Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

வலைபாயுதே

 
 

சைபர் ஸ்பைடர்

 

twitter.com/jeytwits: நைட் ஃபுல்லா போனை சார்ஜ்ல போட்டுவிட்டு, காலையில் ஸ்விட்ச் போடாம இருப்பதைப் பார்க்கிறப்போ என்ன மனநிலை வருமோ...அந்த மனநிலையில்தான் டி.டி.வி.தினகரன் இருப்பார்.

twitter.com/gowrisa: வாழ்க்கை என்பது, சீட்டாட்டம்போல. குலுக்கிப் போடும்போது என்ன சீட்டு வருகிறது என்பது விதி; வந்த சீட்டில் எப்படி ஆடுவது என்பது மதி.

facebook.com/Sureshbabu0989: முன்பெல்லாம் `கேம் இல்லை'ன்னு சொன்னா, போயிடுவாங்க. இப்போ `பரவாயில்லை, குடு... நானே டவுன்லோடு பண்ணி விளாடுறேன்'னு புடிங்கிக்கிறானுங்க சின்ன பசங்க.

twitter.com/TheJIGSAW: இந்தப் பொண்ணுங்க எல்லாரும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளைக் கல்யாணம் பண்ற மாதிரி, பசங்களுக்கு வெளிநாட்டுப் பொண்ணுங்க கிடைக்காதா?

p112a.jpg 

twitter.com/Chaintweter: தனி மரம் ஆலமரமாக இருப்பின், தோப்புகளைப் பற்றிக் கவலையில்லை.

facebook.com/davidyrajkumar: நான் வேலைசெய்யும் ஆஸ்பத்திரியில், என்னை ஒரு பேஷன்ட் கேட்டார், `பிரதர், நீங்க சிஸ்டரா?' - ங்ஙே...

twitter.com/inban_ofl: நெருங்கின பிறகு `ங்க' எப்படிப் போச்சுன்னே தெரியாது. பிரிஞ்ச பிறகு அதே `ங்க' எப்படி வந்துச்சுன்னே தெரியாது.

p112f.jpg

twitter.com/Piramachari: மிடில் க்ளாஸ் வாழ்க்கை  எவ்வளவு கஷ்டம்! எதிர்வீட்டுக் காரன் பார்த்தால் பணக்காரனா நடிக்கணும். சொந்தக்காரன் கடன் கேட்டால் ஏழையா நடிக்கணும்.

twitter.com/akaasi: சன்னாசியப்பன் மகன் அருண்குமார் மகன் த்ருவ் பிறந்த நாள் விழா நேற்று. இத்தனை வேகமாக, பெயரின் பரிணாம வளர்ச்சி 100 தலைமுறை தமிழரிடம் இருந்ததுண்டா?

twitter.com/withindu: சம்பாதிக்காதபோதுகூட சேமிப்புப் பழக்கம் இருந்தது. சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, கடன் வாங்கும் பழக்கம்தான் வந்திருக்கு. எங்கேயிருந்து சேமிக்க?

twitter.com/writernaayon: ஒருத்தன் சுயநினைவோடு நிர்வாணமா திரியுறான்னா, `வெட்கமா இல்லையா?'ன்னு அவன்கிட்ட கேட்கலாம். போராட்டம் பண்றான்னா, அந்தக் கேள்வியை அரசிடம்தான் கேட்கணும்.

p112b.jpg

twitter.com/saravana nucfc:  சின்னச் சின்ன அழகான விஷயங்களையும் மெய்ம்மறந்து ரசிப்பவர்களை, அவர்கள் ரசிக்கும்போது அவர்களை ரசிப்பது அழகு!

p112c1.jpgtwitter.com/mekala pugazh: கையில் செல்போன் இருந்தும் நேரம் பார்க்க வீட்டுச் சுவர்க்கடிகாரத்தை நோக்குவது, நாம் போன தலைமுறை ஆள் என்பதைச் சொல்லிவிடுகிறது.

வாட்ஸ்அப்ல `Hi'னு மெசேஜ் வந்தது.

நான் `who r u?'னு கேட்டதுக்கு, `I am fine'னு ரிப்ளை வந்திருக்கு.

#எவனோ நம்மகூடப் படிச்ச அறிவாளியாத்தான் இருக்கணும்.


p112d.jpg

கருத்தா பேசுவாரு

ட்விட்டரில் `@teakkadai1' என்னும் அறிவுக்களஞ்சிய ஐடி-க்குச் சொந்தக்காரர் முரளிகண்ணன். நாம் சாதாரணமாகக் கடந்துபோகும் விஷயங்களையும் இவர் அணுகும் விதமே அலாதியானது. `ஹரிதாஸ்' படத்தில் இருந்து `ப.பாண்டி' வரை, ஓமந்தூரார் தொடங்கி எடப்பாடி பழனிசாமி வரை, திருக்குறளில் இருந்து ட்விட்டர் வரை தகவல்களை அள்ளித் தருவதில் என்சைக்ளோபீடியா. நதி உருட்டும் கூழாங்கல்லாக வாழ்க்கையை அதன்போக்கில் சென்று ரசித்துக்கொண்டிருக்கும் ரசனைக்காரர்!

ட்ரெண்டிங்

ட்விட்டர், ஃபேஸ்புக்போல பிரபலமான இன்னொரு சமூக வலைதளம் `ஸ்நாப்சாட்'. அதன் சி.இ.ஓ  சமீபத்தில் `இந்தியா போன்ற ஏழைநாட்டில் ஸ்நாப்சாட்டை விரிவுப்படுத்தும் எண்ணம் இல்லை' எனச் சொன்னதாகத் தகவல்கள் வெளியாகின. உடனே சூடான நெட்டிசன்ஸ் செய்ததுதான் p112e.jpgசென்ற வார வில்லங்க வைரல். ஸ்நாப்சாட்டுக்குப் பதிலாக, `ஸ்நாப்டீல்' என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்துக்கு எதிராகப் பொங்கிவிட்டார்கள். ஸ்நாப்டீலின் ஆப்-ஐ அன்இன்ஸ்டால் செய்வது, ஆப் ஸ்டோரில் அவர்களின் ரேட்டிங்கைக் குறைப்பது, ட்விட்டரில் அவர்களை ட்ரோல் செய்வது என ஏகப்பட்ட களேபரங்கள். `200 கோடி ரூபாய்க்கு விளம்பரம் பண்ணியும் உங்க பிராண்ட் பெயரே மக்கள் மனசுல பதியலையேப்பா ஸ்நாப்டீல்' என விஷயம் தெரிந்தவர்களும் நக்கலடித்தார்கள். இதற்கிடையே ஸ்நாப்சாட் நிறுவனம், `இந்தியாவில் இணைய வேகம் குறைவு. எங்கள் ஆப் செயல்பட, டேட்டா வேகம் வேண்டும். அந்த அர்த்தத்தில்தான் சொன்னோம்' என விளக்கம் அளித்தது தனிக் கதை.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புதிய புகைப்படம்...!

 
 

ear_1_03513.jpg

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ம் தேதி 'உலக பூமி தினம்' கொண்டாடப்படுகிறது. 1970-ம் ஆண்டு முதல் இந்த 'உலக பூமி தினம்' அறிவிக்கப்பட்டு உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1970-ல் நடைபெற்ற சுற்றுச்சூழல் இயக்கத்தை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மேலும், சுற்றுச்சூழலைக் காப்பது பற்றி பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை சர்வதேச அளவில் பல்வேறு அரசுகள் மற்றும் ஆர்வலர்கள் இந்த தினத்தில் ஒருங்கிணைப்பது வழக்கம்.

இதையொட்டி, ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனம், பூமியின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் அந்த நிறுவனத்தால் விண்வெளிக்க அனுப்பப்பட்ட ராக்கெட் மூலம் எடுக்கப்பட்டு புகைப்படத்தை தான் தற்போது அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுவரை வெளிவந்த பூமியின் புகைப்படங்களில் இருந்து முழுவதும் மாறுபட்டு இருப்பதால், சமூக வலைதளங்களிலும் இது வைரலாக ஷேராகி வருகிறது. 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

’25 ஆண்டுகளாக இலை தழை மட்டுமே சாப்பிடுகிறேன்’.. ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் மெஹ்மூத்

பாகிஸ்தானை சேர்ந்த மெஹ்மூத் பட் 25 ஆன்டுகளாக வழக்கமான உணவுகளை உண்ணாமல், இலை தழைகளை உண்டு வாழ்ந்து வருகிறார். 

mehmood

பாகிஸ்தானில் உள்ள குஜ்ரன்வாலா மாவட்டத்தை சேர்ந்தவர் மெஹ்மூத் பட். இவர் கடந்த 25 ஆண்டுகளாக சமைத்த உணவு வகைகளை சாப்பிடுவதில்லையாம். சாலையோர மரங்களின் இலைகளை மட்டுமே அவர் உண்டு வாழ்கிறார். தினமும் சம்பாதிக்கும் இவருக்கு எந்த உணவு வகைகள் மீதும் ஆசை வரவில்லையாம். இதுவரை எவ்வித நோய் தாக்குதலுக்கு இவர் ஆளாகவில்லை.

இதுகுறித்து மெஹ்மூத் பட் கூறுகையில்,' 25 வயதில் நான் வறுமையில் வாடிய போது, சப்பிட உணவின்றி பட்டினியாக இருந்தேன். அன்று எனது பசியை போக்க இலை, தழைகளை உண்டேன். அதன் பிறகு அதுவே எனக்கு பழக்கமாகிவிட்டது. தற்போது தினமும் 600 ரூபாய் வரை சம்பாதிக்கும் நான் இலைகளையே உண்கிறேன். எவ்வித நோய்யும் என்னை தாக்கியதில்லை. மருத்துவரிடமும் நான் இதுவரை சென்றதில்லை' எனக் கூறியுள்ளார்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்! #WorldBookDay

 

புத்தகங்கள், முத்தலைமுறைகளின் வீரியமான விழுமிங்களையும் வீழ்ந்த காலங்களையும் எழுத்து வடிவில் கடத்தும் ஆவணங்கள். படித்துப் பாதுகாக்கப்படவேண்டிய காலப்பெட்டகமாக விளங்கும் இவை, காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட தொகுப்பு அல்ல; வரலாற்று நிகழ்வுகளையும் இன்றைய செய்திகளையும் எழுத்தின் வழியே எதிர்கால தலைமுறைக்குக் கொண்டுசெல்ல பதிவுசெய்யப்பட்ட பொக்கிஷங்கள்.

புத்தகம்

‘துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்பார் மார்ட்டின் லூதர்கிங். ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளியின் எண்ணங்களையும் உணர்வுகளையும் கற்பனைகளையும் கனவுகளையும் அச்சு வடிவில் தொகுக்கப்படும் எழுத்துக் களஞ்சியம். விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம்போல் சமூகம் மற்றும் தனிமனித ஒழுக்கத்துக்கான கருத்துகளைப் புத்தகங்கள் தன்னுள் புதைத்துவைத்துள்ளன.

அறிவுசார் சொத்துகளான இவற்றைப் பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்குடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது. உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும் இந்நாளை, 1995-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில்தால் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகங்களைையும் ரோஜா மலர்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.

உலகப் புத்தக தினம் என்ற ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை, சர்வதேச பதிப்பாளர் சங்கம்தான் யுனெஸ்கோவுக்கு முதன்முதலில் பரிந்துரைத்தது. புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இந்த நாளை உலகப் புத்தகம் தினம் மட்டுமல்லாது புத்தக உரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து உலகப் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

புத்தக தினம்

‘புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின்; புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்’ என்பார் பாரதிதாசன். நாட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புத்தகசாலை அமைப்பது அவசியம். தேடுதல் இன்றி வாழ்க்கையில் எந்த உச்சமும் கிடைத்துவிடுவதில்லை. அப்படிப்பட்ட தேடுதலின் ஆரம்பப்புள்ளியே புத்தகம்தான். புத்தக வாசிப்பு என்பது ஓடும் நதியைப்போன்றது. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். அப்படிப்பட்ட புத்தக நதியில் மூழ்கி புத்தம் புதிய சுகானுபவங்களைப் பெற நீங்களும் தயார்தானே!

 புத்தகங்கள்தான் சான்றோர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கும் என்பதால், வாசிப்பை சுவாசமாகக் கருதி நேசிப்போம்... மடைமைச் சுமைகளைச் சுட்டெரிப்போம்!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஒன்றரை வயது குழந்தையின் அபார கிரிக்கெட் திறமை

சென்னையை சேர்ந்த சனுஷ் சூர்யா தேவ் என்ற ஒன்றரை வயது குழந்தைக்கு அவரது தந்தை முருகன் ராஜ் அனைத்து விதமான கிரிக்கெட் பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்

Link to comment
Share on other sites

காபி விரும்பிகளுக்காக காபி அஞ்சல் தலை!

