Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
எமது மூத்த மூதையோரின் மொழி ஒன்று உண்டு 
 
"ரோமுக்கு போனால் ரோமனாய் இரு" என்று 
அதன் இன்னொரு பொருள் அப்படி இருக்க தெரியாவிட்டால் வீட்டிலேயே இரு என்பதாகும்.
 
எனக்கு யாழில் இருப்பதால்தான் தீபாளி சரஸ்வதிபூஜை வருவதே தெரியும் யாழ்களமும் இல்லை என்றால் வருவது போவதே தெரியாது.
குறைந்தபட்சம் இதையாவது கொண்டாடுவோம் என்றால் அதற்கும் விட மாட்டீர்களா?
 
சேர்ச்சுக்கு போய் பைபிள் வாசித்து மெழுகுதிரி கொளுத்தியா கொண்டாடுகிறோம்? 
வர்த்தக பரிணாமமாக காதலர்தினம் போல இதும் ஒன்றாகிவிட்டது. அதில் காதலி மனைவியை மட்டும் கவனிக்கிறோம் ... இதில் பிள்ளைகளை கூடுதலாக கவனிக்கிறோம். அவர்களுக்குதான் இது அதிகம் முக்கியம் இல்லாதுபோனால் வெறுமை ஒன்றுதான் மிச்சம்.
எல்லாம் வணிகம் செய்த வேலை. இதில் மதத்திற்கு முராணனா விடயங்களே அதிகம்.
ஜெகோவா காரன் சொல்கிறான் ஜேசு மார்கழியில் பிறக்கவில்லை என்று. இன்னொருவன் அதே பைபிளை படித்து மார்கழியில் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறான்.
அவர்களுக்குள்ளேயே குழப்பம் .......... இப்போ நீங்கள் எங்களை குழப்ப வெளிக்கிடுகிரீர்கள்.
 
எல்லா நேரமும் 
பெருத்த பயனுள்ள விடயங்கள் மட்டுமே செய்ய முடியாத போது 
சிறுத்த விடயங்களால் பெருத்த அன்பை பகிருங்கள்.
 
அப்படி என்று அன்னை தெரேசா சொல்லியிருக்கிறார்.... கிறிஸ்மஸ் நாளில் என்றாலும் அவர் சொன்னதை புரிந்துகொள்வோம். 
Link to comment
Share on other sites

  • Replies 140
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கரம்பனில் ஒரு வேளாங்கன்னி கோயில் இருந்தது.ஒவ்வொரு வியாழக்கிழமையும் 5,6 மைல் தொலைவில் இருந்து ஆயிரக்கணக்கான சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் அந்தக்கோயிலுக்கு போய்வருவார்கள்,ஆனால் கடைசிவரையும் யாரும் கிறித்தவ மத்த்திற்கு மாறவில்லை.இறுக்கமான உலகில் வாழும் எங்களைப் போன்றோருக்கு ஒரு விடுதலை நாளாக இதை கொண்டாடுகிறோம்.அது எந்த மத்த்தின் விழாவாக இருந்தால் எமக்கென்ன

நாங்கள் பிரான்சுக்கு வந்தபோது

சைவக்கோயில்கள் எதுவுமில்லை

ஆறுதலுக்காக பரிசிலள்ள Montmartre

Chartres

Lourdes 

என போவதுண்டு...

இந்த நத்தாருக்கும் Chartres  போய்வந்தேன்

(பரிசிலிருந்து 100 கிலோமீற்றர் )

புலம் பெயர் தேசத்தில் எமது பிள்ளைகள்

மனச்சாட்சி உடையவராக

கடவுளுக்கு மதிப்பளிப்பவர்களாக வளரணும் என்பதற்கே இவ்வாறு அழைத்துச்செல்கின்றேன்

எந்தக்கடவுள் என்பதை அவர்கள் தான் தீர்மானிக்கணும்.........

Link to comment
Share on other sites

உனக்கு கிறிஸ்மஸ் அலவன்ஸ் கொடுக்கிறார்களா??? கொடுத்தால் அதுவும் தவறுதான். நான் வேலை செய்த இடத்தில் கிறித்தவர் அல்லாதவர்களுக்கு இல்லை என்று 95 இல் நிறுத்திவிட்டனர். அதுபற்றி நான் கவலை கொண்டதோ அன்றி அந்தக் காசுக்காக கிறித்தவத்தில் மாறலாம் என்றோ எண்ணியது கிடையாது. ஆனால் உங்கள் கதையைக்கேட்டால் சனம் அதுக்காகவும் தான் கொண்டாடுது போல.

ஜெர்மனியில் வேலை தரும் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யும்போது அதில் எழுதி இருப்பார்கள். வருடத்தில் ஒரு முறை விடுமுறை அலவன்ஸ்,

கிறிஸ்மஸ் அலவன்ஸ் தருவதாக. அதில் கிறித்தவர்களுக்கு தான் இது என்று குறிப்படுவதில்லை. அப்படி செய்வது சட்டபடி தவறு.

உங்களை யாரோ நல்லா ஏமாத்தி இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனியில் வேலை தரும் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யும்போது அதில் எழுதி இருப்பார்கள். வருடத்தில் ஒரு முறை விடுமுறை அலவன்ஸ்,

கிறிஸ்மஸ் அலவன்ஸ் தருவதாக. அதில் கிறித்தவர்களுக்கு தான் இது என்று குறிப்படுவதில்லை. அப்படி செய்வது சட்டபடி தவறு.

