Jump to content

ஜெயலலிதா சொத்து குவிப்பு அப்பீல் மனு மீதான விசாரணை


Recommended Posts

பவானிசிங் வாதிட்ட லட்சணத்தைப் பார்த்தால் அம்மாவுக்கு களி கான்சல் ஆகும்போல இருக்கு.. :o:D

Link to comment
Share on other sites

  • Replies 311
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வாரம் அம்மாவுக்கு கம்பங்களி ரெடியா இருக்கும்! :lol:

Link to comment
Share on other sites

ஜெ., மேல் முறையீட்டு வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு தேதி அறிவிப்பு

 

 

பெங்களூரு: 'தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட, நான்கு பேர் மீதான, சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு விசாரணையின், வாத, பிரதிவாதம் முடிந்த நிலையில், அடுத்த வாரம் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய, நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனை மற்றும் அபராதத்தை எதிர்த்து, நான்கு பேரும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இதற்காக, சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ள, நீதிபதி குமாரசாமி நியமிக்கப்பட்டார்.

 

இந்த மனுக்கள் மீதான விசாரணை, கடந்த, ஜன., 5ம் தேதியிலிருந்து தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று, 38வது நாளாக விசாரணை நடந்தது.முதலில், ஜெயலலிதா தரப்பிலும், அதன்பின், சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பிலும், அவர்களின் வழக்கறிஞர்கள் வாதத்தை எடுத்துரைத்தனர். அரசு வழக்கறிஞர் பவானி சிங், தன் வாதத்தை, ஆறு நாள் எடுத்துரைத்தார். நேற்று அவர், தன் வாதத்தை நிறைவு செய்தார்.இவ்வழக்கில், தன்னை, 3வது பார்ட்டியாக சேர்த்து கொள்ளும்படி, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோன்று, பா.ஜ., பிரமுகர் சுப்ரமணியன் சாமி தாக்கல் செய்த மனுவுக்கு, எழுத்து பூர்வமாக மட்டுமே, பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

 

 

அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்ற வேண்டும் என, அன்பழகன் தரப்பில் தாக்கல் செய்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பான அப்பீல் மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த விசாரணை, வரும் 9ம் தேதி நடக்கவுள்ளது.கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி குமாரசாமி, விசாரணை நடத்தும்போது, பல அதிரடி கேள்விகளை எழுப்பினார்.உதாரணமாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள, 66 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிரூபிக்க வேண்டும் என, அரசு தரப்பினரை அடிக்கடி வலியுறுத்தினார். அரசு தரப்பு, தங்கள் ஆதாரத்தை சரியாக சமர்ப்பிக்கவில்லை என்றும், அதிருப்தி தெரிவித்தார்.

 

இதேபோன்று, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரிடமும், சொத்து மதிப்பு குறித்து, உங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க வேண்டும் என, நீதிபதி குறிப்பிட்டார்.

நேற்று நடந்த விசாரணையின்போது, நீதிபதி குறிப்பிடுகையில், “வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த, அதிகாரியின் அறிக்கை எங்கே? சொத்து விவரம் சரியாக காண்பிக்கப்படவில்லை; எனக்கு திருப்தியளிக்கவில்லை,” என, குறிப்பிட்டார்.

 

அரசு வழக்கறிஞர் பவானி சிங் வாதிடுகையில், “முந்தைய தனி நீதிமன்றத்தில், விசாரணை நடந்தபோது, எங்களின் கவனக்குறைவால், 11 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களின் கணக்குகளை காண்பிக்க முடியவில்லை. பாக்கியுள்ள, 55 கோடி ரூபாய் சொத்துகள் மட்டுமே கணக்கில் காட்டப்பட்டன. அதே ஆவணங்களையும், சாட்சிகளையும் உங்கள் (நீதிபதி) முன் சமர்ப்பிக்கிறேன். இதை ஏற்று, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,” என்று கூறி, எழுத்து பூர்வமான ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.

 

இறுதியில், நீதிபதி கூறுகையில், 'வரும் 9ம் தேதி, சுப்ரமணியன் சாமியும், 10ம் தேதி ஜெ., தரப்பிலும், தங்களின் எழுத்து பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யவுள்ளனர்' என்றார்.

வழக்கு தொடர்பான, வாத, பிரதிவாதம் முடிவடைந்த நிலையில், அடுத்த வாரம் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பொதுவாக, விசாரணை முடிந்து, இரு வாரங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. 10ம் தேதி, தீர்ப்பு தேதியை, நீதிபதி அறிவித்தால், இம்மாத இறுதிக்குள், சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் சாத்தியம் உள்ளது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1200002

Link to comment
Share on other sites

ஜெ. சொத்துக் குவிப்புவழக்கு... அன்பழகன் கோரிக்கையை டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம் கோர்ட்

 

டெல்லி: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனுவை ஒத்திவைக்கவேண்டும் என்ற அன்பழகன் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது. அதேசமயம் மேல்முறையீட்டு விசாரணையில் இருந்து பவானி சிங்கை நீக்கக் கோரும் திமுக மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மார்ச் 18-க்குள் விளக்கமளிக்குமாறு ஜெயலலிதாவுக்கும், கர்நாடக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜெ. சொத்துக் குவிப்புவழக்கு... அன்பழகன் கோரிக்கையை டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம் கோர்ட் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளதால், அவர்கள் வெளியில் இருந்தபடி வழக்கை நடத்தி வருகின்றனர். மேல்முறையீட்டு வழக்கில் உதவி செய்ய முன்வந்த திமுக-வின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவில், உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் மேல்முறையீடு விசாரணை முறையாக நடக்காததால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. மேலும், அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. அன்பழகன் மனு தள்ளுபடி இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகூர், கோயல் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

 

இந்த வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றக்கோரும் மனு மீதான உத்தரவு வரும் வரையில், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை வழங்க தடை விதிக்க வேண்டும் என்ற திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் இந்த கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

 

உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அதேநேரத்தில், அரசு வழக்கறிஞராக பவானிசிங் நீடிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து மார்ச் 18ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க கோரி கர்நாடகா அரசுக்கும், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட நான்கு பேரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/sc-refuses-stay-appeal-hearing-karnataka-hc-222413.html

Link to comment
Share on other sites

ஜெ. அப்பீல் வழக்கு: புதனுக்குள் தனது வாதத்தைத் தாக்கல் செய்ய சு. சாமிக்கு உத்தரவு...!

 

பெங்களூர்: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் 6 நிறுவனங்களின் சொத்துப்பட்டியல் குறித்த விவரங்களை அரசு வழக்கறிஞர் பவானிசிங் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்தநிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை வரும் புதன்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த அப்பீல் மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. தினசரி இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

ஜெ. அப்பீல் வழக்கு: புதனுக்குள் தனது வாதத்தைத் தாக்கல் செய்ய சு. சாமிக்கு உத்தரவு...! இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் வாதங்கள் நிறைவு பெற்றதையடுத்து கடந்தவாரம் அரசு வழக்கறிஞர் பவானிசிங் தனது இறுதிவாதத்தை நிறைவு செய்தார்.

 

பவானிசிங் வாதம்

நீதிபதி குமாரசாமி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் பதில் அளிக்காததால் அவரது வாதம் திருப்தி அளிப்பதாக இல்லை என நீதிபதி கூறினார். அதற்கு பதிலளித்த பவானி சிங், பதில் அளிக்காத கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக தான் பதிலளிப்பதாக கூறினார்.

 

39வது நாளாக விசாரணை

 

39-வது நாள் விசாரணை இன்று நடைபெற்றது. 6 நிறுவனங்களின் சொத்துப்பட்டியல் குறித்த விவரங்களை அரசு வக்கீல் பவானிசிங் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

 

சுப்ரமணியசுவாமிக்கு அவகாசம்

 

இந்த நிலையில், சுப்பிரமணியசாமி தமது வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வருகிற 13-ந் தேதி வரை கால அவகாசம் கேட்டார். இதற்கு நீதிபதி குமாரசாமி மறுத்து விட்டார். அதோடு வருகிற 11ஆம் தேதி வரை (புதன்கிழமை) கால அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

 

தாமதம் ஏன்?

 

ஜெயலலிதா மேல்முறையீட்டு விசாரணையில் தன்னையும் வாதியாக இணைக்கக் கோரி சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்திருந்தார். வழக்கின் இறுதி வாதத்துக்குப் பின்னர், எழுத்துப்பூர்வமாக வாதத்தை தாக்கல் செய்ய சுப்பிரமணியசாமிக்கு நீதிமன்றம் தெரிவித்தது. கடந்த வாரமே இறுதி வாதம் நிறைவு பெற்ற நிலையில், சுப்ரமணியசாமி இன்று தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தனது எழுத்துப்பூர்வ வாதத்தை இன்று தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து கூடுதல் அவகாசம் கோரிய அவரது மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக நீதிமன்றம் புதன்கிழமையன்று எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்யுமாறு கோரியுள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/bhavani-singh-seeks-more-time-222423.html

Link to comment
Share on other sites

ஜெ.சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு: இன்னும் சில தினங்களில் தீர்ப்பு

 

பெங்களூரு: பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கிளைமேக்ஸை நெருங்கியுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் தீர்ப்பு தேதியை நீதிபதி குமாரசாமி இன்னும் ஒருசில தினங்களில் அறிவிக்க இருக்கிறார். அடுத்த வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்படுவதால் சொத்துக்குவிப்பு வழக்கு மீண்டும் பரபரப்பை எட்டியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன் நேற்று 39வது நாளாக விசாரணை நடைபெற்றது. சுப்ரமணியசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவன் சந்திர ஷெட்டி, "பல்வேறு முக்கிய‌ ஆவணங்களை இணைக்க வேண்டியிருப்பதால் எழுத்துப்பூர்வ இறுதி வாதத்தை தயாரிக்க சுப்பிரமணியசாமிக்கு ஒரு வார கால கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது" என்று கோரிக்கைவிடுத்தார். அதற்கு அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆட்சேபம் தெரிவித்தார்.

