Jump to content

கேரளா


Recommended Posts

கேரளாவுக்கு நாம் ஏன் போக வேண்டும் ?
 
கேரளா, ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்ல தூண்டும் அற்புதமான இடங்களையுடைய மாநிலம். காணுமிடமெல்லாம் பாய்ந்தோடும் ஓடைகள், புன்னகை அணிந்த பேரழகுடைய பெண்டிர், குளுமையும், பசுமையும் சேர்ந்து நர்த்தனமாட கேரளத்தின் இயற்கை அழகில் சொக்கிப்போவதை நம்மால் தவிர்க்கவே முடியாது. அது மட்டும் இல்லாமல் பிரசித்திவாய்ந்த இந்து கோயில்கள், மேர்சலாக்கும் கடற்கரைகள், நாவை கட்டிப்போடும் அதி சுவையான உணவுகள் என கேரளத்தின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். சரி, வாருங்கள் நாம் ஏன் கேரளாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
 

 

 

16-1426503488-4573863886-8601ea6988-o.jp

 

ஆயுர்வேதம் :
 
என்னதான் நவீன மருத்துவம் விஞ்யான வளர்ச்சியின் துணையுடன் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து விட்டாலும் முற்றிலும் இயற்கையின் துணைகொண்டு உருவாக்கப்பட்ட ஆயுர்வேதத்தின் மகத்துவத்திற்கு இணையாக முடியாது. அப்படிப்பட்ட ஆயுர்வேத மருத்துவ முறைகள் இன்றும் வெகுவாக கேரளாவில் பயன்பாட்டில் இருக்கின்றன. 
 
16-1426503645-3818277626-b287d5c169-o.jp
 
கேரளாவில் உள்ள குமரகம், கோட்டைக்கல், திரிச்சூர் போன்ற இடங்களில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும் மையங்கள் நிறைய இருக்கின்றன. இவை மருத்துவமனை போல இல்லாமல் அமைதியான சூழலில் சுற்றுலா விடுதிகள் போல அமைந்திருப்பதால் உடலுக்கு மட்டும் இல்லாமல் மனதுக்கும் இதம் அளிக்கும் இடமாக ஆயுவேத சிகிச்சை மையங்கள் இருக்கின்றன.
 
வேம்பநாடு ஏரி :
 
16-1426503002-kollam.jpg
 
கேரளாவில் இருக்கும் மிகப்பெரியாக ஏரியாக திகழ்கிறது வேம்பநாடு ஏரி. ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊடாக இந்த வேம்பநாடு ஏரி பாய்கிறது. கேரளத்தின் முக்கிய சுற்றுலா சார்ந்த நிகழ்வுகள் இந்த ஏரியில் தான் நடைபெறுகின்றன.
 
வல்லம் கழி :
 
16-1426504690-4904282619-578293d125-b.jp
 
ஓணம் பண்டிகையை ஒட்டி ஆகஸ்ட் மாதத்தில் 'வல்லம் கழி' என்னும் படகு போட்டி நடத்தப்படுகிறது. ஆலப்புழாவில் இதே வேம்பநாடு ஏரி 'புன்னமடா ஏரி' என அழைக்கப்படுகிறது. அந்த ஏரியில் நடக்கும் படகு போட்டியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கு குவிகின்றனர். 
 
16-1426504684-1284899007-d244a6054e-b.jp
 
இந்த படகு போட்டியின் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது 'சுடன் வல்லம்' எனப்படும் பாம்பு படகு போட்டி தான். நீண்ட படகில் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஒரே நேரத்தில் ஆசகாயமாக துடுப்பு போட்டபடி செல்லவது பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். 
 
வர்களா பீச் :
 
 
16-1426505250-varkala.jpg

 

கோவாவில் இருக்கும் கடற்கரைகளுக்கு இணையான அழகுடன் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்ந்திருக்கிறது கேரள தலைநகரான திருவனந்தபுறத்திற்கு அருகில் இருக்கும் வர்களா பீச்.
 
