Jump to content

தேவையானவற்றை உள்வாங்குங்கள், தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு பரீட்சார்த்தமான முயற்சி, வரவேற்பைப் பொறுத்து இதைப்போன்ற பல ஆக்கங்களை வழங்குகின்றேன்... ... கேள்விகளும் கேட்கலாம்.. தெரிந்தவர்கள் பதில் அளிக்கலாம்....

நம் புலத்தமிழர்களிடம் தேவையான அளவு படிப்பறிவு, திறமை இருந்தும் நாம் ஏன் இன்னும் வெற்றியின் உச்சத்தை அடையவில்லை? சிலர் உச்சத்துக்கு சென்றிருந்தாலும் அவர்கள் சமுதாயத்தில் மதிக்க கூடிய நிலையில் இருப்பதில்லை! நல்ல பட்டப்படிப்புகளை படிக்கின்றார்கள்... பின்னர் பார்த்தால் ஒரு கடையை வைத்திருக்கின்றார்கள். திறமை இல்லாததால் தான் என்று நினைத்தால் அது தப்பு. முயற்சி இல்லை என்றும் சொல்ல முடியாது. ஏன் நாம் ஏற்கனவே இருக்கும் தொழிலை, மற்றவர்களால் கண்டு பிடிக்கப்பட்டவையை பாவித்து பணம் சம்பாதிக்க முயற்சி செய்ய வேண்டும்? நாமாக ஒரு புது வழி கண்டு பிடித்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் நம்மில் பலர் ஏன் அதனை செய்வது இல்லை... இப்படியான கேள்விகளுக்கு பதில் எனக்கு தெரியவில்லை. ஒருவர் ஒரு கடையை வாங்கினால்... தொடர்ந்து ஒரு 10 தமிழர்கள் கடை வாங்குவார்கள். ஒரு முறை ஒரு இன்டிப்பென்டன்ட் ரீட்டெயில் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியுடன் பேச சந்தர்ப்பம் கிடைத்த போது, நான் ஒரு இலங்கையர் என்று தெரியாமல் அவர் எனக்கு சொன்னது... என்னை அவமானப்பட வைத்தது.... அவர் சொன்னது " எனது நிறுவனம் ஒரு கோழித்துண்டை எறிந்தால், ஒரு சிறி லங்கன் அதை எடுத்தால், இன்னும் ஒரு 10 சிறி லங்கன் இந்த நிறுவனம் எப்படா கோழித்துண்டை எறியும் என்று பார்த்துக்கொண்டிருப்பார்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில், எந்த ஒரு நடவடிக்கையாக இருப்பினும் சொந்த வாழ்க்கையாகட்டும் அல்லது தொழில் ஆகட்டும் உங்களை நீங்கள் அறிய வேண்டியது முக்கியம். அதாவது, உங்களின் பலம் என்ன? பலவீனம் என்ன? உங்களுக்கு இருக்கும் ஒப்பர்சுனிட்டிஸ் என்ன? நீங்கள் செய்யப்போகும் நடவடிக்கையால் நீங்கள் எதிர் நோக்க கூடிய பிரச்சனைகள் என்னவாக இருக்கலாம்? இது போன்ற கேள்விகளை உங்களிடம் நீங்கள் கேட்டு ஒரு தாளில் எழுதுங்கள்.

எழுதியவுடன், அது உங்களைப்பற்றியது என்பதனை மறந்து விட்டு யாரோ ஒருவரைப்பற்றியது என்று நினைத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள அனைத்தையும் வாசியுங்கள்.

அதில் உள்ள பலத்துக்கு ஏற்றவாறான ஒப்பர்சுனிட்டியை பாருங்கள், அதனால் உங்களுக்கு பிற்காலத்தில் ஏதாவது பிரச்சனை வருமா என்ப்பாருங்கள், இல்லை என்று நினைத்தீர்களானால் துணிந்து அந்த காரியத்தில் இறங்குங்கள். நீங்கள் உங்களைப்பற்றி எழுதியதை, வேறு ஒருவருடையது என்று நினைத்து பார்க்கும் போது, உங்கள் மனதில் குடி கொண்டிருக்கும் பயம், வெட்கம், தன் நம்பிக்கையில்லாமை போன்றவை இல்லாது நல்ல சிறந்த உபயோகமான முடிவுகளை எடுக்கலாம்.

