Jump to content

படித்ததில் பிடித்தது(முகநூல் பதிவுகளில் இருந்து)


Recommended Posts

ரிலாக்ஸ் ப்ளீஸ் . உண்மைய சொன்னேன் .. 1.ஆஃபீஸ்ல மேனேஜர் லீவு போட்டா நமக்கு வர்ற சந்தோஷம் இருக்கே நாமலே லீவு போட்டா கூட வராது.. 2.வேலை தேடுவதை போல் கடினமான வேலை வேறேதும் இல்லை... 3.என்ன தான் நிழல் தந்தாலும் அசைந்து காற்று தராது காங்க்ரீட் சுவர்கள் .. 4.இரு அம்மாகிட்ட சொல்றேன் என்பது பீதிய கெளப்பும் வாசகம் குழந்தைகளுக்கும், அதிமுக எம்.எல்.ஏ களுக்கும்.. 5.குடிக்கப்பட்டு கீழே விழுந்துகிடக்கும் பாட்டிலுக்கான மரியாதை கூட, மயங்கி கீழே கிடப்பவனுக்கு கிடைப்பதில்லை.. 6.அரிசிக் கஞ்சி குடிச்சா ஏழை , ஓட்ஸ் கஞ்சி குடிச்சா பணக்காரன்... 7.அம்மா உணவகங்களால் பாதிப்பு சரவணபவனுக்கோ வஸந்தபவனுக்கோ அல்ல...ரோட்டோர கையேந்தி பவன்களுக்கு தான்... 8.வெளுத்ததெல்லாம் பாலா இருக்கணும்னு அவசியம் இல்ல பால்டாயிலாவும் இருக்கலாம் ..

Link to comment
Share on other sites

  • Replies 125
  • Created
  • Last Reply

ரிலாக்ஸ் ப்ளீஸ் . பயனுள்ள 33 சிறப்பு குறிப்புகள் 1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள். 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும் 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது. 7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம் 8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்து கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை. 9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு. 10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார். 11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள். 12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள். 13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய். 14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை. 15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள். 16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம். 17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள். 18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம். 19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒரு வருடன் விவாதிப்பது சிறப்பாகும். 20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும். 21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும். 22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம். 23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான். 24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள். 25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும். 26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர். 27. வெற்றி பெற்ற பின் தன்னை அடக்கி வைத்து கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான். 28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை. 29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும். 30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம். 31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும். 32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர் தான் கோழைத்தனம். 33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . படித்ததில் பிடித்தது.. சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை.... பணக்கார பங்காளக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது........ சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பல பெண்களிடம் சேலைகள் இல்லை..... ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்..... சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு வருஷ சம்பளம்........ ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சுபோக ஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்.... சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள் பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்..... சட்ட புத்தகத்தில் இருக்கும் நீதிப் பிரிவுகளை விட இங்கு இருக்கும் சாதிப் பிரிவுகள் அதிகம்..... சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும்,பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்..... நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்...... பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன..... கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும் கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும் தேசம்.

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஒரு புடவை வாங்க.., முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம்..., கணவன் எரிச்சலுடன் சொன்னான்..., "ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை"-என்று.., - இதற்கு மனைவி பதில் சொன்னாள், "அதுக்கு அவள் எத்தனை மரம் ஏறி இறங்கினாளோ.......?" காலங்கள் மாறினாலும் ... மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை.. ‪#‎குடும்பஸ்தன்_பாடசாலை

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ரிலாக்ஸ் ப்ளீஸ் . ஒரு காட்டுக்கதை...! யானைகளுக்கும்,பூச்சிகளுக்கும் கால் பந்தாட்டப் போட்டி நடந்தது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து விட்டார்கள். அரை இறுதியில் யானைகள் பத்துக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னணியில் இருந்தன. இரண்டாம் பாதியில் பூச்சிக் குழுவின் சார்பில் பூரான்(நூறு கால் பூச்சி)இறங்கியது.உடனே முழு ஆட்டமும் தலைகீழாக மாறிவிட்டது. பூரான் யானைகளுக்கு இடையே புகுந்து வரிசையாகக் கோல் போட்டது.ஆட்டத்தின் இறுதியில் பூச்சிகள் குழு இருபதுக்கு பத்து என்ற கணக்கில் வென்றது. விளையாட்டு வீரர்கள் களத்தைவிட்டு வெளியேறும்போது,யானைக் குழுவின் தலைவன், பூச்சிக் குழுவின் தலைவனிடம்,''உங்கள் முன்னணி ஆட்டக்காரர் பூரானை ஏன் முதல் பாதியில் இறக்கவில்லை?'' பூச்சித்தலைவன் சொன்னது,''அதுவா, பூரான் தன நூறு கால்களிலும் காலணிகளை அணிந்து கொள்ள அவ்வளவு நேரமாயிற்று.'' ( நோ டென்சன்...ரிலாக்ஸ் ..)

