாகங்களைத் தவிர சாரை, புடையன், கண்கொத்தி, கண்ணாடி விரியன், ரேட்டில், பச்சைப் பாம்பு, சுருட்டை என்று இங்கே மொத்தம் 9 வகையான பாம்பு வகைகள் இருப்பதாகவும் சொன்னார். 

Agumbe

கதை கேட்ட எனக்கு, பாம்புச் சட்டைபோல் ‘கூஸ் பம்ப்’ ஆகிவிட்டது. அன்றிரவு ஓர் இடத்தில் காரை நிறுத்திவிட்டு, அகும்பே நடுக்காட்டில் டென்ட் அடித்துத் தங்கினோம். 'யார்ரா இவன் ஏரியாவுக்குப் புதுசா' என்று வெரைட்டியாக பல உயிரினங்கள் டென்ட்டுக்கு அருகில் வந்து எங்களை விஸிட் அடித்துவிட்டுப் போயின. கருந்தேள், சிலந்திப் பூச்சி, ஓணான், மரவட்டைகள், படா சைஸ் விட்டில்கள், குண்டு குண்டாக வண்டுகள், குட்டிக் குட்டியாய் பாம்புகள்...! காதில் துணி அடைத்துப் படுக்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது.

Agumbe

நீளமாக எதைப் பார்த்தாலும் எனக்கு பாம்புபோலவே தெரிந்தது. பாட்டியின் ஆசை நிறைவேறியது. இரவு ராஜநாகங்கள் கனவில் மொத்தமாக வந்தன. கூடவே புலியின் உறுமல் சத்தமும் கேட்டது. ஆனால், ‘இது நிஜம்’ என்று எழுப்பிச் சொன்னார் மாணவ கைடு. திகிலாக இருந்தது. விடிந்து பார்த்தபோது, ‘‘இந்தப் பக்கம் காட்டெருமை போயிருக்கு’’ என்று காலடித் தடங்களை வைத்துச் சொன்னார் கைடு. மரத்தில் ஓணான் போன்ற ஒன்றை போட்டோ எடுத்தபோது, "அது ஓணான் இல்லை; பறக்கும் பல்லி" என்று ஆச்சரியப்படுத்தினார் கைடு. மரம் விட்டு மரம் பறந்து பறந்து போனது அந்தப் பறக்கும் பல்லி. ஏதோ அமேசான் காட்டுக்குள் வந்ததுபோலவே இருந்தது. ‘‘சீக்கிரம் கிளம்புங்க... சன்ரைஸ் பார்க்கலாம்’’ என்று கிளப்பினார்.

Agumbe

ஒரு காலத்தில் மிகப் பெரிய ஆன்மிக ஸ்தலமாக விளங்கியதாம் அகும்பே. அதற்குச் சாட்சியாக குந்தாத்ரி எனும் மலைக்கோயில் இருக்கிறது. கொல்லிமலை போல் கண்டமேனிக்கு இருந்த கொண்டை ஊசிகள் வழியே 20 கி.மீ தூரம் பயணித்தால் வருகிறது குந்தாத்ரி மலைக்கோயில். பாதையா பாம்பா என்று குழப்பமாக இருந்தது. 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெயின் கோயிலான இங்கிருந்து சூரிய உதயம், அஸ்தமனம் எல்லாம் பார்ப்பது... வர்ணிக்க முடியாத அழகு. நீல வானமும் பச்சைப் புல்லும்தான் குந்தாத்ரி கோயிலுக்குப் பாதுகாப்பாய் இருந்தது. திருமயம் கோட்டைபோல் அகழியெல்லாம் இருந்தது. ‘கடிக்காத நாய் உண்டு; குடிக்காத வாய் இல்லை’ என்பதுபோல், யாரோ சிலர் பீர் பாட்டில்களை உடைத்துச் சிதறடித்து மகிழ்ச்சியாய்க் கொண்டாடி இருப்பார்கள் போல!  வருத்தமாக இருந்தது. 

கார் ஓட்டும்போது ரொம்பவும் கவனமாகவே கார் ஓட்டினேன். நம்ப மாட்டீர்கள்; சிக்னலில் மனிதர்கள் கிராஸ் ஆவதுபோல்... சாலையில் பாம்புகள் அடிக்கடி கிராஸ் ஆன சம்பவம் திகிலாக இருந்தது. அகும்பேவில் மெதுவாகவே கார் ஓட்டச் சொல்லி அட்வைஸ் செய்கிறார்கள். ‘‘அதுங்க இடத்துல நாம் இருக்கோம். தயவுசெஞ்சு எந்தத் தொந்தரவும் பாம்புங்களுக்கு வராமப் பார்த்துக்கோங்க!’’ என்று சொல்லியிருந்தார் கௌரிஷங்கர். 

ஆம் டைம் மழை, பச்சைப் புல்வெளிகள், ஜங்கிள் ட்ராக்ஸ், அருவிக்கெல்லாம் அருவிகள், பெயர் தெரியா உயிரினங்கள், மாறிக் கொண்டே இருக்கும் க்ளைமேட், பாதையெல்லாம் திரிந்த பாம்புகள்... அகும்பே நினைவுகள் என்னை இப்போதும் பாம்புபோல் சுற்றிக் கொண்டே இருக்கின்றன.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

“பொம்மை மாதிரி ஆடை உடுத்துவதற்கா கல்லூரிக்கு வருகிறாய்...?” -ஜெயலலிதாவைச் சீண்டிய பேராசிரியை! 

