Jump to content

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டன்மானை கடத்திச் சென்ற புளொட்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -43

பொட்டன்மானை கடத்திச் சென்ற புளொட்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -43
 

இந்தியா மறுப்பு:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய குண்டுவெடிப்பு இந்திய மத்திய அரசை தர்மசங்கடத்தில் மாட்டிவிட்டது.

ஈழப் போராளிகள் பயிற்சி முகாம்கள் எதுவும் தமிழ்நாட்டில் இல்லையென்று இந்திய அரசு மறுத்து வந்துள்ளது.

‘இந்திய ருடே‘ சஞ்சிகையில் தமிழ் நாட்டில் இருந்த போராளிகளின் பயிற்சி முகாம்கள் பற்றிய புகைப்படம் வெளியாகிய பின்பும், இந்தியா தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்தே வந்தது.

premadasa deviyar illam  பொட்டன்மானை கடத்திச் சென்ற புளொட்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -43 premadasa deviyar illamஅப்போது இலங்கை பிரதமராக இருந்தவர் பிரேமதாசா ‘இந்திய ருடே’ சஞ்சிகையில் புகைப்படங்கள் வெளியானதையடுத்து பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றினார்.

“இந்தியாவில் பயிற்சி முகாம்கள் இயங்குகின்றன. பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் பிரதமராக இதனைக் கூறுகின்றேன்.

இது தொடர்பாக இந்திய அரசு பொறுப்புடன் கவனிக்க வேண்டும்.

இந்தியா எங்களை அற்பத்தனமாக நினைக்க் கூடாது. எமக்கும் சுயகௌரவம் இருக்கிறது. எந்தச் சவாலையும் சந்திக்க நாம் தயார்”

என்று பேசினார் பிரேமதாசா.  அப்போது குறுக்கிட்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சி பா.உ. லக்ஷமன் ஜெயயக்கொடி ஒரு கேள்வி தொடுத்தார்.

“பிரிவினைவாதிகளுக்கு பயிற்சியளிப்பதாக வந்துள்ள செய்திகள் தவறானவை என்று இந்தியத் தூதர் மறுத்துள்ளாரே? என்று அவர் கேட்டார்.

பிரதமர் பிரேமதாசாவுக்கு கோபம் வந்துவிட்டது.

“நீங்கள் என்னை நம்புகிறீர்களா? இந்திய தூதரை நம்புகிறீர்களா? என்று காரசாரமாக கேட்டார்.

anura_4  பொட்டன்மானை கடத்திச் சென்ற புளொட்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -43 anura 4அநுராபண்டாரநாயக்கா.

அநுராவின் பேச்சு

அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் திரு.அநுராபண்டாரநாயக்கா.

பிரதமர் பிரேமதாசாவின் பேச்சுக்கு பதிலளிப்பதுபோல, அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

அவர் சொன்னது இது,

“இந்தியாவில் தீவிரவாதிகளுக்கு பயிற்சியக்கப்படுவது தொடர்பான தகவலில் உண்மை இல்லை” என்று இந்தியத் தூதர் திரு.எஸ்.ஜே.சத்வால் என்னிடம் கூறினார்.

இந்திய அரசு சார்பிலான அவரது கூற்றினை நாம் ஏற்கவேண்டும்.

திரு.சத்வால் திறமைமிக்க ஒரு தூதுவர்.

இந்திய பிரதமர் திருமதி இந்திராகாந்தியினதும், இந்திய அரசின் சார்பிலும் அவர் பதிலளித்துள்ளார்.

இதனை நாம் மறுக்க முடியாது.

அணிசேரா இயக்கத்தின் தலைவியான திருமதி இந்திரா காந்தியின் உறுதிமொழியை நாம் சந்தேகிக்கூடாது”என்றார் அநுரா பண்டாரநாயக்கா.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரே வடக்கு-கிழக்கு பிரச்சனையின் வளர்ச்சி,அதன் விரிவுகள், தொடர்புகள் குறித்து சரியான தகவல்கள் இல்லாமல் எந்தளவுக்கு அப்பாவித்தனமாக பேசியிருக்கிறார் என்று தெரிகிறதல்லவா.

தற்போதும் பெரும்பான்மை இனக்கட்சித் தலைவர்கள் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்.

அதுதான் இனப் பிரச்சனையின் வடிவத்தை அவர்களால் சரவரப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இலங்கையில்கூட இந்தியாவின் மறுப்பை ஒரு சாரர் நம்பிக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில்… மீனம்பாக்கம் குண்டுவெடிப்புக்கு ஈழப்போராளிகளே காரணம் என்று வெளியே தெரிந்தால் தமது மறுப்பு  பொய்யாகிவிடும் என்று இந்திய மத்திய அரசு நினைத்தது.

விமானத்தில் குண்டை ஏற்றி, கொழும்பு விமான நிலையத்தில் வெடிக்க வைப்பதே தமிழீழ இராணுவத்தின் நோக்கம் என்பதையும் இந்திய அரசு தெளிவாக அறிந்து கொண்டது.

 

தமிழீழ இராணுவத்தின் இந்த நோக்கம் வெளியானாலும் அதனால் ஒரு பிரச்சனை இந்தியாவுக்கு ஏற்படலாம.

இலங்கையில் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு தளமாக பாவிக்கப்பட்டு வருவதாக குற்ச்சாட்டு எழுந்துவிடும்.

எனவே-குண்டுவெடிப்புக்கு ஈழப் போராளி அமைப்பு ஒன்றுதான் காரணம் என்ற உண்மையை அப்படியே அமுக்கிவிடவே மத்திய அரசு தீர்மானித்தது.

அனால், இதற்கிடையே தமிழக பொலிஸ் தீவிரமாகச் செயற்பட்டு தமிழிழ இராணுவத்தின் உறுப்பினர்கள் சிலரைக் கைது செய்தது.

அவர்கள் கொடுத்த தகவலை வைத்து குண்டு தயாரிக்கப்பட்ட இடமும் கண்டு பிடிக்கப்பட்டது.

mgr rare picture  பொட்டன்மானை கடத்திச் சென்ற புளொட்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -43 mgr rare pictureஎம்.ஜி.ஆரின் குழப்பம்

இந்த நேரத்தில்தான் இந்திய மத்திய அரசு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரோடு தொடர்புகொண்டது.

விசாரணைகளை தீவிரப்படுத்துவதையும், அது பற்றிய செய்திகள் உள்ளுர் பத்திரிகைகளில் வெளியாவதையும் மத்திய அரசு விரும்பவில்லை என்று எம்.ஜி. ஆரக்கு சூசகமாக சொல்லப்பட்டது.

எம.ஜி.ஆர் குழம்பிப் போனார்.

தமிழக இரகசியப் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த மோகனதாசை அழைத்தார் எம்.ஜி.ஆர்.

அழைத்து என்ன சொன்னார் எம்.ஜி.ஆர்? அதனை மோகனதாஸ் தனது எம்.ஆர். நிழலும் நிஜமும் என்ற நூலில் கூறுகிறார். அது இதுதான்.

” அவர் ஒரு குழபத்தில் இருந்தார். வெடிகுண்டு சம்பவத்தில் “மொசாத்” தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி மீண்டும் கேட்டார்.

அதை நாம் ஏற்றுக்கொண்டால் நம்மை கண்டு சிரிப்பார்கள் என்றேன்.

இதுவரை செய்யப்பட்ட குற்றப்புலனாய்வில் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லையென்றால், என்னை உளவுத்துறைப் பதவியில் இருந்து அவர் விடுவித்துவிடலாம் என்றேன்.

ஒரு நிமிட்ம் யோசித்தார். பிறகு புன்புறுவல் பூத்தபடியே “புது டெல்லி அவர்கள் விரும்பியபடியே செய்து கொள்ளட்டும். நீங்கள் உங்கள் விசாரணையை தொடருங்கள் என்றார்.

எம்.ஜி.ஆர்” என்று மோகனதாஸ் தனத நூலில் குறிப்பிடுகிறார்.

ஆனாலும், குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் அடக்கமாகவே பின்னர் மேற்கொள்ளப்பட்டன.

தடையில்லை

தமிழீழ ஈழ இராணுவத் தலைவர் தம்பாபிள்ளை மகேஸ்வரன் தலைமறைவாக இருந்தார். ஆயினும் தமிழ் ஈழ இராணுவம் தொடர்ந்தும் தமிழ் நாட்டில் இயங்குவதற்கு எவ்வித தடையும் இருக்கவில்லை.

விக்கினேஸ்வரராஜா (இலங்கையில் சுங்க இலாகா அதிகாரியாக இருந்தவர்) சந்திரகுமார்(தமிழ் பொலிஸ் கான்ஸ்டபில்) மற்றும் ஏர்லங்காவில் பணியாற்றிய இந்தியாவை சேர்ந்த இரு தமிழர்கள் ஆகியோர் உடனடியாக கைதுசெய்யப்பட்டனர்.

‘த லீக்’ என்னும் இந்திய ஆங்கில சஞ்சிகை பின்வருமாறு எழுதியிருந்தது.

“தமிழ் நாட்டு குற்றப்புலனாய்வுத்துறை பாராட்டப்படும் விதத்தில் செயற்பட்டிருக்கிறது.

ஆனால்.., இந்தச் சம்பவம் முழுமைக்கும் அரசியல் சாயம் பூச அரசியல்வாதிகள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். காவல்துறையின் கண்டுபிடிப்பை அடுத்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலிருந்து செயற்படும் ஈழப்போராளிகள் குழுக்களுக்கு அரசு ஏன் ஆதரவு தரவேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள்”

ஆனாலும் இத்தகைய கேளவிகள் எல்லாம் தமிழ்நாட்டின் சாதாரண மக்களிடம் செல்லவில்லை.

ஈழப் போராளிகளுக்கு தமிழக மக்கள் வழங்கிய ஆதரவு துளியும் குறைவின்றித் தொடரவே செய்தது.

Kalangher  பொட்டன்மானை கடத்திச் சென்ற புளொட்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -43 Kalangherகலைஞரின் ரெசோ

இக்காலகட்டத்தில் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கினார்.

‘ரெசோ‘ என்று அது சுருக்கமாக அழைக்கப்பட்டது.

“இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்படவேண்டும்” என்று கருணாநிதி குரல் கொடுக்கத்தொடங்கினார்.

முக்கியமாக மூன்று கோரிக்கைகளை கலைஞர் கருணாநிதியால் முன்வைக்கப்பட்டன.

01.இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்படவேண்டும்.

02. இலங்கையுடன் இந்திய தனது இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்ளவேண்டும்.

03.தனித் தமிழீழம் உருவாக மத்திய அரசு ஆவனசெய்ய வேண்டும்.

கோரிக்கைகளை வலியுறுத்த போராட்டம் நடத்தினார் கலைஞர்.

கைதுசெய்யுமாறு கட்டளையிட்டார் எம்.ஜி.ஆர்.

எட்டாயிரம் தொண்டர்களோடு சிறைபுகுந்தார் கலைஞர்.

“உலகத் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞரை விடுதலை செய்” என்று குரல் எழுப்பினார்கள் தி்.மு.க தொண்டர்கள்.

இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் எம்.ஜி.ஆர் அரசு ஏன் கைது செய்ய வேண்டும்?

ஆகவே, எம்.ஜி.ஆருக்கு தமிழ் பற்றுகிடையாது என்று தி.மு.க சொல்லிக்கொள்ள அதுவும் ஒரு வாய்ப்பானது.

தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (ரெசோ) மூலமாக கலைஞர் கருணாநிதி “ரெலோ” இயக்கத்துக்கு மட்டுமே முக்கியத்துவமளிக்க முற்பட்டார்.

இதனால் ஏனைய போராளி அமைப்புகள் “ரெசோ” “ரெலோ”வை வளர்க்கும் அமைப்பு என்று கூறி அதனிடமிருந்து விலகியே இருந்துகொண்டனர்.

ரெசோவுக்குள் முரண்பாடு

கலைஞர் கருணாநிதியோடு திராவிடர் கழகத்தலைவர் சி.வீரமணி,நெடுமாறன் ஆகியோரும் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இணைந்து செயற்பட்டு வந்தனர்.

சி.வீரமணியும், நெடுமாறனும் புலிகள் இயகத்தை ஆதரித்து வந்தனர்.

அதனால் ரெசோவுக்குள், ரெலோவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.

இக்காலகட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து ஆவேசமாக குரல் கொடுத்தபடி ஒருவர் களத்தில் இறங்கினார்.

அனைவரது கவனமும் அவர் மீது திரும்பியது.

அவர்தான் மதுரை ஆதீனம்

கடவுளே இல்லை என்று மறுத்துவரும் வீரமணி போன்றவர்களோடு, மடாலயபதி ஏன் இணைந்து கொண்டார் என்றும் சிலர் கேள்வி எழுப்பினார்கள்.

கேள்வியில் கேலியுமிருப்பதை புரிந்துகொண்டவராக மதுரை ஆதீனம் பதில் சொன்னார்.
” தமிழர்கள் என்ற இன உணர்வு நம்மை இணைத்திருக்கிறது”

தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு அலை வீசிக்கொண்டிருந்தபோது, தமிழ் நாட்டில் தங்கியிருந்த போராளி அமைப்புகள் மத்தியிலான சிறு சிறு உரசல்களும் தொடர்ந்துகொண்டே இருந்தன.

குறிப்பாக புலிகள் அமைப்பினருக்கும், புளொட அமைப்பினருக்குமிடையே கடும் பிரச்சனை நிலவி வந்தது.

நேரில் சந்தித்துக்கொண்டால் மோதிக்கொள்ளும் அளவுக்கு பிரச்சனை சூடாக இருந்தது.

podu  பொட்டன்மானை கடத்திச் சென்ற புளொட்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -43 podu (பொட்டு அம்மான்  தலைவர் பிரபாகரனுடன்)

புலிகள் கடத்தல்: கூட்டணி தலைவாகள் வீட்டில் புலி உறுப்பினர்களுக்கு அடி

1502.85 இல் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை புளொட் அமைப்பினர் சென்னையில் வைத்து கடத்திச் சென்றனர்.

கடத்தப்பட்டவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தெரியந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சங்கரியின் சென்னையிலுள்ள வீட்டுக்குத்தான் கடத்தப்பட்டவர் கொண்டு செல்லப்பட்டார்.

கடத்தி செல்லப்பட்டவரின் பெயர் ஆதவன்.

அதைத் தொடர்ந்து 05.03.85ல் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர் ஒருவரையும், இன்னொரு உறுப்பினரையும் புளொட் அமைபினர் கடத்திச் சென்றனர்.

அவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட புலிகளது மூத்த உறுப்பினர் வேறு யாருமல்ல, பொட்டம்மான் தான் அவர்.

அப்போது ‘பொட்டு’ என்று அழைக்கப்பட்டார்.( பின்னர் புலிகளின் உளவுப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர்)

பொட்டம்மானிடம் இருந்த கைத்துப்பாக்கியையும் பறித்துவிட்டு விடுவித்தனா புளொட் அமைப்பினர்.

இதற்கு முன்னர் யாழ்பாணம் சுழிபுரத்தில் வைத்து புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் 06 பேர் புளொட் அமைப்பினரால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.

இது நடந்தது 25.11.84ல் புலிகள்

அமைப்பு உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவதை கண்டுவிட்டனர் இரு இளைஞர்கள். அதனால் அவர்களும் கொல்லப்பட்டர்.

இக்கொலைகளைத் தொடர்ந்தே புளொட் அமைப்புக்கும், புலிகள் அமைப்புக்கு மிடையிலான மோதல் நிலை தீவிரம் அடைந்தது.

கண்ணன் கடத்தல்

பொட்டம்மான் கடத்தப்பட்டதோடு பிரபாகரன் சீற்றம் அடைந்தார்.

தமது மூத்த உறுப்பினர் கடத்தப்பட்டதற்கு பதில் நடவடிக்கை எடுக்க புலிகள் திட்டமிட்டனா.

சென்னையில் உள்ள மகாவலிங்கபுரம் என்னுமிடத்தில் தமிழ் தகவல் நிலைய அலுவலகம் இருந்தது.

07.03.85 காலை 09 மணிக்கு அங்கு வந்தார் புளொட் அமைப்பின்  படைத்துறைச் செயயலாளா கண்ணன்.

தமிழ் தகவல் நிலையத்தில் இருந்த ரெலோ உறுப்பினனரான குலசிங்கம் என்பவரோடு கண்ணன் பேசிக்கொண்டிருந்தார்.

திடீரென அலுவலகத்தின் வெளியே வெடி ஓசை கேட்டது.

புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினரான சங்கர் என்று அழைக்கப்படும் சொர்ணலிங்கமும், வேறு சில புலிகளும் உள்ளே வந்தனா.

கண்ணணை தம்மோடு வருமாறு கூறி வேன் ஒன்றில் கொண்டுசென்றனர்.

கண்ணனோடு வந்திருந்தவர்களில் ஒருவரான ரவி என்னும் புளொட் உறுப்பினருக்கும் காலில் சுட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

தமிழக பொலிஸ் துறையும், உளவுப்பிரிவும் தலையிட்டு கண்ணனை விடுதலை செய்யுமாறு புலிகளிடம் கோரின.

இரண்டு மணி நேரத்தின் பின்னர் கண்ணன் விடுவிக்கப்பட்டார்.

இதணையடுத்து புளொட் அமைப்பினர் விடுத்த அறிக்கையில் கடத்திச் செல்லப்பட்ட கண்ணன் பிரபாகரன் முன்னிலையில் கை,கால்களுக்கு விலங்குகள் பூட்டப்பட்டு,சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

கண்ணன் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து புலிகள் அமைப்பினரும் விரிவான பிரசுரம் வெளியிட்டிருந்தனர்.
“இது ஒரு இறுதி எச்சரிக்கை நடவடிக்கையாகும்” என்று தெரிவித்த புலிகள் அமைப்பினர், தமது உறுப்பினர்கள் கடத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு கண்ணனே பொறுப்பாகும் என்றும் கூறியிருந்தனர்.

1985 இன் ஆரம்பத்தில் யாழ்பாணத்தில் புலிகள் அமைப்பினரின் பிரதான மறைவிடம் ஒன்றை நோக்கி இராணுவத்தினர் முன்னேறிக்கொண்டிருந்தனர்.

(தொடந்து வரும்)

(அரசியல் தொடர்… எழுதுவது..அற்புதன்)

thuraijapa  பொட்டன்மானை கடத்திச் சென்ற புளொட்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -43 thuraijapa

http://ilakkiyainfo.com/55977/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெண் கடற்புலிகளுக்கு வந்த கௌரவப் பிரச்சனை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை – 44)

பெண் கடற்புலிகளுக்கு வந்த கௌரவப் பிரச்சனை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை  – 44)
 
 

 

பொலிஸார் எங்கே??

முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் உள்ளடக்கிய வன்னித்தளபதியாக மாத்தையாவே புலிகள் இயக்க நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்து வந்தார்.

05.8.84 அன்று ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையம் மீது புலிகள் நடத்திய தாக்குதல் பற்றி முன்னர் கூறியிருந்தேன்.

75f7579770a59159cab603435096c078  பெண் கடற்புலிகளுக்கு வந்த கௌரவப் பிரச்சனை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை  - 44) 75f7579770a59159cab603435096c078மாத்தையா
அத்தாக்குதலும் மாத்தையாவின் வழிநடத்தலில்தான் மேற்கொள்ளப்பட்டது,

அத்தாக்குதலையடுத்து  முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்த மாத்தையா திட்டமிட்டார்.

திட்டம் எல்லாம் வகுத்தாகிவிட்டது. தாக்குதல் நடத்தும்  அணிகளையும் ஒழுங்கு செய்து முடித்தாகிவிட்டது.

தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் பொலிஸ் நிலையத்தை நோட்டமிட்டு வர ஒருவரை அனுப்பிவைத்தார் மாத்தையா.

நோட்டம் பார்க்கச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பொலிஸ் வெறிச்சோடிபபோய் கிடந்தது. அங்கு பொலிசார் யாரும் இருக்கவில்லை.

தாக்குதல் திட்டத்தை முன்கூட்டியே அறிந்தோ என்னவோ பொலிஸ் நிலையத்தை மூடிவிட்டு வாபஸாகியிருந்தனர் பொலிஸார்.

இன்னொரு முறை தாக்குதல் ஒன்றுக்குப் பயன்படுத்த வாகனம் ஒன்று தேவையாக இருந்தது. வீதியில் காத்திருந்தனர்.

ஜீப் ஒன்று வந்தது. கை காட்டி நிறுத்தினார்கள்.

ஜீப்பை நிறுத்திய சாரதிக்கு விஷயம் விளங்கிவிட்டது. சட்டென்று ஜீப்பைக் கிளப்பிக் கொண்டு பறந்து விட்டார்.

மாத்தையா உட்பட யாருமே அதனை எதிர்பார்க்கவில்லை.

இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், அக்கால கட்டத்தில் வாகனம்  ஒன்றைக் கடத்துவது கடினமான காரியமாக இருந்தது.

இப்பொழுது விமானத்தையே புலிகள் கடத்தக்கூடும் என்று நினைக்கும் அளவுக்குப் போராட்ட அனுபவங்கள் வளர்ந்திருக்கின்றன.

முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத் தாக்குதல் முயற்சி தோல்வி அடைந்த பின்னர்தான் இராணுவ ரோந்து அணியினர் மீது குறிவைக்கப்பட்டது.

அத்தாக்குதல் குறித்து சென்ற வாரம் குறிப்பிட்டுவிட்டேன்.

thileepan1  பெண் கடற்புலிகளுக்கு வந்த கௌரவப் பிரச்சனை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை  - 44) thileepan1திலீபனுக்குப் பொறுப்பு

யாழ்பாண மாவட்டத்திற்கான  புலிகளின் பொறுப்பாளராக கிட்டு பொறுப்பேற்ற பின்னர் ஒரு பிரச்சனை எழுந்தது.

யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளராக யாரை நியமிப்பது என்பதுதான் பிரச்சனை.

யாழ்-பல்கலைக்கழக மாணவரான ரவிசேகர்தான் அரசியல் பதவிக்குப் பொருத்தமானவர் என்று யாழ்மாவட்ட புலிகளில் ஒரு பகுதியனர் அபிப்பிராயம் கொண்டிருந்தனர்.

ஆனால்  கிட்டுவுக்கு ரவிசேகர் மீது அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் கிடையாது. எனவே ரவிசேகரை நியமிக்காமல் திலீபனை யாழ் மாவட்டத்திற்கான புலிகளது அரசியல் பிரிவு பொறுப்பாளராக நியமித்தார் கிட்டு.

திலீபனும் கிட்டுவோடு இந்திய அரசு வழங்கிய இராணுவ பயற்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்பியருந்தார்.

ரவிசேகரை ஓரம் கட்டியது யாழ் பல்கலைகழகத்தல் இருந்த புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை.

எனவே அவர்களில் சிலர் இயக்க நடவடிக்கைகளைக் கைவிட்டு ஒதுங்கி இருக்க தொடங்கினார்கள்.

யாழ்பாண பல்கலைக்கழகத்தில் மறுமலர்ச்சி கழகம் என்ற பெயரில் புலிகள் அமைப்பினர் செயற்பட்டு வந்தனர்.

மறுமலர்ச்சி கழகம் ஒருபொதுவான அமைப்பு என்று கூறப்பட்டு வந்தபோதும், புலிகள் அமைபின் ஒரு பிரிவாகவே  இயங்கி வந்தது.

தளிர் என்னும் சஞ்சிகை ஒன்றும் அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டு வந்தது.

மறுமலர்ச்சி கழக செயற்பாட்டில் ரவிசேகரின் பங்கும் முக்கியமானதாக இருந்தது.

உண்மையில் ரவிசேகருடன் ஒப்பிடும்போது  திலீபனுக்கு அதக்காலகட்டத்தில் பொறுப்பு வழங்கப்பட்டமை முறையல்ல என்ற கருத்தியல்  நியாயமில்லாமில்லை.

 எனினும், பின்னர் திலீபனின் செயற்பாடுகளும் புலிகள் அமைப்பின் வளர்ச்சியைப் பொறுத்தவரை குறைசொல்ல முடியாததாகவே இருந்தது.

Kedu  பெண் கடற்புலிகளுக்கு வந்த கௌரவப் பிரச்சனை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை  - 44) Kedu

கிட்டுவின் தாக்குதல்

இந்த நேரத்தில் கிட்டுவின் சாகசங்கள் பற்றியும் குறிப்பிட்டேயாகவேண்டும். யாழ்பாணம் குருநர் இராணுவ முகாமில் ஹெலிக்கொப்படர் வந்து இறங்கும்போது தாக்குதல்  நடத்தவேண்டும் என்று திட்டமிட்டார் கிட்டு.

குருநர் இராணுவ முகாமுக்குச்  சமீபமாக மாடி வீடு ஒன்று  இருந்தது. அங்கு நின்று பார்த்தால் இராணுவ  முகாமின் ஹெலி இறங்கும் தளம் இருந்தது.

அங்கிருந்து தாக்குதலை நடத்த வசதி என்று நினைத்தார் கிட்டு.

ஆா.பி.ஜி ரக ரொக்கட் லோஞ்சர் ஆயதங்களை இந்தியா இயக்கங்களுக்கு வழங்கியிருந்தது.

ஆா.பி.ஜி ரக ரொக்கட் லோஞ்சர்கள் கனரக வாகனங்களை ஊடுருவிச் தாக்க்கூடியவை.

தோளில் வைத்துத்தான் இயக்கவேண்டும்.(விமான எதிர்ப்பு ஏவுகணை அல்ல) தரைத் தாக்குதல்களுக்கே அனேகமாகப் பயன்படும்.

வான் படைமீது புலிகளின் தாக்குதல்

ஹெலிக்கொப்டர் தாழப்பதிந்து இறங்கும்போதோ அல்லது தரையிறங்கி நிற்கும் போதோ ஆர்.பி.ஜி ரொக்கட் லோஞ்சர்களால் தாக்கமுடியும்.

3076-rocket-launcher  பெண் கடற்புலிகளுக்கு வந்த கௌரவப் பிரச்சனை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை  - 44) 3076 rocket launcher
மாடிவீட்டில் ஆா.பி.ஜியுடன் கிட்டு காத்திருந்தார். ஹெலி வந்து இராணுவ  முகாமில் தரையிறங்கியது.

கிட்டு  ஆர்.பி.ஜியைக் குறிபார்த்து இயக்கினார். ரொக்கட் கிரனைற் பறந்து சென்றது.  ஆனால் குறிதவறிவிட்டது.

இலக்குத் தவறி ரொக்கட் கிரனைட் வெடித்தவுடன் இராணுவத்தினர் உஷாராகி விட்டனர்.

கிட்டு ஆர்.பி.ஜியுடன் மாடிவீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

எங்கிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை துல்லியமாக அறிந்து விரைந்து வந்தனர்  இராணுவத்தினர்.

தாக்குதல் நடத்தியவர் அங்கு இல்லை. கண்ணில் பட்டவர்களை நையப்புடைத்தனா.

கிட்டு நடத்திய தாக்குதல் தோல்வியடைந்தபோதும் வான்படையினர் மீது புலிகள் நடத்திய முதலாவது தாக்குதல் முயற்சி அதுதான்.

வான்படையினர் மீதான தாக்குதல் முயற்சியை ஆரம்பித்து வைத்தவர் என்று கிட்டுவைச் சொல்ல முடியும்.

தேடுதல் தந்திரம்

1985 ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினர்  தேடுதல் நடவடிக்கைகளுக்கு புதிய தந்திரங்களை கையாள ஆரம்பித்தனர்.

மினிபஸ்ஸில் வேட்டி, சட்டை அணிந்து, வீபூதி, சந்தனம் இட்டுக்கொண்டு பயணிகள்போல சென்று கொண்டிருப்பார்கள்.

சந்தேகப்படும்படியான இளைஞர்களைக் கண்டால் மினிபஸ்ஸை நிறுத்தி ஏற்றிக்கொள்வார்கள்.

மினபஸ்ஸில் நிறுத்தி ஏற்றிக்கொள்வார்கள். மினிபஸ்ஸில் வைத்தே சாத்துப் படி  நடக்கும்.

ஒருமுறை ஈ.பி.ஆா. எல்.எப் உறுப்பினர் ஒருவரை தந்திரமாக தமது வாகனத்தில் ஏற்றிவிட்டனர்.

தனக்காக வாகனத்தை நிறுத்தி ஏற்றிக்கொண்டதால் வாகனத்திலிருப்பவர்கள் தமது இயக்கத்தினர்தான் என்று நினைத்துவிட்டார் அந்த உறுப்பினர்.

வாகனத்தில் இருந்த இராணுவ வீரர் ஒருவரை நோக்கி “எப்படி தோழர்?”  என்று நலம் விசாரித்தார் அந்த உறுப்பினர்.

தோழர் என்ற பதத்தைப் பிரயோகித்ததை வைத்தே, மாட்டிக்கொண்டவர் எதோ ஒரு இயக்கப் போராளி என்று இராணுவத்தினருக்குப் புரிந்து விட்டது.

அந்த உறுப்பினருக்குப் பலத்த கவனிப்பு. அவரை வைத்தே வேறு சில உறுப்பினர்களும் வலை வீசிப்பிடித்தனர்.

அதே நேரத்தில் கவச வாகனங்கள் சகிதம் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகளும்  ஆமற்கொள்ளப்பட்டே வந்தன.

sri-lanka-army4  பெண் கடற்புலிகளுக்கு வந்த கௌரவப் பிரச்சனை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை  - 44) sri lanka army4

25.4.85 அன்று யாழபாணம் பருத்தித் துறையில் உள்ள இன்பருட்டி என்னும் பகுதியில் இராணுவத்தினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

அங்கு நிலக்கண்ணி வெடிகளைப் புதைத்துவிட்டுக் காத்திருந்த புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

11 இராணுவத்தினர் பலியானார்கள். இராணுவக் கவச வண்டி ஒன்றும் சேதமானது.

ஆத்திரம் அடைந்த இராணுவத்தினர் பருத்திதுறை நகருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கினார்கள்.

நகரில் இருந்த கடைகளுக்கும் தீ வைக்க முயன்றனர்.

நகருக்குள் மறைந்திருந்த புலிகள் துப்பாக்கிப் பிராேயகம் செய்தனர். இராணுவத்தினரும் பதிலுக்கு தாக்கினார்கள்.

கரவெட்டியில்

28.04.85 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டிப் பகுதியில் எட்டுக் கவச வாகனங்களில் இராணுவத்தினர் ரோந்து சென்றுகொண்டிருந்தனர்.

ரோந்து அணியினர் கரவெட்டியில்  உள்ள நவிண்டியில் வீதியை வந்தடைந்தனர்.

அங்கு நிலக்கண்ணி வெடிகள் புலிகளால் புதைக்கப்பட்டிருந்தன. ரோந்து வாகனங்களில்  ஒன்று நிலக்கண்ணி மீத ஏறியதும் வெடித்துத் தூக்கி எறியப்பட்டது.

அந்த வாகனத்திலிருந்த எட்டு இராணுவத்தினரும் பலியானார்கள்.

ஏனைய வாகனத்திலிருந்து குதித்த இராணுவத்தினர், வயலுக்குள் பதுங்கி நிலை எடுத்து தாக்க முற்பட்டனர்.

வயலுக்குள் முன்கூட்டியே பதுங்கி தயார் நிலையிலிருந்த புலிகள் துப்பாக்கி பிரயோகம் நடத்தினார்கள்.

பின்புறம் இருந்து தாக்குதலை எதிர்பாக்காத இராணுவத்தினரால்  பதிலடி நடத்த முடியவில்லை.

பத்து இராணுவ வீரர்கள் பலியானார்கள்.

மொத்தமாக 18 இராணுவத்தினர் அத்தாக்குதலில் பலியானார்கள். புலிகள் தரப்பில் உயிர்தேசம் எதுவும் எற்படவில்லை.

இதேநாள்  அன்று மற்றொரு சம்பவம். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு அண்மையில் இராணுவத்தினர் ரோந்து சென்றுகொண்டிருந்தனா.

பொலிஸ் நிலையம் அருகில் இருந்தமையால் இராணுவத்தினர் வெகு அலட்சியமாக ரோந்து சென்றுகொண்டிருந்தனர்.

மறைந்திருந்த இளைஞா்கள் கைக்குண்டுகளை ஏறிந்து தாக்குதல் நடத்தினார்கள். அதில் நான்கு இராணுவத்தினர் பலியானார்கள்.

ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட இந்த இரண்டு தாக்குதல்களும் அலைந்து திரிந்து  தாக்கும் கெரில்லா யுத்த முறையில் புலிகள் தேர்ச்சி பெற்று வருவதை புலப்படுத்திக்கொண்டிருந்தன.

திருமலையில் தாக்குதல்

திருமலையிலும் கண்ணிவெடித் தாக்குதல் 26.4.85 அன்று  நடத்தப்பட்டது.

இராணுவ ஜீப்வண்டி ஒன்றில் ரோந்து சென்ற இராணுவத்தினர் மீது கட்டைபறிச்சான் என்னும் இடத்தில் வைத்து நிலக் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஒரு லெப்டினன்ட் உட்பட ஆறு அல்லது ஏழு இராணுவத்தினா பலியானார்கள்.

அபபோது திருமலையில் புலிகளின் நடவடிக்கைகளுக்கு  சந்தோஷம் மாஸ்டர், புலேந்தி அம்மான் ஆகியோர் பொறுப்பாக இருந்தனா.

1985 இல் வடக்கு-கிழக்குக்கு வெளியே ஒரு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனா புலிகள்.

ஆயத்தங்கள் துரிதமாக நடக்கத்தொடங்கின.

அரசியல் தொடர் அற்புதன் எழுதுவது.. (தொடர்ந்து வரும்….)


பெண் கடற்புலிகளின் கௌரவப் பிரச்சனை!!:

கடற்புலிகளுக்கு  இந்த மாதத்தில்  மற்றொரு தோல்வி காங்கேசன் துறைதுறைமுகத்தில் நேர்ந்திருந்தது.

10 திகதி  அதிகாலை 12.55மணிக்கு எடித்தாரா தரையிறக்கக் கப்பலை குறிவைத்து கடற்கரும்புலி அருள்ஜோதி என்றழைக்கப்படும் முத்துமோகன் சியாமளா நீருக்குள் இறங்கினார்.

இவர் அங்கையற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவை சேர்ந்தவர்.

4780642722_550c5ebf01_m  பெண் கடற்புலிகளுக்கு வந்த கௌரவப் பிரச்சனை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை  - 44) 4780642722 550c5ebf01 mகரும்புலி கப்டன் -அங்கையற்கண்ணி

1994 ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி காங்கேசன் துறைமுகத்தில் ஊடுருவி எடித்தாரா கட்டளைக் கப்பலை தாக்கிய கடற் கரும்புலிதான் அங்கையற் கண்ணி.

அவரது பெயரில் உருவானதே அங்கையற் கண்ணி நீரடி நீச்சல் பிரிவு.

யூலை 16-1995 அன்று புலிப்பாய்ச்சலின் ஒரு கட்டமாக  காங்கேசன்துறை துறைமுகத்தில் நடந்த கடற்சமரில் கடற்கரும்புலிகளால் எடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது.

அப்போது அங்கு தரித்து நின்ற தரையிறக்கக் கப்பல்மீது குறிவைத்து கரும்புலிகளின் மற்றொரு படகு நகர்ந்தபோதும் கடற்படையினர் அத்தாக்குதலை முறியடித்துவிட்டனர்.

தரையிறக்கக் கப்பல் தப்பிக்கொண்டது. ஒரு பெண் கடற்கரும்புலி கப்படன் தமிழினி(சிவப்பிரகாசம் கனிமொழி- வல்வெட்டித்துறை) பலியானார்.

இன்னொரு பெண் கடற்கரும்புலி செவ்வானம் நீந்திக் கரைசேர்ந்தார்.

யூலை 16 இல்  தப்பிக்கொண்ட தரையிறக்க் கப்பல்தான் செப்டம்பர் 10 திகதி குறிவைக்கப்பட்டது.

யூலை 16  கடற்சமரில் ஆண் கடற்கரும்புலிகள் இருவர் கட்டளைக்கப்பலுக்கும், பெண் கடற்கரும்புலிகள் இருவர் தரையிறக்கக் கப்பலுக்கும் தாக்குதல் நடத்த அனுப்பப்பட்டனர். ஆண் கடற்கரும்புலிகள் மட்டுமே பணியை முடித்தனா.

pirapakaran  பெண் கடற்புலிகளுக்கு வந்த கௌரவப் பிரச்சனை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை  - 44) pirapakaran1
எனவே -தமது அணியால் தவறவிடப்பட்ட தரையிறக்க்கப்பலை மீண்டும் தமது அணிதான் தாக்கவேண்டும் என்று கடற்கபுலிகள் மகளிர் அணியினர் விரும்பினார்கள்.

ஏனெனில், அது அவர்களுக்கொரு கௌரவப் பிரச்சனை. அதனால் -கடற்புலிகளின்  மகளிர் அணியைச் சேர்ந்த அருள்ஜோதியை கரும்புலியாக அணுப்பத் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கு முன்னர் தரையிறக்கக் கப்பல் எங்கு தரித்து நிற்கிறது என்பதை கடற்புலிகளின் வேவுப்பரிவு நீரடி நீச்சல் மூலம் மோப்பம் பிடித்து அறிந்துகொண்டது.

தரையில் உள்ள முகாம்களை தாக்குவதற்குமுன் வேவு பார்ப்பது போல, கடலில் தரித்துள்ள கப்பல்களையும் வேவு பார்ப்பதும் வழக்கம்.

கடற்புலிகளின் விசேட வேவுப் பொறுப்பாளர் மேஜர் மோகன், விசேட வேவுப்படையை சேர்ந்த  கப்டன் ராம்குமார் ஆகியோர் முன் கூட்டியே வேவு பார்த்து விட்டனர்.

அருள்ஜோதியை கடலில் வழிகாட்டி அழைத்துச் சென்று , இலக்கை காட்டிவிட்டு திரும்புவதுதான் அவர்கள் இருவரது பணியாகும்.

நீரடி நீச்சல் மூலமாக மூவரும் தரையிறக்கக் கப்பலை நோக்கிச் சென்றபோது கடற்படையினரின் கப்பலில் இருந்த ராடர்கருவி காட்டிக் கொடுத்து விட்டது.

இந்த  நேரத்தில் ஒரு தகவல். கடற்கரும்புலிகளது தொடர் தாக்குதல்களையடுத்து  கடற்படையினர்  சக்திமிக்க ராடர் கருவிகளை பெற்றுள்ளனர்.

முன்னர் கடற்படையினரிடம்  இருந்த ராடர்கருவிகள்  கடும் மழை பெய்யத் தொடங்கிவிட்டால் சூழலில் நடப்பதைச் சொல்லத் தெரியாதவையாக இருந்தன.

இப்போதுள்ள ராடர்கள் மழைக்காலத்தில் மட்டுமல்ல, நீருக்கடியில்  நடக்கும் நடமாட்டங்களையும் கண்டறியக் கூடியவையாக இருக்கின்றன.

ஆனால் ராடர் கருவியை கவனிப்பவர் தூங்கிவிட்டால் அவ்வளவுதான்.

 

ராடர்கள் மூலம் கடற்கரும் புலியையும், கடற்புலிகளின்   வேவுப்படையினர் இருவரையும் கண்டுபிடித்து கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். மூவரும் பலியானார்கள்.

கடற்படையினர் எந்நேரமும் விழிப்பாக இருக்கமாட்டார்கள் என்று புலிகள் போட்ட தப்பு கணக்கே செப்டம்பர் 10ல் நடந்த தோல்விக்கு காரணமாகும்.

படையெடுப்புக்கான ஆயுத்தமும், அதேநேரம் அதைத் தடுக்க புலிகளது தாக்குதல் உத்திகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில்  கடற்படையினர் விழிப்பாக இருக்க மாட்டார்கள் என்று  புலிகள் நினைத்ததுதான் தவறான கணிப்பு.

இதேவேளை-தரையிறக்கக் கப்பலை தாக்கிவிட்டு ஒரு கடற்கரும்புலி உட்பட மூவர் பலியானதாக  யாழபாணத்தில் புலிகள் அறிவித்தும் விட்டார்கள்.

யுத்தத்தில்  எந்தவொரு தரப்பும் தமது  மக்களுக்கு உண்மையான  தரவுகளை  வழங்க முன்வருவதில்லை  என்பதை  புலிகளும்  நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

sl-navy-33-sundayleader-lk  பெண் கடற்புலிகளுக்கு வந்த கௌரவப் பிரச்சனை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை  - 44) sl navy 33 sundayleader lk
3.09.95 அனறு ‘டோராவை’ தாக்கும் முயற்சியில்  இரண்டு கடற்கரும்புலிகள் பலியாகியிருந்தனர். அப்போதும்  ‘டோரா’ தாக்கி மூழ்கடிப்பு என்றே புலிகள் அறிவித்திருந்தார்கள்.

யுத்தமுனையில் தமது தரப்புப்பற்றிய வெற்றிகளை மிகைப்படுத்தி கூறுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று, எதிரிக்கு உற்சாகம் கொடாமல் இருப்பது.

இதன் ஒரு கட்டம்தான் தமது தரப்பில் பலியானோர் பற்றிய விபரங்களை குறைத்து கூறுவது. இந்த உத்தியை அரசாங்கம்தான் அடிக்கடி பிரயோகிக்கிறது.

இரண்டு, தமது மக்களிடம் தம்மைப் பலமானவர்கள் என்று காட்டுவது. இதன் ஒரு கட்டம்தான் தோல்விகளை மறைப்பது.

இந்த உத்தியை அரசாங்கம் அடிக்கடியும், புலிகள் அவ்வப்போதும் பிரயோகித்து வருகின்றனர்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை சுட்டது யார்??: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-45)

சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை சுட்டது யார்??: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-45)
S

சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜா சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி யாழ்பாண கல்விமான்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

யாழ்-பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன.

ஆனந்தராஜாவின் கொலைக்கு காரணமானவாகள் உடனடியாக உரிமை கோரவேண்டும் என்று குரல் எழுப்பினார்கள் யாழ்-பல்கலைகழக மாணவர்கள்.

யாழ்.மாவட்ட அதிபர்கள் சங்கம், யாழ்-பிரஜைகள் குழு, சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஆகியவை கொலைக்கு கண்டனம் தெரிவித்து 28.06. 85 அன்று ஒருநாள் பாடசாலை அடைப்புக்கும், கடையடைப்புக்கும் அழைப்பு விடுத்தன.

யாழ்.நகரின் பல பகுதிகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் கறுப்பு பட்டிகளோடு காணப்பட்டனர்.

St.Johns-College-Jaffna_Voice-of-jaffna  சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை சுட்டது யார்??: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-45) StSt.Johns-College-Jaffna
மாணவர்கள் கண்டனம்

இயக்கம் ஒன்றுதான் கொலைக்கு காரணம் என்று மெல்லக் கசியத் தொடங்கியது. ஆனாலும் ஆனந்தராஜா கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் துணிச்சலான நடவடிக்கைகள் தெடரவே செய்தன.

இதற்கிடையே யாழ்பாண பொலிஸ் தலைமைக் காரியாலயம் ஒரு அறிவித்தலை வெளியிட்டது.

“ஆனந்தராஜா கொலை பற்றிய தகவல் தருவோருக்கு 5 இலச்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்” என்று அந்த அறிவித்தல் தெரிவிக்கப்பட்டது.

அதிபர் ஆனந்தராஜாவின் இறுதிச்சடங்கில் பெருமளவில் மாணவாகளும், பொதுமக்களும் திரண்டால் தமது நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாமல் போகும், அதனால் அவரது சடலத்தை யாழ்.பொது மருத்துவமனையில் இருந்து கடத்திச் செல்ல அவரை சுட்ட இயக்கம் முயற்சித்தது.

ஆனால் குறிப்பிட்ட இயக்க உறுப்பினர்கள் மருத்துவ மனைக்கு சென்ற போது மாணவர்கள் கூடி நின்றமையால் கடத்தல் முயற்சி கைவிடப்பட்டது.

அதிபர் ஆனந்தராஜாவின் இறுதிச் சடங்கில் பல்லாயிரம் மாணவர்களும், பொதுமக்களும் கண்ணீர் மல்க திரண்டிருந்தனர்.

சென்-ஜோன்ஸ் கல்லூரிக்கு அருகிலுள்ள சவச்சாலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதன் பின்னர்தான் கொலைக்கு யார் காரணம் என்பதும், சம்பந்தபட்ட இயக்கம் மூலமாக வெளியே வந்தது.

Anandarajah26062010B  சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை சுட்டது யார்??: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-45) Anandarajah26062010Bஅதிபர் சி.ஈ.ஆனந்தராஜா

புலிகளின் காரணம்

கொலைக்கு உரிமை கோரியவர்கள் புலிகள். யாழ.நகரமெங்கும் உரிமை கோரும் சுவரரெட்டிகள் புலிகள் அமைப்பினரால் ஒட்டப்பட்டிருந்தன.

ஆனந்தராஜாவின் படையினரோடு உறவுகளை வைத்திருந்தார். எச்சரித்தும் கேட்கவில்லை என்று புலிகள் காரணம் சொல்லியிருந்தார்கள்.

புலிகளே ஆனந்தராஜாவைச் சுட்டார்கள் என்று ஏனைய இயக்கங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி, மாணவாகள் மத்தியில் பரவலான அதிருப்திகள் ஏற்பட்ட நிலையில்- தவிர்க்க முடியாமல் புலிகள் உரிமைகோர வேண்டியேற்பட்டது.

ஆனந்த ராஜாவை சுடுமாறு கட்டளையிட்டவர் கிட்டு. யாழ்பாணம் றக்கா வீதியில் வைத்து ஆனந்தராஜாவைச் சுட்டவர் ரிச்சார்ட்.

ரிச்சார்ட் அரியாலையை சேர்ந்தவர். கிட்டுவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர்.

இப்போது ரிச்சார்ட் இலண்டனில் குடும்பத்தோடு இருக்கிறார்.

யாழ்பாண ஆசிரியர் ஒருவரது மகளை நல்ல சீதனத்தோடு மணமுடித்துக்கொண்டு இலண்டன் வாசியாகிவிட்டார்.

“ஆனந்தராஜாவை ஏன் சுட்டீர்கள்?” என்று கிட்டுவின் நண்பர் ஒருவர் அவரிடம் கேட்டார். அதற்கு கிட்டு சொன்னார் : “அப்படி ஒருவரை போட்டால்தான் மற்றவர்கள் பயப்பிடுவார்கள். புளிப்படங்கும்

Chelliah_Edwin_Anandarajah  சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை சுட்டது யார்??: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-45) Chelliah Edwin Anandarajahஅதிபர் சி.ஈ.ஆனந்தராஜா

இத்தனைக்கும் ஆனந்தராஜா  ஈழமாணவர் பொது மன்றத்தோடு (G:U:E:S) தொடர்பாக இருந்தவர்.

“பாடசாலை நேரம் தவிர ஏனைய நேரங்களில் மாணவர்களை அழைத்து போராட்ட பிரசார வகுப்பு நடத்தலாம் தனது ஒத்துழைப்பு இருக்கும்” என்று (G:U:E:S) அமைப்பிடம் கூறியிருந்தவர்.

யாழ்-பிரஜைகள் குழுவில் ஒருவராக இருந்தமையால், யாழ்பாணத்தில் கைது செய்யப்படும் இளைஞர்களது பெற்றோர்கள் ஆனந்தராஜாவிடம் ஓடுவார்கள்.

படை அதிகாரிகளை சந்தித்து கைதானவர்களின் விடுதலை தொடர்பாக பேசுவார் ஆனந்தராஜா.

ஆனால், ஆனந்தராஜாவுக்கு புலிகளைப் பிடிக்காது. இராணுவத்தினருடன் சினேகபூர்வ கிரிகெட் ஆட்டத்திற்கு ஒழுங்குகள் நடந்து கொண்டிருந்தன.

“கிரிகெட் போட்டி நடத்தவேண்டாம்” என்று ஆனந்தராஜாவிடம் புலிகள் சொன்னார்கள்.

“நீங்கள் படைகளோடு போர் நிறுத்தம் செய்திருக்கிறீர்கள். நாங்கள் கிரிகெட் போட்டி நடத்துவது மட்டும் எப்படி தவறாகும்?” என்று சொல்லிவிட்டார் ஆனந்தராஜா.

அதுதான் கிட்டுவுக்குக் கோபம். “மண்டையில் போடு” என்று சொல்லிவிட்டார்.

மண்ணும் மரணமும்

அதிபர் ஆனந்தராஜாவைச் சுட்ட ரிச்சார்ட் இயக்கத்தைவிட்டு விலகும் முன்னர் மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கையையும் இந்த நேரத்தில் சொல்லிவிடுகிறேன்.

இயக்கத் தேவைகளுக்காக புளொட் அமைபின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் மண் வியாபாரம் செய்து கொண்டிருந்தனா. புலிகளும் மண் வியாபாரம் செய்தனர்.

புளொட் அமைப்பின் யாழ்.மாவட்ட முக்கியஸ்தர் ரவிமூர்த்தியும், இன்னொரு உறுப்பினரும் அரியாலைக்கு மண் அள்ளச் சென்றனர்.

அப்போது அங்கு அங்கு வந்தார் ரிச்சார்ட். “நாம் மட்டுமே இதனை எடுக்கமுடியும்” நீங்கள் வேறெங்காவது சென்று பாருங்கள்” என்றார் ரிசார்ட்.

ரவிமூர்த்தி கேட்கவில்லை. பிரச்சனைப்பட்டார். ரிச்சார்ட்டுக்கு பொறுக்கவில்லை. பிஸ்டலை எடுத்து ரவிமூர்த்தியை சுட்டு விட்டார்.

மற்றொரு புளொட் உறுப்பினரையும் சுட்டார். இருவரும் பலியானார்கள். இதுவும் 1985 ல் தான் நடந்தது.

பேச்சு முயற்சிகள்

இலங்கை அரசு ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை அறிவித்தமையானது இந்தியாவோடு காதோடு காதாகப் பேசி செய்த நடவடிக்கை என்றே நம்பப்பட்டது.

போர் நிறுத்தத்தையடுத்து பேச்சுவார்தையை ஆரம்பிக்க முயற்சி செய்தது இந்தியா.

தீவிரவாத இயக்கங்களை உடன்படவைக்காமல் கூட்டணியோடு பேச்சு நடத்துவதால் பயனில்லை என்று இலங்கை அரசு சொல்லிவிட்டது.

எவ்வாறென்றாலும் தீவிரவாத இயக்கங்களை பேச்சு மேசைக்கு கொண்டுவருவதாக இந்தியாவும் உறுதியளித்துவிட்டது.

இதே காலகட்டத்தில் கூட்டணி நடத்திய நாடகம்தான் அருமையானது.

பேச்சு வார்த்தையில் கூட்டணிதான் முக்கிய பாத்திரம் வகிப்பதுபோல கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றின் மூலமாக செய்திகளை வெளியாக்கிக் கொண்டிருந்தது.

அப்பத்திரிகையும் இயக்கங்களை தீவிரவாதக் குழுக்கள் என்றே குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டு வந்தது.

சுற்றி வளைப்பானேன், “வீரகேசரி”தான் அவ்வாறு செய்திகளை வெளியிட்டு வந்தது.

e0ae85-e0ae85e0aeaee0aebfe0aeb0e0af8de0aea4e0aeb2e0aebfe0ae99e0af8de0ae95e0aeaee0af8d  சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை சுட்டது யார்??: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-45) e0ae85 e0ae85e0aeaee0aebfe0aeb0e0af8de0aea4e0aeb2e0aebfe0ae99e0af8de0ae95e0aeaee0af8dபேச்சுக்கு செல்லவிரும்பாத தலைவர்கள்

இத்தனைக்கும் இயக்கங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லையென்றால் பேச்சு முயற்சியே கிடையாது என்ற நிலைதான் நிலவியது.

“சென்னையில் இருந்து அமிர்தலிங்கம் பேட்டி-பேச்சு வார்த்தைக்கு ஆதரவுதிரட்ட கொழும்புக்கு தலைவர்களை அனுப்பிவைக்கிறார்’ என்றெல்லாம் செய்திகள் வரும்.

உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே பத்திரிகைகள் சில தாமும் குழம்பி, வாசகர்களையும் குழப்பிக் கொண்டிருந்தன.

கூட்டணியின் கையைவிட்டு பேச்சுவார்த்தை அரங்கம் போராளி இயக்கங்களிடம் சென்றுகொண்டிருந்தது.

 

சில பத்திரிகைகள் மூலமாக எல்லாமே தமது கையில் இருப்பதாகக் காட்டிக்கொள்ள முயன்றார்கள் கூட்டணிதலைவர்கள்.

சென்னையில் இருந்த இயக்கத்தலைவர்கள், கூட்டணிக்கு பேச்சுவார்த்தையில் இடமளிக்கப்படுவதையே விருப்பவில்லை.

“கொஞ்சம் இடம் கொடுத்தால் எங்களையும் தள்ளிப்போட்டு குறக்காலே ஓடுவாகள்” என்று அடிக்கடி சொல்லுவார் ரெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம்.

இந்திய ‘றோ‘ அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு உடன்படச் சொல்லிக் கேட்கப் போகிறார்கள் என்று தெரிந்தவுடன் தலைமறைவாகிவிட்டார் பிரபாகரன்.

நான்கு இயக்க கூட்டமைப்புக் கூட்டம் சென்னையில் நடந்தது. ‘பேச்சுக்கு உடன்படுமாறு கேட்கப் போகிறார்கள். என்ன செய்யலாம்’ என்று கேள்வி எழுந்தது.

புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அதற்கு பதில் சொன்னார்.

“தலைவர்கள் கொஞ்ச நாட்களுக்கு வெளியே தலைகாட்டாதீர்கள். தலைவாகள் வரட்டும், கேட்டுவிட்டு முடிவு சொல்கிறோம் என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம்.”

ஆனால் அந்த தந்திரம் பலிக்கவில்லை.

இந்திய அரசு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க பிடிவாதமாக இருந்தது.

இயக்கங்களை கேட்காமலேயே இலங்கை அரசுக்கு வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, தலைவர்களின் கழுத்தை பிடித்தது இந்தியா.

“இன்னமும் ஏழு நாட்களில் தீவிரவாத இயக்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வரப்போகின்றன” என்று நம்பிக்கையோடு அறிவித்தார் அத்துலத் முதலி.

4  சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை சுட்டது யார்??: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-45) 43ஈ.என்.எல்.எஃப். தலைவர்கள்

உடன்பாடு

இறுதியில் நான்கு இயக்கங்களின் கூட்டமைப்பான ஈ.என்.எல்.எஃப். பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது.

“பேச்சுவார்த்தையில் தலைவாகள் கலந்துகொள்ள தேவையில்லை. எமது பிரதிநிதிகளை அனுப்பினால் போதும் என்றார்” பிரபாகரன்.

ஏனைய மூன்று இயக்கத் தலைவர்களும் அதனை ஆமோதித்தனர்.

தலைவாகள் கலந்துகொண்டால் உறுப்பினர்கள் சோர்வடைந்துவிடுவார்கள்.

தமிழீழ போராட்டத்தை கைவிட்டு பேச்சுக்கு மேசைக்கு சென்றுவிட்டார்கள் என்று நினைத்துவிடுவார்கள்.

தலைவர்கள் கலந்துகொள்ளாமல் இருந்தால், “இது ஒரு நாடகம் மட்டுமே பேச்சுக்கு எதிரானவாகள் அல்ல என்று உலகுக்கு காட்டும் நடவடிக்கை” என்று தெளிவு படுத்த முடியும்.

இயக்கங்களின் முதலாம் கட்ட தலைவர்கள் மட்டுமல்ல, இரண்டாம் கட்டத் தலைவர்களை கூட பேச்சுவார்த்தைக்கு அனுப்பிவைக்க இயக்கங்கள் முன்வரவில்லை.

கூட்டணி மட்டும் விதிவிலக்கு. அமிர்தலிங்கமே நேரில் செல்ல ஆயத்தமானார்.

கூட்டமைப்பில் இல்லாவிட்டாலும் புளொட் அமைப்பினரும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டனர்.

தமிழர் தரப்பிலிருந்து 5 அமைப்புக்களது (கூட்டணி உட்பட) பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதை இந்தியா உறுதிப்படுத்தியது.

பேச்சுவார்த்தையை மூன்றாம் நாடொன்றில் நடத்த திட்டமிட்டது இந்தியா.

பூட்டானின் தலைநகரான திம்புவில் தான் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்தது இந்திய அரசு.

08-thimbu  சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை சுட்டது யார்??: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-45) 08 thimbu
(பூடான் தலைநகர் திம்புவில் 1985-ம் ஆண்டு ஈழப்பிரச்சினை குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை (கோப்புப் படம்)

நேரடி தொடர்பு
பேச்சுவார்த்தையில் இயக்கத் தலைவர்கள் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தெரிந்தவுடன் இந்திய அரசு ஒரு காரியம் செய்தது.

திம்புவில் இருந்து பிரதிநிதிகள் உடனுக்குடன் சென்னையில் உள்ள தலைவர்களோடு தொடர்பு கொள்ள நேரடி தொலைபேசி வசதிகளை ஏற்படுத்தியது.

‘தலைவாகளை கேட்டுச் சொல்லுகிறோம்’ என்று பிரதிநிதிகள் நழுவிக்கொள்ளாமல் தடுக்க இந்தியா செய்த தந்திரம் அது.

thipu  சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை சுட்டது யார்??: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-45) thipu
இதேவேளை யாழ்பாணத்தில் மாபெரும் ஆர்பாட்ட ஊர்வலங்களை இயக்கங்கள் பின்னால் நின்று நடத்தத் தொடங்கிவிட்டன.

“ஈழமே ஒரே தீர்வு”

“ஈழப் போராட்டமா –பந்தாட்டமா?”

“வேண்டாம்-வேண்டாம், பேச்சு வார்த்தை வேண்டாம்”

02.07.85 அன்று யாழ்நகரில் அந்த ஊர்வலம் நடைபெற்றது. “தமிழ் ஈழத்திற்கு குறைந்த எதற்கும் சரணடையோம்” என்ற தலைப்பிட்டு ஒரு துண்டுப்பிரசுரமும் வெளியிட்டார்கள் புலிகள்.

ஆனால், பிரசுரத்தின் இறுதியில் ‘தமிழ் மக்கள்’ என்று மட்டும் குறிப்பிடபட்டிருந்தது.

யாழ்பாணம் நெல்லியடியில் அமிர்தலிங்கத்தின் கொடும்பாவி வீதியால் இழுத்துச் செல்லப்பட்டு கொளுத்தப்பட்டது.

கூட்டணிக்கு கண்டனம்

இலங்கையில் ஓரிரு பத்திரிகைகள் மூலம் பேச்சுவார்த்தையில் தாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூட்டணி காட்டிக்கொண்டதாக கூறியிருந்தேன் அல்லவா?

அதனால் இயக்கங்களுக்கு கோபம் வந்துவிட்டது.

