Jump to content

அரைசு - அரசு - அரவு தீண்டல் - 2015 சித்திரை அரவு தீண்டல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்

ஏழாம் பதிவு

நாள்: 24.04.2015

 

     பெருந்தச்சு நிழல் காட்டியின்படி, கடந்த 04.04.2015 அன்று இவ்வாண்டின் நான்காவது முழுநிலவு சரியாக 102-ஆம் நாளில் கடந்து சென்றது.

 

     அதற்கு ஒரு நாள் முன்பாகப் பங்குனி உத்தரம் என்று பஞ்சாங்கத்தை நம்புகிறவர்கள் கொண்டாடினர். அந்த நாள் முழுநிலவு நாளும் இல்லை. அது பங்குனி முழு நிலவும் இல்லை. அது சித்திரை முழுநிலவு ஆகும்.

 

     அந்தச் சித்திரை முழுநிலவை நிழல் தீண்டியது. பழந்தமிழில் ‘அரவு தீண்டுதல்’ என்று குறிப்பிடப்படும் நிகழ்வு இவ்வாறான நிழல் தீண்டும் நிகழ்வு (சந்திர கிரகணம்) அல்ல என்று தெரிகிறது.

 

     மூவைந்தான் முறை (புறம் 400-2) முற்றாமலும், நாள் முதிர் மதியம் (மணி 5-12) தோன்றாமலும், முழுவட்டத்தில் ஏற்படும் குறைவையே ‘அரவு தீண்டுதல்’ என்று பழந்தமிழர் குறித்தனர் என்று கருத இடம் இருக்கிறது.

 

     நிலவு தனது வடிவில் குறைபடாமல் அதனை அணை கொடுத்துக் காப்பாற்றும் வல்லுநர்களின் அமைப்பிற்கே அரைசு அல்லது அரசு என்று பெயர் என்று புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. நிலவில் நிழல் விழுந்தால் அது தானாக நீங்கி விடுகிறது. ஆனால் நிலவை அரவு தீண்டினால் மாந்த முயற்சியினால் நீக்கினர் என்று தெரிகிறது. விசும்பு மெய் அகல (பதிற்றுப்பத்து – 69), திங்கள் அரவு உறின் தீர்க்கலார் (முல்லைக்கலி 140-17). நிழலின் அறிகுறியை அரவு தீண்டும் அறிகுறியாக கருதி அஞ்சினர் என்றும் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இது போகக் கோள்பட்டு மூளியாதல் (பெரும்பாண்-384) என்பதும், நிழல் தீண்டுதல் மற்றும் அரவு தீண்டுதல் ஆகியவற்றுடன் தொடர்பு உடையது என்று தெரிகிறது.

 

     கடந்த 04.04.2015-ல் தோன்றிய நான்காவது முழுநிலவு, இரவு 7.30க்குப் பிறகே நிழலில் இருந்து விடுபட்டு முழுவட்டம் காட்டிற்று ஆயினும், மறுநாள் காலையில் கதிர் எழும் வேளை வரை தாக்குப் பிடித்து இருந்த படியால் அந்த நாளையே முழுநிலவு நாளாகக் கணக்கிடுவதே பொருத்தமானது.

 

     சந்திர கிரகணங்களில் முழுநிலவில் மட்டும் தோன்றும் சந்திர கிரகணம் என்றும், எப்போது வேண்டுமானாலும் தோன்றும் சந்திர கிரகணம் என்றும் வகைப்பாடுகள் பிறரிடம் உள்ளனவா என்பது ஆய்வுக்குரியது.

 

     தமிழர் மரபில் நிழல்படாத 12 முழு நிலவுகளையும், மறு நிறம் கிளர (அகம் 141-6) ஒளிவிடும் ‘தை’ நிலவைப் பெருமைப்படுத்தும் செய்திகள் யாவும், ஆண்டு நாட்களில் எண்ணிக்கைக் குறைவு ஏற்படாத வெற்றிபெற்ற ஆண்டு பற்றிய செய்திகளாகவே தெரிகின்றன.

 

     கட்டிலில் மல்லாந்து படுத்துக்கொண்டு விதானத்தில் வரைந்திருந்த ஓவியத்தைப் பார்த்து அரசி கலங்கிக் கண்ணீர் வடித்த செய்தியில் ‘நிலவை உரோகிணி தீண்டி விடும்’ என்ற அச்சத்தினால் இருக்கலாம் என்ற பார்வையில் ஆய்வு மேற்கொள்தல் தேவையாகிறது. உரோகிணி பாம்பைக் குறிப்பது கருதத் தக்கது.

 

     முரண் மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய

     உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா

     மாயிதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப் பணி

                                           (நெடுநல்வாடை 162-164)

 

     போருக்குச் சென்ற கணவனின் பிரிவால் துயர் உற்று அரசி கலங்கினாள் என்று பலர் உரை செய்துள்ளனர். கணவனைப் போருக்கு அனுப்பிவிட்டுப் பிரிவுத்துயரத்தில் வாடும் வழக்கம் தமிழர் மரபில் இல்லை. மாறாகத் துயரைத் தாங்கும் மரபினதாக இருந்துள்ளனர். மேலும் நிலவும் உரோகினியும் இணைபிரியாக் காதலர்கள் என்ற ஆரியக் கட்டுக்கதை தமிழ் மரபுக்கு நேர் எதிரானது. ‘அரவுப் பகை அஞ்சித் திங்களும் ஈண்டு திரிதலும் உண்டுகொல்’ (சிலம்பு 5-227) என்று நிலவும் அரவும் பகையாகப் பார்க்கப்படுகிறது.

