Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

சாதனை, துயரம், சர்ச்சை, அதிரடி... 2016 டைரியில் இடம்பிடித்த பளிச் பெண்கள்!

 

2016-ம் ஆண்டில், பெரும் பொறுப்புகள், விருதுகள், சாதனைகள், துணிச்சல், துயரம், சர்ச்சை என நம் நினைவில் தங்கிய பெண்கள் இவர்கள்!

பெண்கள்


ஆங் சன் சூகி


மியான்மரில், அரை நூற்றாண்டுக்கு மேலாக நடந்த ராணுவ ஆட்சிக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்று, அந்நாட்டின் புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில், தேசிய ஜனநாயக முன்னணி தலைவராகப் பதவியேற்றார் ஆங் சன் சூகி. 1990ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 492 இடங்களில் 392 இடங்களில் வெற்றியடைந்து பெரும்பான்மை பெற்றாலும், ராணுவச் சட்டம் காரணமாக ஆங் சன் சூகி கட்சி ஆட்சிக்கு வரமுடியாத சூழல் உருவானது. 15 ஆண்டுகள் வீட்டுக்காவல் சிறை வைக்கப்பட்டிருந்த ஒரே பெண் அரசியல் தலைவர் சூகி என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ல், அவர் கைகளுக்குக் கிடைத்தது தாமதிக்கப்பட்ட நீதி!

irom_17347.jpg

இரோம் சர்மிளா


மணிப்பூரில் ராணுவத்துக்கு வழங்கப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக்கோரி, 2000 ஆண்டில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கி, தொடர்ந்து 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து, உலகின் மிக நீண்ட நாட்கள் உணவுவிரதப் போராளி என்ற சிறப்புப் பெற்றார், இரோம் ஷர்மிளா. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது உண்ணா போராட்டத்தை கைவிட்டவர், தனது போராட்ட முறையை அரசியல் வழியில் தொடரப் போவதாக அறிவித்தார். பூவின் போராட்டம் தொடர்கிறது!

THE_6_17524.jpg

அன்னை தெரசா


தனது வாழ்நாள் முழுவதையும் ஏழை மக்களுக்காகவும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அர்ப்பணித்தவர் அன்னை தெரசா. அவரின் சேவையைப் பாராட்டி அன்னைக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் இறந்து 19 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், வாடிகன், புனித பீட்டர் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் அவருக்கு புனிதர் பட்டம் அறிவித்தார். யுகங்கள் கடந்த அன்னை!

_17102.jpg

மம்தா பானர்ஜி


மேற்கு வங்கத்தின் தற்போதைய முதல்வரான மம்தா பானர்ஜி, தனது அரசியல் வாழ்வை 1970களில் தொடங்கி, காங்கிரஸில் முக்கிய பதவிகள் வகித்து, 1997ல் அக்கட்சியில் இருந்து பிரிந்து, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். 2011 தேர்தலில் வெற்றிபெற்று, மேற்கு வங்கத்தில் அதுவரை 34 ஆண்டுகள் தொடர்ந்து வந்த கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் 211 தொகுதிகளில் வென்று, இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தார். இந்திய அரசியலின் முக்கிய ஆளுமைப் பெண்களுக்கு, இந்த ஆண்டு மகத்தான ஆண்டு!

kiranbedi01_17337.jpg

கிரண் பேடி


கிரண் பேடி, இந்திய காவல் பணியில் 1972ம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரி. 2007ம் விருப்பப் பணிஓய்வு பெற்றவர், 2011ல் நடந்த இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கத்தில் இணைந்து சிறப்பான பங்காற்றினார். 2016 மே மாதம் புதுச்சேரி மாநில ஆளுநராகப் பொறுப்பேற்று, பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் மேடம்!

archana_ramasundram_17516.jpg

அர்ச்சனா ராமசுந்தரம்


பெண் ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம், இந்திய - நேபாள எல்லையைப் பாதுகாக்கும் 'சாஷாஸ்ட்ரா சீமா பால்' என்ற  துணை ராணுவப்படையின் தலைவராக இவ்வாண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றார். துணை ராணுவப்படையின் தலைவராக பெண் அதிகாரி நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது சிறப்புச் செய்தி!

_17049.jpg

கிரிஜா வைத்தியநாதன்


தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவின் வீடு, அலுவலகம், ஆகிய இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி நகை, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததால், அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 'இவருக்கு பதில் இந்த இடத்துக்கு வரப்போவது யார்?' என்ற பெரிய கேள்விக்குறிக்கு புன்னகை பதிலாக வந்து நின்றார், கிரிஜா வைத்தியநாதன். டெல்லியில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில், கிரிஜா வைத்தியநாதன் தமிழக அரசின் தலைமைச் செயலாளராகப் பதவியேற்றுக்கொண்டார்!

p_susheela_14566_17283.jpg

பி.சுசீலா


மூத்த பின்னணிப் பாடகி பி.சுசீலா, இவ்வருடம் கின்னஸ் சாதனை படைத்தார். ஆந்திர மாநிலத்தில் பிறந்த இவர், திரைத்துறைக்கு வந்து 60 வருடங்கள் ஆகிய நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில், 17,695 பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். பல மனங்களை குளிர்வித்த அந்தக் குரலுக்கு, இது மற்றுமொரு கிரீடம்!

_17013.jpg

பூங்கோதை


மக்காச்சோள சாகுபடியில் சாதனை படைத்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விவசாயி பூங்கோதைக்கு, பிரதமர் நரேந்திர மோடி 'கிர்ஷி கர்மான்' விருதும் 2 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கியதுடன், குனிந்து, அவர் பாதங்கள் நோக்கி கைநீட்டி வணங்கினார். கணவர் இறந்த பிறகு மனம் தளராமல் தான் மேற்கொண்ட முயற்சியில் சாதனை படைத்த பூங்கோதை, தமிழகத்துக்கும் பெரம்பலூர் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த பசுமைப் பெண்!

_17179.jpg

ஜெயந்தி


நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்தி வீர, தீர, சாகச செயல்களுக்காக தமிழக அரசு வழங்கும் இந்த வருடத்துக்கான 'கல்பனா சாவ்லா' விருது பெற்ற பெண். இவர் சேந்தமங்கலம் பகுதி மின் மயானப் பூங்காவின் மேலாளர். மயானத்தின் தோட்டப் பராமரிப்பில் இருந்து சடலங்கள் எரிக்கும் பணிவரை செய்துவரும் ஜெயந்தி, பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!

 பிரீத்தி மற்றும் ஜெயஸ்ரீ   


சென்னை, மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு துவங்கப்பட, கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட ரயிலை பிரீத்தியும், ஆலந்தூரில் இருந்து புறப்பட்ட ரயிலை ஜெயஸ்ரீயும் இயக்கினர். 2013ம் ஆண்டு சென்னை, மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த இவர்களுக்கு, 18 மாத பயிற்சிக்குப் பிறகு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. மெட்ரோ ரயில் என்ற வரலாற்று நிகழ்வில், பெண்களின் பங்களிப்பு கண்ணுக்கு அழகு!

_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0

சாக்‌ஷி மாலிக்


ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தவர் சாக்ஸி மாலிக். ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கே சொந்தம். ஃப்ரீ ஸ்டைல் 58 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்‌ஷிக்கு, மத்திய அரசு கேல் ரத்னா விருது வழங்கி கௌரவித்தது!

_17597.jpg

தீபா கர்மாக்கர்


ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் அடியெடுத்து வைத்த முதல் இந்திய வீராங்கனை, தீபா கர்மாக்கர். இவர் அந்தரத்தில் குட்டி கரணம் அடித்ததை தேசம் வியந்து ரசித்துக்கொண்டிருக்க, இறுதிப் போட்டியில் மயிரிழையில் வாய்ப்பை இழந்தவர், நான்காம் இடம் பிடித்தார். இருந்தாலும், இந்தியர்களின் மனங்களில் வீர மங்கையாக விஸ்வரூபம் எடுத்தார். ஒலிம்பிக்கில் தன் முதல் முயற்சியிலேயே இறுதிப் போட்டிக்குச் சென்ற தீபாவுக்கு, கேல் ரத்னா விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு!

PV-Sindhu_1_13100_17164.jpg

பி.வி.சிந்து


ரியோ ஒலிம்பிக் இறகுப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து. இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்றுக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையுடன் போட்டியில் கலந்துகொண்டவர், இரண்டாம் இடம் பிடித்து, இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். மத்திய அரசின் கேல் ரத்னா விருதுடன், பல பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்தன சிந்துவுக்கு!

தீபா மாலிக்


ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் குண்டு எறிதல் போட்டியில்  இந்திய வீராங்கனை தீபா மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம், பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் தீபா மாலிக்!

_17357.jpg

சுவாதி


சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய, பரபரப்பாகப் பேசப்பட்ட அகோர சம்பவம் இது. பலகட்ட விசாரணைகள், குழப்பங்கள், சந்தேகங்கள் என நான்கு மாதங்கள் மீடியாவில் தலைப்புச் செய்தியாக இருந்தார் சுவாதி. இந்த வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, வழக்கு முடிவுபெற்றது. ஆனால், சுவாதிகள் தொடர்கதை ஆனது இந்தச் சமூகத்தின் அவலம், அவமானம்!

_17403.jpg

 ஜெயலலிதா   


தமிழக அரசியலில் ஆறாவது முறை முதலமைச்சராக பதவியேற்றார், ஜெயலலிதா. பதவியேற்ற கையோடு, விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி, 100 யூனிட் மின்சாரம் இலவசம், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், டாஸ்மாக் கடை திறப்பு நேரம் குறைப்பு உள்பட 5 கோப்புகளில் முதலில் கையெழுத்திட்டார். செப்டம்பர் மாதம் 22ம் தேதி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை, அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்தும் அது பயனளிக்காமல் போக, டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். தங்கள் முதல்வரை இழந்து தமிழகமே ஸ்தம்பித்தது. இந்த இரும்புப் பெண்மணியின் இழப்பு, தமிழக அரசியலில் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் ஈடுசெய்ய முடியாதது!

_17520.jpg

சசிகலா   


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின், தமிழக அரசியலில் சடசடவென காட்சிகள் மாறின. 'அம்மாவுக்கு பின் யார்?' என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக கட்சியிலும், தமிழக அரசியலிலும் முக்கியப் புள்ளியாக முன்னிறுத்தப்பட்டு வரும் சூழல் இது.  'சின்னம்மா' என்ற வார்த்தை வைரல் ஆக, 2017 இவருக்கு எப்படி இருக்கும் என்பது முக்கியக் கேள்வியாக நிற்கிறது!

சினிமா, எழுத்து, அரசியல் என ஒவ்வொரு துறையிலும் 2016 ஆம் ஆண்டில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது.

vikatan

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

விரைவில் உடலின் கொழுப்பை குறைக்கும் 10 நிமிட உடற்பயிற்சிகள்

உங்கள் உடலில் உள்ள கொழுப்பை உடனடியாக குறைக்க எந்தெந்த உடற்பயிற்சிகளை 10 நிமிடங்கள் செய்தால் போதுமானது என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

 
 
விரைவில் உடலின் கொழுப்பை குறைக்கும் 10 நிமிட உடற்பயிற்சிகள்
 
கொழுப்பை எரிக்க உங்களுக்கு தோதுபடுகிற மாதிரி 10 நிமிட உடற்பயிற்சிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்ப தொடர்ந்து கீழே படியுங்கள்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் முறையை பொறுத்து 100-250 கலோரிகள் வரை குறைக்கலாம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள உத்திகளை பின்பற்றினால் உங்கள் உடல் நல்ல வடிவத்தை பெறும்.

