Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: நிஜ ’ஃபாரஸ்ட் கம்ப்’

 

 
29chkanforrest-gump

இங்கிலாந்தைச் சேர்ந்த 39 வயது ராப் போப் ஓராண்டுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருக்கிறார். 1994-ம் ஆண்டு வெளிவந்த ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தில் கதாநாயகன் கம்ப், தன்னுடைய சிறு வயது காதலி ஜென்னியைத் தேடி ஓடுவார். சுமார் 15,248 மைல் தூரம் ஓடுவதாக அந்தத் திரைப்படம் அமைந்திருக்கும். ஃபாரஸ்ட் கம்பின் இந்த சாதனையை நிஜ வாழ்க்கையில் முறியடிக்க வேண்டும் என்பதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார் ராப் போப். ஓட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்தார். பொதுவாக இதுபோன்ற நீண்டகால ஓட்டத்துக்கு பல மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொள்வார்கள். ஆனால் திரைப்படத்தில் வரும் கம்ப் போலவே எவ்விதப் பயிற்சியும் இன்றி, அமெரிக்காவில் திடீரென்று சாதனை ஓட்டத்தைத் தொடங்கிவிட்டார் ராப். தினமும் 40 மைல் தூரம் ஓடுகிறார். சுட்டெரிக்கும் வெயில், தாங்க முடியாத குளிர், கொட்டித் தீர்க்கும் மழை என்று எந்தப் பருவநிலையையும் பொருட்படுத்தாமல் ஓடிக்கொண்டிருக்கிறார். பயிற்சி எடுக்காமல் ஓடுவதால் பலமுறை காயம் ஏற்பட்டிருக்கிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. தனிமை வாட்டியிருக்கிறது. மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் தன் சாதனை ஓட்டத் திட்டத்திலிருந்து இவர் பின்வாங்கவில்லை.

“ஃபாரஸ்ட் கம்ப் படம் பார்த்ததிலிருந்து கம்பின் சாதனையை நிஜத்தில் முறியடிக்க வேண்டும் என்று ஏனோ தோன்றியது. அதில் கம்ப்பாக நடித்த டாம் ஹாங்க்ஸ் எல்லோரையும் தன் நடிப்பாலும் அன்பாலும் ஈர்த்துவிடுவார். கம்ப் யாரையும் எடை போட மாட்டார். தோல் நிறம், இனம், மொழி, பணம் என எந்தப் பாகுபாட்டையும் பார்க்க மாட்டார். அந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் நாமும் கம்ப்பாக மாற மாட்டோமா என்று ஏங்குவோம். அதன் பாதிப்பால் ஓட முடிவெடுத்தேன். ஆனால் திரையில் பார்த்ததை நிஜத்தில் செய்ய ஆரம்பித்தபோது அவ்வளவு எளிதாக இல்லை. 4 கட்டங்களாகப் பிரித்துக்கொண்டு ஓட்டத்தைத் தொடர முடிவெடுத்தேன். பருவநிலை மாற்றம் என் ஓட்டத்தை மிகவும் கடினமானதாக மாற்றியது. என் தாடியில்கூட பனி படர்ந்தபடி ஓடியிருக்கிறேன். ஆரம்பத்தில் கம்ப் அணிந்துகொண்ட ஆடைகள், தொப்பிகள்போல் பயன்படுத்தினேன். ஆனால் பருவநிலைக்கு ஏற்ப பிறகு அதை மாற்றிக்கொண்டேன். என் பயணத்தை ஆவணப்படுத்தும் விதத்தில் ஓட்டத்தின் நடுவே நான் கடக்கும் முக்கியமான இடங்களில் படம் எடுத்துக்கொள்கிறேன். சமூக வலைதளங்களில் படங்களையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்கிறேன். கம்ப்பின் சாதனையை முறியடித்து, 409 நாட்களில் 15,600 மைல்களைக் கடந்துவிட்டேன். என்னுடைய இலக்கை அடைய இன்னும் 200 மைல்கள்தான் ஓட வேண்டும். ஆனால் எனக்கு மகள் பிறந்திருப்பதால் இங்கிலாந்துக்குத் திரும்பிவிட்டேன். ஏப்ரல் மாதம் பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறேன்” என்கிறார் ராப் போப்.

ரீல் சாதனையை ரியல் சாதனையாக மாற்றியிருக்கும் ராப் போப்புக்கு வாழ்த்துகள்!

http://tamil.thehindu.com/world/article23378725.ece

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: 68 வயதில் 20 வயது இளைஞர்

 

 
30chkanyoung-grandfather

சீனாவின் ஷாங்காய் நகரில் வசிக்கும் ஹு ஹாய், 20 வயது இளைஞர்போல் இருக்கிறார். ஆனால் இவரது வயது 68. தோற்றம் மட்டுமின்றி, இவருடைய உடல், உடல்மொழி, உடை எல்லாமே இவரை இளைஞராகவே காட்டுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘மோஸ்ட் மாடர்ன் கிராண்ட்பா’ என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறார். 1950-ம் ஆண்டு பிறந்தார். இவர் குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்துவிட்டார். சின்ன வயதிலிருந்தே ஹு ஹாய்க்கு விளையாட்டு மீது ஆர்வம். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார். கொஞ்சம் வளர்ந்த பிறகு, உடற்பயிற்சியிலும் அக்கறை செலுத்த ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதியவர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த இளைஞருக்கு இங்கே என்ன வேலை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் பார்வையாளர்களும் கேட்டனர். எல்லோருக்கும் தன்னுடைய வயதையும் அதற்கான சான்றையும் காட்டிவிட்டே, போட்டியில் கலந்துகொண்டார். ‘மிக நவீனமான தாத்தா’ பட்டம் வென்றதும் வெளியுலகில் பிரபலமானார். அதன் பிறகு தொலைக்காட்சி, ஃபேஷன் பத்திரிகைகள், மாடலிங் துறை என்று சகலவற்றிலும் இவரது பங்களிப்பு அதிகரித்து வருகிறது.

“என்னுடைய இந்தத் தோற்றத்துக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உடலை நல்ல வடிவத்தோடு வைத்திருக்க யோகா செய்கிறேன். மனதை ஒருமுகப்படுத்த தியானம் செய்கிறேன். தினமும் 30 நிமிடங்கள் படிகளில் ஏறி இறங்குகிறேன். குறைவான, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுகிறேன். சில சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறேன். இவை தவிர நான் எப்போதும் என்னை 20 வயது இளைஞனாகவே நினைத்துக் கொள்கிறேன். வயது என்பது வெறும் எண்கள்தான். நாம் எப்படி உடலை வைத்துக்கொள்கிறோம், எப்படி நல்ல எண்ணங்களை நிறைத்துக்கொள்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்பதைப் பொருத்தே நம் உருவம் வெளிப்படுகிறது. முதுமை என்பது தவிர்க்க இயலாதது. எல்லோரும் ஒருநாள் முதுமையடையத்தான் போகிறோம். ஆனால் அந்த முதுமையை ஏதோ கெட்ட அம்சம் போலவும் மரணத்தை நெருங்குவதுபோலவும் நினைத்துக்கொள்வதுதான் ஆரோக்கியமற்றது. இந்த எண்ணம் உங்கள் வயதைவிட, அதிக முதிர்ச்சியைக் கொண்டுவந்துவிடும். நான் மரணமடையும் கடைசி நொடியிலும் என்னை இருபது வயது இளைஞனாகவே நினைத்துக்கொள்வேன். ஒவ்வொரு மனிதனுக்கும் மனம், உடல், உடலியக்கம் என 3 விதமான வயதுகள் இருக்கின்றன. கடைசி இரண்டு வயதுகளை மருத்துவப் பரிசோதனை மூலம் அறிந்துகொள்ள முடியும். என்னுடைய உடல், உடலியக்கம் சார்ந்த வயது 40. ஆனால் என் மனதின் வயது 20 ஆக இருக்கிறது என்று நினைக்கிறேன். இருபது வயது இளைஞர் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையும் என்னால் செய்ய முடியும். அவரைப் போலவே இளமையாக சிந்திக்கவும் முடியும். இளமை என்பது அணுகுமுறைதானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். வித்தியாசமான வாழ்க்கையை வாழுங்கள்” என்கிறார் ஹு ஹாய்.

ஆஹா! 68 வயதில் 20 வயது இளைஞர்!

http://tamil.thehindu.com/world/article23389105.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பூனைக்கு மாற்றுச் சிறுநீரகம்

 

 
cat1

அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் வசிக்கும் ஸ்டான்லி பூனைக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது! 17 வயது ஸ்டான்லிக்குச் சுமார் 12.5 லட்சம் ரூபாய் செலவு செய்து, வெற்றிகரமாகச் சிகிச்சையை நடத்தி முடித்திருக்கிறார் பெட்ஸி பாய்ட். இவர் பகுதி நேரப் பேராசிரியராக இருக்கிறார். கணவர், இரட்டை ஆண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பூனைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் வளர்க்கும் பூனைகளில் ஒன்று ஸ்டான்லி. 2016-ம் ஆண்டு பூனையின் உடல் நிலை சரியில்லாமல் போனது. மருத்துவப் பரிசோதனை செய்ததில் சிறுநீரகப் பாதிப்பு தெரிந்தது. ஸ்டான்லி 3 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். இருக்கும் நாட்களில் நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார் பெட்ஸி. மருத்துவர் சொன்ன கெடுவையும் தாண்டி ஸ்டான்லி வாழ்ந்துகொண்டிருந்தது.

“என்னிடம் இருக்கும் பூனைகளில் ஸ்டான்லி ரொம்பவே தனித்துவமானவன். நாய்க்கு உள்ள அறிவும் மனிதர்களிடமிருக்கும் அன்பும் இதனிடம் உண்டு. கண்களால் சொல்வதைக் கூடப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு செயல்படுவான். ஒருநாளும் எல்லை மீறியதில்லை. மிகவும் பொறுமையாக இருப்பான். தினமும் என் அறைக் கதவு திறக்கும்வரை காத்திருப்பான். மிகவும் புத்திசாலி. கெடு தாண்டியும் இவனால் உயிரோடு இருக்க முடிகிறதென்றால், இவனுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து பார்க்கலாமே என்று தோன்றியது. மருத்துவர்களும் ஸ்டான்லியின் உடல் சிகிச்சைக்குத் தயாராக இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இன்னொரு பூனையிடமிருந்து சிறுநீரகம் நன்கொடை பெறுவதற்காகக் காத்திருந்தோம்.

5 மாதங்களுக்கு முன்புதான் ஒரு பூனையைத் தத்தெடுத்து, அதன்மூலம் சிறுநீரகம் பெற்று, ஸ்டான்லிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, 4 மாதங்களாகிவிட்டன. இரண்டு பூனைகளும் நன்றாக இருக்கின்றன. ஸ்டான்லி சக பூனைகளோடு சேர்ந்து விளையாடுகிறது. என்னுடன் வெளியில் வருகிறது. இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மருந்துகளும் தேவைப்படாது. பூனைகள் அதிகபட்சமாக 17 ஆண்டுகள் வரையே வாழக்கூடியவை. அதனால் 17 வயது ஸ்டான்லிக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்று குடும்பத்தினரும் நண்பர்களும் கேட்டனர். அப்படியே செலவு செய்தாலும் அது வெற்றியடையுமா என்று தெரியாது என்றார்கள். என் குழந்தைகளின் எதிர்காலத்துக்குச் சேமித்து வைத்த பணத்தைதான் நான் ஸ்டான்லிக்குக் கொடுக்கிறேன் என்பதால் அவர்களின் கேள்வி நியாயமானதுதான். ஆனால் எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து, என் நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டது ஸ்டான்லி. செலவு செய்தது வீண் போகவில்லை. 25 வயது வரை வாழும் என்று தோன்றுகிறது. இன்னும் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். என் அன்பு ஸ்டான்லிக்குச் செலவு செய்தது குறித்து எனக்குச் சிறிதும் வருத்தம் இல்லை. மகிழ்ச்சி யாக இருக்கிறேன்” என்கிறார் பெட்ஸி பாய்ட்.

பூனைக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்திய பெட்ஸி வாழ்க!

http://tamil.thehindu.com/world/article23397858.ece

Link to comment
Share on other sites

On 24.3.2018 at 6:25 AM, நவீனன் said:

உலக மசாலா: மலைப்பாம்புக்கு ஸ்கேன்!

