Jump to content

பாடசாலைக்காதல் - அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பரே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண தரவகுப்பு

நான் ஒரு பிரிவு (வகுப்பு)

அவனும் அவளும் இன்னொரு பிரிவு(வகுப்பு)....

 

மூவரும் முதல்வரிசை மாணவர்கள்

படிப்பு பற்றியே அதிகம் பேசினாலும்

வயதுக்குணங்களும் இடைக்கிடை வந்து போகும்....

 

பாடசாலைக்காலங்களில் அதிகம் நான் பகிர்ந்து கொண்டது அவனிடம் தான்...

அவனும் அப்படித்தான்...

இவன்  எனக்கு உறவு என்றாலும் நட்பும் இவன் தான்

அவளும் அப்படித்தான்

உரிமையோடு பழகுவாள்....

இருவரும் என்னிடம் கொட்டியதில் இருவருக்கும் ஒரு காதல் இளையோடி இருப்பதை அறிந்தாலும்

இருவரும் தேவையென்பதாலும்

இதை வெளியிடப்போய் விரிசல் வந்துவிடுவோ என்ற பயத்திலும் தவிர்த்து வந்தேன்...

 

 

அவளிடமும் இவன் மீது நாட்டமிருப்பது  தெரிந்தாலும்

பெண் என்பதால் சிலசங்கடங்களும் கணிப்பு சரியா என்ற தயக்கமும்

தப்பாக நினைத்துவிடுவாளோ  

இந்தப்பிரிவு எம்மை நிரந்தரமாக பிரித்துவிடுமோ என்ற பயமும்

சில மாதங்களைத்தின்றுவிட ...

 

பரீட்சை தொடங்க

அதில் கவனம் செலுத்தினாலும்

பரீட்சை முடிந்ததும் நிரந்தரமாகப்பிரியப்போகின்றோம் என்ற நினைவு வரும் போதெல்லாம்

என்னை உதவும்படி  நச்சரிக்கத்தொடங்கிருந்தான்..

நானும் சாடைமாடையாக அவளிடம் இவனைப்பற்றிப்பேசும் போதெல்லாம்

அவளது வெட்கமும் நிலத்தில் கோடு போடுதலும் புன்சிரிப்பும் 

ஒரு நிலைப்பாட்டுக்கு என்னை வரவழைத்தாலும்

அவர்கள் இருவரும் நேரடியாகப்பேசுவது தான் சரியாக இருக்கும் என்பதால்

அவனை அதற்கு தயார்ப்படுத்தலானேன்......

 

இறுதிநாள் பரீட்சை முடிந்து

நாம் பிரியும் அந்த நாளும் வந்தது...

இருவரும் பேசுவதாக இல்லை.....

பிரியும் நேரமும் வந்தது.....

 

தொடரும்....... :icon_idea:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்த இடத்தில், தொடரும்.... என்று போட்டு விட்டீர்கள் விசுகர். :rolleyes:

Link to comment
Share on other sites

பிறகு என்ன நடந்தது? 

ஆரம்பம் அமர்க்களம்!!  :o

 

https://www.youtube.com/watch?v=Y4WGotsRPSs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்த இடத்தில், தொடரும்.... என்று போட்டு விட்டீர்கள் விசுகர். :rolleyes:

 

நன்றி  சிறி

இதில் தான் தொடரும் போடமுடியும்

ஏனெனில்  இன்னொரு பகுதி தான் வரும்...

 

நன்றி  நேரத்துக்கும் கருத்துக்கும்............

பிறகு என்ன நடந்தது? 

ஆரம்பம் அமர்க்களம்!!  :o

 

மோதிரக்கையால் வாழ்த்து

நன்றியண்ணா......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பம் அட்டகாசம்... அப்படியே தொடருங்கள்...!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுத்த இடத்தில் தொடரும் என்று போட்டு விட்டீர்கள் .

கதை நன்றாக ஆரம்பித்திருக்கிறது . விரைவில் தொடருங்கள் .

காதல் கதை என்றால் எனக்கு மிகவும் விருப்பம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மலரும் நினைவுகள் மலர்ந்து மணம் பரப்புது....அட்டகாசமான ஆரம்பம் அசத்துங்கள் விசுகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பம் அட்டகாசம்... அப்படியே தொடருங்கள்...!! :D

 

 

நன்றியண்ணா.....

