Jump to content

யானைக்கும் அடி சறுக்கும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மலர்ந்தும் மலராத காலை பொழுது. வேகமாக நடந்து கொண்டிருந்தார் அந்த மனிதர்.

கையின் உயர்த்தி கடிகாரதினைப் பார்த்தார். பரவாயில்லை, நேற்று இதே இடத்தில் வந்த நேரத்திலும் பார்க்க இரு நிமிடம் முன்னதாக வந்தது விட்டோமே என்று நினைத்துக் கொண்டார், காலை நடைப் பயிற்ச்சியில் இருந்த அந்த மனிதர்.

அவரை, மிக விரைவாக ஆபத்து நெருங்கிக் கொண்டிருகின்றது என்பதை அவர் அறிந்திருக்க வில்லை. ஆனால் தான் தற்போது மறைந்து இருக்கும் லண்டன் மாநகரில், தனக்கு ஆபத்து வர வாய்ப்பு இல்லை என நம்பிக் கொண்டிருந்தார் அவர்.

அவர் தனது நாட்டின் அமைச்சராக இருந்த போது, ஒரு பில்லியன் டொலர் பணத்தினை ஆட்டையைப்  போட்டு விட்டு ஓடி வந்து விட்டார் என அவரது நாட்டின் அரசு குற்றம் சுமத்தி இருந்தது. அவரோ அதை மறுத்து இருந்தார். பிரித்தானியாவில் தஞ்சம் கோரி இருந்தார்.

நடந்து வந்த அவர் வலது புறம் திரும்பி, வேகமாக நடந்தார். 

அதே வேளை அவரை, பினொகுலர் மூலம், தொலைவில் நிறுத்தி இருந்த காரில் இருந்து அவதானித்துக் கொண்டிருந்தார்கள் இருவர்.  அவர்கள் உலகின் மிகவும் பிரபலமான அரச இரகசிய முகவர் அமைப்பினைச் சேர்த்தவர்கள்.

புகழ் மிக்க அந்த அமைப்பின் செயல்பாடுகள் மிகவும் துணிகரம் மிக்கவை. இதன் காரணமாக ஈவு இரக்கம் இல்லா முகவர்கள் கொண்ட அமைப்பு எனப் புகழ் கொண்ட அமைப்பு அது. 

ஒருவர் தலையினை ஆட்டினார். சந்தேகமில்லை, நாம் தேடும் மனிதர் தான். அடுத்தவரும் தலையினை ஆட்டினார்.

ஒருவர் காரில் இருந்து இறங்கினார். அவரது நோக்கம், அந்த மனிதர் எந்த வீட்டினுள் நுழைந்து கொள்கிறார் என்பதை அறிவது.

அது 1984ம் ஆண்டு. கை தொலைபேசி இல்லாத காலம். காரின் டிரைவர் சீட்டில் இருந்த நபர் இறங்கிக் கொண்டார்.

சிறிது தூரத்தில் இருந்த போன் போக்சினுள் நுழைந்து கொண்டார். தனது நாட்டில் அவரது அமைப்பின் உயர் தலைமை அதிகாரியினை நேரடியாக தொடர்பு கொண்டார். அவருக்கு கொடுக்கப் பட்டிருந்த அசைன்மென்ட் மிக மிக முக்கியமானது ஆகையால், நிறுவனத்தின் அதி உயர் அதிகாரியே நேரடியாக கையாண்டார்.

'Sir, the bird has been spotted and identified positively'. 

"பறவை கண்ணில் பட்டு விட்டதுடன், அடையாளமும் சரியாக உறுதிப் படுத்தப் பட்டு உள்ளது".

"மிக்க நல்லது. உங்கள் செயல் பாடுகளை மெச்சுகிறேன். மேலதிக அறிவுறுதுதல்கள் விரைவில் கிடைக்கும். நன்றி".

தொடர்பு துண்டிக்கப் பட்டது.

நடை தொடரும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல.... திரிலாக, உள்ளது.... நாதமுனி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலர்ந்தும் மலராத காலை பொழுது. வேகமாக நடந்து கொண்டிருந்தார் அந்த மனிதர்.