காபி விரும்பிகளுக்காக காபி அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. 

coffee

உலகம் முழுவது உள்ள மக்கள் அருந்தும் பானங்களுள் காபிக்கு என்றுமே தனி இடம் உண்டு. இந்தியா முழுவதும் காபி விரும்பிகளுக்கு பஞ்சமில்லை. அதிகாலை குளித்து கிளம்பும் ஐயங்கார் முதல் அரட்டை அடிக்கும் ஐ.டி ஊழியர்கள் வரை காபி அனைவருக்குமான முதல் சாய்ஸ். இந்நிலையில் இந்திய அஞ்சலகத் துறை காபி அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.

இன்று பெங்களூரில் நடைபெற்ற இந்நிகழ்வில் காபி அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், மனோஜ் சின்ஹா உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சல் தலையை வெளியிட்டனர். இதையடுத்து அஞ்சல் தலை சேகரிப்போருக்கு புதிய வரவாக இடம் பெற்றுள்ளது காபி அஞ்சல் தலை.

 

 

எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்து சாக்கடை சுத்தம் செய்த அவலம்!

 
 

ஹைதராபாத்தில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமி, விடுதி சாக்கடையை சுத்தம் செய்யும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

hiv

ஹைதராபாத்தில் அமைந்திருக்கும் அகப்பே தொண்டு நிறுவனம் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இயங்கி வருகிறது. இவ்விடுதியில் இருக்கும் சிறுமிகளை கொண்டு சாக்கடை சுத்தம் செய்யும் அவலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்வதும், மற்ற சிறுமிகள் அவருக்கு உதவும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இதையடுத்து விடுதியின் வார்டன் பிரஜாவதி உள்ளிட்ட விடுதி காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையாளர் மகேஷ் பகவத் கூறியுள்ளார். இது குறித்து விடுதி சிறுமிகள் கூறுகையில்,' பல சமயங்களில் விடுதியை சுத்தம் செய்ய நாங்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்' என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

உலகின் டாப் 10 செஃப்கள் பட்டியலில் இந்தியர் விகாஸ் கண்ணா... வாழ்த்தலாமே ப்ரண்ட்ஸ்!

 

உலகின் தலைசிறந்த பத்து செஃப்கள் பட்டியலில் இந்தியரான விகாஸ் கண்ணாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. 
உலகின் சிறந்த பத்து செஃப்கள் பட்டியலை ’Gazette Review’ என்ற ஊடக நிறுவனம் வெளியிட்டது. இந்த பட்டியலில் கோர்டன் ராம்சே மற்றும் ஹெஸ்டன் ப்ளூமெண்டால் உள்ளிட்ட சர்வதேச புகழ் பெற்ற செஃப்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

Vikas khanna

பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருக்கும்  விகாஸ் கண்ணாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளது ’Gazette Review’ நிறுவனம். அந்நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ”மிகவும் புகழ்பெற்ற செஃப்கள் அமெரிக்க அல்லது பிரஞ்சு நாட்டை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இந்த கூற்றை பொய்யாக்கி உள்ளார் விகாஸ் கண்ணா.  இவர் சர்வதேச பாராட்டை பெற்ற முதல் இந்தியர் . 2011 ஆம் ஆண்டு  இவர் நியூயார்க் நகரத்தில் உருவாக்கிய பிரதான உணவகம் ’Junoon’, மிச்செலின் நட்சத்திர உணவகம் என்னும் அந்தஸ்தை பெற்றுள்ளது”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விகாஸ் கண்ணா ஆங்கில சேனல்களில் இந்திய உணவுகளை சமைத்து அசத்துபவர். இந்திய சமையல் பற்றி இவர் எழுதிய புத்தகம் 13,000 டாலருக்கு விற்பனை ஆனது.  இந்த புத்தகம் உலகின் மிக விலையுயர்ந்த சமையல் புத்தகம் என்னும் புகழை பெற்றது. இப்புத்தகத்தை விகாஸ் கண்ணா, ராணி எலிசபெத்துக்கு பரிசளித்தார் என்பது கூடுதல் சிறப்பு! 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி?!

 
 

மார்க் சக்கர்பெர்க் - உலக இளைஞர்களின் இதயங்களில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் பெயர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் முதலான சமூகவலை தளங்களின் ஒரே முதலாளி. இன்றைய இணைய உலகின் முடிசூடா மன்னன். அப்பேர்ப்பட்ட தலைவர், அடுத்து அரசியலுக்கும் வருகிறார்!

மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ்., நாஞ்சில் சம்பத், சீமான் முதலானோர் அஞ்சத் தேவையில்லை. அமெரிக்க அரசியலில்தான் மார்க் ஆர்வமாக இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். ஆனால், அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் ட்ரம்ப்புக்கு பரவலாக எதிர்ப்பு அலையே இப்போதும் நிலவுகிறது. `இந்த பேட்பாய் ட்ரம்ப்பால் உலக அரங்கில் மானம்போகுது பாஸ்...' எனச் சமூக வலை தளங்களில் ஆளாளுக்குப் புலம்பித்தள்ள...

அமெரிக்காவின் கெத்துத் தலைவருக்கான தேடல் தொடங்க, முன்னணியில் இருப்பது மார்க். `என்னது... அந்தத் தம்ப்பியா?!' எனப் பேரைக் கேட்டதும் ஆளாளுக்கு அதிர்ர்ர்ர, அரசியல் ஆர்வலர்களோ, “ப்ரோ... தண்ணியைக் குடிங்க. இதெல்லாம் புதுசு இல்ல. மூணு வருஷங்களாவே மார்க் இதுக்கு ஸ்கெட்ச் போட்டுக்கிட்டு்தான் இருக்கார்” என்கின்றனர்.

p100a.jpg

மார்க்கின் கணக்கு

32 வயதான மார்க் சக்கர்பெர்க் ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர். கல்லூரிக் காலத்தில் விளையாட்டாக மார்க்கும், அவர் நண்பரும் உருவாக்கிய ஃபேஸ்மேஷ்தான் பிற்காலத்தில் ஃபேஸ்புக்காக விஸ்வரூபம் எடுத்தது. சீனாவில் பிறந்த பிரிசில்லா சான் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் மார்க்.

`2014-ம் ஆண்டுதான் மார்க் தனது அரசியல் கனவுக்குப் பிள்ளையார்சுழி போட்டிருக்க வேண்டும்' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

கூகுளில் தேடினால் எல்லாமே கிடைக்கும் என நினைத்துக்கொண்டிருந்த நெட்டிசன்களை, `ஃபேஸ்புக்கில் எல்லாமே இருக்கு’ என மாற்றி நினைக்கவைத்தார் மார்க். இதற்காகத்தான் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்பட 54 நிறுவனங்களை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கினார். இவை எல்லாம் தனக்கு ஆதரவாகச் செயல்பட உதவுமோ இல்லையோ... எதிராகப் பயன்படுத்தப்படாமல் இருக்க, அதைத் தன்வசமே வைத்திருப்பதுதான் சிறந்த ராஜதந்திரம் என்பது மார்க் போட்ட கணக்கு.

திட்டமிட்டுத் தாக்கு

அரசியல் ஆசை மட்டுமே வெற்றிக்கு உதவாது என்பதை மார்க் நன்றாக உணர்ந்திருக்கிறார். ஆனால், தடாலடியாக நுழைந்து பிரசாரத்தில் இறங்குவதைவிட தன்னார்வலனாகவும் அறிவுஜீவியாகவும் தொண்டுகள் செய்யும் ரட்சகனாகவும் தன்னை முதலில் பிராண்ட் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

2015-ம் ஆண்டின் தொடக்க நாள் அன்று, தனது அடுத்த கட்டத்துக்கான முதல் அடியை எடுத்து வைத்தார் மார்க். `இயர் ஆஃப் புக்ஸ்' என்ற புத்தாண்டு உறுதிமொழியைக் கையில் எடுத்தவர், வாசிப்பில் ஆர்வமுள்ள மனிதர்களை ஒன்றிணைத்து, பிரமாண்டமான ஒரு குழுவை உருவாக்கினார்.  இது புத்திசாலித்தனமான தோற்றத்தை மட்டும் அல்ல, உலகில் எந்த மாதிரியான புத்தகங்கள் அதிகம் விரும்பப் படுகின்றன என்ற `பிக் டேட்டா' அவரது வர்த்தகத்துக்கும் உதவியது.

2015-ம் ஆண்டு இறுதியில் மார்க் தந்தை ஆனார். ஒரு தந்தையாகத் தான் ஆற்றும் ஒவ்வொரு கடமையையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். ஆனால், அதற்குப் பின்னாலும் விளம்பர உத்தி இருந்தது. நல்ல அரசியல்வாதிக்கான முதல் தகுதியே அதுதானே.

சான் - சக்கர்பெர்க் இனிஷியேட்டிவ் முதல் மகளோடு பிறந்தது.

தன் குழந்தை பெயரில் உலகக் குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி ஆகியவற்றுக்குப் பெரிய உதவிகளைச் செய்தும் வருகிறார். எதிர்கால உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கப்போவது கல்வியும் ஆரோக்கியமும்தான் என மார்க் தொடர்ந்து பரப்புரை செய்கிறார். 

2016-ம் ஆண்டு மார்க்குக்குச் சுக்கிரன் உச்சத்தில் எனச் சொல்லலாம்.  கல்விக்கு `இயர் ஆஃப் புக்ஸ்'  என்றால், ஆரோக்கியத்துக்கு `இயர் ஆஃப் ரன்னிங்'கை கையில் எடுத்தார் மார்க்.

`ஒரு வருடத்தில் 365 மைல் ஓடுவேன்' எனச் சபதம் எடுத்து ஓடி முடித்தார். அவர் ஓடியது வெறும் அமெரிக்க வீதிகளில் மட்டும் அல்ல, உலகம் எங்கும் ஓடினார். இந்தியா, சீனா, ஐரோப்பா, ஜப்பான் எனத் தொழில்நுட்பரீதியாக வளர்ந்த நாடுகளில் மார்க் கால்கள் பதிந்தன. சிரியா போன்ற மக்கள் ஆதரவின்றித் தவிக்கும் நாடுகளிலும் ஓடினார். இது அமெரிக்கர்கள் மத்தியில் மார்க்கின் பிம்பத்தை  ஓர் அக்கறையான நல்ல இளைஞனாகப் பதிவுசெய்தது. நல்ல மனிதனுடைய சொற்கள் எல்லாமே வேதங்கள் ஆகுமே... அதற்குப் பிறகு, மார்க் சொன்ன வார்த்தைகள் எல்லாம் வேதவாக்குகள் ஆகின.

திட்டமிட்டபடி அரசியல் கருத்துகளை உதிர்க்கக் காத்திருந்த மார்க், அந்தச் சூழலில்தான் முதல்முறையாக அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை வெளிப்படையாக விமர்சித்தார்.

`அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்கு வேலை இல்லை' என ட்ரம்ப் அறிவிக்க, கொதித்து எழுந்தார் மார்க். சிலிக்கான் வேலியிலிருந்து எழுந்த முதல் குரல் அவருடையதுதான். தொடர்ந்து பல நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள் மார்க் சொன்னதையே திரும்பச் சொன்னார்கள். அதுவரை நல்ல இளைஞனாக இருந்த மார்க்... கோபக்கார இளைஞனாகப் பரிணமித்தார். அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் மார்க்கை அரியணையில் ஏற்றிப்பார்க்கிற ஆசையைத் தூண்டியது அந்தக் கோபம்தான்.

கனெக்ட்டும் மார்க்கும்

உலகத் தலைவர்கள் பலரின் வளர்ச்சிக்குப் பின்னாலும் ஒற்றை வார்த்தைக்குப் பெரிய இடம் இருக்கும். ஒபாமாவுக்கு `ஹோப்’, மோடிக்கு `அச்சே தின்' அப்துல் கலாமுக்கு  `கனவு காணுங்கள்' என நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். மார்க்கும் இந்த வித்தையை அறிந்தே இருந்தார். இதற்காக அவர் டிக் அடித்த சொல் `கனெக்ட்'.

அதன் பின் என்ன பேசினாலும் எழுதினாலும், செய்தாலும் `கனெக்ட்' என்ற விஷயத்தோடு மார்க் தன்னை கனெக்ட் செய்துகொள்கிறார்.

