Jump to content

எனக்குப் பிடித்த பாடல்.


Recommended Posts

எனக்குப் பிடித்த பாடல்.
 
ஏற்கனவே யாழில் இதற்காக எத்தனையோ திரிகள் இருந்தாலும் இத்திரியை நான் திறப்பதன் காரணம் இத்திரியில் சிவாஜியா, எம் ஜி ஆரா, கமலா, ரஜனியா, விஜயா, அஜித்தா, இளையராஜாவா, கே வி மகாதேவனா, ரகுமானா - எந்த பிரச்சனையும் இல்லை. இங்கு மொழிகூட தடையில்லை பாடல்கள் பிடித்திருந்தால் இணையுங்கள். ஆனால் ஏன்பிடித்தது என்றும் சில வரிகளை பதிவிடுங்கள். முடிந்தால் இசைஅமைப்பாளர், பாடலாசிரியர, பாடியோர், படம், இயக்குநர் பெயர்களையும் பதிவிடுங்கள். அல்லது பாடலுடன் சம்பந்தப்பட்ட ஏதாவது தகவல்களை பரிமாறுங்கள். வெறுமனே பாடல்களை கேட்பதை விடுத்து கிட்னியையும் வளர்க்கலாம்.
 
 
நான் இளையராஜாவின் பரம ரசிகன் என்றாலும் எனது ரசனையை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்க விரும்பவில்லை.
 
இத்திரி றேடியோவில் நீங்கள் கேட்டவை போலிருக்கட்டும் (அதாவது சாம்பாறாக - மணம்கமழும் கலவை + கொஞ்சம் அறிவுக்கு சில தகவல்கள்). 
 
எனது முதல் பதிவாக
 
பாடல் - இன்னும் கொஞ்ச நேரம்
இசை - ஏ ஆர் ரகுமான் 
படம் - மரியான்
பாடல்வரிகள் - கபிலன்
பாடியவர்கள் - விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன்
ஒளிப்பதிவு - மார்க் கொனின்ச்
இயக்கம் - பரத் பாலா
 
ஏன் பிடித்தது - மனதிற்குள் புகுந்து மறுபடியும் "அந்த" பதின்ம வயதில் என்னை வாழ வைத்தது போன்றிருந்தது. இசை பிரமாதம், கபிலனின் வரிகள் மிக எளிமையாகவும்  யதார்த்தத்துடன ஒன்றியதாகவும் இருக்கின்றது. ஆரம்ப கால வைரமுத்துவை ஞாபகப்படுத்துகின்றது.
 
 இன்று வரை ஒளிப்பதிவாளர் இயக்குநர் பரத்பாலா என்றே நினைத்திருந்தேன். நான் நினைத்ததிற்கும் வலுவான காரணம் இருந்தது. இயக்குநர் பரத்பாலா ஒரு புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர். ரகுமானின் வந்தே மாதரம் இசை வீடியோவும் இவராலேயே செய்யப்பட்து. அது மட்டுமில்லை நாங்கள் ரிவியில் பார்க்கும் இந்திய சுற்றுலா விளம்பரங்கள் “Incredible India” பலவும் இவரால் எடுக்கப்பட்டவையே.  ஆனால் இவர் இயக்குனர், தயாரிப்பாளர் மட்டுமே என்பது இப்பதான் தெரியவந்தது. விக்கி ஐயாதான் (முதல்வர் இல்லை நம்ம தோஸ்து Wiki) சொன்னார் மார்க் கொனின்ச் ஒளிப்பதிவாளர் என்று. படம் முழுவதுமே ஒளிப்பதிவு முதல்தரம், பாடலில் கேட்கவா வேண்டும். ஒப்பனைகளற்ற அந்த முகங்கள் அதனூடாக வெளிப்படும் உணர்வுகள். ஒவ்வொரு பிரேமும் என்ன அழகு.
 
ஆனால் இன்னுமிரு விடயங்கள். முதலாவது ஏன் பரத் பாலா எப்பவுமே கமராவுடன் கமராவுக்கு போஸ் குடுக்கிறார் என்பது. இரண்டாவது இவர் ஒளிப்பதிவிற்கு கொடுக்கும் முக்கியத்தை திரைப்படத்தின் மற்ற தொழில்துறைகளிற்கு தனது திரைப்படத்தில் கொடுக்க தவறியிருந்தார் - விளைவு : மரியானின் தோல்வி. ஒளிப்பதிவிற்காகவும் நடிப்பிற்காகவும் இசைக்காகவும் ஒரு படம் வெற்றி பெறமுடியாது.
 