கையின் உயர்த்தி கடிகாரதினைப் பார்த்தார். பரவாயில்லை, பரவாயில்லை, நாம் இப்போது வேகமாக நடக்கிறோம். கடந்த வாரம் இதே நாள் இரண்டு நிமிடமாக இருந்ததை ஐந்து நிமிடமாக குறைத்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டார்.

அவரை, மிக விரைவாக ஆபத்து நெருங்கிக் கொண்டிருகின்றது என்பதை அவர் அறிந்திருக்க வில்லை. 

வேகமாக வந்து தெரு முனையில் வலது பக்கம் திரும்பினார் அவர். விடுமுறையில் சென்றிருந்த அவரது உதவியாளர் வந்திருக்க வேண்டுமே. இடது பக்கம் இருந்த கட்டிடத் தொகுதியினை அண்ணாந்து பார்த்தார்.

சொல்லி வைத்த மாதிரி, அவரது உதவியாளர், யன்னலை திறந்து, கையினைக் காட்டிச்  சிரித்தார். அவரது வீட்டில் எல்லா வேலைகளையும், அவரது கடிதங்களை டைப் செய்வது, போஸ்ட் செய்வது போன்ற வேலைகளை அவரே செய்வார்.

இந்த மனிதரை ஒரு நாளாவது கட்டிலில் தள்ளி விழுத்தி..... நல்ல காசு பாப்போம் என்றால்... ம்.. அந்த நாள் வராமலா போகும்... பார்கிறேன் என நினைத்துக் கொண்டாள் அந்தப் பெண்.

உன்னை, உனது பார்வையின் அர்த்தம் புரியும் பெண்ணே. ஆனால், பெண்களால் கவுழ்ந்தவர்கள் பலர். அவர்களில் ஒருவராக நான் இருக்க முடியாது.. 

நினைத்துக் கொண்டார் அந்த மனிதர்.

அதே வேளை..... 

நடை நிற்கும்.... கதை தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு இலண்டனில் புதிதாக முளைத்த விமான நிலையம், பெரிதாக பிஸி இல்லை. பயணிகள் இன்னும் பயன் படுத்த தொடங்கவில்லை என்பதால் பெரும் பாலும் கார்கோ விமானங்கள் தான் அங்கே வந்து போகும்.

அன்று அமைதியாக இருந்தது விமான நிலையம். அந்த விமான நிலையத்தின் சுங்கப் பிரிவில் கடமையில் இருந்தார் ஒரு இளம் அதிகாரி. பிஸி இல்லாததால் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்.

ராத்திரி அடித்த பியர் வேற ஆளைத் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது.

இன்டர்நெட் இல்லாத காலமாகையால், கையில் இருந்த பத்திரிகையின் சகல விபரங்களையும் அக்கு வேறு, ஆணிவேறு ஆக வாசித்து, நேரத்தினை ஓட்டிக் கொண்டிருந்தார் அந்த அதிகாரி.

அவருடன் அன்று கடமையில் இருந்த இன்னுமோர் அதிகாரி, டோயலட் போய் விட்டு, அப்படியே இரண்டு டீ எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று கீழ் தளத்துக்கு சென்று இருந்தார்.

நாட்டினை உலுக்கப் போகும், அவரையும் சம்பந்தப் படுத்தப் போகும், மிகப் பெரிய சம்பவம் ஒன்று அவரை வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதை அவர் அப்போது அறிந்திருக்க வில்லை.

தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் , நாதமுனி தொடருங்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதர்  உங்கள் தொடர் நன்றாக இருக்கின்றது.
சிறிய பகுதியாக இணைத்தாலும் சுவாரசியாமாக இருக்கின்றது.
தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் பிற்பகல்  3 மணி ஆகிக் கொண்டிருந்தது. 