மனிதர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். தங்களின் உணர்ச்சிகளை இந்த உலகுக்கு தெரிவிக்க ஆசைப்படுபவர்கள். அதற்கு மார்க், தனது ஃபேஸ்புக்கில் தளம் அமைத்துத் தந்தார். சிரியாவுக்காகக் கண்ணீர் சிந்துவது, ட்ரம்ப் மீதான கோபத்தை வெளிக்காட்டுவது என நெட்டிசன்களுக்கு எமொஜிக்களால் ஒரு பாதையை ஃபேஸ்புக்கில் போட்டுத் தந்தார் மார்க். கூடவே தேவையான விஷயங்களைப் பற்றி அவரது கருத்துகளை ஸ்டேட்டஸ்ஸாகப் போட்டு, அது உலகின் கோடிக்கணக்கான ஃபேஸ்புக் பயனர்களின் வால்களில் முதன்மை யானதாகக் காட்டினார். மார்க்கின் கருத்துகளை உலகம் படித்தே ஆக வேண்டியிருக்கிறது.

p100.jpg

அமெரிக்காவில் `நமக்கு நாமே'

2017-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு அமெரிக்க மாகாணமாகத் தேடித்தேடிப் போகிறார் மார்க். மக்களின் கல்வி, ஆரோக்கியம் குறித்துக் கேட்கிறார்; உதவுகிறார். தங்கள் நாட்டு அதிபர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என மக்கள் நினைக்கிறார்களோ, அவற்றை எல்லாம் லிஸ்ட் போட்டுச் செய்துவருகிறார்.

ஃபேஸ்புக்கில் டவுன்ஹால் எனப் புதிய வசதியை உருவாக்கித் தந்திருக்கிறார். அது, மக்கள் தங்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் நேரடியாக உரையாட உதவுகிறது. அரசியல் வாதிகள் செய்யும் தவறுகளை மக்கள் உடனடியாக, அந்த அரசியல்வாதியின் பார்வைக்கே கொண்டு செல்லும் வேலையை டவுன்ஹால் செய்கிறது. தன்னை மட்டுமின்றி, தனது ஃபேஸ்புக்கையும் இப்படி அரசியல் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார்.

ஒருபக்கம் மார்க்குக்கு அமெரிக்கா முழுக்க ஆதரவு பெருகினாலும், அவர் ஒரு முதலாளி; வியாபாரி. மீண்டும் அப்படி ஒருவர் நமக்கு வேண்டாம் என்ற குரல்களும் சேர்ந்தே ஒலிக்கின்றன.

 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவர் போட்டியிட வேண்டுமானால், 35 வயது நிரம்பி யிருக்க வேண்டும். வயதுக்கான தகுதியைத்தொட மார்க்குக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கின்றன. அரசை விமர்சிக்க அவர் கையில் இன்னமும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் அவர் மக்களுடன் இன்னும் அதிகம் நெருங்கலாம். ட்ரம்ப் மீது உள்ள வெறுப்பும், மார்க் செய்யும் அக்கறையான விஷயங்களும் மக்களை அவர் பக்கம் திரும்ப வைக்கும் வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்தால் 2020-ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தல் மார்க்குக்குப் புதிய கதவுகளைத் திறக்கும். ட்ரம்ப்பை எதிர்க்கிறார் என்பதால், குடியரசுக் கட்சியின் ஆதரவு மார்க்குக்குக் கிடைக்க வாய்ப்பு இல்லை.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி மார்க்கை அதிபர் வேட்பாளராகக் களம் இறக்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால், அந்த அதிபர் களத்தில் மார்க் நிச்சயம் இருப்பார் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

நீண்ட நாள்களுக்குப் பிறகு வெளியான ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ் புகைப்படம்..!

 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், தனது தந்தை ஜார்ஜ் ஹெச்.டபிள்யு.புஷ் உடன் மருத்துவமனையில் எடுத்துக்கொண்ட புகைப்படம், ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. அவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல்.

George H.W. Bush
 

அமெரிக்காவில், 1989 முதல் 93 வரை அதிபராக இருந்தவர்,  ஜார்ஜ் ஹெச்.டபிள்யு.புஷ். இவருக்கு தற்போது 92 வயது. அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சைபெற்றுவந்த புஷ், தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளாராம்.  நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ள புஷ், மன தைரியத்துடன் இருப்பதாக அவரின் மகனும் முன்னாள் அதிபருமான ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.

Big morale boost from a high level delegation. No father has ever been more blessed, or prouder.

ட்ரம்ப் அதிபரான நாளில் இருந்து, அவரின் அதிரடி உத்தரவுகள் பற்றிதான் அமெரிக்க ஊடகங்களில் பெரும்பாலும் பேசப்பட்டுவந்தது. முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜார்ஜ் புஷ் , ஜார்ஜ் ஹெச்.டபிள்யு.புஷ்  ஆகியோர் பற்றிய செய்திகள் வருவதில்லை. இந்த நிலையில், ஜார்ஜ் ஹெச்.டபிள்யு.புஷ்ஷின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், நீண்ட நாள்களுக்குப் பிறகு வெளியாகி உள்ள அவரின் புகைப்படம், அமெரிக்க மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. ‘ஜார்ஜ் ஹெச்.டபிள்யு.புஷ்ஷுக்கு,  அவரின் மகனும் உயர்மட்ட அதிகாரியுமான ஜார்ஜ் புஷ்தான் மன உறுதி அளிக்கிறார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வில்லியம் ஷேக்ஸ்பியர் இறந்த தினம்: ஏப்.23- 1616

வில்லியம் சேக்சுபியர் (26 ஏப்ரல் 1564- 23 ஏப்ரல் 1616)[a] ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார்.

 
 
வில்லியம் ஷேக்ஸ்பியர் இறந்த தினம்: ஏப்.23- 1616
 
வில்லியம் சேக்சுபியர் (26 ஏப்ரல் 1564- 23 ஏப்ரல் 1616)[a] ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார்.

ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார். அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

வாழும் அவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல பிற கவிதைகள் அடங்கும். அவரது நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் வேறு எந்த ஒரு நாடகாசிரியரின் நாடகங்களை விடவும் அதிகமாக நடத்தப்படுகிறது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1867 - சக்கரம் ஒன்றில் படங்களைச் செருகி தொடர் படமாகக் காட்டக்கூடிய சோயிட்ரோப் (zoetrope) என்ற கருவிக்கான காப்புரிமத்தை வில்லியம் லிங்கன் என்பவர் பெற்றார்
 
* 1896 - நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் (Koster and Bial's Music Hall) "வாட்வில்லி" குழுவினரால் "இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் விட்டாஸ்கோப் என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.

* 1905 - யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலில் தானுந்து கொண்டுவரப்பட்டது.
 
* 1932 - நெதர்லாந்தில் 153-ஆண்டுகள் பழமையான டி ஆட்ரியான் என்ற காற்றாலை தீயில் எரிந்து அழிந்தது.
 
* 1940 - மிசிசிப்பியில் நாட்செஸ் என்ற இடாத்தில் இரவு விடுதி ஒன்று தீப்பற்றியதில் 198 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முப்படைகள் தாக்குதலை ஆரம்பிக்க முன்னர் கிரேக்க மன்னர் இரண்டாம் ஜோர்ஜ் ஏதன்ஸ் நகரை விட்டு வெளியேறினார்
 
* 1948 - அரபு-இஸ்ரேல் போர், 1948: இஸ்ரேலின் முக்கிய துறைமுகம் ஹைஃபா பாலஸ்தீனர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
 
* 1966 - முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.
 
* 1982 - கொங்க் குடியரசு அமைக்கப்பட்டது.

* 1984 - எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
 
* 1987 - ஐக்கிய அமெரிக்காவின் கொனெக்ரிகட் மாநிலத்தில் பிரிட்ஜ்போர்ட் என்ற இடத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 28 கட்டிடத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
 
* 1990 - நமீபியா ஐநா மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்புகளில் சேர்க்கப்பட்டது.
 
* 1993 - இந்திய அரசியல் கட்சி இந்திய தேசிய லீக் உருவானது.
 
* 1993 - இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொழும்பில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
 
* 1993 - எரித்தீரியாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் எதியோப்பியாவில் இருந்து பிரிவதற்கு எரித்திரியர்கள் பெருமளவில் ஆதரவாக வாக்களித்தனர்.
 
* 1997 - அல்ஜீரியாவில் ஒமாரியா என்ற இடத்தில் 42 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று….

ஏப்ரல் – 24

 

1863 : கலி­போர்­னி­யாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெ­ரிக்க பழங்­கு­டிகள் 53 பேர் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.


1877 : ஓட்­டோமான் பேர­ரசு மீது ரஷ்யா போர் பிர­க­டனம் செய்­தது.


1908 : அமெ­ரிக்­காவின் லூசி­யா­னாவில் புயல் கார­ண­மாக 143 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1915 : ஆர்­மீ­னிய இனப்­ப­டு­கொலை: இஸ்தான்புலில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஆர்­மே­னி­யர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர். ஏனையோர் நாட்­டை­விட்டு விரட்­டப்­பட்­டனர்.

 

new-1807-23_T(2)


1955 : இந்­தோ­னே­ஷி­யாவின் பாண்டுங் நகரில் ஆசியா, மற்றும் ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த 29 அணி சேரா நாடு­களின் முதலாவது உச்சி மாநாடு முடி­வுற்­றது. குடி­யேற்­ற­வாதம், இன­வெறி, மற்றும் பனிப்போர் ஆகி­ய­வற்றைக் கண்­டிக்கும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.


1961 : 17ஆம் நூற்­றாண்டைச் சேர்ந்த "வாசா" என்ற சுவீ­டனின் கப்பல், கட­லி­லி­ருந்து மீட்­கப்­பட்­டது.


1965 : டொமி­னிக்கன் குடி­ய­ரசில் உள்­நாட்டுப் போர் ஆரம்­பித்­தது.


1967 : சோயூஸ் 1 விண்­க­லத்தில் பய­ணித்த ரஷ்ய வீரர் விளா­டிமிர் கொமரோவ் தனது பர­சூட்டை திறக்­க­
மு­டி­யாமல் போனதால் உயி­ரி­ழந்தார். இவரே விண்­வெளிப் பய­ண­மொன்றில் உயி­ரி­ழந்த முத­லா­வது வீர­ராவார்.


1968 : மொரீ­சியஸ் ஐ.நாவின் அங்­கத்­துவ நாடா­கி­யது.


1970 : சீனாவின்  செய்­மதி டொங் ஃபாங் ஹொங் 1 ஏவப்­பட்­டது.

 

varalaru

1970 : பொது­ந­ல­வாய அமைப்பில் காம்­பியா இணைந்­தது.


1981 : முத­லா­வது ஐபிஎம் தனி மேசைக் கணினி அறி­மு­க­மா­னது.


1990 : – டிஸ்­க­வரி விண்­ணோடம், ஹபிள் விண்­வெளி தொலைக்­காட்­டியை விண்­ணுக்குக் கொண்டு சென்­றது.


2004 : லிபி­யா­வுக்கு எதி­ராக 18 வரு­டங்­க­ளுக்­குமுன் விதிக்­கப்­பட்ட பொரு­ளா­தார தடையை அமெ­ரிக்கா நீக்­கி­யது. 


2006 : நேபா­ளத்தில் மன்­ன­ருக்கு எதி­ராக இடம்­பெற்ற கல­வ­ரங்­களை அடுத்து, 2002 இல் கலைக்­க­ப்பட்ட நாடா­ளு­மன்­றத்தை மீள அமைக்க மன்னர் உத்­த­ர­விட்டார்.


2005 : ஸ்னபி எனும் நாய் குளோனிங் முறையில் உரு­வாக்­கப்­பட்ட முத­லா­வது நாயா­கி­யது.


2007 : பலாலி இரா­ணு­வத்­தளம் மீது தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் விமா­னங்கள் தாக்­குதல் நடத்­தின.


2013 : பங்­க­ளாஷில் 8 மாடி கட்­ட­மொன்று இடிந்து வீழ்ந்­ததால் 1129 பேர் உயி­ரி­ழந்­தனர். 


2013 : யாழ் வலி­காமம் வடக்கில் 6371 ஏக்கர் (2578 ஹெக்­டேயர் = 25.78 சதுர கி.மீ)  பரப்­ப­ள­வான காணி­களின் உரி­மை­யா­ளர்­களை அடை­யாளம் காண முடி­வில்லை எனக் கூறி அக்­கா­ணி­களை அர­சினால் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்­கான விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் வெளியிடப்பட்டது.

http://metronews.lk

Link to comment
Share on other sites

சச்சினின் அந்த 7 வெற்றி ரகசியங்கள்! #MondayMotivation #HBDSachin

 

முதலில்..  பிறந்தநாள் வாழ்த்துகள் மாஸ்டர் ப்ளாஸ்டர்! ‘Sachin’ என்ற பெயர் இன்றைக்கு எத்தனை பேருக்கு உத்வேகமளிக்ககூடியதாய் இருக்கிறதென்பதை சொல்ல வேண்டியதில்லை. அவர் ஒவ்வொரு பேட்டிகளில் சொன்ன சிலவற்றில் இருந்து இன்றைய Monday Motivationஐப் பார்ப்போம்!

Sachin Tendulkar


1.  உங்களை செம்மைப்படுத்தும் புதிய முயற்சிகளை எடுங்கள்!  

11 வயதாக இருக்கும்போது அத்தை வீட்டில் தங்கியிருந்தார். கோல்ஃப் பந்துகளை தேய்த்து ஒரு ஷேப்புக்கு கொண்டு வந்து, அத்தையை எறியச் சொல்லி பயிற்சி எடுப்பார். ஒருநாளைக்கு எக்கச்சக்கமான முறை அந்தப் பயிற்சி தொடரும்.

