Jump to content

நடமாடும் அவமானம்- பிரான்சிஸ் ஹாரிசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடமாடும் அவமானம்

Army-2-300x247.jpg

கொழும்பு மிரருக்காக பிரான்சிஸ் ஹாரிசன்

அந்த அறைக்கதவுகள் திறக்கப்பட்ட வேளை அவர் மிகவும் பரிதாபமான நிலையில் அங்கிருந்து ஓடிவந்தார், வெளியே நின்றிருந்த இலங்கைப் படையினர் அவரை பார்த்து கேலி செய்தனர், ஏளனம் செய்தனர், அவரது உடைகளில் இரத்தம் கறை படிந்து காணப்பட்டது, அவரது உடலில் சிகரெட்டினால் சுட்ட காயங்கள் உட்பட பல காணப்பட்டன – பாலியல் வன்முறைக்கு அப்பால் அவர் முகாமிற்கு வெட்கத்துடன் நடந்துகொண்டிருந்தார்.

 

அவரை அந்த நிலையில் பார்த்த அங்கிருந்த ஏனைய தமிழர்களுக்கு அவரிற்கு என்ன நடந்தது என்பது உடனடியாக விளங்கியது. அந்தத் தாய் பழைய நிலைக்கு மீண்டு, தனது குழந்தைக்குப் பால் கொடுக்கும் வரை அந்த குழந்தைக்கு குடிப்பதற்கு நீரை வழங்குவதை மாத்திரமே அவர்களால் செய்ய முடிந்தது.

 

படையினர் அவளை வெளியே இழுத்து வந்தனர், அவள் உரத்த குரலில் சத்தமிட்டு எதிர்ப்பதை நிறுத்தாவிட்டால் அவளது குழந்தைகளை கொன்றுவிடப்போவதாகவும் எச்சரித்திருந்தனர், இது தனக்கு நடக்கும் என அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, சில நாட்களுக்கு முன்னர் இன்னொரு யுவதிக்கு இது இடம்பெற்றதை அவள் பார்த்திருக்கின்றாள். நீ இணங்காவிட்டால் உனது இளையமகளைக் கொண்டுசெல்வோம் என இன்னொரு தாயை அவர்கள் மிரட்டியிருந்தனர்.

 

யுத்தம் நடைபெற்ற வேளை எறிகணைச் சிதறல்களிலிருந்து தங்கள் குழந்தைகளை அவர்கள் தமது உடல்களைக் கவசமாக்கிக் காப்பாற்றியிருந்தனர். சமாதான காலத்தில் தங்களைக் காப்பாற்ற, தாங்கள் வன்புணர்ச்சிக்குட்படுவோம் எனத் தெரிந்திருந்தும் இராணுவத்தினரின் உத்தரவை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

இதனைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இது குறித்து எதுவும் பேசவில்லை, இதற்குப் பாதிக்கப்பட்வர்களின் மீதான மதிப்பு, இரக்கம் மட்டுமே காரணமல்ல. தங்களால்  எதனையும் செய்யமுடியாத, இதனை தடுத்து நிறுத்த முடியாத கையறு நிலையில் இருக்கின்றோம், குறைந்தபட்சம் சிறிதளவு எதிர்ப்பைக் கூட வெளிப்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றோம் என்று உறுத்தும் குற்றவுணர்ச்சி காரணமாகவும் அவர்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் மத்தியில் அவர்களால் எதனையும் செய்திருக்க முடியாது என்பதும் உண்மைதான்.

 

அதேவேளை, வன்முறையில் ஈடுபட்டிருந்த படையினரோ தங்கள் குற்றங்கள் குறித்து அச்சத்தையோ அல்லது வெட்கத்தையோ எள்ளளவும் வெளிப்படுத்தவில்லை. பாலியல் வல்லுறவைத் தங்கள் கையடக்கத்தொலைபேசிகளில் அப்பட்டமாகப் படம் பிடித்தனர், நிர்வாணமாக புகைப்படங்களை எடுத்து எக்காளமிட்டனர். தாங்கள் ஓரு போதும் பிடிபடமாட்டோம் என அவர்கள் கருதினர், அதனை விட முக்கியமாக முழு தமிழ் சமூகத்தையும் அவமானப்படுத்த அவர்கள் விரும்பினர், கூட்டு அவமானத்திற்குட்படுத்த விரும்பினர், ஓரு வகையில் அவர்கள் தமிழ்த் தாய்மண்ணையும் ,தமிழ்ப் பெண்களையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தனர்.

 

ஆனால் இந்த வகையான குற்றங்களை அவர்கள் பெண்களுக்கு மாத்திரம் இழைக்கவில்லை.யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில் தமிழ் ஆண்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பாலியல் வன்முறையின் அளவு, எண்ணிக்கையைப் பார்த்து யுத்தக் குற்ற விசாரணையாளர்களே அதிர்ந்து போயுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் அனேகமானவர்கள் பயந்த, பலவீனமான, மெல்லிய தேகத்தை கொண்ட ஆண்கள். இவர்களில் பலர் பலமுறை தடுத்துவைக்கப்பட்டு  துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் தாங்கள் எதிர்கொண்ட, தங்கள் குடும்பத்தினரிற்கு இது வரை தெரியவராத பாலியல் வன்முறையை மிகவும் சங்கடப்பட்டு தெரிவிக்கின்றனர்.