 

 
24chskopic

அமெரிக்காவின் கொலம்பஸ் விலங்குகள் பூங்காவில் வசித்த ஹன்னா என்ற மலைப்பாம்புக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது. நோய்த்தொற்றால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்று கருதினார்கள் மருத்துவர்கள். மலைப்பாம்பை ஸ்கேன் செய்து பார்த்துவிட முடிவெடுத்தனர். 19 அடி நீளமும் 63.5 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பை 6 பேர் தூக்கி, ஒரு பெட்டியில் வைத்து, ஸ்கேன் மையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கே மலைப்பாம்புக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டு, ஸ்கேன் கருவியில் வைக்கப்பட்டது. மிக நீளமான மலைப்பாம்பு என்பதால் இரண்டாக மடித்து படுக்க வைத்தனர். முன்பக்கம் ஒன்றும் பின்பக்கம் ஒன்றுமாக இரண்டு முறை ஸ்கேன் செய்யப்பட்டது. “எங்கள் ஊழியர்தான் மலைப்பாம்பின் முகம் வீக்கமாக இருப்பதைக் கண்டறிந்தார். அடிப்படை மருத்துவம் செய்து பார்த்தோம். சரியாகவில்லை. விலங்குகளுக்கு எக்ஸ்ரே மிகச் சிறந்த பலனை அளிப்பதில்லை. அதனால் சிஏடி ஸ்கேன் செய்ய முடிவெடுத்தோம். ஸ்கேனில் பிரச்சினை தெரிந்துவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் குணப்படுத்திவிடுவோம். ஒரு மலைப்பாம்புக்கு ஸ்கேன் செய்தது இதுதான் முதல்முறை. அந்தச் சிறப்பைப் பெற்றிருக்கிறாள் ஹன்னா” என்கிறார் பூங்காவின் நிர்வாகி.

அட! மலைப்பாம்புக்கு ஸ்கேன்!

http://tamil.thehindu.com/world/article23339927.ece

 

Link to comment
Share on other sites

உலக மசாலா: தலை இல்லாமல் உயிர் வாழும் கோழி

 

 
01chkanhead1

தாய்லாந்தின் ராட்சபுரி மாகாணத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்து, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தலை வெட்டப்பட்ட கோழி ஒன்று, ஒரு வாரத்துக்கு மேலாக உயிருடன் இருக்கிறது. உடலை அசைக்கிறது. நடக்கிறது.

இந்தக் கோழியைப் பார்ப்பதற்கும் படம் எடுப்பதற்கும் ஏராளமானவர்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள். கடந்த வாரம் ‘தலை இல்லாத கோழி’ என்ற தலைப்பில் படங்களும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. பலரும் இதை நம்ப மறுத்தார்கள். ஆனால் உண்மை. “கோழியின் தலை எப்படி வெட்டப்பட்டது என்று தெரியவில்லை.

புத்த துறவிகள் கோயிலுக்கு அருகே பார்த்ததாகச் சொன்னார்கள். தலையே இல்லை என்றாலும் மரணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து, வாழ நினைக்கும் இந்தக் கோழிக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் கோழியை பத்திரமாகக் கவனித்துக்கொள்கிறேன். ஊசி மூலம் திரவ உணவை, தொண்டை வழியே செலுத்துகிறேன். கோழி தன் விருப்பம்போல் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் பாதுகாக்க தயாராக இருக்கிறேன்” என்கிறார் கால்நடை மருத்துவர் சுபகதீ அருண் தோங்.

இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. 1945-ம் ஆண்டு மைக் என்ற தலை இல்லாத கோழி, 18 மாதங்கள் வரை உயிருடன் இருந்திருக்கிறது. திடீரென ஒருநாள் கோழியின் உரிமையாளர் லாயிட் ஓல்சென் யூட்டா பல்கலைக்கழகத்துக்கு கோழியைக் கொண்டுவந்தார். அவர் கோழிப் பண்ணை வைத்திருக்கிறார். தினமும் கோழிகளை வெட்டுவார். அன்றும் சுமார் 50 கோழிகளை வெட்டினார். அதில் இந்த ஒரு கோழி மட்டும் தலை வெட்டிய பிறகும் உயிருடன் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். நடந்துகொண்டிருந்த கோழியை ஒரு பெட்டியில் வைத்துவிட்டு, சிறிது நேரத்தில் இறந்துவிடும் என்று நினைத்தார்.

ஆனால் கோழி அப்போதும் உயிருடன் இருந்தது. வாழத் துடிக்கும் ஒரு கோழியின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு, ஊசி மூலம், தொண்டைப் பகுதியை தினமும் சுத்தம் செய்து, திரவ உணவை செலுத்தி வருவதாகக் கூறினார். கால்நடை ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். கோழியை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள். கோழியின் தலை தனித்துவமானது. குறிப்பிட்ட கோணத்தில் தலையை வெட்டும்போது முகம், முன்னந்தலை பாதிக்கப்பட்டாலும் பின்னந்தலையில் மூளை இருக்கும் பகுதி பாதிப்புக்குள்ளாகவில்லை. அதனால் கோழி சுவாசிக்க, நடக்க, சாப்பிட முடிகிறது என்று அறிவித்தார்கள். தலை இல்லாமல் கோழி உயிருடன் இருப்பது உண்மைதான் என்ற சான்றிதழையும் வழங்கினார்கள்.

அதன் பிறகு லாயிட் ஓல்சன் தலை இல்லாத மைக்குடன் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்தார். புகழ் பெற்றார். திடீரென்று ஒருநாள் கோழியின் தொண்டையை சுத்தம் செய்ய முடியாமல் போனது. இதனால் தொண்டைப் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு, 18 மாதங்களுக்குப் பிறகு ‘மிராக்கிள் மைக்’ இறந்துபோனது.

ரியல் வாரியர்!

http://tamil.thehindu.com/world/article23403205.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: கையை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத பெதானி

 

 
03chskopic

அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயது பெதானி ஹா மில்டன், அலைச் சறுக்கு வீரராக இருக்கிறார். 14 வயதில் அலைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, மிகப் பெரிய சுறாவின் தாக்குதலில் இடது கையை இழந்தார். 60% ரத்தத்தை இழந்துவிட்டதால் பிழைப்பதே கடினம் என்று மருத்துவர்கள் நினைத்தனர். சற்றும் மனம் தளராமல், கதறி அழாமல், வாழ்வோம் என்ற நம்பிக்கையுடன் சிகிச்சைக்கு ஒத்துழைத்தார். உயிர் பிழைத்தார். இனிமேல் அவரது வாழ்க்கையில் அலைச் சறுக்கு விளையாட்டு இல்லை என்ற முடிவுக்கு எல்லோரும் வந்தனர். நினைவு தெரிந்த நாளில் இருந்து அலைச் சறுக்கு விளையாட ஆரம்பித்தவர் பெதானி. இவரது அப்பா, அம்மா, தம்பி கள் என அனைவரும் அலைச் சறுக்கு விளையாட்டு வீரர்களாக இருந்தனர். கடற்கரையில் ஒருநாள் நின்றுகொண்டு விரக்தியாகப் பார்த்துக்கொண்டிருந்த பெதானியை, அலைகள் இரு கரம் நீட்டி அழைத்தன. சற்றும் யோசிக்காமல் அலைச் சறுக்கு அட்டையைத் தூக்கிக்கொண்டு கடலுக்குள் இறங்கிவிட்டார். குடும்பத்தினரும் நண்பர்களும் அதிர்ச்சியடைந்தனர். சில மணி நேர முயற்சிக்குப் பிறகு ஒற்றைக் கையில் விளையாடும் உத்தி வசப்பட்டது. தினமும் கடுமையான பயிற்சி செய்ததில் மீண்டும் போட்டியில் கலந்துகொள்ளும் தைரியம் வந்தது. உள்ளூர் போட்டியில் 5-வது இடத்தைப் பெற்றார். அடுத்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் முதலிடத்தைப் பிடித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். கை இழந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு தொழில்முறை அலைச் சறுக்கு வீரராகி, உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினார். தொடர்ந்து அலைச் சறுக்கு விளையாட்டில் கொடிகட்டிப் பறந்தார். 2013-ம் ஆண்டு ஆடம் டிர்க்ஸைத் திருமணம் செய்துகொண்டார். 2015-ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. தற்போது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். எங்கள் வீட்டில் நான்காவது உறுப்பினர் வந்திருக்கிறார். மனைவியாகவும் தாயாகவும் இந்த நாட்களை மிகவும் மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருக்கிறேன். எங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என்கிறார் பெதானி. ‘Soul Surfer’ என்ற பெயரில் இவரது வாழ்க்கை, திரைப்படமாக வந்திருக்கிறது.

வாழ்த்துகள் பெதானி!

உலகம் முழுவதும் கெட்சப் விரும்பிச் சாப்பிடப்படுகிறது. ஆனால் கெட்சப் கொட்டி, துணிகள் வீணாகின்றன என்ற வருத்தம் பலருக்கும் இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடித்திருக்கிறார் எமிலி வில்லியம்ஸ். கெட்சப்பை மெல்லியத் துண்டுகளாக உருவாக்கிவிட்டார். இதனால் கெட்சப் வழிந்து கீழே விழாது, துணியில் படாது. “பழகிய ஒரு விஷயத்தில் மாற்றம் கொண்டு வருவது அவ்வளவு எளிதானதல்ல. கெட்சப் துண்டுகள் கிட்டத்தட்ட கெட்சப் சுவையை ஒத்திருக்கின்றன. இதனால் முதலில் சுவைப்பவர்களுக்குத் திருப்தி கிடைக்காது. ஆனால் சில முறை சாப்பிட்ட பிறகு பழகிவிடுவார்கள். 23 நாட்களை இலக்காக வைத்துக்கொண்டு மிக வேகமாக இதைப் பரப்பி வருகிறோம். பொரித்த உணவுகளை இதில் நனைத்துச் சாப்பிட முடியாது. ஆனால் பர்கர், சாண்ட்விச் போன்றவற்றில் வைத்துச் சாப்பிட முடியும். இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு கெட்சப் துண்டுகளை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார் எமிலி வில்லியம்ஸ்.

புதிய வரவு கெட்சப் துண்டு!

http://tamil.thehindu.com/world/article23421396.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: நகர்ந்து போன வீடு

 

 
04chskopic

சீனாவின் ஜியான்ஸி மாகாணத்தில் வசிக்கிறார் விவசாயி காவோ யிபிங். 2014-ம் ஆண்டு தன்னுடைய கனவு இல்லத்தைக் கட்டி முடித்தார். ஓராண்டு மகிழ்ச்சியாகக் குடும்பத்துடன் வாழ்ந்தார். திடீரென்று அரசாங்கத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. புதிய சாலைப் பணிக்கான இடத்தில் நீங்கள் வீடு கட்டியிருக்கிறீர்கள். அதனால் இழப்பீட்டுத் தொகையை வாங்கிக்கொண்டு, வீட்டை இடித்துவிடும்படிக் கேட்டுக்கொண்டனர். அதிர்ச்சியடைந்தார் காவோ. இழப்பீட்டுத் தொகை எவ்வளவு வரும் என்று தெரியாது. வீட்டை இடித்துவிட்டு, புதிதாக வீடு கட்ட அதிகம் செலவாகும். உழைப்பு, நேரம், பணம் அத்தனையும் வீணாவதில் அவருக்கு விருப்பம் இல்லை. வீட்டை இடிக்காமல் என்ன செய்யலாம் என்று யோசித்தார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, காவோவின் நண்பர் ஒருவர், வீட்டை இடிக்காமல் நகர்த்தி வைக்கும் நிறுவனத்தின் முகவரியைக் கொடுத்தார். காவோவுக்கு நம்பிக்கை வந்தது. உடனே அவர்களைத் தொடர்புகொண்டார். மூன்று மாடி கட்டிடம் என்பதால் அந்த நிறுவனம் அதிகத் தொகையைக் கட்டணமாகக் கேட்டது. அரசாங்கத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகையாகச் சுமார் 40 லட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.

அதனால் கட்டிடம் நகர்த்தும் நிறுவனம் கேட்கும் தொகையைக் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்தார். ஆனால் நிறுவனம் இவர் எதிர்பார்த்ததைவிடச் சற்றுக் குறைவாகவே கேட்டது. 2017-ம் ஆண்டு செப்டம்பரில் கட்டிடத்தை நகர்த்தும் பணி ஆரம்பமாகியது. முதலில் கட்டிடம் நகர வேண்டிய இடத்தைச் சுத்தம் செய்தனர். ஆயிரம் மரக்கட்டைகளைக் கொண்டு வந்தனர். கட்டிடத்தைச் சுற்றி மண்ணைத் தோண்டினர்.

இழுவை இயந்திரங்களை வைத்து கட்டிடத்தை இழுக்க ஆரம்பித்தனர். எதிர்பார்த்ததை விடக் கட்டிடம் எடை அதிகமாக இருந்தது. 1000 டன் கட்டிடத்தை இழுக்கத் தாங்கள் கேட்ட தொகையை விட அதிகம் வேண்டும் என்றது நிறுவனம். வேறு வழியின்றி காவோவும் ஒப்புக்கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டிடம் நகர ஆரம்பித்தது. 40 மீட்டர் தூரத்தை ஒன்றரை மாதங்களில் வெற்றிகரமாகக் கடந்தது. நிறுவனத்துக்கு 22.75 லட்சம் ரூபாயைக் கொடுத்தார். கீழ்த் தளத்தில் மட்டும் மறுசீரமைப்புப் பணி செய்ய வேண்டியிருந்தது. அதற்காக 11 லட்சம் ரூபாய் செலவு செய்தார்.

