Jump to content

தீபாவளி என்றால் என்ன?


Recommended Posts

தீபாவளி என்றதும் நமது நினைவுக்கு வருவது காசியிலுள்ள அன்ன பூரணி தேவியின் தங்க விக்ரகம் தான்.

கர்நாடக மாநிலம், "ஹொரநாடு' அன்னபூர்ணேஸ்வரி ஆலயத்தில் உள்ள மூலவரான அருள்மிகு அன்னபூர்ணேஸ்வரியும், ஆறரை அடி உயரத்தில் தங்கக் கவசத்துடன் தான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இக்கோவிலில் அம்மனை தரிசித்துக் கொண்டு வெளியில் வந்தவுடன், தீர்த்தப் பிரசாதத்துடன் கொஞ்சம் அரிசியும் வழங்குகின்றனர், அதை எடுத்து வந்து நமது வீட்டில் இருக்கும் அரிசிப் பானையில் போட்டு வைத்தால், குறைவற்ற உணவு தானியம் எடுக்க எடுக்கக் குறையாமல் இருக்கும் என்பது நம்பிக்கை. இக்கோவிலில் பக்தர்களுக்கு இருவேளை உணவுடன், காலை சிற்றுண்டி காபியுடன் வழங்கப்படுகிறது. சிறிய குழந்தைகளுக்குப் பாலும் வழங்குகின்றனர்.

* * *

நீண்ட ஆயுளுடன் வாழ தீபமேற்றுங்கள்!

கல்விக்கு சரஸ்வதி பூஜை என்றால், செல்வத்திற்கு தீபாவளி எனும் லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை முடிந்து 20வது நாள் தீபாவளி வருகிறது. வீட்டிற்கு வரும் லட்சுமியை வரவேற்கவே விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

செல்வத்திற்கு கடவுள் லட்சுமி, திருப்பாற் கடலில் அவதரித்தவள், விஷ்ணுவுக்கு மாலை அணிவித்து அவர் மார்பில் இடம் பிடித்தவள். இந்த நிகழ்ச்சிகள் நடந்த நாள்தான் தீபாவளி. எனவே தான் தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்கின்றனர். தீபாவளி அன்று வீடுகளில் நெய் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும். இதனால், "அகால மிருத்யு தோஷம்' ஏற்படாதிருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.

அகல் விளக்கில் தீபம் ஏற்றினால், சக்தி தரும் என்பது ஐதீகம்! அத்துடன் தீப சரஸ்வதி என்று 3 முறையும், தீப லட்சுமி என்று 3 முறையும், குல தெய்வத்தை நினைத்து 3 முறையும் ஆக மொத்தம் 9 முறை தீபத்தை நமஸ்காரம் செய்ய வேண்டும்.

* * *

தீபாவளியன்று கிடைத்த முக்தி!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் முத்துசுவாமி தீட்சிதர்!

"அமிர்த வர்ஷிணி' என்ற ராகம் பாடினால், மழை நிச்சயம் பொழியும் என்பது இசை ரசிகர்களின் நம்பிக்கை.

"ஆனந்தாம் குத தர்ஷணீ அமிர்த வர்ஷிணி!' என்ற கீர்த்தனையை அமிர்தவர்ஷிணி ராகத்தில் பாடி மழை வருவித்த மகான் முத்து சுவாமி தீட்சிதர். நவகிரகங்களுக்கும் கீர்த்தனைகளை பாடியுள்ளார். இவ்வளவு பெருமை வாய்ந்த அந்த மகான், இறைவனுடன் கலந்த நாள் தீபாவளித் திருநாள் அன்றுதான்.

* * *

தீபாவளியும் வடையும்!

குஜராத் பகுதிகளில் தீபாவளி மறுநாள் குடும்பத்திலுள்ள சண்டை, சச்சரவு, நோய் நொடி, ஏவல், சூனியம் வகையறாக்கள் நீங்கும் பொருட்டு, வீட்டில் உளுந்து வடை தயாரித்து, அதை மாலை 7 8 மணிக்குள் நான்கு தெருக்கள் கூடும் நாற்சந்தியில் எறிந்து விட்டு, திரும்பிப் பாராமல் வந்து விடுவது ஐதீகமாக கருதப்படுகிறது.

* * *

எமனை சாந்தப்படுத்தும் நாள்!

வட மாநிலங்களில் தீபாவளிக்கு முதல் நாள் எமனை சாந்தப்படுத்த தீபங்களை ஏற்றி வைக்கும் வழக்கம் இன்றும் உண்டு. இதை, "யம தீப் தான்' என்கின்றனர். இதற்கு ஒரு சுவையான கதை உண்டு...

ஹீமா மன்னரின் 16 வயது மகனுடைய ஜாதகத்தில் அவனுடைய ஊழ்வினையின் படி அவனுக்கு கல்யாணமான நான்காவது நாள் பாம்பு கடியால் மரணம் நிகழும் என்று கூறப்பட்டிருந்தது. ஆகையால், வருத்தமடைந்த அவனது மனைவி நான்காம் நாள் இரவு ஏகப்பட்ட விளக்குகளை எல்லா இடங்களிலும் ஏற்றி வைத்து, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை குவியலாக கணவனது அறையின் வாசற்படியில் கொட்டி வைத்தார். இரவு முழுவதும் பாட்டுப்பாடிக் கதைகளும் சொல்லிக் கொண்டு இருந்தார்.