உங்களை யாரோ நல்லா ஏமாத்தி இருக்கிறார்கள்.

அந்த கோபத்தில் தான்

இந்த குதி  குதிக்கிறாரா  சுமே...? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கோபத்தில் தான்

இந்த குதி  குதிக்கிறாரா  சுமே...? :D

அட... அதுவா, சங்கதி. :icon_idea:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட... அதுவா, சங்கதி. :icon_idea:  :lol:

ஊத்தியது  பெற்றோல் தானே சிறி.. :icon_idea:  :lol:  :lol:

பார்க்கலாம்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரம்பனில் ஒரு வேளாங்கன்னி கோயில் இருந்தது.ஒவ்வொரு வியாழக்கிழமையும் 5,6 மைல் தொலைவில் இருந்து ஆயிரக்கணக்கான சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் அந்தக்கோயிலுக்கு போய்வருவார்கள்,ஆனால் கடைசிவரையும் யாரும் கிறித்தவ மத்த்திற்கு மாறவில்லை.இறுக்கமான உலகில் வாழும் எங்களைப் போன்றோருக்கு ஒரு விடுதலை நாளாக இதை கொண்டாடுகிறோம்.அது எந்த மத்த்தின் விழாவாக இருந்தால் எமக்கென்ன

உண்மைதான் ..........
ஆனால் யாழில் உள்ள எந்த கிறிஸ்தவனும் ஒரு சைவ கோவிலை எட்டியும் பார்ப்பதில்லை. (அவர்கள் எல்லோரும் ஒரு 100 வருடம் முன்பு சைவர்கள்தான்).
அது மதத்தால் வந்ததில்லை .............
அடுத்தவனுக்கு விளக்கு காட்டும் யாழ் புத்தி சொல்லி கொடுத்தது. 
 
காதல் திருமணம் என்று வரும்போதுகூட .... 
தமிழ் கிறிஸ்தவர்கள் எதோ ஜெசுவோடு கூட பிறந்தவர்கள் போல்தான் மதம் மாற்ற துடிப்பார்.
பரம்பரை வெள்ளைக்காரன் இந்து கோவிலுக்கு வந்து தாலி கட்டி போவான்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ..........
ஆனால் யாழில் உள்ள எந்த கிறிஸ்தவனும் ஒரு சைவ கோவிலை எட்டியும் பார்ப்பதில்லை. (அவர்கள் எல்லோரும் ஒரு 100 வருடம் முன்பு சைவர்கள்தான்).
அது மதத்தால் வந்ததில்லை .............
அடுத்தவனுக்கு விளக்கு காட்டும் யாழ் புத்தி சொல்லி கொடுத்தது. 
 
காதல் திருமணம் என்று வரும்போதுகூட .... 
தமிழ் கிறிஸ்தவர்கள் எதோ ஜெசுவோடு கூட பிறந்தவர்கள் போல்தான் மதம் மாற்ற துடிப்பார்.
பரம்பரை வெள்ளைக்காரன் இந்து கோவிலுக்கு வந்து தாலி கட்டி போவான்.

புதிதாக மணிக்கூடு கட்டியவரைக்கண்டதில்லையா ஐயா?

புதிதாக ஐபோன் 6 வைத்திருப்பவரைக்கண்டதில்லையா?

பழைய நோக்கியாவை எவன் ஏறெடுத்துப்பார்க்கின்றான்..? :(  :(

அப்படியே இதுவும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ, கிறிஸ்துமஸ் பரிசு பொருள் வாங்கி கொடுத்தவுடன் எனது பிள்ளைகள் மதம் மாறிவிடபோவதில்லை. அவர்களுக்கு எமது பண்டிகை நாட்களும்

தெரியும். நாங்கள் மறந்தாலும் அவர்கள் நினைவூட்டிய நாட்களும் உண்டு. :o

உங்கள் எழுத்தை பார்த்தால் நீங்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கபட்டு இருக்கிறீர்களோ என்று எண்ண தோன்றுகிறது.

நான் பாதிக்கப்பட்டால் இதில வந்து ஏன் புலம்பிறன் ???நவீனன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது மூத்த மூதையோரின் மொழி ஒன்று உண்டு 
 
"ரோமுக்கு போனால் ரோமனாய் இரு" என்று 
அதன் இன்னொரு பொருள் அப்படி இருக்க தெரியாவிட்டால் வீட்டிலேயே இரு என்பதாகும்.
 
எனக்கு யாழில் இருப்பதால்தான் தீபாளி சரஸ்வதிபூஜை வருவதே தெரியும் யாழ்களமும் இல்லை என்றால் வருவது போவதே தெரியாது.
குறைந்தபட்சம் இதையாவது கொண்டாடுவோம் என்றால் அதற்கும் விட மாட்டீர்களா?
 
சேர்ச்சுக்கு போய் பைபிள் வாசித்து மெழுகுதிரி கொளுத்தியா கொண்டாடுகிறோம்? 
வர்த்தக பரிணாமமாக காதலர்தினம் போல இதும் ஒன்றாகிவிட்டது. அதில் காதலி மனைவியை மட்டும் கவனிக்கிறோம் ... இதில் பிள்ளைகளை கூடுதலாக கவனிக்கிறோம். அவர்களுக்குதான் இது அதிகம் முக்கியம் இல்லாதுபோனால் வெறுமை ஒன்றுதான் மிச்சம்.
எல்லாம் வணிகம் செய்த வேலை. இதில் மதத்திற்கு முராணனா விடயங்களே அதிகம்.
ஜெகோவா காரன் சொல்கிறான் ஜேசு மார்கழியில் பிறக்கவில்லை என்று. இன்னொருவன் அதே பைபிளை படித்து மார்கழியில் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறான்.
அவர்களுக்குள்ளேயே குழப்பம் .......... இப்போ நீங்கள் எங்களை குழப்ப வெளிக்கிடுகிரீர்கள்.
 