முடிந்தால் 1080p, Fullscreenஇல் பாருங்கள்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
 
 
 
படம்: உத்தமபுத்திரன்(சிவாஜி)
இசை: ஜி.ராமனாதன்
பாடியவர்கள்: பாலசரஸ்வதி - கோமளா

 

Link to comment
Share on other sites

இப்பாடல்கள் 50களில் உள்ளவர்களின் மனதை விட்டகலாதவை.
 
நேரம் கிடைக்கும் போதெல்லாம் முதலில் இப்படப்பாடல்களை நல்ல தரத்திலான வீடியோவை பதிவேற்ற முயற்சி செய்கின்றேன். பின்னர் இதிலுள்ள முக்கிய நபர் ஒருவர் பற்றி வார இறுதியில் பகிர்கின்றேன்.
 
அத்தனையும் முத்துக்கள் எதை முதலில் பகிர்வது.
 
பாடல் - Mere Sapno Ki Rani Kab Aayegi Tu
படம் - ஆராதனா
இசை - SD பர்மன்
பாடியவர்கள் - கிஷோக்குமார்
நடிகர்கள் - ராஜேஷ்கன்னா + ஷர்மிலா தாகூர்
இயக்கம் - ஷக்தி சமந்தா
 
Link to comment
Share on other sites

இசை - SD பர்மன்
 
21osy9w.jpg
 
இங்கு இவரைப் பற்றிய சில குறிப்புகளைத்தான் வார இறுதியில் பகிர உள்ளேன். இவர் பற்றிய பரிச்சயம் ஏற்கனவே உங்களுக்கிருந்தால் மேலும் வாசித்து உங்கள் பொன்னான நேரத்தை மண்ணாக்காதீர்கள்.
 
சிறுவயதில் சும்மா பொழுது போக்காக பாடல் கேட்ட காலமது. ஆகா ரி.எம்.எஸ் இன் குரலையும் கண்ணதாசனின் வரிகளையும் கூரந்து கேட்டுக் கொண்டிருந்த எனக்குள்ளும் ஒரு பிரளயம், புரட்சி நடந்தேறியது. ஆம் 1976தான் அது - இளையராஜா எனும் எரிமலை புகையத் தொடங்காமலே வெடித்துப் பிரளயமானது. இது வரையில் பாடலாசிரியரதான் ஒரு பாடலின் தாய் பாடகர்தான் தகப்பன் என்றிருந்த எனது எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்துப் போட்டிருந்தது அந்தஅக்கினியின் பிரவாகம். 
 
ஆகா, தப்புப் பண்ணீட்டமே என்றது மனம். ஒரு பாடலின் தாய், தந்தை, சிற்பி, பிரமா எல்லாமே இசையமைப்பாளர்தான். மற்றவர்கள் அவ்விசையெனும் சிற்பத்திற்கு போடப்படும் அணிகலங்கள் என்று அந்த பதின்ம வயதின் ஆரம்பத்தில் சம்மட்டியால் ஓங்கி மண்டையில் அடித்துப் பதியவைத்தது ராஜாவின் வருகை. இதன் பின்னர்தான் எம்.எஸ்.வி, முதல் கே.வி. மகாதேவன்வரை அறிமுகமானார்கள். ஒவ்வோரு பாடலுக்கும் யார் இசையென்று தேடிய காலமது. இந்திய வானொலி உதவிக்கு வராது, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமழ்சேவை 2, ஆசிய சேவைதான் இசையமைப்பாளரின் பெயர் சொல்லும் ஒரே வானொலி.
 
அப்பாடா!  இவ்வளவுதான் இசைபற்றிய எனது அறிவு. எனக்கு எந்த இசைக்கருவிகளையும் இசைக்கத் தெரியாது. சாஸ்திரீக, கர்நாடக இசை அறிவும் சுத்தம். ஆனால் இதுவே எனது பலமும் - என் ரசனையை அறிவு கட்டுப்படுத்தாது. பிடித்தால் ரசிப்பேன், பிடிக்காவிட்டால் விலகி விடலாம் - சங்கராபரணம் போல் சிறந்த வேறு பாடல்கள் இன்றைய சினிமாவில்உண்டா என்றெல்லாம் பீலா விடத் தேவையில்லை. பிடித்ததை ரசித்தேன், ரசித்ததைப் பகிர்கின்றேன்.
 
