Jump to content

இராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்த இளம் பெண் சுட்டுக்கொலை:

Recommended Posts

எமது ஊடகங்கள் பெண் உளவாளிகள் தண்டிக்கப்படுகின்ற பொழுது, இந்த "பாலியல் விவகாரத்தை" தவிர்த்து விடுவது நல்லது என்று நினைக்கிறேன்.

ஆனால் இதை முன்னிலைப்படுத்தி எழுதுவது "பாலியல் தொழிலாளர்கள்" கொல்லப்பட வேண்டியவர்கள் என்று கருத்தியலோடு எமது சமூகம் இருப்பதாக பொருள்படும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 189
  • Created
  • Last Reply

இங்கு முக்கியமாக ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்

இங்கு தமிழரின் தேசியத்துக்கும் ஆபத்து ஏற்பட்டதால் தான் மரனதண்டனை கொடுக்க படுகிறது,

வெறும் சுகத்துக்காகவும் பசி பட்டினிக்காகவும் தான் அந்த பெண் இராணுவத்துடன் தொடர்பை வைத்து இருந்தார் என்று உலக மனித உரிமைகள் மையம் எற்றுக்கொள்ளும் ஆனா உண்மைகளை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்,,,

சபேசன் நீங்கள் சொன்ன ஒரு கருத்து நகைச்சுவயாக இருக்கு:

செய்திகளில் உளவு வேலை பார்த்தார் என்பதை விட பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என்பதுதான் முன்னிலைப்படுத்தப்படுகிறது

ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு அவர் இறக்கிறார் ஆனா மருத்துவ அறிக்கை சொல்லுது குத்திய இடத்தி அதிகமாக இரத்தம் வெளியேறியதால் தான் அவர் இறந்தார் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் தொழில் மனித உரிமைகளாகக் காட்டப்படுவது தவறு. உலகில் பல நாடுகளிலும் பாலியல் தொழிலுக்கு அங்கீகாரமில்லை. சிறீலங்கா உட்பட. தமிழீழத்திலும் பாலியல் தொழிலுக்கு அங்கீகாரமில்லை.

பாலியல் தேவைகளை குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் ஒருவன் ஒருத்திக்குள் வைத்திருக்கச் சொல்வதே உலக அடிப்படை. அதை மீறுவோர் மீது பல நாடுகளிலும் தண்டனை அளிக்கப்படுகிறது. மேற்குலகில் கூட கிழக்கு ஐரோப்பியப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் செய்வது தடுக்கப்படுகிறது. பொதுப்படையான பாலியல் விளம்பரங்களுக்கு தடை இருக்கிறது. மனிதனை பாலியல் இச்சை வழி கட்டுப்பாடின்றி விலங்குகள் போல அனுமதிப்பது உரிமை கிடையாது. மனிதன் நாகரிக ஒழுங்குக்குள் வாழும் போதுதான் வளர்ச்சியைப் பற்றி அதிகம் சிந்தித்திருக்கிறான். அந்த வகையில் பாலியல் என்பது தமிழீழத்தைப் பொறுத்தவரை குடும்பம் என்ற அலகுக்குள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைதான் வரவேற்கப்படுகிறது.

குறித்த பெண் செய்தது தமிழீழச் சட்டப்படி குற்றம். அதில் பண்பாட்டுக்கு சட்டத்துக்குப் புறம்பான பாலியல் தொடர்பு மற்றும் எதிரியுடனான பாலியல் தொடர்பு. மற்றும் பாலியல் தொடர்பை வைத்து உளவுத் தகவல்களை எதிரி பெற உதவியது.

இங்கு முன்வைக்கப்படும் கருத்து வறுமைக்காகத்தான் இப்படித் தொழில் செய்கின்றனர் என்று. எந்த வகையில் எக் காரணத்துக்காகச் செய்யினும் சிறீலங்காவைப் பொறுத்தவரை ஈழத்தைப் பொறுத்தவரை பாலியல் தொழில் சட்டவிரோதமானது. அது சட்டதிலேயே உள்ளது. அந்த வகையில் ஒரு மனிதன் தனது எழுந்தமான அளவுக்கு உடல் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உலகம் மனித உரிமையாகக் கருதவில்லை. அங்கு அளவுகோலிடப்படுகிறது. அது அவசியம் சமூக மனித இனப் பாதுகாப்புக்கு என்பதா

Link to comment
Share on other sites

ஒரு பேச்சுக்காக அப்பெண் உளவு வேலையில் ஈடுபட்டதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியாயின் அப்பெண் எவ்வாறு உளவுத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் நாம் எமது முகத்திற்கே துப்புகின்றோம் என்பது புரியும்.

Link to comment
Share on other sites

பாலியல் தொழில் மனித உரிமைகளாகக் காட்டப்படுவது தவறு. உலகில் பல நாடுகளிலும் பாலியல் தொழிலுக்கு அங்கீகாரமில்லை. சிறீலங்கா உட்பட. தமிழீழத்திலும் பாலியல் தொழிலுக்கு அங்கீகாரமில்லை.

இங்கு பாலியல் தொழில் செய்தா பிடிக்க மாட்டார்கள்

அதை செய்து கொண்டு வரிகட்டாவிட்டால் தான் பிரச்சனை :P

Link to comment
Share on other sites

ஒரு பேச்சுக்காக அப்பெண் உளவு வேலையில் ஈடுபட்டதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியாயின் அப்பெண் எவ்வாறு உளவுத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் நாம் எமது முகத்திற்கே துப்புகின்றோம் என்பது புரியும்.

நீர் நினைப்பது போன்றுதான் உளவுத்தகவலை பெறவேண்டிய அவசியமல்ல, போராளிகளின் நகர்வினையும், அவர்களுக்கு உதவுபவர்களின் நகர்வுகளையும் அவதானிக்க, ஒரு ராணுவவீரனை விட ஒரு சாதாரன பொதுமகனால் துல்லியமாக அவதானிக்கமுடியுமென்பது யதார்தம், கண்டபடி கற்பனையை அவிழ்து விடாதீர். :idea:

Link to comment
Share on other sites

ஒரு பேச்சுக்காக அப்பெண் உளவு வேலையில் ஈடுபட்டதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியாயின் அப்பெண் எவ்வாறு உளவுத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் நாம் எமது முகத்திற்கே துப்புகின்றோம் என்பது புரியும்.