எல்லா நேரமும் 
பெருத்த பயனுள்ள விடயங்கள் மட்டுமே செய்ய முடியாத போது 
சிறுத்த விடயங்களால் பெருத்த அன்பை பகிருங்கள்.
 
அப்படி என்று அன்னை தெரேசா சொல்லியிருக்கிறார்.... கிறிஸ்மஸ் நாளில் என்றாலும் அவர் சொன்னதை புரிந்துகொள்வோம். 

அன்னை தெரேசா கூட கர்த்தர் சொன்னதாக பல நோயாளர்களைக் கருணைக் கொலை செய்தாதாக வாசித்தேன் ஒரு இணையத்தில்.

அட... அதுவா, சங்கதி. :icon_idea:  :lol:

:icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டாட்டங்கள் மகிழ்ச்சிதரக்கூடியவை.நான் எல்லாக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவேன்.ஆனால் தீபாவளி ,சித்திரைவருடப்பிறப்பு. நவராத்திரி என்பன தமிழர் மதத்தைப் புறக்கணித்து தமிழரை அரக்கராகச் சித்தரித்து தமிழர்மேல் திணிக்கப்பட்ட கொண்டாட்டங்கள் என்பதால் கொண்டாடுவதில்லை.பொங்கல் எனது பிரதான கொண்டாட்டம்!!!!

Link to comment
Share on other sites

அண்ணா தைப்பொங்கல் மதம் சார்ந்த கொண்டாட்டம் அல்ல. எம்மவர்க்கு எது மத விழா எது பொதுவிழா என்பதுகூட தெளிவு இல்லை. அதுதான் பிரச்சனையே.

உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனாலும் பிற மதக்கொண்டாட்டங்களை நாங்களும் கொண்டாடுவதால், எங்கள் சந்ததிக்கும் தீங்குநேரும் என எண்ணமுடியவில்லை. அதனால் எனது எண்ணத்தில் தோன்றியதை இங்கு எழுதுகிறேன்.

கிறித்துவர்கள். இசுலாமியர்கள் என அழைக்கும்போது மதமே அங்கு முன்னிலை வகிக்கிறது. தமிழர் என அழைக்கும்போது மதத்திற்கு அங்கு தொடர்பே இல்லை. அந்தவகையில் தமிழர் எதைக் கொண்டாடினாலும் மதம் முன்னிலை வகிக்கிப்பதாகக் கொள்வது ஒரு மாயத்தோற்றமே. எது மத விழா, எது பொதுவிழா என்று தெளிவுபட்டுக் கொண்டாடவேண்டிய தேவை தமிழருக்குத் தேவை இல்லை என்றே எண்ணுகிறேன். இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க. 
 
Link to comment
Share on other sites

இலங்கையில் கிறிஸ்மஸ் நாங்கள் கேள்விப்படாத ஒன்று என்று சொல்லலாம். நாங்கள் கொண்டாடியத்தில்லை. வெளிநாடு வந்தும் கொண்டாடியத்தில்லை. அலுவலகத்தில் வேலை செய்யும் வெள்ளை இனத்தவருக்கு தப்பாமல் வாழ்த்துவேன். பெரும்பாலான வெள்ளைகள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். சிலர் கிறீஸ்தவ மதப் பிரிவுகளோடு தொடர்பானவர்களும் உள்ளார்கள்.
 
கிறிஸ்மஸ் போனஸ் நான் வேலை செய்த நாடுகளில் கேள்விப்படாத ஒன்று.   :D
 
ஒருவேளை இது ஐரோப்பிய விசயமாக இருக்கலாம்.   
 
பிள்ளைகளை மதப் பற்றாக வளர்க்க வேண்டுமா என்ற கேள்வி என்னிடம் இருந்தது. அப்படி வளர்ப்பதில்லை என தீர்மானித்தேன். அனால் இந்துமதம் சொல்லும் அடிப்படை அறிவை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே என் முடிவு. 
 
ஏனென்றால் அவர்களின் காலத்தில் இருக்கும் அறிவியல் இப்போதுள்ள மதங்களை அடித்துச் சென்றுவிடும். பல வெள்ளைகள் கிறீஸ்தவ மதத்தில் நம்பிக்கை இழந்ததன் காரணமும் அது தான். அப்படி இல்லையென்றால் முஸ்லீம்கள் போன்று வளர்க்க வேண்டும். அறிவியலை நிராகரிப்பவர்களாக.
 
இந்துமதம் கொண்டிருக்கும் அறிவியல் சார்ந்த கருத்துக்களை உதாரணமாக 
 
கடவுள் எமக்கு மூன்று விசயங்கள் தான் தருவார். வேறு எதுவும் தரமாட்டார்...
 
