Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

உணவாக தினமும் ஒரு கிலோ களிமண்: 99 வயதில் இப்படி ஒரு அதிசயம்!

 

 
2694286616150290018922321874724152njpg

காரு | படம்: ஏஎன்ஐ.

ஜார்கண்ட் மாநிலத்தில் 99 வயது முதியவர் நாள்தோறும் ஒரு கிலோ களிமண் சாப்பிட்டு உயிர் வாழ்ந்துவரும் அதிசயம் நடந்து வருகிறது.

சிறுவயதில்

ஜார்கண்ட் மாநிலம், சாஹேப்கானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காரு (வயது 99). இவர் கடந்த 1919-ம்ஆண்டு பிறந்தவர். இவர் தனது 11 வயதில் இருந்து களிமண் சாப்பிடும் பழக்கத்துக்கு அடிமையானார். சிறுவயதில் இருந்து தற்போது வரை காரு ஒருநாள் கூட களிமண் சாப்பிடாமல் இருந்ததில்லையாம்.

'தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை' என்பதைப் போல், சிறுவயதில் உண்டான பழக்கம் இப்போது காருவை தொற்றிக்கொண்டு களிமண் சாப்பிடுவதை விடமுடியாமல் தவித்து வருகிறார்.

பழக்கத்தை நிறுத்த முடியவில்லை

இது குறித்து காரு நிருபர்களிடம் கூறுகையில், ''எனது நிதி நிலைமை நினைத்து எனக்கு வெறுப்பாக இருந்தது. என்னுடைய 10 குழந்தைகளுக்கு உணவு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். தற்கொலை செய்யவும் முயற்சி செய்தேன். அதன் பின் களிமண்ணை சாப்பிடத் தொடங்கினேன். அந்தப் பழக்கம் தொடர்ந்து களி மண் சாப்பிடுவதற்கு, அடிமையாகிவிட்டேன். இப்போது அந்த பழக்கத்தில் இருந்து என்னால் விடுபடமுடியவில்லை.

என் மூத்த மகன்கள் காரு, சியா, ராம் பாஸ்வான் உள்ளிட்ட குடும்பத்தினர் பலரும் என் பழக்கத்தை நிறுத்த முயற்சி் செய்தனர். ஆனால், என்னால், அந்த பழக்கத்தை நிறுத்த முடியவில்லை'' எனத் தெரிவித்தார்.

ஒரு கிலோ களிமண்

காருவின் மகன் சியா ராம் பாஸ்வான் கூறுகையில், ''என் தந்தைக்கு இருக்கும் வினோதமான களிமண் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்த பல முறை முயற்ச்சி செய்தோம். ஆனால், அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. களிமண் எங்கு கிடைக்குமோ அங்கு சென்று நாள் ஒன்றுக்கு ஒரு கிலோவுக்கு குறையாமல் சாப்பிட்டுவார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக இதுவரை இவரின் உடலுக்கு எந்தவிதமான பாதிப்பும் வந்ததில்லை. ஆரோக்கியத்துடன், நல்ல உடல்நிலையுடன் எனது தந்தை இருக்கிறார்'' என அவர் தெரிவித்தார்.

களிமண் சாப்பிட்டு உயிர்வாழும் காருவுக்கு கடந்த 2015-ம் ஆண்டு பீகார் மாநிலத்தின் 'சபோர் கிரிஷி வித்யாலயா' விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

“நான் எதைச் செய்தாலும், அதைச் சிறப்பாகச் செய்வேன்” கோடீஸ்வரரான முடி திருத்துனர்…

 200 ஆடம்பர கார்களின் சொந்தக்காரர்  ரமேஷ் பாபு.. 

ramesh-babu6.jpg?resize=600%2C450

ஒரு முடி திருத்தும் கலைஞரான ஜி. ரமேஷ் பாபு என்பவர் 1994 ஆம் ஆண்டில் தனது சேமிப்பைக் கொண்டு வாங்கிய ஒரு மாருதி வானுடன் தனது தொழிலைத் தொடங்கித் தற்போது ஒரு கோடீஸ்வரராக (200 ஆடம்பர கார்களுக்குச் சொந்தக்காரர்) ஆன கதையைப் பற்றி  நம்மில்  பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

இன்றளவும் முடி வெட்டுவதை விரும்பும் தனது பணிவான தொடக்கக் காலங்களை ஒருபோதும் மறக்காத ரமேஷ் பாபுவின் ஊக்கமளிக்கும் இந்தக் கதையை அனைவரும்  பகிர்கொந்ள்கிதுகொள்றோள வேண்ம்டும்.

ரமேஷ் பாபு பெரும்பாலான நாட்களில்  தனது  3.1 கோடி ரூபாய்  மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை ஓட்டிக் கொண்டு தனது பணியிடத்திற்கு செல்கிறார். போட்டிகள் நிறைந்த உலகில் தனது நேர்மை, கடின உழைப்பு, பணிவு மற்றும் சிறிதளவு தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் மூலம் குடிசையிலிருந்து கோபுரத்திற்கு உயர்ந்து மிகப் பெரிய வெற்றியைச் சாதித்த ரமேஷ் பாபு என்பவருடைய அற்புதமான கதை இது.

அரசியல்வாதிகள் முதல் பிரபல பாலிவுட் நடிகர்கள் வரை அவர் மெர்க்கடஸ், பிஎம்டபுள்யூ, ஓடி, ஐந்து மற்றும் பத்து இருக்கைகளைக் கொண்ட ஆடம்பர வான்கள் மற்றும் அவருடைய இறுதிப் பெருமிதமான ரோல்ஸ் ராய் வரை 75 சொகுசு ஆடம்பரக் கார்களின் அணிவகுப்பை வைத்திருக்கிறார்.  மேலும் அவரது வியாபார வாடிக்கையாளர்களின் வரிசை அரசியல்வாதிகள் முதல் பிரபல பாலிவுட் நடிகர்களான சலமான கான், அமீர் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் போன்றவர்களின் பட்டியல் நீள்கிறது.

ramesh-babu5.jpg?resize=600%2C450

 அவர் வாடகைக்கு விடும் காரின் மிகக் குறைந்த வாடகை ஒரு நாளுக்கு  1000 ரூபாய் முதல் மிக உயர்ந்த அளவாக 50,000 ரூபாய் வரையிலும் அதிகரிக்கிறது.  இந்த மனிதருக்கு வாழ்க்கை எப்பொழுதும் திருப்திகரமானதாக இருந்ததில்லை. இவருக்கு 7 வயது இருக்கும் போது பெங்களூரில் முடி திருத்துபராக இருந்த இவரின் தந்தை பி. கோபால் மரணமடைந்தார். மகனுக்காக அவர் விட்டுச் சென்றதெல்லாம் ஒரு சிறிய முடி திருத்த கடை மட்டுமே. அப்பொழுது அவருக்குத் தனது மகன் 40 வயது கூட நிறைவடையும் முன்னரே ஒரு கோடிஸ்வரராக மாறுவார் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கணவரை இழந்த ரமேஷ் பாபுவின் தாயார் தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவும், அவர்களுக்கு மற்றவர்களைப் போலக் கல்வி கிடைக்கவும் மற்றும் தன் குழந்தைகள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடையவும் வேண்டி ஒரு சமையல்காரராக வேலை பார்த்துக் கடினமாக உழைத்தார். அவரால் முடி திருத்தும் கடையை நடத்த முடியாததால் ஒரு நாளுக்கு  5 ரூபாய்க்  அதனை வாடகைக்கு கொடுத்தார்.

தனது ஊழியர்களுக்குக் கட்டளைகள் இட்டுக்கொண்டு தனது மொபைல் போன் அழைப்புகளுக்குப் பதிலளித்துக் கொண்டே இடையே “நாங்கள் ஒரு நாளுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டு வளர்ந்தோம்” என்று சொல்கிறார் ரமேஷ் பாபு.   அவர் வளர வளர அவருடைய பொறுப்புணர்வு அவரை அழுத்தவே மேற்கொண்டு படிப்பதா அல்லது அவரது தாயாருக்கு ஆதரவாகக் குடும்ப வருமானத்திற்காக வேலைக்குச் செல்லத் தொடங்குவதா என்று அவரால் முடிவெடுக்க முடியாமல் திணறினார்.

ramesh-babu4.jpg?resize=600%2C450

 இருப்பினும் அவருடைய தாயாரின் வலியுறுத்தல் காரணமாகப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்கு முந்தைய நிலை வரை படிப்பதாகத் தீர்மானித்தார் மேலும் மின்னணுவியலில் ஒரு பட்டயமும் பெற்றார். இதற்கிடையே அவருடைய தந்தையாரின் கடை இன்னமும் தொடர்ந்து அற்பத் தொகைக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு 1989 இல் அந்தக் கடையைத் தானே நடத்துவதாக முடிவெடுத்தார். முதன்முதலில் அவருடைய தாத்தாவால் தொடங்கப்பட்ட அந்தக் கடையில் அவர் வேலை செய்யத் தொடங்கினார்.

பின்னாட்களில் இன்னர் ஸ்பேஸ் என்று அவர் பெயரிட்ட அந்தக் கடையில் வேலை செய்யும் போது அவர் எப்பொழுதும் தனக்கெனச் சொந்தமாக ஒரு காரை வாங்க வேண்டுமென்று கனவு கண்டு கொண்டிருந்தார்.  எனவே அவர் ஒரு மாருதி ஆம்னியை வாங்கி அதை வாடகைக்கு விடத் தொடங்கினார். அவரது பேரார்வத்தினால் தொடங்கிய அதுவே விரைவில் மிகப் பெரிய அளவில் வெற்றிகரமான வாடகைக் கார வியாபாரமாக மாறியது.  2004 இல் அரசாங்கம் சுற்றுலாத் துறையைத் ஊக்குவிக்கத் தொடங்கிய பின், அவர் ஆடம்பர கார்களை வாடகைக்கு விடுவது மற்றும் சுயமாகக் கார ஓட்டும் தொழிலில் நுழைந்தார். அதன் பிறகு ரமேஷின் சுற்றுலா மற்றும் போக்குவரத்து பின்னடைவைச்  சந்திக்கவில்லை.

“நான் உள்ளூரில் இன்ல்ரெல் போன்ற சிறிய வாடிக்கையாளர்களுக்கு எனது கார்களை வாடகைக்கு விடத் தொடங்கினேன். அது நன்றாகப் போய்க் கொண்டிருந்த போது, நான் தைரியமாக ஒரு இன்னும் ஓர் அடியெடுத்து வைத்து,   என்னுடைய முதல் ஈ வகுப்பு மெர்கடெஸ் காரை வாங்கினேன். ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் பெரிய அதிகாரிகளுக்குக் கூட ஆடம்பர சொகுசு கார்களை வாடகைக்கு விடும் டாக்சி சேவை இருந்திருக்கவில்லை.” என அவர் தெரிவித்தார்.

ramesh-babu3.jpg?resize=600%2C450

பெரிய நட்சத்திர தொழிலதிபர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் அவருடைய கார்களில் பயணம் செய்திருக்கிறார்கள். “எனக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள், மேலும் எனது கார்கள் மிகப் பெரிய நபர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஐஸ்வர்யா ராய் பச்சன் முதல் அமிதாப் பச்சன், ஷாரூக் எனப் பெரும்பாலான பிரபலங்கள் என் காரை ஓட்டிக் கொண்டு வலம் வந்திருக்கிறார்கள்.

இத்தகைய உச்சங்களை அவர் தன்னுடைய வேர்களின் தொடுதலை இழக்க விரும்பாததால் ரமேஷ் இன்னமும் அவருடைய முடிதிருத்த கடைக்குத் தினமும் செல்கிறார். “தினமும் காலை 6 மணிக்கு நான் தொழில் எப்படி நடக்கிறது என்பதைச் சரிபார்க்க கடைக்குச் செல்வேன். அதன் பிறகு காலை 10.30 க்கு நான் அலுவலகத்தில் இருப்பேன். மேலும் ஒவ்வொரு மாலையும் தவறாமல் 5.30 மணிக்கு நான் எங்கள் முடிதிருத்த நிலையத்தில் இருப்பேன். என்னிடம் மட்டுமே குறிப்பாக முடி வெட்டிக் கொள்ள வேண்டும் என்று வரும் சில வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எனக்கு மும்பையிலும் கொல்கத்தாவிலும் மாறாத வாடிக்கையாளர் தளம் உள்ளது” என்கிறார் அவர். குடும்பம் மேலும் ரமேஷ் தனது குழந்தைகளான இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுக்குச் சிகை அலங்காரக் கலையைக் கற்றுத் தருகிறார். “அதுவும் ஒரு திறன் சார்ந்த வேலை, அதை அவர்கள் கண்டிப்பாகக் கற்றுக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் நான் அவர்களை என்னுடன் கடைக்கு அழைத்துச் செல்வேன். ஆனால் தற்போது அங்கு எதையும் எடுத்துச் செய்வதற்கு அவர்கள் மிகவும் சிறியவர்களாக இருக்கிறார்கள். நான் அங்கு இருக்கும் வரையிலும், எனக்குப் பிறகும் கூட, முடி திருத்த நிலையம் வெற்றிகரமாக இயங்கும் என்று முழு நம்பிக்கையுடன் உறுதியளிக்கிறேன். விடுமுறை குடும்பத்துடன் சுற்றுலா செல்வதாக இருந்தாலொழிய பொதுவாக நான் விடுமுறை எடுத்துக் கொள்வதில்லை. செய்யும் தொழிலே தெய்வம் என்று நான் எப்பொழுதும் நம்புகிறேன். இந்த இன்னர் ஸ்பேஸ் முடி திருத்த கடையிலிருந்து தான் எனக்கு உணவிற்கான வருமானம் கிடைக்கிறது.” என்கிறார். பழமை மறவாதவர் இன்றளவும் கூட, அவர் இத்தகைய பணக்காரரான பிறகும் கூடத் தன்னுடைய வேர்களை மறக்கவில்லை. அவர் தனது வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு வெறும் ரூ. 100 க்கு முடி வெட்டுகிறார். எதைச் செய்தாலும், அதைச் சிறப்பாகச் செய்பவர் பாபு தான் சிறந்தது என்று கருதியதை செய்ததன் மூலம் தனது வெற்றியை அடைந்தார். “நான் எதைச் செய்தாலும், அதைச் சிறப்பாகச் செய்வேன், அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும்,” என்று புன்னகைக்கிறார் அவர்.

ramesh-babu2.jpg?resize=600%2C450

http://globaltamilnews.net

Link to comment
Share on other sites

தற்காப்பு கலையின் மீது கொண்ட ஆர்வத்தால் சீனாவில் சிறுவன் செய்த வேலை (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)

 

சீனாவைச் சேர்ந்த சிறுவன் குங்பூ பாணியில் தீயை அணைக்க முயன்று முயற்சி தோல்வியடைந்து  40ற்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள்  தீக்கிரையாகியுள்ளன.

தற்காப்பு கலையான குங்பூ மீது மிகவும் ஆர்வம் கொண்டிருந்த, சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த சிறுவன் குங்பூ படங்களில் வருவது போல கடந்த சில தினங்களுக்கு முன் தீயை கையால் அணைக்க நினைத்துள்ளான்.

தனது ஆசையை நிறைவேற்றுவதற்காக வாகன தரிப்பிடத்தில் தரித்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி வைத்து சினிமா பானியில் அணைக்க முயற்சித்துள்ளான்.

online_New_Slide__3_.jpg

பல முறை முயன்றும் தனது முயற்சி பலிதமாகாததால் அதிருப்தி அடைந்த சிறுவன் மெழுவர்த்தியை அணைக்காமல் சென்று விட்டான். 

தீ பரவி வாகன தரிப்பிடத்தில் தரித்து வைக்கப்பட்டிருந்த  40ற்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள்  தீக்கிரையாகியுள்ளன.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை 

சி.சி.டீவி கமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு சிறுவனின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 9.5 லட்சம் ரூபாய் இழப்பீடு பெறப்பட்டுள்ளது.