சச்சின்:  “அதுதான் எனக்கு பேக் ஃபுட் டிஃபன்ஸ் ஆட பின்னாளில் உதவிகரமாக இருந்தது. கோல்ஃப் பந்தை வைத்து அந்த ப்ராக்டீஸை செய்ததால், பந்து தரையில் பட்டவுடன் எங்கு திரும்பும் என்று கணிக்க முடியாது. அதைக் கணித்து விளையாடுவது சவாலாக இருந்தது. அந்தப் பயிற்சி பின்னாளில் நிறைய போட்டிகளில் கைகொடுத்தது”     

2. அமைதியாய் இருங்கள். அடுத்ததைப் பற்றி சிந்தியுங்கள்

ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்தாலும் சரி, ரன்கள் குறைவாக எடுத்தாலும் சரி. அந்தப் போட்டியைப் பற்றி யோசிக்காமல், அடுத்த போட்டியைப் பற்றி சிந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். 

சச்சின்:  “விளையாடியபிறகு அதைப் பற்றி அடுத்தவர்தான் பேசவேண்டும். நாம் அல்ல என்று என் கோச் எனக்குக் கற்றுக்கொடுத்தார். ஆகவே, எந்த ஒரு போட்டி முடிந்தபின்னும் அதைவிட பிரகாசிக்க வேண்டும் என்பதிலேயே முனைப்புக் காட்டினேன்”


3. ஏமாற்றாதீர்கள். கடினமாக உழையுங்கள்

நெட் பயிற்சிகளின்போது, அதைவிடுத்து ஃபுட்பால், ஹாக்கி, டென்னிஸ் பால் கிரிக்கெட் என்று பலர் விளையாடப் போவார்கள். ஆனால் இவர் ஒருபோதும் அப்படிச் சென்றதில்லை. Padஉடன் நெட்டில் இறங்கி ப்ராக்டீஸ் செய்வதே இவருக்கு எப்போதும் பிடித்திருந்தது.

சச்சின்: “ஆம். என் அண்ணன்  அஜித்தும், கோச்சும் ஆரம்பத்திலிருந்து அதற்கு விட்டதே இல்லை. ‘போய் Pad கட்டிட்டு வந்து ப்ராக்டீஸை ஆரம்பி’ என்பார்கள். பிறகு எனக்கு பயிற்சி எடுப்பதுதான் பெரிய விருப்பமாக இருந்தது. பயிற்சி செஷனை ஏமாற்றி ஆகப்போவது ஒன்றுமில்லை. நஷ்டம் நமக்குத்தான் என்று கடுமையாக உழைக்க ஆரம்பித்தேன்”

4. பெரிய பிரச்னைகளை முதலில் தீருங்கள்

ஒரு அணியுடன் விளையாடுவதென்றால் அந்த அணியில் ஃபார்மில் இருக்கும் பவுலர் யார் என்று கணித்துக் கொள்வார் சச்சின். அவரை சமாளித்தாலே பாதிவேலை முடிந்த மாதிரி. ஒன்று அவரை எதிர்கொண்டு இறங்கி அடித்து, அந்த பவுலரின் நம்பிக்கையைத் தகர்ப்பார். அல்லது அவரது ஓவரில் தாக்குப் பிடித்து மற்ற பவுலர்கள் பந்தில் படம் காட்டுவார். 

நம் முன் பல பிரச்னைகள் இருந்தாலும், பெரிய பிரச்னைகளை அடையாளம் கண்டு அழித்தாலே.. பாதி பிரச்னை முடிந்தமாதிரிதான்!

5. உங்களில் நம்பிக்கை வைத்து ஆபத்தை எதிர்கொள்ளுங்கள்! 

நவம்பர் 1989. சச்சினின் முதல் இண்டர்நேஷனல் மேட்ச். டெஸ்ட். 4 போட்டிகள் கொண்ட தொடரின் நான்காவது போட்டி. பாகிஸ்தானின் சியால்கோட்டில் நடக்கிறது. நான்காவது இன்னிங்க்ஸ். முதல் 3 போட்டிகளும் டிரா. இந்தப் போட்டி பாகிஸ்தான் வென்றால் தொடர் அவர்களுக்கு. 38 ரன்களுக்கு 4 விக்கெட் காலி. களத்தில் இறங்குகிறார் சச்சின்.

தொடரின் முதல் போட்டியில் - அதாவது சச்சினின் இண்டர்நேஷனல் முதல் மேட்ச்சில் -  சச்சினை 15 ரன்களில் போல்டாக்கிய அதே வக்கார் யூனுஸ் பவுலிங். ஒரு ரன் எடுத்திருக்கும்போது சச்சினின் மூக்கைப் பதம் பார்க்கிறது பந்து. ரத்தம் கொட்ட, அவ்வளவுதான் என்று நினைக்கிறார்கள் பலரும்.

சச்சின்: “அதுவும் ஜாவேத் மியாண்டட்.. ‘இதுக்கு மேல ஆட முடியாது. ஆஸ்பத்திரிக்கு போ’ என்றார். நான் கிரவுண்டுக்கு வந்த டாக்டரிடம் ஐஸ்கட்டி வைத்து முதலுதவி மட்டும் செய்துகொண்டேன். தொடர்ந்து விளையாடினேன். ஏனென்றால்.. இன்னும் ஒன்றரை நாட்கள் இருந்தது. 4 விக்கெட் விழுந்த நிலையில், நானும் களத்தைவிட்டு விலகினால் அது எதிரணிக்கு பலமாக அமையும் என்று நினைத்தேன்”

அந்தப் போட்டியில் நின்று விளையாடிய சச்சின் எடுத்தது 57 ரன்கள். அதன்பிறகு  ரிஸ்கான சூழல்களை எதிர்கொள்வது சச்சினுக்குப் பிடித்தமானதாகவே ஆகிவிட்டதாம்!

Sachin Tendulkar


   
6.  சின்ன வெற்றியைக் கொண்டாடுங்கள்! 

பெரிய பெரிய வெற்றிகளைக் கொண்டாட நிறைய பேர் இருப்பார்கள். அல்லது மனமே தானாக கொண்டாட்ட மனநிலைக்குத் தள்ளும். சின்ன வெற்றிகளை கொண்டாடுங்கள். ஆர்ப்பாட்டமாக அல்ல. அமைதியாகவேனும். 

சச்சின் பெரிய வெற்றிகளின்போது அமைதியாக இருந்ததைப் பார்த்திருப்பீர்கள். தமிழகத்துடனான ஒரு ரஞ்சி போட்டியின்போது, மும்பை சார்பாக விளையாடிக் கொண்டிருந்தார் இவர். 40 ரன்கள் தேவை எனும்போது 8 விக்கெட்களை இழந்திருந்தது மும்பை. இவர் நின்று விளையாடி வெற்றிக்கு வித்திட்டார்.

”அன்றைக்கு ஸ்டேடியத்தில் அப்படி ஒன்றும் ஆட்களில்லை. டெலிவிஷன் ஒளிபரப்பும் இல்லை. ஆனால் அன்று சச்சின் கொண்டாட்டமாய் வந்ததை அப்படி ரசித்தேன். அந்த சச்சின்தான் என் ஃபேவரைட்” என்கிறார் இந்தியா டுடேவின் ஸ்போர்ட்ஸ்  எடிட்டர் ஷார்தா உக்ரா.

7. பெரிய வெற்றிகளைத் தொட, சின்ன விஷயங்களை தியாகம் செய்யத் துணியுங்கள்!  

வெற்றிக்கான ரகசியமாக சச்சின் பல இடங்களில் சொல்வது இது. ‘சில விஷயங்களை தியாகம் செய்தே ஆகவேண்டும். இல்லையென்றால் வெற்றியைப் பற்றிச் சிந்திக்காதீர்கள்’ என்பார்.

சச்சின்: “எனக்கு லேட் நைட் பார்ட்டிகள், நண்பர்களோடு சுற்றுதல் என்பதற்கான வாய்ப்புகள் நிறையவே இருந்தன. ஆனால் அறைக்கு வந்து சாப்பிட்டுவிட்டு அடுத்தநாளுக்கான நிகழ்வுகளை அசைபோட்டுக் கொண்டே தூங்கிவிடுவேன்” 

அப்படி நிறைய விஷயங்களை தியாகம் செய்யத் தயாராக இருந்து, தியாகமும் செய்ததால்தான் பெரிய விஷயங்களை சச்சினால் அடைய முடிந்தது.

கற்றுக் கொண்டோம் சச்சின். இன்னும் கற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

காரணம் ஆயிரம்: பாலைவனத்தில் ஓர் எலி

 

eli_3155763f.jpg
 
 
 

யாராவது பாலைவனத்துக்குப் பக்கத்தில் வீடு கட்டி குடியிருக்க விரும்புவார்களா? தண்ணீர் பிரச்சினை வந்தாலே வீட்டை காலி செய்துவிடுவோம். பாலைவனத்துக்குப் பக்கத்தில் இலவசமாக மனை தருகிறோம் என்றால்கூட நாம் தெறித்து ஓடிவிடுவோம் இல்லையா?

பாலைவனத்துக்குப் பக்கத்தில் குடியிருக்கவே நாம் பயப்படுகிறோம். ஆனால், ஓர் எலி பாலைவனத்திலேயே குடியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அந்த எலி பாலைவனத்திலேயே குடியிருக்கிறது, மிகவும் வசதியாகவே வாழ்கிறது. தண்ணீர் பிரச்சினையை எப்படி சமாளிக்கிறது? அது தண்ணீரே குடிப்பதில்லை. தண்ணீரைத் தானே உற்பத்தி செய்துகொள்கிறது. ஆம்! அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் காணப்படும் ‘கங்காரு எலி’களைப் (Kangaroo Rats) பற்றிய அறிமுகம்தான் இது.

பழுப்பு வண்ணத்தில் 15 செ.மீ. நீளம் வரை காணப்படும் பெரிய எலிகள் இவை. உருண்டு திரண்ட பெரிய தலைகளுடன் காணப்படும் இந்த எலிகள், ஆபத்தான இனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

வீட்டு எலிகளைப் போல இந்த ‘கங்காரு எலி’களும் வளைகளில்தான் வசிக்கின்றன. ஆனால், வீட்டு எலிகளிலிருந்து நிறைய மாறுபட்டவை. வளை அமைப்பே வித்தியாசமாக இருக்கும். ‘எலி வளையானாலும், தனி வளை வேண்டும்’ என்பார்கள். இந்த எலிகள் பெரும்பாலும் கூட்டமாகவே வசிக்கின்றன.

பாலைவண மணல்தான் இவை விரும்பி வசிக்கும் இடம். அதாவது உதிரி மணலில்தான் இவை உருண்டு விளையாடும். இப்படி மணலில் விளையாடுவதன் மூலமே தன் உடலை எலி சுத்தப்படுத்திக்கொள்கிறது. இதனை ‘கங்காரு எலிகளின் மணல் குளியல்’என்று சூழலியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி உதிரி மணலில் உருண்டு விளையாடும் கங்காரு எலிகள் சற்று கீழே போய் ஆழமான வளைகளை அமைத்துக்கொள்கின்றன. இந்த வளைகள்தாம் இவை வசிக்கும் வீடுகள்.

இந்த வளைகள் மிகவும் சிக்கலானவை. இந்த வளைகளில் எலிகள் படுப்பதற்கு, வசிப்பதற்கு, உணவு சேகரிப்பதற்கு என்று தனித்தனியாக அறைகள் இருக்கும். உணவு சேகரித்து வைத்திருக்கும் அறைகளில் இவை தூங்காது. அதே போல் படுக்கை அறையில் வசிப்பதில்லை.

இந்த கங்காரு எலிக் கூட்டத்துக்கும் மனித இனக் கூட்டத்துக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயக் கூட்டமைப்பை உடையவை இந்த கங்காரு எலிகள். பெண் எலிகளை எப்போதும் தன்னுடைய அதிகாரக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே ஆண் எலிகள் வைத்திருக்கும். பெண் எலிகள் (மனிதர்கள் மாதிரியே) நிறைய பொறுமையானவை. சகிப்புத் தன்மை வாய்ந்தவை. ஆண்களின் அராஜகங்களைப் பொறுத்துக்கொள்பவை.

ஏனெனில், வசிப்பதற்கான வளைகளைப் பெரும்பாலும் ஆண் எலிகளே அமைக்கின்றன. ஆண் எலிகள் அமைக்கும் வீடுகளை நம்பி வாழ வேண்டியிருப்பதால், பெண் எலிகள் பெரும்பாலும் ஆண் இனத்தைச் சார்ந்தே வாழ்ந்துவிடுகின்றன.