1. அறிவு
2. மனதில் சந்தோசம்
3. உண்மை
 
இதைத்தவிர வேறு எதுவும் தரமாட்டார் என்று சொல்லிக் கொடுக்கும் போது சிறு பிள்ளையின் கடவுள் நம்பிக்கை ஆட்டம் காண்கிறது. ஆனால் அது வளர்ந்து அறிவு தெளிந்து கடவுள் தனக்கு வாழ்க்கையில் எதையும் தரப் போவதில்லை என உணரும் போது இந்து சமயத்தை தூக்கி எறிய வேண்டிய தேவை யில்லை. ஏனென்றால் இந்து சமயம் ஏற்கனவே சொல்லியிருக்கிறது இந்த மூன்றையும் தவிர வேறு எதையும் தரமாட்டார் என்று. ( சத் + சித் + ஆனந்தா = சச்சிதானந்தா)
 
இது ஒரு உதாரணம் மட்டுமே.
 
மற்றப் படி நான் கோவில் போய் ஐயர் செய்யும் பூசைகளைப் பார்த்து நேரத்தை வீணாக்குவதில்லை. பூசையைப் பார்த்தால் பைத்தியம் தான் பிடிக்கும்.
 
.
Link to comment
Share on other sites

நான் தமிழன்........ தமிழன்  கலாச்சாரத்தில் வளர்ந்தவன்  .ஆனால் நான் வழிபடுவது கிறிஸ்துவை ...............எனது கலாச்சாரமும் பண்பாடும் எதை எனக்கு படிப்பித்ததோ அதையே கிறிஸ்துவும் என்னிடம் எதிர்பார்த்து நிற்கிறார் .அதனால எனக்கு எந்த இடையூறும் இன்றி இந்த விதமான மத சார்பான குழப்பமுமின்றி தமிழனாக ,ஓர் நல்ல மனிதனாக பயணிக்கிறேன் .........அனைவர்க்கும் சமாதானம் உண்டாகட்டும்  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் Merry Christmas and Happy Holidays! என்றுதான் வாழ்த்து சொல்லுகிறார்கள்.. நானும அவர்களுக்கு சொல்லுவேன்.. மற்றும்படி, மரம் வைத்து இன்னும் கொண்டாடியதில்லை. பள்ளிக்குப் போகும் குழந்தைகளுக்கு ஆர்வம் வந்து கேட்கிறார்கள்.. சில பெற்றோர்கள் செய்கிறார்கள்.. சிலர் மத விடயம் என்பதால் செய்வதில்லை.. வேறும் சிலர் பஞ்சிபிடித்து செய்வதில்லை.. :D

அது தனிமனித, ஒருவருக்கு ஒருவர் தரும் வாழ்த்து.
 
பாடசாலைகளில் 'happy holiday' என்று மட்டுமே சொல்வார்கள். இல்லாவிடில், happy ponkal, happy ramzan, happy...... என்று போய்விடும் என்பதால்.....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எமது மத விழாக்கள் குறித்து கவலை கொள்ளும் அதேவேளை பிள்ளைகளுக்கு சமயக் கல்வி கொடுக்க நடவடிக்கை எடுங்கள். தமிழ் பாடசாலைகளில் தமிழ் கல்வி. ஆனால் சமயக் கல்வி?
 
பல கோடிகள் கொட்டி அமைக்கப் பட்ட ஆலயங்கள், பராமரிப்பார் இன்றி இழுத்து மூடப் படும் நிலையே காணப் படுகின்றது. லட்சக் கணக்கில் சேரும் உண்டியல் பணத்தில் ஆட்டையைப் போடுவது போக, பிள்ளைகள் சமயக் கல்விக்கும் கொஞ்சம் ஒதுக்கலாமே.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இனத்திற்கும் இல்லாத ஒரு பெருமை தமிழ் இனத்திற்கு உள்ளது.

எந்த மதமோ இனமோ என்று பார்க்காமல் அடுத்தவர்களின் கலாச்சாரத்தையும் மதித்து அவர்களுடன்  சேர்ந்து அவர்களுடைய கொண்டாட்டங்களில் பங்குகொள்வது தான் தமிழரின் பண்பாடு.

இந்த வகையில் நத்தார் பண்டிகையும் அமைந்துள்ளது. வாழும் நாட்டில் அயலவர்களுடன் சேர்ந்து அவர்களின் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு அவர்களையும் வாழ்த்தி  நாங்களும் வாழ்த்துக்களை பெறுவதில் ஒரு மன நிறைவு கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழன்........ தமிழன்  கலாச்சாரத்தில் வளர்ந்தவன்  .ஆனால் நான் வழிபடுவது கிறிஸ்துவை ...............எனது கலாச்சாரமும் பண்பாடும் எதை எனக்கு படிப்பித்ததோ அதையே கிறிஸ்துவும் என்னிடம் எதிர்பார்த்து நிற்கிறார் .அதனால எனக்கு எந்த இடையூறும் இன்றி இந்த விதமான மத சார்பான குழப்பமுமின்றி தமிழனாக ,ஓர் நல்ல மனிதனாக பயணிக்கிறேன் .........அனைவர்க்கும் சமாதானம் உண்டாகட்டும்  :)

யார் எதை வழிபடுகிறார்கள் என்பதல்லப் பிரச்சனை. கிறிஸ்தவர் அல்லாதவர் ஏன் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி வீட்டில் மரம் வைத்துத் தாமும் கொண்டாடுகின்றனர் என்பதே ??????

நீங்கள் சரஸ்வதி பூசையை உங்கள் வீட்டில் கொண்டாடுவீர்களா அதாவது கடவுள் வழிபாடு இன்றி தனிய உணவுகளைச் செய்து. இல்லை என்பதே உண்மையாக இருக்கும்.

