Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: அடடா! 50 ஆயிரம் புத்தகங்களுடன் அட்டகாசமான விடுதி!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
07chskohotel

போர்ச்சுகலின் ஓபிடோஸ் நகரில் உள்ளது ‘தி லிட்ரரி மேன் ஹோட்டல்’. இங்கு சுமார் 50 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன! 2015-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விடுதி, உலகின் மிகச் சிறந்த விடுதி என்று புத்தகப் பிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 30 அறைகள் கொண்ட இந்த விடுதியில் கூடம், அறைகள், மாடிப் படிகள், சுவர்கள் என்று எங்கு பார்த்தாலும் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. வசதியான நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. நாவல்கள், கவிதைகள், வாழ்க்கை வரலாறு, சமையல் என்று பல விதமான புத்தகங்கள் இருக்கின்றன. ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தால் அதை முடிக்காமல் வைக்க முடியாது. அதற்காக இன்னொரு நாள் தங்கவும் நேரிடலாம். புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிச் செல்லலாம். ஆனால் அதற்கான கட்டணத்தைக் கேட்டால் மயக்கமே வந்துவிடும். “அரிய புத்தகங்கள் என்றால் 35 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருக்கும். எங்கள் அறையில் தங்குவதற்கு ஓர் இரவுக்கு 5,900 ரூபாய்தான் கட்டணம். இன்னொரு நாள் தங்கிப் படித்துவிட்டுச் செல்வது செலவு குறைந்தது. இங்கே வரும் வாடிக்கையாளர்கள் கூட எங்களுக்கு நன்கொடையாகப் புத்தகங்களை அனுப்பி வைக்கிறார்கள். அதனால் விரைவில் 1 லட்சம் புத்தகங்களை எட்டி விடுவோம் என்று நம்புகிறோம். எங்களைப் போன்ற விடுதிகள் பல நாடுகளிலும் இருக்கின்றன. ஆனால் நியூயார்க்கில் உள்ள தி லைப்ரரி ஹோட்டலில் 6 ஆயிரம் புத்தகங்களும் போர்ட்லாண்ட், டோக்கியோவில் உள்ள விடுதிகளில் 3 ஆயிரம் புத்தகங்களும்தான் இருக்கின்றன” என்கிறார் விடுதியின் உரிமையாளர்.

அடடா! 50 ஆயிரம் புத்தகங்களுடன் அட்டகாசமான விடுதி!

தன் காதலி ஆன்ட்ரியா காஸ்டில்லாவின் 28-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக லாஸ் வேகாஸ் வந்திருந்தார் டெரெக் மில்லர். இவர்களுடன் ஆன்ட்ரியாவின் தங்கையும் அவரது காதலரும் சேர்ந்து இசை நிகழ்ச்சிக்குச் சென்றனர். இந்த நிகழ்ச்ச்சி முடிந்தவுடன் காதலியிடம் திருமணக் கோரிக்கையை வைப்பதற்காக ஆவலுடன் காத்திருந்தார் டெரெக். திடீரென்று துப்பாக்கிக் குண்டுகள் சீறிப் பாய்ந்தன. தங்கையின் கையைப் பிடித்திருந்த ஆன்ட்ரியாவின் உடலையும் தாக்கின. தன் மீது குண்டுகள் விழுந்தாலும் துப்பாக்கிக் குண்டுகளிடமிருந்து தங்கையைக் காப்பாற்றிவிட்டார் ஆன்ட்ரியா. சட்டென்று அவரைத் தூக்கிக்கொண்டு மூவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். அவசரப் பிரிவில் சேர்த்துவிட்டு, 7 மணி நேரம் காத்திருந்தனர். பிறகுதான் தெரிந்தது மருத்துவமனைக்கு வந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்பது. “அக்கா மிகவும் அன்பானவர். இளம் வயதிலேயே எங்கள் அம்மா புற்றுநோயால் இறந்துவிட்டார். ஆனால் அம்மாவுக்கு அந்தவலி தெரியாமல், மகிழ்ச்சியாகப் பார்த்துக்கொண்டார் அக்கா. இப்போதும் தன் உயிரைக் கொடுத்து என்னைக் காப்பாற்றிவிட்டார். டெரெக்கும் நல்லவர். எங்கள் அப்பாவிடம் திருமணத்துக்கு அனுமதி கேட்டிருந்தார்” என்கிறார் ஏதென்னா.

கொடுந்துயரம்…

http://tamil.thehindu.com/world/article19817846.ece

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: அளவுக்கு மிஞ்சினால் பார்வையும் பறிபோகும்!

 

 
08chskomasalapic

சீனாவின் டோங்குவான் பகுதியைச் சேர்ந்த 21 வயது வூ, ஸ்மார்ட்போனில் தொடர்ந்து விளையாடி பார்வையை இழந்திருக்கிறார். அக்டோபர் முதல் தேதி வழக்கம்போல் ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் விளையாடினார். திடீரென்று வலது கண்ணில் பார்வை குறைந்தது. உடனே தூங்கிவிட்டார். மறுநாள் காலை விழித்தபோது பார்வை முற்றிலும் பறிபோயிருந்தது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். “இவரது விழித்திரை மிக மோசமாகச் சேதமடைந்திருக்கிறது. வயதானவர்களுக்கு மட்டுமே இதுபோன்ற பிரச்சினை வரும். அளவுக்கு அதிகமான அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட கண், இறுதியில் செயலிழந்துவிட்டது. நிதித்துறையில் வேலை செய்துவரும் வூ, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். வேலையிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் ஸ்மார்ட்போனில் விளையாட ஆரம்பிப்பார். ஒரு நாளைக்கு 7 மணி நேரம் கூட விளையாடுவார். இதனால் கண்களுக்கு ஓய்வே இல்லாமல் போய்விட்டது. இவரது பார்வையை மீட்க முயற்சி செய்துவருகிறோம். சிறிய முன்னேற்றம் தெரிகிறது. ஆனால் ஃப்ளாஷ் லைட் அடித்தபோது அவரால் உணர முடியவில்லை. கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் போன்றவற்றை 60 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள். அடிக்கடி பார்வையை வேறு பக்கம் திருப்புங்கள். கண்களுக்குப் பயிற்சி கொடுங்கள். பார்வை மிக முக்கியம்” என்கிறார் வூவின் கண் மருத்துவர். “விடுமுறை நாட்களில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்மார்ட்போனில் விளையாடுவேன். சில நேரங்களில் சாப்பிடுவது கூட இல்லை. சிறிது ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் விளையாட ஆரம்பிப்பேன். இரவு 2 மணிக்கு மேல் களைப்பில் தூங்கிவிடுவேன். என்னுடைய தவறு இப்போது புரிகிறது” என்கிறார் வூ.

அளவுக்கு மிஞ்சினால் பார்வையும் பறிபோகும்!

இன்று உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகமாகியிருக்கிறது. சிலருக்கு நோயின் காரணமாகவும் அளவான உணவு சாப்பிடவேண்டியிருக்கிறது. ஸ்மார்ட்போன்களில் கலோரி குறித்த கால்குலேட்டர்கள் வந்துவிட்டாலும் அதை ஒரு வழிகாட்டியாக மட்டுமே எடுத்துக்கொள்ள இயலும். பானசோனிக் நிறுவனம் CaloRieco என்ற புதிய கருவியை உருவாக்கியிருக்கிறது. நாம் சாப்பிடக்கூடிய உணவுத் தட்டை, இந்தக் கருவிக்குள் வைத்துவிட்டால் சில நொடிகளில் எவ்வளவு கலோரி என்பதைச் சொல்லிவிடுகிறது. அதுமட்டுமின்றி, அந்த உணவில் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்றவை எவ்வளவு இருக்கின்றன என்பதையும் சொல்லிவிடுகிறது. இந்தக் கருவி பெரும்பாலான உணவுகளைச் சரியாகக் கணித்துவிடுகிறது. சூப், அடர் நிற உணவுகளை கணிப்பதில் பிரச்சினை இருக்கிறது. நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்காகவே இந்தக் கருவியை உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறது பானசோனிக். அடுத்த சில ஆண்டுகளில் இந்தக் கருவி விற்பனையில் சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னும் விலை பற்றிய தகவலை வெளியிடவில்லை.

உங்கள் தட்டில் எவ்வளவு கலோரி?

http://tamil.thehindu.com/world/article19823125.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: கட்டிடங்களையும் காப்பி அடிக்கக் கூடாது!

 

 
 
TAMILTHTemplateLibrarynation21clIMG2
10chskomasalapic

கனடாவின் டொரோண்டோ நகரில் ஓர் அழகான வீட்டைப் போலவே, பக்கத்து தெருவில் உள்ள இன்னொரு வீட்டைச் சீரமைத்திருக்கிறார்கள். இதனால் அசல் வீட்டுக்காரர்கள், தங்கள் வீட்டின் மதிப்பு குறைந்துவிட்டதாக கூறி ரூ.16 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்தார்கள். பார்பரா ஆனும் எரிக் கிரிஷென்ப்ளாட்டும் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜாசன், ஜோடி சாப்னிக் தொடுத்த வழக்குக்காக நிம்மதியிழந்திருக்கிறார்கள். “நாங்கள் எங்கள் வீட்டைக் கட்டும்போது கட்டிட அமைப்பு, வண்ணம் என்று ஒவ்வொன்றையும் பிரத்யேகமாக அமைத்தோம். இதற்காக 7 ஆண்டுகள் உழைப்பையும் பணத்தையும் செலவிட்டோம். இந்த வீட்டைப்போல் இன்னொரு வீடு இந்தப் பகுதியில் இல்லை. எங்கள் வீட்டின் மதிப்பு ஏறிக்கொண்டே இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து தெருவில் ஒரு பழைய வீட்டைப் புதுப்பித்தனர். எங்கள் வீட்டைப் போலவே மாற்றிவிட்டனர். இதனால் எங்கள் வீட்டின் மதிப்பு குறைந்துவிட்டது. எங்கள் கற்பனையில் உதித்த விஷயத்தை அவர்கள் எளிதாக எடுத்துக்கொண்டார்கள். மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய அவர்கள் மீது வழக்கு தொடுத்தோம். அதற்கான ஒளிப்பட ஆதாரங்களையும் அளித்தோம்” என்கிறார் ஜோடி சாப்னிக்.

“வெளிப்புறத்தில் ஜன்னல்கள், விளக்குகள், கற்கள் போன்றவை ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும் எங்கள் வீட்டுக்கும் அவர்கள் வீட்டுக்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது. நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. சில ஒற்றுமைகளுக்காக நாங்கள் நஷ்ட ஈடு தரவேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம்? 2015-ம் ஆண்டு புதுப்பித்தவுடன் வாங்கியதைவிட அதிகமாக 2 மில்லியன் டாலர்களுக்கு விற்றுவிட்டோம்” என்கிறார்கள் பார்பராவும் எரிக்கும். இந்த விநோதமான வழக்கை விசாரித்த நீதிமன்றம், இனிமேல் இப்படி யாரும் இன்னொருவருடைய கட்டிட அமைப்பை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிட்டது. நீதிமன்றத்துக்கு வெளியே இரு குடும்பங்களும் சமரச முயற்சியில் இறங்கியிருக்கின்றன. “கட்டிடக் கலைக்கும் காப்புரிமை இருக்கும் என்றும் கட்டிடங்களும் ஒருவிதமான கலை என்றும் நாம் பார்ப்பதில்லை. அதனால்தான் ஒரு வீட்டைப் பார்த்து, இன்னொரு வீட்டை மாற்ற முடிந்திருக்கிறது. இந்த வழக்கு மூலம் மக்களிடம் விழிப்புணர்வு வந்திருக்கும்” என்கிறார் சட்டக் கல்லூரி பேராசிரியர் கேரிஸ் க்ரைக்.

கட்டிடங்களையும் காப்பி அடிக்கக் கூடாது!

சீனாவைச் சேர்ந்த 22 வயது கை க்வானுக்கு ஒரு மாதம் முன்பு வரை நீச்சல் தெரியாது. இன்றோ சுமார் 12 மணி நேரம் நீந்திக்கொண்டிருக்கும் வேலையில் இருக்கிறார்! ‘ஆழ்கடல் அதிசய உலகம்’ என்ற பெயரில் மிகப் பிரம்மாண்டமான காட்சியகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் மீன்களோடு மீன்களாக நீந்துவதற்கு கடல்கன்னி ஆடைகளை அணிந்த பெண்கள் வேலைக்குச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். “எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு மாதம் முன்பு வரை நீச்சல் தெரியாது. இன்று ஒருநாளைக்கு 7, 8 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். கடல்கன்னி என்ற கற்பனை கதாபாத்திரம் எல்லோரையும் வசீகரிக்கும். நானே ஒரு கடல்கன்னிபோல் நீந்துவது அற்புதமாக இருக்கிறது” என்கிறார் கை கவான்.

நீந்தக் கற்றுக்கொண்ட கடல்கன்னி!

http://tamil.thehindu.com/world/article19832793.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஒரு பர்கரின் விலை 1,08,000 ரூபாய்

 

 
masala

உலகிலேயே மிக விலை உயர்ந்த பர்கரை விற்பனை செய்து வருகிறது அமெரிக்காவின் ஹாங்கி டாங் உணவு விடுதி. உலகின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் சிறப்பான உணவுப் பொருட்கள் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பர்கரின் மேற்பகுதி தங்க இழைகளால் மூடப்பட்டுள்ளன. 2,618 கலோரி கொண்ட இந்த பர்க்கரின் விலை 1,08,000 ரூபாய்!