 

 

 

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்கு பயணமான நாள் (ஜன.21- 1960)

அ-அ+

சாம் என்ற பெண் குரங்கு மெர்க்குரி என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணமானது. பிரபலங்கள் பிறந்த தினம் * 1912 - கொன்ராட் எமில் புளொக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000) * 1953 - பால் ஆலன், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். * 1963 - அகீம் ஒலாஜுவான், நைஜீரியக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

 
சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்கு பயணமான நாள் (ஜன.21- 1960)
 
சாம் என்ற பெண் குரங்கு மெர்க்குரி என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணமானது.

பிரபலங்கள் பிறந்த தினம்

* 1912 - கொன்ராட் எமில் புளொக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000) * 1953 - பால் ஆலன், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். * 1963 - அகீம் ஒலாஜுவான், நைஜீரியக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

பிரபலங்கள் இறந்த தினம்

1924 - விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் (பி. 1870)     1989 - சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்     2002 - சொக்கலிங்க பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர்

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார். 1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது. 1941 - இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.

1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் திரையிடப்பட்டது. 1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

பல பல வண்ணங்கள் மாறும் கொலம்பியாவின் ‘வானவில் நதி’... என்ன காரணம்?!

 
 

அது உலகின் நீளமான ஆறும் இல்லை... அகலமான ஆறும் இல்லை. ஆனால் முக்கியமான ஆறுதான். உலகில் உள்ள ஒவ்வோர் ஆற்றின் நிறம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் இந்த ஆறு, வானவில் போல பல வண்ணங்களில் நிறம் மாறுகிறது. இந்த ஆற்றின் பெயர் கேனோ கிரிஸ்டலெஸ். பார்க்கக் கரடு, முரடான தோற்றத்தில் காட்சியளிக்கிறது கேனோ கிரிஸ்டலெஸ். கரடு முரடான பாறைகளில் விழும் தண்ணீர், கண்ணாடிபோல பளபளவென ஓடும். இந்த நீருக்கு அடியில்தான் சிவப்பு, பச்சை, ஊதா, ஆரஞ்சு எனப் பலவிதமான நிறங்கள் தெரிகின்றன. இதற்குக் காரணம், நதி நீருக்கடியில் வளரும் வண்ணத் தாவரங்களும், அதில் பூக்கும் பூக்களும்தான். இந்த அழகுதான் பலரை அங்கு அழைத்துச் செல்கிறது. 

வானவில் நதி

 

Photo - tripfreakz.com

நிறம் மாறும் அழகுக்காகவே இந்நதி 'நீர்ம வானவில்', 'வானவில் நதி' எனப் புகழப்படுகிறது. கொலம்பியாவின் சியாரா டி லா மெகெரினா பகுதியில் இந்த ஆறு பாய்கிறது. இதன் மற்றொரு சிறப்பு வருடத்தின் அனைத்து நாட்களிலும் நீர் நிறைந்து காணப்படுவதுதான். ஒவ்வொரு ஆண்டும் நீருக்குள் இருக்கும் தாவரங்கள் வெடித்துக் குலுங்குகிறது. வருடம் முழுவதும் நீர் நிறைந்து காணப்பட்டாலும், செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரைக்கும் தண்ணீர் குறைந்து காணப்படும். நீருக்குள் வண்ணமயமாகக் காட்சி தரும் அல்கைட் இன பாசியான மெகரேனிய கிளேவிஜெரா மீது சூரிய ஒளிபடுவதால் பாசிகள் வெடித்து நிறம் மாறுகின்றன. சூரிய ஒளி நேராகப் பாசியின்மீது படுவதால் அவை எப்போதும் புதிய பொலிவோடு காட்சி தருகின்றன. இந்த அழகுதான் பார்வையிடும் சுற்றுலாப் பயணிகளை எளிதில் அந்த இடத்தை விட்டு விலக விடாமல் கெட்டியாக பிடித்துக் கொள்கிறது. நீரினுள் பூக்கும் பாசிகள் சிவப்பு நிறத்தில் மட்டும் பத்து வகையான நிறங்களாகப் பிரிந்து காட்சியளிக்கிறது. வெயில் படாத இடங்களில் பாசியானது பசுமையான நிறத்திலும், இளம் பச்சை நிறத்திலும் காட்சியளிக்கிறது. பூக்கள் பல நிறங்களில் தொடர்ந்து இருப்பதால் பார்ப்பதற்கு வானவில் போல காட்சியளிக்கிறது.

வானவில் நதி

Photo - tripfreakz.com

கேனோ கிரிஸ்டலெஸ் நதியின் பாதை, பூமியில் பாறைக் கவசம் பதித்தது போன்று வெறும் பாறையில் அமைந்திருக்கும். பார்ப்பதற்குப் பாறையில் கால்வாய் அமைத்தது போலவே இருக்கும். ஆற்றின் இரு பக்கங்களிலும் பசுமை போர்த்திய புல்வெளிகள் பார்ப்போர் மனதுக்கு இனிமை தரும். இவ்வளவு செழிப்புமிக்க ஆற்றை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட நீண்டகாலமாகத் தடை போடப்பட்டிருந்தது. கொலம்பியாவிலலிருந்து கேனோ கிரிஸ்டலெஸ் நதி வெகு தொலைவில் இருந்ததும், சென்றுவரச் சரியான பாதை இல்லாததும் தடைக்கு முக்கியமான காரணங்கள். இதுதவிர, கொலம்பியாவின் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியும் அதுதான். அந்நிலையில் அங்குச் சென்றுவரும் பயணிகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பது சற்று சிரமமாக இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலே கண்ட அனுமதி மறுப்பு காரணங்களைவிட நதியின் இயற்கைத் தன்மை மாசுபடும் என்பதும் ஒரு முக்கியமான காரணம்.

வானவில் நதி

Photo - tripfreakz.com

 

சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை மீண்டும் ஏற்ற அரசு 2009-ம் ஆண்டிலிருந்து சுற்றுலாப் பயணிகளை பார்வையிட அனுமதி அளித்தது. அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்நதியைக் காணச் செல்கின்றனர். கொலம்பியாவிலிருந்து, இந்நதியைக் காண ஏற்பாடு செய்யும் சுற்றுலா நிறுவனங்களும் அதிக அளவில் உருவாகி வருகின்றன. இந்நதியின் அருகே தேசியப் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பேசும் படம்:

 

 
21CHLRDSEEMABHAVANIjpg

குடியரசு தினத்தையொட்டி டெல்லி குடியரசு மாளிகை அமைந்துள்ள ராஜ பாதையில் குடியரசு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றுவருகிறது. இந்த ஒத்திகையில் முதன்முறையாக 27 பெண் பாதுகாப்புப் படை வீரர்கள் மோட்டார் சைக்கிள் சாகச அணிவகுப்புப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ‘சீமா பவானி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் குழுவினர் குடியரசு தினத்தன்று தங்களுடைய சாகசத்தைப் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தவிருக்கின்றனர்.

கடந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரம், மகிழ்ச்சி, பெருமிதம், போராட்டம் என உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது:

 

21CHLRDBILALAHMED

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பிலால் அஹ்மத் கவா, சில நாட்களுக்கு முன் டெல்லி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். இவர் கடந்த 2000-ல் டெல்லி செங்கோட்டை தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், பிலால் அஹ்மத் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவாகவில்லை என ஸ்ரீநகர் காவல் துறையினர் கூறியுள்ளனர். அவரை விடுதலை செய்யக்கோரி பிலாலின் தாய் பாத்திமா ஜான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

21CHLRDMEDHAPATKAR

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சமூக ஆர்வலர் மேதா பட்கர் சந்தித்து ஆறுதல் கூறினார். புயலில் மாட்டிக்கொண்ட மீனவர்களை மீட்பதில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்குரியது என்றார் மேதா பட்கர்.

21CHLRDNIRMALA

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுகோய் 30 ஜெட் ரக போர் விமானத்தில் கடந்த புதன்கிழமை பயணம் மேற்கொண்டார். இதற்கு முன்னதாக இந்த ரக போர் விமானத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பயணம் செய்திருக்கிறார்.

 
21CHLRDSARITADEVI

ஹரியாணா மாநிலத்தில் மகளிருக்கான தேசிய குத்துச்சண்டைப் போட்டி நடைபெற்றது. அதில் 60 கிலோ எடைப் பிரிவில் சரிதா தேவி (வலது) முதலிடத்தையும், இரண்டாம் இடத்தை பவித்ராவும் பெற்றனர். 12-வது முறையாக சரிதா தேவி இந்தப் பதக்கத்தைப் பெறுகிறார்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

நெகட்டிவ் வீடியோக்களை நாம் அதிகம் ஷேர் செய்வது எதனால்? ஓர் உளவியல் பார்வை

 
 

ரு வைரல் யூட்யூப் வீடியோ இப்படி விரிகிறது.

பாகிஸ்தான் பாடல் நிகழ்ச்சி ஒன்றுக்காகப் போடப்பட்ட செட் அது. விதவிதமான இசைக் கருவிகள், பாடல் பதிவு செய்யப் பயன்படும் மைக்குகள், வண்ண விளக்குகள் என அந்த இடம் கண்ணைப்பறிக்கிறது. அந்தத் தேர்ந்த இசையமைப்பாளர், பாடகர் உள்ளத்தை உருக்கும் பாடல் ஒன்றை பாடத் தொடங்குகிறார். ஒரு பெண்ணின் பேரழகை வர்ணித்துவிட்டு, அவளை படைத்தக் கடவுளை பாராட்டும் பாடல். அவருடன் இணைந்து அந்தப் பாடலை பாடுவதற்காக ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். பாடல் தொடங்கி அதன் மெய்சிலிர்க்க வைக்கும் இசை மற்றும் வசீகரிக்கும் வரிகளில் நீங்கள் உங்களை மறக்கும் தருவாயில் அருகில் அமர்ந்திருக்கும் பெண்ணின் முகம் அடிக்கடி, ஆனால் சில வினாடிகள் மட்டுமே காட்டப்படுகிறது. உங்கள் மனதில் எதுவும் பதியவில்லை. சரியாக 2:40 நிமிடத்தில் அந்தப் பெண் பாடத் தொடங்குகிறாள். காந்தக் குரல். நிச்சயம் பேரழகிதான். அதுவரை, பாடலின் அழகானப் பொருளை, கொடுக்கப்பட்ட சப்டைட்டில்கள் (Subtitles) வாயிலாகப் புரிந்து கொண்டிருந்த நீங்கள், இப்போது அதைப் பார்க்கக்கூட மறந்து விட்டீர்கள். பாடிக்கொண்டிருக்கும் போதே, தற்செயல் போல, அந்தப் பெண் கேமராவை பார்க்க, அவளிடம் ஒரு சிறிய புன்முறுவல். அந்த நொடியிலோ, அல்லது அதற்கு முன்பாகவோ, அல்லது அந்தப் பாடலின் இறுதியிலோ நீங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டீர்கள். அது, அந்த வீடியோவை ஷேர் செய்வதென்று! அந்தப் பெண்ணின் பெயர் மொமினா மஸ்தேசான் (Momina Mustehsan). அந்தப் பாடல்… சரி, அந்த வரலாறு இப்போது தேவையில்லை.

 

Momina Mustehsan வைரல் வீடியோ

Screenshot From YouTube

கேள்வி இதுதான்: எதற்காக அந்தப் பாடலை நீங்கள் ஷேர் செய்தீர்கள்?

அது ஒரு சிறந்த பாடல். அந்தப் பெண்ணிற்கு காந்தக் குரல். அந்த ஆணின் குரலில் மாபெரும் ஆளுமை. ஆகச்சிறந்த வரிகள். அந்தப் பெண் பேரழகி. இன்னும்… இன்னும்... பல நூறு காரணங்கள் அடுக்கி விடலாம். ஆனால், இவை அனைத்தும் மேலோட்டமான காரணங்கள் மட்டுமே. உங்கள் ஆழ்மனதினுள்ளே இறங்கி சுயபரிசோதனை செய்தால், நீங்கள் சொல்ல மறுத்த, உள்ளறையில் பூட்டிவைத்த காரணங்கள் பல கிடைக்கும். இதை ஷேர் செய்வதால், என் நண்பர்கள் இந்தப் பாடலை பார்ப்பார்கள். எனக்கு நல்ல இசை ரசனையிருக்கிறது என்று அவர்கள் உணர்வார்கள். அதில் எனக்கு ஒரு பெருமிதம். பாடலைப் பகிரும்போது அந்தப் பெண்ணின் அழகை வர்ணித்து இரண்டு வரிகள் சேர்த்தால், நண்பர்கள் கலாய்ப்பார்கள். ஃபேஸ்புக்கில் ரியாக்ஷன்கள் அதிகம் வரும். இன்னும் ஆழ்மனதிற்குள் சென்றால், இன்னமும் நீங்கள் சொல்ல மறுத்துக் கொண்டிருக்கும் காரணங்கள் கிடைக்கலாம். அது இப்போது தேவையில்லை. இந்த வீடியோவை பகிர்வதால் யாருக்கும் எந்த நஷ்டமுமில்லை. சொல்லப்போனால் ஒரு நல்ல பாடலை நண்பர்களைக் கேட்கவைத்த திருப்தி கிடைக்கும். இது சரி. ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான். ஆனால், தவறான வீடியோக்கள் பல வைரல் ஆகிறதே? அதற்கு என்ன காரணம்?

உங்கள் கம்ப்யூட்டரில் யூட்யூப் தளம் சென்று இடது புறமுள்ள ‘Trending’ பட்டனை அழுத்துங்கள். வரும் லிஸ்டில் முதல் பத்து வீடியோக்களில், ஏழு வீடியோக்களாவது புறம் பேசுவது, தவறாகப் பேசுவது, சகித்துக்கொள்ள முடியாத தகாத செய்திகளைப் பரப்புவது, கள்ளத் தொடர்பு செய்திகள், நடிகைகள் குறித்த கிசுகிசு, முட்டாள்தனமான மூடநம்பிக்கைகளை முன்னிறுத்துவது என ஒவ்வொன்றும் ஒவ்வொரு தவறான கருத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும். அதை பொதுவாக ஒரு கூண்டிற்குள் அடைத்தால், 'நெகட்டிவ் வீடியோக்கள்' என அந்தக் கூண்டிற்கு பெயர் வைக்கலாம். ஒரு நல்ல வீடியோ ஒரு வருடம் யூட்யூபில் இருந்து வைரலாகி சம்பாதித்த வியூஸ்களை எல்லாம் அது வெறும் ஐந்தே நாட்களில் கூட முறியடித்து விடும். யூட்யூப், ஃபேஸ்புக் போன்ற ஒரு தளத்தில் அன்று பகிரப்பட்ட இந்த வகை வீடியோக்கள், தூங்கியெழுந்து பார்த்தால், எல்லாச் சமூக வலைத்தளங்களிலும் ஆட்சி செய்து கொண்டிருக்கும். பாஸிட்டிவான விஷயங்களுக்குக் கிடைக்காத ஆகச்சிறந்த சிகப்புக் கம்பள வரவேற்பு, இத்தகைய வீடியோக்களுக்கு ஏன் கிடைக்கிறது?

வைரல் வீடியோ

சமீபத்திய வைரல் வீடியோ ஒன்றை எடுத்துக் கொள்வோம். யாரோ, யாரையோ, எதற்காகவோ திட்டுகிறார்கள். ஒரு கூட்டம் அதனிடம் எதிர்பார்க்கப்படாத, மிகவும் இழிவான ஒன்றைச் செய்கிறது. இப்படியெல்லாம் யோசிப்பதே தவறு, அருவருப்பானது என்று நினைக்கும் விஷயங்களை, பொதுவெளியில் தன் பேச்சில் வெளிப்படுத்துகிறது. இந்த வீடியோ பார்த்தவுடன் நாம் செய்த முதல் செயல் என்ன?

