Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: பிரிக்கப்படாத 47 ஆண்டு பரிசுப் பெட்டி

 

 
31chskomasalapic

ஒரு பரிசுப் பெட்டியை எவ்வளவு காலம் திறந்து பார்க்காமல் இருக்க முடியும்? கனடாவைச் சேர்ந்த அட்ரியன் பியர்ஸ், 47 ஆண்டுகளாக ஒரு பரிசுப் பெட்டியைத் திறக்காமல் வைத்திருக்கிறார்! 1970-ம் ஆண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 17 வயது அட்ரியனுக்கு காதலி விக்கி முதல்முறையாக ஒரு பரிசைக் கொடுத்தார். அத்துடன் உறவு முறிந்துவிட்டதாகவும் அறிவித்தார். மனம் உடைந்துபோன அட்ரியன், கோபத்தில் பரிசுப் பெட்டியைத் தூக்கி வீசினார். அது கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் போய் விழுந்தது. அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் முடிந்தவுடன் எல்லாப் பரிசுகளையும் வீட்டில் உள்ளவர்கள் பிரித்துப் பார்த்தார்கள். கடைசியில் இந்தப் பரிசைப் பிரிக்க முயன்றபோது, அதைப் பிரிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

“என் முதல் காதல் முறிந்தபோது கொடுத்த இந்தப் பரிசைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குக் கோபமாக இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு என் குடும்பத்தினர் பிரித்துப் பார்க்கச் சொன்னார்கள். என் வாழ்நாள் முழுவதும் பிரிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டேன். பிறகு, விக்கியின் தங்கை என்னைத் தொடர்புகொண்டார். விக்கி என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார். இருவரும் சந்தித்தோம். ஆனால் இருவருக்குமே மீண்டும் காதலிக்கும் எண்ணம் தோன்றவில்லை. இனி சந்திக்க வேண்டாம் என்று பிரிந்து சென்றோம்.

எனக்கும் திருமணமானது, குழந்தைகள் பிறந்தனர். ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும் இதைப் பிரிக்கலாமா என்று மனைவியும் குழந்தைகளும் கேட்பார்கள். நான் வேண்டாம் என்று மறுத்துவிடுவேன். நான் பரிசைப் பிரிக்காததற்கு முக்கிய காரணம், என்றாவது ஒருநாள் விக்கி வருவார், அப்போது இருவரும் சேர்ந்து பிரிக்கலாம் என்ற எண்ணம்தான். அதோடு பிரித்துவிட்டால், அதில் உள்ள சுவாரசியம் போய்விடும். இந்தக் கிறிஸ்துமஸின்போது விக்கியைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அதனால் 50-வது ஆண்டில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் போகிறேன். இந்தப் பரிசுப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பதைச் சரியாகச் சொல்பவர்களுக்குப் பரிசு கொடுக்கப் போகிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் வருமானத்தை அறக்கட்டளைக்கு வழங்க இருக்கிறேன்” என்கிறார் அட்ரியன் பியர்ஸ். இந்த விஷயம் சமூகவலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

நிகழ்ச்சிக்கு விக்கியும் வரும் வாய்ப்பு இருக்கு!

இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் பகுதியில் நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. அதில் பங்கேற்றவர்களிடமிருந்து 53 ஸ்மார்ட்போன்களைத் திருடிவிட்டார் 22 வயது ஆலின் மாரின். பெண்களுக்கான நீச்சல் உடைகளை அணிந்துகொண்டு, கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று, இந்தத் திருட்டை எளிதாகச் செய்து முடித்திருக்கிறார் இவர். தண்ணீர்ப் புகாத கவருக்குள் போன்களை வைத்து, நீச்சல் உடையில் மறைத்து எடுத்துவந்து, கார் நிறுத்தும் இடத்தில் வைத்துவிட்டார். இப்படி ஒரு முறை திருடிக்கொண்டு வரும்போது, ஒரு போன் ஆடைக்குள் இருந்து வெளியே விழுந்துவிட்டது. அதை பார்த்து காவலர்கள் விசாரித்தபோது திருடியது தெரியவந்தது.

அடப்பாவி!

http://tamil.thehindu.com/world/article22336157.ece

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply
On 29.12.2017 at 6:29 AM, நவீனன் said:

உலக மசாலா: வந்துவிட்டது மைக்ரோ மொபைல்போன்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
29chskomasalapic
 
 
29chskomasalapic

இன்று பலரும் பெரிய திரையுடைய ஸ்மார்ட்போன்களை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் ஜான்கோ நிறுவனம் மைக்ரோ மொபைல்போன்களை உருவாக்கியிருக்கிறது! இந்த போன் கட்டை விரல் அளவிலும் ஓர் உலோக நாணயத்தின் எடையிலும் இருக்கிறது. Zanco tiny t1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போன், உலகின் மிகச் சிறிய மொபைல்போன் என்று விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 300 எண்களைச் சேமிக்கலாம். போன்புக் போல பயன்படுத்தலாம். பரிசளிப்பதற்கும் ஏற்ற பொருள் என்கிறார்கள். இந்த போனில் பேசலாம், குறுஞ்செய்தி அனுப்பலாம், பெறலாம். “நாங்கள் நீண்டகாலமாக மைக்ரோ மொபைல்போன் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். பலரும் இதை உருவாக்க இயலாது என்றார்கள். t1 போனில் பாதியளவே உருவாக்க எண்ணினோம். ஆனால் நடைமுறையில் இதுதான் சாத்தியமானது. இதிலும் கீபோர்டு, டிஸ்ப்ளே, பேட்டரி போன்றவை இருக்கின்றன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 3 நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கும். 180 நிமிடம் பேச முடியும். இதை உருவாக்கியதில் பெருமைகொள்கிறோம். முதல்முறை இந்த போனைப் பார்த்தால் நம்ப முடியாது. இரண்டாவது முறை எடுத்துப் பார்ப்பீர்கள். மூன்றாவது முறை வாங்கிவிடுவீர்கள். எந்த மொபைல் நெட் ஒர்க்கிலும் இது வேலை செய்யும். நானோ சிம் பயன்படுத்த வேண்டும். இது 2ஜியில் மட்டுமே வேலை செய்யும். அதனால் உங்கள் நாட்டில் 2ஜி இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். ஆஸ்திரேலியா, ஜப்பானில் 2ஜி சேவை கிடையாது” என்கிறார் ஜான்கோ நிறுவனர்களில் ஒருவரான ஷாஜாட் டாலிப்.

 

http://tamil.thehindu.com/world/article22324168.ece?homepage=true

 

மைக்ரோ மொபைல்போன்!

Link to comment
Share on other sites

உலக மசாலா: இறுதிவரை உறுதியான போராட்டம்…

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
02chskomasalapic
TAMILTHTemplateLibrarynation21clIMG2
02chskomasalapic

இறுதிவரை உறுதியான போராட்டம்…

அமெரிக்காவைச் சேர்ந்த ஹீதர் மோஷர், மகிழ்ச்சியாகத் திருமணம் செய்துகொண்ட சில மணி நேரங்களிலேயே மரணத்தைச் சந்தித்துவிட்டார். ஹீதரும் டேவிட்டும் நடன வகுப்பில் சந்தித்துக் கொண்டார்கள். 2016-ம் ஆண்டு டிசம்பர் 23 அன்று, ஹீதருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்று இரவு குதிரைப் பூட்டிய ஒரு வண்டியில் ஹீதரின் வீட்டு வாசலுக்கு வந்தார் டேவிட். தெரு விளக்கில் தன்னுடைய திருமணக் கோரிக்கையை வைத்தார். மார்பகப் புற்றுநோய் என்பதால், தன்னால் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள இயலாது என்றார் ஹீதர். ஆனால் மார்பகப் புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது, ஒருவேளை அறுவை சிகிச்சை செய்தால் கூட பிழைத்துவிட முடியும் என்பதால் தன் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும்படியும் இருவரும் சேர்ந்து புற்றுநோயை எதிர்த்துப் போராடலாம் என்றும் கூறினார் டேவிட். ஹீதரும் குணமாகிவிடுவோம் என்ற நம்பிக்கையில் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்தார். ஐந்தே நாட்களில், மிக மோசமான மார்பகப் புற்றுநோய் என்பது தெரியவந்தது. “அந்த நாள் மிகவும் வலியாக இருந்தது. சிறந்த மருத்துவர்களைத் தேடி அலைந்தோம். கடந்த செப்டம்பர் மாதம் புற்றுநோய் மூளைவரை பரவிவிட்டது. இரண்டே மாதங்களில் உயிர்காக்கும் கருவிகள் மூலமே பிழைத்திருக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். ஆனால் கொஞ்சம் கூட பயமோ, அவநம்பிக்கையோ அவரிடம் இல்லை. எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே இருப்பார். திடீரென்று நிலைமை இன்னும் மோசமானது. உடனே ஹீதர் திருமணம் செய்துகொள்ளலாம் என்றார். டிசம்பர் 30 அன்று திருமணம் செய்யத் தீர்மானித்தோம். ஆனால் மருத்துவர்கள் அதற்கு வாய்ப்பில்லை என்று கூறிவிட்டனர். டிசம்பர் 22 அன்று, பிரான்சிஸ் தேவாலயத்தில் எங்கள் திருமணம். இருவரும் திருமண உடைகளை அணிந்திருந்தோம். மருத்துவர்களின் உதவியோடு படுக்கையில் இருந்தபடியே தேவாலயம் வந்தார். நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்த, இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டோம். திருமண உறுதிமொழியைச் சொன்னவுடன் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்போல இரண்டு கைகளையும் உற்சாகமாகத் தூக்கி மகிழ்ச்சியைத் தெரிவித்தார். சிறிது நேரத்தில் மருத்துவமனைக்குத் திரும்பிவிட்டோம். மறுநாள் ஹீதர் மறைந்தார். முதல் நாள் திருமணம் நடந்த அதே தேவாலயத்தில் மறுநாள் இறுதிச் சடங்கைச் செய்தபோது உடைந்துபோனேன்” என்கிறார் டேவிட்.

கண்களைக் கவரும் காகித உடை!

பரிசுப் பெட்டிகளை அலங்கரிக்கும் காகிதங்களைப் பெரும்பாலும் குப்பைத் தொட்டியில் போடுவதுதான் வழக்கம். ஆனால் வட கரோலினாவைச் சேர்ந்த 26 வயது ஒலிவியா மியர்ஸ், காகிதங்களில் அழகான ஆடைகளை உருவாக்கிவிடுகிறார்! “2015-ம் ஆண்டு டாகோ பெல் என்பவரின் காகித உடைகள் எல்லோரையும் கவர்ந்தன. அவருக்கு முன்பே நான் இந்தப் பரிசுக் காகிதங்களை வைத்து ஓர் உடையை உருவாக்கினேன். பசை, டேப் வைத்து உருவாக்கப்பட்ட இந்த உடை எளிதில் கிழிந்துவிட்டது. அதனால் அடுத்த ஆண்டு காகிதங்களைத் தைத்துவிட்டேன். என்னைத் தவிர யாருமே இது காகித உடை என்று நினைக்கவில்லை. ஏராளமான உடைகளை உருவாக்கினேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகாக அமைந்தது. இப்போது பலரும் என்னிடம் காகித உடைகளை விரும்பிக் கேட்கிறார்கள்” என்கிறார் ஒலிவியா.

http://tamil.thehindu.com/world/article22350571.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: குதிரைகளுக்கும் பிறந்த நாள்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
03chskomasalapic
 
 

தாய்லாந்தைச் சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட ஒரு பெண், சமீபத்தில் சில படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். மூக்கு சீர்திருத்தம் செய்வதற்காகக் குறைந்த கட்டணம் கேட்ட ஒரு மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். மூக்கில் வைத்த அந்த சிலிக்கான் தகடு எப்படியோ நகர்ந்து இரு புருவங்களுக்கு இடையில் சென்றுவிட்டது. இது பார்வைக்கு நன்றாகப் புலப்படுகிறது. தன் பெயரையோ, சர்ஜரி செய்துகொண்ட மருத்துவமனையின் பெயரையோ வெளியிடாத இந்தப் பெண், “இந்தப் படங்களை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு முன் யோசித்துக் கொள்ளுங்கள். குறைவான கட்டணத்துக்கு ஆசைப்பட்டு, என்னைப் போல சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். மருத்துவமனைக்குச் சென்று என் நிலைமையைச் சொல்லி, சரி செய்து தரும்படி கேட்டேன். ஆனால் மருத்துவமனை என்னை நிராகரித்துவிட்டது” என்று சொல்லியிருக்கிறார். “ஏதோ தவறு ஏற்பட்டு நோய்த்தொற்றால் இது நிகழ்ந்திருக்கலாம். அதனால் இவரது உடல் சிலிக்கானை ஏற்றுக்கொள்ளாமல் வெளியே அனுப்பியிருக்கிறது. அந்தப் பெண் விரும்பினால் நாங்கள் இதைச் சரி செய்துவிடுவோம். யாரோ செய்யும் ஒரு தவறால் பிளாஸ்டிக் சர்ஜரியே தவறு என்று நினைத்துவிடக் கூடாது. இலவசமாக அந்தப் பெண்ணுக்கு உதவத் தயாராக இருக்கிறோம்” என்கிறார் ஓர் அறுவை சிகிச்சை மருத்துவர்.

