Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

குளிர்ச்சாதன வசதியுடன் கூடிய உலகின் மிக, மிகச்சிறிய இந்த நட்சத்திர உணவக விடுதியில் தங்க, கட்டணம் ரூ.3631 மட்டுமே!

 

 
jordan_tiny_hotel

 

நாம் இதுவரை எத்தனையோ விதமான உணவகங்களைக் கண்டிருக்கலாம். மலைக்குகைகளுக்குள் உணவகம், பாறை உச்சியில் திறந்த வெளி உணவகம், பழைய வேன்கள் மற்றும் மினி பேருந்துகளை ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளுக்கான ரெஸ்டாரெண்டுகளாக்கிய மொபைல் உணவகம், பாதாள உணவகம், சுழலும் உணவகங்கள், நீருக்குள் மிதக்கும் உணவகங்கள் என எத்தனை, எத்தனையோ உணவகங்களைக் கண்டிருப்போம். ஆனால், அவற்றில் எதுவுமே இந்த உணவகத்தைப் போன்றதாக இருக்க வாய்ப்பில்லை. ஜோர்டானில் இயங்கும் இந்த மிகச்சிறிய உணவகம் என்பது ஒரு சிறிய காருக்குள் வடிவமைக்கப்பட்ட குட்டியூண்டு மொபைல் உணவகம். நம்மூர் நானோ கார் போன்று தோற்றம் தரும் இந்தக் கார் வோக்ஸ்வேகன் பீட்டில்ஸ் வகையைச் சேர்ந்தது. பழைய காரை, இப்படி துக்கினியூண்டு உணவகமாக மாற்றி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஐடியா அந்த உணவக ஓனருக்கு எப்படி வந்ததோ தெரியவில்லை. ஆனால், இந்த ஐடியாவைப் பாராட்டத்தான் வேண்டும்.

2011 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக இரண்டே பேர் தான் அமர்ந்து உணவுண்ண முடியும். இருவரைத் தாண்டி இன்னொருவருக்கு இதற்குள் இடமில்லை. உணவகமே காருக்குள் இயங்குவதால், உணவகத்தின் பரப்பளவை அதிகரிக்கவும் வாய்ப்பே இல்லை. ஜோர்டானின் மலைப்பாறைகளின் திடுக்கிடச் செய்யும் பள்ளங்கள், உச்சிகள், பாலவன மணற்புயல்கள், கடுங்கோடையின் உருக்கி வார்க்கும் வெப்பம் இவை எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் இருப்பவர்கள் உலகின் மிகச்சிறிய இந்த உணவகத்துக்கு ஒருமுறை சென்று வரலாம். ஜோர்டானில் கோடையில் வெப்பம் 104 டிகிரிக்கும் மேலாக வரிந்து கட்டிக் கொண்டு சுட்டுத் தள்ளும். பார்வைக்குத்தான் எளிய கையடக்கமான உணவகம் போல் தோற்றமளிக்கிறதே தவிர இந்த உணவகத்தில் ஐந்து நட்சத்திர உணவகங்களுக்கு இணையான தரம் நிர்வகிக்கப்படுகிறது. எனவே கோடையில் இந்த உணவகத்தில் உங்களுக்கு இடம் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் முன்னதாக பதிவு செய்து வைத்துக் கொண்டால் தான் ஆயிற்று!

ஜோர்டானின் அல்ஜயா பகுதியில் இயங்கி வரும் இந்த உணவகத்தின் அதிபரான முகமது அல் மலஹீம் அலைஸ் அபு அலி தனது உணவகத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்;  ‘என் உணவகத்தின் தரத்தையும், இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான சுவாரஸ்யமான பயண இடங்களைத் தேடவும் நான் புதிதாக ஒரு புராஜக்ட்டைத் தொடங்கலாம் என்றிருக்கிறேன். ஏனெனில், ஜோர்டானில் மக்கள் இன்னமும் தரிசிக்காத சுவாரஸ்யமான அழகான இடங்கள் என்கிறார். அல்ஜயாவில் வசித்த மக்களில் பெரும்பாலோர் தங்களுக்கான நவீன வாழ்க்கையைத் தேடி வேறு இடங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று விட்டாலும் அபு அலி இப்போதும் தனது ஊரின் அழகைச் சிலாகித்து அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அதெல்லாம் சரி தான், ஆனால், வோக்ஸ்வேகன் கார் மட்டுமே தான் இந்த உணவகம் என்று நினைத்து விடாதீர்கள், அருகிலுள்ள குகைப்பாறைக் குடைவொன்றில் இந்த உணவகத்தின் லாபி கம் வரவேற்பறை ஒன்றையும் கூட அபு அலி நிர்வகித்து வருகிறார். பால்டு க்ரூட்டோ என்ற பெயருடன் இயங்கி வரும் அந்த லாபியில் வைத்து தனது உணவகத்துக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு காஃபி, டீ, ஸ்னாக்ஸ் வகையறாக்களை விற்பனை செய்து வருகிறார் அபு அலி. விருந்தினர்கள் வெறும் 40 ஜோர்டானியன் தினார்களுக்கு இந்த வசதிகளை எல்லாம் அனுபவிக்கலாம். அமெரிக்க டாலர்களோடு ஒப்பிட்டால் இது வெறும் 56 டாலர்கள் மட்டுமே! இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 3631 ரூபாய் மட்டுமே!

குளிர்ச்சாதன வசதியுடன் கூடிய உலகின் மிக, மிகச்சிறிய இந்த  நட்சத்திர உணவகத்துக்குச் சென்று சரித்திரத்தில் தங்களது பெயரை பதிவு செய்ய நினைப்பவர்கள் ஒருமுறை ஜோர்டான் சென்று அபு அலியின் உணவகத்தை தரிசித்து விட்டு வரலாம்.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

வரலாற்றில் இன்று…

நவம்பர் – 24

 

1642 : ஏபல் டாஸ்மேன் அவுஸ்திரேலியாவில் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இத்தீவுக்கு டாஸ்மேனியா என பின்னர் பெயரிடப்பட்டது.

1859 : சார்ள்ஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின.

1914 : இத்தாலிய சோசலிஸக் கvaralaru-bangladeshi-firefighters.jpgட்சியில் இருந்து முசோலினி விலக்கப்பட்டார்.

1917 : அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத் தலைநகர் மில்வாக்கியில் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

1940 : இரண்டாம் உலகப் போரில் ஸ்லோவாக்கியா அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தது.

1943 : ஐக்கிய அமெரிக்கக் கடற்படைக் கப்பல் டராவா என்ற இடத்தில் மூழ்கடிக்கப்பட்டதில் 650 பேர் கொல்லப்பட்டனர்.

1944 : ஜப்பானின் டோக்கியோ நகர் மீது முதற்தடவையாக அமெரிக்க விமானங்கள் குண்டுகளை வீசின. 88 விமானங்கள் இத்தாக்குதலி;ல் ஈடுபட்டன.

1963 : அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடியை இரு தினங்களுக்கு முன் சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட லீ ஹார்வே ஒஸ்வால்ட், டல்லாஸ் மாநில பொலிஸ் தலைமையகத்தில் வைத்து ஜெக் ரூபி என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1965 : கொங்கோவின் குடியரசுத் தலைவர் பதவியை இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் ஜோசப் மொபுட்டு கைப்பற்றினார்.

1966 : ஸ்லோவாக்கியாவில் பல்கேரிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 82 பேர் கொல்லப்பட்டனர்.

1969 : சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

1971 : அமெரிக்காவில் விமானமொன்றை கடத்திய டான் கூப்பர் என்பவன் 200,000 அமெரிக்க டொலர்களுடன் 10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து பாரசூட்டுடன் கீழே குதித்தார். இதுவரை அவருக்கு என்ன நடந்தது? பணமோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

1992 : மக்கள் சீனக் குடியரசில் சீன விமானம் ஒன்று வீழ்ந்ததில் 141 பேர் கொல்லப்பட்டனர்.

2002 : ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் டில்லியில் 56 லட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

2012 : பங்களாதேஷின் டாக்கா நகரில் ஆடைத் தொழிற்சாலையொன்று தீப்பற்றியதால் 112 பேர் உயிரிழந்தனர்.

2013 : ஈரான், தனது அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக 6 நாடுகளுடன் இடைக்கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

2015 : ரஷ்யாவின் யுத்த விமானமொன்று துருக்கிய – சிரிய எல்லையில் துருக்கிய விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

http://metronews.lk

Link to comment
Share on other sites

டங்கல் பாலிவுட் பட பாணியில் பாகிஸ்தானில் வாழும் மல்யுத்த சகோதரிகள்

டங்கல் ஹிந்தி படத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற இரண்டு மல்யுத்த சகோதரி கதை நமக்கு நினைவிருக்கலாம். அத்தகைய மல்யுத்த சகோதரிகள் பாகிஸ்தானின் லாஹூரில் நிஜத்தில் வாழ்ந்து பல தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருவதை அறிந்து அவர்களை நேரில் சந்தித்தது பிபிசி.

Link to comment
Share on other sites

கேக்கில் மல்லிகைப் பூக்கள், பட்டுப்புடவை- அசத்தும் பட்டதாரிப் பெண்!

 

IMG-20171124-WA0032_13581.jpg

"உதிரி மல்லிகைப்பூக்களை எடுத்து சாப்பிடலாம். நல்லா இருக்கும்' என்று திவ்யா சொன்னபோது, அவரை அதிர்ச்சியோடு பார்த்தோம். அதைப் புரிந்துகொண்ட அவர், மல்லிகை மொட்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டு மென்றார். அதன் பிறகுதான் புரிந்தது, அவை மல்லிகை வடிவில் அமைந்த கேக் க்ரீம்கள் என்பது. 

 

திவ்யா, தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது கணவர் அருண், அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணிபுரிகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். தற்போது, குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் வசித்துவருகிறார்கள்.

தமிழக பாரம்பர்ய சின்னங்களான கோயில் கோபுரங்கள், தலையாட்டிப் பொம்மை, தாலி, திருமணத் தாம்பூலம், பட்டுச் சேலைகள், வீணை, சுவாமி சிலைகள் முதலிய வடிவங்களில் கேக்கைத் தயாரித்து அசத்துகிறார். இவர், தனது முகநூலில் பதிவிடும் கேக்கின் புகைப்படங்களுக்கு விழும் லைக்குகளும் கமென்ட்டுகளும் ஏராளம்.

IMG-20171124-WA0049_13254.jpg

இந்த கேக் தயாரிப்பு பற்றியும் கேக் தயாரிப்பு மீதான ஆர்வம் பற்றியும் திவ்யாவிடம் கேட்டபோது, "எனக்கு சிறுவயதிலிருந்தே சமையல் கலைமீது ஆர்வம் அதிகம். +2 முடித்தவுடன் கேட்டரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனால், பெற்றோரின் விருப்பப்படி பி.சி.ஏ படித்தேன். படிப்பு முடித்தவுடன் திருமணமும்  நடந்தது. உடனடியாக கணவர்  அருணுடன் அமெரிக்கா பயணம். அங்கு சென்ற பிறகும் சமையல் ஆர்வம் எனக்கு குறையவில்லை. என் கணவரிடம் கூறினேன். அவர் என்னை ஊக்கப்படுத்தி, கேக் தயாரிப்பதற்கான அத்தனை உதவிகளையும் செய்தார்.