இந்த கடற்கரையின் சிறப்பம்சம் என்னவென்றால் தென் இந்தியாவிலேயே மலை குன்றை ஒட்டி அமைந்திருக்கும் ஒரே கடற்கரை இதுவாகும். இங்கு அமைந்திருக்கும் குன்றின் மேல் ஏராளமான தாங்கும் விடுதிகளும், 'ஸ்பா'க்களும் நிறைய உள்ளன. சூரியக்குளியல் போடவும், கடலில் நீச்சலடிக்கவும் சிறந்த இடமாகும் இந்த வர்களா பீச்.
 
 

 


காதல் தேசம் :
 
16-1426505233-munnar.jpg
 
அருமையான கடற்கரைகளை போலவே மனம் மயக்கும் மலைவாசஸ் ஸ்தலங்களும் கேரளத்தில் உள்ளன. அப்படியொரு இடம் தான் தமிழக - கேரளா எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் மூணார் நகரமாகும். இந்தியாவில் தேனிலவு செல்ல சிறந்த 10 இடங்களுள் ஒன்றாக மூணார் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
16-1426505643-18-1397825568-wildelephant
 
மூணாரில் பச்சை போர்வை போர்த்தியது போன்ற தேயிலை தோட்டங்கள், அரிய விலங்கினங்கள் வசிக்கும் தேசிய பூங்காக்கள்,மாட்டுபெட்டி அணைக்கட்டு, சூசைட் பாயிண்ட் என சுற்றிப்பார்க்க நல்ல இடங்கள் இங்கே உண்டு. காதல் மனைவியுடன் எங்கேனும் தனிமையில் சுற்றுலா வர ஆசைப்படுபவர்கள் நிச்சயம் மூணாருக்கு வர வேண்டும்.
 
பேரழகு பொருந்திய மூணார் 
 
16-1426505637-18-1397825500-topstation.j
 
16-1426505649-lonluteaestate.jpg
 
16-1426505655-wowmunnar.jpg
 
16-1426505631-18-1397825268-echopoint.jp
 
 
 
 
 

 

Link to comment
Share on other sites

கள்  :
 
16-1426506164-2533018858-50c1e0e6cc-o.jp
 
தென்னையில் இருந்து கிடைக்கும் அற்புதமான பானம் 'கள்' ஆகும். மருத்துவ குணம் நிறைந்த இந்த கல் தமிழ் நாட்டில் தடை செய்யப்படிருந்தாலும் கேரளாவில் சர்வ சாதாரணமாக இது கிடைக்கிறது. நம்ம ஊர் 'பார்' களைப்போல அசுத்தமாக இல்லாமல் மிக நேர்த்தியாக கள் அருந்தும் இடங்கள் பராமரிக்கப்படுகின்றன. 
 
16-1426506170-6162610262-2c72b6113a-o.jp
கள்ளுக்கடை
 
ஆலப்புழா படகு வீடுகள் :
 
16-1426505228-kumarakom.jpg
 
கேரளத்தில் இருக்கும் மற்றுமொரு மிகச்சிறந்த சுற்றுலா அம்சம் ஆலப்புழா படகு வீடுகள் ஆகும். ஆலப்புழாவில் அலைகள் எழாத உப்பங்கழி நீரோடைகள் அமைந்திருப்பதால் அவற்றில் படகுகள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல முடியும். இதனை பயன்படுத்தி படகுகளே சுற்றுலா தாங்கும் விடுதிகள் போல் மாற்றப்பட்டு தேனிலவை கொண்டாடவும், விடுமுறையை களித்திடவும் சிறந்த இடமாக ஆலப்புழாவை மாற்றியிருக்கிறது.
 
