Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: நெகிழச் செய்துவிட்டார் இந்த அம்மா!

 

 
thathu_3153110f.jpg
 
 
 

இங்கிலாந்தைச் சேர்ந்த 25 வயது எமிலி லார்டர், உகாண்டாவைச் சேர்ந்த இரண்டு வயது ஆடமைத் தத்தெடுத்திருக்கிறார். “2015-ம் ஆண்டு குழந்தைகளுக்கான அறக்கட்டளை ஒன்றில் வேலை செய்வதற்காகத் தன்னார்வலராக உகாண்டாவுக்குச் சென்றேன். பிரசவத்தில் உயிரிழந்த பெண்ணின் இறுதிச் சடங்கைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு 7 குழந்தைகள். கடைசிக் குழந்தையைக் காப்பாற்ற ஒருவரும் முன்வரவில்லை. அதனால் பிறந்து இரண்டே நாளான குழந்தையை நான் வாங்கிக்கொண்டு, எங்கள் மையத்துக்கு வந்தேன். அடுத்து 2 மாதங்கள் இரவும் பகலும் குழந்தையைக் கவனிப்பதே என் முழு நேர வேலையாக இருந்தது. இங்கிலாந்துக்குத் திரும்பும் நேரம் வந்தது. சின்னக் குழந்தையை விட்டுவிட்டுச் செல்ல மனமில்லாமல், மேலும் இரண்டு மாதங்கள் தங்கினேன். நான்கு மாதங்களுக்குப் பிறகு பிரிட்டன் திரும்பினேன். ஆனால் குழந்தையை விட்டு என்னால் இருக்க முடியவில்லை. ஆசிரியராக வேலை செய்ததால் பள்ளியில் விடுமுறை விட்டவுடன் ஆடமைப் பார்க்கக் கிளம்பிவிடுவேன். ஒருகட்டத்தில் அவனை விட்டு என்னால் இருக்கவே முடியவில்லை. அவனும் நான் இங்கிலாந்து திரும்பிய பிறகு எனக்காக மிகவும் ஏங்குவதாகவும் அழுவதாகவும் தகவல் வந்துகொண்டேயிருந்தது. தத்தெடுக்க முடிவு செய்தேன். தத்தெடுக்க வேண்டும் என்றால் நான் உகாண்டாவில் பணிபுரிய வேண்டும். ஆசிரியர் வேலையை உதறி, உகாண்டாவில் ஒரு வேலையைத் தேடிக்கொண்டேன். தத்தெடுக்கும் வேலைகளை ஆரம்பித்தேன். வழக்கறிஞர், நீதிமன்றம், இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்வதற்கான கட்டணங்கள் என்று அதிக அளவில் பணம் தேவைப்பட்டது. வேறு வழியின்றி நன்கொடை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். பலரும் உதவ ஆர்வமாக இருக்கிறார்கள். விரைவில் பணம் சேர்ந்தவுடன் தத்தெடுக்கும் வேலைகளை முடித்துவிட்டு, இங்கிலாந்துக்குச் சென்றுவிடுவோம். ஆடம் என் மகனாக வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இனி அவனின்றி என் வாழ்க்கை இல்லை” என்கிறார் எமிலி லார்டர்.

நெகிழச் செய்துவிட்டார் இந்த அம்மா!

சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கத்தை விடமுடியாது. ரசாயன நகப்பூச்சுகளால் தீங்கு ஏற்படலாம் என்ற பயமும் இருக்கும். இவர்களுக்காகவே இங்கிலாந்தைச் சேர்ந்த க்ரூபான் நிறுவனம் சாப்பிடக்கூடிய ப்ராஸிக்கோ நகப்பூச்சை உருவாக்கியிருக்கிறது. “இத்தாலிய ஒயினின் சுவையிலும் நறுமணத்திலும் தயாரிக்கப்பட் டிருக்கும் நகப்பூச்சை எல்லோரும் விரும்புவார்கள். சாப்பிடக்கூடிய நகப்பூச்சாக இருந்தாலும் அதிக வெப்பம், தீ போன்றவற்றுக்கு அருகில் வைக்கக்கூடாது. எளிதில் தீப்பிடித்துவிடும். நகங்களில் பூசிய நகப்பூச்சை மட்டுமே சுவைக்க வேண்டும். நேரடியாகப் பாட்டிலில் இருந்து அப்படியே குடித்துவிடக்கூடாது போன்ற எச்சரிக்கைகளையும் கொடுத்துவிடுகிறோம். மே மாதம் முதல் இந்த நகப்பூச்சு விற்பனைக்கு வருகிறது” என்கிறது க்ரூபான் நிறுவனம்.

நகங்களைக் கடிக்கத்தான் வேண்டுமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நெகிழச்-செய்துவிட்டார்-இந்த-அம்மா/article9628372.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: வன்முறையை எதிர்க்கும் கத்தி தேவன்!

 

 
 
points_3153930f.jpg
 
 
 

இங்கிலாந்தைச் சேர்ந்த அல்ஃபி பிராட்லி, இரண்டு ஆண்டுகள் உழைப்பில் ‘கத்தி தேவன்’ சிலையை உருவாக்கியிருக்கிறார். 24 அடி உயரத்தில் இருக்கும் இந்தச் சிலையில் 1 லட்சம் கத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காவல் நிலையங்களால் குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கத்திகள் இவை. ஆர்.ஆர். மார்டினின் கற்பனையில் உருவான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆயிரம் கத்திகளால் உருவாக்கப்பட்ட ஒரு சிம்மாசனம் இடம்பெறும். இவர் அதைப் பார்த்துதான் கத்தி தேவனை உருவாக்கியிருக்கிறார். “குற்றங்கள் இப்போது அதிகம் நடக்கின்றன. கத்திக் குத்தில் ஏராளமான அப்பாவிகள் இறந்து போயிருக்கிறார்கள். அதனால் வன்முறைக்கு எதிரான பிரச்சாரமாக இந்தப் பணியை மேற்கொண்டேன். விஷயம் அறிந்த பொதுமக்கள் தெருக்களில் கிடைத்த கத்திகளைக் கொடுத்தார்கள். சிலையைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முயன்றோம். ஆனால் கத்தியைப் பயன்படுத்தி எப்படி ஒரு சிற்பத்தை உருவாக்கலாம், யார் அனுமதி கொடுத்தனர் என்ற கேள்வி எழுந்தது. காவல் நிலையங்கள் தாங்கள் கத்தி கொடுத்த விஷயத்தைச் சொல்ல மறுத்தன. அதனால் அனுமதி கிடைக்கவில்லை. கத்திக் குத்துகளால் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், இந்தச் சிலையைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்றும் தங்களைப் போல யாரும் அன்பானவர்களை இழந்து துயரப்படக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தனர். இனி இந்த கம்பீரமான கத்தி தேவன், கத்தியால் உயிரிழந்தவர்களின் வலிகளைச் சொல்லிக் கொண்டிருப்பான். அதைப் பார்க்கும் குற்றவாளிகளில் சிலர் திருந்தினால் கூட என் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக எடுத்துக்கொள்வேன்” என்கிறார் அல்ஃபி பிராட்லி.

வன்முறையை எதிர்க்கும் கத்தி தேவன்!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் வசிக்கும் 64 வயது லி லியாங்வி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சாயலில் இருக்கிறார். ஒரு பத்திரிகையின் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். “ஒருமுறை என் கண்ணாடியை வேகமாகக் கழற்றி வைத்தேன். உடனே என் நண்பர் இதே மாதிரிதான் ட்ரம்ப்பும் செய்கிறார். உருவமும் ஒத்துப் போகிறது. அதனால் ட்ரம்ப் போல சில விஷயங்களைக் கற்றுக்கொண்டால், பிரபலமாகலாம் என்றார். எனக்கு மார்ஷியல் கலைகள் மீதும் புரட்சிகர பாடல்கள் மீதும் அளவற்ற ஆர்வம் உண்டு. நான் ஏன் ட்ரம்ப்பைப் போல என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர் ஒருவர் என்னைக் கட்டாயப்படுத்தி, ட்ரம்ப் போல் நடை, உடை, பேச்சு எல்லாவற்றையும் மாற்றுவதற்குப் பயிற்சியளித்தார். எனக்கு அவரைப் போன்று ஆங்கிலம் பேச வரவில்லை. தலைமுடி, தோல் நிறத்திலும் வித்தியாசம் இருந்தது. பொதுவாக சீனர்களிடம் ட்ரம்ப்க்கு பெரிய வரவேற்பு இல்லை. அதனால் எனக்கு சின்னச் சின்ன விழாக்களில் பங்கேற்கும் வாய்ப்புகளே கிடைத்தன. தற்போது சில பொருட்களுக்கு மாடலாக இருந்து வருகிறேன். ஓரளவு நல்ல வருமானமும் கிடைக்கிறது” என்கிறார் லி லியாங்வி.

இது அமெரிக்க அதிபருக்குத் தெரியுமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வன்முறையை-எதிர்க்கும்-கத்தி-தேவன்/article9635570.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: ரியல் ஹீரோ ஜாக்!

 

 
boy123_3154278f.jpg
 
 
 

ஐரோப்பாவின் மால்ட்டாவில் வசிக்கும் 7 வயது ஜாக் வெல்லா அரிய ஹார்மோன் குறைபாட்டால் (Rapid-onset Obesity with Hypothalamic dysfunction, Hypoventilation and Autonomic Dysregulation) எடை அதிகரித்து வருகிறான். இந்தக் குறைபாட்டுக்கு ஆரோக்கியமான உணவு அவசியம், ஆனால் எடை அதிகரிக்கக்கூடாது. அதனால் டிரையத்லான் பயிற்சிகளை மேற்கொள்கிறான். “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று ஜாக்கின் எடை வேகமாக அதிகரித்தது. சில வாரங்கள் பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் உணவாகக் கொடுத்துப் பார்த்தோம். அப்போதும் எடை குறையவில்லை. உடனே மருத்துவரைச் சந்தித்தோம். அரிய ஹார்மோன் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது. நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த முடியவில்லை. இந்தக் குறைபாட்டைச் சரி செய்வதற்கு தற்போது மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் கவனமாகப் பார்த்துக்கொண்டால் ஐந்திலிருந்து ஒன்பது ஆண்டுகள் வரை மரணத்தைத் தள்ளிப் போடலாம் என்றார்கள். நாங்கள் உடைந்து போனோம். முடிந்தவரை ஜாக்கின் ஆயுளை நீட்டிக்க முடிவெடுத்தோம். டிரையத்லான் பயிற்சிகளை மேற்கொள்ள வைத்திருக்கிறோம். இதன் மூலம் ஜாக்கின் எடை அதிகரிக்காமல் இருக்கிறது. வாரத்துக்கு மூன்றுமுறை பயிற்சிகளுக்குச் செல்கிறான். வெப்பநிலை அதிகரித்தால் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்துவிடும். அதனால் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்வதில் கவனமாக இருப்பான். வாழ்வதற்காக ஒரு குழந்தை இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது” என்கிறார் ஜாக்கின் அப்பா வெல்லா. “ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறையால் மட்டும் உடல் எடை அதிகரிக்கும் என்பதில்லை. இது போன்ற குறைபாடுகளும் காரணமாக இருக்கலாம். அதிகம் தெரியாத, இதுவரை 75 பேருக்கு மட்டுமே கண்டறியப்பட்டுள்ள ஒரு பாதிப்பைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சமூக வலைதளங்களில் எழுதினேன். அதைப் பார்த்து மால்ட்டா முழுவதிலுமிருந்து எங்களுக்கு உதவிகள் செய்யக் காத்திருக்கிறார்கள்” என்கிறார் அம்மா மருஷ்கா வெல்லா.

ரியல் ஹீரோ ஜாக்!

ரஷ்யாவில் இயங்கி வரும் மிகப் பெரிய லாயல் சூப்பர் மார்க்கெட்டைப் பிரபலப்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். அவரவர் பெயரோடு சூப்பர் மார்க்கெட்டின் பெயரையும் சேர்த்து சட்டப்படி மாற்றிக்கொள்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்கள். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வசிக்கும் ஒரு பெண், கணவரிடம் அனுமதி பெறாமல் தன் பெயரை மாற்றிக்கொண்டார். விஷயம் அறிந்த கணவன், தன்னைக் கேட்காமல், தன் அனுமதி இல்லாமல் எப்படிப் பெயரை மாற்றலாம் என்று சண்டையிட்டார். அவரது கோபம் அதிகமாகவே மனைவியின் கார் கண்ணாடிகளை உடைத்தார். கான்கிரீட் கலவையை வரவழைத்து, கார் முழுவதும் நிரப்பினார். “என் மனைவிக்கு மிகவும் பிடித்த இந்த கார் இப்போ எப்படி இருக்கிறது?” என்று கேட்டு ஆணவமாகச் சிரித்தார். அத்தனை செயல்களையும் ஸ்மார்ட் போனில் வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். ரஷ்யாவை தாண்டி வெகுவேகமாகப் பரவி வருகிறது இந்த வீடியோ.