SD பர்மன் பற்றிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டுள்ளேன். வார இறுதிக்குள் அவற்றை உங்களுடன் பகிரலாம்.
 
அதுவரைக்கும் இன்னொரு பாடல்.
 
 
பாடல் - Teri Bindiya Re
பாடலாசிரியர் - தெரிந்து என்ன பண்ணப்போறம். வரிகள் புரியவா போகுது. இருந்தாலும் அறிவை வளர்க்க - Majrooh Sultanpuri
படம் - அபிமான்
இசை - SD பர்மன்
பாடகர்கள் - முகமட் ராபி + லதா மங்கேஸ்கர்
 
இங்கு இன்னுமொரு சுவாரசியமான சம்பவம் - இப்பாடலில் நடிக்கும்  Amitabh Bachchan, Jaya Bhaduri கணவன் மனைவி. காதலர்களாக ஏற்கனவே இருந்தாலும் இப்படத்தின் பின்னரே திருமணம் செய்தனர். ஆனால் 1973 இலிருந்து இன்றுவரை இணை பிரியாமல் வாழ்கின்றனர். வாழ்த்துவோம்.
 
 
Link to comment
Share on other sites

இன்னுமொரு பாடல்.
 
பாடல் - aaj madhosh hua jaye re
படம் - Sharmilee
இசை - SD பர்மன்
பாடியவர்கள் - கிஷோக்குமார் லதா மங்கேஷ்கர்
நடிகர்கள் - Shashi Kapoor & Rakhee
இயக்கம் -  Sameer Ganguly
 
Link to comment
Share on other sites

ஒரு இளவரசன் அரசனாகிறான்.  
S. D. பர்மன்
 
2qcnj0h.png
 
எனக்கு எப்ப ஹிந்தி பாடல்களைக் கேட்டாலும் பசிக்கும். காரணம் ஹிந்தி பாடல்களை மத்தியான நேரம்தான் தமிழ்சேவை 2 ஒலிபரப்பும். இருந்தாலும் இப்பாடல்களைக் கேட்கும்போது பக்கத்து வீட்டு பரிமளமும் கண்முன் தெரியுதே - மறக்க முடியாத நினைவுகள்.
 
1 October 1906இல் பிறந்த இவரது இயற்பெயர் சச்சின் தேவ் பர்மன். இவர் திரிபுர மகாராஜா Ishanachandra Manikya Dev Burman  இன் 9 பிள்ளைகளில் இளைய ஆண்மகன். திரிபுர ராஜாங்கம் இன்றைய பங்காளதேசத்தில் உள்ளது. இவரது தாயாரும் மணிப்பூர் மகாராஜாவின் மகள் (Nirupama Devi). 
 
2wqhdn5.jpg
 
Tripura,Maharaja's Palace
 
கல்கத்தாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் அக்காலத்திலேயே பிஏ, எம்ஏ படித்து பட்டம் பெற்றிருந்த  இவர் ஒரு வானொலிப் பாடகனாக தனது வாழ்கையை ஆரம்பித்திருந்தாலும் இசை மேல் உள்ள ஆர்வத்தால் பல பாடல்களிற்கு இசையமைக்கவும் ஆரம்பித்திருந்தார். 1932 இல் வெளிவந்த இவராவது முதலாவது கிளாசிக்கல் ஆல்பம் பலரக மனிதர்களையும் கவரவே இசையமைப்பாளராக அங்கீகாரம் பெறுகின்றார். ஆனாலும் இவரது அங்கீகாரமானது இவரது குரலுடன் மட்டுப்படுத்தப் பட்டதாகவே இருந்தது. இவர் தனது ஆரம்ப இசையினைத் தனது தந்தையாரிடமிருந்தே கற்றிருந்தார். ஆனாலும் இவருக்குரிய அங்கீகாரமானது 1934 இல் விஜயலட்சுமி பண்டிட் (நேருவின் சகோதரி மட்டுமன்றி ஒரு புகழ் பெற்ற ராஜதந்திரியும் அரசியல்வாதியுமாவார்) தலைமையில் நடைபெற்ற அகில இந்திய சங்கீத மாநாட்டில், 1935இல் ரவீன்திரநாத் தாகூரின் தலைமையில் கல்கத்தாவிலும் கிடைத்தது. 1937களில் நாடகங்களிற்கு இசையமைக்கத் தொடங்கிய இவர் தனது மாணவியை 1938இல் திருமணம் செய்திருந்தார். அரச குடும்பத்தில் திருமணம் செய்யாமையும், ஏற்கனவே ராஜ குடும்ப மரபுகளை ஏற்றுக்கொள்ளாத குணத்தாலும் அங்கிருந்து வெளியேறி கல்கத்தாவில் பாடகியான தனது மனைவியுடன் (மீரா தாஸ் குப்தா) குடியேறினார். அங்குதான் இவர்களது ஒரே மகன் Rahul Dev Burman பிறந்தார். தயவு செய்து இப் பெயரை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டாம். இவர் பற்றிய பதிவும் ஒரு நாள் வரும்.
 
