Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: இறந்து போனவருக்காகக் காத்திருக்கும் நாய்!

 

 
masala_2967480f.jpg
 

பிரேசிலில் உள்ள ரூத் கார்டோசோ மருத்துவமனையை சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது நேகோ என்ற அழகிய கறுப்பு நாய். 8 மாதங்களுக்கு முன்பு ஏழை ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அவருடன் நேகோவும் வந்தது. தன்னை வளர்த்தவர் திரும்பி வருவார் என்று மருத்துவமனை வாயிலில் காத்துக்கொண்டிருந்தது.

ஆனால் அவர் இறந்துவிட்ட விஷயம் நேகோவுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு முறை ஆம்புலன்ஸ் வரும்போதும் ஆர்வத்துடன் ஓடும். அவரா என்று பார்க்கும். பிறகு ஏமாற்றத்துடன் திரும்பிவிடும். மருத்துவமனையில் கிடைக்கும் உணவுகளை உண்டு, அங்கேயே 8 மாதங்களாக தங்கியிருக்கிறது. நேகோவின் அன்பைக் கண்டு மருத்துவமனைக்கு வரும் செல்வந்தர்கள் சிலர் தத்து எடுத்துக்கொள்வதாகக் கூறி, அழைத்துச் சென்றனர்.

ஆனால் எவ்வளவு தொலைவுக்கு அழைத்துச் சென்றாலும் மறுநாளே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துவிடுகிறது நேகோ. பல முயற்சிகளுக்குப் பிறகு மருத்துவமனை நிர்வாகம், நேகோவை பராமரிக்க முடிவு செய்தது. ஆனாலும் தன்னை வளர்த்தவரை தேடுவதை மட்டும் அது நிறுத்திக்கொள்ளவே இல்லை. ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலே பாய்ந்து சென்று பார்த்துக்கொண்டிருக்கிறது. நேகோவைப் பற்றி நிறைய பேர் இணையத்தில் எழுதி வருகிறார்கள். விதவிதமாகப் படங்கள் எடுத்து வெளியிடுகிறார்கள். உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்களின் மனத்தில் இடம் பிடித்துவிட்டது நேகோ.

இறந்து போனவருக்காகக் காத்திருக்கும் அன்பான ஜீவன்!

வட கொரியாவுக்கு அவ்வளவு எளிதாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சென்றுவிட முடியாது என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் வட கொரியாவைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு பலரும் விரும்புகிறார்கள். அலெஜண்ட்ரோ காவோ டி பினோஸ் என்பவர் ஸ்பெயினின் டராகோனா நகரில் ‘பியோங்யாங் கஃபே’ திறந்துள்ளார். “நான் கம்யூனிசத்தை நம்புகிறவன். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு வட கொரியா மீது நம்பிக்கை வந்தது.

2002-ம் ஆண்டு இரண்டாம் கிம் ஜோங்கை சந்தித்தேன். சர்வதேச கலாச்சார தொடர்பு களுக்கான சிறப்புத் தூதராக என்னை நியமித்தார். நான் திறம்பட பணியாற்றினேன். ‘கொரியன் ஃப்ரெண்ட்ஷிப் அசோசியேஷன்’ ஒன்றைத் தொடங்கினேன். இன்று 30 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஸ்பெயின் உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் வட கொரியாவுக்கு எதிராகவே செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். வட கொரியாவைப் பற்றிய புரிதல் வரவேண்டும் என்பதற்காகவே இந்த கஃபேயை தொடங்கி இருக்கிறேன்.

சுவரில் வட கொரிய கொடி, பொதுவுடைமை கருத்துகளைப் பிரதிபலிக் கும் போஸ்டர்களை வைத்திருக்கிறேன். 1948-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் கிம் வம்சத்தினர் பற்றிய புத்தகங்கங்களும் உண்டு. வட கொரியாவின் பிரத்யேக உணவுகளையும் பானங் களையும் மக்கள் விரும்புகிறார்கள். விரைவில் வட கொரியா குறித்த மூடநம்பிக்கைகள் விலகும்” என்கிறார் அலெஜண்ட்ரோ.

மர்மமோ, மூடநம்பிக்கையோ விரைவில் விலகட்டும்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இறந்து-போனவருக்காகக்-காத்திருக்கும்-நாய்/article8972346.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: செயற்கைக்கால் வாத்து!

 

 
masala_2388280f.jpg
 

தென் ஆப்பிரிக்காவில் வசிக்கிறார் சூ பர்கர். இவர் விலங்குகள், பறவைகள் மீது மிகுந்த அன்பு செலுத்தக்கூடியவர். இவரிடம் இருந்த ஓஸ்ஸி என்ற வாத்துக்கு ஒரு கால் உடைந்துவிட்டது. வாத்து நடக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டது.

தன்னுடைய வாத்துக்குச் செயற்கைக் கால் பொருத்தக்கூடியவர்கள் யாராவது இருந்தால் தொடர்புகொள்ளுங்கள் என்று ரேடியோவில் விளம்பரம் கொடுத்தார் சூ. நிறையப் பேர் உதவ முன்வந்தனர்.

இறுதியில் பிரமாதமான செயற்கைக் கால் ஒன்று தயார் செய்து வாத்தின் காலில் பொருத்திவிட்டனர். இரண்டு கால்களால் சதோஷமாக நடக்கிறது ஓஸ்ஸி.

வாத்துக்குக் கால் கொடுத்தவர்கள் வாழ்க!

ஜப்பானில் வசிக்கிறார் ஷின்ஜிரோ குமாகை. பகல் நேரங்களில் சுற்றுச்சூழல் ஆர்வலராக செயலாற்றி வருகிறார். இரவு நேரங்களில் நிஜ வாழ்க்கை சூப்பர் ஹீரோவாக வலம் வருகிறார். வெட்டுக்கிளி போல உருவம் கொண்ட ஹெல்மெட்டும் சூப்பர் ஹீரோவுக்கான உடையையும் அணிந்துகொள்கிறார். மிகப் பெரிய பைக்கை எடுத்துக்கொண்டு இரவு நேரங்களில் நகரில் சுற்றி வருகிறார். குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களைக் கண்டறிந்து, காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்.

குமாகையின் செயல் மூலம் கணிசமான அளவில் விபத்துகள் குறைந்துள்ளதால், காவல்துறை அவருக்கு ஆதரவளித்து வருகிறது. நிஜ வாழ்க்கை சூப்பர் ஹீரோவாக இருப்பது செலவு பிடிக்கும் விஷயம்தான். ஆனால் விபத்துகளைத் தவிர்த்து, எராளமான உயிர்களைக் காக்கும் பணி என்பதால் இதை விரும்பிச் செய்வதாகச் சொல்கிறார். சின்ன வயதில் இருந்தே காமிக் புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து வளர்ந்ததால், சூப்பர் ஹீரோவாக இருந்து நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதை நிஜமாக்க முடிந்ததில் எனக்கு மன நிறைவு என்கிறார் குமாகை.

வெல்டன் சூப்பர் ஹீரோ!

அமெரிக்காவில் வசிக்கும் மைக்கேல் பார்கின்சன், மோச்சா என்ற டாபர்மேனை வளர்த்து வருகிறார். மோச்சாவின் உணவுப் பழக்கத்தால் மிகவும் வருத்தப்படுகிறார் மைக்கேல். உலோகப் பொருட்களைக் கண்டவுடன் மோச்சா விழுங்கிவிடுகிறது. ஒருமுறை ஜூஸ் டப்பாவின் மூடியை விழுங்கிவிட்டது. அறுவை சிகிச்சை மூலம் அந்த மூடி வெளியில் எடுக்கப்பட்டது. தற்போது 3 கைக் கடிகாரங்களை விழுங்கிவிட்டது.

மீண்டும் மருத்துவமனையில் சேர்த்து, 3 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை மூலம் கடிகாரங்களை வெளியே எடுத்திருக்கின்றனர். மோச்சாவுக்கு எட்டக்கூடிய இடங்களில் எந்தப் பொருட்களையும் வைக்காமல் தான் பார்த்துக்கொள்கிறோம். கவனக் குறைவாக இருக்கும் நேரங்களில் இதுபோன்ற காரியங்களைச் செய்துவிடுகிறது. இன்னொரு முறை இப்படி ஏதாவது சாப்பிட்டால் மோச்சாவைக் காப்பாற்ற இயலாது என்று கூறிவிட்டார் மருத்துவர். மைக்கேல்தான் கவலையில் இருக்கிறார். மோச்சா அடுத்த கடிகாரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

ஐயோ… பாவம் மைக்கேல்…

இங்கிலாந்தின் மிக வயதான மரம் மடிந்து போகும் நிலையில் இருக்கிறது. அஷ்பிரைட்டில் தேவாலயத்தில் இந்தப் பழைமையான மரம் இருக்கிறது. மரத்தின் வயது சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் என்கிறார்கள். வெண்கலம் காலத்தில் உருவாக்கப்பட்டது ஸ்டோன் ஹெஞ்ச். அப்பொழுதே இந்த மரமும் வாழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். 38 அடி நீளத்துக்கு கிளைகளைப் பரப்பி இருக்கும் இந்த மரம் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை இலைகளை உதிர்த்து, புதிய இலைகளை உருவாக்கிக்கொள்கிறது. பிரிட்டனில் இருக்கும் 20 வயதான மரங்களில் இதுதான் மிகவும் சீனியர். வயதான காரணத்தால் மடிய இருக்கும் மரத்தை நினைத்து கவலைகொள்கிறார்கள் பிரிட்டன்வாசிகள்.

உலக வரலாறு முழுவதும் தெரிந்திருக்கும் இந்த மரத்துக்கு!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-செயற்கைக்கால்-வாத்து/article7149948.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: பெண் குங்ஃபு துறவிகள்!
whatsapp.png fb.png tw.png gp.png
masala_2970870d.jpg

நேபாளில் உள்ள ட்ரக் அமிதபா மலையில் வசிக்கும் பெண் புத்தத் துறவிகள் குங்ஃபு கற்று வருகிறார்கள். உலகிலேயே முதல்முறையாக குங்ஃபு கற்ற பெண் துறவிகள் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார்கள். பொதுவாக புத்த மடங்களில் பெண் துறவிகளுக்கு வீட்டு வேலைகள்தான் கொடுக்கப்படும். ஆண் துறவிகளின் பிரார்த்தனைகளுக்கு வேண்டிய விஷயங்களைச் செய்ய வேண்டும். சமையலறையிலும் தோட்டங்களிலும்தான் பெரும்பாலான நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும். ஆண் துறவிகளை விட பெண் துறவிகள் தாழ்வாகவே நடத்தப்பட்டு வந்தனர்.

800 வருடங்கள் பழமையான ட்ரக்பா மடத்தில் 26 ஆண்டுகளுக்கு முன்பு கியால்வாங் ட்ரக்பா பொறுப்புக்கு வந்தார். அவர் ஆண்களுக்கு இணையான அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார். ‘‘நான் சிறுவனாக இருந்தபோதே பெண் துறவிகள் குறித்து நிறைய யோசித்தேன். துறவியிலும் ஆண், பெண் பாகுபாடு இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆண் துறவிகளுக்கு வழங்கப்படும் கல்வி, ஆன்மிகப் பயிற்சி போன்றவற்றைப் பெண்களுக்கும் வழங்க நினைத்தேன். நான் பொறுப்புக்கு வந்தபோதுதான் அவற்றைச் செய்ய முடிந்தது.

பெண் துறவிகளும் ஆண் துறவிகள் கற்றுக்கொள்ளும் கல்வி, தியானம், ஆங்கிலம், மேலாண்மை கலை போன்ற அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்கள். 8 ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாமைச் சேர்ந்த பெண் துறவிகள் கொரில்லா போர்ப் பயிற்சிகளை எடுத்துக்கொண்டதைப் பார்த்தேன். அதற்குப் பிறகுதான் இந்த மடத்தில் குங்ஃபு பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தோம். தினமும் 2 மணி நேரம் பயிற்சிகள்’’ என்கிறார் கியால்வாங் ட்ரக்பா. ‘‘குங்ஃபு பயிற்சி துறவிகளுக்கு எதற்கு என்று நினைக்கிறார்கள். அது தவறு. குங்ஃபு ஆரோக்கியத்தைக் காக்கிறது. தியானத்தை எளிமையாக்கி இருக்கிறது.

உடலுக்குச் சிறந்த பயிற்சியாக உள்ளது. ஒழுக்கத்தையும் சிந்தனையையும் ஒருமுகப்படுத்தியிருக்கிறது. தன்னம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. மிக முக்கியமாக ஆண்களிடம் இருந்து எங்களைப் பாதுகாக்கிறது. குங்ஃபு பெண் துறவிகள் என்றாலே ஆண்கள் அருகில் வரக்கூட நினைக்க மாட்டார்கள்’’ என்கிறார் 16 வயது ரூபா லாமா. ‘‘நேபாள பெண்கள் கனவில் எதிர்பார்க்காத விஷயங்களை எல்லாம் துறவிகளான எங்களால் செய்ய முடிகிறது! மடத்தில் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். டென்னிஸ், ஸ்கேட்டிங், ஆங்கிலம், திபெத்திய மொழி, நடனம், இசை என்று ஏராளமானவற்றை அறிந்திருக்கிறோம்’’ என்கிறார் 18 வயது ஜிக்மே கோன்சோக் லாமோ. ‘‘நான் பெரிய தலைவரும் இல்லை, ஆசிரியரும் இல்லை. ஆனால் பாலினச் சமத்துவம் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அது சாத்தியமாகியிருக்கிறது’’ என்கிறார் கியால்வாங் ட்ரக்பா.

சமத்துவத்தை நிலைநாட்டும் பெண் குங்ஃபு துறவிகள்!