என்ன ஒரு வில்லத்தனம்?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ரியல்-ஹீரோ-ஜாக்/article9639434.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: புத்தியிருப்பவர் பிழைத்துக்கொள்வார்!

 
home1_3154606f.jpg
 
 
 

இங்கிலாந்தில் வசிக்கும் டன்ஸ்டன் லோவ், 2011-ம் ஆண்டு மூன்றரை கோடி ரூபாய்க்கு 6 படுக்கையறைகள் கொண்ட மிகப் பெரிய வீட்டை ஆசையாக வாங்கினார். அதற்குப் பிறகு அந்த வீட்டுக்கு ஏராளமாகச் செலவு செய்து புது வீட்டைப் போல மாற்றினார். அந்த வீட்டில் மூன்று ஆண்டுகளே அவரால் நிம்மதியாக வாழ முடிந்தது. கடன் பிரச்சினை அளவுக்கு அதிகமாக, வீட்டை விற்க முடிவு செய்தார். ஆறரை கோடி ரூபாய்க்கு வீடு என்று விளம்பரம் செய்தார். ஆனால் வீட்டை வாங்குவதற்கு ஒருவரும் ஆர்வம் காட்டவில்லை. கடந்த டிசம்பரில் 6.8 கோடி ரூபாய்க்கு விற்பதாக அறிவித்தார். அப்போதும் வீடு விலை போகவில்லை. ஒரு பக்கம் கடன் தொல்லை. இன்னொரு பக்கம் வீட்டை விற்க முடியாத மன உளைச்சல். வேறு வழியின்றி 5.2 கோடி ரூபாய்க்கு விற்பதாக அறிவித்தார். அப்போதும் வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. வீட்டை விற்க வேண்டிய கட்டாயத்தில் ஒரு திட்டத்தை உருவாக்கினார். இவரிடம் 162 ரூபாய்க்கு டிக்கெட் வாங்குபவர்களிலிருந்து ஒருவரைக் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலியாகத் தேர்ந்தெடுத்து, வீட்டை இலவசமாகக் கொடுத்துவிடுவதாக அறிவித்தார். நேரடியாகவும் தபால் மூலமும் ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டுகள் மிக வேகமாக விற்றுக்கொண்டிருக்கின்றன. இதுவரை டிக்கெட்கள் விற்பனை மூலம் ஒரு கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. டன்ஸ்டனுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. 162 ரூபாய் செலுத்தி எளிமையான ஒரு கேள்விக்குப் பதில் சொல்பவர்களையும் அதிர்ஷ்டக் குலுக்கலில் சேர்த்துவிடுவோம் என்று ஒரு போட்டியை அறிவித்திருக்கிறார். “ஆகஸ்ட் முதல் தேதிதான் அதிர்ஷ்டசாலியைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம். அதுவரை விதவிதமாகப் போட்டிகளை அறிவித்து, அதற்கான கட்டணங்களையும் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தையும் வைத்து வீட்டுக்கான தொகையை எடுத்துவிடுவேன். குறைந்தது 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி விற்றால் 8 கோடி ரூபாய் கிடைத்துவிடும். நான் வீட்டை விற்க நினைத்த தொகையை விட அதிகமான லாபம். அதனால் அதிர்ஷ்டசாலிக்கு இலவசமாக வீட்டைக் கொடுப்பதில் எனக்கு மகிழ்ச்சியே!” என்கிறார் டன்ஸ்டன்.

புத்தியிருப்பவர் பிழைத்துக்கொள்வார்!

ஜப்பானைச் சேர்ந்த 6 வயது ரிக்கி குரங்கு மிகப் பிரமாதமாக டென்னிஸ் விளையாடுகிறது. டென்னிஸ் உடையணிந்து, இரண்டு கால்களால் நிமிர்ந்து நின்று, டென்னிஸ் மட்டையால் அநாயாசமாகப் பந்தை அடித்து விளையாடுகிறது. பந்து உயரமாகச் செல்லும்போது தரையிலிருந்து எம்பிக் குதித்து, பந்தை லாவகமாக அடிக்கும் காட்சி ஆச்சரியப்படுத்தி விடுகிறது. விளையாடி முடித்த பிறகு, பயிற்சியாளர் ‘குட் ஜாப்’ என்று பாராட்டியவுடன் அவரது தோள்களில் தட்டிக் கொடுக்கும்போது எல்லோரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுவிடுகிறது ரிக்கி. டென்னிஸ் விளையாடும் வீடியோ வெளியிட்ட 6 மணி நேரத்தில் 3 லட்சம் முறை பார்க்கப்பட்டிக்ருகிறது!

அடுத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்குமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-புத்தியிருப்பவர்-பிழைத்துக்கொள்வார்/article9640915.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: கண்களை ஏமாற்றும் அட்டகாசமான முக ஓவியங்கள்!

 

 
ulagam_3154819f.jpg
 
 
 

னடாவின் வான்கூவர் நகரில் வசிக்கும் 31 வயது மிமி சோய், அற்புதமான மாயத் தோற்றத்தை (Optical Illusion) தன் முகத்தில் வரைந்துவிடுகிறார்! சட்டென்று பார்த்தால் போட்டோஷாப் செய்தது போன்று தோன்றும். பள்ளி ஆசிரியராக இருந்தவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பனைக் கலையைக் கற்றுக்கொண்டார். “வழக்கமாக எல்லோரும் செய்யும் ஒப்பனையைவிட வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்போதுதான் மாயத் தோற்றம் வரையும் எண்ணம் உருவானது. ஆரம்பத்தில் என் முகத்தில் நானே கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு வரைவதில் சிக்கல் இருந்தது. நீண்ட பயிற்சிக்குப் பிறகு கலை வசப்பட்டுவிட்டது. மற்ற ஒப்பனைக் கலைஞர்களைவிட என்னுடைய ஒப்பனை வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதே போல ஒவ்வொரு நாளும் என்னுடைய ஓவியம் இன்னும் பிரமாதமாக வர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களைத்தான் ஓவியங்களாகத் தீட்டுகிறேன். ஓர் ஓவியம் வரைந்து முடிப்பதற்கு 5 மணி நேரம் கூட ஆகிறது. தொடர்ச்சியாக வரைய முடியாததால் நடுவில் சிறிது நேரம் தூங்கிவிட்டு, வரைவதைத் தொடர்வேன். லேஸ் ஓவியம் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது. வரைந்து முடித்த பிறகு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன். என்னை 1,40,000 பேர் பின்தொடர்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் நான் போட்டோஷாப் செய்கிறேன் என்றே நினைக்கிறார்கள். அவர்களுக்காகவே நான் வரைவதை வீடியோவாக எடுத்து வெளியிட்டிருக்கிறேன். நானே வரைவதில்தான் என்னுடைய திறமை அடங்கியிருக்கிறது. அதனால் டிஜிட்டல் எடிட்டிங்கை விரும்புவதில்லை. முதன்முதலில் ஐலைனரை மட்டும் வைத்து முகம் உடைந்தது போன்று வரைந்ததைப் பார்த்த என் அம்மா அப்படியே அதிர்ச்சியடைந்துவிட்டார். இதைவிட வேறு என்ன வேண்டும்?” என்கிறார் மிமி சோய்.

கண்களை ஏமாற்றும் அட்டகாசமான முக ஓவியங்கள்!

செக் குடியரசைச் சேர்ந்த யானி நிறுவனம் ஆன்லைனில் ஒரு தொழிலை ஆரம்பித்திருக்கிறது. பல் துலக்குவதற்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வரும் உகாய் மரக் குச்சிகளை உலகம் எங்கும் விற்பனை செய்து வருகிறது. ஒரு சிறிய குச்சியின் விலை 322 ரூபாய்! கடந்த 7000 ஆண்டுகளாக இந்தியத் துணைக்கண்டத்திலும் மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் உகாய் குச்சிகளைப் பல் துலக்கப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதை இன்று வருமானம் தரக் கூடிய ஒரு தொழிலாக மாற்றிவிட்டது இந்த நிறுவனம். ’பல் துலக்கும் தூரிகையோ, பற்பசையோ இனி தேவையில்லை. இரண்டின் வேலையையும் ஒரே குச்சி செய்துவிடுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் உகாய் குச்சிகளைப் பயன்படுத்துங்கள். இயற்கையான முறையில் பல் துலக்குவதால் உடலுக்கும் நல்லது’ என்று விளம்பரம் செய்திருக்கிறது. புதிய கண்டுபிடிப்பு போலச் சொல்லி, குச்சிக்கு ஏராளமான விலையை நிர்ணயித்திருக்கும் நிறுவனத்துக்கு மக்கள் கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள்.

மீண்டும் குச்சியே வென்றது!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கண்களை-ஏமாற்றும்-அட்டகாசமான-முக-ஓவியங்கள்/article9642125.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மிஸ்டர் தன்னம்பிக்கை!

 
duo_3155413h.jpg
 

அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் வசித்து வந்த 22 வயது கெவின் மோர்டன் படித்துக்கொண்டே, ஓர் உணவகத்தில் வேலையும் செய்து வந்தார். 2007-ம் ஆண்டு இரவில் வேலை முடித்துக் கிளம்பும்போது அடையாளம் தெரியாத ஒருவரால் சுடப்பட்டார். ஆனாலும் தானே மருத்துவமனைக்கு காரை ஓட்டிச் சென்றார். வழியில் நினைவிழந்த நிலையில் வேறு சிலரால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வயிற்றில் பாய்ந்த குண்டு குடல், கணையம் போன்றவற்றை மோசமாகப் பாதித்துவிட்டது. நுரையீரலும் வேலை செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டது. கெவினின் நிலையைக் கண்ட மருத்துவர்கள், பிழைப்பதற்கு 10% வாய்ப்பு மட்டுமே இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் மருத்துவர் டார்டி ஷேத் நம்பிக்கையுடன் மருத்துவம் பார்த்தார். பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். வாரக் கணக்கில் கோமாவில் இருந்தவருக்கு ஓராண்டு வரை திரவ உணவுதான் செலுத்தப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது. டார்டி ஷேத் முயற்சியில் தனக்கு இரண்டாவது முறையாக வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று அறிந்துகொண்டார் கெவின். உடனே தானும் ஒரு மருத்துவராகி, உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். இரண்டு ஆண்டுகளில் பூரணமாகக் குணமடைந்தார். “என் தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக்கொண்ட மருத்துவருக்கு நான் என்ன செய்துவிட முடியும்? 2009-ம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்தேன். என் திருமணத்துக்கு ஷேத் தன் கணவருடன் வந்தார். விழாவில் எல்லோருக்கும் அவரை அறிமுகம் செய்து, கவுரவப்படுத்தினேன். நான் அனுமதிக்கப்பட்டிருந்த செயிண்ட் ஜான் மருத்துவமனைக்கு பயிற்சி மருத்துவராக சென்றேன். ஒவ்வொரு நாளும் நான் இருந்த படுக்கையைப் பார்வையிடுவேன். மருத்துவமனை ஊழியர்கள், பிழைப்பதே கடினம் என்று கருதப்பட்ட ஒரு நோயாளி, அதே மருத்துவமனையில் மருத்துவராக வலம் வருகிறார் என்று எல்லோரிடமும் மகிழ்ச்சியாகக் கூறுவார்கள். என் மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஷேத், என்னை மகனாக நினைத்துப் பெருமைகொள்வதாகக் கூறினார். நான் டெட்ராய்டில் வளர்ந்தபோது ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க மருத்துவரைக்கூடப் பார்த்ததில்லை. எங்களுக்கும் பெரிய கனவு சாத்தியமாகும் என்றெல்லாம் நினைத்ததில்லை. ஆனால் இன்று சாத்தியமாகியிருக்கிறது” என்கிறார் கெவின்.

மிஸ்டர் தன்னம்பிக்கை!

