Jump to content

தமிழ் புத்தாண்டு எது???


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் எதையும் காரண காரியத்தோடு செய்தவர்கள். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அப்படியானால் அவர்களின் புத்தாண்டில் ஏன் குழப்பம்? “தை” யா “சித்திரையா” – தெளிவாக நாம் அறிய வேண்டியது அவசியமாகிறது. தமிழக அரசும், கட்சிகளும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் தமிழ் அறிஞர்கள் எவரும் இதுவரை எது தமிழ் புத்தாண்டு என்பதை துல்லியமாக அறிவிக்க அஞ்சுகிறார்களா? அல்லது அவர்களுக்கும் தெரியாதா?

 

ஆண்டிற்கு 12 முழுநிலவும் (பவுர்ணமி) 12 நிலவில்லா (அமாவாசை) நாட்களும் உண்டு. குறைந்தாலும் கூடினாலும் தவறுதான்.

 

தினமும் சூரியன் கிழக்கே தோன்றி மேற்கே மறைகிறான். அத்தோடு சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கும் தெற்கும் சென்று வருகிறான். வடக்கே சென்று வடக்கிலிருந்து தெற்கே திரும்புவது – வடசெலவு என அழைக்கப்படுகிறது. அதேபோல தெற்கே சென்று “நின்று” வடக்கு திரும்புவது – தென்செலவு என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு வருடம் ஒருமுறை நடைபெறுகிறது. சூரியனின் இந்த தென்செலவைப் பொறுத்துதான் பூமியின் நிகழ்வுகள் அமைகின்றன. அதாவது மழை, புயல், வெள்ளம், கடற்கோள்கள் போன்றவைகளை கட்டியம் கூறி முன்னறிவிப்பவை இந்த தென்செலவு நாட்களே. இன்றைய நவீன அறிவியல் இதனை solstice (December solstice, June Solstice) என வகைப்படுத்துகிறது. அநேகமாக டிசம்பர் 21 அல்லது 22ம் தேதி இது நடைபெறலாம் என அறிவியல் கூறுகிறது. இது இந்த தேதியில்தான் நடைபெறுகிறதா? யார் இதனை பதிவு செய்கிறார்கள் என்பதனை தெரிந்தவர்கள் விளக்கமாக கூறினால் நலம்.

 

 

செந்தமிழ் இலக்கியங்கள் கூறுகிறபடி தென்செலவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் அனைத்து நல்லதையும், கெட்டதையும் தீர்மானிப்பவை இந்த தென்செலவுதான். அதாவது சூரியன் எல்லா ஆண்டிலும் இந்த டிசம்பர் 21 அல்லது 22ல் தென்செலவை முடிப்பதில்லை. சில நாட்கள் நின்று பின் திரும்புகிறது. இதனை தெளிவாக எவரும் கணக்கிடமுடியும். ஒரு சிறு குச்சியை ஊன்றி நிழல்களை கவனித்தால் போதும். சிறுபிள்ளைகள் கூட இதனைத் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். அதே சமயம், அதாவது தென்செலவு நேரத்தில் அமாவாசையும் சேர்ந்து வருவதால் நிலவின் அசைவுகளை வைத்து கணிப்பது கடினம். இதனால் அமாவாசை முடிந்து நிலவு தோன்றும் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது.

 

மரத்தச்சன் ஒரு மூலையை ‘தை’ப்பது போல இந்த தென்செலவுதான் வருட துவக்கமாக தமிழர்களால் கொண்டாடப்பட்டது. அதாவது சூரியன் தென் திசையில் தைக்கப்படுவதனால்தான், அம்மாதம் தை என்னும் பெயர் பெற்றது. அன்றுதான் பொங்கல் கொண்டாடப்படும் அரசு அறிவுரைப்படி. இன்று தமிழர்களுக்கான அரசு இருந்தால் அது முறைப்படி கொண்டாடப்பட்டிருக்கும். கடைசியாக அப்படி அறிவிப்போடு கொண்டாடிய தமிழ் அரசன் ராஜ ராஜ சோழன். அப்படியானால் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேல் தமிழர்கள் சுயம் இழந்து காணப்படுகிறார்கள். யாரோ சொல்வதை, பஞ்சாங்கம் பார்த்து சொல்வதை தமிழர்கள் கேண்டுக்கொண்டாட வேண்டிய இழிநிலை தமிழனுக்கு இன்று. ராஜேந்திர சோழன் காலம் தொட்டு இன்றுவரை இதுதான் நடைபெறுகிறது. சூரியனை, நிலவைப் பார்த்து கொண்டாட வேண்டிய தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கத்திற்குள் திணறி நிற்கும் அவலம்தான் இன்று. மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா அவர்கள் அறிவித்த சித்திரையும் அல்ல, மாண்புமிகு முன்னால் முதல்வர் மு. கருணாநிதி அறிவித்த தையும் அல்ல தமிழ் புத்தாண்டு.