நண்பர்களே உங்கள் வரவேற்பை பொறுத்துதான் இந்த முயற்சி தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன யாருடைய பதிலையும் காணவில்லை.....

Link to comment
Share on other sites

சும்மா இது புலம் பெயர்ந்த எல்லா இனத்தவருக்கும் இருக்கும் பிரச்சினை தான், நாம் இங்கு பெரும் செல்வத்தோடு வரவில்லை.எமக்கு இங்குள்ளவர்களைப் போல் தொடர்புகளோ பெற்றோரின் பரம்பரைச் சொதுக்களோ இல்லை.எல்லாமே ஒன்றும் இல்லாத இடத்தில் இருந்து தான் உருவாக்கிறோம்.அதோடு ஒருவர் இடம் இருந்தே மற்றவர் கற்றுக்கொள்கிறோம் அதனால் தான் அவ்வாறு நிகழ்கிறது.

இந்த போட்டியான சந்தையில் புதிய விடயங்களை இங்கே இப்போது வளரும் இளஞ்சர்கள் தான் உருவாக்க வேண்டும்.அந்த வகையில் எவ்வாறான வாய்ப்புக்கள் இருகின்றன என்றும் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

புதிய முயற்ச்சி தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வார்கள். புலத்தில் எங்கள் சனத்தில், ஒருவன் ஒரு கடை ஒன்று போட்டால், எதிரே, அதே மாதிரி என்னுமொருவன் போடுவான். போட்டுவிட்டு வியாபாரத்தந்திரம் என்று, விலை குறைக்க, மற்றவன் குறைத்து கடைசியில் கடனோடு இரண்டு பேரும் மூட்டை கட்ட வேண்டியது.

இது ஏன் என்றால், சிந்தனைகளை சுயமாக உருவாக்கும் எண்ணம் இல்லாதது தான். வழிகாட்டியாக என்று ஒவ்வொருவனும் கிளம்புகின்றானோ, அதனூடகத் தான் வெற்றி பெறமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. தனி நபர் தாக்குதல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடந்து கொண்டு இருப்பதால், இதை எனது கடைசி ஆக்கமாக நினைத்து நல்ல விளக்கமாக எழுதுகின்றேன்.

வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய பணம் தேவைப்படுகின்றது என்பது நமது அனேகருடைய கருத்து. நான் ஒரு தொழில் ஆரம்பிப்பதற்கு எனக்கு பணம் தேவையாக இருக்கின்றது என்பது நம்மில் அனேகர் அடிக்கடி சொல்லும் ஒரு விடயம். அவர்கள் தொழில் ஆரம்பிக்கவில்லை...இன்னொருவர் செய்வதை செய்யப்போகின்றார்கள்.

உண்மையில் நீங்கள் ஒரு சுய தொழில் நீங்களாக சிந்தித்து ஆரம்பிப்பதாக இருந்தால், உங்களுக்கு நிச்சயமாக ஒரு பணமும் தேவை இல்லை. அப்படியான புதிய முயற்சிகளுக்கு பணத்தை முத்லீடு செய்பவர்கள் பலர் இருக்கின்றர்கள். அந்த விபரம் பின்னர் தருகின்றேன்.

தொழிலதிபர் என்று பார்க்கும் போது, இவர்களை இரண்டு வகைப்படுத்தலாம். முதலாவது, ஒன்ரபிறிற்னர்ஸ் (entrepreneur). இவர்கள் தங்களது திறமையை பாவித்து, புதிய முறைகளைக் கையான்டு தொழிலில் முன்னேறியவர்கள். இரண்டாவது இவர்களது பிள்ளைகள். இவர்களும் தொழிலதிபர்களே. தங்கள் முன்னோர் ஆரம்பித்து வைத்ததை வழி நடத்துவார்கள். இவர்கள் ஒன்ரபிறிற்னர்ஸ் அக் இருக்கின்றதும் இருக்கின்றது.