அடக்கொடுமையே…

 

இங்கிலாந்தில் உள்ள குதிரைகளுக்கு ஜனவரி முதல் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்தப் பிறந்த நாளில் குதிரைகளுக்குச் சிறப்பு கவனிப்பு அளிக்கப்பட்டது. செல்டன்ஹாமில் உள்ள ஜாக்கி க்ளப், குதிரைகளுக்கு வித்தியாசமான முறையில் இந்த ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடியது. மூன்று அடுக்கு வைக்கோலை வைத்து, கேக் போல உருவாக்கியிருந்தனர். இந்த வைக்கோல் கேக் மீது ஆப்பிள்களும் கேரட்களும் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்தன. மேல் அடுக்கில் பெரிய மெழுகுவர்த்தி. குதிரைகளை இந்தப் பிரம்மாண்டமான வைக்கோல் கேக் அருகில் கொண்டு சென்றனர். முதலில் ஆப்பிள்களையும் கேரட்களையும் சுவைத்தன. பிறகு வைக்கோலையும் சாப்பிட்டு முடித்தன!

குதிரைகளுக்கும் பிறந்த நாள்!

 

மலேசியாவைச் சேர்ந்த ஒருவர், வீடியோ கேமுக்காக மனைவியை விவாகரத்து செய்ய இருக்கிறார். சீனாவைச் சேர்ந்த பெண்ணை 4 ஆண்டுகள் காதலித்து, 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இருவரும் மலேசியாவுக்கு குடிவந்தனர். ‘கிங் ஆஃப் க்ளோரி’ வீடியோ கேம் என்றால் கணவருக்கு மிகவும் விருப்பம். ஆரம்பத்தில் கணவருடன் சேர்ந்து மனைவியும் விளையாடியிருக்கிறார். ஒரு கட்டத்தில் மனைவி விளையாடுவது பற்றி நண்பர்களிடம் குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார் கணவர். இதை அறிந்த மனைவி, வீடியோ கேம் விளையாடுவதை விட்டுவிட்டார். பிறகு ஒரு குழந்தையும் பிறந்தது. நாளுக்கு நாள் கணவருக்கு வீடியோ கேம் மீது இருந்த ஆர்வம் அதிகரித்தது. இரவில் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருப்பார். மனைவி, குழந்தையிடம் நேரம் செலவிடுவதே இல்லை. மனைவி எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். கெஞ்சிப் பார்த்தார். ஒருநாள் கோபத்தில் வீடியோ கேம் கணக்கை விற்றுவிட்டார். விஷயம் அறிந்த கணவர் சண்டையிட்டார். விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டார். ‘இப்படிப்பட்ட ஒரு மனிதருடன் இனி வாழ முடியாது, சீனாவுக்குச் சென்று என் மகளை வளர்த்துக் கொள்கிறேன்’ என்று கிளம்பிவிட்டார் மனைவி!

விளையாட்டு வினையாகிவிட்டதே!

http://tamil.thehindu.com/world/article22357248.ece?homepage=true

Link to comment
Share on other sites

3 hours ago, நவீனன் said:

உலக மசாலா: குதிரைகளுக்கும் பிறந்த நாள்!

 

 

 

இங்கிலாந்தில் உள்ள குதிரைகளுக்கு ஜனவரி முதல் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்தப் பிறந்த நாளில் குதிரைகளுக்குச் சிறப்பு கவனிப்பு அளிக்கப்பட்டது. செல்டன்ஹாமில் உள்ள ஜாக்கி க்ளப், குதிரைகளுக்கு வித்தியாசமான முறையில் இந்த ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடியது. மூன்று அடுக்கு வைக்கோலை வைத்து, கேக் போல உருவாக்கியிருந்தனர். இந்த வைக்கோல் கேக் மீது ஆப்பிள்களும் கேரட்களும் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்தன. மேல் அடுக்கில் பெரிய மெழுகுவர்த்தி. குதிரைகளை இந்தப் பிரம்மாண்டமான வைக்கோல் கேக் அருகில் கொண்டு சென்றனர். முதலில் ஆப்பிள்களையும் கேரட்களையும் சுவைத்தன. பிறகு வைக்கோலையும் சாப்பிட்டு முடித்தன!

குதிரைகளுக்கும் பிறந்த நாள்!

 

 

Horses at Cheltenham Racecourse celebrated their birthdays by tucking into a three-tier cake 

Forget Christmas, New Year's Day is the most exciting day of the year for our equine friends

Horses at the Cheltenham Racecourse tucked into a three-tier cake made of hay and vegetables

A couple of horses are seen tucking into their birthday treat, which was topped with a candle

Link to comment
Share on other sites

உலக மசாலா : ஐயோ... பயமாக இருக்கிறது!

alan1

அயர்லாந்தைச் சேர்ந்த 40 வயது ஆலன் ஹாவ், தன் மனைவி மற்றும் 3 குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற இந்தக் கொடூரமான மரணங்களுக்கு காரணம் தெரியாமல் குடும்பத்தினர் தவித்தனர். தன் மகள், பேரக்குழந்தைகளின் மரணங்களுக்குக் காரணம் தெரிய வேண்டும் என்று வழக்கு தொடுத்தார் க்லோடாக்கின் அம்மா. ஆலன் ஹாவ் பள்ளி உதவி தலைமை ஆசிரியராக இருந்தவர். இவரது மனைவி க்லோடாக் பள்ளி ஆசிரியர். ஆலன் எப்போதும் அமைதியாக இருப்பார். மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் அவர் தொந்தரவு கொடுத்ததில்லை. அவருக்கு ஆபாசப் படங்களைப் பார்க்கும் ஆர்வம் மட்டும் இருந்தது. பள்ளியில் கூட தன்னுடைய லேப்டாப்பில் ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார். இந்த விஷயம் க்லோடாக்குக்கு எப்படியோ தெரிந்து, ஆலனிடம் வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஆலன் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

‘‘ஆசிரியராக இருந்துகொண்டு பள்ளியில் இப்படிச் செய்வது ஆலனுக்கும் தவறாகத் தெரிந்திருக்கிறது. ஆனாலும் அவரால் அந்தப் பழக்கத்தை விடமுடியவில்லை. ஒரு கட்டத்தில் மனநல மருத்துவரைப் பார்த்து, 3 மாதங்கள் சிகிச்சையும் எடுத்திருக்கிறார். அப்போதுதான் மனைவிக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. இதனால் தன்னுடைய மதிப்பு குறைந்துவிட்டதாகக் கருதியிருக்கிறார். அந்த நினைப்பு அவரைக் கூடுதல் மன அழுத்தத்துக்குத் தள்ளிவிட்டது. ஒருநாள் வீட்டு வாசலில், ‘அழைப்பு மணியை அழுத்தாதீர்கள், காவலர்களுக்குத் தகவல் கொடுங்கள்’ என்று ஒரு குறிப்பு எழுதி வைத்தார். பிறகு தன் பெற்றோர், சகோதரர்கள், மனைவியின் பெற்றோர், அவரது சகோதரிகளுக்குத் தனித்தனியாகக் கடிதங்களை எழுதினார்.

அதில், ‘என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்று எழுதியிருந்தார். பிறகு குழந்தைகளையும் மனைவியையும் கத்தியால் கொலை செய்தார். தன் தற்கொலைக்கான ஒரு நீண்ட கடிதமும் எழுதினார். ஆனால் கொலை செய்ததை விட தற்கொலை செய்வதற்கு அதிகம் சிரமப்பட்டிருக்கிறார். இந்தத் தகவல்களை எல்லாம் அவர் எழுதிய கடிதங்கள், அவருடைய லேப்டாப், பணிபுரிந்த இடம், நண்பர்கள், மனநல மருத்துவர் போன்றவர்களிடம் விசாரித்து, அறிந்துகொண்டோம். இது மன அழுத்தத்தால் ஏற்பட்ட கொடூரம். ஆலன் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டவர் என்பதை அவர் எந்தவிதத்திலும் வெளிப்படுத்தவே இல்லை. இதனால் அவருக்குச் சிகிச்சை அளிக்கும் வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. எந்தவிதத்திலும் அசாதாரணமாகக் காட்டிக்கொள்ளாமலேயே கொலை செய்யக்கூடிய அளவுக்கு மன அழுத்தம் இருக்கும் என்பது கவனிக்க வேண்டியது” என்கிறார் மனநல மருத்துவத் துறையின் இயக்குநரான பேராசிரியர் ஹாரி கென்னடி.

தீவிர மன அழுத்தத்தில் இருந்த ஒருவர் நான்கு பேரைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார் என்று வழக்கு முடிக்கப்பட்டிருக்கிறது.

ஐயோ… பயமாக இருக்கிறது..!

http://tamil.thehindu.com/world/article22365035.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: இனி உரிக்க வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
05chskomasalapic
 
 

ஜப்பானின் ஓகயாமாவைச் சேர்ந்த விவசாயிகள், வித்தியாசமான வாழைப்பழத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ‘மோங்கே’ என்ற இந்த வாழைப்பழம், மற்ற வாழைப் பழங்களை விட மிகவும் சுவையானது என்பதுடன், இதன் தோலையும் சாப்பிடமுடியும். சாதாரண வாழைப்பழங்களில் தோலில் கசப்புச் சுவை அதிகமாக இருக்கும். ஆனால் மோங்கே வாழையின் தோல் மிக மெல்லியதாகவும் மிகக் குறைவான கசப்புடனும் காணப்படுகிறது. நூறு சதவீதம் இந்தத் தோலைச் சாப்பிட முடியும் என்கிறார்கள். இந்த வாழையை ‘உறைய வைத்து வளர்த்தல்’ என்ற முறையில் உருவாக்குகிறார்கள். இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முறை. பனியுகம் முடிந்த பிறகு, தாவரங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வளர ஆரம்பித்தன. அந்தக் காலத்தில் தோன்றிய தாவரங்களின் டிஎன்ஏவை வைத்து, ஜப்பானின் குளிர் மிகுந்த பிரதேசத்தில் தாவரங்களை உருவாக்கினார்கள். அதில் ஒன்று மோங்கே வாழை. அந்தக் காலத்தில் இந்த வாழை வளர்வதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகின. ஆனால் இன்றோ 4 மாதங்களிலேயே முதிர்ச்சியடைந்து விடுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மோங்கே வாழைப்பழம் கடைகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. ஆனால் ஒரு சிலரே வாங்கி, சுவைக்க முடிந்தது. காரணம் இந்த வாழைப்பழத்தை அதிக அளவில் விளைவிக்க முடியவில்லை. இதன் உற்பத்தி மிகவும் சவாலாக இருக்கிறது. ஒரு வாரத்துக்கு டி&டி பண்ணை 10 வாழைப்பழங்ளை மட்டுமே விளைவிக்கிறது. ஒரு பழத்தின் விலை சுமார் 362 ரூபாய்.

“வாழைப்பழம் பற்றிய கருத்துகளை அறிவதற்காக எங்களுக்குச் சில வாழைப் பழங்களைக் கொடுத்தனர். மற்ற வாழைப் பழங்களை விட மோங்கே மிகவும் சுவையானது. சாதாரண வாழைப் பழத்தில் 18.3 கிராம் சர்க்கரை இருக்கும், மோங்கேயில் 24.8 கிராம் சர்க்கரை இருக்கிறது. மணம் அதிகமாக இருக்கிறது. அன்னாசிப் பழத்தின் சுவையை நினைவூட்டுகிறது. மிகச் சரியாகப் பழுத்திருந்தால் மட்டுமே தோலையும் சேர்த்து உண்ண முடியும். சாதாரண வாழைப் பழங்களில் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றுவதற்கு முன்பே சாப்பிட்டுவிட வேண்டும். ஆனால் மோங்கேயில் பழுப்புப் புள்ளிகள் வந்த பிறகுதான் சாப்பிடமுடியும். மெல்லிய தோலாக இருப்பதால் பழத்துடன் சேர்த்து எளிதாக மென்று விழுங்கிவிட முடிகிறது. தோலின் சுவை கூட நன்றாக இருக்கிறது. வைட்டமின் பி6, மக்னீசியம் போன்ற சத்துகள் இருக்கின்றன. மிக முக்கியமாக செரடோனின் இருக்கிறது.

இது உடல் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகத் தோன்றும் உணர்வுகளுக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. அதனால் ஆரோக்கியம் கருதி, தோலை அவசியம் சாப்பிட்டு விடலாம்” என்கிறது சோராநியூஸ் நிறுவனம்.

ஜப்பானின் மிகக் குளிர்ந்த பிரதேசத்தில் மோங்கே வாழை விளைவிக்கப்படுவதால், இவற்றுக்கு இயற்கையான எதிரிகள் கிடையாது. அதனால் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.