இன்று தமிழர்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன? மார்கழி அமாவாசை முடிந்து முதல் நிலவு தோன்றும் நாளுக்கு அடுத்த நாளே தமிழ் புத்தாண்டு. தமிழர்கள் கொண்டாடவேண்டிய புத்தாண்டு இதுவே.

 

இப்போதே சிவப்பு அரிசியை ஊறப் போட்டு புளித்த அந்த அரிசியைக் கொண்டு முதல் நிலவுக்கு மறுநாள் பொங்கல் கொண்டாடுவோம். அன்று தெற்கு முகமாய் நின்று நம் முன்னோரை நினைவு கூற வேண்டிய நாள். இதைத்தான் கிறித்தவர்கள் ‘சகல பரிசுத்தவான் களின் திருநாள்’ (All Saints Day) என கொண்டாடுகிறார்கள். நாம் செய்வது என்ன என்பதை அறிந்து செய்வோம். அறியாமையை போக்குவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதியுள்ள நாளிலேயே நான் இம்முறை கொண்டாடுகிறேன். நன்றி கட்டுரைக்கு

Link to comment
Share on other sites

பூமத்திய ரேகையின் வடக்கில் வாழ்பவர்களுக்கு சூரியன் தெற்கில் செலவு பண்ணும் நாட்களில் :D டிசம்பர் மூன்றாம் வாரத்தில் ஒருநாளில் மிகக் குறைந்த அளவு சூரிய ஒளி கிடைக்கிறது. (இது குளிர்காலத் தொடக்கத்தின் முதல் நாள்) இதைத் தொடர்ந்து வரும் நாட்களில் கிடைக்கும் சூரிய ஒளியின் அளவு அதிகரித்துச் செல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலப் புத்தாண்டு
தமிழ்ப் புத்தாண்டு
சிங்கள தமிழ்ப் புத்தாண்டு
 இப்படிப் பலவகையான  புத்தாண்டுகளைத் தமிழனைத் தவிர யாரும் கொண்டாட மாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனின் எழுச்சிக்கும் தமிழ் புத்தாண்டு பொங்கலுக்கும் நிச்சயமான தொடர்பு உண்டு. தெரிந்தவர்கள் விளக்கமாக கூறவும்.

 

உலகிலே நம் இனம் தமிழினம். ஆங்கிலப் புத்தாண்டு, சிங்கள புத்தாண்டு பற்றிய கவலை நமக்கு தேவையில்லை. 

 

உலகிலே தமிழர், தமிழல்லாதவர் என்னும் நிலைப்பாட்டை தமிழர்கள் எடுத்தால் மட்டுமே, தமிழனுக்கு விடிவு உண்டு. இல்லையேல் இல்லை. 

 

பாண்டியன் அழகாக கூறுகிறான் 'தமிழ் பொது எனப் பொறான்' - புரியும் தமிழர்களுக்கு புரிந்தால் சரி.

Link to comment
Share on other sites

மாதத்தில் முதலாவது முழு நிலவு வரும் நாளை வருடத்தின் முதல் நாளாகக் கணிக்க முடியாது. நிலவின் சுழற்சிக் காலம் 29.5 நாட்கள். வருடத்தில் 365 நாட்கள் வராது. முழு நிலவு  மார்கழி மாதத்தில்  15ஆம் திகதியும் வரலாம் தை 15 ஆம் திகதியும் வரலாம்.

Link to comment
Share on other sites

இன்று தமிழர்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன? மார்கழி அமாவாசை முடிந்து முதல் நிலவு தோன்றும் நாளுக்கு அடுத்த நாளே தமிழ் புத்தாண்டு. தமிழர்கள் கொண்டாடவேண்டிய புத்தாண்டு இதுவே.

 

இப்போதே சிவப்பு அரிசியை ஊறப் போட்டு புளித்த அந்த அரிசியைக் கொண்டு முதல் நிலவுக்கு மறுநாள் பொங்கல் கொண்டாடுவோம். அன்று தெற்கு முகமாய் நின்று நம் முன்னோரை நினைவு கூற வேண்டிய நாள். இதைத்தான் கிறித்தவர்கள் ‘சகல பரிசுத்தவான் களின் திருநாள்’ (All Saints Day) என கொண்டாடுகிறார்கள். நாம் செய்வது என்ன என்பதை அறிந்து செய்வோம். அறியாமையை போக்குவோம்.