சரி தொடங்கிட்டார் ஒருத்தர் :P

இனி அவா உளவு பாத்த கதை சொல்லி பிறகு அவர்கள் எப்படி ஆவவை உளவு பாத்திங்கள் என்று விளக்கம் சொல்லி அதுக்கு பின் தான் வசம்புவின் அங்கிகாரம் கிடைத்து அந்த பெண்புக்கு கொடுக்கப்பட்ட தண்டனை சரியோ இல்லையோ என்று தீர்ப்பு கிடைக்கும்.....

Link to comment
Share on other sites

ஆனா என்னமோ வசம்புக்கு பாலியல் தொழில் செய்யும் பெண்கள் மீது அக்கறை கொஞ்சம் கூட தான் ஏதும் மனித உறிமை அமைப்பில் இருக்கிறாரோ இல்லை :wink: :P

Link to comment
Share on other sites

அப் பெண் சிறிலங்கா அரசுக்கு ஒரு உளவாளியாக செயற்பட்டதற்காக தண்டிக்கப்பட்டார் என்பது எனக்கு புரிகிறது.

உளவாளியாக ஏன் செயற்பட்டார், எப்படி செயற்பட்டார் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

பெண் உளவாளிகள் தண்டிக்கப்படும் பொழுது பெரும்பாலும் அவர்கள் செய்த தேசத் துரோக குற்றங்களில் ஒன்றாக "பாலியல் தொடர்பு" காட்டப்படுகிறது.

"இராணுவத்திற்கு உளவு பார்த்த குற்றத்திற்காக குறிப்பிட்டவர் தண்டிக்கப்பட்டார்" என்ற செய்தியே போதுமானது.

ஆனால் இத் தண்டனை குறித்து எமது சமூகம் திருப்திப்பட வேண்டும் என்பதற்காக "பாலியல் தொடர்பு" என்பது அழுத்தமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இங்கே என்னுடைய கேள்வி தண்டித்தவர்களை நோக்கி இருக்கவில்லை.

என்னுடைய சமூகத்தின் "மனநிலை" குறித்து தெளிவு பெறுவதற்காக சமூகத்தை நோக்கியே கேட்கிறேன்.

கொல்லப்பட்டவள் பெண் என்பதால் ஏற்படுகின்ற பரிதாப உணர்வை "பாலியல் தொடர்பு" என்ற குற்றச்சாட்டு சமப்படுத்துகிறதா?

"பாலியல் தொடர்பு" என்ற குற்றச்சாட்டு அழுத்தமாக சுட்டிக்காட்டப்படுவதற்கு என்ன காரணம்?

Link to comment
Share on other sites

:twisted: குறளோவியம் :twisted:

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால்இ அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.

Link to comment
Share on other sites

திருவள்ளுவர் காலத்து "ஒழுக்கம்" வேறு. இன்றைய காலத்து "ஒழுக்கம்" வேறு.

என்னுடைய கேள்விகளுக்கு பதிலை தாருங்கள்!

Link to comment
Share on other sites

எமது ஊடகங்கள் பெண் உளவாளிகள் தண்டிக்கப்படுகின்ற பொழுது, இந்த "பாலியல் விவகாரத்தை" தவிர்த்து விடுவது நல்லது என்று நினைக்கிறேன்.

ஆனால் இதை முன்னிலைப்படுத்தி எழுதுவது "பாலியல் தொழிலாளர்கள்" கொல்லப்பட வேண்டியவர்கள் என்று கருத்தியலோடு எமது சமூகம் இருப்பதாக பொருள்படும் என்று நினைக்கிறேன்.

இது நியாயமானது.

அப் பெண் சிறிலங்கா அரசுக்கு ஒரு உளவாளியாக செயற்பட்டதற்காக தண்டிக்கப்பட்டார் என்பது எனக்கு புரிகிறது.

உளவாளியாக ஏன் செயற்பட்டார், எப்படி செயற்பட்டார் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

பெண் உளவாளிகள் தண்டிக்கப்படும் பொழுது பெரும்பாலும் அவர்கள் செய்த தேசத் துரோக குற்றங்களில் ஒன்றாக "பாலியல் தொடர்பு" காட்டப்படுகிறது.

"இராணுவத்திற்கு உளவு பார்த்த குற்றத்திற்காக குறிப்பிட்டவர் தண்டிக்கப்பட்டார்" என்ற செய்தியே போதுமானது.

ஆனால் இத் தண்டனை குறித்து எமது சமூகம் திருப்திப்பட வேண்டும் என்பதற்காக "பாலியல் தொடர்பு" என்பது அழுத்தமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இங்கே என்னுடைய கேள்வி தண்டித்தவர்களை நோக்கி இருக்கவில்லை.

என்னுடைய சமூகத்தின் "மனநிலை" குறித்து தெளிவு பெறுவதற்காக சமூகத்தை நோக்கியே கேட்கிறேன்.

கொல்லப்பட்டவள் பெண் என்பதால் ஏற்படுகின்ற பரிதாப உணர்வை "பாலியல் தொடர்பு" என்ற குற்றச்சாட்டு சமப்படுத்துகிறதா?

"பாலியல் தொடர்பு" என்ற குற்றச்சாட்டு அழுத்தமாக சுட்டிக்காட்டப்படுவதற்கு என்ன காரணம்?

தண்டிக்க முடிவு எடுத்தவர்களின், தண்டித்தவர்களின் முழு விளக்கங்கள் செய்தியாக்கப்படுவது இல்லை. அதைப் பற்றி அறிய முயற்சிப்பதும் இல்லை.

தண்டனை பெற்றவர் பற்றிய அடிப்படை தகவல்களை வைத்துக் கொண்டு மிச்சத்தை செய்தி எழுதுறவர் தனது செந்த விருப்பு வெறுப்புகள் நிலைப்பாடுகள் சார்பாக கற்பனை பண்ணுவார்.

நீங்கள் கூறுவது போல்

-1- இவ்வாறு இந்த நிகழ்வுகள் செய்தி ஆக்கப்படும் முறை மூலம் செய்தி எழுதுபவர்கள் திட்டமிட்டு சமூகத்தின் பொதுவான கலாச்சார சீரழிவை தடுக்க முயற்சிக்கும் மேலதிக குறிக்கோளை அடைய எண்ணும்

தனிப்பட முயற்சிக்களாக இருக்கலாம்.

-2- கொல்லப்பட்டவர் ஒரு பெண் என்ற பரிதாபத்தை நிவர்த்தி செய்ய பாலியல் தொடர்பை முன்நிலைப்படுத்தி நிவர்த்தி செய்ய முற்படுவதாக இருக்கலாம்.