எமது மத விழாக்கள் குறித்து கவலை கொள்ளும் அதேவேளை பிள்ளைகளுக்கு சமயக் கல்வி கொடுக்க நடவடிக்கை எடுங்கள். தமிழ் பாடசாலைகளில் தமிழ் கல்வி. ஆனால் சமயக் கல்வி?
 
பல கோடிகள் கொட்டி அமைக்கப் பட்ட ஆலயங்கள், பராமரிப்பார் இன்றி இழுத்து மூடப் படும் நிலையே காணப் படுகின்றது. லட்சக் கணக்கில் சேரும் உண்டியல் பணத்தில் ஆட்டையைப் போடுவது போக, பிள்ளைகள் சமயக் கல்விக்கும் கொஞ்சம் ஒதுக்கலாமே.

நான் எனது பள்ளியில் முதல் அரை மணி நேரம் சமய நெறி என்று தான் வைத்துள்ளேன். அதற்காக மூடநம்பிக்கைகளை வளர்க்கும் விடயங்களைச் சொல்லக் கூடாது என்பது என் வேண்டுகோள் ஆசிரியர்களுக்கு.ஆனால் மற்றைய பள்ளிகளுக்கும் செய்யும் படி என்னால் சொல்ல முடியவில்லை. கல்விமேம்பாட்டுப் பேரவைக்கும் அதில் ஆர்வம் இல்லை. இனி பூனைக்கு மணிகட்ட யாராவது வந்தால்த்தான் உண்டு.

Link to comment
Share on other sites

யார் எதை வழிபடுகிறார்கள் என்பதல்லப் பிரச்சனை. கிறிஸ்தவர் அல்லாதவர் ஏன் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி வீட்டில் மரம் வைத்துத் தாமும் கொண்டாடுகின்றனர் என்பதே ??????

நீங்கள் சரஸ்வதி பூசையை உங்கள் வீட்டில் கொண்டாடுவீர்களா அதாவது கடவுள் வழிபாடு இன்றி தனிய உணவுகளைச் செய்து. இல்லை என்பதே உண்மையாக இருக்கும்.

இன்னுருவரின் திருமணவைபவத்திற்கோ ,அல்லது அவர்கள் நல்லது சம்பந்தமான விடயங்களுக்கோ ,அவர்களது சந்தோசமான விடயங்களுக்கோ வாழ்த்து சொல்லி வாழுவது மனித பண்பு ,மேன்மை ,மனித நேயம் ,பெருந்தன்மை .அதேபோலவே மற்றவர்களின் மதம் சார்ந்த பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிப்பது ஆகும் .இது உங்களுக்கு சரியாக தெரியாவிட்டால் மனித பண்பு பற்றி நீங்கள் அறிவதற்கு நிறைய விடயங்கள் இருக்குது .அக்கா . :)
 
சரஸ்வது பூசை யில் நாம் பங்கெடுப்பது  வழமை அது எம் கலாச்சாரத்தில் கலைஞ்சர்களுக்கான ஒரு மார்க்கமாக அன்று தொட்டு இன்று வரை கூறப்பட்டு வருகிறது .அந்த வகையில் நாம் தமிழர் என்ற ரீதியில் அந்த கலை தேவதையின் ஆசி வேண்டி நிற்பது வழமை .அது தவறென்று நான் வணங்கும் மதம் எனக்கு சொல்லவில்லை .........அது எனது தனிப்பட்ட விருப்பம் ,அதை எல்லா கிறிஸ்தவர்களும் கடைப்பிடிப்பார்கள் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை .அது அவர்கள் தனிப்பட்ட சுதந்திரம் .எனக்கு எது சரி என்று பிடிக்குதோ அதை நான் செய்ய வேண்டும் ,அதேபோலவே ஒவ்வொரு மதத்தினர்க்கும் உரிமை உண்டு .ஏன் அவர்கள் அதை கொண்டாடவேண்டும் ,கொண்டாடவில்லை என்று கேட்கும் உரிமை எனக்கு இல்லை ..............என்னில் நான் மதத்தை பார்ப்பது நல்ல மனிதனாக வாழ்வதற்குரிய ஒரு வழியாகவே ................மதவெறி கொண்டு எதையும் நான் நோக்குவதில்லை .........அது நல்ல தமிழனுக்கும் அழகல்ல . :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனது பள்ளியில் முதல் அரை மணி நேரம் சமய நெறி என்று தான் வைத்துள்ளேன். அதற்காக மூடநம்பிக்கைகளை வளர்க்கும் விடயங்களைச் சொல்லக் கூடாது என்பது என் வேண்டுகோள் ஆசிரியர்களுக்கு.ஆனால் மற்றைய பள்ளிகளுக்கும் செய்யும் படி என்னால் சொல்ல முடியவில்லை. கல்விமேம்பாட்டுப் பேரவைக்கும் அதில் ஆர்வம் இல்லை. இனி பூனைக்கு மணிகட்ட யாராவது வந்தால்த்தான் உண்டு.

ஆங்கிலத்தில் சமய விபரங்கள் கிடைக்கும் வரை, நீங்கள் சொல்லும் அரை மணி நேர 'பேய்க் காட்டல்களினால்' பிரயோசனம் இல்லை. காலையில் வீடுகளில் நடக்கும், 'அப்பு சாமி, கும்புட்டு, திருநீறு பூசி, பாலும் தெளிதேனும், படித்தாயா',பம்மாத்தின் தொடர்ச்சி தான் அங்கே நடக்கும். 
 