ம்ம்… தங்கம் விக்கிற விலையில இதெல்லாம் ரொம்ப அவசியமாக்கும்…

கெல்சி யேமன்ஸ், லாரி ராக்ஸ்டேல் இருவரும் பள்ளிக் காலத்திலிருந்தே நல்ல நண்பர்கள். வளர்ந்த பிறகு காதலர்களானார்கள். 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது கெல்சியின் அம்மா, கார் விபத்தில் உயிர் இழந்தார். துயத்தில் இருந்த கெல்சியை மீட்டு, வாழ்நாள் முழுவதும் நன்றாகப் பார்த்துக்கொள்வதாக வாக்களித்தார் ராக்ஸ்டேல். மூன்றாண்டுகளுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். ஒரு குடிகார கார் டிரைவர் ராக்ஸ்டேல்லின் காரில் மோதியதால் மோசமான விபத்து நிகழ்ந்தது. பின்னால் வந்த கெல்சி, லாரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.

நீண்ட காலம் கோமாவில் இருந்தார் ராக்ஸ்டேல். கெல்சியின் அன்பும் மருத்துவர்களின் கவனிப்பும் அவரை மீட்டெடுத்தது. கையும் கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சக்கர நாற்காலியில் வலம் வரும் லாரியை 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொள்ள விரும்பினார் கெல்சி. பல இடையூறுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தத் திருமணம் ஒரு தேவதையின் திருமணம் போன்று இருக்க வேண்டும் என்றார் கெல்சி. ஆனால் அதற்குத் தேவையான பணம் இல்லை. கெல்சியின் சகோதரி, இவர்களின் காதல் வாழ்க்கையைச் சொல்லி திருமணத்துக்கு நிதி திரட்டினார். ஏராளமான பணம் கிடைத்தது. கெல்சி நினைத்தது போலவே டிஸ்னி வேர்ல்டில் மிகச் சிறப்பாக சிண்ட்ரெல்லாவின் திருமணம் போன்று நடந்தேறியது!

அன்பு இருந்தால் எதையும் சமாளிக்க முடியும்னு நிரூபிச்ச இந்த ஜோடி, நூறு வருஷம் சந்தோஷமா வாழணும்!

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் இது. புற்றுநோயால் மார்பகங்கள் நீக்கப்பட்டவர்களுக்காக, சீனாவில் உள்ள ஹுனான் புற்றுநோய் மருத்துவமனை புதிய வகை உள்ளாடையை உருவாக்கியிருக்கிறது. இந்த உள்ளாடையை அணிந்துகொண்டால் இயல்பான தோற்றம் கிடைக்கும். சகல வேலைகளையும் சிரமமின்றிச் செய்ய முடியும். உள்ளாடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆண்களுக்கு உள்ளாடையை அணிவித்து, விளக்கம் அளித்து வருகிறது மருத்துவமனை.

உலகம் முழுவதும் பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டு வருவது நல்லதுதான்!

ஃபார்முலா நம்பர் 1 கார் பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கர் ஜெர்மனியைச் சேர்ந்தவர். கடந்த டிசம்பர் மாதம் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. கல்லில் தலை மோதியதால் பெருமூளை நசுங்கிவிட்டது. அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. கோமாவில் இருந்த சூமாக்கருக்குப் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார் சூமாக்கர். 15 மருத்துவர்கள் இரவு பகலாக சூமாக்கரை வீட்டிலேயே கவனித்து வருகிறார்கள். சூமாக்கர் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. மீண்டும் கார் பந்தயங்களில் ஈடுபடாவிட்டாலும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எத்தனையோ ஆபத்துகளில் இருந்து தப்பிய சூமாக்கர், இதிலிருந்தும் விரைவில் மீண்டு வருவார்!

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

உலக மசாலா: உழைத்துச் சாப்பிடும் காகங்கள்!

 

 
12chkancrow-cleaners3a

நெதர்லாந்தைச் சேர்ந்த ரூபென் வானும் பாப் ஸ்பிக்மனும் இணைந்து தெருவில் உள்ள சிகரெட் துண்டுகளை சுத்தம் செய்யும் ரோபோட் ஒன்றை உருவாக்கினார்கள். ஆனால் அந்த ரோபோட்டைப் பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் தோன்றின. சாலைகளில் சைக்கிள் போன்ற வாகனங்கள் வராமலும் மனிதர்கள் தவறுதலாக மிதிக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் ரோபோட்களுக்கு பதிலாக பறவைகளுக்குப் பயிற்சி அளித்து, பயன்படுத்த முடிவெடுத்தனர். நீண்டகாலமாக புறாக்களை மனிதர்கள் பயன்படுத்தி வந்ததால், அவற்றைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் பயிற்சி அளிக்கும்போதுதான் எவ்வளவு கடினம் என்று புரிந்தது. அதனால் காகங்களுக்குப் பயிற்சியளிக்க முடிவெடுத்தனர். “நெதர்லாந்து ரயில் நிலையங்களில் சிகரெட் துண்டுகளைச் சுத்தம் செய்வதே மிகப் பெரிய வேலை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவே நாங்கள் முயன்று வருகிறோம். இந்த வேலையைக் காகங்களால்தான் மிகச் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை நாங்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டோம். காகங்கள் புத்திசாலியாக இருக்கின்றன. சுற்றுப்புறத்தை உற்று நோக்குகின்றன. எளிதாக மனிதர்களிடம் நெருங்கிவிடுகின்றன. அதனால் காகங்களை வைத்து மனிதர்களுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கை வந்தது. சில காகங்களுக்கு சிகரெட் துண்டுகளை எடுத்து வந்து, எங்கள் கருவியில் போடும்படி பயிற்சி அளித்தோம். சரியாக அந்தக் கருவியில் சிகரெட் துண்டுகளைப் போட்டால், கருவியிலிருந்து வேர்க்கடலைகள் வெளிவரும். அதைச் சாப்பிட்டுவிட்டு, அடுத்த சிகரெட் துண்டைத் தேடிப் பறக்க ஆரம்பித்துவிடும். இப்படிக் கடலைகளைச் சாப்பிடுவதற்காக சிகரெட் துண்டுகளைத் தேடித் தேடி எடுத்து வருகின்றன. நாங்கள் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக வேலை செய்கின்றன. பொது இடங்களில் சிகரெட் துண்டுகள் குறைந்து வருகின்றன. கொஞ்சம் உணவைக் கொடுத்துவிட்டு, அதிக வேலைகளை வாங்குகிறோம் என்று தோன்றுகிறது. இப்படி சிகரெட் துண்டுகளை எடுத்து வருவதால், காகங்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்படுகிறதா என்றும் பார்க்க வேண்டும். ஒருவேளை காகங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் வேறு வழியைத்தான் நாட வேண்டும்” என்கிறார் ரூபென். உலகம் முழுவதும் சிகரெட் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஓர் ஆண்டில் 6 லட்சம் கோடி சிகரெட்களை மனிதர்கள் புகைக்கிறார்கள்.

உழைத்துச் சாப்பிடும் காகங்கள்!

லண்டனில் வசிக்கிறார் 32 வயது மல்கோர்ஸாடா குல்ஸிக். இவரது கூந்தல் கணுக்கால் வரை வளர்ந்திருக்கிறது. கூந்தலை விரித்தால் அவரே மறைந்துவிடுகிறார். “7 வயதிலிருந்து வளர்க்க ஆரம்பித்த கூந்தலை இதுவரை வெட்டியதில்லை. நுனியில் மட்டும் ஒரே அளவாக அவ்வப்போது வெட்டிக்கொள்வேன். கூந்தலின் நீளத்தையும் நிறத்தையும் பார்ப்பவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். குடும்பத்தினரும் நண்பர்களும் தனித்துவமாக இருக்கும் இந்தக் கூந்தலை ஒருபோதும் வெட்ட அனுமதிப்பதில்லை. கூந்தல் வளர்வதற்குப் பிரத்யேகமாக நான் கவனம் எடுத்துக்கொள்வதில்லை. தேங்காய் எண்ணெய் மட்டும் பயன்படுத்துவேன். தலைக்குக் குளித்தால் முடி காய்வதற்கு 4 மணி நேரமாகும். சாலையில் சென்றால் அறிமுகம் இல்லாதவர்கள் கூட என் கூந்தலுக்காக புன்னகை செய்வார்கள். பாராட்டுவார்கள். நீண்ட கூந்தலை நான் எந்த விதத்திலும் தொந்தரவாக நினைத்ததில்லை” என்கிறார் மல்கோர்ஸாடா.

ஆஹா, ரியல் ராபுன்ஸெல்!

http://tamil.thehindu.com/world/article19844048.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: குப்பையில் மருத்துவக் காப்பீடு.. இளைஞருக்குப் பூச்செண்டு!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
13chskomasalapic
 
 

இந்தோனேஷியாவைச் சேர்ந்த தொழில் முனைவர் ஒருவர், குப்பைகளை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஏழை மக்களுக்கு அடிப்படை மருத்துவக் காப்பீட்டை வழங்கி வருகிறார். ‘கார்பேஜ் க்ளினிகல் இன்சூரன்ஸ்’ என்ற பெயரில் மூன்று இடங்களில் நிறுவனத்தை நடத்தி வருகிறார் 28 வயது கமால் அல்பின்சையத். 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், இன்று நாட்டின் பல பகுதிகளிலும் பலரால் ஆரம்பிக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. “வறுமையின் காரணமாக ஏழை மக்களுக்கு அடிப்படை மருத்துவ உதவிகள் கூட கிடைக்காததைக் கண்டு சின்ன வயதிலிருந்தே யோசித்து இருக்கிறேன். எங்கள் மலாங் நகரத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 55 ஆயிரம் டன்கள் குப்பை கொட்டப்படுகிறது என்பதும் அதில் பாதி அளவே அப்புறப்படுத்தப்படுகிறது என்பதும் தெரியவந்தது. மறுசுழற்சிக்கான குப்பைகளைப் பிரித்து, விற்றால் ஓரளவு பணம் கிடைக்கும். அதைக் கொண்டு ஏழை மக்களுக்கு அடிப்படை மருத்துவ உதவிகள் வழங்கலாம் என்று திட்டமிட்டேன்.

2010-ம் ஆண்டு என்னுடைய 21 வயதில் இந்தக் குப்பைக் மருத்துவக் காப்பீடு நிறுவனத்தை ஆரம்பித்தேன். ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டில் உள்ள குப்பைகளைத் தரம் பிரித்து, சேர்த்து வைக்க வேண்டும். மாதம் ஒருமுறை எங்களிடம் வந்து, சுமார் 3 கிலோ குப்பைகளைக் கொடுக்க வேண்டும். இந்தக் குப்பைகள் மூலம் 11,750 ரூபாய் கிடைக்கும். அதை வைத்து அவர்களுக்கான அடிப்படை மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறோம். இந்தோனேஷிய மக்களில் 60% பேர் ஏழைகள். அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு இதுவரை கிடைத்ததில்லை. இப்போதுதான் என்னைப் போன்ற பலரின் முயற்சியில் சிறிய அளவுக்காவது மருத்துவக் காப்பீடு வழங்க முடிந்திருக்கிறது. இதன்மூலம் மக்களுக்கும் மருத்துவ உதவி கிடைக்கிறது, சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது. எங்களோடு பல இளைஞர்கள் தன்னார்வத்துடன் வந்து, எதையும் எதிர்பார்க்காமல் வேலை செய்கிறார்கள். பிளாஸ்டிக், உலோகம், காகிதம் என்று குப்பைகளைப் பிரிப்பார்கள். மட்கும் குப்பைகளை உரமாகப் பயன்படுத்த முடியும் என்பதால், அதைத் தனியாக அனுப்பி வைத்துவிடுவார்கள். மலாங் நகரில் இயங்கும் எங்கள் மருத்துவக் காப்பீடு நிறுவனங்களின் மூலம் சுமார் 2 ஆயிரம் மக்கள் பலன் அடைகிறார்கள். ஜகார்தாவிலும் ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது. குப்பைகளால் எந்தப் பயனும் இல்லை என்று நினைத்த மக்கள், அதன்மூலம் மருத்துவ உதவி கிடைப்பதைப் பார்த்து, குப்பைகள்மீது மதிப்பு வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் இதுபோன்ற சேவையைத் தொடர்வது மிகவும் சவாலானது. புதிது புதிதாகப் பிரச்சினைகள் முளைக்கும். அவற்றைச் சரி செய்ய வேண்டும். மக்களின் நலன் மீது அக்கறை இருப்பதால்தான் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, இந்த மருத்துவக் காப்பீடு நிறுவனத்தை நடத்திவருகிறோம். நாட்டின் பிற பகுதிகளில் இருந்து ஆர்வத்துடன் வரும் இளைஞர்களுக்கு, அவர்கள் பகுதியில் காப்பீடு நிறுவனம் ஆரம்பிக்கப் பயிற்சியும் உதவியும் செய்துவருகிறோம்” என்கிறார் கமால் அல்பின்சையத்.

குப்பையில் மருத்துவக் காப்பீடு.. இளைஞருக்குப் பூச்செண்டு!

http://tamil.thehindu.com/world/article19851455.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: அலை ஓசையைக் கணித்த அசாதாரண மனிதர்

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
14chskomasalapic

பிரேசிலைச் சேர்ந்த 24 வயது டெரெக் ரபெலோ, உலகின் முதல் பார்வையற்ற தொழில்முறை அலை சறுக்கு விளையாட்டு வீரர்! இவரது அப்பா அலை சறுக்கு விளையாட்டுகளில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர். பிறக்கும்போதே ரபெலோவுக்குப் பார்வை இல்லை. மகனுக்காக வருத்தப்பட்ட பெற்றோர்கள், அந்தக் குறையைத் தெரியாமல், சாதாரணக் குழந்தைபோல் வளர்க்க முடிவு செய்தனர். இரண்டு வயதில் ரபெலோவைக் கடலுக்கு அழைத்துச் சென்றார் இவரது அப்பா. சிறிதும் பயமின்றி கடல் அலைகளுடன் விளையாட ஆரம்பித்தார். 17 வயதில் முதல்முறையாக அலை சறுக்கு போர்டை வைத்து கடலுக்குள் இறங்கினார். முதலில் சற்றுச் சிரமமாக இருந்தது. ஆனால் பெற்றோர், நண்பர்களின் வழிகாட்டுதலிலும் உற்சாகத்திலும் ரபெலோ அலைகளுடன் மோத ஆரம்பித்தார். அலை சறுக்கு விளையாட்டுப் பள்ளியில் சேர்ந்து, பயிற்சி எடுத்துக்கொண்டார். நாளடைவில் அத்தனை நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்தார். ஒரு தொழில்முறை அலை சறுக்கு வீரராக மாறினார்!