 
 

ஜெயலலிதா

Chennai: 

“உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்மா...” என்று சொல்லித் தன் அம்மாவைக் கட்டிப்பிடித்து அழவேண்டும் என்று ஆசைப்படுகிறார், அவர். அதற்காக, தன் அன்பை... பாசத்தை... ஏக்கத்தை என எல்லாவற்றையும் ‘என் அம்மா’ என்ற தலைப்பில் கடிதமாக எழுதுகிறார். எழுதிய கடிதத்தைத் தன் அம்மாவிடம் காட்டுவதற்காக இரவு முழுவதும் காத்திருக்கிறார். பொழுது புலர்கிறது... யாருக்காக அவர் காத்திருந்தாரோ, அவர் கடைசிவரை வரவில்லை. ஆனால், மனதை உருக்கும் நிலையில் அவர் எழுதியிருந்த கடிதம் மட்டும் பள்ளியில் பலராலும் பாராட்டப்படுகிறது. ஆனால், அவர் எதிர்பார்த்தது பாராட்டையோ... புகழையோ அல்ல... தாயின் உண்மையான அன்பை மட்டும்தான். அதுபோல் அன்பு கிடைக்காதவர்கள் இன்றும் உலகத்தில் பலபேர் இருக்கின்றனர். அதைத்தான் அவரும் அனுபவித்தார். 

 

“இதுபோல் நிகழாது!”

தாய்க்கு என்ன சூழ்நிலையோ? இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு வருகிறார். தன் மகள் ஒரு புத்தகத்தை அணைத்தபடி தூங்குவதைப் பார்க்கிறார்; அதை மெதுவாக எடுக்கிறார். புத்தகம் அசைவதைக் கண்டு எழுகிறார் மகள். ஆச்சர்யத்தில் அன்னையைப் பார்க்கிறார்; அழுது துடிக்கிறார் மகள். அப்படியே அவர் எழுதிய கடிதத்தைப் படித்து அதிர்ச்சியில் உறைகிறார் அன்னை. பின்னர், தன் மகளை இறுக அணைத்து, “இனி உன்னிடம் அதிக நேரம் செலவிடுகிறேன்... இனி எப்போதும் இதுபோல் நிகழாது” என்கிறார். மகளும் சந்தோஷம் தாங்காமல் அவர் மடிமீதே சாய்ந்து தூங்கிவிடுகிறார். 

ஆனால், துரதிர்ஷ்டமாக அதுதான் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. அவர் தன் அம்மாவுக்காகக் காத்திருப்பது தொடர்கதையாகிறது. அதேபோல், அவர் பள்ளிச் செல்லும் நாள்களில்கூடப் பல பிரச்னைகளை அனுபவிக்கிறார். இன்றும் பல குழந்தைகள், சில பள்ளிகளில் பிரச்னைகளை அனுபவித்துக்கொண்டுதானே இருக்கின்றனர். சிலர் வெளியில் சொல்கிறார்கள்; பலர் சொல்லாமல் சாகிறார்கள். நம் கட்டுரையின் நபரும், பள்ளி நாள்களில் வெகுநேரம் தன்னை அழைக்கவரும் வண்டிக்காகக் காத்திருந்திருக்கிறார். ஆம், அது எப்போதும் தாமதமாகத்தான் வந்திருக்கிறது. இன்றும் அப்படித்தான் சில பள்ளிப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிலும், குறிப்பாக வாகன விதிகளை மீறி. 

ஜெயலலிதா

“எங்களுடன் வா...!”

பொதுத் தேர்வு எழுதுவதற்காகக் காத்திருக்கிறார் நம் நபர். வாகனம் வருவதாகத் தெரியவில்லை. ஆனால், கடிகார முட்கள் மட்டும் காலத்தை விரைவாகக் கடந்துகொண்டிருக்கிறது. அவருக்குத் துணையாக ஓர் உற்றத் தோழி இருக்கிறார். தோழியை அழைத்துச் செல்ல... அவரின் தந்தை வருகிறார். நிலைமையறிந்து அந்தத் தோழியின் தந்தை... நம் நபரிடம், “உன் வாகனம் வருவதுபோல் தெரியவில்லை... எங்களுடன் வா, உன்னைப் பள்ளியில் விட்டுவிடுகிறேன்” என்கிறார். ஆனால், அவருக்கோ தயக்கம். என்னதான் உற்றத் தோழி அருகில் இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு பயம் இருக்கத்தானே செய்யும். 