வைரல் வீடியோ“மச்சான், இங்கே பாரேன், என்னா கிழி, கிழிக்கிறாங்க!” என்று அந்த வீடியோ பகிரப்பட்டிருக்கும். இப்படி அதனால் ஈர்க்கப்பட்டோ அல்லது கோபப்பட்டோ, ஒரு நொடி கூட சிந்திக்காமல் ஷேர் பட்டனை அழுத்திவிடுவோம். அவ்வகை வீடியோக்களை வெளியிட்டவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதும் அதைத்தான். உங்கள் ஷேர், அதை நீங்கள் திட்டிக்கொண்டே செய்தாலும் சரி, பாராட்டிக்கொண்டே செய்தாலும் சரி, அந்த வீடியோ வைரல்தானே ஆகிறது! உங்களுக்கு அது ஒரு தவறான வீடியோ என்று தோன்றுகிறது. எல்லோருக்கும் அப்படியே தோன்றுமா? பார்த்த ஆயிரம் பேர்களில் ஒருவரேனும், அந்த வீடியோ கூறுவது சரியான பதிலடிதான் என்று நினைக்க மாட்டார்களா? அப்படி ஒரு மனிதன் மாறினாலும், அதற்குக் காரணம், அதை ஒரு முறை ஷேர் செய்த அந்த ஆயிரம் பேரும்தானே? ஒரு கருத்தை பகிர்வது, பரப்புவது ஒருவரின் தனியுரிமை என்றாலும், ஒரு சில நேரங்களில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை நாம் கருத்தில் கொள்வதேயில்லை. தவறான கருத்துக்களை பிரதிபலிக்கும் வீடியோக்கள் வெளியிடுபவர்கள் இந்த வித்தியாசத்தை நாம் உணராமல் இருப்பதால்தான் வெற்றியடைகிறார்கள்.

அந்த வீடியோக்களுக்கு டிஸ்லைக்குகள் மற்றும் திட்டி வந்த கமெண்டுகள் அதிகம்தான். ஆனால், அது ஏதேனும் ஒரு வகையில் இன்னமும் உங்கள் நியூஸ்ஃபீடில் இருந்து கொண்டுதானே இருக்கிறது? ஆங்கிலத்தில் இதை ‘infamous videos’ என்கிறார்கள். அதாவது அதனுள்ளே இருக்கும் தகாத விஷயங்களுக்காகப் பிரபலமான வீடியோ. குறிப்பு: ‘பிரபலம்’!

ஒவ்வொரு வீடியோவும் ஒரு கருத்தை முன்வைக்கிறது. ஒரு கருத்து எப்படிப்பட்டதாக இருந்தால், அதை மற்றவர்களுக்குப் பரப்ப முற்படுவீர்கள்? கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் இந்தக் கேள்விக்கு பதிலாக, பின்வரும் மூன்று காரணங்களில் எதோ ஒன்றுதான் இருக்க முடியும் என்று கூறுகிறார்.

  • அது நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
  • நல்லதோ, கெட்டதோ, ஏதோ ஓர் உணர்ச்சியை அது தூண்டவேண்டும். மகிழ்ச்சி, திகைப்பு, உத்வேகம், சிரிப்பு, அவமதிப்பு, வெறுப்பு, கோபம், சோகம், பெருமை, ஏக்கம், ஆச்சர்யம், அதிர்ச்சி, குழப்பம், பயம் என்று அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  • அது உங்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.

இந்த மூன்றில் ஒன்றை அந்தக் கருத்து செய்தால் கூட போதும், அது ஏதோ ஒரு வடிவத்தில் உங்கள் நண்பர்களைச் சென்றடையும். அந்தக் கருத்து ஒரு வீடியோ வாயிலாகப் பகிரப்பட்டால் இன்னமும் அதற்கு வீரியம் ஜாஸ்தி. வெறும் வார்த்தைகள், அசையாப் படங்களை விடவும், அது நம்மை அதிகமாக உலுக்கி விடும். இதைத் தவிர, வேறு சில காரணங்களையும் உளவியல் முன்வைக்கிறது.  

வீடியோ பார்ப்பது

“உணர்ச்சிவசப்படுதல்! அதுவும் எதிர்மறை உணர்வுகள்! இதுதான் ஒரு வீடியோவை பகிரவைக்கும் முக்கியமான காரணி!” என்கிறார் ‘Contagious: Why Things Catch On?’ (தொற்று: ஏன் ஒரு விஷயம் பரவுகிறது?) என்ற புத்தகத்தின் எழுத்தாளர். “ஆர்வம், கோபம், சர்ச்சை. இந்த மூன்றையும் போல வேறு எதுவும் நம் ‘ஷேரிங்’ செயலைத் தூண்டிவிடுவதில்லை” என்பது இவர் கருத்து.

இதற்கடுத்த காரணம் எது என்பதை 2011ம் ஆண்டு ‘Psychological Science’ என்ற தளத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வுக்கட்டுரை விளக்குகிறது. உங்கள் உணர்வைத் தூண்டும் ஒரு வீடியோவை, நீங்கள் வேறு ஏதேனும் ஒரு செயலை செய்யும்போது பார்க்க நேர்ந்தால் அதை நீங்கள் நிச்சயம் ஷேர் செய்வீர்கள். அதாவது, உடல் உழைப்பு தேவைப்படும் ஒரு செயலை நீங்கள் செய்கிறீர்கள். அப்போது ஒரு வீடியோவை நீங்கள் காண நேர்கிறது. உங்கள் மூளை நீங்கள் செய்யும் உடல் உழைப்பிலும் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால், இந்த வீடியோவை ஷேர் செய்வது சரியா, தவறா என்ற தர்க்கத்திற்குள் அது ஆழமாகப் போகவே போகாது. அதைப் பொறுத்தவரையில் நீங்கள் உடல் உழைப்பை உறிஞ்சும் காரியம் ஒன்றைச் செய்கிறீர்கள். அதில் கவனம் தேவை. எனவே, இந்த வீடியோவை சுற்றி நீங்கள் எடுக்கும் முடிவை அது அவ்வளவாகச் சீண்டாது. நீங்களும் அந்த வீடியோ உங்களைத் தூண்டிய உணர்வுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அதை ஷேர் செய்துவிட்டு அமைதியாகி விடுகிறீர்கள். இதெல்லாம் நீங்கள் யோசித்துப் பார்ப்பதற்கு முன், அதாவது ஒரு சில நொடிகளில் நடந்து விடுகிறது.

அந்த ஆய்வுக் கட்டுரையில், 93 மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனை ஒன்றைக் குறித்து விளக்குகிறார்கள். அவர்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் தருவாயில் ஒரு செய்திக் கட்டுரையை படிக்கக் கொடுக்கிறார்கள். விருப்பப்பட்டால், அதை அவர்கள் நண்பர்களுக்கு இ-மெயில் அனுப்பிக் கொள்ளலாம். இத்தனைக்கும் அது பகிரப்படும் அளவிற்குப் பெரிய விஷயம் எல்லாம் இல்லை. ஆனால், உடற்பயிற்சியின் போது அதைப் படித்த 75 சதவீதம் பேர், அதை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துள்ளனர். வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் என அந்த ‘சமீபத்திய வைரல் வீடியோ’ பரவலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதாவது பெரும்பாலானோர், ஏதேனும் தீவிரமான வேலைகளுக்கு நடுவிலோ, அல்லது நண்பர்களின் கட்டாயத்தின் பேரிலோ பார்த்து அதனால் ‘ஷேர்’ செய்யத் தூண்டப்பட்டு இருக்கலாம்.

வைரல் வீடியோ

“நண்பர்கள் அனைவரும் பகிர்ந்து விட்டார்கள். நாம் பகிரவில்லை என்றால் நன்றாக இருக்காது”, “எனக்குக் கெட்டவார்த்தைகள் கேட்கப் பிடிக்காது. இதில் என்ன இருக்கிறது என்று கேட்டு சொல்லவும்”, “இந்த விஷயத்தை என் நட்பு வட்டத்திலிருப்பவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அதை அவர்களுக்குக் கொண்டு சேர்த்த முதல் நபர் நானாகத்தான் இருக்க வேண்டும்!", "நான் உண்மையில் அவர்களைத் திட்டி பதிவுசெய்ய, அவர்களின் நிஜ முகத்தை உலகிற்குக் காட்டவே அதைப் பகிர்ந்தேன்!" என்று அந்த வைரல் வீடியோ பகிரப்பட்டதற்கு நாம் ஏகப்பட்ட காரணங்களை அடுக்கலாம். ஆனால், அது அடைந்த வெற்றி, அதே போல் பல கூட்டங்களை அத்தகைய வீடியோக்களை உருவாக்கத் தூண்டியிருக்கிறது. நாமும் அந்தக் கூட்டம் போலப் பிரபலமாவோம், என அதே இடத்தைச் சேர்ந்த வேறு சிலரும் தற்போது முயன்ற வண்ணம் உள்ளனர்.

 

“Infamous” என்பது ஒரு போதை. அது நாம் தவறான விஷயத்திற்காகவே முன்னிறுத்தப் படுகிறோம், நாம் தவறுதான் செய்கிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ள விடாது. ‘பிரபலமாகிறோம்’ என்பதே அதன் தர்க்கமாக இருக்கும். அவர்களிடம் இருந்து உங்களைக் காத்துக்கொள்ள, அவர்களின் “Infamous” போதைக்கு நீங்கள் உதவி செய்யாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அடுத்த முறை ‘ஷேர்’ பட்டன் அழுத்தும் முன், இரண்டு நிமிடம் யோசனை செய்யுங்கள். ஒரு தகாத வீடியோ மற்றவர்களுக்கு உங்கள் வாயிலாகச் செல்வதை தடுக்கலாம்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பிபிசி தமிழ் நேயர்களின் பொங்கல் கொண்டாட்டப் புகைப்படத் தொகுப்பு: கோலம், காளைகளுடன் பொங்கிய மகிழ்ச்சி

 

பிபிசி தமிழின் ஏழாம் வார புகைப்பட போட்டிக்கு "பொங்கல் கொண்டாட்டம்" என்ற தலைப்பில் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

நேயர்கள் அனுப்பி வைத்த பல நூற்றுக்கணக்கான புகைப்படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

நான் சீறுவதற்கு தயார்! - கௌரி சங்கர்

நான் சீறுவதற்கு தயார்! - கௌரி சங்கர்

சீறும் காளை, பறக்கும் வீரர்கள் - முத்துராமலிங்கம்

சீறும் காளை, பறக்கும் வீரர்கள் - முத்துராமலிங்கம்

"பொங்கி வரும் பொங்கல்" - ஸ்ரீரஞ்சினி

"பொங்கி வரும் பொங்கல்" - ஸ்ரீரஞ்சினி

"அம்மாவின் பாடம்" - பூபதி

"அம்மாவின் பாடம்" - பூபதி

காளையை அடக்கும் வீரன் - சசிகுமார்

காளையை அடக்கும் வீரர் - சசிகுமார்

"பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்" - வடிவேல் துசாந்ராஜ்

"பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்" - வடிவேல் துசாந்ராஜ்

 

"கபடி, கபடி, கபடி" - சௌத்தி ராஜா

"கபடி, கபடி, கபடி" - சௌத்தி ராஜா

ஐம்பூதங்களின் தோற்றம் - ஹேமநாதன்

பொங்கல் சாகசம் - ஹேமநாதன்

"இதுதான் சிறுதுளி பெரு வெள்ளமோ?!" - பிரதிப் குமார்

"இதுதான் சிறுதுளி பெரு வெள்ளமோ?!" - பிரதிப் குமார்

http://www.bbc.com

Link to comment
Share on other sites

 

இரு படகுகள் மோதிய தருணம்: பதைபதைத்த மீனவர்கள்

மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களை நோக்கி ஒரு படகு விரைவாக வந்து மோதிய தருணத்தை ஒரு கேமரா படம் பிடித்துள்ளது.

Link to comment
Share on other sites

சுவர்களில் தோட்டம்

 

 
wall3

ஒரு காலத்தில் வீட்டின் புறவாசலில் அல்லது முன்புறம் தோட்டம் இருக்கும். பெரிய அளவில் இல்லையென்றாலும் சிறிய செடிகளாவது இருக்கும். ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது. சிறிய அளவில் இடம் இருந்தால் அங்குக்கூட வீட்டையோ, சிறு அறைகளையோ கட்டிவிடுகிறார்கள். அதனால் வீடுகளில் தோட்டங்கள் வைப்பதே இன்று குறைந்து விட்டது. குறிப்பாகச் சென்னை போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடி கலாச்சாரம் வந்த பிறகு தோட்டங்களுக்கு வேலையே இல்லை.

தனி வீடு வைத்திருப்பவர்கள் தோட்டம் வைக்க விருப்பப்பட்டாலும், அதற்கு இடம் இருப்பதில்லை. பசுமை விரும்பிகள் மாடித் தோட்டத்தோடு ஆறுதல்பட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. தோட்டம் பற்றிக் கவலைப்படுவோருக்கு வெர்ட்டிகல் கார்டன், கிரீன் வால் எனப்படும் பசுமை சுவர் தாவரங்கள் வந்துவிட்டன.

இந்த முறையில் தோட்டம் வைக்க இடம் இல்லையே என்ற கவலையே வேண்டாம். வீட்டுச் சுவர்களிலேயே செடி, கொடிகளைப் படரவிட்டு வளர்க்கலாம். சுவர்களில் மணி பிளாண்ட் போன்ற செடிகளைத் தொங்கவிட்டு வளார்க்கலாம். பசுமைச் சுவர் தாவர முறைக்கு மேலை நாடுகளில் மிகுந்த வரவேற்பு உண்டு. இப்போது நம் நாட்டிலும் வரவேற்பு கூடியிருக்கிறது. சுவர்களில் மட்டுமல்ல, முழு அடுக்கு மாடியிலும்கூட இப்படி விதவிதமான செடிகளை வளர்க்கலாம். வீட்டுத் தூண்களில் அலங்காரக் கொடிகளைப் படரவிடலாம் எனச் சொல்கிறார்கள் கட்டுமானப் பொறியாளர்கள்.

இப்படிப் பசுமைச் சுவர்களை எழுப்பத் திட்டம் இருந்தால், இதுபற்றி முன்கூட்டியே கட்டிடப் பொறியாளரிடம் தெரிவித்துவிட வேண்டும். அப்படிச் சொல்லிவிட்டால் வெர்ட்டிகல் கார்டன், கிரீன் வால் அமைக்கக் கட்டுமானத்தின் போதே வசதி செய்துவிடுவார்கள். இத்தகைய பசுமைச் சுவர் தாவரங்களை அமைப்பது மிகவும் எளிமையான கட்டுமான முறையாகும்.

wall5

சரி, சுவரில் செடி, கொடிகளை எப்படி வளர்க்க முடியும் என்று உங்களுக்குச் சந்தேகம் ஏற்படலாம். இதற்காக ரொம்பவும் மெனக்கெடத் தேவையில்லை. வீட்டின் கட்டுமானப் பணியின்போது சாதாரணச் சுவர்களுடன் சேர்த்து மணல் நிரப்பும் வகையிலான கட்டுமானங்களை அமைத்தாலே போதும். பின்னர் அவற்றில் மணலை நிரப்பிச் செடிகளை நட்டு வளர்க்கலாம்.

கட்டி முடித்த வீட்டிலும் பசுமைச் சுவர் தாவரங்கள் வைக்க வழி இருக்கிறது. கட்டி முடித்த வீட்டில் பந்தல் அல்லது கொடி மாதிரியான அமைப்பை உருவாக்கி, வேர்கள் திறந்த வெளியில் வளரும் வகையில் பசுமைச் சுவர் தாவரங்களை உருவாக்கலாம். சில செடிகளின் வேர்கள் நீரில் இருந்தாலே வளரும் என்பதால், அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

wall6
 

பசுமைத் தாவரங்களை உள்ளடக்கிய சுவர் இன்று அலங்காரப் பொருளாகவும் பார்க்கப்படுகிறது. இது வெப்பத்தின் தாக்கத்தை உணர முடியாத அளவுக்குப் பசுமை கலந்த சூழலை உருவாக்கவும் செய்கிறது. இதனால் நல்ல காற்றோட்ட வசதியும் கிடைக்கும். இதுபோன்ற பசுமைச் சுவர் தாவரங்களை உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களிலும் அமைக்கலாம். வெளிப்புறச் சுவர்களில் அமைக்கப்படும் பசுமைச் சுவர் தாவரங்கள் கோடை காலத்தில் உஷ்ணத்தை உள்வாங்கி வீட்டில் வசிப்பவர்களுக்குக் குளிர்ச்சியான சூழ்நிலையை அளிப்பது சிறப்பாகும்.

