Jump to content

எழுதிச் செல்லும் விதியின் கரங்கள்...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

030-1.jpg

 

 

வானம் கருக்கட்டத் தொடங்கியது!

ஒரு பிரசவத்துக்குத் தயாராகும் தாயின் முனகல்களைப் போன்று... மெல்லிய இடிச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின! வானத்திலிருந்து பூமியை நோக்கிய மின்னல்கள் கடல் நீரின் மேற்பரப்பில் பட்டுச் சைக்கிள் சக்கரங்களைப் போல உருளத் தொடங்கின!

'சூட்டி' தோளில் ஒரு அலவாங்கொன்றைச் சுமந்த படி கடற்கரையில் நடந்து வந்து கொண்டிருந்தான் !

கோவிலடிக் கேணியில் நீச்சல் பழகி, மழைக்காகக் கேணிக்கட்டில் ஏறி நின்ற எங்களுக்கு அவன் நடந்து வருவதைக் கண்டதும் எந்த விதமான ஆச்சரியமும் ஏற்படவில்லை! ஏனெனில் அவனது பட்டப் பெயரே 'மூளை சூட்டி".

அவனுக்கு அப்பா அம்மா வாய்த்த பெயர் 'பிறை சூடி'

என்னடா இந்தப் பேரைக் காவிக் கொண்டு சீவியம் முழுக்கத் திரிய என்னால முடியாது! அதால என்ர பேரை மாத்தப் போறன் என்று ஒரு நாள் அபிப்பிராயம் கேட்டவனுக்கு, நாங்களும் பல பெயர்களைப் பரிந்துரை செய்ய... டேய்.. நீங்கள் சொல்லுற பேரெல்லாம் இருக்கிறதை விடவும் மோசமாய்க் கிடக்கு எண்டு சொன்னவன் தானே 'சூட்டி' என்று தனது பெயரை மாற்றிக்கொண்டான்!

சரி.. இந்த இடிமுழக்கத்துக்குள்ள ஏன் கடலுக்குள்ள அலவாங்கோட இறங்கிறாய்?

டேய்.. மூளையைப் பாவியுங்கடா.. எண்டைக்குத் தான் திருந்தப் போறீங்களோ என்ற படி... இடி முழக்கத்துக்குப் 'பெரு நண்டு' வளையின்ர  வாசலுக்கு வந்து குந்தியிருக்கும்! பிறகென்ன.. அலவாங்கால கல்லைக் கிளப்ப.. அண்ணை என்னிட்ட அடைக்கலம் கேப்பார்! நீங்கெல்லாம் 'கடுக்காய்' பொறுகிறதுதுக்குத்  தான் சரி.. எண்டு கடலுக்குள் இறங்கியவன் பத்தே நிமிடத்தில் இரண்டு பெரு நண்டுகளுடன் கரைக்கு வந்தான்!

அன்றிலிருந்து... அவனிடம்  எங்களுக்கு ஒரு தனி மதிப்பு உருவாகியது என்னவோ உண்மை தான்!

௦௦௦௦௦                   ௦௦௦௦௦௦                    ௦௦௦௦௦௦                        ௦௦௦௦௦௦                        ௦௦௦௦௦௦       

                

இது நடந்து இருபது வருடங்களின் பின்னர் 'காலம்' எங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திசைக்குத் துரத்தி விட்டது!

 

ஒரு சலவை இயந்திரமொன்றினுள் போட்டுத் துவைப்பது போல ஒவ்வொருவரையும் உருட்டிப் பிரட்டி, கொஞ்ச நஞ்சமிருந்த மண் வாடையையும் அகற்றி...சாயம் போன துணிகளாக ஆக்கி விட்டது!

ஒவ்வொருவருக்கும் புதிய விலாசங்கள்... புதிய சொந்தங்கள்..புதிய கோலங்கள் !

கால தேவனின் காற்று  எமது தலைமுறைக் காலத்தில் கொஞ்சம் புயலாகவே வீசி விட்டது!