 

கன காலமாக தொண்டைக்குள் நின்றது...

இன்று வெளியில போட்டாச்சு... :icon_idea:

பொறுத்த இடத்தில் தொடரும் என்று போட்டு விட்டீர்கள் .

கதை நன்றாக ஆரம்பித்திருக்கிறது . விரைவில் தொடருங்கள் .

காதல் கதை என்றால் எனக்கு மிகவும் விருப்பம் .

 

நன்றி  சகோதரி...

இன்னொரு பகுதி தான்

கனக்க இழுக்காது...

யாழில் மலரும் நினைவுகள் மலர்ந்து மணம் பரப்புது....அட்டகாசமான ஆரம்பம் அசத்துங்கள் விசுகு.

 

ஆகா

இன்னொரு மோதிரக்குட்டு....

 

நான் பதிபவை அனுபவங்கள் மட்டுமே..

அதனால் அவை உயிருள்ளவையாகவும்

உணர்வுள்ளனவையாகவும் இருக்கலாம்..

 

நன்றி  அக்கா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிநாள் பரீட்சை முடிந்து

நாம் பிரியும் அந்த நாளும் வந்தது...

இருவரும் பேசுவதாக இல்லை.....

பிரியும் நேரமும் வந்தது.....

 

பரீட்சை முடிந்து மண்டபத்தைவிட்டு வெளியில் வந்தாச்சு..

பரீட்சை பற்றியும்

பதில்கள் பற்றியும்

எமது பரீட்சைத்தரநிலை பற்றியும்

விடுமுறையைக்கழிப்பது

அடுத்த படிப்பு என 

ஒவ்வொருவராக பேசியபடியும் விடைகொடுத்தபடியும்

நான் இருந்தாலும்

இன்றைக்கு இவர்களது சிக்கலுக்கு ஒரு விடை தெரிந்தாகணும் என்பதால்

அவர்களையே நோட்டம்விட்டபடி இருந்தேன்..

அவர்களும் அதே நோக்கத்தில் இருப்பது தெரிந்தது

மெல்ல மெல்ல கூட்டம் கலைந்து

இறுதியில் நாங்கள் மூவரும் மட்டும் மிஞ்சியிருந்தோம்....

 

சொல்லடா

சொல்லடா என நான் அவனுக்கு சைகை காட்டியபடி

அவளுடன் பேசிக்கொண்டிருந்தேன்....

ஆனால் அவனும் சொல்வதாக இல்லை..

இனி  பாடசாலைக்குள் நிற்கமுடியாது என்பதால் மூவரும் அசையத்தொடங்கினோம்...

 

ஒரு 100 மீற்றர் அசைந்து வந்ததும்

நானும் அவனும் ஒரு பக்கமாகவும்

அவள் இன்னொரு பக்கமாகவும் பிரியும் சந்தி  வந்தது...

அதில் சில நிமிடங்கள் கடந்ததே தவிர

ஒரு முன்னேற்றமும் இல்லை..

 

எமது வீட்டுக்கு அவள் செல்லும் வழியாலும்  போகலாம்

சரி அதால போவோம் வா என அவனை அழைத்தபடி சென்று கொண்டிருக்கின்றோம்...

கதை பல திசைகளையும்  தொட்டுவந்தாலும்

காதலை மட்டும் தொடுவதாக இல்லை.

ஒரு நூறு மீற்றரைக்கடக்க ஒரு மணி நேரம் இழுத்தாலும்

இன்றைய சங்கதி அசையவே இல்லை...

 

மீண்டும் சந்தி

இனி ஒன்றாக செல்லமுடியாது

பிரிந்தாகணும்

இரண்டாகப்பிரியும் இரு ஒழுங்கைக்கு முன் வயல்வெளியில் ஒரு கிணறு

(இத்துடன் இது 3வது கிணறு...)

 

கிணற்றுக்கட்டில் ஏறி இருந்தபடி கதை போகுது

கதைத்ததையே திரும்பத்திரும்ப....

 

கிணற்றுக்குள் எட்டிப்பார்ப்பது

ஆளையால் அதில் பார்ப்பது

சிறு கற்களை எடுத்து  கிணற்றுக்குள் எறிவது

அதை ரசிப்பது 

நேரம் போகுதே தவிர

முக்கிய புள்ளியைத்தொடவே இல்லை...