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

மைக்ரோவேவ்... வெல்க்ரோ... இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா? #AccidentalDiscoveries

 
 

நம்ம வீட்ல எதையாவது ஒரு பொருளை தொலைச்சுட்டு தேடும்போது, அந்த பொருள் கிடைக்கவே கிடைக்காது. ஆனால், அதுக்கு முன்னாடி தொலைஞ்சுபோன பொருள் கரெக்டா நம்ம கையில கிடைச்சுரும். அதே மாதிரி, நம்ம விஞ்ஞானிகள் ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கும்போது, அத கண்டுபிடிக்கிறதுக்குப் பதிலா வேற ஒன்னை கண்டுபிடிச்சிருப்பாங்க. அப்படி அவங்களுக்கே சர்ப்ரைஸ் கொடுத்த கண்டுபிடிப்புகள் என்னென்னனு பார்க்கலாமா?

1.மைக்ரோவேவ் ஒவேன் (Microwave Oven)

 

மைக்ரோவேவ் ஒவேன் கண்டுபிடிப்புகள்

மைக்ரோவேவ் ஒவன், இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பொருள்தான். வீட்ல இல்லைனாலும், பக்கத்துல ஏதாவது ஒரு பேக்கரிக்குப் போனா இதை கண்டிப்பா பார்க்கலாம். லாக்கர் பெட்டி மாதிரி ஒரு பெட்டிய ஓரமா வெச்சிருப்பாங்க. அதாங்க, கடைக்குப் போய் பப்ஸ் கேட்டா, ஆறிப்போன பப்ஸை ஒரு பெட்டில வச்சு சூடு பண்ணித் தருவாங்களே அதுதான் மைக்ரோவேவ் ஒவன். இதை பெர்சி ஸ்பென்சர் 1945ஆம் ஆண்டு கண்டுபிடிச்சாரு. இந்தப் பெட்டிய ஸ்பென்சர் கண்டுபிடிச்சது ஒரு தனிக்கதை. ஸ்பென்சர் ஒருநாள், காந்தக்கதிர்களுக்கு நடுவுல வேலை செஞ்சுட்டு இருந்தாரு. அப்ப, அவர் சாப்பிடலாம்னு ஆசையா பாக்கெட்ல வாங்கி வச்சிருந்த சாக்லெட் உருகிப்போச்சு. அது எப்பிடி உருகிப்போச்சுன்னு ஆராய்ந்துதான் இந்த மைக்ரோவேவ் ஒவனை ஸ்பென்சர் கண்டுபிடிச்சாரு. ஸ்பென்சர் உருவாக்கின அந்த மைக்ரோவேவ் ஒவன்ல அவர் முதன் முதலா செஞ்சது என்ன தெரியுமா? பாப்கார்ன்!

2.பேஸ்மேக்கர் (Pacemaker)

பேஸ்மேக்கர்

சீராக இல்லாத இதயத்துடிப்பை சீராக்குற ஒரு கருவிதான் பேஸ்மேக்கர், இதை வில்சன் கிரேட்பேட்ச் எப்படிக் கண்டுபிடிச்சாருனு தெரியுமா? நம்ம எல்லாருமே தப்பு பண்ணுவோம். அடுத்த முறை அந்தத் தப்பை திருத்திக்குவோம். ஆனால் இவர் பண்ண தப்பே ஒரு கண்டுபிடிப்பாயிருச்சு. புரியலையா? அதாவது, கிரேட்பேட்ச் இதயத்துடிப்பு குறைஞ்சதுன்னா அதை உடனே அதிகமாக்குற மாதிரி ஒரு கருவியை உருவாக்க முயற்சி செஞ்சுட்டு இருந்தாரு. ஆனால் இவர் எங்கேயோ தப்பா சொருகுன ஒரு சிப் இந்த கருவிக்கு உயிர் குடுத்துருச்சு. இதயத்துடிப்பைச் சீராக்கும் கருவியும் உருவாச்சு.

3.சாக்கரின் (Saccharin)

சாக்கரின்

சாக்கரின்னா வேற ஒன்னுமில்லைங்க, சர்க்கரை மாதிரியே இருக்கும். இனிப்பு அதிகமாக்க பயன்படுத்துற ஒரு வேதிப்பொருள். இன்னும் தெளிவா சொல்லனும்னா இனிப்புல இனிப்பை அதிமாக்குற இனிப்புச் சுவைகூட்டி. இதைக் கண்டுபிடிச்சது, கான்ஸ்டன்டின் ஃபால்பெர்க் என்கிற வேதியியலாளர். இவரோட நண்பரான இரா ரெம்சென் கூட, ஆய்வகத்துல வேலை செஞ்சுட்டு இரண்டு பேரும் சாப்பிடப் போயிருக்காங்க. அப்ப ஃபால்பெர்க் கையைக் கழுவாம சாப்பிட்டிருக்காரு. சாதாரனமா, வேதியியலாளர்கள், வேலை பார்த்ததுக்கப்புறம்  கையைக் கழுவாமல் சாப்பிட்டால் கெமிக்கல்களால் ஆபத்து ஏற்படும் வாய்ப்புண்டு. சில நேரங்களில் உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படலாம். ஆனால் இவருக்கு ஏதோ நல்ல நேரம்போல. இவரு கையில எடுத்து சாப்பிட்ட பிஸ்கட் ரொம்ப இனிப்பா இருந்திருக்கு. என்னடானு யோசிச்சுப் பார்த்தப்ப தான், இந்த வேதிப்பொருளை கண்டுபிடிச்சாங்க. இந்த வேதிப்பொருளை அதிகமா எடுத்துக்கிட்டா கேன்சர் வரும்னும் பேசிக்கிறாங்க.

4. எக்ஸ்-ரே (X- Ray)

எக்ஸ்-ரே

இப்ப நம்ம கையில அடிபட்டாலோ கால்ல அடிபட்டாலோ எலும்பு ஒடஞ்சுருச்சானு உடனே எக்ஸ்-ரே எடுத்து பாக்குறோம்னா அதுக்கு நாம நன்றி சொல்ல வேண்டியது வில்ஹெல்ம் ரோன்டன்-க்குத்தான். ஒரு நாள் இவர் கேத்தோடு கதிர்கள் தொடர்பான ஆராய்ச்சி செஞ்சுட்டு இருக்கும்போதுதான் இந்த  எக்ஸ்-ரே பிறந்தது. ஆராய்ச்சி செஞ்சுட்டு இருக்கும்போது அங்க பக்கத்துல ஒரு பேரியம் ப்லாடினோசைனைடு தகடு இருந்துச்சு. அந்தத் தகடுல அப்ப அவர் பார்த்ததை அவர் கண்களாலேயே நம்ப முடியல. அந்தத் தகடுல, அவர் கையோட எலும்பு அச்சுப்  பதிஞ்சிருந்தது. அதுதான் உலகில் எடுக்கப்பட்ட முதல் எக்ஸ்-ரே.

5.வெல்க்ரோ (Velcro)

வெல்க்ரோ

 

இந்தப் பெல்ட் வச்ச செருப்புல எல்லாம் சரக் சரக்னு ஒன்ன பிரிச்சு ஒட்டுவோமே அதுதான் வெல்க்ரோ. இதை  சுவிஸ் இஞ்சினியர், ஜார்ஜ்ஸ் டீ மெஸ்ட்ரல் எப்படி கண்டுபிடிச்சார்னு தெரியுமா?  ஒரு நாள், அவரும் அவர் நாயும் காட்டுக்குள்ள பயணம் போயிருக்காங்க. அப்ப ஒரு செடி இவரோட பேன்ட்லையும், நாயோட முடியிலையும் ஒட்டிக்கிச்சு. அதை பார்த்துதான் இந்த வெல்க்ரோவை கண்டுபிடிச்சிருக்காரு மெஸ்ட்ரல். நம்ம இப்ப பாக்கெட் வச்ச வெல்க்ரோ வேட்டி கட்டுறோம்னா அதுக்கு இவர்தான் காரணம். நீங்க வெல்க்ரோ வேட்டி கட்டுறீங்கன்னா, இவருக்கு நன்றி சொல்லுங்க மக்களே!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

1984 : முத­லா­வது அப்பிள் மெக்­கின்டொஷ் கணினி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது

வரலாற்றில் இன்று…

ஜனவரி – 22

 

1506 : 150 சுவிஸ் பாது­காப்புப் படை­க­ளைக்­கொண்ட முதற் தொகுதி வத்­திக்­கானை அடைந்­தது.

1798 : நெதர்­லாந்தில் இரா­ணுவப் புரட்சி இடம்­பெற்­றது.

1840 : பிரித்­தா­னிய குடி­யேற்­ற ­வாசிகள் நியூ­ஸி­லாந்தை அடைந்­தனர்.

1863 : ரஷ்­யாவின் ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக போலந்து, லித்­து­வே­னியா, பெலாரஸ் ஆகிய நாடு­களில் கிளர்ச்சி வெடித்­தது.

1899 : ஆறு அவுஸ்­தி­ரே­லிய குடி­யேற்றப் பிர­தே­சங்­களின் தலை­வர்கள் கூட்­ட­மைப்பு பற்றி விவா­திக்க மெல்­பேர்னில் கூடினர்.

varalaru2-copy.jpg1901 : பிரிட்­டனில் 64 ஆண்­டுகள் ஆட்­சியில் இருந்த விக்­டோ­ரியா மகா­ராணி தனது 81 ஆவது வயதில் கால­மா­னதை அடுத்து அவ­ரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்­தா­னி­யாவின் மன்­ன­ரானார்.

1905 : சென் பீட்­டர்ஸ்­பேர்க்கில் சார் மன்­ன­ருக்­கெ­தி­ரான தொழி­லா­ளர்­களின் எழுச்சி முறி­ய­டிக்­கப்­பட்­டது.

1906 : கன­டாவின் பிரிட்டிஷ் கொலம்­பியா கடற்­ப­கு­தியில் வான்­கூவர் தீவில் வலென்­சியா என்ற பய­ணிகள் கப்பல் பாறை­க­ளுடன் மோதி­யதில் 130 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1915: மெக்­ஸி­கோவில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் சுமார் 600 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1941 : இரண்டாம் உலகப் போரில் லிபி­யாவின் டோப்ருக் நகரை நாசிப் படை­க­ளிடம் இருந்து பிரிட்டன் கைப்­பற்­றி­யது.

1964 : கென்னத் கவுண்டா வட றொடீ­சி­யாவின் முத­லா­வது அதி­ப­ரானார்.

1969 : சோவியத் யூனியனின் தலைவர் லியோனிட் பிரஸ்­னேவை படு­கொலை செய்ய முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.

1970 : போயிங் 747 விமா­னத்தின் முத­லா­வது வர்த்­தக சேவை ஆரம்­ப­மா­கி­யது.

1973 : நைஜீ­ரி­யாவின் கானோ விமா­ன­நி­லை­யத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்­ததால் 176 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1980 : நோபல் பரிசு பெற்ற சோவியத் பௌதி­க­வி­ய­லாளர் அந்­திரே சாகரொவ் மொஸ்­கோவில் கைது செய்­யப்­பட்டார்.

1984 : கணினி மௌஸை பிர­ப­லப்­ப­டுத்­திய அப்பிள் மெக்­கின்டொஷ் கணினி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

1987 : பிலிப்­பைன்ஸில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது படை­யினர் மேற்­கொண்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தால் 13 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1992 : ஸயர் நாட்டின் தேசிய வானொலி நிலை­யத்தை தீவி­ர­வா­திகள் கைப்­பற்றி அரசை பதவி வில­கும்­படி அறி­வித்­தனர்.

1999 : இந்­தி­யாவின் ஒரிசா மாநி­லத்தில் அவுஸ்­தி­ரே­லிய கிறிஸ்­தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்­ப­வரும் அவ­ரது இரு மகன்­களும் உயி­ருடன் எரிக்­கப்­பட்­டனர்.

2006 : பொலிவியாவின் முதலாவது சுதேச இன ஜனாதிபதியாக இவோ மொராயெல்ஸ் தெரிவானார்.

2007 : ஈராக்கின் பாக்தாத் நகரில் சந்தையொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சுமார் 88 பேர் கொல்லப்பட்டனர்.

http://metronews.lk

Link to comment
Share on other sites

தெரு இசைக்கலைஞரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட பூனை! - உண்மைக் கதை #MotivationStory

 
 

கதை

‘உண்மையான நேசம் அரிது; உண்மையான நட்பு அரிதினும் அரிது’ - 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கதாசிரியர் ஜீன் டே லா ஃபான்டெயின் (Jean de La Fontaine) இப்படி அடித்துச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். யதார்த்தத்தில் நாம் எல்லோருமே உணர்ந்திருக்கும் விஷயம்தான் இது. கையடக்க மொபைலில் உலகம் சுருங்கிவிட்ட இந்தக் காலத்திலும்கூட ஓர் உண்மையான நண்பன் கிடைப்பது அரிதாகத்தான் இருக்கிறது. சக மனிதர்களை விடுங்கள்... நம்மோடு அன்றாடம் புழங்கும் செல்லப்பிராணிகள் இன்றைக்கும் நம்மோடு கொண்டிருக்கும் நட்பு அபாரமானது. உலகமெங்கும் ஆயிரமாயிரம் நிகழ்வுகள் செல்லப்பிராணிகள் நம்மீது வைத்திருக்கும் நட்பின் உன்னதத்தை மெய்ப்பித்துக்கொண்டே இருக்கின்றன. நெகிழவைக்கும், உருகவைக்கும், ஆச்சர்யப்படுத்தும், அதிரவைக்கும், அசரவைக்கும் அப்படிப்பட்ட கதைகள் ஏராளம். ஒரு மனிதர், ஒரு பூனையுடன் கொண்ட நட்பு அவரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட கதை இது!

 

சிலருக்கு வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும்; பலருக்கு இருக்காது. `என்னடா வாழ்க்கை?’ என்கிற விரக்தியிலேயே வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவராகத்தான் இருந்தார் ஜேம்ஸ் போவென் (James Bowen)... ஒரு பூனையைத் தன் வாழ்க்கையில் சந்திக்கும் வரை!

குதிக்கும் பூனை

1979-ம் ஆண்டு, தென் கிழக்கு இங்கிலாந்திலிருக்கும் சர்ரேயில் (Surrey) பிறந்தார் போவென். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மண முறிவு. குழந்தையாக இருக்கும்போதே அம்மாவுடன் ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்தார். அங்கே அம்மா இன்னொருவரை மணந்துகொண்டார். போவெனுக்கு வாழ்க்கைக் கசப்பான பல அனுபவங்களைத் தந்தது. நாடுவிட்டு நாடு சென்ற வாழ்க்கை... புதிய இடம், புதுச்சூழல், புதிய பள்ளி. சக மாணவர்கள் அவரை ஓர் அந்நியனைப்போலவே பார்த்தார்கள். அதன் காரணமாகவே சமூகத்தின் மேல், பிற மனிதர்களின் மேல் ஒரு பிடிப்பு இல்லாமலேயே போய்விட்டது அவருக்கு. போதாக்குறைக்கு, `ஏ.டி.ஹெச்.டி’ எனப்படும் (ADHD - Attention deficit hyperactivity disorder) குறைபாடு, மன வளர்ச்சிக் குறைபாடு (Schizophrenia), மனஅழுத்தம் என என்னென்னவோ பிரச்னைகள். பரீட்சையில் ஃபெயில்... `உதவாக்கரைப் பையன்’ என்கிற பட்டம், இவற்றைச் சுமந்துகொண்டு தன் 18-ம் வயதில் இங்கிலாந்துக்குத் திரும்பினார். லண்டனிலிருந்த தன் தங்கையின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒன்றின்மீது பற்று இருக்கும். ஜேம்ஸ் போவெனுக்கும் இருந்தது. அவர் ஒரு கிதார் இசைக்கலைஞர். கிதாரின் மீது அவருக்குக் கொள்ளைப் பிரியம். அதுதான் அவருக்கு பின்னாளில் ஒருவேளை உணவுக்காவது உத்தரவாதம் கொடுத்தது. தங்கை வீடு ஒத்துவரவில்லை. தெருக்களில் வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார் போவென். வீடில்லை, பரிந்து பேச ஆளில்லை, தனிமை, வெறுமை... இவற்றிலிருந்து தப்பிக்க போதைக்கு அடிமையானார். லண்டனின் குளிர் படர்ந்த வீதிகளில் அமர்ந்து கிதார் இசைப்பார். வருவோர், போவோர் போடும் சில்லறைக்காசுகள் அவருடைய போதை மருந்துக்கும் உணவுக்கும் போய்க்கொண்டிருந்தன. அவரை அன்றாடம் பார்க்கிற பல பேர் `இவனெல்லாம் எங்கே பிழைக்கப்போகிறான்’ என்றுதான் நினைத்தார்கள். விதி வேறு கணக்குப் போட்டுவைத்திருந்தது.