ஆக இந்த வாரிசுகளை நாம் கணக்கில் எடுத்து எந்த உபயோகமும் இல்லை. நம் குறிக்கோள் நாம் எப்படி ஒரு ஒன்ரபிறிற்னர் ஆகலாம் என்பதாக இருக்கட்டும். நாம் புலம் பெயர்ந்து வந்தது போலத்தான் பல தொழிலதிபர்கள் நகர் மாறி போய் முன்னேறி இருக்கின்றார்கள். உதாரணம், சேர். றிச்சர்ட் பிரான்சன். (வர்ஜின் குழுமம்) தனது 17 வது வயதில் இலண்டன் நகருக்கு பிழைப்புக்காக சென்று, முதலில் மாணவர்களுக்கான் புத்தகம் ஒன்றை அச்சிட்டு வெளியிட்டவர் தான். நம்மவர்கள் இருக்கும் போது நாம் ஏன் வேற்று இனத்தவரை உதாரணப்படுத்தணும்?

உலகப்பணக்காரர் வரிசையில் உள்ளவரும். தென்கிழக்காசியாவில் பணக்காரர் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளவருமான தான் சிறி தற்பரானந்தம் ஆனந்தகிருஷ்ணன் என்பவரை நம்மில் அனேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 68 வயதுடைய தான் சிறி, ( Tan Sri என்பது மலே மொழியில் ஒரு மதிப்புக்குரிய பட்டம், ஆங்கிலத்தில் சேர் என்பது போல) ஆனந்த்கிருஷ்ணன் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர், அவரது பெற்றோர் யாழ்ப்பாணத்தில் இருந்து மலாய சென்றவர்கள்.( கருத்தில் கொள்ளவும்)

நம் அனைவருக்கும் தெரிந்த, உலகின் உயர்ந்த கட்டடமாக ஒரு காலத்தில் இருந்த, சூரியா கே எல் சி சி (KLCC Twin Towers) இவருக்கு சொந்தமானவையே.இன்று மலேசிய திரு நாடு இந்த நிலையில் இருப்பத்தற்கு இவரும் ஒரு முக்கிய காரணம்.இவர் ஒரு சிறந்த ஒன்ரபிறுற்னர். ஆக நமது திறமையை நாம் பாவித்தால் முன்னுக்கு வரலாம்.

இப்பொழுது நமது விடயத்துக்கு வருவோம். எம்மில் பலர் எப்படியொ கஸ்டப்பட்டு தொழில்கள் ஆரம்பித்தாலும் அதே நிலையிலேயே இருப்பார்கள். பணம் ஈட்டுவார்கள் ஆனால் அந்த நிறுவனத்தை எப்படி முன்னேற்றுவது என்பது பற்றி எந்த ஒரு யோசனையும் இருக்காது. தெரியாத காரணத்தினால் இருக்கலாம். செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்.. எனது பாணியில் செய்யும் தொழிலே பிள்ளை. எமது வாழ்க்கை முறையுடன் ஒரு ஆரோக்கியமான தொழில் எப்படி ஒத்துப்போகின்றது என்று பாருங்கள். ஒரு சிறந்த நிறுவனத்தை கொண்டு நடத்துவது எமது தமிழ் பெற்றோர் ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பது போன்றது.

நீங்கள் ஒரு நிறுவனத்தை ஆரம்பிகின்றீர்கள் என்றால் முதலில் ஒரு கொஞ்ச காலத்துக்கு எந்த பலனையும் எதிர் பாராதீர்கள். உங்கள் உழைப்பு முழுவதையும் அந்த நிறுவனத்துக்கு கொடுங்கள். சில காலத்தில் அந்த நிறுவனம் ஒரு பிள்ளைக்கு பணத்தைக்கட்டி படிப்பித்த பின் எப்படி உழைத்துக்கொடுப்பார்களோ அதே போல அந்த நிறுவனமும் உங்களுக்கு பணத்தைக்கொடுக்கும். பின்னர் அந்த நிறுவனத்திற்கு திருமணம் செய்து கொடுங்கள்.அதாவது இன்னொரு நிறுவனத்துடன் கூட்டு சேர வையுங்கள். அப்போதுதான், மேலும் பல நிறுவனங்கள் அல்லது வர்த்தக கிழைகள் உருவாகும்.

இந்த ஒரு விடயத்தை நம்மவர்கள் தெளிவாக விளங்கிக்கொண்டால், எதிர் கடை போட்டு நட்டத்தில் செல்வதை தடுக்கலாம்.

