Jump to content

ஊர்கூடி உறவாடுவோம்

Recommended Posts

ஊர்கூடி உறவாடுவோம் என்னும் நிகழ்வொன்று, புலம்பெயர்ந்து யேர்மனியின் தென்மானிலத்திலுள்ள லூட்விக்போர்க் என்ற பெருநகருக்கு வந்துசேர்ந்த ஆரம்பகாலத் தமிழர்களால் ஊர்கூடி உறவாடுவோம் என்னும் நிகழ்வொன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வானது, 'லூட்விக்போர்க்' என்ற பெருநகருக்குள் அமைந்த 'மார்பார்க்' என்ற ஊரில் நடந்தேறியது. இந்நிகழ்வின் ஒழுங்குமுறைகள் சற்று வித்தியாசமாக இருந்தது. வழமையாக, முதலில் மங்கலவிளக்கேற்றி, வணக்கம் செலுத்தி, வரவேற்புரை, அறிமுகம் என நேரங்கள் நீண்டு, பெற்றேருடன் வரும் குழந்தைகள் சிறுவர்கள் ஏன் சில பெரியவர்களும்கூட பசி தாகம் ஏற்பட்டு எப்போதடா இடைவேளை வரும் என எதிர்பார்த்துப் பரிதவிப்பதுண்டு. இந்நிகழ்வில் வழமைக்கு மாறாக மண்டபத்தில் நுளைபவர்கள் நேரடியாகவே உணவுப்பண்டங்கள் உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் விரும்பியதை எடுத்து உண்டு பசியாறியபின்னரே நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இதனால் இங்கு எல்லோரும் சாப்பாட்டுராமன்கள் என்று எண்ணிவிடக்கூடாது. ஒரு மாற்றத்தையே ஏற்பாட்டாளர்கள் செய்துபார்க்க விரும்பினர். பாராட்டும் பெற்றனர்.
 
விருந்தோம்பல் நிறைவுற்றதும், பலர்கூடி மங்களவிளக்கு ஏற்றப்பட்டு, தமிழ்மண் மீட்கப் போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவித்து அவர்களது திறமையை ஊருக்கும் காட்டி மகிழ பெற்றோர்கள் விரும்புவது வழமையானது. இங்கு பெற்றோர்களின் கலைத்திறனை பிள்ளைகள் பார்த்து அதிசயித்து வியந்து, கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. என்னுடைய அம்மாவா இப்படி நடனம் ஆடுகிறா? அப்பா இப்படிப்பாடி நான்கேட்டதில்லையே! எனப் பிள்ளைகள் பிரமித்து வியந்து ஆனந்தப்பட்டனர்.  
 
ஒரு குடும்பம்போல் ஒன்றுகூடிப் பழகி வாழ்ந்தவர்கள்  சில முரண்பாடுகளால் விலகிப் பிரிந்துவிடும்போது.... அனைவருடனும், அன்புடன் பாசத்தோடும் வளர்ந்த பிள்ளைகளும் பிரிந்துபோய் விடுவதுண்டு. பிரிந்து சென்றவர்களை பார்க்கவே முடியாத நிலையும் ஏற்படுவதுண்டு. அப்படிப் பிரிந்த பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்கள் முகங்களையே அடையாளம் காண்பது கடினமாகி விடுவதுண்டு. முரண்பாடுகளால் பிரிந்துவாழும் குடும்பங்களும் இந்த நிகழ்வில் கூடியிருந்தனர். கூடியிருந்தாலும் வேறாகவே இருந்தனர். அங்குதான் ஒரு சுவையான நிகழ்வையும் காணக்கூடியதாக இருந்தது. அன்னை ஒருவரை "அன்ரி" என்று ஒரு இளைஞன் அழைத்து ஆரத்தழுவியபோது அவன் யாரென்று புரியாத அந்த அன்னை அவனை வியப்புடன் பார்க்க, நான் இன்னாருடைய மகன் என்பதை அவன் தெரிவிக்க, அன்னைக்கு அந்தக்கால ஞாபகமெல்லாம் நினைவில்வர, தன்னிடம் பாசத்தோடு வளர்ந்த அந்தப்பிள்ளையா இவன்...! என்ற வியப்பும் ஆனந்தமும் மேலிட்டுக் கண்களில் கண்ணீர் பெருக அவனை ஆரத்தழுவி உச்சிமோர்ந்த காட்சி, அந்த நிகழ்ச்சிக்கு மகுடம்சூட்டியது.  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சந்திப்புகளும் நிகழ்வுகளும் எமது பண்பாடு ,கலை ,

கலாச்சாரத்தை எமது அடுத்த  இளம் சந்ததியிடம் கொண்டுசெல்ல உதவும்.

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..

போட்டோ, கீட்டோ போட்டால் குறைந்தா போய்விடுவீர்கள்..? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thumbs_up_smiley.gif நல்லதொரு, பிரயோசனமான நிகழ்வைschilder_7.gif... "லூட்விக்ஸ்பேர்க்" மக்கள் நிகழ்த்தி உள்ளார்கள்.
அதனை எம்முடன் பகிர்ந்து கொண்ட, பாஞ்ச் அண்ணைக்கு நன்றி.schilder_40.gif
எனது ஊர், "பெரிசுகளிடமும்..." இப்படியான ஒரு நிகழ்வை musik_9.gif  நடத்தும் படி, சொல்லப் போகின்றேன். :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்..