பூனை

ஒரு கட்டத்தில் போதைக்கு அதிகப் பணம், சாப்பாட்டுக்கு சிரமம் என்கிற நிலை அவருக்கு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையின் மீதிருந்த தைரியத்தை இழந்துகொண்டிருந்தார். பெரும் போராட்டத்துக்குப் பிறகு அவருக்கு வசிக்க ஒரு அப்பார்ட்மென்ட் கிடைத்தது. நம் ஊர் ஹவுசிங் போர்டு காலனி மாதிரியான இடம் அது. அது அவருக்குக் கிடைத்த சிறிய வெளிச்சம். ஆனாலும், போதைதான் தன் வாழ்க்கைக்கான அர்த்தம் என நினைத்துக்கொண்டிருந்தார் அவர்.

ஒருநாள் களைத்துபோய் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் இளைத்துப்போயிருந்த ஒரு பூனை அவர் கண்ணில்பட்டது. அதன் காலில் அடிபட்டிருந்தது. பொதுவாக இங்கிலாந்தில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு கழுத்தில் பட்டை கட்டியிருக்கும்; அதன் உரிமையாளர் இவர்தான் என அதில் எழுதியிருக்கும். அப்படி எந்த அடையாளமும் அந்தப் பூனையிடம் இல்லை. போவென், அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடம் அது யாருடைய பூனை என்று விசாரித்தார். யாரும் அதற்கு உரிமை கொண்டாடவில்லை. `இந்தப் பூனையும் என்னைப்போலத்தானா... இதற்கும் யாருமே இல்லையா?’ என்கிற எண்ணமே அவரை வாட்டியது. அதன் மேல் ஒரு பரிவை வரவழைத்தது. `உனக்கு நான் இருக்கிறேன்’ என சொல்லத் தூண்டியது. அதை எடுத்துக்கொண்டு ஒரு மிருக வைத்தியசாலைக்குப் போனார். அந்தப் பூனைக்கு அவரே `பாப்’ என்று பெயர்வைத்தார். மருத்துவமனையில் பாப்புக்கு சிகிச்சை கொடுத்தார்கள். தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இரண்டு வாரங்கள் அந்தப் பூனையைக் கண்போலப் பார்த்துக்கொண்டார் போவென்.

ஜேம்ஸ் போவென்

பாப் குணமடைந்தது. அப்போதும் அதை உரிமைகொண்டாட யாரும் வரவேயில்லை. `சரி... இந்தப் பூனைக்குத் தன் எஜமானன் வீடு தெரியாதா? விட்டால், அது பாட்டுக்குப் போய்விடப் போகிறது...’ என்று நினைத்து, அதைத் தெருவில் விட்டுவிட்டார் போவென். ஆனால் அந்தப் பூனையோ, அவர் பின்னாலேயே நாய்க்குட்டிபோல வந்துகொண்டிருந்தது. பஸ்ஸில், அவர் கிதார் இசைக்கும் தெருவில், வீட்டுக்குச் செல்லும் வழியிலெல்லாம் பின்தொடர்ந்தது. இந்தக் கணத்தில் அவருக்கு வேறு வழியிருக்கவில்லை... பாப் என்கிற அந்தப் பூனையைத் தன் நண்பனாக ஏற்றுக்கொள்வதைத் தவிர. அப்போது வேறோர் அதிசயம் நடந்தது. அவர் கிதார் இசைப்பதைக் கேட்காதவர்கள்கூட அந்தப் பூனையின் அழகில் சொக்கி நின்று கேட்க ஆரம்பித்தார்கள். கொடுக்கிற காசுகளையும், கரன்ஸிகளையும் இரு முன்னங்கால்களையும் தூக்கி வாங்க ஆரம்பித்தது பூனை. கிதார் வைக்கும் பையில் ஒய்யாரமாக நின்றுகொண்டு போகிற வருகிறவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் பாப்பின் அழகு அசத்தலாக இருந்தது. `ஒரு மனிதனுக்கும் பூனைக்கும் இப்படி ஒரு பிணைப்பா?’ என்கிற எண்ணமே பலரையும் அவர்களைத் திரும்பிப் பார்க்கவைத்தது. போவெனின் வருமானம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. பாப்புக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். அதற்காகவே உணவுகளையும், விளையாட்டுப் பொருள்களையும் வாங்கிக் கொடுத்துவிட்டுப் போனார்கள்.

இப்போது பாப்புக்காகவே, போவேன் வாழ்ந்தாகவேண்டிய நிர்ப்பந்தம். தன்மேல் பிரியம் காட்டும் ஒற்றை ஜீவன்... அதைப் பார்த்துக்கொள்ள வேண்டாமா? அதோடு பாப்பைப் பார்க்க தெருவில் ரசிகர்கள் இருந்தார்கள். அதன் காரணமாகவே அவர் நேரத்துக்கு கிதாரைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டியிருந்தது. அதனால், அவருடைய போதைப் பழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, ஒரு கட்டத்தில் ஒழிந்தே போனது. அவருக்குப் பொறுப்பு வந்தது. அவரையும் அந்த பாப் பூனையையும் குறித்த வீடியோக்கள் இணையதளத்தில் வலம் வர ஆரம்பித்தன. அந்த நட்பை பல்லாயிரக்கணக்கானவர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.

அழகுப் பூனை

தனக்கும் தன் செல்லப் பூனை பாப்புக்குமான உறவை `A Street Cat named Bop' என்கிற புத்தகமாக எழுதி வெளியிட்டார் போவென். புத்தக விற்பனை சக்கைபோடு போட்டது. அதோடு, உலகம் முழுக்க `பெஸ்ட் செல்லர்’ விற்பனையிலும் சாதனை படைத்தது. அதன் பிறகும் தனக்கும் அந்தப் பூனைக்கும் உள்ள உறவை சில புத்தகங்களாக வெளியிட்டார். அத்தனைக்கும் வாசகர்களிடமிருந்து பலத்த வரவேற்பு. அவருடைய முதல் நூலான `A Street Cat named Bop' திரைப்படமாக எடுக்கப்பட்டு 2016-ம் ஆண்டு வெளியானது. அதில் சில காட்சிகளில் பாப்பும் நடித்திருந்தது. உண்மையான நட்பு எவ்வளவு பெரிய தடைகளையும் உடைத்தெறியும் என்பதற்கு உதாரணம், பாப்-போவென் நட்பு.

 

இப்போது போவென் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும், வீடில்லாதவர்களுக்கும் தன்னாலான உதவியைச் செய்துகொண்டிருக்கிறார், விலங்குகள் நலவாழ்வுக்காகக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்... தன் செல்ல பாப்புடன்!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஆழ்கடலில் உயிர் காக்கும் ஆளில்லா விமானம்

ஆஸ்திரேலிய கிழக்கு கடற்கரையில் அலைகளின் நடுவே தத்தளித்த இரு இளைஞர்களை 70 வினாடிகளில் காப்பாற்ற உதவிய ஆளில்லா விமானம்.

Link to comment
Share on other sites

பச்சைமலை, புளியஞ்சோலை... திருச்சிக்குப் பக்கத்துல ஒரு மினி ஒகேனக்கல்! ஊர் சுத்தலாம் வாங்க...

 

பச்சைமலை - ஊர் சுத்தலாம் வாங்க

‘ஒரு ஹேப்பி நியூ இயர் பாட்டுப் பாடுங்க’ என்றால், கமலின் 'இளமை இதோ'  பாடலைத் தவிர வேறு எதுவும் சட்டென நினைவுக்கு வராது. அதுபோலத்தான் பச்சைமலையும். (Pachamalai) ‘பச்சமலைப் பூவு.. உச்சிமலைத் தேனு’ என்கிற இளையராஜா பாடலைத் தவிர பச்சைமலைக்கும் உங்களுக்கும் உண்டான தொடர்பு பெரிதாக இருந்திருக்காது. ஆனால், எனக்கும் பச்சைமலைக்கும் உண்டான தொடர்பு, அதையெல்லாம் தாண்டி இப்போது வேற லெவலுக்குப் போய்விட்டது. இதுவே நான் ஒரு பருவப் பெண்ணாக இருந்திருந்தால், ‘பச்சமலைப் பூவு’ பாடல் எனக்குப் பொருந்தியிருக்கும். வழக்கம்போல், இந்த வருடமும் எனக்கு கமலின் ‘ஹேப்பி நியூ இயர்’ பாடலோடுதான் தொடங்கியது. ஆனால், வித்தியாசமாக! பச்சைமலை அடிவாரத்தில்!

இந்தப் புத்தாண்டுக்கு, திருச்சியிலிருந்து 85 கி.மீ. தொலைவில் இருக்கும் பச்சைமலைக்குப் போய்விட்டு... திரும்பி வருவதற்கு எனக்கு மனசே இல்லை. பச்சைமலையின் வசியம் அப்படி! ‘அப்படி யாரும் இங்க இல்லையே’ என்று பக்கத்துவீட்டுக்காரர்களைக்கூடத் தெரிந்து வைத்திருக்காத நகரத்து ஃப்ளாட்வாசிகளைப்போல, சில திருச்சிக்காரர்களுக்கே பச்சைமலையைப் பற்றிப் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை என்பது வருத்தமா? மகிழ்ச்சியா? பிரபலமாகாத லோ பட்ஜெட் படங்கள்போல், இன்னும் டூரிஸ்ட்களால் அமளி துமளிப்படாமல் இருப்பது பச்சைமலையின் இயற்கை அமைப்புக்கு ஒரு வகையில் ஆசுவாசம்தான். 

ஓகே! பச்சைமலைக்கு ஒரு ஜாலி ட்ரிப்!

 

பச்சைமலை - புளியஞ்சோலை

வழக்கம்போல், புகைப்படமே கண்ணாக திருச்சியில் போட்டோகிராபர் காத்திருந்தார். ‘உங்களுக்கு கார் ஓட்டத் தெரியும்; ஆனால், கார் இல்லை’ என்பவர்களுக்கு ஒரு ஐடியா. ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டில் காரை வாடகைக்கு எடுத்தால், ஒரு நாளைக்கு 2,500 ரூபாய் முதல் 4,000 வரை செலவாகும். பிரபலமான இடங்களில் மட்டும்தான் இந்த ஆப்ஷன். இதுவே மற்ற ஸ்பாட்கள் என்றால், நீங்கள் செல்ஃப் டிரைவிங்குக்கு காரை எடுப்பது சரியானதாக இருக்கும். வாடகையும் கிட்டத்தட்ட அதேதான் வரும். ஆனால், 'Driving at Own Risk' என்பது மட்டும்தான் இதில் சிக்கல். திருச்சியில் ஒரு டிரைவிங் ஸ்கூலில், ஒரு டொயோட்டா காரை வாடகைக்கு எடுத்துவிட்டுக் கிளம்பினோம். 

ரன்பீர், ரன்வீர்போல் திருச்சியைப் பொறுத்தவரை எனக்கு அடிக்கடி குழப்பும் ஒரே விஷயம் - துறையூர், உறையூர். இரண்டுமே திருச்சிதான். வெவ்வேறு ரூட். ஆனால், இரண்டு பாதைகள் வழியாகவும் பச்சைமலை போகலாம். இந்த முறையும் துறையூரும் உறையூரும் குழப்பியடித்துவிட்டது. கவனமாக துறையூர் வழியைத் தேர்ந்தெடுத்துக் கிளம்பினேன். பச்சைமலைக்கு, பேளூர் ரிஸர்வ் ஃபாரெஸ்ட் வழியாகயும் ஒரு டெரர் ரூட் இருக்கிறது. இதற்கு அனுமதி வேண்டும்.

டூர் என்று வந்துவிட்டால், சிலர் வேட்டை நாய் ஆகிவிடுவார்கள். வேட்டை நாய் எப்போதுமே வேடிக்கை பார்க்க விரும்பாது. நானும் அந்த ரகம்தான். ஓர் இடத்துக்குப் போகும்போது, அதை மட்டும் ஃபோகஸ் பண்ணாமல் போகும் வழியிலும் கண் வையுங்கள். நினைத்ததைவிட பிரமாதமாக அமையலாம் அந்த ட்ரிப்! கிழவரை, கடவரி, பேரிஜம் - இவையெல்லாம் கொடைக்கானல் போகும்போது நிச்சயம் நீங்கள் மிஸ் செய்த ஸ்பாட்களாய் இருக்கலாம். அப்படி நான் கண்டடைந்த ஓர் இடம் - புளியஞ்சோலை. இந்தப் பச்சைமலை ட்ரிப், அடுத்த ஆண்டு வரை என் நினைவுக் குடுவையிலிருந்து 'எவாப்ரேட்' ஆகாமல் இருக்கலாம். அதற்கு புளியஞ்சோலையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 

பச்சைமலை - புளியஞ்சோலை

‘பெரிய கொலம்பஸ் இவரு... அமெரிக்காவைக் கண்டுபிடிச்சிட்டாரு’ என்று இதற்கு திட்டி கமென்ட் போடுபவர்கள், நிச்சயம் திருச்சி சுற்றுவட்டாரக்காரர்களாகத்தான் இருப்பார்கள். துறையூர் தாண்டி ஆத்தூர் சாலையில், இடதுபக்கம் திரும்பி கிட்டத்தட்ட 25 கி.மீ பயணித்தீர்கள் என்றால், பச்சைப் பெருமாள்பட்டி எனும் ஊருக்கருகில் ஓர் அருமையான இடம் உண்டு. அது, புளியஞ்சோலை. காரை பார்க் செய்யும்வரை, ஏதோ புளியமரங்களாக இருக்கும் பார்க், கோயில் குளங்கள் அமைந்திருக்கும் சோலை என்றுதான் நினைத்தேன். மீன் வறுவல்கள், கால் நனைக்கத் தூண்டும் ஓடை, குளிப்பதற்குக் கிடங்குகள், தின்பண்டங்களை எப்போது வேண்டுமானாலும் பிடுங்கித் தின்னக் காத்திருக்கும் குரங்குக் கூட்டங்கள் என்று ஒகேனக்கலின் செல்லமான மினியேச்சர் போல அருமையாக இருந்தது இடம்.