 

நேரில் ஆஜராக உத்தரவு இதையடுத்து, நீதிபதி குமாரசாமி, "இவ்வழக்கை முடிக்க உச்சநீதிமன்றம் குறுகிய கால‌ அவகாசமே அளித்துள்ளது. எனவே ஒரு வார கால அவகாசம் அளிக்க முடியாது. மேலும் உங்களது கருத்தை அரசு வழக்கறிஞர் பவானி சிங் மூலமாகவே நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும். வரும் புதன்கிழமைக்குள் சுப்பிரமணியசாமி நேரில் ஆஜராகி, நீதிமன்றத்தில் தனது எழுத்துபூர்வ இறுதி வாதத்தை தாக்கல் செய்ய‌ வேண்டும்" என உத்தரவிட்டார்.

 

ஆதாரம் என்ன? இதையடுத்து நீதிபதி, "எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீது ரூ.66.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு தொடுத்தீர்கள்? நால்வர் மீதும் சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் குற்றப்பத்திரிக்கையில் ஏன் குறிப்பிடவில்லை? குற்றப் பத்திரிக்கையை யார் தாக்கல் செய்தார்? அதை எந்த அதிகாரி மேற்பார்வையிட்டு ஒப்புக் கொண்டார்? இவ்வழக்கில் அரசு தரப்பும், குற்றவாளிகள் தரப்பும் தேவையான ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாதது ஏன்?" என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

 

குற்றப்பத்திரிக்கை அதற்கு அரசு வழக்கறிஞர் பவானி சிங், "விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையை அப்போதைய அரசு வழக்கறிஞர் சண்முக சுந்தரம் மேற்பார்வையிட்டு ஒப்புதல் அளித்தார். குற்றவாளிகள் மீதான ரூ.66.65 கோடி சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக‌ தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழங்கிய ஆவணங்களையும், சாட்சியங்களையும் ஆதாரப் பூர்வமாக விசாரணை நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளோம்" என்றார்.

 

வயதான நல்லமநாயுடு அதற்கு நீதிபதி, "விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவை நீதிமன்றத்துக்கு அழைத்து வாருங்கள். அதேபோல ஜெயலலிதாவின் வீடுகளை மதிப்பீடு செய்த பொறியாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகக் கூறி இருந்தேனே?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பவானி சிங், "நல்லம்ம நாயுடுவுக்கு வயதாகிவிட்டது. பொறியாளர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதில் நிறைய நடைமுறை சிரமம் உள்ளது" என்றார்.

 

மவுனமான வழக்கறிஞர் இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமாரிடம், "இவ்வழக்கில் இணைக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவிக்கக்கோரி நீங்கள் மனு தாக்கல் செய்தீர்களா?" என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பி.குமார் உட்பட‌ ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் அனைவரும் மவுனமாக இருந்தனர். மேலும் பதில் சொல்லாமல் ஆவணங்களை தேடிய‌தால், நீதிமன்ற சிறப்பு அதிகாரி பிச்சமுத்து அது தொடர்பான‌ பழைய கோப்புகளை நீதிபதியிடம் அளித்தார்

 

நீதிமன்றம் நிராகரிப்பு அதில் சொத்துக்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தொடக்கத்திலேயே நிராகரித்துள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது தெரியவந்தது.

 

பவானிசிங் எழுத்து பூர்வமான ஆவணம் இதனிடையே அரசு வழக்கறிஞர் பவானிசிங் 6 பக்கங்கள் கொண்ட எழுத்து பூர்வமான வாதத்தை நீதிபதியிடம் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட நீதிபதி இதில் என்ன அம்சம் உள்ளது என்று கேட்டார். அதற்கு பதிலளித்த வக்கீல் பவானிசிங், சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மெடோ ஆக்ரோ பாரம், லெக்ஸ்பிராபர்ட்டிஸ், சைனோரா பைனான்ஸ், இந்தோதோஹா கெமிக்கல்ஸ், ராமராஜ் ஆக்ரோ மில்ஸ, ரிவர்வே ஆக்ரோ மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளன.

 

குற்றவாளிகளின் பணம் ஆனால் வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா, இரண்டாவது குற்றவாளியான சசிகலா ஆகியோர் இயக்குனர்களாக உள்ள ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவன வங்கி கணக்கில் இருந்து தான் மேற்கண்ட 6 நிறுவனங்களின் வங்கி கணக்கில் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது. அதில் தான் கம்பெனிகள் இயங்கியுள்ளது.

 

கூட்டுசதி நிரூபணம் அதை அடிப்படையாக வைத்தே, அந்த கம்பெனிகளின் பங்குதாரர் மற்றும் இயக்குனர்களாக இருந்தவர்கள் கூட்டுசதி செய்துள்ளதாக ஐபிசி சட்டம் 120 (பி) பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தனி நீதிமன்றத்தில் அவர்கள் கூட்டு சதி செய்துள்ளதை நிரூபித்தோம். அதையேற்று தான் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியதுடன், மேற்கண்ட 6 கம்பெனிகளை குற்றவாளிகளின் சொத்தாக வழக்கில் சேர்த்து தீர்ப்பு வழங்கியது.

 

நான்கு பேரின் சொத்துக்கள் அது தவறு என்று கம்பெனிகள் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுப்படி செய்ய வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, குற்றவாளிகள் நான்கு பேரின் சொத்து எவ்வளவு என்பதை தனிதனியாக பட்டியலிட்டு காட்டும்படி கூறினார். இன்று ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பும் தங்களது எழுத்துப்பூர்வ இறுதி வாதத்தை தாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுப்ரமணியசாமி எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்த பின்னர் நீதிபதி தீர்ப்பு தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/hc-asks-swamy-make-written-submission-on-mar-11-222459.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை (11.03.15)... சொத்துக் குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பு வெளியிடப்படும் என்று, கர்நாடக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Link to comment
Share on other sites

சுப்ரமணியசாமி ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. சுப்பிரமணியசாமி தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் இன்று தாக்கல் செய்யப்படவில்லை. இவர் தரப்பில் ஆஜரான வக்கீல் பவன் சந்திர ஷெட்டி , ஆஜராகி அவகாசம் கேட்டார். சுப்பிரமணியசாமி நாளை (புதன்கிழமை) வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதை நீதிபதி ஏற்று கொண்டார்

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/hc-asks-swamy-make-written-submission-on-mar-11-222459.html

 

நாளை புதன்கிழமைதான் சுப்ரமணியசாமி தனது வாதத்தை எழுத்து மூலம் சமர்க்கிக இருப்பதால் நாளை தீர்ப்பு வருமா தெரியாது.


சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு: ஜெ. தரப்பு எழுத்துப்பூர்வ வாதம் இன்று தாக்கல், விரைவில் தீர்ப்பு

 

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஜெயலலிதா தரப்பின் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் வழக்கின் சூத்திரதாரி சுப்ரமணியசாமி தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்த பின்னர் கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு தேதியை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது 40வது நாளாக கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் செந்தில் ஆஜராகி, 177 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். அதேபோல சொத்து மறு மதிப்பீடு பட்டியல் மற்றும் மார்பல் புனரமைப்பு பணிகள் குறித்த பட்டியலும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில், இரு தரப்பு ஒப்பீடு அறிக்கையும் இன்றைய விசாரணையில் தாக்கல் செய்யப்பட்டது.

 

சுப்ரமணியசாமி ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. சுப்பிரமணியசாமி தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் இன்று தாக்கல் செய்யப்படவில்லை. இவர் தரப்பில் ஆஜரான வக்கீல் பவன் சந்திர ஷெட்டி , ஆஜராகி அவகாசம் கேட்டார். சுப்பிரமணியசாமி நாளை (புதன்கிழமை) வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதை நீதிபதி ஏற்று கொண்டார்.

 

கூட்டு சதிக்கு ஆதாரம் தொடர்ந்து நீதிபதி குமாரசாமி, அரசு வழக்கறிஞரிடம் இதில் கூட்டுச்சதி நடந்திருக்கிறது என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லையே என கேள்வி எழுப்பினார்.

30 ஆண்டுகளாக இதற்கு பதில் அளித்த பவானிசிங், ஒரு கிரிமினல் வழக்கில் கூட கூட்டுச்சதி என்பதற்கு போதிய ஆதாரங்கள், சூழ்நிலையை கருத்தில் கொண்டே ஏற்று கொள்ளப்படும் . இது போல் ஜெ., சசிகலா, 30 ஆண்டுகளாக சேர்ந்து தான் வாழ்ந்துள்ளனர். எனவே இந்த சூழல் ஆதாரம் போதுமானது என்றார்.

 

தள்ளுபடி செய்யுங்கள் இதனையே சிறப்பு நீதிமன்றம் ஏற்றது. எனவே ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பவானிசிங் வாதிட்டார்.

ஜெ. வக்கீல்கள் பதில் தாக்கல் செய்யப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில் நீதிபதி குமாரசாமி சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் குமார் மற்றும் செந்தில் பதில் அளித்தனர்.

 

தண்டனையை ரத்து செய்க இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் வாதிடுகையில், அரசியல் காழ்ப்புணச்சி காரணமாக அப்போதைய அதிகாரிகளை வலுக்கட்டாயப்படுத்தி இந்த வழக்கில் எப்.ஐ.ஆர்., போட்டுள்ளனர். தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

 

அரசு பணியாளர்கள் தவறு இதற்கு பதில் அளித்த பவானிசிங், அரசு பணியாளர்கள் தவறு செய்தால் செக்சன் 21 ஏ-ன் படி தான் வழக்கு பதியப்பட்டுள்ளது என்றார்.

