Jump to content

8ஆவது ஐ.பி.எல். செய்திகளும் கருத்துகளும்


Recommended Posts

8ஆவது ஐ.பி.எல். ஏப்ரல் 8 இல் ஆரம்பம்
 

 

8ஆவது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.


ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. அதில் இருந்து ஆண்டுதோறும் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 8 ஆவது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 24 ஆம் திகதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

 

இப் போட்டி குறித்து ஆலோசிப்பதற்காக ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சென்னை, புனே ஆகிய இடங்களில் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி நடத்தப்படவில்லை.

டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உள்ளூர் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். ஆட்டம் நடக்கிறது.

 

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் வேண்டுகோளுக்கு இணங்க புனேயிலும் போட்டி நடக்கிறது.

பஞ்சாப் அணியின் உள்ளூர் ஆட்டங்கள் அங்கு நடைபெறும். ஏற்கனவே அந்த அணியின் உள்ளூர் மைதானமான மொகாலியில் எத்தனை ஆட்டம் நடைபெறும் என்பது பற்றி தெரியவில்லை. அந்த அணி கடந்த காலங்களில் தர்மசாலா, கட்டாக்கில் விளையாடியது.

 

இதேபோல ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உள்ளூர் ஆட்டங்களில் சில போட்டிகள் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடத்தப்படுகிறது.

 

http://www.virakesari.lk/articles/2015/02/11/8%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
 

Link to comment
Share on other sites

  • Replies 449
  • Created
  • Last Reply

ஐபிஎல்-8வது சீசன்: எந்த அணிகள், எந்த நாட்களில், எந்த மைதானங்களில் மோத உள்ளன? முழு விவரம்!

 

பெங்களூரு: ஐபிஎல் சீசன்-8 தொடர் ஏப்ரல் 8ம்தேதி தொடங்கி, மே 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஐபிஎல்-8வது சீசன்: எந்த அணிகள், எந்த நாட்களில், எந்த மைதானங்களில் மோத உள்ளன? முழு விவரம்!

 

மொத்தம் 8 அணிகள் கொண்டதாக இந்த சீசன் அமைய உள்ளது. நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிவை அந்த 8 அணிகளாகும். மொத்தம் 11 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.

 

 

ஏப்.8: புதன்கிழமை: கொல்கத்தா- மும்பை. இடம்-கொல்கத்தா. நேரம்-8 மணி.

 

ஏப்.9: சிஎஸ்கே-டெல்லி. இடம்-சென்னை. நேரம் 8 மணி.

 

ஏப்.10: பஞ்சாப்-ராஜஸ்தான். இடம்- புனே.நேரம் 8 மணி.

 

ஏப்.11: சிஎஸ்கே - ஹைதராபாத். இடம் ஹைதராபாத். நேரம் 4 மணி.

 

ஏப்.11: கொல்கத்தா-பெங்களூர். இடம்-பெங்களூரு. நேரம் 8 மணி.

 

ஏப்.12: டெல்லி-ராஜஸ்தான். இடம்-டெல்லி. நேரம்-4 மணி

 

ஏப்.12: மும்பை-பஞ்சாப். இடம்- மும்பை. நேரம்-8 மணி.

 

ஏப்.13: பெங்களூர்-ஹைதராபாத். இடம்-பெங்களூரு. நேரம் 8 மணி

 

ஏப். 14: கொல்கத்தா-சென்னை. இடம்-கொல்கத்தா. நேரம்- 8மணி

 

ஏப்.16: ஹைதராபாத்-ராஜஸ்தான். இடம்-விசாகபட்டணம். நேரம்-8 மணி.

 

ஏப்.17: மும்பை-சென்னை. இடம்-மும்பை. நேரம்-8 மணி.

 

ஏப்.18: ஹைதராபாத்-டெல்லி. இடம்-விசாகபட்டணம். நேரம்-4 மணி.

 

ஏப்.18: பஞ்சாப்-கொல்கத்தா. இடம்-புனே. நேரம்- 8 மணி.

 

ஏப்.19: ராஜஸ்தான் ராயல்ஸ்- சிஎஸ்கே. இடம்-அகமதாபாத். நேரம்-4 மணி.

 

ஏப்.19: பெங்களூர்-மும்பை. இடம்-பெங்களூரு. நேரம்-8மணி.

 

ஏப்.20: டெல்லி-கொல்கத்தா. இடம்-டெல்லி. நேரம்-8 மணி.

 

ஏப்.21: ராஜஸ்தான்-பஞ்சாப். இடம்-அகமதாபாத். நேரம்-8 மணி.

 

ஏப்.22: : ஹைதராபாத்-பஞ்சாப். இடம்-விசாகபட்டணம். நேரம்-4 மணி.

 

ஏப்.22: பெங்களூர்-சென்னை. இடம்-பெங்களூரு. நேரம்-8 மணி.

 

ஏப்..23: டெல்லி-மும்பை. இடம்-டெல்லி. நேரம்-8 மணி.

 

ஏப்.24: ராஜஸ்தான்-பெங்களூர். இடம்-அகமதாபாத். நேரம்-8 மணி.

 

ஏப்.25: மும்பை-ஹைதராபாத். இடம்-மும்பை. நேரம்-4 மணி.

 

ஏப்.25: சிஎஸ்கே-கொல்கத்தா. இடம்-சென்னை. நேரம்-8 மணி.

 

ஏப்.26: கொல்கத்தா-ராஜஸ்தான். இடம்-கொல்கத்தா. நேரம்-4 மணி.

 

ஏப்.26: டெல்லி-ராஜஸ்தான். இடம்-டெல்லி. நேரம்-8 மணி.

 

ஏப்.27: பஞ்சாப்-ஹைதராபாத். இடம்-மொகாலி. நேரம்-8 மணி.

 

ஏப். 28: கொல்கத்தா-டெல்லி. இடம்-கொல்கத்தா. நேரம்-8 மணி.

 

ஏப். 29: பெங்களூர்-ராஜஸ்தான் ராயல்ஸ். இடம்-பெங்களூரு. நேரம்-8 மணி.

 

ஏப்.30: சிஎஸ்கே-கொல்கத்தா. இடம்-சென்னை. நேரம்-8 மணி.

 

மே 1: டெல்லி-பஞ்சாப். இடம்-டெல்லி. நேரம்-4 மணி.

 

மே 1: மும்பை-ராஜஸ்தான். இடம்-மும்பை. நேரம்-8 மணி.

 

மே 2: பெங்களூர்-கொல்கத்தா. இடம்-பெங்களூரு. நேரம்-4 மணி.

 

மே 2: ஹைதராபாத்-சென்னை. இடம்-ஹைதராபாத். நேரம் 8 மணி.