 

சூரியனும்  பொறுமையிழந்து விடைபெறத்தொடங்கிவிட்டார்

அவர் போனால் நாளை வருவார்

நாங்க...

 

என் நச்சரிப்புத்தாங்க ஏலாதவன் என்னைத்தனியே கூப்பிட்டு

நீங்க தொடக்கி விடுங்க மீதியை நான் பார்க்கின்றேன என்றான்...

அடப்பாவி 

மீண்டும் ஆரம்பத்திலிருந்தா

என்னால் முடிந்தால் எப்பொழுதே செய்திருப்பேனே...

கை காலெல்லாம்  நடுங்குதடா

ஆளைவிடு என்றதும் கெஞ்சத்தொடங்கினான்..

சரி சரி என்னால் முடிந்தவரை ரை பண்ணுறன் என்றுவிட்டு

அவளிடம் சென்ற நான் நிலத்தில் நானும் கோடு போடலானேன்.......

நேரத்தை கணக்கெடுத்து

அவன் ஏதோ ஒன்று உன்னிடம் சொல்லணுமாம் என்றேன்

என்னவாம் என்றாள்

அதை அவனே சொல்வான் என்றுவிட்டு நான் பின்வாங்கி

அவனை முன்னுக்கு நகர்த்தினேன்.....

 

இருவரம் சிறிது நகர்ந்து ஒழுங்கைகள் பிரியும் இடத்திற்கு சென்றனர்

நான் கிணற்றுக்கட்டிலேயே நின்று கொண்டேன்

அங்கே போயும் வேற கதை நடக்குது

வேலியில கதியால ஒடிக்கிறதும்

அதை முறிக்கிறதும் அதால வேலியை அடிக்கிறதும்

வாய்க்குள் வைத்து கடிக்கிறதும் என்று போகுதே தவிர.............

 

சூரியனுக்கே கோபம் வந்துவிட்டது போலும்

அவரும் ஆத்திரத்தில் திடீரென காணாமல்ப்போக இருட்ட ஆரம்பித்திருந்தது

நான் போகும் நேரம் வந்துவிட்தை உணர்த்த

அவர்களை அவசரப்படுத்த

எனது வீடடுக்கு போகும் ஒழுங்கை நோக்கி நடக்கத்தொடங்கினேன்.....

 

அவனும் அவளும் விலகத்தொடங்கினார்கள்

எந்தவித தகவல்களும் பரிமாறப்படவில்லை

என்னால் அதற்கு மேல் எதுவும் செய்யமுடியவில்லை...

எங்கள் மூவரின் தலைகளும் மறையும்வரை  திரும்பிப்பார்ப்பதும்

கை அசைப்பதுமாக பிரியமுடியாமல் விடைபெற்றோம்...

கடைசிப்பிரிவு

அதன் பின்னர் நாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் சேரவே இல்லை....

அவர்கள் இருவரும் சந்திக்கவே இல்லை...

அன்றைய பிரிவு இவ்வாறு தான் நடக்கப்போகிறது என்பதை நாம் உணர்ந்திருக்கவுமில்லை..

காலம் அதன்  ஓட்டத்தில் எல்லாவற்றையும் மாற்றிவிடும்

வாழ்க்கை அதன் வழியே ஓடிக்கொண்டிருக்கும்

அது தடைப்படுவதே இல்லை... 

முற்றும்..

 

(இதன் தொடர்ச்சியாக இன்னொரு பகுதி வரும். விரைவில். அது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும்.)

நன்றி

Link to comment
Share on other sites

ஆ..கா..... வர வர நன்றாக எழுதுகின்றீர்கள் விசுகு அண்ணா. ஒரே மூச்சில் வாசிக்கும் அளவிற்கு விறுவிறுப்பாகவும் உணர்வுள்ளதாகவும் எழுதியுள்ளீர்கள்.

விரைவில் நீங்களும் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளராக ஆகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை :)  தொடருங்கள் வி.அண்ணா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிரமத்துக் காதலின் தயக்கத்தை பாரதிராஜாவும் பாதிதான் சொல்லியிருக்கின்றார் என்பதை இந்தப் பகுதியைப் படித்தபின் தெரிந்து கொண்டேன்...!