இவர் 1940 இல் "Nirbashan" எனும் வங்காள திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தாலும் அவருக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். 1944இல் பம்பாய்க்கு இடம்பெயர்ந்தாலும் 1946இலேயேதான் இவருக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. ஆனாலும் 1947இல்தான் இவர் பிரபல்யமானார். கதாநாயர்களின் முழு கட்டுப்பாட்டில் இருந்த ஹிந்தி திரையுலகத்தில் அசோக்குமார் படங்களில் மட்டுமே இசை அமைக்க இவரால் முடிந்தது. ஹிந்தி திரையுலகத்தினர் சிலருடன் ஏற்பட்ட சர்ச்சையால் மறுபடியும் கல்கத்தாவிற்கு ரயிலேற இருந்தவரை நிறுத்திய பெருமை தேவ் ஆனந்தயே சேரும். பின்னர் தேவ் ஆனந்தின் படங்களிற்கு இசையமைக்க தொடங்கிய இவர் தேவ் ஆனந்துடன் கடைசிவரை இணை பிரியாதிருந்தார்.  இக் காலகட்டத்தில்தான் இவரது இசை கதாநாயர்கள், மாநில எல்லை, மொழிகள் ஏன் நாட்டு எல்லைகளையும் தாண்டி வியாபிக்கத் தொடங்கி இருந்தது.
 
இக்காலங்களில் இசையமைப்பாளர் பெரிதா பாடகர் பெரிதா எனும் பிரச்சனை உருவாகவே லதா மங்கேஷ்கரை விலத்தி அவரின் தங்கை ஆஷா போஷலேயை தனது பாடகியாக்கியிருந்தார். என்ன ஆஷா போஷலே இவரது மருமகளானதும் ஒரு சுவாரசியமான கதைதான். 1960களின் பின்னர் இவரது உடல்நிலை காரணமாக பலவிதத்திலும் இவரது ஒரே மகன்தான் உதவியாக இருந்தார்.
 
இக்கால கட்டத்தில்தான் ஆராதனா, அபிமான் போன்ற படங்களும் எங்களுக்கு அறிமுகமாகியது. இப்பாடல்களை முணுமுனுக்காத உதடுகளே இலங்கையிலும் இல்லை என்று சொல்லலாம். இங்கு முக்கியமான இன்னொரு விடயம் "ஆராதனா" படத்தின் இமாலய வெற்றி தமிழ்நாட்டையும் விட்டு வைக்கவில்லை. "சிவகாமியின் செல்வன்" எனும் பெயரில் தமிழிலும் மறுவடிவம் எடுத்தது. சிவாஜி, வாணிஸ்ரீ நடிக்க வெளியான இப்படத்தின் பாடல்களும் தமிழ் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம்தான். 
உங்களுக்காக ஒரு சாம்பிள்.
 
பாடல் - உள்ளம் இரண்டு
இசை - எம் எஸ் விஸ்வநாதன்
படம் - சிவகாமியின் செல்வன்
பாடல்வரிகள் - புலமைப் பித்தன்
பாடியவர்கள் - ரி எம் சவுந்தர்ராஜன்
நடிகர்கள் - சிவாஜி, வாணிஸ்ரீ
ஒளிப்பதிவு - மஸ்தான்
இயக்கம் - சி வி ராஜேந்திரன்
 
நல்ல தரத்திலான வீடியோ கிடைக்கவில்லை.
 