“பார்வை இல்லாவிட்டாலும் அலைகளுடன் விளையாட முடியும் என்ற நம்பிக்கையை என் அப்பாதான் விதைத்தார். என்னால் பார்க்கத்தான் முடியாதே தவிர, மற்ற புலன்களை வைத்து அலைகளின் செயல்பாட்டை நன்றாகப் புரிந்துகொள்வேன். நான் இன்று ஒரு தொழில்முறை அலை சறுக்கு விளையாட்டு வீரராக இருப்பதில் என் நண்பர்களுக்கு அதிகப் பங்கு இருக்கிறது. அவர்கள்தான் என்னுடன் பொறுமையாக விளையாடினார்கள். அதன் மூலம் நன்றாகப் பயிற்சி எடுத்துக்கொள்ள முடிந்தது. நான் உலகத்துக்குத் தெரிய ஆரம்பித்தபோது, எல்லோரும் இது ஆபத்தானது என்று எச்சரித்தார்கள். இதற்கெல்லாம் பயந்தால் இன்று நான் ஒரு தொழில்முறை அலை சறுக்கு விளையாட்டு வீரராக மாறியிருக்க முடியாது. என் அப்பாவின் கனவை நிறைவேற்றியிருக்க முடியாது. நான் பெற்ற வெற்றிகளின் மூலம் உலகப் பயணம் மேற்கொண்ட வாய்ப்பையும் பெற்றிருக்க முடியாது. பிறருக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் என் கதை மாறியிருக்க முடியாது. இன்று எல்லாமே எனக்குச் சாத்தியமாகியிருக்கிறது. ஒவ்வொரு அலை ஓசையும் வித்தியாசமானது. அலையின் ஓசையை முதலில் கவனித்துவிடுவேன். பிறகு அலையைத் தொட்ட உடனே அது எப்படி இருக்கும் என்பதை என்னால் கணித்துவிட முடியும். அதற்கு ஏற்றார்போல விளையாட ஆரம்பிப்பேன். எந்த வேலையைச் செய்தாலும் அதை நம்மால் செய்ய முடியும் என்று நாம் முதலில் நம்பவேண்டும். அப்படி நம்பினால் செய்ய இயலாத விஷயங்களைக் கூடச் செய்ய முடியும். நான் என்னை முழுமையாக நம்புகிறேன்” என்கிறார் டெரெக் ரெபெலோ.

இவரைச் சந்தித்த ஒரே வாரத்தில் காதலிக்க ஆரம்பித்துவிட்டார் மெட்லின் குன்னர்ட். 10 மாதக் காதலுக்குப் பிறகு கடந்த பிப்ரவரியில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. “அற்புதமான மனிதரை வாழ்க்கைத் துணைவராகப் பெற்றிருக்கிறேன். இவரது வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் என்றென்றும் துணையாக நிற்பேன்” என்கிறார் மெட்லின்.

அலை ஓசையைக் கணித்த அசாதாரண மனிதர்

http://tamil.thehindu.com/world/article19859452.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: இந்த அப்பாவை நாளை மகளும் கொண்டாடுவார்!

 

 
15chskomasalapic

இங்கிலாந்தைச் சேர்ந்த 36 வயது ஷாலோம் பெர் சாலமோன் அமெரிக்காவில் வசிக்கிறார். தன்னுடைய 9 மாதக் குழந்தை ஜோவுடன் சேர்ந்து பல வேடங்களில் ஒளிப்படங்கள் எடுத்துவருகிறார். அந்தப் படங்கள் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளன. இவரது இன்ஸ்டாகிராமில் ஒன்றரை லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். “ஜோ பிறப்பதற்கு முன்பு பழைய அறைகலன்கள் விற்கும் கடையை நடத்திவந்தேன். எங்கள் நண்பர்கள் அந்தக் கால ஆடைகளை அணிந்துகொண்டு, மேஜை, நாற்காலிகளில் அமர்ந்து ஒளிப்படங்கள் எடுத்துக்கொள்வார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் மகள் பிறந்தவுடன் அவளுடன் சேர்ந்து வித்தியாசமான ஒளிப்படங்கள் எடுக்கும் எண்ணம் தோன்றியது. ஹவாய் நடனம், காவல் துறை அதிகாரி, தோட்டக்காரர், காட்டு உலா, சமையல்காரர், ஓவியர் என்று பலவிதமான வேடங்களையும் போட்டிருக்கிறேன். சிக்கன் வாங்கிய டப்பாவை ஜோவுக்கு ஆடையாக அணிவித்து, நான் சிக்கன் சாப்பிடுவதுபோல் இருக்கும் படமும் தோட்டத்தில் இருந்த சிங்கப் பொம்மையை நானும் ஜோவும் படுத்தபடி பைனாகுலரில் கண்காணிக்கும் படமும் மண் தொட்டியில் மலர்போல் ஜோ இருக்க, நான் தண்ணீர் ஊற்றுவதுபோல் இருக்கும் படமும் அதிக மக்களால் விரும்பப்பட்ட படங்கள். என் மனைவி கார்லிதான் ஒளிப்படக்காரர். குழந்தையைக் கவனமாக உற்று நோக்கி, சரியான தருணத்தில் படங்கள் எடுப்பது சவாலானது” என்கிறார் ஷாலோம்.

இந்த அப்பாவை நாளை மகளும் கொண்டாடுவார்!

சீனாவின் சோங்க்விங் பகுதியில் இருக்கிறது 6 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு. ஆறாவது தளத்தில் ஸோங் குடும்பம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கிறது. இந்தக் குடியிருப்புக்கு லிஃப்ட் வசதி இல்லை. ஸோங் குடும்பத்தினர் யாரும் இதை ஒரு குறையாக நினைத்ததில்லை. ஆனால் மகளைத் திருமணம் செய்துகொண்ட மாப்பிள்ளை, தினமும் 6 மாடிகள் ஏறுவதும் இறங்குவதும் கடினம் என்று சொல்லி மனைவியுடன் சண்டை போட்டுவந்தார். பொறுமையாக இருந்த ஸோங், ஒருகட்டத்தில் சொந்த செலவில் தானே ஒரு லிஃப்ட்டை அமைத்துக்கொண்டார். கட்டிடத்தின் பக்கவாட்டில் இருக்கும் இந்த லிஃப்ட், இவரது தளத்தில் மட்டும் நிற்கும். கண்ணாடியால் ஆன அழகான இந்த லிஃப்ட்டைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால், அனுமதியின்றி லிஃப்ட் கட்டியதற்காக, ஸோங் அரசாங்கத்தின் விசாரணைக்கு வர இருக்கிறார்.

அரசை விட மாப்பிள்ளையை சமாளிப்பது கடினம்!

http://tamil.thehindu.com/world/article19865337.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: நெகிழ வைத்துவிட்டார்கள் இந்த மனிதர்கள்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
17chskoaccident
 
 

அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் ஸ்மால்ரிட்ஜ் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரது ட்ரக் பழுதடைந்து நின்றுவிட்டது. அப்போது அவரது நண்பர் ஒருவர் தன்னுடைய காரை ஓட்டி வரும்படிக் கேட்டுக்கொண்டார். நண்பரும் அவருடன் இருந்தவர்களும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தனர். அதனால் காரை ஓட்டுவதற்கு எரிக் சம்மதித்தார். அதிகாலை 2.30 மணிக்கு கார் மிக மோசமான விபத்துக்குள்ளானது. அதில் வேலை முடித்து, திரும்பிக்கொண்டிருந்த 20 வயது மேகன் நேப்பியரும் லிசா டிக்சனும் உயிரிழந்தனர். மகளை இழந்த ரெனீ நேப்பியர் துயரத்தின் எல்லைக்கே சென்றார். விபத்து ஏற்படுத்திய எரிக்குக்கு அதிகக் காலம் தண்டனை கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். வழக்கு நடந்த காலங்களில் பல முறை எரிக் உயிரிழந்த பெண்களின் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டார். தன் செயலுக்கு வருந்தி, கண்ணீர் வடித்தார். இறுதியில் ஒவ்வொரு பெண்ணுக்கும் 11 ஆண்டுகள் வீதம் 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு குடும்பங்களும் தன்னை மன்னிக்கும்படி கடிதங்கள் எழுதினார் எரிக்.

“அவரது கடிதம் என்னை உலுக்கியது. காலம் செல்லச் செல்ல என் ரணமும் சிறிது குறைந்திருந்தது. அதனால் அவரது குடும்பத்தினரைச் சென்று பார்த்தேன். எரிக்கிடமும் பலமுறை பேசினேன். மகளை இழந்து நான் வாடுவதைப்போலவே, குற்றம் செய்துவிட்டு எரிக்கும் வாடிக்கொண்டிருந்தார். அவரது வலி எனக்குப் புரிந்தது. சந்தர்ப்பவசத்தால் எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து என்பதையும் அவர் எவ்வளவு நல்லவர் என்பதையும் அறிந்துகொண்டேன். அவர் தண்டனை பெறுவதால் என் மகள் திரும்பி வரப் போவதில்லை. இந்தத் தண்டனை அவரை மோசமானவராகக் கூட மாற்றிவிடலாம். அதற்குப் பதிலாக அவரை மன்னித்தால், அதுவே அவருக்கான வாழ்நாள் தண்டனையாக அமைந்துவிடும் என்று முடிவு செய்தேன். நானே மீண்டும் நீதிமன்றம் சென்றேன். தண்டனையைப் பாதியாகக் குறைக்கும்படிக் கேட்டுக்கொண்டேன். அதாவது என் மகளுக்கான தண்டனையை ரத்து செய்துவிடச் சொன்னேன். நீதிபதியும் எரிக்கின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். தண்டனை கிடைத்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு, தண்டனைக் காலம் பாதியாகக் குறைக்கப்பட்டது. நான் மேகன் நேப்பியர் என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்தேன். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது என்பதையும் சாலை விதிகளையும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த அறக்கட்டளையின் பிரதான நோக்கம். தண்டனை முடிந்து வெளியே வந்த எரிக், இந்த அறக்கட்டளையில் இணைந்துகொண்டார். அவரும் நானும் எங்கள் சொந்த கதைகளைக் கூறி பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 ஆயிரம் பேர் சாலை விபத்துகளால் இறந்து போகிறார்கள். மனிதர்களின் அஜாக்கிரதையால் ஏற்படும் உயிரிழப்புகளை நம்மால் தடுக்க முடியும். ஒவ்வொரு உயிரும் முக்கியமானது, போனால் திரும்பி வராது” என்கிறார் ரெனீ நேப்பியர்.

நெகிழ வைத்துவிட்டார்கள் இந்த மனிதர்கள்!

http://tamil.thehindu.com/world/article19875401.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: சகலகலா பாட்டி!

 

 
18chskomasalapic

இங்கிலாந்தைச் சேர்ந்த 85 வயது ட்ரிஷ் வாக்ஸ்டாஃப், பாராசூட்டில் பறந்து சாகசம் செய்திருக்கிறார்! கடந்த 10 ஆண்டுகளாக மலையேற்றம், பாரா க்ளைடிங், சிறிய வானூர்திகளில் பறத்தல் என்று பல சாகசங்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார். “70 வயதுக்காரர்களே வயதாகிவிட்டது, என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்கிறார்கள். வயதானாலும் செய்ய முடியும் என்பதைக் காட்டவே நான் சாகசங்களில் ஈடுபட்டு வருகிறேன். பயமில்லையா என்று கேட்காதவர்களே இல்லை. நான் ஒரு ராணுவ வீரரின் மனைவி. போர்க்களத்தில் கூட வாழ்ந்திருக்கிறேன். துப்பாக்கி எதிரில் நிற்பதைவிட ஆபத்து ஏதாவது இருக்க முடியுமா? என்னைக் கேட்டால் சாலையைக் கடப்பதுதான் பெரிய ஆபத்து என்பேன். மற்ற எதைக் கண்டும் பயமில்லை. என் கணவர் மறைந்த பிறகுதான் சாகசங்களில் இறங்கினேன். என் குடும்பம் உற்சாகப்படுத்துகிறது. இதுவரை சாகசங்களின் மூலம் சம்பாதித்த 1 கோடியே 29 லட்சத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கியிருக்கிறேன்” என்கிறார் ட்ரிஷ்.

சகலகலா பாட்டி!