IMG-20171124-WA0034_13400.jpg

 

முதலில், என் குடும்பத்துக்காகவும் மிஷனில் தங்கியுள்ளவர்களுக்குப் பரிசளிக்கவும் கேக் தயாரிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் என்னுடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. நிறையப் பேர் விதவிதமா கேக் செய்றாங்களே... நாமும் வித்தியாசமா பண்ணணும்னு நினைச்சேன். நான், சிறு வயதில் என் வீட்டு மொட்டைமாடியில் இருந்து பார்த்த தஞ்சாவூர் பெரிய கோயிலின்கோபுரம், ரசித்து விளையாடிய தலையாட்டி பொம்மை ஆகியவற்றை கேக்காகச் செய்தேன். படிப்படியாக சுவாமி சிலைகள், திருமணத் தாம்பூலம் உள்ளிட்ட பல வடிவங்களில் கேக்கைத் தயாரித்துள்ளேன். பட்டர் க்ரீம் கேக், வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட், கோக்கனட் உள்ளிட்ட பல ஃப்ளேவர்களில் கேக்குகளைத் தயாரித்துள்ளேன். நான் தயாரிக்கும் கேக்குகளில் முட்டை பயன்படுத்துவதில்லை' என்றார். இவர், வில்ட்டன் (Wilton) என்கிற கேக்  நிறுவனத்தில், கேக் தயாரிக்கும் பயிற்சியாளராகப் பணிபுரிகிறார்.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

இன்பாக்ஸ்

 

 ‘பொறுத்தது போதும் பொங்கி எழு’ எனக் களத்தில் குதித்துவிட்டார் சித்தார்த்.  `ஜிகர்தண்டா’வில் நடித்ததை நிஜமாக்கப்போகிறார். எவ்வளவு மெனக்கெட்டாலும் ஹிட் நடிகர்களின் பட்டியலில் வர முடியாத வருத்தத்தில் இருக்கும் அவர் செம ஸ்க்ரிப்ட் ஒன்று வைத்திருக்கிறாராம். தன் ‘டைரக்டர்ஸ்’ நண்பர்களுடன்  கதைக்கு பாலிஷ் போடும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் இயக்குநர் சித்தார்த். ஹூம்ம்ம்... கிளப்புங்கள்!

p36a.jpg

கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார் தீபிகா படுகோன். டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட `பத்மாவதி’ படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற எதிர்ப்புகள் வலுக்க,  தீபிகாவின் `மூக்கை வெட்டுவோம்’, `தலையை வெட்டுவோம்’ எனச் சிலர் கொந்தளிக்க, தீபிகா செம அப்செட். ``படத்தில் ராணி பத்மாவதியை எந்த இடத்திலும் தவறாகச் சித்திரிக்கவில்லை. ஒரு நடிகையாக 2 ஆண்டுகள் இந்தப் படத்துக்காகக் கடுமையாக உழைத்திருக்கிறேன். இதுபோன்ற  அறிவற்ற எதிர்ப்புகளைப் பார்க்கும்போது கோபம் வருகிறது. அதே சமயம் வேடிக்கையாகவும் இருக்கிறது’’ எனப் புலம்பியிருக்கிறார் தீப்ஸ். கூல் கண்மணி!

p36b.jpg

டுகளத்தைத் தாண்டியும் விளாசியிருக்கிறார் கேப்டன் விராட் கோலி. தொழிலதிபர் ஒருவருடன் இணைந்து விராட் கோலி ஃபவுண்டேஷன்  சார்பில் முதன்முறையாக, `இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்’ விருது வழங்கப்பட்டது. மும்பையில் நடந்த விழாவில் பி.டி. உஷா முதல் பி.வி. சிந்து வரை அத்தனை ஸ்போர்ட்ஸ் ஸ்டார்களும் ஆஜர். கோபிசந்த் தலைமையிலான ஜூரி, குழு விளையாட்டின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுத்தது ரவிச்சந்திரன் அஷ்வினை! பெண்கள் பிரிவில் அந்த விருதை வென்றவர் மிதாலி ராஜ். எந்தவொரு விருதுக்கும் தன் பெயரைப் பரிந்துரைக்க வேண்டாம் என ஜென்டில் ரிக்வெஸ்ட் கொடுத்திருந்தார் விராட். அக்ரசிவ் கோலியின் மற்றொரு முகத்தைப் பார்த்து `சூப்பர்ல’ எனப் பாராட்டுகிறது விளையாட்டு உலகம். கோலி ராக்ஸ்!

p36c.jpg

p36d.jpg

ம்பானி சகோதரர்களின் குடும்பத்தில் ஒரு பக்கம் புயலும், இன்னொரு பக்கம் தென்றலும் வீசிக்கொண்டிருக்கிறது. சந்தையில் நிலவும் கடுமையான போட்டியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் வாய்ஸ்கால் வசதியை முற்றிலுமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துவிட்டது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ். இன்னொரு பக்கமோ, ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட, ஆசியாவின் பணக்காரக்குடும்பங்களின் பட்டியலில்,  ‘ஆசியாவின் நம்பர் 1 பணக்காரக்குடும்பம்’ என்ற அந்தஸ்தை எட்டிப்பிடித்திருக்கிறார் முகேஷ் அம்பானி. காரணம், ஜியோ. கடந்த வருடம் 19 பில்லியன் டாலராக இருந்த அம்பானி குடும்பத்தின் மதிப்பு, இந்த வருடம் 44.8 பில்லியன் டாலர். அம்பானி அலப்பறைகள்!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

ASHES Cricket தொடரில் நடந்த இந்த சம்பவம்

ஆஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் நகரில் தற்போது நடைபெற்றுவரும் முதலாவது ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது பார்வையாளர் பகுதியிலிருந்து இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். அதற்கு அவரது காதலியும் உடனடியாக சம்மதம் தெரிவிக்க, மோதிரம் அணிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டார். ஆச்சரியத்தை ஜீரணிக்க முடியாமல் அரங்கில் நின்று துள்ளிக்குடித்தும் அந்த காதல் ஜோடியை நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்த தொலைக்காட்சி கமரா ஒன்று தப்பாமல் கவ்விக்கொண்டது.

Link to comment
Share on other sites

இவர், அவரேதான்!

இந்திய அணியின் சுவர் என்று முன்னொரு காலம் வர்ணிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பாராட்டுக்களுடன் பரிமாறப்பட்டு வருகிறது.

6_Rahul-2.jpg

விஷயம் இதுதான்! ட்ராவிட் தனது இரண்டு மகன்மாருடன் மாணவர்களின் விஞ்ஞானக் கண்காட்சிக்குச் சென்றிருக்கிறார். அங்கே அவர் எந்தவித ஆடம்பரமோ, அலட்டலோ இல்லாமல் மக்களுடன் வரிசையில் நின்று கண்காட்சியைப் பார்வையிட்டிருக்கிறார்.

இந்தப் படம் வெளியாகிய ஒரே நாளில் 12 ஆயிரம் ‘லைக்’குகளை வாங்கியுள்ளதுடன் ஆறாயிரம் முறை மீள்பரிமாறப்பட்டும் இருக்கிறது.

6_Rahul-3.jpg

புகழ்பெற்ற நட்சத்திரத் துடுப்பாட்ட வீரராக இருந்தும் மக்களோடு மக்களாக இயங்கும் அவரது எளிமையை இணையதளவாசிகள் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர்.

“எனது மருமகள் கற்பிக்கும் பாடசாலையில்தான் ட்ராவிட்டின் மகன்மாரும் படிக்கின்றனர். ஏனைய பெற்றோர்கள் போலவே, பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளுக்கு ட்ராவிட் தவறாமல் கலந்துகொள்வதுடன், எந்தவித பந்தாவும் இன்றி மிகச் சாதாரணமாகப் பழகுவார் என்று எனது மருமகள் கூறியிருக்கிறார்” என்று ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

http://www.virakesari.lk

Link to comment
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, lächelnd, machen Sport, Baseball, im Freien und Text

 

Pocket Dynamo, Little Kalu என்று புகழப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் காக்கும் துடுப்பாட்ட வீரர் ரொமேஷ் களுவிதாரணவின் பிறந்தநாள்.
அதிரடி ஆரம்பங்களை வழங்கி, இலங்கையின் பல வெற்றிகளில் பங்களித்த 'களு' 1996இல் இலங்கை உலகக்கிண்ணம் வென்றபோது முக்கியமான வீரர்.

இப்போது இலங்கையின் பல்வேறு இளையவர் அணிகளுக்குப் பயிற்றுவித்து வருகிறார்.
அண்மைக்காலம் வரை தேர்வாளராகவும் கடமையாற்றியவர்.
Happy Birthday Romesh Kaluwitharana

 

 

Link to comment
Share on other sites

ஜெயம் ரவி நடித்திருக்கும் ’டிக்:டிக்:டிக்’ பட ட்ரெய்லர்..!

 

டிக் டிக் டிக்

'வனமகன்' படத்துக்குப் பிறகு, ஜெயம் ரவி நடித்திருக்கும் திரைப்படம் 'டிக் டிக் டிக்'. 'மிருதன் படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் எடுத்திருக்கும் இந்தப் படம், விண்வெளி சம்பந்தப்பட்ட கதை. நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார். 

 

 

Link to comment
Share on other sites

அப்பாவுக்கு பேட், மகளுக்கு சப்பாத்திக் கட்டை: வைரலாகும் தோனி மகள் ஸிவா சுட்டித்தனம்

 

 
ioppng

தோனி மகள் ஸிவா (இடது), மனைவி ஷாக்சியுடன் தோனி

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி எந்த அளவு பிரபலமோ, அதே அளவு பிரபலத்துடன் அவரது மகள் ஸிவா தோனி சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிஸ்டர் கூல் என்று அறியப்படும் மகேந்திர சிங் தோனி களத்தில் மட்டும் எதிர்பாராத முடிவுகளை எடுப்பவர் அல்ல. அவ்வப்போது அவரது நிஜ வாழ்க்கையிலும் யாரும் எதிர்பாரத வகையில் அதிரடி, குறும்புதனமான செயல்களின் மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருப்பார். தோனியின் ரசிகர்களும் தோனியின் செயல்களை ’தோனி டா’ என்ரு பகிர்ந்து கொண்டிருப்பார்கள்.

தற்போது தோனி மீது இருந்த அதே வெளிச்சம் அவரது மகள் ஸிவா மீது விழுந்துள்ளது. இதற்கு காரணம் அவர் தோனி மகள் என்பது மட்டுமல்ல, அவரது மழலை மொழியுடன் கூடிய குறும்பு செயல்கள் என்று கூறலாம். இதன் காரணமாக சமூக வலைதளத்தில் ஸிவாக்கும் தனியான ரசிகர் பட்டாளம் பெருகி வருகிறது.

ஸ்வா பியானோ வாசிக்கும் வீடியோ, ஸிவா மலையாள பாடல் பாடும் வீடியோ, என்று அவ்வப்போது ஸ்வாவின் சேட்டைகள் சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருந்தன. அந்த வகையில் ஸிவா சப்பாத்தி உருட்டு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. அப்பா பேட்டை வைத்து சுழற்றுவார்... மகளோ சப்பாத்தி கட்டையால் உருட்டுகிறார்.

இதோ அந்த வீடியோ:

 

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

எழுத்து, சினிமா, போராட்டம்..! இயங்குவதையே வாழ்வாக்கிக் கொண்ட அருந்ததி ராய் #ArundhatiRoyBDay

 

அருந்ததி ராய்

பெருமைக்குரிய புக்கர் பரிசைப் பெற்ற முதல் இந்தியர் எனும் புகழுக்கு உரியவர் அருந்ததி ராய். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவலுக்கு அளிக்கப்படும் சர்வதேச விருதான புக்கர் பரிசு, இவரது தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் எனும் நாவலுக்குக் கிடைத்தது. இந்த நூல் தமிழில் சின்ன விஷயங்களின் கடவுள் எனும் தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

 

அருந்ததி ராயின் அப்பா ராஜிப் ராய் வங்காளத்தைச் சேர்ந்தவர். அம்மா மேரி கேரளத்தைச் சேர்ந்தவர். 1961-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி ஷில்லாங்கில் பிறந்தார் அருந்ததி ராய். ஆனால், இவர் பிறந்த ஓரிரு ஆண்டுகளில் பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதனால் அம்மாவோடு கேரளத்துக்கு அழைத்துவரப்பட்டார். பள்ளிப் படிப்பை கேரளம், தமிழகத்தில் முடித்தார். டெல்லியில் கட்டட கலைக்கான படிப்பை முடித்து, அங்கேயே பணியிலும் சேர்ந்தார். 

கட்டடக் கலைக்குப் படித்தார் என்றாலும் சினிமாமீது அருந்ததி ராய்க்கு ஈடுபாடு இருந்தது. 84-ம் ஆண்டு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணாவைச் சந்திக்கும் அருந்ததி அவரோடு சில திரைப்படங்களுக்கும் தொலைக்காட்சிப் படங்களும் திரைக்கதை எழுதுகிறார். எந்தச் சூழ்நிலையிலும் சமூகம் சார்ந்த அக்கறையோடே இயங்குகிறார். அதுகுறித்த படைப்புகளை எவருக்கும் அஞ்சாமல் துணிவோடு எழுதிவந்தார். அதன்மூலம் பல எதிர்ப்புகளையும் சம்பாதித்துக்கொண்டார். 

அருந்ததி ராய். 

நர்மதை நதியில் அணைகள் கட்டும் அரசின் முயற்சியால் ஏராளமான எளிய மனிதர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்காக மேதா பட்கர் களத்தில் இறங்கி, ‘நர்மதா பச்சாவோ' எனும் பெயரில் போராடினார். அவரோடு தன்னை இணைத்துக்கொண்டார் அருந்ததி ராய். அதேபோலக் காடுகளின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்கு எதிராகத் தன் குரலை அழுத்தமாகப் பதிவுசெய்தார். அந்த இடத்தில் வனத்தையும் வனவாசிகளையும் காக்கப் போராடும் மாவோயிஸ்டுகளுடன் உரையாடவும் செய்தார். இதற்கு நாடு முழுக்க ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்தது. இதுகுறித்து அவர் குறிப்பிடும்போது, 'நம்முடைய அரசு காட்டின் வளங்களைப் பெரிய நிறுவனங்களிடம் விற்க நினைக்கிறது. ஆனால், பயங்கரவாதிகள் எனச் சொல்லப்படுபவர்கள் அவற்றைக் காக்க போராடுகிறார்கள். நியாயத்தின் பக்கம் நான் பேச விரும்புகிறேன்' என்கிறார். இப்படிக் கூறினாலும் மாவோயிஸ்ட்டுகளின் ஆயுத வழிப் போராட்டம் பற்றிய தம் கருத்துகளைக் கூற தயங்கியதேயில்லை. 