 

மே 3: பஞ்சாப்-மும்பை. இடம்-மொகாலி. நேரம் 4 மணி.

 

மே 3: ராஜஸ்தான்-டெல்லி. இடம்-முடிவாகவில்லை. நேரம்-8 மணி.

 

மே 4: சிஎஸ்கே-பெங்களூர். இடம்-சென்னை. நேரம்-4 மணி.

 

மே 4: மணி கொல்கத்தா-ஹைதராபாத். இடம்-கொல்கத்தா. நேரம்-8 மணி.

 

மே 6: பெங்களூர்-பஞ்சாப். இடம்-பெங்களூரு. நேரம்-8 மணி.

 

மே 7: ராஜஸ்தான் ராயல்ஸ்-ஹைதராபாத். இடம்-முடிவாகவில்லை.

 

நேரம்-8 மணி. மே 8: சிஎஸ்கே-மும்பை. இடம்-சென்னை. நேரம்-8 மணி.

 

மே 9: கொல்கத்தா-பஞ்சாப். இடம்-கொல்கத்தா. நேரம்-4 மணி.

 

மே 9: டெல்லி-ஹைதராபாத். இடம்-ராய்ப்பூர். நேரம்-8 மணி.

 

மே 10: மும்பை-பெங்களூர். இடம்-மும்பை. நேரம்-4 மணி.

 

மே 10: சிஎஸ்கே-ராஜஸ்தான். இடம்-சென்னை. நேரம்-8 மணி.

 

மே 11: ஹைதராபாத்-பஞ்சாப். இடம்-ஹைதராபாத். நேரம்-8 மணி.

 

மே 12: டெல்லி- ஹைதராபாத். இடம்-ராய்ப்பூர். நேரம்-8 மணி.

 

மே 13: பஞ்சாப்-பெங்களூர். இடம்-மொகாலி. நேரம்-8 மணி.

 

மே 14: மும்பை-கொல்கத்தா. இடம்-மும்பை. நேரம்-8 மணி.

 

மே 15: ஹைதராபாத்-பெங்களூர். இடம்-ஹைதராபாத். நேரம்-8 மணி.

 

மே 16: பஞ்சாப்-சென்னை. இடம்-மொகாலி. நேரம்-4 மணி.

 

மே 16: ராஜஸ்தான்-கொல்கத்தா. இடம்-முடிவாகவில்லை. நேரம்-8 மணி.

 

மே 17: பெங்களூர்-டெல்லி. இடம்-பெங்களூரு. நேரம்-4 மணி.

 

மே 17: ஹைதராபாத்-மும்பை. இடம்-ஹைதராபாத். நேரம்-8 மணி.

 

மே 18: ஓய்வு நாள்.

 

மே 19ம் தேதி குவாலிபையர்1 (அரையிறுதி-1) போட்டி இரவு 8 மணிக்கும்,

 

மே 20ம்தேதி எலிமினேட்டர் போட்டி இரவு 8 மணிக்குமநடைபெறும். அதற்கான ஸ்டேடியங்கள் இறுதி செய்யப்படவில்லை.

 

21ம்தேதி மீண்டும் ஓய்வு நாளாகும்.

 

மே 22ல் குவாலிபையர்2 போட்டி நடைபெறும்.

 

23ம்தேதி மீண்டும் ஓய்வு.

 

இறுதி போட்டி மே 24ம்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெறும்.

 

சென்னை மைதானத்தில் நடைபெற உள்ள போட்டிகளில் பெங்களூருக்கு எதிரான ஒரு போட்டியை தவிர மற்ற அனைத்துமே ரசிகர்களின் வசதிக்கேற்ப இரவு 8 மணிக்குதான் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

(குறிப்பு: போட்டி தொடங்கும் நேரமான 4 மணி மற்றும் 8 மணி என்பது, மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணியை குறிக்கிறது)

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/ipl-2015-full-schedule-8-april-24-may-220840.html

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 2 weeks later...

ஐ.பி.எல்., தொடர்: பீட்டர்சன் விலகல்

 

லண்டன்: எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் சுற்று போட்டிகளில் இருந்து விலகினார் பீட்டர்சன்.

 

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பீட்டர்சன், 34. இவர், 104 டெஸ்ட் (8181 ரன்கள்), 136 ஒருநாள் (4440 ரன்கள்), 37 ‘டுவென்டி–20’ (1176 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2014ல் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடருக்குப் பின், இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அப்போதைய பயிற்சியாளர் ஆன்டி பிளவர், கேப்டன் அலெஸ்டர் குக் உள்ளிட்டோருக்கு இதில் பங்கிருப்பதாக, பீட்டர்சன் தெரிவித்தார். இதுகுறித்து தனது சுயசரிதையில் விமர்சித்து இருந்தார். இதனிடையே, இயான் மார்கன் தலைமையில் ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணி, உலக கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் நடையை கட்டியது.

இதையடுத்து, பீட்டர்சனை மீண்டும் அணியில் சேர்க்க முயற்சிகள் நடந்தன. இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்தின் சர்ரே கவுன்டி அணியில் விளையாட முடிவு செய்துள்ளார்.

 

இதற்காக கடந்த ஆண்டு முடிவடைந்த ஒப்பந்தத்தை, மறுபடியும் புதுப்பிக்கிறார். இதை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு வரவேற்றுள்ளதாக தெரிகிறது.

பீட்டர்சனின் இந்த முடிவை அடுத்து, எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் சுற்றில் ஐதராபாத் அணிக்காக (ரூ. 2 கோடி) லீக் சுற்றில் விளையாட மாட்டார். சர்ரே அணியில் இணையும் வகையில், ஐ.பி.எல்., ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஒருவேளை ஐதராபாத் அணி ‘நாக் அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றால், பீட்டர்சன் மீண்டும் அணியில் இணைந்து கொள்வார்.

 

இதுகுறித்து பீட்டசர்ன் கூறுகையில்,‘‘ மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பும் வகையில், என்னால் முடிந்தளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளேன். இங்கிலாந்து அணியில் இடம் பெறுவது தான் இப்போதைய லட்சியம்,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2015/03/1427220198/pieterseniplenglandcricket.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2015: டெல்லி அணியின் கேப்டன் டுமினி
 

 

ஐபிஎல் 2015 கிரிக்கெட் தொடருக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் ஜே.பி.டுமினி நியமிக்கப்பட்டுள்ளார்.

யுவராஜ் சிங், இலங்கை கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் ஆகியோர் இருந்தும், ஜே.பி.டுமினிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2014-ல் 14 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே டெல்லி அணி வெற்றி பெற்று சொதப்பியது.