பிறப்பால் சைவம் எனினும் எங்களிடம் மற்ற மதங்களை அணைக்கும் ஒரு பழக்கம் ஆழமாக வேரூண்டியுள்ளதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்! இது எதனால் ஏற்பட்டது என்பதை ஆராய்வதை விடவும்,,தொடர் இழப்புக்களைத் தொடர்ந்து சந்திப்பதானால் 'இந்த மனநிலை' எமக்கு ஏற்பட்டதோ என்று நினைப்பதுண்டு! ஒரு வேளை. நாம் தொலைத்து விட்ட 'புத்த மதத்தை' மீண்டும் பின்பற்றத் தொடங்கியிருந்தால்.. பல உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்கலாமோ எனச் சில வேளைகளில் எண்ணுவதுண்டு!

இப்படியான ஒரு நம்பிக்கை தான் என்னை 'பிரான்சிலுள்ள' லூர்து மாதா கோவில் வரை அழைத்துச் சென்றது!

கடுகதிப் புகையிரத்திலிருந்து இறங்கியதும், புகையிரத மேடையில் சிலர் இருசக்கர நாற்காலி வண்டிகளுடன் காவல் நின்றதும்.. உலகின் ஏதோ மூலையிலிருந்து வருகின்ற ஒருவரைத் தங்களது இரு சக்கர நாற்காலி வண்டிகளில் ஏற்றிய படி.. மேடும் பள்ளமும் நிறைந்த கிராமத்தின் மூலை முடுக்கெல்லாம் காவிக் கொண்டு திரிந்தது என்னை உண்மையில் கவர்ந்தது! கோவிலிலுள்ள உண்டியல்களின் வாய்கள் பெரிதாக இருந்தும்..அவற்றின் வயிறுகள் நிறைந்து, உதடுகளின் ஓரங்களில் வெளிநாட்டு நோட்டுக்கள் தேடுவாரற்றுத் தொங்கிக் கொண்டிருந்தன! ஏதோ ஒரு விதமான 'அமைதி' என்னை ஆட்கொள்ள... கோவிலின் வெளிப் பிரவாகத்தில் நடந்து கொண்டிருந்தேன்! யேசுநாதர் இழுத்துச் செல்லப் படுவது முதல் சிலுவையிலறையப் படுவது வரை மிகவும் தத்ரூபமாகச் சிலைகள் செதுக்கப்பட்டிருந்தன ! இறுதியில் சில பளிங்குப் படிக்கட்டுகள் இருந்தன! அவற்றின் மீது முழங்காலால் நடந்து மேலே செல்ல வேண்டும்! என்னைக் கேட்காமலே கால்கள் படிக்கட்டுகளில் முழங்கால்களால் நடக்கத் தொடங்கி விட்டன!

திடீரென பிரகாரத்தின் அமைதியைக் கிழித்த படி... டேய்.. என்று மிகவும் பரிச்சயமான இளமைக் குரல்.. கொஞ்சம் 'ஸ்டீரியோ' சத்தத்தில் கேட்டது!

௦௦௦௦௦                   ௦௦௦௦௦௦                    ௦௦௦௦௦௦                        ௦௦௦௦௦௦                        ௦௦௦௦௦௦     

                 

திரும்பிப் பார்த்ததும் கொஞ்சம் பரிச்சயமான முகத்துடன், பாதி முகம் வெள்ளையும் கறுப்பும் கலந்த தாடிக்குள் மறைந்த படியிருக்க... இரண்டு கைத்தடிகள் தோள்களுக்கு ஊன்று கொடுத்தபடியிருக்க ஒருவன் நின்று கொண்டிருந்தான்! முகம் தெரிந்தது போலவும் .. தெரியாது போலவும் இருக்க...படிக்கட்டுகளுக்கு மேலே சென்று அவனை உற்றுப் பார்த்தேன்! டேய்..அம்மன் கோயிலடியையும் மறந்திட்டியா.. என்று அவன் கேட்க.. என்னையறியாமலே 'டேய்.. சூட்டி' என்று உரக்கக் கத்தினேன்!

