Jump to content

எழுதிச் செல்லும் விதியின் கரங்கள்.(2)..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

scaffold_web.jpg

 

இரவு முழுவதும் ‘உறக்கம்' கண்ணாமூச்சி விளையாடியபடி இருந்தது!

 

இளமைக் கால நினைவுகள், மூளையின் எங்கோ ஒதுக்குப்புறத்தில் ‘பத்திரமாகப்' பொத்தி வைத்திருந்திருக்கப் பட்டிருக்க வேண்டும்! மனித மூளை எதையுமே குப்பையில் எறிவதில்லைப் போதும்! அவ்வளவும் ஒரே நேரத்தில் பொங்கிப் பிரவகிப்பது போலப் பிரமை! நினைவுகள் மட்டுமல்ல.. உடலும் இளமையானது போன்ற உணர்வும் கூட ஏற்பட.. அதிகாலையிலேயே எழுந்து அவனது விலாசத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டேன்!

நடக்கும் வழியில் எதிர்ப்படும் பெண்களிடம் அந்த விலாசத் துண்டைக் காட்டிய படியே.. அவர்கள் காட்டும் திசையில் நடந்து கொண்டிருந்தேன்! எங்கிருந்து தான் ‘பிரெஞ்சு' மொழிக்கு இந்த ‘இனிமை' வந்ததோ என மனது சிந்தித்த படியே இருந்தது!

‘சூட்டியினது வீட்டுக்கு முன்னால் வந்ததும்.. ஊரில் உள்ளது போல ஒரு விறாந்தையில் கதிரையில் சாய்ந்து அமர்ந்திருத்த படியே ‘பேப்பருக்குள்' புகுந்து மிக உன்னிப்பாக எதையோ வாசித்துக் கொண்டிருந்தான்! வாயில் ஒரு சிகரட் புகைந்த படியிருக்க, அருகில் ஒரு தட்டில் இரண்டு கோழிக்கால்கள் இணைகர வடிவத்தில் அடுக்கப் பட்டிருந்தன! ஒரு குவளையில் மஞ்சள் நிறத் திரவம், முக்கால் வாசிக்கு நிறைந்திருந்தது! திரும்பிப் போவமோ என்று மனது சிந்தித்துக் கொண்டிருக்கையில்.. சூட்டி நான் வருவதை அவதானித்திருக்க வேண்டும்!

உள்ள வா… என்றவன் இன்னுமொரு கதிரையை இழுத்துத் தனக்கருகில் போட்டான்!

மனுசி பிள்ளையள் எப்படி இருக்கினம்? ஒருக்கா வெளிய வரசொல்லன் பாப்பம் என்று நான் கூறவும், சிகரட் புகையை ஆழமாக உள்ளிழுத்து வெளியே சிறு  சிறு வளையங்களாக வெளியே விட்ட படி.. எனது முகத்தைச் சிறுது நேரம் உற்றுப் பார்த்தபடியே இருந்தவன்...ஊiரில ..பத்திரமாய் இருக்கீனம் என்று கூறினான்! அவனது முகத்தில்...ஒரு வெறுமை தோன்றி மறைந்தது! ‘எல்லாம் விதி'  என்றபடி வானத்தை நோக்கி அவனது கரங்கள் நீண்டன!

அவனுக்குக் கொஞ்சம் போதையேறிய மாதிரி இருக்கவும் நான் பிறகு வாறன் சூட்டி என்று எழும்பவும்,, இந்தா.. இந்தக் கோழிக்காலை எடுத்துக் கடி என்று அவன் கூற...., நான் கோவில் என்று தயங்கவும்… டேய்.. இந்த மாதா.. மரக்கறி, மச்சம் எல்லாம் பாக்கிறேல்ல.. நீ சாப்பிடு என்றவன்..என்னோட ஒண்டா வந்தவங்கள் எல்லாம் குடியும், குடித்தனமுமா இருக்கேக்க .. நான் மட்டும் என் இப்படி எண்டு நினைக்கிறாய் போல கிடக்கு என்றான்!

இல்லையில்லை என்று நான் சறுக்கவும்..அப்பிடியென்றால் நீ யாழ்ப்பாணத்தான் இல்லை என்று அடித்துக் கூறவும்.. தயக்கத்துடன் .. உண்மையில் மனதுக்குள் 'அப்படித் தான்' நினைத்தேன் என்று கூறினேன்!

சிரித்த படியே…எல்லாம் இந்தக் கண்டறியாத குறுக்கு மூளையால தான் வந்தது என்று தனது தலையைத் தொட்டுக்  கா ட்டினான்!

இன்னொரு சிகரற்றைப்  பற்ற வைத்தபடி.. சூட்டி தனது கதையைக் கூறத் துவங்கினான்!

மச்சான் மனுசி தன்ர தாலிக்கொடியைக் கழட்டித் தந்தது இன்னும் கண்ணுக்குள்ளை நிக்குது என்ற படி.. அதைக் கொண்டு போய் ‘ஏஜென்சிக் காரனிட்டைக் குடுத்து.. ஒரு மாதிரி இங்கை வந்து சேர்ந்த பிறகு தான் தெரிஞ்சுது.. உலகம் எவ்வளவு ‘விரிஞ்சு போய்க் கிடக்குது' எண்டு!