இங்கிலாந்தைச் சேர்ந்த 62 வயது மால்கம் ஆப்பிள்கேட், கடந்த 5 ஆண்டுகளாகக் காட்டுக்குள் வசித்து வருகிறார். மனைவி தன்னை அளவுக்கு அதிகமாகக் கட்டுப்படுத்தியதால் இந்த முடிவை மேற்கொண்டதாகக் கூறியிருக்கிறார்! “நான் தோட்ட வேலைகளைச் செய்துவந்தேன். இந்த வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். வேலையை அதிகம் நேசித்ததால் நான் திருமணத்தைப் பற்றி யோசிக்காமலே இருந்தேன். 13 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டேன். மனைவி அழகாக இருப்பார். ஆரம்பத்தில் எங்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல அவர் என்னைக் கட்டுப்படுத்த ஆரம்பித்தார். வேலையிலிருந்து தாமதமாக வீடு திரும்பினால் சண்டை போடுவார். நான் ஊர் சுற்றிவிட்டுத் தாமதமாக வீடு திரும்புவதில்லை, வேலை காரணமாகத்தான் தாமதமாக வருகிறேன் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அதை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்தன. ஒருநாள் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறினேன். சில நாட்கள் என் நண்பரின் வீட்டில் தங்கி, விவாகரத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தேன். பிறகு என்னுடைய சைக்கிளில் ஒவ்வொரு ஊராகச் சென்றேன். லண்டனில் ஓரிடத்தில் சைக்கிளைப் பூட்டாமல் வைத்திருந்தேன். யாரோ எடுத்துச் சென்றுவிட்டார்கள். கால்நடையாகவே அலைந்தேன். கிங்ஸ்டனில் அடர்ந்த காட்டைக் கண்டவுடன் அங்கே தங்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். நகரத்தை விட காடு இனிமையாக இருந்தது. அருகில் உள்ள ஊர்களுக்குச் சென்று தோட்ட வேலைகள் செய்வேன். கிடைக்கும் வருமானத்தில் நிம்மதியாக வாழ்ந்துவருகிறேன். நான் இங்கே இருப்பது என் மனைவிக்கோ, உறவினர்களுக்கோ தெரியாது. என் தங்கை சில ஆண்டுகள் தேடினாள். பிறகு நான் இறந்துவிட்டதாக நினைத்து அழுகிறாள் என்று கேள்விப்பட்டு, அவளுடன் பேசினேன். என் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ்ந்துவருகிறேன்” என்கிறார் மால்கம்.

இல்லறத்தைவிட காட்டு வாழ்க்கையே மேல் என்கிறார் மால்கம்!

http://tamil.thehindu.com/world/article19880541.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: கால் வலிக்கக் காக்க வைக்கும் டீ!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
20chskotea
 
 

சீனாவில் ஒரு கோப்பை தேநீருக்காக ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் கூட வரிசையில் காத்திருக்கிறார்கள்! சாதாரண ஐஸ் டீயின் மீது சீஸைச் சேர்த்துக் கொடுத்தால் அது ‘ஹே டீ’. சீனா முழுவதுமே ஹே டீ சுவையில் மக்கள் மயங்கிக் கிடக்கிறார்கள். தேநீர் பற்றிய அடிப்படை விஷயங்கள் கூடத் தெரியாத 21 வயது இளைஞர்தான் இந்த சீஸ் டீயை உருவாக்கியவர்! சில மாதங்களுக்கு முன்பு வரை ஜியாங்மென் பகுதியிலுள்ள சிறிய தெருவில், ஓர் ஆள் நிற்கும் அளவுக்கான கடையில்தான் இந்த சீஸ் டீ விற்பனை நடந்து கொண்டிருந்தது. இன்று குவாங்டோங் மாகாணத்தில் மட்டுமே 50 கிளைகள் இருக்கின்றன! ஒவ்வொரு கடையிலும் குறைந்தது 2 மணி நேரம் ஒரு கோப்பை தேநீருக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் 5 மணி நேரம் கூட பொறுமையுடன் காத்திருந்து, தேநீரைப் பருகுகிறார்கள். “கோங் சா என்ற தேநீரைப் பார்த்துதான் நான் சீஸ் டீயை உருவாக்கினேன். கோங் சா தேநீரில் க்ரீம் வைத்துக் கொடுப்பார்கள். சில காலம் இது பிரபலமாக இருந்தது. இன்று என்னுடைய சீஸ் டீ மக்களின் விருப்பமாக மாறிவிட்டது.

2012-ம் ஆண்டில் ஒரு சிறிய டீ கடையை ஆரம்பித்தேன். வியாபாரமே இல்லை. ஆனாலும் நம்பிக்கையைக் கைவிடவில்லை. கடையை மூடிவிட்டு, என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பல முயற்சிகளை மேற்கொண்டேன். எல்லாவற்றிலும் தோல்வி. இறுதியில் சீஸ் டீயை அறிமுகம் செய்தேன். இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என்று நானே எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியில் கணிசமான பங்கு சமூக ஊடகங்களுக்குதான். நான் ஆரம்பத்தில் விளம்பரம் செய்யவே இல்லை. இதைப் பருகியவர்கள் நல்லவிதமான கருத்துகளைப் பரப்பிவிட்டனர். இன்றும் காத்திருந்து சீஸ் டீ வாங்கியதும் உடனே பருகுவதில்லை. ஒளிப்படம் எடுத்து, ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டுதான் குடிக்கிறார்கள். ஒரு கோப்பை டீ தயாரித்துக் கொடுக்க 1 நிமிடம்தான் ஆகும். ஒரு மணி நேரத்தில் 360 கோப்பைகளை வழங்குகிறோம். ஆனாலும் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க முடியவில்லை. அவ்வளவு மக்கள் படை எடுக்கிறார்கள். இதைச் சமாளிக்க பல இடங்களில் கிளைகள் ஆரம்பித்துவிட்டோம். ஆனாலும் பிரச்சினை தீரவில்லை. கூட்டம் அலை மோதுகிறது. விரைவில் சீனா முழுவதும் கிளைகளைத் திறக்க இருக்கிறோம். 80 ரூபாய் முதல் 275 ரூபாய் வரை பல சுவைகளில் விற்பனை செய்துவருகிறோம். பால் கலக்காத தேநீரில் லேசான கசப்புச் சுவை இருக்கும். பாலாடைக் கட்டியைச் சேர்க்கும்போது கசப்புச் சுவை மறைந்துவிடுகிறது. இனிப்பு அதிகமாகத் தெரிகிறது. இதுதான் இந்தத் தேநீரை மக்கள் விரும்புவதற்குக் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மக்களின் கருத்துகளை மிகவும் நெருக்கமாகக் கவனித்து வருகிறேன். அவர்களுக்குப் பிடிக்காத விஷயங்களை உடனுக்குடன் சரி செய்துவிடுவேன். கருவுற்றிருக்கும் பெண்கள் கூட வரிசையில் காத்திருப்பதைக் கண்டதும், அவர்களுக்கு வரிசையில் இருந்து விலக்கு அளித்தேன். ஆனால் அவர்கள் 2 கோப்பைகளுக்கு மேல் வாங்க முடியாது” என்கிறார் யுன்சென் நை.

சீனர்களை கால் வலிக்கக் காக்க வைக்கும் டீ!

http://tamil.thehindu.com/world/article19887521.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: யானையை அழைத்து வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
21chskomasalapic
 
 

கனடாவைச் சேர்ந்த குதிரைப் பயிற்சியாளர் லிண்ட்சே பார்ட்ரிட்ஜ், செல்லப் பிராணிகள் விடுதிகளில் தங்க அனுமதிக்கும் அமெரிக்க அரசின் கொள்கையைப் பரிசோதிக்க முடிவு செய்தார். கெண்டகியில் உள்ள ஒரு விடுதிக்குத் தன்னுடைய 5 வயது குதிரையை அழைத்துக்கொண்டு சென்றார். விடுதிக்குள் நுழைந்து, தான் ஒரு குதிரைப் பந்தயத்தில் கலந்துகொள்ள வந்திருப்பதாகவும் தனக்கும் குதிரைக்கும் ஓர் அறை வேண்டும் என்றும் கேட்டார். வரவேற்பறையில் இருந்த பெண்கள் ஆச்சரியமடைந்தனர். தன் குதிரை வெளியில் நிற்கிறது என்றும் அறை ஒதுக்க முடியுமா என்றும் மீண்டும் கேட்டார். பிறகுதான் அவர் நிஜமாகவே கேட்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அவருக்கும் குதிரைக்கும் அறை தருவதாகச் சொன்னார்கள். “என்னால் நம்பவே முடியவில்லை. பெரிய குதிரையுடன் சென்றேன். முதல் தளத்தில் எங்களுக்கான அறை கொடுத்தனர். குதிரைக்காக அதிகமாக வாடகை கேட்கவில்லை. 650 ரூபாய்க்கு அறை கிடைத்துவிட்டது. நானும் குதிரையும் விதவிதமாகப் படங்கள் எடுத்துக்கொண்டோம். சாப்பிட்டோம். சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்தோம். பிறகு குதிரையை அழைத்துக்கொண்டு போய் செல்லப்பிராணிகளுக்கான இடத்தில் கட்டி வைத்துவிட்டேன். என்னுடைய நோக்கம் குதிரையை அறைக்குள்ளே வைத்துக்கொள்வது அல்ல. நாய், பூனைபோல் குதிரை சிறிய பிராணி அல்ல. குதிரையால் கழிவறையைப் பயன்படுத்த இயலாது. கழிவைச் சுத்தம் செய்வது கடினம். செல்லப் பிராணிகள் குறித்து அமெரிக்க அரசின் கொள்கை எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதைப் பரிசோதிக்கவே இப்படி நடந்துகொண்டேன். ஒரு வார்த்தை கூட மறுப்பு சொல்லாமல் குதிரைக்கு அனுமதி வழங்கியது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். ஒருவாரம் இந்த சுப்ரீம் விடுதியில் தங்கப் போகிறேன்” என்கிறார் லிண்ட்சே. “எனக்கு செல்லப்பிராணிகள் குறித்த அரசாங்கத்தின் கொள்கை கள் எதுவும் தெரியாது. லிண்ட்சே கேட்டவுடன் விளையாடுகிறார் என்று நினைத்துதான், குதிரையுடன் வரச் சொன்னேன். ஆனால் அவர் நிஜமாகவே குதிரையுடன் வந்துவிட்டார். வேறு வழியின்றி அறைக்குள் குதிரையை அனுமதித்தோம். உயர் அதிகாரியைத் தொடர்புகொண்டேன். 11 கிலோவுக்குக் குறைவான செல்லப் பிராணிகளை மட்டுமே அறைக்குள் அனுமதிக்கும்படிச் சொன்னார். நல்லவேளை சில மணி நேரத்தில் குதிரையை வெளியே அனுப்பிவிட்டார்” என்கிறார் விடுதியின் வரவேற்பாளர்.

யானையை அழைத்து வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்!

ஜப்பானைச் சேர்ந்த 74 வயது யோகிடோமோ ஷிமொட்டை நீண்ட காலமாக காபி தயாரிப்பில் ஈடுபட்டுவந்தார். ஓய்வுக்குப் பிறகு ‘கார்லிக் காபி’ என்ற புதிய சுவையை அறிமுகம் செய்திருக்கிறார். “என் வாழ்நாளுக்குள் ஏதாவது அழுத்தமாக முத்திரைப் பதித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தேன். தற்போது கார்லிக் காபியை உருவாக்கிவிட்டேன். இந்த காபியைப் பருகினால் பூண்டின் சுவையோடு ஏப்பம் வராது. நன்றாகக் கொதிக்க வைத்துவிடுவதால் பூண்டு இனிமையான சுவையாக மாறிவிடுகிறது. இதில் காஃபீன் கிடையாது. அதனால் இரவிலும் பருகலாம். கர்ப்பிணிப் பெண்களும் குடிக்கலாம். எந்த மனநிலையில் இதைக் குடித்தாலும் உடனே புத்துணர்ச்சி கிடைத்துவிடும். ஒரு கோப்பை கார்லிக் காபி 82 ரூபாய்” என்கிறார் யோகிடோமா.

காபியிலும் பூண்டு!

http://tamil.thehindu.com/world/article19894449.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஐயோ… பார்க்கும்போதே பதறுகிறதே…

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
22chskomasalapic
 
 

ஐயோ… பார்க்கும்போதே பதறுகிறதே…

ஹோண்டுராஸ் நாட்டுக்கு அருகில், ரோட்டன் தீவுப் பகுதியில் உள்ள கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் ஏராளமாக மிதக்கின்றன. கடலில் இப்படி ஒரு மோசமான சூழலை இதுவரை யாரும் கண்டதில்லை. சமீபத்தில் கவுதமாலா நாட்டில் பெய்த அதீத மழையால், குப்பைகள் அடித்துவரப்பட்டு ஆறுகளில் கலந்தன. ஆற்று நீர் குப்பைகளைக் கடலில் சேர்த்துவிட்டது. அதனால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கடல் மாசு அடைந்துவிட்டது. பிளாஸ்டிக் பாட்டில்கள், முள்கரண்டிகள், கத்திகள், பைகள், குப்பைகள் என்று சூரிய ஒளியைக் கடலுக்குள் செல்லவிடாதபடி அடைத்துக் கொண்டிருக்கின்றன. “கடலுக்குள்ளும் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்துகொண்டிருந்தன. பிளாஸ்டிக் துண்டுகள் துகள்களாக மாறினால் மீன்களும் மிதவை உயிரினங்களும் இவற்றைச் சாப்பிட நேரும். இதனால் உணவுச் சங்கிலியே பாதிக்கப்படும். 90% கடல் பறவைகளும் கடல் ஆமைகளும் தெரியாமல் பிளாஸ்டிக் துண்டுகளை விழுங்கினால் உயிரிழக்க நேரிடும். தனி மனிதர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும்படி பிரச்சாரம் செய்துவருகிறோம். அதேபோல தொழிலதிபர்களும் அரசாங்கங்களும் பிளாஸ்டிக் உற்பத்தியையும் பயன்பாட்டையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கடலும் விஷமாக மாறிவிடும்” என்கிறார் ப்ளூ ப்ளானட் சொசைட்டியைச் சேர்ந்த ஜான் ஹோர்ஸ்டன்.

நிறம் மாறாத ஆப்பிள்!