சென்னையில் கூடிய நான்கு இயக்க கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டது.

‘உத்தேசிக்கப்பட்டுள்ள பேச்சு வார்த்தைகளில் ‘தீவிரவாதிகளுக்கு’ தலைமை தாங்கவும், வழிகாட்டவும் தம்மைதாமே அரசியல் தலைமையாக நியமித்துக் கொண்டிருக்கும் த.வி.கூட்டணியின் நிலையை ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இல்லை.

ஈழ மக்களின் சகல நம்பிக்கையையும், நாணயத்தையும் இழந்துவிட்ட கூட்டணியினர் இனியும் தம்மை ஈழமக்களின் சட்ட ரீதியான பிரதிநிதிகள் என்று கூறுவதற்கு அருகதையற்றவர்கள்.

பகைமை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஈழத்தில் எமது மக்களுக்கு ஆயுதப் படைகள் இழைத்துவரும் கொடுமைகளையிட்டு கூட்டணி வாய்மூடி மௌனியாக இருப்பதும் எமது முடிவை உறுதிப்படுத்துகிறது.”

தமிழ்நாட்டு பத்திரிகைகளில் அந்த அறிக்கைசுடச்சுட வெளியாகியது.

அமிர்தலிங்கம் திகைத்துப் போனார்.

கூட்டணியின் பிரபலம் தேடும் முயற்சிக்கு மற்றொரு அடி கொடுக்கும் வகையில் ஒரு நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டது.

யாழபாணத்தில் உள்ள கூட்டணிப் பிரமுகர்களை ‘மண்டையில் போடுமாறு’ ஒரு இயக்கத் தலைவர் சென்னையிலிருந்து உத்தரவிட்டார்.

‘யாரைப் போடலாம்?’ என்று யோசித்தார்கள்.

தொடரும்..
(அரசியல் தொடர்…எழுதுவது அற்புதன்)

poodan  சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை சுட்டது யார்??: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-45) poodan

http://ilakkiyainfo.com/சென்-ஜோன்ஸ்-கல்லூரி-அதிப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணி தலைவர்கள் ‘ஆலாலசுந்தரம், தர்மலிங்கம்’ ஆகியோரை சுட்டது யாா??: (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-46)

கூட்டணி தலைவர்கள் ‘ஆலாலசுந்தரம், தர்மலிங்கம்’ ஆகியோரை சுட்டது யாா??: (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-46)
 

பூட்டானின் தலைநகரான திம்புவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் கூட்டனியை பங்குகொள்ளாமல் செய்வது தான் சகல தமிழ் இயக்கஙஙங்களின் நோக்கமாகவும் இருந்தது.

ஆனால், இந்திய அரசு வேறுவிதமாக கணக்குப் போட்டது.

இயக்கங்கள் மட்டுமெ பேச்சிலே கலந்துகொண்டால் தமிழர் தரப்பிலிருந்து தீவிரமான நிலைப்பாடுதான் பேச்சு மேசையில் போடப்படும்.

மிதவாத தலைமையும் கலந்துகொண்டால் சூடு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல், இலங்கை தமிழர் விவகாரத்தில் ‘தீவிரவாத இயக்கங்கள்  ‘மட்டுமே தனித்துச் செல்வாக்கு செலுத்துவதையும் இந்திய அரசு அவ்வளவாக விரும்பியிருக்கவில்லை.

என்றாலும்கூட, ஜே.ஆர். அரசை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவரும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த கூட்டணியால்  ஒருபோதும் முடியாது என்பதும் இந்தியாவுக்கு தெரிந்தே இருந்தது.

jrjevarthana  கூட்டணி தலைவர்கள் 'ஆலாலசுந்தரம், தர்மலிங்கம்' ஆகியோரை சுட்டது யாா??: (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-46) jrjevarthanaj.r.jevarthana.

இயக்கங்களுக்கு ஆயதமும், பயிற்சியும் வழங்கியதை இந்திய மறுத்துக்கொண்டிருந்தமை ஒரு இராஜதந்திரமே தவிர, பரமரகசியமல்ல.

எனவே- இயக்கங்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாதுபோது,ஜே.ஆர். இந்தியாவிடம் வந்தேயாக வேண்டும்.

‘அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்’ என்று கேட்டேயாக வேண்டும் என்று இந்தியா கணக்குப் போட்டிருந்தது.

கணக்குப் பொய்க்கவில்லை. தனித்து நின்றோ, இந்தியாவோடு முரண்டு பிடித்தோ இயக்கங்களின் நடவடிக்கைகளை அடக்கிவிட முடியாது என்பதை ஜே. ஆர். புரிந்து கொண்டார்.

எனவே –இந்திய பிரதமர் ராஜீவோடு நட்பை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார்.

உள்நாட்டு பிரச்சனை என்ற நிலையில் இருந்து, வெளிநாட்டு மத்தியஸ்தத்தோடு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை என்றளவுக்கு இனப்பிரச்சனை தீவிரமானதை ஜே.ஆர். எற்கவேண்டியதாகிவிட்டது.

அதன் வெளிப்பாடுதான் இந்திய தலைநகரில் இருநாட்டு தலைவர்களும் நடத்திய உச்சிமாநாடு.

அதனைத் தொடர்ந்துதான் பூட்டானில் திம்பு பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்பட்டது.

அமிர் உத்தரவு

இக்காலகட்டதில் சென்னையிலிருந்து அமிர்தலிங்கம் யாழ்பாணப்பாணத்தில் இருந்து கூட்டணித் தவைர்களோடு தொடர்பு கொண்டார்.

பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகப் போகின்றன. வடக்கு-கிழக்கில் உள்ள கூட்டணித் தலைவர்கள் மௌனமாக இருந்தால், பேச்சுவார்த்தையில் கூட்டணியின் பங்கு சிறு அளவில் மட்டுமே என்று மக்கள் நினைத்து விடுவார்கள்.

அரசியல் பேச்சுவார்த்தையில் வல்லவர்கள் என்ற எண்ணமும் அடிபட்டுப் போய்விடும்.

ஆங்கிலப் புலமையில் கெட்டிக்காரர்கள். பேச்சுவார்த்தைகளில் சாணக்கியர்கள். அனுபவசாலிகள் என்று தம்மைப்பற்றி மக்களிடம் ஒரு கருத்தை ஏற்படுத்தியிருந்தவர்கள் கூட்டணி தலைவர்கள்.

போராளி இயக்கங்கள் இலங்கை இனப்பிரச்சனையில் தீவிரமானதும், தீர்க்கமானதுமான பங்கை வகித்தபோதும், “பேச்சுவார்த்தைக்கு கூட்டணி, போருக்கு இயக்கங்கள்” என்று ஒரு தவறான அபிப்பிராயம் இருக்கவே செய்தது.

திம்பு பேச்சில் இயக்கங்கள் தமது அரசியல் வெளிப்பாட்டையும் காட்டிவிட்டால், தமக்குள்ள ஒரேபிடியும் போய்விடும் என்று கூட்டணித் தலையினர் கவலை கொண்டனர்.

யாழ்பாணத்தில் இருந்த கோப்பாய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.ஆலாலசுந்தரம், மானிப்பாய் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் ஆகிய இருவரையுயும் உடனே கொழும்புக்கு செல்லுமாறு கூறினார் அமிர்தலிங்கம்.

ஆலாலாசுந்தரம் ஊழலுக்குப் பேர்போனவர். ஆனால், அவர்தான் அப்போது கூட்டணியின் நிர்வாகச் செயலாளர்.

தாமலிங்கம் நேர்மையானவர். சோஷலிசக் கருத்துக்களில் மிகுந்த ஈடுபாடும், பற்றும் கொண்டவர். கூட்டணித் தலைவர்கள் மத்தியலேயே சோவியத் யூனியனுக்கு சார்பான போக்கை கொண்டிருந்தவரும் அவர்தான்.

பொதுத்தேர்தல் வந்தால் தமது தொகுதிக்கு செல்லாமலேயே வெற்றி பெறக்கூடியவர்களில் ஒருவர் தர்மலிங்கம்.

இருவரும் கொழும்பு வந்து அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்தார்கள்.

ஆலாலசுந்தரம் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தார். போர் நிறுத்தத்தை அரசு சரவர அமுல் நடத்தும் நம்புவதாகக் கூறிக் கொண்டிருந்தார்.

கூட்டணி மட்டுமே தமிழர் தரப்பில் இருந்து அக் காலகட்டத்தில் போர்நிறுத்தத்தை விரும்பிய ஒரே ஒரு அமைப்பாகும்.

போர்நிறுத்தம் வெற்றியளித்தால் ஆயுதப் போராட்டம் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுவிடும். அதன்பின்னர் தமது அரசியல் நடவடிக்கைகளைத் தொடர தடைகள் இருக்காது என்பது கூட்டணியினரது நினைப்பு.

ஆனால், சம்பவங்கள் அவர்களது நினைப்புக்கு மாறாகவே நடந்துகொண்டிருந்தன.

நேரடி எச்சரிக்கை

திம்பு பேச்சுவார்த்தையில் கூட்டணியினர் கலந்துகொள்வதை தடுக்கமுடியவில்லை என்பதால், மாற்று நடவடிக்கை பற்றி நான்கு இயக்க் கூட்டமைப்பு கூட்டத்தில் ஆராயப்பட்டது.

நான்கு இயக்கங்களும் திம்பு பேச்சுவார்த்தையில் தமது நிலைப்பாட்டை முன்வைப்பது என்றும், முடிவு செய்யப்பட்டது.

திம்பு பேச்சில் கலந்துகொள்ள அமிர்தலிங்கம் புறப்பட்டு சென்றுவிட்டார்.

yogeswaran_1  கூட்டணி தலைவர்கள் 'ஆலாலசுந்தரம், தர்மலிங்கம்' ஆகியோரை சுட்டது யாா??: (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-46) yogeswaran 1
யாழ்பாண தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் சென்னையில் இருந்தார்.

அவரை நேரில் அழைத்து கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

முடிவெடுக்கப்பட்டவுடன் ரெலோ தலைவர் சிறீ சபாரத்னம், “யோகேஸ்வரனை இப்போதே அழைத்து எமது நிலைப்பாட்டை சொல்லிவிடலாம். கூப்பிடுங்கள்” என்றார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பிரபாகரனும் அதனை வலியுறுத்தினார்.

ஈரோஸ் பாலகுமார் உடனடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு யோகேஸ்வரனுடன் பேசினார்.

“.இங்கே பிரபா,சிறீ,பத்மநாபா எல்லோரும் இருக்கிறார்கள். உங்களை உடனடியாக சந்திக்கவேண்டும் வாருங்கள்” என்று கூட்டமைப்பு அலுவலக முகவரியை சொன்னார்.

தனியாக வர யோகேஸ்வரனுக்கு ஒரு தயக்கம். “திரு.தங்கத்துரையும் என்னோடு இருக்கிறார். அவரையும் அழைத்து வரலாமா?” என்று கேட்டார் யோகேஸ்.

“சரி”என்றுவிட்டார் பாலகுமார்.

” அவர்கள் வந்ததும் தம்பி முறை சொல்லி அழைத்து சமாளிக்க பார்பார்கள். அதற்கெல்லாம் இடம் வைக்காமல் எமது முடிவை கண்டிப்பான’ குரலில் கூறிவிடவேண்டும்”என்று அனைவரையும் உஷார் படுத்தினார் சிறிசபாரத்னம்..

Balasingam  கூட்டணி தலைவர்கள் 'ஆலாலசுந்தரம், தர்மலிங்கம்' ஆகியோரை சுட்டது யாா??: (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-46) Balasingam
” பாலசிங்கம் அண்ணர் எமது கருத்தைச் சொல்லட்டும.நாம் எதுவம் பேசாமல் சீரியஸாக இருப்போம்” என்றார் பிரபாகரன்.

அரைமணி நேரத்தில் ஓட்டோ ஒன்றின் மூலம் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர் யோகேஸ்வரனும், தங்கத்துரையும்.

எதிர்பார்த்தது போலவே இருவரும் வாய்கொள்ளாத சிரிப்போடு தோன்றினார்கள்.

“லேட்டாகப் போச்சோ? முகவரியை கண்டுபிடித்துவர தாமதமாகிவிட்டது”என்றார் யோகேஸ்.

இயக்கத் தலைவர்கள் யாவரும் வாய்திறக்கவில்லை அன்ரன் பாலசிங்கம் மட்டுமே கூட்டமைப்பின் கருத்தை விளக்கினார்.

” நாங்கள் தீவிரவாத குழுக்கள் அல்ல. அரசியல், இராணுவ இயக்கங்களாக இருக்கிறோம். போரில் மட்டுமல்ல, பேச்சுக்களிலும் நாம் வல்லவர்கள்.எங்களுக்காக யாரும் பேசத்தேவையில்லை” என்று தனது பேச்சை ஆரம்பித்தார் அன்ரன் பாலசிங்கம்,

” நான்கு அடிப்படை அம்சங்களை நாங்கள் திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைக்கபபோகிறோம்.அதற்கு மாறாக வேறு எத்தத் திட்டத்தையும் முன்வைக்க வேண்டாம். என்று அமுதருக்கு தெரிவித்து விடுங்கள்”

என்று தனது நீண்ட விளக்கத்தின் இறுதியில் கூறினார் பாலசிங்கம்.

04_80  கூட்டணி தலைவர்கள் 'ஆலாலசுந்தரம், தர்மலிங்கம்' ஆகியோரை சுட்டது யாா??: (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-46) 04 80
மாறாக பேசினால்….?

அப்போது சிறி சபாரத்தினம் கண்டிப்பான குரலில் கூறியது இது…

” எங்களுக்கு மாறாக திம்புவில் அமுதர் பேசுவதாக இருந்தால், திரும்பிவரும் யோசனையை விட்டுவிடச் சொல்லுங்கள். வேண்டுமானால் அவர் திம்புவிலேயே இருந்துகொள்ளட்டும்”

யோகேஸ்வரன் ஆடிப்போனார்.

“அமிர் அண்ணா ஒருநாளும் உங்களுக்கு விரோதமாகச் செல்லமாட்டார். உங்கள் முடிவுதான் கூட்டணியின் முடிவும்.

stopterro_news_1315085513781  கூட்டணி தலைவர்கள் 'ஆலாலசுந்தரம், தர்மலிங்கம்' ஆகியோரை சுட்டது யாா??: (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-46) stopterro news 1315085513781அமிர்

நீங்கள் நான் சொல்வதை நூறுவீதம் நம்பலாம்” என்று சொன்னார் யோகேஸ்வரன்.

“நம்புவதும் நம்பாமலிருப்பதும் அமுதர் திம்புவில் நடந்து கொள்வதைப் பொறுத்தது. நீங்கள் உடனடியாக அவரை தொடர்பு கொண்டு, நாங்கள் சொன்னதைத் தெரிவித்து விடுங்கள்” என்றார் பிரபா.

இயக்கத் தலைவாகளை சமாதனபடுத்திவிட்டு யோகேஸ்வரனும், தங்கத்துரையும் சென்றனர்.

யோகேஸ்வரன் இன்றில்லை. திரு தங்கத்துரை திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

எச்சரிக்கை வாய் மூலமாக மட்டும் தெரிவித்ததோடு நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை சிறி சபாரத்தினம்.

உரிமை கோராத அரசியல் படுகொலைகள்

‘யாழ்பாணத்தில் உள்ள கூட்டணி முக்கியஸ்தர்கள் இருவரை தீர்த்துக்கடடினால்தான் கூட்டணி ஒழுங்காக நடந்துகொள்ளும்’என்று அவர் நினைத்திருக்கவேண்டும்.

எனவே, ரெண்டு பேரை போடுங்கள் என்று யாழ்பாணத்துக்கு கட்டளை பறந்தது’

‘யாரை போடலாம்’ என்று யாழ்பாண ரெலோ பொறுப்பாளர் தேடினார்.

மறுபடியும் அரசியல் களத்தில் குதிதிருந்த ஆலாலசுந்தரமும், தர்மலிங்கமும் தான் கண்ணில் பட்டனர்

இரவோடு இரவாக ரெலோவின் இரு குழுவினர் புறப்பட்டனர். ஒரே நேரத்தில் இருவரையும் கடத்திச் சென்றார்கள்.

“பேச வேண்டியிருக்கிறது எம்மோடு வாருங்கள்”என்று சொல்லி அழைத்துப் போனார்கள்.

மறுநாள் இருவரும் பிணமாக வீதியில் கிடந்தார்கள்.

tharmalinkam  கூட்டணி தலைவர்கள் 'ஆலாலசுந்தரம், தர்மலிங்கம்' ஆகியோரை சுட்டது யாா??: (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-46) tharmalinkam
யார் காரணம்?

கொலைக்கு யார் என்று எவருக்குமே தெரியவில்லை.

புலிகள் இயக்கத்தினர் செய்திருக்கலாம் என்றே பொதுவாக நம்பப்பட்டது.

சென்னையில் கூட்டமைப்பு கூட்டம் நடக்கும்போது ஈரோஸ் பாலகுமார் பிரபாவிடம் கேட்டார் “நீங்கள்தான் போட்டதாகச் சொல்லுகிறார்கள். உண்மையோ?”

அதற்கு பிரபா சிரித்துக் கொண்டே சொன்னார், ” சிறியின் பொடியள்தான் செய்தது என்றும் ஒரு கதை

சிறியும் அப்போது கூட்டமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

அவரும் சிரித்துக்கோண்டே “நாங்கள் செய்யவில்லை” என்று கூறிவிட்டார்.

ரெலோ இயக்கத்தை தவிர, ஈ.பி.ஆர். எல்.எஃ, ஈரோஸ் இரண்டுமே புலிகள் தான் காரணம் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.

ரெலோ செய்திருக்கும் என்று புலிகளைத்தவிர, யாருமே சந்தேகப்படவில்லை.

ரெலோ இயக்கத்தின் முக்கிய தளபதியாக இருந்த தாஸின் தலைமையில்தான் இருவரும் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் ஆலால் பற்றி யாருமே அலட்டிக்கொள்ளவில்லை.

தர்மலிங்கம் கொல்லப்பட்டது குறித்தே பரவலான கவிலை தெரிவிக்கப்பட்டது.

அமரர் தர்மலிங்கம் புளொட் தலைவர் சித்தார்த்தனின் தந்தையார் என்பது குறிப்பிடதக்கது.

ltte-Tala  கூட்டணி தலைவர்கள் 'ஆலாலசுந்தரம், தர்மலிங்கம்' ஆகியோரை சுட்டது யாா??: (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-46) ltte Talaஇந்திய  தலையீடும் பிரபகரனின் நிலைப்பாடும்.

இதற்கிடையே கூட்டணியினர் மேற்கொண்ட மற்றொரு நிலைப்பாட்டையும் குறிப்பிட்டாயாகவேண்டும்.

“இலங்கை தமிழர்களை காப்பாற்ற இந்திய இராணுவத்தை உடனே அனுப்ப வேண்டும்” என்று கலைஞர் கருணாநிதி திரும்பத் திரும்பத் சொல்லிக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் சென்னையில் இருந்த அமிர்தலிங்கம் ஒரு பேட்டியில், இந்தியா இராணுவத்தை அனுப்பவேண்டும் என்று தனது பங்குக்கு கூறிவைத்தார்.

பேட்டியைக் கண்ட புலிகள் இயக்கத்திற்குப் பொறுக்க முடியவில்லை.

உடனடியாக பிரபாகரன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையின் ஒரு பகுதி…

“எமது பழைய பாராளுமன்ற தலைமை-எதிரியைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும், அரசியல் ஞானமும் அற்றதாக இருந்ததுதான் எமக்கு இந்த துர்க்கதி ஏற்படக் காரணமாகும்.

அரச பயங்கரவதாம் கூர்மையடைந்து இனவாதப் பூதம் தமிழனத்தை அழிக்க கிளம்பிய போதும், இவர்கள் பாராளுமன்ற ஆசனங்களையும் பதவிகளையும் கட்டிப் பிடித்தபடி அரச தலைவர்களுக்கு துதிபாடிக்கொண்டிருந்தார்கள்.

கூட்டணி தலைவர்கள் புரிந்த மாபெரும் தவறு என்னவென்றால், தமிழ் புரட்சியவாத இளைஞர் பரம்பரயை அந்நியப்படுத்தி வந்தமையாகும்.

தேசிய சுதந்திரத்துக்காக நாம் வரித்துக்கொண்ட புரட்சிகர ஆயதப் போராட்ட வரலாற்றுக் கட்டாயத்தையும் அதன் அரசியல் முக்கியத்துவத்தையும் கூட்டணி புரிந்து கொள்ளவில்லை.

எம்மை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று வர்ணித்தனர்.

இவர்கள் செய்தது எல்லாம் எமது ஆயதப் போராட்டத்தை ஒரு அரசியல் அழுத்தமாக பிரயோகித்து அரசிடம் சலுகைகளை வேண்டி சமரசப் பேச்சுகள் நடத்தியதுதான்.

இந்திய ஆதரவு

நாமே போராடி நமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற தன் நம்பிக்கை இவர்களிடம் இல்லை.

இதனால்தான் இந்திய இராணுவப் படையெடுப்புக்கு இவாகள் அழைப்பு விடுக்கிறார்கள்.

எமக்கு இந்தியாவின் உதவி அவசியம்.
இந்தியாவின் ஆதரவும் அவசியம்.

இந்தியாவின் நல்லெண்ணம் அவசியம்.

நாம் முதலில் இந்தியவிடம் எமது தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

எமது மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு வலியுறுத்த வேண்டும்.

தமிழீழ தனியரசே எமது பிரச்சனைக்கு திட்டவட்டமான தீர்வு என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

இந்தியாவின் நல்லாதரவைப் பெறுவதைவிட்டு, எமது பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு இந்தியாவிடம் கைநீட்டி நிற்பது அரசியற் சாணக்கியம் ஆகாது”

அதுதான் பிரபா விடுத்த அறிக்கை.

இந்தியா நேரடியாக படை அனுப்பினால் தமிழீழத்திற்கு குறைந்த தீர்வை எற்கவேண்டி வரலாம் என்பதை உணர்ந்து பிரபா முன்வைத்த நிலைப்பாடு, ‘ படை அனுப்ப வேண்டாம் உதவி செய்தால் போதும்’

thimpu  கூட்டணி தலைவர்கள் 'ஆலாலசுந்தரம், தர்மலிங்கம்' ஆகியோரை சுட்டது யாா??: (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-46) thimpuபேச்சில் சிக்கல்

திம்பு பேச்சுவார்த்தை பற்றி இலங்கைப் பத்திரிகைகள் உட்பட வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் பல நம்பிக்கையான கருத்துக்களை வெளியிட்டு வந்தன.

அதே நேரம் திம்பு பேச்சை புத்திசாலித்தனமாக முறித்துக்கொள்ளக்கூடிய ஒரு தருணத்துக்காக இயக்கங்கள் காத்திருந்தன.

தொடர்ந்து வரும்..

http://ilakkiyainfo.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆலாலசுந்தரம் தர்மலிங்கத்தை போட்டது 
தாஸ் அண்ணை தான்தான் என்று பயிற்சி முகாமிலேயே சொன்னார்.

வடமரச்சியை பொருத்தவரை அது எல்லோருக்கும் தெளிவாக தெரிந்து இருந்தது.
இப்போதும் புலிகள்தான் 

ஆலாசுந்தரம் போன்றவர்களையே சுட்டவர்கள் புலிகள் ... என்று வீணை வாசிப்போர் இன்றும் உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடத்த கைது செய்யப்பட்ட அன்ரன்பாலசிங்கம்!! (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-47)

நாடுகடத்த கைது செய்யப்பட்ட  அன்ரன்பாலசிங்கம்!! (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-47)
 

திம்புவில் நான்கு கோரிக்கைகள்…

திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைப்பதற்காக நான்கு இயக்க் கூட்டமைப்பான ஈழத் தேசிய விடுதலை (ENLF ) முன்னணி முன்வைத்த நான்கு அம்சக் கோரிக்கைகள் முக்கியமானவையாகும்.

அக்கோரிக்கைகளை நான்கு இயக்க்கூட்டமைப்பு தயாரித்திருந்தபோதும், தமிழர் விடுதலைக் கூட்டணியும், புளொட் இயக்கமும் அவற்றை ஏற்றுக்கொண்டன.

அதனால் திம்பு மாநாட்டில் தமிழ் அமைப்புகளது குரல் ஒரேவிதமாக ஒலிக்கக்கூடிய சூழ்நிலை உருவானது.

அதேசமயம் அக்கோரிக்கைகளை தெளிவாக ஆராய்ந்தால் ஒரு விடயம் புலப்படும்.

தமிழீழக் கோரிக்கை கைவிடப் போவதில்லை என்று கூறமுடியாத நிலையில், தமிழீழ கோரிக்கையை ஒத்ததாகவே அக்கோரிக்கைகள் அமைந்திருந்தன.

திம்பு பேச்சில் முன்வைக்கப்பட்ட அந்த நான்கு அடிப்படைக் கோட்பாடுகள் இவைதான்.

1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்று அங்கீகரிப்பது.

2. தமிழ் மக்களது பாரம்பரிய தாயகத்தை அங்கீகரிப்பது.

3. தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது.

4. மலையகத் தமிழ் மக்களது குடியுரிமையை அங்கீகரிப்பது.

மலையகத் தமிழ் மக்களது பிரச்சனையையும் இனப் பிரச்சனைத் தீர்விற்கான பேச்சுவார்த்தையில் முன்வைத்தமை அதுவே முதல் முறையாகும்.

 puli  நாடுகடத்த கைது செய்யப்பட்ட  அன்ரன்பாலசிங்கம்!! (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-47) puli1
மூன்று நிலைப்பாடுகள்.

இந்த இடத்தில் மலையகத் தமிழ் மக்கள் தொடர்பாக வடக்கு- கிழக்கு தமிழ் அமைப்புகள் மத்தியில் காணப்பட்ட மூன்று நிலைப்பாடுகளை குறிப்பிட்டேயாக வேண்டும்.

முதலாவது நிலைப்பாடு- தமிழர் விடுதலைக் கூட்டணியால் முன்வைக்கப்பட்டதாகும்.

மலையகத் தமிழர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வடக்கு- கிழக்கில் வந்து குடியேற வேண்டும் என்று சொன்னது கூட்டணி.

இரண்டாவது நிலைப்பாடு- ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல். எஃப். இயக்கங்களால் முன்வைக்கப்பட்டது.

ஈழம் என்பதில் மலையகமும் அடங்கும். ஈழப் புரசிக்கு மலையகப் பாட்டாளிகளே தலைமைச் சக்திகள் என்று அவை கூறிக்கொண்டிருந்தன.

பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அந்த முடிவை மாற்றிக்கொண்டது.

மூன்றாவது நிலைப்பாடு மலையக மக்கள் தமது உரிமைகளுக்காக தாமே போராட வேண்டும்.

மலையகத்தில் போராடும் அமைப்புகளுக்கு ஈழப்போராளிகள் உதவி செய்யலாம்.

இந்த மூன்றாவது நிலைப்பாட்டை புலிகள் இயக்கமும் கடைப்பிடித்தது.

முதல் இரண்டு நிலைப்பாடுகளும் வெறும் கற்பனைகளாக இன்று ஏற்கப்பட்டுவிட்டன.

இனித் திம்பு பேச்சுக்கு செல்லலாம்.

திம்புவில் பேச்சுவார்த்தையை இயக்கங்கள் குழப்பக்கூடும் என்று இந்தியாவுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.

இயக்கங்களின் நோக்கமெல்லாம் பேச்சில் அல்ல, போரை தொடர்ந்து நடத்தி ஈழம்வரை செல்வதுதான் என்று இந்தியாவுக்கு தெரியும்.

எனவே இயக்கங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க இந்தியா திட்டமிட்டது.

antan  நாடுகடத்த கைது செய்யப்பட்ட  அன்ரன்பாலசிங்கம்!! (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-47) antan

நாடு கடத்தும் திட்டம்.

23.8.85 அன்று இரவு புலிகள் இயக்க ஆலேர்சகர் அன்ரன் பாலசிங்கத்தையும், தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசனையும் கைது செய்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கம் சார்பாக திம்புப் பேச்சில் கலந்துகொள்ள வந்திருந்தவர் சட்டத்தரணி சத்தியேந்திரா.

தமது தரப்பில் திம்புவில் கலந்துகொள்ள வெளிநாட்டிலிருந்து அவரை இறக்குமதி செய்திருந்தது ரெலோ. (இப்போது அவர் புலிகளது ஆதரவாளராக இருக்கிறார்)

அவரையும் கைதுசெய்து நாடுகடத்துவதற்காக இந்திய அதிகாரிகள் தேடுதல் நடத்தினார்கள். அவர் சென்னையில் தலைமறைவாகிவிட்டார்.

அன்ரன் பாலசிங்கத்தையும் சந்திரகாசனையும் சென்னையிலிருந்து இரவோடு இரவாக பம்பாய்க்கு கொண்டு சென்றார்கள்

அங்கிருந்து டெல்லிக்கு அழைத்துப்போனார்கள்.

இருவரையும் நாடுகடத்தும் ஆயுத்தங்கள் துரிதகதியில் நடத்தப்பட்டன. அதேசமயம் சென்னையில் இருந்த நான்கு இயக்க கூட்டமைப்புத் தலைவாகள் கூடி ஆராய்ந்தார்கள்.

அன்ரன் பாலசிங்கம் திரும்பிவராமல் பேச்சில் பங்குகொள்ள முடியாது என்று பிரபாகரன் தெரிவித்துவிட்டார்.

பேச்சில் கலந்து கொள்வதானால் அன்ரன்பாலசிங்கம் வரவேண்டும். பேச்சுவார்த்தையில் அவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று நான்கு இயக்கக் கூட்டமைப்பு முடிவு செய்தது.

அந்த முடிவு இந்திய அரசுக்கும் அறிவிக்கப்பட்டது.

மாறிய முடிவு

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், ஈழப்போராளி அமைப்புகளுக்குச் சார்பான தமிழ்நாட்டு அமைப்புகளும் கடுமையாக கண்டிக்கத் தொடங்கிவிட்டன.

நிலமையைக் கவனித்த இந்திய அரசு அன்ரன் பாலசிங்கத்தையும், சந்திரகாசனையும் நாடுகடத்தும் திட்டத்தை கைவிட்டது.

பேச்சுவார்த்தையில் ஏற்பட இருந்த தடை நீக்கப்பட்டது,

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை ஒருவகையில் நாடுகடத்தும் உதவிகரமாக அமைந்தது என்றே கூறவேண்டும்.

ஈழப்போராளிகள் விடயத்தில் கண்டிப்பாகவே நடந்துகொள்வதாக காட்டிக்கொள்ள அது உதவியது.

தான் ஒரு நியாயமான மத்தியஸ்தர் என்று இலங்கை அரசுக்கும், வெளியுலகுக்கும் முன்பாக இந்தியா செய்த பிரகடனம் என்று அதனைக்குறிப்பிடலாம்.

43  நாடுகடத்த கைது செய்யப்பட்ட  அன்ரன்பாலசிங்கம்!! (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-47) 431ஒரு கூத்து

திம்பு பேச்சுவார்த்தை ஆரம்பமான முதல்நாள் ஒரு கூத்து நடந்தது.

இயக்கங்களும், கூட்டணியும் பொதுவான நிலைப்பாட்டையே முன்வைப்பது என்று, பேச்சுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டதல்லவா??

அதன்படி பேச்சு மேசையில் நான்னு அம்சதிட்டம் முன்வைக்கப்பட்டது.

அதே நேரம் ஈரோஸ் சார்பாக கலந்துகொண்ட சங்கர்ராஜீ தனியாக ஒரு திட்டத்தை விநியோகித்துவிட்டார்.

ஏனைய இயக்க பிரதிநிதிகளுக்கு நெத்தியடியான அதிர்ச்சி.

கூட்டணிதான் ஏதாவது கோளாறு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமிர்தலிங்கம் இயக்கங்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு இருந்துவிட்டார்.

நான் இயக்கக் கூட்டமைப்பில் ஓர் அங்கமாக இருந்துகொண்டு ஈரோஸ் இயக்கம் அப்படிக் குறுக்கால் ஒரு ஓட்டம் ஓடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

அதனை ஒரு திட்டமாக முன்வைக்கவில்லை. விவாதத்திற்காகவே முன்வைப்பதாக சங்காஜீ விளக்கம் சொன்னார்.

திம்புவில் இருந்து தொலைபேசி மூலம் சென்னையில் இருந்த தலைவர்களுகுச் செய்தி வந்தது.

balakumaran-300x209  நாடுகடத்த கைது செய்யப்பட்ட  அன்ரன்பாலசிங்கம்!! (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-47) balakumaranபாலகுமார்

சென்னையில் நடந்த கூட்டமைப்பு கூட்டத்தில் சங்கர்ஜியின் நடவடிக்கை தொடர்பாக பிரச்சனை எழுந்தது.

கூட்டத்தில் கலந்துகொண்ட ஈரோஸ் பாலகுமாரிடம் ஏனைய மூன்று இயக்கத் தலைவாகளும் கேள்விக் கணைகள் தொடுத்தனர்.

பாலகுமார் திணறிப்போனார்.

“சங்கர்ராஜீ இப்படி செய்வார் என்று எனக்கு தெரியாது. அது பிழைதான். ஈரோஸ் சார்பாக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

சங்கர்ராஜீ முன்வைத்த யோசனை திரும்பப் பெறப்படும்” என்று கூறினார்.

பிரபா சொன்னது

ஈரோஸின் முடிவில்லாமல் சங்கர்ராஜி செயற்பட்டிருக்க முடியாது என்றே ஏனைய இயக்கத் தலைவாகள் கருதினார்கள்.

கூட்டமைப்புக் கூட்டம் முடிந்தபின் ஈ.பி.ஆர்.எல். எஃப் தலைவர் பத்மநாபாவிடம் பிரபாகரன் சொன்னது இது,..

“ஈரோஸ் இப்படி செய்யுமென்று எனக்கு தெரியும்.ஈரோசையோ, ரெலோவையோ நம்பி நாம் கூட்டமைப்பில் நாம் சேரவில்லை. உங்களை நம்பிதான் சேர்ந்திருக்கிறோம்” என்றார் பிரபாகரன்.

இந்த இடத்தில் மேலும் ஒரு சம்பவம் :

ஒருமுறை பத்மநாபா தனது T :V :S .50 மோட்டார் சைக்கிளில் சென்னை அடையாறில் உள்ள புலிகளது அலுவலகத்திற்குச் சென்றார்.

அவர் தனியாக வந்ததைக் கண்டதும் பிரபாகரன் கேட்டார்,”பாதுகாப்பில்லாமல் இப்படி வருகிறீர்களே?” அதற்கு பத்மநாபா சொன்ன பதில் : ” நாங்கள் மக்கள் இயக்கம். மக்கள் எங்குமிருப்பதால் அதுதான் பாதுகாப்பு” அதைக் கேட்டு பிரபாவின் பதில் ஒரு சிரிப்பு மட்டுமே.

EP-with-IPKF  நாடுகடத்த கைது செய்யப்பட்ட  அன்ரன்பாலசிங்கம்!! (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-47) EP with IPKF
திம்புவில் சர்ச்சை

திம்பு பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரிதான் முக்கிய பாத்திரம் வகித்தார்.

ரொமேஷ் பண்டாரியை இயக்கங்களுக்கு பிடிக்காது.

இலங்கைக்கு அடிக்கடி விஜயம் செய்வார் ரொமேஷ் பண்டாரி. அவரை ஜே.ஆர். தனது கைக்குள் போட்டுக்கொண்டுவிட்டார் என்று இயக்கங்களுக்குச் சந்தேகம்.

ரொமேஷ் பண்டாரிக்கு முன்னர் இந்திய வெளியுறவுச் செயலாளர்களாக இருந்தவாகள் இயக்கத் தலைவர்களோடு நல்ல உறவுகளை வைத்திருந்தனர்.

திம்பு பேச்சில் சூடான ஒரு கட்டத்தில் ரொமேஷ் பண்டாரி இயக்கப் பிரதிநிகளை நோக்கிச் சொன்ன வார்த்தை இது : ‘BLOODY BOYS’ (கெட்ட பையன்கள்)

இயக்கப் பிரதிநிதிகள் கொதித்துப் போனார்கள். பிரச்சனை பெரிதாகும் என்று உணர்ந்து கொண்ட ரொமேஷ் பண்டாரி இறுதியில் மன்னிப்பு கேட்டார்.

அதேசமயம் திம்பு பேச்சில் கலந்துகொண்ட இலங்கை அரசுப் பிரதிநிதிகளின் பார்வையில் ஒருபடி உயர்ந்தும் விட்டார்.

images-53  நாடுகடத்த கைது செய்யப்பட்ட  அன்ரன்பாலசிங்கம்!! (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-47) images 531ஜே.ஆர்.உறுதி

திம்புவில் பேச்சுகள் நடந்துகொண்டிருந்தபோது கொழும்பில் தனத கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜே.ஆர்.சொன்ன உறுதிமொழி இதுதான் :

“திம்புவில் சமரசப் பேச்சு நடந்தாலென்ன, நடக்காவிட்டால் என்ன தீவிரவாதிகளின் முகாம்களைத் தேடிக்கண்டுபிடித்து அழிப்பதில் முப்படைகளும் ஈடுபடும்.

இலங்கைத் தீவில் வடக்கு – கிழக்கு மாகாணங்களைத் தமது மரபுவழித்தாயகம் என்று தமிழர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். இதை எனது அரசோ, ஏற்கமாட்டோம்.”

இதேவேளை யூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரையான போர் நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட்டது. இந்திய அரசின் தலையீட்டால் அக்டோபர் மாதம் 12ம் திகதி முதல் போர்நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக போர்நிறுத்தம் நீடிக்கப்பட்டபோது, போர்நிறுத்த மீறல்களைக் கண்காணிக்க ஒரு குழுவை அரசு நியமித்தது.

போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்பதில் தனது அரசு நியாயமாக நடந்து கொள்கிறது என்று நிரூபிக்க ஜே.ஆர். செய்த தந்திரமே கண்காணிப்புக் குழுவாகும்.

கார்டியனின் கணிப்பு

இலண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகையில் 19.06.1985இல் டேவிட் பலிஸ்டர் என்பவா எழுதிய கட்டுரை ஒன்று முக்கியமானது.

டேவிட் பலிஸ்டர் தளபதி பிரிகேடியர் நளின் செனிவரத்னாவை பேட்டி கண்டார். அப்போது நளின் செனிவிரத்னா பின்வருமாறு சொன்னாராம்;

“தமிழீழ விடுததைப் புலிகளது கொரில்லாப் போரை எம்மால் வெற்றி கொள்ள முடியாது. எமது முகாம்களை மூடியுள்ள மணல் மூட்டைகளைக் கடந்து எமது ஆணை செல்லாது.”

டேவிட் பலிஸ்டர் யூ.என்.பியின் மூத்த அமைச்சர் ஒருவரையும் சந்தித்தார். அந்த அமைச்சர் பின்வருமாறு கூறியிருந்தார்.


“ஜயவர்த்தனா பிரதமர் பதவியைப் பிடிப்பதற்கு 43 ஆண்டுகாலம் காத்திருந்தார். தமிழர் பிரச்சனையைத் தீர்க்கவும் ஒரு கால அட்டவணையை வைத்திருந்தார்.

ஆனால் இப்போது அவரிடம் பிடிஇல்லாமல் போய்விட்டது. அவர் கொஞ்சம் குழம்பிப்போய் இருக்கிறார்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு தடவையும் நாமே தமிழர்களைத் தாக்கியிருக்றோம். அவர்கள் ஓடினார்கள், இப்போது அவர்கள் எம்மைத் திருப்பித் தாக்குகிறார்கள். அவர்கள் மீது நாம் மரியாதை கொண்டுள்ளோம். கூடிய சலுகைகளை நாம் கொடுத்தேயாக வேண்டும்.”

இவற்றையெல்லாம் வெளியிட்ட கார்டியன், இறுதியில் தனது கணிப்பைச் சொல்லியிருந்தது.

“பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் என்று கூறிவிடமுடியாது.” அதுதான் கார்டியன் வெளியிட்ட கணிப்பு. அந்தக் கணிப்பை உறுதிப்படுத்தும் காரியங்கள் அரங்கேற ஆரம்பித்தன.

(அரசியல் தொடர்… எழுதுவது அற்புதன்)
தொடர்ந்து வரும்..

http://ilakkiyainfo.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று தடவைகள் செய்யப்பட்ட ‘சுதந்திர ஈழப் பிரகடனம்’ : அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-48

மூன்று தடவைகள்  செய்யப்பட்ட  ‘சுதந்திர ஈழப் பிரகடனம்’ :  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-48
 

“போர் நிறுத்தம்” மேலும் நீடிக்கப்பட்டது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் நிறுவப்பட்டது. போர் நிறுத்த மீறல்கள் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தன.

இதற்கிடையே தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி போர் நிறுத்தம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கைகள் இயக்கங்களிடம் கோபத்தை ஏற்படுத்தி வந்தன.

பலவீனமடைந்துவிட்ட இயங்கங்கள் வேறு வழியின்றி யுத்த நிறுத்தத்துக்கு உடன்பட்டுள்ளன என்று கூறிக்கொண்டிருதார் அத்துலத் முதலி.

ஜே.ஆரின் பேட்டி

images-53  மூன்று தடவைகள்  செய்யப்பட்ட  'சுதந்திர ஈழப் பிரகடனம்' :  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-48 images 532‘இந்திய டூடே ‘ சஞ்சிகைக்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனா அளித்த பேட்டியொன்றும் சர்ச்சைக்கு உள்ளாகியது.

“தமிழர் பிரச்சனை ஒரு இராணுவப் பிரச்சனை. எந்த இராணுவப் பிரச்சனையும் இராணுவ ரீதியாகத்தான் தீர்வு காணப்படவேண்டும். பேச்சுவார்த்தைகளுக்கான காலெக்கெடு டிசம்பர் மாதம் அதற்கு அப்பால் பேச்சுவார்த்தைகளை தொடரமாட்டோம்.

இந்தியா 24 மணி நேரத்தில் சிறிலங்காவை கைப்பற்றி என்னைக் கைது செய்துவிடலாம். அப்படி நடந்தால் சிங்கள மக்கள் மத்தியில் வாழும் தமிழர்கள் பிரச்சனைக்குள்ளாக நேரிடும்”

யாழ்பாணத்தை கட்டுப்படுத்துவது கஷ்டமல்ல. அதற்கு முன்னர் மற்றப் பிரதேசங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.

யாழபாணக் குடாநாட்டுக்கு உணவு விநியோகத்தை தடை செய்வதன் மூலம் ஒரு மாதத்தில் பயங்கரவாதிகளை அழித்தொழித்து விடலாம்.” என்று தனது பேட்டியில் கூறியிருந்தார் ஜே.ஆர்.

இயக்கங்களின் திட்டம்

போர் நிறுத்தக் காலதோடு படையினரை முகாம்களுக்குள் முடக்கிவிட வேண்டும் என்பதுதான் இயக்கங்களின் திட்டம் என்று முன்னரே கூறியிருந்தேன்.

ஆனால், யாழ் குடாநாட்டை தவிர ஏனைய பகுதிகளில் படையினர் திடீர் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டே வந்தனர்.

சோதனை நடிவடிக்கைகளும் அடிக்கடி நடைபெற்றன.

படையினரின் போர் நிறுத்த மீறல்களை இயக்கங்கள் கண்டித்த போதும். போர் நிறுத்த மீறல்கள் நடைபெறுவதை அவை ஒருவகையில் விரும்பவும் செய்தன.

அப்படியானால்தான் போர் நிறுத்தத்தையும், பேச்சுவார்த்தையையும் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரலாம்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சமாதானத்தைத் தீர்வுக்கு எப்போதும் முன்வரக்கூடியவரல்ல என்பதை இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்திக்கு எப்படியாவது புரியவைத்துவிட வேண்டும் என்பதுதான் இயக்கங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது.

சுருக்கமாகச் சொல்வதானால், இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே கசப்புணர்வு தோன்றுமானால், அது இயக்கங்களுக்கு செய்தியாகிவிடும்.

அதனால்தான், போர் நிறுத்தத்தை தாங்கள் சரியாக கடைப்பிடிப்பதாகவும், படைகள் அதனை மீறிவருவதாகவும் சகல இயக்கங்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தன.

குறிப்பாக இந்தியாவில் இருந்த இயக்கத் தலைமைகள் அதனைத் திறம்பட செய்துகொண்டிருந்தன.

இதேவேளை 1985 யூலை 8ம் திகதி திம்புவில் நடைபெற்ற முதல் கட்டப் பேச்சு தோல்வியில் முடிந்ததையடுத்து, இந்திய அரசின் முயற்சியால் திம்புவில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

1985 ஆகஸ்ட் 12ம் திகதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

இலங்கை அரசின் சார்பில் சமர்பிக்கப்பட்ட யோசனைகள் மாவட்ட சபைகள், மாகாண சபைகள் என்ற வட்டத்துக்குள் மட்டுமே நின்றுகொண்டிருந்தன.

வடக்கு-கிழக்கு இணைந்திருக்க வேண்டும் என்பதையோ அரசு தரப்பு ஒரேயடியாக நிராகரித்தது.

இந்தியாவை மீறி பேச்சுவார்த்தையை புறக்கணிப்பது எப்படி என்பதுதான் பிரச்சனை.

போர் நிறுத்தமும்  -படையினரின் முற்றுகையும்

திடீர் முற்றுகை

வவுனியா நகரில் இருந்து 10மைல் தொலைவில் உள்ள இறம்பைக்குளம், தோணிக்கல், சூசைப்பிள்ளையார் குளம், கூடாமங்களம், மூன்று முறிப்பு ஆகியகிராமங்கள் சந்தடிகள் அடங்கித் தூங்கத் தயாராகிக் கொண்டிருந்தன.

திடீரென்று பல வாகனங்கள் வரும் இரைச்சல், நாய்கள் குரைக்கத் தொடங்கின.

சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் திகைத்துப் போனார்கள். 50க்கு மேற்பட்ட  ட்ரக்குகளிலும், ஜீப்புககளிலும், கவச வாகங்களிலும் 400க்கு மேற்பட்ட இராணுவத்தினர் கிரமங்களுக்குள் புகுந்தனர்.

வேட்டுச் சந்தங்கள் விண்ணைக் கிழித்தன.

அவற்றையும்மீறி அவலச் சந்தங்கள் எங்கும் ஒலித்தன.

வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டு 50க்கு மேற்பட்ட இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காடுகளுக்குள்ளும், பற்றைகளுக்குள்ளும் ஓடிப் பதுங்கிக் கொண்டவர்கள் போக, வீடகளில் இருந்தவர்கள் வேட்டுகளுக்குப் பலியானார்கள்.

குடிசைகள் பல எரிக்கப்பட்டன.

இரண்டு நாட்களாக ஒரே அமளி. மூன்றாம் நாள் படையினர் வெளியேறினார்கள்.

40 உடல்கள் வவுனியா வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டன.

ஏறக்குறைய 120 பேர்வரை கொல்லப்பட்டனர்.10வயதிற்குட்பட்ட எட்டுக் குழந்தைகளும் பலியானவர்களில் அடக்கம்.

வவுனியாவில் சர்வோதய இயக்கத்திற்குப் பொறுப்பாக இருந்தவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது மனைவி,மகள், தாய், தந்தை ஆகியோரும் விட்டுவைக்கப்படவில்லை. அனைவரும் கொல்லப்பட்டனர்.

திருமலையில்…

திருக்கோணமலையிலும் படையினரின் நடவடிக்கைகள் விசுவரூபமெடுத்தன.

பன்குளம்,இறணைக்கேணி,சாம்பல்தீவு ஆகிய இடங்களில் சாதாரணமக்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

குடியிருப்புக்களும் தாக்கப்பட்டன.

சாம்பல் தீவில் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் வீதிகளுக்கு கொண்டுவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பன்குளம் என்னும் ஊரில் ஊர்காவல் படையினர் கத்தி,வாள் போன்ற ஆயுதங்களோடு தமிழ் மக்களின் வீட்டுகளுக்குள் புகுந்து தாக்கினார்கள்.

திருமலை மாவட்டத்தில் மட்டும் இரண்டு நாட்களில் நூறுபேர் வரை கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த மண்ணில் அகதிகளானார்கள்.

சென்னையில் நான்கு இயக்க் கூட்டமைப்பான ஈழத் தேசிய விடுதலை முன்னணி (E:N:L:F) தலைவாகள் கூடி ஆராய்ந்தனர்.

திம்பு பேச்சுவார்த்தையிலிருந்து உடனடியாக வெளியேறுவது என்று முடிவு செய்யப்பட்டது.

பேச்சுவார்தையிலிருந்து வெளியேறும் முடிவை புளொட் அமைப்பும் ஏற்றுக்கொண்டது. கூட்டணியும் உடன்பட்டது.

உடனடியாக வெளிநடப்புச் செய்யவேண்டாம் என்று திம்புப் பேச்சில் கலந்து கொண்ட இந்திய அரசு பிரதிநிதிகள் இயக்கப்பிரதிகளிடம் வலியுறுத்தினார்கள்,

அதனை சென்னையில் உள்ள தமது தலைவர்களுக்கு தெரிவித்தனர் இயக்க பிரதிநிதிகள்.

“தலைமையின் உத்தரவு என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டுத் திரும்பி வாருங்கள். அங்கு தொடர்ந்து நிற்கவேண்டாம்” என்று சென்னையில் இருந்த தலைவாகள் கண்டிப்பாகக் கூறிவிட்டனர்.

varathrajperuma_CI  மூன்று தடவைகள்  செய்யப்பட்ட  'சுதந்திர ஈழப் பிரகடனம்' :  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-48 varathrajperuma CIவரதராஜப்பெருமாள்

முதல் முறிவு

சகல பிரதிநிதிகளும் மூட்டை முடிச்சுக்களோடு திரும்ப ஆயத்தமானார்கள். ஒரே ஒருவர் மட்டும் சற்றுபின்னடித்தார்.

அவாதான் வரதராஜப்பெருமாள். ஈ.பி.ஆர் எல்.எஃப் பிரதிநிதிகளும் வரதராஜப்பெருமாள், கேதீஸ்வரன் ஆகியோர் திம்பு பேச்சில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய பிரதிநிதிகள் கூறும்போது முகத்தை முறித்துக்கொண்டு உடனே திரும்புவது முறையல்ல என்பதே வரதராஜப் பெருமாளின் வாதம்

பத்மநாபா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரதராஜப்பெருமாளை உடனடியாக திரும்புமாறு கூறிவிட்டார்

எப்படியோ ஈழப்போராளி அமைப்புக்கள் முதன்முதலாக இலங்கை அரசோடு நடத்திய பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

திம்புப் பேச்சுத்தீர்வுக்கான பாதையைத் திறக்கும் என்று ஆரூடம் சொன்னவர்களும், வரவேற்றவர்களும் வாயடைத்துப்போனார்கள்.

pirapakaran  மூன்று தடவைகள்  செய்யப்பட்ட  'சுதந்திர ஈழப் பிரகடனம்' :  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-48 pirapakaran2திம்பு பேச்சுவார்த்தை முறிந்தபின்னர் விடுதலைப் புலிகளது தலைவர் வே.பிரபாகரன் ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பேச்சுவார்த்தைக்கு ஏன் தாம் உடன்பட்டோம் என்பதை அவர் விளக்கியிருந்தார்.

அந்த அறிக்கையிலிருந்து ஒரு பகுதி இது.

“புதிய பாரதபிரதமரின் நேர்மையான நல்லெண்ண முயற்சிகளுக்கு நாம் எவ்வகையிலும் குந்தகமாக இருக்கவில்லை.

ஜெயவர்த்தனா அரசின் சாவாதிகாரக் கொடுங்கோன்மை ஆட்சியின் அட்டூழியங்களை அம்பலப்படுத்துவதோடு, தமிழர் பிரச்சனையை நியாயமான முறையில் தீர்த்துவைப்பதில் சிறிலங்கா அரசுக்கு எவ்வித விருப்பமம் இருக்கவில்லை. என்பதை பகிரங்கப்படுத்தவும் எமக்கு ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டது.

ஆகவே நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கினோம். பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தோம்.

நாம் தீர்க்க தரிசனத்துடன் அனுமானித்தபடி தமிழீழ மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தழுவிய எந்தவொரு உருப்படியான தீர்வுத்திட்டமும் சிறிலங்கா அரசினால் முன்வைக்கப்படவில்லை.

பேச்சுவார்த்தை என்ற வலைவிரிப்பில் எம்மை சிக்கவைத்து, சுதந்திர வீரர்களான எம்மை அடிமைகளாக்கி அழித்தொழிப்பதுதான் ஜெயவர்்த்தனாவின் சூத்திரதாரத் திட்டம்.

இந்த பொறிகிடங்கில் விழுந்துவிட விடுதலைப் புலிகள் தயாராக இல்லை.

பேச்சுவார்தை என்ற நாடகத்தில் போலி வேடம் புனைந்துகொண்டு, அதே சமயம் தமிழீழத்தில் பயங்கரமான இனக்கொலையை கட்டவிழ்த்து விட்டது சிறீலங்கா அரசு.” என்று குறிப்பிட்டிருந்தார் பிரபாகரன்.

Rajiv-Gandhi1  மூன்று தடவைகள்  செய்யப்பட்ட  'சுதந்திர ஈழப் பிரகடனம்' :  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-48 Rajiv Gandhi1ராஜீவுக்கு பாராட்டு

தனது அறிக்கையில் இந்திய ராஜீவ் காந்திக்கும் புகழாரம் சூட்டியிருந்தார். பிரபாகரன். அது இதுதான்.

“ஜெயவர்த்தனா ஒரு சூத்திரதார அரசியல் வாதி என்பதையும் நம்பமுடியாத ஏமாற்றுப் பேர்வழி என்பதையும் நன்கு உணர்ந்து கொண்டவர் முன்னாள் பாரதப்பிரதமர் திருமதி காந்தி.

புதிய பாராதப் பிரதமர் (ராஜீவ் காந்தி) சமாதானப்பிரியர். தமிழரின் பிரச்சனையில் தனிப்பட்ட அக்கறைகொண்டவர். தமிழ் மக்கள் கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் என்று விரும்புபவர்.

அவரது நற்போக்கையும், நல்லெண்ண முயற்சிகளையும் ஆதரிப்பது போல ஜெயவர்த்தனா அரசு நடிக்கிறது.

இந்திய அரசை தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு எதிராக முடிந்துவிடுவதல் ஈடுபடுகிறது.

ஜெயவர்த்தனாவின் இந்த ராஜதந்திர சூழ்ச்சியை இந்திய அரசும் வெகுவிரைவில் புரிந்து கொள்ளும் என்பதே எமது நம்பிக்கை.

pulikal  மூன்று தடவைகள்  செய்யப்பட்ட  'சுதந்திர ஈழப் பிரகடனம்' :  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-48 pulikal
தமிழீழ தனியரசே எமது அசைக்க முடியாத இலச்சியம். இந்த இலட்சியத்தை அடையவே நாம் உயிரை அர்ப்பணித்து போராடிவருகிறோம்.

வேறு எந்த மாற்றுத் திட்டமும் எமது மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக அமையமாட்டாது என்பதே எமது கருத்து.

உலகத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய சுதந்திரப் போராட்டங்களை ஆதரித்துவரும் பாரதநாடு ஈழத் தமிழ்மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

இந்திய மக்களின் அங்கீகாரம் எமக்கு கிட்ட காலம் பிடிக்கலாம். ஆயினும் நாம் அதற்காக போராடிக்கொண்டேயிருப்போம்.

அதுதான் பிரபாகரன் விடுத்த அறிக்கையின் முக்கிய பகுதிகள்.

எழுத்தாளர் எங்கே?

போர் நிறுத்தம், பேச்சுவார்த்தையெல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருந்த போது சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது.

இலங்கையிலிருந்து வெளியேறி சென்னையில் தங்கியிருந்தவர் காவலூர் ஜெகநாதன்.

சிறுகதைகள், நாவல்கள் என்பவற்றை மண்வாசனையோடு எழுதிப் பிரபலமானவர்.

காவலூர் என்பது யாழ்பாணத்திலுள்ள ஊர்காவத்துறையைக் குறிக்கும். ஜெகநாதனின் சொந்தஊர் அதுதான்.

சென்னையில் இருந்த காவலூர் ஜெகநாதனை இரவோடு இரவாக சில இளைஞர்கள் அழைத்துப் போனார்கள். அதன்பின்னர் காவலூர் ஜெகநாதன் வீடு திரும்பவில்லை.

அவரது நண்பர்களும் உறவினர்களும் சென்னையில் உள்ள இயக்க அலுவலகங்கள் தோறும் விசாரித்துப் பார்த்தார்கள். பயனில்லை.

நான்கு இயக்கக் கூட்டமைபுக் கூட்டத்தில் காவலூர் ஜெயகாந்தனை பற்றிப்பேச்சு எழுந்தது.

balakumaran-300x209  மூன்று தடவைகள்  செய்யப்பட்ட  'சுதந்திர ஈழப் பிரகடனம்' :  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-48 balakumaranஈரோஸ் பாலகுமார் சொன்னது

“அவர் மூலம்தான் சென்னையில் உள்ள இயக்கங்களின் நடவடிக்கைகள் இலங்கை அரசுக்குப்போவதாக நாம் அறிந்திருக்கிறோம்.

தனது எழுத்துலகத் தொடர்புகளை பயன்படுத்தி தகவல்களை திரட்டிக்கொண்டிருந்தார்.

சென்னையிலுள்ள இலங்கைத் தூரகம் மூலமாக பணமும் கிடைத்து வந்தது. அவர் ஒரு உளவாளிதான் ஆனால் நாம் அவரை கடத்தவில்லை.” அதுதான் ஈரோஸ் சார்பாக பாலகுமார் சொன்ன விளக்கம்.

பின்னர் உண்மை தெரியவந்தது. காவலுர்ர் ஜெகநாதனை பிடித்துச் சென்று காதும்,காதும் வைத்தது போலக் கதையை முடித்தது யார் தெரியுமா??

ஈரோஸ் இயக்கம்தான்.

பாலமும்-இயக்கமும்

மற்றொரு சம்பவம் 1985 ஆண்டு நவம்பர் மாதம் முதல் தமிழீழ அரசு இயங்கத் தொடங்கும் என்று அறிவித்தது ஒரு குழு.

அதன் பெயர், ஈழப் புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைவர் பெயர் பாலசுப்பிரமணியம்.

ரோகன விஜயவீராவின் கூட்டாளியாக ஜே.வி.பி. அமைப்பில் இருந்த பாலசுப்பிரமணியத்திற்கு தானும் ஒரு தலைவராகும் ஆசைவந்துவிட்டது.

தானும் ஒரு இயக்கம் என்று புறப்பட்டார்.

இயக்கம் என்றால் ஒரு தாக்குதலாவது நடத்தவேண்டுமல்லவா.