 

இதனையடுத்து புதிய வீரர்களை ஏலம் எடுத்த டெல்லி அணி, யுவராஜ் சிங்கை ரூ.16 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆனால் டுமினிதான் கேப்டன் பொறுப்புக்கு ‘சிறந்த தெரிவு’ என்று டெல்லி அணி நிர்வாகம் கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் டுமினி கேப்டன் பொறுப்பில் இருந்துள்ளார்.

 

டெல்லி அணியின் பயிற்சியாளராக கேரி கர்ஸ்டன் இருப்பதால் அவரது பரிந்துரையின் பேரில் டுமினி நியமிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

மேலும், யுவராஜ் சிங் தனது ஆட்டத்தை கேப்டன்சி சுமை இல்லாமல் மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும் என்று டெல்லி அணி நிர்வாகம் விரும்புவதாகவும் தெரிகிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-2015-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/article7039756.ece
 

Link to comment
Share on other sites

வேலையை ஆரம்பி்த்தார் பான்டிங்....!

 

மும்பை: இதோ கைக்கு எட்டும் தூரத்தில் ஐபிஎல் போட்டிகள் வந்து விட்டன. அணிகளும் தயாராக ஆரம்பித்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் அணியினருக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் தனது அணி வீரர்களுக்கான பயிற்சியை ரிக்கி பான்டிங் நடத்தி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு வீரராக இருந்தவர் பான்டிங். 2003, 2007 ஆகிய இரு உலகக் கோப்பைகளை தனது நாட்டுக்காக பெற்றுக் கொடுத்த சாதனையாளர். சிறந்த வீரரான ரிக்கி பான்டிங் தற்போது மும்பை அணியின் பயிற்சியாளராக மாறியுள்ளார்.

 

சில வீரர்கள் பயிற்சியில் முதல் நாள் பயிற்சியின்போது பார்த்திவ் படேல் உள்ளிட்ட சில வீரர்கள் கலந்து கொண்டனர். மற்ற வீரர்கள் விரைவில் பயிற்சிக்குத் திரும்புவார்கள் என்று தெரிகிறது.

முதல் போட்டி கொல்கத்தாவுடன் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஏப்ரல் 8ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளது.

 

ரஞ்சி வீராதி வீரர்கள் மும்பை அணியில் இடம் பெற்றுள்ள வேகப் பந்து வீச்சாளர்களான வினய்குமார், அபிமன்யூ மிதுன் ஆகியோர் ரிக்கி முன்னிலையில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

2 நாளில் வருகிறார் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா சென்று திரும்பியுள்ள ரோஹித் சர்மா இன்னும் 2 நாளில் வருவாராம். ஏப்ரல் 4ம் தேதி மொத்த அணியும் வந்து விடுமாம்.

 

கேப்டன் ரோஹித் மும்பை இந்தியன்ஸ் அணியாக ரோஹித் சர்மா செயல்படவுள்ளார். அவர் தவிர இந்த அணியில் அபிமன்யூ மிதுன், ஆதித்யா தரே, அம்பட்டி ராயுடு, ஹர்பஜன் சிங், ஜஸ்பிரீத் பம்ரா, பார்த்திவ் படேல், பிரக்யான் ஓஜா, வினய் குமார், அக்சய் வக்ரே, ஹர்திக் பாண்ட்யா, ஜெகதீஷா சுசித், நிதிஷ் ராணா, பவன் சுயல், சித்தேஷ் லாட், ஷ்ரேயாஸ் கோபால், உன்முக்த் சந்த், ஆரோன் பின்ச், அய்டன் பிளிஸ்ஸார்ட், கோரி ஆண்டர்சன், ஜோஷ் ஹேஸல்வுட், கீரன் போலார்ட், லசித் மலிங்கா, லென்டில் சிம்மன்ஸ், மெர்ச்சன்ட் டி லாங்கே, மிட்சல் மெக்கல்லகலன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ricky-ponting-starts-new-innings-as-mumbai-indians-coach-223766.html

Link to comment
Share on other sites

2 நாளில் வருகிறார் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா சென்று திரும்பியுள்ள ரோஹித் சர்மா இன்னும் 2 நாளில் வருவாராம். ஏப்ரல் 4ம் தேதி மொத்த அணியும் வந்து விடுமாம்.

இனியென்ன.. தட்டை ஆடுகளங்களில் பிரித்து மேயவேண்டியதுதான்.. :o எல்லாரும் ஆகா.. ஓகோ.. என்பினம்.. :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியென்ன.. தட்டை ஆடுகளங்களில் பிரித்து மேயவேண்டியதுதான்.. :o எல்லாரும் ஆகா.. ஓகோ.. என்பினம்.. :wub::D

 

வீர சூர புலிகள் :D

Link to comment
Share on other sites

ஐபிஎல்: நீஷம், கிறிஸ் லின் விலகல்
 

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த நியூஸிலாந்து ஆல்ரவுண்டரான ஜிம்மி நீஷம், ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள் ளனர்.

 

அவர்களுக்குப் பதிலாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் அசார் மெஹ்மூத், தென் ஆப்பிரிக்க வீரர் ஜோஹன் போத்தா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் அசார் மெஹ்மூத், சுர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். ஜோஹன் போத்தா ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் ஆடி வருகிறார்.

 

ஐபிஎல் போட்டி வரும் 8-ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸும், நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும் மோதுகின்றன.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article7056542.ece

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்., அட்டவணை மாற்றம்

 

கோல்கட்டா: கோல்கட்டாவில் நகராட்சி தேர்தல் நடப்பதை அடுத்து, ஐ.பி.எல்., அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது.

எட்டாவது ஐ.பி.எல்., தொடர் வரும் 8ம் தேதி கோல்கட்டாவில் துவங்குகிறது. முதல் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா, மும்பை அணிகள் மோதுகின்றன.

இதனிடையே, கோல்கட்டாவில் வரும் ஏப். 18ல் நகராட்சி தேர்தல் நடக்கிறது. இதனால், ‘ஐ.பி.எல்., போட்டிகளுக்கு பாதுகாப்பு தர முடியாது, வேறு தேதிகளில் மாற்றிக் கொள்ளுங்கள்,’ என, போலீசார் தெரிவித்தனர்.

 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் அனுராக் தாகூர் கூறுகையில்,‘‘ வரும் ஏப்., 12 முதல் 25 வரை ஈடன் கார்டனில் எந்த போட்டிகளும் நடக்காது. கோல்கட்டா அணி பங்கேற்கும் 3 போட்டிக்கான தேதிகள், நேரங்கள் மாற்றப்படுகின்றன,’’ என்றார்.