“என்னுடைய கனவு இல்லத்தைத் தகர்க்க வேண்டும் என்று சொன்னபோது நான் உடைந்துபோனேன். ஒரு கோடி ரூபாய் செலவு செய்து, உருவாக்கிய வீடு. ஆனால் இழப்பீடு 40 லட்சம்தான் கிடைக்கும். நல்லவேளை, வீட்டை நகர்த்தும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. எல்லா செலவுகளும் போக இழப்பீட்டுத் தொகையில் 6 லட்சம் ரூபாய் எனக்கு மிச்சமாகியிருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் அரசாங்கத்திடமிருந்து 70 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைத்துவிட்டது.

அதனால் எனக்கு 36 லட்சம் ரூபாய் லாபம். அத்துடன் என் கனவு இல்லம் முழுமையாகக் கிடைத்துவிட்டது. வீட்டை இடிக்க வேண்டி வந்தால், நஷ்டப்படாமல் வீட்டை நகர்த்திக்கொள்ளுங்கள். நகர்த்தினாலும் வீடு உறுதியாகத்தான் இருக்கிறது. நாங்கள் இந்த வீட்டில் பயமின்றி வாழ்ந்து வருகிறோம்” என்கிறார் காவோ யிபிங்.

அடடா! அருமையான யோசனை!

 
 

http://tamil.thehindu.com/world/article23431032.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

உலக மசாலா: நகர்ந்து போன வீடு

 

 
04chskopic

சீனாவின் ஜியான்ஸி மாகாணத்தில் வசிக்கிறார் விவசாயி காவோ யிபிங். 2014-ம் ஆண்டு தன்னுடைய கனவு இல்லத்தைக் கட்டி முடித்தார். ஓராண்டு மகிழ்ச்சியாகக் குடும்பத்துடன் வாழ்ந்தார். திடீரென்று அரசாங்கத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. புதிய சாலைப் பணிக்கான இடத்தில் நீங்கள் வீடு கட்டியிருக்கிறீர்கள். அதனால் இழப்பீட்டுத் தொகையை வாங்கிக்கொண்டு, வீட்டை இடித்துவிடும்படிக் கேட்டுக்கொண்டனர். அதிர்ச்சியடைந்தார் காவோ. இழப்பீட்டுத் தொகை எவ்வளவு வரும் என்று தெரியாது. வீட்டை இடித்துவிட்டு, புதிதாக வீடு கட்ட அதிகம் செலவாகும். உழைப்பு, நேரம், பணம் அத்தனையும் வீணாவதில் அவருக்கு விருப்பம் இல்லை. வீட்டை இடிக்காமல் என்ன செய்யலாம் என்று யோசித்தார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, காவோவின் நண்பர் ஒருவர், வீட்டை இடிக்காமல் நகர்த்தி வைக்கும் நிறுவனத்தின் முகவரியைக் கொடுத்தார். காவோவுக்கு நம்பிக்கை வந்தது. உடனே அவர்களைத் தொடர்புகொண்டார். மூன்று மாடி கட்டிடம் என்பதால் அந்த நிறுவனம் அதிகத் தொகையைக் கட்டணமாகக் கேட்டது. அரசாங்கத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகையாகச் சுமார் 40 லட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.

அதனால் கட்டிடம் நகர்த்தும் நிறுவனம் கேட்கும் தொகையைக் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்தார். ஆனால் நிறுவனம் இவர் எதிர்பார்த்ததைவிடச் சற்றுக் குறைவாகவே கேட்டது. 2017-ம் ஆண்டு செப்டம்பரில் கட்டிடத்தை நகர்த்தும் பணி ஆரம்பமாகியது. முதலில் கட்டிடம் நகர வேண்டிய இடத்தைச் சுத்தம் செய்தனர். ஆயிரம் மரக்கட்டைகளைக் கொண்டு வந்தனர். கட்டிடத்தைச் சுற்றி மண்ணைத் தோண்டினர்.

இழுவை இயந்திரங்களை வைத்து கட்டிடத்தை இழுக்க ஆரம்பித்தனர். எதிர்பார்த்ததை விடக் கட்டிடம் எடை அதிகமாக இருந்தது. 1000 டன் கட்டிடத்தை இழுக்கத் தாங்கள் கேட்ட தொகையை விட அதிகம் வேண்டும் என்றது நிறுவனம். வேறு வழியின்றி காவோவும் ஒப்புக்கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டிடம் நகர ஆரம்பித்தது. 40 மீட்டர் தூரத்தை ஒன்றரை மாதங்களில் வெற்றிகரமாகக் கடந்தது. நிறுவனத்துக்கு 22.75 லட்சம் ரூபாயைக் கொடுத்தார். கீழ்த் தளத்தில் மட்டும் மறுசீரமைப்புப் பணி செய்ய வேண்டியிருந்தது. அதற்காக 11 லட்சம் ரூபாய் செலவு செய்தார்.

“என்னுடைய கனவு இல்லத்தைத் தகர்க்க வேண்டும் என்று சொன்னபோது நான் உடைந்துபோனேன். ஒரு கோடி ரூபாய் செலவு செய்து, உருவாக்கிய வீடு. ஆனால் இழப்பீடு 40 லட்சம்தான் கிடைக்கும். நல்லவேளை, வீட்டை நகர்த்தும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. எல்லா செலவுகளும் போக இழப்பீட்டுத் தொகையில் 6 லட்சம் ரூபாய் எனக்கு மிச்சமாகியிருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் அரசாங்கத்திடமிருந்து 70 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைத்துவிட்டது.

அதனால் எனக்கு 36 லட்சம் ரூபாய் லாபம். அத்துடன் என் கனவு இல்லம் முழுமையாகக் கிடைத்துவிட்டது. வீட்டை இடிக்க வேண்டி வந்தால், நஷ்டப்படாமல் வீட்டை நகர்த்திக்கொள்ளுங்கள். நகர்த்தினாலும் வீடு உறுதியாகத்தான் இருக்கிறது. நாங்கள் இந்த வீட்டில் பயமின்றி வாழ்ந்து வருகிறோம்” என்கிறார் காவோ யிபிங்.

அடடா! அருமையான யோசனை!

http://tamil.thehindu.com/world/article23431032.ece

உதென்ன பெரிய விசயம்.......ஏழாலையிலை கிணத்தையே தூக்கிக்கொண்டு போன கதையெல்லாம் எங்களிட்டை இருக்கு...tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

உதென்ன பெரிய விசயம்.......ஏழாலையிலை கிணத்தையே தூக்கிக்கொண்டு போன கதையெல்லாம் எங்களிட்டை இருக்கு...tw_glasses:

கொஞ்சம் விளக்கமாய் சொன்னால் பராவயில்லை அல்லது வடிவேல் கேஸ்தானோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 03/04/2018 at 2:41 PM, நவீனன் said:

உலக மசாலா: கையை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத பெதானி

 

 
03chskopic

அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயது பெதானி ஹா மில்டன், அலைச் சறுக்கு வீரராக இருக்கிறார். 14 வயதில் அலைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, மிகப் பெரிய சுறாவின் தாக்குதலில் இடது கையை இழந்தார். 60% ரத்தத்தை இழந்துவிட்டதால் பிழைப்பதே கடினம் என்று மருத்துவர்கள் நினைத்தனர். சற்றும் மனம் தளராமல், கதறி அழாமல், வாழ்வோம் என்ற நம்பிக்கையுடன் சிகிச்சைக்கு ஒத்துழைத்தார். உயிர் பிழைத்தார். இனிமேல் அவரது வாழ்க்கையில் அலைச் சறுக்கு விளையாட்டு இல்லை என்ற முடிவுக்கு எல்லோரும் வந்தனர். நினைவு தெரிந்த நாளில் இருந்து அலைச் சறுக்கு விளையாட ஆரம்பித்தவர் பெதானி. இவரது அப்பா, அம்மா, தம்பி கள் என அனைவரும் அலைச் சறுக்கு விளையாட்டு வீரர்களாக இருந்தனர். கடற்கரையில் ஒருநாள் நின்றுகொண்டு விரக்தியாகப் பார்த்துக்கொண்டிருந்த பெதானியை, அலைகள் இரு கரம் நீட்டி அழைத்தன. சற்றும் யோசிக்காமல் அலைச் சறுக்கு அட்டையைத் தூக்கிக்கொண்டு கடலுக்குள் இறங்கிவிட்டார். குடும்பத்தினரும் நண்பர்களும் அதிர்ச்சியடைந்தனர். சில மணி நேர முயற்சிக்குப் பிறகு ஒற்றைக் கையில் விளையாடும் உத்தி வசப்பட்டது. தினமும் கடுமையான பயிற்சி செய்ததில் மீண்டும் போட்டியில் கலந்துகொள்ளும் தைரியம் வந்தது. உள்ளூர் போட்டியில் 5-வது இடத்தைப் பெற்றார். அடுத்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் முதலிடத்தைப் பிடித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். கை இழந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு தொழில்முறை அலைச் சறுக்கு வீரராகி, உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினார். தொடர்ந்து அலைச் சறுக்கு விளையாட்டில் கொடிகட்டிப் பறந்தார். 2013-ம் ஆண்டு ஆடம் டிர்க்ஸைத் திருமணம் செய்துகொண்டார். 2015-ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. தற்போது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். எங்கள் வீட்டில் நான்காவது உறுப்பினர் வந்திருக்கிறார். மனைவியாகவும் தாயாகவும் இந்த நாட்களை மிகவும் மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருக்கிறேன். எங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என்கிறார் பெதானி. ‘Soul Surfer’ என்ற பெயரில் இவரது வாழ்க்கை, திரைப்படமாக வந்திருக்கிறது.

வாழ்த்துகள் பெதானி!

உலகம் முழுவதும் கெட்சப் விரும்பிச் சாப்பிடப்படுகிறது. ஆனால் கெட்சப் கொட்டி, துணிகள் வீணாகின்றன என்ற வருத்தம் பலருக்கும் இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடித்திருக்கிறார் எமிலி வில்லியம்ஸ். கெட்சப்பை மெல்லியத் துண்டுகளாக உருவாக்கிவிட்டார். இதனால் கெட்சப் வழிந்து கீழே விழாது, துணியில் படாது. “பழகிய ஒரு விஷயத்தில் மாற்றம் கொண்டு வருவது அவ்வளவு எளிதானதல்ல. கெட்சப் துண்டுகள் கிட்டத்தட்ட கெட்சப் சுவையை ஒத்திருக்கின்றன. இதனால் முதலில் சுவைப்பவர்களுக்குத் திருப்தி கிடைக்காது. ஆனால் சில முறை சாப்பிட்ட பிறகு பழகிவிடுவார்கள். 23 நாட்களை இலக்காக வைத்துக்கொண்டு மிக வேகமாக இதைப் பரப்பி வருகிறோம். பொரித்த உணவுகளை இதில் நனைத்துச் சாப்பிட முடியாது. ஆனால் பர்கர், சாண்ட்விச் போன்றவற்றில் வைத்துச் சாப்பிட முடியும். இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு கெட்சப் துண்டுகளை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார் எமிலி வில்லியம்ஸ்.

புதிய வரவு கெட்சப் துண்டு!

http://tamil.thehindu.com/world/article23421396.ece

நன்றி....நவீனன்!

நானும் அந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன்!

என்னை...மிகவும் பாதித்த படங்களுக்குள் அதுவும் ஒன்று!

Link to comment
Share on other sites

உலக மசாலா: குழந்தையைத் தேடிய ஒரு தந்தையின் போராட்டம்

 

 
05chkanWang-Mingqing

சீனாவின் செங்டு நகரில் வசிக்கும் வாங் மிங்கின் 4 வயது மகள், 24 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார். தங்களுடைய பழக்கடையில் இவரும் இவரது மனைவியும் பரபரப்பாக விற்பனை செய்துகொண்டிருந்தனர். அப்போது மகள் வாங் க்ஃபெங் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து மகளைத் தேடியபோது, அவரைக் காணவில்லை. நாள் முழுவதும் தேடியும் மகள் கிடைக்காமல், இரவு ஒரு மணிக்கு வீடு வந்து சேர்ந்தனர். மறுநாள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். உள்ளூர் செய்தித்தாள்களில் குழந்தை காணவில்லை என்று தகவல் கொடுத்தார்கள். ஆனாலும் குழந்தை கிடைக்கவே இல்லை. வாங்குக்கு இன்னொரு மகள் இருந்தார். அவர் க்ஃபெங் போலவே இருப்பார். அதனால் அவரைப் படம் எடுத்து வைத்துக்கொண்டார். தான் செல்லும் இடங்களில், பார்க்கும் நபர்களிடம் எல்லாம் படத்தைக் காட்டி விசாரிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். மகளை தேடுவதற்காகவே 2015-ல் டாக்சி ஓட்டுநராக பணியில் சேர்ந்தார் வாங். தினமும் ஏராளமான மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் மகளின் படத்தைக் காட்டி விசாரித்துக்கொண்டே இருந்தார். இரண்டரை ஆண்டுகளில் சுமார் 17 ஆயிரம் மனிதர்களிடம் விசாரித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு ஒரு வாடிக்கையாளர் வாங்கின் கதையை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அது வைரலானது. செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் மீண்டும் செய்தி வெளிவந்தது. “என்றாவது ஒருநாள் என் மகள் கிடைப்பாள். அவளை என் அருகில் உட்கார வைத்து கார் ஓட்டுவேன். ஒரு அப்பாவாக உனக்கு எதையும் செய்யவில்லை, என்னை மன்னித்துவிடு மகளே என்று கேட்பேன்” என்ற வாங்கின் பேட்டியைக் கண்டு சீனர்கள் நெகிழ்ந்து போனார்கள். தொலைக்காட்சியில் பணிபுரியும் நி பிங், தன்னுடைய விலை மதிப்புமிக்க ஓவியங்களை விற்று, அதில் கிடைத்த 20 லட்சத்தை, க்ஃபெங் தேடும் பணிக்கு அளித்தார். இந்த விஷயம் இன்னும் பரவலாகச் சென்றடைந்தது. காவல் துறை, ஓர் ஓவியர் மூலம் வளர்ந்த க்ஃபெங் எப்படி இருப்பார் என்று ஒரு படம் வரைந்து வெளியிட்டது. அந்தப் படம் லட்சக்கணக்கில் பகிரப்பட்டது. செங்டுவிலிருந்து 1000 கி.மீ. தொலைவில் வசிக்கும் காங் யிங் இந்தப் படத்தைப் பார்த்தார். தன்னைப்போல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். காவல் துறையைத் தொடர்புகொண்டார். அடையாளங்கள் ஒத்துப் போயின. டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏப்ரல் முதல் தேதி காங் யிங், வாங்கின் மகள் க்ஃபெங் என்று உறுதியானது.