அருந்ததி ராயின் எழுத்துகளுக்காக ஜோதிராவ் புலே விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார். அமைதிக்கான ‘குளோபல் ஹ்யூமன் ரைட்ஸ்’ விருது அவற்றில் முக்கியமானது. 2006-ம் ஆண்டு இவரின் கட்டுரைத் தொகுப்புக்காக மத்திய அரசு சாகித்ய அகாடமி விருதை அளிக்க முன் வந்தது. ஆனால், மக்கள் விரோத கொள்கைகளைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி, நாட்டையே சீரழிக்க அரசிடமிருந்து இந்த விருதைப் பெற மாட்டேன் எனத் தீர்க்கமாக மறுத்தார். சிலர் சமாதானங்கள் செய்ய முயன்றாலும் தன் முடிவை மாற்றிக்கொள்ள வில்லை. எந்தவொரு விருதையும் எவரால் தரப்படுகிறது என்பதை அறிந்தே பெற்றுக்கொள்வதில் சமரசம் செய்துகொள்ளவதில்லை. 

 

எழுத்து மட்டுமல்லாமல், குழந்தைத் தொழிலாளர் பிரச்னைகள், அணு உலை எதிர்ப்பு, சுற்றுச்சூழல் சீரழிவுகளுக்கு எதிரான நிலைப்பாடு எனத் தன் வாழ்க்கையை மக்களுக்கான போராட்டக் களத்தில் இயங்குவதற்கு என மாற்றிக்கொண்டவர் அருந்ததி ராய். 

https://www.vikatan.com

 

Link to comment
Share on other sites

வாகமன்... கடவுளின் தேசத்தில் கால் படாத சொர்க்கம்! ஊர் சுத்தலாம் வாங்க...!

 
 

வாகமன்

‘இந்த லீவுல டூர் அடிக்கலாம்னு இருக்கேன்’ என்பவர்களது பெரும்பாலான சாய்ஸ் என்னவாக இருக்கும்? மலைவாச ஸ்தலங்கள் என்றால் ஊட்டி, கொடைக்கானல்... அருவி என்றால் குற்றாலம்... கோயில் குளம் என்றால் திருச்செந்தூர், திருவண்ணாமலை. இதெல்லாம் மனசை மயக்குபவைதான். ஆனால் அதையும் தாண்டி, ‘‘வாடா தம்பி... ரோஸ்மில்க் வாங்கித் தர்றேன்’’ என்று கிக்காக அழைக்கும் சமந்தாபோல் சொக்கவைக்கும் இடங்கள் எக்கச்சக்கம் உண்டு. மிடில் க்ளாஸ் மக்கள் யோசிக்காமல் பெட்டியைக் கிளப்பிக் கொண்டு பார்க்க வேண்டிய அற்புதமான சில இடங்களுக்கு வண்டியைக் கிளப்பினேன். இந்த வாரம், கேரள மாநிலத்தில் இருக்கும் வாகமன்.

 

வாகமன்

சென்னைக்காரர்களோ, மதுரைக்காரர்களோ - அனைவருக்கும் வாகமன் செல்ல ஒரே வழி - தேனி. தேனி தாண்டி கூடலூர், குமுளி, வண்டிப் பெரியார், ஏலப்பாறை வழியாகத்தான் வாகமன் செல்ல வேண்டும். பஸ்ஸில் கிளம்பினாலும் தேனி போய்விட்டுக் கிளம்புவதுதான் பெஸ்ட். ‘வழியில எங்கேயும் நிக்கக் கூடாது’ என்று சபதம் வேறு எடுத்தபடி காரின் ஸ்டீயரிங் பிடித்தேன். கவர்ன்மென்ட் பஸ் மாதிரி அடிக்கடி நிற்கவில்லை. ஒரே மிதி - தேனி வந்திருந்தது. தேனியில் லஞ்ச்.

வாகமன்

சின்னமனூர் தாண்டி இடதுபுறம் சென்றால், மேகமலை. நேராகச் சென்று லேசாக ரைட் டர்ன் அடித்தால், குமுளி. மலைப்பாதை தெரிய ஆரம்பித்தது. செக்கிங் பண்ணுவார்களோ என்று இறங்கினால், ‘செக்கிங்லாம் கிடையாது சார்; கிளம்புங்க’ என்று உரிமையாக ‘bye’ சொன்னார் காவல்துறை அதிகாரி ஒருவர். ‘சிசிடிவி’ கேமரா மட்டும்தான் ஆதாரமாம். சில செக்போஸ்ட்களில் டைமிங் உண்டு. குமுளிக்கு அது தேவையில்லை. காட்டில் விலங்குகள் இல்லை என்பதால், இரவில்கூட மலையேறலாம். ஆனால், டிரைவிங் அட் ஓனர்ஸ் ரிஸ்க். தமிழ்நாட்டில் இருந்து சில குட்டி யானைகளில் இறைச்சிக்காக மாடுகளை ஏற்றிப் பறந்து கொண்டிருந்தார்கள். ‘‘கேரளாவுக்கு பீஃப் நம்ம சப்ளைதான்!’’ என்றார் ஒரு குட்டி யானை உரிமையாளர்.

குமுளி நெருக்கத்திலேயே மலையாள வாடை. தமிழ்நாடு எல்லை முடிந்துவிட்டது. நிறைய சபரிமலை பக்தர்களைப் பார்க்க முடிந்தது. மலை ஏறி விட்டு வந்தவர்கள்; மலை ஏறப் புறப்பட்டவர்கள். சுற்றிலும் நேந்திரம் சிப்ஸ், மஸ்கோட் அல்வா என்று படு பரபரப்பாக விற்பனை நடந்து கொண்டிருந்தது. சீஸன் என்றால், இன்னும் குமுளி அமளிதுமளிப்படும் என்றார்கள்.

அடுத்து தேக்கடி வந்தது. ‘நம்ம டார்கெட் வாகமன்தான்’ என்பதால், தேக்கடியை அப்புறம் பார்த்துக்கலாம் என்று நினைத்தேன். பெரிய மாலுக்குள் போய்விட்டு எந்த ஷாப்பிங்கும் பண்ணாமல், வெளியே வருவதற்கு மிகப் பெரிய மனதைரியம் வேண்டுமே! அந்த மனதைரியம் நம்மில் பலரிடம் இல்லை. எனக்கும்தான். அதேபோல்தான் தேக்கடியும். ரோஸ்மில்க் சமந்தா ஞாபகம் வந்தது. ‘ரூம் போடுடா கைப்புள்ள’ என ஒரு ஓட்டலில் தஞ்சமடைந்தேன். பால்கனிக்கு வந்தால், மான்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. ஹவுஸ் கீப்பிங் பையனுக்கு எக்ஸ்ட்ரா குடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

வாகமன்

தேக்கடியில் தங்குபவர்கள் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லா ஊர்களிலும் தங்குவதற்கு 24 மணி நேரத்துக்கு பில் போடுவார்கள். தேக்கடியில் மட்டும் 12 மணி நேரக் கணக்கு. அதாவது, மதியம் 12 மணிக்கு ரூம் எடுத்தால், நைட் 12 மணிக்குள் ‘சாமான் நிக்காலோ’ செய்துவிட வேண்டும். ‘அடப்பாவிகளா’ என்று சாபம் விடத் தோன்றவில்லை. ஏனென்றால், தேக்கடியின் அழகு அப்படி. காசுக்கேற்றதைவிட சூப்பர் தோசை. தேக்கடியில் சில யானைகள், மான்கள் எல்லாம் ஹாய் சொல்லின. இதுக்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

தேக்கடி ஜங்ஷனில் இருந்து வாகமனுக்கு மூன்று வழிகள் என்றது ஜிபிஎஸ். வண்டிப் பெரியார் வழி, ஆனவிலாசம் வழி, குமுளி சாலையிலேயே நேராகப் போவது ஒரு வழி. எப்படிப் போனாலும், ஏலப்பாறை எனும் இடத்தில் சந்தித்துத்தான் ஆக வேண்டும். நேர் ரூட்டில் போவதுதான் பெஸ்ட் என்று பள்ளியில் படித்த ஞாபகம். நேராகவே போனேன். பஸ்ஸில் வருபவர்களுக்கும் ஆப்ஷன் இருக்கிறது. தேக்கடியில் இருந்து வாகமனுக்கு அடிக்கடி பேருந்துகள் உண்டு. ஆனால், ஒரு டாக்ஸி புக் பண்ணுவது சாலச்சிறந்தது. டாக்ஸிக்கு 2,500 செலவழித்தால் சுற்றிக் காட்டி கூட்டி வந்து விடுகிறார்கள்.

வாகமன்

கடல் மட்டத்திலிருந்து மேலேறிக் கொண்டே இருந்தேன். செம சில். வெயில் - மழை, குளிர் என்று பார்க்க வேண்டாம். வீட்டில் லக்கேஜ் பேக் பண்ணும்போது, ஸ்வெட்டர் அல்லது ஜெர்க்கினை ஆல்டைமாக வைக்க மறக்காதீர்கள். சில குளிர் நேரங்களில் உடம்பு மொத்தமும் கூஸ்பம்ப்ஸ் ஏற்படலாம். 'தொண்டை சரியில்ல; பச்சத் தண்ணி குடிச்சா செட் ஆகாது' என்பவர்கள், ஹாட் ஃப்ளாஸ்க்கில் சுடுதண்ணீரையும் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். அரைக்கால் ஷார்ட்ஸ் தவிர, ஃபுல் ட்ராக் பயன்படுத்துவது கால்களில் ஏற்படும் விறைப்பைத் தடுக்க உதவும். ஷூவும் அவசியம்.

DSC_0829_17486.JPG

 

இங்கே கார் ஓட்டுபவர்களுக்கு, கொஞ்சம் ராஜதந்திரம் தெரிந்திருக்க வேண்டும். கடாமுடா சாலைகள், காரைப் படுத்தி எடுத்தது. என்னைத் தாண்டி ஒரு பயணிகள் ஜீப், சர்ரென மவுன்ட் ரோடு பாலத்தில் செல்வது போல் பறந்தது. ‘‘அவ்விடம் பழக்கமானு... அதான்’’ என்றார் ஒருவர். பழக்கமான டிரைவர்களுக்கு மட்டும் இந்தச் சாலை நன்கு ஒத்துழைக்கிறது. எனக்கு ஒரு கி.மீ-க்கு 4 நிமிடம் வரை ஆனது.

மலை ஏறி முடித்ததும், சுற்றிலும் பசுமைப் புல்வெளிகள், சில் கிளைமேட்.. 'வா.. கமான்..' என்றது சூழ்நிலை. அட, வாகமன் வந்துவிட்டது. ஆம்! 1,100 மீட்டர் உயரத்தில் இருந்தது வாகமன். மருந்துக் கடை, ஹோட்டல்கள், மளிகைக் கடை என்று ஜாலியாக ஷாப்பிங் நடந்தது. விசாரித்தால், எல்லாரும் நம் ஊர்க்காரர்கள். பல பேர் இங்கே இடம் வாங்கி பில்டிங் கட்டி லாட்ஜ் நடத்துகிறார்கள். சீஸன் நேரங்கள் தவிர இங்கே புக்கிங் தேவையில்லை என்றார்கள். இரவு ஆகியிருந்ததால், நல்ல ரூமாகப் பார்த்து புக் செய்தேன். எப்போதும் 10 முதல் 22 டிகிரி வரை குளிர் இருந்துகொண்டே இருந்ததால், ஃப்ரிட்ஜுக்குள் வைத்ததுபோலவே இருக்கிறது ஊர். மதியம்கூட செம குளிர் அடிக்கும் என்றார்கள். வாய் வழியே நீராவி போல மூச்சு வந்தது. இங்கு தேக்கடி போல் இல்லை. 24 மணி நேரக் கணக்குதான்.