அணில் மாதிரி கொரிக்கும் விலங்கு வகையைச் சேர்ந்தவை இந்த கங்காரு எலிகள். பழ விதைகள் தான் முக்கியமான உணவு என்றாலும் எங்காவது எப்போதாவது கிடைக்கும் இலைகளையும், பூச்சிகளையும்கூட உண்ணுகின்றன. வருங்காலத்துக்கு உணவு சேகரிப்பதில் இந்தக் கங்காரு எலிகள் மிகவும் கெட்டி. போதுமான அளவுக்கு விதைகளைக் கொண்டுவந்து முன்னெச்சரிக்கையாகச் சேமித்து வைத்துக்கொள்ளும். பல எலிகள் சேர்ந்து வாழும் வளைகள் என்றால் பெரிய தானியக் களஞ்சியமே வளைக்குள் இருக்கும்.

தங்கள் பெரும்பகுதி நேரத்தை வளைக்கு உள்ளேயே செலவிடும். உணவு தேடுவதற்காகப் பலமுறை வளையை விட்டு வெளியே வரும். ஆனால், அதிகப்பட்சம் 15 நிமிடம்தான், வளைக்குத் திரும்பிவிடும். வீட்டுப் பாசமெல்லாம் இல்லை. எதிரிகளிடமிருந்து தப்பிக்கவே உடனுக்குடன் இவை திரும்பிவிடுகின்றன.

எதிரிகளிடமிருந்து தப்பிக்க வித்தியாசமான உத்தியைக் கையாளுகின்றன. எதிரிகள் வருவதை இவை சமிக்ஞைகள் மூலம் மற்ற எலிகளுக்குத் தெரிவித்துவிடும். தனது முன்னங்கால்களால் வினாடிக்கு 15 முதல் 20 தடவை இவை தரையைத் தட்டி ஒலி எழுப்பும். இந்த எச்சரிக்கை ஒலியைக் கேட்டவுடன் மற்ற எலிகள் எதிரிகளிடமிருந்து ஓடி மறைந்து விடும்.

இவை கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரம் வரையுள்ள நிலங்களில் வாழும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. கங்காரு எலிகளுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. இதன் கன்னத்தில் இரண்டு பைகள் உள்ளன. கிடைக்கிற உணவை முதலில் இந்த பைகளில் கங்காரு எலிகள் சேர்த்து வைத்துக் கொள்கின்றன. இந்தப் பைகள்தான் உண்ணும் விதைகளிலிருந்து நீர் ஆவியாவதைத் தடுக்கின்றன.

எப்படி இந்த எலிகள் நீர் இல்லாமல் உயிர் வாழ்கின்றன? இதற்கு ஏன் கங்காரு எலிகள் என்று பெயர் வந்தது?

தான் சாப்பிடும் விதைகளிலிருந்தே இது தனக்குத் தேவையான நீரை எடுத்துக்கொள்கிறது. சாப்பிடும் விதைகளுக்குள் இருக்கும் நீர்ச்சத்துதான், கங்காரு எலிகளின் நீர் ஆதாரம். விதைகளுக்குள் இருக்கும் நீரை ஆவியாகாமல் தடுத்துத் தனக்கு தேவையான நீரை எடுத்துக்கொள்கிறது. ஒரு கிராம் விதையிலிருந்து அரை லிட்டர் தண்ணீரை உருவாக்கிக்கொள்ளும் வகையில் இதன் உடல் இயற்கையாகத் தகவமைக்கப்பட்டுள்ளது (மனிதனுக்கும் எலி மாதிரி உடலியக்கம் படைக்கப்பட்டிருந்தால், தண்ணீர் பிரச்சினை வராதே).

கங்காரு மாதிரி தாவுவது இதன் ஸ்பெஷல். அதனால்தான் இந்த எலிகளுக்கு கங்காரு எலிகள் என்று பெயர். தாவுதல் என்றால் கொஞ்ச நஞ்ச தூரமல்ல. ஒரு வினாடியில் 10 அடி தூரத்தை சர்வ சாதாரணமாகத் தாண்டும். அப்படியென்றால் கங்காரு எலிகள் என்ற பெயர் பொருத்தமாகத்தானே இருக்கிறது!

(காரணங்களை அலசுவோம்)

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

'இந்தியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்'. 'இந்தியாவில்' இருந்து - பிரதமர் மோடி ட்வீட்

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர்,  ஜான்டி ரோட்ஸ். கிரிக்கெட் உலகில் ஃபீல்டிங்குக்காகவே அறியப்படும் கிரிக்கெட்டர் இவர். ஜான்டி ரோட்ஸ் தனது குழந்தைக்கு, 'இந்தியா' என்று பெயர் வைத்திருந்தார். அவரது பெண் குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, க்யூட் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிந்திருந்தார், ஜான்டி ரோட்ஸ். 

பிரதமர் மோடி

இந்த நிலையில், நேற்று இரவு திடீரென  பிரதமர் மோடி, ட்விட்டரில் இந்தியாவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். 'இந்தியாவுக்குப்  பிறந்தநாள் வாழ்த்துகள் 'இந்தியாவில்' இருந்து' என அவர் ட்வீட்டினார். மோடியின் இந்த ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்புக் கிடைத்துள்ளது . ஜான்டி ரோட்ஸ் சமீப காலமாக இந்தியாவில்தான்  பெரும்பாலான மாதங்கள் இருக்கிறார். இந்தியாவின் அதிமுக்கிய பணக்காரரான  முகேஷ் அம்பானியின் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ஃபீல்டிங் பயிற்சி ஆலோசகராகப் பணியாற்றிவருகிறார் ஜான்டி ரோட்ஸ்.

http://www.vikatan.com

Bildergebnis für jonty rhodes daughter

Harbhajan Singh took to social media and shared a photo of his daughter Hinaya having a playful moment with fielding coach Jonty Rhodes daughter Índia Rhodes

Link to comment
Share on other sites

வெளியானது ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ ட்ரெய்லர்!

ஜோதிகாவின் நடிப்பில் மே மாதம் திரைக்கு வர இருக்கும் ‘மகளிர் மட்டும்’ திரைப்பட ட்ரெய்லர், இன்று வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வத் தகவலை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜோதிகா

‘36 வயதினிலே’ படத்துக்குப் பிறகு, ஜோதிகாவின் நடிப்பில் வெளிவர இருக்கிறது, ‘மகளிர் மட்டும்’.  சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை, இயக்குநர் பிரம்மா இயக்குகிறார். இன்று, சத்யம் திரையரங்கில் இசை வெளியீடு நடக்கும் நிலையில், சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லரை வெளியிட்டுப் பதிவுசெய்துள்ளார்.

ஜிப்ரானின் இசை பின்னணியில் ஒலிக்க, ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்பிரியா, லிவிங்ஸ்டன், நாசர் எனப் பெரிய நட்சத்திரங்களின் அணிவகுப்பு, ட்ரெய்லரை அலங்கரித்துள்ளது.

 

Link to comment
Share on other sites

அன்றும் இன்றும் என்றும்... சச்சின் ஏன் ஹீரோ..?  #HBDSachin

 
 

1996-ல் எங்கள் ஊரில், களை எடுப்பதற்கு கூலி 30 ரூபாய். மூத்தவனை காட்டுக்கு அழைத்துச் செல்ல படாதபாடுபடுவார்கள் வீட்டில். வேலைக்குச் செல்லாமல் டிமிக்கி கொடுப்பதில் பிஹெச்டி முடித்தவன் அவன். சரியாக கிரிக்கெட் மேட்ச் இருக்கும் நாள்களில் எல்லாம் அவனுக்கு ஏதாவது ஒரு நோக்காடு வந்துவிடும். வரவழைத்துக் கொள்வான். அல்லது எங்கேயாவது போய் ஒளிந்து கொள்வான். ஊர் முழுக்க தேடிப் பார்த்துவிட்டு, ஓய்ந்து, காட்டுக்குச் சென்றுவிடுவார்கள். வீட்டில் எல்லோரும் வேலைக்குச் சென்றதும், பஞ்சாயத்து போர்டு டிவி முன் துண்டை விரித்துக் கொள்வான். நாள் முழுக்க கிரிக்கெட். மதியச் சாப்பாட்டுக்குக்கூட வரமாட்டான். கிரிக்கெட் பார்த்து மாட்டிக் கொண்ட நாள்களில் போட்டு மொத்துவார்கள். வாங்கிக் கொள்வான். ஆனாலும் கடைசிவரை அவன் பகலில் ஒன்டே மேட்ச் நடந்த நாள்களில் வேலைக்குச் சென்றதே இல்லை. நிற்க.

சச்சின்

அப்படியொரு நற்காலைப் பொழுதில்தான் ‛இன்னிக்கு நீ என் கூட வா…’ என அந்த நல்ல காரியத்தைச் செய்தான். நானும் அவனோடு பஞ்சாயத்து போர்டு டிவி முன் கடை விரித்தேன். உலகக் கோப்பை. இந்தியா – இலங்கை மோதல். நான் பார்த்த முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி. பக்கத்தில் இருந்து ஒவ்வொரு பந்துக்கும் விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தான். சச்சின் சதம். இந்தியா தோல்வி. அன்று ஹெல்மெட்டுக்குள் பற்கள் தெரிய சச்சின் சிரித்த சிரிப்பும், முத்தையா முரளிதரன் பந்தில் டீப் மிட் விக்கெட்டில் அடித்த சிக்ஸரும், தோல்வி விரக்தியில் ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் தீவைத்துக் கொளுத்தப்பட்ட அட்டைப் படங்களும், முட்டை உடையாமல் இருக்க கோழி ஃபெவிகால் தின்று கொண்டிருப்பதாகக் காட்டப்பட்ட விளம்பரங்களும் இன்னமும் ஞாபகம் இருக்கிறது.

முதல் பார்வையில் நம்மைப் பார்த்து சிரித்து விட்ட பெண்ணை மறுநாள் ஃபாலோ பண்ணாமல் இருப்பது மகா பாவம் இல்லையா? அதுவும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிகளவில் பார்க்கப்பட்ட, பாராட்டப்பட்ட,  ரசிக்கப்பட்ட, மெச்சப்பட்ட, தூற்றப்பட்ட, போற்றப்பட்ட, நேசிக்கப்பட்ட, ஆராதிக்கப்பட்ட, ஆசிர்வதிக்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட, புகழப்பட்ட, பின்பற்றப்பட்ட, ஈர்க்கப்பட்ட, மதிக்கப்பட்ட, யூகிக்கப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட, கொண்டாடப்பட்ட, வழிபடப்பட்ட வீரர் ஒருவரை ஃபாலோ பண்ணாமல் இருக்க முடியுமா என்ன? அன்று முதல் நானும் அவனைப் போல வேலைக்கு மட்டம் போட ஆரம்பித்தேன். சச்சினைப் பின்தொடர்ந்தேன். கிரிக்கெட் பிடித்தது.

சக்திமான், ஜெய் ஹனுமன் சீரியல்கள் கோலோச்சிய தூர்தர்ஷன் காலத்தில் எங்களுக்கு இருந்த ஒரே என்டர்டெய்ன்மென்ட் கிரிக்கெட், கிரிக்கெட், கிரிக்கெட். அன்று எங்கள் ஊரில் இருந்த ஒரே கலர் டிவி பஞ்சாயத்து போர்டு டிவி மட்டுமே. பகலிரவு ஒன்டே மேட்ச்சை ஊரே திரண்டு பார்க்கும். வசந்தகாலம் அது. காரணகர்த்தா சச்சின். மிகைப்படுத்தல் எல்லாம் இல்லை. தோனி போலவே நாங்களும் சச்சின் அவுட்டானதும் டிவியை ஆஃப் செய்துவிட்டு கிளம்பி இருக்கிறோம். எச்சில் விழுங்கி சச்சின் சதம் அடிக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளையவனை ‛நீ பார்த்தா அவன் சதம் அடிக்க மாட்டான்…’ என விரட்டி இருக்கிறோம். சென்டிமென்ட் காரணமாக இடம் மாறாமல் உட்கார்ந்திருக்கிறோம். ஆங்கிலம், ஹிந்தி தெரியாது என்றாலும் கரன்ட் கட் ஆன நேரத்தில் ரேடியோவைத் திருகி ஸ்கோர் கேட்டிருக்கிறோம். சச்சின் அவுட் எனத் தெரிந்தால் இனி தேறாது என தூங்கப் போயிருக்கிறோம்.