தொழில் ரீதியில் நமக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை நமது உணர்ச்சிகள் மற்றும் உறவுமுறை. உங்களுடைய தனி மனித வாழ்க்கை வேறு, தொழிலதிபர் வாழ்க்கை வேறாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்றதாக நமது மன நிலையை மாற்ற வேண்டும். வீட்டில் உள்ளவர்களுடன் எப்படி பழகுகின்றோமோ அப்படி தொழிலில் பழக கூடாது. அங்கு தான் நாம் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கின்றோம்.

உதாரணமாக, ஒரு 5 தமிழர்கள் ஒரு குழுவாக ஒரு தமிழ் குழுத்தலைவரின் கீழ் ஒரு முடிவு சம்பந்தமாக ஆராய்ந்தால், குழுத்தலைவருக்கு நெருக்கமானவர்களின் அல்லது நீண்ட கால குழு உறுப்பினர்கள் கருத்துகள் சரியோ பிழையோ, அல்லது குழுத்தலைவருக்கு அது பிழை எனத்தெரிந்திருந்தாலும் அதற்கு ஆமாம் சொல்லுவார்கள். என்ன என்று பார்த்தால், கருத்து சொன்னவர் குழுத்தலைவருக்கு நெருக்கம், ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர் தப்பாக நினைப்பார்... அவருக்கும் குழுத்தலைவருகும் இடையில் உறவு பாதிக்கப்படும். இப்படியான சம்பவங்கள் அந்த நிறுவனத்தை என்கே கொண்டு செல்லும் என்பது சொல்லி தெரிய வேண்டும் என்பது இல்லை.

நமது பத்திரிகையாளர்களை எடுத்துக்கொள்ளுங்கள், இந்த காரணங்களால் கூட அவர்கள் பக்கம் சார்ந்து எழுதாலாம். இப்படியான பத்திரிகையாளர்களால் தான் நமது தாயகப்பிரச்சனைகள் பெரிதாக வெளியில் வருவது இல்லை.

ஏன் யாழ் களத்தில் கூட இதே பிரச்சனை தான். பழையவர், நெருங்கிய நண்பர் கவலைப்படுகின்றார் என்பதற்காக, காரணங்கள் உண்மை நிலைகள் தெளிவாக தெரியாமல் வார்த்தைகளை விட்டவர்கள் இருக்கின்றார்கள். அது ஒரு சிறந்த முறை அல்ல. தப்பு என தெரிந்தால், உடனேயே சொல்ல வேண்டும். குறிப்பிட்ட நபர் வந்து சொல்லிய பின்னர் கேட்பது தான் தப்பு. ஆக நாம் இங்கு நடு நிலைமையில் இல்லை. மற்றவர் சொல்லி நாம் இயங்க வேண்டியுள்ளது. இப்படி நாம் இருப்பதால் தான் எம்மால் முன்னேற முடியாதுள்ளது. சொந்த வாழ்கை தவிர, கருத்துகள் சொல்லும் போது, அல்லது வர்த்தக முயற்சிகளில் ஈடுபடும் போது, இவர் எனது நண்பர்.. ஆதலால் ஆமாப்போடலாம் என நினைக்காதீர்கள். உங்கள் சொந்த அறிவை பாவியுங்கள். அதனால் ஒரு உறவு முறை பாதிக்கப்படும் என்றால் அந்த உறவே தேவை இல்லை. எதையும் எதிர்பார்க்காமல் வருவது தான் சிறந்த உறவுகள்.

கொஞ்ச காலத்துக்கு முன்னர், யாழ் களம் தான் எனக்குத் தெரியும்... இப்பொழுது யாழ் களத்தில் கருத்து எழுதுபவர்கள் பலர் தனிக்களம் அமைத்திருக்கின்றார்கள். அவர்கள், மோகன் அவர்களுடன் கலந்து பேசி, அவர்களது எண்ணத்தை தெரியப்படுத்தி, அந்த களத்தில் இருக்கும் அங்கங்களை புதிய களம் அமைக்காது, யாழ் களத்திலே இனைத்திருந்தால், நிச்சயமாக, யாழ் களம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் அதே வேளை, அவர்களுடைய புதிய முயற்சியும் மக்களை இலகுவாக சென்றடைந்திருக்கும்.