 

இதன் விவரம்:

* ஏப்., 14ல் நடக்க இருந்த சென்னை–கோல்கட்டா போட்டி, ஏப்., 30, இரவு 8 மணிக்கு நடக்கும்.

 

* ஏப்., 28ல் டில்லி, கோல்கட்டா அணிகள் மோத இருந்த போட்டி, மே 7ல், இரவு 8 மணிக்கு துவங்கும்.

 

* கோல்கட்டா அணி சென்னையில் ஏப்., 30ம் தேதி விளையாட வேண்டிய போட்டி, ஏப்., 28க்கு மாற்றப்படுகிறது. தவிர, ஏப்., 30ல் சென்னை, கோல்கட்டா போட்டி ஈடன் கார்டனில் நடக்கும்.

 

* ஏப்., 14ல் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோத இருந்த போட்டி, மாலை 4 மணிக்குப் பதில், இரவு 8 மணிக்கு துவங்கும்.

 

* ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் மே 7ல், மாலை 4 மணிக்குப் பதில், இரவு 8 மணி போட்டியில் களமிறங்கும்.

 

http://sports.dinamalar.com/2015/03/1427819770/KolkataelectionspushbackKnightRidershomegames.html

 

Link to comment
Share on other sites

நரைன் சர்ச்சை: கோல்கட்டா அணி விலகல்?

 

மும்பை: முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனை விளையாட அனுமதிக்கவில்லை எனில், கோல்கட்டா அணி 8வது ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

 

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 8வது சீசன், வரும் ஏப்., 8ல் துவங்குகிறது. முதல் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா, மும்பை அணிகள் மோதுகின்றன.

இதனிடையே, கோல்கட்டா அணியின் ‘நம்பர்–1’ சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனின் பவுலிங் சந்தேகத்துக்கு இடமாக இருப்பதாக, கடந்த சாம்பியன்ஸ் லீக் தொடரின் போது இரு முறை புகார் கூறப்பட்டது. இதனால், சென்னைக்கு எதிரான பைனலில் நரைன் விலக, கோல்கட்டா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வாகாத நரைன், உலக கோப்பை தொடரில் இருந்து தானாக விலகினார்.

 

இதுதொடர்பாக சென்னையில் உள்ள ‘பயோ மெக்கானிக்கல்’ மையத்தில் நரைன் சோதனையில் ஈடுபட வேண்டும் என, பி.சி.சி.ஐ., கூறுகிறது. ஒருவேளை, நரைனுக்கு அனுமதி கிடைக்கவில்லை எனில், 8வது ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலக கோல்கட்டா நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

 

திட்டமிட்ட சதி?:

ஏனெனில், ஐ.பி.எல்., தொடரில் இவர் மீது எவ்வித புகாரும் இல்லை. சாம்பியன்ஸ் லீக் தொடரில் தான் திடீரென அடுத்தடுத்த போட்டிகளில் நரைன் பவுலிங் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள லோபரோ மையத்தில் ஏற்கனவே சோதனை செய்து மீண்டு வந்த நிலையில், மறுபடியும் சோதனை நடத்த வேண்டும் என்பது, நரைனுக்கு எதிரான சதி என, கோல்கட்டா தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

 

http://sports.dinamalar.com/2015/03/1427737232/KKRmightpulloutofIPLifSunilNarineis.html

Link to comment
Share on other sites

மிட்சல் ஸ்டார்க் காயம்

 

பெங்களூரு: பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், முழங்கால் காயம் காரணமாக, ஐ.பி.எல்., தொடரின் முதல் ஒரு சில போட்டிகளில் விளையாடமாட்டார்.     

 

இந்தியாவில், 8வது ஐ.பி.எல்., தொடர் வரும் 8ல் துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள பெங்களூரு அணியில், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் இடம் பெற்றுள்ளார். சமீபத்திய உலக கோப்பை தொடரில், 22 விக்கெட் கைப்பற்றிய இவர், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு பெங்களூரு அணியில் அறிமுகமான இவர், 14 விக்கெட் வீழ்த்தினார்.    

 

ஸ்டார்க் இல்லை:  ஸ்டார்க்கின் முழங்காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் மூன்று வாரங்கள் வரை ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து ஐ.பி.எல்., தொடரின் முதல் ஒரு சில போட்டிகளில் இவர் பங்கேற்கமாட்டார்.     

மில்னே சந்தேகம்: பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னே, உலக கோப்பை தொடரின் போது காயம் காரணமாக பாதியில் விலகியதால், ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. இதனால் பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சு இந்தியாவின் வருண் ஆரோன், அசோக் டிண்டா ஆகியோரை நம்பி உள்ளது.     

 

அபாட் ஆஜர்: இம்முறை நடந்த வீரர்கள் ஏலத்தின் போது பெங்களூரு அணிக்காக ஆஸ்திரேலியாவின் சீன் அபாட் ஒப்பந்தமானார். நான்கு மாதங்களுக்கு முன், சிட்னியில் நடந்த உள்ளூர் போட்டியில், இவரது ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் இளம் ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ் மரணமடைந்தார். தவிர, சமீபத்தில் இவருக்கு, சிறந்த இளம் கிரிக்கெட் வீரருக்கான பிராட்மேன் விருது கிடைத்தது.     

 

பெங்களூரு அணி, தனது முதல் போட்டியில் (ஏப். 11, இடம்–கோல்கட்டா) ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா அணியை சந்திக்கிறது.

 

http://sports.dinamalar.com/2015/04/1427902474/MitchelStarcCricketAustraliaBangaloreIPL.html


சுனில் நரைனுக்கு சோதனை:பி.சி.சி.ஐ., உறுதி

 

மும்பை: சுனில் நரைன் பவுலிங்கை மீண்டும் சோதனை செய்ய வேண்டும் என, பி.சி.சி.ஐ., வலியுறுத்தியுள்ளது.      

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 8வது சீசன், வரும் ஏப்., 8ல் துவங்குகிறது. இதில் கோல்கட்டா அணிக்காக பங்கேற்பவர், ‘நம்பர்–1’ சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன். இவரது பவுலிங் குறித்து கடந்த சாம்பியன்ஸ் லீக் தொடரின் போது இருமுறை புகார் தெரிவிக்கப்பட்டது.     

 

இதனால், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், மற்றும் உலக கோப்பை போட்டிகளில் சுனில் நரைன் பங்கேற்கவில்லை. இங்கிலாந்தில் உள்ள ஐ.சி.சி., அங்கீகாரம் பெற்ற மையத்தில் ‘பயோ மெக்கானிக்ஸ்’ முறையில், பவுலிங் சோதனையில் ஈடுபட்டு மீண்டு வந்தார்.      

