Jump to content

நீங்கள் உங்கள் மகளுக்கு என்ன சேர்த்து வைத்திருக்கிறீர்கள்.......

Recommended Posts

நீங்கள் உங்கள் மகளுக்கு என்ன சேர்த்து வைத்திருக்கிறீர்கள்.......

வீடியோவை பார்த்துவிட்டும் பதிலளிக்கலாம்... பார்காமலும் பதிலளிக்கலாம்

http://www.dailymotion.com/video/k4zssI7WOuC6WdaFohz?start=736

Link to comment
Share on other sites

நீங்கள் உங்கள் மகளுக்கு என்ன சேர்த்து வைத்திருக்கிறீர்கள்.......

வீடியோவை பார்த்துவிட்டும் பதிலளிக்கலாம்... பார்காமலும் பதிலளிக்கலாம்

http://www.dailymotion.com/video/k4zssI7WOuC6WdaFohz?start=736

வீடியோ பார்க்கேலை, இப்படி யாரும் கேட்டால்  "Mind your own business" என்பது தான் பதில்!! :D

Link to comment
Share on other sites

வீடியோ பார்க்கேலை, இப்படி யாரும் கேட்டால்  "Mind your own business" என்பது தான் பதில்!! :D

சாமி இங்கிலீஷ் எல்லாம் பேசுது

நீங்கள் பீட்டர் அடித்திருப்பது சரியாக விளங்கவில்லை :rolleyes:

ஒருவேளை நீங்கள் சொல்ல முயல்வது "உங்களுடைய வியாபாரத்தில் தான் குறி வைத்துளேன்" என்று அர்த்தப்படுமோ?

ஆக்கபூர்வமாக பல கருத்துகள் வைக்க இடமுண்டு, இல்லவிட்டால் உங்கள் வியாபாரத்தை பார்த்துக்கொண்டு செல்லலாம்

விளங்காதவர்களுக்காகத்தான் வீடியோ இணைப்பை தந்துள்ளேன் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணோ.. பெண்ணோ.. இளைஞனே.. யுவதியோ.. சிறுவனோ சிறுமியோ.. எல்லோருக்கும் சுய தேவைகள் உண்டு. அதற்கு சேமிப்பு அவசியம்.

பாடசாலைக் காலத்தில் கற்றுக் கொண்ட சேமிப்பு இன்று வரை எனக்கு உதவுகிறது. இதில்... மகள்.. மகன் என்ற பாகுபாடு அவசியமில்லை. அவசியம் சேமிப்பு. உங்கள் சுய தேவைகளை.. சுயத்தை இழக்காமல்.. பூர்த்தி செய்ய. :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உங்கள் மகளுக்கு என்ன சேர்த்து வைத்திருக்கிறீர்கள்.......

வீடியோவை பார்த்துவிட்டும் பதிலளிக்கலாம்... பார்காமலும் பதிலளிக்கலாம்

http://www.dailymotion.com/video/k4zssI7WOuC6WdaFohz?start=736

சேவயர்,

நரிக்கும் ஆசா பாசங்கள் இருக்கும் தானே?

:)

ஜின்சிஸ் கான், தைமூர், அலெக்ஸாண்டர், பிரித்தானியா, சோவியத் இப்படிப் பலர் கட்டிய சாம்ராஜ்யங்களை காலம் காலில் போட்டு மிதித்தது வரலாறு.

இது இந்தியாவுக்கும் நடக்கலாம். கட்டாயம் என்றில்லை. நடந்தால் நல்லம் அவ்வளவே.

தமிழ் நாடு தனி நாடாகினால் ஒரு வருடத்துக்குள் இலங்கை பிளவு படுவது தவிர்க முடியாதது ஆகும்.

கற்பனைதான் ஆனா நல்லா இருக்கில்ல :)

நீங்கள் உங்கள் மகளுக்கு என்ன சேர்த்து வைத்திருக்கிறீர்கள்.......