நமது பிள்ளைகளுக்கு நமது சமய அறிவை அவர்களுக்கு புரியும் கற்கும் மொழியில்  வழங்காது, அவர்கள் தமக்கு புரியும் மொழியில் அறியும் வேறு மத நிகழ்வுகளும் வேண்டாம் என்றால்.....   இது உங்கள் விரக்தியின் வெளிப்பாடு இன்றி வேறு என்ன?
 
உங்கள் விசயங்கள் ஆங்கில மொழியில் பகிரப் பட்டால் மட்டுமே அடுத்தவர் அதனைப் புரிந்து கொண்டு, சிறப்பினை உணர்ந்து, தமது வீடுகளில் கொண்டாடுவர். David Becham வீட்டில், தோட்டத்தில் பிரமாண்டமான பிள்ளையார் சிலைகள் உள்ளன. காரணம், பிள்ளையார் பால் குடித்த விபரத்தினால் ஆர்வமாகி பிள்ளையார் குறித்து ஆங்கிலத்தில் வாசித்து அறிந்து கொண்டாராம்.அதே போல் ஹொலிவூட் நடிகை, ஜூலியா ராபர்ட்ஸ் இந்து மதத்தினையும், ரிச்சர்ட் கேர் பௌத்த மதத்தினையும் தழுவிய காரணம் அவர்களுக்கு கிடைத்த ஆங்கில குறிப்புகள்.
 
நமது சித்தர்கள் தந்த யோகா இன்று உலகம் முழுவதும் பரவக் காரணம் பல மொழிகளில் நடந்த மொழிபெயர்ப்பு தான். அதனால் தான் அதன் சிறப்பு புரிந்து கொண்டாடுகின்றார்கள்.
 
ஆங்கிலத்திலா, சாத்தியம் தானா என்று சொல்லாதீர்கள்.
 
வசதி இல்லாத காலத்தில், ஐரோப்பியர்கள் நமது பகுதிக்கு வந்து பைபிளை தமிழில் மொழி பெயர்த்து கிறிஸ்தவத்துக்கு வழி சமைத்தார்கள். அவ்வாறு தமிழில் கிடைத்த படியினால் தான், கிறிஸ்தவர் இல்லாதவர் கூட கிறிஸ்மஸ் கொண்டாடும் அளவுக்கு, வாசித்ததால், அறிவு வந்தது. சமஸ்கிரிததில் இருந்த பல சமய விடயங்கள் மொழி பெயர்க்கப் பட்டே தமிழுக்கு வந்தது, ராமாயணம், மகாபாரதம் உட்பட. கூடவே விஷ்ணுவும் எமது தெய்வங்களில் ஒருவர் ஆனார்.
 
ஆனால் தமிழ் தெய்வம் முருகன் குறித்த தமிழ் கதைகளின் மொழி பெயர்ப்பு வடக்கே செல்லாததால், வட இந்தியர்களுக்கு முருகன் குறித்தோ, தைப்பூசம், சூரன்போர், கந்த சஷ்டி விரதம் குறித்த விபரம் இல்லை. ஆகவே உங்கள் கருத்துப் படி, நாம் தீபாவளி கொண்டாடுகின்றோம், வட இந்தியர்கள் ஏன் தைப்பூசம் கொண்டாடுவதில்லை என்று கேட்கலாமே?
 
இங்கிலாந்தில் GCSE பரீட்சையில் A * எண்ணிக்கையினை அதிகரிப் பதற்காக இஸ்லாம் பாடத்தினை தெரிவு செய்யும் 'நம் சைவக் கொழுந்துகள்' குறித்து அறிந்துளீர்களா? காரணம் அவை ஆங்கிலத்திலும் உள்ளமையும் மிக இலகுவானதுமாம்.
 
முடிந்தால் இந்த தளத்தினை உங்கள் தமிழ் பாடசாலையில் அறிமுகம் செய்யுங்கள்.: www.hindukidsworld.org 
 
நண்பர் ஒருவர் ஆரம்பித்தார், எம்தமிழ் குழந்தைகளுக்காக. ஆனால் அவரே வியக்கும் வகையில் இந்தியாவில் இருந்தே பலர் இதனை பார்கின்றார்கள் என்கிறார். எமது நாடு மட்டுமே சமயக் கல்விக்கு பாடத்திட்டம் வைத்து உள்ளது. இது மொரிசியஸ், சிங்கப்பூரில் பின் பற்றப்படுகின்றது. பாடத்திட்ட முறைமை, ஒழுங்கு, தெளிவு காரணமாகவே, சமய அறிவு கேள்வி ஞானமாக உள்ள, இந்தியாவில் ஆர்வம் உண்டாகி உள்ளது என்கிறார், நண்பர்.
 
ஆகவே நான் சொல்ல வருவது என்னவென்றால், உங்கள் விரக்திக்கு காரணம் வேறு எங்கோ உள்ளது. அதை கண்டு கொள்ளாமல், வீணாக வேறு  எங்கோ ஒரு விவகாரதினைக் கிளப்புகிறீர்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பரின் புளொக்ஸ் பார்த்தேன். Krishna and the Govarthan Hill,Govardhan hill.இப்படியான கோமாளிக்  கதைகளை எல்லாம் விட்டு அறிவு பூர்வமாக எமது நம்பிக்கைகளை சொல்லிக் கொடுத்தாலே போதும்.