இனி உரிக்க வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்!

http://tamil.thehindu.com/world/article22373230.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ‘சே, என்ன வாழ்க்கை’ என்று தோன்றும்போது ஜாக்குலினை நினைத்துக்கொள்ளலாம்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
06chskomasalapic
 
 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கிறார் 16 வயது ஜாக்குலின் ரோட்ரிகஸ். பிறந்ததிலிருந்தே ஏற்பட்ட அரிய நிணநீர்ச் சுரப்பி குறைபாட்டால் மிகப் பெரிய கட்டி வாயில் உருவாகியிருக்கிறது. இவரால் பேச முடியாது. எதுவும் சாப்பிடவோ, குடிக்கவோ முடியாது. முதல் பிறந்தநாள் வரை ஜாக்குலின் இருக்க மாட்டார் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஆனால் இன்று பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரிக்குள் நுழைய இருக்கிறார். இதற்குக் காரணம் தன் குடும்பமும் நண்பர்களும்தான் என்கிறார் ஜாக்குலின். ஐபாட் மூலமே எதையும் எழுதிக் காட்டி, தன் எண்ணங்களை வெளிப்படுத்துகிறார். குழாய் மூலமே சிறப்பு உணவுகள் அளிக்கப்படுகின்றன.

“மருத்துவர்கள் நான் பிழைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாலும் என் பெற்றோருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. என்னை மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் வளர்த்தார்கள். நானும் எல்லோரையும் போல் சாதாரணமானவள் என்ற எண்ணத்தை விதைத்தார்கள். என்னால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கினார்கள். அதனால்தான் நான் பள்ளி சென்று படிக்க முடிந்தது. பள்ளியிலும் மிக அற்புதமான நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். என்னை ஒருபோதும் சோர்வடைய விட மாட்டார்கள். வாயைத் திறந்தால் கட்டி வெளியே வந்துவிடும். நானும் எத்தனையோ கிண்டல்களையும் வெறுப்பையும் சந்தித்திருக்கிறேன். ஆனால் அவற்றைக் கண்டு ஒருநாளும் வருத்தப்பட்டதே இல்லை. என்னைச் சுற்றி ஏராளமானவர்கள் அன்பைக் கொட்டும்போது, நான் ஏன் யாரோ சிலருக்காக வருத்தப்பட வேண்டும்? நன்றாகப் படிப்பேன். ஓய்வு நேரத்தில் டென்னிஸ் விளையாடுவேன். கிடார் வாசிப்பேன். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் செவிலியர் படிப்பு படிக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.

நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் அதிகமாகச் சென்ற இடம் மருத்துவமனைதான். அங்கே செவிலியர்கள் மிகவும் அக்கறை யாக என்னைக் கவனிப்பார்கள். நான் மகிழ்ச்சியாக உணர்வேன். அதேபோன்ற மகிழ்ச்சியை நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செவிலியராக விரும்புகிறேன்” என்கிறார் ஜாக்குலின்.

“ஜாக்குலின் மாதிரி ஒரு குழந்தை பிறந்ததை எண்ணி நாங்கள் இதுவரை வருத்தப்பட்டதே இல்லை. அவளையும் வருத்தப்பட வைத்ததில்லை. இந்தப் பதினாறு ஆண்டுகளில் எவ்வளவு கஷ்டத்தையும் தடைகளையும் தாண்டி வந்திருக்கிறாள் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது. என் வாழ்நாளில் ஜாக்குலின் போன்ற ஒரு அற்புதமான மனிதரைச் சந்தித்ததில்லை. எதைச் செய்தாலும் திருத்தமாகச் செய்வாள். அவளுக்கும் வாழ வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. எங்களுக்கும் நீண்ட காலம் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இதுதான் அவளின் வாழ்நாளை நீட்டித்திருக்கிறது என்று நம்புகிறேன். வாய்க்குள் இருக்கும் கட்டி மிகப் பெரிதாக வளரும்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். எத்தனை தடவை எடுத்தாலும் மீண்டும் மீண்டும் கட்டி வளர்ந்துகொண்டே இருக்கும். இந்த நோய்க்கு மருத்துவம் இதுவரை கிடையாது” என்கிறார் ஜாக்குலினின் அப்பா பால்.

‘சே, என்ன வாழ்க்கை’ என்று தோன்றும்போது ஜாக்குலினை நினைத்துக்கொள்ளலாம்!

http://tamil.thehindu.com/world/article22381876.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: விநோத வழக்கு!

 

 
07chskomasalapic

தைவானைச் சேர்ந்த இரு பல் மருத்துவர்கள், தங்கள் தாய்க்கு 6 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. லுவோ என்ற தாய், கணவரிடம் விவாகரத்துப் பெற்ற பின்னர், தனியாக இரண்டு மகன்களை வளர்த்தார். ஒரு கட்டத்தில் தன்னுடைய தியாகத்தை மகன்கள் மறந்து, முதுமையில் கைவிட்டு விடுவார்களோ என்று அச்சம் அடைந்தார். இரு மகன்களும் பல் மருத்துவம் சேர்ந்தபோது, பிற்காலத்தில் பல் மருத்துவமனையில் இருந்து கிடைக்கும் லாபத்தில் 60% தனக்கு அளிக்க வேண்டும் என்று ஓர் ஒப்பந்தத்தைத் தயார் செய்து கொடுத்தார். தங்களைத் தனியாகக் கஷ்டப்பட்டு வளர்த்ததற்கும் படிக்க வைத்து, மருத்துவமனை அமைத்துக் கொடுப்பதற்கும் அம்மா கேட்கும் 10.5 கோடி ரூபாயைத் தர மகன்களும் சம்மதித்தனர். ஆனால் படிப்பு முடித்து, மருத்துவமனையிலிருந்து லாபம் வர ஆரம்பித்தபோது ஒப்பந்தப்படி நடந்துகொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. பெரிய மகன் மிகவும் குறைந்த அளவு பணத்தைக் கொடுத்து, அம்மாவைச் சரிகட்ட நினைத்தார். இரண்டாவது மகன் எதையும் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். எவ்வளவோ மகன்களிடம் பேசிப் பார்த்தார். சண்டையிட்டுப் பார்த்தார். பலன் இல்லை. தான் தன் மகன்களாலேயே ஏமாற்றப்பட்டோம் என்பதை லுவோவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நீதிமன்றம் சென்றார்.

“ஒரு தாய் குழந்தைகளை வளர்ப்பது இயல்பானது. இதெற்கெல்லாம் யாராவது கணக்குப் பார்க்க முடியுமா? எந்தத் தாயும் செய்யாத காரியத்தைச் செய்தார் எங்கள் அம்மா. அப்போது எனக்கு 20 வயது என்பதால், விவரம் தெரியாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டேன். அம்மாவிடம் மகன் போட்ட ஒப்பந்தம் எல்லாம் எப்படிச் செல்லுபடியாகும்? இப்படி எங்களிடம் பணம் கேட்டதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததும் எந்தவிதத்தில் நியாயம்? வயதான காலத்தில் கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு, நிம்மதியாக வாழ வேண்டியதுதானே? இவ்வளவு பணத்தை என்ன செய்யப் போகிறார்?” என்றார் ச்சூ.

“என் மகன்கள் இருவரும் என்னை மதித்து, ஒப்பந்தப்படி பணம் தந்திருந்தார்கள் என்றால் நானே அதை மறுத்திருப்பேன். அவர்கள் என்னை மதிக்கவில்லை. என்னுடைய தியாகத்தைப் புரிந்துகொள்ளவில்லை. என்னை ஏமாற்றப் பார்த்தார்கள். இதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தாயை ஏமாற்றுவது தவறு என்று அவர்களுக்குப் புரியவைக்க வேண்டாமா? அதற்காகத்தான் நீதிமன்றத்தை நாடியிருக்கிறேன்” என்றார் லுவோ.

இந்த அசாதாரணமான வழக்கு தைவானில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. இரு தரப்பினரிடமும் பேசி, சமரசத்துக்குக் கொண்டு வந்தது நீதிமன்றம். ஒப்பந்தப்படி 10.5 கோடிக்குப் பதிலாக 6 கோடி ரூபாயை இருவரும் லுவோவுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. ‘ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளிடம் இவ்வளவு தூரம் நடந்துகொள்ள வேண்டியதில்லை. பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறார்?’ என்று ஒரு தரப்பினர் கேட்கிறார்கள். ‘பெற்றோரைப் புறக்கணிக்கும் பிள்ளைகளுக்கு இது ஒரு பாடம். இன்னும் கூட லுவோவுக்குப் பணம் கொடுத்திருக்கலாம்’ என் கிறார்கள் இன்னொரு தரப்பினர்.

விநோத வழக்கு!

http://tamil.thehindu.com/world/article22387582.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: தானும் செய்யாது, அடுத்தவர்களையும் செய்ய விடாது!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
09chskomasalapic
 
 

அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கிறார் க்ரெக் ஷில்லெர். இந்த ஆண்டு மிகக் கடுமையான குளிர்காலம். பாதுகாப்பான வீட்டைத் தவிர, வெளியில் வசிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. வீடற்ற மக்களுக்கு இதுபோன்று வசிக்க முடியாத சூழல் ஏற்படும்போது, அரசாங்கம் தற்காலிகக் காப்பகங்கள் அமைத்து, தங்குவதற்கு ஏற்பாடு செய்யும். ஆனால் இந்த ஆண்டு இவர் வசிக்கும் பகுதியில் வீடற்ற மனிதர்களுக்கு எந்த ஏற்பாடும் அரசாங்கத்திலிருந்து செய்யவில்லை. அதனால் தன்னுடைய வீட்டின் கீழ்த் தளத்தில், முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத பெரிய அறையில் வீடற்ற மக்களைத் தங்க வைத்தார். அவர்களுக்குச் சூடான பானங்களை வழங்கினார். உணவளித்தார். தூக்கம் வராதவர்களுக்குப் பொழுது போக்குவதற்காகத் தொலைக்காட்சிப் பெட்டியையும் வைத்தார். குளிரைத் தாங்குவதற்கு கட்டில்கள், கம்பளிகள், போர்வைகள் போன்றவற்றை வழங்கினார். மாலையிலிருந்து மறுநாள் காலை வரை இங்கே வீடற்றவர்கள் தங்கிக்கொள்ளலாம். அரசாங்கம் தங்களைக் கைவிட்டாலும் க்ரெக் தனி மனிதராக இவ்வளவு தூரம் உதவுவதை எண்ணி அந்த ஏழை மக்கள் மகிழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

“தாங்க முடியாத குளிர்காலம். வீட்டுக்குள் இருப்பதே மிகவும் சிரமமாக இருக்கிறது. வீடற்ற மனிதர்கள் குளிரில் வாடுவதைச் சகிக்க முடியாமல்தான், நான் இந்த ஏற்பாட்டைச் செய்தேன். இந்த ஆண்டு அரசாங்க மையங்கள் ஏனோ திறக்கவில்லை. உரிமம் பெற்ற தனியார் மையங்களும் திறக்கவில்லை. அந்த மக்கள் என்ன செய்வார்கள்? பகலில் சூரிய வெளிச்சம் வந்தவுடன் கிளம்பிச் சென்றுவிடுவார்கள். அவர்கள் வேலைகளை முடித்துக்கொண்டு, மாலையில் இங்கே வருவார்கள். இது தற்காலிகம்தான். பருவநிலை சரியானால் இங்கே யாரும் வரப் போவதில்லை. நான் இந்தப் பணியை நீண்ட காலம் செய்யப் போவதுமில்லை. அதற்குள் அரசாங்கத்திலிருந்து இதை உடனடியாக மூடும்படி உத்தரவு வந்திருக்கிறது. 2016-ம் ஆண்டும் இதுபோன்ற சூழ்நிலையில் என் கார் நிறுத்தும் இடத்தைப் பயன்படுத்தினேன். அப்போதும் அரசாங்க அதிகாரிகள் மூடச் சொன்னார்கள். ஆனால் இந்த ஆண்டு நிலைமை ரொம்ப மோசம். இப்போதும் அப்படிச் சொன்னால் என்ன செய்வது?” என்கிறார் க்ரெக்.

“உரிமம் இல்லை. தரைத்தளம் முழுமையாகக் கட்டப்படவில்லை. உயரம் குறைவாக இருக்கிறது. போதுமான ஜன்னல்கள் இல்லை. தரைத் தளத்தில் தூங்குவதற்குச் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதையெல்லாம் க்ரெக் கடைப்பிடிக்கவில்லை. இது அவ்வளவு பாதுகாப்பான இடம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. அதனால் சட்டப்படி இவருடைய மையத்தை நடத்த அனுமதிக்க இயலாது. உடனடியாக அனைத்து விஷயங்களையும் செய்து, உரிமம் பெற்றால் மட்டுமே தொடர்ந்து மையத்தை நடத்த இயலும்” என்கிறார் அரசாங்க அதிகாரி கோபி பாஷம்.

