Jump to content

காட்சியும் கவிதையும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செம்பகன்.. படத்தில் எழுதும் போது எழுத்துரு பருமனை..  28.. அதற்கு மேல்.. வைச்சிருந்தால்.. வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும். அல்லது படத்தில் எழுதப்பட்டதையும் பதிவில் இணைத்துவிடுங்கள்.  :icon_idea:  :)

Link to comment
Share on other sites

  • Replies 109
  • Created
  • Last Reply

நெடுக்காலபோவான்,  suvy,   சியோன் யாழ்வேந்தன்

ஆகியோருக்கும்  நெடுக்காலபோவான்.ஆலோசனைக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  

 

2ptw96q.jpg

 

 

 

 

 

 

 

 

   நீ ஒரு பக்கம் நான் ஒரு பக்கம்

நின்மதி யிழந்து கொள்ளுறோம் ஏக்கம்

இளமை இன்பத்தை  இழக்காமல் நாம்

இணைந்து வாழ்வோம் இங்கேவா கண்ணே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்று.   "நாம் இணைந்து வாழ்வோம் இங்கே வா கண்ணே" என்பது சரியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

நன்று.   "நாம் இணைந்து வாழ்வோம் இங்கே வா கண்ணே" என்பது சரியாக இருக்கும்.

 

நன்றிகள் சியோன் யாழ்வேந்தன்.   மாற்றம் செய்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  

10ds4gp.jpg

 

 

   ஆசை ஆசையாய்க் கட்டியவர் வெளியே

அகதியாய் அலைகிறார் இருப்பிடமின்றி

அவர்களின் வருகை அழகூட்டுமென்று

ஆண்டுகள் பலவாய்க் காத்திருக்கிறோம் இங்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகிய கவிதை வரிகளுக்கு பொருத்தமான படம். வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  

 

 

 

 

 

 

 

 

   vq65xh.jpg   எல்லைகளுமில்லை விசாக்களுமில்லை

எங்கு  செல்வதற்கும்  தடைகளுமில்லை

சென்ற இடங்களில் நாம் தங்காமல்

தேசத்தை நோக்கியே சிறகுவிரிப்போம்.

Link to comment
Share on other sites

  

2j26ltz.jpg

   பங்களிப்புச் செய்யார்க்கு மேடை நிகழ்வில் தீண்டாமை

பள்ளி வேறானால் பொதுத் தேர்வில் தீண்டாமை

கட்சி மாறானால் கதைப்பதிலும் தீண்டாமை - இவை

கயவர்கள் கைக்கொள்ளும் புதுவிதத் தீண்டாமை

Link to comment
Share on other sites

  

 

  

   25tb3uc.jpg

 

   நிழல் தரும் மரமாய்

நிமிர்ந்து நிற்கும் காலம்

புகழ்பாடிப் பூரிப்புக் கொள்வார் - அது

சாய்ந்து வீழ்ந்தால் தறித்தெறிவார்

Link to comment
Share on other sites

   20hk1up.jpg

   பூக்களுடன் உறவாடிப் பூந்தேனைக் களவாடி

பூரிப்பாய்ப் பறந்த வண்டு வழியினிலே

மாம்பூவை  ஏமாற்றி மதுவுண்ட வேளையிலே -  அது

தன்னுள் அணைத்துத் தனிச் சிறையாக்கியதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாம்பழத்துக்குள் இருக்கும் வண்டு இப்படித்தான் மாட்டிக்கொண்டதா?

நல்ல கவிதை.

Link to comment
Share on other sites

  

 

 

 

 

 

 

 

 

 

   2vxg6t4.png   கோடைவெயிலின் கொடுமையால் தும்பி

கானகம் எங்கும் களைப்புடன் சுற்றி

தாகம்கொண்டு தடாகம் வர

தாமரைமொட்டு தாகம் தீர்த்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோடையைக் குளிர்விக்கும் கவிதை. 

வாழ்த்துகள்!