அவனும் படிக்கட்டுக்களில் ... இரு கட்டைகளையும் ஊன்றியபடியே என்னை நோக்கி நடந்து வர, இருவருமே ஒருவரையொருவர் கட்டிப்பிடித படியே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தோம்!

டேய்.. என்னடா  இந்தக் கோலம் ?

சரி முதலில 'மாதாவைப் பாப்பம்! பிறகு என்ர கதையைச் சொல்லுறன் எண்டவன் கோவிலுக்குள் என்னை அழைத்துச் சென்றான்!

மாதாவின் சொரூபம் 'தங்கத்தினால்' செய்யப்பட்டிருக்க வேண்டும்! தக..தகவென்று பளபளத்துக் கொண்டிருந்தது!

புதிதாக வாங்கியிருந்த 'நிக்கன்' கமரா.. இடுப்பில் தொங்கிய படி.. படத்தை எடடா ...எடடா என்று.. என்னிடம் சொல்ல.. சில படங்களைக் 'கிளிக்' செய்து விட்டேன்!

டேய்.. படச்சுருளை எடுத்துப் பூவலுக்குள்ள போட்டுவிடு... மாதாவின்ர படம் எல்லாருக்கும் வராது..சில பேருக்கு வெறும் கறுப்புப் படமா வரும். பிறகு உனக்குக் கவலையா இருக்கும் எண்டு சொல்ல..எனக்கு மெல்லிசாக நடுக்கம் ஏற்பட்டது மாதிரி இருந்தது!

இல்லையடா..  இதில 'போதோ'வில எடுத்த கொஞ்சப் படங்களும் இருக்கு! மாதா என்னைத் தண்டிக்க மாட்டா .. என்று கூறிய படி..உன்ர கதையைச் சொல்லு என்று கேட்க.. மச்சான்.. கிட்டத் தான் இருக்கிறன். நீயும் பயணத்தால வந்தனீ..களைச்சுப் போய் இருப்பாய்..என்ர கதை எங்கையும் ஓடிப் போகாது என்று கூறியபடி ஒரு சிகரட் பக்கற்றில் அவன் தங்கியிருக்கும் இடத்தின் விலாசத்தை எழுதி என்னிடம் தந்த படியே.. எட்டு மணிக்கு முதல் வரப்பார் என்று கூறிய படியே விடை பெற்றான்!

(இன்னும் ஒரு பகுதி வரும்!)

௦௦௦௦௦                   ௦௦௦௦௦௦                    ௦௦௦௦௦௦                        ௦௦௦௦௦௦                        ௦௦௦௦௦௦               

எழுதிச் செல்லும் விதியின் கரங்கள் - பகுதி 2 ஐப் பார்க்கப் பின்வரும் இணைப்பில் அழுத்தவும்!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

   நீண்ட நாட்களின் பின் உங்கள் பதிவு ..........தொடருங்கள் ஆவலாக உள்ளோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லூர்து அற்புதமான ஒரு புனிதஸ்தலம். மனதைப் புதுப்பித்துக் கொண்டு வரக்கூடியதோர் ஆலயம்.

ஒரு தகவல்: அங்குள்ள காரியாலயத்தில் ஆறேலு பேர் சேர்ந்து லூர்தின் வரலாறைப் பார்க்கவேண்டும் எனக் கேட்டால் அவர்கள் அத் திரைப்படத்தைத் தமிழில் ஒளிபரப்புவார்கள். 15/20 நிமிடப் படம்....! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின்பு உங்கள் கதை ,வெகு சீக்கிரம் தொடருங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

   நீண்ட நாட்களின் பின் உங்கள் பதிவு ..........தொடருங்கள் ஆவலாக உள்ளோம். 

வணக்கம் நிலாக்கா... அன்று போல இன்றும்.. உங்கள் ஊக்குவிப்பு, எனது எழுத்தை நிச்சயம் மெருகு படுத்தும்! நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லூர்து அற்புதமான ஒரு புனிதஸ்தலம். மனதைப் புதுப்பித்துக் கொண்டு வரக்கூடியதோர் ஆலயம்.

