Jump to content

மந்திரக்காரி - 27.8.15 ஆனந்த விகடனில் சேயோன் யாழ்வேந்தன் கவிதை

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

27.8.15 ஆனந்தவிகடனில் சொல்வனம் பகுதியில் "மந்திரக்காரி" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை, தளத்தின் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

மந்திரக்காரி!

என்னை ஒரு நாய்க்குட்டியாக

இருட்டில் உருட்டும் திருட்டுப் பூனையாக

தலையணை மெத்தையாக

கண்ணீர்த்துளிகளை ஒற்றி

மூக்கைச் சிந்தும் கைக்குட்டையாக

மாற்றிக்கொள்ளும் மந்திரக்கோல்

அவளிடம் இருக்கிறது.

பிறர் காணும்போது

அவளை ஆட்டுவிக்கும் மந்திரவாதியாகவும்

என்னை மாற்றிக்காட்டும்

மாயவித்தைக்காரி அவள்.

வார நாட்களில்

என்னை நானாக்கி

வாசல் நிலையில் சாய்ந்து நின்று

வழியனுப்பிவைப்பாள்

மந்திரக்கோலை முதுகில் மறைத்து!

- சேயோன் யாழ்வேந்தன்

நன்றிஆனந்த விகடன்

Link to comment
Share on other sites

ம். :):)

கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சேயோன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவள் மந்திரக்கோலாக இருந்தாலும் மந்திரவாதி ஆட்டினால்தான் மந்திரவாதம் நடைபெறும்

நல்ல கவிதை பகிா்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சேயோன்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மந்திரக்காரி நன்றாக மந்திரம் போடுகிறாள். வாழ்த்துக்கள் சேயோன்...!

Link to comment
Share on other sites

வாழ்க்கையில் நொந்து வெந்தவன் வடித்த கவிதையாகத் தெரிகிறது. நல்லதொரு குடும்பம் என்று பெயரெடுக்கச் சிலசமயம் கடந்துவரவேண்டிய கரடுமுரடான பாதையை வெளிக்காட்டும் கவிதை. அறியத்தந்தமைக்கு நன்றி சேயோன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், யாழ் வேந்தன் !

கவிதை அருமை...!

மந்திரக்காரியையும் கேட்டதாகச் சொல்லி விடுங்கள்..!:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம். :):)

கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சேயோன்.

மிக்க நன்றி தோழரே! 

அவள் மந்திரக்கோலாக இருந்தாலும் மந்திரவாதி ஆட்டினால்தான் மந்திரவாதம் நடைபெறும்

நல்ல கவிதை பகிா்வுக்கு நன்றி

மிக்க நன்றி தோழமைக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சேயோன்.:)

வாழ்த்துக்கு நன்றி தோழரே!

வாழ்த்துக்கள் சேயோன்

நன்றி தோழரே!

வாழ்த்துக்கள், யாழ் வேந்தன் !

கவிதை அருமை...!

மந்திரக்காரியையும் கேட்டதாகச் சொல்லி விடுங்கள்..!:)

மிக்க நன்றி தோழரே!

நீங்கள் கேட்டதாக நிச்சயமாகச் சொல்கிறேன்.

வாழ்க்கையில் நொந்து வெந்தவன் வடித்த கவிதையாகத் தெரிகிறது. நல்லதொரு குடும்பம் என்று பெயரெடுக்கச் சிலசமயம் கடந்துவரவேண்டிய கரடுமுரடான பாதையை வெளிக்காட்டும் கவிதை. அறியத்தந்தமைக்கு நன்றி சேயோன். 

அந்த உணர்வில் வடித்ததில்லை இக்கவிதை.

நன்றி தோழரே!

மந்திரக்காரி நன்றாக மந்திரம் போடுகிறாள். வாழ்த்துக்கள் சேயோன்...!

நன்றி தோழரே!

Link to comment
Share on other sites

அந்த உணர்வில் வடித்ததில்லை இக்கவிதை.

கவிதையின் பொழிப்புரை...? விளக்கினால் தன்னியனாவேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சேயோன். சூனியக்காரிகள் நிறைந்த உலகில் மந்திரக்காரிகளும் இருக்கின்றார்கள் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதையின் பொழிப்புரை...? விளக்கினால் தன்னியனாவேன்!