உலகிலேயே முதல் முறை மரபணு மாற்றப்பட்ட ஆர்டிக் ஆப்பிள் விற்பனைக்கு வந்துள்ளது. இதை நறுக்கினால் பழுப்பு நிறமாக மாறாது. கனடாவைச் சேர்ந்த ஆகனாகன் நிறுவனம், இந்த ஆப்பிள்களை விளைவித்து விற்பனைக்கு வைத்திருக்கிறது. சாதாரண ஆப்பிள்களை நறுக்கும்போது அதில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுவதால், பாலிபினோல் ஆக்ஸிடேஸ் வேதி மாற்றம் அடைந்து சில நிமிடங்களில் பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது. சில ஆப்பிள் விரைவாகவும் சில ஆப்பிள் மெதுவாகவும் நிறம் மாறக்கூடியவை. ஆனால் ஆர்டிக் ஆப்பிள்களை நறுக்கி ஒரு நாள் ஆனாலும் பழுப்பு நிறமாக மாறுவதில்லை. “ஆப்பிள் துண்டுகள் நிறம் மாறினால், அதைக் குப்பையில் கொட்டிவிடுகிறார்கள். இதைத் தவிர்க்க நானும் என் மனைவி லூயிசாவும் 20 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தோம். 2003-ம் ஆண்டிலேயே நிறம் மாறாத ஆப்பிள்களை விளைவித்துவிட்டோம். ஆனால் அதைப் பரிசோதனை செய்து, கேடு விளைவிக்காத உணவுப் பொருள் என்று சான்றிதழ் பெற இத்தனை ஆண்டுகளாகிவிட்டன. அமெரிக்க விவசாயக் கழகமும் உடல் நலனுக்கோ, சுற்றுச் சூழலுக்கோ ஆர்டிக் ஆப்பிள்களால் கெடுதல் இல்லை என்று சொல்லிவிட்டது. அதே நேரம் மற்ற ஆப்பிள்களில் உள்ள அதே அளவு சத்து, சுவை இதிலும் உள்ளன. நறுக்கினால் வண்ணம் மட்டுமே மாறுவதில்லை. இதனால் நறுக்கிய ஆப்பிள் துண்டுகளும் வீணாகாது. நல்ல ஆப்பிளா என்பதை இந்த ஆர்டிக் ஆப்பிளில் எளிதாகக் கண்டுபிடித்துவிடவும் முடியும்” என்கிறார் ஆகனாகன் நிறுவனத்தின் தலைவர் நீல் கார்ட்டர்.

http://tamil.thehindu.com/world/article19900682.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஐயோ… பாவம் இந்த மனிதர்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
24chkancarbage
 
 

பிரான்ஸைச் சேர்ந்த 60 வயது ஜியானின் வீடு முழுவதும் குப்பைகள். சமையலறை, உணவறைகளில் சாப்பிட்ட குப்பைகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள், எலும்புகள், அழுகிய காய்கள், பழங்கள் என்று நாற்றமடிக்கும் குப்பைகள். கூடத்திலும் அறைகளிலும் புத்தகங்கள், செய்தித்தாள்கள், தபால்கள். இன்னும் இரண்டு அறைகளில் அழுக்குத் துணிகள். கழிவறைகளில் பிளாஸ்டிக் டப்பாக்கள், துணிகள், தாள்கள் என்று வீடு முழுவதும் குப்பைக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்தக் குப்பைகளுக்குள்ளே உறங்கி, சாப்பிட்டு உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஜியான். இவர் சில வருடங்களாக senile squalor syndrome என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்தக் குறைபாடுடையவர்கள் எந்தப் பொருளையும் வெளியில் தூக்கி எறிய மாட்டார்கள். “ஜியான் மிகவும் அருமையான மனிதர். 2002-ம் ஆண்டு வரை தொழில்நுட்ப வல்லுநராக வேலை செய்துவந்தார். புத்திசாலி. நிறைய படிப்பார். அறிவுப்பூர்வமான உரைகளைக் கேட்பார். அவரிடம் இருக்கும் ஒரே மோசமான பழக்கம் குப்பைகளை வீட்டுக்குள் வைத்துக் கொள்வதுதான். அதுவும் இந்தக் குறைபாடு வந்த பிறகுதான் இப்படி நடந்துகொள்கிறார். நாற்றம் வருகிறது, அவர் ஆரோக்கியத்துக்குக் கேடு என்றெல்லாம் சொன்னாலும் அவர் மனம் அதை ஏற்றுக்கொள்ளாது. அதனால் ஆண்டுக்கு ஒருமுறை அரசாங்கத்திலிருந்து ஆட்களை வரவழைத்து, அனைத்து குப்பைகளையும் அப்புறப்படுத்தி விடுவோம். குப்பை வெளியேறும்போது, ஏதோ பொக்கிஷம் கொள்ளை போவதுபோல் பாவமாக பார்த்துக்கொண்டிருப்பார் ஜியான். இவரது குறைபாட்டை அறிந்து, அதை ஆவணப்படுத்தும் விதத்தில் ஒளிப்படங்களை எடுத்துவருகிறேன்” என்கிறார் ஒளிப்படக் கலைஞர் அர்னாட் சோசோன்.

ஐயோ… பாவம் இந்த மனிதர்!

சீனாவின் ஜியாங்சு பகுதியில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் பருமனான மாணவர்களின் எடையைக் குறைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. “மாணவர்கள் எடை அதிகமாக இருப்பதால் அவர்கள் ஆரோக்கியமின்றி இருக்கிறார்கள். படிப்பில் கூட அதிக கவனம் செலுத்த முடிவதில்லை. அதனால் மருத்துவர்களை அழைத்து மாணவர்களைப் பரிசோதித்தோம். பிறகு உணவியல் வல்லுநர்களின் அறிவுரைப்படி ஒவ்வொருவருக்கும் ஆலோசனைகளை அளித்தோம். வாரத்துக்கு 3 நாட்கள், 90 நிமிடங்களுக்கு உடல் குறைப்புக்கான பயிற்சிகளை அளித்தோம். இவற்றை எல்லாம் சரியாகச் செய்து எடையைக் குறைத்தால்தான் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் முழுமையாக வழங்கப்படும். இல்லாவிட்டால் அவர்கள் 60 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தாலும் 40 சதவிகித மதிப்பெண்களே வழங்கப்படும் என்று அறிவித்தோம். சாதாரணமாக சொன்னபோது யாருமே எடை குறைப்பில் ஆர்வம் காட்டவில்லை. மதிப்பெண்கள் குறையும் என்றதும் எல்லோரும் எடை குறைத்துவருகிறார்கள். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் செய்து, அவர்களுக்கு ஆலோசனைகளை மாற்றி வழங்குகிறோம். பல்கலைக்கழத்தை விட்டுச் செல்லும்போது ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்” என்கிறார் பேராசிரியர் ஸோவ் குவாங்ஃபு.

எடை குறைத்தால்தான் முழுமையான மதிப்பெண்!

http://tamil.thehindu.com/world/article19910683.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: எப்படி தென்னை மரத்தில் வாழ்ந்திருக்க முடியும்?

 
25chkanGilbert-Sanchez

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 47 வயது கில்பர்ட் சான்செஸ், கடந்த 3 ஆண்டுகளாக தென்னை மரத்தில் வசித்து வந்தார். 60 அடி உயரம் உள்ள தென்னை மரத்தில்தான் சாப்பிட்டார், உறங்கினார், எப்பொழுதாவது குளிக்கவும் செய்தார். கில்பர்ட்டின் வயதான அம்மா, தம்பி, அவரது இரண்டு மகள்கள், ஊர்க்காரர்கள் என்று எவ்வளவு பேர் கெஞ்சிப் பார்த்தும் அவர் கீழே இறங்கவே இல்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் ஒரு கலவரம். அதில் துப்பாக்கியால் யாரோ கில்பர்ட்டின் தலையில் அடித்துவிட்டனர். அதிலிருந்து தன்னைக் கொலை செய்யப் போகிறார்கள் என்ற பயம் அவருக்கு வந்துவிட்டது. அலறியடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவர், தோட்டத்திலிருந்த தென்னை மரத்தில் ஏறிவிட்டார். பயம் தெளிந்த பிறகு கீழே இறங்குவார் என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் அவர் இறங்கவே இல்லை.

“மகன் இப்படி இருப்பதை எந்தத் தாயால் சகித்துக்கொள்ள முடியும்? கெஞ்சிப் பார்த்தேன், அழுது பார்த்தேன், மிரட்டிப் பார்த்தேன். எதையும் அவன் கண்டுகொள்ளவே இல்லை. கீழே இறங்கினால் தன்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்று நினைக்கிறான். அப்படி யாரும் இங்கே கிடையாது. அவன் உயிருடனாவது இருக்க வேண்டும் என்பதற்காக தினமும் தண்ணீர், உணவு, மருந்து, உடை, சிகரெட் ஆகியவற்றை கயிற்றில் கட்டி அனுப்பி வைப்பேன். வாரம் ஒருமுறை கீழே இறங்கி, குளித்துவிட்டு மேலே போ என்று கூட சொல்லிப் பார்த்தேன். அதையும் அவன் கேட்கவில்லை. எப்பொழுதாவது வாளியில் இருக்கும் தண்ணீரை உடலில் ஊற்றிக்கொள்வான். வெயில், புயல் காற்று, மழையிலும் கூட நடுங்கிக்கொண்டே உட்கார்ந்திருப்பான். வேறு மரங்கள் என்றால் கூட கிளைகளில் நடக்கலாம், படுக்கலாம். தென்னை மரத்தில் உட்கார்ந்தபடியேதான் தூங்க முடியும். பூச்சிகள், வண்டுகள் கடித்துக்கொண்டேயிருக்கும். இவனது மனைவி இரண்டாவது பிரசவத்தின்போது இறந்துவிட்டாள். இரண்டு குழந்தைகளையும் இந்தத் தள்ளாத வயதில் பார்த்துக்கொள்வதில் சிரமமாக இருக்கிறது. குழந்தைகளுக்காக கீழே இறங்குமாறு சொன்னேன். முடியாது என்று சொல்லிவிட்டான். இவனைப் பற்றிய செய்திகள் வெளியே வர ஆரம்பித்தன. பலரும் எங்கள் குடும்பத்தினரின் நிலை கண்டு வருந்தினர். கில்பர்ட்டைக் கீழே கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர். கடந்த 11-ம் தேதி மீட்புப் பணிக்காக 50 பேர் வந்தனர். கிரேன் கொண்டுவரப்பட்டது. மரத்தை வெட்டப் போகிறோம் என்று அவனுக்கு தகவல் கொடுத்தனர். அப்படியும் அவன் இறங்க மாட்டேன் என்றான். வேறு வழியின்றி மரத்தை வெட்டினர். அடிபட்டுவிடுமோ என எல்லோரும் பயந்தோம். நல்லவேளை மரம் மெதுவாக கீழே சாய்ந்தது. அவனை வலுக்கட்டாயமாகக் கீழே இறக்கினர். 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவன் கால் நிலத்தில் பட்டது. ஆனால் ஊன்றி கூட நிற்க முடியவில்லை. உடல் முழுவதும் கொப்புளங்களாக இருந்தன. மருத்துவமனையில் சேர்த்தோம். அவன் மனநலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதால், யாரோ கொல்ல வருவதாகக் கற்பனை செய்துகொள்கிறான். மனநல மருத்துவரிடம் சிகிச்சை ஆரம்பித்திருக்கிறோம். முழுமையாகக் குணமாக சிறிது காலம் ஆகும்” என்கிறார் கில்பர்ட்டின் அம்மா.

எப்படி தென்னை மரத்தில் வாழ்ந்திருக்க முடியும்?

http://tamil.thehindu.com/world/article19916733.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: வருமானம் கொட்டும் பாதங்கள்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
26chkanScarlet-Vixxen-feet
 
 

கனடாவில் வசிக்கும் 32 வயது ஜெஸிகா குட், இன்ஸ்டாகிராம் மாடலாக இருக்கிறார். தன்னுடைய பாதங்களை விதவிதமாக ஒளிப்படங்கள் எடுத்து, விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.45.5 லட்சம் சம்பாதிக்கிறார்! “இப்படி வருமானத்துக்கு ஒரு வழி கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இது தற்செயலாக நிகழ்ந்த விபத்து. ஓய்வு நேரங்களில் வேலை வாய்ப்புச் செய்திகளைப் படித்துக்கொண்டிருப்பேன். ஒருநாள் பெண் பாதம் மாடல்கள் தேவை என்ற விளம்பரத்தைக் கண்டேன். பாதங்களுக்கு மாடல்களா என்று வியந்தேன். இதில் நல்ல வருமானம் இருப்பதாக நினைத்தேன். அதனால் என்னுடைய பாதங்களை தொழில்முறை ஒளிப்படக்காரர்களைக் கொண்டு விதவிதமாகப் படங்கள் எடுத்தேன். அவற்றை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டேன். பல நிறுவனங்களில் இருந்து என் படங்களைக் கேட்டு வந்தனர். நல்ல விலைக்கு விற்பனை செய்ய ஆரம்பித்தேன். என் கற்பனையைக் கலந்து பாதங்களைப் படம் எடுப்பதில் வித்தியாசம் காட்டினேன். தினமும் மூன்று படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன். அவற்றைப் பார்ப்பவர்கள் உடடியாக தொடர்புகொள்வார்கள். சில படங்களுக்கு அதிக அளவில் போட்டி இருக்கும். அப்போது விலையை அதிகமாகச் சொன்னாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். பாத மருத்துவம், காலணி தொடர்பான வியாபாரங்களுக்கு இந்தப் படங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் என்னை 12 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். இன்று என்னுடைய ஆண்டு வருமானம் ரூ.45.5 லட்சம். நானே இவ்வளவு சம்பாதிப்பேன் என்று எதிர்பார்த்ததில்லை. என் வாழ்க்கையே இப்போது மாறிவிட்டது” என்கிறார் ஜெஸிகா.

வருமானம் கொட்டும் பாதங்கள்!