வாகமன்

டாஸ் போட்டுப் பார்த்தேன். முதலில் போட்டிங். நீங்கள் நினைப்பதுபோல் இங்கு போட்டிங் அணை நீரிலோ, ஏரியிலோ நடக்கவில்லை. ‘‘இடுக்கி டேம் தண்ணியா? பெரியார் டேமா?’’ என்று விசாரித்தேன். ‘‘எந்த டேமும் இல்லா. இவ்விட மழைத் தண்ணியானு’’ என்றார் டிக்கெட் கவுன்டரில் இருந்த சேச்சி. ‛மழை நீர் சேகரிப்பில் போட்டிங்கூட விடலாமா... வெல்டன் கேரளா!’ என்று பாராட்டிவிட்டு ஒரு போட்டில் ஏறினேன். தனியார் நடத்தும் படகுக் குழாம் என்பதால், தலைக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலித்தார்கள். இங்கே குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் வைத்திருந்தார்கள். ஒரு பெரிய பந்துக்குள் குழந்தைகளை அடைத்து, தண்ணீருக்கு மேல் மிதக்கவிடும் விளையாட்டைப் பார்த்ததும் எனக்கே ஆசை வந்தது.

வாகமனில் சுற்றிப் பார்க்க என்று ஒரு பெரிய லிஸ்ட்டையே எழுதித் தந்தார் என் காட்டேஜ் உரிமையாளர். ஆனால், உள்ளே நுழைந்ததும் டூரிஸ்ட் ஸ்பாட் மாதிரி இல்லையே என்றுதான் நினைத்தேன். ஸாரி வாகமன். இரண்டு நாட்கள் தங்கியிருந்து வாகமனை ஆசை தீரச் சுற்றிப் பார்த்தவர்களைப் பார்த்தேன். மொத்தம் 13 ஸ்பாட்கள். இதில் முக்கால்வாசி இடங்கள் வியூபாயின்ட் மட்டுமே! ஒரு மலை மேல் ஏறி நின்று மொத்த கேரளாவையும் குட்டியாக ரசிக்கும் எக்கச்சக்க வியூபாயின்ட்கள்தான் வாகமனின் பியூட்டி.

அதாவது, வானம் தொடும் மலைகளும், ஆழம் அறியா பள்ளத்தாக்குகளும்தான் வாகமனின் ஸ்பெஷல். ஒரு மாலை நேரத்தில் இங்குள்ள வியூ பாயின்ட்களில் வலம் வந்தால், மனசில் உள்ள அழுக்கெல்லாம் துடைத்தெறியப்படலாம். அத்தனை அமைதி, அழகு, வாஞ்சை! சொல்லப் போனால், பல நல்ல சினிமாக்களின் செல்லமான ஸ்பாட்டாக வாகமன் இருந்திருக்கிறது. ‘தங்க மீன்கள்’ படத்தில் வரும் ‘ஆனந்த யாழை’ பாடல் இங்குதான் படமாக்கப்பட்டது என்று ஓர் இடத்தைக் காட்டினார்கள். மொட்டைப் பாறை எனும் அந்த இடம், அவ்வளவு ரம்மியமாக இருந்தது. இதன் உச்சிக்குப் போக வேண்டும் என்றால், 1 கி.மீ ஜாலியாக ட்ரெக்கிங் போக வேண்டும். உச்சியில் ஏறி செல்ஃபிகளை அள்ளிக் குவிக்கலாம். கொஞ்சம் தள்ளி ஓர் இடத்தைக் காட்டி, இது ‘பையா’ படத்தில் ‘அடடா மழைடா’ பாட்டு எடுக்கப்பட்ட இடம் என்றார்கள்.

ஆன்மிக அன்பர்களுக்கும் ஒரு அருமையான ஸ்பாட் வாகமன். இங்கே புகழ்பெற்ற ஸ்பாட்கள் மூன்று. குரிசு மலை, முருகன் மலை, தங்கல் மலை. குரிசு மலையில் மிகப் பழைமையான புனித செபாஸ்டியன் தேவாலயம்தான் ஸ்பெஷல். புனித வெள்ளியில் தள்ளுமுள்ளே நடக்கும் என்றார்கள். குரிசு மலையின் கிழக்கில் இருக்கும் முருகன் கோயில் உள்ள முருகன் மலையில் தைப்பூசம் அன்று அல்லோல கல்லோலம்தான். தங்கல் மலை, கிட்டத்தட்ட முஸ்லிம்களுக்கானது. 800 ஆண்டுகளுக்கு முன்பு ஆஃப்கானிஸ்தானில் இருந்து வந்த ஹஷ்ரத் ஷேக் ஃபரூதீன் பாபா எனும் முனிவர், இந்த இடத்தில்தான் ஜீவசமாதி அடைந்ததாகச் சொல்கிறார்கள். முஸ்லிம் திருவிழாக்களின்போது இங்கு தரப்படும் ‘கஞ்சுசக்கார்’ என்னும் இனிப்பு வகை பிரசாதம் செம ஃபேமஸ். பருந்துப் பாறை எனும் மேடு, வாகமனுக்கே அழகு.

 

வாகமன்

 

பாஞ்சாலி மெட்டு என்ற இடத்துக்கு ட்ரெக்கிங் போவது செம ஜாலியான விஷயம். ஒற்றையடிப் பாதையில் புல் சரிந்து, காலடிகளில் வழுக்கும். மலையில் கைகளை ஊன்றி, மேலேறிச் செல்வது சுகமாக இருக்கும். ஆனால், அட்டைகள் கவனம். வரிசையாக கற்கள். சில கோயில்கள். 'உடைகளைக் கழற்றிவிட்டு காற்றில் நிற்பதுபோல், எண்ணங்களைக் கழற்றிவிட்டு நின்று பாருங்கள்’ என்று எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் சொன்னது சரிதான்.

இப்படி எல்லா ஸ்பாட்டுகளுமே உள்ளடங்கி, மேலேறி இருக்கிறது. அதனால், நிறைய பேர் வாகமனை ஜஸ்ட் லைக் தட் டீல் பண்ணிவிட்டுக் கிளம்பிவிட வாய்ப்புண்டு. இங்குள்ள பைன் ஃபாரெஸ்ட்டும் அப்படித்தான். கொடைக்கானலை நினைவுபடுத்தியது. இரண்டுக்கும் ஒரே வயசு என்றார்கள். கொடைக்கானல் போலவே இங்கும் ஆன் தி ஸ்பாட் போட்டோ எடுத்து ஃப்ரேம் பண்ணித் தருகிறார்கள். அதே மாதிரிதான் அருவிகளும் உள்ளடங்கி இருந்தன.

DSC_5774_18297.JPG

எப்போதாவது தொகுதிப் பக்கம் எட்டிப் பார்க்கும் எம்.எல்.ஏக்கள் மாதிரி, அவ்வப்போது எட்டிப் பார்த்துக் காணாமல் போகும் அருவிகள் வாகமனில் நிறைய உண்டு. சில அருவிகளுக்கு கடுமையான ட்ரெக்கிங் மூலம்தான் செல்ல வேண்டும். பாம்புப் படுக்கையில் பெருமாள் பள்ளி கொண்டிருப்பதுபோல், சுற்றிலும் மேற்குத் தொடர்ச்சி மலை படுத்துக் கிடக்க, 2 கி.மீ மலை மீதேறி ஓர் அருவியைப் பார்த்தேன். பார்த்ததும் குளிக்கத் தூண்டியது. இதற்கு வாகமன் அருவி என்றே பெயர் வைத்திருந்தார்கள். ‘அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்’ என்று பாடிய த்ரிஷாவுக்கு வாகமன் அருவியை ரெகமண்ட் செய்கிறேன். சுற்றிலும் யாருமே இல்லை. அதனால், வாகன இரைச்சல், காற்று மாசு, பிளாஸ்டிக் குப்பைகள் எதுவும் இல்லை. வாகமன் அருவியை நாசம் பண்ண கொடுங்கோலர்களுக்குக்கூட மனசே வராது. ஆசம்!

குளித்துவிட்டு நல்ல டீ அடித்தால் செமையாக இருக்கும். எங்கேயாவது தென்பட்ட டீக்கடைகளில், மணமான ஒரு டீ. வாகமனில் டீக்கடைகளுக்குத்தான் பஞ்சம். எஸ்டேட்டுகளுக்கு இல்லை. எக்கச்சக்க எஸ்டேட்டுகள். எல்லாமே பிரைவேட். கேரளா டூரிஸத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு சில டீ எஸ்டேட்டுகள், மணம் பரப்பியிருந்தன.

உச்சிப் பாறைகள், பச்சைத் தாவரங்கள், நீரோடைகள் என எல்லா இடத்தையும் டிக் அடித்தாயிற்று. டூர் முடியப் போகிறதே என்று ஆண்ட்ராய்டு போனில் சர்ரென சார்ஜ் இறங்குவதுபோல், வருத்தம் பரவியது. அதேநேரம் சார்ஜ் இறங்கிய போன்போல், மனசும் சுத்தமாக இருந்தது. கேரளாவை, கடவுளின் தேசம் என்று ஏன் சொல்கிறார்கள் என்று இப்போது புரிந்தது.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

கொலை செய்யும் தேன் காளான்கள்

அமெரிக்காவின் கிழக்கு ஓரிகன் மலைப் பகுதிகளில் உலகிலேயே மிகப் பழமையான ஆச்சரியம் அளிக்கக்கூடிய ஓர் உயிரினமான Armillaria Ostoyae  என்ற தேன் காளான்  வாழ்ந்துகொண்டிருக்கிறது.

2,200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் காளான்கள் பரந்து விரிந்திருக்கின்றன. இவை அனைத்தும் கண்களுக்குத் தெரியாத ஒரே ஒரு வித்திலிருந்துதான் உருவாகியிருக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.இந்தக் காளான் உருவாகி குறைந்தது 2,400 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 8,000 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்கிறார்கள்.

online_New_Slide.jpg

 

இந்த தேன் காளான்கள் மெதுவாகப் படர்ந்து தான் செல்லும் வழியில் உள்ள உயிரினங்களைக் கொன்றுவிடுகின்றன. ஒவ்வோர் இலையுதிர் காலத்தின்போதும் மஞ்சள் வண்ணக் காளான்களாகக் கூட்டம் கூட்டமாகத் தங்கள் இருப்பை வெளிக்காட்டிக்கொள்கின்றன.

ஒரு சில வாரங்களில் தங்களுடைய உருவத்தை மாற்றி வெள்ளை நிறமாக மாறி சுண்ணாம்புபோல் சாதாரணமாகக் காட்சியளிக்கின்றன. இந்தத் தேன் காளான்கள் மரங்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை விளைவித்துவிடுகின்றன. மரத்தின் வேர்களில் இருந்து சத்தை மெதுவாக உறிஞ்சி தங்களை வளர்த்துக்கொள்கின்றன. இதனால் மரங்கள் மெதுவாக சத்துகளை இழந்து 20, 30 ஆண்டுகளில் தேன் காளான்களை எதிர்த்து நிற்க முடியாமல் இறக்கும் நிலைக்கு சென்றுவிடுகின்றன.

ArmillariaOstoyaeMushroomsGrowTree.jpg.8

“காளான்களால் ஒரு மரத்தைக் கொலை செய்ய இயலும் என்பதை மக்களால் நம்ப முடிவதில்லை. மரத்துக்குத் தேவையான சத்துகளும் தண்ணீரும் தொடர்ச்சியாகக் கிடைக்காவிட்டால் அவை காலப்போக்கில் மடிந்துதான் போகவேண்டும். தேன் காளான்கள் இப்படித்தான் அனைத்தையும் அபகரித்துக்கொண்டு மரங்களை வீழ்த்திவிடுகின்றன” என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த நோய் இயல் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் க்ரெக் ஃபிலிப்.

1988 ஆம் ஆண்டு வனத்துறையைச் சேர்ந்த க்ரெக் விப்பில் என்பவர் முதல்முறையாக இந்தக் காளான்களைக் கண்டுபிடித்தார்.

பல காளான்கள் சேர்ந்த தொகுப்பாக இருக்கும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால் மரபணு பரிசோதனையில் ஒரே ஒரு வித்திலிருந்து உருவானது என்பது தெரியவந்துள்ளது. இந்தக் காளான்களை எல்லாம் ஒன்று சேர்த்தால் குறைந்தது 7,500 டன்களிலிருந்து அதிகபட்சம் 35,000 டன்கள் வரை எடை இருக்கலாம் என்கிறார்கள்.

ஓர் ஆண்டுக்கு தேன் காளான்கள் ஓர் அடியிலிருந்து மூன்று அடி தூரம் வரை பரவுகின்றன. இந்தக் காளான்கள் குறித்து ஆச்சரியமும் ஆராய்ச்சியுமாக உலகம் இருக்க மர வியாபாரிகள் நீண்ட காலம் வளரக்கூடிய அற்புதமான மரங்களை சேதப்படுத்தி அழித்து விடுவதால் வெறுக்கிறார்கள்.