 

இதை ஏற்க மறுத்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), தனது அங்கீகாரம் பெற்ற சோதனை மையத்தில் இவரது பவுலிங்கை மீண்டும் சோதிக்க வேண்டும் என தெரிவித்தது. இதனால் கோபமடைந்த கோல்கட்டா நிர்வாகம், ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகும் என செய்திகள் வெளியாகின.      

இதை மறுத்த பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘ இதுபோன்ற செய்திகள் எங்கிருந்து வருகின்றன என்றே தெரியவில்லை. பி.சி.சி.ஐ., விதிப்படி தான் எல்லாம் நடக்கிறது. மற்றபடி, திடீரென ஒரு அணி தொடரை புறக்கணித்து விட முடியாது,’’ என்றார்.      

 

இதனிடையே, சுனில் நரைன் சோதனை விஷயத்தில், பி.சி.சி.ஐ., உறுதியாக உள்ளதாம். இதுகுறித்து இவரது மானேஜர் ஜெப்ரே கய்லன் கூறியது:     

ஐ.பி.எல்., போட்டி பி.சி.சி.ஐ., நடத்தும் தொடர் தான், எனினும் இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அனுமதியின் படி தான் நடக்கிறது.      

ஐ.சி.சி., அனுமதி தந்துவிட்ட நிலையில், சுனில் நரைனை விளையாட அனுமதிப்பது தான் சரி. இவ்விஷயத்தில் பி.சி.சி.ஐ., என்ன சொல்கிறது என்றே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.      

கடினமாக பயிற்சி செய்துள்ள சுனில் நரைன் மறுபடியும் எந்த சோதனைக்கும் தயாராக உள்ளார். என்னைப் பொறுத்தவரையில் இவருக்கு மீண்டும் சோதனை என்பது சரியான செயல் அல்ல.     

இவ்வாறு ஜெப்ரே கய்லன் கூறினார்.

 

 

http://sports.dinamalar.com/2015/04/1427901667/SunilNarineKolkataIPLBowlingActionTest.html

Link to comment
Share on other sites

வருகிறது ஐ.பி.எல் ‘பேன் பார்க்’: ரசிகர்களை இழுக்க புதிய திட்டம்

 

மும்பை: ஐ.பி.எல்., தொடரில் புதுமுக ரசிகர்களை கவரும் வகையில் ‘பேன் பார்க்’ என, புதுத்திட்டம் அறிமுகம் ஆகிறது.     

கடந்த 2008ல் துவங்கப்பட்டது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,). ‘டுவென்டி–20’. பல்வேறு சர்ச்சைகள் வந்த போதும், தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கிறது.      

இந்த ஆண்டு 8வது தொடர், சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லி உட்பட 12 இடங்களில் நடக்கிறது. இப்போட்டிகளை நேரடியாக காண முடியாமல் இருக்கும் ரசிகர்கள், தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மைதானத்தில் அமர்ந்து பார்ப்பது போன்ற உணர்வை தரக் கூடிய வகையில், ‘பேன் பார்க்’ திட்டம் அறிமுகம் ஆகிறது.      

இதற்காக மொத்தம் 15 இடங்கள் தேர்வாகியுள்ளன. வாரத்தின் கடைசி நாட்களில் நடக்கும் போட்டிகளை 10 ஆயிரம் ரசிகர்களுக்கும் மேல் பொது இடத்தில் அமர்ந்து ராட்சத ஸ்கிரீனில் நேரடியாக கண்டு களிக்கலாம்.     

 

 

போட்டி துவக்கும் நேரத்துக்கு 2 முதல் 4 மணி நேரத்துக்கு முன் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற இலவச அனுமதி தரப்படும்.      

இந்த இடத்தில் உணவு, இசை மற்றும் பல்வேறு கடைகள் என, மைதானத்தில் இருப்பது போன்ற வசதிகள் இருக்கும். குழந்தைகள், சிறுவர்களுக்கு ‘ஸ்பெஷல்’ இடம் தரப்படும். இந்த இடங்களில் எட்டு அணிகளும் மோதும் போட்டிகள் ஒளிபரப்பாகும்.      

 

இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் அனுராக் தாகூர் கூறுகையில்,‘‘ புதிய இடங்களுக்கு ‘டுவென்டி–20’ போட்டிகளை கொண்டு செல்வது, கிரிக்கெட்டினை வளர்க்க நல்ல வழியாக உள்ளது. மைதானத்திற்கு நேரடியாக செல்ல முடியாத குடும்பத்தினர்களை அந்த இடத்திற்கே சென்று பார்ப்பது போன்ற உணர்வை தருவது தான் ‘பேன் பார்க்’ திட்டம். இதற்கு அதிகளவு ரசிகர்கள் வருவர் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2015/04/1427902815/IPLFansCricket.html

Link to comment
Share on other sites

மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடுவதில் மகிழ்ச்சி: மைக் ஹஸ்ஸி
 

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியதில் மகிழ்ச்சி அடைவதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீர்ர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை போட்டிகளின் போது தென் ஆப்பிரிக்க அணிக்கு சிறப்பு ஆலோசகராகச் செயல்பட்ட மைக் ஹஸ்ஸி, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை என்று கூறியிருந்தார். இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம் என்றார். ஆனால் அவர் கூறியதற்கு மாறாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் சென்னைக்கு வந்த மைக் ஹஸ்ஸி, "மீண்டும் சென்னைக்கு வந்ததில் மகிழ்ச்சி. இங்கு எனக்கு எண்ணற்ற நண்பர்கள் உள்ளனர், சேப்பாக்கத்தில் விளையாடியது பற்றிய இனிமையான நினைவுகள் உள்ளன. மீண்டும் சென்னை அணிக்குத் திரும்பியதை பெருமையாகக் கருதுகிறேன்" என்றார் மைக் ஹஸ்ஸி.

இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிய போது 2 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டமும், ஒரு முறை சாம்பியன்ஸ் லீக் பட்டமும் வென்றது சென்னை.

ஐபிஎல்-8 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாய்ப்பு பற்றி ஹஸ்ஸி கூறும்போது, “மிகச்சிறந்த அணி கடைசி வரை திறமை இருக்கிறது, அதனால் இம்முறை வாய்ப்புள்ளது.

 

அணியில் வாய்ப்புகளுக்காக வீரர்களிடையே போட்டி உள்ளது. இது எப்போதும் ஆரோக்கியமானதே.