 

ப்பா... என்ன ஒரு ஆளுமை...!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ..கா..... வர வர நன்றாக எழுதுகின்றீர்கள் விசுகு அண்ணா. ஒரே மூச்சில் வாசிக்கும் அளவிற்கு விறுவிறுப்பாகவும் உணர்வுள்ளதாகவும் எழுதியுள்ளீர்கள்.

விரைவில் நீங்களும் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளராக ஆகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை :)  தொடருங்கள் வி.அண்ணா!

 

நன்றி  சகோதரி..

 

அந்தளவுக்கு எந்த ஆசையுமில்லை

நோக்கமும் இல்லை

 

ஆனால் ரஐனி வசனம் தான்

எம்மிடம் எதுவுமில்லை

முடிவுகளை எடுக்க நாம் யார்?

அது தான் நடக்குமென்றால் வந்து தானே தீரும்...

காலமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது

ஆனாலும் அப்படி அமைந்தாலும்

என்வழி

தனிவழியாகவே இருக்கும்..... :icon_idea:

 

நன்றி சகோதரி

வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும்..

ஒரு கிரமத்துக் காதலின் தயக்கத்தை பாரதிராஜாவும் பாதிதான் சொல்லியிருக்கின்றார் என்பதை இந்தப் பகுதியைப் படித்தபின் தெரிந்து கொண்டேன்...!

 

ப்பா... என்ன ஒரு ஆளுமை...!! :)

 

 

நான் மிகவும் மதிக்கும் அண்ணாவிடமிருந்து மிகப்பெரிய விருது.

இதற்கு ஏதாவது உந்து துணை இருக்கிறது என்றால்

எதையும் கொட்ட களம் தந்த யாழுக்கும்

அதை சரியாக பயிருக்கு விட்ட யாழ் உறவுகளுக்கும் தான் அந்த வாழ்த்துக்களும் விருதுகளும் சேரும்.

 

நன்றி அண்ணா

வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அதிர்ச்சி எண்டாலும் பரவாயில்லை உடனே எழுதிவிடுங்கள் விசுகு அண்ணா. :rolleyes:

Link to comment
Share on other sites

நன்றாக எழுதுகிறீங்கள் அண்ணா. தொடர்ச்சியை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா நம்ம விசுகரிடம் எழுத்துவல்லமை அதிகமாகவே இருக்கின்றது. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் போற போக்கைப் பார்த்தால் கோடாம்பாக்கத்தில் தான் நிற்பார் போல கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அதிர்ச்சி எண்டாலும் பரவாயில்லை உடனே எழுதிவிடுங்கள் விசுகு அண்ணா. :rolleyes:

 

 

எது  தற்பொழுது இதை இங்கு எழுதத்தூண்டியது..?

அது தான் அடுத்து வரும்..

 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி  சுமே...

நன்றாக எழுதுகிறீங்கள் அண்ணா. தொடர்ச்சியை எழுதுங்கள்.

 

 

நன்றி  தம்பி....

 

ஒவ்வொருவரிடமிருந்து ஒவ்வொன்று எம்மிடம் தொத்திக்கொள்கிறது

அந்தவகையில் இயற்கையாகவே உள்ள நகைச்சுவை உணர்வை மெருகூட்ட

உங்களது பாணியும் என்னை வலுச்சேர்க்கிறது..

உங்களை அறியாமலேயே நீங்கள் விதைப்பவை இவை

நீங்களும் தொடருங்கள்...

 

நன்றி தம்பி

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா நம்ம விசுகரிடம் எழுத்துவல்லமை அதிகமாகவே இருக்கின்றது. தொடருங்கள்.

 

நன்றி அண்ணா

எல்லாம் உங்கள் போன்றவர்களின் ஆசீர்வாதமும் தூக்கிவிடலும் தானண்ணா..

 

நன்றியண்ணா

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்து பச்சையும் குத்தியுள்ளேன் ...தொடருங்கள் அந்தநாள் ஞாபகங்களை....உங்கள் தொடர்களை வாசிக்கும் பொழுது எனக்கு இளமை ஊஞ்சலாடுகிறது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின்சார கனவா விசுகர் :lol:

 

நன்றி அண்ணா

 

அதே...