ஆனால் மரங்கள் அழிந்து மீண்டும் மண்ணுக்கே உரமாகி மறுசுழற்சி நடைபெறுவதால் தேன் காளான்களைக் கண்டு அஞ்சத் தேவை இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

http://www.virakesari.lk

Link to comment
Share on other sites

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி

 

 
22CHSUJCHEMBRA1

சாகசப் பயணம் செய்ய விரும்பினால் செம்பரா மலைக்குதான் செல்லவேண்டும். கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டத்தில் இருக்கிறது இந்த மலை. கடல் மட்டத்திலிருந்து 2,100 மீட்டர் உயரத்தில் உள்ள இந்தச் செம்பரா மலை, வயநாடு மாவட்டத்திலேயே மிக உயரமான மலை உச்சியாகக் கருதப்படுகிறது.

   

மலை உச்சியிலிருந்து பார்க்கும்போது பசுமை நிறைந்த வயநாடு மலைகளும் நீலகிரி மலைகளும் கண்களுக்கு விருந்தாக இருக்கின்றன! மலை அடிவாரத்தில் தேயிலைத் தோட்டங்களும் மலையின் வலப் பக்கத்தில் பசுமையான பள்ளத்தாக்கும் உள்ளன. கல்பேட்டா நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தச் செம்பரா மலை. காடுகளுக்குள்ளும் மிகப் பெரிய பாறைகளைக் கடந்தும் செல்லவேண்டும்.

செம்பரா மலை உச்சியை அடைவதற்கு 3 மணி நேரம் ஆகும். மலை ஏறுவதற்கு அருகில் உள்ள மேப்படி நகரில் உள்ள வனத்துறையிடம் அனுமதி பெற்று, நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும். காலை 7 மணி முதல் மதியம் 2 மணிவரை நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது. மலையேற்றத்துக்கு வழிகாட்டிகள் இருக்கின்றனர். அவர்களுடைய உதவி இல்லாமல் செம்பரா மலை ஏறுவது சற்றுச் சிரமமாக இருக்கும்.

22CHSUJCHEBRA2
 

மலை ஏறுவதை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். நுழைவுச் சீட்டு வாங்கிய இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ. சமவெளியில் தேயிலைத் தோட்டங்கள் வழியே பயணிக்க வேண்டும். இது கொஞ்சம் எளிதான வழி. அடுத்து காய்ந்த இலைகள், கிளைகளுக்கிடையே சற்றுச் சாய்வாக உள்ள மலைப் பகுதியில் ஏற வேண்டும். வழுக்குப் பாறைகளும் மாவு போன்ற மண்ணும் இருப்பதால் மிகவும் கவனமாக ஏற வேண்டும். கால்களை அழுத்தமாக நிலத்தில் பதித்தும், அருகில் இருக்கும் செடிகளின் கிளைகளைப் பிடித்துக் கொண்டும் செல்ல வேண்டும்.

அடுத்த கட்டத்தில் உயர்ந்த மரங்களுடன் கூடிய வனப்பிரதேசம். இங்கு மலை செங்குத்தாக இருப்பதால் ஏறுவது மிகவும் சிரமாக இருக்கும். இங்கும் பாறைகள் வழுக்கும் விதத்திலேயே உள்ளன. மேலே செல்லச் செல்ல பசுமை போர்வை போர்த்திய இடங்கள் கண்களைக் கவர்கின்றன. பெரிய பாறைகளைத் தாண்டிச் சென்றால் ’இதய’ வடிவில் ஓர் அழகான ஏரி இருக்கிறது. இதை ’இதயத் தடாகம்’ என்று அழைக்கிறார்கள். பச்சை மலைக்கு நடுவில் நீல வண்ண ஏரியைப் பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.

ஏரிக்கு மேல் ஏறுவதற்கு வனத்துறை அனுமதிப்பதில்லை. வனவிலங்குகளின் அபாயம் இருப்பதால் முகாம் அமைத்து தங்குவதற்கும் அனுமதியில்லை. சுற்றிப் பார்த்து விட்டு, இரண்டரை மணி நேரத்தில் கீழே இறங்கிவிடலாம்.

22CHSUJCHEMBRA4
 

கேரளா சுற்றுலாத்துறை சாலைகளோ, படிக்கட்டுகளோ அமைக்காமல் இயற்கையை அப்படியே பாதுகாக்கிறது. மலை ஏற்றம் சிரமமாக இருந்தாலும் சாகச அனுபவத்தைத் தருகிறது. இந்த மலையில் அபூர்வமான மரங்களும் விலங்குகளும் காணப்படுகின்றன.

இங்கு பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வனத்துறையும் சுற்றுலாத்துறையும் மிக நன்றாக மலையைப் பராமரிக்கின்றனர். செப்டம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம்வரை இங்கு மலை ஏறுவதற்கு தகுந்த காலம். மழைக் காலங்களில் ஏற முடியாது.

 

 

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ஆடுகள் பகை... குட்டிகள் உறவு!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மகள் மலியாவுக்கு சார்பாக, தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகள் இவங்க்காவும் முன்னாள் ஜனாதிபதி பில் க்ளின்ட்டனின் மகள் செல்ஸி க்ளின்ட்டனும் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

மலியா ஒரு இளைஞனுடன் கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் இணையத்தில் பரவியதையடுத்தே இவங்க்காவும் செல்ஸியும் மலியாவுக்குச் சார்பாகக் குரல் கொடுத்துள்ளனர். ஒபாமா - ட்ரம்ப் ஆகியோருக்கிடையில் பரஸ்பர கருத்து வேறுபாடுகள் இருப்பது அனைவரும் அறிந்ததே!

7_Malia.JPG

இணையத்தில் நேற்று தரவேற்றப்பட்ட வீடியோ ஒன்றில், காற்பந்தாட்டப் போட்டியொன்றுக்கு முன்னதாக மலியா ஒபாமா, ஒரு இளைஞனை இறுக்கி அணைத்து முத்தமிடும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதையடுத்து, இவங்க்கா ட்ரம்ப் தனது ட்விட்டர் கணக்கில், “மாணவப் பருவத்தில் இருக்கும் மலியா தனது சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை உண்டு. அவர் ஒரு சுதந்திரமான பெண். அவரது சுதந்திரம் பேணப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, “மலியா ஒபாமாவை ஒரு இளம் பெண்ணாக, ஒரு கல்லூரி மாணவியாக, ஒரு தனிப்பட்ட நபராகக் கருதவேண்டுமே தவிர, உங்கள் விளையாட்டு பொம்மையாகக் கருதக்கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் சட்டப்படி, அரசியல் தலைவர்களின் பிள்ளைகளின் தனிமை பாதிக்கப்படக்கூடாது. ஆனால், அந்த விதியை மீறும் வகையிலேயே இந்தக் காட்சி பதிவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே மலியா ஒபாமா சிகரட் புகைக்கும் வீடியோ ஒன்றும் அவர் வேடிக்கையாகத் தனது பின்னழகைக் காட்டும் வீடியோ ஒன்றும் பதிவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

வலைபாயுதே

 

சைபர் ஸ்பைடர்

 

twitter.com/mymindvoice

திருமண வாழ்க்கையில் ஆகச்சிறந்த புரிதலென்பது, எந்தெந்தச் சண்டைகள் எத்தனை மணி நேரம் நீடிக்கும் என, சண்டை தொடங்கும் முன்பே தெரிந்திருப்பது.

twitter.com/Kannan_Twitz

தெரிஞ்சத தெரியாத மாதிரி நடிக்கிறவன் மனுஷன், தெரியாததை தெரிஞ்ச மாதிரி நடிக்கிறவன் பெரிய மனுஷன்.

twitter.com/naiyandi

சில வாட்ஸப் குரூப்பில இருக்கிறது, துக்கம் விசாரிக்கப்போய் பேசாம உட்கார்ந்திருப்பது  போல் இருக்கு!

twitter.com/manipmp

கமல் ஆட்சிக்கு வருவாரா, ரஜினி ஆட்சிக்கு வருவாரா என யோசிப்பதற்குள் ஆளுநர் ஆட்சிக்கு வந்துவிடுவார் போல.

twitter.com/CreativeTwitz

நாம வாக்கப்பட்டது என்னமோ அதிமுகவுக்குன்னாலும் நம்மள வச்சிருக்கிறது என்னமோ பாஜகதான்.

twitter.com/MJ_twets

கண்ணெதிரில் நடக்கும் அநியாயத்தைத் தட்டிக்கேட்க முடியாமல் சிசிடிவி கேமராக்கள்...

p112a.jpg

twitter.com/SoBeNotIt

சீமான் பேசுற பேச்சுக்கு குஜராத்னா இந்நேரம் C.M ஆக்கி 10 வருஷத்துல P.M ஆக்கியிருப்பாங்க.தமிழ்நாடுங்கறதால `யாருடா இது’ ரேஞ்சிலேயே பார்க்கிறாங்க!

twitter.com/saysatheesh

போன வருஷம் இந்நேரமெல்லாம் உயிர் இருக்கான்னு பேசிட்டிருந்தாங்க... இப்போ உயில் இருக்கான்னு பேசிட்டிருக்காங்க!

twitter.com/selva_twitz

வெள்ளந்தியான மனிதர்களையெல்லாம் வெறுத்து ஒதுக்கிவிட்டு, பச்சோந்தி போன்ற மனிதர்களோடுதான் பாசமாய்ப் பழகிக்கொண்டிருக்கிறோம்...

twitter.com/HAJAMYDEENNKS

ரயிலில் ஸ்நேகம் பிடிக்கலாம்... பஸ்ஸில் ஸ்நேகம் பிடிக்கலாம்...விமானத்தில் மட்டும் முடியாது. ஏறுனதிலிருந்து இறங்குவது வரை உர்ருன்னே வராங்க..!

p112b.jpg

twitter.com/SKtwtz

நூறு நாள் வேலைத் திட்டத்தை `நூறு நாள் இலவச சம்பளத் திட்டம்’னு பெயர் மாத்தலாம்.

ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கலாம் தவறில்லை. ஆனால், சோம்பேறியாக்கி விவசாயத்தையும் அழிக்க வேண்டாம்.

முறையாகச் செயல்படுத்தியிருந்தால் எத்தனையோ ஏரி குளங்களைத் தூர்வாரியிருக்கலாம். சாலைகளைச் சீரமைத்திருக்கலாம்.

twitter.com/yugarajesh2

புதுசா வாங்கின கைலியைத் துவைக்காமல் அப்படியே கட்டிக்கிட்டு நடக்கும்போது வடிவேலு கூடையைக் கட்டிக்கிட்டு நடக்கிற மாதிரியே ஃபீல் ஆகுது.

twitter.com/smhrkalifa

நம் அமைச்சர் பெருமக்களின் டெல்லி மீதான பயத்தைப் பார்த்தால், கிரண்பேடி வந்து தமிழகத்தில் ஆய்வு செய்தாலும் வரவேற்பாங்க போல!

twitter.com/SairSairam

வேலையை முடித்துக்கொடுப்பதைவிட சாப்பிட்டுவிட்டு மதிய நேரத்தில் தூங்காமல் விழித்திருப்பதே பெரிய சாதனையாக இருக்கிறது அலுவலகத்தில்.

twitter.com/abuthahir707

மாதத்திற்கு ஒருமுறை நிம்மதியான தூக்கம் சலூன் கடைகளில் மட்டும்தான் கிடைக்கிறது.

p112c.jpg

twitter.com/CreativeTwitz

மொக்க காமெடிக்கெல்லாம் சிரிக்க, டி.வில வர்ற ஜட்ஜுங்களால மட்டும்தான் முடியும்.

facebook.com/anaswamy

வட சரியான ஷேப்ல செய்யத்தெரியாத ஆள்தான் பக்கோடாவைக் கண்டுபிடிச்சிருக்கணும்.

twitter.com/Kozhiyaar

நாம் எவ்வளவு ஏமாளி என்பதை நம் வீட்டில் உள்ள எல்.ஐ.சி பாலிசியின் எண்ணிக்கை சொல்லிவிடும்!

p112d.jpg

twitter.com/udhayamass1

ஒருநாள் கூத்து  என்பது தலைவர்களின் சிலைக்குத்தான் பொருந்தும்...!

twitter.com/CreativeTwitz

நமக்கு இந்த உலகத்துல சொத்து சேர்த்து வைக்காத தாத்தா இருக்கலாம்.  ஆனா, லீவ் வாங்கித்தராத தாத்தா மட்டும் இல்லவே இல்ல..! :)

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

சமோசா விற்பதற்காக கூகுள் வேலையை விட்ட இந்தியர்

மும்பையைச் சேர்ந்த இந்த இளைஞர் கூகுள் நிறுவனத்தில் தாம் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு தன் வீட்டிலேயே உணவகம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்த உணவகத்தில் உண்பதற்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. அவை என்னவென்று தெரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

மிராபெல் சகோதரிகளை நினைவுகூறும் சர்வதேசப் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினம்! #EliminationOfVilolenceAgaistWomans

 

பெண்

'ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 25 அன்று பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைக்கு எதிரான நாள்' என்று 1999-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இது, மிராபெல் சகோதரிகளை நினைவுகூறும் நாளாகவும் போற்றப்படுகிறது. இந்த மிராபெல் சகோதரிகளின் கதை, கண்ணீா் கலந்த புரட்சி காவியம். 