ஒரு தகவல்: அங்குள்ள காரியாலயத்தில் ஆறேலு பேர் சேர்ந்து லூர்தின் வரலாறைப் பார்க்கவேண்டும் எனக் கேட்டால் அவர்கள் அத் திரைப்படத்தைத் தமிழில் ஒளிபரப்புவார்கள். 15/20 நிமிடப் படம்....! :)

பிற தலங்களில் கிடைக்காத ஒரு விதமான 'அமைதி' இங்கு எனக்கு ஏற்பட்டது! 'குறிஞ்சி' நிலத்தின் சூழ்நிலையால் மட்டும் அது ஏற்பட்டு விடவில்லை என எண்ணுகின்றேன்! வெறும் 'பொருளாதார ரீதியான' உலகத்தைத் தாண்டி...அதற்கப்பாலும் ஒரு அழகிய உலகம் உண்டு என்ற கருத்தை எனது மனதில் ஆழப் புதைத்து விட்ட ஒரு இடமாக இந்தத் தலம் அமைந்து விட்டது!

வருகைக்கு நன்றி...சுவியர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதமும் 

முடிந்தால்  கிறிஸ்மஸ் நாளிலும்  போகுமிடம்

 

அந்த அமைதியும் இயற்கையும்  அங்கு நடமாடும் மனிதர்களும் 

வரலாற்றுச்சாட்சிகளும் பிடிக்கும்

மக்களுக்கும் ஒரு ஒழுங்கப்பாதையைக்காட்ட முயல்வதும் ஒரு காரணம்...

 

உங்கள் எழுத்துநடைபற்றி சொல்லவேண்டியதில்லை

அந்த இடத்தை இதற்கு மேல் எம் கண்முன் நிறுத்த உங்களால் மட்டுமே முடியும்

 

அப்படியே சிறு கோபம்

எனக்கும் ஒரு காட்சி தரக்கூடாதா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் உங்கள் எழுத்தின் உவமானங்கள் மிக நன்றாக உள்ளன. உதாரணமாக  ஒரு பிரசவத்திற்கு தயாராகும் தாயின்  முனகல்,  சலவை இயந்திரத்தில்  துவைக்கப்பட்ட சாயமிழந்த துணி,  மனதுக்கு இதமான மண்ணின் சுவாசம் எப்பொழுதும்  உங்கள் எழுத்தில்  சுவாசிப்பது சுகமான அனுபவம். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும்

வருகைக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி.. அபராஜிதன்!

நீண்ட நாட்களின் பின்பு உங்கள் கதை ,வெகு சீக்கிரம் தொடருங்கள்....

நன்றி.. புத்தன்... உங்களைப்போல நாலு நல்ல மனுசர் இருக்கிறபடியால..யாழில நம்மட காலமும் பரவாயில்லாமல் போகுது! :lol:

தொடருங்கள் புங்கையூரன் 

நன்றி...வாத்தியார்!

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதமும் 

முடிந்தால்  கிறிஸ்மஸ் நாளிலும்  போகுமிடம்

 

அந்த அமைதியும் இயற்கையும்  அங்கு நடமாடும் மனிதர்களும் 

வரலாற்றுச்சாட்சிகளும் பிடிக்கும்

மக்களுக்கும் ஒரு ஒழுங்கப்பாதையைக்காட்ட முயல்வதும் ஒரு காரணம்...

 

உங்கள் எழுத்துநடைபற்றி சொல்லவேண்டியதில்லை

அந்த இடத்தை இதற்கு மேல் எம் கண்முன் நிறுத்த உங்களால் மட்டுமே முடியும்

 

அப்படியே சிறு கோபம்

எனக்கும் ஒரு காட்சி தரக்கூடாதா??

வருகைக்கு நன்றி...விசுகர்!

எனக்கும் அங்கு மீண்டுமொரு முறை செல்ல வேண்டும் என்ற உணர்வு அடிக்கடி வந்து போகும்!