மெக்ஸிகோவில் நாய்களுக்கான பிரத்யேகமான ஐஸ்க்ரீம் விற்பனை செய்யப்படுகிறது. டான் பேலட்டோ ஐஸ்க்ரீம் நிறுவனத்தின் உரிமையாளர் மவுரிசியோ மொன்டாயோ, “மனிதர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடும்போது தங்களின் செல்லப் பிராணிகளுக்கும் கொடுத்துவிடுகிறார்கள். இதனால் நாய்களின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்படுகிறது. அதனால் நாய்களுக்காக ஐஸ்க்ரீம் உருவாக்க நினைத்தேன். கால்நடை மருத்துவர்களைச் சந்தித்து, எந்தெந்த உணவுப் பொருட்கள் நாய்களுக்கு கெடுதல் என்பதைக் கேட்டு அறிந்துகொண்டேன். அவற்றை எல்லாம் தவிர்த்து, ஐஸ்க்ரீம்களை உருவாக்கினேன். எங்கள் ஐஸ்க்ரீமில் லாக்டோஸ் இல்லை, சர்க்கரை இல்லை. தேனையும் பழச்சாறுகளையும் இனிப்புக்குச் சேர்த்துகொண்டேன். செல்லப்பிராணிகள் மீது உண்மையான அக்கறையுள்ளவர்கள் தாங்கள் சாப்பிடுவதைக் கொடுக்க மாட்டார்கள். நாய்களுக்கென்று தயாரிக்கப்படும் உணவுகளைத்தான் கொடுக்க வேண்டும். ” என்கிறார்.

எந்த நாயாவது ஐஸ்க்ரீம் வேண்டுமென்று கேட்டதா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மிஸ்டர்-தன்னம்பிக்கை/article9645350.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: உலகின் மிக வயதான பெண்மணிக்கு வாழ்த்துகள்!

 
 
masala_3155743f.jpg
 
 
 

உலகின் மிக வயதானவராக விளங்கிய இத்தாலியைச் சேர்ந்த எம்மா மொரனோ, 117 ஆண்டுகள் 137 நாட்களைக் கடந்த நிலையில் கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, ஜமைத்காவைச் சேர்ந்த வயலட் மோஸ் ப்ரவுன், உலகின் புதிய மிக வயதான மனிதராக உருவெடுத்துள்ளார். இவர் 117 ஆண்டுகள் 138 நாட்களைக் கடந்துள்ளார்.

1900-ம் ஆண்டு பிறந்த இவர், கரும்பு தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து, தன்னுடைய கடின உழைப்பால் தொழில்முனைவோரானார். இவருக்கு 6 குழந்தைகள். இவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வசித்து வருகின்றனர். இவரை கவனித்துக்கொள்வதற்காக இவரது 96 வயது மகன் இங்கிலாந்திலிருந்து ஜமைக்கா வந்துவிட்டார்.

“எங்களது மரபணுக்கள் மூலமே நீண்ட ஆயுள் கிடைத்திருக்கிறது. மீன், ஆடு, மாட்டின் கால், இனிப்பு உருளைக் கிழங்கு, பழங்கள் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுவேன். ஆரஞ்சும் மாம்பழங்களும் மிகவும் பிடிக்கும். கோழி, பன்றி இறைச்சிகளைச் சாப்பிடுவதில்லை. நன்றாக உழைப்பேன். கரும்பை வெட்டி கழுதையின் முதுகில் கொஞ்சம் ஏற்றிவிட்டு, மீதியை என் தலையில் சுமந்துகொண்டு மைல் கணக்கில் நடந்துசென்று விற்றுவிட்டு வருவேன். கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் ரொட்டிக் கடை வைத்தேன். அப்படியே வியாபாரம் பெருகியது. குடும்பம் நல்ல நிலைக்கு முன்னேறிவிட்டது.

இத்தனை ஆண்டுகளில் நினைவாற்றல் கூட குறையவில்லை. முதல் முறை சென்ற விமானப் பயணமும் கார் பயணமும் இன்னமும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன. பைபிளை விரும்பிப் படிக்கிறேன். நல்லவற்றையே நினைக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்கிறார் வயலட். மூப்பியல் ஆராய்ச்சி குழு இவரது வயதை உறுதி செய்திருக்கிறது.

ஆனால் இவரைவிட முதியவர் வேறு யாராவது இருக்கிறாரா என்று கின்னஸ் அமைப்பு தேடிக்கொண்டிருக்கிறது. உலகில் சுமார் 450 பேர் நூறு வயதைக் கடந்துள்ளனர். இதில் 50 பேரின் வயது மட்டுமே இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகமானவர்கள் பெண்கள்.

உலகின் மிக வயதான பெண்மணிக்கு வாழ்த்துகள்!

சீனாவின் உஹான் ஓசன் பார்க்கில் வசிக்கும் விலங்குகளுடன் பழகுவதற்கு வாரத்தில் ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதற்காக ரூ.940 கட்டணம் செலுத்தி, ஒரு வாரத்துக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும். மூன்று மணிநேரம் வரை விலங்குகளுடன் செலவிடலாம். விலங்குகளுக்கு உணவுகளைத் தயார் செய்து, அவர்களே ஊட்டலாம். குளிப்பாட்டலாம். மலத்தை அள்ளி, இடத்தைச் சுத்தம் செய்யலாம். விலங்குகளைச் சந்திக்கும் முன்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. எச்சரிக்கைகள் கொடுக்கப்படுகின்றன.

காலுறைகள் வழங்கப்படுகின்றன. விலங்குகள் ஆர்வலர்களும் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்புகிறவர்களும் இந்தப் பணியைச் செய்வதற்காக வரிசையில் காத்திருக்கிறார்கள். “ஏப்ரல் முதல் தேதி இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது முதலில் உண்மை என்று நம்பவில்லை. இங்கே துருவக் கரடிகள் இருக்கின்றன. அவற்றை நெருங்கிப் பார்க்கவும் அவற்றுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் நான் இங்கே வந்தேன். அற்புதமான அனுபவம். ஃபேஸ்புக்கில் ஏகப்பட்ட லைக்ஸ்!” என்கிறார் லி.

வித்தியாசமான பார்க்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உலகின்-மிக-வயதான-பெண்மணிக்கு-வாழ்த்துகள்/article9648238.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மகிழ்ச்சியாக வாழட்டும்!

 
poly_3156130f.jpg
 
 
 

நியூயார்க்கில் வசிக்கும் 24 வயது அல்மா டோர்ரெஸ், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருகிறார். ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக உதிரப் போக்கு, இடுப்பு வலி, தாய்மை அடைவதில் சிக்கல், முகத்தில் முடி போன்ற பல பிரச்சினைகள் இதன்மூலம் ஏற்படுகின்றன. எடை அதிகரிப்பு, தூக்கமின்மை, இதயக் கோளாறுகள் போன்றவையும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. 16 வயதிலிருந்து இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அல்மா, முகத்தில் தாடியும் மீசையும் அடர்த்தியாக வளர்ந்ததால் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார். ஒருகட்டத்தில் மனதளவில் சோர்ந்து போய், தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார். ஆனால் அவரது காதலர், “மீசை, தாடியுடன் இருந்தாலும் நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்! இயற்கையாக இப்படியே இருந்துவிடு. இதில் எனக் கொன்றும் பிரச்சினை இல்லை” என்று சொல்லி, அல்மாவுக்கு நம்பிக்கையளித்தார். அதற்குப் பிறகு தாடி, மீசையுடன் வெளியில் செல்ல ஆரம்பித்தார். “எனக்கு நேராக எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் நான் நடந்து செல்லும்போது செல்போனில் படம் பிடிப்பார்கள். இன்று எல்லாவற்றையும் எளிதில் கடந்துவிடும் மனநிலையில் இருக்கிறேன். தாடி, மீசையால் இன்னும் கம்பீரமான, தைரியமான பெண்ணாக உணர்கிறேன். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் குறித்து பிற பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். ஐந்து ஆண்டுகளாக என் காதலர் கொடுத்த நம்பிக்கையால்தான் நான் இவ்வளவு தூரம் மாறியிருக்கிறேன். இதைப் பார்த்து பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னம்பிக்கை அடைந்தால் போதும்” என்கிறார் அல்மா. “உள்ளத்தைத் தான் நான் பார்க்கிறேன். தாடியும் மீசையும் ஒரு குறையாகவே என்றைக்கும் தெரிந்ததில்லை. நோயை எதிர்த்துப் போராடுவதை விட்டுவிட்டுப் பிறர் என்ன நினைக்கிறார்களோ என்று வருத்தப்படுவது கொடுமையானது. அல்மா தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீண்டுவிட்டார். இனி எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்” என்கிறார் டெய்லர்.

இந்தப் புரிதலுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழட்டும்!

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் வசிக்கும் ஸ்டீவ் போல்ஸ்டன் வீட்டு மாடியில் திடீரென்று நாய் குலைக்கும் சத்தம் கேட்டுள்ளது. திருடன் வந்திருக்கிறான் என்று வீட்டிலிருந்தவர்கள் உஷாரானார்கள். ஜன்னல் வழியே பார்த்தபோது 9 அடி நீளமுள்ள மிகப் பெரிய முதலை ஒன்று வராண்டாவில் இருந்து நாயை ஆக்ரோஷமாக மிரட்டிக்கொண்டிருந்தது. “எங்களால் நம்பவே முடியவில்லை. மாடிக்கு வருவதற்கு வெளிப்பக்கமாக ஒரு வழி இருக்கிறது. 15 அடி உயரத்துக்கு இருக்கும் மாடிப்படிகளில் ஏறி, அலுமினியக் கதவை உடைத்துக்கொண்டு, வராண்டாவுக்குள் நுழைந்திருக்கிறது முதலை. இதைக் கொல்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால், விலங்குகள் மையத்தைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு வந்த அவர்கள் முதலையை பிடித்துச் சென்றனர். இதுபோல இன்னொரு முறை யாருக்கும் எங்கும் நடக்கக் கூடாது” என்கிறார் ஸ்டீவ் போல்ஸ்டன்.

மாடிக்கு வந்த விருந்தினர்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மகிழ்ச்சியாக-வாழட்டும்/article9651161.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: மிதந்து வந்த 150 அடி பனிப்பாறை

 

 
masala_3156510f.jpg
 
 
 

கனடாவின் கடற்கரை நகரமான பெர்ரிலாண்ட், திடீரென சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய இடமாக மாறிவிட்டது! 150 அடி உயரமுள்ள மிகப் பெரிய பனிப்பாறை ஒன்று இந்தப் பகுதிக்கு மிதந்து வந்திருக்கிறது. புவி வெப்பமடைவதால் ஒவ்வோர் ஆண்டும் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி, உடைந்து, இடம்பெயர்ந்து வருகின்றன. இந்தப் பனிப்பாறைகளில் 90% தண்ணீருக்குக் கீழேதான் இருக்கிறது. 1912-ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் மோதிய பனிப்பாறையை விட இது 50 அடி உயரம் அதிகம்.

திடீரென தோன்றிய இந்தப் பனிப்பாறையைப் பார்ப்பதற்கும் புகைப்படங்கள் எடுப்பதற்கும் ஆயிரக்கணக்கானவர்கள் குழுமிவிட்டனர். 2016-ம் ஆண்டில் 687 பனிப்பாறைகள் நகர்ந்து வந்துள்ளன. இந்த ஆண்டு இதுவரை 616 பனிப்பாறைகள் நகர்ந்து வந்துவிட்டன. இவற்றில் இதுவே மிகப் பெரிய பனிப்பாறை. இந்தப் பனிப்பாறையின் வருகையால் சுற்றுலாத் துறை மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.

இயற்கை விடுக்கும் எச்சரிக்கை இது.

 

இன்று உலகம் முழுவதும் காபி விரும்பிக் குடிக்கப்படுகிறது. அவரவர் விருப்பப்படி டிகாஷனை அதிகமாகவோ குறைத்தோ பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் வண்ணமே இல்லாத காபியை ஸ்லோவாகியாவைச் சேர்ந்த சகோதரர்கள் டேவிட், ஆடம் இருவரும் உருவாக்கி இருக்கிறார்கள். பார்ப்பதற்கு தண்ணீர் போன்று தோற்றமளித்தாலும் காபியின் சுவையும் நறுமணமும் இதில் இருக்கிறது. “சாதாரண காபியைக் குடித்தால் பற்களின் நிறம் மங்கிவிடும்.

ஆனால் எங்கள் CLL CFF காபியைக் குடித்தால் பற்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை. உயர்தர அரேபிகா காபிக் கொட்டைகளில் தூய்மையான தண்ணீர் சேர்த்து உருவாக்கி இருக்கிறோம். இதில் ரசாயனங்கள், செயற்கை நறுமணங்கள், இனிப்புப் பொருட்கள் ஆகியவற்றைச் சேர்க்கவில்லை. 200 மி.லி. காபியின் விலை 500 ரூபாய். இந்தச் சுவைக்கு தாராளமாகக் கொடுக்கலாம். தற்போது ஸ்லோவாகியா, இங்கிலாந்தில் எங்கள் காபி விற்பனை செய்யப்படுகிறது” என்கிறார் ஆடம்.

தண்ணீர் மாதிரி காபி என்று சொல்வது உண்மையாகிவிட்டதே!