தீர்ப்பு தேதி புதன்கிழமையன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்துள்ள நிலையில் தீர்ப்பு வழங்கப்படும் தேதியை நீதிபதி நாளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/hc-asks-swamy-make-written-submission-on-mar-11-222459.html

Link to comment
Share on other sites

பெங்களூரு கோர்ட்டில் சுப்ரமணியசாமி

 

பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி இன்று தனது எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய கூறி, சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதன்படி,. இன்று காலை 10:45 மணிக்கு பெங்களூரு கோர்ட்டிற்கு நேரில் வந்த சுப்ரமணியசாமி, தனது வாதத்தை எழுத்துபூர்வமாக, 14 பக்கங்களில் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, சாமி கோர்ட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். சுப்ரமணியசாமி தாக்கல் செய்துள்ள எழுத்துபூர்வமான வாதத்திற்கு மதியம் ஜெ., வக்கீல்கள் பதில் அளிக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1203643

Link to comment
Share on other sites

ஜெ. அப்பீல் வழக்கு: சாமி வாதத்தோடு கர்நாடகா ஹைகோர்ட்டில் விசாரணை இன்று முடிவு.. தீர்ப்பு எப்போது?

 

சென்னை: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. சொத்துக்குவிப்பு வழக்கின் சூத்திரதாரியான சுப்ரமணியசாமி இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நேரில் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்துள்ளார். சுப்ரமணியசாமியின் வாதத்திற்கு பதிலளிக்க வேண்டும் என்று குற்றவாளிகள் தரப்பிற்கும் அரசு தரப்பிற்கும் உத்தரவிட்ட நீதிபதி குமாரசாமி விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்துள்ளார். இன்றுடன் விசாரணையை முடித்துக்கொள்ளவதாக கூறியுள்ள நீதிபதி குமாரசாமி தீர்ப்பு தேதியை இன்றே அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 41வது நாளாக நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கு தற்போது க்ளைமேக்ஸை நெருங்கியுள்ளது.

 

41 நாட்கள் வாதம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் மேல்முறையீட்டு விசாரணை கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவும், சசிகலா வழக்கறிஞர் பசந்தும் தலா 9 நாட்களும், சுதாகரன், இளவரசி வழக்கறிஞர் சுதந்திரம் 8 நாட்களும், கம்பெனி வழக்குகள் 2 நாட்களும் நடந்தது. அத்துடன் நால்வர் தரப்பு இறுதி வாதம் நிறைவு பெற்றது.

 

அரசு தரப்பு வாதம் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் பவானி சிங் கடந்த மார்ச் 6ஆம் தேதியோடு தன் வாதத்தை நிறைவு செய்தார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் திங்கட்கிழமை நிறுவனங்கள் மனுவுக்கு எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்தார்.

 

எழுத்து பூர்வ வாதம் இந்த நிலையில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று கூடியதும் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர்களின் சார்பில் 171 பக்கங்கள் கொண்ட எழுத்துபூர்வமான வாதமும் மற்றும் தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள், வரவு-செலவுகள், கட்டுமான பணிகளுக்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்து 65 பக்க ஆவணங்கள் அடங்கிய வாதமும் தாக்கல் செய்யப்பட்டது.

 

சுப்ரமணியசாமி தரப்பு 41 வது நாளான இன்று வழக்கின் சூத்திரதாரியான சுப்ரமணியசாமி 14 பக்கங்கள் அடங்கிய எழுத்துப்பூர்வமான வாதத்தை இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

 

உறுதி செய்க ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது சிறப்பு நீதிமன்றத்தில் நிருபணமாகியுள்ளது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்யவேண்டும் என்று சாமி தனது தரப்பு வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்

 

தப்பித்து விடக்கூடாது சட்டவிரோதமாக சொத்து சேர்த்துவிட்டு வருமானவரி கட்டி தப்பிவிடக்கூடாது என்றும் சாமி குறிப்பிட்டுள்ளார். சுப்ரமணியசாமி தரப்பு வாதத்திற்கு பதில் தர ஜெயலலிதா, அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி குமாரசாமி விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்

 

தீர்ப்பு எப்போது 41 நாட்கள் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்றுடன்(புதன்கிழமை) முடிவடைகிறது. நீதிபதி குமாரசாமி இன்று தீர்ப்பு தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-da-case-karnataka-hc-wind-up-hearing-today-222501.html

Link to comment
Share on other sites

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு அப்பீல் மனு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார் நீதிபதி

 

Link to comment
Share on other sites

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
 

 

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த வழக்கின் குற்றவாளிகள், எதிர்த் தரப்பினர் என அனைத்துத் தரப்பும் வாதமும் விசாரணையும் முடிவுக்கு வந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைப்பதாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி அறிவித்தார்.

 

முன்னதாக, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில், சுப்பிரமணியன் சுவாமி தனது எழுத்துபூர்வ வாதத்தை இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்தார்.

 

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவரது 14 பக்க வாதத்தில், பொது ஊழியரான ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளதாக, சுப்பிரமணியன் சுவாமி தரப்பு கூறியது.

சுப்பிரமணியன் சுவாமியின் எழுத்துபூர்வ வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமாரும் இன்று பிற்பகலில் தங்கள் இறுதி வாதத்தை முன்வைக்க வேண்டும் என்று கூறி, விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். அதன்படி, இரு தரப்பு வாதமும் நடைபெற்றது.

 

இதைத் தொடர்ந்து, விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ஒத்திவைத்தார்.

முன்னதாக, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக் கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் 40-வது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பிலும் சுமார் 300 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை நேற்று தாக்கல் செய்தனர்.

 

எழுத்துபூர்வ இறுதி வாதம்

எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட இறுதி வாதம் 3 பகுதிகளை கொண்டிருந்தது. 177 பக்கங்கள் கொண்ட முதல் பகுதியில் சொத்துக்குவிப்பு வழக் கின் விசாரணையின் தொடக்கத்தில் இருந்து தீர்ப்பு வரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை செய்த தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. 65 பக்கங்கள் கொண்ட 2-வது பகுதியில் 1991-96 காலகட்டத்தில் நால்வரின் வரவு, செலவு கணக்குகள் அடங்கி இருந்தன.

 

8 பக்கங்கள் கொண்ட 3-வது பகுதியில் நால்வரின் சொத்துப் பட்டியல், அதற்கான வருமான ஆதாரத்தை அட்டவணையாக குறிப்பிட்டு இருந்தனர். சுமார் 300 பக்கங்கள் அடங்கிய இந்த வாதம்தான் தீர்ப்பை மாற்றுவதாக அமையும் என ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் கூறினர்.

 

அதேவேளையில், வழக்கறிஞர்களின் வாதத்துக்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர் பவானிசிங், "கூட்டுச்சதி, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்தது, ஜெயலலிதாவின் பணம் 32 தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டது அனைத்தும் உண்மை. இதனை விசாரணை நீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளோம். இது தொடர்பாக எனது விளக்கத்தை புதன்கிழமை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்கிறேன்'' என்றது குறிப்பிடத்தக்கது.
 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6982065.ece

Link to comment
Share on other sites

அதுதான்  காணி  புடுங்கும் அதிகாரத்துக்கு ஆமா  போட்டமே ...அரசியல் .

Link to comment
Share on other sites

ஜெ. மேல்முறையீட்டு வழக்கு: தீர்ப்பு தேதி நாளை அறிவிக்கப்படும்?

 

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா உட்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி நாளை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு 4 ஆண்டு காலம் சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதித்தது பெங்களூரு தனிநீதிமன்றம். இத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

 

ஜெ. மேல்முறையீட்டு வழக்கு: தீர்ப்பு தேதி நாளை அறிவிக்கப்படும்? இம்மனுவை விசாரிக்க கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி நியமிக்கப்பட்டார். அவர் முன்னிலையில் இம்மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி 5-ந் தேதி முதல் 41 நாட்கள் நடைபெற்றது. குற்றவாளிகள் தரப்பில் வழக்கறிஞர்கள் நாகேஸ்வரராவ், வசந்த், சுதந்திரம் ஆகியோரும் அரசு தரப்பில் பவானி சிங்கும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதமும் முடிந்த நிலையில், இவ்வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அனுமதிகேட்டு சுப்பிரமணியசாமி மனு கொடுத்திருந்தார். அதை பரிசீலனை செய்த நீதிபதி குமாரசாமி, வாதம் செய்ய அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் உங்கள் தரப்பு வாதத்தை எழுத்து மூலமாக தாக்கல் செய்யலாம் என அனுமதி வழங்கி இருந்தார்.

 

அதன்படி நீதிமன்றத்தில் ஆஜரான சுப்பிரமணியசாமி தனது தரப்பு வாதத்தை எழுத்து மூலமாக நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்பு தாக்கல் செய்திருந்தார். அதன் பின்னர் நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். இதனிடையே மேல்முறையீட்டு வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கக் கோரி தி.மு.க.பொதுச்செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அப்போது அன்பழகனின் மனு ஏற்கப்பட்டு பவானிசிங் நீக்கப்பட்டால் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் புதிய அரசு வழக்கறிஞர் தமது வாதத்தைப் பதிவு செய்ய வேண்டியதிருக்கும்.

 

அதனால் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை மேலும் சில காலம் நீட்டிக்க வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் அன்பழகனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டால் நாளையே மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்புக்கான தேதியை கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி அறிவிக்க வாய்ப்பிருக்கிறது என்றே கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-da-appeal-case-verdict-date-may-be-fixed-tomorrow-222795.html

Link to comment
Share on other sites

ஜெ. அப்பீல் வழக்கு… சொத்துக்களை ஆய்வு செய்யும் ஆடிட்டர்கள்: தயாராகும் தீர்ப்பு…

 

பெங்களூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சொத்துப்பட்டியலை ஆடிட்டர் குழு ஆய்வு செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குழுவின் அறிக்கை கிடைத்த உடன் தீர்ப்பின் தேதியை நீதிபதி குமராசாமி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்புக்கான முகவுரையை தயாரிக்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 41 நாட்கள் நடைபெற்று கடந்த 17ஆம் தேதி முடிவடைந்தது.