இன்று, தன் தோழியின் சகோதரனாக இருந்தாலும்... தந்தையாக இருந்தாலும் பெண் பிள்ளைகள் பயப்படத்தானே செய்கிறார்கள். இதுதான் அவருக்கும் இருந்தது. அதேபோன்று மற்றவர்களையும் தன் மகளாகவும், சகோதரியாகவும் நினைத்து அவர்களையும் உயர்த்திவிடுவதில் இன்றும் சில தந்தையர்களும், சகோதரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தோழியும்,  “இப்படியே நின்றுகொண்டிருந்தால், தேர்வைக் கோட்டைவிட்டுவிடுவாய். வா... அப்பாவுடன் செல்லலாம்” என்று நம்பிக்கை கொடுக்கிறார். நம்பிக்கை ஒருபோதும் பொய்ப்பதில்லை அல்லவா? அதனால், தோழமையுடன் தேர்வுக் களத்துக்குச் செல்கிறார். கவலையுடனும்,கண்ணீருடனும் அந்தத் தேர்வை எழுதுகிறார். ஆனால், இது எதுவும் அவர் வெற்றிக்குத் தடையாக இல்லை. ஆம், தேர்வில் பெரிய அளவில் ஜெயிக்கிறார். 

ஜெயலலிதா

தோழி செய்த உதவி!

அது, அவருக்கு ஒரு மாற்றத்தையே நிகழ்த்துகிறது. இதற்கு யார் காரணம்? நான் மட்டும் அன்று சரியான நேரத்துக்குத் தேர்வுக் களத்துக்குச் சென்றிருக்காவிட்டால், இன்று என் நிலை என்னவாகியிருக்கும் என்று சிந்தித்தப்படியே தன் தோழியைப் பார்த்து நன்றி சொல்லியிருக்கிறார். அதுவும், ஒருமுறை... இருமுறை அல்ல... அவரைச் சந்திக்கும்போதெல்லாம். இதுகுறித்து அவருடைய தோழி, “அன்று நாங்கள் செய்தது சிறு உதவி மட்டும்தான். ஆனால், அதற்கு அவர், ‘உன் அப்பா மட்டும் என்னை அழைத்துச் செல்லவில்லை என்றால், என்னால் தேர்வெழுதி இருக்கவே முடியாது’ என்று என்னைப் பார்க்கும்போதெல்லாம் சொல்லி அந்த நினைவை ஞாபகப்படுத்துவார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். உண்மையான நட்பும், துரோகமில்லாத உதவியும் என்றும் ஏற்றம்பெற்றவர்களின் வாழ்வில் நிலைத்து இருக்கும் என்பதற்கு இதுவே பெரிய உதாரணம். இந்த நன்றிப் பழக்கத்தைச் சிறுவயதிலேயே நன்கு கற்றறிந்த நம் நபர், பிற்காலத்திலும் அதைத் தொடர்ந்தார்.  

பள்ளி முடிந்தது... அடுத்து கல்லூரி? அதற்கான தேடலை ஆரம்பிக்கிறார் நம் நபர். அதுகூட அதே பள்ளியின் தோழிமூலம். அவரிடம், “எனக்காக விண்ணப்பம் வாங்கி, நீ என்ன பாடத்தைத் தேர்வு செய்கிறாயோ... அதே பாடத்தை எனக்கும் தேர்வுசெய்து விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து கல்லூரியில் கொடுத்துவிட முடியுமா...” என்று கேட்கிறார். தோழி எப்படி மறுப்பு தெரிவிப்பார்? அப்படி, அவர் ஒருவேளை மறுப்பு தெரிவித்திருந்தால் நட்புக்கே மரியாதை இல்லாமல் போயிருக்குமே? தோழியின் உதவியால் கல்லூரிக்குள் நுழைகிறார், நம் நபர். ஒருநாள் பாடம் நடத்துவதற்காகப் பேராசிரியை ஒருவர் வகுப்புக்குள் நுழைகிறார். அப்போது நம் நபரிடம் எந்தப் புத்தகமும் இல்லை; பெரிய அளவில் ஜெயித்த நம் நபர் குறித்த விவரமும் அவருக்குத் தெரியவில்லை. கோபத்துடன் கேள்விகளை அடுக்குகிறார் பேராசிரியை. மெளனம் காக்கிறார் நம் நபர். 

ஜெயலலிதா

ஜெ.-வைச் சீண்டிய பேராசிரியை!

இறுதியாக, “பொம்மை மாதிரி ஆடை உடுத்துவதற்கா கல்லூரிக்கு வருகிறாய்...” என்று எரிந்து விழுகிறார். இப்படிப்பட்டக் கேள்வியை எந்த இதயம்தான் தாங்கும்? அதுவும், பல பேருக்கு முன்னால். ஆனால், இன்று அப்படியில்லையே... கேள்வி கேட்ட அடுத்த நொடி, கத்திக்குத்தே விழுந்திருக்குமே. நம் நபர் அப்படி எதுவும் செய்யவில்லை. அதற்குக் காரணம், அன்று ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைத்திருந்த மரியாதை. இன்று, ஆசிரியர்கள் மீது மாணவர்களும் மரியாதை வைப்பதில்லை; மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் நல்ல மதிப்பு வைப்பதில்லை. அந்தத் தர்மசங்கடமான கேள்விக்குப் பிறகும், அமைதியாகவே இருந்தார் நம் நபர். அடுத்த, சிறிதுநேரத்தில் மதிய உணவு இடைவேளை வருகிறது. அப்போது வீட்டுக்குச் செல்கிறார்... பின் எப்போதும் கல்லூரிக்குத் திரும்பி வரப்போவதில்லை என்ற முடிவுடன்.