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது.. தென்னிலங்கையில் ஒரு பாலம் பழுதடைந்து உடைந்துவிட்டது.(இடம் நினைவில்லை)

பாலம் உடைந்த செய்தியை கேள்விப்பட்ட பாலசுப்பிரமணியம் எடுத்தர்ர் லெட்டர் ஹெட்டை ” பாலத்தை உடைத்து தகர்த்தவாகள் நாமே” என்று உரிமை கோரிவிட்டார்.

சில பத்திரிகைகளும் அதனை வெளியிட்டுத் தொலைத்ததுதான் வேடிக்கை.

அந்தப் பாலசுப்பிரமணியம் தான் “1985 நவம்பரில் சுதந்திர ஈழப் பிரகடனம் செய்யப்படும். சுதந்திர ஈழ அரசு இயங்கும்” என்று அறிவித்திருந்தார்.

அதனை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

1982 ஆண்டில் யாழ்பாணத்தில் தந்தை செல்வா நினைவுத்தூபி முன்பாக தமிழீழ விடுதலை அணியும் தமிழீழ பிரகடனம் செய்திருந்தது.

பாலசுப்பிரமணியத்தின் ஈழப்பிரகடனம் இரண்டாவதாகும்.

மூன்றாவது ஈழப்பிரகடனம் 1990 இல் ஈ.பி.ஆர். எல. எஃப் இயக்கத்தால் செய்யப்பட்டது. மூன்று ஈழப்பிரகடனங்களுமே புஸ்வாணமாகிப் போயின.

உள்மோதல்கள்

1985 இன் பிற்பகுயில் ஈ.பி.ஆர். எல் எஃப்,புளொட், ஈரோஸ் ஆகிய இயக்கங்களுக்குள் உள்பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தன.

ஈ.பி.ஆர். எல் எஃப் அமைப்புக்குள் மத்திய குழுவுக்கும், இரண்டாம் கட்டத்தலைமைக்கும் இடையே விரிசல்கள் எழத்தொடங்கின.

புளொட் அமைபிலும் இரண்டாம் கட்டத் தலைமை தமது தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்தது.

இந்த இரண்டு அமைப்புக்குள்ளும் இரண்டாம் கட்டத் தலைமையினர்தான் இயங்கும் சக்திகளாக இருந்தனர்.

அரசியல் பிரச்சாரம், இராணுவ வேலைகள் போன்றவை இரண்டாம் கட்டத் தலைமைகளாலேயே முன்வைக்கப்பட்டு வந்தன.

புளொட்டை பொறுத்தவரை அதன் தலைவர் உமாமகேஸ்வரன் தாக்குதல் நடவடிக்கைகள் சிலவற்றில் நேரடியாகப் பங்குகொண்டிருந்தார்.

ஈ.பி.ஆர். எல் எஃப் தலைவர் பத்மநாபா இராணுவ நடவடிக்கைள் எதிலும் நேரடியாகப் பங்குகொள்ளாமலேயே அரசியல்-இராணுவ இயக்கத் தலைவராக அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.

ஈரோஸ் இயக்கத்தலைமையும் உத்தரவுகளை போடுவதோடு நின்று கொண்டது.

இயக்க வேலைகளை முன்னெடுத்த இரண்டாம் கட்டத் தலைமைகள் தமது தலைவர்களின் வழிகாட்டும் திறமை குறித்து சந்தேகம் கொள்ள ஆரம்பித்தார்கள்.

புலிகளைத் தவிர, ஏனைய இயக்கங்கள் உட்கட்சி ஜெனநாயகம் பற்றி பேசிவந்தனர்.

அதே இயக்கங்களுக்குள் உட்கட்சி பிரச்சனைகள் ஏற்பட்டபோது உட்கட்சி ஜனநாயகம் காற்றில் பறந்தது.

புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் தமது இயக்க உறுப்பினர்களையே உளவு பார்க்க தனது உளவுப்பிரிவை பயன்படுத்தினார்.

இந்தியாவில் இருந்த பயிற்சி முகாம்களில் பல உறுப்பினர்கள் பிரச்சனைக்குரியவர்கள் என்று சந்தேகப்பட்டு சித்திரவதைக்குள்ளானார்கள்.

ஈரோஸ் இயக்கத்துக்குள்ளும், ஈ.பி.ஆர். எல் எஃப் இயக்கத்துக்குள்ளும் பிரச்சனை வேறு ஒரு கோணத்தில் தோன்றியிருந்தது.

(தொடர்ந்து வரும்…
-அரசியல் தொடர்.. எழுதுவது அற்புதன்-)

http://ilakkiyainfo.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில்..அன்ரன் பாலசிங்கம் வீட்டுக்கு குண்டு வைப்பு: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 49)

சென்னையில்..அன்ரன் பாலசிங்கம் வீட்டுக்கு குண்டு வைப்பு: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 49)
 

உள் பிரச்சனைகள்: ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தில் 1985ம் ஆண்டின் மத்தியில் உள் இயக்கப் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன.

1982ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்திற்குள் உள்பிரச்சனை ஏற்பட்டது.

1982இல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் கொள்கைகளும், மக்கள் மத்தியிலான வேலைகளும் யாழ்-பிராந்திய கமிட்டியில் இருந்த உறுப்பினர்களால்தான் முக்கியமாக முன்னெடுக்கப்பட்டன.

இயக்கத்தின் மத்திய குழு தலைமை என்றளவில் இருந்ததே தவிர, ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தை தனித்துவமாக அடையாளப்படுத்திய அரசியல் பிரச்சார வேலைகளுக்கு வழிகாட்ட அதனால் முடியவில்லை.

இதனால் மத்திய குழுவை கடுமையாக விமர்சித்த யாழ்-பிராந்திய கமிட்டி தனித்து இயங்குவதற்கு தீர்மானித்தது.

மட்டக்களப்பு பிராந்திய கமிட்டி, வன்னிப் பிராந்தியக் கமிட்டி என்பவற்றின் ஆதரவோடு ஒரு தீாமானத்தையும் எடுத்தது.

அப்போது இயக்கத்தின் உள் இயக்கத் தொடர்பாளராக இருந்தவர் குணசேகரன். அவரது முயற்சியின் காரணமாக 1982 இல் ஏற்படவிருந்த பிளவு தடுக்கப்பட்டது.

அதனையடுத்து ஏற்பட்ட உள் பிரச்சனை 1985இன் மத்தியில்தான் தீவிரமடைந்தது.

ஈழப்போராளிகள் அமைப்புக்குள் இரண்டாம் கட்ட தலைமைத்துவம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பில்தான் பலமானதாக இருந்தது.

அது மட்டுமல்லாமல் கட்சிக்குள் கருத்து மோதல்களை துணிச்சலாக நடத்தக்கூடியளவுக்கு உட்கட்சி ஜனநாயகமும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்குள் தான் 1986 வரை உயிரோட்டமுள்ளதாகவும் இருந்தது.

இரண்டாம் கட்ட தலைமையே இயக்க நடவடிக்கைகளுக்கு உண்மையான தலைமைபாத்திரம் வகித்தமையால் தலைமைக்கு தன்னிச்சையான போக்குகளை மேற்கொள்ள முடியாமல் இருந்தது.

இந்தியாவிலும், இலங்கையிலும் இயக்கத்தின் அரசியில்-பிரச்சார நிறுவனங்களும், கட்சியின் மக்கள் அமைப்புகளும் இரண்டாம் கட்ட தலைமையின் கையில் இருந்ததும் ஒரு முக்கிய அம்சமாகும்.

இந்திய அரசுடனான தொடர்பு, இந்திய புலனாய்வு அமைப்புக்களுடனான தொடர்பு என்பவற்றை பத்மநாபா தனது கையில் வைத்துக்கொண்டார்.

தலைமையில் பிளவு

1983க்குப் பின்னர் இயக்கத்தின் ஆட்பலம் பெருகிய நிலையில் ஏற்பட்ட புதிய சூழலுக்கு தலைமையால் ஈடுகொடுக்க முடியவில்லை.

ஆட்பலம் பெருகியதோடு தலைமை திருப்திப்பட்டுக்கொண்டிருந்ததே தவிர, இயக்கத்தை புரட்சிகர கட்சியாக மாற்றும் செயல்பாட்டுக்கு தலைமை வழங்க முடியாமல் இருந்தது.

மத்திய குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் தலைமைத்துவத்திற்குரிய திறமையை வெளிப்படுத்த முடியாதவர்களாக இருக்கின்றனர் என்றொல்லாம்,  இயகத்தின் இரண்டாம் கட்டத் தலைமை விமர்சனங்களை முன்வைத்தது.

மத்திய குழுவின உறுப்பினராகவும், மக்கள் விடுதலைப் படையின் பிரதம தளபதியாகவும் இருந்த டக்ளஸ் தேவானந்தா, மத்திய குழு உறுப்பினர் செழியன் ஆகியோர் இரண்டாம் கட்டத் தலைமையின் பக்கம் நின்றனர்.

அதனால், இயக்கத்தின் இராணுவ அமைப்பும் தலைமையின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்படும் என்ற நிலை இல்லாமல் போய்க்கொண்டிருந்தது.

“மத்திய குழுவை கூட்டி நிலமையை ஆராயலாம்” என்றார் பத்மநாபா

“மத்திய குழுக் கூட்டத்தை தமிழ் நாட்டில் வைத்துக்கொண்டால் வரமுடியாது. மத்திய குழு உறுப்பினர்கள் ஈழத்துக்கு வரவேண்டும். இங்கு கூட்டத்தை நடத்தலாம். கலந்துகொள்கிறேன்” என்று சொல்லிவிட்டார் டக்களஸ் தேவானந்தா.

இதற்கிடையே ஈ.பி.ஆர்.எல்.எஃப் இந்திய பிராந்திய கமிட்டி தலைமைக்கு எதிரான விமர்சனங்களை ஒன்றுதிரட்டி உட்கட்சிப் போராட்ட  ஆவணமாகத்  தயாரிக்கத் தொடங்கியது.

இந்தியாவில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் வேலைகளுக்கு பொறுப்பாக இருந்தவர்களில் சகலருமே தலைமைக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தனர்.

ஈழச் செய்தி தொடர்பு நிலைய பொறுப்பாளர் பிரேம், இந்திய பயிற்சி முகாம்களுக்கான பொறுப்பாளர் தயாபரன், இந்திய கமிட்டிச் செயலாளர் டேவிற்சன்,   ஈ.பி.ஆர்.எல்.எஃப் உளவுப்பிரிவின்  தலைமைகுழுவைச் சேர்ந்தவரும், பிரச்சார வெளியீடுகளுக்கு பொறுப்பாக இருந்தவருமான ரமேஷ் , புதுடில்லியில் கட்சி வேலைகளுக்கு பொறுப்பாக இருந்த மகேஷ், கட்சியன் ஆங்கிலப் பத்திரிகையான  ‘ஸ்போக்ஸ் மன்’ ஆசிரியர் மனோராஜசிங்கம்  ஆகியோர்   ஒரே குரலில் விமர்சனங்களை முன்வைத்தனர்.

மைகேல் எங்கே?

இதே காலகட்டத்தில் ஈரோஸ் அமைப்புக்குக்குள்ளும் உட்கட்சி பிரச்சனையில் முன்னின்றவர்களில் ஒருவர் மைக்கேல். யாழ்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்தவர். அவர் தீரென்று காணாமல் போனார்.

மைக்கேல் எங்கே என்று கேட்டால் தமிழ்நாட்டிலிருந்த ஈரோஸ் இயக்கத்தினர் மைகேல் ஈழத்துக்கு போய்விட்டார் என்றனர்.

இங்கு கேட்டால் தமிழ்நாட்டில் இருப்பதாக கூறினார்கள்.

மைக்கேல் உட்பட வேறு சிலரும் காதும் காதும் வைத்தாற்போல் மண்டையில் போடப்பட்டுவிட்டார்கள் என்று நம்பப்பட்டது.

ஈரோஸ் இயக்கத் தலைமையின் இந்திய அரசுக்கு ஆதாரவான போக்குத் தொடர்பாகவும் உள்ளே பிரச்சனைகள் ஏற்படத்தொடங்கின.

இயக்கங்களின் உள்பிரச்சனைகள் குறித்து இத்தோடு தற்காலிகமாக நிறுத்தின்கொண்டு மேலே தொடருவொம்…

 pulikal  சென்னையில்..அன்ரன் பாலசிங்கம் வீட்டுக்கு குண்டு வைப்பு: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 49) pulikal
முஸ்லிம்களின் நிலைப்பாடு

திம்புப் பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு காணமுடியாமல் போனதற்கு இரண்டு காரணங்களே முக்கியமாக கூறப்பட்டன.

அரச படைகளின் போர்நிறுத்த மீறல்கள், வடக்கு-கிழக்கு இணைந்திருப்பதையோ, வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்பதையோ அரசாங்கம் ஏற்க மறுத்தமை என்பவையே முக்கிய காரணமாக கூறப்பட்டன.

இதற்கு தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி சொன்ன பதில் புத்திசாலித்தனமானது.

“வடக்கு- கிழக்கு இணைந்திருக்கக்கூடாது என்று அரசாங்கம் சொல்வது முஸ்லிம் மக்களுக்காகத்தான், அவர்களை அநாதரவாக்கிவிட முடியுமா? என்று தேனொழுகப் பேசினார் அத்துலத் முதலி.

லலித் அத்துலத் சொன்னதிலிருந்து ஒரு பகுதி இது…

“வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைப்பது என்பது சாத்தியமானதல்ல. இலங்கை மட்டுமல்ல சர்வதேச நாடுகளும் அதனை ஆதரிக்கவில்லை.

கிழக்கில் வாழும் 33வீதமான முஸ்லிம் மக்களை நாம் அநாதரவாக்கிவிடமுடியாது.

எந்த இனமும் இந்த நாட்டில் பாதிக்கப்படாத வகையிலான அரசியல் தீர்வையே நாம் முன்வைப்போம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அபாயகரமான திட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

வவுனியா, திருக்கோணமலை போன்ற பகுதிகளிலுள்ள முஸ்லிம் கிராமங்களில் தாக்குதல்களை மேற்கொள்ள அவர்கள் உத்தேசித்திருப்பதாக தெரிய வருகிறது.” என்று கூறியிருந்தார் அத்துலத் முதலி.

உண்மையில் அவ்வாறான ஒரு திட்டம் புலிகளிடம் அப்போது இருக்கவில்லை.

வடக்கு- கிழக்கு இணைப்புக்கு உள்ள தடையாக முஸ்லிம் மக்களை கொண்டுவந்து நிறுத்துவதே லலித்தின் திட்டமாக இருந்தது.

இதே லலித் அத்துலத் முதலிதான் இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவினரை இலங்கைக்குள் கொண்டுவரக் காரணமாயிருந்தவர் என்பது மறக்க முடியாதது.

முஸ்லிம் தூதுக்குழு

“இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வில் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளும் இடமளிக்க வேண்டும்.

தமிழ் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து எமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறப்போகிறோம்”

என்று அறிவித்திருந்தார் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத்.

சென்னையில் இருந்த தமிழ் அமைப்புத் தலைவர்களைச் சந்திக்க பதியுதீன் மஹ்மூத் தலைமையில் ஆறுபேரடங்கிய குழு ஒன்று புறப்பட்டுச் சென்றது.

“வடக்கு- கிழக்கு இணைப்பை ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை. மாகாண சுயாட்சி ஏற்படுவதையே நாம் விரும்புகிறோம்.

அரசாங்கம் மாவட்ட சபை யோசனைகளை முன்வைத்தால் ஏற்கமாட்டோம்.” என்று பதியுதீன் மஹ்மூத் தெரிவித்தார்.

சிறிலகா சுதந்திரக் கட்சி ஆட்சியில் கல்வியமைச்சராக இருந்தவர் பதியுதீன் மஹ்மூத்.

புலிகள் இயக்கமும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் ரெலோ ஆகிய இயக்கங்களும் பதியுதீன் மஹ்மூத் தலைமையில் சென்ற தூதுக்குழவை சந்திக்கவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈரோஸ் ஆகிய அமைப்புகளோ சந்தித்து பேசியிருந்தன.

thuraiyapa  சென்னையில்..அன்ரன் பாலசிங்கம் வீட்டுக்கு குண்டு வைப்பு: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 49) thuraiyapa
மீண்டும் முயற்சி

திம்பு பேச்சுகள் முறிவடைந்தபோதும் மீண்டும் பேசு்சுவார்த்தைகளை ஆரம்பித்துவைக்க இந்திய பிரதமர் ராஜீவ் விருப்பம் கொண்டிருந்தார்.

ஈழப் போராளி அமைப்புக்களின் தலைவாகளை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ராஜீவ் காந்தியைச் சந்தித்து தமது நிலைப்பாட்டை விளக்க ஈழப் போராளி அமைப்புகளது தலைவர்களும் விருப்பம் கொண்டிருந்தனா.

“போர் நிறுத்தத்தை மீறிய அரச படைகள் திருக்கோணமலையில் பொதுமக்களை வேட்டையாடிய காடசிகளை வீடியோ படமாக வைத்திருக்கிறோம். அதனை ராஜீவ் காந்தியிடம் காண்பிப்போம் ” என்று நான்கு இயக்க கூட்டமைப்பான ஈழத்தேசிய விடுதலை முன்னணி (E:N:L:F) கூறியது.

ஆனால் திம்பு பேச்சு முறியும் கட்டலிருந்தபோது, போராளி அமைப்பின் தலைவர்களை ராஜீவ் காந்தியைச் சந்திக்க வைக்க ஒரு முயற்சி நடந்தது.

போராளி அமைப்பின் தலைவர்களை சந்திக்க ராஜீவ் காந்தி நேரமும் ஒதுக்கி வைத்திருந்தார்.

vimanam  சென்னையில்..அன்ரன் பாலசிங்கம் வீட்டுக்கு குண்டு வைப்பு: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 49) vimanam

காத்திருந்த விமானமும் தலைமறைவான தலைவர்களும்

சென்னையில் இருந்து அவாகளை புதுடில்லிக்கு அழைத்துச் செல்ல விசேஷ விமானம் ஓன்றும் சென்னை விமான நிலையத்தில் மூன்று நாட்களாகக் காத்திருந்தது.

ஆனால், போராளி அமைப்புகளது தலைவர்கள் தலைமறைவாகிவிட்டனர். ராஜீவ் காந்தியை சந்தித்தால் திம்பு பேச்சைத் தொடரவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்றே சந்திப்பை தவிர்த்துக் கொண்டார்கள்.

muk-ka-2  சென்னையில்..அன்ரன் பாலசிங்கம் வீட்டுக்கு குண்டு வைப்பு: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 49) muk ka 2
கருணாநிதியின் முடிவு

திம்பு பேச்சுக்கள் முறிந்தது குறித்து திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதியிடம் பி.ரி.ஐ செய்தி நிறுவனம் கருத்துக்கேட்டது.

திரு.மு.கருணாநிதி சொன்னது இது..

“1947ல் இந்திய உபகண்டம் இந்தியா, பாகிஸ்தான் என்று பிரிக்கப்பட்டதைப் போன்று, இலங்கையும் இன அடிப்படையில் பிரிக்கப்படுதே ஒரேயொரு தீர்வாக அமையும்”

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் சி.வீரமணி ஒரு அறிக்கையில் பின்வருமாறு சொன்னார்.

” இலஙகைத் தமிழ் மக்களின் இன்னல் தீர தனிநாடு ஒன்றுதான் சரியான தீர்வாகும்.

அப்பாவித் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு மீண்டும் இனப்படுகொலையை ஆரம்பித்துள்ளது.

இப்படியான சூழ்நிலையில் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து கலந்து கொள்ளும்படி தமிழர் பிரதிநிதிகளை வற்புறுத்தக்சூடாது”என்று தெரிவித்தார் சி.வீரமணி. அதனை மத்திய அரசுக்கு தெரிவித்து ஒரு தந்தியும் அடித்திருந்தார்.

சதி முயற்சி

தமிழ்நாட்டில் போராளி அமைப்புக்கள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருப்பதையும், தமிழகத்தில் ஏற்பட்டு வந்த ஆதரவும் இலங்கை அரசுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது.

சென்னையில் போராளி அமைப்புக்களின் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த திட்டம் தயாரானது.

23.12.85 அன்று அதிகாலை 5மணியளவில் சென்னையில் ஒரு குண்டு வெடிப்பு இடம் பெற்றது.

குண்டுவெடிப்புக்கு இலக்கான வீடு புலிகள் இயக்க ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தங்கியிருந்த வீடாகும்.

இலங்கை அரசின் கையாட்கள் செய்த சதி முயற்சி என்று விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றம் சாட்டியது.

குண்டை வைத்தவர் யார் என்றும் இனம் கண்டுவிட்டதாக புலிகள் கூறினார்கள்.

அவர்கள் குற்றம் சாட்டியது யாரைதெரியுமா?? கந்தசாமி நாயுடுவை.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் அமைச்சர் தொண்டமானுக்கு நெருக்கமாக தற்போதிருப்பவர்தான் கந்தசாமி நாயுடு.

புலிகள் ஏன் அவர் மீது குற்றம் சாட்டினார்கள்? அடுத்தவாரம்

(எழுதுவது அற்புதன்..தொடர்ந்து வரும்.)

http://ilakkiyainfo.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

“தமிழீழம் அமையத்தான் போகிறது”. பிரபாகரனின் தீர்க்கதரிசனம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-50)

“தமிழீழம் அமையத்தான் போகிறது”. பிரபாகரனின்  தீர்க்கதரிசனம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-50)
 

சென்னையில் புலிகள் அமைப்பின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் வீட்டுக்கு குண்டு வைத்தது இலங்கை அரசின் உளவாளிகளும் மொசாட்டும் இணைந்து செய்த சதி என்றே புலிகள் உடனடியாக குற்றம் சாட்டியிருந்தார்கள்.

அதன் பின்னர்தான் கந்தசாமி நாயுடு மீத சந்தேகம் ஏற்பட்டது. கந்தசாமி நாயுடு பற்றிச் சில பின்னணி விபரங்கள் கூறவேண்டும.

சிறுபான்மைத் தமிழர்

கந்தசாமி நாயுடு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். யாழ்பாணத்தில் வசித்தவர். யாழ்பாணத்தில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்னும் அமைப்புக்கு தலைவராக இருந்தவர் சி.சுப்பிரமணியம்.

” ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை??” என்று காசி ஆனந்தன் கவிதை எழுதியிருந்தார். அதனை கூட்டணி மேடைகளில் பேச்சாளர்கள் மறந்துவிடாமல் பயன்படுத்துவார்கள்.

ஆண்ட பரம்பரை என்பது உயர்சாதி. அந்தப்  பரம்பரை மீண்டும் ஆள வந்தால் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் உதைக்கப்படுவார்கள் என்று சிறுபான்மை தமிழர் மகாசபை பீதியூட்டிக்கொண்டிருந்தது.

சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களையே சிறுபான்மை தமிழர் என்ற பதத்தால் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை அழைத்து வந்தன.

சிறுபான்மைத் தமிழர்கள் மாகாணசபை என்பதும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவுதான்.

அப்போது சிறிலங்கா சுதந்திரக் கடசியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவியில் இருந்தது.

தமிழர்கள் மத்தியில் சிறுபான்மைத் தமிழர், பெரும்பான்மைத் தமிழர் என்ற பிரிவினை நிலவுவதை ஐக்கிய முன்னணி அரசாங்கம் விரும்பியிருந்தது.

அதனால் சிறுபான்மைத் தமிழர் மகாசபைத் தலைவரான சி.சுப்பிரமணியத்திற்கு நியமன எம்.பி பதவி கொடுக்கப்பட்டது.

சி.சுப்பிரமணியத்தோடு நெருக்கமாக இருந்த திரு.கந்தசாமி நாயுடுவுக்கு சுப்பிரமணியம் பொலிஸ் சேவையில் வேலை பெற்றுக்கொடுத்தார்.

index  "தமிழீழம் அமையத்தான் போகிறது". பிரபாகரனின்  தீர்க்கதரிசனம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-50) index3அனுதாபியா??

கூட்டணியின் செயலாளர் நாயகம் அமரர் அமிர்தலிங்கத்தின் பாதுகாப்பு அதிகாரியாகவும் திரு.கந்தசாமி கடமையாற்றினார். அதன் பின்னர் இலங்கையின் தேசிய உளவுப் பிரிவான NIB க்கு மாற்றப்பட்டார்.

பின்னர் இலங்கைத் தொழிளாளர் காங்கிரஸ் தலைவர் திரு.தொண்டமான் தனது பாதுகாப்பு அதிகாரியாக கந்தசாமி நாயுடுவை நியமிக்குமாறு ஜே.ஆரிடம் கேட்டுக்கொண்டார்.

அதனால் NIB யிலிருந்து விடுவித்து, அமைச்சர் தொண்டமானின் பாதுகாப்பு அதிகாரியாக திரு.கந்தசாமி நாயுடு நியமிக்கப்பட்டார்.

1984ம் ஆண்டளவில் கந்தசாமி நாயுடு தமிழ் நாட்டுக்குச் சென்றார்.

சென்னையிலிருந்த ஈழப் போராளி அமைப்புகள் பலவற்றோடு திரு.கந்தசாமி நாயுடு தொடர்புகளை வைத்திருந்தார். இயக்கங்களின் அனுதாபி என்று கருதப்பட்டவர்.

anton-balasingam  "தமிழீழம் அமையத்தான் போகிறது". பிரபாகரனின்  தீர்க்கதரிசனம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-50) anton balasingam
சென்னையில் அன்ரன் பாலசிங்கம் வீட்டுக்கு குண்டு வைக்கபட்டதையடுத்தே கந்தசாமி நாயுடு மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்தியாவின் ‘றோ’ உளவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கந்தசாமி நாயுடு மீது இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

சென்னையில் மதீனா கடற்கரையில் தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டு வைத்து மேடையைத் தகர்க்க முனைந்தமை.

அன்ரன் பாலசிங்கத்தின் வீட்டில் குண்டுவைத்தமை என்பவைதான் கந்தசாமி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளாகும்.

திரு.கந்தசாமியின் டயறியை உளவுப்பிரிவினர் பார்வையிட்டபோது அவர் அடிக்கடி இரண்டு பேரை சந்தித்த விடயம் தெரியவந்தது.

ஒருவர் மணவைத் தம்பி, மற்றவர் தற்போது சென்னையில் மதுரா ட்ராவல்ஸ் உரிமையாளராக உள்ள வி,கே.ரி.பாலன். இருவரும் இலங்கையிலிருந்து சென்று சென்னையில் குடியேறியவாகள்.

கந்தசாமியுடன் சேர்ந்து அந்த இருவரும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் கந்தசாமி நாயுடு செய்யப்பட்டார்.

மர்மம்

கந்தசாமி நாயுடுவின் இந்திய விஜயமும், இயக்கங்களின் உறவைத் தேடுவதில் ஆர்வம் காட்டியதும் சந்தேகத்திற்குரியதாகவே கருதப்பட்டது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் மகன் ரவி ஜெயவர்த்தனாதான் சில காலம் ஜே. ஆரின் பாதுகாப்பு ஆலேசகராக இருந்தவர்.

இந்தியவிலுள்ள போராளி அமைப்புக்களைக் கண்காணிக்க கந்தசாமி நாயுடுவையும் அவரே அனுப்பி வைத்ததாக கூறப்பட்டது.

ஆனால் கந்தசாமி நாயுடு இலங்கை திரும்பியபோது கட்டநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு இரண்டு மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கந்தசாமியின் நாயுடு தற்போது இலங்கைத் தொழிளாளார் காங்கிரசின் உபதலைவராக இருந்து வருகிறார்.

காலித்துறைமுக அபிவிருத்தி திட்டக் குத்தகை கந்தசாமி நாயுடு பிரதிநித்துவம் செய்யும் ‘பிரிட்டிஷ்-சைனீஸ் கொன்கோட்டியல்’ என்னும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

kadorn  "தமிழீழம் அமையத்தான் போகிறது". பிரபாகரனின்  தீர்க்கதரிசனம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-50) kadornசென்னையில் உளவு

சென்னையில் இருந்தே ஈழப் போராளி அமைப்புகளின் தலைவர்கள் இயங்கியதால் இயங்கியதால் இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவான NIBயும் அங்கு கவனம் செலுத்தி வந்தது. சென்னையில்லுள்ள இலங்கையின் உதவித்தூதரகத்தில் NIB தனது அதிகாரி ஒருவரை வைத்திருந்தது.

1972ம் ஆண்டு முதல் அவ்வாறு ஒரு உளவுத்துறை அதிகாரி நியமிக்கப்படுவது தொடர்ந்தது.

1985ம், 86 ஆண்டுகளில் அப்துல் மஜீத் NIB அதிகாரியாக கடமையாற்றி வந்தார். (அப்துல் மஜீத்தான் கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே. கட்சியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்டவர். பொலிஸ் சேவையில் இருந்து விலகியே போட்டியிட்டார்)

சென்னையில் போராளி அமைப்புகளது நடமாட்டங்களை கவனிக்க இலங்கை உளவுத்துறையினர்  செய்த முயற்சிகளில் சுவாரசியமான சம்பவங்களும் இருக்கின்றன.

போராளி அமைப்புகளது உளவுப்பிரிவுகளும், அரசின் உளவுப்பிரிவினரை மோப்பம் பிடித்துத் திரிந்தன.

ஈ.பி.ஆர்.எல.எஃப் இயக்கத்தின் மக்கள் ஆய்வுப் பிரிவு (உளவுப் பிரிவு) சென்னை விமான நிலையத்தில் தனது உறுப்பினர்களைப் போட்டு, கொழும்பில் இருந்து வருபவர்களை கவனித்து வந்தது.

சென்னையில் சன நெருக்கம் மிகுந்த பகுதிகளில் உள்ள தங்குவிடுதிகளில்தான் உளவுத்துறையினர் தங்குவார்கள். அப்பகுதிகளிலுள்ள ரவுடிகளையும் பணம் கொடுத்து கைக்ககுள் போட்டு வைத்துக்கொள்வார்கள். தங்களை வியாபாரிகள் என்றுதான் அவர்களுக்கு சொல்லி வைத்திருப்பார்கள்.

இயக்க உறுப்பினர்கள் தம்மை பின்தொடர்வதாக தெரிந்தால் உடனே ரவுடிகளிடம் காட்டிவிடுவார்கள். இயக்க உறுப்பினர்களை சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தம்மை தாக்க வருவதாகவும் ரவுடிகளிடம் சொல்லிவிட்டு  உளவுத்துறையினர் நழுவிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

ரவுடிகளிடம் மாட்டிக்கொண்டு தம்மை விடுவித்துக்கொள்ள  இயக்க உறுப்பினர்கள் தடுமாறிய சந்தர்ப்பங்களும் இருந்தன.

டபுள் ஏஜன்ட்

இதற்கிடையே ஈ.பி.ஆா.எல்.எஃப் இயக்கத்தில் இருந்த உறுப்பினர் ஒருவரை  தேசிய புலனாய்வு பிரிவு தமது ஆளாக மாற்றிக்கொண்டது.

அவ்வாறு மாற்றப்பட்டவரின் பெயர் மவூசூக். சென்னையில்  இருந்து கொழும்பு வந்தபோது மவூசூக் கைது செய்யப்பட்டார்.

அவரை விடுதலை செய்யவேண்டுமானால்  தமக்கு தகவல் தருபவராக  மாறவேண்டும் என்று புலனாய்வு பிரிவினர்     நிபந்தனை போட்டார்கள்.

மவூசூக்  உடன்பட்டார். விடுதலை செய்யப்பட்டு மீண்டும் சென்னைக்குத் திரும்பினார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தனது புதிய பாத்திரம் குறித்து   ஈ.பி.ஆா.எல்.எஃப்  தலைவர் பத்பநாபாவிடம் கூறிவிட்டார்.

இலங்கை உளவுப்பிரிவுக்கு தகவல் கொடுப்பதுபோல் நடித்துக்கொண்டு, உளவுப்பரிவுத் தகவல்களை தமக்கு தருமாறு பத்மநாபா யோசனை கூறினார்.

டபுள்  ஏஜன்ட்  மாதிரி மவுசூக் செயல்பட வேண்டும். தேசிய புலனாய்வுத் துறையின் ஆளாக இருந்துகொண்டு , ஈ.பி.ஆா.எல்.எஃப்  இயக்க ஆளாகவும் நடந்துகொள்ளவேண்டும.

பின்னதற்கே விசுவாசமாக இருக்கவேண்டும். என்று பத்மநாபா கூறியிருந்தார். எனினும்  மவுசூப் பின்னர் நடந்துகொண்ட முறைகள் சந்தேகமாக இருந்தன.

இறுதியில்  அவர்  தமிழ்நாட்டிலிருந்து  தப்பி கொழும்புக்கு ஓடிவிட்டார்.

மவுசூக் கிழக்கு மாகானத்தை சேர்ந்தவுர்.  அவரை அப்துல் மஜீத்தான் பயன்படுத்தினார் என்று நம்பப்பட்டது.

ராஜீவ் சந்திப்பு

இப்போது பேச்சுவார்த்தைகளின் முயற்சிகளின் தொடர்ச்சியை கவனிக்கலாம்.

திம்புப் பேச்சுவார்த்தை முடிவடைந்த பினனர் 1985ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை நான்கு இயக்கக் கூட்டமைப்பின் தலைவாகள்  சந்தித்தனர்.

பிரபாகரன், பத்மநாபா, சிறிசபாரத்தினம், பாலகுமார் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும். அதற்கு இந்தியாவின் ஆதரவு என்றும் உண்டு என்று தெரிவித்த ராஜீவ் காந்தி, தீர்வுக்கான முதல் படியாக இடைக்கால ஏற்பாடொன்றுக்கு இயக்கங்கள் சம்மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“அவ்வாறான இடைக்காலத் தீாவை  ஏற்றுக்கொண்டால் மக்கள் எம்மை நிராகரித்து விடுவார்கள்”  என்று தலைவர்கள் கூறினார்கள்.

“எனினும் இந்தியாவின் சமசர முயற்சிகளுக்கு தடையாக இருக்கமாட்டோம்” என்று தெரிவித்தார்கள்.

அதன்பின்னர் இந்திய அதிகாரிகளுடன் புதுடில்லியில் வைத்து  இயக்கத் தலைவர்கள் பேச்சு நடத்தினார்கள்.

இலங்கை அரசு தனது புதிய யோசனை ஒன்றை  இந்தியாவுக்கு அனுப்பியிருந்தது. இந்திய அதிகாரிகள் மூலமாக அந்தயோசனை இயக்கத் தலைவர்களிடம் முன்வைக்கப்பட்டது.

புதிய யோசனை என்று சொல்லப்பட்ட போதும், திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்ட்ட  யோசனைக்கும் அதற்கும் பெரிய வேறுபாடுகள்  இருக்வில்லை.

வடக்கு மாகாணத்திற்கும், கிழக்கு மாகாணதிற்கும் இரண்டு தனித்தனி சபைகள் அமையும். அது தவிர, கிழக்கு மாகாணத்தில் திருக்கோணமலை நகரம் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் இருக்கும்.

மாகாணங்களிலுள்ள மாவட்டங்கள் விரும்பினால் பிரிந்து மாவட்ட சபைகளாக செயல்படலாம்.

மாகாண சபைகளும், மாவட்ட சபைகளும் மத்திய அரசின் பூரண கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அதுதான் புதிய யோசனையின் முக்கிய அம்சங்கள்.

நிரகரிப்பு

நான்கு இயக்க கூட்டமைபான ஈழத் தேசிய விடுதலை முன்னணி ( ENLF) அந்த யோசனையை நிரகரித்தது.

இலங்கை இரு தேசிய இனங்கள் உள்ளன. அவையிரண்டும் தனித் தனியாகப் பிரிந்து இரு நாடுகளாக அமையும் தகுதி கொண்டவை.  அதன் அடிப்படையில் முன்வைக்கப்படும் யோசனைகள் பற்றியே எம்மால் விவாதிக்க முடியும்.

வேறு யோசனைகளை ஆராய முடியாது என்று   நான்கு இயக்கக் கூட்டமைப்பு தலைவாகள் கூறிவிட்டனார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின்  புதிய யோசனைகளைக் குறித்து ஒரு அறிக்கையாகச் சமர்ப்பித்தது.

வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைத்தல், உள்ளுர் சட்டமும் ஒழுங்கும், நிலக்குடியேற்றம் தொடர்பான கருத்துக்களை கூறிய கூட்டணி மாநில சபை தொடர்பான விட்டுக் கொடுக்கமுடியாத கொள்கைகள் கொள்கைகள் சிலவற்றையும் குறிப்பிட்டிருந்தது.

புளொட் அமைப்பு தனியாக ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. புதிய யோசனைக்கு  திருத்தங்கள்கூறி சுவிற்சர்லாந்து முறையிலான சமஷ்டித்திட்டத்தை சார்ந்த யோசனையை இந்தியாவிடம் சமர்ப்பித்தது.

remashpadary  "தமிழீழம் அமையத்தான் போகிறது". பிரபாகரனின்  தீர்க்கதரிசனம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-50) remashpadaryபகாமாஸ் மாநாடு

தமிழர் விடுதலைக் கூட்டணியால்  சமர்பிக்கப்பட்ட அறிக்கையைவிட ஏனைய  இயக்கங்களின் நிலைப்பாடும், யோசனைகளும் கடுமையாக இருந்தன.

அதேவேளை பொதுநலவாய நாடுகளின் மாநாடு பகாமாஸில் நடைபெறவிருந்தது. அம்மாநாட்டில் வைத்து ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுடன் ராஜீவ் காந்தி இலங்கை பிரச்சனை பற்றி பேசுவதாக இருந்தது.

எனவே பகாமாஸ் மாநாட்டுக்கு கூட்டணியின் அறிக்கையையும், அதற்கான திருத்தத்தையும் ராஜீவ் காந்தி எடுத்துச்சொல்வார் என்று ரொமேஷ் பண்டாரி கூறினார்.

அரசின் யோசனைகளையோ கூட்டணியின் திருத்தைதையோ தாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நான்கு இயக்க கூட்டமைப்புத் தலைவாகள் கூறிவிட்டார்கள்.

புலிகளின் அறிக்கை: “தமிழீழத்தை  தற்கொலைக்கு ஒப்பானது”  வெளிச்சக்திகளை நம்பி  போராடவில்லை. புலிகள் வெளியிட்ட அறிக்கை

 

பகாமாஸ் மாநாடு குறித்தும் இடைகால தீாவை ஏற்குமாறு இந்தியா வலியுறுத்தியது தொடர்பாகவும் புலிகள் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் முக்கியமானவை.

அதனைக் கீழே தருகிறேன்.

“நாம் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து  இடைக்காலத் தீர்வை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் போராட்டத்தையும் தொடரலாம் என்று  இந்தியா எமக்கு  ஆலோசனை கூறலாம். இது தற்கொலைக்கு ஒப்பானது என்பதை நாம் அறிவோம்.

தமிழீழப் போராட்டத்தை எம்மால் கைவிட முடியாது. ஆனால் இந்தியாவின் நல்லுறவை  முறித்துக்கொள்ள நாம் விரும்பவில்லை.

இடைக்காலத் தீர்வு என்ற பொறியிலிருந்து இந்தியாவின் நல்லுறவை  முறிக்காமல்  தப்பித்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.

பேச்சுவார்தைகளில் இருந்து ஒதுங்குவதே அறிவுடமை. அற்ப  ஆசைககளுக்காக பெறியில் வீழ்பவர் விழட்டும்.

 எமது இலட்சியத்துக்காக எந்த எதிர்விளைவு ஏற்பட்டபோதும் அதனைத் தாங்கி எமது வழியில் நடப்பதே சிறந்தது.

அமெரிக்கா போன்ற  ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஊடுருவலையும், பேரினவாத சிறிலங்கா இந்தியாவின் தெற்கில் அதன் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இல்லாமல் இருக்கவும் தமிழீழ் உருவாகுவதே  சிறந்ததாகும்.

இவ்வுண்மையை ஏற்றுக்கொண்டு இந்தியா எமது       மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவேண்டும.

அமையபோகும் தமிழீழம்  இந்தியாவுக்கு நட்புக்கரம் நீட்டி அதற்கு உறுதுணையாக அமையும். அதன் பாதுகாப்புக்கு பலமாக அமையும். தமிழ் மக்களும், அவர்களது தமிழீழமும்  இந்தியாவால் புறக்கணிக்க முடியாதவை. அது மாத்திமல்ல, ஒன்றிலிருந்து ஒன்று அவற்றின் நலன்கள் பிரிக்க முடிக்காதவை.

இந்தியவின் நட்பு எமது போராட்டத்துடன் ஒன்றிப் போனது. ஆயினும் அந்த நட்பை இழந்து போயினும், நாம் நமது மக்களுக்காக, நமது மண்ணில் தொடர்ந்து போராடத்தான் போகிறோம்.

pirapakarannnnnn  "தமிழீழம் அமையத்தான் போகிறது". பிரபாகரனின்  தீர்க்கதரிசனம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-50) pirapakarannnnnnஎமது தலைவர் பிரபாகரன்  கூறியது போல, தமிழீழம் அமையத்தான் போகிறது. அதனை உலகத்தில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

எந்த வெளிச் சக்திகளையும் நம்பி எமது போராட்டத்தை  ஆரம்பிக்கவில்லை. எமது இலச்சியத்தை அடையும் வரை போராடிக்கொண்டே இருப்போம். (ஆதாரம்- விடுதலைப் புலிகள். ஜனவரி. 1986)

இதுதான் தமது பத்திரிகை மூலமாக புலிகள் அமைப்பினர் தமிழ் மக்களுக்கு தெரிவித்த செய்தியாகும்,

rajivee  "தமிழீழம் அமையத்தான் போகிறது". பிரபாகரனின்  தீர்க்கதரிசனம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-50) rajiveeராஜீவின் நிலைப்பாடு

திம்புப் பேச்சுகள் முறிவடைந்தமை குறித்தும், இலங்கை அரசின் புதிய யோசனைகள் குறித்தும்  இந்திய பிரதமர் ராஜீவ்  தெரிவித்த கருத்துக்களும் முக்கியமானவை.

குவைத் நாட்டிலிருந்து வெளிவரும்  “அராப் டைம்ஸ்”, அல்பெசயாஷா பத்திரிகைகளுக்கு ராஜீவ் காந்தி ஒரு பேட்டி வழங்கியிருந்தார். அதில்  தனது கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.

அதன் விபரங்களை வரும் வாரம் தருகிறேன்.

தொடர்ந்து வரும்…

-எழுதுவது அற்புதன்-

http://ilakkiyainfo.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

87இல் புலிகளால் வெள்ளோட்டம் விடப்பட்ட விமானம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-51)

87இல் புலிகளால் வெள்ளோட்டம் விடப்பட்ட விமானம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-51)
 

ராஜீவின் பேட்டி: குவைத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திஜியின் பேட்டி வெளியாகியிருந்து. அப்பேட்டியில் ராஜீவ் காந்தி இலங்கை அரசின் போக்கு மீதும் அதிதிருப்தி தெரிவித்திருந்தார்.

“பேட்டியின் விபரம் இதுதான். இலங்கையில் வன்செயல்கள் தமிழ் தீவிரவாதப் பிரிவினரால் தூண்டிவிடப்பட்டாலும், இலங்கை ஆயிதப்படையினரின்  நம்பகமற்ற தன்மையே உண்மையான பிரச்சனையாக இருக்கிறது” என்றார் ராஜீவ்.

“ஆயுதப் படைகளின் வன்செயல்களை ஜே.ஆர். மறுத்திருக்கிறாரே?   என்று குறுக்கிட்டுக் கேட்டார் நிருபர். அதற்கு ராஜிவ் சொன்னார்: “சில சம்பவங்களைதான் அவர் மறுத்திருக்கிறார். ஆனாலும் உலகம் பூராகவுள்ள வெகுஜன தொடர்பு சாதனங்கள் தெரிவிக்கும் செய்திகள் இலங்கை அரசு கூறுவது முற்றிலும் முரணாகவே உள்ளன.

இத்தகைய நம்பிக்கையீன இடைவெளி நிச்சியமாக அகற்றப்படவேண்டும்” என்றார் ராஜீவ்

rajivu-ganthi-4  87இல் புலிகளால் வெள்ளோட்டம் விடப்பட்ட விமானம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-51) rajivu ganthi 4
ராஜீவ் காந்தி சொன்ன கருத்துக்களில் முக்கியமான பகுதிகள் இவை:

” இலங்கை ஜனாதிபதி புதுடெல்லிக்கு வந்திருந்து போது தீர்வு தொடர்பான அடிப்படையொன்றை வகுத்திருந்தோம்.

இது இலங்கை அரச தரப்பினரும் தமிழர் தரப்பினரும் சேர்ந்து பேசித் தீர்மானிக்க வேண்டிய விடயம் என்பதால் அவற்றை எழுத்தில் வடிக்காமல் விட்டோம்.

பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்கவேண்டுமானால் பேச்சுக்கு ஆரம்ப திட்டமாக அமைய கூடிய நகல் திட்டமொன்று அவசியம்.”

இரண்டாவதாக, இலங்கை அரசின் ஆயுதபடைகளது நம்பகதன்மையை நிலைநிறுத்த ஏதாவது செய்தாக வேண்டும். இந்த இரண்டுமில்லாமல் முன்னேற்றம் ஏற்பட முடியாது

இதனை இலங்கை அரசின் தூதுக்குழுத் தலைவர் எச்.டபிள்யூ.ஜெயவர்தனாவிடம் நான் வலியுறுத்தியிருந்தினேன்” என்று கூறியிருந்தார் ராஜீவ்.

” புலிகள் இயக்க ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தை ஏன் நாடு கடத்தினீர்கள்?” என்று ராஜீவ்விடம் கேட்கப்பட்டது.

அதற்கு ராஜீவ் சொன்ன பதில்: இலங்கைப் பிரஜையாகவோ, இந்திய பிரஜையாகவே இல்லாத இருவர் தொடர்பாக நாம் பெரும் சர்ச்சைகளை எதிர்நோக்கினோம். அதனால் நடவடிக்கை அவசியம் எனக்கருதினோம்”.

அன்ரன் பாலசிங்கம் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர். ரெலோ சார்பில் திம்பு பேச்சில் கலந்துகொண்ட சத்தியேந்திராவும் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றிருந்தவர். அதனால்தான் ராஜீவ் காந்தி அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

index  87இல் புலிகளால் வெள்ளோட்டம் விடப்பட்ட விமானம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-51) index7தற்போது திரு.அன்ரன் பாலசிங்கமும், அவரது பாரியாரும் வெளிநாட்டுக் குடியுரிமையை வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

“இலங்கை இனப்பிரச்சனையில் இரு தரப்புக்கும் கௌரவம் அளிக்கக்கூடிய வகையிலான தீர்வொன்றை காண்பதுதான் இந்தியாவின் நோக்கம். அதற்காகவே இந்தியா உழைத்துக் கொண்டிருக்கிறது” என்றும் தனது பேட்டியில் சொல்லியிருந்தார் ராஜீவ்காந்தி.

வினோதமான விளம்பரம்

இக் காலகட்டத்தில், அதாவது 1985 செப்படம்பர் மாதமளவில் ஒரு பத்திரிகை விளம்பரம் பலரது கவனத்தை இழுத்த்து.

சிங்கள பத்திரிகைகளில் வெளிவந்த அந்த விளம்பர வாசகம் இதுதான்:

“எங்களுக்கு சில நல்லவர்கள் தேவை அவர்கள் விவேகம் மிக்கவர்களாகவும், திடகாத்திமுடையவர்களாகவும், தேசப்பற்று மற்றும் தலைமைத்துவ ஆற்றல் உடையவர்களாகவும் இருந்தால் வாருங்கள். எம்முடன் இணைய வாருங்கள்”

விளம்பர வாசகத்தோடு இராணுவத்தினரின் சின்னமும் காணப்பட்டது.

பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் என்பதில் இலங்கை அரசும் நம்பிக்கை கொண்டிருந்தமைக்கு அந்த விளம்பரமும் ஒரு அத்தாட்சி.

ARV_MGR_2_142731f  87இல் புலிகளால் வெள்ளோட்டம் விடப்பட்ட விமானம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-51) ARV MGR 2 142731fதமிழ் நாட்டில் கொந்தளிப்பு

1985 செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற எழுச்சிகள் பற்றி குறிப்பிட்டேயாகவேண்டும்

1985 செப்டம்பர் 24ம் திகதி தமிழ்நாடு மாநிலத்திலும், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தமிழக மாநில அரசும், பாண்டிசேரி யூனியன் பிரதேச அரசும் முன்னின்று பூரண கர்த்தால் நடத்த ஒத்துழைத்தன.

தமிழக முதலமைச்சர் எம.ஜி.ஆர் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் 2ஆயிரம் தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனா.

இந்திரா காங்கிரஸ் கட்சியினர் மெரினா கடற்கரையில் காந்தி சிலையருகே உண்ணாவிரதம் இருந்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஹர்த்தாலில் கலந்து கொள்ளவில்லை.

தி.மு.க தலைமையில் செயல்பட்டுவந்த தமிழீழ ஆதரவாளர் அமைப்பு சற்றே தீவரமாக்கச் செயற்படத் தொடங்கிய நிலையில், எம்.ஜி.ஆர் நடத்திய போராட்டம்தான் பூரண ஹர்த்தால்.

தி.மு.க.வை இலங்கைத் தமிழர் விடயத்தில் தன்னை மிஞ்சாத வகையில் வைத்துக்கொள்ளவே எம்.ஜி.ஆர் எப்போதும் விரும்பியிருந்தார்.

எம.ஜி.ஆர். நடத்திய பூரண ஹர்த்தால் மாநில அரசே முன்னின்று நடத்திய காரியம். பஸ்கள் ஓடவில்லை. ரயில்கள் ஓடவில்லை, அரச அலுவலகங்கள் இயங்கவில்லை. சுருக்கமாக சொல்வதாயின் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்றவை அனைத்தும் ஸ்தம்பித்தன.

அதனைவிட பெரிய ஒரு போராட்டத்தை தி.மு.கவால் நடத்த முடியாது என்று எம.ஜி.ஆருக்கு தெரியும்.

எம.ஜி.ஆர் மேற்கொண்ட இன்னுமொரு நடவடிக்கையும் குறிப்பிடவேண்டியது.

தமிழ்நாடு மாநில அரசின் ஊழியர்கள் இலங்கை தமிழர்களுக்கு நிதி கொடுக்கவேண்டும் என்று கூறினார் எம.ஜி.ஆர். அதற்கு முன்னோடியாக தனது சார்பாக இரண்டாயிரம் ரூபாவை வழங்கி கொடி விற்பனைய ஆரம்பித்து வைத்தார்.

தமிழக தலைமை செயலகத்தில் பெரிய விழாவாக கொடி விற்பனை நிகழ்ச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுமார் 10இலச்சம் தமிழக அரசு ஊழியர்கள் தமது ஒரு நாள் சம்பளத்தை இலங்கை தமிழர்களுக்காக முன்வந்தனர்.

தமிழக அரசின் தலைமைச் செயளாளர் அந்த செய்தியை மேடையில் அறிவித்தபோது எம.ஜி.ஆர் உண்மையாகவே உணர்ச்சி வசப்பட்டார்.

தனது நாற்காலியைவிட்டு எழுந்து வந்து மைக்கைப் பிடித்த எம.ஜி.ஆர் ” அண்ணா நாமம் வாழ்க”என்று மூன்று தடவை கூறினார்.

1985 செப்டம்பர் மாதம் 24ம் திகதி உண்ணாவிரதம் நடந்த்து என்று கூறினேன் அல்லவா??

Jayalalitha-10  87இல் புலிகளால் வெள்ளோட்டம் விடப்பட்ட விமானம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-51) Jayalalitha 10சென்னையில் செங்கல்பட்டு என்ணும் பகுதியிலும் உண்ணாவிரதம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

உண்ணவிரதத்திற்கு தலைமை தாங்கியவர் செல்வி ஜெயலலிதா. அப்போது அவர் அ.தி.மு.க கொள்கை பரப்பும் செயலாளர்.

தென்னிந்திய திரைப்பட நடிகர்களும் உண்ணாவிரதம் நடத்தினார்கள். இலச்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

சென்னை நகரில் மட்டும் 65 இடங்களில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற மற்றொரு சம்பவம் நெஞ்சை உலுக்கக் கூடியது.

முத்து என்னும் முதியவருக்கு 75வயது எட்டு பிள்ளைகள். மெரினா கடற்கரைக்கு சென்ற முத்து தனது உடலெங்கும் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டார்.

“தமிழக அரசே முதலைக் கண்ணீர் வடிக்காதே” என்று கூறிக்கொண்டே தன்னை பற்றவைத்து கொண்டார்.

வேறு சிலரும் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர்.

pulikal  87இல் புலிகளால் வெள்ளோட்டம் விடப்பட்ட விமானம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-51) pulikal1யாழில் உண்ணாவிரதம்

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வெலிக்கடை சிறையில் இருந்த தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யுமாறு கோரியே உண்ணாவிரத போராட்டம் வடக்கில் ஆரம்பித்தது.

1985 ஆகஸ்ட் 27ம் திகதி முதல் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.

யாழ்.குடாநாட்டில் பல கிராமங்களில் பொதுமக்கள் பங்குகொள்ளும் உண்ணாவிரதங்கள் நடத்தப்பட்டன. உண்ணாவிரப் போராட்டத்திற்கான கோரிக்கை இரத்தினச் சுருக்கமானது. ஆனால் உரமானது. அது இதுதான்:

” விசாரணை செய், அல்லது விடுதலை செய்”

18 மாத காலத்திற்கும் மேலாக தமிழ் இளைஞர்களை சந்தேகத்தின் பெயரில், விசாரணையில்லாமல் தடுத்துவைத்ததை கண்டித்தே மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

ஜே.ஆர். அரசு உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு மதிப்பளிக்க தயாராக இருக்கவில்லை. ஆனாலும் சிறையில் உள்ள இளைஞர்களை அவர்களது பெற்றோர்கள் இருவாரங்களுக்கு ஒரு முறை பார்வையிடலாம் என்று அனுமதித்த்து.

அப்போது வெளிகடைச் சிறையில் பெண்கள் உட்பட 197 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

பேராசிரியர் சிவத்தம்பி அப்போது யாழ். பிரஜைகள் குழுவின் தலைவராக இருந்தார். யாழ்-பிரஜைகள் குழுவினர் வெலிக்கடை சிறையில் உள்ள கைதிகளை பார்வையிடவும் அரசு அனுமதி வழங்கியிருந்த்து.

செப்டம்பர் மாதம் 24ம் திகதி யாழ் நகரில் பல்கலைகழக மாணவர்கள் மாபெரும் ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள்.

யாழ்பாண அரச செயலக கொடிக்கம்பத்தில் கறுப்புகொடி ஏற்றினார்கள்.

மழை,வானம் இடிந்த்துபோல் கொட்டியது. கொட்டும் மழையிலும் ஊர்வலமும் ஆர்ப்பாட்டம்மும் நடந்தன.

செப்டம்பர் 26ம் திகதி முதல் யாழ்குடாநாட்டில் யாழ்பல்கலைகழக மாணவர்களால் பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து எட்டு நாட்கள் கிராமம் கிரம்மாகச் சென்றனர்.

சிறையிலுள்ள இளைஞர்களை விடுதலை செய்யும் போராட்ட நடவடிக்கை என்ற போதிலும், அரசுக்கு எதிரான உணர்வுகளை வளர்த்துவிடும் வகையில் அந்தப்போராட்டங்கள் அமைந்தன.

இரவில் தாம் தங்கியிருக்கும் கிராமங்களில் கவியரங்கு, வில்லுப்பாட்டு என்று பல்வேறு நிகழ்ச்சிகளை மாணவர்கள் நடத்தினார்கள்.

devil  87இல் புலிகளால் வெள்ளோட்டம் விடப்பட்ட விமானம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-51) devil
சென்னையில் கடத்தல்
காந்திய இயக்க தலைவராக இருந்தவர் ச.அ.டேவிட். புளொட் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர். பனாகொடை, வெலிக்கடை, மட்டக்களப்பு சிறைகளில் வைக்கப்பட்டிருந்தவர்.

மட்டகளப்பு சிறையுடைப்பின் பின்னர் சென்னை சென்றுவிட்டார் டேவிட். அவரை டேவிட் ஜயா என்றுதான் அழைப்பார்கள்.

சென்னையில் அண்ணா நகரில்தான் டேவிட் ஜயா குடியிருந்தார்.

02-08-1985 அன்று இரவு பத்துமணிக்கு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த டேவிட் ஜயாவுக்கு குறுக்கே ஒரு வேன் வந்த்து நின்று வழிமறித்த்து.

டேவிட் ஜயா சுதாகரிப்பதற்கிடையில் நான்கு இளைஞர்கள் அவரை குண்டாக தூக்கி வேனில் போட்டுக்கொண்டு பறந்தனர்.

பின்னர் வேனில் இருந்து ஒரு காருக்குள் மாற்றப்பட்டார். கார் சற்று தூரம் சென்றதும் கார் சாரதி ஆசனத்தில் இருந்தவர் கேட்டார்.
“யாரைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்??”

டேவிட் ஜயாவை அமுக்கி பிடித்திருந்தவர் சொன்னார் “டேவிட் ஜயாவை” சாரதி ஆசனத்தில் இருந்தவர் சொன்னார் “வசந்தனைத்தானே” பிடிக்கச் சொன்னது.மற்றவர் சொன்னார் வசந்தன் வரவில்லை. அதுதான் இவரைப் பிடித்தோம்.

சிறிது தூரம் சென்றதும் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியில் காரை நிறுத்தி டேவிட் ஜயாவை தள்ளிவிட்டு, கார் பறந்துவிட்டது. டேவிட் ஐயாவுக்கு ஆபத்து ஒன்றுமில்லை.

டேவிட் ஐயாவை கடத்திச் சென்றது புளொட் அமைப்பினர். இது புளொட் உள் இயக்கமோதலின் ஒரு கட்டம்.

Davit  87இல் புலிகளால் வெள்ளோட்டம் விடப்பட்ட விமானம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-51) Davitதோழர்.சந்ததியாரோடு டேவிட் ஐயா

வசந்தன் என்று குறிப்பிடப்பட்டது சந்த்தியாரை.சந்த்தியாரும் டேவிட் ஐயாவும் நல்ல ஒட்டு. இருவரும் சேர்ந்து வருவார்கள். சந்ததியார் டேவிட் ஐயாவீட்டில் தங்கவரலாம் என்று காத்திருந்தனர். அவர் வரவில்லை. டேவிட் மாட்டினார்.

புளொட் அமைப்பில் முக்கியமானவராக இருந்த வசந்தனுக்கும்,புளொட் தலைவர் உமா மகேஸ்வரனுக்கும் இடையில் பிரச்சனை.

பிரச்சனை வளர்ந்து சந்த்தியாரை தீர்த்துக்கட்டும் நோக்கத்தோடு தேடும் அளவுக்கு சென்றது.

பின்னர் சந்த்தியார் புளெட் அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

சந்ததியார் தொடர்பாக முன்னரும் குறிப்பிட்டிருந்தேன்.