கதவு தட்டப் பட்டது. ஹான்டிலிங் முகவர்கள் இருவர் வந்தார்கள். ஒரு பெரிய கார்கோ வந்து உள்ளது. அது காத்து இருக்கும் Boeing 707 விமானத்துள் போகவேண்டும் என்று அதை கொண்டு வந்தர்வர்கள் சொல்கிறார்கள். ஆனால் அது டிப்லோமட்டிக் பொதி என்ன கூறி அதில் உள்ள விபரங்களை விளக்கமாக, சுங்க பத்திரத்தில்  பதிவு செய்ய தயங்குகிறார்கள் என தெரிவித்தார்கள்.

அப்படியா, இதோ கீழே வருகிறேன், அவர்கள் யார் என்பதை பாப்போம் எனக் கூறிய அதிகாரி கீழ் தளம் வந்தார்.

கீழ்தளத்தில் அந்த நாட்டின் ராஜதந்திரி ஒருவர் காத்திருந்தார். தனது ராஜ தந்திர கடவுச் சீட்டினைக் காண்பித்தார். விமானத்தில் ஏற இருக்கும் பொருட்கள் சாதாரணமாக பத்திரங்களும் சில நாடு திரும்பும் ராஜ தந்திரிகளின் உடமைகளும் என குறிப்பிட்டார்.

இது போன்ற ராஜதந்திர பொதிகள் பொதுவாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலே கையாளப் படுவதால், அந்த விமான நிலையத்தில் இது புதிதாக இருந்தது.

அந்த அதிகாரி உட்பட, வேறு யாரிடமும் அது குறித்த அனுபவம் இருக்கவில்லை. அது குறித்து அறிந்து கொள்வதற்காக, லண்டனிலுள்ள வெளிவிவகார அமைச்சுக்கு போன் செய்யும் நோக்குடன் தனது அலுவலக அறைக்கு வந்தார் அவர்.

அதேவேளை, அவரது சக அலுவலகர் திரும்பினார், டீ யுடன் மட்டும் அல்ல, பொலிசாரினால் சகல குடிவரவு, குடி அகழ்வு துறைகளுக்கு  அனுப்பி வைக்கப் பட்டிருந்த விசேட fax செய்தியுடன் வந்திருந்தார்.

அதை வாசித்து முடித்த அதேவேளை பீட்டர் என்னும் கார்கோ மேனேஜர் அரக்கப் பறக்க ஓடி வந்தார்.

"பொதியினை, அவர்கள் வண்டியில் இருந்து போர்க்ளிப்ட் மூலம் இறக்கிய போது, கடுமையான மருந்து வாடை வீசியது. வழக்கமான விமானப் பொதிகள் போல இறுக்கமான வகையில் அதில் உள்ள பொருட்கள் பாதுகாக்கப்  படாமல், பொதி லூசாக இருந்ததை அவதானித்தேன். மிகச் சந்தேகமடைந்து, அதனை விமானத்துக்கு அருகில் கொண்டு சென்று, உயரத்தினைக் குறைத்து சீட்டில் இருந்து பார்த்த போது, மனித உடல்கள் இரண்டு இருப்பதைக் கண்டு கொண்டேன். அதுதான் பதட்டத்துடன் ஓடி வந்தேன்" என்றார் அவர்.

விசயம் மிகப் பாரதூரமானது எனப் புரிந்து கொண்டார் அந்த அதிகாரி. என்ன செய்வது என ஒரு கணம் யோசித்தார் அவர். மறுகணம் அவரது கை போனை எடுத்தது. அழைத்தார் 999 எனும் இலக்கத்தினை ....

அழைப்பினை அழுத்தும் போதே பொறி தட்டியது. மனித உடல்கள் என்றால், இறந்த மனித உடல்கள் என்றால் எதற்காக, பார்த்தவுடன் தெரியுமாறு பொதியினுள் உள்ளது. அப்படியானால் அது..... இறந்த உடலங்களா? அல்லது... உயிருள்ள.... மனிதர்களா?

குழம்பினார் அந்த அதிகாரி.. 

தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நைஜீரியா, மேற்கு ஆபிரிக்காவின் எண்ணெய் வளம் மிக்க நாடு. பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பின்னர், பெரும்பாலும் ஊழல் அரசியவாதிகளிடம் சிக்கி சின்னாபின்னமாகி விட்ட ஒரு நாடு.