 

( தும்பி அல்லது வண்டு என்று சொல்வது வேறொன்று.  இந்தப் படத்தில் உள்ளதை தட்டாம்பூச்சி, தட்டான், தட்டாரப்பூச்சி என்று தமிழ்நாட்டில் சொல்கிறோம்.)

Link to comment
Share on other sites

நன்றி seyon yazhvaendhan 

எங்கள்   பகுதிகளில்  தும்பி என்றும்  தட்டான் என்றும்    தட்டாம் பூச்சி என்றும்   அழைப்பது வழமை. 

தட்டானில் மிகப் பெரியதை தும்பித் தட்டான் என்று கூறுவதும் உள்ளது.  . இத்தட்டான்களுக்கு,

சற்கரைத் தட்டான், ஊசித்தட்டான், சீனித் தட்டான். ... இப்படிப் பல. பல பெயர்களும் வைத்திருப்பார்கள்.  

உங்களின் கருத்து என்னைத் தேடலுக்கு உட்படுத்தியது. நன்று தொடர்ந்து இணைந்து பயணிப்போம். நன்றி.

                

Link to comment
Share on other sites

   

15waw6b.jpg

 

    உள்ளன்பு இல்லார் உறவு உறவல்ல

    உண்மை  மகிழ்வு  மல்ல  - இத்

 தகவிலார்  வாழ்வுடன் இணைவது

 தண்ணீரில் தாமரை இலை போலாகும்

Link to comment
Share on other sites

  

   2ryh8hi.jpg   குளிர்காலம்  முழுதும் கூடிக்கிடந்து

வேனிற்காலம் வர வெளியே சென்றவர்

இருளாகியும்  இல்லம் திரும்பவில்லையெனில்

ஏங்கித் தவிக்கும்   இளம் பேடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை நண்பரே.

 

   குளிர்காலம்  முழுதும் கூடிக்கிடந்து

வேனிற்காலம் வர வெளியே சென்றவர்

இருளாகியும்  இல்லம் திரும்பவில்லையெனில்

ஏங்கித் தவிக்கும்   இளம் பேடு.

 

திரும்பவில்லையெனில் என்ற சொல்லுக்குப் பதிலாக,

 

 திரும்பவில்லையென,  திரும்பவில்லையென்று என்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.

 

 

இருளாகியும்  இல்லம் திரும்பவில்லையென்

றேங்கித் தவிக்கும்   இளம் பேடு.

 

நன்றாக இருக்குமா என்று பாருங்கள்.

Link to comment
Share on other sites

 

தங்கள் கருத்துக்கு நன்றி    seyon yazhvaendhan

 

திரும்பவில்லையெனில்

ஏங்கித் தவிக்கும்   இளம் பேடு.

  என் எண்ணத்துக்கு பொருத்தமாக இருக்கிறது.

 

Link to comment
Share on other sites

242e9gk.png

 

வண்டொன்று எனைச் சுற்றி வட்டமிட

வனிதையர் தூதோவென நானெண்ணி

மெல்ல அதனருனே காதை நீட்ட

கடித்து  விசமேற்றிப் பறந்ததுவே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் பாட்டுக்குப் படம் தயார் செய்கிறீர்களா, அல்லது படத்துக்குப் பாட்டு எழுதுகிறீர்களா?   இந்தக் கவிதை முதல் வகை போலத் தோன்றுகிறது.  நன்று.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

seyon yazhvaendhan  நீங்கள் கூறுவது உண்மை.

சங்க காலத்தில் அன்னத்தைத் தூதுவிட்டார்கள். நாரையைத் தூது விட்டார்கள் என்று அறிய முடிகிறது. அவ்வகையில் பூங்காவில் நின்றபோது ஒரு குளவி என்னைச் சுற்றி வட்டமிட. யாராவது தூது அனுப்பினார்களோ என்று  என்னுள் ஒரு நப்பாசை.   படம் எடுக்க முடியவில்லை. படத்தைச் சேர்த்தேன். நன்றி உங்கள் ஆய்வுக்கும் கருத்துக்கும். .  

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.