 

எதை சகல பரிசுத்தவான்களின் திருநாளாக கொண்டாடுவார்கள்???? :rolleyes:  All Saints Day நினைவுகூறப்படுவது கார்த்திகை 1ம் நாள். அதற்கும் புத்தாண்டுக்கும் என்ன தொடர்பு என்று விளங்கவில்லை :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் எழுச்சிக்கும் தமிழ் புத்தாண்டு பொங்கலுக்கும் நிச்சயமான தொடர்பு உண்டு. தெரிந்தவர்கள் விளக்கமாக கூறவும்.

 

உலகிலே நம் இனம் தமிழினம். ஆங்கிலப் புத்தாண்டு, சிங்கள புத்தாண்டு பற்றிய கவலை நமக்கு தேவையில்லை. 

 

உலகிலே தமிழர், தமிழல்லாதவர் என்னும் நிலைப்பாட்டை தமிழர்கள் எடுத்தால் மட்டுமே, தமிழனுக்கு விடிவு உண்டு. இல்லையேல் இல்லை. 

 

பாண்டியன் அழகாக கூறுகிறான் 'தமிழ் பொது எனப் பொறான்' - புரியும் தமிழர்களுக்கு புரிந்தால் சரி.

 

ஒன்றை எழுதிவிட்டு புரியும் தமிழனுக்குப் புரிந்தால் சரி என்று எப்படிக் கூறுவீர்கள் ???அனைவருக்கும் புரியும்படி கூறவேண்டும்.

 

Link to comment
Share on other sites

தமிழ் வருடம் சித்திரைப்புத்தாண்டுதான்,தை மாதம் அறுவடைகாலம் அது சூரியனுக்கு நன்றி சொல்லும்  நிகழ்வு,அது தான் தைப்பொங்கல்.மற்றும் மாடுகளின் மூலம் உழவு மற்றும் நீர் இறைத்தல் செய்வதால் பட்டிப்பொங்கல் செய்வார்கள்.இதுவும் ஒருவகை  தாங்க்ஸ் கிவ்விங்தான்

Link to comment
Share on other sites

உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்.
உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள்!
உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்!
உயரிய கலைகளைக் கொடுத்தவர்கள்!
உயரிய பண்பாட்டைக் கொடுத்தவர்கள்!
அவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்-கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர்!. அதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து கணக்கிட்டுச் சொன்னவர்கள்.
ஒரு நாள் என்பது என்ன?
சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.
ஒருமாதம் என்பது என்ன?
ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்கு திங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்-படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.
அதேபோல் ஆண்டு என்பது என்ன?
சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் (உத்ராயணம் தொடங்கும்) நாள் முதல் மீண்டும் அதே நிலை (உத்ராயணம் மீண்டும்) தொடங்கும் வரையுள்ள

கால அளவு ஓர் ஆண்டு.
அதாவது சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒருநாள்.
சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.
சுருங்கச் சொன்னால் ஓர் உத்ராயணத் தொடக்கத்திலிருந்து மீண்டும் அடுத்த உத்ராயணத் தொடக்கம் வரும் வரையுள்ள காலம் ஓர் ஆண்டு.
உத்ராயணம் என்றால் வடக்கு நோக்கல் என்று பொருள். தட்சணாயனம் என்றால் தெற்கு நோக்கல் என்று பொருள்.
சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் பங்குனி சித்திரையில் உச்சியில் இருக்கும் பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும் பின் தென் கோடிக்கு வந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு.
சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்து அவ்வாறு கணித்தனர்.
இவ்வாறு சூரியனின் இருப்பைக் கொண்டுதான் நாளும் கணக்கிடப்பட்டது. ஆண்டும் கணக்கிடப்பட்டது. நிலவைக் கொண்டு மாதம் கணக்கிடப்பட்டது. ஆக காலக் கணக்கீடுகள் என்பவை இயற்கை நிகழ்வுகளை வைத்தே கணக்கிடப்பட்டன. இவ்வாறு முதலில் கணக்கிட்டவர்கள் தமிழர்கள்.
தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்-டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின் முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.ஆக இயற்கை நிகழ்வுகளின் சுழற்சியை அடிப்படையாக வைத்துத்தான் காலக்-கணக்கீடு என்பது உறுதியாவதோடு தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதும் உறுதியாகிறது.இழிவு என்று தெரிந்தும் உண்மை என்பது விளங்கியும் இழிவைச் சுமப்பது இந்த இனத்திற்கு அழகாகுமா? எனவே தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி தலை நிமிர்ந்து தமிழனாக வாழ்வோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாதத்தில் முதலாவது முழு நிலவு வரும் நாளை வருடத்தின் முதல் நாளாகக் கணிக்க முடியாது. நிலவின் சுழற்சிக் காலம் 29.5 நாட்கள். வருடத்தில் 365 நாட்கள் வராது. முழு நிலவு  மார்கழி மாதத்தில்  15ஆம் திகதியும் வரலாம் தை 15 ஆம் திகதியும் வரலாம்.