இதனால் தொடக்கத்தில் களமிறங்கினாலும் சரி, நடுக்களத்தில் இறங்கினாலும் சரி, அல்லது களத்துக்கு வெளியே இளம் வீரர்களுக்கு உதவிபுரிவதாக இருந்தாலும் சரி எந்த ஒரு பணிக்கும் நான் தயாராகவே இருக்கிறேன்" என்றார் மைக் ஹஸ்ஸி.

தோனி பற்றி கூறிய மைக் ஹஸ்ஸி, “ஆட்டம் பற்றி தோனிக்கு மிகப்பெரிய புரிதல் உள்ளது. வீரர்கள் மனநிலை பற்றியும் நன்றாக புரிந்து வைத்துள்ளார். அவரது குணாம்சம் சீரானது. வெற்றி, தோல்விகளை சமமாகப் பாவிக்கிறார். இது ஒரு கேப்டனுக்கு மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

 

ஜடேஜா பற்றி...

உலகக் கோப்பையில் அவர் மிகவும் பாகம்படாத நிலையில் இருந்தார். 7-ம் நிலையில் இறங்கி விளையாடுவது சுலபமல்ல. அந்த நிலையில் விளையாடுவது கடினமே. ஆனால் ஜடேஜாவிடம் திறமைகளுக்குக் குறைவில்லை என்றே கருதுகிறேன். என்றார் ஹஸ்ஸி.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF/article7061511.ece

 

Link to comment
Share on other sites

ஆல்பி மார்கல் நம்பிக்கை

 

புதுடில்லி: ‘‘ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்,’’ என, தென் ஆப்ரிக்க ‘ஆல்–ரவுண்டர்’ ஆல்பி மார்கல் நம்பிக்கை தெரிவித்தார்.

 

இந்தியாவில், 8வது ஐ.பி.எல்., தொடர் வரும் 8ல் துவங்குகிறது. இதில் டில்லி அணிக்காக தென் ஆப்ரிக்க ‘ஆல்–ரவுண்டர்’ ஆல்பி மார்கல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த தொடர்களில் சென்னை (2008–13), பெங்களூரு (2014) அணிகளுக்காக விளையாடிய இவர், இதுவரை 85 போட்டியில் பங்கேற்று 872 ரன், 80 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

முதன்முறையாக டில்லி அணிக்காக விளையாடுவது குறித்து ஆல்பி மார்கல் கூறியது: ஐ.பி.எல்., தொடரில் மீண்டும் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உள்ளூர் போட்டிகளின் போது அடிக்கடி காயம் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கிக் கொள்வேன். ஆனால் இம்முறை நல்ல உடற்தகுதியுடன் இருப்பதால், ஐ.பி.எல்., தொடரில் முழுமையாக பங்கேற்பேன் என நம்புகிறேன். தவிர இம்முறை கேரி கிறிஸ்டனின் பயிற்சியின் கீழ் விளையாட இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ளேன். இருப்பினும் விடாமுயற்சியால், அதிக முறை எனது இலக்கை அடைந்துள்ளேன். இன்னும் சில ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடக் கூடிய தகுதி இருப்பதாகவே உணர்கிறேன். முன்னதாக, தேசிய அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை என எனக்கு நானே நெருக்கடி ஏற்படுத்திக் கொண்டேன். இதனால் போட்டிகளில் சாதிக்க முடியாமல் போனது. ஆனால் தற்போது, மற்ற விஷயங்கள் குறித்து கவலைப்படாமல், போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். டில்லி அணிக்காக இம்முறை சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு ஆல்பி மார்கல் கூறினார்.

 

http://sports.dinamalar.com/2015/04/1427993002/AlbieMorkalSouthAfricaCricketDelhiIPL.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் தொடக்க விழா 7-ம் தேதி நடக்கிறது
 

 

8-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் வரும் 7-ம் தேதி நடக்கிறது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில், பாலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர் என தெரிவித்துள்ள பிசிசிஐ, அவர்களின் பெயர் எதையும் குறிப்பிடவில்லை.

 

இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடக்க விழாவில் பங்கேற்கும் பாலிவுட் பிரபலங்களின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும்.

 

தொடக்க விழாவுக்கான குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.200 ஆகும். பாக்ஸ் ஆபிஸ் டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்கும். டிக்கெட்டுகளை இணையதளத்தின் மூலம் பெறலாம்” என கூறப்பட்டுள்ளது.

முதல் போட்டி 8-ம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், மும்பை இண்டியன்ஸும் மோதுகின்றன.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article7064215.ece

Link to comment
Share on other sites

ஸ்டார்க் இல்லாதது இழப்பா: வருண் ஆரோன் விளக்கம்
ஏப்ரல் 03, 2015.

 

பெங்களூரு: ‘‘ஐ.பி.எல்., தொடரில் மிட்சல் ஸ்டார்க், ஆடம் மில்னே உள்ளிட்ட முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாதது, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது,’’ என, பெங்களூரு அணியின் வருண் ஆரோன் தெரிவித்தார்.

 

எட்டாவது ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் பெங்களூரு அணியில், ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க், நியூசிலாந்தின் ஆடம் மில்னே உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால், சமீபத்தில் முடிந்த உலக கோப்பை தொடரில், 22 விக்கெட் கைப்பற்றி தொடர் நாயகன் விருது வென்ற ஸ்டார்க், முழங்காலில் காயமடைந்துள்ளார். இதனால் இரண்டு வாரம் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ள இவர், முதல் ஒரு சில போட்டிகளில் விளையாடமாட்டார். இதேபோல, குதிங்கால் காயத்தால், உலக கோப்பை தொடரில் இருந்து பாதியில் விலகிய மில்னே, ஐ.பி.எல்., தொடரில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. பெங்களூரு அணியில் இம்முறை சீன் அபாட் (ஆஸ்திரேலியா), வருண் ஆரோன் (இந்தியா), அசோக் டிண்டா (இந்தியா), டேரன் சமி (வெஸ்ட் இண்டீஸ்), டேவிட் வெய்ஸ் (தென் ஆப்ரிக்கா) உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

 

இதுகுறித்து பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வேகப்பந்துவீச்சாளர் வருண் ஆரோன் கூறியது: மிட்சல் ஸ்டார்க், ஆடம் மில்னே போன்ற திறமையான வேகப்பந்துவீச்சாளர்களுடன் விளையாட முடியாதது வருத்தம் அளிக்கிறது. இவர்களது இடத்தை பூர்த்தி செய்வது கடினம். இருப்பினும் அணியில் இடம் பெற்றுள்ள மற்ற வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு கிடைத்துள்ளது. இதனால் எவ்வித நெருக்கடியும் உண்டாகாது. இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, திறமையை நிரூபிக்க வேண்டும். அப்போது தான் தேசிய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

 

சமீபத்தில் முடிந்த உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது ஏமாற்றம். இதற்காக யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. என்னை மட்டுமே காரணமாக கூறுவேன். தற்போது எனது கவனம் முழுவதும் ஐ.பி.எல்., தொடரில் மட்டுமே உள்ளது. இத்தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, திறமையை நிரூபிக்க காத்திருக்கிறேன். கடந்த ஆண்டு துவக்கத்தில் சிறப்பாக விளையாடிய நாங்கள், பின்னர் சோபிக்கத்தவறிவிட்டோம். இம்முறை மிகுந்த கவனமுடன் விளையாடுவோம்.