இந்த இரண்டுமே யானை தன்னுடைய தலையில் மண் வாரும் நடத்தை. உள்ளதை உள்ளவாறு கற்பனைகள் இல்லாது செய்தியாக்குவது தான் தேவை. ஒரு கற்பனையில் உள்ள பொய்களை மறைக்க மேலும் பரிதாபகரமான பொய்களை புனையும் நிர்ப்பந்தம் வந்துவிடுகிறது.

முக்கியமாக மரண தண்டனைகளிற்கு இவ்வாறு சொந்த முயற்சிகளில் கற்பனையில் நியாயம் கற்பிக்க வெளிக்கிடுபவர்கள் அதற்கான பின் விழைவுகளை யோசிப்பது இல்லை. அந்த மரண தண்டனையை வைத்து தமது தனிப்பட்ட நிலைப்பாடுகளிற்கு உச்சமாக பயன் பெற முயற்சிக்கிறது தான் நடக்குது. இதுவரை அவர்கள் அதற்கு பதில்கள் நியாயங்கள் சொல்ல வேண்டிய தேவை வரவில்லை என்ற நிலை தொடர்போவது இல்லை.

இவற்றிற்கான பாதக விளைவுகளை எதிர்கொள்ளப் போவது நாம் எல்லோரும் தான்.

Link to comment
Share on other sites

அப் பெண் சிறிலங்கா அரசுக்கு ஒரு உளவாளியாக செயற்பட்டதற்காக தண்டிக்கப்பட்டார் என்பது எனக்கு புரிகிறது.

உளவாளியாக ஏன் செயற்பட்டார், எப்படி செயற்பட்டார் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

பெண் உளவாளிகள் தண்டிக்கப்படும் பொழுது பெரும்பாலும் அவர்கள் செய்த தேசத் துரோக குற்றங்களில் ஒன்றாக "பாலியல் தொடர்பு" காட்டப்படுகிறது.

"இராணுவத்திற்கு உளவு பார்த்த குற்றத்திற்காக குறிப்பிட்டவர் தண்டிக்கப்பட்டார்" என்ற செய்தியே போதுமானது.

ஆனால் இத் தண்டனை குறித்து எமது சமூகம் திருப்திப்பட வேண்டும் என்பதற்காக "பாலியல் தொடர்பு" என்பது அழுத்தமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இங்கே என்னுடைய கேள்வி தண்டித்தவர்களை நோக்கி இருக்கவில்லை.

என்னுடைய சமூகத்தின் "மனநிலை" குறித்து தெளிவு பெறுவதற்காக சமூகத்தை நோக்கியே கேட்கிறேன்.

கொல்லப்பட்டவள் பெண் என்பதால் ஏற்படுகின்ற பரிதாப உணர்வை "பாலியல் தொடர்பு" என்ற குற்றச்சாட்டு சமப்படுத்துகிறதா?

"பாலியல் தொடர்பு" என்ற குற்றச்சாட்டு அழுத்தமாக சுட்டிக்காட்டப்படுவதற்கு என்ன காரணம்?

பாலியல் தொடபுடையவர்கள் எல்லோருமே உளவாளிகள் அல்ல, உளவாளிகள் அநேகமாக அப்படி இருப்பதற்கு வாய்புகள் இருக்கிறது. நாட்டை காட்டி கொடுக்க துணிந்தவர்களுக்கு அதுவெல்லாம் சர்வசாதாரணம். பாலியல்தொடர்புடையவர்களுக்க

Link to comment
Share on other sites

என்னைக் கேட்டால், இணையங்களில் இது போன்ற செய்திகள் தேவையே இல்லை என்பேன்.

இணையங்களில் வருகின்ற செய்திகள் பெரும்பாலும் புலம்பெயர் மக்களாகிய எங்களை நோக்கியே இருக்கிறது.

ஒரு பெண் உளவாளி தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்ற பொழுது, அதை நாம் ஏற்றுக்கொள்வதற்கு, குறிப்பிடப்பட்ட பெண் பாலியல் தொடர்பு கொண்டிருந்த விடயம் மேலதிகமாக தேவைப்படுகிறதா?

;உளவு பார்ப்பதை விட, பாலியல் தொடர்பு வைத்திருப்பது பாரிய குற்றமாக எனது சமூகம் கருதுகிறது என்றே நான் இதை புரிந்து கொள்கிறேன்.

என்னுடைய புரிதல் சரியானதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு அவருக்கு ஏன் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகவே உள்ளது, அதாவது உளவு பார்ப்பதற்கு. மேலும் இப் பெண்மணிக்கு எத்தனை தரம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிள்ளது என்பதை தெரியாமல் இத் தலைப்பில் கதைப்பது என் பார்வையில் மடமைத்தனம். மேலும் சபேசன் அவர்களே இது ஒரு போர்க்காலச் சூழல் என்பதையும் குறித்துக்கொள்க. எனினும் ஒரு பெண் பாலியல் தொடர்பு வைத்துள்ளதற்காக இத் தண்டனை கொடுக்கப்பட்டதாக இருந்தால் கண்டிக்கத்தக்கது. சில நாட்களுக்கு முன் ஒரு ஆணும் யாழில் தண்டிக்கப்பட்டார், இதற்கான காரணம் அவர் மினி சினிமா வைத்திருந்து பாலியல் படம் காட்டியதுடன் அவர் இராணுவத்துடனும் தொடர்பு வைத்திருந்தார். இவரும் பல முறை எச்சரிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இப் பெண்மணியும் பலமுறை எச்சரிக்கப்பட்டிருக்கலாம், இவ்ரும் திருந்தாமல் இருந்ததால் போர்காலச் சூழலில் இவருக்கு மறணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கலம். இதுவே கடைசியாக இருக்கட்டும். ஆகவே இவர் பெண் என்பதாலோ இல்லை பாலியல் தொடர்பு வைத்திருந்ததாலோ கொல்லப்பட்டவர் என்பது நகைப்புக்கூறிய ஒரு விடயம். உமக்கு ஆர் சொன்னது பாலியல் குற்றம் உளவு பார்ப்பதைவிட பெரிய குற்றம் என்று_இவரின் துப்பின் கிழே எத்தனை குடும்பம் தமது அங்கத்தவரை இழந்திருக்கக்கூடும்.