ஏரோபிக் உடற்பயிற்சி நடனமான ஜூம்பா என்பது குஷியுடன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வழியாகும். இசையை உணர்ந்து, அதற்கேற்ப உடம்பை அசைந்து கொடுத்து, அதனால் ஊக்கமடைந்து உடல் எடையை குறைக்கலாம். ஜூம்பாவுடன் இணைந்து கொள்ள, நல்ல ஷூக்கள் மட்டுமே தேவை. உடல் எடை, பாலினம், கட்டுக்கோப்பின் அளவு மற்றும் இதர ஃபிசிகல் காரணிகளின் அடிப்படையில், ஒரு மணி நேரத்திற்கு 400-600 கலோரிகளை வரை எரிக்கலாம்.

வீட்டை சுத்தப்படுத்தி பொருட்களை ஒதுக்கினால், உடலை சற்று கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ளவும், அழுத்தத்தை நீக்கவும் உதவும். இதனுடன் சேர்த்து போனஸாக உடல் எடையும் குறையும். உங்கள் வீட்டு அலமாரியை 2 மணிநேரம் சுத்தப்படுத்தினால் போதும், அது 20 நிமிடங்களுக்கு ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வதற்கு சமமாகும். இதனால் 200-300 கலோரிகள் வரை எரிக்கப்படும். இருப்பினும் 10 நிமிடங்கள் துணி துவைப்பது போன்ற வேலைகளால் மட்டும் கொழுப்பு குறையும் என எண்ணி விடாதீர்கள். நீங்கள் ஈடுபடும் வேலையை ரசித்து செய்தால், 20-20% வரை உடல் எடை குறையும்.

10 நிமிடங்களுக்கு தீவிர இடைவெளி பயிற்சியில் ஈடுபட்டால், 150-250 கலோரிகளை வரை குறைக்கலாம். உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதனை முயற்சி செய்யலாம். இதய துடிப்புக்கு சவால் விடும் விசேஷமான உடற்பயிற்சி இது. வயது, சக்தி, தாங்கும் உறுதி மற்றும் உங்கள் உடலால் தாங்கப்படும் பயிற்சியின் எண்ணிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில், இந்த பயிற்சியின் வகையையும், அளவையும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இதனை அன்றாடம் பயன்படுத்தி வந்தால், உங்கள் தாங்கும் திறன் மேம்படும். ஆகவே உங்கள் தேவைகேற்ப இந்த பயிற்சியில் ஈடுபடுங்கள்.

ஸ்கிப்பிங் பயிற்சியை 10 நிமிடங்களுக்கு செய்யுங்கள். புஷ் அப் (10 முறை), குந்துகைகள் (15), க்ரஞ்சஸ் (25), ஸ்கிப்பிங் (முடிந்த வேகத்தில் 100-200 முறை). 1-2 நிமிடம் ஓய்வு எடுத்துக் கொண்டு, இந்த மொத்த சுற்றையும், உங்கள் உடலைப் பொறுத்து, 2-3 முறைகள் தொடர்ந்து செய்யுங்கள்.

சுறுசுறுப்பான நடை பழக்கத்தை அன்றாடம் 10-20 நிமிடங்களுக்கு செய்யலாம். முடிந்த வரை வேகமாக நடங்கள். கூடுதல் தசைகளுக்கு வேலை கொடுக்க, நடப்பதில் போட்டி கூட வைத்துக் கொள்ளலாம். அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் படி, 10 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாக நடந்தால் தோராயமாக 106 கலோரிகள் வரை குறைக்கலாம். இப்படி நடக்கையில், கைகளை நன்றாக மேலேயும் கீழேயும் அசையுங்கள். அப்போது தான் வேகமாக நடக்க முடியும்.
Link to comment
Share on other sites

அந்தஸ்து கடவுள் முன் செல்லாது
 
 

article_1482986882-images.jpgவணக்கஸ்தலங்களில் சிலர் அழையா விருந்தினர்கள் போல உள்நுழைந்து, அடாவடித்தனமான கட்டளைகளை மக்கள் மீது திணிப்பார்கள். சம்பந்தப்பட்ட தலங்கள், அல்லது நிறுவன சபையின் உறுப்பினர்கள் இதனைக் கண்டுகொள்வதில்லை. 

சில சமயங்களில் இந்த முகாமைத்துவக் குழு உறுப்பினர்களும் சர்வாதிகாரிகள் போல செயற்படுவதுண்டு.  

இறைவன் பொதுவானவன். அவரை வணங்கும் புனித பூமியும் பொதுவானதே என இங்கு வந்து, தங்கள் மன அழுக்கைக் கொட்டுவது என்ன நியாயம் ஐயா? கோவிலுக்குள் வந்தால் எல்லோரும் சமன்தான். இங்கு எந்தத் தலைவருக்கும் முன்னுரிமை அளிப்பது மகாபாவம். இதனை ஏற்பவருக்கும் இந்தப் பாவம் சேரும்.  

மௌனமாக வந்து, மௌனமாக இறைவழிபாடு செய்வதே உத்தமம். பதவி, பொருள், கௌரவம், அந்தஸ்து கடவுள் முன் செல்லாது. இறைவன் விரும்பாததை நல்லோர் பணிவுடன் புரிந்து ஒழுகுவார்கள். 

Link to comment
Share on other sites

தினமும் காலையில் கட்டாயம் செய்ய வேண்டிய நான்கு விஷயங்கள்!

 

புத்துணர்ச்சியுடன் தொடங்கும் ஒவ்வொரு நாளின் புதிய விடியலையும், அந்த நாளில் நாம் செய்யும் நான்கு விஷயங்கள் நம்மை மேலும்  உற்சாகப்படுத்தும். அவை தூங்கி எழுதல், குளித்தல், சூரிய ஒளி நம் மீது படுதல், காலை உணவு சாப்பிடுதல். இந்த நான்கு முறைகளையும் எப்படிச் செய்ய வேண்டும், அவற்றால் கிடைக்கும் நன்மைகள் குறித்த விபரங்களைக் கூறுகிறார் கிராமியக் கலைப் பயிற்சியாளரான மாதேஸ்வரன்.

காலை

விடியற்காலையில் எழுதல்!

தூக்கம்தான் ஒரு மனிதனுக்கு மிக முக்கிய ஆரோக்கியத்தைக் கொடுக்கும். அதனால் இரவு நேரங்களில் செல்போன், டிவி பயன்பாடுகளைக் குறைத்துக் கொண்டு, இரவு 9 - 10 மணிக்குள் தூங்குவதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்வதால் காலை 5 - 6 மணிக்கெல்லாம் இயல்பாகவே தூக்கம் கலைந்துவிடும்.

விடியற்காலையில் நாம் சுவாசிக்கும் காற்று, நம் உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுப்பதுடன் சுவாச மண்டலத்தை நல்ல முறையில் இயங்கச்செய்யும். அந்த நேரம் தவறாது யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என நமக்கு ஏதுவான எதாவது ஒரு பயிற்சியையாவது கட்டாயமாகச் செய்ய வேண்டும். இவைதான் நோய் நொடியில்லா, மருந்தில்லா ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளம். 

குறிப்பாக இன்றைக்கு பலரின் இரவுப் பொழுதை தூக்கத்துக்கு பதிலாக சமூக வலைதளங்களும், தொலைக்காட்சிகளுமே கைப்பற்றுகின்றன. இதனால் தூக்க நேரம் குறைகிறது. பொதுவாக நம் தூக்க நேரம் குறைய நம் உடலில் வெப்பம் அதிகமாகும். அதனால் அடுத்தடுத்து உடல் உறுப்புகளின் செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டு, பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். எனவே சீக்கிரம் படுத்து உறங்கி, சீக்கிரம் எழுவதே சிறந்தது.

காலை

குளிர்ந்த நீரில் குளியல்!

இன்றைக்கு பாத்ரூமில் ஹீட்டர் இருப்பதைத்தான் பலரும் விரும்புகின்றனர். பொதுவாக நம் உடல் வெப்பமாக இருப்பதால், உடல் சூட்டைத் தணிக்க குளிர்ந்த நீரினைக் கொண்டு குளிப்பதும், தூய்மையான குளிர்ந்த நீரை குடித்து வியர்வையின் வழியாக சூட்டை வெளியேற்றுவதுமே வழிகள். மாறாக சூடான நீரால் குளிப்பதால் உடல் மேலும் சூடாவதுடன், சோம்பல் உணர்வும் ஏற்படும்.

அருவியில், ஆறு/குளத்தில், வீட்டில் குளிப்பது என மூன்று வகையான குளியல்கள் உள்ளன. அதில் நீர் நம்மை அடிக்கும் குளியலான அருவியில் குளிப்பதுதான் உடல் செல்களை நன்றாகச் செயல்படத்தூண்டும். அடுத்து நாம் நீரினை அடிக்கும் நீச்சல் செய்யும் முறையான ஆற்றில்/குளத்தில் குளிப்பதாலும் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இவ்விரண்டு முறைகளையும் இன்றைய இயந்திரமயமான உலகில் பெரும்பாலானோரால் கடைபிடிப்பது கடினம் என்பதோடு, நகரப்பகுதியினரால் செய்யவும் முடியாது. அதனால் மூன்றாவதாக வீட்டில் குளிப்பதுதான் ஒரே தீர்வு. 

குளிப்பதே உடல் சூட்டைத் தணிப்பதற்காக என்பதால், எடுத்தவுடனே தலையில் நீர் ஊற்றுவதால் உடல் சூடு மீண்டும் கால் பாதத்துக்குதான் செல்லும். அதனால் முதலில் கால் பாதத்தில் இருந்து மேல் பாகங்களில் படுமாறு ஊற்றி இறுதியாக தலைக்கு தண்ணீரை ஊற்ற வேண்டும். இப்படி தினமும் காலையில் 6 - 7 மணிக்குள் குளித்துவிட வேண்டும்.

காலை

உடல் மீது சூரிய ஒளிபடுதல்!

தலைக்கு குளித்து சரியாக தலையை துவட்டாமல் விட்டுவிட்டால் தலையில் நீர் கோர்த்து, தலை பாரம், தலைவலி போன்ற பிரச்னை ஏற்படலாம். அதனால் குளித்த பின்னர் பத்து நிமிடங்கள், நம் உடல் மீது சூரிய ஒளி படும்படி நிற்பதால் உடலில் இருக்கும் தேவையற்ற நீர் வெளியேறிவிடும்.

இன்றைக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நம்மிள் பெரும்பாலானோருக்கும் அதிக உடல்நலக்குறைபாடுகள் வருவதற்கு காரணமே, சூரிய ஒளி நம்மீது படாததுதான். காலையில் 6 - 8 மணி நேரத்திற்குள், 3 - 10 நிமிடங்கள் வரை மிதமான சூரிய ஒளி நம் உடல் மீது படுமாறு நிற்கலாம். சூரிய ஒளி நம் உடல் மீது படுவதால், இரத்த ஓட்டம் சீராக இயங்கும். உடலில் உள்ள லட்சக்கணக்கான செல்களும் நன்றாக வேலை செய்யும். தோல் நோய்கள் வரவு கட்டுப்படும்.

தினமும் நம் உடல் மீது சூரிய ஒளி படவேண்டும் என்பதற்குத்தான், சூரிய நமஸ்காரம் செய்யும் முறையை நம் முன்னோர்கள் கடைபிடித்தனர். 

காலை

காலை உணவு சாப்பிடுதல்!

ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான ஆற்றலில், அதிகபட்ச ஆற்றலைக் கொடுப்பவை காலை உணவுதான். மாறுபட்ட உணவு முறைகள், துரித உணவுகளைச் சாப்பிடுவதால் காலை நேரம் பலருக்கும் பசி எடுப்பதில்லை. பலரும் தெரிந்தே காலை உணவைத் தவிர்க்கின்றனர். இதனால் பலருக்கும் அடிக்கடி உடல் நலன் பாதிக்கப்படுகிறது. 