16-1426505174-alleppey.jpg
 
கேரளத்தின் பசுமையையும், இயற்கை அழகையும் ரசிக்க விரும்புகிறவர்களுக்கு இந்த படகு வீடுகள் மிகச்சிறந்த தேர்வாக அமையும். 
 
ஆலப்புழா படகு வீடுகளின் சில அழகிய புகைப்பட தொகுப்பு. 
 
16-1426505162-touristplaces.jpg
 
 
16-1426505143-kuttanad.jpg
 
16-1426505137-htrandweather.jpg
 
 
16-1426505131-houseboats.jpg
 
 
சுவையான சாப்பாடு :
 
 
16-1426506608-fiiishsh.jpg
 
வேறு எதற்காக இல்லா விட்டாலும் கிடைக்கும் அதிசுவையான உணவுகளுக்காகவே கேரளாவிற்கு சுற்றுலா செல்லலாம். ஆலப்புழாவில் கிடைக்கும் சுவையான கரி மீன், கொச்சியில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயில் பொறிக்கப்பட்ட எறால் மீன், தலசேரி பிரியாணி போன்ற உணவுகள் ஒருமுறை சாப்பிட்டால் அதன் சுவைக்கு நம்மை அடிமைப்படுத்தி விடும். 
 
tamil.nativeplanet.com/travel-guide/reasons-why-we-should-visit-kerala-000411.html#slide5933
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • 7 months later...

மறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா

 

ஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு  நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் ! சில பயணங்களில் சிலர் போட்டோ எடுப்பதற்கும், அதை செய்யாதே இதை செய்யாதே என்று ஹிட்லர் போல இருப்பதை பார்த்திருக்கிறேன், ஆனால் அப்படி செய்யும் பயணங்கள் மனதில் நிற்குமா என்பது சந்தேகம்தான் ! நாங்கள் நான்கு நண்பர்களும் இந்த பயணம் ஆரம்பிக்கும்போது குழந்தை போல குதூகலத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் விரும்பினோம்.... அதை சரியாக செய்தோம் என்றே நினைக்கறேன் ! கேரளாவில் இருக்கும் ஆலப்புழாவில் ஒரு நான்கு நாட்கள் குழந்தைகளாக சுற்றி திரியலாமே என்று யோசித்து எல்லோரும் கிளம்பினோம்..... அந்த பயணத்தில் படகு வீட்டில் பயணம் என்றவுடன் எல்லோருக்கும் சந்தோசம் ! சீசன் இல்லாதபோது இந்த படகு வீடுகள் சுமார் ஏழாயிரம் ரூபாயில் இருந்து கிடைக்கிறது. இந்த படகு வீடுகளில் பல வகைகள் இருக்கின்றன, அதற்க்கு ஏற்ப விலையும் !!

DSC01786.JPG

 

 

DSC01808.JPG

காலை பன்னிரண்டு மணிக்கு இந்த படகு வீட்டை எடுக்கிறார்கள், மெதுவாக அது வேம்பநாடு ஏரியில் மிதந்து செல்லும்போது சுகமான காற்றில் கொஞ்சம் கிறக்கமாக இருக்கிறது. இந்த படகு வீட்டை நிர்வகிக்க மூன்று பேர் இருக்கின்றனர், ஒரு ஆள் படகை ஓட்டுவதற்கு, இன்னொரு ஆள் அவருக்கு துணை மற்றும் தொழில் கற்றுக்கொள்பவர், மூன்றாவது ஆள் என்பது சமையலுக்கு. சிறிது தூரம் சென்ற பின்னே ஆரஞ்சு ஜூஸ் கொடுத்தனர், அதை சியர்ஸ் என்று சொல்லி எங்களது நட்பினை அழகுபடுத்தினோம், பின்னர் பழைய கதைகளை பேசிக்கொண்டு இருந்துவிட்டு இயற்கையை ரசிக்க வயிறு பசிக்க ஆரம்பித்தது. எப்போ சாப்பாடு ரெடி ஆகும் என்று கேட்க, அவர்களோ இன்னும் அரை மணி நேரம் என்று சொல்ல திகிலாய் இருந்தது. அப்போது அவர் உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா என்று கேட்க நாங்கள் முழித்தோம்.... பின்னர் அவரே பக்கத்தில் பொறித்த மீன்கள், இறால், நண்டு, கள் எல்லாம் கிடைக்கும் வேண்டுமா என்று கேட்கவும் நாங்களும் சரி என்றோம் ! 