1998. உள்ளூரை விட்டு பக்கத்து ஊர் டவுனில் படிக்கச் செல்லும் நேரம். சைக்கிள் பழகினோம். நீச்சல் தெரியும். ஆஃப் சைட், லெக் சைட், ஸ்ட்ரெய்ட் திசைகளைத் தாண்டி ஓரளவு ரூல்ஸ் தெரியும். ஆஃப் ஸ்பின்னுக்கும், லெக் ஸ்பின்னுக்கும் வித்தியாசம் புரியும். மார்க் வாக் யார் என்று தெரியும். ஷேன் வார்ன் எப்பேற்பட்ட ஆள் எனப் பேசிக்கொள்வோம். ஃபிளெமிங், காஸ்பரோவிச்சின் வேகம் பிடிபட்டது. அந்த சமயத்தில்தான் அந்த அதிசயமும் நிகழ்ந்தது. ஷார்ஜா என்றதும் கோக கோலா கோப்பை, மணல் புயல். டோனி கிரேக் கமென்ட்ரி. ஷேன் வார்ன் பந்தில் பறந்த சிக்ஸ்ர்கள், பிறந்தநாள் சதம், இந்தியா ஃபைனலுக்கு முன்னேறியது. ஃபைனலில் ஜெயித்தது இவை எல்லாம் கோர்வையாக நினைவுக்கு வந்தால் நீயும் சச்சின் ரசிகனே. இதுவரை சச்சின் ரசிகனாக இருந்தவர்கள் இந்த இன்னிங்ஸுக்குப் பின் வெறியர்கள் ஆனார்கள். நானும்...

1999 உலகக் கோப்பை. கேபிள் டிவி கோலோச்சி விட்டது. பல வீடுகளில் கலர் டிவி வந்து விட்டது. தூர்தர்ஷனின் பிரைம் டைம் முடிவுக்கு வரும் நேரம். இந்தியா உலகக் கோப்பையின் முதலிரண்டு போட்டிகளில் தோல்வி. தந்தையின் மரணத்துக்குப் பின் மீண்டும் இங்கிலாந்து சென்று, கென்யாவுக்கு எதிராக ஒரு அட்டகாச சதம் விளாசினார் சச்சின். உலக கோப்பையில் இந்தியா நீடிக்க உதவிய சதம் அது. சதம் அடித்துவிட்டு வானத்தை நோக்கிப் பார்த்தார். தன் தந்தையிடம் ஆசிர்வாதம் பெற்றார். அன்றுமுதல் ஒவ்வொருமுறையும் சதம் அடித்து வானம் நோக்கிப் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டார். சச்சின் இன்னும் மனதுக்கு நெருக்கமான தருணம் அது. 

2003. பிளஸ் 2 பரிட்சையும் உலகக் கோப்பையும் ஒன்றுபோல தொடங்குகிறது. சச்சின் ருத்ரதாண்டவம் ஆடிய உலகக் கோப்பை அது. ஒரு போட்டியைக் கூட, ஒரு பந்தைக் கூட மிஸ் செய்யவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக நொண்டிக்கொண்டே சோயிப் அக்தர், வாசிம் அக்ரம் பந்தைக் கிழித்ததெல்லாம்  இன்னும் கண்ணுக்குள். ஆனால் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி. அந்தத் தொடரில் இந்தியா இரண்டு முறை தோற்றது. இரண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக… ஆனால் அந்த உலகக் கோப்பையின் நாயகன் சச்சின். இருந்தாலும் உலகக் கோப்பை கிடைக்காத சோகத்தில் இருந்தோம். எங்களை எங்களாலேயே தேற்ற முடியவில்லை.

அதன்பின் கல்லூரி, வேலை என எவ்வளவோ மாறி விட்டது.  இந்திய அணியிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். ஆனால் ஒன்று மட்டும் மாறவே இல்லை. ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த இலக்கு 351. இரண்டாவது இன்னிங்சில் சச்சின் பொறுப்புடன் ஆடி 175 ரன்கள் அடித்தபோதும், இந்தியா தோல்வி. சச்சின் அவுட்டானால் மற்ற பேட்ஸ்மேன்கள் வரிசையாக பெவிலியன் திரும்பி விடுவர் என்ற தியரி 2009 வரை தொடர்ந்தது. ரிக்கி பாண்டிங் சொன்னதுபோல, சச்சின் இருக்கும்வரை எதிரணிக்கு அவர் மட்டுமே சிம்மசொப்பனம்.

2010. நல்ல இடத்தில் வேலை. தூர்தர்ஷனில் கிரிக்கெட் பார்த்த காலத்தில் இருந்து நல்ல முன்னேற்றம். லைவ் ஸ்ட்ரிம்களில் மேட்ச் பார்க்கலாம். இன்னமும் சச்சின் ஆடுகிறார். எதற்காக? அவர் படைக்க வேண்டிய சாதனை ஒன்று மிச்சமிருக்கிறது. இடம்: குவாலியர். எதிரணி: தென் ஆப்ரிக்கா. 190 ரன்களுக்கு மேல் சச்சின் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் 90 ரன்களில் இருந்தாலே மனம் பதை பதைக்கும். இப்போது 190 ரன்களில் இருக்கிறார். டபுள் செஞ்சுரி சாத்தியமா? ஒருநாள் போட்டியில் முதல் இரட்டைச்சதம் அடித்தவர் என்ற சாதனை சாத்தியமா? கிரிக்இன்ஃபோ இணையத்தை மேய்கின்றனர் ரசிகர்கள். இணையம் முடங்குகிறது. என்ன ஆச்சர்யம், சச்சின் ஆடத் தொடங்கிய காலத்தில் இப்படி இணையதளங்கள் எல்லாம் இல்லவே இல்லை. நினைத்ததும் ஸ்கோர் பார்க்கும் வசதி இல்லை… சச்சின் இன்னமும் ஆடுகிறார். அதுவும் இளைஞர்கள் படைக்காத சாதனையை நோக்கி நகர்கிறார். சச்சின் அந்த சாதனையைப் படைத்து விடுவாரா? தோனி அதற்கு வழி விடுவாரா… அப்பாடா… ஒரு வழியாக இரட்டைச்சதம் அடித்து விட்டார். ட்விட்டரில் வாழ்த்துமழை பொழிகிறது. பஞ்சாயத்து போர்டு டிவியில் பார்த்து பக்கத்துவீட்டு பையனிடம் சச்சின் பெருமை பேசிய நான், ட்விட்டரில் ட்வீட் போட்டு சந்தோஷப்பட்டேன்.  டெக்னாலஜி வளர்ந்து கொண்டே இருக்கிறது. சச்சின் இன்னமும் ஆடுகிறார். முன்னைவிட படு நேர்த்தியாக.

சச்சின்

2011 உலகக் கோப்பை. பெண் பார்க்கும் படலம் தொடங்கி விட்டது. 5 டிஜிட்டில் சம்பளம்.  ஐ.பி.எல். கோலோச்சி விட்டது. தோனி விஸ்வரூபம் எடுத்து விட்டார். விராட் கோலி வளர்ந்து வருகிறார். சச்சினுடன் விளையாடிய கேரி கிறிஸ்டன் இந்திய அணியின் பயிற்சியாளராகி விட்டார். சச்சினுக்கு முதல் பந்து வீசிய வக்கார் யூனுஸ் ரிட்டய்ட் ஆகி ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. சச்சின் இன்னமும் விளையாடுகிறார். இன்னமும் அவர்தான் எதிரிணியின் இலக்கு. ஃபைனலில் அவர் சொற்ப ரன்களில் அவுட். விரக்தியில் இருந்த நேரத்தில் ஊரில் இருந்து அழைத்தான் மூத்தவன். அவனிடம் புலம்ப, ‛பொறு. இந்தியா இந்தவாட்டி வேர்ல்ட் கப் ஜெயிக்குது’ என்றான். அவன் சொன்னது பலித்தது. இந்தியா இரண்டாவது முறையாக உலக சாம்பியன். சச்சினை தோளில் தூக்கி வலம் வந்தனர் இந்திய அணியினர். நிறைவாக இருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கவாஸ்கர் சாதனையை முறியடித்ததில் இருந்து சதத்தில் சதம் அடித்தது வரை சச்சினின் சாதனைகளுக்கென்றெ தனி புத்தகம் எழுதலாம். இந்தக் கட்டுரையில் டெஸ்ட் கிரிக்கெட்டைத் தொடவில்லை. அது இன்னும் நீளம். ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் இந்தளவு கூடவே டிராவல் செய்த கிரிக்கெட்டர் வேறு யாரும் இருக்க முடியாது. கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் என்பது அசாதாரணம். அந்த அசாதாரணன் ஓய்வை அறிவித்த பின், கிரிக்கெட்டுக்கு  குட்பை சொன்னவர்கள் ஏராளம். ஹர்ஷா போக்லே ஒருமுறை சொன்னார். “சச்சின் நல்ல ரன்கள் எடுக்கும் நாட்களில், இந்தியாவே நிம்மதியாக உறங்கும்” என்று. ஆனால், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் முடிந்து, மும்பை வான்கடே மைதானத்தைத் தொட்டுக் கும்பிட்டு, ஃபேர்வெல் ஸ்பீச்சில் ‛ரசிகர்கள் சச்சின் சச்சின்னு சொல்றது கேட்டுட்டே இருக்கும்’ என சச்சின் பேசியபோது சச்சினை விமர்சித்தவர்களும் கலங்கினர்.

இந்தியாவில் கிரிக்கெட்டை மதம் பிடித்துப் பார்க்க வைத்த பெருமை சச்சினையே சாரும். டெண்டுல்கரையே சாரும். சச்சின் டெண்டுல்கரையே சாரும். சச்சின் ரமேஷ் டெண்டுல்கரை மட்டுமே சாரும். 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

செய்தி..
சுகேசை ஐகோர்ட் நீதிபதி என நினைத்தேன் : தினகரன்
 
ஒரு வாசகரின் கருத்து...
 
அடேங்கப்பா மன்னார்குடி மாபியாவையே ஒருவன் ஏமாற்றியிருக்கிறான் என்றால், சுகேஷ்தான் அதிமுக பொதுச்செயலாளருக்கு பொருத்தமான தேர்வு.
Link to comment
Share on other sites

ரஜினி இந்திய ஜனாதிபதியானால், இதெல்லாம்தான் நடக்கும்!

 

யார் கிளப்பிவிட்டதுன்னு தெரியலை ரஜினிகாந்த் பெயர்  குடியரசுத்தலைவர் பதவிக்கான பரிந்துரை பட்டியல்ல இருக்குதாமேங்கிறதுதான் ஹாட் டாபிக்கா ஓடிக்கிட்டு இருக்குது. சரி ஒருவேளை அப்படி ஆயிட்டார்னா என்னெல்லாம் நடக்கும்னு சும்மா ஒரு ஜாலிக்கோ ஜிம்கானா கற்பனை பண்ணலாமா பாஸு...

* வருங்கால முதல்வர் வருங்கால பிரதமர்னுலாம் கூவிக்கிட்டு இருந்த ரஜினியின் ரத்தத்தின் ரத்தங்கள் எல்லாம் இப்போ குடியரசுத்தலைவரே ஆயிட்டாருங்கிறதால அடுத்த இலக்கு இனி அமெரிக்காதான்னு ஒரு படி மேலே போயி 'வருங்கால ஐ.நா சபை தலைவர் ரஜினிகாந்த்'னு கூவ ஆரம்பிப்பார்கள்.

* டெண்ட் கொட்டகை முதல் அல்ட்ரா மாடர்ன் தியேட்டர் வரைக்கும் பலாபிசேகம் டூ  பீர் அபிசேகம், வால் போஸ்டர்ஸ் டூ பிளக்ஸ் பேனர்னு சீரும் சிறப்புமாகப் பண்ணிக்கிட்டு இருந்த ரசிகர்கள் இனி வரும் ரஜினி படங்களுக்கு ஜனாதிபதி மாளிகை வாசலிலேயே பேனர் வைக்க வாய்ப்புள்ளது.

ரஜினி

* ஐ.நா சபையிலேயே போய் ஐஸ்வர்யா பரதநாட்டியம் ஆடிவிட்டதால் ஜனாதிபதியாக ரஜினி பதவி ஏற்கும் விழாவிலும் அவர் ஆடுவார் என எதிர்பார்க்கலாம். அட்லீஸ்ட் தங்கச்சிக்கு விட்டுக்கொடுத்து செளந்தர்யா கூட இந்தமுறை நாட்டியம் ஆட வாய்ப்பிருக்கிறது மக்களே..

* ரஜினியே ஜனாதிபதி ஆயிட்டா இந்த தனுஷ் ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா என்ன. 'வருங்கால முதல்வர் தங்க மகன் தனுஷ்'னு அவரது பேனருக்கு பக்கத்துலேயே இவரது பேனரையும் வைத்து பேலன்ஸ் செய்வார்கள்.

* தமிழ்நாட்டுல இருந்தே அடிக்கடி இமயமலைக்குப்போன ரஜினிகாந்த், இப்ப டெல்லிக்கே போவதால் உசிலம்பட்டிக்கு பஸ்ஸுல போயிட்டு வர்றதுமாதிரி இனி அடிக்கடி பக்கத்தில் இருக்கும் இமயமலைக்குச் சென்றுவர அதிகமானவாய்ப்பு இருக்கின்றது.