பாம்பு வடிவத்தில் எமன் வந்த போது, அங்கே குவிந்திருந்த தங்கத்தின் ஒளி பாம்பின் கண்களை குருடாக்கியதால் அதனால் அறைக்கு உள்ளே வர இயலவில்லை, ஆகையால், அது அந்தக் குவியலின் மேல் ஏறி உட்கார்ந்து இரவு முழுவதும் இனிமையான பாடல்களை கேட்டுக் கொண்டு இருந்துவிட்டு காலையில் அமைதியாக திரும்பியது. இவ்வாறு அந்த மனைவி தன் கணவரின் உயிரை காப்பாற்றினாள். அப்போதிருந்து அந்நாள், "தான்த்ரா' என்றும், மரணத்தின் கடவுளான எமனை போற்றி வழிபடும் நாளாக, "யமதீப்தான்' என்று அழைக்கப்பட்டது.

* * *

Thanks:Varamalar...........

Link to comment
Share on other sites

தீபாவளி என்றதும் நமது நினைவுக்கு வருவது காசியிலுள்ள அன்ன பூரணி தேவியின் தங்க விக்ரகம் தான்.

எனக்கு அப்படி ஒன்றும் நினைவு வரவில்லையே எனக்க்கு நினைவு வாரது சிட்னி முருகன் கோயில் அன்னதானம்

:wink: :wink:

Link to comment
Share on other sites

தீபாவளியன்று கிடைத்த முக்தி!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் முத்துசுவாமி தீட்சிதர்!

"அமிர்த வர்ஷிணி' என்ற ராகம் பாடினால், மழை நிச்சயம் பொழியும் என்பது இசை ரசிகர்களின் நம்பிக்கை.

"ஆனந்தாம் குத தர்ஷணீ அமிர்த வர்ஷிணி!' என்ற கீர்த்தனையை அமிர்தவர்ஷிணி ராகத்தில் பாடி மழை வருவித்த மகான் முத்து சுவாமி தீட்சிதர். நவகிரகங்களுக்கும் கீர்த்தனைகளை பாடியுள்ளார். இவ்வளவு பெருமை வாய்ந்த அந்த மகான், இறைவனுடன் கலந்த நாள் தீபாவளித் திருநாள் அன்றுதான்.

தீபாவளி அன்று முக்தி கிடைக்கவேணும் என்றால் சொல்லுங்கப்பா... நான் நிறைவேத்தி வைக்கிறன்.. :mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வருடம், திருமணம் முடித்த நண்பர் சயந்தனுக்கு, தலைத் தீபாவளியாகும். அவருக்கு வாழ்த்துக்கள். வேறு யாரும் இரகசியாகமாகக் கொண்டாடுகின்றார்களோ தெரியாது!

Link to comment
Share on other sites

தீபாவளி என்றால் என்ன?

:roll: :oops: :evil: :? :lol:

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள் என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மானக்கேட்டை உணரவில்லை!

ஆரியரின் இறக்குமதியே தீபாவளி!

வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்குக் கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை - விரதம், நோன்பு - உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்! எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி - யார் - எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதைக் காதில் வாங்கக்கூடச் செவிப் புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லையே!

இப்படி நடப்பவர்கள் பாமரமக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் ஆங்கில வேதாந்தத்தில், ஆங்கில விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக்கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப் பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்? நம் பள்ளிகளும் கல்லு}ரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்கவில்லை என்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் - பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில்தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

1) ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2) தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3) விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4) ஆசைக்கு இணங்கிப் பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5) அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6) அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7) தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8) விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை விஷ்ணு வின் மனைவி நரகாசூரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்.

9) இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10) இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இவற்றை இப்போது ஆராய்வோம்.

இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் நிலநு}ல்கூடத் தெரியவில்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது? பூமி தட்டையா? உருண்டையா?

தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது?

கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்? பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்? இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம் இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது.

மற்றொரு ஊர் பிரகத்ஜோதிஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் 'ஆமாம்” என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள் எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போய்விட்டோம். அறிவியல் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் மோசம் போகலாமா?

?????????????????????????????????????????

தலைப்பு திருத்தப்பட்டுள்ளது - யாழ்பிரியா

Link to comment
Share on other sites

தீபாவளி குறித்து பல கட்டுரைகளை முன்பும் யாழில் வந்து கடுமையான விவாதங்களும் நடந்திருக்கின்றது. முன்பு ஆரம்பிக்கபட்ட தலைப்புகள் சிலவற்றை கீழே தருகின்றேன். படித்து பாருங்கள்.

தீபாவளி! தமிழனுக்கு மானக்கேடு

http://www.yarl.com/forum/viewtopic.php?t=7265

தீபாவளி கவிதை

http://www.yarl.com/forum/viewtopic.php?p=136172

அமெரிக்காவில் தீபத்திருநாளின் தபால் தலை

http://www.yarl.com/forum/viewtopic.php?p=115321

Link to comment
Share on other sites

தீபாவளி என்றால் என்ன?

நல்ல தண்ணி அடிக்கவும் அடிச்சுடுட்டு பயந்து பயந்து விட்டுக்கு போவதும் தான் நல்ல தலை சிறந்த தீபாவளி :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.