 

pachamalai

காரை பார்க் செய்யும்போதே, ‘சலசல’வென ஓடை நீர் புகுந்து புறப்படும் சத்தம் கேட்டது. அற்புதமாக இருந்தது. இடதுபுறம் திரும்பினால், ஓடையின் மேலுள்ள குட்டிப் பாலத்தைத் தாண்டி அரசமரத்தடியில் பூச்சொறியப்பட்டபடி வீற்றிருக்கிறது குட்டியாக ஒரு கோயில். குருவாயி அம்மன் கோயில் என்றார்கள். நாத்திகனான எனக்கே ரொம்ப ஆர்வமாகிவிட்டது. கமலை ரசிக்கிற ரஜினி ரசிகன்போல் கோயில் அமைந்திருந்த இடத்தை நன்றாக ரசித்தேன். ‘‘என்ன கோயில்... என்ன விசேஷம்’’ என்று விசாரிக்க ஆரம்பித்துவிட்டேன். இங்குள்ள ஆதிவிநாயகர் சிலைக்குப் பின்னால் இருக்கும் ஒரு புராணக் கதை ஒன்றைச் சொன்னார் பெண் பூசாரிப் பாட்டி ஒருவர்.

pachamalai

‘‘பிள்ளைப் பேறே இல்லாத சிவன் - பார்வதி தம்பதியினருக்கு நீண்ட நாள் கழித்துப் பிறந்த சிறுவன் - விநாயகர். ஒருமுறை கைலாயத்தில் குளிக்கச் சென்ற தன் தாய்க்குக் காவல் காத்த சிறுவனிடம் தகராறு ஏற்படுகிறது சிவனுக்கு. மகன் என்று தெரியாமல், விநாயகரின் கழுத்தை வாளால் சீவிவிடுகிறார் சிவன். பிள்ளைப் பாசத்தில் பார்வதி கதற, அப்போது ஆபத்பாந்தவனாக விஷ்ணுவும் பிரம்மனும் இதற்குப் பரிகாரம் சொல்கிறார்கள். காட்டுப் பக்கம் நாலா திசையில் செல்லும்போது, எந்த உயிரினம் வடக்குப் பக்கமாகத் தலை வைத்துப் படுத்திருக்கிறதோ, அந்த உயிரினத்தின் தலையை அப்படியே சிறுவன் உடம்பில் பொருத்தினால், உயிர் வந்து விடும். மகனைக் காப்பாற்ற சிவன் காடு காடாய் அலைகிறார். அப்போது வடக்குப் பக்கமாக யானை ஒன்று வீற்றிருக்க, யானையின் தலையைக் கொய்து சிறுவனின் உடம்பில் அலேக்காகப் பொருத்தி உயிர் வரச் செய்தார். அந்தச் சிறுவன்தான் பிள்ளையார். யானைத் தலை வருவதற்கு முன்னால், மனிதத் தலையுடன் இருந்த விநாயகர் நினைவாகத்தான் இந்த ஆதிவிநாயகர் சிலை’’ என்று ‘சுகிசிவம்’போல் கதாகாலட்சேபமே பண்ணிவிட்டார் பூசாரிப் பாட்டி. ‘பிள்ளையாருக்கு ஏன் தும்பிக்கை இருக்கு’ என்று ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி அன்றும் என் பக்கத்து வீட்டு வாண்டுகள் என்னை நோண்டியெடுப்பது இனி இருக்காது. இந்தக் கதையையே அவர்களுக்குச் சொல்லிவிடலாம். பூசாரிப் பாட்டிக்குக் காணிக்கை செலுத்திவிட்டு, அழகாக ஓடிய ஓடையில் கால் நனைத்துவிட்டுக் கிளம்பினேன்.

பச்சைமலை - புளியஞ்சோலை

‘காடு இல்லை; ஆனா காடு மாதிரி’ என்றிருந்த காட்டுப் பாதை வழியே குட்டியாய் ஒரு மினி ட்ரெக்கிங். ஒரு கையில் மீன் வறுவல், ஒரு கையில் கேமரா என்று ஸ்நாக்ஸ் டைமில்கூட கேமராமேனின் தொழில்நேர்த்தி வியக்க வைத்தது. ஒகேனக்கலின் ஒண்ணுவிட்ட தம்பியைப் பார்ப்பதுபோலவே இருந்தது மொத்தப் புளியஞ்சோலையும். பரிசல் சவாரி மட்டும்தான் மிஸ்ஸிங். ஆனால், இங்கே அதற்கு வாய்ப்பில்லை. காரணம், அங்கங்கே பதுங்கியிருக்கும் பாறைகள். தண்ணீர் மிரட்டவில்லை. அவ்வளவாகக் கூட்டமே இல்லை. அம்மாக்கள், தங்கள் மகன்களையோ மகள்களையோ காலை நனைக்க வைத்து, ‘ஒண்ணும் இல்லடா.. இறங்கு... ஜாலியா இருக்கும்’ என்று வீரத்தாய்களாக மாறிக் கொண்டிருந்தார்கள். முழங்கால் அளவுதான் ஆழம்; ‘தைரியமா இறங்குங்க’ என்பதுபோல், பெருசுகள் சிறுசுகள் எல்லோரையும் அழைக்கிறது ஓடை. விஷுவல் டேஸ்ட்டில் நிறைய புகைப்படங்களை அள்ளித் தள்ளினார் கேமராமேன். 

 

பச்சைமலை - புளியஞ்சோலை

புளியஞ்சோலைக்கு எங்கிருந்து இவ்வளவு தண்ணீர் வருகிறது என்று விசாரித்தேன். புளியஞ்சோலைக்குப் பின்புறம் கொல்லிமலை. அங்கிருக்கும் ஆகாய கங்கை அருவியிலிருந்து வழியும் நீர்தான் புளியஞ்சோலைக்குப் பயணிப்பதாகச் சொன்னார்கள். தண்ணீர் வரும் பாதையை அப்படியே ஃபாலோ செய்தால், கொல்லிமலைக்குச் சென்று விடலாம் என்றார்கள். நீச்சல் எக்ஸ்பெர்ட்டுகளுக்காக, கொஞ்ச தூரத்தில் அகழிபோல் இருந்த ஒரு ஏரியாவில், பாறைக்கு மேலிருந்து சிலர் ‘தலைகீழாத்தான் குதிக்கப் போறேன்’ என்று கவுண்டமணி போல் ‘டைவ்’ அடித்துக் குளித்துக் கொண்டிருந்தார்கள். ரொம்பவும் ஆழம் இல்லாமல், டைவ் அடித்துக் குளிக்க ஏற்ற இயற்கை அமைத்த நீச்சல் குளம் மாதிரி இருந்தது. சும்மா ஐந்து தடவைதாம் முங்கினேன். காலை டிஃபன் செமித்தே விட்டது. 

pachamalai

புளியஞ்சோலையில் ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ என்பதுபோல், ஒரே ஒரு ஹோட்டல்தான் இங்கு வருபவர்களுக்குப் பசியாற்றுகிறது. பெயரிடப்படாத படத்துக்கு ஷூட்டிங் நடப்பதுபோல், பெயரே இல்லாத அந்த ஹோட்டலில் பரபரப்பாக நாட்டுக்கோழியை மஞ்சள் தடவி உறித்துக் கொண்டிருந்தார் ஓர் அக்கா. ‘‘நீங்களே செலெக்ட் பண்ணிக் கொடுத்துட்டுப் போங்க தம்பி. குளிச்சுட்டு வர்றதுக்குள்ள சூப், ரசம், குழம்பு, வறுவல் எல்லாம் ரெடி பண்ணிப்புடுறேன்!’’ என்று முன்பே சொல்லியிருந்தார். சொல்லும்போதே எச்சில் ஊறிவிட்டது. 

Pachamalai

நான்வெஜ் பிரியர்களுக்கும், நான்-ஜிஎஸ்டி பிரியர்களுக்கும் இந்த ஹோட்டல், மாமியார் வீட்டு விருந்துபோல் பிரமாதமாக அமையலாம். இங்கு ஸ்பெஷல் என்னவென்றால்... நாட்டுக்கோழி, காடை, மீன் போன்ற பறப்பன, நடப்பன, ஊர்வனவற்றை உயிருள்ளபோதே நீங்கள் செலெக்ட் செய்துவிடலாம். நீங்கள் பசியாற வருவதற்குள் பறப்பனவெல்லாம் இறப்பனவாக மாறி உங்கள் இலையில் விழும்.

‘‘அண்ணே, இந்தக் கோழியை செலெக்ட் பண்ணுங்க... நமீதா மாதிரி நல்லா வெயிட்டா இருக்கு!’’ என்று விடாப்பிடியாக ஒரு நாட்டுக்கோழியை செலெக்ட் செய்தார் புகைப்பட நிபுணர். ஆனால், சாப்பிடும்போது ‘வத்தக் வத்தக்’ எனச் சவ்வாக இருந்தது. ‘நாட்டுக்கோழினு சொல்லிட்டு போந்தாங்கோழியைப் போட்டுட்டாய்ங்களோ?’ நான் முறைத்தேன். ‘‘நான் அப்பவே சொன்னேன்ல தம்பி.. எப்பவுமே எடை அதிகமா இருக்குனு குண்டான கோழியை செலெக்ட் பண்ணக் கூடாது. ஒல்லியான கோழிதான் டேஸ்ட்டா இருக்கும்’’ என்று போகிறபோக்கில் ஒரு டிப்ஸ் கொடுத்தார். அசைவப் பிரியர்கள் நோட் செய்க!

புளியஞ்சோலை தங்குவதற்கு ஏற்ற இடம் இல்லை. ஆனால், தங்கினால் இத்தனை ரம்மியமா என்று கிளம்பவே மனசிருக்காது. ‘அப்படியே பச்சைமலைக்கு டர்ன் அடிச்சுடலாம்’ என்று ப்ளான் பண்ணியிருந்த என்னை, புளியஞ்சோலையில் தங்கும்படி இயற்கை ஒரு விளையாட்டை விளையாடிவிட்டது.

காரில் வருபவர்கள் எப்போதுமே கார் சாவி விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ‘கீலெஸ் சிஸ்டம்’ என்றால், கார் ஓட்டும்போதுகூட சாவியை எப்போதும் செல்போன் மாதிரி உங்கள் பாக்கெட்டிலேயே வைத்திருங்கள். இதுதான் எப்போதுமே பாதுகாப்பு. நாங்கள் சென்றபோது, ஒரு குடும்பம் காரின் டிக்கியில் சாவியை மறந்து வைத்துப் பூட்டிவிட, குழந்தையுடன் அந்தக் கணவனும் மனைவியும் அல்லோல கல்லோலப்பட்டது மறக்கவே முடியவில்லை. இம்மாதிரி நேரங்களில் ஸ்பேர் சாவிதான் ஒரே தீர்வு. அதை உங்கள் பாக்கெட்டிலேயே எப்போதும் வைத்துக்கொள்ள மறக்காதீர்கள். மறுநாள் ஸ்பேர் சாவி கிடைத்த பிறகுதான் காரை எடுக்க முடிந்தது.

புளியஞ்சோலையில் ரூம்கள் அவ்வளவாகக் கிடையாது. 600 ரூபாய் வாடகை ரூம்களில், கூட்டுக்குடும்பத்தினர் அடித்துப் பிடித்துத் தூங்குவதுபோல், இரண்டு பேர் மட்டும் நெருக்கியடித்துத் தூங்கலாம். புளியஞ்சோலை அடர்ந்த காடு போல்தான் இருக்கிறது. ஆனால், காட்டு விலங்குகளால் தொந்தரவு இல்லை. தைரியமாக புளியஞ்சோலையில் செல்போன் டார்ச்சே இல்லாமல், பேய் மாதிரி உலாப் போனோம். இரவு நேரத்தில் சலசலக்கும் ஓடைச் சத்தம், பறவைகளின் சிம்பொனி இசை என்று காதுகளுக்குத் தேனைப் பாய்ச்சிவிட்டு, வெள்ளி நிலாவும் நட்சத்திரங்களும் விளக்காய் எரியும் வீடுபோல் கண்களுக்கும் விருந்தாய் இருந்தது புளியஞ்சோலை. இரவு நேரம் மட்டும் ஊட்டிபோல் செம குளிரடித்தது.

மறுநாள் அதிகாலை விறைக்கும் குளிரில் பச்சைமலைப் பயணம். நுங்கு வண்டி ஓட்டிய சிறுவர்கள், பழைய சினிமாக்களில் வருவதுபோல் பஞ்சாயத்து மேடைகளில் அரட்டையடித்துக் கொண்டிருந்த பெரியவர்கள், புளியங்காய் அடித்துத் துவையல் செய்துகொண்டிருந்த இளசுகள், மாட்டுச் சாணத்தில் ஆர்ட் வரைந்துகொண்டிருந்த ஆயாக்கள், ‘அம்மா, கோழி முட்டை போட்டுருக்குமா’ என்று நாட்டுக்கோழி முட்டையுடன் முகம் மலர்ந்த சிறுமி, ‘கூலிக்குப் போயிட்டு வந்துடுறேன்த்தா... வூட்டையும் மாட்டையும் பார்த்துக்கோ’ என்று திறந்த மேனியுடன் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சிக்ஸ்பேக் குடும்பஸ்தர்கள்... தோட்டத்தோடு கூடிய வீடு அமைந்தால் வரம்... ஆனால், தோட்டத்தையே வீடாக்கிக் குடியிருந்த சில வெள்ளந்தி மக்கள்... இப்படியொரு கிராமத்துப் பயணத்துக்காக எத்தனை நாள் ஏங்கியிருந்தேன்! பழைய பாரதிராஜா படம் பார்ப்பதுபோலவே இருந்தது. போட்டோகிராஃபர் கேமராவை ஆஃப் பண்ணவே இல்லை. 

Pachamalai

பச்சைமலை முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கிறது. மரவள்ளிக் கிழங்கு, அரிசி, அன்னாசி, பப்பாளி, மூலிகை போன்ற இயற்கைப் பொருள்களின் அமோக விளைச்சலில் செழிப்பாக இருக்கிறது ஊர். பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும், உணவைச் சம்பாதிக்கக்கூடிய ஒரே வழி விவசாயம் மட்டும்தான்! அதை முழுமையாக நம்பியிருக்கிறது பச்சைமலை. ‘‘வாவ்... செமயா இருக்குல்ல! இங்க ஒரு ரெண்டு ஏக்கர் வாங்கிப் போட்டு செட்டில் ஆகிட வேண்டியதுதான்’ என்று  கற்பனைக் குதிரையை விரட்டும்  ரியல் எஸ்டேட் புள்ளிகளுக்கு இங்கே இடமில்லை. காரணம் - இங்கு வெளியாட்கள் பெயரில் யாரும் பட்டா போட முடியாது. முழுக்க முழுக்க இங்குள்ள பழங்குடியினருக்கு மட்டும்தான் பச்சைமலை சொந்தம். சுற்று வட்டாரக் கிராமங்களுக்கெல்லாம் சோறு போடும் பூமியை, ரியல் எஸ்டேட் என்ற பெயரில் கூறு போட அனுமதிக்காததற்காக தமிழ்நாடு டூரிஸத்துக்கு ஒரு லைக்!