 
இவர் 100இற்கும் மேற்பட்ட படங்களிற்கு இசை அமைத்திருந்தார். இவரது இசை இந்தியாவின் சினிமா இசையில் தவிர்க்க முடியாததொன்று. இவரைப்பற்றி இளையராஜா இவ்வாறு குறிப்பிடுகின்றார் - இவரது காலடியில் வாழ்நாள் முழுவதும் இருக்கலாம், இவரது இசையின் தாக்கம் எனது இசையில் என்றும் இருக்கும் என்றார்.
 
காதுகளால் இவரது இசையை ரசித்த எமக்கு அப்பாடல் வரிகள் இன்றும் புரியாதது வருத்தம்தான். 1960களின் பின்னர் இவரது உடல்நிலை காரணமாக பலவிதத்திலும் இவரது  மகன்தான் உதவியாக இருந்தார்.
 
மறைவு - 31 October 1975
 
இளவரசனாகப் பிறந்த இந்த பர்மன் நாட்டை ஆளாவிட்டாலும் கோடானு கோடி மனங்களில் இசை அரசனாக இன்றும் வீற்றிருக்கின்றான்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக இருக்கின்றன பாடல்கள். தொடருங்கள் ஜீவன் சிவா

Link to comment
Share on other sites

அருமையாக இருக்கின்றன பாடல்கள். தொடருங்கள் ஜீவன் சிவா

நன்றி உங்களின் ஊக்கத்திற்கு

Link to comment
Share on other sites

மைக்கல் ஜக்சன்
 
எனது வயதில் உள்ளவர்களின் அபிமான நட்சத்திரம். 1979 என்று நினைக்கின்றேன் எனது அண்ணர் ஊர் வந்தபோது Off the Wall அல்பம் (கசற்) வாங்கி வந்திருந்தார். அக்காலத்தில் ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒரு தடவை இலங்கை வருவார். ஆரம்பத்தில் ABBA, Boney M, Lionel Richie, Kenny Rogers .... போன்றோரை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கே உரியது. டேய் ஜீவா சும்மா பாட்டைக் கேட்டு மண்டையை மண்டையை ஆட்டாமல் பாடலின் கருத்தை கேளடா என்பார். நானும் இல்லையண்ணை எனக்கு புரியவில்லை என்பேன். பக்கத்தில் இருந்து ஒவ்வொரு வசனமாக சொல்லுவார், அர்த்தத்தையும் புரிய வைப்பார். நாளடைவில் என்ன யோசித்தாரோ தெரியவில்லை கசற் வாங்கும் போது பாடல்வரிகள் பதிக்கப்பட்ட கசற்தான் வேண்டி வருவார். இப்படித்தான் எனது ஆங்கில பாடல்களின் இரசனை ஆரம்பமானது. 
 
மைக்கல் ஜக்சனின் நினைவு தினத்தை கருத்திலெடுத்து (25. juni 2015) அவரது பாடல்களை பதியவுள்ளேன். ஆனாலும் எனக்கு ஆங்கிலப் பாடல்களை அறிமுகப்படுத்திய எனது அண்ணா 1982இல் அவுஸ்ரேலியாவில் அகால மரணத்தை தழுவியிருந்தார். அவர் ஞாபகமாக அவருக்குப் பிடித்த ஒரு தமிழ்பாடலும், ஒரு ஆங்கிலப்பாடலும் உங்களுக்காக.
 
Rest in peace Capt.S.Ravikumaran
 
ஆங்கிலப்பாடல் - Brotherhood of Man - Angelo 1977
 
Long ago,
High on a mountain in Mexico
Lived a young shepherd boy, Angelo
Who met a young girl and he loved her so

Rich was she,
Came from a very high family,
Angelo knew it could never be,
They ran away to their destiny

Running away together
Running away forever
Angelo
Running away from danger
Hiding from every stranger
Angelo
They knew it wasn't wrong
They found a love so strong
They took their lives at night
And in the morning light
They found them on the sand
They saw them lying there, hand-in-hand

Long ago,
High on a mountain in Mexico
Lived a young shepherd boy, Angelo
Who met a young girl and he loved her so

Running away together,
Running away forever,
Angelo
Running away from danger,
Hiding from every stranger,
Angelo
They knew it wasn't wrong
They found a love so strong
They took their lives at night
And in the morning light
They found them on the sand
They saw them lying there, hand-in-hand

Running away together,
Running away forever,
Angelo
Running away from danger,
Hiding from every stranger,
Angelo
They knew it wasn't wrong
They found a love so strong
They took their lives at night
And in the morning light
They found them on the sand
They saw them lying there, hand-in-hand

Running away together,
Running away forever,
Angelo
Hiding from every stranger,
Angelo
They knew it wasn't wrong
They found a love so strong
They took their lives at night
And in the morning light
They found them on the sand
They saw them lying there, hand-in-hand...
 