நாட்டின் அரசியல்வாதிகள் முதல் அறிவார்ந்தவர்கள் வரை, ஊழல் மற்றும் மோசடி மூலம் பணம் பண்ணுவதே குறிக்கோள். இவ்விடயத்தில் உலகப் புகழ் மிக்கவர்கள் இந்த நாட்டினர்.

1980 ஆரம்பகாலத்தில் அதிபராக பதவிக்கு வந்தார் சிஹாரி. இவரது காலத்தில் தான் நாட்டின் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டது. அரசியல் வாதிகள் உசாரானார்கள். கிட்டதட்ட  16 பில்லியன் டொலர்கள், ஊழலில்,  நாட்டின் திறைசேரிக்கு வராமல் விழுங்கப் பட்டது.

அதிபரின் மைத்துனர் பெயர் உமாரு டிக்கோ. போக்குவரத்து அமைச்சரான இருந்த அவர், அதிபருடனான நெருக்கம் காரணமாக மிக அதிகாரம் கொண்டவராக விளங்கினார். அதே வேளை ஊழலின் பிதாமகராக இவரே திகழ்ந்தார்.

இவரின் ஊழல் கதைகள் இன்றும் பிரபலம். கவிதையாக, பாடலாக இவரின் வீர தீர ஊழல் கதைகள் நாடு முழுவதும் இன்றும் உலா வருகின்றன.

டிக்கோ மிகவும் தந்திரசாலி, இராணுவத்துடன் ஒரு நாள் மோதல் வரும் என நினைத்து இருந்தார். அதனால் இராணுவத்தினுள் சொந்தமான புலனாய்வுக் குழுக்களை வைத்து இருந்தார்.

நினைத்து போலவே 1983 டிசம்பர் 31 ம் நாள், ரத்தமில்லா புரட்சி மூலம், ராணுவம் ஆட்சியைக் கவுழ்த்து, அதிபரை சிறையிட்டது.

கைது ஆணையுடன், டிக்கோவை நாடு முழுவதும் தேடினால், காணோம், காணோம் எங்குமே காணோம்.

தனது புலனாய்வு குழுக்கள் தந்த தகவல்கள் மூலம், புரட்சி நடக்கப் போவதை முன் கூட்டியே அறிந்து கொண்ட டிக்கோ, தகுந்த நேரத்தில் தப்பி விட்டார்.

அவர் எங்கு போனார் என்பது பரம ரகசியமாக இருந்தது. புரட்சியின் நோக்கமே, ஊழல் பேர்வழிகளை தூக்கி உள்ளே போடுவது.

அந்த ஊழலின் கதாநாயகனே தப்பி முகத்தில் கரி பூசி விட்டார் என்றால்?

ராணுவம் ஆட்சியாளருக்கு மானப் பிரச்சினை ஆகி விட்டது. அவரை எப்படியாவது தேடித் பிடித்து நாட்டுக்கு கொண்டு வந்து விசாரித்து தண்டனை வழங்குவது தான், தமது புரட்சியினை நியாயப்படுத்தவும் மக்கள் ஆதரவைப் பெறவும் முக்கியமானது என ராணுவ ஆட்சி பீடம் கருதியது.

அது மட்டுமல்ல, டிக்கோ ஆட்டையைப் போட்ட தொகையோ, ஆகக் குறைந்தது 1 பில்லியன் டொலர்கள். அம்மாடியோவ்...

அவரை எங்கே தேடுவது? முதலில் இருக்குமிடம் தெரிந்தால் தானே, ஆளைக் கொண்டு வருவது குறித்து சிந்திக்க முடியும்? 

தகுந்த ஆளிடம் பொறுப்பினை ஒப்படைத்து விட்டால், விசயம், காதும், காதும் வைத்தது போல முடிந்து விடுமே..

ஒரு புத்திசாலித்தனமான ஐடியா கிடைத்தது.

இஸ்ரேலின் MOSAD !!!  -  யானை

தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கில் பல எதிரிகள், சோவியத் - மேற்கு, கோல்ட் யுத்தம்.