காலை நேரம் சிறுதானிய உணவுகள், அதிகம் எண்ணெய் சேர்க்கப்படாத உணவுகள் சாப்பிடுவதே சிறந்தது.

vikatan

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 29
 
 

images%281007%29%281%29.jpg1845: மெக்ஸிகோவின் மாநிலமான டெக்ஸாஸை சர்வதேச எல்லை நிர்ணயத்திற்கிணங்க தனது மாநிலமாக்கியது அமெரிக்கா.

1890: அமெரிக்கப் படையினர் 200 இற்கும் அதிகமான செவ்விந்தியர்களை சுட்டுக்கொன்றனர்.

1911: சீனாவின் கிங் வம்ச ஆட்சியலிருந்து மொங்கோலியா சுதந்திரம் பெற்றது.

1930: இந்தியாவின் சேர் முஹமட் இக்பால் (அல்லாமா இக்பால்) பாகிஸ்தான் உருவாக்கத்திற்காக இரு நாடுகள்  கொள்கையை முன்வைத்தார்.

1972: அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் விமானமொன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதால் 101 பேர் பலி.

1984: இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி 508 ஆசனங்களில் 401 ஆசனங்களை சுவீகரித்தது.

1996: கௌதமாலாவில் அரசாங்கத்திற்கும் கௌதமாலா தேசிய புரட்சி ஒன்றியம் எனும் அமைப்பிற்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் மூலம் 30 வருடகால சிவில் யுத்தம் முடிவடைந்தது.

1997: ஹொங்கொங்கில் பறவைக்காய்ச்சல் அச்சம் காரணமாக 12.5 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன.

1998: கம்போடியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட இனப்படுகொலைகளுக்காக கெமரூஜ் தலைவர்கள் மன்னிப்பு கோரினர்.

2001: பெருவின் தலைநகர் லீமாவில் பெரும் தீ பரவியதில் 274பேர் கொல்லப்பட்டனர்.

.tamilmirror.lk
Link to comment
Share on other sites

ஆடு விட்ட சாபம்... காலுக்கடியில் ஆஸ்கர்.. 2016ன் உலக பரபரப்புகள்! #2016Rewind

 

என்ன்ன்னனனன???!!!!!! என நம்மள ஆச்சர்யப்படுத்தும் சம்பவங்களும், " என்ன??? சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா???!!!" என்கிற மாதிரியான  எதிர்பாரா நிகழ்வுகளும் நம்மள சுத்தி நடந்துக்கிட்டேத் தான் இருக்கு.  அப்படி 2016 யில் நம்மை "ஆஹா..." போட வைத்த சில சம்பவங்கள்...

1. ஹலோ... ட்ரம்ப்பா? டொனால்ட் ட்ரம்ப்பா??!! :

2016

"ஒபாமா ஒரு ஓஷன் (Ocean)... ட்ரம்ப்போ ஒரு காஷன் (Caution)"... என உலகமே அலறிக் கொண்டிருந்தது. ஹிலரி தான் ஹிஸ்டரி படைப்பாங்கன்னு கணிச்ச எல்லோருடய கண்கள்லயும் மண்ணைத் தூவிட்டு, "ஹிஸ்டரின்னா... வரலாறு தானே..." என்று கேட்டபடியே உலக வரலாற்றுல தன்னோட வெற்றியின் மூலமா இடம் புடிச்சாரு ட்ரம்ப். இது தான் இந்த வருஷத்துல நடந்த மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம்னு ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் தலைல கைய வெச்சுட்டு உட்கார்ந்துட்டாங்க . இந்த வெற்றியின் காரணமா அமெரிக்காவுல மட்டுமில்லாம, உலகளவுல பல அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்கிற பயம் பலரிடமும் ஏற்பட்டிருக்கு. ஒரு பக்கம் இந்த அதிர்ச்சியிலருந்து இன்னும் பல பேர் மீளவே இல்ல... ட்ரம்ப்போ "வரலாறு மிக முக்கியம் அமைச்சரே..."ன்னு கூலாக அரசியல் தொழில்ல கால் பதிக்கத் தொடங்கிட்டாரு. 

2. பிரிஞ்சது "பிராட்  ஏஞ்சலினா ", கடிச்சது கொளத்து மீனா ??!! : 

Brangelina_22140.jpg

" இன்னா... லவ்வ்வுவுவு...ப்ப்ப்பாபா... சான்ஸே இல்ல. ரோமியோ, ஜூலியட்டே தோத்துருவாங்க..." அப்படி, இப்படின்னு ஊரு, உலகமே கொண்டாடுன ஹாலிவுட் ஜோடி... யாரு கண்ணு பட்டதோ தெரில, கண்ணுக்கு முன்னாடியே கவிழ்ந்துடுச்சு. இவங்கள கடிச்ச அந்தக் கொளத்து மீனு யாருங்குறதும் இன்னும் சரியாத் தெரில...பிரிஞ்சது அவங்க ரெண்டு பேருக்குமே வலிச்சது. அதப் பார்தத நம்ம எல்லாருக்குமே ரொம்பவே வலிச்சது. 

3. கையில் வாங்கிய விருது, காலுக்குப் போனது !!! : 

Caprio_22547.jpg

"அடப் போங்கய்யா... நீங்க எப்பவுமே இப்படித் தான்... சிபாரிசுல இருக்கும். ஆனா எங்க டிகாப்ரியோவுக்கு விருது கொடுக்க மாட்டீங்க" -  ஆறாவது முறையாக லியனார்டோ டிகாப்ரியோ ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட போது அவரோட ரசிகர்கள்  இப்படித் தான் நினைச்சாங்க. ஆனால், உலக அதிசயமாக ’தி ரெவனண்ட்" படத்திற்காக ஒரு வழியா ஆஸ்கர் ஜெயிச்சாரு டிகாப்ரியோ. பல தடவ வெறுங்கையில திரும்புன வெறுப்புலயோ, என்னமோ கையில் வாங்கன விருத கால்கிட்ட வச்சு சர்ச்சையில வேற சிக்கினாரு. அதாம்லே கெத்து’ன்னு அவங்க ரசிகர்கள் அதையும் கொண்டாடினாங்க!

4. நீங்க வந்தா மட்டும் போதும்...!!! :

Chipotel-Mexican-Grill-London_22174.jpg

நம்ம ஊர்ல கே.எஃப்.சி எப்படியோ... அங்க அமெரிக்காவுல... அத விட...இந்த சிப்பாட்லே (Chipotle). மெக்சிகோ உணவுகளுக்கு பேர் போன இந்த நிறுவனம், உலகம் முழுக்க 2000 இடங்கள்ல இயங்குது. இந்த வருஷம் இவங்களோட உணவுல சில பிரச்சினைகள்ன்னு புகார் வர...இங்க சாப்பிட்டவங்களுக்கும் வயித்துல பிரச்சினைகள் வர... வியாபாரத்தில் படு மந்தமாகி, வீழ்ச்சி வரலாற்றில் இடம்பிடித்தது. ‘செப்டம்பர் மாசம் முழுக்க கடைகள்ல இலவசமா உணவுத் தர்றோம்...நம்பி வாங்க, நல்லா தின்னுட்டு போங்க"ன்னு அறிவிப்பு கொடுத்து கூட கூப்பிட்டு பார்த்தாங்க. ஆனா, "அடிச்சுக் கூட கூப்பிடுவாங்க... போயிடவே போகாத..."ன்னு பிடிவாதமா இருந்துட்டாங்க வாடிக்கையாளர்கள்.   

5. வெள்ளை மாளிகையை அலறடித்த கோமாளிகள்...!!! :

Clowns_22422.jpg

சிரிக்க அல்ல... குழந்தைகளை அழ வைத்த கோமாளிக் கூட்டம் உலகளவில் கவனத்தை ஈர்த்தது. தென்கிழக்கு அமெரிக்காவுல ஹாலோவின் சமயத்துல, திடீர் திடீர் என காடுகளுக்குள்ளருந்து கோமாளிக் கூட்டம் வந்து குழந்தைகள பயப்படுத்திட்டு இருந்தது. முதல்ல இது ஏதோ காமெடின்னு நினைச்சா... கடைசியில ரொம்பவே சீரியஸ் பிரச்சினையா உருவெடுத்தது. அமெரிக்கப் பள்ளி கூடங்களுக்கு லீவு விடப்பட்டது. வெள்ளை மாளிகையே இது குறித்து அறிக்கை வெளியிட்டது...!

6. 71 ஆண்டுகளுக்கு முன் "ஆடு" விட்ட சாபம்...? 

billygoat_22043.jpg

அமெரிக்காவுல பேஸ்பால் ரொம்ப பிரபலம். பேஸ்பால்ல "சிகாகோ கப்ஸ்" (Chicago Cubs)  பிரசித்தி. வில்லியம் சியானிஸ் என்ற பேஸ்பால் ரசிகர் எல்லாப் போட்டிக்கும் ரெண்டு டிக்கெட் எடுப்பார். ஒண்ணு அவருக்கு, இன்னொன்னு அவருடைய "மர்ஃபி" என்ற ஆட்டுக்கு. 1945ஆம் ஆண்டு உலகப் போட்டியின் இறுதி ஆட்டத்தப் பார்க்க மர்ஃபிய அனுமதிக்க முடியாதுன்னு சொல்லிடுச்சு ஸ்டேடிய நிர்வாகம். கொந்தளித்த சியானிஸ் தன்னிடமும், தன்னுடைய ஆட்டுக்குட்டியிடமும் மன்னிப்பு கேக்கலைன்னா "சிகாகோ கப்ஸ்" போட்டியில இனி ஜெயிக்காதுன்னு சாபம் விட்டார். அதுவரை உலக சாம்பியனா இருந்த கப்ஸ் அணி அன்றைய போட்டியிலருந்து தோற்க ஆரம்பிச்சது. கடந்த 71 வருடங்களா இறுதிப் போட்டி வரைக்கும் வந்தாலும் ஜெயிச்சதில்ல. அதுக்கு காரணம் அந்த சாபம் தான்னு சொல்லப்பட்டது. கடைசியா இந்த வருஷம், ஒரு வழியா அவங்களுக்கு சாப விமோசனம் கிடைச்சது. 

7. ஏம்ப்பா இதெல்லாம் உங்களுக்குப் பெரிய பிரச்சினையா ??!!

161108090601-toblerone-design-780x439_22

சாக்லேட்ல இருக்கும் முக்கோணங்களுக்கு இடையேயான இடைவெளி அதிகமாயிடுச்சு... இது ஒரு பிரச்சினையாக உருவெடுத்து சர்வதேச செய்தியானது. பணக்கார நாடுகளின், பணக்காரர்கள் விரும்பி சுவைக்கும் சாக்லெட் "டோப்லரோன்" (Toblerone). இதில் செய்யப்பட்ட மாற்றங்கள், பிரிட்டனில் பெரிய சர்ச்சையானது. 170 கிராம் இருந்த சாக்லேட்டின் எடை, இந்த மாற்றத்துக்குப் பிறகு 150 கிராமாகவே, அதிருப்தியாயினர் சாக்லேட் விரும்பிகள். BREXITதான் காரணமா என்றெல்லாம் யூகங்கள் உலவ,  ‘உற்பத்தி செலவை சமாளிக்க முடியலைப்பா’ என்று அறிக்கை வர, விஷயம் சீரியஸாகி  பிபிசியில் இடம் பிடித்தது. ‘சரி.. டேஸ்டுக்காக மன்னிக்கறோம்’ என்று பல வாடிக்கையாளர்கள் சொல்ல.. ஒருவழியாக சமாளித்தது டோப்லரோன். 