DSC01805.JPG

 

DSC01918.JPG

படகு போக போக தூரத்தில் அந்த தண்ணீர் தேசத்தில் ஒற்றை வீடு, அதை சுற்றி சில படகுகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அந்த வீட்டை நெருங்க நெருங்க பொறித்த மீன் வாசம் வந்து கொண்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தால் இலையில் சின்ன இறால் எல்லாம் மசாலா தடவி வைக்கப்பட்டு இருந்தது. பக்கத்தில் மண் சட்டியில் மீன், இறால் குழம்பு கொதிதுக்கொண்டு இருந்தது. இன்னொரு பக்கத்தில் பல வகை மீன்களும், இறால்களும் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. நாங்கள் எங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டு படகுக்கு திரும்ப மேஜையில் சாப்பாடு தயாராக இருந்தது !

DSC01821.JPG

 

 

DSC01823.JPG

 

DSC01827.JPG

சாப்பாடு மெனு என்பது சாம்பார், கூட்டு, போரியல், அப்பளம், பொறித்த மீன், பச்சடி அவ்வளவுதான்...... பின்னர் நாங்கள் வாங்கிய மீன் கொழம்பு, இறால் மற்றும் கிழங்கு ! பசிக்கு அது தேவாமிர்தமாக இருந்தது என்று சொல்லவா வேண்டும். சமைக்கும் ஆள் முன்னாள் துபாயில் ஸ்டார் ஹோடேலில் வேலை செய்தவர், இப்போது குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று வேலையை விட்டு விட்டு இங்கே வந்து இருக்கிறார், அதனால் ருசி அருமையாக இருந்தது. நாங்கள் நால்வரும் பேசிக்கொண்டே சாப்பிட்டதில் அந்த சாப்பாட்டின் சுவை இன்னும் அதிகமாக இருந்தது.சாப்பிட்டு கை கழுவிய பின்னே படகு மீண்டும் அந்த தண்ணீரில் மிதக்க, அங்கு அடித்த அந்த குளிர்ந்த காற்றில் கண்கள் மயங்க ஆரம்பித்தது, நெக்ஸ்ட் என்ன பண்ணலாம் என்று சொல்ல உட்கார்ந்த படி இருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து சயன நிலைக்கு போயிருந்த நான் "நெக்ஸ்ட் வேற என்ன...... ரெஸ்ட் தான் !!" என்று கண்களை மூடிக்கொண்டேன் !

DSC01835.JPG

 

DSC01836.JPG

 

DSC01844.JPG

 

சுமார் ஒரு மணி நேரம் வரை நன்கு தூங்கிய பிறகு எழுந்து பார்த்தால் எல்லோரும் அதே நிலை. அப்போது படகு ஒட்டியவருடன் பேசி கொண்டு இருந்தபோது அங்கு பலருக்கு சைக்கிள் போல வீட்டுக்கு ஒரு சிறு ஓடம் இருக்கும் என்பது தெரிய வந்தது. அப்போது தூரத்தில் ஒருவர் ஒரு ஓடத்தை நிறுத்தி வைத்து விட்டு, மூழ்கி மேலே வந்து எதோ கொட்டினார், என்னவென்று கேட்க அது மணல் என்றார். இங்கு வீடு கட்ட மணலை ஆற்றில் இருந்து மட்டுமே எடுக்க வேண்டுமாம், அரசாங்க விதி இதனால் இங்கு மணல் விலை அதிகம் என்று தெரிந்தது. நிறைய பேர் இப்படி தொழில் செய்து பிளைப்பதாகவும், வேறு நல்ல தொழில் இங்கு எதுவும் இல்லை என்றார். நாங்கள் பேசி முடிக்கவும் எனது நண்பர்கள் எழுந்திருக்கவும் சரியாக இருந்தது. அப்போது சூடாக இஞ்சி தட்டி போட்ட டீயும், மொரு மொறுவென்று வெங்காய பஜ்ஜியும் வர எங்களுக்கு நாக்கில் நீர் ஊற ஆரம்பித்தது !