 

அமெரிக்காவின் டென்னிசியில் வசிக்கிறார் 78 வயது ஃப்ரெட் கில்லாண்ட். 51 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி ஜானிஸுக்கு, என் உயிர் உள்ளவரை உன்னுடன் இருப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்தார். 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜானிஸ் மறைந்தார். ஆனாலும் தான் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றி வருகிறார். “ஜானிஸைப் பார்த்தவுடனே எனக்குக் காதல் வந்துவிட்டது.

மிகவும் அழகாக இருப்பார். என் விருப்பத்தை ஏற்று திருமணம் செய்துகொண்டார். அப்போதுதான் சத்தியம் செய்து கொடுத்தேன். நான் இருக்கும் வரை சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தினமும் கல்லறைக்குச் செல்கிறேன். சிறிதுநேரம் கல்லறைக்கு அருகில் அமர்ந்து, நாங்கள் வாழ்ந்த மகிழ்ச்சியான தருணங்களை நினைத்துக்கொள்வேன்” என்கிறார் ஃப்ரெட் கில்லாண்ட்.

சத்தியத்தைக் காப்பாற்றும் கணவர்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மிதந்து-வந்த-150-அடி-பனிப்பாறை/article9655077.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: கார் மீது கார்கள்!

 

ulaga_masala1_3156939f.jpg
 
 
 

மலேசியாவைச் சேர்ந்த 34 வயது மஹாடி பட்ருல் ஜமான் தொழிலதிபராக இருக்கிறார்.

13 வயதிலிருந்தே இவருக்கு பொம்மை கார்களைச் சேகரிக்கும் பழக்கம் இருந்தது. படித்து, தொழிலதிபராகி, சொந்தமாக ஆடம்பர கார் வாங்கியபோதும் பொம்மை கார் மீதுள்ள ஆர்வம் மட்டும் குறையவே இல்லை. 5,000 பொம்மை கார்களை என்ன செய்வது என்று யோசித்தவர், தன்னுடைய விலை மதிப்புமிக்க காரின் மேல் ஒட்டி விட்டார்.

சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள், கறுப்பு என்று பல வண்ணங்களில் 4,600 கார்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. கண்ணாடி, விளக்குகள், சக்கரங்களைத் தவிர எல்லா இடங்களிலும் கார்கள் இருக்கின்றன. “பொம்மை கார்களை ஒட்டியதால் இரண்டு பிரச்சினைகள் தீர்ந்தன. இத்தனை பொம்மை கார்களை வைத்து என்ன செய்யப் போகிறாய் என்று எல்லோரும் கேட்டுக்கொண்டிருந்தனர். பொம்மை கார்களைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்பொழுதும் இருந்தது.

இதில் மிக முக்கியமான விஷயம், நான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாகவும் தெரிகிறேன். பலரும் காருக்காகவே என்னைத் தேடி வருகின்றனர். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் பேட்டி வந்ததால் பிரபலமாகி விட்டேன். இப்போது காரைச் சுத்தம் செய்வது மிகவும் கடினமானது. எங்காவது காரை நிறுத்திவிட்டுச் சென்றால், பொம்மை கார்களை யாராவது பிய்த்துக்கொண்டு சென்றுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது” என்கிறார் மஹாடி ஜமான்.

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கார்-மீது-கார்கள்/article9657484.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர பேரனுக்கும் கார் என்றால் கொள்ளைப் பிரியம். மலேசியாவுக்கு ஒரு டிக்கட் போடத்தான் இருக்கு....! tw_blush:

Link to comment
Share on other sites

Bildergebnis für Malaysian Man Covers His Jaguar Entirely in Toy Cars  Read more at WOB: http://www.worldofbuzz.com/malaysian-man-covers-jaguar-entirely-toy-cars/

 

Bildergebnis für Malaysian Man Covers His Jaguar Entirely in Toy Cars  Read more at WOB: http://www.worldofbuzz.com/malaysian-man-covers-jaguar-entirely-toy-cars/

 

Bildergebnis für Malaysian Man Covers His Jaguar Entirely in Toy Cars  Read more at WOB: http://www.worldofbuzz.com/malaysian-man-covers-jaguar-entirely-toy-cars/

6 hours ago, நவீனன் said:

உலக மசாலா: கார் மீது கார்கள்!

 

ulaga_masala1_3156939f.jpg
 
 
 

மலேசியாவைச் சேர்ந்த 34 வயது மஹாடி பட்ருல் ஜமான் தொழிலதிபராக இருக்கிறார்.

13 வயதிலிருந்தே இவருக்கு பொம்மை கார்களைச் சேகரிக்கும் பழக்கம் இருந்தது. படித்து, தொழிலதிபராகி, சொந்தமாக ஆடம்பர கார் வாங்கியபோதும் பொம்மை கார் மீதுள்ள ஆர்வம் மட்டும் குறையவே இல்லை. 5,000 பொம்மை கார்களை என்ன செய்வது என்று யோசித்தவர், தன்னுடைய விலை மதிப்புமிக்க காரின் மேல் ஒட்டி விட்டார்.

சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள், கறுப்பு என்று பல வண்ணங்களில் 4,600 கார்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. கண்ணாடி, விளக்குகள், சக்கரங்களைத் தவிர எல்லா இடங்களிலும் கார்கள் இருக்கின்றன. “பொம்மை கார்களை ஒட்டியதால் இரண்டு பிரச்சினைகள் தீர்ந்தன. இத்தனை பொம்மை கார்களை வைத்து என்ன செய்யப் போகிறாய் என்று எல்லோரும் கேட்டுக்கொண்டிருந்தனர். பொம்மை கார்களைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்பொழுதும் இருந்தது.

இதில் மிக முக்கியமான விஷயம், நான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாகவும் தெரிகிறேன். பலரும் காருக்காகவே என்னைத் தேடி வருகின்றனர். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் பேட்டி வந்ததால் பிரபலமாகி விட்டேன். இப்போது காரைச் சுத்தம் செய்வது மிகவும் கடினமானது. எங்காவது காரை நிறுத்திவிட்டுச் சென்றால், பொம்மை கார்களை யாராவது பிய்த்துக்கொண்டு சென்றுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது” என்கிறார் மஹாடி ஜமான்.

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கார்-மீது-கார்கள்/article9657484.ece?homepage=true&relartwiz=true

 

Link to comment
Share on other sites

உலக மசாலா: நிச்சயம் டேனியல் சாதிப்பான்!

 

 
daniel_3157212f.jpg
 
 
 

பிலிப்பைன்ஸில் வசிக்கும் 9 வயது டேனியல் கேப்ரெராவின் தந்தை மூன்று ஆண்டு களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவனது அம்மா உணவகத்தில் வேலை பார்ப்பதோடு, மிட்டாய்களையும் விற்று வருகிறார். ஆனாலும் சொற்ப வருமானமே கிடைக்கிறது. டேனி யலுக்கு படிப்பு மீது தீராத ஆர்வம். வறுமையி லிருந்து விடுபடுவதற்கு படிப்பு ஒன்றே வழி என்று புரிந்து வைத் திருக்கிறான். அவன் வயது குழந்தைகள் விளையாடும் நேரத்திலும் படித்துக்கொண்டிருப்பான். வீட்டில் மின்சாரம் இல்லை என்பதால், அருகில் இருக்கும் மெக்டொனால்ட் கடையிலிருந்து வரும் விளக்கு வெளிச்சத்தில் இரவில் படிப்பான். தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் பள்ளிக்கு நடந்து செல்கிறான். மதிய உணவோ, மதிய உணவுக்கான பணமோ கொடுக்க அவர் அம்மாவிடம் வசதி இல்லை. அதனால் பட்டினியாகவே இருந்துவிடுவான். பள்ளியில் சக மாணவர்கள் இவனின் வறுமையை கிண்டல் செய்துகொண்டே இருப்பார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டான். ஒருநாள் மெக்டொனால்ட் வெளிச்சத்தில் எழுதிக் கொண்டிருக்கும்போது அந்த வழியே வந்த மருத்துவ மாணவி ஜாய்ஸ், புகைப்படங்கள் எடுத்தார். பேஸ்புக்கில் படத்தை வெளியிட்டு, இந்தச் சிறுவனின் வறுமையைப் போக்குவதற்கு உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்தப் படம் 7 ஆயிரம் தடவை பகிரப்பட்டது. போதுமான நிதியும் கிடைத்தது. டேனியல் அம்மாவை சந்தித்து, புத்தகங்கள், நோட்டுகள், பேனா, பென்சில், விளக்கு, உடைகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்ததோடு, கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரைக்குமான நிதியையும் வழங்கினார் ஜாய்ஸ். “என் மகன் புத்திசாலி. எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று ஒருநாளும் கேட்டதில்லை. மதிய சாப்பாடு கூட இல்லாமல்தான் பள்ளிக்குச் சென்று வருகிறான். எனக்குதான் அவனை இப்படி வைத்திருக்கிறோமே என்று வருத்தமாக இருக்கும். நான் வறுமையில் இருப்பதை விரும்பவில்லை. ஒருநாள் என் கனவை எட்டிப் பிடித்துவிடுவேன், கவலைப்படாதீர்கள் என்பான். இப்போது எங்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. ஒருநாள் எங்கள் வறுமை தீரும்” என்கிறார் அம்மா.

நிச்சயம் டேனியல் சாதிப்பான்!

கொரியாவைச் சேர்ந்த பிரபல நடிகை லீ டாய் இம், சமீப காலமாக அளவுக்கு அதிகமாக எடை குறைந்து காணப்படுகிறார். அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தவர், எப்படி இவ்வளவு ஒல்லியாக மாறினார் என்று எல்லோருக்கும் அதிர்ச்சி. “சக நடிகைகள் என்னை விட ஒல்லியாகவும் அழகாகவும் இருப்பதாகத் தோன்றியது. நானும் அவர்களைப் போல எடை குறைந்து, இன்னும் அழகாக மாற வேண்டும் என்று நினைத்தேன். கடந்த 6 மாதங்களாக ஒரு நாளைக்கு மூன்று ஸ்பூன் சாதம் மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். என்னுடைய உணவுக் கட்டுப்பாடு நிச்சயம் ஆரோக்கியமானதல்ல. யாரும் என்னைப் பார்த்து இந்த உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டாம். விரைவாக எடை குறைவதற்காகவே இந்தப் பழக்கத்தை மேற்கொண்டேன். என் படங்களைப் பார்த்த ரசிகர்கள், நான் நோயுற்றுவிட்டதாகக் கருதுகிறார்கள். அதனால் இப்போது ஒரு நாளைக்கு 6 ஸ்பூன் சாதம் சாப்பிட ஆரம்பித்திருக்கிறேன்” என்கிறார் லீ டாய் இம்.

எடை படுத்தும் பாடு….

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நிச்சயம்-டேனியல்-சாதிப்பான்/article9658863.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஐயோ, நெஞ்சை உலுக்கிவிட்டது...

 

 
ulakamasaala_3157866f.jpg
 
 
 

பாகிஸ்தானின் கஜ்ரன்வாலா மாவட்டத்தில் வசித்து வரும் 50 வயது மெஹ்மூத் பட், கடந்த 25 ஆண்டுகளாக இலைகளை மட்டுமே உணவாகச் சாப்பிட்டு வருகிறார். “அளவுக்கு அதிகமான வறுமை எங்கள் குடும்பத்தை வாட்டியது. சாப்பாடு கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் பசியை அடக்க முடியாதே? சாலையில் பிச்சை எடுப்பதைவிட இலை தழைகளைச் சாப்பிட்டு விடலாம் என்று முடிவெடுத்தேன். அதுவே பிறகு பழக்கமாகிவிட்டது. பிற்காலத்தில் வேலையும் கிடைத்து, ஓரளவு வருமானமும் வந்தது. ஆனாலும் இலைகளைச் சாப்பிடுவதை என்னால் விட முடியவில்லை. ஒரு நாளைக்கு கழுதை வண்டி மூலம் 600 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். இலை தழைகளைச் சாப்பிடுவதால் எனக்கு இதுவரை எந்த நோயும் வந்ததில்லை. ஆலமரக் குச்சிகளும் சிசே மரத்தின் இலைகளும் மிகவும் பிடிக்கும்” என்கிறார் மெஹ்மூத் பட். இலைகளைச் சாப்பிடுவதாலேயே இந்தப் பகுதியில் பிரபலமாக இருக்கிறார் இவர். “போகும் வழியில் பசுமையான இலைகளைப் பார்த்துவிட்டால், உடனே வண்டியை நிறுத்திவிட்டு, நேரம் காலம் பார்க்காமல் இலைகளைச் சாப்பிட ஆரம்பித்துவிடுவார். இவர் மருத்துவரிடம் சென்று நாங்கள் பார்த்ததில்லை” என்கிறார் பக்கத்து வீட்டுக்காரர் குலாம் முகமது.