தயவு செய்து தனி நபர் தாக்குதல் நடத்தும் போது என்ன ஏது, நீங்கள் யார் என்பதை சொல்லி விட்டு நடத்துங்கள். கள் உறவுகளை சொந்த உறவுகளாக நினைத்த படியால் தான் எனது பெயர் விபரம் எம் எஸ் என் இல் சொல்லியிருக்கின்றேன். அதனை வைத்து மிரட்டல் விடுவது எல்லாம் நல்ல மனிதருக்கு அழகு அல்ல... புதிய மின்னஞ்சலில் அனுப்பினாலும் அழகு இல்லைத்தான். நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாழைப் பல காலமாகப் பார்வையிடுபவன்,ஆனால் சும்மா எழுதிய ஒரு கட்டுறைக்கு (தேவையானவற்றை உள்வாங்குங்கள், தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்)

பதில் எழுதவேண்டும் என்ற ஆவலில் தான் பதிந்தேன். ஓருவாரு பலரிடமும் பேச்சுக்கேட்டு எனக்கு பறீட்சயம் இல்லாத தலைப்பில் ஒரு 51 பதில் எழுதி உள்ளேன். எப்போ அனுமதி வரும்?

தற்போது உங்களுக்கு இடைநிலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சும்மாவிற்கு!

உங்களின் ஆக்கம் ஒரு சிந்தனயய் தூண்டக்கூடியது, எனது சில அனுபவங்களை உங்களுடனும் யாழ் அன்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்ரேன். இந்த தலைப்பை யாழிலில் தேடிக் கண்டுபிடிப்பதும் கடினமாக உள்ளது. (தொடரும்)

Link to comment
Share on other sites

சும்மா நல் விடையங்கள் எழுதுறியள் வாழ்த்துக்கள். சளைக்காது தொடருங்கள். தனிநபர் தாக்குதல் எங்கடை கள்ளச்சாராயம் அதை கைவிட சொல்லுறது கொஞ்சம் கூட நன்னா இல்லை.

எமது பலனம் பலவீனங்கள் சுய ஆய்வு செய்வது, தனித்துவமான சுய எண்ணங்களிற்கு மதிப்பளிப்பது, ஊக்குவிப்பது, தன்நம்பிக்கை, சுயமரியாதை, பகுத்தறிவிற்கு முக்கியத்துவம் என்பன சின்ன வயதில் இருந்து பாடசாலையில் ஊட்டி வழர்க்கப்பட வேண்டியது. அதை ஊக்குவிக்க வேண்டியது ஆசிரியர் பெற்றார் மற்றும் ஏனை பெரியவர்கள்.

இது சிறீலங்கா கல்வித்திட்டத்தில் இல்லை எமது தற்போதைய கலாச்சாரத்திலும் இல்லை. தமிழீழத்தில் இவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றதற்கு நல்ல அறிகுறிகள் ஏற்கனவே உண்டு.

Link to comment
Share on other sites

சும்மா அந்தத் தனிமடல் களத்தில் இருந்து அனுப்பப்பட்டால் மோகனுக்கு அறிவித்தால் அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பார்.இல்லை வேறுவிதமாக வந்தால் நீங்கள் உங்கள் பெயரை வழங்கிய நபர்களில் யார் அதனைச் செய்திருப்பார்கள் என்று ஊகித்து அவரைத் தவிர்க்கலாம்.இப்படியான பிரச்சினைகள் வரும் தான் இந்தச் சில்லறைப் பிரச்சனைகளால் தொடர்ந்து எழுதுவதை நிற்பாட்ட வேண்டாம்.இப்படியான சில்லறைத் தனமான விடயங்களில் ஈடுபடுபவர்களை பெரிதாக எடுக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கத் தமிழரில் பலர் சிறந்த கல்வி அறிவு உள்ளவர்களாக இருந்தபோதும், இதில் ஒரு சிலரே சிறந்த நிருவாகிகளாக உள்ளனர். ஏனையவர்கள் எல்லோரும் இன்னோருவரின் கீழ் சிறப்பாக வேலை செய்பவர்களாக உள்ளனர். இதற்கான காரணமாக என்னால் இரு காரணங்களை சொல்ல முடியும்.