கன காலமாக நெஞ்சுக்குள் கிடந்த விடயம் ஒன்று

இதில் சம்பந்தப்பட்ட மூவரைவிட

எவருக்கும் தெரியாதது இது..

 

தற்பொழுது சொல்லலாம் என தள்ளிய விடயம்

பக்குவம் என நினைக்கின்றேன்

இது இனித்தெரிய வந்தாலும்

எவரும் தப்பாக எடுக்கமாட்டார்கள்

அவரவர் துணை மற்றும் பிள்ளைகள் உட்பட...

ஏனெனில்அப்பொழுது எமக்கு வயசு 15-16

அந்த வயதை எமது மூவரின் பிள்ளைகளும் கடந்துவிட்டார்கள்.

ஆனாலும் ஆட்களைக்கண்டுபிடிக்காதபடி

அங்கங்கே சில திசை மாற்றங்களைச்செய்திருக்கின்றேன்.

 

நன்றி அண்ணா

வருகைக்கும் கருத்துக்கும் நேரத்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் போற போக்கைப் பார்த்தால் கோடாம்பாக்கத்தில் தான் நிற்பார் போல கிடக்கு.

 

 

 

 

நன்றியண்ணா

நீங்கள் கோடம்பாக்கம் என எழுதியதும்

சுவியண்ணா பாராதிராசா பற்றி எழுதியதும்

கொஞ்சம் நினைத்துப்பார்த்தேன்

 

நான்

அவன்

அவள்

அந்த இடம்

கிணறு

வயல்

சூரியன்

ஒழுங்கைகள்

பனை மரங்கள்

வேலி மற்றும் கதியால்கள்....

அப்படியே கண் முன் நீற்கின்றன

அவற்றை அவ்வாறே என்னால் இன்றும் அமைக்கமுடியும்....

அது ஒரு கனாக்காலமண்ணா.... :wub:

 

நன்றியண்ணா

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்து பச்சையும் குத்தியுள்ளேன் ...தொடருங்கள் அந்தநாள் ஞாபகங்களை....உங்கள் தொடர்களை வாசிக்கும் பொழுது எனக்கு இளமை ஊஞ்சலாடுகிறது :D

 

 

நன்றி புத்தர்

 

இதை எழுதமுதல் எனக்கொரு எண்ணம் இருந்தது

இக்கதை போல் இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும்

நாம் ஒவ்வொருவரும் தாண்டி வந்த பருவம்

பாதை

 

ஒருவரையாவது இது  எழுதத்தூண்டினால் அதுவே  இதன் வெற்றி..

தயாரா புத்தரே... :D

 

நன்றி சகோதரா

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தர்

 

இதை எழுதமுதல் எனக்கொரு எண்ணம் இருந்தது

இக்கதை போல் இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும்

நாம் ஒவ்வொருவரும் தாண்டி வந்த பருவம்

பாதை

 

ஒருவரையாவது இது  எழுதத்தூண்டினால் அதுவே  இதன் வெற்றி..

தயாரா புத்தரே... :D

 

நன்றி சகோதரா

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்

 

என்ட அந்த நாள் ஞாபகமும் எழுத இருகின்றேன் ஆனால் தற்பொழுதல்ல .....நேரம் தான் முக்கிய பிரச்சனை ...நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் எழுதுவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரியும் இடத்திலாவது இருவரும் மனம் திறப்பார்கள் என்று நினைத்தேன் . ஏமாற்றி விட்டீர்கள் .

அது சரி , என்ன ஒரு அதிர்ச்சிக்கு தயாராகும்படி முன் எச்சரித்து விட்டீர்கள் . எப்பொழுது நீங்கள் மூவரும் மீண்டும்

சந்தித்தீர்கள் ? திரைப்படங்களில் வரும் Climax மாதிரி காத்திருக்க வேண்டியது தான் .