இளைஞர் பேரவையில் தீவிர உறுப்பினர். அல்பிரட் துரையப்பா கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டு வழக்கு ஜோடிக்கப்பட்டவர்.
இளைஞர் பேரவையின் தீவிரம் போதாது என்று. அதிலிருந்து பிரிந்து “தமிழ் இளைஞர் அணி”தலைவராக இருந்தவர். வவுனியாவில் காந்திய இயக்க வேலைகளில் ஈடுபட்டவர்.

anura_4  87இல் புலிகளால் வெள்ளோட்டம் விடப்பட்ட விமானம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-51) anura 4
அநுராவின் பேச்சு

1985 செப்டம்பரில் எதிர்க்கட்சி தலைவர் அநுரா பண்டாரநாயக்கா.

முல்கிரிகலை என்னும் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றினார் அநுராபண்டாரநாயக்கா.

பேசியதில் முக்கால்வீதம் இனவாத விஷசம். அந்த பேச்சிலிருந்து ஒரு பகுதி.

” ஜே.வி.பி.க்கு தடைவிதித்த அரசாங்கம் தமிழர்விடுதலைக் கூட்டனிக்கு ஏன் தடைவித்திக்கவில்லை?

தமிழர்கள் இன்று இந்தியாவில் இருந்துகொண்டு, இந்த நாட்டை துண்ணடா திட்டமிடுகின்றனர்.

இன்று இந்த நாட்டின் முக்காற் பங்கை தமிழாகள் பிடித்துவிட்டனர். மக்களை ஏமாற்ற அரசாங்கம் முயல்கிறது.

இன்று வடக்கில் தமிழர் ஆட்சியே நடைபெறுகிறது. கிழக்கில் மட்டுமென்ன, அங்கும் தமிழர் ஆட்சியே வேரூன்றி நிற்கிறது.

1977ம் ஆண்டு ஆட்சி ஒப்படைக்கப்படும்போது யாழ்பாணப் பகுதியில் 25 ஆயிரம் சிங்களவர்களும், மன்னர், வவுனியா பகுதிகளில் 40ஆயிரம் சிங்களவர்களும்,சேருவில், தெஹிவத்த பகுதிகளில் 20 ஆயிரம் சிங்களவரும் வாழந்து வந்தனர்.

எனினும், தற்போது அவர்கள் அனைவரும் அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநெச்சியில் குறி

1985 செப்படம்டபர் மாதத்தில் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் மீது மீண்டும் ஒரு முறைகுறிவைக்கப்பட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் வைத்த குறி தப்பியதையும், தாக்குதல் தோல்வியில் முடிவடைந்ததையும் முன்னர் விபரித்திருந்தேன்.

இப்போது குறிவைத்த்து தமிழீழ இராணுவம்.(TEA) தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் தலைமையில் ஒரு வித்தியாசமான திட்டம் தீட்டப்பட்டது. அதன்விபரங்களை வரும் வாரங்களில் தருகிறோன்.

(தொடர்ந்து வரும்.
எழுதுவது அற்புதன்)

vimanam  87இல் புலிகளால் வெள்ளோட்டம் விடப்பட்ட விமானம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-51) vimanam1

http://ilakkiyainfo.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

லெறியில் வெடிமருந்து நிரப்பி கிளிநொச்சி பொலிஸ் நிலையம் தாக்குதல்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 52)

லெறியில் வெடிமருந்து  நிரப்பி  கிளிநொச்சி பொலிஸ் நிலையம்  தாக்குதல்! : (அல்பிரட்  துரையப்பா முதல் காமினிவரை- 52)
 

லெறியில் வெடிமருந்து:

செப்படம்பர் மாதம் 23 ஆம் திகதி 1985 நல்லிரவு 12மணியளவில் கிளிநொச்சி பொலிஸ்- இராணுவ கூட்டு முகாம் முன்பாக ஒரு லொறி வந்து நின்றது.

லெறியைச் செலுத்தியவர் இறங்கி ஓடிவிட்டார். லெறியில் வெடி மருந்து நிரப்பப்பட்டிருந்த்து. சாரதி இறங்கிச் சென்றதும் லொறி வெடிக்க வைக்கப்பட்டது.பாரிய சத்தத்தோடு லொறி வெடித்தபோது பொலிஸ் நிலைய கட்டிடங்கள் சேதமாகின.

பொலிஸ் நிலையத்திலும், அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் தீப்பிடித்துக்கொண்டது.

லொறியில் பெற்றோல், டீசல் நிரப்பிய பீப்பாய்களும் வைக்கப்பட்டிருந்தமையால் குண்டு வெடிப்போடு அவையும் பற்றியெரியத் தொடங்கின.

அதே வேளையில் பொலிஸ் நிலையம் மீது குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது.

தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பெற்றோல் நிரப்பப்பட்ட பவுசர் ஒன்று வந்து பொலிஸ் நிலையம் முன்பாக நின்றது. அதிலிருந்தும் சாரதி இறங்கி ஓடிவிட்டார்.

பவுசரை வெடிக்க வைக்க முயன்றார்கள். பவுசர் வெடிக்கவில்லை.

பொலிஸ்- இராணுவ கூட்டுப்படை நிலையத்துக்கு அருகேதான் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் குதம் இருந்தது.

பவுச்சர் வெடித்திருந்தால் அந்தப் பெற்றோல் குதமும் பற்றியெரிந்திருக்கும். நகரெங்கும் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும்.

பவுசரை வெடிக்க வைத்து பெற்றோல் குதத்தையும் நாசம் செய்வதே தாக்குதல் நடவடிக்கையின் நோக்கங்களில் ஒன்றாக இருந்த்து.

ஆனால் பவுசர் வெடிக்கவில்லை. அதனையடுத்து மீண்டும் மோட்டார் ஷெல் தாக்குதல் தொடர்ந்தது. பொலிஸ் நிலையத்திலிருந்து பொலிசார் தப்பிச் சென்றதால் பலத்த உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

தாக்குதல் நடைபெற்றபோது கிளிநொச்சி பொலிஸ், இராணு கூட்டு முகாமில் 57 இராணுவ வீர்ர்களும், 39 பொலிசாரும் ஒரு உயரதிகாரியும் இருந்தனர்.

தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்தனர். அதில் நான்கு பேர் காயமடைந்தனர். அதில் நான்கு பேர் இராணுவ வீர்ர்கள். நான்கு பேர் பொலிஸ்கார்ர்கள். ஒருவர் அதிகாரி

தாக்குதல் நடவடிக்கைக்கு தமிழீழ இராணுவம் (TEA)உரிமை கோரியது. தம்பாபிள்ளை மகேஸ்வரன்தான் லொறியில் வெடி மருந்து

நிரப்பியும், எரி பொருள்களை வைத்தும் வெடிக்கவைக்கும் தெழில்நுட்ப நேரடியாக்க் கவனித்தார்.

இலண்டனில் கற்றுகொண்ட தெழில் நுட்ப அறிவை பயன்படுத்தி பார்த்தார் தம்பாபிள்ளை மகேஸ்வரன் (பனாகொடை மகேஸ்வரன்)

முதன்முதலில் வெடிமருந்து நிரப்பிய லொறியை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலும் அதுதான்.

தயாரிப்புக்கு பாராட்டு

கிளிநொச்சி தாக்குதல் படைத்தரப்பு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த்து. கொழும்பில் பாதுகாப்பு அமைச்சின் செயளார் ஜெனரல் சிறில் ரணதுங்கா ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தினார்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத் தாக்குதல் தொடர்பாக தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி ஒரு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

“ கிளிநொச்சி பொலிஸ் நிலையத் தாக்குதலில் தீவிரவாதிகள் “நேபாம்” குண்டுகளைப் பாவித்துள்ளார்கள்.

இது ஜெனிவா சமாதான உடன்பாட்டுக்கு மாறானது” என்று குற்றம் சாட்டினார் அமைச்சர்.

தீப்பற்றும் இராசயன குண்டுதான் “நோம்” குண்டு என்றழைக்கப்படும்.

அவ்வாறான குண்டுகளை பாவித்த்தாக குற்றம் சாட்டியதன் மூலம் தீவிரவாத இயக்கங்களுக்கு வெளியுலகில் கண்டனம் ஏற்படும் என்று அமைச்சர் அத்துலத் முதலி நினைத்தார்.

“இந்து” மீது பாய்ச்சல்

ஜே..ஆர். ஜெயவர்த்தனா அரசுக்கு எரிச்சலை கொடுத்த இன்னொரு விஷயம் வெளிநாட்டு பத்திரிகைள்.

சர்வதேச சமூகத்தின் அனுதாபத்தை அரசுக்கு இல்லாமல் செய்யுமளவுக்கு வெளிநாட்டு பத்திரிகைளில் இலங்கை நிலவரச் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

இந்தியாவில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கில தினசரி “இந்து”

இலங்கையில் இருந்த தமிழ் இயக்கங்களிடையேயான புலிகள் அமைப்பை பலமாக ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்திருந்தது “இந்து”.

“இந்து” பத்திரிகையின் ஆசிரியரான ராம் போராளிகள் அமைப்புகளில் புலிகள் மட்டுமே சிறந்த கெரில்லா அமைப்பாகும் என்னும் கருத்தை கொண்டிருந்தார்.

புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மீத மதிப்பு கொண்டிருந்தார். நேரடியாகவும் பல தடவைகள் பிரபாகரனை சந்தித்து நெருக்கமான உறவையும் வைத்திருந்தார்.

“இந்து” பத்திரிகையின் நிலைப்பாட்டால் எரிச்சலடைந்த ஜே.ஆர்.தனது அதிதிருப்தியை வெளிப்படையாகவே கொட்டித் தீர்த்தார்.

ஜப்பான், இலங்கை நட்புறவுச் சங்கத்தின் மூன்று மாடி விகாரை கட்டித் திறப்பு விழவில் கலந்துகொண்டு ஜே.ஆர் உரையாற்றினார்.

அக் கூட்டத்தில் ஜே.ஆர் சொன்னது: “இலங்கை பிரச்சனை பற்றி அறிய வேண்டுமானால் என்னை கேளுங்கள். “இந்து” வை நம்பவேண்டாம். அதில் வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை”

ஜே.ஆரின் கடும் எரிச்சலை அப்போது சந்தித்த “இந்து” தற்போது என்னசெய்துகொண்டிருக்கிறது?

புலிகள் அமைப்பை கடுமையாக சாடிக்கொண்டிருக்கிறது.

ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தின் பின்னர் “இந்து” தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.

n-ram  லெறியில் வெடிமருந்து  நிரப்பி  கிளிநொச்சி பொலிஸ் நிலையம்  தாக்குதல்! : (அல்பிரட்  துரையப்பா முதல் காமினிவரை- 52) n ram

ராம்

“இந்து” ராம் தற்போது ‘புரன்லைன்’ ஆங்கில சஞ்சிகையின் ஆசிரியராக இருக்கிறார். தீவிர புலி எதிர்ப்பாளர்.

ராஜீவ் கொலை விவகாரத்தில் ஒற்றைக் கண் சிவராசன் என்னும் பாக்கியசந்திரன் பற்றிய விபரங்களை முதலில் வெளியிட்டதும் புரன்லைன் சஞ்சிகைதான் என்பதும் குறிப்பிடதக்கது.

வங்கிகள் நிலை

யாழ்-குடநாட்டில் நிலவிய சூழலைக் காரணம் காட்டி அங்கு வங்கிகளின் நடவடிக்கைகள் இடைநிறுத்தியது பாதுகாப்பு அமைச்சு.

நகைகளை அடகு வைத்தோருக்கு மீளப்பெற முடியவில்லை. பாதுகாப்புக் கருதி நகைகள் வேறிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டன.
அதனையடுத்து நகைகளை அடகுவைத்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“அடகுவைத்த நகைகளை திருப்பி தா’ என்று கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையையும், போராட்டத்தையும் கவனித்த பாதுகாப்பு அமைச்சருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

நகை அடகுவைத்தோர் என்ற போர்வையில் இயக்கங்கள்தான் போராட்டங்களை தூண்டிவிடுகின்றன.

வங்கிகள் திறக்கப்பட்டால் கைவரிசையைக் காட்டலாம் என்று நினைக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டது பாதுகாப்பு அமைச்சு.

பாதுகாப்பு அமைச்சால் ஒரு அறிக்கை விடுக்கப்பட்டது.

அந்த அறிக்கை பின்வருமாறு கூறப்பட்டது.

“நகைகள் அடகு வைக்காதோரும் அவற்றை திரும்பப் பெறக்கோரும் போராட்டத்தின் பின்னால் இருந்திருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளும் அதேவேளையில், நகைகளை யாழ்பாணத்துக்கு எடுத்துச்சென்று விநியோகிக்கத் தேவையான பாதுகாப்பை வங்கிகளுக்கு அரசாங்கம் வழங்கும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது,

நகைகளை திரும்ப வழங்கும் நடவடிக்கையில் இறுக்கமான பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்பட்டன.

அதனால் வங்கிகளில் தமது நகைகளை அடகுவைக்க யாழ். குடாநாட்டு மக்கள் தயங்கினார்கள்.

தனியார் நகை அடகு கடைக்காரர்ளுக்கு அதனால் நல்ல சந்தோசம்.

இடம்பெயர்ந்தவர்கள்

போர் நிறுத்தம் முடிவடைந்த அடுத்து 1012பேர் அகதிகளாக வந்து சேர்ந்தனர் என்று தமிழக அரசு அறிவித்த்து.

1983ம் ஆண்டு யூலை இனக்கலவரத்தை தொடர்ந்து இந்தியாவுக்கு செல்லும் அகதிகள் தொகை அதிகரித்த்து.

அகதிகளை கொண்டுசென்று தமிழக கடலோரப் பகுதிகளில் இறக்கிவிடுவதற்காகவே படகுச்சேவைகள் நடத்தப்பட்டன.

மீன்பிடிப் படகுகளிலும் அகதிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், இங்கிருந்து நம்மூர் மீன்பிடிபடகில் சென்று, இந்திய கடல் எல்லையின் பின்னர்   இந்திய மீன்பிடிப் படகுகளில் ஏற்றிச் செல்வதும் உண்டு.

இந்திய மீனவர்களில் பலர் அனுதாப உணர்வோடு அகதிகளை ஏற்றிச்சென்றனர். அவர்களுக்கு துணிவகைகள், சவர்க்காரம் போன்ற பொருட்களை அகதிகள் கொடுப்பார்கள்.

ஒரு சில மீனவர்கள் அநாகரிகமாக நடந்துகொள்வதும் உண்டு. அகதிகள் தமது செலவுக்காக விற்பனை செய்யக்கொண்டு செல்லும் பொருட்களை கொள்ளையடித்த சம்பவங்களும் நடைபெற்றன.

தமிழக மக்களை பொறுத்தவரை இலங்கைத் தமிழ் அகதிகள் விடயத்தில் மிகவும் வாஞ்சையுடன் நடந்துகொண்டார்கள்.

போராளி அமைப்புக்களது உறுப்பினர்களை மரியாதையோடு நோக்கினார்கள்.

1983 யூலை முதல் 1985 செப்டம்பர் மாதம் வரை சுமார் 85ஆயிரம் அகதிகள் தமிழகம் வந்துசேர்ந்தனர். என்று புள்ளி விபரங்கள் தெரிவித்திருந்தன.

கணக்கெடுப்புக்கு உள்ளாக்கப்படாமலும் மேலும் பல ஆயிரம் பேர் தமிழ்நாட்டுக்குள் பிரவேசித்திருந்தனர்.


தீவிரவாதிகளின் கடும்போக்கும் இந்தியாவின் மனப்போக்கும்

images  லெறியில் வெடிமருந்து  நிரப்பி  கிளிநொச்சி பொலிஸ் நிலையம்  தாக்குதல்! : (அல்பிரட்  துரையப்பா முதல் காமினிவரை- 52) images2ராஜீவ் சொன்னது

இலங்கையில் இனப்பிரச்சனை என்பது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை போன்றே அங்கு முக்கியத்துவம் பெற தொடங்கியிருந்த்து.

தமிழக அரசியில்கட்சிகளின் நிலைப்பாடும், தமிழகத்தில் குவிந்த அகதிகளின் எண்ணிக்கையும், திம்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்திய அரசு வெளிப்படையாக மத்தியஸ்த பாத்திரம் வகிக்க தொடங்கியமையும் இலங்கை பிரச்சனை இந்திய பிரச்சனைகளில் ஒன்று போல மாறிவிடக்காரணமாகியது.

1985 செப்டம்பர் 27ம் திகதி இந்திய ஜெனாதிபதி மாளிகையில் பத்திரிகையாளர் மகாநாடு ஒன்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உரையாற்றினார்.

“பஞ்சாப் உடன்படிக்கையை முன்ணுதாரணமாக கொண்டு, இலங்கையின் இனப்பிரச்சனையை தீர்த்து வைப்பதில் இலங்கையரசு அக்கறையுடன் செயற்படவேண்டும்.

இலங்கையின் இனப்பிரச்சனைக்கு குறுகியகால தீர்வொன்று பயன்தராது. நீண்டகால அடிப்படையில் இறுதியான இணக்கத்தீர்வு காணப்படவேண்டும்.

இது முற்றிலும் ஒரு அரசியல் பிரச்சனை இராணுவ  மார்க்கங்கள் நாடப்பட்டால்  நிலைமை  சிக்கல்லடையும்” என்றார் ராஜீவ் காந்தி.

‘இந்து’ பத்திரிகை பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. ‘இந்து’ பத்திரிகையின் பிரபல விமர்சகர் ஜி.கே.ரெட்டி.

இந்திய அரசியல் தலைவர்களோடு நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்த விமர்சகர்.

இலங்கை இனப்பிரச்சனையின் போக்கைப் படம்பிடித்து காட்டுவது போல ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

அதிலிருந்து சில முக்கியமான பகுதிகள் இவை (தற்காலத்திற்கும் பொருத்தம்)

‘அரசியல், சமூக இலக்குகளை எய்துவதற்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ள தீவிரவாத இயக்கம் ஒன்று முரணான சூழ்நிலைகளில் பலவந்தப்படுத்தப்பட்டாலன்றி, தனது அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக்கொடுக்கும் வகையிலான பேச்சுவார்த்தைகளில் நாட்டமோ விருப்பமோ கொள்வதில்லை.

தமது இலட்சிய நோக்கத்தை அடைவதற்காக, பரந்த அடிப்படையில் தீர்க்கமாக மேற்கொள்ளப்படும் கிளர்ச்சியை இடைநடுவில் கைவிடுவது  அத் தீவிரவாத இயக்கத்தின் கருத்துப்படி  புரட்சிகரப் பாதையை முற்றிலும் சரணாகதியாக்குவதாகவே கொள்ளப்படும்.

அத்தகைய ஜீவ மரண போராட்டத்தின் நடுவில் தளர்வது போன்று காணப்படும் தோற்றப்பாடு எதுவும் இயக்கத்தில் உள்ளவர்களின் உறுதிப்பாட்டையும், உட்சாகத்தையும் மிகவும் பயங்கரமான விளைவுகளுடன் இல்லாதொழிக்கவே வகைசெய்வதாக அமைந்துவிடும்.

இத்தகைய இக்கட்டான நிலையில்தான் ஈழம் குழுக்கள் இன்று இருக்கின்றன.

சமனான சலுகை அடிப்படையிலான இணக்கத் தீர்வை காண்பது என்ற இந்திய அரசின் அழைப்புக்கு செவி மடுப்பதா? அல்லது பிரிவினைக்கான போராட்டத்தை மேலும் உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வதா என்பதே இக் குழுக்களைக் குழப்பிக் கொண்டிருந்த்து.

மிதவாத தலைவர்கள்

இந்திய மண்ணில் இருந்து இக்குழுக்களின் தலைவாகள் இயங்குவதால் இந்தியாவின் கருத்துமிக்க ஆலோசனைகளை தமிழ் தீவிரவாதிகள் தட்டிக்கழித்து அசட்டை செய்துவிட முடியாது.

இலங்கை அரசாங்கம் நம்பகதன்மையான யோசனை எதனையும் தெரிவிக்காத நிலையில் தமது இயக்கத்திற்குள் இருக்கும் தீவிரவாதிகளால் ‘கடதாசிப் புலிகள்’ என்று நாமகரணம் சூட்டப்பட்டு அபாயத்திலிருந்தும் தீவிரவாதத் தலைவர்கள் தப்பமுடியாது.

தீவிரவாதிகளிலும் பார்க்க தேசப்பக்தியில் குறைந்தவர்களல்லாத தமிழ் மிதவாத தலைவாகள் (கூட்டணி தலைவாகள்) இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவாத்தனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதால் எந்த ஆபத்தும் நிகழ்ந்து விடாது என்று கருதுகின்றனர்.

ஐக்கியப்பட்ட இலங்கை அரசியலமைப்புக்கு போதுமான அதிகாரப் பரவலாக்கரைலயும், பாதுகாப்பையும் வழங்கக்கூடிய தீர்வொன்றை, தமிழ் பிரதேசங்களுக்கு வழங்கப்படும் நியாயமான சுயாட்சி மூலம் பெறமுடியுமாயின் தமிழ் மக்களுக்கு அநாவசிய இழப்புகளை ஏற்படுத்தக் கூடிய ஆயுதப் போராட்டத்தை தொரடவேண்டிய அவசியமில்லை என்பது தமிழ் தலைவர்களின் எண்ணமாக உள்ளது.

இந்திய நிலைப்பாடு

பிரிவினைக்கு சமமான வகையில் அமையக்கூடிய முற்று முழுதான சுயாட்சிக்கு குறைந்த எதற்கும் இணங்குவதில்லை என்ற தீவிரவாதிகளின் அடம்பிடிப்பின் இலாப – நட்டங்களை தீவிரவாதிகளிடமே விட்டுவிட புதுடில்லியில் உள்ள சில வட்டாரங்கள் தயாராகவே உள்ளன.

அடம்பிடித்த நிலையில், அரைமனதுடன் ஜனாதிபதி ஜெயவர்த்தனா இணங்கிக் கொண்ட வரையறுக்கப்பட்ட சுயாட்சித் தீர்வுக்கு அப்பால் அவர் வழங்குவதற்கு  தயாராக இல்லாதவரை, தீவிரவாதிகளின் விடாப்பிடியான நிலை தொடர்வதை அனுமதிப்பதில் எதுவித ஆபத்தும், சங்கடங்களும் ஏற்படபோவதில்லை என்று அந்த வட்டாரங்கள் கருதுகின்றன.

தனது ஆயுதப்படையை பலப்படுத்தி சீரமைக்கவும், இந்தியாவை சாந்தப்படுத்தவுமே ஜே.ஆர். மேற்படி சுயாட்சியை வழங்க உடன்பட்டார்.

தமிழர்களின் கிளர்ச்சியை கண்டிப்பதோ, அல்லது ஈழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை அடக்குமளவுக்கு நடவடிக்கை எடுப்பதோ இந்தியாவின் தற்போதைய கொள்கையல்ல.

தமிழர்களின் சட்டபூர்வமான உரிமைகளைப் பூரணப்படுத்தக் கூடிய வகையில் இலங்கை அரசாங்கம் நடந்துகொள்ளாவிட்டால், ஆயுதப் போராட்டத்தை மீள ஆரம்பிக்கும் உரிமையைக் கைவிடத் தேவையில்லை என்ற அடிப்படையில், இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு சாத்தியமான முயற்சிகளை இந்தியா செய்கிறது.

வீரபுருசர்கள்

தமது இயலாமையை மறைப்பதற்காக வீர புருசர்கள் போன்ற தோற்றப்பாட்டைக் காட்டும் தீவிரவாதிகள் தொடர்பாக புதுடில்லி வட்டாரங்களில் பொறுமையின்மையும், கவலையும் காணப்படுகிறது.

இலங்கை நெருக்கடிக்கு விரைவான திடீர் தீர்வொன்று சாத்தியமில்லை என்பது இந்திய அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் உணரப்பட்டுவருகிறது’

ஜி.கே.ரெட்டி தனது கட்டுரையில் கூறிய மேற்படி கருத்துக்கள் இலங்கைப்பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டை மிகத் துல்லியமாக விளக்கியிருந்தன.

இந்திய அரசின் தவறுகள் பற்றியும் ஜி.கே.ரெட்டி குறிப்பிட்டிருந்தார். தற்போதும் பொருந்தக்கூடியவை அவை.

தொடரும்..
எழுதுவது அற்புதன்

http://ilakkiyainfo.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜென்டில்மென்’ பத்திரிகைக்கு பிரபாகரன் அளித்த பேட்டி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 53)

 
 

புதுடில்லியில் விளக்கம்

இலங்கைப் இனப்பிரச்சினையில் இந்திய நிலைப்பாடு, ஈழப் போராளி அமைப்புக்கள் இந்தியாவோடு கையாண்ட அணுகுமுறைகள் பற்றி ‘இந்து’ பத்திரிகை விமர்சகர் ஜீ.கே. ரெட்டி நல்ல விமர்சனம் ஒன்றை எழுதியிருந்தார்.

1985 இல் எழுதப்பட்ட விமர்சனம் அது.

அந்த விமர்சனத்தின் மறுபகுதியையும் கவனித்துவிட்டு நாம் தொடர்ந்து செல்லாம்.

அதற்குமுன் ஒரு விடயத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 1985 இல் போர் நிறுத்தம் முடிவடைந்தபோது இலங்கை அரசுதான் அந்த முடிவுக்குக் காரணம் என்பதை வலியுறுத்துவதில் தமிழ் இயக்கங்கள் வெற்றி பெற்றன.

இயக்கங்கள் மீது பழியைப் போட அரசு செய்த பிரசாரம் பயனளிக்கவில்லை. இயக்கங்களின் அரசியல் சாணக்கியத்துக்கு கிடைத்த வெற்றியே அது என்று கொள்ளலாம்.

pulikla  ‘ஜென்டில்மென்’ பத்திரிகைக்கு பிரபாகரன்  அளித்த பேட்டி:  (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 53) puliklaஇனி விமர்சனத்தைக் கவனிக்கலாம். இந்தியாவின் தவறுகளை பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார் ஜீ.கே. ரெட்டி:

“புதுடில்லியில்  தீவிரவாத இயக்கங்கள் நடாத்திய நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் இயக்கங்கள் யுத்த நிறுத்தத்தை மீறியதன் எதிர்விளைவாகத் தான் இலங்கை இராணுவம் பதிலடியில் இறங்குகின்றது என்னும் தப்பெண்ணத்தை நீக்கும் வகையில் தலைவர்கள் தமது வாதங்களை முன்வைத்தனர்.

ஒவ்வொரு சம்பவத்தின் பின்னரும் இராணுவத்தினர் தமிழ் மக்களின் உடமைகளை எரித்து அவர்களை வீடுகளை எரித்து அவர்களை வீடுகளை விட்டு ஓடவைப்பதில் முனைந்து விடுகின்றனர் என்பது தெளிவாக வலியுறுத்தப்பட்டது.

தமிழர்களின் பிரதேசங்களில் திட்டமிட்ட முறையில் சிங்கள மக்களைக் கொண்டுவந்து இலங்கை அரசாங்கம் குடியேற்றியது. இதற்கு முன்னர் இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதும் தீவிரவாதத் தலைவர்களால் புதுடில்லிக்கு எடுத்து விளக்கப்பட்டது.

உதாரணமாக கேந்திர முக்கித்துவம் வாய்ந்த திருகோணமலையில் 1948 ஆண்டு 7,606 ஆக இருந்த சிங்கள மக்களின் தொகை, 1981 இல் 86,341 ஆக உயர்ந்துள்ளது.

1921 இல் திருகோணமலையில் 2.8 வீதமாக இருந்த சிங்கள மக்களின் தொகை 1971 இல் 28.8 வீதமாகி 1981 இல் 33.8 வீதமாக உயர்ந்துள்ளது.

இதே காலகட்டத்தில் அங்குள்ள தமிழர்களின் தொகை 54 வீதத்திலிருந்து 36 சதவீதமாக இறங்கியுள்ளது. 1921 இல் 37 வீதமாக இருந்த தமிழ் பேசும் முஸ்லிம்களின் தொகை 1981 இல் 29 சதவீதமாக இறங்கியது. இன விகிதாசார சமத்துவத்தன்மையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் தவறு

மாறி மாறிவந்த இலங்கை அரசுகள் மேற்கொண்ட இந்த குடியேற்ற விவகாரத்திற்கு புதுடில்லி கொள்கை வகுப்பாளர்கள் போதிய கவனம் கொடுக்கவில்லை.

வடக்கையும், கிழக்கையும் இணைப்பது என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதோ அல்லது எல்லைகளை மீள வரைவதன் மூலம் தமிழ்  பிரதேசங்களை வரையறுப்பதோ பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்பது இலங்கையின் வாதம்.

இந்த வாதத்தோடு ஒத்துப்போக இந்தியா தயாராக இருப்பது, வடக்குக் கிழக்கு மாகாணங்களில் காணிக் குடியேற்றத் திட்டங்களை மேற்கொள்ள இலங்கை அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது என்பதை கவனத்தில் எடுக்கத் தவறியமையாகும்.

உள்நாட்டில் (இந்தியாவில்) பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்தச் சிக்கலான வெளிநாட்டுப் பிரச்சினையைக் கையாள்வதில் நேர்மையான தரகரின் பங்குக்கும், அப்பாவி போன்று நடிக்கும் தீக்கோழிக்கும் இடையில் ஒரு சரியான வேறுபாடு வரையறுக்கப்படவேண்டும்.

தமிழ் தீவிரவாதிகள் மேலும் கோரிக்கைகளை தமது நிலைப்பாட்டின்பால் வற்புறுத்துவார்கள்.

ஆனால் மிதவாதிகள் தங்கள் நாட்டுப் பிரச்சினையை தீர்த்துவைக்க இந்தியாவே முன்முயற்சி எடுக்கவேண்டும் என்று முற்றிலும் விட்டுவிடுவார்கள்.

நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்தியா பணியாற்றி வருவதால் இப்பிரச்சினையில் விரைவான தீர்வொன்று காணப்பட வேண்டும்.

telooo  ‘ஜென்டில்மென்’ பத்திரிகைக்கு பிரபாகரன்  அளித்த பேட்டி:  (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 53) teloooராஜீவ் எதிர்ப்பு

அயல் நாடுகளுடன் உன்னத உறவுகளைளப் பேணுவது என்ற கொள்ளையை இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி பின்பற்றி வருகிறார்.

தமிழர்களின் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கைக்கான தனது முற்று முழுதான எதிர்ப்பை எந்தவித இரகசியமுமின்றித் தெரிவித்துவிட்டார்.

சுதந்திர ஈழம் என்ற சிந்தனைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த ராஜீவ், இலங்கையின் ஐக்கிய அமைப்பு வரையறைக்கு அப்பால் அமையக்கூடிய சமஷ்டி அமைப்பைக்கூட நிராகரித்துவிட்டார்.

திரு.காந்தியின் கருத்துப்படி இலங்கைத் தமிழர்களின் அபிலாசைகளைப் பூரணப்படுத்துவதற்கு இந்தியாவின் மாநிலங்களில் உள்ள சுயாட்சி அமைப்பு போதுமானது.

இந்தியாவின் பெருந்தன்மையான பலவந்தம், சிநேகித பூர்வமான வழிநடத்தல் என்பவற்றின் மூலமாக தமிழ் தீவிரவாதப் பிரிவினரும், மிதவாதத் தலைவர்களும் ஒன்று சேர்க்கப்பட்டனர். அதன் மூலம் நிச்சயமற்ற தன்மை நீக்கப்படுவதற்கு திம்புப் பேச்சு மேடைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக இரு பிரிவினருக்கும் இடையிவான அணுகுமுறை வேறுபாடு தொடர்ந்தது.

இலங்கை ஆயுதப்படைகளின் அட்டூழியங்கள் மீது கவனத்தை திசை திருப்பியது மூலம் திம்புப் பேச்சுவார்த்தையின் முறிவானது தமிழ் முகாமுக்குள் இருந்த பாரிய கருத்து வேறுபாடுகள் வெளியில் தெரியாமல் செய்ய உதவிவிட்டது.

போர் நிறுத்தம்

தற்போது செய்யக்கூடியது யாதெனில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் தமக்கிடையில் நம்பிக்கையை வளர்க்க முனையும்வரை பேச்சுவார்த்தைகளை தொடர வைப்பதே.

யுத்த நிறுத்தம் என்பது வெறுமனே விரோத செயற்பாடுகளை நிறுத்துவது மட்டுமல்ல. மீண்டும் கூடிய சாதகமான நிலையில் இருந்து தாக்குதலைத் தொடுப்பதற்கு வசதியாக ஒவ்வொரு தரப்பும் தமது சக்தியையும் வளத்தையும் பெருக்காதிருப்பதுமாகும்.”

இதுதான் ஜீ.கே. ரெட்டி எழுதிய விமர்சனத்தின் முக்கிய பகுதிகள்ஃ

நீளமாக இருந்த போதும் இந்தியா, இலங்கை இனப்பிரச்சினையின் மீது கொண்டிருந்த கண்ணோட்டத்தை தற்போதைய நிலையில் பலர் மறந்திருப்பர், வேறு பலர் தெரிந்திராது இருப்பர்.

இந்த அரசியல் தொடரைப் படித்துவரும் பல்லாயிரம் வாசகர்கள் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய விடயம் அதுவாகும் என்பதால் நீளம் அதிகமானாலும் அந்த விமர்சனத்தை தரவேண்டியிருந்தது. எனினும் சில பகுதிகளை நீளம் கருதி சுருக்கியே தந்தேன்.

பிரபா பேட்டி

இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘ஜென்டில்மென்’ பத்திரிகை நிருபர் ஜஸ்விந்தர்சிங், புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார்.

திம்பு பேச்சுவார்த்தை முறிவு, போர் நிறுத்த முறிவு பற்றிய கேள்விகளைத் தொடுத்தார்.

கேள்வி:- ஆயுதமேந்துமளவுக்கு உங்களை நிர்பந்தித்த காரணிகள் எவை?-

பிரபா:- ஈழத்தமிழ் மக்கள் அடைந்து வரும் அவலநிலை தான் துப்பாக்கி ஏந்த வேண்டிய நிலைக்கு என்னைத் தள்ளியது. எமது மக்கள் திட்டமிட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதை உணர்ந்தேன். எனவேதான் நமது மக்களைப் பாதுகாத்து, எமது நாட்டின் விடுதலையை மீட்க ஆயுதப் போராட்டமே ஒரே வழி என்னும் முடிவுக்கு வந்தேன்.

கேள்வி:- சுதந்திரமாக இயங்கும் பத்திரிகைகள் மூலமாகவும், பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலமாகவும் உங்கள் குறைகளை எடுத்து விளக்கி நிவாரணம் கண்டிருக்கலாம் என்று நீங்கள் எண்ணியதில்லையா?

பிரபா:- முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் தமது குறைகளையும், கோரிக்கைகளையும் நாடாளுமன்றம் மூலம் எடுத்துக் கூறியாகிவிட்டது.

சிறீலங்காவின் பாராளுமன்றம் என்பது பெரும்பான்மை இனத்தின் கொடுமைகளது மொத்த வடிவமாகவே இருக்கின்றது. பத்திரிகைகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றில் எழுதுபவர்கள் தீவிர இனவாதிகளான சிங்கள பத்திரிகை ஆசிரியர்கள். பாராளுமன்ற ஜனநாயகம் மூலம் எமது அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கு இலங்கையில் எதுவிதமான வாய்ப்பும் இல்லை.

கேள்வி:- உங்கள் குடும்பப் பின்னணி என்ன? உங்கள் பெற்றோருடன் இன்னும் தொடர்புண்டா?

பிரபா:- நான் மிகச் சாமானியக் குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தை சிறீலங்கா அரச ஊழியராக இருந்தவர். எனது மூத்த இரு சகோதரிகளுக்கும் திருமணமாகிவிட்டது.

சிறியவயதிலேயே போராட்டத்தில் இணைந்து தேடப்படுபவன் ஆகிவிட்டேன். 19 வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாகிவிட்டேன் . அன்றிலிருந்து பெற்றோருக்கும் எனக்குமிருந்த தொடர்பு அறுந்துவிட்டது.

கேள்வி:- தமிழீழ தீவிர வாதத்தின் அடையாளச் சின்னமாக நீங்கள் சித்தரித்துக் காட்டப்படுகின்றீர்கள். உங்கள் இயக்கமே உங்களை ஒரு பெரிய வீரனாக எடுத்துக் காட்டுகிறது. அழுத்தமான கொளகைப் பிடிப்பு உள்ளவர் என்ற முறையில் இந்தத் தனிநபர் வழிபாடு சரியான தென்று கூறுகிறீர்களா?

பிரபா:- இதுமாதிரி என்னை மக்கள் உருவகப்படுத்துவதற்கும், அப்படி ஒரு வீரப்பாத்திரமாக என்னைக் கருதுவதற்கும் நான் என்ன செய்ய முடியும்? எனது மக்களுக்கு நான் கொண்டுள்ள இலட்சியப்பற்று நன்கு தெரியும்.

சரியான பாதையில் அவர்களை வழி நடத்திச் செல்வேன் என்று அவர்கள் நம்புகிறார்கள். மக்கள் என் மீது கொண்டுள்ள பாசத்தின் எடுத்துக்காட்டே இம்மாதிரியான புகழ்ச்சி மொழிகள்.

கேள்வி:- இலங்கையின் இன்றைய நிலை பற்றி எவ்வாறு கணிக்கிறீர்கள்?

பிரபா:- இன்றைய நிலை மிகவும் பயங்கரமானது. போர் நிறுத்தம் என்ற திரையின் பின்னால் சிறீலங்கா அரசு ஈவிரக்கமற்ற ஒடுக்கு முறைகள், இராணுவ ஆக்கிரமிப்பு போன்றவற்றில் ஈடுபடுகின்றது.

இன்றைய அரசுக்கு சமாதானப் பேச்சுக்கள் மூலம் நியாயமும், நீதியுமுள்ள தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டுமென்பதில் அக்கறை கிடையாது.

இராணுவத் தீர்வையே சிறீலங்கா அரசு நம்பியுள்ளது.

பேச்சு பயனற்றது

கேள்வி:- தமிழர் பிரதிநிதிகளுக்கும், சிறீலங்கா அரசுப் பிரதிநிதிகளுக்கும் இடையில் திம்புவில் நடந்த பேச்சுவார்த்தைகள் குறித்து உங்கள் கருத்தென்ன?

பிரபா:- சமாதானப் பேச்சுக்கள் என்பது ஒரு பயனற்ற முயற்சி. இது உலக நாடுகளை ஏமாற்றுவதற்கு ஜயவர்த்தனா ஆடிவரும் கபட நாடகம்.

ஜயவர்த்தனா தன்னை ஒரு சமாதானப்பிரியர் போலக் காட்டிக்கொண்டாலும், அவருக்கு சமாதானத் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் உள்ளுர ஆர்வம் கிடையாது. எமது மக்களின் அபிலாசைகளைஈ டுசெய்யக் கூடிய எந்தவொரு ஆலோசனையையும் அவர் இதுவரை முன்வைக்கவில்லை.

கேள்வி:- போர்நிறுத்த அவகாசத்தைப் பயன்படுத்தி ஜயவர்த்தனா அரசு தமது இராணுவக் கட்டமைப்பை பலப்படுத்துவதாக நீங்கள் குற்றம் சாட்டி இருந்தீர்களே?

பிரபா:- அது உண்மைதான். போர் நிறுத்த உடன்படிக்கை என்ற திரைமறைவில் ஜயவர்த்தனா அரசு மிகவும் திட்டமிட்ட இராணுவக் கட்டமைப்பு முயற்சியிலீடுபட்டது.

தனது இராணுவ பலத்திதைப் பெருக்குவதற்கு சிறீலங்கா அரசு தனது பட்ஜெட்டில் பெருமளவு தொகையை ஒதுக்கியுள்ளது. எல்லாவகையான நவீனரக ஆயுதங்களும் பெருமளவு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. முழுச் சிங்கள இனமும் யுத்தத்துக்கு தயார்படுத்தப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டுக் கூலிப்படைகள் சிறீலங்கா இராணுவத்திற்கு பயிற்சி கொடுக்கின்றன. இவாவறு இராணுவ மயப்படுத்தும் ஜயவர்த்தனாவின் போக்கு, சமாதானப் பேச்சு மூலம் உடன்படிக்கை காண்பதைவிட, இராணுவத் தீர்வு ஒன்றிலேயே அவர் அதிக அக்கறை கொண்டுள்ளார் என்பதை தெளிவாக்குகிறது.

அதுதான் பிரபா வழங்கிய பேட்டி.

தலைவர்களின் படங்களும்  சுவாரிசியமான சில சர்ச்சைகளும்


தனிநபர் வழிபாடு

பிரபாவின் பேட்டியில் தனிநபர் வழிபாடு பற்றிய விடயமும் வந்திருக்கிறதல்லவா?

இதுபற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் புலிகள் அமைப்புத்தான் தமது தலைவரது புகைப்படத்தை பத்திரிகை மூலமாக வெளிவரச் செய்தது.

இந்திய ஆங்கில சஞ்சிகை ஒன்றில் ‘சண்டே’ இதழ் என்று நினைவு-பிரபாவின் புகைப்படம் முகப்பில் இடம்பெற்றிருந்தது. சப்-மெஷின்கன் துப்பாக்கியுடன் பிரபாகரன்  தோன்றியிருந்தார்.

அதனைப் பார்த்து ஏனைய இயக்கத்தினர் கேலி செய்தனர். “பிரபா ஒரு நடிகராகி விட்டார்போஸ் கொடுத்திருக்கிறார்” என்றெல்லாம் விமர்சித்தனர்.

அதெல்லாம் கொஞ்ச நாளுக்குத்தான். பின்னர் ஏனைய தலைவர்களுக்கும் தங்கள் முகங்களைக் காட்டும் ஆசை வநடதுவிட்டது.


ரெலோ இயக்கம் சிறீசபாரெத்தினத்தின் புகைப்படத்தை வெளியிட்டது.

‘ரை’கட்டியபடி போஸ் கொடுத்திருந்தார் சிறீசபாரெத்தினம். புளொட தவைர் உமா மகேஸ்வரனின் படமும் வெளியானது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்திற்குள் மட்டும் படம் வெளியிடுவதில் பிரச்சினை ஏற்பட்டது.

யாழ்-பிராந்தியக் கமிட்டி உறுப்பினர்கள் படம் வெளியிடப்படுவதை விரும்பவில்லை. “ஒரு தனிநபரை முக்கியப்படுத்துவது சரியல்ல, நாம் ஒரு புரட்சிகர அமைப்பினர்” என்று கூறிக் கொண்டிருந்தனர்.

எனினும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அரசியல் பிரசார வேலைகளுக்குப் பொறுப்பாக இருந்த ரமேஷ் ‘செந்தணல்’ என்னும் பெண்கள் அமைப்புக்கான பத்திரிகையில் பத்மநாபாவின் பேட்டியை வெளியிட்டதோடு, பத்மநாபாவின் புகைப்படத்தையும் பிரசுரித்தார்.

அதுவரை தோழர் ரஞ்சன் என்றே இயக்க உறுப்பினர்களால் அழைக்கப்பட்டு வந்த பத்மநாபா, முதன் முதலில் தனது சொந்தப் பெயரில் அறிமுகமானார்.pulikla  ‘ஜென்டில்மென்’ பத்திரிகைக்கு பிரபாகரன்  அளித்த பேட்டி:  (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 53) pulikla

‘செந்தணல்’ சஞ்சிகை தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சஞ்சிகையினை விரித்துப் பார்த்தார்கள் யாழ்-பிராந்தியக் கமிட்டியினர். பொத்துக் கொண்டு வந்தது கோபம்.

‘செந்தணலின்’ ஐயாயிரம் பிரதிகளையும் கொண்டுபோய் ஒரு குழிவெட்டிப் புதைத்து விட்டார்கள்.

தனிநபர் வழிபாடு உருவானால் கூட்டுத் தலைமைத்துவம் பாதிக்கப்படும் என்பதுதான் யாழ்-பிராந்தியக் கமிட்டியின் வாதம்.

யார் தலைவர் என்பதை மக்கள் அறிய விரும்புவார்கள். செயலாளர் நாயகத்தை தெரியப்படுத்த வேண்டும். ஆனால் அவரால் தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படாத வகையில் உட்கட்சி ஜனநாயகம் இருக்க வேண்டும் என்பது மறுதரப்பு வாதம்.

அதற்கே ஆதரவு கிடைத்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பும் தமது செயலாளர் நாயகத்தின் படத்தை வெளியிட ஆரம்பித்தது.

எனினும் சகல புகைப்படங்களிலும் எளிமையாகவே தோன்றியிருந்தார் பத்மநாபா.

1984ம் ஆண்டு ஜுன் மாதம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் முதலாவது காங்கிரஸ் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் நடைபெற்றது.

செயலாளர் நாயகத்தின் புகைப்படத்தை வெளியிடலாமா, கூடாதா என்பது பற்றியே ஒருநாள் பூராவும் விவாதம் நடந்தது.

விவாதத்தின் முடிவில் வெளியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

உளவுப்பிரிவு

அந்தக் காங்கிரசில் நீண்டநேர விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்ட மற்றொரு விடயம் உளவுப் பிரிவு சம்பந்தமானது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கு மக்கள் ஆய்வுப் பிரிவு (MAP) என்னும் உளவுப் பிரிவு  இருந்தது.

பத்மநாபா, மணி, ரமேஷ், வெற்றி, ஜேம்ஸ் ஆகியோர் அதன் தலைமைக் குழுவில் இருந்தனர்.

இயக்கத்திற்குள்ளும் கண்காணிப்பு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இயக்க உறுப்பினர்களை உளவுப்பிரிவு கண்காணிக்கக் கூடாது என்று காங்கிரசில் கலந்து கொண்ட ஒரு சாரார் வலியுறுத்தினார்கள்.

செழியன், கண்ணன், கபூர் ஆகியோர் உளவுப் பிரிவு தொடர்பாக அச்சம் தெரிவித்தனர்.

உளவுப்பிரிவு தலைமைக் குழுவில் இருந்த ரமேஷால் ஒரு இரகசியக் குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். தலைமைக்கு விரோதமானமானவர்களை தீர்த்துக்கட்ட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்று கூறி காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்ட முயன்றனர்.

உளவுப்பிரிவு அவசியம். இயக்கத்திற்குள்  கண்காணிப்பும் அவசியம் என்று காங்கிரசில் வாதிட்டவர்களில் ரமேஷ், யாழ் மாவட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப் தளபதி  சுபத்திரன், தயாபரன், மட்டக்களப்பு மாவட்ட தளபதி சிவா ஆகியோர் முன்னனியில்  நின்றனர்.

இறுதியில் அவர்களின் கருத்து காங்கிரசால் ஏற்கப்பட்டது.

1985 இன் இறுதிப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும், புலிகள் அமைப்புக்கும் இடையில் பிரச்சினை ஒன்று ஏற்பட்டது.

(தொடர்ந்து வரும்…….)
எழுதுவது அற்புதன்..

 

பிரபாவின் உத்தரவும் மாத்தையாவின் மீறலும்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-54

பிரபாவின் உத்தரவும் மாத்தையாவின் மீறலும்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-54
 

 

வவுனியாவில் பிரச்சனை
1985 அக்டோபர் மாதம் புலிகள் அமைப்புக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை நான்கு இயக்க கூட்டமைப்புக்குள் விரிசலை ஏற்படுத்தியது.

அந்தப் பிரச்சனை ஏற்படக் காரணமாக இருந்த வவுனியாவில் இடம்பெற்ற ஒரு சம்பவம்.

வவுனியா 2ம் கட்டையில் ‘உதய அரிசி ஆலை’யில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர் ஒருவருக்கும் ஆலையின் உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. பிரச்சனை கை கலப்பு நடக்குமளவுக்குச் சென்றுவிட்டது.

‘உதய அரிசி ஆலை’ உரிமையாளர்களுக்கு புலிகள் அமைப்பினரோடு தொடர்பிருந்தது. அந்தத் துணிச்சலில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினரை தாக்குமளவுக்குச் சென்றனர்.

தமது உறுப்பினரோடு ஏற்பட்ட பிரச்சனை பற்றி கேட்பதற்காக உதய அரிசி ஆலைக்கு ஒரு ஜீப் வண்டியில் சென்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள்.

அவர்கள் வருவார்கள் என்று தெரிந்து காடையர்கள் சிலரை உதவிக்கு அழைத்து வைத்திருந்தனர் ஆலை உரிமையாளர்கள்.

உதய அரிசி ஆலையின் மகன் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தில் இராணுவப் பயிற்சி எடுத்தவர். பின்னர் இயக்கத்தின் அனுமதி இல்லாமல் வீட்டுக்குச் சென்று தலமறைவாக இருந்தவர்.

ஜீப்பில் சென்று ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் இறங்கியபோது அரிசி ஆலைக்காரர்கள் முந்திக் கொண்டார்கள்.  ஜீப்பை சுற்றிவளைத்து தடிகளாலும், இரும்புக் கம்பிகளாலும் தாக்கத் தொடங்கி விட்டார்கள்.

ஜீப் நொருங்கிப் போனது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்களுக்குக் காயம். தாக்குதல் நடத்திய கோஷ்டியில் முன்னணியில் நின்றவர் அலை உரிமையாளரின் மகன.; ஈ.பி.ஆர்.எல்.எஃப் கொடுத்த பயிற்சியை திருப்பிக் கொடுத்து விட்டார்.

mathiyaa  பிரபாவின் உத்தரவும் மாத்தையாவின் மீறலும்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-54 mathiyaaமாத்தையாவின் கசப்பு

வவுனியாவுக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப் இராணுவத் தளபதியாக இருந்தவர் றேகன்.

1984ம் ஆண்டு பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி (பி.எஃப்.எல்.பி) யிடம் பயிற்சி பெற்றவர்களில் ஒருவர் றேகன்.

1985 முதல் வவுனியா ஈ.பி.ஆர்.எல்.எஃப் இராணுவத்தளபதியாக பொறுப்பேற்றார். சொந்தப் பெயர் நல்லதம்பி இன்பராசா.

வன்னிப் பிராந்தியத்திற்கான புலிகளது தளபதியாக அப்போதிருந்தவர் மாத்தையா. வவுனியாவுக்கு பொறுப்பாக இருந்த றேகன் மீது மாத்தையாவுக்கு புகைச்சல்.

பாலஸ்தீனில் பயிற்சி பெற்றவர் என்று றேகனுக்கு மதிப்பிருப்பதை மாத்தையாவால் சகிக்க முடியவில்லை.

றேகனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்த மாத்தையாவுக்கு உதய அரிச ஆலை பிரச்சனை ஒரு வாய்ப்பாகக் கிடைத்தது.
அதனால் பிரச்சனையை பெரிதுபடுத்த பின்னணியில் நின்று தூண்டி விட்டார்கள் புலிகள் அமைப்பினர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் மில் உரிமையாளரினால் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்தின் பின்னர், உதய அரிசி ஆலைக்கு ஆயுதபாணிகளாக சௌறார்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள்.

அவர்கள் அங்கு வரப்போகும் செய்தி எப்படியோ ஆலை உரிமையாளர்களுக்குத் தெரிந்துவிட்டது. புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு செய்தி சொல்லி அனுப்பினார்கள். ஆயுதங்களோடு இரண்டு பேரை அனுப்பி வைத்தார் மாத்தையா.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் அரிசி ஆலையின் முன்பாக சென்று இறங்கியபோது, அவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்களும் திருப்பிச் சுட்டார்கள்.

சண்டை முடிந்த போது அரிசி ஆலை உரிமையாளர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர் ஒருவரும் பலியானார்.

mathaiya  பிரபாவின் உத்தரவும் மாத்தையாவின் மீறலும்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-54 mathaiya1கிட்டு-மாத்தையா

அப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலைப் படையின் பிரதம தளபதி டகளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இருந்தார்.

யாழ் மாவட்ட புலிகளின் தளபதி கிட்டுவையும், யாழ் மாவட்ட புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திலீபனையும் சந்தித்து வவுனியா பிரச்சனை பற்றிப் பேசினார் டக்ளஸ் தேவானந்தா.

அந்தக் காலத்தில் மாத்தையாவுக்கும் கிட்டுவுக்கும் இடையில் பனிப் போர் நடந்து கொண்டிருந்தது. கிட்டுவைவிட  மாத்தையா இயக்கத்தில் மூத்தவர். ஆனாலும் கிட்டு மளமளவென்று பிரபலம் பெற்றுவிட்டார்.

கிட்டு தலைமைதாங்கி நடத்திய தாக்குதல்கள் வெற்றியாக முடிந்தமையால் புலிகள் இயக்கத்திற்குள்ளும் கிட்டுவுக்கு தனிச் செல்வாக்கு ஏற்படத் தொடங்கியிருந்தது.

இந்திய அரசு வழங்கும் ஆயுதங்களை பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைப்பார்.

அவற்றில் தரமான ஆயுதங்களையும், யாழ்ப்பாணத்திற்கு என்று கூடிய எண்ணிக்கையிலும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, மீதியை ஏனைய பிராந்தியங்களுக்கு கிட்டு பகிர்ந்து கொடுத்துவிடுவார்.

அதனால் ஏனைய பிராந்தியங்களுக்கு போதிய ஆயுதங்கள் கிடைப்பதில்லை என்று மாத்தையா அணியினர் சொல்லிக் கொண்டிருந்தனர்.

யாழ்-பிராந்தியம் பூரண கட்டுப்பாட்டில் இருந்தமையால் ஏனைய பிராந்தியங்களைவிட அதிக நிதி திரட்டக்கூடிய வசதி கிட்டுவுக்கு இருந்தது.

நிதியில்  ஒரு பகுதியை  கேட்டுப் பார்த்தார்  மாத்தையா. கிட்டு கொடுப்பதாக இல்லை. உடனே காரியத்தில் இறங்கினார் மாத்தையா.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று பொருட்களோடு திரும்பும் யாழ்ப்பாண வர்த்தகர்களது லொறிகள் வன்னிப் பகுதியில் வைத்து மாத்தையா அணியினரால் தடுக்கப்பட்டன.

பணம் தந்தால்தான் லொறிகள் மேற்கொண்டு செல்ல முடியும் என்று கூறி விட்டார்கள்.

“நாங்கள் யாழ்ப்பாணத்தில் உங்கள் இயக்கத்திற்கு நிதி கொடுத்திருக்கிறோம்” என்று லொறி உரிமையாளர்கள் சொல்லுவார்கள்.

“அதைக் கிட்டரிடம் பேசிக் கொள்ளுங்கள். இது வன்னிப் பகுதி. பணம் தராவிட்டால் லொறியை விடமாட்டோம்” என்று சொல்லி விடுவார்கள் மாத்தையா அணியினர்.

ஒரே இயக்கத்திடம் இரண்டு பகுதிகளில் பணம் கொடுக்க வேண்டிய நிலமை லொறி உரிமையாளர்களுக்கு.

இவ்வாறு யாழ்ப்பாண பிராந்திய, வன்னிப் பிராந்திய புலிகள் அணிகளுக்கடையே திரைமறைவுப் பூசல்கள் நடந்து கொண்டிருந்தன.

இந்த நேரத்தில்தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும், புலிகள் அமைப்புக்கும் வன்னிப் பகுதியில் மோதல் வெடிக்கத் தொடங்கியிருந்தது.

பிரபாவின் உத்தரவு
வன்னிப் பிரச்சனை பற்றி டக்ளஸ் தேவானந்தா கூறிய போது “வன்னிப் பிரச்சனையை தலைவர்தான் தீர்க்க முடியும். நாம் சொன்னால் அங்கு கேட்கமாட்டார்கள். இந்தப் பிரச்சனையை சென்னையில் பேசித் தீர்ப்பதுதான் நல்லது.” என்று சொல்லி விட்டார் கிட்டு.

இது தொடர்பாக சென்னையில் இருந்த பத்மநாபாவுக்கு அறிவித்தார் டக்ளஸ் தேவானந்தா.

இதற்கிடையே, வவுனியாவில் நடந்த பிரச்சனையை வவுனியாவிலேயே தீர்த்துக் கொள்ளலாம். இன்னும், சந்தித்துப் பேச்சு நடத்தலாம் என்றும் மாத்தையாவிடமிருந்து றேகனுக்குத் தகவல் அனுப்பப்பட்டது.

பேச்சு நடத்துவதற்கு றேகன் உட்பட 16 ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் மாத்தையாவை சந்திக்கச் சென்றனர். பேச்சு நடத்தச் சென்ற உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

16 பேரும் மாத்தையா அணியினரால் சுற்றிவளைக்கப்பட்டனர். ஆயுதங்கள் பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இச் செய்தி உடனடியாக சென்னைக்கு அறிவிக்கப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் செயலாளர் நாயகம் பத்மநாபா அதனை உடனடியாக பிரபாகரனுக்கு தெரிவித்திருந்தார்.

“ஒன்றும் யோசிக்க வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறிய பிரபா 16 பேரையும் உடனடியாக விடுவிக்குமாறு மாத்தையாவுக்கு தகவல் அனுப்பினார்.

பிரபாவின் செய்தி கிடைத்ததும் மாத்தையா தனது உறுப்பினர்களுக்கு சொன்னது இது: றேகனை தட்டிவிடுங்கள். ஏனையோரை விடுதலை செய்துவிடுங்கள்.”

றேகன் சுட்டுக் கொல்லப்பட்டார். இது நடந்தது 23.11.85இல். இச் செய்தி சென்னையிலிருந்த பிரபாகனுக்கும் அதிர்ச்சிதான்.

Ltte_Ledr17  பிரபாவின் உத்தரவும் மாத்தையாவின் மீறலும்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-54 Ltte Ledr17அதிருப்திகள்

யாழ்-பிராந்திய புலிகள் அமைப்பு இராணுவத்தளபதி கிட்டு, திலீபன் ஆகியோரும் மாத்தையாவின் நடவடிக்கையையிட்டு அதிருப்தி கொள்ளவே செய்தனர்.

அப்போது கிட்டுவுக்கும், டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் யாழ்ப்பாண பிராந்தியத்தில் நல்லுறவு நிலவியது. ஏனைய இயக்கங்களைவிட  புலிகளும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும்; சென்னையிலும், யாழ்ப்பாணத்திலும் நல்ல நெருக்கமாகவே இருந்தன.

அதனைப் பயன்படுத்தி பிரச்சனையை நெளிவு சுழிவாக கையாண்டிருந்தால் முரண்பாடு முற்றாமல் தடுத்திருக்கலாம். ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்குள் காணப்பட்ட பூசல் காரணமாக பிரச்சனையை கையாள்வதில் நிதானமின்மை வெளிப்பட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் பிரசாரப் பணிகளில் வரதராஜப்பெருமாளுக்கு இடம் கொடுக்க ஆரம்பித்தார் பத்மநாபா.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் அதுவரை கால பிரசார வேலைகளை ரமேஷ், டேவிற்சன் ஆகியோர்தான் இந்தியாவில் முன்னெடுத்து வந்தனர்.

அவர்கள் இருவரும் பத்மநாபாவின் தலைமைத்துவம் தொடர்பாக விமர்சனம் எழுப்பிய உறுப்பினர்களோடு இணைந்து நின்றமையால், மெல்ல மெல்ல அவர்களை முக்கியத்துவம் குறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் இருந்து இரகசிய வானொலி நிலையம் ஒன்றை ஆரம்பித்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.  அது தொடர்பாக இந்திய பிராந்திய ஈ.பி.ஆர்.எல்.எஃப் கமிட்டிக்குக் கூட விளக்கம் கொடுக்கப்படவில்லை.


