Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: நாய்க்கு எவ்வளவு அறிவு!

 

 
dog1_3119569f.jpg
 
 
 

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் வசித்து வருகிறார் 64 வயது பாப். இரவு தீமூட்டுவதற்காக, 15 அடி தூரத்தில் இருந்த விறகுகளை எடுக்கச் சென்றார். அவரது செருப்பு வழுக்கிவிட, கீழே விழுந்துவிட்டார். அவரால் அசையக்கூட முடியவில்லை. உதவிக்கு யாரையாவது கூப்பிடலாம் என்றாலும் கால் மைல் தொலைவு நடக்க வேண்டும். பாப் வளர்க்கும் கோல்டன் ரிட்ரீவர் நாய் கெல்சி, அவரைத் தேடிக்கொண்டு வந்தது. பாப்பின் நிலையைக் கண்டு, ஏதோ அசம்பாவிதம் என்பதை உணர்ந்தது. உதவி கேட்டுக் குலைத்தது. அருகில் யாரும் இல்லாததால், உதவி கிடைக்கவில்லை. சற்று நேரத்தில் சுயநினைவை இழந்தார் பாப். குளிர் மிக அதிகமாக இருந்தது. பனியில் உறைந்து போனவர் மீது நாய் அமர்ந்துகொண்டு கதகதப்பை அளித்தது. அவரது முகத்தையும் கைகளையும் நாக்கால் தடவிக்கொண்டேயிருந்தது. தொடர்ந்து குரைத்துக்கொண்டும் இருந்தது. ஒரு நிமிடம் கூட அவரை விட்டு அகலவில்லை. 20 மணி நேரம் கழித்து, கால் மைல் தொலைவிலிருந்த அண்டை வீட்டுக்காரர் ரிக் வந்துசேர்ந்தார். உடனே ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சுயநினைவின்றி, 20 மணி நேரம் பனியில் உறைந்து கிடந்தவர் உயிர் பிழைக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்றனர் மருத்துவர்கள். “மறுநாள் கண் விழித்தேன். நாயின் உதவியால்தான் நான் உயிர் பிழைத்திருக்கிறேன் என்றும் நாய் இல்லாவிட்டால் இறந்து பல மணி நேரங்கள் ஆகியிருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறினார்கள். முதுகெலும்பு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் இனிமேல் கால்களை அசைக்கக்கூட முடியாது. உயிர் பிழைத்ததை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள் என்று சொல்லிவிட்டனர். மறுநாள் என் கால்களை ஆட்டிப் பார்த்தேன். அசைந்தன. மருத்துவர் கோலன், இதுக்கும் உங்கள் நாய்க்குதான் நீங்கள் நன்றி சொல்லணும் என்றார். 6 மாதக் குட்டியிலிருந்து கெல்சியை வளர்த்து வருவதைத் தவிர, வேறு எதையும் நான் செய்யவில்லை. ஆனால் அது என் உயிரையே காப்பாற்றியிருக்கிறது” என்று நெகிழ்கிறார் பாப். “என் அப்பாவும் கெல்சியும் தனியாக வசித்துவருகிறார்கள். கெல்சியின் ஓயாத சத்தத்தால்தான் ரிக் வந்திருக்கிறார். இல்லை என்றால் அப்பாவைக் காப்பாற்றியிருக்க முடியாது. கெல்சியைப் போல புத்திசாலியான, அன்பான நாயைப் பார்க்க முடியாது” என்கிறார் பாப்பின் மகள் ஜென்னி.

ஓர் உயிரைக் காப்பாற்றும் அளவுக்கு நாய்க்கு எவ்வளவு அறிவு!

கனடாவைச் சேர்ந்த டிரெக், ஸ்டீவ் இருவரும் எஸ்தர் என்ற பன்றியை வளர்த்து வருகிறார்கள். 303 கிலோ எடை கொண்ட மிகப் பெரிய பன்றியாக உருவெடுத்திருக்கும் எஸ்தர், துருவக் கரடி அளவுக்கு இருக்கிறது. “ஓட்ஸ், பார்லி, சோளம், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைத்தான் எஸ்தர் சாப்பிடுகிறது. உணவுக்காக மட்டும் வாரத்துக்கு 2,500 ரூபாய் செலவாகிறது. சில நேரங்களில் ஐஸ் க்ரீம், கேக் போன்றவற்றையும் விரும்பி உண்ணும். இப்பொழுதே துருவக் கரடி அளவுக்கு வளர்ந்துவிட்டது. இன்னும் வளரும் என்கிறார்கள். குளியல் தொட்டியை விடப் பெரிதாக வளர்ந்துவிட்டதால், பெரிய வீட்டுக்குக் குடிபோக இருக்கிறோம். எஸ்தர் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. இவளை 10 லட்சம் பேர் ஃபேஸ்புக்கில் பின்தொடர்கிறார்கள்” என்கிறார் டிரெக்.

ராட்சச பன்றி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நாய்க்கு-எவ்வளவு-அறிவு/article9486608.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: ஒரு வேலைக்கு 20 ஆயிரம் விண்ணப்பங்கள்!

 
masala_3120676f.jpg
 
 
 

அமெரிக்காவில் வசிக்கும் மெக்கென்ஸி, டிரெக் டில்லாட்சன் தம்பதியர் தங்கள் 3 குழந்தைகளுடன் உலகப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்தப் பயணத்தில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கும் சமையல், பாத்திரங்களைச் சுத்தம் செய்வதற்கும் உதவியாக ஒரு பாட்டி வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்திருந்தனர். 10, 20 விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு 20 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்ததில் ஆச்சரியமடைந்தனர். “நாங்கள் மறக்க முடியாத ஒரு உலகப் பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டோம்.

மூன்று குழந்தைகளையும் எங்கள் இருவரால் கவனித்துக்கொள்வது கஷ்டம். அதனால் குழந்தைகள் மீது அன்பும் அக்கறையும் கொண்ட பாட்டி ஒருவரை அழைத்துச் செல்ல திட்டமிட்டோம். பாட்டிக்கு ஏற்படும் அனைத்துச் செலவுகளையும் நாங்களே பார்த்துக்கொள்வோம். அவருக்கென்று ஒவ்வொரு நாளும் தனியாக சில மணி நேரங்களை ஒதுக்கிவிடுவோம். எங்களுடனே அவர் தங்கிக்கொள்ளலாம், சாப்பிடலாம். மிக நாகரிகமாகவும் மனிதத்தன்மையோடும் அவரை நடத்துவோம்.

இவை தவிர, அவருக்கு மாதம் ஒரு தொகையைச் சம்பளமாகவும் வழங்கிவிடுவோம். இந்தப் பயணத்துக்காக எங்களின் வீட்டை விற்றிருக்கிறோம். சில விண்ணப்பங்கள் வரும் என்று நினைத்த எங்களுக்கு 20 ஆயிரம் விண்ணப்பங்களைப் பார்த்து உறைந்துபோய்விட்டோம். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், செவிலியர்கள், சமூக சேவகர்கள், மருத்துவர்கள் கூட விண்ணப்பித்திருக்கிறார்கள். இதிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் மிகப் பெரிய பொறுப்பு எங்களிடம் இருக்கிறது” என்கிறார் டிரெக் டில்லாட்சன்.

அடேங்கப்பா! ஒரு வேலைக்கு 20 ஆயிரம் விண்ணப்பங்களா!

போலந்தைச் சேர்ந்த 20 வயது நடாலியா குட்கிவிஸ், மூன்றே ஆண்டுகளில் இன்ஸ்டாகிராமில் உலகப் புகழ் பெற்றுவிட்டார். இவ்வளவுக்கும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்திலும் முகத்தை மறைத்திருக்கிறார்! ஆனாலும் இவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள். “எல்லோரும் விதவிதமாகப் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதில்தான் ஆர்வமாக இருப்பார் கள். எனக்கு ஏனோ என் முகத்தைக் காட்டுவதில் விருப்பமில்லை. அதனால்தான் இதுவரை நான் வெளியிட்ட 443 புகைப்படங்களிலும் முகத்தை விதவிதமாக மறைத்திருக்கிறேன். ஒரு புகைப்படத்தில் கண்கள் தெரியும், இன்னொன்றில் உதடுகள் தெரியும். முழு முகத்தை இதுவரை காட்டியதில்லை. யாருக்குமே நான் எப்படி இருக்கிறேன் என்று தெரியாது. என்றாவது ஒருநாள் நான் முழு முகத்தையும் காட்டுவேன் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் இணையப் பிரபலமாக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. நான் வெளியே சென்றால் என்னை யாருக்கும் இப்போது அடையாளம் தெரியாது. நிம்மதியாக இருக்கிறேன். என்னுடைய கருத்துகள்தான் முக்கியமே தவிர, என்னுடைய முகம் முக்கியமில்லை என்பதை என்னைப் பின்தொடர்பவர்களும் புரிந்துகொள்வார்கள். ஆனாலும் இணையம் மூலம் என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதன் மூலம் விளம்பரங்களும் நல்ல வேலையும் எனக்குக் கிடைத்திருக்கின்றன” என்கிறார் நடாலியா.

பிரபலமாவதற்கு முகம் அவசியமில்லை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஒரு-வேலைக்கு-20-ஆயிரம்-விண்ணப்பங்கள்/article9491877.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: அபூர்வ காகங்கள்!

 

 
masala_2337362f.jpg
 
 
 

வாஷிங்டனில் வசிக்கும் கபிமனுக்கு வித்தியாசமான நண்பர்கள். தினமும் கபிக்கு நண்பர்களிடமிருந்து பரிசுப் பொருட்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கரையும் காகங்கள்தான் கபியின் நண்பர்கள். பக்கத்து வீட்டுச் சுவர்களில் வந்து அமரும் காகங்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு உணவு கொடுக்க ஆரம்பித்தாள் கபி.

விரைவில் காகங்களுக்கும் கபிக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டது. உணவு கொடுப்பது, தண்ணீர் வைப்பது, குளிப்பாட்டுவது என்று கபியின் சேவைகள் விரிவடைந்தன. காகங்கள் தங்கள் பங்குக்குத் தினமும் ஏதாவது ஒரு பொருளைக் கொண்டு வந்து கபியிடம் கொடுக்க ஆரம்பித்தன. நகைகள், பளிங்குக் கற்கள், பட்டன்கள், ஜெம் க்ளிப், ஸ்க்ரூ என்று என்ன கிடைக்கிறதோ அவற்றை எல்லாம் கொண்டு வந்து கொடுக்கின்றன.

காகங்கள் கொடுத்த பரிசுப் பொருட்களைப் பத்திரமாகக் காட்சிக்கு வைத்திருக்கிறாள் கபி. `வேர்க்கடலையும் நாய் உணவுகளையும் காகங்கள் விரும்பிச் சாப்பிடுகின்றன. நான் கொஞ்சம் தாமதமானாலும் சரியான நேரத்துக்கு வந்து, டெலிபோன் கம்பிகளில் அமர்ந்தபடி காத்திருக்கின்றன’ என்கிறாள் கபி. காகங்களால் மனித சமிக்ஞைகளைப் புரிந்துகொள்ள முடியும்.

தங்கள் எண்ணங்களையும் வெளிப்படுத்த முடியும்… நம்பிக்கை வந்துவிட்டால் காகங்கள் மனிதர்களுக்கு வெகு அருகில் வசிக்க விரும்புகின்றன. ஆனாலும் காகங்கள் பரிசு கொடுக்கும் சம்பவத்தை முதல் முறையாக கேள்விப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார்கள் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

அபூர்வ காகங்கள்!

அமெரிக்காவில் ஓரிகன் மாகாணத்தில் வசிக்கிறார் நடாலி ஃப்ளெட்சர். மனித உடலில் வரையும் கலைஞர்களில் இவர் வித்தியாசமானவராக இருக்கிறார். இல்லாத ஒன்றை இருப்பது போலக் காட்டும் ஆப்டிகல் இல்யூஷன் என்ற மாயத் தோற்றத்தை வரைவதில் சிறந்தவராக இருக்கிறார். மஞ்சள், பச்சை, வெளிர் நீலம் போன்ற வண்ணங்களில் கறுப்பு வண்ணத்தைக் கோடுகளாக வரைகிறார்.

அத்தனை அட்டகாசமாகப் பார்ப்பவர்களை ஏமாற்றி விடுகின்றன இந்த ஓவியங்கள். கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த நடாலியின் பார்வையில் `பாடி பெயிண்டர்’ வேலை தென்பட்டது. குழந்தையிலிருந்தே ஓவியத்தின் மீது ஆர்வம் கொண்ட நடாலி, பயிற்சி எடுத்துக்கொண்டு இந்த வேலையில் இறங்கிவிட்டார்.

அடடா! பிரமாதம் நடாலி!

முட்டையின் வடிவத்தைக் கொஞ்சம் மாற்றினால் எப்படி இருக்கும்! முட்டையின் வடிவத்தை மாற்றக்கூடிய மோல்ட்கள் லண்டனில் விற்பனைக்கு வந்துள்ளன. முட்டைகளை வேக வைத்து, ஓடுகளை நீக்க வேண்டும். மோல்டில் முட்டையை வைத்து, மூட வேண்டும். குளிர்ந்த நீரில் சில நிமிடங்கள் வைத்துவிட வேண்டும்.