மெரிக்காவின் கென்டகி பகுதியைச் சேர்ந்த 7 வயது வயாட் ஷா, ஒருநாள் இரவு தூங்க ஆரம்பித்து 11 நாட்களுக்குப் பிறகு கண் விழித்திருக்கிறான். “தன் அத்தையின் திருமண விருந்தில் மகிழ்ச்சியாக நடனமாடினான். நன்றாகச் சாப்பிட்டான். வீட்டுக்கு வந்தவுடன் தூங்கிவிட்டான். மறுநாள் திருமணத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக எழுப்பினால் எழுந்திருக்கவே இல்லை. களைப்பில் தூங்குகிறான் என்றுதான் நினைத்தோம். சிறிது நேரம் கழித்து எழுப்பியபோதும் திரும்பிப் படுத்துக்கொண்டான். எவ்வளவோ சொல்லியும் கண்களைக் கூட திறக்கவில்லை. அதனால் குழந்தைக்கு ஏதோ பிரச்சினை என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவப் பரிசோதனைகளில் எல்லாம் எந்தப் பிரச்சினையும் தெரியவில்லை. மர்மமான தூக்கத்துக்குக் காரணம் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. வைரஸ், பாக்டீரியா பாதிப்பாக இருக்கலாம் என்று நினைத்தார்கள். வயாட் தூங்குவதற்கு முன்பு வயிறும் தலையும் வலிப்பதாகச் சொன்னான் என்பதை நினைவூட்டினேன். மூளையில் ஏற்பட்ட திடீர் மின் அதிர்ச்சியால் கூட இப்படி தொடர்ச்சியாகத் தூங்குவதற்கான சாத்தியம் இருப்பதாகச் சொல்லி, மருத்துவம் செய்ய ஆரம்பித்தனர். 11 நாட்களுக்குப் பிறகு வயாட் கண் விழித்தான். தூக்கத்திலிருந்து விடுபட்டுவிட்டாலும் அவனால் சரியாகப் பேச முடியவில்லை. தானாக நடக்க முடியவில்லை. நாளுக்கு நாள் அவன் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. விரைவில் முற்றிலும் குணமாவான் என்று நம்புகிறோம்” என்கிறார் வயாட்டின் அம்மா.

மர்மமான தூக்கம்!

http://tamil.thehindu.com/world/article19923241.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: புயலில் தப்பித்த ஆப்பிள்கள்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
27chkanapple
 
 

அயர்லாந்தில் ஒபிலியா புயல் மிக மோசமான சேதத்தை உருவாக்கியிருக்கிறது. ஆனால் ஆப்பிள் தோட்ட விவசாயிகளுக்கு மட்டும் உதவி செய்திருக்கிறது. இந்த சீசனுக்கு விளைந்திருந்த ஆப்பிள்களைப் பறிப்பது என்பது பல வாரங்களுக்கு செய்ய வேண்டிய கடினமான பணி. ஆனால் ஒபிலியா புயல் ஒரே இரவில் அனைத்து ஆப்பிள்களையும் நிலத்தில் தள்ளிவிட்டது. ஆப்பிள்கள் என்ன ஆகுமோ என்று பயந்திருந்த விவசாயிகள், மறுநாள் தோட்டங்களுக்குச் சென்று பார்த்தபோது மகிழ்ச்சியடைந்தார்கள். மழையில் ஆப்பிள்கள் அடித்துச் செல்லப்படவில்லை. போர்வை விரித்ததுபோல் நிலமே தெரியாதபடி ஆப்பிள்களால் மூடப்பட்டிருந்தது தோட்டம். பழங்கள் எந்தவிதத்திலும் சேதமடையவில்லை.

புயலில் தப்பித்த ஆப்பிள்கள்!

பிரிட்டனைச் சேர்ந்த பால் ஃபெர்ரெல் தைவானில் 13 ஆண்டுகளாக வசித்து வருகிறார். ஆசிய நாடுகளிலேயே சின்னஞ்சிறு தைவான்தான் தனக்கு மிகவும் பிடித்த நாடு என்று சொல்லிக்கொண்டிருப்பார். திடீரென தைவான் மீதுள்ள அபிமானத்தை எல்லோருக்கும் காட்ட வேண்டும் என்று நினைத்து, நெற்றியிலும் தாடையிலும் டாட்டூ போட்டுக்கொண்டார். அதைப் பார்த்த இவருடைய தைவான் மனைவி, விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டார். பால் ஃபெர்ரெல் ஆஸ்திரேலியாவில் தன்னுடைய மனைவியை சந்தித்தார். இருவரும் காதலித்து, திருமணம் செய்துகொண்டனர். மனைவிக்காக தைவானுக்கே வந்துவிட்டார். இங்கே ஒரு மதுபான விடுதி வைத்து நடத்தி வருகிறார். “அன்று விடுமுறை என்பதால் நண்பர்களுடன் பார்ட்டி. கொஞ்சம் அதிகமாகவே மது அருந்திவிட்டேன். தைவான் சுதந்திரப் போராட்டம் பற்றி பேச்சு வந்தது. அந்த வரலாற்றைக் கேட்டதும் எனக்கு தைவான் மீது மேலும் மதிப்பு கூடிவிட்டது. உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அருகில் டாட்டூ பார்லர் இருந்தது. என்னுடைய சீனப் பெயரையும் தைவானையும் தைவான் விடுதலை கட்சியின் கொடியையும் முகத்தில் வரையும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் நெற்றி நிறைய 2 டாட்டூக்களும் தாடையில் ஒரு டாட்டூவையும் வரைந்துவிட்டார். மறுநாள் பார்த்தபோதுதான் நான் எவ்வளவு பெரிய முட்டாள்தனமான காரியத்தைச் செய்திருக்கிறேன் என்று தெரிந்தது. மது அருந்தாவிட்டால் நிச்சயம் இப்படி ஒரு டாட்டூ வரைந்துகொண்டிருக்க மாட்டேன். என் மனைவிக்கு இது பிடிக்கவில்லை. பயங்கரமாக கோபப்பட்டார். இந்த டாட்டூவை அழிக்கும்படிக் கேட்டேன். மிகப் பெரிய டாட்டூக்கள் என்பதால் அழிப்பது அத்தனை எளிதான காரியம் இல்லை என்கிறார்கள். என்னுடைய ஒளிப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, இதற்கு ஒரு தீர்வு சொல்லும்படி கேட்டுக்கொண்டேன். இந்த விஷயம் என் மனைவியின் கோபத்தை இன்னும் அதிகமாக்கிவிட்டது. சண்டை பெரிதாகி, இப்போது விவாகரத்து வரை சென்றுவிட்டார்” என்று வருந்துகிறார் பால் ஃபெர்ரெல். “அவர் போதையில் இருந்தபோது நான் வேண்டுமென்றே இந்தக் காரியத்தைச் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். நான் பலமுறை அவரிடம் கேட்டு, அவருடைய ஒப்புதலுடன்தான் இந்த டாட்டூக்களை வரைந்தேன். எனக்கு வாடிக்கையாளரின் விருப்பம்தான் முக்கியம்” என்கிறார் டாட்டூ கலைஞர். வலி நிறைந்த 10 லேசர் சிகிச்சைகள் மூலம்தான் ஓரளவாவது டாட்டூக்களை அழிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நாட்டுப் பற்றால் பிரிந்த குடும்பம்!

http://tamil.thehindu.com/world/article19930697.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: சிரித்தால் மட்டுமே முகம் காட்டும் அதிசய கண்ணாடி!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
28chkansmart-mirror
 
 

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புற்றுநோயாளிகளுக்காகவே ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை உருவாக்கியிருக்கிறார் துருக்கியைச் சேர்ந்த பெர்க் இல்ஹான். டேப்லட் போலவே இருக்கும் இந்தக் கருவியில் கண்ணாடியும் கேமராவும் பொருத்தப்பட்டிருக்கின்றன. முக உணர்ச்சிகளை கண்காணித்துக்கொண்டிருக்கும். சிரித்தவுடன் சட்டென்று கண்ணாடியில் முகத்தைக் காட்டும். சிரிக்கவில்லை என்றால் கண்ணாடியில் முகம் தெரியாது. வழக்கமான கண்ணாடி போலவே சுவரில் மாட்டலாம், மேஜையில் வைக்கலாம். ரூ.1.2 லட்சத்திலிருந்து ரூ.1.94 லட்சம் வரை பல விதங்களில் இந்தக் கண்ணாடிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. “என் குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் வந்துவிட்டது. அதுவரை அவரிடமிருந்த மகிழ்ச்சியும் சிரிப்பும் காணாமல் போய்விட்டன. கண்ணாடி பார்ப்பதைக் கூட நிறுத்திவிட்டார். அப்போது தான் அவர்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எந்தக் கஷ்டம் வந்தாலும் அதைக் கண்டு துவண்டு போகாமல், நம்பிக்கையோடும் புன்னகையோடும் எதிர்கொண்டால் நோய் விரைவில் குணமாகலாம். அல்லது மரணமாவது தள்ளிப் போகலாம். நியூயார்க்கில் படிப்பை முடித்தவுடன் சில புற்றுநோய் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினேன். சிரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆயுளும் அதிகரிக்கும் என்பதை அறிந்துகொண்டேன். புற்றுநோயாளிகளிடமும் மருத்துவர்களிடமும் பேசினேன். 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, சிரித்தால் முகம் காட்டும் கண்ணாடியை உருவாக்கினேன். இப்போது இந்தக் கண்ணாடி தயாரிக்க அதிகம் செலவாகிறது. 32 ஆயிரம் ரூபாய்க்குள் கண்ணாடி தயாரிப்பைக் கொண்டுவருவது தான் என் லட்சியம். மருத்துவமனைகளும் மருத்துவமனைகளுக்கு நன்கொடை அளிப்பவர்களும் இந்தக் கண்ணாடியை வாங்கிக்கொள்ளலாம்” என்கிறார் பெர்க் இல்ஹான்.

சிரித்தால் மட்டுமே முகம் காட்டும் அதிசய கண்ணாடி!

இந்தோனேசியாவில் பலதார மணம் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் ஒரு நேரத்தில் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்வார்கள். டெலுக் கிஜிங் கிராமத்தைச் சேர்ந்த பான்சர், நவம்பரில் 2 பெண்களை திருமணம் செய்ய போகிறார். நவம்பர் 5-ல் ஒன்று, 8-ல் இன்னொன்று. நவம்பர் 9-ல் இரு திருமணங்களுக்கும் சேர்த்து ஒரே வரவேற்பு நிகழ்ச்சி. 2 பெண்களுடனும் பான்சர் இருப்பதுபோல் அச்சடிக்கப்பட்ட வரவேற்பு அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. “இரண்டு திருமணங்கள் சட்டப்பூர்வமாக செய்துகொள்ள அனுமதிக்கும் ஒரு நாட்டில், ஒரே வரவேற்பு வைத்துக்கொள்வதில் என்ன அதிசயம்? சிண்ட்ரா பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர், இன்டா இதே கிராமத்தைச் சேர்ந்தவர். திருமணங்களை எளிமையாகவும் தனித் தனியாகவும் நடத்துகிறோம். வரவேற்பு மட்டும் ஆடம்பரமாக இருக்கும். இரண்டு பெண் வீட்டார்கள் சம்மதத்துடன்தான் திருமணமும் வரவேற்பும் நடக்க இருக்கின்றன. மணப்பெண்கள் இருவரிடமும் போட்டியோ, பொறாமையோ இல்லை. இருவரின் விருப்பத்தின் பேரில்தான் திருமணம் நடக்கிறது” என்கிறார் பான்சர்.

அடப்பாவிகளா!

http://tamil.thehindu.com/world/article19937745.ece

Link to comment
Share on other sites

1 hour ago, நவீனன் said:

உலக மசாலா: சிரித்தால் மட்டுமே முகம் காட்டும் அதிசய கண்ணாடி!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
28chkansmart-mirror
 
 

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புற்றுநோயாளிகளுக்காகவே ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை உருவாக்கியிருக்கிறார் துருக்கியைச் சேர்ந்த பெர்க் இல்ஹான். டேப்லட் போலவே இருக்கும் இந்தக் கருவியில் கண்ணாடியும் கேமராவும் பொருத்தப்பட்டிருக்கின்றன. முக உணர்ச்சிகளை கண்காணித்துக்கொண்டிருக்கும். சிரித்தவுடன் சட்டென்று கண்ணாடியில் முகத்தைக் காட்டும். சிரிக்கவில்லை என்றால் கண்ணாடியில் முகம் தெரியாது. வழக்கமான கண்ணாடி போலவே சுவரில் மாட்டலாம், மேஜையில் வைக்கலாம். ரூ.1.2 லட்சத்திலிருந்து ரூ.1.94 லட்சம் வரை பல விதங்களில் இந்தக் கண்ணாடிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. “என் குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் வந்துவிட்டது. அதுவரை அவரிடமிருந்த மகிழ்ச்சியும் சிரிப்பும் காணாமல் போய்விட்டன. கண்ணாடி பார்ப்பதைக் கூட நிறுத்திவிட்டார். அப்போது தான் அவர்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எந்தக் கஷ்டம் வந்தாலும் அதைக் கண்டு துவண்டு போகாமல், நம்பிக்கையோடும் புன்னகையோடும் எதிர்கொண்டால் நோய் விரைவில் குணமாகலாம். அல்லது மரணமாவது தள்ளிப் போகலாம். நியூயார்க்கில் படிப்பை முடித்தவுடன் சில புற்றுநோய் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினேன். சிரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆயுளும் அதிகரிக்கும் என்பதை அறிந்துகொண்டேன். புற்றுநோயாளிகளிடமும் மருத்துவர்களிடமும் பேசினேன். 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, சிரித்தால் முகம் காட்டும் கண்ணாடியை உருவாக்கினேன். இப்போது இந்தக் கண்ணாடி தயாரிக்க அதிகம் செலவாகிறது. 32 ஆயிரம் ரூபாய்க்குள் கண்ணாடி தயாரிப்பைக் கொண்டுவருவது தான் என் லட்சியம். மருத்துவமனைகளும் மருத்துவமனைகளுக்கு நன்கொடை அளிப்பவர்களும் இந்தக் கண்ணாடியை வாங்கிக்கொள்ளலாம்” என்கிறார் பெர்க் இல்ஹான்.

சிரித்தால் மட்டுமே முகம் காட்டும் அதிசய கண்ணாடி!

