Jump to content

முகவரி தெரியாக் கல்லறைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மூன்றுவருடங்கள் இருக்கும். இருள் கெளவ்விய மாலைப் பொழுதில் ஆயிரக் கணக்கானவர் மத்தியில் ஒழுங்காகக் அடுக்கப்பட்டிருந்தன அவை. சாம்பலும், கறுப்புடன் இடையிடையே வெள்ளையும் கொண்டு பூசப்பட்ட கல்லறைகள். 

 

ஒவ்வொரு கல்லறையின் தலையிலும் மண்ணுக்காக மரித்துப் போன தெய்வங்களின் திருவுருவப் படங்கள். நானும் மாவீரர் குடும்பம்தான், ஆனால் எதற்கு முன்னால் போய் நிற்பது?அங்கிருந்த எல்லோருக்கும் மலர்தூவ எனக்கு ஆசைதான், ஆனால் ஒவ்வொரு படத்தினதும் முன்னால் அந்ததந்தக் குடும்பங்கள் அழுதுகொண்டிருக்க நான் எப்படி...........முடியவில்லை. 

 

முகவரி தெரியாத கல்லறை தேடிக் கண்களும், கூடவே கால்களும் சேர்ந்துகொள்ள அடுக்கப்பட்டிருந்த கல்லறைகளிலே அதனைத் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு ஓரத்தில் அது இருந்தது. படம் ஏதுமில்லாமல், மரணித்தவனின் பெயரும் இல்லாமல் தனியே அது கிடந்தது. முன்னால்ப் போய் நின்றேன். கண்கள் மூடி கண்ணீர்வழிய சிறிது நேரம் அங்கே நின்றேன். மனம் முழுதும் தம்பியின் நினைவுகள். அவனைப் போலவே மண்ணுக்காக மரணித்துப் போன அனைவரினதும் நினைவுகள். 

 

நினைவுகள் பெருக்கெடுத்து, துக்கம் அழுகையாக மாறி வாய்வழியும் கண்வழியும் வழிந்தோடியது. நான் அப்படி அங்கே நின்றிருப்பதைப் பார்த்த ஒருவர் என்னிடம் வந்தார். ' நீங்கள் மாவீரர் குடும்பமென்றால், உங்களது உறவின் விபரங்களைத் தந்துவிட்டுப் போங்கள், வருகிற மாவீரர் தினத்தில் அவரையும் வைக்க ஏற்பாடு செய்கிறோம்' என்றார். கொடுத்துவிட்டு வந்தேன். 

 

அதன் பின்னரான ஒவ்வொரு மாவீரர் நாளிலும் எனது தம்பி அங்கு இருப்பான். நான் வருவேன் என்று அவனுக்குத் தெரியும், அதனாலாவது நான் போகவேண்டும் என்று  நினைத்துக்கொள்வேன்.

 

முகவரி தெரியா கல்லறைமேல் நான் அன்று அழுததுபோல இன்றும் தாய்மார்கள், சகோதரர்கள், மனைவிகள் அழுகிறார்கள். முள்ளிவாய்க்கால் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் காணொளி ஒன்று கண்ணில் பட்டது. அடையாளத்துக்காக கற்கலால் அடுக்கப்பட்ட மாதிரிக் கல்லறைகளின் முன்னால் அந்த உறவுகள் உண்மையாகவே கதறியழுதபோது கூடவே மனதும் அழுதது. அந்த மாதிரிக் கல்லறைகளில் பெயரில்லை, முகமில்லை, வேறு எந்த விபரமோ இல்லை. ஆனாலும், அங்கு நின்ற ஒவ்வொருவரும் அதனைக் கட்டித்தழுவி தேம்பினார்கள். 

 

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது எனக்கு. இந்தக் கல்லறைகளுக்கு இனிமேல் முகவரி தேவையில்லை, விபரம் தேவையில்லை, அவர்கள் யாரென்று கூட எமக்குத் தெரியத் தேவையில்லை. ஆனால் அவர்கள்தான் இனி எமக்கு எல்லாமே. அங்கிருப்பவன் எனது தம்பி, எனது மகன், எனது தகப்பன், எனது அக்காள், எனது தங்கை, எனது தாய், எங்களின் நம்பிக்கை தெய்வங்கள். முகவரி தெரியாத எவருக்காகவும் இனி இந்த மனது அழும். 

 

எம்முயிர் காக்க தமுதியிர் தந்த அந்த தெய்வங்களுக்கு இனி முகவரி தேவையில்லை! முகவரி தெரியாக் கல்லறைகளாகவே அவை இருக்கட்டும், எல்லோரும் வந்து தொழுது செல்ல அவை அப்படியே இருக்கட்டும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கல்லறைக்கு 'முகவரி' இருந்தால்.. அவனைப் பற்றிய விமரிசனங்களால். அந்தக் கல்லறையின் 'மகிமை' கொஞ்சம் குறைந்து போகும்.. அல்லது குறைக்கப் படும் சாத்தியங்கள் உண்டு!

