Jump to content

சூரிய ஒளிச் சக்தியில் உலகை வலம் வருகிறது Solar Impulse 2 விமானம்


Recommended Posts

முற்றிலும் சூரிய ஒளிச் சக்தியைக் கொண்டு இயங்கும் Solar Impulse 2 விமானம் நேற்று காலை 7:12 ற்கு அபூதாபியிலிருந்து புறப்பட்டு 6000 மீற்றர் உயரத்தில் பறந்தது. இந்த விமானம் வேறெந்த எரிபொருளையும் பயன்படுத்தாதவில்லை.

 

f0a681314324f0e4fbb8c5147107f86dfeb1f1ef

 

13 மணித்தியாலங்களின் பின்னர் 400 கிலோமீற்றருக்கு அப்பாலிருக்கும் Mascate இல் சூரியன் மறைந்தபோது தரையிறங்கியது. இன்று அதிகாலையில் இந்த விமானம் பயணத்தைத் தொடரவுள்ளது.

12 வருட ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள Solar Impulse 2, சூரிய சக்திப் பாவனையை ஊக்கப்படுத்துவதற்காக உலகைச் சுற்றி வரப் போகிறது.

 

https://fr.news.yahoo.com/solar-impulse-2-atterri-à-oman-première-étape-162541707.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமான பறப்பில், முக்கிய முதல் அடி.
இதன் தொழில் நுட்பம், மேலும் வளர்ந்தால்.... தினமும் பலகோடி லீற்றர் எரி பொருளையும், காற்று மாசு அடைதலையும் தவிர்க்கலாம்.

Link to comment
Share on other sites

5e70fea2813eb475b505a6c24a3c8cee8f053d9e

 

இன்று காலை 6:30 மணிக்கு மஸ்காட்டிலிருந்து கிழம்பிய  Solar Impulse 2 விமானம் அரபுக் கடலைத் தாண்டி இந்தியாவை நோக்கிப் பறந்து கொண்டிருக்கிறது.

1464 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அஹ்மதாபாத் நகரில் தரையிறங்க ஏற்பாடாகியுள்ளது. இத் தூரத்தைத் தொடர்ச்சியான 16 மணித்தியாலப் பறப்பில் கடக்கவுள்ளது.

Link to comment
Share on other sites

ஏன் அரபுநாட்டில் பரீட்சார்த்தம்! இனி அவர்கள் பணத்திமிர் அடங்கி பேரீச்சம்பழம் விற்று வாழவேண்டி வரும் என்பதனை உணர்த்தவா....??  :(

Link to comment
Share on other sites

நல்ல விடயம்.

 

ஒரு விமானத்தினையே சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் சக்தியினால் இயக்க முடியுமாயின்  கார்கள் / பேரூந்துகள் போன்றவற்றை ஏன் இயக்க முடியாது?

 

 

ஏன் அரபுநாட்டில் பரீட்சார்த்தம்! இனி அவர்கள் பணத்திமிர் அடங்கி பேரீச்சம்பழம் விற்று வாழவேண்டி வரும் என்பதனை உணர்த்தவா....??  :(

 

அரபு நாடுகளின் பணத்திமிர் மற்ற எந்த நாடுகளை பாதித்தது என்று உதாரணங்கள் தரமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.

 

ஒரு விமானத்தினையே சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் சக்தியினால் இயக்க முடியுமாயின்  கார்கள் / பேரூந்துகள் போன்றவற்றை ஏன் இயக்க முடியாது?

 

 

 

தொடர்ச்சியான சூரிய ஒளி வழங்கல் பிரச்சினை.

விமானத்திட்க்கு 6000 மீற்றர் உயரத்தில் இலகுவாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2400102946.jpg

 

 

 

Gulf News.