“காவல் துறையினர் பலமுறை அடையாளம் ஒத்துப் போகிறது என்று டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவை தோல்வியில் முடிந்ததால், நான் இந்த முறை பெரிய அளவில் எதிர்பார்க்கவில்லை. இந்த நாள் மகத்தானது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் மகள் கிடைத்துவிட்டாள். மகளை வரவேற்க எங்கள் வீட்டை சுத்தம் செய்து, அலங்கரித்திருக்கிறோம். எங்களுடன் சேர்ந்து மகளைத் தேடிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி” என்கிறார் வாங் மிங்.

குழந்தையைத் தேடிய ஒரு தந்தையின் போராட்டம் பிரமிக்க வைக்கிறது!

http://tamil.thehindu.com/world/article23440573.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மாடுகளுக்காக ஆபத்தை எதிர்கொள்ளும் பெண்

 

 
06chskopic

கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் அணு உலை விபத்து நிகழ்ந்த ஃபுகுஷிமா, தடை செய்யப்பட்ட பகுதியாக இருக்கிறது. சுனாமி மற்றும் அணு உலை விபத்தால் சுமார் 20 ஆயிரம் பேர் இறந்து போனார்கள். 1,60,000 பேர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். ஆனால் மனிதர்களால் வளர்க்கப்பட்ட கால்நடைகள் அங்கேயே விடப்பட்டன. 3,500 மாடுகளின் உடலில் கதிர்வீச்சு அளவு அதிக மாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நிறைய மாடுகள் கதிர்வீச்சு பாதிப்பால் மடிந்து போயின. மீதி இருந்த 1,500 மாடுகளை உரிமையாளர்களின் அனுமதி பெற்று, அரசாங்கமே கொன்றுவிட்டது. சில உரிமையாளர்கள் மட்டும் தங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருதிய மாடுகளைக் கொல்வதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. அவர்களிடமிருந்து ஆண்டுக்கு 1.3 லட்சம் ரூபாயைப் பெற்று, மாடுகளைப் பராமரித்து வருகின்றனர். இவற்றில் 11 மாடுகள் மட்டுமே தற்போது எஞ்சியிருக்கின்றன. இந்த மாடுகளைப் பராமரிப்பதற்காக ஃபுகுஷிமா வருவதற்கு மக்கள் அஞ்சுகிறார்கள். இதைப் பார்த்த இரக்கக் குணம் படைத்த இளம்பெண் டானி சகியுகி, இந்தப் பணியை விரும்பி ஏற்றுக்கொண்டார். இரவு நேரத்தில் வேலைக்குச் செல்கிறார். பகல் நேரத்தில் மாடுகளைப் பராமரிக்கிறார். “விபத்து நடந்தபோது நான் டோக்கியோவில் இருந்தேன். செய்தித்தாள்களில் மாடுகள் ஆதரவு இன்றி இருப்பதைப் பற்றிப் படித்தேன். உடனே மாடுகளைக் காப்பாற்ற முடிவெடுத்தேன். அரசாங்கம் இது ஆபத்தான பகுதி என்று எச்சரித்தது. நான் உதவி செய்யாவிட்டால், வேறு யார் செய்யப் போகிறார்கள்? அதனால் துணிச்சலுடன் இந்த முடிவை மேற்கொண்டேன். ஆரம்பத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சென்று உணவு, தண்ணீர் கொடுத்து வந்தேன். விரைவிலேயே தண்ணீர், உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் தினமும் வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. மாடுகள் வசிக்கும் பகுதிக்குச் சற்றுத் தொலைவில் இருந்து தண்ணீர் கொண்டு வருகிறேன். ஒவ்வொரு மாடும் தினமும் ஏராளமான லிட்டர் தண்ணீர் குடிப்பதால், நான் பலமுறை தண்ணீர் எடுத்து வர வேண்டியிருக்கிறது. உணவுகளையும் வெளியில் இருந்து கொண்டு வருகிறேன். 4 மணி நேரங்களுக்கு மேல் இங்கே இருந்தால் ஆபத்து என்பதால், அதற்குள் வேலைகளை முடித்துவிடும்படிச் சொல்லியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இந்த மாடுகளுடன் இன்னும் கொஞ்ச நேரம் என்னால் செலவிட முடியும். ஃபுகுஷிமா அணு உலையிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் இந்த இடம் இருப்பதால், இது அதிக ஆபத்தான பகுதியாக இருக்கிறது” என்கிறார் டானி சகியுகி.

மாடுகளுக்காக ஆபத்தை எதிர்கொள்ளும் டானியை என்னவென்று சொல்வது!

ட்ரினிடாட்டில் வசித்த 33 வயது ஷெரோன் சுகேடோ ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்து வந்தார். மிகப் பெரிய கோடீஸ்வரர். தொழில்முறையில் இவருக்கு ஏராளமான எதிரிகள் இருந்தார்கள். பலமுறை கொலை முயற்சியில் இருந்து தப்பியிருக்கிறார். பாதுகாப்பு ஆட்களுடன் வலம் வருவார். கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்திருப்பார். கடந்த வாரம் எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை இவருக்கு அணிவித்து, சவப்பெட்டியில் வைத்திருந்தனர்!

நகைப் பிரியர்!

http://tamil.thehindu.com/world/article23451115.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஓநாய்களால் வளர்க்கப்பட்ட நிஜ மெளக்ளி!

 

 
07chskopic

ஸ்பெயினைச் சேர்ந்த 72 வயது மார்கோஸ் ரோட்ரிகஸ் பான்டோஜா, 12 ஆண்டு காட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்டிருக்கிறார். 3 வயதில் தாயை இழந்தார். தந்தை வேறு திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டதால் தனித்துவிடப்பட்டார். ஒருநாள் மலைக்கு அருகில் வசித்த ஆடு மேய்ப்பவரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடமிருந்து சில வேலைகளையும் கருவிகளை உருவாக்குவதையும் கற்றுக்கொண்டார். 7 வயதில் முதியவர் இறந்துவிட, ஆதரிக்க ஆள் இன்றி அலைந்தவர், காட்டுக்குள் சென்றுவிட்டார்.

“எனக்குக் காட்டு விலங்குகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அதனால் விலங்குகளிடம் அன்பாகப் பழகினேன். அப்படித்தான் ஒரு ஓநாய் என்னை அன்புடன் அரவணைத்தது. தாயின் அன்பை ஓநாயிடம்தான் பெற்றேன். என்னை எப்போதும் கவனமாகப் பார்த்துக்கொள்ளும். பெர்ரிகளையும் காளான்களையும் சாப்பிட சொல்லும். விஷ உணவுகளைச் சாப்பிடக் கூடாது என்று எச்சரிக்கும். அதன் குட்டிகளையும் என்னையும் ஒன்றாக விளையாட வைக்கும். எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விலங்குகளின் மொழி புரிய ஆரம்பித்தது. நான் எங்கிருந்து குரல் கொடுத்தாலும் சில நிமிடங்களில் ஓநாய்கள் என்னிடம் வந்து சேர்ந்துவிடும்.

ஓநாய்கள், மான்கள், பாம்புகள் என்று பல விலங்குகளும் நானும் ஒரே குகையில் தங்கியிருப்போம். தூங்கும்போது பலமுறை என் மீது பாம்புகள் ஏறிப் போயிருக்கின்றன. ஒருநாளும் எந்த விலங்காலும் நான் ஆபத்தைச் சந்தித்ததே இல்லை. என் வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்தபோது, 19 வயதில் ராணுவ வீரரால் மீட்கப்பட்டேன். நாட்டுக்குள் அழைத்து வரப்பட்டேன். மொழி புரியவில்லை. மனிதர்களின் வாழ்க்கை முறை பிடிக்கவில்லை. காட்டுக்குள் ஓடிவிடலாம் என்று நினைக்காத நொடி இல்லை.

ஆனால் என்னை நிரந்தரமாகக் காட்டில் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை. அடிக்கடி ஓநாய் அம்மாவையும் ஓநாய் தம்பிகளையும் பார்க்க காட்டுக்குள் சென்றுவிடுவேன். பிரத்யேக ஒலி எழுப்பினால், அவை அன்புடன் ஓடிவந்து என்னைக் கட்டிப் புரளும். காலப்போக்கில் என்னிடம் மனிதர்களின் மணமும் குணமும் வந்துவிட்டதால், காட்டில் குரல் கொடுத்தால் ஓநாய்கள் ஓடிவருவதில்லை. பதில் குரல் மட்டுமே கொடுத்தன. மனிதர்களால் வசிக்க முடியாத காட்டில் நான் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தேன். ஆனால் மனிதர்களுடன் வசிக்க ஆரம்பித்தபோதுதான் ஏமாற்றப்பட்டேன். சுரண்டப்பட்டேன். வஞ்சிக்கப்பட்டேன்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உதவி செய்கிறார்கள். பள்ளிகளில் என்னைப் பேச அழைக்கிறார்கள். பெரியவர்களை விடக் குழந்தைகளிடம் பேச எனக்குப் பிடித்திருக்கிறது. அவர்கள் என்னுடைய அனுபவத்தைக் கேட்டு வியக்கிறார்கள். ஆயிரம் கேள்விகள் கேட்கிறார்கள்.”

இப்படித்தான் சொல்கிறார் மார்கோஸ். ஆராய்ச்சியாளர்கள் இவரிடமிருந்து பல தகவல்களைத் திரட்டி, ஆவணப்படுத்தி வருகிறார்கள்.

ஓநாய்களால் வளர்க்கப்பட்ட நிஜ மெளக்ளி!

http://tamil.thehindu.com/world/article23462890.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: 500 வண்ணத்துப்பூச்சிகளை கொன்று ஓவியம்

 

 
10chskopic

சீனாவைச் சேர்ந்த லி ஸெங், க்வான்ஸொவ் பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு ஓவியக்கலை பயின்று வருகிறார். சமீபத்தில் வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளை வைத்து இவர் உருவாக்கிய ஓவியம் அதிக வரவேற்பையும் அதிக எதிர்ப்பையும் பெற்று வருகிறது. “இந்த ஆண்டு நான் ஸ்பெஷல் பிராஜக்டைச் சமர்ப்பிக்க வேண்டும். என் நண்பர்கள் இதுவரை யாரும் பயன்படுத்தாத பொருளை வைத்து ஓவியத்தை உருவாக்கச் சொன்னார்கள். யாருமே பயன்படுத்தாத பொருளைப் பல நாட்கள் யோசித்தேன். ஆராய்ச்சியும் மேற்கொண்டேன். இறுதியில் வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகளை வைத்து ஓவியத்தை உருவாக்க தீர்மானித்தேன். புகழ்பெற்ற ஓவியர் வான்காவை உருவாக்குவதற்கு எனக்கு சுமார் 500 வண்ணத்துப்பூச்சிகள் தேவைப்பட்டன. அதற்காக வேட்டையில் இறங்கினேன். ஆரம்பத்தில் வண்ணத்துப்பூச்சிகளைக் கொல்கிறோமே என்று வருத்தமாக இருந்தது. சில நாட்களில் இறந்துபோகும் வண்ணத்துப்பூச்சிகளுக்கு மறு வாழ்வு அளிக்கிறோம் என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன். வண்ணத்துப்பூச்சிகளைப் பிடித்து, பதப்படுத்தி, ஓவியத்தில் கொண்டுவருவது நான் நினைத்ததைப்போல் அவ்வளவு எளிதாக இல்லை. என்னுடைய இந்த பிராஜக்ட் எல்லோரையும் கவர்ந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பேராசிரியர்கள் உட்பட பலரும் என்னைக் கண்டித்துவிட்டனர். இந்த ஓவியம் உருவாக்கியதில் இப்போதுவரை எனக்குக் குற்றவுணர்வு ஏற்படவில்லை. இந்த ஓவியத்தின் அழகையும் உழைப்பையும் மதிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் பாராட்டு எனக்கு ஆறுதலைத் தருகிறது” என்கிறார் லி ஸெங்.