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்... 1)உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு எண்ணை எடுக்கவும் 2)அதை இரண்டால் (2) பெருக்கவும்.. 3)அதனுடன் ஐந்தை (5) கூட்டவும் 4)கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும் 5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும் 6)அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (உ+ம்-1985,1987,1956 etc) இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்... அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்... மற்ற (2 digit) எண் உங்களின் வயது....!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- dinakaran daily newspaper . இப்போது என்பது மட்டுமே நிஜம் ! துறவி ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். ''இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்'' என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர். மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ஏய்... என்ன மடத்தனம் பண்ணுகிறாய்... குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு? என்றனர் மற்றவர்கள். மூத்த சீடர், ''குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.எல்லோரும் கவலையோடிருந் தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார். மூத்த சீடர் வந்ததும், வந்து விட்டாயா... எங்கே நாவல்பழம்? என்றார். அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி அதை வாங்கிக் கொண்டார். ஒரு சீடர் குருவிடம், ''குருவே... தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?'' என்றார். குரு சிரித்தபடி, ''என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால் எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை!'' என்று சொல்லிவிட்டு நாவல் பழத்தை ருசித்து தின்னத் தொடங்கிவிட்டார்.இன்னொரு சீடர் குருவிடம் பணிந்து, ''ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப் போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தங்களின் இறுதிக் கருத்து என்ன?'' என்று கேட்டார். குரு சிரித்தபடி, ''இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது'' என்று சொல்லிவிட்டு இறுதி மூச்சை விட்டார். அந்தந்தக் கணத்தில் வாழுங்கள். கடந்து போன நிமிடமும், வரப் போகும் நிமிடமும் நமக்கானதல்ல. இன்று இப்போது என்பது மட்டுமே நிஜம்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ரிலாக்ஸ் ப்ளீஸ் · . "நெகிழ வைத்த நிஜங்கள்" இந்த மாசம் தாத்தா நம்ம வீட்டுக்கு வரலையாப்பா?’ ஆசையோடு கேட்டான் மகன் அமுதன். “அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க பெரியப்பா தாத்தாவை இங்கே கொண்டு வந்து விட்ருவாருடா. கவலைப்படாதே!’ குதர்க்கமாய்ப் பதில் சொன்னாள் உஷா, என் மனைவி. அப்போது என் அலைபேசி மணி ஒலித்தது. “எடுங்க உங்க அண்ணனாய்த்தான் இருக்கும்! ‘ உஷாவின் யூகம் சரிதான். அண்ணன்தான் அழைத்தார். “வணக்கம்ண்ணே, கோபுதான் பேசுறேன்… சொல்லுங்க’ என்றேன். “என்னடா, அப்பாவை அழைச்சிட்டுப் போகலையா?’ அண்ணன் கேட்டார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. அண்ணி தொந்தரவு செய்திருப்பாள். “கொஞ்சம் வேலையாப் போய்டுச்சிண்ணே… இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திடுறேன்’ இணைப்பை துண்டித்தேன். புறப்பட ஆயத்தமானேன். - “அப்பா, எனக்கொரு சந்தேகம்’ என்றான் அமுதன். “என்னடா சந்தேகம்?’ “தாத்தாவுக்கு நீ, பெரியப்பான்னு ரெண்டு பிள்ளைங்கள்… தாத்தாவை மாறி மாறி வச்சுக்கிறீங்க… உனக்கு நான் ஒரே பிள்ளை உனக்கு வயசாய்ட்டா ஒரு மாசம் நான் வச்சுக்குவேன்…. அடுத்த மாசம் நீ எங்கே போவே...?’ என்னை யாரோ பிடரியில் ஓங்கி அறைந்ததுபோல உணர்ந்தேன்...!

Link to comment
Share on other sites

இது நம்ம நெடுக்கருக்கு உதவக்கூடிய பதிவு ------------------------------------------------------------------------------------------------------------------------------------- ரிலாக்ஸ் ப்ளீஸ் . (பேச்சிலர்கள் மட்டும் இந்த குறுங்கதையை வாசிக்கவும்,, மற்றவர்களுக்கு நோ யூஸ்,,) பொண்ணு,, போட்டோவுல பாக்குறது ஓரளவுக்கு இருந்தாலும் பையனோட எதிர்பார்ப்புகள்,, ஏதோ 'திரிஷா மாதிரி இல்லன்னாலும் அட்லீஸ்ட் நமீதா மாதிரி' என்ற வகையில் இருப்பதால் அவனுக்கு இதில் அவ்வளவாக நாட்டமில்லை, போய் பார்த்து விட்டு வந்து விடலாம் என்ற சொந்தகாரர்களின் குடைச்சல் தாங்க முடியாததால் அவர்களுடனே பெண் பார்க்க கிளம்பி போனவன் அவன்'. மாப்பிள்ளைக்கு இருக்கும் ஒரே கெட்டப்பழக்கம் அவன் ஒரு 'காபி பிரியன்'. இதை ஏற்கனவே சொந்தகாரர்கள் மூலம் அறிந்து கொண்ட பெண் வீட்டார், என் பொண்ணு அவள் கையால் போட்ட காபி என்று சொல்லி அவள் கையாலே காபியை பறிமாற வைத்து விட்டார்கள், சிறிது பதட்டத்தில் இருந்த நம்ம மாப்ள பொண்ண சரியா கூட பார்க்காம காப்பிய எடுத்து குடிக்க ஆரம்பித்து விட்டான், அப்படி ஒரு காபியை அவன் இதுவரை குடித்ததே இல்லை அவ்வளவு சுவை, அவன் மெய்மறந்து குடித்து கொண்டிருக்கும் போது,,, 'என்ன மாப்ள காபி புடிச்சிருக்கா ??' என்று பெண்ணின் தகப்பனார் கேட்க, அதே நேரத்தில் 'என்ன தம்பி பொண்ண புடிச்சிருக்கா' என்று பையனின் சித்தப்பா கேட்க , "ரொம்ப புடிச்சிருக்கு,, சான்சே இல்ல,," என்று நம்ம மாப்ள பெண்ணின் தகப்பனாருக்கு பதில் சொல்ல, அப்புறம் என்ன,,, 'பையனே பொண்ண ரொம்ப புடிச்சிருக்குன்னு சொல்லிட்டன்' என்று சொல்லி சித்தப்பா தட்டை மாற்றிவிட்டார், இருந்தாலும்,, இந்த காபி ஒன்றே போதும்,, அவளுடன் ஆவலுடன் வாழ,,, கலக்கிட்டடி காப்பி,, என்று மாப்பிள்ளையும் மனதுக்குள் கவிதை கிறுக்க ஆரம்பித்து விட்டான்,, கல்யாணமும் முடிந்து விட்டது,, முதலிரவில்,, நம்ம மாப்ள தன் மனைவியின் கையை பிடித்து கொண்டு,, "எனக்கு சுவையான காபியை போட்டுத்தந்த இந்த கைக்கு அன்னைக்கே முத்தம் குடுக்கனும்னு நெனச்சேன்,, ஆனா உங்க அப்பா திட்டுவாருன்னு பேசாம போயிட்டேன்" ,, (சிரிப்பு தாங்க முடியாமல் மனைவி கூறினாளாம்,,) "நீங்க அன்னைக்கே முத்தம் குடுத்திருந்தாலும் எங்க அப்பா ஒன்னும் சொல்லி இருக்க மாட்டாரு, ஏன்னா அந்த காப்பிய போட்டதே எங்க அப்பா தான்,, அதனால தான் காபி எப்படி இருக்கு மாப்ளன்னு ரொம்ப ஆர்வமா உங்க கிட்ட கேட்டாரு,,, மாப்பிள்ளைக்கு கோபம் தலைக்கேற,, "அப்புறம் எதுக்கு நீ போட்டதுன்னு உங்க அம்மா பொய் சொன்னாங்க ??" மனைவியும் பயங்கர கோபத்துடன்.. "அந்த பொய்ய சொல்ல சொன்னதே உங்க அம்மாவும் உங்க சித்தியும் தான்,,எனக்கு பொய் சொல்ல தெரியாது,, எனக்கு அடுப்பு கூட பத்த வைக்க தெரியாதுன்னு அப்பவே அவங்க கிட்ட உண்மைய சொல்லிட்டேன்" நீதி : திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவதில்லை, சொந்த காரர்களால் நிச்சயிக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் · . விந்தையான சிந்தனைகள்... 1) ”நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே” 2) ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும். இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான். 3) எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார். 4) பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார். 5) நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும். 6) முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.. 7) யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து. 8) ”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம். ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!” 9) வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள் ஒரு கடமை - நிறைவேற்றுங்கள் ஒரு இலட்சியம் - சாதியுங்கள் ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள் ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள் ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள் 10) கற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை சொல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய்!!! பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்!!! 11) நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும். நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும் 12) எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள். 13) நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக*கிடைத்தே தீரும்..