* பஞ்ச் பேசுவதற்கென்றே தமிழ்சினிமாவுக்கு தாரைவார்த்துக்கொடுக்கப்பட்ட ரஜினி அங்கே மட்டும் சும்மா இருப்பாரா என்ன... 'எத்தனையோ நடிகர்கள் க்ரோர்பதியா இருக்கலாம்; ஆனா சிலபேர்தான் ஜனாதிபதி ஆகலாம்', 'அல்லோபதி.. ஹோமியோபதி.. டெலிபதி.. நான்தான் இப்போ ஜனாதிபதி' நல்லவங்களுக்கு ஆண்டவன் முதல்வர் போஸ்டிங் கொடுப்பான், ரொம்ப நல்லவங்களுக்கு ஜனாதிபதி போஸ்டிங்கே கொடுப்பான்... எச்சச்ச கச்சச்ச கச்சச்சா...' னு வாயில் வந்த எதையாவது பஞ்ச் டயலாக்காக அடித்துப் பால் காய்ச்சலாம்.

வழக்கமாக ஏதாவது விழா என்றாலே குட்டிக்கதை சொல்லும் ரஜினிகாந்த் இங்கேயும் ஏதாவது குட்டிக்கதைகளை அவிழ்த்துவிடலாம். கதையே கிடைக்கவில்லை என்றாலும் அட்லீஸ்ட் அவரது மருமகன் தனுஷ் நடித்த 'குட்டி' படத்துக் கதையையாவது சொல்லி மேனேஜ் செய்வார்  என எதிர்பார்க்கலாம்.

 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

24.04.2005: உலகின் முதல் குளோனிங் நாயான ஸ்னப்பி உருவாக்கப்பட்ட தினம் இன்று!

 

 
snuffy

 

தென் கொரியாவில் இருக்கும் சியோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழுவானது   `குளோனிங்' மூலம் உருவாக்கப்பட்ட `ஸ்னப்பி' என்ற பெயருள்ள உலகின் முதல் நாயை இதே நாளில் உருவாக்கி சாதனை படைத்தார்கள்.

அதற்கும் மேலாக, தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட நாய்க்குட்டிகளையும் `குளோனிங்' முறையில் உருவாக்கி உலகையே வியக்க வைத்திருக்கிறார்கள்.

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

“பறவைங்க குடிக்க கேன் வாட்டரா இருக்கு..?!’ வறட்சியிலும் பறவைகளைக் காக்கும் சிறுவர்கள்

 
 

பறவைகள்

                      
மிழகம் முழுவதும் வறட்சி கோரத்தாண்டவமாடுகிறது. பெண்கள் தலையில்.. இடுப்பில் என குடத்தை வைத்துக்கொண்டு நீண்ட தூரம் தண்ணீருக்காக அலைவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. இத்தனை வறட்சிக்கு நடுவிலும் பறவைகளுக்கு மறக்காமல் தண்ணீர் வைத்து அவற்றை காத்து வருகிறார்கள் கரூர் மாவட்டம் தாந்தோனிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை கிரமத்தைச் சேர்ந்த சிறுவர்கள். ஆச்சர்யப்பட்டு கிராமத்தை சுற்றி வந்தோம்.

கிராமத்தில் உள்ள அத்தனை குளங்களும் வெடித்து பாளம் பாளமாக தலைவிரிகோலமாக காட்சியளிக்கிறது. ஊரில் உள்ள போர்வெல்லும் தண்ணீர் அடி ஆளத்துக்கு போய்விட, தண்ணீர் இல்லாததால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறைதான் குளிக்கிறார்கள் அவ்வூர் மக்கள்.

ஆனால் அத்தனை வீடுகளின் முன்னாலும் ஓட்டு சட்டியிலும், பிளாஸ்டிக் ஏனத்தில், சில்வர் டபராவில் தண்ணீரும், அப்படியே சாப்பிட அரிசி சாதம் உள்ளிட்ட உணவு பொருட்களையும் வைத்து 'பகிர்ந்து' பசி போக்குகிறார்கள்.

சிறுவர்கள்


ஐந்தாம் வகுப்பு படிக்கும் அமிர்தஸ்ரீ மற்றும் பிரியங்கா என்ற சிறுமிகளிடம் பேசினோம். "ஒரு மாசத்துக்கு முந்தி சனிக்கிழமை லீவுல பக்கத்துல உள்ள குளத்துக்கு விளையாடப் போனோம். அப்ப, குளத்துல நாலஞ்சு காக்கா செத்து கிடந்துச்சு. பாக்கவே கஷ்டமாப் போச்சுண்ணா.  ‘அதுக செத்ததுக்கு என்ன காரணம்'னு எங்க ஆசிரியர் தர்மலிங்கம் சார்கிட்ட கேட்டோம். அவர்தான்,'வரலாறு காணாத வறட்சி நிலவுது. நமக்கே குடிக்க தண்ணீர் கிடைக்கலை. பாவம், பறவைகள் என்ன பண்ணும்?. அதான், கடுமையான வெயில்ல தண்ணீர் கிடைக்காம செத்து போயிருக்கும். இந்த வறட்சிக்கு காரணமே மரங்களை அழித்ததுதான். அதனால்தான், மழை பெய்யாம இப்படி வறட்சி வந்துட்டு. இருக்கிற மரங்களை நாம் வெட்டுறதோட சரி. யாரும் ஒரு மரம் வளர்க்க விரும்புறதில்லை.

பறவைகள்

ஆனால், பறவைகள் மரங்களில் இருக்கும் பழங்களை கொட்டையோட சாப்பிட்டு, அந்த கொட்டையை தனது கழிவோடு சேர்த்து காடுகள்ல போடும். அப்படி போடும் விதைகள்தான் செடியா முளைச்சு மரமா பெருகி, காடா பரவும். ஆனா செல்போன் டவர் அது இதுனு  நம்ம வசதிக்காக கதிரியக்க வஸ்துகளை பெருக்கி, பறவை இனங்களை ஒவ்வொண்ணா அழிச்சுட்டு வர்றோம். சிட்டுக்குருவி இனமே அழிஞ்சது அப்படித்தான். அதனால்,நாம இல்லாமல் பறவைகள் வளரும். ஆனால், பறவைகள் இல்லைன்னா, நம்ம வாழ்க்கை சுழற்சி பாதிக்கும்'னு புரியிற மாதிரி சொன்னார்.

அதுலேருந்து பறவைகள் மேல பாசம் வந்திருச்சு. அதுகளைக் காப்பாத்த என்ன பண்ணலாம்னு ஊர்ல உள்ள பிள்ளைங்க பேசி முடிவு பண்ணினோம். எங்களுக்கு கெடைக்கிற தண்ணியை அதுங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கலாம்னு முடிவு பண்ணினோம்.

கடந்த இருபது நாளா இப்படி வீடுகளுக்கு வெளியே பாத்திரங்களில் தண்ணீரும், அரிசிச் சோறு வைச்சோம். ஆரம்பத்துல பறவங்க வரல. இப்ப எங்க கூட ஃப்ரெண்டாகிடுச்சுங்க. இனி அதுகளை காப்பாத்துறதுதான் எங்க வேலண்ணா"

முகிலன்


முகிலன், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன்:

“முன்னலாம் எங்களுக்கு பொழுதுபோக்கே ஓணானை அடிக்கிறது, பறவங்களை விளையாட்டுக்கு அடிக்கிறதுதான். ஆனா எங்க ஃப்ரெண்ட்ஸ் சொன்னதுக்கு அப்புறதாம் பறவங்க அருமை தெரிஞ்சது. அதான் ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி மறக்காம அதுகளுக்கு சாப்பாடும், தண்ணீயும் வைச்சிடுறோம்''.

உணவு

 

 அந்த ஊரை சேர்ந்த தியாகராஜன் என்பவரிடம் பேசினோம்.  "வேகாத வெயில்ல தண்ணீர் எடுத்துட்டு வாறோம். அதப்போய் பறவைங்களுக்கு வைச்சு வேஸ்டாக்குறாங்களேனு ஆரம்பத்துல பசங்க மேல செம கோவம் வந்துச்சு. ஆனா அந்தப் பறவைங்க வந்து குடிக்கிற அழகப் பார்த்ததுமே தண்ணீருக்காக அலையுற கஷ்டம் மறக்க ஆரம்பிச்சது. இப்ப நாங்களும் அதுக்காக பார்த்து பார்த்து தண்ணீர் எடுத்து வைக்கிறோம். சில வீட்டுக்கு சில பறவைங்க ரெகுலர் கஸ்டமரா வந்துட்டுப் போகுது. இனி தீபாவளிக்கு கூட வெடிவெடிக்க கூடாதுனு ஊர்ல முடிவு பண்ணிட்டோம்" என்றார். ஒவ்வொரு வீட்டில் கூரையில் இருக்கும் தண்ணீரில் தாகம் தீர்த்து, ரெற்கை நனைத்து குதியாட்டம் போட்டு மகிழ்ச்சியாக கிளம்புகிறது பறவைகள்.

பறவைக்குத் தண்ணீர்

மீதமிருந்த தண்ணீரில் உடலை நனைத்து, வெக்கை தீர்த்து குதியாளம் போட்டன. அப்போது தெறித்து பரவியது நீர்த்துளிகள் மட்டுமல்ல, அந்த ஊர் சிறார்களின் கைக்கொள்ளா கரிசனமும்தான்!.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, steht und Anzug

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரும், இந்நாளில் சர்வதேசக் கிரிக்கெட் நடுவர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான குமார் தர்மசேனவின் பிறந்தநாள்.

Happy Birthday Kumar Dharmasena

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

கிரிக்கெட் உலகின் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று பிறந்த நாள்.

இந்திய கிரிகெட் இதுவரை கண்டிராத இந்த சாதனையாளன்
இன்றுவரை கிரிக்கெட் உலகின் கடவுளாகவே பார்க்கப்படுகிறார் சாதனைகளில் சாதனை செய்தவர்
தன் வாழ்க்கைக்காலத்தின் பாதிக்காலத்தை கிரிக்கெட்டுக்காகவே வாழ்ந்து காட்டி பெருமை சேர்த்தவர்

25 வருடகால கிரிக்கெட் வாழ்க்கையை வாழ்ந்து, இந்திய கிரிக்கெட் மட்டுமல்லாது
உலக கிரிக்கெட் அரங்குகளிலும் முத்திரை பதித்த சாதனைச் சிகரம்!

சாதனைகளில் சரித்திரம் படைத்து உச்சம் தொட்ட Sachin Tendulkar வசம் தான் அநேக கிரிக்கெட் துடுப்பாட்ட சாதனைகள் இருக்கின்றன.

சூரியனின் இனிய வாழ்த்துக்கள்
Happy Birthday Sachin Tendulkar

Link to comment
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, Innenbereich
 

ஏப்:24 ’எழுத்து சிங்கம்’ #ஜெயகாந்தன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு...

காலக் குடுவையில் தமிழ்ச் சமூகத்தைக் குலுக்கிப் போட்ட எழுத்துச் சிங்கம் ஜெயகாந்தனின் பெர்சனல் பக்கங்கள் இதோ...

ரயிலில் டிக்கெட் இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்தியோகங்கள்... மளிகைக் கடைப் பையன், டாக்டரிடம் பை தூக்கும் வேலை, மாவு மெஷின் கூலி, தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றது, டிரெடில் மேன், அச்சுக் கோப்பாளர், பவுண்டரியில் இன்ஜின் கரி அள்ளிப்போட்டது, இங்க் ஃபேக்டரியில் கை வண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர், பத்திரிகை புரூஃப் ரீடர், உதவி ஆசிரியர். பின் முழு நேர எழுத்தாளர்!

சிறுகதைகள் 200-க்கு மேல், குறுநாவல்கள் 40, நாவல்கள் 15, கட்டுரைகள் 500, வாழ்க்கைச் சரிதத்தை ஆன்மிக, அரசியல், கலையுலக அனுபவங்களாகப் பிரித்து மூன்று புத்தகங்கள் என எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன்!

சுருதிசுத்தமாக வீணை வாசிக்கத் தெரியும். இசை படித்தவர். நல்ல சினிமா பாடல்களாக இருந்தால் சுருதி கூட்டி குரல் இசைய, லேசாக விரல்கள் தாளமிட, இது இந்த ராகம் என நண்பர்களிடம் சொல்வார்!

'இந்த உலகம் உங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் நான் ஆச்சர்யப்பட மாட்டேன். இந்த உலகத்தை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால், ஆச்சர்யம் மட்டுமல்ல; வருத்தமும் அடைவேன்' என்று ஜே.கே-விடம் சொன்னாராம் எஸ்.எஸ்.வாசன். நண்பர்களிடம் இதைச் சொல்லி, தனக்கு உத்வேகம் கிடைத்த விதத்தைச் சொல்லிப் பெருமைப்படுவார்!

காமராசரின் மீது மிகுந்த மரியாதையும் அன்பும்கொண்டவர். முதல்வராக இருந்தும், தனது தாய்க்கு வசதிகள் செய்து தராத அவரது நேர்மையைச் சொல்லும்போதெல்லாம் தழுதழுப்பார். காமராஜரை காங்கிரஸில் இருந்த கம்யூனிஸ்ட் எனக் குறிப்பிடுவார்!