DSC01851.JPG

 

DSC01857.JPG

 

இப்படி செல்ல செல்ல மாலை மயங்க ஆரம்பிக்க, அவர்கள் யாருமே இல்லாத ஒரு தீவை போன்ற பகுதியில் படகை நங்கூரமிட்டனர். ஒரு பக்கம் தண்ணீர், மறு பக்கம் வயல் வெளி என்று அந்த இடம் அருமையாக இருந்தது. அப்போதுதான் தெரிந்தது அந்த படகு இனி அடுத்த நாள் காலையில் மட்டுமே எடுக்கப்படும் என்று ! ஆக..... இந்த படகு சுமார் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் மட்டுமே ஓடுகிறது, மீதி நேரங்களில் நிறுத்தி வைத்து விடுகின்றனர். நாங்கள் அந்த வயல் வெளிகளில் இறங்கி குழந்தைகளை போல விளையாட ஆரம்பித்தோம். சுற்றிலும் பச்சை பசேல் என்று வயல், சிலு சிலுவென்ற காத்து என்று இருந்த அந்த தேசத்தை நாம் ஏன் கடவுளின் தேசம் என்று சொல்கிறோம் என்று அன்று புரிந்தது !!

DSC01865.JPG

DSC01868.JPG

 

என்னதான் நாங்கள் வயல் வெளிகளில் சுற்றி திரிந்தாலும், சீக்கிரம் இருட்டிய பின்பு என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த படகு வீட்டில் பெரிய டிவி, CD பிளேயர் என்று இருக்கிறது, நீங்கள் நல்ல படம் எடுத்துக்கொண்டு சென்றால் நல்லது இல்லையென்றால் மோட்டுவளையை பார்க்க வேண்டியதுதான். குடும்பத்துடன் செல்பவர்கள் இப்படி தீவு போன்ற இடத்தில் இப்படி தங்கினால் குழந்தைகளுக்கு பொழுது போகாதே என்று கேட்க இந்த படகு வீடுகள் நான்கு மணி நேரம், அரை நாள் என்ற வகையில் எல்லாம் கிடைப்பதால் இப்படி தங்க வேண்டாம் என்று நினைப்பவர்கள் அரை நாள் வாடகைக்கு மட்டும் எடுத்தால் மீண்டும் மாலைக்குள் ஹோட்டல் சென்று விடலாம் என்பது ஒரு உபயோகமான செய்தி. நண்பர்களாகிய நாங்கள் அந்த இரவினில் அந்த தீவினில் பேசிக்கொண்டு இருந்தது என்றும் மறக்க முடியாத ஒன்று !

DSC01900.JPG

அங்கு சேற்றினில் புரண்டு ஆடும்போது கரையினில் மீன்கள் துள்ளி ஆடி கொண்டு இருந்தது. சில மீன்கள் துள்ளும்போது கரையினில் விழுந்து துடிக்க நண்பர்கள் சீனா சென்ற நீ இந்த பச்சை மீன்களை சாப்பிட முடியுமா என்று சவால் விடுக்க அதை நிறைவேற்றி காட்டினேன்.... என்ன உப்பு கொஞ்சம் அந்த மீனில் கம்மி !! அடுத்து மீன் பிடிக்கலாம் என்று எண்ணி அந்த படகு வீட்டில் இருந்த தூண்டிலை வாங்கி மீன் பிடிக்க ஒரு நல்ல மீன் சிக்கியது. இரவினில் சப்பாத்தி, குருமா, இறால் என்று சுவையான சாப்பாட்டோடு எங்களது அரட்டையும் சேர அங்கு மின்னிய நட்சத்திரங்கள் அந்த இரவை இன்னும் அழகாக்கின.