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!! அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை. கைதி பதில் எழுதினான். அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள்..பின்னாலிர ுக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்.. ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்த ு கடிதம். அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்.. இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..? கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான். அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்.. ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!! புத்திசாலி எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்..

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . ஒரு முறை அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் அரை மனதோடு அங்கே இருக்கும் ஒரு பெரிய மர பீரோவை தூசு தட்டிக்கொண்டிருந்தார். தீடிரென்று அவர் முன் பூதம் ஒன்று தோன்றியது. " நூற்றாண்டுகளாக அடைபட்டுக்கிடந்த என்னை விடுவித்தாய். அதற்கு கைமாறாக உன் மூன்று விருப்பங்களை நிறை வேற்றி வைக்கிறேன். என்ன வேண்டும் சொல்" என்றது. அவன் அதனை பரிசோதிகிக்க எண்ணினான். "முதலில் எனக்கு ஒரு குளிர்ந்த பீர் வேண்டும்". சொல்லி முடித்ததும் உடனே பீர் வந்து விட்டது. "ஆஹா...உண்மைதான். சரி.நான் ஒரு தனித்தீவில் மன்னனாகவும் என்னைச்சுற்றிலும் என் விருப்பத்துக்கு இணங்கும் அழகிகளுடன் இருக்க வேண்டும்." அடுத்த நிமிடம் அவன் தீவின்நடுவில் இருந்தான். "ஆஹா!ஜாலியாக..கும்மாளம்..உல்லாசம்..ஆடலாம்..பாடலாம்.. இதுவல்லவோ வாழ்க்கை. இப்படி நினைத்துக் கொண்டே அவன் தனது மூன்றாவது விருப்பத்தை சொன்னான். அடுத்த நிமிடம் அவன் பழையபடி தன் அரசாங்க அலுவலகத்தில் அதேபழைய பீரோ பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். அப்படி என்ன சொன்னான் ? தனது மூன்றாவது விருப்பமாக அவன் சொன்னது:" கடவுளே..நான் என்னிக்கும் வேல செய்யாமே எப்பவுமே ஜாலியா இருக்கணும்" என்பதுதான்..

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல: ஒரு நாய் கடைக்கு வந்துச்சு. . . கடைக்காரர் விரட்டிவிட்டார், திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு... கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது. . . கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார். அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது. அப்போது ரெட் சிக்னல். அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது... பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது... கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார்... அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது.. ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன்நாய் பேருந்தில் ஏறியது... கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்... இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்துஇறங்கியது... கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்... நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது... கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்... நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்... கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க! ஏன் அடிக்கறீங்க? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே.??? அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு. # # # # நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான். நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது

Link to comment
Share on other sites

......................................................................................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் . Girl :- ஹேய் நீயும் வெனிலா ஆர்டர் பண்ணி இருக்கலமே... Boy :- ஏன்..!! எனக்கு சாக்லேட் தான் பிடிக்கும்.. Girl :- ஒரு நாளைக்கு எனக்கு பிடிச்ச மாதரி சாப்பிட மாட்டியா? Boy :-மாட்டேன். எனக்கு பிடிச்சத தான் நான் செய்வேன், யாருக்காகவும் மாற்றிக்க மாட்டேன்.. Girl :-ம்ம்ம்ம் ஓகேடா.. smile emoticon Girl :-இதோ ஐஸ் கிரீம் வந்துடு இந்த உன்னோட வெண்ணிலா ப்ளேவர்... Boy :-உனக்கு கோவமே வராதாடி... Girl :-ஏன் கோவம் Boy :-இல்ல நான் எப்பவும் நீ எது சொன்னாலும் எனக்கு பிடிச்சத தான் நான் செய்வேன்டு சொல்வேன் but வேற ஒரு பொண்ணா இருந்தா கோவப்படுவா? இது வரைக்கும் நீ கோவப்பட்டதே இல்லயே...!!! Girl :-எனக்கு தெரியும்டா உன்ன பத்தி.... எனக்காக கூட உனக்கு பிடிச்சத மாதிக மாட்டேன்நு சொல்ற... அப்போ என்னைக்கும் எதுக்காகவும் உனக்கு ரொம்ப புடிச்ச என்னையும் நீ விட்டு கொடுக்க மாட்டாய்நு தெரியும்.. so நான் கோவப்பட மாட்டேன் தங்கம்... Boy :- So Sweet Di... heart emoticon Girl :-எடு ஐஸ் கிரீம்ம.. Boy :-இல்ல நீ Girl :- grin emoticon Boy :- Love uuuu Diii.... இப்படி ஒவ்வொருத்தரும் விட்டு கொடுத்து போன Happy தான்.. எந்த ஒரு விஷயத்தையும் Positive aa Think பண்ணுங்க Happy aa இருக்கலாம்...