 

ஏனப்பு... எங்கட எயர்போட்டுக்களின் 'தரம்' சரியில்லையா? :o

 

இதன் பாதையில் 'அவுஸ்' இல்லாததைச் சொன்னேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Published on 9 Apr 2014

The solar airplane Solar Impulse 2 has been presented on April 9th. The construction of the experimental solar aircraft didn't happen in a day. Watch this video about the construction of Solar Impulse 2 and understand the steps that had to be taken when you're looking towards attempting the First #RTW Solar Flight!

WHAT IS SOLAR IMPULSE ?
Solar Impulse is the only airplane of perpetual endurance, able to fly day and night on solar power, without a drop of fuel.
Solar Impulse challenge is to attempt the First Round-The-World Solar Flight in 2015. A way for Bertrand Piccard, André Borschberg and their team to demonstrate how pioneering spirit, innovation and clean technologies can change the world. 

Get more information about the project: http://www.solarimpulse.com

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகமதாபாத் வந்தது உலகின் முதல் 'சோலார் விமானம்'!!

 

அகமதாபாத்: சூரிய ஒளி சக்தியில் மட்டுமே இயங்கக் கூடிய உலகின் முதலாவது சோலார் விமானம் நேற்று குஜராத்தின் அகமதாபாத் வந்தடைந்தது.

 

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியிலிருந்து நேற்று முன்தினம் தனது பயணத்தைத் தொடங்கிய உலகைச் சுற்றும் சூரிய ஒளியில் இயங்கும் விமானமான 'சோலார் இம்பல்ஸ் 2' நேற்று நள்ளிரவு குஜராத்தின் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

 

ஏறத்தாழ 5 மாதங்கள் சூரிய ஒளியைக் கொண்டே உலகை சுற்றவுள்ள இந்த விமானம் சுமார் 22,000 மைல் தூரத்தை தனது பயணத்தில் கடக்க இருக்கிறது. 500 மணி நேரம் வானில் பறக்கும் இந்த விமானம், ஒரு சொட்டு விமான எரிபொருளைக் கூட உபயோகப்படுத்தாமல் மூன்று கண்டங்களையும், இரண்டு கடற்பரப்புகளையும் கடக்க உள்ளது.

 

அந்த வகையில் அபுதாபியிலிருந்து புறப்பட்டு ஓமன் வந்தடைந்த விமானம், ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து புறப்பட்டு அரபிக்கடல் வழியாக 1465 கி.மீ பயணம் செய்து நேற்று இரவு 11.25 மணிக்கு, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

 

விமானத்தை இயக்கிய பெர்ட்ரண்ட் பிக்கார்டுக்கு மோனாகோவில் உள்ள விமானத்தின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ட்விட்டர் மூலம் வாழ்த்து சொல்லப்பட்டது. அவரையும் அவரது சகவிமானிகளையும் விமான நிலைய அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.

 

'சோலார் இம்பல்ஸ் 2'-வின் வருகையையொட்டி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்து பல நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இன்னும் நான்கு நாட்கள் இந்த விமானம் அகமதாபாத்தில் வைக்கப்படும் என்று சுவிஸ் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

 

பின்னர் அங்கிருந்து கிளம்பி வாரணாசியில் சிறு ஓய்வு எடுத்துக் கொண்டு மார்ச் 16-ம் தேதி மியான்மருக்குச் செல்லும் தனது பயணத்தின் நான்காவது பகுதியைத் தொடங்க இருக்கிறது.

 

இந்த விமானத்தில் ஒவ்வொரு பைலட்டும் தனியாக ஐந்து நாட்கள் பயணம் செய்கின்றனர். இந்த சுற்றுப்பயணத்தின் மிக நீண்ட பகுதியாக விமானிகளில் ஒருவர், சீனாவில் இருந்து ஹவாய்க்கு, சுமார் 8,500 கிலோமீட்டர் தூரத்தை ஐந்து நாட்கள் இரவும் பகலும் இடைவிடாமல் பறந்து கடக்க இருக்கிறார்.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இரவில் இயங்காது போலிருக்கே?

 

ஈழப் பிரியனுக்கும், யாழ் வாசகர்களுக்குமாக.... இணையத்தில் திரட்டிய சுவராசியத் தகவல்கள்.