‘‘பச்சை மலையை விரைவில் எக்கோ டூரிஸமாக ஆக்குவேன்’’ என்று எப்போதோ ஜெயலலிதா சொல்லியிருந்தார். ஜெயலலிதா இப்போது இல்லை; ஆனால், மலையைச் சுற்றிலும் ஆங்காங்கே மர வீடுகள் கட்டும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. ‘‘விரைவில் ஊட்டி - கொடைக்கானல்போல் ஃபாரஸ்ட் சஃபாரி, ஹோட்டல்னு பெரிய சுற்றுலாத் தலமாக்க எல்லா வேலையும் நடந்துக்கிட்டிருக்கு!’’ என்றனர் வனத்துறை அதிகாரிகள் சிலர். இப்போதைக்குப் பச்சைமலையில் என்ஜாய் பண்ண இரண்டே இரண்டு விஷயங்கள் - அருவிக் குளியல், ட்ரெக்கிங்.

pachamalai

செங்காட்டுப்பட்டி என்றோர் இடம் வந்தது. 2006-ல் இந்த இடத்தில்தான் திருச்சி, மதுரையைக் கதி கலங்கவைத்த கொள்ளையர்கள் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி, தமிழகக் காவல்துறைக்குத் தண்ணி காட்டி வந்தார்களாம். சில பல கிராமங்கள் தாண்டி ‘இதுக்கு மேல் கார் போகாது’ எனும்படியான ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு, நடக்க ஆரம்பித்தோம். 360 டிகிரியில் கழுத்து முறியும் அளவுக்குச் சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். இயற்கை அத்தனை அழகும் கொண்டு குடியேறியிருந்தது பச்சைமலையில்.

pachamalai

இங்கே தங்கும் இடங்கள் கிடையாது; உணவகங்கள் கிடையாது; கடைகள் கிடையாது; முறையான சாலை வசதி கிடையாது; ஆள் நடமாட்டம் கிடையாது. இவ்வளவு ஏன்... இத்தனை பெரிய மலையில் விலங்குகள்கூட அவ்வளவாகக் கிடையாது என்றார்கள். கடவுள் இல்லா ஆலயமா? பெண்கள் இல்லா வீடா? விலங்குகள் இல்லா காடா? பரிதாபமாக இருந்தது. ‘‘ஆனா, கரடிங்க கால்தடம் பார்த்திருக்கேன்ங்க!’’ என்று பீதி கிளப்பினார் ஒரு கிராமத்துவாசி. கூடவே மலைப்பாம்புகள் உண்டு என்றும் கிலி கிளப்பினார்கள். நிஜம்தான்... காரில் போகும்போது ‘பாதையா பாம்பா’ என்று சந்தேகம் வரும் அளவுக்கு வளைந்து நெளிந்து சென்ற ஒரு மலைப்பாம்பைப் பார்த்தோம். 

pachamalai

காரை நிறுத்திவிட்டு ஒரு கி.மீ ட்ரெக்கிங். மங்களம் அருவி என்று பழைய டூரிங் கொட்டகைபோல் போர்டு இருந்தது. ‘‘ஃபால்ஸ் இருக்குன்னாங்களே...’’ என்று விசாரித்தேன். ‘‘உள்ளதான் போங்க...’’ என்று 20 ரூபாய் கட்டணம் வாங்கிவிட்டு உள்ளே விட்டார்கள். ஆகாய கங்கை அருவிக்குப் போவதுபோல் சில பல படிகள் இறங்கி வலதுபுறம் திரும்பினால், 'தானுண்டு தன் வேலையுண்டு' என்று தனியாக பச்சைமலை அருவி சலசலத்துக் கொண்டிருந்தது. ‘கச கச’ என ஆள் அரவம் இல்லை. சின்ன அருவி பெரிதாய்க் கூச்சலிட்டதுபோல் கேட்டது. அதிரப்பள்ளி, குற்றாலம் போன்ற அருவிகள், பெரிய ‘சொல்வனம்’ கவிதைகள் என்றால், பச்சைமலை அருவி சிக்கென்ற ஹைக்கூ. ‘அப்படி என்னைப் பற்றி என்ன எழுதிவிடுவீர்கள் என்னைவிட அழகான ஹைக்கூவை’ என்பதுபோல், சின்னக் கவிதையாக கவிஞர்களுக்குச் சவால் விட்டுக் கொண்டிருந்தது அருவி.

pachamalai

புகைப்படத்தைப் பார்த்தால், ‘ஹ்ஹே... இவ்வளவுதானா அருவி’ என்று நினைக்கத் தோன்றும். குறைந்த உயரத்தில் இருந்துதான் விழுகிறது. ஆனால் குற்றாலம், மணிமுத்தாறு போன்ற அருவிகளுக்கு இணையாக தலையில் ‘ணங் ணங்’கென்று ஓங்கி ஆசீர்வதிக்கிறது மங்களம் அருவி. ‘அருவித் தண்ணியில அடிச்சுட்டுப் போயிடுவோமோ’ என்கிற பயம் இங்கே இல்லை என்பது பெரிய ப்ளஸ். ‘இன்னும் ஏண்டா நின்னுக்கிட்டிருக்க கைப்புள்ள’ என்று எனக்குள் இருந்த ரசிகனை ஓரம் கட்டிவிட்டு, களத்தில் இறங்கினேன். சின்ன வயதில் பண்டிகைக் காலங்களில் அம்மா தலைக்குக் குளிப்பாட்டிவிட்ட ஞாபகம் வந்தது. 

pachamalai

அருவி வழிந்த இடத்தை மேலிருந்து கீழே பார்த்தேன். கண்ணுக்கெதிரே குட்டி வானவில் வட்டமாய் நெளிந்தது. ‘அபோகலிப்டோ’ படத்தில் வருவதுபோல், பெரிய பள்ளத்தாக்காக இருந்தது. ‘‘திஸ் ஈஸ் மை ஃபாரஸ்ட்..’’ என்று கீழே குதித்துவிட்டு ஓங்கிக் கத்த வேண்டும் போல் இருந்தது. அப்படிப்பட்ட சிலர் உண்மையாகவே இருந்தார்கள். விடுமுறை நாள் என்பதால், ‘அபோகலிப்டோ’ ஹீரோபோலவே டிரெஸ் கோடில் இருந்த சில பள்ளிச் சிறுவர்கள், அருவியை அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். பாறைகளை அடுப்பாக்கி, விறகுகளால் நெருப்பு மூட்டி, விரல்களைக் கரண்டியாக்கி, ஈர டவுசரோடு சிக்கன் குழம்போ ஏதோ சமைத்துக் கொண்டிருந்தார்கள். ‘‘30 கி.மீ-க்கு அந்தால இருந்து வர்றோம்ணே... பாக்கெட் காசு சேர்த்து வெச்சு வாரா வாரம் இங்கேதான் குளியல், சாப்பாடு எல்லாம். இது எங்க காடுண்ணே! ஆமா... இந்த ஆண்ட்ராய்டு, கேண்டிக்ரஷ், டெம்பிள் ரன்றாவளே.. இதெல்லாம் என்னண்ணே?’’ என்று இயற்கையாக விழுந்த சிக்ஸ்பேக்கைத் தடவியபடி ‘பொடேரென’ அருவிக்குள் டைவ் அடித்தான் ஒரு வாண்டு. 

pachamalai

தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்றால், தனியாக இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டதோ என்னவோ - மங்களம் அருவி தனித்துவமான அழகோடு தனியாக இருக்கிறது. ‘ஆசம்’ என்று வியக்க வைக்கும் பச்சைமலை, எக்கோடூரிஸம் ஆன பிறகு நாசம் ஆகாமல் இருக்க எல்லாம் வல்ல இயற்கையைப் பிரார்த்திப்போம்!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

அமேசான் புது முயற்சி: பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட், இனி க்யூவில் நிற்க வேண்டாம்

 

 
go%20APjpg

அமேசான் கோ கடைக்கு வெளியே வாடிக்கையாளர்கள் | படம்: ஏபி

சூப்பர்மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் விதத்தில் அமேசான் நிறுவனம் புதிய புரட்சியே செய்துள்ளது. பணியாளர்கள் இல்லாமல், பில் போட க்யூவில் நிற்காமல் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க அமேசான் வகை செய்துள்ளது.

அமேசான் கோ  (Amazon Go) என்ற இந்த சூப்பர்மார்க்கெட்டின் சோதனை ஓட்டம் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் மேலே வைக்கப்பட்டிருக்கும் கேமரா வாடிக்கையாளரை அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் வாங்கும் பொருட்கள் என்ன, திரும்ப வைக்கும் பொருட்கள் என்ன என்பதை பதிவு செய்துகொள்ளும்.

   

வாங்கிய பொருட்களுக்கான பில் விலை, வாடிக்கையாளர் கடையை விட்டுப்  போகும்போது அவர்களின் கிரெடிட் கார்டிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். இதனால் பில் போட க்யூவில் நிற்க வேண்டியதில்லை.

amazon%20go%20reutersjpg

மொபைலில் இருக்கும் செயலியை ஸ்கான் செய்து கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர் | படம்: ராய்ட்டர்ஸ்

 

ஷாப்பிங் ஆரம்பிப்பதற்கு முன் அமேசான் கோ என்ற ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் ஸ்கான் செய்து கொள்ள வேண்டும். பொருட்கள் இருக்கும் அலமாரிகளில் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். அவை வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் பொருள் என்ன என்பதை அடையாளம் கண்டு அதை பட்டியலில் சேர்க்கும். பொருளை திரும்ப வைத்துவிட்டால் பட்டியலிலிருந்தும் அந்தப் பெயர் நீங்கும்.

2016 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த சூப்பர்மார்கெட்டை அமேசான் பணியாளர்களை வைத்து சோதித்து வந்தனர். விரைவில் பொதுமக்களுக்கும் இது திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே மாதிரி உருவ அமைப்புடையவர்களை அடையாளம் காணுவதிலும், பொருட்களை வெவ்வேறு இடங்களில் குழந்தைகள் மாற்றி வைப்பதிலும் சில சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது.

இதுபோன்ற கடைகளை மேலும் திறப்பது பற்றி அமேசான் தரப்பலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக அமேசான் வோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தை 13.7 பில்லியனுக்கு வாங்கியிருந்தது. அதன் செயல்பாடு அமேசான் கோ போல இருக்காது.

அதிக நேரம் க்யூவில் நிற்பதை தவிர்ப்பதாலும், அதிவேகமாகம் பொருட்கள் வாங்கும் அனுபவத்தை தருவதாலும் அமேசான் கோ நல்ல வரவேற்பைப் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் கோ எப்படி வேலை செய்கிறது? வீடியோ கீழே

 

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

 

தனிமையைப் போக்க, ஓவியங்கள் தீட்டும் சிங்கப்பூர் பெண்

சிங்கப்பூரில் தனிமையை வெல்லும் நோக்குடன் பெலின்டா லோ என்ற பெண்மணி, உயிரோவியங்களைத் தீட்டி வருகிறார்.

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று…

ஜனவரி – 23

 

1368 : சூ யுவான்ஷாங், சீனாவின் பேர­ர­ச­னாக முடி­சூ­டினார். இவரின் மிங் பரம்­பரை 3 நூற்­றாண்­டுகள் சீனாவை ஆட்சி புரிந்­தது.

1556 : சீனாவின் சாங்சி மாநிலப் பூகம்­பத்தில் 830,000 பேர் வரை­யானோர் இறந்­தனர். உலக வர­லாற்றில் மிக அதி­க­மானோர் கொல்­லப்­பட்ட பூகம்பம் இது­வாகும்.

1570 : ஸ்கொட்­லாந்தில் உள்­நாட்டுப் போர் ஆரம்­ப­மா­கி­யது.

varalru1-copy.jpg1719 : ரோம் பேர­ரசின் கீழ் லீக்­டன்ஸ்டைன் நாடு உரு­வாக்­கப்­பட்­டது.

1789 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் முத­லா­வது கத்­தோ­லிக்கப் பல்­க­லைக்­க­ழ­க­மான ஜோர்ஜ்­டவுன் பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­பட்­டது.

1793 : ரஷ்­யாவும், பிரஷ்­யாவும் போலந்தைப் பிரித்­தன.

1833 : போக்­லாந்து தீவு­களை பிரித்­தா­னியா மீண்டும் கைப்­பற்றிக் கொண்­டது.

1870 : மொன்­டா­னாவில் அமெ­ரிக்கப் படை­க­ளினால் பெண்கள், சிறார்கள் உட்­பட 173 செவ்­விந்­தி­யர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

1874 : விக்­டோ­ரியா மகா­ரா­ணியின் மகன் எடின்­பரோ கோமகன் அல்­பி­ரட் ரஷ்­யாவின் மூன்றாம் அலெக்­சாண்­டரின் ஒரே மக­ளான மரீயா அலெக்­சாந்­தி­ரொவ்­னாவை திரு­மணம் புரிந்தார்.

1924 : விளா­டிமிர் லெனின் ஜன­வரி 21 இல் இறந்­த­தாக சோவியத் ஒன்­றியம் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­தது.

1937 : லியோன் ட்ரொட்ஸ்கி தலை­மையில் ஜோசப் ஸ்டாலின் அரசைக் கவிழ்க்க முயன்­ற­தாக 17 கம்­யூ­னிஸ்­டு­களின் மீது மொஸ்­கோவில் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­யின.

1943 : இரண்டாம் உலகப் போரில் லிபி­யாவின் தலை­நகர் திரிப்­பொ­லியை நாசி­க­ளிடம் இருந்து பிரித்­தா­னியர் கைப்­பற்­றினர்.

1943 : இரண்டாம் உலகப் போரில் அவுஸ்­தி­ரே­லிய, மற்றும் அமெ­ரிக்கக் கூட்டுப் படைகள் பப்­பு­வாவில் ஜப்­பா­னியப் படை­களைத் தோற்­க­டித்­தனர். இது பசிபிக் போரில் ஜப்­பா­னி­யரின் வீழ்ச்­சிக்கு வழி­கோ­லி­யது.

1950 : இஸ்­ரேலின் நாடா­ளு­மன்றம் ஜெரு­ஸ­லேமை இஸ்­ரேலின் தலை­ந­க­ராக அறி­வித்­தது.

1957 : இந்­தி­யாவின் சென்னை மாநி­லத்தில், தமிழ் ஆட்சி மொழி­யாக அறி­விக்­கப்­பட்­டது.

1963 : கினி­யா­பிஸோ சுதந்­திரப் போர் ஆரம்­ப­மா­கி­யது.

 

1973 : வியட்­நாமில் சமா­தான ஒப்­பந்தம் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரிச்சார்ட் நிக்ஸன் அறி­வித்தார்.

1997 : அமெ­ரிக்­காவின் முத­லா­வது பெண் ராஜாங்க செய­லா­ள­ராக மெடலின் அல்­பிரைட் பத­வி­யேற்றார்.

2002 : அமெ­ரிக்க ஊட­க­வி­ய­லாளர் டானியல் பேர்ள் கராச்­சியில் கடத்­தப்­பட்டார். இவர் பின்னர் கொலை செய்­யப்­பட்டார்.

2005 : தமி­ழ­கத்தின் திருச்சி ஸ்ரீரங்கத்தில் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் உட்பட 62 பேர் கொல்லப்பட்டனர்.

2012 : பதவி கவிழ்க்கப்பட்ட கேணல் கடாபிக்கு ஆதரவான படையினர் லிபியாவின் பானி வாலித் நகரை கைப்பற்றினர்.

http://metronews.lk/

Link to comment
Share on other sites

உங்கள் தவறை யாராவது சுட்டிக்காட்டினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? - தன்னம்பிக்கைக் கதை! #MotivationStory

 
 

உன்னை அறிந்தால்

‘ஒரு மனிதனின் விரல் யாரோ ஒருவரை நோக்கி நீளும்போது அவரின் மற்ற நான்கு விரல்களும் அவரை நோக்கியே திரும்பியிருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்காவின் பிரபல வழக்கறிஞர் லூயிஸ் நைஸர் (Louis Nizer). ஒருவரைக் குறை சொல்வதோ, ஒருவர் செய்த வேலையில் குற்றம் கண்டுபிடிப்பதோ எளிது. ஆனால், அதைச் சரிசெய்வது எல்லோராலும் முடியாத காரியம். `குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர் நீங்கள் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்!’ என்கிற நாகேஷின் பிரபல `திருவிளையாடல்’ திரைப்பட வசனம் மறக்க முடியாதது. பிறரிடம் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களில் சிலர் வேண்டுமென்றே அந்த வேலையைச் செய்பவராக இருக்கலாம்; உண்மையிலேயே தொடர்புடையவர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் சொல்பவராகவும் இருக்கலாம். வெற்றி என்கிற வரம் கிடைப்பதற்கு முதலில் மற்றவர்கள் தன் மேல் சுமத்தும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பக்குவம் ஒருவருக்கு வேண்டும். தன் பிழைகளைத் திருத்திக்கொள்ளும் தன்மை வேண்டும். உங்கள் தவறுகளைப் பிறர் சுட்டிக்காட்டும்போது அதை எதிர்கொள்வது எப்படி என்பதை விளக்குகிறது இந்தக் கதை!