Link to comment
Share on other sites

இங்கு அவருக்கு ஏன் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகவே உள்ளது, அதாவது உளவு பார்ப்பதற்கு. மேலும் இப் பெண்மணிக்கு எத்தனை தரம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிள்ளது என்பதை தெரியாமல் இத் தலைப்பில் கதைப்பது என் பார்வையில் மடமைத்தனம். மேலும் சபேசன் அவர்களே இது ஒரு போர்க்காலச் சூழல் என்பதையும் குறித்துக்கொள்க. எனினும் ஒரு பெண் பாலியல் தொடர்பு வைத்துள்ளதற்காக இத் தண்டனை கொடுக்கப்பட்டதாக இருந்தால் கண்டிக்கத்தக்கது. சில நாட்களுக்கு முன் ஒரு ஆணும் யாழில் தண்டிக்கப்பட்டார், இதற்கான காரணம் அவர் மினி சினிமா வைத்திருந்து பாலியல் படம் காட்டியதுடன் அவர் இராணுவத்துடனும் தொடர்பு வைத்திருந்தார். இவரும் பல முறை எச்சரிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இப் பெண்மணியும் பலமுறை எச்சரிக்கப்பட்டிருக்கலாம், இவ்ரும் திருந்தாமல் இருந்ததால் போர்காலச் சூழலில் இவருக்கு மறணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கலம். இதுவே கடைசியாக இருக்கட்

அது தானே சுகத்துக்காக் ஆண்களும் சரி பெண்களும் சரி அலையவில்லயே அதில் ஒரு சிலர் மட்டும் விதிவிலக்காக அதுவும் இராணுவதுடன் தொடர்பு வைத்து இருக்கிறர என்றால் அது பாலியல் தொடர்புதான் என்று நம்பும் அளவுக்கு இன்னும் நாங்கள் இருகிறோம் என்றால் இது தான் நாம் புரிந்து கொண்ட போராட்டவரலாறு அதுவும் ஒரு இனையம் நடத்துகிற ஒருவராக இருந்து கொண்டு இப்படியான கேள்விகள் கேட்பது????????????? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவர் காலத்து "ஒழுக்கம்" வேறு. இன்றைய காலத்து "ஒழுக்கம்" வேறு.

என்னுடைய கேள்விகளுக்கு பதிலை தாருங்கள்!

கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்குள் மனிதன் மனதளவில் பாலுணர்வு அடிப்படையில் மாறிவிட்டான் என்று கூறிவிட முடியாது.

திருவள்ளுவர் கூட மனிதன் மிருகமாகி செய்யக் கூடிய பாலியல் களவுகளையும் சொல்லித்தான் ஒழுக்கத்தை உயர்வாகக் காட்டியுள்ளார். அவர் டேற்றிங் பற்றி கிளப் பப் பற்றி சொல்லாமல் விட்டிருக்காலாம். ஆனால் மனிதனுக்குள் உள்ள மிருக்கத்தை ஒத்த உணர்வுகளுக்கு நல்ல ஒழுக்கம் என்ற ஒன்றால் வழிகாட்டுகிறார். ஆபிரிக்காவெங்கும் கட்டுப்பாடற்ற பாலியல் நடத்தைகளே எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் பெருகிக் கிடக்கக் காரணம். இன்று இந்தியாவில் கூட இந்த சட்டவிரோத பாலியல் தொழில்தான் அச்சுறுத்தும் அளவுக்கு எயிட்ஸ் நோயைப் பரப்பி உள்ளது.

ஒரு பக்கம் நோய்கள் பெருகின்றன என்றால் இன்னொரு பக்கம் பெற்றோர் பராமரிப்பற்ற பிள்ளைகள் பெருகுகின்றனர். அளவுக்கு அதிகமான கருக்கலைப்புகளும் அதனால் பெண்கள் உடல் உள ரீதியில் சந்திக்கும் பிரச்சனைகளும். அதுமட்டுமன்றி செயற்கையான கருத்தடை மாத்திரிகளைப் பாவிப்பதன் வாயிலான பக்க விளைவுகள் என்று வள்ளுவர் கண்டிராத பல பிரச்சனைகளை பாலியல் வெறித்தனத்தைக் கட்டுப்படுத்த முடியாத மனிதர்களால் மனித சமூகம் எதிர் நோக்கியுள்ளது.

குறிப்பாக அண்மைய ஆய்வொன்று கூட குடிநீரில் கருத்தடை மாத்திரிகைகளின் அளவு அதிகரித்திருப்பதும் இதனால் சில உள உடல் பிரச்சனைகள் வருமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளன.

குடும்பம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைக்குள் மனிதனின் பாலியல் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் போது இப்படியான மனித இனத்தைப் பாதிக்கக் கூடிய விடயங்கள் பெருகாமல் இருக்கும்.

அதுமட்டுமன்றி பெண்களுக்காக ஆண்களும் ஆண்களுக்காக பெண்களும் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். சித்திரவதைகளில் ஈடுபடுகின்றனர். மொத்தத்தில் மிருகங்களை விடக் கேவலமான முறையில் தங்கள் பாலியல் தேவைகளை மனித இயற்கைக்கு மாறான அளவில் கூட தீர்த்துக் கொள்ள விளைகின்றான். இது மனித உரிமையல்ல. மனிதனின் சிந்தனைகளின் பாலியல் வக்கிரத்தனம் மனித உரிமை கிடையாது. பாலியல் உணர்வை வெளிப்படுத்தவும் ஒரு வரையறை இருக்கிறது. அந்த வகையிலேயே பாலியல் தொழில் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலுக்கு பெயர் போன அம்ஸராமில் கூட குறித்த பகுதிகளில் மட்டும் தானாம் அவர்கள் அதைச் செய்ய முடியும். மற்றைய பல நாடுகளில் பாலியல் தொழில் சட்டவிரோதமானது. கடும் தண்டனைக்குரிய குற்றம். ஏன் அவர்கள் இது மனித உரிமை என்றால் சட்டம் போட்டுத் தடுக்கின்றனர். ஆக மொத்ததில் மனிதன் மன உடல் கிளர்ச்சிக்கு அவன் போக்கில் விடை தேட முடியாது. கட்டுப்பாட்டுக்குள் இருந்துதான் விடை காண வேண்டும். அதுதான் அவனுக்கும் மொத்த மனித இனத்துக்கும் பாதுகாப்பு.

அந்த வகையில் பாலியல் என்பது வள்ளுவர் காலத்தில் இருந்து இன்று வரைக்கும் ஒன்றுதான் உணர்வின் அடிப்படையில். எனவே வள்ளுவன் வாக்கு என்றும் எக்காலத்துக்கும் பொருந்தும்.