கல்லூரிக்கு அவர் மீண்டும் வராதபோதும் வாழ்வில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திச் சரித்திரத்தில் இடம்பெற்றார். கல்லூரிக்கு எப்படி அவரால் திரும்ப முடியாமல் போனதோ... அதேபோல், காலனிடமிருந்தும் திரும்பி வரமுடியாத அளவுக்குச் சென்றுவிட்டார். அவர் வேறு யாருமல்ல... மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவருடைய பிறந்த தினம் இன்று. 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

கட்டிட உலகின் ராணி

 

 
shutterstock285521444

சொகொ ஹாங்காக்கியா, சீனா

உலகின் தலைசிறந்த பெண் கட்டிடக் கலைஞர் என்று அறியப்பட்டவர் ஜாஹா ஹாடித். அரபுப் பின்னணியில் பிறந்தவர் என்பதும், பிரிட்டனில் படித்தவர் என்பதும் இவரைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டின. பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர்களுக்கான ராயல் இன்ஸ்டிட்யூட் என்ற உலகப் புகழ் பெற்ற அமைப்பிடமிருந்து ‘ராயல் தங்கப் பதக்கம்’ பெற்ற முதல் பெண் இவர்தான் (ஒரே பெண்ணும் இவர்தான்). மிக வித்தியாசமான பல கட்டிடங்களை வடிவமைத்த இவர் ‘வளைவு ராணி’ (Queen of the curve) என்றும் வர்ணிக்கப்பட்டார்.

shutterstock311850899

பாக்தாதைச் சேர்ந்த ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். தொழிலதிபரான இவர் தந்தைக்கு அரசியல் தொடர்பும் இருந்தது. ஈராக்கின் தேசிய ஜனநாயகக் கட்சியை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். நிதி அமைச்சராகவும் விளங்கியவர். ஜாஹாவுக்கான கலைத்தன்மை ஒருவேளை அவரது அம்மாவிடமிருந்து வந்திருக்கலாம். வஜிஹா என்ற பெயர் கொண்ட அவர் ஓர் ஓவியர்.

shutterstock376708405

ஹைதர் அலி செண்டர், அசர்பைஜன்

லண்டனிலுள்ள கட்டிடக் கலைக் கல்லூரியில் (Architectural Assocaition School of Architecture) ஜாஹா படித்தார். 1980-ல் தானாகவே ஒரு கட்டிடக் கலை நிறுவனத்தையும் தொடங்கினார். ஆனால், இவரது வடிவமைப்புகள் பிறரால் பிரமிப்புடன் பார்க்கப்பட்டன. மிக வித்தியாசமானவை என்று பாராட்டப்பட்டன. வடிவங்களிலும் வண்ணங்களிலும் அவர் காட்டிய புதுமைகள் பெரிதும் கவனம் ஈர்ப்பதாக இருந்தன. ஆனால், அவற்றில் ஒன்றுகூட நெடுங்காலத்துக்குக் கட்டிடமாக வடிவம் பெறவில்லை என்பது சோகம். ஆக, கட்டிடக் கலை தொடர்பான விரிவுரைகளை ஆற்றத்தான் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

shutterstock381793936

டாங்டியோன், தென் கொரியா

“பெண் கட்டிடக் கலைஞராக இருப்பது எப்படியிருக்கிறது? என்று கேட்பவர்களுக்கு, ‘எனக்குத் தெரியாது. ஏனென்றால், நான் ஆணாக இருந்ததில்லை’ என்றுதான் பதிலளிப்போன். மற்றபடி பிற பெண் கட்டிடக் கலைஞர்களுக்கு நான் ஒரு உந்துசக்தியாக இருக்கிறேன். இது மகிழ்ச்சிதான்” என்கிறார் ஹாதித்.

shutterstock475402798

இவருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. ‘அவர் ஒரு காலிப் பானை’ என்று கூறியவர்கள் உண்டு. ஜாஹாவின் பிடிவாதமான போக்கும் தன் வடிவங்களை அவர் சமரசத்துக்கு உட்படுத்தாததும்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

hadid

அவர் வடிவமைத்த கட்டிடங்களை விளக்குவதைவிடப் பார்த்து அனுபவிப்பது பொருத்தமாக இருக்கும். அவரது கற்பனையில் உருவான ஜெர்மனியிலுள்ள விட்ரா தீயணைப்பு நிலையம், ஜெர்மனியிலுள்ள ஃபேனோ அறிவியல் மையம், இத்தாலியில் உள்ள அதிவேக ரயில் நிலையம், ஸ்பெயினிலுள்ள பெவிலியன் பாலம், சீனாவிலுள்ள இசை அரங்கம், நீர் விளையாட்டுகளுக்காக லண்டனில் 2012 ஒலிம்பிக்ஸின்போது உருவாக்கப்பட்ட நீர் விளையாட்டு மையம், வியன்னா பல்கலைக்கழக நூலகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