வான்கா மன்னிக்க மாட்டார்!

உலகில் உள்ள பாதுகாப்பான நகரங்களில் டோக்கியோவும் ஒன்று. ஆனால் இங்கே தனித்து வாழும் பெண்களைக் குறிவைத்து சிலர் தாக்கி வருகிறார்கள். இதுபோன்ற பெண்களுக்காகவே ‘திரைச்சீலையில் மனிதன்’ என்ற தலைப்பில் புதிய அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறது லியோ பேலஸ் என்ற நிறுவனம். திரைச்சீலைகளை வாங்கி, ஸ்மார்ட்போனில் அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இரவு நேரத்தில் போனை இயக்கினால் திரைச்சீலையில் ஆணின் உருவம் தெரியும். காபி குடிப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, உடற்பயிற்சி செய்வது, கிடார் வாசிப்பது, புத்தகம் படிப்பது, மார்ஷியல் கலை பயில்வது, விளையாடுவது, நடனமாடுவது என்று மொத்தம் 12 வித நடவடிக்கைகள் திரையில் வரும். ஒருமுறை இயக்கினால் சுமார் 5 மணி நேரத்துக்கு இந்த உருவங்கள் வந்துகொண்டே இருக்கும். இதைப் பார்க்கும் குற்றவாளிகள், பெண் தனியாக இல்லை என்றும் வலிமையான ஆண் உடன் இருக்கிறான் என்றும் அறிந்துகொண்டு கிளம்பிவிடுவார்கள். தனித்து வாழும் இளம் பெண்கள் மத்தியில் இந்தத் திரைச்சீலைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதை ஜப்பானில் மட்டுமே கொண்டு செல்லும் திட்டம் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது லியோ பேலஸ்.

பெண்கள் தனித்து வாழக்கூடிய சமூகத்தை உருவாக்குவதுதான் ஆரோக்கியமானது, நிரந்தரமானது!

http://tamil.thehindu.com/world/article23487575.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: உயில் போராட்டம்

 

 
11chskopic

இங்கிலாந்தைச் சேர்ந்த 79 வயது ஜோன் தாம்சன், 94 வயது வின்ஃபோர்ட் ஹோட்ஜுடன் அவர் இறக்கும்வரை 42 ஆண்டுகள் மனைவியாக வாழ்ந்திருக்கிறார். ஆனால் கோடீஸ்வரரான வின்ஃபோர்ட், தன்னுடைய சொத்துகளில் ஒரு ரூபாய் கூட ஜோனுக்கோ அவரது குழந்தைகளுக்கோ எழுதி வைக்கவில்லை. அவரது எஸ்டேட்டில் வேலை செய்யும் இருவருக்குச் சொத்துகளை எழுதி வைத்துவிட்டார்! இதனால் கையில் இருந்த 2 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, முதியோர் காப்பகத்தில் சென்று தங்கிவிட்டார் ஜோன். உடல்நலம் சரியில்லாததால் மருத்துவச் செலவும் அதிகமாகிறது. அவரால் தன்னுடைய மருத்துவக் கட்டணத்தைக் கூடக் கொடுக்க முடியாத அளவுக்கு வறுமையில் வாடுகிறார்.

இறுதி 5 ஆண்டுகளில் புற்றுநோயால் அவதிப்பட்டார் ஹோட்ஜ். குறைந்தது 10 முறையாவது உயிலை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார். கடைசியாக எழுதிய உயில் ஜோனுக்குச் சாதகமாக இருந்ததாக இவர்களது குடும்ப வழக்கறிஞர் கூறினார். ஆனால் அந்த வழக்கறிஞருக்கே தெரியாமல் 2016-ம் ஆண்டு வேறு ஓர் உயிலை எழுதி வைத்திருப்பது, ஹோட்ஜ் இறந்த பிறகே தெரியவந்திருக்கிறது. உயிலுடன் இருந்த கடிதத்தில், ‘என் மனைவி ஜோனுக்குத் தேவையான பணம் இருக்கிறது. அதனால் என்னை இறுதிக் காலத்தில் நன்றாகக் கவனித்துக்கொண்ட என்னுடைய இரு ஊழியர்களுக்குச் சொத்து முழுவதையும் பிரித்துக் கொடுக்கிறேன்’ என்று எழுதி வைத்திருக்கிறார். ஜோனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள் அவரது நண்பர்கள். நீதிபதி ஜார்மன், அத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார். “ஜோன் 42 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுடன் ஹோட்ஜ் எஸ்டேடுக்கு வந்து சேர்ந்தார். பண்ணையில் வேலை செய்தார். ஹோட்ஜின் அம்மாவை அவர் வாழ்ந்தவரை அன்போடு கவனித்துக்கொண்டார். 2 ஆண்டுகளில் ஜோனைத் திருமணம் செய்துகொண்டார் ஹோட்ஜ். இந்த 42 ஆண்டுகளில் மனைவிக்கு உரிய அத்தனை பொறுப்புகளையும் கடமைகளையும் ஜோன் சிறப்பாகச் செய்திருக்கிறார். 12 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டார். ஆனாலும் ஹோட்ஜை அவரது உயிர் பிரியும்வரை நன்றாகக் கவனித்துக்கொண்டார். மருத்துவமனை ஊழியர்கள் இதை உறுதி செய்திருக்கிறார்கள். ஹோட்ஜ் தன்னுடைய பொறுப்பையும் கடமையையும் செய்யத் தவறியதால், இதில் நீதிமன்றம் தலையிட்டிருக்கிறது. ஜோனுக்கும் அவரது குழந்தைகள் 4 பேருக்கும் எஸ்டேட் பங்களாவும் சில நிலங்களும் கொடுக்கப்படுகின்றன. ஹோட்ஜின் ஊழியர்கள் இருவருக்கும் வீடுகளும் சில நிலங்களும் வழங்கப்படுகின்றன” என்று தீர்ப்பளித்தார். திடீர் கோடீஸ்வரர்களான ஊழியர்களில் ஒருவர், தங்களுக்கு இவ்வளவு சொத்து வேண்டாம் என்றும் குழந்தைகள் படிப்புக்கும் ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலா செல்வதற்கும் உரிய பணம் கொடுத்தால் போதும் என்றும் சொல்லிவிட்டார். சக்கர நாற்காலியில் இருக்கும் ஜோனும் ஊழியர்களுக்குக் கொடுத்த சொத்து குறித்து எதிர்ப்பு காட்டவில்லை. இந்தத் தீர்ப்பால் மகிழ்ச்சியடைவதாகச் சொல்லியிருக்கிறார்.

கோபத்தில் சொத்தை ஊருக்கு எழுதி வைத்துவிடுவேன் என்று சொல்வதுண்டு; இவர் நிஜமாவே எழுதி வைத்துவிட்டாரே!

http://tamil.thehindu.com/world/article23499298.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: போதை எலிகள்

 

 
12chkanRat

அர்ஜென்டினா தலைநகருக்கு அருகில் இருக்கிறது பிலர் நகரம். அங்குள்ள காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 6 ஆயிரம் கிலோ போதைப் பொருட்களை ஓர் அறையில் பத்திரமாக வைத்திருந்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறையைத் திறந்து பார்த்தபோது, 540 கிலோ போதைப் பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது. கமிஷனர் எமிலியோ போர்டெரோ, தமது உதவியாளர் ஜாவியர் ஸ்பீசியாவிடம் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அவருடன் இன்னும் இருவர் சேர்ந்து புலன் விசாரணையில் இறங்கினர். முதலில் காவல் நிலையத்தில் பணிபுரிபவர்களை விசாரித்தனர்.

பிறகு போதைப் பொருட்கள் இருந்த அறையை ஆராய்ந்தனர். பிறகு மூன்று பேரும் மனிதர்கள் யாரும் போதைப் பொருட்களை எடுக்கவில்லை என்றும் எலிகள்தான் இரண்டு ஆண்டுகளில் 540 கிலோ போதைப் பொருட்களை காலி செய்திருக்கின்றன என்றும் தெரிவித்தனர். எமிலியோ போர்டெரோவுக்கு இந்த அறிக்கையில் நம்பிக்கை வரவில்லை. மீண்டும் வேறு சில நம்பகமான ஆட்களை விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர்களும் இது எலிகளின் வேலை என்று சில ஆதாரங்களுடன் நிரூபித்தனர். “எலிகளால் இவ்வளவு போதைப் பொருட்களை காலி செய்ய முடியும் என்று என்னால் இப்போதுகூட நம்ப முடியவில்லை. ஆனால் அதுதான் உண்மை” என்று சொல்கிறார் எமிலியோ போர்டெரோ. நிபுணர்கள் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். போதைப் பொருட்களை சாப்பிட்ட எலிகள் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அறையிலும் அறையைச் சுற்றியுள்ள இடங்களிலும் எலியின் உடல்கள் எதுவும் இருக்கவில்லை என்கிறார்கள். முதலில் காவல் துறையின் அறிக்கையை ஏற்றுக்கொண்டது நீதிமன்றம். இப்போது மீண்டும் இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வர இருக்கிறது.

இந்த வேலையைச் செய்தது எலிகளா, மனிதப் பெருச்சாளிகளா?

 

 

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் விரக்தியடைந்தார் எரிக் ஹாகர்மன். உடனே பெரிய நிறுவனத்தில் தான் செய்த வேலையை ராஜினாமா செய்தார். கிராமப் பகுதியில் குடியேறினார். பன்றிப் பண்ணையை உருவாக்கினார். ட்ரம்ப் பற்றிய எந்தச் செய்தியும் தனக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தன் வாழ்க்கை முறையையே மாற்றிக்கொண்டார். செய்தித்தாள்கள் வாங்குவதை நிறுத்தினார்.

தொலைக்காட்சியில் விளையாட்டு, வானிலை செய்திகளை மட்டுமே பார்த்தார். நண்பர்கள், உறவினர்களிடம் ட்ரம்ப் பற்றிய எந்தச் செய்தியையும் தன்னிடம் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். கடைகளுக்குச் செல்லும்போது யாராவது ட்ரம்ப் பற்றி பேசி, அது தன் காதில் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக ஹெட்போனை மாட்டிக்கொண்டு சென்று வருகிறார். “எந்த மனிதர் மீதும் எனக்கு வெறுப்பு இருந்ததில்லை. ஆனால் ட்ரம்பை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. அதனால்தான் என்னை மாற்றிக்கொண்டிருக்கிறேன். ஓராண்டு காலமாக என்னுடைய கொள்கையில் உறுதியாக இருக்கிறேன். அப்படியும் ஒபாமா மருத்துவக் காப்பீடு, வடகொரிய அதிபர் குறித்த செய்திகள் என் கண்ணில் பட்டுவிட்டன. இந்த ஓராண்டில் இதுவரை நான் வாழ்ந்த காலங்களைவிட மகிழ்ச்சியாக இருக்கிறேன். பதற்றம் இல்லாமல் வாழ்கிறேன். ஆரோக்கியமாக இருக்கிறேன். இப்படி இல்லாவிட்டால், ட்ரம்ப் செய்யும் செயல்களுக்கு என் மனநிலையும் உடல் நிலையும் என்ன ஆகியிருக்கும் என்று எனக்குத் தெரியாது” என்கிறார் எரிக் ஹாகர்மன்.

ஒரு மனிதரின் வாழ்க்கை முறையையே மாற்றிய ட்ரம்ப்!

http://tamil.thehindu.com/world/article23508906.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: சாது மிரண்டால் நாடு தாங்காது!

 

 
13chskopic

ரக்கூன்கள் என்பவை பாண்டா கரடிகளுக்கு நெருங்கிய இனமாகும். இவை வடஅமெரிக்காவில் காணப்படுகின்றன. அண்மைகாலமாக அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தின் யங்ஸ்டவுன் பகுதியில் ரக்கூன்களின் தொல்லை அதிகரித்து வருகின்றன. பொதுவாக ரக்கூன்கள் இரவு நேரத்தில்தான் உணவு தேடி வெளியே வரும். மனிதர்களைக் கண்டால் ஒதுங்கிவிடும். இப்படிப்பட்ட ரக்கூன்கள், சமீப நாட்களில் பகலில் மனிதர் வசிப்பிடங்களைத் தேடி வருகின்றன. இரண்டு கால்களால் நிமிர்ந்து நிற்கின்றன. கண்களை உருட்டி மிரட்டுகின்றன. பற்களைக் காட்டிப் பயமுறுத்துகின்றன. “ரக்கூன்களின் விநோதமான நடவடிக்கைகளுக்குக் காரணம், அவை நோயால் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்தில் இருக்கலாம். வைரஸ் பாதிப்பு என்றால் அவை ஒரு ரக்கூனிலிருந்து இன்னொரு ரக்கூனுக்குப் பரவிவிடும். இப்படி இருக்கும்போது அவை புறச் சூழலை மறந்து, மோசமாக நடந்துகொள்கின்றன. தடுப்பூசி போடாவிட்டால் வீட்டு நாய்களுக்குக் கூட இந்தப் பிரச்சினை ஏற்படலாம்” என்கிறார்கள் விலங்குகள் ஆராய்ச்சியாளர்கள்.