ஒவ்வொருவரும் அந்த நாள் ஞாபக கதைகளை அவிழ்க்க போயினம் . :wub:  இனி யாழில் கொண்டாட்டம் தான் போங்க :D :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையெல்லாம் மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டிய நிலையில் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் எனும் போது..நேரம் விரயமாக்காமலே இருந்து விடத் தோன்றுகிறது😇.
    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - மூன்று ---------------------------------------------------------------------- இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமே கோவிலுக்கு போவது தான் என்று பல நாட்களாகவே மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தது. அம்மன் கோவிலின் 15 நாட்கள் திருவிழாவில் சரி நடுவில் போய் அங்கே இறங்கியிருந்தோம்.   எல்லா ஊர்களிலும் அவர்களின் ஊரையும், ஊர்க் கோவில்களைப் பற்றியும் பெருமையான கதைகள் இருக்கும். இங்கும் அதுவே. உலகிலேயே ஒரு சிவன் கோவிலும், ஒரு அம்மன் கோவிலும் அருகருகே இருந்து, ஒரே பொது வீதியை கொண்டிருப்பது இரண்டே இரண்டு இடங்களில் தான் இருக்கின்றது என்று சொல்வார்கள். அதில் ஒன்று இங்கு. அம்மன் கோவிலின் தெற்கு வீதியும், சிவன் கோவிலின் வடக்கு வீதியும் ஒன்றே. சிவன் கோவில் பிரமாண்டமானது. அது தலைவர் அவர்களின் குடும்பக் கோயில் என்ற வரலாறு கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். இன்றும் அவர்களின் குடும்பமே சிவன் கோவிலின் சொந்தக்காரர்களும், நிர்வாகிகளும்.   சிவன் கோவிலின் பிரமாண்டம் அதைக் கட்டியவர்கள் ஒரு காலத்தில் இருந்த செல்வாக்கான, மிக வசதியான நிலையைக் காட்டுகின்றது. இன்று அந்தக் கோவிலின் உள்ளே நிற்கும் போது, கோவிலுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய செய்யாமல் விடப்பட்டிருக்கின்றன என்றே தோன்றியது. இன்றைய நிலையில் அவர்களால் எல்லாப் பணிகளையும் செய்வது இயலாத காரியம். ஆட்பலமும் இல்லை, பலரும் இடம் பெயர்ந்து போய்விட்டனர். ஒரு தனியார் கோவிலாகவே சதாகாலமும் இருந்த படியால், பெரிய வரும்படியும் என்றும் இருந்ததில்லை என்று நினைக்கின்றேன். அவர்களும் அதை எதிர்பார்த்ததும் இல்லை. ஆனாலும் எக் காரணம் கொண்டும் அவர்கள் அந்தக் கோவிலை வேறு எவரிடமும் கொடுக்கமாட்டார்கள். புரிந்து கொள்ளக் கூடிய பெருமையே.   அம்மன் கோவில் பொதுக் கோவில். சிவன் கோவில் அளவிற்கு கட்டுமானத்தில் பிரமாண்டமானது இல்லை. ஆனால் இதுவும் ஒரு பெரிய கோவில். ஊரே பயந்து பணியும் தெய்வம் அங்கு குடியிருக்கின்றது என்பது பெரும்பாலான ஊரவர்களின் நம்பிக்கை. இங்கு வளரும் காலத்தில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை, ஆனாலும் அடி மனதில் ஒரு பயம் என்றும் தங்கியிருந்தது. இருட்டில் பேய்க்கு பயப்படுவது போல. அம்மை, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் அதிகமாக வரும் சித்திரை, வைகாசி மாதங்களில் கோவில் திருவிழா நாட்கள் வருவதும் 'சாமி, கண்ணைக் குத்தும்' என்ற பயத்தை உண்டாக்கி வைத்திருந்தது.   இந்த ஊரவர்கள் படம் பார்க்க கடல் கடந்து தமிழ்நாடு போய் வருவார்கள், அம்மன் திருவிழாவிற்கு சேலைகள் எடுக்க போய் வருவார்கள், வேட்டைத் திருவிழா அன்று நடக்கும் வாண வேடிக்கைக்கு வெடிகளும், வாணங்களும் எடுத்து வர போய் வருவார்கள் என்பன பல வருடங்களின் முன்னர் நிகழ்ந்த உண்மையான நிகழ்வுகளே.   