 

தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு நீதிபதி குமாரசாமி ஒத்திவைத்தார். இந்நிலையில் வழக்கின் ஆவணங்களை சரியாக மதிப்பிட ஆடிட்டர்கள் குழுவின் உதவியை நீதிபதி நாடியுள்ளார். இதனையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோரின் சொத்துகளை ஆடிட்டர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குழுவின் அறிக்கைக்காக நீதிபதி காத்திருப்பதாகவும், இந்த வழக்கின் தீர்ப்புக்கான முகவுரையை தயாரிக்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு விசாரணை கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி, மார்ச் 11ஆம் தேதியோடு நிறைவு பெற்றிருக்கிறது. தீர்ப்பு தேதியை அறிவிக்காமல் நீதிமன்றத்தை ஒத்திவைத்திருக்கிறார் நீதிபதி.

 

தேதி தெரிந்தாலாவது கொஞ்சம் தெம்போடு இருக்கலாம். ஆனால் தேதியே தெரியாமல் பக்... பக்... பதற்ற மனநிலையோடு இருக்கிறது போயஸ்கார்டன். ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், அன்புக்கரசு, பன்னீர்செல்வம், செல்வகுமார், குலசேகரன், நாகராஜன், திவாகர், பரணிகுமார், கருப்பையா, தனஞ்செயன், முத்துகுமார், அம்பிகை தாஸ், மகேஸ்வரன் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி ஆகியோர் வாதாடினர். தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சிறப்புப் பணி அமர்த்தல் ஐ.ஜியான குணசீலன், டி.எஸ்.பியான சம்பந்தம் சார்பாக அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும், அவரின் தற்காலிக உதவியாளர் சதீஷ் கிரிஜியும் ஆஜரானார்கள். இந்த வழக்குக்காகச் சிறப்பு நீதிமன்றத்தில் பணிபுரிந்த பிச்சைமுத்து, யோகானந்த் ஆகியோர் நீதிபதி கேட்கும் ஆவணங்களை உடனுக்குடன் எடுத்துத் தருவதற்காக இந்த நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஜெயலலிதா தரப்பு வாதங்களும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் வாதமும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் 3ஆம் தரப்புவாதியான சுப்பிரமணியன் சாமியின் எழுத்துப்பூர்வ வாதத்தை கடந்த 11ஆம் தேதி தன் வழக்கறிஞரோடு வந்திருந்த சுப்பிரமணியன் சுவாமி 14 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். அப்போது சுப்ரமணியசாமியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

 

அதிகார துஷ்பிரயோகம் சாமி தனது வாதத்தில், ''ஜெயலலிதா, முதல்வர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, சொத்து சேர்த்ததால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா, 1979-ம் ஆண்டு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். 1985-86-ம் ஆண்டு வருமானவரித் துறையில் தாக்கல்செய்த அறிக்கையில் தனக்கு எந்த வருமானமும் இல்லை என்று கூறி இருக்கிறார்.

 

சொத்துக்கள் என்னென்ன 1984-89 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் 1988-ம் ஆண்டு ரூ.9.2 லட்சம் செலவில் 4 கார்களும், ரூ.1.40 லட்சத்தில் ஒரு ஜீப்பும் வாங்கியுள்ளார். எந்த வருமானமும் இல்லை என்று 1985-ஆம் தெரிவித்தவருக்கு, எம்.பியாக இருந்த காலத்தில் மட்டும் எப்படி வருமானம் வந்தது?

 

மூன்று நிறுவனங்கள் 1990-ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்து ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் ஆகிய 3 நிறுவனங்களைத் தொடங்கினார்கள். ஆனால், அந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் எந்தப் பண பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. ஜெயலலிதா முதல்வரானதும் இந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

 

29 நிறுவனங்கள் கூடுதலாக 29 நிறுவனங்கள் தொடங்கப்பட்டு அதில் சுதாகரன், இளவரசி பங்குதாரர்களாகச் சேர்க்கப்பட்டனர். அந்த 29 நிறுவனங்களில் எந்தச் செயல்பாடும் இல்லாத நிலையில் வங்கிக் கணக்கில் மட்டும் கோடிக்கணக்கான அளவில் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றன.

 

வருமானம் வந்த வழி 1991ஆம் ஆண்டில் முதல்வராவதற்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள திராட்சைத் தோட்ட பங்களாவைப் புதுப்பிக்க தனி நபரிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கிய ஜெயலலிதாவுக்கு 1991-96 வரை அவர் முதல்வராக இருக்கும்போது கோடிக்கணக்கான பணம் எப்படி வந்தது? 1987-93ஆம் ஆண்டு வரை இவர் வரி கட்டவில்லை. இவர்கள் கூட்டுச்சதி செய்து வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை சேர்த்துள்ளதை கீழ் நீதிமன்றம் விசாரணை நடத்தி, உறுதி செய்துள்ளது'' என்று கூறியுள்ளார்.

 

தீர்ப்பு எப்போது இதையடுத்து சுப்பிரமணியன் சாமியின் எழுத்துப்பூர்வ வாதத்துக்குப் பதில் வாதத்தை 6 பக்கங்கள் தயாரித்துக் கொடுத்தார். சுப்பிரமணியன் சாமியின் எழுத்துப்பூர்வ வாதம் ஆதாரமற்ற வாதம் என்பதால் இந்த நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டார். பவானி சிங் தன் தரப்பு வாதங்களை 4 பக்கங்களில் கொடுத்தார். அதையடுத்து நீதிபதி குமாரசாமி, ''இந்த வழக்கின் அனைத்துத் தரப்பு விசாரணையும் முடிந்துவிட்டதால் தீர்ப்புத் தேதியை அறிவிக்காமல் ஒத்தி வைக்கிறேன்'' என்று கூறி அன்றைய விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி குமாரசாமி.

 

தயாராகும் தீர்ப்பு தீர்ப்பை எழுதும் பணியில் நீதிபதிக்கு உதவியாக 5 பேர் கொண்ட குழு செயல்பட்டு வருகின்றது. நடப்பு வார இறுதியில் மேல் முறையீடு தீர்ப்புக்கான முகவுரை தயாரிக்கும் பணிகள் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆடிட்டர் குழுவின் அறிக்கை கிடைத்ததும் தீர்ப்பை நீதிபதி எழுதவுள்ளார். மார்ச் இறுதியிலோ ஏப்ரல் முதல் வாரத்திலோ சொத்து குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் என எதிர்பர்க்கப்படுகிறது.

 

வெளியே வருவாரா? 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறை வளாக நீதிமன்றத்தில் ஜான் மைக்கேல் டி.குன்ஹா 64 ஆயிரம் பக்கங்கள்கொண்ட ஆவணங்களை வைத்து, 1,300 பக்கங்களுக்குத் தீர்ப்பை வழங்கினார். இந்தத் தீர்ப்பை எதிர்த்துத்தான் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.குன்ஹா கொடுத்த நான்கு ஆண்டு சிறைத் தீர்ப்பில் 21 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு போயஸ் கார்டனுக்குள் போன ஜெயலலிதா, இன்னமும் வெளி உலகத்துக்கு வரவில்லை.

 

தீர்ப்பு எப்படி இருக்கும் அரசு வழக்கறிஞராக பவானி சிங் தொடரக் கூடாது என க.அன்பழகன் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அந்த மனுவில் என்ன உத்தரவு வரப்போகிறது என்பதை வைத்துத்தான் தீர்ப்புத் தேதி முடிவு ஆகும். அதில் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றால், மார்ச் மத்தியில் தீர்ப்பை வழங்கிவிடுவார் நீதிபதி என்றே பெங்களூரு தகவல்கள் சொல்கின்றன. குன்ஹாவின் தீர்ப்பை நீதிபதி குமாரசாமி மாற்றுவாரா? அல்லது அந்த தீர்ப்பையே உறுதிப்படுத்துவாரா? திக் திக் மனநிலையோடு காத்திருப்பது போயஸ்கார்டன் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களும்தான்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/verdict-date-jayalalithaa-s-appeal-be-announced-very-soon-223223.html

Link to comment
Share on other sites

ஜெ. அப்பீல் வழக்கில் மார்ச் இறுதியில் தீர்ப்பு வெளியாகலாம்... பவானி சிங் தகவல்

 

பெங்களூரு: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் "ஒன்இந்தியா"விடம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. அதில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை, ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்ஹா உத்தரவிட்டார்.

 

ஜெ. அப்பீல் வழக்கில் மார்ச் இறுதியில் தீர்ப்பு வெளியாகலாம்... பவானி சிங் தகவல் இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் நால்வரும் உச்சநீதிமன்றத்தை அணுகி ஜாமீின் பெற்று வெளியே வந்தனர். அதன் பின்னர் நால்வர் சார்பிலும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தனி நீதிபதி குமாரசாமி பெஞ்ச் தினசரி விசாரணையாக நடத்தி முடித்தது. தற்போது நீதிபதி குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு அனைவராலும் எதிர்பார்க்ககப்படுகிறது. காரணம், வழக்கு விசாரணையின்போது இரு தரப்பு வாதங்கள் அதுபோல இருந்தன. அதை விட முக்கியமாக நீதிபதி குமாரசாமி கேட்ட பல கேள்விகள் தீ்ர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

இந்த நிலையில் தீர்ப்பு தேதி குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் ஒன்இந்தியா செய்தியாளர் கேட்டபோது, இந்த மாத இறுதியில் தீர்ப்பு வரலாம். இதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த வழக்கானது, தனி நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ஜெயலலிதா மற்றம் பிறர் தாக்கல் செய்த அப்பீலாகும். அரசுத் தரப்பில், தனி நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு செல்லும் என்று உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளோம். கூடுதல் தண்டனை குறித்து நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. கூடுதல் தண்டனை கோருவதாக இருந்தால் அரசுத் தரப்பில் அதற்கு தனியாக மனு செய்ய வேண்டும். எப்படியும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும். ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டால், அதை எதிர்த்து அரசுத் தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுகும் என்றார் அவர்..