வரதராஜப் பெருமாள்   அப்போது   இந்திய பிராந்திய கமிட்டி உறுப்பினராக இருந்தார்.  அவருக்குப் பொறுப்பாளராக இருந்தவர் டேவிற்சன்.

டேவிற்சனுக்குத் தெரியாமல் வரதராஜப் பெருமாளுக்கு இரகசிய வானொலி பிரசாரப் பொறுப்பை வழங்கினார் பத்மநாபா.

பாசிசக்காளி
றேகன் கொல்லப்பட்ட செய்தி அறிந்தவுடன் வரதராஜப் பெருமாள் தனது பிரசாரத் திறமையைக் காட்ட நினைத்தார்.

பாசிசக் காளி என்றொரு கவிதையை எழுதி யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பியிருந்தார்கள். அக்கவிதையை எழுதியவர் சம-கண்ணண் அவர் யாழ்பிராந்திய கமிட்டி உறுப்பினர்.

பாசிசப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் றேகனுக்கு வீரவணக்கம் எனும் முன்னுரையோடு, அந்தக் கவிதையை தனது குரலில் வாசித்தார் வரதராஜப் பெருமாள்.

முதன் முதலில் புலிகள் அமைப்பினரை பாசிசப் புலிகள் என்று தமிழ் அமைப்பொன்று அழைக்கத் தொடங்கியது அன்றுதான். வானொலியைக் கேட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப் இந்தியப் பிராந்திய கமிட்டி உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி.

புலிகள் பாசிஸ்டுகள் என்ற முடிவுக்கு நாம் வந்தால், அவர்களோடு நான்கு இயக்கக் கூட்டமைப்பில் இருக்க முடியாது. பாசிஸ்டுகளோடு ஐக்கிய முன்னணியில் இணைந்து செயற்படுவது என்பது கேலிக்குரிய அரசியல் தந்திரமாகும்.

றேகன் கொல்லப்பட்டது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய நடவடிக்கை. ஆனால், அந்த நடவடிக்கைக்காக ஒட்டு மொத்தமாகவே புலிகளை பாசிஸ்டுகள் என்று குற்றம் காட்டலாமா?

ஆம், எனில் புலிகள் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்று அர்த்தமாகிறது.

புலிகளை கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும். அல்லது நாம் வெளியேற வேண்டும் என்று இந்தியக் கமிட்டியினர் வாதிட்டனர்.
பத்மநாபாவால் பதில் சொல்ல முடியவில்லை.

விரிசல்

அதேவேளையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் வானொலியில் தம்மை பாசிஸ்டுகள் என்று கூறப்பட்டதை செவிமடுத்தார் பிரபாகரன்.

தமது வானொலியில் பாசிஸ்டுகள் என்று அறிவித்துவிட்டு, கூட்டமைப்புக் கூட்டத்தில் வைத்து வன்னிப் பிரச்சனையை கிளப்பிது ஈ.பி.ஆர்.எல்.எஃப்

“றேகன் கொள்ளையடிக்கப் போனார், அதனால் மரணதண்டனை வழங்கப்பட்டது” என்று சொல்லிவிட்டார் பிரபாகரன். அத்தோடு ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும், புலிகளுக’கும் கூட்டமைப்பில் இருந்த நெருக்கம் விரிசலானது.


 

அந்த விரிசலை பயன்படுத்தத் தொடங்கினார் ஈரோஸ் பாலகுமார்.

புலிகள் அமைப்பை கூட்டமைப்புக்குள் கொண்டுவருவதற்கே அதிக விருப்பம் இல்லாதிருந்தவர் பாலகுமார்.

புலிகளுக்கு, ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும் நெருக்கமாக இருப்பதாகக் கூறி, ரெலோ சிறீசபாரெத்தினத்தை கைக்குள் போட்டுக் கொண்டு, புளொட் அமைப்பை கூட்டமைபுபுக்குள் கொண்டுவர திட்டமிட்டவர் பாலகுமார்.

புளொட்டையும் கூட்டமைப்புக்குள் கொண்டுவந்தால், புலிகளும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் பும் அடக்கிவைக்கப்படலாம் என்று தந்திரக் கணக்கு போட்டிருந்தவர் பாலகுமார்..

றேகனின் பிரச்சனையும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதனைக் கையாண்ட முறையும் இப்போது ஈரோசுக்கு வாய்ப்பாகிவிட்டது.

இரு அமைப்புக்களையும் சமரசம் செய்து, கூட்டமைப்பிற்குள் தொடர்ந்து வைத்திருக்கும் நடுநிலையாளர் பாத்திரத்தை பாலகுமார் தனது கையில் எடுத்துக் கொண்டார்.

மெல்ல, மெல்ல புலிகள் அமைப்போடு நெருங்கத் தொடங்கியது ஈரோஸ்.  பின் நாட்களில் ஈரோசுக்கும், புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கத்திற்கும், தற்போது பாலகுமார் புலிகளின் பிரமுகராக மாறியிருப்பதற்கும் ‘றேகன்’ பிரச்சனைதான் பிள்ளையார் சுழி போட்டது.

‘பாசிசக்காளி’ என்னும் கவிதையை எழுதியவர் சம-கண்ணன் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா.

அவர் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். புலிகள் அமைப்பினரின் போராட்டம் நியாயமானது என்று பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.

சென்னையில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கியிருந்தபோதும், யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும், புலிகள் அமைப்புக்கும் இடையே நல்லுறவு நிலவியது.

டக்ளஸ் தேவானந்தா, கிட்டு ஆகியோரின் அணுகுமுறையே பிரச்சனைகள் ஏற்படாமல் உறவு தொடரக் காரணமாக இருந்தது.

தாக்குதல்
9.10.95 அன்று அதிகாலை வவுனியா பொலிஸ் நிலையம் தாக்குதலுக்கு உள்ளானது. பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த மின்மாற்றி முதலில் தகர்க்கப்பட்டது.

பொலிஸ் நிலையம் இருளில் மூழ்கியது. கைக்குண்டுகள், ஆர்.பி.ஜி ரக ரொக்கட் லோஞ்சர்கள் மூலம் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் தொடர்ந்தது.

பொலிஸார் பின்வாங்கிச் சென்றதால் பலத்த உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை.

கான்ஸ்டபிள் தோமஸ் (வயது 40) என்பவர் பலியானார். சிலர் காயமடைந்தனர். பொலிஸ் நிலையக் கட்டங்கள் சேதமடைந்தன.

தாக்குதல் ஒரு மணி நேரம் நீடித்தது.

இத்தாக்குதல் நடவடிக்கை ரெலோ இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்டது.

pirapa  பிரபாவின் உத்தரவும் மாத்தையாவின் மீறலும்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-54 pirapa1
“யுத்த நிறுத்தம் ஒரு நாடகம்”  ஸ்ண்டே இதழு ற்கு பிரபா பேட்டி

யுத்த நிறுத்தம்

இந்தியாவில் கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ‘ஸன்டே’ ஆங்கில வார இதழுக்கு பிரபா அளித்த பேட்டியில் இருந்து ஒரு பகுதி.

கேள்வி:- யுத்த நிறுத்தம் குறித்து உங்கள் தளபதிகளின் அபிப்பிராயம் என்ன?

பிரபா- யுத்த நிறுத்தம் என்பது ஒரு கேலிக்கூத்து. இதனுள் மறைந்து கொண்டு இலங்கை இராணுவம் எமது மக்களுக்கு எதிராக வன்செயல்களைக் கடடவிழ்த்து விடுகிறது.

இன்றைய சூழ்நிலையில் நான் நிதானமாகச் செயற்பட வேண்டியுள்ளது. யுத்த நிறுத்தம் என்பது ஒரு கேலிக்கூத்து என்பதை எமது தளபதிகள் நன்கறிவர்.

கேள்வி:- திரு. பாலசிங்கத்தின் நாடு கடத்தலின் பின்னர் தலைமறைவான நீங்கள் மீண்டும் வெளிவந்தது ஏன்?

பிரபா: பல காரணங்கள் உண்டு. நான் தலைமறைவாக இருந்தமையால் எமக்கு எதிரான தீயசக்திகள் எம்மை ஆபத்தான பயங்கரவாதிகள் என்றும், பேச்சுவார்த்தைக்கு எதிரானவர்கள் என்றும் சித்தரித்துக் காட்ட முற்பட்டன.

சில பத்திரிகைகளும் வாந்திகளைக் கிளப்பின. தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களை (தர்மலிங்கம், ஆலால சுந்தரம்) கொலை செய்த பழியையும் எம்மீது சுமத்தினர்”

பிரபா கூறியது போல, தர்மலிங்கம். ஆலாலசுந்தரம் ஆகியோரை புலிகள் கொலை செய்ததாக ரெலோவும் நசூக்காகக் கூறி வந்தது. தம்மீது சந்தேகம் வராதிருக்க ரெலோ செய்த தந்திரம் அது.

தர்மரையும், ஆலாலையும் ‘ரெலோ’ இயக்கமே கொலை செய்தது என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.

(தொடர்ந்து வரும்………..)

-எழுதுவது அற்புதன்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அமைப்புக்கு ஆரம்பகாலப் போஷகர் யார் தெரியுமா?? : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -56)

 
 

  
புளொட் தலைவர் உமாமகேஸ்வரனுக்கும் தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பெரும்சித்தனாருக்கும் இடையே நல்ல நெருக்கம். இந்தியாவில் தனித தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் பெரும் சித்தனார்.

பெரும் சித்தனாருக்கு தமிழ் மீது மட்டற்ற காதல். தமிழ் மொழியில் பிற மொழிச் சொற்கள் பலவாமை வேண்டும் என்று கூறி வந்தவர். கூறியதோடு நிற்காமல், தனிப்பட்ட ரீதியில் உரையாடும் போதும் தூய தமிழில்தான் பேசுவார்.

வீட்டுச் சென்றால் விருந்து போடுவார். உணவு தயாரானதும் நண்பர்களிடம் “உண்ண ஏகலாமா?” என்றுதான் கேட்பார்.    பெரும் சித்தனார் வெளியிட்ட பிரசுரமொன்றில் “கமுக்கக் காவலர்கள் துமுக்கியால் சுட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தது.

பழந் தமிழ் அகராதியின் உதவியோடு அந்தத் தழிழை மொழி பெயர்த்துப் பார்த்துத்தான் பலரும் அர்த்தத்தை புரிந்து கொண்டனர்.

தூய தமிழும்  – உளன்றி வதையும்

கமுக்கம்= இரகசியம், துமுக்கம் = துப்பாக்கி. “இரகசியப் பொலிசார் துப்பாக்கியால் சுட்டனர்”என்பதுதான் பொருள்.

பெரும்சித்தனாரின் நட்பு உமாமகேஸ்வரனுக்கு பிடித்தமாகிவிட்டது. அவரது கொள்கைகளிலும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார்.

புளொட் அமைப்பினர் வெளியிட்ட பிரசுரங்களிலும் தூயதமிழ் சொற்கள் தலைகாட்டத் தொடங்கியிருந்தன.

புளொட் அமைப்பினர்  சென்னையில் ஆரம்பித்த அச்சகமும் பெரும் சித்தனாரின் மேற்பார்வையில்தான் இயங்கிவந்தது.

தூயதமிழ் சொற்களை பிரசுரங்களில் மட்டுமல்ல, இயக்கக் தண்டனைக் கூட்டத்திலும் உமாமகேஸ்வரன் அறிமுகம் செய்து வைத்தார்.

இதில் ஒன்றுதான் உழன்றி. உழன்றி என்றால் கப்பி. கிணற்றில் தண்ணீர் அள்ள பயன்படுத்தப்படும் கப்பி.

உழன்றி வதை
ஆளை உயரத்தில் கட்டித் தொங்கவிட்டு கப்பியின் உதவியால் உயர்த்தியும், இறக்கியும் வேடிக்கை காட்டலாம். கீழே நெருப்பு எரியும்.

அல்லது ஆளை பதியச் செய்து உருட்டுக் கட்டைகளால் அடித்துவிட்டு மீண்டும் உயரத்தில் தொங்கச் செய்யலாம்.

மிகப் பழமையான சித்திரவதை முறை அது. அதனால் தூய தமிழில் பெயர் சூட்டிவிட்டார் உமாமகேஸ்வரன்.

உமாமகேஸ்வரனின் கட்டளைப்படி புளொட் இயக்க பயிற்சி முகாமகளில் சித்திரவதைகளை முன்னின்று நடத்தியவர்களில்

முக்கியமானவர்கள் பரந்தன் ராஜன், வாமதேவன், சங்கிலி எனறழைக்கப்படும் கந்தசாமி ஆகியோராவார்.

ஒவ்வொரு  இயக்கத்திலும் தமது தலைவர்களை பெயர் சொல்லி அழைக்கும் முறை வெவ்வேறாக இருக்கும்.

புலிகள் அமைப்பினர் பிரபாகரனை தம்பி என்று குறிப்பிடுவார்கள். தற்போது தலைவர் என்று குறிப்பிடுகிறார்கள். அண்ணை என்றும் சொல்லிக் கொள்வதுண்டு.

புளொட் அமைப்பில் உமாமகேஸ்வரன் பெரியவர் என்று அழைக்கப்பட்டார்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பில் பத்மநாபாவை ‘தோழர் எஸ்.ஜி.’ என்றுதான் குறிப்பிடுவார்கள். ‘எஸ்.ஜி’ என்பது செயலாளர் நாயகத்தின் சுருக்கம்.

ஈரோசில் யார் தலைவர் என்பதே முதலில் குழப்பமாக இருந்தது. பொதுவாக தோழர் என்று தலைமையில் உள்ளவர்களும் அழைக்கப்பட்டார்கள்.

ரெலோவில் சிறிசபாரத்தினம் சிறி அண்ணா என்று அழைக்கப்பட்டார். தலைமையைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘மெயின்;’ என்றும் ரெலோ உறுப்பினர்கள் சொல்லிக் கொள்வார்கள்.

praba_nedumaaran  புலிகள் அமைப்புக்கு ஆரம்பகாலப் போஷகர்  யார் தெரியுமா?? : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -56) praba nedumaaranபோஷகர்கள்

ஈழப் போராளி அமைப்புக்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டில் தங்களுக்கென்று ஒவ்வொரு போஷகர்களைக் கொண்டிருந்தன.

புலிகள் அமைப்புக்கு ஆரம்பகாலப் போஷகர் நெடுமாறன். இவர் முதலில் இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். காமராஜரும் இந்திராகாந்தியும்  பிரச்சனைப்பட்டுக் கொண்டு காங்கிரஸ் இரண்டாக உடைந்தபோது காமராஜரோடு இருந்தவர்.

காமராஜர் மறைவுக்குப் பின்னர் இரண்டு காங்கிரசும் இணைந்துவிட்டன. நெடுமாறன் அதிலிருந்து விலகி காமராஜர் காங்கிரஸ் என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தவர். சொல்லிக் கொள்ளக்கூடிய அரசியல் செல்வாக்கு எதுவும் அவருக்குக் கிடையாது.

இலங்கைப் பிரச்சனையால் அடிக்கடி சிறை சென்று பிரபலம் பெற்றுக் கொள்ள முடிகிறது.

ரெலோவுக்கு கலைஞர் கருணாநிதிதான் ஆரம்பகால போஷகர். (தற்போதல்ல)

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கு கும்பகோணம் ஸ்டாலின்தான் போஷகர். இவா தந்தை பெரியாரின் தீவிரமான தொண்டர்.

திராவிக் கழக மாணவரணியில் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். பெரியார் மறைவுக்குப் பின்னர் திராவிடர் கழகத் தலைவரானார் கி.வீரமணி.

“இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுக்க வேண்டும். போராட்டம் நடத்த வேண்டும்” என்று வீரமணியிடம் சொன்னார் ஸ்டாலின். அதற்கு வீரமணி சொன்னார், “அது அந்த நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனையாச்சே. நாம் தலையிடவேண்டாம்.”

திராவிடர் கழகத்திற்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வந்துவிட்டார் ஸ்டாலின்.

veeramani-praba  புலிகள் அமைப்புக்கு ஆரம்பகாலப் போஷகர்  யார் தெரியுமா?? : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -56) veeramani prabaஅதே வீரமணி பின்னர் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார். திராவிடர் கழகம் மூலமாக புலிகளுக்கு நிதி திரட்டல் நடந்தது. திரட்டிய நிதியில் திராவிடர் கழகத்துக்காக ஒர குறிப்பிட்ட வீதம் எடுக்கப்படும் என்று முன்நிபந்தனையோடுதான் நிதி திரட்டப்பட்டது.

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் கோடி கோடியாக நிதி வைத்திருக்கும் கட்சிகள்.
எம்.ஜி.ஆரின் உதவி

எம்.ஜி.ஆர். தனது சொந்த நிதியிலிருந்தும் புலிகளுக்கு உதவியிருக்கிறார்.  எம்.ஜி.ஆர். புலிகளுக்கு உதவி செய்தது பற்றிய ஒரு சம்பவம் பரவலாக பேசப்பட்டது.

எம்.ஜி.ஆருடன் இருந்த நெருக்கத்தை வைத்தே பல கோடிகள் சம்பாதித்தவர் ஒரு தொழிலதிபர். ஒரு தடவை தனக்கு வியாபாரம் ஒன்றில் கிடைத்த லாபத்தை எம்.ஜி.ஆரிடம் குறைத்துச் சொல்லிவிட்டார்.

எம்.ஜி.ஆர். எப்படியோ மணந்து பிடித்து விட்டார். அந்தத் தொழிலதிபரிடம் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை கொண்டுவருமாறு கூறினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் கட்டளையை மீற முடியுமா? பெட்டியில் வந்தது பல லட்சங்கள். பெட்டியை வாங்கிக் கொண்டது பிரபாகரனின் ஆள்.

கும்பகோணம் ஸ்டாலின் தனது சொத்துக்களை விற்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்திற்காக உதவியவர். விளம்பரம் விரும்பாத மனிதர்.
கும்பகோணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். கால்வைக்க முன்னர் ஒரு அம்பாசிடர் கார், இரண்டு பெரிய பேக்கரிகள், சொந்த வீடு எல்லாம் இருந்தது.

இப்போது கால் நடையாகத்தான் திரிகிறார் ஸ்டாலின்.

புளொட் அமைப்புக்கு போஷகராக இருந்தவர் எஸ்.டி. சோமசுந்தரம்.

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பவர்ஃபுல்லாக இருந்தபோது புளொட்டுக்கு நல்ல பயன் கிடைத்தது. ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதால் எம்.ஜி.ஆரோடு பிரச்சனைப்பட்டுக் கொண்டு வெளியேறினார்.

‘நமது கழகம்’ என்று தனிக்கட்சி ஆரம்பித்தார். இடைத்தேர்தலில் படுதோல்வி. மீண்டும் அ.தி.மு.கவுக்குத் திரும்பினார். இப்போது எஸ்.டி. சோமசுந்தரத்திற்கு ஜெயலலிதா ஆதிபராசக்தியாக தெரிகிறார்.

இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தற்போது எஸ்.டி. சோமசுந்தரம் வாயே திறப்பதில்லை.

பொதுவான பெயர்
1985 காலப்பகுதியில் இலங்கையின் புலிகள் அமைப்பினர் நடத்திய தாக்குதல்கள் தமிழகப் பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருந்தன.

சகல ஈழப் போராளி அமைப்புக்களையும் பொதுவாக  விடுதலைப் புலிகள் என்றே தமிழக மக்கள் அழைத்து வந்தனர்.

ரெலோ நடத்திய தாக்குதலாக இருந்தாலும் புலிகள் தாக்கிவிட்டார்களாம் என்றே தமிழக மக்கள் பேசிக் கொண்டனர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ரெலோ, ஈரோஸ், புளொட் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதைவிட புலிகள் என்று பொதுவாகக் குறிப்பிடுவதே அவர்களுக்கு வசதியாக இருந்தது.

ஈழப் போராளி இயக்கத் தலைவர்கள் மத்தியிலும் பிரபாகரனும், உமாமகேஸ்வரனுமே தமிழக மக்களிடம் அறியப்பட்ட பெயர்களாக இருந்தன. உமாமகேஸ்வரனை முகுந்தன் என்று சொன்னால்தான் தெரியும்.

பாண்டிபஜாரில் புளொட்டுக்கும், புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பிரபாகரனையும், முகுந்தனையும் பிரபலம் செய்திருந்தது.

சாதாரண மக்கள் மட்டுமல்ல தமிழக அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மத்தியில் கூட ஈழப் போராளி அமைப்புக்களின் பிரிவுகள் குறித்து தெளிவு இருக்கவில்லை.

அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். மதுரையில் ஒரு புகைப்பட கண்காட்சி நடத்தியது ஈ.பி.ஆர்.எல்.எஃப். கண்காட்சியை முன்னிட்டு ஒரு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரை மேயர் பழனிவேல்ராஜன் (பெயர் சரியாக நினைவில்லை) அழைக்கப்பட்டிருந்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் சார்பாக டேவிற்சன் அவரை வரவேற்றார். மதுரை மேயர் கேட்ட முதல் கேள்வி: “உங்க தலைவர் பிரபாகரன் செயக்கியங்களா?”

அவருக்கு நீண்ட நேரமாக எல்லா விளக்கம் கொடுத்தார் டேவிற்சன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, கூட்டத்திலும் உரையாற்றி முடித்துவிட்டு, விடைபெறும் போது டேவிற்சனிடம் சொன்னார் மதுரை மேயர்: “பிரபாகரனிடம் நான் ரொம்பக் கேட்டதாகச் சொல்லுங்கள்.” டேவிற்சன் முகத்தில் ஈயாடவில்லை.

umamakeswaran  புலிகள் அமைப்புக்கு ஆரம்பகாலப் போஷகர்  யார் தெரியுமா?? : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -56) umamakeswaranஉமாவின் விளக்கம்
ஈழப் போராளி அமைப்புக்கள் தமது பிரிவுகள் வேறுபாடுகள் பற்றிச் சொன்ன விளக்கங்கள் தமிழக மக்களுக்கு புரியவில்லை.

பொதுவாக இரண்டே இரண்டு கேள்விகள் கேட்பார்கள்.

“நீங்கள் அனைவரும் ஏன் ஒன்றுபடக்கூடாது?”

“புலிகள்தானே தாக்குதல் நடத்துகிறார்கள்? யார் பெரிய இயக்கம்?”

நான்கு இயக்க கூட்டமைப்பு உருவான பின்னர் புளொட் அமைப்புதான் வெளியே நின்றது. எனவே, மேற்கண்ட இரு கேள்விகளுக்கும் புளொட்தான் கூடுதலாகப் பதில் சொல்ல வேண்டியிருந்தது.

1985 மே மாதம் 16ம் திகதி பெங்க@ரில் ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தினார் உமாமகேஸ்வரன்.

ஏன் பரவலான தாக்குதல்களை புளொட் அமைப்பு நடத்தவில்லை என்பதற்கு உமா சொன்ன விளக்கம் இது:

“பொதுவாக கொரில்லா போர் முறை எல்லா நாடுகளிலும் வெற்றி பெற்றுவிடாது. இலங்கையைப் பொறுத்தவரை பூகோள அமைப்பு முறையை வைத்து கணித்தால் இங்கு கொரில்லா போர் வெற்றி பெற வழியில்லை. ஆகவேதான் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்களைத் திரட்டி மக்கள் யுத்தம் நடத்த வேண்டும் என்கிறோம்.

யாழ்ப்பாணத்திற்குள் தாக்குதல் நடத்துவது கூடாது. ஒரு சிறிய வெற்றிக்காக பெரிய இழப்புக்களை ஏற்படுத்திக் கொள்வது சரி இல்லை. இதில் தான் புலிகளோடு நாங்கள் வேறுபடுகிறோம்.” என்றார் உமாமகேஸ்வரன்.

புளொட் அமைப்புத்தான் பெரியது என்று சொல்லவும் அவர் மறக்கவில்லை.

“தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் 6 ஆயிரம் பேர் கொண்ட படை வைத்திருக்கிறது. ஏனைய இயக்கங்கள் அனைத்தும் 4ஆயிரம் பேர் இருக்கிறார்கள். மொத்தம் 10 ஆயிரம் பேர் கொண்ட படை இருக்கிறது” என்று சொல்லியிருந்தார் உமாமகேஸ்வரன்.

அதாவது எனைய இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்தால்கூட புளொட் அமைப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு கிட்டவும் வரமுடியாது என்று மறை முகமாகச் சொல்லிவிட்டார்.

உண்மையில் அப்போது ஏனைய இயக்கங்களைவிட (தனித்தனியாக) புளொட் அமைப்பில்தான் உறுப்பினர்கள் தொகை அதிகம்.

ஆனால் அது உமா சொன்ன கணக்கல்ல. புளொட் மட்டுமல்ல சகல அமைப்புக்களுமே போட்டி காரணமாக தமது ஆட் பலத்தை மிகைப்படுத்தியே கூறி வந்தன.
(தொடர்ந்து வரும்).
-எழுதுவது அற்புதன்-

துறைமுகத்துக்குள் புகுந்த கரும் புலிகள்

pirapakaran  புலிகள் அமைப்புக்கு ஆரம்பகாலப் போஷகர்  யார் தெரியுமா?? : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -56) pirapakaran
pirapa  புலிகள் அமைப்புக்கு ஆரம்பகாலப் போஷகர்  யார் தெரியுமா?? : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -56) pirapa

17-10-1995  அதிகாலை மூன்றுமணிக்கு   திருமலை துறைமுகத்துக்குள் ஊடுருவி கடற்கரும் புலிகளால்  இலங்கை கடற்படைக்கு சொந்தமான  3கடற்படகுகள் தாக்கப்பட்டன.

ஒரு தறையிறங்கு கப்பல், ஒரு அதிவே படை வீரர் கப்பல், ஒரு டோறா அதிவே பீரங்கிப் படகு என்பனவே  தகர்க்கப்பட்ட படகுகளாகும். இத்தாக்குதலை சுலோஜன்  நேரடி நீச்சல்  பிரிவின் கரும்புலிகளும், அங்கயற்கண்ணி  நேரடி நீச்சல் பிரிவின் கரும்புலியும் மேற்கொண்டு பலியாகினர்.

மூன்றாம் கட்ட ஈழுப்போரில்  திருமலை துறைமுகத்தில்  கடற்கரும்புலிகள்  நடத்திய இரண்டாவது தாக்குதல் இது.

எழுதுவது அற்புதன்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“தமிழீழத்தைக் கைவிட்டால் தம்பிக்கும் வெடிதான்” கிட்டுவின் உறுதி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-57)

“தமிழீழத்தைக் கைவிட்டால் தம்பிக்கும் வெடிதான்” கிட்டுவின் உறுதி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-57)
 

இந்திய இராணுவம்:

இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை 1983க்கு பின்னர் திராவிட முன்னேற்றக் கழகமும் கலைஞர் கருணாநிதியும் வலியுறுத்திக் கொண்டிருந்தனர்.

இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பும் கோரிக்கையை எம்.ஜி.ஆர். ஆதரிக்கவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரை கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் ஏட்டிக்குப் போட்டியான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வந்தனர்.

ஈழப் போராளி அமைப்புக்களைப் பொறுத்தவரை இந்திய இராணுவம் தேவையில்லை என்ற கருத்தையே கொண்டிருந்தன.

ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ், புலிகள் இயக்கம், புளொட் ஆகிய அமைப்புக்கள் இந்திய இராணுவம் நேரடியாகத் தலையிடத் தேவையில்லை.  ஆயுத உதவியை மட்டும் இந்தியா வழங்கினால் போதுமானது என்று கூறிவந்தன.

பெங்களூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் கூறியது இது:

“இந்தியா இராணுவம் அனுப்பத் தேவையில்லை. எமது போராட்டத்தை ஆதரித்தால் போதுமானது. எம்மிடம் பயிற்சி பெற்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தமிழீழ விடுதலையை நாம் பார்த்துக் கொள்வோம்.”

புளொட் அமைப்பினால் “வங்கம் தந்த பாடம்” என்றொரு புத்தகமும் வெளியிடப்பட்டது.

இந்திய இராணுவம் பங்களாதே~pல் நடந்துகொண்ட முறைகளைப் பற்றி அதில் விபரிக்கப்பட்டிருந்தது.

பெண்களை பலாத்காரப்படுத்தியமை, பங்களாதேசில் இருந்து முற்போக்கு சக்திகளை கொன்று குவித்தமை போன்ற சம்பவங்களை அவற்றில’ முக்கியமாக குறிப்பிட்டிருந்தன.

இந்திய இராணுவம் தொடர்பாக கடும் விமர்சனத்தை முன்வைத்த ஒரேயொரு ஈழப்போராளி அமைப்பு அப்போது புளொட் அமைப்புத்தான்.

‘வங்கம் தந்ந பாடம்’ என்னும் நூலை தயாரித்தவா சந்ததியார், டொமினிக் போன்றவர்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. பின்னர் சந்ததியார் புளொட் உட்பிரச்சனையால் கொல்லப்பட்டார்.

‘வங்கம் தந்ந பாடம்’ நூலின் ஆயிரக்கணக்கான பிரதிகள் குழிவெட்டிப் புதைக்கப்பட்டன.

சந்ததியார், மற்றும் புளொட் அமைப்புக்குள் நடைபெற்ற உட்கொலைகள் பற்றி இந்திய புலனாய்வுப் பிரிவினர் அறிந்தே இருந்தனர்.

சந்ததியாரும், மற்றும் உட் பிரச்சனைகளில் சம்பந்தப்பட்டவர்களும் இந்திய எதிர்ப்பாளர்கள் என்றும், அதனால்தான் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் கூறிவிட்டார் உமா மகேஸ்வரன்.

அதனால்தான் ‘வங்கம் தந்த பாடம்’ மண்ணோடு மண்ணாக மறைக்கப்பட்டது.

நம்பநட

ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பில் பத்மநாபா ஆரம்ப நாள் முதலே இந்தியா தெடர்பாக சந்தேகங்களை கொண்டிருந்தவர்.

இந்திய முதலாளித்துவ அரசுடன் நம்ப நட, நம்பி நடவாதே என்ற நிலைப்பாடே இருக்கவேண்டும் என்பதுதான் பத்மநாபாவின் உறுதியான கருத்தாக இருந்தது.

தற்போது இதனைச் சொல்லும் போது பலருக்கு ஆச்சரியம் ஏற்படலாம். பின்னாளில் இந்தியாவின் உற்ற நண்பராக கருதப்பட்டவர் பத்மநாபா. அவரது 1985ம் ஆண்டு நிலைப்பாடு பற்றியே இப்போது குறிப்பிடுகிறேன்.

அதேபோல ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் இராணுவத் தளபதியாக இருந்த டக்ளஸ் தேவானந்தாவும் இந்தியாவின் நேரடித் தலையீட்டை அப்போது விரும்பவில்லை.

ரெலோ வரவேற்பு

ஒரே ஒரு இயக்கம்தான் இந்திய இராணுவத்தின் தலையீட்டை விரும்பியது: வரவேற்றது.

அந்த இயக்கம்தான் ரெலோ, கருணாநிதியின் நிலைப்பாட்டை ஆதரித்ததோடு, இந்திய இராணுவம் வந்தால் தமக்குத்தான் நல்ல வாய்ப்பு என்றும் ரெலோ நம்பியிருந்தது.

ஒரு பேட்டியொன்றில் சறீசபாரத்தினம் சொல்லியிருந்தது என்ன தெரியுமா?

“நாங்கள் போர் வீரர்கள். எமது அரசியலை இந்தியா பார்த்துக் கொள்ளட்டும்.”

அதேபோல தமிழர் விடுதலைக் கூட்டணியும் இந்தியாவின் நேரடித் தலையீட்டை விரும்பியது.

இந்தியா நேரடியாகத் தலையீட்டால் தமக்கு ஒரு முக்கிய பாத்திரம் கிடைக்கலாம் என்பதுதான் அந்த விருப்பத்தின் காரணமாக இருந்தது.

அமிர்தலிங்கம் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னது இது:

“நாங்கள் நோயாளிகள். இந்தியா முன் வைக்கும் தீர்வை நாம் ஏற்றுக்கொள்வோம்.”

அமுதரின் கருத்து புலிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

‘வீரவேங்கை’ பத்திரிகையில் கோவை மகேசன் பின்வருமாறு எழுதியிருந்தார்.

“அமிர்தலிங்கம் கூறியதுபோல சுதந்திரத்தை நேசிக்கும் எந்தத் தமிழனும் கூறமாட்டான். சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும்  ஒட்டுப் போடும் எந்தத் தீர்வும் நீடித்து நிலைக்காது.

சுதந்திர ஈழமே ஒரே வழி என்பதை இந்திய அரசுக்கு உணர்த்துதே எமது ஒரே சிந்தனையும் செயலுமாக இருக்க வேண்டும்.

3IxucEMX4hD7NiRXMg2eCPE60P-uikxhefur7WnR
(ஈழப்போராளி இயக்கத் தலைவர்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன். இடமிருந்து வலமாக: பத்மநாபா(ஈ.பி.ஆர்.எல்.எஃப்), சிறீசபாரெத்தினம்(ரெலோ), மு.கருணாநிதி, பாலகுமார்(ஈரோஸ்)

பரவிய வதந்தி

ரெலோ இயக்கம் யாழ்ப்பாணத்தில் பரவலான பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் இருந்த சுபாஸ் விடுதி, அசோகா விடுதி போன்றவற்றுக்கு சென்ற ரெலோ உறுப்பினர்கள் சொன்னது இது:

“அறைகள் தயாராக இருக்கட்டும். இன்னும் சில வாரங்களில் முக்கியமான ஆட்கள் வரப் போகிறார்கள்.” அவர்கள் கூறியது இந்திய இராணுவ அதிகாரிகளை.

பொதுமக்களிடமும் ‘இந்தியப்படை வரப்போகிறது’ என்று ரெலோ உறுப்பினர்கள் ஜாடைமாடையாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

1985இன் இறுதியில் பரவிய பெரிய வதந்தியும் அதுதான்.

‘இந்தியப் படை வந்தால் எங்கள் ஆட்சிதான்’ என்று ரெலோ உறுப்பினர்கள் சொல்லிக் கொண்டிருந்ததும் ஏனைய இயக்க உறுப்பினர்களுக்கு வெறுப்பூட்டியது.

அதனையடுத்து யாழ்ப்பாணத்தில் இரவோடு இரவாக சுவரொட்டிகள் தோன்றின.

“இந்தியப் படையினர் வந்தால் தமிழ் பெண்களின் மானம் போய்விடும்.”

“வேண்டாம், வேண்டாம் இநிதியப் படை இங்கே வேண்டாம். வங்கத்தில் பல்லாயிரம் தேச பக்தர்களை படுகொலை செய்தது இந்தியப் படை.”

“ஈழம் மற்றொரு பங்களாதேசமாக மாறவேண்டுமா? இந்தியப் படை இங்கே வரத்தான் வேண்டுமா?”

போன்ற வாகசங்கள் சுவரொட்டிகளில் காணப்பட்டன. சுவரொட்டிகளில் அதனை வெளியட்டவர்கள் -தமிழ் மக்கள் என்று குறிப்பிப்பட்டிருந்தது.

images  “தமிழீழத்தைக் கைவிட்டால் தம்பிக்கும் வெடிதான்” கிட்டுவின் உறுதி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-57) images5தமிழ் மக்களின் பெயரில் சுவரொட்டியை வெளியிட்டவர்கள் புலிகள். சுவரொட்டி வாசகங்களை தயாரித்தவர் திலீபன்.
திலீபன் சொன்னது.

இந்தியப்படையின் வருகையால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி ஆராய யாழ்ப்பாணத்தில் ஒரு கலந்தரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தவர் டக்ளஸ் தேவானந்தா.

யாழ்ப்பாணம் அத்தியடியில் இருந்த மக்கள் விடுதலைப்படை தலைமைக் காரியாலயத்தில் கலந்துரையாடல் நடந்தது.
புலிகள் அமைப்பின் சார்பில் திலீபன், ஈரோஸ் சார்பாக கைலாஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பாக டக்ளஸ் தேவானந்தா, ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புளொட் அமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வேறொரு அவசர காரியம் இருந்தமையால் வரமுடியாது போய்விட்டதாக புளொட் அமைப்பின் முக்கியஸ்தர் மென்டிஸ் பின்னர் அறிவித்திருந்தார்.

ரெலோ சார்பாக பொபியை அழைத்திருந்தும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்தியப் படை வந்தால் ஏற்படக்கூடிய நிலை தொடர்பாக ஈரோசும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பும் ஒரேவிதமான கருத்தைத் தெரிவித்தன.

புலிகள் சார்பாக திலீபன் சொன்ன கருத்துத்தான் ஆச்சரியமானது.

“இந்திய படை அதிகாரிகளோடு பயிற்சி முகாமில் நான் பழகியிருக்கிறேன். அவர்கள் பண்பானவர்கள். இந்தியப் படை வந்தால் நம் மக்களைக் கொடுமைப்படுத்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

ஆனால் தமிழீழத்தை உருவாக்கித் தருவார்களா என்பதுதான் சந்தேகம். அதனால் தான் இந்தியப்படை நேரடியாக வருவதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை” என்றார் திலீபன்.

திலீபன் சொன்னதைக் கேட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ் பிரதிநிதிகளுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.

“இந்திய படை வந்தால் பெண்களை பாலியல் வதைக்கு உள்ளாக்கும் என்று சுவரொட்டிகள் போட்டிருக்கிறீர்களே” என்று கேட்டார் டக்ளஸ் தேவானந்தா.

அதற்கு திலீபன் சொன்ன பதில்: “அப்படியானால்தான் சனம் பயப்படும். வேறு விதமாகச் சொன்னால் சனத்துக்கு புரியாது. இந்தியா ஒரு முதலாளித்துவ நாடு என்றெல்லாம் எழுதினால் விளங்குமோ? அதுதான்  அப்படிப் போஸ்டர் போட்டனாங்கள்” என்றார் திலீபன்.

அதே திலீபன்தான் பின்னர் இந்திய அமைதிப்படைக்கு எதிராக உண்ணாவிரதமிருந்து பலியானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

eelam01100011.jpg

கிட்டுவின் உறுதி

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை 1985ம் ஆண்டு இறுதிப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பும், புலிகள் அமைப்பினரும் நெருக்கமாகவே இருந்தனர்.

மாத்தையா தெடர்பாக கோபம் இருந்தாலும், கிட்டுவுடன் டக்ளஸ் தேவானந்தா அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தார்.

அக் காலகட்டத்தில் கிட்டுவுக்கும் பிரபாகரனுக்கு இடையில் வெளியே தெரியாத வகையில் மனக்கசப்புக்கள் உருவாகியிருந்தன.

யாழ்ப்பாண பத்திரிகைகள் மூலமும், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் மூலமும் கிட்டு பிரபலமாகியிருந்தார்.

தனது மோட்டார் சைக்கிளில், இடுப்பில் பிஸ்டலோடு, முன்புறம் ஒரு குரங்குக் குட்டியோடு வலம் வரும் கிட்டு யாழ்ப்பாண மக்களுக்கும் சுவாரசியமான ஒருவராகவே தெரிந்தார்.

டக்ளஸ் தேவானந்தா தனது பாதுகாவலர்கள் சகிதம் ‘பிக்கப்’ வாகனம் ஒன்றில் வலம் வருவார். அவரது வாகனத்திலும் ஒரு குரங்குக் குட்டி பயணம் செய்யும்.

டக்ளஸ் தேவானந்தாவுக்கும் பத்மநாபாவுக்கும் இடையில் அப்போது மனக்கசப்பு தோன்றியிருந்தது.

டக்ளஸ் தேவானந்தாவும், கிட்டுவும் பிரபலமானதும், அவர்களை மீறி யாழ்ப்பாணத்தில் அவர்களது தலைமைகளால் செயற்படமுடியாதளவுக்கு செல்வாக்குப் பெற்றிருந்ததும், இரு இயக்கங்களுக்கும் அவர்கள் இருவரையும் சர்ச்சைக்குரியவர்களாக்கியது.

கிட்டு ஒரு முறை உறுதியோடு சொன்ன கருத்து இதுதான்.

“தமிழீழத்தைக் கைவிட்டுப் போட்டு தம்பி வந்தாலும் வெடிதான்.” தம்பி என்றழைத்தது பிரபாவை. அப்போது தமிழ் நாட்டில் தங்கியிருந்தார் பிரபாகரன்.

ரொலோவோடு பிரச்சனைகள்

புலிகள் அமைப்பிற்கும் ரெலோவுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் எப்போதும் பிரச்சனைதான்.

கிட்டுவை ‘மொட்டை’ என்று அழைத்து கேலி செய்வார்கள் ரெலோ உறுப்பினர்கள். கிட்டு அதைக் கேட்டும் கேட்காதவர் போலச் சென்றுவிடுவார்.

யாழ் கோட்டை இராணுவ முகாமில் இருந்து வெளியேற முற்படுவார்கள் படையினர்.

உடனே சகல இயக்கங்களும் விரைந்து சென்று பதிலடி கொடுப்பார்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் அடிக்கும் மோட்டார்  ஷெல்லுக்கு கோட்டை இராணுவத்தினரிடம் நல்ல மரியாதை.

உடனடியாகப் பின்வாங்கி விடுவார்கள். அப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிடம் மட்டுமே மோட்டார் ஷெல்கள் இருந்தன. சொந்தமாகத் தயாரிக்கப்பட்டவை.

புலிகள் அமைப்பினர் பதில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடாதளவுக்கு தொல்லை கொடுப்பார்கள் ரெலோ அமைப்பினர்.

இராணுவத்தினரை நோக்கி புலிகள் அமைப்பினர் முன்னேறிச் சென்று விட்டால், ரெலோ பின்னால் நின்று சுட்டுப் பயம்காட்டும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் புலிகள் அமைப்பினரும், கிட்டுவும் காட்டிய சகிப்புத் தன்மை உண்மையில் மெச்சத்தக்கதுதான்.

ரெலோவைப் பொறுத்தவரை அதன் உறுப்பினர்கள் கட்டுப்பாடு விடயத்தில் மிக மோசமாக இருந்தனர்.

மிரட்டும் பெயர்கள்
பொறுப்பாளர்களுக்கு மற்றவர்களைப் பயமுறுத்தக்கூடிய பெயர்களாக வைத்துக் கொண்டார்கள்.

தோட்டுத்தில்லை, மொட்டை மாமா என்றெல்லாம் பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இயக்கங்கள் உருவாக முன்னர் வீதிக்கு வீதி நின்ற சண்டியர்களும் அப்படித்தான் பெயர்களை வைத்திருந்தார்கள்.

உதாரணமாகச் சில பெயர்கள்: கொட்டடிமணி, சுருள்வாள் சின்னத்தம்பி.

சண்டித்தனப்பாணியில் கட்டுப்பாடு இல்லாமல் செயற்பட்ட ஒரு அமைப்பாகத்தான் ரெலோ இயங்கிக் கொண்டிருந்தது.
ரெலோவுக்கு யாழ்ப்பாண பொறுப்பாளராக இருந்தவர் தாஸ்.

தனது உறுப்பினர்கள் சகிதம் கள்ளுத்தவறணைகளில் வாகனத்தை நிறுத்தி வயிறுமுட்டக் குடிப்பார் தாஸ்.

தாஸ் மீது விசுவாசங் கொண்ட ஒரு பெரிய அணியே ரெலோவுக்குள் இருந்தது,

அவர்கள் அனைவரும் தாஸின் ஊரவர்களாகவோ, அயலவர்களாகவோ இருந்தனர்.

தாசுக்கு கிடைத்த மரியாதையை ஒரு பிரபல சண்டியனுக்கு முன்பிருந்த மரியாதையோடும் ஒப்பிடலாம்.

புலிகள் மேற்கொண்ட தாக்குதல் பற்றி வரும் வாரம் சொல்கிறேன்.

-

குறி தவறிய கரும்புலித் தாக்குதல்

pulikal  “தமிழீழத்தைக் கைவிட்டால் தம்பிக்கும் வெடிதான்” கிட்டுவின் உறுதி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-57) pulikal3
புல்மோட்டைக் கடற்பரப்பில் 3.09.95 அன்று கடற் கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்கு புலிகள் புலிகள் திட்டமிட்டனர்.
கடற் கரும்புலி மேஜர் நகுலன், கடற் கரும்புலித் கண்ணாளன் ஆகியோர் வெடி மருந்து நிரப்பப்பட்ட படகொன்றில் விரைந்தனர்.

kanan  “தமிழீழத்தைக் கைவிட்டால் தம்பிக்கும் வெடிதான்” கிட்டுவின் உறுதி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-57) kananபுல்மோட்டைக் கடற்பரப்பில் டோறா படகை குறிவைத்து நெருங்கும்போது கடற்படையினர் கண்டுவிட்டனர். உடனே தாக்குதல் நடத்தினர். கரும்புலிப்படகு வெடித்துச் சிதறியது. இரு கரும்புலிகள் பலியானார்கள்.

மேஜர் கண்ணாளன் புலிகளது புலிகளது தயாரிப்பான ‘உயிராயுதம்’ படத்தில் நடித்தவர். ஒரு டோறாப் படகை தாக்கும் கரும்புலியாக நடித்திருந்தார்.

(தொடர்ந்து வரும்)
-
எழுதுவது அற்புதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துர்க்கை அம்மன் கோவில் நகைகளை கொள்ளையடித கிட்டு!!: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-58

images?q=tbn:ANd9GcRx35x1hdSVNrCjEM97zl7
 

திருமலையில் தாக்குதல்:

திருக்கோணமலையில் கன்னியா பகுதியில் இராணுவத்தினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

வாகனத் தொடர்களில் முப்பது இராணுவத்தினர்வரை பயணம் செய்து கொண்டிருந்தனர்.

திடீர் என்று கண்ணிவெடிகள் முழங்கத் தொடங்கின.

பின்னால் வந்த வாகனங்களில் இருந்த இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபடி பின்வாங்கிச் சென்றனர்.

கண்ணிவெடியில் சிக்கி 9 இராணுவத்தினர் வரை பலியானார்கள். வர்ணகுலசூரியா, தென்னகோன், தயானந்த, கொல்மன, திலகரட்ண, ரணவீர, புஞ்சிநிலமே, பியதாச, விஜித்தா ஆகியோரது பெயர்கள் பலியான இராணுவத்தினர் பட்டியலில் வெளியாகியிருந்தன.

இத்தாக்குதல் 28.3.86ல் நடைபெற்றது. திருமலை மாவட்ட புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவரான புலேந்தி அம்மான் தலைமையில் மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டது.

31.3.86 அன்று அதிகாலையில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சென்று கொண்டிருந்தனர்.

எதிரே வந்து கொணடிருந்த இராணுவத்தினர் அவர்களைக் கண்டுவிட்டனர்.

தப்பி ஓடினால் இராணுவத்தினர் சரமாரியாகச் சுடுவார்கள். வேறு வழியில்லை என்பதால் புலிகளும் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர்.

இராணுவத்தினர் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.

திடீர் துப்பாக்கிப் பிரயோகத்தினால் அதிர்ச்சியடைந்து விட்டனர்.

சுதாகரித்துக் கொண்டு பதிலடியில் இறங்குவதற்கிடையில் இராணுவத்தினரின் தரப்பில் ஐந்துபேர் வரை பலியானார்கள். புலிகள் தரப்பில் எதுவித சேதமும் ஏற்படவில்லை.


கறுப்பு உடை

பாகிஸ்தானில் இலங்கை இராணுவத்தினருக்கு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் விஷேட பயிற்சி வழங்கப்பட்டது.

அவ்வாறு பயிற்சி பெற்று வந்த இராணுவத்தினருக்கு கறுப்பு உடை கொடுக்கப்பட்டது.

கறுப்பு உடை அணிந்த இராணுவத்தினர் மாங்குளம்-கொக்காவில் பகுதிகளுக்கு இடையே புலிகளது தாக்குதலை எதிர்கொண்டனர்.

2.4.86 அதிகாலையில் புலிகளது அணியொன்று பதுங்கியிருந்து அத்தாக்குதலைத் தொடுத்தது.

அதிகாலை நேரம் என்பதால் இராணுவத்தினர் பலத்த தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை. அலட்சிய மனோபாவத்தோடு ரோந்தில் ஈடுபட்டனர்.

ஆர்.பி.ஜி ரொக்கட் லோஞ்சர், ஏ.கே. 47 போன்ற ஆயுதங்களால் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

இரண்டாவது லெப்ரினன்ட் எம்.ஏ.எம்.ஜி.மல்லவாராய்ச்சி, கோப்ரல் பியதாசா, கோப்ரல் செனரத் பண்டா, லான்ஸ் கோப்ரல் கருணாதிலக உட்பட ஒன்பது இராணுவத்தினர் பலியானார்கள்.

இராணுவத்தினரிடமிருந்து வு.56-1, ரவைக்கூடுகள்-5, மோட்டார் n~ல்-2, ஏ.கே.ரவைகள்-125 ஆகியவை புலிகளால் கைப்பற்றப்பட்டன.

இத்தாக்குதல் மாத்தையாவின் வழிநடாத்தலின் கீழ் நடத்தப்பட்டது. புலிகள் தரப்பில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

LTTE_Major_Sothiya_Women_Commando_Unit-1துப்பாக்கிச் சமர்

5.4.86 சனிக்கிழமை, மட்டக்களப்பு கரடியனாற்றில் புலிகளது கெரில்லா அணியொன்று காத்திருந்தது.

கரடியனாறு வழியாக இராணுவத்தினர் தொடர்வண்டிகளில் ரோந்துசெல்வது வழக்கம்.

காலையிலிருந்து புலிகளது அணி காத்திருந்தது.

நண்பகல் 12 மணியாகியும் இராணுவத்தினர் ரோந்து வருவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.

பிற்பகல் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது, தூரத்தில் ஒரு புள்ளியாக வாகனம் ஒன்று தெரிந்தது. ‘வருகிறார்கள்’ என்று ஊகித்து தயாராக காத்திருந்தார்கள்.

அவர்கள் காத்திருப்பது தெரியாமல் தொடர் வாகனங்களில் வேகமாக வந்து கொண்டிருந்தனர் இராணுவத்தினர்.

வாகனத் தொடரின் முதல் வாகனமாக வந்த கவசவண்டி தமது எல்லைக்குள் வந்ததும் புலிகளது ரொக்கட் லொஞ்சர் பறந்தது.

கவச வண்டி சேதமாகி நகராமல் நின்றுவிட்டது.

துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் கெரில்லாக்கள, டிரக் வண்டிகளில் வந்த இராணுவத்தினர் கீழே குதித்து டிரக் மறைவில் நின்று துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

சுமார் இரண்டு மணிநேரம் துப்பாக்கிச் சமர் நடைபெற்றது.

இராணுவத்தினர் தரப்பில் ஏழுபேர் பலியானதாக ஞாபகம், புலிகள தரப்பில் ஒருவர் பலியானார்.

வீடுகளில் கொள்ளைகள்

86ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் தனியார் வீடுகளில் பரவலான கொள்ளைகள் நடைபெறத் தொடங்கின.
யாழ்ப்பாணத்தில் இருந்த பிரபல பணக்காரர்கள், வர்த்தகர்கள் ஆகியோரது வீடுகள்தான் குறிவைத்து கொள்ளையிடப்பட்டன.

நவீனரக ஆயுதங்களோடு கொள்ளையர்கள் தோன்றியதால் அவர்கள் தனிப்பட்ட நபர்கள் அல்ல: இயக்கங்கள்தான் கொள்ளைகளுக்குப் பின்னணியில் நிற்கின்றன என்று மக்கள் புரிந்து கொண்டனர்.

எந்த இயக்கம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்பது தெரியாமல்போனதால் மக்கள் மத்தியில் இருந்து கொள்ளைகளைக் கண்டித்து பொதுவான கோரிக்கைகள் விடப்பட்டன.

கொள்ளையர்களை பிடித்துத் தாருங்கள் என்று கேட்டார்கள் மக்கள்.

நாங்களும் அவர்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம் என்றன இயக்கங்கள்.

வெறுத்துப்போன மக்கள் வீதித்தடைகளை போட்டார்கள். கொள்ளையர்களை பிடித்துத் தந்தால்தான் வீதியைத் திறப்போம் என்று எதிர்ப்புக் காட்டினார்கள்.

சகல இயக்கங்களும் தனியார் வீடுகளில் நடைபெற்ற கொள்ளைகளைக் கண்டித்து பத்திரிகைகளில் அறிக்கை விட்டன.

யாழ்  நடந்த  ரு கொள்ளைகள்

86ல் நடைபெற்ற இரண்டு கொள்ளைகள்தான் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தன.

ஒன்று யாழ்ப்பாணம் பொருமாள் கோவில் கொள்ளை. இன்னொன்று தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவில் கொள்ளை.

பெருமாள் கோவில் கொள்ளையில் ஈடுபட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். மக்கள் விடுதலைப் படையின் யாழ் மாவட்ட தொடர்பாளராக இருந்தவர் கபூர் என்று அழைக்கப்பட்ட பாலா.

அவரது தலைமையில்தான் பெருமாள் கோவில் கொள்ளை நடத்தப்பட்டது.

கொள்ளை நடவடிக்கைக்காக வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது பொருமாள் கோவிலுக்கு அருகே ரெலோ உறுப்பினர்கள் அந்த வாகனத்தை மறித்தனர்.

ஒவ்வொரு இயக்கமும் வீதிப்பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவது வழக்கம். வீதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ரெலோ உறுப்பினர்தான் வாகனத்தை மறித்தார்.

“யார் நீங்கள்?” என்று அந்த உறுப்பினர் கேட்டார். தாமதம் இல்லாமல் வேனில் இருந்தவர்கள் சொன்னார்கள்: “நாங்கள் எல்.ரி.ரி.ஈ.

வாகனத்தை மறித்தவர் வழிவிட்டு விலகிக் கொண்டார்.

எந்தவொரு இயக்க வாகனம் என்றாலும் மற்றொரு இயக்கம் சோதனையிடவோ, தடுக்கவோ முற்படுவதில்லை.

யாழ் நகருக்குள் பெருமாள் கோவில் இருப்பதால் அப்பாதை வழியாக இயக்க வாகனங்கள் சென்று வருவது வழக்கம்.

அப்படியிருந்தும் இரவோடு இரவாக பெருமாள் கோவில் நகைகள் சுத்தமாக துடைத்து எடுக்கப்பட்டன.

DSC_0012  துர்க்கை அம்மன் கோவில் நகைகளை கொள்ளையடித கிட்டு!!:  அல்பிரட்  துரையப்பா முதல் காமினி வரை-58 DSC 0012பெருமாள் கோவில்

விசாரிக்க வந்தவர்கள்

மறுநாள் காலையில் பொருமாள் கோவில் கொள்ளைச் சம்பவம் காட்டுத்தீபோலப் பரவிவிட்டது.

இயக்கங்கள் கோவிலில் கைவைக்கத் துணிவார்களா? என்றும் பலர் சந்தேகப்பட்டனர்.

கொள்ளைபற்றி விசாரிக்கவும், என்ன நடந்தது என்று அறியவும் பொருமாள் கோவிலுக்கு வந்தனர் இயக்கங்களின் முக்கியஸ்தர்கள்.

விசாரிக்க வந்த இயக்கங்களில் ஒன்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கிறோம். ஏதாவது தகவல் கிடைத்தால் எமக்குத் தெரியப்படுத்துங்கள் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். சார்பாகவும் பெருமாள் கோவில் நிர்வாகத்திடம் சொல்லப்பட்டது.

முதல்நாள் இரவு தன்னால் மறிக்கப்பட்ட வேன்தான் கொள்ளையில் சம்பந்தப்பட்டது என்று புரிந்து கொண்ட ரெலோ உறுப்பினர் விசியத்தை அவிழ்த்து விட்டார்.

புலிகள்தான் கொள்ளை நடத்தியிருக்க வேண்டும். அவர்களது வாகனம்தான் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியது என்று ரெலோ முலம் செய்தி பரவிவிட்டது.

யாரோ தமது பெயரைப் பாவித்து விட்டார்கள் என்று  தெரிந்து புலிகளும் விசாரணையில் இறங்கினர்.

அவர்களுக்கு ரெலோ  மீதுதான் முதலில் சந்தேகம். பின்னர் விசாரித்துக் கொண்டு போனபோது தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப். தான் கைவரிசை காட்டியிருக்கிறது என்று ஓரளவு தெரிந்து கொண்டனர்.

எனினும், கிட்டு அதனை பெரிதுபடுத்த விரும்பவில்லை. நிரூபிக்கக்கூடிய ஆதாரமில்லாதது மட்டும் அதற்கு காரணமல்ல.
thelli  துர்க்கை அம்மன் கோவில் நகைகளை கொள்ளையடித கிட்டு!!:  அல்பிரட்  துரையப்பா முதல் காமினி வரை-58 thelliதுர்க்கை அம்மன் 

வேறு ஒரு காரணம் இருந்தது. அதுதான் துர்க்கை அம்மன் கோவில் கொள்ளை.

பொருமாள் கோவில் கொள்ளையை புலிகள் வெளிப்படுத்த நினைத்தால், துர்க்கை அம்மன் கோவில் கொள்ளையை ஈ.பி.ஆர்.எல்.எஃப். அம்பலப்படுத்திவிடும்.

புலிகள் உத்தரவாதம்.

தெல்லிப்பளையில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் கொள்ளை கிட்டுவின் தலைமையில்தான் நடந்தது.

புலிகள் இயக்கத்தின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் மட்டுமே பொறுக்கி எடுக்கப்பட்டு மிக இரகசியமாக நடத்தப்பட்ட கொள்ளை அது.

கிட்டு, திலீபன், அருணா ஆகியோர் முக்கிய பங்கு வகித்தார்கள்.

இரவோடு இரவாக, அப்போதைய மதிப்பில் 25இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகைகள் கொள்ளையிடப்பட்டன.

கொள்ளைச் செய்தியால் தெல்லிப்பளையில் மக்கள் கொதித்துப் போனார்கள்.

நகைகளைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று வீதித்தடைகளைப் போட்டு எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

வழக்கம்போல சகல இயக்கங்களும் சென்று விசாரணை நடத்தின. புலிகள் அமைப்பினரும் ‘கொள்ளையர்களை பிடித்தே தீருவோம்’ என்று உத்தரவாதம் வழங்கிவிட்டு வந்துவிட்டார்கள்.

புலிகள் இயக்க உறுப்பினர்கள் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்பதால் கோவில் கொள்ளைகளில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள் என்று பொதுமக்களில் ஒரு சாரார் பேசிக்கொண்டனர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பு கம்யூனிச சித்தாந்தம் கொண்ட அமைப்பு என்பதும், கடவுள் நம்பிக்கை அவர்களுக்கு கிடையாது என்றும் மக்களுக்கு தெரியும்.