8. ஓர் ஓவியத்தின் 14 ஆண்டு கால வனவாசம் :

Van_gogh_22429.jpg


உலகப் புகழ்பெற்ற ஓவியரான வின்சென்ட் வேன் கோவின் மிகச் சிறந்த இரண்டு ஓவியங்கள் 2002ஆம் ஆண்டு, ஆம்ஸ்டர்டாமில் திருடு போனது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம், இத்தாலியில் ஒரு மாஃபியா கும்பலிடம் இருந்து அது மீண்டும் கைப்பற்றப்பட்டது. 

9. சாப்பிட வந்த இடத்தில், பிறந்த குழந்தை!!! :

Mcd_22008.jpg

இது சில நாட்களுக்கு முன்னர் தான் நடந்தது. ப்ளோரிடாவில் இருக்கும் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில், மதிய உணவு சாப்பிட வந்திருந்தார் கேத்தி ஜோர்டன். கை கழுவ பாத்ரூமுக்குப் போக, அங்கேயே அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. அதே ஹோட்டலில் சாப்பிட வந்திருந்த ஏப்ரல் எனும் நர்ஸ்... உடனடியாக ஓடிப் போய் பிரசவம் பார்த்தார். எந்தவித சத்தமுமில்லாமல் அமைதியாக இந்த உலகில் ஜனித்தது அந்த ஆண் குழந்தை. குழந்தை அழாததால், எல்லோரும் பயந்து போனார்கள். ஏப்ரல் சில முதலுதவிகளை செய்திட... அழ ஆரம்பித்தது குழந்தை! ‘ஐ.. சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழுகிறது. உலகின் செல்லக் குழந்தையாக இருப்பான்’ என்று ஏப்ரல் மகிழ்ச்சிக்கடலில் துள்ள.. தாய்க்கு டபுள் சந்தோஷம்! 

10. லண்டனில் மிதக்கும் படகு வீடுகள்:

collage_01_Compressed_22159.jpg

லண்டனில் வீட்டு வாடகை விண்ணை முட்டும் நிலையை எட்ட, எளியவர்களின் வீடாகிப் போனது பல பழைய படகுகள். லண்டன் கால்வாய்களிலும் நிற்கும் இந்தப் படகுகளும், இந்த வாழ்க்கையும் உலகம் உற்று நோக்கிய விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. 

vikatan

Link to comment
Share on other sites

அன்பின் வெளிப்பாடு : படுகாயமடைந்து நடு தண்டவாளத்தில் இருந்த நண்பனை இரண்டு நாட்களாக பாதுகாத்த நாய் : காணொளி இணைப்பு 

 

 

படுகாயமடைந்த நிலையில் தண்டவாளத்தின் நடுவில் கிடந்த பெண் நாய் ஒன்றை ஆண் நாய் ஒன்று ரயிலில் ரயிலில் அடிபடாமல் இரு நாட்களாக பாதுகாத்த சம்பவம் ஒன்று உக்ரைனில் பதிவாகியுள்ளது.Dog-too-injured-to-move-from-a-track-is-

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உக்ரைனில் காயமுற்று தண்டவாளத்தில் மாட்டிக் கொண்ட லுஸி எனும் நாயை அதன் துணை நாயானபண்டா இரண்டு நாளாக பாதுகாத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமைக்கான காணொளி வெளியாகி அணைவரையும் நெகிழவைத்துள்ளது.3BA6BA1500000578-0-image-a-70_1482771202

டெனிஸ் மலாப்பேயெவ் என்பவர் உக்ரைனின் டிசெக்லொவ்கா பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தின் காணொளியை பதிவு செய்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக டெனிஸ் குறிப்பிட்டுள்ளதாவது, லுஸி எனும் பெண் நாய் அடிபட்ட

 

நிலையில் ரயில் தண்டவாளத்தின் மேல் விழுந்து வலியால் துடித்து கொண்டிருந்தது. இதன்போர் இதற்கு பக்கத்தில் அதன் ஆண் துணையான பண்டா நின்று ரயிலில் மோதாமல் காக்க ஒவ்வொரு முறை ரயில் குறித்த

தண்டவாளத்தை கடக்கும் போதும் அடிபட்ட தனது ஜோடி நாயை தரையில் அமுத்துகின்றது.

இவ்வாறு பனிப்பொழிவு மிகுந்த இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

3BA6BA2600000578-0-image-a-69_1482771200

 

 

இந்நிலையில் குறித்த காணொளி வெளிவரவே குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படையினர் இரண்டு நாய்களையும் மீட்டு சிகிச்சை அளித்ததோடு நாயின் உரிமையாளரிடம் அவற்றைக் கையளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk

Link to comment
Share on other sites

சைலன்டாக 340 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சர்வாதிகாரி

korea_14167.png

வடகொரியாவில் கிம் ஜோங் யுன்னின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  ’கிம் ஜோங்-யுன்’ பதவியேற்று ஐந்து ஆண்டுகள் ஆகிறது. சர்வாதிகாரியான கிம், கடுமையான சட்டங்கள் பிறப்பிப்பதில் பெயர் போனவர். கிம்மின் 5 வருட ஆட்சி காலத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார் என தென் கொரிய தேசிய பாதுகாப்புத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

வட கொரியாவில் 2011-ம் ஆண்டிலிருந்து 340 பேருக்கு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களில் 140 பேர் மூத்த அரசாங்க அதிகாரிகள்.  அதிலும் ஒருவர்  அரசு கூட்டத்தின்போது தூங்கியதற்காக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவல் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் ஆபத்தான மனிதர்  என்று கிம் ஜோங்-யுன்னுக்கு பட்டப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

vikatan.

Link to comment
Share on other sites

சீன வனவிலங்குகளின் அபூர்வமான படங்கள்

பிரிட்டனைச் சேர்ந்த சீன புகைப்பட கலைஞர் ஜாக்கி ஃபூன், சீனாவின் அடர்ந்த மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் மறைந்து வாழும் அருகிவரும் விலங்கினம் குறித்த ஆவணப் படங்களை எடுக்கும் மிகச் சில தொழில் முறைக் கலைஞர்களில் ஒருவர். வளர்ந்து வரும் வன விலங்குகளை படம்பிடிக்கும் துறையின் ஒரு அங்கமாக தான் இருப்பது

Link to comment
Share on other sites

'SALSODROMO 2016'
 

கொலம்பியாவின் தலைநகர் கெலியில் கெலி ஃபெயார் எனும் பாரம்பரிய கலாசார விழா கடந்த ஞாயிறன்று ஆரம்பமாகியது.

 

172697394-01-02.jpg

 

172697444-01-02.jpg

 

172697447-01-02.jpg

 

இவ் விழாவின் ஆரம்பமாக “சல்சோட்ரோமோ 2016” ("Salsodromo" 2016)  எனும் சல்சா நடன ஊர்வலம் நடைபெற்றது. 

 

172697448-01-02.jpg

 

172697463-01-02.jpg

 

கெலி நகரிலுள்ள சல்சா நடனப் பாடசாலைகளைக் சேர்ந்த 1000க்கும் அதிகமான நடனக் கலைஞர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.

 

172697464-01-02.jpg

 

172697465-01-02.jpg

 

172697466-01-02.jpg

 

metronews.lk
Link to comment
Share on other sites

கிளிக் தொழில்நுட்ப காணொளி

கண் பார்வை இழந்தவர்களுக்கு இயந்திர கண், சமையல் செய்யும் ரோபோ, கேட்கும் திறன் அற்ற குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி உள்ளிட்டவை அடங்கிய காணொளி

Link to comment
Share on other sites

உலகின் வயதான ஆண் பாண்டா மரணம்!

 

Panda_17447.jpg

உலகின் மிகவும் வயதான ஆண் பாண்டாக்கரடி பான்-பான் (31). இந்த பாண்டாக்கரடி, ஹாங்காங்கின் உயிரியல் பூங்கா ஒன்றில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இந்த பாண்டா, தற்போது உயிரிழந்துள்ளது. மனிதர்களின் ஆயுளுடன் ஒப்பிடும்போது, பான்-பான் 100 ஆண்டுகள் வாழ்ந்துள்ளதாம். மேலும்,பான்-பான் மூலம் 130 பாண்டாக்கள் வந்துள்ளனவாம். குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் ஹாங்காங்கில் ஜியா-ஜியா என்ற வயதான ஆண் பாண்டாக்கரடி உயிரிழந்தது. அந்த பாண்டாவுக்கு வயது 38. மூன்று மாதங்களில் இரண்டு வயதான ஆண் பாண்டாக்கரடி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கோலி- அனுஷ்கா சர்மாவுக்கு நிச்சயதார்த்தமா?

 

virat-anushka-647_020816031140_16268.jpg

சின்ன கேப்புக்குப் பிறகு, கோலி- அனுஷ்கா சர்மா மீண்டும் ஹாட் ஜோடியாக வலம் வரத் தொடங்கியுள்ளனர். முக்கியமாக அண்மையில் யுவராஜ்சிங் திருமணத்துக்கு ஜோடியாக விசிட்டடித்தனர். இந்நிலையில் கோலி- அனுஷ்காவுக்கு, உத்தரகாண்டில் வருகிற 1-ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், இதற்கான அறிவிப்பை இருவரும் வெளியிடவில்லை. குறிப்பாக அண்மையில் இருவரும் மலைப்பிரதேசம் ஒன்றுக்கு ஜோடியாக அவுட்டிங் சென்றதாக கூறப்படுகிறது. இருவரின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகளில், பேக்ரவுண்டை வைத்து இவர்கள் அவுட்டிங் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

Link to comment
Share on other sites

ஆயிரம் ஆண்டு கால உருளைக்கிழங்கு

ஆயிரம் ஆண்டு கால உருளைக்கிழங்கு

 

கனடா நாட்டில் நீருக்கடியில் 3,800 ஆண்டுகள் பழமைவாய்ந்த உருளைக்கிழங்கு தோட்டம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கனடா நாட்டின் கொலம்பியா மாகாணத்தில் பசிபிக் கடலோரப் பகுதியை ஒட்டி நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருகிறது.

இதற்காக நிலத்தினை தோண்டும் பணியின் போது, கடலோரமாக மிகப்பெரிய உருளைக்கிழங்கு குவிந்து இருப்பதை கண்டறிந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

3,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த இடத்தில் உருளைக்கிழங்கு தோட்டம் செயல்பட்டு வந்ததை கண்டறிந்தனர். மேலும் பல ஆண்டுகளாக அந்த இடத்தில் கடல் நீர் சூழ்ந்திருந்ததால், அழியாமல் அப்படியே இருந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வசித்துவந்த கட்ஸி பழங்குடியின மக்கள், இந்த உருளைக்கிழங்கு தோட்ட விவசாயத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உருளைக்கிழங்கு இந்தியாவில் பயிரிடப்படும் இனத்தைச் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

http://onlineuthayan.com

Link to comment
Share on other sites

 

செங்கற்களை ஓரம்கட்டும் மரக்கட்டட கோபுரங்கள்

மரக்கட்டடங்களின் யுகம் ஆரம்பித்திருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.

ஏனென்றால் மரப்பலகைகளைப் பயன்படுத்தி வானுயர் கட்டடங்களை கட்டும் நடவடிக்கைகள் தற்போது பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இயற்கையிலேயே மீளுறுவாக்கவல்ல மூலப்பொருளான மரங்களைக்கொண்டு கட்டடங்களை கட்டும்போக்கு சுற்றுச்சூழலை பாதிக்காத, இயற்கைவளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கான செயல்முறை என்று கட்டட வடிவமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.

கற்கள், செங்கற்கள், கான்கிரீட் கட்டிடங்கள் படிப்படியாக பழங்கதையாக மறைந்தும் போகலாம் என்றும் சிலர் கணிக்கிறார்கள்.