சீனாவின் சாங்ஷா நகரில் ஒருவர் தன்னுடைய சைக்கிளை, மரத்தில் சங்கிலியால் கட்டி வைத்திருந்தார். ஸ்கூட்டரில் வந்த ஒரு மனிதர், சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, மரத்தை ரம்பத்தால் வெட்டினார். சில நிமிடங்களில் மரம் கீழே சாய்ந்தது. சைக்கிளை எடுத்து ஸ்கூட்டரில் வைத்துக்கொண்டு, வேகமாகச் சென்றுவிட்டார். அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் பதிவாகியிருந்த காட்சிகள், வெளியில் பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடப்பாவி

Link to comment
Share on other sites

உலக மசாலா: என்னது, மீண்டும் முதலில் இருந்தா?
 
whatsapp.png fb.png tw.png gp.png
ulaga_2971984d.jpg

சீனப் பெண்கள் கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் உறவு இருப்பதை அறிந்தால், ‘Mistress dispellers’ என்ற நிறுவனத்தை நாடுகிறார்கள். கணவருடன் தொடர்பில் இருக்கும் பெண்ணை விடுவித்து, மனைவிகளுக்கு உதவுவதுதான் இந்த நிறுவனத்தின் நோக்கம். “மேற்குலக நாடுகளைப் போல சீனப் பெண்கள் தங்கள் கணவரிடம் சண்டை போடுவதில்லை. விவாகரத்தும் அவ்வளவு எளிதில் கிடைக்காது. கிடைத்தாலும் அதற்குப் பிறகான வாழ்க்கை மிகுந்த பொருளாதார சிக்கலைத் தந்துவிடுகிறது. குழந்தைகளை தனியாக வளர்ப்பதும் கஷ்டமாக இருக்கிறது. அதனால் எங்கள் நிறுவனத்தை நாடி வருகிறார்கள். நாங்கள் தகுந்த நேரம் பார்த்து, சம்பந்தப்பட்ட பெண்களைத் தனியாகச் சந்திப்போம். பல சந்திப்புகளுக்குப் பிறகு, அவர்கள் விரும்பும் பணம், கார், போன்றவற்றை அளித்து, எங்கள் வாடிக்கையாளரின் கணவரை விட்டு விலகிவிடும்படி கேட்டுக்கொள்வோம். சிலருக்கு புதிய நட்பையும் உருவாக்கிக் கொடுப்போம். எங்களைப் பொறுத்தவரை மனைவிகள்தான் முக்கியம். ஆனாலும் எந்தப் பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே மிகவும் கவனமாக இந்த வேலைகளை செய்கிறோம். இதன் மூலம் மனைவிகளும் காதலிகளும் பிரச்சினைகளில் இருந்து விடுபடுகிறார்கள். கணவர்களிடமும் சூழலை விளக்கி, இனி காதலிகளை தொந்தரவு செய்யக்கூடாது என்ற உறுதிமொழியையும் வாங்கி விடுகிறோம். இதற்காக 30 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறோம்” என்கிறார் நிறுவனர் காங் நா. சீனாவில் பலரும் இந்த சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் இவர்களை ஆதரிக்கிறார்கள். ஐரோப்பா, வட அமெரிக்காவிலும் நிறுவனத்தை ஆரம்பிக்க முடிவு செய்திருக்கிறார் காங் நா.

எப்படியெல்லாம் புதிய புதிய தொழில்கள் உருவாகிவிடுகின்றன!

ரித்தூளைக் கொண்டு பல் துலக்குவது நல்லது என்ற கருத்து சமீப காலமாக இணையதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. வழக்கமாக பயன்படுத்தும் பற்பசைகளை விட கரித்தூள் பற்களை அதிக அளவில் வெண்மையாக்கி, பளிச்சிட வைக்கிறது என்கிறார்கள். ஆனால் அமெரிக்க டென்டல் அசோசியேஷன் இந்தக் கூற்றை மறுத்திருக்கிறது. இயற்கையான பொருட்களைக் கொண்டு பற்களை சுத்தம் செய்வதும் பாதுகாப்பதும் நல்லது என்ற கருத்து வேகமாகப் பரவி வருகிறது. கரியால் தேய்ப்பதற்கு முன், தேய்த்த பின் என்று போடும் படங்கள் பலரையும் ஈர்க்கின்றன. ஃப்ளூரைடுக்கு மாற்றாக கரித்தூள் இருப்பதால்தான் பற்கள் வெண்மையாகின்றன என்று விளக்கமும் அளிக்கிறார்கள். ஆனால் மருத்துவர் கிம் ஹார்ம்ஸ், “அறிவியல் அடிப்படையில் கரித்தூள் பற்களுக்கு நன்மை சேர்க்கிறது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஃப்ளூரைட் மூலம் 40 சதவிகித பற்சொத்தைகளைக் குறைக்க முடியும். பற்பசைகளே கரித்தூளைவிடப் பாதுகாப்பானவை” என்கிறார். சர்வதேச நிறுவனங்கள் பற்பசைகளை வெற்றிகரமான தொழிலாக செய்து வருகின்றன. அதனால் கரித்தூளை அங்கீகரிக்க மாட்டார்கள் என்கிறார்கள் கரித்தூள் ஆதரவாளர்கள்.

என்னது, மீண்டும் முதலில் இருந்தா

Link to comment
Share on other sites

உலக மசாலா: ரத்தக்காட்டேரியாக வாழும் இளைஞர்!
 
masala_2969358d.jpg

இங்கிலாந்தில் வசிக்கும் டார்க்னெஸ் விலாட் டெபேஸ் (25), கடந்த 13 ஆண்டுகளாக தான் ரத்தக்காட்டேரியாக வாழ்ந்து வருவதாகச் சொல்கிறார்! “நான் சூரிய வெளிச்சத்துக்கோ, பூண்டின் வாசனைக்கோ பயந்து ஓடும் ரத்தக்காட்டேரி இல்லை. சிறுவனாக இருந்தபோது நாயுடன் வெளியே சென்றேன். அங்கே இறந்த ஆன்மாக்கள் மனிதர்கள் உடலில் வசிக்கக்கூடிய ஸோம்பி பெண்களைப் பார்த்தேன். பயத்தில் ஓடி வந்துவிட்டேன்.

ஆனால் ஆர்வம் அதிகமானது. ரத்தக்காட்டேரி படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். நிறைய புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நானே ரத்தக்காட்டேரியாக மாறியதை உணர்ந்தேன். என் பெயருடன் டார்க்னெஸ் என்பதை சேர்த்துக்கொண்டேன். தினமும் மாடு, பன்றியின் ரத்தத்தைக் குடித்து வருகிறேன். மனிதர்களின் ரத்தம் கிடைத்தால் அதையும் விடுவதில்லை. இறந்துபோன ஆன்மா ஒன்று என் உடலில் தங்கியிருக்கிறது. அதற்காகவே நான் ரத்தக்காட்டேரியாக மாறியிருக்கிறேன்.

அதனால்தான் ரத்தத்தைக் குடித்து, சவப்பெட்டியில் உறங்குகிறேன். பார்ப்பவர்களுக்கு நான் சாதாரண மனிதன் இல்லை, ரத்தக்காட்டேரி என்று புரிய வேண்டும். அதற்காக கண்களுக்கு மை பூசிக்கொள்கிறேன். இரண்டு ஆண்டுகள் வரை இந்த ரகசியத்தை நான் வெளிப்படுத்தவில்லை. இப்போது பலருக்கும் தெரிவதால் என்னைக் கண்டு அச்சப்படுகிறார்கள். நான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை. செய்யப் போவதும் இல்லை. என்னைக் கண்டு பயப்படாமல், கிண்டல் செய்யாமல் உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் கோரிக்கை” என்கிறார் டார்க்னெஸ்.

நீங்க சாதாரணமாக சொன்னாலும் திகில் அடிக்குதே டார்க்னெஸ்!

வியட்நாமைச் சேர்ந்த வசதியான, படித்த பெண்கள் வெள்ளைத் தோலுக்காக அதிகம் மெனக்கெடுகிறார்கள். கடுமையான கோடையிலும் பல அடுக்கு உடைகளை அணிந்துகொள்கிறார்கள். கைகளுக்கு உறைகள், முகத்தை மறைக்கத் துணி, கண்களுக்குக் கண்ணாடி, தலைக்குத் தொப்பி, கால்களில் ஷூக்கள் என ஏதோ வேற்றுகிரகத்துக்கு செல்வதைப் போலத்தான் வெளியே கிளம்பி வருகிறார்கள். வியட்நாம் மக்கள் பெரும்பாலும் ஏழைகள் என்பதால், நெல் வயல்களில்தான் அதிகம் வேலை செய்வார்கள். அதனால் அவர்கள் அடர் வண்ணத் தோலுடன் இருப்பார்கள். கடந்த 20 ஆண்டுகளாக மேற்குலக அழகு சாதனப் பொருட்கள் வியட்நாமில் காலூன்றிவிட்டன.

வெள்ளைத் தோலே உயர்ந்தது, அடர் வண்ணம் தாழ்ந்தது என்ற கருத்து பலவகையிலும் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் சமூகத்தில் நிறம் குறித்த பாகுபாடு அதிகரித்துவிட்டது. வியட்நாம், ஜப்பான், இந்தோனேஷிய நாடுகளின் நடுத்தர வர்க்க மக்களிடம் நிறப் பாகுபாட்டால் திருமணங்கள் பெரிய அளவில் சங்கடங்களைச் சந்தித்து வருகின்றன. பெண்கள் தங்கள் நிறத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கு உடல் முழுவதும் துணிகளைச் சுற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். சிவப்பழகு க்ரீம்களின் விற்பனையும் அதிகரித்துவிட்டது.

சமீபத்தில் தோல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால், சூரியனில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும் இந்த வழிமுறையைக் கையாள்வதாகப் பெண்கள் சொல்கிறார்கள். நிறத்தில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களிடம், முதலில் நிறம் பற்றிய சமுதாயத்தின் பார்வை மாறட்டும், நாங்களும் மாறுகிறோம் என்கிறார்கள் வியட்நாம் பெண்கள்.

நல்லதுக்கே காலமில்லை, மெலனின் அதிகம் சுரக்கும் கறுப்புத் தோல்தான் நோய்களிடமிருந்து பாதுக்காக்கிறது

Tamil.thehindu

Link to comment
Share on other sites

 

உலக மசாலா: தண்ணீர் பொம்மலாட்டம்!

 

   

வியட்நாமில் பல நூற்றாண்டுகளாக வித்தியாசமான பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இவர்கள் மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. தண்ணீருக்குள் நடத்துகிறார்கள். துணி மறைப்புக்குப் பின்னால், மார்பு வரை தண்ணீரில் நின்றுகொண்டு பொம்மலாட்டத்தை நடத்தி அசத்துகிறார்கள். பொம்மைகளைப் பிடித்திருக்கும் கம்பிகள் தண்ணீருக்குள் இருப்பதால் வெளியே தெரியாது. பாரம்பரிய இசைக்கு ஏற்ப பொம்மைகள் நீரில் நடனமாடுவதுடன் நீரில் அலைகள் தோன்றும், வண்ண விளக்குகள் ஒளிரும்.

இது அற்புதமான அனுபவங்களைத் தரும். 11-ம் நூற்றாண்டில் இருந்து தண்ணீர் பொம்மலாட்டம் வியட்நாமில் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஆரம்பக் காலத்தில் நெல் அறுவடை செய்தவுடன், அதைக் கொண்டாடும் விதத்தில் குளத்தில் பொம்மலாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலம் செல்லச் செல்ல தண்ணீர் பொம்மலாட்டம் புதுமைகளையும் புகுத்திக்கொண்டது. அதனால்தான் இன்றைய தலைமுறை வரை நீடித்து இருக்கிறது. பொம்மலாட்டத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பொம்மையும் 9 முதல் 14 கிலோ எடை வரை இருக்கும்.

நீண்ட மூங்கில் கம்புகள் மீது பொம்மைகளை வைத்து, தண்ணீரில் மிதக்க விட்டிருப்பார்கள். தண்ணீருக்குள் பல மணி நேரம் நின்று நிகழ்ச்சிகளை நடத்தும்போது பொம்மலாட்டக் கலைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். தண்ணீரால் வரும் நோய்கள், மூட்டு வலி, அட்டைகளின் கடி என்று பலவற்றை எதிர்கொண்டார்கள். இன்று தண்ணீர்ப் புகாத ஆடைகளை அணிந்துகொள்வதால் பல சங்கடங்களில் இருந்து தப்பி விடுகிறார்கள்.

அசத்தும் தண்ணீர் பொம்மலாட்டம்!

இங்கிலாந்தில் வசிக்கும் கிறிஸ் வில்சன், ஜாமி க்ரும்மி இருவரும் ‘Too good to go’ என்ற அப்ளிகேஷனை உருவாக்கியிருக் கிறார்கள். இது உணவு வீணாவதைத் தடுப்பதற்காக உருவாக்கப் பட்டது. ‘’இங்கிலாந்தில் மட்டுமே பல லட்சம் டன் உணவுகள் தினமும் வீணாகின்றன. இன்னொரு பக்கம் உணவு கிடைக்காமல் பட்டினியில் வாடுகிறார்கள். இதை ஓரளவாவது சரி செய்வதற்குத்தான் நாங்கள் முயன்று வருகிறோம். ஸ்மார்ட்போன்களின் மூலம் தேவையான உணவுகளை ஆர்டர் செய்கிறார்கள். நேரம் கடந்துவிட்டாலோ, விடுதி மூடும் நேரம் வந்துவிட்டாலோ, உணவுகளை டெலிவரி செய்ய முடியாது. அந்த உணவுகள் அப்படியே வீணாகிவிடுகின்றன.

அதேபோல ஒருநாள் சமைக்கப்பட்ட உணவுகள் அனைத்துமே விற்பனையாகி விடுவதில்லை. அவையும் வீணாகின்றன. இந்த உணவுகளை விடுதிகளில் இருந்து நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். சுற்றுச்சூழலுக்குத் தீங்கு தராத பெட்டிகளில் அடைத்து, மிக மிகக் குறைந்த விலையில் உணவுகளைக் கொடுத்து விடுகிறோம். இதனால் விடுதி உணவுகளும் வீணாவதில்லை. உணவு வாங்க இயலாதவர்கள் பட்டினி கிடக்க வேண்டியதும் இல்லை. ஹங்கேரியில்தான் நாங்கள் இந்தச் சேவையை முதன்முதலில் ஆரம்பித்தோம். தற்போது லண்டனில் உள்ள 95 உணவகங்களில் எங்கள் சேவைகளைச் செய்து வருகிறோம்’’ என்கிறார் கிறிஸ் வில்சன். 2010-ம் ஆண்டு அறிக்கையின்படி பிரிட்டனில் மட்டும் ஒரு வருடத்தில் 6 லட்சம் டன் உணவுகள் வீணாகின்றன.

உங்கள் சேவை உலகம் முழுவதும் தொடரட்டும்

Tamil.thehindu

Link to comment
Share on other sites

உலக மசாலா: அன்பானவர்களின் இதயத் துடிப்பை உணர வைக்கும் மோதிரம்!

   

உலகிலேயே அதிநவீன மோதிரம் Touch HB Ring. இது காதலர்களுக்கும் தம்பதியர்களுக்குமான மோதிரம். இதை அணிந்து கொண்டால் உங்கள் அன்புக் குரியவர்களின் இதயத் துடிப்பை உணர முடியும். போன், ஸ்கைப் என்று எத்தனையோ கருவிகள் உறவுகளுக்கு இடையே இருக்கும் தூரத்தைக் குறைத்துவிடுகின்றன. ஆனால் அவற்றைவிட இந்த மோதிரம் இன்னும் நெருக்கத்தை அதிகரிக்கிறது. பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தில் கணவனும் மனைவியும் தனித்தனியாக இருந்தாலும் மோதிரத்தின் மூலம் அவர்களின் இதயத் துடிப்பை உணர முடியும்!

அருகில் இருப்பது போலவே தோன்றும். ஸ்மார்ட்போனில் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொண்டு, கணவன் அல்லது மனைவியின் தகவல்களைக் கொடுக்க வேண்டும். பிறகு மோதிரத்தை அழுத்தினால் இதயத் துடிப்பைக் கேட்கலாம்.