எனவே-இரண்டு கொள்ளைகளையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். செய்திருக்கலாம் என்று பரவலான பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியிருந்தன.
Nallur-Kovil  துர்க்கை அம்மன் கோவில் நகைகளை கொள்ளையடித கிட்டு!!:  அல்பிரட்  துரையப்பா முதல் காமினி வரை-58 Nallur Kovil
நல்லூரில் கண்

இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் பிரபலமானதும், வருமானம் கூடியதுமான நல்லூர் கந்தசாமிக் கோவில் மீதும் இயக்கங்களுக்கு ஒரு கண்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கும், புலிகள் அமைப்புக்கும் இடையே யார் முந்திக்கொள்வது என்று இரகசியமாக ஒரு போட்டியே நடந்து கொண்டிருந்தது.

அதற்கடையே ரெலோ முந்திக் கொள்ள இருப்பதாக கிட்டுவுக்கு யார் மூலமோ தகவல் கிடைத்துவிட்டது.

நல்லூர் தேர் திருவிழாவுக்கு முதல்நாள் இரவு கொள்ளையை நடத்த ரெலோ திட்டமிட்டிருப்பதாக கிட்டுவுக்கு தெரிந்து விட்டது.

உடனே கிட்டு ஒரு காரியம் செய்தார். ‘நல்லூர் கோவிலுக்குள் குண்டு’ என்று ஒரு வாந்தியைப் பரப்பிவிட்டார். நினைத்தது போலவே வதந்தி காட்டுத் தீயாகப் பரவியது.

குண்டு இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்தால் தேர் திருவிழா நடத்தலாம்.

பக்தர்கள் கோவிலுக்கு வெளியே திரண்டு என்ன ஆகுமோ என்று பயந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு வாகனம் வந்து நின்றது.

வாகனத்தில் இருந்து ஒரு பக்தர்போன்ற தோற்றத்தோடு கிட்டு இறங்கிவந்தார்.

கிட்டுவைக் கண்டதும் பக்தர்கள் முறையிட்டனர். “பயப்படாதீர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று சொன்னார் கிட்டு.

கிட்டுவும் சிலரும் கோவிலுக்குள் சென்று தேடுதல் நடத்தினார்கள்.

வெளியே நின்றவர்களுக்கு ஒரே திக் திக். எந்த நேரமும் வெடிச்சத்தம் கேட்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு.

உள்ளேயிருந்து வந்த கிட்டு சொன்னார்: “யாரோ புரளி கிளப்பிவிட்டார்கள். குண்டும் இல்லை, ஒன்றும் இல்லை.”

பக்தர்களுக்கு நிம்மதி. கிட்டுவுக்கு நன்றி சொல்லிக் கொண்டார்கள்.

அதன்பின்னர் கோவிலைச் சுற்றி வெளிவீதியில் கிட்டு அங்கப் பிரதட்சணம் செய்த காட்சியும் பக்தர்களின் நெஞ்சங்களை நெகிழச் செய்துவிட்டது.

கிட்டுவின் அங்கப்பிரதட்சணமும் கோவில் கொள்ளைகளோடு புலிகளை இணைத்துப் பேச முடியாதளவுக்கு செய்திருந்தது.

திருப்பி ஒப்படைப்பு

துர்க்கை அம்மன் கோவில் கொள்ளையை அடுத்து நடைபெற்ற சில சம்பவங்கள் புலிகள் இயக்கத் தலைமைக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டன.

கொள்ளையில் பங்கு கொண்ட உறுப்பினர்களில் சிலரும், ஏனைய உறுப்பினர்களும் படகில் தமிழகம் சென்றபோது கடற்படைத் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

கொள்ளையில் பங்கு கொண்டவரான அருணா தமிழகம் சென்று திரும்பிவரும் போது படகு தாக்குதலுக்கு உள்ளானது. படகில் இருந்தவர்கள் பலியானார்கள். அருணா கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து படகில் தமிழகம் புறப்பட்டார் திலீபன். படகை ஹெலிகொப்டர் ஒன்று தாழப்பறந்து துரத்தத் தொடங்கியது.

ஹெலிகொப்டரில் இருந்து கொடுக்கப்பட்ட தகவலையடுத்து கடற்படைப் படகுகளும் திலீபன் சென்ற படகை குறிவைத்து விரைந்தன.

படகு ஓட்டியின் சாமர்த்தியத்தால் படகு திரும்பி கரைக்கு விரைந்தது.

கடலில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் பலியானவர்கள் பலர் துர்க்கை அம்மன் கோவில் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற உண்மை கிட்டுவுக்கு உறுத்தலாகிவிட்டது.

திலீபன் தப்பியதும் மயிரிழையில் தான் அடுத்தது தனக்குத்தான் என்று நினைத்துக் விட்டார் கிட்டு.

தெய்வக் குற்றம்தான் துரத்துகிறது என்ற சந்தேகம் ஆழமாய்ப் பதிந்துவிட்டது.

கொள்ளை நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டபோதும் நகைகள் பத்திரமாக இருந்தன.

கிட்டு ஒரு முடிவுக்கு வந்து விட்டார்.

இரவோடு இரவாக துர்க்கை அம்மன் ஆலயத்துக்குள் கொண்டுபோய் நகைகளைப் போட்டுவிட்டு திரும்பிவந்து விட்டார்கள்.

விடிந்தபோது கோவில் நிர்வாகத்தினருக்கு பேராச்சரியம்.

“திருப்பி ஒப்படைத்தவர்களுக்கு நன்றி. அம்பாள் கருணை காட்டுவார்.” என்று ஒரு அறிக்கை விட்டது கோவில் நிர்வாகம்.

ஒரு சில நகைகளைத் தவிர மீதி அனைத்தும் அப்படியே இருந்தன.

ஒரு சில நகைகளைக் காணவில்லை என்ற விடயத்தைப் பற்றி கோவில் நிர்வாகம் வெளியே சொல்லவிரும்பவில்லை.

கிடைத்ததே பெரும் பாக்கியம். திருப்பி ஒப்படைக்கப்பட்டதே அம்பாளின் அருள் என்று பேசாதிருந்துவிட்டனர்.

உண்மையில் புலிகள் இயக்கத்தினரிடம் இருந்த காரணத்தால்தான் நகைகள் பத்திரமாக திருப்பி ஒப்படைக்கக் கூடியதாக இருந்தது என்பதும் உண்மைதான்.

(தொடர்ந்து வரும்) 
எழுதுவது அற்புதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயக்க கொள்ளைகளும் மாட்டிவிடும் தந்திரங்களும் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-59)

இயக்க கொள்ளைகளும் மாட்டிவிடும்  தந்திரங்களும்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-59)
 

கண்டணம்

சகல இயக்கங்களும் கொள்ளை நடவடிக்கைகளை கண்டித்தன. கொள்ளைகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன.
கொள்ளை நடவடிக்கைகளை கண்டித்து தமிழீழ இராணுவம் (TEA) ஒரு காரசாரமான துண்டுப்பிரசுரம் வெளியிட்டிருந்தது.

அந்தப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது இதுதான்:

“வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை போல மக்களால் போற்றிப் பாதுகாத்து பேணிவளர்க்கப்பட்ட இயக்கங்;கள் இன்று தமிழ் மக்கள் மீதே பாய்ந்துவிட்டன. எமது போராட்டத்தின் மூலவேரையும் ஆட்டம் காணச் செய்து விட்டன.

மக்களே எமது பலம், மக்களே எமது மூச்சு, மக்கள் விடுதலையே எமது இலட்சியம், மக்களே கிளர்ந்தெழுங்கள் என்றெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை மக்கள், மக்கள் என்று கோ~மிட்டவர்கள் இன்று தம் மக்களையே மேயத் தலைப்பட்டுவிட்டனர்.

புத்தூர் கொலை, கொள்ளைகளில் சி.ஐ.ஏயின் கைவண்ணம் தெரியுதென்பர். காரைநகர் வேலை மொசாட்தான் என்பர். இந்த சி.ஐ.ஏ. பூச்சாண்டி எத்தனை நாள்தான் வேலை செய்யும்.

மக்களே! விடுதலைப் போராட்டத்தை சிதறடிக்கும் எத்தர்களை இனம்கண்டு நிராகரியுங்கள்.” அதுதான் தமிழீழ இராணுவத்தினர் வெளியிட்ட துண்டுப் பிரசுரம்.

அவர்கள் மறைமுகமாகத் தாக்கியது ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தை.

இப்பிரசுரம் வெளியான சில நாட்களில் பின்னர் நடைபெற்ற ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.

மின்கம்பப்பூசை

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரை இரு இளைஞர்கள் வழிமறித்தனர்.

மோட்டார் சைக்கிளை தம்மிடம் தந்துவிடுமாறும், பின்னர் திருப்பித் தருகிறோம் என்றும் சொன்னார்கள்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர் புத்திசாலி. அவர் மறுக்கவில்லை. வாருங்கள் தம்பி, வீட்டில் வைத்து தருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

வீட்டுக்குப் போனார்கள் இளைஞர்கள். அயலவர்களை திரட்டிவைத்திருந்து மடக்கிப்பிடித்தார் இளைஞர்களை. கடும் பூசைக்குப் பின்னர் அந்த இளைஞர்கள் தமது இயக்கப் பெயரை சொன்னார்கள்.

“நாங்கள் ‘தமிழீழ இராணுவம்”  ஒரு மின்கம்பத்தில் அந்த இளைஞர்களை கட்டிவைத்தனர் ஊர்மக்கள்.

சம்பவத்தை கேள்விப்பட்டு ஒரு வேனில் வந்தனர் தமிழீழ இராணுவத்தினர். மக்கள் பார்க்கக்கூடியதாக அந்த இளைஞர்களுக்கு நாலு சாத்துச் சாத்தி விட்டு தமது வேனில் ஏற்றிச் சென்றுவிட்டனர்.

தனியாரிடம் கொள்ளை

புத்தூரில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக தழிழீழ இராணுவம் கண்டித்திருந்தது அல்லவா. அக்கொள்ளை நடவடிக்கை ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்டது.

தனியார் வீடொன்றில் நடைபெற்ற அக்கொள்ளை நடவடிக்கையில் அந்த வீட்டு உரிமையாளரான இராசதுரை ஸ்ரீ இராமச்சந்திரன் என்பவர் கொல்லப்பட்டார்.

தனிப்பட்ட கொள்ளையர்கள்தான் வீட்டுக்குள் வருகிறார்கள் என்று நினைத்து விட்டார் இராமச்சந்திரன். அதனால்தான் எதிர்ப்புக்காட்டினார்.

அதனால் இராமச்சந்திரன் கொல்லப்பட்டார். அதன்பின்னர் காரைநகரில் உள்ள ஒரு வீட்டிலும் கொள்ளையிடப்பட்டது. அதுவும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தால்தான் மேற்கொள்ளப்பட்டது.

அரியாலையில் உள்ள பிரபல வர்த்தகர் வீடொன்றும் கொள்ளையிடப்பட்டது. பல லட்சம் ரூபாய்கள் பெறுமதியான நகைகளோடு ஆயுதம் தாங்கியவர்கள் பறந்துவிட்டார்கள்.

அரியாலை கொள்ளை நடவடிக்கை புலிகள் இயக்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.

புலிகள் இயக்கத்திலும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்திலும் தனியார் கொள்ளைகளில் ஈடுபடுவதற்காக இரகசியமான அணிகள் இருந்தன.

அந்த இயக்கங்களில் இருந்த ஏனையோருக்கு தமது இயக்கத்தினர்தான் கொள்ளையில் சம்பந்தப்படுகிறார்கள் என்பது தெரிந்திருக்கவில்லை.

கச்சேரிக் கொள்ளை

யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் ரெலோவின் முகாமுக்கு அருகில் இருந்த இரண்டு வீடுகளில் ஒரே இரவில் கொள்ளையிடப்பட்டது.

கொள்ளையை நடத்தியவர்கள் புலிகள். கொள்ளை நடவடிக்கைக்கான குழுவை அனுப்பி வைக்கும் போது கிட்டு சொன்னது இது:

“சில நேரங்களில் மொட்டையன் வருவான். சுட்டுப் போடவேண்டாம். துப்பாக்கியைக் காட்டி குப்புறப் படுக்க வையுங்கள்”.

கிட்டு மொட்டையன் என்று குறிப்பிட்டது, புலிகள் இயக்க அரியாலைப் பொறுப்பாளராக இருந்த பிரேமை. மொட்டைப்பிரேம் என்று அவர் அழைக்கப்படுவது வழக்கம்.

கொள்ளையை நடத்துவது தமது ஆட்கள் என்று தெரியாமல் பிரேம் தலையிட்டாலும் என்றுதான் அந்த முன்னெச்சரிக்கை.

ரெலோ முகாமுக்கு அருகில் கொள்ளைகள் நடந்தமையால், ரெலோதான் கொள்ளை அடித்திருக்கலாம் அவர்களது சென்றி இருக்கக் கூடியதாக வேறு யாரும் செய்திருக்க முடியாது என்று மக்கள் நினைத்துக் கொண்டனர்.

அப்படி நினைக்கட்டும் என்றுதான் ரெலோ முகாமுக்கு அருகில் உள்ள வீடுகள் புலிகளால் தெரிவு செய்யப்பட்டன.

அரியாலைப் பொறுப்பாளராக அப்போதிருந்த ‘மொட்டைப் பிரேம்’ தற்போது கனடாவில் இருக்கிறார். தற்போது அவர் ஒரு கனடா பிரஜை.

pulikall  இயக்க கொள்ளைகளும் மாட்டிவிடும்  தந்திரங்களும்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-59) pulikall3

சிறுப்பிட்டிக் கொள்ளை

யாழ்ப்பணத்தில் உள்ள சிறுப்பிட்டி பகுதியிலும் ஒரு கொள்ளை நடைபெற்றது. சிறுப்பிட்டி ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் கோட்டையாக இருந்தது.

சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக ஈ.பி.ஆர்.எல்.எஃப். பல போராட்டங்களை நடத்தியது. சிறுப்பிட்டியிலும் அவ்வாறான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனால் சிறுப்பிட்டியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். பலமாக இருந்தது.

சிறுப்பிட்டியில் உள்ள வீடொன்றில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டார்கள் புலிகள்.

ஆறு பேர் கொண்ட குழுவொன்று அதற்காக தயாராக்கப்பட்டது. ஆறு பேரும் புலிகளது உளவுப்பிரிவைச் சேர்ந்தவர்கள். அப்போது உளவுப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர் வாசு.

ஆறு பேரிடமும் இருந்த சயனைட் குப்பிகளை வாங்கிக் கொண்டார் வாசு. “கொள்ளையடிக்கும் போது ஒருவரோடு ஒருவர் பேசும்போது ‘தோழர்’ என்று அழைத்துக் கொள்ளுங்கள். மறக்க வேண்டாம்” என்று சொல்லியனுப்பினார் வாசு.

‘தோழர்’ என்ற பதம் பாவிக்கப்பட்டால் அது ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது சந்தேகம் வரச்செய்யும் என்று வாசு நினைத்தார்.
கொள்ளைக்குச் சென்று கொண்டிருந்த போது, சிறுப்பிட்டியில் சென்றிக்கு நின்ற புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் வாகனத்தை மறித்திருக்கிறார்.

வாகனத்தில் இருந்து இறங்கியவர்கள் அவரை மடக்கி நல்ல சாத்துப்படி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். தன்னைத் தாக்கியவர்கள் தனது இயக்க உளவுப்பிரிவினர் என்பது அடிபட்டவருக்கு தெரியவே தெரியாது.

தோழர்கள்

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் நடத்திய தனியார் கொள்ளைகளில் பங்குபற்றும் குழுவினருக்கு ஒரு கண்டிப்பான உத்தரவு வழங்கப்படுவது வழக்கம்.

“எக்கட்டத்திலும் மறந்தும் கூட தேழர் என்ற வார்த்தையை உச்சரிக்க வேண்டாம்.” என்றுதான் அந்த உத்தரவு. அப்படியிருந்தும் கூட அவசரத்திலும், பதட்டத்திலும் பழக்கதோசம் காரணமாக ‘தோழர்’ என்று அழைத்துகத் தொலைத்த சம்பவங்களும் உண்டு.

அதுவும் ஒருவகையில் நல்லதாகப் போனது. எப்படி என்கிறீர்களா?

ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாமுக்கு வந்து முறையீடு செய்யப்படும்.

“கொள்ளையிட்டவர்களில் ஒருவர் இன்னொருவரை ‘தோழர்’என்று அழைத்தார்.” என்று சொல்வார்கள் முறையீட்டாளர்கள்.

அதைக்கேட்டுவிட்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப். சார்பாக பதில் கூறுகிறவர் சொல்வார்: “பார்த்தீர்களா, பார்த்தீர்களா எங்கள் ஆட்கள் என்றால் ‘தோழர்’ என்ற வார்த்தையை இப்படிப்பட்ட நேரத்தில் பயன்படுத்தி இருக்க மாட்டார்கள் அல்லவா? எம்மை மாடடிவிட நினைக்கும் ஏதோ இயக்கம்தான் செய்திருக்க வேண்டும்.”

மக்களுக்குள் பெரிய குழப்பம். சகல இயக்கங்களும் தனியார் வீடுகளில் நடக்கும் கொள்ளைகளைக் கணடிக்கின்றன.
அப்படியானால் யார்தான் காரணம்?

ஏதோ ஒரு இயக்கம்தான் செய்கிறது என்பது மட்டும் மக்களுக்கு புரிந்தது.

ஆனால் ஒன்று. யாழ்ப்பாணத்தில் பெரும் பணக்காரர்களாக இருந்தவர்களது வீடுகளில்தான் கொள்ளைகள் நடத்தப்பட்டன.

வடக்கு-கிழக்கில் வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. இருந்த சில வங்கிகளும் பலத்த பாதுகாப்புடன் இருந்தன.

இயக்கங்களுக்கு தனது உறுப்பினர்களை பராமரிக்கவும், ஏனைய தேவைகளுக்கும் பெருமளவு நிதி தேவைப்பட்டது. நிதித் தேவையை நிறைவு செய்ய பெரும் பணக்காரர்கள் குறிவைக்கப்பட்டனர்.

தவறாகப்பட்டாலும் சில நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவையாக இருந்தன. என்பதும் மறுப்பதற்கில்லை.

கலைஞர் முழக்கம்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் ஒரு பேரணி நடைபெற்றது.

பேரணியில் ஒரு சித்திரம் காணப்பட்டது. ராஜீவ் காந்தியும், ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் கட்டித் தழுவிக் கொண்டிருக்கு எம்.ஜி.ஆர். அதனை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்பதுபோல அந்தச் சித்திரம் வரையப்பட்டிருந்தது.

பேரணியில் வானைமுட்ட எழுந்த கோஷம் இது: “காப்போம், காப்போம், ஈழத் தமிழர்களைக் காப்போம். மலரட்டும், மலரட்டும், தமிழீழம் மலரட்டும்.”

பேரணியின் முடிவில் கலைஞர் கருணாநிதி உரையாற்றினார்.

“தமிழீழம் என்ற தனிநாடு அமைக்க வேணடும் என்ற கோரிக்கையை நாங்கள் ஏற்கவில்லை என்று ராஜிவ் காந்தி கூறியிருக்கிறார்.

ஜெயவர்த்தனாவின் வாயில்ருந்து வரவேண்டியது, அவருக்குச் சிரமம் இல்லாமல் ராஜிவ் காந்தியின் வாயிலிருந்து வந்திருக்கிறது.” என்று கூறிய கருணாநிதி, ஒரு கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு, “இலங்கைத் தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்தவும் தயார்” என்று கூறியபோது மைதானம் அதிர கரகோசம் எழுந்தது.

balakumar  இயக்க கொள்ளைகளும் மாட்டிவிடும்  தந்திரங்களும்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-59) balakumarஈரோஸ் இன் அறிக்கை

ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் என்று வே.பாலகுமாரின் பெயரையே பத்திரிகைகள் வெளியிட்டுவந்தன.

ஈரோஸ் சார்பாக பாலகுமார் அடிக்கடி கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தார். அதனால் அவர்தான் தலைவர் என்று கருதப்பட்டார்.
அதனால் ஈரோஸ் இயக்கத்திற்குள் சில புகைச்சல் ஏற்பட்டுவிட்டது.

விளைவு, ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

“ஈரோஸ் தனிமனித தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் அமைப்பல்ல. ஜனநாயக அடிப்படையில் கூட்டுத் தலைமைத்துவத்தையே நாம் கொண்டிருக்கிறோம். திரு.பாலகுமார் ஈரோசின் அதி உயர் தலைமைப் பீடமான புரட்சிகர நிறைவேற்றுக் குழுவில் இருக்கிறார். அமைப்பின் நிர்வாகத்திற்கும் பொறுப்பாக இருக்கிறார்.

ஆனால் சில பத்திரிகைகள் அவரை வெறுமனே பேச்சாளராகவும், வேறு சில பத்திரிகைகள் அவரது தனித்தலைமைதான் ஈரோசை வழிநடத்துவதாகவும் கூறிவருகின்றன. இவை தவறான கருத்துக்களாகும்.” என்றது அறிக்கை.

நடைபவணி

1985 இன் பிற்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் நடைபவணி ரோந்துக்களை மேற்கொண்டு வந்தனர்.
கண்ணிவெடித் தாக்குதல்களில் இயக்கங்கள் கூடுதலான தேர்ச்சி பெற்று வந்தமையால், வாகனங்களை தவிர்த்துவிட்டு நடை பவனியை ஆரம்பித்தது இராணுவம்.

எனினும், நடைபவனி ரோந்தும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தான் நடைபெற்றது.

இயக்கங்களின் கைகள்தான் யாழ்ப்பாணத்தில் ஓங்கத் தொடங்கியிருந்தன.

யாழ்ப்பாணக்குடாநாடு மெல்ல, மெல்ல படையினரின் கட்டுப்பாட்டை விட்டு விலகியது.

அக்கட்டத்திலும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சொன்னது இது:

“இன்னும் ஒரு வருட காலத்திற்குள் பயங்கரவாதிகளை முறியடித்து விடுவோம்”

ஜே.ஆர். சொல்லி வாய் மூடுவதற்கு இடையில் மட்டக்களப்பில் கண்ணி வெடிகள் வெடித்தன.

(தொடர்ந்து வரும்)

எழுதுவது அற்புதன்

வை. 8 மீது ‘ஒலிகன்’ தாக்குதல்

modar  இயக்க கொள்ளைகளும் மாட்டிவிடும்  தந்திரங்களும்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-59) modar18.11.95 அன்று காலை 7.40 மணயளவில் பலாலி படைத்தளத்திற்கு சமீபமாக வைத்து வை.8.ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

பலாலி படைத்தளத்தில் இறங்குவதற்காக கடற்பரப்பின் மேலாக தாழப்பறந்த போதே வை.8 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ஒலிகன் ரக சிறு பீரங்கிகளால் கடலில் படகில் இருந்து புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

முல்லைத்தீவுக் கடலில் ஐரிஸ்மோனா கப்பலை பணயமாக வைத்து இரண்டு டோறாப் படகுகளை புலிகள் தாக்கினார்கள் அல்லவா.

அவற்றில் இருந்து நான்கு ஒலிகன் பீரங்கிகளை புலிகள் கைப்பற்றியிருந்தார்கள். அவற்றின் மூலமே வை.8 சுட்டு வீழ்த்தப்பட்டது.

டோறாப் படகில் கைப்பற்றப்பட்ட ஒலிகன் ரக பீரங்கிகளை புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் பார்வையிடும் காட்சி தான் படத்தில் உள்ளது.

எழுதுவது அற்புதன்

தொடர்ந்து வரும்..

Link to comment
Share on other sites

On 1/5/2016 at 1:12 PM, பெருமாள் said:

துர்க்கை அம்மன் கோவில் நகைகளை கொள்ளையடித கிட்டு!!: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-58

images?q=tbn:ANd9GcRx35x1hdSVNrCjEM97zl7
 

திருமலையில் தாக்குதல்:

திருக்கோணமலையில் கன்னியா பகுதியில் இராணுவத்தினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

வாகனத் தொடர்களில் முப்பது இராணுவத்தினர்வரை பயணம் செய்து கொண்டிருந்தனர்.

திடீர் என்று கண்ணிவெடிகள் முழங்கத் தொடங்கின.

பின்னால் வந்த வாகனங்களில் இருந்த இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபடி பின்வாங்கிச் சென்றனர்.

கண்ணிவெடியில் சிக்கி 9 இராணுவத்தினர் வரை பலியானார்கள். வர்ணகுலசூரியா, தென்னகோன், தயானந்த, கொல்மன, திலகரட்ண, ரணவீர, புஞ்சிநிலமே, பியதாச, விஜித்தா ஆகியோரது பெயர்கள் பலியான இராணுவத்தினர் பட்டியலில் வெளியாகியிருந்தன.

இத்தாக்குதல் 28.3.86ல் நடைபெற்றது. திருமலை மாவட்ட புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவரான புலேந்தி அம்மான் தலைமையில் மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டது.

31.3.86 அன்று அதிகாலையில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சென்று கொண்டிருந்தனர்.

எதிரே வந்து கொணடிருந்த இராணுவத்தினர் அவர்களைக் கண்டுவிட்டனர்.

தப்பி ஓடினால் இராணுவத்தினர் சரமாரியாகச் சுடுவார்கள். வேறு வழியில்லை என்பதால் புலிகளும் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர்.

இராணுவத்தினர் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.

திடீர் துப்பாக்கிப் பிரயோகத்தினால் அதிர்ச்சியடைந்து விட்டனர்.

சுதாகரித்துக் கொண்டு பதிலடியில் இறங்குவதற்கிடையில் இராணுவத்தினரின் தரப்பில் ஐந்துபேர் வரை பலியானார்கள். புலிகள் தரப்பில் எதுவித சேதமும் ஏற்படவில்லை.


கறுப்பு உடை

பாகிஸ்தானில் இலங்கை இராணுவத்தினருக்கு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் விஷேட பயிற்சி வழங்கப்பட்டது.

அவ்வாறு பயிற்சி பெற்று வந்த இராணுவத்தினருக்கு கறுப்பு உடை கொடுக்கப்பட்டது.

கறுப்பு உடை அணிந்த இராணுவத்தினர் மாங்குளம்-கொக்காவில் பகுதிகளுக்கு இடையே புலிகளது தாக்குதலை எதிர்கொண்டனர்.

2.4.86 அதிகாலையில் புலிகளது அணியொன்று பதுங்கியிருந்து அத்தாக்குதலைத் தொடுத்தது.

அதிகாலை நேரம் என்பதால் இராணுவத்தினர் பலத்த தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை. அலட்சிய மனோபாவத்தோடு ரோந்தில் ஈடுபட்டனர்.

ஆர்.பி.ஜி ரொக்கட் லோஞ்சர், ஏ.கே. 47 போன்ற ஆயுதங்களால் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

இரண்டாவது லெப்ரினன்ட் எம்.ஏ.எம்.ஜி.மல்லவாராய்ச்சி, கோப்ரல் பியதாசா, கோப்ரல் செனரத் பண்டா, லான்ஸ் கோப்ரல் கருணாதிலக உட்பட ஒன்பது இராணுவத்தினர் பலியானார்கள்.

இராணுவத்தினரிடமிருந்து வு.56-1, ரவைக்கூடுகள்-5, மோட்டார் n~ல்-2, ஏ.கே.ரவைகள்-125 ஆகியவை புலிகளால் கைப்பற்றப்பட்டன.

இத்தாக்குதல் மாத்தையாவின் வழிநடாத்தலின் கீழ் நடத்தப்பட்டது. புலிகள் தரப்பில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

LTTE_Major_Sothiya_Women_Commando_Unit-1துப்பாக்கிச் சமர்

5.4.86 சனிக்கிழமை, மட்டக்களப்பு கரடியனாற்றில் புலிகளது கெரில்லா அணியொன்று காத்திருந்தது.

கரடியனாறு வழியாக இராணுவத்தினர் தொடர்வண்டிகளில் ரோந்துசெல்வது வழக்கம்.

காலையிலிருந்து புலிகளது அணி காத்திருந்தது.

நண்பகல் 12 மணியாகியும் இராணுவத்தினர் ரோந்து வருவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.

பிற்பகல் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது, தூரத்தில் ஒரு புள்ளியாக வாகனம் ஒன்று தெரிந்தது. ‘வருகிறார்கள்’ என்று ஊகித்து தயாராக காத்திருந்தார்கள்.

அவர்கள் காத்திருப்பது தெரியாமல் தொடர் வாகனங்களில் வேகமாக வந்து கொண்டிருந்தனர் இராணுவத்தினர்.

வாகனத் தொடரின் முதல் வாகனமாக வந்த கவசவண்டி தமது எல்லைக்குள் வந்ததும் புலிகளது ரொக்கட் லொஞ்சர் பறந்தது.

கவச வண்டி சேதமாகி நகராமல் நின்றுவிட்டது.

துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் கெரில்லாக்கள, டிரக் வண்டிகளில் வந்த இராணுவத்தினர் கீழே குதித்து டிரக் மறைவில் நின்று துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

சுமார் இரண்டு மணிநேரம் துப்பாக்கிச் சமர் நடைபெற்றது.

இராணுவத்தினர் தரப்பில் ஏழுபேர் பலியானதாக ஞாபகம், புலிகள தரப்பில் ஒருவர் பலியானார்.

வீடுகளில் கொள்ளைகள்

86ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் தனியார் வீடுகளில் பரவலான கொள்ளைகள் நடைபெறத் தொடங்கின.
யாழ்ப்பாணத்தில் இருந்த பிரபல பணக்காரர்கள், வர்த்தகர்கள் ஆகியோரது வீடுகள்தான் குறிவைத்து கொள்ளையிடப்பட்டன.

நவீனரக ஆயுதங்களோடு கொள்ளையர்கள் தோன்றியதால் அவர்கள் தனிப்பட்ட நபர்கள் அல்ல: இயக்கங்கள்தான் கொள்ளைகளுக்குப் பின்னணியில் நிற்கின்றன என்று மக்கள் புரிந்து கொண்டனர்.

எந்த இயக்கம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்பது தெரியாமல்போனதால் மக்கள் மத்தியில் இருந்து கொள்ளைகளைக் கண்டித்து பொதுவான கோரிக்கைகள் விடப்பட்டன.

கொள்ளையர்களை பிடித்துத் தாருங்கள் என்று கேட்டார்கள் மக்கள்.

நாங்களும் அவர்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம் என்றன இயக்கங்கள்.

வெறுத்துப்போன மக்கள் வீதித்தடைகளை போட்டார்கள். கொள்ளையர்களை பிடித்துத் தந்தால்தான் வீதியைத் திறப்போம் என்று எதிர்ப்புக் காட்டினார்கள்.

சகல இயக்கங்களும் தனியார் வீடுகளில் நடைபெற்ற கொள்ளைகளைக் கண்டித்து பத்திரிகைகளில் அறிக்கை விட்டன.

யாழ்  நடந்த  ரு கொள்ளைகள்

86ல் நடைபெற்ற இரண்டு கொள்ளைகள்தான் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தன.

ஒன்று யாழ்ப்பாணம் பொருமாள் கோவில் கொள்ளை. இன்னொன்று தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவில் கொள்ளை.

பெருமாள் கோவில் கொள்ளையில் ஈடுபட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். மக்கள் விடுதலைப் படையின் யாழ் மாவட்ட தொடர்பாளராக இருந்தவர் கபூர் என்று அழைக்கப்பட்ட பாலா.

அவரது தலைமையில்தான் பெருமாள் கோவில் கொள்ளை நடத்தப்பட்டது.

கொள்ளை நடவடிக்கைக்காக வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது பொருமாள் கோவிலுக்கு அருகே ரெலோ உறுப்பினர்கள் அந்த வாகனத்தை மறித்தனர்.

ஒவ்வொரு இயக்கமும் வீதிப்பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவது வழக்கம். வீதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ரெலோ உறுப்பினர்தான் வாகனத்தை மறித்தார்.

“யார் நீங்கள்?” என்று அந்த உறுப்பினர் கேட்டார். தாமதம் இல்லாமல் வேனில் இருந்தவர்கள் சொன்னார்கள்: “நாங்கள் எல்.ரி.ரி.ஈ.

வாகனத்தை மறித்தவர் வழிவிட்டு விலகிக் கொண்டார்.

எந்தவொரு இயக்க வாகனம் என்றாலும் மற்றொரு இயக்கம் சோதனையிடவோ, தடுக்கவோ முற்படுவதில்லை.

யாழ் நகருக்குள் பெருமாள் கோவில் இருப்பதால் அப்பாதை வழியாக இயக்க வாகனங்கள் சென்று வருவது வழக்கம்.

அப்படியிருந்தும் இரவோடு இரவாக பெருமாள் கோவில் நகைகள் சுத்தமாக துடைத்து எடுக்கப்பட்டன.

DSC_0012  துர்க்கை அம்மன் கோவில் நகைகளை கொள்ளையடித கிட்டு!!:  அல்பிரட்  துரையப்பா முதல் காமினி வரை-58 DSC 0012பெருமாள் கோவில்

விசாரிக்க வந்தவர்கள்

மறுநாள் காலையில் பொருமாள் கோவில் கொள்ளைச் சம்பவம் காட்டுத்தீபோலப் பரவிவிட்டது.

இயக்கங்கள் கோவிலில் கைவைக்கத் துணிவார்களா? என்றும் பலர் சந்தேகப்பட்டனர்.

கொள்ளைபற்றி விசாரிக்கவும், என்ன நடந்தது என்று அறியவும் பொருமாள் கோவிலுக்கு வந்தனர் இயக்கங்களின் முக்கியஸ்தர்கள்.

விசாரிக்க வந்த இயக்கங்களில் ஒன்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கிறோம். ஏதாவது தகவல் கிடைத்தால் எமக்குத் தெரியப்படுத்துங்கள் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். சார்பாகவும் பெருமாள் கோவில் நிர்வாகத்திடம் சொல்லப்பட்டது.

முதல்நாள் இரவு தன்னால் மறிக்கப்பட்ட வேன்தான் கொள்ளையில் சம்பந்தப்பட்டது என்று புரிந்து கொண்ட ரெலோ உறுப்பினர் விசியத்தை அவிழ்த்து விட்டார்.

புலிகள்தான் கொள்ளை நடத்தியிருக்க வேண்டும். அவர்களது வாகனம்தான் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியது என்று ரெலோ முலம் செய்தி பரவிவிட்டது.

யாரோ தமது பெயரைப் பாவித்து விட்டார்கள் என்று  தெரிந்து புலிகளும் விசாரணையில் இறங்கினர்.

அவர்களுக்கு ரெலோ  மீதுதான் முதலில் சந்தேகம். பின்னர் விசாரித்துக் கொண்டு போனபோது தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப். தான் கைவரிசை காட்டியிருக்கிறது என்று ஓரளவு தெரிந்து கொண்டனர்.

எனினும், கிட்டு அதனை பெரிதுபடுத்த விரும்பவில்லை. நிரூபிக்கக்கூடிய ஆதாரமில்லாதது மட்டும் அதற்கு காரணமல்ல.
thelli  துர்க்கை அம்மன் கோவில் நகைகளை கொள்ளையடித கிட்டு!!:  அல்பிரட்  துரையப்பா முதல் காமினி வரை-58 thelliதுர்க்கை அம்மன் 

வேறு ஒரு காரணம் இருந்தது. அதுதான் துர்க்கை அம்மன் கோவில் கொள்ளை.

பொருமாள் கோவில் கொள்ளையை புலிகள் வெளிப்படுத்த நினைத்தால், துர்க்கை அம்மன் கோவில் கொள்ளையை ஈ.பி.ஆர்.எல்.எஃப். அம்பலப்படுத்திவிடும்.

புலிகள் உத்தரவாதம்.

தெல்லிப்பளையில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் கொள்ளை கிட்டுவின் தலைமையில்தான் நடந்தது.

புலிகள் இயக்கத்தின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் மட்டுமே பொறுக்கி எடுக்கப்பட்டு மிக இரகசியமாக நடத்தப்பட்ட கொள்ளை அது.

கிட்டு, திலீபன், அருணா ஆகியோர் முக்கிய பங்கு வகித்தார்கள்.

இரவோடு இரவாக, அப்போதைய மதிப்பில் 25இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகைகள் கொள்ளையிடப்பட்டன.

கொள்ளைச் செய்தியால் தெல்லிப்பளையில் மக்கள் கொதித்துப் போனார்கள்.

நகைகளைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று வீதித்தடைகளைப் போட்டு எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

வழக்கம்போல சகல இயக்கங்களும் சென்று விசாரணை நடத்தின. புலிகள் அமைப்பினரும் ‘கொள்ளையர்களை பிடித்தே தீருவோம்’ என்று உத்தரவாதம் வழங்கிவிட்டு வந்துவிட்டார்கள்.

புலிகள் இயக்க உறுப்பினர்கள் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்பதால் கோவில் கொள்ளைகளில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள் என்று பொதுமக்களில் ஒரு சாரார் பேசிக்கொண்டனர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பு கம்யூனிச சித்தாந்தம் கொண்ட அமைப்பு என்பதும், கடவுள் நம்பிக்கை அவர்களுக்கு கிடையாது என்றும் மக்களுக்கு தெரியும்.

எனவே-இரண்டு கொள்ளைகளையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். செய்திருக்கலாம் என்று பரவலான பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியிருந்தன.
Nallur-Kovil  துர்க்கை அம்மன் கோவில் நகைகளை கொள்ளையடித கிட்டு!!:  அல்பிரட்  துரையப்பா முதல் காமினி வரை-58 Nallur Kovil
நல்லூரில் கண்

இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் பிரபலமானதும், வருமானம் கூடியதுமான நல்லூர் கந்தசாமிக் கோவில் மீதும் இயக்கங்களுக்கு ஒரு கண்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கும், புலிகள் அமைப்புக்கும் இடையே யார் முந்திக்கொள்வது என்று இரகசியமாக ஒரு போட்டியே நடந்து கொண்டிருந்தது.

அதற்கடையே ரெலோ முந்திக் கொள்ள இருப்பதாக கிட்டுவுக்கு யார் மூலமோ தகவல் கிடைத்துவிட்டது.

நல்லூர் தேர் திருவிழாவுக்கு முதல்நாள் இரவு கொள்ளையை நடத்த ரெலோ திட்டமிட்டிருப்பதாக கிட்டுவுக்கு தெரிந்து விட்டது.

உடனே கிட்டு ஒரு காரியம் செய்தார். ‘நல்லூர் கோவிலுக்குள் குண்டு’ என்று ஒரு வாந்தியைப் பரப்பிவிட்டார். நினைத்தது போலவே வதந்தி காட்டுத் தீயாகப் பரவியது.

குண்டு இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்தால் தேர் திருவிழா நடத்தலாம்.

பக்தர்கள் கோவிலுக்கு வெளியே திரண்டு என்ன ஆகுமோ என்று பயந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு வாகனம் வந்து நின்றது.

வாகனத்தில் இருந்து ஒரு பக்தர்போன்ற தோற்றத்தோடு கிட்டு இறங்கிவந்தார்.

கிட்டுவைக் கண்டதும் பக்தர்கள் முறையிட்டனர். “பயப்படாதீர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று சொன்னார் கிட்டு.

கிட்டுவும் சிலரும் கோவிலுக்குள் சென்று தேடுதல் நடத்தினார்கள்.

வெளியே நின்றவர்களுக்கு ஒரே திக் திக். எந்த நேரமும் வெடிச்சத்தம் கேட்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு.

உள்ளேயிருந்து வந்த கிட்டு சொன்னார்: “யாரோ புரளி கிளப்பிவிட்டார்கள். குண்டும் இல்லை, ஒன்றும் இல்லை.”

பக்தர்களுக்கு நிம்மதி. கிட்டுவுக்கு நன்றி சொல்லிக் கொண்டார்கள்.

அதன்பின்னர் கோவிலைச் சுற்றி வெளிவீதியில் கிட்டு அங்கப் பிரதட்சணம் செய்த காட்சியும் பக்தர்களின் நெஞ்சங்களை நெகிழச் செய்துவிட்டது.

கிட்டுவின் அங்கப்பிரதட்சணமும் கோவில் கொள்ளைகளோடு புலிகளை இணைத்துப் பேச முடியாதளவுக்கு செய்திருந்தது.

திருப்பி ஒப்படைப்பு

துர்க்கை அம்மன் கோவில் கொள்ளையை அடுத்து நடைபெற்ற சில சம்பவங்கள் புலிகள் இயக்கத் தலைமைக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டன.

கொள்ளையில் பங்கு கொண்ட உறுப்பினர்களில் சிலரும், ஏனைய உறுப்பினர்களும் படகில் தமிழகம் சென்றபோது கடற்படைத் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

கொள்ளையில் பங்கு கொண்டவரான அருணா தமிழகம் சென்று திரும்பிவரும் போது படகு தாக்குதலுக்கு உள்ளானது. படகில் இருந்தவர்கள் பலியானார்கள். அருணா கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து படகில் தமிழகம் புறப்பட்டார் திலீபன். படகை ஹெலிகொப்டர் ஒன்று தாழப்பறந்து துரத்தத் தொடங்கியது.

ஹெலிகொப்டரில் இருந்து கொடுக்கப்பட்ட தகவலையடுத்து கடற்படைப் படகுகளும் திலீபன் சென்ற படகை குறிவைத்து விரைந்தன.

படகு ஓட்டியின் சாமர்த்தியத்தால் படகு திரும்பி கரைக்கு விரைந்தது.

கடலில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் பலியானவர்கள் பலர் துர்க்கை அம்மன் கோவில் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற உண்மை கிட்டுவுக்கு உறுத்தலாகிவிட்டது.

திலீபன் தப்பியதும் மயிரிழையில் தான் அடுத்தது தனக்குத்தான் என்று நினைத்துக் விட்டார் கிட்டு.

தெய்வக் குற்றம்தான் துரத்துகிறது என்ற சந்தேகம் ஆழமாய்ப் பதிந்துவிட்டது.

கொள்ளை நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டபோதும் நகைகள் பத்திரமாக இருந்தன.

கிட்டு ஒரு முடிவுக்கு வந்து விட்டார்.

இரவோடு இரவாக துர்க்கை அம்மன் ஆலயத்துக்குள் கொண்டுபோய் நகைகளைப் போட்டுவிட்டு திரும்பிவந்து விட்டார்கள்.

விடிந்தபோது கோவில் நிர்வாகத்தினருக்கு பேராச்சரியம்.

“திருப்பி ஒப்படைத்தவர்களுக்கு நன்றி. அம்பாள் கருணை காட்டுவார்.” என்று ஒரு அறிக்கை விட்டது கோவில் நிர்வாகம்.

ஒரு சில நகைகளைத் தவிர மீதி அனைத்தும் அப்படியே இருந்தன.

ஒரு சில நகைகளைக் காணவில்லை என்ற விடயத்தைப் பற்றி கோவில் நிர்வாகம் வெளியே சொல்லவிரும்பவில்லை.

கிடைத்ததே பெரும் பாக்கியம். திருப்பி ஒப்படைக்கப்பட்டதே அம்பாளின் அருள் என்று பேசாதிருந்துவிட்டனர்.

உண்மையில் புலிகள் இயக்கத்தினரிடம் இருந்த காரணத்தால்தான் நகைகள் பத்திரமாக திருப்பி ஒப்படைக்கக் கூடியதாக இருந்தது என்பதும் உண்மைதான்.

(தொடர்ந்து வரும்) 
எழுதுவது அற்புதன்

துர்க்கையம்மன் கோவில் கொள்ளை .வாசிக்கும்போது  சிரிப்பை அடக்கமுடியவில்லை .நல்லவேளை எல்லாம் இனிதே முடிந்தது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, arjun said:

துர்க்கையம்மன் கோவில் கொள்ளை .வாசிக்கும்போது  சிரிப்பை அடக்கமுடியவில்லை .நல்லவேளை எல்லாம் இனிதே முடிந்தது .

காலம் மிக வேகமானது  இத்தொடரில் உங்களுக்கு தெரிந்ததை ஆதாரத்துடன் இணைப்பது வரவேற்க்க கூடியதாக இருக்கும் என நம்புறன் அமரர் அற்புதன் தன்னுடைய எல்லை எது என தெரிந்தவர் உங்களுக்கும் நான் சொல்ல தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்-பொது மருத்துவமனை வைத்து ரெலோ இயக்க பொறுப்பாளர் சுட்டுக்கொலை !!: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – 60

யாழ்-பொது மருத்துவமனை வைத்து  ரெலோ இயக்க பொறுப்பாளர் சுட்டுக்கொலை !!: அல்பிரட்  துரையப்பா முதல் காமினி வரை – 60
 

1986 இன் ஆரம்பத்தில் கிழக்கில் மட்டக்களப்பு வாகரை, படுவான்கரை பகுதிகளில் புலிகளது கண்ணிவெடித் தாக்குதல்கள் இடம்பெற்றன.

2.4.86 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்தையாவின் வழிநடத்தலின் கீழ் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.

கொக்காவிலுக்கும் மாங்குளத்திற்கும் இடையில் உள்ள காட்டுப்பகுதியில் வாகனத் தொடரில் வந்த இராணுவத்தினர் மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டது.

10ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் பலியானார்கள். இராணுவ வாகனம் ஒன்று கண்ணிவெடியில் சிக்கி சேதமடைந்தது. புலிகள் தரப்பில் இழப்பில்லை.

ஏ.கே. 47 துப்பாக்கிகள் சிலவற்றை இராணுவத்தினர் கைவிட்டுச் சென்றனர்.

யாழ்ப்பாணத்தில் வடமராட்சியில் பருத்தித்துறை, தொண்டமானாறு, வல்வெட்டித்துறை ஆகிய மூன்று இடங்களிலும் இராணுவ முகாம்கள் ஒரு வலைப்பின்னல் போல அமைக்கப்பட்டிருந்தன.

பாலம் தகர்ப்பு
இந்த மூன்று இராணுவ முகாம்களையும் தொண்டமானாறு பாலம்தான் இணைத்துவைத்திருந்தது.

தொணடமானாறு இராணுவ  முகாமிலிருந்து 300 யார் தூரத்தில் 100 யார் நீள விஸ்தீரணம் கொண்டது அந்தப் பாலம். 24 மணிநேரமும் பாலத்தைப் பாதுகாக்கும் இராணுவக் காவல் போடப்பட்டிருந்தது.

பாலத்தின் மீதும், பாலத்தின் இரு புறமும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்தப் பாலத்தை எப்படியாவது உடைக்க வேண்டும் என்று திட்டமிட்டார் கிட்டு. இரவோடு இரவாக ஒன்பது பேர் கொண்ட புலிகளது அணி வெடிமருந்துகளோடு சென்றது.

காவல் பணியில் இருந்த இராணுவத்தினர் கண்களில் படாமல் பாலத்தின் அடியில் வெடிமருந்துகள் வைக்கப்பட்டன.

பாலம் பெரும் சத்தத்தோடு வெடித்துச் சிதறியது. எனினும் பாலத்தின் கால்வாசிப்பகுதிதான் முற்றாகத் தகர்க்கப்பட்டது.

அதன் மூலம் மூன்று இராணுவ முகாம்களுக்கும் இடையிலான போக்குவரத்துத் தடைப்பட்டது.

srisabaratnam  யாழ்-பொது மருத்துவமனை வைத்து  ரெலோ இயக்க பொறுப்பாளர் சுட்டுக்கொலை !!: அல்பிரட்  துரையப்பா முதல் காமினி வரை - 60 srisabaratnamகரடியனாற்றில் 
5.4.86 அன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கரடியனாறு என்னுமிடத்தில் எட்டு வாகனங்களில் இராணுவத்தினர் ரோந்து சென்றனர்.

ஆர்.பி.ஜி ரக ரொக்கட் லோஞ்சர்களால் புலிகளின் கெரில்லா அணியினர் தாக்குதல் நடத்தினார்கள். இராணுவ கவச வாகனம் ஒன்று ரொக்கட் லோஞ்சரால் சேதமடைந்தது.

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் மோதல் நடைபெற்றது. ஒன்பது இராணுவத்தினர் பலியானார்கள். புலிகள் தரப்பில் இழப்பில்லை.

1985 கடைசியில் ரெலோ இயக்கத் தலைவர் சிறீசபாரெத்தினம் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார்.

தமிழ் நாட்டில் இருந்து தனக்கு நம்பகமான குழுவுடன், பெருந்தொகையான ஆயுதங்கள் சகிதம் சிறிசபாரெத்தினம் யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்தார்.

ரெலோ இயக்கத்திற்குள் பிரச்சனை இருந்தமையால் இந்திய அரசு கொடுத்த ஆயுதங்களில் பெரும்பகுதியை சிறீசபாரெத்தினம் தமிழ்நாட்டிலேயே வைத்திருந்தார்.

ரெலோ இயக்கத்தின் இராணுவப் பொறுபாபளராக இருந்தவர் தாஸ். சிறீசபாரெத்தினத்தின் விசுவாசியாக இருந்த ‘பொபி’ இராணுவப் பொறுப்பை எடுக்க விரும்பினார்.

பொபிக்கும், தாசுக்கும் ஒத்துவரவில்லை. தாஸ் செல்வாக்குப் பெறுவதையும், தன்னையாரும் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலையில் வளர்ந்து வருவதையும் சிறியும் விரும்பவில்லை.

தாஸ் வடமராட்சியைச் சேர்ந்தவர். சிறீசபாரெத்தினம் கல்வியங்காட்டை சேர்ந்தவர். வடமராட்சியில் தாசுக்கு தனிச் செல்வாக்கு இருந்தது.

சவால்
வடமராட்சியில் புலிகள் இயக்கத்தினருக்கும் தாஸ் சவாலாக விளங்கினார்.

ஒரு முறை தாஸ் குழுவினர் வீதிகளில் எதிர்ப்படும் புலிகள் இயக்க உறுப்பினர்களை பந்தாடிக்கொண்டு திரிந்தார்.

வீதிகளில் இறங்கினால் பிரச்சனை வரும் என்று தமது உறுப்பினர்கள் அனைவரையும் முகாம்களுக்குள் இருக்குமாறு கிட்டு சொல்லவேண்டி ஏற்பட்டுவிட்டது.

பின்னர் தாசுடன் புலிகள் இயக்கத்தினர் பேச்சு நடத்தியதால் பிரச்சனை தீர்ந்தது.

புலிகள் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கை மூலம் தாஸின் செல்வாக்கு ரெலோவுக்குள் மேலும் வளர்ந்தது. இவற்றையெல்லாம் சிறீசபாரெத்தினம் அவ்வளவாக ரசிக்கவில்லை.

தாசுக்கும், பொபிக்கும் இடையே சமரசம் செய்ய முயன்றார் சிறிசபாரெத்தினம்

பொபிக்கு சார்பாகவே சிறீசபாரெத்தினம் பிரச்சனையைத் தீர்க்க முற்பட்டதால் தாஸ் சமரசத்திற்கு உடன்படவில்லை. தாஸ் இருக்கும் வரை பிரச்சனை தீராது என்ற முடிவுக்கு வந்தார் சிறீசபாரெத்தினம்.

நேரடியாக மோதினால் தாசின் பலத்தோடு ஈடுகொடுக்க முடியாமல் இருக்கும்.

வடமராட்சியில் தாசுக்கு மக்கள் மத்தியிலும் செல்வாக்கு இருப்பதால், தாசை தேடிச் சென்று மோதலில் ஈடுபடுவதும் முடியாத காரியம்.

இதனால் சதித்திட்டம் தீட்டப்பட்டது. தாசை தீர்த்துக்கட்டுமாறு பொபிக்கு உத்தரவிட்டார் சிறீசபாரெத்தினம். தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது ‘பொபி’ குழு.

telooo  யாழ்-பொது மருத்துவமனை வைத்து  ரெலோ இயக்க பொறுப்பாளர் சுட்டுக்கொலை !!: அல்பிரட்  துரையப்பா முதல் காமினி வரை - 60 teloooசதிவலை  
சதித்திட்டத்தின் ஒரு ஏற்பாடாக தாசுக்கு தூது அனுப்பப்பட்டது. தாசும், பொபியும் ஒரு பொது இடத்தில் சந்தித்துக் பேசிக்கொள்ளலாம்.

யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைதான் சந்திப்புக்கு ஏற்ற இடமாக சொல்லப்பட்டது.

பொது மருத்துவமனைக்குள் இயக்கத்தினர் எவரும் ஆயுதங்களோடு செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்தது.

சகல இயக்கங்களும் அந்தப் பொதுக்கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வந்தனர்.

மருத்துவமனையில் மனித வேட்டை
யாழ்-பொது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார் தாஸ். ஆயுதங்களை வாகனத்தில் வைத்துவிட்டு தாசும், நாலு பேரும் மருத்துவமனைக்குள் சென்றனர்.

மருத்துவமனையில் தேநீர் விடுதியில் தேநீர் அருந்திக்கொண்டு பொபி குழுவினரின் வருகைக்காக காத்திருந்தனர்.  திடீரென்று மருத்துவ மனையின் வாயில் பக்கம் வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்கின.

தாஸ் குழுவினருக்கும் இந்தச் சத்தங்கள் கேட்டன.

கையிலே ஆயுதமும் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்கு இடையில், தேநீர் விடுதிக்குள் புகுந்துவிட்டது பொபி குழு.

கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு. தாஸ் சூடுபட்டு விழுந்தார். தொடர்ந்து தாசுடன் வந்தவர்களை நோக்கி சுட்டுத்தள்ளினார்கள்.

தாசின் வலது கரமாக இருந்த காளி, அண்ணாச்சி என்றழைக்கப்படும் பீற்றர், மற்றும் நிசான், மோகன் ஆகியோர் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாக்கப்பட்டனர்.

பொதுமக்களும் பலி

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த வேலணை ஆரம்பநீதிமன்ற நீதிபதி கிருபரத்தினம். ரெலோ குழுவினரின் கண்மூடித்தனமான சூடு அவர்மீதும் விழுந்தது. அந்த இடத்திலேயே பலியானார் நீதிபதி.

மருத்துவ தாதியொருவரையும் துப்பாக்கிக் குண்டு பதம்பார்த்தது. அவரும் பலியானார்.

சிகிச்சைக்காக வந்திருந்த மற்றொரு பொது மகனும் கொல்லப்பட்டார். பத்துப்பேர் வரை காயமடைந்தனர்.

தாசின் உடலை தூக்கிக் கொண்டு வெளியேறியது பொபி குழு.

இது நடத்தது 11.3.86 இல. ஈழப் போராளி அமைப்பொன்று பொது மருத்துவமனைக்குள் படுகொலை வேட்டை நடத்தியது அதுதான் முதல் தடவை.

இதுவரை முறியடிக்கப்படாத சாதனை அது (?!)

ரெலோவின் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல் உட்பட, வடக்கில் நடைபெற்ற ரெலோவின் சொல்லிக் கொள்ளக்கூடிய தாக்குதல்கள் அனைத்திலும் முன்னணியில் நின்றவர் தாஸ்.

தாஸ் பொல்லப்பட்ட பின்னர் ரெலோ இயக்கம் வெற்றிகரமான தாக்குதல் எதிலும் ஈடுபடவில்லை. அது ஒன்றே போதும் தாசின் திறமைக்கு தக்க சான்றுசொல்ல.

தாஸ் கொல்லப்பட்ட செய்தியறிந்து வடமராட்சியெங்கும் மக்கள் தாமாகவே முன்வந்து கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டார்கள்.

teloo  யாழ்-பொது மருத்துவமனை வைத்து  ரெலோ இயக்க பொறுப்பாளர் சுட்டுக்கொலை !!: அல்பிரட்  துரையப்பா முதல் காமினி வரை - 60 telooஊர்வலமாய் மக்கள்.

13.1.86 அன்று உடுப்பிட்டியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் லொறிகளில் கிளம்பினார்கள்.

யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச் சந்தியில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, கல்வியங்காட்டில் உள்ள ரெலோ முகாமுக்கு செல்வது. தாசின் உடலை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோருவது என்பதுதான் ஏற்பாடு.

சிறீசபாரெத்தினம் அப்போது கல்வியங்காட்டில்தான் தங்கியிருந்தார்.

ஊர்வலத்தை தடுத்து நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார் சிறீசபாரெத்தினம். தோட்டுத்தில்லை தலைமையில் ஒரு குழு ஆயுதங்களோடு சென்றது.

முத்திரைச் சந்தியில் உள்ள மின்சார டரான்ஸ்போமருக்கு பின்புறமாக மறைந்திருந்து ஊர்வலத்தினர் மீது சுடத் தொடங்கினார்கள்.

அச்சுவேலியைச் சேர்ந்த உதயபாதம் என்னும் இளைஞர் சூடுபட்டு விழுந்தார். அடுத்த சூடு செல்வராணி என்னும் பெண் மீது விழுந்தது.

இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

தப்பி ஓட்டம்

தோட்டுத் தில்லையை நோக்கி ஊர்வலத்தில் இருந்த இளைஞர்கள் ஓடிச்செல்ல, துப்பாக்கிப் பிரயோகம் செய்தபடியே தலைதெறிக்க ஓடித்தப்பினார்கள்.

ஊர்வலமாக வந்த மக்கள்மீது ஒளித்திருந்து துப்பாக்கி பிரயோகம் செய்து இருவர் பலியாகக் காரணமாக இருந்த முதல் இயக்கம் ரெலோதான்.

முத்திரைச் சந்திக்கு சமீபமாக நல்லூரில்தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அலுவலகம் இருந்தது.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டு டக்ளஸ் தேவானந்தா சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்திருந்தார்.

ஊர்வலத்தில் பலியானவர்களது உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட இருந்தன.

உடல்களை தம்மிடம் ஒப்படைக்க செய்யுமாறும், இறுதிச் சடங்கு ஏற்பாடுகளுக்கு பாதுகாப்பு தறுமாறும் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊர்வலத்தினர் கேட்டனர்.

இதற்கிடையே கவிஞர் சேரன் உட்பட யாழ் பல்கலைக்கழக் மாணவர்கள் வந்து, ரெலோவின் அராஜக நடவடிக்கையை கண்டிக்கும் வகையில், இறுதிச் சடங்கை பெரியளவில் செய்யவேண்டும் என்று அபிப்பிராயப்பட்டனர்.

ஊர்வலத்தில் பலியான இருவரது உடல்களையும் யாழ் பல்கலைக்கழகத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கு ஏற்பாடுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வாங்கினார் டக்ளஸ் தேவானந்தா.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாழ் பிராந்தியக் கமிட்டி உறுப்பினர்கள் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளில் முன்னணியில் நின்றனர்.

இதற்கிடையே யாழ், பல்கலைக்கழகத்தில் சகல இயக்கப் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

ரெலோ சார்பாக மோகன் கலந்து கொண்டார். இவர் புலிகளால் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலை இராணுவ (ரெலோ) இயக்கத் தலைவர் ஒபரோய் தேவனின் தம்பி.

முத்தரைச் சந்தியில் நடைபெற்ற சம்பவத்திற்கு துளியும் கவலைப்படாமல் விளக்கம் சொன்னார் மோகன்.

“ஊர்வலத்தில் இருந்து வெடிகுண்டு (கிரனைட்) ஒன்று உருண்டுவந்தது. நல்லகாலம் வெடிக்கவில்லை. ஆனால் வெடிக்கப்போகிறது, வெடிகுண்டு வீசப்படுகிறது என்ற பதட்டத்தில் எமது உறுப்பினர்கள் சுட்டுவிட்டார்கள்.”