எண்ணெய் வளம் கொண்ட இன்னுமொரு நாட்டின் தொடர்பு முக்கியமானது என முடிவு செய்தார் இஸ்ரேலிய பிரதமர் சாமீர்.

மொசாத் தலைமைக்கு, நைஜீரியா ராணுவ அரசின் கோரிக்கை குறித்து பரீசீலனை செய்ய அனுமதி கிடைத்தது.

மொசாத் இயக்குனர் நாயகம் நகும் அட்மோனி, போலியான கனடிய கடவுச் சீட்டுடன் லாகோஸ் வந்து, இராணுவத் தலைமை ஆட்சியாளர் புஹாரியினை சந்தித்தார்.

பல பில்லியன் டாலர் பணத்தினை மீட்கும் நோக்கில், புஹாரி தந்த கான்ட்ராக் பணமானது, அட்மோனியினால், மறுக்கவே முடியாத பெரும் தொகையாக இருந்தது.

இஸ்ரேலின் மொசாத் பங்களிப்பு எப்போதும் ரகசியமாகவே இருக்கும் என்றும், டிக்கோவை உயிருடன் கொண்டு வந்து லாகோஸில் கையளிப்பதுடன், அவரது offshore வங்கி கணக்கு விபரங்கள் குறித்து துப்பறிந்தது சொல்வது எனவும் முடிவானது.

தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரில் இருந்து இறங்கிய முகவர் டிக்கோவை பின் தொடர்ந்து அவர் தங்கி இருந்த வீடு, 49 Porchester Terrace என கண்டுகொண்டார்.

சகல தயார் படுத்துதல்களையும் முடித்த பின்னர், கடத்தல் திட்டம் செயல் படுத்தப் பட்டது.

ஆனால், டிக்கோவின், காரியதரசி ஆக வேலை செய்த எலிசபெத் எனும் பெண் குறித்த விபரங்கள், அவர் விடுமுறையில் இருந்த காரணத்தினால், அவர்களால் கவனத்தில் எடுக்கப் பட வில்லை.

அதுவே பெரும் தவறாக அமைந்து விட்டது.

டிக்கோவை நோக்கி கை அசைத்து விட்டு, திரும்ப எத்தனித்த மறுகணம், அவர் கண்ட காட்சி அவரை அதிர வைத்தது.

வீதி ஓரமாக நிறுத்தி இருந்த வான் ஒன்றின் பின் கதவு திறக்கப் பட, அதனுள் இருந்து இருவர் பாய்ந்து இறங்கி, டிக்கோவினை தூக்கி உள்ளே வீசி, தாமும் ஏறிக் கொள்ள, வான் வேகமாக ஓடி மறைந்தது.

டிகோவின் அதிஸ்டம், அவரது கடத்தல் தொடங்கிய மறு நிமிடமே பொலிசாருக்கு அறிவிக்கப் பட்டு விட்டது.

கபினெட் மீடிங்கில் இருந்த பிரதமர் மார்கிரட் தட்சர் இடம் தகவல் சொல்லப் பட்டது. 

தங்கள் மண்ணில் இந்த துணிகர செயலை செய்ய நைஜிரியர்களுக்கு தைரியம் எவ்வாறு வந்தது என கோபம் கொண்டது பிரித்தானிய அரசு.  அவர்கள் நோக்கம் என்ன, பின்னால் யார் இருகின்றார்கள் என விசாரித்து அறிய உத்தரவுகள் பறந்தன.

சகல குடி வரவு, அகழ்வு துறைகளுக்கும், நைஜீரிய விமானங்கள், கார்கோ க்கள் குறித்து கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டது.

தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டுப்புட்டெண்டு எழுதுங்கோ... நாதம்..!

பொயின்ட் ஒவ் நோ றிற்றேனிலை ஆக்களைக் கொண்டே விட்டிட்டு கன நேரம் ஓய்வெடுக்கக் கூடாது!:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Umaru Dikko

Umaru Diko

டிக்கோ கடத்தல் திட்டம், ஒரு சிறிய குழுவின் கையில் கொடுக்கப் பட்டு இருந்தது. ஆளைத் தூக்குதல், மயக்க மருந்து செலுத்துதல் - அதனை கையாளுதல், லண்டனில் இருந்து லாகோசிக்கு கடத்திக் கொண்டு செல்லுதல் என மூன்றாக உப திட்டங்கள் தீட்டப் பட்டன.