இந்தச் சின்னஞ்சிறு மோதிரத்துக்குள் பேட்டரி, சார்ஜிங் கனெக்டர், மதர்போர்ட், சென்சார்கள் என்று ஏராளமான விஷயங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. தண்ணீர் புகாதவாறு அமைக்கப்பட்டிருக்கிறது. 2 தங்க மோதிரங்கள் 2 லட்சம் ரூபாய். துருப்பிடிக்காத உலோகங்களால் செய்யப்பட்டிருக்கும் 2 மோதிரங்கள் 40 ஆயிரம் ரூபாய். மோதிரங்களின் தரத்துக்கு ஏற்ப விலையும் இருக்கும். ஆப்பிள் கைக்கடிகாரங்களில் பதிவு செய்யப்பட்ட இதயத் துடிப்புகளைத்தான் கேட்க முடியும். ஆனால் டச் மோதிரங்களில் நேரடியாகவே இதயத் துடிப்புகளை அறிய முடியும்.

அன்பானவர்களின் இதயத் துடிப்பை உணர வைக்கும் மோதிரம்!

ஜெர்மனியில் இருந்து ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்திருக்கிறது ஒரு குடும்பம். காரோலா க்ரிஸ்பாச்சும் ஆண்ட்ரூவும் இரு மகள்கள், 4 பேரக் குழந்தைகளுடன் 1,400 மைல்கள் பயணம் செய்து, ரஷ்யாவில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். “ஜெர்மனி எல்லோரும் நினைப்பதுபோல அமைதியான நாடு இல்லை. அகதிகளுக்குப் புகலிடம் கொடுத்ததில் இருந்து ஜெர்மனி மாறிவிட்டது. அங்கே குழந்தைகள் வளரக்கூடிய இனிமையான சூழல் இல்லை. திடீரென்று கிளம்பியதால் சுற்றுலா விசாவில்தான் ரஷ்யா வந்தோம். இங்கே வந்த பிறகு அரசியல் அடைக்கலம் கோரியிருக்கிறோம். இன்னும் அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் ரஷ்ய மக்கள் எங்களிடம் காட்டும் அன்புக்கும் உதவிக்கும் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. இவ்வளவுக்கும் எங்களுக்கு இன்னும் ரஷ்ய மொழி நன்றாக வரவில்லை. ஒரு கடை வைத்து பிழைப்பை நடத்தி வருகிறோம்.

ஜெர்மனியை விட எல்லா விதங்களிலும் ரஷ்யா சிறந்த நாடாக இருக்கிறது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் மிகவும் பாதுகாப்பான நாடு. சொந்த நாட்டைவிட இங்கேதான் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்கிறோம். எங்கள் உறவினர்கள், நண்பர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் வந்துவிட்டோம் என்பதைத் தவிர எங்களுக்கு வேறு வருத்தங்கள் இல்லை. 8 மாதங்களாக ரஷ்யாவில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அரசியல் அடைக்கலம் கிடைத்துவிட்டால் இன்னும் நிறைவாக இருப்போம்’’ என்கிறார் ஆண்ட்ரூ. உலக நாடுகளில் ஜெர்மனிக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. ஆண்ட்ரூ சொல்லும் காரணத்தை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அரசியல் அடைக்கலம் இன்னும் வழங்கவில்லை. இந்தக் குடும்பத்தை வெளியேறவும் சொல்லவில்லை.

அடைக்கலம் கொடுக்கும் நாட்டில் இருந்தே அடைக்கலம் தேடி வந்தது விநோதமாக இருக்கிறதே.

Tamil.thehindu

Link to comment
Share on other sites

உலக மசாலா: உலகம் சுற்றிய வாத்து பொம்மை!

 

அமெரிக்காவில் வசிக்கும் ட்ரோயானோவின் மகள் அலிசியாவுக்கு மஞ்சள் வாத்து பொம்மை பரிசாகக் கிடைத்தது. வழக்கமான வாத்து பொம்மைகளைவிடச் சற்றுப் பெரியது. பால்டி என்று பெயரிட்டு, மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வந்தாள் அலிசியா. ஒருநாள் வாத்து பொம்மை காணாமல் போனது. எங்கு தேடியும் கிடைக்கவே இல்லை.

சில மாதங்களுக்குப் பிறகு, ட்ரோயானோவுக்கு ஒரு கடிதம் வந்தது. ‘இப்பொழுது என் பெயர் கேல் டக்கி. நான் பல நாடுகளுக்கும் சுற்றுலா சென்றுகொண்டிருக்கிறேன். என்னைத் தேட வேண்டாம். என்னைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றால், கேல் டக்கி ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. ட்ரோயானோ குழம்பிப் போனார். ஃபேஸ்புக்கில் தொடர்ந்து கவனித்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரியா, தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, குவைத், ஸ்விட்சர்லாந்து என்று 20 நாடுகளுக்குப் பயணம் செய்துவிட்டது வாத்து.

அதற்குப் பிறகு எந்தத் தகவலும் இல்லை. “திடீரென்று ஒருநாள் எங்கள் கார் நிறுத்தும் இடத்தில் மிகப் பெரிய பெட்டி ஒன்று இருந்தது. பிரித்துப் பார்த்தபோது நானும் அலிசியாவும் மகிழ்ச்சியில் உறைந்து போனோம். எங்கள் வாத்து எங்களிடமே வந்து சேர்ந்துவிட்டது. பெட்டி முழுவதும் வாத்து பயணித்த நாடுகளின் புகைப்படங்கள், விளையாட்டுச் சாமான்கள், வாழ்த்து அட்டைகள் என்று ஏராளமாக இருந்தன. இன்றுவரை இதைச் செய்தவர் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் வாத்தை எடுத்துச் சென்றவர் ஒரு பைலட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். விமானத்தின் காக்பிட் பகுதியில் வாத்தை வைத்து ஒரு படம் எடுத்திருக்கிறார். 5 ஆண்டுகளில் 20 நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். அதனால் இந்த முடிவுக்கு வந்தேன்’’ என்கிறார் ட்ரோயானோ.

உலகம் சுற்றிய வாத்து பொம்மை!

பிரிட்டனைச் சேர்ந்த 51 வயது மார்க் எல்லிஸும் அவரது மனைவி டோன்னாவும் தங்களது காதல் திருமணத்தைப் பற்றிய ரகசியங்களை வெளியிட்டிருக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு ட்ரக் ஓட்டுநராக இருந்த மார்க், நண்பர்களுடன் சாப்பிட்டுவிட்டு, பொது கழிப்பறைக்குச் சென்றார். அந்தச் சுவற்றில் எழுதப்பட்டிருந்த விஷயம் அவர் கவனத்தை ஈர்த்தது. ‘ஷாக், நீ விரும்பினால் டோன்னாவின் இந்த எண்ணுக்குத் தொடர்புகொள்’ என்ற செய்தி எளிதில் புரியாதது போல, எழுத்துகளை மாற்றி எழுதப்பட்டிருந்தது. “ஒரு பெண் மிகுந்த வலியுடன், தன் காதலருக்கு எழுதப்பட்டிருந்த செய்தி என்பதைப் புரிந்துகொண்டேன். அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு பேசினால் என்ன என்று தோன்றியது. நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். சாதாரணமாகப் பேசிக்கொண்டோம்.

3 நாட்களுக்குப் பிறகு டோன்னா நேரில் சந்திக்கலாமா என்று கேட்டார். சந்திப்பு காதலாக மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொண்டோம். 8 வயதில் ஒரு மகளும் 6 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். டோன்னாவின் அறிமுகம் விநோதமாக இருந்தாலும் எங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் மார்க். “காதல் தோல்வி. அதைத் தாங்க முடியாமல் ஒருநாள் கழிவறையில் என் முன்னால் காதலருக்கு எழுதி வைத்தேன். நல்லவேளை அவர் வரவில்லை. அற்புதமான மார்க் என் கணவராகக் கிடைத்தார். கழிவறை மூலம் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டாலும் எங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைந்துவிட்டது’’ என்கிறார் டோன்னா.

தேவதைக் கதைகளில் வரும் காதல் கதை போல இருக்கிறதே!

Tamil.thehindu

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது...

 

   

சீனாவில் வசிக்கும் 18 வயது லியு டாவேய், தைவான் இணையதளம் மூலம் 18 பொம்மைத் துப்பாக்கிகளை வாங்கு வதற்குப் பணம் செலுத்தினார். 3 லட்சம் மதிப்புள்ள துப்பாக்கிகள் சீன சுங்கத் துறையின் பார்வைக்கு வந்தன. உடனே காவல்துறை ஆயுதக் கடத்தல் குற்றத்துக்காக லியுவைக் கைது செய்தது. 24 துப்பாக்கிகளில் 20 துப்பாக்கிகள் நிஜத் துப்பாக்கிகள். அதனால் கைது செய்திருப்பதாகக் காவல்துறை சொன்னது.

சீனச் சட்டப்படி 1.8 j/cm2 அளவுள்ள துப்பாக்கிகள் நிஜத் துப்பாக்கிகள். இந்த அளவீடு ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடுகிறது. சீனாவின் பிற பகுதிகளில் கூட அளவீடு வேறுவிதமாக இருக்கிறது. இந்த விஷயம் தெரியாமல் லியு துப்பாக்கிகளை வாங்கிவிட்டார். ஆயுதக் கடத்தல் குற்றத்துக்கு சீனாவில் ஆயுள் தண்டனை வழங்கப்படும். ஆனால் லியு 18 வயதானவர் என்பதாலும் சட்டம் தெரியாமல் வாங்கிவிட்டதாகச் சொல்வதாலும் தண்டனைக் காலத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது நீதிமன்றம். குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

‘‘நான் நிஜமாக ஆயுதக் கடத்தல் செய்திருந்தால் என்னைக் குற்றவாளியாகக் கருதி, சுட்டுத் தள்ளுங்கள். பொம்மைத் துப்பாக்கி என்று நினைத்து ஆர்டர் செய்து, இப்படிச் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டேன். உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறேன். நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்’’ என்கிறார் லியு.

ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது…

வங்கதேசத்தில் வசிக்கும் 40 வயது ஹாஷ்மோட் அலியின் முகம் புலியின் தாக்குதலால் கோரமாகிவிட்டது. சுந்தரவனக் காடுகளுக்குள் தேன் எடுக்கவும் விறகு எடுக்கவும் மீன் பிடிக்கவும் சென்று வருவார் ஹாஷ்மோட். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்றார். நீண்ட நேரம் மீன் பிடித்ததில் அனைவரும் சோர்வுற்று, படகில் தூங்கிவிட்டனர். அடர்ந்த இருளில் ஒரு புலி ஹாஷ்மோட்டின் முகத்தைத் தாக்கியது. அந்த ஒற்றைத் தாக்குதலில் நிலைகுலைந்து போனார் ஹாஷ்மோட். புலி படகை இழுத்தது. நண்பர்கள் புலியை விரட்டி அடித்தனர். 6 மணி நேரம் பயணம் செய்து, ஊருக்குள் வந்து சேர்ந்தனர். ஒரு கண் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு சுயநினைவற்றுப் போயிருந்தார் ஹாஷ்மோட். சிகிச்சை அளிக்கப்பட்டு, உயிர் பிழைத்ததே பெரிய விஷயமாகிவிட்டது.

விகாரமான முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு அவரிடம் பணமில்லை. வேறு வேலைகளும் செய்யத் தெரியாது. அதனால் ஒரு கைக்குட்டையை முகத்தில் கட்டிக்கொண்டு, மீண்டும் காட்டுக்கே வேலைக்குச் சென்று வருகிறார். அவருக்குத் திருமணமும் ஆகி, ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ‘‘என் முகம் இப்படி இருப்பதால் எங்கள் கிராமத்தை விட்டு நான் எங்கும் செல்வதே இல்லை. கடந்த 20 ஆண்டுகளில் அவமானப்படாத நாட்களே இல்லை. விசேஷம், நல்லது, கெட்டது, திருவிழா என்று பொதுமக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதில்லை. ஆனால் இன்று என் மகள் திருமணம் செய்யக்கூடிய நிலைக்கு வளர்ந்துவிட்டாள். என் முகத்துக்காக, என் மகளைத் திருமணம் செய்துகொள்ள ஒருவரும் வரமாட்டேன் என்கிறார்கள். என் மகளின் திருமணத்துக்காகவாவது நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய விரும்புகிறேன். ஒரு சர்ஜரி மூலம் என் அனைத்து வலிகளும் மாயமாகும். என் மகளின் வாழ்க்கையும் சிறக்கும். அதற்கு என்னிடம் பணம் இல்லை. உதவிக்காகக் காத்திருக்கிறேன்’’ என்கிறார் ஹாஷ்மோட் அலி.

ஐயோ பாவம்... புலியால் பாதிக்கப்பட்ட அலி!

Tamil.thehindu

Link to comment
Share on other sites

உலக மசாலா: இறந்தவர் திரும்பிய மர்மம்!

   

இந்தோனேஷியாவைச் சேர்ந்த 62 வயது வாலுயோ, சென்ற வாரம் தன் வீட்டுக் கதவைத் தட்டினார். திறந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ஓராண்டுக்கு முன்பு விபத்தில் இறந்த வாலுயோ திரும்பி வந்தவுடன், பேயாக இருக்க வேண்டும் என்று நினைத்தனர். நிஜ மனிதர்தான் என்பதைப் புரிந்துகொண்டவுடன், மகிழ்ச்சி யோடு வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். செமராங் நகரில் துப்புரவு வேலை செய்து வரும் வாலுயோ, ஒருநாள் கார் விபத்தில் சிக்கிக் கொண்டதாகக் காவல்துறையிடமிருந்து அழைப்பு வந்தது.

குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் மருத்துவமனைக்கு ஓடினார்கள். உடல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, சுயநினைவற்று இருந்த மனிதர், சில நாட்களில் இறந்து போனார். அவரது உடலை வீட்டின் தோட்டத்திலேயே புதைத்து, சடங்குகளையும் செய்து முடித்தனர். ‘‘என் அப்பா தானா என்பதைப் பல கேள்விகள் கேட்டு உறுதி செய்தோம். ஒரு பல் மட்டும்தான் இல்லையே தவிர, மற்ற அடையாளங்கள் ஒத்துப் போயின. எங்கள் உறவினர்களிடமும் அப்பாவைப் போல யாராவது இருக்கிறார்களா என்றும் விசாரித்தோம். இரட்டையர்களாகப் பிறந்திருக்க வாய்ப்பும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டோம்.

என் அப்பாவை போல இருந்த ஒருவர் விபத்தில் சிக்கிக்கொண்டதை, காவல்துறை தவறாகத் தகவல் தந்திருக்கலாம். அந்த நேரத்தில் எங்கள் அப்பாவும் வீட்டுக்குத் திரும்பி வராததால் நாங்களும் அவர்தான் என்று முடிவு செய்துவிட்டோம். இறந்தவரின் முகம் பார்க்கக்கூடிய அளவுக்கு இல்லை என்பதால், உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அப்பா திரும்பி வந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் இறந்தவர் யார் என்பதும், அப்பா ஏன் ஒரு வருடமாக வீட்டுக்கு வரவில்லை என்பதும் புரியாத புதிராக இருக்கிறது. ஒரு வருடமும் செமராங் நகரில்தான் வேலை பார்த்து வந்ததாகவும் தன்னிடம் மொபைல் போன் இல்லாததால் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் சொல்கிறார்.