பிறகு எடுத்து, மோல்டைத் திறந்தால் அழகான கோல்ஃப் பந்து போல உருண்டையாகவும் புள்ளிகளுடனும் முட்டை காணப்படும். விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களும் குழந்தைகளும் இந்த வடிவ முட்டையை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். கேரட்களின் தோல்களை நீக்கும் ஷார்ப்னர்களும் இப்பொழுது விற்பனைக்கு வந்திருக்கின்றன.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அபூர்வ-காகங்கள்/article6981544.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: போஸ்னியா குகை மனிதருக்கு விரைவில் வீடு கிடைக்கட்டும்...

 
pani_3121505f.jpg
 
 
 

போஸ்னியாவைச் சேர்ந்த 62 வயது ஜார்கோ ஹர்ஜிக், கடந்த 10 ஆண்டுகளாக ஜெனிகா நகருக்கு அருகே இருக்கும் ஒரு குகையில் வாழ்ந்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகு ஜெர்மனியில் குடியேறியவரின் திருமண வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வந்துவிட்டது. அதற்குப் பிறகு கிடைக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருந்தவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு போஸ்னியா திரும்பினார். ஆனால் ஜார்கோவின் வீடு போஸ்னியப் போரில் சிதைந்திருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார். அவரிடம் சேமிப்பும் இல்லை. அவருக்கு உதவக்கூடியவர்களும் யாருமே இல்லை. சிறிய மலையில் இருந்த குகைக்குள் தற்காலிகமாகத் தங்க முடிவுசெய்தார். கடந்த பத்து ஆண்டுகளாக அங்கேதான் வசித்துவருகிறார். குகைக்குக் கீழே பபினா நதி ஓடிக்கொண்டிருக்கிறது. “என்னுடைய ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு, ஒரு வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாது. அதனால் இந்தக் குகைக்குள் 13 நாய்களுடன் தங்கிக்கொண்டேன். என் செலவைக் குறைத்துக்கொண்டு நாய்களுக்கு உணவுகளை வாங்கிப் போடுகிறேன். வெளியில் எப்படிப்பட்ட பருவநிலை நிலவினாலும் குகைக்குள் அற்புதமாக இருக்கும். குளிர்காலத்தில் வெளியே மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். ஆனால் குகைக்குள் அளவான குளிர் மட்டுமே இருக்கும். கதகதப்புக்கு நெருப்பைப் பற்ற வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. கடுமையான கோடை காலங்களிலும் குகை குளிர்ச்சியோடு காணப்படும். இந்தக் குகையில் ஒரே ஒரு ஆபத்து மட்டும் இருக்கிறது. நதியில் வெள்ளம் வந்தால் குகைக்குள்ளும் புகுந்துவிடும். அப்போது நானும் நாய்களும் பாதுகாப்பான இடம் தேடிச் செல்ல வேண்டும். அதற்காக உயரமான இடத்தில் ஒரு கூடாரத்தை அமைத்திருக்கிறேன். நீர் வடிந்தவுடன் குகைக்குத் திரும்பிவிடுவேன். நவீனக் குகை மனிதர் என்று என்னை அழைக்கும் மக்கள், இந்த வழியே செல்லும்போது தேவையற்ற உணவுப் பொருட்களைப் போடுவார்கள். அவற்றை நானும் நாய்களும் பகிர்ந்துகொள்வோம். இன்னும் மூன்று ஆண்டுகளில் எனக்கு போஸ்னியாவிலிருந்தும் ஓய்வூதியம் கிடைக்கும். இரட்டை ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு, ஒரு சிறிய வீட்டுக்குக் குடிபுக முடியும். ஆரோக்கியமாக இருப்பதால் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்கிறேன்” என்கிறார் ஜார்கோ.

போஸ்னியா குகை மனிதருக்கு விரைவில் வீடு கிடைக்கட்டும்…

ஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்விலிருந்து பாம்பு கடித்து இறப்பவர்களை விட குதிரை தாக்கிக் கொல்லப்படுபவர்களே அதிகம் என்ற விஷயம் தெரியவந்திருக்கிறது. மெல்பர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ரோனெல் வெல்டன், 2000 முதல் 2013-ம் ஆண்டு வரை மருத்துவமனைகளில் பதிவான தகவல்களை ஆராய்ந்து இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார். 13 ஆண்டுகளில் குதிரைகளால் 74 மனிதர்கள் இறந்திருக்கிறார்கள். விஷப்பூச்சிகளால் 27 பேரும் பாம்புகளால் 27 பேரும் இறந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் விஷப் பூச்சிகளாலும் பாம்புகளாலும் மனிதர்கள் அதிகமாக உயிரிழக்கிறார்கள் என்று வழக்கமாகச் சொல்லப்பட்டு வந்ததை, இந்த ஆய்வு முடிவுகள் மாற்றியமைத்திருக்கின்றன என்கிறார் ரோனெல் வெல்டன்.

குதிரைகளைவிட பாம்புகள் சாதுவானவை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-போஸ்னியா-குகை-மனிதருக்கு-விரைவில்-வீடு-கிடைக்கட்டும்/article9495984.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஜெனி, என்னைத் திருமணம் செய்துகொள்கிறாயா?

 

 
masala_2336480f.jpg
 
 
 

அமெரிக்காவில் வசிக்கும் டேயான் ஸ்மித்தும் ஜெனிஃபர் கெஸெலும் நண்பர்கள். ஜெனிஃபரின் அடுத்த ஆண்டு பிறந்தநாளுக்குள் வித்தியாசமான முறையில் திருமணக் கோரிக்கையை வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார் ஸ்மித். தினமும் ஒரு வெள்ளைத் தாளில் `ஜெனிஃபர், என்னைத் திருமணம் செய்துகொள்கிறாயா?’ என்று எழுதி, தேதியையும் குறிப்பிடுவார்.

பல் தேய்க்கும்போது, துவைக்கும்போது, சாப்பிடும்போது, விளையாடும்போது என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் கோரிக்கைத் தாளைப் பிடித்தபடி போட்டோ எடுத்துக்கொள்வார். 365 புகைப்படங்கள் எடுத்தவுடன், இவற்றை எல்லாம் வீடியோவாக மாற்றினார்.

ஜெனிஃபரின் பிறந்தநாளுக்குக் குடும்பத்தோடு கடற்கரைக்குச் சென்றனர். ஜெனிஃபர் நாற்காலிக்குப் பின்பக்கம் கோரிக்கையோடு நின்றார் ஸ்மித். குடும்பத்தினரின் ஆரவாரம் பார்த்து, ஜெனிஃபர் திரும்பினார். ஸ்மித்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

பிறகு அவருக்கு வீடியோ போட்டுக் காட்டப்பட்டது. `அதீதமான அன்பு இல்லாவிட்டால் இது போன்ற காரியங்களை எல்லாம் செய்ய முடியாது’ என்று உருகிப் போய்விட்டார் ஜெனிஃபர்.

காதலிக்கும்போது இருக்கும் இதே அன்பும் சுவாரசியமும் வாழ்க்கை முழுவதும் தொடரட்டும்!

அமெரிக்காவில் வசிக்கும் ட்ரேசி கிப்சனும் அவரது மகள் ஜாரா ஹர்ட்ஸோரனும் மிக அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 45 வயது ட்ரேசிக்கும் 18 வயது ஜாராவுக்கும் முகம், கழுத்து, கை பகுதிகளில் உள்ள தோல்களில் சுருக்கங்கள் விழுந்துவிட்டன. முதுமையானவர்கள் போலத் தோற்றம் அளிக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இலவச சிகிச்சையளிக்க ஒரு மருத்துவமனை முன்வந்தது.

பற்கள் கூட விழுந்து மிகவும் வயதான தோற்றம் அளிக்கும் ட்ரேசி, சிகிச்சையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தன் மகளுக்கு மட்டும் சிகிச்சையளிக்கும்படிக் கேட்டுக்கொண்டார். `90 வயது முதியவருடைய தோல் எனக்கு வந்துவிட்டது. என்னைக் கேலி செய்யாதவர்களே கிடையாது.

எனக்கு வந்தது ஒரு நோய்… அதை மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் பரவாயில்லை. என் மகளுக்கும் அந்த நோய் வந்ததைத்தான் என்னால் தாங்க இயலவில்லை’ என்கிறார் ட்ரேசி. ஜாராவின் சிகிச்சைக்குச் சுமார் 50 லட்சம் செலவாகும் என்கிறார்கள். மகளின் இளமை திரும்பக் கிடைக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார் ட்ரேசி.

அடக் கொடுமையே… எப்படியெல்லாம் நோய் வருது…

பல்கேரியாவில் ஜிப்ஸி இன மக்கள் `திருமணச் சந்தை’ நடத்துகிறார்கள். மிக வறுமையில் இருக்கும் மக்கள், இந்தத் திருமணச் சந்தைக்கு மணமகன்களையும் மணமகள்களையும் அழைத்து வருகிறார்கள். பெரியவர்கள் உணவருந்த, குழந்தைகள் விளையாட, இளம் ஆண்களும் பெண்களும் தங்கள் இணையைத் தேடுகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் பேசி, பிடித்துப் போனால் குடும்பத்தாரிடம் தெரிவிக்கிறார்கள்.

இரண்டு குடும்பங்களும் கூடிப் பேசுகிறார்கள். மணமகளின் அழகுக்கு ஏற்றவாறு மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை அளித்து, திருமணத் தேதியை முடிவு செய்துவிடுகிறார்கள். அழகான பெண்ணை நிறையப் பேர் திருமணம் செய்துகொள்ள ஆர்வம் காட்டினால், யார் அதிகம் வரதட்சணை அளிக்கிறார்களோ, அவர்களுக்குப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். காலம் காலமாக நடைபெற்று வரும் இந்தத் திருமணச் சந்தை, பெரிய குதிரைச் சந்தை மைதானத்தில் நடைபெறுகிறது.

அடப்பாவிகளா… பெண்களையும் ஆடு, மாடு போல வியாபாரம் செய்யறீங்களே…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஜெனி-என்னைத்-திருமணம்-செய்துகொள்கிறாயா/article6977688.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஐயோ.... பாவம்...

 

 
 
masala_2334724f.jpg
 
 
 

பிரிட்டனில் வசிக்கும் 46 வயது சாரா, ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார். கடந்த ஜூலை மாதம் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். முதலில் அதிர்ச்சியடைந்த சாரா, சட்டென்று மீண்டுவிட்டார். அக்டோபர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் மார்பகம் அகற்றப்பட்டது. அடுத்து கீமோ தெரபி செய்யவேண்டும். அழகான தன்னுடைய கூந்தலை வெட்டி, மொட்டையடித்துக்கொண்டார். அன்றிலிருந்து தினமும் தன்னுடைய மொட்டைத் தலையில் விதவிதமான பொருட்களை வைத்து, புகைப்படம் எடுத்து வெளியிட ஆரம்பித்தார். பொம்மை ஸ்டாண்ட், உலக உருண்டை, கேக், கடிகாரம், ரேடியோ, பூங்கொத்து என்று தினமும் தலையில் ஓர் அலங்காரம் செய்து புகைப்படங்கள் எடுப்பார். அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை மெக்மில்லன் கேன்சர் சப்போர்ட் என்ற அறக்கட்டளைக்கு வழங்கி வருகிறார். இதுவரை 141 படங்கள் மூலம் சுமார் 7 லட்சம் ரூபாயை வழங்கியிருக்கிறார். 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தத் திட்டத்தையே அவர் ஆரம்பித்தார். உற்சாகமும் தன்னம்பிக்கையும் ததும்பி வழியும் சாராவின் புகைப்படங்களைப் பார்த்தாலே போதும், புத்துணர்ச்சி கிடைத்துவிடும். ’புற்றுநோயை நான் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காவிட்டால், அது என்னைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துவிடும். அதை அனுமதிக்கக்கூடாது என்று தீர்மானித்தேன். என்னைப் போல பாதிக்கப்பட்டிருக்கும் சக புற்றுநோயாளிகளுக்கு உதவ வேண்டும் என்றும் நினைத்தேன். இன்று என்னையும் புற்றுநோயில் இருந்து மீட்டுவிட்டேன்… மற்றவர்களையும் மீட்டு வருகிறேன்’ என்கிறார் சாரா.

உலக அழகி!

பிரிட்டன் கோழிப் பண்ணைகளில் கோழிக் குஞ்சு ஆணா, பெண்ணா என்று கண்டறியும் வேலையைச் செய்பவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 38 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகை சம்பளமாகக் கிடைத்தாலும் இந்த வேலையைச் செய்வதற்கு ஆட்கள் வருவதில்லை என்பதுதான் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. வளர்ந்த பிறகு கோழியையும் சேவலையும் கண்டறிவது சுலபம். ஆனால் கோழிக் குஞ்சாக இருக்கும்போது கண்டறிவது கடினம். அனுபவம் வாய்ந்தவர்களாலேயே இந்த வேலையைச் செய்ய முடியும். அதற்காக 3 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் 800 - 1200 கோழிக் குஞ்சுகளை எடுத்து ஆணா, பெண்ணா என்று பரிசோதிக்க வேண்டும். இதில் 97 சதவிகிதம் சரியாகக் கணித்திருக்க வேண்டும். ஒரு கோழிக் குஞ்சைப் பரிசோதிக்க 3 நொடிகள்தான் கிடைக்கும். பிரிட்டன் முழுவதும் 100 முதல் 150 பேர்தான் இந்த வேலையைச் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டில் ஒருவர் கூட இந்த வேலையில் புதிதாகச் சேரவில்லை. தென்கொரியாவில் இந்த வேலையைச் செய்பவர்களுக்கு மிகுந்த மரியாதையும் வருமானமும் கிடைக்கிறது. ஆனால் பிரிட்டனில் இந்த வேலை என்றால் ஒருவர் கூட எட்டிப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்.

எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் வேலையில் கொஞ்சமாவது சுவாரசியம் இருக்கணுமே…

சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் டோல் பூத் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி எல்லோரையும் நெகிழ்ச்சியடைய வைத்துவிட்டது. காரில் வந்த நாய் ஒன்று, உரிமையாளருக்குத் தெரியாமல் வெளியே குதித்துவிட்டது. 13 நாட்களாக அந்தப் பகுதிக்கு ஒவ்வொரு வாகனம் வரும்போதும் ஓடிச் சென்று, தன்னுடைய உரிமையாளர்தானா என்று தேடுகிறது. இரவு, பகல் பாராமல் ஓடி, ஓடித் தேடி அலைகிறது. நாயின் தகவல்களை வெளியிட்டு, தற்காலிகமாக நாயைப் பராமரித்து வருகிறது சீனக் காவல்துறை.

ஐயோ… பாவம்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஐயோ-பாவம்/article6971591.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: நெருப்பால் முடிவெட்டுவது ஆபத்தானது!

 

 
 
weruppu_3123002f.jpg
 
 
 

நெருப்பை வைத்து முடி வெட்டும் கலையைச் செய்துவருகிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷஃபாத் ராஜ்புத் என்ற சிகை அலங்காரக் கலைஞர். இவரது முடிவெட்டும் உத்தியை வீடியோ எடுத்து இணையதளத்தில் ஒரு வாடிக்கையாளர் வெளியிட, உலகம் முழுவதும் ஒரே இரவில் பிரபலமாகிவிட்டார். எரியக்கூடிய ஒருவித துகள்களையும் திரவத்தையும் தலையில் தடவுகிறார். திடீரென்று தலையில் தீப்பற்றி எரிகிறது. கத்திரியையும் சீப்பையும் வைத்து மிக வேகமாக முடிகளை வெட்டி விடுகிறார். தலையில் தீப்பற்றி எரிவதை கண்ணாடி வழியாகப் பார்த்தபடி ஒரு வாடிக்கையாளர் பயமின்றி அமர்ந்திருக்கிறார். 15 நிமிடங்களில் அழகாக வெட்டப்பட்ட தலையலங்காரத்தைக் கண்டு திருப்தியடைந்தவராக நாற்காலியை விட்டு நகர்கிறார் வாடிக்கையாளர். ஒரே வாரத்தில் இந்த வீடியோவை பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். பலர் ஷஃபாத்தின் திறமையைக் கண்டு ஆச்சரியமடைந்து, பாராட்டியிருக்கிறார்கள். சிலர், எத்தனையோ நவீன வழிகள் இருக்கும்போது தலையில் தீவைத்து முடிவெட்ட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கிறார்கள். அதிக வெப்பம் ஆபத்து என்றும், ஆபத்தை விட நன்மையே அதிகம் என்றும் விமர்சனங்கள் வருகின்றன. பாகிஸ்தானைச் சேர்ந்த உமர் குவாரைஷி என்ற பத்திரிகையாளர் ஷஃபாத்தைச் சந்தித்தார். “உலகின் பல பகுதிகளிலும் நெருப்பை வைத்து முடி வெட்டும் வழக்கம் இருந்து வருகிறது. முடியை நேராக்குவதற்கும் பளபளப்பாக்குவதற்கும் நெருப்பைப் பயன்படுத்துவதாக ஷஃபாத் ஒப்புக்கொண்டார். ஏற்கெனவே தன்னுடைய பிரத்யேக முடிவெட்டும் நுட்பம் மூலம் பாகிஸ்தானில் பிரபலமாக இருக்கும் ஷஃபாத், இன்று உலக அளவில் பிரபலமாகிவிட்டார்” என்கிறார் உமர்.

எவ்வளவு தேர்ந்தவராக இருந்தாலும் நெருப்பால் முடிவெட்டுவது ஆபத்தானது!

அமெரிக்காவின் ஆர்லண்டோ நகர் காட்டர்லாண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் இருக்கிறது வெள்ளை முதலை. குறைபாடுடைய நிறமிகள் தோலில் தோன்றுவதால் அல்பினிசம் எனப்படும் வெள்ளைத் தோல் நோய் உருவாகிறது. இது மரபணுக் குறைபாட்டு நோய். மனிதர்களில் இருந்து விலங்குகள் வரை இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். தன் நிறத்தால் முத்து என்று அழைக்கப்படும் 10 வயது முதலை, ஏழரை அடி நீளமும் 48 கிலோ எடையும் கொண்டதாக இருக்கிறது. உடல் முழுவதும் வெண்மையும் கண்கள் இளஞ்சிவப்பாகவும் காட்சியளிக்கின்றன. “மூன்று வயதில் அல்பினோ முதலை இங்கு வந்தது. இந்த அதிசய முதலையைப் பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்கள்தான் முத்து என்று பெயரிட்டுள்ளனர். பத்து லட்சம் முதலைகளில் 3 முதலைகளுக்கு இந்த மரபணுக் குறைபாடு ஏற்படுகிறது. உலகெங்கும் முதலைகள் இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன. கடத்தல்காரர்களிடமிருந்து முதலைகளை மீட்டு வருகிறோம். அப்படி மீட்கப்பட்ட முதலைகளில் ஒன்று இந்த அல்பினோ முதலை. இதே போல பினோ என்ற அல்பினோ முதலை பிரேசிலில் வசிக்கிறது. முதுகு, கால் வலியால் அவதிப்பட்ட இந்த முதலைக்கு அக்குபஞ்சர் மருத்துவம் அளிக்கப்பட்டது” என்கிறார் பூங்காவின் செய்தித் தொடர்பாளர்.

நோயால் நிறமிழந்த அபூர்வ முதலை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நெருப்பால்-முடிவெட்டுவது-ஆபத்தானது/article9500820.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: புதின் காலண்டரை விரும்பும் ஜப்பானியர்கள்!

 

 
 
putin1_3123512f.jpg
 
 
 

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அதிகாரப்பூர்வமான 2017-ம் ஆண்டு காலண்டரை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டது. இதில் ஒவ்வொரு மாதத்துக்கும் புதினின் வித்தியாசமான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அவரின் புகழ்பெற்ற வாசகங்கள் ஆங்கிலம் உட்பட 8 மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த காலண்டர் ரஷ்யாவில் மிகப் பெரிய அளவுக்கு விற்பனையானதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இதே காலண்டர் தற்போது ஜப்பானில் மிக அதிக அளவில் விற்பனையாகி வருவது ரஷ்ய அரசை ஆச்சரியமடைய வைத்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஜப்பானியர்கள் ரஷ்ய அதிபரின் விசிறியாக இருக்கின்றனர் என்பது ஜப்பான் அரசுக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவிலிருந்து காலண்டரை விற்பனைக்காக வாங்கினேன். ஒரு காலண்டர் 45 ரூபாய்க்கு விற்பனை செய்தேன். என்னுடைய சில நண்பர்கள் ரஷ்ய அதிபரின் தீவிர விசிறிகள். அவர்கள் மூலம் இணையதளங்களில் விஷயத்தைப் பரப்பினேன். அக்டோபருக்குள் இருவிதமான காலண்டர்கள் விற்றுத் தீர்ந்தன. மீண்டும் ஆர்டர் கொடுத்தேன். வேறு வகை 3,500 காலண்டர்கள் வந்து சேர்ந்தன. புதினுக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்கிறார் காலண்டர் விற்பனையாளர் கோயுமி யோகோகவா. புதின் ஜுடோ போட்டியில் பங்கேற்பது, க்ளைடரில் பறப்பது போன்ற புகைப்படங்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. இந்த காலண்டரில் அக்டோபர் 7-ம் தேதி மட்டும் விடுமுறை என்று எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. புதினின் பிறந்தநாள் இது.

புதின் காலண்டரை விரும்பும் ஜப்பானியர்கள்!

மலேசியாவின் பாஹாங் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டின் கம்பி வேலிக்குள் வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடுகளை மலைப்பாம்பு விழுங்கிவிட்டது. 16 அடி நீளம் கொண்ட இந்த மலைப்பாம்பு அளவுக்கு அதிகமாக இரண்டு ஆடுகளை அடுத்தடுத்து விழுங்கியதால், நகர முடியாமல் தவித்தது. சிறிது நேரத்தில் மனிதர்களின் பார்வையில் பட்டுவிட்டது. உடலின் இரண்டு பகுதிகள் ஆடுகளால் புடைத்திருந்தன. முதலில் மலைப்பாம்பைக் கண்டு அஞ்சிய மக்கள், அது நகர முடியாமல் தவிப்பதைக் கண்டு தைரியம் பெற்றனர். குச்சியால் நகர்த்திப் பார்த்தனர். மலைப்பாம்பு எந்தவித எதிர்ப்பையும் காட்ட இயலாமல் பொம்மை போல படுத்திருந்தது. மலைப்பாம்பை அப்புறப்படுத்தும் எண்ணத்தில் தலைப் பகுதியை ஒருவர் பிடித்து இழுக்க, வால் பகுதியை இன்னொருவர் பிடித்து இழுத்தார். யாராலும் தூக்க முடியவில்லை. வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். 4 மனிதர்கள் சேர்ந்து மலைப்பாம்பின் தலையைக் கட்டி, வாகனத்தில் ஏற்றினர். சாதாரணமாக இருப்பதைவிட மிகப் பெரிய இரையை விழுங்கும்போது, மலைப்பாம்பின் உள் உறுப்புகள் சட்டென்று மாற்றம் அடைந்து, அளவில் பெரிதாகி, வேலை செய்ய ஆரம்பிக்கின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பேராசையால் பிரச்சினையில் சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-புதின்-காலண்டரை-விரும்பும்-ஜப்பானியர்கள்/article9502784.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: உலகின் மிக அழகான ஐஸ் க்ரீம் பூக்கள்!

icecream_poo_3124133f.jpg
 
 
 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஐஸ்க்ரீமி ஆர்டிசன் ஜெலடோ, சுவையான ஐஸ் க்ரீம்களை வழங்கிவருகிறது. ஆனால் ஐஸ் க்ரீம்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் ஆசிய சுவைகளைத் தாண்டி, வெற்றி பெற இயலவில்லை. இவர்களின் ஐஸ் க்ரீம் சுவைகளை விட, அது மிக அழகாக வழங்கப்படுவதில்தான் உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருக்கிறது. ஜெலடோ கோன் ஐஸ் க்ரீம்கள், அழகான பூக்களின் வடிவத்தில் வழங்கப்படுகின்றன! கடுங்குளிர் காலத்தில் இரவு நேரங்களில் கூட இங்கே மக்கள் வரிசையில் இருந்து கோன் ஐஸ் க்ரீம்களை வாங்கிச் சுவைக்கின்றனர். ஆரம்பத்தில் எல்லா ஐஸ் க்ரீம் கடைகளைப் போலத்தான் ஐ க்ரீமி ஜெலடோவும் இருந்தது. மக்கள் அதிகம் வரவில்லை. வியாபாரத்தைப் பெருக்க, பூக்கள் வடிவத்தில் கோன் ஐஸ் க்ரீம்களை வழங்க முடிவுசெய்தனர். ஐஸ் க்ரீம் அலங்காரக் கலைஞர்களை வைத்து, வெவ்வேறு சுவைகளில் வெவ்வேறு வண்ணங்களில் பூக்கள் வடிவ கோன் ஐஸ் க்ரீம்களை விற்பனை செய்தனர். மக்கள் இவற்றின் அழகில் மயங்கிப் போனார்கள். விரைவில் பிரபலமானது. “இதுவரை வழங்கப்பட்ட அதே ஐஸ் க்ரீம்தான். சுவையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால் அழகான, யாருமே செய்யாத வடிவத்தில் வழங்கிய சிறிய முயற்சி இவ்வளவு பெரிய வெற்றியைத் தேடித் தந்துவிட்டது. சிலர் இரு வண்ணப் பூக்களைக் கேட்பார்கள். இன்னும் சிலர் பல வண்ணப் பூக்களைக் கேட்பார்கள். அவர்களின் விருப்பம் அறிந்து, எங்கள் கலைஞர்கள் ஐஸ் க்ரீம் பூக்களை உருவாக்கித் தருவார்கள். இதைச் செய்வதற்கு நேரம் அதிகமாகும். ஆனாலும் மக்கள் காத்திருக்கிறார்கள். இந்த வெற்றி ஆஸ்திரேலியாவின் பல இடங்களிலும் கிளைகளைப் பரப்ப உதவியிருக்கிறது. தினமும் 24 விதச் சுவைகளில் ஐஸ் க்ரீம்களை வழங்கிவருகிறோம். ஆசிய ஐஸ் க்ரீம்களின் சுவை எங்களை மிகவும் ஈர்த்திருக்கிறது. தாய் டீ, பனைவெல்லம், கருஞ்சீரகம், துரியன் போன்றவற்றை வைத்து இன்னும் புதிய சுவைகளில் ஐஸ் க்ரீம்களை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்” என்கிறார் நிறுவனர்களில் ஒருவரான சாசினுச் லாப்வாங்பைபூன்.

உலகின் மிக அழகான ஐஸ் க்ரீம் பூக்கள்!