தோழரே,

கணவனை தன் பின்னால் சுற்றிவரச் செய்யவும் (நாய்க்குட்டியாக),

இரவில் அவளின் துணைக்காகப் போராடுபவனாகவும் (பூனைக்குட்டியாக)

அவனைத் தன் மஞ்சமாகவும் தலையணையாகவும் மாற்றிக்கொள்ளவும்,

அவளது சின்னச் சின்ன துன்பங்களையுங்கூட அவனிடம் கொட்டித் தீர்க்கவும் (கண்ணீர்த்துளிகளை ஒற்றி....)

அவனை அப்படி மாற்றும் மந்திரக்கோல் மனைவியிடம் உள்ளது.

கணவனை ஆட்டுவிக்கும் மனைவி, பிறர் அதை அறியக்கூடாது என்றும் நினைக்கிறாள்.  அதனால் பிறர் முன்னிலையில் கணவனின் ஏவல்களைத் தட்டாது நிறைவேற்றி, அவன் என்னவோ இவளை ஆட்டுவிக்கும் மந்திரவாதி என்று பிறர் நினைக்கும்படி செய்கிறாள்.

வார நாட்களில், வேலைக்குப் புறப்படும் கணவனை, அவனாக மாற்றி, வழியனுப்பி வைக்கும்போது, அந்த மாயமான மந்திரக்கோலை தன் முதுகுக்குப்பின் மறைத்துக்கொள்கிறாள்.

உங்கள் கவிதை ஆர்வத்துக்கு நன்றி தோழரே!

வாழ்த்துக்கள் சேயோன். சூனியக்காரிகள் நிறைந்த உலகில் மந்திரக்காரிகளும் இருக்கின்றார்கள் :cool:

மந்திரக்காரிகளையும் சூனியக்காரிகளையும் ஆண்களே உருவாக்குகிறார்கள் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை தோழரே!

Link to comment
Share on other sites

விளக்கத்திற்கு நன்றி சேயோன். நான் இக்கவிதைபற்றி விளங்கிக்கொண்டது சரியாகவே இருந்தது. ஆனால் அந்த விளக்கத்தை வெளிப்படுத்திய சொற்கள் வழுக்கிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சேயோன்

நன்றி தோழரே!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சேயோன் 
இரட்டைவேடப் பெண்களின் இதயம் அறிந்த வார்த்தைகள். 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சேயோன் 
இரட்டைவேடப் பெண்களின் இதயம் அறிந்த வார்த்தைகள். 

நன்றி

வாழ்த்துக்கு நன்றி தோழரே!

ஆனால் நான் சொல்ல வந்த கருத்து வேறு -

கணவனை தன் பின்னால் சுற்றிவரச் செய்யவும் (நாய்க்குட்டியாக),

இரவில் அவளின் துணைக்காகப் போராடுபவனாகவும் (பூனைக்குட்டியாக)

அவனைத் தன் மஞ்சமாகவும் தலையணையாகவும் மாற்றிக்கொள்ளவும்,

அவளது சின்னச் சின்ன துன்பங்களையுங்கூட அவனிடம் கொட்டித் தீர்க்கவும் (கண்ணீர்த்துளிகளை ஒற்றி....)

அவனை அப்படி மாற்றும் மந்திரக்கோல் மனைவியிடம் உள்ளது.

கணவனை ஆட்டுவிக்கும் மனைவி, பிறர் அதை அறியக்கூடாது என்றும் நினைக்கிறாள்.  அதனால் பிறர் முன்னிலையில் கணவனின் ஏவல்களைத் தட்டாது நிறைவேற்றி, அவன் என்னவோ இவளை ஆட்டுவிக்கும் மந்திரவாதி என்று பிறர் நினைக்கும்படி செய்கிறாள்.

வார நாட்களில், வேலைக்குப் புறப்படும் கணவனை, அவனாக மாற்றி, வழியனுப்பி வைக்கும்போது, அந்த மாயமான மந்திரக்கோலை தன் முதுகுக்குப்பின் மறைத்துக்கொள்கிறாள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.