இது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமாக இல்லை. காவல்துறை, இறந்தவர், என் அப்பா என்று மூன்று பக்கமும் ஏதோ மர்மம் இருக்கிறது. ஆனால் அதை ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு நாங்கள் இல்லை. இறந்து போனதாக நினைத்த அப்பா உயிருடன் வந்ததில் திருப்தி கொள்ளவேண்டியதுதான்’’ என்கிறார் வாலுயோவின் மகள் ஆன்டி ரிஸ்டான்டி. இறப்புச் சான்றிதழை மாற்றும் முயற்சியில் இருக்கிறார் வாலுயோ.

ஓராண்டுக்கு முன்பு இறந்து போனவர் திரும்பி வந்த மர்மம் என்னவோ?

தென்னாப்பிரிக்காவின் ப்ளோக்ரன்ஸ் பாலம், உலகிலேயே மிக உயரமாக பங்கி ஜம்ப் செய்யக்கூடிய இடங்களில் ஒன்று. மார்டின் ஃபார்ரகெர் மிகுந்த எதிர்பார்ப்போடு, பங்கி ஜம்ப் செய்வதற்குத் தயாரானார். பாதுகாப்பு விதிமுறைகள் அவருக்குத் தெரிவிக்கப்பட்டன. திடீரென்று பாலத்தில் இருந்து கீழே தள்ளியபோது, உற்சாகத்தில் கத்தினார். சற்று நிதானம் வந்தவுடன் செல்ஃபி எடுப்பதற்காக பாக்கெட்களில் ஸ்மார்ட்போனைத் தேடினார்.

போன் கிடைக்கவில்லை. அவர் குதிக்க ஆரம்பித்தபோதே போன் பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிட்டது. மார்டினின் ஆர்வமும் மகிழ்ச்சியும் மறைந்துவிட்டது. ‘‘இந்த பங்கி ஜம்ப் அவ்வளவு எளிதான செயல் இல்லை. இதில் செல்ஃபி எடுக்க வேண்டும் என்பதே என் முக்கிய நோக்கமாக இருந்தது. அத்தனையும் வீணாகிவிட்டது’’ என்று வருந்துகிறார் மார்டின்.

ஒரு செல்ஃபிக்காக, சாகச த்ரில்லை ரசிக்க மறந்துட்டீங்களே மார்டின்!

Tamil.thehindu

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஓவியப்படம்!

2zyejqa.jpg

இந்தப் படத்தைப் பார்க்கும் எவரும் ப்ரான்சிஸ்கா ட்ர்ப்டோவ் மிகச் சிறந்த புகைப்படக்காரர் என்பார்கள். விலங்குகளின் முடி, கண்கள் என்று ஒவ்வொரு நுட்பமான விஷயம் அத்தனை அழகாகப் படத்தில் தெரிகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த ப்ரான் சிஸ்கா புகைப்படக்காரர் அல்ல, ஓவியர். இந்தப் படமும் அவர் வரைந்த ஓவியமே! ‘ஆரம்பத்தில் வனவிலங்குகளின் படங்களை போட்டோஷாப் மூலம்தான் வரையக் கற்றுக்கொண்டேன். அதில் இருந்து வெளிச்சத்தையும் நிழலையும் எப்படி வரைவது என்று அறிந்துகொண்டேன். பிறகு காகிதங்களிலும் கேன்வாஸிலும் கைகளால் வரைய ஆரம்பித்தேன்.

இன்று இந்தக் கலை என் வசமாகிவிட்டது. ஒரு படத்தை முடிக்க சில மணி நேரங்களில் இருந்து ஒரு மாதம் வரை கூட ஆகும். அந்தந்தப் படங்களின் தன்மைதான் அதைத் தீர்மானிக்கிறது. ஓவியத்துக்காக நான் எங்கும் பயிற்சி பெறவில்லை. என் விருப்பத்தால், தேடித் தேடிப் படித்து, பயிற்சிகள் செய்து, என்னை ஓவியராக மாற்றிக்கொண்டேன். இன்றும் எந்தவிதத்தில் என் ஓவியத் திறமையை முன்னேற்றிக்கொள்ளலாம் என்றே சிந்திக்கிறேன்’ என்கிறார் ப்ரான்சிஸ்கா.

ஓவியங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை!

அரிசோனாவில் வசிக்கிறார் 31 வயது பாக்வாலே பாட் ப்ரோக்கோ, 274.5 கிலோ எடையுடன் இருந்தார். ஒவ்வொரு வேளையும் தனக்குத் தேவையான உணவை நடந்து சென்று, வால்மார்ட்டில் வாங்கி வந்து சாப்பிட ஆரம்பித்தார். 3 ஆண்டுகளில் 134 கிலோ எடையைக் குறைத்துவிட்டார். ‘‘என்னைப் பரிசோதித்த மருத்துவர் உயர் ரத்த அழுத்தமும் கொழுப்பும் அதிகம் இருப்பதாக எச்சரித்தார். இப்படியே என் எடை அதிகரித்தால் என் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை. என் உருவத்தைப் படம் எடுத்துப் பார்த்தேன். என் தொப்பை தொடையைத் தொட்டுக்கொண்டிருந்தது.

என் மார்பு கீழே இறங்கி இருந்தது. எப்படியும் எடை குறைத்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன். ஜிம் கருவிகளில் என் உருவம் நுழையாது. எனக்கு எப்போதெல்லாம் பசி எடுக்கிறதோ, அப்போதெல்லாம் 1 மைல் தூரத்தில் இருக்கும் வால்மார்ட் கடைகளுக்குச் சென்று வேண்டியதை வாங்கிவந்து, சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு நாளைக்கு 3 வேளை இப்படிச் சென்றால் 6 மைல் தூரத்துக்கு நடந்து விடலாம். தொடர்ந்து 6 மைல்கள் நடப்பதை விட, இது சுவாரசியமாகவும் இருந்தது. இரண்டே ஆண்டுகளில் 91 கிலோ எடை குறைந்தேன். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இப்போது என்னால் ஜிம் கருவிகளில் ஏறி, உடற்பயிற்சி செய்ய முடிந்தது. வால்மார்ட் நடக்கும் தூரத்தை ட்ரட்மில்லில் நடந்தேன். என்னுடைய உணவுப் பழக்கத்தையும் மாற்றினேன். காய்கறிகள், இறைச்சி, ஓட்ஸ் போன்றவற்றையும் முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்துக்கொண்டேன்.

பால் எடையை அதிகரித்தது. அதனால் பாலை என் உணவில் இருந்து நீக்கிவிட்டேன். ‘பேட் பாட்’ என்று என்னைக் கூப்பிட்டவர்கள் இன்று, ‘பாசிபிள் பாட்’ என்று அழைக்கிறார்கள். தொங்கிக்கொண்டிருந்த அளவுக்கு அதிகமான 13 கிலோ தோலை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துவிட்டேன். இதோ ஒரு பாடிபில்டராக மாறிவிட்டேன்’’ என்கிறார் பாட் ப்ராக்கோ.

நடந்து நடந்தே எடை குறைத்த மனிதர்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஓவியப்படம்/article9020729.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஒலிம்பிக் போராளி!

 

 
 
masala___2984038f.jpg
 

ஆண்களுக்கான மாரத்தான் ஒலிம்பிக் போட்டியில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஃபெயிசா லிலேசா வெள்ளிப் பதக்கம் வென்றார். எல்லைக் கோட்டைத் தொடுவதற்குச் சில அடிகள் தூரத்திலிருந்து தன் இரு கைகளையும் தலைக்கு மேல் குறுக்காக வைத்தபடி ஓடினார். பதக்கம் வாங்கும்போதும் அதே சைகையைச் செய்தார். எத்தியோப்பியாவில் நடைபெற்றுவரும் அரசியல் சூழ்நிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவும் மக்களின் போராட்டம் உலகின் கவனத்துக்கு வரவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் ஃபெயிசா. ‘‘எங்கள் நாட்டில் மிக மோசமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. ஜனநாயகத்துக்காகக் குரல் கொடுப்பவர்கள் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

ஒரோமோ பழங்குடி மக்களின் நிலங்களை அரசாங்கம் கைப்பற்றிக்கொண்டு, வேறு இடங்களுக்குச் செல்ல வற்புறுத்தி வருகிறது. தங்கள் நிலங்களை விட்டுச் செல்ல மாட்டோம் என்று பழங்குடி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த நடவடிக்கையில் இறங்கினேன். நான் எத்தியோப்பியா சென்றவுடன் கொல்லப்படலாம் அல்லது சிறையில் அடைக்கப்படலாம்.

மிக மோசமான நாடாக மாறிவிட்டது எங்கள் எத்தியோப்பியா. ஒருவேளை நான் வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தாலும் சுதந்திரம் இல்லாத மக்களுக்காகப் போராடவே செய்வேன். ஒரோமோ மக்கள் எங்கள் பழங்குடியினர். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காகவும் அமைதிக்காகவும் போராடுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நிற்பதும் போராடுவதும் என் கடமை என்று நினைக்கிறேன்’’ என்கிறார் ஃபெயிசா லிலேசா.

மிகச் சிறந்த மனிதராகவும் உயர்ந்து நிற்கிறீர்கள் ஃபெயிசா!

இங்கிலாந்தில் வசிக்கும் சிமோன் ஜோன்ஸ் சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு, சொந்தமாகத் தொழில் செய்து வந்தார். திடீரென்று தொழில் நலிவடைந்தது. அவரது காதலியும் பிரிந்து சென்றார். அடுத்த வேளை உணவுக்குக் கூட அவரிடம் பணமில்லை. தங்குவதற்கு வீடு இல்லை. ‘‘உலகமே இருண்டது போலிருந்தது. அப்போதுதான் டெர்மினல் திரைப்படம் என் நினைவுக்கு வந்தது. டாம் ஹான்க்ஸ் விமான நிலையத்திலேயே தங்கியிருப்பார். நானும் அதேபோல விமான நிலையத்தில் தங்க முடிவு செய்தேன். என்னுடைய உண்மையான அடையாளங்களை மறைத்து, போலியான அடையாளங்களுடன் விமான நிலையத்தில் நுழைந்தேன். இரண்டு நாட்களைக் கழிப்பதற்கு மட்டுமே திட்டமிட்டிருந்தேன். ஆனால் விமான நிலையத்தில் நான் எதிர்பார்த்ததை விடவும் வசதிகள் கிடைத்தன.

ஓய்வெடுக்கும் அறை, குளியலறை, இலவச இணைய வசதி, பயணிகள் கொடுக்கும் உணவுகள், காபி என்று வாழ்க்கை எளிதாக நகர்கிறது. அதனால் என் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, நல்ல வேலை கிடைக்கும் வரை இங்கேயே தங்கிக்கொள்வது என்று முடிவு செய்தேன். இங்கே வந்து ஒரு மாதமாகிவிட்டது. இதுவரை செலவு செய்யும் சூழல் ஏற்படவில்லை. அதே நேரத்தில் இந்த விமான நிலையத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை, காவலர்களும் இல்லை. தீவிரவாதிகள் எளிதில் நுழையும் ஆபத்து இருக்கிறது’’ என்று வருந்துகிறார் ஜோன்ஸ். ஹீத்ரோ விமான நிலைய அதிகாரிகள், ‘வீடற்றவர்கள் இப்படி விமான நிலையங்களில் தங்குவது சகஜம்தான். எங்கள் ஊழியர்கள் இவர்களைப் போன்றவர்களுக்குச் சேவை நோக்கில் வேண்டியதை வழங்கி வருகிறார்கள். பாதுகாப்பு குறித்து தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்’ என்கிறார்கள்.

பாதுகாப்பு அதிகரித்திருந்தால் நீங்களே தங்கியிருக்க முடியாது ஜோன்ஸ்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஒலிம்பிக்-போராளி/article9025246.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: வாழ்த்துகள் க்ளார்!

 

 
piki_2980900f.jpg
 

மெரிக்காவின் மாசச்சூசெட்ஸைச் சேர்ந்த க்ளேர் பிக்கியுடோ 100-வது வயதில் டிப்ளோமாவை வாங்கியிருக்கிறார்! ‘80 ஆண்டுகளுக்கு முன்பு என்னால் டிப்ளோமாவைப் பெற முடியவில்லை. என் சகோதரர்கள் படிப்பைத் தொடர வேண்டும் என்பதற்காக, என் படிப்பை அம்மா நிறுத்திவிட்டார். நான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். ஆனால் ஒரு டிப்ளோமா வாங்க முடியவில்லையே என்ற ஏக்கம் மனத்தில் இருந்துகொண்டே இருந்தது. என் மகளிடம் விருப்பத்தை வெளிப்படுத்தினேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். இதோ தேர்வு எழுதி, டிப்ளோமாவைப் பெற்றுவிட்டேன். நூறாவது வயதில் என் ஆசை நிறைவேறும் என்று நான் நினைக்கவே இல்லை. டிப்ளோமா வாங்கும்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. வாழ்க்கையில் ஏதோ சாதித்துவிட்டது போல இருக்கிறது’ என்கிறார் க்ளார் பிக்கியுடோ.

வாழ்த்துகள் க்ளார்!

சீனாவின் டியான்பிங் நகரத்தில் வசிக்கிறார் வாங் ஷி. 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கருவுற்று, 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்! உலகிலேயே மிக நீண்ட கர்ப்பக் காலம் வாங் ஷியுடையது என்கிறார்கள். ‘பிரசவ தேதி வந்த பிறகும் எனக்கு வலி வரவில்லை. நானும் கணவரும் மருத்துவமனைக்குச் சென்றோம். பரிசோதித்த மருத்துவர்கள் நஞ்சுக்கொடி வளர்ச்சியடையவில்லை என்றார்கள். அதற்குப் பிறகு 10 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துகொண்டே இருந்தோம். 14-வது மாதம் குழந்தை பிறக்கப் போகிறது என்று ஆர்வத்துடன் காத்திருந்தோம். ஆனால் குழந்தை போதுமான அளவு வளர்ச்சியடையவில்லை என்றும் அதனால் சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே கொண்டு வர முடியாது என்றும் மருத்துவர்கள் சொன்னவுடன் மிகவும் சோர்வடைந்துவிட்டோம். பரிசோதனைகளுக்கு மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்துவிட்டோம். என் எடையும் 26 கிலோ அதிகரித்துவிட்டது. எப்படியாவது குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். 17 மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 18 அன்று 3.8 கிலோ எடையில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தேன். அதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டன’ என்கிறார் வாங் ஷி. 1945-ம் ஆண்டு அமெரிக்கப் பெண், 375 நாட்கள் கர்ப்பத்தைச் சுமந்திருந்தார். வாங் ஷி 517 நாட்கள். அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் வாங் ஷி 17 மாதக் கர்ப்பம் என்பதற்கு ஆதாரங்கள் வலுவாக இல்லை. அவருக்குப் பிரசவம் செய்த மருத்துவமனை, 9-வது மாதத்திலிருந்துதான் அவருக்கு மருத்துவம் செய்ததாகச் சொல்கிறது. அதற்கு முன் எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார் என்பதற்குச் சான்றுகள் இல்லை. வாங் ஷி சொன்னதன் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். அதனால் வாங் ஷி கின்னஸில் இடம்பிடிக்க மாட்டார். 200 பிரசவங்களில் ஒரு பிரசவம் நஞ்சுக்கொடி பிரச்சினையைச் சந்திக்கிறது. சிலருக்கு அது பெரிய பிரச்சினையாகவும் வரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உன்னை 17 மாதம் சுமந்தேன்னு சொல்வாங்களோ வாங் ஷி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வாழ்த்துகள்-க்ளார்/article9014366.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: தலையில் உட்காரும் ஆந்தைகள்

 
masala_2386269f.jpg
 

தெற்கு ஹாலந்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆந்தைகள் மனிதர்களின் தலை மீது வந்து அமர்கின்றன. 2.7 கிலோ எடை கொண்ட ஐரோப்பிய ஆந்தை மரங்களிலோ, வேலிகளிலோ வந்து அமர்வதில்லை. நடந்துகொண்டிருக்கிற மனிதர்கள், நின்றுகொண்டிருக்கிற மனிதர்களின் தலையை நோக்கிக் குறிவைத்து அமர்கிறது. ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் பறந்து செல்கிறது. ஆந்தை தலையில் வந்து அமர்வதை அங்குள்ள மக்கள் ஆட்சேபம் தெரிவிப்பதில்லை. தலையைக் கொடுத்துவிட்டுக் காத்திருக்கிறார்கள். ஆந்தை கிளம்பிய பிறகு நகர்கிறார்கள். இந்தக் காட்சியைப் புகைப்படங்கள் எடுப்பதற்காக ஏராளமானவர்கள் வருகிறார்கள். ஆந்தைகளின் இந்தச் செயல் மூலம் தங்களுடைய கிராமம் பிரபலமடைந்து வருவதாக அங்குள்ளவர்கள் பெருமைப்படுகிறார்கள். கேமராவைப் பார்த்துவிட்டால் இன்னும் உற்சாகமாகி, தலையில் அமர்ந்தபடி நன்றாகக் காட்சி தருகின்றன ஆந்தைகள்.