 

அதனால் தானோ என்னவோ.. அநேகமான வெளிநாடுகளில் நான் கண்ட கல்லறைகள் அனைத்தும்.. பெயர் தெரியாத போர்வீரன் ஒருவனின் கல்லறை என்ற பெயரிலேயே உள்ளன!

 

இங்கு.. தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களையும்.. விமரிசனங்களையும் தாண்டி..அந்தக் கல்லறை மகிமை பெறுகின்றது!

 

நினைவு நாள் வீர வணக்கங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.

The tomb of the unknown warrior எனும் போது அங்கே அரசியல் அடிபட்டுப் போகிறது. அவர் யார், நல்லவர்களுடன் போராடினானானா தீயவர்களுடன் போராடினானா? அவன் கொள்கைகள் என்ன? எல்லாமே அடிபட்டுப் போக, பிறருக்காய் தன் வாழ்வைக் கொடுத்துப் போராடினான் என்ற ஒற்றை செய்தி மட்டுமே நிலைகிறது.

Link to comment
Share on other sites

ஒரு சண்டையில் வீரச்சாவடையும் புலிவீரனின் புகழுடம்பை அடையாளம் காண்பதற்காக மூன்று இடங்களில் தகடுகள் கட்டப்பட்டு இருக்கும். கழுத்து, கை மற்றும் இடுப்பு பகுதிகளில் அவை தொங்கி கொண்டு இருக்கும். (இது பொதுவான உலக இராணுவ நடைமுறை என்று நினைக்கிறேன்)

குறிப்பிட்ட ஒரு சண்டையில் கிடைக்கும் புகழுடம்பில் இருக்கும் இலக்க தகட்டை அடிப்படையாக வைத்தே அந்த மாவீரனின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும்.வித்துடல் விதைக்கப்படும்.

வித்துடல் கிடைக்கபெறாத கரும்புலிகளுக்கு மற்றும் மாவீரர்களுக்கு நினைவு கற்கள் அமைக்கபட்டு இருக்கும்.

முகம் தெரியா கரும்புலிகளுக்கு என விசேட கல்லறைகள் மாவீரர் துயிலுமில்லங்கள் தவிர்த்து கரும்புலி பாசறைகளுக்கு நடுவே அமைக்கபட்டிருக்கும்.

இருப்பினும் மேலே ரகு அண்ணா கதையில் குறிப்பிட்டது போல மாவீரர் துயிலுமில்லங்களில் படமோ பெயரோ குறிப்பிடப்பாமல் "தியாக சீலம்" என்று மட்டும் எழுதிய எத்தனையோ கல்லறைகள் அமைக்கபட்டு இருக்கிறது.

தங்கள் உறவுகளுக்கு என ஒரு கல்லறை இல்லாத உறவுகளும் அல்லது அந்த மாவீர்களின் வித்துடல் விதைக்கபட்ட துயிலுமில்லத்துக்கு போகமுடியாதவர்களும்,மறைமுக கரும்புலிகளின் உறவுகளும் இவ்வாறான தியாக சீலங்களை தெரிந்தெடுத்து மாவீரர் நாட்களில் விளக்கேற்றுவார்கள்.

உண்மையிலேயே இந்த "தியாக சீலம்" என குறிப்பிட்ட கல்லறைக்குள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட மாவீரர்களில் உடல் உறுப்புகள் புதைக்கபட்டிருக்கும்.

சில சண்டைகளின் முடிவில் எறிகணைகளினால் தாக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட மாவீரர்களின் உடற்சிதைவுகள் ஒரு குவியலாகவே அள்ள வேண்டி ஏற்படும். அப்போது அந்த உடற்பாகங்களை ஒரு மாவீரரின் பெயரால் உரிமைகோர முடியாது.

அவ்வாறான உடற்பாகங்கள் ஒன்றாக விதைக்கபட்டு அமைக்கபட்டது தான் ரகு அண்ணா சொல்லும் "தியாக சீலம்" என்று அழைக்கப்படும் "முகவரியற்ற கல்லறைகள்".

நன்றி ரகு அண்ணா மீண்டும் ஒரு முறை எங்கள் தியாக சீலங்களை கண்முன்னே கொண்டுவந்தமைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு ரகுநாதன். பச்சை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன்,

விளக்கத்துக்கு நன்றி.

மாவீரர் நாள், துயிலுமில்லங்கள் உருவாக்கம் பெற முன்னமே, கிட்டு மாமாவின் சிந்தனையில் வீரர்களை நினைவுகூறும் முகமாக, சிறுவர் பூங்காவுடன் சேர்த்து, தியாகசீலம் எனும் வித்துடல் புதைக்கப் படதா நினைவாலயம் ஆனைக்கோட்டையில் அமைக்கப் பட்டிருந்தது.

இதுக்கு ஒருமுறை சியாமாசெட்டியில் வந்து குண்டுவீசியும் போனார்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.