ஜெயகாந்தனின் சபையில் பெரும்பாலும் அவரே பேசுவார். மற்றவர்கள் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். கேள்வியும் அவரிடம் இருந்தே வரும். சிறிது நேரம் மௌனம் காப்பார். பிறகு பதிலும் அவரிடம் இருந்தே வரும்!

ஜெயகாந்தனின் சபையில் அடிக்கடி ஆஜரானவர்கள், நாகேஷ், எஸ்.வி.சுப்பையா, சந்திரபாபு, பீம்சிங், எம்.பி.சீனிவாசன், கண்ணதாசன், இளையராஜா, பார்த்திபன், லெனின் ஆகியோர் அடக்கம்!

ராஜராஜன் விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, சாகித்ய அகாடமி, ஞானபீடம், நேரு விருது (சோவியத் நாடு கொடுத்தது) பத்மபூஷண் இவை அனைத்தும் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் ஜே.கே-தான்!

1977 சட்டமன்றத் தேர்தலில் தி.நகர் தொகுதியில் சிங்கம் சின்னத்தில் ஜெயகாந்தன் போட்டியிட்டார். 481 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 'சிங்கத்துக்குப் பிடித்த உணவு நம்ம டெபாசிட் போலும்' என நகைச்சுவையாக அதை எடுத்துக்கொண்டார்!

கவிஞர் பாரதிதாசன் ஜெயகாந்தனின் மேல் பிரியம்கொண்டவர். திருவல்லிக்கேணி பாண்டியன் ஸ்டுடியோவில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இப்போதும் ஜே.கே-யின் வீட்டில் இருக்கிறது!

'என் வாசகனுக்குப் பிடித்தவிதமாக எல்லாம் எழுத முடியாது. நான் எழுதுவதை விரும்புகிறவனே எனது வாசகன்' எனச் சொல்வார். எழுதாமல் இருப்பதைப் பொருட்படுத்துவதில்லை. கேட்டால், 'நான் எழுதியதை எல்லாம் முதலில் படிங்க' என்பார். இன்னும் கேட்டால், 'உங்க அம்மாதான் உன்னைப் பெத்துப்போட்டா. அதுக்காக, இன்னும் பெத்துக் குடுன்னு கேட்டுட்டே இருப்பியா?' என்பார் கோபமாக!

பயணங்கள் என்றாலே நண்பர்களோடுதான். கிண்டலும் நகைச்சுவையும் கரை புரண்டோடும். யாரையும் புண்படுத்துவதாக அந்த நகைச்சுவை அமையாது!

கமல் தன் ஒவ்வொரு திரைப்படத்தையும் ஜெயகாந்தனுக்கு தனியாகப் போட்டுக் காண்பித்து, அபிப்பிராயத்தைக் கேட்டு அறிந்துகொள்வார்!

பாரதியார் பாடல்கள், திருக்குறள், சித்தர் பாடல்கள் எதுவாக இருந்தாலும் அதனை வெறுமனே சொல்ல மாட்டார் ஜே.கே. ஒரு சந்தமும், சுதியும் சேர்ந்து வர அர்த்தங்கள் இயல்பாக வெளிப்படும்!

மிகுந்த ஞாபகசக்திகொண்டவர். தான் படித்த இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டுவதிலாகட்டும், தனது பொருட் களைக் கவனமாக வைத்திருப்பதிலாகட்டும் மறதியைப் பார்க்கவே முடியாது!

ஜெயகாந்தனின் சிறு வயதுத் தோழர் கி.வீரமணி.

ஜெயகாந்தனின் படைப்புக்களான 'புதுச் செருப்பு கடிக்கும்', 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'காவல் தெய்வம்', 'உன்னைப்போல் ஒருவன்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'கருணையினால் அல்ல', 'யாருக்காக அழுதான்' ஆகியவை திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன!

காலையில் சிறிது நேரம் யோகாசனம். அதற்குப் பிறகுதான் உணவு. எந்தக் குளிரையும் பொருட்படுத்தாமல் பச்சைத் தண்ணீரில் குளித்துவிடுவார் ஜே.கே!

ஜே.கே-யின் பிறந்த நாள் ஏப்ரல் 24 - 1934. ஒவ்வொரு வருடமும் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முதல் நாளில் இருந்தே நண்பர்கள் குவிய ஆரம்பித்துவிடுவார்கள். சபை களை கட்டி பாட்டும், சிரிப்பும், பேச்சுமாகக் கலகலக்கும். அன்றைக்கு எல்லோருக்கும் உணவு அவர் வீட்டில் பரிமாறுவது வழக்கம்

ஆசையுடன் நாய் வளர்த்தார். 'திப்பு' எனச் செல்லமாக அழைப் பார். 'திப்பு' இறந்த துயரத்துக்குப் பிறகு பிராணிகள் வளர்ப்பதை விட்டுவிட்டார்!
'எங்களுக்குள் இருப்பது முரண்பாடு இல்லை; வேறுபாடு. முரண்பாடு என்பது தண்ணீரும் எண்ணெய்யும் மாதிரி... சேராது. வேறுபாடு தண்ணீரும் பாலும் போல... சேர்ந்துவிடும்' என்று கலைஞர் தன்னைப்பற்றி சொன்னதை, ரசித்து ரசித்துக் குறிப்பிடுவார் ஜெயகாந்தன்!

'நாளை சந்திப்போம்...' என்பது மாதிரியான வாக்குறுதிகள் கொடுத்தால், கூடவே 'இன்ஷா அல்லா' என்று சொல்லிதான் முடிப்பார்!

ஒரு கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது "இன்றைக்கு நீங்கள் விஸ்வரூபம் காட்டவில்லையே, ஏன்?" என்றார் ஒரு வாசகர். உடனே "விஸ்வரூபம் என்பது காட்டுவது அல்ல; காண்பது" என்றார் ஜெயகாந்தன்.

'குப் குப்' என்று புகைவிட்டு... 'கூ கூ' என்று கூச்சலிட்டு... 'வருகுது வருகுது ரயில் வண்டி... வேகமாக வருகுது... புகை வண்டி.'-அவர் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் பாட்டுக் களில் இதுவும் ஒன்று!

எந்தப் பிரச்னை என்றாலும் அது சரியாகும் என்று நம்புபவர். எல்லாவற்றுக்கும் தீர்வுகள் உண்டு என்பதில் உறுதிகொண்டவர். ஒருபோதும் 'இது முடியாது' என்றோ, 'அவ்வளவுதான்' என்றோ அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வராது!

- பொக்கிஷம் ஆனந்த விகடன்

ஜெயகாந்தன்

 
jai_2368672f4_3157513f.jpg
 
 
 

ஞானபீட விருது பெற்ற தமிழ் படைப்பாளி

ஞானபீட விருது பெற்ற சிறந்த தமிழ் படைப்பாளியான ஜெயகாந்தன் (Jayakanthan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் விவசாயக் குடும்பத்தில் (1934) பிறந்தார். இயற்பெயர் முருகேசன். பள்ளிப் படிப்பில் அவ்வளவாக நாட்டம் இல்லாததால், 5-ம் வகுப்போடு படிப்பு நின்றது. பிறகு விழுப்புரத்தில் மாமா வீட்டில் வளர்ந்தார்.

* பொதுவுடைமைக் கோட்பாடுகளை யும் பாரதியாரின் எழுத்துகளையும் மாமாவின் வாயிலாக அறிந்தார். சிறிது காலத்துக்குப் பிறகு சென்னையில் குடியேறினார். ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணியாற்றினார். அங்கு பல தலைவர்கள் பேசுவதைக் கேட்டு இலக்கியத்தில் நாட்டம் பிறந்தது.

* வேலை செய்துகொண்டே புலவர் க.சொக்கலிங்கத்திடம் தமிழ், இலக்கிய, இலக்கணங்கள் கற்றார். காமராஜரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கடைகள், மாவு மில், தியேட்டர் என பல இடங்களில் வேலை செய்தார். கைவண்டி இழுத்தார். இதற்கிடையில், ஓய்வு நேரத்தில் எழுதும் பழக்கம் கொண்டிருந்தார்.

* இவரது முதல் சிறுகதை 1950-ல் ‘சௌபாக்கியம்’ என்ற இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் எழுதினார். ‘சரஸ்வதி’ இதழில் இவரது படைப்புகள் வெளிவரத் தொடங்கிய பிறகு, ஓரளவு பிரபலமானார். ‘தாமரை’, ‘கிராம ஊழியன்’, ‘ஆனந்த விகடன்’, ‘கல்கி’, ‘குமுதம்’ உள்ளிட்ட இதழ்களிலும் இவரது கதைகள் வெளிவந்து வரவேற்பை பெற்றன.

* 1958-ல் வெளிவந்த இவரது ‘ஒரு பிடி சோறு’ சிறுகதை இலக்கிய வாதிகளின் பரவலான பாராட்டைப் பெற்றது. இவர் பல்வேறு இதழ்களுக்கு அளித்த பேட்டிகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது. தனது அரசியல், கலையுலக, இதழியல், ஆன்மிக அனுபவங்களைத் தனித்தனி நூல்களாகப் படைத்தார்.

* ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘ஊருக்கு நூறு பேர்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன. ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, ‘புதுச்செருப்பு கடிக்கும்’ ஆகிய திரைப்படங்களை இவரே இயக்கினார்.

* ஏறக்குறைய 200 சிறுகதைகள், 30-க்கும் மேற்பட்ட குறுநாவல்கள், 17 நாவல்கள், ஏராளமான கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் என நிறைய எழுதினார். இவர் எழுதிய முன்னுரைகள் தொகுக்கப்பட்டு தனி நூலாக வெளியிடப்பட்டது. இவரது பல படைப்புகள் இந்திய மொழிகள் உட்பட உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

* ராஜராஜன் விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, 1972-ல் சாகித்ய அகாடமி விருது, 2002-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது ஆகிய விருதுகளைப் பெற்றார். 2009-ல் பத்மபூஷண் விருது பெற்று இலக்கியத்துக்காக பத்மபூஷண் விருது பெற்ற முதல் படைப் பாளி என்ற பெருமை பெற்றார். ரஷ்ய விருதையும் வென்றார்.

* இவருக்கு நன்றாக வீணை வாசிக்கத் தெரியும். இலக்கியம், அரசியல், கலை, இதழியல் உள்ளிட்ட துறைகளில் 50 ஆண்டு காலம் தீவிரமாக செயல்பட்டவர். குடிசைப் பகுதி மக்களின் வாழ்வை தமிழ் இலக்கியத்துக்குள் முதன்முதலில் கொண்டுவந்தவர்.

* சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்ட படைப்பாளி. தனக்கு சரி என்று பட்டதை துணிச்சலாக வெளியிடும் தன்மை கொண்டவர். 20-ம் நூற்றாண்டின் இணையற்ற படைப்பாளிகளில் ஒருவராகப் போற்றப்பட்ட ஜெயகாந்தன் 81-வது வயதில் (2015) மறைந்தார்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

101 வயதில் ஒட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற இந்தியப்பாட்டி

இந்தியாவைச் சேர்ந்த 101 வயது மூதாட்டி மான் கவுர் 100மீட்டர் ஓட்டப் போட்டி ஒன்றில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

பிபிசிபடத்தின் காப்புரிமைAFP Image caption'சாதனைப் பாட்டி' மான் கவுர்

நியூசிலாந்தின் ஆக்லான்ந்து நகரில் நடைபெற்ற, உலக மூத்தோர் போட்டியில் அவர் பதக்கம் வென்றார்.

நூறு மற்றும் அதற்கும் அதிகமான வயதுடையோருக்கான பிரிவில் போட்டியிட்ட ஒரே வேட்பாளர் அவர் மட்டுமே.

அந்தப்பாட்டி 100மீட்டர் தூரத்தை 74 நொடிகளில் ஓடினார்.

அவரை 'சண்டிகரின் அதிசயம்' என்று நியூசிலாந்தின் ஊடகங்கள் புகழ்ந்துள்ளன.

விளையாட்டுபடத்தின் காப்புரிமைAFP Image captionதொடர்ந்து ஓடப் போவதாக மான் கவுர் கூறுகிறார்

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஓடுவதற்கு அனுமதிக்கப்பட்ட அவர், தனது 93ஆவது வயதில்தான் ஓட்டப்போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்.

இதுவரை 17 தங்கப்பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.

தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

BBC

Link to comment
Share on other sites

உணவு வீணாவதைத்தடுக்க லண்டனில் வித்தியாசமான முயற்சி

உலக அளவில் 11% மக்கள் மிகவும் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ நா கூறுகிறது.


அதேசமயம் உலகின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி வீணாகிறது.


இப்படி உணவு வீணாவதைத்தடுக்க லண்டனில் நூதன திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இது உள்ளூர் மக்களிடமும் உணவு வர்த்தகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.


அது என்ன திட்டம்? அதை மற்ற பெருநகரங்களும் பின்பற்ற முடியுமா? பிபிசியின் நேரடி செய்தி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.