அர்ஜெண்டினாவில் உள்ள ஒரு நதி, பாறைகளுக்கு இடையே ஆர்ப்பரித்து ஓடிவந்துகொண்டிருந்தது. வெள்ளை, கறுப்பு நிற நாய்கள் ஒன்றை ஒன்று துரத்தியபடி ஓடிக்கொண்டிருந்தன. திடீரென்று கறுப்பு நாய் ஆற்றுக்குள் விழுந்த வேகத்தில், மிதந்து வந்த ஒரு கட்டையை வாயில் கவ்விக்கொண்டது. பாறைகளில் ஏற முயற்சி செய்தபோது, தண்ணீரின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டது. பாறையில் தன் நண்பனைக் காப்பாற்ற காத்திருந்தது வெள்ளை நாய். தண்ணீரில் அடித்துக்கொண்டு வந்த கறுப்பு நாய் பிடித்திருந்த மரக்கட்டையைப் பெரு முயற்சி செய்து இழுத்தது. கறுப்பு நாய் பாறையில் ஏறி உயிர் பிழைத்தது. ஒரு சில நிமிடங்களில் நடந்த இந்த நிகழ்ச்சி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. தவறி விழுந்தால் எப்படி உயிர் தப்பவேண்டும் என்றும் ஓர் உயிரை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்றும் இந்த நாய்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.

ஆற்றில் விழுந்த நண்பனைக் காப்பாற்றிய நிஜ ஹீரோ!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உலகின்-மிக-அழகான-ஐஸ்-க்ரீம்-பூக்கள்/article9504482.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: மூடநம்பிக்கையால் உயிர் பிழைத்த 700 வயது மரம்!

 
tree_3124577f.jpg
 
 
 

ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கயாஷிமா ரயில் நிலையம் வித்தியாசமாகக் காட்சியளிக்கிறது. இரண்டு நடை மேடைகளுக்கு இடையே, மேற்கூரை துளை வழியே ஒரு மரம் பரந்து விரிந்து நின்றுகொண்டிருக்கிறது. இது மிக மிகப் பழமையான மரம் என்று மக்கள் சொன்னாலும், அதிகாரப்பூர்வமாக 700 வயது என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 1910-ம் ஆண்டு இந்த மரத்துக்கு அருகில் ரயில் நிலையம் திறக்கப்பட்டது. பயணிகள் வெயிலுக்கும் மழைக்கும் இந்த மரத்தடியில்தான் ஒதுங்கினர். ரயில் நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக 1972-ம் ஆண்டு மரத்தை வெட்ட முடிவு செய்தனர். இந்த மரம் வெட்டப்படுவதை விரும்பாத சிலர், மரத்துக்கு அபூர்வ சக்தியிருப்பதாகக் கிளப்பிவிட்டனர். அந்த நேரம் தற்செயலாக ரயில் நிலையத்தில் வேலை செய்தவர்களுக்குச் சில பிரச்சினைகள் வந்தன. உடனே மரத்தை வெட்ட நினைத்ததால் தான் இந்தத் துன்பத்துக்கு ஆளானோம் என்று நினைத்தனர். மரம் வெட்ட வந்தவர்களுக்குக் கடுமையான ஜுரம் வர, மரம் வெட்டுவது தடைபட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மரம் வெட்டுவதற் கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது, ரயில் நிலையத்திலேயே ஒருவர் மரணம் அடைந்தார். அதுவரை நம்பாதவர்கள்கூட மரத்துக்கு உண்மையிலேயே சக்தி இருப்பதாக நம்பினர். இந்த மரத்துக்குத் தொந்தரவு கொடுக்காமல், நடைமேடையைக் கட்டிவிட்டனர். 40 ஆண்டு களில் மரத்துக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை. மரத்தைப் பாதுகாப்பதற் காகச் சுற்றிலும் கண்ணாடியால் தடுப்பு போடப்பட்டிருக்கிறது.

மூடநம்பிக்கையால் உயிர் பிழைத்த 700 வயது மரம்!

சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் புலம் பெயர்ந்த ஒருவர் வேலை செய்துவந்தார். தான் ஈட்டிய வருமானத்தில் வீட்டுக்கு அனுப்பி வைத்தது போக, மீதியைத் தேவையில்லாமல் செலவு செய்துவிடுவார். திடீரென்று சீனப் புத்தாண்டுக்கு வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்தார். கையில் பணமில்லை. வேறுவழியின்றி, சைக்கிளில் சென்றுவிட முடிவு செய்து, ஒரு மாதத்துக்கு முன்பே கிளம்பினார். கிட்டத்தட்ட 1,700 கி.மீ. தூரத்தை சைக்கிள் மூலம் கடந்தும் அவரால் ஊருக்குச் சென்று சேர முடியவில்லை. எக்ஸ்பிரஸ்வே பகுதியில் சைக்கிளில் சென்றவரை காவல் அதிகாரி வாங் ஷுவான் நிறுத்தி விசாரித்தார். தான் க்யுஹார் நகருக்குச் செல்ல வேண்டும் என்றார் அந்த மனிதர். “நான் அதிர்ந்து போனேன். அவர் தவறான வழியில் ஆயிரக்கணக்கான கி.மீ. தூரத்தைக் கடந்துவந்திருக்கிறார். இவருக்குச் சாலை சமிக்ஞைகள் புரியவில்லை என்பதால் பலரிடமும் கேட்டு, அவர்கள் சொன்ன திசையில் பயணம் செய்திருக்கிறார். அவரைப் புகைப்படங்கள் எடுத்துவிட்டு, ரயில் பயணச் சீட்டு வாங்கிக் கொடுத்தோம். ஒரு மாதத்துக்குப் பிறகு ஊருக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறார்” என்ற வாங் ஷுவான்.

இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மூடநம்பிக்கையால்-உயிர்-பிழைத்த-700-வயது-மரம்/article9506954.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஆடம்பரத்தை நியாயப்படுத்த அறக்கட்டளைகளுக்கு வழங்குவது இப்போதைய ஃபேஷன்!

 
ulagam_3124894f.jpg
 
 
 

லகப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்காக பொட்டிக் ட்ரீம்மேக்கர் நிறுவனம், 20 நாட்களில் 20 நகரங்களைப் பார்க்கக் கூடிய ஒரு சுற்றுலாவை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடம்பரமான சுற்றுலாவில் உங்களுடன் உறவினர்கள், நண்பர்கள் 49 பேர் பயணம் செய்யலாம். சுற்றுலா கட்டணம் 94.5 கோடி ரூபாய். இது மற்ற சுற்றுலாக்களைப் போல இல்லை. விமானம் ஏறியதிலிருந்து மீண்டும் விமானத்திலிருந்து இறங்கும் வரை ஒவ்வொரு விஷயத்திலும் அதிகபட்சமான ஆடம்பர வசதிகளை அனுபவிப்பீர்கள். பிரத்யேக போயிங் விமானம் 767 ஜெட்டில்தான் பயணம். ஒவ்வொரு விமானத்திலும் குறைந்த அளவு ஆட்களே அனுமதிக்கப்படுவர். ஆடம்பரமான மிக வசதியான படுக்கைகளுடன் கூடிய இருக்கைகள். 20 நாட்களில் 12% நேரம் மட்டுமே விமானத்தில் செலவிடப்படும். ஆனாலும் ஒவ்வொரு பயணிக்கும் ஒவ்வொரு பிரத்யேக உதவியாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார். பானங்களைக் கலக்கும் குச்சி தங்கத்தில் செய்யப்பட்டு, வைரக் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். உலகின் உன்னதமான ஒயின், சிறந்த யோகா குரு, ஆயுர்வேத மருந்துகள், அக்குபஞ்சர் போன்ற வசதிகளும் உண்டு. மிகச் சிறந்த தங்கும் விடுதிகளில் தங்குவதற்கும் அரிய உணவுகளை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த சுற்றுலா கட்டணத்தில் ஒரு பகுதி அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படுகிறது. கம்போடியாவில் 2,500 குழந்தைகளுக்கு சைக்கிள்கள், பிலிப்பைன்ஸில் 50 ஆயிரம் குழந்தைகளுக்குத் தூய்மையான குடிநீர், இங்கிலாந்தில் 50 ஆயிரம் குழந்தைகளுக்கு மருந்துகள் போன்றவற்றையும் அளிக்க இருக்கிறார்கள். பாஸ்போர்ட் 50 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுப் பயணம் ஆகஸ்டில் ஆரம்பமாக இருக்கிறது.

ஆடம்பரத்தை நியாயப்படுத்த அறக்கட்டளைகளுக்கு வழங்குவது இப்போதைய ஃபேஷன்!

லகின் மிகப் பிரபலமான ட்விட்டர் கணக்கு வைத்திருப்பவர்களில் டொனால்ட் ட்ரம்பும் ஒருவர். இவரை 3.3 கோடி மக்கள் பின்தொடர்கிறார்கள். ஆனால் ஒரு பிளாஸ்டிக் பைக்குள் இருக்கும் பாதியாக வெட்டப்பட்டுள்ள வெங்காயம், அமெரிக்க அதிபரை விட அதிகம் பேரைத் தன்னால் பின்தொடர வைக்க முடியும் என்று களத்தில் இறங்கியிருக்கிறது. அரை வெங்காயமாக இருந்தாலும் கனவு ரொம்பப் பெரிதாக இருக்கிறது என்று எல்லோரும் நினைத்தனர். டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு விழாவின்போதே அரை வெங்காயத்தை 4,90,000 பேர் பின்தொடர ஆரம்பித்துவிட்டனர். இன்று 2.2 கோடி பேர் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அரை வெங்காயத்தின் பெயரில் ட்விட்டர் கணக்கை இயக்கும் மனிதர் யாரென்று இதுவரை தெரியவில்லை. ‘நான் நல்ல சிந்தனைகளை உருவாக்கவும் சிரிக்கவும் இந்த ட்விட்டர் பக்கத்தை வைத்திருக்கிறேன்’ என்ற செய்தியை மட்டும், 5 லட்சம் பேர் பரப்பியிருக்கிறார்கள். நான் ட்விட்டர் கணக்கு ஆரம்பித்தபோது, என்னால் என் கனவை நிறைவேற்ற முடியாது என்று பலரும் நினைத்தனர். ஆனால் இன்று கனவை நிறைவேற்றி விடுவேன் என்று பலரும் நம்ப ஆரம்பித்துவிட்டனர். அரை வெங்காயமாக இருந்தாலும் என்னால் மிகப் பெரிய கனவை நிஜமாக்க முடியும்போது, முழு மனிதர்களான உங்களால் முடியாதது ஒன்றும் இல்லை என்கிறது இந்த அரை வெங்காய ட்விட்டர் கணக்கு.

ட்ரம்பை முந்திவிடும் போலிருக்கே இந்த அரை வெங்காயம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஆடம்பரத்தை-நியாயப்படுத்த-அறக்கட்டளைகளுக்கு-வழங்குவது-இப்போதைய-பேஷன்/article9507974.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: நாய்களுக்கு தினமும் 400 கிலோ உணவு

 
amazon_2331132f.jpg
 
 
 

அமேசானில் வாழும் சினேரியோஸ் மொர்னர் என்ற பறவையின் குஞ்சு தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்கிறது. முட்டையில் இருந்து வந்தவுடன் குஞ்சின் உடல் முழுவதும் கம்பளிப் பூச்சியைப் போல கூர்மையான, விஷமுடைய முட்கள் ஆரஞ்சு வண்ணத்தில் நீட்டிக்கொண்டிருக்கின்றன. நிறத்தையும் முட்களையும் பார்க்கும் எதிரி, குஞ்சின் அருகே வர நினைக்காது.

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறைதான் தாய்ப் பறவை உணவூட்டும். அதனால் தாயின் தயவை எதிர்பார்க்காமல், தானே உணவு தேடிக் கிளம்பிவிடுகிறது குஞ்சு. பறக்கும் அளவுக்குச் சக்தி இருக்காததால், எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு இயற்கை இப்படி ஒரு பாதுகாப்பை குஞ்சுக்கு அளித்திருக்கிறது. முதிர்ச்சியடைந்தவுடன் ஆரஞ்சு வண்ண முடிகள் காணாமல் போய்விடுகின்றன. சினோரியஸ் மொர்னர் பறவையின் இந்தத் தகவமைப்பைப் பற்றி 2012-ம் ஆண்டில்தான் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தன் சிறகே தனக்கு உதவி!

சீனாவின் ஷான்க்ஸி மாகாணத்தில் வசிக்கிறார் 60 வயது வாங் யான்ஃபாங். 2009-ம் ஆண்டு நாய்கள் பாதுகாப்பு மையத்தை ஆரம்பித்தார். இன்று 1300 நாய்களைப் பராமரித்து வருகிறார். தினமும் 400 கிலோ உணவுகளைச் சமைத்துப் போடுகிறார். இவருக்கு உதவியாக 4 பெண்கள் இருக்கிறார்கள். தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து உணவு தயாரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். வாங் வளர்த்த நாய்கள் என்றாலும் இவை எல்லா நேரங்களிலும் அன்பாக இருப்பதில்லை.

சில நேரங்களில் கடித்துவிடுகின்றன. ஆனாலும் பராமரிப்பதைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். ’குழந்தை கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டால் விட்டுவிடுவோமா? அது போலத்தான் இந்த நாய்களும்’ என்கிறார் வாங். நாய்களுக்கான உணவு, மருத்துவக் கண்காணிப்பு போன்றவற்றுக்கு நன்கொடைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். வாங்கின் சேவை மனப்பான்மையைக் கண்டு தாராளமாக நிதியுதவி குவிகிறது.

அடேங்கப்பா!