அடடா! எவ்வளவு துணிச்சல்!

கனடாவில் வித்தியாசமான முறையில் திருமணக் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு வனப்பகுதிக்கு நண்பர்கள் மற்றும் காதலியுடன் சென்றார் காதலர். அங்கே ஓரிடத்தைத் தோண்டச் சொன்னார். விஷயம் புரியாமல் மண்ணைத் தோண்டினார் காதலி. ஓர் அடி ஆழத்தில் ஒரு பெட்டி வைக்கப்படிருந்தது. அதை எடுத்துத் திறந்தார். அதற்குள் சிறியப் பெட்டி ஒன்று இருந்தது. அதையும் திறந்தார். உள்ளே ஒரு மோதிரம். புரியாமல் காதலரைப் பார்த்தார். சட்டென்று மோதிரத்தை வாங்கி, என்னைத் திருமணம் செய்துகொள்கிறாயா என்று கேட்டார் காதலர். காதலிக்குக் கண் கலங்கிவிட்டது. உடனே தன்னுடைய சம்மதத்தைத் தெரிவித்துவிட்டார். இப்படி ஓர் அழகான திருமணக் கோரிக்கை இதுவரை வைக்கப்பட்டதில்லை என்ற தலைப்பில், இணையதளங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

எங்கிருந்துதான் புதுப் புது டெக்னிக்குகளைக் கண்டுபிடிக்கிறாங்களோ!

தைவானின் தலைநகர் தைபேயில் நாய்களுக்கான சலூன்கள் பிரபலமடைந்து வருகின்றன. சலூன்களுக்கு நாய்களை அழைத்துச் சென்றால், வட்டம், சதுரம் போன்ற வடிவங்களில் முடிகளை வெட்டி, நாய்களின் தோற்றத்தையே மாற்றிவிடுகின்றனர். முடி வெட்டும் வரை நாய்கள் மிக அமைதியாக ஒத்துழைப்பு தருவதுதான் இதில் ஆச்சரியம். தங்கள் செல்ல நாய்கள் சலூன்களின் மூலம் மிக அழகாக மாறிவிடுவதால், நாய்களின் உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஒருமுறை வட்டமான முக அமைப்பு இருந்தால் அடுத்த முறை சதுரத்துக்கு மாற்றிக்கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

நாய்களுக்கு ஸ்பா ஆரம்பிச்சிடுவாங்க போல…

அழிந்து போன பறவைகளில் ஒன்று யானைப் பறவை. ஒருகாலத்தில் உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. 10 அடி உயரமும் 500 கிலோ எடையும் கொண்டது. 800 ஆண்டுகளுக்கு முன் யானைப் பறவை இட்ட முட்டை ஒன்று லண்டனில் ஏலத்துக்கு வந்திருக்கிறது. இந்த முட்டையின் விலை 48 லட்ச ரூபாய். உலகில் இதுவரை 25 யானைப் பறவை முட்டைகளே இருப்பதால், இந்த முட்டைக்கு வரவேற்பு அதிகம் இருக்கிறது. 200 கோழி முட்டைகளைச் சேர்த்தால் ஒரு யானைப் பறவை முட்டை.

முட்டையும் பெருசு… ஏலமும் பெருசு!

லண்டனில் வசிக்கும் நடாலிக்கு இசை என்றால் ஆர்வம் அதிகம். அதிலும் வினைல் வெளியிடும் நிர்வனா இசை ஆல்பங்கள் மீது கூடுதல் ஈடுபாடு. நிர்வனா இசை ஆல்பங்களின் அட்டைகளைத் தன் முகத்தில் வரைந்துகொள்ள விரும்பினார் நடாலி. ஃபேஸ்புக் நண்பர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார். அவர்கள் 11 இசை ஆல்பங்களின் அட்டைகளைச் சிபாரிசு செய்தனர். அவற்றை எல்லாம் முகத்தில் வரைந்து, புகைப்படங்கள் எடுத்து, இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் இந்த இசைக் காதலி.

ம்ம்... ரசனை என்னவெல்லாம் செய்ய வைக்குது…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தலையில்-உட்காரும்-ஆந்தைகள்/article7141599.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: ராட்சச முத்து!

 

 
world1_2985244f.jpg
 

உலகிலேயே மிகப் பெரிய முத்து பிலிப்பைன்ஸில் கிடைத்திருக்கிறது. 34 கிலோ எடை கொண்ட இந்த ராட்சச முத்து சுமார் ரூ.670 கோடி மதிப்பு கொண்டது! புயர்டோ பிரின்செஸ்கா நகரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மீனவர் ஒருவருக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த மீனவருக்கு இது முத்து என்றோ, அது விலை மதிப்புமிக்கது என்றோ தெரியவில்லை. அதிர்ஷ்ட கல்லாக நினைத்து, தன் மர வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு எரிந்து போனது. ஆனால் முத்தை மட்டும் பத்திரமாக மீட்டெடுத்தார் மீனவர். வீடுகளைப் பார்வையிட வந்த அதிகாரிகளிடம் முத்தை ஒப்படைத்தார். 6.4 கிலோ எடை (ரூ.234 கோடி) கொண்ட ஒரு முத்துதான் இப்போது உலகின் மிகப் பெரிய முத்தாக இருந்து வருகிறது. “இதன் மதிப்பு முறையாக கணக்கிடப்பட்டவுடன், உலகின் மிகப் பெரிய, மதிப்புமிக்க முத்தாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதற்குப் பிறகு புயர்டோ பிரின்செஸ்கா நகரம் உலகின் மிகப் பெரிய இயற்கை முத்து வைத்திருக்கும் நகரம் என்ற சிறப்பைப் பெறும்” என்கிறார் ஓர் அதிகாரி.

ரூ.670 கோடியில் அந்த மீனவருக்கும் ஏதாவது வழங்கக்கூடாதா?

அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் வசிக்கிறார் மாடல் சம்மர் ரேன் ஓக்ஸ். கடந்த 11 ஆண்டுகளாக தான் வசித்து வரும் 1,200 சதுர அடி கொண்ட வீட்டை, தோட்டமாக மாற்றிவிட்டார். சமையலறை, படுக்கை அறை, கூடம், குளியலறை, கழிவறை, பால்கனி, நூலக அறை என்று எங்கும் விதவிதமான செடிகள் செழித்து வளர்ந்திருக்கின்றன! ஜன்னல், கூரை, சுவர்கள் என்று எங்கெங்கும் செடிகள்தான். இதில் உணவுக்கு பயன்படுத்தக்கூடிய தாவரங்களும் அழகுக்கு வளர்க்கப்படும் தாவரங்களும் இருக்கின்றன. “நான் இதற்கு முன்பு பென்சில்வேனியாவில் வசித்தேன். அங்கே 5 ஏக்கர் நிலத்தில் செடி, மரம், கொடிகளுக்கு நடுவே வாழ்ந்தேன். ஆனால் மாடலாக மாறியவுடன் நியூயார்க் வர வேண்டியதாகிவிட்டது. அதனால் எனக்கு ஏற்ற சூழலை உருவாக்கிக் கொண்டேன். ஒரு மாடலாக இருந்தாலும் என் ஆர்வம் எல்லாம் சுற்றுச்சூழலில்தான் இருக்கிறது.

18 வயதில் இருந்து செடிகள், மரங்களை வளர்த்து வருகிறேன். சூழலியல் பயிற்சி பெற்றிருக்கிறேன். சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். நான் சாப்பிடும் உணவுப் பொருட்கள் முதல் அணியும் ஆடை வரை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறேன். என் வீட்டுக்குள் சுமார் 500 செடிகள் இருக்கின்றன!

தினமும் ஒரு மணி நேரம் செலவிட்டு, தண்ணீர் விடுகிறேன். வாரத்துக்கு ஒருமுறை இயற்கை உரமிடுவேன். நான் வீட்டுக்குள் நுழையும் ஒவ்வொரு தடவையும் இந்த பசுஞ்சோலை எனக்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. என் வீட்டுக்கு வருகிறவர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். அவர்களும் தங்கள் வீடுகளில் சில செடிகளையாவது வளர்க்க ஆரம்பிக்கிறார்கள்” என்கிறார் சம்மர் ரேன் ஓக்ஸ்.

அட! வீட்டுக்குள்ளே பசுஞ்சோலை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ராட்சச-முத்து/article9031111.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: விவசாயிகளின் பிரச்சினைகள் குறையுமே!

 

 
masala_2987096f.jpg
 

தர்பூசணிக் கொடியில் ஒரு தடவைக்கு 1 முதல் 4 தர்பூசணிகளை மட்டுமே அறுவடை செய்ய முடியும். ஆனால் சீனாவைச் சேர்ந்த விவசாயத் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று, ஒரே கொடியில் 131 தர்பூசணிப் பழங்களை அறுவடை செய்திருக்கிறது. ஜெங்ஜோவ் விதைத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், சூப்பர் தர்பூசணிக் கொடியை உருவாக்கி, கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுவிட்டது. பொதுவாக தர்பூசணிக் கொடிகளில் 12 காய்கள் காய்க்க ஆரம்பிக்கும்.

அதில் சில காய்கள் உதிர்ந்துவிடும். இன்னும் சில காய்கள் வெம்பிவிடும். இறுதியில் வலுவான சில காய்கள் மட்டுமே பழமாகும். ஆனால் சூப்பர் தர்பூசணிக் கொடியில் காய்கள் உதிர்வதோ, வெம்புவதோ இல்லை. ஏப்ரல் 26-ம் தேதி 100 சதுர மீட்டர் நிலத்தில் விதை நடப்பட்டது. மே முதல் தேதி விதையில் இருந்து முளை வந்தது. ஜூன் முதல் தேதி பூக்க ஆரம்பித்தது. ஜூலை 31 அன்று 131 தர்பூசணிப் பழங்கள் அறுவடை செய்யப்பட்டன. எண்ணிக்கையில் மட்டுமல்ல, எடையிலும் இந்த சூப்பர் தர்பூசணிக் கொடி அசர வைத்துவிட்டது.

மிகச் சிறிய தர்பூசணி 5 கிலோ எடையும் மிகப் பெரிய தர்பூசணி 19 கிலோ எடையும் கொண்டவையாக இருந்தன. சூப்பர் தர்பூசணிக் கொடிக்கு ‘டையலாங் 1508’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளும் சக்தி, இந்தக் கொடிகளுக்கு அதிகமாக இருக்கிறது. ‘90 நாட்களில் 131 பழங்கள் விளைவித்ததற்கு முக்கியக் காரணம் தண்ணீரின் வெப்பநிலை. எங்கள் குழுவினர் 90 நாட்களும் நீர்ப் பாய்ச்சும்போது வெப்பநிலையைக் கண்காணித்தனர். ஒரே அளவு இருக்குமாறு பார்த்துக்கொண்டனர்’ என்கிறார் ஸுகாங் என்ற ஆராய்ச்சியாளர்.

இப்படி விளைந்தால் விவசாயிகளின் பிரச்சினைகள் குறையுமே!

ஜெர்மனியில் உணவு வீணாவதைத் தடுக்கப் பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் யுவோகி உணவு விடுதி, அதிரடியாக ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறது. வீணாகும் உணவுப் பொருட்களுக்குக் கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறது. ‘தங்களுக்குத் தேவையான உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்வதற்காகவே பஃபே வழிமுறையைக் கையாள்கிறோம். அதிலும் உணவுகளைத் தேவைக்கு அதிகமாக எடுத்து வைத்துக்கொண்டு, அப்படியே வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். பஃபேக்கான நோக்கமே இதில் அடிபட்டு விடுகிறது.

அதற்காக நாங்கள் குறிப்பிட்ட இடைவேளைகளில் 5 வகை உணவுகளைக் குறைவாக வழங்குகிறோம். தேவை ஏற்பட்டால் மீண்டும் மீண்டும் வழங்குவோம். இப்படிப் பார்த்துப் பார்த்து உணவுகளை அளிக்கும்போதும் பலர் வீணாக்கிவிடுகின்றனர். அவர்களுக்கு உணவுக்கான கட்டணத்துடன் வீணாகும் உணவுக்கான கட்டணத்தையும் வசூலிக்கிறோம். இப்படிச் செய்யும்போது அடுத்த தடவை உணவுகளை வீணாக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். வீணாகும் உணவுகளுக்கான கட்டணம் முழுவதையும் அறக்கட்டளைகளுக்கு வழங்கி விடுகிறோம். இந்தத் திட்டத்தை ஆரம்பித்ததில் இருந்து உணவு வீணாவது குறைந்து வருகிறது. மக்களிடம் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது’ என்கிறார் உணவு விடுதியின் உரிமையாளர் குவோயு.

அட! சாப்பிடுவதற்கும் கட்டணம்; வீணாக்குவதற்கும் கட்டணம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-விவசாயிகளின்-பிரச்சினைகள்-குறையுமே/article9035535.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: மண் குளியல்!

 

 
masala_2385447f.jpg
 

ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவு கியுஷு. அங்கே வெந்நீர் ஊற்றுகள் ஏராளமாக இருக்கின்றன. இங்கே நிலவும் பருவநிலைக்காகவும் வெந்நீர் ஊற்றுகளுக்காகவும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். இங்குள்ள ஸ்பாக்களில் மண் குளியல் சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. எரிமலைப் பகுதிகளில் இருந்து எடுத்து வந்த ஈரமண்ணை ஒரு பெட்டியில் கொட்டுகிறார்கள்.