அதிகரித்துவரும் வானுயர் மரக்கட்டட கோபுரங்கள் குறித்து பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு.

Link to comment
Share on other sites

கிரிக்கெட் வீரரின் வேற லெவல் ஐடியா!

 

இந்திய ஏ அணி மற்றும் ஐ.பி.எல். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடி வரும் வீரர் சச்சின் பேபி. இவர் விரைவில் சாண்டி என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில் இவரது திருமண அழைப்பை மிகவும் வித்தியாசமான முறையில் தயாரித்துள்ளார். இதற்காக தயாரிக்கப்பட்ட வீடியோவில் சச்சின் பேட் செய்கிறார். மணப்பெண் சாண்டி பந்து வீசுகிறார். இதில் சாண்டியின் அழகில் மயங்கிய சச்சின், அவரது பந்தில் போல்டாகி, காதலில் விழுகிறார். 

 

 

 

Link to comment
Share on other sites

காரணம் ஆயிரம்: உராய்வால் இயங்கும் உலகம்!

 

 
scratch_3109474f.jpg
 
 
 

மாணவர்களே! பரீட்சை விடைத் தாள்களை நூல் கொண்டு கட்டிக் கொடுக்கிறீர்கள் அல்லவா? ஒருவேளை நாம் முடிச்சுப்போட்டுக் கட்டிய நூல் அவிழ்ந்துவிட்டால் என்னாவது?

இப்படி ஒரு சந்தேகமும் பயமும் எப்போதாவது உங்களுக்கு வந்திருக்கிறதா?

“நிச்சயமாக அவிழாது, நான் இறுக்கி முடிச்சு போட்டிருக்கிறேன். அவிழ்வதற்கு வாய்ப்பே இல்லை” என்று சொல்லிச் சந்தோஷப்பட்டிருக்கிறீர்களா!

கேள்வி இதுதான். ஏன் நூலில் போடும் முடிச்சுகள் அவிழ்ந்துவிடுவதில்லை?

“இது என்ன கேள்வி? முடிச்சு போட்டாச்சு, அது அவிழாது”.

இப்படிப் பொதுவாகச் சொல்லக்கூடாது.

‘ஏன் முடிச்சுகள் அவிழ்வதில்லை?’

இன்னொரு கேள்வியும் உண்டு. “இரண்டு இரும்புக் கம்பிகளை வளைத்துக் கட்டினால்கூட அதைத் திரும்பவும் பிரித்துவிட முடிகிறது. ஆனால், அதைவிட மென்மையான நூல் முடிச்சுகளை ஏன் பிரிக்க முடிவதில்லை?

காரணம் என்ன?

ஒரு விளக்கத்தைப் பார்ப்போமா? கிராமங்களில் வயல் வெளிகளில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்குக் கட்டிப் போடும்போது நீளமான கயிற்றைக் கொண்டு கட்டுவார்கள். சில சமயம் கம்புகளில் முடிச்சுகள் போட்டுக் கட்டாமல், முளைக்கம்பு மீது நான்கைந்து சுற்றுகள் மட்டுமே சுற்றிவிட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இதுவும் அவிழாமல் இருக்கும். முடிச்சுகள்தான் அவிழாமல் இருக்கிறது என்று நினைத்தால், முடிச்சு போடாமலேயே கயிறுகளும் அவிழ்வதில்லை. அது ஏன்?

இதற்குக் காரணம், நூலுக்கும் பொருளுக்கும் உள்ள உராய்வு விசைதான். இதனால்தான் முடிச்சுகள் அவிழ்வதில்லை. சரி, இப்போது விடைத்தாள் முடிச்சுக்கு வருவோம். ஒரே நூலைக் கொண்டுதான் விடைத்தாள்களைக் கட்டுகிறோம். ஆனால், கட்டப்படும் நூலின் இரு முனைப் பகுதிகளும், இருவேறு பொருட்களாகச் செயல்படுகின்றன. இதனால் தங்களுக்குள் அதிக உராய்வு விசையை ஏற்படுத்திக்கொள்கின்றன.

நூலை வளைத்து நெளித்துப் போடும் முடிச்சுகளும் உராய்வு விசையை அதிகப்படுத்துகின்றன. எனவே நீங்கள் என்னதான் வலுவாக முடிச்சு போட்டாலும், அது அவிழ்ந்துவிடுமா? அவிழ்ந்துவிடாதா? என்பதைத் தீர்மானிப்பது உராய்வு விசையும் பொருளின் (சொரசொரப்பு அல்லது வழவழப்பு) தன்மைதான்.

எங்கெங்கும் உராய்வு

நம் அன்றாட வாழ்க்கையில் இந்த உராய்வு விசையின் பங்கு மிகப் பெரியது. ஆனால், நாம் அதைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. உராய்வு விசை இல்லாமல், பூமிக்கும் நமக்கும் தொடுதல் தொடர்பு எளிதாக இருக்காது. ஓர் அடிகூட நம்மால் எடுத்து வைக்க முடியாது. நாம் நடப்பதற்கு, உட்காருவதற்கும், வாகனங்கள் ஓட்டுவதற்கும், எழுதுவதற்கும், அனைத்து வேலைகளுக்கும் உராய்வு தேவை. ஏனென்றால் இரண்டு பொருட்களுக்கான தொடர்பை இந்த உராய்வு விசைதான் ஏற்படுத்தித் தருகிறது.

தாளில் பேனா கொண்டு எழுதும்போது பேனாவுக்கும் தாளுக்கும் இடையேயான தொடர்பை ஏற்படுத்துவது உராய்வு விசைதான். உராய்வு விசை இல்லையென்றால், தாள் முழுவதும் மை கொட்டிப் பரவுமே தவிர எழுத முடியாது.

பொருட்களின் தன்மைக்கு ஏற்ப உராய்வு மாறுபடும். சொரசொரப்பான தரையில் நம்மால் எளிமையாக நடந்துவிட முடிகிறது. ஏனெனில் நமது பாதத்துக்கும், தரைக்குமான உராய்வு விசை அதிகம். ஆனால், வழவழப்பான மார்பிள் தரைகளில் நடக்கும்போது கவனமாக நடக்க வேண்டியிருக்கிறது. வழவழப்பான தரைகளில் தரைக்கும் பாதத்துக்குமான உராய்வு விசை குறைவு. அதனால் நாம் சில சமயங்களில் வழுக்கி விழவும் நேர்கிறது.

ஒரு வேளை உராய்வு விசை முற்றிலும் இல்லாமல் போனால் இந்த உலகம் என்னாகும்?

மலைகள் மீது திரண்டு நிற்கும் பாறைகள் உருண்டு விழும். மலைகள் எல்லாம் சரிந்து மணல் சமவெளியாகிவிடும். நடக்கவோ உட்காரவோ ஓடவோ முடியாது. வார்தா மாதிரிப் புயல் வந்து கொண்டே இருக்கும். ஓயவே, ஓயாது. எங்காவது எழுந்த ஒலியும் குரலும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். இயற்கை சமதளமாகிவிடும்.

சுவர்க் கடிகாரங்களை மாட்ட ஆணி அடிக்க முடியாது. மேற்கூரையில் ஃபேன் போட முடியாது. பூட்டைப் பூட்ட முடியாது (பூட்டு செய்யவே முடியாது). வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட எந்த ஒரு பொருளையோ இயந்திரத்தையோ செய்ய முடியாது. நிலத்தில் சுனாமி பொங்கியது போல உலகம் சிதைந்துவிடும்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் இந்தப் பூமி ஒரு வழவழப்பான பந்து போல மாறிவிடும்.

tamil.thehindu

Link to comment
Share on other sites

2016 டாப் 10 மனிதர்கள்

 

 

16p1.jpg

தமிழகத்தின் சுழல் புயல்
16p11.jpg
ரவிச்சந்திரன் அஸ்வின், (கிரிக்கெட் வீரர்)


லகின் நம்பர் ஒன் பௌலர் நம்ம தமிழன் என்பது தமிழ்நாட்டின் பெருமை. அத்தனை டாப் பேட்ஸ்மேன்களையும் அலறவைத்த அஸ்வின், சுழலில் ஆண்டு முழுவதும் பின்னியெடுத்தது விக்கெட் அறுவடை. அநாயாசமாக சீனியர்களின் பல சாதனைகளை அடித்து உடைத்தார். எட்டு டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுகள், பேட்ஸ்மேனாக 336 ரன்கள், 19 டி-20 போட்டிகளில் 27 விக்கெட்டுகள்… என 2016-ம் ஆண்டில் அஸ்வின் ரெக்கார்டுகள் வேற லெவல். கடைசி 20 டெஸ்ட்களில் 133 விக்கெட்டுகள் என்பதும் இன்னோர் இந்திய சாதனை. போன வருடம் ஐ.சி.சி-யின் தரவரிசையில் டெஸ்ட் போட்டிப் பந்து வீச்சாளர்களில் நம்பர் ஒன்னாக வந்தவர், இந்த ஆண்டும் அதைத் தக்கவைத்தார். எல்லா கிரிக்கெட் ஜீனியஸ்களாலும் புகழப்படும் அஸ்வின் முன்னால் உடைபடக் காத்திருக்கின்றன இன்னும் பல சாதனைகள்!


16p2.jpg

இயற்கைப் போராளிகள்

ரெஜி ஜார்ஜ் - லலிதா ரெஜி  (சமூகச் செயற்பாட்டாளர்கள்)

ந்தத் தம்பதிக்குப் பூர்விகம் கேரளா என்றாலும், 23 ஆண்டுகளாகத் தமிழகம்தான் தாய்மடி. பழங்குடி மக்கள் வாழும் தமிழகக் கிராமங்களில் தங்கி, மருத்துவ சேவை செய்வதில் தொடங்கியது இந்தத் தம்பதியின் பயணம். மனிதர்களுக்கு மட்டும் அல்ல, இந்த மண்ணுக்கும் மருத்துவம் தேவை என உணர்ந்த கணத்தில் மலர்ந்தது புதிய அத்தியாயம். சேலம் சிட்லிங்கி பள்ளத்தாக்குப் பகுதியில் படிப்படியாக விவசாயம் அழிந்துகொண்டிருந்த 21 கிராமங்களில், விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புஉணர்வை உண்டாக்கினார்கள். அவர்களை ஒன்றிணைத்து  ‘சிட்லிங்கி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு’ என்ற அமைப்பைத் தொடங்கினார்கள். அறுவடை முதல் விற்பனை வரை அனைத்தையும் அந்த விவசாயிகள் மூலமாகவே வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்ட, அது மகத்தான முன்னுதாரணமாக ஆனது. 20 ஆண்டுகளாக தரிசாகக் கிடந்த நிலங்கள் இந்த மருத்துவர்களால் பசுமை பூமியாக உயிர்த்திருக்கிறது. இந்தப் பகுதியில் வேளாண் தொழிலைக் கைவிட்டு வெளியூர் வேலைகளுக்குப் போனவர்கள், இப்போது விவசாயத்தை நோக்கித் திரும்பி வருவது நம் தேசத்துக்கான பாடம். நான்கு பேருடன் தொடங்கிய இந்த இயற்கை விவசாயப் புரட்சி, இன்று 300 விவசாயக் குடும்பங்களுக்கும் மேல் வளர்ந்திருப்பது, இவர்களின் அன்பில் தழைத்த ஈர விருட்சம்!