உக்ரைனைச் சேர்ந்த 58 வயது வலெரி ஸ்மாக்லிக்கு உலகிலேயே மிக அடர்த்தியான, நீளமான இமை முடிகள் பெற்றவர் என்ற பட்டம் கிடைத்திருக்கிறது. தன்னுடைய இமை முடிகள் நீளமாக வளர்வதற்கு, ரகசிய உணவு ஒன்றை உட்கொள்வதாகச் சொல்கிறார் வலெரி. இமைகளை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கும். அதற்காகத்தான் பார்வைக்கு இடையூறாக இருந்தாலும் முடியை வளர்த்து வருகிறேன் என்கிறார். ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியவில்லை.

இமை முடிகளை வெட்டிவிட நினைத்தார். கின்னஸ் அலுவலகம் சென்று தன்னுடைய இமை முடியின் நீளத்தைப் பதிவு செய்தார். அமெரிக்காவின் ஸ்டூவர்ட் முல்லரிடம் இருக்கும் சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் கொஞ்ச நாள் வலெரி காத்திருக்க வேண்டும். அதனால் வெட்டும் எண்ணத்தைக் கைவிட்டு, கின்னஸ் சாதனைக்காகக் காத்திருக்கிறார்.

இப்படியெல்லாம் சாதனை செஞ்சு என்ன செய்யப் போறீங்க வலெரி?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நாய்களுக்கு-தினமும்-400-கிலோ-உணவு/article6959936.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: நாக்கால் கண்களைச் சுத்தம் செய்யும் பெண்மணி!

 
thanmbathi_3125764f.jpg
 
 
 

போஸ்னியா கிராமத்தில் வசித்துவருகிறார் 80 வயது ஹவா செலிபிக். மனிதர்களின் கண்களில் இருக்கும் தூசு துகள்களைத் தன் நாக்கால் சுத்தம் செய்கிறார். ‘நானா ஹவா’ என்று அழைக்கப்பட்ட வேறொரு பெண்மணி, பல ஆண்டுகளுக்கு முன்பு இப்படி நாக்கால் கண்களைச் சுத்தம் செய்து வந்திருக்கிறார். அவர் பெயரையே செலிபிக் பாட்டிக்கும் வைத்துவிட்டனர். இவரிடம் ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் உட்பட உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மக்களும் கண் களைச் சுத்தம் செய்து கொள்ள வருகிறார்கள். சிலர் நவீன மருத்துவத் தால் செய்ய முடியாத விஷயத்தைக்கூட ஹவா செலிபிக், தன் நாக்கால் சரி செய்துவிடுகிறார் என்கிறார்கள். கண்களில் விழுந்த நிலக்கரி, இரும்புத் துகள், ஈயம், மரத்தூள், கண்ணாடி போன்றவற்றை நீக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். “மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு, சரியாகாதவர்கள்தான் என்னிடம் வருகிறார்கள். என் வாழ்நாளில் 5 ஆயிரம் பேருக்கு நாக்கால் கண்களைச் சுத்தம் செய்திருக்கிறேன். கண்களைச் சுத்தம் செய்யும் முன் என் வாயை ஆல்கஹால் மூலம் நன்றாகச் சுத்தம் செய்துகொள்வேன். எந்த ஒரு சிறு பொருளும் என் நாக்கிடமிருந்து தப்பிக்க முடியாது. என் குழந்தைகளுக்கு நாக்கால் சுத்தம் செய்வது பிடிக்காது. அதனால் அவர்கள் யாரும் என்னிடம் இதைக் கற்றுக்கொள்ள முன்வரவில்லை. கட்டணமாக 730 ரூபாயைப் பெறுகிறேன். வேலை இல்லாதவர்கள், ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்து அனுப்புகிறேன்” என்கிறார் ஹவா செலிபிக்.

நாக்கால் கண்களைச் சுத்தம் செய்யும் பெண்மணி!

கேத்ரின் ஹவார்த், ரிச்சர்ட் தம்பதியர் இங்கிலாந்தில் வசிக்கிறார்கள். கேத்ரின் நைஜீரியாவைச் சேர்ந்த ஆப்பிரிக்கர். ரிச்சர்ட் இங்கிலாந்துக்காரர். இருவருக்கும் முதல் குழந்தை வெள்ளைத் தோல், நீல நிறக் கண்களுடன் பிறந்தது. மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். பத்து லட்சம் பேரில் ஒருவருக்குதான் இப்படிக் கலப்பின ஜோடியில் ஒருவரின் சாயல் கொண்ட குழந்தை பிறக்கும் என்றார்கள். கடந்த மார்ச் மாதம் இரண்டாவது குழந்தை பிறந்தது. இதுவும் வெள்ளைத் தோலும் நீலக் கண்களுமாகக் காட்சியளித்தது. மருத்துவர்கள் இந்த நிகழ்வு அதிசயத்திலும் அதிசயம் என்றார்கள். ஒரு குழந்தை அம்மா போலவும் இன்னொரு குழந்தை அப்பா போலவும் பிறந்திருக்கின்றன. இருவரின் நிறங்களைக் கலந்து பிறந்திருக்கின்றன. ஆனால் கேத்ரினுக்கு மட்டும் இரண்டு குழந்தைகளும் ரிச்சர்டைப் போலவே பிறந்திருப்பதால் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. கேத்ரினின் மூதாதையர்கள் யாராவது கலப்பினத்தில் திருமணம் செய்திருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் அப்படி எந்தத் தகவலும் இல்லை என்கிறார் கேத்ரின். “எல்லோருக்கும் வெள்ளையாகக் குழந்தைகள் பிறந்ததில் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் எங்களுக்கு நிறம் குறித்து எந்தவிதப் பெருமையோ, சிறுமையோ இருந்ததில்லை. நான் குழந்தைகளை அழைத்துச் சென்றால், இந்த உலகம் என்னைக் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் வேலைக்காரி என்றுதான் நினைக்கிறது. வெள்ளைக் குழந்தைக்கு அம்மாவாக இருக்க முடியாது என்று நம்புகிறது. பத்து லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தையாக என்னுடைய இரு குழந்தைகளும் இருப்பதில் எனக்கு சந்தோஷம். மற்றபடி நிறம் குறித்த எந்தக் கருத்தும் என்னிடம் இல்லை” என்கிறார் கேத்ரின். “குழந்தைகள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத் தவிர எனக்கு வேறு எந்த எண்ணமும் இல்லை” என்கிறார் ரிச்சர்ட்.

நிறம் குறித்த புரிதல்களை இந்தத் தம்பதியரிடம் கற்றுக்கொள்ளலாம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நாக்கால்-கண்களைச்-சுத்தம்-செய்யும்-பெண்மணி/article9510978.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: அம்மாடி! எவ்வளவு உயரம்!

 
basket_baal_3126388f.jpg
 
 
 

அமெரிக்காவில் வசித்துவரும் 16 வயது ராபர்ட் பாப்ரோஸ்கி, 7 அடி 7 அங்குல உயரம் இருக்கிறார்! கூடைப் பந்து வீரரான இவர், தேசிய கூடைப்பந்து அசோசியேஷன் வரலாற்றில் இடம்பெற்ற மிக உயரமான மனிதர் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார். ருமேனியாவைச் சேர்ந்த ராபர்ட், 12 வயதிலேயே 7 அடி உயரத்தை எட்டிவிட்டார். 4 ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. ஆனாலும் 8 அடி உயரத்தை எட்டக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. மருத்துவ வரலாற்றில் 18-வது உயரமான மனிதர் என்ற முத்திரையைப் பதித்துவிட்டார். ராபர்ட்டுக்கு எடைதான் மிகவும் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. 86 கிலோ எடையுடன் தேசிய கூடைப்பந்து அசோசியேஷனில் விளையாடுவது கடினம். விரைவில் எடையை அதிகரிக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு முன்பு ராபர்ட் குறித்த செய்தி ஃபேஸ்புக்கில் வெளிவந்து, உலகம் முழுவதும் பிரபலமானார். ராபர்ட்டின் அப்பா தொழில்முறை கூடைப்பந்து வீரர். ருமேனியா தேசிய அணிக்காக விளையாடியவர். மகனின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக அமெரிக்கா வந்துவிட்டனர். “நாங்கள் ராபர்ட்டின் தசைகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம். வாரத்துக்கு 3 நாட்கள் பயிற்சியளிக்கிறோம். உணவு முறையிலும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். அளவுக்கு அதிகமான உயரம் மைதானத்தில் வேகமாக ஓடுவதற்குச் சிரமத்தைத் தருகிறது. ஆனால் ராபர்ட்டின் கைக்குப் பந்து வந்துவிட்டால் எளிதாக கோல் போட்டு விட முடிகிறது” என்கிறார் பயிற்சியாளர் பாபி போஸ்மன். 16 வயதில் மிக உயரமான கூடைப்பந்து வீரராக இருக்கும் ராபர்ட் பாப்ரோஸ்கி, உலக அளவில் கூடைப்பந்து விளையாடும் இரண்டாவது உயரமான மனிதர். இங்கிலாந்தைச் சேர்ந்த 29 வயது பால் ஸ்டர்கெஸ் 7 அடி 8 அங்குல உயரத்தில் கூடைப்பந்து வீரராக இருந்திருக்கிறார்.

அம்மாடி! எவ்வளவு உயரம்!

சீனாவின் நான்ஜிங் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்களுக்காக ‘மதிப்பெண் வங்கி’ ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த வங்கியில் மாணவர்கள் மதிப்பெண்களைக் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். அடுத்து வரக்கூடிய தேர்வுகளில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று, கடனைத் திருப்பியடைத்துவிட வேண்டும். “இந்த மதிப்பெண் வங்கி மாணவர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஒரு மதிப்பெண்ணில் தோல்வியடைபவரும் 10 மதிப்பெண்களில் தோல்வியடைபவரும் இந்த வங்கியில் மதிப்பெண்களைக் கடன் பெற்று, தேறிவிட முடியும். ஆனால் அடுத்து வரக்கூடிய தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, வட்டியுடன் சேர்த்து வங்கிக்குத் திருப்பியளித்துவிட வேண்டும். சில ஆசிரியர்கள் பரிசோதனைக் கூடம், பேச்சுப் போட்டி போன்றவற்றைச் சிறப்பாகச் செய்யும் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கி, கடனை அடைக்க உதவுகிறார்கள். பத்தாம் வகுப்பில் 49 மாணவர்களில் 13 மாணவர்கள் வங்கியிலிருந்து மதிப்பெண்களைக் கடனாகப் பெற்றிருக்கிறார்கள். இது பரிசோதனை முயற்சிதான். ஆனாலும் நல்ல பலனைத் தருகிறது” என்கிறார் பள்ளியின் இயக்குநர் கான் ஹுவாங். மதிப்பெண் வங்கிக்கு மாணவர்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் பலரும் எதிர்க்கின்றனர். இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத நடைமுறை.

மதிப்பெண்கள் கடன் கொடுக்கும் வங்கி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அம்மாடி-எவ்வளவு-உயரம்/article9513866.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: கால் சிதைந்த யானை!

 

masala_2330052f.jpg
 
 
 

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஏழு மாதக் குட்டியாக ஓடியாடித் திரிந்துகொண்டிருந்தது மோஷா. ஒருநாள் கண்ணிவெடி மீது கால் வைத்ததில் யானையின் ஒரு கால் சிதைந்து போய்விட்டது. மோஷாவை மேயாவோ தேசியப் பூங்காவுக்கு அழைத்து வந்தனர். அங்கே மருத்துவமும் உணவும் கொடுத்துப் பராமரித்தனர்.

யானைகளுக்கான சிறப்பு மருத்துவமனை தாய்லாந்தில் இயங்கிவருகிறது. அது மோஷாவுக்கு செயற்கைக் கால் பொருத்தும் பணியை மேற்கொண்டது. மிக வேகமாக செயற்கைக் காலைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டது மோஷா.

இப்போது நடக்க ஆரம்பித்திருப்பதில் மோஷாவுக்கும் பூங்கா ஊழியர்களுக்கும் எல்லை இல்லா மகிழ்ச்சி.

யானைக்குக் கால் கொடுத்தவர்கள் வாழ்க!

பாரிஸ் நகரில் இருக்கிறது மோனோப்ரிக்ஸ் சூப்பர் மார்கெட். மிகப் பழங்காலத்தைச் சேர்ந்த கட்டிடம் இது. பராமரிப்புப் பணிக்காகத் தரைத் தளத்தைத் தோண்டும்போது வரிசையாக மனித எலும்புக் கூடுகள் வெளிவந்தன. சுமார் 200 எலும்புக் கூடுகள் அங்கே இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள்.

500 ஆண்டுகளுக்கு முன்பு இவை புதைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். எலும்புக்கூடுகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. முடிவு வந்த பிறகுதான் இவர்கள் எல்லாம் யார், எதற்காக இங்கே புதைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற விவரங்கள் எல்லாம் தெரியவரும்.

இனிமேல் அந்த மார்க்கெட்டுக்கு மக்கள் வருவாங்களான்னு தெரியலை…

பெய்ஜிங்கில் இரண்டு அடுக்குமாடி வீட்டுக்குச் சொந்தக்காரரான பிச்சைக்காரர் லீ கைது செய்யப்பட்டிருக்கிறார். 46 வயது லீ, தினமும் நல்ல ஆடைகளை அணிந்து கொண்டு பீய்ஜிங் ஸ்டேஷனுக்குச் செல்கிறார். கழிவறைக்குச் சென்று, பத்து நிமிடங்களில் ஊனமுற்ற பிச்சைக்காரராக வெளியே வருகிறார்.