குற்றவாளி அவள் பாலியல் குற்றவாளியாக இருக்கலாம் உளவாளியாக இருக்கலாம். தண்டிக்கப்படுதலே சமூகம் தவறான உதாரணங்களைத் தனதாக்காமல் போரியல் சூழலில் எதிரிக்குத் துணை போகாமல் வெற்றியை நோக்கிய சிந்தனையில் இருக்க உதவும். :idea:

Link to comment
Share on other sites

உண்மை நிகழ்வை செய்தியாக போடுவதில் தவறு இல்லை. அதில் தன்னார்வ தணிக்கையை (volunteer censorship) கொண்டுவரத்தேவையில்லை. அது தேவையற்ற சந்தேகங்களையும் குளப்பங்களையும் உருவாக்க உதவும்.

ஆனால் இப்படியான நிகழ்வுகள் செய்தியாக்கப்படும் முறையில் நிச்சயம் மாற்றம் தேவை. கன்றுக்குட்டி ஊடகத்தாரினால் தாக்குதல்களும் தாக்குதல் முறைகளும் தான்தோன்றித்தனமாக உரிமை கோரப்படுவது போலவே மரணதண்டனைக்கான காரணங்களும் நியாயங்களும் குறளோவியத்தின் பெயராலும் மானுடவியலின் பெயராலும் தான்தோன்றித்தனமாக வியாக்கியானப்படுத்தப்படுகி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாலியல் தொழிலாளியால் அவள் மட்டுமல்ல அவள் சார்ந்த அனைவருமே பாதிக்கப்படுகின்றனர். இந்த சட்டவிரோத சமூகவிரோத தேச விரோத பாலியல் தொழிலாளி படையினருடன் வந்திருந்த தொடர்புகளின் போது வெளியிட்ட தகவல்களின அடிப்படையில் மரணித்துப் போன மனிதர்களுக்கான மனிதாபிமானம் எங்கே போனது? மரணிக்கப் போகின்ற மனிதர்களுக்கான மனிதாபிமானம் எங்கே போகின்றது.

எயிட்ஸே இல்லாத வடபகுதிக்குள் எயிட்ஸைக் காவி வந்தவர்கள் மேற்குலகில் அலைந்து திரிந்த தமிழர்களும் மேற்குலக வெளிநாட்டுப் பணியாளர்களும். இவர்களிடமிருந்து எப்படி எயிட்ஸ் யாழில் பெண்களிடம் பரவிப் போனது? கட்டுப்பாடற்ற பாலியல் நடத்தைகளால் தான். இங்கு மரணித்துப் போகப்போகின்ற உயிர்களுக்கான மனிதாபிமானம் எங்கே யாரால் வழங்கப்படப் போகிறது.

எதற்கும் எதிர்வாதம் செய்தியாளர்களைக் குறை பிடித்தல் என்ற நிலைகுள் நிற்காமல் அவர்கள் எல்லாளன் படை விடுத்த அறிகையைத்தான் வெளியிட்டுள்ளனர் என்ற உண்மையையாவது உணர்ந்து கொள்ளுங்கள். எனி இராணுவ உளவாளிகளையும் சுடாதீர்கள் ஐயோ மனிதாபிமானம் இறந்து கொண்டிருக்கிறது என்றும் கூறுவீர்கள். ஐயோ கதிர்காமர் பாவம் அவரைச் சுட்டது எவரென்றாலும் மனித உரிமை மீறல் என்பீர்கள்.

ஆனால் இப்படிக் காட்டிக் கொடுப்போரால் மக்களை போராளிகளை தினமும் கொன்று குவிக்கும் போது உங்களால் ஏன் இப்படி ஒரு விவாதத்தை மனிதாபிமானக் கண்னோட்டத்தோடு நடத்த முடியவில்லை. இன்று கொழும்பில் கூட ஒரு தமிழ் பெண் மணி சுட்டுக் கொல்லப்பட்டார். பல இளம் பெண்கள் கடத்தப்பட்டுக் காணாமல் போயுள்ளனர். இவர்களிடத்தில் காட்டத்தயங்கும் மனிதாபிமானத்தை ஒரு தேசத்தரோகியின் மீது சமூ விரோதி மீது காட்டி அவளால் அழிந்து போன அல்லது அழியப் போகும் மனித உயிர்களுக்கான அல்லது பாதிப்புகளுக்கான விளைவுகளை சமூகம் மனிதாபிமானத்தின் பிரகாரம் ஏற்றுக் கொண்டு வீழ்ந்தொழிய வேண்டுமா?

சமூகக் களை ஒன்றை எடுப்பதில் தவறில்லை. உலகின் மனிதாபிமானம் பேசும் மனித உரிமைகள் காக்கும் நாடுகளில் எல்லாம் பொலிஸாரே சுட்டுக் கொள்கின்றனர் குற்றவாளிகள் என்று நிரூபிக்காமலே. ஆனால் இவளோ சமூக விரோதி. சட்டவிரோத பாலியல் தொழிலாளி. தேச விரோத உளவாளி. அந்த வகையில் அப்பெண்ணின் இருப்பின் சமூக ஆபத்துக் கருதி அவள் சுடப்பட்டிருக்கலாம்.

இதில் மனித உரிமைகளுக்கு மேலால் பல மனித உயிர்களின் அழிவுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்ற நிம்மதிதான் அதிகம்.

அன்று படையினர் இறந்த போது படை மனிதாபிமானம் பேசுகிறார்கள். இன்று துரோகி ஒருத்தி சுட்டுக் கொல்லப்பட்டதற்காக அதுவும் சட்டவிரோத சமூக விரோத பாலியல் தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டதற்காக மனிதாபிமானம் பேசுகின்றன.

மரண தண்டனைகள் கொடுமையான தண்டனைகள் தான். மரண தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்தும் அதை உதாசீனம் செய்து எதிரிக்குச் சேவகம் செய்தை கை கட்டி நின்று வேடிக்கை பார்த்து மக்களின் மீது அவள் திணிக்கப் போகும் மனித அவலங்களுக்கு உடந்தையாக எல்லோரும் இருந்து அந்தத் துரோகியின் சமூக விரோதியின் சட்டவிரீதியின் இருப்புக்காக மனிதாபிமானம் பேச வேண்டுமா?