2016-ல் இவர் இறந்த பிறகு அவர் கற்பனையில் உருவாகி வடிவமைக்கப்பட்ட கப்பல் நிறுத்தம் (இத்தாலி) முழுமை பெற்றது. இன்னவகையில் இவரது கட்டிடங்கள் இருக்குமென்று பிரித்தறிய முடியாதபடி ஒரு பாணியை (பல பாணிகளை) இவர் அறிமுகப்படுத்தினார். அதுவே அவரது தனித்துவம்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ஐபோன் மட்டுமல்ல... ஃபேஸ்புக்கைக் காப்பற்றியவரும் ஜாப்ஸ் தான்! #RememberingSteveJobs

 
 
 

ஜாப்ஸ்

ஆப்பிள் என்றதும் சட்டென மனதில் ப்ளூ ஜீன்ஸ், கறுப்பு டீ-ஷர்ட்டுடன் ஒரு மனிதன் கண் முன்னே தோன்றினால் நிச்சயம் நீங்கள் ஆப்பிள் ரசிகராகத்தான் இருப்பீர்கள். ஆப்பிள் லோகோ வெளியே தெரியும்படி போன் பேசும் பல யூத்களின் ட்ரெண்டுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே விதை விதைத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். புதுமை என்ற வார்த்தைக்கு அர்த்தமே ஜாப்ஸ்தான் என்கிறது ஒரு ஆங்கில நாளிதழ். மிகச்சிறிய ஐபோன், ஆப்பிள் லோகோவின் கலர் என ஆரம்பித்து ஆப்பிளின் ஒவ்வொரு நுண்ணிய விஷயங்களும் ஜாப்ஸின் பெயர் சொல்லும். இன்று ஜாபிஸின் பிறந்தநாள் அவரைப்பற்றிய சுவாரஸ்யமான சில விஷயங்கள் இதோ...

 

* 1955ம் ஆண்டு சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தவர் ஜாப்ஸ். பிறந்தவுடன் தன் மகன் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக பால் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டார். அவர்களிடம் ஜாப்ஸ் மகிழ்ச்சியாக வளர்ந்தாலும், தான் தத்துப்பிள்ளை என்பது ஜாப்ஸுக்கு அடிக்கடி வருத்தமளிக்கும் விஷயமாகவே இருந்துள்ளது. படிப்புக்காக தத்து கொடுக்கப்பட்ட ஜாப்ஸ் கல்லூரியில் பாதியில் படிப்பை விட்டவர்.

* எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின்மீதும், வரைகலையின் மீதும் ஆர்வம் கொண்ட ஜாப்ஸால் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. அதோடி கல்வியில் சுதந்திரம் வேண்டும் என்று விரும்பியவர் ஜாப்ஸ். பிற்காலத்தில் வரைகலை பயின்ற ஜாப்ஸ் மாக் கம்ப்யூட்டருக்கான அழகான எழுத்துருக்களை தானே வடிவமைத்தார்.

ஜாப்ஸ்

* படிப்பை விட்ட காலத்தில் நண்பர்களின் அறையில் தங்கி இருந்த ஜாப்ஸ் நீண்ட தொலைவுகளுக்கு நடந்து சென்றும், பசியால் வாடும் நேரத்தில் ஹரே கிருஷ்ணா கோவிலில் உணவு உண்டும் தனது காலத்தை கழித்துள்ளார்.

* 1974ம் ஆண்டில் தலையில் நீண்ட முடியோடு, இந்தியாவில் இமையமலைப்பகுதிகளில் ஆன்மீக தேடலில் இருந்த ஜாப்ஸுக்கு தோல் நோய்கள் வந்துள்ளது. மேலும் கடும் புயலில் சிக்கி கொண்ட ஜாப்ஸ் ஆன்மீக தேடலை கைவிட்டு அறிவியல் பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இல்லையென்றால் இந்தியாவில் சாமியாராகி இருப்பார் ஜாப்ஸ்.

* ஆப்பிள் 1 கணினிக்கு பின்னால் அவர் நிகழ்த்திய மேஜிக் அளப்பறியது. தனது நண்பருடன் இணைந்து ஆப்பிள் 1 கணினியை உருவாக்கிய ஜாப்ஸ் அதனை ஒரு வீடியோ கேம் கணினிகளை விற்கும் ஃபைட் ஷாப் உரிமையாளரிடம் விளக்கினார். அவர் ஒரு மாதத்தில் 50 கணினிகள் வேண்டும் என ஆர்டர் தர இதனை ஒப்பந்தமாக எழுதி வாங்கி, அந்த ஒப்பந்தத்தை காட்டி மூலப்பொருட்களை கடனில் வாங்கி கணினியை தயாரித்துள்ளார் ஜாப்ஸ். 

* ஐபோன் தயாரித்து ஜாப்ஸிடம் காட்டிய டீமிடம் இன்னும் சிறியதாக வடிவமைக்கக்கூறியுள்ளார். ஆனால் இதை எப்படி இன்னும் சிறிதாக்குவது என ஜாப்ஸிடம் கேட்டுள்ளனர். உடனே தயாரித்த ஐபோனை தண்ணீருக்குள் போட்டு அதில் குமிழிகள் வருகின்றன. அதனால் இதில் வெற்றிடம் இடக்கிறது. அதனை சரிசெய்யுங்கள் ஐபோன் இன்னும் சிறியதாகும் என்றார். ஜாப்ஸின் மறைவுக்கு பின் வந்த ஐபோன்கள் தான் பெரிய வடிவில் வரத்துவங்கின. 