நாங்க வந்த காலத்தில.. இப்பப் போல இல்லை மச்சான்! பரிசுக்குள்ளை தங்கிறது பெரிய கஷ்டம்! இரவில படுத்திட்டு, விடிய எழும்பிப் பாத்தா,அறை முழுக்கப் பெடியள் குறுக்கும்... நெடுக்குமாய்ப் படுத்திருப்பாங்கள்! எப்ப வந்து படுத்தாங்கள், எப்ப எழும்பி வெளியால போறாங்கள் எண்டு பிடிபடவே, எனக்குக் கொஞ்சக் காலமெடுத்திட்டுது!

மற்றவங்களைப் போல,, நானும் ஏதாவது வேலை செய்வமெண்டு கொஞ்ச நாளைக்கு வேலை செய்தால்.. தலையுக்குள்ளை ஒரே யோசனை ஓடிய படி இருக்கும்! இந்தப் போக்கிலை வேலை செய்து சம்பாதிச்சு, மனுசி பிள்ளையளைக் கூப்பிடுறதெண்டால், வயசு வட்டுக்கை போன பிறகு தான் நடக்கும் போல கிடந்தது!

"ஆனால், எங்களுக்கும் வேற வழியில்லைத் தானே.. சூட்டி! அகதியாய் வந்து போட்டு..பிரெஞ்சுக்காரர் மாதிரிச் சீவிக்க ஏலாது தானே!"

முன்ன வந்த பெடியள் குறுக்கு வழியால போய், இப்ப பெரிய ஆக்களா இருக்கினம்! நானும் ஒருத்தருக்கும் ‘பாதிப்பு' ஏற்படாத மாதிரி ஒரு குறுக்கு வழி கண்டு பிடிச்சன்! பிழைச்சுப் போச்சுது மச்சான்!

"அப்பிடி எண்ணத்தைத் தான் செய்தனீ, சூட்டி?"

இஞ்ச வேலை செய்யிற இடத்தில.கொஞ்ச நாளைக்கு ஒழுங்கா வேலை செய்த பிறகு... தொழிலாளிக்கு ஏதாவது ‘காயம்' எதுமேற்பட்டால், அது மாறிற வரைக்கும் சம்பளக்காசு குடுப்பினம்!  

பெயிண்ட் அடிக்கிற வேலை அல்லது கண்ணாடி துடைக்கிற வேலை அல்லது கட்டிடங்கள் கட்டிற இடங்களில 'முட்டாள்' வேலை மாதிரிக் கொஞ்சம் உயரத்தில ஏறி நிக்கிற வேலையாப் பார்க்கிறது… பிறகு வேலை செய்யிற நேரம்.. கொஞ்சம் மெதுவாய்க் காயம் படுகிற மாதிரி விழுகிறது..!

பிறகு ஆரும் ஒரு ‘அடையார்' டாக்குத்தராய்ப்  பாத்துக் ‘அடி' கொஞ்சம் பலம் தான் எண்ட மாதிரி.. ஒரு சேர்டிபிக்கேற் ஒண்டை எடுத்துக் குடுத்தால்… ஒரு மூண்டு மாதம் வரைக்கும் ‘சம்பளம்' விழும்!

"அப்ப… அந்த மூண்டு மாசத்துக்கும்.. வேற எங்கையாவது.. கைக்காசுக்கு வேலை செய்வியாக்கும்?

இல்லை மச்சான்.. எனக்குக் குதிரை எண்டா அந்த மாதிரி…!

எந்தக் குதிரை.. எந்த மண்ணில...என்ன கால  நிலையில … என்ன மாதிரி ஓடும் எண்டு அவ்வளவும் அத்து படி! இப்ப கூட.. நான் பாத்துக் கொண்டிருக்கிற பேப்பரை என்னெண்டு நினைச்சாய்?

(இன்னும் வரும்…..!)  

எழுதிச் செல்லும் விதியின் கரங்கள்-3 (இறுதிப் பாகம்) ஐப் பார்க்கப் பின்வரும் இணைப்பை அழுத்தவும்!

http://www.yarl.com/forum3/topic/159990-எழுதிச்-செல்லும்-விதியின்-கரங்கள்-3/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்படி சிலரைத்தெரியும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நடக்கும் வழியில் எதிர்ப்படும் பெண்களிடம் அந்த விலாசத் துண்டைக் காட்டிய படியே.. அவர்கள் காட்டும் திசையில் நடந்து கொண்டிருந்தேன்! எங்கிருந்து தான் ‘பிரெஞ்சு' மொழிக்கு இந்த ‘இனிமை' வந்ததோ என மனது சிந்தித்த படியே இருந்தது!

 

 

 

சரியான சுழியான இருப்பார் போலும்..

எனக்கே இப்பத்தான் இந்த வழி தெரிஞ்சுது..

நன்றிஅண்ணா:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடலும் இளமையானது போன்ற உணர்வும் கூட ஏற்பட.. அதிகாலையிலேயே எழுந்து அவனது விலாசத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டேன்!


நடக்கும் வழியில் எதிர்ப்படும் பெண்களிடம் அந்த விலாசத் துண்டைக் காட்டிய படியே[/quote]

இளமை ஊஞ்சல் ஆடும் பொழுதுதான் பெண்களிடம் விலாசம் கேட்பீங்கள் போலகிடக்கு ? தொடரட்டும் உங்கள் தேடல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.