 

பாதுகாப்பு ஏற்பாடுகள்: இதற்கிடையே, தீர்ப்பையொட்டி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறையினரும் ஆயத்தமாகி வருகின்றனர். தீர்ப்புக்கு ஒரு நாள் முன்னதாக பெங்களூர் காவல்துறை உஷார்படுத்தப்படும். உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்படுவர். தீர்ப்பு நாளன்று கர்நாடகத்திலும், பெங்களூரிலும் எந்த வன்முறையும் நிகழாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மேலும் தமிழகத்தையொட்டியுள்ள கர்நாடக எல்லையிலும் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்படவுள்ளனராம்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jayalalithaa-verdict-likely-month-end-223350.html

Link to comment
Share on other sites

ஜெ. அப்பீல் வழக்கில் பவானிசிங் ஆஜராக அரசு அங்கீகாரம் இல்லை: கர்நாடக அரசு

 

டெல்லி: ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜராக பவானி சிங்கிற்கு அங்கீகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் எம்.என்.ராவ் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் பவானி சிங் ஆஜராக கர்நாடக அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் தொடர்ந்து ஆஜராகி வருவதை ரத்து செய்யக் கோரி திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் பவானி சிங் ஆஜராவதை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

அந்த மனுவில், ‘சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் அப்பீல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணையில் அரசு தரப்பில் பவானிசிங் ஆஜராவதற்கு கர்நாடக அரசு தரப்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, அவரை நீக்கிவிட்டு வேறு ஒரு மூத்த வழக்கறிஞரை நியமிக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்றும், மேல் முறையீட்டு வழக்கு விசாரணையில் தன்னையும் சேர்க்குமாறு உத்தரவிட வேண்டும்" என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

இதை எதிர்த்து அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி மதன் லோகூர் தலைமையிலான டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு மீது கர்நாடக அரசு, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி மதன்லோகுர் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

கர்நாடக அரசு வழக்கறிஞர் விளக்கம் விசாரணையின் போது கர்நாடக அரசு சார்பில் ஆஜராக வழக்கறிஞர் எம்.என்.ராவ் விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜராக பவானி சிங்கிற்கு அங்கீகாரம் இல்லை என்றும், உயர் நீதிமன்றத்தில் பவானி சிங் ஆஜராக கர்நாடக அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அன்பழகன் வழக்கறிஞர் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் வழக்கறிஞர் அந்தியார்ஜுனா வாதம் செய்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்திவ் ஜெயலலிதா மேல்முறையீடு செய்திருந்தார்

முகாந்திரம் இல்லை ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பில் பவானி சிங் ஆஜராக அனுமதியில்லை என்றும், உயர்நீதிமன்றத்தில் ஆஜராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை என்று அன்பழகன் சார்பில் ஆஜரான அந்தியர்ஜுனா வாதிட்டார். மேலும் ஜெயலலிதா வழக்கில் அரசு சார்பில் பவானி சிங் ஆஜராக எந்த முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

 

குற்றவாளிகளுக்கு ஆதரவு குற்றவாளிகளுக்கு ஆதரவாக பவானி சிங் செயல்படுவதாகவும் அந்தியார்ஜுனா புகார் தெரிவித்தார். மேலும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவால் அபராதம் விதிக்கப்பட்டவர் பவானி சிங் என்றும் குற்றம் சாட்டினார்.

குற்றவாளி கேட்டது தவறு அரசு வக்கீலாக பவானி சிங்கை நியமிக்க வேண்டும் என குற்றவாளிகள் கோரியது தவறு என்றும் அரசு தரப்பில் குறிப்பிட்ட ஒருவரை நியமிக்க குற்றவாளி கோருவது சட்டவிரோதம் என வாதிட்டார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/bhavani-singh-has-no-locus-stand-appearing-jaya-case-karnataka-govt-223415.html

Link to comment
Share on other sites

பவானி சிங் நியமனத்தில் தொடர்பில்லை: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு விளக்கம்
 

 

‘ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு மேல்முறையீடு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டதில் எங்களுக்கு தொடர்பில்லை’ என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு கர்நாடக உச்ச நீதிமன்றத்தில் விசாரிக் கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட் டுள்ளது. `இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக உள்ள பவானி சிங்கை நீக்க வேண்டும், அரசு தரப்புக்கு உதவ அனுமதி அளிக்க வேண்டும், அதுவரை மேல்முறையீட்டு வழக்குக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இம்மனு, நீதிபதிகள் மதன் லோக்கூர், ஆர்.பானுமதி அடங் கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அன்பழகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜுனா ஆஜராகி, `விசாரணை நீதிமன்றத் தில் அரசு தரப்பில் ஆஜராகும் ஒரு வழக்கறிஞர், அதன் மேல் முறையீட்டு வழக்கில் ஆஜராக முடியாது. மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங்கின் வாதங் கள் அனைத்தும் குற்றவாளிக்கு ஆதரவாக உள்ளது. குற்றவாளி கள் தரப்பில் தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு செய்தபோதும், ஜாமீன் கோரிய போதும் பவானி சிங் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, அவரை வழக்கில் இருந்து நீக்கி உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

 

ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நரிமன், `மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், அரசு தரப்பு விசா ரணை அமைப்பான லஞ்ச ஒழிப் புத்துறை சார்பில் பவானி சிங் நியமிக்கப்பட்டு வழக்கை நடத்தி வருகிறார். இதில் எந்த தவறும் இல்லை’ என்று வாதிட்டார்.

 

கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.என்.ராவ், `ஜெயலலிதா மேல் முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசை பிரதிவாதியாக சேர்க்க வில்லை. எனவே, பவானி சிங் நியமனத்துக்கும் கர்நாடக அரசுக் கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று வாதிட்டார். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 1-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேல்முறையீட்டு வழக்குக்கு தடை விதிக்க கோரிய வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7038795.ece?homepage=true&relartwiz=true

 

Link to comment
Share on other sites

பவானிசிங்கை நீக்கக் கோரும் அன்பழகன் வழக்கு விசாரணை ஏப்.7க்கு ஒத்திவைப்பு

 

டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் தொடர்ந்து ஆஜராகி வருவதை ரத்து செய்யக் கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

அந்த மனுவில், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணையில் அரசு தரப்பில் பவானிசிங் ஆஜராவதற்கு கர்நாடக அரசு தரப்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, அவரை நீக்கிவிட்டு வேறு ஒரு மூத்த வழக்கறிஞரை நியமிக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், மேல் முறையீட்டு வழக்கு விசாரணையில் தன்னையும் சேர்க்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. பவானிசிங்கை நீக்கக் கோரும் அன்பழகன் வழக்கு விசாரணை ஏப்.7க்கு ஒத்திவைப்பு இந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

 

இம்மனு நீதிபதி மதன் லோகுர், பானுமதி தலைமையிலான பெஞ்சில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின்போது, குற்றவாளிகளுக்கு ஆதரவாக பவானிசிங் செயல்பட்டார்; வழக்கு விசாரணையை இழுத்தடிக்க முயற்சி செய்தார்; சிறப்பு நீதிமன்றம் பவானிசிங்குக்கு அபராதமும் விதித்தது. இதனால் மேல் முறையீட்டு வழக்கிலிருந்து அவரை நீக்க வேண்டும். அவருக்கு பதிலாக வேறு ஒருவரை அரசு வழக்கறிஞரை நியமிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்‘ என்று அன்பழகன் தரப்பில் வாதிடப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.என்.ராவ், சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசுத் தரப்பில் ஆஜராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமனம் செய்யவில்லை என்றார்.

 

இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று கூறி ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பாலி நாரிமன், கர்நாடகா அரசு புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்காதது கர்நாடகாவின் தவறு; பவானிசிங்தான் ஜெயலலிதா வழக்குக்காக நியமிக்கப்பட்டவர் என்று வாதாடினார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வரும் ஏப்ரல் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் இருதரப்பினரும் வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/sc-adjourns-hearing-anbazhagan-s-petition-ap-7-223844.html

Link to comment
Share on other sites

பவானிசிங்கை நீக்க கோரிய வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பில் திடீர் குழப்பம்..நடந்தது என்ன?

 

டெல்லி: ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக கூடாது என்று திமுக அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான இறுதிகட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. விசாரணை முழுவதும் முடிந்த நிலையில், வரும் 15ம்தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆனால் இந்த தீர்ப்பு தேதியை வெளியிடுவதில் மீடியாக்கள் குழப்பமடைந்தன. இதற்கு காரணம் உள்ளது. தமிழக முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது, அரசு தரப்பு வக்கீலாக ஆஜரானவர் பவானிசிங்.

 

அந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தார், நீதிபதி மைக்கேல் டி குன்ஹா. பவானிசிங்கை நீக்க கோரிய வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பில் திடீர் குழப்பம்..நடந்தது என்ன? இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலும், பவானிசிங்கே அரசு வக்கீலாக ஆஜரானார். ஆனால், கர்நாடக அரசு பவானிசிங்கை ஆஜராகுமாறு ஆணை பிறப்பிக்கவில்லை, தமிழக லஞ்ச ஒழிப்பு துறைதான் அந்த ஆணையை கொடுத்தது. பவானிசிங், குற்றவாளி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்று குற்றம்சாட்டும் திமுகவின் அன்பழகன், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இதில் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகள் தரப்பு வாதம் கடந்த வாரம் புதன்கிழமை நிறைவடைந்துள்ளது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பாலி நாரிமன், பவானிசிங் ஆஜரானதில் சட்ட விதிமுறை மீறல் இல்லை என்று வாதிட்டார். இன்று இறுதிவாதம் நடந்தது. நீதிபதிகள் மதன்லோகுர் மற்றும் பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், "பவானிசிங்கை மேல்முறையீட்டு விசாரணையின்போது அரசு வக்கீலாக ஆஜராக கர்நாடக அரசு நியமிக்கவில்லை" என்றார். இதைத்தொடர்ந்து வாதிட்ட அன்பழகன் தரப்பு வழக்கறிஞர், அந்தியார்ஜுனா, "பவானிசிங்கை, இந்த வழக்கில் ஆஜராக நியமிக்கவில்லை என்று கர்நாடக அரசே கூறிவிட்டதால், ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங் ஆஜரானது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.