ஸ்டீவ் ஜாப்ஸ்

* 1985ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஜாப்ஸ். தளராமல் பிக்ஸார் அனிமேஷன் நிறுவனம் மூலம் ஹிட் அடித்தார். ஆப்பிள் நிறுவனமே வீழ்ச்சிக்கு சென்ற நிலையில் ரீ-என்ட்ரி கொடுத்து ஆப்பிளை முன்னணி பிராண்ட் ஆக்கினார் ஜாப்ஸ்.

* ஜாப்ஸ் ஒரு சிறந்த வழிகாட்டி. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ஃபேஸ்புக்கை மூடிவிடலாம் என்று முடிவில் இருந்த போது இந்தியா சென்றுவிட்டு வா ஒரு ஐடியா கிடைக்கும் அவசரப்பட்டு நிறுவனத்தை மூடிவிடாதே என அறிவுரை கூறி மார்க்கை இன்று உலகின் நம்பர் 1 மனிதனாக மாற்றியதும் ஸ்டீவ் ஜாப்ஸ்தான்.

* ஜாப்ஸ் ஒரு பெஸ்டேரியன் (pescetarian) அதாவது மீன் தவிர மற்ற மாமிசங்களை உண்ணாதவர். வாழ்நாளில் 7 மாதங்கள் தீவிரமாக புத்த மதத்தை பின் தொடர்ந்தவர் ஜாப்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரஷ்யாவின் பங்குச் சந்தையை விட அதிகம், ஆப்பிளின் செயல்பாட்டு கையிருப்பு அமெரிக்காவின் கஜானாவை விட அதிகம் என்பதும் ஆப்பிளின் மிகப்பெரிய சிறப்பு.

* ஆப்பிள் ஐபோன்களை ஸ்டீவ் ஜாப்ஸ் தான் உலகுக்கு அறிமுகம் செய்தார். முதன் முதலில் 9:41 மணிக்கு இந்த போன்களை அறிமுகம் செய்ததால் அனைத்து ஐபோன்களும் வெளியிடப்படும் மாடல்கள் மற்றும் போன்களின் புகைப்படங்களில் 9:41 என்ற மணியையே காட்டும். 

 

* ஸ்டீவ் ஜாப்ஸின் நினைவாக ஆப்பிள் சென்டரில் ஜாப்ஸ் ஆடிடோரியம் கட்டப்பட்டுள்ளது. 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பங்குசந்தை நிலை தடுமாறும்போது என்ன செய்யலாம்?

பங்குசந்தை என்றால் என்ன? சமீபத்தில் பங்குசந்தையில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய ஏற்றதிற்கு என்ன காரணம்? சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும்போது நீங்கள் செய்யவேண்டியது என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது பிபிசியின் '#வரவு எப்படி?'
Link to comment
Share on other sites

``வாவ் ஒரு லெஜண்ட் எங்களுடன் இருக்கிறார்'' - சச்சினுடனான சந்திப்பு குறித்து பிரியாவாரியர் நெகிழ்ச்சி!

 

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை நடிகை பிரியா வாரியர் சந்தித்துள்ளார். 

பிரியா வாரியர்

 

சமீபத்தில் வலைதளங்களில் சென்சேஷனல் ஹிட் அடித்தவர் என்றால் அது மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்தான். மலையாளத் திரைப்படமான 'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்க மலராய பூவி' பாடலில் சில நிமிடங்கள் தலைகாட்டினாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். இதற்கு காரணம் பாடலில் இவர் காட்டிய க்யூட் எக்ஸ்பிரஷன்கள். இதனால் இவருக்கென ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டானது. பிறகு தினமும் இவர் குறித்த ட்ரோல் வீடியோக்கள், இவர் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 

ஓவர் நைட்டில் ஸ்டார் அந்தஸ்து பெற்ற இவர் நேற்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்துள்ளார். ஒரு அடார் லவ் படத்தில் நடித்த ரோஷனுடன் கொச்சியில் நேற்று நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியைப் பார்க்கச் சென்றார். அப்போது சச்சினை பார்த்த அவர், ட்வீட்டரில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நாங்கள் மிகவும் ஆவலாக இருக்கிறோம். காரணம் எங்கள் முன் லெஜெண்ட் இருக்கிறார்" என்று சச்சினை குறிப்பிட்டுள்ளார். பின்னர் போட்டி முடிந்ததும் சச்சினை சந்தித்த அவர்கள், சச்சினுடன் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது இணையதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

https://www.vikatan.com

 

 

Link to comment
Share on other sites

டிஜிட்டல் பிச்சைக்காரர்கள்!
 