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் 2 hrs · . இப்படி வாழ்ந்து பாருங்கள் like emoticon like emoticon சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன், ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..? heart emoticon heart emoticon அவள் துணி காய போட வருவதை பார்த்து கொடியை சற்று உயர்த்திக் கட்டிவிட்டு அருகிலேயே அமர்ந்திருந்தேன்... # துணிகளை என்னிடம் கொடுத்துவிட்டு புன்னகையோடு நகர்ந்தாள்..! heart emoticon heart emoticon சொட்டும் நீர் உறிஞ்சா பாலிஸ்டர் துணி ,இருந்தும் அதில் தலை துவட்டவே ஆசை... # அவளின் முந்தானை.! heart emoticon heart emoticon உன் சட்டையை அணிந்து கொள்ளட்டுமா என்றாள் , அந்த சட்டைக்குள் நானும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு சம்மதித்தேன்.!!! heart emoticon heart emoticon கோபத்தில் அவளைத் திட்டியதற்காய் ஒரு முத்தமிட்டு மன்னிப்புக் கேட்டேன், அன்று முதல் என்னைக் கோபப்படுத்துவதை யே வேலையாய் கொண்டிருக்கிறாள்..!!! heart emoticon heart emoticon காதுகள் கூட சுவை உணருமா??... choo sweet என்று அவள் சொன்னது, காதின் வழிச்சென்று ரத்தத்தில் சர்க்கரையை ஏற்றுகிறது.! heart emoticon heart emoticon அவள் செய்யும் வேளைகளில், அவளுக்கு நான் ஏதாவது உதவி செய்ய நினைத்தால் அந்த வேலையை சப்தமாகச் சொல்வாள்.. # இப்படித்தான் இப்பொது குளிக்கப்போறேன் என்று கத்தினாள் !!! heart emoticon heart emoticon அதிகம் பேசிவிட்ட களைப்பில் ஓய்வெடுக்கிறது அவளின் விழிகள்... # உறக்கம் ! heart emoticon heart emoticon கணவன் மனைவி உறவின் ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக அனுபவித்து வாழுங்கள்.. அன்பு பெருகும்..

Link to comment
Share on other sites

Maalaimalar தமிழ் முயலின் தன்னம்பிக்கை ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது. அதற்கு காரணம். ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான். இன்னொரு பக்கம் நாய்.... மறுபக்கம் புலி.. என எந்தப்பக்கம் திரும்பினாலும் முயலுக்கு எதிரிகள். சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது. எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம் என்று சிந்தித்துப்பார்த்தது. இறுதியாக.. குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று சென்றது முயல். அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவின. முயல் சிந்தித்தது... அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளனவா?? என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ்ந்ததாம்..... “தற்கொலை செய்து கொள்வதற்கு வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்? வாழ்ந்துதான் பாரேன்..”

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் · . நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில் வந்தான். அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான். "நான் இங்கே அமரலாமா?" அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.... பின் உறக்கக் கேட்டாள் "இன்று இரவு உன்னோடு தங்குவதா? என்ன நினைத்தாய்?" அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர். அவனுக்கு அவமானமாகி விட்டது. அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான். சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள். சொன்னால் "நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி உங்கள் மன நிலையைப் பார்க்க எண்ணி அவ்வாறு செய்தேன்" இளைஞன் உரக்ககச் சொன்னான். என்ன? ஒர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா? மிக அதிகம்" இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர். அவள் குறுகிப் போனாள். அவன் சொன்னான் "நான் ஒரு வழக்கறிஞர் யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்...! நீதி : ஒருவரை நம்ம அவமானப்படுத்தினால் கண்டிப்பாக நாம் அவமானப்பட வேண்டிய காலம் வரும்.

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . அதிசயிக்க வைத்த சிறுவன்.! 1825'ஆம் ஆண்டு லண்டனில் அதிகாலையில் அப்பாவுடன் வாக்கிங் போய்க்கொண்டிருந்தான் ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன். எதேச்சையாக தந்தையிடம் அந்தச் சிறுவன் கேட்டான் - "அப்பா என் பர்த்டே எனக்குத் தெரியும். நான் பிறந்த மணி என்ன? கரெக்டாகச் சொல்லுங்கள்". "அதிகாலை சரியாக நாலு மணி" என்றார் தந்தை. "இப்போ சரியாக மணி என்ன?" என்று கேட்டான் மகன். "7.50. ஏன் என்ன விஷயம்" என்று கேட்டார் தந்தை. சில நிமிஷங்கள் கழித்து "அப்படியென்றால் எனக்கு இப்போது 188,352,000 வினாடிகள் வயசாகிறது!" என்றான் அந்தச் சிறுவன் பளீரென்று. திகைத்துப்போன அப்பா மகன் சொன்ன எண்ணைக் குறித்துவைத்துக் கொண்டார். வீட்டுக்குத் திரும்பியவுடன் முதல் வேளையாக ஒரு பேப்பரில் நிதானமாக கணக்குப் போட்டார். மகனிடம் வந்து "நீ கெட்டிக்காரன் தான். ஆனால் 172,800 வினாடிகள் அதிகமாகச் சொல்லியிருக்கிறாய்!" என்றார். புன்னகை புரிந்த சிறுவன் "அப்பா. நீங்கள் தான் தப்பாக கணக்கு போட்டிருக்கிறீர்கள். 1820'ஆம் ஆண்டும் 1824'ஆம் ஆண்டும் லீப் வருஷங்கள். அந்த எக்ஸ்ட்ரா நாள்களைச் சேர்த்துக் கொள்ளாமல் மறந்து விட்டுவிட்டீர்கள்!" என்றான். கணக்கு கரெக்ட். தந்தைக்குத் தலை சுற்றியது. அந்தச் சிறுவனின் பெயர் பெஞ்சமின் ப்ளீத் (Benjamin Blyth). http://en.wikipedia.org/wiki/Benjamin_Blyth

................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் . MAX TEACHER : சார்,உங்க பையனுக்கு படிப்பே வரமாட்டிங்கிது.அவன கண்டிச்சு வைங்க. PARENT : அப்படி என்ன பண்ணுனான் என் பையன்? M.TEACHER : அவனுக்கு சுத்தமா கணக்கு பாடம் வரமாட்டிங்கிது.ஈசியான கணக்கு கேட்டாக்கூட திரு திருனு முழிக்கிறான். PANRENT : அப்படி என்ன ஈசியான கணக்கு கேட்டீங்க? M.TEACHER : சார்,நான் உங்க பையன்கிட்டே, "டேய்,என் கைல அஞ்சு வாழைப் பழம் இருக்கு.அதுல மூனு பழத்தை நான் தின்னுட்டேன்.அப்போ எங்கிட்ட எத்தன பழம் மீதி இருக்கும்"னு கேட்டேன்.அதுக்கு அவன் திரு திருனு முழிக்கிறாங்க. PARENT : ஏன் சார் உங்களுக்கு அறிவே இல்லையா.பழத்தை நீங்க தின்னுட்டு,அவன்கிட்ட கேட்டா என்ன செய்வான்.அவனும் சின்னப் பய தானே.அவனுக்கு ஒரேயொரு பழம் கொடுத்தா நீங்க குறஞ்சா போவிங்க.அவன பாக்க வச்சு திண்ணுட்டு,பலிய என் பையன் மேல போடாதீங்க. M.TEACHER : நான் என் வேலைய ரிஸைன் பன்றேன் சார். ‪#‎நீதி‬ நீ தான்யா உண்மையான அப்பன்.