டெல் அவிவ், ஹஷாரோன் வைத்திய சாலையின்,  intensive care unit ன், டைரக்டர் ஆன, மயக்க மருந்து நிர்வகிப்பதில் நிபுணரான டாக்டர் லெவி-ஆரி குழுவில் சேர்க்கப் பட்டார். சர்பியோ எனும் இஸ்ரேல ஆர்மி ரிசேர்வ் உடன் குழுத் தலைவராக அலெக்சாண்டர் பாரக் எனும் 27 வயது மொசாத் ஏஜென்ட்  நியமிக்கப் பட்டார்.

இவர்களது வேலைகளை ஒருங்கினைபதற்காக பீலிக்ஸ் அப்தோல் எனும் இன்னுமோர் மொசாத் ஏஜென்ட்  ஜூலை 2ம் திகதி லண்டன் வந்து சேர்ந்தார்.

நைஜீரிய தூதரகத்தினை சேர்ந்த, இந்த நடவடிக்கைக்காக, புதிதாக, ராஜதந்திரியாக வந்து இருந்த, மேஜர் யூசுப் என்பவரால், ஒரு வான் ஒன்று கடத்தல் நடவடிக்கைக்காக வாடைக்கு எடுக்கப் பட்டு இருந்தது. ஆனால், அது கண்ணைக் கவரும் பிரகாசமான மஞ்சள் கலரில் இருந்தது. - முதல் தவறு - ஜன்னலைத் திறக்கும் போதே, அந்த வான் கலர் என்னை கவனிக்க வைத்து என்றார் எலிசபெத், பின்னர்.

1984 ஜூலை 4 ம் திகதி, Nigerian Airways Boeing 707 கார்கோ விமானம் ஒன்று, எந்த விதமான பொதிகளும் இன்றி லாகோஸில் இருந்து, லண்டன், ஸ்டான்ச்ட் விமான நிலையம் வந்து இறங்கியது.

நைஜீரிய தூதரகத்தில் இருந்து வரும் பல 'ராஜதந்திர பொதிகளை' எடுத்து செல்ல வந்திருப்பதாக, UK அதிகாரிகளுக்கு சொல்லப் பட்டது.

விமானத்தில் பல பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தனர். விமானத்தினை விட்டு வெளி யேறக்கூடாது என்ற உத்தரவு இட்டப் பட்டு இருந்தது.

Nigeria Airways plane

மறுநாள் 3 மணிக்கு, 'பொதியுடன்' லாகோசுக்கு கிளம்பிச் செல்லும் என அதிகாரிகளுக்கு சொல்லப் பட்டு இருந்தது?

ஆனால் விமானத்தினுள் 'பொதி' வருமா?

சறுக்கு தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தப் பட்ட டிக்கோ, வானினுள் கை விலங்கு இடப்பட்டார். அவரது கால்களும் கட்டப் பட்டன. லண்டன் மிருகக் காட்சி சாலை அருகில் வேறு வண்டி ஒன்றுக்கு மாற்றப் பட்டார் அவர். 

பகல் 12 மணியளவில் அவருக்கு மயக்க மருந்து செலுத்தப் பட்டது. 1.2m உயரம் * 1.2m ஆழம் * 1.5m அகலம் கொண்ட இரு பெட்டிகள், லாரி ஒன்றில் வைக்கப் பட்ட நிலையில் விமான நிலையம் நுழைந்தன. முன்னும், பின்னும் தூதரகத்துக்கு சொந்தமான, கறுப்பு நிற மெர்செடெஸ் கார்கள் சென்றன.

எந்த கார்களிலும், டிகோவையோ, அவரது டாக்டரையோ காண முடியவில்லை. 