கருணைக் கொலைகளைக் கூட அனுமதிக்கும் மேற்குலகில் நின்று மனிதாபிமானம் கொல்லப்படுகிறது என்று கூச்சலிடுங்கள் நிறுத்துகிறார்களோ பார்ப்போம். ஈராக்கில் மக்கள் மடிகிறார்களே மனித உரிமைகளைக் காருங்கள் என்று கூச்சலிடுங்கள் நிறுத்துகிறார்களோ பார்ப்போம். வன்னியில் கொழும்பில் கிழக்கில் தினமும் பெண்களும் இளைஞர்களும் கொல்லப்படுகிறார்களே கடத்தப்படுகிறார்களே அவர்களுக்காக மனிதாபிமானம் பேசுங்கள் அவர்கள் உயிர் பிழைக்கிறார்களோ பார்ப்பம்.

மூதூரில் யாழில் என்று பல பெண் உளவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு போராளிகளும் மக்களும் என்று அழிவுகளைச் சந்தித்து வரும் வேளையில் இவர்கள் மீது மனிதாபிமானம் காட்டுங்கள் என்று கூச்சல் போடுவது ராஜபங்ச புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்க்கின்றனர் என்று குற்றம் சாட்டுவது போலானது. எதிரிக்கு சேவகம் செய்யும் இவள் மீது மனிதாபிமானம் அர்த்தமற்றது. பாலியல் வெறி பிடித்த ஒரு விலங்கு சுடப்பட்டுள்ளது. விசர் நாய்களைச் சுடும் போது ஜீவகாருணியம் பார்ப்பதில்லை. அந்த நாய் காவும் விசக் கிருமிகளால் சமூகத்துக்கு வரப்போகும் பாதிப்புத்தான் நோக்கப்படுகிறது. அதுதான் என்னவோ நோய் கண்ட உயிரினங்களை இயற்கை கூட அழித்துவிடுகிறது. அதிலும் மனிதாபிமானம் ஜீவகாருணியம் பேசலாமே?

சட்டவிரோத செயலுக்காக ஒரு தண்டனை அவ்வளவவே. இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம். சிங்கள இராணுவத்துக்கு பாலியல் சேவகம் செய்ய ஆண்கள் பற்றாக்குறையால் அவதியுறும் தமிழ் பெண்களை அனுமதியுங்கள். இந்தப் பற்றாக்குறையும் வறுமையும் தான் அவர்களை இராணுவத்தை நம்பி பிழைப்பு நடத்தப் பண்ணுகிறது. எச்சரிக்கைகளுக்கும் மேலால் அவர்கள் அதைத் துணிவோடு செய்கிறார்கள். எனவே அவர்களின் வீரத்தை மதித்து அவர்களின் பாலுணர்வுகளுக்கு வடிகாலிட வழிவிடுங்கள். அவர்கள் காட்டிக் கொடுத்தால் என்ன காவித் திரிந்தால் என்ன எத்தனை பேரை அவர்கள் எதிரியோடிணைந்து சுயநலத்துக்காக அழிப்பினும் அவர்களை மனிதர்களாக நோக்கி சுதந்திரமாக செயற்பட விடுங்கள். மொத்தத்தில் யாழ்ப்பாணத்தை விபச்சார விடுதியாக்கி 40,000 சிங்கள இனவெறியனுக்கும் பாலியல் தீனிபோடுங்கள். அப்படி என்றா சொல்ல வருகிறீர்கள். இதை அங்குள்ள எல்லாளன் படையை நோக்கிச் சொல்லுங்கள். யாழ் களத்தில் கத்திப் பிரயோசனமில்லை. சட்டவிரோதமான பாலியல் தொழிலை யாழில் சட்டமாக்கி பப் கிளப் போன்றவற்றையும் ஐரோப்பிய கனேடிய அவுஸ்திரீலிய தமிழர்களின் முதலீட்டோடு திறந்து சிங்கள அரச பயங்கரவாத இராணுவத்துக்கு சேவை செய்து வருமானம் ஈட்டும் அதேவேளை ஆண்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் தமிழ் பெண்களின் பாலுணர்வுகளுக்கு தமிழீழத்தை தாரை வார்க்க நாங்கள் தயார். தமிழ் பெண்களை சிங்களப் படையினருக்கு மணம் முடித்துக் கொடுத்து இன ஐக்கியத்தையும் ஐக்கிய சிறீலங்காவையும் காப்போம் என்று யாழில் உறுதி எடுக்கின்றோம் என்று அனுப்பி வையுங்கள் எல்லாளன் படைக்கு ஒரு குறிப்பு. :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக் கேட்டால், இணையங்களில் இது போன்ற செய்திகள் தேவையே இல்லை என்பேன்.

இணையங்களில் வருகின்ற செய்திகள் பெரும்பாலும் புலம்பெயர் மக்களாகிய எங்களை நோக்கியே இருக்கிறது.

ஒரு பெண் உளவாளி தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்ற பொழுது, அதை நாம் ஏற்றுக்கொள்வதற்கு, குறிப்பிடப்பட்ட பெண் பாலியல் தொடர்பு கொண்டிருந்த விடயம் மேலதிகமாக தேவைப்படுகிறதா?

;உளவு பார்ப்பதை விட, பாலியல் தொடர்பு வைத்திருப்பது பாரிய குற்றமாக எனது சமூகம் கருதுகிறது என்றே நான் இதை புரிந்து கொள்கிறேன்.

என்னுடைய புரிதல் சரியானதா?

பாலியல் தொழில் சட்டவிரோதமானது. தமிழீழத்தைப் பொறுத்தவரை. அந்த வகையில் இது பாரிய குற்றம் என்பதை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அத்தோடு உளவும் பார்த்துள்ளார்.அதுவும் பாரிய குற்றம்.

எமது சமூகத்தில் மட்டுமல்ல பாலியல் துர்நடத்தை உள்ளோரை எந்தச் சமூகமும் மதிப்பதில்லை, வெள்ளையர்கள் கூட இப்படியான பெண்களை பிச் (Bitch) என்று மட்டமாத்தான் அழைக்கின்றனர், மதிக்கின்றனர். பிச் என்பது பெட்டை நாய் என்பது. நாய் தான் பல நாய்களோடு மனிதர்கள் கண்காண கூடித் திரிவது. அதனால் தான் அப்படி அழைப்பதாக அவர்களே விளக்கம் சொல்கிறார்கள்.