 

1930 - 38, 1942 - 61 க்குட்பட்ட ஆண்டுகளில், ரஃபேல் ட்ருஹியா என்பவா் டொமினிக் குடியரசு நாட்டின் அதிபராகப் பதவி வகித்துவந்தார். வெளியுலகுக்குத் தன்னை நல்லவராகக் காட்டிக்கொண்டு நாட்டின் வளங்களைச் சூறையாடினார். அவரை எதிர்ப்பவர்களைக் கொலை செய்வதற்காக 'தி 42' என்ற பெயரில் தனிக் கூலிப்படையே வைத்திருந்தார். இதை எதிர்த்து மிராபெல் சகோதரிகள் போராடினா். இவா்களின் பெயா் மாரியா தெரஸா மிராபெல், மினா்வா மிராபெல், பேட்ரியா மிராபெல். மிராபெல் என்பது இவா்களின் குடும்பப் பெயர். 'தி42' குழுவினா் சில பெண்களைக் கொலை செய்வதை நேரில் பார்த்த பேட்ரியா, பெரும் போராட்டத்தை முன்னெடுத்தார். இந்தச் சகோதரிகளுக்குப் பெருகும் ஆதரவைக் கண்டு, அதிபா் ரஃபேல் கோபமானார். இனியும் இவர்களை விட்டுவைத்தால் தன் பதவிக்கு ஆபத்து வரும் என, அவர்களைக் கொல்லத் திட்டமிட்டார். 

பெண்கள்

சிறையில் இருக்கும் சக போராட்ட வீரர்களைச் சென்று சந்திப்பது இந்தச் சகோதரிகளின் வழக்கங்களில் ஒன்று. அப்படி ஒருமுறை சந்திப்பு முடிந்து திரும்பியபோது, ரஃபேல் ட்ருஹியாவின் ஆள்கள் இவர்களைக் கொன்றுவிட்டார்கள். அதை விபத்துபோல ஜோடிக்க, இறந்த சடலங்களை அவர்களின் காருக்குள் வைத்து மலையிலிருந்து தள்ளிவிட்டனா். இது நடந்தது 1960-ஆம் ஆண்டு. இந்த உண்மையும் ட்ருஹியோவின் மரணத்துக்குப் பின்னா்தான் வெளிச்சத்துக்கு வந்தது. இந்தச் சகோதரிகளின் வாழ்க்கையை மையமாகவைத்து 'இன் தி டைம்ஸ் ஆஃப் பட்டா்ஃபிளை' என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது. 

ஒவ்வொரு நாளும் பெண்கள்மீது தொடுக்கப்படும் வன்முறைகளும், அவா்களுக்கு எதிரான குற்றமும் அதிகரித்துவருகிறது. சமீபத்திய ஆய்வின்படி, உலகில் மூன்றில் ஒரு பெண், தன் வாழ்நாளில் ஒருமுறையெனினும் வன்புணர்வு தொல்லைக்கு ஆளாகிறார். ஆண், பெண் இருபாலரும் உடலமைப்பால்தான் வேறுட்டு இருக்கின்றனர். மற்ற விஷயங்களில் பெண் என்பவள், ஆணுக்குச் சற்றும் குறைவில்லை. ஒரு நாட்டில் பெண்கள் எப்போது பாதுகாப்பை உணர ஆரம்பிக்கின்றனரோ அப்போதுதான் அது சிறந்த நாடு என்கிற தகுதியைப் பெறுகிறது. பெண்கள், தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எந்தக் காரணத்துக்காகவும் மறைக்காமல், தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும். ஓங்கி குரல் கொடுக்க வேண்டும். வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், யாரோ ஒருவரின் தாயாகவோ, சகோதரியாகவோ இருக்கிறார் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் பதியவேண்டும். தங்கள் சகோதரிக்கு நடக்கும் வன்கொடுமையைச் சமூகத்துக்கு அஞ்சி மறைக்காமல், குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுதர குடும்பத்தாரும் முன்வர வேண்டும். அது, பெண்களிடம் நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கும். அது, அவர்களை நட்சத்திரமா ஜொலிக்கச் செய்யும். 

பெண்கள்

‘உலகம் ஆரஞ்சுமயமாகட்டும்’ என்று ஐநா பெண்கள் அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்துக்கட்டும் விதமாக ஐ.நா. அறிவித்துள்ள நவம்பர் 25 தொடங்கி உலக மனித உரிமை நாளான டிசம்பர் 10 வரை 16 நாட்கள் பெண்களின் உரிமைகளுக்காக உலகெங்கும் ஆரஞ்சு வண்ணத்தில் அதிரடியாய் ஆர்ப்பரிப்போம் என்று அந்த அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

வரதட்சணை ஒழிப்புச் சட்டம் தொடங்கி, குடும்ப வன்முறை சட்டம், வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்புச் சட்டம், அண்மையில் கொண்டுவரப்பட்ட நிர்பயா சட்டம் வரை நிறைய சட்டங்கள் இருக்கின்றன. இன்னும் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற முன்மொழிவும் இருக்கிறது. இத்தனை சட்டங்கள் இருந்தும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.     

இப்போது உலகெங்கும் உயிர்வாழும் பெண்களில் ஏறத்தாழ 12 கோடிப் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள். 30 நாடுகளில் வாழும் 20 கோடிப் பெண்கள் ஐந்து வயதுக்கு முன்பே பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டவர்கள் (female genital mutilation), ஏறத்தாழ 75 கோடிப் பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் பட்டியலில் 35 விழுக்காடு பெண்கள் தங்கள் சொந்தக் குடும்ப உறுப்பினர்களாலேயே துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் 2012 இல் கொலை செய்யப்பட்ட பெண்களில் பாதிப்பேர் குடும்ப உறுப்பினர்களால் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். அதே ஆண்டில் குடும்ப உறுப்பினர்களால் கொலை செய்யப்பட்ட ஆண்கள் 6% விழுக்காடுதான் என்று ஐ.நாவின் அறிக்கை ஒன்று ஆய்வு சொல்கிறது.

பெண்கள்

பெண்ணை அன்னையாய், பாட்டியாய், அத்தையாய், அக்காவை, அண்ணியாய், தங்கையாய்க் கொண்டாடும் ஆண்கள் அதேவேளையில் அவர்களை பாலுறவுக்காவும், சொத்துக்காகவும் துன்புறுத்துவதும் கொலை செய்வதும் ஏன் நிகழ்கிறது? இன்னும் மாமியாராக, நாத்தனாராக, பெண்களே பெண்களுக்கு எதிரியாவதும் குடும்பங்களில் நிகழ்கிறதல்லவா? பெண்ணை முதன்மையாகக் கொண்டு இயங்கிய பழங்கால சமுதாயத்திற்குப் பின்வந்த சமுதாயங்கள் எல்லாவற்றிலும் நாம்  பெண்ணை அடிமையாக, அழகுப் பதுமையாக,  இன்பம் துய்க்கும் நுகர்வுப் பொருளாகவே பார்க்கும் போக்கை ஊக்குவித்து வந்துவிட்டோம் . உழைக்கும் பெண்களைப் பொறுத்தவரை குடும்பத்திலும், வேலை செய்யும் இடங்களிலும் என்று இரட்டைச் சுரண்டலுக்கும், இரட்டைத் துன்புறுத்தலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

ஆண் மைய சமுதாய அமைப்பு மாறாதவரை பெண்கள் மீதான வன்முறை முற்றாக ஒழியாது. ’ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லது ‘பெண்மை’ விடுதலை இல்லை என்பது உறுதி.  என தந்தை பெரியார் சொன்னதை இங்கே பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும். 

 

ஒவ்வொரு பெண்ணும் ஒரு பட்டாம்பூச்சி... அவர்கள் இந்த உலகில் சிறகு விரித்துப் பறக்க உரிமை உள்ளது. 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

“உலகில் அதிகம் சம்பளம் பெறத் தகுதியான உத்தியோகம் எது?” - இந்தியாவின் மனுஷி சில்லாரை உலக அழகியாக்கிய அந்தப் பதில்...

 

 
2-format43

 

1951-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உலக அழகி போட்டியில் உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல அழகிகள் பங்கு பெறுவதுண்டு. இன்னிலையில், 2017-ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி சீனாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் 108 நாடுகளின் சார்பில் 118 பேர் அந்த ஒரு பட்டத்திற்கு போட்டியிட்ட நிலையில் இந்தியாவின் மனுஷி சில்லார் மகுடம் சூடினார். 

ஏற்கனவே உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹேடன் (1997), யுக்தா மூகே (1999), பிரியங்கா சோப்ரா (2000) ஆகியோரின் வரிசையில் 17 ஆண்டுகள் கழித்து இடம் பிடித்துள்ளார் மனுஷி சில்லார். உலக அழகி என்பவர் வெறும் வெளித் தோற்றத்தை வைத்து மட்டும் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை, உலகி அழகி எனப்பட்டும் அந்தப் பட்டத்தை வெல்ல புற அழகைக் காட்டிலும் அக அழகு அதிகம் தேவைப் படுகிறது. போட்டியாளர்களின் புத்தி கூர்மை, பேச்சு திறன், முடிவெடுக்கும் சாதுரியம் ஆகியவையும் நடுவர்களால் மிகவும் கவனமாக பரிசீலிக்கப்படுகிறது. அதனாலேயே உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி 5 போட்டியாளர்களிடம் மிகவும் சாமர்த்தியமாக யோசித்துப் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் கேட்கப்படும்.

PicMonkey-Collage1.jpg

இந்த ஆண்டு கேட்கப்பட்ட அந்த 5 கேள்விகளும் அதற்கு அழகிகள் கூறிய பதில்களும் என்னென்ன தெரியுமா?

1.  ஸ்டஃபனி ஹில் - இங்கிலாந்து:

கேள்வி: உலகில் உள்ள அனைத்துத் தலைவர்கள் முன்னிலையிலும் நீங்கள் பேச வேண்டும் என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்பு என்னவாக இருக்கும்?

பதில்: அப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் நான் நிச்சயம் உலக சுகாதாரம் குறித்தும், சுகாதார வசதிகளில் நாடுகளுக்கு இடையே இருக்கும் முரண்பாடுகளைக் கலைவது குறித்தும் பேசுவேன். என்னுடைய நாடு மருத்துவ வசதிகளில் வழங்குவதில் மிகவும் சிறப்பாக செயல்படும் ஒன்று, ஆனால் உலகில் பல நாடுகளில் வாழும் மக்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைப்பதில்லை, இதற்கு எப்படித் தீர்வு காண்பது என்பது குறித்தே நான் பேசுவேன்.

2. ஏரோரே கிச்செனின் - ஃபிரான்ஸ்:

கேள்வி: உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு எது? ஏன்?

பதில்: என்னைப் பொருத்த வரையில் அது போக்குவரத்து தான். அந்தக் கண்டுபிடிப்பே நாடுகளுக்கு இடையே நாம் தொடர்பு கொள்ள உதவுகிறது.

questionstory_647_1118170839111.jpg

3. மனிஷி சில்லார் - இந்தியா:

கேள்வி: உலகில் அதிகம் சம்பளம் பெறுவதற்கான தகுதியுடைய உத்தியோகம் எது? ஏன்?

பதில்: உலகிலேயே அதிகம் மதிப்பிற்குரியவர் தாய், மிகவும் அதிக சம்பளம் பெறும் தகுதியுடையவர்களும் அவர்கள் தான். மேலும் சம்பளம் என்பது வெறும் பணம் மட்டும் கிடையாது என்னைப் பொருத்தவரை அது அன்பும், மரியாதையும். நமக்காகப் பல தியாகங்களைச் செய்தவர்கள் அவர்கள், ஆகையால் உலகிலேயே அதிகமான சம்பளமாக அன்பையும், மரியாதையையும் பெற தகுதியானவர்கள் அவர்கள் தான்.

4. மாக்லின் ஜெருடோ - கென்யா:

கேள்வி: ‘சைபர் புல்லிங்’ இன்று உலகளவில் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது, நீங்கள் அதற்கு எப்படித் தீர்வு காண்பீர்கள்?