 

அது ஃபிரான்ஸிலிருந்த ஒரு கலைகளுக்கான கல்லூரி. எல்லா கலைகளும் அங்கே கற்றுத்தரப்பட்டன. விதவிதமான கலைகளைக் கற்றுக்கொள்ள வெகு தூரத்திலிருந்தெல்லாம் மாணவர்கள் அந்தக் கல்லூரிக்கு வந்தார்கள். சிறு வயதிலிருந்தே ஓவியத்தின் மேல் உயிரைவைத்திருந்த ஒரு மாணவன் அந்தக் கல்லூரிக்குப் படிக்க வந்திருந்தான். அந்தி வானம் தொடங்கி, அழகான கடற்கரை மணல்வெளி வரை ஏற்கெனவே அவன் பல ஓவியங்களை வரைந்த அனுபவமுள்ளவன். வகுப்பில் பாடம் நடத்துவதைவிட, செயல்முறைப் பயிற்சியில் மாணவர்களை ஈடுபடுத்துவதுதான் அந்தக் கல்லூரியின் வழக்கம். எனவே, மாணவர்கள் அவரவர் துறையில் தங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்த மெனக்கெடுவார்கள். அந்த மாணவனும் செயல்முறைப் பயிற்சியில் தீவிரமாக இருந்தான்.

கதை

ஒருநாள் அவன் ஓவியம் ஒன்றை வரைந்தான். அதைத் திரும்பத் திரும்பப் பார்த்தான். `நிச்சயமாக இது வரை நான் வரைந்தவற்றிலேயே மிக உன்னதமானது இதுதான்’ என்று பெருமைபொங்கத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். மிகுந்த மகிழ்ச்சியோடு அடுத்த நாள் காலை அந்த ஓவியத்தை எடுத்துக்கொண்டு கல்லூரிக்குப் போனான். கல்லூரி வரவேற்பறையில் பொருத்தமான ஓரிடத்தில் அதை மற்றவர்களின் காட்சிக்குவைத்தான். கூடவே அந்த ஓவியத்துக்குப் பக்கத்தில் ஒரு குறிப்பையும் எழுதிவைத்தான்... `இந்த ஓவியத்தில் நீங்கள் ஏதாவது குறையைக் கண்டுபிடித்தால், அந்த இடத்தில் கறுப்பு நிறத்தில் வட்டமிடவும்’ என்றது அந்தக் குறிப்பு.

அன்று மதியத்துக்கு மேல் ஆவலோடு, காட்சிக்குவைத்திருந்த அந்த ஓவியத்தைப் பார்க்கப் போனான். அதிர்ந்துபோனான். அவனுடைய ஓவியம் முழுக்க கறுப்பு நிற வட்டங்கள் இருந்தன. தவறுகளைச் சுட்டிக்காட்டியது இருக்கட்டும்... அவனுடைய அற்புதமான அந்த ஓவியமே பாழாகிப்போய் நின்றுகொண்டிருந்தது. அவன் சோர்ந்து போனான். அந்த ஓவியத்தை எடுத்துத் தன் பையில் வைத்துக்கொண்டான். சற்று தூரத்திலிருந்த கடற்கரைக்குப் போனான்... உட்கார்ந்துகொண்டான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கடலையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

ஓவியம்

கொஞ்ச நேரம் ஆனது. யாரோ அவனுடைய தோளைத் தொட்டார்கள். திரும்பிப் பார்த்தவன் பதறியவனாக எழுந்தான். அவனுக்கு முன்னால், அவனுடைய பேராசிரியர் நின்றுகொண்டிருந்தார். ``என்னப்பா... இங்கே வந்து தனியா உட்கார்ந்து என்ன பண்றே?’’ என்று கேட்டார். அந்த மாணவன் கண்கலங்கியவனாக நடந்ததைச் சொன்னான்.

“இதுக்கா இவ்வளவு கவலைப்படுறே... இதெல்லாம் விஷயமே இல்லை. நான் சொல்றபடி செய்றியா?’’

மாணவன் தயக்கத்தோடு ``சரி’’ என்றான். பேராசிரியர் அந்த யோசனையைச் சொன்னார்.

ஓவியம்

அவன் அன்று இரவே தன் வீட்டுக்குப் போய் ஓர் அழகான ஓவியத்தை வரைந்தான். அதை எடுத்துக்கொண்டு அடுத்த நாள் காலை கல்லூரி வரவேற்பறைக்குப் போனான். அதைக் காட்சிக்குவைத்தான். இந்த முறையும் ஒரு குறிப்பை எழுதிவைத்தான். ஆனால் அந்தப் பேராசிரியர் சொன்னபடி... `இந்த ஓவியத்தில் நீங்கள் பிழைகள் எதையாவது கண்டுபிடித்தால் அதைச் சரிசெய்யவும்’ என்று எழுதியிருந்தான்.

அன்று மதியத்துக்கு மேல் அந்த ஓவியம் இருந்த இடத்துக்குப் போனான். அவன் ஓவியத்தில் ஒரு திருத்தமும் இல்லை. அவன் எப்படிவைத்துவிட்டுப் போயிருந்தானோ, அப்படியே அது இருந்தது. அந்த ஆச்சர்யத்தைத் தாங்க முடியாமல், நேரே அந்தப் பேராசிரியர் இருந்த அறைக்குப் போனான். ``சார்... நீங்க சொன்னபடியே செஞ்சேன். இந்த முறை யாரும் எந்தத் திருத்தமும் செய்யலை’’ என்று விஷயத்தைச் சொன்னான்.

“அது ஒண்ணுமில்லைப்பா. ஒருத்தர் செய்யற வேலையில மத்தவங்களால ஈஸியா குற்றம் கண்டுபிடிச்சிட முடியும். ஆனா, அதைச் சரிசெய்யணும்னா ஒருத்தர்கூட வர மாட்டாங்க’’ என்றார் பேராசிரியர்.

 

ஒருவர் செய்த தவறைச் சுட்டிக்காட்டும்போது, அது அவரைக் காயப்படுத்தக் கூடாது; அந்தத் தவறை அவர் திரும்பவும் செய்யாமலிருக்க உதவ வேண்டும். அதேபோல தவறுகளைக் களைவது என்பது வெற்றியை நோக்கிய பயணத்தின் முக்கிய கட்டம் என்பதை சம்பந்தப்பட்டவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

22 வரு­டங்­க­ளாக கடற்­கரை மணற்­கோட்­டையில் வசிக்கும் நபர்: தன்னை மன்னர் எனவும் கூறிக்­கொள்­கிறார்

பிரே­ஸிலைச் சேர்ந்த நபர் ஒரு­வர் 22 வரு­டங்­க­ளாக கடற்­க­ரையில் மணற்­கோட்டை ஒன்றில் வசித்து வரு­கிறார்.
மணலில் வீடு, சிற்­பங்கள் நிர்­மா­ணித்து விளை­யா­டு­வது பல­ருக்கும் பிடித்­த­மான விளை­­யாட்டு. கலை நுணுக்­கத்­துடன் பாரிய சிற்­பங்­களை மணலில் நிர்­மா­ணிக்கும் கலை­ஞர்­களும் உள்­ளனர்.

903001-01-02-copy.jpg

ஆனால், பிரே­ஸிலைச் சேர்ந்த மார்­சியோ மிஸாயெல் மோட்­டோ­லியஸ் என்­பவர், கடற்­கரை மணற்­கோட்டை ஒன்­றையே தனது இல்­ல­மாக மாற்றி 22 வரு­டங்­க­ளாக வசிக்­கிறார். இதன் மூலம் வீட்டு வாடகைச் செலவை அவர் தவிர்த்துக் கொண்­டுள்ளார்.
ரியோ டி ஜெனெய்ரோ நக­ரி­லுள்ள கடற்­க­ரை­யொன்றில் இந்த மணற்­கோட்­டையை மார்­சியோ மிஸாயெல் மோட்­டோ­லியஸ் நிர்­மா­ணித்­துள்ளார்.

903005-01-02-copy.jpg

44 வய­தான மார்­சியோ, “கோட்­டையில்” வசிப்­பது மாத்­தி­ர­மல்லாமல், தன்னை மன்னர் எனவும் கூறிக்­கொள்­கிறார். ஆழ­கிய கிரீ­ட­மொன்­றயும் இவர் அணி­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.  தனது மணற்­கோட்­டைக்கு அரு­கி­லேயே பழைய புத்­தக விற்­பனை நிலைய­மொன்­றையும் மார்­சியோ நடத்­து­கிறார். இதன் மூலம் கிடைக்கும் வரு­மா­னத்தில் அவர் வாழ்க்கை நடத்­து­கிறார்.

சுற்­றுலாப்பய­ணி­களின் கவ­னத்­தையும் நான் ஈர்த்­துள்ளேன். கடற்­க­ரைக்கு முன்னால் வசிப்­ப­தற்கு பலரும் அதிக வாட­கையை செலுத்­து­கின்­றனர். எனக்கு வாடகையுமில்லை. கட்டணப் பட்டியல்களும் இல்லை. நான் சிறப்பாக வாழ்கிறேன்” என்கிறார் மார்சியோ.

903008-01-02-copy.jpg903015-01-02-copy.jpgbrazil-copy.jpg

http://metronews.lk

Link to comment
Share on other sites

“எனக்கு யாரும் அரசியல் சொல்லித் தரத் தேவையில்லை!’’ சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினச் சிறப்புப் பகிர்வு

 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

‘‘உங்களுடைய ரத்தத்தை என்னிடம் தாருங்கள்; நான் உங்களுக்கு விடுதலை வாங்கித் தருவேன்’’என்று இளைஞர்களிடம் வீரமுழக்கமிட்டவர் சுபாஷ் சந்திரபோஸ். அவருடைய பிறந்த தினம் இன்று. 

 

நாட்டின் முதன்மைப் பணிகளில் ஒன்றான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான ஐ.சி.எஸ். தேர்வில், இந்திய அளவில் நான்காம் இடம்பெற்றுத் தேர்ச்சியடைகிறார் சுபாஷ் சந்திரபோஸ். மிகப்பெரிய பதவி, அரசாங்க வேலை என்பதையெல்லாம் தாண்டி, நாட்டின் விடுதலைக்காக அந்தப் பதவியையே தூக்கியெறிகிறார் போஸ். அதற்கான ராஜினாமா கடிதத்தை அந்தத் துறை உயர் அதிகாரியிடம் கொடுக்கிறார். வாங்கிப் பார்த்த அந்த அதிகாரி சுபாஷிடம், “உன் பெற்றோர் வருத்தப்படமாட்டார்களா” என்று கேட்கிறார். அதற்கு சுபாஷ், “என் தாய் தந்தையருக்கு வருத்தமாகத்தான் இருக்கும்; ஆனால், என் தாய்நாட்டின் வருத்தம் அதைவிடப் பெரியது” என்று சொல்லி அந்த அதிகாரிக்கே அதிர்ச்சியளித்தார். 

சுபாஷுக்கு நாட்டின் மீதிருந்த தீவிரப் பற்று காரணமாகச் சுதந்திரப் போராட்டத்தைக் கையிலெடுத்தார்; அதற்காக ஆண்கள் மற்றும் பெண்களை ஒன்றுதிரட்டினார்; அதன்மூலம் ஒரு வலிமைமிக்க ராணுவத்தை உருவாக்கினார். இந்தப் படையைக்கொண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய புரட்சியாளரான போஸ், ஒருமுறை வீட்டுச் சிறையில் பயங்கரக் கண்காணிப்பில் இருந்தபோது ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தரைவழியாகவே பயணம் செய்து ஆப்கனையும், பின்னர் அங்கிருந்து பெருமுயற்சி எடுத்து ஜெர்மனியையும் அடைந்தார். ஒன்பது நாடுகளின் ஆதரவுடன் ஒரு பெரும்படையை உருவாக்கி வலம்வந்த சுபாஷ், “இந்தத் தற்காலிகத் தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள்; இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தளத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்தச் சக்திக்கும் இல்லை” என்று வானொலி மூலம் குரல்கொடுத்தார். 

ஜெர்மனியில் சுபாஷ் தங்கியிருந்தபோது ஹிட்லரிடம், “இந்திய நாட்டின் சுதந்திரத்துக்கு உதவி செய்யவேண்டும்” என வேண்டுகோள் வைக்கிறார். என்னதான் சுபாஷ் ஹிட்லரிடம் உதவி கேட்கச் சென்றிருந்தாலும், அவருடைய தேசப்பற்று அவரைக் கோபமடையச் செய்தது. இந்தியர்களை, ‘காட்டுமிராண்டிகள்’ என்று ஹிட்லர் தனது புத்தகத்தில் குறிப்பிட அதை எதிர்த்துக் குரல்கொடுக்கிறார் போஸ். அத்துடன் நில்லாமல், அந்த வாக்கியத்தைத் திரும்பப் பெறவும் வற்புறுத்துகிறார். இதனால் கோபமடைந்த ஹிட்லர், “இந்தியா சுதந்திரம் பெறுவது கடினம்” என்று சொல்ல... அதற்கு சுபாஷ், “எனக்கு எவரும் அரசியல் சொல்லித் தரத் தேவையில்லை என்று உங்கள் அதிபருக்குக் கூறுங்கள்” என்று மொழிபெயர்ப்பாளரிடம் சொல்லிவிட்டுக் கோபமாக வெளியேறினார். அன்று உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரியாக விளங்கிய ஹிட்லரிடமே, சுபாஷ் அப்படிப் பேசியதை நினைத்து வியந்தனர் ஹிட்லரின் உதவியாளர்கள்.  

அவர் உருவாக்கிய ஐ.என்.ஏ. வீரர்களின் அணிவகுப்பினைப் பார்வையிட்டு... அவர்களிடம், “நான் உங்களைச் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்வேன்” என்று உறுதியளித்தார். அத்துடன் கிழக்கு ஆசியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஐ.என்.ஏ-வுக்கு நிதி திரட்டினார்; படைக்கு ஆள் சேர்த்தார்; தன் படை வீரர்களிடம் உரை நிகழ்த்தி எழுச்சியை உண்டாக்கினார். இவருடைய பேச்சைக் கண்ட பலரும் வியந்தனர்; விவாதித்தனர். இப்படி சுபாஷாக வலம்வந்த போஸ், பின்னாளில் ‘நேதாஜி’ என்று அழைக்கப்பட்டு, பலராலும் சபாஷ் போடவைக்கப்பட்டார்.  

குறிப்பாகப் பர்மிய நாட்டுத் தலைவர் பாமோவ், “போஸ் ஆழமாகப் பேசத் தொடங்கினால், இன்னொரு சக மனிதரிடம் பேசுவதுபோல் நீங்கள் உணரமாட்டீர்கள்; மாறாக, நம்மைவிடப் பல மடங்கு பிரம்மாண்டமான, அமானுஷ்யமான, பலகாலம் அடக்கப்பட்ட  ஆதார சக்தி ஒன்று திடீரென உடைப்பெடுத்துப் பெருகினால் எப்படி இருக்குமோ, அப்படி உணர்வீர்கள்” என்று புகழ்ந்துள்ளார். 
வரலாற்று ஆய்வாளர் பீட்டர் ஃபே, “போஸ் போகுமிடமெல்லாம் அவர் பேச்சைக் கேட்டு, குடும்பப் பெண்கள் காதிலும் கழுத்திலும் போட்டிருக்கும் அத்தனை நகைகளையும் அணிகலன்களையும் கழற்றி நாட்டு விடுதலைக்குச் சமர்ப்பித்தார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

 

இளைஞர்களின் மனதில் உந்துசக்தியை விதைத்து நாட்டின் சுதந்திரத்துக்காக இறுதிவரை போராடிய புரட்சியாளர் சுபாஷ் சந்திரபோஸின் மரணம், இன்றுவரை விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

உலகப் போர் சிப்பாயின் குரல்: கொள்ளுப் பேரன்களுக்கு கிடைத்த அதிசயம்

முதல் உலகப் போரில் பிரிட்டனுக்காக போரிட்ட இந்திய வீரர் ஒருவர் ஜெர்மன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது குரல் பதிவு ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்தது. சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு அவரது குரலைக் கேட்ட அவரின் பேரக் குழந்தைகள் எப்படி உணர்ந்தனர் தெரியுமா? விடை இந்தக்காணொளியில்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.