 

ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக்கூடிய விமானமாக உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 36 மணி நேரம் பயணிக்கும் திறன் கொண்டது.

 

சூரிய வெளிச்சம் இல்லாத நிலையில், சேமிக்கப்பட்ட மின்சார ஆற்றலில் இரவில் தொடர்ந்து 9 மணிநேரம் பறந்ததும் பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

 

இந்த சோலார் விமானம் ஏர்பஸ் ஏ380 விமானத்திற்கு இணையான நீளம் கொண்ட இறக்கைகளை கொண்டது. அதாவது இதன் இறக்கை 236 அடி நீளம் கொண்டது. அதேவேளை, ஏர்பஸ் ஏ380 விமானம் 500 டன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த இம்பல்ஸ் 2 விமானம் வெறும் 2.3 டன் மட்டுமே எடை கொண்டது. ஏனெனில், இது முழுவதும் கார்பன் ஃபைபர் தகடுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தின் இறக்கைகள் மீது 17,000 சோலார் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து பெறப்படும் மின்சாரம் லித்தியம் அயான் பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.

 

மேலே எழும்புவதற்காக ரன்வேயில் ஓடும்போது மணிக்கு 35 கிமீ வேகத்திலும், பறக்கும்போது சராசரியாக 90 கிமீ வேகத்திலும் பறக்கும். இரவு நேரத்தில் மின் திறனை சேமிப்பதற்காக அதிகபட்சமாக 60 கிமீ வேகம் வரை செல்லும். அதிகபட்சமாக மணிக்கு 140 கிமீ வேகம் வரை பறக்கக்கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

அரபு நாடுகளின் பணத்திமிர் மற்ற எந்த நாடுகளை பாதித்தது என்று உதாரணங்கள் தரமுடியுமா?

 

அரபு நாடுகளுக்கு தொழில் தேடிச்சென்றவர்கள் படும் அவலம்பற்றி ஊடகங்களே தெரிவிக்கின்றன, தவிர அங்கு தொழில் புரிந்துவிட்டு வந்தவர்கள் அரேபியர்களின் திமிர்பற்றிக் கூறியதைக் கேட்டுள்ளேன்.  
 
பெரும் செல்வந்தர்களாக இருக்கும் அரேபியர்களின் தவறுகளை பிற நாட்டவன் சுட்டிக்காட்டினால் காட்டியவன் அங்கு குற்றவாளியாவான். 
 
பிற நாட்டவர்கள்மீது அந்த அரேபியர்களில் ஒருவன் பொய்யான குற்றம் சுமத்தினாலும் அது உண்மையான குற்றமாகவே கருதப்படும். இலங்கைப் பெண் ரிசானாவின் படுகொலை இதற்கு ஒரு சாட்சி.  
 
வேலைக்குச் சென்ற அப்பாவிப் பெண்கள் சீரழிக்கப்பட்டால் சீரழித்த அரேபியனுக்குத் தண்டனை இல்லை. சீரழிக்க வாய்ப்புக் கொடுத்ததற்காக அப்பாவிப் பெண்ணுக்கே தண்டனை கிடைக்கும்.
 
அரபு நாடுகளில் சித்தரவதைக்கு உள்ளாகி உடம்பில் சூட்டுக் காயங்களுடனும், ஊசி, ஆணிகளுடனும் தப்பிவந்தவர்களின் செய்திகள் வந்தனவே தவிர அதற்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிகப்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை 
 
மாற்று விமானப் பயணத்திற்கு தங்கியிருந்த வேளைகளில், பயணிகளின் தேவைகளைக் கவனிப்பதில், அரபு நாட்டவனுக்கும், பிறநாட்டவனுக்கும் இடையே காட்டும் பாரிய வேறுபாடுகளை நேரில் கண்ட அனுபவம். 
 