சட்டவிரோத பாலியல் தொடர்புகள் தண்டனைக்குரிய குற்றங்கள். பெண்கள் அல்லது ஆண்கள் பற்றாக்குறை இருக்கலாம் விடலாம். வீட்டில் உணவில்லை என்றால் களவெடுக்கச் சொல்வீர்கள் போலிருக்கிறது. பசியை அடைக்கி உணவைத் தேடும் வழியைத்தான் காட்ட வேண்டும். அதேபோல் தான் இதுவும் பாலியல் தொழில் செய்வதோடு வரும் தொடர்புகளைப் பயன்படுத்தி உளவுகளையும் செய்கின்றனர். இது இன்று நேற்றல்ல பன்னெடுங்காலமாக நடக்கின்றது. ஏதோ புதியது போல நீட்டி நிமித்தி தேசத் துரோகிகளிடத்து சட்டவிரோத மனித நாகரிக ஒழுக்கங்களற்ற விலங்குகள் போன்ற பாலியல் தொழில் செய்யும் மனித விலங்குகளிடம் மனிதாபிமானம் அவசியமற்ற்து. அவர்களை நாடிச் செல்லும் மனித ஆண் விலங்குகளையும் சுட்டுக் கொல்வதே மனித இனத்துக்குப் பாதுகாப்பு. சமூக நோய்களும் பரவாது. சமூக தனி மனித ஒழுக்கங்களும் மனித நாகரிகமும் உயர்ந்தளவில் பேணப்பட்டும். :idea:

Link to comment
Share on other sites

அதுவும் எடுத்தவுடன் சுட்டுதள்ளுவதில்லை 3 முறை எச்சரிக்க செய்யப்படுவர அதை மீறினே சுட்டுகொல்லப்படுவார் ஆக இதில் எந்தப்பிழையும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு வாந்தி யெடுத்தவை

________________________________________

மேலே சொல்லப்பட்டது போலவே இவ்வருட ஆரம்பத்திலும் 4 பிள்ளைகளின் தாயொருவர் யாழ்ப்பாணத்தில் போட்டுத் தள்ளப்பட்டார். பின் இவ்விடயம் விவாதமாகி இராணுவத்துடன் பாலியல் தொடர்பென்றவர்களே கசிப்புக் காய்ச்சியதாலேயே போட்டுத் தள்ளப்பட்டாரென்று கதையை முன்னுக்குப் பின் முரனாக்கினார்கள். சாவுக்கும் சாட்டு வேண்டும் தானே.

எங்கள் மக்களை நாங்களே அழித்துக் கொண்டு அதற்கு ஏதாவது நொண்டிச் சாட்டுச் சொல்லி நியாயம் கற்பிக்கின்றோம். இதே போல்த்தானே சிங்கள அரசாங்கமும் தமிழனை எதிரி என்பதாலேயே அழிக்கின்றது என்று மௌனம் காப்போமா???

இங்கே பதில்கள் என்பது நியாயம் சார்ந்தல்ல சந்தர்ப்பம் சார்ந்தே பலர் மனம் போனபடி எழுதிக் கலாய்க்கின்றார்கள்.

சிங்கள அரசாங்கத்திடம் ஊதியம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கெதிராகச் செயல்பட்டால் அதுவும் துரோகம் தானே. அப்போ அவர்கள் போட்டுத் தள்ளுவதும் நியாயம் என்கின்றீர்களா???

ஒரு பேச்சுக்காக அப்பெண் உளவு வேலையில் ஈடுபட்டதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியாயின் அப்பெண் எவ்வாறு உளவுத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் நாம் எமது முகத்திற்கே துப்புகின்றோம் என்பது புரியும்.

அப்பு குசும்பு

நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்துக்கிடந்த துரோகத்துக்கு வயறு குளிருகிறமாதிரி விடயம் கிடைத்திட்டுதென்று நினைக்கின்றேன்.

ஐயா! மனிதாபிமானம், மனிதம், மனிதஉரிமை இவை எல்லாம் என்ன பாவம் ஐயா! செய்தவை உங்கட வாயால் உச்சரிக்கப் படுவதற்க்கு,

மனித அவலத்தை விற்றுப்பிழைக்கும் வயறுகளுக்கு இது எல்லாம் யோக்கியம்தானா ஐயா?

Link to comment
Share on other sites

தமிழீழத்தனியரசு அமைக்கப்பட்டதும் மரணதண்டனை அறவே ஒழிக்கப்பட்டுவிடும் என்பது என் எதிர்பார்ப்பு.

மரணதண்டனையானது குற்றவாளி தன் தவறை உணர்ந்து கொள்ளவும் திருத்திக் கொள்ளவும் இருக்கும் வாய்ப்பை அறவே இல்லாதொழிக்கின்றது என்பதே என் கருத்தும்.

சட்டத்தை சரியான முறையில் அமுல் படுத்தினால் அல்லது அமுல்படுத்த முடிந்தால் இந்த மரணதண்டனை பூச்சாண்டி அவசியமே இருக்காது.

போர்சூழலில் சிக்குண்டு நிற்கும் யாழ்ப்பாணத்தை உங்கள் புலம்பெயர் நாடுகளில் இப்போது நீங்கள் அனுபவிக்கும் உரிமைகளோடு ஒப்பிடாதீர்கள்.

அல்லது போர்காலத்தில் உங்கள் தேசத்தில் மனிதஉரிமைகள் எப்படியிருந்தது என்று அப்போதிருந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து ஒப்பிடுங்கள்.

துரோகி ஒருவனை அல்லது ஒருத்தியை முதல் தரம் எச்சரித்ததுமே எதிரி விழிப்படைந்து எச்சரித்தவரையே போட்டுத்தள்ளி விடுவான்

எச்சரிக்கை செய்வதென்பது தாளொன்றில் கையொப்பமிட்டு கையளிப்பதோ அல்லது நேரில் சென்று மிரட்டுவதோ கிடையாது.

ஒருவரைப்பற்றி தகவல் கிடைத்ததும், அவரை இரகசிகமாக கண்காணித்து சந்தேகம் உறுதியானதும், களத்தில் உள்ளவரே முடிவெடுத்து அதை செயற்படுத்துவார்.

அவரும் மரணத்தின் ஒரு கைதியாகவே அதனை செய்கிறார். அவருக்குத் தெரியும் அதைச் செய்வதன் முலம் தனக்கான வலை மேலும் இறுகுமென்று.

மேலும் மரணதண்டனை ஒரு உடனடி நிவாரணி மட்டுமே, நீண்டகால நோக்கில் அதுவும் போராட்டத்திற்க்கு பாதிப்பையே உண்டுபண்ணும்.