வீடியோவை பார்த்துவிட்டும் பதிலளிக்கலாம்... பார்காமலும் பதிலளிக்கலாம்

இதை அன்றே பார்த்திருந்தேன்..

இதில் அம்மாக்களின் உலகம் என்பது மிகச்சிறிது என்பது புலப்பட்டது... :o

நீங்கள் என்ன சேர்த்து வைத்திருக்கின்றீர்கள் என்பதற்கு எனது பதில்

அண்டா சட்டி பானை என்ற பதில் வராது என்னிடமிருந்து....

படிப்பு

தனியே நிற்கக்கூடிய துணிவு

அசாதாரணநிலையிலும் தேவையான முடிவுகளை எடுக்கக்கூடிய பக்குவம்

அப்பா அம்மா நல்ல குடும்பம்

நல்ல வளர்ப்பு என்ற பெயர்

இவ்வளவு தான்.

இவ்வளவும் காணும் வாழ.... :icon_idea:

Link to comment
Share on other sites

விழுந்து விழுந்து காசை சேர்க்காமல், பதின்ம வயதில் பிள்ளைகளை சரியாக வழிநடத்தவேண்டும் என்ற கருப்பொருளுடனே இதை ஆரம்பித்தேன்.

விசுகு அண்ணா, நெடுக்ஸ் அண்ணா மற்றும் மீனா உங்களின் கருத்துக்கும் நேரத்துக்கும் நன்றி

உண்மை

அதைப்புரிந்தே கருத்தை வைத்தேன்..

நன்றி

தொடர்ந்து பேசுவோம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்பிள்ளைக்கு அண்டா குண்டா வாங்கி சேமிக்காமல் / நகை நட்டுக்கள் வாங்கி சேமிக்காமல்.... நல்ல கல்வியையும் மனத்திடத்தையும் சுயமாக சிந்திக்கும் மனத்திறனையும் கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி, கார் லைசென்ஸ், கராட்டியில் கறுப்பு பெல்ற். :D  :lol:  :icon_idea: 

Link to comment
Share on other sites

கல்வி, கார் லைசென்ஸ், கராட்டியில் கறுப்பு பெல்ற். :D  :lol:  :icon_idea: 

கல்வி, கார் லைசென்ஸ்  :D  :lol: 

கராட்டியில் கறுப்பு பெல்ற். :o  :( 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி, கார் லைசென்ஸ், கராட்டியில் கறுப்பு பெல்ற். :D  :lol:  :icon_idea: 

கல்வி, கார் லைசென்ஸ்

இதில் உடன்பாடுண்டு

ஆனால் கராட்டியில் கறுப்பு பெல்ற்

இது பெண்களுக்கு வேண்டாமே... :lol:  :D

ஆண்களிடம் தான் பாதுகாப்புத்துறை இருக்கணும்.. :icon_idea:  

பெண்களிடம் 

அன்பும் 

தன்னம்பிக்கையும் 

மென்மையான குணங்களும் தான் அவளது சொத்துக்கள்......

அது நூற்றாண்டுகளுக்கும் தொடரணும்

தொடர நாம் வழி செய்யணும்..... :)

Link to comment
Share on other sites

நாம் ஒன்றும் சேர்க்க வேண்டியதில்லை.. சிறந்த முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினாலே போதும். :huh::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஒன்றும் சேர்க்க வேண்டியதில்லை.. சிறந்த முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினாலே போதும். :huh::D

அதுதுதுதுது......... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஒன்றும் சேர்க்க வேண்டியதில்லை.. சிறந்த முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினாலே போதும். :huh::D

என்னத்தை எழுதலாம் என யோசித்தேன் இதை விட சிம்பிளாக எழுத முடியாது. ஆனாலும் கேட்ட கேள்விக்குப் பதில் பிழை :D