Link to comment
Share on other sites

dinakaran daily newspaper · . கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான் !!! கொடையளிப்பதில் இவனுக்கிணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன. இதைக் கண்ட கண்ணன், நீ செய்த தர்மத்தின் பலன் யாவும் தந்து விடு , என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறான் கர்ணன். இவ்வளவு சிறந்த கொடையாளியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் காலை கிணற்றடியில் எண்ணெய் தேய்த்து முழுக கர்ணன் தயாராகிக் கொண்டிருக்கிறான். இடக் கையில் வைத்துக் கொண்டிருந்த எண்ணெயைக் கிண்ணியிலிருந்து எடுத்து உடம்பில் பூசிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஏழை அங்கு வந்து கர்ணனிடம் தனக்கு ஏதேனும் உதவி செய்யக் கோரினான். அடுத்த கணமே இடது கையில் ஏந்தியிருந்த தங்கக் கிண்ணியை அந்த ஏழையிடம் கர்ணன் கொடுத்து விட்டான். அங்கிருந்த நண்பர் ஒருவர் கர்ணனைக் கேட்டார். கர்ணா! தர்மம் என்றாலே கர்ணன் என்று தான் பெயர். ஆனால் கொடுக்கும் தர்மத்தை வலது கையால்தான் கொடுக்க வேண்டும் என்ற முறை உனக்குத் தெரியாதா? சிரித்துக் கொண்டே தெளிவாக கர்ணன் பதில் சொன்னான். நீர் சொல்வது சரிதான். வாழ்க்கை என்பது எப்பொழுதும் முன்னெச்சரிக்கை கொடுக்காது. ஆகையால்தான் இடக்கையிலிருந்து வலக்கைக்குக் கிண்ணம் மாறுவதற்குள் ஏதேனும் எனக்கு நிகழ்வதற்குள் உடனேயே அந்தத் தர்மத்தைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில் தான் இடக் கையாலேயே கொடுத்து விட்டேன். மூட்டையாகச் சுமக்கும்போது அது பாரம். போட்டியாகச் சுமக்கும்போது அது பொய். வாட்டமாகச் சுமக்கும் போது அது வாழ்க்கை. நாட்டமாகச் சுமக்கும் போதுதான் அது ஞானம். யோசிக்காமல் கொடுப்பதே தானம்...

....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் . எது நாகரீகம்...? நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த தோனி ,கோஹ்லி சொல்லி பூஸ்ட் குடிச்சிட்டு போய் தோட்டத்தில நாள் முழுக்க வேலை செஞ்சாங்க ???? ..... - எந்த டூத் பேஸ்ட் ல உப்பு இருக்குனு பாத்து பல்லு விளக்கணங்க ??? ..... - அமேஜான் காட்டுல மட்டுமே கிடைக்கிற எண்ணைய வச்சுதான் தலையில தேச்சு முடிய வளாத்த்தங்கலா??? ... - எந்த காஃபீ /டீ குடிச்சுட்டு அவங்கங்க வீட்டுக்காரம்மாவ புரிஞ்சிக்கிட்டாங்க ??? .... - எந்த இந்ஸ்டிட்யூட்ல 10 லட்சம் செலவு பண்ணி படிச்சிட்டு ,தலப்பாகட்டு பிரியாணி கடை சமையல் மாஸ்டர் பிரியாணி செய்யிறாரு ???? ..... வாழ்க்கை தரத்தை உயர்த்திடோம்னு நினைச்சு ,நம்ம உடம்பு தரத்தை கீழ போட்டுட்டோமே .... நாகரீகம் நாகரீகம் னு சொல்லி கடைசியா நம்ம நாசமா போனதுதான் மிச்சம் .... ...... " ஏன்டா படிச்சோம்னு இருக்கு .... பேசாம படிக்கலன்னா எந்தவித எதிர்பார்ப்பு இல்லாம , காலையில ஏந்திரிச்சு, பழைய கஞ்சிய குடிச்சுட்டு, தோட்டத்தில வேர்வை வர அளவு உழைச்சு , அப்படியே சாயந்திரம் ஊர் பசங்க கூட கொஞ்ச நேரம் கம்மா கரைக்கு போய் அரட்டை அடிச்சிட்டு, ராத்திரி படுத்த உடனே தூக்கம் வர்ற வாழ்க்கை வாழ முடியாத படி , இந்த கருமம் பிடிச்ச படிப்பு தந்த வெட்டி கௌரவம் தடுக்குது நாசமா போக....!!!

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் · . நட்புக்குத் துரோகம் ! ஒரு காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் நண்பர்களாகப் பழகத் தீர்மானித்தன. இரண்டும் சேர்ந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டன. நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும், நரியும், கழுதையும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொண்டன. ஒருநாள் நரி, தன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக தன் இருப்பிடத்தை விட்டு கழுதை இருக்குமிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும், அந்தப் பக்கமாக சென்ற சிங்கத்தைக் கண்டு நடுங்கியது. எப்படியாவது உயிர்தப்ப வழியுண்டா என யோசித்தது. ஒரு வழி நரிக்குப் புலப்பட்டது. அதாவது, தன் நண்பன் கழுதையைக் காட்டிக் கொடுத்துவிட்டு, தான் தப்பித்துக் கொள்வது என்பதுதான் அந்த வழி. நரி உடனே சிங்கத்தை நோக்கி, ""மன்னாதி மன்னா! அற்பப் பிராணியாகிய என்னைக் கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை. உங்களுக்கு நான் மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்ய முடியும். என் நண்பனாக, கொழுத்த கழுதை ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் சிரமமில்லாமல் பிடித்துக் கொள்வதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்கிறேன். அந்தக் கழுதை, இரண்டு மூன்று நாட்களுக்கு உங்கள் உணவுக்கு ஆகும்!'' என்று கூறிற்று. அந்த ஏற்பாட்டுக்கு சிங்கம் ஒப்புக் கொண்டது. நரி, சிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு கழுதையின் இருப்பிடத்திற்குச் சென்றது. ""நண்பனே! இரை தேடச் செல்லலாமா?'' என, கழுதையை அழைத்துக்கொண்டு சிங்கம் மறைந்திருந்த இடத்திற்கு வந்தது. கழுதையை, சிங்கம் மறைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் கொண்டு வந்து நிறுத்தியது நரி. சிங்கம், கழுதையின் மீது பாய்ந்து அதைக் கொன்றது. பிறகு சிங்கம், நரியின் மீதும் பாய்ந்து பிடித்துக் கொண்டது. நரி பதறிப் போய், ""மகாராஜா! எனக்குப் பதிலாகத் தானே கழுதையைக் காண்பிக்க வந்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே!'' என்று நரி நடுக்கத்துடன் கேட்டது. ""நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுக்கத் தயங்காத உன்னை நம்ப முடியாது. நாளை நீ உயிர் தப்புவதற்காக பலம் வாய்ந்த ஒரு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம். ஆகவே, உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது,'' என்று கூறிக் கொண்டே சிங்கம், நரியையும் கொன்று வீழ்த்தியது. இதற்குத்தான் கெட்ட நண்பர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களால் உங்களுக்கு தீமை தான் ஏற்படும்.