 
 
தமிழ்பாடல் - தெய்வீக ராகம் தெவிட்டாத கீதம்
படம் - உல்லாசப் பறவைகள்.
இசை - இளையராஜா
 
Link to comment
Share on other sites

If You Wanna Make The World
A Better Place
Take A Look At Yourself And
Then Make A Change
 
மைக்கல் ஜக்சனைப்பற்றி இங்கு நான் எழுதினால் அது மடைத்தனம். உங்களிற்கு நிச்சயமாக அவரின் வாழ்கை தெரிந்தே இருக்கும். எனவே அவரது பாடல்களில் எனக்கு பிடித்தவற்றை பகிர்கின்றேன். ஏன் எனக்கு பிடித்ததென்பதையும் எழுதுகின்றேன். இதை வாசிக்கும் நண்பர்களும் 25ம் திகதிவரை மைக்கல் ஜக்சனின் பாடல்களைப் பதியலாமே - தயவு செய்து ஏன் பிடித்தது என்று இரு வரிகளாவது எழுதவும்.
 
மைக்கலின் பாடல்கள் உலகப்பிரசித்தம், ஆனாலும் இப்பாடலின் வரிகள் எப்பவுமே உயிர்ப்பானது. வெறுமனே மைக்கலின் ஆட்டத்தையும் குரலையும் ரசிக்கும் நாம் பாடலின்வரிகளில் உள்ள அர்த்தங்களை கவனிக்க மறந்து விடுகின்றோம். அதுவும் இப்பாடலில் மாற்றத்தை எதிர்பார்க்கும் ஒவ்வொரு மனிதனும் கண்ணாடியில் தெரியும் அந்த விம்பத்தில் இருந்து மாற்றத்தை ஆரம்பிக்கலாமே என்று சாதாரணமாக கூறியிருப்பார்.
 
இதைவிட உன்னில் ஆரம்பி உலகம் தானாகவே மாறும் என்பதை எப்படித்தான் ஆழகாக கூறுவது.
 
பாடல் - Man in the Mirror
வரிகள் - Siedah Garrett, Glen Ballard
 
"Man In The Mirror"
 
I'm Gonna Make A Change,
For Once In My Life
It's Gonna Feel Real Good,
Gonna Make A Difference
Gonna Make It Right . . .
 
As I, Turn Up The Collar On My
Favourite Winter Coat
This Wind Is Blowin' My Mind
I See The Kids In The Street,
With Not Enough To Eat
Who Am I, To Be Blind?
Pretending Not To See
Their Needs
A Summer's Disregard,
A Broken Bottle Top
And A One Man's Soul
They Follow Each Other On
The Wind Ya' Know
'Cause They Got Nowhere
To Go
That's Why I Want You To
Know
 
I'm Starting With The Man In
The Mirror
I'm Asking Him To Change
His Ways
And No Message Could Have
Been Any Clearer
If You Wanna Make The World
A Better Place
(If You Wanna Make The
World A Better Place)
Take A Look At Yourself, And
Then Make A Change
(Take A Look At Yourself, And
Then Make A Change)
(Na Na Na, Na Na Na, Na Na,
Na Nah)
 
I've Been A Victim Of A Selfish
Kind Of Love
It's Time That I Realize
That There Are Some With No
Home, Not A Nickel To Loan
Could It Be Really Me,
Pretending That They're Not
Alone?
 
A Widow Deeply Scarred,
Somebody's Broken Heart
And A Washed-Out Dream
(Washed-Out Dream)
They Follow The Pattern Of
The Wind, Ya' See
Cause They Got No Place
To Be
That's Why I'm Starting With
Me
(Starting With Me!)
 