ஐயோ, நெஞ்சை உலுக்கிவிட்டது…

இங்கிலாந்தைச் சேர்ந்த லாரன்ஸ் கோபால்ட் இருபதாயிரம் அலங்காரப் பொருட்களை வீட்டில் சேகரித்து வைத்திருக்கிறார். இந்த அலங்காரப் பொருட்கள் அனைத்தும் பறவைகள் தொடர்பானவை. பொம்மை, தட்டு, பேப்பர் வெயிட், விரல் ஆபரணம், கண்ணாடி, மேஜை விரிப்பு, தலையணை உறை, கரண்டி, அலங்கார விளக்கு, பறவைக் கூண்டு, கோப்பை, கிண்ணம், ஓவியங்கள் என்று எல்லாவற்றிலும் விதவிதமான பறவைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் விரல்களில் மாட்டக்கூடிய ஆபரணங்கள் 14 ஆயிரமும் பேப்பர் வெயிட்கள் 2 ஆயிரமும் இருக்கின்றன. வீடு, சுவர்கள், கூரை, மாடிப்படிகள், 3 கார் நிறுத்தும் இடங்கள் போன்றவற்றில் அழகாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் மொத்த மதிப்பு 50 லட்சம் ரூபாய். “என் அப்பா கிளிகள், மஞ்சள் குருவிகள் போன்ற பறவைகளை வளர்த்துவந்தார். அவரிடமிருந்துதான் எனக்குப் பறவைகள் மீது ஆர்வம் வந்தது. பறவைகள் பற்றிய விஷயங்களைத் தேடித் தேடிப் படித்தேன். 30 ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டாகச் சேகரிக்க ஆரம்பித்தேன். பிறகு ஆர்வம் அதிகமாகவே தீவிரமாக இறங்கிவிட்டேன். வீட்டில் இவற்றுக்கே இடம் போதவில்லை என்பதால் நான் அருகில் இருக்கும் பெற்றோர் வீட்டில்தான் தங்கியிருக்கிறேன். சுத்தம் செய்து பாதுகாப்பதுதான் மிக முக்கியமானது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்கே வந்துவிடுவேன். இன்றும் கூட என்னால் பொருட்கள் வாங்குவதை விட முடியவில்லை. வீட்டிலுள்ளவர்கள் என் விருப்பத்தை மதிக்கிறார்கள் என்பதால் எனக்குப் பிரச்சினை எதுவும் வரவில்லை. 6 அடி உயரத்திலிருக்கும் கிளி வடிவ விளக்குதான் எனக்கு மிகவும் பிடித்தது. ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினேன். எதற்காக இவ்வளவையும் சேமித்து வைத்திருக்கிறேன் என்ற கேள்விக்கு, பிடித்திருக்கிறது என்பதைத் தவிர என்னிடம் வேறு பதில் இல்லை” என்கிறார் லாரன்ஸ்.

வீட்டுக்குள் பறவைகள் அருங்காட்சியகம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஐயோ-நெஞ்சை-உலுக்கிவிட்டது/article9661568.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: வாழ்தல் இனிது!

 
masala_3158358f.jpg
 
 
 

அரிசோனாவைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரையன் கோல்ஃபேஜ், 2004-ம் ஆண்டு இராக்குடன் நடைபெற்ற போரின்போது இரண்டு கால்களையும் வலது கையையும் இழந்தார். அருகில் இருந்த வீரர் ஒருவர் பெருகிய ரத்தத்தைத் துண்டால் கட்டுப்படுத்தி, ராணுவ முகாமுக்குத் தூக்கிச் சென்றார். மிக மோசமான பாதிப்பு. 8 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக ஜெர்மனிக்குக் கொண்டு செல்லப்பட்டார். அடுத்த ஓராண்டில் 16 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. உடலில் வைத்த உலோகத்துண்டுகள் நீக்கப்பட்டன. செயற்கைக் கால்களும் கைகளும் பொருத்தப்பட்டன. உடலைச் சமன் செய்து எப்படி நடக்க வேண்டும் என்றும் செயற்கைக் கையால் எப்படி எழுத வேண்டும் என்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நாடு திரும்பிய பிறகு தனக்கேற்ற வேலையைத் தேடிக்கொள்வதற்காகப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கட்டிடவியல் படிப்பை முடித்தார். கட்டிடங்களுக்கு வரைபடம் செய்து கொடுக்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் டெக்சாஸ் நகரில் இருந்தபோது உணவகத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணின் நினைவு இவருக்கு வந்துகொண்டே இருந்தது. ஃபேஸ்புக் மூலம் அவரைத் தொடர்புகொண்டார். ஆனால் அவர் தனக்கு ஒரு காதலர் இருப்பதாகவும் நேரில் சந்திப்பதில் ஆட்சேபனை இல்லை என்றும் கூறினார். இருவரும் சந்தித்த சில நிமிடங்களிலேயே அந்தப் பெண், தனக்குக் காதலர் யாரும் இல்லை என்றும் பிரையனைத் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறிவிட்டார். 2011-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இருவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ராணுவ மருத்துவமனைகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன்னம்பிக்கை வகுப்புகள் எடுக்கிறார்கள்.

வாழ்தல் இனிது!

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் வசித்து வருகிறார் ஜாவோ. இவரது வீட்டு மாடியில் குடியிருப்பவர்களால் எப்பொழுதும் அளவுக்கு அதிகமான சத்தம் வந்து காதைக் கிழித்துக்கொண்டேயிருந்தது. களைப்புடன் வீடு திரும்பும் ஜாவோவால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. பலமுறை சத்தத்தைக் குறைக்கும்படிச் சொல்லிப் பார்த்தார். ஆனால் அந்த வீட்டிலுள்ளவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. பொறுமை இழந்தவர், பில்டிங் ஷேக்கரை விலை கொடுத்து வாங்கினார். வெள்ளிக்கிழமை மாலை அதை இயக்கி, வீட்டைப் பூட்டிச் சென்றுவிட்டார். டிரிலிங் இயந்திரம் போல சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. மாடி வீட்டுக்காரர்கள் கீழே வந்து பார்த்தபோது, வீட்டில் ஆள் இல்லை. சத்தம் பொறுக்க முடியாமல் காவல்துறையில் புகார் கொடுத்தனர். ஆள் வரும்வரை வீட்டைத் திறக்க முடியாது என்றார்கள் காவலர்கள். இரண்டு நாட்கள் கழித்து ஞாயிற்றுக்கிழமை வீடு வந்து சேர்ந்தார் ஜாவோ. இயந்திரத்தை நிறுத்திவிட்டு, காரணத்தைக் கூறினார். மாடி வீட்டுக்காரர்கள் மன்னிப்புக் கேட்டனர். ஜாவோவுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு சென்றார்கள் காவலர்கள்.

சத்தத்துக்கு இவ்வளவு பெரிய தண்டனையா!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வாழ்தல்-இனிது/article9664285.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: சிலந்திப் பண்ணை!

 
silanthi_3158757f.jpg
 
 
 

இந்தோனேஷியாவைச் சேர்ந்த 28 வயது மிங் கு, கடந்த 7 ஆண்டுகளாக ராட்சத சிலந்திகளை வளர்த்துவருகிறார். இவரது வீட்டில் தற்போது 1,500 சிலந்திகள் இருக்கின்றன. ‘‘ஒருநாள் தோட்டத்தில் மிகப் பெரிய அழகான சிலந்தியைக் கண்டேன். விதவிதமாகப் படங்கள் எடுத்தேன். ஏனோ அந்த 8 கால் பூச்சி என்னை வசீகரித்தது. அதனை வளர்க்க விரும்பினேன். என் பெற்றோரிடம் சொன்னபோது அதிர்ந்து போனார்கள். என் ஆசையை ஓரமாக வைத்துவிட்டு, சிலந்திகளைப் பற்றிய புத்தகங்களைத் தேடிப் படித்தேன். என் ஆர்வத்தைக் கண்ட பெற்றோர், வீட்டில் சிலந்திகளை வளர்க்க சம்மதம் தெரிவித்தனர். விதவிதமான சிலந்திகளைத் தேடிப் பிடித்து வளர்க்க ஆரம்பித்தேன். சிலந்திகளுக்காக இதுவரை ரூ.35 லட்சம் செலவு செய்திருக்கிறேன். இவற்றுக்காகத் தனியாக ஓர் அறையை ஏற்பாடு செய்திருக்கிறேன். சிறியதும் பெரியதுமான ஜாடிகளில் வளர்கின்றன. இவற்றில் சில சிலந்திகள் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவை. மற்றவை வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டவை. இன்னும் இரண்டு வகை சிலந்திகள் கிடைத்துவிட்டால் என்னிடம் அத்தனை சிலந்தி வகைகளும் இருக்கும். ஒருநாளைக்குப் பத்து மணி நேரம் இவற்றுக்காகச் செலவிடுகிறேன். பெண் சிலந்திகள் கொன்று தின்று விடுவதால் ஆண் சிலந்திகளைத்தான் அடிக்கடி வாங்க வேண்டியிருக்கும். இதுவரை நான் சிலந்திகளை விற்பனை செய்ய நினைத்ததில்லை. ஆனால் அரிய வகை சிலந்திகள் இனப் பெருக்கத்தின் மூலம் அதிகரித்துவிட்டன. அதனால் தற்போது சிலந்தி வளர்ப்பைத் தொழிலாக மாற்றிக்கொண்டேன். இந்தோனேஷியா மட்டுமின்றி, ஆன்லைன் மூலம் இங்கிலாந்து, ஸ்வீடன், ஜெர்மனி, போலந்து போன்ற நாடுகளிலும் விற்பனை செய்துவருகிறேன். 7 ஆண்டுகளில் 14 தடவை சிலந்திகள் கடித்திருக்கின்றன. அதிக விஷமுள்ள சிலந்தி கடித்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். பாதுகாப்பாகக் கையாண்டால் சிலந்தி வளர்ப்பு மிகவும் சுவாரசியமானது” என்கிறார் மிங் கு.

சிலந்திப் பண்ணை!

வட கரோலினாவைச் சேர்ந்த 23 வயது மரின்னா ரோலின்ஸ், ராணுவத்தில் பணிபுரிந்தவர். மருத்துவக் காரணங்களால் வெளிவந்துவிட்டார். இவரும் இவருடைய காதலர் ஜார்ரென் ஹெங்கும் சேர்ந்து, பயிற்சியளிக்கப்பட்ட நாயை ஒரு மரத்தில் கட்டினர். அருகில் நின்று 5 முறை துப்பாக்கியால் சுட்டு, ஆனந்தமாகச் சிரித்தனர். பிறகு குழி தோண்டி நாயைப் புதைத்துவிட்டனர். இவை அனைத்தையும் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டிருக்கின்றனர். வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனவர்கள், விலங்குகள் அமைப்பில் புகார் கொடுத்துவிட்டனர். தற்போது இருவரும் விசாரணையில் இருக் கின்றனர். பிணையில் வெளிவர முடியாத அளவுக்குத் தண்டனை அளிக்க வேண்டும் என்கிறார்கள் விலங்குகள் ஆர்வலர்கள்.

என்ன ஒரு கொடூரம்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சிலந்திப்-பண்ணை/article9666182.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்த தனி மனிதர்!

 

 
 
thaneer_3159090f.jpg
 
 
 

சீனாவின் காவோவாங்பா என்ற மலைக் கிராமத்தின் தலைவர் ஹுவாங் டஃபா. 36 ஆண்டுகளில் 10 கி.மீ. தூரத்துக்கு மூன்று மலைகளில் கால்வாய் வெட்டி, தண்ணீர் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்! 56 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கிராமத்தில் கடுமையான வறட்சி. மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்தனர். அன்றாடத் தேவைகளுக்குக் கூட பல மைல் தூரம் சென்று தண்ணீர் எடுத்துவர வேண்டியிருந்தது. மக்களின் துயர் துடைக்க மூன்றாவது மலையில் இருந்த நீரைக் கொண்டு வந்து சேர்க்கத் திட்டமிட்டார் 23 வயது டஃபா. 1959-ம் ஆண்டு வேலையை ஆரம்பித்தார். ஆனால் அவர் நினைத்தது போல வேலை எளிதாக இல்லை. ஊர் மக்கள் இது செய்ய முடியாத வேலை, நேரம் விரயம் என்றார்கள். ஆனால் இதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. நவீனக் கருவிகள் இன்றி, மலையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கினார். ஒருகட்டத்தில் தான் சரியாகச் செய்கிறோமா என்று சந்தேகம் வந்தவுடன், வேலையை நிறுத்திவிட்டு நகருக்குச் சென்று நீர் தொழில்நுட்பம் படித்தார். பொறியியல் வல்லுநர்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பணியைத் தொடர்ந்தார். கிராம மக்களும் அவருடன் சேர்ந்து வேலை செய்தனர். இவரது மகளும் பேரனும் இறந்தபோதுகூட துக்கத்தைத் தள்ளி வைத்துவிட்டு, வேலையைத் தொடர்ந்தார். 1995-ம் ஆண்டு 7,200 மீட்டர் நீண்ட கால்வாயும் 2,200 மீட்டருக்கு துணைக் கால்வாயும் வெட்டி முடிக்கப்பட்டன. மூன்று மலைகளைக் கடந்து தண்ணீர் வந்து சேர்ந்தது. வழியில் இருந்த மூன்று கிராமங்கள் பயனடைந்தன. டஃபாவைக் கவுரவிக்கும் விதத்தில் அவர் பெயரையே கால்வாய்க்குச் சூட்டினர். “மக்களுக்குத் தண்ணீர் கிடைத்த பிறகுதான் என் மனம் அமைதியானது. நல்ல விளைச்சல். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நாங்கள் இந்த வேலையைச் செய்திருக்காவிட்டால் இன்றும் வறுமையில்தான் வாடிக்கொண்டிருந்திருப்போம்” என்கிறார் 82 வயது டஃபா. 1,200 மக்களால் ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் கிலோ அரிசி வரை விளைவிக்கப்படுவதற்குக் காரணம் இவர்தான்.

தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்த தனி மனிதர்!

ரஷ்யாவைச் சேர்ந்த 20 வயது ஆண்ட்ரே நகோமி என்ற இளைஞர், பெண்களுக்கான உள்ளாடை விளம்பரப் போட்டியில் கலந்துகொண்டு, வெற்றி பெற்றிருக்கிறார்! பெண்களுக்கான உள்ளாடை நிறுவனம் ஒன்று ஆன்லைனில் புகைப்படப் போட்டியை அறிவித்தது. தன் தோழி மூலமாக விஷயத்தைக் கேள்விப்பட்ட ஆண்ட்ரே, தனக்குப் பெண் சாயல் இருப்பதால் போட்டியில் கலந்துகொள்ள முடிவெடுத்தார். ஒப்பனை செய்து, விதவிதமான உள்ளாடைகளை அணிந்து புகைப்படங்கள் எடுத்து, போட்டிக்கு அனுப்பி வைத்தார். “விளையாட்டுக்குத்தான் இந்தக் காரியத்தைச் செய்தேன். ஆனால் என்னை வெற்றியாளராக அறிவிப்பார்கள் என்று நினைக்கவே இல்லை. நேரடியாக என்னைப் புகைப்படங்கள் எடுப்பதற்கு வந்தபோது தான் நான் ஆண் என்று தெரிந்தது. என்னைப் போட்டியிலிருந்து நீக்கிவிட்டு, இரண்டாம் இடத்திலிருந்த ஒரு பெண்ணை வெற்றியாளராக அறிவித்தனர்” என்கிறார் ஆண்ட்ரே.

என்ன ஒரு குறும்பு…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தண்ணீர்-பிரச்சினையைத்-தீர்த்த-தனி-மனிதர்/article9669457.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஓவியங்களால் கிடைத்த பெருமை!

 

 
 
ulagam_3159435f.jpg
 
 
 

துனிஷியாவின் கடற்பகுதியில் இருக்கும் ஜெர்பா தீவில் உள்ள மிகச் சிறிய கிராமம் எரியாட். ஒருகாலத்தில் கனவுத் தீவாகக் கருதப்பட்ட இந்தத் தீவு, தற்போது துனிஷியாவின் சுற்றுலாப் பட்டியலில் இல்லை. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக யாத்ரீகர்கள் வந்து செல்லும் இடமாக இருந்து வந்தாலும் மிகக் குறைவான வெளிநாட்டினரே சுற்றிப் பார்க்க வந்துகொண்டிருந்தனர். அதனால் பெரிய அளவில் கடைகளோ, தங்கும் விடுதிகளோ இல்லை. பெரிதாக உலகத்தின் பார்வைக்கு வராத இந்தக் கிராமம் சமீபகாலமாகச் சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாக மாறிவிட்டது. இதற்குக் காரணம் அந்தக் கிராமத்து வீட்டுச் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்தான்! 2014-ம் ஆண்டு மெஹ்டி பென் சீய்க் என்ற பாரசீக ஓவியர், 30 நாடுகளிலிருந்து நூறு ஓவியர்களை ஜெர்பாவுக்கு வரவழைத்தார். கிராமங்களில் உள்ள வீட்டுச் சுவர்களின் மீது நிரந்தரமான ஓவியங்களைத் தீட்ட வைத்தார். “அரசாங்கத்திடம் அனுமதி கிடைத்துவிட்டது. ஆனால் வீட்டின் உரிமையாளர்களிடம் அனுமதி வாங்குவதற்குக் கஷ்டப்பட்டேன். இந்தக் கிராமத்தில் மட்டும் 300 சுவர் ஓவியங்களைத் தீட்டியிருக்கிறோம். சாதாரணமான ஒரு கிராமம், இன்று மிகப் பெரிய திறந்தவெளி ஓவிய அருங்காட்சியகமாக மாறிவிட்டது. இந்த ஓவியங்களைப் பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். உணவு விடுதிகளும் உணவகங்களும் பெருகிவிட்டன. வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கிறது” என்கிறார் மெஹ்டி பென் சீய்க்.

ஓவியங்களால் கிடைத்த பெருமை!

டோக்கியோவில் சீன உணவகத்தை நடத்தி வருகிறார் 82 வயது சுமிகோ இவாமுரோ. பகலில் உணவக உரிமையாளராக இருப்பவர், மாலையானதும் டிஜே சுமிராக் அவதாரம் எடுக்கிறார். டோக்கியோவில் உள்ள இரவு விடுதிகளில் அற்புதமான இசையை வழங்கிவருகிறார். தன்னிடம் இவ்வளவு அருமையான இசைத் திறமை இருப்பதை 12 ஆண்டுகளுக்கு முன்பு, மகனின் பிறந்தநாள் விழாவில் தான் கண்டுகொண்டார். உடனே முறையாகப் பயிற்சியில் சேர்ந்து நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, டிஜேவாக மாறினார். விரைவில் டோக்கியோவின் புகழ்பெற்ற டிஜேவாக உருவாகிவிட்டார். “என்னுடைய ரசிகர்கள் எல்லாம் என்னைவிட 60 ஆண்டுகள் இளையவர்கள். ரசிகர்களுக்கும் எனக்கும் இடையே மிகப் பெரிய தலைமுறை இடைவெளி இருக்கிறது. அப்படியிருந்தும் என்னை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உணவகத்தில் உணவைக் கொடுக்கும்போதும் இசையை வழங்கும்போதும் உடனடியாக வாடிக்கையாளர்களின் உணர்வுகள் முகத்தில் தெரிந்துவிடும். என் தந்தை ஜாஸ் ட்ரம்மர். அவரிடமிருந்துதான் எனக்கு இசை ஞானம் வந்திருக்கிறது. 19 வயதில் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இசையை விட்டுவிட்டு, உணவகத்தை ஆரம்பித்தேன். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலாவது இசையை வெளிப்படுத்த முடிந்ததில் திருப்தியாக உணர்கிறேன்” என்கிறார் சுமிராக்.

82 வயது டிஜே!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஓவியங்களால்-கிடைத்த-பெருமை/article9673024.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: ரிஸ்க் எடுக்கும் நிஜ ஸ்பைடர்மேன்கள்!

 

 
 
spider_3160465f.jpg
 
 
 

ஒவ்வோர் ஆண்டும் சீனாவின் ஆபத்தான மலைப் பகுதிகளைப் பல லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மலைகளின் மகத்துவம் பற்றி அறியாமல் கண்ட இடங்களிலும் குப்பைகளை வீசி விடுகின்றனர். மலைகளைச் சுத்தம் செய்வதற்காகவே ஸ்பைடர்மேன் க்ளீனர்ஸ் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ஆண்களும் பெண்களும் உயிரைப் பணயம் வைத்து தினந்தோறும் வேலை செய்துவருகிறார்கள். மலையைச் சுத்தம் செய்பவர்கள் ஸ்பைடர்மேன் ஆடைகளை அணிந்துகொண்டு, இடுப்பில் கயிற்றைக் கட்டி, செங்குத்தான மலைகளில் இறங்குகிறார்கள். ஆங்காங்கே வீசப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் போன்ற குப்பைகளைச் சேகரித்து வருகிறார்கள். சுத்தம் செய்ய ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணி, இப்போது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. 2014-ம் ஆண்டு ஸ்பைடர்மேன் பணிக்காக ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டது. அதில், ‘ஆபத்து நிறைந்த மலைகளைச் சுத்தம் செய்யும் பணி. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம். சொந்த விருப்பத்தின் பேரில் இந்த வேலையைச் செய்ய முன்வரவேண்டும்’ என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தனர். ஆரம்பத்தில் சில மலைகளை மட்டும் சுத்தம் செய்து, இந்த வேலையை நிறுத்திவிட நினைத்தனர். ஆனால் மக்கள் குப்பைகளைப் போடப் போட ஸ்பைடர்மேன்களுக்குத் தொடர்ந்து வேலைகளும் இருந்துகொண்டே இருந்தன. இன்று இவர்களால் ஆண்டுக்கணக்கில் சேர்ந்த குப்பைகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஸ்பைடர்மேன் பணிகளை நேரில் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள், தங்கள் தவறை உணர்ந்து கொள்கிறார்கள். குப்பைகளும் குறைந்துவருகின்றன.

ரிஸ்க் எடுக்கும் நிஜ ஸ்பைடர்மேன்கள்!

ஜப்பானைச் சேர்ந்த டெசுடோவுக்கு ரயில் என்றால் மிகவும் விருப்பம். ரயிலைப் பார்ப்பதும் ரயிலில் பயணம் செய்வதும் விதவிதமாகப் படங்கள் எடுப்பதும் சுவாரசியமான விஷயம் என்கிறார். “எனக்கு ஏன் இப்படி ஓர் ஆர்வம் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் எத்தனையோ தடவை ரயில்களைப் பார்த்தாலும் இன்றுதான் புதிதாக ஒரு ரயிலைப் பார்ப்பது போன்று தோன்றுகிறது. சில நேரங்களில் வேலைகளை மறந்துவிட்டு ரயிலில் அப்படியே உட்கார்ந்திருப்பதும் உண்டு. என்னுடைய ஆர்வம் அன்றாட வேலைகளைப் பாதிப்பதால் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். என் வீட்டையே ரயில் பெட்டியாக மாற்றிவிட்டேன். ஹால், படுக்கையறை, சமையலறை, கழிவறை எல்லாமே ரயிலில் எப்படி இருக்கின்றனவோ அப்படியே வீட்டிலும் இருக்கின்றன. மனிதர்களின் சலசலப்பு, ரயிலின் ஓட்டம் போன்றவை இல்லாதது மட்டுமே குறை. 485 புகைப்படங்களை வைத்து இந்த வீட்டை உருவாக்கியிருக்கிறேன். வீடு ரயில் பெட்டியாக மாறும் தருணங்களைப் புகைப்படங்கள், வீடியோக்களாக ஆவணப்படுத்தியிருக்கிறேன். சமீபத்தில் இந்தப் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டேன். பார்த்தவர்கள் பிரமித்துவிட்டனர்.