சாது மிரண்டால் நாடு தாங்காது!

 

சீனாவின் வுஹான் பகுதியில் வசிக்கும் 50 வயது சென், கடுமையான முதுகுத் தண்டு நரம்பணு பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். வைட்டமின் பி12 குறைபாடுதான் இந்தப் பாதிப்புக்குக் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். 20 வயதில் 55 கிலோ எடை இருந்த சென், அசைவ உணவைச் சாப்பிடுபவராக இருந்திருக்கிறார். திடீரென்று எடை குறைப்பின் மீது அவருக்கு ஆர்வம் வந்தது. உடனே அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். சைவத்திலும் எல்லாச் சத்துகளும் நிறைந்த உணவுகளை அவர் சாப்பிடவில்லை. மிகக் குறைவான உணவுப் பொருட்களை, குறைந்த அளவே எடுத்துக்கொண்டார். இதனால் மிக வேகமாக உடல் எடையை இழந்தார். 45 கிலோ எடையுடன் அதே உணவுப் பழக்கத்தைக் கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். “என்னுடைய உணவுப் பழக்கம் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென்று என் கால்கள் இரண்டும் சமமாக இல்லாதது போன்று தோன்றியது. இரண்டு அடி எடுத்து வைத்தபோது, நடக்க முடியாமல் விழுந்துவிட்டேன். என் கைகளும் கால்களும் உணர்ச்சியற்று இருந்தன. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிறகு ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினையாக இருக்குமோ என்று ஆராய்ந்தனர். இறுதியில் பி12 வைட்டமின் குறைபாட்டால் நான் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டேன் என்று தெரிவித்தனர். சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் பி12 அளவில் 10% மட்டுமே எனக்கு இருக்கிறது. இதற்குக் காரணம் நான் மேற்கொண்ட உணவுப் பழக்கம்தான். எடை அதிகரிக்கும் என்று சைவ உணவிலும் அனைத்துச் சத்துகளையும் நான் எடுத்துக்கொள்ளவில்லை. பி12 மாத்திரைகளையும் பயன்படுத்தவில்லை. இதனால் என் முதுகுத் தண்டில் உள்ள நரம்பணுக்கள் பாதிக்கப்பட்டுவிட்டன. இன்னும் சிறிது நாட்கள் கழித்து மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் என்னால் நிரந்தரமாக நடக்க முடியாமலே போயிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்” என்கிறார் சென். “பி12 இறைச்சியில்தான் அதிகம் இருக்கிறது. மீன், ஆலிவ் எண்ணெய் போன்று நல்ல கொழுப்பு கிடைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இறைச்சி சாப்பிடாதவர்கள் அதைச் சரிகட்டும் விதத்தில் உணவுகளையும் சத்து மாத்திரைகளையும் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். எடை குறைப்பை விட உயிர் வாழ்தல் முக்கியமானது” என்கிறார் சென்னின் மருத்துவர்.

எடை குறைப்பின் விபரீதம்!

http://tamil.thehindu.com/world/article23521098.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா - உடல் முழுவதும் நகம்

 

 
masal

ஷானைனா இசோம்

அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் பகுதியில் வசிக்கிறார் 32 வயது ஷானைனா இசோம். கடந்த ஐந்து ஆண்டு களாக வித்தியாசமான நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். தோலில் முடிகள் முளைக்க வேண்டிய இடங்களில் எல்லாம் நகங்கள் முளைத்துள்ளன. இந்த நோய்க்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆஸ்துமாவுக்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபோது, அளவுக்கு அதிகமான ஸ்டீராய்ட் மருத்துகள் கொடுக்கப்பட் டிருக்கின்றன. அது அலர்ஜியாக மாறி, தோலில் கடுமையான அரிப்பை உண்டாக்கியிருக்கிறது. அரிப்பைத் தடுக்க மேலும் சில மருந்துகள் கொடுக்கப்பட்டபோது, நிலைமை இன்னும் மோசமாகி விட்டது.

முடிகளுக்குப் பதிலாக நகங்கள் உடல் முழுவதும் முளைத்துவிட்டன. கால்கள் இரண்டும் கறுப்பாகிவிட்டன. அவரது பார்க்கும் திறன் குறைந்துவிட்டது. எலும்புகள் வலுவிழந்துவிட்டன. உடல் எடையும் வேகமாகக் குறைந்து வருகிறது. மருத்துவச் செலவு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஒரு மில்லியன் டாலர் மருத்துவமனைக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது. மாதத்துக்கு 25 ஆயிரம் டாலர் செலவாகிறது. மகளுக்காக வேலையைவிட்டுவிட்ட அவரது அம்மாவால் சமாளிக்க இயலவில்லை. ஷானைனாவுக்காக நிதி திரட்டி வருகிறார்கள். ஆனால் அந்த நிதியை விட மருத்துவச் செலவு அதிகமாகிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.

நோய்க்கு வைத்தியம் பார்க்கப் போன இடத்தில் புதுசா இப்படி ஒரு நோயா… கொடுமைதான்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த ஹெலேன் ஹோயோஸ், திபட் கில்க்வின் இருவரும் புதிய வகை பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் பாத்திரத்தைச் சுத்தம் செய்து, மீண்டும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. உணவைப் பாத்திரத்தில் வைத்து, அப்படியே பாத்திரத்தையும் சேர்த்துக் கடித்துச் சாப்பிட வேண்டியதுதான். உருளைக் கிழங்கு, தண்ணீர், எண்ணெய் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாத்திரங்கள் எளிதாக ஜீரணமாகக்கூடியவை. சின்னச் சின்னப் பாத்திரங் களைத்தான் தற்போது உருவாக்கியிருக்கிறார்கள். எதிர்காலத்தில் பெரிய பாத்திரங்கள், தண்ணீர் டம்ளர்கள் எல்லாம் உருவாக்கும் திட்டம் இருக்கிறது என்கிறார்கள்.

புதுமையான ஐடியாதான்… ஆனால் மளிகை சாமான்கள் வாங்கும்போது 500 தம்ளர், 300 தட்டுனு வாங்க முடியுமா என்ன!

புளோரிடாவில் 40 வயது ரூபி க்ரவ்பெராவுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. மிகவும் சிக்கலான இந்த ஆபரேசனுக்குப் பிறகு ரூபியின் நாடித்துடிப்பு படிப்படியாகக் குறைந்து நின்றுவிட்டது. டாக்டர்கள் குழு பரிசோதித்த பிறகு, ரூபியின் உறவினர்களை அழைத்து இறந்துபோன விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். சந்தோஷமான தருணம் துக்கமாக மாறிய அதிர்ச்சியில் எல்லோரும் இருந்திருக்கிறார்கள். திடீரென்று ரூபியின் இதயம் துடிக்க ஆரம்பித்தது. மருத்துவர்கள் தொடர்ந்து மருந்துகளைச் செலுத்த, ரூபி பிழைத்துக்கொண்டார்! நாடித்துடிப்பு நின்று 45 நிமிடங்களுக்குப் பிறகு ரூபி பிழைத்ததில் மருத்துவர்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது!

மரணத்தைத் தொட்டுத் திரும்பிய ரூபிக்கு வாழ்த்துகள்!

சூரிய சக்தி மூலம் இயங்கும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான சாலை நெதர்லாந்தில் போடப்பட்டிருக்கிறது. உலகின் முதல் சூரிய சக்திக்கான சாலையாக இது இருக்கிறது. இந்தச் சாலையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது வாகனங்களுக்கான சூரிய சக்தி கிடைக்கிறது. வீடு, தெரு விளக்கு, டிராபிக் விளக்குகள் போன்றவற்றில் பயன்பட்டுவந்த சூரிய சக்தி, இனி இரண்டு சக்கர வாகனங்களுக்கும் பயன்பட இருக்கிறது. எரிபொருள் பற்றாக்குறை, எரிபொருள் மாசு போன்றவற்றில் இருந்து உலகத்தைக் காக்க இந்தச் சூரிய சக்தி மிகவும் இன்றியமையாதது.

வருடத்தின் பெரும்பகுதி வெயில் வாட்டும் நம்ம நாட்டுக்குத்தான் முதலில் இந்தத் திட்டம் கொண்டு வரணும்…

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உலக மசாலா: கைகளால் நடக்கும் அதிசய மனிதர்!

 

 
14chskowalk

எத்தியோப்பியாவின் டிக்ரே நகரில் வசிக்கும் 32 வயது டிரார் அபோஹோய் பெரும்பான்மையான நேரம் கைகளால் நடக் கிறார். தார்ச் சாலை, மலைப் பதை, மாடிப் படிகள் என்று எந்த இடமாக இருந்தாலும் வெறும் கைகளால் நடந்து, காண்போரை ஆச்சரியப்படுத்துகிறார். சின்ன வயதில் சீன, அமெரிக்கத் திரைப்படங்களில் தலைகீழாக நடப்பவர்களைக் கண்டு வியந்திருக்கிறார். 9 வயதில் தானும் அதுபோல் நடக்க வேண்டும் என்று முடிவெடுத்து, கைகளால் நடக்கப் பயிற்சி எடுத்திருக்கிறார். ”திரைப்படங்களில் தலைகீழாக நடக்கும் காட்சிகளில் தொழில்நுட்பமும் எடிட்டிங்கும் பங்குவகித்திருக்கும் என்று அப்போது எனக்குத் தெரியாது. அது உண்மை என்று நினைத்துதான் பயிற்சியில் இறங்கினேன். ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது. தோள்பட்டையும் கைகளும் பயங்கரமாக வலித்தன. வெறும் கைகளால் நடப்பதால் புண்ணாகிவிட்டன. வீட்டில் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்கள். நான் என்னுடைய லட்சியத்தில் உறுதியாக இருந்தேன். வீட்டில் நடக்க ஆரம்பித்து, பிறகு சாலைகளில் நடக்க ஆரம்பித்தேன். சிலர் என்னைப் பார்த்து வியந்தார்கள். சிலர் சிரித்தார்கள். பிறகு காடு, மலை, மாடிப்படிகள் என்று முன்னேறினேன். இப்போது காலையில் 3 மணி நேரமும் மாலையில் 3 மணி நேரமும் பயிற்சி செய்கிறேன். கால்களால் நடந்து செய்யும் பல விஷயங்களை நான் கைகளால் நடந்துகொண்டு செய்கிறேன். இடுப்பில் ஒரு கயிறைக் கட்டி, கைகளால் நடந்தபடி காரை இழுத்துச் செல்கிறேன். என் முதுகில் ஒருவரை உட்கார வைத்து, கைகளால் நடந்து செல்கிறேன். மூட்டையைச் சுமந்து செல்கிறேன். வாய்க்காலைத் தாண்டுகிறேன். கைகளால் நடக்கும் கலையில் மாஸ்டர் பட்டம் பெற்றுவிட்டேன். விரைவில் கின்னஸ் சாதனை படைப்பேன். எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள். ஆனால் என் அம்மா ஒரு நாளும் என்னைப் பாராட்டியதில்லை. எனக்கு என்னாகுமோ என்று பயந்துகொண்டே இருக்கிறார்” என்கிறார் டிரார் அபோஹோய்.

கைகளால் நடக்கும் அதிசய மனிதர்!

 

தாய்லாந்தில் கடந்த 3 மாதங்களில் புதிதாக ஒரு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. வரதட்சணை கொடுக்க முடியாத ஏழை மக்களுக்கு, வரதட்சணையை வாடகைக்குக் கொடுக்கிறார்கள் இவர்கள். தாய்லாந்து திருமணத்தில் வரதட்சணை முக்கியப் பங்கு வகிக்கிறது. திருமணத்தின்போது வரதட்சணை கொடுக்க முடியாதவர்கள், வருத்தத்தோடு காட்சியளிப்பார்கள். அந்த வேதனையைப் போக்கும் விதத்தில் இந்தத் தொழிலை ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள். கட்டுக் கட்டாகப் பணம், நகைகள், கார் போன்றவற்றை வாடகைக்கு விடுகிறார்கள். அவரவர் சக்திக்கு ஏற்ப கட்டணத்தைச் செலுத்தி, சில நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து, சிறப்பாகத் திருமணத்தை நடத்தி முடிக்கிறார்கள். 1 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வைத்திருக்கிறார்கள். “நாங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டோம். நாங்கள் நினைத்ததுபோல் வரதட்சணை கொடுக்க முடியவில்லை. அப்படி ஒரு நிலை யாருக்கும் வரவேண்டாம் என்பதற்காகவே இந்தத் தொழிலை ஆரம்பித்திருக்கிறோம்” என்கிறார் தவான் சுபனோண்டகோம்.