16p3.jpg

விண்வெளித் தமிழன்

கே.சிவன் (இயக்குநர், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்)

நாகர்கோவிலுக்குப் பக்கத்தில், வல்லங்குமாரவிளை என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர். மிக எளிய குடும்பத்தில் முதல் தலைமுறையாக முளைத்து, சென்னை எம்.ஐ.டி-யில் படித்து, அயராமல் உழைத்து, இந்திய விண்வெளித் துறையின் தவிர்க்க முடியாத மனிதராக உயர்ந்து நிற்பவர் சிவன். படிப்படியாக வளர்ந்து, இன்று விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநராக உயரம் தொட்டிருக்கிறார். சந்திராயன், மங்கள்யான் வெற்றிகளில் இவரது பங்கு மிக முக்கியமானது. அடுத்த மைல்கல்லாக ‘மார்க் 3’ என்கிற புதுமையான ராக்கெட் ஆய்வில் இருக்கிறார் இஸ்ரோ சிவன். இன்னும் அண்ணாந்து பார்க்கக் காத்திருக்கிறது தேசம்!


16p4.jpg

எல்லைகள் உடைத்த இயக்குநர்

வெற்றி மாறன் (திரைப்பட இயக்குநர்)

வெற்றி மாறனின் ‘விசாரணை’, பல தளங்களில் தமிழ் சினிமாவின் எல்லைகளை உடைத்து விஸ்தரித்தது. சந்திரகுமாரின் ‘லாக்கப்’ நாவலின் மையமே ‘விசாரணை’ ஆனது. அதை அதிரவைக்கும் சினிமா அனுபவமாக மாற்றியதே வெற்றியின் வெற்றி. எளிய மனிதர்களின் மேல் நடக்கும் அதிகாரத் தாக்குதலையும், காவல் துறைக்கும் அரசியல் அதிகாரத் தொடர்புகளுக்கும் பின்னால் ஒளிந்துகிடக்கும் குரூர  அழுக்குகளையும் பதறப் பதறக் காட்டியது படம். இந்தப் படம் பார்த்த ஒவ்வொருவருக்குள்ளும் ‘நமக்கும் இப்படி நடக்கலாம்’ என்ற விசாரணையை உருவாக்கின காட்சிகள். பாடல்கள் இல்லாமல், சமரசம் இல்லாமல் படமாக்கலிலும் இது புதுப் பாய்ச்சல். வெனீஸ் திரைப்பட விழாவில் மனித உரிமைக்கான படைப்புகள் பிரிவில் கௌரவம், மூன்று தேசிய விருதுகள், இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் வரை போனது என வெற்றி மாறன் தந்தது தமிழனுக்கான பெருமை!    


16p5.jpg

தன்னம்பிக்கைத் தமிழன்

மாரியப்பன்  (தடகள வீரர்)

சேலம் பெரிய வடகம்பட்டி மாரியப்பன், ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது, ஓர் அபார சரிதம்! செங்கல் சூளையில் வேலைபார்க்கும் ஏழைத்தாய், குடிகார அப்பா என வறுமைக்கு வாக்கப்பட்ட வாழ்க்கை. துள்ளித் திரியும் பள்ளி வயதில் நடந்த திடீர் விபத்தில் ஒரு கால் சிதைந்தது. ‘நடக்கவே முடியாது’ என்ற உடல் தடையை உடைத்து எழுந்தது மாரியப்பனின் நன்னம்பிக்கை. சீராக நடக்க முடியாத காலுடன் சீறிப் பாய்ந்த  இவரது கனவு, உயரம் தாண்டுதலை இலக்காக்கியது. ஏழைத்தாயின் அணைப்பும், பள்ளி ஆசிரியர்கள் தந்த பயிற்சிகளும், இரவு-பகலாகப் பயிற்சியில் கிடந்த உழைப்பும் அடுத்தடுத்து உயரம் தாண்டவைத்தன. இந்திய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தும் நிதி உதவியும் அரசுசார் ஆதரவும் இல்லை. அடுத்தகட்டத்துக்குப் போக முடியாமல் தவித்தபோது, வெளிச்சம் பாய்ச்சினார் பெங்களூரு பயிற்சியாளர் சத்யநாராயணா. அவர் வழிகாட்ட, ரியோ பாரா ஒலிம்பிக் போய் மாரியப்பன் தங்கம் வென்றது, தமிழகத் தடகள வரலாற்றின் வைர அத்தியாயம். 1.89 மீட்டர் உயரம் தாண்டி இந்த இளைஞன் படைத்தது உலக சாதனை. இந்தியாவே வியந்து பார்க்கும் மாரியப்பனின் வாழ்க்கை, நமக்கான நம்பிக்கைப் பாடம்!


16p6.jpg

கலைக் களஞ்சியன்

இ.மயூரநாதன் (தமிழ் விக்கிப்பீடியா முன்னோடி)

ன்று விக்கிபீடியாவில் 85,000-க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகள் குவிந்துகிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வாசிக்கிறார்கள். இதற்குப் பின்னால் இருப்பது இ.மயூரநாதனின் பெரும் உழைப்பு. 2001-ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.  அதன் எதிர்கால வீச்சை உணர்ந்து, விக்கிப்பீடியாவோடு இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003-ம் ஆண்டில் தொடங்கினார். அதன் அடிப்படைக் கட்டமைப்புக்காக ஒரு வருடம் தனியாளாக உழைத்தார். ஏராளமான இளைஞர்களை ஒன்றுதிரட்டி, ஆன்லைன் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இன்று 88,000 தமிழர்கள் விக்கிப்பீடியாவில் பதிவுசெய்துள்ளனர். இலங்கைத் தமிழரான இவர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிகிறார். உலகளாவிய பன்மொழிக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை, ஆற்றல் வாய்ந்த குழுமமாக உருவாக்கியது இவரது அரிய சாதனை. இவரே தன்னுடைய முனைப்பால் 4,458 கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். உலகப் பன்மொழித் திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ்மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசினால், தமிழ் மொழிக்கான ரேங்க் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும். இதற்கு ஒரே காரணம் மயூரநாதன்.


16p7.jpg

தனிப்பெரும் தமிழ்க் கவிஞன்

மனுஷ்ய புத்திரன் (எழுத்தாளர்)

தொடர்ச்சியான தொலைக்காட்சி விவாதங்கள், தி.மு.க மேடைகள் என வருடம் முழுக்க ஒலித்துக்கொண்டே இருந்தது மனுஷ்ய புத்திரன் குரல். இதற்கு நடுவிலும் இவர் எழுதிக் குவித்த கவிதைகள்தான் ஆச்சர்யம். சமூக வலைதளங்கள், பத்திரிக்கைகள் என இந்த ஆண்டு மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான கவிதைகளை எழுதியிருக்கிறார். எண்ணிக்கையில் மட்டும் அல்ல, அடர்த்தியிலும் ஆழத்திலும் அவை அபாரமான கவிதைகள். ஆண்-பெண் உறவின் அகமனக் காட்சிகளில் இருந்து அரசியல் அறச்சீற்றம் வரை அத்தனை தளங்களிலும் பயணித்தது இவர் எழுத்து. விகடனில் இவர் எழுதிய ‘கிளிக்காவியம்’ என்ற நீள்கவிதை, இந்த ஆண்டு எழுதப்பட்ட மகத்தான படைப்புகளில் ஒன்று. சென்னை வெள்ளத்தின் மீள்துயரத்தையும் கொடும் சித்திரங்களையும் கவிதைகளாக ஆவணப்படுத்தினார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் இருந்து ஜெயலலிதா மரணத்துக்குப் பின்பான அரசியல் வரை எல்லாமே கவிதைகளாயின. ஒரு போராளியைப் போல, தோழனைப் போல, காதலனைப் போல எல்லா திசைகளிலும் எழுந்து நடக்கின்றன மனுஷ்ய புத்திரனின் கவிதைகள். 


16p8.jpg

இந்திய கிரிக்கெட்டின் லேடி டெண்டுல்கர்

மித்தாலிராஜ் (கிரிக்கெட் வீராங்கனை)

ந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் 17 ஆண்டுகால நம்பிக்கை நட்சத்திரம். விளையாட விரும்பும் இந்தியப் பெண்களுக்கு இவர்தான்  ரோல்மாடல். இந்த ஆண்டு ஆசியக்கோப்பையை வென்று காட்டியது இவரது பிரமாத கேப்டன்ஷிப்பும் அதிரடி ஆட்டமும்.  இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீராங்கனை... உலக அளவில் 5,000 ரன்களைக் கடந்திருக்கும் இரண்டாவது பேட்ஸ்வுமன்... என ஏராளமான சாதனைகளை எட்டிப் பிடித்திருக்கும் மித்தாலியின் பூர்விகம் தமிழ்நாடு. 1999-ம் ஆண்டில் தொடங்கிய இவரின் சாதனைப் பயணம் சளைக்காமல் தொடர்வது இன்னுமோர் இலக்கை நோக்கி. அது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு உலகக்கோப்பையை வென்று தருவது.  நிகழ்த்திக் காட்டுவார் மித்தாலி!  


16p9.jpg

கலகக்காரக் கேலிச்சித்திரன்

ஹாசிப் கான் (கார்ட்டூனிஸ்ட்)

ஹாசிஃப்கானின் ஒவ்வொரு சித்திரத்திலும் கிழிந்துத் தொங்கின அதிகார முகமூடிகள். அபாரமான புதிய பாணியில் இவர் வரைந்த ஒவ்வோர் ஓவியத்தையும் கொண்டாடியது தமிழ்ச் சமூகம். ஒவ்வொரு சாமானியனுக்குள்ளும் கிடந்த கேள்விகளை  இவர் கேலிச் சித்திரங்களாக்க, அது அநீதிகளுக்கு எதிரான சாட்டையானது. களப் போராட்டங்களின் குரலை ஒரே கார்ட்டூனில் ஒலிக்கவிட்டார் ஹாசிஃப். மோடி, ஜெயலலிதா என ஆளும்வர்க்கத்தின் அத்தனை தவறுகளையும் கூண்டில் ஏற்றியது இவரின் தூரிகை. விவசாயிகள் தற்கொலையில் இருந்து கறுப்புப் பணம் வரை அத்தனை பிரச்னைகளிலும் தன் ஓவியங்களை வீரியமான விமர்சன ஆயுதங்களாக்கினார். இந்த நாகர்கோவில் இளைஞனுக்கு ஆயிரமாயிரம் லைக்ஸ். ஹாட்ஸ் ஆஃப் ஹாசிஃப்!   


16p10.jpg

சளைக்காத சமூகப் போராளி

முகிலன் (சமூகச் செயற்பாட்டாளர்)

மிழ்நாட்டில் எங்கே… என்ன போராட்டம் என்றாலும் முதல் குரலாக முதல் ஆளாகப் போய் நிற்பார் முகிலன். அணுஉலைகளுக்கு எதிராக… மரங்கள் வெட்டுப்படுவதற்கு எதிராக… ஏரிகளின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக… சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு எதிராக… அத்தனை மக்கள் போராட்டங்களிலும் முகிலன் இருப்பார். அதிகார ஆசையோ பணத்தேவையோ புகழ் போதையோ எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இவரது முன்னெடுப்புகள் `ஏதாவது செய்யணும்’ என நினைக்கும் எல்லோருக்குமான முன்னுதாரணம். 1980-களில் ஈழப்பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, போராட்டக்களத்துக்கு வந்தவர், இன்றும் தீராத  உயிர்ப்புடன் போராடுகிறார். `செயற்பாட்டாளராக இருப்பதுதான் மனநிறைவைத் தருகிறது’ என, சம்பளம் கொடுத்த பொதுப்பணித் துறை வேலையைத் துறந்தவர். தாதுமணல் கொள்ளைக்கு எதிரான இவரது தொடர்ச்சியான போராட்டங்கள், இந்த மண்ணுக்கான பெருங்காதல்; அடுத்த தலைமுறைக்கான அறைகூவல். நேரடி வன்முறைகளுக்கும் மிரட்டல்களுக்கும் ஆளானபோதும் முகிலனை இயக்குவது அறத்தின் மீதான பெரும் நம்பிக்கை.

vikatan

Link to comment
Share on other sites

Kein automatischer Alternativtext verfügbar.
 