 
E_1518759577.jpeg
 

உலகம் ரொம்பவே நவீன மயமாகி விட்டது. அதிலும், நம் அண்டை நாடான சீனா, தொழில்நுட்ப வளர்ச்சியில் உச்சத்தை தொட்டு விட்டது.
சீனாவில் உள்ள குறிப்பிட்ட சில நகரங்களில், பிச்சைக்காரர்கள் அதிக அளவில் உள்ளனர். சீனாவில், பணப் பரிமாற்றம் இப்போது டிஜிட்டல் மயமாகி விட்டதால், மிக குறைவானவர்கள் மட்டுமே, கரன்சி மற்றும் நாணயங்கள் வைத்திருக்கின்றனர். இதனால், கடுமையாக பாதிக்கப்பட்ட பிச்சைக்காரர்கள், இப்போது, 'ஸ்வைப்பிங் மிஷின்' வாங்கி வைத்துள்ளனர்.
பிச்சை எடுக்கும் இடங்களில், தங்களுக்கு அருகிலேயே இந்த மிஷினை வைத்துள்ளனர். பிச்சை போடுவோர், தங்கள் கார்டுகளை இந்த மிஷினில் தேய்த்து, கொடுக்க விரும்பும் பணத்தை அதில் பதிவு செய்தால் போதும், பிச்சைக்காரரின் வங்கி கணக்கிற்கு, அந்த பணம் சென்று விடும்.
சீனாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர், இங்குள்ள பிச்சைக்காரர்களை பார்த்து, வாய் பிளந்து நிற்கின்றனர்.

 

 

இது நாய் அல்ல; பசு!
 
 
E_1518759671.jpeg

 

 

அமெரிக்காவில் உள்ள லோவா நகரத்தில் வசிக்கும், டஸ்டின் பில்லார்டு என்ற விவசாயி, வித்தியாசமாக சிந்தித்து, அதன் மூலம், வருவாய் ஈட்டி வருகிறார்.
தன் பண்ணை வீட்டில், பசு, எருது உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். மிகச் சிறிய உருவமுள்ள பசுக்களை வளர்த்து, அவற்றை, பல ஆயிரம் ரூபாய்க்கு விற்று, பெரும் பணக்காரராகி விட்டார்.
'பல இடங்களுக்கும் சென்று, வித்தியாசமான தோற்றமுள்ள பசுக்களை வாங்குவேன். அவற்றை என் பண்ணையில் வளர்த்து, இனப் பெருக்கம் செய்ய வைத்து, அதை விற்று, காசாக்கி விடுவேன்...' என்கிறார், பில்லார்டு.
இவரது பண்ணையில் உள்ள பசு மற்றும் எருதுகள், நாயை விட சிறிய உருவத்தில் தோற்றமளிக்கின்றன. இவை, 'மைக்ரோ பசுக்கள்' என, அழைக்கப்படுகின்றன. பார்ப்பதற்கு வித்தியாசமாக தோற்றமளிப்பதால், வீட்டில் செல்லமாக வளர்க்க, பலரும் இவற்றை போட்டி போட்டு வாங்குகின்றனர்.

 

 

முதல் பெண் புகைப்பட கலைஞர்!

 

 
E_1518759541.jpeg
 

இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகைப்பட கலைஞர், ஹோமாய் வியாராவாலா. 1930ல், மும்பையிலிருந்து வெளிவந்த, 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி'யில் பணியாற்றினார். உடன் பணிபுரிந்தவரும் நண்பருமான, மனேஷா என்பவரை மணந்தார். நாடு சுதந்திரம் அடைந்தபோது, அந்த காட்சிகளை படம் பிடித்தார். அன்றைய தலைவர்கள் எவரும் இவர் கேமராவிலிருந்து தப்பவில்லை. 'எங்கிட்ட எதுவும் இல்லை; எல்லாம் கேமராக்கள் செய்கிற வித்தை...' என்று கூறிய இவர், 2012ல், தன் 99வது வயதில் காலமானார்.

 

கட்டட வேலை செய்யும் மூதாட்டி!
 
E_1518759509.jpeg

 

 

நாற்பது வயது ஆனாலே, சோர்வு மூடுக்கு வந்து, வீட்டு வேலைகளை கூட செய்ய மாட்டார்கள், சில பெண்கள். ஆனால், கத்ரீனா சேட்டத்தி, 89 வயதிலும் சுறுசுறுப்பாக கட்டட வேலை செய்து, அனைவரையும் வியக்க வைக்கிறார். தன், 30வது வயதிலிருந்தே வெயில், மழை பாராமல் கட்டட வேலையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த, 58 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து, சம்பாதிக்கும் இவர், கேரள மாநிலம், திருச்சூரில் வசிக்கிறார்

 

நிஜம் அல்ல; நிழல்!

 

 
E_1518759485.jpeg

 

 

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர், செர்ஜிசோலோவியாவ்; பொதுவுடைமை புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான லெனின் மாதிரியே இவர் இருப்பதால், இவர் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து துரத்தப்பட்டார்.
இன்று, மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் லெனின் நினைவிடத்திற்கு வரும் சுற்றுலா பயணியர், இவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இதற்காக இவர் வசூலிக்கும் கட்டணம், ஒரு ஆளுக்கு, 110 ரூபாய்.
ஏழு ஆண்டுகளுக்கு முன், தனக்கும், லெனினுக்கும் உருவ ஒற்றுமை இருப்பதை அறிந்தார். அன்று முதல் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது தான் இவரது முழுநேர வேலை. வருமானமும் நன்றாக இருப்பதாக கூறுகிறார், செர்ஜி.