அத்தோடு நிறுத்தவில்லை ரெலோ இயக்கப் பிரதிநிதி. இன்னொன்றையும் சொன்னார்:

“எமது உறுப்பினர்கள் சுட்டது உண்மை. ஆனால் அவர்கள் சுட்டதால் தான் அந்த இரண்டு பேரும் செத்தார்களா என்பது தெரியவில்லை. ஊர்வலத்திற்குள் இருந்து யாராவது சுட்டு தவறுதலாக பட்டதோ என்றும் பார்க்க வேண்டும்.”

அதன் பின்னர் தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை என்பதால் கூட்டம் முடிவடைந்தது.

குற்றச்சாட்டுக்கள்
தாஸ் மீது குற்றச்சாட்டுப் பட்டியல் சுமத்தி ரெலோ பிரசுரங்களை வெளியிட்டது.

“கொள்ளைக்காரன் தாசுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை வரவேற்கிறோம்.” இப்படிக்கு, தமிழ் மக்கள் என்றும் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டதும் ரெலோ தான்.

tharmalinkam  யாழ்-பொது மருத்துவமனை வைத்து  ரெலோ இயக்க பொறுப்பாளர் சுட்டுக்கொலை !!: அல்பிரட்  துரையப்பா முதல் காமினி வரை - 60 tharmalinkamரெலோ நேரடியாக வெளியிட்ட பிரசுரத்தில் தாஸ் மீதான கொலை நடவடிக்கைக்கு கூறப்பட்ட காரணங்களில் ஒன்று இது:

“இயக்கத் தலைமைக்குத் தெரியாமல் கூட்டணித் தலைவர்கள் தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் ஆயியோரை படுகொலை செய்தார் தாஸ்.”

அதுவரை புலிகள்தான் அந்தக் கொலைகளுக்கு காரணம் என்று சொல்லிவந்தது ரெலோ.

தமது உட்பிரச்சனை காரணமாக முதன் முதலாக உண்மையை ஒப்புக் கொண்டது ரெலோ.

ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோரது கொலைகள் தாஸ் தலைமையில் செய்யப்பட்டது உண்மைதான். ஆனால், அதற்கான உத்தரவை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பியவர் சிறிசபாரெத்தினம்தான்.

யாழ்-பல்கலைக்கழகத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தில் பலியான இருவருக்கும் அஞ்சலி தெரிவித்தனர்.

ஐயாயிரம் பேர்வரை கலந்து கொள்ள இறுதி ஊர்வலம் மௌனமாக நடைபெற்றது.

இறுதி ஊர்வலம் ஆரம்பமான யாழ் பல்கலைக்கழக வாயிலுக்கு சமீபமாக ஒரு பத்துப் பேர் சுலோக அட்டைகளுடன் நின்றனர்.

“கொள்ளைக்காரன் தாஸ் கொல்லப்பட்டது நியாயம்” என்றன சுலோக அட்டை வாசகங்கள். சுலோக அட்டையோடு நின்றவர்கள் ரெலோ உறுப்பினர்கள்.

பிரமாண்டமான இறுதி ஊர்வலம் முன்பாக ரெலோவின் அந்த நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமாகவே தெரிந்தது.

அதேவேளை தாசின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ரெலோ ஒப்படைக்கவேயில்லை.

ரெலோ இயக்கத்தின் வளர்ச்சிக்கு உரமாக இருந்த தாஸ், அதே இயக்கத்தால் ஒரு அநாதைப் பிணமாக, கொள்ளைக்காரன் என்ற பட்டத்தோடு எங்கோ ஒரு வெளியில் எரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது குழி வெட்டி புதைக்கப்பட்டிருக்கலாம்.

(தொடர்ந்து வரும்)
-எழுதுவது அற்புதன்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகரில் நடந்த இயக்க மோதல்!: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-61

யாழ் நகரில் நடந்த இயக்க மோதல்!:  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-61
 

புரிந்துணர்வோடு தாக்குதல்:

‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள இயக்கங்கள் ஒன்றாதல் கண்டே’ என்று 1986 இல் பாடியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

1986 இல் யாழ்-குடாநாட்டுக்குள் படையினரின் பிரவேசத்தை தடுப்பதில் சகல் இயக்கங்களும் ஒரு புரிந்துணர்வோடு செயற்பட்டன.

யாழ்ப்பாணம் கோட்டை இராணுவ முகாம், வசாவிளான் இராணுவ முகாம், நாவற்குழி இராணுவ முகாம் போன்றவற்றிலிருந்து படையினர் முன்னேற முயற்சி செய்வார்கள்.

முகாம்களுக்கு அண்மையில் இயக்கங்களின் காவல் அரண்கள் அமைந்திருக்கும்.

இராணுவத்தினர் முன்னேறுவதாகத் தகவல் கிடைத்ததும் ஒவ்வொரு இயக்கமும் தமது உறுப்பினர்களை அங்கே அனுப்பிவிடும்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கம் மேற்கொள்ளும் மோட்டார் ஷெல் தாக்குதலுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு இருந்தது. அப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப் மட்டும் தான் மோட்டார் வைத்திருந்தது.

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பல தடவைகள்  ஷெல்   மேல் எழாமல் மோட்டாருக்குள்ளேயே வெடித்துவிடும்.
அவ்வாறு பல உறுப்பினர்களை ஈ.பி.ஆர்.எல்.எஃப் பறிகொடுத்திருக்கிறது.

எனினும் மோட்டார் செல் தாக்குதல் இராணுவத்தினரை அச்சுறுத்தும் விதமாக அமைந்திருந்தமையால், இழப்புக்கள் மத்தியிலும் மோட்டார் தொடர்ந்து பாவிக்கப்பட்டது.

முகாமுக்குள் பிரசுரம்

ஈ.பி.ஆர்.எல்.எஃப் இராணுவத் தளபதியாக இருந்த டக்ளஸ் தேவானந்தாவின் திட்டப்படி மோட்டார் ஷெல் லில் துண்டுப்பிரசுரங்களை வைத்து யாழ் கோட்டை முகாமுக்குள் ஏவிவிட்டார்கள்.

பிரசுரங்கள் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டிருந்தன. பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது இதுதான்:

“படைவீரர்களே! நீங்கள் யாருக்காகப் போராடுகிறீர்கள்?

உங்களையும், எங்களையும் ஒடுக்கிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ அரசுக்கு எதற்காக சேவகம் செய்கிறீர்கள்?

நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராகப் போராடவில்லை!

சிங்கள-தமிழ் பாட்டாளிகளது பொது எதிரியான சிறீலங்கா நவபாசிச அரசுக்கு எதிராகவே போராடுகிறோம்.

ஈழமக்களது விடுதலை சிங்கள பாட்டாளிகளினதும், உழைக்கும் மக்களதும் விடுதலைக்கு முதற்படியாக அமையப்போகிறது.

இலங்கையில் சோசலிசப் புரட்சிக்கான முதலாவது போர் முனையை நாம் ஈழத்தில் திறந்திருக்கிறோம். இரண்டாவது போர்முனையை நீங்கள் சிறீலங்காவில் திறக்க வேண்டும்.

நீங்கள் எமது எதிரிகளல்ல: நாங்கள் உங்கள் விரோதிகளுமல்ல.

நமது பொது எதிரி சிறீலங்கா அரசுதான்.

எனவே-திரும்பிச் செல்லுங்கள். நாம் அனைவரும் சோசலிசப் புரட்சியின் பங்காளர்களாக மாறுவோம்.” என்று பிரசுரத்தில் கூறப்பட்டிருந்தது.

sel  யாழ் நகரில் நடந்த இயக்க மோதல்!:  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-61 selபாரிய இழப்பு
ஈ.பி.ஆர்.எல்.எஃப் மோட்டார் உற்பத்தி செய்வதைப் பார்த்துவிட்டு, தாமும் மோட்டார் உற்பத்தியில் ஈடுபட்டது தமிழீழ இராணுவம்-(TEA).

தமது உற்பத்தியை ஒரு வெட்ட வெளியில் பரிசோதித்துப் பார்த்தார்கள். செல் உயர எழுந்து வெடித்தது.

யாழ்-கோட்டை இராணுவ முகாமில் இருந்து விமானப்படை உதவியோடு இராணுவத்தினர் முன்னேறிவர முயன்று கொண்டிருந்தனர்.

புலிகள் அமைப்பினரும், ரெலோ அமைப்பினரும் பதிலடி நடவடிக்கைளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஒரு முனையில் இருந்து மோட்டார்  ஷெல் தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

யாழ்ப்பாணம் கொட்டடிச்சந்திக்கு மிகப் பெரிய மோட்டார்களோடு வந்து சேர்ந்தது தமிழீழ இராணுவம்.

மோட்டாருக்குள் ஷெல் லைப் போட்டார் ஒருவர்.

அடுத்த நொடியே விபரீதம் நிகழ்ந்தது. மோட்டாருக்குள் போடப்பட்ட  ஷெல்   மோட்டாருக்குள்ளேயே வெடித்துச் சிதறியபோது,

அதன் அருகில் நின்ற தமிழீழ இராணுவ உறுப்பினர்கள் ஆறுபேர்வரை காணாமல் போனார்கள்.

அங்கங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததால் எந்த உடலும் அடையாளம் காணக்கூடிய நிலையில் இருக்கவில்லை.

மிகக் கோர வெடிவிபத்து அது, முதலாவது பெரிய வெடிவிபத்தும் அதுதான்.

அலார அறிவிப்பு

யாழ்-கோட்டை இராணுவமுகாமில் இருந்து அடிக்கடி செல் தாக்குதல்கள் நடாத்தப்படும்.  ஏவப்படும் ஷெல் கள் யாழ் நகருக்குள் விழுந்து வெடிக்கும்.

யாழ் பொது மருத்துவ மனைக்கு முன்பாகவெல்லாம் செல்கள் வந்து விழுவதுண்டு.

ஷெல் தாக்குதலால் பொதுமக்களுக்கு ஏற்படும் உயிரிழப்புக்களைத் தடுக்க புளொட் அமைப்பினர் ஒரு திட்டம் போட்டனர்.

யாழ் கோட்டை முகாமுக்குள் இருந்து செல் ஏவப்படும் சத்தம் கேட்டதும், கோட்டை முகாமுக்கு அருகில் உள்ள புளொட் கண்காணிப்பு நிலையில் இருந்து ஒரு சுவிட்சை அமுக்க வேண்டியதுதான்.

யாழ் நகரில் பிரதான இடங்களில் மண்மூட்டைகள் அடுக்கி பங்கர்கள் அமைத்து வைத்திருந்தது புளொட்.

அலாரம் அடித்ததும் மக்கள் ஓடிப்போய் பங்கருக்குள் மறைந்துகொள்ள வேண்டியதுதான்.

மிகவும் திட்டமிட்டு, கோட்டை முகாமுக்கு அருகில் உன்னிப்பாக அவாதானித்து கொண்டிருந்து புளொட் மேற்கொண்ட அந்த நடவடிக்கைக்கு பலத்த வரவேற்பு இருந்தது.

regal  யாழ் நகரில் நடந்த இயக்க மோதல்!:  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-61 regal
தவறுதல்தானா?

1986 இல் புலிகளுக்கும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் மோதல் ஏற்பட்டது.

யாழ்-கோட்டை இராணுவ முகாமுக்கு அருகில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் காவலரணுக்கு அந்த இயக்க உறுப்பினர்கள் சென்று கொண்டிருந்தனர்.

இரவு நேரமாக இருந்தாலும் கோட்டை இராணுவ முகாமின் அதிக் சக்திவாய்ந்த மின்சார லைட்டுக்கள் அந்தப் பகுதியை பகலாக்கி வைத்திருந்தன.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்களை நோக்கி திடீரென்று துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது.

ஓர் உறுப்பினர்மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்துவிட்டது.

அவரையும் தூக்கிக்கொண்டு ஏனைய உறுப்பினர்கள் பாதுகாப்பு நிலை எடுத்த போது, சுட்டுக் கொண்டிருப்பது இராணுவத்தினர் அல்ல என்பது தெரிந்தது.

கோட்டை முகாமுக்கு அருகில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள்தான் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை நிறுத்திவிட்டு ஓடிவந்த புலிகள் இயக்கத்தினர் தாம் தவறுதலாக நினைத்து சுட்டுவிட்டதாகக் கூறினர்.

“இராணுவத்தினர் என்று நினைத்துத்தான் சுட்டோம்.” என்று விளக்கம் சொன்னார்கள்.

புலிகளது துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டவர் அமீன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் இராணுவப்பிரிவைச் சேர்ந்தவர். லெபனானின் டாக்டர் ஜோஜ் ஹபாஷ் தலைமையிலான பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணியிடம் பயிற்சி பெற்றவர்.

முன்னர் வவுனியாவில் புலிகள் இயக்கத்தினரால் கொல்லப்பட்ட றேகனும் அமீனுடன் பயிற்சி எடுத்தவர்தான்.
லெபனானில் பயிற்சி பெற்றவர்களை குறிவைத்து புலிகள் இயக்கத்தினர் தீர்த்துக்கட்டி வருகின்றனர் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்களுக்குள் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.

சந்தேகங்கள்
“தவறுதலாக நடந்துவிட்டது” என்று புலிகள் சொன்னதை மறுத்து ஈ.பி.ஆர்.எல்.எஃப் பின்வரும் சந்தேகங்களை எழுப்பியிருந்தது.

‘நகர்ப் பக்கமிருந்து கோட்டை முகாம் நோக்கிச் சென்றவர்களை இராணுவத்தினர் என்று எப்படி சந்தேகப்பட்டிருக்க முடியும்? கோட்டை முகாம் இருந்த பக்கமிருந்து வந்திருந்தால் சந்தேகப்பட்டிருக்கலாம்.

பகல் போல வெளிச்சம் இருந்த நிலையில் அடையாளம் காண முடியாமல் போனது எவ்வாறு

எவ்வித முன்னெச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது ஏன்?’

என்பன போன்ற கேள்விகளை ஈ.பி.ஆர்.எல்.எஃப் தொடுத்திருந்தது.

15906_930816886953001_7915336836909825356_n-300x200  யாழ் நகரில் நடந்த இயக்க மோதல்!:  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-61 15906 930816886953001 7915336836909825356 nகிட்டு விளக்கம்
புலிகள் இயக்க யாழ் மாவட்ட இராணுவத் தளபதி கிட்டு, ஈ.பி.ஆர்.எல்.எஃப் இராணுவப் பிரிவுத் தளபதி டக்ளஸ் தோவானந்தாவை சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

“வேண்டுமென்றே திட்டமிட்டு நடக்கவில்லை. தவறுதலாக நடந்தது என்பதுதான் உண்மை” என்று கிட்டு வலியுறுத்திக் கூறினார்.
புலிகள் இயக்கத்தில் ஒருவரையாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் கோபப்பட்டுக் கொண்டிருந்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் செயளாலர் நாயகம் பத்மநாபாவும் அப்போது யாழ்ப்பாணத்தில் தங்கி நின்றிருந்தார்.

புலிகள் அமைப்பினர் வருத்தம் தெரிவித்துவிட்டமையால் மோதலைத் தூண்டும் வகையில் எவ்விதமான பதில் நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்று பத்மநாபாவும், டகளஸ் தேவானந்தாவும் உத்தரவிட்டிருந்தனர்.

அதற்கிடையே கோபப்பட்ட சில உறுப்பினர்கள் கோட்டை முகாமிற்கு அருகில் இருந்த புலிகளது காவலரணுக்குச் சென்று அமீனைச் சுட்ட உறுப்பினர்களை தேடினார்கள்.

ஆனால் சம்பவம் நடைபெற்ற உடன் குறிப்பிட்ட உறுப்பினர்களை கிட்டு அழைத்துச் சென்று விட்டார்.

இறுதிச்சடங்கு

சாவகச்சேரியில் அமீனின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

சாவகச்சேரியில் கடைகளை மூடுமாறு ஈ.பி.ஆர்.எல்.எஃப் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கடைகள் மூடப்பட்டன.

புலிகளது தீவிர ஆதரவாளர்கள் சிலரது கடைகள் மட்டும் திறந்திருந்தன. அக் கடைகளுக்கு முன்பாக வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தார்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள்.

ஒரு சிறுவன் காயமடைந்தான். வெடி குண்டை வெடிக்கவைத்த உறுப்பினர், இராணுவப் பிரிவில் முக்கியமானவர். அவரை அழைத்து கடுமையாகக் கண்டித்தார் டக்ளஸ் தேவானந்தா.

duglas-devananda-terrorist-rebel  யாழ் நகரில் நடந்த இயக்க மோதல்!:  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-61 duglas devananda terrorist rebelமீண்டும் மோதல்

முதலாவது சம்பவம் மோதல் இல்லாமல் முடிந்தபோதும், மற்றுமொரு சம்பவத்தால் மோதல் வெடித்தது.

யாழ்ப்பாணம் நல்லூர் வைமன் வீதியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைமைச் செயலகம் இருந்தது.

தலைமைச் செயலகத்தின் பின்புறமிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது.

காவல்பணியில் இருந்தவர்கள் ஓடிச் சென்று பார்ப்பதற்கிடையில் துப்பாக்கிக் பிரயோகம் செய்தவர்கள் தப்பிச் சென்று விட்டார்கள்.

அருகிலிருந்த ரெலோ முகாமில் விசாரித்தபோது, கிட்டுவின் கார் அவ்வழியாகச் சென்றதைப் பார்த்ததாகக் கூறினார்கள்.

அதனால் புலிகள் மீது ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பினருக்கு சந்தேகம் வந்துவிட்டது.

புலிகள் அமைப்பினது பிரதான முகாம் யாழ்ப்பாணம் தட்டாதெருச் சந்திக்கு அருகாமையில் இருந்தது.

நல்லூர் சம்பவம் நடைபெற்று முடிந்த கையோடு ஈ.பி.ஆர்.எல்.எஃப் இராணுவத் தளபதி டக்ளஸ் தேவானந்தாவும், மத்திய குழு உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தட்டாதெருச் சந்தி வழியாக மானிப்பாய் நோக்கி ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர்.

வேனுக்கு முன்பாக டக்ளஸ் தேவானந்தாவின் மெய்யப்பாதுகாலர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

தட்டாதெரு சந்திக்கருகில் பாவல்பணியில் ஈ.டுபட்டிருந்த புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் மோட்டார் சைக்கிளை மறித்தார்.

மறித்தபடியே பிஸ்டலை எடுத்து நெற்றிக்கு எதிராக நீட்டினார். மோட்டார் சைக்கிளில் சென்ற டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாவலர், பிஸ்டலை எட்டிப்பிடித்துக் கொண்டு பிஸ்டலை நீட்டியவரை கீழே வீழ்த்திவிட்டார்.

டக்ளஸ் தேவானந்தாவின் வேனில் இருந்தவர்களும் தமது ஆயுதங்களோடு கீழே குதித்தபோது புலிகளது முகாமில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் ஆரம்பித்தது.

இரு தரப்பினரும் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈ.டுபட்டுக்கொண்டிருக்க, முதலில் பிஸ்டலை காட்டிய புலிகள் இயக்க உறுப்பினரான ரிச்சாட்டை அவரது பிஸ்டலாலேயே டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாவலரான ரமணன் சுட்டுவிட்டார்.

ரிச்சாட் சாகவில்லை: உயிர் இருந்தது. மீண்டும் அவரைச் சுடமுயன்றபோது டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரரான பிரேம் குறுக்கே விழுந்து தடுத்துவிட்டார். அவரும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்.

துப்பாக்கிச் சமர் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, ரிச்சாட்டை தூக்கி வேன் ஒன்றில் போட்டு வைத்தியசாலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டார் பிரேம்.

deva  யாழ் நகரில் நடந்த இயக்க மோதல்!:  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-61 devaஅதேநேரம் டக்ளஸ் தேவானந்தாவையும், சுரேஸ் பிரேமச்சந்திரனையும் பாதுகாப்பாக வெளியேற்றி அனுப்பி விட்டார்கள்.

அரைமணிநேர சமரின் பின்னர் துப்பாக்கி முழக்கங்கள் ஓய்ந்தன.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் நால்வரை புலிகள் பிடித்து வைத்துக் கொண்டார்கள்.

புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டனர். அவர்களது உடல்களை தூக்கிக் கொண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் சென்று விட்டார்கள்.

அதனையடுத்து தம்மிடம் பிடிபட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர் ஒருவரை புலிகள் சுட்டுக்கொன்றார்கள்.

சமரசம்
இச்சம்பவம் நடைபெற்ற மறுநாள் யாழ்ப்பாணம் எங்கும் ஒரே பதட்டமாக இருந்தது. புலிகள் இயக்க மானிப்பாய் பொறுப்பாளர் ஐயர், ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்களால் தாக்கப்பட்டார்.

“புலிகள் வசமுள்ள நான்கு போரையும் உடனடியாக விடுவிக்காவிட்டால் தட்டாதெரு முகாம்மீது மோட்டார் ஷெல் தாக்குதல் நடத்தப்படும். அருகிலுள்ளவர்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும்” என்று டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

யாழ் நகர முன்னால் மேயர் விசுவநாதன் சமரசம் செய்ய முன்வந்தார். அவரது வீடும் தட்டாதெருப்பகுதியில்தான் இருந்தது.

யாழ்-பல்கலைக் கழகத்தில் இரு தரப்பும் சந்தித்துப் பேசுவதாக முடிவு செய்யப்பட்டது.

ஒரு புறம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் மறுபுறம் புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஆயுதம் ஏந்தி வரிசையாக நின்றார்கள்.

புலிகளது சார்பாக கிட்டுவும், திலீபனும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பாக டக்ளஸ் தேவானந்தா, ரமேஷ்  பாலா ஆகியோரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

நல்லூர் அலுவலகம் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது தாம் அல்லவென்று கிட்டு உறுதியாக தெரிவித்தார்.

“நம் இரு அமைப்புக்கிடையேயும் மோதல் ஏற்படுத்த விரும்பும் இயக்கமொன்றுதான் துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு, பழியை எங்கள் மீது போட்டடிருக்கிறது” என்று கூறினார் கிட்டு.

(பின்னர் விசாரித்துப் பார்த்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.: கிட்டு சொன்னதில் பொய்யில்லை என்று தெரிந்தது.)

மேற்கொண்டு எந்தப் பிரச்சனை வந்தாலும் இரு தரப்பும் நேரடியாகப் பேசித்தீர்ப்பது என்ற முடிவோடு இரு தரப்பினரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

இரண்டு புலிகள் இயக்க உறுப்பினர்களது உடல்களையும் இராணுவ மரியாதையோடு திரும்பி ஒப்படைத்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

புலிகளும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினரது உடலை ஒப்படைத்தனர்.

(தொடர்ந்து வரும்)

எழுதுவது அற்புதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெலோ இயக்கத்தினரை உயிருடன் டயரில் போட்டு எரித்த புலிகள்!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி -62)

 
 

திருப்பமான மோதல்:  1986 ஏப்ரல் மாதம் புலிகள் இயக்கத்திற்கும் ரெலோவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்தான் போராளி இயக்கங்களின் வரலாற்றில் திருப்பமாக அமைந்தது.

அதுவரை எங்காவது ஒரு பகுதியில் நடைபெறும் மோதலோடு பூர்த்தியான இயக்க மோதல்கள் முதன் முதலாக முழு மோதலாக வெடித்தது அப்போது தான்.

புலிகள் இயக்கத்தின் கோப்பாய் பகுதி பொறுப்பாளர் லிங்கம். அவர் வல்வெட்டிதுறையைச் சேர்ந்தவர். தமது இயக்க சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த லிங்கத்தோடு ரெலோ இயக்க உறுப்பினர்கள் சிலருக்கு பிரச்சனை ஏற்பட்டது.

பிரச்சனை முற்றியதால் ரெலோ உறுப்பினர்கள் துப்பாக்கிமுனையில் லிங்கத்தை தமது வாகனத்தில் கடத்திச் சென்றார்கள்.

சிறீசபாரெத்தினம் தங்கியிருந்த கல்வியங்காடு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார் லிங்கம். அங்குவைத்து லிஙகத்தை விசாரிக்க முற்பட்டனர் ரெலோ இயக்கத்தினர்.

லிங்கம் ஒத்துழைக்கவில்லை. அதேநேரம் லிங்கம் கடத்திச் செல்லப்பட்ட விடயத்தை அறிந்த புலிகள் ரெலோவோடு தொடர்பு கொண்டனர்.

லிங்கம் தப்பியோட முற்பட்டபோது நம்மவர்கள் சுடவேண்டியேற்பட்டது. அதனால் லிங்கம் இறந்துவிட்டார். என்று பதில் சொல்லப்பட்டது.

உடனடியாக செயலில் இறங்கினார்கள் புலிகள். ரெலோ இயக்க முகாம் ஒன்றுக்குள் புகுந்து பதிலடி நடவடிக்கையில் ஈடுபடுமாறு ஒரு குழுவை அனுப்பி வைத்தார் கிட்டு.

யாழ்ப்பாணம் பழைய பூங்காவீதியில் ரெலோ முகாம் ஒன்று இருந்தது. ஏனைய முகாம்களைவிட அதனைத் தாக்குவதுதான் சுலபமாக இருக்கும் என்று கிட்டு திட்டம் போட்டார்.

ரெலோ முகாம் ஒன்றை தாக்கிவிட்டு பின்னர் ரெலோவோடு பேச்சுக்குச் செல்லலாம் என்பதுதான் கிட்டுவின் திட்டம்.

தாக்குதல் ஆரம்பம்

திட்டப்படி பழைய பூங்காவீதி முகாம் புலிகளால் தாக்கப்பட்டது. ரெலோ உறுப்பினர்கள் பதிலடியில் ஈடுபடவில்லை. அதற்கு தயாராகவும் இருக்கவில்லை.

லிங்கம் கடத்தப்பட்ட விவகாரமும் அங்கிருந்தவர்களுக்குத் தெரியாது.

முகாமிலிருந்த சிலர் கொல்லப்பட்டனர். முகாம் பொறுப்பாளர் உட்பட பலர் தப்பிச் சென்றனர்.

அந்த முகாமின் பொறுப்பாளரது மருமகன் ஒருவர் புலிகளிடம் சிக்கிவிட்டார். அவரது வயது 13. முதல்நாள்தான் மட்டக்களப்பிலிருந்து இருந்து தனது மாமனாரைக் காண வந்திருந்தார்.

அவரையும் ரெலோ இயக்க உறுப்பினர்கள் என்று நினைத்துவிட்டார்கள் புலிகள். ‘தனக்கு எதுவும் தெரியாது’ என்றான் சிறுவன். நம்பவில்லை.

வேன் ஒன்றுக்குள் போட்டு பூட்டி வெடி குண்டை வைத்தனர் புலிகள். வேன் சிதறியது. சிறுவனின் காலில் ஒரு பகுதி மரத்தில் போய் தொங்கியது.

பழைய பூங்காவீதி முகாமில் பதிலடி இருக்கவில்லை என்பதால் கிட்டு திட்டத்தை மாற்றிக் கொண்டார்.

ரெலோ முகாம்கள் அனைத்தையும் தாக்குமாறு சகல முகாம்களுக்கும் ‘வோக்கி’யில் உத்தரவு பிறப்பித்தார்.

திலீபன் தலைமையில் கல்வியங்காடு ரெலோ முகாம் நோக்கியும் ஒரு அணி சென்றது.

இந்தக் காலகட்டத்திலேயே புலிகள் தொலைத்தொடர்பு சாதன விடயத்தில் முன்னணியில் இருந்தனர். அநேகமாக சகல முகாம்களிலும் வோக்கிடோக்கி இருந்தது.

அதனால் உத்தரவுகளையும், உடனடித் தகவல்களையும் விரைவாகப் பரிமாற முடிந்தது.

ஏனைய இயக்கங்களிடம் தலைமையில் உள்ளவர்களுக்கு மட்டுமே வோக்கிடோக்கி இருந்தது.

பழைய பூங்காவீதி முகாம் தாக்கப்பட்ட செய்தியை அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடிவந்துதான் கல்வியங்காடு ரெலோ முகாமுக்கு தெரிவிக்க வேண்டியிருந்தது.

அதற்கிடையே கல்வியங்காட்டுப் பகுதியில் புலிகளது வியூகம் வகுக்கப்பட்டு விட்டது.

பழைய பூங்காவீதி முகாம் தாக்கப்பட்ட செய்தியை முதலிலேயே அறிந்திருந்தால் கல்வியங்காட்டில் பிரதான முகாமில் இருந்த ரெலோ உறுப்பினர்கள் முந்திக்கொண்டு பதிலடிக்கு தயாராகியிருப்பார்கள்.

ரெலோவின் பிரதான முகாமுக்கும், யாழ்ப்பாணத்தில் இருந்த ஏனைய ரெலோ முகாம்களுக்கும் இடையே வானொலித் தொடர்பு இருந்திருந்தால் பிரதான முகாமை நோக்கி அவர்கள் அழைத்திருக்கலாம்.

வானொலி தொடர்பு சாதனங்களின் பெறுமதியை அன்றுதான் ரெலோ உணர்ந்திருக்கும். முதலிலேயே உணர்ந்திருந்தால் ரெலோவாலும் வாங்க முடிந்திருக்கும்.


டயரில் பேட்டடார்கள்.

தமது முகாம்கள் தாக்கப்படும் விடயமே தெரியாமல் வீதிவழியாக வாகனங்களில் சென்று கொண்டிருந்த ரெலோ உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுத் தள்ளப்பட்டார்கள்.

ரெலோ வாகனம் ஒன்றை மறித்த புலிகள் “நீங்கள் எந்த இயக்கம்?” என்று கேட்டார்கள். புலிகள் தமது இயக்கத்திற்கு எதிராக தாக்குதலை ஆரம்பித்துவிட்டதை அவர்கள் அறியவில்லை.

“நாங்கள் ரெலோ…நீங்கள்?”

புலிகள் பதிலே சொல்லவில்லை.

கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத்தள்ளினார்கள். வேனில் இருந்தவர்கள் ஆறுபேரும் கொல்லப்பட்டார்கள்.

திருநெல்வேலிச் சந்தியில் மட்டும் முப்பதுக்கு மேற்பட்ட ரெலோ உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

கல்வியங்காடு பிரதான முகாமில் இருந்து மட்டும் ரெலோ பதில் தாக்குதலில் ஈடுபட்டது.  அதனால் பிரதான முகாமை புலிகள் நெருங்கிச் செல்ல முடியவில்லை.

பிரதான முகாமுக்கு வெளியிலிருந்து ஆட்பலம் வந்து சேராமல் புலிகள் வியூகம் அமைத்துக் கொண்டனர்.

அதேவேளை திருநெல்வேலிச் சந்தியில் சூடுபட்டு விழுந்து கிடந்த ரெலோ உறுப்பினர்களது உடல்களை ஒன்று சேர்த்தனர்.

சகல உறுப்பினர்களது உடல்களையும் ஒரே இடத்தில் குவித்து, அவற்றின்மீது டயர்களை போட்டு கொளுத்தினார்கள். கிட்டு, திலீபன் ஆகியோரது உத்தரவுப்படியே உடல்கள் டயர் போட்டு எரிக்கப்பட்டன.

சொக்கப்பானை எரிவது போல திருநெல்வேலி சந்தியில் தீயெழுந்து அப்பகுதியை சுடுகாடு போல மாற்றியிருந்தது.

தமது ஜீன்ஸ்களை முழங்கால்வரை மடித்துவிட்டுக்கொண்டு எரியும் நெருப்பில் உடல்களை தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தார்கள் புலிகள் இயக்க உறுப்பினர்கள்.

திசை தெரியவில்லை

கல்வியங்காடு பிரதான முகாமைத்தவிர யாழ்ப்பாணத்தில் உள்ள சகல ரெலோ முகாம்களும் புலிகள் தாக்குதலை ஆரம்பித்த முதலாவது நாளே வீழ்ச்சியடைந்தன.

ரெலோ உறுப்பினர்களில் முகாம்களில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம்பேர்.

புலிகளால் ரெலோ முகாம்கள் தாக்கப்பட்டபோது தப்பியோடிய அவர்களுக்கு பாதைகள் தெரியவில்லை. யாரிடம் சென்று அடைக்கலம் கேட்பது என்றும் விளங்கவில்லை. புலிகளிடம் மாட்டிக் கொண்டார்கள்.

முதல் நாளன்று அப்படி மாட்டியவர்களில் கிட்டத்தட்ட நூறுபேர் வரை புலிகள் இயக்கத்தினரால் கொல்லப்பட்டனர்.

திருநெல்வேலி சந்தி தவிர இரு பாலைச் சந்திக்கு அருகாமையிலும் டயர்களில் பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன.

ரெலோ இயக்க முக்கியஸ்தர்கள் பலர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்திடமும், ஈரோசிடமும் சென்று பாதுகாப்புக் கேட்டனர்.

கிட்டத்தட்ட நூறு ரெலோ உறுப்பினர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாம்களிலும், 50ற்கு மேற்பட்டவர்கள் ஈரோஸ் இயக்க முகாம்களிலும் முதல் நாளன்று அடைக்கலம் பெற்றனர்.

ரெலோ உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டாம் என்று கிட்டு நேரில் சென்று டக்ளஸ் தேவானற்தாவிடம் கூறினார்.

புலிகள் விதித்த தடை
பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கும், புலிகள் இயக்கத்திற்கும் இடையில் கசப்புகள் ஏற்படலாம் என்றார் கிட்டு.

எனினும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். ரெலோ உறுப்பினர்களுக்கு தொடர்ந்து புகலிடம் வழங்கியது. வெள்ளைக் கொடிகளை வீதிகளில் பறக்கவிட்டு சமாதானத்தை வலியுறுத்தியது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

மக்கள் எதிர்ப்பு
யாழ்ப்பாணம் நாவந்துறையில் இருந்த ரெலோ முகாமை தாக்குவதற்காகச் சென்ற புலிகள் இயக்கத்தினரை பொதுமக்கள் தடுத்தனர்.

பொதுமக்களுக்கும், புலிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள் புலிகள். பொதுமக்களில் இருவர் கொல்லப்பட்டனர்.

ஆத்திரமடைந்த மக்கள் புலிகள் சென்ற வாகனங்களில் இரண்டை கொளுத்தினார்கள்.

திரும்பிச்சென்ற புலிகள் மீண்டும் வந்து வாகனத்தைக் கொளுத்தியவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்டனர்.

இறந்தவர்களது உயிர்களை உங்களால் திருப்பித்தரமுடியுமா? என்று கேட்டனர் கூடியிருந்த மக்கள்.

பிரச்சனையை வளர்க்காமல் புலிகளது அணி திரும்பிச் சென்றது.

யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் புலிகள் இயக்கத்தினரால் ஊரடங்கு அறிவித்தல் செய்யப்பட்டது.

ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்களில் ஊர் ஊராகச் சென்று, “ரெலோ இயக்க உறுப்பினர்கள் எம்மிடம் உடனடியாகச் சரணடைய வேண்டும். ரெலோ இயக்கத்தினருக்கு புகலிடம் வழங்குவோர் துரோகிகளாகக் கருதப்படுவார்கள்.

இந்திய அரசின் கைக்கூலிகளாக இருந்து தமிழீழ போராட்டத்தை காட்டிக் கொடுத்த ரெலோ இயக்கத்தை தடை செய்திருக்கிறோம்.” என்று அறிவித்தார்கள் புலிகள்.

ஈ.ழப் போராட்ட வரலாற்றில் இயக்கமொன்றை பிறிதொரு இயக்கம் தடைசெய்துவிட்டதாக அறிவித்தது அதுதான் முதல் தடவை.

(தொடர்ந்து வரும்)
எழுதுவது அற்புதன்

pulikall  ரெலோ இயக்கத்தினரை உயிருடன் டயரில் போட்டு எரித்த புலிகள்!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - (பகுதி -62) pulikall
எம்.ஐ.17 எங்கே வீழ்ந்தது? கிளம்பிய வதந்திகளும், கிடைத்துள்ள தகவல்களும்

எம்.ஐ.17 சிறப்புத்தகுதிகள்

• சோவியத் யூனியன் ஒன்றாக இருந்தபோதே தயாரான தரமான உற்பத்தி
• 24 இருக்கைகள் உள்ளன.

• 12 தற்காலிக படுக்கைகளை ஏற்படுத்தி நோயாளர்களை காவிச் செல்ல முடியும். மருத்துவ சாதனங்களையும் பொருத்தலாம்.

• வசதிக்கு ஏற்ப மாற்றக்கூடிய கதவுகள்.

•மீட்புப் பணிகளுக்கு நன்கு ஒத்துழைக்கும்.

•ஒரு முறை எரிபொருள் போட்டு விட்டால் 800கி.மீட்டர் தூரம் வரை தாக்குப்பிடிக்கும். பூரண சுமையோடு என்றால் 550கி.மீட்டர்.

•மேலதிக எரிபொருள் தேவைக்கு ஓரிரு பெற்றோல் தாங்கிகளையும் எடுத்துச் செல்லும் வசதி இருக்கிறது.

எம்.ஐ. ஹெலிகொப்டர் எங்கே? சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது சிறு சேதத்துடன் புலிகளால் தரையிறக்கப்பட்டதா?

கொழும்பு குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் தலைநகர ஆங்கில, சிங்கள பத்திரிகைகளில் பரபரப்பான கேள்வி அதுதான்.
இதற்கிடையே ஹெலிகொப்டரில் பயணம் செய்தவர்களில் சிலரது உடல் பகுதிகள் கரையொதுங்கி உள்ளன.

மொத்தம 39 பேர் பயணம் செய்தனர். கரையொதுங்கிய உடல்பகுதிகள் சிலரதுதான். மீதிப் பேர் என்ன ஆனார்கள்? அது அடுத்த கேள்வி.

ஹெலிகொப்டர் எப்படித் தாக்கப்பட்டது என்பதற்கான விடையில் மேற் கண்ட கேள்விகளுக்கு பதில் இருக்கிறது.

கடந்த ஆண்டு பலாலி விமானத்தளம் அருகே இரண்டு அவ்ரோ விமானங்களை புலிகள் சுட்டு வீழ்த்தியிருந்தனர்.

முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கையின்போது புக்காரா விமானம் ஒன்று புலிகளால் வீழ்த்தப்பட்டது.

மூன்று விமானங்களுமே விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் தாக்கப்பட்டிருந்தன. அதனால் மூன்று விமானங்களும் வானிலேயே வெடித்துச் சிதறியிருந்தன.

கடந்த வருட இறுதியில் சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் வை. 8 ரக விமானம் ஒன்றும் புலிகளால் தாக்கப்பட்டது.

பலாலி கூட்டுப்படை தளம் அருகே கடற்பரப்பின்மீது தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தபோதே வை. 8 தாக்கப்பட்டது. தாக்கப்பட்ட வை. 7 கடலில் வீழ்ந்தது. இருவர் உயிர்தப்பவும் முடிந்தது.

அதற்கு என்ன காரணம்? வை. 8 தாக்கப்பட்டது ஏவுகணையால் அல்ல. ஒலிகன் ரக பீரங்கியால்தான் சுடப்பட்டது.

ஏவுகணை என்றால் விமானத்தில் பட்டதும் வெடித்து, விமானத்தையும் வெடித்துச் சிதறவைத்துவிடும். உள்ளேயிருப்பவர்கள் தப்பமுடியாது.
விமானதளத்தில் தரையிங்க தாழ்வாகப் பறந்ததால்தான் ஒலிகன் ரக பீரங்கியால் குறி தப்பாமல் சுட முடிந்தது. தாழ்வாகப் பறந்த நிலையில் கடலில் விழுந்தமையால் இருவர் தப்பிக் கொண்டார்கள்.

ஆனால் எம்.ஐ.17 விவகாரம் வேறு மாதிரியானது.

பலாலியில் இருந்து வெற்றிலைக்கேணி நோக்கி சென்று கொண்டிருந்தபோது இடை நடுவில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.

ஹெலி தாக்கப்பட்டதையோ, வெடித்து சிதறியதையோ வெற்றிலைக்கேணி முகாமிலிருந்தவர்கள் காணமுடியாத தூரத்தில் வைத்துத்தான் தாக்கப்பட்டிருக்கிறது.

எனவே, தரையிறங்கும் நோக்கோடு எம்.ஐ.17 தாழ்வாகப் பறந்திருக்க முடியாது. உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோதுதான் குறிவைக்கப்பட்டிருக்கின்றது.

உயரத்தில் பறந்து சென்று கொண்டிருக்கும் ஹெலியையோ, விமானத்தையோ ஏவுகணையால் தாக்குவதுதான் சுலபம்.
ஒலிகன் ரக பீரங்கியால் சுட்டால் குறிதவறலாம்.

அப்படி குறி தவறும் போது ஹெலியில் உள்ளவர்கள் கவனித்துவிட்டால் மற்றொரு தாக்குதலுக்கு வசதியில்லாமல் போய்விடும்.
ஏவுகணையென்றால் இலக்கு தவறினாலும் தனது ரகத்திற்கு ஏற்ப வெப்பத்தையோ, அல்லது உலோகத்தையோ மோப்பம்பிடித்து சென்று தாக்கிவிடும்.

புலிகளது நோக்கம் ஆனையிறவு, மற்றும் வெற்றிலைக்கேணி முகாம்களில் படையினர் பாரிய தாக்குதலுக்கு தம்மை தயார்படுத்தாமல் தடுப்பதுதான்.

வடக்கில் அடுத்த கட்ட பாரிய நடவடிக்கைக்கு ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் முக்கிய பங்காற்றும். எனவே அதறடகு விநியோக பாதையில் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதுதான் நோக்கம்.

எனவே கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவறவிடாமல், பயன்படுத்தவே புலிகள் நினைத்திருப்பர். அதனால் ஏவுகணைத் தாக்குதலையே மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது நூற்றுக்கு 95 வீதம் நம்பத்தகுந்தது.

மீதி 5 வீதம் தான் ஒலிகன் ரக பீரங்கி தாக்குதலுக்கான சாத்தியம் இருக்கலாம்.

ஒலிகன் ரக பீரங்கியால் தாக்கி இருந்தால்கூட ஹெலி உயரத்தில் பறந்த நிலையில் சூடுபட்டு வெடித்திருக்கும்.

கரையொதுங்கியுள்ள உடல்பாகங்கள் சிதைந்துள்ளன. வெடித்து சிதறியதற்கான நம்பகரமான ஆதாரம் அதுதான்.

வெடிக்காமல் கடலில் விழுந்திருந்தால் சில உடல்களாவது முழு உடல்களாகவே கரையொதுங்கியிருக்கும். எனவே எம்.ஐ.17 வானில் வெடித்து கடலில் பாகங்களாக விழுந்தது மட்டும் நூறுவித உறுதி.

எம்.ஐ.17 எங்கே வைத்து தாக்கப்பட்டது? முரசுக்கு கிடைத்த தகவலின் படி பருத்தித்துறை முனையருகே வைத்துத் தான் புலிகள் தாக்கியிருக்கிறார்கள்.

ஹெலியின் பாகங்களும் அந்தக் கடற்பகுதியில்தான் விழுந்திருக்கின்றன. அதனை மக்கள் சிலரும் நேரடியாகக் கண்டிருக்கிறார்கள்.

ஆனால், படைத்தரப்பினருக்கு ஹெலி எங்கு வைத்து தாக்குதலுக்கு உள்ளானது என்பது சரியாகத் தெரியாது.

காரணம், பாதகாப்புக் காரணங்களுக்காக ஹெலி புறப்பட்ட பின்னர் அதற்கும் தரை முகாம்களுக்கும் இடையில் வானொலி தொலைத் தொடர்புகள் இருப்பதில்லை. தொடர்புகளை வைத்து புலிகள் தாக்கக்கூடும் என்பதால் அந்த ஏற்பாடு.

அதுதவிர கடலில் பரந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடவும் கடற்கரும்புலிகளது அச்சுறுத்தல் அபாயம் ஒரு பிரதான தடை.

ஆக, எம்.ஐ.17 விவகாரம் முடிந்து போன கதைதான். புலிகளது விமானத்தாக்குதல் படடியலிலும், அரச தரப்பின் விமான இழப்பு பட்டியலிலும்தான் அந்த எம்.ஐ.17 பத்திரமாக இருந்து கொண்டிருக்கும்.

எம்.ஐ.17 இல் பயணம் செய்தவர்களில் சிலர் உயிரோடிருப்பதாக கூறப்படுவது அப்பட்டமான வதந்தி. நம்பாதீர்கள்.

(தொடர்ந்து வரும்)
எழுதுவது அற்புதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோண்டாவிலில் வைத்து சிறீசபாரெத்தினத்தை சுட்டுக்கொன்ற கிட்டு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி-63)

கோண்டாவிலில் வைத்து  சிறீசபாரெத்தினத்தை சுட்டுக்கொன்ற கிட்டு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி-63)
 

இன்று ரெலோ நாளை??

ரெலோவை தடைசெய்துவிட்டதாக புலிகள் இயக்கம் அறிவித்தது ஏனைய இயக்கங்களையும் யோசிக்க வைத்து விட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளொட், ஈரோஸ் ஆகிய அமைப்புக்கள் தமக்கெதிராகவும் புலிகள் திரும்பலாம் என்று நினைக்கவே செய்தன.

ரெலோ இயக்கத்தை இந்தியாவின் கைக்கூலிகள் என்று கூறியே தமது தடைக்கான பிரசாரம் செய்தனர் புலிகள் இயக்கத்தினர்.

ரெலோவுக்கு அடுத்ததாக இந்திய அரசோடு நெருக்கமாக இருந்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப். எனவே, ரெலோமீது காட்டப்பட்ட குற்றச்சாட்டு தமக்கெதிராகவும் காட்டப்படலாம் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். நினைத்தது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். செயலதிபர் க.பத்மநாபா அப்போது தமிழ்நாட்டில் இருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். உள் பிரச்சனை காரணமாக இரண்டு துருவங்களாக இருந்தது. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தார்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்குள் பத்மநாபாவோடு நின்றவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தாவோடு இருந்தவர்கள் மீது ஒரு சந்தேகம் இருந்தது.

கிட்டுவோடு டக்ளஸ் தேவானந்தா நட்பாக இருப்பதால் ரெலோவுக்கு உதவி செய்ய விரும்பமாட்டார் என்நு நினைத்து விட்டார்கள்.

டக்ளஸ் தேவானந்தா தனது வாகனம் மூலமாகவே நூற்றுக்கும் மேற்பட்ட ரெலோ உறுப்பினர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று மானிப்பாயில் இருந்த பிரதான முகாமில் புகலிடம் கொடுத்து வைத்திருந்தார்.

அப்படிச் செய்தாலும்கூட ரெலோ தலைமைக்கு டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்புக் கொடுக்க விரும்பமாட்டார் என்றே ஈ.பி.ஆர்.எல்.எஃப்.க்குள் இருந்த மறுசாரார் நினைத்துக் கொண்டிருந்தனர்.

விதிக்கப்ட்ட தடையும் புலிகள் நடத்திய கண்காட்சியும்

kiduuuaw  கோண்டாவிலில் வைத்து  சிறீசபாரெத்தினத்தை சுட்டுக்கொன்ற கிட்டு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி-63) kiduuuaw
முதல் நாள் மோதல்

ரெலோவின் பிரதான முகாமில்தான் ரெலோத் தலைவர் சிறீசபாரெத்தினம் தங்கியிருந்தார்.

புலிகள் தாக்குதலை ஆரம்பித்த முதலாவது நாள் பிரதான முகாமில் இருந்த ரெலோ உறுப்பினர்கள் தீரத்துடன் சண்டையிட்டனர்.

முதலில் அது ஒரு தற்காலிக மோதல் என்றுதான் சிறீசபாரெத்தினமும் முதலில் நினைத்தார்.

சண்டை தொடர்ந்த தீவிரமும், கிடைத்த தகவல்களும் புலிகள் இறுதித் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகிவிட்டதை உணர்த்தத் தொடங்கின.

அதனால் சிறீசபாரெத்தினமும் தனது முக்கியமான பாதுகாவலர்களுடன் வேறு இடத்துக்கு தப்பிச்செல்ல தீர்மானித்தார்.
அதற்கிடையே சிறீசபாரெத்தினத்தின் நம்பிக்கையான ஆள் ஒருவர் மூலமாக பத்மநாபாவோடு தொடர்பு கொள்ளப்பட்டது.

ரெலோவோடு சேர்ந்து புலிகளுக்கு எதிராக ஈ.பி.ஆர்.எல்.எஃப். களத்தில் இறங்கியிருந்தால் மோதல் தீவிரமாகியிருக்கும்.

ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எஃப். உள்ளே  இருபிரிவுகளாக இருந்தமையால் அதைப்பற்றி யோசிக்கவே இயலவில்லை.

சிறீசபாரெத்தினத்துக்கு பாதுகாப்பு வழங்க பத்மநாபா ஒப்புக்கொண்டார்.

கல்வியங்காட்டில் இருந்து சிறீசபாரெத்தினத்தை வெளியே கொண்டுவந்து பாதுகாப்பான இடத்;தில் தங்கவைப்பது.

பின்னர் தமிழ்நாட்டுக்கு பத்திரமாகக் கொண்டு செல்வது என்பதுதான் திட்டம்.

சிறீசபாரெத்தினம் தப்பிச் சென்றால் ஆபத்து. ரெலோ மீண்டும் பலமாகிவிடும். அதனால் சிறீசபாரெத்தினத்தை தப்பவிடக் கூடாது என்று புலிகள் உறுதியாக இருந்தார்கள்.

srisabaratnam  கோண்டாவிலில் வைத்து  சிறீசபாரெத்தினத்தை சுட்டுக்கொன்ற கிட்டு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி-63) srisabaratnam1
சிறீ எங்கே?

கல்வியங்காட்டிலிருந்து சிறீசபாரெத்தினம் தப்பிச்செல்ல முடியாதளவுக்கு புலிகள் இயக்க உறுப்பினர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்படியிருந்தும் சிறீசபாரெத்தினம் தனது நம்பகமான மெய்ப்பாதுகாவலர்களுடன் கல்வியங்காட்டில் இருந்து தப்பிவிட்டார்.

ரெலோவின் பிரதான முகாமை புலிகள் கைப்பற்றியபோது அங்கு சிறீசபாரெத்தினத்தை இறந்த உடல்கள் மத்தியில் தேடிப்பார்த்து ஏமாந்து போனார்கள்.

சிறீசபாரெத்தினம் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களால் கோண்டாவில் அன்னங்கை என்னுமிடத்தில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டார்.

ஆனால், இந்த விடயம் இராணுவத் தளபதியாக இருந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கு தெரியவே தெரியாது.

kiduuua  கோண்டாவிலில் வைத்து  சிறீசபாரெத்தினத்தை சுட்டுக்கொன்ற கிட்டு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி-63) kiduuua
டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கச் சென்றார் கிட்டு.

“சிறீசபாரெத்தினத்துக்கு பாதுகாப்புக் கொடுத்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

“சாதாரண உறுப்பினர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்திருக்கிறோம். தலைமையில் உள்ளவர்களுக்கு பாதுகாப்புக் கொடுப்பது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை. அவர்கள் கேட்டால் யோசிக்கலாம்.” என்றார் டக்ளஸ் தேவானந்தா.

ரெலோவை தாம் ஏன் தடை செய்ய வேண்டி வந்தது என்று விளக்கினார் கிட்டு.

“முதலில் ஒரு பாடம் படிப்பிக்கத்தான் நினைத்தோம். அவர்களிடம் இருந்து எதிர்ப்பு இல்லையென்பதால் பூரணமாக முடித்து விடலாம் என்று தீர்மானித்தோம்” என்று டக்ளஸ் தேவானந்தாவிடம் சொன்னார் கிட்டு.

மரச்சட்ட அடி

ரெலோவின் முக்கிய உறுப்பினர்கள் பலர் புலிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் மோகன். ஒபரோய் தேவனின் சகோதரர். பறுவா மோகன் என்றும் அவரை அழைப்பார்கள்.

அவர்மீது கிட்டுவுக்கு முன்னரே கோபம் இருந்தது. அதனால் தானே நேரடியாகச் சென்று மோகனை மரச்சட்டத்தால் அடித்து நொறுக்கினார்.

“சிறீசபாரெத்தினம் எங்கே?” என்று கேட்டு மோகனை துவைத்தெடுத்தார்கள்.

கைது செய்யப்பட்ட ரெலோ உறுப்பினர்கள் அனைவரையும் புலிகளது உளவுப்பிரிவினர் விசாரணை செய்தனர்.

விசாரணைக்குப் பொறுப்பாக இருந்தவர் வாசு. அவர்தான் அப்போது உளவுப்பிரிவுக்கு யாழ் மாவட்டத்தில் பொறுப்பாக இருந்தவர்.

வாசுவே நேரடியாக பலரை விசாரணை செய்தார். மரச்சட்டத்தால்தான் அடிப்பார். தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டவர்கள் மரச்சட்டத்தால் அடிவிழும்போது உரத்துக் கத்துவார்கள். ‘கத்தாதே’ என்று அடி தொடரும்.

மக்களின் பாதுகாப்பு

புலிகளிடமும் பிடிபடாமல், ஏனைய இயக்கங்களிடமும் புகலிடம் கேட்காமல் பொதுமக்களது பாதுகாப்பில் பல ரெலோ உறுப்பினர்கள் உயிர் தப்பினார்கள்.

இயக்கங்கள் தமக்குள் சண்டை போடுவதை மக்கள் விரும்பவில்லை.

“எல்லோரும் எங்கள் பிள்ளைகள்தானே. போராட வந்தவர்கள்தானே” என்று சொல்லி தமது வீடுகளில் தங்கவைத்தார்கள்.

ஆனால் ரெலோ பலமாக இருந்தபோது அதனை விழுந்து விழுந்து ஆதரித்த சிலர் கட்சி மாறினார்கள்.

புலிகள் இயக்கத்தினருக்கு கொக்காகோலா கொடுத்து ரெலோ மீதான வெற்றியில் தமது மகிழ்ச்சியை அவர்கள் தெரிவித்ததுதான் வேடிக்கை.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்.

யாழ்ப்பாணம் இருபாலை சந்திக்கருகில் ஒரு தேநீர் கடை இருந்தது. இந்தக் கடையில்தான் ரெலோ உறுப்பினர்கள் வாடிக்கையாக சாப்பிடுவார்கள்.

கூடக்குறைய கணக்குச் சொன்னாலும் பணம் கொடுத்துவிட்டுப் போவார்கள். அவரும் தன்னை ஒரு ரெலோ ஆதரவாளராகவே காட்டிக்கொண்டிருந்தார்.

ரெலோவை புலிகள் தாக்கிவிட்டு, இருபாலை சந்திக்கு அருகிலும் டயர் போட்டு கொளுத்திக்கொண்டிருந்தார்கள்.

ரெலோ உறுப்பினர்கள் டயரில் எரிந்து கொண்டிருந்தார்கள்.

அந்த தேநீர் கடை உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா? புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு களைப்புத்தீரு சுடச்சுட தேநீர் தயாரித்து வழங்கிக்கொண்டிருந்தார்.

அதேவேளை மற்றொரு சம்பவம்ஃ

நல்லூரில் இருந்தது அவர்கள் வீடு. இரண்டு பிள்ளைகளும் புலிகள் இயக்கத்தில் இருந்தார்கள். மறைய இடம்தேடிச் சென்ற ரெலோ உறுப்பினர்களுக்கு அந்த விஷயம் தெரியாது.

தமது வீட்டில் அவர்களை தங்க வைத்தது அந்தக் குடும்பம்.

ரெலோ இயக்க உறுப்பினர்கள் இருவர் வீட்டில் மறைந்திருப்பது தமது பிள்ளைகளுக்கே தெரியாமல் பார்த்துக் கொண்டனர் அந்த வீட்டார்.

விடைபெறும்போதுதான் ரெலோ உறுப்பினர்களுக்கே விஷயம் தெரிந்தது. விழிகளில் கண்ணீரோடு நன்றி சொன்னர்கள். அதற்கு அந்த வீட்டார் சொன்னார்கள்: “தம்பிமார், நீங்களும் எங்கள் பிள்ளைகள்தானே”.

ரெலோவை சரணடையுமாறு புலிகள் தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

இலங்கை வானொலியில் பணியாற்றிய கே.எஸ்.ராஜா பணியால் விலக்கபட்டு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தார்.

ரெலோவை சரணடையுமாறு ஒலிபெருக்கியில் அறிவிக்குமாறு கூறி கார் ஒன்றில் அவரை ஏற்றி விட்டார்கள் புலிகள். தனது வழக்கமான பாணியில் கே.எஸ். ராஜா அறிவிக்கத் தொடங்கினார்.

deva  கோண்டாவிலில் வைத்து  சிறீசபாரெத்தினத்தை சுட்டுக்கொன்ற கிட்டு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி-63) deva1எப்படிச் சொல்வது?
சிறீசபாரெத்தினத்தை பளையில் உள்ள தாழையடி கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டார் பத்மநாபா.

பளைக்கு செல்வதற்கு இடையில் புலிகளது சோதனை அரண்களை தாண்ட வேண்டியிருக்கும்.

யாழ்ப்பாணத்திலிருந்து சிறீசபாரெத்தினம் தப்பிச்சென்றுவிடலாம் என்பதால் யாழ்ப்பாணக் கடலோரங்களிலும், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறும் தரைப்பாதைகளிலும் கடும் கண்காணிப்பில் ஈ.டுபட்டிருந்தனர்.

சகல வாகனங்களையும் மறித்து சோதனையிட்டனர்.

டக்ளஸ் தேவானந்தாவும் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் சென்ற வாகனமொன்றை புலிகள் மறிக்க முற்பட்டதில் பிரச்சனை எழுந்தது.

“எமது வாகனங்களை மறிக்கக்கூடாது. மறித்தால் பிரச்சனை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்” என்று சொல்லிவிட்டார் டக்ளஸ் தேவானந்தா.

அப்போது டக்ளஸ் தேவானந்தாவின் வேனுக்குள் அவரது மெய்ப்பாதுகாலர்களுடன் நான்கு ரெலோ உறுப்பினர்களும் இருந்தனர்.

வேறு வழியின்றி புலிகள் வழிவிட்டனர். டக்ளஸ் தேவானந்தா ஆட்களோடு பிரச்சனைப்பட வேண்டாம் என்று கிட்டுவும் உத்தரவிட்டிருந்தார்.

இடையில் ஒரு தடவை தாழையடிக் கடற்கரையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் படகு ஒன்று தமிழ்நாட்டுக்கு செல்ல ஆயத்தமானது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களோடு, ரெலோ உறுப்பினர்களும் படகில் ஏற்றப்பட்டனர். புலிகளுக்கு எப்படியோ செய்தி கிடைத்துவிட்டது.

குறிப்பிட்ட இடத்துக்கு வந்த புலிகள் அந்த படகில் இருப்பவர்களை பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள். ‘முடியாது’ என்று மறுத்துவிட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

அதே தாழையடி கடல் மார்க்கமாகத்தான் சிறீசபாரெத்தினத்தையும் ஏற்றி அனுப்பத் திட்டமிடப்பட்டது.