திருவிழா நாட்களில் பூசைகள் நீண்டவை. சில மணித்தியாலங்கள் எடுக்கும் ஒவ்வொரு பகல் பூசையும், இரவுப் பூசையும். மக்களில் எவருக்கும் நேரம் பற்றிய உணர்வு ஒரு துளி கூட இருக்கவில்லை என்றே எனக்குப் பட்டது. அத்துடன் பூசைகள் பல காரணங்களால் மிகவும் பிந்தி விடுகின்றது அல்லது அதிக நேரம் எடுத்து விடுகின்றது. ஆனாலும் 'இன்று கொஞ்சம் பிந்தி விட்டது...' என்ற ஒரு வரியுடன் எல்லோரும் கடந்து போகின்றனர். கோவிலை சுற்றி மூன்று மடங்களில் அன்னதானம் கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சிறு வயதில் இருந்த காலங்களில், பல திருவிழாக்களின் போது ஒரு மடத்தில் கூட அன்னதானம் கொடுக்கப்பட்டதில்லை. இன்று புலம் பெயர்ந்தவர்களே அன்னதான உபயம். அன்றைய உபயகாரர்களின் பெயர்கள் மடங்களிற்கு வெளியே அறிவிப்புக்களாக எழுதப்பட்டிருக்கின்றது.   மிகவும் ஆச்சாரம் பார்ப்பார்கள். கோவில் வீதியில் கூட மேல் சட்டை அணிய முடியாது. அப்படி மீறி அணிந்திருந்தால், யாராவது வந்து ஏதாவது சொல்லுவார்கள். தாங்க முடியாத வெக்கையும், வேர்வையும் என்று வெளியே முன் வீதியில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றேன். வேறு சிலரும், வயதானவர்கள், அங்கே இருந்த ஒரு திண்ணையில் ஏற்கனவே முடியாமல் அமர்ந்திருந்தனர். அதற்குப் பின்னே ஒரு மடம் இருந்தது. ஒருவர் வந்து அருகே நின்றார். சிறிது நேரம் பேசாமல் நின்றவர் மெதுவாக ஆரம்பித்தார்.   'தம்பி, இந்த மேல் சட்டை போடக் கூடாது என்று சொல்வது எல்லாம் அந்த நாட்களில் அவர்கள் செய்த சதி' என்றார். இவர் சொல்லும் அந்த 'அவர்கள்' யாராக இருக்கும் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் இவர் யார் என்று எனக்குத் தெரியாது, நான் யாரென்றும் அவருக்கும் தெரிந்திருக்காது. ஆனாலும், எங்கள் இருவருக்குமிடையில் நிச்சயம் ஒரு தொடர்பு, உறவுமுறை இருக்கும். 'யார் பூணூல் போட்டிருக்கின்றார்கள், யார் போடவில்லை என்று பார்ப்பதற்கே இந்த மேல் சட்டையை கழட்டும் வழக்கம் வந்தது' என்றார். பெரியாரின் சீடர் ஒருவர்! சும்மா வெறுமனே இருவரும் பேசி விட்டு போக வேண்டியது தான், வெக்கை தெரியாமல் நேரம் போக இந்தப் பேச்சு உதவுமே தவிர ஒரு மாற்றமும் ஏற்படாத, ஏற்படுத்த முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று.   காலை பத்து மணிக்கு ஆரம்பித்த பூசை முடியும் போது கிட்டத்தட்ட இரண்டு மணி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு மடத்தில் அன்னதானம். மடத்தில் வயது போனவர்கள் இருப்பதற்கு சில கதிரைகளும், ஒன்றிரன்டு வாங்கில்களும் போட்டிருந்தனர். மற்றவர்கள் நிலத்தில் சம்மணம் போட்டே இருக்கவேண்டும். நிலத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு எழும்பும் போது சிரமமாகவே இருந்தது. போதாக்குறைக்கு அந்த வாரம் கரப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் அடிபட்டு இடது முழங்கால் சில்லில் ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருந்தது. விமானப் பயணம் நல்லதல்ல என்ற மருத்துவர்களின் ஆலோசனையை மீறியே பயணம் போய்க் கொண்டிருந்தது.   தினமும் மதியமும், இரவும் இதுவா நிலைமை என்ற நினைப்பு கண்ணைக் கட்டியது.   (தொடரும்..........)    
    • இல்லாத விடுதலை புலிகளை பார்த்து இன்னும் ஹிந்தியா வுக்கு பயம்...,  தமிழர்கள் Now: அந்த பயம் இருக்கனும்🔥🔥  
    • ஏதோ ஒரு நாட்டின் சரணாகதியாகத் தானே அரசு போகிறது. சீனாவாக இருந்துட்டு போனால் என்ன?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.