*************************************  XX **************************************

சார்லஸ் மோரா எனும் அந்த இளம் சுங்க அதிகாரிக்கு, 999  தொடர்பு கிடைத்ததும், My name's Morrow from Customs at Stansted. We've got some bodies in a crate

"ஸ்டான்சட் விமான நிலைய சுங்கப் பிரிவில் இருந்து பேசும் எனது பெயர் மோரா. இங்கே ஒரு பொதிப் பெட்டியில் சில உடல்கள் காணப் படுகின்றன"

'இறந்த உடல்களா அல்லது உயிர் உள்ளவைகளா'

'நல்ல கேள்வி, ஆனால் எனக்குத் தெரிய வில்லை'.

'அப்படியா, நாம் அம்புலன்சினையும்  கூட அனுப்பி வைக்கிறோம்' 

சறுக்கு தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நிமிடங்களில் விமானம் பொலிசாரினால் சுத்தி வளைக்கப் பட்டது. அவர்கள் முன்னிலையில், பொதி பெட்டி உடைக்கப் பட்டது. 

உள்ளே மேலாடை இல்லாமல் மயங்கிய நிலையில் டிக்கோ காணப் பட்டார். அவரது வாயினுள் குழாய்கள் திணிக்கப் பட்டு இருந்தன.

பக்கத்தில் டாக்டர் ஆரி இருந்தார். "நல்லது கனவான்களே, இப்போது என்ன செய்யப் போகிறோம்"  என சிரித்தவாறே கேட்டார் அவர். (“Well gentlemen, what do we do now?”)

அடுத்த பொதிப் பெட்டியில் இரு இஸ்ரேலியர்களும் இருந்தார்கள்.

மயக்கத்தில் இருந்த டிக்கோ வைத்தியாசலைக்கு அனுப்பட்டார். மறுநாள் மதியம், 36 மணி நேர மயக்கத்தில் இருந்து கண்விழித்தார் அந்த பேரதிஸ்டக்காரர்.

கடத்தப் பட்டது தெரியும். பின்னர் என்ன நடந்தது? ஆனால் யாரால், எதற்காக என அறிந்ததும் மீண்டும் சிறு மயக்கமானார் அவர். :rolleyes:

தொடரும்...

Link to comment
Share on other sites

பாஸ், எப்புடி பாஸ்? கலக்குறீங்க போங்க ...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டிஷ் கலிடோனியன் போயிங் 707 விமானம் பயணிகளுடன் லாகோஸ் நகரத்தில் இருந்து லண்டன் நோக்கி கிளம்பியது.

புறப்பட்ட 45 நிமிடங்களுக்குள், 'பாதுகாப்பு காரணங்களுக்காக'  உடனடியாக லாகோஸ் திரும்புமாறு அறிவுறுத்தல் வந்தது.

அப்பாவித்தனமாக திருப்பிய பின்னர் தான் விமானிக்கு புரிந்தது அது ஒரு தந்திர நடவடிக்கை என்று. லண்டன் ஸ்டான்ட்ஸ்டெட் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ள தமது விமானத்தினை மீட்பதற்காகவே இந்த நடவடிகையினை நைஜீஜியர்கள் செய்திருந்தார்கள்.

பயணிகளும், விமான சிப்பந்திகள், விமானிகள் எவரும் சிறைப் பிடிக்கப் படவில்லை.

அவர்களது விமானம் விடுவிக்கப் பட்டதும், பிரிட்டிஷ் விமானமும் விடுவிக்கப் பட்டது.  

ஒரு நட்பு நாடு ஒன்றில் தேவையில்லாமல் தொடர்ச்சியாக செய்த ஆத்திரமூட்டும் செயல் என பிரித்தானியா கோபம் கொண்டது.

உண்மையிலே, டிக்கோ மீதானா ஆதாரங்களை சமர்ப்பித்து, பிரித்தானிய நீதிமன்றம் மூலமாக, அவரை இலகுவாக நாடுகடத்தியிருக்க முடியும் எனிலும் ராணுவ ஆட்சியாளர்களின் அவசரமே இந்த நடவடிக்கைக்கு காரணம்.