மிகவும் பணபலம் கொண்ட நாடு என்றபடியால் மனிதஉரிமைகள் பற்றி யாரும் அங்கு கதைக்கவே முடியாது! 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டவர், வெளிநாட்டவர் என்ற பாகுபாடு (Discrimination) , நடத்தும் விதம் பல்வேறு மட்டங்களில் வெளிப்படையாக இருக்கும். இங்கு இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் உள்ளே இந்த பாகுபாடு இல்லாமல் இருக்கலாம், ஆனால் வெளியே மக்கள் சேவை பெறும் அனைத்து இடங்களிலும், அரசாங்க அலுவலகங்களிலும் நிச்சயம் உண்டு. (Priority for local nationals)

 

சட்டங்களும், தண்டனைகளும் மிகக்கடுமை என்பதால் குற்றங்கள் குறைவு, பெண்களுக்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பும், முன்னுரிமையும் உண்டு. சட்டங்கள் அனைவருக்கும் சமம் என்ற நிலை இங்கு இல்லை, காவல்துறை, நீதிமன்றங்களிலும் அப்படியே. ஏனெனில் இப்பகுதிகள் மன்னராட்சியால் ஆளப்படுவது.

 

மூலதனம் இருந்தாலும் வெளிநாட்டவர்கள் யாரும் அவர்களின் பெயரில் சுதந்திரமாக வியாபாரம் செய்ய முடியாது, அதற்கு உள்ளூர் அரபிகளின் வியாபார பங்கோடு(Major Shares) அவர்கள் சம்மதிக்கும்/அரசாங்கம் அனுமதிக்கும் பெயரில்தான் வியாபாரம் செய்ய வேண்டும். முக்கியமாக இந்துமதம் சார்ந்த பெயர்களில் முதலில் தடை இருந்தது.. இப்பொழுது துபாயில் பரவாயில்லை, சரவண பவன், சங்கீதா என பெயரில் உணவகங்கள் இயங்குகின்றன.

 

பிற மத்தியகிழக்கு நாடுகளில் பாகுபாடு நிலை கடுமையாக இருக்க, துபாய் அமீரகத்தில் மட்டும் மற்ற வெளிநாட்டவர்கள் வந்து செல்லும் உல்லாச நகரம் என்பதால், இந்த பாகுபாடு சற்று கம்மியாக இருக்கும், எல்லா விமான நிலையங்களிலும் அரபியர்களுக்கென (GCC nationals) தனி Passport Control கவுண்டர்கள் உண்டு.

 

சில மாதங்களுக்கு முன் துபாயில் அரபியொருவர், இந்திய வாகன ஓட்டுநரை தாக்கிய சம்பவம் யூடுயூபில் பிரபலமாக இருந்தது.. அந்த ஓட்டுநர் எதிர்க்காமல் அரபியின் அடியை வாங்கிகொண்டு பரிதாபமாக இருப்பதை பலரும் எதிர்த்து, சமூக வலைதளங்களில் குரல் கொடுக்கவே அரசாங்கம் உள்ளூர் அரபி மேல் நடவடிக்கை எடுத்தது.

 

வீட்டு வேலை செய்யும் ஆடவர், பெண்டிர்களின் நிலை, வெளியே தெரியாவிட்டாலும் பரிதாபத்திற்குரியதுதான். மிக வயதான அரபிகளுக்கு 1950, 1960களில் அவர்களின் பரிதாப நிலையை நன்கறிவர், ஆகவே வெளிநாட்டவர்களை கண்ணியமாக நடத்துவதை காணலாம். ஆனால் இன்றைய நடுத்தர, இளைய தலைமுறையினரின் அட்டகாசம் சொல்லிமாளாது. மக்கள் தொடர்பு பதவியில் இருக்கும் இவர்களுக்கு அரசாங்கம் தன்மையாக நடந்துகொள்வது பற்றி தனியாக வகுப்பெடுத்தே (Brainstorming) அமர்த்துகின்றனர், படிப்பறிவினால் இனிமேல் சிறிது சிறிதாக மாற்றம் வந்தால் நல்லது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் பிரியனுக்கும், யாழ் வாசகர்களுக்குமாக.... இணையத்தில் திரட்டிய சுவராசியத் தகவல்கள்.