“இந்தக் குளிரில் யாராக இருந்தாலும் உறைந்துபோய் விடுவார்கள். உயிர்களைக் காப்பாற்றுவது முக்கியமா, இல்லை சட்டம் முக்கியமா? அரசாங்கம் போல என்னால் வீடற்ற மக்களை நினைத்துக் கவலைப்படாமல் இருக்க முடியாது. வேறு வழிகளில் முயற்சி செய்யப் போகிறேன்” என்கிறார் க்ரெக் ஷில்லர்.

தானும் செய்யாது, அடுத்தவர்களையும் செய்ய விடாது!

http://tamil.thehindu.com/world/article22402296.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஒரே நேரத்தில் 3 திருமணங்கள்

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
10chskomasalapic
 
 

உகாண்டாவைச் சேர்ந்த 50 வயது முகமது ஸெமன்டா, ஒரே நேரத்தில் 3 திருமணங்களைச் செய்து, ஆப்பிரிக்கா முழுவதும் பிரபலமாகிவிட்டார்! உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் இவர். 48 வயது சல்மாத் நலுவுக், 27 வயது ஜாமியோ நகாயிஸா, 24 வயது மஸ்டுல்லா நாம்வான்ஜே என்ற மூன்று பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துவிட்டார். மூவரும் வெள்ளை ஆடையில் கிரீடம் சூட்டிக்கொண்டு முகமதுவை இன்முகத்துடன் திருமணம் செய்திருக்கிறார்கள். “தனித் தனியாகத் திருமணம் செய்வதற்கு என்னிடம் வசதி இல்லை. அத்துடன் இந்த மூன்று பெண்களும் ஒரே நேரத்தில் திருமணம் செய்ததை நினைத்துச் சிறிதும் வருந்தவில்லை. திருமணம் ஒன்றாக நடைபெற்றாலும் மூவரும் தனித் தனி வீடுகளில்தான் வசிக்கப் போகிறார்கள். நான் இன்னும் கடினமாக வேலை செய்து, மூன்று மனைவிகளையும் மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொள்வேன். நான் யாரையும் ஏமாற்றி, திருமணம் செய்துகொள்ளவில்லை. 48 வயது சல்மாத் என்னுடைய முதல் மனைவிதான். 20 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்து, 5 குழந்தைகளும் எங்களுக்கு இருக்கிறார்கள். ஜாமியோ, மஸ்டுல்லா இருவரும் சல்மாத்தின் தங்கைகள். இவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே திருமணமாகி, குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை சரியாக இல்லை. அதனால் அவர்கள் இருவரையும் நான் திருமணம் செய்துகொண்டு, காப்பாற்ற முடிவெடுத்தேன். இதில் அந்தப் பெண்களுக்கும் முழுச் சம்மதம். என் மனைவிக்கும் சம்மதம். இருவரைத் திருமணம் செய்யும்போது, என் மனைவிக்குப் பொறாமை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் மீண்டும் அவரைத் திருமணம் செய்துகொண்டேன். மூவரும் சகோதரிகள் என்பதால் இங்கே போட்டி, பொறாமைக்கு வழியே இல்லை” என்கிறார் முகமது.

என்னத்தைச் சொல்றது?

தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குக் தீவுகளில் திமிங்கில ஆராய்ச்சியாளர் நன் ஹாசர், தன் குழுவினருடன் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மிக மிகப் பிரம்மாண்டமான, சுமார் 22 ஆயிரம் கிலோ எடையுடைய ஹம்பேக் திமிங்கிலம் ஒன்று வந்தது. அதன் அருகே சென்று, திமிங்கிலத்தைத் தட்டிக் கொடுத்தார். பிறகு அவரும் அவருடைய குழுவினரும் திமிங்கிலத்தைச் சுற்றிச் சுற்றி வந்து படம் பிடித்தார்கள். “நாங்கள் அனைவரும் திமிங்கிலம் மீதே கவனம் செலுத்திக்கொண்டிருந்தோம். அப்போது மிகப் பெரிய புலிச்சுறா ஒன்று எங்களை நோக்கி வந்தது. எங்களுக்கு ஆபத்து என்று உணர்ந்த திமிங்கிலம், சுறாவைத் தன் தலையாலும் துடுப்பாலும் வாலாலும் விரட்டியடித்தது. இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்துவிட்டது. திமிங்கிலம், மனிதர்கள் உட்பட மற்ற உயிரினங்களைப் பாதுகாக்கிறது என்ற உண்மையை இப்போது படம் பிடித்து, நிரூபித்துவிட்டோம். கடந்த 28 ஆண்டுகளாகத் திமிங்கிலங்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகப் பல நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறோம். ஆனால் ஒரு திமிங்கிலத்தால் நான் காப்பாற்றப்பட்ட இந்தத் தருணம் என் வாழ்க்கையில் மிகவும் அற்புதமானது!” என்கிறார் 68 வயது நன் ஹாசர்.

ஆபத்தில் உதவி செய்யும் அற்புதமான திமிங்கிலங்கள்!

http://tamil.thehindu.com/world/article22409837.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பிறந்தநாளில் மரணத்தைப் பரிசளித்த செல்ஃபி..

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
11chkanchildren-smoking
 
 

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 6-ம் தேதி போர்ச்சுகல் நாட்டின் வேல் டி சல்குரியோ கிராமத்தில் திருவிழா நடைபெறுகிறது. அப்போது கேக் சாப்பிடுவார்கள், கீதங்கள் இசைப்பார்கள், பெற்றோர் தங்கள் குழந்தைகளை புகைப்பிடிக்க அனுமதிப்பார்கள். பல நூற்றண்டுகளாக இந்தப் பழக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுவாக போர்ச்சுகல் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் சட்டப்பூர்வமாகப் புகைப்பிடிக்க முடியும். ஆனால் இந்தத் திருவிழா நடைபெறும் 2 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

இதில் 5 வயது குழந்தைகள் முதல் புகைப்பிடிக்கிறார்கள். இதைப் போர்ச்சுகல் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களே எதிர்க்கிறார்கள். ஆனால் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அது தங்களின் பாரம்பரியம் என்றும் இதில் பிறர் தலையிட முடியாது என்றும் கூறுகிறார்கள்.

“இரண்டு நாட்கள் புகைப்பிடிப்பதால் குழந்தைகள் அனைவரும் சிகரெட்டுக்கு அடிமையாகிவிடுவதுபோல் சொல்கிறார்கள். அது தவறு. குழந்தைகள் நிஜமாகவே புகைப்பதில்லை. உள் இழுக்கும் புகையை உடனே வெளியிட்டுவிடுவார்கள். இதை திருவிழாவுக்கான ஒரு சடங்காகத்தான் பார்க்கிறார்கள். இந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு யாரும் சிகரெட் வேண்டும் என்று கேட்பதில்லை” என்கிறார் குல்ஹெர்மினா மேட்டஸ்.

“புகைப்பிடிப்பது நுரையீரலுக்கு கெடுதல் என்று எங்கள் எல்லோருக்குமே தெரியும். அதனால் நாங்கள் திருவிழாவைத் தவிர்த்து, சிகரெட் கேட்பதில்லை” என்கிறார் 6 வயது டோமாஸ். “எனக்கு 88 வயதாகிறது. நானும் 5 வயதில் இந்தத் திருவிழாவின்போது புகைப்பிடித்திருக்கிறேன். ஆனால் ஒருநாளும் அதை வழக்கமாக மாற்றிக்கொள்ள எண்ணியதில்லை. பிறகு என் குழந்தைகளும் இந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்றினார்கள்.

இன்று என் பேரக் குழந்தைகளும் இதைத் தொடர்கிறார்கள். எங்கள் வீட்டில் யாருமே புகைப்பிடிப்பதில்லை. அதனால் இதைப் பெரிய விஷயமாக எல்லோரும் பேச வேண்டிய அவசியம் இல்லை” என்கிறார் எட்வர்டோ அகஸ்டோ. மற்ற சில ஐரோப்பிய நாடுகளைப் போலவே போர்ச்சுகலும் புகைப்பிடிப்பதைக் குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. திருவிழாவில் புகைப்பிடிப்பதற்கு தடை வருமோ என்று கிராம மக்கள் கவலைப்படுகிறார்கள்.

சிறுவர்களும் புகைக்கும் விநோதமான திருவிழா!

துருக்கியைச் சேர்ந்த ஹலில் டாக், தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக வராலாற்றுச் சிறப்புமிக்க உர்ஃபா கோட்டைக்குச் சென்றார். குன்றில் 150 அடி உயரம் ஏறியவுடன், செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பினார். ஒரு பெரிய பாறையின் மீது நின்று செல்ஃபி எடுக்கும்போது, தன்னை அறியாமல் பாறையின் ஓரத்துக்கு வந்தார். சட்டென்று நிலை தடுமாறி, கீழே விழ ஆரம்பித்தார்.

பக்கவாட்டில் ஏதையாவது பிடித்துவிட முயன்றார். ஒன்றும் அகப்படவில்லை. கீழே விழுந்தார். அருகில் இருந்த அவரது நண்பர்கள் ஓடிவந்து உதவ முயன்றார்கள். ஆனால் விழுந்த வேகத்தில் இறந்துவிட்டார். 8 குழந்தைகளுக்கு அப்பாவான ஹலில் 39 வயதில் கவனக் குறைவால் தானே மரணத்தைத் தேடிக்கொண்டார்.

பிறந்தநாளில் மரணத்தைப் பரிசளித்த செல்ஃபி..

http://tamil.thehindu.com/world/article22418532.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பயணிகளைச் சிறை வைத்த பனிப் பொழிவு!

 

 
12chkanswiss1

சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் அமைந்திருக்கிறது ஜெர்மாட் உல்லாச விடுதி. குளிர்காலத்தில் பனியை ரசிக்கவும் பனிச் சறுக்கு விளையாடுவதற்காகவும் உலகம் முழுவதிலுமிருந்து இங்கே பயணிகள் வருகிறார்கள். இந்த ஆண்டு எதிர்பாராத விதத்தில் மிகக் கடுமையான பனிப் பொழிவு. பல அடி உயரத்துக்கு பனி பெய்ததால் சாலைகள் மூடப்பட்டுவிட்டன.

ரயிலையும் இயக்க முடியாத சூழல். கீழிருந்து மேலே வருவதற்கோ, மேலிருந்து கீழே செல்வதற்கோ வழி இல்லை. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். பலருக்கு இந்த அதீத பனியும் குளிரும் ஒத்துக்கொள்ளவில்லை. ஜெர்மாட் விடுதிகளில் மட்டும் 13 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கிறார்கள். 5,500 மக்கள் வசிக்கிறார்கள்.

“வெளியில் செல்ல முடியாது, விளையாட முடியாது. ஆனால் அறைகளுக்குள் பத்திரமாக இருக்க முடியும். பனி குறைந்தவுடன் கிளம்ப வேண்டியதுதான்” என்று ஒரு பக்கம் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். “இந்த மோசமான பருவ நிலையை ரசிக்க முடியவில்லை. அதனால் ஹெலிகாப்டர் மூலம் கீழே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று மற்றொரு பக்கம் கிளம்புகிறார்கள். ‘

பயணிகளைச் சிறை வைத்த பனிப் பொழிவு!

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒருவர், தன் வீட்டில் நுழைந்த பெரிய சிலந்தியைக் (வுல்ஃப் ஸ்பைடர்) கொல்வதற்காகத் தீ வைத்தார். நெருப்பிலிருந்து தப்பிக்க சிலந்தி, மெத்தை மீது ஓடியது. தீ வெகுவேகமாக அறை முழுவதும் பரவியது. “என் வீட்டு மேல் தளத்தில்தான் அந்த மனிதர் வசிக்கிறார். மிகப் பெரிய சிலந்திதான்.

அதற்காக கொஞ்சம் கூட யோசிக்காமல் நெருப்பு வைத்துவிட்டார். சிலந்தி சென்ற இடங்களுக்கெல்லாம் தீ பரவிவிட்டது. உடனே தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தோம். நல்லவேளை 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தார்கள். சுமார் 7 லட்சம் ரூபாய் அளவுக்கு சேதமாகிவிட்டது. யாருக்கும் காயமும் இல்லை” என்கிறார் பக்கத்து வீட்டில் வசிக்கும் லிண்ட்சே வைஸ்கார்வர். இந்த சிலந்தி விஷமற்றது, தனக்கு ஆபத்து என்றால் மட்டும் கடிக்கக்கூடியது. வட அமெரிக்காவில் சர்வ சாதாரணமாகப் பார்க்கக்கூடியது.

மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தலாமா!