 

இந்திய அணியின் துணை பயிற்சியாளர் பாரத் அருண், எங்கள் அணியின் பவுலிங் பயிற்சியாளராக இணைந்தது மகிழ்ச்சி. சமீபத்திய உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சில் நல்ல முன்னேற்றம் கொண்டுவந்தார். ஐ.பி.எல்., தொடரில் ஆலன் டொனால்டு, பாரத் அருண் ஆகியோரது பயிற்சியின் கீழ் விளையாட ஆர்வமுடன் காத்திருக்கிறேன். இவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். இவ்வாறு வருண் ஆரோன் கூறினார்.

 

http://sports.dinamalar.com/2015/04/1428075456/starcipl.html

Link to comment
Share on other sites

புதிய சீருடையில் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
 

es5lsg.jpg

ஐபில்-8-ல் கவுதம் கம்பீர் தலைமையிலான ஷாரூக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் புதிய சீருடையில் களமிறங்கவுள்ளனர்.

 

கொல்கத்தா அணியின் புதிய ஸ்பான்சர்கள் சீனாவின் மொபைல் தயாரிப்பு நிறுவனம் கியோனீ என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த புதிய ஜெர்சி யுனைடெட் ஸ்டேட்ஸ் போலோ அசோசியேஷனால் தயாரிக்கப்பட்டது.

 

கியோனீ தவிர டிஷ் டிவி, ராயல் ஸ்டாக் என்று அதிகாரபூர்வ ஸ்பான்சர்களைக் கொண்டுள்ளது.

 

கவுதம் கம்பீர் தலைமையில் 2 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது கொல்கத்தா அணி. கடந்த முறை கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தி பட்டம் வென்றது கொல்கத்தா. மணீஷ் பாண்டேயின் அதிரடி 94 ரன்கள் பெரும் பங்களிப்பு செய்தது நினைவிருக்கலாம்.

 

ஏப்ரல் 8-ம் தேதி ஈடன் கார்டனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் ஐபிஎல்-8 தொடரைத் தொடங்குகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

கொல்கத்தா அணியில்தான் கர்நாடகாவின் 20 வயது புதிர் ஸ்பின்னர் கே.சி.கரியாப்பா விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article7068348.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

ஐபிஎல் தொடக்க விழாவில் ஹிருத்திக் ரோஷன், அனுஷ்கா சர்மா நடனம்
 

 

8-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், ஷாகித் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடனமாடுகிறார்கள்.

கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் வரும் 7-ம் தேதி ஐபிஎல் தொடக்க விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

ரசிகர்களை மகிழ்விக்கக் கூடிய வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற வுள்ள தொடக்க விழாவை பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் தொகுத்து வழங்குகிறார். பாலிவுட் நட்சத்திரங்கள் ஃபர்ஹான் அக்தர், இசையமைப் பாளர் பிரிதாம் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

 

விழாவின் தொடக்கமாக ஹிருத்திக் ரோஷன், அனுஷ்கா சர்மா ஆகியோரின் நடனம் இடம்பெறுகிறது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியில் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்கிறார்கள்.

 

அதைத் தொடர்ந்து நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் கோப்பையை ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் தொடக்க விழா, இரண்டு மணி நடைபெறும். மாலை 5 மணி முதல் தொடக்க விழா நடைபெறும் மைதானத்துக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ் ஆகிய தொலைக்காட்சிகளில் தொடக்க விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article7070511.ece

 

Link to comment
Share on other sites

மும்பை இந்தியன்ஸ் சாதிக்கும் : ரோஹித் சர்மா
 

 

திறமை வாய்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுபவ வீரர்களை சமநிலையில் கொண்ட  மும்பை இந்தியன்ஸ் அணி,  8 ஆவது ஐ.பி.எல். தொடரில் சாதிக்குமென ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

 

8 ஆவது ஐ.பி.எல். தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

 

இந்நிலையில் ஐ.பி.எல். தொடர் பற்றி மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் சர்மா கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

நாங்கள் நல்ல திறமையுள்ள இந்திய வீரர்களை எங்களுடைய அணியில் கொண்டுள்ளோம். கடந்த சீசனில் விளையாடிய 15 முதல் 16 வீரர்களை இம்முறை தக்க வைத்துள்ளோம்.

 

வெளிநாட்டு வீரர்கள் சிறப்பான நிலையில் செயல்படுகிறார்கள். ஐ.பி.எல். சீசனை சிறப்பான முறையில் தொடங்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் ஆரம்ப போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதவுள்ளோம். சில சமயங்களில் அது சிறப்பாக அமையலாம். கொல்கத்தா ஈடன் கார்டனில் நாங்கள் சிறப்பாக செயல்பட்ட வரலாறு உண்டு.

 

கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது அங்குதான். அங்குள்ள சூழ்நிலைகள் எங்களுக்கு நன்றாக தெரியும்.

 

இதேவேளை, எதிர்வரும் புதன்கிழமை தொடங்கும் முதல் போட்டி எங்களுக்கு முக்கியமானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 

 

http://www.virakesari.lk/articles/2015/04/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE

Link to comment
Share on other sites

சுனில் நரைனுக்கு அனுமதி: பவுலிங் சோதனையில் தேர்ச்சி

 

சென்னை: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நடத்திய பவுலிங் சோதனையில், கோல்கட்டா அணியின் சுனில் நரைன் தேர்ச்சி பெற்றார். இதன்மூலம் இவர், 8வது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பது உறுதியாகிவிட்டது.

 

வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன், ஐ.பி.எல்., தொடரில், கோல்கட்டா அணியில் இடம்பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் இவர், ஐ.சி.சி., நிர்ணயித்த 15 டிகிரி அளவை விட அதிகமாக முழங்கையை வளைத்து பந்து வீசுகிறார் என, புகார் தெரிவிக்கப்பட்டது.