 

இவர்களில் ஓரு இளவயது நபர் வெள்ளைவானில் கடத்தப்பட்டார். இராணுவ முகாம் ஓன்றில் பல வாரங்கள் பாலியல் வன்முறை, சித்திரவதை, துஸ்பிரயோகம் போன்றவற்றிற்கு உட்படுத்தப்பட்டிருந்த அவரை அவரது தந்தையார் இலஞ்சம் கொடுத்து வெளியே கொண்டு வந்தார். உடனடியாக மகனை மன்னாரிற்குக் கொண்டு சென்று படகு மூலம் இந்தியாவிற்கு அனுப்பிவைத்தார்.

 

அதற்கு முன்னர் அந்தத் தந்தை மருந்தகத்திலிருந்து சில கிறீம்களை வாங்கிவந்து மகனின் சித்திரவதைக் காயங்களுக்குப் பூசினார், தனது ஆசைக்குரிய மகனை தன்னால் காப்பற்ற முடியவில்லையே என அவர் கண்ணீர்விட்டார். கட்டிலில் படுத்திருந்த மகன் தான் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டது குறித்து தனது தந்தைக்கு தெரிவிக்கவில்லை. அந்த கொடுரமான துயரத்திலிருந்து தனது தந்தையை அவன் பாதுகாக்க விரும்பியதே அதற்கு காரணம்.

 

கொடூரமான செயற்பாட்டின் பின்னர் இடம்பெற்ற உருக்கமான, பாசத்தை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வு, தந்தைக்கும் மகனிற்கும் இடையில் நிரந்தரமான, எப்போதும் நீக்கப்பட முடியாத தடுப்பை உருவாக்கியிருந்தது.

 

இதன் பின்னர் அந்த மாணவன் வெளிநாட்டிற்கு சென்றான், அந்த நாட்டில் பேசப்படும் மொழி அவனுக்கு புரியவில்லை, தனது குடும்பத்தவர்களுக்கு பிரச்சினை வரும் என்பதால் அவன் அவர்களுடன் தொலைபேசியிலும் தொடர்புகொள்ளவில்லை, கண்டங்கள் பல கடந்த பின்னரும் பல தடைகள் உருவாக்கப்பட்டுக்கொண்டேயிருந்தன.

 

பிரச்சினைகள் வரும் போது நீங்கள் யாரை நாடுவீர்கள், ஆனால் அந்த அற்புதமான உறவை கூட சித்திரவதைக் கும்பல் சின்னாபின்னமாக்கிப் பலவீனப்படுத்திவிட்டது.

இன்னொருவர் தன்னைப் பிடித்துவைத்திருந்த இராணுவத்தினர் பணத்தை வாங்கிக்கொண்டு காட்டிற்குள் விட்டுச்சென்றனர் என்றார். அவரது உறவினர் ஓருவர் பணத்தை அவர்களிடம் ஓப்படைத்தார். பின்னர் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றதும் அந்த இளைஞனின் காயங்களை கார்வெளிச்சத்தில் அந்த உறவினர் பார்வையிட்டுள்ளார். இந்த உள, உடற்காயங்களை எவரும் மருத்துவரிடம் சொல்வதில்லை, அது மிகவும் ஆபத்தானது என்பது அவர்களுக்கு நன்கே தெரிந்திருந்தது.

 

சூடாக்கப்பட்ட இரும்பு கம்பிகளால் முதுகில் காயங்களுக்குட்படுத்தப்பட்ட பலர் இலங்கையிலிருந்து தப்பிவெளியேறும்போது பல மணிநேரம் விமானத்தில் வலியுடன் அமர்ந்திருந்ததை வர்ணித்துள்ளனர். அவர்களால் விமானத்தில் உட்கார்ந்து பயணிக்கமுடியாத நிலை.

 

220px-Frances_Harrison.bw_.jpg

 

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களுக்குப் பின்னரும் இவ்வாறான பாதிப்புகளை எதிர்கொண்டவர்கள் வெளிநாடுகளில் தோன்றுவார்கள் என நான் நினைத்திருக்கவில்லை, 2009 ஆம் ஆண்டு தப்பிப்பிழைத்தவர்களின் கதையை நான் எழுதிய வேளை பலர் தங்களால் அதில் தெரிவிக்கப்பட்டிருந்த கொடுமைகளைத் தாங்க முடியாமலிருந்ததாகவும் தாங்கள் ஓரு தடவை ஓரு பாகத்தை மாத்திரம் வாசித்ததாகவும் என்னிடம் தெரிவித்தனர்.

 

அது யுத்தத்தில் நடைபெற்ற விடயங்களை முழுயைமாகத் தெரிவிக்காத தீவிரதன்மை குறைந்த முயற்சி என்பது எனக்குத் தெரியும், 2011 இல் நான் பேட்டி கண்டவர்கள் மிகவேகமாக அங்கிருந்து தப்பிவிட்டனர்.