கட்டாயம் பள்ளியில் தான் ஒரு பிள்ளை சமய அறிவைப் பெறவேண்டும் என்பதில்லையே நாதமுனி. பெற்ரோர் எதைச் செய்கிறார்களோ அதையே பிள்ளைகளும் ஏற்றுக்கொள்கின்றனர்.

ஊரானையே எப்போதும் நம்பி ஏன் குறை கூறுவான் எமது எமது பிள்ளைகளுக்கு நாம்  சொல்லிக் கொடுத்தாலே போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுருவரின் திருமணவைபவத்திற்கோ ,அல்லது அவர்கள் நல்லது சம்பந்தமான விடயங்களுக்கோ ,அவர்களது சந்தோசமான விடயங்களுக்கோ வாழ்த்து சொல்லி வாழுவது மனித பண்பு ,மேன்மை ,மனித நேயம் ,பெருந்தன்மை .அதேபோலவே மற்றவர்களின் மதம் சார்ந்த பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிப்பது ஆகும் .இது உங்களுக்கு சரியாக தெரியாவிட்டால் மனித பண்பு பற்றி நீங்கள் அறிவதற்கு நிறைய விடயங்கள் இருக்குது .அக்கா . :)
 
சரஸ்வது பூசை யில் நாம் பங்கெடுப்பது  வழமை அது எம் கலாச்சாரத்தில் கலைஞ்சர்களுக்கான ஒரு மார்க்கமாக அன்று தொட்டு இன்று வரை கூறப்பட்டு வருகிறது .அந்த வகையில் நாம் தமிழர் என்ற ரீதியில் அந்த கலை தேவதையின் ஆசி வேண்டி நிற்பது வழமை .அது தவறென்று நான் வணங்கும் மதம் எனக்கு சொல்லவில்லை .........அது எனது தனிப்பட்ட விருப்பம் ,அதை எல்லா கிறிஸ்தவர்களும் கடைப்பிடிப்பார்கள் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை .அது அவர்கள் தனிப்பட்ட சுதந்திரம் .எனக்கு எது சரி என்று பிடிக்குதோ அதை நான் செய்ய வேண்டும் ,அதேபோலவே ஒவ்வொரு மதத்தினர்க்கும் உரிமை உண்டு .ஏன் அவர்கள் அதை கொண்டாடவேண்டும் ,கொண்டாடவில்லை என்று கேட்கும் உரிமை எனக்கு இல்லை ..............என்னில் நான் மதத்தை பார்ப்பது நல்ல மனிதனாக வாழ்வதற்குரிய ஒரு வழியாகவே ................மதவெறி கொண்டு எதையும் நான் நோக்குவதில்லை .........அது நல்ல தமிழனுக்கும் அழகல்ல . :)

சாதாரண ஒரு கருத்தையே ஏற்றுக்கொள்ள முடியாது மதவெறி என்று காழ்ப்புடன் கூறும் உங்களைப் போன்றவர்களுக்கு என்ன எழுதியும் விளங்கப் போவதில்லை. தமிழன் என்ற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு தம் தவறுகளை எல்லாம் சரி என வாதிடுபவர்களுக்கும் எதுவும் புரியவும் போவதில்லை.

Link to comment
Share on other sites

சாதாரண ஒரு கருத்தையே ஏற்றுக்கொள்ள முடியாது மதவெறி என்று காழ்ப்புடன் கூறும் உங்களைப் போன்றவர்களுக்கு என்ன எழுதியும் விளங்கப் போவதில்லை. தமிழன் என்ற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு தம் தவறுகளை எல்லாம் சரி என வாதிடுபவர்களுக்கும் எதுவும் புரியவும் போவதில்லை.

இதில எது தவறு ,எதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை .என்ன சொல்ல வாரீங்க கொஞ்சம் புரியும்படி சொல்லலாமே ................மற்றவனையும் லூசன் எண்டு நினைத்து கருத்திட வேண்டாம் ............... :D  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனது பள்ளியில் முதல் அரை மணி நேரம் சமய நெறி என்று தான் வைத்துள்ளேன். அதற்காக மூடநம்பிக்கைகளை வளர்க்கும் விடயங்களைச் சொல்லக் கூடாது என்பது என் வேண்டுகோள் ஆசிரியர்களுக்கு.ஆனால் மற்றைய பள்ளிகளுக்கும் செய்யும் படி என்னால் சொல்ல முடியவில்லை. கல்விமேம்பாட்டுப் பேரவைக்கும் அதில் ஆர்வம் இல்லை. இனி பூனைக்கு மணிகட்ட யாராவது வந்தால்த்தான் உண்டு.

உங்கள் பள்ளியா?

அது எங்கே உள்ளது?

விளக்கமாக சொல்லமுடியுமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பரின் புளொக்ஸ் பார்த்தேன். Krishna and the Govarthan Hill,Govardhan hill.இப்படியான கோமாளிக்  கதைகளை எல்லாம் விட்டு அறிவு பூர்வமாக எமது நம்பிக்கைகளை சொல்லிக் கொடுத்தாலே போதும்.

கட்டாயம் பள்ளியில் தான் ஒரு பிள்ளை சமய அறிவைப் பெறவேண்டும் என்பதில்லையே நாதமுனி. பெற்ரோர் எதைச் செய்கிறார்களோ அதையே பிள்ளைகளும் ஏற்றுக்கொள்கின்றனர்.

ஊரானையே எப்போதும் நம்பி ஏன் குறை கூறுவான் எமது எமது பிள்ளைகளுக்கு நாம்  சொல்லிக் கொடுத்தாலே போதும்.