பதில்: சைபர் புல்லிங் செய்பவர்கள் பதிக்கப்படுபவர்களைப் பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டும், தன்னுடைய ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றுவதற்கு முன்பு ஒவ்வொருவரும் சற்று சிந்திக்க வேண்டும்.

Outfits-of-Miss-World-Manushi-Chhillar.j

5. ஆண்டிரியா மீஸா - மெக்சிகோ:

கேள்வி: உலக அழகிக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்பு என்ன?

பதில்: அது அன்பு, தன் மீது அன்பு செலுத்துவதோடு உலகில் உள்ள மற்றவர்களிடமும் அதை வெளிப்படுத்த வேண்டும். இதுவே உலக அழகிக்குத் தேவையான முக்கிய பண்பு.

ஒவ்வொரு ஆண்டும் இந்த இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றவர் கூறும் பதில்கள் அதிகம் பேசப்படும் ஒன்றாக இருக்கும், இதற்கு முன்  ஐஸ்வர்யா ராய் கூறிய பதில் பலராலும் பாராட்டப்பட்ட ஒன்றாகும், அதே போல் மனுஷி கூறி இருக்கும் இந்தப் பதில் அரங்கையே அதிர வைத்துள்ளது. இறுதி முடிவுகள் சொல்லும் தருவாயில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அரங்கத்தில் இருந்த அனைவரும் ஒருமித்த குரலில் ‘இந்தியா’ ‘இந்தியா’ என கோஷம் எழுப்பினர். மிகவும் தந்திரமான இந்தக் கேள்விக்கு சற்றும் தடுமாறாமல் சாதுரியமான மனுஷியின் இந்தப் பதிலே இன்று அவருக்கு ‘உலக அழகி 2017’ என்ற பட்டத்தை பெற்று தந்துள்ளது.

 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

சிறைவாழ் சிங்காரிகள்

பிரேஸில் நாட்டிலுள்ள உயர்பாதுகாப்பு சிறைச்சலையான ரியோ டி ஜனேரியாவில் ஒவ்வொரு வருடமும் அங்குள்ள பெண்களின் மத்தியில் அழகிப்போட்டி நடைபெறுவதுண்டு. நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மன உறுதியை வளர்த்துக்கொள்வதற்காக இப்படியான நிகழ்வுகள் அங்கு நடைபெறுவதுண்டு. இந்த ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்டுள்ள சிங்காரிகளின் அழகையும் அவர்களின் மகிழ்ச்சி பொங்கும் அந்த முகங்களையும் பாருங்கள்.

Link to comment
Share on other sites

 
தோல்விகளே  மனிதர்களுக்கு  பாடம் கற்றுத் தருகின்றன
 
 

தோல்விகளே மனிதர்களுக்கு பாடம் கற்றுத் தருகின்றன

மனி­தா்­கள் வெற்­றி­கள் கார­ண­மாக அல்­லாது, தோல்­வி­க­ளி­லி­ருந்தே பாடம் கற்­றுக்­கொள்­கின்­ற­னா். தோற்­ப­வா்­க­ளுக்கு மட்­டுமே வெற்றி ேதவைப்­ப­டும்.ஆத­லால் எந்­த­வொரு முயற்­சி­யி­லும் தோல்வி காண்­பது குறித்து அதி­கம் கவலை கொள்­வது கூடாது. எதிா்­கால வெற்­றிக்­கான முயற்­சியை அது வலுப்­ப­டுத்­தும்; வேகப்­ப­டுத்­தும்.

ஆனால் அந்­தத் தோல்வி ஆமைக்­கும் முய­லுக்­கு ­மான ஓட்­டப்­போட்­டி­யில், முயல் தோல்­வி­யைத் த­ழு­வி­யது போன்று அமை­தல் ஆகாது . ஏனெ­ னில் ஆமை­யி­னது வேகத்­தின் படி ஆமைக்­கும் முய­லுக்­கு­மான அந்­தப்­போட்­டி­யில், முயல் ஒரு முழு நாளோ அல்­லது இரண்டு நாள்­கள் வரையில் தானோ வழி­யில் உறங்­கி­யி­ருக்­க­வேண்­டும் என எம்­மால் அனு­மா­னிக்­க ­வேண்­டி­யி­ருந்­தது.

ஏனெ­னில் போட்­டி­யில் வெற்­றி­பெற வேண்­டு­மென்ற முனைப்பு முய­லி­டம் இருக்­கவே இல்லை.
முத­லா­வது சுற்­றில் தோல்­வி­யைத் தழுவ நோ்ந்ததால் முய­லுக்கு அடக்க முடி­யாத கோபம் .வௌிநாட்­டுச் சதி, கணி­னிச்­சுத்­து­மாத்து வேலை என்று எவ­ரும் குற்­றஞ் சாட்­டாத நிலை­யில், இரண்­டாம் சுற்­றுப் போட்டி இடம்­பெற்­றது. அந்த இரண்­டா­வது சுற்­றுப்­போட்­டி­யில் முயல் கண்­தூங்­கவே இல்லை . முடி­வில் முய­லுக்கே வெற்றி.

கதை அத்­தோடு முடிந்து வ।ிட­வில்லை. இரண்­டா­வது சுற்­றுப்­போட்­டி­யில் தோல்­வி­யுற்ற ஆமை ,என்ன ‘ஜில்­மால்’ செய்­தா­வது முயலை மீண்­டும் தோற்­க­டிக்­கத் திட்­ட­ மிட்­டது. இந்­தத்­த­டவை ஓட்­டப்­போட்­டி­யின் தன்மை சற்று மாற்றி அமைக்­கப்­பட்­டது. முத­லில் நிலத்­தில் ஆரம்பிக்கும் போட்டி, பாதித்­தூ­ரத்­துக்­கப்­பால் குறிப்­பிட்ட தூரத்தை ஆற்­றில் பய­ணித்­துக்­க­டந்து, மீதித் தூ­ரத்தை மீண்­டும் நிலத்­தில் பய­ணித்து முடிக்­க­வேண்­டும் என்­பது இந்தத் தடவை போட்­டிக்­கான விதி­முறை.

குறித்த இந்த மூன்­றாம் சுற்­றுப் போட்­டி­யில் முயல் முன்­னிலை வகித்­தது . ஆனால், அத­னால் ஆற்­றில் இறங்கி அத­னைக் கடக்க இய­லாது போய்­விட்­டது . நீாிலும் சாி, நிலத்­தி­லும் சாி மெது மெதுவாகப் பய­ணித்த ஆமை அந்த மூன்­றாம் சுற்­றில் முய­லைத் தோற்­க­டித்து விட்­டி­ருந்­தது.

இனி­மேல் தான் கதை­யின் சுவா­ரஸ்­ய­மான பகுதி வரப்­போ­கின்­றது.போட்­டி­யின் நான்­கா­வது சுற்­றில் கலந்து கொள்­ளு­முன்­னா் முய­லும் ஆமை­யும் தத்­த­மது எதிா்த்­த­ரப்­பைத்­தோற்­க­டிப்­பது எப்­படி எனச் சிந்­திப் ப­தற்­குப் பதி­லாகப் போட்­டி­யில் இரு­வ­ருமே எவ்­வாறு வெற்றி ஈட்ட முடி­யு­மெ­னச் சிந்­திக்­கத் தலைப்­பட்­டன .ஆமை­யும் முய­லும் தமக்­குள் கூடிப்­பேசி ஏதோ­வொரு இறு­தித்­தீா்­மா­னத்தை எட்­டின.

 

தமது தொழில் குறித்த மதிப்பும் கடமை உணர்வும் ஊழியர்களுக்கு அவசியம்

போட்­டி­யின் நான்­கா­வது சுற்­றும் ஆரம்­ப­மா­கி­யது. ஆரம்­பத்­தில் நிலப்­ப­கு­தியை முயல் ஆமை­யைத் தனது தோளில் காவி­ய­படி பய­ணித்து முடித்­தது.ஆற்­றில் இறங்­கிய ஆமை முய­லைத்­த­னது முது­கில் சுமந்­த­படி பய­ணித்துக் கரை­யே­றி­யது .கடை­சி­யில் ஆமைக்­கும் முய­லுக்­கும் வெற்­றியோ வெற்றி .சில போட்­டி­க­ளில், வெற்றி இலக்கை அடைய வேண்­டு­மா­னால், சம்­பந்­தப்­ப­டும் சகல தரப்­புக்­க­ளும் ஒன்­றி­ணைந்து ஒரே நோக்­கில் முயற்­சித்­தால் மட்­டுமே வெற்­றியை ஈட்ட முடி­யும்.

உதா­ர­ணத்­துக்­குக் குறிப்­பிட்டு சொல்ல வேண்­டு­மா­னால் , ஒரு நிறு­வ­னத்­தின் இலக்கு வெற்­றி­பெற வேண்­டு­மா­னால், அந்த நிறு­வ­னத்­தின் சகல பணி­யா­ளா்­க­ளும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டும் .உய­ர­திகாாி முதல் கடை நிலை ஊழி­யா் வரை ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டும் . அமொிக்­கா­வின் ‘நாசா’ விண்வௌி ஆய்வு மையத்­தில் கூட்­டிச்­சுத்­தம் செய்­யும் பணியை மேற்­கொள்­ளும் ஊழி­ய­ரொ­ரு­வ­ரி­டம் நிறு­வ­னத் தில் உமது தொழில் எத்­த­கை­யது என வின­வியபோது, சந்­தி­ர­னுக்கு விண்­கோ­ளொன்றை அனுப்­பும் முயற்­சிக்கு உத­வு­வதே தமது தொழில் எனக் குறிப்­பிட்­டா­ராம் .

அந்த வகை­யில் நாம் மற்­ற­வா்­கள் குறித்து எமது பாா்வையைத்­தான் மாற்­றிக்­கொள்ள வேண்­டும். எவ­ரை­யும் குறைத்த மதிப்­பி­டல் தவறு என்­பது புாிகி­றல்­லவா? அந்த வகை­யில் எமது சிந்­த­னையை,எமது கருத்து நிலைப்­பாட்டை தேவைப்­ப­டும் வேளை­யில் மாற்­றி­ய­மைத்­துக்­கொள்­வது தவ­றல்­லவே?

அதேவேளை குறித்த அந்தச் சுத்திகரிப்புப் பணியை மேற் கொள்ளும் ஊழியர் மனதளவில் தமது அந்தப் பணி தரக் குறை வானதொன்று என்ற மன உணர்வுடன் அல்லாது ‘நாசா’ என்ற அந்த விண்வெளி ஆய்வு மையம் மேற்கொள்ளும் பெறு மதிமிக்க பணியில் தாமும் ஒரு பங்காளி என்ற உணர்வுடன் பணியாற்றுவதை எம்மால் உணர முடிகிறதல்லவா?

தோல்விகளே வெற்றிக்கான உந்துதலை உருவாக்கி வைக்கின்றன

ஆனால் சகல வகையான போட்­டி­ க­ளை­யும் மேற்கண்ட விதத்­தில் ஒன்­றி­ணைந்து வெற்றி கொள்ள இய­லாது.உதா­ர­ண­மாக பத்­தா­யி­ரம் மீற்­றா் தூர ஓட்­டப்­போட்­டி­யில் பங்கு பற்­றும் சக­ல­ரா­லும் வெற்­றி­யீட்ட இய­லா­தல்­லவா? போட்­டி­யின் முடி­வில் முத­லில் வரு­ப­வரே முத­லி­டம் பெறு­வார்.

1964ஆம் ஆண்­டில் ஜப்­பா­னின் டோக்­கியே நகாில் இடம் பெற்ற ஒலிம்­பிக் போட்­டி­கள் குறித்த சுவா­ரஸ்­ய­மான தக­வ­லொன்றை இந்த வேளையில் பகிர்ந்து கொள்வது பொருத்த மானது. 2020ஆம் ஆண்­டில் இடம் பெற­வுள்ள அடுத்த ஒலிம்­பிக் போட்­டி­க­ளும் ஜப்­பான் தலை நகா் டோக்­கி­யோ­வி­லேயே இடம் பெற­வுள்­ள­தால், மேற்­கு­றிப்­பிட்ட தக­வலை நாம் அனை­வ­ரும் தொிந்து வைத்­தி­ருத்­தல் பயன் மிக்­கது.1964ஆம் ஆண்டு ஜப்­பான் டோக்­கியோ நக­ரில் இடம் பெற்ற ஒலிம்­பிக் போட்­டி­க­ளின்­போது பத்­தா­யி­ரம் மீற்­றா் ஓட்­டப்­பந்­த­யத்­தின் தகு­திச்­சுற்­றுப்­போட்­டி­யில் இலங்­கை­யின் சாா்பில் இந்த நாட்­டின் நீண்ட தூர ஓட்­டப்­பந்­தய வீர­ரொ­ரு­வ­ரும் கலந்து கொண்­டாா்.