 

இதற்காக, இங்கிலாந்தில் உள்ள ஐ.சி.சி., அங்கீகாரம் பெற்ற மையத்தில்,‘பயோ மெக்கானிக்ஸ்’ முறையில் சோதனையில் ஈடுபட்டு, தேர்ச்சி பெற்றார். ஆனால், சென்னையில் உள்ள தனது அங்கீகாரம் பெற்ற மையத்தில், மீண்டும் பவுலிங்கை சோதிக்க வேண்டும் என்பதில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) உறுதியாக இருந்தது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ஐ.பி.எல்., தொடரில் விளையாட முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.      

 

இதையடுத்து, இவருக்கு கடந்த 2ம் தேதி சென்னையில், இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீநாத் தலைமையில், பல்வேறு வகையில் பவுலிங் சோதனை நடத்தப்பட்டது. இதன் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் நரைன், ஐ.சி.சி., விதிமுறைப்படி பந்துவீசுகிறார் என தெரிவிக்கப்பட்டது.

 

இது குறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், ‘‘சமீபத்தில் கோல்கட்டா அணி வீரர் சுனில் நரைனுக்கு, பவுலிங் சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில், ஐ.சி.சி., விதிமுறைப்படி பந்துவீசுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், தடை செய்யப்பட்டுள்ள பவுலர்கள் பட்டியலிலிருந்து, இவரது பெயரை நீக்குகிறோம். எனவே இவர், வரும் 8ம் தேதி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம்,’’ என, தெரிவிக்கப்பட்டது.      

 

கோல்கட்டா அணி செயற்குழு தலைவர் வெங்கி மைசோர் கூறுகையில்,‘‘ பவுலிங் சோதனையில் சுனில் நரைன் தேர்ச்சி பெற்றிருப்பது, மிகப்பெரிய நிம்மதியை தந்துள்ளது. இதற்காக, பி.சி.சி.ஐ., தலைவர், செயலர் மற்றும் பவுலிங் சோதனை கமிட்டிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2015/04/1428251344/SunilNarineKolkataIPLBowlingActionTestSuccess.html

Link to comment
Share on other sites

கோல்கட்டாவில் ஐ.பி.எல்., கோலாகலம் * இன்று வண்ணமய துவக்க விழா

 

 

கோல்கட்டா: எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் துவக்கவிழா இன்று கோல்கட்டாவில் நடக்கிறது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஹிரித்திக் ரோஷன், ஷாகித் கபூர், அனுஷ்கா சர்மா பங்கேற்று அசத்த காத்திருக்கின்றனர்.

 

எட்டாவது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடர், நாளை துவங்குகிறது. இதற்கான துவக்க விழா இன்று மாலை 7.30 மணிக்கு கோல்கட்டாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடக்கிறது. ‘இந்தியாவின் விழா’ என்ற பெயரில், 2 மணி நேரம் நடக்கும் விழாவில் ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா அணிக்கு அர்ப்பணிக்கும் வகையில் ‘ஸ்பெஷல்’ நிகழ்ச்சி இடம் பெறுகிறது. இது இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக இருக்கும் எனத் தெரிகிறது. வழக்கமாக துவக்கவிழாவில் பங்கேற்கும் கோல்கட்டா அணி உரிமையாளர் ஷாருக்கான் இம்முறை கலந்து கொள்ள மாட்டார்.

 

இரண்டாவது முறை:

நடன கலைஞர் ரெமோ டி சவுசா, சந்தோஷ் ஷெட்டி மற்றும் 300 உள்ளூர் கலைஞர்களுடன் சேர்ந்து மொத்தம் 400 பேர் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியில் ஹிருத்திக் ரோஷன், ஷாகித் கபூர், அனுஷ்கா சர்மா நடனம் ஆட உள்ளனர். கோல்கட்டாவில் 15 ஆண்டுக்குப் பின் ஹிருத்திக் ரோஷன் பங்கேற்கும் இரண்டாவது ‘ஷோ’ இது தான்.

சையப் அலி கான், பர்ஹான் அக்தர், இசையமைப்பாளர் பிரிதம் இணைந்து வீரர்கள் மற்றும் நட்சத்திரங்களை அறிமுகம் செய்யவுள்ளனர். சென்னை, மும்பை உட்பட எட்டு அணிகளின் கேப்டன்களும் பங்கேற்கின்றனர்.

இவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின், ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா அணியின் கேப்டன் காம்பிர், ஐ.பி.எல்., கோப்பையை கொண்டு வந்து, 8வது தொடர் துவங்கி விட்டதாக ‘சிக்னல்’ தருவார்.

 

மிரட்டும் மழை

துவக்கவிழா கோல்கட்டாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடக்கிறது. இங்கு மதியத்திற்கு பின் இடியுடன் கூடிய மழை வர 60 சதவீத வாய்ப்புள்ளது. இரவிலும் இது தொடரும் என்பதால், வருண பகவான் வழி விடுவாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

பாதுகாப்பு வளையத்தில் ‘ஈடன் கார்டன்’

நாளை முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தை சுற்றிலும் 5000 போலீசார் குவிக்கப்பட, பாதுகாப்பு வளையத்தில் சிக்கித் திணறுகிறது. வீரர்கள் ‘டிரசிங் ரூம்’ மற்றும் முழு மைதானத்தை சுற்றிலும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் சி.சி.டி.வி., காமிராவும் பொருத்தப்பட்டுள்ளன.

 

கோஹ்லி–அனுஷ்கா நடனம்

பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, பாலிவுட் நடிகை இருவரும் காதல் பறவைகளாக சுற்றுவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதையடுத்து, இன்றைய விழாவில் இருவரையும் இணைத்து ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் தோன்றச் செய்ய, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

மீண்டும் ராஜிவ் சுக்லா

ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக்குழு தலைவராக மீண்டும் ராஜிவ் சுக்லா தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2008 முதல் இப்பதவியில் இருந்த இவர், சூதாட்ட புகார் காரணமாக 2013ல் பதவி விலகினார். நாளை தொடர் துவங்கவுள்ள நிலையில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படாமல் இருந்தார்.

இப்பதவிக்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி, அஜய் ஷிர்கே, ரஞ்சிப் பிஸ்வால் என யாராவது ஒருவர் தேர்வாக வாய்ப்பு இருந்தது.

கடைசியில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ராஜிவ் சுக்லா, மீண்டும் தலைவராக தேர்வாகினார். மற்றபடி கட்டுப்பாட்டுக் குழுவில் உறுப்பினராக ரவி சாஸ்திரி தொடர்கிறார். இவருடன் கங்குலியும் இடம் பெற்றார்.

 

http://sports.dinamalar.com/2015/04/1428341377/RainthunderstormmayplayspoilsportatIPLopeningceremony.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.