காலை முதல் மாலை வரை பிச்சை எடுத்துவிட்டு, மீண்டும் தன் ஆடைகளை மாற்றிக்கொள்கிறார். வீட்டுக்கு வந்து வசதியான வாழ்க்கை வாழ்கிறார். சமீப காலமாக கவனித்து வந்த காவல்துறை, லீயைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

இதுக்கு ஒரு வேலையைச் செஞ்சிட்டுப் போயிருக்கலாம் லீ…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கால்-சிதைந்த-யானை/article6958291.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: பெல்ஜியத்தில் ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு

masal_3127526f.jpg
 
 
 

பெல்ஜியத்தில் பிரபலமான ஜீஜிட் கஃபேயில் இதுவரை விற்கப்பட்டுவந்த கோகோ கோலா, லேஸ் சிப்ஸ் போன்ற பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுவரும் கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. “ட்ரம்பின் நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானவை. அவருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது ஒவ்வொருவரின் கடமை. அந்த வகையில் எங்கள் கஃபேயில் இனி அமெரிக்கப் பொருட்களை விற்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம்.

அமெரிக்கப் பொருட்களுக்கு மாற்றாக பெல்ஜியத்திலேயே பானங்களி லிருந்து சிப்ஸ் வரை தயார் செய்யப்படுகின்றன. எங்கள் கஃபேயில் உள்நாட்டுப் பொருட்கள்தான் கிடைக்கும். விருப்பமுள்ளவர்கள் பொருட்களை வாங்கலாம். இல்லாவிட்டால் வேறு இடங்களை நாடலாம். அதற்காக எங்கள் கருத்துகளை நாங்கள் மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. எங்களின் புறக்கணிப்பு அமெரிக்காவையோ, ட்ரம்ப்பையோ எட்டுமா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு எட்டுமா, எட்டவில்லையா என்பது முக்கியமில்லை. நாங்கள் அநீதிக்குத் துணை போகவில்லை என்பதில் நிம்மதியாக இருக்கிறோம். உலகம் முழுவதையும் தன்னுடைய மோசமான வலதுசாரி சிந்தனைகளால் ஒருவர் அச்சுறுத்திக்கொண்டிருக்கும்போது, நாம் அனைவரும் ஒன்று கூடி எதிர்ப்புக் காட்டவேண்டியது அவசியம்.

அமெரிக்கப் பொருட் கள் பலவும் பெல்ஜியத்தில், பெல்ஜியம் தொழிலாளர்களால் செய்யப் பட்டவைதான். அமெரிக்க அதிபர் பதவி விலகிய பிறகோ, அவரது தீவிரவாத கருத்துகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்போதோ நாங்களும் அமெரிக்கப் பொருட்களை மீண்டும் விற்பனை செய்வது குறித்து யோசிப்போம்” என்கிறார் உரிமையாளர்களில் ஒருவரான டேவிட் ஜோரிஸ். பெல்ஜியம் செய்தித்தாள்களில் இந்த செய்தி வெளியாகி, தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவிட்டது.

அனைவரும் ஒன்று திரண்டு ட்ரம்ப்பை எதிர்க்க வேண்டிய தருணம் இது…

 

இங்கிலாந்தைச் சேர்ந்த 21 வயது சார்லோட், டிசம்பர் மாதம் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். குரோமோசோம்கள் குறைபாடுடைய அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தது குழந்தை. 4 வாரங்களில் உயிரிழந்த குழந்தையை, 16 நாட்கள் தன்னுடன் வைத்திருந்து, அடக்கம் செய்திருக்கிறார் சார்லோட். “முதல் குழந்தை என்பதால் எனக்கும் கணவருக்கும் ஏகப்பட்ட கனவுகள் இருந்தன. 20 வாரங்களில் ஸ்கேன் மூலம் குழந்தைக்குப் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஆனாலும் ஏதாவது மேஜிக் நிகழ்ந்து, குழந்தை உயிரோடு இருந்துவிடாதா என்று நினைத்தோம். குழந்தை பிறந்ததிலிருந்து ஏகப்பட்ட குழாய்களுடன் தனியாக இருந்தாள்.

நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகி, ஒரு மாதத்தில் எங்களைவிட்டுப் பிரிந்தாள். அவளுடன் சிறிது நாட்கள் செலவிடவேண்டும் என்று முடிவுசெய்தோம். மருத்துவமனையும் அனுமதித்தது. குளிர்சாதன வசதி கொண்ட தொட்டிலில் குழந்தை இருந்தாள். அவ்வப்போது குழந்தையைத் தூக்குவோம், தோளில் போட்டு நடப்போம், தோட்டத்துக்கு எடுத்துச் செல்வோம். 12 நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு அழைத்துவந்தோம். நான்கு நாட்களுக்குப் பிறகு நல்லவிதமாக இறுதிச் சடங்கு நடத்தி, அனுப்பி வைத்தோம். குழந்தையுடன் நேரம் செலவிட முடியாத பெற்றோர், எங்களைப் போல அனுமதி வாங்கிக் குழந்தையுடன் இருக்கலாம்” என்கிறார் சார்லோட்.

நெகிழ வைத்துவிட்டது இந்தப் பெற்றோர் பாசம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பெல்ஜியத்தில்-ட்ரம்ப்புக்கு-எதிர்ப்பு/article9518902.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: ’மடோனா’வாக மாறியவர்

 

 
 
masala_2329269f.jpg
 
 
 

அமெரிக்காவில் ஆடம் டேனியல் மிகவும் பிரபலமான மனிதராக வலம் வருகிறார். பாப் பாடகி மடோனாவைப் போல ஆடம் தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டார். ’மடோனோ மீது மிகப் பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அதனால்தான் என்னுடைய சொத்தை எல்லாம் விற்று, 50 லட்சம் ரூபாய் செலவு செய்து பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் உருவத்தை மாற்றியிருக்கிறேன்.

மடோனாபோல இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அவர் போலவே விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை அணிய வேண்டும். அவரைப் போலவே பேச வேண்டும். நடக்க வேண்டும்’ என்கிறார் ஆடம். 12 வயதில் மடோனாவின் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவருக்கு, நாளடைவில் மடோனாவாக மாறிவிடவேண்டும் என்ற எண்ணம் ஆழமாக உருவாகிவிட்டது.

31 வயது இளம் மடோனாவாக வலம் வரும் ஆடமை ஒருவரும் பாராட்டவில்லை என்று வருந்துகிறார். ஆனாலும் தான் மடோனாவாகவே வாழ்ந்து மடியவேண்டும் என்று விரும்புகிறார்.

என்ன செய்தாலும் ஒரிஜினலாக முடியாது என்ற உண்மை உங்களுக்குத் தெரியலையா ஆடம்?

பொதுவாக இரட்டையர்கள் என்றால் உருவத்தில் ஒரே மாதிரி யாக இருப்பார்கள். ஆனால் அமெரிக்காவில் வசிக்கும் 18 வயது லூசியும் மரியாவும் நிறம், உருவம் என அனைத்து விஷயங்களிலும் வித்தியாசமாக இருக்கிறார்கள். லூசி வெள்ளைத் தோலும் பழுப்பு முடியுமாகக் காட்சியளிக்கிறார்.

மரியா மாநிறத் தோலும் சுருட்டையான கறுப்பு முடியுடனும் காட்சி தருகிறார். இந்த இரட்டையர்களின் அம்மா ஜமைக்காவைச் சேர்ந்தவர். அப்பா அமெரிக்கர். லூசி அப்பாவைப் போலவும் மரியா அம்மாவைப் போலவும் பிறந்ததில் ஒன்றும் அதிசயமில்லை.

இரட்டையர்கள் இப் படிப் பிறந்திருப்பதுதான் அதிசயம் என்கிறார்கள். உருவத்தில் மட்டு மில்லை, குணத்திலும் இருவரும் வெவ்வேறாக இருக்கிறார்கள்.

யார் என்ற குழப்பம் இவர்களிடம் வராது…

பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியில் வசிக்கும் காலும் சாம்பர்லைன், ஒரு பட்டதாரி. பெரிய பல்கலைக்கழகங்களில் படித்து முடித்தாலும்கூட வேலை கிடைப்பது மிகவும் கஷ்டமான காரியமாக இருக்கிறது. ஆன்லைன் மூலம் எத்தனையோ வேலைகளுக்கு முயற்சி செய்தார். ஒன்றும் கிடைக்கவில்லை. பரபரப்பாக இருக்கும் மான்செஸ்டரில் நடுத் தெருவில் நின்றுகொண்டு வேலை தேட ஆரம்பித்துவிட்டார்.

‘நான் ஒரு பட்டதாரி. எனக்கு ஏற்ற வேலை தாருங்கள்’ என்று ஓர் அட்டையைப் பிடித்தபடி மணிக்கணக்கில் நின்றுகொண்டிருக்கிறார். பெரும்பாலானவர்கள் புன்னகை செய்து, நம்பிக்கையான வார்த்தைகளைக் கூறிச் செல்கின்றனர். இதுவரை 5 ஆயிரம் மக்களைச் சந்தித்திருக்கிறார். அதில் 40 பேர் தகுந்த வேலைக்கு ஏற்பாடு செய்வதாக வாக்களித்திருக்கிறார்கள்.

ஐயோ... தொழிற்சாலைகள் நிறைந்த மான்செஸ்டரிலேயே வேலை இல்லையா?

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் வசிக்கிறார் 24 வயது ஸாங் க்யி. கடந்த 5 ஆண்டுகளாக அவரை இருட்டறையில் அடைத்து வைத்திருந்தனர். 18 வயதில் திருமணம் ஆன ஸாங், கட்டாயக் கருக்கலைப்பின் மூலம் நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டார்.

உடனே அவரது பெற்றோர் தனி அறையில் அடைத்துவிட்டனர். ஒரு சிறிய துவாரத்தின் வழியே கொஞ்சம் உணவுகளைக் கொடுத்து வந்தனர். சூரிய வெளிச்சமோ, பேச்சுத் துணையோ, சரியான உணவோ இல்லாமல் ஸாங் மனநிலை பாதிக்கப்பட்டார். ஸாங்கின் தோழிகள் சிலருக்கு சந்தேகம் வந்து, காவல்துறையில் புகார் அளித்தனர். தற்போது ஸாங் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டி ருக்கிறார். பெற்றோர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

அடப்பாவிகளா…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மடோனாவாக-மாறியவர்/article6954788.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: பூனைக்கு டாட்டூ ரொம்பவே அநியாயம்...

 
masala_3128349f.jpg
 
 
 

ஷ்யாவின் உஸுரி வளைகுடா மிக அழகான பகுதி. ஒருகாலத்தில் அருகில் இருந்த தொழிற்சாலைகளிலிருந்து தேவையற்ற கண்ணாடி பாட்டில்கள் இந்தக் கடற்கரையில் அளவுக்கு அதிகமாகக் கொட்டப்பட்டன. உடைந்த கண்ணாடிகள் நிரம்பிய பகுதி என்பதால், மனிதர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. காலங்கள் சென்றன. கூர்மையான உடைந்த கண்ணாடி துண்டுகள் எல்லாம் நீரால் அரிக்கப்பட்டு, கூழாங்கற்களைப் போன்று வழவழப்பாகி விட்டன. சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை என்று அத்தனைக் கண்ணாடி துண்டுகளும் கற்கள் போல உருமாறி, கரைக்கு வந்துசேர்கின்றன. கடற்கரை முழுவதும் வண்ணக் கண்ணாடி கற்களால் அழகாகக் காட்சியளிக்கிறது. தற்போது இந்தப் பகுதியைக் காண்பதற்காக உள்நாட்டிலிருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமிருந்தும் மக்கள் வருகிறார்கள். கரைகளில் ஒதுங்கும் கண்ணாடி கற்களை எடுப்பதற்கும் சற்றுத் தொலைவில் உறைந்திருக்கும் பனிப் பாறைகளைப் புகைப்படம் எடுப்பதற்கும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

மனிதர் செய்த தவறை அழகாகத் திருத்தியிருக்கிறது இயற்கை!

லேசியாவில் பல் மருத்துவராக வேண்டும் என்றால் 6 ஆண்டுகள் கல்லூரியில் படித்து, உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் 25 வயது முகமது இர்வான், பல் மருத்துவ மாத இதழ்களைப் படித்தும் யூடியூப் வீடியோக்களைப் பார்த்தும் மருத்துவம் கற்றுக்கொண்டார். தான் கற்றுக்கொண்ட வித்தையை ஒரு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்து, செய்தும் பார்த்துவிட்டார். தான் சிறந்த பல் மருத்துவர் என்ற நம்பிக்கை வந்தவுடன், சொந்தமாகப் பல் மருத்துவமனையை ஆரம்பித்தார். அங்கீகரிக்கப்படாத இந்த மருத்துவமனைக்குப் பலரும் வந்து பல் பிடுங்குதல், பற்களைச் சுத்தம் செய்தல், பற்களைப் பொருத்துதல் போன்ற சிகிச்சைகளை எடுத்துக்கொண்டனர். திடீரென்று கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனையை மூட முடிவு செய்தார் முகமது இர்வான். அவரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவர், சந்தேகப்பட்டு காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டார். காவலர்கள் விசாரித்தபோது மருத்துவப் பட்டமோ, உரிமமோ இல்லாமல் முகமது இர்வான் பல் மருத்துவம் பார்த்த விஷயம் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட முகமது இர்வானுக்கு 6 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவத்தில் விளையாடலாமா?

ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் டாட்டூ கலைஞர். தன் உடல் முழுவதும் டாட்டூ குத்திக்கொண்டிருக்கிறார். அவரிடம் முடிகளற்ற ஸ்பின்ஸ் பூனை ஒன்று இருக்கிறது. இதுவரை அந்தப் பூனையின் உடலில் 4 டாட்டூக்களை வரைந்திருக்கிறார். “டாட்டூ மீது அளவுக்கு அதிகமான ஆர்வம். பலவிதங்களிலும் பல தோல்களிலும் டாட்டூ பரிசோதனை மேற்கொண்டு வருகிறேன். பூனைக்கு அனஸ்தீசியா கொடுத்து, மயக்க நிலையில் வைத்துதான் டாட்டூ போடுவேன். சிறிது நேரத்திலேயே மயக்கத்திலிருந்து விழித்துவிடும். மனிதத் தோலைப் போலவே இந்தப் பூனையின் தோலும் டாட்டூ வரைவதற்கு உகந்ததாக இருக்கிறது” என்கிறார் அலெக்சாண்டர். விலங்குகள் நல ஆர்வலர்கள் இதைக் கடுமையாக எதிர்த்துவருகிறார்கள்.

பூனைக்கு டாட்டூ ரொம்பவே அநியாயம்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பூனைக்கு-டாட்டூ-ரொம்பவே-அநியாயம்/article9522577.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: விலை உயர்ந்த சாக்லேட்!

 

 
 
choc_2325655f.jpg
 
 
 

உலகிலேயே அதிக விலை கொண்ட சாக்லெட் ஈக்வடாரில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 42 கிராம் சாக்லெட் 16 ஆயிரம் ரூபாய். ஈக்வடாரில் விளையும் உலகத் தரமான கோகோ விதைகளில் இருந்து, கைகளாலேயே இந்த சாக்லெட் தயாரிக்கப்படுகிறது. 81 சதவிகிதம் கோகோ கலந்த இந்த சாக்லெட், 32 வழிமுறைகளில் உருவாக்கப்படுகிறது.

இறுதியில் ஒரே ஒரு மனிதரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, பெட்டியில் அடைக்கப்படுகிறது. சாக்லெட்டின் நடுவே ஒரு கோகோ விதையும் வைக்கப்படுகிறது. இந்த டார்க் சாக்லெட்டில் தங்க இழையோ, வைரமோ பதிக்கப்படவில்லை. ஆனாலும் உருவாக்கும் விதத்தில் விலை மதிப்புள்ள சாக்லெட்டாக மாற்றியிருக்கிறார்கள்.

14 சிறிய தோட்டங்களில் இருந்து கோகோ விதைகள் பெறப்படுகின்றன. நிலத்திலிருந்து மரம், மரத்திலிருந்து விதைகள், விதைகளில் இருந்து சாக்லெட் என்று ஒவ்வொன்றையும் தனிக் கவனம் எடுத்து உருவாக்கியிருக்கிறோம் என்கிறார் நிறுவனர்களில் ஒருவரான கார்ல் ஸ்வெய்ஸெர். மிகக் குறைவாகவே இந்த சாக்லெட் தயாரிக்கப்படுகிறது. அதனால் விலையும் அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டு 574 சாக்லெட் பார்களே தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

என்னதான் சொன்னாலும், இதெல்லாம் ரொம்ப அநியாயம்…

இத்தாலியைச் சேர்ந்த ஆல்பர்டோ ஃப்ரிகோ விநோதமான பழக்கத்தைக் கடந்த 11 ஆண்டுகளாகக் கடைபிடித்து வருகிறார். 36 வயது ஆல்பர்டோ தினமும் வலது கையால் தொடும் பொருளைப் புகைப்படம் எடுத்து வருகிறார். 2040ம் ஆண்டு, அவர் ஓய்வு பெறும் வரை இந்த வழக்கத்தை மேற்கொள்ள இருப்பதாகக் கூறுகிறார்.

இடது கையில் எப்பொழுதும் கேமராவுடன் இருக்கும் ஆல்பர்டோ, என்ன அவசரமாக இருந்தாலும் வலது கையால் ஒரு பொருளைத் தொட்டுவிட்டால், புகைப்படம் எடுக்காமல் அடுத்த வேலையைச் செய்யமாட்டார். ஒரு நாளைக்குக் குறைந்தது 76 பொருட்களைத் தொடுவதால் 76 புகைப்படங்கள் எடுத்துவிடுகிறார். புகைப்படங்களைத் தேதி, மாதம் குறிப்பிட்டு ஆவணப்படுத்துகிறார். தன்னுடைய 60வது வயதில் சுமார் 10 லட்சம் புகைப்படங்களாவது சேர்ந்துவிடும் என்று பெருமிதம் கொள்கிறார் ஆல்பர்டோ.

ஐயோ… இவங்களை எல்லாம் என்ன செய்யலாம்?

அமெரிக்காவில் வசிக்கும் ஜாமி ஜாக்சனுக்கு பூங்கொத்துகளைச் சேகரிப்பது பொழுதுபோக்கு. திருமணங்களில் மணப்பெண் கையில் இருக்கும் பூங்கொத்தை, தூக்கிப் போட்டுப் பிடிப்பது ஒரு சம்பிரதாயம். அப்படித் தூக்கிப் போடும் பூங்கொத்துகளைச் சரியாகப் பிடித்து, தன் வீட்டு அலமாரியில் கொண்டு வந்து சேர்த்து வைக்கிறார் ஜாமி. 37 வயது ஜாமி, 1996ம் ஆண்டிலிருந்து பூங்கொத்துகளைச் சேகரித்து வருகிறார்.

இதுவரை 46 பூங்கொத்துகள் இவரிடம் உள்ளன. 50 பூங்கொத்துகளைச் சேர்ப்பதுதான் தன்னுடைய நோக்கம் என்கிறார். இத்தனைப் பூங்கொத்துகளைச் சேகரித்தாலும் ஜாமி இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ’நான் செல்லும் திருமணங்களில் எல்லாம் பூங்கொத்து எனக்கே கிடைத்துவிடாது. சில நேரங்களில் வேறு யாராவது எடுத்துச் சென்றுவிடுவார்கள். வெட்கமோ, தயக்கமோ இல்லாமல் பூங்கொத்துகளைச் சேகரிப்பதே நோக்கமாகச் செயல்பட்டு வருகிறேன்’ என்ற ஜாமி, தனது சாதனையை கின்னஸில் பதிய வைக்கும் முயற்சியிலும் இருக்கிறார்.

விநோதமான மனிதர்கள்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-விலை-உயர்ந்த-சாக்லேட்/article6944452.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

26 minutes ago, நவீனன் said:

42 கிராம் சாக்லெட் 16 ஆயிரம் ரூபாய்.

இது இங்கு வாங்கலாம் 

ferrero_rocher_16_pcs_pack_101027_2.jpg

இது இங்கு கிடைப்பது அரிது

 download_3.jpg


ஆனாலும் இதற்கு ஈடாகுமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

இது இங்கு வாங்கலாம் 

ferrero_rocher_16_pcs_pack_101027_2.jpg

இது இங்கு கிடைப்பது அரிது

 download_3.jpg


ஆனாலும் இதற்கு ஈடாகுமா??

புலம் பெயர்ந்து இருப்பவன் புளுக்கொடியலுக்கு ஈடாகுமா என்பான்....
புலத்தில் இருப்பவன் கண்ட கண்ட உடம்பிற்கு விக்கனமாதையெல்லாம் பார்த்து ஈடாகுமா என்பான்....

Link to comment
Share on other sites

உலக மசாலா: 18 வயதில் பல்கலை., பேராசிரியார்

 
 
மார்ச் டியான் போடிஹார்ட்ஜோ
மார்ச் டியான் போடிஹார்ட்ஜோ
 
 

மார்ச் டியான் போடிஹார்ட்ஜோ 18 வயதில் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரிய ராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்! ஹாங்காங்கில் பிறந்த மார்ச் டியான், 2007-ம் ஆண்டு உலக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார். 9 வயதில் கணிதத்தில் A, புள்ளியியலில் B நிலைகளைக் கடந்து General Certificate of Education படிப்பை இங்கிலாந்தில் முடித்தார். சாதாரண மாணவர்கள் 17 வயதில்தான் இதற்கான நுழைவுத் தேர்வுகளையே எழுதுவார்கள். அதே ஆண்டு ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 4 ஆண்டுகளில் முதுகலை படிப்புடன் வெளியே வந்தார். அமெரிக்கா சென்ற மார்ச், சமீபத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து உலகின் முதல் 10 பல்கலைக்கழகங்களில் ஒன்றான கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் வேலையைப் பெற்றிருக்கிறார். மார்ச்சின் ரத்தத்திலேயே மேதமை கலந்திருக்கிறது. இவரது அண்ணன் ஹொராசியோ, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 14 வயதில் நுழைந்தார்! இவரது அப்பா ஆரம்பக் கல்வி பயிலும் வயதிலேயே உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்தார்! “என்னை மேதை என்று அழைப்பதை நான் விரும்பவில்லை. நான் எந்தக் கஷ்டமும்படாமல் இயல்பாகவே படித்து முடித்திருக்கிறேன். என் பெற்றோரும் ஆசிரியர்களும் என் குழந்தைத் பருவத்தைச் சிதைத்து, மேதையாக்கியிருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்கிறார்கள். என் குழந்தைப் பருவம் குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கினாலும் நான் இதே பாதையில்தான் பயணிப்பேன்” என்கிறார் மார்ச் டியான் போடிஹார்ட்ஜோ.

அடுத்த தலைமுறையில் பேச ஆரம்பிப்பதற்கு முன்பே பள்ளிப் படிப்பை முடித்துவிடுவார்களோ!

யானையின் தந்தங்களால் செய்யப்படும் பொருட்களின் விற்பனையைத் தடை செய்திருக்கிறது பிரிட்டன். கடந்த செப்டம்பர் மாதத்திலேயே 70 ஆண்டுகளுக்குக் குறைவான தந்தங்களால் செய்யப்பட்ட பொருட்களுக்குத் தடை விதித்திருந்தது. தற்போது முழுமையாகத் தடையைக் கொண்டுவந்திருக்கிறது. யானைகளை அழிவிலிருந்து பாதுகாக்கவும் சட்டத்துக்குப் புறம்பாக வேட்டையாடுபவர்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கையை பிரிட்டன் மேற்கொண்டுள்ளது. கடத்தல்காரர்கள் எந்தக் கட்டுப்பாட்டையும் எளிதில் உடைத்து, தந்தங்களின் விற்பனையைத் தடையில்லாமல் மேற்கொண்டுவருகிறார்கள். 70 ஆண்டுகளுக்குக் குறைவான தந்தங்களால் செய்யப்பட்ட பொருட்களுக்குத் தடை விதித்தபோது, புதிய தந்தங்களைப் பழைய தந்தங்கள் போல மாற்றி, சான்றிதழும் பெற்றுவிடுகிறார்கள். அதனால் முழுமையான தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் தந்தங்களால் ஆன பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உலக வனவிலங்குகள் நிதியகம் வலியுறுத்தி வருகிறது. ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. தற்போது 3,50,000 யானைகளே எஞ்சியிருக்கின்றன. ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஓர் ஆப்பிரிக்க யானை கொல்லப்படுகிறது. உலகின் சட்டத்துக்குப் புறம்பான வர்த்தகங்களில் நான்காவது இடத்தில் இருக்கிறது யானைத் தந்தம். சட்டப்பூர்வமாகவும் சட்டத்துக்குப் புறம்பாகவும் மிகப் பெரிய தந்தம் வர்த்தகம் நடைபெற்று வரும் சீனாவில், இந்த ஆண்டு இறுதிக்குள் தடை கொண்டு வரப்பட இருக்கிறது. அமெரிக்காவும் முழுமையான தடையைக் கொண்டு வர இருக்கிறது.

மற்ற நாடுகளும் தந்தங்களுக்குத் தடை விதித்தால், யானைகளைக் காப்பாற்றலாம்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-18-வயதில்-பல்கலை-பேராசிரியார்/article9525811.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஒரே குடும்பப் புகைப்படத்தில் 500 பேர்

 
masala_3129787f.jpg
 
 
 

உலகின் மிகப் பெரிய குடும்பப் புகைப்படம் சீனாவில் எடுக்கப்பட்டிருக்கிறது. ரென் வம்சத்தைச் சேர்ந்த 500 உறவினர்கள் ஒன்று கூடி, ஒரே புகைப்படமாக எடுக்கப்பட்டிருக்கின்றனர். ரென் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களுக்கு வாழ்வாதாரம் தேடிச் சென்றுவிட்டனர். அவர்களை எல்லாம் ஒன்றிணைக்கும் வேலை இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

பெய்ஜிங், ஷாங்காய், ஸின்ஜியாங், தைவான் போன்ற இடங்களில் இருந்தவர்கள் எல்லாம் தங்கள் பூர்விகமான ஜெய்ஜியாங் மாகாணத்தில் உள்ள கிராமத்துக்கு வந்து சேர்ந்தனர். ஒரு குன்றின் மீது எல்லோரும் வரிசையாக நிற்க, பறக்கும் ரோபோ கேமரா மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. 500 பேரையும் ஒரே புகைப்படத்தில் பார்க்க முடிந்தது. “சீனர்கள் எவ்வளவுதான் முன்னேறினாலும் தங்கள் வேர்களை மறக்க மாட்டார்கள். அப்படித்தான் எங்கள் வம்சத்தைச் சேர்ந்தவர்களைத் தேட ஆரம்பித்தோம். இரண்டு ஆண்டுகளில் 500 பேரைக் கண்டுபிடித்துவிட்டோம். எங்கெங்கோ வசிக்கும் உறவினர்கள் எல்லாம் வசந்த விழாவில் இணைவார்கள். இந்த வசந்த விழாவில் நாங்கள் இணைந்தோம்.

எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பலரை முதல்முறையாகச் சந்தித்திருக்கிறோம். புகைப்படத்துக்கு நிற்க வைப்பதற்கே அரைமணி நேரமானது. உலகின் மிகப் பெரிய குடும்பப் புகைப்படம் எங்களுடையதுதான். இந்த விஷயம் வேகமாக சமூக வலைதளங்களில் பரவி, இன்னும் பல உறவினர்கள் தொடர்புகொண்டு வருகிறார்கள். அடுத்த ஆண்டு ஆயிரம் பேர் ஒன்றுகூடுவோம்” என்கிறார் ரென்.

ஒரு புகைப்படத்துக்குள் 500 பேர்!

 

கலிபோர்னியாவில் வசிக்கும் 31 வயது ப்ரையன் ரே, பாப் பாடகர் பிரிட்னி ஸ்பியர்ஸின் அதிதீவிர ரசிகர். தன்னையும் பிரிட்னியைப் போலவே மாற்றிக்கொண்டிருக்கிறார்! கடந்த 14 ஆண்டுகளில் 54 லட்சம் ரூபாய் செலவு செய்து, போலி பிரிட்னியாக வலம் வருகிறார். “எல்லோருக்கும் ஆச்சரியம். ஆண், வேறொரு ஆணாகத் தன்னை மாற்றிக்கொள்வது உண்டு. பிரிட்னியைப் பார்க்கும் வரை நான் ஒரு பெண்ணாக என்னை மாற்றிக்கொள்வேன் என்று நினைத்ததில்லை. உருவம், குரல், நடனம் என்று அத்தனையும் அற்புதமாக அமைந்த பெண் அவர்.

17 வயதில் அவரைப் பார்த்தவுடன் என்னையும் அப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. கடந்த 14 ஆண்டுகளில் 90 அழகு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளேன். புதிதாகப் பார்ப்பவர்கள் என்னை பிரிட்னியா என்று கேட்கும்போது, நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பேன். ஒரு ஆண், பெண்ணாக மாறுவது அத்தனை எளிதல்ல. அடிக்கடி அறுவை சிகிச்சைகள் செய்துகொள்ள வேண்டும். ஒப்பனையில் கவனமாக இருக்க வேண்டும்” என்கிறார் ப்ரையன் ரே.

உருவத்தில் மட்டுமின்றி, பிரிட்னியைப் போலவே பாடுவதிலும் ஆடுவதிலும் பேசுவதிலும் நடப்பதிலும் பயிற்சி செய்துவருகிறார் ப்ரையன். தொழிலதிபராக இருக்கும் ப்ரையன், தன்னுடைய தோற்றத்தையும் இளமையையும் தக்க வைத்துக்கொள்வதற்காக க்ரீம்களுக்கு மட்டும் மாதம் 34 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறார்.

இவ்வளவு செய்தும் பிரிட்னி மாதிரி தெரியலையே ப்ரையன்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஒரே-குடும்பப்-புகைப்படத்தில்-500-பேர்/article9528393.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: சிந்திக்கும் தொப்பி!

 

 
 
thoppi_2323014f.jpg
 
 
 

அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் ‘சிந்திக்கும் தொப்பி’ ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பெயர் சிந்திக்கும் தொப்பி என்றாலும் இது தானாக சிந்திக்காது. இந்தத் தொப்பியை அணிந்துகொண்டால் வேகமாக எதையும் கற்றுக்கொள்ளவும் விரைவாக முடிவெடுக்கவும் முடியும் என்கிறார்கள்.

ஒரு விஷயத்தில் முடிவெடுக்கத் திணறுகிறவர்களுக்கும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் திணறுகிறவர்களுக்கும் தொப்பியை அணிவித்து, குறைந்த அளவு மின்சாரம் மூளைக்குள் செலுத்தினார்கள். அப்பொழுது மிகச் சரியாக முடிவெடுத்துவிட்டனர், வேகமாகக் கற்றுக்கொண்டனர்.

இதுவரை 60 மனிதர்களிடம் இந்தச் சோதனையை நடத்தி, 75 சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இன்னும் பல சோதனைகளுக்குப் பிறகுதான் இந்தத் தொப்பி வெளிவரும் என்கிறார்கள்.

வேகமா கத்துக்கிற தொப்பின்னா, நம்ம ஊரு குழந்தைகளுக்கு எல்லாம் மாட்டிவிட்டுடுவாங்களே பெத்தவங்க…

நியூயார்க்கைச் சேர்ந்த 15 வயது நோவா மின்ட்ஸ் உலகிலேயே மிக இளம் வயது தொழிலதிபராக இருக்கிறார். ‘நான்னிஸ் பை நோவா’ என்ற அவருடைய குழந்தைகள் காப்பகத்தில் 200 குழந்தைகள் வரை பராமரிக்கப்படுகிறார்கள். பள்ளியில் படிக்கும் நோவாவுக்குக் காப்பகத்தில் தீடீரென்று ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்கப் போதுமான அனுபவம் இல்லை.

அதனால் காப்பகத்தை நிர்வகிக்க ஒரு சிஇஓ வை வேலைக்குச் சேர்த்திருக்கிறார். பள்ளியில் கொடுக்கும் வீட்டுப்பாடங்களுடன், பிஸினஸ் தொடர்பாக வரும் நூற்றுக்கணக்கான மெயில்களுக்கும் பதில்களை அனுப்புகிறார். சிறிய அளவில் ஆரம்பித்த இந்தத் தொழில், இன்று பெரிதாக வளர்ந்துவிட்டது.

கடந்த ஆண்டில் அவர் முதலீடு செய்த பணத்தை விட மூன்று மடங்கு பணத்தை இந்தத் தொழிலில் ஈட்டிவிட்டார் நோவா. மீடியாவில் நோவாவைப் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ‘நான் நன்றாகப் படிக்கும் மாணவி இல்லை. ஆனாலும் பிஸினஸில் ஆர்வம் அதிகம். குழந்தைகளைப் பராமரிக்கும் பெண்களை மிகக் கவனத்துடன் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ என்கிறார் நோவா.

வெல் டன் நோவா!

விதவிதமான உணவுப் பொருட்களை உருவாக்குவதில் ஜப்பானியர்களுக்கு இணை யாருமில்லை. பூண்டு சுவைகொண்ட கோலாவை உருவாக்கியிருந்தார்கள். தற்போது எலுமிச்சையும் ஆரஞ்சும் சேர்ந்த சுவையும் வாசனையும் கொண்ட முட்டைகளை உருவாக்கியிருக்கிறார்கள். எலுமிச்சையும் ஆரஞ்சும் ஜப்பானியர்களின் விருப்பமான பழங்கள். ‘யுஸு டாமா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புளிப்புச் சுவையுடைய முட்டைகளை ஜப்பானியர்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். முட்டையில் செயற்கை யாக எந்த ரசாயனமும் கலக்கப்படவில்லை.

கோழிகளுக்கு எலுமிச்சை, ஆரஞ்சு இலைகள், தோல்கள் போன்றவற்றைத் தீவனமாகக் கொடுத்து வளர்ப்பதால் முட்டைகளிலும் அந்தச் சுவையும் மணமும் வந்துவிடுகின்றன. சாதாரண முட்டைகளைப் போலவே யுஸு டாமா காட்சியளித்தாலும் மணத்திலும் சுவையிலும் வித்தியாசப்படுகிறது.

சமைக்கும்போதே வாசனை பிரமாதப்படுத்து கிறது. இந்த முட்டை கொஞ்சம் இனிப்புச் சுவையுடனும் இருக்கும் என்பது கூடுதல் விசேஷம்! 6 முட்டைகள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை சுமார் 260 ரூபாய்.

தாவரங்களில்தான் கலப்பினம் செஞ்சாங்க… இப்ப முட்டையிலுமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சிந்திக்கும்-தொப்பி/article6936133.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: கொஞ்சம் அன்பு காட்டினால், அதிக அன்பை கொடுக்கும் நாய்!

 

 
dog_3131624f.jpg
 
 
 

மெரிக்காவின் பென்சில்வேனியாவில் வசிக்கும் கைலா ஃபிலூன், காப்பகத்தில் ஒரு நாயைக் கண்டார். காயமடைந்து, நோய்வாய்ப்பட்டு, எடை குறைந்து மிக மோசமான நிலையில் இருந்தது. அதை விட்டுச் செல்ல அவருக்கு மனமில்லை. உடனே தத்தெடுத்து, வீட்டுக்கு அழைத்துவந்தார். மருத்துவம் பார்த்தார். கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருகிறது நாய். “ரஸ்ஸைப் பார்த்தவுடன் எனக்கு அன்பு பீறிட்டுவிட்டது. அதேபோல அதுவும் என் மேல் அளவற்ற அன்பு வைத்திருக்கிறது. நான் லேப்டாப்பில் வேலை செய்தால், என் அருகே அமர்ந்துகொண்டு கவனிக்கும். தொலைக்காட்சி பார்க்கும்போது தோளில் சாய்ந்துகொள்ளும். படுத்தால், அருகில் வந்து படுத்துக்கொள்ளும். வெளியே சென்று திரும்பினால் குழந்தையைப் போல கட்டிக்கொள்ளும். என்னிடம் இன்னும் சில நாய்கள் இருக்கின்றன. ஆனால் ரஸ், நாய்க்குரிய எந்தக் குணத்தோடும் இல்லை. மிகவும் சாதுவாகவும் அன்பாகவும் இருக்கிறது. ரஸ்ஸை விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டுவருகிறேன். இதுவரை 50 ஆயிரம் தடவைகள் புகைப்படங்கள் பகிரப்பட்டிருக்கின்றன” என்கிறார் கைலா.

கொஞ்சம் அன்பு காட்டினால், அதிக அன்பை கொடுக்கும் நாய்!

காதலர் தினத்துக்காக ஸ்பெஷல் ஸ்ட்ராபெர்ரி விற்பனைக்கு வந்திருக்கிறது. ஜப்பானில் விளைவிக்கப்படும் அரிய வகை கோடோகா ஸ்ட்ராபெர்ரிகள் குறைவான அளவில் விளைவிக்கப்பட்டு கைகளால் பறிக்கப்படுகின்றன. மற்ற ஸ்ட்ராபெர்ரிகளை விட இனிப்பு அதிகம். ஒரு பழத்தின் விலை ரூ.1,500. அழகான சிறிய பெட்டியில் வைத்துப் பரிசுப் பொருள் போல விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹாங்காங்கில் விற்பனைக்கு வந்த இந்த ஸ்ட்ராபெர்ரியைப் பார்த்து மக்கள் அதிர்ந்து போனார்கள். “காதலர் தினத்துக்காக அதிகம் செலவு செய்வோம் என்றாலும் ஒரே ஒரு ஸ்ட்ராபெர்ரிக்கு இவ்வளவு ரூபாய் என்பது ரொம்பவே அதிகம். இந்த விலை கொடுக்கும் அளவுக்கு அந்தப் பழத்தில் ஒன்றுமில்லை” என்கிறார் ஹாங்காங்கைச் சேர்ந்த யான் வாங்.

மக்களின் ஆர்வத்தை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கிறாங்க!

ந்தோனேஷியாவில் ஜிஜிவி திரையரங்குகள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன. இந்தத் திரையரங்குகளில் வெல்வெட் க்ளாஸ் பகுதி மிகவும் வசதியான இருக்கைகளைக் கொண்டது. இருக்கைகளை நீட்டி, மடக்கி, படுக்கை போல மாற்றிக்கொள்ளலாம். தலையணைகளும் இருப்பதால் வசதியாகப் படுத்துக்கொண்டோ, உட்கார்ந்துகொண்டோ திரைப்படத்தைப் பார்க்கமுடியும். சில ஆண்டுகளாக எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் இயங்கிவந்த இந்தத் திரையரங்கின் வெல்வெட் க்ளாஸ் பகுதியை சாதாரண இருக்கைகளாக மாற்றச் சொல்லியிருக்கிறார் பேலம்பாங் துணை மேயர். பொது இடத்தில் இதுபோன்ற இருக்கைகள் தவறான செயலுக்கு வழிவகுக்கின்றன என்று பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளதால், இவற்றை மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். “வெல்வெட் க்ளாஸ் ஜோடிகளுக்கு மட்டும் வழங்கப்படுவதில்லை. குடும்பத்துக்கே வழங்கப்படுகிறது. இங்கே வருகிறவர்கள் மிகவும் வசதியாக, குடும்பத்துடன் மகிழ்ச்சியாகத் திரைப்படம் பார்ப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் கண்காணிப்பு கேமராக்களை திரையரங்குக்குள் பொருத்தி கண்காணித்து வருகிறோம். தகாத செயல்கள் நடக்க வாய்ப்பில்லை. இதுவரை எங்களிடம் எந்தப் புகாரும் வந்ததில்லை. ஆனாலும் அரசு சொல்லும்போது மாற்றம் செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார் திரையரங்க உரிமையாளர்.

வசதிதான் முக்கியம் என்றால் வீட்டிலேயே பார்த்துக்கலாம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கொஞ்சம்-அன்பு-காட்டினால்-அதிக-அன்பை-கொடுக்கும்-நாய்/article9537329.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.