வட கரோலினாவில் நீர்நிலைகள் எல்லாம் பனியால் உறைந்துவிட்டன. ஒரு பூங்கா குளத்தில் வசித்த அலிகேட்டர் முதலைகள் இறந்து போயிருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் அவை உயிருடன் இருக்கின்றன. தலையை மட்டும் தண்ணீருக்கு வெளியே நீட்டியபடி அப்படியே சிலைபோல் இருக்கின்றன. “கோடிக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் முதலைகள் வசித்து வருகின்றன. இவற்றில் இதுவரை பெரிய மாற்றம் நிகழவே இல்லை. எந்தக் கடுமையான சூழலையும் சமாளிக்கும் திறன் பெற்றவை. உடலை பனி சூழ்ந்துகொண்டவுடன் இயக்கத்தை நிறுத்தி, ஆழ்நிலை உறக்கத்துக்கு சென்றுவிடுகின்றன. தலையை மட்டும் வெளியே நீட்டி சுவாசித்துக் கொள்கின்றன. பனி உருகும் வரை இப்படியே இருந்து, உயிர் தப்பிவிடுகின்றன. குளம் முழுவதும் இவற்றின் தலைகளைப் பார்க்கலாம்” என்கிறார் பூங்கா மேலாளர் ஜார்ஜ் ஹவார்ட்.

உயிர் தப்பிக்கும் ரகசியம்!

http://tamil.thehindu.com/world/article22427166.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: இவ்வளவு அப்பாவியாகவா இருப்பது!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
13chskomasalapic
 
 

சீனாவின் ஜெஜியாங் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயது வாங் க்வி, கடந்த ஓராண்டாக ஒரு பெண்ணை ஆண் என்று நம்பி வாழ்ந்து வந்திருக்கிறார்! ஒரு குழந்தையுடன் விவாகரத்துப் பெற்றுத் தனியாக வசித்துவந்த வாங்குக்கு, 2016-ம் ஆண்டு ஆன்லைன் மூலம் க்யான் அறிமுகமானார். இருவரும் வெகு விரைவில் தனிப்பட்ட விஷயங்களைப் பகிரும் அளவுக்கு நண்பர்களானார்கள். நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. க்யான் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். ஆனால் தன்னை விட வயதில் மிகவும் இளையவரும் வசீகரமானவருமான க்யானைத் திருமணம் செய்துகொள்வதில் அவருக்குத் தயக்கம் இருந்தது. அதைப் புரிந்துகொண்ட க்யான், அன்பும் காதலும்தான் முக்கியம், வயது முக்கியமில்லை என்றெல்லாம் பேசி, சம்மதத்தைப் பெற்றார்.

இருவரும் நெருங்கிப் பழகினார்கள். சில மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று, பெற்றோரை அறிமுகம் செய்து வைத்தார் க்யான். மாமனார், மாமியாரை எல்லாம் பார்த்து மகிழ்ந்து போனார் வாங். திரும்பி வந்த பிறகு இருவரும் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்கள். திருமணம் செய்த பிறகே குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் க்யான். 6 மாதங்களில் சுமார் 30 லட்சம் ரூபாயை க்யானுக்காகக் கொடுத்திருந்தார் வாங். திடீரென்று ஒருநாள் வெளியில் சென்ற க்யான், திரும்பி வரவேயில்லை. மொபைல் போனிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. முதலில் தன்னை விட்டு, வேறு ஒரு பெண்ணிடம் க்யான் சென்றுவிட்டதாக நினைத்தார். பிறகு தான் தன்னிடம் 30 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு, ஏமாற்றிவிட்டார் என்பதை உணர்ந்தார். ஏமாற்றிய க்யானைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அந்த விசாரணையில்தான் க்யான், ஆண் அல்ல ஒரு பெண் என்பது தெரியவந்தது. பணத்தை ஏமாற்றியதைவிட, ஒரு பெண்ணை ஆண் என்று நினைத்து வாழ்ந்த ஏமாற்றம் அவரை மிகவும் வருத்தப்பட வைத்துவிட்டது. க்யானின் பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். “க்யானுக்கு சின்ன வயதிலிருந்தே ஆண் உடை மீதுதான் ஆர்வமாம். நடை, உடை, பாவனைகளை ஆணாகவே அடிக்கடி மாற்றிக்கொள்வாராம். மற்றபடி க்யான் என்னை ஏமாற்றி, பணம் பறித்தாள் என்பதை அவளின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் இருக்கும் இடம் தங்களுக்குத் தெரியாது என்றும் கூறிவிட்டனர். ஒரு பெண்ணை எப்படி ஆண் என்று நம்பினாய் என்று கேட்கிறார்கள்.

க்யான் வெளியில் செல்லும்போது ஒருநாளும் பெண்கள் கழிவறைக்குச் சென்றதில்லை. ஆணுக்கு உரிய உடல் வாகு. ஒரு ஆண் எப்படிக் காதலை வெளிப்படுத்துவாரோ அதேபோல நடந்துகொண்டாள். ஒரு பெண்ணாக இருந்தும் என்னை எவ்வளவு சாமர்த்தியமாக ஏமாற்றியிருக்கிறாள் என்பதை நினைக்கும்போது என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. திட்டமிட்டு, தனியாக வசிக்கும் பெண்ணாகப் பார்த்து ஏமாற்றும் இவள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, என் பணத்தை வாங்கப் போகிறேன். என்னைப் போல் இனி யாரையும் அவள் ஏமாற்றக் கூடாது என்பதற்காகத்தான் வெளியுலகில் பகிர்ந்துகொண்டேன்” என்கிறார் வாங்.

இவ்வளவு அப்பாவியாகவா இருப்பது!

http://tamil.thehindu.com/world/article22435043.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பெண்கள் உடைகளுக்கு ஆண் மாடல்!

 

 
14chskomasalapic

சீனாவின் மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இங்கே குறைந்த விலையில் ஆடைகளை வாங்கலாம். ஆனாலும் மக்கள் வாங்குவதற்குத் தயங்குகிறார்கள். விளம்பரத்தில் காட்டப்படும் படங்களுக்கும் உண்மையான துணிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதுதான் காரணம். விளம்பரத்தைப் பார்த்து வாங்கிவிட்டு, ஏமாற்றமடைகிறார்கள். அலி எக்ஸ்பிரஸ் என்ற ஆன்லைன் நிறுவனத்தை நடத்திவரும் இளைஞர், மக்களின் நம்பிக்கையைப் பெற முடிவு செய்தார். மாடல்களால் அணியப்பட்ட ஆடைகளின் படங்களுக்குப் பதிலாக, தானே விதவிதமான ஆடைகளை அணிந்து படங்கள் எடுத்தார். அவற்றை இணையதளத்தில் வெளியிட்டார். 24 மணி நேரத்துக்குள் வாடிக்கையாளர்கள் குவிந்தனர். “ஒரு ஆண், பெண்கள் உடையை அணிவதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று பயமாக இருந்தது. ஆனால் யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. என்னுடைய கடையில் இருக்கும் உடைகளையே அணிந்து படங்கள் எடுத்ததால், அதே உடைகளே அவர்கள் கைகளுக்கும் போய்ச் சேர்ந்தன. இதனால் வாடிக்கையாளர்கள் திருப்தியடைந்தார்கள். ஒல்லியாக இருப்பதால் நானே ஒரு மாடலாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ‘டிஸ்னி பிரின்சஸ்’ என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். எனக்கும் வியாபாரம் பெருகிவிட்டது. வாடிக்கையாளர்களுக்கும் கொடுத்த பணத்துக்கு அவர்கள் விரும்பிய ஆடைகளைப் பெற முடிந்தது” என்கிறார் அலி எக்ஸ்பிரஸ் உரிமையாளர்.

பெண்கள் உடைகளுக்கு ஆண் மாடல்!

டோக்கியோவின் ஜின்போகோ பகுதியில் உள்ள ‘ஓபன் சோர்ஸ்’ உணவகம் மிராய் ஷோகுடு. இந்த உணவகத்தை 33 வயது சேகாய் கோபயாஷி என்ற பொறியாளர் நடத்தி வருகிறார். பணம் இல்லாவிட்டாலும் இந்த உணவகத்தில் 50 நிமிடங்கள் வேலை செய்துவிட்டு, ஒரு வேளை உணவைச் சாப்பிட்டுச் செல்லலாம். இங்கே நிரந்தரமான ஊழியர்கள் கிடையாது. ஒரே நேரத்தில் 12 பேர் வரை சாப்பிடக்கூடிய சிறிய உணவகம்தான். வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் எடுப்பது, மேஜைகளைத் துடைப்பது, பாத்திரங்களைச் சுத்தம் செய்வது, உணவுகளைப் பரிமாறுவது என்று வேலைகள் இருக்கும். அவரவருக்கு என்ன வேலை பிடிக்கிறதோ, அதை 50 நிமிடங்கள் செய்ய வேண்டும். பிறகு விருப்பமான உணவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்கள் இங்கே உணவுக்காக வேலை செய்து வருகிறார்கள். “நான் படிப்பை முடித்துவிட்டு, ஐபிஎம் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே சமையலறை இருக்கும். ஊழியர்கள் தாங்களே சமைத்துச் சாப்பிடலாம். மற்றவர்களுக்கும் கொடுக்கலாம். நான் சமைத்த உணவுகள் என் நண்பர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டன. எனக்குச் சமையலில் ஆர்வம் அதிகமாகிவிட்டது. உணவகம் ஆரம்பிப்பதற்கான முறையான பயிற்சி எடுத்துக்கொண்டேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உணவகத்தை ஆரம்பித்தேன். அப்போதுதான் எங்கள் அலுவலகத்தில் பின்பற்றிய ஓபன் சோர்ஸ் முறையை இங்கே அமல்படுத்தினேன். இதன் மூலம் கஷ்டப்படுபவர்களின் பசியையும் போக்க முடியும். அதே நேரம் அவர்களுக்கும் தங்கள் உழைப்பால் கிடைத்த உணவு என்பதில் திருப்தி கிடைக்கும். பலரும் இது சரி வராது என்றார்கள். ஆனால் இந்த ஓபன் சோர்ஸ் முறையை நான் வெற்றிகரமாகச் செய்துவருகிறேன்” என்கிறார் சேகாய் கோபயாஷி.

பசி போக்கும் ‘ஓபன் சோர்ஸ்’ உணவகம்!

http://tamil.thehindu.com/world/article22438373.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: அபூர்வமான காட்சி!

 

 
 
TAMILTHTemplateLibrarynation21clIMG2
16chskomasalapic
 
 

கென்யாவின் மாசை மாரா வனவிலங்குகள் பூங்காவில் ஒளிப்படக் கலைஞர் பால் கோல்ட்ஸ்டீன் எடுத்த படங்கள், பார்ப்பவர்களை உறையச் செய்துவிட்டன. “எனக்கு இப்படி ஒரு காட்சி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளுக்கு இடையே ஒரு சிறுத்தை அமர்ந்திருந்ததைக் கண்டு முதலில் ஆச்சரியத்தில் அப்படியே நின்றேன். பிறகுதான் சுதாரித்துக்கொண்டு படங்கள் எடுத்தேன். முசியாரா என்ற இந்தப் பெண் சிறுத்தை மிகவும் பசியோடுதான் இருந்தது. ஆனால் வேட்டையாடுவதற்குச் சோம்பல் பட்டுக்கொண்டு, அமர்ந்திருந்தது. அப்போது தற்செயலாக இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள் வந்து, சிறுத்தையின் இரண்டு பக்கங்களில் நின்றன. தன்னைக் கவனிக்காத ஒட்டகச்சிவிங்கிகளை ஒரு கை பார்க்கலாம் என்று சிறுத்தை தயாரானபோது, ஒட்டகச்சிவிங்கி கூட்டமே வந்துவிட்டது. இனி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்த சிறுத்தை, அமைதியாக அமர்ந்துவிட்டது. எனக்கு அற்புதமான காட்சிகள் கிடைத்துவிட்டன” என்கிறார் பால் கோல்ட்ஸ்டீன்.

அபூர்வமான காட்சி!

இங்கிலாந்தைச் சேர்ந்த 3 வயது டோட்லர் எட்வர்ட்டின் செல்ல நாய் மோர்ஸ் கடந்த டிசம்பரில் காணாமல் போனது. எவ்வளவோ தேடியும் நாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எட்வர்ட் மனம் உடைந்து போனான். அவனை சமாதானப்படுத்த முடியவில்லை. கிறிஸ்துமஸ் தாத்தாவுக்குக் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்றான். அவனின் விருப்பப்படி அவனது அப்பா, ‘டியர் சாண்ட்டா, இந்தக் கிறிஸ்துமஸுக்கு என்னுடைய மிகச் சிறந்த நண்பனான மோர்ஸை கொண்டுவந்து கொடுத்துவிடுங்கள். இதுவே எனக்கான சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு’ என்று எழுதி அனுப்பி வைத்தார். இந்தக் கடிதம் கோடீஸ்வரர் சைமன் கோவெலின் பார்வைக்குச் சென்றது. 3 வயது சிறுவனின் வேண்டுகோள் அவரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனே நாயைத் தேடிக் கண்டுபிடித்து கொடுப்பவருக்கு 8.7 லட்சம் ரூபாயை அன்பளிப்பாகத் தருவதாக அறிவித்தார். எட்வர்ட் இருப்பிடத்திலிருந்து 20 மைல் தொலைவில் ஒரு தம்பதி தங்களிடம் ஒரு நாய் இருப்பதாகத் தகவல் கொடுத்தனர். “நாயை யாரோ கடத்திச் சென்றிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து, சகதியோடு ஒருநாள் எங்கள் வீட்டு வாசலில் படுத்திருந்தது. நாயைச் சுத்தம் செய்து, உணவு கொடுத்து கவனித்துவந்தோம். அப்போதுதான் பரிசுத் தொகை அறிவிப்பு வந்தது. தகவல் கொடுத்தோம்” என்கிறார் கென்ட். பணத்தைக் கொடுத்து நாயை வாங்கிய சைமன் கோவெல், நாயைப் படம் எடுத்து எட்வர்ட் முகவரிக்கு அனுப்பி வைத்தார். “எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே கிளம்பினோம். எட்வர்ட்டைப் பார்த்ததும் மோர்ஸுக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. தாவி வந்து அவனை அணைத்துக்கொண்டது. சைமன் கோவெலுக்கு நன்றி கூறியபோதுதான், 8.7 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்து, மோர்ஸைக் கொண்டு வந்து எங்களிடம் சேர்த்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது” என்கிறார் அப்பா ரிச்சர்ட் லாட்டர்.