பெட்டிக்கு அடியில் ஊற்றுகளில் இருந்து கிடைக்கும் நீரைச் சூடேற்றுகிறார்கள். மண் சூடாக இருக்கும்பொழுது, மனிதர்களைப் பெட்டிக்குள் படுக்க வைத்து, மேலே மண்ணைக் கொட்டி மூடி விடுகிறார்கள். மண்ணில் உள்ள வெப்பம் குறைந்தவுடன் மனிதர்களை வெளியில் எடுக்கிறார்கள். பிறகு வெந்நீர் ஊற்று நீரால் குளிக்க வைக்கிறார்கள். இந்த மண் குளியலால் குழந்தையின்மை, சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் சரியாகும் என்றும் உடல் எடை குறையும் என்றும் சொல்கிறார்கள்.

நோய் சரியாகிறதோ, இல்லையோ மண் குளியலால் புத்துணர்ச்சி கிடைப்பதாகப் பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். இது ஒன்றும் புதிய விஷயமில்லை. பன்றி, நீர்யானை, யானை போன்ற விலங்குகள் எல்லாம் சகதியில் உழன்றுவிட்டு, தண்ணீரில் குளித்து, புத்துணர்வு பெற்றுக்கொள்கின்றன. அதைத்தான் செய்கிறோம் என்கிறார்கள் ஸ்பா உரிமையாளர்கள்.

ம்… உடம்புக்கு நல்லதுன்னு சொல்லிட்டா எதை வேணும்னாலும் செய்யத் தயாரா இருக்காங்க…

சீனாவின் ஸுவாங்ஸி கிராமத்தில் வசிக்கிறார்கள் சென் டியான்வென் குவோ கைரன் தம்பதியர். 1989-ம் ஆண்டு தெருவில் ஒரு கைவிடப்பட்ட சிறுவனைக் கண்டனர். அவனை வளர்க்க ஆரம்பித்தனர். கிராமத்தில் கைவிடப்பட்ட குழந்தைகளைக் கவனிக்க எந்த அமைப்பும் இல்லாததால், வரிசையாக அவர்கள் வீட்டுக்குக் குழந்தைகளை அனுப்பி வைத்தனர். கடந்த 26 வருடங்களில் 40 ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள். இவர்களுடன் டியான்வென் குழந்தைகள் 3 பேரையும் வளர்த்தனர்.

குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவே தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டார் டியான்வென். தன்னிடமுள்ள நிலத்தில் விவசாயம் செய்து செலவுகளைச் சமாளிக்கிறார். அரசாங்கம் ஒவ்வொரு குழந்தைக்கும் குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. சிலர் தாங்களாக முன்வந்து நன்கொடைகளையும் அளிக்கிறார்கள். குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்திக்கொண்டு மிகவும் சந்தோஷமாகத் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

ஆனால் அருகில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை இவர்களுடன் விளையாடுவதற்கோ, பேசுவதற்கோ அனுமதித்ததில்லை. இன்று மக்களின் மனநிலை மாறிவிட்டது. கிராமத்தினரும் டியான்வென் வளர்த்த 5 குழந்தைகளும் சேர்ந்து ஒரு பெரிய வீட்டை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வீட்டில் இன்னும் சில குழந்தைகளைக் கூட பராமரிக்க முடியும் என்கிறார்கள் டியான்வென்னும் குவோவும்.

அழகான தம்பதியர்!

நெதர்லாந்தின் ராட்டர்டேம் பகுதியில் ஸ்ஹி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகளையும் குப்பைகளையும் மக்கள் கொட்டி வந்தார்கள். 37 வயது டாம்மி க்ளெய்ன் தனி ஒருவராக இந்த ஆற்றைச் சுத்தம் செய்யும் பணியில் இறங்கினார். தினமும் அரை மணிநேரம் ஆற்றங்கரைக்குச் சென்று, குப்பைகளை ஒரு பையில் சேகரிக்க ஆரம்பித்தார். 5 வாரங்களில் 100 மீட்டர் தூரத்தைச் சுத்தம் செய்து முடித்துவிட்டார். தான் சுத்தம் செய்யும் விஷயத்தையும் புகைப்படங்களையும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டார்.

அதைப் பார்த்துவிட்டு நிறையப் பேர் சுத்தம் செய்ய வந்தனர். இப்பொழுது ஆற்றங்கரையோரம் சுத்தமாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறது. “கர்ப்பமாக இருக்கும் என் மனைவி, ஒருநாள் ஆறு ஏன் அசுத்தமாக இருக்கிறது என்று குழந்தை கேட்கப் போகிறது. உன் அப்பாதான் சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டார் என்று சொல்வேன் என்றார். விளையாட்டுக்கு அவர் சொன்னாலும் என் குழந்தை பிறக்கும்போது சுத்தமான ஆறாக இது மாறவேண்டும் என்று முடிவெடுத்தேன். அதைச் செயல்படுத்தியும் விட்டேன்’’ என்கிறார் க்ளெய்ன். நெதர்லாந்தில் மட்டுமில்லை, க்ளெயின் புகைப்படங்களும் கட்டுரையும் மற்ற நாடுகளிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

நாமும் இப்படி இறங்கினால் எத்தனையோ இடங்கள் சுத்தமாகும்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மண்-குளியல்/article7140667.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: குழந்தைகளை, குழந்தைகளாக வாழ விடுங்கள்!

 

masala_2988450f.jpg
 

தங்களுடைய பிள்ளைகள் மிகச் சிறந்தவர்களாக வரவேண்டும் என்ற எண்ணம் சீனப் பெற்றோர் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதற்காகச் சிறிய வயதிலேயே எல்லாவற்றையும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் சிஇஒ பயிற்சி கொடுக்கும் இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இங்கே 3 வயது முதல் 12 வயது குழந்தைகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் கட்டணம். வாரத்துக்கு 2 வகுப்புகள். வார்த்தைகளிலும் வாக்கியங்களிலும் விடுபட்ட எழுத்துகளை நிரப்புவது, பில்டிங் செட்டை அடுக்குவது போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

‘போட்டி நிறைந்த உலகம் என்பதால் உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் சக்தி வாய்ந்த மனிதர்களாக வாழ்வதற்கு இந்தப் பயிற்சி உதவும்’ என்று விளம்பரம் செய்யப்படுகிறது. இது போன்ற விளம்பரங்களால் ஈர்க்கப்படும் வசதி படைத்த பெற்றோர்கள், ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளைச் சேர்த்து விடுகிறார்கள். ஆனால் இந்தப் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் குழந்தைகளைவிட, அவர்களின் பெற்றோர்களுக்குத்தான் அதிக அளவில் பயன் தருகிறது.

பிள்ளைகள் சிஇஒ பயிற்சி பெறுவது பெற்றோர்களின் குடும்ப கவுரவமாக மாறிவிட்டது. ‘இந்தப் பயிற்சியில் பெறும் அறிவை மற்ற குழந்தைகள் தங்கள் அனுபவங்கள் மூலம் வீட்டிலேயே பெற்றுவிடுகிறார்கள். 3 வயதில் சிஇஒ பயிற்சி எல்லாம் மிக மோச மான விஷயம்’ என்கிறார் ஒரு குழந்தையின் அம்மா. நிபுணர்களும் 3 வயதில் இருந்து குழந்தைகளைத் தலைவர்களாக மாற்ற முடியாது என்றே கூறுகிறார்கள். படிப்பு போக மீதி நேரத்தை குழந்தைகள் சொந்தமாகச் செலவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்கிறார்கள்.

குழந்தைகளை, குழந்தைகளாக வாழ விடுங்கள்!

வியட்நாமைச் சேர்ந்த 30 வயது லி தி என், சமீபத்தில் ஒரு காலையும் கையையும் இழந்தார். ஹெல்த் இன்சூரன்ஸில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் தர முடியாது என்று மறுத்துவிட்டதோடு, அவர் மீது புகாரும் கொடுத்துவிட்டது. லி தி என் நடத்தி வந்த தொழில் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதைச் சரி செய்ய அவரால் இயலவில்லை. விபத்துக்கு முன்பு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்தார். அடுத்த சில வாரங்களில் ஒரு நண்பன் மூலம் தன் காலையும் கையையும் 1.5 லட்சம் ரூபாய் கொடுத்து வெட்டிக்கொண்டார். இது இயல்பான விபத்தாக இருக்க வேண்டும் என்பதற்காக ரயில் தண்டவாளத்துக்கு அருகில் படுத்திருந்தார்.

அந்த வழியே வந்த ஓர் இளைஞர் இவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டார். சிகிச்சைப் பெற்றுத் திரும்பிய லி தின் என், இன்சூரன்ஸ் தொகை கேட்டு விண்ணப்பித்தார். சமீபத்தில்தான் மிகப் பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் எடுத்ததால், சந்தேகம் வந்து விசாரித்திருக்கிறார்கள். விஷயம் வெளியே வந்துவிட்டது. கால், கையை இழந்து, பணத்தை இழந்து, இன்சூரன்ஸ் தொகையை இழந்து தவிக்கிறார் லி தி என். ஒரு பெண் தனக்குத்தானே கை, காலை வெட்டிக்கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். ஒரு பக்கம் வழக்கு நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் அவரது கை, காலை இணைக்க முடியுமா என்று மருத்துவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

அடக் கொடுமையே…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-குழந்தைகளை-குழந்தைகளாக-வாழ-விடுங்கள்/article9039767.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: உள்ளங்களைக் கொள்ளை கொண்ட புரூனோ!

bruno_2989457f.jpg
 

மெரிக்காவின் விர்ஜினியா பகுதியில் குடித்து விட்டு, கார் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய குற்றத்துக்காக ஒரு பெண் கைது செய்யப் பட்டார். காரின் பின் பகுதியில் ஒரு வயது குழந்தை ஒன்று, வாந்தி எடுத்த நிலையில் அழுது கொண்டிருந்தது. உடனே காவல்துறை அதிகாரி, குழந்தையைத் தூக்கினார். குளிக்க வைத்தார். துண்டால் துடைத்து பால் கொடுத்தார். காவல் நிலையத்தில் இருந்த ஒரு கரடி பொம்மையை விளையாடக் கொடுத்தார். இருக்கையில் அமர்ந்து, தன் மார்பில் குழந்தையைப் படுக்க வைத்து, தூங்க வைத்தார். அதிகாரியின் அன்பான கவனிப்பில், குழந்தை தன் அம்மாவைத் தேடி அழவே இல்லை. பிறகு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து வந்தவர்களிடம் குழந்தையைப் பத்திரமாக ஒப்படைத்தார். அதிகாரியின் அன்பைக் கண்டு எல்லோரும் நெகிழ்ந்து போனார்கள்.

காவல் துறை உங்கள் நண்பன் என்று நிரூபித்திருக்கிறார்!

அமெரிக்காவின் மின்னசோட்டா லாங்வில் பகுதி மக்களின் அடையாளமாக மாறியிருக்கிறது 12 வயது புரூனோ. இங்கே 150 குடும்பங்கள் வசிக்கின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும் புரூனோ செல்லப் பிராணி. ஆனால் புரூனோ வசிப்பதோ 4 மைல் தொலைவில் இருக்கும் லாரியின் குடும்பத்துடன். தினமும் 4 மைல் தொலைவைக் கடந்து, லாங்வில் மக்களைச் சந்திக்கிறது. விளையாடுகிறது. அவர்கள் கொடுக்கும் உணவைச் சாப்பிடுகிறது. மீண்டும் மாலையில் தன் உரிமையாளர் வீட்டுக்குத் திரும்பி விடுகிறது. ‘புரூனோ எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. ஒரு குப்பைத் தொட்டிக்கு அருகில் புரூனோவைப் பார்த்தேன். வீட்டுக்கு எடுத்து வந்தேன். ஆனால் எங்கள் செல்ல நாய் ஒன்றை இழந்திருந்ததால், என் மனைவிக்கு புரூனோ மீது ஆர்வம் இல்லை. எங்காவது விட்டுவிடலாம் என்று ட்ரக்கில் வைத்து, லாங்வில் சென்றேன். புரூனோவைப் பார்த்ததும் குழந்தைகளும் பெரியவர்களும் உற்சாகமானார்கள். குட்டி புரூனோ எல்லோரையும் தன் அன்பாலும் அழகாலும் வசீகரித்துவிட்டான். ட்ரக்கை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். வீட்டில் பார்த்தால் புரூனோ! எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. 4 மைல் தூரமும் ட்ரக்கில் தொங்கிக்கொண்டு வந்து சேர்ந்துவிட்டது. அதற்கு மேல் எங்களால் புரூனோவை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. எங்களுடன் தங்க விரும்பும் புரூனோ, லாங்வில் மக்களின் அன்புக்காகவும் ஏங்குகிறது. அதனால் கடந்த 12 வருடங்களாக லாங்வில் சென்று வருகிறது. மோசமான வானிலை காரணமாகச் சில நாட்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும். மற்றபடி புரூனோ பயணிக்காத நாட்களே இல்லை. வயதாகிவிட்டதால் தினமும் அவ்வளவு தூரம் நடக்க முடிவதில்லை. அதனால் ஏதாவது வாகனங்களில் வருபவர்கள் இறக்கிவிட்டுச் செல்கிறார்கள்’ என்கிறார் லாரி. ‘எங்கள் பகுதியில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரியாதவர்களாகக் கூட இருக்கிறோம். ஆனால் புரூனோவைத் தெரியாதவர்களே இல்லை. அவனால்தான் எங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரித்திருக்கிறது! அவன் வராத நாட்கள் வெறுமையாக இருக்கும். அவனின் அன்பை உலகத்துக்குச் சொல்வதற்காகவே புரூனோ சிற்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். லாங்வில் பகுதியின் செல்ல நாயும் அம்பாசடரும் புரூனோதான்! இங்கிருக்கும் ஒவ்வொருவரும் புரூனோ பற்றி ஏராளமான கதைகள் வைத்திருக்கிறார்கள். எதிர்காலத் தலைமுறையினரிடம் மிகப் பெரிய பழுப்பு நாய் ஒன்று எல்லோர் மனங்களையும் கொள்ளைகொண்டது, அது பெயர் புரூனோ என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்!’ என்கிறார் ரிச்சர்ட்.

உள்ளங்களைக் கொள்ளை கொண்ட புரூனோ!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உள்ளங்களைக்-கொள்ளை-கொண்ட-புரூனோ/article9042573.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: சிறைச்சாலை புத்தகம்!

 

 
masala_2384288f.jpg
 

அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில் 1896-ம் ஆண்டு முதல் ஒரு சிறைச்சாலை இயங்கி வந்தது. இங்கிருந்த சிறைக் கைதிகளிடம் மருத்துவம், தோல், உயிர் வேதியியல் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இது பெரிய சர்ச்சையாகி, 1995-ம் ஆண்டு இந்தச் சிறைச்சாலையை மூடிவிட்டனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, மாத்யு கிறிஸ்டோபர் என்ற புகைப்படக்காரர் சிறைச்சாலைக்குச் சென்றார்.