 

 

http://tamil.thehindu.com/world/article19937745.ece

 

 

This high-tech mirror only works if you smile, and it's intended to help lift the spirits of cancer patients

Link to comment
Share on other sites

உலக மசாலா: அட, சுவாரசியமான சாகசப் பயணம்தான்!

 

 
29chkanUP-in-Real-life

‘அப்’ என்ற அனிமேஷன் திரைப்படத்தைப்போல், 8 ஆயிரம் அடி உயரத்தில் வண்ண பலூன்களில் பறந்து திரும்பியிருக்கிறார் டாம் மோர்கன். இங்கிலாந்தைச் சேர்ந்த சாகசப் பயணங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனம் ‘தி அட்வஞ்சரிஸ்ட்’. இமய மலையில் ரிக்ஷா ஓட்டுதல், ரஷ்யாவின் பனி உறைந்த ஏரியில் மோட்டார் பைக்கில் பயணம் செய்தல் போன்ற சாகசப் பயணங்களை ஏற்கெனவே வெற்றிகரமாக செய்திருக்கிறது. சாகசப் பயணங்களின் மூலம் கிடைக்கும் நிதி, பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக இதுபோன்ற சாகசப் பயணங்கள் மூலம் 42 கோடியே 59 லட்சம் ரூபாயைத் திரட்டி, நன்கொடையாக அளித்திருக்கிறோம் என்கிறார் நிறுவனர் டாம் மோர்கன். “திரைப்படத்தில் பார்த்ததுபோல் 100 பலூன்களை கட்டிக்கொண்டு பறக்கும் சாகசப் பயணம் ஒன்றை ஏற்பாடு செய்ய முடிவெடுத்தோம். இரண்டு மாதங்கள் திட்டமிட்டோம். இந்தப் பயணத்துக்கான சோதனை ஓட்டத்தில் நானே கலந்துகொள்ள முடிவு செய்தேன். பலூனில் பறக்கும்போது பருவநிலை சீராக இருக்க வேண்டும். இல்லை என்றால் பலூன்கள் உடைந்து, பயணமே ஆபத்தில் முடிந்துவிடலாம். அதனால் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றோம். இரண்டு நாட்கள் பலூன்களில் ஹீலியம் வாயுவை நிரப்பினோம். முதல் ஒன்றிரண்டு முயற்சிகள் தோல்வியடைந்தன. பிறகு வெற்றிகரமாக பயணத்தை தொடங்கினேன். பயமும் மகிழ்ச்சியும் கலந்த அற்புதமான அனுபவம். 8 ஆயிரம் அடி உயரத்தில் 25 கி.மீ. தூரத்துக்குப் பறந்து வெற்றிகரமாகத் திரும்பிவிட்டேன். பலூன்களுக்குக் கீழ் இருந்த நாற்காலியில் பாதுகாப்பு கருவிகளையும் தொலைத் தொடர்பு கருவிகளையும் இணைத்திருக்கிறோம். இதைப் பார்ப்பவர்கள் நம்பிக்கையோடு சாகசப் பயணத்தில் பங்கேற்பார்கள்” என்கிறார் டாம் மோர்கன்.

அட, சுவாரசியமான சாகசப் பயணம்தான்!

ரஷ்யாவில் இன்ஸ்டாகிராமில் ஒளிப்படங்களை வெளியிடுவதில் மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவர்களுக்காகவே ஜியான்லுகா வசியும் டான் பில்ஸெரியனும் சேர்ந்து ஜெட் விமானத்தை வாடகைக்குக் கொடுக்கின்றனர். ஆடம்பரமான இந்த விமானத்தில் சில மணி நேரங்களுக்கு கட்டணம் செலுத்திவிட்டு, விதவிதமாக ஒளிப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடலாம். “எல்லோராலும் தனி விமானத்தில் பயணம் செய்ய இயலாது. ஆனால் ஆசை இருக்கும். அவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் விமானத்தை வாடகைக்கு விடுகிறோம். 2 மணி நேரத்துக்கு 16 ஆயிரம் ரூபாய் கட்டணம் என்பது சாதாரணமானதுதான். நாங்களே தொழில்முறை ஒளிப்படக்காரரையும் ஒப்பனை செய்பவரையும் ஏற்பாடு செய்கிறோம். அவற்றுக்கு தனிக் கட்டணம். விலை உயர்ந்த ஷாம்பெயின் பாட்டிலும் சுவையான உணவும் மேஜையில் இருக்கும். இவற்றைச் சாப்பிடுவதுபோல் படம் எடுத்துக்கொள்ளலாம். இங்கே வருபவர்கள் எங்களின் சேவையில் மனம் மகிழ்ந்து, பணத்தை தாராளமாகக் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். இன்ஸ்டாகிராம் மீது ஆர்வம் இருப்பவர்களுக்குத்தான் எங்கள் சேவையின் மகத்துவம் புரியும்” என்கிறார்கள் இந்த ரஷ்யர்கள்.

ஒளிப்படம் மோகம் இருக்கும்வரை தொழில்கள் பெருகும்!

http://tamil.thehindu.com/world/article19943855.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: எப்போதும் அம்மா!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
31chskomasalapic
 
 

இங்கிலாந்தைச் சேர்ந்த 98 வயது அடா கியாட்டிங், ஒரு காப்பகத்தில் வசித்து வந்தார். இவருடைய மூத்த மகன் 80 வயது டாம், இன்னொரு காப்பகத்தில் வசித்து வந்தார். திடீரென்று டாமுக்கு அதிகக் கவனிப்பு தேவைப்பட்டது. அதை அறிந்த அடா, மகன் இருக்கும் காப்பகத்துக்கே சென்று, அவரைக் கவனித்து வருகிறார்! “எனக்கு 4 குழந்தைகள். டாம் மட்டும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் வாழ்க்கை முழுவதும் என்னுடனே இருந்தான். முதுமை காரணமாக நான் ஒரு காப்பகத்தில் சேர்ந்துவிட்டேன். அவனைக் கவனிக்க ஆள் இல்லாததால், அவனும் ஒரு காப்பகத்தில் சேர்ந்துவிட்டான். இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வோம். வாய்ப்பு இருக்கும்போது சந்தித்துக்கொள்வோம். இப்போது டாமுக்கு உடல் நிலை மோசமாகிவிட்டது. காப்பகத்தில் நன்றாகக் கவனித்துக்கொண்டாலும் வீட்டினரின் அன்பும் அரவணைப்பும் அவனுக்குத் தேவைப்பட்டது. அதனால் அவன் இருக்கும் காப்பகத்துக்கே சென்றுவிட்டேன். இருவரும் பக்கத்து பக்கத்து அறைகளில் வசிக்கிறோம். தினமும் இருவரும் சேர்ந்து உணவருந்துவோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்போம். பேசிக்கொண்டிருப்போம். இடையிடையே அவரவர் அறைகளில் ஓய்வெடுத்துக்கொள்வோம். இரவு அவனுக்கு குட் நைட் சொல்லிவிட்டுதான் படுக்கச் செல்வேன். இப்போது டாமின் உடலும் மனமும் தேறிவருவதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்” என்று மகிழ்கிறார் அடா. “அடாவைப் போல் ஒருவரைப் பார்ப்பது அரிது. செவிலியராக இருந்தவர். இந்த வயதிலும் தன் மகனை அவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்” என்கிறார் காப்பகத்தின் மேனேஜர் பிலிப் டேனியல்.

எப்போதும் அம்மா!

சீனாவின் ஹிஃபை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இலைகளால் ஆன உடை ஒன்றை வடிவமைத்திருக்கிறார்கள். “எங்கள் குழுவில் 2 பெண்கள், 2 ஆண்கள் இருக்கிறோம். 6 மாதங்களுக்கு முன்பு விலங்குகள் மற்றும் தாவரங்கள் மாதிரிகளை வைத்து ஒரு போட்டி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. அந்த நேரம் பெண்கள் எல்லோரும் சீன நடிகை ஃபான் பிங்பிங் கேன்ஸ் திரைப்பட விழாவில் அணிந்து வந்த உடையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அதே போன்ற உடையை இலைகளை வைத்துச் செய்தால் என்ன என்று கேட்டார் எங்கள் பேராசிரியர். மிகவும் கடினமான வேலைதான், ஆனாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். சில வகை இலைகள் எங்கள் பல்கலைக்கழகத்துக்குள்ளேயே கிடைத்தன. மங்கோலியா இலைகளைத் தேடி மலைப்பகுதிக்குச் சென்றோம். இலைகளை ரசாயனத்தில் 2 மணி நேரம் ஊற வைத்தோம். பச்சயம் எல்லாம் கரைந்து, இலைகளின் நரம்புகள் மட்டுமே இருந்தன. அவற்றைக் காய வைத்தோம். 6 ஆயிரம் இலைகள் சேர்ந்தவுடன் உடை தயாரிக்கும் பணியை ஆரம்பித்தோம். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மட்டுமே இந்தப் பணியை மேற்கொண்டதால் 4 மாதங்களுக்குப் பிறகே உடையைச் செய்து முடித்தோம். இந்த உடையில் இலைகள், நூல், ஏராளமான பொறுமை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சீனா முழுவதும் நாங்கள் பிரபலமாகிவிட்டோம்” என்கிறார்கள் 4 ஸ்டூடண்ட்ஸ் குழுவினர்.

அட்டகாசமாக இருக்கிறதே இந்த இலை உடை!

http://tamil.thehindu.com/world/article19954537.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: கொஞ்சம் நம்புகிற மாதிரி சொல்லலாமே ஜான்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
01chskomasalapic
 
 

அரிசோனாவில் உள்ள பாலைவனப் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது ஸ்டார்டஸ்ட் பண்ணை. இதில் 3,436 சதுர அடியில் நீச்சல் குளத்துடன் கூடிய ஒரு வீடும் உள்ளது. இந்தப் பண்ணையின் உரிமையாளர் ஜான் எட்மண்ட்ஸ் இங்கே வசித்து வருகிறார். “கடந்த 20 ஆண்டுகளாக நானும் என் மனைவியும் வேற்று கிரகவாசிகளுடன் போராடி அலுத்துவிட்டோம். பலமுறை வேற்று கிரகவாசிகள் என்னை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றனர். என் மனைவியைத் துன்புறுத்தியிருக்கின்றனர். நாங்கள் இங்கே வந்ததிலிருந்தே விசித்திரமான அனுபவங்களைப் பெற ஆரம்பித்தோம். ஒருமுறை கட்டிலில் படுத்திருந்த என் மனைவியை ஒரு கூம்பு வடிவ ஒளி இழுத்துச் சென்றது. நான் அதைத் துப்பாக்கியால் சுட்டு என் மனைவியைக் காப்பாற்றினேன். இதுவரை 18 வேற்று கிரகவாசிகளை என் சாமுராய் வாளால் வெட்டிக் கொன்றிருக்கிறேன். வெட்டியவுடன் அந்த உடல்கள் மாயமாக மறைந்து விடுவதால் இதுவரை என்னிடம் பிறருக்கு நம்பிக்கையளிக்கும்படியான ஆதாரத்தைக் காட்ட முடியவில்லை. ஆனால் என் கைகளில் அவை ஏற்படுத்திய காயங்கள் இருக்கின்றன. இவ்வளவு பிரச்சினைகளுக்குப் பிறகும் நான் ஏன் இன்னும் இங்கே இருக்கிறேன் என்றால், இந்த இடத்துக்காக நிறைய பணமும் நேரமும் செலவிட்டிருக்கிறேன். இனிமேலும் இருக்க முடியாது என்பதால் நல்ல விலைக்கு விற்றுவிட்டு, நிம்மதியாக வேறு இடத்துக்குச் செல்ல இருக்கிறேன்” என்கிறார் ஜான் எட்மண்ட்ஸ். சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடம், வேற்று கிரகவாசிகள் வரும் இடம் என்பதால் 32 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது!

கொஞ்சம் நம்புகிற மாதிரி சொல்லலாமே ஜான்!

அமெரிக்காவிலுள்ள ப்ளைமவுத் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு மாணவியாக இருக்கிறார் 19 வயது அனோக் யாய். கடந்த வாரம் வாஷிங்டனில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கான விழாவில் அனோக்கும் கலந்துகொண்டார். அப்போது இவரை விதவிதமாக ஒளிப்படங்கள் எடுத்து, அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ஒரு புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞர். ஒளிப்படங்களின் கீழே, ‘நான் அந்த விழாவில் அற்புதமான ஒரு பெண்ணைச் சந்தித்தேன்’ என்று எழுதி அனோக் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். திடீரென்று அந்தப் படங்கள் வைரலாகின. “நாங்கள் எகிப்தில் இருந்து 17 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா வந்தோம். எனக்கு ஃபேஷன் மீது ஆர்வம் அதிகம். மாடலிங் செய்ய வேண்டும் என்பது என் கனவு. ஆனால் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்ததே இல்லை. என்னுடைய 2 படங்களுக்கும் ஏராளமான வரவேற்பு!. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேல் லைக் செய்திருந்தார்கள். என் போன் இடைவிடாமல் நீண்ட நேரம் அலறிக்கொண்டே இருந்தது. முதலில் யாரோ என் படங்களை வைத்து மீம் உருவாக்கிவிட்டதாகத்தான் நினைத்தேன். பிறகுதான் உண்மையிலேயே என் படங்களை அங்கீகரித்திருக்கிறார்கள் என்று அறிந்தேன். இந்தப் படங்களைப் பார்த்து மிகப் பெரிய மாடலிங் நிறுவனங்கள் என்னை ஒப்பந்தம் செய்துகொள்ள அணுகியுள்ளன. என்னால் இன்னும் கூட இதை நம்ப முடியவில்லை!” என்கிறார் அனோக் யாய்.