 

ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக்கூடிய விமானமாக உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 36 மணி நேரம் பயணிக்கும் திறன் கொண்டது.

 

சூரிய வெளிச்சம் இல்லாத நிலையில், சேமிக்கப்பட்ட மின்சார ஆற்றலில் இரவில் தொடர்ந்து 9 மணிநேரம் பறந்ததும் பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

 

இந்த சோலார் விமானம் ஏர்பஸ் ஏ380 விமானத்திற்கு இணையான நீளம் கொண்ட இறக்கைகளை கொண்டது. அதாவது இதன் இறக்கை 236 அடி நீளம் கொண்டது. அதேவேளை, ஏர்பஸ் ஏ380 விமானம் 500 டன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த இம்பல்ஸ் 2 விமானம் வெறும் 2.3 டன் மட்டுமே எடை கொண்டது. ஏனெனில், இது முழுவதும் கார்பன் ஃபைபர் தகடுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தின் இறக்கைகள் மீது 17,000 சோலார் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து பெறப்படும் மின்சாரம் லித்தியம் அயான் பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.

 

மேலே எழும்புவதற்காக ரன்வேயில் ஓடும்போது மணிக்கு 35 கிமீ வேகத்திலும், பறக்கும்போது சராசரியாக 90 கிமீ வேகத்திலும் பறக்கும். இரவு நேரத்தில் மின் திறனை சேமிப்பதற்காக அதிகபட்சமாக 60 கிமீ வேகம் வரை செல்லும். அதிகபட்சமாக மணிக்கு 140 கிமீ வேகம் வரை பறக்கக்கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவலுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பு... எங்கட எயர்போட்டுக்களின் 'தரம்' சரியில்லையா? :o

 

இதன் பாதையில் 'அவுஸ்' இல்லாததைச் சொன்னேன்!

 

அவ்விமானம் நேர்கோட்டில்தான் பயணத்தை தொடருமாம்.. :(:D

 

நீங்கள் ரொம்பக் கீழே போயிட்டீங்க.. புவியில் நீங்கள் இருக்கும் நாட்டின் நிலை அப்படி! :icon_idea:

 

Link to comment
Share on other sites

அரேபியர்களின் திமிரை வெளிப்படுத்தச் சாட்சியங்கள் பதிந்த குமாரசாமி ஐயா மற்றும் ராசவன்னியர் அவர்களுக்கும் நன்றிகள்.smiley2343.gif

Link to comment
Share on other sites

  • 1 month later...

உலகின் முதல் சூரிய சக்தி விமானமான சோலார் இம்பல்ஸ் மேற்கு-மத்திய சீனாவில் உள்ள சோங்கிங்கில் இருந்து சீனாவின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நான்ஜிங்கை வந்தடைந்துள்ளது.

மார்ச் 9-ம் தேதி அபுதாபியில் இருந்து கிளம்பிய சோலார் இம்பல்ஸ் விமானத்தின், உலகம் முழுவதும் பறக்கும் லட்சியப் பயணம் தற்போது ஆறாவது கட்டத்தில் உள்ளது.

மியான்மரில் உள்ள மண்டலேவில் இருந்து புறப்பட்டு சீனாவின் சோங்கிங் விமானதளத்திற்கு வந்த சோலார் இம்பல்ஸ் சில மணி நேரங்களே அங்கு இருக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக மூன்று வாரங்களாக அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது வானிலை சரியானதையடுத்து, சோலார் இம்பல்ஸ் விமானத்தின் பயணத்தை தொடர விமானியான பெர்ட்ரண்ட் பெக்கர்ட் விரும்பினார். அதன்படி நேற்று காலை உள்ளூர் நேரப்படி 6 மணியளவில் சீனாவின் சொங்கிங் விமானத்தளத்தில் இருந்து புறபட்டு 17 மணி நேரம் பயணித்து சீனாவின் கிழக்கு பிராந்தியமான நான்ஜிங்கில் இரவு 11.31 மணிக்கு தரை இறங்கியது.