Link to comment
Share on other sites

என்னத்தை எழுதலாம் என யோசித்தேன் இதை விட சிம்பிளாக எழுத முடியாது. ஆனாலும் கேட்ட கேள்விக்குப் பதில் பிழை :D

வாத்தியார்.. நான் எற்கனவே உங்கட வகுப்பில் இருந்து ஓடிப்போய்ட்டன்.. :o வெருட்டிற வேலையெல்லாம் வேணாம்.. ஆமா.. :unsure::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் என்றால் நாலு  முட்டைக்கோழியும்  இரண்டு பசு மாடும் ஒரு கன்னுக்குட்டியும்

ஒரு ஆட்டுக்குட்டியும்சேர்த்து  வைக்கலாம்.அதை எப்படி வளக்கலாம் எனவும் சொல்லிக்கொடுக்கலாம். :D

இங்கினை என்னத்தைச் சேர்த்து... வைத்து என்னத்தைச் செய்யிறது ... :lol:
வைச்சிருக்கிறதையும் அனுபவிக்க ஒரு கொட்டுப்பினை வேணுமல்லோ.. :lol:

Link to comment
Share on other sites

மேற்கு நாடுகளில் பிள்ளைகள் பட்டதாரிகள் ஆவதென்பது நம்மூரில் பிள்ளைகள் பாடசாலை போவது போன்றது.
 
கல்வி, வாழ்வதற்கான தன்னம்பிக்கை போன்றவற்றை பாடசாலைகளே அவர்களுக்கு கொடுத்து விடும்.  அப்படி இல்லையென்று சொல்வோமாகில் மேற்கு நாட்டு கல்வியை நாம் குறைவாக மதிப்பிடுகிறோம்.
 
ஆனால் வாழ்க்கை என்பது படிப்பும், வேலையும், பணமும் அல்ல. இவை அவசியம் தான். ஆனால் இவை அல்ல.
 
வெளிநாட்டுக்கு சிறு வயதில் வந்த பிள்ளைகளைப் பார்த்திருக்கிறேன். சிறிய நன்பர் கூட்டம்.. சிறிய உறவினர் கூட்டம்.. என்பவற்றுடன் அவர்கள் வாழ்வு சுருங்கி விடுகிறது.
 
இலங்கையில் இருந்து கீழ் நடுத்தர வர்க்கப் பின்ணனியில் [  Lower middle class ] இருந்து வந்த பெற்றோர்கள் தமக்கு கிடைக்காத பொருளாதார வசதி கொண்ட வாழ்கை தம் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நாயாய் பேயாய் அலைகிறார்கள்.
 
பிள்ளைகளின் வாழ்க்கையில் உண்மையான சந்தோசத்தை எது கொடுக்கும் என்பதை அவர்கள் உணரவேண்டும். சில சமயம் இப்படியான பிள்ளைகளுக்கு உண்மையில் இப்படி ஒரு சமுதாய வாழ்வு இருக்கிறதா என்று தெரியாத வகையில் அவர்கள் புறொயிலர் கோழிகள் போன்று வளர்ந்திருப்பதும் நடக்கிறது.  :mellow:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வெள்ளிக் கிழமையில் இருந்து இதில் ஈசனுடன் உடன்படுகின்றேன்...!

மகன் யுனியில் இருந்து வீட்டுக்கு வரும்வழியில் கார் இன்னொரு காருடன் விபத்தில் சிக்கி முன்பக்கம் சேதம். ஏர்பாக்ஸ் எல்லாம் சிரித்துக் கொண்டு நிக்குது. அவரே பொலிசுக்கும் தகவல் சொல்லி அவற்றின் அலுவல்கள் எல்லம் முடித்துவிட்டு பிறகுதான் எனக்கு போன் பண்ணிணார். நான் பதட்டத்துடன் பிள்ளைக்கு என்னவோ ஏதொ என்று பதறி அடிச்சு ஓடிப் போனால் அவர் கூலாக நின்று எனக்கு ஆறுதல் சொல்கின்றார்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.