.................................................................................................................................................................................................................................................................................................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் ஒருத்தன் டாக்டர்கிட்ட போய்ட்டு, "டாக்டர்.. வர வர என் பொண்டாட்டிக்கு காது கேக்குறது குறைஞ்சுட்டே வர்ற மாதிரி தெரியுது?? என்ன பண்ணலாம்?? டாக்டர்??"ன்ன்னு கேட்டான்.. டாக்டர் சொன்னாரு.. "மொதல்ல ஒரு 15 அடி தூரத்துல இருந்து எதாவது பேசிப்பாரு.. அப்பவும் அவ திரும்பலைன்னா, கொஞ்சம் கிட்டப் போய்ட்டு பேசிப்பாரு.. அப்பவும் திரும்பலைன்னா அவ பின்னாடி போய்ப் பேசிப்பாரு... அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்ன்னு" சொன்னார்.. இவனும் வீட்டுக்கு போய்ட்டு பொண்டாட்டி கிச்சன்ல சமையல் பாத்திரத்தை கழுவிட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை.. இன்னும் கொஞ்சம் கிட்டக்க போய்ட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை.. இன்னும் கொஞ்சம் கிட்டக்க போய்ட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை.. கடைசியா அவ பின்னாடி போய் நின்னுட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ சொன்னா... . . "நாலாவது முறையா சொல்றேன்.. இன்னிக்கு உப்புமா"ன்னு... ஙே!!!!! gasp emoticon gasp emoticon

................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் · . இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்குகின்றனர். ஆனால், காதல் இல்லாமல் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்தால் இவர்கள் தங்களது ஆசையை விட்டு விடுவார்கள்....... ●●●பொய் சொல்வதை 90% குறைக்கலாம் ● நமது நேரம் மீதமாகும். ●நன்றாக இரவில் நித்திரை கொள்ளலாம். ●மிஸ்ட் கால் வந்தால் அதை பற்றிக் கவலை பட தேவையில்லை ●எந்த ஹோட்டலிலும் சாப்பிடலாம். ●எப்படி வேணுமானாலும் உடை உடுத்தலாம். ●நாள்ளிரவில் what's app எஸ்.எம்.எஸ் வந்து தூக்கம் கலையாது. ●நல்ல கனவுகளை (டூயட் இன்றி) காணலாம் ●எல்லா பெண்கள்களோடும் கதை அளக்கலாம், பழகலாம். ●உங்கள் செல்பேசி பில் கூடி, தொடர்பு துண்டிக்கப்படாது. ‘இங்கே வா, அங்கே வா’ என்ற தொல்லை இருக்காது. ●அழகான காதல் கவிதை எழுதலாம் (நல்ல காதல் கவிதை எழுத்தும் பெரும்பாலானோர் காதலித்தது இல்லை) ●பணம் மிச்சமாகும். ●தேவதாஸாக வாய்ப்புக்கள் கம்மி. ●வேலையை சிரத்தையுடன் செய்யலாம் ●நாலு நல்ல வார்த்தைகளைப் படிக்கலாம் ●காதல் காவியங்களை ரசித்து ருசித்து படிக்கலாம் ●பெற்றோர் நிம்மதிக்கு, மரியாதை கொடுக்கலாம் ●இஷ்டம் போல ஆடலாம்! <<<< ஏதோ நம்மால முடிஞ்ச ஒரு பொது நல ஆலோசனை அவ்வ்வ்வ்வ்...... tongue emoticon tongue emoticon

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . கடி தத்துவங்கள்.. 1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது. 2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது. 3. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு 4. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். 5. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!! 6. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா? 7. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது. 8. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா? 9. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா? 10. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான். 11. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது. 12. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர். 13. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது. 14. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது. 15. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா? 16. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது. 17. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது. 18. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது. 19. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது. 20. என்னதான் உயர பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது...

............................................................................................................................................................................................................................................................................................ ரிலாக்ஸ் ப்ளீஸ் . கண்ணதாசன் சொன்ன கதை... (இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ற கதை) எமதர்மன் சித்திரகுப்தனிடம் ‘இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்து விடு’’ என்று சொன்னான். அது போல் சுமார் ஆயிரம் நாக்குகளை அவன் அறுத்துக் கொண்டு வந்தான். அறுத்த பின்னாலும் சில நாக்குகள் துடித்துக்கொண்டு கிடந்தன. சில நாக்குகள் மரத்துப் போய் இரு கூராகப் பிளந்து கிடந்தன. ‘’மரத்துப் போய் இரட்டையாகக் கிடக்கும் நாக்குகளெல்லாம் யாருடயவை?’’ என்று கேட்டான் எமதர்மன். ‘இரட்டையாகக் கிடக்கும் நாக்குகளெல்லாம் ஆளும் கடசிக்காரர்களுடைய நாக்குகள் பிரபு! துடித்துக்கொண்டிருக்கும் நாக்குகளெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களுடைய நாக்குகள் பிரபு!’ என்றான் சித்திரகுப்தன். ‘’ஒரு உணர்ச்சியும் இல்லாத மற்ற நாக்குகள்?’’ என்று கேட்டான் எமன். ‘’அவர்களுக்கு ஓட்டுப போட்டவர்களுடைய நாக்குகள்’ என்று அமைதியாகச் சொன்னான் சித்திரகுப்தன் >கவிஞர் கண்ணதாசன்