 

ஹைகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்துவிட்டது. அதன் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்புள்ளது. எனவே, இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும்வரை, மேல்முறையீட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார். இதையடுத்து, இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிபதிகள், சாப்பாட்டு இடைவேளைக்காக கிளம்பி சென்றனர். இதன்பிறகு, நீதிபதிகள், இருதரப்பையும், தங்களது சேம்பருக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இரு தரப்புமே, நீதிபதிகள் எதற்காக அழைக்கிறார்கள் என்ற குழப்பத்திலேயே சென்றுள்ளனர்.

 

அப்போது, பவானிசிங் வழக்கின் மீதான தீர்ப்பை ஏப்ரல் 15ல் அறிவிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்பழகன் தரப்பு கோரிக்கையை ஏற்று, தீர்ப்பு வழங்கும் 15ம் தேதிவரை, கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4பேரின் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவேதான், முதலில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படவில்லை என்று செய்தி வெளியிட்ட மீடியாக்கள், அதை மாற்றி, 15ம்தேதி தீர்ப்பு என்று வெளியிட வேண்டியதாயிற்று.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/anbazhagan-s-petition-remove-bhavani-singh-jaya-case-verdict-expected-today-224210.html

Link to comment
Share on other sites

அன்பழகன் வழக்கில் ஏப்.15-ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு! அதுவரை ஜெ. அப்பீல் வழக்கில் தீர்ப்புக்கு தடை

 

டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனையை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவதை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது ஏப்ரல் 15-ந் தேதியன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. அதுவரை மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர். அன்பழகன் வழக்கில் ஏப்.15-ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு! அதுவரை ஜெ. அப்பீல் வழக்கில் கர்நாடகா ஹைகோர்ட் இம்மனு மீதான விசாரணைகள் முடிவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க.பொதுச்செயலர் அன்பழகன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் மதன் லோகுர், பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. இம்மனு மீதான விசாரணைகள் அனைத்தும் இன்றுடன் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 15-ந் தேதியன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

மேலும் இந்த வழக்கில் ஏப்ரல் 15-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதால் அதுவரை ஜெயலலிதா உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கவும் இடைக்கால தடை விதித்தனர் நீதிபதிகள்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/bhavanisingh-s-fate-be-decided-sc-s-verdict-on-apr-15-224245.html

Link to comment
Share on other sites

சப்போஸ், பவானிசிங் நியமனம் செல்லாதுன்னு உச்சநீதிமன்றம் சொன்னா, ஜெ. வழக்கு கதி?

 

பெங்களூரு: ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவதை எதிர்த்து தி.மு.கவின் அன்பழகன் தொடர்நத வழக்கில், ஒருவேளை திமுகவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா.. சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளும், கர்நாடக ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில், இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

 

நியமிக்காமலேயே ஆஜரான பவானி இவ்வழக்கில், அரசு தரப்பு வக்கீலாக, பவானிசிங் ஆஜராகிறார். இவர் சிறப்பு நீதிமன்றத்திலும் அரசு வக்கீலாக ஆஜரானவராகும். ஆனால், ஹைகோர்ட்டில் பவானிசிங் உட்பட யாரையுமே இதுவரை அரசு வக்கீலாக கர்நாடக அரசு நியமிக்கவில்லை.

உச்சநீதிமன்றம் விசாரணை எனவே, பவானிசிங் ஆஜரானது தவறு, அவரை அரசு வக்கீல் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுகவின் அன்பழகன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே ஹைகோர்ட்டில், அப்பீல் மனு மீது விசாரணை முடிந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி குமாரசாமி.

 

ஹைகோர்ட் தீர்ப்பளிக்க தடை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து தீர்ப்பு தேதியை குமாரசாமி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அன்பழகன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற பெஞ்ச், தீர்ப்பை இம்மாதம் 15ம்தேதி அறிவிக்க உள்ளதாகவும், அதுவரையில், மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான தீர்ப்பை ஹைகோர்ட் வெளியிட கூடாது என்றும் அறிவித்தது

 

சரின்னா ஓகே, இல்லைன்னா? பவானிசிங் ஆஜரானது சரிதான் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறினால், அதன்பிறகு ஹைகோர்ட் தனது தீர்ப்பை வெளியிடுவதற்கு தடை இருக்காது. வழக்கு அடுத்தகட்டத்துக்கு நகரும். ஒருவேளை, பவானிசிங் ஆஜரானது தவறு என்று தீர்ப்பு வெளியானால், அப்போது என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா..

 

புது வக்கீல் நியமனம் ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் பவானி சிங் நீக்கப்பட்டால், கர்நாடக அரசும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் சேர்ந்து ஒரு புதிய அரசு வழக்கறிஞரை நியமிப்பார்கள். ஏப்ரல் 20ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை என்பதால், மேற்கொண்டு இந்த வழக்கு நடைபெறாது. அதன் பிறகு ஜூன் மாதத்தில் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டால், அவர் இந்த வழக்கு விவரங்களைப் படிப்பதற்கு எப்படியும் ஓரிரு மாதங்கள் வாய்தா கேட்பார். அதற்குள், ஆகஸ்ட் மாதம் வந்துவிடும்.

 

நீதிபதி ஓய்வு அதில் ஒரு சிக்கல் ஏற்படும். ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடக தலைமை நீதிபதி வகேலாவும் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி குமாரசாமியும் ஓய்வு பெறுகிறார்கள். அதன்பிறகு, வேறு சிறப்பு நீதிபதியை நியமிக்க வேண்டிவரும். அதற்குள் வருடமும் முடிந்துவிடும்.

 

தேர்தல் முக்கியமாச்சே.. இந்த இழுபறி, அதிமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைகோர்ட் இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் எப்படியும், வழக்கில் இருந்து மீண்டு வந்துவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கும், அதிமுகவினருக்கு, காலம் வீணாவது பிடிக்கவில்லை. ஏனெனில் வழக்கில் இருந்து வெளிவந்தால்தான், அடுத்த சட்டசபை தேர்தலை சந்திக்க ஜெயலலிதா முழு வீச்சில் களமிறங்க முடியும்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/what-will-happen-if-bhavani-singh-will-remove-from-jayalalitha-case-224549.html

Link to comment
Share on other sites

ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் நீக்கமா?: நாளை மதியம் 1 மணிக்கு தீர்ப்பு!

 

டெல்லி: ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக கூடாது என்று திமுகவின் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு நாளை மதியம் 1 மணி 5 நிமிடத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் வெளியாகிறது. தமிழக முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது, அரசு தரப்பு வக்கீலாக ஆஜரானவர் பவானிசிங். அந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தார், நீதிபதி மைக்கேல் டி குன்ஹா. ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் நீக்கமா?:

 

நாளை மதியம் 1 மணிக்கு தீர்ப்பு! இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலும், பவானிசிங்கே அரசு வக்கீலாக ஆஜரானார். ஆனால், கர்நாடக அரசு பவானிசிங்கை ஆஜராகுமாறு ஆணை பிறப்பிக்கவில்லை, தமிழக லஞ்ச ஒழிப்பு துறைதான் அந்த ஆணையை கொடுத்தது. பவானிசிங், குற்றவாளி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்று குற்றம்சாட்டும் திமுகவின் அன்பழகன், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகள் தரப்பு வாதம் கடந்த வாரம் புதன்கிழமை நிறைவடைந்துள்ளது.

 

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பாலி நாரிமன், பவானிசிங் ஆஜரானதில் சட்ட விதிமுறை மீறல் இல்லை என்று வாதிட்டார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி, நீதிபதிகள் மதன்லோகுர் மற்றும் பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், "பவானிசிங்கை மேல்முறையீட்டு விசாரணையின்போது அரசு வக்கீலாக ஆஜராக கர்நாடக அரசு நியமிக்கவில்லை" என்றார். இதைத்தொடர்ந்து வாதிட்ட அன்பழகன் தரப்பு வழக்கறிஞர், அந்தியார்ஜுனா, "பவானிசிங்கை, இந்த வழக்கில் ஆஜராக நியமிக்கவில்லை என்று கர்நாடக அரசே கூறிவிட்டதால், ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங் ஆஜரானது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். ஹைகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்துவிட்டது.

 

அதன் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்புள்ளது. எனவே, இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும்வரை, மேல்முறையீட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார். இதையடுத்து, பவானிசிங் வழக்கில், ஏப்ரல் 15ம்தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட்ட ஜெயலலிதாவின், மேல்முறையீட்டு வழக்கி்ல் ஏப்ரல் 15ம்தேதிக்குள் தீர்ப்பு வழங்க கூடாது என்றும் தடை விதித்தனர். இந்நிலையில், 15ம் தேதியான, நாளை தீர்ப்பு வெளியாகிறது. தீர்ப்பு மதியம், 1 மணி 5 நிமிடத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையொட்டிதான், ஜெயலலிதா மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி வெளியாகும்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jayalalithaa-case-supreme-court-verdict-on-counsel-on-tomor-224694.html

Link to comment
Share on other sites

'ஜெ. வழக்கில் வளைந்து கொடுக்காத கர்நாடக தலைமை நீதிபதி டிரான்ஸ்பர்: ராமதாஸ் சரமாரி புகார்!