மன்னிக்க வேண்டும்,
 
சிலவேளைகளில் உங்களுடன் ஆக்க பூர்வமாக விவாதிப்பதில் தயக்கம் உண்டாகின்றது.
 
பிள்ளைகளுக்கு சில விடயங்களை புரியவைக்கும் வகையில் சொல்லப் பட்டவையே கதைகள். இதனை பெரிய மனிதர் பார்வையுடன் பார்க்க கூடாது. இவை சொல்லப் படும் போது, குழந்தைகளின் psycology தெரிந்து அவர்களுக்காக சொல்லப் பட்டது. வளர்ந்த எமக்கு அல்ல என்பதை மறந்து விடாதீர்கள்.
 
இந்த கதையே உங்களுக்கு கோமாளித்தனம் என்றால், எது உண்மையானது? திருவிளையாடல் புராணம்: பிட்டுக்கு மண் சுமந்தமை ? சுந்தரரின் முதலை உண்ட பாலகனை மீட்டமை ? அப்பரின் பாம்பு தீண்டி இறந்த அப்பூதி அடிகள் மகனை உயிர் மீட்டு தந்தமை? மாணிக்கவாசகரின் நரிகளைப் பரிகளாக்கியமை?
 
சரி; கொஞ்சம் வெளிய பார்த்தால், கொடூரமாக கொலை செய்யப் பட்ட ஜேசு மகான், மூன்றாவது நாள் உயிர்த்தார் என கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது எத்தகையது?
 
முதலில் கோமாளிக் கதைகள் என்ன என்று ஒரு தெளிவுக்கு வாருங்கள். குழம்பிப் போய் உள்ளீர்கள் என்று மட்டும் தெரிகிறது. மன்னிக்க வேண்டும் இப்படி சொல்வதற்கு.
 
இவ்வளவு விடயங்கள் அடங்கிய ஒரு தளத்தின் மிகப் பெரிய முயற்சியினை உலகெங்கும் பல பெற்றோர் வியந்து பாராட்ட, நீங்கள் அதில ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு, கோமாளிக் கதை என்கிறீர்கள். உண்மையில், அந்தக் கதை பிடிக்காவிடில அதை தவிர்த்து விட்டு, கோமாளித்தனம் இல்லாதது என்று கருதும் கதைகளை அல்லவா நீங்கள் சிறுவர்களுக்கு காட்ட வேண்டும்.
 
பார்வதி குளிக்கும் போது, அங்கே வந்த (அவரது கணவர்) சிவனாரை உள்ளே போக விடவில்லை என்பதால் கோபமடைந்த சிவனார் பிள்ளையார் தலையினை வெட்டிவிட, அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த பார்வதி அழுத துயரத்தினை தாங்க முடியாது, எதிர்ப்பட்ட யானை ஒன்றின் தலையினை வெட்டி பிள்ளையார் முண்டதுடன் பொருத்தினார். இவ்வாறு பிள்ளையார் யானைத் தலை அடைந்தார்.
 
இது தான் கோமாளித்தனமான, வன்செயல் மிக்க, நீங்கள் சுட்டிக் காட்டக் கூடிய ஒன்று. அழகிய விளக்கங்கள் இருக்கையில், இந்த விளக்கம், இந்து மதம் குறித்த பெரிய அறிவு இல்லாத, வியாபார நோக்கம் கொண்ட, கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து குடியேறிய, இந்திய மூன்றாம் தலை முறையினால் இங்கே புத்தகம் மூலம் UK பாடசாலைகளுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. இவை இந்த தளத்தில் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பலருக்கு சிபார்சு செய்தேன்.
 
இப்படியே நொட்டை பிடித்துக் கொண்டிருதோம் ஆயின், முன்ன பின்ன கேள்விப் படாத வேற மத வியாபாரிகள் பிள்ளைகளை அணுகுவர் அது பரவாயில்லையா? அதுதான் இப்போது பரவலாக நடக்கின்றதே ? 
 
முதலில் ஒரு நல்ல முயற்சிக்கு வாழ்த்து தெரிவியுங்கள், பின்னர் உங்கள் கருத்துகளை அவர்களுக்கு நேரடியாக தெரிவியுங்கள், 
 
கட்டாயம் பள்ளியில் தான் ஒரு பிள்ளை சமய அறிவைப் பெறவேண்டும் என்பதில்லையே நாதமுனி. பெற்ரோர் எதைச் செய்கிறார்களோ அதையே பிள்ளைகளும் ஏற்றுக்கொள்கின்றனர்.
 
உங்கள் பாடசாலையில் அரை மணி சமயக் கல்வி நான் organize பண்ணினேன் என்று நேற்றும், இன்று அதற்கு முரணான statement ?
 
இலங்கையில் எமக்கான சமயக் கல்வி, வீட்டில் இல்லை, பாடசாலை மூலமாகவே 3ம் வகுப்பு முதல்,A/L வரை வழங்கப் பட்டது. அதன் காரணமாகவே, வேறு எந்த சமூகமும் செய்யாத அளவில், எம்மத்தியில் தோன்றும் கோவில்களுக்கு எம்மாதரவு முழுவதுமாக கிடைகின்றது.
 
ஆக்க பூர்வமாக விவாதித்தால் தொடரலாம். இல்லையாயின், இந்த திரியில் இருந்து விடை பெறுகின்றேன். நன்றி.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.