ஐயோ… வாடகைக்கு வரதட்சணையா!

http://tamil.thehindu.com/world/article23534778.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: சுவாரஸ்யமான தேடுததான்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
15chskorobo
TAMILTHTemplateLibrarynation21clIMG2
15chskorobo
 

மனிதர்களின் வேலைகளை ரோபோக்கள் செய்ய ஆரம்பித்து வெகு காலமாகிவிட்டது. ரோபோக்கள் அரசியலில் குதித்து, அரசாங்க நிர்வாகத்திலும் பங்கேற்கும் நாள் தொலைவில் இல்லை. சாமுராய், விடுதி வரவேற்பாளர், தொழிற்சாலை ஊழியர் போன்ற பணிகளில் ரோபோக்களை ஜப்பானியர்கள் ஏற்கெனவே கொண்டுவந்துவிட்டனர். ஆனால் சட்டப்பூர்வமான அரசாங்கப் பணிகளில் இதுவரை எந்த ரோபோவும் வேலை செய்யவில்லை. தற்போது ஜப்பானின் டாமா நகரில் நடைபெறும் மேயர் தேர்தலில் மனிதர்களுடன் சேர்ந்து முதல் முறையாக ரோபோவும் களத்தில் குதித்திருக்கிறது. ரோபோவை தேர்தலில் இறக்கியிருக்கும் 44 வயது மிச்சிஹிடோ மட்சுடா, 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மேயர் தேர்தலில் நின்று தோற்றார். இந்தத் தேர்தலில் தான் நேரடியாக இறங்காமல், ரோபோவை இறக்கியிருக்கிறார். “உலகிலேயே மேயர் தேர்தலில் நிற்கக்கூடிய முதல் ரோபோ இதுதான். இந்த நகரத்தைப் பற்றிய அத்தனை விஷயங்களும் ரோபோவுக்குத் தெரியும். நியாயமான, பாரபட்சம் இல்லாத, துரிதமாக வேலை செய்ய, வேகமாக முடிவெடுக்க இந்த ரோபோவால் முடியும். மனிதர்களை விடவும் சிறப்பாகச் செயல்பட முடியும். ஒரு முறை இந்த ரோபோவுக்கு வாக்களித்துப் பாருங்கள். உண்மையை அறிந்து கொள்வீர்கள்” என்று பிரச்சாரம் செய்து வருகிறார். நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் வேட்பாளர்கள் படங்களுடன் ரோபோவின் படங்களும் இடம்பெற்றுள்ளன. பிரச்சாரத்திலும் ரோபோ ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் தேர்தலில் நிற்கும் ரோபோவை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். ரோபோ மேயரானால் ஊழல் குறையும் என்றும் நல்ல நிர்வாகம் அமையும் என்றும் கருதுகிறார்கள். இது தேர்தல் ஏமாற்று வேலை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஏப்ரல் 15 தேர்தல் நடக்கிறது. இதில் ரோபோ வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படலாம்.

உலகின் முதல் மேயராகுமா இந்த ரோபோ?

 

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளி மாணவர்கள், கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கண்ணாடி பாட்டிலைக் கண்டெடுத்தனர். அதற்குள் ஒரு கடிதம் இருந்தது. ஆசிரியர்களிடம் ஒப்படைத்தனர். “கதைகளில்தான் கடிதம் அனுப்பும் பாட்டிலைப் பார்த்திருக்கிறோம். நிஜத்தில் ஒரு பாட்டில் கிடைத்தவுடன் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பள்ளிக்குக் கொண்டுவந்து திறந்து பார்த்தோம். 2007-ம் ஆண்டில் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. எழுத்துகள் மங்கலாகத்தான் தெரிந்தன. ‘நான் கடலில் ஒரு மரக்கட்டையைப் பிடித்தபடி மிதந்து கொண்டிருக்கிறேன். க்ரீனாக் பகுதியைத் தவறிவிட்டேன். மீன்களையும் மிதவை உயிரினங்களையும் உண்டு கொண்டிருக்கிறேன். எவ்வளவு நேரம் என் உடல் தாக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை. 30 டிகிரி தீர்க்க ரேகை, 24 டிகிரி அட்ச ரேகையில் ஆர்டிக் வட்டத்தில் துருவக் கரடிகளையும் பென்குவின்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு உதவி செய்தால், உங்களுக்கு தக்க சன்மானம் அளிக்கிறேன். இப்படிக்கு, உதவியற்ற ஆண்ட்ரூ மீர்ஸ்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. குழந்தைகளும் நாங்களும் ஆண்ட்ரூவைத் தேடும் பணியில் ஆர்வமாக இறங்கியிருக்கிறோம். அவர் நலமாக இருக்க வேண்டும்” என்கிறார் பள்ளி நிர்வாகி.

சுவாரசியமான தேடுதல்தான்!

http://tamil.thehindu.com/world/article23546401.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: தங்கத்தில் செருப்பு

 

 
17chskopic

பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் சல்மான் சாஹித், திருமண வரவேற்பில் அணிந்திருந்த ஆடை பரபரப்பாகியிருக்கிறது. தங்க இழைகளால் நெய்யப்பட்ட சூட், அதுக்குப் பொருத்தமாகத் தங்கப் படிகங்களால் ஆன டை, தங்கத்தால் செய்யப்பட்ட காலணி போன்றவற்றை அணிந்திருந்தார். இதைப் பார்த்தவர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறார்கள். சூட், டை, காலணி எல்லாம் சேர்த்து 25 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் செலவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். “எனக்கு எப்போதும் தங்கக் காலணி அணிய வேண்டும் என்று விருப்பம். பொதுவாகத் தங்கத்தைக் கழுத்தில் ஆபரணமாக மக்கள் அணிகிறார்கள். செல்வம் உங்கள் கால் தூசிக்குச் சமமானது என்பதைச் சொல்வதற்காகவே நான் தங்கக் காலணிகளை அணிய விரும்புகிறேன்” என்கிறார் சல்மான் சாஹித்.

இதற்கு நாம் ஒன்றும் சொல்ல முடியாது!

 

லண்டனில் வசிக்கும் 27 வயது டாம் சர்ச், 100 மைல் தொலைவில் பிரிஸ்டோலில் இருக்கும் நண்பரைப் பார்க்க விரும்பினார். ஆனால் ரயில் கட்டணம் அதிகமாக இருந்தது. எனவே மாற்று வழி குறித்து யோசித்தவர் பழைய கார் ஒன்றை வாங்கி பயணம் மேற்கொள்வது ரயில் கட்டணத்தை விடக் குறைவானது என்று அறிந்தார். “கம்ட்ரீ பகுதியில் ஒரு பெண்ணிடம் 1997-ம் ஆண்டு வாங்கப்பட்ட கார் விற்பனைக்கு வந்துள்ளதைக் கண்டுபிடித்தேன். 20 ஆண்டுகளுக்கு மேலானாலும் கார் ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. குறைவாகச் செலவு செய்தால் போதும் என்று தோன்றியது. அதனால் காரை வாங்கினேன். பணம் செலவு செய்து காரை நல்ல நிலைக்குக் கொண்டு வந்தேன். 6 மாதங்களுக்கு உரிய சாலை வரியைச் செலுத்தினேன். இன்சூரன்ஸ் எடுத்தேன். பெட்ரோல் போட்டேன். மொத்தம் 19 ஆயிரம் ரூபாய் செலவானது. ரயில் கட்டணத்தை விட ஆயிரம் ரூபாய் குறைவாகச் செலவு ஆகியிருக்கிறது! அத்தோடு ஒரு காரும் எனக்குச் சொந்தமாகியிருக்கிறது. ரயில் கட்டணத்தை விட, கார் பயணம் செலவு குறைவு என்று சொல்லவில்லை. பயணம் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டால் செலவை குறைக்கலாம்” என்கிறார் டாம் சர்ச்.

நமக்கு ரயில் கட்டணம்தான் குறைவானது!

 

ஜப்பானைச் சேர்ந்த 31 வயது டைகோ, வீடியோ கேம் விளையாடுவதில் அளவுக்கு அதிகமான ஆர்வம் கொண்டவர். இரவு முழுவதும் விளையாடுவார். குளிக்கும்போது, சாப்பிடும்போதும் விளையாடுவார். பயணத்திலும் விளையாடுவார். ஒரு கட்டத்தில் இந்த விளையாட்டுகளில் அவருக்கு சுவாரசியம் குறைவாகத் தோன்றிவிட்டது. சில கதாபாத்திரங்களின் குணா அம்சத்தை மாற்றுவதற்கும் விளையாட்டின் வேகத்தை அதிகரிப்பதற்கும் சொந்தமாக அப்ளிகேஷனை வாங்க முடிவு செய்தார். இதற்காகச் சுமார் 45 லட்சம் ரூபாய் செலவு செய்து வாங்கிவிட்டார். “நான் பெற்றோருடன் வசித்து வருகிறேன். என் சம்பாத்தியம் முழுவதும் எனக்குதான். அதனால் என்னால் இதைச் செய்ய முடிந்தது” என்கிறார் டைகோ.

விளையாட்டை விளையாட்டாகப் பார்ப்பதில்லை!

http://tamil.thehindu.com/world/article23567996.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: நாரையின் மிக அழகான காதல் கதை!

 

 
18chskopic

தென்னாப்பிரிக்காவிலிருந்து மிகப் பெரிய மஞ்சள் மூக்கு நாரைகள் (Stork), ஐரோப்பாவில் உள்ள குரேஷியா நாட்டின் ஒரு சிறிய கிராமத்துக்கு ஆண்டுதோறும் வலசை செல்கின்றன. கடந்த 16 ஆண்டுகளாக ஓர் ஆண் நாரை, 14 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து, பறக்க இயலாத தன் இணையைச் சந்தித்துக் கொண்டிருக்கிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் குரேஷியாவுக்கு வந்து பெண் நாரையுடன் குடும்பம் நடத்தி, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, குழந்தைகளுடன் தென்னாப்பிரிக்காவுக்குப் பறந்து செல்கிறது. அடுத்த மார்ச் மாதம்வரை தன் இணைக்காகப் பெண் நாரை காத்துக்கொண்டிருக்கிறது!

“1993-ம் ஆண்டு வேட்டைக்காரர்களின் துப்பாக்கிக் குண்டு இந்தப் பெண் நாரையின் காலில் துளைத்து மயங்கிக் கிடந்தது. காட்டில் பிற விலங்குகளுக்கு இரையாகிவிடும் என்று எல்லோரும் சொன்னார்கள். எனக்கு அந்தப் பறவையை அப்படியே விட்டுவிட மனம் இல்லை. மருத்துவம் செய்தேன். ஆனாலும் பறக்கும் ஆற்றலை இழந்துவிட்டது. மெலினா என்று பெயரிட்டு, என் வீட்டிலேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்தேன்.

தினமும் 30 கி.மீ. தூரத்திலிருக்கும் குளத்துக்குச் சென்று, மீன்களைப் பிடித்து வந்து உணவு கொடுக்கிறேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த க்லெபேடனுடன் இணை சேர்ந்தது. இரண்டும் குடும்பம் நடத்தி அந்த ஆண்டு சில குஞ்சுகளை உருவாக்கின. குஞ்சுகள் நன்றாகப் பறக்கக் கற்றுக்கொண்டவுடன், க்லெபேடன் தன் குழந்தைகளுடன் தென்னாப்பிரிக்கா சென்றுவிட்டது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மெலினாவைத் தேடி வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் வந்து சேர்ந்தது. மெலினாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த 14 ஆண்டுகளில் இரண்டும் சேர்ந்து 62 குஞ்சுகளை உருவாக்கியிருக்கின்றன. ஒவ்வொரு வருஷமும் இணையும் குஞ்சுகளும் பறந்து செல்லும்போது மெலினா துயரத்தில் ஆழ்ந்துவிடும். உயரமான மரத்திலோ கட்டிடத்திலோ 3 நாட்கள்வரை உண்ணாமல், உறங்காமல் அப்படியே அமர்ந்திருக்கும். அப்போது என்னைக் கூடப் பொருட் படுத்தாது. துயரம் குறைந்தவுடன் இறங்கி வந்து, இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளும். அடுத்த மார்ச் மாதத்துக்காகக் காத்திருக்கும்.

மெலினாவுக்கு மட்டுமின்றி, அதன் குஞ்சுகளுக்கும் சேர்த்து நான் மீன்களைக் கொண்டு வந்து கொடுப்பேன். க்லெப்பேடனால் தன் குடும்பத்துக்கே உணவு கொண்டு வர இயலாது என்பதால் நான் உணவூட்டுவதை இந்த ஜோடி அனுமதிக்கிறது. நான் பள்ளி யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். என் மகன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறான். மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்டார். நானும் என் மகள் மெலினாவும் மட்டுமே இங்கே வசிக்கிறோம். க்லெப்பேடனின் காலில் ஆராய்ச்சியாளர்கள் அடையாளத்துக்கு வளையம் கட்டி வைத்திருக்கிறார்கள். இதன்மூலம் கேப் டவுனில் அது வசிப்பது தெரிய வந்திருக்கிறது. என்னால் மெலினாவைத் தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச்செல்ல இயலாது. ஒரு மாதம் பயணித்து, சரியாக மார்ச் 24-ம் தேதி தன் இணையைக் காண வரும் க்லெப்பேடனின் அன்பை என்னவென்று சொல்வது?” என்கிறார் 71 வயது ஸ்டெஜ்பன் வோகிக்.