 

சென்னை: கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா ஒடிசாவுக்கு மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: 'கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரேந்திர ஹீராலால் வகேலா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒதிஷா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட் டிருக்கிறார்.

 

குறிப்பாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளுக்குரிய அதிகாரம் நீக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன்பாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது தவறாகும். 'ஜெ. வழக்கில் வளைந்து கொடுக்காத கர்நாடக தலைமை நீதிபதி டிரான்ஸ்பர்: ராமதாஸ் சரமாரி புகார்! குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வகேலா அப்பழுக்கற்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர் ஆவார்.

 

இவர் வரலாற்று சிறப்பு மிக்க பல தீர்ப்புகளை அளித்திருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நாளிலிருந்தே வகேலாவை இடமாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவரைக் கர்நாடகத்திலிருந்து சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி முயன்றபோது அதை வகேலா கடுமையாக எதிர்த்ததால் அம்முடிவு கைவிடப்பட்டது. இந்த நிலையில், நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவின் அதிகாரம் முடிவுக்கு வரும் நிலையில் அவசர அவரசமாக வகேலா மாற்றப்பட்டிருக்கிறார்.

 

இந்தியாவின் மூத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் ஒருவரான வகேலா அடுத்த சில மாதங்களில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறவுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ஒரு சில மாதங்கள் மட்டும் பணியாற்றுவதற்காக இன்னொரு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவது முறையல்ல. 'ஜெ. வழக்கில் வளைந்து கொடுக்காத கர்நாடக தலைமை நீதிபதி டிரான்ஸ்பர்: ராமதாஸ் சரமாரி புகார்! வகேலா இப்போது 62 நீதிபதிகளைக் கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். இவரை இடமாற்றம் செய்ய வேண்டுமானால் இதைவிட பெரிய உயர்நீதிமன்றங்களில் ஒன்றுக்குத் தான் மாற்ற வேண்டும். அதுதான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு ஆகும். ஆனால், 27 நீதிபதிகள் மட்டுமே உள்ள ஒதிஷா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வகேலா இட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

 

இந்த இடமாற்றத்திற்கும் நீதிபதி வகேலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதையும் மீறி அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது நியாயமான நடவடிக்கையாக தோன்றவில்லை. தலைமை நீதிபதி வகேலா இடமாற்றம் செய்யப்பட்ட நேரமும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது. பவானிசிங் நியமிக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது புதிதாக விசாரணை நடத்த வேண்டியிருக்கும். இவ்வழக்கை இப்போது விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், இதற்காக புதிய நீதிபதியை நியமிக்க வேண்டியிருக்கும். அந்த புதிய நீதிபதி யார்? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்குத் தான் உள்ளது.

 

யாருக்கும் வளைந்து கொடுக்காத தன்மை கொண்ட நீதிபதி வகேலா, ஏற்கனவே இந்த விஷயத்தில் மேலிடத்திலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களை நிராகரித்தவர். இத்தகைய சூழலில் நீதியரசர் வகேலா இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களையும், யூகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கியது, அவரது மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை யாரும் கேட்காமலேயே 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டது போன்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவின் நடவடிக்கைகள் நீதித்துறை வட்டாரங்களில் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகிருக்கின்றன.

 

இந்த நிலையில் வகேலா மாற்றப்பட்டிருப்பது இந்த ஐயங்களை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. நீதிபதி வகேலா இன்னும் இரு மாதங்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீடிக்கலாம் என்ற போதிலும், அவை விடுமுறை காலம் என்பதால் அதனால் எந்த தாக்கமும் ஏற்படாது. நீதிபதி வகேலாவின் இடமாற்றம் தொடர்பான சர்ச்சைகளையும், ஐயங்களையும் போக்க வேண்டியது உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் கடமை ஆகும். எனவே, வகேலாவின் இடமாற்றத்தை ரத்து செய்து அவருக்கு பதவி உயர்வு வரும் வரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடரச் செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karnataka-high-court-chief-justice-dhirendra-hiralal-waghela-224687.html

Link to comment
Share on other sites

எதற்காக இந்த மாறுதல்? கர்நாடக தலைமை நீதிபதி டிரான்ஸ்பர் பற்றி கருணாநிதி அடுக்கடுக்கான கேள்வி!

 

சென்னை: கர்நாடக தலைமை நீதிபதி வகேலா, ஒடிசா நீதிமன்றத்திற்கு திடீரென மாற்றப்பட்டுள்ளது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரு சில நாளிதழ்களில் மட்டுமே பெங்களூர் உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதியின் மாறுதல் பற்றி செய்தி வந்துள்ளது. "கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதியாக வகேலா கடந்த 2013 மார்ச் 7ஆம் தேதி பொறுப்பேற்றார்.

 

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதி மன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது, அதை விசாரணை நடத்திய நீதிபதி குன்ஹாவுக்கு பக்க பலமாக இருந்து வழக்கை முடிவுக்குக் கொண்டு வர உதவினார். கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் இவரை ஒரிசா மாநில தலைமை நீதிபதியாக பணி இட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. எதற்காக இந்த மாறுதல்? கர்நாடக தலைமை நீதிபதி டிரான்ஸ்பர் பற்றி கருணாநிதி அடுக்கடுக்கான கேள்வி! அவருக்குப் பதிலாக தலைமை நீதிபதியாக கே.எல். மஞ்சுநாத் நியமனம் செய்யப்பட்டார்.

 

இடையில் ஒரு வாரத்திற்குப் பின், மீண்டும் தலைமை நீதிபதி பணியை வகேலா தொடர்ந்து வருகிறார். தற்போது மீண்டும் ஒரிசா மாநிலத்தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வகேலா மாற்றத்தின் பின்னால் பலமான அரசியல் தலையீடு இருக்கும் வாய்ப்பு உள்ளதாக வக்கீல்கள் இடையே சந்தேகம் எழுந்துள்ளது" என்றெல்லாம் ஒரு நாளேட்டில் எழுதப்பட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தற்போது ஒரிசா உயர் நீதி மன்றத்தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டிருந்த போதிலும், நமது "முரசொலி" நாளிதழில் 29-12-2014 அன்று ஒரு பெட்டிச் செய்தி வெளி வந்தது.

 

 

அதில்,"நீதி மன்ற வட்டாரங்களில் பேசப்படும் இந்தச் செய்திகள் உண்மையா? ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு விசாரணை தொடர்பாக, கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, நேர்மையோடு நடந்து கொள்வதால், அவரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு,விரைவில் மாற்றப்படவிருப்பது உண்மையா? கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி வகேலாவை மாற்றி விட்டு, அவருக்கு அடுத்த இடத்திலே உள்ள நீதிபதி மஞ்சுநாத் அவர்களை கூடுதல் பொறுப்பில் நியமிக்கவிருப்பது உண்மையா? மத்திய அரசின் சார்பாக ஒருவர் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறதே, அது உண்மையா? நீதிமன்ற வட்டாரங்களில் பேசப்படுவதாக வந்த அந்தச் செய்தியை மெய்ப்பிக்கும் வகையில் அல்லவா தற்போது கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி மாற்றப் பட்டிருக்கிறார். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி வகேலா அவர்கள் திடீரென்று, வேறொரு சிறிய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு, வகேலா பற்றிய சில விவரங்களை உனக்கு நான் தெரிவிக்கிறேன். 2-2-2015 அன்று கர்நாடக உயர் நீதி மன்றத்தில், பவானிசிங் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நீடிக்கலாமா என்ற விசாரணை வந்த போது, தலைமை நீதிபதி வகேலா அவர்களே, "சி.ஆர்.பி.சி. 24(1)ன்படி, கிரிமினல் வழக்கு ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு மாற்றம் செய்யும்போது எந்த மாநிலத்துக்கு மாற்றப்படுகிறதோ, அந்த மாநில அரசு தான் அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

 

மேலும் தலைமை நீதிபதி வகேலா அவர்கள், "இந்த மேல்முறையீட்டு மனுவில் நீங்கள் (பவானி சிங்) ஆஜராகியிருப்பது சட்டத்துக்குப் புறம்பானது, 24 (1)ஐப் படித்துப் பாருங்கள். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்கத் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை; கர்நாடக அரசு இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்காத போது, பவானி சிங் ஆஜராகியிருப்பது சட்டத்துக்குப் புறம்பானது" என்றெல்லாம் வகேலா உறுதிபடக் கருத்து தெரிவித்திருக்கிறார். தலைமை நீதிபதி இவ்வாறு பவானி சிங் அரசு வழக்கறிஞராக நீடிப்பதற்குச்சட்டப்படியான எதிர்க் கருத்துகளைத் தெரிவித்ததால், பவானிசிங்குக்காக ஆஜரான வழக்கறிஞர் செபாஸ்டியன் எழுந்து, இந்த வழக்கினைத் தலைமை நீதிபதி வகேலா விசாரிக்கக் கூடாது என்றும், வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டுமென்றும் கோரியதால், வழக்கினை வேறு அமர்வு விசாரிக்கட்டும் என்று தலைமை நீதிபதி வகேலா தானாக முன்வந்து கூறினார். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமேயானால் வழக்கு விசாரணையின் தொடக்கத்திலேயே, தலைமை நீதிபதி வகேலா அவர்களே, தான் இந்த வழக்கை விசாரிப்பதில் ஆட்சேபணை ஏதும் உண்டா என்று பவானி சிங்கின் வழக்கறிஞர் செபாஸ்டியனிடம் கேட்டு, அவர் எந்த ஆட்சேபணையும் இல்லை என்று கூறியதைத் தொடர்ந்து தான் வழக்கினை விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அப்போது ஆட்சேபணை இல்லை என்று தெரிவித்து விட்டு, தலைமை நீதிபதி வகேலா அவர்கள் விசாரணையின் போது விதிமுறைகளையொட்டிச் சில கருத்துகளைத் தெரிவித்த பிறகு, அவர் அந்த வழக்கினை விசாரிப்பதற்கு செபாஸ்டியன் ஆட்சேபணையைத் தெரிவித்தார். இந்தக் குறிப்புகள் எல்லாம் கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தலைமை நீதிபதி வகேலா யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்! இவை மாத்திரமல்ல; செல்வி ஜெயலலிதா தரப்பினர் மீது பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது, பவானிசிங்குக்கு முன்பாக, அந்தப் பதவியில், அரசுத் தரப்பு வழக்கறிஞராகப் பணியாற்றிய பி.வி. ஆச்சார்யா தனது வாழ்க்கைப் பயணத்தை "அனைத்தும் நினைவுகளிலிருந்து என்ற தலைப்பில், ஆங்கிலத்தில் நூல் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் 206ஆம் பக்கம் முதல் 220ஆம் பக்கம் வரை, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக தான் இருந்த போது எப்படிப்பட்ட அனுபவம் தனக்கு ஏற்பட்டது, என்னென்ன தவறுகள், முறைகேடுகள் அந்த விசாரணையில் நடைபெற்றன என்பதையெல்லாம் எழுதியிருக்கிறார்.