 

ஆனால் பலவருட இடம்பெயர்வு, துயரம், இழப்பு , சித்திரவதை,பட்டினி, மனஉளைச்சல், புனர்வாழ்வு முகாமில் பல வருடங்கள் தடுத்துவைப்பு, சித்திரவதை , பாலியல் வன்புணர்வு, வெள்ளைவான் கடத்தல் போன்றவற்றை அனுபவித்த பலர் உள்ளனர்.

 

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னரும் கடத்தப்பட்ட பலர் உள்ளனர் – புனர்வாழ்விற்கு பின்னரும் மீண்டும் தடுப்பு  நீண்ட கால சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் என்பன இன்னொரு சுற்று ஆரம்பித்துள்ளன. மீண்டும் அவர்களது துயரம் என்பது வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாததாகக் காணப்படுகின்றது.

 

வெளிநாடுகளுக்கு வந்துசேரும் அவர்கள் நேரடியாக இங்குள்ள தடுப்பு முகாம்களுக்கு செல்கின்றனர், புதிய நாட்டில் காலடியெடுத்து வைப்பதேயில்லை. இவர்கள் மீண்டும் தடுத்துவைக்கப்படுவது கொடுரமானது, அவர்களைக் கடந்த கால நினைவுகள் வாட்டிவதைக்கின்றன, இலங்கையில் சித்திரவதை கூடத்தில் இருப்பதாகக் கருதி இரவில் எழுந்து அலறுகின்றனர்.

 

இவர்களில் பலர் வன்னியில் தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு வந்தவர்கள், தங்களுடைய புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளபடும் வரையில் நிச்சயமற்ற நிலையில் அவர்கள் வாழ்கின்றனர். தங்கள் குடும்பத்தினர் இலங்கை படையினரால் அச்சுறுத்தப்படலாம், தங்களுடைய புகலிடக்கோரிக்கை மறுக்கப்படலாம், தாங்கள் திருப்பி அனுப்பபடலாம் என்ற அச்சத்தில் அவர்கள் வாழ்கின்றனர்.

 

அவர்களது குடும்பத்தினருக்கு எதிரான அச்சுறுத்தல்களும், பழிவாங்கல்களும் வழமையான விடயங்கள். தன்னை கண்டு பிடிக்க முடியாததால் தனது மனைவியைப் படையினர்தடுத்து வைத்து பாலியல் வன்முறைக்குள்ளாக்கியதை ஓருவர் விபரித்தார். தான் வீட்டிற்குச் சென்றபோது தனது மனைவியின் உடலில் காயங்களை கண்டதாக அவர் குறிப்பிட்டார். தான் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றதாகவும், அவர்கள் தனது மனைவியை அதிதீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அதன் பின்னர் தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவரது மனைவி அவருடன் பேசவேயில்லை- இங்கு இன்னொரு தடை உருவாக்கப்பட்டது.

 

இதேவேளை, பாலியல் வல்லுறவினால் ஏற்பட்ட காயங்கள், அதிர்ச்சி ,சமூக ரீதியிலான அவமானம் போன்றவற்றை ஆண்களின் துணையுடன் கடந்து வந்த கம்பீர்மான பல பெண்கள் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளனர். பலர் சமீபத்தில் திருமணம் செய்துள்ளனர் , அவர்களுக்கு குழந்தைகள் உள்ளன. மகிழச்சியாக இருப்பதே சித்திரவதைகாரர்களை தோற்கடிப்பதற்கான ஒரே வழி என்பதை அவர்கள் நன்கே உணர்ந்துள்ளனர்.

 

இதற்கு மிகுந்த துணிச்சல் அவசியம் ஆனால் அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதனால் தங்களுக்கு நடந்த அநீதியை மன்னித்துவிட்டார்கள், நல்லிணக்கம் உருவாகின்றது என்ற மாயைக்குள் சிக்ககூடாது.

இவ்வாறன சூழ்நிலையில் உள்ள ஒருவரிடம் நீண்டகால கோபமும், பகைமையுணர்ச்சியும் இருக்காது எனக் கருதவே முடியாது.

நல்லிணக்கம் என்பது நீங்கள் எந்த மொழியில் உங்கள் தேசிய கீதத்தை இசைக்கின்றீர்கள் என்பதைவிட ஆழமான விடயம்!

 

(யுத்ததிற்குப் பின்னரான இலங்கையில் இடம்பெற்றுவரும் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளை ஆவணப்படுத்திவரும் முன்னாள் பீ.பீ.சி செய்தியாளரான பிரான்சிஸ் ஹாரிசன், யுத்தத்தில் உயிர் பிழைத்தவர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் “இன்னமும் எண்ணப்படும் இறப்புக்கள்” என்ற தலைப்பிலான புத்தகத்தின் நூலாசிரியர் ஆவார்)

 

http://www.colombomirror.com/tamil/?p=4560

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.