1)வரலாறு

2)மொழி

1)வரலாறு (சுயசிந்தனை, தன்னம்பிக்கை)

நாம் பல ஆண்டு காலமாக இன்னொருவரின் ஆட்சியின் கீழ் அடிமைகளாக வாழ்ந்துள்ளோம். இதனால் இன்னொருவரின் சிந்தனையை நாம் செய்துமுடிப்பவர்களாகவே திகழ்ந்துள்ளோமே ஒழிய எம்மால் ஒரு சிந்தனையய் உருவாக்கி அதை நடைமுறைப் படித்தக்கூடிய அளவில் எம்மை உருவாக்கவில்லை (pடயn யனெ ழசபயnளைiபெ). இதற்கு ஒரு உதாரணமாக, முன்பு எமது சனம் எமது காலநிலைக்கேற்ப இலகு ஆடைகளை அணிந்தார்கள் ஆண்கள் கோவனத்தோடோ இல்லை ஒரு கால்சட்டையோடோ திரிந்தார்கள். இதைப்பார்த்த வெள்ளயர்கள் என்ன சுத்தமாக நாகரிகமில்லாமல் திரிகிரீர்கள், எம்மைபோல் ஒரு கோட் சூட் அனியுன்கள் என்ரதும், நாம் கோட் சூட்டிற்கு தாவியுள்ளோம்.அதாவது வெள்ளையர்கள் கூறுவதை நாம் சிந்திக்காமலே செய்கின்றோம்.

அடுத்ததாக தன்னம்பிக்கை உள்ளது.

பல ஆண்டு அடிமைத்தன்மயின் காரணமாகவே எமது தன்னம்பிக்கயிலும் ஆட்டம் கண்டுள்ளோம். உதாரணமாக வெள்ளயர்களைப் பார்த்தால் பல ஆண்டு ஏஜமானத்துவம் காரணமாக அவர்களுக்குள் ஒரு சுப்பீரியர் என்று ஒரு உணர்வு உள்ளது. தொமஸ் அல்வா எடிசன் தொடங்கிய ஜி.யி நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி தனது குறிப்பில் கூறியுள்ளார் , தனக்கு தன்னம்பிக்கையய் தந்தது தாய் என்றும், தாய் எப்போதும் தான் கெட்டிக்காரன் என்று கூருவதால், தனக்கு தன் மீது ஒரு அலாதி நம்பிக்கை வந்த்தது என்றும் பின் அந்த நிலையை தக்கவைக்க தான் உழைக்கவேண்டி இருந்ததாகவும் கூறியள்ளார். அதாவது எப்போது உங்களுக்கு நீங்கள் மற்றையவர்களை விட அறிவு கூடியவர்கள் என்று ஒரு தோற்றம் உருவாகும் போது, அதை நடைமுறைப்படுத்த போட்டி போடுவீர்கள். இல்ங்கையில் கூட தமிழர்கள் கல்வியில் சிறந்துவிளங்குவதிற்கு காரணம், கல்வியில் அவ்ர்கள் கெட்டிக்காரர்கள் எனும் ஒரு கருத்து பரவலாக இல்ங்கயில் திகழ்வதுதான் காரணம். (தொட)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாழைப் பல காலமாகப் பார்வையிடுபவன்,ஆனால் சும்மா எழுதிய ஒரு கட்டுறைக்கு (தேவையானவற்றை உள்வாங்குங்கள், தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்)

பதில் எழுதவேண்டும் என்ற ஆவலில் தான் பதிந்தேன். ஓருவாரு பலரிடமும் பேச்சுக்கேட்டு எனக்கு பறீட்சயம் இல்லாத தலைப்பில் ஒரு 51 பதில் எழுதி உள்ளேன். எப்போ அனுமதி வரும்?

தற்போது உங்களுக்கு இடைநிலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சும்மாவிற்கு!