புறநகர் கிராமம்!

கிராமத்தைவிட்டு வந்தவன், மறுபடியும் செல்கிறான் கிராமத்துக்கே... அதற்கு `புறநகர்ப் பகுதி' எனப் பெயரிட்டு!

 

Link to comment
Share on other sites

டாப் 10 பெண்கள் - உலகம்

 

 

p10b.jpg

செல்வமும் சேவையும்

p10f.jpgஉலகின் நம்பர் 1 பில்லியனரான பில்கேட்ஸின் மனைவி மெலிண்டா கேட்ஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனரான கணவரின் வருமானத்தைக் கணக்குப் பார்த்துச் செலவிடுபவர் இவர்தான்.  பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் மூலம் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயைச் சமூகப் பணிகளுக்கு வழங்கி இருக்கிறார். மெலிண்டாவின் ஃப்ளாஷ்பேக் இதுதான்... இவர் கல்லூரிப் படிப்புக்கான பணம் ஈட்டுவதற்காக பள்ளி மாணவிகளுக்கு டியூஷன் எடுத்திருக்கிறார். 1986-ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரி படித்துவிட்டு, மேனேஜ்மென்ட் படிப்பையும் முடித்திருக்கிறார். 1987-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். 1994-ல் பில் கேட்ஸுக்கும் இவருக்கும் திருமணம். 2000-ல் இருந்து சுகாதாரம், கல்வி சார்ந்த சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு ஓராண்டு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உண்டு. இந்த வசதி குழந்தையைத் தத்து எடுத்து வளர்ப்பவர்களுக்கும் வழங்கப்படுகிறது.


p10a.jpg

சிம்பன்சிகளின் தாய்

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஜேன் குட் ஆல். 82 வயது. இவரது முக்கியப் பணி உயிருக்குப் போராடும் சிம்பன்சிகளை மீட்பதுதான். ஆப்பிரிக்காவில் காட்டுத் தீயினால் மரங்கள் அழிவது மற்றும் வன அழிப்பு காரணமாக வாழ வழியற்று சிம்பன்சிகள் திரிகின்றன. உணவும் நீரும் கிடைக்காமல் நோய்வாய்ப்பட்டுவிடும் குரங்குகள் ஆங்காங்கே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றன. அதுபோன்ற குரங்குகளைத் தேடிக் கண்டுபிடித்து, அபாயத்தில் இருந்து மீட்டு, உணவும் சிகிச்சையும் அளித்துக் காப்பாற்றுவதையே முழுநேரமாகச் செய்கிறார் ஜேன். அவற்றால் மீண்டும் வன வாழ்க்கையைத் தொடர முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டதும், அவற்றை மீண்டும் காட்டுக்குக் கொண்டுவந்து விடுகிறார்.

இதுவரை ஜேனின் அமைப்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிம்பன்சிகளைக் காப்பாற்றியுள்ளது. சிறந்த வன உயிரின ஆர்வலரான ஜேனுக்கு ‘ஆர்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் விருது உள்பட ஏராளமான அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.


p10.jpg

அழகான மனசு

ஹாலிவுட்டில் தவிர்க்க முடியாத செலிப்ரிட்டி ஏஞ்சலினா ஜோலி. 41 வயது. தந்தை ஜான் வாயிட்டுடன் குழந்தை நட்சத்திரமாக 1982-ல் அறி முகமானவர். நடிகை, தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பன்முகம் கொண்டவர். 1999-ல் ‘கேர்ள்‘ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டருக்கான ஆஸ்கர் விருது ஏஞ்சலினா ஜோலிக்குக் கிடைத்தது. மூன்று திருமணம் செய்தார். மூன்றுமே விவாகரத்தில் முடிந்திருக்கின்றன. குழந்தைகள் நலன், பெண் கல்விக்காக பாடுபட்டு வருகிறார். மனித உரிமை ஆர்வலரும்கூட. அகதிகள் நலனுக்காகவும் ஏஞ்சலினா குரல் கொடுத்து வருகிறார். உலகின் அழகான பெண் யார் என்றால் சந்தேகமேயில்லாமல் ஏஞ்சலினாவை நோக்கி கை காட்டலாம். முக அழகு மட்டுமல்ல... மனதாலும் வசீகரமானவர்!


p10h.jpg

தாயானாலும் தயக்கமில்லை!

டென்னிஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரென்கா, பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர். 27 வயது. கடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியோடு டென்னிஸ் விளையாடுவதை நிறுத்திவிட்டார். அண்மையில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

ஜெர்மன் வீராங்கனை ஸ்டெஃபி கிராப்தான் அசரென்காவின் ரோல் மாடல். ஆஸ்திரேலிய ஓபனை இரு முறை வென்றுள்ள அசரென்கா, லண்டன் ஒலிம்பிக்ஸில் மிக்ஸட் டபுள்ஸிலும் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். 2012-ல் உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை எட்டினார். அடிக்கடி காயமடைவது மட்டுமே அசரென்காவின் டென்னிஸ் வாழ்க்கையை மிரட்டுகிறது.

``குழந்தை பிறந்தாலும் டென்னிஸுக்கு முழுக்குப் போடப் போவதில்லை. நிறைய தடகள வீராங்கனைகளும் டென்னிஸ் வீராங்கனைகளும் குழந்தைப் பிறப்புக்குப் பின்னும் சிறப்பாகவே ஆடுகின்றனர். அதனால், மீண்டும் டென்னிஸுக்குள் வருவேன்'' என்கிறார் நம்பிக்கையுடன்.


p10c.jpg

யுத்த களத்தில் ஒரு பெண்!

`நிறத்தின் காரணமாக நான் ஏன் ஒடுக்கப்பட வேண்டும்?' என்கிற கேள்வி சிறுவயதிலேயே ஆலிஸ் வாக்கருக்குத் தோன்றியது. கல்லூரிக் காலத்தில் மார்ட்டின் லூதர் கிங்கை சந்தித்தது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்று முதல், 72 வயதை எட்டிய இன்று வரை ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பாலஸ்தீனியருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் வன்முறைகளைக் கண்டித்து, யுத்த களத்துக்கே சென்று போராடி இருக்கிறார்.

மிகச்சிறந்த எழுத்தாளரான இவரது `தி கலர் பர்ப்பிள்' நாவல் புலிட்சர் விருது வென்றது. நிற வெறி அதன் உச்சத்தில் இருந்த 1930-களில் ஒரு கறுப்பின பெண்ணின் உணர்வுகளைப் பதியும் கதை இது.

`நமக்கான உரிமைகளைப் பெற்றுத் தர யாரும் வர மாட்டார்கள்' என்கிற ஆலிஸ் சொல்வது இதுதான்... “நாம் காத்துக்கொண்டிருப்பது நமக்காகத்தான்!”


p10d.jpg

வில்லேஜ் ஃபேஷன்

50 வயது ஆனாலும், இன்றும் ஃபேஷன் உலகின்  சாவி இவரது கைவசம். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின், சிறு கிராமத்தில் பிறந்தவர் டோரி பர்ச். அப்பா, அம்மா - இருவருமே சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள். ஆரம்பத்தில் ஃபேஷன் உலகம் டோரியை ஈர்க்கவில்லை. வரலாறு படித்தார். பின்பு, ஒரு கட்டத்தில் ஃபேஷன் உலகுக்குள் வந்து சேர்ந்தார். பெற்றோரின் நிழல் இல்லாமல் சுயமாகவே தொழில் தொடங்கினார். வீட்டுச் சமையலறையில் வைத்துதான் உடைகளை வடிவமைத்தார்.

ஓப்ரா வின்ஃப்ரே தன் நிகழ்ச்சியில் டோரியின் திறமையைப் பற்றி பேச, உலகின் கவனம் ஈர்த்தார் டோரி. இன்று டோரி பர்ச் என்பது அமெரிக்காவின் மிக முக்கிய பிராண்டாக உருவெடுத்துள்ளது. உடைகளோடு, ஷூ, வாட்ச், ஹேண்ட் பேக் என சகல விஷயங்களையும் வடிமைக்கிறார் டோரி. கிராமத்தில் வளர்ந்ததாலோ என்னவோ, இவரது வடிவமைப்புகளில் காணப்படும் ஒருவித நாடோடித் தன்மை  கூடுதல் அழகு சேர்க்கிறது.


p10e.jpg

தெறிக்கும் இசை

24 வயது செலீனா கோமஸ், லவ்லி சிங்கர். யூடியூப்பிலும் கூகுளிலும் அதிகம் தேடப்படும் பிரபலங்களில் செலீனாவுக்கு முக்கிய இடம் உண்டு. நடிகையாக வாழ்க்கையை ஆரம்பித்தவர், பின்னர் அமெரிக்க ஹாலிவுட் கலைஞர்களின் பாணியில் ஆல்பங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். `கம் அண்ட் கெட் இட்', `ஸ்டார்ஸ் டான்ஸ்' என இவரது ஆல்பங்கள் தெறி ஹிட் அடிக்க ஆரம்பித்தன. ஜஸ்டின் பீபருடன் இணைந்து கலக்கிய `லெட் மீ லவ் யூ' பாடல் என்றும் இளசுகளின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கிறது. இந்த ஆண்டு `ரெவைவல் டூர்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். 2016 ஜூன் மாதம் `கில் எம் வித் கைன்ட்னெஸ்' என்றொரு பாடல் வெளியிட்டார். யூடியூப்பில் அதன் வியூஸ் எவ்வளவு தெரியுமா? 30.3 கோடி!


p10g.jpg

புதியதோர் உலகம்

 கண்களால் இந்த உலகத்தைப் பார்த்ததை விடவும், இவர் டெலஸ்கோப்பில் விண்வெளியைப் பார்த்ததுதான் அதிகம். கனடாவைச் சேர்ந்த சாரா சீகர் விண்வெளி ஆராய்ச்சியில் நம்பிக்கை நட்சத்திரம். `எக்ஸோ பிளானட்' எனப்படுகிற சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்கள் பற்றி ஆராய்ந்து, இதுவரை 700-க்கும் அதிக எக்ஸோ பிளானட்களைக் கண்டுபிடித்திருக்கிறார். மனிதர் வாழும் சூழலிருக்கும் கிரகங்களைக் கண்டடையும் பெரும்  நோக்கத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் யுனிவர்சிட்டியில் பேராசிரியராகவும், நாசாவின் ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்து வருகிறார். விண்வெளியைத் தவிர வேறெதுவும் தெரியாது சாராவுக்கு. சமைக்க, துவைக்க, வீட்டு வேலைகள் எல்லாவற்றையுமே கணவர் மைக்கேல் வெவ்ரிக் கவனித்துக்கொண்டிருந்தார். அவர் 2011-ல் கேன்சரில் இறந்துவிட, நிலைகுலைந்து போனார் சாரா. ஒருவழியாக வலிகளையும் இழப்புகளை யும் கடந்து, மனித சமுதாயத்துக்கான மகத்தான கண்டுபிடிப்பை நோக்கி தன் வாழ்வை செலுத்திக் கொண்டிருக்கிறார் சாரா.


p10i.jpg

மனித நேய எழுத்து

 கடந்த 20 ஆண்டுகளாக உலகப்பெண் எழுத்தாளர் வரிசையில் முக்கிய இடத்தில் இருப்பவர் ஜூம்பா லஹரி. 2000 ஆண்டுக்கான புலிட்சர் விருதை இவரது சிறுகதைத் தொகுப்பு ‘இன்டர்ப்ரட்டர் ஆஃப் மாலதிஸ்’ வாங்கியது. அதன்பின், அந்நிய நாட்டில் குடியேறுபவர்களின் மனநிலை குறித்த இவரது நாவலான ‘தி நேம்ஸேக்’ பெருங்கவனம் பெற்றது. 2014-ல் அதிபர் ஒபாமா இவருக்கு ‘தேசிய மனிதநேய விருது’ கொடுத்து கௌரவித்தார். இவரது இரண்டாவது நாவலான ‘தி லோ லேண்ட்’ 2014-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு இரண்டாவது இடத்தில் இருந்தது.


p10j.jpg

அதிபரின் மனைவி

அமெரிக்க அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலானியா... ஐந்து வயதிலேயே மாடலிங் செய்யத் தொடங்கியவர். இவர் போஸ் கொடுக்காத பத்திரிகையே இல்லை. ஃபேஷன், டிராவல் இரண்டும் தான் மெலானியாவுக்கு பிடித்தமானவை. டொனால்ட் ட்ரம்ப்பையும் 1998-ல் ஒரு ஃபேஷன் நிகழ்ச்சியில்தான் சந்தித்தார். 46 வயதாகும் மெலானியா ட்ரம்ப்பின் மூன்றாவது மனைவி. இப் போது டொனால்ட் ட்ரம்ப் புக்கு வயது 70. அவருடைய முதல் மனைவிக்குப் பிறந்த மகன் ஜூனியர் ட்ரம்ப்பை  விட மெலானியாவுக்கு 7 வயதுதான் அதிகம்!

vikatan

Link to comment
Share on other sites

88 நாடுகள் இவரை அதிகமாக தேடியுள்ளது!