அடுத்த நாள் அதிகாலை எழுந்தபோது அப்படி ஒரு அமைதியையும், குளிர்ச்சியையும், காட்சியையும் நான் அதுவரை கண்டதில்லை எனலாம். வெறும் பறவை சத்தம் மட்டுமே, சில்லென்ற காற்று வீச, வயல் வெளிகளின் இடையே ஒரு சிறு வாக் சென்று திரும்பினால் அது சொர்க்கம்தான். நகரத்தின் இரைச்சல்கள் இடையே வாழ்ந்தவர்கள் இங்கு வந்தால் கண்டிப்பாக உலகம் இவ்வளவு அழகா என்று வியப்பது உறுதி. எங்களுக்கு இட்லி, சட்னி, சாம்பார், அப்பம், கடலைகரி என்று கொடுத்து சாப்பிட்டு முடித்தவுடன் அந்த படகு எங்களை இறக்கிவிட கிளம்ப....... அந்த இடத்தை விட்டு பிரிய மனமே இல்லாமல் பிரிந்தோம். படகு வீட்டு பயணம் என்பது கண்டிப்பாக உங்களது மனதை நிரப்பும்...... ஒரு முறை நீங்கள் அனுபவிக்க வேண்டிய ஒன்று !!

DSC01931.JPG

http://www.kadalpayanangal.com/2014/02/blog-post_5.html

 

Link to comment
Share on other sites

னேந்திரம் சிப்சு, புட்டு, கடலை, கப்பை கெழங்கு, மீனு - இந்த அஞ்சு ஐயிடத்துல கேரல அடங்கிடும்.

எங்க கன்னியாகுமரியும் மாவட்டமும் பல ஆண்டுக திருவிதாங்கூரோட இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இணைப்பு ஆதவன்! நன்றி!

கேரளாப்பக்கம் ஒருக்காப் போகத்தான் இருக்கு!

அப்படியே யாழ்ப்பாணம் மாதிரியே இருக்கு!

Link to comment
Share on other sites

ஒரு கேரளா சுற்றுலா போனேன் .

மறக்கமுடியாத அனுபவம் குறிப்பாக ஆலப்புழா படகு வீடு .கடற்கரைகள் சாப்பாடுகள் மிச்சம் சொல்லி அடங்காது .

466481_10150712795190376_154145499_o.jpg

423902_10150708492120376_1547548433_n.jp

படம் தெளிவில்லை ஆனபாடியால் இணைத்துவிடுகின்றேன் .

குஞ்சுமோன் ,

கன்னியாகுமாரியும் சுற்றி பார்த்தேன் .மிக அழகான இடம் .திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு பயணம் ரொம்ப பயமுறுத்திவிட்டது நாகர்கோயிலில் சுந்தரராமசாமி வீட்டிற்கும் சென்றேன் .

Link to comment
Share on other sites

கனம் நிர்வாகம் அவர்களே,

ஆதவன், அர்ஜுன் போன்றவர்கள் இப்பதிவுகள் மூலம் எனது பழைய ஞாபகங்களைத் தூண்டி என்னைக் கடுப்பேத்திரார்கள். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். 20 வயதில் நாங்கள் 6 பேரும் கேரளாவும் - இதற்கு மேல் வேண்டாம். மறுபடியும் கிடைக்காதது. சும்மா கடுப்பேத்தாதீங்க.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவுக்கு போக வேண்டும் என்பது என் கனவு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.