உங்களின் ஆக்கம் ஒரு சிந்தனயய் தூண்டக்கூடியது, எனது சில அனுபவங்களை உங்களுடனும் யாழ் அன்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்ரேன். இந்த தலைப்பை யாழிலில் தேடிக் கண்டுபிடிப்பதும் கடினமாக உள்ளது. (தொடரும்)

நைனா, உங்கள் கருத்துக்கும் தனி மடலுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். உங்களது தனிமடல் ஒரு கிரிஜா ஊக்கி போல என்னுள் தோண்றுகின்றது. மீண்டும் நன்றிகள். உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள, http://www.yarl.com/forum3/viewtopic.php?t=14630 தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா அந்தத் தனிமடல் களத்தில் இருந்து அனுப்பப்பட்டால் மோகனுக்கு அறிவித்தால் அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பார்.இல்லை வேறுவிதமாக வந்தால் நீங்கள் உங்கள் பெயரை வழங்கிய நபர்களில் யார் அதனைச் செய்திருப்பார்கள் என்று ஊகித்து அவரைத் தவிர்க்கலாம்.இப்படியான பிரச்சினைகள் வரும் தான் இந்தச் சில்லறைப் பிரச்சனைகளால் தொடர்ந்து எழுதுவதை நிற்பாட்ட வேண்டாம்.இப்படியான சில்லறைத் தனமான விடயங்களில் ஈடுபடுபவர்களை பெரிதாக எடுக்க வேண்டாம்.

நாரதர் அண்ணா, நன்றி. யார் என்று ஊகித்து, அவவையும், அவன்களையும் எம் எஸ் என்னில் தவிர்த்தாகிவிட்டது. உங்கள் ஆலோசனைக்கு நன்றி. உங்கள் கருத்துக்கள் மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்... தயவு செய்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்காலபோவான் முதலில் உங்களுக்கு நன்றி. புங்குடுதீவான், யாழ்ப்பாணத்தான், கொழும்பான் என்று கேள்விப்பட்டு இருக்கின்றன்.. இது என்ன குறுக்காலபோவான்???

சிறிலங்கா கல்வித்திட்டத்தை குறை சொல்வதை விட, அங்கு எம்மை ஆசிரியர்கள் ஊக்குவிப்பது குறைவு. காரணம் அவர்களை எவரும் ஊக்குவிப்பது இல்லை.முக்கிய காரணம் நாட்டுப்பிரச்சனை காரணமாக இருக்கலாம், எந்த ஒரு விடயத்தையும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிந்திக்க கூடிய மன நிலையில் தான் வட இலங்கையின் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் என்றுதான் கூற வேண்டும்.

இலங்கை கல்வித்திட்டத்தில், நீங்கள் ஒரு சிறந்த அறிவாளியாக உருவாகலாம், ஆனால் அந்த அறிவை எங்கு எப்படி எவ்வாறு சிறந்த பயன் பெறும் விதத்தில் உபயோகிப்பது என்பது தெரியாமல் போகின்றது.

தமிழீழத்தில் கல்வித்திட்டத்தில் மாற்றம் ஏற்படும் என நினைக்கின்றேன், அப்படி நடந்தால் நன்மையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நைனா மன்னிக்க வேண்டும். என்னைப்பொறுத்த வரை, என்னால் இந்த வரலாறும் மொழியும் காரணமாக இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

)வரலாறு (சுயசிந்தனை, தன்னம்பிக்கை)

நாம் பல ஆண்டு காலமாக இன்னொருவரின் ஆட்சியின் கீழ் அடிமைகளாக வாழ்ந்துள்ளோம். இதனால் இன்னொருவரின் சிந்தனையை நாம் செய்துமுடிப்பவர்களாகவே திகழ்ந்துள்ளோமே ஒழிய எம்மால் ஒரு சிந்தனையய் உருவாக்கி அதை நடைமுறைப் படித்தக்கூடிய அளவில் எம்மை உருவாக்கவில்லை (ப்டயன் யனெ ழசபயன்ளைஇபெ). இதற்கு ஒரு உதாரணமாக, முன்பு எமது சனம் எமது காலநிலைக்கேற்ப இலகு ஆடைகளை அணிந்தார்கள் ஆண்கள் கோவனத்தோடோ இல்லை ஒரு கால்சட்டையோடோ திரிந்தார்கள். இதைப்பார்த்த வெள்ளயர்கள் என்ன சுத்தமாக நாகரிகமில்லாமல் திரிகிரீர்கள், எம்மைபோல் ஒரு கோட் சூட் அனியுன்கள் என்ரதும், நாம் கோட் சூட்டிற்கு தாவியுள்ளோம்.அதாவது வெள்ளையர்கள் கூறுவதை நாம் சிந்திக்காமலே செய்கின்றோம்.