இப்படியும் ஒரு ரயில் பிரியரா!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ரிஸ்க்-எடுக்கும்-நிஜ-ஸ்பைடர்மேன்கள்/article9677963.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

 

உலக மசாலா: அதீத நினைவுத் திறனால் அல்லல்படும் ரெபேக்கா!

 
atetha_3160786f.jpg
 
 
 

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வசிக்கும் 27 வயது ரெபேக்கா ஷார்ரோக், Highly Superior Authobiographical Memory என்ற அரிய குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவருக்கு தனது வாழ்க்கையில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் நினைவில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் சாப்பிட்ட உணவுகளிலிருந்து பேசிய பேச்சுகள் வரை நினைவில் உள்ளன. “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செய்தித்தாளில் இந்தக் குறைபாடு பற்றி படித்தேன். குழந்தையாக இருந்தபோது நடந்தவை கூட நினைவில் இருக்கும் என்பதை நான் நம்பவில்லை. ஆனால் நானே அந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டபோது, பிறந்த பன்னிரண்டாவது நாளில் நடந்த நிகழ்ச்சிகூட நினைவுக்கு வந்ததைக் கண்டு பிரமித்தேன். மருத்துவமனையிலிருந்து கிளம்பும்போது, என்னை காரில் வைத்து புகைப்படம் எடுத்தார் அப்பா. அந்த கார், காரில் தொங்கிய பொம்மை, அம்மாவின் ஆடை, அப்பாவின் தலை அலங்காரம் என்று அத்தனையும் என் நினைவுக்கு வந்தது! உலகில் இந்தக் குறைபாட்டால் இதுவரை 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு முக்கியமான நிகழ்வுகள்தான் நினைவில் இருக்கின்றன. ஆனால் எனக்கு சின்னச் சின்ன விஷயங்கள் கூட நினைவுக்கு வந்துகொண்டிருக்கின்றன. என் முதல் பிறந்தநாளில் எனக்குக் கிடைத்த பரிசை என்னைத் தள்ளிவிட்டு அக்கா எடுத்துக்கொண்டாள். இதைச் சொன்னபோது அம்மாவும் அக்காவும் பயந்து போனார்கள். தொலைக்காட்சிக்காக என்னைப் பேட்டி எடுக்க வந்த அலிசன் லாங்டன், எனக்குப் பிடித்த ஹாரிபாட்டரிலிருந்து ஒரு வரி சொன்னார். அது எந்தப் புத்தகம், எந்த அத்தியாயம், எத்தனையாவது பாரா என்பதைச் சொல்லிவிட்டேன். இவ்வளவு நினைவுத்திறன் இருப்பது வரம் அல்ல, சாபம். மனிதர்கள் என்றால் எல்லா நினைவுகளும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. துக்கத்தை மறந்தால்தான் இயல்பாக வாழ முடியும். என்னால் அப்படி எந்தத் துன்பமான நிகழ்வையும் மறக்க முடியவில்லை. யாரைப் பார்த்தாலும் அவருடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் நினைவில் வருகின்றன. அதேநேரம் படிப்பில் புலி என்று நினைக்காதீர்கள். இதனால் என்னால் படிக்கவே முடியவில்லை. என்னுடைய மூளையின் உதவியால் அல்ஸைமர் என்ற மறதி நோய்க்கு தீர்வு கண்டுபிடிக்க இயலுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள்” என்கிறார் ரெபேக்கா.

அதீத நினைவுத் திறனால் அல்லல்படும் ரெபேக்கா!

மக்கள் அதிகம் புழங்கக்கூடிய இடத்தில் வசிக்கும் கடல்வாழ் உயிரினங்கள், அளவுக்கு அதிகமான இரைச்சலால் கேட்கும் திறனை இழக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதிலும் இங்கிலாந்தில் கப்பல்கள் செல்லும் பரபரப்பான பகுதிகளில் வசிக்கும் உயிரினங்கள் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்படுகின்றன. சூழலியல் விஞ்ஞானி எஸ்தர் ஜோன்ஸ் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் சீல்களை வைத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 28 சீல்களில் 20 சீல்கள் தற்காலிகமாக கேட்கும் திறனை இழந்திருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் ஆழ்கடலில் ஒலி மாசு அதிகரித்து வருவது ஆபத்தானது என்கிறார்கள்.

மனிதனால் கேட்கும் திறனை இழக்கும் கடல்வாழ் உயிரினங்கள்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அதீத-நினைவுத்-திறனால்-அல்லல்படும்-ரெபேக்கா/article9679769.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: மருத்துவ மைல்கல்!

 

 
masala_3161199f.jpg
 
 
 

குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள். இப்படிப் பிறக்கும் குழந்தைகளின் உள்உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடைவதில் பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அதனால் செயற்கையாகக் கருப்பை போன்ற ஒரு கருவியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி, அதில் குறைப் பிரசவத்தில் பிறந்த ஆட்டுக் குட்டிகளை வைத்து, பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர். கருப்பைக்குள் அம்னியோடிக் திரவத்தை நிரப்பி, தாயின் கருப்பையில் இருக்கும் வெப்பநிலையை உருவாக்கியிருந்தனர். குழாய் மூலம் உணவுகள் குட்டிகளுக்குச் செலுத்தப்பட்டன. குட்டிகளின் இதயத் துடிப்பும் சுவாசமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

மீதிக் காலத்தில் குட்டிகள் செயற்கைக் கருப்பையில் முழுமையாக வளர்ச்சியடைந்து, ஆரோக்கியமான குட்டிகளாக மாறிவிட்டன! பிலடெல்பியாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும் மருத்துவருமான ஆலன் ஃப்ளேக், “அறிவியலில் இது முக்கியமான முன்னேற்றம். குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடையாததால் நுரையீரல், இதயம் போன்றவை பாதிக்கப்படுகின்றன. இதனால் மூச்சுத் திணறல், நரம்புக் கோளாறுகள், வலிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்கும் நோக்கத்தில்தான் நாங்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறோம். மனிதக் குழந்தைக்கும் ஆட்டுக் குட்டிக்கும் நுரையீரல் வளர்ச்சி ஒத்துப் போனதால் ஆட்டுக் குட்டிகளைப் பரிசோதனைக்குத் தேர்ந்தெடுத்தோம்.

மூன்று ஆண்டு கால உழைப்பில் எங்கள் முயற்சி வெற்றியடைந்துவிட்டது. இதை மனிதக் குழந்தைகளுக்குப் பயன்படுத்துமாறு மாற்றுவதற்கு இன்னும் 5 ஆண்டுகள் தேவைப்படும். ஏனென்றால் ஆடு 5 மாதங்களிலேயே முழு வளர்ச்சியடைந்துவிடும். மனிதனுக்கு 8 மாதங்கள் தேவைப்படும். உலகம் முழுவதும் ஆண்டுக்கு ஒன்றரை கோடி குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பிறக்கின்றன. எதிர்காலத்தில் குறை மாதக் குழந்தைகளின் உறுப்புகளை முழு வளர்ச்சியடைய வைத்து, ஆரோக்கியமான குழந்தைகளாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இந்தப் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது” என்கிறார்.

மருத்துவ அறிவியலில் மேலும் ஒரு மைல்கல்!

 

கொலம்பியாவைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட சண்டையால் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை விழுங்கிவிட்டார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவர் இரைப்பையிலும் சிறுகுடலிலும் இருந்த 57 நூறு டாலர் நோட்டுகளை வெளியே எடுத்திருக்கின்றனர். மீதிப் பணம் பெருங்குடல் வழியே வெளியே சென்றுவிட்டது. “நானும் கணவரும் சுற்றுலா செல்ல வேண்டும் என்பதற்காக ஆண்டுக்கணக்கில் பணத்தைச் சேமித்து வைத்திருந்தேன். வீட்டில் இருந்த சில பொருட்களை விற்று அந்தப் பணத்தையும் பத்திரப்படுத்தியிருந்தேன். திடீரென்று கணவருக்கும் எனக்கும் சண்டை வந்துவிட்டது. அந்தக் கோபத்தில் சேமித்து வைத்திருந்த 7 ஆயிரம் டாலர்களையும் (சுமார் நான்கரை லட்சம் ரூபாய்) எடுத்து விழுங்கிவிட்டேன். வயிற்று வலி வந்தவுடன் மருத்துவமனைக்குச் சென்று விஷயத்தைச் சொன்னேன். பெரும்பாலான பணத்தை எடுத்துவிட்டனர்” என்கிறார் அந்தப் பெண்.

பணம் விழுங்கி மகாதேவி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மருத்துவ-மைல்கல்/article9681652.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பூனைகளுக்காகக் குரல் கொடுக்கும் மனிதர்!

 

 
poonai_3161573h.jpg
 

ஜப்பானின் கியுஷு நகரில் வசிக்கும் 55 வயது மசாஹிகோ சுகா சாலையில் சென்றால் அவரை நிறுத்தி புகைப்படங்கள் எடுக்காத வர்களே இல்லை. எப்பொழுதும் தள்ளுவண்டியில் 9 பூனைகளை வைத்துக்கொண்டு நடந்துகொண் டிருப்பார். ஜப்பானியர்கள் பூனை களை விரும்பி வளர்ப்பார்கள். ஆனால் அவற்றை வெளியில் அழைத்துச் செல்வதில்லை. அதனாலேயே மசாஹிகோவை எல்லோரும் வியப்பாகப் பார்க் கிறார்கள். பூனை மனிதர் என்றே அழைக்கிறார்கள். “1999-ம் ஆண்டு ஒரு பூனையை எடுத்து வளர்க்க ஆரம்பித்தேன். நாய்க்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதர்கள் பூனைக்குக் கொடுப்பதில்லை என்பதைக் கவனித்தேன். நாய்களைப் போலவே மனிதர்களின் அன்புக்கும் அரவணைப்புக்கும் பூனைகளும் ஏங்குகின்றன. உலகம் முழுவதும் நாய்களைத் தினமும் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள். யாருமே பூனைகளை அப்படி விரும்பி அழைத்துச் செல்வதில்லை. நான் பூனைகளை வெளியில் அழைத்துச் செல்ல முடிவெடுத்து ஒரு தள்ளுவண்டி வாங்கினேன். அதில் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே வருகின்றன பூனைகள். குழந்தைகள் அவற்றுடன் கொஞ்சி விளையாடுகின்றனர். இதனால் பூனைகளும் மகிழ்ச்சி யடைகின்றன. குழந்தைகளும் மகிழ்ச்சியடைகின்றனர். நான் சந்திக்கும் மனிதர்களிடமெல்லாம் நாய்களைப் போல பூனைகளுக்கும் மதிப்பு கொடுங்கள், வெளியில் அழைத்துச் செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்” என்கிறார் மசாஹிகோ.

பூனைகளுக்காகக் குரல் கொடுக்கும் மனிதர்!

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தைச் சேர்ந்த வாங்குக்கும் ஸிவோலிக்கும் கடந்த மாதம் புகழ்பெற்ற அரங்கத்தில் ஆடம்பரமாகத் திருமணம் ஏற்பாடாகியிருந்தது. பெண் வீட்டார் மாப்பிள்ளையின் குடும்பத்தையும் உறவினர்களையும் அன்புடன் உபசரித்தனர். ஆனால் அவர்கள் யாரும் இயல்பாகப் பேசவில்லை. மகிழ்ச்சியாகச் சடங்குகளில் கலந்துகொள்ளவில்லை. ஒருவிதப் பதற்றத்துடனேயே காணப்பட்டனர். பல பேரிடம் சாதாரணமாகக் கேட்ட கேள்விகளுக்குக் கூடப் பதில் கிடைக்கவில்லை. சந்தேகப்பட்ட ஸிவோலி காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாகச் சொன்னவுடன், பலரும் தாங்கள் வாங்கின் உறவினர்களோ, நண்பர்களோ இல்லை என்பதையும் வாடகைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என்பதையும் ஒப்புக்கொண்டனர். கல்லூரி மாணவர்களும் டாக்ஸி டிரைவர்களும் 800 ரூபாய்க்காக உறவினர்களாக வருவதற்குச் சம்மதித்ததாகச் சொன்னார்கள். அதற்குச் சாட்சியாகக் குறுஞ்செய்திகளையும் காட்டினர். உடனே ஸிவோலி காவல்துறையிடம் புகார் கொடுத்தார். வாங்கைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். “என்னால் நம்பவே முடியவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் வாங் மிகவும் நாகரிகமான அன்பான மனிதராகத்தான் பழகினார். எனக்காக எவ்வளவோ செலவு செய்திருக்கிறார். எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. பணத்துக்காகத்தான் என்னைத் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருக்கிறார் என்பதை அறிந்தபோது உடைந்துவிட்டேன். பணம் இல்லாவிட்டாலும் வாங் உண்மையானவராக இருந்திருந்தால் திருமணம் செய்திருப்பேன். அடிப்படையில் நேர்மையில்லாதவரிடம் எப்படி வாழ்க்கையை ஒப்படைப்பது? இப்படி ஒரு ஏமாற்றுக்காரரைத் திருமணம் செய்துகொள்ளாமல் தப்பித்ததை நினைத்து நிம்மதியடைகிறேன். இதுவரை ஒரு கோடி ரூபாயைத் தொழிலுக்காக எங்களிடம் வாங்கியிருக்கிறார். வரதட்சணையாக 65 லட்சம் ரூபாயும் ஆடம்பரமான காரும் கொடுத்திருக்கிறோம்” என்கிறார் ஸிவோலி.

ஏமாற்றாதே ஏமாறாதே...

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பூனைகளுக்காகக்-குரல்-கொடுக்கும்-மனிதர்/article9683635.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: நிஜ எல்ஃப்

 
elf_3161865f.jpg
 
 
 

நிஜ எல்ஃப்!