 

     நிலவின் ‘அரவுக்குறி’ இயற்கைப் பேரிடரைச் சுட்டும் என்றும், மக்கள் இன்னுயிர் அஞ்சினர் என்றும் செய்திகள் உள்ளன (மதுரை காஞ்சி 403) தமிழர் மரபில் தன்னுயிர் அஞ்சுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. பிற உயிர்கள் அழிவுறுவதையே இன்னுயிர் அஞ்சுதலாகப் புரிந்து கொள்ள முடிகிறது. மன்னர் நடுங்கினர் என்ற செய்தியும் வியக்க வைக்கிறது.

 

மன்னர் நடுங்கத் தோன்றிப் பல்மாண்

எல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்

குல்லை கரியவும் கோடு எரிநைப்பவும்

அருவி மாமழை நிழத்தவும் மற்றுஅக்

கருவி வானம் கடற்கோள் மறப்பவும்

பெருவறன் ஆகிய பண்பில் காலையும்

(பொருநர் ஆற்றுப்படை 232-237)

 

     நிலவு அஞ்சியதும், மக்கள் இன்னுயிர் அஞ்சியதும், அரசி கலங்கியதும், மன்னர் நடுங்கியதும் ஆன அரவுப் பகைமை பற்றி ஆரிய வைதிகம் அஞ்சவே இல்லை என்பதும் அது பற்றி அறிந்து கொள்ளவே அது அக்கறை எடுக்கவில்லை என்பதும் அதன் அயோக்கியத்தனத்திற்கு அளவு கோல் ஆகும்.

 

     ஆரிய வைதிகப் பஞ்சாங்க நம்பிகளும், அதனை உயர்த்திப் பிடிக்கும் அம்பிகளும் ‘சந்திரகிரகணம்’ ஒரு தோசம் என்று நேர்மையாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அதனைத் தவிர்க்கவும் நீக்கவும் வழி சொல்லவில்லை. பரிகாரம் செய்யவே பரிந்துரை செய்கின்றனர். இந்த இடத்தில் தான் குற்றுயிரும் குறையுயிரும் ஆகக் கிடக்கும் தமிழர் மரபறிவு உதவிக்கு வருகிறது. இலக்கியங்களும் தொழில் மரபு நூல்களும் துணை புரிகின்றன.

 

     நிலவை நிழல் தீண்டிவிடாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதே கோத்தொழில். அத்தகைய கோத்தொழில் நுட்பங்களைக் கொள்ளையடித்து மொழிமாற்றம் செய்து எற்றிப் பிழைத்துக் கொண்டு முட்டாள்களாக நீடிக்கும் ஆரிய வைதிகர் யாருக்கும் தமிழைத் தொட்டுப் பேச உரிமை இல்லை. அவர்கள் முக்கினாலும் அறிவு வராது.

 

     கடந்த சித்திரை நிலவினைக் ‘கோள்பட்ட வருடை’ (பதிற்றுப்பத்து-60-ன்-பதிகம்-3) என்றும், ‘சித்திரை சித்திரத் திங்கள் சேர்ந்தென வெற்றிவேல் மன்னர்க்கு உற்றதை ஒழிக்க என’ (சிலம்பு – இ.வி-5-64) என்றும், இந்திர விழா எடுக்க வாய்ப்பு இல்லை. வருவதை எதிர்கொள்ளக் காத்திருக்கும் தமிழ் மக்கள் அறிவாயுதத்தை நம்பி இருக்கின்றனர்.

 

     கடந்த 04.04.2015-ல் தோன்றிய நான்காவது முழுநிலவு நாளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அந்த நாளைத் தவிர்த்து எண்ணப்பட்ட 15-வது வழிநாள் ஆனது கடந்த 19.04.2015 அன்று அமாவாசை நாளாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதன் வழியே இவ்வாண்டின் ஐந்தாவது முழுநிலவானது 132-ஆம் நாளில் 04.05.2015 அன்று எதிர்பார்க்கப்படுகிறது. அது வைகாசி நிலவு ஆகும். அந்த நிலவு ஒருநாள் முந்தினாலும் அது அது வைகாசி நிலவுதான். அதனைச் சித்திரை நிலவாகத் தமிழர்கள் யாரும் கொண்டாட வேண்டாம். கொண்டாடுவோரைக் குறுக்கே விழுந்து தடுக்கவும் வேண்டாம்.

 

     ஒவ்வொரு நாளையும் எண்ணித் தைத்திங்கள் முதல் நாளுக்காகத் தவம் இருப்போரின் மன வலிமையே கோளின் போக்கை ஊக்கப்படுத்தும் பேராற்றல் என்ற உண்மையை புரியும்படி ஒவ்வொருவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது தமிழறிந்த தமிழர்களின் தலையாய கடமையாகும். இந்த முயற்சியில் ஈடுபடும் எவருக்கும் தமிழர்களின் மரபு வழிப்பட்ட அனைத்துவகை அறிவுத்துறைகளும் வழியமைத்துத் தரும் என்று தமிழின் பெயரால் நம்பலாம்.

 

__--000OOO000---___

    

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.