இதற்கு காரணம் மேலைத்தேசத்தவரின் திறமை. அதாவது விளம்பர திறமை மற்றும் ஆளுமை. அவர்களுக்கு தேவைப்பட்டது ஒன்று மட்டும். அனைவரும் தம்மை பின் தொடர வேண்டும் என்பதே. அதை சாதித்தார்கள்.

நீங்கள் சொல்வதன் படி பார்த்தால், இந்தியாவும் தான் பிரித்தானியாவின் கீழ் இருந்தது, அங்கும் அடிமையாக நடத்தினார்கள். இந்தியர்கள் உலகின் சிறந்த நிர்வாகிகளாக வீறு நடை போட்டு மேலைத்தேசத்தவர்களுக்கு சவாலக இருக்க போகின்றார்கள், இருக்கின்றார்கள். ஆக அடிமையாக இருந்ததால் தான் நாம் இப்படி இருக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

முழுக்காரணமும், தன்னம்பிக்கையும் எமது சமூகமும் தான். எமது சமூகத்தில் வெற்றி அடைந்தால், எனக்கு அப்பவே தெரியும் வெற்றி அடைவாய் என்பார்கள். தோல்வி அடைத்தால் கிண்டல் செய்து, உனக்கு எதற்கு இதெல்லாம்... அப்பவே தெரியும் எனக்கு என்பார்கள். இப்படியான பேச்சுவார்த்தைகள் தான் நம்மில் பலரை கீழ் நிலையிலேயே வைத்திருக்கின்றது. இதன் காரணமாக ஒரு மனிதன் தன்னம்பிக்கையை இழக்கின்றான்.

தொடரும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருவரும் கூறுவது ஒன்றுதான் அதாவது நாம் வெற்றிபெற முடியாமல் இருப்பதற்கு காரணம் தன்நம்பிக்கையும் சமுதாயமும் என்று கூறுகின்றீர்கள். நான் இதனுடன் மொழி வல்லமயும் ஒரு காரணம் என்றுகூறுகின்றேன்.அத்துடன் நம் நடைமுறைச்சமுதாயம் இவ்வாறு உருவாக்கப்பட்டதற்கு நமது அடிமைசேவகம் தான் ஒரு காரணம் எனகூறுகின்றேண்.

நீங்கள் இந்தியாவை ஒரு உதாரணமாகக் காட்டி உள்ளீர்கள். இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்குப் பின்னரே முன்னுக்குவரத்தொடங்கியுள்ள

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துக்கு நன்றி நைனா. மொழி வல்லமையை ஒரு காரணமாக கருதினால், சீனர்களும், ஜப்பானியர்களும் எந்த மொழி வல்லமையை வைத்து உலக சந்தையை கைக்குள் வைத்திருக்கின்றார்கள்? ஒரு விடயம் குறிப்பிட வேண்டும், சீனர்களுக்கு மொழி வல்லமை இருந்தால், அதாவது இந்தியர்களுக்கு இருக்கும் பேச்சுத்திறமை அல்லது மொழி அறிவுகள் இருந்தால், இருந்திருந்தால், அவர்கள் உலக சந்தையில் முன்னுரிமையில் இருப்பார்கள்.

விளக்கமாக தொடர்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துக்கு நன்றி நைனா. மொழி வல்லமையை ஒரு காரணமாக கருதினால், சீனர்களும், ஜப்பானியர்களும் எந்த மொழி வல்லமையை வைத்து உலக சந்தையை கைக்குள் வைத்திருக்கின்றார்கள்? ஒரு விடயம் குறிப்பிட வேண்டும், சீனர்களுக்கு மொழி வல்லமை இருந்தால், அதாவது இந்தியர்களுக்கு இருக்கும் பேச்சுத்திறமை அல்லது மொழி அறிவுகள் இருந்தால், இருந்திருந்தால், அவர்கள் உலக சந்தையில் முன்னுரிமையில் இருப்பார்கள்.

விளக்கமாக தொடர்கின்றேன்.

நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் இந்தியர்கள் மொழிவல்லமை இருந்தபடியால்தான் சீனர்களைவிட ஒரு குறுகியகாலத்தில் முன்னேறியுள்ளார்கள் என்றுகூறுகின்றீர்களா?. நான் கூறிய மொழிவல்லமை என்பது புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் முன்னுக்கு வர மொழியும் ஒரு தடை என்று கூறுகின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.