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த 25 வயது லூயி பட்ரன் தன்னை எல்ஃப் (elf) போன்று மாற்றிக்கொள்வதற்காக அறுவை சிகிச்சைகளைச் செய்து வருகிறார். இதுவரை 21 லட்சம் ரூபாய்க்கு உதடுகள், மூக்கு, கண்கள் போன்றவற்றை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக்கொண்டிருக்கிறார். க்ரீம்களுக்கும் முடி சாயத்துக்கும் மாதம் 3 லட்சம் ரூபாய் செலவு செய்கிறார்.

“சின்ன வயதிலிருந்து பிறரின் கிண்டலுக்கு உள்ளாகி வந்தேன். அந்த வலி என்னைத் தனிமைப்படுத்தியது. மற்ற வர்கள் என்னைக் கண்டு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் என் உருவத்தை மாற்ற 14 வயதில் முடிவு செய்தேன். 18 வயதில் முதல் அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டேன். எந்தச் சிகிச்சைக்கும் நான் மயக்க மருந்தைப் பயன்படுத்திக்கொள்வதில்லை. வலியை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

கண் நிறத்தை மாற்றுவதற்குத்தான் மிகவும் கஷ்டப்பட்டேன். இன்னும் என்னை முழுமையாக மாற்றிக்கொள்ளவில்லை. நீண்ட கூர்மையான காதுகள், கூர்மையான தாடை, இன்னும் சற்று உயரம் என்று எதிர்காலத் திட்டங்கள் நிறைய இருக்கின்றன. திருநங்கைகள் தங்களுக்குள் பெண்மையை உணர்வது போன்றே நான் என் மனதுக்குள் ஒரு எல்ஃப் போலவே உணர்கிறேன். அதனால் எல்ஃப் மாதிரியே உருவத்தை மாற்றி வாழ வேண்டும் என்ற தீராத ஆர்வம் இருந்துகொண்டே இருக்கிறது. அதற்காகத்தான் இத்தனை வலிகளும் செலவுகளும்” என்கிறார் லூயி பர்டன்.

பாலுக்கு இனி மாடுகளை நம்பியிருக்க வேண்டியதில்லை!

மாடுகளிலிருந்து பால் பெற வேண்டிய கட்டாயம் இன்னும் அதிகக் காலம் நீடித்திருக்காது என்கிறார்கள் ரியான் பாண்டியாவும் பெருமாள் காந்தியும். 3 ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்டனிலும் நியூயார்க்கிலும் வசித்து வந்த இந்த இளம் விஞ்ஞானிகள் இணைந்து, மாட்டுப் பாலுக்கு மாற்றாகச் செயற்கைப் பாலை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

வீகன் உணவுக்காரர்கள் ஏற்கெனவே மாட்டின் பாலுக்குப் பதிலாக சோயா பால், பாதாம் பால் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவை மாட்டுப் பால் போன்று சுவையாக இருப்பதில்லை. “நாங்கள் இருவரும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் மாட்டுப் பாலுக்கு இணையான பாதுகாப்பான ஒரு பாலை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். தாவரக் கொழுப்பு, விட்டமின்கள், கனிமங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி லாக்டோஸ் இல்லாத பாலை உருவாக்கினோம்.

இந்தப் பால் அசல் பாலைப் போலவே சுவையாக இருந்தது. மாட்டுப் பாலை விட அதிக சத்துகளும் நிறைந்திருந்தது. ’பர்ஃபக்ட் டே’ என்று எங்கள் பாலுக்குப் பெயரிட்டோம். எங்கள் கண்டுபிடிப்பு மாடுகளுக்கும் நன்மை செய்கிறது, சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்கிறது. லாக்டோஸ், கொழுப்பு, நுண்ணுயிர்க்கொல்லி, ஊக்கமருந்து போன்ற பிரச்சினைகள் எங்கள் பாலில் கிடையாது.

நாங்கள் இந்தப் பாலை உருவாக்கும்போது வியாபார ரீதியாகக் கொண்டு வரவேண்டும் என்று திட்டமிடவில்லை. ஆனால் எங்கள் பாலைச் சுவைத்தவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். பாலாடைக் கட்டி, தயிர், ஐஸ்க்ரீம் போன்றவற்றுக்கு மாட்டின் பாலைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் செயற்கைப் பாலை விற்பனைக்குக் கொண்டு வந்துவிடுவோம்” என்கிறார்கள் ரியானும் பெருமாளும்.

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நிஜ-எல்ப்/article9684878.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: அற்புதமான தம்பதி!

 
masala_3162466f.jpg
 
 
 

இங்கிலாந்தில் வசிக்கும் 87 வயது பீட்ரிஸ் கடந்த 6 ஆண்டுகளாக எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, தான் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் இனிமேல் மருத்துவம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். தினமும் இவரைப் பார்ப்பதற்காக 90 வயது கணவர் பெர்ட் ஒயிட்ஹெட் சக்கர நாற்காலி மூலம் மருத்துவமனைக்கு வருவார். திடீரென்று பெர்ட்டுக்கு உடல் நலம் குன்றி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரின் விருப்பப்படி மனைவிக்குப் பக்கத்திலேயே படுக்கை ஒதுக்கப்பட்டது. அதைப் பார்த்தவுடன் வலியால் துடித்துக்கொண்டிருந்த பீட்ரிஸின் முகம் சந்தோஷமானது. “என் அம்மா சில நாட்கள்தான் வாழப் போகிறார். எங்கள் விருப்பப்படியே ராயல் போட்டன் மருத்துவமனை அம்மா அருகில் அப்பாவை அனுமதித்திருக்கிறது. 15 வயதில் அம்மா, அப்பாவைச் சந்தித்தார். நட்பு காதலானது. 20 வயதில் திருமணம். 4 குழந்தைகள். பேரன், பேத்திகளுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். 67 ஆண்டுகள் அழகாக வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். இவர்களைப் பார்த்துதான் நாங்களும் வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டோம். புற்றுநோய் வந்த பிறகுதான் அம்மா துன்பத்தை அனுபவிக்க ஆரம்பித்தார். அது அப்பாவை மிகவும் பாதித்தது. இவர்கள் இருவரின் அன்பும் புரிதலும்தான் இவ்வளவு தூரம் வாழ்நாளை நீட்டித்து வைத்திருந்தது. இப்படி ஒரு பெற்றோருக்கு மகளாகப் பிறந்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். மரணம்தான் இருவரையும் முதல்முறையாகப் பிரிக்கப் போகிறது என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது” என்கிறார் சூஸன்.

அற்புதமான தம்பதி!

பிரேசிலில் வசிக்கும் 24 வயது மரியானா மென்டஸுக்குப் பிறக்கும்போதே முகத்தில் பெரிய மச்சம் இருந்தது. வலது கண், மூக்கு, வலது கன்னம் வரை பரவியிருக்கும் மச்சைத்தைக் கண்டு பயந்துபோன இவரது அம்மா, 5 வயதில் 3 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். மச்சத்தின் தன்மையைக் கொஞ்சம் குறைக்க முடிந்ததே தவிர, முற்றிலும் நீக்க முடியவில்லை. “என் மச்சத்தைப் பார்த்துக் கிண்டல் செய்திருக்கிறார்கள். அசிங்கமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அவை எல்லாம் என்னைப் பாதிக்கவே இல்லை. மற்றவர்களைப் போல இல்லாமல், நான் தனித்துவமாகத் தெரிகிறேன் என்ற எண்ணம் எனக்குச் சின்ன வயதிலேயே வந்துவிட்டது. நிறையப் பேர் என்னை அன்போடு அரவணைத்திருக்கிறார்கள். எனக்கு விவரம் தெரியாத வயதில் அம்மா அறுவை சிகிச்சை செய்துவிட்டார். இல்லையென்றால் நான் அதைச் செய்திருக்க மாட்டேன். என்னிடம் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. கிண்டல் செய்கிறார்களே என்று கவலைப்பட்டுக்கொண்டு என்னை நானே அழித்துக்கொள்வது. கிண்டலைப் புறக்கணித்து வாழ்க்கையில் முன்னேறிக் காட்டுவது. நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன். இதோ இன்று பிரேசிலின் முக்கியமான மாடலாக மாறிவிட்டேன். எந்தச் சூழ்நிலையிலும் மச்சத்தை மறைத்து, ஒப்பனை செய்துகொள்ள நான் அனுமதிப்பதில்லை. இன்று யாரும் என் மச்சத்தைக் குறை சொல்வதில்லை” என்கிறார் மரியானா.

ரோல் மாடல்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அற்புதமான-தம்பதி/article9687446.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: சக்கர நாற்காலியிலும் சாகசம்!

 
masala1_3162961f.jpg
 
 
 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 43 வயது சாரா ஜேன், கயிற்றைக் கட்டிக்கொண்டு மலையேற்றம் செய்யும் வீராங்கனை, பயிற்சியாளர். 2013-ம் ஆண்டு காலில் ஏற்பட்ட வலியால் ஓர் எளிய அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அந்தச் சிகிச்சை இவரது இயக்கத்தையே முடக்கிவிட்டது. இடுப்புக்குக் கீழே முற்றிலும் செயலிழந்துவிட்டது. “எனக்கு சாகசங்களில் அளவு கடந்த ஆர்வம். உலகின் பல்வேறு மலைகளிலும் ஏறியிருக்கிறேன். ஆனால் ஒரு சிறிய சிகிச்சை முடக்கிவிட்டதில் ரொம்பவே பாதிக்கப்பட்டேன். அப்போது என் மகனுக்கு ஐந்து வயது. நான் முடங்கியதால் அவன்தான் மிகவும் பாதிக்கப்பட்டான். அவனை அழைத்துக்கொண்டு எவ்வளவோ சாகசங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கற்பனை செய்திருந்தேன். அத்தனையும் வீணாகிவிட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புகைப்படக் கலைஞர்கள் பெஞ்சமின் வோன் வாங்கும் கரென் அல்சோப்பும் என் கனவை நிறைவேற்றுவதாகச் சொன்னார்கள். எனக்கு நம்பிக்கை வந்தது. நான் விரும்பிய விதத்தில் புகைப்படங்கள் எடுப்பதற்காக ஒரு குழுவினர் கடுமையாக உழைத்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு சக்கர நாற்காலியோடு கயிற்றில் தொங்கியதும் என் மகனுடன் படங்கள் எடுத்ததும் என்னை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது. என் மகனும் அவ்வளவு மகிழ்ச்சியடைந்தான். சக்கர நாற்காலிக்காரர்களாலும் இதுபோன்ற செயல்களைச் செய்ய முடியும் என்பதைக் காட்டுவதற்காக இந்தப் படங்களைப் பயன்படுத்த இருக்கிறேன்” என்கிறார் சாரா.

சக்கர நாற்காலியிலும் சாகசம்!

இரவில் கணவர் தாமதமாக வரும்போது பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை போன் செய்கிறார்கள், நிமிடத்துக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள், சுவையான உணவைப் புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்கிறார்கள் பெரும்பாலான மனைவிகள். ஆனால் சீனாவில் வசிக்கும் ஒரு பெண் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார். வீட்டு வாசலில் கார்ட் ரீடர் கருவியைப் பொருத்தியிருக்கிறார். கணவர் வெளியில் சென்று திரும்பும்போது கார்டை இயந்திரத்தில் தேய்க்க வேண்டும். தினமும் இரவு 9 மணிக்கு மேல் வீடு திரும்பும் கணவர், உருப்படியான காரணத்தைச் சொல்வதில்லை. தன் தோழியிடம் பிரச்சினைக்குத் தீர்வு கேட்டபோது, இந்த யோசனை கிடைத்தது. கார்ட் ரீடரை வீட்டில் பொருத்தினார். அருகில் ஒரு தாளில் விதிகளை எழுதி வைத்தார். 9 மணிக்குள் வீட்டுக்கு வந்தால், அருமையான இரவு உணவு வழங்கப்படும். சொன்ன நேரத்தை விட 30 நிமிடங்கள் தாமதமாக வந்தால் 970 ரூபாய் அபராதம். மேலும் 30 நிமிடங்கள் தாமதமாக வந்தால் அந்த வார இறுதியில் வீட்டு வேலைகள் முழுவதையும் செய்ய வேண்டும். “நான் எத்தனையோ வழிகளில் என் கணவரை வீட்டுக்குச் சீக்கிரம் வரும்படிச் சொல்லிப் பார்த்தேன். என்னால் செய்ய முடியாததை இயந்திரம் செய்துவிட்டது. கணவர் 9 மணிக்குள் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடுகிறார். உண்மையாகவே தாமதமாகும் நாட்களில் சரியான காரணத்தை முன்கூட்டியே சொல்லிவிடுகிறார். இந்த சிஸ்டம் வந்த பிறகு எங்கள் இருவருக்குள்ளும் உறவு மேம்பட்டிருக்கிறது” என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.

ஹஸ்பண்ட் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சக்கர-நாற்காலியிலும்-சாகசம்/article9689725.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.