........................................................................................................................................................................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் . ஒரு பிச்சைக்காரர் விலையுயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தார். அதன் மதிப்பு என்னவென்றுதெரியாமலே அதை தன்னுடனிருந்த கழுதையின் காதில்மாட்டிவிட்டார். இதை கண்காணித்துக்கொண்டிருந்த ஒரு வைரவியாபாரி அவரிடஞ்சென்று "இந்த கல்லை எனக்குக்கொடுத்தால் நான் உனக்கு பணந்தருகிறேன், எவ்வளவுவேண்டும் கேள்" என்றார். உடனே பிச்சைக்காரர், "அப்படியானால் ஒருரூபாய்தந்துவிட்டு இந்தக்கல்லை வைத்துக்கொள்" என்றார். அதற்கு, வைரவியாபாரி இன்னுங்குறைவாகவாங்கும் எண்ணத்துடன் "ஒருரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசாதருகிறேன் இல்லையென்றால் வேண்டாம் "என்றார். பிச்சைக்காரர், "அப்படியானல் பரவாயில்லை. அது இந்த கழுதையின் காதிலேயேருக்கட்டும்" என்றவாறே நடக்கலானார். வைரவியாபாரி, எப்படியும் அந்த பிச்சைக்காரர் தன்னிடம் அதை 50பைசாவிற்க்கு தந்துவிடுவாரென்ற எண்ணத்துடன் காத்திருந்தார். அதற்குள் அங்குவந்த இன்னொருவியாபாரி அந்த பிச்சைக்காரரிடம் 1000ரூபாய்தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டார். இதை சற்றுமெதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன், "அட அடிமுட்டாளே! கோடிரூபாய்மதிப்புள்ளவைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவுசந்தோசமாகச்செல்கிறாயே ! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றார். அதைக்கேட்ட பிச்சைக்காரர், பலத்தசிரிப்புடன் “ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத்தெரியாது அதனால் அதை இந்தவிலைக்கு விற்றுவிட்டேன். மேலும் எனக்கு இதுவேமிகப்பெரியதொகை. எனவே நான் மிகுந்தமகிழ்வுடனிருக்கிறேன். அதன் மதிப்புதெரிந்தும் வெறும் 50பைசாவிற்காக அதை இழந்துவிட்டாய்..! இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்..!" என்றவாறே நடக்கலானார் -ஓஷோ

...................................................................................................................................................................................................................................................................................... Maalaimalar தமிழ் வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....! திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடினார்கள். ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார். நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார். இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது. "நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது. அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம். அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம். எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது. அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, "இது தான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள். சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இது தான் உனக்கு இரண்டாம் முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள். மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!!! இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். "ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்று விட்டாயே? அறிவில்லையா?" என்று கேட்டேன். அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, "இதுதான் உங்களுக்கு முதல் முறை" என்றாள். அவ்வளவு தான். அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார் கணவர். இப்படி தான் பலரது வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. உண்மை தானே..!

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . சமயோசித அறிவு வேண்டும் ! இது ஒரு உண்மைச் சம்பவம் !! ஒரு ரயில் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் ஜன்னல் வழியே காற்று ‘குபுகுபு’வென்று வீசிக் கொண்டிருந்தது. பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் காற்றின் ஜிலுஜிலுப்பை நன்றாக அனுபவித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பெட்டியில் ஜன்னல் ஓரமாக இருந்த ஒருவர் சந்தோஷத்தில் ஜன்னலுக்கு வெளியே தன் கையை நீட்டி ஆட்டி அசைத்து மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் கையில் அணிந்திருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் சட்டென்று கழன்று கீழே விழுந்துவிட்டது. பதறிப்போன அந்த மனிதர் தன் கைக்கடிகாரம் கீழே விழுந்துவிட்டதாகக் கூச்சல் போட்டுக் கத்தினார். இதனையடுத்து அந்தப் பெட்டியில் இருந்த சகப் பயணிகள் அனைவரும் பதற்றத்தோடு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். சிலர் ஜன்னல் வழியே கைக்கடிகாரம் தெரிகிறதா என்று பார்த்தனர். சிலர் எமர்ஜென்சி செயினைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார்கள். இவ்வாறு அந்தப் பெட்டி முழுவதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தபோது, கைக்கடிகாரத்தைத் தவற விட்டவருக்கு நேரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் மட்டும் எதனைப் பற்றியும் கவலைப்படாமல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தார். இதனைப் பார்த்தவர்கள் அவர் மீது கடுப்பில் இருந்தனர். இதற்குள் அடுத்த ரயில் நிலையம் வந்துவிட்டது. இந்தப் பெட்டி அருகே நிறைய அதிகாரிகள் காத்திருந்தனர். இதனைப் பார்த்ததும் மற்றவர்கள் பரபரப்புடன் அந்த அதிகாரிகளிடம் கைக்கடிகாரம் தொலைந்துபோனதைப் பற்றி வருத்தத்துடன் கூறி, ஏதாவது உதவி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர். இந்நேரத்தில் அந்த எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவரோ, அந்த அதிகாரிகளிடம் இங்கிருந்து இருபத்தயிந்து கம்பங்களுக்குப் பின்னால் இவரது விலை உயர்ந்த கடிகாரம் விழுந்துவிட்டது. அதனைக் கண்டுபிடித்து இவரிடம் சமர்ப்பித்து விடுங்கள்” என்றார். அந்த எதிர் இருக்கைக்காரர் ராஜாஜி! உட்கருத்து: பரபரப்பான சூழலில் பதற்றப்படாமல் சமயோசிதமாகச் சிந்தித்து நடந்து கொள்ளவேண்டும்