நைஜீரியர்களின் தேவையில்லா, முட்டாள் தனமான, அவசர நடவடிக்கைகளினால் இரு நாட்டு உறவுகள் மிக மோசமாக நிலை அடைத்துள்ளன என பிரித்தானியாவினால் , ராஜதந்திர முறையில் கடுமையாக சொல்லப் பட்ட பின்னரே நைஜீரியா, வாலை சுருட்டி அமைதியாகியது.

எனினும் இஸ்ரேலின் மொசாத் பங்களிப்பு குறித்து ஒரு போதுமே ஒத்துக் கொள்ளப் படவில்லை.

மொத்தமாக 17 பேர்கள் கைதானார்கள். வழக்குகளின் பின்னர் அவர்களது பங்களிப்புக்குரிய வகையில் தண்டனை வழங்கப் பட்டது. 

முக்கியமான கடத்தல் கதாநாயகர்களான, 3 இஸ்ரேலியர்களுக்கும், ஒரு நைஜீரியருக்கும் பின் வருமாறு தண்டனை கிடைத்து.

Alexander Barak - 14 years
Mohammed Yusufu – 12 years
Levi-Arie Shapiro - 10 years
Felix Abithol – 10 years

தண்டனைக் காலம் முடிந்ததும், கமுக்கமாக அனைவரும் நாடு கடத்தப் பட்டனர். 

சில பல கவனக் குறைவுகளால், புகழ் மிக்க அமைப்பான மொசாட்டின் கருமையான பக்கங்கள் தான் இந்த நடவடிக்கை.

முக்கியமாக, சில விடயங்களில், நைஜீரியர்களை ஈடு படுத்தியமையே இந்த யானையின் அடி சறுக்களுக்கு காரணம் என இது குறித்து எழுதிய பலர் கூறுகின்றனர்.

வாடகை வான் பெற சென்ற நைஜீரியர் தேர்வு செய்த நிறம், டிக்கோ செயலாளர் குறித்த தகவல் இன்மை,  டிப்லொமட் பொதி தொடர்பான ஆவணம் தயாரிப்பதில் அனுபவம் மிக்க நைஜீரிய ராஜதந்திரி, கடைசி நேரத்தில், பயத்தினால், விமான நிலையத்துக்கு வராமல் ஒளிந்து கொண்டதால், வேறு அனுபவம் இல்லாத ஒருவர், ஆவன விடயத்தில் சொதப்பியதால்,அதிகாரி மோரோவின் கவனம் தீவிரமாகி, தேவை இல்லாமல் நேரம் இக்கப் பட, நிமிட இடைவேளைகளில் திட்டம் தோல்வி அடைந்தது என்கின்றனர்.

நமது கதாநாயகர் உமாறு டிக்கோ, தான் பெற்றுக் கொண்ட கசப்பான அனுபவத்துடன் பிரித்தானியாவில் தொடர்ந்து மேலும் 12 ஆண்டுகள் வாழ்ந்து 1996 ம் ஆண்டு, புதிய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் நாடு திரும்பினார்.

பிரித்தானியாவில் இருந்த காலத்தில், தனது இளமைக்கால கனவான, பாரிஸ்டர் பட்டப் படிப்பினை முடித்து இன்றும் உயிருடன் வாழ்கின்றார் அவர்.

Charles Morrow

Custom Officer Morrow: In an interview in 2002

முற்றும்.

பதிவு இட்டு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனியடித்த மாதிரி  உயிரோட்டமான எழுத்து நடையுடன் கூடிய ஆக்கத்தைத் தந்ததுக்கு நன்றி நாதமுனி...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை முழுவதையும் இப்போதுதான் வாசித்து முடித்தேன். விறுவிறுப்புடன் கூடிய அருமையான கதை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை விறுப்பாய் கொண்டு போய்,அவசரப்பட்டு முடித்த மாதிரி இருக்கின்றது...பாராட்டுக்கள்...இதே மாதிரி உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை முழுவதையும் இப்போதுதான் வாசித்து முடித்தேன். விறுவிறுப்புடன் கூடிய அருமையான கதை.

நன்றி  நாதரே...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.