நாரையின் மிக அழகான காதல் கதை!

http://tamil.thehindu.com/world/article23581035.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: தன்னம்பிக்கை சாம்பியன்

 

 
19ChKanMail%20photos
 

சீனாவின் ஹார்பின் பகுதியைச் சேர்ந்த 22 வயது ஸாங் ஷுவாய் அளவுக்கு அதிகமான எடையுடன் இருந்தார். ஆறே மாதங்களில் எடையைக் குறைத்ததோடு, பாடிபில்டிங் சாம்பியனாகவும் மாறியிருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் இவர் சிறந்த கூடைப்பந்து வீரராக திகழ்ந்தார். திடீரென மிக மோசமான காயம் ஏற்பட்டது. அவரால் விளையாட முடியாமல் போனது. மன அழுத்தத்துக்கும் ஆளானார். அதிகமாக சாப்பிட்டார். 40 கிலோ எடை கூடியது. இதனால் பல விதங்களில் கஷ்டப்பட்டார். உடல் தேறியதால் 6 மாதங்களுக்கு முன்பு எடை குறைக்க முடிவெடுத்தார். மீண்டும் உடற்பயிற்சிகளை ஆரம்பித்தார். கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டார். 30 கிலோ எடையைக் குறைத்தவுடன் கிட்டத்தட்ட பழைய உடல்நிலைக்குச் சென்றார். அப்போது தான் பாடிபில்டிங் மீது ஆர்வம் ஏற்பட்டது. லட்சியத்துடன் உழைத்தார். அவர் எதிர்பார்த்ததைவிட உடல் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தது. நம்பிக்கையுடன் போட்டியில் கலந்துகொண்டார். சாம்பியன் பட்டத்தையும் வென்றார். எடையைக் குறைத்து ஆறே மாதங்களில் ஸாங் இதைச் செய்தார் என்பதுதான் ஆச்சரியமானது. “விபத்து நிகழ்ந்தபோது நான் மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் துவண்டு போனேன். கண்டதையும் சாப்பிட்டேன். உடல் எடை கூடியது. ஒரு கட்டத்தில் அதன் கஷ்டத்தை உணர ஆரம்பித்தேன். நான் இனி அவ்வளவுதானா என்ற பயம் வந்தது. நல்லவேளை, என் உடல் பூரணமாகக் குணமடைந்தது. சட்டென்று மன உறுதியுடன் உடல் எடையைக் குறைத்ததோடு, பாடிபில்டிங்கிலும் சாம்பியன் ஆகிவிட்டேன்” என்கிறார் ஸாங் ஷுவாய்.

தன்னம்பிக்கைக்கு வாழ்த்துகள்!

 

மொராகோவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், சமீபத்தில் மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டார். அதில் அவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி இல்லை என்பது தெரியவந்தது. அதிர்ந்து போனார். திருமணமாகி 35 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறார். இதில் 9 குழந்தைகள் அவருக்கு பிறந்திருக்கின்றனர். மருத்துவரிடம் குழந்தைகள் இருப்பதைச் சொன்னார். உடனே மேலும் சில மருத்துவப் பரிசோதனைகளைச் செய்தார் மருத்துவர். அனைத்துப் பரிசோதனை முடிவுகளிலும் இவருக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பது தெரிந்துவிட்டது. வேறு ஓர் இடத்திலும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, முடிவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தார். அதிலும் அதே முடிவு வந்தவுடன் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்துவிட்டார். நீதிமன்றம் மனைவியின் தரப்பையும் தீர விசாரித்து, இன்னொரு முறை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பிறகு தீர்ப்பு வழங்கும். ஒருவேளை குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், மொராகோ சட்டப்படி கடுமையான தண்டனை மனைவிக்கு வழங்கப்படும். பேராசிரியருக்கு 9 குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் இல்லாமல் போய்விடும்.

தீர விசாரிப்பதே மெய்.

http://tamil.thehindu.com/world/article23599391.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: வெறிநாய் மருந்து

 

 
20chskopic
 

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத் தின் தலைநகர் விக்டோரியாவில் இயற்கை மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் அன்கு ஸிம்மெர்மான். சமீபத்தில் இவர் நோயால் பாதிக்கப்பட்ட 5 வயது ஜோனா என்ற சிறுவனை, வெறிநாயின் உமிழ்நீரைக் கொண்டு குணப்படுத்தியதாகத் தன்னுடைய வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

“ஜோனா இருளைக் கண்டு பயப்படுகிறான். இரவில் 3 மணி நேரங்களுக்கு மேல் தூங்குவதில்லை. ஓநாய் வரும் என்று பயமாக இருக்கிறது என்கிறான். பகலில் மேஜைக்கு அடியில் ஒளிந்துகொள்கிறான். மாமிச உணவுகளை மட்டும் முகர்ந்து பார்த்துவிட்டு உண்கிறான். சில நேரங்களில் நாய்போல குரைக்கவும் செய்கிறான். பள்ளியில் சக மாணவர்களிடம் மூர்க்கமாக நடந்துகொள்கிறான். ஆசிரியர்களால் இவனைச் சமாளிக்க முடியவில்லை. அவனும் கஷ்டப்படுகிறான். நாங்களும் கஷ்டப்படுகிறோம் என்று சொன்னார்கள் அவனது பெற்றோர். எப்போதாவது நாய் கடித்திருக்கிறதா என்று பெற்றோரிடம் கேட்டேன். இரண்டு வயதில் கடற்கரையில் ஜோனா பிஸ்கெட் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அப்போது ஒரு நாய் பிஸ்கெட்டைக் கேட்டு குரைத்தது. இவன் கொடுக்க மறுத்ததால் எதிர்பாராதவிதமாக அந்த நாய் கையில் கடித்துவிட்டது. உடனடியாக சிறுவனுக்கு தடுப்பூசி போட்டு விட்டதாகவும் சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் ஜோனாவின் குணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்திருக்கிறது என்றார்கள். வெறிநாய்க் கடியால்தான் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன். இவனுக்கு வழக்கமான மருத்துவம் இல்லாமல், வெறிநாயின் உமிழ்நீரைக் கொண்டு மருத்துவம் செய்ய முடிவெடுத்தேன். நாய் கடித்த இடத்தில் உமிழ்நீரை வைத்த இரண்டே நிமிடங்களில் அவனது முகத்தில் சிரிப்பைக் கண்டேன். என் மருத்துவம் வேலை செய்கிறது என்ற நம்பிக்கை வந்தது.

இந்த மருத்துவத்துக்குப் பெயர் Lyssinum 200CH. மூன்று வாரங்களுக்குப் பிறகு அவனது பெற்றோரிடம் விசாரித்தேன். வீட்டில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் ஆனால் பள்ளியில் மூர்க்கமாகவே இருப்பதாகவும் சொன்னார்கள். மீண்டும் உமிழ்நீர் மருத்துவத்தைத் தொடர்ந்து மேற்கொண்டேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஜோனா இரவைக் கண்டு பயப்படுவதில்லை, பகல் நேரங்களில் மேஜைக்கு அடியில் ஒளிந்துகொள்வதில்லை, எப்போதாவது சில நேரங்களில் மட்டுமே குரைப்பதாகச் சொன்னார்கள். முன்பு முழுக்க முழுக்க நாயின் தன்மையோடு இருந்த ஜோனா, இப்போது பெரும்பாலும் மனிதத் தன்மையோடு மாறியிருப்பதைக் கண்டு நான் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கொண்டேன். மருத்துவம் ஆரம்பித்து 6 மாதங்களாகிவிட்டன.

இப்போது ஜோனா இயல்பான, அமைதியான சிறுவனாக மாறியிருக்கிறான். இயற்கை மருத்துவத்தில் வெறிநாய்க் கடியையும் குணப்படுத்த முடியும் என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது. இன்னும் சில வித்தியாசமான பிரச்சினைகளை நான் குணப்படுத்தியிருக்கிறேன். இந்த விவரங்களை என் வலைத்தளத்தில் படித்துக்கொள்ளலாம்” என்று எழுதியிருக்கிறார் அன்கு ஸிம்மெர்மான்.

வெறிநாயின் மூச்சுக் காற்று மனிதர்களின் காயங்கள் மீது பட்டாலே பாதிப்பு வரும் என்பார்கள் மருத்துவர்கள். இவரது கட்டுரையைப் படித்துவிட்டு மருத்துவ உலகமே கொந்தளித்திருக்கிறது. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் நோய்க்கான காரணியையே நோய்க்கான மருந்தாகப் பயன்படுத்துவதா என்று மருத்துவ நிபுணர்கள் கேட்கிறார்கள். ஆனால் பெண் மருத்துவர் அன்கு ஸிம்மெர்மான் பணிபுரியும் பிரிட்டிஷ் கொலம்பியா இயற்கை மருத்துவக் கல்லூரி, இவருக்குத் துணையாக நிற்கிறது.

மருத்துவத்தில் விளையாடாதீங்கம்மா!

http://tamil.thehindu.com/world/article23611159.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: கற்பனைக்கு எட்டாத கடலளவு சாதனை

 

 
21chskopic

காகிதக் கப்பல் செய்து தண்ணீரில் விடுவது என்றால் எல்லாக் குழந்தைகளுக்கும் பிடிக்கும். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 8 வயது ஓல்லி ஃபெர்குசன், 5 வயது ஹாரி சகோதரர்கள் இருவரும் சேர்ந்து ஒரு சிறிய கப்பலை உருவாக்கினார்கள். கடந்த ஆண்டு மே மாதம் இந்தக் கப்பல், கடலில் விடப்பட்டது. மழை, காற்று, புயல், பேரலை என்று எல்லாவற்றையும் சமாளித்து இன்றும் கடலில் அழகாகத் தன் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இவர்களின் ஆர்வத்தைக் கண்டதும் பெற்றோருக்கு மகிழ்ச்சியாகிவிட்டது. உடனே தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து கொடுத்தார்கள். பெரியவர்கள் செய்தது போலவே அத்தனை நேர்த்தியாகக் கப்பல் தயாரானது. இதைக் கடலில் மிதக்க விட வேண்டும் என்று சகோதரர்கள் கோரிக்கை வைத்தவுடன், கப்பல் மிதப்பதற்குத் தேவையான எடையை அதிகப்படுத்தினார்கள். தகவல் தொடர்பு கருவியை இணைத்தனர். பீட்டர்ஹெட் கடல் பகுதியில் மிதக்க விட்டனர். தற்போது கப்பல் கயானா நாட்டுப் பகுதியில் தென் அமெரிக்கக் கண்டத்தில் மிதந்துகொண்டிருக்கிறது. ‘அட்வஞ்சர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிறிய கப்பல் அவ்வப்போது கரையைத் தொடுவதும் உண்டு. அப்போது கரையில் உள்ளவர்கள் ‘கரை ஒதுங்கினால் மீண்டும் கடலில் விட்டுவிடுங்கள்’ என்று எழுதப்பட்டிருக்கும் செய்தியைப் படித்துவிட்டு மீண்டும் கடலுக்குள் விட்டுவிடுகிறார்கள்.

“ஃபெர்குசனும் ஹாரியும் தாங்களாகவே கப்பல் செய்ய ஆரம்பித்தனர். குழந்தைகளின் ஆர்வத்தை நாங்கள் எப்போதும் தடை செய்ததே இல்லை. ஏதோ விளையாட்டுக்காகச் செய்கிறார்கள் என்று தான் நினைத்தோம். ஆனால் அவர்கள் மிக அழகான பொம்மைக் கப்பலை உருவாக்கிவிட்டார்கள். நண்பர்களும் அசந்து போனார்கள். இந்தக் கப்பலைக் கடலில் விட வேண்டும் என்று குழந்தைகள் கோரிக்கை வைத்தனர். கடலில் விட்டால் கப்பல் காணாமல் போய்விடும் என்று சொன்னோம். என்ன ஆனாலும் பரவாயில்லை, கப்பல் கடலில் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அதற்குப் பிறகுதான் கப்பல் மிதந்து செல்வவதற்குத் தேவையான எடையை அதிகரித்தோம். ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தினோம். அதனால் கப்பல் எங்கே செல்கிறது என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பள்ளியிலிருந்து வந்தவுடன், கப்பல் குறித்த செய்திகளைத்தான் கேட்பார்கள். கப்பலுக்காக ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்து, கப்பல் குறித்த தகவல்களை எழுதி வருகிறார்கள். உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் இந்தப் பக்கத்தைப் பின்தொடர்கிறார்கள். கப்பலைப் பார்ப்பவர்கள் படங்கள் எடுத்து அனுப்புகிறார்கள். ஒராண்டை நெருங்கும் நேரத்தில் கடந்த வாரம் கப்பல் தன் பயணத்தை நிறுத்திக்கொண்டு விட்டதாக நினைத்தோம். கப்பல் இடத்தைவிட்டு நகரவில்லை. தகவல் தொடர்பு கருவிக்கு அனுப்பிய சமிக்ஞைக்குப் பதில் கிடைக்கவில்லை. வெற்றிகரமாக 300 மைல்களைக் கடந்ததே பெரிய விஷயம் என்று நினைத்தோம். ஆனால் மீண்டும் கப்பல் நகர ஆரம்பித்துவிட்டது” என்கிறார் மாக்நெயில் ஃபெர்குசன்.

கற்பனைக்கு எட்டாத கடலளவு சாதனை

http://tamil.thehindu.com/world/article23624613.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.