நான்ஜிங்கில் 10 நாட்கள் தங்கும் சோலார் இம்பல்ஸ் அங்கிருந்து பசிபிக் பெருங்கடலுக்கு மேலாக 5 பகல்கள் 5 இரவுகள் தொடர்ந்து பயணித்து ஹவாய் சென்றடையவுள்ளதாக இம்பல்ஸ் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது

- See more at: http://www.canadamirror.com/canada/41504.html#sthash.jJBFcRHY.dpuf

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் இருந்து ஹவாயை நோக்கி தனது பயணத்தை தொடங்கிய சூரிய சக்தி மூலம் இயங்கும் விமானம்: தொடர்ந்து 5 நாட்கள் பயணம் மேற்கொள்ள திட்டம் [ ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2015, 12:28.59 மு.ப GMT ] so_ar_001icon.jpgமுற்றிலும் சூரிய சக்தி மூலமாகவே இயங்கும் சோலார் இம்பல்ஸ் விமானம் பசிபிப் பெருங்கடல் மீதான தனது நெடுந்தூர பயணத்தை தொடங்கியது.

 முற்றிலும் சூரிய சக்தி மூலமாகவே இயங்கும் சோலார் இம்பல்ஸ் விமானத்தை சுவிட்சர்லாந்தை சேர்ந்த விமானிகள் பெர்ட்ராண்ட் பிக்கார்டு(Bertrand Piccard) மற்றும் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்(Andre Borschberg) ஆகியோர் வடிவமைத்தனர்.

இவ்விமானம் கடந்த மார்ச் மாதம் 9 தேதி துபாயின் அபுதாபியில் இருந்து தனது பயணத்தை தொடங்கியது. அங்கிருந்து ஓமன், இந்தியா, மியான்மர் வழியாக சீனாவை அடைந்தது.

பின்னர் மோசமான வானிலை காரணமாக ஒரு மாதத்திற்கும் மேல் அங்கு நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் சீனாவில் இருந்து அமெரிக்காவின் ஹவாயை நோக்கிய தனது பயணத்தை இன்று காலை தொடங்கியது.

ஐந்து அல்லது ஆறு நாட்கள் தொடர்ந்து பசிபிக் பெருங்கடல் மேல் பறந்து அது ஹவாயை அடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை இயக்கவுள்ள விமானி ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் செயல்பாடுகள் அனைத்தும் மொனாகோவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும் எனவும் அவருக்கு வானிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தேர்ந்த விமானிகள் மூலம் பாதை பற்றிய தகவல்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விமானம் பசிபிக் கடலை வெற்றிகரமாக கடந்து விட்டால் , உலகில் நீண்ட தூரத்தை கடந்த தனி விமானம் என்ற சிறப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

so_ar_002.jpg

so_ar_001.jpg

so_ar_004.jpg

தமிழ்வின்.காம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
 
0
 
 
 
66
pilot-health-Borschberg-silhouette.png
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

PILOT ID

ab_pix.jpg
NAME ANDRÉ BORSCHBERG
RTW FLIGHT N°7

TIME SINCE TAKEOFF

pilot-health-chrono.png
1D 5H 21M 02S

PILOT'S OCCUPATION

PILOTING
INTERVIEW
YOGA
SELF-HYPNOSIS
RESTING
EATING
TOILETS

REST-TIME

pilot-health-rest-time.png
140 TOTAL

160MIN AVERAGE /DAY

REST PERIODS TAKEN TODAY

 
 
 
 
 
 
 
 
 
 
8 X 20 MIN = 160 MIN / 200 MIN

O2 RESERVES

pilot-health-ressources-o2.png
7 / 8

BOTTLE

FOOD RESERVES

pilot-health-ressources-food.png
15 / 18

RATIONS

WATER RESOURCES

pilot-health-ressources-water.png
21 / 25

LITRES

DISCUSS WITH THE MISSION CONTROL CENTER

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.