 

 

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

பொம்மைகளின் கதை: பொம்மைக்குள் பொம்மைக்குள் பொம்மை

 

 
Doll%20-3

ஒரு பொம்மை. அதன் வயிற்றுப் பகுதியைத் திறந்தால் இன்னொரு பொம்மை. அந்தப் பொம்மையைத் திறந்தால் இன்னொரு குட்டி பொம்மை. இப்படி ஆறு பொம்மைகளைத் தன் வயிற்றுக்குள் வைத்திருக்கும் ஏழாவது பெரிய பொம்மைதான் மத்ரியோஷ்கா. அன்னை என்ற அர்த்தம் வரும் லத்தீன் வார்த்தையான மேட்ரனிலிருந்து திரிந்து இந்தப் பெயர் வந்துள்ளது. ரஷ்யாவைப் பூர்விகமாகக் கொண்ட உலகெங்கும் புகழ்பெற்ற பொம்மை இது.

வெங்காயத்தின் மேல்தோலைப் பிரித்தால் இன்னொரு வெங்காயம். இன்னொரு தோலைப் பிரித்தால் இன்னொரு வெங்காயம். உரிப்பதும் வெங்காயம், கிடைப்பதும் வெங்காயம். அதைப் போலத்தான் மத்ரியோஷ்காவுக்குள் அதே வடிவில் சின்னப் பொம்மைகள் திறந்து கொண்டேயிருக்கின்றன.

வஸீலிவிச் பெட்ரோவிச் ஜ்வெஸ்டோக்கின், சவ்வ அய்வனோவிச் மமோன்தவ் இருவரும் சேர்ந்து 1892-ல் வடிவமைத்த பொம்மை இது. குண்டான இளம் கிராமத்து ரஷ்யப் பெண்ணின் சாயலில் முதல் பொம்மையை உருவாக்கினார்கள். பின்னர் மத்ரியோஷ்காவுக்குப் பாரம்பரிய ரஷ்ய உடையான சராஃபனை அணிவித்து அழகு பார்த்தார்கள்.

1900-வது ஆண்டில் பிரான்சின் தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சியில்தான் மத்ரியோஷ்கா பொம்மை உலகமெங்கும் ரசிகர்களைப் பெற்றது. வெவ்வேறு நாடுகள், கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் தங்களைக் கவர்ந்த கதைகளின் தாக்கத்தில் மத்ரியோஷ்கா பொம்மைகளை உருவாக்க ஆரம்பித்தனர். தற்போது சர்வதேச தலைவர்களின் உருவத்தில்கூட மத்ரியோஷ்கா பொம்மைகள் கிடைக்கின்றன.

Doll%20-1

 

தாயும் குழந்தையும்

அம்மாவே குடும்பத் தலைவராக இருந்த ரஷ்யக் குடும்ப முறையைக் குறிப்பதாக பெரிய பொம்மை அமைந்துள்ளது. அதற்குள் பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் சிறிய பொம்மைகளாக உள்ளன. அதனடிப்படையில் தாய்மையின் அடையாளமாகவும் மத்ரியோஷ்கா உள்ளது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் பல அனுபவங்களையும் சந்தோஷங்களையும் துக்கங்களையும் கடக்கிறான். ஒரு மனிதன்; பல அனுபவங்கள்; இதைக் குறிப்பதாகவும் மத்ரியோஷ்கா பொம்மை விளங்குகிறது.

மத்ரியோஷ்காவைச் செய்யும் கைவினைக் கலைஞர்கள் ஒரு பொம்மையைப்போல் இன்னொரு பொம்மையை உருவாக்குவதில்லை. ஒவ்வோர் அன்னையையும் தனித்தனியாகவே உருவாக்குகிறார். நமது அம்மாக்களும் பிறரோடு ஒப்பிட முடியாத அளவுக்குத் தனித்துவமானவர்கள்தானே!

Doll%20-2

நீங்கள் மாஸ்கோவுக்குப் போக நேர்ந்தால் இஸ்மய்லோஸ்கயா சந்தைக்குப் அவசியம் செல்லுங்கள். அங்கே உங்களுக்கான மத்ரியோஷ்கா கிடைப்பார்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

100170581100169840mediaitem100169837jpg
 

ஆழ்ந்த இரங்கல்கள்..

 

 

ஸ்ரீதேவி - இந்திய சினிமாவின் 'மயிலு' (புகைப்படத் தொகுப்பு)

ஸ்ரீதேவி தனது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு.

ஸ்ரீதேவி Sridevi

 

ஸ்ரீதேவி Srideviபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி Sridevi2013இல் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பத்மஸ்ரீ விருதுபெறும் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி Srideviதனது கணவர் போனி கபூர், மகள்கள் குஷி மற்றும் ஜான்வி ஆகியோருடன் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி Sridevi2013இல் மகுவாவில் நடைபெற்ற ஒரு சர்வதேச திரைப்பட விழாவின்போது நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பிரபுதேவாவுடன் நடனமாடும் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி Srideviரசிகர்களுடன் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி Sridevi'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படத்தின் தோற்றத்துடன் மேடையில் நடனமாடும் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி Srideviஷமிதாப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல், இளையராஜா மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோருடன் ஸ்ரீதேவி.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.