 

"மார்கழி அமாவாசை முடிந்து முதல் நிலவு தோன்றும் நாளுக்கு அடுத்த நாளே தமிழ் புத்தாண்டு. தமிழர்கள் கொண்டாடவேண்டிய புத்தாண்டு இதுவே."

 

ஐயா அமாவாசை முடிந்து நிலவு தோன்றும் முதல் நாள் அதாவது அது முழு நிலவு நாளல்ல. இன்னும் தெளிவாகக் கூறினால் அமாவாசை முடிந்து நிலவு தோன்றும் முதல்நாள் அதாவது சரியாக அமாவாசை முடிந்து 3ஆம் நாள் தோன்றலாம். அதுவும் மாலை 5 மணி முதல் 7மணி வரை தான் அந்த நிலவு இருக்கும். பின் மறைந்துவிட வாய்ப்பு உண்டு.

 

பழந்தமிழ் இலக்கியங்கள் ஆண்டிற்கு 360 நாட்கள் உண்டு எனக் கூறுகிறது. சூரியன் தெற்கே தைக்கப்பட்டதால்தான் நமது முதல் மாதம் 'தை' ஆகியது. இவை போக முதல் நிலவு வெளிறியிருந்தால், பளிச்சென்றிருந்தால், மாசுபட்டிருந்தால், தேற்கே சாய்ந்திருந்தால், தேற்கே ஏறியிருந்தால்..... என பல விளக்கங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்கால நிகழ்வுபடி இவை பொருந்துகிறதா எனவும் ஆய்வு தேவை. கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் தமிழன் இந்த கண்ணோட்டத்தையே மறந்ததுதான் அத்தனை தவறுகளுக்கும் காரணமாகியது. பஞ்சாங்கத்தை நம்பும் தமிழன் சூரியனையும், சந்திரனையும் பார்க்க மறந்தது தான் நம் அறிவை இழந்ததற்கு காரணம். நம் இளந்தலைமுறைக்கு அறிவை ஊட்டலாமா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றை எழுதிவிட்டு புரியும் தமிழனுக்குப் புரிந்தால் சரி என்று எப்படிக் கூறுவீர்கள் ???அனைவருக்கும் புரியும்படி கூறவேண்டும்.

சரியான கூற்று.

 

"பாண்டியன் அழகாக கூறுகிறான் 'தமிழ் பொது எனப் பொறான்' - புரியும் தமிழர்களுக்கு புரிந்தால் சரி" 

பாண்டியன் கூறியிருக்கிறான் அவ்வளவே. தமிழர்கள் அனைவருக்கும் புரியும் என்ற நம்பிக்கையில் தான் எழுதுகிறேன்.

 

"தமிழ் வருடம் சித்திரைப்புத்தாண்டுதான்,தை மாதம் அறுவடைகாலம் அது சூரியனுக்கு நன்றி சொல்லும்  நிகழ்வு,அது தான் தைப்பொங்கல்.மற்றும் மாடுகளின் மூலம் உழவு மற்றும் நீர் இறைத்தல் செய்வதால் பட்டிப்பொங்கல் செய்வார்கள்.இதுவும் ஒருவகை  தாங்க்ஸ் கிவ்விங்தான்" - Blue Bird.

 

இப்படி புரிந்துகொள்ள மறுக்கும் தமிழர்களும் இருக்கிறார்கள் என்பதால்தான் 'புரியும் தமிழர்களுக்கு புரிந்தால் சரி' என எழுதவேண்டியதாயிற்று. நான் கூறியது தவறு என நீங்கள் நினைத்தால், மன்னித்துகொள்ளுங்கள்.

 

 


எதை சகல பரிசுத்தவான்களின் திருநாளாக கொண்டாடுவார்கள்???? :rolleyes:  All Saints Day நினைவுகூறப்படுவது கார்த்திகை 1ம் நாள். அதற்கும் புத்தாண்டுக்கும் என்ன தொடர்பு என்று விளங்கவில்லை :unsure: - தமிழினி.

 

 

All Saints Dayக்கும் தமிழ் புத்தாண்டான தைக்கும் சம்பந்தம் உண்டு என்பதற்காக இதை நான் கூறவில்லை.

 

மறைந்தவர்களை நினைவுகூறல் - கிறித்தவத்திலும் உண்டு. அது தமிழனிடத்தில் இருந்திருக்கிறது என்பதற்காகவே நான் அதை கூறினேன். All Saints Day - தமிழில் இருந்து கிறித்தவத்திற்கு சென்றிருக்கிறதா அல்லது கிறித்தவத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கிறதா என பட்டிமன்றமே நடத்தலாம். தமிழில் இருந்துதான் கிறித்தவத்திற்கு சென்றிருக்கவேண்டும் என்பது என் கணிப்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.