இருப்பினும்.. பயணங்களைப் பொறுத்த வரையில் முடிந்து போன அத்தியாயங்களைத் திரும்பப் படிப்பதை விடவும்... புதிய அத்தியாயங்களைப் படிப்பதில் 'ஆர்வம்' அதிகம்!

தேரில் சில மாறுதல்கள் இருப்பினும்... போன வருடம் நடந்த தேர்த்திருவிழாவைத் திரும்ப.. இந்த வருடம் பார்ப்பதில்..எனக்கு அவ்வளவு 'திரில்' இருப்பதில்லை!

நல்லூர்த் திருவிழா மட்டும் இதற்கு விதி விலக்கு!:lol:

உங்கள் கருத்து...எப்போதும் எனக்குப்..'புதுப் பனையிலை இறக்கின கள்ளு' மாதிரி ஒரு வித்தியாசமான போதையைத் தருவதுண்டு!

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.. விசுகர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் உங்கள் எழுத்தின் உவமானங்கள் மிக நன்றாக உள்ளன. உதாரணமாக  ஒரு பிரசவத்திற்கு தயாராகும் தாயின்  முனகல்,  சலவை இயந்திரத்தில்  துவைக்கப்பட்ட சாயமிழந்த துணி,  மனதுக்கு இதமான மண்ணின் சுவாசம் எப்பொழுதும்  உங்கள் எழுத்தில்  சுவாசிப்பது சுகமான அனுபவம். பாராட்டுக்கள்.

வணக்கம்..காவலூரின் கண்மணி!

தமிழை முறையாகக் கற்றிருக்க வேண்டும் என்ற ஏக்கம் என்னிடம் எப்போதுமே உண்டு !

எழுதிச் செல்லுகின்ற விதியின் கரங்கள்...நான் வாழ நினைத்த எனது வாழ்க்கையை வேறு விதமாக எழுதிச் செல்லுகின்றன!

இளமை வயதிலேயே.. புழுதியின் வாசம் தொலைத்து.. அந்நிய தேசங்கள் துப்புகின்ற 'புழுதியிலும்', அந்தத் தேசங்களின் இயந்திரங்களின் கட்டமைப்புக்கள் கக்கும்.. கரியமில வாயுவின் நஞ்சிலும்....துருவப் பனியிலும் வெடவெடத்துப் போய்..இப்போது ...மானுடமே தொட்டுக் கூடப் பார்க்காத   வெட்ட வெளிகள் நிறைந்த தேசமொன்றின் மூலையில் ஒதுங்கியிருக்கிறேன்!

இருப்பினும் எனது மண்ணின் 'புழுதி வாசமும்' ... அங்கு பிறந்ததனால்.. இலவசமாக என்னுடன்  இணைந்த தமிழும் என்னை விட்டுவிடுவதாக இல்லை!

உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களும்... விமரிசனங்களும்... ஊக்கங்களும் .. எனது தாகத்தை.. எப்போதும் அழிந்து போகாதவாறு, நிச்சயம் பாதுகாத்து வைத்திருக்கும் என்னும் நம்பிக்கையிலேயே.. ஒவ்வொரு நாளும்  'யாழுக்கு' ஓடிவருகிறேன்!

நன்றி!.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லூர்து மாதாவை, தரிசித்த பின்.... எமது உடலில், வாழ்க்கையில்... ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை அனுபவ பூர்வமாக, உணர்ந்துள்ளேன்.
அதுகும்.... அதிகாலையில் அங்குள்ள குளிர்ந்த நீரில், குளிப்பது மிகப் பெரிய சுக அனுபவம்.
இந்த மாதாவை தரிசிப்பதற்கென்றே.... அமெரிக்காவிலிருந்து, அவுஸ்திரேலியா வரை பலர் நேர்த்தி வைத்து வருகின்றார்கள்.
ஜேர்மனியில் உள்ள பெரிய நகரங்களிலிருந்தும், விசேட பேருந்துகள், லூர்து மாதா கோவிலை நோக்கி பயணிக்கும்.
பகிர்விற்கு நன்றி, புங்க்கையூரான். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.