 

GettyImages-483201940.0.0_01585.jpg

உலகில் உள்ள 161 நாடுகளில் கூகுள் மூலம் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 88 நாடுகள் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பை அதிகம் தேடியுள்ளது. மீதமுள்ள நாடுகளில் டிகாப்ரியோ, பில்கேட்ஸ் ஆகிய பெயர்கள் தேடப்பட்டுள்ளன.இந்த வருடத்தின் வைரல் மனிதர் ஆகியுள்ளார் ட்ரம்ப்.

இந்த வருடம் அனைவரும் எதிர்பார்க்காத வகையில் அமெரிக்க அதிபரான ட்ரம்ப் தான் அதிகம் ட்ரெண்ட் செய்யப்பட்ட அமெரிக்க அதிபர். அதிபர் விவாதங்களின் போது அதிகம் பார்க்கப்பட்டதும் இவரது விவாத வீடியோக்கள் தான். சோஷியல் மீடியாவின் ஹிட் மேன் ட்ரம்ப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மகள் இறந்து ஒரு நாள் கழித்து உயிரிழந்த தாய்

 

promo307269601_01214.jpg

ஸ்டார் வார்ஸ் புகழ் நடிகை கேரி ஃபிஷர் இரண்டு நாட்களுக்கு முன் காலமானார். அவரது தாயார் மாரடைப்பு காரணமாக அன்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் புதனன்று சிகிச்சை பலனின்றி அவரது தாயார் டெப்பி ரெனால்ட்ஸ் (84) காலமானார். ஒருநாள் இடைவெளியில் இருவரும் உயிரிழந்தது அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சன்னி லியோனை விசாரிக்க உத்தரவு!

 

`ராகினி எம்.எம்.எஸ்'. என்ற படத்தில் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில்  நடிகை சன்னி லியோன் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார் என குற்றம் சாட்டி கடந்த 2014ம் ஆண்டு  ஹேமந்த் பர்ட்டீல் என்ற சமூக ஆர்வலர் போலீசில் புகார் அளித்தார்.  அதில், அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் சட்ட பிரிவு 295 ஏ-யை மீறும் வகையில் படத்தில் ஆபாச காட்சிகளை காட்டி மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

சன்னி லியோன்

இந்த புகாரினை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி ஜே.எஸ். கோகட்டே இன்று பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் உத்தரவு எதுவும் பிறப்பிப்பதற்கு முன் விசாரணை ஒன்று நடத்த வேண்டிய தேவை உள்ளது.  எனவே, பிரிவு 202ன் கீழ் போலீசார் விசாரணை மேற்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Link to comment
Share on other sites

தசைகளை விரிவுபடுத்த வேகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?

வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் உடற்பயிற்சி செய்தால் தசைகளை விரைவில் விரிவுபடுத்த முடியும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. அதை பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

தசைகளை விரிவுபடுத்த வேகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?
 
தசைகள் விரிவுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும் என்று நினைத்து பலரும் அதை பின்பற்றுகின்றனர். ஆனால் இது தவறானது.

இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும்.

ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

வேகமாக செய்ய வேண்டிய பயிற்சிகளை வேகமாகவும், நிதானமாக செய்ய வேண்டிய பயிற்சிகளை மெதுவாகவும் செய்யவேண்டும். எந்த பயிற்சியாக இருந்தாலும் பயிற்சியாளரில் அனுமதி பெற்ற பின்னரே செய்ய வேண்டும். ஏனெனில் உங்களின் உடல்நிலைக்கு ஏற்றபடியான பயிற்சிகள் எது என்று பயிற்சியாளரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
Link to comment
Share on other sites

பௌத்திரமான காதல் பெரும் பாக்கியமாகும்
 
 

article_1481810101-love.jpgகாதலர்கள் ஒருவரை ஒருவர் சரிவர முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் அவர்களுக்கிடையே ஊடல் கொள்வது பொருத்தமாகாது. 

 ஆழமான அன்பு கொண்டால் ஊடல் புரிவது வழக்கமான ஒன்றுதான். இதனையும் அதிக நேரமாகக் கொள்வது மிகத் தவறாகும்.   

காதல் இறுக்கமடைய இறுக்கமடைய, உரிமையின் நிமித்தம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வார்த்தைப் பிரயோகத்திலும் நாகரிகம் இருக்க வேண்டும். ‘இவள் என்னவள்’ தானே என்று காதலனும் ‘இவர் என்னவர்’ என்று காதலியும் என்ற உரிமையில் கண்டபடி வார்த்தைகளை வௌிப்படுத்தக்கூடாது. 

மனம் எத்தருணத்திலும் காயப்படக்கூடிய ஒன்றுதான். சூழ்நிலை தெரியாமல், மனப்பாங்கு  புரியாமல் பேசுவது புத்திசாலித்தனமான காரியம் அல்ல!

நல்ல பௌத்திரமான காதல் கிட்டுவது, கணவன் மனைவிக்குரிய பெரும் பாக்கியமாகும். திருமணமாகாத காதலர்களுக்கும் இது பொருந்தும்.  

Link to comment
Share on other sites

 

நம்புவீர்களா... இம்முறை நியூ இயர் 12 மணிக்கு இல்லை... 'லீப் செகண்ட்' அதிசயம்!

 

லீப்

இந்த 2016 பலருக்கும் ஒரு நீண்டஆண்டாக இருந்திருக்கும், கவலை வேண்டாம்! அது இன்னும் நீளப்போகிறது.இம்முறை புத்தாண்டுக்கு10,9,8... கவுண்ட்டவுனுக்கு பதில் 11,10,9... என இருக்கவேண்டும். ஏனென்றால் எப்போதும் 12 மணிக்கு கொண்டாடப்படும் புத்தாண்டு இவ்வாண்டு 12 மணி 1 வினாடிக்கு கொண்டாடப்படுமாம். ஏன் என்று தெரியுமா?

இந்த டிசம்பர் 31-ம் தேதி அனைத்து நேரகாப்பாளர்களும் 'லீப் செகண்ட்' என அழைக்கப்படும் ஒரு வினாடியை தங்களது கடிகாரங்களில் கூட்டுவர்.லீப் இயர் நாம் அறிந்ததே, பூமி சூரியனை சுற்றிவர சரியாக 365.25 நாட்கள் ஆகும். மீதம் இருக்கும் 0.25 நாள் 4 வருடங்களில் 1 நாள் ஆவதே லீப் இயர், அந்த நாள் தான் பிப்ரவரியில் சேர்க்கப்படும் 29-ம் தேதி. அதே போல் நேரத்தை பூமியின் சுழற்சியுடன் சரிவர இருக்க சேர்க்கப்படுவதே லீப் செகண்ட்.அதாவது பூமி ஒரு சுழற்சிக்கு சரியாக 24 மணிநேரம் எடுப்பதில்லை, அது 86400.002 வினாடிகள் எடுக்கும். அந்த 0.002 விநாடிகள் தான் சேர்ந்து இப்போது 'லீப் செகண்ட்'டாக சேர்க்கப்படவுள்ளது.

இப்போது உலகளாவிய நேரநிலையான கோஆர்டிநேட் யூனிவேர்சல் டைம்மில்(UTC) இந்த டிசம்பர் 31-ம் தேதி 23:59:59லிருந்து 23:59:60க்கு சென்றபிறகு தான் 00:00:00க்கு செல்லுமாம் UTC யின் கடிகாரம்.இந்த லீப் செகண்ட் சேர்க்கும்முறை 1972ல் செயல்படுத்தப்பட்டது அதில் 27 ஆண்டுகளில் லீப் செகண்ட் சேர்க்கப்பட்டுள்ளது. 

லீப் நொடியால் பாதிப்பா?

 1972-ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வரும் இந்த லீப் நொடி, கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதியோடு சேர்க்கப்பட்டது. அந்த நாளில் பல பெரிய பாதிப்புகள் நிகழ்ந்தன.  மிகப்பெரிய நிறுவனங்களான மொஸில்லா, ரெடிட், ஃபோர் ஸ்கோயர், யெல்ப், லிங்க்டுஇன் மற்றும் ஸ்டெம்பிள்டன் ஆகிய நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகி முடங்கிப்போயின. லினெக்ஸ் செயல்பாடுகள் முடங்கிப்போனது பாதிப்புக்கு காரணமாகின. மேலும் சில ஜாவாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் நிறுவனங்கள் முடங்கின. 

 2015-ம் ஆண்டு  ஜூன் 30-ம் தேதி இந்த லீப் செகண்ட் வந்தபோது பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தது. அப்போது கூகுள்,  இந்த ஒரு நிமிடத்தை கடக்க புதிய திட்டத்தை வைத்துள்ளதாக கூறியது. இதன் மூலம் 20 மணி நேரத்துக்கு முன்னதாக கூகுளின் அனைத்து சர்வர்களும் இணையத் துவங்கும். இந்த செயல்பாடு முடியும்போது லீப் நொடி கடக்கப்பட்டிருக்கும் என கூகுள் கூறியது.

இப்படி ஒரு வினாடியைத் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதா வேண்டாமா என்பது உலக அளவில் பிரச்னையாகியிருக்கிறது. சேர்த்துக் கொள்வதால் பிரச்னை ஏற்படுகிறது. ஆகவே "கூடாது, இதை நிறுத்த வேண்டும்" என்று அமெரிக்கா தலைமையிலான நாடுகள் எதிர்க்கின்றன. ஒரு வினாடியை சேர்த்துக் கொள்வதை நீடிக்க வேண்டும் என்று பிரிட்டன் தலைமையிலான நாடுகள் வற்புறுத்துகின்றன. லீப் வினாடியைச் சேர்க்கும் ஏற்பாடு இல்லாமல் போனால் கால வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே போகும். 500 ஆண்டுகளில் இது ஒரு மணி நேரமாக அதிகரித்து விடும்.

தானாக அப்டேட் ஆகிக்கொள்ளும் மொபைல்களும், கம்ப்யூட்டர்களும் நேரத்தை மாற்றிகொள்ளும்.மத்த கடிகரங்களில் நீங்களே மாற்றலாம், ஆனால் நமது தேவைக்காக 5,10 நிமிடங்கள் கூடவும்,குறையவும் வைக்கும் நமக்கு ஒரு வினாடி பெரியவிஷயம் இல்லையே!

vikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.