போட்டோ, கீட்டோ போட்டால் குறைந்தா போய்விடுவீர்கள்..? :lol:

படம்பிடிக்கும் தொழில்நுட்பம் வந்தபோதும் அன்றைய காலத்தில் பலர் படம்பிடித்தால் ஆயுசு குறைந்துவிடும் என்று ஒரு புரளியைக் கிளப்பித் தங்களைப் படம்பிடித்து வைத்துக்கொள்ளாததன் காரணம் இப்போது புரிகிறது.   :icon_idea:   :D   :lol:

தமிழ் சிறி

அதனால் தான்.... எங்கடை ஆக்கள் கன பேர்  மறியலுக்குப் போகாமல் இருக்கினம்.

பிராங்கும்... அந்தக் காலத்தில், நம்ம சனத்துடன் தொடர்புகளை பேணியிருப்பாரேயானால்...

இப்ப மறியலுக்குப் போக வேண்டி வந்திராது.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Paanch, on 07 May 2015 - 08:50 AM, said:snapback.png

படம்பிடிக்கும் தொழில்நுட்பம் வந்தபோதும் அன்றைய காலத்தில் பலர் படம்பிடித்தால் ஆயுசு குறைந்துவிடும் என்று ஒரு புரளியைக் கிளப்பித் தங்களைப் படம்பிடித்து வைத்துக்கொள்ளாததன் காரணம் இப்போது புரிகிறது.   :icon_idea:   :D   :lol:

தமிழ் சிறி

அதனால் தான்.... எங்கடை ஆக்கள் கன பேர்  மறியலுக்குப் போகாமல் இருக்கினம்.

பிராங்கும்... அந்தக் காலத்தில், நம்ம சனத்துடன் தொடர்புகளை பேணியிருப்பாரேயானால்...

இப்ப மறியலுக்குப் போக வேண்டி வந்திராது.  :D

போட்டோ எடுத்தால் ஆயுள் குறையுமா? :o :o

இதென்னப்பா பழையகரடியா இருக்கே? :(

எந்த ஊரு மூட நம்பிக்கை? :lol:

சரி சார்.., தனிப்படம் வேண்டாம், வந்த சனக் கூட்டத்தையாவது போடுங்கோ, பாப்போம்..! :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..

போட்டோ, கீட்டோ போட்டால் குறைந்தா போய்விடுவீர்கள்..? :lol:

போட்டோ எடுத்தால் ஆயுள் குறையுமா? :o :o

இதென்னப்பா பழையகரடியா இருக்கே? :(

எந்த ஊரு மூட நம்பிக்கை? :lol:

சரி சார்.., தனிப்படம் வேண்டாம், வந்த சனக் கூட்டத்தையாவது போடுங்கோ, பாப்போம்..! :rolleyes::lol:

வன்னியன், படம் இணைக்கச் சொல்லி.... நாண்டு கொண்டு நிக்கிறார்.

பாஞ்ச் அண்ணை, படத்தை... இணைக்க பஞ்சிப் படுகிறார். :D

எனது ஊரிலும், லூட்விக்ஸ்பேர்க் மக்கள் நடாத்திய மாதிரி ஒரு நிகழ்ச்சி விரைவில் நடக்கும் போல் உள்ளது.

அப்போ... கார் தரிப்பிடத்திலிருந்து, மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள், உணவு அருந்தும் படங்கள் எல்லாம்.... வீடியோவில் இணைப்பேன். :lol:

அதுவரை... வன்னியன் பொறுத்திருக்க வேண்டும்.

ஓகேயா... வன்னியன் சார். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியன், படம் இணைக்கச் சொல்லி.... நாண்டு கொண்டு நிக்கிறார்.

பாஞ்ச் அண்ணை, படத்தை... இணைக்க பஞ்சிப் படுகிறார். :D

எனது ஊரிலும், லூட்விக்ஸ்பேர்க் மக்கள் நடாத்திய மாதிரி ஒரு நிகழ்ச்சி விரைவில் நடக்கும் போல் உள்ளது.

அப்போ... கார் தரிப்பிடத்திலிருந்து, மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள், உணவு அருந்தும் படங்கள் எல்லாம்.... வீடியோவில் இணைப்பேன். :lol:

தமிழ்சிறி தம்புடு, பாஞ் நானா திக்ற சித்திரனி லேது.. :(

நீங்கள் காணொளி எடுத்து இங்கே போட்டாலும், அதில் நிச்சயம் நீங்கள் இருக்கமாட்டீர்களென தெரியும்..! :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான சந்திப்புகள். இப்படியான நிகழ்வுகள் எல்லா இடங்களிலும் தொடர்ந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்..

போட்டோ, கீட்டோ போட்டால் குறைந்தா போய்விடுவீர்கள்..? :lol:

ஆட்களையெல்லாம் அடையாளம் கண்டுவிடுவார்களல்லவா?

Link to comment
Share on other sites

கோகுலில்  இல்லை கூகிளில் போய் தமிழ் சிறி என அடித்துவிட்டு படங்கள் என்ற பதத்தை அழுத்தினேன்.முழு படமும் வந்து விட்டது அதன் பின் தான் அங்கே என்ன தான் நடந்திருக்கும் என ஊகித்துகொண்டேன்

tamil siri  images

https://www.google.ca/search?q=tamil+siRi&rlz=1C1VFKB_enCA639CA639&espv=2&biw=1680&bih=905&source=lnms&tbm=isch&sa=X&ei=Q3ZqVYrAOIPItQWvuILwDw&ved=0CAYQ_AUoAQ#tbm=isch&q=tamil+siri

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நானும் ஏதோ ஆர்வத்தில் 'பாஞ்' என்று அடித்துப் பார்த்தேன் இந்தப்படம்தான் வந்தது.  :(

paanch.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.