தொலைந்த நாயைத் திரும்பிவர வைத்த கடிதம்!

http://tamil.thehindu.com/world/article22447240.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஐயோ... கற்பனைக்கு எட்டாத உறைபனி!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
17chskomasalapic
 
 

உலகின் மிகக் குளிர்ந்த பகுதியாக இருக்கிறது சைபீரியாவில் உள்ள ஒமியா கோன் கிராமம். சாதாரணமாகவே இந்தக் கிராமம் குளிர்ப் பிரதேசமாகத்தான் இருக்கும். தற்போது மைனஸ் 62 டிகிரி செல்சியஸ் என்று பதிவாகியிருக்கிறது. வெப்பநிலையை அளவிடும் தெர்மாமீட்டரே கடுங் குளிரால் உடைந்துவிட்டது. இந்தக் கிராமத்தில் 500 பேர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பனிமான்களை மேய்த்துக்கொண்டு நாடோடிகளாக ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள். அரசாங்கத்தின் முன்முயற்சியால் 80 ஆண்டுகளாக இதே கிராமத்தில் வசித்து வருகிறார்கள். பேனாவில் உள்ள மை, வாகனங்களில் உள்ள பெட்ரோல் உட்பட அனைத்தும் உறைந்துவிட்டன. வீட்டை விட்டு வெளியே வந்தால் இமைகளில் கூடப் பனிப் படர்ந்துவிடுகிறது. 1933-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் இப்படி ஓர் உறைபனிச் சூழலை மக்கள் சந்திக்கிறார்கள்.

ஐயோ... கற்பனைக்கு எட்டாத உறைபனி!

துருக்மெனிஸ்தான் தலைநகர் அஸ்காபாத்தில் இந்தப் புத்தாண்டிலிருந்து கறுப்பு கார்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. நகரில் சுற்றிவரும் கறுப்பு கார்களைக் காவல் துறையினர் கைப்பற்றுகிறார்கள். காரின் நிறத்தை வெள்ளையாக மாற்றிவிடுவதாக ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுக் கொடுத்தால்தான், கார்களைத் திரும்ப ஒப்படைக்கிறார்கள். ஜனவரி முதல் நாளில் இருந்து வாகனங்கள் நிறுத்தக்கூடிய அரசாங்க இடங்களில் உள்ள கறுப்பு கார்களை காவல் துறையினர் கைப்பற்றி வருகிறார்கள். இந்த விஷயம் சொந்தமாகக் கறுப்பு கார் வைத்திருப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. பலரும் எதிர்ப்பு காட்டியவுடன், கறுப்பு கார் தலைநகரில் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளை அல்லது வெளிர் நிறங்களில் உங்கள் விருப்பம்போல் வண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்று யோசனையும் வழங்கப்பட்டிருக்கிறது. 2015-ம் ஆண்டிலேயே துருக்மெனிஸ்தான் கறுப்பு கார்கள் இறக்குமதிக்குத் தடை விதித்துவிட்டது. அப்போது காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. கடந்த நவம்பர் மாதம், ‘வெள்ளை அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்’ என்ற தகவல் பரப்பப்பட்டது. அரசாங்க அதிகாரிகளின் கார்கள் அனைத்தும் வெள்ளையாக மாற்றப்பட்டன. தற்போது பொது மக்களின் கார்களையும் நிறம் மாற்றச் சொல்லி அரசாங்கம் கட்டாயப்படுத்துகிறது. இந்த நிற மாற்றத்துக்குக் காரணம் அதிபர் குர்பங்குலி பெர்டிமுகமேதோவ். இவர் முன்பு பல் மருத்துவராக இருந்தவர். தன்னுடைய வீடு, அலுவலகத்தை வெள்ளை மார்பிளில் மாற்றிவிட்டார். வெள்ளைக் குதிரைகளை வைத்திருக்கிறார். வெள்ளை ஆடைகளை அணிகிறார். வெள்ளைத் தரை விரிப்புகள், வெள்ளைப் பூக்கள் நிறைந்த ஜாடிகள் என்று எங்கும் எதிலும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிறார். “அதிபருக்கு வெள்ளை அதிர்ஷ்டம் என்றால் அவர் மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். திடீரென்று காரின் நிறத்தை மாற்றச் சொன்னால் என்ன செய்வது? முதலில் எங்களுக்கு வெள்ளைப் பிடித்திருக்க வேண்டும். நிறம் மாற்றுவது மிகவும் செலவு பிடித்த விஷயம். அரசாங்கத்தின் அறிவிப்பால் வெள்ளை பெயின்ட்டை பல மடங்கு விலை ஏற்றிவிட்டனர். சாதாரணமாக காருக்கு நிறம் மாற்ற இங்கே 2.6 லட்சம் ரூபாய் செலவாகும். இப்போது 4 லட்சம் ரூபாய் கேட்கிறார்கள். என்னுடைய மாத வருமானமே 38 ஆயிரம் ரூபாய்தான். ஆண்டு முழுவதும் சேமித்தால்கூட என்னால் பெயின்ட் அடிக்க முடியாது” என்கிறார் ஓர் அஸ்காபாத்வாசி.

தனி மனித சுதந்திரத்தில் அரசாங்கம் தலையிடுவதெல்லாம் அநியாயம்…

http://tamil.thehindu.com/world/article22454735.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: இந்த ஒளிப்படக் கலைஞருக்கு என்ன விருது தரலாம்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
18chkanDave-Zaring
 
 

அமெரிக்காவில் வசிக்கும் டேவ், பாம் ஜாரிங் தம்பதியரிடம், கடந்த மே மாதம் நடுத்தர வயது பெண்மணி ஒருவர் வந்தார். தன்னைத் தொழில்முறை ஒளிப்படக் கலைஞர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். குடும்பப் படங்களை எடுத்துக் கொடுப்பதாகச் சொன்னார். அதற்கு பாம் ஜாரிங் சம்மதம் தெரிவித்தார். ஒரு விடுமுறை நாளன்று கணவர், 2 மகன்கள் மற்றும் மாமியாரோடு பூங்காவுக்கு சென்றனர். நீண்ட நேரம் படங்கள் எடுத்துத் தள்ளினார் அந்தப் பெண். வேலை முடிந்தவுடன் அவர் கேட்ட 16 ஆயிரம் ரூபாயையும் கொடுத்தார் பாம் ஜாரிங். இந்தப் படங்களை சில வாரங்களில் அனுப்புவதாகச் சொல்லிவிட்டு விடைபெற்றார்.

பல மாதங்கள் ஆகியும் படங்கள் வரவேயில்லை. ஒரு கட்டத்தில் பாம் ஜாரிங் படங்கள் எடுத்ததையே மறந்து போனார்.

கடந்த வாரம் அந்த ஒளிப்படக் கலைஞரிடமிருந்து அழைப்பு வந்தது. மெயிலில் படங்களை அனுப்புவதாக தகவல் சொன்னார். சில நாட்களில் படங்களும் வந்தன. ஆனால், படங்களைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

“படங்களைப் பார்த்தபோது கோபமும் எரிச்சலுமாக இருந்தது. குழந்தைகள் மிகவும் குழப்பமடைந்தனர். யாராவது நம்மை வைத்து காமெடி செய்கிறார்களா என்று கேட்டனர். எடிட் செய்கிறேன் என்று எங்கள் அனைவரின் முகங்களையும் லெகோ பொம்மைகள் போன்று மாற்றியிருக்கிறார். சில மணி நேரம் கழித்து, இந்தப் படங்களை மீண்டும் பார்த்தபோது சிரிப்புதான் வந்தது. உடனே ஒளிப்படக் கலைஞரைத் தொடர்புகொண்டேன். பூங்காவில் எடுத்த படங்களில் நிழல் படிந்துவிட்டதால், அவரது பேராசிரியர் சொன்னபடி எடிட் செய்ததாகச் சொன்னார். எங்களைப் போல் யாரும் ஏமாற வேண்டாம் என்பதற்காக, ‘நன்றாக விசாரித்து ஒருவரிடம் வேலையை ஒப்படையுங்கள்’ என்ற செய்தியோடு, சமூக வலை தளத்தில் படங்களை வெளியிட்டேன்” என்கிறார் பாம் ஜாரிங்.

இந்த விழிப்புணர்வு படங்கள் இதுவரை 3 லட்சம் முறை பகிரப்பட்டிருக்கின்றன.

இந்த ஒளிப்படக் கலைஞருக்கு என்ன விருது தரலாம்!

தைவானைச் சேர்ந்த ஒருவர் தன் மனைவி குளிக்காததால், விவாகரத்து செய்திருக்கிறார்! “நானும் லின்னும் காதலிக்கும்போது வாரத்துக்கு ஒரு நாள்தான் குளித்துக்கொண்டிருந்தார். அது எனக்குப் பெரிய விஷயமாகப் படவில்லை. திருமணத்துக்குப் பிறகு 2 வாரங்களுக்கு ஒருமுறை குளிக்க ஆரம்பித்தார். பிறகு அது மாதத்துக்கு ஒரு முறையானது. பத்தாண்டுகளில் வருடத்துக்கு ஒருமுறை குளிக்க ஆரம்பித்துவிட்டார். எப்போதாவது முடியை அலசுவார், பற்களைத் தேய்ப்பார். இதனால் எங்கள் இருவரின் குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. லின்னின் பழக்கத்தை மாற்ற எவ்வளவோ முயன்றேன். முடியவில்லை. வேறு வழியின்றி விவாகரத்துக்கு விண்ணப்பித்தேன். இறுதிவரை அவர் விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளவே இல்லை” என்கிறார் லின்னின் கணவர்.

பாவப்பட்ட கணவர்!

http://tamil.thehindu.com/world/article22461584.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: கைவிடப்பட்ட புத்தகங்களை, கொண்டாடும் புத்தகங்களாக மாற்றிய தொழிலாளர்களுக்கு ஒரு பூங்கொத்து!

 

 
19chskobooks

துருக்கியின் கன்கயா பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நூலகம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது! மிகப் பெரிய, அழகான இந்த நூலகத்தில் இடம்பெற்றிருக்கும் புத்தகங்கள் அனைத்தும் படித்துவிட்டு, குப்பைகளில் தூக்கி எறிந்தவை. துப்புரவுத் தொழிலாளர்கள் மாதக் கணக்கில் வேலை செய்து, குப்பைகளில் இருந்து இந்தப் புத்தகங்களை எடுத்திருக்கிறார்கள். தங்கள் குடும்பங்கள் பயன்படுத்திக்கொள்வதற்காக, ஒரு வீட்டில் சிறிய அளவில் நூலகத்தை ஆரம்பித்தனர். நாளுக்கு நாள் புத்தகங்கள் சேர ஆரம்பித்தன. புத்தகங்களின் வகைகளும் பெருகின. ஒரு கட்டத்தில் இந்த நூலகம் பற்றிய தகவல் பலர் மூலம் வெளியே பரவியது.

அதைக் கேள்விப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் புத்தகங்களை இங்கே கொண்டு வந்து அன்பளிப்பாகக் கொடுக்க ஆரம்பித்தனர். புத்தகங்கள் பெருக ஆரம்பித்ததும் இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. துப்புரவுத் துறை அதிகாரிகள் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்தனர். “அதிகாரிகள் மேயரிடம் சென்று யோசனை கேட்டார்கள். ஒரு காலியான செங்கல் தொழிற்சாலையை நூலகத்துக்காக அவர் ஒதுக்கித் தந்தார். இடத்தைச் சுத்தம் செய்து, அலமாரிகளை உருவாக்கினோம். 3 ஆயிரம் புத்தகங்களை அடுக்கினோம். அந்தப் பெரிய கட்டிடத்தில் புத்தகங்கள் குறைவாக இருப்பது போல் தோன்றியது. ஆனால் வெகு விரைவில் 6 ஆயிரம் புத்தகங்கள் சேர்ந்துவிட்டன.