 

இந்தப் புத்தகத்தை வெளியிட்டவர் யார் தெரியுமா? இந்த நூலை பெங்களூரில் 15-11-2014 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. வகேலா தான் வெளியிட்டிருக்கிறார். நீதிபதி திரு. வேணுகோபால் அவர்களும், மத்திய அரசின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் திரு. வீரப்ப மொய்லி அவர்களும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பின்னணியையும் இந்தத் தருணத்தில் நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமானது அல்லவா? வகேலா அவர்கள் மாற்றப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் ஒருசில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவுக்கு உச்ச நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது குறித்து, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது :- "சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நான்காண்டுகள் சிறைதண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டத்தின் மரபுகளுக்கு முரணாகச் செயல்பட்டு, தலைமை நீதிபதி தத்து ஜாமீன் வழங்கியிருக்கிறார். சாதாரண வழக்கு என்றாலுங்கூட, குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குவதற்கு முன் எதிர் தரப்பினரிடம் விளக்கம் கேட்கப்படும். ஆனால் இந்த வழக்கில் எதிர்தரப்பான கர்நாடக அரசையும், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையையும் விசாரிக்காமலேயே ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

ஊழல் குற்றவாளிகள் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளில் ஜாமீன் வழங்கும்போது அதற்கான காரணங்களைத் தெளிவாகக் கூற வேண்டுமென ஏற்கனவே உச்ச நீதி மன்றமே தீர்ப்பளித்திருக்கிறது. இதற்கு மாறாக, கர்நாடக உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதற்கான காரணம் எதையுமே கூறாமல் நான்கே வரிகளில் தலைமை நீதிபதி தத்து ஜாமீன் உத்தரவை வழங்கியுள்ளார். இவ்வளவு ஏன்? ஜெயலலிதா உட்பட நான்கு குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுப்பதற் கான காரணங்களை கர்நாடக உயர் நீதிமன்றமே நாற்பது பக்க உத்தரவில் தெளிவாகக் கூறியுள்ளது. இவற்றிற்கெல்லாம் மேலாக ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் ஜாமீன் கேட்டு மட்டுமே மனு செய்த வழக்கில் (குற்றவாளிகள் கோரிக்கை எதுவும் வைக்காத நிலையிலேயே) மேல் முறையீட்டு மனுவையும் விரைந்து முடிக்க வேண்டுமென்று தலைமை நீதிபதி தத்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

கர்நாடக உயர் நீதி மன்றத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, ஜெயலலிதாவுக்கு தலைமை நீதிபதி தத்து வழங்கியிருக்கும் இந்தச் "சூப்பர்" சிறப்புச் சலுகை முறை கேடானது. ஒரு ஊழல் குற்றவாளி தொடர்பான வழக்கிலேயே இப்படியொரு முறைகேடான தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது மக்களுக்கு விடப்பட்டிருக்கும் அபாய எச்சரிக்கையாகும்" என்றெல்லாம் கூறியதோடு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய அமைப்பைச்சேர்ந்தவர்கள் ஆயிரம் வழக்கறிஞர்களின் கையெழுத்துக்களுடன் குடியரசுத் தலைவரிடம் உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு முன்பே சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி,பாலி நாரிமனின் மகன் உச்ச நீதி மன்ற நீதிபதியாக இருப்பதால், பாலி நாரிமன் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவது பார் கவுன்சில் விதித்துள்ள நெறிகளுக்கு எதிரானது என்று புகார் அளித்துள்ளார். "இந்த வழக்கு தொடர்பாக உங்கள் மீது ஊழல் புகார் இருப்பதால், விசாரிப்பதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ள வேண்டும்" என்று டிராபிக் ராமசாமி தலைமை நீதிபதி தத்துவுக்கே மனு அளித்துள்ளார் என்பதும் நினைவிலே கொள்ளத்தக்கது. கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வகேலா அவர்கள் ஒரிசா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச். எல். தத்து அவர்கள் தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய காலேஜியம் இந்த உத்தரவை 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு பிறப்பித்துள்ளது. நமது மதிப்பு மிக்க நீதித் துறை நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்பது அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று. ஆனால் "மாறுதல்கள்" போடுவதில் இவ்வளவு விரைந்து செயல்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

 

இந்த நாட்டின் மீது அக்கறை கொண்ட குடிமகன் என்ற முறையில் சட்டம் மற்றும் நீதியின் பாதுகாவலர்களிடமிருந்து சில நியாயமான கேள்விகளுக்கு பதில் கோர விரும்புகிறேன். ஒரிசா உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதிப் பதவி கடந்த பிப்ரவரி மாதம் 2015லிருந்து காலியாக இருக்கும்போது, திடீரென்று ஏன் ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த "டிரான்ஸ்பர்" போடப்பட்டது? தேசிய நீதித் துறை நியமனக் கமிஷனுக்கான அறிவிக்கை திங்கள்கிழமை அன்று வெளியிடப்படவுள்ள நிலையில், அதற்கு முதல் நாள் இந்த மாறுதலைச் செய்ய வேண்டிய காரணம் என்ன? நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர உருவாக்கப்பட்ட "தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை" எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு முன்பு 15-4- 2015 அன்று விசாரணைக்கு வருவதற்குள் ஏன் இந்த மாற்றல் உத்தரவு போடப்பட்டது? கர்நாடக உயர் நீதி மன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் வாதாடிய அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமனம் செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பும், அதே சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளி வருவதற்கு முன்பும் இப்படியொரு மாறுதல் செய்யப்பட்டுள்ளதை நாம் இந்த நேரத்தில் மறந்து விட முடியாது.

 

 

எனவே இந்த மாறுதல் பற்றி யாருக்காவது சந்தேகம் எழுந்தால் அதிலே தவறு இருக்க முடியுமா? உச்ச நீதி மன்றத்தில் 15ஆம் தேதியன்று அளிக்கப்படும் தீர்ப்பில் பவானி சிங் நியமனம் தவறானது தான் என்று ஒருவேளை சொல்லப்படுமேயானால், சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டினை விசாரிப்பதற்கு புதிய நீதிபதி ஒருவரை கர்நாடக உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி தான் நியமிக்க வேண்டும். மேலும் அரசு புதிய வழக்கறிஞராக பவானி சிங் அவர்களுக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமனம் செய்ய வேண்டிய பொறுப்பும், கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதிக்குத் தான் உண்டு. மேலும் தற்போது ஜெயலலிதாவின் மேல் முறையீட்டினை விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி அவர்கள் வரும் ஆகஸ்ட் திங்களில் ஓய்வு பெறவிருப்பதால், அவருக்குப் பதிலாக இந்த முக்கியமான வழக்கினை விசாரிக்க வேண்டிய நீதிபதியையும் நியமிக்க வேண்டிய பொறுப்பும் கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதிக்கே உண்டு.

 

இந்தநிலையில் தான் அவர் மாற்றப்பட்டுள்ளார். இந்த உச்சக் கட்ட ஊழலுக்கெல்லாம் முழு முதற்காரணம் யார்? எதற்காக இந்த மாறுதல்? இதையெல்லாம் உன்னுடைய யூகத்திற்கே விட்டு விடுகிறேன். நீதித் துறையின் சுதந்திரம், நேர்மை, நடுநிலை - ஆகியவற்றின் மீது மிக உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறோம். நாடு முழுவதும் ஒளிவு மறைவில்லாத வெளிப்படையான நிர்வாகத்திற்கான கோரிக்கை வலுப்பெற்று வரும் இந்தக் காலகட்டத்தில், அரசின் முடிவுகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் வேளையில், நீதித் துறையின் நிர்வாக முடிவுகள் மட்டும் வேறு ஒரு தளத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் ஏன் இருக்க வேண்டும் என்று சில மூத்த வழக்கறிஞர்களும், நடுநிலையாளர்களும், பத்திரிகையாளர்களும் நம்மிடம் கேட்கும் போது நாம் என்ன பதில் கூறுவது?

 

நமது ஜனநாயக நாட்டில் அனைத்துக்கும் மேலானது நீதித் துறை தான்;ஜனநாயகத்தின் அனைத்து அங்கங்களையும் கண்காணிப்பதே நீதித் துறை தான். அப்படிப்பட்ட உயிர்நாடியான அந்தத் துறையின் மீதே, இதுவரையில் இல்லாத அளவுக்கு, இப்படி யெல்லாம் விமர்சனங்கள் வருவது நம் நாட்டுக்கும், நாம் போற்றிப் பாதுகாத்து வரும் ஜனநாயகத்திற்கும், வாய்மையே வெல்லும் - (சத்தியமேவ ஜயதே) என்று நாம் கொண்டாடி வரும் கோட்பாட்டுக்கும் உகந்தது தானா?'

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karnataka-high-court-chief-justice-dhirendra-hiralal-waghela-transfer-karunanidhi-224705.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.