சுற்றி வளைப்பு

டக்ளஸ் தேவானந்தாவுக்கு தெரியாமல் ஏற்பாடுகள் செய்யவேண்டியிருந்தமையால் தாமதங்கள் ஏற்பட்டன.

ஒரு சவப்பெட்டி செய்து, அதற்குள் சிறீசபாரெத்தினத்தை படுக்கவைத்து கொண்டு செல்ல ஏற்பாடு நடந்தது. சவப்பெட்டியும் தயாராகிவிட்டது.

இடையில் புலிகள் மறித்தால் தமது உறுப்பினரது உடலைக் கொண்டு செல்வதாகக் கூறிவிடலாம் என்பதுதான் நோக்கம்.

இந்த ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தபோது, சிறீசபாரெத்தினம் தங்கியிருந்த இடத்தை புலிகள் கண்டுபிடித்து விட்டனர்.

கிட்டுவின் தலைமையில் சென்ற புலிகளது அணி கோண்டாவிலில் அன்னங்கையில் இருந்த வீட்டைச் சுற்றிவளைத்தது.

எதிர்த்துப் போராடுவதில் பலன் இல்லை. முதலில் நிலமையைச் சமாளிக்க வேண்டும் என்று சிறீசபாரெத்தினம் நினைத்தாரோ என்னவோ, வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

கிட்டுவை நோக்கி சிறீசபாரெத்தினம். “நாங்கள் பிரச்சனையைப் பேசித் தீர்கக்லாம்” என்று சொன்னார்.

கிட்டு பதிலேதும் சொல்லவில்லை. சுடத்தொடங்கினார்.

சிறீசபாரெத்தினமும் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.

சிறீசபாரெத்தினத்தின் உடலை தூக்கிக் கொண்டு புலிகள் சென்றுவிட்டனர்.

அதனையடுத்து ஒலிபெருக்கி பூட்டிய கார்களில் புலிகள் அறிவித்த செய்தி இது:

“இந்திய கைக்கூலிகளான ரெலோ இயக்கத் தலைவர் சிறீசபாரெத்தினம் இன்று நடைபெற்ற மோதலில் மோதலில் கொல்லப்பட்டார். ரேலோ உறுப்பினர்கள் எம்மிடம் வந்து சரணடைந்தால் மன்னிப்பு வழங்கப்படும்.”

கண்டனங்கள்

சிறீசபாரெத்தினம் கொல்லப்பட்டதை ஏனைய இயக்கங்கள் யாவும் கண்டித்தன.

யாழ்ப்பாணத்தில் மானிப்பாயில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கம் சவப்பெட்டி ஊர்வலம் ஒன்றை நடத்தியது. பல நூற்றுக்கணக்காக மக்கள் கலந்து கொண்டனர்.

சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் என்பவற்றையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். வெளியிட்டது.

ஏனைய இயக்கங்கள் பத்திரிகை அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டன.

karunanithy  கோண்டாவிலில் வைத்து  சிறீசபாரெத்தினத்தை சுட்டுக்கொன்ற கிட்டு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி-63) karunanithy
தமிழ்நாட்டில் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி சிறீசபாரெத்தினம் பலியான செய்தி கேட்டு அதிர்ந்து போனார்.

முரசொலி பத்திரிகையில் உடன்பிறப்புக்கு எழுதிய கடிதத்தில் “எனது நெஞ்சில் இருந்து இரத்தம் வடிகிறது” என்று தனது வேதனையை வடித்திருந்தார். புலிகளையும் கண்டித்திருந்தார்.

விளக்கம் சொல்லப்பட்டது.

ரெலோ உறுப்பினர்களை டயரில் போட்டு எரித்தது ஏன்? என்று கிட்டுவிடம் பலரும் டேடார்கள்.

“சண்டைகளில் இது சகஜம். மறு தரப்பை அச்சமடையச் செய்வதற்கு இப்படியான சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்.

இங்கே இது புது அனுபவம் என்பதால் அதிர்ச்சியடைகிறீர்கள்” என்று விளக்கம் சொன்னார் கிட்டு.

யாழ்ப்பாணம் நல்லூரில் புலிகள் ஒரு கண்காட்சி நடத்தினார்கள்.

ரெலோ பாவித்த வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.

ரெலோவால் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் என்று தொலைக்காட்சி பெட்டிகள், வீடியோ டெக்குகள், தங்க நகைகள் போன்றவையும் வைக்கப்பட்டிருந்தன.

உரியவர்கள் வந்து அடையாளம் காட்டி பெற்றுச் செல்லலாம் என்று அறிவித்தார்கள்.

ரெலோவால் கொள்ளையிடப்பட்டதாக கூறி பார்வைக்கு வைக்கப்பட்ட பொருட்களில் ஒரு பகுதி புலிகள் இயக்கத்தின் வசம் இருந்தவை என்பது கிட்டுவுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.

ரெலோ தடைசெய்யப்பட்டதையும், ரெலோ உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் நியாயப்படுத்த புலிகள் செய்த ஏற்பாடுதான் அந்தக் கண்காட்சி.

ரெலோவின் கல்வியங்காட்டு முகாமில் பெருந்தொகையான ஆயுதங்கள் இருந்தன. அத்தனையையும் புலிகள் கைப்பற்றினார்கள்.
piraba  கோண்டாவிலில் வைத்து  சிறீசபாரெத்தினத்தை சுட்டுக்கொன்ற கிட்டு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி-63) piraba
ஐந்து பிரதான இயக்கங்களில் ஒன்று அதிலொரு இயக்கத்தாலேயே தடை செய்யப்பட்டது,

நான்கு இயக்க ஒற்றுமையும் ஈழத் தேசியவிடுதலை முன்னணியும் (ENLF) ரெலோவுக்கு விதிக்கப்பட்ட தடையோடு முடிந்த கதையாகியது.

கைகோர்த்து நின்ற நான்கு இயக்க தலைவர்களில் ஒருவர் சக இயக்கத்தாலேயே கொல்லப்பட்டார்.

ஈழப்போராளி அமைப்புக்களது முதலாவது ஒற்றுமை முயற்சி முறிந்த கதையும் அதுதான்.

(தொடர்ந்து வரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் ஒரு புரியாத புதிர்!!; இறுதிவரை ஈழத்துக்காக போராடுவோம் – பிரபா சூளுரை: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-64)

 
 
 

மூன்றுவித விளக்கம்

ரெலோ இயக்கத் தலைவர் சிறீசபாரெத்தினம் 6.5.86 அன்று கொல்லப்பட்டார். அதன் பின்னர் தமிழ்நாட்டில் தங்கியிருந்த புலிகள் அமைப்பின் தலைவரிடம் ரெலோ இயக்கம் மீதான தடை தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன.

“ரெலோ இயக்கமும், அதன் தலைவர் சிறீ சபாரெத்தினமும் புலிகள் இயக்கத்தை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டியிருந்தார்கள். அதனை அறிந்து நாம் முந்திக்கொண்டோம்” என்;று தமிழ் நாட்டில் விளக்கம் சொன்னார்கள் புலிகள் இயக்கத்தினர்.

“இந்தியக் கைக்கூலிகள் என்பதால் ரெலோ இயக்கத்தை தடைசெய்தோம்” என்று வடக்கு-கிழக்கில் சொன்னது போல, தமிழ்நாட்டில் சொல்லவில்லை என்பதையும் கவனிக்க முடிந்தது.

ரெலோ இயக்கத்தை முற்றாகத்தடை செய்தது மூலம் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியில் பலமுள்ள அமைப்பு என்று இந்தியா தவிர்ந்த வெளிநாடுகளில் பிரசாரம் செய்யப்பட்டது.

ரெலோ மீதான நடவடிக்கைக்கு முன்று விதமாக-மூன்றுவிதமான சூழல்களுக்கு ஏற்ப, புலிகள் அமைப்பினர் விளக்கம் கொடுத்தனர் என்பதுதான் உண்மை.

அமெரிக்க ‘டைம்’ சஞ்சிகை 9.6.86 அன்று வெளியான இதழில் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக ஏழுபக்க கட்டுரை வெளியிட்டிருந்தது.

“தமிழீழ விடுதலை கோரும் அமைப்புக்களில் பிரபாகரன்தான் குழப்பமற்ற ஒரு தலைவராக விளங்குகிறார்” என்று குறிப்பிட்டிருந்தது ‘டைம்’ சஞ்சிகை.

இலண்டன் பி.பி.சி. தமிழோசை அப்போதிருந்தே விடுதலைப் புலிகளுக்கு சாதகமாகவே செய்திகளை வெளியிட்டு வந்தது.

2.5.86 அன்று இலண்டன் பி.பி.சி. தனது செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவித்தது:

“விடுதலைப் புலிகள், இராணுவத்தை எதிர்கொள்வது போல இம்முறை ரெலோ மீது எடுத்த நடவடிக்கையினால் தமிழ் மக்களை மேலும் கவர்ந்துள்ளனர். அது மட்டுமல்ல, அங்குள்ள பெரியவர்கள், விடுதலைப் புலிகள் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்”.

யூ.என்.ஐ. செய்தி

கொழும்பிலுள்ள யூ.என்.ஐ. செய்தி நிறுவன நிருபர் “ரெலோ உறுப்பினர்களை புலிகள் பெற்றோல் ஊற்றி உயிருடன் எரித்தனர். சிறுவர்களை விரட்டி விரட்டிச் சுட்டனர்” என்று தனது செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தனர்.

13.5.86 அன்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் யூ.என்.ஐ. நிருபர் எழுதிய கட்டுரையில், புலிகள் அமைப்பினர் ரெலோவை தடைசெய்தமைக்காக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் சொன்ன கருத்து இடம்பெற்றிருந்தது.

அது இதுதான்:
“இந்திய அரசின் ஆதரவில் தமிழர் பிரச்சனைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணவும், பாரம்பரிய அரசியல் பாதைக்கு திரும்பவும் ‘ரெலோ’ தயாராக இருந்தது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரே நோக்கம் சுதந்திர தமிழீழத்தை அமைப்பதுதான். அதிலே அவர்கள் பிடிவாதமாக உள்ளனர்.

இந்தியத் தயாரிப்பான ஓர் அரசியல் தீர்வினைத் தற்காலிகமாகவேனும் ஈழத்தமிழர் இ;ப்போது ஏற்றால், இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளின் பின்னர் மீண்டும் புதிதாக போராட்டத்தை ஆரம்பிக்க நேரும் என்று விடுதலைப்புலிகள் நினைக்கிறார்கள்.

அதைவிட இப்போது நடைபெறும் விடுதலைப் போரை தமிழீழத்தை அடைவதுவரை தெடர்ந்து நடத்துவது மேலானது என்று புலிகள் கருதுகிறார்கள்” என்று பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் விளக்கமளித்தார்.

கோவையின் மடல்

பிரபாகரனின் பண உதவியால் தமிழ் நாட்டிலிருந்து கோவை மகேசன் வெளியிட்டு வந்த பத்திரிகை ‘வீரவேங்கை.’

ரெலோ தடை செய்யப்பட்டது தொடர்பாக கோவை மகேசன் வீரவேங்கையில் ஒரு நீண்ட மடல் வரைந்திருந்தார்.

அதில் ஒரு இடத்தில் கோவை மகேசன் காட்டமாக குறிப்பிட்டிருந்தது இப்படி:

“தாயக விடுதலை என்ற இலட்சியத்தை ஏற்று களத்தில் இறங்கி விட்டபின்னர், அந்த இலட்சியத்திற்கு துரோகம் செய்யத் துணிந்து விட்டவன் எவனாயிருந்தாலும், அவன் நண்பனாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும், தம்பியாக, தங்கையாக ஏன் தாரமாக இருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டியவர்களே.

ரெலோ மட்டுமல்ல-சுதந்திர தமிழீழம் என்ற ஈழத்தமிழர்களின் கண்ணீராலும், செந்நீராலும், எலும்புகளாலும், தசைகளாலும் வளர்க்கப்பட்டுள்ள இலட்சியப்பயிரை, நம் ஊனோடும், உயிரோடும் கலந்துவிட்ட விடுதலை இலட்சியத்தை கைவிட்டு ஜெயவர்த்தனாவின் மாகாணசபை என்ற மாய்மாலத்தில் மயங்கி சிங்கள மேலாதிக்கத்தையும், சிறீலங்காவின் ஒற்றையாட்சி அமைப்பையும், சிங்கள தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் எவர் ஏற்றுக் கொண்டாலும்-அப்படிப்பட்டவர்கள் ஈழத்தமிழர்களின் பச்சைத் துரோகிகள் என்றே நான் கூறுவேன்.

தமிழீழ விடுதலை எனும் உயிர்கொள்கைக்கு எதிரான அனைத்து இயக்கங்களையும் தமிழீழ மண்ணில் இயங்க விடாமல் தடைசெய்வது என்று விடுதலைப் புலிகள் தீர்மானித்திருப்பதாக யாழ்ப்பாணத் தளபதி தம்பி கிட்டு அறிவித்திருப்பதை வீரவேங்கை சார்பாக வரவேற்கிறேன்.” என்றெல்லாம் எழுதியிருந்தார் கோவை மகேசன்.

சுவாமியின் கோபம்

இந்திய அரசியல்வாதியான சுப்பிரமணியம் சுவாமி ரெலோவுக்கு ஆதரவாக இருந்தவர்.

சிறீ சபாரெத்தினம் பலியானவுடன் ரெலோ இயக்கம் தன்னை நம்பித்தான் வரவேண்டும் என்று நினைத்தார் சந்திரஹாசன். தந்தை செல்வாவின் மகனான சந்திரஹாசனுக்கு முன்னரே ரெலோவோடு இருந்த தொடர்பை விளக்கியிருக்கிறேன்.

பின்னர் அந்த தொடர்பை சிறீ சபாரெத்தினம் வெட்டிவிட்டதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.

சந்திரஹாசனுக்கு நெருக்கமானவர் சுப்பிரமணியம் சுவாமி.

ரெலோவை புலிகள் தடைசெய்ததை கண்டித்து காரசாரமான அறிக்கை ஒன்றi வெளியிட்டார் சுப்பிரமணியம் சுவாமி.
“பிரபாகரன் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று தனது அறிக்கையில் கோரிக்கையும் விடுத்திருந்தார் சுப்பிரமணியம் சுவாமி.
pirapakarannnnnn  "தமிழீழம் அமையத்தான் போகிறது". பிரபாகரனின்  தீர்க்கதரிசனம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-50) pirapakarannnnnn

பிரபா ஒரு புதிர்
ஜுன் 30, 1986 இல் வெளிவந்த ‘இந்தியா டுடே’ ஆங்கில் சஞ்சிகை பிரபாகரனின் பேட்டியை பிரசுரித்திருந்தது.

பிரபாகரன் தொடர்பாக தனது வாசகர்களுக்கு நீண்டதொரு அறிமுகமும் செய்திருந்தது.

அதிலிருந்து ஒரு பகுதி இது:

“பிரபாகரன் ஒரு புதியாத புதிராக விளங்குகிறார். அவரைச் சுற்றி யார் எத்தகைய பிரச்சாரத்தினை மேற்கொண்ட போதிலும் பிரபாகரன் ஒரு அதிசய மனிதராகவே எளிமையுடன் விளங்குகிறார். அவரது நடவடிக்கைகள் மிகவும் இரசகியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.”

இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக மனம்திறந்து பேசியிருந்தார் பிரபா.
அப்பேட்டியின் முக்கிய பகுதிகளை வாசகர்கள் அறிவது அவசியம். இதோ பேட்டி:

கேள்வி : இலங்கை தமிழர் பிரச்சனையின் அடுத்த அத்தியாயம் எப்படி இருக்குமென எதிர்பார்க்கிறீர்கள்?

பிரபா : இராணுவ ரீதியாக ஏதாவது தனக்குச் சாதகமான வெற்றி நிலை ஏற்பட்டால் மட்டுமே சிறீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். பேச்சுவார்த்தை மேசைக்கு வருவார். அதுவரை அவர் இராணுவத் தீர்வையே நாடித் தொடர்ந்து அதிலே ஈடுபடுவார்.

கேள்வி : சிறீலங்கா அரசினர் தமது முழுப் படை பலத்தையும் பிரயோகித்து இறுதியில் உங்கள் இயக்கத்தையே அழித்து விடுவர் என்று நீங்கள் கருதவில்லையா?

பிரபா : தமிழீழ விடுதலைப் பிரச்சனைக்கு இராணுவ ரீதியாகத் தீர்வு கண்டுவிடலாம் என ஜே.ஆர் நினைக்கக்கூடும். ஆனால் பெரிய அளவில் ‘இனக்கொலை’ ஒன்றை நடத்தி முடிப்பதிலேயே அவர் வெற்றி காண முடியும். எமது இலட்சியத்தை அடையும்வரை ஒருவர் பின் ஒருவராக போராடிச் சாவதற்கு எம்மிடம் ஏராளமான இளைஞர்கள் உண்டு.

கேள்வி : புலிகளின் இராணுவ பலத்தையும், சிறீலங்கா அரசின் இராணுவ பலத்தையும் நீங்கள் எவ்வாறு கணக்கிடுகிறீர்கள்?

பிரபா : இராணுவ ரகசியம் எதையும் நான் கூற முடியாது. சிங்கள இராணுவத்தை தமிழீழ மண்ணை விட்டு விரட்டும் ஆற்றல் எம்மிடமுண்டு. சிறீலங்கா இராணுவத்தை தோற்கடிக்கும் அளவுக்கு போதுமான ஆதரவைத் திரட்ட எமது இயக்கத்தினால் முடியும்.

தமிழீழம் எப்போது?

கேள்வி : சுதந்திர இறைமையுள்ள தமிழீழ தனிநாட்டை அடைவதற்குக் குறிப்பிட்ட காலக்கெடு ஏதாவது நிர்ணயித்துள்ளீர்களா?

பிரபா : தமிழீழ நாட்டை நாம் எப்போது மீட்போம் என்று வரையறுத்து என்னால் கூற முடியாது. ஆனால் நிச்சயமாக நாம் அதனை மீட்டே தீருவோம். இது ஓரளவு சர்வதேச அரசியல் நிலையிலும், சிங்கள அரசுக்கு ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடியிலும் தங்கியுள்ளது.

எமது ஆயுதப் போராட்டம் காரணமாக சிங்களத்துப் பொருளாதாரச் சீரழிவு ஏற்பட்டே தீரும். ஜெயவர்த்தனாவின் வெளிநாட்டு ஆதரவாளர்களால், இலங்கைத்தீவை ஒரே நாடாக வைத்துக் கொள்வதற்கு ஜெயவர்த்தனாவினால் முடியாது என்பது உணரப்பட்டவுடன், அவர்கள் அவரைக் கைவிடுவார்கள். அவரிடமுள்ள துப்பாக்கிகளாலும், குண்டுகளாலும், கவச வண்டிகளாலும், அவரது ஆட்சியை எதிர்த்துத் தொடர்ச்சியாகப் போராடிவரும் எம்மை அசைத்துவிட முடியாது.

கேள்வி : சிறீலங்கா அரசுடன், கௌரவமான அரசியல் உடன்பாடுகாண முடியும் என்று நீங்கள் கருதவில்லையா?

பிரபா : ஐக்கிய இலங்கைக்குள் அமைந்த அரசியல் உடன்பாட்டினைக் காணமுடியும் என்கின்ற காலகட்டத்தையும் எதிர்பார்ப்புக்களையும் நாம் இன்று கடந்து வந்து விட்டோம். தமிழீழ நாட்டை மீட்கும் எமது குறிக்கோளிலிருந்து அணுவளவேனும் பின்வாங்குவதற்கோ, திரும்பிப்பார்ப்பதற்கோ இனி இடமேயில்லை.

கேள்வி : தமிழீழத் தாயகம் என்னும் பெயரில் நீங்கள் விடுவிக்கப்பட விரும்பும் பூகோள எல்லைகள் எவை?

பிரபா: தமிழீழம் ஏற்கனவே இயங்;கிக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்களுக்கெனத்தனியானதோர் தாயகம் இலங்கைத் தீவிலுண்டு. அத்தாயகத்தில் எமது இறைமையையும் சுதந்திரத்தையும் ஆட்சியையும் நிலைநிறுத்தவே நாம் போராடி வருகிறோம்.

கேள்வி : நீங்களே யுத்தகளத்தில் நின்றிருக்கிறீர்களா?

பிரபா: ஆம், ஏராளமான எமது இராணுவத்தாக்குதல்களில் நான் பங்குபற்றியுள்ளேன். எமது இராணுவத்தில் நாம் எல்லோரும் பங்கு பற்றியே தீரவேண்டும்.

கேள்வி: உங்கள் முதலாவது கெரில்லா நடவடிக்கை என்ன?

பிரபா: யாழ்ப்பாணமாநகர முதல்வராக இருந்த அல்பிரெட் துரையப்பாவை 1975 இல் சுட்டுக் கொன்றதே எனது முதல் நடவடிக்கையாக இருந்தது. அதைத் தொடர்ந்து எத்தனையோ தாக்குதலில் பங்குபற்றியுள்ளேன்.

நிலாவெளியில் நடைபெற்ற தாக்குதலின்போது பெரும்பாலும் அங்கேயே தங்கியிருந்தேன். 1983 ஜுலையில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவமும் என் தலைமையிலேயே இடம் பெற்றது.

கேள்வி: ‘ரெலோ’ மீது நீங்கள் போர் தொடுத்த காரணம் என்ன? தீவிரவாதிகள் மத்தியிலுள்ள ஒற்றுமையின்மை, உங்கள் இயக்கத்தையே பாதிக்கும் என்பதை நீங்கள் சிந்திக்கவில்லையா?

பிரபா : எமது போராட்டத்தில், நாம் ஒருமைப்பாடான அணுகுமுறையையே பின்பற்ற வேண்டும். எமது மத்தியிலுள்ள ஒற்றுமையின்மை, தமிழின விடுதலை இயக்கத்துக்கே பலவீனமானதுதான்.

ஆனால் இந்த ஒற்றுமையீனம் சிலரால் திட்டமிட்டே வளர்க்கப்பட்டு வந்துள்ளது. எனது கருத்தின்படி, ஒரேயொரு பலம் வாய்ந்த தீவிரவாத இயக்கமே விடுதலைப்போரைத் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளாகிய நாமே, சிறீலங்கா இராணுவத் தாக்குதல்களைப் பல கட்டங்களில் முறியடித்துள்ளோம்.

ஒன்றுபட்ட ஐக்கியமான அமைப்புக்கு எதிராக நடவடிக்கையெடுப்பது சிங்கள் ராணுவத்துக்கே மிக ஆபத்தானது. இப்போது விடுதலைப் புலிகளே பலம் வாய்ந்த ஒன்றுபட்ட தனித்துவமான இராணுவமாக விளங்குகின்றனர்.
இயக்க ஒற்றுமை

கேள்வி: பேச்சுவார்த்தைகளினால் இந்த ஒற்றுமையயை ஏற்படுத்த உங்களால் முடியாதா?

பிரபா: ஏனைய இயக்கங்களே தங்களுக்குள் நம்பிக்கை இழந்து, தமக்குள்ளேயே ஒற்றுமையின்றித் தவிக்கும் போது, இந்த இயக்கங்களில் யாருடன் நாம் எதைத்தான் பேச முடியும்?

கேள்வி: ஏனைய குழுக்களை இல்லாதெழிப்பதே, ஐக்கியமான அணுகுமுறைக்கு ஒரே வழியா?

பிரபா: நாம் எந்த ஒரு இயக்கத்தையும் துடைத்தெறியவில்லை. ‘ரெலோ’வுக்கு ஒரு பாடம் கற்பித்தோம். ‘ரெலோ’ எமது இயக்க வீரர்களை கொலை செய்து வந்தது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிடின், விடுதலைப்புலிகள் இயக்கம், படிப்படியாக செயலிழந்துவிடும்.

ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா குழு) இயக்கத்துடன் எமக்குப் பிரச்சனை ஏற்பட்டாலும், நாம் மிகவும் பொறுமையுடன் இருப்பதை நீங்கள் அவதானிக்க முடியும்.

‘ரெலோ’ விடயத்திலும் எம்முடன் போரிட வந்த 100 உறுப்பினர்கள் வரை போரில் கொல்லப்படினும், 400 ‘ரெலோ’ உறுப்பினர்களை மட்டுமே கைது செய்து, அவர்களது ஆயுதங்களையும், தளவாடங்களையும் சுவீகரித்தோம்.

உண்மையான எதிரியான சிங்களப் படைகளுடன் போரிட முடியாத இவர்களிடம் ஆயுதங்கள் இருக்கக் கூடாதென்பதே எமது குறிக்கோள். எமது இயக்க வீரர்கள் சிங்கள இராணுவத்தை முகாமுக்குள் முடக்கி வைத்திருக்கும்போது, ‘ரெலோ’ குழுவினர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டனர்.

விடுதலைப் போராட்டத்திற்கான முழுப்பொறுப்பையும் விடுதலைப்புலிகளே ஏற்பதுதான் நமக்கு நல்லது என்று யாழ்குடி மக்கள் கூறுகிறார்கள்.

கேள்வி: உங்களை ‘பயங்கரவாதி’ என்று அழைக்கும் ஜெயவர்த்தனாவுக்கு நீங்கள் கூறுவதென்ன,

பிரபா: நாம் பயங்கரவாதிகள் அல்லர்: அரச பயங்கரவாதத்தின் கோரப்பிடியிலிருந்து வெளியேறிச் சுதந்திரமாக வாழத் துடிக்கும் தமிழீழ மக்களின் பிரதிநிதிகள் நாமே!

(தொடர்ந்து வரும்)
அற்புதன் எழுதும் அரசியல்தொடர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானில் இருந்து தரையில் இறங்கிய படை!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-65)

p8.jpg
 

ரேலொ இயக்கத்தை தடைசெய்த பின்னர் ‘இந்தியா டுடே’ ஆங்கில சஞ்சிகைக்கு பிரபாகரன் அளித்த பேட்டியின் ஒரு பகுதியை சென்ற வாரம் தந்திருந்தேன்.

1986 இல் பிரபாவின் மனோபாவம் எத்தகையதாக இருந்தது என்பதை இப்பேட்டி புலப்படுத்துகிறது.

பேட்டியிலிருந்து மேலும் சில முக்கிய பகுதிகள்:

கேள்வி: கம்யுனிச நாடுகளில் இருந்து நீங்கள் ஆயுத உதவி பெறுவதாக ஜயவர்த்தனா குற்றம் சாட்டுகிறாரே?

பிரபா : கம்யுனிஸ்ட் நாடுகளில் இருந்து எனக்கு ஆயுதங்கள் கிடைத்தால் இந்தப் பேட்டியை சுதந்திர தமிழீழத்தில் இருந்து தந்திருப்பேன்.

கேள்வி: தமிழ் ஈழத்துக்கு எந்த விதமான அரசியலமைப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

அங்குதான் யுத்தம்
பிரபா: தமிழீழ அரசு ஒரு சோசலிச அரசாக அமைந்திருக்கும். மக்களால் ஆதரிக்கப்படும் ஒரே ஒரு அரசியல் கட்சியே அங்கு இருக்கும். பல கட்சி ஜனநாயகத்தை நான் விரும்பவில்லை. ஒரு கட்சி அரசு மூலமே விரைவில் தமிழீழத்தை வளர்ச்சயடைந்த ஒரு நாடாக மாற்றியமைக்க முடியும்.

கேள்வி: பாராளுமன்ற ஜனநாயகம் இருக்குமா?

பிரபா: மக்கள் ஜனநாயகக் குடியரசாக, யூகோஸ்லேவிய அமைப்பு முறையில் ஒரு கட்சியை மக்கள் தெரிவு செய்வார்கள்.

கேள்வி: தமிழீழ வெளிவிவகாரக் கொள்கை எப்படியிருக்கும்?

பிரபா: நாம் சோசலிச அணிகளுடன் இருப்போம். ஏனெனில் அப்படியான நாடுகள்தான் இன்று எமக்கு உதவி புரிகின்றன.

கேள்வி: அண்மைக்காலத்தில் நீங்கள் யாழப்பாணம் போனதுண்டா?

பிரபா: என்னுடைய நடவடிக்கைகள் இரகசியமானவை. எனது நம்பிக்கைக்குரிய தளபதிகள் என்னோடு தினமும் தொடர்புகொள்வார்கள்.


கேள்வி: ஜயவர்த்தனா உங்கள்மீது சுமத்தும் குற்றச்சாட்டு என்னவெனில், இந்திய மண்ணிலிருந்து உங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கிறீர்கள் என்பதாகும். அது பற்றி என்ன கூறுகிறீர்கள்.

பிரபா: எமது போராட்டம் எமது மண்ணான தமிழீழத்திலேயே நடைபெறுகிறது. எமது யுத்தத்தை அங்கேயே நடத்துகிறோம். தேவையேற்படும் போது நாமும் அங்கு செல்வோம். இங்கிருந்து போராடும் எண்ணம் நமக்கு இல்லை. நாம் இங்கிருப்பது சர்வதேச அளவில் அரசியல் பிரசாரம் செய்வதற்காகவே.

கேள்வி: இந்திய அரசின் ஈடுபாட்டை எவ்வளவு தூரம் போற்றுகிறீர்கள்?

பிரபா: எமது இரட்சியத்திற்கு இந்திய அரசின் அனுதாபம் உண்டு. எம்மை இங்கு தங்குவதற்கு அனுமதித்துள்ளதே இந்திய அரசின் மிக உயர்ந்த மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டு. இந்தியா தலைமறைவாக வாழும் சகல அரசியல் தலைவர்களுக்கும், இரட்சக்கணக்கான ஈழமக்களுக்கும் அடைக்கலம் தந்துள்ளது.

கேள்வி: இந்தியா ஐக்கிய இலங்கை என்ற அமைப்புக்குள் தீர்வைக் காண முயல்கிறது. நீங்கள் ஈழம் தவிர வேறு எதனையும் ஏற்பதில்லை என்கிறீர்கள். இதிலே முரண்பாடு இல்லையா?

பிரபா: நாம் எமது மக்களின் அரசியல் அபிராசைகளையே பிரதிபலிக்கிறோம். எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக இந்திய அரசு நடக்காது என்று நம்புகிறோம்.

எமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற இந்தியாவின் ஆதரவு தேவை. அதே சமயம் எமது தமிழீழ மக்களுக்கு இறைமையும், சுயநிர்ணய உரிமையும் உண்டு.

அதுதான் பிரபா அளித்த பேட்டி. ஒரு கட்சி முறைக்கு ஆதரவு, பல கட்சி ஜனநாயகத்திற்கு எதிர்ப்பு போன்ற அம்சங்கள் பிரபாவின் பேட்டியில் ஏனைய இயக்கங்களை அச்சுறுத்துவதாகவே இருந்தன.

IPKF6.jpg

எதிர்ப் பிரசாரம்

ரெலோவுக்கு நடந்தது தமக்கும் நடக்கும் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளொட் போன்ற அமைப்புக்கள் நம்பத் தொடங்கிவிட்டன.

“யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாம்களை புலிகள் உளவறிகிறார்கள்: விபரம் திரட்டுகிறார்கள்” என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். தமிழ்நாட்டில் அறிவித்தது.

‘ஈழப்போராளி’ என்றொரு பத்திரிகை தமிழ்நாட்டிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பால் வெளியிடப்பட்டது. வரதராஜப்பெருமாள்தான் அதன் பொறுப்பாளராக இருந்தார்.

அதுவரை காலமும் தமிழ்நாட்டில் பிரசார வேலைகளை கவனித்துவந்த டேவிற்சன் யாழ்ப்பாணம் திரும்பினார்.

பத்திரிகை வேலைகளுக்கு பொறுப்பாக இருந்த ரமேஷ்சுக்கும் பத்மநாபாவுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டன.

அதனால் வரதராஜப்பெருமாள்  தமிழ்நாட்டிலிருந்து ஈழப்போராளி என்னும் பத்திரிகையை பொறுப்பேற்கச் செய்தார்.

புலிகளுக்கு எதிராக கடும் பிரசார ஏடாக ‘ஈழப்போராளி’ வெளிவந்தது.

‘ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்’ என்று தலைப்புச் செய்தியும் வெளியிடப்பட்டது.

டக்ளஸ் தேவானந்தாவும் அரவது பக்கம் நின்ற ரமேஷ், டேவிற்சன், இப்ராகீம் போன்றவர்கள் புலிகளுக்கு சார்பானவர்களாகக் கருதப்பட்டனர்.

பத்மநாபாவும் அவருடன் நின்ற சுரேஸ் பிரேமச்சந்திரன், வரதராஜப்பெருமாள் போன்றோர் தீவிர புலி எதிர்ப்பாளர்களாக கருதப்பட்டனர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். பிரச்சனையில் கிட்டுவின் உதவியோடு டக்ளஸ் தேவானந்தா அணியினர் இயக்கத்தை கைப்பற்றத் திட்டம் என்றும் ஒரு பிரசாரம் செய்யப்பட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். உள் இயக்கப் பிரச்சனையை பேசித்தீர்க்கவும், வெளிநாட்டு சந்தையில் ஆயுதம் வாங்கவும் இந்தியா செல்லப் புறப்பட்டார் டக்ளஸ் தேவானந்தா.

படகுப் பயணம்

யாழ்ப்பாணம் குருநகரில் இருந்து படகு புறப்பட்டது.

காலநிலை சீராக இல்லை. கடலின் நீரோட்டம் மோசமாக இருந்தது. படகும் அதன் கொள்ளளவுக்கு மீறிய சுமையோடு சென்றது.

நடுக்கடலில் பயங்கர அலையொன்று சுழன்றடிக்க படகு கவிழ்ந்தது. கவிழ்ந்த படகில் தொற்றிக் கொண்டு நின்றனர் சிலர்.

சுகிர்தன், அசோக், அகிலன், எட்வேர்ட் என்னும் நான்கு பேரும் தம்மால் நீந்திக் கரை சேரமுடியாது என்று நினைத்து விட்டனர்.

கழுத்தில் கட்டியிருந்த சயனைட்டைக் கடித்துக்கொண்டு படகின் பிடிப்பை விட்டனர். கடலில் விழுந்தனர்.

ஏனையோர் படகில் பிடித்தபடி தத்தளித்துக்கொண்டிருந்தனர்.

யாராவது ஒருவர் கரைக்குச் சென்றால்தான் வேறு படகுகளை உதவிக்கு அழைக்கவும் முடியும்.

நடுக்டகடலில் இருந்து கரை நோக்கி நீந்தத் தொடங்கினார் டக்ளஸ் தேவானந்தா.

கிட்டத்தட்ட பத்துமணி நேர நீச்சல். திசை தெரியாமல் அலைகளில் சிக்கித்தடுமாறி நீந்திவர நீண்ட நேரமானது. அவரோடு சேர்ந்து படகின் ஓட்டியாகச் சென்ற கென்னடி என்னும் உறுப்பினரும் கரைக்கு வந்து சேர்ந்தார்.

அதன் பின்னர்தான் கரையில் இருந்து படகுகள் உதவிக்கு விரைந்தன.

ஆனால் அதற்கு முன்னரே படகில் தொங்கிக் கொண்டிருந்த ஏனைய மூன்று உறுப்பினர்கள் கடலில் விழுந்து காணாமல் போய்விட்டனர்.

ஜீவன், கலீல், காமினி, ரமணன் ஆகிய நான்கு பேர் மட்டுமே படகில் தமது பிடியை தளரவிடாமல் தொங்கிக்கொண்டிருந்தனர்.

அவர்களை மீட்டுக்கொண்டு, கடலில் விழுந்தவர்களை பல படகுகளில் தேடினார்கள். பலன் இல்லை.

மறுநாள்தான் சடலங்கள் கரை ஒதுங்கியது. சயனைட் கடித்த உறுப்பினர்களது சடலங்கள் நீலம்பாலித்த நிலையில் கரை ஒதுங்கியிருந்தன.

மொத்தம் ஏழு பேர் கடலில் பலியானார்கள். அத்தனை பேரும் டக்ளஸ் தேவானந்தாவின் மெய்ப் பாதுகாவலர்கள்.  மக்கள் விடுதலைப் படையின் முன்னணி உறுப்பினர்கள்.

எட்வேர்ட் (கோப்பாய்), இமாம் (சாவகச்சேரி), சுகிர்தன் (மன்னார் தளபதி) நடராஜா (திருமலை), அசோக் (இளவாலை), ஞானம் (மட்டக்களப்பு) ஆகியோரே கடலில் பலியானவர்கள் ஆவர்.

ஆயுதம் வாங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்கக் கட்டிகளும் கடலில் தொலைந்து போயின.

இறுதிச் சடங்குகள்

கடலில் பலியான ஏழுபேரினதும் இறுதிச் சடங்குகள் யாழ்ப்பாணத்தில் மிகப்பாரியளவில் நடத்தப்பட்டன.

பலியான உறுப்பினர்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்தி பொதுக்கூட்டமும் நடத்தும் முறையை யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் சிறப்பாகச் செய்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புத்தான்.

டேவிற்சன்தான் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளைப் பொறுப்பேற்று திறம்படச் செய்து வந்தார்.
ஏழு பேரின் இறுதிச் சடங்கும் எழுச்சிகரமாக நடத்தப்பட்டது. மானிப்பாயில் வெள்ளம் போல் மக்கள் திரண்டிருக்க

ஏழுபேரின் உடல்களுக்கும் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. சிதைகளுக்கு டக்ளஸ் தேவானந்தா தீமூட்டினார்.

மதச்சார்பற்ற இறுதிச் சடங்காக உணர்ச்சிகரமாக நடந்து முடிந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். நடத்திய மிகப்பெரிய இறுதி அஞ்சலி நிகழ்ச்சியும் அதுதான்.

TAMIL+EEZHA+VIDUTHALAIPULIKALIN+THALAIVA
அதிரடித் தாக்குதல்

இதற்கிடையே இக்கட்டுரைத் தொடரில் தவறவிட்ட ஒரு முக்கிய மோதல் ஒன்றைச் சொல்ல வேண்டும்.

யாழ்ப்பாணம் சுதுமலையில் புலிகளது முகாம் ஒன்று இருந்தது.

புலிகளது யாழ்மாவட்ட தளபதி கிட்டு அங்குதான் தங்கியிருந்தார்.

சுதுமலை முகாம் பற்றிய விலாவாரியான தகவல் இலங்கை அரசுக்கு கிடைத்து விட்டது.

1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி. காலை நேரத்தில் மூன்று ஹெலிகொப்டர்கள்.

ஹெலிகொப்டர்கள் ஏன் வருகின்றன? வழக்கம் போல வட்டமடித்துவிட்டுச் சென்று விடக்கூடும் என்று மக்கள் நினைத்தனர்.

ஆனால், மூன்று ஹெலிகளும் புலிகளது சுதுமலை முகாமுக்கு அருகே தரையிறங்கின.

நவீன ஆயுதங்களோடு குதித்தனர் இராணுவத்தினர். ஏ.கே.47, எல்.எம்.ஜி, ஆர்.பி.ஜி. மோட்டார்களோடு அதிரடிப்பயிற்சி

பெற்ற இராணுவத்தினர் புலிகளது முகாமை நோக்கி பாய்ந்தனர்.

புலிகளது முகாமில் இருந்தும் பதிலடி ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் ஹெலியில் படையினர் வந்து இறங்கிய விடயம் ஏனைய இயக்கங்களுக்கு எட்டிவிட்டது.

ஆயுதங்களோடு சுதுமலை நோக்கி ஏனைய இயக்க உறுப்பினர்களும் விரைந்தனர்.

புலிகளது முகாமில் அப்போது கிட்டுவும் இருந்தார். வோக்கி டோக்கி மூலம் ஏனைய தமது முகாம்களுக்கு செய்தி அனுப்பினார் கிட்டு.

பல்வேறு திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுவதை அறிந்த இராணுவத்தினர் தாக்குதலை நிறுத்திவிட்டு, ஹெலிகளில் ஏறிக்கொண்டனர்.

தமக்கு இக்கட்டான நேரத்தில் உதவிக்கு விரைந்த ஏனைய இயக்கங்களுக்கு நன்றி சொன்னார் கிட்டு.

யாழ் குடாநாட்டில் வான் வழியாக வந்திறங்கி அதிரடித் தாக்குதல்களை நடத்த இராணுவத்தினர் திட்டமிட்டிருந்தனர்.

அத்திட்டத்தின் முதலாவது தாக்குதல்தான் சுதுமலைத் தாக்குதல்.

ஆனால், சுதுமலையில் கிடைத்த பதிலடியில் இருந்து படையினர் தப்பிச் சென்றதே பெரிய காரியமாகிவிட்டது.

அதனால் வான் மூலமாக தரையிறங்கி அதிரடித் தாக்குதல் நடத்தும் திட்டத்தை அத்தோடு கைவிட்டனர் இராணுவத்தினர்.

தமது முகாமை நோக்கி வந்து முன்னேறிய படையினரை திருப்பியனுப்ப புலிகள் தீரமுடன் சமரிட்டதை மறுக்க முடியாது. அதே சமயம் ஏனைய இயக்கங்கள் அத் தாக்குதலை முறியடிக்க செலுத்திய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாகும்.

இஸ்ரேலிய மொசாட் ஆலோசனைப்படிதான் வான்மூலம் வந்து தரையிறங்கும் தாக்குதல்களுக்கு அன்றைய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலி அனுமதி வழங்கியிருந்தார்.

பேச்சு முயற்சி

மீண்டும் 1986ம் ஆண்டு காலப்பகுதிக்குச் செல்லுவோம்.

இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவுடன் மறுபடியும் பேச்சு நடத்த முன்வந்தது தமிழர் விடுதலைக் கூட்டணி.

மாகாணசபைத் திட்டத்தையும் பரிசீலிக்க முன்வந்தார் அமிர்தலிங்கம்.

ஈழப் போராளி அமைப்புக்கள் கூட்டணியின் நிலைப்பாட்டை கடுமையாகக் கண்டித்தன.

எனினும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமை அதனைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

இயக்கங்கள் அரசியல் விவேகமற்றவை என்பது போலவே கூட்டணியினர் கூறிவந்தனர்.

போருக்கு இயக்கங்கள். பேச்சுக்கு கூட்டணி என்று நம்பவைக்க முற்பட்டது மூலமே இயக்கங்களின் கடுமையான வெறுப்புக்கு ஆளாகியது கூட்டணி.

நூற்றுக்கணக்கான போராளிகளை பலிகொடுத்து இயக்கங்கள் போராடிக் கொண்டிருந்த நேரம் அது.

அந்த நேரத்தில் இயக்கங்களின் தாக்குதல்களால்தான்; ஜே.ஆர். பேச்சுக்குவரவே ஒப்புக்கொள்ளவேண்டியிருந்தது.

தமது தாக்குதல்ளால் கிடைக்கும் பலன்களை கூட்டணி அனுபவிக்க நினைப்பதாக இயக்கங்கள் வெறுப்புக் கொண்டன.

குறிப்பாக, புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் அமிர்தலிங்கம் அன்ட் கொம்பனி என்றும், தமிழர் வியாபாரக் கூட்டணி என்றும் கூட்டணியை கேலியாக அழைக்கத் தொடங்கினர்.

(தொடர்ந்து வரும்)
-அரசியல் தொடர் எழுதுவது அற்புதன்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணக் கோட்டை மீது ஈ.பி.ஆர்.எல்.எஃப். அடித்த ஷெல்களால் பின்வாங்கிய இராணுவத்தினர்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-66)

thraujapa-680x365.jpg
 

பேச்சும்-வேட்டையும். ஈழப் போராளி அமைப்புக்களது விருப்பங்களுக்கு மாறாக ஜே.ஆர். அரசுடன் பேச்சு நடத்த முன்வந்தனர் கூட்டணியினர்.
இந்திய அரசு சொன்னால்தான் பேச்சுவார்த்தைகளுக்கு செல்லுகிறோம் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தெரிவித்தனர்.

திம்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கொழும்பில் ஜே.ஆர். அரசுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே 1986 ஜுலை மாதம் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.

மாகாண சபைத் திட்டத்தை கொழும்பில் வைத்து கூட்டணியினர் பரிசீலித்துக் கொண்டிருந்தபோது வடக்கு-கிழக்கில் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தன.

திருக்கோணமலையில் மட்டும் நூறு பேர் வரை கொல்லப்பட்டனர். அவர்களில் மூதூர் அகதி முகாமில் இருந்து மட்டும் 60 பேர் வரை கொல்லப்பட்டனர். 40 போ வரை காணாமல் போயினர்.

மன்னார் மாவட்டத்தில் 50 பேர்வரை கொல்லப்பட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 பேர் பலியானார்கள்.

வவுனியாவில் 30 பேர் வரை சுட்டக் கொல்லப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் 25 பேர் வரை கொல்லப்பட்டனர்.

கூட்டணிமீது பாய்ந்த ‘வீரவேங்கை

ஒருபுறம் இராணுவ நடவடிக்கை காரணமாக தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதை இயக்கங்கள் கடுமையாகக் கண்டித்தன.

வீரவேங்கை விமர்சனம்
ஜே.ஆர். அரசு முன்வைத்துள்ள மாகாண சபை தீர்வு யோசனை தொடர்பாக வீரவேங்கை பத்திரிகையில் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
hfhfhhf.jpg

இந்திய அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட திம்பு மாநாட்டில் இந்திய அரசின் வார்த்தைக்கு மதிப்பளித்து

தூக்குக்கயிறு

இவையெல்லாவற்றையும் விட ஜெயவர்த்தனாவின் மாகாணசபைத் திட்டம் ஒரு தூக்குக் கயிறு. இதனை ஏற்றுக் கொண்டால் இலங்கைத்தீவு ஒரே நாடு என்பதனையும், ஒற்றையாட்சி நாடென்பதையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும்.

பௌத்தம் அரச மதம், சிங்கக் கொடி, சிங்கள தேசிய கீதம் என்பவற்றை உள்ளடக்கிய ஒற்றையாட்சி என்னும் தூக்குக் கயிற்றில் நாமே நமது தலையைக் கொடுத்தது போலாகிவிடும்.

இத்தகைய இழி நிலையை ஏற்பதற்கா 1977இல் இருந்து இதுவரை இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களை பலிகொடுத்தோம்?

கொடிய விஷத்தை அமிர்தமாகக் கருதிக் கடித்துத் தின்று உயிரைத் தியாகம் செய்த இளைஞர்கள் எத்தனை பேர்?

தமிழீழ இயக்கங்களையும், இந்திய அரசையும் ஏமாற்றி கண்ணாமூச்சி காட்டும் மாகாணசபைத் திட்டத்தை முன் வைத்து உலக அரங்கிலே தான் நியாமாக நடப்பதுபோல நாடகமாடுகிறார் ஜே.ஆர்.

உண்மையில் ஜெயவர்த்தனா நடத்தி முடிக்க விரும்புவது தமிழர்களுக்கு சமவுரிமை அளிக்கும் சமரசமல்ல. தமிழர்களை மீளா அடிமை நிலைக்குள் தள்ளும் சாணக்கியம் நிறைந்த சமரசத் திட்டமாகும்.

தமிழீழ மக்களிடமிருந்து நூற்றுக்கு நூறுவீதம் “இறைமையுள்ள சுதந்திரத் தமிழீழம்” என்று 1977இல் வீர முழக்கமிட்டது கூட்டணி.

1979 இல் மாவட்டத்துக்குப் பின்னால் ஆவலட்டம் பிடித்துக் கொண்டு ஓடியது கூட்டணி.

கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றி தமது நாவன்மையால் வாக்கு வேட்டையாடிய அரசியல் குத்துக்கரண வீரர்கள், இன்றும் அதே பழைய மாவட்டத்தை ‘மாகாணமாக்கி’ தமிழர்களை கிணற்றிலே விழுத்த ஜெயவர்த்தனாவுக்கு ஒத்துழைப்புத் தருகின்றனர்.

இல்லாவிட்டால், மாகாணசபை திட்டத்தில் கூட்டணியினரோடு 90 வீத உடன்பாடு கண்டுவிட்டதாக ஜே.ஆர். துணிந்து கூறுவாரா?

டில்லியில் இனி நடைபெறும் மூன்றாவது சுற்றுப் பேச்சில், வடக்கு-கிழக்கு இணைப்பு விவகாரமே முக்கிய இடம்பெறும் என்று, 11.9.86இல் வீரகேசரிக்கு அளித்த பேட்டியில் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதிலிருந்தே ஏனைய பிரச்சனைகளில் கூட்டணிக்கு ஜே.ஆர். அரசோடு உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என்பது தெரிகிறதல்லவா?

தமிழீழ மக்களையும், தமிழீழ போராளிகளையும் அமிர்தலிங்கம் கூட்டணியினர் ஏமாற்றுவதை உணரமுடியாத அறிவிலிகள நாங்கள்?”

இவ்வாறு கூட்டணியையும், ஜே.ஆரின் மாகாணசபைத் திட்டத்தையும் கடுமையாக சாடியிருந்தது ‘வீரவேங்கை’.

83493147_83493140  யாழ்பாணக் கோட்டை  மீது  ஈ.பி.ஆர்.எல்.எஃப். அடித்த ஷெல்களால்  பின்வாங்கிய இராணுவத்தினர்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-66) 83493147 83493140தாக்குதல்

19.9.86 திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள தெகிவத்தை இராணுவ முகாமில் இருந்து ரோந்து அணியொன்று புறப்பட்டது.

முன்னால் கால் நடையாக 15 பேர் வந்தனர். அவர்களின் பின்னால் ஜீப் ஒன்றில் ஏனையோர் வந்தனர்.

3ம் யூனிட் என்ற இடத்துக்கு அந்த ரோந்து அணிவந்த போது புலிகள் தாக்கினார்கள்.

திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத இராணுவத்தினர் பின்வாங்கினார்கள். ஒருவர் கொல்லப்பட்டார். அவரிடமிருந்த வு.56 ரக துப்பாக்கி புலிகளால் கைப்பற்றப்பட்டது.

அதே தினம் யாழ் மாவட்டத்திலும் ஒரு தாக்குதல் நடந்தது.

தொண்டமானாறு பாலத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவவீரர்கள் புலிகளால் தாக்கப்பட்டனர். இராணுவத்தினர் திருப்பிச் சுட்டனர். மோதலின் முடிவில் இராணுவத்தரப்பினர் ஒருவர் பலியானார்.

புலிகளது தரப்பில் சேதமில்லை.

21.9.86 அன்று பருத்தித்துறை இராணுவ முகாமில் இருந்து பலத்த ஷெல் அடிகள், மற்றும் துப்பாக்கி வேட்டுக்களை பொழிந்தபடி வெளியேறியது இராணுவம்.

புலிகளும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பினரும் இணைந்து இராணுவத்தினரின் முன்னேற்றத்தைத் தடுத்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அடித்த மோட்டார் ஷெல்கள் விழுந்து வெடிக்க ஆரம்பித்ததும் இராணுவத்தினர் பின்வாங்கிச் சென்று விட்டனர்.
images?q=tbn:ANd9GcQeLiDk8neRP9zhhL60I6G
யாழ்ப்பாணம் கோட்டை

‘ஷெல்’மாரி

யாழ்ப்பாணம் கோட்டை இராணுவ முகாமிலிருந்து தினமும் ‘ஷெல்’மாரி பொழிவது வழக்கமாகிக் கொண்டிருந்தது.
கோட்டை முகாமைச்சுற்றியிருந்த ஆயிரம் மீட்டர் பகுதியை பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியிருந்தனர். அப்பகுதிக்குள் யாரைக் கண்டாலும் இராணுவத்தினர் கண்ணை மூடிக்கொண்டு சுட்டுத் தள்ளிவிடுவர்.

கோட்டை முகாமிலிருந்து ஷெல் அடிப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

‘யாழ் மக்கள் ஒன்றியம்’ என்ற பெயரில் நடைபெற்ற அந்த ஊர்வலத்தில் பெருந் தொகையான மக்கள் கலந்து கொண்டனர். 27.8.86 இல் அந்த ஊர்வலம் நடைபெற்றது.

“கோட்டைக்குள் வீரமா? வெளியே வந்தால் ஓட்டமா?”
“வடக்கில் வீடுக்ள அழிப்பு. தெற்கில் வீடமைப்பு.”
“அழிக்காதே, அழிக்காதே, யாழ் நகரை அழிக்காதே!”
“எங்கள் பிள்ளைகளை அழிக்காதே, பள்ளி மாணவர்களைக் கொல்லாதே”

என்றெல்லாம் கோஷங்கள் எழுப்பியபடி, சுலோக அட்டைகளைத் தாங்கியபடி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது.

அப்போது கோட்டைக்குள்ளிருந்த இராணுவத்தினர் என்ன செய்தார்கள் தெரியுமா?

வழமைபோல ‘ஷெல்’ மாரி பொழிந்தார்கள். யாழ்-பழைய சந்தை, கே.கே.எஸ். வீதி, யாழ்-மத்திய கல்லூரி, சத்திரத்துச் சந்தி ஆகிய இடங்களில் n~ல்கள் வந்து விழுந்து கொண்டிருந்தன.

ilakkiyas  யாழ்பாணக் கோட்டை  மீது  ஈ.பி.ஆர்.எல்.எஃப். அடித்த ஷெல்களால்  பின்வாங்கிய இராணுவத்தினர்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-66) ilakkiyas

அன்னையர் முன்னணி
அன்னையர் முன்னணி என்னும் அமைப்பும் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வந்தது. யாழ் மாவட்ட அன்னையர் முன்னணித் தலைவிகளில் ஒருவர் திருமதி. ரி. குணநாயகம்.

“சிறைகளில் உள்ள எமது பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள்.” என்பதுதான் அன்னையர் முன்னணியின் பிரதான கோஷம்.

யு.என்.ஐ. செய்தி நிறுவன நிருபருக்கு அளித்த பேட்டியில் திருமதி ரி.குணநாயகம் சொன்னது இது:

“அண்மைக் காலமாக சிறீலங்கா படைகள் மேற்கொண்ட வன்முறைகள் காரணமாக 2 ஆயிரம் பேர்வரை இளம் பெண்கள் – பெரும்பாலும் கரையோரக் கிராமங்களில் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்.

யாழ்-குடாநாட்டில் வாழும் பொரும்பாலான பெற்றோர்களுக்கு அவர்கள் இறந்தால் கூட இறுதிக்கரியை செய்ய பிள்ளைகள் கிடையாது.

அவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள், அல்லது வெளிநாடுகளுக்கு தப்பியோடி இருப்பார்கள். அதுவும் இல்லாவிட்டால் ஏதாவது ஒரு தீவிரவாத இயக்கத்தில் பணியாற்றுவார்கள்.

எமது பிள்ளைகளை சிறீலங்கா அரசு கைதுசெய்து சித்திரவதை செய்தமை காரணமாகவே அவர்கள் ஆயுதமேந்தி போராட ஆரம்பித்தனர். இதற்கான முழுப்பொறுப்பையும் சிறீலற்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.”

ஈழவர் முன்னணி

ஈரோஸ் இயக்கத்தினால் ஈழவர் முன்னணி என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்காக முன்னின்று செயற்பட்டவர்களில் ஒருவர் பரராஜசிங்கம்.

மக்களைத் திரட்டி வெகுஜனப் போராட்டங்களை நடத்தினார்கள்.

ரெலோ இயக்கம் புலிகளால் தடை செய்யப்பட்ட போதும் யாழ்ப்பாணத்தில் ஏனைய நான்கு இயக்கப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளொட், புலிகள் ஆகிய நான்கு இயக்கங்களும் வாரத்தில் ஒரு தடவை சந்தித்து பிரச்சனைகள் குறித்து கலந்து பேசிக்கொண்டன.

 86ல் ஏழு நாள் போர்

யாழ்ப்பாணத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர 1986 மே மாதத்தில் முப்படைகளும் பாரிய நடவடிக்கையில் இறங்கினார்கள்.

மே 17 முதல் மே 24 வரை யாழ்ப்பாணத்திற்குள் முன்னேறும் முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கும் இயக்கங்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

விமானக் குண்டுவீச்சுக்கள் மத்தியில் பலத்த மோதல் தொடர்ந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். மோட்டார் தாக்குதலில் ஈடுபட்டது.

கோட்டை இராணுவ முகாமுக்கருகே இருந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். மோட்டாரிலிருந்து ஷெல்கள் சீறிக் கிளம்பிக் கொண்டிருந்தன.

திடீரென்று ஒரு ஷெல் மோட்டாருக்குள்ளேயே வெடித்தது. இரண்டு போராளிகளின் உயிரை எடுத்தது. அதன் பின்னரும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். தொடர்ந்து மோட்டார் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டது.

ஏனெனில் மோட்டார் தாக்குதலை விட்டால், இராணுவத்தினரை அச்சுறுத்த வேறு மார்க்கம் இருக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் ஏழு நாள் மோதலின் பின்னர் இராணுவத்தினர் தமது முயற்சியைக் கைவிட்டனர்.

ஏழுநாள் மோதல் முடிந்தவுடன் அதன் வெற்றியை புலிகள் அமைப்பின் தனித்த வெற்றியாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

உளி-மோகன் என்ற பெயரில் புலிகளின் பத்திரிகையில் ஒருவர் எழுதிய கவிதையில் ஒரு பகுதி இது:

“ஈண்டு பகையழித்து ஈழத் திருநாட்டை
ஆண்டு வருவதெல்லாம் ஆகா! நம் புலிப்படையே!
மீண்டு(ம்) பகைவன் படை மீறி வந்தால் – நம் புலிகள்
வேண்டும் வரை கொடுப்பர்! வெல்லும் தமிழீழம்”

ஏனைய இயக்கங்கள் மத்தியில் இதனால் கசப்புணர்வு ஏற்பட்டது.

(தொடர்ந்து வரும்)
-எழுதுவது அற்புதன்-

கிழக்கில்-தரையில்-முதலாவது கரும்புலி

Sans titre-4  யாழ்பாணக் கோட்டை  மீது  ஈ.பி.ஆர்.எல்.எஃப். அடித்த ஷெல்களால்  பின்வாங்கிய இராணுவத்தினர்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-66) Sans titre 41

5.12.95 அன்று மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பில் விசேட அதிரடிப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதுதான் கிழக்கு மாகாணத்தில் தரையில் நடத்தப்பட்ட முதலாவது கரும்புலித் தாக்குதலாகும்.

அத்தாக்குதலில் கரும்புலியாக பங்குகொண்டவர் மேஜர் ரங்கன் என்றழைக்கப்படும் தினே~;குமார். கரும்புலி ரங்கன் உட்பட 24 புலிகள் அத்தாக்குதலில் பலியானார்கள்.

கரும்புலி ரங்கனின் நினைவாக 5.01.96 அன்று மட்டக்களப்பு மியாங்குளம் சந்தியில் இராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் தொடுத்தனர். ரோந்து சென்ற படையினர் மீது புலிகள் நடத்திய தாக்குதல் அது.

ஒரு அதிகாரி உட்பட எட்டு இராணுவத்தினர் பலியானதாகவும், தமது தரப்பில் மூன்று பேர் பலியானதாகவும் புலிகள் அறிவித்தனர். பலியான புலிகளில் இருவர் பெண்கள்.

http://ilakkiyainfo.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.