1970-ம் ஆண்டில் சிறைக்குள் நடைபெற்ற கலகங்கள், பாலியல் வன்முறைகள், கொலைகள் போன்றவற்றைச் சுவர்களில் எழுதப்பட்டுள்ள அறிக்கைகளிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது என்கிறார் மாத்யு. ’கைவிடப்பட்ட அமெரிக்காவும் அதன் விளைவுகளும்’ என்ற தலைப்பில் வெளிவர இருக்கும் புத்தகத்தில், இந்தச் சிறைச்சாலைப் புகைப்படங்கள் இடம்பெற இருக்கின்றன.

சிறைக்கூடங்கள் முற்றிலும் வேறுபட்ட ஓர் உலகமாக இருக்கின்றன. சுண்ணாம்பு இழந்த சுவர்களும் துருப்பிடித்த கதவுகளும் அழியாத கரும்பலகைகளும் அலங்கோலமான படுக்கைகளும் திகிலூட்டும் வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன என்கிறார் மாத்யு.

ஒரு சமூகத்தின் நாகரீகத்தை அதன் சிறைச்சாலைகளுக்குள் சென்றால்தான் கணிக்க முடியும் என்றார் தஸ்தாயெவ்ஸ்கி… எத்தனை உண்மை!

கைலி ஜென்னர் அமெரிக்காவின் புகழ்பெற்ற மாடல். அவரது உதடுகளைப் போல, தங்களது உதடுகளையும் அளவுக்கு அதிகமாக பெரிதாக்கிக் காட்டுவதுதான் கைலி ஜென்னர் சேலஞ். நன்றாக இருக்கும் உதடுகளை வித்தியாசமாகக் காட்டிக்கொள்வதில் ஆண்களும் பெண்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒரு தம்ளர் அல்லது வாய் அகன்ற பாட்டிலை எடுத்துக்கொண்டு, வாயை அதற்குள் விட வேண்டும். பிறகு தம்ளருக்குள் இருக்கும் காற்றை வாயால் இழுக்க வேண்டும். இப்பொழுது தம்ளர் வாயுடன் ஒட்டிக்கொள்ளும்.

சிறிது நேரத்துக்குப் பிறகு தம்ளரை பிடித்து இழுக்க வேண்டும். அவ்வளவு எளிதில் தம்ளர் வாயை விட்டு வராது. நீண்ட முயற்சிக்குப் பிறகு, மிகுந்த வலியோடு தம்ளர் வெளியே வரும். சாதாரண உதடு பெரியதாக வீங்கியிருக்கும். சிலருக்குச் சில மணி நேரங்கள் வரை இந்த வீக்கம் அப்படியே இருக்கும்.

ஒரு சிலருக்கு ஒரு நாள் முழுவதும் கூட உதடு வீங்கியே இருக்கும். மீண்டும் உதடு வீங்க வேண்டும் என்றால் மறுபடியும் தம்ளருக்குள் வாயை விட வேண்டும். வலி மிகுந்த இந்தச் சவாலை இளம் ஆண்களும் பெண்களும் விரும்பிச் செய்துகொள்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம். கைலி ஜென்னர் இதுபோன்ற முயற்சிகளைக் கைவிடும்படிக் கேட்டுக்கொண்டார். ஆனால் அதனை கேட்கத்தான் யாரும் தயாராக இல்லை.

சே! என்ன ரசனையோ… என்ன ஆர்வமோ…

சீனாவில் வசிக்கிறார் 66 வயது ஸி ஹூவோ. இவர் சைக்கிளில் பல நாடுகளைச் சுற்றி வருகிறார். 1993ம் ஆண்டு சைக்கிள் பயணத்தை ஆரம்பித்தார். சீனாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சைக்கிளில் சென்று திரும்பியிருக்கிறார். 11 ஐரோப்பிய நாடுகளையும் சைக்கிள் மூலமே சுற்றி வந்திருக்கிறார்.

இதுவரை 1,80,000 கிலோமீட்டர்களைக் கடந்திருக்கிறார். இந்த ஆண்டு 67 நாட்கள் பயணமாக வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, மலேசியா நாடுகளுக்குச் சென்று திரும்பியிருக்கிறார். ஒருமுறை விபத்து ஏற்பட்டு, 30 செ.மீ. நீளத்துக்கு இரும்புக் கம்பி இடுப்பில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் சைக்கிள் பயணத்தை ஸி கைவிடவில்லை.

அடடா! உதாரண மனிதர்!

சீனாவின் ஷென்ஸென் விமான நிலையத்தில் ஒரு பெண் மிகவும் பதற்றமாக இருந்தார். சுங்க அதிகாரிகள் சந்தேகத்துடன் அவரது பையை வாங்கிப் பரிசோதித்தனர். ஆனால் அதில் ஒன்றுமே இல்லை. ஆனாலும் அந்தப் பெண்ணிடம் பதற்றம் தணியவில்லை. தன் ஆடையை இறுக்கிப் பிடித்தபடி ஒன்றும் இல்லை என்று கூறிக்கொண்டே இருந்தார்.

அவரை அழைத்து தனியாகப் பரிசோதித்தபோது, உடல் முழுவதும் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள யுவான் கரன்ஸியை மறைத்து வைத்திருந்தார். சட்டவிரோதமாக கரன்ஸியை மாற்றும் வேலையைச் செய்து வருவது தெரிந்தது. கடந்த 15 நாட்களில் மட்டும் 90 தடவை ஹாங்காங் எல்லையைக் கடந்து சென்றிருக்கிறார். இந்த ஏப்ரலில் மட்டும் மிக அதிக அளவில் கரன்ஸி பரிமாற்றம் நடந்திருப்பதாக சங்க அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

பல நாள் திருடர் ஒருநாள் அகப்பட்டுட்டார்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சிறைச்சாலை-புத்தகம்/article7137300.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: நீரில் வளரும் உணவுப் பொருள்!

C
 
masala_2382928f.jpg
 

தாவரங்களை மண்ணில் வளர்க்காமல் காற்றிலும் நீரிலும் வளர்க்கக்கூடிய புதிய நுட்பம் வளர்ந்து வருகிறது. அதைப் பயன்படுத்தி கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் உணவகத்தில் தாவரங்களை வளர்த்து வருகிறார்கள். உணவகத்தின் உள்ளே 24 தூண்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தூணிலும் 44 செடிகள் வளர்க்கப்படுகின்றன. கீரைகள், காய்கறிகள், பழங்கள் எல்லாம் இந்தத் தாவரங்களில் இருந்து உணவு விடுதிக்குக் கிடைக்கின்றன.

வாரம் ஒரு முறை பறிக்கப்பட்டு, விதவிதமான சிறப்பு உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள். வறட்சியாக, விளைவிக்க முடியாத பகுதிகளில் கூட காற்று மூலம் தாவரங்களை வளர்க்கலாம். சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. நீர் மூலம் வளர்க்கும் தாவரங்களுக்கும் நிலத்தில் வளர்க்கும் தாவரங்களுக்குத் தேவைப்படும் தண்ணீரில் 10 சதவீதம் இருந்தால் போதுமானது.

அடடா! வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை நாமே உற்பத்தி செய்துகொள்ளலாம் போல!

அமெரிக்காவில் உள்ள மினியாபொலிஸில் வசிக்கிறார் 70 வயது ஆலன் லா. ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற ஆலன், கடந்த 15 ஆண்டுகளாகப் பசியால் வாடும் மக்களுக்கு சாண்ட்விச்களை வழங்கி வருகிறார். 1999ம் ஆண்டு இந்த நல்ல காரியத்தை ஆரம்பித்த ஆலன், இதுவரை 10 லட்சம் சாண்ட்விச்களை வழங்கியிருக்கிறார். இவரை எல்லோரும் ’சாண்ட்விச் மேன்’ என்றே அழைக்கிறார்கள். பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களிடமிருந்து சாண்ட்விச்களை நன்கொடையாகப் பெற்றுக்கொள்கிறார். ’ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்துவோம்’ என்று எழுதப்பட்டுள்ள தன்னுடைய மினி வேனில் சாண்ட்விச்களை ஏற்றிக்கொண்டு, இரவு 9 மணிக்குக் கிளம்புகிறார்.

ஒவ்வோர் இடமாகச் சென்று சாண்ட்விச்களை வழங்குகிறார். காலை 10 மணிக்கு அவரது வேலை முடிகிறது. மீண்டும் வீட்டுக்கு வந்து சாண்ட்விச்களைத் தயாரிக்கிறார். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் சாண்ட்விச் வழங்கும் பணிக்குச் செலவிடுகிறார். காரிலேயே 2 மணி நேரம் மட்டும் தூங்கிக்கொள்கிறார். மீதி நேரங்களில் நன்கொடையாளர்களைத் தேடிச் செல்கிறார். புற்றுநோயிலிருந்து மீண்டவர் ஆலன். தற்போது மூட்டுவலியால் அவதிப்படுகிறார். ஆனாலும் எந்தக் காரணத்துக்காகவும் சாண்ட்விச் வழங்கும் பணியை நிறுத்தவே இல்லை. ஒருமுறை சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அன்று இரவு மருத்துவச் சீருடையில் காரில் சென்று, சாண்ட்விச்களை வழங்கிவிட்டு வந்தார். ஏழைகளுக்கு உணவளிப்பது என் நோக்கம் அல்ல, அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே என் நோக்கம் என்கிறார் ஆலன்.

சாண்ட்விச் மேனுக்கு வந்தனங்கள்!

லாஸ் ஏஞ்சல்ஸில் யூசெஃப் சலெ எராகட் மக்களின் மனநிலையை அறிந்துகொள்வதற்காக ஒரு காரியத்தைச் செய்தார். சாலையில் செருப்பின்றி அமர்ந்துகொண்டார். அந்த வழியே செல்பவர்களைக் கை நீட்டி அழைத்தார். ஒவ்வொருவரும் எரிச்சலுடன் நின்றனர். சிலர் பணம் இல்லை என்று கூறி நடந்தனர். சிலரோ என்ன வேண்டும் என்று அதிகாரத்தோடு கேட்டனர். ’பிறருக்குக் கொடுப்பவர்கள் ஒருநாளும் ஏழைகளாக இருக்க முடியாது’ என்ற வாசகம் உள்ள அட்டையை எடுத்துக் காண்பித்தார். தன்னிடமுள்ள பணத்தை அவர்களிடம் நீட்டினார்.

சிலர் கடுமையாகத் திட்டினர். சிலர் பணத்தை வாங்கி, அவர் முகத்தில் வீசி எறிந்தனர். எல்லாக் காட்சிகளையும் வீடியோவோகப் பதிவு செய்துகொண்டார் எராகட். ஒருநாளின் முடிவில் இருவர் மட்டுமே அவரிடம் அன்புடன் பேசினர். அதில் ஒரு பெண், அவரைப் புரிந்துகொண்டு, தன்னிடமுள்ள பணத்தை வழங்கினார். அன்பு செலுத்துவதில் ஏழைகள் மிகப் பெரிய பணக்காரர்களாக இருக்கின்றனர். ஆனால் பணக்காரர்கள் இந்த விஷயத்தில் பரம ஏழைகளாக இருக்கிறார்கள்’’ என்கிறார் எராகட்.

நீங்க சொல்றது உண்மைதான் எராகட்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நீரில்-வளரும்-உணவுப்-பொருள்/article7133570.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: பேஷனான உப்பு உடை!

 

 
 
masala_2992058f.jpg
 

இஸ்ரேலைச் சேர்ந்த சிகாலிட் லாடாவ் என்ற கலைஞர் ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கினார். 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நீண்ட அங்கியை, சாக்கடலில் 3 மாதங்கள் வைத்திருந்தார். உலகிலேயே உயிர்கள் வசிக்காத உப்பு ஏரி சாக்கடல். நீண்ட கம்புகளில் அங்கியைக் கட்டி, சாக்கடலுக்குள் வைத்து விட்டார். வாரம் ஒருமுறை துணியை எடுத்து, படங்கள் எடுத்துக்கொண்டார். கருப்புத் துணி, மூன்றே மாதங்களில் பளிங்குத் துணியாக மாறிவிட்டது! சாக்கடலில் இருக்கும் அதிகப்படியான உப்புதான், துணியை இப்படி மாற்றியிருக்கிறது.

இனிமேல் உப்பு உடையும் பேஷனாகிவிடும்!

அமெரிக்காவில் வசிக்கும் 42 வயது பாட்ரிக் ஹார்டிசன், தீயணைப்பு வீரராகப் பணியாற்றியவர். 2001-ம் ஆண்டு தீப்பிடித்த ஒரு வீட்டை அணைக்கச் சென்றார். உள்ளே ஒரு பெண் மாட்டிக்கொண்டதைக் கண்ட பாட்ரிக், முகமூடி அணிந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டின் மேற்கூரை உருகி, பாட்ரிக் மீது விழுந்துவிட்டது. ஒரு நொடி நிலை குலைந்து போனவர், வேகமாக வெளியே ஓடி வந்து முகமூடியைக் கழற்றி எரிந்தார். கண்களைத் திறக்கவே இல்லை. சற்று தூரம் ஓடிச் சென்று மூச்சுவிட்டார்.

2 மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். புத்திசாலித்தனமாகக் கண்களை மூடியிருந்ததால் பாதிப் பார்வையைக் காப்பாற்ற முடிந்துள்ளது. சற்றுத் தள்ளி வந்து மூச்சு விட்டதால் நுரையீரலையும் காப்பாற்ற முடிந்துள்ளது. மற்றபடி உதடுகள், காதுகள், மூக்கு என்று அத்தனையையும் இழந்துவிட்டார். மனைவியும் குழந்தைகளும் பாட்ரிக்கைப் பார்க்கப் பயந்தனர். 7 ஆண்டுகளில் 71 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார்! ‘’இறந்து போவதைவிட உயிருடன் இருப்பது மிகக் கொடுமையாக இருந்தது. நான் எங்கும் வெளியில் செல்வதே இல்லை. என் மனைவியும் என்னைவிட்டுப் பிரிந்து சென்றார். வீட்டையும் இழந்து, திவாலாகிப் போனேன். கடினமான காலகட்டம்.

என் பேட்டி பிரபல பத்திரிகையில் வெளிவந்தது. மேரிலாண்ட் மெடிக்கல் சென்டரைச் சேர்ந்த மருத்துவர் ரோட்ரிகுஸ், என் முக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுவதாகச் சொன்னார். 2014-ம் ஆண்டு சிகிச்சைக்காகப் பதிவு செய்தேன். எனக்கு ஏற்ற தோல், முடி, ரத்தம் உள்ள ஒரு உடலுக்காகக் காத்திருந்தேன். விபத்தில் பலியான டேவிட் தோல் எனக்குப் பொருந்தியது. கடந்த ஆண்டு 100 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சேர்ந்து 26 மணி நேரம் எனக்கு முக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். 50% மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு என்று கூறியிருந்தனர். ஆனால் நான் முழுமையாக நம்பிக்கை வைத்தேன். இதோ 12 மாதங்களுக்குப் பிறகு என் முகத் திசுக்கள் புதிய தோலை ஏற்றுக்கொண்டன.