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. நாயின் வாயிலிருந்த முயல் இறந்துவிட்டது தெரிந்தது. என் நாய்தான் முயலை கொன்றுவிட்டது என்ற உண்மை பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரிந்தால்....?.... நெஞ்சம் பதறியது. என்ன செய்வது என சற்று சிந்தித்தபின் ... நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கி, வீட்டுக்குள் எடுத்துச் சென்று நன்றாக அதை குளிப்பாட்டி, பின் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டேன். ஈரமான முயலைப் பார்த்ததும் "அதிக குளிர் தாங்காமல் முயல் இயற்கையாக இறந்ததாக எண்ணி பக்கத்து வீட்டார் ஏமாந்து போவார்கள்' என மனதிற்குள் நினைத்து என் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டேன். நேற்று எதேச்சையாக என்னைப் பார்த்துவிட்ட பக்கத்து வீட்டுக்காரர், "உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா" என்று கேட்டார். எனக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தன. எனினும் ஒன்றும் தெரியாதவன் போல், "தெரியாதே என்ன விஷயம்...?" என நான் சொல்ல, ப‌க்கத்து வீட்டுக்காரர், "கடந்த சில நாட்களுக்கு முன்னாடி எங்கள் வீட்டு முயல் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டது."என்றார் "அப்படியா...!!!??" "ஆமாம். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, எவனோ ஒரு லூசுப்பய ... நாங்கள் புதைத்த முயலை தோண்டி யெடுத்து குளிக்கவச்சி எங்கள் வீட்டுக்ள்ள போட்டிருக்கான்" tongue emoticon tongue emoticon # படித்ததில் பிடித்தது #

Link to comment
Share on other sites

........................................................................................................................................................................................................................................................ ரிலாக்ஸ் ப்ளீஸ் . இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் ஒரு முறை கிராமங்களை சுற்றிப் பார்க்க குதிரையில் கிளம்பிச் சென்றார்.அப்போது வயலில் ஒரே ஒரு பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். மன்னர் அவரிடம்,''மற்றவர்கள் எல்லாம் எங்கே?''என்று கேட்க, விசாரிப்பது மன்னர் என்பதை அறியாத அந்த பெண் ,''அவர்கள் எல்லாம் மன்னரைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்,'' என்று சொன்னார். ''அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் போகவில்லை?''என்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தப்பெண்,''மன்னரைப் பார்ப்பதற்காக ஒருநாள் கூலியை இழக்கும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை.எனக்கு ஐந்து குழந்தைகள்.அவர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது.அதனால்தான் போகவில்லை,''என்றார். மன்னர் அவரது கையில் சில நூறு பவுண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு,''உங்களது நண்பர்களிடம் சொல்லுங்கள்.நீங்கள் எல்லாம் மன்னரைப் பார்க்க சென்றீர்கள்.ஆனால் மன்னரோ என்னைப் பார்க்க வந்தார் என்று..'' என கூறிவிட்டு சென்றார். எதையும் தேடி செல்லாதே தகுதி இருந்தால் எல்லாம் உன்னை தேடி வரும் like emoticon like emoticon

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . 823 ஆண்டுக்கு- ஒரு முறை நடக்கும் அதிசயம் 2015-ல் பிப்ரவரியில் 4-ஞாயிறு 4-திங்கள் 4-செவ்வாய் 4-புதன் 4-வியாழன் 4-வெள்ளி 4-சனி

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஷப்பா.. மிடியல.. gasp emoticon gasp emoticon முட்டை போடாத பறவை எது..? ** ஆண் பறவை. * ராத்திரியில சூரியன் எங்கே போகுது..? ** எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால நம்மால அதை பார்க்க முடியலை.. * பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..? ** Mrs.பில் கேட்ஸ் * வருஷத்துல எந்த மாசத்துல 28 நாள் இருக்கு..? ** எல்லா மாசத்துலயும் தான்.. * 1984-ல நம்ம Prime Minister பெயர் என்ன.? ** நரேந்திர மோடி ( 1984 -லயும் அவர் பெயர் அதுதானே ) * இந்தியாவுக்கும் இலங்கைக்கும் என்ன வித்தியாசம்..? ** இந்தியா Map-ல இலங்கை இருக்கும் ஆனா இலங்கை Mapல இந்தியா இருக்காது.. * ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..? ** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு -இருப்பீங்க உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே.

Link to comment
Share on other sites

............................................................................................................................................................................................................................................................ ரிலாக்ஸ் ப்ளீஸ் . :: தகவல் துணுக்குகள் :: எடிசனின் உயிர் பிரியும்போது கடைசியாக 'விளக்கை எரியவிடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சமாக இருக்கட்டும்!' என்றாராம்!!. ஆண்களாக பிறந்து பெண்ணாக உணருபவர்கள் 'திருநங்கை' பெண்ணாக பிறந்து ஆணாக உணருபவர்கள் 'திருநம்பி'!. தலைவா படத்துக்காக தற்கொல பண்ணிக்கிறது ரஜினி படத்துக்காக மண்சோறு திங்கிறது போன்றவை Celebrity Worship Syndrome என்ற மனநோய் வகையறாக்கள்!!. பறவை இனங்களில் ஆந்தை மட்டுமே கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற அனைத்து பறவைகளும் கண்களை சிமிட்டுவது கீழ் இமையால்தான்!. கூகுள் என்ற சொல் ஒரு கோடி பூஜ்ஜியங்களைக் கொண்ட எண்களுக்கான பொதுவான பெயர் ஆகும்!. உங்களுடைய கை நகங்கள் 24 மணி நேரத்தில் 0.00007 அங்குலம் வளர்கின்றன!. மொகலாயப் பேரரசர் பாபர் உயிரிழக்கும் போது தன் மகன் ஹுமாயூனிடம் "இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே!" என்றாராம்!. ஹிட்லர் ஒரு சைவ விரும்பி! மேலும் மிருகவதையை தீவிரமாக எதிர்ப்பவர்!!. இங்கிலாந்தைச் சேர்ந்த மாத்யூ கிரீன் என்பவர் இதயமேயில்லாமல் இயந்திரங்களின் உதவியால் 2 வருடங்கள் வரை வாழ்ந்திருக்கிறார்!. 15.23 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் 8 வயது கோவை சிறுமி இடம் பிடித்துள்ளார்!. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்!. ஐன்ஸ்டீனின் கணிப்புப்படி உலகில் தேனீ இனம் முற்றிலும் அழிந்து போனால் அன்றிலிருந்து 4 வருடத்திற்குள் மனித இனம்அழிந்து போகுமாம்!!. தோல்விகளைக் கண்டு துவளாதீர்! மில்லியன் கணக்கான விந்தணுக்களின் வெற்றி பெற்றது நீங்கள் ஒருவரே! பயாலஜிப்படி சாதிக்கப் பிறந்தவர் நீங்கள்!.

Link to comment
Share on other sites

............................................................................................................................................................................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் இன்பத்தை INBOX இல் வை...........! கவலையை OUTBOX இல் வை...........! புன்னகையை SENT பண்ணு...............! கோபத்தை DELETE பண்ணு..................! மனதை VIBRATE செய்து பார்...................! வாழ்கை தானாக RING TONE ஆக மாறும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.