I'm Starting With The Man In
The Mirror
(Ooh!)
I'm Asking Him To Change
His Ways
(Ooh!)
And No Message Could Have
Been Any Clearer
If You Wanna Make The World
A Better Place
(If You Wanna Make The
World A Better Place)
Take A Look At Yourself And
Then Make A Change
(Take A Look At Yourself And
Then Make A Change)
 
I'm Starting With The Man In
The Mirror
(Ooh!)
I'm Asking Him To Change His
Ways
(Change His Ways-Ooh!)
And No Message Could've
Been Any Clearer
If You Wanna Make The World
A Better Place
(If You Wanna Make The
World A Better Place)
Take A Look At Yourself And
Then Make That . . .
(Take A Look At Yourself And
Then Make That . . .)
Change!
 
I'm Starting With The Man In
The Mirror,
(Man In The Mirror-Oh
Yeah!)
I'm Asking Him To Change
His Ways
(Better Change!)
No Message Could Have
Been Any Clearer
(If You Wanna Make The
World A Better Place)
(Take A Look At Yourself And
Then Make The Change)
(You Gotta Get It Right, While
You Got The Time)
('Cause When You Close Your
Heart)
You Can't Close Your . . .Your
Mind!
(Then You Close Your . . .
Mind!)
That Man, That Man, That
Man, That Man
With That Man In The Mirror
(Man In The Mirror, Oh Yeah!)
That Man, That Man, That Man
I'm Asking Him To Change
His Ways
(Better Change!)
You Know . . .That Man
No Message Could Have
Been Any Clearer
If You Wanna Make The World
A Better Place
(If You Wanna Make The
World A Better Place)
Take A Look At Yourself And
Then Make A Change
(Take A Look At Yourself And
Then Make A Change)
Hoo! Hoo! Hoo! Hoo! Hoo!
Na Na Na, Na Na Na, Na Na,
Na Nah
(Oh Yeah!)
Gonna Feel Real Good Now!
Yeah Yeah! Yeah Yeah!
Yeah Yeah!
Na Na Na, Na Na Na, Na Na,
Na Nah
(Ooooh . . .)
Oh No, No No . . .
I'm Gonna Make A Change
It's Gonna Feel Real Good!
Come On!
(Change . . .)
Just Lift Yourself
You Know
You've Got To Stop It.
Yourself!
(Yeah!-Make That Change!)
I've Got To Make That Change,
Today!
Hoo!
(Man In The Mirror)
You Got To
You Got To Not Let Yourself . . .
Brother . . .
Hoo!
(Yeah!-Make That Change!)
You Know-I've Got To Get
That Man, That Man . . .
(Man In The Mirror)
You've Got To
You've Got To Move! Come
On! Come On!
You Got To . . .
Stand Up! Stand Up!
Stand Up!
(Yeah-Make That Change)
Stand Up And Lift
Yourself, Now!
(Man In The Mirror)
Hoo! Hoo! Hoo!
Aaow!
(Yeah-Make That Change)
Gonna Make That Change . . .
Come On!
(Man In The Mirror)
You Know It!
You Know It!
You Know It!
You Know . . .
(Change . . .)
Make That Change.
 
 
ஒறிஜினல் வீடியோ இது
 
 
பாடலையும் ஆட்டத்தையும் பார்க்க இது
 
Michael Jackson Man - Grammy Awards 
 
Link to comment
Share on other sites

எனக்கு பாடல்களை மறுபதிவு செய்வது பிடிப்பதேயில்லை. ஆனாலும் 
Beatlesசின் "Come Together" பாடலை மைக்கல் மறுபதிவு செய்தது பிடித்தேயிருந்தது. ஒறிஜினலை விட மறுபதிவு நன்றாக இருந்தது என்பது எனது கருத்து.
 
"Come Together"
 
[Written by John Lennon]
 
Here come ol' flat top
He come groovin' up slowly
He's got Joo Joo eyeball
He one holy roller
He got hair down to his knees
Got to be a joker he just do what he please
 
He wear no shoe shine
He's got toe jam football
He's got monkey finger
He shoot Coca-Cola
He say "I know you, you know me"
One thing I can tell you is you got to be free
 
Come together
Right now
Over me
 
He bag production
He's got walrus gum-boot
He's got Ono sideboard
He one spinal cracker
He got feet down through his knees
Hold you in his arm 'til
You can feel his disease
 
Come together
Right now
Over me
Come together babe
Come together babe
Come together
Come together
 