தமிழர் ஒருவர் தன் தமையனுக்கு மரணதண்டனை வழங்கியமைக்காக புலனாய்வாளராகி அவர் காணமல் போகும் வரை பல வருடங்களாக தன் இனத்தையே பழிவாங்கினார்.

ஆகவே துரோகிகளாக திருந்தா விட்டால் துரோகத்தை ஒழிக்க முடியாது.

எதிரி திட்டமிட்டு ஏற்படுத்திய தற்போதைய வறுமையான சூழல் இந்த வகையில் அவனுக்கு மிகவும் வாய்ப்பானது.

இது இவ்வாறே இருக்கும் ஒவ்வோறு கணமும் நாங்கள் எங்களின் உறவுகளை ஒவ்வொருவராக இழக்கும் நிலையே நீடிக்கும்.

Link to comment
Share on other sites

ஜஙரழவநசிறீ"நெனரமமயடயிழழஎயn"ஸஜஙரழவநசிறீ"சபேசன்"ஸதிருவள்ளுவர் காலத்து "ஒழுக்கம்" வேறு. இன்றைய காலத்து "ஒழுக்கம்" வேறு.

என்னுடைய கேள்விகளுக்கு பதிலை தாருங்கள்!ஜஃஙரழவநஸ

கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்குள் மனிதன் மனதளவில் பாலுணர்வு அடிப்படையில் மாறிவிட்டான் என்று கூறிவிட முடியாது.

திருவள்ளுவர் கூட மனிதன் மிருகமாகி செய்யக் கூடிய பாலியல் களவுகளையும் சொல்லித்தான் ஒழுக்கத்தை உயர்வாகக் காட்டியுள்ளார். அவர் டேற்றிங் பற்றி கிளப் பப் பற்றி சொல்லாமல் விட்டிருக்காலாம். ஆனால் மனிதனுக்குள் உள்ள மிருக்கத்தை ஒத்த உணர்வுகளுக்கு நல்ல ஒழுக்கம் என்ற ஒன்றால் வழிகாட்டுகிறார். ஆபிரிக்காவெங்கும் கட்டுப்பாடற்ற பாலியல் நடத்தைகளே எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் பெருகிக் கிடக்கக் காரணம். இன்று இந்தியாவில் கூட இந்த சட்டவிரோத பாலியல் தொழில்தான் அச்சுறுத்தும் அளவுக்கு எயிட்ஸ் நோயைப் பரப்பி உள்ளது.

ஒரு பக்கம் நோய்கள் பெருகின்றன என்றால் இன்னொரு பக்கம் பெற்றோர் பராமரிப்பற்ற பிள்ளைகள் பெருகுகின்றனர். அளவுக்கு அதிகமான கருக்கலைப்புகளும் அதனால் பெண்கள் உடல் உள ரீதியில் சந்திக்கும் பிரச்சனைகளும். அதுமட்டுமன்றி செயற்கையான கருத்தடை மாத்திரிகளைப் பாவிப்பதன் வாயிலான பக்க விளைவுகள் என்று வள்ளுவர் கண்டிராத பல பிரச்சனைகளை பாலியல் வெறித்தனத்தைக் கட்டுப்படுத்த முடியாத மனிதர்களால் மனித சமூகம் எதிர் நோக்கியுள்ளது.

குறிப்பாக அண்மைய ஆய்வொன்று கூட குடிநீரில் கருத்தடை மாத்திரிகைகளின் அளவு அதிகரித்திருப்பதும் இதனால் சில உள உடல் பிரச்சனைகள் வருமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளன.

குடும்பம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைக்குள் மனிதனின் பாலியல் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் போது இப்படியான மனித இனத்தைப் பாதிக்கக் கூடிய விடயங்கள் பெருகாமல் இருக்கும்.

அதுமட்டுமன்றி பெண்களுக்காக ஆண்களும் ஆண்களுக்காக பெண்களும் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். சித்திரவதைகளில் ஈடுபடுகின்றனர். மொத்தத்தில் மிருகங்களை விடக் கேவலமான முறையில் தங்கள் பாலியல் தேவைகளை மனித இயற்கைக்கு மாறான அளவில் கூட தீர்த்துக் கொள்ள விளைகின்றான். இது மனித உரிமையல்ல. மனிதனின் சிந்தனைகளின் பாலியல் வக்கிரத்தனம் மனித உரிமை கிடையாது. பாலியல் உணர்வை வெளிப்படுத்தவும் ஒரு வரையறை இருக்கிறது. அந்த வகையிலேயே பாலியல் தொழில் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலுக்கு பெயர் போன அம்ஸராமில் கூட குறித்த பகுதிகளில் மட்டும் தானாம் அவர்கள் அதைச் செய்ய முடியும். மற்றைய பல நாடுகளில் பாலியல் தொழில் சட்டவிரோதமானது. கடும் தண்டனைக்குரிய குற்றம். ஏன் அவர்கள் இது மனித உரிமை என்றால் சட்டம் போட்டுத் தடுக்கின்றனர். ஆக மொத்ததில் மனிதன் மன உடல் கிளர்ச்சிக்கு அவன் போக்கில் விடை தேட முடியாது. கட்டுப்பாட்டுக்குள் இருந்துதான் விடை காண வேண்டும். அதுதான் அவனுக்கும் மொத்த மனித இனத்துக்கும் பாதுகாப்பு.

அந்த வகையில் பாலியல் என்பது வள்ளுவர் காலத்தில் இருந்து இன்று வரைக்கும் ஒன்றுதான் உணர்வின் அடிப்படையில். எனவே வள்ளுவன் வாக்கு என்றும் எக்காலத்துக்கும் பொருந்தும்.

குற்றவாளி அவள் பாலியல் குற்றவாளியாக இருக்கலாம் உளவாளியாக இருக்கலாம். தண்டிக்கப்படுதலே சமூகம் தவறான உதாரணங்களைத் தனதாக்காமல் போரியல் சூழலில் எதிரிக்குத் துணை போகாமல் வெற்றியை நோக்கிய சிந்தனையில் இருக்க உதவும்.

வணக்கம் நெடுக்காலபோவான்............குறளோவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் கேட்டிருக்கும் கேள்வி அர்த்தமுள்ளதாகத் தெரியவில்லை. அந்தப் பெண் தவறான பாலியல் நடத்தை காரணமாகத் தான் தண்டிக்கப்பட்டிருக்கின்றார

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.