சிகிச்சை வெற்றி பெற்றுவிட்டது. என்னுடைய பழைய முகம் போல இல்லைதான். ஆனால் ஒரு மனித முகம் எனக்குக் கிடைத்துவிட்டது. நீண்ட காலங்களுக்குப் பிறகு நான் எல்லோரையும் போல வெளியே சென்று வருகிறேன். இழந்த வாழ்க்கையை மீண்டும் பெற்றுவிட்டேன்!’’ என்கிறார் பாட்ரிக். இவர் வேலை செய்த தீயணைப்பு நிறுவனம், பாட்ரிக்கின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செய்யும் விதத்தில் ஒரு பலகை வைத்திருக்கிறது.

புதிய முகத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறது நவீன மருத்துவம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பேஷனான-உப்பு-உடை/article9049496.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: இப்படியா ஒரு மனுஷியை நடத்துவது?

 

 
masala_2993215h.jpg
 

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் சோசியல் செக்யூரிட்டி அட்மினிஸ்ட்ரேஷன், ஓய்வு பெற்ற முதியோர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகையை அளித்து வருகிறது. இதற்காக ஏற்கெனவே அவர்களின் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை வரியாகப் பெற்றுக்கொண்டு விடுகிறது. இந்த மாகாணத்தைச் சேர்ந்த பார்பரா மர்பி 64 வயதில் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் அரசாங்கக் குறிப்பு 2014-ம் ஆண்டே பார்பரா இறந்துவிட்டார் என்கிறது.

அதனால் 2 ஆண்டுகளாக அவருக்குச் சேர வேண்டிய மருத்துவக் காப்பீட்டுத் தொகையைத் தர மறுக்கிறது. ‘2 வாரங்களுக்கு முன்பு என் பேத்தியுடன் உணவு விடுதிக்குச் சென்றேன். கடன் அட்டையைக் கொடுத்தேன். அதில் பணம் இல்லை என்று திருப்பிக் கொடுத்துவிட்டனர். என் பேத்தி வங்கியில் பணி புரிகிறார். உடனே வங்கியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, சோசியல் செக்யூரிட்டி அட்மினிஸ்ட்ரேஷன் அறிவுறுத்தலின்படி பார்பரா இறந்து விட்டதால், அவரது கணக்கை முடக்கிவிட்டதாகச் சொன்னார்கள். நான் உயிருடன் இருப்பதாக என் பேத்தி சொன்னார்.

உடனே சோசியல் செக்யூரிட்டியைத் தொடர்புகொள்ளச் சொன்னார்கள். மறுநாளே சோசியல் செக்யூரிட்டி அலுவலகம் சென்றோம். அங்கே என்னுடைய எண் தவறு என்று வந்தது. ஒரு அதிகாரியைச் சந்தித்தோம். நான் இறந்து விட்டதாகச் சான்றிதழைக் காட்டினார். நான் மறுத்தேன். நீண்ட விசாரணை. நூற்றுக்கணக்கான கேள்விகள். பொறுமையாகப் பதில்களைச் சொன்னேன். இறுதியில் ஒரு கடிதம் எழுதி, வாங்கிக்கொண்டார்கள். விரைவில் என்னுடைய கணக்கை இயங்க வைப்பதாகச் சொன்னார்கள். 2 ஆண்டுகளாக எனக்கு வந்து சேரவேண்டிய மருத்துவச் செலவுகளுக்கான தொகையைப் பெறுவதற்கு ஒவ்வொரு மருத்துவராக நாடி வருகிறேன்.

இதற்கிடையில் இறப்புச் சான்றிதழை மாற்றும் முயற்சி தோல்வியடைந்துவிட்டது. இந்த அமைப்பு முறையை என்னவென்று சொல்வது? இறப்பதை விடக் கொடுமையாக இருக்கிறது உயிருடன் இருக்கும்போதே இறந்ததாக நடத்துவது. மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். இறந்த பின்னரும் நடமாடும் பெண் என்று என்னை இந்த உலகம் அழைக்கட்டும்’ என்கிறார் விரக்தியுடன் பார்பரா.

அடப்பாவிகளா… இப்படியா ஒரு மனுஷியை நடத்துவது?

சீனாவின் வெய்ஃபாங் பகுதிக்கு வேலை தேடி வந்தார் லியு. அவரின் பக்கத்து வீட்டில் ஒருவர், நடுத்தர வயது பெண்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தார். அது வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சி என்று லியுவுக்குத் தெரியவில்லை. தன் ஸ்மார்ட்போனில் படங்கள் எடுத்தார். அதைப் பார்த்தும் அங்கிருந்த ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. ஃபேஸ்புக்கில் படங்களை வெளியிட்டார் லியு. படங்கள் சற்று மோசமாக இருந்ததால், அவருக்குப் பயம் வந்தது. ஏன் படங்களைப் போட்டாய் என்று யாராவது கேட்டால் என்ன செய்வது? தேவை இல்லாமல் இப்படி மாட்டிக்கொண்டோமே என்று வருந்தினார்.

இறுதியில் அந்தப் பகுதியில் இருந்த இண்டர்நெட் ஜங்சன் பாக்ஸை உடைத்துச் சேதப்படுத்தினார். 10 லட்சம் ரூபாய்க்கு நஷ்டம். விரைவில் சீனக் காவலர்களால் கைது செய்யப்பட்டார் லியு. விசாரணையில், ‘’இண்டர்நெட் இணைப்புகளைச் சேதப்படுத்தினால், அக்கம்பக்கத்தினர் நான் பகிர்ந்த படங்களைப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தில் இப்படிச் செய்தேன்’’ என்று சொல்லியிருக்கிறார் லியு. காவல்துறை லியுவின் ஃபேஸ்புக்கை ஆராய்ந்தபோது அந்தப் படங்களை யாருமே கண்டுகொள்ளவில்லை என்பது தெரிய வந்தது!

வேண்டாத வேலை செய்தால் இப்படித்தான் மாட்டிக்கணும்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இப்படியா-ஒரு-மனுஷியை-நடத்துவது/article9054092.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: மனிதர்களின் ஆதித் தாய்!

 

 
masala_2994492f.jpg
 

“லூசியின் கடந்த 1974-ம் ஆண்டு எத்தியோப் பியாவில் ஓர் எலும்புக் கூடு கண்டுபிடிக்கப் பட்டது. இது சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு பெண்ணின் எலும்புக் கூடு. இவர்தான் மனிதர்களின் ஆதித் தாய். லூசி என்று பெயரிட்டு, கிடைத்திருக்கும் 40% எலும்புகளை வைத்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். மூன்றரை அடி உயரமும் 29 கிலோ எடையும் கொண்டவர். சிறிய பாதங்கள், நீளமான கைகள் கொண்ட லூசி, நவீன சிம்பன்ஸியை ஒத்திருக்கிறார். மனிதக் குரங்குகளுக்கு மத்தியில் எழுந்து நின்று, நடந்து சென்ற முதல் உயிரினக் கூட்டத்தைச் சேர்ந்தவர் லூசி. அன்றையக் காலகட்டத்தில் பெண்களின் சராசரி ஆயுட் காலம் 20 ஆண்டுகள்தான். லூசியும் 20 வயதில்தான் இறந்திருக்கிறார். லூசியின் எலும்புகளை வைத்து ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள், லூசி மரத்தில் இருந்து விழுந்து இறந்து போயிருக்கலாம் என்கிறார்கள்.

மார்பெலும்புகள், இடுப்பு எலும்புகள், தொடை எலும்புகள், தோள்பட்டை எலும்புகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் காலத்தில் மரங்களில் அதிக நேரம் மனிதர்கள் செலவிட்டிருக்கிறார்கள். லூசியும் 40 அடி உயர மரத்திலிருந்து விழுந்து, எலும்புகள் நொறுங்கி இறந்து போயிருக்கலாம். எலும்புகளின் சேதம் அதை உறுதி செய்கிறது. அளவுக்கு அதிகமான துன்பத்தை அனுபவித்தே லூசி இறந்திருக்கிறார். லூசி நமக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான விஷயம். ஆதி மனித இனத்தைச் சேர்ந்த இந்த லூசியை வைத்து இன்னும் ஏராளமான விஷயங்கள் மனித குலம் அறிய வேண்டியிருக்கிறது’’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் கேப்பல்மனும் ரிச்சர்ட் கெட்சமும்.

சே… மிகுந்த வலியுடன் இறந்து போயிருக்கிறார் நம் ஆதித்தாய்…

நார்வேயில் மின்னல் பாய்ந்து 323 கலைமான்கள் ஒரே நேரத்தில் இறந்து போயிருக்கும் காட்சி, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹார்டங்கர்விடா மலைப் பகுதிக்குச் சென்ற வேட்டைக்காரர்கள் இந்தக் காட்சியை முதலில் கண்டு, வெளியுலகத்துக்கு அறிவித்திருக்கிறார்கள். இந்த மலையில் சுமார் 11 ஆயிரம் கலைமான்கள் வசித்து வந்தன. எவ்வளவு மோசமான வானிலையின்போதும் இதுபோன்று பெரிய அளவில் கலைமான்கள் உயிர் இழந்தது இல்லை. ‘இதுவரை மின்னல் பாய்ந்து 10, 20 ஆடுகள்தான் இங்கே உயிரிழந்திருக்கின்றன.

ஆனால் முதல் முறை 323 கலைமான்கள் உயிரிழந்து, தரையில் விழுந்து கிடந்த காட்சி வருத்தமானது. மரத்தில் மின்னல் பாய்ந்தபோது, மின்சாரம் நிலத்துக்கும் பரவியிருக்கிறது. கலைமான்கள் மின்சாரத்தை உணர்ந்ததும் வேகமாக ஓட ஆரம்பித்திருக்கின்றன. மோதலில் ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு எளிதாக மின்சாரம் பாய்ந்திருக்கிறது. அதனால்தான் இவ்வளவு பெரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. மிக மோசமான வானிலை. நிலத்தில் தண்ணீரின் அளவும் அதிகமாக இருந்திருக்கிறது. மலை உச்சியை நோக்கி கலைமான்கள் கூட்டம் நகர்ந்துகொண்டிருக்கும்போது மின்னல் பாய்ந்திருக்கிறது. கலைமான்கள் மட்டுமில்லை, மனிதர்கள் இருந்திருந்தாலும் தப்பியிருக்க முடியாது’ என்கிறார்கள் நார்வேயின் சுற்றுச்சூழல் மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள். 1918-ம் ஆண்டு அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் மின்னல் பாய்ந்து 654 ஆடுகள் இறந்து போயிருக்கின்றன. 98 ஆண்டுகளுக்குப் பிறகு மின்னல் பாய்ந்து அதிக உயிரிழப்பு இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது.

பாவம் கலைமான்கள்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மனிதர்களின்-ஆதித்-தாய்/article9058937.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: அடுக்கு மாடி கல்லறைகள்

 

 
masala_2996303f.jpg
 

இதுவரை பல ஆயிரம் கோடி மக்கள் இறந்து, மண்ணோடு மண்ணாகக் கலந்திருக்கிறார்கள். சமீபகாலங்களில் அன்புக்குரியவர்கள் இறந்து போனால், உரிய மரியாதையோடு வைத்திருப்பதற்காகவே அடுக்கு மாடி கல்லறைகள் உலகின் பல பகுதிகளிலும் கட்டப்பட்டிருக்கின்றன. பிரேசிலின் சான்டோஸ் பகுதியில் உள்ள நெக்ரோபோலே இகுமேனிகா, உலகின் மிக உயரமான கல்லறை என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது. 108 மீட்டர் உயரத்தில் 32 மாடிகளைக் கொண்ட கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது.

இந்த அடுக்கு மாடியில் 25 ஆயிரம் உடல்களைப் பாதுகாக்க முடியும். கல்லறை போன்றே இருக்காது என்பதுதான் இதன் சிறப்பு. கல்லறையில் இளைப்பாறுவதற்கு அறைகள், சிறிய நீர்வீழ்ச்சி, அழகான தோட்டம், கட்டிடத்தின் உச்சியில் ஆலயம், சிற்றுண்டி கூடம் என்று அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. கீழ்தளங்களுக்கு கட்டணம் குறைவாகவும் மேலே செல்லச் செல்ல அதிகமாகவும் இருக்கிறது. “ஒவ்வொரு அறையும் நல்ல காற்றோட்ட வசதியுடன் அமைத்திருக்கிறோம். ஒரு அறையில் 6 உடல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு உடல் மட்கிப் போவதற்கு 3 ஆண்டுகள் ஆகும். அதற்குப் பிறகு மட்கிய உடல் குடும்பத் தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, வேறு இடங்களில் புதைக்கப்படும்.

சிலர் இறந்தவர்களின் உடல் இங்கேயே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்கள் அதிகக் கட்டணம் செலுத்தி, இங்கேயே வைத்துக்கொள்ளலாம். குடும்பத்தினர் அடிக்கடி வந்து, பிரார்த்தனை செய்துவிட்டு செல்வார்கள். 3 ஆண்டுகளுக்கு ஒரு உடலைப் பாதுகாக்க ரூ.4 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கட்டணம். ஒரு குடும்பம் தனி அறை தேவை என்று விரும்பினால் ரூ.34 லட்சம் கொடுக்க வேண்டும். இறந்த பிறகும் வாழ்க்கை இருக்கிறது. அது நன்றாக அமைவதற்கு நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். சிறிய கல்லறையாகத்தான் ஆரம்பித்தோம். தேவை அதிகம் இருப்பதால் உலகின் உயரமான கல்லறையாக மாறிவிட்டது!” என்கிறார் அதன் நிறுவனர் பெப்பி அல்ஸ்டட்.

ஐயோ… இறந்த உடலுக்கு இவ்வளவு செலவா?

 

பிரிட்டனைச் சேர்ந்த பென் சுமடிநிரியா (22) சமையல் கலைஞராக இருக்கிறார். இந்தோனேஷியாவில் ‘டெத் நூடுல்ஸ்’ என்ற சவாலை ஏற்றார். மிளகாய் சாஸை விட 4 ஆயிரம் மடங்கு அதிகக் காரம் கொண்ட நூடுல்ஸ் இது. பென், சாப்பிட ஆரம்பித்ததும் வியர்த்துக் கொட்டியது. நாவில் இருந்து நீர் வடிந்தது. கண்ணீர் பெருகியது. கதறினார். “இது உண்மையிலேயே டெத் நூடுல்ஸ்தான். உலகிலேயே காரம் அதிகமான உணவு என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஐஸ்க்ரீம், ஜூஸ், ஸ்வீட் என்று எது சாப்பிட்டும் வாய் எரிச்சல் நிற்கவே இல்லை.

உடல் முழுவதும் எரிந்தது போலிருந்தது. சில நிமிடங்கள் காது கேட்கும் சக்தியை இழந்துவிட்டது. நான் எத்தனையோ உணவு சவால்களில் கலந்துகொண்டிருக்கிறேன். இது மாதிரியான கடினமான சவால் எதுவும் இல்லை. இங்குள்ள சிலர், முழு நூடுல்ஸையும் சாப்பிட்டு, சவாலில் வெற்றியடைந்திருப்பதாக சொல்கிறார்கள். என்னால் நம்பவே முடியவில்லை!” என்கிறார் பென்.

டெத் நூடுல்ஸ் என்று சரியான பெயர்தான் வைத்திருக்கிறார்கள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அடுக்கு-மாடி-கல்லறைகள்/article9063982.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.