He roller coaster
He's got early warning
He's got muddy water
He one Mojo filter
He say "One and one and one is three"
Got to be good looking 'cause he's so hard to see
 
Come together
Right now
Over me
 
 
Come Together- The Beatles
 
 
Michael Jackson - Come Together
 
     
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

மன்னிக்கவும்
நேரம் போதாமையால் தொடர முடியவில்லை. மைக்கலின் பல பாடல்களை பதிய ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. சில மாதங்களின் பின்னர் நிறைய நேரம் கிடைக்கலாம். அப்பொது தொடர்கின்றேன்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவிற்காக எனக்கு மிகவும் பிடித்த பாடலிது. ஆனால் இது ராமமூர்த்தியுடன் சேர்ந்து இசையமைத்தது.

Link to comment
Share on other sites

  • 1 year later...

Leo Rojas

எனக்கு எப்பவுமே காற்றின் கீதங்களை கானங்களாக்கும் இசைக்கருவிகள் பிடிக்கும். 
அதில் முதலிடம் Pan flute இக்குத்தான், அடுத்தது புல்லாங்குழல்.

இந்த இசைக்கலைஞன் இசையை மட்டுமில்லை இயற்கையையும் ரசிப்பவன்.
ஒவ்வொரு பாடலும் இயற்கையின் அழகை அப்படியே அள்ளிக் கொட்டும் இடத்திலும், 
அதனை கண்முன்னே அழகாக நிறுத்தும் கமரா கலைஞனும் சேர்த்து வடித்த பிம்பங்கள்.

இருவருக்குமே தலை வணங்குகிறான் ஜீவன்.

தயவு செய்து இந்த வீடியோவை பார்ப்பவர்கள் full screen இல் maximum resolution இல் பாருங்கள்.

தொடரும்

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

எனக்கு வேற்று மொழி பாடல்களில் நல்ல விருப்பம் உள்ளது .... , தேடித் தேடி கேட்பேன் அதன் இசை தான் ஒரே ஒரு காரணம் ..... எனக்கு தமிழ்மொழி தவிர்ந்த ஏனைய மொழி பாடல்களின் அர்த்தம் பெரும்பாலும் புரிவதில்லை (அரிதாக ஒரு சில ஆங்கில , இத்தாலி,டொச் , சிங்கள பாடல்கள் விதிவிலக்கு) 
எனக்குப் பிடித்த தமிழ்மொழி தவிர்ந்த சில பாடல்களை இங்கே இணைக்கின்றேன் ..... உங்களுக்கு கொடுமையோ தெரியாது மன்னித் தருள்க ....

Link to comment
Share on other sites

2 துருக்கிப் பாடல்கள்.

1997 ஆம் ஆண்டளவில் வெளியாகி உலகைக் கலக்கிய துருக்கிய பாடல் இப் பாடல் ஆங்கிலத்திலும் என "kiss kiss"வந்துள்ளது

98 களில் காரில் றேடியோவில் கேட்டு மிகவும் பிடித்த பாடல்  .... நீண்ட காலத்திற்குப் பின் இந்த பாடல் நினைவு வந்தது ..... அதன் முனு முனுப்பை வைத்து எப்படி தேடுவது என தெரியாமல் ,(பாடியவரின் பெயரையும்  மறந்து விட்டேன்) அண்மையில் எனது துருக்கி நண்பரிடம் எனது பாடலை கம் பண்ணிக் காட்டி அவர் எழுதி தந்து youtube இல் தேடி கேட்டு ரசித்த பாடல்.

பாடியவர்: டர்க்கான் (Tarkan)

இதுவும் டர்கானின் பாடல் தான் எனது துருக்கி நண்பன் வேலைத் தளத்தில் முனுமுனுக்கும் பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

 

Link to comment
Share on other sites

14 hours ago, Athavan CH said:

இதுவும் டர்கானின் பாடல் தான் எனது துருக்கி நண்பன் வேலைத் தளத்தில் முனுமுனுக்கும் பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

எனக்கு இது பிடித்திருந்தது / அர்த்தமும் சுப்பர் 

 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இந்த பாடலுக்கு கருத்து எதுவுமே எழுதப்போவதில்லை.
பாடல் வரிகளையும் பதிய போவதில்லை

அழகான ஒரு காதல் கதை + அழகிய வீடியோ வடிவம் 

இதற்குமேல் என்ன வேண்டும்.

நன்றி - மடோனா 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.