அழகு, நிறம் பற்றிய கற்பிதங்கள் மாறிவருவது ஆரோக்கியமானது!

http://tamil.thehindu.com/world/article19959841.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: உத்வேக மனிதர்

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
02chskomasalapic
 
 

கனடாவைச் சேர்ந்த 25 வயது மாடீ கில்பர்ட், மேஜிக் உலகைக் கலக்கி வருகிறார்! பொதுவாக எல்லா மேஜிக் கலைஞர்களும் சீட்டுக் கட்டுகளில் வித்தை காட்டுவார்கள். ஆனால் கில்பர்ட் சிட்டுக் கட்டுகளை வைத்து மட்டுமே இதுவரை யாரும் செய்யாத வித்தைகளைக் காட்டிவருகிறார்! 4 அடி 6 அங்குல உயரம் கொண்ட கில்பர்ட்டின் இடதுகை, முழங்கைக்கு மேல் வளரவில்லை. வலது கை மணிக்கட்டு வரையே வளர்ந்திருக்கிறது. இவரது மேஜிக் தந்திரங்கள் அனைத்தும் இவராலேயே உருவாக்கப்பட்டவை. தன்னுடைய கற்பனையில் நுட்பங்களை உருவாக்கி, அதைச் செயல்படுத்திப் பார்த்து, ஒவ்வொன்றையும் படைத்திருக்கிறார்.

“நான் சின்ன வயதிலிருந்தே யாரையும் சார்ந்திருக்காமல் வாழப் பழகிக்கொண்டேன். அப்போது மேஜிக் கலையைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூடப் பார்த்ததில்லை. மேஜிக் புத்தகங்களையும் படித்ததில்லை. என்னைச் சுற்றியிருப்பவர்கள் மேஜிக் கலைஞர்களைப் பற்றி ஆச்சரியமாகப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனாலும் என்னுடைய பள்ளி ஆசிரியர் நீ என்னவாக வர விரும்புகிறாய் என்று கேட்டவுடன், ‘மேஜிக் கலைஞராகப் போகிறேன்’ என்று பதில் அளித்தேன். ஆச்சரியமடைந்த ஆசிரியர், இப்போது ஒரு மேஜிக் செய்ய முடியுமா என்று கேட்டார். இதுவரை மேஜிக் எதுவும் தெரியாது, ஆனால் ஒருநாள் மேஜிக் கலைஞாராக மாறுவேன் என்றேன். பிறகுதான் மேஜிக் நிகழ்ச்சிகளை இணையதளங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பார்க்க ஆரம்பித்தேன். புகழ்பெற்ற மேஜிக் கலைஞர் டேவிட் பிளைனின் ரசிகனாக மாறினேன்.

ஆனால் அவர் செய்யும் மேஜிக் கலைகளை என்னால் செய்ய இயலாது என்பதை உணர்ந்தேன். பிறகு இங்கிலாந்தைச் சேர்ந்த டெர்ரென் ப்ரெளன் என்ற உளவியலாளரைச் சந்தித்தேன். அவர்தான் விரல்கள் இல்லாவிட்டாலும் மூட்டுகளைக் கொண்டே மேஜிக் செய்யமுடியும் என்று எனக்கு நம்பிக்கை அளித்தார். என் மூளையைப் பயன்படுத்தி புதிய தந்திரங்களை உருவாக்கினேன். என்னுடைய பேச்சால் மக்களின் கவனத்தை எப்படித் திசை திருப்புவது என்று அறிந்துகொண்டேன். ஒருநாள் என்னாலும் மேஜிக் செய்து, காண்போரை வியப்பில் ஆழ்த்திவிட முடியும் என்ற நம்பிக்கை வந்தது. சக மாணவர்களிடம் என் தந்திரங்களைச் செய்து காட்டி, பயிற்சி எடுத்துக்கொண்டேன். ஆனால் அதில் எனக்கு முழுமையான திருப்தி கிடைக்கவில்லை. 16 வயதில் மூளையை மட்டும் அதிகம் பயன்படுத்தும் சீட்டுக் கட்டு தந்திரங்கள் மீது ஆர்வத்தைத் திருப்பினேன். ஆரம்பத்தில் பல தோல்விகளைச் சந்தித்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தந்திரங்களை என் வசமாக்கினேன்” என்கிறார் கில்பர்ட்.

2010-ம் ஆண்டு நடைபெற்ற உலக மேஜிக் மாநாட்டில் கலந்துகொண்டு, புகழ்பெற்ற மேஜிக் கலைஞர்கள் முன் உரை நிகழ்த்தி, வித்தைகளையும் செய்து காட்டினார் இவர். இன்று 18 நாடுகளில் மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி, ஏராளமான மக்களின் மனத்தில் இடம்பிடித்து விட்டார். உலகின் அத்தனை மேஜிக் கலைஞர்களும் கில்பர்ட்டை, மிகச் சிறந்த மேஜிக் கலைஞர் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இவரை ஈர்த்த டேவிட் பிளைன், ‘கில்பர்ட் என் இன்ஸ்பிரேஷன்’ என்கிறார்!

உத்வேக மனிதர்!

http://tamil.thehindu.com/world/article19966235.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பறவைகளைப் பிடிக்கும் மரங்கள்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
03chskomasalapic
 
 

இங்கிலாந்தைச் சேர்ந்த டிசைனர் டெப்பி விங்ஹாம் உலகின் விலையுயர்ந்த ஒரு ஜோடி ஷூக்களை உருவாக்கியிருக்கிறார். இந்த ஷூக்களின் விலை சுமார் 97 கோடி ரூபாய்! உலகின் மிகப் பிரபலமானவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் அரசக் குடும்பத்தினருக்கும் விலையுயர்ந்த ஆடைகள், கேக்குகள், ஷூக்கள் போன்றவற்றைச் செய்து கொடுப்பதே டெப்பியின் தொழில். 2 ஆயிரம் வைரக்கற்கள் பதித்த உலகின் விலை மதிப்பு மிக்க உடையை உருவாக்கியிருக்கிறார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த கேக்குகளையும் இவர் ஏற்கெனவே உருவாக்கியிருக்கிறார். தற்போது இந்த ஷூக்களை அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளருக்காகச் செய்திருக்கிறார். “இந்த ஷூக்களைத் தினமும் அணிந்துகொள்ளலாம். இவற்றை உருவாக்குவதற்குப் பல நூறு மணி நேரம் கஷ்டப்பட்டிருக்கிறேன். அரிய இளஞ்சிவப்பு வைரங்களும் நீல வைரங்களும் இதில் பதிக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர 1000 சிறிய வைரக்கற்களும் இருக்கின்றன. ஜிப், சோல் போன்றவை தங்கத்தால் ஆனவை. 24 காரட் தங்க வண்ணத்தைப் பூசியிருக்கிறேன். 18 காரட் தங்க நூலால் தைத்திருக்கிறேன். நான் ஒரு பொருளைச் செய்துவிட்டு விற்பதில்லை. ஆர்டர் கிடைத்த பிறகே அந்த வேலையை எடுத்துக்கொள்கிறேன்.துபாயைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பிறந்தநாள் பரிசுக்காக இந்த ஷூக்களை உருவாக்கியிருக்கிறேன்” என்கிறார் பெப்பி விங்ஹாம்.

விலையைக் கேட்டு யாருக்கும் மயக்கம் வராமல் இருந்தால் சரி!

பி

சோனியா ப்ருனோனியானா என்ற நச்சுக்கொட்டை கீரை மரங்கள் ஹவாயிலிருந்து நியூசிலாந்து வரை காணப்படுகின்றன. இந்தியாவின் மேற்குப் பகுதியிலும் இருக்கின்றன. இந்த மரத்தை அருகில் சென்று பார்த்தால், இறந்துபோன பறவைகளின் உடல்களும் எலும்புகளும் தொங்கிக்கொண்டிருக்கும். இந்த மரத்தை ‘பறவை பிடிக்கும் மரம்’ என்று அழைக்கிறார்கள். மரத்திலுள்ள காய்களில் பூச்சிகளை ஈர்ப்பதற்காக பசை போன்ற ஒரு திரவம் சுரக்கிறது. இந்தக் காய்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூச்சிகளைச் சாப்பிடுவதற்காகப் பறவைகள் நாடி வருகின்றன. பறவைகளின் இறக்கைகள் காய்களில் ஒட்டிக்கொள்வதால் அவற்றால் தப்பிக்க முடிவதில்லை. உணவின்றி அப்படியே வெயிலில் காய்ந்து, மடிந்துவிடுகின்றன. ஒருவேளை மரத்திலிருந்து வெளியே வந்தாலும் இறக்கைகளில் விதைகள் கனமாக ஒட்டிக்கொள்வதால் அவற்றால் பறக்க முடிவதில்லை. சில நாட்களில் உணவின்றி உயிரிழந்துவிடுகின்றன. “பறவைகளின் மூலம் பெரும்பாலான தாவரங்கள் பல்வேறு இடங்களில் இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்புகளைப் பெறுகின்றன. ஆனால் நச்சுக்கொட்டை கீரை மரத்தின் விதைகளால் பறவைகள் உயிரிழப்பதால், இவற்றின் இனப்பெருக்கம் பெருகுவதில்லை. மரங்களில் சிக்கியிருந்த பறவைகளை மீட்டு, அவற்றின் இறக்கைகளில் இருந்து விதைகளை அப்புறப்படுத்தினோம். புதிய இறக்கைகள் முளைக்கும் வரை பராமரித்து, பிறகு வெளியே அனுப்பியிருக்கிறோம்” என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த தாவரவியல் ஆய்வாளர் பெத் ஃபின்ட்.

பறவைகளைப் பிடிக்கும் மரங்கள்!

 

 

http://tamil.thehindu.com/world/article19973974.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: அடப்பாவமே! ஒருவரின் வாழ்க்கையில் இப்படி விளையாடலாமா!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
04chskomasalapic
 

வங்கதேசத்தைச் சேர்ந்த திரைப்பட நட்சத்திரம் ஷாகிப் கான், மிகவும் புகழ்பெற்றவர். சமீபத்தில் இவர் மீது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வழக்கு தொடுத்திருக்கிறார். ஜூன் மாதம் வெளியான ஷாகிப் கானின் திரைப்படத்தில் ஒரு மொபைல் எண் காட்டப்பட்டிருக்கிறது. அந்த எண்ணுக்குரியவர் இந்த ஆட்டோ ஓட்டுநர். தன்னிடம் கேட்காமல், மொபைல் எண்ணைத் திரைப்படத்தில் பயன்படுத்தியதால் அவரது வாழ்க்கையே நிம்மதியிழந்து விட்டது என்கிறார்.

“ராஜ்நீதி என்ற திரைப்படம் வெளிவந்த அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு நிம்மதியே இல்லை. பொதுவாகத் திரைப்படங்களில் போலி எண்களைத்தான் காட்டுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் என்னுடைய மொபைல் எண்ணைக் காட்டிவிட்டனர். ஒரு நாளைக்குக் குறைந்தது 500 அழைப்புகளாவது வந்துகொண்டிருந்தது. எல்லோருமே ஷாகித் கானின் பெண் ரசிகைகள். ‘ஹலோ, ஷாகித் கான்… உங்களுடன் இரண்டு நிமிடங்கள் பேசலாமா?’ என்றுதான் ஆரம்பிக்கின்றனர். என்னால் பதில் சொல்லி முடியவில்லை. என் வாடிக்கையாளர்களுக்கு இந்த எண்ணைத்தான் கொடுத்திருக்கிறேன். இதனால் என்னுடைய தொழிலும் பாதிக்கப்பட்டது. இன்றுவரை 100 அழைப்புகளாவது வந்துகொண்டிருக்கின்றன. பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதால், என் மனைவி என்னைப் பற்றித் தவறாக நினைத்துவிட்டார். நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டேன். ஒரு வயதில் குழந்தையும் இருக்கிறது. எனக்குப் பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் பலரை ஏமாற்றுவதாகவும் கருதிவிட்டார் மனைவி. நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவருக்கு என் மீது நம்பிக்கை வரவில்லை. ஒருநாள் குல்னா என்ற ஒரு பெண் என் மொபைல் எண் முகவரியை வாங்கிக்கொண்டு, 300 மைல்கள் பயணம் செய்து, வீட்டுக்கே வந்துவிட்டார். உடனே என் மனைவி கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஒரு கிராமத்தில் உழைத்துச் சம்பாதித்து, நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு ஏன் இந்தத் தண்டனை? என்னுடைய சொந்த வீட்டை விற்றுவிட்டு, வேறு வீட்டுக்குச் சென்றுவிட முடிவு செய்திருக்கிறேன். ஆனால் மொபைல் எண்ணை மட்டும் என்னால் மாற்ற முடியாது. பல ஆண்டு உழைப்பில் ஏராளமான வாடிக்கையாளர்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன். இந்த எண் இல்லாவிட்டால் என் தொழில் நஷ்டமடைந்துவிடும். இந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவருவதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஷாகிப் கான், இயக்குநர் புல்புல் பிஸ்வாஸ், தயாரிப்பாளர் அஷ்ஃபாக் அஹமது மீது வழக்கு தொடுத்துவிட்டேன். என் அனுமதியின்றி மொபைல் எண்ணைப் பயன்படுத்தியதற்கும் என் வாழ்க்கையில் நான் அனுபவித்துவரும் துன்பங்களுக்கும் நஷ்ட ஈடாக 39 லட்சம் ரூபாய் கோரியிருக்கிறேன்” என்கிறார் மியா.

இவரது வழக்கறிஞர் எம்.ஏ.மஜித், “தனிப்பட்ட ஒருவருடைய மொபைல் எண்ணை அவரது அனுமதியில்லாமல் பயன்படுத்தியதற்கு நிச்சயம் தண்டனை உண்டு. மியாவுக்குத் தகுந்த நஷ்ட ஈடும் கிடைக்கும்” என்கிறார். இதுவரை ஷாகிப் கான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அடுத்த மாதம் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

அடப்பாவமே! ஒருவரின் வாழ்க்கையில் இப்படி விளையாடலாமா!

http://tamil.thehindu.com/world/article19980456.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.