உடனே எங்கள் துறை, இதைப் பொதுமக்கள் நூலகமாக மாற்ற முடிவெடுத்தது. கடந்த செப்டம்பர் முதல் பொதுமக்களும் இந்த நூலகத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆங்கிலம், பிரெஞ்சு மொழி நூல்கள் இங்கே உள்ளன. இலக்கியம், வாழ்க்கை, வரலாறு, அரசியல், பொருளாதாரம், கலை என்று பல்வேறு பிரிவுகளிலும் புத்தகங்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்குத் தனியாகக் கதைகள், படக்கதைகள், அறிவியல் புனைகதைகள் என்று ஏராளமான புத்தகங்கள் உள்ளன. அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்குக்கூட இங்கே புத்தகங்கள் கிடைக்கின்றன. ஒரு முழு நேர நூலகரை நியமித்துவிட்டோம். தினமும் புத்தகங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

இங்கிருந்து உள்ளூர்ப் பள்ளிகள், சிறைச் சாலைகள் போன்ற இடங்களுக்கும் புத்தகங்களை அனுப்பி வைக்கிறோம். இங்கேயே அமர்ந்து படிக்கும் வசதியையும் ஏற்படுத்தியிருக்கிறோம்” என்கிறார் நகராட்சி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் சிமா கேஸ்கயா.

கைவிடப்பட்ட புத்தகங்களை, கொண்டாடும் புத்தகங்களாக மாற்றிய தொழிலாளர்களுக்கு ஒரு பூங்கொத்து!

கண்ணீர் வரவழைக்காத வெங்காயங்களை உருவாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளும் விவசாயிகளும் முயற்சி செய்து வந்திருக்கிறார்கள். இப்போது கண்ணீர் வரவழைக்காத வெங்காயத்தை உருவாக்கிவிட்டனர்! இதற்குப் பெயர் ‘சனியன்’. 1980-ம் ஆண்டிலிருந்து வாஷிங்டனில் பரிசோதனை முயற்சியாகத் தொடர்ந்து விளைவிக்கப்பட்ட வெங்காயம், தற்போதுதான் கண்ணீர் வரவழைக்காத தன்மைக்கு மாற்றமடைந்திருக்கிறது.

சாதாரண வெங்காயத்தின் சுவை இதில் மென்மையாக இருக்கும். இனிப்பு அதிகமாக இருக்கும். கிலோ கணக்கில் இந்த வெங்காயங்களை நறுக்கினாலும் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வராது. ஓர் உருளைக்கிழங்குபோல் இருக்கிறது இந்த வெங்காயம். வெள்ளரியைப்போல் இந்த வெங்காயத்தை அப்படியே சுவைக்க முடியும். தற்போது இந்த வெங்காயம் வாஷிங்டனில் மட்டுமே கிடைக்கிறது.

பெயர்தான் நமக்கு கொஞ்சம் இடிக்கிறது!

 

 

http://tamil.thehindu.com/world/article22470357.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன் அவங்களை திட்ட ஒரு வெங்காயம் கிடைச்சிருக்கு. எப்பவாம் சந்தைக்கு வரும், என்ன விலையெண்டாலும் வாங்கி குசினிக்குள் வைக்க வேணும்....! tw_blush:

கண்ணீர் வரவழைக்காத வெங்காயங்களை உருவாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளும் விவசாயிகளும் முயற்சி செய்து வந்திருக்கிறார்கள். இப்போது கண்ணீர் வரவழைக்காத வெங்காயத்தை உருவாக்கிவிட்டனர்! இதற்குப் பெயர் ‘சனியன்’. 1980-ம் ஆண்டிலிருந்து வாஷிங்டனில் பரிசோதனை முயற்சியாகத் தொடர்ந்து விளைவிக்கப்பட்ட வெங்காயம், தற்போதுதான் கண்ணீர் வரவழைக்காத தன்மைக்கு மாற்றமடைந்திருக்கிறது.

Link to comment
Share on other sites

உலக மசாலா: கோடீஸ்வர யாசகர்கள்!

 

doctor-patient-conflict
picchai%201
 
 

துபாய் பணக்கார நகரம். இங்கே யாசகம் கேட்பவர்கள் கூட மாதத்துக்கு சுமார் 48 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்பது ஆச்சரியமானது. துபாயில் யாசகம் கேட்பது சட்டப்படி குற்றம். ஆனால் இவர்கள் சாதாரணமான யாசகர்கள் அல்லர். தொழில்முறை யாசகர்கள். வெளிநாடுகளில் இருந்து 3 மாத விசாவோடு துபாய்க்கு வருகிறார்கள். மிக நாகரீகமாக உடை அணிகிறார்கள். பார்ப்பதற்குப் பணக்காரர்கள் போலவே தோற்றம் அளிக்கிறார்கள். இவர்கள் கண்ணில் படுகிறவர்களிடமெல்லாம் யாசகம் கேட்பதில்லை. பணக்காரர்களிடம் மட்டுமே கேட்பார்கள். ‘நான் பணக்காரன். கையில் இருந்த பணமும் வங்கி அட்டைகளும் திருடப்பட்டுவிட்டன. என் உறவினர் மயங்கிக் கிடக்கிறார். என் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது..’ இப்படி ஏதாவது ஒரு கதையை நெஞ்சை உருக்கும் விதத்தில் சொல்வார்கள். 17 ஆயிரம் ரூபாயை உதவியாகக் கேட்பார்கள். துபாய் செல்வந்தர்களுக்கு இது ஒரு பெரிய தொகை இல்லை என்பதால், கொடுத்துவிடுகிறார்கள். மசூதி வாசலில் யாசகம் கேட்டால், கேள்வி கேட்காமல் கேட்ட தொகை கிடைத்துவிடுகிறது. அரை மணி நேரத்தில் 20 ஆயிரம் ரூபாயைச் சம்பாதித்துவிடுகிறார்கள். இப்படி ஒரு மாதத்தில் 48 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். மூன்று மாதங்களில் பணம் சேர்ந்தவுடன் துபாயிலிருந்து கிளம்பிவிடுகிறார்கள். பணம் செலவான பிறகு, மீண்டும் துபாய் நோக்கி வருகிறார்கள். தொழில்முறை யாசகர்களைக் கண்டுபிடிப்பது கடினம். அப்படியும் 65 யாசகர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். எப்படியோ அவர்கள் வெளியே வந்துவிடுகிறார்கள் என்கிறார்கள்.

கோடீஸ்வர யாசகர்கள்!

 

ரஷ்யாவைச் சேர்ந்த 20 வயது அனஸ்டாசியா டிமிட்ரிவா இரவு நேர கேளிக்கை விடுதிக்குச் சென்றார். அங்கே சில ஆண்களால் காயப்படுத்தப்பட்டார். சில மணி நேரத்துக்குப் பிறகு சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனைக்குச் சென்றார். அந்த மருத்துவரைக் கண்டதும் அதிச்சியடைந்தார். விடுதியில் தாக்கியவர்களில் அந்த மருத்துவர் விளாடிமிர் நவ்மோவ்வும் ஒருவர். அனஸ்டாசியாவைக் கண்டதும் மீண்டும் மருத்துவர் தாக்க ஆரம்பித்தார். அப்போது ஒரு செவிலியர் அங்கே வந்ததால் மருத்துவர் அடிப்பதை நிறுத்தினார். அந்தக் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. அனஸ்டாசியா காவல் துறையில் புகார் கொடுத்தார். தான் அடித்ததை மறுத்த மருத்துவர் வீடியோவை பார்த்த பிறகு, “அந்தப் பெண்தான் முதலில் என்னைத் தாக்கினார். அதற்கு சாட்சிகள் இருக்கின்றன. மருத்துவமனையில் அவர் தாக்க ஆரம்பித்தவுடன் அந்தச் சம்பவம் கேமராவில் பதிவானால், அவர் சிறை செல்ல நேரிடும் என்று நினைத்தேன். உடனே நான் அடிப்பதுபோல் நடந்துகொண்டேன். என் நண்பர்கள்தான் அவரை டிஸ்கோவில் தாக்கினார்கள். நானும் இந்தப் பெண்ணுக்காக நண்பர்களுடன் சண்டையிட்டேன். கடைசியில் என்னையே குற்றவாளியாக்கிவிட்டார்” என்கிறார் விளாடிமிர். மருத்துவ நிர்வாகம் இவரின் விளக்கத்தை ஏற்காகமல் பணியிலிருந்து நீக்கியிருக்கிறது. “ஒன்றரை ஆண்டுகள் நான் இங்கே பணிபுரிந்திருக்கிறேன். நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறேன். ஒரு வீடியோவால் என்னை அனுப்பியது நியாயமில்லை” என்கிறார் விளாடிமிர்.

மருத்துவரே, இது நியாயமா?

http://tamil.thehindu.com/world/article22478364.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: நேர்மையாகக் கிடைக்கும் வெற்றியே நிலைக்கும்!

 

 
21chskomasalapic

அமெரிக்காவில் அல்ட்ரா மாரத்தான் போட்டிகளில் பிரபலமான வீரர் 45 வயது கெல்லி அக்நியு. 2014-ம் ஆண்டு முதல் 48 மணி நேர அல்ட்ரா மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு, முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். தற்போது இவருக்கு இனி ஓடக் கூடாது என்று தடை விதித்துள்ளது அல்ட்ரா மாரத்தான் அமைப்பு. காரணம், ஓய்வெடுக்காமல் ஓட வேண்டிய இந்தப் போட்டிகளில் கெல்லி யாருக்கும் தெரியாமல் ஓய்வெடுத்திருக்கிறார்.

2015-ம் ஆண்டில் 48 மணி நேர அல்ட்ரா மாரத்தான் போட்டியில் 55 மைல்களுக்கு அதிகமான தூரத்தை அவர் எட்டியபோதே போட்டி அமைப்பாளர்களுக்குச் சந்தேகம் வந்தது. ஒவ்வொரு போட்டியிலும் இவருக்கும் 2-வது இடத்துக்கு வந்தவர்களுக்கும் அதிக தூர வித்தியாசம் இருந்தது. அதன்பிறகு கெல்லியைக் கண்காணிக்க முடிவெடுத்தனர். அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. சமீபத்தில் நடந்த போட்டியில் கழிப்பிடங்களில் கேமராக்களைப் பொருத்தினர். கழிவறைக்குச் சென்ற கெல்லி, யாருக்கும் தெரியாது என்று எண்ணி 7 நிமிடங்கள் உட்கார்ந்து ஓய்வெடுத்தார்.

பிறகு இன்னும் உத்வேகத்தோடு ஓடி, முதலாவதாக இலக்கை அடைந்தார். போட்டி அமைப்பாளர்கள் கெல்லி ஓய்வெடுத்த விஷயத்தை அறிந்து அவரை தகுதி நீக்கம் செய்தனர். இதுவரை வாங்கிய பட்டங்களைத் திரும்பப் பெறுவதாகவும், விளையாடத் தடை விதிப்பதாகவும் அறிவித்தனர். “ஓய்வெடுக்காமல் ஓட வேண்டும் என்பதுதான் போட்டி. கழிவறையைப் பயன்படுத்துவதில் தவறு இல்லை. ஆனால் உட்கார்ந்து ஓய்வெடுத்துவிட்டு, ஓடுவதில் நியாயம் இல்லை. ஒவ்வொரு போட்டியாளரும் கடினமாக உழைக்கிறார்” என்கிறார்கள் அமைப்பாளர்கள்.

நேர்மையாகக் கிடைக்கும் வெற்றியே நிலைக்கும்!

அமெரிக்காவில் ‘Tide pod challenge’ என்ற சவால் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. சோப்பு அடைக்கப்பட்ட சிறிய பிளாஸ்டிக் பைகளைக் கடித்து, சோப்பு நீரைத் துப்ப வேண்டும் என்பதுதான் சவால். இப்படி கடிக்கும்போது சோப்புத் தண்ணீர் வாய்க்குள் சென்றுவிடுகிறது. இது உடல் நலத்துக்கு மிகவும் தீங்கானது என்று மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். சோப்பு உள்ளே சென்றால் வாந்தி, கொப்புளம், பேதி போன்றவை ஏற்படலாம். மரணத்துக்கும் அழைத்துச் சென்றுவிடும் என்கிறார்கள். டைட் சோப்பு நிறுவனம், “நாங்கள் துணிகளைச் சுத்தம் செய்வதற்குத்தான் சோப்புகளைத் தயார் செய்கிறோம். பல லட்சக்கணக்கான வீடுகளில் பாதுகாப்பாக எங்கள் சோப்பு பயன்படுத்தப்பட்டுவருகிறது. குழந்தைகள் அருகில் சோப்புகளை வைக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கிறோம். எங்கள் தயாரிப்பை இப்படிப் பயன்படுத்துவது வருத்தத்தை அளிக்கிறது” என்கிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் 40 பேர் சோப்பை விழுங்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முட்டாள்தனமான சவால்…

http://tamil.thehindu.com/world/article22484826.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ‘கேக்’கில் கலை வண்ணம் கண்டார்!

