Jump to content

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் நடாத்தப்படவிருக்கும் முத்தமிழ் விழாவின் முன்னோடி நிகழ்வான குறும்படப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தால்(பாரதி விளையாட்டுக்கழகமும் இணைந்து) நடாத்தப்படவிருக்கும் முத்தமிழ் விழாவின் முன்னோடி நிகழ்வான நாவலர் விருதுக்கான குறும்படப்போட்டிகளுக்கான குறும்படங்கள் கோரப்படுகின்றன.

 

 

 

முதலாவது பரிசாக 1500 ஈரோக்களும்

 

இரண்டாவது பரிசாக 1000 ஈரோக்களும்

 

மூன்றாவது பரிசாக 750 ஈரோக்களும்

 

துறைசார்  தொழில்நுட்ப  கலைஞர்கள் 5பேருக்கு ஆளுக்கு 250 ஈரோக்களும்  வழங்கப்படும்.

 

இந்தியா தவிர்ந்த

உலகெங்கிலிமிருந்து குறும்படங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இப்போட்டியானது

ஈழக்கலைஞரது கலைத்திறனை வெளிக்கொண்டு வரவும்

எமக்கான ஒரு திரைப்படத்துறையை வளர்ப்பதுமே முக்கிய நோக்கமாகக்கொண்டது.

 

இந்த குறும்படங்களை தெரிவு செய்யும் குழுவில்

எம்மவர் மூவருடன் 

தமிழகத்திலிருந்து இயக்குநர் ஒருவர் தலைமை தாங்குவார்.

 

poster_short_film.jpg

 

அத்துடன்  இவ்விழாவில்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட

அறிவுத்திறன்  போட்டிகளில்  பங்குபற்றி வெற்றி  பெற்றவர்களுக்கான பரிசில்களும்

பங்கு பற்றிய  அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்......... 

 

 

 

தகவல்

யாழுக்காக விசுகு........

 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கடந்தவருடம் நண்பர்களின் படைப்புகளான சூனியவளையம், தழும்பு ஆகியவை தேர்வாகியிருந்தது இம்முறையும் பல படைப்புகள் கலந்துகொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தவருடம் நண்பர்களின் படைப்புகளான சூனியவளையம், தழும்பு ஆகியவை தேர்வாகியிருந்தது இம்முறையும் பல படைப்புகள் கலந்துகொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 

 

வணக்கம் கிருத்திகன்

சூனியவளையம்

தழும்பு

இரு படங்களையும் தேர்வின்  போது பார்த்தேன்

வரவேற்கப்பட்ட

எமது தேடலுக்கு ஏற்ற கதைக்கருக்களைக்கொண்ட படங்கள்......

அவற்றை ஊக்கவியுங்கள்

இந்தமுறையும் தாயகத்திலிருந்து அதிக படங்களை எதிர்பார்க்கின்றோம்

 

தாயகத்திலிருந்து வரும் படங்களுக்கு

அனுமதிப்பணம் (50ஈரோக்கள்) கேட்கப்படமாட்டாது

ஆனால் அவை பணப்பரிசில்களை  பெற்றால் மட்டும் அதிலிருந்து 50 ஈரோக்கள் கழிக்கப்படும்.

இத்தகவலையும் நண்பர்களுக்கு கொண்டு செல்லுங்கள்....

இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது

விரைந்து செயற்பட்டால்

பலரும் இதை பயன்படுத்தலாம்...

 

நன்றி  தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.