 

வெற்றிகளையும் தோல்விகளையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை போட்டிகள் ஏற்படுத்த வல்லவை.

போட்டி ஆரம்­ப­மா­கி­றது. உலக நாடு­கள் பல­வற்­றைச் சோ்ந்த பல ஓட்­டப்­பந்­தய வீரா்­கள் குறித்த தகு­திச்­சுற்­றுப் போட்­டி­யில் கலந்து கொள்­கின்­ற­னா்.எமது நாட்­டைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் அந்த வீர­ரும் அந்­தப்­போட்­டி­யில் கலந்து கொள்­கி­றாா். குறித்த அந்தப் போட்­டி­யில் கலந்து கொள்­வோா் சுற்று வட்­டப் பாதையை மொத்த மாக 25 சுற்­றுக்­கள் சுற்றி வந்தே போட்டியை நிறைவு செய்ய வேண்டியிருந்தது .

போட்­டி­யின் முடி­வில் முத­லாம் இரண்­டாம் மற்­றும் மூன்­றாம் இடங்­க­ளைக் கைப்­பற்­றி­யோா் மத்­தி­யில் கடும் போட்டி நில­வி­யது . ஒரு சில செக்கன்கள் வித்தியாசத்திலேயே அவர்களால் ஆளுக்காள் வெற்றிக் கம்பத்தை அடைய முடிந்தது. மற்­றெல்­லோ­ரை­யும் பின் தள்ளி அமெரிக்க வீரா் வில்­லி­யம் மிலாஸ் முத­லி­டத்தை தட்­டிச்­செல்­கி­றாா். முத­லாம், இரண்­டாம், மூன்­றாம் இடங்­களை பெற்­றோா் பெயர்­க­ளும் அவர்­கள் பிர­தி­நி­தித்­து­ வப்­ப­டுத்­திய நாடு­க­ளின் பெயர்­க­ளும் உறு­திப்­ப­டுத்­தப்­பட ,பின் தங்கி ஓடி வந்து கொண்­டி­ருந்த வீரா்­க­ளில் பலா் அத்­து­டன் தத்­த­மது முயற்­சி­க­ளைக் கைவிட்டு போட்­டி­யி­லி­ருந்து ஒதுங்­கிக் கொள்­கின்­ற­னா் . போட்டி முடி­வு­கள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டன.

ஏற்ப பாட்­டா­ளா்­கள் அடுத்த போட்­டிக்­கான தயாா்ப்­ப­டுத்­தல்­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­னர் .ஆனால் பத்­தா­யி­ரம் மீற்­றா் தகு­திச்­சுற்­றுப் போட்­டி­யில் கலந்து கொண்டு ஓட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்த ஒரே­யொரு வீரர் மட்­டும் தொடா்ந்­தும் ஓடிக்­கொண்­டி­ருக்­கின்­றாா். அவா் அந்­தப் பத்­தா­யி­ரம் மீற்­றா் தூரத்தை ஓடி­மு­டிக்க இன்­ன­மும் நான்கு சுற்­றுக்­கள் ஓடி முடிக்­க­வேண்­டி­யுள்­ளது.தமது 22 ஆவது சுற்றில் அவா் தனி­யாக ஓடிக்­கொண்­டி­ருப்­ப­தைப் பாா்த்து பாா்வையா­ளா்­கள் கேலிப்­புன்­னகை உதிா்க்­கி­றாா்­கள். வாய் விட்டு சத்தமிட்டுக் கேலி செய்­கி­றாா்­கள்.

 

ஆனாலும் பார்வையாளர்களது கேலி, கிண் டல், எவற்­றை­யும் பொருட்­ப­டுத்­தாது அந்த வீரர் தமது முயற்­சி­யில் தொடர்ந்து கவ­னம் வைத்து முன்­னே­று­கின்­றார். தமது 23 ஆவது சுற்றை அவா் ஆரம்­பிப்­ப­தைக்­கண்டு அத்­தனை பாா்வை யா­ளா்­க­ளும் மௌன­மா­கின்­ற­னா் .

தமது 25 ஆவது சுற்றை,நூறு மீற்­றா் தூரப்­போட்­டி­யில் ஓடும் வேகத்­தில் அவர் மிக வேக­மாக ஓடி­ மு­டிக்­கின்­றாா் . பாா்வையா­ளா்­கள் அனை­வ­ரும் தமது இருக்­கை­க­ளி­னின்­றும் எழுந்து நின்­று அந்தப் பத்­தா­யி­ரம் மீற்­றா் ஓட்­டப்­ போட்­டி­யை முழுமையாக ஓடி முடித்த அந்த வீர­ரது மன ஓா்மத்­தைப் பாராட்­டும் வகை­யில் கைகளைத் தட்டி ஒலியெழுப்பி அந்த வீரரரைப் பாராட்டுகின்ற னர். அந்த வீரா் வேறு எவ­ரு­மல்­லா் . இலங்­கை­யைப் பி­ர­தி­நித்­து­வப் ப­டுத்தி அந்­தப்­போட்­டி­யில் கலந்து கொண்டு பத்­தா­யி­ரம் மீற்­றா் தூரத்­தை­யும் முழு­மை­யாக ஓடி முடித்து குறித்த போட்­டி­யில் கடைசி இடத்­தைப் பெற்­றுக்­கொண்ட ஆா்.ஜே.கே.கரு­ணா­ரத்ன என்ற நீண்ட தூர ஓட்ட வீரரே அவ­ரா­வாா்.

தாம் குறித்த போட்­டி­யில் கலந்து கொண்­டது, போட்­டியை ஆரம்­பிப்­ப­தற்கு மட்­டு­மென்­றல்­லாது, போட்­டியை முழு­மை­யாக ஓடி முடிக்­கும் நோக்­கி­லுமே ஆகு­மென அவா் செய்­தி­யா­ள­ர்களுக்கு பெரு­மை­யு­டன் விளக்­க­ம­ளிக்­கின்­றாா்.

தமது அந்த விடாப்­பி­டி­யான, ஓா்மம் மிக்க செயற்­பாட்­டால் கரு­ணா­ரத்ன என்ற அந்த நெடுந்­தூர ஓட்ட வீரா் ஒரே இர­வில் ஜப்­பா­னின் வீர புரு­ஷ­ராக போற்­றப்­பட நேர்ந்தது . கரு­ணா­ரத்ன என்ற அந்த வீர­ரது மனத்­தைாி­யம் குறித்து ஜப்­பா­னிய அரசு அந்த நாட்டின் ஐந்­தாம் ஆண்டு வகுப்பில் கல்வி கற்கும் மாண­வா்­க­ளுக்கு கற்­பித்து வரு­கி­றது.

இரண்­டாம் உல­கப்­போாில் சுக்கு நூறா­கிப்­போன ஜப்­பான் நாடு, போருக்­குப் பின்­னர் தன்னைத் தானே உல­கின் பலம்­மிக்க நாடொன்­றாக ஆக்­கிக்­கொண்ட விதம் குறித்து அந்த நாட்­டின் எதிர்­கா­ல­சந்­த­தி­யி­னருக்குக் கற்­றுக்­கொ­டுக்­கி­றது. நாமோ போரை வெற்றி கொண்ட துட்டகை­முனு மன்­னன் பற்றி வர­லாற்­றுப்­பா­டம் கற்­றுக் கொடுக்­கி­றோம் .ஆனால் மனி­தா்­கள் வெற்­றி­க­ளாலல்ல , தோல்­வி­க­ள் மூலமே பாடம் கற்­றுக் கொள்­கி­றார்­கள் என்­பதை நாம் வசதி கருதி மறந்து விடு­கி­றோம் அல்­லவா?

http://newuthayan.com

இதை வாசித்தபோது எங்கு இணைப்பது என்று விளங்கவில்லை. அதனால் இங்கு இணைத்து உள்ளேன்..:rolleyes:

Link to comment
Share on other sites

‘உங்களிடமே உங்கள் விதி இருக்கின்றது’
 

image_6253905f34.jpgஎவரையும் பெறுமதியற்றவர் என எண்ணற்க! ஒன்றுமே தெரியாத, எதுவுமே செய்யாத நபர்கள் கால ஓட்டத்தில் கோட்டைபோல் வீடுவாசல் அமைத்து அரசர் போல் வாழ்ந்ததும் உண்டு.  

பிறரைக் கிண்டலடித்துக் கேலி பேசியவர்கள், பின்னர் அவர்களிடமே பின்சென்று, உதவி கேட்பதும் காலம் வழங்கும் தண்டனையாகும். 

காரணம் இன்றி எந்த உயிரும் பிறப்பதுமில்லை; எளிய மனிதனை இகழக்கூடாது. 

வலியவர் முன் வளைந்து நெளிந்து பயப்பிடவும் கூடாது. நாங்கள், எமது கடமைகளை ஒழுங்காகச் செய்தால் போதும். வருகின்ற வெகுமதிகளை, எவராலும் தடுக்க முடியாது.  

உங்களிடமே உங்கள் விதி இருக்கின்றது. அதனை வழி நடத்துபவர் நீங்களேயாவார்.  

மக்களைப் போற்றுங்கள்; நீங்கள் உயர்வீர்கள்.  

Link to comment
Share on other sites

’ஊடகங்களுடன் ட்விட்டர் சண்டை போடுவதுதான் அமெரிக்க அதிபர் வேலையா?’ - ட்ரம்ப்பை சீண்டும் நெட்டிசன்ஸ்!

 
 

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து மீடியாக்களை தொடர்ந்து சீண்டி வருகிறார். 'பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு விமர்சனங்களை தாங்கி கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும்' என்று எதிர்கட்சிகள் டிரம்புக்கு அட்வைஸ் மழை பொழிந்து வருகின்றனர். 

trump
 

 

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ட்ரம்ப், மீடியாக்களை சேர்ந்தவர்கள் யார் தன்னை பற்றி விமர்சித்தாலும் சற்றும் யோசிக்காமல் அவர்களின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்வீட் தட்டி விடுகிறார். அப்படிதான் அண்மையில் "Times Magazine" ஐ வம்பிழுத்து ட்வீட் செய்திருந்தார்..

times
 

அந்த ட்வீட்டில் ‘ கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் என்னை சிறந்த நபராகத் (Person of the Year) தேர்ந்தெடுத்திருப்பதாக  டைம்ஸ் ஊடகம் தெரிவித்தது. ஆனால் நான் கடந்தாண்டைப் போலவே இந்த ஆண்டும் இண்டர்வ்யூ தர வேண்டுமாம்.. போட்டோ ஷூட்டுக்கும் ஒப்புக் கொள்ள வேண்டுமாம். நான் முடியாது என்றுக் கூறிவிட்டேன்” என்றுக் குறிப்பிட்டிருந்தார்.

times
 

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிகம் பேசப்பட்ட, பிரபலமான நபருக்கு டைம்ஸ் ஊடகம் சார்பில்  ’Person of the Year’ என்னும் பட்டம் அளிக்கப்படும். கடந்த ஆண்டு ட்ரம்புக்கு இந்த பட்டம் கிடைத்தது. இதுகுறித்து விமர்சித்துதான் மேற்குறிப்பிட்டுள்ளப் பதிவை பகிர்ந்துள்ளார் ட்ரம்ப். ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக டைம்ஸ் ஊடகம் ’எங்களை பற்றி தவறானத் தகவலை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார். இறுதி முடிவுகள் வெளியாகும் வரை இந்தாண்டின் சிறந்த நபர் யாரென்பதை நாங்கள் வெளியே சொல்லமாட்டோம்’ என்று குறிப்பிட்டு ட்ரம்ப் உண்மைக்கு மாறான தகவலை பகிர்ந்திருப்பதாக தெரிவித்தனர். 

trump
 

இதனையடுத்து தற்போது சர்வதேச ஊடகமான CNN செய்தி தொலைக்காட்சியை விமர்சித்து ட்வீட் செய்து, நெட்டிசன்களின் மீம்ஸுக்கு இரையாகி இருக்கிறார் ட்ரம்ப். CNN ஊடகம் அமெரிக்க அரசாங்கத்தை தொடர்ந்து விமர்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் CNN தொலைக்காட்சி அமெரிக்காவை பற்றி வெளி உலகிற்கு தவறான ஒரு பிம்பத்தை உருவாக்கி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அவரின் ட்வீடுக்கு பதிலளித்துள்ள CNN,  "அமெரிக்காவை பற்றி வெளி உலகிற்கு தெரியப்படுத்துவது எங்கள் வேலையல்ல.. அதிபரான உங்களின் வேலை. உண்மையான செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதே எங்கள் வேலை” என்று காட்டமாகக் குறிப்பிட்டுள்ளது. 

’ட்விட்டர் சண்டை போடுவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நிகர் அவரேதான்!’ என்று நெட்டிசன்கள் நக்கல் அடித்து வருகின்றனர்!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.