 

dvofnd.jpg
 

சீனாவைச் சேர்ந்த கேக் தயாரிப்பாளர் ஸோவ் யி, ‘சுகர் கிங்’ என்று அழைக்கப்படுகிறார். கைகளால் செய்யப்படும் இவரது கேக் அலங்காரங்களைப் பார்ப்பவர்கள் உடனடியாக இந்தப் பட்டத்தை வழங்கிவிடுவார்கள்! பளிங்கு பொம்மையைப் போல் அவ்வளவு அழகாக கேக் உருவங்களைச் செய்கிறார்.

கேக் என்று சொன்னால் தவிர, இதை யாரும் சாப்பிடக்கூடிய பொருள் என்று நினைக்க மாட்டார்கள். அவ்வளவு நுணுக்கமான கலைப்படைப்பு. இதுவரை சீனாவில் மட்டும் சுகர் கிங் என்று அறியப்பட்ட இவர், கடந்த ஆண்டு இறுதியில் சர்வதேச கேக் போட்டிகளில் கலந்துகொண்டார். 3 தங்கப் பதக்கங்களையும் 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்ற பிறகு, உலகில் உள்ள மிக முக்கியமான கேக் தயாரிப்பாளர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

அந்தப் போட்டியில் சீனாவை ஆண்ட முதல் பெண்ணின் உருவத்தை உருவாக்கியிருந்தார். இமை முடிகள்கூட மிகத் துல்லியமாகத் தெரியும்படி அமைக்கப்பட்ட பேரர சி யின் உருவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது. “உணவுச் சிற்பங்களை உருவாக்குவது எளிதான விஷயமில்லை. சில சமயங்களில் நான் நினைக்கும் அளவுக்கான துல்லியம் கிடைக்காது. அதற்காக மீண்டும் மீண்டும் அந்த விஷயத்தைச் செய்துகொண்டே இருப்பேன்.

எனக்குத் திருப்தி வரும் வரை நான் செய்வதை நிறுத்தமாட்டேன். சாப்பிடக்கூடிய பொருள்தானே, இதற்கு ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஒரு விஷயத்தைச் செய்யும்போது நூறு சதவீதம் சரியாகச் செய்ய வேண்டும் என்பது என் கொள்கை. இப்படி இருப்பதால்தான் என்னால் மிகச் சிறிய பூக்களிலும் சில மி.மீ. அளவுள்ள இமை முடிகளிலும் நேர்த்தியைக் கொண்டுவர முடிகிறது. நான் ரகசியம் என்று எதையும் வைத்துக்கொள்வதில்லை. ஆர்வமாக வருகிறவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கிறேன்” என்கிறார் ஸோவ் யி.

‘கேக்’கில் கலை வண்ணம் கண்டார்!

இத்தாலியில் 16 வயது மகன் ஒருவர், தன் தாய் மீது வழக்குத் தொடுத்திருந்தார். “என் அம்மாவும் அப்பாவும் விவாகரத்து செய்துகொண்டவர்கள். என் அனுமதியின்றி, என் படங்கள் விவரங்களை பேஸ்புக்கில் தொடர்ந்து அம்மா பகிர்ந்து வருகிறார். பல தடவை சொல்லியும் அவர் தன் செயலை நிறுத்தவே இல்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறேன். என் அப்பாவின் மிரட்டலுக்கும் ஆளாகியிருக்கிறேன்” என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார் அந்த மகன். சமீபத்தில் தீர்ப்பு வந்தது. “நாம் பெற்ற குழந்தையாக இருந்தாலும் ஓரளவு வளர்ந்த பிறகு, அவர்களின் விருப்பங்களை நாம் மதிக்க வேண்டும்.

அவர் அனுமதியின்றி படங்கள் வெளியிடுவதே தவறு. வேண்டாம் என்று சொன்ன பிறகும் தொடர்ச்சியாக அதே விஷயத்தைச் செய்வது குற்றம். பிப்ரவரி 1, 2018-க்குள் மகன் தொடர்பான அத்தனை விஷயங்களையும் ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், சுமார் 8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இது முக்கியமான வழக்கு. மற்றவர்களுக்கும் இது ஒரு பாடம்” என்று நீதிபதி மோனிகா வெல்லெட்டி கூறியிருக்கிறார்.

ஒருவரின் விருப்பத்தை மதிக்கக் கற்றுக்கொள்வோம்!

http://tamil.thehindu.com/world/article22495453.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: தாஸ்தாவெஸ்கியின் குற்றமும் தண்டனையும் போலிருக்கே!

 

 
24chskomasalapic

சீனாவின் நான்சோங் பகுதியைச் சேர்ந்த 48 வயது ஸியாவோபிங் என்ற பெண், தன்னுடைய 27 வயது மகனைத் தான் பெற்றெடுக்கவில்லை என்றும் திருடிக்கொண்டு வந்ததாகவும் காவல் துறையிடம் சரணடைந்திருக்கிறார். 26 வருடங்களுக்குப் பிறகு ஒருவர், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தபோது முதலில் யாரும் நம்பவில்லை.

“எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. மிகுந்த துன்பத்தில் இருந்தேன். அடுத்தவர் குழந்தையை எடுத்து வளர்த்தால், எனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றார்கள் கிராமத்துப் பெரியவர்கள். குழந்தை வேண்டும் என்ற சிந்தனை தவிர, வேறு சிந்தனை இல்லாததால் நானும் அடுத்தவர் குழந்தையை எடுத்து வளர்க்க முடிவு செய்தேன். போலியாக ஓர் அடையாள அட்டையைத் தயார் செய்துகொண்டேன். 1992-ம் ஆண்டு ஒரு வயது குழந்தையைக் கவனித்துக்கொள்ள ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்தேன். அந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்தேன். மூன்றே நாட்களில் குழந்தையை எடுத்துக்கொண்டு, வேறு ஒரு கிராமத்தில் குடியேறினேன். இவன் என் குழந்தை என்று எல்லோரும் நம்பிவிட்டனர். லியு ஜின்ஸிங் என்று பெயரிட்டேன். நான் பெற்ற குழந்தையாகவே அன்பைக் கொட்டி வளர்த்தேன். எங்கள் வீட்டில் மகிழ்ச்சி திரும்பியது. 1995-ம் ஆண்டு எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. உடனே லியுவை அவன் பெற்றோரிடம் கொடுத்து விடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் குழந்தையைத் திருடிய குற்றத்துக்காக நான் சிறைக்குச் சென்றால் என் மகளின் நிலை என்னாவது என்று பயந்தேன். அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். சில ஆண்டுகளில் என் கணவரை இழந்தேன். இரண்டு குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்தேன். ஒருநாள் தொலைக்காட்சி ஆவணப்படத்தில், வயதான பெண் தன்னுடைய தொலைந்துபோன மகனை 50 ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருக்கிறார் என்பதைப் பார்த்தேன். அப்படியே உடைந்து போனேன். இந்தப் பெண்ணைப் போல் என் மகனின் பெற்றோரும் தேடிக்கொண்டுதான் இருப்பார்கள். இனிமேல் நான் சிறைக்குச் செல்வது குறித்து கவலைப்படப் போவதில்லை. என் மகனிடம் உண்மையைச் சொன்னேன். அவனோ, நான் உங்கள் மகன்தான். நீங்கள் சரணடைய வேண்டாம் என்றான். என் மனம் கேட்கவில்லை. சரணடைந்துவிட்டேன். என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். லியுவை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுங்கள்” என்கிறார் ஸியாவோபிங்.

“என் அம்மா சொல்வதை நான் ஏற்கவில்லை. உண்மையிலேயே நான் தத்துப்பிள்ளை என்றாலும் கவலையில்லை. தனியாளாக என்னையும் என் தங்கையையும் கஷ்டப்பட்டு வளர்த்தார். சொந்த மகன் போலவே அவ்வளவு அன்பு காட்டினார். நான் ஒருநாளும் அவரது அன்பிலும் அக்கறையிலும் குறை கண்டதில்லை. என்னைப் பெற்றவர்களைத் தேட வேண்டாம். ஒருவேளை தேடிக் கண்டுபிடித்தாலும் நான் அவர்களுடன் செல்ல மாட்டேன். என் அம்மாவுக்குத் தண்டனை கிடைக்கக் கூடாது ” என்கிறார் லியு.

காவல்துறையினர் இதை எப்படி கிரிமினல் வழக்காகப் பதிவு செய்ய முடியும் என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். லியு பெற்றோர் வசித்த பகுதியில் குழந்தை காணவில்லை என்ற புகாரே அந்த ஆண்டில் பதிவாகவில்லை.

தாஸ்தாவெஸ்கியின் குற்றமும் தண்டனையும் போலிருக்கே!

http://tamil.thehindu.com/world/article22503526.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பெற்றால்தான் பிள்ளையா!

 

masala%20photo%202
masala%20photo%201
masala%20photo%202
masala%20photo%201

வட சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் வசித்துவருகிறார் லியாங் க்யாயிங். 2003-ம் ஆண்டில் ஏற்பட்ட நச்சு வாயு வெளியேறிய விபத்தில் இவரும் இவரது ஒரே மகன் லியாங் யூவும் மாட்டிக்கொண்டனர். இதில் லியாங் பிழைத்துக்கொண்டார், யூ இறந்து போனார். உயிர் பிழைத்தாலும் லியாங்கின் மூளை பாதிப்புக்கு உள்ளானது. பக்கவாதமும் ஏற்பட்டது. சில காலத்துக்குப் பிறகு மகன் பற்றிய நினைவு வந்தது.

இந்தச் சூழ்நிலையில் உண்மையைச் சொல்ல இவரது கணவர் ஸியாவுக்கு மனம் வரவில்லை. அதனால் வெகுதொலைவில் வேலை செய்வதாகச் சொல்லிவிட்டார். மகன் குறித்து அதிக விவரங்கள் கேட்கும் அளவுக்கு லியாங்கின் மனநிலை இல்லை. அதனால் எளிதாகச் சமாளித்துவந்தார் ஸியா.

2010-ம் ஆண்டு இருவரும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஷாங்காய் நகர் காவல்துறையைப் பற்றிய நிகழ்ச்சி அது. அதில் ஒரு காவல்துறை அதிகாரியின் முகத்தைக் கண்டதும் ஸியாவின் முகம் பிரகாசமானது. உடனே தன் மனைவியின் முகத்தைப் பார்த்தார். அவரும் புன்னகை செய்துகொண்டே, ‘நம்ம லியூ’ என்று கண்ணீர் விட்டார்.

“எங்கள் மகனுக்கும் அந்த அதிகாரிக்கும் உருவத்தில் அவ்வளவு ஒற்றுமை இருந்தது. இந்த 8 ஆண்டுகளில் என் மனைவியின் மனநிலை கொஞ்சம் தேறியிருந்தது. அதனால் மகனை நேரில் பார்க்க வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார். என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒரு தொலைக்காட்சியில் வருபவரை நான் எப்படித் தேடிக் கண்டுபிடிக்க முடியும்? ஆனாலும் மனைவிக்காகத் தேடிக்கொண்டு கிளம்பினேன். சுமார் 1,500 கி.மீ. பயணித்தேன். தொலைக்காட்சி நிலையத்தைத் தொடர்புகொண்டேன். ஆனால் அந்த மனிதரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 2013-ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஆரம்பமானது. பிரிந்திருந்தவர்களைச் சேர்க்கும் நிகழ்ச்சி என்பதால், அவர்களைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னேன்.

அவர்கள் ஷாங்காய் காவல்துறையின் உதவியுடன் ஜியாங் ஜிங்விய் என்ற அதிகாரியைக் கண்டுபிடித்தார்கள். அவரைச் சந்தித்து எங்கள் துன்பக் கதையைச் சொன்னேன், பள்ளி ஆசிரியராக இருந்த என் மனைவி இன்று இருக்கும் நிலையையும் எடுத்துச் சொன்னேன். அவரது மனம் சட்டென்று இளகியது. எங்களுக்கு உதவுவதாகச் சொன்னார். எங்கள் சந்திப்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ஜியாங்கைப் பார்த்ததும் லியூ என்று கட்டிப் பிடித்து, கண்ணீவிட்டார் மனைவி. நானும் அதிகாரியும் மேடையில் இருந்த அனைவரும் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டோம். எங்கள் மகன் போலவே அத்தனை அன்பாக நடந்துகொண்டார் அதிகாரி.

அவரது பெற்றோருக்கு விருப்பம் இல்லை என்றாலும் எங்களுக்கு உதவ முன்வந்தது பெரிய விஷயம். அதுவரை இரவில் தூங்காத என் மனைவி, அன்று கூடுதலாக 8 மணி நேரம் தூங்கினார். அதற்குப் பிறகு என் மனைவியின் உடலிலும் மனநிலையிலும் நல்ல முன்னேற்றம் வந்தது. அடிக்கடி மகனைப் பார்க்க வேண்டும் என்பார். அதிகாரி 5 ஆண்டுகளாக போனில் பேசுகிறார், ஸ்கைப்பில் பேசுகிறார். பரிசுப் பொருட்களை அனுப்புகிறார். நானும் அவரை எங்கள் மகனாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டேன்” என்கிறார் ஸியா.

பெற்றால்தான் பிள்ளையா!

http://tamil.thehindu.com/world/article22518765.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.